பண் :

பாடல் எண் : 3

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருள்தீர்ந்
தருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வற நந்தி முனிகணத் தளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன்
பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே.

பொழிப்புரை :

இதன் பொருள், மலர் தலை உலகின் மா இருள் துமியப் பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் என்பது விரிந்த இடத்தையுடைய ஞாலத்தின்கண்ணே துன்னிய பெரிய புறவிருள் கெடும்படி பல சமயத்தாரானும் புகழப்படுகின்ற பரிதியங்கடவுள் உதயகிரியினின்றும் போந்தாலன்றிக் காட்சி யெய்தமாட்டாத கண்ணொளிபோல, அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி என்பது பொறுத்தற்கரிய துயரங்களுக்கெல்லாம் ஒரு நிலைக்களமாய்ச் சத்த தாதுக்களாற் பொத்திய குரம்பையாகிய காணப்பட்ட உடம்பானே காணப்படாத ஆன்மாவையும் பரமான் மாவையும் அனுமான அளவையான் வைத்தாராய்ந்து அவற்றது தடத்த லக்கணமெனப்படும் பொதுவியல்புணர்ந்து, கண் இருள் தீர்ந்து எது அவ்வுணர்ச்சியானே கருதியுணரப்படும் அகவிருளாகிய ஆணவமலத்தினின்று நீங்கி, ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு என்பது அது நீங்கிய வழி எல்லா நூல்களுந் தன் பொருளேயாகத் திரண்டு கூடிய பெரும்பெயரெனப்படும் ஒரு வார்த்தையாகிய மகாவாக்கியத்தான் எடுத்தோதப்படும் முதற்கடவுளது திருவருளானே அப்பொருள்களது சொரூபலக்கணமெனப்படுஞ் சிறப்பியல்பை அநுபூதியிற் கண்டுணர்ந்து, மயர்வு அற என்பது இம்முறையானே மயக்கவாசனையற்றுச் சிவாநுபவம் பெறுதற்பொருட்டு, நந்திமுனிகணத்து அளித்த என்பது சீகண்டதேவர்பாற் கேட்டருளிய நந்திபெருமான் சனற்குமாரமுனிவன் முதலிய முனிவர்கணங்கட்கு முறையானே அளித்தருளப்பட்ட, உயர் சிவஞானபோதம் எது சரியை முதலிய மூன்று பாதப்பொருள்களை ஆராயு நூல்களின் மேற்பட்ட சிவஞான போதமென்னும் வடநூலை,உரைத்தோன் என்பது மொழி பெயர்த்துக் (இது இவ்வுரையாசிரியர் தம்முரையுட் பல இடங்களில் கூறுவது: தமிழ்ச் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பல்ல, தமிழ் முதனூலே என்பது இக்காலத்திய ஆராய்ச்சியின் முடிபு) கூறி வார்த்திக மெனப்படும் பொழிப்புரை செய்தோன் பெண்ணைப்புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன் எது பெண்ணையாற்று நீராலே சூழப்பட்ட திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளிய சுவேதவனப் பெருமாளென்னும் பிள்ளைத் திருநாமமுடையான், பொய் கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் என்பது பொய்ச்சமயங்களின் பொருள் இதுவிது என்று கண்டு கழிப்பித்த காரணத்தாற்பெற்ற மெய்கண்ட தேவனென்னுஞ் சிறப்புத் திருநாமமுடையான், பவம்நனி வன்பகை கடந்த தவர் அடிபுனைந்த தலைமையோன் எது பிறவியாகிய மிக்க வலிய பகையினை வென்ற தவத்தோர் தனது திருவடியைப் புனைந்து கோடற் கேதுவாகிய தலைமைப் பாட்டினையுடையோன் என்றவாறு.

குறிப்புரை :

படரிற் காண்டல் செல்லுங் கண்ணெனற்பாலதனை எதிர் மறைமுகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு. இப்பொருள்பற்றிக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கேற்பக் காண்டல்சேறற்குப் படர்ந்த ஞாயிறு போலென்பது கருத்தாகக் கொள்க. இருட்கேட்டிற்கும் நிருவிகற்பஞ் சவிகற்பமென்னும் இருவகைக்காட்சிக்கும் ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற் றாயவாறுபோல, மலத்தீர்விற்கும் ஆராய்ச்சி அநுபூதியென்னும் இருவகை யுணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிற்றாயது இந்நூலென்பார், துமியப் படரினல்லதைக் காண்டல் செல்லாக் இது இவ்வுரையாசிரியர் தம்முரையுட் பல இடங்களில் கூறுவது: தமிழ்ச் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பல்ல, தமிழ் முதனூலே என்பது இக்காலத்திய ஆராய்ச்சியின் முடிபு. கண்போனாடித் தீர்ந்து கண்டு மயர்வறவளித்த சிவஞானபோதமென்றார். தலைமைபற்றி அருந்துயர்க்குரம்பையின் என்றாரேனும், இனம்பற்றிக் கரணம் புவனமுதலியனவும் உடன் கொள்ளப்படும். அருந்துயர்க் குரம்பையி னாடப்படுவதாகிய பொதுவியல்பு முன்னாறு சூத்திரத்தானும், பெரும்பெயர்ப் பொருளிற் காணப்படுவதாகிய சிறப்பியல்பு பின்னாறு சூத்திரத்தானும் ஓதுப. நாடியெனவே அநுமான அளவையான் என்பதூஉம், கண்டெனவே அநுபூதியில் என்பதூஉம், தாமே போதரும். பொதுவியல்பு அளவை முகத்தானும் இலக்கணமுகத்தானுங் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் என்னும் இருதிறத்தானுணரப்படும்; சிறப்பியல்பு சாதனமுகத்தானும் பயன்முகத்தானுங் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டையென்னும் நான்கு திறத்தானுணரப்படும்.
இஃதென்சொல்லியவாறோவெனின், இவ்விருவகையியல்பும் வேறுகூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது ஒரோவொன்றேபற்றி ஐக்கவாதமுதற் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை யுணர்த்தற்கு எழுந்தது இந்நூலென்றவாறாயிற்று. சிவஞானபோதம் என்பதூஉம் இக்காரணத்தாற் பெற்ற பெயரென்பது வடமொழிச் சிவஞானபோதத்து இறுதிச் சூத்திரத்து ஓதியவாறுபற்றி யுணர்க.
சரியை முதலிய மூன்று பாதப்பொருளை ஆராயும் நூல்களாவன சோமசம்பு பத்ததி முதலாயின. அந்நூல்களின் மேற்பட்ட சிவஞானபோதமெனவே, அந்நூல்களுணர்ந்த பின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது பெறப்பட்டது; படவே, முன்னர்த் தீக்கையுற்றுச் சிவாகமங்களையோதி அதன்பின்னர்ச் சரியாபாத முதலியவற்றை ஆராயும் நூல்களை முறையேகேட்டு அவ்வாறொழுகி மனந்தூயராய் நித்தியாநித்திய வுணர்வு தோன்றிப் பிறவிக்கஞ்சி வீடுபேற்றின் அவாமிக்குடையராய் வந்த அதிகாரிகளுக்கு இந்நூல் உணர்த்துக என்பது போந்ததெனக்கொள்க.
உயர் சிவஞானபோதமெனவே யாப்பும், கேட்போரும், நுதலிய பொருளும், நூற்பெயரும்; நாடித் தீர்த்து கண்டு மயர்வறவெனவே நுதலிய பொருளின்வகையும், பயனும்; நந்தி முனிகணத்தளித்தவெனவே வழியும்; வெண்ணைச்சுவேதவனன் மெய்கண்டதேவனெனவே ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்குநிலமே இந்நூல் வழங்குநிலமென எல்லையும் போந்தவாறுணர்க. வடநூலார் யாப்பை ஆனந்தரியமென்றும், நுதலிய பொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோசனமென்றுங் கூறுப. யாப்புச்சம்பந்தமென்பாருமுளர்.

பண் :

பாடல் எண் : 1

கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.

பொழிப்புரை :

இதன் பொருள், கல்லால் நிழல் என்பது அருள்வடிவாகிய கல்லால் நிழலின்கண்ணே எழுந்தருளியிருந்து, மலைவு இல்லார் என்பது நந்திபெருமானுக்கு இந்நூலான் மலைவுதீர்த்தருளிய முதலாசிரியர், அருளிய என்பது மேன்மேற் கருணைகூர்ந்தருளுதற் பொருட்டு, பொல்லார் இணை மலர் என்பது பொல்லாத பிள்ளையாருடைய ஞானசத்தி கிரியாசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை, நல்லார் எது கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர், புனைவரே எது தம்முடைய ஞானசத்தி கிரியாசத்திகட்கு வியாபகமாகக் கொண்டு தாடலைபோல் அடங்கி நிற்பர். என்றவாறு .

குறிப்புரை :

நல்லார் புனைவரெனவே, ஏனையோர்க்கு அது கூடாதென்றவாறாயிற்று. மூவகை வாழ்த்துள் இது பொருளியல்புரைத்த தெனக் கொள்க. அருளிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ; அது புனைவரென்னும் பிறவினை கொண்டது. இல்லார் இல்லாகச் செய்தாரெனப் பண்படியிற் பிறந்த வினைப்பெயர். அருளிய பொல்லாரெனப் பெயரெச்சமுடிபாக வைத்துரைப்பினும் அமையும். மலைவில்லாரருளப் பொல்லார்தாள் புனைவரெனவே, அவ்விருவருந் தம்முள் வேற்றுமையின்மை பெற்றாம். உலகத்துப் புதல்வர்கண்மாட்டுச் செய்யும் வழிபாடு தந்தையர்க்குக் கழிபேருவகை பயப்பிக்குமாகலின், அந்நயம்பற்றி அங்ஙனங் கூறியதூஉமாம்.
திருச்சிற்றம்பலம்

பண் :

பாடல் எண் : 1

தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.

பொழிப்புரை :

இஃது அவையடக்கங் கூறுமுகத்தானே ஈண்டெடுத்துக் கொண்ட சித்தாந்த சைவரினுயர்வும் ஏனைச் சமயத்தார்கள திழிபுங் கூறுகின்றது. இதன் பொருள் தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார் என்பது உடைப்பொருளாகிய தம்மியல்பினை உணர்ந்து தம்மையுடையானாகிய தலைவனை யுணருஞ் சித்தாந்த சைவர், எம்மை உடைமை எமை இகழார் என்பது தமக்குடைப் பொருளாகிய எம்மையுடையராகலின் எம்மைக் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவதன்றி இகழ்தல் செய்யார்; ஆகலான் எம்மாற் செய்யப்படு நூலையும் அவ்வாறு கைக்கொள்வர். தம்மை உணரார் உணரார் என்பது அங்ஙனந் தம்மை யுணராதார் தம்மையுடையானாகிய தலைவனையுமுணரார் ஆகலான், உடங்கு இயைந்து தம்மின் புணராமை என்பது அவர் ஒருங்கே குழீஇக்கொண்டு தம்மிற்றாமே சேராது முரணுதலால், புறன் கேளாம் என்பது அவர் எம்மையும் எம்மாற் செய்யப்படு நூலையும் இகழ்ந்துரைக்கும் புறமொழியை யாம் பொருளாகக் கொள்ளாம் என்றவாறு.

குறிப்புரை :

ஆகலான் எம்மாற் செய்யப்படு நூலையும் அவ்வாறு கைக் கொள்வாரென்பது குறிப்பெச்சம். தன்னையென்னும் இரண்டனுருபு விகாரத்தாற் றொக்கது. உடைமை புணராமை என்புழி இன்னுருபு விரித்துரைக்க. தம்மை யுணராரெனப் பொதுப்படக் கூறுதலானே, தாமொருபொரு ளுண்டென்பதே உணராத உலோகாய தரும், தம்மைக் குணிப்பொருளென்றுணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு உடைப்பொருளென்றுணராத ஏனைச்சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும், சிவாத்துவித சைவரும், தம்மை உடைப்பொருளெனக் கொள்ளினும், அவருட் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், உடையானல்லாதானை உடையானென மயங்கிக்கோடலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும், அவருந் தம்மை உணராரே யென்பது. புறன் புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்குமொழியும் புறங்கூற்று மொழியுமென்பது இரட்டுறமொழிதலென்னும் உத்தியாற் கொள்க. புறங்கூற்றுமொழியாவது முக்கூற்றுப் புறச்சமயங்களின் வேறான பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறுமொழியென்க.

பண் :

பாடல் எண் : 1

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

பொழிப்புரை :

சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சங்காரகாரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பதுணர்த்துதல் நுதலிற்று. (வார்த்திகம் 1)
இது சூத்திரக் கருத்துரைக்கின்றது. இள் நிவிர்த்திகலை முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஐவகைச் சங்காரத்துள் இறுதிக் கண்ணதாகிய மாசங்காரத்தைச் செய்யும் வினைமுதலாயுள்ள முதல்வனையே தனக்கு முதற்கடவுளாக வுடைத்து அவனவளது என்று இவ்வாறு சுட்டி யுணரப்படுவதாய உலகம் என வேதாக மங்களுட் கூறப்படுவதனை அநுமான அளவையா லுணர்த்துதலைக் கருதிற்று இச்சூத்திரம் என்றவாறு.

குறிப்புரை :

ஈண்டு ஆசிரியர், முதனூலிற் கூறியவாறே சிவாகமங்களி னோதப்படும் ஞானபாதப்பொரு ளெல்லாவற்றையும் பொது, உண்மையென்று இரண்டாகத் தொகுத்து, பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியலென நால்வகைப்படுத்து, பிரமாணவியல் மூன்று பாதத்தாற் கூறுவான்தொடங்கி, முதற்கண் உலகிற்கு முதற்கடவுள் சிறப்புவகையான் உண்டென்னும் ஆகமப் பிரமாணத்தை வலியுறுத்துவதாய அநுமானப் பிரமாணங் கூறுகின்றார்.
ஏகாரம், இயைபின்மை நீக்குதற்கும் பிறிதினியைபு நீக்குதற்கும் பொதுவாய்நின்ற பிரிநிலை.
இதன்பொழிப்பு உரைத்துக்கொள்க. (வா 2)*
இஃது இவ்வுரைமுகத்துக் கேட்போரால் உரைவகைபற்றிச் செய்து கோடற்பாலதொன்றனை அறிவுறுத்துகின்றது. இதன் பொருள் இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு முன்னர்க் கண்ணழித்துரைக்கும் பொழிப்புரைபற்றி உரைத்துக்கொள்க. என்றவாறு.
எனவே, இங்ஙனம் இருவகைப்படும் பொழிப்புரையுட் கண்ணழித்துக் கடாவிடைகளானுரைக்கும் வார்த்திகமாய பொழிப்புரை மாத்திரையே யாமீண்டுரைக்கின்றாம்; பிண்டமாகக் கொண்டுரைப்பதாய பொழிப்புரை இதுபற்றி யுணர்ந்துகோடல் எளிதாகலின், அஃதியாமுரைக்கின்றிலம் என உரைமுகத்து மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று. இஃது, ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துக் கொண்டுணர்தற்பொருட்டு, முதற்கண் வைக்கப்பட்டது.
இவ்வாறு ஆசிரியர் ஆணைதந்தமையின், கண்ணழித் துரைபற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும். அவன் அவள் அது எனும் அவை புலவர் என்பது. அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய்ச் சுட்டியுணரப்படுஞ் சொல்லும் பொருளுமாய இருகூற்றுப் பிரபஞ்சத்தொகுதி; தோற்றம் நிலை இறுதியென்னும் முத்தொழிலுடைமையால், ஒருவனாற் றோற்றப்பட்டதாய உள்பொருளேயாம். அது, தோன்றுங்கால், தானொடுங்குதற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும், சகசமல நீங்காமையால், அது நீங்குதற்பொருட்டு மீளத்தோன்றுவதாம். இவ்வாறாகலின், சங்காரத்தொழிலைச் செய்யுங் கடவுளே உலகிற்கு முதற்கடவுள்; ஏனையோர் அன்னரல்லர் எனக் கூறுவர் அளவை நூலுணர்ந்தோர் என்றவாறு.
அவை தொகுதி ; சுட்டுப் பெயரெனக் கொள்ளின், உளவெனப் பிரித்துப், பயனிலையாக்கித், தாமென்பதனை அசை நிலையாக வைத்துரைத்து, ஆக்கச்சொல் வருவித்துக்கொள்க. வினைமை வினையுடைமை. தோன்றியவென்னாது தோற்றியவெனப் பிறவினை வாய்பாட்டானோதுதலின், அதற்குரிய வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. தோற்றியவென்னும் பெயரெச்சந் திதியென்னுஞ் செயப்படு பொருட்பெயர் கொண்டது. திதியா யொருவனால் தோற்றப்பட்டதென்பார் தோற்றிய திதியென்றார். திதியென்றது ஈண்டு உள்பொருளென்னுந் துணையாய் நின்றது. மூவினையுடைமையால் உள்பொருளாதலும், அவ்விரண்டு முடைமையால் நிமித்த காரணனை யுடைத்தாதலுந் துணியப்படுமென்பார், மூவினைமையிற் றோற்றிய திதியென்றார். ஏகாரந் தேற்றம். ஒடுங்கியென்பது பெயர். உருபுகள் தொக்கு நின்றன. அந்தத்தைச் செய்யுங் கடவுளை அந்தமென்றது உபசாரம். காணப்பட்டவுலகாற் காணப்படாத கடவுட்குண்மை கூறவேண்டுதலின், தோற்றிய திதியே யெனவும், ஒடுங்கியுள தாமெனவும், உலகின்மேல் வைத்துக் கூறினார். கருத்துரையுட் கூறியதும் அது நோக்கி.
இச்சூத்திரத்துள் அவனவளதுவெனு மவை மூவினைமையின் என்பது ஓரதிகரணம்; தோற்றிய திதியே யொடுங்கியுளதாம் என்பது மூன்றதிகரணத்தை யுள்ளடக்கி நிற்பதோ ரதிகரணம்; அந்தமாதி யென்மனார் புலவர் என்பது ஓரதிகரணம்; ஆக முக்கூற்றது இச்சூத்திரமென்றுணர்க. இம்மூன்றும் முறையே ஒன்றற்கொன்றேதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், ஒரு சூத்திரத்தாற் கூறினார். தன்னாற் கூறப்படும் பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும், அதனை மறுத்துரைக்குஞ் சித்தாந்தத் துணிபும், இயைபுமென்னும் இவற்றது நிலைக்களம் ஈண்டு அதிகரணமெனப்படும்.

பண் :

பாடல் எண் : 2

பூதாதி ஈறும் முதலும் துணையாகப்
பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ
ஒன்றொன்றிற் றோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து.

பொழிப்புரை :

மேற்கோள் : ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசமுடைத்து என்றது. (வா 3 )
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், மூவினையுடைத்தோ அன்றோ என்னும் ஐயப்பாட்டின்கண் நித்தமாய்க் காணப்படும் பிரபஞ்சத்தை மூவினையுடைத்தென்றல் பொருந்தாது என மீமாஞ்சகரும் உலோகாயதருங் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : ஈண்டு இம்மூன்று அதிகரணங்களின் வைத்து இம்முதல் அதிகரணத்துள்; ஒருவன். பிரபஞ்சம் ஒருவனென்றும் ஒருத்தி யென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப்பகுப் புடைத்தாயும் பல வேறுவகைத்தாய்ச் சடமாயும் முயற்கோடு முதலியன போலத் திரிவையங்களானன்றி மெய்யாகச் சுட்டி யறியப்பட்ட பிரபஞ்சம் இம்மூன்று ஏதுவானும் ; உற்பத்தி . . . என்றது தோன்றி நின்று அழிதலை யுடைத்து என்றவாறு.)
ஒருவனென்றும் ஒருத்தி யென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப்பகுப்புடைத்தாயும் பல வேறு வகைத்தாய்ச் சடமாயுஞ் சுட்டியறியப்படுவதாயு மிருத்தலின் இம்மூன்றேதுவானும் பிரபஞ்சந் தோன்றிநின்றழியுமென்பது துணியப்படுமென்பார், உளதா யொருவனொருத்தி யொன்றென்று சுட்டப்பட்ட பிரபஞ்சமென உடம்பொடு புணர்த்தோதினார்.
உளதாய்ச் சுட்டப்பட்ட வெனவியையும். உளதாகச் சுட்டப்படுதல் முயற்கோடு முதலியனபோலத் திரிவையங்களானன்றி மெய்யாகச் சுட்டப்படுதல்.
ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின். (வா 3)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் காட்சியளவைக்கு எய்தாதுரைப்பன வெல்லாம் பிரமாணமாகாவென உலோகாயதர் கூறுங்கடாவை யாசங்கித்துக் காட்சியளவைபற்றியும் மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். உற்பத்தியும் நாசமுங் காணப்பட்ட திதியின் பக்கத்தே காணக் கிடத்தலின் உளதா யொருவ னொருத்தியொன் றென்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசமுடைத்து என மேற்கொண்டது என்றவாறு.

குறிப்புரை :

என்பது உம் என்னுதலிற்றோவெனின், உள்ளதன்பால் அவ்விரண்டுங் கிடத்தல் யாங்ஙனம் என்னுங் கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள். பேதாய் என்பது காட்சியளவைகளானும் அறியப்படாத மடவோனே, பூதாதி என்பது பூதமுதற் காரணமாகவுடைய பிரபஞ்சத்திற்கு, திதி ஈறும் முதலும் துணை ஆக ஆகும் என்பது திதி நிகழ்வழி, நாசமும் உற்பத்தியுந் தனக்குத் துணைக்காரணமாகக்கொண்டே நிகழாநிற்கும். அற்றாயினும். ஒன்று தோன்ற நிற்ப ஒன்றழிவதன்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே யழியக் கண்டிலமாலெனின்; ஒன்று ஒன்றின் பெற்றிமையின்தோன்றி உளதாய் இறக்கண்டும் என்பது ஒவ்வொரு காலவிசேடத்திற் சாதிபற்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே யழிவதனைக் கண்டு வைத்தும், என்றும் அன்று உண்டு என்ன ஆய்ந்து ஓதாரோ என்பது என்றாயினும் அதற்குரிய காலம் வருமென்று உலகத்திற்கும் அங்ஙனமாத லுண்டென்று அக்காட்சிபற்றி ஆராய்ந்து சொல்லார்களோ உன்னைப்போலும் மடமையில்லாதோர் என்றவாறு.
பூதாதி அன்மொழித்தொகை. பூதத்துக்கு மேலுளவாய தத்துவங்கள் உலோகாயதருக்கு உடம்பாடன்மையின், பூதமுதலாய தத்துவங்களென வுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக. பூதாதிக்கென நான்கனுருபு விரித்துரைக்க; அது பின்னருஞ் சென்றியையும். ஆகுமென்பது முற்றுவினை. ஈண்டுப் பெற்றிமை என்றது சாதியை. ஓகாரம் எதிர்மறை. ஒன்றொன்றினென்பது சூசூஒன்றொன்றாப் பார்த்துணர்வ துள்ளமே” என்றாற்போல அடுக்கு மொழி. அது காலவிசேடமாதல் என்று மன்றெனப் பின்வருதலாற் பெற்றாம். ஒருங்கேயென்பது சொல்லெச்சம். ஒன்றொன்றிற்றோன்றி யுளதாயிறுதலாவது சூசூபயில்வித்தெல்லாங் காரிடமதனிற் காட்டுமங்குரங் கழியும் வேனில்” இந்நூல் உதாரணம் 68, சிவஞானசித்தி, 19 என்பதனானறிக. சூசூகண்டும்” உம்மை சிறப்பு.

பண் :

பாடல் எண் : 3

வித்துண்டா மூல முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்
வேட்டுவனாம் அப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக்
கூட்டானே மண்போற் குளிர்ந்து.

பொழிப்புரை :

மேற்கோள் : இனி ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லையென்றது
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், இத்துணையுங் கூறியவாற்றான் உலகத்தைத் தோற்றுவிப்பான் உண்டெனப்பட்ட கருத்தாத் திதிகருத்தா, சிருட்டிகருத்தா முதலியோரில் ஒருவனே யாதலமையும் எனப் பாஞ்சராத்திரி முதலியோர் கூறுங்கடாவை யாசங்கித்து ஒடுங்கியுளதாமென்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள், உலகம் தானொடுங்குதற்கு நிலைக்களமான சங்காரகருத்தாவினின்றன்றி உளதாகாது என்றவாறு.
ஒடுங்கினவென்னும் பெயரெச்சஞ் சங்காரமென்னும் இடப்பெயரோடு முடிந்தது. சங்காரம் ஆகுபெயர். அல்லதில்லை என்று எதிர்மறைமுகத்தாற்கூறியது, ஏனைக் கடவுளரின் உளதாகாமை யாப்புறுத்தற்பொருட்டு. இதனுள் ஒடுங்கின என்பதனாற் போந்த குறிப்பேதுவைப் புலப்படக்காணுமாறு.
ஏது : ஆண்டு ஒடுங்குதலின்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னை என்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் யாது யாண்டொடுங்கும் அஃததனிலுற்பத்தியாம் மண்ணிற் குடம்போலும் என்னும் அவினாபாவத்தாற், பிரபஞ்சஞ் சங்கார காரணன்மாட் டொடுங்குதலின் மீளத்தோன்றுங்கால் ஆண்டுநின்றுந் தோன்றுதலே பொருத்தமுடைமையின் அவ்வாறு மேற்கொண்டது என்றவாறு.
இவ்வாறு மூன்றதிகரணப்பொருளும் இதன்கட் போந்தவாறும் இவ்வாறுரையாக்காற் பொருளியையு படாமையும் நுண்ணுணர்வாற் கண்டுகொள்க.
உதாரணம் :
இலயித்த தன்னில்இல யித்ததாம லத்தால்
இலயித்த வாறுளதா வேண்டும் -
என்பது உம் என்னுதலிற்றோவெனின், உலகம் உள்ளதாயின் உள்ளதற்கு உண்டாக வேண்டுவதில்லையாகலாற் சற்காரியவாதம் அடாது எனப் புத்தர் கூறுங்கடாவை யாசங்கித்து இல்லதற்குத் தோற்ற மின்மையினென்ற ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இலயித்தது இலயித்த தன்னில் ஆம் என்பது உள்ளதாயினுஞ் சங்காரகாலத்தினொடுங்கிய தாகலான் அவ்வொடுங்கிய உலகம் தானொடுங்குதற்கு நிலைக்களமான சங்காரகருத்தாவினின்றும் படைப்புக்காலத்தின் மீளவுளதாம்; அற்றேல் ஒடுங்கியது ஒடுங்கியவாறேயொழியாது மீளவுண்டாகவேண்டாம்: வேண்டுமாயின்; முன்னொடுங்காது நிலைபெறவேயமையும்; அவ்வாறன்றி ஒடுங்கி மீளவுளதாவது ஏற்றுக்கெனின் ; மலத்தால் என்பது உள்ளதாகிய உலகம் கருமமலம் பரிபாகமாதற்பொருட்டு ஒடுங்கி ஆணவ மலம் பரிபாகமாதற் பொருட்டு மீளவுமுண்டாம்; அற்றேல் முன்னின்ற பிரபஞ்சம் நாசமாக வேறு தோன்றுமென்னாமல் அதுவே ஒடுங்கி நின்று மீளவுளதாமென்றற்குப் பிரமாணம் என்னை யெனின் ; இலயித்தவாறு உளது ஆ வேண்டும் என்பது எஃதெவ்வாறு நின்றொடுங்கிற்று; அஃதவ்வொடுங்கியவாறே உளதாதல் எல்லாரானும் விரும்பப்படும் என்றவாறு.
எனவே அந்நியமமில்லையாயின் நெற்கமுகாய் நீளாது நெல்லாய் நீளுதற்கு ஏதுவென்னையென்னுந் தருக்கமே அதனையறிவுறுத்து மென்றவாறாயிற்று. சற்காரியவாதத்தின் இயல்பு சூசூதந்து முதல் காரகம்’’ என்னும் ஞானாமிர்தத்தினுங் காண்க.
இதனானே, இல்லது முள்ளதுமல்லாத பொருள் தோன்று மென்னுஞ் சூனியவாதிகளும், இல்லதுமுள்ளதுமாய பொருள் தோன்றுமென்னும் அநேகாந்த வாதிகளும் மறுக்கப்பட்டவாறறிக.
உதாரணம் :
இலயித்த
தத்திதியில் என்னின் அழியா தவையழிவ
தத்திதியும் ஆதியுமாம் அங்கு.
என்பது உம் என்னுதலிற்றோவெனின், இனிச் சற்காரியவாதத்தின் அவ்வக்காரியங்கள் தத்தமுதற்காரணத் தொடுங்குமெனவே கோடலின் உலகிற்கு முதற்காரணமாகிய மூலப்பகுதி வாசுதேவனுருவாகலான் உலகம் அவன் மாட்டொடுங்குமென்றலே அமைவுடைத்தன்றி முதற்காரணத்தின் வேறாய நிமித்தகாரணமெனக் கொண்ட சங்கார கருத்தாவின் மாட்டொடுங்குமென்றல் பொருந்தாதெனப் பாஞ்சராத்திரிகள் கூறுங்கடாவை யாசங்கித்து ஒடுங்கின சங்காரத்தின் எனவும் இலயித்ததன்னில் எனவுங் கூறிப்போந்த குறிப்பேதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இலயித்தது அத்திதியில் என்னின் என்பது உலகமொடுங்கியது அந்த மூலப்பகுதி வடிவாய திதிகருத்தாவின்கண் என்பையாயின்; அவை அழியாது என்பது நீ அங்ஙனங்கொள்ளினும் மூலப்பகுதிக்கு மேலுள்ள புவனங்கள் அதனால் வியாபிக்கப்படாமையிற் கீழுள்ள ஏகதேசமாத்திரையே ஆண்டொடுங்குவதன்றி மாயாகாரியத்தொகுதி முழுவதும் ஆண் டொடுங்காது ; அற்றேல், மாயாகாரியத்தொகுதி முழுவதும் யாண் டொடுங்குவதெனின் ; அத்திதியும் ஆதியும் ஆம் அங்கு அழிவது என்பது அந்தத் திதிக்கடவுளும் படைப்புக்கடவுளும் தோன்றுதற்குக் காரணமாகிய அச்சங்காரக் கடவுளிடத்தே அவ்விருவரோடுங் கூட அழிவதாம் அத்தொகுதி என்றவாறு.
இவ்வெண்பாவினைச் \"இது மாபுராணச் செய்யுள் என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார். செய்யுட்களோசை சிதையுங்காலீரளபு, மையப்பாடின்றியமையுமா மைதீரொற், றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு, குன்றுமே லொற்றளபுங்கொள்’’ என்பதுபோல இரண்டதிகரணப் பொருள்படுமாறு இருதொடராக வைத்துரையாக்காற் பொருளியையு படாமையறிக. இலயித்த என்னும் பெயரெச்சம் தன்னென்னும் இடப்பெயரோடு முடிந்தது. இலயித்ததென்றது ஏதுப்பொருண்மை யுணரநின்ற பெயர். இலயித்ததெனச் சற்காரியவாதங்கூறவே இலயித்தவவத்தையின் அவ்வக்காரியசத்தி சமூகமாய்ச் சூக்குமமாய் நிற்பதொன்றுண்டு.அதுவே முதற்காரணமெனப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயையுண்மையும் பெறப்பட்டது. ஆ என்பது முதனிலைத்தொழிற்பெயர். வேண்டுமெனச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். அவை தொகுதி ; அஃறிணைப் பன்மைப் பெயரென்பார்க்கு அழியாது அழிவதென்னும் ஒருமைகளோடியையாமையும் உத்தரமாகாமையுமுணர்க. திதியும் ஆதியும் ஆகு பெயர். ஆமங்கு பெயரெச்சமுடிபு. இரணிய கருப்பமதத்தையும் மறுத்தற் பொருட்டுப் படைப்புக்கடவுளையும் உடன் கூறினார்.
நிமித்தகாரணனாகிய முதல்வன் உலகிற்கு முதற்காரண னல்லனாயினும் முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின், உலகம் ஆண்டொடுங்கி ஆண்டு நின்று தோன்றுதல் அமையுமென்பது வருகின்ற வெண்பாவிற் பெறப்படும்.

குறிப்புரை :

இனி இல்லதற்குத்தோற்றமின்மையின் உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின் ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லையென்றது. (வா 4)
என இங்ஙனஞ் சொற்பல்காமைப்பொருட்டுத் துணிந்ததாக வைத்துரைத்தாராயினும், பொருளியைபிற்கேற்ப இதனை மூன்றதிகரணமாக வைத்துரைப்பது ஆசிரியர் கருத்தெனக் கொள்க ; அஃதாமாறு காட்டுதும் : மேற்கோள் : இனி உலகமுள்ளது என்றது.
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், உலகம் இல்பொருளாய்த் தத்தஞ் சார்பிலே தோன்றியழிதல் இயல்பென்றலே அமைவுடைமையின், அது மூவினையுடைத்தாயினும் தோற்றுவானொருவனை யுடைத்தாதல் செல்லாது எனப் புத்த நூலார் சொல்லுங் கடாவை யாசங்கித்துத் திதியென்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
ஏது : இல்லதற்குத் தோற்றமின்மையின்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், உள்ளதாதல் யாங்ஙனம் என்னுங்கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள், இல்பொருளாகிய முயற்கோட்டிற்கு முக்காலத்து முற்பத்தியின்மையின் ஈண்டுற்பத்தி காணப்படுதலான் உலகமுள்ளது என மேற்கொண்டது என்றவாறு.
மேற்கோள் : இனி உலகஞ்செய்வோனையுடைத்து என்றது.
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், உள்பொருளெனப்பட்ட பிரபஞ்சம் தத்தமுதற்காரணத்தினின்றுந் தானே தோன்றியழியும் இதற்கொரு நிமித்தகாரணமாய் ஒருகருத்தா வேண்டாம் எனச் சாங்கியர்கூறுங் கடாவை யாசங்கித்துத் தோற்றியவென்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை. (சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி உலகம் மேல் உள் பொருளெனச் சாதிக்கப்பட்ட பிரபஞ்சம்; செய்வோனை உடைத்து என்றது தொழிற்படுத்தும் நிமித்த காரணனாகிய முதற்கடவுளை யுடைத்து என்றவாறு.)
ஏது : உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின்
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னை என்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள், மண்முதலியவற்றினுள்ளதாகிய கடமுதலிய பொருட்குக் குயவன் முதலிய செய்வோரையின்றி வனைதல் முதலிய செய்தொழில் நிகழாமையின், உலகம் இவ்வியல்பிற்றாகலான் இனியிவ்வுலகஞ் செய்வோனை யுடைத்து என மேற்கொண்டது என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில்
தாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் - ஆக்காதே
கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக்
கண்டவனில் இற்றின்றாங் கட்டு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், மேலையுதாரணத்திற் கூறியவாற்றான் உலகிற்கு முதற்கடவுள் உண்டெனக் கொள்ளினும் அவன் படைப்பு முதலியன தொழில் செய்வானாயின் விகாரமெய்தி அதனின் பந்த முறுவானென்னுமவர் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இறைவன் என்பது முதல்வன் ; காலத்தில் தாக்காது நின்று என்பது இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறுபட்டு எல்லாத்தொழிலுஞ் செய்துந் தனக்கு விகாரமின்றி நிற்குங்காலம்போல விகாரப்படாது நின்று, ஆக்காதே கண்டு என்பது பிரபஞ்சத்தைக் கரணத்தாற் படையாது சங்கற்பமாத்திரத்தானே படைத்து, நோக்காது நோக்கி நொடித்து என்பது அவ்வாறே காவாது காத்து அழியா தழித்தலால், இன்று ஆம் கட்டு என்பது இவ்வமலனுக்குப் பந்த மின்றாதல் ; உளத்தின் கண்டநனவு உணர்வில் கண்ட கனவு உணரக்கண்டவனில் இற்று என்பது கற்றநூற் சொல்லும்பொருளும் உள்ளத்திற் றோன்றுங்கால் உள்ளம் அவற்றிற் றொடக்குண்ணாத வாறுபோலும் கனவின்கட் கண்டவற்றைப் புறத்து விடயங்களையறிந்து வந்த நனவுணர்வின்கண்ணே விளங்கவறிந்தவன் அப்பொழுது அவற்றிற் றொடக்குண்ணாதவாறு போலுமித்தன்மைத்து என்றவாறு.
எனவே, இஃதிவ்வாறாகவென்றெண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரையாற் செய்வதூஉம், கரணத்தாற் செய்வதூஉமென வினைமுதல் இருவகைப்படு மென்பதூஉம், கரணத்தானன்றிச் செய்யமாட்டாத குயவன் முதலியோர் சங்கற்பமாத்திரையாற் செய்யுமுதல்வனுக்கு வினைமுதலாதற் பொதுமைபற்றி ஒருபுடையுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமையானும் சங்கற்ப மாத்திரையாற் செய்யுஞ் செய்திக்குக் கட்டுண்டன் முதலிய குற்றங்கள் பகைப்பொருளாகலானும் அவை ஆண்டுளவாதற்கோரியை பின்றென்பதூஉம் கூறி, ஏதுவை வலியுறுத்தவாறு காண்க.
ஆக்குதல் படைத்தல் ; காண்டலும் அது. நோக்குதல் காத்தல். நொடித்தல் அழித்தல் ; அது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு இறுதிப் பதிகம் \"நொடித்தான்மலை” என்பதனானு மறிக. ஆக்காது நோக்காது என்றமையால் நொடியாதென்பது வருவித்துரைக்கப்பட்டது. நொடித்தலானென்பது நொடித்தெனத் திரிந்தது. அன்றே அசை ; அநாதியே யெனினுமமையும். இல் மூன்றும் உவமவுருபுகள். உளத்தினென்பதற்குச் சங்கற்பத்தா லென்றுரைப்பினுமமையும். இன்றாங்கட்டு என்பது திருக்குறள் - 210 \"அருங்கேடன்” என்பதுபோல நின்றது.

குறிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உலகந் தனக்கு முதற்காரணமாகிய மாயையினொடுங்குவதன்றி நிமித்தகாரணன் ஒருவனுண்டெனக் கொள்ளினும் அவன்மாட்டொடுங்குமென்றல் பொருந்தாமையின், யாது யாண்டொடுங்கும் அஃததனிலுற்பத்தியாம் என்னும் அவிநாபாவத்தான் மாயையினொடுங்கிய உலகத்தை மாயையே தோற்றுவிக்கும், இதற்கோரிறைவன் வேண்டா எனச் சாங்கிய நூலார் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின் என்னும் ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் மண்போல் குளிர்ந்து வித்து உண்டா மூலம் முளைத்தவா தாரகம் ஆம் அத்தன் தாள் நிற்றல் அவர் வினையால் வித்தகம் ஆம் என்பது மாயையும் உலகமும் வித்தும் அங்குரமும் போலுமாகலின் வித்துக்கு ஆதாரமாகிய நிலங்குளிர்ந்தவழி அதன்கண் வித்துள்ளதாக அதனினின்றும் அங்குரந் தோன்றியவாறுபோல மேலை வெண்பாவின் இலயித்தது என்றதனாற் பெறப்பட்ட மாயை தனக்காதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சத்தியின்கணுள்ளதாய் நிற்றலால் அச்சத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக அவ்வக்காரியங்களை அவ்வவ்வியல்பிற் பிறழாமற்பயக்குஞ் சதுர்ப்பாடுடைத்தாம், அல்லுழி உடைத்தன்று; நிலங்குளிர்ந்தவழி அதன்கட் கிடந்தன்றி வித்து முளையைத் தோற்றாதவாறு போலும். ஆகலான் மாயையினொடுங்கித் தோன்றிய உலகம் அதற்காதாரமாய் நின்ற இறைவன் சத்தியினொடுங்கித் தோன்றியதேயாம் என்றவாறு.
ஆகலானென்பது முதல் குறிப்பெச்சம். இது கிழங்கினின்றுந் தோன்றிய தாமரையைப் பங்கயமென்பதனானுமறிக. வழி நூலாசிரியர் \"உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதெ னரன்பால்” எனப்படும், \"உலகவ னுருவிற்றோன்றி யொடுங்கிடும்” எனப்படும் ஓதியதூஉம், உலகவனுருவிற்றோன்றி யொடுங்குமாறு வாதுளாகமத்தில் வகுத்தோதியதூஉம் இவ்வியல்பு நோக்கியென்க. இஃதறியாதார் இன்னேரன்னவற்றைத் தத்தமக்கு வேண்டியவாறேயுரைப்ப.
உவமவினை பொருளினும் பொருளடை உவமையினுஞ் சென்றியையும். உண்டாகவெனச் சற்காரியத்தை வலியுறுத்துதல், வித்தில்வழி நிலத்தினின்றும் அங்குரந் தோன்றாதவாறுபோல மாயையில்வழிப் பிரமத்தினின்றும் உலகந் தோன்றாதெனப் பரிணாம வாதிகளையும், மாயை அநிர்வசனமென்னும் மாயாவாதிகளையும், வித்துநிலனும் போலென்றதனான் மாயை முதல்வனின் வேறு பொருளன்றென்னுஞ் சிவாத்துவிதசைவர் பாஞ்சராத்திரிகளையும் மறுத்தவாறாயிற்று. முதல்வன் பலவேறுவகைப்படச் சங்கற்பித்த வாறென்னை என்னுங் கடாவை யாசங்கித்து, அவர்வினையா லென்றார். வித்தகம் விசித்திரமென் றுரைப்பினுமமையும்.
அற்றேல், தன்வயத்தானன்றி வினைவயத்தாற் றோற்றுவிப்பான் இறைவனாகானெனின், வேட்டுவன் ஆம் அப்புழுப்போல் வேண்டு உருவைத் தான் கொடுத்துக் கூட்டானே என்பது வேட்டுவனாதலை விரும்பும் புழுவிற்கு வேட்டுவன் விரும்பிய வடிவினைக் கொடுக்குமாறுபோல இறைவனும் அவரவர் வேண்டுமுருவினைக்கொடுத்து அவ்வினைக்குத்தக்க பயன்களையுங் கூட்டுவனாகலான் அதுகொண்டு சுதந்திரத்திற் கிழுக்கென்னை என்றவாறு.
ஆகலான் அதுகொண்டு சுதந்திரத்திற் கிழுக்கென்னையென்பது குறிப்பெச்சம். போல் அசை. குளிர்ந்தவழியென்பது குளிர்ந்தெனத் திரிந்துநின்றது. நிற்றலினென்னும் ஐந்தாவது விகாரத்தாற்றொக்கது. ஏகாரம் எதிர்மறை.

பண் :

பாடல் எண் : 5

ஒன்றலா வொன்றால் உளதாகி நின்றவா
றொன்றலா வொன்றிலவை யீறாதல் - ஒன்றலா
ஈறே முதலதனின் ஈறலா வொன்றுபல
வாறே தொழும்பாகும் அங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனமாயினும் சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் பலவாயினாற்போலச் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரமும் பலவுளவெனக் கோடும் ஒன்றே யென்றற்குப் பிரமாண மென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அவை என்பது சேதனப்பிரபஞ்சத்தொகுதி ; ஒன்று அலா ஒன்றால் என்பது உருவும் அருவுமென்னும் அவ்விரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றல்லாத ஒப்பற்ற பரம்பொருளாலே; உளது ஆகி நின்றவாறு என்பது சிருட்டிப்பட்டுத் திதிப்பட்டவாறே ; ஒன்று அலா ஒன்றில் ஈறாதல் என்பது அந்தப் பரம் பொருளின்கண்ணே சங்காரப்படுதலால் ; ஒன்று அலா ஈறே முதல் என்பது அச்சங்காரக்கடவுளொருவனே உலகிற்கு முதற்கடவுள்; அற்றேல், இவ்வாறு முத்தொழிற்படுஞ் சேதனப்பிரபஞ்சம் வீடு பெற்றவழிச் சுட்டுணர்வின்றிச் சிவசமமாமென வேதத்தும் ஆகமத்தும் ஓதுதலின் அவ்வழி அவையும் முதற்கடவுளாமென்றற்கு இழுக்கென்னை யெனின்; அதனின் ஈறு அலா ஒன்று என்பது அப்பரம்பொருள்போல் அழிவின்றி நித்தமாய சேதனப் பிரபஞ்சம் ; அங்கு எது வீடுபேற்றின் கண்ணும் ; பலவாறே தொழும்பு ஆகும் என்பது பலவாற்றானும் பரம்பொருளுக்கு அடிமையாம் என்றவாறு.
இது சொற்பொருட் பின்வருநிலை. காரியப்பிரபஞ்சஞ் சடமாகாலானும், சேதனப்பிரபஞ்சம் அவிச்சையாற் கட்டுற்றுச் சுட்டுணர்விற்றாய் நிற்றலானும், இவற்றைத் தொழிற்படுத்தற்கு இவற்றின் வேறாய் ஒருமுதற்கடவு ளுண்டென்பது பெற்றாம். பெறவே, பிரபஞ்சம் விசித்திரகாரியமாய்க் காணப்படுதலின் இவ்வாறு நடாத்தும் முதற்கடவுள் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளுஞ் சுதந்திரமும் முதலிய நிரதிசய குணங்களுடையனென்பதூஉம் பெறப்பட்டது ; படவே, இத்தன்மையனாகிய முதற்கடவுளொருவனே அமையுமாகலின் வேறுமத்தன்மைய ருண்டெனக் கொள்ளின் மிகையென்னுங் குற்றமாம்; அல்லதூஉம், இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமை யில்வழி இலக்கியம் பலவாதல் செல்லா தென்னுங் கருத்தால், ஒன்றலாவொன்று என வரையறுத்தோதினார். ஈறே முதலென்றது முடிந்தது முடித்தல். ஈறு ஆகுபெயர். இறந்ததுதழீஇய எச்சவும்மை விகாரத்தாற்றொக்கது.
பலவாறாவன, இருணீங்கிய வழியுங் கண்ணுக்குக் காட்சி ஞாயிற்றை யின்றியமையாதவாறுபோல, மலநீங்கிய முத்திநிலையினும் ஆன்மாவுக்கு அறிவு வியஞ்சகமாய் உடனின்றறிவிக்கு முதல்வனை யின்றியமையாதவாறும், கண் படிகம் ஆகாயம்போலச் சார்ந்ததன்வண்ணமாயன்றி முதல்வன்போலத் தனித்து நிற்குமியல்பில்லாதவாறும், முதல்வன்போல் ஐந்தொழிற்கும் வினைமுதலாமுரிமையின்றிச் சிவாநுபவமொன்றினுக்கே யுரித்தாயவாறும், சமவியாபக மாயினும் முதல்வனைநோக்கத் தூலவறிவாகலான் விளக்கொளியுட் கண்ணொளிபோல முதல்வனின் வியாப்பியமாயன்றி நில்லாதவாறும் முதலாயின. அற்றேல், முத்திநிலையின் ஆன்மாச் சிவமாமென்னுஞ் சுருதிக்குப் பொருளென்னையெனின்; அஃது உண்மையதிகாரத்துட் பெறப்படும். இதனானே சிவசமவாதி சங்கிராந்தவாதி, உற்பத்திவாதி, ஆவேசவாதி மதங்களும் மறுக்கப்பட்டன.
பதியுண்மைக்குப் பிரமாணங் கூறுவார் மலத்துளதாம் எனப் புனருற்பத்திக் கேதுக் கூறுமுகத்தான் மலத்துண்மைக்குப் பிரமாணமும் உடன்கூறினார். அதனை ஈண்டு வேறோரதிகரணமாக வைத்துரையாராயினார்; அதிகரணத்திற்குரிய ஐயப்பாடு முதலியனவெல்லாஞ் சகசமலத் துணராதென அதனிலக்கணங் கூறும்வழிப் பெறப்படுதலால், ஈண்டு மிகைபடவேறோதல் வேண்டாமையின்.
இச்சூத்திரத் ததிகரணங்களாற்போந்த தொகைப்பொருளாவது: \"தோற்றக்கேடுகளதுண்மை காட்சி முதலிய அளவைகளான் அறியவாராமையிற் பிரபஞ்சம் நித்தப்பொருளேயாம். அன்றித்தோன்றியழியுமெனக் கொள்ளினும், இல்பொருள் தத்தஞ் சார்பிற்றோன்றி நின்றழிதல் இயற்கையென அமையும்; செயற்கையென்றற்கு ஓரேதுவின்மையின். மற்றுள்பொருளாயின், அதுவேயமையும் இறைவன் வேண்டா; இரண்டுள்பொருள் கோடல் மிடிகையாகலின்; வேண்டுமாயினும், மாயோன் முதலிய கடவுளரில் ஒருவனேயமையும், அவரையொழித்துச் சங்காரகருத்தா முதற் கடவுளென்றதற்குப் பிரமாணமென்னை? பிரமாணமுண்டாயினும், அதிவிசித்திரமாய பிரபஞ்சம் ஒருவனாற்செய்தல் கூடாமையின், மற்றும் அவ்வியல்பினராய முதற்கடவுளர் உளராதல்வேண்டும்” என உலோகாயதர் மீமாஞ்சகர், புத்தர், சமணர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள், அநேகேசுரவாதிகள் மதம்பற்றிப் பூருவபக்க நிகழ்ந்தவழி அவரை மறுத்துச் சித்தாந்தஞ்செய்து முதற்கடவுள துண்மை பொதுவகையானுஞ் சிறப்புவகையானுங் கருதலளவையின் வைத்துணர்த்தியவாறென உணர்க. இவ்வாறு சூத்திரந்தோறும் உணர்ந் துரைத்துக்கொள்க.

குறிப்புரை :

மேற்கோள் : இனிச் சங்காரமே முதலென்றது. என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், \'ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை’ எனவே சங்காரகருத்தா உலகிற்கு முதற்கடவு ளென்பது போந்ததாயினும் தேர்முதலாயின பலர்கூடிச் செய்யக் காண்டலின் அவற்றினும் அதிவிசித்திரமான உலகத்திற்கு மற்று மத்தன்மையராய முதற்கடவுளர் உண்டெனக்கோடும் என்னும் அநேகேசுரவாதிகள் முதலியோர் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து \'அந்தமாதி’ என்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள். சங்காரகருத்தா ஒருவனே உலகிற்கு முதற்கடவுளென்றது என்றவாறு.
சங்காரம் ஆகுபெயர். ஏனையோர் முதல்வராகாரெனப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
ஏது : சுட்டுணர்வாகிய பிரபஞ்சஞ் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின்வழி யல்லது சுதந்திரமின்றி நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். ஒன்றொன்றாய்ச் சுட்டியறிவதாகிய உருவும் அருவுமென்றிருவேறு வகைப்பட்ட பிரபஞ்சம் அவ்வாறு சுட்டியறிதலின்றி எவ்வுலகும் ஒன்றாயறிந்து நின்ற சங்காரகருத்தாவின்வழிப் பரதந்திரமாய் நிற்பதல்லது தனக்கெனச் சுதந்திரமுடைத்தாய் நிற்பதன்றாகலாற் சங்காரகாரணனொருவனே உலகிற்கு முதற்கடவுளன்றி ஏனையோர் முதற்கடவுளரல்லரென மேற்கொண்டது என்றவாறு. பிரபஞ்சத்திற்குச் சுதந்திரமின்மையுஞ் சங்காரகாரணனுக்குச் சுதந்திரமுண்மையும் ஏதுமுகத்தாற் காட்டுவார் சுட்டுணர்வாகிய பிரபஞ்சமெனவும் சுட்டுணர்வின்றிநின்ற சங்காரமெனவும் ஈரிடத்தும் உடம்பொடுபுணர்த்தோதினார். சுட்டுணர்வுடையதனைச் சுட்டுணர் வென்றது உபசாரம்.
ஈண்டுப் பிரபஞ்சமென்றது சேதனப் பிரபஞ்சத்தை; பிரிநிலை யேகாரத்தான் விலக்குதற்குரியது அதுவேயாகலின்.
தேர்முதலாயின பலராற் செய்யப்படினும் அப்பலரும் ஒருவனேவல்வழி நின்றே செய்பவாகலானும், வேதத்துட் காரண வாக்கியங்களிற் சுட்டுணர்வினராகிய நாராயணன், இரணியகருப்பன், இந்திரன், அங்கி, சூரியன் முதலியோரைக் காரணமென்றது குயவன் போல் அவாந்தர காரணமாதல்பற்றியேயாகலின் அவையெல்லாம் ஆகுபெயராற் சங்காரகாரணனாகிய முதற்கடவுளையே யுணர்த்தி நிற்குமாகலானும், செய்துஞ் செய்வித்தும் எல்லாத் தொழிற்கும் வினைமுதலாய் நிற்கும் முதற்கடவுள் சங்காரகருத்தா வொருவனே யென்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 1

அவையே தானே யாய்இரு வினையில்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

பொழிப்புரை :

அவையே தானேயா யென்பதனை இரட்டுற மொழிந்து கொண்டுரைக்க. இக்கருத்தேபற்றி \"உலகெலா மாகிவேறாயுடனுமாய்” என்றார் வழிநூலாசிரியரும். மேலைச்சூத்திரத்தின் சூஅந்தமாதி’ என்புழி விகாரத்தாற்றொக்க பிரிநிலையேகாரத்தான் விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சத்தை ஈண்டு அவையெனச் சுட்டிக்கூறினார். \'ஒடுங்கியுளதாம்’ என்றதற்கேற்ப ஈண்டும் போக்கினை முற்கூறினார். புரிதல் எப்பொழுதும் மேற்கோடல். ஆணையினென்பது சிங்கநோக்காய் இருவினையென்பதனோடும் நீக்க மின்றி யென்பதனோடும் இயைந்து பொருள் தந்து நின்றது. ஆண்டு இன்னுருபு, முன்னர் ஏதுப்பொருட்கண்ணும், பின்னர் நீக்கப் பொருட்கண்ணுமாய் நின்றது. இன்னென்பது சாரியையெனக் கொண்டு ஈரிடத்தும் ஏற்கு முருபுகள் விரித்துரைத்தலுமொன்று.
அன்றே அசை; அநாதியே இவ்வாறு நிற்குமெனினும் அமையும். ஆய்ப் புரிய நிற்குமெனவே, அச்செயல்களெல்லாம் முதல்வன் கரணத்தானன்றிச் சங்கற்பமாத்திரத்தாற் செய்வனென்பது பெறப்பட்டது. இதனானே மேல் \'அந்தம்’ என்று உத்தேசமா யெடுத்துக் கொண்ட முதல்வனுக்கு இலக்கணங் கூறியவாறுமாயிற்று. இது தடத்தலக்கணமெனப்படும் பொதுவியல்பு. ஆணையினிருவினையினெனவே, தனது சிற்சத்தி துணைக்காரணம், இருவினையும் அதன்வழித்தாய துணைக்காரணம், இருவினையினெனவே அதற்குப் பற்றுக்கோ டுண்டென்பதூஉம் பெற்றாமாகலின், அது முதற்காரண மென்பதூஉம் இருவினையிற் போக்குவரவு புரியவெனவே ஒடுங்கியின் மீளவுளதாங்கால் இருவினைகட்கேற்பப் பலவேறு வகைப்பட்டு விரியுமென்பதூஉம் போந்தவாறு காண்க.
இதனுள் அவையேதானேயாய் என்பதோரதிகரணம்; ஆணையினிருவினையின் என்பதோரதிகரணம்; போக்கு வரவுபுரிய என்பதோரதிகரணம்; ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே என்பதோரதிகரணம்; ஆக நாற்கூற்றது இச்சூத்திரமெனக் கொள்க.

குறிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதனுதலிற்று. (வார்த்திகம் 6)
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக்கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். உலகம் ஒடுங்கியினின்றும் மீளவுளதாமாற்றை வகுத்துணர்த்து முகத்தானே துணைக்காரண முதலியன இல்வழி இறைவன் உலகிற்கு நிமித்தகாரணனாதல் சாலுமாறு யாங்ஙனம் என்னுங் கடாவை யாசங்கித்து அவற்றதுண்மைக்குப் பிரமாண முணர்த்துதனுதலிற்று இச்சூத்திரம் என்றவாறு.
சூத்திரவியைபும் இதனானே விளங்கும். ஒடுங்கியுளதாமென்றவழி ஒடுங்கியினின்றும் மீளவுளதாவது எவ்வாறென்று அவாய் நிற்றலின், அவ்வவாய்நிலைபற்றிப் புனருற் பவமே ஈண்டுக் கூறப்பட்டது.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : மேலைச்சூத்திரத்து எடுத்துக்கொண்ட சங்காரகாரணனாகிய முதல்வன் கலப்பினால் உடலின் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையாற் கண்ணின் அருக்கன்போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்கு உயிராதற்றன்மையாற் கண்ணொளியின் ஆன்மபோதம்போல் உடனுமாய் நின்று, ஆணையென்னும் பரியாயப்பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினைகளான் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும் வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 2

கட்டு முறுப்பும் கரணமும் கொண்டுள்ளம்
இட்டதொரு பேரழைக்க என்னென்றாங் - கொட்டி
அவனுளமா கில்லான் உளமவனா மாட்டா
தவனுளமா யல்லனுமாம் அங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், ஒரு பொருள் மூவகையியல்பை யுடைத்தாதல் யாங்ஙனம் என்னுங்கடாவை யாசங்கித்து அவற்றுள் அவையேயாதலை உவமை முகத்தான் வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . உள்ளம் கட்டும் உறுப்பும் கரணமுங் கொண்டு என்பது உயிர் நரம்பு முதலியவற்றாற் பிணிக்கப்படும் உடம்பினையும் ஐம்பொறி முதலிய கருவிகளையுங் கைக்கொண்டு நின்று, இட்டது ஒரு பேர் அழைக்க என் என்றாங்கு என்பது சாத்தா கொற்றா என உடம்பிற்கிட்ட பெயராற் பிறரழைத்த வழித் தான் என்னையென வந்து நிற்றல் காண்டுமன்றே, இருவர் கைகோத்து நின்றுழியும் அவருள் அழைக்கப்பட்டோனேயன்றி ஏனோன் என்னை யென்றல் உலகத்தின்மையின் அவ்வாறன்றி உடம்பின் பெயரான் அழைத்த வழி உயிர் என்னென்றற்குக் காரணம் பிறிதோராற்றாற் பெறப்படாமையின் அருத்தாபத்தியளவையானே அவ்வுயிர் உடம்பெனத் தானென வேற்றுமையின்றி அபேதமாய் நிற்றல் பெற்றாம் அதுபோல ; ஒட்டி என்பது முதல்வன் உயிர்களின் அபேதமாய் ஒட்டி நிற்போனாம்; அங்கு அவன் உளம் ஆகில்லான் உளம் அவனாமாட்டாது அவன் உளம் ஆய் அல்லனும் ஆம் என்பது அவ்வாறொட்டிய வழி உயிர் உயிரே, உடம்பு உடம்பே, உயிர் உடம்பாயொழியாது உடம்பு உயிராக மாட்டாது ; அவ்வாறாயினும் உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும் ; உடம்பு அங்ஙன நில்லாது. அது போல முதல்வன் முதல்வனே, உயிர் உயிரே, முதல்வன் உயிராயொழியான், உயிர் முதல்வனாகமாட்டாது ; அவ்வாறாயினும் முதல்வன் உயிராயும் அதனின் வேறாயும் நிற்பன் ; உயிர் அங்ஙன நில்லாது என்றவாறு.
அவனுளமா கில்லா னுளமவனாமாட்டா தவனுளமா யல்லனுமாமங்கு என்றது ஒன்றாயும் ஒன்றன்மைக்கு அநுபவங் காட்டியவாறு. உறுப்பு ஆகுபெயர். எவனென்பது என்னென மரீஇயிற்று. ஒட்டியென்பது பெயர் ; வினையெச்சமாகக் கொள்ளிற் சிறப்பும்மை விரித்துரைக்க. ஒட்டுதல் பொருந்துதல். அங்கு அதுபோல.

குறிப்புரை :

மேற்கோள் : ஈண்டு இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் றானேயாய் நிற்கும் என்றது. (வார்த்திகம் 7அ)
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், மேன் முதற்கடவுளல்லவென விலக்கப்பட்டு நின்ற சேதனப்பிரபஞ்சமும் முதல்வனும் பொன்னும் பணியும்போல் ஏகான்ம வாதிமதம் அபேதமோ, இருளும் வெளியும்போல் மாத்துவமதம் பேதமோ, சொல்லும்பொருளும்போற் பாஞ்சராத்திரி மதம் பேதாபேதமோ என்னும் ஐயப்பாட்டின்கண் அம்மூன்றனுள் ஒரோவொன்றேபற்றி அவ்வம்மதத்தார் கூறுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : ஈண்டு இவ்வதிகரணம் நான்கனுள் வைத்து இம் முதலதிகரணத்துள் ; முதல்வன் கடவுள்; இவ்வான்மாக்கள் பலவும்ஆய் கலப்பினால் இவ்வுயிர்களேயாய்; தானேஆய் பொருட்டன்மையால் அவற்றின் வேறுமாய் ; இவ்வான் மாக்கள் பலவும் தானேயாய் உடனாய் நிற்றலின் இவ்வுயிர்கள் பலவுந் தானேயாய் ; நிற்கும் என்றது நிற்பன் என்றவாறு.)
ஈண்டும் இரட்டுற மொழிந்துகொள்க. இதனானே, ஒரு விடயத்தைக் காணுங்கால் ஆன்மபோதம் கண்ணொளியெனத் தானென வேறின்றி உடனாய் நின்று காணுமாறு போல, முதல்வன் புனருற்பவஞ் செய்யுங்கால் உயிர்களோடு உடனாய் நின்று செய்வனென்பதூஉம் பெறப்பட்டது.
ஏது : அத்துவிதமென்ற சொல்லானே ஏகமென்னில் ஏகமென்று சுட்டுவதுண்மையின் அத்துவிதமென்ற சொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு. (வா 7ஆ)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், முதல்வன் அவ்வாறு மூவகையுமாய் நிற்பனென்றற்குப் பிரமாணமென்னை என்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். அத்துவித மென்ற சொல்லின் நகரம் வடமொழியில் ந+த்வீதியம் இன்மை அன்மை மறுதலை என்னு முப்பொருளுணர்த்துமன்றே ; அவற்றுள் இன்மைப்பொருள்பற்றி அத்துவிதமென்ற மொழிமாத்திரையானே ஒருபொருளென்றல் பொருத்தமுடைத்தெனின், தானே தன்னையொன்றெனக் கருதல்வேண்டாமையின் அவ்வாறு கருதும் பொருள் வேறுண்டென்பது பெறப்படுதலானும், எண்ணுப்பெயர்மேல் வந்த நகரம் அன்மைப்பொருள் மாத்திரையே யுணர்த்திப் பொதுமையினிற்பதன்றி ஏனைச்சொற்களின்மேல் வந்த நகரம்போல இன்மை மறுதலைப் பொருள்களை யுணர்த்துதல் வழக்கின்கண் இன்மையின் அத்தவிதமென்கின்ற மொழிதானே பிறிதுகாரணம் வேண்டாது வேறன்மையை யுணர்த்தி நிற்குமாகலானும், ஈண்டிவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் றானேயாய் நிற்குமென மேற்கொண்டது என்றவாறு.
ஆகலானென்பதற்கு ஆயிட்டென்பது அக்காலவழக்குப் போலும்; அற்றாகலினன்றே இருபாவிருபது - 4 \"நீயோ செய்யாய் நின்மலனாயிட்டு” என்றார் வழி நூலாசிரியரும்; இனி \"மழைபெய்து குளநிறைந்தது” என்புழிப்போல ஆயிடலாலென்பது ஆயிட்டெனத் திரிந்ததென்றலு மொன்று. எண்ணும்மை விரித்துரைக்க. வேறன்றி உடனாதல் பெறப்படவே, பொருண்மையாற் பேதமென்பதூஉம் கலப்பினால் அபேதமென்பதூஉந் தாமே போதருமென்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
ஒன்றென்ற நீபாசத் தோடுளைகாண் - ஒன்றின்றால்
அக்கரங்க ளின்றாம் அகரவுயி ரின்றேல்
இக்கிரமத் தென்னு மிருக்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், வேதத்துள் அத்துவிதமென்றதூஉ மன்றி ஏகமெனவுமோதுதலின் அதற்கு மறுதலையாய் உயிர்களோ டொட்டி நிற்பனெனப் பேதப்படக் கூறுவதென்னை என்னுங் கடாவை யாசங்கித்து அச்சொற்குத் தாற்பரியங் கூறுமுகத்தால் தானேயாதலை வலியுறுத்துதனுதலிற்று. இள். இருக்கு ஒன்று என்றது ஒன்றே காண் என்பது வேதம் ஒன்றென்றதற்குப் பொருள் ஒன்றென்பதேயாம், வேறு பொருள்படாது; பதி ஒன்றே என்பது அதற்குத் தாற்பரியம் பதிப்பொருளொன்றே, இரண்டில்லை யென்பதாம் ; ஒன்று என்ற நீ பசுவாம்காண் என்பது இஃதறியாது ஒன்றென்று சொல்லுகின்ற நீ அப்பதிப்பொருளின் வேறாய பசுவென்றறிவாயாக, பதியுஞ் சேதனமாக யானுஞ் சேதனமாக என்னைப் பசுவென்றதென்னையெனின்; பாசத்தோடு உளை என்பது நீ மலத்தோடு கட்டுற்று நின்றாயாகலிற் பசுவெனப்பட்டனை; அற்றேல் இவ்வாறு வேற்றுமை கூறிற் பிரமமில்லையாயின் ஒரு பொருளுமில்லை யென்னும் வேதத்திற்குத் தாற்பரியமென்னை யெனின்; அகரவுயிர் இன்றேல் அக்கரங்கள் இன்று ஆம் இக்கிரமத்து ஒன்று இன்று என்னும் என்பது அகரவுயிரில்லையாயின் அக்கரங்களில்லையாமென்னும் இம்முறைபற்றி வேதம் பிரமப்பொருள் இல்லையாயின் ஒருபொருளுமில்லையென்றோதும் அத்தனை என்றவாறு.
ஒன்றின்றா லக்கரங்ளிறா மகரவுயிரின்றே லிக்கிரமத்தென்னும் என்றது வேறாகியும் வேறன்மைக்கு அநுபவங்காட்டியவாறு. இக்கிரமத்தாலென உருபு விரித்துரைக்க. இன்றென்னுமொருமை அப்பண்பின்மேனின்றது. காணென்பதனை மேலே கூட்டுக. ஆல் அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போ லெங்குமாம் - அண்ணல்தாள்
அத்துவித மாதல் அருமறைக ளொன்றென்னா
தத்துவிதம் என்றறையும் ஆங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், வேதம் ஏகமாய பிரமத்தை ஏகமென்றொழியாது பிரமம் அத்துவிதமெனவும் ஒரோரிடங்களின் ஓதுதலின் அத்துவிதம் இருபொருட் கண்ணதென்பார்க்கு ஏகமாய பிரமத்தை அத்துவிதமென்றல் பொருந்தாதாய் முடியும் என்னுங் கடாவை யாசங்கித்து அதனை நீக்குமுகத்தானே அவையே தானேயாதலை வலியுறுத்துனுதலிற்று. இதன் பொருள். பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணும் சுவையும்போல் எங்கும் ஆம் அண்ணல்தாள் அத்துவிதம் ஆதல் என்பது பண்ணும் அதனின் வேறன்றா யெண்ணப்படும் இசையும்போலவும் பழமும் அதனின் வேறன்றா யெண்ணப்படுஞ் சுவையும்போலவும் யாங்கணும் வியாபகமாய முதல்வன்றிருவருள் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்பதாகலான் ; அருமறைகள் ஒன்று என்னாது அத்துவிதம் என்று ஆங்கு அறையும் என்பது வேதங்கள் ஏகமென்னாது பிரமம் அத்துவிதம் என்று அவ்விடங்களிற் கூறும் என்றவாறு.
ஆண்டுப் பிரமம் அத்துவித மென்றது பிரமம் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்குமென்னும் பொருட்டாகலான், அஃது ஏகமென்பதோடு முரணுமா றில்லையென்பதாம். பண்ணை யென்னும் ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி. பண் பாலைப்பண் முதலாயின. எங்குமாமண்ணல்தாளென விசேடித்தது, குண குணிகள்போல் உடனாயும் அவ்வாறுடனாகாமைக்கு அநுபவங் காட்டியவாறு. வியாப்பிய வியாபகமாதல் ஒப்புமை மாத்திரையேபற்றிக் குண குணிகளை உவமை கூறினாரென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

அரக்கொடு சேர்த்தி அணைத்தஅக் கற்போல்
உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித்
தானே உலகாந் தமியேன் உளம்புகுதல்
யானே உலகென்பன் இன்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இங்ஙனம் வெவ்வேறுவமையெடுத் துக்காட்டின் அநேகாந்தவாதமா மென்னுங் கடாவை யாசங்கித்து அஃதாகாமை உவமைமுகத்தான் விளக்கி மூன்றனையும் ஒருங்கே வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள். உருக்கி அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற்போல் உடங்கு இயைந்து நின்று பிரிப்பு இன்றித் தானே உலகு ஆம் என்பது அரக்கையுருக்கி அதனோடு சேர்த்து அணைத்த கற்பொடி அவ் வரக்கினோடொன்றாய் ஒருங்கியைந்து நீக்கமின்றி நின்றாற்போல, முதல்வன் உயிர்களின் ஒருங்குகூடி நின்று நீக்கமின்றி உடனாகலால், தானேயாம் உலகேயாம் தானே உலகேயாம். அற்றேல், வாமதேவமுனிவன் முதலியோர் யானேயுல கெல்லாமாயினேன் எனக் கூறுதலானும், சர்வஞ்ஞானோத்தரத்தில் யானேயெல்லாமாய் அல்லனுமாய் உடனுமாய் நின்றேன் என்று உயிர்கண்மேல் வைத்தோதுதலானும், உயிர்களும் இவ்விலக்கணத்தன ஆவான் செல்லும்போலுமெனின்; தமியேன் உளம் புகுதல் யானே உலகு என்பன் இன்று என்பது. அம்முதல்வன் பாசக் கூட்டத்தினீங்கித் தனியாய் நின்ற என்னகத்துச் சோகம்பாவனையாற் புகுந்து வேற்றுமையின்றித் தோன்றலான் யானே யுலகெல்லா மென்பேனாயினேன் இம்முத்திகாலத்து. ஆகலின் அதுபற்றி உயிர்களும் அவ்வாறாவான் சேறலின்றென்பது குறிப்பெச்சம் என்றவாறு.
இவ்வொற்றுமைபற்றியன்றே அருச்சுனற்குக் கீதை நூல் செவியறிவுறுத்த கண்ணன் \"யானே யுலகெல்லா மாயினேன்” என்றதூஉம்,பகவத்கீதை 10-42 முதல்வனது விச்சுவரூபத்தைத் தான் காட்டியதூஉம், ஏனையவற்றைக் கைவிட்டு என்னையே வழிபடுகவென்றதூஉம், அதனை உறுதியாகக் கொண்ட அருச்சுனன் அவன் கூறிய கருத்துநோக்கிச் சாங்காறுஞ் சிவபூசை செய்ததூஉம், கண்ணன் மேலிட்ட போதுகள் முதல்வன் றிருமுடிமேற் கண்டதூஉமென்க. கண்ணன் உபமன்னியமுனிபாற் சிவதீக்கையுற்றுத் தன்னையுந் தலைவனையு முணர்ந்தோனாகலிற் சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதலறிக. கலப்பாய் நிற்றலான் உலகேயாமென்பார் உடங்கியைந்து எனவும், பொருட்டன்மையால் வேறுநிற்றலால் தானேயாமென்பார் நின்று எனவும், உயிர்க்குயிராய் நிற்றலால் தானேயுலகாமென்பார் பிரிப்பின்றி எனவுங் கூறினார். ஈண்டும் இரட்டுற மொழிந்துகொண்டுரைக்க. இன்றி யென்னுஞ் செய்தெ னெச்சக்குறிப்பு மழைபெய்து குளநிறைந்தது என்புழிப்போலக் காரணகாரியப் பொருட்டாய் நின்றது.
இவ்வதிகரணத்தானே பேதமென்றும் அபேதமென்றும் பேதாபேதமென்றும் பிணங்குஞ் சமயிகளையெல்லாம் மறுத்து அம்மூவகையியல்புந் தன்கட்டோன்ற நிற்கும் அத்துவிதத்துண்மை ஏதுக்களானும் உவமைகளானும் உணர்த்தியவாறு. புடைநூலாசிரியரும் இவ்வதிகரணப்பொருளேபற்றி சூசூபுறச்சமயத்தவர்க்கிருளாய் தெரிக்கலுற்றாம்” என வகுத்தோதினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

உள்ளதே தோற்ற உயிரணையும் அவ்வுடலின்
உள்ளதா முற்செய்வினை உள்ளடைவே - வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன்விளைக்குஞ் செய்யேபோற்
செய்வன் செயலணையா சென்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், வினை உண்டென்பதற்கும் அதுவே உயிர்க்குப் பயனாய் வருமென்றற்கும் மேல்வினை யேறுமாற்றிற்கும் அது முதல்வனையின்றியமையாமைக்கும் பிரமாணமென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். உள்ளதே தோற்ற என்பது இல்லது தோன்றாதென்பது மேற்கூறிப் போந்தமையான் முன் உள்ளதாய புண்ணியபாவ மென்னும் இருகூற்றுச் சஞ்சிதவினையே தன்பயனாகிய இன்ப துன்பங்களையும் அவை நுகர்தற்குரிய நிலைக்களமாகிய உடம்பினையுந் தோற்றுவிப்ப, உயிர் அவ்வுடலின் அணையும் என்பது அவ்வின்ப துன்ப நுகர்ச்சி சடத்துக்குக் கூடாமையிற் சித்தாகிய உயிரே அவ்வுடம்பிற் பொருந்தி அவற்றை யநுபவிக்கும் ; முன்வினையை ஈண்டநுபவித்தொழிந்தால் மேலைக்கு வினையுண்டாமா றியாங்ஙன மெனின் ; முன் செய்வினை உள் அடைவே உள்ளதாம் என்பது முன் செய்த வினை அநுபவித்தற்கேதுவான முறைமையிலே மேலைக்கு வினையுளதாம். அற்றேல், அவ்வினையே பயனாக வருமெனவமையும் முதல்வன் எற்றுக்கெனின் ; செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல் என்பது உழவர் செய்யுந் தொழிற்குத் தக்கபயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அத்தொழில் தானே விளைவிக்கமாட்டாததுபோல ; வள்ளலவன் செய்வன் என்பது உணவும் வித்துமாய்த் தொன்றுதொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன் ;செயல் சென்று அணையா என்பது அவ்வாறன்றி வினை தானே உயிர்கட்குப் பயனாய் வந்து பொருந்தமாட்டாது என்றவாறு.
வள்ளலென்றார், தற்பயன் குறியாது திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் 5.78.6. \"வேண்டுவார் வேண்டிய” வாறே நல்கும் அருளுடைமை நோக்கி. உள்ளடைவு உள்ளுதற்கேதுவாகிய அடைவென விரியும். ஏகாரம் ஏழாவதன் பொருட்கண் வந்தது. உள்ளுதல் ஈண்டநுபவித்தல் ; அதற்கேதுவாய முறைமையாவன அநுபவித்தற்குத் துணைக்காரணமாகிய விருப்பு வெறுப்புக்கள். அவற்றின்க ணுண்டாமாறு முன்னர்க்காட்டுதும். மேல் முதல்வனுக்கு வினை வேண்டப்படுமென்பதற்கு அரசனை உவமை கூறினார். ஈண்டு முதல்வனையின்றி யமையாதென்பது உணர்த்துதற்கு உழவு தொழிலை யுவமை கூறினாரெனக் கொள்க.

குறிப்புரை :

5. இரண்டாமதிகரணம்
சிவப்பிரகாசம், பாயிரம் மேற்கோள் : இனி இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வனாணையின் வரும் என்றது. (வா 8அ)
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், முதல்வன் அவ்வாறு உயிர்களோடியைந்து நின்று புனருற்பவஞ் செய்யுங்கால் உலகத்துக்குப்போல் அவனுக்குத் துணைக்காரண முதலியன வேண்டப்படுமோ படாவோ என்னும் ஐயப்பாட்டின்கண் முதல்வனது சுதந்திரத்திற்கும் அளவிலாற்றற்கும் இழுக்காய் முடியுமாகலின் அவனுக்கு அவை வேண்டப்படா எனப் பரிணாமவாதிகள் கூறுங் கடாவையாசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று.இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணியதேசிகர் உரை :இனி இவ்வான்மாக்களுக்கு முதல்வன் இவ்வாறு மூவகையுமாய் நிற்றற்குரிமையுடைய உயிர்களுக்கு; இருவினை முற்பிறவிகளின் ஈட்டப்பட்டு மாயையிற் கட்டுப்பட்டுக் கிடந்த புண்ணிய பாவங்கள்; முதல்வன் ஆணையின் இறைவனுடைய சிற்சத்தியால் ; வரும் என்றது வரும் என்றவாறு.)
ஈண்டு இருவினையென்றது முற்பிறவிகளின் ஈட்டப்பட்டு மாயையிற் கட்டுப்பட்டுக் கிடந்த புண்ணிய பாவங்களையென்க ; எனவே, மாயையினுண்மையும் பெறப்பட்டது. இவை வேண்டப் படுதல்பற்றி முதல்வன் சுதந்திரத்திற்கு இழுக்கில்லையென்பார், முதல்வனாணையின் வரும் என்றார்.
ஏது : ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனதாக்கினை யாகலான். (வா8ஆ)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், ஆணையே யமையும் இருவினை யெற்றுக்கு என்னுங்கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். ஒரு பட்டணத்தைப் புரக்கும் வேந்தன் பாடிகாவற்றொழிலைக் களைகணாவானொருவன்மாட்டு வைத்தாற்போல எல்லாவறிவு முதன்மை யநுக்கிரகங்களுடைய அம்முதல்வன் புனருற்பவத்தைச் செய்வதாகிய தனதாணையை அவ்விருவினைகண் மாட்டுவைத்து நடாத்துதலே முறையாகலான் இனி யிவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வனாணையின் வரும் என மேற்கொண்டது என்றவாறு.
முதல்வன் செய்யுஞ் செய்தியெல்லாம் உலகத்தோடொப்ப நிகழ்வனவாகலின் ஈண்டைக்கு அரசன்செய்தி உவமையாயிற்று. பாடிகாவலாவது களைகணாவானொருவனைக்கொண்டு வேந்தன் செய்விப்பதொரு தண்டத்தொழில் விசேடம். அது திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் 6.23.1. \"கோடிகாவினைக் கூறாத நாளெலாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே” என்னுந் திருப்பாட்டானுமறிக. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டிய வாறெல்லாமுரைப்ப.

பண் :

பாடல் எண் : 7

அவ்வினையைச் செய்தவனில் அவ்வினைஞர் தாஞ்சென்றங்
கவ்வினையைக் காந்த பசாசம்போல் - அவ்வினையைப்
பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தாம் அறிந்தணைப்பார் ஆங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இருவினை சடமாகலிற் சென்றணைய மாட்டாவாயினும் உயிர்கள் சேதனமாகலின் அவையே அவற்றது பயனை யறிந்து எடுத்துக்கொண்டு நுகரும், வள்ளல் எற்றுக்கு என்னுங் கடாவை யாசங்கித்து அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் காந்த பசாசம்போல் என்பது ஒருவனெடுத்து நேரொக்கப் பிடித்தவழி இரும்பினை வலித்துக் கொள்ளும் காந்தம்போல; அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் என்பது அவ்வினைப் பயன்களைப் பிறழாமல் நுகர்விக்கும் முதல்வனால்; அவ்வினைஞர் தாம் என்பது அவ்வினைகளைச் செய்யும் ஆன்மாக்கள் தாம்; அவ்வினையைச் செய்வதனில் சென்று அவ்வினையை நுகராரேல் ஆர்தாம் அறிந்து அணைப்பார் என்பது அவற்றைச் செய்தற்கு நிலைக்களமாகிய உடம்பின்கட்பொருந்தி அவற்றது பயனை அநுபவிப்பர்; அவ்வாற நுபவியாராயின்; வேறே எவர் தாம் அவற்றையறிந்து கூட்டுவார் ; ஆங்கு என்பது அறிவுஞ் சுதந்திரமுமின்றி மலத்தின் மறைப்புண்டு கிடக்கும் அப்பெத்தகாலத்து என்றவாறு.
ஒருவருமில்லையென்பதாம்.
ஆன்மாக்களுக்குத் தமக்கென அறிவின்மையானும் வினை சடமாகலானும், மாயை தாரகமாமத்தன்றாணிற்றல் எனப்போந் தமையானும், முதல்வனே அறிந்தணைப்பனெனப் பாரிசேடவளவை கூறுவார், பிரானினுகராரேலார் தாமறிந்தணைப்பா ரென்றார். இது சொற்பொருட் பின்வருநிலை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி
மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
அலர்சோகஞ் செய்கமலத் தாம்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அவ்வினை ஆதியோ ? அநாதியோ? ஆதியெனின் முன்பில்லது இடையே தோன்றுமென்பது சற்காரிய வாதத்துக்கேலாது, அநாதியெனின் ஒருவர் கூட்டவேண்டுவ தில்லையென்னுங்கடாவை யாசங்கித்து அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும் சொல்லின் புதிது அன்று தொன்மையே என்பது நெல்லின்கணுமியும் செம்பின்கட்களிம்பும் எக்காலத்துளவாயினவென்று ஆராய்ந்து சொல்லுங்கால் அந்நெல்லுஞ் செம்பும் உளவாயினவன்றே உள்ளனவன்றி இடையே வந்தனவல்ல ; அதுபோல ; வல்லி மலகன்மம் அன்று உளவாம் என்பது மாயை, மலம், கன்மமென்னு மும்மலங்களும் அநாதியேயுள்ளனவாம் ; கமலத்து அலர் சோகம்பொன்வாள் செய்வள்ளலால் ஆம் என்பது முன்னேயுள்ளதாய தாமரைப்பூ அலர்தலும் கூம்புதலும் ஞாயிற்றினாற் செய்யப்படுமாறுபோல அவை தத்தங் காரியங்களைச் செய்தல் முதல்வனாலேயாம் என்றவாறு.
இஃதெடுத்துக் காட்டுவமை. புதிதன்றென்பதனைத் தனித் தனி கூட்டுக. தொன்மையி லுள்ளவற்றைத் தொன்மை என்று உபசரித்தார்.
ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. மாயை இறைவனுக்குப் பரிக்கிரகசத்தியாகலின், வல்லியென்றார். வினைக்குத் தொன்மைகூறுவார் இனம்பற்றி மாயைமலங்களுக்குந் தொன்மை கூறினார்.
மூலமலத்தின் காரியம் மோகம், மதம் முதலாயின. இருவினையின் காரியம் இன்பதுன்பம் முதலாயின. மாயையின் காரியம் தநுகரணம் முதலாயின. வள்ளலாலாமெனவே திரோதானசத்தியது உண்மையும்பெற்றாம். அது பாகம் வருவித்தற்பொருட்டு மலத்தின்வழி நின்று மோகம் முதலியவற்றைத் தொழிற்படுத்துவதாகிய சிவசங்கற்பத்திற் கேதுவாதல் பற்றி மலமென்றுபசரித்துக் கூறப்படும். இவ்வாறு மல கன்ம, மாயை திரோதானம் மாயாகாரியமென்னும் ஐவகைப்பாசமுங் கண்டுகொள்க.
இவற்றுண் மாயை, சுத்தமாயை அசுத்தமாயையென் றிருவகைப் படும். இவ்விரண்டனுட் சுத்தமாயையின் காரியமே அசுத்தமாயை யென்பாரும், சுத்தமாயைபோல அசுத்தமாயையும் அநாதியேயா மென்பாரும், ஒன்றுதானே ஊர்த்துவமாயை அதோமாயையென் றிருவகைப்படு மென்பாரும் எனப் பலதிறத்தர் ஆசிரியர். இனி முதல்வனது கிரியாசத்தியே சுத்தமாயை யெனப்படுமென்பாருமுளர். அது முதல்வனுக்குத் தாதான்மிய சத்தியாகலிற் பரிக்கிரகசத்தியாகிய சுத்தமாயையாதல் யாண்டையதென்றொழிக. சுத்தமாயையினின்றும் பஞ்சகலைகளும் நால்வகைவாக்குஞ் சிவதத்துவமைந்துஞ் சுத்தகாலமுதற் சுத்தநிலமீறாகிய முப்பத்தொன்றுந்தோன்றும். அசுத்தமாயையினின்றும் அசுத்தகாலமுதல் அசுத்தநிலமீறாகிய முப்பத்தொரு தத்துவங்களுந் தோன்றும். இந்தத் தத்துவங்களெல்லாம் பொதுவுஞ் சிறப்பும் பொதுச்சிறப்புமெனத் தனித்தனி மூவகைப்பட்டு உயிர்கடோறும் வெவ்வேறுளவாம்.
கன்மமும் சிவப்பிரகாசம், பொது 16. \"நாசோற்பத்தி பண்ணிவரு மாதலா லநாதி’’ என்பதுபற்றிப் பிரபஞ்சம்போலப் பிரவாகாநாதி யென்பாரும், திருவருட்பயன் 52. \"ஏக னநேக னிருள்கரும மாயையிரண் டாக விவையாறாதியில்’’ எனப்படும் ஞானாமிர்தம் 22. \"ஆணவ முதலன் றதுபோற் கருமமும்’’ எனப்படும் ஒப்ப வோதுதல்பற்றி மூவகைவினைக்கும் முதற்காரணமாய மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டென்பாருமென்று இருதிறத்த ராசிரியரென்க. இவ்வினையீட்டப்படுங்கால், மந்திர முதலிய அத்துவாக்களிடமாக மனம் வாக்குக் காயமென்னும் மூன்றான் ஈட்டப்பட்டு, தூலகன்மமாய் ஆகாமியமெனப் பெயர் பெற்று, பின்னர்ப் பக்குவமாங்காறுஞ் சூக்குமகன்மமாய்ப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிற்கிடந்து, சாதி ஆயுப் போக மென்னும் மூன்றற்குமேதுவாய் முறையே சனகந் தாரகம் போக்கியம் என்னு மூவகைத்தாய் அபூருவம் சஞ்சிதம் புண்ணியபாவ மென்னும் பரியாயப்பெயர் பெற்று, பின்னர்ப் பயன்படுங்கால் ஆதிதைவிகம் ஆதியான்மிகம் ஆதிபௌதிகம் என்னுமுத்திறத்தாற் பலதிறப்பட்டு, பிராரத்தமெனப் பெயர்பெறும். ஆதிபௌதிகமாவது சடம் வாயிலாக வருவது. ஆதியான்மிகமாவது சடத்தோடு கூடிய சேதனம் வாயிலாக வருவது. ஆதிதைவிகமாவது ஒரு வாயிலானன்றித் தெய்வந்தானே காரணமாக வருவது. இன்னும் இவ்வினைகள் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என்று ஐவகைப்பட்டு ஒன்றற்கொன்று ஏற்றமுடைத்தாய், முறையே நிவிர்த்திமுதலிய பஞ்சகலைகளினடங்கி, அசுத்தம், மிச்சிரம் சுத்தமெனப்படும் போகங்களைப் பயப்பிக்குமென்றறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

கண்ட நனவைக் கனவுணர்விற் றான்மறந்து
விண்படர்ந்தத் தூடு வினையினாற் - கண்செவிகெட்
டுள்ளதே தோற்ற உளமணுவாய்ச் சென்றுமனந்
தள்ள விழுங்கருவிற் றான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், புனருற்பவமாங்காற்படும் இயல்புகளுணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. கண் செவி கெட்டு உள்ளதே தோற்ற உளம் அத்தூடு விண்படர்ந்து கண்ட நனவைக் கனவு உணர்வின் தான் மறந்து மனம் தள்ள வினையினால் அணுவாய்ச் சென்று கருவில் விழுந்தான் எனக் கொண்டு கூட்டுக. இதன் பொருள் கண் செவி கெட்டு உள்ளதே தோற்ற என்பது கண் செவி முதலிய உறுப்புக்களையுடைய இவ்வுடம்பு கெட்டவழித் தனக்குக் கேடின்றிப் படைப்புக்காலந்தொடங்கிச் சங்காரகாலமளவும் நிலைபெற்றுள்ளதாகிய சூக்குமதேகம் பூதசாரவுடம்பு முதலியனவாய்க் காரியப்பட; உளம் அத்தூடு விண்படர்ந்து என்பது உயிரானது அப்பூதசாரமுதலிய உடம்பின்கட்பொருந்தித் துறக்க நிரயங்களிற் சென்றநுபவித்து, பின்னர்; கண்ட நனவைக் கனவு உணர்வின் தான் மறந்து என்பது நனவின்கட்கண்டவற்றைக் கனாக்காணுங்காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற்போல, முன்னைக் கண் செவி கெட்டவாறும் உள்ளதே தோற்ற அத்தூடு விண்படர்ந்தவாறும்ஆண்டநுபவித்தவாறுமாகிய இன்னோரன்னவற்றை மறந்து அறிவு வேறுபட்டு ; மனந்தள்ள வினையினால் அணுவாய்ச் சென்று கருவில் விழும்தான் என்பது முன்னுடம்பு இறக்குங்கால் அடுத்த வினை காட்டுங்கதிநிமித்தம்பற்றி உயிர் அவாவுமாறு மனஞ்செலுத்துதலான் அக்கதிக்கட்சேறற் கேதுவாய் எஞ்சிநின்ற புண்ணியபாவசேடத்தாற் சூக்குமதேக மாத்திரையாய்ச் சென்று அம்மனந்தள்ளிய கதிக்கு அமைந்த அக்கருவின்கட்படும் என்றவாறு.
இன் உவமவுருபு. தான் அசை. மறத்தற்குச் செயப்படு பொருள் அவாய்நிலையான் வந்தது. விண்படர்ந்தென்னும் உபலக்கணத்தால் நிரயம்படர்ந்தென்பதூஉம் பெறுதும். படர்ந்தெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். அத்தூடென்புழி அன்சாரியை விகாரத்தாற்றொக்கது. பொருந்தியென்பது சொல்லெச்சம். வினை ஆகுபெயர். உடம்புநீங்கிப் போங்கால் முதற்கட்கெடுவன கண்ணுஞ் செவியுமாகலின், அச்சிறப்பு நோக்கிக் கண்செவி கெட்டென் றுபசரித்தார். கெட்டவழியென்பது கெட்டெனத் திரிந்து நின்றது. ஐம்பெரும்பூதத்தின் காரியமெனப்பட்ட தூலவுடம்பு சூக்குமவுடம்பின் காரியமாமாறென்னை யென்னும் ஐயநீக்குதற்கு உள்ளதே தோற்றவென்றார். ஏகாரந் தேற்றம்.
ஆகாயமுதலிய தூலபூதங்கள் சத்தமுதலிய சூக்குமபூதங்களின் காரியமாதலின், அதுபற்றியே தன்மாத்திரை மயமாகிய சூக்கும வுடம்பிற் றோன்றுவதாய தூலவுடம்பு ஐம்பெரும் பூதமயமெனப் பட்டதன்றிப் பிறிதில்லையென்பது. சிவஞான சித்தி 236. \"பூதனாசரீரம் போனாற் புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி’’ எனப்படும், சிவஞான சித்தி 410. \"சூக்கும வடிவே தென்னிற் றூலகாரணமதாகும்.” எனப்படும், சிவஞான சித்தி 250. “தூலமா முருவினுக்குச் சூக்கும முதல்” எனப்படும், சிவஞான சித்தி 247 “மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னிற் கூறிய சூக்கு மத்தாம்.” எனப்படும், சிவஞான சித்தி 249. “விதிப்படி சூக்குமத்தே யுருவரும்.” எனப்படும், சிவஞான சித்தி 113.“மனாதிதரு முடல்.” எனப்படும், வழி நூலாசிரியரும் இவ்வாறே கூறியவாறு காண்க. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே யுரைப்ப. அது தோன்றுங்கால் சிவஞான சித்தி 248. “காலமுற்று நீக்கிட மரம் பின் வேரோர் நீண்மர நிகழ்த்து,” மாறுபோலச் சூக்குமவுடம்பு கெடாது நிற்பத் தூலவுடம்பு சிவஞான சித்தி 247. “வேறொரு குறியாமாரம் வீரசங்கிலியுமா” தல்போல வினைக்கீடாக அச்சுவேறுபட்டு சிவஞான சித்தி 249. “மதிக்கெழு கலைகள்போல வருவது போவதாம்” என்பதூஉம் வழி நூலாசிரியர் கூறியவாற்றானறிக.
அணு சூக்குமவுடம்பு. தள்ள தள்ளுதலானென்க. அக்கருவி லெனச் சுட்டுவருவிக்க. தான் அசை. உள்ளதே தோற்றவென்றதனால் உடற்றிரிவும், விண்படர்ந்தென்றதனால் இடத்திரிவும், கண்ட நனவைக் கனவுணர்விற்றான் மறந்தென்றதனால் அறிவுத்திரிவும் பெறப்பட்டன. உள்ளதே தோற்றவென்றதனால் புதிது புதிதாய்த் தோன்றுதல் பற்றிச் சற்காரியவாதத்திற்கு இழுக்கின்மையும், அத்தூடுவிண்படர்ந் தெனவும் அணுவாய்ச் சென்று கருவில் விழுமெனவுங் கூறியதனால் போக்குவரவு பற்றி வியாபகத்துக்கு இழுக்கின்மையும், வினைச்சேடத்தாலென்றதனால் துறக்க நிரயங்களின் அநுபவித் தொழிந்தமை பற்றிப் புனருற்பவகாரணத்திற்கு இழுக்கின்மையும், மனந்தள்ளவென்றதனால் அஃதெஞ்சுதற் கேதுவுங் காட்டியவாறு.
வேதத்துட் கூறப்படும் பஞ்சாக்கினி வித்தையின் இயல்புணர்த்துவார் கண் செவி கெட்டவழி விண்படர்ந்து மறந்தணுவாய்ச் சென்று கருவில் விழுமென்றார். பஞ்சாக்கினி வித்தையினியல்பு நீலகண்ட பாடியத்திற் காண்க. மறந்து விண்படர்ந்தெனக் கூட்டி உரைப்பாருமுளர். துறக்க நிரயங்களிற் படர்ந்து அநுபவிப்புழி அறிவு திரியாமை புராணங்களுட் காண்க.

குறிப்புரை :

6. மூன்றாமதிகரணம் மேற்கோள் : இனி இவ்வான்மாக்கள் மாறிப்பிறந்து வருமென்றது. (வா9அ)
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், புனருற்பவம் சடத்துக்கன்றிச் சித்துக்கு முளதாயினன்றே முற்செய்வினையே ஈண்டைக்கு வருமென மேற்கூறியதமையும். அஃதுண்டோ இல்லையோ என்னும் ஐயப்பாட்டின்கட் குடமுடைந்தவழிக் குடாகாயம் ஆகாயத்தோடு கூடுமாறுபோல உடம்பு நீங்கியவழி உயிர் பிரமத்தோடு கூடுமென்னுஞ் சுருதிபற்றி இறந்தவுயிர் மீளப்பிறப்பதில்லையெனக் கிரீடாப் பிரமவாதிகள் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணியதேசிகர் உரை : இனி இவ்வான்மாக்கள் இருவினைப் பயன்களை நுகர்தற்குரிய உயிர்கள் ; மாறிப்பிறந்து வருமென்றது இறந்து மீளப்பிறந்து இவ்வாறே வரும் என்றவாறு.)
வருதல் தொன்றுதொட்டவ்வாறாதல். மாறுதல் ஈண்டிறத்த லென்பது \'போக்குவரவு புரிய’ என்னும் மூலத்தானும், ஏதுவுதாரணங்களோடு உளதாகிய இயைபானுமுணர்க. இஃதுணராது அச்சுவேறுபடுதலென் றுரைப்பாருமுளர். அஃதீண்டைக்கியாதுமியையாமை யுணர்க.
ஏது : தோற்றமுமீறும் உள்ளதற்கல்லது உளதாதலின்மையான். (வா 9ஆ)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னையென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். உற்பத்தியும் நாசமுந் தொடர்ச்சியாயுள்ள பொருட்கன்றி ஏனைப்பொருட்கு உற்பத்தி கூடாமையான் இனி இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்துவருமென மேற்கொண்டது என்றவாறு. தோற்றமும் ஈறுமென்னுமும்மைகளை எதிரது தழீ இயினவாகக் கோடலிற் றொடர்ச்சியாயென்பது போந்தவாறறிக. உளதாதல் ஈண்டுத் தோன்றுதல்.
இனி இவ்வாறன்றிக் குடாகாயவுவமையேபற்றி இருவினையான் வரும் புனருற்பவம் உயிரின்பொருட்டுச் சிவத்துக்கே யாமெனச் சிவாத்துவிதிகள் கூறுங்கடாவை யாசங்கித்தும் மூலப்பகுதியிற்றோன்றும் புத்திதத்துவத்திற்கே அதுவெனச் சாங்கியர் கூறுங்கடாவை யாசங்கித்தும் மேற்கோடனுதலிற்று இவ்வதிகரண மெனக்கொண்டு, தோற்றமும் ஈறும் அவ்வுரிமையுள்ளதற்கேயன்றி ஏனையவற்றிற்கு உளதாதலின்மையான் இவ்வான்மாக்களே மாறிப் பிறந்துவருமென மேற்கொண்டதென் றுரைப்பினுமாம். இப்பொருட்கு உரிமையென்பது அவாய்நிலையான் வந்தது.
உளதாதலென்னும் ஒருமை தோற்றவீறுகளோடு தனித்தனி சென்றியையும். ஆன்மாக்களேயென்னும் பிரிநிலையேகாரம் விகாரத்தாற் றொக்கது. இனி மாயாவாதி முதலியோர் மதத்தை மறுத்தற்பொருட்டு மேற்கொண்டதென்பாருமுளர். அத்துவிதமென்ற சொல்லானே அவரை மறுத்து ஆன்மாக்களைப் பெறுவித்தமையின் ஈண்டவர்மதம்பற்றிக் கடா நிகழ்தற்கோ ரியைபின்மை யுணர்க.

பண் :

பாடல் எண் : 10

அரவுதன் தோலுரிவும் அக்கனவும் வேறு
பரகாயம் போய்வருமப் பண்பும் - பரவிற்
குடாகாய ஆகாயக் கூத்தாட்டா மென்ப
தடாதுள்ளம் போமா றது.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உயிர்க்குப் புனருற்பவமாகாமைக்கு வாதிகளான் எடுத்துக் காட்டப்படுங் குடாகாய வாகாய வுவமைக்குப் பொருள்கூறி மேலதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அரவு தன் தோல் உரிவும் அக்கனவும் பரகாயம் போய் வரும் அப்பண்பும் பரவில் வேறு என்பது கண் செவி கெட்ட வழி உள்ளதே தோற்ற அத்தூடு விண் படர்தற்குப் பாம்பு தோலுரித்துப் புதிதொருதோல் போர்த்துச் சேறலும், புருடன் நனவுடம்பினீங்கிக் கனவுடம்பிற் சேறலும், யோகிகள் தம்முடம்பு நீங்கிப் பர காயத்திற் சென்று மீடலுமாகிய இவ்வுவமைகள் மிக்கு வழங்குதற் கண் இவற்றிற்கு மாறாக ; குடாகாய ஆகாயக் கூத்தாட்டு ஆம் என்பது அடாது என்பது குடவாகாயங் குடமுடைந்தவழி ஆகாயத்தோடு கூடுமாறு போல்வதோர் கூத்தாட்டாமென்று நீ கூறுதல் பொருந்தாது ; உள்ளம் போம் ஆறு அது என்பது சூக்குமவுடம்பு விட்டுப் போமாற்றிற்கே அவ்வுவமையாகலான் என்றவாறு.
எனவே, உடல்விட்டுப் போமாற்றிற்கு இவ்விருவகையுவமைகளும் ஆகமங்களிற் கூறுதலின், அவை தம்முண் முரணாதவாறு, அரவுதன்றோலுரிவு முதலியன தூலவுடல் விட்டுப் போமாற்றிற்கும், குடாகாயவுவமை சூக்குமவுடம்பு விட்டுப் போமாற்றிற்குமெனக் கோடல் பொருத்தமுடைமையின் அவ்வேறுபாடுணராது குடாகாயவமையுந் தூலவுடம்பு விட்டுப் போமாற்றிற்கே போலுமென மலையற்கவென மேலதனை வலியுறுத்தவாறு காண்க.
மேலை வெண்பாவில் \"கண்ட நனவைக் கனவுணர்விற்றான் மறந்து” என்றது அறிவு வேறுபடு முறைமைக்கு எடுத்துக் காட்டியதெனவும், ஈண்டு அக்கனவு மென்றது அதனையே உடல் வேறுபடு முறைமைக்கு எடுத்துக் காட்டியதெனவுந் தெரிந்து கொள்க. பரவு முதனிலைத் தொழிற்பெயர். இல்லுருபு தொழில் நிகழ்ச்சிக்கண் வந்த ஏழாவது. பரவுதல் எல்லார்க்கும் புலனாமாறு மிக்குநிகழ்தல். ஈண்டு உள்ளமென்றது சூக்குமவுடம்பை. போமாற்றிற்கென்னும் நான்காவது விகாரத்தாற் றொக்கது ; \"ஐந்தவித்தா னாற்றல்” திருக்குறள் - 25 என்புழிப்போல. குளவாம்பல் குளாம்ப லென மரீஇயினாற்போலக் குடவாகயங் குடாகாயமென மரீஇயிற்று. ஆகாயக்கூத்தாட்டென்பது உவமத்தொகை. இதனை உம்மைத் தொகையாகக் கொண்டு குடாகாய வாகாயமுங் கூத்தாட்டும் போலென்றுரைப்பாருமுளர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

எங்குமுள னென்றளவை ஒன்றன் றிரண்டென்னில்
எங்கு முளன்அன் றெவற்றெவனும் - அங்கண்
அவையவன் அன்றில்லைப் பொன்னொளிபோல் ஈசன்
அவையுடைமை யாளாநாம் அங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், ஏதுவும் மேற்கோளுந் தம்முள் அவி நாபாவமாமாறு யாங்ஙனமென்னுங் கடாவை யாசங்கித்து அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். எங்கும் உளன் என்ற அளவை ஒன்று அன்று என்பது யாங்கணும் அவையேதானேயென மேற்கூறிய அளவையானே முதல்வன் ஒரு பொருளாதல் கூடாது என்றவாறு. ஒன்றாயிற் கங்கைக்கரையினின்ற ஒரு மானுடனே காவிரிக் கரையினும் ஒருங்கு நிற்கமாட்டான் அதுபோல ஒருபொருள் ஒரிடத்துள தாதலன்றி யாங்கணும் வியாபித்து நிற்கமாட்டா தென்பதாம் ; இரண்டு என்னில் எங்கும் உளன் அன்று என்பது அற்றேல் முதல்வன் இருபொருளாய் நிற்குமெனக் கோடுமெனின் யாங்கணும் அவையே தானேயா யுளனாதல் கூடாது. என்றவாறு. தன்மாட்டே வேற்றுமையுடையானுக்குப் பிறபொருள்களின்கண் வேற்றுமையின்றி வியாபித்து நிற்றல் சாலாதென்பதாம் ; அற்றேல் இவ்விரண்டோடு முரணுதலின் எங்குமுள னல்லனெனக் கோடுமெனின்; எவற்று எவனும் அங்கண் அவை அவன் அன்று இல்லை என்பது எவ்விடங்களிலுள்ள எத்திறப்பொருளுமாகிய அவ்விடத்து அவைகளெல்லாம் அகரவுயிரின்றேல் அக்கரங்களில்லையாமாறுபோல அம்முதல்வனையின்றி யமையாவாகலான் எங்குமுளனல்லனென்றல் பொருந்தாது என்றவாறு. ஆகலான் எங்குமுளனல்ல னென்றல் பொருந்தாதென்பது குறிப்பெச்சம். அற்றேல் வேறு விடுக்குமாறென்னையெனின் ; ஈசன் பொன் ஒளிபோல் என்பது எங்குமுளனாகிய முதல்வன் ஞாயிறும் ஒளியும்போல ஒன்றாதற்கும் இரண்டாதற்கும் பொதுவாய்த் தாதான்மியத்தாற் சிவமுஞ் சத்தியு மென்றியைந்து நிற்கும். என்றவாறு. அற்றேல் பசுபாசங்களும் வியாபகமெனக் கோடலின் அவையும் இம்முறைமைபற்றி ஏகாநேக மிரண்டுமின்றி முதல்வன்போலத் தத்தஞ் சத்திகளோடு தாதான்மியமாய் நிற்குமென்பது பெறப்படுதலான் முதல்வனொடு சமமாவான் செல்லுமெனின் ; அவை உடைமை நாம் ஆள் ஆம் அங்கு என்பது அவ்வாறாயினும் முதல்வனது வியாபகத்தை நோக்கி வியாப்பியமாகலின் அப்பாசங்கள் உடைமையாம் ; பசுக்களாகிய நாம், அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு என்றவாறு.
அன்றெனப் பாடமோதுவாருமுளர். பாசங்கள் உடைமையா மாறும் பசுக்கள் அடிமையாமாறும் \'தாரகமாமத் தன்றாணிற்றல் எனப்படும், \'அதனி னீறலா வொன்று பலவாறே தொழும்பாகும்’ எனப்படும் மேற்பெறப்பட்டமையின், அவற்றை ஈண்டெடுத்துக்காட்டி ஆசங்கை நீக்கியவாறு. என்றவென்னும் பெயரெச்சத்தகரம் விகா ரத்தாற்றொக்கது. திருக்குறள் - 59 \"புகழ்புரிந்தில்” என்புழிப்போல. அளவையா னென ஆனுருபு விரித்துரைக்க. ஒன்றன்று உளனன்று என்புழி ஒன்று உளனென்னுந் தருமிவாசகங்கள் ஆகுபெயரால் அத்தருமங்களின் மேனின்றனவாகலான் உளனென்பதும் அஃறிணை யொருமையோடு முடிந்தது. அன்மை கூடாமைப்பொருட்டு. எவற்றெவனு மென்பது ஏழாம்வேற்றுமைத் தொகை. அஃறிணைக்கண்வரும் எவனென்னும் வினாவினைக்குறிப்புச் சொல் ஈண்டுப் பெயர்த்தன்மைப்பட்டு எவனுமென எஞ்சாப் பொருண்மையுணர்த்தி நின்றது. அன்றியென்னும் வினையெச்சம் செய்யுளாகலின் அன்றெனத் திரிந்தது. இன்மை ஈண்டு அமையாமைப் பொருட்டு. பொன் ஆகுபெயர். ஆம் என்பது உடைமை யோடுமியையும். பொன்னொளிபோலீசனென்பது தொகையுவமமாகலிற் பொதுவியல்பு விரித்துரைக்கப்பட்டது.
இவ்வதிகரணத்தாற் போந்த தொகைப்பொருள் :முதல்வன் வியாபகனாதலின் வியாபகப்பொருட்கு ஒன்றாய் நிற்றல் கூடாது அது கூடாமைபற்றி இரண்டாய் நிற்பனெனின் வியாபகனாதல் கூடாது ; வியாபியல்லனெனின் பசுபாசங்கள் அவனையின்றியமைதல் கூடாது ; ஆகலான் முதல்வனொருவனே ஞாயிறு மொளியும் போலச் சிவமுஞ்சத்தியுமெனத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டுச் சருவவியாபியாய்ப் பொதுமையினிற்பனெனச் சமவேதமாய் நிற்குமாறு தெளிவிக்கு முகத்தானே தாதான்மியசத்தி உண்மைக்குப் பிரமாணங்கூறியவாறா மென்றுணர்க. அஃதாமாறு, தன்னை விளக்குவதூஉம் விடயங்களை விளக்குவதூஉம் தானேயாகிய ஞாயிறொன்று தானே விடயங்களை விளக்குழிக் கதிரெனவுந் தன்னை விளக்குழிக் கதிரோனெனவுந் தாதான்மியத்தால் இருதிறப்பட்டியைந்து நிற்றல்போல, புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பினிற்பதூஉம் புறப்பொருளை நோக்கி நின்றுணர்த்துவதூஉமாகிய இருதன்மையையுடைய பேரறிவாய சைதன்னிய மொன்றே அங்ஙனம் புறப்பொருளை நோக்கி நிற்குநிலையிற் சத்தி எனவும் புறப்பொருளை நோக்காது அறிவுமாத்திரையாய் நிற்குநிலையிற் சிவமெனவுந் தாதான்மியத்தால் இருதிறப்பட்டியைந்து நிற்கு மெனவுணர்க.
இனித் தீயின்சத்தியொன்றுதானே சுடுதல் அடுதல் முதலிய தொழில் வேறுபட்டால் சுடுஞ்சத்தி அடுஞ்சத்தி யென்றற்றொடக்கத்துப் பலவேறு வகைப்படுமாறுபோல, சிவசத்தியொன்றே காரிய வேறுபாட்டால் பரை ஆதி இச்சை ஞானம் கிரியையென்று ஐவகைச்சத்திகளாயும், முறையே ஐந்தும் நான்கும் எட்டும் பதின்மூன்றும் எட்டுமாகிய கூறுபாடுடைய ஈசானி முதலிய ஐவகைச்சத்திகளாயும், ஆரணி செனனிமுதலிய மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி பிரதிட்டை முதலிய ஐவகை சத்திகளாயும், வாமை சேட்டை முதலிய அட்டசத்திகளாயும், பரவாகீசுவரி அபரவாகீசுவரி மனோன்மனி மகேசை உமை திரு வாணியென எழுவகைச் சிவபேதங்கட்கும் முறையே எழுவகைச்சத்திகளாயும், அத்தியான்மிகமெனப்படும் உன்மனை சமனை முதலிய கலைகளாயும், இன்னும் பல்வேறுவகைப் பட்டும் நிற்கும். அவ்வச்சத்திகளோடு புணர்ந்த சிவமும் அவ்வாறே பலவகைப் பெயர்பெற்று நிற்கும். அவ்வச்சத்திகட்கு இடமாய விந்துவும் அங்ஙனம் பலவேறுவகையான் விருத்திப்பட்டு அப்பெயர் பெறும். இவற்றினியல்பெல்லாம் ஆகமங்களுட்காண்க.

குறிப்புரை :

7. நான்காமதிகரணம்
மேற்கோள் : இனி நீக்கமின்றி நிற்குமன்றே யென்றது. (வா10அ)
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், அங்ஙனம் புனருற்பவமாதற் கேதுவாய் இருவினைகளைச் செலுத்தி நிற்பதெனப்போந்த ஆணையெனப்படுஞ் சத்தியாவது முதல்வனின் வேறோ அன்றோவெனும் ஐயப்பாட்டின்கட் பொருட்குச் சத்தி வேறென்னும் மீமாஞ்சகர் முதலியோர் மதமும் அன்றென்னும் நையாயிகர் முதலியோர் மதமும் பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் இறுதிக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோட னுதலிற்று. இதன் பொருள். முதல்வன் தனதாணையாகிய சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் என்றவாறு.
அன்னியயோகவியவச்சேதம் அயோகவியவச்சேதம் என்றற் றொடக்கத்து வடசொற்கள் பிறிதினியைபு நீக்குதல் இயைபின்மை நீக்குதல் என்றற்றொடக்கத்தனவாக மொழிபெயர்த்து வழங்கப் படுமாறுபோலச் சமவாயமென்னும் வடமொழி தமிழின்கண் நீக்கமின்றி நிற்றலென மொழிபெயர்த்து வழங்கப்படு மென்றுணர்க. வடமொழி இரண்டாஞ் சூத்திரத்திறுதியின் ஆணை முதல்வனோடு சமவேதமாய் நிற்குமென ஆணைமேல் வைத்தோதியதனை ஈண்டு முதல்வன்மேல் வைத்தோதினார். கண்ணழிப்புழி இருவினை முதல்வனாணையின் வருமெனக் கூறிப்போந்த ஆணை ஈண்டுக் கூறாமையே இனிது விளங்குமென்னுங் கருத்தாற் சொற்பல்காமைப்பொருட்டு அதனை யொழித்தெடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பொருள் காணமாட்டாதார் சருவவியாபியாய் நிற்றலானென்னும் ஏதுவின் பொருளே மேற்கோளுக்கும் பொருளாகக் கொண்டுரைப்ப. அது கூறியது கூறலாதலுமன்றி மொழிபெயர்த்தல் யாப்பிற்கு ஏலாமையுமறிக. ஈண்டுச் சமவாயமென்றது தாதான்மிய சம்பந்தந்தை. அஃதாவது பொருளான் ஒன்றேயாயும் ஒருவாற்றாற் பேதமாதற்கு உரிமையுடைமை.
ஏது : அவன் ஏகாநேகமிரண்டுமின்றிச் சருவவியாபியாய் நிற்றலான். (வா 10ஆ)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னையென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அம்முதல்வன் ஒன்றே வேறேயென்னும் இருதன்மையு மின்றி அவ்விரண்டற்கும் பொதுவாய் எங்கணும் வியாபியாய் நிற்றலான் இனி ஆணையினீக்கமின்றி நிற்குமன்றேயென மேற்கொண்டது என்றவாறு.
அவிநாபாவ முணர்த்துவார் ஏகாநேக மிரண்டுமின்றியென மேற்கோளிற்போந்த பொருளை அநுவதித்துச் சருவவியாபியாய் நிற்றலானென ஏதுக்கூறினார். சருவவியாபியாய் நிற்றல் அவையே தானே யாயென்னும் அதிகரணத்தாற் சாதிக்கப்பட்டமையின் அதனை ஈண்டேதுவாகவைத்து ஆணையினீக்கமின்றி நிற்குமென்னு மேற்கோளைச் சாதித்தவாறு.

பண் :

பாடல் எண் : 1

உளதில தென்றலின் எனதுட லென்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலிற் கண்படில்
உண்டிவினை யின்மையின் உணர்த்த வுணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஆன்மப்பிரகாச முணர்த்துதனுதலிற்று. (வா11)
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். மேல் அவையே தானே யென்றெடுத்துக் கொள்ளப்பட்ட உயிர் சூனிய முதலியவற்றுள் ஒன்றாகற்பாற்றென அவ்வம்மதம் பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து உயிர் அவற்றிற்கு வேறாயுண்டென்பது கருதலளவையான் விளக்கி மேலைச்சூத்திரத்தின் உயிர்கண்மேல் வைத்தோதிய முதல்வனதிலக்கணத்தை வலியுறுத்துதல் மூன்றாஞ்சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
முதன்மையுடைமைபற்றி உலகிற்கு நிமித்தகாரணமாகிய பதிப் பொருளுண்டென்பது முதற்சூத்திரத்துட் கூறி, காரணமாதற் பொதுமையான் இயையுடைமைநோக்கித் துணைக்காரண முதற் காரணங்களது உண்மையும் அவற்றான் உலகங் காரியப்படுமாறும் இரண்டாஞ் சூத்திரத்துட்கூறி அவற்றானாய பயன்கோடற்குரிய பசுக்கள துண்மைக்குப் பிரமாணம் ஈண்டுக் கூறுகின்றாரென்றுணர்க. இதனானே சூத்திரவியைபும் இனிது விளங்கும்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : இலதென்றன் முதலிய அறுவகை யேதுக்களானும் மாயாவியந்திர தனுவென்னும் பெயரடையாற் பெறப்படும் குறிப்பேதுவானும் இவற்றின்வேறாய் இவ்வுடம்பினுள் உயிரெனப்படுவ தொன்றுண்டு என்றவாறு.
இது பூட்டுவிற்பொருள்கோள். உளதென்றது சாதி யொருமை. அறிதலினென்றது ஐம்புலனோடுஞ் சென்றியையும். தனுவினுளான்மா வுளதென்றாரேனும், காணப்பட்ட உடம்பாற் காணப்படாத உயிருக்குண்மை கூறவேண்டுதலின் இவ்வுடம்பு சூனியமுதலியவற்றின் வேறாய ஆன்மாவையுடைத்தென உடம்பின் மேல் வைத்தோதுதல் ஆசிரியர் கருத்து. அற்றாகலினன்றே பதியுண்மை உலகின்மேல் வைத்தோதியதூஉ மென்பது.
உளதென்றது ஆன்மாவுளதென் றெங்குமொட்டிப் பொருளுரைக்கற்பாற்று. (வா 12)
ஈண்டுமேற்கோள் ஒன்றாயினும் எழுவகை மதங்களை வேறுவேறு மறுக்குமேதுக்கள் ஏழாகலான் ஆன்மாவுளதென்னு மேற்கோள் அவற்றொடு தனித்தனி சென்றியைதலின் ஏழதிகரணத்ததாயிற்று இச்சூத்திரமென்றுணர்க. இதனுட் கூறிய ஏதுவே யேதுவும் மேற்கோளும் அதுவேயாகலான் ஏனைச்சூத்திரங்களுட் போல வேறேதுக் கூறவேண்டாமையின், இவை யேதுவாமாறும் இவற்றான் மேற்கோளைச் சாதிக்குமாறும் இனிது விளக்கி வலியுறுத்துதன் மாத்திரையே ஈண்டுரைக்கப்படுவதெனக் கொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 2

அன்றன் றெனநின் றனைத்தும்விட் டஞ்செழுத்தாய்
நின்றொன் றுளததுவே நீயனைத்து - நின்றின்று
தர்ப்பணம்போற் காட்டலாற் சார்மாயை நீயல்லை
தற்பரமு மல்லை தனி.

பொழிப்புரை :

பொழிப்புரை : எவற்றினையும் அன்றன்றெனவிட்டு ஆன்மா இலதென்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், ஆன்மா இலதென்றலேபற்றி அஃதுண்டெனக் கோடல் முயற்கோடில்லையென்னு மேதுவால் அஃதுண்டெனச் சாதித்தலோடொக்கும் என்னுங்கடாவை யாசங்கித்து அதன்றாற்பரிய முணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். ஆன்மா இலதென்னுஞ் சூனியான்மவாதிகளும் இல்லையென வாளா கூறுதலமையாமையின் உடல்பொறி விடயமனைத்தினையும் முறையானே இஃதான்மாவன்று இஃதான்மாவன்றென ஒரோ வொன்றாகக் கழித்து இவ்வாறாகலின் ஆன்மாவென்பது சூனியமென்று அங்ஙனங் கூறுபவாகலான் அவற்றை ஒரோவொன்றாக விட்டு அங்ஙனங் கூறிக்கொண்டு நிற்பதோ ரறிவுண்மையின் அவ்வறிவே மேல் அவையே தானேயா யென்பதனுள் ஆகமவளவையாற் சாதித்துப் போந்த ஆன்மாவென்றவாறாம். ஈண்டில தென்றலின் ஆன்மாவுளதென மேற்கொண்டது என்றவாறு.
அங்ஙனமறியுமறிவுஞ் சூனியமேயெனின், அஃது என்னையீன்றாள் மலடியென்பதனோ டொக்குமென்றொழிக வென்பது கருத்து. இன்மை ஈண்டுச் சூனியப்பொருட்டு. சூனியமாவது உள்ளதுமன்று இல்லதுமன்று இரண்டுமாவதுமன்று வேறுமன் றெனப்படும் பாழ். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அவ்வறிவை உடல் பொறி விடய முதலியவற்றின் வேறாகப்பிரித்துக் காணுமாறும் அதுவே உயிராமாறுந் தெரித்துணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அனைத்தும் நின்று என்பது உடல் பொறி விடயமுதலிய அனைத்தினும் அதுவது தானாகநின்று ; அன்று அன்று என விட்டு என்பது முறையானே இது நானன்று இது நானன்றென ஒரோவொன்றாகக் கண்டு நீக்கியவழி; அஞ்செழுத்தாய் ஒன்று நின்றுளது என்பது அவ்விடத்து அகரமுதலிய சூக்குமபஞ்சாக்கர ரூபமாயறிந்து வந்ததோரறிவு நிலைபெற்றுளதன்றே; அதுவே நீ என்பது அதுவு நானன்றெனக் கழிப்பின் அங்ஙனங் கழித்தவுணர்வு வேறுண்டெனப்பட்டு மேலும் வரம்பின்றியோடுமாகலிற் சூக்குமபஞ்சாக்கரரூபமாய் நின்றறிந்து வந்த அவ்வறிவு தானே நீயென்பதறிவாயாக; அற்றேல், மாயேயமுஞ் சிவமு முளவென்பது மேலைச்சூத்திரங்களாற் சாதிக்கப்பட்டமையின் அவையே அவ்வறிவினையுமறிந்து நீக்குமென அமையுமாகலான் வரம்பின்றியோடுமா றில்லையாலெனின் ; சார்மாயை என்பது நின்னாற் சாரப்பட்ட மாயை ; அனைத்தும் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலான் நீ அல்லை என்பது நிலமுதலிய காரிய மனைத்துமாய் நின்னொடு விரவி நின்று இப்பெத்தகாலத்துக் கண்ணுக்குக் கண்ணாடிபோல் உனக்கறிவை விளக்கி நிற்றன் மாத்திரையேயன்றி அறிவதன்றாகலான் நீ அம்மாயையல்லை ; தற்பரமும் அல்லை என்பது மாயையான் விளங்கியறியும் நீ அதற்கு அதீதமாகிய சிவமுமல்லை ; தனி என்பது அவற்றின்வேறு எறு. விட்டவழியென்பது விட்டெனத் திரிந்துநின்றது. அவ்வறிவாவது இதுவென்றுணர்த்துவார் அன்றன்றென நின்றனைத்தும் விட்டவழியென ஏதுப்பொருளை அநுவதித்து அஞ்செழுத்தாயென்று நின்றுளதென அடையாளங் கூறினார். அஞ்செழுத்தாய் நின்றியுமாறு வருகின்ற சூத்திரத்துட் பெறப்படும். இதற்குப் பிறரெல்லாங் கூறியது கூறலென்னும் வழுப்பட மேலுமோரியைபின்றி யுரைத்தார். அனைத்துநின்றென்புழி முன்னர்க் கண்ணுருபும் பின்னர் ஆக்கச்சொல்லுந் தந்துரைக்க. ஏகாரந் தேற்றம். தற்பரமென்றது குறிப்பேதுவாய் நின்றபெயர். அனைத்து நின்றின்று தர்ப்பணம்போற் காட்டலால் சார்மாயை நீயல்லை தற்பரமுமல்லை தனியென்றதனானே வருகின்ற அதிகரணங்களுக்கெல்லாந் தோற்றுவாய் செய்தவாறு மாயிற்று.

குறிப்புரை :

ஏது : ஈண்டு இலதென்றலின். மேற்கோள் : ஆன்மாவுள தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், சூனியான்மவாதி, தேகான்மவாதி, இந்திரியான்மவாதி,அந்தக்கரணான்மவாதி, சூக்குமதேகான்மவாதி, பிராணான்மவாதி, விஞ்ஞானான்மவாதி, சமூகான்மவாதி என்னுமெண்மருள் அந்தக்கரணான்மவாதிகள் ஆன்மாவின திலக்கணங்கூறும்வழி அநுவாதமுகத்தான் மறுக்கப்படுதலின் அவரை யொழித்து, ஒழிந்த எழுவர்மதங்களையும் முறையே மறுத்து உயிருண்மை சாதிப்பான்றொடங்கி, அவற்றுள் இது சூனியமேயான்மாவென மாத்துமிகர் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று.இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை :ஈண்டு இவ்வேழதிகரணத்துள் வைத்து இம்முதலதிகரணத்துள்; இலது என்றலின் இஃதான்மாவன்று இஃதான்மாவன்று என்று சொல்லும் பொருளுண்மையான்; ஆன்மா உளது என்றது இதனின்வேறாய் உயிரெனப்படுவ தொன்றுண்டு என்றவாறு.) ஆன்மாவிலதென்றலினென வருவித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 3

எனதென்ற மாட்டி னெனதலா தென்னா
துனதலா துன்கைகால் யாக்கை - எனதென்றும்
என்னறிவ தென்று முரைத்துநீ நிற்றிகாண்
உன்னிலவை வேறாம் உணர்.

பொழிப்புரை :

என்பதி என்மனையென்றாற்போல என்கை என்காலென நிற்பதுளதாகலின் அதுவே அவ்வான்மாவா மென்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், எனதுடலென்பது பிறிதின் கிழமைப்பொருள்படாது தலைமாத்திரையாய் நிற்கு மிராகுவை இராகுவினது தலையென்று வழங்குமாறுபோல அபேதம்பற்றியே வழங்கப்படுமென அமையுமென்னுங் கடாவையாசங்கித்து அதன்றாற்பரிய முணர்த்துதனுதலிற்று. இள். இராகுவினது தலை யென்றாற்போல்வன சிறுபான்மை வழக்கமாகலின் ஆண்டொற்றுமைப்பொருள் கோடலமையும், ஈண்டவ்வாறன்றி என்பதி என்மனைவி என்பொருள் என்று வழங்குமாறுபோல என்கை என்கால் என்கண் என்செவி என்பொறி என்பிராணன் என்னறிவெனப் பல வாற்றானும் பெரும்பாலும் உலகத்து வழங்கக் காண்டலின் இவ்வழக்க மிகுதிப்பாடு பிறிதின் கிழமைப் பொருட்கணன்றி வாராமையான் அங்ஙனங்கூறிக்கொண்டு நிற்கும் பொருள் வேறொன்றுண் டென்பது பெறப்படுதலின் அதுவே மேலுரையளவைப் பற்றிச் சாதித்த ஆன்மா வென்றவாறாம். எனதுடலென்றலின் ஆன்மாவுளதென மேற்கொண்டது என்றவாறு.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், பதி மனைவிமுதலிய பொருள்கள் தம்மின் வேறாதல் கண்டு பிறிதின்கிழமைப்பொருள்பட என தென்றாற்போலன்றிக் கைகான்முதலியவற்றைத் தற்கிழமைப் பொருள்பட எனதென்று கூறிநிற்றலின் அவ்விருவேறு மொழியுந் தம்முளொக்குமாறென்னையென்னுங் கடாவை யாசங்கித்து அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். எனது அலாது என்னாது எனது என்றமாட்டின் என்பது நீ உலோகாயத நூல் கேட்குமுன்னெல்லாம் பதி மனைவிமுதலிய புறப்பொருளையே உயிரெனக்கொண்டு மயங்கிநின்றாயன்றே, அக்காலத்து அவற்றை எனதன்றென வேறுகாணாது தனித்தனி எனதென்றே தற்கிழமைப்பொருளாகக் கூறிக் கொண்டு நின்றாற்போல; உனது அலாது உன்கை கால் யாக்கை எனது என்றும் என் அறிவது என்றும் உரைத்து நீ நிற்றிகாண் என்பது உனதன்றாகிய உன் கைகால் யாக்கைகளைத் தனித்தனி எனதென்றும் அங்ஙனமறிந்த பாசவறிவை என்னறிவதென்றுந் தற்கிழமைப்பொருளாகக் கூறிக்கொண்டு நீ யொருபொருள் வேறு நிற்கின்றாய் காண்; உன்னில் என்பது உலோகாயதநூல் ஆராய்ந்த பின்னர்ப் பதி மனைவி முதலிய பொருள்கள் உனக்கு வேறாதல் கண்டாற்போலக் கைகால் முதலியவற்றினியல்புகளையும் ஏதுக்கண் முதலியவற்றான் ஆராய்ந்து பார்த்தியாயின் ; அவை வேறாம் உணர் என்பது அக்கைகால் முதலியன உனக்கு அன்னியமாம் அதனையறிவாயாக என்றவாறு.
இன் உவமவுருபு. உனதலாதென்பதனைக் கை கால் யாக்கைகளோடு தனித்தனி கூட்டுக.

குறிப்புரை :

ஏது :இனி எனதுடலென்றலின். மேற்கோள் : ஆன்மாவுள தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், அவ்வறிவு உடம்பின் கண்ணன்றி நிகழக் காணாமையானும் நானுணுகினேன் பருத்தேனென உடம்பினையே நானென்று வழங்கக் காண்டலானும் உடம்பே யான்மாவெனத் தேகான்மவாதிகள் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தி னிரண்டாங்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை .
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி என துடலென்றலின் நான் பருத்தேன் சிறுத்தேன் கரியேன் மனிதன் பார்ப்பானென உடம்பின் குணவிசேடங்களை உபசாரத்தால் உயிருக்கேற்றி வழங்கினும் யான்உடம்பு யான்கை யான்கால் என உடம்பை அவ்வாறு வழங்குவாரின்றி எனதென வேற்றுமைப்படவே யாவரும் வழங்கக் காண்டலின் அதனால் ; ஆன்மா உளது என்றது இவ்வுடம்பின் வேறாய் உயிரெனப்படுவ தொன்றுண்டு என்றவாறு.)
நான் பருத்தேன் சிறுத்தேன் கரியேன் மனிதன் பார்ப்பானென உடம்பின் குணவிசேடங்களை உபசாரத்தால் உயிருக்கேற்றி வழங்கினும் யானுடம்பு யான்கை யான்கால்என வுடம்பை அவ்வாறு வழங்குவாரின்றி எனதென வேற்றுமைப்படவே யாவரும் வழங்கக் காண்டலின் அதுவே உயிர்வேறுண்டென்பதனை அறிவுறுக்குமென அவன் வழங்கு முரையேபற்றி அவனை மறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 4

ஒன்றறிந்த தொன்றறியா தாகி உடன்மன்னி
அன்றும் புலனாயவ் வஞ்செழுத்தை - ஒன்றறிதல்
உள்ளதே யாகி லதுநீ தனித்தனிகண்
டுள்ளலவை ஒன்றல்லை ஒர்.

பொழிப்புரை :

ஐம்புலனாகிய சத்தப்பரிசரூபரச கந்தங்களை இந்திரியங்கள்ஒன்றறிந்ததொன்றறியாமையின் இவ்வைந்தினானும் ஐம்பயனு மறிவதுளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், ஐம்புலனறிதலின் ஆன்மா ஐம்பொறியின் வேறெனச் சாதித்தற்கேதுவாமாறு யாங்ஙன மென்னுங் கடாவை யாசங்கித்து அதன்றாற்பரிய முணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : ஐம்புலனாகிய சத்தப் பரிசரூப ரச கந்தங்களை ஐந்து விடயங்களாகிய ஒசை ஊறு ஒளி சுவை நாற்றங்களை ; இந்திரியங்கள் சுரோத்திரம் முதலிய இந்திரியங்களுள்; ஒன்று ஒரு விடயத்தை ; அறிந்தது அறிந்த இந்திரியம் ; ஒன்று மற்றொரு விடயத்தை ; அறியாமையின் அறியாதாதலான் ; இவ்வைந்தினாலும் இவ்வைந்து இந்திரியங்களாலும் ; ஐம்பயனும் ஐம்புலன்களையும் ; அறிவது உளதாகலின் அறியும்பொருள் உண்டாதலான் ; அதுவே அவ்வாறறியும்பொருளே ; அன்வான்மாவாம் மேல் உரையளவைபற்றிச் சாதித்த ஆன்மா என்றவாறாம் ; என்றது ஐம்புலனறிதலின் ஆன்மா வுளதென மேற்கொண்டது என்றவாறு.)
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இந்திரியங்கள் ஒன்றறிந்த தொன்றறியா தென்றதொக்கும் ஐந்துமைந்துயிரெனக் கோடலின் அதனானெமக் காவதோரிழுக்கில்லை ; இனி இவ்வைந்தையுங் கொண்டு ஐம்புலனையும் ஒரு பொருளே யறியுமெனின் அதற்குப் பிரமாணங்கண்டிலம்; குடத்தைக் கண்ட யானே அதனைத் தீண்டினேனென மறித்துணர்வு நிகழ்தல் ஐந்துமோருடம்பின்கண்ணே நிலைபெறு மொற்றுமைபற்றி யமையுமெனக் கோடுமென்னுங் கடாவை யாசங்கித்து அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். உடல் மன்னி ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி என்பது உடம்பின்கண்ணே நிலைபெற்று ஒரு விடயத்தையறிந்த இந்திரியம் மற்றொரு விடயத்தை அறியாதாய்; அன்றும் புலன் ஆய் அவ்வஞ்செழுத்தை என்பது அங்ஙனந் தம்முண்மாறுபடுஞ் சத்தமுதலிய புலன்களைச் சூக்குமபஞ்சாக்கரத்தாற் செலுத்தப்பட்டாராய்ந் தறிகின்ற அவ்வைம்பொறிகளின் றொழிற்பாட்டை; அறிதல் ஒன்று உள்ளதேயாகில் என்பது கண் உருவத்தையறிவது செவி ஒசையையறிவதென்று இவ்வாறுணர்தலை யுடையதோர் பொருள் இல்லதோ உள்ளதோவென வினாயினார்க்கு இல்லதெனின் அவ்வறிவு நிகழாதாதல் வேண்டுமாகலான் உள்ளதேயாமெனின்அது நீ என்பது அவ்வாறுணர்வது யாது அதுவே நீயாகிய ஆன்மா அவ்வாறுணர்வனவும் அவ்விந்திரியங்களேயென்றாற் படுமிழுக்கென்னையெனின்; அவை தனித்தனி கண்டு உள்ளல் என்பது அவ்விந்திரியங்கள் தத்தம்விடயங்களை வேறுவேறு கண்டறிதன் மாத்திரையேயன்றி இத்தொழிற்பாட்டை யுடையேம் யாமெனவும் அறியமாட்டாவாகலான் ; ஒன்று அல்லை ஒர் என்பது அவ்வைந்தின் றொழிப்பாட்டையுமறிந்து அவற்றின் வரும் பயன் கொள்வதாய நீ யவற்றின் வேறாவை அதனையாராய்ந் தறிவாயாக என்றவாறு.
ஆகியென்னுஞ் சிறப்புவினை ஆயென்னும் பொதுவினையோடு முடிந்தது ; இவனுமிவளுஞ் சிற்றிலிழைத்துஞ் சிறுபறை யறைந்தும் விளையாடுப என்றாற்போல. ஆயென்பது வினைத்தொகை. அவ்வஞ்செழுத் தென்க. அஞ்செழுத்தாற் செலுத்தப்பட்ட பொறியை ஆகுபெயரான் அஞ்செழுத்தென்றார். அஃதிருமடியாகு பெயராய் ஐம்பொறியின் றொழிற்பாட்டை யுணர்த்திநின்றது உள்ளல் உள்ளலானென்க. இம்மூன்றதி கரணங்களானுஞ் சாக்கிரத்தி னிகழுமியல்பு பற்றி ஆன்மாவினுண்மை சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :

இனி ஐம்புலனொடுக்க மறிதலினென்றது ஐம்புலனறிதலின் ஒடுக்கமறிதலி னென்றுணரற்பாற்று.
ஏது : இனி ஐம்புலனறிதலின் மேற்கோள் : ஆன்மாவுள தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், ஐம்பொறிகள் ஐம்புலன்களை யறியுமென்றல் எல்லார்க்குமொப்ப முடிந்தமையின் அவை உடல் போற் சடமன்மை பெறப்படுதலானும், அவற்றை எனதென்னும் வழக்கம் பெரும்பான்மையன்றாகலானும், அவையே உயிராதலமையு மென இந்திரியான்மவாதிகள் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் மூன்றாங்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி ஐம்புலன் அறிதலின் ஐம்புலன்களையும் அறிதலான்; ஆன்மா உளது என்றது இவ்விந்திரியங்களின் வேறாய் உயிரெனப்படுவதொன்றுண்டு என்றவாறு.)

பண் :

பாடல் எண் : 5

அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்பச்
செவ்விதின் அவ்வுடலிற் சென்றடங்கி - அவ்வுடலின்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை
மாறலுடல் நீயல்லை மற்று.

பொழிப்புரை :

நனவின்கட் கனவுகண்டா மென்றுங் கண்டிலமென்றும் நிற்பதுளதாகலின் அதுவே யவ்வான்மாவா மென்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், சொப்பனத்தி னிகழ்ந்தவற்றை யறிவதுஞ் சூக்குமதேகமேயாகலின் இது சித்தசாதனமாமா லென்னுங்கடாவை யாசங்கித்து அதன்றாற்பரிய முணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : கனவு சொப்பனத்தினை ; கண்டாம் என்றும் காணப்பெற்றேம் என்றும் ; கண்டிலம் என்றும் காணப் பெற்றிலேம் என்றும் ; நனவின்கண் சாக்கிரத்தின்கண் ; நிற்பது உளதாகலின் மயங்கியறியும் பொருள் உண்டாதலான்; அதுவே அவ்வாறு மயங்கியறியும் பொருளே ; அவ்வான்மாவாம் மேல் உரையளவை பற்றிச் சாதித்த ஆன்மா என்றவாறாம் ; என்றது ஒடுக்க மறிதலின் ஆன்மாவுளதென மேற்கொண்டது என்றவாறு.)
இஃதென்சொல்லியவாறோ வெனின் ஒடுக்கமறிதலின் என்றது ஒடுக்கத்தினிகழ்ந்தவற்றை நனவின்கண் மயங்கியறிதலென்னும் பொருட்டாதலாற் சித்தசாதனமாதல் யாண்டைய தென விடுத்தவாறென்பது. கனவு கண்ட சூக்குமவுடம்பே நனவின் கண் அதனை யறியுமாயிற் கண்டபடி யறியாது மயங்கியறிதல் கூடாமையின் உயிர்க்காயின் அதுபோல் ஒரு தன்மைத்தாகலின்றி அகத்துச் சேறலும் புறத்துச் சேறலும் வேறுபாடுடைமையான் அதுபற்றி மயங்கியறிதல் கூடுமாகலின் அங்ஙனமறியு முயிர் வேறுண்டென்பது கண்டுகொள்க.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், கனவின்கட் செல்லுமாறும் ஆண்டு நிகழுமாறும் மீளவருமாறுமுணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் அவ்வுடலின் நின்று உயிர்ப்ப ஐம்பொறிகள் தாம் கிடப்ப என்பது மேல் உயிரன்றெனக் இச்சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்துள் கூறிப்போந்த தூலவுடம்பினின்று உயிர்ப்பனவாய ஐம்பொறிகள் ஆண்டே உயிர்ப்பொழிந்து கிடப்ப ; அடங்கி அவ்வுடலில் செவ்விதின் சென்று என்பது அவை யங்ஙனங்கிடந்தவழிப்புறத்து நிகழுந் தொழிற்பாடெல்லாமடங்கி அவ்வுடம்பினுள்ளால் வருத்தமின்றிச் சென்று; அவ்வுடலின் வேறு ஒன்று கொண்டு விளையாடி என்பது. அத்தூலவுடம்பு போல அதனின் வேறாயதொருடம்பை யெடுத்துக் கொண்டு வேறோராற்றாற்கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று விளையாடி; மீண்டு அதனை மாறல் என்பது மீளவதனை மாறிமேற் சேறலான் ; நீ உடல் அல்லை மற்று என்பது நீ அச்சூக்கும தேகமல்லை அதனின் வேறாவை என்றவாறு.
உயிர்ப்பவென்றது அன் பெறாத அகரவீற்றுப் பல வறிசொல். உயிர்த்தல் தொழிற்படுதல். தாமும் மற்றும் அசை. மீண்டு மீள. மாறல் மாறலானென்க.
இவ்வதிகரணத்தாற் சொப்பனத்தினிகழு மியல்புபற்றி உயிருண்மை சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :

ஏது : இனி ஒடுக்க மறிதலின். மேற்கோள் : ஆன்மாவுள தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், சிவஞானசித்தி, 264 \"நேசவிந் திரியங் கட்கு நிகழறிவிதனாற் காண்டும்” என நீவிருங் கோடலின் அவ்விந்திரியங்களின் வேறாய் அங்ஙனமறிவது புரியட்டக வுடம்பேயாமென அமையும் அது புறத்து நிகழாதாயினும் அகத்தே நின்று இந்திரியங்களைப் புறத்திற் செலுத்தி யறியுமெனக் கோடுமெனச் சூக்கும தேகான்மவாதிகள் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தினாலாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற் கோடனுதலிற்று. இதன் பொருள். ஐம்பொறிகளு மொடுங்கின சொப்பனத்தானத்தின் நிகழ்ந்தவற்றை யறிதலின் ஆன்மா வேறுண்டு என்றவாறு.ஒடுக்கம் ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 6

கண்டறியு மிவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே
உண்டி வினையின்றி யுயிர்த்தலாற் - கண்டறியும்
உள்ளம்வே றுண்டா யொடுங்கா துடனண்ணில்
உள்ளதா முண்டிவினை யூன்.

பொழிப்புரை :

ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருதிக்கின்மையின் ஒடுங்காதவிடத்து இன்பத்துன்பஞ் சீவியாநிற்பதுளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், கண்படை கொண்டவழி உண்டி வினையில்லையென்றது உடற்கோ பிராணவாயுவுக்கோவென வினாயினார்க்கு உடம்பு உயிரன்மையான் அதற்கவை யில்லாமை பற்றி ஈண்டைக்காவதோரிழுக்கில்லை. இனிப் பிராணவாயுவுக்கென்னின் அது துயின்றெழுந்த பின்னர்ச் சுகமாகத் துயின்றேனென்றறிதல் பிறிதோராற்றாற் பெறப்படாதென்னும் அருத்தாபத்தியான் ஆண்டும் இன்பநுகாச்சி யுண்டென்பது பெற்றாம். விழித்துழிப் போல உறங்குழியும் பிராணவாயு இயங்குதலான் வினையுண்மையுங் கண்டாமாகலின் அதற்கு அவை யாண்டில்லை யென்றல் மாறுகோள்போலுமென்னுங் கடாவை யாசங்கித்து அதன்றாற்பரிய முணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். ஈண்டு உண்டி யென்றது விடயங்களினிடமாக வரும் இன்பத்துன்ப நுகர்ச்சியை; வினை யென்றது உடம்பு சேட்டித்தலையாகலின். இவ்விரண்டும் பிராணவாயுவை யொழித்தொழிந்த கருவிகளெல்லாமொடுங்கிய துயிலிடத்து அஃதியங்காநிற்பவும் உடம்பின்கண்ணே நிகழ்தலின்மையின் அவை யொடுங்காத நனவினிடத்து அவையிரண்டும் அதன்கணிகழ்தலுண்மையின் அவ்வின்மை யுண்மைகட்கேதுவாகக் கருவிகளை யொடுக்கியும் ஒடுக்காது நிற்பதியாது அதுவே அவ்வான்மாவென்றவாறாம். கண்படில் உண்டி வினையின்மையின் ஆன்மாவுளதென மேற்கொண்டது என்றவாறு.
பிராணவாயுவை யொழித்தொழிந்த கருவிகளென்பது ஆற்றலான் வந்தது. இன்பத்துன்ப நுகர்ச்சியை இன்பத்துன்பமென்றுபசரித்தார். சீவனம் சீவித்தல். சேட்டித்தலென்றதாம்.செவ்வெண்டொகை விகாரத்தாற்றொக்கது. சீவியாநிற்பதென்பது சீவியாநிற்றலென்னுந் தொழிற்பெயர் மாத்திரையாய் நின்றது. திருக்குறள் 339 \"உறங்குவதுபோலும்’’ என்புழிப்போல. உளதென்றது தனித்தனி சென்றியையும். துயின்றுழியும் விழித்துழியுந் திரிபின்றி ஒருதன்மைத்தாதல்பற்றி உடம்பு பிரகிருதியெனப்பட்டது. பிரகிருதிக்கென்றது உருபுமயக்கம். இரண்டுகாலத்து மொப்ப இயங்கு கிருதிக்கென்றது உருபுமயக்கம். இரண்டுகாலத்துமொப்ப இயங்குதல்பற்றிப் பிராணவாயுவைப் பிரகிருதியெனக்கொண்டு அதற்கவையின்மையினென்றுரைப்பாரும், பிரகிருதிவிகாரமாகிய சித்தத்திற்கு அவையின்மையினெனவுரைத்துச் சுழுத்தியின்கண்ணுந் தொழிற்படுவதாய சித்தமேயுயிரென்னுஞ் சித்தான்ம வாதிகளை மறுத்தற்கெழுந்த திவ்வதிகரணமென் றுரைப்பாரு முளர்.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், துயிலிடத்துக் கருவிகளெல்லா மொடுங்குதலின் இன்பத்துன்ப நுகர்ச்சியுஞ் சேட்டையும் பிரகிரு திக்கில்லையாயினவாகலான் அதுபற்றிப் பிராணவாயுவை யான்மா வென்றற் கிழுக்கென்னை யென்னுங்கடாவை யாசங்கித்து அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். கண்டு அறியும் இவ்வுடலே என்பது கண்டறிதற்கு நிலைக்களமான இவ்வுடம்பின் கண்ணே ; காட்டுக் காணாதே ஒடுங்க என்பது காட்டாய கருவிகள் தொழிற்படாதே யொடுங்கவும் ; உண்டி வினை இன்றி என்பது அவை யொடுங்கியவழி உண்டியும் வினையும் பிரகிருதிக்கில்லையாகவும் ; உயிர்த்தலான் என்பது பிராணவாயு நிலைபெற்று இயங்குதலான் ; கண்டு அறியும் உள்ளம் வேறு உண்டு என்பது கண்டறியு முரிமையையுடைய உயிர் பிராணவாயுவின் வேறாயுண்டு ; ஒடுங்காது உடல் நண்ணில் ஊன் உண்டி வினை உள்ளதாம் என்பது அவ்வுயி ரொடுங்காது அவ்வுடலின்கணெய்திற்றாயின் அவ்வுடம்பு கருவிகளின் றொழிற்பாட்டானாய உண்டியும் வினையுமுடைத்தாம் ; ஆய் என்பது அதனையாராய்ந்தறிவாயாக என்றவாறு.
இது அருத்தாபத்தியளவை. கண்டறிதல் ஒருபொருட் பன்மொழி. இன்றியென்னும் வினைக்குறிப்புச் செயவெனெச்சத்திரிபு. சிறப்பும்மைகள் தொக்கன. அவை சிவஞானசித்தி, 34 \"அறிந்திடா துடலுறக்கத் தறிவின்மை கரண மின்மை யறிந்திடு முதலியாகினது நிற்கக் கரணம் போகா’’ என்னும் பொருள் விளைத்து நின்றன. ஊன் ஆகுபெயர். உயிர் வேறுண்டென்றதனை வலியுறுத்துவார் உடம்பாட்டு முகத்தானும் ஒதினார்.
இவ்வதிகரணத்தானே சுழுத்தி துரியங்களினிகழு மியல்புபற்றி உயிருண்மை சாதிக்கப்பட்டது. இதுகாறுஞ் சார்மாயை நீயல்லை யென்றதனை வலியுறுத்தியவாறு.

குறிப்புரை :

ஏது : இனிக் கண் படில் உண்டிவினையின்மையின். மேற்கோள் : ஆன்மாவுள தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், சொப்பனத் தானமாத்திரையினன்றித் தொழிற்படாத சூக்குமதேகம் போலன்றிச் சுழுத்தி துரியங்களினுந் தொழிற்படுவதாய பிராணவாயுவே அடங்குதல் விடுதல் செய்தறிவதாகிய ஆன்மாவாதலமையுமெனப் பிராணான்மவாதிகள் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் ஐந்தாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனிக்கண்படில் துயிலிடத்து; உண்டி விடயங்களிடமாக வரும் இன்பத்துன்ப நுகர்ச்சியும் ; வினை உடம்பு சேட்டித்தலும் ; இன்மையின் இல்லாமையால்; ஆன்மா உளது என்றது இப்பிராண வாயுவின் வேறாய் ஆன்மா உண்டு என்றவாறு.)
உண்டிவினை உம்மைத்தொகை. அஃது சிவஞானசித்தி, 4-30 \"உண்டியும் வினையு மின்றிக் கிடந்து” என வழி நூலாசிரியர் கூறியவாற்றானுமுணர்க.

பண் :

பாடல் எண் : 7

அறிந்தும் அறிவதே யாயு மறியா
தறிந்ததையும் விட்டங் கடங்கி - அறிந்த
தெதுஅறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்
அதுவதுதான் என்னும் அகம்.

பொழிப்புரை :

பொழிப்புரை : அவனறிந்தாங் கறிவனென் றறிவிக்கவறிந்து உபதேசியாய் நிற்பதுளதாகலின் அதுவே யவ்வான்மாவாமென்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், அறிந்தாங்கறிவதாகிய பிரமப் பொருள் அவிச்சைக்காலத்துக் கருவிகளோடுங் கூடியன்றி யறியா தெனக்கோடுமாகலின் அதுபற்றி உயிர்வேறுண்டென்றல் பொருந்தாதென்னுங் கடாவை யாசங்கித்து சூஅவ்வளவினவன்மகிழுக’ வென்னு நியாயத்தால் வேறுமதன் றாற்பரிய முணர்த்துதனுதலிற்று இள் கருவிகளோடு கூடிய வழியும் தன்னியல்புணருமாறில்லாத ஆன்மாவைப்போல அம்முதல்வன் மறந்து மறந்தறி தலின்றி அறிந்தவாறேயறிந்து நிற்கும் பேரறிவுடையனென வேதாகமங்களா னறிவிக்க அறிந்து குரவனறிவுறுக்கு முபதேசமொழியைப் பெற்றுடையதாய் நிற்பதொன்றுள தாகலின் அதுவே மேலுரையளவையாற் சாதித்துப் போந்த ஆன்மா என்றவாறாம். உணர்த்தவுணர்தலின் ஆன்மாவுளதென மேற்கொண்டது என்றவாறு.
அறிந்தாங்கென்பது அப்பொருட்டாதல் திருக்குறள் 666 \"எண்ணிய வெண்ணியாங் கெய்துப” என்பதனானுமறிக. இதற்குப் பிறவாறு முரைப்ப. அவையெல்லாம் பொருந்தாமை யோர்ந்துணர்க.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், கருவிகளோடு கூடியவழியும் அவிச்சை நீங்காமையின் விடயங்கண் மாத்திரையே யறியுமன்றித் தன்னியல்பறியுமாறில்லை. அஃதுபதேசத்தா லறியற்பாலதே யாமாகலான் அதுபற்றி இழுக்கென்னையென்னுங் கடாவை யாசங்கித்து அதனையும் மேற்கூறிய நியாயத்தானுடம்பட்டு இன்னுமொரு தாற்பரிய முரைக்கு முகத்தானே விடயங்களை யறிவழியும்படும் வேறுபாடுகூறி அதனை வலியுறுத்துதனுதலிற்று. அவனறிந்தாங் கறியுமாறும் உயிர் மறந்துமறந் தறியுமாறும் தெரித்துணர்த்தி வலியுறுத்துதனுதலிற்று எனினுமமையும். இதன் பொருள். அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது என்பது கருவிகளெல்லாவற்றோடுங் கூடிச் சாக்கிரத்தானத்தினின்று விடயங்களை யறியுமிடத்தும் ஒருங்கே யறிய மாட்டாது ஒன்றனையேயறிந்தும் ஒன்றனை யறியப்புகுவதாயும் முன்னறிந்த தொன்றனை அறியாதொழிந்தும் ; அறிந்தையும்விட்டு அங்கு அடங்கி என்பது இங்ஙனமொரோவொன்றாக அறியப்பட்ட விடயத்தையும் இடையீடின்றி அறியமாட்டாது விட்டுவிட்டாங்கே ஐந்தவத்தைப்பட்டடங்கி ; அறிந்தது எது என்பது மீளவறிந்து வருதல் கண்கூடாகக் காணப்படுதலான் அங்ஙன மறிந்துவந்த பொருள் யாது? அது சடமன்றென்பது இச்சூத்திரத்து 2ம் அதிகரணத்தில் மேற்காட்டப்பட்டது பின்னருங் நான்காஞ் சூத்திரத்தில் காட்டப்படும் ; அறிவும் அன்று என்பது ஒன்றாக இயல்பாக வுணர்தலே பேரறிவாகலின் அதுவுமன்றாம் ; மெய் கண்டான் ஒன்றின் என்பது இனி மெய்யாகிய சித்தாந்த நெறியினை யுணர்ந்தோன் வேறென்னையோவென மனமொருங்கியாராயு மாயின் ; அது அது தான் என்னும் அகம் ஆகும் என்பது காட்டு மொளிக்கு வேறாய கண்ணொளிபோல அவ்வறிவிற்கு வேறாய் அதுவதுவே தானெனச் சார்ந்ததன் வண்ணமாய் நின்றறியுமியல்பையுடைய உயிராம் என்றவாறு.
அறிந்தும் அறிவதேயாயும் என்னும் உம்மைகள் எண்ணின்கண் வந்தன. அறியாதுமென்னு மெண்ணும்மை விகாரத்தாற் றொக்கது. அறிந்ததையுமென்னுமும்மை இழிவுசிறப்பு. அறிவுமென்னுமும்மை இறந்தது தழீஇயது. ஏகாரம் அசைநிலை. அங்கு உணர்த்துமுறைமைத் தானமாகிய இலாடத்தினென்றவாறு. அறிந்ததையும் விட்டங்கடங்கி யறியுமாறு வருகின்ற சூத்திரத்திறுதியினும், அதுவதுதானெனச் சார்ந்ததன் வண்ணமாமாறு உண்மையதிகாரத்தும் ஏழாம் சூத்திரத்துள் பெறப்படும். அறிந்து மறிவதேயாயும் அறியாதறிந்ததையும் விட்டங்கடங்கி யறிந்ததெது என்பதற்கு ஒதியதனை ஒதியபொழுதே யுணர்ந்தும் பலகாலோதி யுணர்வதாயும் பலகாலோதியு முணர்தலின்றியும் உணர்ந்ததனையும் பின்னர் மறந்தொழிந்தும் இவ்வாறோதி யுணர்ந்ததியாதென் றுரைத்தலுமொன்று. இப்பொருட்கு அடங்கி யென்புழியும் எண்ணும்மை விரித்துரைக்க.
இங்ஙனம் மூவகைப்படுத் துரைப்பவே, உணர்த்த வுணர்த லென்னுமேதுவான் முறையே அதீதத்தின்கணிகழு மியல்புபற்றியும் சுத்தத்தின்கணிகழு மியல்புபற்றியும் உணர்த்து முறைமைக் கணிகழு மியல்புபற்றியும் உயிருண்மை சாதிக்கப்பட்டது. இது தற்பரமுமல்லை என்றதனை வலியுறுத்தியவாறு காண்க. விஞ்ஞானமே ஆன்மாவென்னும் புத்தரின் யோகாசாரன் மதத்தை மறுத்தற் கெழுந்தது இவ்வதிகரணமெனக் கொண்டு அதற்கியைய வுரைப்பாருமுளர்.

குறிப்புரை :

ஏது : இனி உணர்த்தவுணர்தலின். மேற்கோள் : அன்மாவுளது என்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், பிரமப்பொருள் மேற்கூறிப்போந்த சடப்பொருள்கள்போலன்றிச் சித்தாகலான் அதுவே உயிராதலமையுமென விஞ்ஞானான்மவாதிகள் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தினாறாங்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள். தொழிற்படுங் கருவிகளொள்று மின்றிக் கேவலமாய் அதீதாவத்தையினின்றுழி அறியுமாறின்றிப் பின்னர்க் கலைமுதலிய கருவிகளால் அறிவிக்கவறிந்து வருதலுண்மையின் எக்காலத்துந் திரிபின்றி யறிந்தாங்கறிந்து நிற்குஞ் சித்தாகிய பிரமத்திற்கு இதுதகாமையான் அங்ஙன முணருமான்மா வேறுண்டு. என்றவாறு.
உணர்த்தவுணர்தலெனவே முன்னுணராது கிடத்தல்பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 8

கலையாதி மண்ணந்தங் காணில் அவை மாயை
நிலையாவாந் தீபமே போல - அலையாமல்
ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் அதுதனுவாம்
தான்அத்தின் வேறாகும் தான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அவை தனித்தனி வெவ்வேறு பெயர்பெறினுந் தொக்க சமுதாயத்தின்கண் ஆன்மாவெனப் பெயர் பெறுமெனக் கோடுமாகலின் அதுபற்றி யிழுக்கென்னையென்னுங் கடாவை யாசங்கித்து அவை வெவ்வேறு பெயர்பெறும் வழியும் அவர் கூறியவாறு பெயர்பெறாது வேறுபெயர் பெறுமாறும் அவை மாயாகாரியங்களேயாமாறும் அவை தொக்க சமுதாயத்தினும் ஆன்மாவெனப் பெயர்பெறாது வேறுபெயர் பெறுமாறுமுணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். காணின் கலை ஆதி மண் அந்தம் என்பது அங்ஙனஞ் சமுதாயமாதற்குரியவை யாவையென்று அளவைகளானறியப்புகிற் கலைமுதனிலமீறாகிய தத்துவங்களேயாம் ; அவை மாயை நிலையாவாம் என்பது அவையனைத்தும் மாயையின் காரியங்களாகலின் நிலையுதலின்றிச் சிலகால நின்றழிவனவாம் ; ஞானத்தை அலையாமல் முன் உணர்ந்து நாடில் என்பது அவை தொக்க சமுதாயத்தின் விளங்கித்தோன்றுவதாய ஞானத்தினியல்பை அசையாமற் கருத்தை யொருக்கி முன்னுணர்ந்து பின் அச்சமுதாயத்தை யாதென்றாராயின் ; அது தீபமேபோலத் தனுவாம் எது அச்சமுதாயங் கண்ணுக்கு விளக்குப்போல உயிர்க்குத் தூலசூக்குமபரங்களாகிய உடம்பாம் ; தான் அத்தின் வேறு ஆகும் தான் என்பது ஆதலாற் கண் விளக்கின் வேறாயினாற்போல உயிர் அவ்வுடம்பின்வேறாம் என்றவாறு. ஆமென்பது மேலுஞ்சென்றியையும். மாயை ஆகுபெயர். தானென்பது முன்னையதெழுவாய் ; பின்னையது அசை. அதனி னென்பது அத்தினென மரீஇயிற்று. திருவாசகம், அதிசயப்பத்து 7 \"இத்தை மெய்யெனக்கருதி’’ என்புழிப்போல. இதனானே தனியென்றதனை வலியுறுத்தவாறு.
இவ்வாறு மூன்று சூத்திரத்தானும் சைவாகமங்களுட் கூறப்படும் பதிமுதலிய பொருள்களதுண்மை அனுமானவளவையான் வலியுறுத்தப்பட்டது. ஆகமவளவையே யமையுமாகலின் அனுமானவளவை மிகையாம்போலுமெனின், ஆகாது: மந்தவுணர்வுடைய மாணாக்கர்க்கு வேற்றுச் சமய நூல்களை நோக்கியவழிச் சைவாகமப்பொருளின் மலைவு நிகழாமைப்பொருட்டும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டையென்னும் நான்குவகையானன்றி ஆக மங்களைக்கேட்ட துணையானே அநுபவங் கூடாமையிற் சிந்தனை செய்து வன்மை மென்மைகளை யுணர்ந்து தெளிந்துகோடற் பொருட்டும் கருதலளவையும் வேண்டப்படுமாகலானென்க.

குறிப்புரை :

மேற்கோள் : இனி மாயாவியந்திர தனுவினுள் ஆன்மாவுள தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், உடம்பு முதலியவற்றுள் ஒரோ வொன்றே ஆன்மாவாதலின்றென்றதொக்கும், அவற்றுள் ஒன்று குறைந்தவழியும் அறிவு நிகழாமையானும் எல்லாங்கூடியவழி அது நிகழ்தலானும் அனைத்துங் கூடிய சமுதாயமே உயிராதலமையு மெனச் சமூகான்மவாதிகளாகிய சௌத்திராந்திகர் வைபாடிகர் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தி னிறுதிக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள். மாயா காரியங்களான் யாக்கப்பட்டியன்ற சூத்திரப்பாவைபோலு முடம்பின் கண்ணே அவற்றிற்கு வேறாய் ஆன்மாவுண்டு என்றவாறு.
எனவே அவையெல்லாம் மாயையின் காரியங்களாய் நிலை பெறாதனவாகலின் நிலைபேறுடைய உயிராகாவென்றவாறாயிற்று. மாயை ஆகுபெயர். இகரம் விரித்தல்விகாரம்.
ஏது : அவைதாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், சித்தமுஞ் சித்தப்பகுதியுமாகிய அகச்சமுதாயமைந்தும் மாயாகாரியமென்பது எம்மனோர்க்கு உடம் பாடன்மையின் அதுபற்றி ஆன்மா வேறுண்டெனச் சாதித்தலமையு மாறென்னையெனுங் கடாவை யாசங்கித்து சூஅவ்வளவினவன்மகிழுக’ என்னு நியாயம்பற்றி வேறுமோராற்றாற் சாதித்தனுதலிற்று. இள், நீ ஐந்துகந்தமெனக் கொண்ட மாயா காரியங்கள் ஆன்மா வெனப் பெயர்பெறுமாறின்றி வேறுவேறு பெயர்பெற்று நிற்பனவாகலான் மாயாவியந்திர தனுவினுள் ஆன்மாவுளதென மேற் கொண்டது என்றவாறு. வேறுவேறு என்பது வெவ்வேறென மரீஇயிற்று.

பண் :

பாடல் எண் : 1

அந்தக் கரண மவற்றினொன் றன்றவை
சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா
தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவுமது, என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துத னுதலிற்று. இதன் பொருள். பிரமாணம் இலக்கணமிரண்டானும் பொருளுண்மை பெறற்பாற்றென்னு முறைமைபற்றி மேற்பிரமாணத்தாற் பெறுவிக்கப்பட்ட பதி பாச பசுக்களுக்கிலக்கணம் எதிர் நிரனிறையாக வைத்துக் கூறுவான்றொடங்கி அவற்றுள் இது மேலடுக்க நின்ற ஆன்மாவினிலக்கணங் கூறுதனுதலிற்று.
சொற்பல்காமைப் பொருட்டும் ஓத்து வேறாயவழியும் இயை புடைமை யுணர்ந்து கோடற்பொருட்டும் ஈண்டு இதுவுமதுவென மாட்டெறிந்துரைத்த ஆசிரியர், இங்ஙனமுரைத்துக் கோடற் கேற்பவன்றே ஆண்டு ஆன்மாவின துண்மை யுணர்த்துதனுதலிற் றெனச் சிறந்தெடுத்தோதாது பொதுப்பட ஆன்மப்பிரகாச முணர்த்துதனுதலிற்றென்றதூஉமென்க. இவ்வாறன்றி மேலைச் சூத்திரத்தின் ஆன்மாவினதுண்மை கூறுமுகத்தாற் றொகுத்தோதிய அஞ்சவத்தை ஈண்டிலக்கணங் கூறுமுகத்தான் விரித்தோதப்படுதலின், இதுவுமதுவென்றது மேலைச்சூத்திரப் பொருளோடு மாட்டெறிந்த தென்றுரைப்பினுமாம். இதனானுஞ் சூத்திரவியைபு இனிது விளங்கும்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு: ஆன்மா அந்தக்கரணங்களாகிய மனம் புத்தி அகங்காரஞ் சித்தமென்னு நான்கனுள் ஒன்றன்றாயினும் நுண்ணுணர்வின்மையிற் சூழ்ச்சித் துணைவராகிய அமைச்சரோடு கூடி நின்று தன்றொழினடாத்தும் அரசன்போல, சகசமலத்தினான் உணர்வின்றிக் கஞ்சுகம்போலுங் கலாதிகளாற் பொதுவகையான் உணர்வு நிகழினுஞ் சிறப்பு வகையான் நிகழுமாறு அவற்றாற் பெறப்படாமையிற் சிறப்புவகையானுணருமாறு தனக்குச் சூழ்ச்சித் துணையாகிய அவ்வந்தக்கரணங்களோடு கூடி நின்று சாக்கிர முதலிய ஐந்தவத்தையுடைத்தாம் என்றவாறு. எனவே, அங்ஙனநின்று அஞ்சவத்தைப்படுதல் ஆன்மாவுக் கிலக்கணமென்றவாறாயிற்று. இஃது உயிர்க்குத் தடத்தலக்கண மெனப்படும் பொதுவியல்பு.
ஒன்றன்றாயினும் சகசமலத்து உணராது அமைச்சரசேய்ப்ப அவற்றொடு சந்தித்தது நின்று அஞ்சவத்தைத் தாமென வியையும். உணராது சந்தித்ததென்பது காரணகாரியப் பொருட்டாய் நின்றது. சந்தித்தது வினையெச்சமுற்று. இவ்வாறன்றி, ஆன்மா அவற்றினொன்றன்றாயினும் சகசமலத்துணராமையால் அவற்றொடு சந்தித்தது சந்தித்தவழி அவையுந்தானும் அமைச்சரசேய்ப்ப நிற்றலான் ஐந்தவத்தைத்தாயிற்று என அதிகரணம் பகுத்துக்கோடற்கேற்ப வேறு வேறு வினைமுடிபு செய்துரைத்தலுமொன்று. வடமொழிச் சூத்திரத்தோதுதலின் ஈண்டும் ஆயினுமென வருவித்து ஒரு தொடராக வைத்துரைக்க. அந்தக்கரணமவற்றினொன்றன்றாயினுமெனவே, அவற்றினொன்றன்றாதலும் அநுவாதமுகத்தால் ஈண்டேபெற்றாம். இஃதுணராதார் அந்தக்கரணமவற்றினொன்றன் றென்றதனை வேறு தொடராக வைத்துரைப்ப. அங்ஙன முரைப்பின், முன் வருவனவற்றை அவாய்நின்று ஒரு பொருண்மேல் வாராமையின் ஒரு சூத்திரமாதற் கேலாமையறிக. அவை சந்தித்ததென்புழி ஒடுவுருபு விகாரத்தாற்றொக்கது; இரண்டாவது விரிப்பினுமமையும். ஆன்மாவென்பது மேலைச்சூத்திரத்தினின்றும் வருவித்துரைக்கற் பாலதாகவும், ஈண்டு வேறோதியது ஓத்து வேறாதல் பற்றியென்றுணர்க. ஆன்மாவென்னுஞ் சொற்குப் பொருள் வியாபகமென்பதூஉம் சித்தசித்தென்பதூஉமாம். மலத்து மலத்தாலென விரிக்க. அமைச்சரசு அமைச்சரோடு கூடிய அரசென உருபும் பொருளும் உடன்றொக்கன. காரணப்பொருட்டாய நின்றென்னும் வினையெச்சம் அஞ்சவத்தைத்தென்னும் வினைக் குறிப்பு முற்றோடு முடிந்தது.
இதனுள் அந்தக்கரணமவற்றி னொன்றன்றென்றது ஓரதிகரணம்; ஒன்றன்றாயினுஞ் சகசமலத்துணரா தமைச்சரசேய்ப்ப அவை சந்தித்ததென்றது ஓரதிகரணம் : அமைச்சரசேய்ப்பநின் றஞ்சவத் தைத்தேயென்றது ஓரதிகரணம்; ஆக மூன்றதிகரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

மனமாதி யாலுணர்தல் மன்னு புலன்கள்
மனமாதி மன்புலனின் அல்லன் - மனமேல்
உதித்தொன்றை உள்ளம் உணர்தல் அதனின்
உதிக்குங் கடற்றிரையை ஒத்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அவ்வந்தக்கரணங்கள் தம்மிற் கீழுள்ளவற்றை நோக்கிச் சித்தாமாறும் தம்மின் மேலுள்ளவற்றை நோக்கியுந் தம்மைநோக்கியும் அசித்தாமாறுந் தெரித்துணர்த்தி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள் என்பது மனமுதலிய அந்தக்கரணங்களா லுணரப் படுவன ஐம்பொறிகளாற்றரப் பட்டுப் புறத்தே நிலைபெற்ற விடயங்களாம் ; உள்ளம் உணர்தல் மனம் மேல் உதித்த ஒன்றை என்பது ஆன்மா வுணர்வது மனத்துக்கு மேலெனப்படும் புத்தியிற்றோன்றிய தொன்றனையாம் ; கடற்றிரையை ஒத்து உதிக்கும் என்பது அவ்விருவேறுணர்வுங் கடலிடையெழுந்து கரைசாருந் திரைபோலப் பரம்பரையின் ஆன்மாவின்மாட்டு வந்து தோன்றும்; அதனின் மனம்ஆதி மன்புலனின் அல்லன் என்பது அதனானே மனமுதலியன அவ்விடயங்களின் வேறாயினாற்போல ஆன்மாவும் அம்மனமுதலியவற்றின் வேறாம் என்றவாறு.
உதிக்குமென்னும் பயனிலைக்கு உணர்தலிரண்டும் எழுவாய். செவ்வெண்டொகை விகாரத்தாற் றொக்கது. புலனின் இன் உவமவுருபு. மன் அசை. அல்லனென ஆடூஉவறிசொல்லாற் கூறியது வடமொழி மதம்பற்றி. உதித்தவென்னும் பெயரெச்சவீறு விகாரத்தாற்றொக்கது. புத்தியிற் றோன்றியதொன்றாவது சுகதுக்க மோகரூபவிடயம். பரம்பரையிற் றோன்றுதலாவது முன்னர் வாயிற்காட்சியுணர்வு தோன்றி அதன்பின் மானதக்காட்சியுணர்வு தோன்றி அதன்பின்னர்த் தன்வேதனைக் காட்சியுணர்வு உயிரின்கண் வந்து தோன்றுதல்.
இதனானே அந்தக்கரணங் கீழுள்ளவற்றை நோக்கிச் சித்தாமாறும் மேலுள்ளவற்றை நோக்கி அசித்தாமாறும் உயிர் அவ்வாறன்றி யாண்டுஞ் சித்தாமாறுங் கண்டுகொள்க.

குறிப்புரை :

ஈண்டு இவ்வான்மாவாவது அந்தக்கரணங் களாயுள்ள மனோபுத்தியகங்கார சித்தங்களில் ஒன்றன்று என்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், ஏனையவெல்லாம் வெவ்வேறு பெயர் பெற்று நிற்பனவாகலான் உயிராகா ஆயினும் மனமுதலிய அந்தக்கரணங்கள் சிவஞானசித்தி, 428 \"சிந்தையைச் சீவனென்றுஞ் சீவனைச் சிந்தை யென்றும்” இங்ஙன முயிரென்னும் பெயரானும் வழங்கப்படுத லுண்மையானும் இந்திரிய முதலியவற்றை அவ்வாறு கூறாமையின் அஃதாகுபெயரென்றற் கேலாமையானும் அவையே தனித்தனி ஆன்மாவாமென்றல் அமைவுடைத்தென அந்தக்கரணான்ம வாதிகள் கூறங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இது மேலைச்சூத்திரத்துள் ஓதற்பாலதேயாயினும் ஈண்டிலக்கணங்கூறும் வழியும் அவற்றோடு சந்தித்து அமைச்சரசேய்ப்ப நிற்பதென அவத்தைக்கேதுவாக எடுத்தோத வேண்டுதலின் ஈரிடத்துமெடுத்தோதுதல் \"சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகிச் சொல்லுங்காலைப் பெரும்பொருளடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத்தாகி” என்னு மிலக்கணத்ததாய தொல்காப்பியம், பொருள். மரபு. 100 சூத்திரத்துக் கேலாமையான் அதுபற்றி விதி முகத்தானன்றி அநுவாதமுகத்தான் ஈண்டுணர்த்தப்பட்டது. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணியதேசிகர் உரை : ஈண்டு இம்மூன்றதிகரணத்துள் வைத்து இம்முதலதிகரணத்து ; இவ்வான்மா ஆவது மேற் கூறிப்போந்த உயிராவது ; அந்தக்கரணங்களாய் உள்ள மனோபுத்தி அகங்கார சித்தங்களில் புறவந்தக்கரணங்களாகிய மனம் புத்தி அகங்காரம் சித்தங்களாகிய இவற்றின் ; ஒன்று அன்று என்றது வேறாம் என்றவாறு.)
ஈண்டு அந்தக்கரணமென்றது உள்ளந்தக்கரணமாகிய கலாதிகளினுஞ் செல்லாமைப்பொருட்டு மனோபுத்தியகங்கார சித்தங்களிலெனக் கிளந்தெடுத்துரைத்தார். கலாதிகளுண்டெனக் கொண்டோரின் உயிர் வேறுண்டெனக் கொள்ளாதார் இன்மையின் ஆண்டாசங்கை நிகழாமையானும் அமைச்சரோடு உவமிக்கப்பட்டு அவத்தைக் கேதுவாவன அம்மனமாதியேயன்றிக் கஞ்சுகத்தோடு உவமிக்கப்பட்டு அதீதத்தினு நீங்காது உடனிற்பனவாய கலாதிகளன்மையானும் அவற்றை ஈண்டெடுத்தோத வேண்டாமையின் மனமுதலிய புறவந்தக்கரணங்களே ஈண்டுக்கூற நின்றனவென்பது கருத்து.
ஏது : அவைதாம் பிரகாசமாய்நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், சிவஞானசித்தி, 4-2 \"மனமும் புத்தி யகங்காரஞ் சித்த நான்கு மருவியான் மாவே யென்ன வரும்” என நீயிருங்கோடலின் உயிர் அவற்றுளொன்றாதலமையுமென்றாற்படு மிழுக்கென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இள் அவ்வந்தக்கரணங்கடாம் தம்மிற் கீழுள்ளவற்றை நோக்கிச் சித்தாய்நின்றே தம்மை நோக்கி அசித்தாய் நிற்றலால் தன்னை நோக்கியுஞ் சித்தாய் நிற்கும் இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாயுள்ள மனோபுத்தி யகங்காரசித்தங்களில் ஒன்றன்றென மேற்கொண்டது எறு. எனவே, உயிரான் அதிட்டிக்கப்பட்டு ஐம்பொறிகளறிந்த விடயங்களுள் ஒன்றனை இஃதியாதாகற்பாற்றெனச் சித்தஞ் சிந்தித்து அறியும் யான் சிந்தித்தேனென்றறியமாட்டாது. மனம் அதனை இஃதின்னதாகற்பாற்றெனவும் அஃதாமோ அன்றோவெனவும் இவ்வாறு சங்கற்ப விகற்பஞ்செய்தறியும்; யான் சங்கற்பவிகற்பஞ் செய்தேனென் றறியமாட்டாது. அகங்காரம் அதனை இன்னதெனத் துணிவேன் யானென்று ஒருப்பட்டெழுந்தறியும்; யானொருப் பட்டெழுந்தேனென் றறியமாட்டாது. புத்தி அதனை இன்ன திதுவென நிச்சயித்தறியும் ; யானிச்சயித்தேனென்றறிய மாட்டாது. ஆகலான் அவ்வாறின்றி அவற்றொடு கூடி யான் சிந்தித்தேன் பற்றினேன் எழுந்திருந்தேன் நிச்சயித்தே னென்றும் அதன்பின் அதுவதுவாய்ப் பரிணமித்துச் சுகதுக்க மோகரூபமாய்த் தன்மாட்டு வந்த புத்திதத்துவத்தின் பரிணாமங்களைக் கலாதிகளோடு கூடி நின்று இது சுகம் இது துக்கம் இது மோக மென்றறிந்தும், யான் சுகித்தேன் யான்றுக்கித்தேன் யான் மோகித்தேன் என்றறிந்தும் இங்ஙனம் பிறவற்றை நோக்கியுந் தன்னை நோக்கியுஞ் சித்தாகிய ஆன்மாத் தம்மை நோக்கிச் சித்தாகாத அந்தக்கரணங்களின் ஒன்றாமாறியாண்டையதென மறுத்தவாறாயிற்று. சிவஞானசித்தி, 11-11 \"இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி” என வழி நூலாசிரியர் கூறியதும் இவ்வியல்பு நோக்கி.
ஈண்டுப் பிரகாசம் அப்பிரகாசம் என்பன சித்து அசித்தென்னும் பொருளவாம்.
ஏனையோரை நோக்கி அரசனுக்கு அணுக்கராதற் சிறப்புப்பற்றி அமைச்சரை அரசரென்று உபசரித்துக் கூறப்படுமாறு போலப் புறக்கருவிகளை நோக்கி ஆன்மாவுக்கு அணுக்கமாய் நிற்றற் சிறப்புப்பற்றி மனம் புத்தி யகங்காரஞ் சித்த நான்கு மருவி யான்மாவேயென்ன உபசரித்துக் கூறப்படுமத்தனையென் றொழிக. சூழ்ச்சித் துணையாதல் பற்றி அந்தக்கரணங்கள் அமைச்சரை யொக்குமெனவே, ஏனைக்கருவிகள் ஏனைப்பரிசனங்களை ஒக்குமென்பது பெற்றாம். அது ஞானாமிர்தத்திற் \'ஞானாமிர்தம் 9\' காண்க.
மேலைச் சூத்திரத்தினோதிய ஏதுக்களே ஈண்டைக்கு மமையு மாயினும், சிறந்தமைபற்றி வேறேதுக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

சிந்தித்தாய்ச் சித்தந் தெளியாதாய் ஆங்காரம்
புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் - பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்துள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போதுபோல் ஆங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், மேற்பொதுவகையாற் கூறிப்போந்த அந்தக்கரணங்களின் இயல்பு சிறப்புவகையாற் கூறுமுகத்தான் மானதக்காட்சியுள்ளுங் கடற்றிரைபோலப் பரம்பரையின் வெவ்வேறாயுணர்வு நிகழுமாறுணர்த்தி உயிர்வேறாதலை, வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். உள்ளம் என்பது புருடதத்துவமென நின்றவுயிர் ; ஆங்கு என்பது வாயிற்காட்சியாற் கண்டவிடயங்களி னொன்றனை மனமாதியானுணரும் மானதக்காட்சியின் கண்ணும் ஒரு பெற்றித்தாதலின்றி ; சித்தமாய்ச்சிந்தித்து என்பது சித்தமாய் நின்று இஃதியாதாகற்பாற்றெனச் சிந்தித்தும் ; மனம் ஆகிப் பந்தித்து என்பது அதன்பின் மனமாய் நின்று இஃதின்னதாகற்பாற் றெனப் பற்றியும் ; ஆங்காரம் ஆய்த் தெளியாது என்பது அதன்பின் அகங்காரமாய் நின்று இஃதாமோ அன்றோ இதனை யின்னதெனத் தெளிவேன் யானெனத் தெளிவுபிறவாதெழுந்தும் ; புந்தியாய் ஆய்ந்து என்பது அதன்பின்னர்ப் புத்தியாய்நின்று இஃதின்னதெனத் தெளிந்தும் ; வெவ்வேறு தானே துணிந்து இவ்வேறாம் என்பது இங்ஙனம் வெவ்வேறாகவே யுணர்தலான் அவ்வாறுணரும் புருடன் இவ்வந்தக்கரணங்களின் வேறாம் ; போது அவ்வேறாம் போல் என்பது ஞாயிறு முதலியவற்றோடு கூடிநின்று நாழிகை நாள் பக்கந் திங்கள் யாண்டு முதலியனவாய்ப் படும் பாகுபாடுசெய்யுங் காலதத்துவம் அஞ்ஞாயிறு முதலியவற்றின் வேறாயினாற்போல் என்றவாறு.
ஆய்தல் ஈண்டு நிச்சயித்தற்பொருட்டு. துணிதலென்பது அறிதலென்னும் பொருண்மாத்திரையாய் நின்றது. தான் அசை. ஏகாரந்தேற்றம். இவ் அவ் என்பன வகரவீற்றஃறிணைப் பன்மைச் சுட்டுப்பெயர். வேறாம் போதுபோலெனவே, ஆண்டு நீக்கப்பொருள் ஞாயிறுமுதலியனவென்பது தானே விளங்குமென்பது நோக்கி அவ்வெனச்சுட்டியொழிந்தார். சாரியையும் உருபும் உடன்றொக்கன சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. ஆங்கும் வெவ்வேறு தானே துணிந்தெனவே மானதக்காட்சியும் இங்ஙன நால்வேறு வகைத்தாய் ஒன்றற்கொன்று முறையே ஏதுவும் பயனுமாய்க் கடற்றிரைபோலப் பரம்பரையிற் றோன்றுமென்றவாறாயிற்று. செய்யுளாகலின் முறைபிறழ வைத்தார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அகார உகாரம் அகங்காரம் புத்தி
மகாரம் மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை
நாதம் உளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அம்மானதக் காட்சியினிகழுஞ் சவிகற்ப வுணர்விற்கேதுவாய் அவற்றையுடனின்று செலுத்தும் அக்கரங்களிவை யென்பதும் அவற்றானுணர்வு மாறிமாறித் தோன்று மாறு முணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை. (சுப்பிரமணிய தேசிகர் உரை : அகாரம் அகங்காரம் அகரம் அகங்காரத்தினையும் ; உகாரம் புத்தி உகரம் புத்தியினையும் ; மகாரம் மனம் மகரம் மனத்தினையும் ; விந்து சித்தம் விந்து சித்தத்தினையும்; நாதம் உளவடிவு நாதம் உயிரினையும் செலுத்துதல்பற்றி ; கடல்திரையே போன்று சமுத்திரத்தின்கண் புதிது புதிதாய்த் திரைதோன்றியும் ஒடுங்கியும் வருமாறுபோல; போதம் மாசகலத்தின்கட் கணந்தோறும் உணர்வு ; ஆம் உதித்தும் ஒடுங்கியும் வரும் ; பகாது இவற்றை நாடில் பகுக்காது இவ்வக்கரங்களை ஆராயின் ; பிரணவம் ஆம் பிரணவமாகும் என்றவாறு.)
துகளறுபோதம், 14 \"மன்னு மகார மனஞ்செலுத்தும் புத்தியினை யுன்னு முகார முபகரிக்கு முன்னாகு மாங்காரந் தன்னை யகாரஞ் செலுத்தியிடு நீங்காத சித்தம்வித்து நேர்” என்பவாகலானும், ஈண்டோதிய முறையே முறையெனவும், சிவஞானசித்தி, 4-3 \"அவ்வுடனுவ்வு மவ்வு மனம்புத்தி யகங்காரங்கள்” என வழி நூலாசிரிய ரோதியது எதிர்நிரனிறைப் பொருளெனவுங் கொள்க. சூசூஅவ்வுட னுவ்வு மவ்வு மனம்புத்தி யகங்காரங்கள்” என்றதே முறையெனக் கொண்டு அதற்கியையக் கொண்டுகூட்டி யுரைப்பாருமுளர்.
பகாதிவற்றை நாடிற் பிரணவமாமெனவும் போன்றாமெனவுங் கூட்டுக.
அந்தக்கரணங்களைச் செலுத்தும் அக்கரங்களைக் கூறுவார் ஒப்புமைபற்றிப் புருடனைச் செலுத்தும் அக்கரமும் உடன் கூறினார். உடனின்று செலுத்துதல்பற்றி அபேதமாக வைத்தோதப்பட்டன.
\"நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப்பற்றி” அகர முதலிய பஞ்சகலை வடிவாய் நின்று இவற்றை வேறுவேறு செலுத்துதல்பற்றிக் கணந்தோறும் நினைப்பு மறப்புமாகிய சகல கேவலங்கள் அதிநுட்பமாய்க் கறங்கோலைபோல மாறி மாறி நிகழு மெனவும் மாசகலத்தின்கட் கணந்தோறும் அங்ஙனமுணர் வுதித்தும் ஒடுங்கியும் வருதல் சமுத்திரத்தின்கட் புதிது புதிதாய்த் திரை தோன்றியும் ஒடுங்கியும் வருமாறுபோலு மெனவுமுணர்க. கடற்றிரையுவமை மேற் பரம்பரையாய் உணர்வு வருதற்கெடுத்துக் காட்டினார் ; ஈண்டுப் புதிது புதிதாய் வருதற்கெடுத்துக்காட்டினார் ; ஆதலாற் புனருத்தியன்மை யுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

எண்ணில ஒங்காரத் தீசர் சதாசிவமா
நண்ணிய விந்துவொடு நாதத்துக் - கண்ணிற்
பகரயன்மா லோடு பரமனதி தெய்வ
மகரவுக ரம்மகரத் தாம்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அவ்வக்கரங்களுஞ் சடமாகலின் அவற்றை யதிட்டிக்கும் அதிதெய்வங்கள் இவையென்ப துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். எண்ணிலவோங்காரத்து நண்ணிய விந்துவொடு நாதத்ததிதெய்வங் கண்ணில் ஈசரொடு கூடிய சதாசிவமாம். அகரவுகரமகரத் ததிதெய்வங்கண்ணிற் பகரயன் மாலோடு பரமனாம் என்றவாறு.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : எண்நிலவு மானதக் காட்சியின்கண் நிலவிய ; ஓங்காரத்து பிரணவத்தின்கண்ணே ; நண்ணிய பொருந்திய ; நாதத்து நாதத்திற்கும் ; விந்துவோடு விந்துவிற்கும் ; அதிதெய்வம் அதிதேவதையை ; கண்ணில் கருதுமிடத்து ; சதாசிவம் சதாசிவமும் ; ஈசர் ஆம் மகேசனுமாம் ; மகர உகர அகரத்து மகர உகர அகரங்கட்கு ; அதிதெய்வம் கண்ணில் அதி தேவதையைக் கருதுமிடத்து ; பரமன் மாலோடு பகர் அயனாம்முறையே சுத்தவித்தையின் வைகுவோராகிய உருத்திரனும் மாலும் சொல்லப்படும் அயனுமாம் என்றவாறு.)
எண்ணில வோங்காரம் எண்ணத்தின்கண் நிலவிய ஒங்கார மென வினைத்தொகை. எண்ணம் ஈண்டு மானதக் காட்சி. ஒடு எண்ணின்கண் வந்தது.
ஈண்டு அயன் மால் பரமனென்றது சுத்தவித்தையின் வைகுவாரை. பரமன் உருத்திரன். அகரவுகரம் மகரத்தாமென்புழி மகரம் இசைப்பொருட்டாய் ஒற்றில்வழி யொற்றாய் வந்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

மாயா தனுவிளக்காம் மற்றுள்ளங் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை அது அதுவாய் - வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்தொன்றாங் காட்டம்போல்
தன்னைமல மன்றணைதல் தான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், ஆகந்துகமலமே ஞானதிரோதக மாதலமையும், வேறுமோர் மலமுண்டென்றல் மிகைபோலுமென ஐக்கவாதசைவர் முதலியோர் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து ஆகந்துகமலத்தானுஞ் சகசமலத்தானுஞ் செயப்படுங் காரியங்கட்குத் தம்முள் வேற்றுமை பெரிதாமாறுணர்த்து முகத்தான் ஏதுவை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள். உள்ளம் மாயாதனு விளக்கு ஆக் காணாதேல் ஒன்றை ஆயாது ஆம் என்பது உயிர் ஆகந்துக மலமெனப்படும் மாயா காரியமாகிய உடம்பு தனக்குக் காட்டாகக் கொண்டு காணாதாயின் ஒரு விடயத்தையு மறிவதில்லையாம் ; மற்று மலம் தன்னை அன்று அணைதல் தான் என்பது சகசமலம் உயிரை அநாதியே பற்றிநிற்றல்; அது அது ஆய் வீயாத வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்று ஆம் காட்டம்போல் என்பது காட்டமுதலியவற்றுள் அதுவதுவேயாய் நின்றுந் தனக்குக் கேடில்லாத வன்னியைத் தனக்குள் மறைத்து வைத்து ஒன்றேயாய் நிற்குங் காட்டம்போலும் என்றவாறு.
எனவே, காட்டாய் நின்று விடயங்களை யறியும் வண்ணம் உயிர்க்கறிவை விளக்குதல் மாயையின் செய்தி ; அவ்வறிவைத்தடை செய்துகொண்டு நிற்றல் மலத்தின் செய்தி ; இவ்விரண்டும் இங்ஙனம் ஒளியுமிருளும்போல் இகலி நிற்பனவாகலான் அத்தன்மைத்தாய மாயை இத்தன்மைத்தாய மலமாதல் யாண்டைய தென மறுத்தவாறாயிற்று.
மற்றென்பது மலமன்றணைதலென்பதனோடியைந்து வினை மாற்றின்கண் வந்தது. முற்றும்மை சிறப்பும்மைகள் தொக்கன. ஆமுந் தானுங் கட்டுரைக்கண் வந்த அசை.
வன்னி அது அதுவாதல் காட்டத்துள் மறைந்துழிக் காட்டமேயாயுஞ் சூரியகாந்தத்துள் மறைந்துழி அதுவேயாயும் இவ்வாறே அவ்வவற்றின் மறைந்துழித் தானென்பதொன்றில்லை யென்னும்படி நிற்றல். அங்ஙனமாகியும் வீயாமை, கடைதல் முதலிய தொழிற்பாடு நிகழ்ந்தவழித் தோன்றுதலாற் பெற்றாம். தன்னுள் மறைத்தல் வன்னியென்பதொன்றில்லை யென்னும்படி பொதிந்து கொண்டு தானேயாதல். ஒன்றாங்காட்டம் ஒன்றேபோல் அத்து விதமாங் காட்டமென்றவாறு. இவ்வாறு உவமைக்கோதிய அடையுந்தொழிலும் இயைபும் பொருட்கண்ணுங் கூறிக்கொள்க.
மாயை கன்மங்கள்போல ஆதியன்றெனக் காலத்தானும் வேற்றுமை கூறுவார் அன்றணைதலென்றார்.
இங்ஙனங் கூறிப்போந்த மலமாவது ஞானாபாவமென்பாரும், பிராந்திஞானமென்பாரும், தமோகுணமென்பாரும், பஞ்சக்கிலேசத்துள் ஒன்றாகிய அவிச்சை யென்பாரும், மாயை கன்மங்களென்பாரும், சிவசத்தி யென்பாரும், உயிர்க்குணமென்பாருமாய், அவ்வச்சமயநூல்பற்றி மயங்குவாருமுளர். அம்மலத்திற்குப் பற்றுக் கோடாகிய சூனிய முதலியவற்றின் வேறெனப்பட்ட ஆன்மாவும் இயற்கையாற் சடமென்பாரும், அறிவு மாத்திரையேயெனக் குணிப்பொருளன்றென்பாரும், சுதந்திர வறிவுடைத்தென்பாரும், அவ்வவ்வுடம்பளவிற்றென்பாரும், அணுவளவிற்றென்பாரும், உருவென்பாரும், அருவென்பாரும், உருவருவென்பாருமாய், இன்னும் பலதிறப்படக் கூறி மயங்குவாருமுளர். அவை யெல்லாம் பொருந்தாமை ஆகமங்களுட் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.
இச்சகசமலம் ஞானதிரோதகமாய்த் திரவியமாய் அறியாமைக் குணத்ததாய்ச் செம்பிற்களிம்புபோல உயிரின் குற்றமாய் அநாதி பந்தமாய்ச் சடமுமாய்ப் பலவுமாயின் அழிவெய்துமாகலின், அநாதி பந்தமாதல் பெறப்படாமையின் ஒன்றேயாய் விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சகலரென்னும் உயிர்ப்பாகுபாட்டிற்கேதுவாய் உயிர்க டோறுந் தனித்தனி வெவ்வேறாய் மறைத்து நின்று தத்தங்கால வெல்லையி னீங்குவனவாகிய சத்திகள் பலபல வுடைத்தாய் உயிர்கள் மூன்றவத்தைகளும் படுதற்கு மூலகாரணமாய் நித்தமாய் வியாபகமாய் வியாபகவுயிர் அணுத்தன்மைப்படுமாறு செய்தலின் ஆணவமென்னும் பெயர்த்தாய்ப் பசுத்துவம் பசுநீகாரம் மிருத்தியு மூர்ச்சை மலம் அஞ்சனம் அவித்தை ஆவிருதி யென்றற் றொடக்கத்துக் காரணக் குறிகளுமுடைத்தாய் நிற்பதெனவும் படலம் படர்ந்த கண் ஞாயிற்றின் சந்நிதியி னிற்பினும் படலத்தான் அவ்வொளியை யிழந்து இருளினழுந்துமாறு போல முதல்வன் சந்நிதியினிற்பினுஞ் சோபானமுறையின் அறிவிக்க அறியுந்தன்மைத்தாய உயிர் அநாதியேயறிவித்தால் அறிய மாட்டாமையின், அம்மாட்டாமையான் அவ்வறிவை இழந்து அறியாமையாய் அழுந்துதலின் அஃதவ்வுயிர்க்குப் பந்தமாயிற்றெனவு முணர்க. அநாதியே மலத்தினீங்குதல் முதல்வன் வினையாய் அநாதி முத்தத்தன்மையென எண்குணங்களுள் வைத்தெண்ணப்படுவதென்பது சிவாகமங்களுக்கெல்லாம் ஒப்பமுடிந்தாற்போல அநாதியே மலத்தைப்பற்றுதல் உயிரின் வினையாய் உயிர்க்குற்றங்களுள் வைத்தெண்ணப்படுவதென்பதூஉம் அவற்றிற்கெல்லாம் ஒப்பமுடிந்தது. ஈண்டுப்படுங் கடாவிடைகளெல்லாம் ஈரிடத்துமொக்கும்.

குறிப்புரை :

இனி இவ்வான்மாச் சகசமலத்தினா லுணர்வின் றென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், ஆன்மா அந்தக்கரணங்களினொன் றன்றாயின் அவற்றொடு சந்தித்து நிற்றற் கேதுவென்னையென அவர் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணியதேசிகர் உரை : இனி இவ்வான்மா அந்தக் கரணங்களின் ஒன்றன்றாகச் சாதிக்கப்பட்ட ஆன்மா ; சகசமலத்தினால் முதல்வனைப்போல அந்தக்கரணம் முதலியவற்றின் வேறாய சேதனப் பொருளாயினும் செம்பிற்களிம்புபோல வேறு காரணமின்றி மூலமலந் தன்னோடு உடனாய் நிற்றலின்; உணர்வு இன்று என்றது தன்னியல்பான் உணருமாறின்றிக் கருவிகளைக்கூடி நின்று உணர்வதாயிற்று என்றவாறு.)
ஆகந்துக மலங்களி னீக்குதற்குச் சகசமலமென விசேடிக்கப் பட்டது : படவே, உயிர் முதல்வனைப்போல் அந்தக்கரண முதலியவற்றின் வேறாய சேதனப்பொருளாயினுஞ் செம்பிற் களிம்புபோல வேறுகாரணமின்றி மூலமலந் தன்னோடு உடனாய் நிற்றலிற் றன்னியல்பானுணருமாறின்றிக் கருவிகளைக் கூடிநின்றுணர்வதாயிற்றென விடுத்தவாறாயிற்று. இதனானே மலத்துள தாமென மேற் பிரமாணத்தாற் பெறுவிக்கப்பட்ட மூலமலத்திற்கு ஈண்டிலக்கணங் கூறினாரென்பது பெறுதும். அறியாமையைச் செய்தலாகிய கேவலத்தினிகழுமியல்பே மலத்திற்குத் தன்னியல்பு ; கருவிகளோடு கூடி அவத்தையுறுவதாகிய விபரீதவுணர்வைச் செய்யுஞ் சகலத்தினிகழுமியல்பே பொதுவியல்பாகலான் ; மலத்திற்கு இருவகையிலக்கணமும் ஈண்டே பெறப்பட்டன.
ஏது : அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துக்கொடு நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் சகசமலத்தினால் உணர்வின்றி யொழியிற் பின் கருவிகளோடு கூடியவழி அறிவுண்டாமா றியாங்ஙனமெனச் சற்காரியவாதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுலிற்று. இதன் பொருள். அச்சகசமலமாவது ஞானத்திற்குத் திரோதகமாய் அதனையில்லையென்னும்படி மறைத்துச் கொண்டு நிற்றலான் இனி இவ்வான்மாச் சகச மலத்தினால் உணர்வின்றென மேற்கொண்டது என்றவாறு.
மலத்தினதிலக்கணம் வடமொழி வழக்குப்பற்றிக் கூறுவார் ஞானதிரோதகமாயெனவும் அதனைத் தமிழ்மொழியான் விளக்குவார் மறைத்துக்கொடு நிற்றலானெனவுங் கூறினாராகலான், அது கூறியது கூறலன்மையுணர்க. திரோதகமென்னும் வடமொழி மறைத் தலைச்செய்வதென்னும் பொருட்டாய் வினைமுதன்மேனின்ற வினைப்பெயர்.
இதனானே ஞானாபாவமே அஞ்ஞானமென்பார் மதமும் மறுக்கப்பட்டது ; அபாவம் ஒரு காரியத்தைச் செய்யமாட்டாமையின்.

பண் :

பாடல் எண் : 7

ஒன்றணையா மூலத் துயிரணையு நாபியினிற்
சென்றணையுஞ் சித்தம் இதயத்து - மன்றவே
ஐயைந்தாம் நன்னுதலிற் கண்டத்தின் வாக்காதி
மெய்யாதி விட்டகன்று வேறு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், தத்துவங்கள் தொழிற்படுதற்கண் நிகழும் அவத்தை வேறுபாடு தெரித்துணர்த்தி அஃதேதுவாதலை வலியுறுத்துதனுதலிற்று. நல்நுதலில் வாக்காதி மெய்யாதி மன்ற ஏய் ஐயைந்தாம் கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டு அகன்று வேறு ஐயைந்தாம் இதயத்திற் சித்தஞ் சென்றணையும் நாபியினில் உயிர் அணையும் அணையா மூலத்து ஒன்று எனவியையும். இதன் பொருள்.சாக்கிரத்தான மெனப்படும் இலாடத்திற் புறவிந்திரியம் பத்தினையுந் தேற்றமாகப் பொருந்திய இருபத்தைந்து கருவி தொழிற்படும் ; சொப்பனத்தான மெனப்படுங் கண்டத்தின் அப் பத்தினையும் விட்டு நீங்கி வேறாய இருபத்தைந்து கருவி தொழிற்படும் ; சுழுத்தித் தான மெனப்படும் இதயத்தின் அவற்றுள் இருபத்திரண்டு கருவிகளை விட்டு நீங்கி முன்னர்க் கூறப்படும் இரண்டு கருவிகளோடு கூடிய சித்தந் தொழிற்படும் ; துரியத்தானமெனப்படும உந்தியிற் சித்தத்தையும் விட்டு நீங்கி முன்னர்க் கூறப்படும் புருடதத்துவத்தோடு பிராணவாயுக்கூடித் தொழிற்படும்; இக்கருவிகளொன்றும் அணையாத அதீதத்தானமெனப்படும் மூலாதாரத்திற் புருடனொன்றே நிலைபெறும் என்றவாறு.
எனவே, இலாடத்தான முதலிய ஐந்தினும் நிற்கும் கருவிகள் முறையே முப்பத்தைந்தும் இருபத்தைந்தும் மூன்றும் இரண்டும் ஒன்றுமென்பது போந்தவாறுணர்க.
மன்றவென்பது தேற்றப் பொருட்டாகிய இடைச்சொல். ஏய்தல் பொருந்துதல் ; வினைத்தொகை. வாக்காதி மெய்யாதியை யென இரண்டாவது விரித்துரைக்க. அஃதீரிடத்துஞ் சென்றியையும்.
வருகின்ற சூத்திரத்தின் மெய் வாய் கண் மூக்கு எனச் செய்யுட்கேற்ப மெய்யை முற்கூறுதலின் அம்முறைபற்றி ஈண்டுச் செவியாதியென்னாது மெய்யாதியென்றார். அவற்றொடு கூடிய இருபத்தைந்தாவன : அவ்விந்திரியம் பத்துக்கும் விடயமாகிய வசனாதி சத்தாதி பத்தும் அவற்றினுக்கு உட்கருவியாகிய அந்தக் கரணங்கள் நான்கும் அவற்றொடு கூடி அவத்தையுறுவதாகிய புருடனொன்றும், அஃதவத்தையுறுதற்குரிய மதுகைக் கேதுவாய் அகங்காரத்தாற் செலுத்தப்படும் பிராணாதி வாயுக்கள் பத்துமென இவை. ஈண்டுச் சத்தாதியென்றது வசனாதிபோலும் விடயங்களையெனக் கொள்க. எனவே; பூதங்களின் கூறாய் அவற்றுடனின்று தேராழிக்குத் தேருறுப்புப்போல இந்திரியங்களின் தொழிற்பாட்டுக்கு மதுகையை விளைத்து நிற்பனவாய புறக்கருவி யறுபதில் ஈண்டுக் கூறிப்போந்த விடயங்கள் பத்தும் வாயுக்கள் பத்தும் ஒழித்தொழிந்த புறக்கருவிகள் நாற்பதும் அவற்றையுடைய பூதங்களைந்தும் அவற்றிற்கு வலியா யுடனிற்பனவாய சூக்குமபூதமெனப்படுந் தன்மாத்திரைகளைந்து மென்னும் ஐம்பது கருவிகளுங் கீழ் நோக்கிய சாக்கிரத்தானத்தில் தமது சத்திமடங்கி வினைக்கீடாகத் தொழிற்படாதொழியுமெனவும், அவை யொழிந்தவழி அவத்தைக் கேதுவாய் நின்ற ஏனைப்பொறிமுதலிய முப்பத்து நான்கும் அவற்றோடு கூடிய புருடதத்துவமும் இருவகைப் பூதங்களானும் புறக்கருவிகளானுந் தரப்படும் மதுகையின்மையின் ஆண்டுப் பொறிகளின் தொழிற்பாடு மெத்தென நிகழுமெனவுங்கொள்க. கலாதிகளுஞ் சுத்ததத்துவமும் அவத்தைக் கேதுவாகாமையான் உடனெண்ணாராயினார். ஏனையவும் விரிந்த நூல்களுட் கூறியவாறு பற்றி உணர்ந்து கொள்க.

குறிப்புரை :

இனி இவ்வான்மாச் சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி துரியந் துரியாதீதமாயுள்ள பஞ்சாவத்திதனாய் நிற்குமென்றது .(வா 24ய) என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், இருளினகப்பட்ட கண் விளக்கோடு கூடியவழி விடயங்களைக் காண்டலேயன்றி வெவ்வேறவத் தைப்படுமாறில்லை. அதுபோல மலத்திலகப்பட்ட உயிர் கருவிகளோடு சந்தித்தவழி ஒருதன்மைத்தாயறிதலே அமைவுடைத்து. அவ்வாறன்றி மேலைச்சூத்திரத்தோதிய முறையான் ஐம்புலனறிந்தும் ஒடுக்க மறிந்தும் உண்டி வினையின்றிக் கிடந்தும் உணர்த்தவுணர்ந்தும் இங்ஙனம் வெவ்வேறு அவத்தைப்படுமா றியாங்ஙனமென அவர்கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் இறுதிக்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணியதேசிகர் உரை : இனி இவ்வான்மா அந்தக் கரணங்களோடுகூடிய ஆன்மா ; சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாய் உள்ள சகசமலத்துணராது அமைச்சர சேய்ப்ப நிற்றலாற் படைகொடு பவனிபோதும் வேந்தன் கடைதொறும் விட்டுவிட்டுக் காவலுமிட்டு அந்தப்புரத்திற் செல்லுமாறு போலச் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாயுள்ள; பஞ்சாவத்திதன் ஆய்நிற்கும் என்றது அஞ்சவத்தையை உடையவனாய் நிற்பன் என்றவாறு.)
அவத்தையெனப்படுவன பலவுளவாகலின் அவற்றுள் ஈண்டு ஐந்தவத்தையெனப்பட்டவை யாவையென்னும் ஐயநீக்குதற்குக் கிளந்தெடுத்துரைத்தார்.
அவத்திதன் என்னும் வடமொழி ஆடூஉவறிசொல்லாற் கூறியது அம்மதம்பற்றி. அமைச்சரசேய்ப்ப நிற்றலானென்பதூஉம் ஈண்டு வருவித்துரைத்துக்கொள்க. கொள்ளவே, \"படைகொடு பவனிபோதும்” வேந்தன் சூசூகடைதொறும் விட்டுவிட்டுக் காவலுமிட்டு” அந்தப்புரத்திற் செல்லுமாறுபோல ஆன்மா அங்ஙனம் அஞ்சவத்தைப்படுதல் அமைவுடைத்தென விடுத்தவாறாயிற்று.
ஏது : அதுதான் மலசொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அரசன்போல் உயிர் அங்ஙன மஞ்சவத்தைப்படுமாயின் வியாபகத்திற்கிழுக்காய் முடியும்போலு மென்னுங் கடாவை யாசங்கித்து மோற்கோளைச் சாதித்தனுதலிற்று . இதன் பொருள். அவ்வுயிர்தான் மலவடிவின் மறைப்புண்டவழி அருவுடம் பாகிய தத்துவ சொரூபியாய் நிற்றலான் அத்தத்துவங்கள் தொழிற்படுமவத்தை வேறுபாடுபற்றி இனி இவ்வான்மாச் சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி துரியந் துரியாதீதமாயுள்ள பஞ்சாவத்திதனாய் நிற்குமென மேற்கொண்டது என்றவாறு.
உலகுடை நாயனார் கழி நெடில் 3 \"சீவனோ வியாபி யவத்தையி லிழிந்து திரும்புதல் குற்றமாங்கருவி சேருதல் பிரிதலில்லையா முறையிற் செயப்படுங் கருவியே தெரியுந் தாவிலா வறிவு தங்கினவிடமே தகுமுயிர்க் கிருப்பிடம்” என்றதூஉம் இப்பொருள் பற்றியென்க.
தத்துவவன்னரூபனாதல் வீடு பெற்றுழியும் உண்டுபோலு மென்று ஆசங்கை நிகழாமைப்பொருட்டு, மல சொரூபத்தின் மறைந்தென மேற்கூறிப்போந்ததனை வழிமொழிந்து கொண்டு அரூபசொரூபியாய் நிற்றலானென்று ஏதுக்கூநினார்.
மறைந்த வழியென்றது மறைந்தெனத் திரிந்துநின்றது.

பண் :

பாடல் எண் : 8

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை யெய்தும் - இலாடத்தே
அவ்வவ் இந்திரியத் தத்துறைகள் கண்டதுவே
அவ்வவற்றின் நீங்கலது ஆங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனம் அதீதத்தையெய்திய புருடன் மீளப் பிரேரக அவத்தையாகிய உணர்த்துமுறைமைச் சாக்கிரத்தைத் தலைப்படுமாறு அநுவாதமுகத்தான் விளக்கி அவ்விடத்தினும் முறைமையிற் செலுத்தும் பிரேரகக் கருவிகளைந்தின் தொழிற் பாடுபற்றி ஐந்தவத்தை நிகழுமென்பதூஉம் அவை இவையென்பதூஉஞ் சுத்தாவத்தையும் இவைபோ லுண்டென்பதூஉங்கூறி அதனை வலியுறுத்தனுதலிற்று. இதன் பொருள். இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம் என்பது இலாடத்தானத்தினீங்கி ஆண்டாண்டவத்தைப்பட்டுக் கீழ்ப்போந்து மூலாதாரத்தினெய்தியபின் மறித்தும் அவ்வாறே ஆண்டாண்டவத்தைப்பட்டு மேற்சென்று இலாடத்தானத்தின் உணர்த்துமுறைமைச் சாக்கிரத்தைத் தலைப்பட்ட புருடன்; இலாடத்தே ஐந்து அவத்தை எய்தும் என்பது ஆண்டுஞ் சாக்கிரச் சாக்கிரமுதலிய ஐந்தவத்தையுறும்; இலாடத்தே அவ்வவ்விந்திரி யத்து அத்துறைகள் கண்டு என்பது அவையாவன அவ்விலாடத் தானத்தின்கண்ணே அவ்வப்பொறிகளான் அவ்வவ்விடயங்களை யுணர்ந்து ; அதுவே என்பது அப்போதப்போதே ; அவ்வவற்றின் நீங்கல் என்பது அவ்வவ்விடயங்களி னீங்குதலாம் ; அது ஆங்கு என்பது இனி முன்னர்க் கூறப்படுஞ் சுத்தாவத்தையும் இவைபோல ஐவகைப்படும் என்றவாறு.
மேற்செல்வுழி ஆண்டாண்டுப்படு மவத்தைகளுங் கீழ்ச்செல்வுழிப் போலன்றி விசேடமின்மையின் வகுத்தோதாது இலாடத்தே சாக்கிரத்தையெய்திய வுள்ளமென அநுவாதமுகத்தாற் கூறியொழிந்தார்.
இழியுங்காலும் ஏறுங்காலும் கண்டத்தானத்திற் கனாக்காண்டலுண்டென்பது முறையே ஞானாமிர்தத்தினும் போற்றிப் பஃறொடையினுங் காண்க.
அவ்வவ்விந்திரியம் ஆண்டாண்டு விடயித்தற்குரிய இந்திரியம். அவ்வவ்விடயம் ஆண்டாண்டுப் புலனாதற்குரிய விடயம். கண்டு நீங்கலென வியையும். அது அவ்வக்காலம். ஈண்டும் அடுக்கிக் கூறிக்கொள்க. கண்ணுருபு தொகுத்து ஏகாரம் விரித்தார். கண்டதென ஒருமொழியாகவைத் துரைப்பாருமுளர். குற்றியலுகரத்தின்முன் உடம்படுமெய் பெறுதற்கு ஓத்திலாமையானும் பொருட்சிறப்பின்மையானும் அஃதுரையன்மையறிக.
அப்போதப்போதே நீங்கலாவது விடயங்களைக் கண்ட கண்ட பொழுதே அவற்றை அயர்த்துவிடுதல். \"ஒன்றன்பாலும் வருபயன் மாறிமாறி வந்திடும்” என வழி நூலாசிரியர் கூறியதும் இவ்வியல்பு நோக்கியென்க. \"கரணந்தன்னிற் செயல்தொறுங் கண்டு கொள்நீ” \"உந்திடுங் கரணந்தன்னிற் செயல்தொறு முணர்ந்து கொள்ளே’’ என்பனவுமது. இந்நுட்ப முணர்ந்துகோடற்குத் தூலாருந்ததி நியாயம் பற்றிக் கைப்பொருளை வீழ்த்தித் தெளிதன் முதலிய தூலத்துள் வைத்துக் காட்டுப.
இனி அரூபசொரூபியாய் நிற்புழிப்படும் ஐந்தவத்தையினியல்பு கூறுதற்கெடுத்துக்கொண்ட இவ்வதிகரணத்தின் அதனோடியைபில்லாத சுத்தத்தின்கட்படும் ஐந்தவத்தை கூறுதற்கு ஓரியைபில்லையாயினும், அவத்தை யெனப்படுவன ஈண்டோதியன மாத்திரையே போலுமென மயங்காமைப் பொருட்டு வேறுமைந்தவத்தையுள அவை முன்னர்க் கூறப்படுமென்னுந்துணையே கூறுவார் அதுவாங்கு என்றொழிந்தார். இக்கருத்தேபற்றி \"பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற வருளா லாங்கே குறியொடு மைந்தவத்தை கூடுவர் வீடு கூட” என்றொழிந்தார் வழி நூலாசிரியரும்.
இவ்விரண்டு வெண்பாக்களானும் கூறிப்போந்த முத்திறத் தைந்தவத்தைகட்கு முறையே மூலமாய கேவலஞ் சகலஞ் சுத்தமென்ற மூன்றனுள் வைத்தும் \"தன்னுண்மை” யெனப்படுங் கேவலத்தினியல்பு சகசமலத்துணராதென்பதனானே பெற்றாம். ஏனைச் சகலத்தினியல்பு வருகின்ற சூத்திரத்தினுஞ் சுத்தத்தினியல்பு அப்பாலைச் சூத்திரத்தினும் பெறுதும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்
களந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்
காந்தங் கண்ட பசாசத் தவையே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதலுபகார முணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக்கருத்துணர்த்துத னுதலிற்று. இதன் பொருள். ஐந்தவத்தைப்படும்வழிக் கருவியும் உயிரும் அமைச்சும் அரசுமேய்ப்ப நிற்பின் அவையே யமையுமாகலான் முதல்வனால் ஆண்டைக் காகற்பாலதொரு பயனில்லை போலு மென்னுங் கடாவை யாசங்கித்து ஆண்டும் இன்றியமையாது வேண்டப்படுவதாய முதல்வனுடைய உதவியை அறிவிக்கு முகத்தானே இரண்டாஞ் சூத்திரத்தினோதிய துணைக்காரண முதற் காரணங்களது இலக்கண முணர்த்துதல் இவ்வஞ்சாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
இதனானே சூத்திர வியைபும் இனிது விளங்கும்.
மாயை கன்மங்கள் திரோதானசத்திக்குக் கருவியாய் அதனுளடங்குதலிற் றமது முதலுபகாரமெனப்படுந் திரோதான சத்திய திலக்கணங் கூறவே அவற்றதிலக்கணமுங் கூறியவாறாதலறிக.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : மேலைச் சூத்திரங்களில் அங்ஙனங் கூறிப்போந்த உயிரானே மெய் வாய் கண் மூக்குச் செவியென்பன தத்தம் விடயங்களை இஃதின்னதென்று அளவிட்டறிந்தும் அங்ஙனமறியுந் தம்மையுந் தம்மை யதிட்டித்து நின்றுசெலுத்தும் அவ்வுயிரையும் அறியமாட்டா; அவ்விந்திரியங்கள் போல் உயிர்களுந் தமதறிவிற்கு வியஞ்சகமாகிய முதல்வனது சிற்சத்தியான் மேற் கூறிப்போந்த இருவகை யஞ்சவத்தையினின்று வினைப்பயன்களை யறிந்து அநுபவிக்குந் தம்மையுந் தம்மைச் செலுத்திநிற்குந் திருவருளையும் அறியமாட்டா; உயிர்கள் அவ்வாறுணர்தல் காந்தத்தைக்கண்ட இரும்பு அதன் சந்நிதிமாத்திரையின் வலித்துக்கொள்ளப்படுமாறுபோலக் கரணத்தானன்றிச் சங்கற்பத்தான் அதிட்டிக்கு முதல்வன் சந்நிதிமாத்திரையினாம். ஆகலான் அதுபற்றி முதல்வன் விகாரியாதலின்று என்றவாறு.
ஆகலான் அதுபற்றி முதல்வன் விகாரியாதலின்றென்பது குறிப்பெச்சம். செவியென்பது சொல்லெச்சம். ஐம்பொறிகளைக் கூறியது உபலக்கணமாகலின் ஏனைக் கருவிகளும் அவ்வாறாதல் கொள்ளப்படும். அற்றாகலினன்றே \"பொறிபுலன் கரணமெல்லாம் புருடனாலறிந்து” என்றார் வழிநூலாசிரியரும். விடயங்களையறிவுழி முதல்வன் உடனின்று செலுத்துவனாயின் அவ்விடயங்களோடொப்ப முதல்வனையும் அறிதல் வேண்டுமென்பாரை நோக்கி, அளந்தறிந்தென்றொழியாது அறியாவென்றார். ஆங்கவை ஒரு சொன்னீர்மைத்து. தம்முணர்வின்றமியென்றது தமது முதலென்னும் பொருள்பட வந்த ஆறாம் வேற்றுமைத் தொகை.
ஈண்டு அருளென்றது ஏற்புழிக்கோடலால் திரோதான சத்தி யின்மேனின்றது. அருளாலென விரித்து அளந்தறிந்தறியாவென உவமைக்கோதிய வினையைப் பொருளினுங் கூட்டியுரைக்க.
இதனுள் விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண்மூக் களந் தறிந்தறியாவென்றது ஓரதிகரணம்; ஆங்கவை போலத் தாந்த முணர்வின் தமியருள் காந்தங்கண்ட பசாசத்தவையே யென்றது ஓரதிகரணம்; ஆக இரண்டதிகரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஐம்பொறியை ஆண்டங் கரசாய் உளநிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் - ஐம்பொறியிற்
காணாதேற் காணாது காணுமுளங் காணாதேல்
காணாகண் கேளா செவி.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உயிர் அங்ஙனமொற்றுமைப்பட்டு நின்று செலுத்துதலும் அவை உயிரையின்றி யமையாமையும் எற்றாற்பெறுது மென்பாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அரசு ஆய் என்பது அரசன் அத்தாணி மண்டபத்தின் வைகித் தன்கீழ்க் கருமஞ் செய்வாரை அவரவர்க்குரிய காரியங்களிற் செலுத்தி ஆளுமாறு போல; உளம் ஐம்பொறியை ஆண்டு அங்கு நிற்ப என்பது உயிர் ஐம்பொறிகளை அவ்வவற்றிற்குரிய விடயங்களிற்செலுத்தி யாண்டு இலாடத்தானத்தி னிற்றலான்; ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் என்பது அரசனாலேவப்பட்டோர் ஏவிய கருமமாத்திரையினன்றி அதிகத்திற் செல்ல மாட்டாமைபோல அவ்வைம் பொறிகள் உயிரையறிய மாட்டாவாயின; அற்றேல், ஐம்பொறிகள் உயிரானன்றியறிதல் அமையாதாயினும் உயிர் ஐம்பொறிகளானன்றியும் அறிதலமையும் போலுமெனின்; ஐம்பொறியில் காணேதல் காணாது காணும் உளம் காணாதேல் காணாகண் கேளா செவி என்பது ஒருகருமஞ் செய்தற்கண் அரசரும் அமைச்சர் முதலாயினாருந் தம்முள் இன்றியமையாதவாறு போல ஒன்றனை விடயித்தற்கண் உயிரும் ஐம்பொறிகளுந் தம்முள் இன்றியமையா என்றவாறு.
அன்னவாதல் உயிர் ஐம்பொறியினீங்கிச் சொப்பனத் தானத்தினெய்தியவழிக் கண்டு கொள்க. நிற்பவென்னுஞ் செயவெனெச்சம் மழைபெய்யக் குளநிறைந்தது என்புழிப் போல நிற்றலாலெனக் காரணப் பொருட்டாய் நின்றது. இவ்வாறுரையாக்கால் இஃதேதுவின் பொருள் வலியுறுப்பதாய உதாரணமாதற் கேலாமையறிக.

குறிப்புரை :

ஈண்டு ஐயுணர்வுகள் ஆன்மாவாலுணரு மென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின் தாமரையிலையில் நீர்போற் புருடன் பற்றற்று நிற்பப் புருடன் சந்நிதியிற் புத்திதத்துவமே ஐம்பொறி வழியான் விடயங்களை அறியுமெனவமையும், அவ்வாறன்றிக் கருவிகளோடு கூடிப் புருடனே அவத்தைப்படுமென நான்காம் சூத்திரத்து மூன்றாமதிகரணத்தில் மேற்கூறியதமையுமா றென்னையெனச் சாங்கிய நூலார் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: ஈண்டு இவ்விரண்டதிகர ணங்களுள் வைத்து இம் முதலதிகரணத்து; ஐயுணர்வுகள் உணர் விற்கு ஏதுவாகிய ஐம்பொறிகள்; ஆன்மாவால் உணரும் என்றது உயிரால் விடயங்களை அறியும் என்றவாறு.)
உணர்விற்கேதுவாகிய பொறிகளை உணர்வென் றுபசரித்தார்.
எது : அவற்றினான் ஆன்மா வொற்றித்துக் காணினல்லது அவை யொன்றையும் விடயியாவாகலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் அதற்குப் பிரமாணமென்னை யென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். அவ்வைம் பொறிகளோடும் உயிர் ஒற்றுமைப்பட்டு நின்றறிந்தாலன்றி அவை ஒரு விடயத்தையும் விடயிக்கமாட்டாவாகலான் ஈண்டு ஐயுணர்வுகள் ஆன்மாவாலுணருமென மேற்கொண்டது என்றவாறு. ஆன் உடனிகழ்ச்சிப் பொருட்கண் வந்தது. உம்மை இழிவு சிறப்பு. முற்றுமாம். எதிர்மறை முகத்தாற் கூறினார் இன்றியமையாமை விளக்குதற்கு.

பண் :

பாடல் எண் : 3

மன்னுசிவன் சந்நிதியில் மற்றுலகஞ் சேட்டித்த
தென்னு மறையின் இயன்மறந்தாய் - சொன்னசிவன்
கண்ணா உளம்வினையாற் கண்டறிந்து நிற்குங்காண்
எண்ணான் சிவன் அசத்தை யின்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின் தன்னாலுணரும் இந்திரியங்களை ஈண் டைக்கு உவமை கூறின் அவ்விந்திரியங்கட்கு வரும்பயன் அவற்றி னாலொற்றித்துக் காணும் உயிர்க்காயவாறு போல உயிர்க்கு வரும் இன்பத்துன்பப் பயனும் உயிரானொற்றித்துக் காணும் முதல்வனுக் காதல் வேண்டு மென்பாரை நோக்கி அங்ஙனமாகாமை கூறி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் மன்னுசிவன் சந்நிதியின் மற்று உலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல்மறந்தாய் என்பது ஈண்டுக்கூறிய கருதலளவையேயன்றி நிலைபெற்ற முதல்வனது சந்நிதியிற் பிரபஞ்சஞ் செயப்படுகின்ற தென்றோதும் வேதப் பொருளையும் அறியாது பிணங்குகின்ற பேதாய்; உளம் சொன்ன சிவன் கண்ணா வினையால் கண்டு அறிந்து நிற்கும் காண் என்பது உயிராவது தமக்கெனவோர் காரணமின்றித் தன்பொருட்டே அறிவனவாய அவ்விந்திரியங்கள் போலன்றி அவ்வேதத்துள் எடுத்தோதப்படும் முதல்வன் தனக்குக் காட்டாகி நிற்பத் தான் செய்த வினைக்கீடாக ஒன்றனையறிந்து நிற்கும்; இவ்வேறுபாடு அறிவாயாக; இன்று (ஆகலாற்) சிவன் அசத்தை எண்ணான் என்பது அங்ஙனங் காட்டாகி நிற்பினுந் தனது சந்நிதியின் அசத்தெல்லாஞ் சூனியமாகலான் மங்கலவடிவினனாய முதல்வன் அவ்வுயிர் போல் அவற்றை அநுபவியான் என்றவாறு.
இதனுட் சிவனென்றது மன்னுசிவனென்புழிப் பேரின்பத்துக்குக் காரணமென்னும் பொருட்டாய்த் தனது சந்நிதிக்கண் உலகத்தைச் சேட்டிப்பித்தற்குரிய இயைபுணர நின்றது; சொன்ன சிவனென்புழி முற்றுணர்வினனென்னும் பொருட்டாய்க் காட்டாதற் குரிய இயைபுணர நின்றது; எண்ணான் சிவனென்புழித் தூயதன்மையனென்னும் பொருட்டாய் அசத்தை எண்ணாமைக்குரிய இயைபுணர நின்றது. ஆகலாற் கூறியது கூறலன்மையுணர்க. அஃது அம்முப் பொருளுடைத்தென்பது சோமசம்பு பத்ததி வியாக்கியான முதலியவற்றுட் காண்க. சிவதத்துவ விவேகத்துள் மூவகைப்படுத் தோதிய பொருளும் இவையேயாமாறு கண்டு கொள்க.
ஈண்டு உலகமென்றது உயிர்களை. மறையினியலும் பொருளை மறையினியலென்றுபசரித்தார். இறந்ததுதழீஇயஎச்சவும்மை விகாரத்தாற்றொக்கது. மறந்தாயென்பது விளியுருபேற்ற பெயர்.
ஈண்டுச் சந்நிதியென்றது அவிகாரவாதிகள் கூறும் அபிமுக மாத்திரையன்றென்பார் சொன்ன சிவன் கண்ணாவென்றார். சிவசத்தி அவ்வக் காரியங்களின் உன் முகமாதலாகிய சங்கற்பமே ஈண்டுச் சந்நிதியெனப்படு மென்பதாம்.
காந்தங்கண்ட பசாசத்தவையேயென்றது ஒரு புடையுவமை யாதல் பற்றியே பிறிதன்றென்பது கருத்து. வினையாலென்றது ஐம்பொறிபோலன்றி உணர்தற்பயன் உயிர்க்கேயாதற்கேதுக் காட்டியவாறு. கண்டறிதல் ஒருபொருட்பன்மொழி. எண்ணல் ஈண்டநுபவித்தன்மேற்று. இன்றென்பது சாதியொருமை. அவனெதிர் என்பது அவாய்நிலையாய் வந்தது. ஆகலானென்பது சொல்லெச்சம். இன்றாதல் “யாவையுஞ் சூனியஞ் சத்தெதிர்” என்புழிப் பெறப்படும். இக்கருத்தே பற்றி “மாயை மருவிடான் சிவனவன்க ணுறைதரா தசேதனத்தால்” என்றார் வழி நூலாசிரியரும். “உன்னுதரத் தேகிடந்த கீட முறுவதெல்லா முன்னுடைய தென்னாய்நீ யுற்றனையோ மன்னுயிர்க ளவ்வகையே காணிங் கழிவதுவுமாவ துவுஞ் செவ்வகையே நின்றசிவன் பால்” என்றதும் இவ்வியல்பு நோக்கி.

குறிப்புரை :

இனி இதுவுந் தமது முதலாலே யுணருமென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், கருவி சடமாகலிற் சித்தாகிய உயி ரானன்றி அமையாவாயினுஞ் சித்தாகிய உயிர் முதல்வனது உப காரத்தையவாய் நிற்பதன்று; அவாவுமாயின் முதல்வனும் அவ்வாறே பிறிதொன்றனுபகாரத்தை அவாவுமெனப்பட்டு மேலும் வரம்பின்றி யோடும் என ஈசுவரவிகாரவாதி முதலியோர் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் பிற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற் கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: இனி இதுவும் இவ்வான்மாக் களும்; தமது முதலாலே இறைவனாலே; உணரும் என்றது அறிவிக்க அறியும் என்றவாறு.)
தமது முதலென்பது யானெம்மூர் புகுவன் நீ நும்மூர் புகுவை யென்புழிப்போல வேறு முடிபு கோடலிற் பால்வழுவன்மை யுணர்க. உம்மை இறந்ததுதழீஇயவெச்சம். இம்முறைமை தமக்கொரு முதலுடையவற்றிற்கேயன்றி ஏனைப்பொருட்கின்மையின் வரம்பின்றி யோடுமாறில்லை யென்பார், தமது முதலென்று உடம்பொடு புணர்த்தோதினார். தம்முணர்வின்றமி யென்றது மது. தத்துவங்களுமுயிருந் தமக்கொரு முதலுடையனவாதலும் முதல்வனுக்கு அஃதின்மையும் மேற்கூறிப் போந்த சூத்திரங்களாற் பெறப்பட்டனவென்பது கருத்து.
ஏது : இவ்வான்மாத் தன்னாலே யுணரு மிந்திரியங்களைப் போலத் தானுந் தன்னையுணராது நிற்றலான்.
என்பது எது என்னுதலிற்றோவெனின் உயிர் ஐம்பொறியிற் சடமன்மையான் அவற்றை யெடுத்துக்காட்டி மேற்கோடல் ஈண்டைக் கமையா தென்பாரை நோக்கி அதனைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இவ்வான்மா இவ்வுயிர்கள்; தன்னாலே உணரும் தம்மாலே விடயிக்கும்; இந்திரியங்களைப் போல பொறிகளைப் போல; தானும் சடமும் சேதனுமுமாய வேறுபாடுபற்றித் தம்முள் ஒவ்வாவாயினும் இவ்வுயிர்களும்; தன்னை தம்மையும்; தன் ஐ தம்முடைய முதல்வனையும்; உணராது நிற்றலான் அறியாது நிற்கும் ஆகலான், இதுவும் தமது முதலாலே உணருமென மேற்கொண்டது.)
சடமுஞ் சேதனமுமாய வேறுபாடுபற்றித் தம்முள் ஒவ்வா வாயினுந் தம்மையுந் தமது முதலையும் அறியமாட்டாமைக்கண் ஐம்பொறியும் உயிருந் தம்முள் ஒக்குமாகலின், அதுபற்றி அங்ஙன மேற்கோட லமையுமென்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 4

வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல-மெய்யவனில்
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனைக்
கண்டுடனாய் மன்னுதலைக் காண்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உயிர் அங்ஙன முணர்த்த வுணருங்கால் முதல்வனின் வேறுநின்றுணருமோ ஒன்றாய் நின்றேயுணருமோ வென்பாரை நோக்கி அவ்விரண்டியல்புமின்றி நின்றுணருமாறுணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். வெய்யோன் ஒளியில் ஒடுங்கி என்பது ஞாயிற்றினொளியினடங்கி; விளங்காது என்பது அதனின் வேறாய் விளங்கித் தோன்றுதலின்றி; வெய்யோனை ஆகாத மீன்போல என்பது அதுவா யொழிதலுமில்லாத நாண்மீன்கள் அஞ்ஞாயிற்றானே ஒளியுடையவாமாறுபோல; கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனை மெய் அவனில் கண்டு என்பது கண்டுங் கேட்டும் உண்டும் உயிர்த்துந் தீண்டியும் அறியப்படும் ஐவகை விடயங்களையும் உயிர் மெய்ப்பொருளாகிய முதல்வனால் உணர்ந்து; உடனாய் மன்னு தலைக் காண் என்பது வேறாதலும் ஒன்றாதலுமின்றி அவ்விரண்டற்கும் பொதுவாய் அடங்கி உடனாய் நிலைபெறுதலை அறிவாயாக என்றவாறு.
உவமை யடை பொருளினும், பொருள்வினை உவமையினுஞ் சென்றியையும். ஐ சாரியை. நாண்மீன் முதலியவற்றின் ஒளி யெல்லாம் ஞாயிற்றானாய ஒளியேயென்பது வேதநூற்றுணிபாகலான் அஃதீண்டைக் குவமையாயிற்று. உயிரென்னும் எழுவாய் மேலை வெண்பாவினின்றும் வருவித் துரைக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

அருளுண்டாம் ஈசற் கதுசத்தி யன்றே
அருளும் அவனன்றி யில்லை-அருளின்
றவனன்றே யில்லை அருட்கண்ணார் கண்ணுக்
கிரவிபோல் நிற்குமரன் ஏய்ந்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனமாயினும் உயிர்கட்குப் பல வேறுவகைப்பட உணர்வு நிகழ்தலின் அஃதுணர்த்துதல் வேறு பாட்டானாய தெனல் வேண்டும்; வேண்டவே, நிருவிகாரியென்னுஞ் சுருதியோடு முரணி முதல்வன் விகாரியாவான் செல்லுமென்பாரை நோக்கி விகாரியாகாமையுணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அருள் ஈசற்கு அன்றே உண்டாம் என்பது உயிர்கட்குப் பசுத்துவத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதற்கணுளதாகிய இரக்கம் முதல்வனுக்கு அநாதியேயுள்ளது; அது சத்தி என்பது அவ்விரக்கம் வேறு பொருளன்று முதல்வனுக்குளதாகிய சத்தியேயாம்; அருளும் அவனன்றி இல்லை அவன் அருளின்று அன்றே இல்லை என்பது இரக்கமும் அவனுங் குணமுங் குணியுமாகலின் அவ்வருளு முதல்வனையின்றி யமையாது, முதல்வனும் அதனையின்றி யமையானாய்; அருட்கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் ஏய்ந்து நிற்கும் அரன் என்பது ஞானக்கண்ணுடையாருணர்விற்கு ஞாயிறு தன்னொளியோடு தாதான்மியமாயியைந்து நிற்குமாறுபோல் அவ்வருளோடு தாதான்மியமாயியைந்து நிற்பன் முதல்வன்; ஆகலாற் றன்வயத்தனாகிய அம்முதல்வன் விகாரமின்றி நின்றே தனது சத்திசங்கற்பமாத்திரையான் அனைத்துஞ் செய்தல் கூடும் என்றவாறு.
ஆகலாற் றன்வயத்தனாகிய அம்முதல்வன் விகாரமின்றி நின்றே தனது சத்தி சங்கற்பமாத்திரையான் அனைத்துஞ் செய்தல் கூடுமென்பது குறிப்பெச்சம். உம்மை எதிரது தழீஇயது. இன்றி யென்னும் வினையெச்சக் குறிப்பினிகரஞ் செய்யுளாகலின் உகரமாய்த் திரிந்தது. அன்றே அசை. இவ்வியல்பு சித்தாந்த நெறி யுணர்ந்தார்க்கன்றி விளங்கா தென்பார் அருட்கண்ணார் கண்ணுக் கென்றார். சத்தியதுண்மையும் அதனியல்பும் “நீக்கமின்றி நிற்குமன்றே” யென்பதனுள் வகுத்துரைத்தமையின் ஆண்டுக் காண்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

உணருரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிற னல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்கும்மன் னுலகே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சத்தும் அசத்தும் வரைசெய் துணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின் சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் மேலைந்து சூத்திரத்தானுங் கூறிப்போந்த பொருள்களுள் யாது சத்து யாது அசத்தென்னும் ஐயநீக்குதற்குச் சத்தினியல்பும் அசத்தினியல்பும் இவையென அவ்விரண்டும் இலக்கணத்தாற் றம்முண் மயங்காதவாறு வரைந்துவைத்துணர்த்தி உண்மை யதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யுமுகத்தானே இலக்கண வோத்துட் கூறுதற்கு எஞ்சிநின்ற பதிப்பொருள திலக்கணங் கூறுதல் இவ்வாறாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
இதனானே சூத்திரவியைபும் இனிது விளங்கும்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : தம்முணர்வின் தமியாகிய முதற்பொருள் அளவைகளானறியப்படும் இயல்பிற்றெனின், அங்ஙனம் அறியப்படும் பிரபஞ்சம்போல் அழிபொருளாகிய அசத்தாம்; எவ்வாற்றானும் அறியப்படாத இயல்பிற்றெனின், அங்ஙன மறியப்படாத முயற்கோடுபோலச் சூனியப் பொருளாம்; ஆகலான் இவ்விரு பகுதியுமன்றி ஒருவாற்றா னறியப்படாமையும் ஒருவாற்றா னறியப்படுதலுமாகிய இரண்டு வகையானுஞ் சிவசத்தாமெனக் கூறுவர் மெய்யுணர்வின் நிலைபெற்றுயர்ந்தோர் என்றவாறு.
உணருரவெனி னசத்தென மாறுக. எனினென்பது முன்னருஞ் சென்றியைந்தது. முற்றும்மைகள் தொக்கன. அல்லதென்பது வினையெச்சக் குறிப்புமுற்று. அன்றியாமென இயையும்.
ஒருவாற்றானறியப்படாமை பாசஞான பசுஞானங்களான் அறியப்படாமை. ஒருவாற்றானறியப்படுதல் சிவஞான மொன்றானே அறியப்படுதல். பாசஞான பசுஞானங்களான் அறியப்படாமையிற் சிவமாதலும் பதிஞானத்தால் அறியப்படுதலிற் சத்தாலும் பெறப் படுமென்பார், இரண்டுவகையிற் சிவசத்தாமென இசைக்கு மென்றார். சிவசத்தென்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு. சடமாகிய சத்தினீக்குதற்குச் சிவசத்தென்றார். சிவசத்தென்பது சித்துச் சத்தென்னும் பொருட்டு. எழுவாய் மேலைச்சூத்திரத்தினின்றும் வருவித்துரைக்கப்பட்டது. இருதிறனுமன்றி இரண்டு வகையானுஞ் சித்தாதலுஞ் சத்தாதலு முடையனாய் நிற்றல் முதல்வனுக் கிலக்கணமென இலக்கணமும் இதனுட் போந்தவாறுணர்க.
முதல்வனுக்குப் பொதுவியல்பு மேற்புனருற்பவமுணர்த்து முகத்தாற் கூறிப் போந்தமையின் இது சொரூபலக்கணமெனப்படுஞ் சிறப்பிலக்கணமெனக் கொள்க. அற்றாகலினன்றே இதனை இலக்கணவோத்துள் முதற்கட்கூறாது உண்மையைச் சாரவைத்து இறுதிக்கட் கூறியதூஉமென்க. இன்னும் முதல்வனுக்குளவாகிய சிறப்பியல்புக் குணங்களெல்லாம் இவ்விரண்டனுளடங்கும். அஃதறிந் தடக்கிக் கொள்க. “தன்னாலே தனையறிந்தாற் றன்னையுந் தானே காணும்” என்பதாம் “உன்னரிய திருவருளை யொழியமல முளதென்றுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா முனக்கே” என்பதாம், “மாயைமா மாயை மாயாவருமிரு வினையின் வாய்மை யாயவா ருயிரின் மேவு மருளெனி லொளியாய் நிற்கும்” என்பதாம் ஓதியவாற்றால் ஏனைப்பசுபாசங்களுஞ் சிறப்பியல்புபற்றியுணர்தல் சிவஞானத்தானன்றி அமையாதாயினும் +“தீபமெனத் தெரிந்தாங் கொருவியான் மாவினுண்மை யுணர்ந்தவர் தமையுணர்ந்தோர் தருமிது பசுஞானம்” எம், + “இவைகீழ் நாடலாலே காதலினா னான்பிரம மென்னு ஞானங் கருதுபசு ஞானம்” எம் பொதுவியல்பு பற்றி பாசவுணர்விற்கு அவற்றது பொதுவியல்பு விடயமாதல் கண்கூடாகப் பெறப்படுதலானும், அவை ஒருவாற்றா னுணருருவாதலு முடைமையிற் சிவசத்தாவான் செல்லாமை யறிக. சற்காரிய வாதங்கூறுஞ் சைவசித்தாந்தத்தில் அசத்தென்பது சத்துக்கு மறுதலையன்மையான் அப்பசுபாசங்கள் அங்ஙனமறியப்படும் பொதுவியல்புபற்றி அசத்தெனப்படுமாயினுஞ் சிறப்பியல்பு பற்றி அசத்தாதல் செல்லாமையிற் சிறப்பியல்பு நோக்கும்வழி அவை சத்தாதற் கிழுக்கின்மையுமறிக. இங்ஙனஞ் செவ்வனே யிறுக்க அறியாதார் அபாவத்தினியல்பாவது பாவத்திற்கு மறுதலைப் பொருள் போலுமென நையாயிகர் முதலியோர் மதம்பற்றி மயங்கி எல்லாப் பொருளுஞ் சத்தென்னுஞ் சித்தாந்தத்தோடு முரணாமைப் பொருட்டு ஈண்டுச் சத்து அசத்தெனப்பட்டனவும் சித்து அசித்தென்னும் பொருளவாமெனவும், சுத்தம் அசுத்தமென்னும் பொருளவாமெனவும் உரைத்திடர்ப்படுவர். காரியப்பிரபஞ்சம் ஏனைப் பசுபாசங்கள் போலன்றி இருவகையியல்பானுங் காட்சிப் புலனாய் இத்துணைப் பொழுது நிற்குமென நம்மனோரால் அறிய வாராது நிலைபெறுவது போலத் தோன்றிவிரையக் கெட்டு மறைந்து போதற் சிறப்புடைமை பற்றி அதுவே ஈண்டு உணருருவசத்தென் றெடுத்துக் கொள்ளப்பட்டது. அசத்தெனவே அசித்தென்பதுந் தானே போதரும்.
இதனுள் உணருருவசத்தெனி னுணராதின்மையினென்றது ஓரதிகரணம்; இருதிறனல்லது சிவசத்தாமென இரண்டுவகையி னிசைக்கு மன்னுலகே யென்றது ஓரதிகரணம்; ஆக இரண்டதி கரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

அசத்தறியாய் கேள்நீ அறிவறிந்த எல்லாம்
அசத்தாகும் மெய்கண்டா னாயின் - அசத்தலாய்
நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும்
ஓரின் அவை யின்றமா றொப்பு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இரட்டுற மொழிந்து கொண்டு சாங்கியரை நோக்கி யுரைத்த பொருளை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் அசத்து அலாய் என்பது அசற்காரிய வாதி யல்லாத அறிவுடை யோனே; அவை இன்று ஆம் ஆறு ஒப்பு ஓரின் என்பது அங்ஙனந் தோன்றி மறைவனவாய பிரபஞ்சம் அசத்தாமாற்றிற்கு உவமையாராயின்; நிகழ் நீரில் எழுத்தும் கனவும் பேய்த்தேரும் என்பது நிகழாநின்ற நீர்மேலெழுத்துங் கனவிற் காட்சியும் பேய்த்தேருமாம் என்றவாறு.
எனவே, அப்போதுள்ளனவாய நீர்மேலெழுத்து முதலியனவற்றை அங்ஙனே சடிதியின் மறைந்துபோதற் சிறப்புப்பற்றி அசத்தென்றல் எலார்க்குமொப்ப முடிந்தமையின், அவ்வியல் புடைய பிரபஞ்சத்தையும் அவைபோல் அசத்தென்றல் அமையு மென்றவாறாயிற்று. அசற்காரிய வாதியை அசத்தென்றுபசரித்தார். நீரிலெழுத்து முதலியன பொய்யென்பாரை மறுத்தற்கு நிகழென்றடை கொடுத்தார்; அஃதியாண்டுஞ் சென்றியையும். குவ்வுருபு விகாரத்தாற் றொக்கது. இன்றென்னுமொருமை அப்பண்பின்மே னின்றது.
நீரிலெழுத்துத் தோன்றிய பொழுதே மறைந்து போதற்கும், கனாப்பொருள் முடிவு பெறுதலின்றி இடையே மறைந்து போதற்கும், அருஞ்சுரத்தின் முதுவேனிலின் நண்பகற்கடுமை பற்றித் தோற்றி ஞாயிற்றின் கிரணம் முகிற்படலத்தின் மறைந்தவழித் தானு மறைந்து போவதாகிய பேய்த்தேர் ஒரு காரணங்காட்டி மறைந்து போதற்கும் உவமையாயின. இவ்வெண்பாவை “இலயித்ததன் னில்” என்பது போல இங்ஙனம் இருதொடராக வைத்துரைத்து கரணப் பொருள் கோடல் ஆசிரியர் கருத்தென்பது வழி நூலாசிரியர் “அசத்தாஞ் சுட்டியுணர் பொருளான வெல்லாம்” என்பதாம், “உலகினை யசத்து மென்பர்” என்பதாம் வேறு கூறியவாற்றானு முணர்க. இஃதறியாது இவ்வெண்பாவை ஒரு தொடராக வைத்துரைப்பார்க்கு அசத்தறியாய் அசத்தலாய் என்றதனால் ஒரு பயன் படாமையும், ஆயின் ஓரினென்று இருகாற்கூறுதலும், அசத்தாகும் இன்றாமென்று இருகாற் கூறுதலுங் கூறியது கூறலென்னும் வழுவாதலுமறிக. இனி ஒரு வாற்றானுமுணரப்படாத பொருள் சூனியமென்பது எல்லாச் சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தமையின் ஆண்டதிகரணத்திற்குரிய ஐயப்பாடு முதலியன நிகழாமையான் அதனை வேறெடுத்துரைத்து மேற்கொள்ள வேண்டாவாயினும், மந்தவுணர்வுடையார்க்கு அதன்கண் ஐயநிகழாமைப் பொருட்டு வழி நூலாசிரியர் “உணராத பொருள் சத்தென்னி லொருபய னில்போலும்” என விடுத்தொழிந்தாரென்றுணர்க.

குறிப்புரை :

ஈண்டு அறிவினாலறியப்பட்ட சுட்டு அசத்தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், மேலைச் சூத்திரத்தின் அளந்தறிந் தறியாவென்றதனை உடம்படாது பிரபஞ்சம்போல முதல்வனும் அளவைகளான் அளந்தறி பொருளேயாமென நையாயிகர் முதலியோர் கூறுங்கடாவையும் எல்லாப் பொருளுஞ் சத்தாகலின் அளந்தறி பொருளுஞ் சத்தேயாமெனச் சாங்கியர் கூறுங்கடாவையு மாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள். சுட்டறிவினால் அறியப்பட்ட சுட்டுப் பொருளெல்லாம் அசத்து என்றவாறு.
சுட்டு ஆகுபெயர். சிவஞானத்தாலறியப்படுதலை நீக்குதற்கு அறிவினாலென விசேடித்தார்.
ஈண்டு அறிவென்றது ஒன்றை முந்தி அதுவதுவாகச் சுட்டிக் காணும் அளவையறிவினையென்பது சிவப்பிரகாசம், உண்மை 5 “அறிவினா லறிந்த யாவு மசத்தாத லறிதி” என்ற புடைநூலாசிரியர் மீள அங்ஙனந் தெரித்தோதியவாறு பற்றி யுணர்ந்து கொள்க.
ஏது : அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் உள்ளதென்னு முணர்விற்கு விடயமாய் உபலத்தியைப் பயப்பிக்கும் பிரபஞ்சத்தை இல்லையென்னு முணர்விற்கு விடயமாய் அநுபலத்தியைப் பயப்பிக்கும் இல்பொருளோடொப்ப அசத்தென்றல் அமையுமாறியாங்ஙன மெனவும் சத்தாகிய பிரபஞ்சத்தைச் சுட்டப்படுதன் மாத்திரையான் அசத்தென்றல் சற்காரிய வாதத்திற் கிழுக்காம் போலுமெனவும் முறையே அவ்விருவர் மதம்பற்றிக் கூறுவாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். அச்சுட்டுப் பொருள்கடாம் இராசதகுண மிகுதிப்பாட்டான் உள்ளதென்னும் உணர்விற்கு விடயமாய் உபலத்தியைப் பயப்பித்து நின்றுதானே தாமதகுண மிகுதிப்பாட்டான் இல்லையென்னு முணர்விற்கு விடயமாய் அநுபலத்தியைப் பயப்பித்து நிற்றலான் ஈண் டறிவினாலறியப்பட்ட சுட்டு அசத்தென மேற்கொண்டது என்றவாறு.
ஈண்டுப் பிரகாசம் அப்பிரகாசமென்பன உபலத்தி அநுபலத்தி யென்னும் பொருளவாய் அவை நிகழ்தற்கிடனாகிய பொருண்மேனின்றன. இது நையாயிகரை நோக்கி மேற்கோளைச் சாதித்தவாறு. இனி இதனையே இரட்டுற மொழிந்து கொண்டு அவைதாங் காரிய வவத்தையிற் றூலமாய் விளங்கிநின்றே காட்சிப் புலனாய்ச் சடிதியின் மறைந்து சூக்குமமாய்க் காரணவவத்தையின் விளங்காது நிற்கும் இவ்வேற்றுமையுடைமையான் அங்ஙனம் புலனாகாத காரணப் பொருள்களை நோக்கிக் காரியப் பிரபஞ்சம் அசத்தாதல் சாலுமாகலின் ஈண்டறிவினாலறியப்பட்ட சுட்டு அசத்தென மேற்கொண்ட தென்றவாறு எனவும் உரைத்துக் கொள்க.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், ஒருசாரன அங்ஙனமாயினும் உபலத்திப் பட்டனவெல்லாம் அவ்வாறு அசத்தாமென்றற்குப் பிரமாண மென்னையென்னும் நையாயிகரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் அசத்து அறியாய் நீகேள் என்பது அசத்தினியல்பை யறியாத மடவோனே யாமிறுக்குமிறையை நீ மனம் பற்றிக் கேட்பாயாக ; மெய் கண்டான் ஆயின் அறிவு அறிந்த எல்லாம் அசத்து ஆகும் என்பது சத்தினியல்பை யறிந்தோன் ஆராய்ந்தானாயின் அறிவினாலறியப்பட்டனவெல்லாம் அசத்தேயாம். என்றவாறு.
அறியாயென்பது விளியுருபேற்ற பெயர். அசத்தினியல்பை யறிந்தாயாயின் இவ்வாறு பிணங்குவாயல்லையென்பார் அசத்தறியாயென்றும், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 3.54.4. “எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்று கேட்க” என்பார் கேணீயென்றும், உபலத்திக்கு விடயமானவையெல்லாம் அநுபலத்திக்கு விடயமாதல் ஒரு தலையென்பார் அறிவறிந்த வெல்லா மசத்தாகு மென்றும், சத்தினியல்புணர்ந்தார்க்கன்றி அசத்தினியல் புணர வாரா தென்பார் மெய்கண்டானென்றும், ஆய்தற்கருமை நோக்கி ஆயினென்றுங் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

எண்ணிய சத்தன் றசத்தன்றாம் என்றால்என்
கண்ணி யுளதென்றல் மெய்கண்டான் - எண்ணி
அறிய இரண்டாம் அசத்தாதல் சத்தாம்
அறிவறியா மெய்சிவன்தா ளாம்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின் பரமார்த்தமாகிய பரப்பிரமப் பொருள் அவிச்சை வயத்தான் ஞாதாவெனவும் ஞேயமெனவும் பகுக்கப்பட்டு முன்னர்க் கூறப்படுஞ் சாதகங்களி னின்றறியவும்படும் அவிச்சை நீங்கிய வழி அப்பகுப்பின்மையாற் சத்தென்றாதல் அசத்தென்றாதல் ஒருவாற்றானும் ஞேயமாமாறின்றிக் கேவல ஞானமாத்திரையேயாய் நிற்பதொன் றாகலான் அது கோசரமாமென்றல் பொருந்தாதென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் எண்ணிய சத்து அன்று அசத்து அன்று ஆம் என்றால் உளது என்றல் என் கண்ணி என்பது பரமார்த்தமாகிய பரப்பிரமப் பொருள் விவகாரத்திற் கருதப்பட்ட சத்துமன்று அசத்துமன்றெனின் அங்ஙனமொரு பொருளுண்டென்றல் யாது பிரமாணங் கருதியோ அதனைக் கூறுவாயாக. பிராமண முண்டெனின் அதற்கு அது பிரமேயமெனப்பட்டு ஞேயமாவான் செல்லுமென்றஞ்சிப் பிரமாணமில்லையென்பையாயின்; மெய்கண்டான் எண்ணி அறிய இரண்டு அசத்து ஆம் என்பது சத்தினியல்பை யுணர்ந்தோன் ஆராய்ந்தறியிற் காட்சி முதலிய பிராமணங்கட்கு விடயமாவதூஉம் ஒருவாற்றானும் பிரமாணமல்லாத சூனியமுமாகிய இரண்டும் மேற்கூறியவாற்றான் அசத்தேயாம்; ஆதல் சத்து ஆம் அறிவு அறியா மெய் சிவன் தாள் ஆம் என்பது ஆதலாற் சாந்தோக்கிய முதலியவற்றுட் சத்தென்றோதப்படுஞ் சுட்டறிவினால் அறியப்படாத மெய்ப்பொருள் சைவ உபநிடதங்களினுஞ் சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவமாத்திரையிற் கோசரிப்பதென் றோதப்படுஞ் சிவனருளாவதன்றி நீ கூறுஞ் சூனியமன்று என்றவாறு.
அறியவென்னுஞ் செயவெனெச்சம் மழைபெய்யக் குள நிறையும் என்புழிப் போலச் செயினென்னு மெச்சப் பொருட்டாய் நின்றது. முற்றும்மை விகாரத்தாற் றொக்கது.
அசத்தாமென மாறுக. சத்தாகிய மெய்யெனவியையும். “அடியளந்தான்றாயது” என்றாற் போல அறிவறியாமெய்யென்றது வாளாபெயராய் நின்றது. சிவன்றாளெனச் சிவசத்தியின் மேல் வைத்து உயர்த்துக் கூறியது உபசார வழக்கு: “இறைவனார் கமலபாதம்” என்பதுமது.
இதனாற் போந்தபொருள் சத்துமன்றி அசத்துமன்றி ஒரு பொருளுண்டெனின் அதற்குப் பிரமாணமென்னை? பிரமாணா தீதமாகிய சூனியமெனிற் சூனியமும் அழிபொருளுமாகிய இரண்டும் அசத்தேயென்பது மேற்காட்டினமையாற் பிரமப்பொருள் அசத்தெனப்பட்டுச் சத்தென்னுஞ் சுருதிகளோடு முரணுமாகலின் அவற்றுட் சத்தென்றோதப்படும் பரப்பிரமப் பொருளாவது உண்மை ஞானத்திற் கோசரிப்பதென யாங்கூறுஞ் சிவமேயன்றி நீ கூறுஞ் சூனியமன்றென மாயாவாதியை மறுத்துக் கோசரமென்றதனை வலியுறுத்திய வாறாமென்க.
எண்ணியறிய இரண்டாமசத் தென்பதற்குப் பிறரெல்லாம் வருகின்ற வெண்பாவிற் கூறும் பொருள் படக் கூறியது கூறலாதன் மேலும் ஓரியைபின்றியுரைப்ப.

குறிப்புரை :

இனி இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீதகோசரமாய் நின்ற வதுவே சத்தாயுள்ள சிவமென்றுணரற் பாற்று.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின் மேல் உணர் பொருளியல்பும் உணராத பொருளியல்புங் கூறுமுகத்தான் அசத்தினியல்பை வரை செய்துணர்த்தியவழி இரண்டும் இவ்வாறாகலான் இவற்றின் வேறாய முதல்வனதியல்பாவது மாயாவாதி கூறும் அநிருவசனம் போலு மென்னுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் பிற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி இவ்விரண்டு தன்மையுமின்றி உணருருவாந் தன்மையும் உணராதாந் தன்மையும் இன்றி; வாக்கு பாசஞானத்திற்கும்; மனம் பசுஞானத்திற்கும்; அதீதம் அவ்விரண்டன் விருத்திகளைக் கடந்து அதீதமாய் நின்று; கோசரமாய் ஒற்றுமைப்பட்டு நின்று உணரும் அனுபவ ஞானமாத்திரைக்கே விளங்கிக் கோசரிப்பதாய்; நின்ற நிற்கின்ற; அதுவே அவ்வாறு நிற்கின்ற பொருள் இதுவென அளவைகளானறிய வாராமை பற்றி அதுவேயென மகா வாக்கியத்தாற் கூறப்படும் பதிப்பொருளே; சத்தாய் உள்ள சிவம் என்று சத்தாகிய சிவமாமென்று; உணரற் பாற்று உணரும் பான்மையுடைத்து.)
வாக்கெனப்படும் நாதமுடிவான பாசஞானத்தை வாக்கென்றும் அவற்றின் வேறாய பசுஞானத்தை மனமென்றும் உபசாரவழக்காற் கூறினார்.
வாக்குமனாதீத கோசரமாய் நின்ற என்பது அவ்விரண்டின் விருத்திகளைக் கடந்து அதீதமாயும் ஒற்றுமைப்பட்டு நின்றுணரும் அநுபவஞான மாத்திரைக்கே விளங்கிக் கோசரிப்பதாயும் நின்ற வென்றவாறு. அவ்வாறு நின்ற பொருள் இதுவென அளவைகளான் அறிய வாராமைபற்றி அதுவேயென மகாவாக்கியத்திற் கூறியதனை அநுவதித்துச் சத்தாகிய சிவமாதலைச் செவியறிவுறுத்தார். வாக்கு மனாதீதம் என்றது தமிழ்நூன் முடிபு : மரவடி மராடியென மரீஇயி னாற்போல மனவதீதம் மனாதீதமென மரீஇயிற்று. அதீதகோசர மென்பது வடநூன் முடிபு. வாக்கு மனாதீதப் பொருளாகலின் உணருருவாந் தன்மையும், கோசரப் பொருளாகலின் உணராதாந் தன்மையும் இல்லையென்பது பெறப்படுதலின் இவ்விரண்டு வகையு மின்றி யென்றார்.
ஏது : பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவதின்மையானும் அப்பிரகாசத்தினுக்குப் பிரகாசமின்மையானும்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் இவ்விரண்டுவகையு மில்லாத பொருள் அநிருவசனமாய் நிற்பதென்னாது வாக்குமனாதீத கோசரமாய் நிற்பதென்றற்குப் பிரமாணமென்னை யென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். வாக்கு மனங்களாலோதி யுணரப்படுவதாய நிருவசனப் பொருட்கு முன்னர்க் கூறப்படுஞ் சாதனங்களினின்று அறியற்பாலதாக வேண்டாமையானும் ஒருவாற்றானும் அறியப்படாத அநிருவசனப் பொருட்குச் சாதனத் தினின்றும் அறியப்படுமாறின்மையானும் இனி இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்குமனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவமென்றுணரற்பாற்றென மேற்கொண்டது என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

உணர்ப அசத்தாதல் ஒன்றுணரா தொன்றை
உணருநீ தானுணரா யாயின் உணரும் - உனின்
தானிரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால்
தானிரண்டாய்க் காணான் தமி.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின் பிரகாசித்த பொருளையும் வேறோராற்றான் அறிதுமென வேட்கை சென்றுழி அவ்வாற்றாற் புதுவதாய்ப் பிரகாசிக்க வேண்டுதலிற் பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவதில்லையென்றல் யாண்டுஞ் செல்லாமையின் வாக்கு மனாதீதமென்றல் பொருந்தாதென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். உணர்ப அசத்து என்பது நின்னாலறிவனவாய கருவிகளெல்லாம் மேற்கூறியவாற்றான் அசத்தாம், அசத்தெனவே அசித்தாதலும் பெறப்படும்; ஆதல் ஒன்று ஒன்றை உணராது என்பது ஆகலான் அவற்றுள் ஒரு கருவியும் ஒன்றாகிய முதற்பொருளை அறியமாட்டாது; உணரும் நீ தான் உணராய் என்பது அவற்றானறிந்து வருகின்ற நீதானும் அதனையறியமாட்டாய்; ஆயின் என்பது நீயேயாய்ந்தறிவாயாயின் ; உணரும் உனின் தான் இரண்டு ஆம் என்பது அவ்வாறுணரப்படும் பொருள்கள் போல் உணர்கின்ற நின்னின் வேறாம்; மெய்கண்டான் றன்னால் உணர்தலால் தான் இரண்டாய்க் காணான் தமி என்பது உயிர்க்கு அறிவு விளங்கு முண்மையை அறிந்தோன் தன்னறிவு அச்சிவனருளினடங்கி அதுவாய் நின்று அதனானே அதனை யறியுமாகலான் ஏனைப்பொருள்களை யறியுமாறுபோல வேறாய் நின்றறிவானல்லன் அத்தனி முதற்பொருளை என்றவாறு.
இதனாற் போந்தது சத்தாகிய சிவம் பாசஞானத்தானாதல் பசு ஞானத்தானாதல் அறியப்படாது ; அறியப்படிற் குடமுதலாயின போல உயிரின் வேறாய் அவிச்சையான் வருஞ் சுகதுக்கங்களைப் பயப்பதன்றி அவிச்சையினீங்கிய நிரதிசய வின்பத்தினைப் பயவாதாகலான் அவ்வுண்மையுணர்ந்தோன் ஏனைய போல அசத்தாதலின்றித் தனியாய் நின்ற அம்முதற்பொருளை அதனானொற்றித்து நின்றே காண்பனென நையாயிகர் முதலியோரை மறுத்து வாக்குமனாதீதமாய் நின்றே கோசரமாமென வலியுறுத்தியவாறாமென்க.
உணர்பவென்பது அகரவீற் றஃறிணைப் பன்மைப் பெயர்ச் சொல். ஒன்றுமென்னும் முற்றும்மை விகாரத்தாற்றெக்கது. உனினென்னும் இன்னுருபு நீக்கப்பொருட்கண் வந்தது. ஒற்றிரட்டாமை புறனாடையாற் கொள்க. தான் அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பாவகமேற் றான்அசத்தாம் பாவநா தீதமெனிற்
பாவகமாம் அன்றென்னிற் பாழதுவாம் - பாவகத்தைப்
பாவித்தல் தானென்னிற் பாவகமாந் தன்னருளாற்
பாவிப் பதுபரமில் பாழ்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், தானே கோசரமானாலன்றித் தன்னாலறிதல் கூடாமையிற் றன்னாலே தனையுணருமென்பது தன்னைப் பற்றுதலென்னும் வழுவாமாகலின் அவ்வாறன்றி வாக்கு மனாதீதப்பொருள் யோகநூலிற்கூறுந் தியானபாவனைகளிற் கோசரமாமென்றாலே அமைவுடைத்தென யோகமதம்பற்றிக் கூறுவாரை நோக்கித் தன்னாலன்றிக் கோசரமாகாமையை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். பாவகமேல் தான் அசத்து ஆம் என்பது நீ கூறும் பாவனை ஏனைப் பாவகங்கள் போல மனமுதலியவற்றோடு கூடி நின்று பாவிக்கும் பாவகமெனின் அறிவினாலறியப் பட்ட சுட்டாகலான் அப்பொருள் அசத்தாம் ; பாவனாதீதம் எனின் பாவகம் ஆம் என்பது கருவிகளை நீங்கி நின்று பாவிப்பதாகலின் அப்பாவனையைக் கடந்ததெனிற் கருவிகள் நிங்கிய வழி ஒன்றுமறியுமாறின்றிக் கேவலமாமாகலான் அது பாவகமாத்திரையேயன்றிப் பயன்படுமாறில்லை; அன்று என்னின் பாழது ஆம் என்பது இவ்விருதிறனுமன்றி அநிருவசனமாகப் பாவிக்கப் படுவதெனின் அது சூனியப் பொருளாம் ; பாவகத்தைப் பாவித்தல் தான் என்னின் பாவகம் ஆம் என்பது அவ்வாறன்றிப் பாவனைப் கெய்தாத பொருளை எய்தியதாக வைத்துப் பாவகஞ்செய்தலெனின் அது போலிப் பாவனையாதலாற் பாவனாதீதம் போலப் பாவனை மாத்திரையேயன்றிப் பயன் படுமாறில்லை, அற்றேல் ஒருவாற்றானும் பாவனைக் கெய்தாத பொருள் பாழாமெனின் ; தன் அருளால் பாவிப்பது பரம் என்பது அப்பாவகங்களை யொழித்துத் தனது திருவருளாற் பாவிக்ககப் படுவதாம் பரம்பொருள்; பாழ் இல் என்பது ஆகலான் நீ கூறும் பாவனைக் கெய்தாமைபற்றிப் பாழாதலில்லை என்றவாறு.
தான் அசை. பாவகத்தைப் பாவித்தலென்பது “கறைமிடறணியலு மணிந்தன்று’’ என்றது போலக் கொள்க. மேலை வெண்பாவில் தன்னென்றது தனது சத்தியேயாகலால் தன்னைப்பற்றுதலென்னுங் குற்றமாதல் யாண்டையதெனவிடுப்பார் தன்னருளாற் பாவிப்பதென்றார். தன்னருளை யறியுமாறும் அதனாற் பாவிக்குமாறும் ஒன்பதாஞ் சூத்திரத்துட் கூறப்படும். யோகநூலார் கூறும் பாவனையாவது இந்நான்கனுள் ஒன்றாகற்பாலதன்றி வேறின்மையின் நான்கினையுங் கூறி மறுத்தார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அறிய இரண்டல்லன் ஆங்கறிவு தன்னால்
அறியப் படான் அறிவி னுள்ளான் - அறிவுக்குக்
காட்டாகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்னக்
காட்டா தறிவறிந்து கண்டு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், மேற்கூறிப் போந்த பாவனை கட்கெய்தாத பொருளைத் தன்னருளாற் பாவித்தல் வேண்டாம். உயிர் பசுத்துவ நீங்கிய காலத்துச் சிவனைப் போல முற்றுமுணர்தன் முதலிய எண்குணங்களுமுடைய தென்று ஆகமங்களுட் கூறுதலின் ஆண்டான்மஞானஞ் சிவஞானத்தோடொப்பதன்றிப் பசுஞானமெனப்படாமையான் அவ்வறிவான் அறியப்படுங் கோசரப் பொருளென்றலே அமைவுடைத்தென்னுஞ் சிவசமவாதிகளை நோக்கித் தன்னருளாலன்றிக் கோசரமாகாமையை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் அறிய இரண்டு அல்லன் என்பது சிவாகமங்களின் அத்துவிதங் கூறுதலின் உயிர் தன்னறிவானறிதற்குத் தன்னின் வேறல்லனாகலானும்; அறிவின் உள்ளான் ஆங்கு அறிவு தன்னால் அறியப்படான் என்பது சமமாததலின்றித் தூலசூக்கும முறையாற் றன்னறிவுக்குள்ளுமாய் நிற்றலின் அவ்விடத்துத் தன்னறிவினால் அறிய வாரானாகலானும்; அறிவுக்குக் காட்டு ஆகி நின்றானை என்பது தன்னறிவுக்கு வியஞ்சகமாய் நின்றறிவிக்கும் உயிர்க்குயிராய முதல்வனை ; அறிவு கண்டு அறிந்து காட்டாது என்பது ஆன்மஞானமானது தான் கண்டறிந்து தன் குணியாகிய உயிர்க்குக் கோசரமாமாறு காட்டமாட்டாது ; மெய் அறியாக் கண் என்ன என்பது தன்னின் வேறின்றித் தனக்குண்ணிற்றலிற் றன்னாற் காணப்படாது தனக்குக் காட்டாகிநின்ற உயிரை யறியமாட்டாத கண்ணொளி போல் என்றவாறு.
காட்டு முதனிலைத் தொழிற்பெயர். அறிவுக்குக் காட்டாகி நின்றானென்னும் பெயரடையானும் ஓரேதுக் கூறியவாறு. கண்டறிதல் “குழிந்தாழ்ந்தகண்’’ என்றாற்போல ஒரு பொருட்பன்மொழியாய்ச் சிறப்பின்கண் வந்தது. மெய்யறியாக் கண்ணென்னவென இயைத்துரைக்க. கண்முதலியவற்றை நோக்கி உயிர் சத்துச் சித்தாமென்றவதனை மெய்யென்றார். கண் ஆகுபெயர். கண்ணறியாமெய்யென்ன என்பதற்குக் கண்ணையறியாத உடம்புபோலென்றுரைப்பாருமுளர். உடம்பிற்கு அறியுந் தன்மையின்மையானும், உடம்பிற்குக் கண் காட்டாதலு மின்மையானும் அஃதீண்டு உவமையாதற்கேலாமையின் அது போலியுரை யென்றொழிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

அதுவென்னும் ஒன்றன் றதுவன்றி வேறே
அதுவென் றறியறிவு முண்டே - அதுவென்
றறிய இரண்டல்லன் அங்கறிவுள் நிற்றல்
அறியுமறி வேசிவமு மாம்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அத்தன்மையனாகிய முதல்வனைத் தலைப்பட்ட உயிர் முதல்வனோடு ஒன்றாய்ப் போவதேயாகலின் ஆண்டங்ஙனமறிவதூம் அறியப்படுவதூஉமாதல் யாங்ஙனமென்னுஞ் சிவாத்துவித சைவர் சுத்த சைவரை நோக்கி ஒன்றாய வழியும் அறிவதும் அறியப்படுவது முண்டென்பதுணர்த்தி அதனை வலியுறுத்துதனுலிற்று. இதன் பொருள். அது என்னும் ஒன்று அன்று என்பது சத்தாகிய சிவம் ஞேயப் பொருளாய் விசிட்டமாய் நிற்பதென்று உமக்குமொக்குமாகலான் அச்சிவம் இன்னதென்றறிய வாராது அநிருவசனமாய் நிற்பதொரு நிருவிசேடப் பொருளெனக் கொண்ட மாயாவாதத்தைப் போல அதுவென்று அநிருவசனமாய்க் கூறப்படுவதொரு சூனியமன்று ஆகலான் ; அது அன்றி வேறே அது என்று அறி அறிவும் ஆங்கு உண்டே என்பது அந்த ஞேயமாத்திரையேயன்றி அதனின் வேறாக வாக்கு மனாதீதமாய் நிற்பதொரு பொருளென்றறிகின்ற ஞாதாவும் ஆண்டுள்ளதேயாம், அற்றேல், ஒன்றாதல் பெறப்படாதாலெனின்; அது என்று அறிய இரண்டு அல்லன் அறிவுள் நிற்றல் அறியும் அறிவே சிவமும் ஆம் என்பது உலகத்துப் பொருள்போல் அதுவென்று சுட்டி யறியுமாறு முதல்வன் தன்னின் வேறல்லனாய் அப்பணைந்த உப்புப்போலத் தன்னறிவின்கண் விரவி வேற்றுமை தோற்றாது நிற்றலான் அறிவிறந்தறிகின்ற அவ்வுயிர் சிவமேயாம் என்றவாறு.
உம்மை சிவமாயுஞ் சிவமாகாமை விளக்கி நின்றது. அதுவென்னுமொன்றன்றாகலானென ஏதுப் பொருள்படக் கொண்டுரைக்க அறிவுமென்ற உம்மை இறந்தது தழீஇயது. அல்லனென்பது முற்றெச்சம். வேறுமுடிபு கோடலிற் பால்வழுவாகாமையுணர்க. உண்டேயென்னும் ஏகாரம் தேற்றம்; ஏனையிரண்டும் அசைநிலை. நிற்றல் நிற்றலானென்றவாறு.
இவ்வெண்பாக்களைந்தும் முறையே வாக்குமனாதீதமென்றல் பொருந்தும், கோசரமாமென்றல் பொருந்தாதென்னும் மாயாவாதிகளையும், கோசரமாமென்றல் பொருந்தும் வாக்கு மனாதீதமென்றல் பொருந்தாதென்னும் நையாயிகர் முதலியோரையும், பாவனைக்குக் கோசரமாமென்னும் பாதஞ்சலரையும், ஆன்ம ஞானத்திற்கே கோசரமாமென்னுஞ் சமவாத சைவரையும், முத்தியிற் சிவமேயன்றி உயிரென வேறின்மையின் உயிர்க்குக் கோசரமாமாறியாண்டைய தென்னுஞ் சிவாத்துவித சைவர் முதலியோரையும் மறுத்து, வாக்கு மனாதீதகோசரமாய் நிற்குமியல்பு வலியுறுத்தி ஒருபொருண்மேல் வந்தவாறு காண்க.
இவ்வாறு நாலாஞ்சூத்திர முதலிய மூன்றினும் மேற்பிரமாணத்தாற் கூறிப்போந்த பசுபாசபதிகட்கு இலக்கணங்கூறு முகத்தான் முறையே கேவலஞ் சகலஞ் சுத்தமென்னும் மூன்றவத்தையுங் காட்டப்பட்டன. இம்மூன்றனுட் கேவலம் மருட்கேவலமும், சகல கேவலமும், பிரளய கேவலமும், விஞ்ஞான கேவலமும், அருட்கேவலமுமென ஐவகைப்படும். அவற்றுள், மருட்கேவலமாவது அநாதிகேவலம். சகலகேவலமாவது சங்கரித்த பின்னர்ப் புனருற் பவத்திற் கேதுவாய்ப்படுங் கேவலம்; ஆண்டுச் சூக்கும ஐந்தொழி லுண்டென மிருகேந்திரத்துட் கூறுதலின் அநாதிகேவலத்தோடு இதனிடை வேற்றுமையாமாறு கண்டு கொள்க. பிரளயகேவலமாவது மாயையோடு இயைபின்றி ஆண்டுப்படுங் கேவலம். விஞ்ஞான கேவலமாவது மாயை கன்மங்களென்னும் இரண்டனோடும் இயைபின்றி ஆண்டுப்படுங் கேவலம். அருட்கேவலமாவது தத்துவ சுத்திப்பின்னர்ப்படுங் கேவலம். அது துகளறு போதத்திற் காண்க. இனிச் சகலமுஞ் சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தமென மூவகைப்பட்டு ஒரோவொன்று ஐந்து வகைப்படும். அவற்றுட் சகலத்திற் கேவலமைந்தும் “ஒன்றணையா மூலத்து” என்றதனுட் காண்க. சகலத்திற் சகலமைந்தும் “இலாடத்தே சாக்கிரத்தை” என்றதனுட் காண்க. சகலத்திற் சுத்தமைந்தும் “யோகிற் றருவதோர் சமாதி” என வழி நூலாசிரியர் தொகுத் தோதியது சித்தாந்த சாராவலி யோகபாதத்தின் வகுத்துக் கூறுதலான் ஆண்டுக் காண்க. இனிச் சுத்தமுஞ் சீவன்முத்தி அதிகார முத்தி போகமுத்தி இலயமுத்தி பரமுத்தியென் றைவகைப்பட்டுச் சாக்கிர முதலிய பெயர் பெறும்; அவற்றை முன்னர் வகுத்தோதுப.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலிற்
சத்தே யறியா தசத்தில தறியா
திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மேலதற்கோர் புறனடை யுணர்த் துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். தூலாருந்ததி நியாயம்பற்றி மேலையாறு சூத்திரங்களினுஞ் சிவாகமங்களிற் கூறப்படும் முப்பொருள்களது பொதுவியல்பு பிரமாண முகத்தானும் இலக்கண முகத்தானும் ஆராய்ச்சி செய்துணர்த்திய ஆசிரியர், அம் முப்பொருள்களது சிறப்பியல்பெனப்படும் உண்மை, சாதன முகத்தானும் பயன் முகத்தானும் ஆராய்ச்சி செய்துணர்த்துவான் புகுந்து முதற்கண் மூன்று சூத்திரங்களான் அவற்றையறிந்து அதனானாய பயன் பெறுதற்கேதுவாகிய சாதனங் கூறத் தொடங்கினார். அவற்றுள் இச்சூத்திரம் உணருருவசத்தெனவும் இருதிறனல்லது சிவசத்தெனவும் மேலைச்சூத்திரத்தான் வரைசெய்துணர்த்தியவழி அங்ஙனமறியும் பொருள் அவ்விரண்டினுள் ஒன்றோ வேறோவென்னும் ஐயப்பாட்டின்கண் அவ்விரண்டினுள் ஒன்றாகற்பாலதென்பார் மதம் பற்றி நிகழுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்துக்குப் புறனாகவெடுத்து ஓரொழிபாகிய சதசத்தினியல்பு வரைசெய்துணர்த்து முகத்தானே சாதித்துப் பயன்பெறுதற்குரிய அதிகாரியினியல்பாவது இதுவென்ப துணர்த்துத னுதலிற்று என்றவாறு.
அதிகாரமும் ஓத்தும் வேறாய வழியும் இயைபுணர்ந்து கோடற் பொருட்டுக் கருத்துரை அவ்வாறு செய்தாரென்பது. இப்புறனடையை வடநூலார் வாக்கியசேடமென்ப.
இதனுட் கூறப்படு மூன்றதிகரணமும் மூன்று புறனடை போலுமென மலையாமைப் பொருட்டு ஓர் புறனடை யென்றார். முன்னைய விரண்டும் இறுதி யதிகரணத்தைச் சாதித்தற் கேதுவாய் ஒரு பொருண்மேல் வந்தனவேயாம் என்பது கருத்து.
ஒன்றனை யறிந்தவழி அதனானாய பயன் பெறுதற்குரிய முயற்சி செய்யலுறுவார்க்கு அதனைச் சாதிக்குமாற்றல் தமக்குண்டென்பதூஉம், சாதித்ததனால் வரும் பயன் இதுவென்பதூஉம், அதனைப் பயப்பித்தற்குரிய சாதனமாவது இதுவென்பதூஉம், அது வருவாயும் உணர்ந்தாலன்றி அதன்கண் மனவெழுச்சி செல்லாமையின் ஈண்டோதப்படுஞ் சாதனஞ்செய்து பயன்பெறுதற் குரிமையுடைய அதிகாரியின் இயல்புணர்த்துவதாய இச்சூத்திரம் முதற்கண் வைக்கப்பட்டது.
இதன் பிண்டப்பொழிப்பு : மேலைச் சூத்திரத்துட் கூறிப் போந்த இரண்டனுள், வாக்குமனாதீதமாகிய சிவசத்தின் சந்நிதியின் உணருருவாகிய அசத்தெல்லாம் பாழாகலிற் சத்தாகிய சிவம் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறிதல் செய்யாது; அசத்தாகிய பிரபஞ்சம் அறிவில்லாத சடமாகலிற் சத்தாகிய சிவத்தை அறிதல் செய்யாது; ஆகலாற் பாரிசேட வளவையான் இருதிறனறிவுள தொன்றுண்டென்பது பெறப்படுதலின் அதுவே சத்தாதற்றன்மையும் அசத்தாதற்றன்மையுமாகிய இரண்டுமின்றிச் சதசத்தாயுள்ள உயிராம் என்றவாறு.
இரண்டனுள் ஒன்றனைப் பிரிக்கின்றமையிற் சத்தேயென்னு மேகாரம் பிரிநிலைக்கண் வந்தது. அசத்திலதாகலினென்றுரைக்க.
அசத்துச் சத்தையறியாமைக்கும் சத்தெதிர் சூனியமாதலே ஏதுவாதலமையுமாயினும், அசத்தெனப்பட்ட கருவிகண் முத்தி நிலையிற் சிவகரணமாய் ஆன்மசந்நிதியையொட்டி முதல்வன் சந்நிதியினிற்கப் பெறுமென்பாரை நோக்கி வேறுமோரேதுக் கூறினார். இக்கருத்தே பற்றி “சத்தின்மு னிலாமையானுந் தனைக்கொடொன்றுணர்தலானும்” என இரண்டேதுவும் உடன் கூறினார் வழி நூலாசிரியரும்.
ஏற்புழிக்கோடலான் அறிதலென்றது ஈண்டனுபவ அறிவின் மேற்று. “இனைத்தெனவறிந்த” பொருட்கு வினைப்படு தொகுதிக் கண் வேண்டப்படு முற்றும்மை விகாரத்தாற் றொக்கது.
இதனுள் யாவையுஞ் சூனியஞ் சத்தெதிராகலிற் சத்தேயறியா தென்றது ஓரதிகரணம் ; அசத்திலதறியாதென்றது ஓரதிகரணம் ; இருதிறனறிவுள திரண்டலாவான்மாவென்பது ஓரதிகரணம் ; ஆக மூன்றதிகரணத்தது இச்சூத்திர மென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

அன்னியமி லாமை அரற்கொன் றுணர்வின்றாம்
அன்னியமி லானசத்தைக் காண்குவனேல் - அன்னியமாக்
காணா னவன்முன் கதிர்முன் னிருள்போல
மாணா அசத்தின்மை மற்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின் சுட்டுணர்வின்மையான் முதல்வன் அசத்தையறியானெனின் முற்றுணர்வுடைமைக் கிழுக்காமென்பாரை நோக்கி இழுக்கின்மை கூறி ஏதுவை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள்.அன்னியம் இலாமை அரற்கு உணர்வு ஒன்று இன்று ஆம் என்பது தன்னுள் வியாப்பியமான பசு பாசங்களோடு வேற்றுமையின்றி உடனாய் நிற்றலையுடைய முதல்வனுக்குச் சுட்டியறியக் கிடப்பதொன்றில்லை ஆகலான்; அன்னியம் இலான் அசத்தைக் காண்குவனேல் அன்னியமாக் காணான் என்பது அத்தன்மையனாகிய முதல்வன் அசத்தை யறியலுறுவனாயின் அறிந்தாங்கறிவனன்றி நம்மனோர் போல வேறாகச் சுட்டியறிவானல்லன்; கதிர்முன் இருள் போல் அவன் முன் மாணா அசத்து இன்மைமற்று என்பது ஞாயிற்றின் முன் இருட்டுப்போல அம்முதல்வனெதிர் நன்மையில்லாத பிரபஞ்சம் விளங்கி நில்லாதாகலான் என்றவாறு.
எனவே, அசத்தை விடயிப்பதாகிய ஏகதேசவுணர்வு முற்றுணர்வைத் தடுப்பதாகலான் அஃதில்லாமை முற்றுணர்விற்கு மேம் பாடாவதன்றி இழுக்காகாதென ஐயமகற்றி ஏதுவை வலியுறுத்தவாறு காண்க. மாணாமை வியாபகவுணர்விற்கு விடயமாகாமை. இன்மை ஈண்டு விளங்காமை குறித்து நின்றது. மற்று அசை. மற்றுக் காண்குவனேலென மேலேகூட்டி வினைமாற்றின்கண் வந்ததெனினுமமையும். உணர்வுங் கதிரும் ஆகுபெயர். கதிர் முன்னிருள் ஈண்டு முனையாமை மாத்திரைக்கு ஒருபுடை யுவமையாயிற்றென்பது வழி நூலாசிரியர் “முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருளிரவி முன்போல்” என்றவாற்றானறிக.

குறிப்புரை :

ஈண்டுச் சத்தினிடத்து அசத்துப் பிரகாசியா தென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின் “தந்திடுஞ் சிவனவன்றன் சந்நிதி தன்னினின்றே” சிவஞானசித்தி, 119 என்பதாம், “கூடுமொளி வளர்குடிலை மாயைமேவி” சிவப்பிரகாசம், பொது, 2 என்பதாம், “தாரகமா மத்தன்றாணிற்றல்” இந்நூல் உதாரணவெண்பா, 3 என்பதாம், “விமலனுக்கோர் சத்தியாய்” சிவஞானசித்தி, 253 எனவும், “உலகமேயுருவமாக” யூ, 57 என்பதாம், “அத்துவா மூர்த்தியாகி” யூ, 156 என்பதாம், “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி நின்ற வாறே” அப்பர் தேவாரம், 6.941 என்பதாம், கூறப்படுமியல்புடைய பிரபஞ்சத்தைச் சத்தெதிர் சூனியமென்றல் அவசித்தாந்தமாய் முடியும் போலும் எனவும் “மண்டிய வுணர்வுயிர்க்காய் மன்னிநின்றறியும்” சிவப்பிரகாசம், உண்மை 15 எனவுங் கூறுஞ் சிவாத்துவிதசைவர் மதம் பற்றி நிகழுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றிற் போந்த ஏதுவைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் . சுட்டுணர்வின்றி நின்றறியுஞ் சிவசத்தின் முன்னர்ச் சுட்டியறியப்படும் அசத்தாய பிரபஞ்சம் விளங்கித் தோன்றாது என்றவாறு.
ஈண்டுச் சூனியமென்றது விளங்காமைப் பொருட்டென்பார் பிரகாசியா தென்றார். இக்கருத்தே பற்றி “முனைத்திடாத சத்துச் சத்தின் முன்” சிவஞானசித்தி, 71 என்றார் வழி நூலாசிரியரும். முனைத்திடாமையாவது இது குடம் இஃதாடையென நம்மனோராற் சுட்டியறிப்படுமாறுபோல முதல்வனால் சுட்டியறியப்படுவதாய் வேறு நில்லாமையாம். ஆகவே ஈண்டுச் சத்தெதிர் யாவையுஞ் சூனியமென்றது கொண்டு அவசித்தாந்தமாதல் யாண்டைய தென மறுத்துச் சத்தறியா தென்றதனை வலியுறுத்தியவாறு காண்க.
ஏது : மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், முற்றுணர்வுடைய சிவத்துக்கு அசத்தை விடயிப்பதாய சுட்டுணர்வும் உண்டென்றாற்படும் இழுக்கென்னை யென்பாரை சிவாத்துவித சைவரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். தன்னியல்பாகிய இயற்கையுணர்வின் முன்னர்ப் பொதுவியல்பாகிய செயற்கைச் சுட்டுணர்வு பிரகாசித்து நில்லாமையான் ஈண்டுச் சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாதென மேற்கொண்டது என்றவாறு.
பிரகாசித்து நிற்றலின்மையாவது இயற்கையுணர்வோடொப்ப ஒருங்கு நில்லாமை. எக்காலத்து நிலைபெறுவதாய தன்னியல்பே மெய்யெனவும் இடையே தோன்றி மறைவதாய பொதுவியல்பே பொய்யெனவுங் கூறப்படுவனவாகலான் அவை ஈண்டைக்கேற்புடைய அறிவின்மேனின்றன. இஃதறியாதா ருரைப்பனவெல்லாம் மேற்கோளைச் சாதித்தற்குரிய ஏதுவாதல் செல்லாது கூறியது கூறலாய் முடியுமென்றொழிக.

பண் :

பாடல் எண் : 3

பேய்த்தேர்நீ ரென்றுவரும் பேதைக்கு மற்றணைந்த
பேய்த்தே ரசத்தாகும் பெற்றிமையின்-வாய்த்ததனைக்
கண்டுணர்வா ரில்வழியிற் காணு மசத்தின்மை
கண்டுணர்வா ரில்லதெனக் காண்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அதனை உவமை முகத்தான் வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். பேய்த்தேர் நீர் என்று வரும் பேதைக்கு மற்று அணைந்த பேய்த்தேர் அசத்து ஆகும் பெற்றிமையின் என்பது பாலை நிலத்தின்கட் காணப்படுவதாய பேய்த்தேரை நீரென்று கருதி அதனையுண்ண வருகின்ற நீர் வேட்கையுடைய மடவோனுக்கு அதனை யடுத்தவழித் தன்னாலணையப்பட்ட அப்பேய்த் தேர் நீராதலின்றிப் பொய்யாந் தன்மைபோல; வாய்த்து என்பது குரவன் அறிவுறுக்கும் உபதேச மொழி கிடைத்து; அதனைக் கண்டு உணர்வார் இவ்வழியின் அசத்து இன்மை காணும் என்பது அவ்வசத்தினியல்பை ஆராய்ந்தறிவாரின்றி அறியமாட்டாதார் உள்வழி அவர்க்கு அதன் கணறிவுள்ளதாய் மதிக்கப்படுஞ் சத்தாந் தன்மையே காணப்படும்; கண்டு உணர்வார் இல்லது எனக் காண் என்பது அவ்வுபதேச மொழி கிடைத்து அதனியல்பை யாராய்ந்தறிய வல்லார்க்கு அவ்வசத்து அறிவில்லதேயாமென்று அறிவாயாக என்றவாறு.
மற்று வினைமாற்று. மை பகுதிப்பொருள் விகுதி. இன் உவம வுருபு. வாய்த்தென்பது வாய்ப்பவென்பதன்றிரிவு. வாய்த்தல் நேர்படுதல். ஆண்டைக்கேற்புடைய வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. அசத்தின்மையாவது சத்தாந்தன்மை. நான்கனுருபு விகாரத்தாற் றொக்கது. அறிவென்பது அதிகாரத்தான் வந்தது.

குறிப்புரை :

இனி அசத்தினுக்கு உணர்வின் றென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், சத்து அசத்தை யறியாதாயினும் அசத்தெனப்பட்ட தனுகரண புவனபோகங்களுள் ஒன்றாய கரணம் விளக்குப்போல் விகாரமின்றிநிற்கும் ஆன்மசந்நிதியிற் பெத்தநிலைக் கண் அசத்தாய விடயங்களை யறிந்தாற்போல முத்தி நிலையிற் சிவகரணமாய் நின்று சிவத்தையறியுமென்றலும் கண்ணாடியினிழல் போல ஆன்ம சந்நிதியின் அதன்கணறிவுண்டாமென்றலும் அமைவுடைத்துப்போலுமெனச் சிவசங்கிராந்தவாதி மதம்பற்றி நிகழுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றிற்போந்த ஏதுவைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: இனி அசத்தினுக்கு தத்துவப் பிரபஞ்சத்திற்கு ; உணர்வு அறிவானது ; இன்று என்றது இல்லை என்றவாறு.)
சூத்திரத்தின் இலதென்றது அறிவிலதென்னும் பொருட்டென்பார் உணர்வின்றென வுரைத்தார். ஈண்டு அசத்தென்றது தத்துவப் பிரபஞ்சத்தை; ஏனைப் பிரபஞ்சத்திற்கு அறிவின்மை சாதிக்க வேண்டாமையின்.
ஏது : அதுதானிரூபிக்கில் இன்றாகலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், பதிஞான பசுஞானங்களோடொப்பப் பாசஞான மொன்றென வைத்தெண்ணப்படு முரிமையுடையவதனை அறிவுடைத்தன்றென்றல் பொருந்தாதென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். அவ்வறிவாவது தூலமாய் நோக்கும் வழி அவ்வசத்துக்கு உள்ளதுபோலத் தோன்றினும் ஐயந்திரிபின்றி மாசறுகாட்சியான் ஆராயும் வழி அதன்கண் இல்லாதாகலான் இனி அசத்தினுக் குணர்வின்றென மேற்கொண்டது என்றவாறு.
எனவே, பாசம் வாயிலாக உயிரின்கணிகழு ஞானமே பாசஞானமென்று உபசரித்துக் கூறப்படுமதனைப் பாசத்திற்குளதாகிய ஞானமெனக் காண்டல் நிரூபியாதவழிப் படும் மடமையே பிறிதில்லை யென்றவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 4

அருவுருவந் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா
அருவுருவ மன்றாகு முண்மை-அருவுருவாய்த்
தோன்றியுட னில்லாது தோன்றாது நில்லாது
தோன்றன் மலர்மணம் போற் றொக்கு.

பொழிப்புரை :

இவ்விரண்டனையு மறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன் பாலுமுளதாய் உள்ளவதுவே அவ்வான்மாவாமென்றது.
என்பது பொழிப்புரை என்னுதலிற்றோவெனின், இருதிறனறிவென்னுந் தொகைச் சொல் விரியுங்காற்படும் பொருள் வேறுபாடு விளக்குமுகத்தான் உயிர்க்குத் தன்னியல்பு வேறுவேறு கூறுஞ் சமயங்களெல்லாம் மறுக்கப்படுமா றுணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். இவ்விரண்டினையும் அறிவதாய் என்பது மேற்கூறிப் போந்த சத்தையும் அசத்தையும் அறியுந் தன்மைத்தாய்; உபதேசியாய் என்பது அறிவிக்க அறியுந் தன்மைத்தாய்; அவ்விரண்டன்பாலும் நின்ற அறிவு உளதாய் என்பது அவ்விரண்டின் கண்ணும் நிலைபெற்ற அநுபவவறிவுள்ளதாய்; உள்ள அதுவே அவ்வான்மாவா மென்றது என்பது இவ்வாறுள்ள பொருள் யாது அதுவே சத்தும் அசத்துமல்லாத சதசத்தாகிய உயிராமென்றவாறாம்; இருதிறனறிவுள திரண்டலா வான்மாவென மேற்கொண்டது என்றவாறு. ஆயென்னும் வினையெச்ச மூன்றும் உள்ளவென்னும் பெயரெச்ச வினைக் குறிப்போடு முடிந்தன. இருதிறனறிவென்னும் தொகைச்சொல் ஈண்டு மூன்று பொருளின் மயங்கிற்றென்னுங் கருத்தான் இவ்வாறு மொழிந்தார். அவற்றுள் இருதிறனையு மறியு மறிவென்னும் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள் பற்றி இவ்விரண்டினையு மறிவதாயெனவும், இருதிறனால் விளங்கிய வறிவென்னும் மூன்றாம் வேற்றுமைத்தொகைப்பொருள்பற்றி உபதேசியாயெனவும், இருதிறனிலுமுள்ள வறிவென்னும் ஏழாம் வேற்றுமைத் தொகைப் பொருள்பற்றி நின்றவறிவு இரண்டன்பாலு முளதாயெனவும் உரைக்கப்பட்டன.
இவ்விரண்டினையு மறிவதாயுள்ள வதுவென்பதனால் இரண்டும் இவ்வாறாயின் இவற்றை யறியும் பொருள் வேறென்னை யென்னுங் கடாவுக்கு விடைகூறி அவ்விருவர் மதங்களையும் அவற்றோடொரு தன்மையவான சமயங்களையும் மறுத்தவாறு.
உபதேசியாயுள்ள அது வென்றதனால் உயிர் அறிவிக்க வேண்டாது தானே யறியுமியல்பிற்றென்னுஞ் சமவாத சைவர் ஈசுரவவிகாரவாத சைவர் ஐக்கவாத சைவர் மதங்களையும் அவற்றோடொரு தன்மையவான சமயங்களையும் மறுத்தவாறு.
இரண்டன்பாலு முளதாயுள்ள அதுவென்பதனால் ஆன்மாவினறிவு சத்தோடு கூடுமாறில்லையென்னும் பாடாணவாத சைவர் பேதவாத சைவர் மதங்களையும் சத்தோடு கூடியவழி ஒன்றாய்ப் போதலேயன்றி அதன் பாலுளதா மாறில்லை யென்னுஞ் சுத்தசைவர் மதத்தையும் அவற்றோ டொருதன்மையவான சமயங்களையும் மறுத்தவாறு.
இவ்விரண்டினையும் அறிவதாயெனவே அவ்வறியுந்தன்மை இவ்விரண்டின் றன்மைபோலன்றி “இருளொளியலாக் கண் டன்மை” போல வேறாயதோர் தன்மை யென்பதூஉம் உபதேசியாயெனவே அஃதாகாயத்தின் குணமாய ஓசையினியல்பு போலத் தன்னை விளக்குவதாகிய வியஞ்சகமுள்வழி விளங்குவதோர் தன்மை யென்பதூஉம், இரண்டன்பாலு முளதாயெனவே அத்தன்மை படிகம் போலச் சார்ந்ததன் வண்ணமாய அழுந்துந் தன்மை யென்பதூஉம் பெறப்பட்டன.
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின் அம்மூன்றனுள் முன்னையதனை வலியுறுத்தி இரண்டலாமையை விளக்குதனுதலிற்று. இதன் பொருள். ஆய் இழை ஆய் ஆன்மா அரு உருவந்தான் அறிதல் அரு உருவம் அன்று ஆகும் என்பது நுணுகிய நூற்களை ஆராய்வதாகிய உயிரே சத்து அசத்தென்னும் இண்டினையும் அறிவதாகலான் அஃதவ்விரண்டு மின்றி அவற்றின் வேறாம், அற்றேல் அவ்விரண்டினையும் அறியு முயிர்க்குத் தன்னுண்மையறியப்படுமோ படாதோவெனக் கடாயினார்க்குப் படுமெனிற் றன்னோடுளப்பட மூன்றனையு மறிவதென்னாது அவ்விரண்டனையுமறிவதாயென்றால் பொருந்தாது; படாதெனின் அறியப்படாத பொருள் சூனியமெனப்பட்டு வழுவாமாலெனின்; உண்மை அரு உருவாய்த் தோன்றி உடன் நில்லாது தோன்றாது நில்லாது மலர் மணம்போல் தொக்குத் தோன்றல் என்பது அவ்வான் மாவினுண்மைத் தன்மை அவ்விரண்டும்போல விளங்கித் தோன்றி அவற்றோடொப்ப நிற்பதுமன்று விளங்காது சூனியமாய் நிற்பது மன்றாய் மலரின்கண் வாசம் அவ்விருவகையுமன்றி அதன் கணடங்கித் தோன்றுமாறுபோலச் சத்திலும் அசத்திலுஞ் சார்ந்ததன் வண்ணமாய் அடங்கித் தோன்றுவதோரியல்பாம். ஆகலான், அஃதவைபோலத் தனித்தறியப்படுவ தொன்றன்றி அவ்விரண்டினையு மறியு முகத்தான் அறியப்படுவதாம் எறு. ஆகலான் அஃதவைபோலத் தனித்தறியப்படுவ தொன்றன்றி அவ்விரண்டினையு மறியுமுகத்தான் அறியப்படுவதாமென்பது குறிப்பெச்சம்.
சுட்டுணர்விற்கு விடயமாகாமைபற்றிச் சத்தை அருவென்றும் அதற்கு விடயமாதல்பற்றி அசத்தை உருவென்றுங் கூறினார். உணருருவசத்தென்புழி உருவென்றதும் அதுநோக்கி. செவ்வெண் டொகை விகாரத்தாற் றொக்கது. தான் அசை. அறிதலானன் றாகுமெனவியையும். இழை நூலாகலான் ஈண்டுச் சாத்திரத்தை யுணர்த்திற்று. ஆய்தல் நுணுகுதல். “ஓய்த லாய்த னிழத்தல் சாஅ யாவயி னான்கு முள்ளதனுணுக்கம்” என்றார் தொல்காப்பியனாரும். ஆயிழையாயெனப் பொருளினுணுக்கம் நூன்மே லேற்றப்பட்டது; இரண்டாவது விரித்துரைக்க. உயிர்க்கு அறியுந்தன்மை யுண்டாகலானன்றே வேதாகம முதலிய நூல்களுளவாயினவென அதனை வலியுறுத்துவார் ஆயிழை யாயான்மாவென அதனையுடம் பொடு புணர்த்தோதினார். இக்கருத்தே பற்றி “பலகலை யுலகி னிலவுதலானும்” என்றார் புடை நூலாசிரியரும். இவ்வாறன்றி ஆயிழையாயென மகடூஉ முன்னிலையாக்குவார்க்கு இவ்வுதாரணம் மேலதனை வலியுறுத்துதற் கெழுந்ததன்றாய்க் கூறியது கூறலென்னும் வழுவாய் முடியுமென்றொழிக. தேற்றேகாரம் விகாரத்தாற்றொக்கது. அருவுருவாயென்புழி ஆக்கச்சொல் உவமைப் பொருள் குறித்து நின்றது; “ஆள்வா ரிலிமா டாவேனோ” என்றாற் போல. தொக்குத் தோன்றன் மலர்மணம் போலெனக் கூட்டுக.

குறிப்புரை :

இனி இருதிறனறிவுள திரண்டலா வான்மா வென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், சிவசத்தின்றன்மையே உயிர்க்குத் தன்மையாவதன்றி வேறில்லையாகலிற் சத்தே அசத்தை அறியு மென்னுஞ் சிவாத்துவித சைவரையும் உயிர்க்குத் தன்மை யென்ப தொன்றின்மையின் அசத்தே சத்தை அறியுமென்னுஞ் சிவசங்கிராந்தவாத சைவரையும் மறுத்துச் சத்து மசத்துந் தம்முளறியுமா றில்லையென மேற்சாதித்தவழி இரண்டும் இவ்வாறாயின் இவற்றை யறியும் பொருள் வேறென்னை யென்பாரை நோக்கிப் பாரிசேட வளவையான் அவ்விரண்டின் வேறாய் உயிர்க்குத் தன்மை யுண்டென்பது விளக்கிச் சதசத்தினியல்பை வரை செய்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: இனி இருதிறன் சத்து அசத்து என்னும் இரண்டின் இயல்பை; அறிவுளது அறியும் பொருள்; இரண்டு அலா சத்தும் அசத்தும் அல்லாத; ஆன்மா என்றது சதசத்தாகிய உயிராம் என்றவாறு.)
ஈண்டு இரண்டலாவான்மா இருதிறனறிவுளதென்றது சத்தெதிர் நில்லாத அசத்துஞ் சத்துந் தம்முள் ஒன்றாய் நின்றறியப் படாமையான் இருதிறனறிவுளது இரண்டலாவான்மாவேயாம், தம்முள் ஒன்றானொன்று அநுபவிக்கப்படாத ஞாயிற்றையும் விடயத்தையும் அநுபவிக்குங் கண்போலுமென அனுமானங் கூறிக் காண்க. அவை உயிரானும் அறியப்படாதவழிப் பயப்பாடின்றிச் சூனியமாய் முடியுமாகலான் உயிர் அறிதற்றன்மைத்து என்பது தெற்றென வுணர்க.

பண் :

பாடல் எண் : 5

மயக்கம துற்று மருந்திற் றெளிந்தும்
பெயர்த்துணர்நீ சத்தாகாய் பேசில்-அசத்துமலை
நீயறிந்து செய்வினைகள் நீயன்றி வேறசத்துத்
தானறிந்து துய்யாமை தான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனமறியுமுயிர் சிவசத்தோடொப்பச் சித்தாகுமென்பாரை நோக்கி உபதேசியாயென்றதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும் என்பது நின்னறிவை விளக்குதற்குரிய வியஞ்சகமில்வழி ஒரு விடயத்தை இன்னதென்றறியமாட்டாது மயக்கத்தையுற்றும் பசிநோய்க்கு அன்னம்போல அம்மயக்க நோய்க்கு மருந்தாய வியஞ்சகமுள்வழி அம்மயக்க நீங்கி அதனையின்னதென்ற நிச்சயித்தும்; பெயர்த்து உணர் நீ பேசில் சத்து ஆகாய் என்பது இங்ஙனம் மாறி மாறி யுணர்ந்து வருகின்ற நீ சொல்லுமிடத்துச் சிவசத்தோடொப்ப அறியுஞ் சத்தியுடையாயல்லை, அற்றேல் அசத்தனாவேன் போலுமெனின்; நீ அறிந்து செய்வினைகள் நீ அன்றி வேறு அசத்துத் தான் அறிந்து துய்யாமை தான் அசத்தும் அலை என்பது வியஞ்சகம் உள்வழியும் நீ முன்னறிந்து செய்த வினைகளை இப்பொழுது நீயே யறிந்தநுபவிக்க வல்லையன்றி நின்னின் வேறாய் அசத்தாகிய பாசம் அறிந்தநுபவிக்க மாட்டாமையான் அதனோடொப்ப அசத்தனாவாயுமல்லை; வேறு என்பது சத்தகுணமுடைய ஆகாயம்போல வியஞ்சகமுள்வழி அறியுமாற்றலுடைமையும் அஃதில்வழி அவ்வாற்றலின்மையுமாகிய இரண்டுமுடைய நீ அவ்விரண்டற்கும் வேறாய்ச் சிதசித்தாந் தன்மையுடையை என்றவாறு.
மருந்திற்றெளிந்தெனவே மயங்குதல் அஃதில்வழியென்பது பெற்றாம். வியஞ்சகமில்வழித் தலைப்படுவதூஉம் அஃதுள்வழி நீங்கி நிற்பதூஉமாகிய மயக்கம், உண்டியில்வழித் தலைப்படுவதூஉம் அஃதுள்வழி நீங்கி நிற்பதூஉமாகிய இயல்புடைய பசியோடொத்தலின் அதனைப் பசிநோயாகவும், தீர்த்தலொப்புமைபற்றி வியஞ்சகத்தைப் பசிதீர்க்குமருந்தாகவும் உருவகஞ் செய்தார். இஃதேகதேசவுருவகம். மருந்தெனப் பொதுப்பட உருவகஞ் செய்தாராயினும் மறித்து மறித்து வேண்டப்படுமாறு ஈண்டைக் கேற்புடையது பசிநோய் தீர்க்கு மருந்தேயாகலின் அவ்வாறுரைக்கப்பட்டது. அது பகுதிப் பொருள் விகுதி.
உம்மை எண்ணின்கண் வந்தது. அசத்துமென்னுமும்மை இறந்தது தழீஇயிற்று. தானென்பது முன்னையது எழுவாயுருபு படநின்றது. பின்னையது அசைநிலை. துவ்வாமை துய்யாமை என மரீஇயிற்று. சத்தியுடைய பொருள் சத்தம், அஃதில்பொருள் அசத்தமாகலின் அவ்வடமொழிகள் ஈண்டம்முக் கெட்டுக் குற்றிய லுகரவீறாய் நின்றன. “நாகணையான்;” “பெற்றொன்று யர்த்த பெருமான்;” “பேது செய்து;” “வாது செயத் திருவுள்ளமே” என்புழிப்போல.
அசித்துமலையென்பது பாடமாயின், மேற்சத்தாகாயென் றதனை இசையெச்சமாகக் கொண்டு சத்தாந் தன்மையே யுடையாயல்லை; அதன்மேலுஞ் சித்தாமாறியாங்ஙன மென்றுரைத்து இயைத்தக் கொள்க. இவ்வாறன்றி ஈண்டுச் சத்தாகாய் அசத்து மலையென்ப வற்றை மேலருவுருவ மன்றாகுமென்றதன் பொருள்படக் கொண்டுரைப் பாருமுளர். அவர் ஆண்டேயமைந்து கிடந்த பொருளை மறித்துங் கூறவேண்டாமையும் பெயர்த்துணர் நீ யெனவும் அறிந்து துய்யாமை யெனவும் அறிவுடைமை அறிவின்மை பற்றிக் கூறும் பொருளவையாதல் செல்லாமையும் நோக்கிலர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

மெய்ஞ்ஞானந் தன்னில் விளையா தசத்தாதல்
அஞ்ஞான முள்ள மணைதல்காண்-மெய்ஞ்ஞானந்
தானே யுளவன்றே தண்கடல்நீ ருப்புப்போல்
தானே யுளமுளவாத் தான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அம்மயக்கம் அவ்வுயிரோடியைபுடைய முதல்வனுக்கு முண்டுபோலுமெனவும் அதுதான் உயிர்க்கு எக்காலத்து வந்ததெனவு நிகழுங்கடாவை விடுக்கு முகத்தான் இரண்டன்பாலு முளதாமாறு வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அஞ்ஞானம் என்பது மேற்கூறிப் போந்த மயக்கமாவது; மெய்ஞ்ஞானந் தன்னில் அசத்து ஆதல் விளையாது என்பது ஒரு பெற்றித்தாய அறிவெனப்படுஞ் சிவத்தினெதிர் கதிர்முன்னிருள்போல நிலையுதலில்லதாகலின் ஆண்டுளதாதலின்றி; மெய்ஞ்ஞானந் தானே உள அன்றே என்பது அச்சிவம் என்றுள்ளது அன்றே; தான் ஏய் உளம் உளவாத்தான் என்பது தான் பொருந்துதற் குரிமையுடைய உயிர்களுள்ளனவாக; உள்ளம் அணைதல் என்பது அவ்வுயிர்களைப் பற்றி நிற்றல்; தண்கடல் நீர் உப்புப்போல் காண் என்பது தண்ணிய கடலின் கணுளதாதலின்றி அக் கடலிடத் துளதாகிய நீரைப் பற்றிநிற்கு முப்புப்போலென் றறிவாயாக என்றவாறு.
விளையாதென்னும் வினையெச்சமறை அணைதலென்னுந் தொழிற்பெயரோடு முடிந்தது. தானேயென்பது கட்டுரைக் கண் வந்தது. தானேயுளமுளவாத் தானென்புழித் தானென்பது முன்னையது எழுவாய் பின்னையது அசைநிலை. ஏயுளமென்னும் வினைத்தொகை *“அறிவறிந்த மக்கட்பேறு” போல நின்றது. ஏய்தற்குரிமையாவது மேற்காட்டினாம். தண்கடனீருப்புப்போ லென்றதனால் முப்பொருள்களும் வியாபக வியாப்பியங்களாய் நிற்குமாறும் பெறப்பட்டது. இரண்டன் கண்ணும் உயிர்க்கியைபுடைமை கூறவே, இரண்டன்பாலு முளதாதலை வலியுறுத்தவாறு காண்க.
ஈண்டிருதிறனையுமறியு மறிவுளதெனவே இருதிறனாகிய சத்து அசத்து எனப்பட்டனவெல்லாம் பிரமேயம்; அவற்றை யறியுஞ் சத சத்தாகிய உயிர் பிரமாதா; அவ்வுயிரினவறிவாகிய சிற்சத்தி பிரமாணம்; அவ்வறிவு நிகழ்ச்சி பிரமிதியென்பதூஉம் இருதிறனால் விளங்கு மறிவுளதெனவே அவ்விரண்டனுள் அசத்தானறிவு விளங்கும்வழித் தனக்கு வேறாய் நின்று விளக்குவனவாய காட்சி யனுமான முரை யெனப்படும் அசத்தாகிய பாசஞான மூன்றும் சத்தானறிவு விளங்கும்வழி அன்னியமின்றித் தனக்காதாரமாய் உடனின்று விளக்குஞ் சிவஞானமுந் தனக்கு வியஞ்சகங்களாகலான் அதுபற்றி அவையும் பிரமாணமென்று உபசரித்துக் கூறப்படுமென்பதூஉம், இருதிறனினு மறிவுளதெனவே ஈரிடத்துங் கேடின்றி அசத்தான் விளங்கி அசத்தை யறிவுழி அசத்தின்பாலும் சத்தான் விளங்கிச் சத்தை யறிவுழிச் சத்தின்பாலும் அதுவதுவாய் அழுந்துமென்பதூஉம் பெறுதும். இவ்வாறன்றி வியஞ்சகங்களையே பிரமாணமென்னுந் தார்க்கிகர் முதலியோர் மதங்கள் பொருந்தாமையும் அவ்வியஞ்சகங்களானிகழும் பிரமிதி வேறுபாடும் அவற்றதியல்புகளும் ஈண்டு விரிப்பிற் பெருகும்; பௌட்கர முதலிய சிவாகமங்களுட் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின் ஞானத்தினை யுணருமுறைமையினை யுணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின் சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். அவ்வான்மாவின் அறிவாவது மேலிருதிறனென்றதனுள் அசத்தான் விளங்கி அசத்தின்பாலுளதாய் அசத்தினை யறிந்து நின்றவாறுஞ் சத்தான் விளங்கிச் சத்தின்பாலுளதாய்ச் சத்தினை யறிந்து நிற்குமாறுந் தரிசிக்கு முறைமையினை யுணர்த்து முகத்தாற் சாதித்தற்குரிய அதிகாரந் தனக்குண்டென மேலைச் சூத்திரத்தானறிந்த ஆன்மாவுக்குச் சாதித்ததனாற் பெறப்படும் பயனும் அதற்குச் சிறந்த சாதனமாவதும் அது வருவாயும் இவை யென்ப துணர்த்துதல் இவ்வெட்டாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
இதனானே சூத்திரவியைபும் இனிது விளங்கும்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு: உயிர்தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணிய விசேடத்தாற் றனக்கு அந்தரி யாமியாய் இதுகாறு முண்ணின் றுணர்த்தி வந்த பரம்பொருளே இப்பொழுது குருவடிவமுங்கொண் டெழுந்தருளிவந்து சிவதீக்கை செய்து, மன்னவ குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடருட்பட்டு வளர்ந்து நின் பெருந்தகைமையை அறியாது மயங்கி யிடர்ப்பட்டாய்; நின் பெருந்தகைமையாவது இவ்வியல்பிற் றென்றறிவுறுப்ப அறிந்த மாத்திரையே அவ்வேடரை விட்டு நீங்கி அன்னியமின்றி அனன்னியமாந்தன்மையின் நிலைபெற்று அம்முதல்வன் திருவடிகளையணையும் என்றவாறு.
உயிரென்பது மேலைச் சூத்திரத்தினின்றும் வருவித் துரைக்கப்பட்டது. தவத்தினிற் குருவுமாய் வளர்ந்தயர்ந்தனையென வுணர்த்தவிட்டுச் செல்லுமென இயையும். புலன் ஆகுபெயர். வளர்ந்த யர்ந்தனை யென்பது “ஈந்து புகழ்பெற்றான்” என்புழிப் போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. தம்முதலென்றது வேறு முடிபாகலிற் பால்வழுவின்மையுணர்க. குருவுமென்ற உம்மை உயிர்க்குயிராய் உண்ணின்றுணர்த்தியதூஉமன்றியென இறந்தது தழீஇயிற்று; சிறப்புமாம். அன்னியமின்மை அத்துவிதம். அஃதாவது சேறலைப் பயப்பித்ததாய் ஆண்டுளதாகியவியைபு. அரனென்றது சுட்டுப் பெயர்பட நின்றது.
வெண்கொற்றக்குடையும் நவமணிமுடியுஞ் சிங்காசனமும் மன்னவர்க்கேயுரிய சிறப்படையாளமாம்; அதுபோலப் பிரபஞ்ச மெல்லாவற்றிற்கும் மூலகாரணமாமியல்பாகிய ஒருபெரு வெண் கொற்றக்குடையும், எவற்றையும் ஒருங்கே ஓரியல்பானறியும் பேரறிவாகிய ஒருபெருஞ் சுடர்முடியும், அங்கங்கே உயிர்க்குயிராய் நின்று எவற்றினையுஞ் செலுத்துமியல்பாகிய ஒருபெருஞ் சிங்காதனமும், பிறரொருவர்க்கின்றித் தனக்கேயுரிமையாகச் சிறந்தமைபற்றிப் பசுக்களுக்குப் பாசங்களையரித்தலான் அரனென்னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னவனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ்செல்வமுழுதுந் தனதேயாகக்கொண்டநுபவிக்குஞ் சுதந்திரமுடைமையுஞ் சித்தெனப்படுஞ் சாதியொருமையும்பற்றி ஆன்மாவை மன்னவகுமாரனாகவும், அவ்வான்மாவை அறிவுப் பெருஞ் செல்வமுழுதையும் ஆறலைத்துக்கொண்டு சிறுமையுறுத்துதலும் விதிவிலக்கை யிழப்பித்து இழி தொழிலி னிற்பித்தலுமாகிய இயல்புபற்றி ஐம்பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃதேக தேசவுருவகம்.
ஐம்புலவேடரினயர்ந்தனை வளர்ந்தெனவெனவே ஐம்புல வேடரின் வளர்ந்தயர்தலும் அநுவாதமுகத்தாற் பெற்றாம்.
இதனுள், தவத்தினிலுணர்த்தவென்றது ஓரதிகரணம்; தம் முதல் குருவுமாயென்றது ஓரதிகரணம்; ஐம்புலவேடரி னயர்ந்தனை வளர்ந்தெனவென்றது ஓரதிகரணம்; விட்டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே யென்றது ஓரதிகரணம்; ஆக நான்கதிகரணத் தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து
பவஞ்செய்து பற்றறுப்பா ராகத்-தவஞ்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்தார் அவற்றான் ஞானத்தைக் காணுமுறைமை எவ்வாறென்பாரை நோக்கி அஃதாமாறுணர்த்தி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். தவம் செய்தார் என்பது சரியை முதலியவற்றைச் செய்தார்கள்; என்றும் தவலோகம் சார்ந்து என்பது அவ்வத் தவப்பயன்களைப் பயப்பிக்குஞ் சாலோகாதிபதங்களை ஒருதலையாக நண்ணி ஆண்டுளவாகிய இன்பங்களை அநுபவித்து ; பற்றுப் பவம்செய்து அறுப்பார் ஆக என்பது முன்னுடம்பிறக்குநாள் அடுத்த வினை காட்டுங்கதிநிமித்தம் பற்றியெழுந்த அவாவினை மீள நிலத்தின்கட் பிறந்தநுபவித்து நீக்கிக் கோடற்பொருட்டு; தவம் செய்த நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலை எது மீளத்தவஞ் செய்தற்குரிய உயர்ந்த குலத்தின்கண் வந்து தோன்றித் தவக்குறையான் அவ்விடயப்பற்று முறுகாவண்ணம் அறுத்துத் தத்துவஞானத்தைத் தலைப்படுவாராதலை; கற்றார் சூழ்கண்டு சொல்லுமாம் என்பது வீட்டு நூல்களைக் கற்றாரது சூழ்ச்சி அந்நூற் கருத்துணர்ந்து சொல்லும் என்றவாறு.
தவந்தானாகப் பிறிதொன்று தானாக இவ்வுலகத்து உடம்பொடு நின்றீட்டிய வினையெல்லாம் அவ்வுலகத்திற் செலுத்தித் தத்தம் போகங்களைப் பயந்தே விடுமாகலான் அவற்றை ஒருஞான்றும் பிறழ மாட்டாரென்பார் என்றுந் தவலோகஞ் சார்ந்தென்றார். ஆகவென்னுஞ் செயவெனெச்சம் உண்ணவந்தானென்புழிப்போலத் தற்பொருட்டாய் நின்றது. பற்றறுதற்பொருட்டு வந்துதித்தெனவே ஆண்டுப் பற்றுச் செல்லாதவழி அவ்வுலகத்து நின்றாங்கே ஞானத்தை நண்ணுவரென்பதூஉம் பெறுதும். கற்றாரது சொல்லுதற் றொழில் சூழ்ச்சிமேலேற்றப்பட்டது. ஆம் அசை. நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலென்ற அருத்தாபத்தியான் இழிகுலத்தோர் தத்துவ ஞானத்துக் குரியரல்லரென்பது பெறப்பட்டது.

குறிப்புரை :

மேற்கோள் : ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞானநிகழுமென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், மேற்கூறிப்போந்த சாதகராற் செய்யப்படுஞ் சாதனமும் அது வருவாயும் வேறுவேறாகக் கூறுஞ் சமயத்தாரை நோக்கிச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : ஈண்டு இந்நான்கதி கரணங்களுள் வைத்து இம்முதலதிகரணத்து; இவ்வான்மாக்களுக்கு மேற்கூறிப்போந்த இயல்புடைய ஆன்மாக்களுக்கு; முற்செய்தவத்தான் படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்தவத்தான் அமையாது முற்பிறவிகளிலே செய்துவந்த தவமாகிய சரியைகிரியா யோக விசேடத்தால்; ஞானம் குரவன் உணர்த்தியவாறு சிவஞானங் கண்ணாகக் கொண்டு அறிவதாகிய சாதன அறிவானது; நிகழும் என்றது ஐயந்திரிபின்றி விளங்கும் என்றவாறு.)
மேற்கூறிப் போந்த இயல்புடைய ஆன்மாக்களுக்கென்பார் இவ்வான்மாக்களுக்கென்றார். படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே அமையாதென்ப துணர்த்துதற்கு முற் செய்தவமென விசேடித்தார். ஈண்டு ஞானமென்றது குரவனுணர்த்தியவாறு சிவஞானங் கண்ணாகக்கொண்டு அறிவதாகிய சாதனவறிவின் மேற்று.
நிகழ்தல் ஐயந்திரிபின்றி விளங்குதல்.
ஏது : மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோக்ஷத்தைக் கொடாவாகலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், தவங்களே சாதனமாதலமையும், ஞானமெற்றுக்கென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : மேல் முற்பிறவிகளில் ; சரியை கிரியா யோகங்களைச் செய்துழி சரியை கிரியா யோகங்களாகிய தவங்களைச்செய்து முற்றுப்பெற்றவிடத்து அத்தவங்கள்தாம்; நன்னெறி ஆகிய வீடுபேறு எய்தற்குச் சன்மார்க்கமாகிய ; ஞானத்தை மேற்கூறிய ஞானத்தை; காட்டி அல்லது பயப்பித்தன்றி ; மோக்ஷத்தை முத்தியை ; கொடாஆகலான் கொடுப்பன அல்ல ஆகலான் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞான நிகழும் என மேற்கொண்டது என்றவாறு.)
ஈண்டுத் தவமெனப்பட்டன பிறவல்லவென்பார் சரியை கிரியா யோகங்களையெனக் கிளந்துரைத்தார். கிரியாயோகங்களென்னும் உம்மைத்தொகை வடநூன் முடிபு. கிரியாயோகமிரண்டற்குந் தீக்கையொன்றென்பது தோன்ற அவ்விரண்டனையுந் தொகுத்தோதிச் சரியையைத் தமிழுக்குரிய வீற்றான் வேறு வைத்தார். ஆளுடைய பிள்ளையார் முதலாயினார்க்குத் தவமின்றியும் ஞானநிகழ்ந்த வாறென்னை யென்னுங் கடாவை விடுத்தற்கு மேற்செய்துழியென ஈண்டும் வலியுறுத்தார். மேலாகிய உண்மைச் சரியை கிரியா யோகங்களை யெனினுமமையும்.
காட்டிக்கொடுக்கு மெனற்பாலதனை எதிர்மறைமுகத்தாற் கூறினார், ஞானத்தை யின்றியமையாமை யுணர்த்துதற்கு. சரியை கிரியா யோகங்களைச் செய்துழி யென்றது உபலக்கணமாகலின் தீக்கை பெற்றுழி அதுவும் ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடாதெனக் கொள்க. அவையெல்லாம் ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடாமையை வலியுறுத்துவார் நன்னெறியாகியவென ஞானத்தை விசேடித்தார். நன்மையெனப்படுவன எல்லாவற்றினுஞ் சிறந்த நன்மையாவது வீடுபேறென்பது. அதனைத் தலைப்படுதற் கேது வாய்ச் சிறந்த நெறியாகலின் ஞானம் நன்னெறியெனப்பட்டது. வீட்டிற்கு நெறியென அவ்வச்சமயத்தாராற் கூறப்படுவனவனைத்துந் தன்கண்ணே வந்து கூடநின்ற பெருநெறியாகலானும் அது நன்னெறியெனப்பட்டது. நன்னெறி சன்மார்க்கமென்பன ஒரு பொருட்கிளவி.

பண் :

பாடல் எண் : 3

பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும்
இசைத்து வருவினையி லின்பம்-இசைத்த
இருவினை யொப்பில் இறப்பில் தவத்தான்
மருவுவனாம் ஞானத்தை வந்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், சரியை முதலிய தவங்களே தத்துவ ஞானத்தைக் காட்டுமென யாப்புறுத்தோதிய தென்னை? வேதத்துட் கூறிய வேள்வி முதலாயினவுந் தத்துவ ஞானத்தைக் காட்டு மென்றல் அமையுமெனப் பாட்டாசாரியன் மதம்பற்றிக் கூறுவாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இசைத்து வருவினையில் இன்பம் என்பது ஒருநல்வினைசெய்வான்றொடங்கி அறநூலை யாய்வாரது உணர்வின்கண் விடயமாய் வரும்பொழுதே தம்மாற் பெறப்படுங் காமியப்பயன்களை உடன்கூறிக்கொண்டே வருகின்றனவாய வேள்வி முதலிய அறங்களின் பயனாகிய இன்பம்; பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும் என்பது முன்னர்ப் பசித்துண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியான் வருமின்பத்தை யொக்கும் ஆகலான்; இசைத்த இருவினை இறப்பு இல் தவத்தான் ஒப்பில் என்பது ஒருவனுக்கு ஞானத்தைத் தடுத்துப் பந்தமுறுத்துதற்கட் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தம்முட் சமப்படுத்துணரப் படுவனவாகிய அறம் பாவமிரண்டுந் தம்மைப்போல் அநுபவ மாத்திரை யாற் கெடுதலின்றி மேன்மேன் முறுகி வளர்வனவாய சரியை முதலிய தவங்களானே நேராகவொத்தால்; வந்து ஞானத்தை மருவுவன் ஆம் என்பது அத்தவமுதிர்ச்சி யுடைமையான் முன்னர்க் கூறப்படு ஞானகுருவைத் தேடி வந்து ஞானத்தைத் தலைப்படுவன் என்றவாறு.
வேள்வி முதலாயினவெல்லாம் அழிதன் மாலையவாய காமியங்களைப் பயப்பனவன்றித் தத்துவ ஞானத்தைப் பயவாவென்றற்கு அவற்றை விதித்த நூல்களே சான்றென்பார் இசைத்து வருவினை யென்றும், அவை ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றித் தீவினைபோல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலு முடைமையின் அவற்றது கழிவே ஈண்டைக்குக் காரணமாவதென்பார் இசைத்த இருவினை யொப்பிலென்றுங் கூறினார்.
ஒப்பிலென்னும் வினையெச்சம் மருவுவனென்னும் பிறவினை முதல்வினை கொண்டது. தேற்றவேகாரம் விகாரத்தாற் றொக்கது. ஆம் அசை. வருதல் இடவழுவமைதி. பசிப்பானென்றது ஆகுபெயர். இசைத்து வருவினையென நூலின் றொழில் வினைமேலேற்றப்பட்டது. மிசைத்த விருவினையெனப் பாடமோதி, இருவினைகளுண் மிக்க இருவினையாகிய பிரமக்கொலை பரிமேதவேள்வி போல்வன தம்முள் ஒருங்கே பயன்றருவனவாய் ஒத்தகாலத்தென் றுரைப்பாருமுளர். அஃது ஈண்டைக்குப் பயன்படாமையுஞ் சித்தாந்தத்துக் கேலாமையுமறிக.
இசைத்து வருவினையிலின்பம் பசித்துண்டு பின்னும் பசிப் பானையொக்குமெனவே, இறப்பிறவத்தான் மருவப்படு ஞானம் பசித்துண்டு பின்னும் பசித்தலில்லாத கடவுளர்க்கு அவ்வமிழ்த வுண்டியானாய பயனையொக்கு மென்பதூஉம் பெறப்பட்டது. படவே அவ்வமிழ்தவூண் நரைதிரை மூப்பின்றி நிலைபெறுதலாகிய பெரும் பயனைத் தருதன் மாத்திரையேயன்றிப் பசி தீர்தலாகிய அவாந்தரப் பயனையுந் தருமாறுபோல இறப்பிறவமுந் தத்துவ ஞானத்தைப் பயத்தன் மாத்திரையேயன்றித் தத்தம் பதமுத்தியாகிய அவாந்தரப் பயனைப் பயத்தலும் அமைவுடைத்தாமாறு கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ் ஞானகலர்க்
கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய் - மெய்ஞ்ஞானம்
பின்னுணர்த்து மன்றிப் பிரளயா கலருக்கு
முன்னுணர்த்துந் தான்குருவாய் முன்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், ஓரோரிடங்களிற் குருவாய் வந் துணர்த்துதலின்றியும் ஞான நிகழுமாறென்னை யென்பாரை நோக்கி அதனை வரைசெய்துணர்த்தி வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். விஞ்ஞான கலர்க்குத் தானே மெய்ஞ்ஞானம் விளையும் என்பது அம் முதல்வன் மூவகையான்மாக்களுள் விஞ்ஞானகலராயினார்க்குத் தன்மையினின்றவாறே தத்துவ ஞானத்தை விளைவிப்பன்; அன்றிப் பிரளயாகலருக்குத் தான் குருவாய் முன் உணர்த்தும் என்பது அவ்வாறன்றிப் பிரளயாகலராயினார்க்கு நாற்றோளும் முக்கண்ணுங் கறைமிடறு முதலிய உறுப்பிற்றாய் முத்தொழினடாத்தி நின்ற தன்னியற்கை வடிவே குருவடிவாகக் காட்டி முன்னாக நின்று தத்துவஞானத்தை யுபதேசித்துணர்த்துவன்; அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய்ப் பின் மெய்ஞ்ஞானம் உணர்த்தும் என்பது அவிச்சையையுடைய சகலராயினார்க்கு அவர் வடிவுபோலும் வடிவுடைய குருவாகி அவ்வடிவின் பின்னாக மறைந்து நின்று தத்துவ ஞானத்தை யுணர்த்துவன்; முன் என்பது அவ்வேறு பாட்டை யறிவாயாக என்றவாறு.
முன்னென்றதனை முன்னைப் பொருளென்றுரைத்து எழு வாயாகக் கோடலுமொன்று. விளையுமென்பது அரசனெடுத்த வாலயம் என்புழிப் போல விவ்விகுதி தொக்குநின்றது. இவ்வாறன்றி எளிதினடப்படுதனோக்கி அரிசி தானே அட்டது என்றாற் போல எளிதின் விளைவிக்கப்படுதனோக்கி மெய்ஞ்ஞானந் தானே விளையுமென்றா ரெனினுமமையும்.“உண்ணின்றறுத்தருளி” என்றார் புடைநூலாசிரியரும். ஈண்டு அஞ்ஞானமென்றது அவிச்சையை யென்பது சகலர்க்கே அடையா யோதியவாற்றானறிக. அச் சகலரென்றது தவஞ்செய்தாரென மேலெடுத்துக் கொள்ளப்பட்ட சகலரென்றவாறு. அக்குருவென்றது மேற்கோளிற் கூறிப்போந்த குருவென்றவாறு.
தானே விளையும் முன்னுணர்த்தும் பின்னுணர்த்தும் எனவே, விஞ்ஞானகலர்க்குத் தன்மையினும் பிரளயாகலர்க்கு முன்னிலையிலும் சகலர்க்குப் படர்க்கையினும் நின்றுணர்த்துமென வரைசெய்தவாறு காண்க. இவற்றுண் முன்னைய விரண்டும் நிராதாரமெனவும் பின்னையது சாதாரமெனவுங் கூறப்படும்.

குறிப்புரை :

இனி இவ்வான்மாக்களுக்குத் தமது முதறானே குருவுமா யுணர்த்து மென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், மேற்கூறியவாற்றான் நிகழு ஞானத்தை யுணர்த்துவார் கலைஞானங்களை யுணர்த்துவார் போல நம்மனோரில் ஒருவராதலமையுமெனச் சாங்கியர் நையாயிகர் முதலியோர் மதம்பற்றி நிகழுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள். மேற்கூறியவற்றாற் சரியை முதலிய மூன்றும் முற்றிய பின்னர் இம்முற்றுதலானே மலபரிபாகஞ் சத்திநிபாதம் நிகழ்ந்து தத்துவ ஞானத்தின் அவாவுதலையுடைய உயிர்கட்கு இதுகாறுந் தமக்கு முதலாய் உண்ணின் றுணர்த்தி வந்த பரம்பொருளே அப்பருவமறிந்து குருமூர்த்தமா யெழுந்தருளி வந்து அதனை யறிவுறுக்கும் என்றவாறு.
எனவே, ஏனையோர்க்கு அது கூடாதென்றவாறாயிற்று.
இக்கருத்தே பற்றி “அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி யதனைச் சகத்தவருங் காண்பரோ தான்” என்றார் புடை நூலாசிரியரும். ஏகாரந் தேற்றம்.
ஏது : அவன் அன்னியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் “மாயாவுருவினன் மாயாவுருவினை யேயான்” ஏயுமெனின், எம்மனோரிலொருவனாய் முடியுமாகலின் தமது முதல் குருமூர்த்தி ஆதாரமாகத் தரித்து நின்றுணர்த்து மென்றலே அமைவுடைத்தெனப் பொதுவகையான் அதிட்டான பக்கங் கூறுவாரை நோக்கிச் சிறப்பு வகையான் ஆவேசபக்கமாமாறுணர்த்தி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். அம் முதல்வன் பாலினெய்போல மறைந்து வேறாய் நிற்றலின்றிச் சுத்தான்ம சைதன்னியமே தனக்குச் சொரூபமாகக் கொண்டு தயிரி னெய்போல ஆண்டு விளங்கி நிற்றலான் ‘இவ்வான்மாக்களுக்குத் தமது முதறானே குருவுமாயுணர்த்து’ மென மேற்கொண்டது என்றவாறு.
பாலினெய்போல வேறாய் மறைந்து நின்று செலுத்தப்படுவன வற்றினும் பொதுவாய்ச் செல்வதாகிய அதிட்டானபக்கங் கொள்வார்க்கு ஏனைச்சமய குரவருங் குரவராவான் சேறலின் அஃது ஈண்டைக் கமைவுடைத் தன்றென்பதாம். சைதன்னிய மென்றார் மாசுதீர்ந்த தென்ப துணர்த்துதற்கு.

பண் :

பாடல் எண் : 5

அறிவிக்க அன்றி அறியா உளங்கள்
செறியுமாம் முன்பின் குறைகள் - நெறியிற்
குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடென்
குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், விஞ்ஞானாகலர் முதலிய மூவர்க்கும் ஓரியல்பானுணர்த்தாது அவ்வாறு தன்மையினும் முன்னிலையினும் பின்னிலையினுமா யுணர்த்துதல் எற்றுக்கென்பாரை நோக்கிக் காரணங்கூறி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். உளங்கள் நெறியின் அறிவிக்க அன்றி அறியா என்பது உயிர்களெல்லாம் தமக்குரிய படிவழியின் வைத்து முதல்வனறிவிக்க அறியுமியல்பினவன்றி ஒன்றுபோல் அறிவிக்க அறியுமியல்பினவல்ல ஆகலான்; குறைவு இல் சகன் சூழ்கொள்பவர்க்கு என்பது அவ்வறிவாற் குறைபாடில்லாத சகக்கடவுளது உபதேச மொழியைக் கொண்டுணரு மியல்பினராகிய பிரளயாகலர் சகலர்க்கு; குறைகள் முன்பின் செறியுமாம் என்பது அவ்வறிவித்தாலறிதலாகிய குறைகள் முன்னிலையினும் பின்னிலையினும் நிகழ்வனவாம்; குறை உடைய சொல் கொள்ளார் கொள்பவத்தின் வீடு என் என்பது குறைவில் சகனாலாகிய குறைவினையுடைய உபதேசமொழி கொண்டுணர வேண்டாத விஞ்ஞானகலர்க்கு முதல்வனாற் கொள்ளப்பட்ட தன்னுண்மை மாத்திரையின் வீடு பயக்கு முணர்வுண்டென் றறிவாயாக என்றவாறு.
குறை இன்றியமையாமைப் பொருள்; அது * “வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன்றுலகு” என்பதனுட் பரிமேலழகருரையானு முணர்க. பவம், சம்பவம், உண்மை என்பன ஒருபொருட்கிளவி. வீடுபயக்கு முணர்வை வீடென்றும், சூழ்ச்சி பயக்கு முபதேசமொழியைச் சூழென்றுங் காரணகாரியமாக உபசரிக்கப்பட்டன. கொள்பவர் கொள்ளாரென்பனவும் அவை. கொள்ளார்க்கென்னு நான்கனுருபு விகாரத்தாற்றொக்கது. “ஐந்தவித்தானாற்றல்” என்புழிப்போல. ஆம் வீடெனவுமியையும். வீடாமெனப் பாடமோதுவாருமுளர்.
மேலை வெண்பாவின் முன்னுணர்த்தும் பின்னுணர்த்தும் தானே விளையுமெனக் கூறியவற்றை ஈண்டு நெறியினறிவிக்கவன்றி யறியாவாகலான் அது முன் செறியும் பின்செறியும் பவத்தினாமெனக் காரணங்காட்டி வலியுறுத்தினார். இதற்குப் பிறரெல்லாந் தத்தமக்கு வேண்டியவாறே மேலை வெண்பாவோடு இயைபற வுரைத்தார். அல்லதூஉம் அறிவிக்க வன்றி யறியாமை உபதேசியாம் என ஆன்மாவின் றன்னியல்பு கூறும்வழிப் பெறப்பட்டதாகலின் அதனை ஈண்டும் புனருத்தியாகக் கூறவேண்டாமையின் மேலது வலியுறுத்துதற் கேற்புடைய அறிவிக்க அறிதற்கட்படும் விசேடமாத்திரையே ஈண்டெடுத் தோதினாரென்றுணர்க. படிவழியின் வைத்தறிவிக்க வன்றி யறியாமை “பந்தமும் வீடுந் தெரிபொருட் பனுவற் படிவழி சென்று சென்றேறி” என்பதனானுமறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 7

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 8

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 9

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 10

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை - நாடி
உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்நிழ லாம்பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஆன்ம சுத்தி பண்ணுமா றுணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். தம்முதல் குருவுமாயுணர்த்தக்கேட்டு அதனைச் சிந்தனை செய்துணருமாறுணர்த்து முகத்தான் ஐம்புலவேடரின் வளர்ந்த வாலாமை நீக்கி உயிர் தன்னைத் தூய்மைப் படுத்துமாறுணர்த்துதல் இவ்வொன்பதாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
சூத்திரவியைபும் இதனானே இனிது விளங்கும்.
சிவப்பிரகாசத்துத் “தான் பணியை நீத்த” லென்றோதப்படும் ஆன்மசுத்தியாவது “இறைபணிநிற்க” என வருகின்ற சூத்திரத்திற் பெறப்பாலதாகலானும், அழுக்கு நீக்கமே அறுவைக்குச் சுத்தியாமாறு போலப் பாசக்ஷயமே உயிர்க்குச் சுத்தியாவதன்றி வேறன்மையானும், பாசக்ஷயம் பண்ணுமுன்னர்ச் சுத்தியாதல் கூடாமையானும், வருகின்ற, சூத்திரத்தின் கருத்தாய் நின்ற ஆன்ம சுத்தி பண்ணுமாற்றைப் பதியை நாடியெனவுந் தண்ணிழலாம்பதி யெனவுஞ் சிவதரிசனம் பண்ணுமாறே யுணர்த்துதற்கெழுந்த இச்சூத்திரத்தின் கருத்தாக வைத்துரைத்த தென்னையோவென மலையற்க; சிவதரிசனத்தி னிகழ்வது ஆன்ம சுத்தியென்னும் உடனிகழ்ச்சி யுணர்த்துதற்கும் தம்முள் வேறுபாடு சிறுபான்மையுடையனவாய இவ்விரு சூத்திரமும் ஒருபொருள் மேலனவென்ப துணர்த்துதற்கும் இவ்வாறுரைத்தாராகலின். அஃதங்ஙனமாக, ஆன்மாத் தன்னை யிந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை யணையுமென்றலின், அக்காட்சியே அதற்கமையுஞ் சுத்தி யெற்றுக் கெனின், அஃதொக்கும். நிருவிகற்பமாய்க் காண்டலும், இரட்டுறக் காண்டலும், தெளியக் காண்டலுமெனக் காட்சி மூவகைப்படும். இம்மூன்றும் அதிபரிபக்குவ முடையார்க்குக் கேட்ட மாத்திரையே ஒருங்கு நிகழுமாயினும் ஏனையோர்க்குக் கேட்டல் சிந்தித்தல் தெளிதலென்னுஞ் சோபான முறையினன்றி நிகழாமையின், அவரை நோக்கிச் சிவரூபத்தினிகழும் ஆன்ம தரிசனத்தின் பின்னாகச் சிவதரிசனத்தினிகழும் ஆன்ம சுத்தியும் ஒருதலையான் வேண்டப்படு மென்றுணர்ந்து கொள்க. “நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கு நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி யாசையொடு மங்குமிங்கு மாகியல மருவோ ரரும்பாச மறுக்கும்வகை யருளின் வழி யுரைப்பாம்” என வழி நுலாசிரியரும் இக்கருத்தே பற்றி யோதினார்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : குறையுணர்வாகிய பசு அறிவானும் பாச அறிவானும் உணரப்படாத முதல்வனை அவனது திருவடிஞானத்தால் தன்னறிவின் கண்ணே யாராய்ந்தறிக. அத்திருவடி ஞானத்தான் நிலமுதல் நாதமீறாகிய பாசக்கூட்டம் நின்றுழி நில்லாது பரந்து திரிதற்கண் அதிவேகமுடைய பேய்த் தேரினியல்பிற்றாய்க் கழிவதென்றறிந்து நீங்கவே, அப்பதிஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும் ; அவ்வாறு பாசத்தை யொருவி ஞானத்தைப்பெற்று ஞேயத்தைக் கண்டகாட்சி சலியாமைப் பொருட்டு அப்பொருள் பயக்குந் திருவஞ்செழுத்து அவ்விதிப்படியறிந்து கணிக்கப்படும் என்றவாறு.
ஊனமென்பது அப்பொருட்டாதல் “ஊனமேற் கிரியை வித்தை” என்பதனானறிக. “நன்று மன்னிது நாடாய் கூறி” என்றாற் போல நாடியென்பது இகரவீற்று முன்னிலையேவல். உராத்துனை ஏழாம் வேற்றுமைத் தொகை. உராவென்பது முதனிலைத் தொழிற்பெயர்; பறவாக்குளவி பாயாவேங்கை யென்றாற்போல ஒருவரானூரப்படாத வேகத்தையுடைய தேரெனச் செயப்படு பொருட்கண் வந்த பெயரெச்ச மறையாகக் கொண்டுரைத்து, “திருத்தார் நன்றென்றேன் றியேன்” என்றாற்போல உராவென்பது குறுக்கல் விகாரமென்பாருமுளர். பின் வந்த பதி ஆகுபெயர். இதனுள், ஊனக்கண் பாசமுணராப்பதியை ஞானக்கண்ணினிற் சிந்தை நாடியென்றது ஓரதிகரணம்; உராத்துனைத் தேர்த்தெனப் பாசமொருவத் தண்ணிழலாம் பதியென்றது ஓரதிகரணம் ; விதியெண்ணு மஞ்செழுத்தேயென்றது ஓரதிகரணம் ; ஆக மூன்றதிகரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடியரன்
தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணார்
என்னா மெனஅறிவா ரின்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், கோசரமாதல் பிறிதொன்றாற் பெறப் படாதென்றதென்னை பசுத்துவ நீங்கியவழிச் சுட்டிறந்தறிவதாகிய உயிருணர்வு திருவடிஞானத்தோ டொப்பதாகலின் அதன்கட் கோசரமாதல் அமைவுடைத்துப்போலு மென்பாரை நோக்கி அவ்வுணர்வு விளங்குமாறுணர்த்து முகத்தான் அவரை மறுத்து ஏதுப் பொருளை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். நாடியோ நரம்புசீக் கோழையோ தேடி எனை அறியேன் தேர்ந்த என்போ வகை நாடி எது நாடி முதலியவற்றுள் யான் யார் என்னைத் தேடியு மறிகின்றிலேனென்று இவ்வாறு தேர்கின்ற தேர்ச்சி யறிவின்கண்ணே இதனைத் தெளிவிப்பதோரறிவு வேறுண்டென ஆராய்ந்து நோக்கி ; அரன் றன்னாலே தன்னையும் கண்டுதமைக் காணார் எது அவ்வாறு நாடுங்கால் விளங்கித் தோன்றுவதாய முதல்வனது திருவடிஞானத்தால் முதல்வனையு முணர்ந்து முதல்வனின் வியாப்பியமாய் நின்று அங்ஙனமறியும் பொருளாகிய தம்மையு முணர்தலைச் செய்யாதார் ; என்னாம் என அறிவார் இன்று எது மற்றெவ்வியல்பின ரென்று தம்மை யறிய வல்லுநர் இம்முத்தி காலத்து என்றவாறு.
நாடியென்றது இடை பிங்கலை முதலியவற்றை. நரம்பெனவே யடங்குமேனும் தலைமைபற்றி வேறு கூறினார். சீ புண்ணீர். கோழை ஐ. ஓகாரந் தெரிநிலை. என்றென்பது சொல்லெச்சம். வகை ஆகுபெயர். ஒற்றுமைபற்றி அரனது ஞானத்தை அரனென்றுபசரித்தார். உம்மை எதிரது தழீஇயிற்று. எவனென்னும் வினா வினைக் குறிப்புப்பெயர் ஈண்டாகு பெயராய் என்னென மரீஇயிற்று. ஆம் அசை. நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ வென்ற உபலக்கணத்தால் ஏனைத் தத்துவ தாத்துவிகங்களினும் அவ்வாறு தெரித்தல் கொள்ளப்படும். இது தம்மையறியுமாறுணர்த்துமுகத்தானே தலைவனை யறிந்தபின் அறியப்படுவதாகிய தம்மறிவு கொண்டு தலைவனையறியுமாறு யாண்டையதென மறுத்து வலியுறுத்தவாறு காண்க.

குறிப்புரை :

ஈண்டு அம்முதலை ஞானக் கண்ணாலே காண்க வென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், மேலைச் சூத்திரத் தோதியவாற்றான் முதல்வன் பாச அறிவால் நாடப்படுவனல்லனாயினும் பசு அறிவால் நாடப்படுவனென்றற்கு இழுக்கென்னையெனச் சிவசமவாதசைவர் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : ஈண்டு இம்மூன்றதி கரணங்களுள் வைத்து இம்முதலதிகரணத்து ; அம்முதலை பாச ஞான பசு ஞானங்களான் உணரப்படாத முதல்வனை ; ஞானக் கண்ணாலே சிவஞானத்தினாலே ; காண்க அறிக ; என்றது என்றவாறு.
ஏகாரம் தேற்றம். ஏது : அவன் வாக்கு மனாதீதகோசரமாய் நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், ஏனைஞானங்களா னறியப்படாது சிவ ஞானத்தா னறியப்படுமென்றற்குப் பிரமாணமென்னை யென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். வாக்குமனாதீத கோசரமாய் நின்ற அதுவே என்புழியுரைத்தாம்.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : வாக்கு நாத முடிவான பாச ஞானமும் ; மனம் பசு ஞானமுமாகிய ; அதீதம் அவ்விரண்டன் விருத்திகளைக் கடந்து அதீதமாய் நின்று; கோசரமாய் நிற்றலான் ஒற்றுமைப்பட்டு உணரும் பதிஞான மாத்திரைக்கே விளங்கிக் கோசரிப்ப தாகலான் ஈண்டு அம்முதலை ஞானக் கண்ணாலே காண்க என்றது என மேற்கொண்டது.)
ஆண்டுப் பொதுவகையாற் பெறப்பட்டதனை ஈண்டேதுவாக வைத்து வாக்கு மனாதீதமாயுங் கோசரமாதல் பிறிதொன்றாற் பெறப் படாதென்னும் அருத்தாபத்தியான் ஞானக் கண்ணாலே காணப்படு மென்பது தாமே போதருமென மேற்கோளைச் சாதித்தார்.

பண் :

பாடல் எண் : 3

காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளந் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன்றான் உள்ளத்திற் காண்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், எதிர் முகத்து ஒரு பொருளைக் கண்ட கண்ணே மறித்து நோக்கியவழி வெரிந் புறத்துப் பொருளையுங் காண வல்லும், அதுபோல அங்ஙனந் தேர்ந்தறிதலைச் செய்த உயிரே தெளிந்தறிதலையுஞ் செய்யவல்லுமென அமையுமென்பாரை நோக்கி அதனது மாட்டாமையை விளக்கி அரன் றன்னாலே காண்டலை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். காட்டிய கண்ணே தனைக்காணா எது உயிராற் காட்டப்பட்டு ஒரு விடயத்தைக் காண்கின்ற கண்ணானது தன்னியல்பைக் காணமாட்டாது; கண்ணுக்குக் காட்டாய உள்ளத்தைக் கண் காணா எது தனக்கு அவ்விடயத்தைக் காட்டாய உள்ளத்தைக் கண் காணா எது தனக்கு அவ்விடயத்தைக் காண்பித்து முதலாய் நிற்குமுயிரையும் அது காணமாட்டாது; காட்டிய உள்ளம் தனைக்காணா எது அதுபோல முதல்வனால் மறைந்து நின்றுணர்த்தப்பட்டு ஒன்றனைத் தேர்ந்துணர்கின்ற உயிர் அவ்வாறே தன்னியல்பையு மறியமாட்டாது ; தன்னை யுணர்த்தி நிற்கு முதல்வனையு மறியமாட்டாது ; உள்ளத்தின் கண் ஆய கள்வன்தான் எது அத்தேர்ச்சியறிவின் கண்ணும் உடனாய் நிற்குங் கள்வன் அம்முதல்வனாகலானே ; உள்ளத்தில் காண் எது அவனை அவ்வறிவின் கண் வைத்து நாடித் தெளிவாயாக என்றவாறு.
இது சொற்பொருட் பின்வருநிலை. ஏகாரம் அசைநிலை. “முறைகாக்கு முட்டாச் செயின்” என்றாற்போலக் காணாதென்னுந் துவ்வீறு விகாரத்தாற் றொக்கது. பின்வந்தவுள்ளம் ஈண்டுத் தேர்ச்சியறிவின் மேற்றது. உள்ளத்தின் கண்ணுமென்னுஞ் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. தோன்றாது நிற்றல்பற்றிக் கள்வனென்றார். கள்வனென்றது கண்ணுக்கு உயிர் மறைந்து நின்றே காட்டுவதாகலான் அது தன்னையும் உயிரையும் அறியமாட்டாதாயிற்று; அதுபோல முதல்வன் இதுகாறு மறைந்து நின்றே யுணர்த்துதலின் உயிர் தன்னையு முதல்வனையும் அறியமாட்டாதாயிற்றென்பதுபட நின்ற குறிப்புமொழி. உள்ளத்திற் காணவல்லார்க்கு அக்கள்ளந் தீர்தலின் தம்மையும் முதல்வனையுங் காண்டல் கூடுமென்பதாம். +“கள்ள ரொடில்ல முடையார் கலந்திடின் வெள்ள வெளியாமென் றுந்தீபற” என்றதும் இக்கருத்து நோக்கி.
கண்ணுக்குக் காட்டாய வுள்ளத்தைக் கண் காணாவென உவமைக்கோதியவாறு பொருளினும் வருவித்துரைத்துக் கொள்க. இஃதெடுத்துக் காட்டுவமை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் - அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அசத்தென்று கண்டொருவியவழித் தோன்றுவது சூனியமேயன்றிப் பிரிதில்லைபோலு மென்பாரை நோக்கி ஞான சொரூபத்தினியல்புகூறி அதனை வலியுறுத்துத னுதலிற்று. இள். நிர்க்குணன் ஆய் எது அசுத்தப் பிரபஞ்சம் போல முக்குணரூபமா யளவிட்டறியப்படுவானுமல்லனாய் ; நின்மலன் ஆய் எது முக்குணங்களைக் கடந்த மிச்சிரப் பிரபஞ்சம் போல மலகன்ம காரியரூபமா யறியப்படுவானு மல்லனாய்; நித்தியானந்தன் ஆய் எது மலகன்மங்களையுங் கடந்த சுத்தப்பிரபஞ்சம்போல அநித்தியானந்தரூபனாய்ச் சுட்டியறியப்படுவானுமல்லனாய் ; தற்பரம் ஆய் எது இம்மூன்றனோடுங் கூடிப் பொதுவியல்பு பற்றி அவ்வா றுணரப்படும் உயிர்போலன்றி அதற்கு மேலாய் ; நின்ற தனி முதல்வன் எது இவ்வாறு நிற்றலான் ஒன்றனியல்புபற்றி யறியப்படாத தனிமுதலாகிய இறைவன் ; வானே முதல் களையின் எது ஆகாச முதலிய அசத்தை அசத்தென்று கண்டொருவியவழி ; அளவு இறந்து அற்புதம்போல் வந்து எது பயின்றறிந்துவருந் தனது சுட்டறிவினளவினைக் கடத்தலான் இன்னதென்றறிய வாராத சூனியப் பொருள் போலத் தோன்றி ; ஆனா அறிவு ஆய்த் தோன்றானோ எது பின்னர்ச் சுட்டிறந்தறியுந் தன்னறிவின்கண் நீங்காது நிலை பெறுவதாய்ச் * “சோதிக்குட் சோதியாய்” விளங்கித் தோன்றான் கொல்லோ என்றவாறு.
தற்பரம் தனக்குப் பரமென விரியும். தன்னென்றது உயிரை. அற்புதம் ஈண்டுச் சூனியத்தின்மேற்று. முதற்கட் சூனியமாய்த் தோன்றினுஞ் சூனியமன்றென்பார் அற்புதம்போல் வந்தென்றார். ஆனாமை நீங்காமை. ஓகாரம் எதிர்மறை. ஏகாரம் அசைநிலை. வானே முதலெனவே தோற்றமுறை பற்றி வான் முதலாகிய பூதங்களும், ஒடுக்கமுறை பற்றி வான் முதலாகிய ஏனைத் தத்துவங்களு மடங்கும். நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியானந்தனாய்த் தற்பரமா யென்புழி ஆக்கச்சொல் உண்மை குறித்து நின்றது வடமொழி மதம். அறிவா யென்புழி ஆக்கம் வேறுபாடு குறித்து நின்றது. ஒற்றுமைபற்றி முதல்வனது ஞானத்தை முதல்வனென்றுபசரித்தார்.

குறிப்புரை :

இனி அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூப மென்றுணரற் பாற்று.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், அம்முதலை ஞானக் கண்ணாலே காண்க வென்றுணர்த்தியவழி அந்த ஞானக்கண்ணைப் பெறுமாறு யாங்ஙனமென நிகழும் அவாய்நிலையை நீக்குதற்பொருட்டு மேல தற்கோர் புறனடையாயெழுந்த இச்சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி அசத்தாயுள்ள நிலையுதலுடைய தற்சொரூபத்தைக் காட்டாது மறைத்து நிற்கும் நிலையுதலிலவாயுள்ள ; வன்னபேதங்களை பிரபஞ்சங்களை ; அசத்து என்று இவை நிலையுதலுடையவல்ல என்று; காண விவேகித்தறியின் ; உளதாய் நிற்பது அங்ஙனம் நிராலம்பமாய் விளங்கித் தோன்றுவது ; ஞானசொரூபம் என்று உணரற் பாற்று பதி ஞானத்தின் இயல்பென்று அறியற் பாலதாம்.)
பாசமொருவத் தண்ணிழலாம்பதி யென்புழிப் பாசமென்றது காரியப்பிரபஞ்சத்தையென்பார் அசத்தாயுள்ளவென்றும், சொற் பல்காமைப் பொருட்டு ஏதுப்பொருளை உருவகமுகத்தான் உடம்பொடு புணர்த்துக் காட்டுவார் பிரபஞ்சத்தை யென்னாது வன்னபேதங்களை யென்றும், வியாபகப் பொருளுக்கு ஒருவுதலாவது உணர்ச்சி விசேடமேயாமென்பார் அசத்தென்றொழிய என்னாது காண என்றும், தண்ணிழலாய் நிற்றல் புதிதன்றென்பார் உளதாய் நிற்பதென்றும், பதியென்றது ஆகுபெயராற் பதிஞானத்தின்மேனின்றதென்பார் ஞானசொரூபமென்றும், இஃதநுபவத்தினன்றிச் சொல்லளவையின் அறிய வாராதென்பார் உணரற்பாற்றென்று முரைத்தார். இஃதேகதேசவுருவகம்.
இதனுட் பெறப்படுமேதுப்பொருளை ஏனையவற்றுட்போல மேற்கோளின் வேறுவைத்துக் காணுமாறு.
ஏது : இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காணவுளதாய் நிற்பது ஞானசொரூபமென்றது வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பென்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிகசொரூபமாந்துணையான்.
இதன் பொருள். படிகசொரூபத்தைக் காட்டாது மறைந்து நின்ற வேற்று நிறங்களை இவை நிலையுதலிலவாகிய வேற்று நிறங்களெனக் கண்டு நிற்பின் அவ்வழி நிலையுதலுடைத்தாய் விளங்கி நிற்பது பளிங்கினது சொரூபமாமென்னு மொப்புமையான் நிலையுதலுடைய தற்சொரூபத்தைக் காட்டாது மறைத்து நிற்கும் நிலையுதலிலவாயுள்ள இது உரையாசிரியர் வருவித்துக் கொள்வது வார்த்திகமன்று.
பிரபஞ்சத்தை இவை நிலையுதலுடையன வல்லவென்று விவேகித்தறியின் அங்ஙன நிராலம்ப மயமாய் விளங்கித் தோன்றுவது ஞான சொரூபமென மேற்கொண்டது என்றவாறு.
வன்னபேதமாவது சித்திரமெனக் கொண்டு சுவர்மேல் வைத்துரைத்தலுமொன்று. அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண்டலாவது ஆசிரியனறிவுறுத்த உபதேசப் பொருளினுரைத்து நின்று “அட்டகுண மெட்டுச்சித்தி கோகனதன் முதல்வாழ்வு குலவு பதமெல்லாம் வெறுத்துநெறி யறுவகையு மேலொடுகீ ழடங்கக்” காரணரூபத்தினில்லாமையால் “வெறும்பொயென நினைந்திரு” த்தல்.

பண் :

பாடல் எண் : 5

சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச்
சட்ட இனியுளது சத்தேகாண் - சுட்டி
உணர்ந்தநீ சத்தல்லை உண்மையைத் தைவம்
புணர்ந்ததனாற் பொய்விட்டுப் போம்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், வானே முதல் களைந்தவழி அங்ஙனந் தோன்றுவதும் வேறொன்றெனக் கோடும் ஞானசொரூபமென்றற்குப் பிரமாண மென்னையென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துத னுதலிற்று. இள். சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்து என்ன எது ஏகதேச வுணர்வாற் சுட்டி யுணரப்படுவதாய பிரபஞ்சத்தை மேற்கூறியவாறே ஒரோவொன்றாகச் சுட்டி அசத்தென்று கண்டு கழித்துக் கொண்டு சென்றவழி ; இனிச் சட்ட உளது சத்தே காண் எது முடிவின்கட் செம்மையே கோசரமாவது யாது அஃது அவ்வசத்தின் வேறாகிய சத்தே யாம் அதனையறிவாயாக, அற்றேல் அசத்தின் வேறாய் அங்ஙனந் தோன்றுஞ் சத்தாவது உயிரேயாமென அமையுமெனின் ; சுட்டி உணர்ந்த நீ சத்து அல்லை எது இதுகாறும் அசத்தோடு கூடிச் சுட்டி யறிந்துவந்த நீ அசத்தின் வேறாய் அங்ஙனந் தோன்றுஞ் சத்தாவாயல்லை. அற்றேல் இச்சுட்டுணர்வு எனக்கு நீங்குவதின்று போலுமெனின் ; உண்மையைத் தைவம் புணர்ந்து எது அசத்தின் வயப்பட்டு நின்று சுட்டியறிந்து வந்த நீ அதனை யொழிந்து அங்ஙனந் தோன்றிய சத்தின் வயத்தினையாய் அதனைப் புணர்ந்தால் ; அதனால் பொய்விட்டுப் போம் எது அப்புணர்ச்சி யானே சுட்டுணர்வாகிய அப்பொதுவியல்பு நின்னைவிட்டு நீங்கும் என்றவாறு.
என்ன என்றது உபசார வழக்கு. சட்டவென்பது செப்ப முணர்த்தி நிற்பதோ ரகரவீற்றிடைச் சொல் ; அது சட்டமென இழிவழக்கின் மகரவீறாய் மரீஇயிற்று. அசத்தைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. உண்மை சத்தென்பன ஒரு பொருட் கிளவி. தைவமாயென ஆக்கச்சொல் வருவித்துரைக்க. புணர்ந்தா லென்பது புணர்ந்தெனத் திரிந்தது. உண்மைக்குத் தைவமாதல் புணரினென உருபுமயக்கமாகக் கொண் டுரைப்பினுமமையும். பற்றறக் கழிந்தொழியு மென்பார் விடுமென்னாது விட்டுப் போமென்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்த்துணரப் - பண்டணைந்த
ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட
சானத்தில் தீர்விடம்போற் றான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அசத்தை அசத்தென்று கண்டொழியு மாறும் ஒழிந்தவழி உண்மையைத் தைவம் புணருமாறும் புணர்ந்தவழி அதனாற் பொய் விட்டுப் போமாறும் யாங்ஙன மென்பாரை நோக்கி அவற்றைத் தெரித்துணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இள். கண்டதை அன்று அன்று எனக் கண்டு அசத்து ஆய் விட்டு எது சுட்டியுணரப்பட்ட பிரபஞ்சத்தை இது சத்தன்று இது சத்தன்றென ஒரோவொன்றாகவைத்து நோக்கி அசத்தென்றொழித்து; ஆன்மாவில் அண்டனை ஆய்ந்து எது அவ்வாறு கண்டொழிந்த தன்னறிவின்கண்ணே சுட்டுணர்வின்றி நின்ற கடவுளை ஆராய்ந்து ; உணர எது சோகமெனப் பாவிப்பனாயின் ; உத்தமனின் பண்டு அணைந்த ஊனத்தைத்தான் விடுமாறு எது அப்பாவகத்தான் அத்துவிதமாய் விளங்கித் தோன்று முதல்வனால் அநாதியாய்க் கூடி நின்ற பொதுவியல்பைத் தான் விட்டு நீங்குமாறு ; ஒண் கருட சானத்தின் தீர் விடம்போல் தான் எது ஒள்ளிய கருடதியானத்தில் விளங்கித் தோன்றுங் கருடனால் அப்பாவகன் விடத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலாம் என்றவாறு.
தானென்பது முன்னையது எழுவாய். பின்னையது அசை. சானம் பாகதச்சிதைவு. கருடதியானமாவது யாதெனிற் கூறுதும்; ஆதி பௌதிகம், ஆதிதைவிகம், ஆத்தியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும். பொருள்தோறும் இவ்வாறு கண்டுகொள்க. அவற்றுள் உலகத்திற் காணப்படுங் கருடன் ஆதிபௌதிக கருடன், அதற்கதி தெய்வமாகிய மந்திரம் ஆதி தைவிக கருடன், அம்மந்திரம் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும். அம்மூன்றனுள் ஈண்டுக் கருடனென்றது கருடனுக்கு அதிதெய்வமாய மாந்திரிகனுள்ளத்தின் அதுபோல் வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரரூபமாகிய ஆதிதைவிக கருடனை. அதனைப் பாவித்தலாவது நாடோறும் பயின்று வந்த பயிற்சி விசேடத்தால் அம்மந்திரரூபமே தானாக அநன்னியபாவனை செய்து தன்னறிவு அதன் வயத்ததாம்படி உறைத்து நிற்றல். அவ்வாறு நின்று அம்மந்திரக் கண்கொண்டு பார்ப்பவே அஃதவ் விடவேகத்தை மாற்றுதல் ஒருதலையாகலின் அப்பாவனை ஈண்டைக் குவமையாயிற்று. புள்ளு விலங்கு மரம் முதலியவற்றுக்கெல்லாம் அதிதெய்வ மந்திரமுளதென்பதூஉம், மந்திரங்களைக் கணிப்போன் படிகம்போல மந்திரசொரூபியாவனென்பதூஉம், சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றுட் காண்க.
இதனானே கருடபாவனை அசத்தியமென்பார் மதம் போலி யாயவாறுமுணர்க. அல்லதூஉம், பாவனை போலியாயவழி அது பயன்றருமா றியாண்டையதென்றொழிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தாற்
குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இஃதவ்வாசனையை நீக்குதற்குச் சாதனமாமா றியாங்ஙனமென்பாரை நோக்கி அஃதாமாறு கூறி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். உள்ளம் அரன் உடைமை அஞ்செழுத்தால் கண்டு எது உயிர் சிவனுக்குடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக்கு முறையில் வைத்து நோக்கி ; இதயத்தில் அதனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து எது தன்னுடம்பகத்தே இதயம் உந்தி புருவநடுவென்னு மூன்றனையும் முறையே பூசைத்தானம் ஓமத்தானம் தியானத்தானமாகக் கருதிக்கொண்டு புறம்பே ஞான பூசைசெய்யு முறைப்படி இதயபங்கயத்தில் அவ்வஞ்செழுத்தாலமைந்த திருமேனியில் அம்முதல்வனைக் கொல்லாமை ஐம்பொறியடக்கல் பொறை அருள் அறிவு வாய்மை தவம் அன்பு என்னும் அட்டபுட்பங்கொண்டு அம்மனுவா லர்ச்சனை செய்து; அஞ்செழுத்தால் குண்டலியின் ஓமம்செய்து எது அத்திரு மந்திரத்தானே குண்டலித்தானமான உந்தியில் ஞானவனலை யெழுப்பி அதன்கண் விந்துத்தானத் தமிழ்தமாகிய நெய்யைச் சுழுமுனைநாடி இடைநாடியாகிய சுருக்குச் சுருவங்களாலோமித்து; கோதண்டம் சானிக்கில் எது விந்துத் தானமாகிய புருவநடுவிற் சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே தற்பதப் பொருளும் துவம்பதப் பொருளும் அசிபதப் பொருளுமா முறைமைநோக்கி அதனாற் சிவோகம்பாவனை செய்வனாயின்; அங்கு அண்டன் ஆம் சேடன் ஆம் எது அப்பா வனைக்கண் அம்முதல்வன் விளங்கித் தோன்றுவன், அப்பாவகன் அவனுக்குச் சேடசேடிய பாவகத்தால் அடிமையாவன் என்றவாறு.
ஓமித்தலுந் தியானித்தலும் பூசைக் கங்கமெனவறிக. ஞான சொரூபம் விளங்கிய வழியும் பயிற்சி வயத்தான் ஏகதேசப்பட்டுப் புறத்திற் செல்ல நோக்குவதாய தன்னறிவை அங்ஙனமாகாதவாறு மடக்கி அகத்தே ஒரு குறியின்கணிறுத்தி நிட்டை கூடும்படி அஞ்செழுத்தோது முறையில் வைத்துக் கண்டு சிந்திக்கச் சிந்திக்க அஃது அந்நோக்கத்தைப் பற்றறக் கெடுத்து ஞானசொரூபத்தை இனிது விளக்கிப் பூரணநிலையிற் கொண்டு செலுத்துமாகலின் இஃது ஈண்டைக்குச் சிறந்த சாதனமாயிற்றென்பது.

குறிப்புரை :

இனி இவ்விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப் படி யுச்சரிக்க என்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், ஆன்மாவைச் சுத்திபண்ணுதற்குப் பாசமொருவியவழித் தண்ணிழலாய்ப் பிரகாசித்த ஞானசொரூப மொன்றே அமையுமாகலின் இவ்விடத்தில் இனிச் செய்யக்கடவ தொன்றில்லை யென்பாரை நோக்கிச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இள். பாசமொருவி ஆண்டுத் தண்ணிழலாய்ப் பிரகாசித்த ஞானக்கண்ணாற் பதியைச் சிந்தை நாடிய பின்னர் அவ்விடத்துத் திருவஞ்செழுத்தையும் விதிப்படி கணிக்கவென மேற்கொண்டது என்றவாறு.
இறந்தது தழீஇயவெச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. அற்றாகலினன்றே * “பின்னு மோசைதரு மஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க” என்றார் வழிநூலாசிரியருமென்க. ஈண்டு ஸ்ரீ பஞ்சாக்கரத்தை யென்றது முத்திபஞ்சாக்கரத்தை. திருவஞ்செழுத்தாற் சாதிக்கப்படும் பொருளும் அதுவேயாகலான் வேறு வகுத்துக் கூற வேண்டாமையின், விதிப்படியென மாட்டெறிந்தொழிந்தார். இவ்வாறாசிரியர் மாட்டெறிந்ததூஉமுணராதார் சாதித்து நிற்குமுறை வேறே ஓதுமுறைவேறேயெனச் சித்தாந்த வழக்கொடு முரணிக் கூறுவர். நிற்குமுறைமையும் ஓதுமுறைமையுந் தம்முளியைபில்வழி அஃது அதற்குச் சாதனமாமாறு யாண்டையதென்றொழிக. மானதம் மந்தம் உரையெனக் கணிக்குமாறு மூவகைப்படும். அவற்றுட் சுத்தமானத மெனப்படும் அறிவாற் கணித்தலே ஈண்டு உச்சரித்தலென்பார் சூத்திரத்துள் உச்சரிக்கவென்னாது எண்ணுகவென்றார். வடமொழிச் சூத்திரத்துத் தியானிக்க என்றதும் அது. இன்னும் இதன்கட்படும் இயல்பெல்லாம், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், கொடிப்பாட்டு, நெஞ்சுவிடுதூது முதலியவற்றுட் காண்க. ஈண்டு விரிப்பிற் பெருகும்.
ஏது : இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞா னத்தை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்கு மாகலின் அது நீக்குதற்கெனக்கொள்க.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அந்தரங்க வழிபாடாகலின் அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக்கண்டு வழிபடுமாற்றைச் சாரவைத் தோதற்பாலதாகிய இதனைச் சித்தசாதனமாய் ஈண்டு விதித்தல் எற்றுக்கென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இள். வேம்பு தின்றபுழு அதனையொருவிக் கரும்பைத் தலைப்பட்டு அதன்சுவை தெரிந்துழியும் பயிற்சிவயத்தான் நோக்கிற்றை நோக்கி நிற்குமாறுபோல அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்தென்று கண்ட உயிர்களுக்கு அதனான் ஞானசொரூபம் விளங்கி ஞேயங்காட்சிப்பட்டவிடத்தும் அவை பயிற்சிவயத்தாற் பண்டைச் சிற்றுணர்வை நோக்கி நிற்குமாகலின் அவ்வாதனை நீக்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டப்படுதலான் இனி ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி யிவ்விடத்துச்சரிக்கவென மேற்கொண்டதெனக் கொள்க என்றவாறு.
இவ்விடத்தென்றதனால் அணைந்தோர் தன்மையைச் சார வைத்து மேற்கோடற்குரிய ஸ்ரீ பஞ்சாக்கரத்தையென வருவித்துரைத்துக் கொள்க எனக்கொள்கவென்று உடம்படுப்பித்ததும் அது பற்றி. இக்கருத்து நோக்கியன்றே புடைநூலாசிரியர் அஞ்செழுத் தருணிலையை ஆன்மலாபத்தின் பின்னாக அணைந்தோர் தன்மையைச் சாரவைத் தோதியதூஉமென்க. * “வானோக்கிவாழும் கோனோக்கிவாழும்” என்றாற்போல ஈண்டு நோக்கென்றது மனவெழுச்சி விசேடத்தை. பிரகாசித்த வழியென்பது பிரகாசித்தெனத் திரிந்தது. ஈண்டு ஞானமென்றது அசத்தை அசத்தென்று கண்டவழி விளங்குவதெனப்பட்ட ஞானசொரூபத்தை ; அஞ்ஞானமென்றது அதற்கு மறுதலையாகிய சுட்டுணர்வையெனவுணர்க. அது நீக்குதற்கெனக் கொள்கவெனவே, சித்தசாதனமன்றென்பதும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இந்துவிற் பானுவில் இராகுவைக் கண்டாங்குச்
சிந்தையிற் காணிற் சிவன்கண்ணாம்-உந்தவே
காட்டாக்கிற் றோன்றிக் கனல்சே ரிரும்பென்ன
ஆள்தானாம் ஓதஞ் செழுத்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனம் ஒரு குறியின்கண் வைத்தன்றி முதல்வனைக் காண்டல் செல்லாதவாறும் அவ்வாறு கண்டவழி முதல்வன் தன்மாட்டு விளங்கித் தோன்றுமாறுந் தோன்றியவழித் தான் அம்முதல்வனுக் கடிமையாமாறும் உவமையில் வைத்துணர்த்தி அதனை வலியுறுத்துத னுதலிற்று; இள். இராகுவை இந்துவில் பானுவில் கண்டாங்கு எது அந்தரத்தியங்கு நவக்கோள்களுள் ஏனையபோலக் காணப்படாத இராகு கேதுக்களை உபராகத்திற் சந்திராதித்தர்மாட்டுக் கண்டாற்போல ; சிந்தையில் காணில் எது முப்பொருள்களுள் யானிதனை யறிந்தேன் அறிகின்றிலேன் என்னுமுணர்விற்கு விடயமாகிய பசுபாசங்களோடொப்ப வேறுணரப்படாத முதல்வனைத் தன்னிதய பங்கயத்தின் அஞ்செழுத்தின் முறையின் வைத்துக் காணுமாயின் ; உந்தவே காட்டாக்கில் சிவன் தோன்றிக் கண் ஆம் எது கோலைநட்டுக் கயிற்றினாற் சுற்றிக் கடையவே காட்டத்தினின்று அங்கி தோன்றுமாறு போல அம்முதல்வன் ஆண்டுத்தோன்றி அறிவுக்கறிவாய் விளங்கி நிற்பன் ; தான் கனல் சேர் இரும்பு என்ன ஆள் ஆம் எது அப்பொழுது தானும் எரி சேர்ந்த இரும்புபோலத் தனது சுதந்திரத்தைவிட்டு அம்முதல்வனுக்கு அடிமையாம் ; அஞ்செழுத்து ஓது எது ஆகலான் அத்திருவஞ்செழுத்தை விதிப்படி யோதுவாயாக என்றவாறு.
கேது சாயாக்கிரகமாகலின், வேறு கூறாராயினார். கண் அறிவு. தோன்றியாமெனவியையும். உந்துதல் ஈண்டுக் கடைதன்மேற்று. காட்டாக்கி வடமொழிச்சிதைவு. இகரம் விகாரத்தாற் றொக்கது. இன் உவமவுருபு. ஈண்டும் ஓதஞ்செழுத்து என்றது வலியுறுத்தவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

மண்முதல் நாளம்மலர் வித்தை கலாரூபம்
எண்ணிய ஈசர் சதாசிவமும் - நண்ணிற்
கலையுருவாம் நாதமாம் சத்தியதன் கண்ணாம்
நிலையதிலாம் அச்சிவன்தாள் நேர்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், தத்துவ முப்பத்தாறுக்கும் மேற்பட்ட முதல்வனை இதயபங்கயத்திற் கண்டர்ச்சிக்குமாறு யாங்ஙனமென் பாரை நோக்கி அவ்விதய பங்கயத்தினியல்புணர்த்தி அதனை வலியுறுத்துத னுதலிற்று. இள். நண்ணில் எது அவ்விதய பங்கயத்தினியல்பை அறியப்புகின் ; மண் முதல் நாளம் எது நில முதலிய இருபத்துநான்கு தத்துவமும் உந்தியினின்றுந் தோன்றி எண் விரலளவைத்தாயுள்ள நாளவடிவாம் ; வித்தை மலர் எது வித்தியா தத்துவங்களேழுஞ் சுத்தவித்தையுமென்னும் எட்டுத்தத்துவமும் எட்டிதழ்வடிவாம் ; எண்ணிய ஈசர் சதாசிவமும் கலாரூபம் எது அத்தத்துவங்களுக்கு மேலாகக் கருதப்பட்ட ஈசுரஞ் சதாசிவமென்னும் இரண்டு தத்துவமும் அறுபத்துநான்கெனப்படுங் கேசர வடிவாம் ; சத்திகலை உருவாம் எது சத்திதத்துவம் அக்கேசரங்களுக்குள்ளாகிய பொகுட்டு வடிவாம்; நாதம் அதன் கண்ணாம் எது சிவதத்துவம் அப்பொகுட்டிற் காணப்படும் ஐம்பத்தொரு வீசவடிவாம் ; அதில் அச்சிவன் தாள் நிலையாம் எது ஆகலான் அவ்வியல்பிற்றாகிய இதயபங்கயத்தின் முப்பத்தாறு தத்துவமும் ஆசனமாகவுடைய அச்சிவனது சத்தி நிலைபெறும் ; நேர் எது அதனை யறிந்து திருவஞ்செழுத்தால் அர்ச்சிப்பாயாக என்றவாறு.
இதனானே “அண்டபிண்டமவை சமமாதலால்” புறத்துக் காணப்படும் முப்பத்தாறு தத்துவமும் அகத்தினிற் சூக்குமமா யுண்டென்பது காட்டி முதல்வனுக்கு இந்நிலையே அந்நிலையெனத் தெளிவித்தவாறு. வித்தையென்பது இரட்டுற மொழிதலான் அவ்வாறுரைக்கப்பட்டது. சிவஞானசித்தியில் + “மூட்டு மோகினி சுத்தவித்தை மலரெட்டாய்” என்புழி மோகினியென்றதூஉம் ஆகு பெயரான் அதன்காரியமாய கலாதிகளின் மேனின்றது.
இவ்வாறன்றி, நிலமுதலிய முப்பத்தொரு தத்துவமெனப்படும் எட்டுக்கொத்தும் எண்விரல்நாளவடிவும், அசுத்த மாயாதத்துவம் நாளத்துக்கும் மலருக்கும் நடுக்கண்டமாகிய கிரந்திவடிவும், அதற்குமேற் சுத்தவித்தையின் வாமை முதலிய எட்டும் எட்டிதழ் வடிவுமாமென் றுரைப்பாரும், முப்பத்தொன்றுக்குமேல் அசுத்தமாயை கிரந்தியின் அதச்சதனம் சுத்தமாயை ஊர்த்துவச்சதனம் அதற்குமேல் ஈசுரதத்துவத்தில் அனந்தன் முதலிய எட்டும் எட்டிதழ் வடிவம் சதாசிவ தத்துவமொன்றுங் கேசர வடிவமெனக் கொண்டு அதற்கியையக் கொண்டு கூட்டியுரைப்பாரும், கலாரூபமென்றது பஞ்ச கலைகளை யெனவும் அஃதியாண்டுங் கூட்டியுரைக்கப்படுமெனவுங் கொண்டு, மண்முதல்நாள மலரென்பதற்கு மண்ணாகிய நிவிர்த்திகலாரூபம் நாளமும், மண்ணை முதலாகவுடைய ஏனையிருபத்துமூன்று தத்துவமாகிய பிரதிட்டாகலாரூபம் மலருமாமெனவும், வித்தை யெண்ணிய ஈசர் சதாசிவமுங் கலையுருவமா மென்பதற்கு வித்தியா தத்துவமாகிய வித்தியாகலாரூபங் கலையெனப்படுங் கேசரமுஞ், சுத்த வித்தையோடு கூடியெண்ணப்பட்ட ஈசுரதத்துவஞ் சதாசிவ தத்துவமாகிய சாந்திகலாரூபங் கலைக்குள் உருவெனப்படும் பொகுட்டுமாமெனவும், நாதமாஞ்சத்தியதன்கண்ணா மென்பதற்குச் சிவதத்துவஞ் சத்திதத்துவமாகிய சாந்தியதீதகலாரூபம் பொகுட்டின் கண்ணாகிய வீசமாமெனவும் உரைப்பாருமுளர். இவையெல்லாம் அவ்வவ்வாகமபேதம் பற்றிக் கொள்ளப்படும். கலை அறுபத்து நான்காகலான், அறுபத்துநான்காகிய கேசரங்களுக்குத் தொகைபற்றிக் கூறப்படும் ஆகுபெயராயிற்று. ஈசர் ஆகுபெயர். கலையுரு கலைக்குள்ளுருவென உள்ளுருபு விரித்துரைக்க. அதில் என்புழி அன்சாரியை விகாரத்தாற்றொக்கது. இது நாளமுதலாக மேனோக்கித் தோன்றும் உலகத்துக் கமலம் போலாது கண்முதலாகக் கீழ்நோக்கித் தோன்றியதோர் திப்பிய கமலமெனக் கொள்க. சிவன்றாளதினிலையாமெனவே சிவன் சத்திக்கு மேலாய் நிற்பன் என்பதூஉம் பெறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பாசக்ஷயம் பண்ணுமாறுணர்த் துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் . மேல் ஏழாஞ்சூத்திர முதலிய மூன்றானும் முறையே சாதிக்கும் பொருளதியல்புஞ் சாதித்துப் பெறப்படும் பொருளதியல்புஞ் சாதிக்குமாறு முணர்த்தி, இனி அச்சாதனத் தானாய பயனியல்பு வகுத்துக்கூறுவா னெடுத்துக்கொண்டார். அப்பயனாவது பாசவீடுஞ் சிவப்பேறுமென இருவகைப்படும். அவ்விரண்டனுட் சுட்டுணர்வினாகிய ஏகதேச நோக்கத்தைத் திருவஞ்செழுத்தினது உச்சரிப்பாற் பற்றறத் துடைத்தவழிப் பெறப்படுவதாகிய மேலைச்சூத்திரத்தி னெடுத்துக் கொண்ட ஆன்மசுத்திப் பயனாகிய பாசவிடுதியைச் செய்து கொள்ளுமாறு மேற்சிந்தனை செய்த பொருளைத் தெளியுமாறு உணர்த்து முகத்தானுணர்த்துதல் இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
இதனானே சூத்திரவியைபும் இனிது விளங்கும்.இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு : ஞானக் கண்ணாற் காணப்பட்ட அம்முதல்வன் தானுடனாய் நின்றறியவும் வேறு காணப்படுமாறின்றி யானேயறிந்தே னென்னும்படி உயிர் தானேயாய் ஒற்றுமைப்பட்டு உயிரின்வழி நின்ற அப்பெத்த நிலைபோல் ஈண்டு உயிர் அம்முதல்வனோடுடனாய் நின்றறியினுந் தானென வேறு காணப்படுமாறின்றி அவனோடொற்றுமைப்பட்டு அவ்விறைபணியின் வழுவாது நிற்பின், மலமாயையென்னும் இரண்டனோடு வலிய கன்மமலமும் இல்லையாயொழியும் என்றவாறு.
அவனே தானேயென்னும் ஏகாரமிரண்டனுள் முன்னையது பிரிநிலைக்கண்ணும் பின்னையது தேற்றத்தின் கண்ணும் வந்தன. நெறி உவமவுருபு. மலமாயையொடு கூடிய வினையென்றாராகலின் இன்றே யென்றார். உவமைக்கோதியது பொருளினும், பொருளுக் கோதியது உவமையினுஞ் சென்றியைந்தன.
ஈண்டொற்றுமைப்படுதலாவது, குடமுடைந்தவழிக் குடாகாயமும் ஆகாயமும்போல ஒருபொருளா யொற்றுமைப்படுதலோ, அன்றிக் குற்றியை மகனென்பதுபோலத் திரிவுகாட்சியா னொற்றுமைப்படுதலோ, அன்றி மண்ணே குடமென்பது போல ஒன்று திரிந்தொன்றா யொற்றுமைப்படுதலோ, அன்றி வெள்ளையுந் தாமரையும்போலக் குணகுணித்தன்மையா னொற்றுமைப்படுதலோ, அன்றித் தீயுமிரும்பும் போல ஒன்றினொன்று விரவுதலானொற்றுமைப் படுதலோ, அன்றிப் பாலுநீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத்தா னொற்றுமைப் படுதலோ, அன்றிக் கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனை மாத்திரையா னொற்றுமைப்படுதலோ, அன்றிக் காய்ந்த இரும்பினீர் போல ஒன்றினொன்றிலயமா யொற்றுமைப்படுதலோ, அன்றிப் பேயும் பேய்பிடியுண்டவனும்போல ஆவேசத்தா னொற்றுமைப்படுதலோ, அன்றி இந்தனத்தினெரிபோல விளங்காமையா னொற்றுமைப்படுதலோ, அன்றி ஞாயிற்றினொளியின் விளக்கொளி போலச் சத்திகெட்டு நிற்றலானொற்றுமைப்படுதலோ, அன்றித் தலைவனுந் தலைவியும்போல இன்பநுகர்ச்சி மாத்திரையா னொற்றுமைப்படுதலோ, அன்றி நட்டாரிருவர்போல நட்பு மிகுதியா னொற்றுமைப்படுதலோ, அன்றி ஆவும் ஆமாவும்போல ஒப்புமை மாத்திரையா னொற்றுமைப்படுதலோ என்று அவ்வச் சமயவாதிகள் மதம்பற்றி நிகழும் இன்னோரன்ன ஐயப்பாடுகளை யெல்லாம் நீக்குதற் பொருட்டு, அவனே தானே யாகிய அந்நெறியென உவமையெடுத்துக்காட்டி யோதினார். ஈண்டுக் கூறிய ஒற்றுமைக்கட்படும் இயைபாவ தென்னையெனின் அது வருகின்ற சூத்திரத்திற் பெறப்படும்.
இதனுள், அவனேதானே யாகிய வந்நெறி யேகனாகியென்றது ஓரதிகரணம்; இறைபணிநிற்க மலமாயை தன்னொடு வல்வினையின்றே யென்றது ஓரதிகரணம் ; ஆக இரண்டதிகரணத்தது இச்சூத்திர மென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

நானவனென் றெண்ணினார்க்கு நாடுமுளம் உண்டாதல்
தானெனவொன் றின்றியே தானதுவாய் - நானெனவொன்
றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத்
தில்லென்று தானாம் இறை.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனம் பகுத்து நின்றுணருமுணர்வை மயக்க வுணர்வென்றதென்னை யென்பாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல் தான் என ஒன்று இன்றியே தான் அது ஆய் எது யானென்றும் அவனென்றும் ஞாதிரு ஞேயங்களைப் பகுத்துணர்ந்து நிற்பார்க்கும் யானேயென நிற்பார்க்குப்போல அவ்வாறெண்ணுகின்ற உயிருணர்வு முனைத்துத் தோன்றுமாகலான், அவ்வழித் தானென்றொருமுதல் காணப்படுமாறின்றித் தான் அவ்வுணர்வேயாய்; நான் என ஒன்று இல் என்று தானே எனுமவரைத் தன் அடி இல் என்று வைத்துத் தான் ஆம் இறை எது இனி யானென்றொருமுதல் காணப்படுமாறில்லையென்றுணர்ந்து முழுவதுந் தானேயெனக் காணுந் தெளிவுடையாரைத் தனது திருவடி வியாபகத்துள் அடங்கி நிற்கச்செய்து அவ்வாறே யாவன் முதல்வன் என்றவாறு.
ஆய் ஆம் எனவியையும். ஆயாமென்புழிச் செய்தெனெச்சம் “நள்ளார்க்கு நஞ்சொத்து நட்டார்க் கமிழ்தொக்குமிவன்” என்றாற் போலத் தன்வினையாத லுணர நின்றது.
நாடுமுளம் உண்டாயவழித் தானிலனாதலும் அஃதில் வழித் தானுளனாதலும் யாங்ஙனம் பெறுதுமெனிற் காட்டுதும் : தூல வொளியாகிய கண்ணொளியுஞ் சூக்குமவொளியாகிய விளக்கொளியும் அத்துவிதமாய்க் கலந்து நிற்குநிலை உற்றுநோக்க வல்லார்க்குப் பிரித்தறிய வாராமையிற் கண்ணொளியாக் காணுங்காற் காணுந் தன்மையே முனைத்துத் தோன்றுமாகலின் அவ்வழி விளக்கொளி இருந்தும் இல்லைத்தானே, அன்றி விளக்கொளியாக் காணுங்காற் காட்டுந் தன்மையே முனைத்துத் தோன்றுமாகலின் அவ்வழிக் கண்ணொளி இருந்தும் இல்லைத்தானே; இனிக் கண்ணொளியும் விளக்கொளியுமெனப் பகுத்துக் காணப்புகினும் காணுந்தன்மையே முற்பட்டுத் தோன்றுதலின் அவ்வழி விளக்கொளியைத் திரிவு புலனாக் காட்சிப்படுவதல்லது தெளிவு புலனாக் காட்சிப்படுமாறில்லை. அதுபோலத் தூல அறிவாகிய உயிருஞ் சூக்கும அறிவாகிய சிவமும் அத்துவிதமாய்க் கலந்து நிற்குநிலையும் பிரித்தறிய வாராமையின் ஆண்டும் இவ்வாறே கண்டுகொள்க.
எண்ணினர்க்குமென இறந்ததுதழீஇய வெச்சவும்மை சந்தி நோக்கி மகரங் கெட்டுநின்றது.
இக்கருத்துப் பற்றியன்றே “கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன்றன்றே” என்பதாம் “காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை காண்பார்க ணன்முத்தி காணார்கள் காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவுந் தண்கடந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாரா தவர்” என்பதாம், கூறினார் புடைநூலாசிரியரும். அற்றேல், இவ்விரண்டனுள் யாது திரிவு காட்சி யாது தெளிவு காட்சியெனின், கண்ணொளியோடு கூடிய வழியும் இது விளக்கொளி இது ஞாயிற்றொளி இது திங்களொளியென அவ்வப்பெற்றியவேயாய்க் காணப்படும் விளக்கொளி முதலியவற்றின் காட்சி தெளிவு காட்சியெனவும், அவ்வொளிகளோடு கூடியவழி அவ்வாறொரு பெற்றித்தாய்க் காணப்படாத கண்ணொளியை வேறுகாண்டல் திரிவுகாட்சியெனவும் கண்கூடாக விளங்கிக் கிடத்தலின் இவ்வாறே பொருளினும் வைத்துணர்ந்துகொள்க. இவ்வாறன்றி, விளக்கொளி முன்னர்க் கண்ணொளி சத்தி மடங்கிப்போதலின் அது விளக்கொளியைப்போலக் காட்சி புலனாகாதாயிற் றென்னாமோவெனின்; என்னாம் : என்னை? கண்ணொளி சத்திமடங்கிற்றாயின் விளக்கொளி காட்சிப் புலனாதல் பிறிதொன்றாற் பெறப்படாமையின். அற்றேல், மின்மினித் துணையாயினுந் தானேவிளங்கும் இயல்பில்லாத கண்ணுக்கு ஒளிக்குணமுண்டென்பதற்குப் பிரமாண மென்னையெனின்; அறியாது கடாயினாய்: ஆகாயத்தின் கண்ணதாகிய சத்தகுணம் வியஞ்சகத்தானன்றித் தினைத்துணையானுந் தானென விளங்குமாறின்மையின் அதுபற்றி எதிரொலி வடிவாய அவ்வோசையை ஆகாயத்தின் குணமன்று வியஞ்சகப் பொருளின் குணமென்பார் யாருமில்லை. அதுபோலக் கண்ணின் கண்ணதாகிய ஒளியும் வியஞ்சகமுள்வழி விளங்கி அல்லுழி விளங்காமைமாத்திரையே பிறிதில்லை யாகலான் அதனைக் கண்ணின் குணமன்றென்றல் அறிவிலாதார் கூற்றேயாமெனவும், அக்கண்ணொளியாவது தன்னை விளக்குதற்குரிய வியஞ்சகப்பொருள் ஏகதேசமாயின் ஏகதேசமாய் விளங்கியும், அது வியாபகமாயின் வியாபகமாய் விளங்கியும் நிற்பதோரியல்பிற்றெனவும் உணர்க. அஃதங்ஙனமாக * “கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடும்” என்றற்குப் பிரமாணமென்னை : ஒரு விடயத்தின் வீழ்ந்த பல கண்ணொளிகட்குத் தம்முள் இயைபில்லாதவாறு போல ஒருவயிற்பட்ட கண்ணொளி விளக்கொளிகட்குத் தம்முள் இயை பில்லையென்றலே பொருத்தமுடைத்துப் போலுமெனின்; அஃதறியாதார் கூற்றேயாமென்றொழிக. என்னை? ஒரு விடயத்தின் வீழ்ந்த கண்ணொளிகள் தம்முள் ஒன்றனையொன்று காணுமாறு மில்லை காட்டுமாறுமில்லையாகலான் அவை தம்முட் கலத்தற்கு ஓரியைபின்றென்பது ஒக்கும். அவ்வாறன்றிக் கண் விளக்கினைக் காண்டலும் விளக்கு கண்ணுக்குக் காட்டலுமாகிய இயைபுண்மை யானும், இவ்வியைபு தம்முட் பெறப்படாத கண்ணொளி முதலாயின ஈண்டைக்கு உவமையாதல் செல்லாமையானும், இந்திரியங்கள் தத்தம் விடயத்தோடியைந்தன்றிச் சந்நிதி மாத்திரையான் அவற்றையறிதல் செல்லாதென்பது ஆகமங்களுக்கெல்லாந் துணிபாகலானும் அத்தன்மையவாய கண்ணொளி விளக்கொளிகட்குத் தம்முட் கலப்பில்லையென்றல் காண்டல் விரோதமாகலின் இவ்வாறு உவமைக் கோதியனவெல்லாம் பொருட்கண்ணுமாமாறுணர்ந்து உய்த்துரைத்துக் கொள்க. அற்றேல், ஈண்டெடுத்துக் காட்டிய கண்கள் தம்முள் ஒன்றனையொன் றறியுமாறில்லைபோலு மெனின் ; அறியாது கூறினாய் : கண்கள் தம்முள் ஒன்றானொன்று காணப்படுமாறில்லை யென்றது விளக்கும் விடயமுங் காணப்படுமாறுபோல வேறியைந்து தனிப்பொருளாய்க் காணப்படுமா றில்லையென்ற துணையேயன்றிப் பிறிதின்மையின், விளக்கொளியைக் கண்காணுங்கால் அதுவதுவாய் நின்று காணும் பெற்றித்தாய்த் தன்னையும் அவ்விளக்கொளி வண்ணமாய்க் காண்டலுண்டென்பது கண்கூடாக அறியக்கிடத்தலின், ஏனைக்கண்களையும் அவ்வாறு காண்டலமையுமாகலான் அதுபோலத் தம்முள் தனித்தியைபில்லாத உயிர்களுஞ் சிவத்தோடியைந்து நின்று தம்மையும் பிறவுயிர்களையும் இவ்வாறுணர்தல் அமைவுடைமையானென்பது * “நாடியரன் தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணாரென்னா மெனவறிவார்” என்பதாம், “தன்னாலே தனையறிந்தாற் றன்னையுந் தானே காணுந் தானதுவாகி நின்றே.” என்பதாம், “அதிலறி வடங்கி மன்னிட வியாபியாய வான்பயன் றோன்றும்” என்பதாம். “என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டே னின்னிலை யனைத்தையுங் கண்டேனென்னே நின்னைக் காணா மாந்தர் தம்மையுங்காணாத் தன்மையோரே” எம், பிறாண்டும் இவ்வாறோதும் அநுபவமுடைய தேசிகர் திருவாக்குக்களானும் இவ்வுண்மை யுணர்ந்துகொள்க.

குறிப்புரை :

ஈண்டுப் பரமேசுரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்தேகனாகி நிற்கவென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், ஞானம் பிரகாசித்து முதற்பொருளைக் காண்டன் மாத்திரையே வீடுபேற்றிற் கமையுமெனச் சிவசமவாத சைவர் முதலியோர் மதம்பற்றி நிகழுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோட னுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை. (சுப்பிரமணிய தேசிகர் உரை: ஈண்டு இவ்விரண்டதிகரணங்களுள் வைத்து இம்முத லதிகரணத்து; பரமேசுரன் ஞானக் கண்ணாற் காணப்பட்ட அம்முதல்வன்; இவ்வான்மாவாய் பெத்த நிலையில் உடனாய் நின்று அறியவும் வேறு காணப்படுமாறின்றி யானே அறிந்தேன் என்னும்படி உயிர் தானேயாய்; நின்றமுறைமையான் ஒற்றுமைப்பட்டு உயிரின் வழி நின்ற முறைமைபோல; அவனிடத்து ஏகனாகி ஈண்டு உயிர் அம்முதல்வனோடு உடனாய் நின்று அறியினும் தானென வேறு காணப்படுமாறின்றி அவனோடு ஒற்றுமைப்பட்டு; நிற்க என்றது நிற்க என்றவாறு.)
ஏது : அவ்வாறு நிற்கவே யானென தென்னுஞ் செருக்கற்று அவனது சீபாதத்தை யணையுமாகலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அஃதெற்றுக் கென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் . அங்ஙன மொற்றுமைப்பட்டு நின்றாலே யானும் எனதும் எனப் பகுத்து நிற்கும் மயக்க வுணர்விற் கேதுவாய மல நீங்கி அம்முதல்வனது திருவடியாகிய சிவானந்தத்தைப் பெறுமாகலான் அச்செருக்கறுதிக்குக் காரணமாதல்பற்றி ஈண்டுப் பரமேசுரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்கவென மேற்கொண்டது என்றவாறு.
அவ்வாறு நில்லாதவழி மலமறாது, அஃதறாதவழிச் சீபாதத்தை யணைதல் பெறப்படாதென்பார் நிற்கவேயெனத் தேற்றேகாரத்தாற் கூறினார். யானெனப்படுவது ஞாதிரு. எனதெனப்படுவன ஞான ஞேயங்கள். ஆறாவது பண்பின் கிழமையும் உணர்ச்சிக் கிழமையும் பற்றி வந்தது. ஒருமை தனித்தனி சென்றியையும். செருக்கு ஆகுபெயர். அற்றணையுமென்றது மழைபெய்து குளநிறையும் என்றாற்போலக் காரண காரியப்பொருள் பற்றி வந்த செயவெனெச்சத் திரிபு.

பண் :

பாடல் எண் : 3

நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி
நாமல்ல நாமும் அரனுடைமை - ஆமென்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை
முற்செய்வினை யுந்தருவான் முன்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உடம்பொடு நிற்பார் நுகர்தற்கு வேண்டப்படும் பிராரத்தவினையும் அதுபற்றியேறும் ஆகாமிய வினையும் ஒருதலையானுண்மையின் இறைபணி நிற்றல்பற்றி அவை பிரவேசியா வென்றல் அமைவுடைத்தன்றுபோலு மென்பாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள் . இந்திரியம் நாம் அல்ல என்பது வினைகளை நுகர்தற்கும் ஈட்டுதற்குங் கருவியாகிய இந்திரியங்கள் மாயேயமாவனவன்றி யாமாவனவல்ல ; நம் வழியின் அல்ல என்பது அவை தொழிற்படுதலும் முதல்வன் வயத்தானன்றி நம் வயத்தானல்ல; வழி நாம் அல்ல (நம் வழியின் அல்ல) என்பது வினை நிகழ்ச்சிக்கு வாயிலாகிய விடயாதிகளும் அவ்விந்திரியங்கள் போல மாயேயமாவனவன்றி யாமாவனவல்ல. அவை சேட்டித்தலும் முதல்வன் வயத்தனவன்றி நம் வயத்தனவல்ல; நாமும் அரன் உடைமை என்பது அவற்றோடியைந்து நின்று வினைகளை யீட்டுதற்கும் நுகர்தற்கும் வினை முதலாகிய யாமும் ஞானச் செய்திகளை முதல்வன் விளக்கியவழி விளங்கி அல்லுழி விளங்குமாறின்மையான் அம்முதல்வன் வயத்தராவேமல்லது சுதந்திரராவேமல்லேம் ; ஆம் என்னில் என்பது என்றிங்ஙனம் பசுபாசங்களதியல்பை உள்ளவாறுணர்ந்து செய்வனவெல்லாம் அவனருளின் வழி நின்று செய்யுஞ் செயலாகக் கண்டுகொண்டிருப்பாராயின்; இறை பணியார்க்கு எத்தனுவின் நின்றும் வினை இல்லை என்பது இவ்வடிமைத் திறமுடையார் எவ்வுடம்பினின்று எவ்வினைகளைச் செய்யினும் அவர்க்கு அவை பந்தமாதலில்லை; முன் செய்வினையும் தருவான் முன் எது அவ்வாகாமிய வினையை அவினாபாவமாய் உடன்கொண்டு வருவதாகிய பிராரத்தவினையுந் தன்னைக் கூட்டுவிக்கு முதல்வன் சந்நிதியின் உடலூழாய்க் கழியும் என்றவாறு.
நம் வழியினல்ல என்பது வழியென்பதனோடுங் கூட்டி யுரைத்துக் கொள்ளப்படும். மகனன்று குற்றியென்றாற்போல அன்மைச் சொற் றழுவப்படும் பொருண் மேனின்றது. தொல்காப்பியம், சொல் கிளவி, 25 “அன்மைக் கிளவி வேறிடத்தானும்” என்பதோத்தாகலின். நின்றும் உம்மை சிறப்பு ; ஏனையும்மைகள் இறந்தது தழீஇயின. சஞ்சிதவினை தீக்கை செய்த மாத்திரையே எரிசேர்ந்தவித்துப்போலக் கெட்டொழிதலின் ஈண்டு முற்செய்வினையென்றது ஏற்புழிக்கோடலாற் பிராரத்தவினை மேற்றாயிற்று. தருதல் இடவழுவமைதி. கழியுமென்பது சொல்லெச்சம். உடலூழாயென்பது அவாய் நிலையான் வந்தது.

குறிப்புரை :

இனி அம்முதல் பணி என்றும் பாடம். இறைபணி வழுவாது நிற்கவென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், உடம்பு நிற்குங்காறும் அது கொண்ட வினைப்பயனும் அதனை யநுபவித்தற்குத் துணைக் காரணமாய் உடனிற்குமுயற்சியும் ஒருவாற்றானும் நீக்கலாகாமையின் அவை அவ்வழி யேகனாகி நிற்றற்குத் தடையாதலைக் கடக்கு மாறில்லை போலுமெனச் சுத்தசைவரீறாயினார் மதம்பற்றி நிகழுங் கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி இறைபணி அம்முதல் வன் அருள்வழி ; வழுவாது நிற்க என்றது சலியாமல் நிலைநிற்க என்றவாறு.)
நிற்றலாவது சலியாது நிலைபெறுதலென்பார் வழுவாது நிற்க வென்றார். ஈண்டிறைபணி யென்றது யாதெனின் ; அஃது ஆசிரியர் தாமே முன்னர்த் தெரித்துரைக்கின்றமையின் இனிது விளங்கும்.
ஏது : அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யானாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியாவாகலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், ஏகனாகி நிற்றலேயமையும் இறைபணி நிற்றலெற்றுக்கென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் . தன் செய்திக்கு முதல்வன் செய்தியை இன்றியமையாத ஆன்மாச் செய்வனவெல்லாம் அவனருளின் வழி நின்று செய்யுமாயின் மாயேயமுங் கன்மமும் ஏகனாகி நிற்றற்குத் தடையாய் வந்து தாக்கா ஆகலான், அவை தாக்காமைப் பொருட்டுச் செய்யப்படு முபாயமாதல்பற்றி இனி இறைபணி வழுவாது நிற்கவென மேற்கொண்டது என்றவாறு. அஞ்ஞான கன்மம் உம்மைத் தொகை.
மலமின்றாதல் மேற் பெறப்பட்டமையின் ஈண்டஞ்ஞானமென்றது மாயையின் காரியமாகிய மயக்கத்தை யென்பது பெற்றாம். உடம்பு நசிக்குமளவும் அவை மாய்வனவன்மையின் அறுமென்னாது பிரவேசியா வென்றார்.

பண் :

பாடல் எண் : 4

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் - சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இறைபணியார்க்கு உளவாகிய முற்செய்வினை ஏனையோர்க்குப் போலன்றித் தருவான் முன்னா யொழியுமாயின் அங்ஙனம் இருவேறு வகைப்படச் செய்யுமுதல்வன் நடுவு நிலைமையின்றிக் கோட்டமுடைய னெனப்பட்டு வழுவாம்போலு மென்பாரை நோக்கி வழுவன்மைகூறி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . சார்ந்தாரைக்காத்தல் தலைவர் கடன் ஆதல் சார்ந்தாரைக் காத்தும் எது தம்மாட்டு அடைக்கலமெனச் சார்ந்தாரை அவர்க்கு வருமேதத்தை நீக்கிக் களைகணாய் நின்று காப்பது தலைமைக் குணமுடையராயினார்க்குக் கடமையாகலான் முதல்வன் ஏனையோரை யொழித்துத் தன்னைச் சார்ந்தாரை அங்ஙனம் பாதுகாப்பானாகியும்; சலம் இலன் ஆய் எது அதுபற்றிக் கோட்ட முடையனல்லனாய் ; சார்ந்து அடியார் தாம் தான் ஆச்செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் எது தன்னைச் சார்ந்து தன்னடித் தொழில் செய்வார் தன்போல் ஆகாமியவினைத் தொடக்கிலராகச் செய்து பிறர்க்கு வருமாகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பானாகலான் ; ஆய்ந்து ஆர் முன்செய் வினையும் ஆங்கு எது அவ்விரு திறத்தோர் மாட்டும் நுணுகி வந்து கூடுவதாய பிராரத்த வினையும் அவ்வாறே செய்வோர் செய்திக்குத் தக்க பயனாய் இருவேறு வகைப்படச் செய்வன் என்றவாறு.
இறைபணியார்க்கில்லை வினை முற்செய்வினையுந் தருவான் முன்னென்றதுபற்றி ஏனையோர்க்கு நியதி செய்தூட்டி இறைபணி யார்க்கு வினையின்றாகச் செய்தல் இறைவனுக்கு நடுவு நிலைமை யன்றென்பாரை நோக்கி அதனை உடன்பட்டே அமைதி கூறுவாராய்ச் சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனெனப் பழமொழி யெடுத்துக் காட்டி இஃதவ்வாறு நடுவன்மையுமன்றென வலியுறுத்துவார் சார்ந்தடியார் தாந்தானாச்செய்து பிறர் தங்கள் வினைதான் கொடுத்தலென வேறுவமை யெடுத்துக் காட்டினார். சார்ந்தடியார் தாந்தானாச்செய்து பிறர் தங்கள் வினைதான் கொடுத்தலுண்டென்பதூஉம், அது கோட்டமின்று நடுவு நிலைமையேயா மென்பதூஉம் ஏனைச் சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அஃதீண்டைக் குவமை யாயிற்று.
உம்மை சிறப்பின்கண் வந்தது. சலம் வஞ்சனை ; அஃது ஈண்டுக் கோட்டத்தின்மேனின்றது. சார்ந்தென்னும் வினையெச்சம் அடியாரென்னும் வினைக்குறிப்புமுற்றுபெயர் கொண்டது. சார்ந்த என்னும் பெயரெச்சத்தகரந் திரித்து முடிந்ததெனினு மமையும். தாமும் பின்வந்த தானும் அசை. ஆதல் கொடுத்தலென்புழி ஆனுருபு விரித்துரைக்க. தானாச் செய்தென்புழி ஆக்கம் உவமவுருபின் பொருள் குறித்துநின்றது. பிராரத்தவினை அதிசூக்குமமாய் வருவதாகலின் அதனியல்பறிதல் அரிதென்பார் ஆய்ந்தார் முன்செய்வினையுமென்றார். உம்மை இறந்தது தழீஇயற்று. ஆர் வினைத் தொகை. ஆய்தல் அப்பொருட்டாதல் மேற்காட்டினாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை
மாயையுடன் நில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே
ஆயவத னாலுணரும் அச்சு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், இறைபணி நிற்பார்க்குப் பிராரத்தவினை தாக்குதலுண்டென்பதற்குத் திருவாசகம், நீத்தல் விண்ணப்பம், 39. \"தினைத்துணை யேனும் பொறேன்றுய ராக்கையின் றிண்வலையே” என்றற் றொடக்கத்தான் அவர் கூறுந் திருவாக்குக்களே சான்றாகலின், அஃதவர்க்குச் செய்வோர் செய்திப் பயனா யொழியுமென்றல் அமையாமையின் அஃதுண்டாகவே அதுபற்றி நிகழும் ஆகாமியமும் பிறவிக்கு வித்தாய் நிலை பெறுதலுண்டுபோலு மென்பாரைநோக்கி ஆண்டுப் பிராரத்தவினைதாக்குதற் கேதுக்கூறி அதுபற்றிச் செய்வோர் செய்திப்பனாயொழிதற்கு இழுக்கில்லையென வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . இங்குளி வாங்கும் கலம்போல என்பது தன்பால் வைத்தெடுக்கப்பட்டொழிந்த பெருங்காயத்தினின்றும் அதன்வாசத்தை வாங்கிக்கொள்ளும் பாசனத்தின்கண் அவ்வாசம் மங்கிப்போய் மெலிதாய்க் கந்திக்குமாறுபோல ; ஞானிபால் முன் செய் வினை மாயை மூண்டிடினும் என்பது இறைபணி நிற்குந் தத்துவஞானிக்குப் பயிற்சிவயத்தான் ஒரோவழி நாடுமுள முண்டாதலும் உண்மையின் அதுபற்றிப் பிராரத்தவினையும் அதற்கு வாயிலாகிய உடம்புமுதலிய மாயேயமும் மங்கிப்போய் வாசனைமாத்திரையாய் மெலிதாய் வந்து மூளுமாயினும் ; பின்செய் வினை மாயையுடன் நில்லாது எது அம்மூட்சிபற்றி ஒருதலையா னிகழ்வதாகிய ஆகாமியவினை மேலைக்குவித்தாய் நிலைபெற்று முறகுதலின்றித் தனக்கு வாயிலாகிய மாயேயத்தோடு கெட்டொழியும்; அவன் தான் மெய்ப்பொருளே ஆயவதானல் மற்று அச்சு உணரும் எது இறை பணி நிற்கும் அவன் சத்தாயுள்ள சிவமேயாயவாற்றால் ஒரோவழி அவ்வாசனைபற்றிப் பிறழவரினும் பிறழவொட்டாத அவ்வச்சினையே நோக்கி நிற்பனாகலான் என்றவாறு.
ஒளி இருளைத் துரக்குமாறுபோல அவ்வுணர்வு அவ்வாகாமியத்தைத் துரக்குமென்பதாம். சிவப்பிரகாசம், உண்மை, 39. \"தொல்லையில் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல் அல்லொளி புரையு ஞானத் தழலுற வழிந்துபோமே” எனப் புடைநூலாசிரிய ரோதியதூஉம் அது. உளி ஐந்தாம்வேற்றுமையுருபுபட நின்றது திருமுருகாற்றுப்படை, 95. \"மந்திரவிதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி” என்றாற்போல முற்றுகரக்கேடு இலேசாற்கொள்க. வாங்குதற்குச் செயப்படுபொருள் அவாய் நிலையான் வந்தது. மூண்டிடினுமெனவே, மூளுதல் ஒருதலையன்றென்பது பெற்றாம். மாயை ஆகுபெயர். மற்று வினைமாற்றின்கண் வந்தது. தானென்பது அநுவதித்தற்கண் வந்த இடைச்சொல். பிறழவிடாமைபற்றி மெய்ப்பொருளை அச்சாக உருவகஞ் செய்தார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

நண்அனல் வேவாத நற்றவர் தம்மினும்
பண்அமர மாச்செலுத்தும் பாகரினும் - எண்ணி
அரனடி ஓர்பவர் ஐம்புலனிற் சென்றும்
அவர்திறன் நீங்கார் அதற்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், முன் செய்வினை மாயை மூண்டவழியும் அந்நிலையிற் பிறழாது அவ்வச்சினையே யுணர்ந்து நிற்றல் யாங்ஙன மென்பாரை நோக்கி உவமைமுகத்தான் அதனை வலியுறுத்து தனுதலிற்று. இதன் பொருள் . நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும் பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் எது அங்கித்தம்பனத்தால் நண்ணனல் வேவாமைக் கேதுவாகிய நற்றவமுடையார் அவ்வனலுட் கிடப்பினுந் தந்திறனில் நீங்காதவாறுபோலவும் பண்ணுதலமரப் பரிமாவூர்தற்குரிய பாகனூல் கற்றுவல்லார் அப்பரிமாவின் வேகத்துட்படினுந் தந்திறனில் நீங்காதவாறு போலவும் ; எண்ணி அரன் அடி ஒர்பவர் எது ஐம்புலன்களில் அகப்படாமைக்கு உபாயம் யாதென்றெண்ணி முதல்வன் திருவடியாகிய அச்சையுணரவல்லார் ; ஐம்புலனில் சென்றும் அதற்கு அவர்திறன் நீங்கார் எது முன் செய்வினை மாயை மூட்சிபற்றி ஐவகைப்பட்ட விடயங்களிற் சென்றராயினும் அதனால் அவர் தந்திறலிற்றீர்ந்து பந்தத் தொடக்குறுவாரல்லர் என்றவாறு.
பொருள்வினை உவமையினுஞ் சென்றியைந்தது. நண்ணனல் திருக்குறள், 929. \"கீழ்நீர்” போல முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. நள்ளனல் நண்ணனலென மரீஇயிற்று. அப்பர் தேவாரம், 5.2.4. “நீணுலகெலாம்” என்றாற்போல. தம்மால் காணப்படும் அனலென்றுரைப்பினு மமையும்.
பண்ணுதல் கதிப்பித்தல். இன் இரண்டும் உவமவுருபுகள். உம்மை எண்ணும்மை. சென்றுமென்னும் உம்மை சிறப்பு. அதற்கென்பது உருபுமயக்கம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின்
இதமித்தல் பாசத்தி லின்றிக் - கதமிக்
கெரிகதிரின் முன்னிருள்போல் ஏலா அசத்தின்
அருகணையார் சத்தணைவார் ஆங்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், சார்ந்ததன் வண்ணமாய்ச் சதசத் தெனப்படு மியல்புடையார் அரனடியோரினும் ஐம்புலனிற் சென்றுழி அவற்றிற் றொடக்குண்ணாது திறலுடையராதல் யாங்ஙனமென்பாரை நோக்கிச் சார்ச்சிக்கட்படும் விசேடங்கூறி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . சதசத்து ஆம் மெய்கண்டான் சத்து அருளின் காணின் எது தன்னாற் சாரப்படுவனவாகிய சத்தினும் அசத்தினும் அதுவதுவாதல்பற்றிச் சதசத்தென்னுந் தன்னுண்மையை யுணர்ந்தோன் சத்தாகிய முதல்வன் திருவருளாலல்லது ஒன்றையுங் காணானாய் அவ்வருளின்வழி நின்று காணுமாயின்; பாசத்தில் இதமித்தல் இன்றி எது அவ்வழிப் பாசமாகிய அசத்தின் இதஞ்செய்தலின்மையால் ; சத்து அணைவார் கதம் மிக்கு எரிகதிரின் முன் இருள்போல் ஆங்கு ஏலா அசத்தின் அருகு அணையார் எது சத்தாகிய முதல்வனைத் தலைப்பட்டு நிற்பார் சீற்றமிக் கெரியாநின்ற சுடரின் முன்னர் அந்தகாரம்போலச் சத்தெதிர் தனது சத்தி யேற்கமாட்டாத அசத்தாய ஐம்புலனின்மாட்டெய்தி நிற்பரல்லர் என்றவாறு.
வேறுமுடிபாகலின் ஒரமைப் பன்மை மயக்கமின்மையுணர்க. அருளினென்னும் இன்னுருபு ஏதுப்பொருட்கண் வந்தது. இதமித்தல் பெயரடியிற் பிறந்த வினைப்பெயர். இதஞ்செய்தல் பற்றுச் செய்தல். இன்றியென்னுஞ் செயவெனெச்சக் குறிப்புக் காரணப் பொருட்டாய் நின்றது. இன்மைக் கேதுக்கூறுவார் கதமிக்கெரிகதிரின் முன்னிருள்போ லேலா வசத்தென்றார். கதமிக்கெரிகதிரென்றது ஒப்புமைபற்றிய உபசாரவழுக்கு. * சூசூஎல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்” என்பதனானும் ஒப்புமையாதலுணர்க. இதனாற் போந்தது, சத்தும் அசத்துந் தம்முட் சமமல்லவாகலான் அரனடியோர்பவர் ஐம்புலனிற் சென்றாலும் அதுபற்றி அவர் திறன் நீங்காரென மேலது வலியுறுத்தவாறாமென்க. ஏகனாகி நிற்றலான் மலமின்றாதலும் இறைபணி நிற்றலான் மாயை வினைகளிலவாதலும் பெறப்பட்டமையின், மலமாயை தன்னொடு வல்வினையின்றே யென்பதனை வேறோ ரதிகரணமாக வைத்தோதாராயினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற்
காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

பொழிப்புரை :

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பரமேசுரனது சீபாதங்களை யணையுமா றுணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக் கருத்துணர்த்துத னுதலிற்று. இதன் பொருள் . அங்ஙனம் ஏகனாகி யிறைபணி நிற்பார்க்கு அறிவிச்சை செயல்கள் விடயித்தற்குரியதோரியைபு ஆண்டுப் பெறப்படாமையின் விடயமாவதொன்றில்லை போலும் என்னும் வாதிகளை நோக்கி விடயித்த லில்வழி ஆண்டுப் புத்தர்கூறு மாலய விஞ்ஞானம் போலச் சூனியமாமெனப்பட்டுக் குணஞ் சூனியமாகவே குணியுஞ் சூனியமாய் முடியுமாகலான் அஃதேலாமையின் ஆண்டவை யியைபு பற்றி விடயிக்குமா றுணர்த்து முகத்தானே பயனிரண்டனுள் முடிவா யெஞ்சிநின்ற சிவப்பேறு கூடுதலாய நிட்டையினியல்புணர்த்துதல் இப்பதினொராஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
இதனானே, சூத்திரவியைபும் இனிது விளங்கும். அற்றேல், ஏகனாகி யிறைபணி நின்றார்க்கு இனிச் செய்யக் கடவதொன்றின்மையானும், இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் உடனிகழ்ச்சியாயவாறுபோலப் பசுத்துவநீக்கமுஞ் சிவத்துவ விளக்கமும் இடையீடின்றி உடனிகழ்வனவாகலின் வேறோத வேண்டாமையானும், முதனூலுட் சுவாநுபூதியாகிய சிவப்பேற்றைப் பத்தாஞ்சூத்திரத்துட் பாசநீக்கத்தோடு ஒருங்குவைத்தே யோதலானும் அதனையீண்டு வேறு வைத்தோதல் அமையாதுபோலுமெனின்; அறியாது கடாயினாய் : ஏகனாகி யிறைபணி நிற்பது துரியநிலைக்கண்ணதாகிய அருள் நிலையேயாகலின் ஆண்டு மலநீங்கிய துணையானே சுகப்பிரபைமாத்திரையே விளங்குவதன்றி அதீத நிலைக்கண்ணதாகிய சிவத்துவவிளக்க மெனப்படும் பரமசுகம் விளங்காமையின் அது விளங்குதல் அவனருளாலல்லதொன்றையுஞ் செய்யாமை மாத்திரையால் அமையாமையின் அதற்கு வேறுமாண்டுச் செய்யக்கடவ துண்டென்பது தானே போதருதலானும், இருணீக்கத்தின் ஒளிவிளக்கம்போலப் பசுத்துவ நீக்கத்தின் அருள்விளக்க மாத்திரையேயன்றி ஆனந்த விளக்கமும் உடனிகழாமையானும், அவ்விரண்டற்கும் வேறுபாடு முன்னர்க் காட்டப்படுமாகலானும், முதனூலிற் பாசக்ஷயம் பண்ணுமா றுணர்த்தியவழிப் பாசநீக்க மாத்திரையே முத்தியெனக்கொண்ட வாதிகளை மறுத்தற்பொருட்டுப் பாசநீக்கம் பெற்றோன் சுவாநுபூதி யுடையவனாவனெனப் பதினொராஞ் சூத்திரஞ்செய்தற்குத் தோற்றுவாயாந்துணையே பத்தாஞ் சூத்திரத்திற் செய்துவைத்துச் சுவாநுபூதி நிகழ்ச்சிக்கண் ஓதற்பாலன வெல்லாம் பதினொராஞ் சூத்திரத்துட் கூறுதலின் ஒன்பதாஞ் சூத்திரத்தின் எடுத்துக்கொண்ட ஆன்மசுத்தி பண்ணுமாறு பத்தாஞ் சூத்திரத்திற் சென்றியைந்து முற்றுப்பெற்றாற்போலப் பத்தாஞ் சூத்திரத்தின் எடுத்துக்கொண்ட சுவாநுபூதிநிலை பதினொராஞ் சூத்திரத்திற் சென்றியைந்து முற்றுப்பெறுதலான் அதன்கண் மலையாமைப் பொருட்டு ஆசிரியர் சுவாநுபூதிமானாவ னென்பதனையும் அரன்கழல்செலுமெனப் பதினொராஞ் சூத்திரத்தானே ஒருங்குவைத்தோதினாராகலின் அது மாறன்மையானும், அவ்வாறன்றி மொழி பெயர்த்தல் யாப்பால் நூல்செய்துரைப்பான் புகுந்த ஆசிரியர் வேறுபடச் செய்துரையாராகலானுமென்பது. இதனானே, முதனூலிற் சுவாநுபூதிமானென வாளா கூறியதனைப் பதினெராஞ் சூத்திரத்துப் பத்திசெய்கவென்றதன் பின்னாகக் கொண்டுகூட்டி வைத்துரைத்தலே அதன்கருத்தென்பதூஉம் பெறப்பட்டது. அற்றாகலினன்றே, பத்தாஞ் சூத்திரம் பாசக்ஷயம்பண்ணுமா றுணர்த்திற்றெனவும், பதினொராஞ் சூத்திரம் பரமசிவனது சீபாதங்களை யணையுமாறுணர்த்திற் றெனவுங் கருத்துரை செய்ததூஉமென்க. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறேயுரைப்ப.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு ; காட்டக் காணுந் தன்மையுடைய கண் உருவத்தைக் காணும்படி அதனோடொருங் கியைந்து நின்று காட்டி அவ்வுருவத்தைக் காண்கின்ற ஆன்மாப்போல அறிவிக்க அறியுமியல்பையுடைய அவ்வான்மா விடயத்தையறியும்படி முதல்வன் அதனோடொருங்கியைந்து நின்று அறிவித்து அறிந்து வருதலான் அவ்வத்துவித நிலையை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே அம்முதல்வன் திருவடியாகிய சிவானந்தாநுபூதியைத் தலைப்படும் என்றவாறு.
காணுமென்னும் உவமையடை பொருளினும், கண்டென்னும் பொருள்வினை உவமையினும் சென்றியைந்தன. காணவென்பதனை ஈரிடத்துங் கூட்டுக. நாலடியார், சினமின்மை, 4. \"வேர்த்து வெகுளார் விழுமியோர்” என்பதுபோலக் கண்டு காட்டலென்பது மாறிவைத் துரைக்கப்பட்டது. இக்கருத்துநோக்கியன்றே, இதனை விரித்துக் கூறுவான் புகுந்த வழி நூலாசிரியர் + சிவஞானசித்தி, 11.1. \"காட்டிக்கண்டிடுமாபோலக் . . . . காட்டிக் கண்டிடுவன்” என்றதூஉமென்க. அயராமைக்குச் செயப்படு பொருள் அதனையென் நேர்த்துறெடுத்துக் கொள்க. அயராவன்பென்றது அயராமையானாகிய அன்பென சிவஞானசித்தி, 11.1 \"ஆறுசென்ற வியர்” போல நின்றது. அது \"இத்தையாயு மறிவுடையனாயன்புசெய்ய” என வழிநூலாசிரியர் கூறியதனானுமுணர்க.
உள்ளத்தையென்பது உருபுமயக்கம். அறிவிச்சை செயல்களின் நிகழ்ச்சியாகிய அயராமையும் அன்பும் செலவும் முறையே காரண காரியங்களாய் அவ்வொரு பொருள்மேல் ஒருங்கு நிகழுமென்பார் அயராவன்பினரன்கழல் செலுமேயென்றார்.
இஃதென்சொல்லியவாறோ வெனின்; உயிரையின்றி யமையாத கண் உருவத்தைக் காணுங்கால் உயிரின துணர்வு கண்ணொளி யெனத் தானென வேற்றுமையின்றி உடனாய் விரவி நின்று கண்ணுக்குக் காட்டியவதனைக் கண்கண்ட தென்றுங் கண்ணையதிட்டித்து நின்ற உயிர் கண்டதென்றும் பகுத்தறிய வாராது இரண்டன் காட்சியும் ஒன்றனையொன்று விடாது அத்துவிதமாகி ஒருங்கே நிகழுமாறுபோல, முதல்வனையின்றி யமையாத உயிர் ஒருவிடயத்தை யறியுங்காலும் முதல்வனது சிற்சத்தி ஆன்ம சிற்சத்தியெனத் தானென வேறின்றி உடனாய் விரவி நின்ப முதல்வனும் அவ்வாறு விரவிநின்று ஆன்மாவிற்கு அறிவித்ததொன்றனை அவ்வான்மா அறிந்ததென்றும், அதனையதிட்டித்து நின்ற தானறிந்தா னென்றும் பகுத்தறிய வாராது இருவகையறிவும் ஒன்றனையொன்று விடாது அத்துவிதமாய் ஒருங்கே நிகழுமாறு செய்துவரும் இவ்வுபகாரம் பெத்தமுத்தி யிரண்டினும் ஒருபெற்றித்தாய் உண்மையின், ஏகனாகி யிறைபணிநிற்குமுயிர் முதல்வன் அங்ஙனம் அத்துவிதமாய் உபகரித்து நிற்கு முரிமையை நோக்குமாயின் நோக்குந்தோறும் நோக்குந்தோறும் அப்பொருட்கட் செல்லுமிச்சை அடங்காது மீதூரு மாகலின் அவ்வழி அவ்விச்சையே தானாக விளங்கித் தோன்றும் பேரானந்தத்தை அநுபவிக்கப்படுமென அறிவிச்சை செயல்கள் மூன்றுங்கண்டு விடயிக்குமாறுணர்த்தி அதீதநிலையியல்பு கூறியவாறாமென்க. அத்துவிதமாவது பேதப்பொருளிரண்டுந் தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்தவிசேடம். இக்கருத்தேபற்றி திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா, கோயில், 11.10.9.7. \"அறிவொளிபோற் பிறிவருமத்துவிதம்” என்றார் புடைநூலாசிரியரும். + சூசூஅங்கியு மொன்றிற் றங்கிநின் றல்லது தன்றொழி னடத்தா” தாகலின், அதுபோல முதல்வனும் உயிரையதிட்டித்து நின்று எத்தொழிலுஞ் செய்வனென்றுணர்க. உயிர் ஒன்றனையறிதல் முதல்வன் உடனின்றறி தலையின்றி அறிவித்தன் மாத்திரையான் அமையாதென்பது + சூசூதொண்டனே னினையுமா நினையே’’ சூசூவிரும்புமா விரும்பே’’ சூசூதொடருமா தொடரே’’ சூசூநுகருமாநுகரே’’ என்றிவ்வாறு முத்திநிலைபற்றியோதிய திருவாக்குக்களானுமறிக. இவ்வியல்பு நோக்கியன்றே சூசூஅறிவானுந் தானே யறிவிப்பான் றானே’’ என்றோதிய அம்மை சூசூஅறிவாயறிகின்றான்றானே’’ எனவுமோதியதூஉ மென்க. முன்னறிதல் அறிவித்தற்பொருட்டெனவும் பின்னறிவாயறிதல் விடயத்தில் அழுந்துவித்தற்பொருட்டெனவுங் கொள்க. இதனை யீண்டு வைத்தார் அத்துவிதநிலை இனிது விளங்குதற்கு.
இவ்வாறன்றிக் காணுங் கண்ணுக்குக் காட்டுமுளம்போற் காணவுள்ளத்தைக் கண்டு காட்டலென்பதற்குக் காட்டுமுபகார முணர்த்தன் மாத்திரையே கருத்தென் றுரைப்பாரு முளர். இதனைக் கண்ணழித்துரைப்புழி அவனும் அவற்றது விடயத்தை யுணருமெனக் காணு முபகாரமாத்திரையே எடுத்துக் கொண்டுரைத்தல் ஆசிரியர் கருத்தன்றாகலானும், காணுமுபகாரங் காட்டுமுபகாரத்தின் பின்னர்த்தாய் நிகழுமென்பது உணர்ந்து கோடற் பொருட்டு அதுவும் உடன்கூறப் பட்டதன்றி வேறின்மையானும், அவ்வாறன்றென்பார்க்கு ஐந்தாஞ் சூத்திரத்துட் பெறப்பட்டதனை ஈண்டுக் கூறுதல் புநருத்தியாய் முடியுமாகலானும், அவருரைப்பனவெல்லாம் போலியுரை யென்றொழிக. அற்றேல் முதனூலிற் பதினொராஞ் சூத்திரத்துட் காட்டுவனென்பது மாத்திரையேயன்றிக் காண்பனென்பது கூறிற்றில்லையா லெனின் ; அறியாது வினாயினாய், ஆண்டுக் காட்டுவானுமென்ற வும்மை காண்பானுமாமென எதிரது தழீஇநிற்றலின், கூறாமை யாண்டையதென்றொழிக. அவ்வும்மைக்குப் பொருள் காணமாட்டாதார் பாடம் வேறாக ஒதுப.
இதனுள், காணுங்கண்ணுக்குக் காட்டுமுளம்போற் காண வுள்ளத்தைக் காட்டிக் காண்டலென்றது ஓரதிகரணம் ; அதனை யயரா அன்பினரன்கழல் செலுமேயென்றது ஓரதிகரணம் ; ஆக இரண்டதி கரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஐந்தையும் ஒக்க உணரா தவற்றுணர்வ
தைந்தும்போல் நின்றுணரும் ஆகலான் - ஐந்தினையும்
ஒன்றொன்றாப் பார்த்துணர்வ துள்ளமே எவ்வுலகும்
ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அவனும் அவற்றது விடயத்தை யுடனின்றுணருமாயின் அவற்றோடு அவனிடையறிதற்கட்படும் வேற்றுமை இல்லைபோலுமென்பாரை நோக்கி வேற்றுமையுங் காட்டி அதனை வலியுறுத்தனுதலிற்று. இதன் பொருள் . உள்ளம் என்பது ஆன்மாவாவது ; அவற்று ஐந்தும்போல் நின்று உணர்வது உணரும் ஆகலான் என்பது சுவையொளியூறோசை நாற்றமென்னும் ஐந்தினும் ஐம்பொறிபோல் அதுவதுவாய்ச் செறிந்து நின்று உணர்தற்பாலதனை உணருந் தன்மைத்தாகலான்; ஐந்தையும் ஒக்க உணராது ஐந்தினையும் ஒன்று ஒன்று ஆப் பார்த்து உணர்வது எது அவ்வைம்புலன்களையும் ஒருங்கே யுணரமாட்டாது அவ்வைந்தினையும் ஒரோவொன்றாயறிந் தநுபவிப்பதாம் ; ஒன்று எவ்வுலகும் ஒன்றா உணர்ந்து பார்க்கும் எது அதுபோலச் சார்ந்ததன் வண்ணமாய்ப் பலதிறப்படுதலின்றி என்றுமொரு பெற்றித்தாகிய சிவம் எல்லாவுயிர்களுடைய எல்லா விடயங்களையும் பொதுவகையான் ஒருங்கே யுணர்ந்து அவ்வுயிர்களுடனின்று சிறப்புவகையானுமறியும் என்றவாறு.
இது சொற்பொருட்பின்வருநிலை. சிவத்தைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. ஒன்றென்பது குறிப்பேதுவாய் நின்ற பெயர்.

குறிப்புரை :

ஈண்டு அவனும் அவற்றது விடயத்தை யுணரு மென்றது. சிவஞானசித்தி, 10.6.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், முதல்வன் உயிர்க்குக் காட்டுமுபகார மாத்திரையே யுள்ளதென்னும் வாதிகளை நோக்கி அத்துவித நிலையுணர்த்துதற் கெடுத்துக்கொண்ட சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் . முதல்வனும் உயிர்களானுணரப்படும் விடயத்தை உடனின்றுணருவன் என்றவாறு.
உம்மை உயிர்களுணர்தலே யன்றியென இறந்ததுதழீ இயிற்று. இஃதறியாதார் ஈண்டுணருமென்றது அறிவித்தற்கேதுவா யறியு மென்றுரைப்பாருமுளர். அவ்வாறுரைப்பிற் சித்தசாதனமாமாகலானும், ஈண்டைக் கியைபின்மையானும் அதுபோலியென்றொழிக. அவையே தானேயாயெனவும் தாந்தமுணர்வின் றமியருளெனவும் மேற்பொ துவகையாற் கூறிப்போந்த அத்துவிதத்தை ஈண்டுக்காணு முபகாரத்தன வைத்துணர்த்தி இனிது விளக்கியவாறு.
ஏது : இவ்வான்மாக்கள் அவனையின்றியமைத்து ஒன்றையும் விடயியாவாகலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், கண் சடமாகலானும் காண்டற்பயன் உயிர்க்கேயாகலானும் கண் காண்புழி உயிரும் உடனின்று காண்டல் பெறப்படும் கண்போல் உயிர் சடமன்மையானும் உணர்தற்பயன் உயிர்க்கேயாகலானும் அதனையெடுத்துக்காட்டி அவனும் அவற்றது விடயத்தையுணருமென்றல் அமையா தென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் . விளக்கொளி கண்ணொளியோடு கலந்து கண்ணொளியோடுகூட உருவத்தினுங் கலந்தாலன்றி அஃதவ்வுருவத்தைக் காண்டலின்றாயவாறுபோல அறிவிக்க அறியும் இயல்பினவாய உயிர்களும் முதல்வனதுணர்வு தம்மோடு விரவிநின்று தம்மோடு கூடச்சென்று விடயத்தினும் விரவிநின்றால் அறிவு விளங்கி அதனை யறியும் இயல்பினவன்றித் தனித்தமையவுமாட்டா, தனித்தொன்றனை விடயிக்கவுமாட்டா வாகலான் அறிவு விளங்குதன் மாத்திரைக்கேயன்றி விடயத்தைப் பற்றுதற்கண்ணும் முதல்வன் உடனின்றறிதல் ஒருதலையான் வேண்டப்படுதலான் ஈண்டு அவனும் அவற்றது விடயத்தையுணருமென மேற்கொண்டது என்றவாறு.
அவனையின்றி யமையாமையிற் காட்டுமுபகாரம் விளங்கினாற் போல அவனையின்றி ஒன்றையும் விடயியாமையிற் காணுமுபகாரமும் இனிது விளங்குமென்பார் அவனையின்றி யமைந் தொன்றையும் விடயியாவாகலானென்றார். அமைந்து விடயியாவென்றதனைக் \"கந்தித்துச் சுழலும்’’ என்றாற்போலக் கொள்க. உம்மை முற்றும்மை.
விடயியா என்றது பெயரடியிற் பிறந்த எதிர்மறைவினை, யூ, 11.7. \"எவ்விடத்து மிறையடியை யின்றியமைந் தொன்றை யறிந்தியற்றி யிடாவுயிர்க ளீசன் றானுஞ் செவ்விதினி னுளம்புகுந்து செய்தியெலா முணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா விவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் அவ்வுயிர் போனின்றிடுவ னாத லானா மரனடியை யகன்றுநிற்ப தெங்கே யாமே’’ எனவழி நூலாசிரியர் இதனை விரித்தோதியாவாறு முணர்க. எவ்விடத்து மென்றது பெத்த முத்தியிரண்டினு மென்பதாம். இதனுள், \'இறையடியை யின்றியமைந் தொன்றையறிந் தியற்றிடாவுயிர்கள்’ எனவும், \'ஈசன்றானெங்குமாய்ச் செறிந்து நிற்பன்’ எனவுங் கூறியது விடயத்தின்கட்படு நிகழ்ச்சிக்கெனவும் \'இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா’ எனவும் \'அவ்வுயிர்போனின்றிடுவன்’ எனவுங் கூறியது உயிரின்கட்படு நிகழ்ச்சிக்கெனவுங் கொள்க. அவ்வாறு கொள்ளாக்கால் இருகாற் கூறுதல் புனருத்தியாய் முடியுமென்றொழிக. இனி விளக்கொளி கலத்தல் ஈரிடத்தும் வேண்டப்படுமென்பதூஉம், \"விளக்கொளி கலந்தவற்றை” என்பதாம் , \"விளக்கின்சோதி கலந்திடும்” என்பதாம், புடைநூலாசிரியர் வகுத்தோதியவாற்றானுணர்க. அஃதங்ஙனமாக, பரமுத்தியில் உயிர்க்கு விடயமாவது ஒன்றின்மையின் வழி நூலாசிரியர் எவ்விடத்துமென்றது அமையுமாறென்னை யெனின்; அறியாது கூறினாய் ; \"சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு” என்பதாம், \"ஒன்றிநின் றுணருமுண்மை” என்பதாம், பிறாண்டும் இவ்வாறே யோதுபவாகலின், பரமுத்தியில் உயிர் சிவானந்தாநுபூதியை விடயித்தலுண்டெனவும், அது முதல்வனை இன்றி யாகாமையின் அவனும் ஆண்டவ்வநு பூதியை உடனின்றறிவனெனவுமுணர்க.

பண் :

பாடல் எண் : 3

ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப்
போகமாய்த் தான்விளைந்த பொற்பினான் - ஏகமாய்
உள்ளத்தின் கண்ணானான் உள்குவா ருள்கிற்றை
உள்ளத்தாற் காணானோ உற்று.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், ஆன்மா ஐம்பொறியை விடயிப்புழிப்போல முதல்வனை விடயிப்புழியும் முதல்வன் அவ்வாறுடனின்று தன்னைத் தான் விடயிப்பனெனின் ஆன்மாச்சிரயமென்னுங் குற்றமாமாகலின் அது பெறப்படாமையான் அவனும் அவற்றது விடயத்தை யுணருமென்றல் யாண்டுஞ் செல்லாதென்பாரை நோக்கி ஆண்டும் அவ்வாறுணர்தலுண்டென்ப துணர்த்தி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . ஒன்று ஏகம் ஆய்நின்று இணை அடிகள் உணரவே தான் போகம் ஆய் விளைந்த பொற்பினான் என்பது முதல்வனைச் சார்ந்தவழி அவ்வண்ணமேயாய் ஒருபெற்றிப்பட்ட ஆன்மா அவனோ டொற்றுமைப்பட்டு நின்று அவனதடியிணைகளை யுணரவே தான் அவ்வான்மாவுக்குப் பரபோகமாய் மேன்மேல் விளைகின்ற பொலிவினை யுடையனாகலானும் ; உள்ளத்தின்கண் ஏகம் ஆய் ஆனான் என்பது அங்ஙன முணருங்கால் அவ்வான்ம ஞானத்தினிடத்து ஏகமாய் விட்டு நீங்காதவனாகலாகும் ; உள்குவார் உள்கிற்றை உள்ளத்தான் உற்றுக் காணானோ என்பது கருதுவார் கருதிய பொருளாகிய தன்னை அவரறிவோடு கூடி நின்றறியான் கொல்லோ என்றவாறு.
போகமாய்த் தான் விளைந்த பொற்பினான், ஏகமாயுள்ளத்தின் கண்ணானன் என்னும் பெயரடைகள் ஏதுப்பொருளவாய் நின்றன ; யாண்டுஞ்சேற லுணர்த்துதற்கு. உள்குவாருள்கிற்றையென்றார். திருச்சிற்றம்பலக்கோவையார், 9. \"வேண்டுவார் வேண்டியதேயீவான்’’ என்றாற்போல. ஆனுருபு உடனிகழ்ச்சிப்பொருட்கண் வந்தது. ஓகாரம் எதிர்மறை. ஆன்மாக்கள் முதல்வனை விடயிக்குங்கால் அவற்றது விடயமாகிய அவன் தன்னாலும் உடனின் றுணரப்படுவன், உள்குவாருள்கிய பொருளாகலின்.
மேலை வெண்பாவிற் கூறிப்போந்த ஐம்புலன்போல என்று அனுமானவளவை காட்டுவார் உள்குவாருள்கிற்றை யுள்ளத்தானுற்றுக் காணானோவென்றும், உள்குவாருள்கிற்றாதல் ஈரிடத்தும் ஒக்குமென்பார் ஏகமாய்நின்றே யிணையடிக ளொன்றுணரப் போகமாய்த் தான்விளைந்த பொற்பினான் என விடயித்தற்கட் படுமியல்பும் ஏகமாயுள்ளத்தின் கண்ணானானென அறிவு விளங்குதற்கட்படுமியல்பும் எடுத்தோதினார்.
பரபோகமாயென்னாது போகமாயென்றதும் ஒப்புமையிணங்குதற் பொருட்டு. சேற்றுநிலமிதித்துச் சென்றானுக்கு அன்னிலம் போலப் பரபோகவிளைவு செயற்கைப்பொருளாய் நிற்றலின், ஆக்கமுங் காரணமும் அடுத்து வந்தது. இணையடிகளுணருந்தோறும் போகம் மேன்மேல் விளைதல் \"புணர்ந்தாற் புணருந் தொறும் பெரும்போகம் பின்னும்புதிதாய் மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே” எனவும் அப்பொருள்மேல் வைத்தோதிய திருவாக்கானுமறிக. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், 6.231 தெளிவுபற்றி விளைந்தவென இறந்தகாலத்தாற் கூறினார். கண்கண்ணாடியினின்றுந் தன்னை விடயித்தாற்போல முதல்வன் ஆன்மாவுடனின்று தன்னை விடயித்தல் பொருத்தமுடைமையின், ஆன்மாச்சிரயமென்னுங் குற்றம் இன்னோரன்னவற்றிற் கெய்தாதென்றுணர்க.கண்ணாடிக்குள்ளாகத் தோன்றுவதுபோலும் எதிர்விம்பமாவது விம்பமேயன்றி வேறன்றென்பது சிவாகம நூற்றுணிபென்க.
இதனுள் அவனும் அவற்றது விடயத்தை யுணருமென உணர்வேபற்றி யோதினாரேனும் சிவஞானசித்தி, 1.62. \"எத்திற ஞானமுள்ள தத்திறமிச்சை செய்தி” என்பவாகலின், அவற்றிற்கும் இஃதொக்கும் ; ஒக்கவே, பெத்தமுத்தி யிரண்டினும் ஆன்மா விடயிக்கப்படும் விடயங்களை முதல்வன் உடனின்று விடயிப்ப னென்பதூஉம் பெத்தத்தின் அவனிவனாய் நின்று விடயித்தலின் விடயங்கள் அவனுக்கன்றி இவனுக்காயின் முத்தியின் இவனவனாய் நின்று விடயித்தலின் அவனொழிந்த விடயங்களெல்லாம் இவனுக்கின்றி அவனுக்காயின என்பதூஉம் இனிது விளங்கும். இம்முறைமை நோக்கியன்றே உலகத்துள் ஒன்றனை ஈவாரும் ஏற்பாரும் சிவார்ப்பணமெனக் கருதாதவழிக் குற்றமென்று ஆகமங்களோதியதூஉம். \"யாதொரு தெய்வங்கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்” என்றதூஉம், அவ்வுண்மையறிந்தவழி \"எத்தனுவினின்று மிறை பணியார்க் கில்லைவினை முற்செய்வினை யுந்தருவான்முன்” என்பதாம் \"பெற்றசிற் றின்பமே பேரின்பமாய்” என்பதாம், \"உடம்புடைய யோகிடா முற்றசிற் றின்ப மடங்கத்தம் பேரின்பத்தாக்கி” என்பதாம், \"காணுங் கரணங்க ளெல்லாம் பேரின்பமெனப் பேணு மடியார்” என்பதாம், \"எல்லாஞ் சிவமாயிருந்ததே” என்பதாம் இவ்வாறோதியதூஉமென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அருக்கன்நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்
கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன் - அருட்கண்ணாற்
பாசத்தை நீக்கும் பகலலர்த்துந் தாமரைபோல்
நேசத்திற் றன்னுணர்ந்தார் நேர்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அரன் கழல் சேறல் உடம்பினீங்கிய பின்னன்றி உடம்புடையவழியுங் கூடுமாயின் அது ஞாயிற்றினொளி போல மருங்குள்ளார்க்குப் புலனாதல்வேண்டுமென்பாரை நோக்கி அது கூடாமையுங் கூடுமாறும் உவமைமுகத்தானுணர்த்தி ஏதுவை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள் . அருக்கன் நேர் நிற்பினும் காணார்க்கு அல் இருளே என்பது ஞாயிறு எல்லார்க்கும் ஒப்ப நிற்பினும் அது காட்சியுடையார் கண்ணுக்கன்றி அஃதில்லாதார் கண்ணுக்கு இரவின் கண்ணதாகிய இருளேயாம் அதுபோல; ஈசன் பாசத்தார்க்கு இருட்கண்ணே என்பது முதல்வன் எங்கணும் ஒப்ப நிற்பினும் மலநீங்கிய முத்தர்க்கன்றி அஃதுடையார்க்கு அவன் அம்மலத்தின் கண்ணேயாவன். சீவன் முத்தரும் ஏனையோர்போல் உடலுடைமையிற் பாசத்தாராகலின் வேற்றுமையின்றாலெனின்; பகல் அலர்த்துந் தாமரைபோல் என்பது ஏனைத் தாமரைகளோடொப்ப ஒருங்கு நிற்பினும் பக்குவமுடைய தாமரையைக் கூம்புதலை நீக்கி அலர்த்து ஞாயிறுபோல; நேசத்தில் தன் உணர்ந்தார் நேர் அருட்கண்ணால் பாசத்தை நீக்கும் என்பது ஏனையோர்போல் உடம்போடு நிற்பினும் பருவமுடையராய்ப் பத்தியினாற்றன்னை மறவாதுணர்வார்க்கு முதல்வன் தனது திருவருட்பார்வையாற் பாசத்தை நீக்கி அறிவையலர்த்தும் ஆகலான் உடம்புள்வழியும் அவர் பாசத்தாரல்லர் என்றவாறு.
ஆகலான் உடம்புள்வழியும் அவர் பாசத்தாரல்லரென்பது குறிப்பெச்சம். ஏகாரந் தேற்றம். திணிந்த இருளென்பார் அல்லிரு ளென்றார். மலத்திற்குக் கண்ணாவது அறியாமை. காணாரும் பகலும் ஆகுபெயர். அருக்கன் எடுத்துக்காட்டுவமை. தன்னை யென்னும் இரண்டனுருபு விகாரத்தாற் றொக்கது. ஏழாம்வேற்றுமைப் பொருட்கண் வருநேரென்பது உருபுமயக்கமாய் நான்காவதுணர்த்திற்று. நீக்குதலும் அலர்த்துதலும் ஏனையிடத்துஞ் சென்றியைதலின், ஈரிடத்துஞ் செயப்படுபொரு ளேற்பன வருவிக்கப்பட்டன.

குறிப்புரை :

இனிப் பத்தியினான் மறவாதேத்த அவனது சீபாதத்தையணையு மென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், ஏகனாகி நின்றார்க்கு அவ்வியைபு பற்றி அறிவிச்சை செயல்கள்மூன்றும் ஆண்டு விடயிக்குமாறு யாங்ஙனமென்பாரை நோக்கி நிட்டையி னியல்புணர்த்துதற் கெடுத்துக் கொண்ட இரண்டாங்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் . சூத்திரத் துரைத்தவாறுபற்றி யுரைத்துக் கொள்க.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி மறவாது அவ்வத்துவித நிலையை மறவாது கடைப்பிடித்துச் செய்யும்; பத்தியினான் அன்பானே; ஏத்த முதல்வனருள் வழிநின்றால்; அவனது சீபா தத்தை அவன் திருவடியாகிய சிவாநந்தா நுபூதியை; அணையும் என்றது தலைப்படும் என்றவாறு.)
சிவஞானசித்தி, 11.1. \"இத்தையாயு மறிவுடையனாயன்புசெய்ய’’ என வழி நூலா சிரியரும் ஓதுதலின் ஈண்டு மறவாது பத்தியினாலேத்த வெனச் சூத்திரப்பொருட்கேற்ப மாறிவைத்துரைத்துக்கொள்க. ஏத்த என்றது உபசாரவழக்கு. அன்பு பத்தி காதலென்றாற்போல்வன இச்சை மீதூர்தற் பொருளவாகலான், அது பரமுத்தியினுமுண்டென்பதுணராதார் பத்தியாவது சீவன்முத்தி நிலைக்கே செய்யப்படுவதொரு சாதனம் போலுமென மயங்கித் தத்தமக்கு வேண்டியவாறே யுரைப்ப. பரமுத்தியின்கண் இச்சை நிகழாதவழிச் சிவபோகம் அநுபவமாதல் செல்லாமையானும், சீவன்முத்தி நிலைக்கே கூறுவதொன்றாயிற் சூசூசெம்மலர் நோன்றாள்’’ என்னுஞ் சூத்திரத்து ஒருங்கு வைத்தோதவமையும் சூத்திரம் வேறுசெய்ய வேண்டாமையானும், அவ்வுரை போலியென்றொழிக.
ஏது : அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப்பயன் விளைந்து நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், பத்தியினான் மறவாதேத்தினும் அவனது சீபாதத்தை யணைதல் பரமுத்தியினன்றி முடியாதென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் . அம்முதல்வன் வேறு நில்லாது செய்வோர் செய்வனவற்றை யறிந்து அவ்வச்செய்திக்குத் தக்க பயனை மிகச் செய்யலாயின் அவ்வப்பொழுதே விளைவித்தும் அல்லுழிக் காலாந்தரத்தின் விளைவித்தும் உடனாய் நிற்பனாகலான் இனிப் பத்தியினான் மறவா தேத்தவே அம்முதல்வனது சீபாதத்தையணையுமென மேற்கொண்டது என்றவாறு.

பண் :

பாடல் எண் : 5

மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின்
மன்னும் அரனே மலந்துரந்து - தன்னின்
வலித்திரும்பைக் காந்தம் வசஞ்செய்வான் செய்தல்
சலிப்பில் விகாரியலன் தான்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், நேசத்திற் றன்னுணருஞ் சீவன் முத்தர்க்குப் பாசத்தை நீக்கி அறிவை யலர்த்துதல் பரமுத்தியினன்றி இல்லையென முரணிக் கூறும் வாதிகளைநோக்கிப் பாசத்தை நீக்கி அறிவையலர்த்து முறைமை இவ்வாறென்றுணர்த்தி அதனை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள் . அன்பின் மன்னும் அரனே மன்னும் இருளை மதி துரந்தவாறு மலம் துரந்து என்பது உயிரைத் தானாக்கிக் கோடற்கணுளதாகிய இச்சைமிகுதியான் அவ்வுயிரோடும் அநாதியே நிலைபெறுமுதல்வன் கண்ணின்கண்நிலைபெறும் இருளைப் பிறைமதி நாடோறுஞ் சிறிது சிறிதாக நீக்கியோட்டுமாறுபோல் அவ்வுயிரின் கண்ணதாகிய மலசத்தியை அவ்வப்பருவந்தோறுஞ் சிறிது சிறிதாகச் சோபானமுறையி னீக்கிப் பற்றத் துரந்து ; காந்தம் இரும்பைத் தன்னின் வலித்து வசம் செய்வான் செய்தல் சலிப்பு இல் என்பது காந்தக்கல் இரும்பைத் தன்கணீர்த்துத் தன்வசமாகச் செய்தல்போல மலம் அங்ஙனந் துரக்கப்படுந்தோறும் அம்முறையே அச்சத்தி பதிவித்து உயிரைத் தன்கண் வலித்துக்கொண்டு தன்வசமாகச் செய்து வருஞ்செய்கையின் அவனுக்கு ஒருஞான்றுஞ் சலிப்பில்லை ; விகாரி அலன் தான் என்பது அங்ஙனஞ் சலியாது செய்து வருதல்பற்றி விகாரியாவானுமல்லன். காந்தம்போலத் தனது சந்நிதிமாத்திரையிற் செய்யும் அம்முதல்வன் என்றவாறு.
மதியென்றது ஏற்புழிக்கோடலான் ஈண்டு வளர்பக்கத்திற்றிங்களின் மேற்றாயிற்று. துகளறு போதம், 33. \"அந்த வருளுனக்கிங் காதாரமாயல்லின் இந்து வெனவெறித் திட்டு” என்றதும் அது. மலந் துரத்தல் உயிரின் செயலானாவதன்றென்பதுபட நின்றமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. வான் பான் பாக்குக்கள் தொழிற்பெயர் விகுதியுமா மென்பது திருக்குறள், 1127. \"கரப்பாக்கறிந்து” என்பதனானுணர்க. உவமவுருபு விரித்துரைக்க. சலித்தல் வேசறுதல். செய்தற்கண்ணென ஏழனுருபு விரித்துரைக்க. மதி துரந்தவாறு மலந்துரந்தென்ற இதனானே மலநீங்குவது பின்னென்பார் மதம் மறுக்கப்பட்டவாறு காண்க. சோபானமுறையி னீக்குதலானன்றே, சத்திநிபாதஞ் சிவபுண்ணிய முதலாயின நால்வேறு வகைப்பட்டதூஉம், அவற்றுள்ளும் ஒரோவொன்று நந்நான்காய்ப் பதினாறு வகைப்பட்டதூஉம், அவற்றுள்ளும் ஒரோவொன்று பல்வேறு வகைப்பட்டு விரிந்ததூஉமென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

நசித்தொன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா
நசித்திலதேல் ஒன்றாவ தில்லை - நசித்துமலம்
அப்பணைந்த உப்பின் உளமணைந்து சேடமாங்
கப்பின்றாம் ஈசன் கழல்.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உயிருக்குக் குணம்போல அநாதியாயுள்ள சகசமலம் அவ்வுயிரின் வேறாய்த் துரக்கற்பாலதன்றாகலின் மலந்துரந்தென்றது அமையாதென்னும் பாடாணவாதசைவரை நோக்கி அருத்தாபத்தியளவையான் அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா நசித்திலதேல் ஒன்று ஆவது இல்லை என்பது அரன்கழல் செல்லுங்கால் அதனை ஆன்மாக் கெட்டொன்றுமோ கெடாதொன்றுமோவெனக் கடாயினார்க்குக் கெட்டொன்றுமெனின், ஆன்மாக் கெட்டுப்போகலான் ஒன்றமாட்டாது கெடாதொன்றுமெனிற் கெடாதவழி இருபொருளாய் நிற்றலின் ஒன்றாமாறில்லை, ஆகலான் அருத்தாபத்தியளவையானே; அப்பு அணைந்த உப்பின் மலம் நசித்து உளம் ஈசன் கழல் அணைந்து சேடம் ஆம் என்பது உப்புத் தனது கண்டிப்பு நீங்கி நீரின் ஒன்றாமாறுபோலத் தனது சகலமலங் கெட்டொழிய ஆன்மா அரன்கழலையொன்றி அவ்வரன்கழற்குச் சேடமாம்; கப்பு இன்று ஆம் என்பது அங்ஙனஞ் சேடமாகிய ஆன்மாவுக்கு மீளக் கவர்ச்சியில்லை என்றவாறு.
ஒன்றாதென்னுந் துவ்விகுதி விகாரத்தாற் றொக்கது. பின்வந்த நசித்தென்பது செயவெனெச்சத் திரிவு. யாதொன்று யாதொன்றன் பொருட்டேயாய்த் தனக்கெனச் சுதந்திரமின்றி நிற்கும் அஃததற்குச் சேடமென்பதறிக. உதாரணவெண்பா, 15. \"அவையுடைமை யாளாநா மங்கு’’ எனவோதுதலின், ஏனைப் பசுபாசங்கள் முதல்வனுக்குப் பொதுவகையாற் சேடமாமாயினும் இதுபோலச் சிறப்புவகையாற் சேடமாதலின்மையின் இதனை வேறெடுத்தோதினார். முத்திநிலை கூறி முடிந்தமையின் இறுதிக்கட் கப்பின்றாமென அவினாவிருத்தியுங் கூறினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

பொன்வாள்முன் கொண்மூவில் புக்கொடுங்கிப் போயகலத்
தன்வாளே எங்குமாந் தன்மைபோல் - முன்வாள்
மலத்துள் மறைந்துள்ள மற்றுலகை உண்ணும்
மலத்திரித்துச் செல்லும் வரத்து.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், நான்காஞ் சூத்திரமுதல் இதுவரையிற் கூறிப்போந்த கேவலசகல சுத்தமென்னும் முத்திறத் தவத்தைகளினும் ஆன்மாத் தன்னியல்பிற்குக் கேடின்றியே நிற்குமென்பது உவமையின் வைத்துக்காட்டி மேலதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் . பொன் வாள் முன் கொண்மூவில் புக்கு என்பது ஞாயிறு காலைப்போதின் முகிற்படலத்துள் மறைந்து; ஒடுங்கி என்பது அம்முகிற்படலம் ஒருபுடை நீங்கியவழித் தன்னொளி ஏகதேசமாய் ஒடுங்கித்தோன்றி; போய் அகல எங்கும் தன் வாளே ஆம் தன்மைபோல் என்பது அம்முகிற்படலம் பெருங்காற்றானடியுண்டு முழுவதும் விட்டொழிந்தவழி எங்கணுந் தன்னொளியேயாய்த் தோன்றும் பெற்றிபோல; உள்ளம் முன் வாள் மலத்துள் மறைந்து என்பது ஆன்மா அநாதியே தன்னறிவு மலத்துள் மறைப்புண்டு கேவலப்பட்டு; மற்று உலகை உண்ணும் என்பது பின்பு கருவிகளோடு கூடி ஏகதேசமாய் அறிவு விளங்கி ஐம்புலன்களை விடயிக்கும்; மலத்து இரித்து வரத்துச் செல்லும் என்பது பின்பு அம்மலத்தை முதல்வனருளாற் பற்றறக் களைந்து வியாபகமாய் அறிவு விளங்கி அவனது சீபாதத்தையணைந்து சுத்தப்படும் என்றவாறு.
தன்மையென்றார் கொண்மூவிற் புக்குழியுங் கேடின்மையின். ஏகாரந் தேற்றத்தின்கண் வந்தது. பின்வந்த வாள் ஆகுபெயர். வினைமாற்றின்கண் வந்த மற்றென்னு மிடைச்சொல் மலத்திரித் தென்பதனோடு மியைந்தது. சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாதுவருதல் இலேசாற் கொள்க. உவமை வினைகள் பொருளினுஞ் சென்றியைந்தன. அறிவு மறைந்தும் ஒடுங்கியும் மறைப்பு நீங்கியே எங்குமாய் நிகழ்தன்மாத்திரைக்கே பொன்வாளுவமை யென்பார், உலகையுண்ணும் வரத்துச் செல்லுமென வேற்றுமையும் உடன் கூறினார். மலநசித்தலாவது தனது மறைத்தற் சத்தி மடங்கிக் கீழ்ப்படுதன் மாத்திரையே பிறிதன்றென்பதூஉம் உவமையாற் பெறுதும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே.

பொழிப்புரை :

என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின் , அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறுணர்த்துத னுதலிற்று.
எது க ரை எனின், சூத்திரக் கருத்துணர்த்துத னுதலிற்று. இள். அயராவன்பி னரன்கழல்சென்ற முத்தர்க்குச் சீவன் முத்திநிலைக்கண் அவ்வறிவிச்சை செயல்கள் ஒரோவழிப் புறத்துச் செல்லுங்கால் அவை செல்லுமிடம் இவையென்ப துணர்த்துமுகத்தான் வாக்குமனாதீதமாய்ப் பத்தியினான் மறவாதேத்த நின்ற முதல்வனை வாக்குமனக் கோசரமாம்படி தெளியக்கண்டு வழிபடுமாறுணர்த்துதல் இப்பன்னிரண்டாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
சூத்திரவியைபும் இனிது விளங்கும்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : அயராவன்பி னரன் கழலணைந்த சீவன் முத்தனாவான் செங்கமலமலர்போல விரிந்து விளங்கிய முதல்வனது நோன்றாளை அணையவொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் அவ்வியல்பினையுடைய மும்மலவழுக்கை ஞான நீராற் கழுவி அங்ஙனம் அயராவன்புசெய்யு மெய்ஞ்ஞானிகளோடு கலந்து கூடி மலமயக்க நீங்குதலான் அன்புமிக்குடைய அவரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் முதல்வனெனவே கண்டு வழிபட்டு வாழும் என்றவாறு.
எழுவாய் மேலைச்சூத்திரத்தினின்றும் வருவிக்கப்பட்டது. சீவன் முத்தனென்பது ஏற்புழிக் கோடலாற் பெறுதும். நோன்றாள் வினைத்தொகை. நோன்றல் பொறுத்தல். “எடுத்துச் சுமப்பானை” என்றார் புடைநூலாசிரியரும். கழீஇயென்றது குறிப்புருவகம். மாலறநேய மலிந்தவரென்றது அம்மலங்கழீஇ யன்பரொடு மரீஇயினாரென்னும் பொருள்தந்து சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. நேயமலிதல் கூறவே, வழிபாடும் பெறப்படும். தான் அசை.
அம்மலங்கழீஇ யென்றதனால் அறிவு வியாபரிக்குமிடமும், அன்பரொடு மரீஇயென்றதனால் இச்சை வியாபரிக்குமிடமும், தொழுமென்றதனாற் செயல் வியாபரிக்குமிடமும் பெறப்பட்டன. படவே, சீவன்முத்தர்க்கு அறிவிச்சை செயல்கள் ஏனைவிடயங்களிற் செல்லா என்பதூஉம் பெறப்பட்டது. இம்மூன்றும் பிரிப்பின்றி ஒரிடத்தொருங்கு நிகழ்வனவாகலின், விடய வேற்றுமையின்மையு முணர்க.
தொழுகவென்னாது தொழுமென்றமையின், இஃதணைந்தோரது தன்மையென்பது பெற்றாம். அற்றாகலினன்றே இதனைச் சாதனவோத்தின் வையாது ஈண்டு வைத்தாரென்பது. இனித்தொழுமென்றதனை இரட்டுற மொழிந்துகொண்டு விகுதிப் பொருள்பட நின்ற முன்னிலையேவலாக்கியு முரைத்துக்கொள்க. என்னை? செல்வப்பெருக்க முடையார்க்கு உணவாகிய ஆன்பால் உடம்பு நோயின்றி வளரச்செய்யும் மருந்துமாதல்போல, இவ்வழிபாடு மலவாசனை சிறிதுந் தாக்குதலின்றிச் சிவானந்தம் மேன்மேல் வளரச்செய்யுஞ் சாதனமாதலுமுடைமையின். கண்ணழித்துரைபற்றி விதியாக வைத்துரைத்தலும் அதுபற்றி.
இதனுள், செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழீஇ யென்றது ஓரதிகரணம்; அன்பரொடு மரீஇயென்றது ஓரதிகரணம்; மாலறநேய மலிந்தவர்வேடமும் ஆலயந்தானும் அரனெனத்தொழுமே யென்றது ஓரதிகரணம்; ஆக மூன்றதிகரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

புண்ணிய பாவம் பொருந்துமிக் கான்மியமும்
மண்முதல் மாயைகாண் மாயையும் - கண்ணிய
அஞ்ஞானங் காட்டுமிவ் வாணவமும் இம்மூன்றும்
மெய்ஞ்ஞானிக் காகா விடு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின் , அவை அஞ்ஞானத்திற் கேதுவாய் வந்து நுழையுமாறும் அஃது அவர்க்காகாமையுந் தெரித்துணர்த்தி ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். புண்ணிய பாவம் பொருந்தும் இக்கான்மியமும் என்பது புண்ணிய பாவப் பயனாயும் புண்ணியபாவ காரணமாயும் பொருந்துகின்ற இக்கன்மமலமும்; மண் முதல் மாயை காண் மாயையும் என்பது நிலமுதல் மோகினியீறாகக் காணப்படுகின்ற இம்மாயாமலமும்; கண்ணிய அஞ்ஞானங் காட்டும் இவ்வாணவமும் என்பது சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வைப் பயக்கும் இவ்வாணவமலமும்; இம்மூன்றும் மெய்ஞ்ஞானிக்கு ஆகாவிடு என்பது இம்மலங்கள் மூன்றும் மெய்யுணர்வுடைய உனக்காகாமையான் அவற்றை விடுத்தொழிவாயாக என்றவாறு.
எல்லாமலங்களும் பற்றறத்துடைத்து மெய்யுணர்ந்து நிட்டை கூடினார்க்கு உடம்பு நிற்குமளவும் பிராரத்தவினை அவ்வுடம்பைப் பற்றி நிற்றலான் அஃது அவர்க்கு ஒரோவழி வாசனை வயத்தான் இங்குளி வாங்குங் கலம்போல வந்து தாக்கும் ; அவ்வழிப், சிவஞானசித்தி, 2.11.”பிற்செயா தநுபவிப்ப தின்று’’ ஆகலின் அது சார்வாக விருப்புவெறுப்புக்கள் உளவாம் ; அவை உளவாகவே, யூ, 11.2.”பரமே பார்த்திருப்பார்”க்கு நிலமுதலிய ஏகதேசப்பொருள் காட்சிப்படும்; படவே, அவற்றைச் சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாம் : இவ்வாறிம்மூன்றும் அறிவற்றம் பார்த்து இம்முறையானே வந்து தலைப்படுமெனக் காட்டிக் கூறுவார் கன்மமாயை யாணவமென்றிம் முறையின் வைத்து அவ்வக்காரிய நிகழ்ச்சிகளை யெடுத்தோதிச் சுட்டிக் கூறினார். இகரச்சுட்டு இடையினும் வந்தியையும்.
புண்ணியபாவமென்றது உபசாரம். முன் வந்த மாயை முப்பத்தொராமெண்ணு முறைமைக்கணின்ற தத்துவத்தையுணர்த்தி விடாதவாகுபெயராய்த் தன்னை யீறாகவுடைய ஏனைத் தத்துவங்களையுந் தழீஇயிற்று. காண்மாயை செயப்படுபொருளோடு முடிந்த வினைத்தொகை.
இவை சிவபோகப் பெருவாழ்வை யிழப்பித்தலின் மெய்ஞ் ஞானிக்காகாவாயின. மேன்மேன் முறுகுவனவாய இவற்றைத் தோன்றும் பொழுதே துடையாக்கால் “களைகுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து” என்னு முறைமைத்தாய் முடியுமென்பதுபற்றி விடுவென ஈண்டும் வலியுறுத்தப்பட்டது. விடுதலாவது, அவை அம்முறையானிகழ்ந்தவழி இவ்வஞ்ஞானம் ஏகதேசக்காட்சி யானாயதெனவும், அக்காட்சி விருப்பு வெறுப்புக்களது தோற்றத் தானாயதெனவும், அத்தோற்றமும் பிராரத்தவினை நுகர்ச்சிக்கட் சென்ற தற்போதத்தாலாயதெனவும், அறிந்து அங்ஙனஞ் செல்வதாகிய தற்போதம் முளையாதவாறு பரிகரித்துச் சிவஞானத்துளடங்கிச் சிவாநுபவம் சுவாநுபூதியாம்படி ஞானநிலையில் உறைத்து நிற்றல்.
மாயைகன்மங்கள் அஞ்ஞானங்காட்டுதல் ஆணவமலச் சார்வானாய செயற்கை யென்பதுணர்த்துதற்கு, மூன்றற்கும் பொதுவாக ஏதுவுட் கூறிப் போந்தவதனை ஈண்டாணவமாத்திரைக்கே சிறந்தெடுத்தோதினார்.

குறிப்புரை :

ஈண்டு ஆணவ மாயை கான்மியமென்னும் மலங்களைக் களைக என்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின் , சீவன்முத்தர்க்கு ஒருதலையான் முன்னர்ச் செய்யக்கடவதிதுவெனச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: ஈண்டு இம்மூன்றதிகரணத்துள் வைத்து இம்முதலதிகரணத்து; ஆணவம் மாயை கான்மியம் என்னும் மலங்களை ஆணவம் மாயை கான்மியம் என்று கூறப்படும் மும்மலங்களை ; களைக என்றது நீக்குக என்றவாறு.)
கன்மமலமே தன் மூலத்தை நோக்கிக் கான்மிய மெனவும்படும். காமியமெனப் பாடமோதி, ஆகாமியங் காமியமெனத் தலைக்குறை யென்றுரைப்பாருமுளர்.
ஏது : அவைதாம் ஞானத்தை யுணர்த்தாது அஞ்ஞானத்தை யுணர்த்துமாகலான்.
என்பதுஏது என்னுதலிற்றோவெனின், “மலமாயை தன்னொடு வல்வினையின்றே” எனப் பாசநீக்கம் மேலே பெறப்பட்டமையின், மெய்யுணர்ந்து நிட்டைகூடியபின் அவை களையக்கிடத்தல் யாங்ஙன மென்பாரை நோக்கிச் சூத்திரத்தின் உடம்பொடு புணர்த்தோதிய பொருளைத் தெரித்துணர்த்தி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இள். அம்மலங்கள்மூன்றும் மெய்யுணர்ந்து நிட்டை கூடினார் மாட்டும் யாதானுமோராற்றானுழைந்து தம்மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாகிய பண்டை விபரீதவுணர்வை மேற்படுத்துவனவாம் ஆகலான், அஃதவர்க்காகாமையின் ஈண்டு ஆணவமாயை கான்மியமென்னும் மலங்களைக் களைகவென மேற்கொண்டது என்றவாறு.
உணர்த்துதல் உணர்விற்கேதுவாதல். ஈண்டு அஞ்ஞான மென்றது விபரீதவுணர்வை.

பண் :

பாடல் எண் : 3

மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ்
சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - அறப்பித்துப்
பத்தர் இனத்தாய்ப் பரனுணர்வி னாலுணரும்
மெய்த்தவரை மேவா வினை.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அஞ்ஞானத்தை யுணர்த்துமவரோடு இணங்காமை மாத்திரையேயமையும் சிவபத்தர்களோ டிணங்குதல் எற்றுக்கென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள். தம்மை மறப்பித்து மலங்களின் வீழ்க்கும் சிறப்பு இல்லார்தம் திறத்துச் சேர்வை அற என்பது முதல்வன் காட்டியுங் கண்டும் உபகரித்து நிற்கும் அத்துவித நிலையை மறவாது கடைப்பிடிக்குந் தமது ஞானக்கண்ணை யிழப்பித்துத் தீயநெறிக்கட் கொண்டு சென்று மலங்களானாய பிறவிக்குழியில் வீழ்வித்துத் துயருறுத்துவாராகிய அன்பில்லார் கூற்றிலே தொன்றுதொட்டுப் பயின்றுவந்த சேர்ச்சியறும்படி; பத்தர் இனத்துப் பித்து ஆய்ப் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை என்பது அம்மறவியை மாற்றி ஞானக் கண்ணை யுதவிப் பிறவிக்குழியினின்றுமெடுத்து நன்னெறிக்கட் செலுத்தி வாழ்விக்குஞ் சிவபத்தரது கூற்றிலே பேரன்புடையராய் அவ்வன்பு சார்பாக விளங்குஞ் சிவஞானக் கண்ணால் அந்நிலை கடைப்பிடித்துணரப்பெற்ற மெய்த்தவராயினாரை; வினை மேவா என்பது எல்லா அநத்தங்கட்கும் மூலமாய் வந்து சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வையைப் பயப்பிக்கும் பிராரத்தவினைகள் வாதியா என்றவாறு.
மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பில்லாரென மேற்சொல்லிய பொருளையே அநுவதித்து விரித்தோதினார், அதனெதிர்மறை முகத்தாற் சிவபத்தரது பெருந்தகைமை யுணர்ந்து கோடற்பயனோக்கி. மலம் ஆகுபெயர். வீழ்க்குமென்றது உருவகங்குறித்து நிற்றலின், அவ்வாறுரைக்கப்பட்டது. எல்லாவற்றினும் அன்பு சிறந்தமையின் அதனைச் சிறப்பென்றார். பித்துப் போறலின், அன்பு பித்தெனப்பட்டது. ஏனைத் தவங்களெல்லாம் மெய்யாதலின்றி மலநடையாய்ப் போதலின், பரனுணர்வினாலுணருந் தவமொன்றே மெய்த்தவமெனப்பட்டது.
வினை பால்பகாவஃறிணைப் பெயர். சிவபத்தர் மாட்டன்புடையராய் மனஞ் சொற்செய்கைகளான் அவர்வழி நிற்பார்க்கு உலகியலுணர்வு மாறிச் சிவாநுபூதியுணர்வே மேம்பட்டு நிகழும் : அது நிகழவே பௌதிக வுடம்பைப் பற்றிவரும் பிராரத்த வினைகள் அவர்க்கு நுகர்ச்சியாதல் செல்லாமையின் வாதிக்கமாட்டா : மாட்டா தொழியவே, அவை பற்றுக்கோடாக நிகழுஞ் சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை பற்றறக் கெடுமென்பார் சேர்வையறப் பித்துப் பத்தரினத்தாய்ப் பரனுணர்வினா லுணரு மெய்த்தவரை மேவா வினையென்றார். எனவே, வீட்டுணர்வை நிலைபெறுத்துஞ் சிவபத்தர்களோ டிணங்கினாலன்றி வினை பற்றுக்கோடாகத் தொன்றுதொட்டுப் பயின்றுவந்த சிறப்பில்லார திணக்கம் அறாமையின், அவ்விணக்கம் ஒரு தலையான் வேண்டுமென வலியுறுத்த வாறாயிற்று.

குறிப்புரை :

இனிச் சிவபத்தர்களோடிணங்குக என்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், அம்மலங் கழீஇயினார்க்கு அதனை நிலைபெறுத்துவதாய் அதன் பின்னர்ச் செய்யக்கடவது இதுவெனச் சூத்திரத்தின் இரண்டாங்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி சிவபக்தர்களோடு அத்துவித நிலையைக் கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே முதல்வன் அருள்வழி நின்ற சீவன் முத்தர்களோடு; இணங்குக என்றது நட்புச் செய்க என்றவாறு.)
ஈண்டுச் சிவபத்தரென்றது பத்தியினான் மறவாதேத்தி முதல்வனது சீபாதத்தையணைந்த சீவன் முத்தர்மேற்று. இணங்குதல் நட்புச் செய்தல். சிவபத்தர்களோடிணங்குக எனவே, எதிர்மறை முகத்தான் ஏனையரோடிணங்கற்க என்பதூஉம் பெறப்பட்டது.
ஏது : அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவராகலான். (வா52ஞ)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், உறவும் பகையுமொழித்த மெய்ஞ்ஞானிகள் சிலர்மாட்டு நட்புஞ் சிலர் மாட்டு நட்பின்மையு முடையராதல் சால்பன்றென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இள் வெடை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: அல்லாதார் பத்தியினான் மறவாதேத்தி முதல்வனது சீபாதத்தை அணையாத பாசத்தார்; அஞ்ஞானத்தை சுட்டியுணர்வதாகிய விபரீத உணர்வை; உணர்த்துவர் ஆகலான் அறிவிப்பாராகலான், இனிச் சிவபக்தர்களோடு இணங்குக என மேற்கொண்டது.)
அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துமாறு திருக்குறள், 879 “தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலு மாறு கோடி மாயா சத்திகள் வேறு வேறு தம் மாயைக டொடங்கின ஆத்தமானா ரயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் விரத மேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்த மதங்களே யமைவ தாக அரற்றி மலைந்தனர்” என்றற் றொடக்கத்துத் திருவாக்குக்களானறிக. மும்மலங்கள் அஞ்ஞானத்தை யுணர்த்துதல் இலக்குவாய்த்துழி ஏதுவாதன் மாத்திரையே சிவபத்த ரல்லாதார் அவ்வாறின்றி இலக்குவாயாத வழியும் வாய்க்குமாறு செய்து கொண்டு பலவகை யுபாயங்களானுந் தம்மோடொப்ப விபரீதவுணர்வைச் செலுத்தியே விடுவராகலான் அம்மலங்களினுங் கொடியராகிய இவரை அவற்றினும் அஞ்சிவிட்டொழிதலே அறிவுடைமைக்குச் சால்பென்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத்
தன்னுணரத் தன்னுள் இருத்தலால் தன்னுணரும்
நேசத்தர் தம்பால் நிகழுந் ததிநெய்போற்
பாசத்தார்க் கின்றாம் பதி.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், திருவேடத்தின் இறைவன் பிரகாசமாய் நிற்குமாறு யாங்ஙனமென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். பதி என்பது அசிந்திதனாய் நின்ற பரம்பொருளே; தன் உணரவேண்டி என்பது உலகத்துள்ளார் தன்னையறிதற் பொருட்டு; தனது உருவைத்தான் கொடுத்து என்பது திருநீறு கண்டிகை முதலிய திருவேடமாகிய தனது திருவடிவத்தைத் தன்னன்பர்க்குக் கொடுத்தலானும்; தன் உணர எது அவ்வன்பர் தன்னைச் சிவோகம் பாவனையால் அறியச் செய்தலானும்; தன்னுள் இருத்தலால் என்பது அங்ஙனம் ஒரு குறியின்கண் நின்றுணருமவரைத் தனது வியாபகத்துள்ளாக இருத்துதலானும்; தன் உணரும் நேசத்தார் தம்பால் ததிநெய்போல் நிகழும் எது குறியுமிறந்து நின்று தன்னை யுள்ளவாறுணருமவர் மாட்டுத் தயிரின் கண்ணதாகிய நெய்போல விளங்கித் தோன்றும்; பாசத்தார்க்கு இன்று ஆம் என்பது அவ்வியல்பில்லாத பாசக்கட்டுடையார் மாட்டுப் பாலின் கண்ணதாகிய நெய்போல விளங்காது நிற்கும் என்றவாறு.
செய்தென்பது சொல்லெச்சம். இருத்தல் அல்லீற்றுப் பிறவினைத் தொழிற்பெயர். கொடுத்துச் செய்திருத்தலானிகழுமென இயையும். தன்னுணருநேசத்தரெனப் பெயரடையானும் ஓரேதுக் கூறப்பட்டது. தன்னையென்னுமிரண்டனுருபு விகாரத்தாற் றொக்கது. உணர்தலை மூவிடத்தோதுதலின் இஃதங்ஙனம் வேறு வேறுரைக்கப்பட்டது. பாசத்தார்க்கென்பது உருபுமயக்கம். இன்மை ஈண்டு விளங்காமை குறித்து நின்றது.

குறிப்புரை :

இனிப் பத்தரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழிபடுக என்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், அன்பரொடு மரீஇயினார்க்கு அம் மருவுதலை நிலைபெறுத்துவதாய் அதன் பின்னர்ச் செய்யக் கடவதிதுவெனச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை: இனிப்பத்தரது திருவேடத்தையும் அயரா அன்பின் அரன்கழல் ஏத்தும் மெய்யன்பரது திருவேடங்களையும்; சிவாலயத்தையும் சிவாலயங்களையும்; பரமேசுரன் எனக்கண்டு முதல்வவெனனவே ஐயுறவின்றித் தெளிந்து; வழிபடுக என்றது வழிபாடு செய்க என்றவாறு.)
காண்டல் ஐயுறவின்றித் தெளிதல்.
காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடைசாந் தணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர்வுடையாரைக் காட்சி மாத்திரையின் வசீகரித்து இன்பஞ் செய்தல் பற்றித் திருவேடத்தையுஞ் சிவாலயத்தையுமென் றுபசரித்தார். அது திருப்பல்லாண்டு, 8. “சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்குமென்று புண்ணியர் போற்றிசைப்ப” என்னுந் திருவாக்கானுமறிக. திருவேடத்தினியல்பு “தூயவெண்ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போலன்பி னீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொன் மேய் செவ்வாயு முடையார் புகுந்தனர் வீதி யுள்ளே.” “சிந்தை யிடையறா வன்புந் திருமேனி தன்னி லசைவுங் கந்தை மிகையாங் கருத்துங் கையுழ வாரப்படையும் வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலி திருநீறும் அந்தமிலாத்திரு வேடத்தரசு மெதிர் வந்தணைய” “கண்ட கவுணியக் கன்றுங் கருத்திற் பரவுமெய்க் காதற் றொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழுதே” என்றற் றொடக்கத்துத் திருவாக்குக்களானுமறிக.
ஏது : அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான். (வா53ஞ)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் , மெய்யுணர்வுடையார்க்குப் பகுப்பின்றி எங்கணும் பரமேசுரனெனக் காண்டலே பொருத்த முடைமையானும், நின்ற திருத்தாண்டக முதலியவற்றுள் அவ்வாறோதுதலானும் திருவுருத்திரத்துட் பகுப்பின்றி உயிர்ப்பொருள் உயிரில் பொருளெல்லாவற்றையுந் தனித்தனி யெடுத்தோதி வழிபாடு கூறுதலானும் ஈண்டிவற்றை மாத்திரையே விதந்துகொண்டோதியதென்னையென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரினெய்போல விளங்கி நிலைபெற்று அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத்தரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழிபடுகவென மேற்கொண்டது என்றவாறு.
மற்று உரையசை. எப்பொருட்கண்ணுமிறைவன் கலந்துள னென்பது தெளிந்துகோடற் பொருட்டுத் திருவுருத்திரத்தின் அவ்வாறோதப் பட்டதெனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 5

கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தில் அங்கிவே
றுண்டல்போல் நின்றங் குளதாமாற் - கண்டவுருத்
தானதுவா யன்றானான் றானதுவாய்த் தோன்றானோ
தானதுவாய்க் காணுந் தவர்க்கு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், சங்கமவடிவிற்குக் கூறிப்போந்த இயல்பில்லாத தாவரவடிவின் மந்திரசாந்நித்திய முள்வழியன்றிப் பிரகாசமாய் நிற்றல் பெறப்படாதென்பாரை நோக்கிச் சிவாலயத் தினிடத்தும் இறைவன் பிரகாசமாய் நிற்றலை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். காட்டத்தின் அங்கிவேறு உண்டல்போல் என்பது விறகிற்றீ கடைகோலாற் கடைந்துழி வேறாய் விளங்கும் அல்லுழி விளங்கு வதன்றானற்போல; கண்ட உருத் தான் அது ஆய் அன்று ஆனான் என்பது உயிர்கட்குப் புத்திமுத்தி யளித்தற்பொருட்டுக் காணப்பட்ட தாவரவடிவின்கட் கலப்பினால் அதுவே தானாய் அதுவன்றி வேறு பொருளுமாமியல்புடைய முதல்வன்; கண்டது ஒருமந்திரத்தான் நின்று அங்கு உளது ஆம் ஆல் என்பது அதுவே தானாகக் காணாதார்க்குத் தம்மாலறியப்பட்டதொரு மந்திர சாந்நித்தியமில்வழி அவ்வடிவின்கண் விளங்காது நின்று அஃதுள்வழி விளங்கித் தோன்றும் பொருளாம்; அது தான் ஆய்க் காணும் தவர்க்கு அதுதான் ஆய்த் தோன்றானோ என்பது. அவ்வாறன்றி அவ்வடிவே அவனாகக் காணப்பெறும் உண்மைத்தவமுடையார்க்கு அப்பெற்றியனேயாய் விளங்கித் தோன்றான் கொல்லோ என்றவாறு.
காணாதார்க்கென்பது சொல்லெச்சம். மந்திரத்தாலென்னும் பொருளடைக்கேற்ப உவமையினும் வருவித்துரைக்கப்பட்டது. உண்டாதல் ஈண்டு விளங்குதன்மேற்று. ஆல் அசை. ஆனானென்பது பெயர். ஓகாரம் எதிர்மறை. பொருண்மைபற்றி உளதெனவும் அன்றெனவும் கூறினார்.
தானதுவா யன்றானானென்னும் பெயரடையான் அவரவர் பாவனைக்கேற்ப விளங்குதற்கேதுக் கூறியது. தானதுவாயன்றாதல் சங்கம வடிவிற்கும் ஒக்குமேனும், தாவர வடிவின்கண் நிகழுங் கடாவை இதனானன்றி நீக்கலாகாமையின் ஈண்டுக்கூறினார். இஃதீரிடத்தும் ஒக்குமென்பது முன்னர்ப் பெறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அதுஇது என்ற ததுவல்லான் கண்டார்க்
கதுஇது என்றதையும் அல்லான் – பொதுவதனில்
அத்துவித மாதல் அகண்டமுந் தைவமே
அத்துவிதி யன்பிற் றொழ.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், முதல்வனுக்கு அவ்வியல்பு எல்லாப் பொருட்கண்ணு முண்மையின் அவற்றுள் இவ்விடங்களின் மாத்திரையே வழிபாடு விதித்ததென்னையென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். கண்டார்க்கு என்பது முதல்வன் உயிர்ப்பொருள் உயிரில்பொரு ளெல்லாவற்றினும் நிற்கு நிலைமையறியப்பெற்றோர்க்கு ; அது இது என்றது அல்லான் என்பது கண் அருக்கன்போல் அதுவும் இதுவுமெனப் பக்கிசைத் தோதப்பட்ட பேதநிலைமையனுமல்லனாய்; அது என்றது அல்லான் என்பது உடலுயிர்போல் அதுவேயென்றோதப்பட்ட அபேத நிலைமையனுமல்லனாய் ; அது இது என்றதையும் அல்லான் என்பது குணகுணிபோல் அதுவாகிய இதுவென்று பக்கிசையாம லோதப்பட்ட பேதாபேத நிலைமையனுமல்லனாய் ; பொதுவதனில் அத்துவிதம் ஆதல் அகண்டமுந் தைவமே என்பது அறிவொளிபோல் அம்மூன்றற்கும் பொதுமையான் அத்துவித நிலைமையனாதலான் எல்லாப் பொருளும் அவன்வடிவேயாமாயினும்; அத்துவிதி அன்பின் தொழு என்பது அவற்றுள்ளும் அன்பு விளையுமிடத்தின் வழிபடுவாயாக அவ்வத்துவித சித்தாந்தத்தைப் பெற்றுடையோய் என்றவாறு.
அது இது என்றது முன்னையது உம்மைத்தொகை; பின்னையது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அல்லானென்பதனை மேலுங் கூட்டி, என்றதென்பதனை அதுவென்றதனோடுங் கூட்டியுரைக்க.அல்லானென்பது முற்றெச்சக்குறிப்பு. என்றதை ஐயீற்றுடைக்குற்றுகரம். உம்மை இறந்தது தழீஇயிற்று. பொதுவதென்னுமது பகுதிப்பொருள் விகுதி. தைவமென்னுஞ் சொல்லியல்பு 8ம் சூத் 3ம் அதிகரணம் மேலேயுரைத்தாம். ஏகாரந் தேற்றம். ஆயினுமென்பது சொல்லெச்சம். அன்பு ஆகுபெயர். ஏழாவது விரித்துரைக்க.
சிவஞானசித்தி, 12.4.”திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனி” யினன்றி சூசூஎங்கு முருக்காணவொண்ணாத பான்முலைப்பால் விம்மி யொழுகுவது போல் வெளிப்பட்டருளுவ” தாகி அடிப்பட்டு வருமன்பு விளையாமையின் ஆண்டுச்செய்யும் வழிபாடே அத்துவிதஞானத்தை நிலைபெறுத்தற் பயத்ததென்பார் அத்துவிதமாத லகண்டமுந் தைவமேயென அநுவதித்து அத்துவிதியன்பிற் றொழுவென்றார். அத்துவிதி யென்னும் அண்மை விளி பயனுணர நின்ற குறிப்புப் பெயர். இதனானே விதிக்குப் பயன்கூறியதூஉமாயிற்று. இனி அது இது என்பன அருவுருவாகிய திருமேனியெனக்கொண்டு அதற்கியைய வுரைப்பாருமுளர் : அவர், அன்பினென்றதனை ஏதுப்பொருட்கண் வரும் ஐந்தனுருபேற்ற இயற்பெயராக வைத்துரைப்ப.

குறிப்புரை :

இனி இவ்விடங்களின் வழிபடுக என்றது.
என்பது மேள் எனின், மேற்கூறிப்போந்த மூன்றுஞ் சீவன் முத்தர்க்குத் தாமேயுளவாம் இலக்கணமாகலின் அநுவாதமாக வைத்துணர்த்தற்பாலனவாகிய இவற்றைக் களைக இணங்குக வழிபடுகவென விதியாக வைத்தோதிய தெற்றுக் கென்பாரை நோக்கி அதனை அவற்றதொழிபாகக் கொண்டு சாதித்தற்கு மேற்கோடனுதலிற்று. இள் வெடை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி இவ்விடங்களின் மேற்கூறிய திருவேடங்கள் சிவாலயங்களிடத்தே; வழிபடுக என்றது வழிபாடு செய்க என்றவாறு.)
இவ்விடங்களென்றது மேற்கூறிய இரண்டனையும். வழிபடுக என்னும் எடுத்த லோசையான் அநுவதித்துணர்த்துவதே யமையு மென்பாரை நோக்கி விதித்தலை வலியுறுத்தவாறு. இனம்பற்றிக் களைதல் இணங்குதல்கட்கும் இஃதொக்கும்.
ஏது : நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனுமாகலான். (வா 54ஞ)
எது ஏது எனின், எய்தியதனை விதித்தல் பயனுடைத் தன்றுபோலுமென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இள். நரம்பு முதலிய தாதுக்களின்கண் வேற்றுமையின்றி அதுவது தானாய் வருகின்ற உயிர் நாடியோ என்போ நரம்பு சீக்கோழையோ என்று இங்ஙனம் * சூசூபைமறியாய்ப்’’ பார்ப்பார்க்கு அந்நரம்பு நாடி முதலியவையாகாது அவற்றின் வேறுமாயினாற்போல உயிர்க்குயிராகிய அம்முதல்வனும் உயிர்ப்பொருள் உயிரில் பொருளெல்லாவற்றினுங் கலப்பான் அதுவது தானாகியும் பொருண்மையான் அல்லனாகியும் நிற்பனாகலான் அதுவது தானாய்க்காணுங் காட்சிபற்றி யெய்திய வழிபாடு அல்லனாய் நிற்றலைக் காணுங்காலெய்தாதாகலின் அவ்வழியு மெய்துவிக்க வேண்டுதலான் இனி இவ்விடங்களின் வழிபடுகவென விதித்தோதியது எறு.
*நாலடியார், தூய்தன்மை, 2. அவையாகாவாறப்புருடனுமெனவே அவ்விடத்தெய்துவித்தல் ஒருதலையான் வேண்டுமென்பது தாற்பரியமாயிற்று. மேற்கோளின் இவ்விடங்களையென்னாது இவ்விடங்களினென வேற்றுமைப்படுத் தோதியதூஉம் இஃதுணர்ந்து கோடற்பொருட்டு. இதனானே, எய்தாத தெய்துவிப்பதூஉம், எய்திய திகந்துபடாமற் காப்பதூஉம், எய்தியதனை யொருமருங்கு மறப்பதூஉம் என்னும் விதி மூன்றனுள், இஃதெய்திய திகந்துபடாமற் காத்ததென்பது போந்தவாறுணர்க. வாறு உவமவுருபுபட நின்றது. முதலானவற்றையென்பது உருபு மயக்கம்.

பண் :

பாடல் எண் : 7

வினையால் அசத்து விளைதலான் ஞானம்
வினைதீரின் அன்றி விளையா வினைதீர
ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்
ஆனத்தால் அன்பிற் றொழு.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்தென்று கண்டொருவவே ஞானசொரூபம் உளதாய் அத்து விதத்தை யுணர்த்துமாகலான் அதன்பொருட்டு வழிபாடு வேறுவிதித்தல் எற்றுக்கென்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். வினையால் அசத்து விளைதலான் வினைதீரின் அன்றி ஞானம் விளையா என்பது உடம்பின் கண்ணதாகிய பிராரத்தவாசனை உயிர்க்குத் தாக்குவதாயுள்ள துணையும் அதனான் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றிக் காட்சிப் படும் மண்முதன் மாயைகளும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வுமாகிய அசத்துக்கள் ஒருவியவழியும் வந்துகூடி மேம்படுவனவாகலான் அவ்வளவிற் கெல்லாம் மூலமாகிய பிராரத்தவாசனை பற்றறக் கழிந்தாலன்றி அவ்வசத்தைக் கீழ்ப்படுத்து மெய்யுணர்வு மேம்படுதல் கூடாதாகலின்; வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அது நிகழும் என்பது அவ்வாசனை பற்றறக் கழிதற்பொருட்டு அம்மெய்யுணர்வுடையாரை நாடி வழிபடவே அவ்வினை நீங்கி மெய்யுணர்வு மேம்பட்டு நிகழும்; ஆனத்தால் அன்பின் தொழு என்பது ஆகலான் அன்பினால் அவரை வழிபடுவாயாக என்றவாறு.
அசத்தையொருவியவழி உளதாகிய ஞானசொரூபம் நிலைபெறுதல் அவ்வசத்தினது விளைவிற்கு வேராகிய வினைத் தீர்வின் கண்ணதாகலான், அவ்வினை வேரறுத்து மெய்யுணர்வை நிலைபெறுத்துதற் பொருட்டு அதனை அங்ஙன நிலைபெறுத்தினார் மாட்டுச் செய்யும் வழிபாடு ஒருதலையான் வேண்டப்படுமென்பதாம். அற்றேல், அதன்பொருட்டு ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி யுச்சரிக்கவென்றவதுவே அதற்கமையுமெனின்; அஃதொக்கும், அவ்வுச்சரிப்பும் இவ்வழிபாட்டை யின்றியமையாதென்க. அற்றாகலினன்றே, ஆண்டஞ்செழுத்தாலெனவும், மண்முதனாளமெனவும், அகத்து வழிபாட்டை உடன் கூறியதூஉமென்பது.
விளையாதென்னுந் துவ்விகுதி விகாரத்தாற்றொக்கது. பின்வந்த ஞானம் ஆகுபெயர். ஆனதனாலென்பது ஆனத்தாலென மரீஇயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

தன்னை யறிவித்துத் தான்றானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது முன்னவனே
தானேதா னாச்செய்துந் தைவமென்றுந் தைவமே
மானே தொழுகை வலி.

பொழிப்புரை :

என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனம் பயன்பற்றி விதிக்கப்படும் வழிபாடு வேள்வி முதலியனபோலப் பயன் வேண்டாமையானாதல் பின்னர்ச் செய்து பெறுதுமென்றாதல் ஒரோவழியொழியவும் படுங்கொல்லோவென்பாரை நோக்கி அது செய்யாவழிப்படுங் குற்றமும் செய்தல் கடமையாமாறும் உணர்த்தி விதித்தலை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். தன்னை அறிவித்துத் தான் தான் ஆச்செய்தானைப் பின்னை மறத்தல் பிழை அலது என்பது தன்னுண்மையை அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிர்க்குப் பலவாற்றானும் அதனைத் தெரித்துணர்த்தி எத்தனையு மெளிய அவ்வுயிரை எத்தனையுமரிய தானாம்வண்ணஞ் செய்தளித்த பெரியதோருதவியை அதன் பின்னர் மறக்குமாயின் அஃது இதற்குமுன் அறியாமையான் மறந்த குற்றம்போலத் தீர்திறனுடையதோர் குற்றமன்றாகலானும் ; முன்னவனே தானே தானச் செய்தும் தைவம் என்றும் தைவமே மானே தொழுகை வலி என்பது முதல்வன் அங்ஙனந் தான்றானேயாகச் செய்தாலும் இதுகாறுந் தனக்குச் சுதந்திரமின்றி முதல்வனது உபகாரத்தை யின்றியமையாதாய் அடிமையாகிய உயிர் எக்காலத்தும் அவ்வாறடிமையேயா மாகலானும் தான்றானாச் செய்தளித்த அப்பெரியோனை வழிபடுதலே அவ்வுயிர்க்கு வலியாவது என்றவாறு.
தமது முதறானே குருவாகலிற் றான்றானாச் செய்தானையென்றும், முன்னை மறந்த குற்றம் அறியாது நிகழ்ந்ததாகலிற் கழுவப்படும் இஃததுபோற் கழுவப்படுவ தன்றென்பார் பின்னை மறத்தல் பிழையலதென்றுங் கூறினார். பின்னை மறத்தல் என்றதனால் முன்னை மறத்தல் பெறப்பட்டது. திருக்குறள், 110. “எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்னுங் கருத்து நோக்கிக் கூறியதூஉமாம்.
அலதுமெனப் பாடமோதி இது பிழையாதலன்றியு மென்றுரைப்பாரு முளர். ஏகாரம் முன்னையது அசைநிலை; பின்னையன தேற்றம். செய்தாலென்பது செய்தெனத் திரிந்தது. உம்மை சிறப்பின்கண் வந்தது. தான்றானாச்செய்தல் எதனையெதனைப் பற்றினும் அதுவதுவாமுயிர் தன்னையறிந்தவழி எண்குணங்களானிறைந்து தன் வண்ணமாகச் செய்தல். அங்ஙனஞ் செய்தவழியும் சிவஞானசித்தி, 11.10 “உயிர்தானுஞ் சிவாநுபவ மொன்றினுக்கே யுரித்து” என்பார் தைவமென்றுந் தைவமே யென்றார். தைவமென்னுஞ் சொல்லியல்பு மேலே யுரைத்தாம். மானையென்னும் இரண்டனுருபு விகாரத்தாற்றொக்கது. மானென்பது வடசொற்றிரிபு. சுட்டு வருவிக்க. வலிதருவதனை வலியென்றுபசரித்தார்.
இவ்வுதாரணங்கள் மூன்றானும், வழிபாட்டிற்கும் இடத்து நிகழ்பொருண் மாத்திரையேயன்றி இடவிசேடமும் பெறல் வேண்டுமென அதனை வலியுறுத்துமுகத்தானே, முறையே சிவலிங்கத்தையுஞ் சிவபக்தர் வேடதையுஞ் சிவதேசிகர்களையும் அறிந்து வழிபடுமாறு கூறப்பட்டது.
சிவமென்னும் அந்ததர சிந்தைநேர் நோக்கப்
பவமின்றாங் கண்வா சகத்திற் சிவமுண்டாம்
ஒன்று மிரண்டு மலத்தார்க்கிங் கொண்குருவால்
இன்றிந்நூன் மும்மை மலர்க்கு.
என்பது செய்யுள் என்னுதலிற்றோவெனின், இங்ஙனஞ் சிவாகமத்துள் ஞானபாதப்பொரு ளெல்லாவற்றையும் பொது உண்மையென் றிருவகைப் படுத்துப் பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியலென நான்கியலாக வைத்துப் போதிப்பதாகிய இச்சிவஞானபோத நூலைக் கோடற்குரிய அதிகாரிகளாவார் இவரென்ப துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். சிவம் என்னும் அந்ததர என்பது தான்றானாச் செய்தவாற்றாற் சீவனென்னு மியல்பு னீங்கிச் சிவமென்றோதப்படும் வேதாந்தத் தெளிவாகிய சித்தாந்தத்டியுடைய மாணவகனே; ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு என்பது ஒன்றுமிரண்டுமாய மலங்களையுடைய விஞ்ஞானாகலர்க்கும் பிரளயாகலர்க்கும்; சிந்தை நேர் நோக்கக்கண் வாசகத்தின் பவம் இன்று ஆம் சிவம் உண்டாம் என்பது முறையே அறிவின்கணின்று அருட்பார்வையா னோக்குதலானும் தேவகுருவாய் முன்னின்று செய்யுந் திருநோக்கம் பரிசம் வாக்கெனப்படுந் தீக்கையானும் பிறவிக் கேதுவாய பசுத்துவ நீங்கிச் சிவத்துவம் விளங்குமாகலான்; மும்மை மலர்க்கு இங்கு ஒண்குருவால் இன்று இந்நூல் என்பது அவரின் வேறாகிய மும்மலமுடையவர்க்கே உரித்து இவ்வுலகத் தனுபவமுடைய தேசிகராற் போதிக்கப்படும் இச்சிவஞானபோத நூல் என்றவாறு.
அந்தம் வேதாந்தம். அந்ததரஞ் சித்தாந்தமாகலின், அதனைப் பெற்றாரது பெருமை கூறுவார் சிவமென்னுமந்ததர என்றார். என்னுமென்புழிப் படுசொற் றொக்கு நின்றது. சிந்தை அறிவு கண்ணுருபு விரித்துரைக்க. நேர் நோக்குதல் முன்னை மருட்பார்வையை மாற்றி அருட்பார்வையா னோக்குதல். நோக்க நோக்குதலானென்க.கண்வாசகங்களைக் கூறவே இனம் பற்றிப் பரிசமும் உடன் கொள்ளப்படும். பவம் ஆகுபெயர். இந்நூல் அநுபவமுடைய தேசிகனாலன்றி விளங்கா தென்பார் ஒண்குருவாலென்றார். போதிக்கப்படு மென்பது அவாய்நிலையான் வந்தது. இன்றிந் நூலென்பது இந்நூலென்னும் பொருட்டு. இக்காலத்துரைக்கப்படு நூலெனினுமமையும். அது சூசூதானுரைத்தானின்று” என வருகின்ற வெண்பாவாற் கூறியாவாற்றானு மறிக. மும்மையென்றது ஈண்டெண்ணின்மேனின்றது, சூசூதெரிமாண் டமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்” என்புழிப்போல.
நூலாசிரியர் பெயர்
எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழஇயல்பாய்
நந்தி யுரைத்தருளு ஞானநூல் சிந்தைசெய்து
தானுரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணர
ஏதுதிருட் டாந்தத்தால் இன்று.
இந்நூலாசிரியன் திருவருட் சிறப்புணர்த்துதற் கெழுந்தது.
எந்தை சனற் குமரன் எந்தையாகிய சனற்குமார முனிவன் முதலிய முனிவர்கணங்கள்; ஏத்தித்தொழ துதித்துவணங்க ; நந்தி சீகண்டதேவர்பாற் கேட்டருளிய நந்திபெருமான்; இயல்பாய் தான் கேட்டமுறையே; உரைத்தருளும் உபதேசித்தருளிய ; ஞானநூல் சிவஞானபோதமாகிய வடநூலை; சிந்தை செய்து பரஞ்சோதி முனிவன்பாற் கேட்டவாறே சிந்தித்து ; தாரணியோர் தாம் உணரதமிழ் நாட்டார் அறிந்துய்தற்பொருட்டு; ஏது திருட்டாந்தத்தால் மேற்கோளோடு கூடிய ஏது திருட்டாந்தங்களுடன்; இன்று இக்காலத்தே; மெய்கண்டான்தான்உரைத்தான் மொழிபெயர்த்துக்கூறி வார்த்திகப்பொழிப்புரை செய்தருளினான் மெய்கண்டதேவன். (இப்பாட்டுக்கு உரை சிவஞான சுவாமிகளால் இயற்றப்படவில்லை.)

குறிப்புரை :

சிவஞானபோதச் சூர்ணிக்கொத்து * முதற்சூத்திரம் :(1) சகம் பிறப்பிருப்பிறப்பாகிய முத்தொழிலை யுடையது. (2) அது அரனாலே உடையது. (3) மற்றிருவரும் முத்தொழிற் படுவர்கள். இரண்டாஞ்சூத்திரம் :(4) அரன் உயிர்களில் இரண்டற நிற்பன். (5) உயிர்களுக்குக் கன்மபலனை அரனே கொடுப்பன். (6) + உயிர்கள் அச்சு மாறியே பிறக்கும். (7) அரன் சருவ வியாபகன். மூன்றாஞ்சூத்திரம் :(8) இல்லையென்கிற அறிவுடனே சொல்லுகையினாலே அறிவுயிர் உண்டு. (9) எனது உடல் என்று பொருட்பிறிதின் கிழமையாகச் சொல்லுகையினாலே, உடற்கு வேறாய் உயிருண்டு. (10) ஐந்தையும் ஒருவனே அறிதலின், ஒவ்வொன்றை மாத்திரம் அறிகிற ஐந்திற்கு வேறாய் உயிர் உண்டு. (11) கனவுடலை விட்டு நனவுடலிலே வருகையினாலே, அக்கனவுடற்கு வேறாய் உயிர் உண்டு. (12) நித்திரையிலும் பிராணவாயுத் தொழில் பண்ணவுஞ் சரீரத்துக்குப் புசிப்புத் தொழிலும் இல்லாதபடியினாலே, பிராணவாயுவுக்கு வேறாய் உயிர் உண்டு. (13) மறந்து மறந்து நினைக்கிறபடியினாலே மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறாய் உயிர் உண்டு. (14) எல்லாத் தத்துவங்களுக்கும் வேறு வேறு பெயர் இருக்கையினாலே, அந்தந்தத் தத்துவங்களுக்கு வேறாய் உயிர் உண்டு. நான்காஞ் சூத்திரம்: (15) அந்தக்கரணங்களுக்கு உயிர் உட்கூடினாலன்றித் தொழில் இல்லாதபடியினாலே, அந்தக்கரணங்களுக்கு வேறாய் உயிர் உண்டு. (16) மலமறைப்பால் உயிக்கு அறிவு இல்லை. (17) உயிர் மூன்றவத்தைப்படும். ஐந்தாஞ் சூத்திரம் :(18) உயிராலே தத்துவங்களெல்லாந் தொழில் செய்யும். (19) அரனாலே உயிர்களெல்லாம் அறியும். ஆறாஞ் சூத்திரம் : (20) உயிரறிவினாலே அறியப்பட்டவெல்லாம் அழியும். (21) அப்பிரமேயமாக அறியப்பட்டவனே அரன். ஏழாஞ் சூத்திரம் (22) அரன் பாசத்தை அநுபவியான். (23) பாசம் அரனை அநுபவியாது. (24) உயிர் அவ்விரண்டனையும் அநுபவிக்கும். எட்டாஞ் சூத்திரம் : (25) உயிருக்கு நல்லறிவு தவத்தினாலேயே வரும். (26) உயிருக்குச் சற்குருவாய் வருவது அரனே. (27) உயிர் பஞ்சேந்திரியங்களைப் பற்றுகையினாலே தன்னையும் அறியமாட்டாது. (28) உயிர் பஞ்சேந்திரியங்களிலே பற்றற்றால் தன்னையும் அறியும். ஒன்பதாஞ் சூத்திரம் : (29) உயிர் அரன்ஞானத்தினாலேயே அரனைக் காணும். (30) உயிர் பாசத்திலே பற்றற்றால், அரன் வெளிப்படுவன். (31) பஞ்சாக்ஷரசெபம் பண்ணினால், வாசனாமலம் போம். பத்தாஞ் சூத்திரம் : (32) அரனுடன் ஒன்றாகி நில். (33) உன்றொழிலெல்லாம் அரன் பணி என்றே கொள். பதினொராஞ் சூத்திரம் : (34) ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அநுபவிப்பன். (35) அரனை மறவாமல் அன்பு இருந்தால் அவனிடத்திலே ஐக்கமாய்ப் போவன். பன்னிரண்டாஞ் சூத்திரம் : (36) மும்மலங்களையும் களைக. (37) சிவஞானிகளுடனே கூடுக. (38) சிவஞானிகளையுஞ் சிவலிங்கத்தையுஞ் சிவனெனவே தேறி வழிபடுக.(39) வழிபடாமையை ஒழிக.

பண் :

பாடல் எண் : 1

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.

பொழிப்புரை :

கங்கையாறுங் கோணுதலைத் தரும் அழகிய பிறையுங் கொன்றை மாலையுமுடைத்தாய்த் தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் பிள்ளையாகத்தந்த தேவன், ஒரு கொம்பையும் இரண்டு செவியையும் மூன்று மதத்தையும் நான்றவாயையும் ஐந்து கரத்தையு முடையோனாகிய ஒப்பற்ற யானையினது தாள்கள் உள்ளம் உருகுதலைச் செய்வதாகிய அன்போடுகூடி வந்தித்து ஒழியாது இரவும் பகலும் நினைப்போரது நெஞ்சில் திருக்கை ஈண்டணுகாவண்ணம் துரக்கும். பிரம விஷ்ணுக்கள் பதங்களும் ஒன்றல்லவென்ன மிக்க வீட்டின்பத்தையும் உண்டாக்கும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற
மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப்
பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத்
தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.

பொழிப்புரை :

சிவபெருமான் - முதல்நடு இறுதியின்றி ஒருவராலும் அறியப்படாத பரசொரூபப் பிரகாசத்தையுடைய அருளாகிய ஞானமே திருமேனி யாகக்கொண்டு தனது காருண்யத்தினாலே சகளீகரித்துப் பிரபஞ்சத்தை யுண்டாக்கிய அந்தப் பரமேசுவரியையுந் தன்னிடப்பாக முழுதினும் அடக்கிப் பிரமன் மால் முதலாகிய தேவர்களது மகுடரத்திநம்போலும் மிக்க சத்தி சிவமாகிய சகள நிஷ்கள் சொரூபமாய் உலகத்துள்ளார் துதிப்ப ஒற்றைக்கலையை அலங்காரமாக அணிந்த பவளம்போன்ற சடைகளைத் தாழவிட்டு விரிந்த ஒளியையுடைய திருவம்பலத்தின்கண்ணே நிருத்தஞ் செய்தருளுகின்ற மேலான பரமனது சீபாதங்களாகிய தாதுக்கள் மிக்க தாமரைகளைத் தலையின்மீது வைத்துத் தளர்ச்சியில்லாத மிக்க அன்பு மிகவும் உண்டாம்படி நில்லா நின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம் இலயமொடு போகமதி கார மாகித்
தேசருவம் அருவுருவம் உருவமாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்
பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவையளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்
டாசகலும் அடியருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னிவைப்பாம்.

பொழிப்புரை :

சத்தி - ஈசன் அருள் ....... அதிகாரமாகி கருத்தாவை விட்டு நீங்காத சத்தியானது அவனது கருணையினால் பராசத்தியும் இச்சா சத்தியும் ஞானசத்தியும் கிரியாசத்தியும் திரோதான சத்தியும் இவையன்றி இலயபோக அதிகார அவத்தைகளுமாய், தேசருவம் ....... செல்வமாகி அந்தப் பிரகாசமாகிய இறைவனுக்கு அரூபம் ரூபாரூபம் ரூபமெனப்பட்ட மூன்று முறைமைக்கும் அம்முறைமைகளாகிய வடிவுந் தானாய் இறைவன் அங்ஙனம் கொண்டருளுந் திருமேனிக்கு அந்தந்தச் சத்திகளும் தானாய்ப் பிரபஞ்சங்களும் பதார்த்தங்களுந்தானாய், பேசரிய ..... நோக்கிஅவன் எடுத்துக்கொண்ட திருமேனிக்கேற்ற சத்தியாய் நின்று எண்ணுதற்கரிதாகிய எல்லா ஆன்மாக்களையும் படைத்து அளித்து, பெரும் போகம் .... ஒழித்திட்டு ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்கட்கீடாகச் சுவர்க்காதி பதங்களையுங் கொடுத்து சநநங்களையுங் கெடுத்து அவ்விறைவனோடுங் கூடிநிற்க முத்தியையுங் கொடுத்து, ஆசு அகலும் ....... அன்னை அஞ்ஞான நீங்கின அடியார் இருதயத்திற் சிவபெருமானோடுங் கூடியிருக்கும் உலகமாதாவினுடைய, அருட் பாதமலர் சென்னி வைப்பாம் கிருபையாகிய திருவடித் தாமரைகளை எந்தலைமேல் வைத்துக் கொள்ளா நின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றால் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்
தயங்குபேர் ஒளியாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப்
பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள்கோட்டுப் பெரிய பண்டிக்
கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.

பொழிப்புரை :

விநாயகக் கடவுள் - இயம்புநூல் இப்பொழுது சொல்லுநூல், இருந்தமிழின் . . . . வேண்டித் தமிழினாற் செய்யுமிச் செய்யுள் பஞ்சாதிகாரங்கள் சொல்லும் வழியால் வருங்குற்றமொழிந்து இனிது முடிதலைவிரும்பி, தயங்குபேரொளியாகி விளங்கும் பெரிய ஒளியேயாகி , எங்கு நின்ற தலைவனார் எவ்விடத்தும் பூரணமாய் நின்ற இறைவர், மலைமாது தன்னோடு ஆடிப்பயந்த அசுரரைக் கொல்லு நிமித்தமாக இமையமாதோடுங்கூடி உண்டாக்கப்பட்ட, ஐங்கரம் ...... தன் ஐந்துகையினையும் நான்குதோளினையும் மூன்று கண்ணினையும் இரண்டு பாதத்தினையும் பரியதாகி நீண்டதொரு கொம்பினையும் பெரிய வயிற்றினையுமுடைய யானைமுகத்து விநாயகனது, அடிக்க மலங்கள் . . . செய்வாம் சீபாதகமலங்களை விரும்பித் துதித்துச் சித்தத்திலுமுறும்படி வைத்து மிக்க விருப்பத்தைச் செய்யாநின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை
திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்
பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையிற் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள்
கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந்தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.

பொழிப்புரை :

சுப்பிரமணியக் கடவுள் - அருமறை . . . குருளை தெரிதற்கரிய வேதங்களும் ஆகமங்களும் ஆறங்கங்களும் அரிதாகிய கலைஞானங்களுமாகிய நூல்களை ஆராய்ந்த அகத்தியமாவிருடிக்கு வேதவியாக்கியாநத்தை அருளிச் செய்த ஞானாசாரியனாகிய இளைய பிள்ளை, திருமறைமா . . .தெய்வம் அழகிய வேதத்தைக் கற்றுவல்ல மிக்கவிருடிகட்குத் தலைவனாகிய விருடி, தேவர்கட்குச் சுவாமி, சிவனுக்குக் கிருபையாலுண்டாகிய புத்திரன், தவத்தின் மிக்கோர்க்கு வழிபடுந்தெய்வம், பொரும் அறையார் . . . கந்தன் ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய பொருகின்ற வீரர்க்கு வீரன், ஒழியாது கையின் மலருமஞ்சனமுங் கொண்டு துதிக்கும் அடியார்கள் கருப்பத்தில் அழுந்தாதவகை அருள் செய்து மோக்ஷத்தைக் கொடுக்குங் கந்தசுவாமி, கழலிணைகள் . . . வைப்பாம் அவனது சீபாதங்களிரண்டையும் எந்தலைமீதும் இதயத்திலும் வைத்துக்கொள்ளாநின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
கண்டஇரு தயகமல முகைக ளெல்லாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.

பொழிப்புரை :

மெய்கண்டதேவ நாயனார் - பழையதாகிய வேதவண்டுகள் ஒலிப்பப் பரஞானமாகிய செவ்வியதேன் சிநேகத்தோடும் புறப்படச் சிவமாகிய மணம்விரிந்து மணக்கச் சகலரிற் சத்திநிபாதம் பதிந்து தரிசித்தோரது இதயகமலங்கள் விட்டு விரியப் பூமியிடத்தெழுந்தருளிய விரிந்தமலர்களையுடைய பொழில்கள் பக்கங்களிலே சூழப்படாநின்ற திருவெண்ணெய் நல்லூரைத் திருப்பதியாகப் பொருந்தின சைவசித்தாந்ததுக்கு ஆதியாகிய மெய்கண்டதேவனென்னுந் திருநாமத்தையுடைய ஞானசூரியனது அழகிய சீபாதங்கள் தாமரைமலரும் ஒப்பழியும்படி எமது தலைமீதே எப்பொழுதும் வாழும் ஆதலால் அவற்றையே துதியா நின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் வையகத்தா கமம்வேத மற்று முள்ள
நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலுமாறு
வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி வேறேழு மொன்றாகி நின்ற போது
சாலவுமான் குளப்படியிற் றங்கி நின்ற சலமதுதா னேரென்னுந் தன்மைத் தாலோ.

பொழிப்புரை :

அவையடக்கம் - மால் . . . மார்க்கம் பிரம விஷ்ணுக்களாலும் நான்கு வேதங்களாலும் அறிதற்கரிதாகிய பரமேசுவரனது வழியை, வையகத்து ... நுவலுமாறு பிரபஞ்சத்தின்கண்ணே ஆகமத்தையும் வேதத்தையும் அவற்றின் வழியுண்டாகிய சாத்திரங்களையும் கற்றறிந்து பரமேசுரனது சீபாதங்களையே பற்றுக்கோடாகவுடைய நோய் முதலியவற்றைப் பொறுக்கும் அருந்தவத்தினர்முன்னே யாதும் அறியாதயான் சொல்லுநெறி, வேலை .... தன்மைத்தாலோ உலாவுந் திரைகண் மிகுத்து வேற்றுமைப்பட்ட சமுத்திர மொன்றுபட நின்ற விடத்து மிகவும் ஆன்குளப்படியிற் றங்கிநிற்கும் சலத்தை அப்பிரளய சலத்துக்கொப்பென்னு முறைமையுடைத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில்
கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி
மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென்
பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல் பாராட்டா நிற்பர்அருட் பரிசி னாலே.

பொழிப்புரை :

நீடுபுகழ் . . . வாழ்வர் நிலைபெற்ற புகழினையுடைய உலகின்கண் மாதராடவர் சிநேகத்தோடும் தாம் பெற்ற மக்களிடத்துண்டாகிய மொழி இளமையோடு தடுமாறி ஒன்றுந் தெரிதற் கரிதாயிருந்ததேனும் அதனை மிகவும் கொண்டாடிப்போற்றி யாம் பெறும் பெருஞ் செல்வமென்று மகிழ்ந்து வாழாநிற்பர்கள் அதுபோல . . . பரிசினாலே அத்தன்மைபோல நிலைபெற்ற தமிழ்ப்புலவராயினோர் என்னிடத்துண்டாகிய கவியினது குற்றம்பாரார், யான்சொன்ன இந்நூலைப் பாராட்டாநிற்பர் ஞானத்தின் முறைமைப்பாட்டினால்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

சுத்தவடி வியல்பாக வுடைய சோதி சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும்
ஒத்துமுடி யுங்கூட ஒரி டத்தே ஒருபதிக்குப் பலநெறிக ளுளவா னாற்போற்
பித்தர்குணமது போல ஒருகா லுண்டாய்ப் பின்னொருகால் அறிவின்றிப் பேதை யோராய்க்
கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.

பொழிப்புரை :

நூற்சிறப்பு - சுத்த . . . சோதி ஞானமே தனக்குச் சுதந்திரவடிவாகவுடைய இறைவன், சொல்லிய . . . ஒரிடத்தே சமய பேதங்கடோறும் அவனருளிச்செய்த ஆகமங்களெல்லாம் பலபேதமாயினும் ஞானபாதம் எல்லா ஆகமங்களினும் தம்முளொத்துச் சென்று ஒரு பொருளையே நோக்கிமுடியும். அஃதென்போல வென்னில், ஒருபதிக்குப் . . .போல் ஓரூர்க்குண்டாகிய வழிகளெல்லாம் பலபேதப்பட்டதேனும் சேர அவ்வூரையே நோக்கிக்கிடந்தாற்போலும், பித்தர் . . . பட்டோர் எல்லா ஆகமங்களிலும் ஞான பாதம் ஒக்குமென்று கண்டு முத்தியடைந்திருக்கும் ஆன்மாக்கள்போ லாகாமற் பித்தேறினோர் குணம்போல மருளுந்தெருளுமாய் முத்தியடையத்தக்க நெறியைக் காணாமல் அந்நெறியைக் கண்டாற்போலக் கூப்பிட்டுத்திரியும் அறிவிலோரென்னும் பரசமயிகளது பசு நூற்கட்டுக்குட்பட்டோர், கனகவரை .... வீழ்வார் மகாமேருவைக்குறித்துப் போக ஒருப்பட்டவன் அவ்வழி சென்றெய்தாமல் மற்றொருதிசையே போய்க் கடற்கே வீழ்ந்தாழுந் தன்மைபோலும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல
ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா ளிறைவனரு ணந்திதனக்கியம்ப நந்தி
கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவலயத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு
தீதகல எமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தியென்றே.

பொழிப்புரை :

நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும் - போத மிகுத்தோர் சாத்திரஞானத்தான் மிக்கவர்கள், தொகுத்த பேதைமைக்கே பொருந்தினோர் தொகுத்துச் சொல்லப்பட்ட அறியாமையைக் கூடினோர், இவர்க்கன்றி இந்த இருவர்க்குமன்றி, கதிப்பாற்செல்ல ... இறைவன் இயம்ப முத்தியின் வழிச்செல்ல யாது வழியென்று ஆராயுஞ் சத்திநிபாதத்தோர்க்கு அறியவேண்டி ஆதியிலே பரமேசுவரன் தன்னளவிற் பத்திசெய்யும் நந்திபெருமானுக்கு அருளிச்செய்ய, நந்தி கோதில் அருட் சனற்குமாரற்குக் கூறஸ்ரீ நந்திபெருமானுந் தம்மளவிற்குற்றமற்ற பத்திசெய்யுஞ் சனற்குமார பகவானுக்கு அருளிச்செய்ய, குவலயத்தின் . . . சிவஞானசித்தியென்றே அம்முறைமையாலே கேட்டருளிப் பிரபஞ்சத்திலெழுந்தருளிய எம்முடைய சுவாமியாகிய மெய்கண்டதேவ நாயனார் குற்றமற்ற தமிழாகச்செய்து சிவஞானபோதச்சிறப்புத் திருநாமந்தரித்து எமதஞ்ஞான நீங்க அருளிச்செய்த அந்நூலை ஒதியுணர்ந்து சொல்லாநின்றேன் இந்நூலை சிவஞானசித்தி யென்னும் பெயரினால்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும் ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் செய்தி
முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா மூதுலகில் எமக்கியன்ற முயற்சி யாலே
சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் செய்கைபோ லுண்டாய பொய்கொள் மார்க்கத்
துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம்.

பொழிப்புரை :

நூற்கருத்து - இறைவனையும் இறைவனால் இயம்புநூலும் பரமேசுரனையும் பரமேசுரனால் அருளிச்செய்யப்பட்ட வேதாகமபுராணப் பொருள்களையும், ஈண்டு அளவும் இவ்விடத்துண்டாகிய அளவையாகிய பிரமாணத்தையும், பொருளியல்பும் அவ்வளவைகளால் அறியப்படும் பொருள்களின் இயல்பையும், வேண்டுஞ்செய்தி முறைமைகளும் அப்பொருளியல்பின் வழிநின்றோர் செய்யவேண்டும் ஆசாரங்களையும், பெத்தமொடு முத்தியெல்லாம் பெத்தலக்ஷணத்துடனே முத்திலக்ஷணங்க ளெல்லாவற்றையும், மூதுலகில் எமக்கு இயன்ற முயற்சியாலே பழையதாய் வரும் பிரபஞ்சத்தில் எமக்குக்கூடின செயலாலே, சிறை உலவும் . . . சொல்லிப்போக்கி தடைப்பட்டு நிற்கும் நீரை யொப்பத் தோன்றுகின்ற பேய்த்தேரினை மெய்யென்று நிருமிக்குமிடத்துப் பொய்யான தன்மையேபோல நூல்களாகவும் வழிகளாகவும் கேட்டார்க்குப் பொருந்தத் தக்கதாகவுண்டாய்ப் பொய்யைக் கைக்கொண்ட வழிகளாகிய உலகாயதன்முதற் பாஞ்சராத்திரியீறாய சமயிகளுடைய பல துறைகளையுங் கடாவினானும் விடையினானுஞ் சொல்லிநீக்கி, துகள்தீர இந்நூலிற் சொல்லகிற்பாம் குற்றந்தீர ஞானபாதத்தை அறிய இந்நூலிற் சொல்லக்கடவேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின்
தந்திர மெனாதறிவி னோடருளி லாமல்
சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க
உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான்.

பொழிப்புரை :

சந்தனமணிந்த தோளிடத்து நறுமலர் மாலைகள் விளங்கும்படி கர்ப்பாசயநீங்காத உலகாயதன் இந்திரபுரோகிதனாகிய பிருகஸ்பதி பகவான் ஆன்மாக்கள் போகங்காரணமாக அருளியநூலை இப்பொழுது இடையூறென்று கொள்ளுதற்கு ஞானமுங் கிருபையுமில்லாமல் அந்த நூலையே உலகத்து மெய்யென்று சொல்லாநிற்பன். இயம்பு நூல் உலகாயத சித்தாந்தம். இந்திரன் தவத்தினைப் புரியப் பிருகஸ்பதி அவனை மயக்கி விடயத்தில் வீழ்வித்த சாத்திரமென்க. அஃதென்போலெனின் அருச்சுனன் தவத்தினைப்புரிய வாசுதேவன் தேரிலிருந்து கீதை யென்னுஞ் சாத்திரத்தினால் மயக்கிக் கொல்லுவித்ததற்கொக்குமெனக் கொள்க. உலகாயதன் சார்வாகனென்றும் சொல்லப்படுவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய்
வேண்டும்அனு மானமுத லானபல வேண்டா
பூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந்
தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே.

பொழிப்புரை :

இவ்விடத்து அளவையென்று கொள்ளப்படுவது காட்சியே. அக்காட்சியினை விகற்பித்து ஐயக்காட்சிமுதல் ஆறுவகைக் காட்சியாய்க் கோடல்வேண்டும். இக்காட்சியில் விகற்பமொழிந்து அனுமானம் உரைமுதலிய பல வேண்டுவதில்லை. அக்காட்சியானும் அதன் விகற்பத்தானுங் கண்டு கைக்கொண்ட பொருள் பூதங்கள் நான்குமே சொல்லப்பட்ட கடினம் சீதம் தொடுதற்கரியவெப்பம் சலனமென்னுஞ் சொரூபங்களோடுங் கூடும்.
மனமென்றது ஐயக்காட்சி. பழுதையைப் பாம்பென்றையப்படுவது மனமாகலின் மனக்காட்சி யென்றார். இனிக் காட்சி யிருமூன்றாவன ஐயக்காட்சி, வாயிற்காட்சி, விகற்பக்காட்சி, அந்வயக்காட்சி, வெதிரேகக்காட்சி, திரிவுகாட்சியென இவை. இனி நிர்விகற்பக் காட்சியாவது இவ்வாறினோடுங் கூடாது குற்றமறக் காண்பது. ஐயக்காட்சியாவது இருளிற் பாம்போ பழுதையோவென்றையுறுதல், அதுவே மனக்காட்சி. வாயிற்காட்சியாவது இந்திரியங்களாற் காண்பது. விகற்பக்காட்சியாவது பெயர் சாதி குணம் கன்மம் பொருளென்னும் ஐந்தினாலுங் காண்பது. அந்வயக் காட்சியாவது புகையினால் அனலறிதல். வெதிரேகக்காட்சியாவது நாற்றத்தாற்பூவறிதல். திரிவுகாட்சியாவது பழுதையைப் பாம்பென்று கொள்வது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின்
காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின்
நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும்
போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே.

பொழிப்புரை :

அப்பூதங்கள்நான்கும் அப்படிக் கூடின பின்பு அவையிற்றுக்குச் சொல்லும் பெயர்களானவை பிருதிவியும் அப்புவுந் தேயுவும் பின்வாயுமென்று சொல்லலாம். இப்பூதங்கள் கூடிய குணங்களின் பெயரை முறையானே சொல்லின் கந்தம் இரதம் உருவம் பரிசம் இவையாகும். தெய்வமாகத்தொழும் இப்பூதங்கள் நான்கும் அழியாத இயல்புகளை யுடையவாம். இவை கூடுமிடத்து மேலானவாயு பூதத்திலே நின்று மூன்று பூதங்களில் ஒன்றிலொன்றாக அடைவே கூடப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும்
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே.

பொழிப்புரை :

அப்பூதங்களின் சொரூபங்களுங் குணங்களுந் தம்மிலொத்துக் கூடுகிற கூட்டத்திலே வடிவுகள் பலவுண்டாம். (அஃதென்போலெனின்) திரிகையிலேவைத்த மண்ணின்கண்ணே பலகடாதிகள் தோன்றுமாபோல நீரினிற் கிளம்பிய குமிழியை யொத்து, புத்தியுங் குணமும் ஞானேந்திரியமாகிய பொறிபுலன்களும் இவையெல்லாம் இவ்வுருவின் கண்ணேயுண்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும்
நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல்
ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால்
ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே.

பொழிப்புரை :

அப்பூதங்களில் வாயுப்பிரிய இந்திரியங்கள் கெடும். (புலனிற்குமெனவே புலன் காரணமாகிய பொறி குணம் புத்தி முதலியவு மிறக்கும்.) இம்முறைமையாலே தாபரசங்கமங்களு மிறக்கப்படும். சொன்ன முறைமையிற் கூடிப்போந்த காரியமாகிய சொரூபகுணங்கள் இறந்தாற் காரணமாகிய பூதங்களேயாம். இவையிற்றை இம்முறைமைப் பாட்டாலே அறிவதே ஞானமாவது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே.

பொழிப்புரை :

இப்படிப் பூதக்கூட்டத்தினால் உருக்கள் தோன்றி வாயுக்கெடக்கெடுதலன்றி, முன்செய்தகன்மம் பின்றொடரு மென்றும் இதனைப் புசிக்கத்தக்கதோர் ஆன்மாவுண்டென்றும் இவையிற்றைக் கூட்டுவான் ஒரு கர்த்தாவுண்டென்றுஞ் சமயிகள் உலகத்தாரை மயக்க உலகத்தார் சமயிகளுக்குச்செய்த குற்றம் யாது ? உலகத்தாரை மயக்கச் சமயிகள் கூறுமது, மலடிபெற்ற ஒப்பில்லாதமகன் ஒரு முயலின் கொம்பிலேயேறி ஆகாயத்திற்பூத்த பூவைத் தவறின்றிப் பறித்தானென்னுந் தன்மையோடொக்கும்.
பூதமேதெய்வம், பூதக்கூட்டத்தின் மிகுதிகுறைவே கன்மம், பூதக்கூட்டத்தின் நிகழுமுணர்வே ஆன்மா ; இங்ஙனமன்றி வேறு தெய்வமுங் கன்மமும் ஆன்மாவுமில்லை யென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ.

பொழிப்புரை :

முற்பிறப்பில் ஆன்மாக்கள்செய்த கன்மமெல்லாங் கெடாமல் ஆன்மாக்களைப் பொருந்திநின்று இப்பிறப்பிலே யூட்டுமென்று கூறின், இப்பிறப்பிற்செய்த புண்ணியபாவங்கள் இக்காயத்தோடு கெடுமாதலாற் பிற்பிறப்பிற் புக்குக் கூடுமாறெங்ஙனே ; பொருந்திய தூலவுடல்கெட்டுச் சூக்குமமாய்ப் பொருந்துமுறை எப்படி யென்னில், திரியோடேகூடிநின்ற விளக்கொளி அத்திரியை நீங்கி வேறே நின்றொளிருமென்னுந் தன்மைத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல்
ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி
ஒய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ றுதரத் தற்றால்
வாய்ந்திடும்மலம்வயிற்றிற் கொண்டிடும் வழக்குவைத்தாய்.

பொழிப்புரை :

வயலினிட்ட, வைக்கோலுந்தழையுங் கெட்டுப் பின்புபயிர்க்கு நன்மையைக் கொடுக்குமாறுபோலக் கன்மந்தோன்றாமற் றன்மைகெட்டுப் பொருந்துமென்று கூறின்,நீ உவமை கூறிய வைக்கோலுந் தழையும் இட்டவிடத்திற் பயிர்க்கு நன்மையைக் கொடுக்கும் (அன்றிப்பிறவிடத்திற்கு நன்மையையைக் கொடுக்கமாட்டா.) காயந்தளர்ந்து பசித்து வந்தவரை உண்ணல் பண்ணுவித்த சோறு அவருதரத்து மாண்டாலுண்டாம் பிரயோசனம் அவர் வயிற்றின் மலங்கொள்வார் வழக்குக் கூறினாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய்
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.

பொழிப்புரை :

ஒருகாயத்தின் செய்தியும் ஓருணர்வின் செய்தியும் ஒத்திராமற் பேதிக்கப்படுவது கன்மச் செய்தியென்று கூறின், அறிவிலாதாய் முன்பு எந்தக்கன்மஞ் செய்து பின்பு தொழிலை மருவின கை விரல்கள் ஒன்றுக்கொன்று தம்மில் ஏறியுங் குறைந்து மிருப்பது? வளரும் பூதங்கள் தம்மின் மிக்குக் குறைதலாற் காயமுமுணர்வும் பேதிக்கப்பட்ட தல்லது கன்மத்தினாலன்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில்
நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா
மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை
என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே.

பொழிப்புரை :

ஒரு பொருட்கு இன்பத்துன்பங்க ளெல்லாம் கன்மத் தாற்பொருந்து மென்று கூறின், தெளிந்த புனலானது சந்தனமுதலாகிய நறுநாற்றத்தோடு கூடவுங் கூடுதற்கரிதாகிய வொளிமிகுதியையுடைய அனலோடு கூடவும் எந்த நன்மை தீமை செய்ததென்று நீ கூறாய்; இவை யெல்லாம் ஒரு பொருட்கு இயல்பாமாதலாற் பூதகுணமன்றிக் கன்மமில்லை.
தோல்முதலானவை நெருப்பைக் கண்டாற் சுருண்டும் நீர்கூடினால் நெகிழ்ந்தும் வருவது பதார்த்தவியல்பொழிந்து வேறுகன்மத்தாலன்று. யாவும் பதார்த்தவியல்பென் றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின்
மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும்
நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை
தேயத்தின்முயற்கொம்பெல்லைசெப்புவோர்செய்தியாமே.

பொழிப்புரை :

நூறுகாய் அடைகூடவே ஒரு சிவப்புண்டாமாறு போலப் பூதக்கூட்டத்தில் ஓருணர்வுண்டாம். அஃதன்றி மற்றோரான்மாவென்று தனியே காணப்பட்டது உண்டாயின், உன் மயக்க நூலிற் சொல்லாதே, மனக்காட்சி முதலாய ஆறுகாட்சிக்கும் பொருந்தச் சொல்லவேண்டும்; காட்சி விகற்பத்தாலொழிந்து கருதலானும் உரையானுங் கூறுமது, உலகத்திற் கோடில்லாத முயலுக்குக் கோடும் அதற்களவும் பெருமையுங் கூறுவோரது கூற்றாம். மனமென்பது ஐயக்காட்சியை. நேயமென்பது பொருத்தத்தை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும்
உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும்
மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல்
இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே.

பொழிப்புரை :

கர்த்தா அரூபியென்று கூறில் அறிவுமில்லையாய் ஆகாயம் போலவாம்; அந்தக் கர்த்தா உருவமுடையவனென்று கூறிற் பூதக்கூட்டத்திற் றோன்றுஞ் சரீரியாதல் வேண்டும்; பொருந்திய ரூபாரூபத்தோடுங் கூடிநிற்பவ னென்றுகூறில், மிக்க ஆகாயமாகிய அரூபத்திலே ரூபமாகிய கல்லைவிட்டாற் றம்மிற்கூடி நிற்குமோ, பிரபஞ்சத்தினில்லாதாகையால் ரூபாரூபங் கூடிநில்லாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி
பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று
வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம்
கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல கேட்கு மாறே.

பொழிப்புரை :

பிருதிவி பூதத்தே உணவுதோன்றி அவ்வுணவால் உடலும் அவ்வுடலிலே புத்தியும் புத்தியிலே பேதிக்கப்பட்ட மனமு முண்டாய் வேறுபட்டவற்றை இப்பொழுது தெரியத் தங்கள் வேதஞ் சொல்லும் வழியும், தங்கள் வேதம் அப்படிச் சொல்லவும் பிரபஞ்சத்திலுள்ளோ ரெல்லாம் வருத்தத்திலே வீழ்ந்து வேறு வழியல்லாவகையைக் கேட்டு அதனை மேற்கொள்ளுமா றென்னோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள
மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம்
தாகத்தில் தண்ணீர் கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச்
சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ.

பொழிப்புரை :

பூமியிலே மெய்யாக மாதர்போகத்தைக் கண்டிருந்தும் அதனையநுபவியாது கைவிட்டுப்போய், சுவர்க்கத்திலே போகமுண்டென்று கேட்டு அதனைக் கைக்கொள்ளுதற்கு ஆசையுடையராய்த் தவமென்னுஞ் சிறையிலே முயன்று தடுமாறும் அறிவில்லாதவரெல்லாம், தாகித்த விடத்தே தண்ணீரை மெய்யாகக் கண்டிருந்தும் அதனை யுண்ணாமற் கைவிட்டுப்போய் மற்றொரு தண்ணீரை ஓருவன் தூரத்திலே உண்டென்ன அதனைக் கேட்டுச் சோகித்து அத்தண்ணீரை உண்டு தாகந் தீரவேண்டுமென்று போய் வழியிலே துயர முறுவோர் தன்மைபோலும், ஐயோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத்
தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய்
கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினாயே.

பொழிப்புரை :

இவ்வுலகத்துள் எம்மைப் போல நீயும் வாழவல்லை ; வாமதந்திரியே உன் வலக்கையைத் தருவாயாக, என்னுயிர்க்குத் தோழன் நீயேயன்றிச் சொல்லுமிடத்து உன்போல்வார் வேறில்லை கண்டாய், பயந்தமானுடர் பொல்லாங்கென்று சொல்லப்பட்ட கொலை களவு முதலியவற்றை யாங்கைக்கொள்ளு முறைமைபோலக் கைக் கொண்டு சுற்றுமொழுங்கு நீண்ட குழலினையுடைய மடவார் சேவித்துப்போத விளக்குப்போலத் தோன்றினாயாதலாற் றோழனீயே.
வலக்கைதா என்றது பிரியவசனஞ் சொல்லியது. கொலைகளவாதியாவது கொலை, களவு, கள், காமம், பொய் இவையும், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் முதலிய பிறவுமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற்
பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியோரானார்
ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின்
வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின்.

பொழிப்புரை :

உருத்திரன் பிரமா விஷ்ணு இவருடன் இந்திரனும் மாதர்களிடத்துச் சொல்லவொண்ணாதபடி தலையிற்றரித்தும் நாவிற் றரித்தும் மார்பிற்றரித்துங் கொளதமர் சாபந் தரித்தும் மற்றுஞ் செய்துமன்றோ பெரியோரென் றெல்லாராலுஞ் சொல்லப்பட்டார்கள்; ஆகையால் அப்படி அவர்களைப்போல எல்லாராலும் பெரியோரென்று கொண்டாடப்படுதற்கு நமக்கும் ஆசையுண்டாயின் மணந்தங்கிய குழலினையுடைய மடவாரோடு வல்ல வண்ணம் வருந்தியும் பொருந்தி வாழ்மின்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச்
செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி
மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா
மையல்மா னுடர்பொய் மார்க்கவேடத்தே மாய்கின் றாரே.

பொழிப்புரை :

மகளிர் ஊடின காலத்து அவ்வூடலை நீக்கி அவரோடுங் கூடி, தாமரையினது சிவப்பை ஒப்பழித்த பாதத்தைச் செம்பஞ்சூட்டி அவரதடிகளாற் றமது காயமெங்கும் புனைந்து கொள்ளும் வேடத்தினிற்பவராகிய உலகாயத ருண்மையிற் கூடாத மயக்கத்தையுடைய மானுடர், பொய் வழியாகிய தவவேடத்திற் புகுந்து மாயாநின்றார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி
நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு
தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே
மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ.

பொழிப்புரை :

மணம் தங்கிய குழலினையுடைய மடவார்களது இரத்தி னத்தினால் அமைக்கப்பட்ட மேகலை பொருந்தின அல்குலென்னுந் துறையின் மூழ்கி சிநேகமிகுதியையுடைய அவரதாம்பல மலர் போலுஞ் சிவந்த வாயினிலூறும் அமுதத்தை நிறையப் பருகி, ஒளி வீசிய மணியினையுடைய மெல்லிய தோள்மீ தணைந்து வாழ்ந்திருந்திடாதே, குற்றஞ் சேர்ந்த மனத்தையுடைய பரசமயிகளெல்லாம் மறுமைப் பயனுண்டென்று அழிவர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி
முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலாமுகிழ்ப்ப மொய்த்த
கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும்
புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே.

பொழிப்புரை :

மதிபோலும் விளங்கும் நுதலினையுடைய மாதரோடுங் கூடி ஒளியையுடைய முன்றிலிற் சென்றேறி, பூரணசந்திரன் ஒளி விட்டு விளங்க அவரது சிவந்த வாயில் நகையொளி தோன்றச் செறிந்த ஒளிமிக்க முத்துவடத்தைத் தாங்கிய முலைக்கண்கள் தமது மார்பகலத்தே மூழ்கும்படி அழுந்திய நுபவித்து நாடோறும் புதுமை தங்கிய நல்லவநுபோகத்தைக் கைவிடுவர், இவ்வழி நில்லாத அவமாய சமயத்தவர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

ஊடுவ துணர்வ துற்ற கலவிமங் கையரை யுள்கி
வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய்
நீடுவ தின்ப முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர்.

பொழிப்புரை :

கலவிபொருந்தின (புதிதாகக் கூடிய) மாதரை நினைத்துத் தம்முடனூடுவதானால் அவரை ஊடல் தீர்ப்பது பொருட்டாகத் தளர்தலும் அவர்களடிகளில் வீழ்ந்து வருந்துதலுமே அரிதாகச் செய்யுந் தவமாம், அப்படித் தவத்தினின்றபின் அம்மகளிரோடுந் தன்னறிவு கெட்டுக் கூடுவது முத்தியாம். இந்திரியங்களெல்லாம் ஒருமைப்பட விருப்பம் நிலைபெறுவது முத்தியின்பமாம் : இவ்வழியில் நின்றவர்களே முத்தராவர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு
காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர்
நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும்
ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே.

பொழிப்புரை :

காணப்பட்ட ஸ்திரீ போகத்தை அநுபவியாது வேறே வீட்டின்பமுளதென்று தடுமாறி மெலியுந் தவத்தைச் செய்வதி யாது? அந்த வீட்டினைக் காட்டினவர்களையும் கண்டவர்களையும் அதனைக் கேட்டவர்களையும் உண்டாகிற் சான்று காட்டீர்? அது காட்டமாட்டீராயின், உலகத்தின்கண் அரசனாக்கினை வழியில் நடந்து நாடோறுந் தேடிய பொருள் கொண்டு இப்பிரத்தியட்சமான இன்பத்தை இவ்விடத்திற் பொருந்துவீர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ
பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக்
கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய்
மெள்ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே.

பொழிப்புரை :

உலகாயதன்மத மறுதலை உலகாயதா ! நீ உலகத்துக் காட்சியே மெய்யென்றும் அனுமான முதலிய பொய்யென்றுங் கொள்ளப்பட்டது என்னை? நீ பிறந்து வளர்கின்ற நாளில் உன்மாதாவினுயிரையும் பிறப்பதன் முன் உன்பிதாவினுயிரையும் கட்புலனாற் காணாத தொழிலைப் புரியும் எமன் கொண்டுபோக நீ இளமை நீங்கியபின் மாதாபிதா நமக்கு உண்டென்று மெல்லக் கருதியநெறி நீ கூறிய காட்சியன்று, அனுமானமே. உண்ணல் கோடல், விரும்பல் கருதல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென்
றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்புனல் ஆறுகொண்
டெடுத்து வந்திட மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று
முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று மொழிந்திடே.

பொழிப்புரை :

மேகம் முழங்கியும் மின்னியும் இருண்டும் பரந்தெ ழுந்தவிடத்து இதனால் மழைபெய்யுமென்று நினைப்புண்டானதும், ஆறு அகில் சந்தன முதலியவற்றைத்தள்ளி அலைத்தொழுகு நீரைக் கொண்டு வந்திட அதனைக்கண்டு பெரிய மலையின்கண் மேகமிருந்து பெய்ததென்று நினைந்து துணிந்ததும், இவையிரண்டும் நீ கூறிய காட்சியன்று அனுமானமென்று கூறுவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

காண்ட லோஅநுமான மாவதும் காட்சி முன்னதும் காட்சியேல்
பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை
மாண்ட வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென்
றீண்டு பூத மியைந்த திவ்வுடல் என்ப தென்பிர மாணமே.

பொழிப்புரை :

அநுமானமென்று கூறப்பட்டதுங் காட்சியே, அது பூர்வக்காட்சி யாகையால் பூர்வக்காட்சியுங் காட்சியென்று நீ கூறில், பூதக்கூட்டத்தினுள் ஓரறிவெழுமென்று கூறியது அநுமானமன்றி யாதுகொண்டு கண்டனை ; அன்றியும், சத்தாதிகளை நல்லபொறியிட மாக நின்று அறியுமென்னும் அறிவுங் காட்சியன்று அநுமான மென்று கொள்வாயாக ; இஃதன்றிப் பிரமாணமு மில்லையென்று கூறுவை ; அங்ஙனங்கூறிற், பூதக்கூட்டத்தின் உருத்தோன்று மென்று கூறியது யாது உன்காட்சியும் அநுமானப் பிரமாணமே யென்று அறிவாயாக.
இவ்விடத்துப் பூதங்களின் கூட்டத்து உடம்பாமென்று சொல்லியது அநுமானத்தாலென்க. இலிங்கத்தைக் கொண்டு இலிங்கியை யூகிக்கிற ஞானம் அநுமான மெனப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன்
மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே
அழிவி லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின்
எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே.

பொழிப்புரை :

குற்றமில்லாத வேதமுதலாகிய நூல்கள் குற்றமின்றிச் சொல்வனவுள; அவையெங்ஙன மென்னிற், பூதியின்கட் சோதிட நூலோர் கருதி நிகழ்காலத்தினின்றும் எதிர்காலத்து வினையை முன்பு கூறாநிற்பர்கள். பின்பு அதுவும் அழிவில்லாததாகக் கண்டனம். அவையொழிந்துஞ் சில நூற்பிரமாணத்தினுள்ளபடியை எடுத்துக் கொண்டு இறந்த காலத்தில் வைக்கப்பட்டுப் பூமியின்கண் மறைந்து கிடக்கும் பொருள்களையும் எடுக்கப்படும். அவை நூற்பிரமாணமே யென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக்களாய்
ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும்
காத லோடு கடாதி மண்கொ டியற்று வோருளர் கண்டனம்
சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே.

பொழிப்புரை :

பூதம் நான்கும் அழியாத இயல்புடைத்தென்று கூறிய தென்னை? பூதக்கூட்டத்தில் உருத்தோன்றுதலுங் கெடுதலு முண்டாதலால் இவை நித்தமன்றி இவை கூட்டுவான் ஒரு கர்த்தா வேண்டும்; அஃதென்போல வென்னில், நீ உவமை கூறிய கடாதிகளையும் மண்ணைக்கொண்டு உண்டாக்குவானைக் காண்டலால், நீரிடமாகக் குமிழி தோன்றுமாபோல, மனமுதலாயின தோன்றுமென்று கூறினாய் ; குமிழியும் வாயுவாலுண்டாம். ஆகையால், உருவிடத்திலும் மனமுதலானவற்றைக் கூட்டுதற்கொரு கர்த்தா வேண்டு மென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும்
ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும்
தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும்
பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே.

பொழிப்புரை :

நீரின் கண்ணே தோன்றுங் குமிழியும் நீராமாறு போல, விளங்கிய பூதங்களும் விசாரிக்குமிடத்து வேறாக அறியும் அறிவாகாது, அவை காயபூதமேயாம். அன்றியும் ஆராயும் வழி நூறுங் காயும் அடையுங் கூடி அவை கலந்தவிடத்து ஒரு சிவப்புண் டாமாறுபோலப் பூதங்கூட்டத்தின் ஓரறிவெழுமெனக் கூறியது, பூமியிடத்துச் சிவப்புச்சேர்வை நீங்காது, அச்சேர்வை போலப் புத்தியும் அவ்வுடலைவிட்டு நீங்காதாக வேண்டும். அங்ஙனமன்றி உடல்கிடக்கப் புத்தி நீங்குகையால் நீ கூறியது பழிப்பாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே
வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென்
நூறு காயடை கூடும் வேறொரு வன்றனாலென நோக்கிநீ
தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்தனென்று தெளிந்திடே.

பொழிப்புரை :

நூறுங் காயும் அடையுமென்று கூறப்பட்ட சேர்வையின் கண் வந்த விடத்துச் சிவப்பெனும் ஒரு தன்மையே காணப்படும். அப்படி ஒரு தன்மையேயாகாது புலனென்றும் பொறியென்றும் குணங்களென்றும் தனித்தனி உடற்கண் வந்துண்டாகிய தென்னை? அஃதன்றியும், நூறுங்காயும் அடையுஞ் சிவப்பேறக் கூட்டுதற்கு ஒருவன் வேண்டுமென்பதனை நீ கருதியது போலப் பூதச்செயற்கும் ஒருத்தன் வேண்டுமென்று நிச்சயமாகத் தெளிந்திடுவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய்
ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல்
வானின் வந்திடும் மாதர் ஆண்அலியாகி மானுடர் ஆதியாய்
யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே.

பொழிப்புரை :

சிலம்பியிடத்து நூல்தோன்றுமாபோல முன்பில்லாத வையான ஐம்பொறி உணவு துயில் பயம் மைதுனம் முதலியவை காயத்தின் குணமாக இப்போதுண்டாமென்று நீ சொல்லில், மாதர் ஆண் அலியாகியும் மானுடராதியாகியும் ஆகாயத்தினின்றுந் தோன்றல் வேண்டும்; பூதக்கூட்டம் ஒரு தன்மையாகலான் மிருகபசு பட்சி தாபராதிகளாகிய யோனிபேதமும் இல்லையாம் ; ஆகையால், நீ கூறியது பொருளன்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின்
வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம்
புந்தி யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சி தான்
தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா.

பொழிப்புரை :

நீ முன்பில்லையென்று கூறிய கன்மம் இல்லையாயின் யோநிபேதமும் இல்லையாய் அவ்வியோநிபேதங்களின் உண்டாம் உடலங்களின் இந்திரியங்களும் ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்றென்னும் அறிவுகளும் இல்லையாம். அவை யன்றியும், புந்தியால் அறியும் அக்ஷரங்களும் புசிப்புகளும் குணபேதங்களும் பூதக்கூட்டந் தரமாட்டா. இந்திரியம் மிகவாகவும் குறைவாகவும் சாதிபேத மாகவும் குணபேதமாகவும் பேதித்திட வந்தவாறு கன்மந்தந்தவா றென்று அறிவாயாக. (முன்னர் வன்னம் ஜாதி, பின்னர் வன்னம் அக்ஷரம்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

அறிவு பூதம தென்னில் வேறு புறத்த றிந்தமை கண்டிலம்
செறிவு தான்உடலத்தெ னில்சவ மான போதுடல்தேருமோ
குறிகொ ளாதுடல் வாயுவானது கூடிடாமையின் என்னின்நீ
பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே.

பொழிப்புரை :

பூதங்களே அறிவாமென்று நீ கூறில், புலப்படக் காணப்பட்ட மண்ணிலும் நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் அறிவு கண்டிலமன்றோ, உடலிலே செறிந்தபோதுகாண் தோன்றுவ தென்னிற், சவமாய்க் கிடந்தகாலத்தே அறிவுகண்டதில்லையே, அறிவு குறிக்கமாட்டாது காண். உடலின் வாயுப் பிரிந்தவாறே யென்று நீ கூறில், அந்த வாயுவானது உறக்கத்திலே பிரியாதுநிற்க அறியாமல் நிற்பானேன்? ஆகையாற் பூதக்கூட்டத்தே அறிவுதோன்றாது. வேறோரறிவுண்டென் றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

அறிவு டற்குண மென்னில் ஆனைய தாதி அந்தம் எறும்பதா
உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே
சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும்
பெறுமுடற்சிறிதாவ தென்பெரி தாவதென்சில பேசிடே.

பொழிப்புரை :

அறிவென்று வேறொரு முதலில்லை உடற்குணமே காண் அறிவென்று நீ கூறின், ஆனைமுதல் எறும்பீறாக எடுத்தவுடலிற் பெரிதானவற்றின் உதிக்குமறிவு பெரிதாயுஞ் சிறிதானவற்றின் உதிக்குமறிவு சிறிதாயுமிருக்க வேண்டும். அங்ஙனமன்றி, பரிணாமத் தையுடைய யானையுடற்கு அறிவு சிறிதாயும் சிறியவுடலை யுடைய மானுடற்கு அறிவு பெரிதாயுமிருப்பதென்? ஆகையால் அறிவு உடற்குணமன்று ; வேறு நீ சொல்லத்தக்க துண்டாயிற் சொல்.
சரீரம் வளருந்தோறும் அறிவு வளரவும் அது கெடுந்தோறுங் கெடவுங் காண்டலானும் சரீரத்தைப் பிரிந்து சேதநனிற்கக் காணப்படாமையானும் சரீரகாரியமென்னிற் பிருதிவிசேடணமாகிய இந்தனம் பெருகுந்தோறும் பெருகிச் சுருங்குந்தோறுஞ் சுருங்கி அதனில் வேறுபடப்படாதாகி இந்தனமில்லாதவழி யில்லையாகின்ற அக்கிநி இந்தனகாரியமாகி இந்தனத்துடனொன்றாகாவாறு போல, அறிவு சரீரகாரியமாகிச் சரீரத்துடனொன்றாகாது. அன்றியும் அறிவு மகாசரீரவானில் அற்பசரீரியாயினான் சகலசாத்திர ஞானமுடையனாகக் காண்டலிற் சரீரவிருத்தியாற் சேதனத்துக்கு விருத்தியில்லையெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

போத மும்மெலி வாகி யும்மலி பூத மானவை கூடலிற்
பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின்
ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும்
நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே.

பொழிப்புரை :

அற்றன்று, உடற்குணமேகாண் அறிவென்றது, பூதமானவை கூடுங்காலத்துப் போதமெலிவாகியும் பூதமலிவாகியுங் கூடலில் அறிவு சிறுத்துக் காயம் பெருத்ததென்றும், போதமலி வாகியும் பூதமெலிவாகியுங் கூடலில் அறிவு பெருத்துக் காயஞ் சிறுத்ததென்றும் நீ கூறின், பூதக்கூட்டத்தாற் றோன்றுமென்று நீ கூறியவுடல் பெரிதானவுடல் சிறிதாயிடாது, சிறிதானவுடல் பெரிதாயிடாது, முன்னமுள்ள முறைமைப் பாட்டில் நிற்கவேண்டும். அங்ஙனம் நில்லாது பெரியவுடல் காலஞ்சென்றாற் சிறிதாயுஞ் சிறியவுடல் காலஞ்சென்றாற் பெரிதாயும் இருத்தலாற் பூதக்கூட்டத்தில் அறிவு தோன்றுவதன்று; கன்மத்துக்கீடாக வடிவெடுத்துக் கோடலாமென்று கருதுவாயாக. (நீடுதல் நிலைபெறுதல்).

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணொ டாணிரு தன்மையாஞ்
செயல்கொ ளாஇவர் செய்தி காரணமாக வந்து செனிப்பதென்
இயல்ப தாமுடல் பூத காரியமாவ தும்மில்லை யாகுமால்
மயல தாம்வினை யாலொ ருத்தன் வகுத்த தன்மையின் வந்ததே.

பொழிப்புரை :

கன்மம் உடலாக எடுத்துக் கோடற்கு அறிவில்லை; இவையெல்லாம் பூதஇயல்பென்று நீ கூறின், இயல்பு ஒரு தன்மைப் பட்டிருத்தலன்றி வேற்றுமைப்படப் பொருந்தி இரண்டு தன்மையாகிய பெண் ஆண் என்னும் முறைமையைக் கொள்ளாது. இஃதன்றியும், பூதகாரணமாகில் இரண்டு தன்மைப்பட பெண்ஆண் என்னும் முறைமை காரணமாகப் பிறப்பதென்னை? ஆகையால், இயல்பாமென்றவுடல் பூதஇயல்புமன்றாய்ப் பூதகாரியமாவது மில்லையாம். அதனால், நீ கூறியது மயக்கத்தை யுடைத்தாம். கன்மத்துக்கீடாக ஒருத்தன் உண்டாக்கப்பட்ட தன்மையிலே வரும் உருக்களென் றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

காரணம் அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம்
நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம்
போர ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும்
நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே.

பொழிப்புரை :

உருக்கட்குப் பெண் ஆண் செய்தி காரணமென்று நீர் கூறியதென்னை? மண்ணின்கட் கடாதிகள் தோன்றுமாறு போலப் பூதகாரணத்திற் பெண் ஆண் காரியப்பட்டுத் தம்மிற்கூடிய கூட்டத்தே உருச்சமைந்திடுமென்று நீ சொல்லுகிற இதனையாங் கொள்ளோம். அஃதெங்ஙன மென்னில், நீ கூறிய பூதங்கள் நான்குந் தம்மின் மாறுபடும் ஆதலால், அன்றி அவை மறுதலையாகாமற் கூடுமாயின் நீருந் தீயும் ஓரிடத்திற் கூடிநின்ற தன்மையை உன் காட்சியளவையிற் கண்டதுண்டாயின் வருந்தியுஞ் சொல்வாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல்
காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி காரண மாவதென்
ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்
நாதன் நாயகி யோடுகூடி நயந்த காரணம் என்பரே.

பொழிப்புரை :

பூதக்கூட்டமே பொருந்தப்பட்ட காயத்துக்குக் காரணமாயின், பெண் ஆண்கள் காதலோடு புணரும் புணர்ச்சி காரணமாக உருக்கள் காரியப்படுவானேன்? அங்ஙனமானது, அநாதியே கர்த்தா நாயகியோடு கூடிப் போகத்தை விரும்ப அதுகாரணமாக ஆதியே உலகின்கண் ஆண் பெண் காரியப்பட்டு அதுகாரணமாக உருக்கள் காரியப்பட்டு வருதலின்றிப் பூதக்கூட்டங் காரணமெனப் படாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை
சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர்
தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும்
சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் வேறு டற்கிலை தேறிடே.

பொழிப்புரை :

புனலானது சந்தனாதிகளைக் கூடிக் குளிர்ந்தும் நெருப்பைக்கூடி வெப்பங்கலந்து மிருத்தலால் அஃதென்னை கன்மஞ் செய்தது ; ஆதலாற் கன்மமில்லையென்று கூறினாய், நீ உவமங்கூறிய நீர் சந்தனத்தையுந் தழலையுஞ்சார அவ்வொரு பொருட்கு இரண்டு தன்மையுண்டானவாறு விசாரிப்பாயாக. கன்மம் இரண்டு வகைப்படப் பொருந்திச் சுகதுக்கங்களைக் கொடுக்கும். அந்தச் சுகதுக்கங்களை உற்றறிந்திடுவது சேதநமான உயிருக்கல்லது அசேதநமான உருக்கட் கில்லையென்றறிவாயாக. தந்த கன்மமாவது முன்ஜநநத்தில் அறிவுண்டாக்கிக் கொண்டதாய்ப் பின்ஜநநத்தில் வந்து கூடிய கன்மம். சிந்தியா வெழுசீவனென்றது சுகதுக்கங்களுக்குப் பிரியாப் பிரியப்படுதலை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென்றிடில்
துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல்
முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந்
தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்கமைப் பொடநாதியே.

பொழிப்புரை :

நீ ஸ்திரீகளுடன் கூடிப் போக இன்பத்தை அநுபவித்திருந்தும் அது இயல்பொழியக் கன்மமில்லையென்று கூறில், அந்த ஸ்திரீகள் நீங்கினவிடத்துத் துக்கப்படுவானேன், இஃது எத்தால் வந்ததென்று சொல்லவல்லையாகிற் சொல்லுவாயாக : ஸ்திரீகளுடன் கூடிப் போகத்தை அநுபவிப்பதும் அவரைநீங்கித் துன்பத்தை அநுபவிப்பதும் நீ முன்செய்த புண்ணிய பாவங்களென்று அறிவாயாக. அந்தப் புண்ணியபாவங்களுந் தாமாக அணைவதல்ல, கர்த்தாவானவன் அவைகள் செய்த கன்மத்துக்கீடாக அறிந்து அநுக்கிரகத்தாலே யூட்டுவன். அறிவுங் கன்மமும் அவற்றைக் கூட்டுதலும் அநாதியே யுள்ளன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

அநாதி யேலமை வின்றெ னின்மல மாயை கன்மம் அணுச்சிவன்
அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா
அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து)
அநாதி யாதி அமைக்கவேண்டும் அமைப்பி னோடும் அநாதியே.

பொழிப்புரை :

நீர் கூறியவை அநாதியேயாமாகில் ஒருவன் கூட்டுத லில்லையென்று கூறின், மலமும் மாயையுங் கன்மமும் ஆன்மாவுங் கர்த்தாவும் அநாதி, கன்மத்தை ஆன்மாக்கள் செய்ய அந்தக் கன்மந் தானாயறிந்து ஆன்மாக்களுக்கு உருவையெடுத்துக் கூட்டமாட்டாது, அநாதியே காரியப்பட்டு வரும் உடல்கள் அசேதனமாகையால் ஆன்மாவையறிந்து கூடமாட்டாது. ஆகையால் அநாதியாகிய கர்த்தா ஆன்மாவையும் கன்மத்தையும் அதற்குப் பொருந்தின வுருவையும் ஆதியாகக் கூட்டல் வேண்டும். அப்படி அவன் கூட்டின கூட்டரவும் அநாதியாகையால் இவையும் அநாதிதான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டிடாமையின் இன்றெனில்
காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே
காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக்
காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே.

பொழிப்புரை :

புறக்கரணங்களுக்கு உயிர்காணவொண்ணா தாகையாற் காட்சிக்குப் புலப்படாமையின் ஆன்மாவென்றொன் றில்லை யென்று கூறின், சரீரமானது தன்னைக் கண்ட கண்ணைத்தான் காணவற்றோ? அச்சரீரத்தைக் கண்டு நிற்பதுங் கண்ணுக்குள்ள தொழிலேயாம். காட்சியளவையாகிய கண்ணுக்குக் காணவொண்ணாதென்ற உயிரும் இத்தன்மைத்து; உயிர் சேதனமாகையாற் கரணங்களைக் கண்டு நிற்கும் ; கண்களைச் சரீரம் அறியாதவாறு போலக் கரணங்களும் அவ்வான்மாவைக் காணவொண்ணா ; ஆகையால் ஆன்மாவை யுண்மையாக உண்டென அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும்
பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து)
எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீபமான தெரிந்திடும்
அங்க தாம்உடல் நின்ற கன்மம் அருந்தி யாருயி ராவதே.

பொழிப்புரை :

நெருப்பானது ஓரிந்தனத்தைப் பற்றிநின்று தன்வடிவைக் காட்டுந் தன்மையன்றித் தனித்து நின்று தன்வடிவைக் காட்டுந் தன்மையை யுடைத்தன்று; அதுபோல், ஆன்மாவும் ஓருருவைக் கூடியன்றி நிற்கமாட்டாது, தகளியெங்கும் நிறைந்த எண்ணெயைப் பருகி ஓங்கிய தீபமானது எரியா நிற்கும், அப்படிக் கன்மத்தால் எடுத்துக் கொண்ட காயத்தினின்றுங் கன்மத்தைப் புசிப்பது ஆன்மாவாம். திரி காயத்திற்கும், எண்ணெய் கன்மத்திற்கும், தீபம் ஆன்மாவிற்கும் உவமை. பங்கியாது அழியாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின்
அறிவு முன்புள திங்குவந்தும் அறிந்தி டாமைய தின்றெனின்
அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந்
தறியு மவ்வறி வோம யக்கறி வாத லாலறி யாதுகாண்.

பொழிப்புரை :

அறிவானது இவ்வுடலத்தின் வேறுபட்டு இறந்தும் பிறந்துந் திரியுமாயின் அவ்வறிவு முன்புள்ளதாயின் இப்பிறப்பினும் அறியாமையின்றி அறிவேயாயிருக்க வேண்டும். அஃதில்லையே யென்று நீ கூறின், நீ கனவு காணுமிடத்தே அக்கனவை நனவென்ப தன்றிக் கனவென்பதறிதியோ? அஃதன்றியும், நீ மாதாவுதரத்தில் முன்னிருந்தறிந்த அறிவோ பூததேகமானபின்பு மயங்கின அறிவு. ஆகையால் இறந்தும் பிறந்துந் திரிகையால் ஆன்மாவுக் கறியாமையே குணமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின்
உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்குதித்திடு மாறதோர்
பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின்
மறத்தி டுங்கன வத்தின் வேறுடல் வந்தவாறு மதித்திடே.

பொழிப்புரை :

இறந்த அறிவே பிறக்குமென்று இவ்விடத்துக் கூறியது பொருத்த முடைத்தன்றென்று நீ கூறின், நீ துயில்செய்யுமிடத்து முகத்திற் பாம்பேறவும் அறிவின்றிக் கிடந்து விழித்தவிடத்து உணர்வினின்று பாம்பைக் காணவும் பயப்படுமாறு விசாரிப்பாயாக. இப்போதெடுத்துக் கொண்ட காயங் கெட்டாற் பின்பு மற்றொரு காயமுண்டாம்படி எப்படியென்று சொல்லின், நனவை மறந்திடுங் கனவில் உன்னை யெடுத்துக்கொண்டு திரியும் உடல் உன்னைக் கூடியவாறு எத்தன்மை அத்தன்மையாக என்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம்
மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல்
கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும்
தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே.

பொழிப்புரை :

ஒருவன் மரணமானவிடத்தே இந்திரியங்கள் கெட்டுப் பின்பு அவைவரு முறைமைப்பாடு எத்தன்மைத் தென்னில்? ஒருவன் மூர்ச்சித்த விடத்துக் கரணங்கள் வாயுவிடத் தொடுங்க அவ்வாயுவுஞ் சேட்டைகெட்டுப் பின்பு அவன் மூர்ச்சை தீர்ந்தவிடத்து அக்கரணங்கள் சேட்டைப்பட்டாற் போலும். இஃதன்றியும், மதியினது கிரணம் பொருந்தின கலைகள் கெட்டுந் தோன்றியும் வருதலை மதிக்கும் இறப்பும் பிறப்புமாகக் கூறாநிற்பர்கள் உலகத்தார் ; அதுபோல, ஆன்மாவுக்கும் இப்படிக் கூறுவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும்
ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே
பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில்
கோதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே.

பொழிப்புரை :

நீ கூறிய பூதங்கள் காரியப்பட்டுப் பொலிவினை யுடைத்தாய்ப் புசிப்பளவு நிலைபெற்று மீளவும் அழியா நிற்கும் ; ஆதலால், இவற்றை ஆக்கியும் அழித்துஞ் செய்வான் ஒரு கர்த்தா வுண்டென்று அறிவாயாக. மண்ணினிடத்துக் கடாதிபேதம் வந்தாற்போலப் பூதகாரியமே காயமென்னில், அம்மண்ணுங் குற்றமில்லாத குலாலனது செய்கையாற் காரியப்பட்டாற்போலக் கர்த்தாவினுடைய செய்கையாற் பூதமும் காரியப்பட்டதென்று அறிவாயாக. ஐயனே என்றது இகழ்வின் கண் வந்தது. அசேதனமாகிய மண் சேதனனாகிய குலாலனாலே காரியப்படுமாபோலப் பிரபஞ்சம் ஈசுரனாலே காரியப்படுமென்று அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால்
தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்மை செய் தொண்டனுக்(கு)
ஆத லாலடி யார்க ளுக்கெளி யான டிக்கம லங்கள்நீ
காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே.

பொழிப்புரை :

பிரமாவும் விஷ்ணுவும் இருக்கு யசு சாமம் அதர்வண மென்னு நாலுவேதமும் அறிதற்கரிதாகிய விழுமியபொருள், வலிந்தாட் கொண்ட சுந்தரமூர்த்தி நாயனார்க்குத் தூதனாய்ப் பரவையாரிடத்தே இரவின்கண் இருகால் நடந்த துணைவன், அப்படிப் பிரம விஷ்ணுக்களுக்கு அரியனாயினும் அடியார்களுக்கெளியனாய் எண்ணியவை யிம்மையிலே கொடுக்கத் தக்கவனாகையால், அவனது ஸ்ரீ பாதகமலங்களை நீ விருப்பத்தோடும் வழிபடுவாயாக. விரும்பிய போகத்தையும் இம்மையிலே தருவனாதலால் அவனை மெய்யாகக் காண்பாயாக. வன்மைசெய் தொண்டனென்பதற்குக் கர்த்தாவை ஏவல்கொள்ளுந் தொண்டன் எனினும் அமையும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா
மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள்
புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம்
என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே.

பொழிப்புரை :

பொன்னால் விளங்கப்படாநின்ற மணிகள் அழுத்திய அணிகள் மலத்திடை விழுந்தால் அம்மலத்தின் அசுத்தத்தாற் கையாலெடுத்தல் பொருந்தாது. அதுபோல, உலகத்து மின்போல நுடங்கின இடையையுடைய மகளிர்பால் மிக்க விருப்பமும் செயற்கை மண நீங்கினாலுண்டாகிய அசுத்தமிகுதிகண்டு ஆசையை விடத்தக்க பொருளாம். அஃதென்போல வென்னில், புல்லிதாய இரத்தமல மூத்திராதிகள் முதலானவை கசிந்து மிகவுந் துர்க்கந்தத்தையுடைத்தாகிய பொல்லாக்காயமாகையால், இம்மல மூத்திராதிகளில் என்ன பெறுதற்கு விசாரித்து இவர்களிடத்து விருப்ப முண்டாவது இதனால் யாதுண்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 48

தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ
ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுக்கி னோடு புழுக்குழாம்
நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம்
சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே.

பொழிப்புரை :

துவக்கு உதிரம் மாம்சம் மேதை அத்தி மச்சை சுக்கில ஜலம் இவையிற்றினாலே எடுத்துக்கொண்ட துர்க்கந்தமாகிய காயம், அன்றியும் ஊத்தையுடன் கிருமித்திரள் நூலொழுகுங் கோழை ஈரல் இவைகளாற் பொங்கி நுரைக்கும் மூத்திரபாண்ட மாதலால் அப்படிப்பட்ட காயத்தையுடைய மகளிர்; சேலிரண்டு அடுத்தாற் போலுங் கண்ணையுடையாரென்று சொல்லுவது எதனாலென்று விசாரிப்பாயாக; விசாரிக்குமிடத்துச் சர்வமு நிச்சயமாக மலத்தொகுதியாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 49

ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின்
றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம்நீ
மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண்
ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே.

பொழிப்புரை :

அறிவின் மகளிரோடு நீ சுகமுறுவது ஆசை மிகுத்துத் தடுமாறும் பன்றிகள் மலத்திற்புக்கு அதனைப் புசித்து அதனிற் புரண்டு மிகவுஞ் சுகத்தையடைந்தனவாய் நிற்பனபோலும். அங்ஙன மன்றியும், கர்த்தாவுக்கு அடிமைத்திறஞ் செய்து யாங்கள் பெறும் இன்பமாவது குற்றமற்று விளங்கும்படியாய் அழியாததாய் நின்மலமாயிருக்குஞ் சிறப்பினையுடைத்தாகிய இன்பசமுத்திரமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 50

குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார்
அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார்
பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ
விராவுமெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இது மெய்ம்மையே.

பொழிப்புரை :

கோபமிகுதியை இயல்பாகவுடையார் பொறையினா லுண்டாகிய நன்மையையறியமாட்டார் ; ஆசையே தமக்குக் குணமாக வுடையவர்கள் அவ்வாசையை அறுத்தவர்களுக்குண்டாகிய சுகத்தை அறியமாட்டார்கள்; அவர்களைப்போல நீயுஞ் சிற்றின்பமாகிய ஸ்திரீ போகத்தைக் கைக்கொண்டு பேரின்பமாகிய பிரம்மாநந்தத்தை அறியாய் அஃதறிய விரும்பின், இந்திராதி தேவர்களாற் பரவப்பட்ட பிரம விஷ்ணுக்களாற் போற்றி செய்யப்படுஞ் சுத்தமான பரைக்கு மேலானவனது ஸ்ரீபாதங்களை நீ பற்றுக்கோடாகக் கொள்வாயாக ; அதனால் அப்பொழுதே உன்னுடைய சரீரந்தன்னிலே ஒருகாலும் நீங்காத சுகம் பிரகாசிக்கும். இது சத்தியம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 51

காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால்
தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும்
நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த போது தருஞ்சுகம்
சேம மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே.

பொழிப்புரை :

காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் இடும்பை அகங்காரம் என்கின்ற இவையிற்றைச் சுகமென்று கொண்டாய் அஃதெத்தன்மை யென்னில், குளிர்மிக்க காலத்து வெப்ப விருப்பத்தால் புகைபொருந்தின அழல்கின்ற அக்கினி சுகத்தைத் தருவது போலவும், வெப்பமிகுந்த விடத்துப் புனலென்று பெயரையுடைய நீரின் குளிர்ச்சியை யடைந்தபோது சுகத்தைத் தருவது போலவுமாம். கர்த்தாவினுடைய ஞானமார்க்கத்திலே கூடினால் ஒருகாலும் விடாத இன்பமுண்டாம்; ஆதலால், அதனோடு கூடுவாயாக. காமமாதி யென்றதனால், காமச்சுகம், சாங்கம் உபாங்கமென இருவகைத்து. சாங்கமாவது ஆலிங்கனம், முத்தம், மிடற்றினாலுண்டாம் ஒலிபேதம், நகக்குறி, பல்லிடுகுறி, அங்கதாடநம், அங்குலிமர்த்தநம், சும்பநம் முதலியவுமாம். உபாங்கமாவது அன்னம், வஸ்திரம், பூஷணம், சந்தனம், தாம்பூல முதலியவுமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமோடு பதித்திறம்
எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே
விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள்
முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே.

பொழிப்புரை :

சிவநெறியாற் பேரின்பமெய்துவோர் படிக்கும் நூல்களாவன : வேதாகமங்கள், அவைகளெடுத்துச் சொல்லுஞ் சொல்லாவன : பதிபசுபாசத் திறங்கள், அவர்கள் கிரியையாவன : பரமேசுவரனுடைய ஸ்ரீபாதங்களை வணங்குகை, எப்போதும் அவர்கள் கைவிடும் பொருளாவன : காமக்குரோத முதலானவை ; அவர்கள் வேண்டும் பொருளாவது : மிக்கவருள். ஆகையால் இப்படி மூன்று பதார்த்தத்தையு முற்றுப்பெற நிறுத்தி, மலத்திரயங்களையும் விட்டுக் கர்த்தாவோடு கூடுதல் முத்தியின்பம் ; ஆதலால், நீயும் இச்செயலிலே நிற்பாயாக. இதனுள் நாலுபாதமும் அடங்கியவாறு கண்டுகொள்க. உலகாயதர் மிச்சிரசார்வாகர், இரணியகர்ப்பசார்வாகர் என்றிரு திறத்தார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும்
ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப்
போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச்
சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும்.

பொழிப்புரை :

நீதி சாத்திரத்தைத் தனக்கங்கமாகப் பொருந்திய வேதநூல்நெறியல்லாத அறநெறியாகிய பிடகநூலை நாடோறுமோதி, உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானமென்னும் ஐந்து கந்தங்களின் குணங்களுடையராய், உடலைத் துவராடையாற் போர்த்து, அரசினைத் தெய்வம்போற்பேணி அதன்கீழ்ப் பொருந்தியிருக்கும் பௌத்தர் நால்வகையார்களையும் வைத்து அவர்களில், வருணபேத மறக்காணுஞ் சௌத்திராந்திகன் முன்னே சொல்லாநின்றான். புத்தர் நால்வரினும் வைத்தென்பது பௌத்தர் நால்வரினும் உட்கோளாகக் கொண்டென்க. நால்வராவார் சௌத்திராந்திகன், யோகாசாரன், மாத்திமிகன், வைபாடிகன் என்போர். நீதியார் வேதமாவது லௌகீக தன்மமாகிய சோதிடம், வியாகரணம், சிற்பம், பரதம், சிடிக்ஷ, சந்தசு என்க. நெறியலா அறங்களாவன ஐராத்மவாதமும், அகத்திருவாதமும், ஆகாசம் காலம் திக்கு காரணாத் பாவமுமில்லை யென்றும், குணியும் அவயவியுமில்லை யென்றும் கொள்ளுங் கொள்கை. ஐந்துசீலமாவன அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், பிரமசரியம், சங்கிரகம் என்க. அவ்வைந்து சீலமும் சாரதற்கு சாரணற்கு தேசசீலம், உபசம்பன்னற்கு நூறுசீலம், சுவவீரருக்குக் கோடிசீலம், இப்படி நிலைதோறுஞ் சீலம் பலவாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முனிந்து மற்றும்
பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாகித்
தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான
வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நாத னாவான்.

பொழிப்புரை :

சர்வத்தையுமறிந்து பிரபஞ்சத்திற் பொய் கொலை களவு கள் காமங்களை வெறுத்து, குற்றமில்லாத கிருபையாலே எவ்வுயிர்த் துன்பமுந் தன்னுயிர்த்துன்பம்போற் கொண்டு, தேவர்களுந் தொழுது துதிக்கப்பட்டுவரும் பழைய பிடகநூலாகிய இகழ்ச்சியில்லாத ஆகமங்களை யருளிய புத்தமுனியே கர்த்தாவாவான். பழுதிலா அருளென்பது இராஜ்யத்தைக் கொடுத்தும், பிள்ளைகளைக் கொடுத்தும், தன் கண்ணைக் கொடுத்தும், உதிரமாம்ச முதலாயின புறவுக்கரிந்து கொடுத்தும், வையங்காத்து வந்தவை முதலியன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றால்
கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம்
வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாகித்
தருமவை ஒன்றி ரண்டாய்த் தான்விரிந் தெட்டினாமே.

பொழிப்புரை :

பிடக நூலிற் பொருந்திக் கொள்ளப்படும் அளவையாவன: காட்சியும் அநுமானமும் எனவிரண்டாம். இக்காட்சியாலும் அநுமானத்தாலும் அறியப்படும் பொருள்கள் அறிவும் அறியப்படும் பொருளுமாய் ஒரு மாத்திரையிற் கெட்டுவரும், ஞானஞேயங்களினால் உருவும் அருவும் வீடும் வழக்குமென நான்காகி அந்நான்கும் ஒன்றிரண்டாக விரிந்து எட்டாகத் தரும். கணத்திற்கெடுகை நால்வகை, அவையாவன கெட்டு வர்த்தித்தலும், கெட்டு க்ஷயித்தலும், கெட்டொத்து நிற்றலும், கெட்டுக் கெட்டே போதலுமாம். கணம் தாமரையிதழை அடுக்கி உளியிட்டடித்தால் எட்டிதழறு மெல்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும்
அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின்
மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின்
இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே.

பொழிப்புரை :

உருவினதியல்பு. பூதவுருவத்துடனே உபாதாயரூபமென இரண்டாம்; அருவியல்பு சித்த அருவென்றுங் கன்ம அருவென்றும் இரண்டாகும்; வீட்டினது பொருந்தினவியல்பு குற்றவீடென்றும் கந்தவீடென்றும் இரண்டெனப்படும்; வழக்கு இரண்டியல்புள்ளது; அவை உள்வழக்கென்றும் இல்வழக்கென்றும் வழங்கப்படும் சொல்லுமிடத்து. இயல் இயல்பு. உபாதாநம் உபாதாயமென்றும் பேராம். உபாதாயம் பற்றப்படுவது. உருவியல்பாவது சைதன்னிய ரூபமென்றும் அசைதன்னிய ரூபமென்றும் இரண்டு வகைப்படும். சைதன்னிய ரூபம் பதினெட்டுக்கூடியது. அவை, பஞ்சேந்திரியங்களும் அவற்றின் விஷயங்களும் ஸ்திரீ பும்ஸகமான பாவரூபமிரண்டும் இருதய மொன்றும் ஆகாரரூபமும் பூதநாலுமாம். அசைதன்னியரூபம் முன்சொன்ன எட்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம்
எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி
உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக்
கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றல் காணே.

பொழிப்புரை :

பூதவுருவாவது பிருதிவி அப்பு தேயு வாயு என நான்காம்; உபாதாய ரூபமாவது கடினம் கந்தம் இரதம் வன்னம் என நான்காக எண்ணத்தகும். எட்டுங் கூடியவிடத்தில் யாதொரு பொருளுண்டாயது அஃதுருவாம். இவை புலன்கள் பொறிவழியோடியறிய அதனைக்கண்டது சித்த அருவாம் ; அப்படிக்கண்ட பொருளை நன்றென்றுந் தீதென்றுங் காண்டல் கன்ம அருவாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைத்த லாகும்
மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த்த லாகும்
சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய்
உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம்.

பொழிப்புரை :

இராகாதி குணங்கள் பொன்றக்கெட்டு முத்தியின்ப மடையாது சேட்டைகெட முத்தியின்பமடைவது குற்றவீடாம் ; உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞான மென்னும் ஐந்து கந்தங்களுஞ் சந்தானத்துப் பொன்றக் கெட்டடைவது கந்தவீடாம்; உள்வழக்கு இல்வழக்கென்று கூறப்பட்ட வழக்கிரண்டும், தொகையுண்மை வழக்கும் தொகையின்மை வழக்கும், தொடர்ச்சியுண்மை வழக்கும் தொடர்ச்சியின்மை வழக்கும், மிகுத்துரையுண்மை வழக்கும் மிகுத்துரையின்மை வழக்குமென ஆறாகி விரியும். அராகாதி குணங்களைக் குறைத்தல் குற்றவீடெனமாறுக. உருவமாதியைந்தையும் மாய்த்தல் மற்றவீடெனமாறுக. உருவமாதியைந் தாவது உருவக்கந்தம், வேதனைக் கந்தம், சஞ்ஞானக் கந்தம், விஞ்ஞானக் கந்தம், வாசனைக் கந்தம் எனப்படும். தொகை கூட்டம். தொடர்ச்சி சந்தானத் தொடர்ச்சி. மிகுத்துரை தோற்றநாசம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி
வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும்
உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று
தருவது தொகையினின்மை வழக்கதாஞ் சாற்றுங்காலே.

பொழிப்புரை :

ஒரு கர்த்தாவென்றுரைக்கப்பட்டவன் உருவ முதலிய ஐந்தோடுங்கூடி வருபவனென்று கூறுதல் தொகையுண்மை வழக்காம் ; உருவ முதலிய ஐந்தையும் ஒரு கர்த்தா அவற்றோடுங் கூடாமல் நீங்கி நின்று உண்டாக்குவனென்பது தொகையின்மை வழக்காம் ; சொல்லுங் காலத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின்
சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை
ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தும் உள்ளா னென்று
தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே.

பொழிப்புரை :

காரணகாரிய மென்னுந் தொடர்ச்சியுடையவாய்க் கால மூன்றென்னும் மயக்கமறக் கெட்டுத்தோன்றும் என்னும்வழித் தொடர்ச்சியுண்மை வழக்காம் ; ஒரு கர்த்தாவே காரண காரியத்தின் தொடர்ச்சியாய் எக்காலத்து முள்ளானென்று சொல்லுவது தொடர்ச்சியின்மை வழக்காம் ; உணர்வினாற் சொல்லு மிடத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

தோற்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும்
மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை
போற்றிய பொருள்கண் கட்குப் போனது போல்மு திர்ந்து
வேற்றுடைப் பட்டதென்கை மிகுத்துரை இல்வழக்கே.

பொழிப்புரை :

தோன்றப்பட்ட பொருள்களெல்லாங் கெடுமென்னும் உத்தரத்தை முன்னர்ச் சொல்லுமது மிகுத்துரையுண்மை வழக்காகும் ; தோற்றியிரடிக்ஷப்பட்ட பொருள்கள் காரியங் கெட்டுக் காரணமாய் நின்றதென்று கூறல் மிகுத்துரை யின்மைவழக்காம். கண்கட்குப் போனதுபோன் முதிர்ந்து வேற்றுமைப்படுகை காரியமழிந்து காரணங்கிடக்கை. மிகுத்துரை மூன்றும் உள்வழக்கு இல்வழக்கு இரண்டினும் வழங்கும் வழியெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு)
உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த
உள்வழக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம்
உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே.

பொழிப்புரை :

முற்கூறிய உள்வழக்கும் இல்வழக்கும் உள்ளது சார்ந்த உள்வழக்கும் உள்ளது சார்ந்த இல்வழக்கும் இல்லது சார்ந்தவுள்வழக்கும் இல்லது சார்ந்த இல்வழக்குமென்னும் நான்கோடுங் கூடி ஆறுவகையாம். அவற்றுள் உள்ளதையுண்டென்பது உள் வழக்காம் ; அது யானைக் கோடுண்டென்கை. இல்லதனை யில்லை யென்கை இல்வழக்காம் ; அது முயற்குக் கொம்பில்லை யென்கை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை
உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை
உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை
உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே.

பொழிப்புரை :

அறிவைச் சார்ந் தறிவுண்டாமென்கை உள்ளது சார்ந்த வுள்வழக்கு ; அறிவுகெட்டாற் பின்பறிவுண்டாகா தென்பது உள்ளது சார்ந்த இன்மைவழக்கு; அறிவு முன்புள்ளதன்றாய்ப் பின்புண்டாமென்பது இல்லது சார்ந்த வுள்வழக்கு; உள்ளங்கையின் மயிருண்டென்பதும் அம்மயிராற் செய்த கயிறுண்டென்பதும் இல்லது சார்ந்த இல்வழக்கு ஆராயின். இவையன்றிச் சார்பு பன்னிரண்டுள. அவையாவன பேதைமை, செய்கை, உணர்ச்சி, உருவருவவாயில், நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத்தொகுதி, முற்றோற்றம், பிணி, மூட்பு, சாக்காடு என இவை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம்
என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா
மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு)
உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே.

பொழிப்புரை :

முற்சொன்ன உரு அரு வீடு வழக்கு என்னும் நான்கும் அவற்றின் விரிவுமன்றி வானமென்றும் ஆன்மாவென்றும் நிலைபெற்ற காலங்களென்றும் திக்குகளென்றும் மனவாக்கிறந்தறியும் ஒரு கர்த்தாவுண்டென்றுஞ் சொல்லுவது நிலையுடைத் தன்றாகையால், இப்படிச் சொல்லும் பொருள்கள் பித்தேறியோ சொல்லா நின்றார்கள், எப்படிச் சொல்லுகின்றார்களென்றறிகிலேம். அவை நிலைப்பட்டனவல்ல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

ஈங்குவான் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம்
தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல்
ஓங்குவான் ஓசைக் காதி யெனிலதங் குருவின் கூட்டம்
நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே.

பொழிப்புரை :

இவ்விடத்துக் கூறப்பட்ட வானென்னும் பொருள் தொழிற்குவாராது, பூதநான்கு முதலாகச் சொல்லப்பட்ட பொருள்களெல்லாவற்றையும் தாங்குதற் பொருட்டு ஆகாசமுள தென்று கூறின் அஃதருவமாதலால் பொருள்களைத் தரிக்கற்பாற்றன்று ; பெரிய வானானது சத்தத்துக்கு முதலென்று கூறின் அவ்வோசையும் உருக்கூட்டத்தன்றித் தோன்றாது, அந்த ஆகாயம் நீங்குதலின்றி எங்கு நின்றதென்று கூறின் அஃதெங்கு மில்லையாம் ; ஆகையால், ஆகாயமென்றொரு பொருளில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும்
ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில்
ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது
கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே.

பொழிப்புரை :

உயிர்கட்கு அறிவுண்டென்று சொல்லின், இந்திரியங்களும் விடயங்களுஞ் சாத்திரங்களுங் கொண்டு அறிவானேன்; அப்படியன்று இந்திரியங்களைக் கலந்தும் புலன்களைப் பரிசித்துஞ் சாத்திரங்களைப் பொருந்திநின்றும் அறிவனென்பையாகில், இருளினிடத்துப் பச்சை சிவப்பென்னும் வன்னங்கிடக்க அவற்றைத் தொட்டுந் தீண்டியும் கலந்தும் அறியாமற் கிலேசமுற்று என்னோ என்னும் ஐயங்கிடத்தலாற் கூறியது குற்றமுண்டு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி
அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக
அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை
அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே.

பொழிப்புரை :

இந்திரியங்களில்லையாயின் உயிர் ஒன்றையும் அறியமாட்டாது; இந்திரியங்கட் கறிவில்லையாதலால் அவ்விந்திரியங்கள் ஐந்தையும் பற்றிநின்று அறிந்திடுமறிவு உயிர்க்குண்டென்று கூறில், உயிரறியுமாயிற் புலன்களைந்தாலும் அறியும் அறிவை ஒருபுலனாலறியவேண்டும். அற்றன்று, உயிரறியுமிடத்துப் பொறிகளின் வழிகளிலே நின்றும் அவ்வவற்றின் புலன்களாகிய குணங்களை அறியுமெனக் கூறின், உன்னை ஆன்மவாதி யென்றறிந்தோம் ; நீ சார்பிற் றோன்றுமென்கையாற் புத்தனானாய் ; இஃதறிந்திலோம் ; நீ உயிரறியுமென்று சொன்ன தழகிது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல
ஆனதிங் கறிவோ அன்றோ அன்றெனில் அவனி போலும்
தானதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப்
போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே.

பொழிப்புரை :

அறிவும் அறியப்படும் பொருளும் அன்றி அறியும் பொருளுண்டென்று இவ்விடத்திற் கூறில் அதற்குண்டாய தறிவோ அறியாததோ, அறிவில்லாததென்று சொல்லின் மண்போலும் அசேதநமாம். அறியும் பொருள்தான் அறிவென்று கூறின் பருப்பாற் கூட்டிச் சமைத்த சோற்றுக்கு அப்பருப்புச் சோறுதானே கறியென்று கூறிய தன்மைத்தாகும். இதனுட் பருப்புச் சோறென்று அதற்குப் பெயராயிருக்கக் கறியும் பருப்புச் சோறென்பது புனருத்தியாய தோடமாம். அதுபோல ஞானம் அறிவாயிருக்க ஞாதிருவும் அறிவாகலில் தனித்து வேண்டாவென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து)
உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து)
உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும்
உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே.

பொழிப்புரை :

நீ யுண்டென்று கூறிய ஆன்மாவை அருவமென்று சொல்லின் உருவமாகிய வுடலோடு அருவமாகிய ஆன்மா பொருந்தி நில்லாது ; ஆதலால் அருவமன்று, அந்த ஆன்மாவுருவ மென்று கூறின் ஓருருவினோருரு அடங்காது ; ஆதலால் ஆன்மா உருவமன்று; அந்த ஆன்மாவை அணுவென்று கூறின் உடலினில்லாது பல துவாரத்தாற் போக வேண்டும்; ஆதலால், ஆன்மா அணுவன்று, அந்த ஆன்மாவை நித்தமென்று கூறில் அறிவு தோற்றமும் கேடும் இல்லையாக வேண்டும்; இவையிற்றையுடைத் தாகையால், ஆன்மா நித்தமன்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம்
தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின்
மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரி டத்தே
அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே.

பொழிப்புரை :

ஓரான்மா எங்குநிறைந்து நின்றதென்று கூறின் உடல் தோறும் பல பேதப்படுமாகையால் ஓரான்மா எவ்விடத்தும் உண்டாகாது; அந்த ஆன்மா தத்தம் உடல்கள் தோறும் நிறைந்துநிற்குமென்று கூறின் உடல்கெடு மிடத்துத் தானுங் கூடக்கெடவேண்டும். அந்த ஆன்மா உறுப்பிலோரிடத்தைத் தனக்கிடமாகக் கொண்டு நின்றறியுமென்று கூறின் தானின்ற விடமன்றிப் பாதாதி கேசமளவாக அறியமாட்டாது; ஆதலால் அறியும் பொருளாகிய ஆன்மாவில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை
தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென்னில்
போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம்
தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே.சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென்னில் போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம் தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே.

பொழிப்புரை :

முற்கூறிய காலம் இங்கு நின்றபடியெப்படி, பதார்த்தங்களைத் தோற்றுவித்தும் நிறுத்தியும் போக்கியும் நிற்பது காலமென்னில், அந்த மூன்றுவிதப் பொருளுடன் காலங்கூடி மயங்கிடும், அப்பொருட்குக் கேடுவந்தாற் காலமுமின்றாம், பொருள் மூன்றுவிதப்பட்டதன்றிக் காலம் மூன்றுண்டென்று கூறப்பட்டது தெளிவையுடைய இல்வழக்காம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால்
எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத்
தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்வ ழக்குத்
தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே.

பொழிப்புரை :

நீ எனக்குக் கிழக்கிருந்தாயாகில் என்னை மேற்கிருந்தானென்று சொல்லுவை; என்மாட்டு எனக்கு மேற்கிருந்தானொருவன் என்னிடத்து யானிருந்தவிடத்தைக் கிழக்கென்று கூறுவன்; ஆதலால் திக்கிற்கு நாங்கொள்வ தெப்பகுதி? நீ கூறிய கிழக்கையோ அவன் கூறிய மேற்கையோ சொல்லாய்; நீ கூறிய இல்வழக்கிற்கு உளதாம் உள்வழக்கு இல்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின்
உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து)
உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம்
உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டோ.

பொழிப்புரை :

உலகத்தைப் படைத்தவன் ஒரு கர்த்தாவென்று நீ கூறினாய்; இவ்வுலகம் முன்புள்ளதாய்ப் பின்பு படைத்தானாயின் முன்புள்ளதை ஒருவன் படைக்கவேண்டுவதில்லை; இவ்வுலகம் முன்பில்லையாயின் ஒருவன் படைக்கவுள்ளதாகாது; அவ்வுலகினுக்குக் காரணமுள்ளதாய்க் காரியங் கெடுமாதலாற் காரியப்படும் உலகினைப் படைத்தானென்று கூறின், யாதொரு பொருள் உள்ளதும் இல்லதுமாக வுண்டோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின்
மெள்ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது
வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே
தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே.

பொழிப்புரை :

மண்போல உலகிற்கு மூலமுள்ளதாய்க் கடாதிகளைக் குலாலன் தோற்றுவிக்குமாபோல இவ்வுலகங்களை ஒருவனுண்டாக்கினானென்று நீ கூறின், இவ்வுலகத்தை யுண்டாக்குமிடத்து மெல்ல எவ்விடத்து நின்றுண்டாக்கினான்; பிரபஞ்சத்திலே நின்று கர்த்தா வுண்டாக்கினானென்று கூறிற் பிரபஞ்சம் முன்னே உண்டானதாம்; நீங்கப்படாமல் எங்கு நிறைந்து நின்று உண்டாக்கினானென்று நீ கூறின் எங்குமென்பதொரு முதலாய்க் கர்த்தாவைப் பின்பு தந்ததாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில்
கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற
வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம்
பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் கர்த்தாவானவன் இருக்குமிடம் நியமிக்கப்படாமையின் அப்படி யந்நியமான கர்த்தா காருண்ணியத்தினாலே இல்லாததொன்றைப் படைத்தானென்று கூறின், கொலைத் தொழிலைப் பொருந்தின சிங்கத்தையும் புலியையும் யானையையுங் கூற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டு தோற்ற வல்லவனுக்குக் காருண்ணியமென்னோ ; கர்த்தா வல்லவனாகையாலே எல்லா ஆன்மாக்களும் வர்த்திக்கும்படி படைத்தானென்று கூறின், அஃதோர் காரண காரியப்படாமற் பித்தர் செய்யுங் குணமாதலாற் பித்தரையே கர்த்தாவாக வணங்குவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

பெறுவதிங் கென் படைத்துப் பெற்றது விளையாட் டென்னில்
சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின்
உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை
அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே.

பொழிப்புரை :

சர்வான்மாக்களையும் இவ்விடத்துப் படைத்துப் பெறும் பேறென்னென்று ; கேட்டவிடத்துப் பெறும்பேறு விளையாட்டென்று கூறின், உன் கர்த்தா இளவறிவினனாய்ச் சிறுபிள்ளையாக வேண்டும் ; கன்மத்துக்கீடாகப் படைத்தானென்று கூறின், கன்மஞ் செய்வோர் அநாதியாவர் ; இதனை மெய்யாக அறியின், பிரபஞ்ச மெல்லாம் அநாதியே யுள்ளதென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும்
உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும்
உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின்
உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே.

பொழிப்புரை :

உன் கர்த்தா உரூபியென்று சொல்லின் அவ்வுருவத்தை முன்புண்டாக்கினார் வேண்டும் ; அவனதிச்சையாலே உருவத்தை யெடுத்துக் கொண்டானென்னின் உலகத்துள்ளோருந் தமதிச்சையாலே உருவெடுத்துக் கொண்டாராவார்; உருவம் உலகத்திலுள்ளவர்க்கு வருவது அவரவர் கன்மத்தாலென்று நீ சொல்லின் உருவமுடையவர்களெல்லார்க்கும் உருவமுறுவது கன்மத்தாலேயே யாகவேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல்
மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி
பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும்
கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே.

பொழிப்புரை :

உன் கர்த்தா அரூபியென்று கூறில் ஆகாசம்போலச் சேட்டையிலனாகையினால் ஆன்மாக்களைப் பிறவிக் கடலினின்றும் எடுத்திடமாட்டாதவனாவன்; யாவருஞ் சென்றடையத்தக்க நிழல் போல்வனென்னின், அந்நிழல் தன்னிடத்துவந்து மருவினோர்க்கே நன்மையைக் கொடுத்தலால் அவனும் வியாபியல்லன்; ஏகதேசி யாயினும் நிறைந்த அறிவினையுடையனென்று கூறின் விருப்போடுஞ் சிந்தித்தறியத் தக்கதோர் உருவுண்டாதல் வேண்டும்; அப்படி யறியத்தக்க உருவில்லையாயின் அறிவுமில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

எங்கள்நூல் அநாதி யாக இறைவனுண் டென்னு மென்னின்
உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும்
அங்கவன் தன்னை நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே
இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே.

பொழிப்புரை :

எங்கள் நூலாகிய வேதாகமங்கள் அநாதியுமாகிக் கர்த்தாவுண்டென்று சொல்லுமென்று கூறின் உங்கள் நூலாகிய வேதாகமங்கள் சொல்லுவாருமின்றித் தோன்றுமென்பது அழகி தாயிருக்கும்; அவ்விடத்துக் கர்த்தா வுண்டென்று வேதங் கொண்டு அறிந்தன மென்றும் அந்தக் கர்த்தாவைக் கொண்டே வேதங்கேட்கப்பட்ட தென்றுங் கூறின், ஈதிங்ஙனமே மயங்கினது இதனை முன் கேட்டுங் கண்டும் அறிந்தனவல்லவாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம்
பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப்
புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும்
மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே.

பொழிப்புரை :

பூமியினிடமாக நின்று வளரும் மரங்கள் முதற் புல்லீறாகவுள்ளன தாவரங்களாம் : அவை உயிர்வர்க்க மல்லவாய்ப் பிருதிவி யப்புத் தேயு வாயுவென்னும் பூதரூபத்தைப் பொருந்திய பகுதிகளாகப் பலபேதப்பட்டுப் புற்றுப்போலவும் மயிர்போலவுங் கொம்புபோலவும் உண்டாய் வளர்ந்து மீளவுந் தோன்றின முறைமைப் பாட்டிலே கெடும். இஃதியாது காரணமாயுண்டாயதென்னின், அண்டசஞ் சுவேதசஞ் சராயுசமென்னும் மூன்று பேதத்தி லுண்டாகிய ஆன்மாக்களுக்குப் பிரயோசன காரணத்தால் அநாதியே யுண்டாய் வழங்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

கொன்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும்
தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம்
ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ
சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே.

பொழிப்புரை :

தானோர் ஆன்மாவைக் கோறல் ஒருகாலும் நியாயமன்று; மாண்டவெல்லாம் மண்ணோடொக்குமாதலால் ஒருவர் கொல்லப்பட்டவற்றைக் கைக்கொண்டு எப்பொழுதும் புசிக்கலாம், அதனால் தோடமுண்டாகாது; மணங்களாற் கட்டுப்பட்ட நீர் அருமையான வழிகளிலே உண்டாக்கி வைத்தவர்க்குப் புண்ணியமுண்டாயதோ? வழிநடந்து தாகித்துக் குடித்தவர்க்குப் புண்ணியமுண்டாயதோ? சொல்லாய், வைத்தவர்க்கே புண்ணியம் உண்டாமாதலாற் கொன்றவர்க்கே பாவமுண்டாவது, தின்றவர்க்குப் பாவமில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும்
தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப்
பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம்
ஆங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தியின்பம்.

பொழிப்புரை :

மிக்க உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞான மென்னும் ஐந்து கந்தமும் ஒருமைப்பட்டு ஒழுங்கிலே காரியங் கெடக் காரணங் கிடக்குமென்பது மிகுத்துரையில் வழக்குமாய்ப் பந்ததுக்கமுமாம். அவ்விடத்துச் சொல்லப்பட்ட கந்தங்கள் ஐந்தும் நேராகக் கெட்டு வீட்டையடையு மென்பது முத்தியின்பமாம். இனி உருவமாவதெட்டு. அவை பூதவுருநாலு, உபாதானவுரு நாலு. அவை வருமாறு பிருதிவி, அப்பு, தேயு, வாயுவெனு நாலும் பூதவுரு. வலி, கந்தம், இரதம், வன்னமெனு நாலும் உபாதானவுரு ஆக அ. வேதனையாவது மூன்று. அவை வருமாறு குசலாவேதனை அகுசலாவேதனை, குசலாகுசலாவேதனை ஆக ங. குறிப்பாவது ஆறு சோத்திரம், துவக்கு, சக்ஷ, சிகுவை, ஆக்கிராணம், மனம் ஆக சா. பாவனை இருபது : தீக்குணம் க0. நற்குணம் க0. தீக்குணங்களாவன பொய்சொல்லல், கோட்சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில சொல்லல் என வாக்கின் குணம் ச, களவிற்குப் போகுதல், வறிதே தொழில் செய்தல், கொலை செய்தல் எனக் காயத்தின் குணம் ங, கொலைநினைக்கை, காமப்பற்று, ஆசை என மனத்தின்குணம் ங ஆக க0. நற்குணங்களாவன மெய்யுரை, நல்வார்த்தை, இனியனகூறல், பயன்படுசொல் எனவாக்கின் குணம் ச, பள்ளிவலம் வரல், தவம்புரிதல், தானஞ் செய்தல் எனக் காயத்தின் குணம் ங, அருள்நினைவு, ஆசையறுத்தல், தவப்பற்று என மனத்தின் குணம் ங ஆகக0. ஆகப்பாவனை உ0. இவை, மானச வாசிக காயங்களான் வருவனவாம். விஞ்ஞானம் ஆறு. அவையாவன சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், சித்தம் ஆகசா. ஆகப் பஞ்சகந்தபேதம் சங. இதற்கு அவன் வசநம் “எட்டிவை யுருவ மூன்று வேதனை யாறு ஞானம் ஒட்டிய குறிப்போ ராறு செய்கையு மிருப தாகக் கட்டிய பஞ்சகந்தங் கணத்தினிற் பங்க மாகுந் தொட்டநாற் பத்து மூன்றுஞ் சுகதநூற் றுணிவு தானே” என்பதாம். சந்தானமாவது தொடர்ச்சி. அந்தத் தொடர்ச்சி நால்வகையாம். அவை வாயு சந்தாநம், தீபசந்தாநம், தாராசந்தாநம், பிபீலிகா சந்தாநம் என்பனவாம்

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

அழித்திடும் அராக மாதி அகற்றில்நல் லறங்கள் பூரித்து
இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப்
பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித்தெல்லாம்
ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே.

பொழிப்புரை :

நன்மையைக் கெடுக்குங் காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்களை நீக்கி, நன்றான தன்மங்களை நிறையச் செய்து, பொல்லாங்கைச் செய்யும் புலன்வழிச் சேறலைக் கைவிட்டு, துன்ப இன்பங்களை யொழித்துப் புண்ணிய பாவங்களைக் கெடுத்து, பிறராற் பழிக்கப்படாத குற்றமில்லாத நல்வாழ்க்கை எட்டையும் விரித்து, மற்றுந் தோஷங்களானவை யெல்லா மொழித்திடும் ஞானகுணமாவது சமாதியின் உறுதியாம். பழுதிலா வாழ்க்கை எட்டாவன நற்சாட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்க. தீவாழ்க்கை எட்டாவன நற்காட்சி முதலாயினவற்றை மாற்றிக் கொள்க. சமாதியினுறுதி வாழ்க்கை இவையெட்டுங்கெட இருத்தல். இதற்கவன் வசனம் “ சகலமு மான்மாவுங் காரணனுமில்லை, சகலமுமா மநித்தஞ் சார்பாற் பிறவி, வகைவினை யுண்டுபதி பொன்ற மாய்தல், சுகதநூன் முத்தித் துணிவு’’ என்பதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

அனைத்தினையும் உணர்ந்தானெம் இறைவ னென்றிங் கறியாது புத்தநீ அறைந்தா யென்றும்
அனைத்தினையும் அறிந்திடான் அளவி லாமை ஒன்றொன்றா அனைத்தினையும் அறிந்தா னென்னின்
அனைத்தினையும் அளவிறந்த தென்ன வேண்டா அளவிலா ஞானத்தால் அறியின் ஞானம்
அனைத்தினையும் அறியாது கணத்தில் தோன்றி அழிதலால் அறிந்தமையின் றாகு மன்றே.

பொழிப்புரை :

சௌத்திராந்திகன் மத மறுதலை புத்த ! நீ முழுவதையும் உணர்ந்தான் எம்முடைய கடவுளென்று அறியாமற் கூறினாய்; எப்போதும் சர்வத்தையுமுணர்ந்து அறியமாட்டான். பிரபஞ்சபேதம் அளவிட அரிதாகையால், முழுவதையும் ஓரொன்றாக அறிந்தானென்று நீ கூறின் அப்படி அறியுமிடத்துச் செலவு கலப்பு நீக்கத்தால் அறிய வேண்டும்; ஆதலால், அதனை யளவிறந்ததென்று கூறவேண்டாம்; எல்லையில்லாத ஞானத்தால் அறிந்தானென்று நீ கூறின் உனது ஞானம் அனைத்தினையும் அறியமாட்டாது. அஃதியாங்ஙனமென்னில் ஒரு மாத்திரையில் அறிவு தோன்றிக் கெடுமென்றும் நீ கூறுகையால் அனைத்தினையும் அறிந்தானென்கை யில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

சிலபொருளை அறிந்தவற்றின் திறத்தே யொட்டிச் சிந்திப்பன் எப்பொருளும் என்னிற் சென்று
பலபொருளாய் ஒன்று பல பேத மாகிப் பயின்று வருமாதலாற் பார்க்குமாறென்
உலகுதனில் ஒருபொருளங் குணரும் போதின் உற்றுணர்தல் ஆராய்தல் தெளித லுண்டாய்
நிலவுமத னால் உணர்வு பன்மை முன்பின் நின்றிடா தென்பையெல்லாம் நினைப்ப தெங்கே.

பொழிப்புரை :

பிரபஞ்ச பேதத்திற் சிலபொருள்களை அறிந்து அவற்றின் பகுதியிலே எல்லாப் பொருள்களையு மொட்டிச் சிந்திப்ப னென்று புத்த ! நீ கூறின், அறிவாலறியும் பொருள் பலவாகச் சென்று அவற்றின் பலபகுதியாகிப் பொருந்தி வருமாகையால், ஒன்றைக் கொண்டு அவற்றின் பேதமறியுமாறெங்ஙனம்? அன்றியும், பிரபஞ்சத்தில் ஒருபொருளை யறியுமிடத்துக் கூடியறிந்தாராய்ந்து தெளிதல் வேண்டுமாதலால் ஒன்றையறியும்போது பலபேதப்படுகையாலும் நீ முன்புண்டான அறிவு பின்பில்லையென்று சொல்லுகையாலும் ஒருபொருளையறிந்து அதனோடு மற்றொரு பொருளைச் சேர்த்தறியுநெறி யாண்டுள்ளது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

முத்திநிலம் கண் டறங்கள் மொழிந்தா னாயின் முதல் முழுதும் பொன்றிப்பின் மொழிந்த வண்ணம்
ஒத்திடுந் தேன் நெய்கூட்டி உண்டிறந்தோன் ஒருவன் உலகினில் வந் திதுதீதென் றுரைத்தால் ஒக்கும்
செத்ததுபின் னென்றுரைக்கில் கதியில் செல்லாத் தேரனுரை நீர் பெருகிச் சென்றா றாகும்
அத்தி னள வறியா திக் கரையோர் தம்மை யக்கரைக்கே செல்ல விடும் ஆசை யாமே.

பொழிப்புரை :

வீட்டிடத்தைக் கண்டு பின்பு அறமுதலியவற்றைச் சொன்னானென்று புத்த ! நீ கூறின் ஒருமுதல் சேரக்கெட்டுப்போய்ப் பின்புவந்து சொன்னதென்னும் முறைமையொக்கும். அஃதென் போலவென்னில், தேனையும் நெய்யையுங்கூட்டிக் குடித்துச் செத்தோ னொருவன் மீளவும் உலகின்கண் வந்து தேனும் நெய்யுங் கூடினது விஷமென்று சொன்ன தன்மைத்து; அறமுதலியவற்றைக்கூறி வீட்டிடத்தைப் பின்பு அடைந்தானென்னில் அவன் முத்தியை அறிந்தவனல்லன். ஆதலால் அவன் கூறிய அறமுங் கதியிற் செலுத்தமாட்டாது ; புத்தன் உரையானது, ஜலமானது பெருகிச் சென்றோடும் ஆற்றின் அளவறியாதானொருவன் இக்கரையினின்றோரை அக்கரையிலே செலுத்திவிடுவேனென்று ஆசைப்படுதல்போலும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே நெருப்பாய துயர்ப்பிறப்பின் நிகழ்ந்து நின்று
பாரோருக் களித்தபடி வலையிற் பட்ட பலகலைமான் கண்டொருநீள் கலைபாய்ந் தோடி
நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா லொக்கும் நீள்பாவக் குழியில்விழு நீர்மை யாகும்
ஆரோவிங் கவனொப்பார் அறத்தை யாக்கப் பிறந்தறமாக் கினனென்னில் அடங்க வாமே.

பொழிப்புரை :

கர்த்தா ஜலமும் அதன் இரதமும்போலச் சர்வான்மாக் களிடத்திலும் நீங்காமல்நின்று இரட்சிப்பனென்னாதே, கொடிதாகிய தீத்தன்மையையுடைய துன்பப்பிறவியின்கண்ணே தோன்றிநின்று பிரபஞ்சத்தார்க்கு அருள்செய்வனென்னுமது, வலையிற்பட்ட பல மான்களையுங் கலைகளையுங்கண்டு அப்பாற்பட்டு நின்ற ஒரு கலையானது இவற்றை யிரக்ஷிக்கவோடித் தவறாமற்சென்று அந்த வலைக்குள்ளே தானுமகப்பட்ட தன்மைபோலும், மிக்க நரகத்திற்செல்லும் வழியாமிதனை, மெய்யே யிரக்ஷிக்கும் வழியென்று சொல்லுகின்ற புத்தனை யொப்பார் யாவர்; அறமுதலியனவற்றை யுண்டாக்க வேண்டித் தான் பிறந்து அறத்தையுண்டாக்கினான் என்னில், சர்வான்மாக்களுந் தருமத்தை யுண்டாக்க வேண்டிப் பிறந்தார்களாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

அலகிறந்த யோனிகளில் புகுந்த தெல்லாம் அறத்தை அளித் திடவென்னில் அவற்றி னெல்லாம்
நிலவுவது கன்மத்தா லாகு மன்றி நினைந்ததோர் இச்சையினால் நிகழ்ந்தானாகில்
உலகுதனி லுள்ளோர்க்கும் அதுவே யாகும் ஒருத்திவயிற் றினிலிருந்தங் குதரந் தள்ளித்
தலமதில்வந் தானென்னில் தாயைக் கொன்றான் தருமத்தை யின்றெனக்குச் சாற்றிடேலே.

பொழிப்புரை :

எண்ணிறந்த யோனிகளிற் சாதனனானதெல்லாந் தன்மத்தையுண்டாக்க வேண்டியென்று புத்த ! நீ கூறின், அங்ஙனம் பலயோனிசாதனனானது கன்மத்தாலாக வேண்டும்; அற்றன்று, தான்கருதிய விருப்புக்காரணத்தாற் காயமெடுத்துக் கொண்டா னென்று கூறின், பிரபஞ்சத்திலுள்ளோர் காயமெடுத்துக் கொண்டதுந் தன்மஞ்செய்ய விரும்பி யெடுத்துக் கொண்டதேயாம்; அங்ஙனம் ஆன்மாக்கள்போல யோனிசாதனனானதில்லை; மாதாவின் உதரத்தேயிருந்து அவ்வுதரத்தைப் பிளந்து பூமியின்கண்ணே வந்து அறத்தையுண்டாகினன் என்று நீ கூறின், அங்ஙனம் மாதாவைக்கொன்று அறத்தையுண்டாக்கினான் என்னில், அத்தாயைக் கொன்றான் கூறிய தன்மத்தை இப்போதெனக்குக் கூறுவாயல்லை. புத்தன் பிறக்கிறகாலத்து மாதாவினுடைய வலமருங்குலாற் பிறந்தான். அவளும் ஆறுநாள் குற்றுயிரோடே கிடந்து ஏழாநாள் இறந்தாள். இது புத்தர் மாதாக்களிருபத்து நால்வர்க்கு மொக்கும். இதனை சூசூஉலும்பிலி வனத்து ளொண்குழைத் தேவிவலம்படு மருங்குல் வடுநோ யுறாம லான்றோ னவ்வழித் தோன்றின னாதலி னீன்றோ ளேழாநா ளின்னுயிர் வதைத்தான்” என்னும் விம்பசாரகதை யாற்றெளிக, சூசூமுத்தராம் புத்தர் தோன்றித் தாய்பழுவை முறித்தேவிட்டார் கொத்துவாழ் குழலா ளாகுங் குண்டலகேசி தானுங் கத்திருவாங் கணவனக் காடனையுங் கொன்றிட்டா ரித்துணையா ரிருவரும்வந் திங்ஙனே தவமுரைப்பார்.” இது சித்தாந்தவசனம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

அரியினொடு நரிஉழுவை ஆதி யாக ஆனபோ தறந்திரிந்து கோற லாதி
பரிவினொடும் செய்தனனாம் இல்லையாகிற் பசிதனக்குத் தின்பதவன் பழுதை யோதான்
கருதிலவன் பரதுக்க துக்க னாகிற் கணவனிழந் தோர்கட்குங் கண்ணி குத்தித்
திரியுமவர் துயரினுக்கும் இரங்கு வோன்றன் செயலறத்துக் கழகியதாஞ் செப்புங் காலே.

பொழிப்புரை :

உன் ஆதிபுத்தன் அலகிறந்த யோனிகளிற் பிறந்தா னென்றும் அப்படிப்பிறந்தது கொலை முதலிய பாவங்களை நீங்கித் தன்மத்தைப் பரிபாலிக்க விரும்பி யென்றுங் கூறினாய் ; அங்ஙனமாயின், புத்தன், சிங்கம் நரி புலி முதலிய யோனிகளிலே சாதனனானவிடத்துத் தன்மத்தை விட்டுக் கொலையை விரும்பிப் பலஆன்மாக்களையுங் கொன்றுதின்ற இது பிரியத்தோடுஞ் செய்தானாக வேண்டும். அப்படிக் கொன்று தின்றானில்லை யென்று சொல்லுவையாயின் அந்த யோனி சாதனனாய்த் திரிந்தவிடத்துண்டான பசிக்குப் புத்தன் தின்பது பழுதையோ? அன்றேன் மாமிசமன்றோ? ஈதன்றியும், பரதுக்கதுக்க னென்று நீ சொல்லின், பூகேதனாய்ப் பலவான்மாக்களைக் கோறலால் பொல்லாதவனானதன்றியும், கணவனைநீங்கிச் சோரத்திற்செல்லு மகளிர் உறுந்துயரத்தினுக்கும், கண்ணி முதலியகொண்டு கொலைத் தொழில் புரிவோர் துயரத்தினுக்கும் இரங்குவனென்னில் அச்செய்தி அவன் தன்மத்துக்கு அழகிதாம் சொல்லுங்காலத்துங் கருதுங் காலத்தும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி உரைப்பதன்முன் உணர்விறக்கும் உனக்கு நூலென்
மருவிவருஞ் சந்தான வழியில் என்னில் வாயுரைத்த தேயுரைத்து வழங்கு மாகும்
பெருகுவது கெட்டென்னில் அதுபோ லாம்பின் பித்துரைத்த தறியாது பேதை சொல்லும்
தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ டிறுதி தான்விருத்த மின்றியது சாற்றி டாயே.

பொழிப்புரை :

ஒருபொருளைத்தேடி அதற்கேற்றதோர் சொல்லையுந் தேடிச் சொல்லொடு பொருளைக்கூட்டி நூலாகக் கூறுதன் முன்னே உன்ஞானங் கெடுமாதலால் உனக்கு நூலுண்டாம்படியென் ? அற்றன்று, அவ்வறிவுபொருந்தி வருந்தொடர்ச்சி வழித்தோன்றின நூலாமென்று புத்த ! நீ கூறின், முன்சொன்ன அக்கரமொன்றையே பின்சொல்லி நிற்கவேண்டும். அற்றன்று, முன்னறிவுகெட்டுப் பின்தோன்றுமறிவு மிக்கவறிவாமென்று கூறின், அங்ஙனம் பின்தோன்று மறிவுங் கணத்திற் கெடுகையாலே முன்னறிவேயாம்; உனது நூல் பித்தர் சொல்லுஞ் சொல்லும் அறியாதார் சொல்லுஞ்சொல்லுஞ் சொல்லும் சொல்லிற்றாம்; நூலாவது முதல்நடுஇறுதி மாறுபாடில்லாதாதலால் எப்பெற்றியதுனது நூல் ? உன்னுடைய பழுதுநூலை யென்னுடன் சொல்லாயல்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன் முழுதுணர்ந்திங் கருளினால் உயிர்கள் முத்தி அடையப்
பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று பேசினாய் இவன்முன்பு பேரறங்கள் புரிநூல்
சொன்னாரார் இவனைப்போன் முன்னொருவன் என்னில் அவனுக்குச் சொன்னாரார் எனத்தொடர்ச்சியாகி
அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன் இன்றாம் ஆரோஉன் பாழியிருப் பார்இதனை அறையே.

பொழிப்புரை :

ஆதியிலே எம்முடைய கடவுள் பலதருமங்களைச் செய்து நிறைந்து சருவஞ்ஞனாய் கிருபையாலே ஆன்மாக்கள் வீட்டின்ப மடைதற்கும் பின்பு அறஞ்செய்தற்கும் வழியாகிய பிடகநூலை அருளினானென்று புத்த நீ சொன்னாய், பெரிய அறங்களை யுண்டாக்க இவனுக்கு முன்பு நூல்சொன்னவரார்? அவனுக்கு முன்பு அவனாசாரியன் சொன்னானென்று கூறின், அவனாசாரியன் றனக்குச்சொன்னார் ஆரென மேன்மேல் தொடர்ச்சிப்பட்டுப் பின்சொற்கு உத்தரமின்றி முட்டுப்படுமாகையாற் கர்த்தாவுமில்லையாம். இஃதன்றியும், உன்பள்ளியுள் நீதெய்வ மென்றேத்த இருப்பாராரோ கூறுவாயாக.
அனவத்தைப்படு மொருவனென்றாய்,அனவத்தையென்ப தொரு தோடங்கொண்டு நின்றுசொன்னா னொருவனென்றா யென்பது. அநவத்தை தலைகாணாதது அல்லது முடிவுகாணாதது. அன்னாய் அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

இந்நூலைச் சொன்னவன் தான் இங்கிருந்தா னென்னில் இவனிருத்தி யேத்துமவன் எங்கிருந்தா னெவனோ
அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை அடைவுதரின் முடிவின்கண் அநாதி போதன்
சொன்னானாம் அவைவேதா கமங்க ளாகுஞ் சுருக்கியூண் தவம்புரியச் சொல்லுவ தெல்லோரும்
உன் நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன் புலாலோ டுண்பானோர் ஊன்பிரிய னுரைத்ததொரு நூலே.

பொழிப்புரை :

இந்தப் பிடகசாத்திரஞ்சொன்ன புத்தாசாரியன் இப்பள்ளியிலிருந்தானாகில், இவன் ஆசாரியனாக ஏத்தப்பட்ட வனாவான் எவ்விடத்தான், கடவுளாவான் எவன், அவனாற் சொல்லப்பட்ட நூலெவ்விடத்தது, அவை காணப்படாமையாற் குருசந்தான அடைவும் உனக்கில்லையாம் ; நூலடைவு சொல்லப்புகின் சங்காரத்தின்கண் அழிவில்லாத பரமேசுவரன் சொல்லப்பட்டனவாம். அவை வேதாகமங்களென்பர்; இவ்வாகமங்களின் சார்வுளார் சொல்லுவது உணவைச் சுருக்கித் தவத்தைப் புரிதலை. இங்ஙனமன்றி, உன்னுடைய பிடகநூல் கண்கழுவாது சூரியனுதிக்குமுன்னே புலாலுடன் உண்பானொரு போசனப்பிரியன் சொல்லப்பட்ட நூலாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும் மூன்றாகும். உலகத்து மொழிந்த நூல்கள்
இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில் இந்நூல்கா ணென்நூலென் றியம்ப மாட்டாய்
உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே உலட்டுநூல் பருத்திநூல் சிலம்பி நூல்கள்
அந்நூலு மல்லாதே பொய்ந் நூல் கொண்டிங் கறநோற்றுத் திரிந்தவா றழகி தாமே.

பொழிப்புரை :

இவ்வுலகின்கண் வழங்கு நூல்கள் முதல்நூலும் வழி நூலும் சார்புநூலுமென மூன்றுவிதமாம் ; இங்ஙனம் மூன்று விதமான நூல்களில் உன்நூல் எந்த நூலென்று கேட்டால் இந்த நூல்களில் என்னுடைய நூல் இந்நூலென்று சொல்லவல்லாயல்லை. ஆதலால், உன்நூலை ஒருநூலாய்ச் சொல்வதெப்படி, உலண்டாற் செய்தநூல் பருத்தியாற் செய்தநூல் சிலம்பியால்செய்த நூலென்று சொல்லப்பட்ட நூல்களின் தகுதியுமல்லாத உனது பொய்யாகிய நூலைக் கொண்டு இங்கே அறத்தையுண்டாக்கி நடந்தது ஆச்சரியம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று போற்றுவதிங் காரைநீ பொய்த்தவஞ்செய் புத்தா
செத்தவர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச் செய்தவர்க்கும் புண்ணியமா மென்று செப்பின்
நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி நினைந்துதரு வானுமுளன் உனக்கிவ்வா றில்லை
வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா லதற்கு மருவுதிரி நெய் கூட்டு மதிகேடுன் வழக்கே.

பொழிப்புரை :

பொய்த்தவத்தைச் செய்யும் புத்தா நீ உன்னாசாரியன் முதலறக்கெட்டுப் போயினானென்று சொல்லி இவ்விடத்துப் போற்றுவது யாவரை; இறந்தோரை நோக்கிச் செய்த சில நன்மை இருந்தோர்க்கும் புண்ணியமாமென்று கூறின், உயிர்கள் நித்தமாதல் வேண்டும், ஆகையால் கொடுக்கும் பலியா லுண்டாகிய புண்ணியம் இத்தன்மை யென்று நினைந்து அப்புண்ணியபலம் அருளுவானாகிய ஒரு கர்த்தாவும் உண்டாகவேண்டம். இந்நெறி உன்நூல் நெறியன்று ; பொன்றக் கெட்டவர்க்குச் செய்யுஞ் சிறப்பாகிய உனதுவழக்கு தீபம் பொன்றக் கெட்டவிடத்து இறந்த தீபத்துக் குபகார மென்று கருதி நெய்யுந் திரியுங் கூட்டும் அறிவின்மைபோலும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

நூலுரைத்தான் ஒருவனுளன் என்றநுமா னத்தால் நூல்கொண்டிங் கறிந்தாற்போல் நூலா நூலின்
பாலுரைத்த பொருள்களெல்லாம் அநுமான மென்னிற் பரலோக பாதாள லோகங்க ளொருசொல்
லாலுரைத்த நூலின்றி அறையாயின்றேல் அவையறிந்த படியெனுன தநுமான மன்றே
மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை காட்சி யநுமானம் விட்டபொருள் விளக்குவதா கமமே.

பொழிப்புரை :

நூலைச் சொன்னவன் ஒருவனுண்டென்று நூலைக் கொண்டு அநுமித்தாற்போலச் சிறந்த நூலின் பகுதியிற் சொன்ன பொருள்களெல்லாமறிகை அநுமானமென்று புத்த நீகூறின், பூமிக்கு மேலான வுலகங்களின் செய்தியுங் கீழானவுலகங்களின் செய்தியும் நூல்கொண்டு சொல்லுவதின்று; அநுமித்துச் சொல்லலாமாயிற் சொல்லாய்; அந்த நூலில்லையாயின் அந்தவுலகங்களின் செய்தியறிந்தபடியென், உனது அநுமானத்தாலறியும் பகுதியன்றே ? ஆகையால், காட்சியானும் அநுமானத்தானும் அறியாத பொருளை அறிவிப்பது நூல் ; அந்நூற்பிரமாணம் உனக்கில்லையென்றுகூறின், நீ முன் சொன்ன பிடகநூற் பிரமாணமும் உனக்கில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

எப்பொருளும் அநித்தமென இயம்பிடுவை அநித்தம் இல்லதற்கோ உள்ளதற்கோ உளதிலதா னதற்கோ
செப்பிடின்இல் லதற்கில்ல தென்று மில்லை சென்றடைவ துள்ளதற்கேல் உள்ளதென்று முண்டாம்
அப்படிதான் உளதிலதாம் அப்பொருளுக் கென்னில் உளதிலதா காதிலதும் உள்ளதாகா
திப்பொருளுக் கநித்தமிலை என்றொன்றைக் காட்டாய் எனில்தோன்றும் பொருள்நின்றிங் கிறுதி யாமே.

பொழிப்புரை :

எல்லாப்பொருளும் நித்தமில்லை அநித்தமென்று புத்தா நீ சொல்லாநிற்பை, நீ கூறிய அநித்தம் இல்லாதபொருளுக்கோ உள்ள பொருளுக்கோ உளதிலதான பொருளுக்கோ, அநித்தம் இல்லாததற் கென்று நீ கூறின் இல்லாதது என்றுமில்லையாம்; ஆகையால், இல்லாததற்கு உண்டாவதில்லை. உள்ளதற்கென்றுகூறின் உள்ள தில்லையாகாது என்று முண்டாகவேண்டும். உளதிலதாம் பொருட்கென்றுகூறின் அதுவும் உளதிலதாகையால், உள்ளதில்லை யாகாது இல்லாததுண்டாகாது. அதனால் இவை யநித்தியமன்று; தோன்றும் பொருள்களின் இப்பொருள் அநித்தமல்லாத நித்தமென் றொன்றைக் காட்டாயென்று கூறின், தோன்றும் பொருளாகிய தூலவுடல் தோன்றிநின்று கெடுதலையுடைத்தாம்.
ஆதலாற் சூக்குமவுடலுக்கு அநித்தமில்லையென்பது கருத்து. அன்றியுந் தோன்றியிடுந் தூலதேகமும் வன்னபேதமும் ஒருகாலும் இடையறாமல் தொன்றுதொட்டு வருதலால் அதுவும் நித்தியமென்னுங் கருத்தாகக்கொள்ளினும் அமையும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

அங்குரம்வித் தின்கேட்டில் தோன்றுமது போல அனைத்துருவுங் கெட்டுவழி யாகு மென்னின்
அங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லாம் அநித்தமெனும் உரைமறந்தாய் அருகனுமா னாய்நீ
இங்குமுளை யிலைமரமாய் எழுந்தீண்டிச் செல்லா திறந்ததே எழுந்தபடி நில்லா தென்னின்
மங்கியிடா தேபால தருணவிருத் தையாய் வரும்வடிவு திரிந்து நின்று மாயுங் காணே.

பொழிப்புரை :

முளையானது வித்துக்கெடத்தோன்றும்; அதுபோல எல்லா வுருவங்களுங்கெட்டுப் பின்பு அவ்வழியே தோன்றுமென்று, புத்த ! நீ கூறின், எல்லாம் அநித்தமெனுஞ் சொல்லைமறந்து உருக்களுக்கு ஆக்கக்கேடு கூறினாய். அதனால் நீயும் க்ஷமணன் மதவழியிலேயாயினாய். அற்றன்று, இவ்விடத்து அம்முளை இலையும் மரமுமாய் வளர்ந்து செல்லாத வளர்ச்சியைக் கைவிடுவானேன்; ஆதலால், எழுந்தபடி நில்லாதென்று நீ கூறின் தோன்றினவுருவங் கெடாமல் நின்று பால தருண விருத்த அவத்தைகளைப்பொருந்தி அவ்வவத்தைகள்தோறும் பேதப்பட்டுப் பின்பு தூலவுடல் கெட்டுப்போம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

உடல்பூத மெனில்ஒன்றுக் கொன்றுபகை ஒன்றா வுதிரசுக் கிலமென்னின் மரத்தினுளுக் கல்லி
னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பாய் இருவினைகா ணெனின்வினைக ளிரண்டுருவாய் நிற்கும்
திடமாக வன்னமுரு வெனின்உண்ண வுண்ணச் சென்றுவள ருங்காயந் தேயுமுணர் வென்னின்
மடவோனே அருவுணர்விங் கசேதனமாய் உருவாய் வளராது வருமில்லா தெனின்மலர்வான் வருமே.

பொழிப்புரை :

புத்த ! நீ உருக்கள் பூதரூபமென்றுகூறின் பூதங்களொன் றோடொன்று பகையாதலால் அவை தம்மிற்கூடி யுருவாகாது, சுக்கில சுரோணிதங்கள் கூடி உருவாமென்று நீகூறின், மரமிடமாகத் தோன்றும் உளுவுங் கல்லினிடமாகத் தோன்றுந் தவளையும் உருப்பெற்றதற்குச் சுக்கில சுரோணிதங்கள் கூடிவந்தவாறு சொல்லாய், புண்ணியபாவங்கள்தாமே உருவமாமென்றுகூறிற் புண்ணியம் பாவமிரண்டுந் தம்மிற்கூடி யோருருவந் திரண்டதாக வேண்டும் ; அது கூடாது. நிச்சயமாகவே அன்னசாரமே யுருவாமென்று கூறிற் போஜ நத்தால் வளருங்காயம் விருத்தாவத்தடியில் வளராது தேய்தல்காண்டும். அதனால் அன்னசாரமுமன்று, உணர்வுதானே யுருவமெடுத்துக்கொண்ட தென்றுகூறின் அறியாதவனே அருவமாயிருக்குமறிவு அசேதநமாயிருக்கும் உருவமா யிவ்விடத்து வளராது, இல்லாத தொன்று உருவமாய் வருமென்று கூறின் இல்லையாயதில்லையேயாம்; ஆகையால், நீ கூறிய இது ஆகாயப்பூப்போலப் பொய்யாகவரும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம் வித்தின் எழுமரம்போ லெனின்வித்தி னுண்டாய்நின் றெழுங்காண்
நின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை யென்னின் நெற்கமுகாய் நீளாது நெல்லாயே நீளும்
ஒன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா ரணம்பெற் றுதிப்பதுகா ரியமதுவு முள்ள தாகும்
மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து மருவியுள தெனும்உரையும் மறந்தனையோ இன்றே.

பொழிப்புரை :

யான் கூறிய பொய்யன்று, என்றுமில்லாத தொன்றுண்டாய்வரும் ; அஃதெங்கனென்னின், வித்தினிடத்திலே மரந்தோன்றுமா போலவென்று, புத்த ! நீ கூறின், அம்மரம் வித்தினிடத்திலே யுண்டாய் நின்று எழுதலன்றி யில்லையாய் நின்று ஏழாதுகாண், அப்படி வித்திலே மரமுண்டாமாயின் வித்தினிடத்திலே காணவேண்டும். வித்தினிடத்தின் மரங்கண்டதில்லை யென்று கூறின் நெல்வித்துக் கமுகாய் வளராது நெல்லேயாம், ஒருமரத்தில் ஒருமரம் உண்டாகாதாகையால் இவ்லாத துண்டாகாது, வித்துக்காரணமாக மரங்காரியப்படுதல் உள்ளதாம். நிச்சயமாக மதியுங்கலையும் போலக் கந்தங்கள் ஐந்தும் பொருந்தி உருவுண்டா மென்னுஞ் சொல்லும் இன்று மறந்தாயோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 48

உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட் டகவுருவ மென்னின் நீ உலவத்துக்கு
மருவும்அன லோடுநீர் மண்கந்த மிரதம் வன்னம் இலை வன்னிக்கு வளிநீர்மண் வாசந்
தருமிரத மிலைநீர்க்குத் தழல்கால்மண் கந்தந் தானில்லைத் தலத்தினுக்குச் சலமனல்கால் கூடி
வருவதிலை இந்திரிய விடயமான மாபூதங் களுமறியாய் மதிகெட்டாயே.

பொழிப்புரை :

புத்த ! நீ சுத்த உருவமெல்லாம் பூதவுருநான்கும் உபா தானவுரு நான்குமாகிய எட்டுங் கூடியே வருமென்று கூறின், அவையெட்டும் ஒன்றோடொன்று கூடாது. அஃதெங்ஙன மென்னில், காற்றுக்குத் தன்குணமாகிய சலித்த லொழிந்து அனலும் நீரும் மண்ணும் என்பவற்றின் குணமாகிய உருவம் இரதங் கந்தங்கள் கூடுவதில்லையாம். அக்கிநிக்குத் தன்குணமாகிய வுருவமொழிந்து வாயுவும் நீரும் மண்ணும் என்பவற்றின் குணமாகிய பரிச ரசகந்தங்கள் கூடுவதில்லையாம். அப்புவுக்குத் தன்குணமாகிய இரதமொழிந்து அக்கினியும் வாயுவும் பிருதிவியும் என்பவற்றின் குணமாகிய ரூப சலந கந்தங்கள் கூடுவதில்லையாம். பூமிக்குத் தன்குணமாகிய கந்தமொழிந்து ஜலமும் அக்கிநியும் வாயுவும் என்பவற்றின் குணமாகிய இரதமும் உருவமுஞ் சலித்தலுங் கூடுவதில்லையாம். ஆகையால் இவையெட்டுங் கூடியுருவாகாது. அந்த மகா பூதமுங் குணமும் இந்திரிய விடயங்களென்பதும் அறியாய் புத்தியில்லாதாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 49

மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற் போல மறைந்தெட்டும் சூக்குமமாய் மருவு மென்னில்
திருத்து மவன் மருந்தெண்ணெய் சேர்த்தாற் போலச் சேர்ப்பவன்வே றுண்டெல்லா வுருவும் எட்டும்
பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க ளொன்றின் குணமொன்றிற் புகாதறைகை பொருளறியாய் பூத
உருப்பொருள்வே றுபாதாயப் பொருள்வேறு காட்டா யுபாதாயம் பூதகுணங் குணகுணியா முலகே.

பொழிப்புரை :

மருத்தெண்ணெயின் மருந்து தோன்றாமற் கரந்து நின்று நன்மையைத் தருமாபோல, பூதவுருவும் உபாதாயவுருமாகிய எண்வகையுந் தூலங்கெட்டுச் சூக்குமவுருப்பெற்று நிற்குமென்று புத்த ! நீ கூறின், வியாதியைத் தீர்க்கும் மருத்துவன் அவ்வெண்ணெயையும் மருந்தையுஞ் சேர்த்தாற்போல, பூதவுருவையும் உபாதாயவுருவையுங்கூட்டி உண்டாக்குவான் ஒரு கர்த்தா வேண்டும்; எல்லா உருவத்தையும் இவ்வெட்டுமே யுண்டாக்குகின்றனவென்று கூறின் அப்பொருள்களெல்லாம் ஒரு தன்மைப்படவேண்டும். அவ்வுருக்களின் குணங்களில் ஒன்றின்குணம் ஒன்றிற் கூடாது; ஆகையாற் சொல்லுகைக்குப் பொருள் அறியாய், அன்றிப் பூதவுருப்பொருளையும் உபாதாய வுருப்பொருளையும் வேறு காட்டவல்லையாயிற் காட்டாய்; உபாதாயமாவது பூதகுணமாம்; அந்தக் குணத்தையுடையது பிரபஞ்சமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 50

அழிந்துணர்வை உணர்வுதரு மெனின் அழிந்த தாக்கா தாமுணர்விற் பொருள்வினைகள் அணையா வாகும்
அழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா லத்தே அறிவிரண்டு நில்லாதங் கறக்கே டின்றி
அழிந்துணர்வை உணர்வுதரு மெனின்நித்தா நித்தம் அடையும்உணர் வுக்கநித்த மாயே செல்லா
தழிந்தெருவை ஆக்குவது போலாக்கு மென்னின் ஆம்பொருள்வே றழிந்துசத்தி கிடந்தாக்கும் அவையே.

பொழிப்புரை :

தோன்றிய அறிவு கெட்டுப் பின்னோரறிவை யுண்டாக்கு மென்று புத்த ! நீ கூறின், கெட்ட அறிவு மற்றோரறிவையுண்டாக்க மாட்டாது; அன்றியும் ஆகிற அறிவும் முன்னறிவுகெடுதலாற் கெட்ட அறிவும் அறியும்பொருளையுஞ் செய்யும் வினையையும் அறிந்துஞ் செய்யவுமாட்டாது, முன்னையறிவு பின்னையறிவை யுண்டாக்கிக் கெடுமென்று கூறின் ஒருகாலத்தே இரண்டறிவு தோன்றிநில்லாது, அவ்விடத்து முன் அறிவு முற்றக்கெடாது சிறிதுநின்று மேலோரறிவை யுண்டாக்கிப் பின்னிறந்திடுமென்று நீகூறின், உணர்வுக்குச் சுபாவம் நித்தாநித்தமாதலால் உணர்வு அநித்தமென்று கூறியது பொருந்தாதாம். பயிருக்கிடும் எருவும் வைக்கோலுந் தாங்கெட்டுப் பயிருக்கு நன்மைகொடுப்பதுபோல, முன்னை யறிவுகெட்டுப் பின்னை யறிவையும் உண்டாக்கும் என்று கூறின், அவ்வெருவும் வைக்கோலுந் தூலங்கெட்டுச் சூக்குமமாகிய வீரியங்கிடந்து பயிர்க்கு நன்மை கொடுக்கும்; அதுபோல, உன்னறிவு சேரக்கெடா தென்ன வேண்டுமாகையால், நீ கூறிய அதற்கு நித்தியமில்லை யென்னவேண்டா; ஆம்பொருள் வேறென்றதனால் எருவால் நன்மைபெறும் பயிர் வேறானாற்போல அறிவாலாம் பொருளும் வேறென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 51

கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று கிளக்கும்நீ சந்தானம் நித்த மாகும்
ஓடுநீர் போலழிந்தா முணர்வொழுக்க மென்னின் ஒழுகுநீ ரிட்டதெல்லா முடன்கழிதல் போலத்
தேடுபொருள் சீலம்பா வனைகுறிவிஞ் ஞானஞ் சென்றவுணர் வோடேகு நின்றுணர்வின் ஏயா
நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந் தோடு நிகழுணர்வுங் கேடின்றி நிறைந்து செலுங் காணே.

பொழிப்புரை :

உணர்வுகெடாத தொடர்ச்சியாலே உணர்வுதோன்று மென்று புத்த ! நீகூறின், அந்தத்தொடர்ச்சிதான் நித்தமாக வேண்டும். ஆற்றின்க ணோடுநீர் முன்சென்றது வற்றப் பின்சென்றது அவ்வெல்லையி னிறந்துபோமாறுபோல, முன்னை யறிவுகெடப் பின்னையுண்டாகிய அறிவு மிக்க அறிவாமென்று நீகூறின், ஓடுகின்ற நீரின்கண் உண்டானவையெல்லாம் அந்நீரோடுகூடக் கழிந்துபோகப் பின்னர்ச்செல்லுநீர் அவற்றைக்கூடமாட்டா; அதுபோல, முந்தையறிவால் தேடும் பொருள்கள் சீலம் பாவனை குறி விஞ்ஞானம் இவையெல்லாம் முன்னையறிவோடு கெடுமாகையாற் பின்னையுண்டாம் அறிவிற் கூடமாட்டா. விடாமலோடுநீர் முன்னொழுகிய தன்மைகெடாமல் நிறைந்தோடியவாறுபோல, அறிவு இடையறாமற்றோன்றுமென்று நீகூறின், அப்படியுண்டாம் அறிவு அநித்தியமன்று ; நித்தமாய் நிறைவுபெற்றுச் செல்லவேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

சந்தானங் காரணமோ காரியமோ இரண்டின் தன்மையதோ காரணமுங் காரியமும் நித்தம்
வந்தாருஞ் சந்தானத் தொடர்ச்சியெனின் அதற்கும் வருநித்தந் தோற்றக்கே டடைதலின்மற் றொன்றேல்
ஐந்தான கந்தங்க ளன்றாய் நித்தம் அடைபொருளாம் அறிவும்அறி வடைவு மின்றிச்
சிந்தாமுன் பின்னாகிப் பின்முன் னாகித் திரிந்துவருந் திரிவறிந்து தேரா தேரே.

பொழிப்புரை :

நீ தொடர்ச்சியென்றது காரணமாய் நின்றதோ, காரியமாய் நின்றதோ, காரணகாரியமாய் நின்றதோ? காரணமென்னில் என்றுங் காரணப்பட்டு வருகையால் நித்தமாம்; காரியமென்னில் என்றுங் காரியப்பட்டு வருகையால் அதுவும் நித்தமாம்; காரணகாரியத் தொடர்ச்சி மீளவந்து பொருந்துமென்று நீ கூறின், அப்படிக் காரண காரியப்படுதலுமாய்த் தோன்றுதலுங் கெடுதலுமாய்த் தொன்றுதொட்டு வருதலால் அதற்கும் நித்தியத்துவமுண்டாம். மற்றோரறிவென்னில், அப்படிக் காரணகாரியப்படுதற்கு இந்திரியங்களோ டொருபொருளாகாமல் அவ்வறிவு வேறொரு பொருளாகலானும் இந்திரியங்கள் அவ்வறிவுக்கு மூலமல்ல வாகையானும், அவ்வறிவு நித்தியமாக அடையும் பொருளாம். அங்ஙனமாயின், ஆன்மாவும் ஆன்மாவால் அடையும் பொருளுமாக அறிதலின்றி முறையே கெட்டு இந்திரியங்கள் அறிவாகவும் அறிவு இந்திரியங்களாகவும் முறை பிறழ்ந்து வரும் ; இவற்றின் திரிவையறிந்து விசாரியாய் ; புத்தனே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

ஒருகாலத் துணர்வுகெட்டா மெனின்உதிப்பீ றொன்றாம் ஒருபொருளின் திரிவுனக்குக் கால மானால்
வருகால நிகழ்காலங் கழிகால மென்று வழங்குவதென் பொருள்வரவு நிலைகழிவால் இன்றேல்
திரிகாலம் செப்பிடாய் பொருட் செயலு மொன்றாம் செயல்மூன்றும் ஒருகணத்தே சேருமென்னில்
தருகால மூன்றாகும் தாமரைநூ றிதழில் தள்ளூசி யுங்கால மூன்றினையுந் தருமே.

பொழிப்புரை :

காலம் பேதப்படாது ஒரு காலத்திலே அறிவு கெடுதலும் உண்டாதலுஞ் செய்யுமென்று புத்த ! நீ கூறின், சங்காரமுஞ் சிருஷ்டியும் ஒரு தொழிலாக வேண்டும். ஒரு பொருளின் திரிவே உனக்குக் காலமென்று சொல்வையானால், எதிர்காலமென்றும் நிகழ்காலமென்றும் கழிகாலமென்றும் வழங்குவானேன்? அப்படி வழங்கியது பொருள்களானது வருதலும் நிற்றலுங் கழிதலுமாதலாற் காலமில்லையென்று சொல்லுவையாயின், மூன்று விதமான காலத்தின் பெயரை நீ சொல்வாயல்லை. அங்ஙனங் காலபேதமில்லையாயின், இருது பேதாதிகளுங் குணபேதாதிகளும் இல்லையாய்ப் பொருள்களெல்லாம் ஒரு செயலாக வேண்டும். அப்படிப் பேதித்த மூன்று செயலும் ஒரு கணத்திலே சேருமென்னில், அப்படிக் கணத்திலே யுண்டாயதுவுங், காலமூன்றியையும் உடைத்தாம் ; அஃதெங்ஙனமென்னில், தாமரையிதழ் நூறடுக்கிற் செலுத்தின வூசியும் இதழ்தோறும் பற்றுகையும் உருவுகையுங் கழிகையுமாய் மூன்று காலத்தைத் தருமாதலாற் பொருட்செயலன்று காலமுண்டா மென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 54

உணர்வுகா ரணமுணர்வுக் கென்னின் நித்தம் உண்ர்வுக்குண் டாகிநின் றுணர்வையுதிப் பியாதிங்
குணர்வுசந் தானவிடத் தொழிந்தாற் பின்னை யுண்டாகா துடலுணர்வுக் குபாதாந மென்னின்
உணர்வுடலின் இடையறா துதிக்க வேண்டும் உடலுணர்வின் வினையினால் உணர்வுதிக்கு மென்னில்
உணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ் செய்தி உணர்வைவினை தரினொருவன் செயல்வினையின் றாமே.

பொழிப்புரை :

அறிவுகாரணமாக மற்றோரறிவுண்டாமென்று புத்த ! நீ கூறின், நீ அநித்தியமென்று கூறுகையால் அறிவுக்கு நித்திய முண்டாகி நின்று மற்றோரறிவை யுண்டாக்கமாட்டாது. அன்றியும், அவ்வறிவுதான் வருகிற தொடர்ச்சியிலே கெட்டாற் பின்னையறிவு தோன்றாது. உணர்வுக்கு மூலகாரணமாகி நின்று உடலந் தோற்றுவிக்கு மென்னில், அவ்வறிவு உடலில் உறக்கத்தின் கண்ணும் இடையறாமல் உண்டாக வேண்டும்; உடலுணர்வின் வினையாலே உணர்வு தோற்றுமென்று கூறின், இந்திரியங்கள் எப்பொழுதுங் கன்மத்தை யுடைத்தாதலால் அதனாலுண்டாமறிவு அழியப்பட்டாது. அதுவன்றி, உணர்வு வினையைத் தருமென்றும் வினை உணர்வைத் தருமென்றும் நீ கூறின் ஒருவர்க்குச் செய்யப்பட்ட கன்மமென்பதன்றே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 55

வினையுணர்வு தரும்வினையை உணர்வுதரு மென்றும் விளம்பின்நீ உணர்வுபோல் வினையி னுக்கு
நினைவுவரும் ஒன்றையொன்று நிகழ்த்தி டாபின் நிலையின்மை யானிகழ்த்திக் கெடுதல் செய்யா
னல்விறகில் பிறந்ததனைப் பொடிசெய்தாற் போல் கருத்துவினை யிற்றோன்றிக் கழிக்கும்வினை யென்னின்
முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கும் முன்பின் உதியாது முகிழ்நெருப்பின் விறகுதியா வாறே.

பொழிப்புரை :

கன்மம் அறிவை யுண்டாக்குமென்றுங் கன்மத்தை அறிவுண்டாக்கு மென்றும் புத்த ! நீ கூறின், அறிவுக்கு நினைவுண் டானாற்போலக் கன்மத்துக்கு நினைவுண்டாக வேண்டும். அப்படிக் கன்மத்துக் கறிவில்லையாகையால் ஒன்றையொன் றுண்டாக்க மாட்டாது. அவை அநித்தியமென்று சொல்லுகையால் ஒன்றை யொன் றுண்டாக்கிக் கெடமாட்டாது. காட்டத்திலே அக்கிநிதோன்றி அந்தக்காட்டத்தைத் தகித்தாற்போல, அறிவு கன்மத்திலே பிறந்து மீளவும் அக்கன்மத்தையே கெடுக்குமென்று நீ கூறின், முன்பிறந்த அறிவு பிறந்தபோதே கன்மத்தைக் கெடுக்கும். பின்அக்கன்மம் அறிவை யுதிப்பிக்கமாட்டாது. அறிவும் பின்னர்க் கன்மத்தை யுதிப்பிக்கமாட்டாது. அஃதென்போல வென்னில், காட்டத்திலுண்டாம் அக்கிநி அக்காட்டத்தைச் சுட்டால் மீண்டொரு காட்டத்தை யுண்டாக்க மாட்டாதுபோல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 56

பேயுநர கரும்சுரரும் பிரமருமாய் உலகிற் பிதாமாதா ஆதார மொன்று மின்றிக்
காயமொடு தாம்வருவர் என்றுரைப்பை காயங் காரியமாய் வருதலினால் காரணமுண்டாகும்
ஆயுமுணர் வோசுத்த அட்டகமோ கன்மம் வடித்ததோ வடிவுசெய்து வைத்தாரும் உண்டோ
ஆயுமுணர் வுண்டாகில் அறைந்திடாய் உலகுக் காதிதுணை நிமித்தகா ரணமறிவ தறிவே.

பொழிப்புரை :

பேயென்றும் நரகரென்றுஞ் சுரரென்றும் பிரமா முதலாயினாரென்றுஞ் சொல்லப்படுவார் உலகின் மாதா பிதாக்களுமின்றி இருப்புமின்றிக் காயத்தோடு கூடிய வடிவமுடையராய் வருவரென்று புத்த ! நீ கூறுவை. அக்காயம் காரியப்பட்டு வருகையினால் ஒருகாரணத்தானன்றி யுண்டாகாது. அக்காரண காரியங்களை அறியாய். அறிவையாகில், அக்காயங்கள் நீ ஆராய்ந்த வுணர்வு தானோ, சுத்தாட்டகமோ, அன்றிக் கன்மம் உண்டாக்கியதோ, அன்றி அவ்வடிவை யுண்டாக்கினார் ஒருவருண்டோ? உனக்காராயத்தக்க அறிவுண்டாயிற் சொல்லாய். அவற்றை உண்மையாக அறியுங்காலத்துப் பிரபஞ்சவுற்பத்திக்கு ஆதிகாரணமென்றுந் துணைக்காரணமென்றும் நிமித்தகாரணமென்றும் உண்டாம். அதனை யறிவதுகாண் அறிவு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 57

உருவாதி கந்தங்கள் ஐந்துங் கூடி ஒருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா
உருவாதி ஐந்தினையும் உணர்பவன்வே றென்ன உணரும்விஞ் ஞானமென்றாய் அஞ்ஞானம் உணர்ந்தவரார்
உருவாதி பொருள்காட்டித் தனைக் காட்டும் சுடர்போல் உணர்வுபிறி தினையுணர்த்தித் தனையுணர்த்து மென்னின்
உருவாதி பொருளினையும் சுடரினையும் காணும் உலோசனம்போல் உணர்வுபொருள் உணர்வதுவே றுண்டே.

பொழிப்புரை :

உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞான மென்கின்ற கந்தங்கள் ஐந்துங்கூடி ஆன்மாவன்றித் தனித்தோரான்மா இல்லையென்று கூறும் புத்தா ! அவ்வுருவம் முதலிய கந்தங்கள் ஐந்தையும் அறிவானொருவ னுளனென்று நாங்கூறுவதன்று, அவற்றை யறிவது சித்தமேயென்று கூறினாய். அந்தச் சித்தத்தை யுணர்ந்தவர் ஆரென்று வினாயவிடத்து, உருவங்கள் முதலாய பொருள்களையுங் காட்டித் தன்னையுங்காட்டும் விளக்குப்போல, சித்தமும் பிறி துண்டாகியவற்றையும் அறிவித்துத் தன்னையும் அறிவித்து நிற்குமென்று கூறின், உருவங்கள் முதலாகிய பொருள்களையும் அவற்றைக் காட்டி நிற்கும் விளக்கையுங் கண்டுநிற்குங் கண்போல, சித்தத்தையும் விடயத்தாலறியும் இந்திரியங்களையும் உணர்வானொருவன் வேறுண்டென்று அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 58

காயமுடன் இந்திரியம் மனம்நான் என்று கதறுவாய் காயம் உறக் கத்தறியா வாகும்
வாயில்களும் அப்படியி லொன்றையொன்றங் கறியா மனங்கணத்திற் கெடுங்கால மூன்றின்வர வறியா(து)
ஆயுமறி வாகியுடல் பொறிமனமூன்றறிந்தாங் கவைநானல் லேனென்றும் அறிந்துமனத் தாலே
ஏயுமொரு பொருள்கருதி இந்திரியப் பாலே இசைவித்துக் காயத்தால் இயற்றுவதான் மாவே.

பொழிப்புரை :

உடம்புடன் இந்திரியங்களும் மனமுமே ஆன்மா, வேறே ஆன்மாவென் றொன்றில்லையென்று கூப்பிடும் புத்தா! அக்காயம் உறக்கத்தினிடத் தறியாமையுடைத்தாம். இந்திரியங்களும் அக்காயம்போல் உறக்கத்திலும் வியாத்தியிலும் ஒன்றறிந்த விடயத்தை யொன்றறியமாட்டா. மனமுங் கணத்திற்கெடும், காலமூன்றின் செய்தியையும் அறியமாட்டாது ; ஆகையால், இவை ஆன்மாவல்ல, உடல் முதலாயின மூன்றினையும் ஆராயத்தக்க அறிவாய், அவற்றின் குணங்களை யறிந்தும் அவற்றை என்னுடல் என்பொறி என்மனமென்று சொல்லியும் அவைநானல்லே னென்றறிந்தும் மனத்தாற் பொருந்தத் தக்கதொரு பொருளைக்கருதி இந்திரியங்களின் பகுதி காட்டக்கண்டு காயத்தாலே தொழிலைச்செய்வது ஆன்மாவென்று அறிவாயாக, காலமூன்றாவன பூத பௌஷ்ய வர்த்தமானமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 59

கழிந்தஉணர் வேபின்னும் யானறிந்தே னென்று கருதலினவ் வுணர்வறிந்த தென்னின் முன்னே
மொழிந்த மொழி நான்மொழிந்தே னென்றால் வாய்தான் மொழிந்ததோ மொழிந்தவன்வே றானாற் போல
எழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே னென்ற தெதுஅதுகாண் உயிருணர்வால் வாக்கான் மற்றை
ஒழிந்தகா யந்தன்னால் உணர்ந்துரைத்துச் செய்தங் குணர்வினுக்கும் ஆதார மாய் நிற்கும் உயிரே.

பொழிப்புரை :

முன்னொரு பொருளையடுத்துக் கெட்ட அறிவுதானே பின்புண்டாகியவற்றை யான் அறிந்தேனென்று விசாரிக்கையாலே அவ்வறிவேகாணு மறிவதன்றி ஆன்மாவென் றொன்றில்லை யென்று புத்த ! நீ கூறின், முன்னே சொன்னசொல்லும் நான் சொன்னே னென்று சொல்லுதல் வாயாற் பிறத்தலால் வாய்சொன்னதோ? அன்றே, அச்சொல்லைச் சொன்னவன் ஒருவனுண்டானாற்போல, உண்டாய அறிவுகளெல்லாவற்றையுங் கொண்டறிந்து அதனையான் அறிந்தே னென்றது எது அதுகாண் ஆன்மா. மனத்தாலும் வாக்காலும் ஒழிந்ததாகச் சொல்லப்பட்ட காயத்தாலும் அறிந்துஞ்சொல்லியுந் தொழில்செய்தும் அம்மனத்திற்குப் பற்றாய் நிற்கும் ஆன்மா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 60

இந்திரிய வீதிஎழுஞ் சித்தம் நெஞ்சத் தெழுஞ்சித்த மென்றிரண்டு மொன்றுகெட்டே யொன்று
வந்தெழுவ தெனில்கனவில் கண்டபடி நனவின் வாய்திறவார் நனவு கண்ட படிகனவிற் காணார்
அந்தனுரு வன்னங்க ளறிந்திடா னின்றேல் அறிகனவும் இறந்துணர்வும் அழிந்துறக்கம் அடைந்தால்
உந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப உயிர்கனவு நனவினையும் உணருங் காணே.

பொழிப்புரை :

இந்திரிய வியாபாரத்தால் உண்டாம் அறிவென்றும் மனத்திலுண்டாம் அறிவென்றும் இரண்டாய், ஒன்றுகெட் டொன்று தோன்றுமென்று புத்த ! நீ கூறின், கனவிற்கண்டதெல்லாம் நனவிற் சொல்லமாட்டார்; நனவிற் கண்டதெல்லாங் கனவிற் சொல்ல மாட்டார். அன்றியும், பிறவிக்குருடன் பிறர் வடிவத்தையும் வன்னத்தையும் அறியமாட்டான். இந்திரியக் குறைவாலே அறிவு தோன்றிற்றில்லை யென்று நீ கூறின், அறியத்தக்கனவும் அழிந்து உணர்வும் அழிந்து உறக்கத்தையும் அடைந்தால் உண்டாகத்தக்க தொடர்ச்சியில்லை; ஆன்மாக்களுக்கு இச்சா ஞானக்கிரியைகளுண்டாகக் கனவினையும் நனவினையும் அறியாநிற்கும். (இன்றேலெனவே, இந்திரியங்கள் அறிவிக்குமென்பது புலப்பட்டது. வீதி நேரே செல்லுதல். அந்தன் அந்தகன்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 61

ஒருகாலத் தோரிடத்தில் ஓருணர்வேல் செவிதான் ஒன்றுணரா திருசெவியும் உணரும் ஓசை
ஒருகாலத் திருகண்ணும் இருசெவியும் மனமும் ஒருவனைக்கண் டவனுரைகேட் டுணர்ந்திடுமைம் பொறியும்
ஒருகாலும் உணராவுள் உணர்வின்றிப் பொறிகள் ஒன்றொன்றா வுணர்வதுள் ளுணர்வைந்தும் உணரா
ஒருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக் குள்ளதுகாண் விகற்பமிரண் டும்முணர்வ துயிரே.

பொழிப்புரை :

ஒருகாலத்திலே ஒருபொறியிடத்திலே ஓருணர்வாக அறியுமென்று புத்த ! நீ கூறினாய். அப்படியாயின், இரண்டு செவியும் அறியும் ஒசையை ஒருசெவி யறியமாட்டாது; இரண்டு செவியாலும் அறியவேண்டும். அஃதன்றியும், ஒருகாலத்தே இரண்டுகண்ணும் இரண்டு செவியும் மனமுங்கூடி ஒருவனைக்கண்டு அவன் வார்த்தை கேட்டு அதனையறியாநிற்கும். ஐம்பொறிகளும் மனங்கூடாமல் தனித்தொருகாலும் அறியமாட்டா. பொறிகளொரோவொன்றாகத் தாமறியும் விஷயத்தை யறியும் அதனையே, அம்மனமும் ஏககாலத்து ஐம்பொறியின் விஷய அறிவுகளைந்துங் கூடியறியமாட்டாது. அதுவுமன்றி, பொறிகள் ஒருகாலுந் தாமறியும் அறிவன்றி விகற்பித்தறியமாட்டா. அந்தப் பொறிகளுடனே கூடி நின்று விகற்பித்தறிவது மனத்துக்குள்ள குணங்காண். இப்பொறிகளையும் மனத்தையுங் கொண்டறிவது ஆன்மாவாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

அருஉணர்வு மாய்ஆறும் மாறி மாறி அங்கங்கே தோன்றியிடின் அகத்துநிலை யின்றி
உருவினொடு பாலதரு ணவ்ருத்தா வத்தை உண்டாகா துறக்கத்தின் உடல்தட்ட அழைப்ப
வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னில் வாயில்வினை யறிந்தெழுப்ப ஆயுஅறி யாதாம்
திரியொழிய இடிஞ்சில்தொடத் தீபமெழா அடக்கஞ் சென்ற பொழு தாலுணர்வு நின்றநிலை செப்பே.

பொழிப்புரை :

மனமானது அருவுமாய் உணர்வுமாய்ப் பொறிகளைந் தோடுங்கூடி ஆறுவிதமாய் மாறிமாறித் தோன்றியிடுவதென்று புத்த ! நீகூறின், மனம் அருவமாகையால் உருவின் நிலையுடையது மன்றாய்க் காயத்தோடுகூடிப் பால தருண விருத்தாவத்தையும் உண்டாகாதாதல் வேண்டும். அஃதன்றியும், அவத்தைப்பட்ட விடத்து உடலிற்றட்டவும் அழைப்பவும் அறிந்து வருமறிவு எவ்விடத்திருந்தென்று சொல்லாய்; நெஞ்சிலிருந்தென்று நீகூறின், சத்தாதி விடயங்களிலே செல்லுந் தொழிலை யறிந்து செலுத்த மனமறியாதாம்; அஃதென்போலென்னில், திரியைப்பற்றி நின்றவொளி அத்திரிமாய்ந்தால் உடன் மாய்தலன்றி இடிஞ்சிலைப்பற்றித் தோன்றாதாகையால், உணர்வுக்கு மூர்ச்சைவந்தபொழுது அறிவு நின்றநிலை சொல்வாயாக. (உரு தேகம். ஆயு மனம் . ஆல் அசை. இடிஞ்சில் அகல்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 63

இச்சைவெறுப் பியற்றலின்பத் துன்பம் ஞானம் இவையணுவின் குறியாகும் இவற்றில் இச்சை
நச்சிநுகர்ந் தொரு பழத்தின் இனங்கண்டு முன்பு நான்நுகர்ந்த கனியினினமென்று நச்சல் பின்பு
மெச்சவெறுப் பாதிகளும் இப்படியே யாகும் இவைமுன்பும் பின்புமுணர்ந் திடுத லாலே
நிச்சயகர்த் தாஒருவ னுளனென்று நல்லோர் நிறுத்திடுவர் வெறுத்திடுவர் நின்னுடைய பொருளே.

பொழிப்புரை :

ஆசை வெறுத்தல் தொழில்செய்தல் சுகதுக்கப்படுதல் அறிவு இவை முதலியவெல்லாம் ஆன்மாவின் குணங்களாம். இவற்றில் ஆசையாவது முன்னொரு பழத்தை ஆசைப்பட்டு நுகர்ந்து பின்பு அதனை யொப்பதொரு கனியைக் கண்டு முன்பு நானுகர்ந்த கனியின் இனம் ஈதென்று பின்பும் அதனை யாசைப்படுதல்; ஒழிந்த வெறுப்பு முதலாயினவும் இத்தன்மையே யாகும். அவ்விச்சா ஞானக்கிரியை முதலாயினவற்றை ஆன்மா முன்பும் பின்பும் அறிகையாலே நிச்சயமாக ஆன்மா வொருவனுளனென்று சொல்லுவர் பெரியோர். நீ ஆன்மா இல்லையென்று சொல்லுஞ் சொல்லை அப்பெரியோர் தள்ளாநிற்பர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 64

எப்பொருட்கும் இரந்தரமாய் இடங்கொடுத்து நீங்கா திருளொளிதா னன்றிஇரண் டினுக்குமிட வகையாய்
ஒப்பில்குணஞ் சத்தமதாய் வாயுவாதி உதித்தொடுங்க நிற்கும்வா னுயிர் முன்னே சொன்னோம்
செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித் திரிவிதமாய்த் தீமைநன்மை செய்யுந் திக்குத்
தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி தானாகித் திரியாதே நின்றுபலந் தருமே.

பொழிப்புரை :

முன்னர் வானமும் ஆன்மாவுங்காலமுந் திக்கும் இல்லையென்ற புத்தனே ! நீ கேட்பாயாக. எல்லாப்பொருளுஞ் செல்லுதற்கு வழியாய் இடங்கொடுத்து நீக்கமின்றி இருளும் ஒளியுமன்றாய் இரண்டும் நிற்கத்தக்கவிடமாய் உவமையில்லாத குணம் சத்தமாய் வாயுமுதலிய பூதங்கள் நாலுந்தோன்றி யொடுங்குதற்குத் தாரகமாய் நிற்கும்வானம் ; ஆன்மாவுண்டென்று முன்னமேசொன்னோம் ; சொல்லத்தக்க காலமானது காலையும் உச்சியும் மாலையுமென்னும் பொழுதாயும், நெருநல் இன்று நாளை என்னும் நாளாயும் மற்று முள்ளனவாயும், இத்தன்மையிலே மூன்றுவிதமாய் வேற்றுமைப்பட நன்மை தீமைகளைச் செய்யும்; திக்கானது கிழக்கு மேற்கு தெற்கு வடக்கென்று தவறில்லாததாய் அநாதியிலும் ஆதியிலும் உள்ளதாய்ப் பிறழாமல் அத்திசைகளை நோக்கிக் கன்மஞ்செய்தோர்க்குக் கன்மபலத்தைக் கோடுக்கும். ஆகையால், ஆகாசமும் ஆன்மாவும் காலமுந் திக்கும் உண்டேன்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

காரியமாய் உலகெலாம் இருத்த லாலே கடாதிகள்போல் காரியகர்த் தாவொருவன் வேண்டும்
ஆரியமாய் அறம் பொருளோ டின்பவீ டெல்லாம் அறைந்துயிர்கட் கறிவுசெயல் அளிப்பதுநூல் அந்நூல்
கூரியராய் உள்ளவர்கள் ஓதஓதிக் கொண்டுவர லான்முன்னே குற்ற மின்றிச்
சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும் செயலினுக்குங் கரிவேண்டுஞ் சிவனுளனென் றறியே.

பொழிப்புரை :

கர்த்தாவும் நூலுமில்லையென்று கூறிய புத்தனே! பிரபஞ்சமெல்லாங் கடாதிகள்போலக் காரியப்பட்டுவருதலாலே இதனைச் செய்வானொரு கர்த்தாவேண்டும். வடமொழியாய் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு காரியமுஞ்சொல்லி ஆன்மாவுக்கறிவையுஞ் செயலையுங் கொடுப்பது வேதாகமங்கள்காண்; அவ்வேதாகமங்கள் குசலராயுள்ள பிரமாதிகள் ஓதுவிக்க மகாவிருடிகளாலே ஓதப்பட்டு அவர்கள் வழியாகத் தொன்று தொட்டு வருதலால் ஆதியிலே தவறின்றி மிக்க பெரிய அறிவையுடையோனாலே சொல்லப்பட வேண்டும். அவ்வேதாக மங்களாற் சொல்லப்பட்ட கன்மத்துக்குக் காண்பானொரு சாட்சியும்வேண்டும். ஆகையாலே சிவனாலே நூல் சொல்லப்பட்டதென்றும் அவன் கர்த்தா என்றும் அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 66

மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய் வாடுதல்பூ ரித்தலால் மரங்களுயி ராகும்
திரங்குநீர் பெறாதொழியிற் பெறிற்சிரத்தை சேரும் சீவ னல எனினுலகில் சீவ னெல்லாம்
உரங்கொள்வ தூண்பெறிற் சோரும் ஊண்பெறாவேல் உலர்ந்தமர நீர்பெற்றா லுய்யாதுள் ளுயிர்கள்
கரந்தசினை முட்டைகட்கு வாயிலின்று வாயில் கண்டிலதேற் பூத்துக்காய்த் தெழல்மரங்கள் உயிரே.

பொழிப்புரை :

மரம்முதலியன உயிருள்ளன அல்லவென்று புத்த ! நீ சொன்னாய். அவைமெலிதலாலும் பருத்தலாலும் அம்மரமுதலியவை உயிருள்ளனவாகும். மரம்முதலியன நீர்பெறா தொழியில் வாடுதலும் அந்நீர்பெற்றாற் பூரித்தலும் இயல்பு. சிரத்தைபெற்ற ஆன்மாவல்ல வென்று நீகூறில், உயிருள்ளவற்றுக்கெல்லாம் ஊண்பெற்றாற் பருத்தலும் ஊண்குறைந்தால் மெலிதலுங் குணமாகையால் உலர்ந்த மரத்துக்கு நீரைவிட்டாற் பரிணாமமில்லை யாதலான் மரம் முதலிய வுயிருடையவாம். அற்றன்று, மரம் முதலியனவற்றுக்கு இந்திரியங்களில்லையாகையால் உயிரல்லவென்று கூறின், ஆன்மாவையுள்ளடக்கி நிற்கும் முட்டை சினை முதலியவற்றிற்கு வாயில் தோன்றாவாறு போல மரம் முதலியவற்றுக்கும் வாயில் தோன்றா. அம்முட்டை சினை முதலியவற்றுக்கு வாயில் பின்புதோன்றத் கண்டனம், இவற்றிற்கு வாயில்தோன்றக் கண்டதில்லையென்று கூறில், அம்மரம் முதலியனவற்றுக்கு இந்திரியங் கட்புலனாகாதாயினும் பூத்துக் காய்த்து வளர்தலுங் காண்டலால் இந்திரியமும் உயிரும் மரம் முதலியனவற்றுக்குண் டென்று அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

ஒருமரத்தின் உயிரொன்றேல் கொம்பொசித்து நட்டால் உய்யுமுயிர் ஒன்றுபல வாமோ வென்னில்
கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு கண்கலந்து கொள்ளுமுயிர் அண்டம் வேர்ப்புத்
தருபிறப்புச் சராயுசங்கள் சநநமும்பெற் றாற்போல் தானடையும் உற்பிச்சம் தலநடவா வென்னில்
பெருநிலத்தில் காலிலார் நடப்பரோ பேதாய் பிறப்பின்விதம் அநேகங்காண் பேசுங் காலே.

பொழிப்புரை :

மரத்துக்கு ஆன்மா வுண்டாமாயின், ஒரு மரத்தின் கொம்பை முறித்து நட்டால் அதனைப்போல வளர்தலால், ஒருயிர் பலவுயிராமோவென்று புத்த ! நீ கூறில், மரத்தினுண்டாகிய வித்து வேர் கொம்பு இவற்றையும் பிறவற்றிற் கொடி கிழங்கு கணுக்கள் இவற்றையுங் கருப்பாகக் கொண்டு ஆன்மாக்கள் தோன்றும். முட்டையிலுங் கசிவிலுந் தோன்றிய ஆன்மாக்கள்போல நடைபெற்று வித்திற்றோன்றும் மரம் முதலியன பூமியிடத்து நடை பெறாவகையால் ஆன்மா அன்றென்று நீகூறில், சொல்லுங் காலத்துக் காலிலார் பெரிய பூமியிடத்து நடக்கவல்லரோ? அப்படியே இந்திரியக்குறைவான ஆன்மபேதம் அநேகமாகவுண்டு பேதையே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா தின்பை யெனக் கொன்றுனக்குத் தீற்றினர்க்குப் பாவம்
மன்னுவதுன் காரணத்தால் தின்னா தார்க்கு வதைத்தொன்றை இடாமையினால் வதைத்தவர்க்கே பாவம்
என்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர என்னதவம் புரிகின்றாய் புலால்கடவுட் கிடாயோ
உன்னுடலம் அசுசியென நாணி வேறோர் உடலுண்ணில் அசுசியென உணர்ந்திலைகாண் நீயே.

பொழிப்புரை :

தான் கொல்லுமது குற்றமுடைத்து, செத்தது தின்னுமது குற்றமில்லையென்று கூறும் புத்தா ! நீ தின்பை யென்று கருதி உனக்கு ஒன்றைக்கொன்றூட்டினர்க்குப் பாவம் உன் காரணத்தாலுண்டாம். அஃதெங்ஙனமென்னில், தின்னாதார்க்குக் கொன்றூட்டுவாரில்லை யாகையால். என் காரணத்தாற் பாவமுண்டாகாது, கொன்றவர்க்கே பாவமுண்டென்றுகூறின், உன்னைப் பரிந்தூட்டினவர்க்குப் பாவமுண்டாக நீ என்ன தவத்தைச் செய்கின்றாய் ! அஃதன்றியும், நீ புலால் நுகருங்காலத்தே உன் கடவுளுக்கும் புலாலையூட்டுவை. அஃதன்றியும், உன்னுடம்பு சுத்தமில்லையென்று வெட்கி நீ பிறவூனை நுகருமது சுத்தமில்லையென்று அறிந்தாயில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 69

குடைநிழலும் கண்ணாடிச் சாயையும்போல் பிறப்புக் கொள்ளும்உணர் வென்னில்கா ரணமழிய அழியும்
அடை நிழல்போல் கந்தமைந்தும் அழியுமுனக் கிங்கே அவையழிந்தால் அருங்கதியின் அணையுமுணர் வின்றாம்
இடைகனவில் எழுமுணர்வு நனவுணர்வா னாற்போல் எழுமுணர்வு கன்மத்தால் நினைந்துகதி யென்னில்
மிடைசினையும் அந்தனுமுட்டையு முயிர்விட் டக்கான் மேவுவதென் பிறப்பினுடல் விடாது கன்ம வுணர்வே.

பொழிப்புரை :

குடையின்கட் குடைபோல நிழல்தோன்றுந் தன்மையும் கண்ணாடியிற்காட்டின வுருப்போல உருத்தோன்றுந் தன்மையும்போல இக்காயம்விட மற்றொருகாயத்தை எடுத்துக் கொள்ளுமென்று புத்த ! நீ கூறின், குடையுங் கண்ணாடியுமாகிய காரணங்கெட அவற்றிற்பொருந்திய நிழலாகிய காரியங்கெட்டாற்போல, கந்தங்கள் ஐந்தும் உனக்கிவ்விடத்தே கெடும்; அவைகெடவே, இந்திரியங் காரணமாகக் காரியப்படும் அறிவும் இங்கே யழியுமாகையால், காரணமாகிய கந்தங்கள் ஐந்தும் அழிந்தால் அரியகதியையடையும் அறிவில்லையாம். கனவிடையெழும் அறிவு மெய்யறிவாய்ப் பரிணமித்தாற்போல, கன்மங்கட்கீடாக நினைந்துண்டாமுணர்வு கதியிற் கூடுமென்று நீ கூறின், இந்திரிய அறிவுகெட்டால் தம்மினெருங்கியசினையும் பிறவிக்குருடனும் முட்டையும் உயிர்போனாற் பெறுங்கதி யாது ? அதனால், பிறப்பினுடலைக் கன்மவுணர்வு விடாது.
கன்மவுணர்வென்பது ஆன்மஞானம். சினையும் அந்தகனும் முட்டையும் பூர்வகன்மத்துக்கீடாகத் தொழின்மறந்து கிடக்கையாற் கதியடையாவென்பதாயிற்று. கதியென்றது நற்பிறப்பு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

ஐந்துகந்தம் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக்கெடுகை முத்தியின்பம் என்றறைந்தாய் கந்தம்
ஐந்துமழிந்தால்முத்தி அணைபவர்யா ரென்ன அணைபவர்வே றில்லை யென்றாய் ஆர்க்குமுத்தி யின்பம்
ஐந்தினுணர் வினுக்கென்னில் அழியாத உணர்வுண் டாகவே அவ்விடத்தும் உருவாதி கந்தம்
ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி அரந்தைதரும் முத்தியின்பம் அறிந்திலைகாண் நீயே.

பொழிப்புரை :

கந்தங்கள் ஐந்துந் தொடர்ச்சியிலே சேட்டை கெடுதல் பந்ததுக்கமென்றும் அவை கர்ப்பூரதீபம்போலச் சேரக்கெடுகை முத்தியின்பமென்றும் புத்த ! நீ கூறினாய். கந்தங்கள் ஐந்துங்கெட்டால் முத்தியிற் செல்வார் யாரென்றுழிச் செல்வாரொருவருமில்லையென்று கூறினாய். முத்திபெறுவாரில்லையாயின் முத்தியின்பம் யாவர்க்கு ? கந்தங்கள் ஐந்திற்றோன்றும் அறிவிற்கென்று கூறின், மனத்தால் அறியும்மறிவு கெடாதிருக்குமாயின், அவ்விடத்திலும் உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானமென்னுங் கந்தங்கள் ஐந்தும் உண்டாதல் வேண்டும். அவையுண்டாகவே, முத்தியிடத்திலும் பந்ததுக்கமுண்டாய்க் கிலேசத்தையுந் தரும்; ஆதலால், நீ மோக்ஷசுகத்தை அறிந்திலை, அதனைக் கேட்பாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 71

அநாதிமுத்த னாய்ப்பரனாய் அசலனா யெல்லா அறிவு தொழில் அநுக்கிரக முடையஅரன் கன்மம்
நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாத நுழைவித்து மலங்களெல்லாம் நுங்க நோக்கி
மனாதிகர ணங்களெல்லாம் அடக்கித் தன்னை வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால்
இனாதபிறப் பினில்நின்று மெடுத்து மாறா இன்ப முத்திக் கேவைப்பன் எங்கள்முத்தி யிதுவே.

பொழிப்புரை :

அநாதியிலே மலரகிதனாய் எப்பொருட்குமேலாய்ச் சலநமில்லாதவனுமாய்ச் சர்வஞ்ஞத்துவமுஞ் சர்வகிருத்தியமுஞ் சர்வா நுக்கிரகமும் உடையனாகிய பரமேசுவரன் ஆன்மாக்கள் செய்த புண்ணியபாவ மிகுதி குறைவறத் துலையொத்தவிடத்து அருட்சத்தி பதிவித்துக் குருமுர்த்தியா யெழுந்தருளி மலங்கள்கெடத் திருக்கண் சாத்தியருளி மநமுதலாகிய உட்கரணங்களையும் இந்திரிய முதலாகிய புறக்கரணங்களையுங் கெடுத்துத் தன்னை வழிபடு நால்வகையாகிய வழிபாட்டையுமருளி மிகுந்த காருண்ணியக் கையாலே பொல்லாப் பிறவிக்கடலில் வீழாமலெடுத்து ஒழியாத இன்ப முத்திக்கரையிலே வைத்தருளுவன்; இதுவே எங்கள் முத்தியாகையால், நீயும் இவ்வழியினின்று முத்தியின்பத்தை அநுபவிப்பாயாக. ச0 நூனாதிகம் நுனாதிகமென விகாரப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதாய் எழலாற் போதம்
வாதனை அதனாற் கூடி வருதலால் வடி விலாமை
ஆதலாற் கனவே போலும் சகமுள தறிவே யாமென்(று)
ஓதினான் ஓதா னாய உணர்வினால் யோகா சாரன்.

பொழிப்புரை :

அறிவே இந்திரியங்களுமாய்த் தோன்றப்பட்ட உருக்களுமாய் வருதலானும், அவ்வறிவு இந்திரியவாதனையினாலே கூடிவருதலானும், அவ்வறிவு அரூபமாதலானும், அநித்தியரூபமாகிய பிரபஞ்சம் சொப்பனம்போலும்.யோகாசாரன் சாத்திரத்தைஉணராத அறிவினாலே சௌத்திராந்திகனில் வேறுபட்டு இந்திரிய வாதனையால் அறிவுண்டாமென்றும் பிரபஞ்சங் கனவேபோலும் என்றும் அறிவேயுள்ளதென்றுங் கூறினான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

போதமுந் தவிர வேறோர் வாதனை புகன்றாய் போதம்
வாதனை இரண்டுண் டென்னாய் போதவா தனையும் என்னிற்
காதலாற் பொருளி னோடு கலந்தபின் எழுங்க ருத்தாம்
வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க ருத்தே.

பொழிப்புரை :

யோகாசாரன் மத மறுதலை..யோகாசார ! நீ அறிவொழிய வேறொரு வாதனையுண் டென்று சொன்னாய். அப்படியாயின், போதமென்றும் வாதனை யென்றும் இரண்டுண்டென்று கூறாய். வாதனைதானும் அறிவே யென்று கூறின், அறிவு சத்தாதிவிடயத்திலே கலக்கவேண்டு மென்னும் இராகத்தாற் கலக்க அக்கலப்பிலே பலகாற் கருத்தைச் செலுத்துதலே வாதனை; ஆகையால், வாதனை அறிவன்று. கனவானது நனவிற் கண்ட பொருளின்மேற் கருத்தைச் செலுத்துவதாதலாற் பிரபஞ்சங் கனவுமன்று; அதனால், நீ கூறியது மித்தையேயாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அறிவதே பொருள தாயின் அகம்சடம் என்ன வேண்டும்
பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னில்
உறுபொருள் உருவந் தோய்ந்தால் உணர்வு மவ்வுருவாய் நிற்கும்
செறிபொரு ளதுவாய் நிற்கும் தெளிபளிங் கதுவேபோல.

பொழிப்புரை :

யோகாசார ! நீ கூறிய அறிவுதானே பிரபஞ்சரூப மென்று கூறின், நான் உடம்பென்று சொல்லவேண்டும். அறிவும் உருவும் வேறுபாட்டையுடைத்து. அறிவும் உருவும் வேறுபாட்டை யுடைத்தாமென்னில், உருவை நீங்கிநின்ற அறிவுதானே நான் பொருளென்று கூறும் பகுதியாம். அறிவு உருவத்தோடு கூடினால் அவ்வறிவு உருவந்தானாய் நிற்கும் ; அஃதென்போல என்னில், அடுத்த வன்னத்தோடு கூடிய பளிங்கு அவ்வன்னந்தானாகத் தோன்றுமாபோல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை
இவைபொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்கள் இன்றாம்
அவைபொருள் இலாமை யாலே அறிவுமின் றாகு மென்று
நவைதரு மொழியி னாலே நவிலுமாத் தியமி கன்றான்.

பொழிப்புரை :

இந்திரியம் பத்தும் பொருளாய்த் தோன்றும், இந்திரியங்கள் கெட்டாற் பின் பொருள் இவையென்றறிதற்கு ஒன்று மில்லாமையாற் பொருளு மில்லையாம், அந்தப் பொருள்களில்லா மையினாலே பொருளைக் கூடிநின்றறியும் அறிவுமில்லையாம், என்றிப்படிக் குற்றத்தைத்தருஞ் சொல்லாலே மாத்தியமிகன் சொல்லுவான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

கடத்தினில் அவய வங்கள் படத்தினில் புகாமற் காத்தும்
படத்தினில் அவய வங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டும்
இடத்தினில் நிற்கும் ஆகும் அவயவி இரண்டுங் கூடி
உடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வும் உண்டே.

பொழிப்புரை :

மாத்தியமிகன் மத மறுதலை - மாத்தியமிக ! நீ அவயவமே பொருளாவது, அவயவியில்லையென்று கூறினாய்; கடாதிகளின் அவயவங்கள் படாதிகளிற் செல்லாமை நீக்கிக்கொண்டும், படாதிகளின் அவயவங்கள் கடாதிகளிற் செல்லாமை நீக்கிக்கொண்டும், அவ்வவ் வவயவங்களிலே அவ்வவ்வவயவி நிற்குமாகையால், அவயவமும் அவயவியுங் கூடியே ஒருபொருளாக வுண்டாவது. அப்படி யுண்டாகவே அதுபோலப் பொருளாகிய சரீரமும் உண்டு உணர்வும் உண்டென்று அறிவாயாக.
கடாதிகட்கு அவயவி மண். படாதிகட்கு அவயவி நூல். பொருள் அவயவம். உணர்வு அவயவியாகிய ஆன்மா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

கருவியும் ஒளியும் வேறு கருதிடுங் கருத்தும் நிற்கப்
பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம்
மருவிடும் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால்
பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே.

பொழிப்புரை :

இந்திரியங்களும் இந்திரிய விடயமாகிய சத்தாதிகளும் அவற்றாற் காணப்படும் பொருள்களை வேறுபட ஆராயும் அந்தக் கரணங்களுமுண்டாய் நிற்கவும் ஆன்மாவந்து கூடாதது கொண்டு ஒருபொருளையுந் துணிந்தறியும் அறிவில்லையாம். இந்திரிய விடயங்களோடும் அந்தக்கரணங்களோடுங் கூடிநின்றறியும் ஆன்மாவுண்டாக அறிவுமுண்டாமாகையால் ஆன்மாவுண்டாகும். அஃதுண்டாகவே அறிவுமுள்ளதாம். (இவ்விடத்துப் பொருளென்றது ஆன்மாவை.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அரிசனம் நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல
விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும்
தெரிசன மிதுவே யென்று தெளிந்திடும் தேரர் வீடு
பரிவோடும் அடைவீ ரென்று பகரும்வை பாடி கன்றான்.

பொழிப்புரை :

மஞ்சளுஞ் சுண்ணாம்புங்கூட ஒரு சிவப்புநிறந் தோன்றுமாபோல, காணப்பட்ட பொருள்களும் இந்திரிய விடயமான அறிவுங் கூடினபோது பிரபஞ்சப்பொருள்கள் பொருந்தித் தோன்றும். இதுவே ஞானதரிசனமென்று தேறுவீராக. அப்படித் தெளிந்தீராயின், புத்தர் வீடுதரும் இன்பத்தை அடைவீரென்று பரிவோடுஞ் சொல்லா நிற்பன் வைபாடிகன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும்
தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம்
அருவுணர் உருவ ஞேய மாதவி னாலுங் கூடா
உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே.

பொழிப்புரை :

வைபாடிகன் மத மறுதலை - அறியப்படும் பொருள் புறத்ததாகும்; அறியுமறிவு அகத்ததாகும்; ஆதலால், தெளிய அறியுமிடத்து இரண்டுஞ்சென்று கூடுந் தொழிலில்லையாம். அன்றியும் ஞானமாகிய அறிவு அரூபமாகையாலும், ஞேயமாகிய பொருள் உருவமாகையாலுங் கூடா. உருவும் அருவுங் கூடுமென்ற வைபாடிகனுக்கு இனிச்சொல்லும் உத்தரமில்லையாம். (பொருள் பிரபஞ்சம், ஞேயமுமது.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து)
ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்
பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினோடு பீலிமேல்
நேச மாயவை தரித்துள்ளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம்.

பொழிப்புரை :

மணமும் வண்டும் பொருந்திய மலர்களையுடைய அசோக விருட்சத்தைத் தெய்வம்போலப்பேணி, வேதமார்க்கத்தோடு மறுதலைப்பட்டுரைக்குந் தவத்தினை ஆசைப்பட்டு, உடுக்கையைக் கைவிட்டுக் குளிக்குந் தன்மையின்மையின் அழுக்கடைந்து, பிரமசரிய முதலாகிய ஆச்சிரம மூன்றுக்கும் பற்றாயிருக்கிற கிருகத்தாச் சிரமத்தை விட்டு, வயிறுபெருக்கவுண்டு பாயுடுத்துப் பீலி கைப்பிடித்து, இங்ஙனஞ் சொல்லியவற்றிலே சிநேகமாய் அவற்றைத் தரித்துள்ளோர்களின் நிகண்டவாதிமதத்தைச் சொல்லுகின்றோம்.
கண்டம் உடை. நிகண்டம் உடையின்மை. அஃது க்ஷமணரில் நிகண்டவாதி எனக்கொள்க. ஆசீவகர்க்கு உடையுளதாம். மறை நீதியோடு மலையுந்தவம் எக்கியாதி கர்மம், கர்த்திருவாதம், பஸ்ம ருத்திராக்ஷம் முதலியவைகளை நீக்கிய கன்மம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஈறி லாதன அநந்த ஞானமுதல் எண்கு ணங்களெனும் ஒண்குணம்
மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே
வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர்
ஏறு பான்மையுடை நீடு வாழ்அருகன் எங்க ளுக்கிறைவன் என்றனன்.

பொழிப்புரை :

கேடில்லாதனவான அநந்தஞானமுதலிய நற்குணம் எட்டையும் கோணாத மதிக்குக் குளிர்ச்சி தன்னிடத்திலே தோன்றி னாலொப்பத் தோற்றுவித்து, அந்த நற்குணங்களோடு கூடாது பரந்த தீக்குணங்களென்று சொல்லப்பட்ட ஞானாவரணிய மாதியாகிய எட்டுக் குணங்களையும் விட்ட அழகினையும், இந்திராதி தேவர்கள் போற்ற மிக்க பான்மையையுடைத்தாய் நெடிது வாழ்கின்ற அருகபரமன் எங்கள் கர்த்தாவென்று கூறினான்.
நற்குணம் எட்டாவன : அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம், நிர்நாமம், நிர்க்கோத்திரம், நிராயுஷியம், சம்மியதாபாவம் என்பன. சம்மியதாபாவம் அழிவின்மை. ஞானாவரணியம் எட்டாவன : ஞானாவரணியம், தரிசனாவரணியம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷியநாமம், கோத்திரநாமம், ஆயவந்தராயம், காயவந்தராயம் என்பன. இவையே தீக்குணங்களென்றும் பெயர் பெறும். சீரேறுபான்மை யென்பது நின்மலத்துவ முதலியன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

கருவி கண்படு தொடக்கொ ழித்துவரு கால மூன்றின் நிகழ்காரியம்
பெருக நின்றொரு கணத்தி லேஉணர் பெருந் தவக்கடவுள் பீடினால்
மருவி நின்றுவழி பட்ட வர்க்கும்மலை வுற்ற வர்க்கும்மனம் ஒத்திடும்
குரிசி லெங்களிறை யென்று பின்னும்நிகழ் குற்ற மின்மையது கூறுவான்.

பொழிப்புரை :

இந்திரிய விடயத்தால் வருந்தொடக்கைத் தன்னிடத்துநின்றுங் கைவிட்டுப் பெருங்காலமுதலாக மூன்று காலத்திலும் உள்ள காரியங்களை மிகவும் ஒரு கணமாத்திரத்தாலே அநந்த ஞானத்திலே அறியத்தக்க பெரிய தவத்தையுடைய தேவன், தனது பெருமையினாலே பொருந்தநின்று வழிபாடு செய்தவர்க்கும் மாறுபட்டவர்க்கும் ஒரு நீர்மையான தலைவன், எங்கள் சுவாமியென்று கூறி அவனுக்குக் குற்றமில்லாத தன்மையைப் பின்னுஞ் சொல்லுவான். மனமொத்திடுகை சமதரிசனமாகை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

பசித்தல் தாகபய செற்ற மோடுவகை மோக சிந்தனை பழித்தனோய்
நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும்
புசிப்பு வந்திடு பிறப்பு றக்கமிவை விட்டொ ரட்டகுண பூதனாய்
வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொல் இகல னுக்கருளும் என்றனன்.

பொழிப்புரை :

பசித்தல் பசித்தல், தாகம் ஆசை, பயம் அச்சம்,செற்றமோடு மாற்சரியம் ஆகிய இவற்றுடனே, உவகை ஒன்றன்மேற் பிரியப்படுதல், மோகம் மயக்கம், சிந்தனை ஒன்றைச் சிந்தித்தல், பழித்தல் ஒன்றை நிந்தித்தல், நோய் வாதபித்த சிலேஷ்மம், நசித்தல் சாதல், வேர்வினொடு வியர்வோடும், கேதமோடு கிலேசப்படுதலோடும், மதம் வேண்டல் கர்வத்தைவிரும்பல், ஈண்டு அதிசயித்தலும் இவ்விடத்து அதிசயப்படுதலும், புசிப்பு உணவு, வந்திடு பிறப்பு ஜநித்தல், உறக்கம் மூவகை நித்திரை, இவைவிட்டு ஆகிய இவை பதினெட்டையும் முற்றக் கைவிட்டு, ஓரட்டகுண பூதனாய் அநந்தஞான மாதியாகச் சொல்லப்பட்ட எட்டு குணங்களையுடையவனாய், வசித்தவன் உலகின்மேல் இருந்து ஒருசொல் இகலனுக்கு அருளுமென்றனன் உலகத்துக்கு மேலாகிய பொன்னெயில் வட்டத்திருந்து சித்தபரமேட்டிகள் கேட்டதொரு சொல்லினுக்கு உத்தரமருளுமென்று கூறினான்.
பிறப்பு தேவ மநுஷிய நரக விலங்கென நால்வகை. மூவகை நித்திரையாவன நித்திராநித்திரை, பிரசலாப்பிரசலை, நிக்கிரககதி அனுக்கிரக கதியென்க. இதற்கருகன்கூறிய சொல்லாவது பொன்னெயில் வட்டத்திருக்கிற சித்தபரமேட்டி என்னும் சகலாத்தரை இகலாத்தர் சூசூதன்மம்பகவ” என்று கேட்க, முரசுதாக்கச் சத்தங்கிளம்பினாற்போல வொருசொல் சூசூபஞ்சாஸ்தமயம்” என்று சகலாத்தர் சொல்ல, இதுகொண்டு விசாரித்தான் எனக்கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

அந்த வாய்மொழியி னால் அவன்சரண மாதி யோகமுதலான நூல்
இந்த மாநிலம் மயங்கி டாதவகை இங்கி யம்பினன் இதன்பொருள்
வந்த காலமுயிர் தன்ம தன்மிஅறம் மற்றும் விண்மருவு புற்கலம்
பந்தம் வீட்டினொ டநாதியா யிவை படைப்ப தின்றியுள பத்துமே.

பொழிப்புரை :

அந்தப் பஞ்சாஸ்தமயமாகிய வாக்கியத்தினாலே அந்தச் சித்தபரமேட்டி சரணமாதியாகிய யோகமுதனூலை இப்பெரிய நிலத்துள்ளோர் மயங்காதவகை இவ்விடத்துச் சொன்னான். இந்த நூலிற் கூறிய பொருள், உண்டானகாலம் ஆன்மா தன்மம் அதன்மம் புண்ணியம் பாவம் ஆகாசம் அணுவாய்த்திரண்டான்மத்தன்மை பொருந்தின புற்கலம் பந்தம் வீட்டோடுகூடப் பத்தும் ஒருவராற் படைக்கப் படாததாய் அநாதியே யுள்ளனவாம்.
தன்மமென்பது தன்மாத்திகாயத்தை. தன்மியென்பது அதன்மாத்திகாயத்தை. சரணம் ஆதிசரணம், சித்தசரணம், ஆசரிய சரணம், தன்மசரணம் என நான்கு. மற்றுள்ளனவுங் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

நிற்ற லோடுதலை போதல் அன்மையை நிகழ்த்து நீடுவெதி ரேகமும்
உற்ற தாம்இவை கணத்தி லேமருவி உள்ள வாபுரியு மாறுதான்
கற்ற காலமள வெய்தி வாழுமுயிர் காய மேவிநிறை வானதே
பெற்று வேறுவரு தன்மை நேரறிவு பெற்ற தாகியுள பேசிலே.

பொழிப்புரை :

அநாதிப்பொருள் பத்திலே, காலமானது நிகழ்காலமும் இறந்தகாலமும் இவையல்லாமையை விளக்காநின்ற நிலைபெற்ற எதிர்காலமுமாகிய மூன்றையும் பொருந்தியதாம். அன்றியும் இம்மூன்று காலத்தையும் ஒருகணப்பொழுதிலே பொருந்தியுண்டான தகுதியைச்செய்யுந் தொழிலையும் அந்தக் காலங்கற்றதாம், அக்காலத் தெல்லையப் பொருந்திவாழும் ஆன்மாவானது சரீரியாய் அந்தச் சரீரமுழுதும் நிறைந்த தன்மையைப்பொருந்திப் பால தருணவிருத்த அவத்தைகளினும் வேறுவேறாகவருந் தன்மையோடு பொருந்தின அறிவு பெற்றதாகியுள்ளதாம் சொல்லுங்காலத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

பரந்து மீதுதரு மாத்தி காயம்அழி வித்(து) அநித்தமது பண்ணிடும்
நிரந்து கீழதரு மாத்தி காயமது நித்த மாய்மிக நிறுத்திடும்
புரந்த புண்ணிய மிதற்கு நன்மைபுகல் பாவ மானவது தீமையே
தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு புற்க லன்களவை சாற்றுவாம்.

பொழிப்புரை :

விரிந்து மேலாகிய தன்மாத்திகாயமானது பூதகாயத்தை மேலும் எடாதபடி அழிவித்து அதனை அநித்தியத்தைச் செய்யும். நிரைபட்டுக் கீழாகிய அதன்மாத்திகாயமானது பூதகாயத்தோடு கூடி நித்தமாய் மிகவும் நிலைபெறுவித்திடும். மன வாக்குக் காயங்களாற் செய்யப்பட்ட புண்ணியமானது இத்தன்மாத்திகாயத்தைத் தருவதற்கு நன்மையாம். சொல்லப்பட்ட பாவமானது தீமையே தரும் அதன்மாத்திகாயத்துக் கேதுவாம். எல்லாப் பொருட்கும் இடங்கொடுத்து நிற்கும் ஆகாயம். இதனிடத்தில் தோன்றும் புற்கலப் பொருளை மேலே சொல்லுவாம்.
தன்மாத்திகாயமாவது புண்ணியத்தால் எடுக்குந் தேகம். அதன்மாத்திகாயமாவது பாவத்தால் எடுக்குந் தேகம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

ஏணும் ஒன்றுடைய வாகி எங்கும் அணு வாய்இரும்புகல் மரங்களும்
பூணும் அங்குருவே லாமு மாகுமிவை புற்க லப்பொருள்கள் என்னலாம்
காணும் அங்கறு வகைத்தொ ழில்களவை கட்டு விட்டநெறி கன்மமேல்
மாண நின்றுவரு மாறி மாறிமுன் வகைந்த துண்டுவிட மாட்சியே.

பொழிப்புரை :

ஒரு வலியுமுடையவாய் எவ்விடத்திலும் உருவமாய்த் திரண்டு இரும்பு கல்மரங்கள் முதலியனவுமாய் இவை யொழிந் தெடுத்துக் கொள்ளப்பட்ட உருக்களெல்லாமுமாய்த் திரியக்கணு பூர்வமென்னும் ஆன்மப் பெயரையுமுடையவாய் நிற்கும் ; அவற்றைப் புற்கலப் பொருளென்று சொல்லலாம். பொல்லாங்காய்க் காணப்பட்டுள்ள அறுவகைத்தொழில்களே பந்தம், அப்பந்தத்தைவிட்ட ஒழுங்கே தவம். அத்தவந்தான் உடல் மேன்மேல் வருந் தவமாட்சிமை யுண்டாய் நிலைபெற்று வர்த்திக்கும் ஆன்மாவுக்கு முன்பே புசிப்பதாக வுண்டாக்கப்பட்ட புண்ணியபாவங்கள் தொலையப்புசித்து விட்டமாட்சிமையே வீட்டைத்தரும்.
அணுபூர்வமாவன : தெய்வகதியாவை பூர்வம், மனுஷியகதி யாவை பூர்வம், நரககதியாவை பூர்வம், பக்ஷிமிருககதியாவை பூர்வம், திரியக்காதியாவை பூர்வம் எனவிவை. இவற்றுள் திரியக்காதியாவை பூர்வம் புற்கலப்பொருள். அறுவகைத் தொழிலாவன கந்தம், ரசம், ரூபம், பரிசம், சத்தம், பரிணாமம் எனவிவை. காமாதியறுவகையுமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

அருகனுக் கனந்த ஞான மாதி ஆதி யாகவே
பெருக நிற்றல் சீதம்மா மதிக்க டைந்த பெற்றியேல்
ஒருவும் இட்ட ஒப்பவன் னுயிர்த்தி றத்தி னுள்ளபின்
மருவு மிக்க குற்றம்மேல் அறத்தின் மன்னி னானெனில்.

பொழிப்புரை :

நிகண்டவாதி மத மறுதலை - அருகபரமனுக்கு ஞானாவரணியமாதியாகிய தீக்குணங்க ளெட்டு நீங்கப்பட்டு, அனந்தஞானமாதியாகிய நற்குணங்களெட்டுஞ் சந்திரனுக்குச் சைத்தியம்போல இடையேயுண்டாமென்று கூறினாய்; அதுவே முறையாயின், நீகூறிய உவமையின் நீங்கப்படும்; அஃதெங்ஙனமென்னில், கர்த்திருகுணமின்றியே சில குணத்தை விட்டுச் சில குணம்வந்து கூடிற்றென்பது ஆன்ம குணமாகையால்; அவனும் ஆன்ம குணத்தை யுடையவனாவன்; ஆகவே விடப்பட்ட தீக்குணங்கள் எட்டும் முன்புண்டாய்விட்டவாம். அற்றன்று, அவன் ஞானாவரணியமாதியாகிய குணங்களை நீங்கி அனந்த ஞானமாதியாகிய குணங்களைக் கூடுதன் மேலான அறத்தின்கண்ணே பொருந்தினனாகையாலெனில்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

அறத்தின் மன்னு வித்தவன் ஒருத்தனாய் அவன் அறத்
திறத்தி னிற்றல் மற்றொருத்த னால்வி ளைந்த செய்தியாம்
மறத்தின் அற்ற வர்க்கெலாம் வணக்கம் உன் இறைக்குமேற்
பிறக்குமிங் கவத்தை கொண்ட தாரை யின்று பேசிடே.

பொழிப்புரை :

அவன் அத்தருமத்தினாலே பொருந்தினானாயின், அத்தன்மத்திலே நிலை பெறுவித்தவன் ஒருவனுளனாய் அவனாற் கூறப்பட்ட தன்மநெறியிலே நிற்குந் தகுதி ஒருவன் கற்பித்ததொழிலை ஒருவன்செய்த செய்தியாம். கொலையை நீங்கினவர்க்கெல்லாம் வணக்கமாகப்பட்ட உன்கர்த்தாவுக்கு மேலுமொருவனுளன் என்பதோர் எல்லையுண்டாமாகையால், முன்னர்க் கூறியவனையோ, அவன் கீழ்நின்றிந்திரியத் தொடக்குப்படாமல் தவஞ் செய்தவனையோ, நீ கர்த்தவாகக் கொண்டது யாவரையென்று இப்போது சொல்வாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

கருவிதன் தொடக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியேல்
உருவு கொண்டு நின்ற தென்னில் உண்டுதான் மநாதிகள்
ஒருவி நின்ற தென்னில் அத்த மொன்றையும் உணர்ந்திடான்
பொருள்தெ ரிந்து போகை கால மொன்றிலே புணர்ந்திடான்.

பொழிப்புரை :

உன் கர்த்தவாகிய அருகபரமன் மனாதிகளாகிய கருவி களினின்று அறியுமறிவை நீங்கிச் சர்வமுங் கண்டிருக்குமென்று கூறினாய். அப்படியாயின், அவனைச் சரீரம் பொருந்தி நின்ற தென்று கூறின் மனமுதலாகிய கருவிகளுண்டாம். அவை யொழிந்து காண்டற்கு வழியுமில்லை; அவனைச் சரீரம் நீங்கி நின்ற தென்று கூறின், அவன் எல்லாவற்றையுங் கண்டு வாழுமென்று சொல்லுதலும் மித்தியாவாதமாய் மற்றொன்றையும் உணர்ந்த தில்லையாவன். ஒரு பொருளை அறிதற்குக் கருவியான மூன்று காலத்தையும் ஒருகாலத்திலே உணருந்தன்மையனும் அல்லன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

ஆர்வ கோப மானவை அடைந்தொ றுப்ப வர்க்கெலாம்
சேர்வ தின்மை செப்பில்இன்று சீவன் மேவு காயமால்
ஒரு மன்னர் போலவே உயிர்க்க ளித்த லென்றியேல்
ஏர்கொள் பொன்எ யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ.

பொழிப்புரை :

காமக்குரோத முதலியவற்றோடுங் கூடி அக்கூட்டுறவு தீதென்றறிந்து நீக்கப்படுவார்க்கெல்லாம் இன்று முத்தியடைதலில்லையாம், சொல்லுமிடத்து உன் அருக பரமனுஞ் சீவனோடு கூடின காயமுடைமையால். அற்றன்று, க்ஷத்திரிய தன்மமான சாத்திரத்தை ஆராய்ந்த ஒப்பற்ற அரசரைப்போல, உயிர்க்குத் தலையளி செய்தலே அருகபரமனுக்கு முறைமையென்று கூறுவையாயின், அவ்வரசரைப் போலத் துஷ்ட நிக்கிரகமுஞ் சிஷ்டபரிபாலனமுஞ் செய்யவேண்டும். அவ்வரசரைப்போல ஒரு நிலத்திலிருந்து துஷ்ட நிக்கிரகமுஞ் சிஷ்டபரிபாலனமுஞ் செய்யாது அழகிய பொன்னெயில் வட்டத் திருக்கப்பெற்றதியாது? அதுவுமன்றி, சூசூமருவி நின்று வழிபட்டவர்க்கு மலைவுற்றவர்க்கு மனமொத்திடுங் குரிசில்” என்று நீ முன்னர்க் கூறுகையானும் அரசர் இவ்வுலகத் திருத்தலானும் உன் அருகபரமன் அரசரையொக்குந் தன்மையும் உடையனல்லன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

சொல்ல தொன்று கொண்டிகலின் ஆத்தன் நாட வேசொலின்
இல்லை யாம் மநாதிதான் இயம்பு மாற தெங்ஙனே
நல்ல வாம் மநாதிதான் அவர்க்கு நாட வேயிலை
ஒல்லை ஊமர் ஊமருக் குரைத்த வாற தொக்குமே.

பொழிப்புரை :

உன் அநாதி அருகபரமனாகிய சகலாத்தன் ஒரு சொல்லைக் கொண்டு ஆதி அருகபரமனாகிய இகலாத்தன் கேட்க மாறுபாடில்லாத பொருளைச் சொன்னானென்று கூறின், உன் ஆதி அருகபரமனுக்கு மநாதிகளில்லையென்றும் நீ கூறுகையால் அநாதி அருகபரமனுடன் ஒரு சொற்கேட்டுப் பலவிதமாக நூல் சொன்னபடி எப்படி? அஃதன்றியும், உன் ஆதி அருகபரமனுக்கு நன்றாகிய மநமுதலாகிய கருவியும் அறிதற்கில்லையாகையால் அவன்கேட்டபடி எப்படி? அநாதி அருகபரமன் ஒரு சொற்சொல்ல அதனை ஆதி அருகபரமன் கேட்டுப் பலவிதமாக நூல்செய்தானென்று நீ சொல்லுமது, ஊமர் சொல்ல வூமர் கேட்டு நூல்செய்தாரென்னுந் தன்மையையொக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

இன்ப பூமி சேரிகலில் நாதன் இவ்வி ருநிலத்
துன்பம்அங் குணர்ந்தி டாமை இங்கு வந்த சொல்லிடான்
இன்ப பூமி யில்இருந் திருந்தி யாவும் எய்திடில்
துன்ப பூமி யாமுணர்ந்து சொல்ல வல்ல தில்லையே.

பொழிப்புரை :

புண்ணிய பூமியாகிய பொன்னெயில் வட்டத்திருக்கிற மாறுபாடில்லாத அநாதி அருகபரமன் இப்பெரிய பூமியிடத்துண்டாகிய துன்பங்களை அறியானாகையாலும் மநாதிகள் இல்லை யாதலானும் இம்பூமியில் உண்டானவற்றை இப்படிச் சொல்லென்று சொல்லமாட்டான். புண்ணிய பூமிப் பொன்னெயில் வட்டத்திருந்து அநாதி அருகபரமன் பூமியில் துன்பம் யாவையுமறிந்து சாத்திரஞ் செய்யச் சொன்னானென்று சொலின், புண்ணிய பூமியாகிய பொன்னெயில் வட்டமுந் துன்பபூமியாகையால், நீ தலைமயங்கச் சொல்லுஞ் சொல்லுக்கு யாமறிந்து சொல்லுஞ் சொல்லில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

நிறைந்து காய மோடுசீவன் நின்ற தாகில் இவ்வுடல்
குறைந்த போது தானும் இத்தொ டொக்கவே குறைந்திடும்
இறந்து போகும் இக்கடம் இறந்த போது நீர்குடத்(து)
உறைந்து டைந்தி டக்குடம் உலர்ந்த வாற தொக்குமே.

பொழிப்புரை :

இச்சரீரத்தோடு ஆன்மாவானது நிறைந்து நிற்குமென்று கூறினாய்; அங்ஙனம் நிறைந்து நின்றதாகில், ஆன்மாநின்ற காயங் குறைந்தபோது ஆன்மாவுங்குறைந்து அறிவு குறையவேண்டும். அன்றியும், கெட்டுப்போகின்ற இச்சரீரமானது கெட்டபோது, குடத்தின்கண் நிறைந்துநின்ற நீர் குடமுடைய அந்நீருங் கெட்டாற்போல, ஆன்மாவுங்கூடக் கெடவேண்டுமாகையால், ஆன்மா சரீரமுழுதும் நிறைந்து நிற்குமென்று சொல்வாயல்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

கண்டநூல் தருந்தன் மாத்தி காய மோட தன்மமும்
உண்டு மீது கீழ்உலாவி உற்று நின்றி டப்பொருள்
கொண்ட தென்னில் அத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா
வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே.

பொழிப்புரை :

ஆன்மாவானது தான்செய்த புண்ணியத்தாலே தன்மாத்திகாயத்தை யெடுத்துக்கொண்டு மேலாகப்பொருந்தி நன்மையைப்புசித்து அதிலே பரந்திடுமென்றும், தான்செய்த பாவத்தாலே அதன்மாத்திகாயத்தை யெடுத்துக்கொண்டு கீழாகப்பொருந்தித் தீமையைப் புசித்து அதிலே பரந்திடுமென்றும், இப்படி இரண்டு காயத்தை ஒருகாலத்திலே மாறிமாறிக் கைக்கொண்டதென்று அருகபரமன் அருளியநூல் சொல்லிற்றென்னின், ஆன்மா ஒருகாலத்திலே நின்று இரண்டுரு எடுத்துக்கொள்ளமாட்டாது. மயிர்க்குட்டிப்புழு வண்டானாற்போலவும் மற்றொருபுழு வேட்டுவாளியானாற் போலவும் வேறுபடக் காயம் எடுத்துக்கொள்ளுமென்று நீகூறின், அந்த ஜந்துக்களுங் கணப்பொழுதிற் பேதித்தனவில்லையாம். ஆகையால், ஆன்மா வேற்றுருவத்தை விரைய எடுத்துக்கொள்ள மாட்டாது.
ஆன்மா தானின்ற தூலகாயத்தை விட்டுப்போய்ச் சூக்கும காயத்துடனே நின்று நன்மை தீமைப் பயனை அநுபவிக்கும தொழிந்து நின்ற தூலகாயத்திலே பேதப்பட்டு வேற்றுரு எடா தென்பது கருத்து. அதன்மம் அதன்மாத்திகாயத்தை. பொருள் அத்தம் இரண்டும் ஆன்மா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றிலே செலுத்துவிப்போன் ஒரு கர்த்தாவில்லையென்று நீ சொல்லின், மிக்க பாவங்களால் நரகங்களையும் மிக்க புண்ணியங் களாற் சுவர்க்கங்களையும் பொருந்திநின்று அநுபவிப்பாரில்லையாம். விரைந்த செலவையுடைய பெரிய அம்பு இலக்கிலே பட்டாற் போலச் செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொல்லுகின்றாயாயின், அப்படி விடப்பட்ட பெரியகணைக்கும் இலக்கைநாடி யெய்வானொரு வில்லிபோல வேண்டுமாதலால், ஆன்மாக்கள்செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவான் ஒரு கர்த்தா வேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

ஏண தொன்று புற்கலத்தின் எய்து மென்னின் நாசமே
காண லாகும் அக்கடம் கழிந்த தன்மை இல்லவை
பூண வேண்டும் மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின்
மாண வே அணுப்பொருள் நிகண்ட வாதி வைத்ததே.

பொழிப்புரை :

நீ கூறிய புற்கலப் பொருளாகிய கல்லும் இரும்பும் மரமும் ஓரறிவையுடைய வென்று நீ கூறின், ஓரறிவையுடைய எல்லாந் தானே கெடுதல் காணலாகும் ; அக்கல்லிரும்புகள் தானே வடிவுகெடுமுறைமை காண்டலில்லை. அன்றியும், பொருந்த ஓரறி வுண்டாயிற் கல் இரும்பு மேல் நரக சுவர்க்கம் பொருந்த வேண்டும். அது பொருந்தாமையுங் காணலாகும். ஒன்றினும் ஓரறிவுடைத்தென்று சொல்லப்படாத கல்லிரும்புகள் அணுப்பொருளாக மாட்சிமைப்படவைத்து நிகண்டவாதி நீ சொன்னாய், இதனை வேறு சொல்வாரில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

ஆறு காரி யங்கள்மாற வேத வங்க ளாமெனின்
மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதனம்
ஈறி லாத வூழதென்னின் எங்கு முள்ள தூழதே
பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே.

பொழிப்புரை :

அறுவகை உவர்ப்புக்களும் நீங்கவே தவமாமென்று நீ கூறின், பொருள்களைப் பரிவர்த்தனை செய்து வாணிகஞ் செய்யாதிருப்பப் பொருள் வந்தடையாது. அதுபோல, உவர்ப்புமாறி ஒரு தவஞ்செய்யாதிருந்தால் தவம் வந்து கூடாது. கேடில்லாத முன்னை வினைப்பயனாலே தவமுண்டாமென்று சொல்லின், உவர்ப்பைக் கைவிடுதல் முதலாயினவும் முன்னை வினைப்பயனாமாதலால், தவமாகியபேறு தவஞ்செய்தலாகிய காரியத்தைவிட்டால் உண்டாகாது சொல்லுங்காலத்து.
கந்த ரச ரூப பரிச சத்த பரிணாமம் ஆறும் உவர்ப்புக்கள். தவ ஒழுக்கங்களினின்று தவஞ்செய்தால் அல்லது ஆறுகாரியத்தை விடுதலினாலே தவஞ்சித்தியாதென்பது கருத்து. ஆறுகாரியம் உழவு, தொழில், வரைவு, வாணிகம், சிடிக்ஷ, சிற்பம் என்பாருமுளர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

உடல்வ ருந்தல் மாதவங்கள் உறுதி யென்று ரைத்திடில்
படவ ருந்து நோயினோர்கள் படர்வர் பொன்னெ யில்எனாய்
திடவ ருந்த இன்பம்இச்சை செய்தல் செய்தல் செய்தியேல்
கெடஅரிந்தி டாய்உன் நாசி கேடில் இன்பம் உன்னியே.

பொழிப்புரை :

சரீரம் வருந்துதலே பெரிய தவத்திற்கு உறுதியென்று நீ சொல்லின், துக்கமாகவுடல் வருந்தச் சரீர இன்பத்துக்கு மாறுபாடு செய்தலைச் செய்வதுவே கேடில்லாத மோட்சத்தின் செய்தியேன்றமையான், நோயினால் மனோதுக்கிகளாய் மெலிவோர் பொன்னெயில் வட்டஞ் சேர்குவரென்று நீ சொல்லாய். முத்தியின்பத்தை ஆசை செய்தல் சரீரம் வருந்தச் செய்தற்றன்மையே யென்னின், அந்த முத்தியின்பத்தைக் கருதி உன் மூக்கைக் கெடுக்கும்படி அறுத்திடுவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

பூர்வ கன்மம் அற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில்
நேர்வ தென்னின் அக்கன் மத்து நிச்சய மிலாமையில்
தீர்வ தின்மை தீரின்வாயில் சேர்வ தின்மை தெண்கடல்
நீர்வ றந்த பின்புபூஞை மீன ருந்த நின்றதே.

பொழிப்புரை :

முன் ஜநநங்களிலுள்ள கருமந்தொலைய இந்த ஜநநத்திலே புசித்த பின்பு பொன்னெயில் வட்டத்தைச் சென்று பொருந்துமென்று நீ சொல்லின், அக்கன்மத்துக்கு அளவின்மையால் நியமிக்க அறிவது இல்லையாய்ப் புசித்துத் தொலையாதாம். கன்மம் புசித்துத் தொலைவுபெற்றால் இந்திரியங்களுடன் சத்தாதி கூடுவதின்மையாம்; அவை கூடாதொழியவே மோக்ஷ வுபாயமான தவஞ்செய்தலும் இல்லையாம்; ஆதலால், கன்மத்தை தொலைய புசித்துப் பொன்னெயில் வட்டத்தை அடைவோமென்று நீ கருதியிருத்தல், பூனை தெளிந்த சமுத்திரத்து நீர் வற்றினவுடனே மீன் தின்னக்கடவோமென்று கருதி, அது வற்றுமளவும் பார்த்திருந்த தன்மையை ஒக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

கூறு கூவல் மன்னும்அக் குடம் குறித்து நீள்கரை
ஏற லுற்ற தன்மைநீ ஒருத்த ரின்றி ஏறுதல்
வேறொ ருத்தன் அக்குடத்தை மீது நின்றெ டுக்கவே
ஏற லுற்ற தன்மையில் சிவன்தி றத்து நின்றிடே.

பொழிப்புரை :

சொல்லப்பட்ட கிணற்றினுட்கிடக்குங்குடம் கரையை நோக்கித் தானே யேறினாற்போலும் ஒரு கர்த்தாவின்றிப் பொன்னெயில் வட்டத்தை நீ சேர்குவமென்னுந் தன்மை, ஒருத்தன் அந்தக் கிணற்றிற் கிடந்த குடத்தை மேலே நின்றெடுக்க அக்குடங் கரையேறிய தன்மைபோலக், கர்த்தா நின்று கன்மத்தைத் தொலைவித்து மேலாகிய வீடுபேற்றைக் கொடுக்கவேண்டும்; அப்படிக் கொடுப்பான் சிவன்; ஆகையால் அந்தச் சிவனையே தெய்வமாகக் கொண்டு, அவனருளிய வேதாகமங்களின் திறமாகிய சரியை கிரியா யோக ஞானங்களிலே நீயும் நிற்பாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

என்உயி ரதற்குப் போல எவர்க்கும்ஒத் திருப்பன் என்று
தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல்
மன்உயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும்
அன்னதோர் வாய்மை ஆசீவகன்அம ணர்களிற் கூறும்.

பொழிப்புரை :

எனதான்மாவுக்கு யான் கிருபைசெய்யுந் தன்மைபோல எல்லா ஆன்மாக்களுக்கும் யான் கிருபை செய்திருப்பனென்று சொல்லின், தன்னுடைய ஆன்மா வருத்தப்படத் தன் தலைமயிரைப் பறித்து, உலகின்கண் நிலைபெற்ற ஆன்மாக்கள் எல்லாவற்றினுக்கும் வருத்தம் கூறுவதுவே அறங்களாகச் சொல்லுமென்னுந் தன்மையாகிய சொல்லை அமணர் இருவகையாரில் ஆசீவகன் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

வரம்பிலா அறிவன் ஆதி வைத்தநூற் பொருள்கள் தாமும்
நிரம்பவே அணுக்கள் ஐந்து நிலம்புனல் தீகால் சீவன்
பரந்திவை நின்ற பான்மை பாரது கடினம் சீதம்
தரும்புனல் சுடும்தீ வாயுச் சலித்திடும் உயிர்போ தத்தாம்.

பொழிப்புரை :

அநந்தஞானனாகிய அருகபரமன் ஆதியிலே யுண்டாக்கப்பட்ட நூலிற் பொருள்கள்தாமும் பூரணமாக ஆன்மாக்கள் ஐந்தெனக்கூறும்; அவையாவன பிருதிவி அப்பு தேயு வாயு ஆன்மா. அவ்வான்மாக்கள் ஐந்தும் விரிந்துநின்ற முறைமை சொல்லிற் பிருதிவி கடினமாம், அப்பு சைத்தியமாம், அக்கினி உஷ்ணமாம், வாயு சலநமாம், ஆன்மா போதத்தை யுடைத்தாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

பார்புனல் பரக்கும் கீழ்மேல் படர்ந்திடும் தேயு வாயுச்
சேர்வது விலங்கின் உள்ளம் அவற்றொடும் சேரும் வேறு
சார்வது பெற்ற போது சார்ந்தஅப் பொருளின் தன்மை
நேர்வது மாகி நிற்கும் இதுபொருள் நிகழ்த்து மாறே.

பொழிப்புரை :

பிருதிவியும் அப்புவும் கீழே விரிவை யுடைத்தாய் நிற்கும். தேயுவும் வாயுவும் மேலே விரிவை யுடைத்தாய் நிற்கும். ஆன்மாவானது காயத்தோடுஞ் சேருஞ் சேர்வையை நீங்கினாற் பிருதிவி அப்பு தேயு வாயுவாகிய நாலான்மாக்களோடுங் கூடி நிற்கும். இவற்றை வேறுபடக் காயத்தைச் செறிவாகப் பெற்றவிடத்துக் காயத்தை இடமாகக் கொண்டு அதனது தன்மை தானாகப் பொருந்தி நிற்கும். இது பஞ்சான்மாக்கள் செய்தியைச் சொல்லும் வழி.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகா
புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும்
அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான
இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே.

பொழிப்புரை :

சீவனையொழிந்த நான்கான்மாக்களும் ஒன்றையொன்றறியுந் தன்மையல்லவாம். அவ்வான்மாக்கள் நான்கும் ஒன்று கெட்டு ஒன்றுமாகா. ஓரான்மாவினிடத்திலே புக்கு ஓரான்மா கூடிநில்லாது. அப்படிக் கூடாதாயினுங் காயமாமிடத்துப் பொருந்தியும் நிற்கும். அவ்வான்மாக்கள் அநாதியிற் கூட்டமன்றி இவ்விடத்துப் புதிதாக வந்து கூடுவதுஞ் செய்யா. பழைய ஆன்மாத் தன்மை கழிதலும் உண்டாகாது. அவ்வான்மாக்கள் கூடுமிடத்துச் சேரக்கூடுவதொழிந்து ஓரொன்றாகக் கூடுவதுஞ் செய்யா. இவையிற்றின் செய்தி ஒருகாலும் ஒழிவதில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

கொண்டுமுன் விரித்தல் நீட்டல் குறக்குதல் குவித்தல் ஊன்றல்
உண்டுதின் றுலர்த்தல் மீட்டல் உடைத்திடல் ஒன்றும் ஒண்ணா
விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும்
பண்டுமின் றென்றும் எங்கும் பரந்தொரு தன்மைப் பாலே.

பொழிப்புரை :

முன்கூறிய ஆன்மாக்களை முன்னே யுண்டாக்கிக் கொண்டு பரப்புதலும் அதனை வர்த்திப்பித்தலும் அதனை எல்லையிலே குறுக்குதலும் சேர எடுக்குதலும் அவற்றிலே யுற்றுநிற்றலும் அதனை உண்டு தின்று கெடுத்தலும் மீளவுண்டாக்குதலும் அவற்றைப் பிளந்திடுதலும் என்னும் இவற்றின் ஒன்றுஞ் செய்ய ஒண்ணாது. விரிந்த அண்டகோளகைக் கப்புறத்தும் போகும். அதற்கு வேற்றுமைப்பட்டு உருக்களுள்ளும் பொருந்தும். முற்காலத்தும் இக்காலத்தும் எக்காலத்தும் எவ்விடத்தும் நிறைந்து ஒருதன்மைப் பகுதியாயிருக்கும்.
விரிதல் பரப்புதல், அஃதாவது சிருஷ்டி. நீட்டல் வர்த்திப் பித்தல், அஃதாவது திதி. குறுக்கல் ஒடுக்குதல், அஃதாவது சங்காரம். குவித்தல் ஒன்றினுட் செறித்தல், அஃதாவது சருவசங்காரம். ஊன்றல் உற்றுநிற்றல், அஃதாவது முத்தியின் கட்சேறல். உண்டு தின்றுலர்த்தல் உண்டுதின்று கெடுதல், தின்ற பகுதியும் உணவாகலின் உண்டு தின்றென்று கூறிற்று. மீட்டல் மீளவிடுதல், அஃது உமிழ்தல். உடைத்திடல் சின்னப்படுதல், அஃதண்டங்களைக் கெடுத்தல். இவ்வணுக்கள் ஒருவரால் நியமிக்கப்பட்டனவல்ல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

கண்ணினில் காண வொண்ணா சனித்தந்தக் கன்மத் தாலே
நண்ணிடும் உருக்க ளாகி நின்றபின் நரரோ காண்பார்
விண்ணினில் தேவர் காண்பர் ஓரணு மிக்க நான்காய்
எண்ணிய பொருள்க ளெல்லாம் இசைவதென் றியம்பு மின்னே.

பொழிப்புரை :

முற்கூறிய அணுக்கள் ஐந்தில் ஆன்மா என்னும் அணுப்பொருள் கண்ணிற் காண்டற்கரிதாகி அக்கன்மத்தாலே ஜநித்து உருக்களாகப் பொருந்தி நின்றிடும். அக்கன்மவுருவொடு நின்றபின் நரரோ காண்பார்! விண்ணாகிய பொன்னெயில் வட்டத்தில் தேவனாகிய அருகபரமனே காணவல்லான். ஆன்ம அணுவொன்றும் தன்னையொழிந்த அணுக்கள் நான்குமாய், எண்ணப்பட்ட வுருக்களெல்லாவற்றுள்ளும் இப்படிச் சென்று பொருந்தும் என்று கண்ட நூல் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு
நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று)
இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
றென்றநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும்.

