நள்ளாறு (திருநள்ளாறு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை நள்ளாறர்


மரம்: வில்வம்
குளம்: நள தீர்த்தம்

பதிகங்கள்: பாடக மெல்லடி (ஆலவாய்) -1 -7 திருஞானசம்பந்தர்
போகமார்த்த -1 -49 திருஞானசம்பந்தர்
ஏடுமலிகொ -2 -33 திருஞானசம்பந்தர்
தளிரிள -3 -87 திருஞானசம்பந்தர்
உள்ளாறாத -5 -68 திருநாவுக்கரசர்
ஆதிக்கண் நான்முகத்தில் -6 -20 திருநாவுக்கரசர்
செம்பொன்மேனி -7 -68 சுந்தரர்

முகவரி: திருநள்ளாறு
திருநள்ளாறு அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுவை மாநிலம் 609607
தொபே. 04368 236530

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம், நாகைமாவட்டத்தில் காரைக்காலை அடுத்துள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இது அரசிலாற்றுக்கும் வாஞ்சநதிக்கும் நடுவில் இருப்பதால் நள்ளாறு என்று அழைக்கப்படுவதாயிற்று.

தர்ப்பாரணியம், நகவிடங்கபுரம், நளேசுரம் என்பன இதன் மறு பெயர்கள். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. நளன் வழிபட்ட தலம்.

விநாயகர் கற்பகவிநாயகர், சொர்ணவிநாயகர், தியாகர் நகவிடங்கத் தியாகர்; அம்மன் நீலோற்பலாம்பாள்; நடனம் உன்மத்த நடனம். இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகச் சிறப்புடையது.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி