நெல்வாயில்அரத்துறை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகுஆனந்தநாயகி உடனுறை அரத்துறைநாதர்


மரம்: ஆல மரம்
குளம்: நிவாநதி

பதிகங்கள்: எந்தையீச -2 -90 திருஞானசம்பந்தர்
கடவுளைக் -5 -3 திருநாவுக்கரசர்
கல்வாய்அகிலும் -7 -3 சுந்தரர்

முகவரி: திருவட்டுறை அஞ்சல்
விருத்தாசலம் வழி
திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம், 606111
தொபே. 04143 246303

விழுப்புரம் - திருச்சி குறுக்குத் தொடர்பாதையில், திருப் பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கித் தெற்கே 1 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.

இறைவர் திருப்பெயர் அரத்துறைநாதர், இறைவி திருப்பெயர் ஆனந்தநாயகி . சுந்தரமூர்த்தி நாயனார் வண்டார் குழலாள் என்று கூறியுள்ளார். ``வண்டார் குழலாள் மங்கை பங்கினனே`` (தி. 7பதி. 3 பா. 3) என்பது அவரது தேவாரப் பகுதி. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர்.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம். மூவர் பாடலும் பெற்றது. திருப்புகழும் பெற்றது.

இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக ஞான சம்பந்தர் குறிப்பித்துள்ளார்.

``கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண்சோலை நெல்வாயிலரத்துறையடிகள் தம்மருளே`` (தி. 2 பதி. 226 பா. 1) என்பது இவர் தேவாரப் பகுதி. இங்கே நிவா என்றது வடவெள்ளாறு ஆகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குறள், நாலடியார் இவைகளிலுள்ள கருத்து, அடி இவைகளை இவ்வூர் ஏழாம் திருப்பாடலில் எடுத்து ஆளுகின்றார். இத்தலத்துக்குத் திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று,சுந்தரர் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

கோயிலுக்கு முன்னால் மூன்று சிறு உருவங்கள் இருக்கின்றன. அவைசேர சோழ பாண்டிய லிங்கங்களாம்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி