பட்டீச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பல்வளைநாயகி உடனுறை பட்டீச்சுரநாதர்


மரம்: வன்னி
குளம்: ஞான தீர்த்தம்

பதிகம்: பாடன்மறை -3 -73 திருஞானசம்பந்தர்

முகவரி: பட்டீச்சரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612703
தொபே. 0435 2416976

காமதேனுவின் மகளாகிய பட்டியால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயர். தலத்தின் பெயர் பழையாறை என்பது. அது பெரிய நகரமாய் இருந்த இடம். சோழ அரசர்கள் முடி சூடும் ஐந்து நகரங்களில் ஒன்று. இப்பொழுது அது பல ஊர்களாகப் பிரிந்து வழங்குகிறது. பட்டீச்சரம் என்னும் கோயில் இருக்கும் ஊர் முன்பு (சம்பந்தர் காலத்தில்) மழபாடி (கொள்ளிடத்தின் வடபால் மழநாட்டைச் சேர்ந்த திருமழபாடி என்பது வேறு தலம்.) என்று வழங்கப்பெற்றது. இப்பொழுது அவ்வூரும் பட்டீச்சரம் என்றே வழங்கப்பெறுகின்றது. சம்பந்தப்பெருமான் அதை மழபாடி நகரம் என்றே பாடியுள்ளனர்.

இது கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப்பாதையில் இருக்கும் தாராசுரம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே சுமார் 3. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்களுள் இருபத்துமூன்றாவது ஆகும்.

இறைவரின் திருப்பெயர் பட்டீச்சுரநாதர். இறைவியின் திருப்பெயர் பல்வளைநாயகி. தீர்த்தம் ஞானதீர்த்தம். மரம் வன்னி. இராமபிரான் வழிபட்டுப் பிரமகத்திதோஷம் நீங்கப்பெற்றான். இவ்விழா மார்கழி அமாவாசையில் கொண்டாடப்பெறுகின்றது. திருஞானசம்பந்தர் திருச்சத்தி முற்றத்தினின்று இப்பதிக்கு எழுந்தருளியது ஆனி முதுவேனிற் காலமாதலால், இறைவன் பூதங்களின் மூலம் முத்துப் பந்தரைக் கொடுத்தருளிய தலம். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் முதல் தேதியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப் பெற்றுவருகின்றது. கோயில் நந்திகள், திருமுன்பிற்குச் சற்று விலகியிருக்கின்றன. ஞானசம்பந்தப் பெருந்தகையார் எழுந்தருளும் போது நேரில் கண்டுகளிக்கும் பொருட்டாக இறைவன் கட்டளைப்படி நந்திகள் விலகியிருக்கின்றன என்பர். இக்கோயிலில் திருப்பணி புரிந்த கோவிந்த தீட்சதர், அவர்தம் மனைவியார் பிரதிமைகள் எழுந்தருளுவிக்கப் பெற்றுள்ளன.



கல்வெட்டு:

இக்கோயிலில் ஐந்து கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டாம் கோபுரத்தின் உட்பக்கம் இருக்கும் கல்வெட்டு தஞ்சை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டதாகும். இவ்வூரில் திருமணம் நிகழும்போது தாம்பூலத்தை முதலில் இவ்வூரினர்களாகிய செட்டியார்கள், பட்டுநூல்காரர்கள் என்போருள் எவர்களுக்கு முதலில் கொடுப்பது என்ற தகராறு எழுந்தது. முடிவில் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மனுக்கு ஒரு புடைவையையும் வெற்றிலை பாக்கையும் முதலில் கொடுத்துவிட்டுப் பின்னர் அவ்விருவகுப்பாரும் எடுத்துக் கொள்வது என்னும் முடிவுபற்றியதே அது. கிரந்தத்தில் உள்ள கல்வெட்டு கோயிலைப் பழுது பார்த்ததைப்பற்றிக் கூறுகின்றது. கிரந்தத்திலுள்ள இரண்டு செய்யுள்கள், புனித இடங்களாகிய விருத்தாசலம், கமலாலயம், வெண்காடு, சாய்க்காடு, கைலாசம் இவைகளைப் போல் பட்டீச்சரமும் ஒன்று என்று குறிப்பிடுகின்றன. வெளிப் பிராகாரத்தில் பலிபீடத்தின்அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு, திருஞானசம்பந்தர் மடம், திருநாவுக்கரசு மடம், திருமூலதேவர் திருமடம் என்பவை பற்றிக் குறிப்பிடுகின்றது.

( See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927, No. 257-261)

 
 
சிற்பி சிற்பி