பொழிப்புரை :

ஆன்மாவொழிந்து நிலனாதியான அணுக்கள் நான்கும் தம்மிற் கூடுமிடத்து ஓரணுவைவிட்டு மூன்றணுத் தம்மிற்கூடி நில்லாது; இரண்டணுவை விட்டு இரண்டணுக்கூடாது. (எனவே கூடுமிடத்திவை நான்குங்கூடி நிற்குமென்பது கருத்து). இவை நான்கும் தம்மிற் கூடிநிற்குமென்று சொல்லு முறைமையாவது எங்ஙனமென்னின், இப்பொழுது பிருதிவியில் கந்த ரச ரூப பரிசம் நான்கும், அப்புவில் இரச ரூப பரிச மூன்றும், அக்கிநியில் ரூபம் பரிசம் இரண்டும், வாயுவிற் பரிசம் ஒன்றுமாகிய குணங்கள் பொருந்தியிருக்கும். இந்த முறைமையிலே பிருதிவி அப்பு தேயு வாயு என்று கூறும் அணுக்களின் குணங்கள் கூடி நிற்கும் என்று சொல்லும் நூல்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை
உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
உண்மையவ் வொட்டுத் தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான்.

பொழிப்புரை :

வெண்மையும் நன்றாகிய பொன்மையும் சிவப்பும் நீலமும் மிக்க வெண்மையும் பச்சையுமாகிய ஆறுவன்னமுள; இவ்வாறு வன்னத்தினுள்ளும், மிக்க வெண்மையென்று கூறிய வன்னமே பெரிய பொன்னெயில் வட்டத்துக்குச் சிறப்புடைத்தான வன்னமாகச் சேரும். ஒழிந்த வெண்மை பொன்மை சிவப்பு நீலம் பச்சை என்னும் ஐந்து வன்னமும் மற்றை அணுக்கள் நான்கினான வடிவுகளைக் கூடிநிற்க, அந்த ஆன்மாவானது இவ்வுருக்களைப் பற்றுதல் இழிதல் கூடுதல் இவையிற்றால் அறியுமென்றான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்
வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்ட தாகும்
தேறிய ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான்.

பொழிப்புரை :

செல்வம் முதலிய கூடுதலும் அவை நீங்குதலும் துக்கமுறுதலும் சுகமுறுதலும் உடலொடு நீங்காமையும் வேற்று நாட்டுச் சேறலும் விருத்தாவத்தையும் மரணமும் என்று சொல்லப்பட்ட எட்டும் முற்பிறப்பின் வினையிலுள்ளதாய்க் கர்ப்ப கோளகையிலே கைக்கொள்ளப்பட்டுள்ளதாம். ஆதலால், தெளிவாக முற்பிறப்பிற் செய்த வினையில்அகப்பட்டு இம்முறைமையிலே நடந்து செல்வது இவ்வுலகமென்றான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே
எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்க ளோடு
நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பர் என்றான்.

பொழிப்புரை :

புண்ணிய பாவமென்னும் இரண்டினோடும் அணுக்கள் ஐந்தையுங் கூடவைத்து இவற்றோடும் ஏழேனவெண்ணி எங்கள் சமயத்தினோடு பொருந்திய கர்த்தாவான ஒப்பற்ற அருகபரமன் அருளிய ஞானம் இத்தன்மைத்தென்று அதனைக் கூடக் கருதுங் கருத்தை யுடையவர்களே நற்கதியாகிய பொன்னெயில் வட்டத்தைக் காணலுறுவார் என்றான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

வாராநெறி வீடானபின் மண்மேல் அவன் வந்து
தாராமையின் நூலானது தானோ உள தின்றாம்
சேராமையில் அணுவானவை ஐந்தும் ஒரு தேயத்(து)
ஓரானொரு காலத்தினில் ஒன்றா முணர் வின்றாம்.

பொழிப்புரை :

ஆசீவகன் மத மறுதலை - மோக்ஷமென்பது மீண்டு காயமெடுத்து வாராவழியால் அடையத்தக்கதாம். அப்படியானவிடத்து, வீட்டுலகத்திருந்த அருக பரமன் பூமியிடத்து வந்து நூல்தருமுறைமை யில்லையாகையால், நூலானது தானுண்டாம் வழியில்லையாம். ஒப்பற்ற தேசமாகிய பொன்னெயில் வட்டத்தில் ஐவகை அணுவுஞ் சேராதாகையால் சரீரியாந்தன்மை யில்லையாகும். அதனால், ஒன்றையும் ஒரு காலத்தில் விசாரிக்க மாட்டானாம். அன்றியும் கீழான அணுக்களிரண்டின் செய்தியை அறியவுமாட்டான். ஆகையால், அணுக்கள் எல்லாவற்றையுங் கூட்டி ஒன்றாகவும் உணரும் உணர்வையும் உடையனவல்லன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

இருபான்மையர் இவர்மண்டலர் செம்போதகர் என்றே
வருபான்மையர் இவர்மண்டலர் மண்மேல்வரு நூலும்
தருபான்மையர் எனின்நீதல மதில்வாழ்பவர் தம்போல்
ஒருபான்மையின் உளராகுவர் உணராதுரை செய்தாய்.

பொழிப்புரை :

இவ்வருகபரமர் இரண்டு பகுதியராயிருப்பர் மண்டலரென்றும் செம்போதகரென்றும். அவ்விருவரின், இப்படி வரும் பகுதியையுடைய இவர் மண்டலர். மண்டலராகிய இவர் உலகத்தின் கண்ணே வந்து அணுக்கள் ஐந்தின் செய்தியும் ஒருங்கேயறிந்து உலகத்தின்கண்ணே நடக்கும் நூல் செய்த பகுதியையுடையரென்று நீ சொல்லுகின்றாயாயின், அம்மண்டலர் பூமியில் வாழும் ஆன்மாக்களைப் போல் ஒரு பகுதியிலேயாகுவர்; ஆகவே, ஓருரு இரண்டு பேதப்பட்ட அவற்றில் ஒன்று மானுடத் தன்மையும் ஒன்று தெய்வத் தன்மையும் பெறுதல் இல்லையாம் ; ஆதலால், விசாரியாமற் சொன்னாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

உயிரானவை உடல்தீண்டிடல் ஒட்டுக்கலப் பெய்தும்
பயில்வால்உணர் வெய்தும்மெனும் மொழியானவை பழுதாம்
துயிலார்தரு மவர்பாலகர் தொடரார்அறி வினைநீ
செயிரார்தரும் உரையேதரும் அதுவோஉன செயலே.

பொழிப்புரை :

ஆன்மாக்களானவை உடலைப் பற்றியும் உற்றும் கலந்தும் செய்யுந் தொழிலாலே அறிவைப் பொருந்துமென்று நீ சொல்லுஞ்சொல் குற்றமுடைத்தாகும். அஃதெங்ஙனமென்னில், மிக்க உறக்கம் பொருந்தினவரும் பாலவவத்தை யடைந்தவரும் பற்றியும் உற்றும் கலந்தும் அறிவினை யறியமாட்டார். நீ சொல்லுஞ் சொற்றானே குற்றத்தை மிகவுந் தரும். உன்தொழிலும் அத்தனையோ?

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

அணுவானவை கீழ்மேல்உள வானால்அவ யவமும்
நணுகாவென லாமேவரின் நாசம்அவை யெய்தும்
அணுகாவெனின் இவைதொள்ளைகொள் ஆகம்முள வாகும்
துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை இலவாம்.

பொழிப்புரை :

ஆன்மா ஒழிந்து அணுக்களென்று கூறப்பட்ட பிருதிவி முதலான நான்கிலே கீழே யிரண்டுளவாயும் மேலே யிரண்டுளவாயும் நிற்குமாயின், அவை காரணமான சரீர அவயவங்களுங் கூடாவாய் கீழும் மேலுமாய் வேறுபட்டு நிற்குமென்று சொல்லலாமே. அஃதன்றியும், அவ்வணுக்கள் நான்கும் சரீர அவயவத்திற் கூடிவருமாயின் அவ்வணுக்களை நித்தியமென்று நீ முன்னர்க் கூறியது மித்தியையாம்; அவை சரீர அவயவங்களிலே பொருந்தாவென்று நீ கூறின், அவ்வணுக்களின் குணங்களாகிய உதிர மாமிசாதிகளுங் கலந்து நில்லாததுமாய் அணுக்கள் நான்கின் கூறுபலவுங் கூடிய திரட்சியுங் காயத்திற்கில்லையுமாய்த் துணிந்தறியுமிடத்துச் சரீர முறைமையாகாததுமாய்ப் புரைபட்டு நிகழ்ந்ததில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

மிகையாம்அணு உளவாகையின் அவையாம்மிக வென்னில்
தொகைநாலிடை அறலால்அவை தொகுமாறில வாகும்
பகையாகையின் மிசைதாழ்மையின் நிலையாவகை பண்ணும்
நகையாம்உரை கழியாயிரம் அவைதூணென நண்ணா.

பொழிப்புரை :

இவ்வணுக்கள் நான்குமன்றி வேறே அறியத்தக்கதொரு மிக்க அணுவுண்டாகையினாலே மிகவும் யோனிபேதங்களாகிய உருக்களாமென்று நீ கூறின், அணுக்கள் நாலின் கூட்டம் மிகவும் பொருந்தாமல் நடுநீங்கிக் கிடக்கையால் அறியுமணு இவற்றைக் கூட்ட அவை கூடிநிற்கும் வழியில்லையாம். அஃதன்றியும், அவ்வணுக்கள் நாலும் மேலுங்கீழுமாய் நிற்கையாலுந் தம்மிற் பகையாகையாலும் ஆன்மா ஓரிடத்துக் கூடாவகையைச் செய்யா நிற்கும். கோல் ஆயிரங் கூடினாலும் தூணாகாத தன்மைபோல, அணுக்கள் கூடியது கொண்டே உருக்களாகாதாகையால் நீ கூறியது நகையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

கூடாஅணு அறியாமையின் வளிகூட்டுதல் கூறின்
நாடாவளி அணுவானவை நணுகச்செயும் அவரை
நீடாவினை தன்னாலெனில் நினைவின்றது இன்றாம்
தேடாயொரு வனைநீஇவை செய்வானுள னென்றே.

பொழிப்புரை :

நீ கூறிய ஐவகை யணுக்களும் தமக்கென அறிவில்லா வாகையால் அவ்வடிவெடுத்துக்கொள்ள வல்லனவல்ல. வாயுவணு ஒழிந்த அணுக்கள் மூன்றையும் ஆன்மாவாகிய அணு கூடும்படிக்குக் கூட்டுமென்று நீ கூறின், வாயுவானது அவ்வணுக்களைக் கூட்டுதற்குக் கன்மஞ்செய்யும் ஆன்மாக்களை அறியமாட்டாது. பழைய கன்மத்தினாலே வாயுக்கூட்டுமென்னில், அந்தக் கன்மமும் அறிவையுடையதன்று; ஆகையால் தானுங் கூடமாட்டாது, வாயுவைச் கொண்டு கூட்டுவிக்கவுமாட்டாது. இவ்வணுக்கள் ஐந்தையுங் கன்மத்தையுங் கூட்டிக் காயமுண்டாக்குவான் ஒரு கர்த்தாவுளனென்பதனை ஆராய்வாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச்
சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின்
நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை
ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம்.

பொழிப்புரை :

இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நாலு வேதத்தையுமே ஓதி, அவ்வேதமொழியக் கர்த்தாவில்லையென்று சுவர்க்கம் புகுதற்குத் தனச்சேதமாம்படி சோமயாக முதலாகிய கன்மங்களைச் செய்தற்குச் சைமினி பகவானாலே அருளப்பட்ட சூத்திரத்தின் வழியைக் கொண்டு பட்டாசாரியன் என்பான் பாட்டமாகச் சொல்லு முறைமையை ஒலிபொருந்தின சமுத்திரத்தாற் சூழப்பட்ட பூமியிடத்தே உள்ளபடியே சொல்லாநின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம்
மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம்
கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல்
பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே.

பொழிப்புரை :

ஆன்மாக்களுக்கு அநாதியே பொருந்திய காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாச்சரியம் அகங்காரம் இடும்பையாகிய குணங்கள் கூடிநிற்கும். இக்குணங்களே ஆன்மாவுக்கு அறிவைத் தருமாகில் வேதவசனத்தால் ஒரு நன்மையுமில்லையாம். ஆகையால், ஆன்மாக்கள் கற்ற நூல் எவ்வளவோ அவ்வளவே அறிவுண்டாம். நூல்கற்றலில்லாத ஆன்மாக்களைப் பிறந்து முதிராத பாலரென்றும் ஊமையென்றுஞ் சொல்லலாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை
கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில்
பண்டைய உயிரே யாகும் படித்தநூ லளவு ஞானம்
கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான்.

பொழிப்புரை :

சுயம்புவாகிய வேதத்தைக் கூறுதற்கு ஒரு கர்த்தாவுண்டென்றும் அக்கர்த்தா ஆன்மத்தன்மையன் அல்லன் என்றுஞ் சொல்லின், வேதத்தைச் சொன்னானென்ற கர்த்தாவானவன் வேதஞ் சொல்லுமிடத்துச் சரீரியாய்ச் சொல்லவேண்டும்; ஆகையால், அப்படிச் சரீரியாகில் ஆன்மத்தன்மையனாவன். அப்படிச் சரீரியான ஆன்மா தான் கற்றநூல் அளவே அறிவையுடைத்தாம். அத்தனையே. வடிவில்லையாயின் நூலைக் கருதிச்செல்லுந் தன்மையுமில்லையாம். ஆதலால், வேதஞ் சுயம்புவேயாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும்
யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப்
போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும்
கூவல்நீ ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே.

பொழிப்புரை :

பிரம விஷ்ணுக்கள் முதலாகிய தேவர்களும் அகத்தியர் வசிட்டராதி இருடிகளும் சித்தர்களும் ஒழிந்த வித்தியாதரர் கந்தருவர் கின்னரர் கிம்புருடர் பைசாசர்இயக்கர் முதலாயினாரும் நரர்களும் வேதம் இன்னார் சொன்னார் என்று தம்மால் அறியப்படுவதன்றென்று சொல்லாநிற்பர்; ஆகையால், காலந்தோறும் பழையதாக வருமென்றே சொல்லப்படுவதாம். கூவலில் நீர்போலத் தானே வந்து தோன்றப்பட்டதென்று சொல்லும் உவமையும் கொள்ளேம், அஃதொருவனாற் செய்யப்படுதலானும் மறுமையெய்தத் தக்கதாயிருத்தலானும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும்
தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து
முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி
மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான்.

பொழிப்புரை :

வேதமானது கருதப்பட்ட ஆறங்கங்களையும் மூன்றுப வேதங்களையும் தனக்குள் அடக்கி, அர்த்தங்கள் எல்லாம் தன்னிடத் தடங்குவதொழிந்து வேறொரு நூலின் அர்த்தந் தன்னிடத்தில்லையென்னாமையைப் பொருந்தி, ஆதியிலும் ஓரிடத்தில் தோன்றிற்றென்னும் முறைமையுமின்றி, ஒரு காலத்திலுங் கேடின்றி நித்தமுமாய், ஒரு தன்மையாய் நிலைபெற்றுப் பேதிக்கப்படாததாய்; இப்படி வழங்காநிற்கும் அவ்வேதமென்று கூறினன்.
ஆறங்கமாவன: சிடிக்ஷ, கற்பம், வியாகரணம், நிருத்தம், சோதிடம், சந்தோவிசிதி. மூன்று உபவேதமாவன: ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வவேதம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம்
எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும்
ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய்
மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே.

பொழிப்புரை :

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பல செய்திகளுஞ், செய்தி செய்யும் வழியும், அவ்வழியிலே மேவுந் தேவரும், அவர்களாற் கொடுக்கப்பட்ட இகலோக பரலோக சாத்தியமான வர்த்தங்களும் இவையெல்லாம் பன்மையாகப் பொருந்தி நின்றன வாகையாலும் இவற்றைச் சொல்ல வேண்டுகையாலும் வேதமுமொரு நெறிப்படச் சொல்லாதாம். அம்மூன்று தொழிலாலே மூன்றவிதப்பட்டு இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாராலும் அறியப்பட்டபின், வேதமானது ஒரு வடிவைப் பொருந்தி அவ்வடிவின் நெஞ்சகத்தே பொருந்தி உலகத்திலே விளங்காநிற்கும். (காலமூன்று மறிந்தபின் வேதம் உருவாமென்பதனால் அநாதியில் அருவாமென்னும் பொருள் பயந்தது,

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே
ஒப்பில்லா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு
செப்புமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம
வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே.

பொழிப்புரை :

வேதமானது தவறில்லாதனவாகிய பகுதி விகுதிகளோடு உவமையில்லாததாகிய பெயர்ப் பகாப்பதம் என்னும் அவயவங்களையுந் தன்னிடத்திலே அடக்கிக்கொண்டு சொல்லுவதாம். அந்த வேதஞ்சொன்ன விதிப்படி கன்மத்தைச் செய்யப் பாசக்கட்டு விட்டு நீங்கலாம்; அது நீங்கவே வீட்டின்பமும் ஆப்த தநமாகக் கூடும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி
ஆக்கவே றொருவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி
நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி
ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே.

பொழிப்புரை :

ஊக்கம் ஆர் உலகம் போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வது இன்றி வலிமைபெற்ற பிரபஞ்சமானது சங்காரமுஞ் சிருட்டியும் ஒரு காலத்திலும் உண்டாகாததாய், ஆக்க வேறு ஒருவர் இன்றி இரக்ஷிக்க ஒரு கர்த்தாவுமில்லையாய், அநாதியாய் அநாதியேயுள்ளதாய், அணுக்களாகி ஆன்ம சம்பந்தியாய், நீக்கிடா வினையிற் கூடி நீக்கப்படாத புண்ணிய பாவங்களோடு கூடி, நிலமுதலாக நீடி பிருதிவி முதலாகிய தத்துவங்களாக நிலை பெற்று, என்றும் உள்ளதென்று உரைக்கலாமே என்றும் உள்ளதென்று சொல்லலாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப்
புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச்
சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு)
ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும்.

பொழிப்புரை :

பிரபஞ்சத்திலே நிலைபெற்ற ஆன்மாவானது அழிவில்லாததாய் நிறைவையுடைத்தாய், அறிவே தனக்கு வடிவமாய், புத்திமுதலாகிய தத்துவங்களிடத்துக் கலவாது நிற்பதாய், தத்துவங்கள் நீங்கினவிடத்தே அழுக்கற்று நிற்பதாய், அருவமாய்ப் பழையதாய்வரும் புண்ணிய பாவங்களினது முறைமைக்கீடான காயத்துடனே கூடி இந்திரியங்கள் வழியாகக் கண்டு கேட்டு உண்டுயிர்த்துற்றறியா நிற்கும்.
புத்திதான் ஆதியாய கருவிகளாவன இந்திரிய முதற் பிரகிருதி யீறாய தத்துவம் இருபத்து நாலும், புறம் ஏழாம் வேற்றுமையிடப்பொருள். ஒத்ததோருருவம் வினைகளுக்கேற்ற வடிவம். சுத்தமாகிறது கன்மவசமா யுழலுமோவென்னில் சுத்தமாகாதாகின் முத்தியிலுஞ் சுத்தனாகான். சத்காரியவாதமுங் கெடுமென்பது கருத்து.அஃது ஆன்ம லக்ஷணம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று
பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம்
வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு)
இயல்பொடுந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான்.

பொழிப்புரை :

முற்நநத்தின் மனவாக்குக் காயங்களின் தொழில்களாலே யுண்டாகிய புண்ணிய பாவங்கள் அக்காயத்துடனே தூலங்கெட்டுச் சூக்குமமாக ஆன்மாவோடும் பொருந்தி இந்தச் சநநத்திற் பிரயோசநத்தோடு ஆன்மாவுக்குண்டாகா நிற்கும். அஃதென்போல என்னின், வைக்கோல் தழை முதலானவைகளெல்லாங் கழனியைப் பொருந்திநின்று வடிவுக்கேடு வந்தபின்பு அவ்வயலின் பயிருக்கு நன்மையைக் கொடுத்தாற் போலவென்றும் கூறி வேறுஞ் சில சொல்லா நின்றான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார்
தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய
ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம்
ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீடதாமே.

பொழிப்புரை :

அவரவர் சூத்திர முறைமையிலே சந்தியா அநுஷ்டானம் காயத்திரி செபமுதலிய பிராமணர் செய்ய ஏனைய வரணத்தாருந் தமக்குக் கற்பித்த விதிவழாமற் செய்யவே நன்மையை எப்பொழுதும் நீங்கார். குற்றமில்லாத இச்சாகன்மமாகிய வைசுவதேவபலி கரணாதிகளும். தக்ஷிணாக்நி காருகபத்தியம் ஆகவநீயம் முதலிய அக்நிகளுஞ் செய்யத் தான் விரும்பியது யாது அவையெல்லாம் எய்தலாம். சோமயாக முதலிய யாகங்களைச் செய்யுமிடத்து அர்த்தத்தை மிகவுஞ் செலவழித்துச் செய்ய வீட்டின்பம் உண்டாகும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு
மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி
ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத்
தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே.

பொழிப்புரை :

சூத்திர விதிகளாலே கருதப்பட்ட கன்மமும் வேதஞ் சுயம்புவென்னும் ஞானமும் ஆகிய இரண்டையும் இடமாகக் கொண்டு வீட்டின்பத்தைப் பொருந்தலாகும்; வேதம் சுயம்புவென்றறியும் ஞானமே அமையுமென்று நிச்சயித்துக் கன்மத்தைக் கைவிடிற் கன்ம சண்டாளனாகும். கன்ம சண்டாளானை மீள நல்லநெறியிலேயேற விடுவதற்கு உண்டாவதோர் வழி வேதத்திலும் இல்லையென்று சொன்னான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று
வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக
நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும்
பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே.

பொழிப்புரை :

எப்பொழுதும் பசுபந்தனஞ் செய்து யாகங்களைச் செய்வது புண்ணியமாமென்று குற்றமில்லாத இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நாலுவேதங்களுஞ் சொன்ன விதிப்படி உண்மையாகக்கொண்டு கேடில்லாத மந்திரங்களைச் சொல்லுதலாற் போகமோக்ஷமாகிய இன்பத்தைத் தரும். அஃதென்போலவென்னில், மிகவும் பசிப்புளான் ஒருவன் உண்டல்செய்தாற் பசிதீர்ந்தின்பமுற்ற தன்மையாம்.பட்டாசாரியன் மத மறுதலை

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

வேதம் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும்பிர மாண முளதேல்
நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல்
ஓதுஞ் சொலாய்வருத லானுங் கடாதிபட மோவந்தி டாஒ ருவரா
லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே.

பொழிப்புரை :

வேதஞ் சுயம்புவென்று பட்டாசாரிய! நீ கூறியவுண்மையொழிய நான் சுயம்புவென்று அவ்வேதந்தான் கூறிற்றில்லையாம். அஃதன்றியும், வேதம் அநாதி யென்பதற்கு வேறு பிரமாணமில்லை. உண்டாயின் நீ சொல்லிக்காண் இவ்விடத்தே மிகவும் பெருமையுடைய மகாபாரதம் பிரமாணமென்று நீ சொல்லின், அதுவும் வியாசராலே சொல்லப்பட் டு வேதத்திற் கொப்பாய் ஐந்தாம் வேதமென்று வழங்கப்படுவதாம்; அதனாலும், அந்த மகாபாரதம் போல ஒருத்தனாலே சொல்லுஞ் சொல்லாய் வருதலானும், மண்பாவையுங் கிழிப்பாவையும் செய்வார் ஒருவரின்றி வந்து தோன்றாமையானும், அவ்வேதமும் ஒருவனாலே சொல்லப்பட்டதேயாம். வேதம் ஒருவன் சொன்னானென்று சொல்லப்பட்டு வேறு இரகசியங்களாய் வருகிற சத்தியவசநமும் சந்திரசேகர னிடத்ததே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

உரைதந்தி டான்ஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம்
புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல்
வரைதந்த தாலிவ்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும்
விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே.

பொழிப்புரை :

வேதம் தானே யுண்டானதன்றி ஒருவன் சொல்லானென்று நீ சொல்லின், இவ்வாகாசத்தின்கண்ணே பொருந்திய ஓசையைக்கொண்டு உண்டானதாகவேண்டும்; ஆகையால், வேதங்களும் சொல்லும் பொருளும் விளங்காமற் குற்றத்தையுடையவாம் அற்றன்று, வேதஞ் சர்வத்தையும் விளக்குவித்துத் தானும் நின்று விளங்குகை, விளக்கு பொருளைக்காட்டித் தானும் நின்று பிரகாசித்தாற்போல என்று கூறின், வேதத்தின் பெருமை இல்லையாய் ஓரெல்லைக்குள் அகப்பட்டதாம்; அகவே, நீ உவமை கூறல் நிரீசுர சாங்கியன் சொல்லுஞ் சொல்லாம். அவ்வேதம் அருவாம் முறைமையும் உருவாய்த் தோன்றும் முறைமையும் இங்ஙனமென்று விரைவிலே சொல்லுவாயாக. வேதம் முன் அருவாய்ப் பின் உருவாய்த் தோன்றிச் சொல்லும் பொருளும் விளங்கச் சொல்லுமென்று நீ சொல்லுகின்ற இதனை யாது பிரமாணமாகக் கொள்வது? ஆதலால், நீ சொல்லுகின்ற சொல் பயனற்றுப் போனதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும்
தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமைய தனால்
வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகின்ற வாடை பலவால்
ஒரு தந்து வாயனவன் இவனேன்ற போதிலிவை உளதென்று நீடிய வையே.

பொழிப்புரை :

உருவின்கணே மருவிவரில் வேதமானது யாதோர் உருவைப்பற்றி மனத்திடத்ததாய்ப் பிரகாசிக்குமென்று நீ சொல்லில், இன்று தேரை உரை உளது உங்கள் நூல் இன்மறையும் ஓருருவைப்பற்றி வருமென்னும் நியமம் இல்லாதபடியாலே இப்பொழுது தேரையினிடத்துண்டாகிய சத்தத்திலும் உங்கள் நூலாகிய இனிய வேதம் உண்டாகும், தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தர வந்திடாமையதனால் வருமென்று நேடியெனில் வேதத்தை யுண்டாக்கியவன் இன்னானென்று பேர் குறித்து வேதஞ் சொல்லாதாகையால் தானே தன்னை ஓதத்தக்க உருவைத் தேடி அஃதிடமாகத் தோன்றுமென்று நீ சொல்லில், வளர்கின்ற தீவதனில் வருகின்ற ஆடை பலவால் பல வளங்களும் வளர்கின்ற தீவின்கண் நின்று வருகின்ற புடைவை பல பேதங்களையுடைத்து ; ஆகையால், ஒரு தந்துவாயனவன் இவனென்றபோதில் இவை உளதென்று நீடியவையே பல பேதப்பட்ட புடைவைகளைக் கண்டபொழுதே தந்துவாயனென்று சொல்லப்பட்டவனாலே இப்புடைவை யுண்டானதென்று அறிந்தாற்போல வேதமுஞ் சத்தார்த்தமாகையால் ஒருவனாலே செய்யப்பட்டதென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரைதந்த வாய்மை அதனால்
நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம்
குறைவின்றி நாடும்மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான்
உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே.

பொழிப்புரை :

நான்கு திக்கிலும் பாஷை பேதிக்கப்பட்ட ஜாதிபேதங்களும் மற்றொரு நூல்போலாகாமல் ஒருமைப்பட ஓதிவரும் உண்மையாலே, வேதம் அநாதியாய் நிறைவையுடையதாய் நிலைபெறுமென்று கூறின், குலாலனால் உண்டாக்கப்படும் கடாதிகள் பல பேதம் பொருந்தி அநாதியிலே உள்ளதாகிறதுபோலக், குற்றமின்றியறியப்படுஞ் சொல்லும் பொருளுங் கூடும்படிக்குக் கூட்டுவதோர் கர்த்தாவுண்டாக வேண்டும்; அற்றன்று, மாலையினுறையும் பூவுமணமும் அந்த மாலையினிடத்தினுள்ள வல்லவாய் முன்பே யுண்டாயவற்றைப் பின்பு மாலையாகக் கூட்டினாற் போலச் சத்தமும் அர்த்தமும் முன்பேயுள்ளவாய்ப் பின்பு மூர்த்திகளாலே கூட்டப்பட்டவென்று கூறின், அம்மூர்த்திகள் சத்தத்தை அறிந்து கூட்டப் பட்டார்கள் அன்றாகில் உன்வேதம் ஆழியின் ஓசையை ஒக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய்
இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின்
கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர்
திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே.

பொழிப்புரை :

சரீரத்தினின்று நாமுணருமது கண்டபடியாலே, ஒரு கர்த்தாவானவன் பிரபஞ்சமே திருமேனியாய்ப் பிரபஞ்சத்திடையிலே யெழுந்தருளி நின்று, மகிமையுடைய வேதங்களை அநாதியிலே திருவாய் மலர்ந்தருள, பின்பு அவ்வநாதியைக் கொண்டு பிரபஞ்சமானது அவ்வேதங்களின் முறையிலே நின்று வாழுமதனைக் கருதி அநாதியென்றுஞ் சுயம்புவென்றுஞ் சொல்லா நிற்கும்; அஃதென்போல வென்னின், உலகநாயகனாகிய ஓரரசன் ஆணைவழியொழுகும் உலகத்தினுள்ளார்க்குத் திடமாக அவ்வரசனுரை வரைந்த ஓலையைத் திருமுகமென்று மங்கல மரபினாற் கூறித் தலையில் தரித்து அவ்வரசனைப்போலச் சிறப்புச் செய்கையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழியும் சொல் ஆரிய மெனில்
கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து)
ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம்
அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே.

பொழிப்புரை :

ஆரியமாகிய வேதமே கேடில்லாத பிரம க்ஷத்திரிய வைசியர் என்னும் மூன்று சாதியும் ஓதுஞ்சொல்லென்று நீ சொல்லின், ஏனைய வருணத்துள்ளாராய்ச் சோதிடஞ் சொல்லுமவர்கள் வேதத்துக்கங்கமாகிய சாத்திரத்தை ஓதாமல் அறியும்படி எங்ஙனம்? அஃதன்றியும், இந்தத் தீவின் வடகூற்றினுள்ளார் மற்ற வருணத்தார் வேதத்தை ஓதத் தகாரென்று நீக்கப்படாமல் எல்லாராலும் ஓதப்படுவானேன்? ஆதலால் நீக்கப்படாதாயிற்று. எல்லார் சொல்லுந் தன்னிடத்திலே யுடைத்தான வேதம் சத்தமாகவுள்ளதென்று கூறுமவர் தாமும், வேதத்துக்கு மூலகர்த்தாவில்லையென்று சொல்லுமது, பிறந்த பிள்ளைக்குப் பெற்றவர் இல்லையென்று அறிவிலாது விரும்பிக் கூறுதல்போலும்.
கடிவின்றி நீக்கமின்றி, ஒடிவின்றி தவிர்தலின்றி.ஈனுமவர் உண்டாக்குமவர். ஆதரவு இலக்கணை.முடிவின்றி வேதியர்கள் அளவிறந்த பிராமணர்கள். முதல்வந்தமூவர்களும் பழைய பிரம வீட்டுணு ருத்திரர்களும். கடிவின்றியே கணிதரவர் கண்டவாறதுவென் கடியாது கணித நூல்களும் ஒருவர் சொல்லாமல் வந்ததாம். வடகண்ட சாதிகடியாது வடபூமியிலுள்ளாருங் குறைபடாமல் வேதஞ் சுயம்புவென்றே சொல்லா நின்றார்கள் என்றலுமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே
செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்று கூட வொருவன்
குறிகொண்டு காரின்முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும்
உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே.

பொழிப்புரை :

ஆன்மாவானது பேதப்பட்டுச் சரீர வவயவத்தைத் தானறியும் பகுதியிலே கூடிநின்றதாயின், அழியுந் தகுதியையுடைய சரீராதி போல ஆன்மாவும் அழிந்துபோம். ஆன்மா அந்தச் சரீர வவயவத்தைச் சேராது, சரீர வவயவந்தானே சென்று ஆன்மாவைச் சேருமென்று கூறின், சரீர வவயவந்தானே ஆன்மாவைக்கூடும் நிலைமையுடைத்தன்று; கர்த்தாவொருவன் குறிக்கோளாகக் கூட்டுகையாலே ஆன்மாவுஞ் சரீரமுங் கூடிவரும். முளைகளானவை கார்காலத்து விதையினின்று முளைத்து வரும், வேனிற் காலத்துச் தகுதி வேறுபட்டழியும் ; அங்ஙனம்போல், பிரபஞ்சமானது சிருஷ்டி திதி சங்காரமென்று கூறப்பட்ட மூவகைத் தொழிலுற்ற காலத்துடனே கூடித் தோன்றி நின்று கெடுமாகையாற், காலத்தோடுங் கூடிவரும் பிரபஞ்சமானது எந்நாளும் நிலைபேற்றையுடையதன்றாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே
குறைவின்றெலாமும்உள குடகந்த மாகில்அவை விடநின்ற வாறு குறியா
உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய்
மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே.

பொழிப்புரை :

ஆன்மாவானது பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்குமாயின், ஆன்மாவானது நித்திய கன்மமுதலாகிய நெறிகளிலே பொருந்தி நின்று அந்த நெறிக்குத் தக்க சுவர்க்காதிபதங்களிலே சென்று புண்ணியப்பயனைப் புசித்துப் புண்ணியகன்மந் தொலைந்தால் மீளவும் வருமென்னும் வேத வாய்மையில்லையாம்; அற்றன்று, எல்லா ஆன்மாக்களும் சரீரத்திலே குடத்திற்கட்டின பூமணம் போல நிறைந்துநிற்குமென்று கூறுகின்றாயாயின், அவ்வான்மாக்கள் சரீரங்கெட்டபோது தாங்கெடாமல் உடலைவிட்டு நிற்கிற வழியைக் குறிக்கொள்ள மாட்டா. உடலின்கண் உறைகின்ற மகாயோகிகள் அவ்வுடலைவிட்டுப் பரகாயப்பிரவேசஞ் செய்வதும் வருவதும் அறியாய். வேதஞ் சொன்ன சத்தியமான அர்த்தத்தில் உனக்கு நிறைவில்லை யாதலால் நீ சொல்லுகின்ற சொல்லும் உலகத்தின்கண் மாறுபாடு பொருந்திற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெரு வதுமங்கி யான பரிசேல்
ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம்
கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர்
பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே.

பொழிப்புரை :

ஒருவன் செய்த கன்மங்கள் இக்காயங்கெடக் கூடக்கெடுமாகையாற் கன்மம் மேலைக்கு வந்துண்டாம்படி எங்ஙனம் ? வயலுக்கிட்ட எரு தனது தூலமுறைமைகெட்டுச் சூக்கும முறைமையாகி வீரியங்கிடந்து பயிருக்கு நன்மை கொடுக்குமாறு போலச், செய்த கன்மமும் உடலோடு தூல முறைமைகெட்டு ஆன்மாவோடு சூக்கும முறைமையாகிப் பொருந்துமென்று நீ சொல்லின், நாம் நாடோறும் உண்ணும் உணவு செரிக்கக் கழிந்தமலம் பயனை அனுபவிக்க வினைவருகின்றவாறு மீளவும் நமக்கு நன்மையைத் தருமென்பார் கூறுங்கூற்றெனலாம்; காயத்தோடுஞ்செய்த வினைகெடுகையால் அவ்வினை ஆன்மாவையறிந்து கூடமாட்டாது ; அதுகூடும்படி, தொழில் செய்தோர்க்குச் செய்த தொழில்கண்டு தொழில்கொள்வோர் அவ்வவர் தொழிற்குத் தக்கதொத்துப் பழுதறக்கொடுக்குந் தன்மைபோல, ஆன்மாக்கள்செய்த புண்ணிய பாவங்களையறிந்து அப்புண்ணிய பாவங்களுக்கீடான புசிப்புக்களைக் கொடுத்தருளிப் புசிப்பிக்குந் தொழில் பரமேசுவரனதாகும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லால்மருவு கதிதங்க லாகு மெனின்நீ
தரும்அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவு தவிரும்பின் வீடும் அணையா
பொருள்நின்று தேடிவரு பயன் உண்டு போகவினை புரிகின்ற வாற தெனவே
திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழ்வ செயலே.

பொழிப்புரை :

நித்திய கன்மமுதலிய கன்மங்களை ஞானங் கூடிநிற்றலாலே அழிவில்லாமையைப் பொருந்தின வீட்டின்பத்தைப் பொருந்தலாம் என்று நீ கூறின், கன்மங்கள் செய்யுமிடத்துத் திரவியார்ஜிதம் வேண்டுகையாலே ஆசைமுதலியனவுண்டாம். அவ்வாசை முதலியனவுண்டாகவே ஆன்மாப் பாசஞானமாய் நிற்கும். அந்தப் பாசஞானத்தாலே மோக்ஷமும் அடையாது; ஒருவன் பொருளைத்தேடி அதனால் உண்டாய பயனை அதிலேநின்று புசித்து அந்தப்பொருள் மாளவே மீளவும் பொருள் தேடுதற்கு முயல்கின்றதனையொப்ப, வெகுவான ஆகுதி செய்கையினாலே அவ்வாகுதி சென்ற புண்ணியத்தால் மிக்க சுவர்க்கபோகங்களைப் பொருந்தி அப்புண்ணியந் தொலையுமளவும் புசித்துத் தொலைய மீளவும் புண்ணியகன்மஞ் செய்ய நினைக்கின்ற செயல் உன் செயல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த்
திருந்தும்உல கினிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப்
பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப்
புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம்.

பொழிப்புரை :

அரிய தவத்தினை யுடையவாகிய சைமினி முனிவன் முன் வேதநூலை ஆராய்ந்தானாய், நல்ல வுலகின் கண்ணே தான் சொல்லுகின்ற வழிக்குப் பொருந்தத்தக்கவற்றை வேதத்திலே நின்றெடுத்துக்கொண்டு சொல்லப்பட்ட அவனது சூத்திர முறைமையினைப் பொருந்திப் பிரபாகரன் பட்டாசாரியனாற் சொல்லப்பட்ட பாட்டத்தின் நெறியிலே வந்து அதிற் சிறிது வேறுபடச் சொன்ன வழியதனை யெடுத்து நாமும் பூமியின் கண்ணே சொல்லா நின்றேம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித்
தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது
வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித்
தருஞ்செயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன்சாற்றும்.

பொழிப்புரை :

அரிதாகச் செய்யுங் கன்மத்தை யொழிந்தவிடத்திலே அபூர்வமென்ப தொன்றுண்டாய், அந்தக் கன்மத்திலே அறிவு கூடி நின்று தொழிற்பட்டுக் கன்ம முடிந்தபொழுது, பின்பு தானின்று பிரயோஜநப் படுப்பிப்பதாம். அவ்வறிவுங் கன்மமுங்கூடி வருந்தொழிலொன்று மின்றியே, வீட்டுநெறியைத் தருகிற செய்தியாவது பண்போலவுங் கல்லுப்போலவும் அறிவுந்தொழிலும் அற்றிருத்தலாம். மண்போலவுங் கல்லுப்போலவும் அறிவுந்தொழிலும் அற்றிருந்தலாம். மண்போலவுங் கல்லுப்போலவும் அறிவுஞ் செயலும் அற்றிருப்பதே முத்தியென அறிந்து பூமியின்கண்ணே இத்தன்மைத்தென்று பிரபாகரன் சொல்வான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள்
கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை
மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால்
தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம்.

பொழிப்புரை :

பிரபாகரன் மத மறுதலை - முன் ஜநநத்திற் செய்த இருவினையும் இந்த ஜநநத்திலே பலபேதப்பட்டுச் சுகதுக்கங்களைக் கொடுக்குமென்று உன் வேதங்கள் சொல்லாநிற்கவும், முன் ஜநநத்திற் செய்த வினைக்கு இந்த ஜநநத்திலே பலத்தைக் கொடுப்பது அபூர்வமென்பதொன்றென்று பிரபாகரா! நீ மெய்யாகக் கொண்டு சொல்லப்பட்ட சாத்திரம், வேதத்தோடு மறுதலைப்படும். செய்த கன்மத்தினுடைய பலம் அநாதியிலில்லையாய்ப் பின்பு ஆபூர்வமென்பதொன்றினாலே வந்ததாயின், வாட்டமில்லாத குளிர்ந்த ஆகாயப்பூவுக்கு முன்பு மணமில்லாமல் தலையிலே சேர்ந்த பின்பு மணமுன்டானதென்று சொல்லுந் தன்மைபோலும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை
ஊனம்பின்உணர்விழந்தோர்க் குளதாகும் உயர்முத்தி
தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை
ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால்.

பொழிப்புரை :

பரமாநந்தமே வீடென்று வேதங்கள் சொல்லவும் நீ ஆன்மாவினதறிவுகெட்டு மண்போலவுங் கல்லுப்போலவு மாதல் வீட்டின்பமென்று கூறியது குற்றமுடைத்து; அப்படி அறிவு கெட்ட ஆன்மா முத்தியடைவானாயின், மூர்ச்சைவுந் தறிவுகெட்டவர்களுக்கும் மிக்க வீட்டின்பம் உண்டாகவேண்டும்; அஃதன்றியும் இவ்விடத்து நெருப்பானது தன் சொரூபமாகிய சிவப்புக்கெட்டால், தானுங்கூடக் கெடுதலன்றி அந்நெருப்பு நிற்கும் வழியில்லையாம்; அதுபோல, ஆன்மாவானது தன் சொரூபமாகிய அறிவுகெட்டால் தானுங் கூடக் கெடுதலன்றி ஆன்மாநின்று வீட்டின்பத்தை அநுபவிக்குமென்று சொல்லுஞ்சொற் பொருந்தாது; ஆகையால், அறிவுகெட்டுக் கல்லுப்போலவும் மண்போலவுமாய் முத்தியடையும் என்னுமது குற்றமுடைத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

உரையா னதுமை யலினால் உலகாம்
புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை
விரையா துணரும் அதுவீ டெனவே
வரையா துரைவா திவகுத் தனனே.

பொழிப்புரை :

சத்தமானது மயக்கத்தினாலே பிரபஞ்சமாம். அறியாதார் அர்த்தமுஞ் சத்தத்துக்கு உண்டென்று விசாரிப்பது மெய்யன்றாம். சத்தமே பிரமமாவது, அர்த்தமில்லையென்றறியும் அறிவே வீட்டின்பமாவது என்று சத்தப்பிரமவாதி பிரபஞ்ச பேதத்தையெல்லைப்பட அறியாது சத்தமேயுள்ளதென்று வகுத்துச் சொன்னான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

பரிணா மம்விவர்த் தநம்மா யம்அதில்
தருமாம் உலகுள் ளதுசத் தமதே
பொருளா வதுசொல் நலம்அல் லவெனில்
மருவா துபொருட் டிறமற் றிலையே.

பொழிப்புரை :

சத்தத்தாலே பரிணமித்து மிகவும் உண்டாதலே மயக்கமாம். அந்த மயக்கத்திலே உலகத்தை யுண்டாக்கப்படுவதுமாகையால், உள்ளதாகக் காணப்பட்டது சத்தமொன்றுமே. சத்தத்துக்கு அர்த்தமென்று சொல்லப்பட்டது அச்சத்தத்தின் நன்மையேயாகும். சத்தத்தின் நன்மையன்று அர்த்தம், அர்த்தத்தின் நன்மையே சத்தமென்றுகூறின், சத்தங்கூடாதொரு பொருளுண்டாவதில்லை; ஆதலாற் சத்தத்தின் நன்மையே அர்த்தமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

பூமா வெனவே உரையும் பொருளும்
ஆமாம் பொருளொன் றில்அணைந் திலதால்
நாம்ஆ தரவெய் துசொல்நன் கருவாய்த்
தாமாம் பொருள்நெற் பொரிதா னெனவே.

பொழிப்புரை :

பூவெனவும் மாவெனவும் இரண்டு சொல்லுளவாய் அவற்றிற்குப் பொருள் கூறுமிடத்துப் புட்பமென்றும் இலக்குமியென்றுங் கூறப்படும். அப்படிக் கூறப்படும் பொருளொன்றிலே சத்தம் அடங்காமற் பூமியெனவும் விலங்கெனவுஞ் சொல்லப்பட்ட பொருளையுங் கொள்ளப்படுமாதலால், நாம் விருப்பத்தைக் கொண்டு சொல்லுஞ் சொல்லே நல்ல கருப்பமாகக் கொண்டு பல பொருள்களுமுண்டாம்; அஃதென்போல வென்னில், நெல்லிற்றோன்றும் பொரிக்கு நெல்லே கருப்பமானாற்போல அர்த்தத்துக்குச் சத்தமே கருப்பமாம்.
பொரிக்கு வன்னபேதமும் நாமபேதமும் உண்டாயினும் நெல்லே அதற்குக் கருப்பமானாற்போல, அர்த்தம் பலபேதப்படினுஞ் சத்தமே கருப்பமாமென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

சொல்வந் தெழலும் பொருள்தோன் றுதலால்
சொல்லே பொருளென் றுதுணிந் திடுநீ
சொல்லும் பொருளும் உடனின் றதெனின்
சொல்லும் பொருளின் றுசொல்நின் றதுவே.

பொழிப்புரை :

யாதொருசொல் தந்ததால் ஓட்டங்களாலே யுண்டாக அந்தச் சொல்லிலே பொருளும் உண்டாமாதலாற் சொல்லே பிரதானமென்று நீ தெளிந்திடுவாயாக; அற்றன்று, சொல்லும் பொருளும் உடனிற்கையாற் பொருளுந் தனியேயொருமுதலென்று கூறின், ஒரு சொற்குப் பொருளுரைக்குமிடத்துப் பொருளுஞ் சொல்லாமாதலாற் சொல்லொழிந்து பொருளென் றொன்றுண்டாவதில்லை; அதனாற் சத்தமே பிரமமென்று கொள்வாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

உரையா னதுமை யலினால் உலகேல்
உரையாய் ஒருமை யலும்உள் ளதென
வரையா துணரும் அதுவண் கதியேல்
வரையா மறையோ டுமலைந் தனையே.

பொழிப்புரை :

சத்தப் பிரமவாதி மத மறுதலை - சத்தமானது பரிணாமவிவர்த்தனமாகிய மயக்கத்தினாலே பிரபஞ்சமாமென்று கூறினாய்; அங்ஙனமாயின், சத்தமே சர்வமுமாம் என்பதன்றிச் சத்தத்திலேநின் றுண்டாகத்தக்கதொரு மயக்கமும் உண்டென்று சொல்லாய். அஃதன்றியும் பொருளை வரையாமல் சத்தத்தைப் பிரமமென்று குறித்துணர்தலே நல்ல முத்தியென்று கூறினாய்; அங்ஙனமாயின் வேதத்திற் சொல்லப்பட்ட கன்மத்தையும் ஞானத்தையும் செய்வதும் உணர்வதுஞ் செய்யாமல் முத்தியடைலாமென்று வேதத்தோடு மறுதலைப்பட்டுக் கூறினாய்.
வேதஞ்சொன்னபடி கன்மஞ் செய்தானாயினும் ஞானமுணராதார்க்கு முத்தியில்லையென்று வேதாகம சாத்திர புராணங்கள் சொல்லவுஞ் சத்தமே பிரமமென்றறியும் அறிவால் முத்தியடையலாமென்பது மாறுபாடு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அருவம் உரையா தலின்அவ் வுருவாய்
மருவும் பரிணா மம்மறந் திடுமாம்
பருகுந் ததியா னதுபா லதெனில்
உருவம் அதுவாய் அழியும் உரையே.

பொழிப்புரை :

அந்தச் சத்தமானது அரூபமாதலாற் பிரபஞ்ச ரூபமாய்ப் பரிணமித்துப் பொருந்துதலை நினைக்கமாட்டாதாம், அற்றன்று, குடிக்கும் பகுதியான பாலானது தின்னும் பகுதியாகிய தயிராய் உருப்பெற்றாற்போல அருவமாகிய சத்தம் உருவமாகிய பிரபஞ்சமா யுருப்பெறுமென்று நீ கூறின், அத்தயிர் மீளவும் பாலாகுந் தன்மையின்றித் தயிராய்நின்றழியுந் தன்மை போல, சத்தமும் பிரபஞ்சமாய் உருப்பெற்றால் மீளவுஞ் சத்தமாகுந் தன்மையின்றிப் பிரபஞ்சமேயாய் நின்றழியும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

ஆயம் உடன்அந் தவிவர்த் தநமும்
மாயவ் வுளதென் றுசொல்எவ் விடமு
மாய்நின் றமையின் உரையின் நலமும்
ஆயும் பொருளுக் கறிநா மமதே.

பொழிப்புரை :

சத்தத்தின் வரவு பிரபஞ்சமாய் வருதலும் பலரூபங்களாய்ப் பரிணமித்து வருதலுஞ் செய்கையால் சத்தத்துக்கு இப்போ தழிவுண்டாதல் வேண்டுமென்று சொல்லாய்; அஃதன்றியும், சத்தத்துக்கு நன்மை யென்றபொருள் எவ்விடமுமாய் நின்றமையின் அப்பொருளை யாராயுமிடத்து அப்பொருளுக்குப் பெயர்ச் சொல்லாய் நின்று பொருளை விளக்குவதே நன்மையென்றறிவாயாக.
எனவே, சத்தத்தினும் அர்த்தமே சிறப்பையும் நிலைபேற்றையும் உடைத்தென்பது கருத்து. பரிணாமமாகின், நெருப்பென்றபோது நெருப்பா யெழுந்திருக்கவேண்டும்; விருத்தியாகின் நெருப்பென்ற போது வாய் வேக வேண்டும். ஆதலால், தாதான்மியமுமன்று ததுற்பத்தியுமன்று, இடுகுறிப்பெயரா மென்றதெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

உரைபோல் பொருளுக் குருவின் மையினவ்
உரையே பொருளென் றனைஇன் றரியென்
உரையே கவிமா லவனுக் குளதாம்
உரையாய் கவியா கவொர்மா லினையே.

பொழிப்புரை :

சத்தத்தைப்போல அர்த்தத்திற்கும் உருவமில்லாமையினால் அச்சத்தமே அர்த்தமென்று கூறினாய். இன்று அரியென்று சொல்லப்பட்ட சத்தம் திருமாலினுக்குங் குரங்குக்கும் மற்றும் பலபொருட்கும் பெயராகச் சொல்லலாம்; அதனைப் பொருள் தன்மையிலே நின்றுஞ் சத்தங்கொள்ளாமற் சத்தத்தின் தன்மையிலே நின்றும் பொருள் கொள்ளலாமாகில், திருமாலைக் குரங்காகச் சொல்வாயாக.
எனவே, சொல்வேற்றுமையும் பொருள்வேற்றுமையும் உண்டென்பதாயிற்று. இதனால், சத்தமும் பொருளும் ஒன்றுபட்டிருந்தாலும் இரண்டும் வேறென்றே காண்க என்றதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

நெல்லில் பொரியா வதுநீ டழலில்
சொல்லில் பொருளொன் றொடுதொக் கிடலால்
கல்வித் திறமாம் உரைகாட் சியினால்
மல்லற் பொருள்சா லவளந் தருமே.

பொழிப்புரை :

பொரிக்கு நெல்லே கருப்பமானாற்போலப் பொருட்கெல்லாஞ் சொல்லே கருப்பமென்று கூறினாய்; அங்ஙனமாயின், நெல்லும் மிக்க நெருப்பினைச் சேர்ந்தாற் பொரியாவதாதலால் நீ கூறியது உவமையன்று. பூ மா முதலிய வொருசொல்லிலே பல பொருள் கூடி நிற்றலால் அதனையறியக்கற்பதே சத்தம்; அப்பொருளைப் பிரித்தறியப்பட்டால் நல்ல வளப்பத்தினையுடைய பொருள் தானே நின்று மிகவும் நன்மையைத் தருமாதலால் நீ கூறிய சத்தத்திலும் அர்த்தமே சிறப்புடைத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

முன்கண் டபொருள் பெயரா தலினால்
பின்கண் டபிழம் புணரும் பெயரால்
நன்கண் டபொருட் கொருநா சமதின்(று)
என்கண் டனைகா ரணமின் றழிவே.

பொழிப்புரை :

முன் அறிவினாற் காணப்பட்ட அர்த்தமே சத்தமான பெயராய் நிற்கையாலும், பின் காணப்பட்ட உருக்களைச் சத்தமான பெயரைக்கொண்டறிகையினாலும், நன்றாகக் காணப்பட்ட அர்த்தத்துக்குக் கேடில்லையாம்; எனவே சத்தத்துக்குக் கேடுண்டாம்; காரியமாகிய சத்தமழிதலே யன்றிக் காரணமாகிய அர்த்தம் அழியுமென்று சொல்லுகை எப்படி யறிந்தாய்?
எனவே, அர்த்தங் காரணமென்றும் பிரதானமென்றுமாயிற்று. என் கண்டனை யென்பது ஏதுகொண்டு கண்டாயென வினாவியது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

பொருள்இந் திரியம் உணர்வோ டுபுமான்
இருளின் றியிடும் ஒளிஇத் தனையும்
மருவும் பொழுதில் வருஞா னமதின்
ஒருவும் பெயர்அர்த் தம்உதித் திடுமே.

பொழிப்புரை :

ஆன்மா ஒருவிடயத்தை யறியும்போது, அறியப்படு பொருளும் அதனைக் காட்டும் இந்திரியமும் அதனோடு கூடியுணரும் அத்தக்கரணங்களும் அவற்றிற்கு மூலமாகிய பிரகிருதியுத் அவற்றை வெளியாகத் தோற்றுவிக்கிற திரோதான சத்தியுமாக இத்தனையுங் கூடுமளவில் ஆன்மாவுக் கறிவுண்டாம். அவ்விடத்திற் பெயர் நீங்கப்படும் பொருள் தோன்றப்படுமாதலால் அர்த்தமே பிரதானம்.
இருளின்றியிடும் ஒளியென்பது கன்மத்துக்கீடான புசிப்பிற் செலுத்துகையால் திரோதாயி ஒளியென்றாயிற்று. ஒருவும் நீங்கும். ஆண்பனையிற் குரும்பை தோன்றினது பெரியோர் வசனமாகிய சத்தத்திலேயன்றோவென்னில், அவர் சிவோகம் பாவனா பலத்தினால் உண்டானதொழியக் கேவலஞ் சத்தத்திலுண்டானதன்று; உண்டாகில் எல்லா வசனங்களிலும் உண்டாக வேண்டுமெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

அர்த்தம் தெளிதற் கொளியா னதுபோல்
சத்தம் பொருள்தான் அறிதற் குளதாம்
நித்தம் அதுவன் றுரைநின் றழியும்
சித்தன் ஒருவன் உரைசெய் தனனே.

பொழிப்புரை :

இருளின்கட்கிடக்கும் பல பொருள்களைத் தெரிதற்குக் கைவிளக்குண்டான தன்மையைப்போல, பல பேதப்பட்ட பொருள்களையும் அறிதற்குச் சத்தமுண்டானதாம்; அந்தச் சத்தம் நிலைபேறுடைத்தன்றாய்ப் பொருளாகிய காரணமில்லையாயில் தானுங் காரியப்படாதழியுமாகையால், இந்தச் சத்தஞ் சித்தனாகிய பரமேசுவரனாலே யுண்டாக்கப்பட்டதாலால், அதனைப் பிரமமென்று சொல்லக்கடவையன்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி
ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும்
மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித்
தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம்.

பொழிப்புரை :

ஆன்மாவுஞ் சிவமு மென்னாது அகம்பிரமமென்று சொல்லிப் பிரபஞ்சமெல்லாம் கானற்சலம்போலப் பொய்யெனக் கருதிக் கருப்பாசயம் நீங்காமல் நின்று தான் மற்றுள்ள ஆன்மாக்களுக்கு உபதேசங்கள் சொல்லித் திரிகின்ற நாணமில்லாத அறிவீனனாகிய மாயாவாதி பித்தேறி வேதாகமங்களுக்குப் பொருந்தாமல் தனக்குப் பொருந்தத்தானே சொல்லிக்கொள்ளும் அந்த நூலினது உண்மையின் தன்மையைச் சாற்றுவாம்.
ஊனே புகுந்துநின் றென்பது தான் பிரமமாயின் ஊனிற்புகுதல் வேண்டாவென்பது கருதியென்க. உயிர்கட்குபதேசங்களுரைத்து வருமென்பது சர்வ ஆன்மாக்களுந் தன்னைப் போலப் பிரமமாகையால் உபதேசஞ் சொல்லவேண்டா என்பது கருதியென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அருவாய்ச்
செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச் சுத்தமாய்க்
குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப்
பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான்.

பொழிப்புரை :

ஞானமே சொரூபமாய்ப் பிரபஞ்சத்துக்குக் காரணமாய் எல்லையில்லாத ஆனந்தமாய் உருவமின்றி அருவமாய் எங்கும் நிறைந்து நிற்பதாய்க் கேடிலதாய் விளங்குஞ்சத்தாய் அசுத்தத்துடன் கூடாது சுத்தமேயாய், ஓரடையாளமும் ஒருகுணமுமில்லையாய்ச் சொல்லத்தக்க வேதங்கட்கு வரம்பாய் நீக்கமில்லாத அநுபூதி தனக்கேயுடைத்தாய் நின்றது உயர்ந்த பிரமம்.
பிறியா அநுபூதிகந்தனக்காய் என்றதனால். ஞாதிரு ஞான பேதமில்லை என்பதாயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே
நின்றாய் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள்மேற்கண்
சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம்
என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால்.

பொழிப்புரை :

ஓராதித்தன் ஆகாசத்திலே நிற்கப் பல பாத்திரங்களிலும் உண்டாகிய ஜலங்களிலே தனித்தனியே தோன்றுமாறுபோல, ஏகமாகிய பிரமம் உடல்கள் தோறுந் தனித்தனியே தோன்றப்பட்டு நிற்கும்; அவ்வாதித்தன் பாத்திர வுதகங்களில் அகப்படாமல் மேற்பட இயங்குகின்றாற் போல, அந்தப் பிரமம் உடலில் அகப்படாது மேற்பட்டு இந்தியங்களுக்கும் கரணங்களுக்கும் அறிதற்கரிதாய் நிற்கும்; இப்படிச் சொல்லப்படுகையாலே காட்சி முதலாய ஆறளவைக்குந் தெரிதற்கரிதாம்.
பொருள்மேற்கண் பாத்திரத்திடத்துக் கண்ணான தோடிக் கண்டாற்போல, அறிவுகளுக் கிராவணன் பல தலையுங்கொண்டு வியாபரித்தாற் போலவும் ஆயிரம் பணாமுடியையுடைய அநந்தனைப் போலவும் ஒருவனுமே பலமுகமாய் வழங்காநின்றான். இருமூன்றளவை: பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம், உபமானம், அருத்தாபத்தி, அபாவம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள்
அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல்
மருளில் சகமுஞ் சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத்
தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சதத்தின் செயலெல்லாம்.

பொழிப்புரை :

இருளின்கட் புற்றருகே ஒரு பழுதை கிடப்ப அதனைக் கண்டோர் பாம்பெனவே பொருந்தி நிற்கும் அளவில், ஆதித்த கிரணங்கள் தோன்றப் பழுதை மெய்யாய்ப் பாம்பு பொய்யாம் அதுபோல், பொய்யாகிய பிரபஞ்சத்தினுடைய செயலும் மயக்கத்தாலே மெய்யாகப் பொருந்தித் தோன்றும்; மயக்கமற்ற பிரமஞானம் விளங்கின காலத்துப் பிரமமே யுண்மையாகப் பிரபஞ்சத்தின் செயலெல்லாம் பொய்யாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

உலகந் தானும் நிருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது
நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால்
இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வெள்ளி நின்றதாம்
குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால்.

பொழிப்புரை :

பிரபஞ்சமானது வசநரகிதமான பிரமத்திலே நின்றுந் தோன்றும். அந்தப் பிரமத்தினின்றும் தோன்றாதாகில் வேறொர் உபாதானமுண்டாய் பிரபஞ்சம் தோன்றுவதுமில்லை. பிரபஞ்சத்தை ஒருவர் தோற்றுவிக்காமல் தானே யுண்டாமாகில் அதுவும் ஒரு முதலாயழியாது நிற்கத்தகும்; அஃதன்றி அழியப்படுவது யாங்ஙனமென்னில், பிரபஞ்சம் மெய்போலத் தோன்றினும், பொய்யாகை நிச்சயமாகையால்; அஃதன்றிப் பிரபஞ்சம் மெய்போலத் தோன்றிப் பிரகாசிக்கிறபடியும் பரமார்த்தத்திற் பொய்யாகிறபடியும் எங்ஙனமென்னில், வெள்ளிபோலப் பிரகாசிக்கும் இப்பியையும் வெள்ளியையுங் கனலிலிட்டால் இப்பி கெட்டு வெள்ளி நின்றாற் போல மெய்போலத் தோன்றும் பிரபஞ்சமும் அவிகாரமாகிய பிரமமும் பரமார்த்தத்தில் நிரூபணஞ் செய்தால் அவிகாரமாகிய பிரமமே மெய்யாய்ப் பிரபஞ்சம் பொய்யாகக் கொள்ளப்படும்.
நிருவசநம் அவிகாரம் என்பன பிரமத்துக்கோர் ஆகுபெயர். சுத்தி இப்பி, கிளிஞ்சல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால்
வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன் பக்கல்
ஓங்க உதிப்புத்துள தாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும்
ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம்.

பொழிப்புரை :

ஆதாரமாகிய பிரபஞ்சத்துக்கு உபாதாநம் சத்தாகிய பிரமமேயாம்; அஃதென்போல என்னில், சிலம்பியானது நூலைத் தன்னிடத்திலே நின்றுந் தோற்றுவித்து அந்த நூலை ஓரிடத்திலேயுண்டாக்கி வைத்துப் பாதுகாத்துப் பின்பந்த நூலழியும்படி தானீங்குந் தன்மைபோலப் பிரமமும் பிரபஞ்சபேதம் எல்லாவற்றையுந் தன்னிடத்திலே நின்றும் விளங்கத் தோற்றுவித்தும் அவற்றை உளதாக இரக்ஷித்தும் பின்னில்லையாம்படி சங்கரித்திடும். அப்படிப் பிரமத்திலே தோன்றி நின்று கெடுகையாற் பிரமத்தினுடைய நியமமே பிரபஞ்சத்தின் செயலெல்லாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி
தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச்
சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய்
அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால்.

பொழிப்புரை :

கேடில்லாத பிரமத்திலே ஆகாசந்தோன்றி ஆகாசத்திலே வாயுதோன்றி அவ்வாயுவிலே அக்கிநி தோன்றி அக்நியிலே ஜலந்தோன்றி ஜலத்திலே பிருதிவி தோன்றி, கூறிய இப்பிருதிவியிலே ஓஷதியாய்த் தோற்றி யவ்வோஷதியிலே உணவாய் அவ்வுணவிலே காயப்பகுதிப்பட்ட தாதுக்களாறும் உண்டாயின்.
தாதுக்கள் ஆறாவன : தோல், எலும்பு, நரம்பு, மச்சை, சோரி, சுக்கிலம் என்பவை. இவை காயத்தின் பகுதிக்கோர் பொதுப்பெயர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம்
மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான்
வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில்
கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால்.

பொழிப்புரை :

அவ்வாறு தாதுக்களுங்கூடி யுண்டாகியது அன்னமயகோசம்; பொருந்திய அந்த அன்னமய கோசத்திலே மாறில்லாது வாயுப் பரந்து துடிப்புண்டானது பிராணமய கோசம்; அந்தப் பிராணமய கோசத்திலே மயக்கம் நீங்கிப் பழைய மனங் கூடுவது மனோமய கோசம்; பொருந்திய அந்த மனோமய கோசத்திலே வேறாகவருஞ் சோத்திராதிகள் கூடி அறிவாயிருப்பது விஞ்ஞானமயகோசம்; அந்த விஞ்ஞானமய கோசத்திலே கூறுகின்ற வாக்காதிகள் கூடி ஆநந்தமாயிருப்பது ஆநந்தமய கோசம். மயமென்னுஞ் சொல்லின் பின்னே கோசமென்னுஞ் சொற்கூடியதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு
காசம் மருவும் கடந்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன்
வீசு கிரணம் உருவின்கண் வெளிப்பட் டிடுவ ததிற்பற்றும்
பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ.

பொழிப்புரை :

பஞ்சகோசமாகிய உருவின் கண்ணே பிரமமானது கூடிப் பிரகாசிக்கும்; அஃதென்போலவென்னில், எட்டுதற்கரிதாய ஒப்பற்ற ஆகாயத்தின்கண்ணே பொருந்திநிற்கும் ஆதித்தனது மிகுந்த கிரணமானது பூமியின்கண் வைத்த கடந்தோறுந் தனித்தனியே தோன்றுமா போல, அந்தப் பிரமமும் ஆதித்தனைப்போல எட்டாதாயினும் உருக்கள்தோறுந் தனித்தனியாற் நிற்கும்; பிரமம் அப்படிப் பாசத்தோடு கூடி நின்றதாயினும் பிரமத்தைப் பாசஞ் சென்று பற்றுவதில்லையாம்; பிரமத்தைப் பாசம் பற்றாதாகையால் அந்தப் பிரமத்துக்குப் பாசத்தோடு பற்றில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே
நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம்
பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான்
குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால்.

பொழிப்புரை :

எண்ணிறந்த பல வன்னமாகிய மணிகளைக் கோவையாகக் கோத்தவிடத்தே ஒருநிறப்பட்ட நூல் அம்மணிகளாலே பல நிறமாய் நின்றாற்போல, பிரபஞ்சத்தில் தோன்றப்பட்ட யோனிகள் பலவாகப் பேதிக்கப்படுகையால் அவற்றோடுங் கூடிய பிரமமும் பல பேதப்பட்டாற்போல அங்கங்கே தோன்றும்; ஆகையால். மணிகளிற் பொருந்தின நூலுந் தன் தன்மைகெடாது நின்றாற்போலப், பிரமமும் போக போக்கியங்கள் கொள்வாரைப் போன்று கொள்ளாதாய் நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில்
தோற்றும்நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு)
ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும்
மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடவே.

பொழிப்புரை :

பிரபஞ்சத்தார் துதிக்குந் தொழிலாலே பரமான்மாவென்றும் ஜீவான்மாவென்றும் அந்தரான்மாவென்றும் நரகான்மாவென்றுந் திரியக்கான்மாவென்றும் பல பெயர்களையும் பொருந்தி, போகத்திலும் போக்கியத்திலும் கூடி அநுபவிப்பாரைப் போலத் தோன்றும்; சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி துரியமென்னும் நாலவத்தையும் பொருந்தும்; அவ்வவத்தை நாலிற்குங்கூடி நிற்குங்கரணம் அடைவே நிரைநிரையாகக் கொள்ளுமிடத்துச் சாக்கிரத்துக்குப் பதினாலும், சொப்பனத்துக்கு நாலும், சுழுத்திக்கொன்றும், துரியத்துக்குக் கேடில்லாது வந்த புண்ணிய பாவங்கள் கெடும்படி எல்லாவற்றையும் நீங்கி நிற்குமிடமுமாக நிற்கும்.
சாக்கிரத்திற் பதினான்கு கருவியாவன: சோத்திராதி ஐந்து, சத்தாதி ஐந்து, அந்தக்கரணம் நான்கு ஆகப் பதினான்காம். சொப்பனத்தினாலாவன: அந்தக்கரணங்கள். சுழுத்தியிலொன்றாவது உள்ளம், இதனையே சித்தமெனக்கூறுவர். பிரகிருதி புமான் மகான் புருடன் அவித்தை அவ்வியத்தம் மூலப்பிரகிருதி என்பன ஒரு பொருட்கிளவி. பிரமமொழிய எல்லாடம் நீங்கி நின்றவிடந் துரியம். போகம் புண்ணிய பாவம். போக்கியம் மனம். இவையிரண்டிற்குஞ் சாட்சிபூதம் பிரமமென்பது கருத்து. அவத்தையென்பது பிரமம் உபாதிகளோடும் கூடினாற் பேதிக்குமவதரம். சாக்கிரம் விழிப்பு. சொப்பனம் பிரகிருதியவதரம். சுழுத்தி பிரகிருதிரூபம். போகபோக்கியம் என்பது புசிப்பும் புசிப்புக்கிடமாகிய பதார்த்தங்களும் துரியமாவது கருவி நீங்கின விடமெனக்கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை
ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால்
மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை
பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே.

பொழிப்புரை :

கருவிகள் பதினாலோடுங்கூடி அவற்றை நானென்று கருதி நிற்பது பந்தமாம். அக்கருவிகள் பதினாலோடுங் கூடாமல் நீங்கித் துரியத்துநிற்கவே தற்சொரூபமாகிய சிவோகம்பாவம் பிறந்து முத்தியுண்டாம். பந்தத்துக்கு வித்தாவது மூலப்பிரகிருதி; அந்த மூலப்பிரகிருதியின் செயலாலே மாயாகாரியங்களாகிய சுகதுக்கங்கள் பொருந்தும்; அவித்தையாகிய மூலப்பிரகிருதியின் செயல் கெடவே மாயை நீங்கும்; அம்மாயை நீங்கவே ஞானமுண்டாம்; அந்த ஞானமுண்டாகியவிடத்தே அந்த ஞானம் பந்தந்தோன்றாமற் சிவோகம்பாவம் பிறக்கும்.
கருவியெல்லாம் என்றது தொண்ணுடற்றாறு கருவிகளும். உள்ளம் வித்தாஞ் செய்தியினால் மருவுமென்பது அவித்தையாகிய அறியாமையின் காரியத்திலே பொருந்துமென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும்
ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும்
ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால்
வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே.

பொழிப்புரை :

உண்டான கன்மாநுஷ்டானங்களாகிய வாகிய சுத்தியாலே அந்தக்கரணத்துக்குச் சுத்தியுண்டாம்; குற்றமின்றி அச்சுத்தியானது ஞானத்தையுண்டாக்கும்; அந்த ஞானந்தானே அகம்பிரமம் என்பதனை அறிவிக்கும்; அங்ஙனந் தானான தன்மையிலே கருத்து முற்றினால் ஆகாசத்திலுண்டாகிய சந்திரன் சலத்தின் கண்ணே நின்று விளங்கித் தோன்றும் உருவம்போல மாயையிலே தற்சொரூபமுந் தெரியும்.
துளக்கப்பாடு, சலத்துக்கொழியச் சந்திர பிரதிபிம்பத்துக்கில்லாமை போல், அலைவு கருவிகளுக்கொழியப் பிரமத்திற்கில்லை என்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு)
ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து
வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி
நானே பிரமம் எனத்தெளியும் ஞானம் பிரம ஞானமே.

பொழிப்புரை :

அகம்பிரமமாய் அநுபூதியுந் தன்னிலே தன்னை அநுபவித்து, காயமென்றுங் கரணமென்றும் வாயுவென்றும் ஒரு பேதமுமின்றி இன்னபடியென்று சொல்லுதற்கோர் சொல்லுமின்றி, ஆகாச முதலாகிய பூதங்கள் கெடவுந் தானொருகாலுங் கெடாதே நிலைபெற்று, அகம்பிரமம் எனத்தெளியும் ஞானமே பிரமஞானம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால்
போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே
தேற்று மிதனைத் தெளியாதார் தெளியப் பஞ்ச ஆதநமேல்
ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றவரால்.

பொழிப்புரை :

சொல்லப்படும் வேதத்தின் முடிவாகிய தத்துவமசி முதலாகிய மகாவாக்கியங்கள் சொல்லும் பகுதியை யுணருங்காலத்து விரும்பி அதுநீயானாய் என்பதல்லாது மற்றொரு பொருள் சொல்லுதற்கில்லையாம்; ஆதலால், இப்படித் துணியச்சொல்லும் மகாவாக்கியங்களின் உண்மையைக்கொண்டு சோகம்பாவகமாக அறியாதார் அந்த முறையைத் தெளியவேண்டிப் பஞ்சவாதன முதலாகிய பூசிக்குங்கிரியையும் மேலாகிய இயமம் முதலாகிய அட்டாங்கயோகமுஞ் செய்துதிரிவார்.
எனவே சரியை கிரியை யோகமாகியவை பிரமஞானங்கூட வேண்டிச் செய்யுந் தவமென்பது கருத்து. பஞ்ச ஆதனமாவன: கூர்மாசனம், அநந்தாசனம், சிங்காசனம், பத்மாசனம், யோகாசனமாம். அஷ்டாங்க யோகமாவன : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியாநம், சமாதி என இவை. பஞ்சசாதனம் எனப் பாடமாயின் ஆசநமும் யோகப்பட்டமும் தண்டும் கமண்டலமும் செபமாலையும் எனப்பொருள் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென
மோக மான உரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய
காக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின்
தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே.

பொழிப்புரை :

மாயாவதி மத மறுதலை - மாயாவதி! நீ நான் ஏகப்பிரமமென்று சொல்லிப் பின்பு கருவிகளை நீங்கி இப்படித் தரிசித்து முத்தி யடையுங்களென்று மயங்கிச் சொல்லுஞ் சொல், நீ எடுத்துக் காட்டின சோகம் பாவனையேல், அங்ஙனங் கூறும் இனிய ஆன்ம வாக்கியத்தோடு கூடிமுடியாது; அஃதெங்ஙனமென்னில், அவ்வாக்கியம் அது நானானேன் என்கையால் இரண்டுபட்டுப் பெறுவானும் பேறுமாயொன்றுகையால். அஃதன்றியும், பிரமத்தை விகாரமற்றதாகவுங் கூறி, மீளவும் மயங்கி, அந்தப் பிரமஞ் சீவான்மாவாகப் பேதித்ததாகவுங் கூறினாய்; அதற்குக் கன்மமென் றொருமுதலின்றி இல்லாததனையும் உண்டாக்கி அதனைக் கூடிற்றென்றுங் கூறியது மயக்கம். அஃதென்போலவென்னில், ஒரு மலட்டுக் காகமானது அழுகின்ற தனது கரிய நிறத்தையுடைய குஞ்சுக்கு மிக்க பசியைத் தணிப்பான் கரிய கல்லினுண்டான இறைச்சியை வாங்கிக் குஞ்சின் வாயிலே கொண்டுவந்து கொடுத்ததென்று சொல்லுந் தன்மையாம்.
எனவே, நிர்விகற்பமாகிய பிரமத்திற்குவமை மலட்டுக்காகம். அப்பிரமத்திலே சீவான்மாவாகப் பேதித்த தென்றதற்குவமை அக்குஞ்சு. அந்த சீவான்மாவுக்குக் கன்மாதிகளுண்டாக்கிக் கொடுத்தற்குவமை கல்லின் மாமிசம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல்
நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால்
ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள்
கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடா தறிவி லாமையால்.

பொழிப்புரை :

அநாதியேயுண்டாகிய வேதம் வரையறையாகப் பிரமமொன்றே யென்று சொல்லுவதாக நீ சொன்னாய். அப்படியாயின், அந்த வேதத்தில் ஞாதிரு ஞான ஞேயமாகிய மூன்று முதலுமுண்டெனவே தெரித்து நாடொறுஞ் சொல்லுதலால், நீ ஒன்றென்று சொல்லுஞ்சொல் அவ்வேத வாக்கியங்கொண்டே பின்னிடா நிற்கும். இன்னும் நீ பிரமம் ஒன்றே யென்றும் அகம் பிரமமென்றுஞ் சொல்லுஞ் சொற்கள் குற்றப்பட்டுத் தத்துவமசியென்னும் வாக்கியத்தோடு மாறுகோடலைப் பொருந்தும். உனக்கான்மாவில்லை யாகையாலே அநுபூதிதானும் உண்டாக மாட்டாது.
நான்மறையும் என்கையால் ஆகமத்துணிவும் பெற்றது. உரை மகாவாக்கியம். அறிவு ஆன்மா. ஞாதிரு அன்மா. ஞானம் ஆன்மாவிற்ககு சகாயபூதமான சிவசத்தி. ஞேயம் அந்தச் சத்தியாலறியப்படும் பிரமேயமான சிவம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

நீதியால் ஒளிகொள் பானு வான(து)அக னீரி லேநிகழுமாறு போல்
ஆதி தானுருவ மாய காயமதின் மேவி ஆவதிலை யாகுமாம்
தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால்
ஓதில் ஓர் அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே.

பொழிப்புரை :

கிரணங்களையுடைய ஆதித்தனது சாயை பாத்திரோதகங்கள்தோறும் முறைமையாலே விளங்குமாபோல, சர்வத்துக்கும் முதலாயிருக்கிற பிரமங் குற்றமில்லாத அரூபமாகையால் உபாதிகளோடுங் கூடி யுரூபமாகிய காயத்திலே பொருந்தி உண்டாவதில்லையாம்; அன்றியும், பாத்திரோதகம் நிழலின்கண் இருந்தால் ஆதித்தகிரணஞ் செல்லாதாற்போலப் பிரமங்கூடாத காயமுமுண்டாக வேண்டும்; ஆகையாலும், பாத்திரோதகத்திலே ஆதித்தனைக் காண்பான் ஒருவனைப் போலக் காயத்திலே பிரமத்தைக் காண்பான் ஓரான்மா உண்டாகையாற் சொல்லுங்காலத்து உனது அகம்பிரமம் என்பதில்லையாம்.
அருவமாதலானும், இடமில்லாமையாலும், ஒருவர் காணலாலும் என உம்மை கூட்டுக. நிழல்சேர வேறிடமிலாமையாலென்பது பிரமமருவமாதலால் நிழல் சேர்தற் கிடமில்லையா மென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமும்
கூறிடா தறிவுதா னெனாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய்
ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீஇசையும் ஞானமும்
பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே.

பொழிப்புரை :

ஒன்றொடொன்று கூடாமல் உணரும் பொறிகளும் புலன்களும் அவற்றின்மேலுண்டாகிய மனமுங் கூடாமல் உடலில் ஓரறிவு தனித்து நின்றறியாதிருக்கவும், அறியுமென்று சாத்திரப் பிரமாணங்களுஞ் சொல்லாதனவாயிருக்கவும், நீ பிரமங் காயத்தோடுங் கூடித்தானே தானாய் நின்றறியுமென்று சொல்லிய அறிவு, கோடில்லாத முயலுக்குக் கோடுண்டென்றறிந்த அறிவிற்கொக்கும்; அன்றியும், கேடில்லாத பிரமம் ஏகமாயே நிற்குமென்று சொல்லுகிற நீ, பொருந்து ஞானத்தால் உனக்குப் பயனுண்டாவதில்லையாம். அஃதெங்ஙனமென்னில், பரப்பிரமமே சீவான்மாவுமென நீ சொல்லுகையால், நீ இங்ஙனஞ் சொல்லுமுறைமையின்றிப் பரமான்மாவும் அதனை யறியப்படுஞ் சீமான்மாவுமென இரண்டு முதலுண்டென்று சொல்லும் முறைமையே போற்றவுளது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனின் ஏகமது விலகினாய்
குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம்
பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா
உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே.

பொழிப்புரை :

மிக்கவொளியும் மணியும்போல ஒன்றாயிருக்குமென்று நீ சொல்லின், இந்த உவமையாலே ஒன்றென்பதனை மறுத்துக் கூறினாய் ; அஃது யாங்ஙனமெனின், விளங்குகின்ற மணியும் பிரகாசமும் மிகவுண்டாகிற குணமும் ஆராய்ந்தறியத்தக்க குணியுமாகையால். அன்றியும் ஒன்றான பிரமமானது இச்சா ஞானக் கிரியைகளாகிய பல குணங்களை நீங்கி நிற்குமென்று நீ சொல்லின், அந்தப் பிரமத்துக்கு இச்சா ஞானக்கிரியைகளாகிய பல குணங்களில்லையாகில், ஒப்பில்லாத பிரபஞ்சத்தை உண்டாக்குந் தொழிலில்லையாய் அதனைக் காக்க வேண்டுமென்னும் அறிவுமில்லையாம் விசாரிக்குங்காலத்து.
மணியும் ஒளியும் குணமுங் குணியுமாகையால், இரண்டுபடுமென்பது கருத்து. இச்சா ஞானக் கிரியைகளை நீங்கிய நிர்விகற்பமென்னில், இச்சா ஞானக் கிரியையோடுங் கூடியே பிரபஞ்சத்தின் சிருஷ்டி திதி சங்காரங் கண்டு நடத்தவேண்டுகையால், அவை நீங்கி நிற்குமென்னில் அறிவுமில்லையாய்க் கர்த்தாவும் அன்றாமென்பது கருத்து. இராவணனையும் சகத்திரவாகுவையும் ஒன்று பலவானதுக்குவமையிட்டாய். இராவணனொரு முகத்தாற்கண்ட தொருமுகத்தாற் சொல்லுமாபோல, உலகத்தில் ஒருத்தன்கண்ட தொருத்தனறிந்து சொல்லக் கண்டதில்லை. சகத்திரவாகுவும் பல கரங்களாலும் இயற்றப்பட்ட வில்லும் அம்பும் வலிக்குங்காலத்து வேறுபடுகை வழங்கலும் வினையொன்றின் மேலாம். இது அப்படியன்றென்று கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளக மாக அர விரவிலே
உற்றதாம் அதனை யொக்க வேஉலகு திக்குமாறு மொரு சத்திலே
பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய்
நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம்.

பொழிப்புரை :

புற்றின்கண்ணே பழுதைகிடப்ப, இருளிடத்தே அந்தப் பழுதையைக் கண்டவர்க்குப் பயத்தாலே மயிர் புளகித்துப் பாம்பெனவே நினைக்கப்படுவதாம். அதுபோல, பிரபஞ்சமும் ஒப்பற்றதாகிய பிரமத்திலே தோன்றுமாறும், அதனதயிக்கியத்தாலே அப்பிரபஞ்சமும் மெய்போலத் தோன்றும் முறைமையும் பெற்றதென்று நீ சொல்லின், அங்ஙனம் மயங்கின அறிவையுடைய ஆன்மாக்களும் இச்சா ஞானக் கிரியையுண்டாய்ப் பிரபஞ்சக்கிருத்தியஞ் செய்வதில்லையென்று நீ கூறும் பிரமத்தின் பேதமாய் நிற்பராம். இப்படி நீ சொல்லின் நினக்கு மிக்க மயக்க அறிவே யுண்டாய்ப் பிரமமாம் இன்பமுண்டாகாது.
பழுதையைப் பாம்பென்று பிரமித்தது பிரமமாக வேண்டும். அதுதான் விகாரமென்னில், கரணங்களுக்கறிவில்லையாம். பிரமத்தின் சந்நிதிமாத்திரத்திலே சலிக்குமென்னில் தெளிந்தகாலத்திற் சந்நிதியிற் சேட்டித்த லில்லையாகவேண்டும். அது பின் சலித்துத் தத்துவமுங் கூடாதெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

ஓதி யேஉலக மதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென்
பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய்
ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தழிந்துபோம்
நீதி யால்உளதி லாமை நேர்வதெனின் நேர்மை யாகியது நின்றதே.

பொழிப்புரை :

நீ வேதத்தை ஓதியிருந்தும், பிரபஞ்சத்தை முன்பில்லையென்றும், பின்பு நிருவசனமாகிய பிரமத்திலே தோன்றப்பட்டதென்றுஞ் சொல்லுதலுண்டானதென்; ஒரு பொருள் இல்லதுமன்று உள்ளதுமன்று என்று சொல்லுவாருமுளரோ? ஆகையால் அறியாதவனே சொலாய்; அற்றன்று, ஆதிதோறுந் தோன்றி வருதலால் இல்லையென்ப தில்லையாய் உள்ளதான தழிந்துபோம்; பின்னில்லாமையாம்படி யழிந்துபோம் முறைமையாலே இல்லாமையுண்டானது; ஆகையால், உள்ளதுமில்லாததும் பிரபஞ்சத்துக்குப் பொருந்திற்றென்று நீ கூறின், அப்படி யழிந்துபோம் பிரபஞ்சம் மீளவும் பிரமத்திலே யுண்டாமிடத்து முன்புபோலத் தோன்றுகையால் அதற்கு மூலகாரணங் கிடந்தழியாமல் நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

வேற தாகியது போல்இ ருந்தமையில் வெள்ளி சுத்தியெனில் ஐயமே
கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம்
மாறி டாதுநிலம் நீர தாகிஅனல் வாயு வாகிஅவை மாறியும்
சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே.

பொழிப்புரை :

மித்தையாகிய பிரபஞ்சம் பிரமம்போல மெய்யாகத் தோன்றினமையால் இப்பியானது வெள்ளியையொக்கப் பிரகாசித்தாற்போலுமென்று கூறின், அந்த இப்பியை வெள்ளியென்று ஐயப்பட்டாற்போலப் பிரபஞ்சத்தையும் பிரமமோ மித்தியையோ என்று ஐயப்பட்டே சொல்லலாம். முன்பிந்தப் பிரபஞ்சம் ஒப்பற்ற பிரமத்தோடொத்த பொருளாகக் கொள்ளப்பட்டு இப்பொழுது மித்தியையாக மாறிக்கண்டனமென்னில், நிலம் நீராகியும் அனல் வாயுவாகியும் மாறிநில்லாது, நீர் நிலனாகியும் வாயு அக்கினியாகியும் மாறியுஞ் செல்லாது. ஆதலால், இப்பிரபஞ்சம் விவகாரத்திலே மெய்யாதலன்றிப் பரமார்த்தத்திலும் மெய்யாகச் செறிந்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே
ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று)
ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ
பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே.

பொழிப்புரை :

பொய்நூலானது சிலம்பியின் வாயிடத்தே நின்று தோன்றிநின்று கெட்டவிடத்து மீளவும் அதனிடத்தே இந்த நூலாகத்தோன்றி வந்தாற்போல, உலகமானதும் பிரமத்திலே தோன்றிநின்று கெட்டபின் மீளவும் பிரமத்திலே முன்புபோலே தோன்றி வருமென்று நீ கூறின், அரூபமா யவிகாரமாகிய பிரமமும் பிரபஞ்சத்திலே யகப்பட்டு மயங்கவுமாகுமாதலால் நீ கூறியது உவமையன்று. அந்த நூலாகிய சடத்துக்குள் அச்சிலம்பி யகப்படாது நின்றாற்போலப் பிரபஞ்சமாகிய சடத்துக்குள்ளும் பிரமங்கூடி நில்லாது காரணமாய் நின்குமென்று கூறின், அறியாதவனே! கடத்துக்கு மண் காரணமாயிருக்கவுங் காரணமாகிய மண்ணிற் கடந்தானே தோன்றாது; தோன்றுமிடத்தே ஆதிகாரணமாகிய மண்ணும் நிமித்த காரணமாகிய குலாலனும் துணைக்காரணமாகிய திரிகையுங்கூடித் தொழில் செய்யக் கடந் தோன்றுமாபோல, பிரபஞ்சத்துக்கும் ஆதிகாரணமுண்டாய்த் தோன்றவேண்டும்.
எனவே, ஆதிகாரணமின்றிப் பிரமமே ஆதிகாரணமாகத் தோன்றுமென்னிற் சித்திலே அசித்துத்தானே தோன்றாதென்பது கருத்து. மிருத்து மண். மாயநூலென்பது இல்லாதொன்று தோன்றுவது. மாயையென்பதவன் கருத்தாதலினால் மாய நூலென்றான். பேயனேபடமென்பது பாடமாயின், புடைவையானது மண்ணினிடத்துண்டாகாதெனப் பொருள்கொள்க. அஃதாவது ஒன்றின் காரணத்தில் ஒன்றின் காரியமுண்டாகா தென்பதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ
ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென்
மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில்
ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே.

பொழிப்புரை :

வன்னபேதமாகிய வேற்றுமைப்பட்ட வுருவத்திலே பிரமம் வெளிப்பட்டு நிற்குமென்று நீகூறின், குற்றமில்லாத சடத்தினிடத்திலே பிரமமுண்டாயிருக்க அந்த சடமவத்தைப்பட்ட விடத்தறிவின்றிக் கிடப்பானேன்? வாயுவும் அந்தக்கரணங்களும் நீங்கி வந்து கூடாமையினாலே அறிவில்லையானதென்று கூறின், பிரமத்தினறிவு கெடத்தக்கதாயிற்றோ? அதுவுமன்றிப் பிரமம் நிற்க வாயுவும் அந்தக்கரணங்களும் நீங்கியவாயினவோ? ஆதலால், பிரமம் அறிவும் அறியாமையுமாகி உருக்களிலே நில்லாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன்
உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின்
குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும்
பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே.

பொழிப்புரை :

பிரமமானது காயத்திலே நின்றதாயினும் அக்காயத் தோடு பற்றில்லாமல் நிற்குமென்று கூறினாய்; அங்ஙனமாயின் பிரமம் ஆர்வத்துடனே கூறிநின்ற வுடம்பு நரைதிரை நோய் சிறை இவற்றினால் உறுப்பழிவுண்டானபின்பும் இவ்வுடம்பைப் பொல்லாததென்று நீங்கி நிற்கமாட்டாது, அவ்வுடல் நீங்கப்படு மென்னுமிடத்து மிகவும் வியாகுலப்பட்டு நடுநடுங்கா நிற்கும்; ஆகையால், இப்படிக் காயத்தோடும் பற்றிநிற்கு முறைமையை எவ்விடத்தினுங் கண்டிருந்துங் காயத்தோடு பிரமத்துக்குப் பற்றில்லையென்று உன்னாசையாற் சொல்ல வுள்ளதன்றிப் பற்றுவிட்டதில்லை.
எனவே, பிரமஞ் சீவான்மாவாகவும் பரமான்மாவாகவும் பேதிக்குமெனவுங்கூறி இவ்விடத்துப்பிரமம் பேதியாதெனவுங் கூறியது வழுவாம். உலகானது பேதமென்றபடியோ இல்லையாகில் அபேதமென்றபடியோ சொல்லாய். இதனால், நீ அபேதமென்றது விருத்தமாம். பேதமே யுள்ளதென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும்
நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய்
ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனியில் அமர்ந்தவன்
பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே.

பொழிப்புரை :

பிரகாசத்தை யுடையமிக்க பலமணிகளுக்குள்ளே உருவி யொன்றாய் நின்றநூலுஞ் சொல்லத்தக்க முறைமையிலே கோத்த மணிகள் பலநிறமாகப் பேதித்து ஒரு நூலிலே நின்றமையும் போலப் பிரமத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் உவமைகூறினாய்; அங்ஙனங் கூறிய உவமையால், கர்த்தாவானவன் ஒருவனாய்ப் பலபேதப்பட்டு எண்ணிறந்த யோனிகள்தோறும் நின்றவன் பேதியா நிலையே கூறினாயாகையால், மணிகள் பேதம்போலப் பிரபஞ்சம் பேதமாக வுள்ளது பிரமத்துக்குப் பேதமிலதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

ஒத்து நின்றுடலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும்
பித்த உன்னுரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல்
துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ
வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே.

பொழிப்புரை :

அஞ்ஞானமாகிய காயத்தோடு கூடிப் பிரமமும் அஞ்ஞானமாய்ச் சுகதுக்கங்களை அநுபவித்து நிற்கவும், பிரமங் காயத்தோடு கூடுவதில்லையென்று சொல்லும் பேயனே! நீ அனுபவமில்லை யென்னும் வார்த்தை, உன் சாத்திரத்திலேயும் பொருந்தினதே; சாத்திரத்தினன்றி அநுபவத்தினுமன்றி உண்டானதன்று; அஃதன்றியும், அநுபவத்தினுமின்றி உண்டானதாயின், பிரத்தியக்ஷத்திலே நீ அநுபவத்தை யுறுவானேன் ; பரமான்மா அநுபவிப்பதில்லை ஜீவான்மாவினுடைய பாவனையென்று நீ கூறின், இப்படி அநுபவிக்கிற ஜீவான்மாவை ஒன்றினுந் தோய்விலாத பரமான்மாவாகக் கொண்டு நித்தமாய் மனவாக்கிறந்ததென்றும் அகம்பிரமமென்றுஞ் சொல்ல உனக்கு இன்னமும் நாணமில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ
அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா
இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்திதிஇ யங்குநேர்
தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே.

பொழிப்புரை :

பிரமம் ஜீவான்மாவாய்க் காயந்தோறும் நிறைந்து நிற்குமென்று கூறின், நீ கூறிய அவத்தையிலகப்பட்டு அடங்குவதில்லையாம்; அப்படி யவத்தைப்படுவது ஜீவான்மாவன்று அந்தக்கரணங்களினது சம்பந்தமென்று நீ கூறின், கரணங்கள் அவத்தையைப் பொருந்தினவிடத்தே அவ்விடத்துநின்ற ஜீவான்மா எங்கே மறைந்து நின்றது? அந்தக்கரணம் நாயகனாகிய ஜீவான்மா அவ்விடத்து நின்றதாயின் அவன் வழித்தாய கரணங்களும் அடங்கமாட்டா; அற்றன்று, இவ்விடத்துண்டானதொரு காந்தக் கல்லின் சந்நிதியிலே இரும்பு அசைந்தடங்கும் தன்மைபோல ஜீவான்மாவின் சந்நிதியிலே அந்தக்கரணங்களுஞ் சேட்டைப்பட்டடங்கின வென்று நீ கூறின், நீ கூறிய இரும்பு காந்தத்தோடு கூடினாற் காந்தத்தை இரும்பு நீங்கமாட்டாத தன்மைபோல, அந்தக்கரணங்களும் ஜீவான்மாவோடு கூடினால் நீங்கப்படாதாகையால், நீ கூறிய உவமையும் பிறழ்ந்ததாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும்
மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே
தெருள்பொ திந்து பரம்நானெ னும்தெளிவு சென்ற போதுகதி யென்றிடும்
பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே.

பொழிப்புரை :

இருளான் மூடப்பட்டதோர் ஆதித்தன் இந்த உலகின் கண்ணுண்டாகி நின்றதனை யொக்கும் காயங்கள்தோறும் நானென்று மருட்சியாலே மூடப்பட்ட பிரமம் இவ்விடத்துண்டாய் நின்றது; அப்படி மருட்சிபொருந்தி நின்ற காயம் நீங்கி, அறிவு சூழப்பட்டுப் பரப்பிரமம் நானேயென்னுந் தெளிவுண்டான பொழுது முத்தியாய் நிற்கும்பொருளுந் தானாமென்று கூறின், மலரகிதமாகிய பிரமத்துக்கு மலங்கூடுதலும் நீங்குதலும் உண்டாகையாமென்று நீ கூறியவுரை வெளிற்றுரை.
உளதுபுன்மையே என்பது நின்மலமாயிருக்கிற பிரமத்துக்கு மலமானது கூடுதலால் ஆபாசமாகை யுண்டாமென்க. இது கூடா தென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ
வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்குமலம் வைத்தனை
ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய்
பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே.

பொழிப்புரை :

பரப்பிரமத்துக்குப் புதிதாகச் சுத்தமுண்டாயதன்று, அநாதியே சுத்தமுள்ளது; நீ ஜீவான்மாவென்று பிரமத்திலே பேதித்துச் சொல்லப்பட்ட சித்தானது மயக்கமுற்று அசுத்தத்தைப் பொருந்தவே அதன் பேதமாகிய பரப்பிரமத்துக்கு மலமுண்டென்று தோற்றுவித்தனை. காயத்தோடு பொருந்தின ஆன்மா மலமுங் கன்மமும் மாயையுங்கூடி அநுபவிக்குங் காரியத்துக்குக் காரணமாகிய முதலை அறியாயாதலால் நீ பேயனே. அற்றன்று, காட்டத்திலே அக்கினி மறைப்புண்டு நின்று பிரகாசித்தாற்போல, காயத்திலே மறைப்புண்டு நிற்கும்பொழுது ஜீவான்மாவென்று நின்று பிரகாசிக்கும் பொழுது பரப்பிரமமாக நின்று பிரகாசிக்குமென்று கூறின், ஓரக்கினி இரண்டாகப் பிரிந்து காட்டத்திலே நிற்பதன்றி வேறொரு பொருளாய்த் தோன்றுமாபோல ஜீவான்மாவும் வேறொரு முதலென்றறிவாயாக.
வேறு பொருள்பெற்றதே என்பதற்கு விறகில் நெருப்புத் தோன்றுந் தன்மை யென்பையாகில், அந்நியப் பொருளைக் காட்டி நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

உன்னின் நீயும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு)
என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல்
மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வே லாமு மாயையெனில் மாயையே
சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே.

பொழிப்புரை :

நானே நானாயநுபவிப்ப னென்னு மிடத்துப் பெறுவானும் அநுபவிப்பது முண்டாய் இரண்டாம். பெறுவானாக என்னிடத்திற் கண்டதில்லையென்னிற் பேறாகிய நீயும் இல்லையாம். அஞ்ஞானங் கெட்டவிடமே உண்மையென்று நீ கூறின் அந்தமயக்க அறிவு கெட்டுக் கூடுமிடத்தே ஆன்ம அறிவு சிறிதுண்டாயிருக்கும். அற்றன்று, அப்படி அறியும் அறிவெல்லாம் மாயையறிவாம் என்று கூறின், மாயை நீங்கின விடத்திற்றோன்றும் அறிவும் மாயையறிவென்னின் அந்தப் பிரமம் மாயையாகவேண்டும். ஆகையால் பிரமமுமாயையாய் அம்மாயையாலே அறிவுங் கெடுமென்பதேயாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

ஆர ணங்கள்தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய்
கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய்
நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ
ஏர ணைந்துபொலி சாத நங்கள்கொடு யோக ஞானமும் இயற்றிடே.

பொழிப்புரை :

வேதமுடிவிலே சொல்லப்பட்ட தத்துவமசி யென்னும் மகாவாக்கியத்தையும் அதனால் தரிசிக்கப்பட்ட பதபதார்த்தங்களையும் அறியாய், காரணமாகிய கர்த்தாவுங் காரியமாகிய ஆன்மாவும் இரண்டுபட்டு நின்றமையுங்கண்டு கூடிநிற்குமதுவும் அறிந்திடாய். ஆகையால் பிரமவிஷ்ணுக்களாலும் நாடுதற்கரிய கர்த்தாவினுடைய திருவடிகளைப் பொருந்துதற்கு அழகு பொருந்திப் பொலிவினை யுடைத்தாகிய சிவசாதநங்களையும் பொருந்திக்கொண்டு யோக ஞானங்களை யறிந்து செய்வாயாக.
எனவே, யோகத்தாலே மனதைப் பிரித்து ஞானத்தாலே திருவடியைச் சேர்க என்பது கருத்தாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

மன்னு மறையின் முடிவென்று மாயா வாதி உடன்மலைந்து
பின்ன மாகிப் பிரமத்தைப் பேதா பேதம் சாதித்துப்
பன்னு மொருநூல் அதுவாகப் பாரின் மீது பாற்கரியன்
சொன்ன இதனை இந்நூலின் அகத்தே தோன்றச் சொல்லுவாம்.

பொழிப்புரை :

சுவயம்புவாக நிலைபெற்ற வேதம் இத்தன்மைத்தென்று மாயாவாதியோடு மாறுபட்டு நீங்கி, மாயாவாதி கூறிய பிரமத்தைப் பேதமாகவும் அபேதமாக நிலைநிறுத்தி, ஓதுநூலும் வேதமுமாயிருக்க அதனுண்மையை யறியாது பூமிமீதே பாற்கரியன் சொன்ன மதத்தை இச்சிவஞான சித்தியாரிடத்தே தெளியச் சொல்லுவாம்.
பாற்கரியன் என்பான் ஓரிருடி, பாற்கரியம் எனினும் பரிணாம மாயாவாதம் எனினும் ஒக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால்
சத்தே யெல்லாம் முத்தியினைச் சாரக் கண்ட ஞானங்கள்
வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால்
ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே.

பொழிப்புரை :

அறிவாகிய பிரமமே பிரபஞ்சபேதமாய்த் தோன்றி வளர்ந்து ஆன்மாக்களுமாய் விளங்குந் தன்மையால், சர்வமும் அந்தப் பிரமமேயாம், வீட்டின்பத்தைச் சேர அறியும் ஞானங்களை வேதவாக்கியங்கள் சொல்லும், அந்த வாக்கியங்களைச் சொன்ன படியே வைத்துத் தத்துவமசி பதபதார்த்தங் கண்டால் அந்தப் பிரமத்தோடே ஆன்மாக்கூடி ஆன்மத்தன்மை கெட்டு ஒன்றிப் பிரமமாயே போமென்று பாற்கரியன் கூறினான்.
வாக்கியம் தத்துவமசி. சத்து நிலைநின்றது. அசத்து நிலை நில்லாதது. ஆதலாற் சத்தே சர்வமுமா மென்பதவன் கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

இயம்பு கின்றதுல காயி டாதுசட மின்றி நின்றுசட மாகியே
முயங்கு கின்றமையில் இலவணத் திரத முழுதுமே கனதை முயல்கைபோல்
பயந்த தென்னில்அறி யப்ப டும்பொருளும் அறிவு மென்றுபல வாகுமோ
தியங்கு கின்றதெனு ரைத்தி டாய்கடின மாதி யாகிவரு சித்தனே.

பொழிப்புரை :

பாற்கரியன் மத மறுதலை - நீ சொல்லுகின்ற பிரமம் பிரபஞ்ச பேதமாயிடமாட்டாது. ஆகையாலே, பிரமம் ஜடத்தை நீங்கிநின்றது ஜடந்தானுந் தானாகவே கூடிநின்றமை உண்டாகாது. அற்றன்று, உப்பானது ஜலத்தோடுகூடி ஒரு தன்மைப்பட்டாற்போல, வத்துவும் ஒன்றாய் நின்றதென்னில், ஜலத்தோடுகூடிய இலவணம் பேதியாது ஏகத்துவமாய் நின்றாற்போல, பிரமமும் ஒன்றாய் நிற்கையின்றி அறியப்படும் பொருளாகிய ஜடமும் அறிவாகிய ஞானமுமாகப் பேதித்து நிற்குமோ, இப்படி மயங்குவானேன் சொல்லாய், மாபூதங்கள் முதலானவையும் நானே யாவேனென்று வரும் அறிவனே.
கடினம் பூதகுணம். அது குணிமேல் நின்றது. இலவணத்திரத முழுதுமே கனதை முயல்கைபோ லென்றது மண்ணின் சாரமானதை ஜலமானது கொண்டு உப்பான தொழியச் சிற்சொரூபந்திரண்டு பரிணமியாதென்பது நோக்கியாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ
மன்னு கின்றசில கால மோடழியும் அழிய வந்துதவு மாயையால்
தன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி தருத லால் அதுச டத்ததாம்
உன்னொ டச்சகமும் உண்மை யன்றுசட மென்ன வேஉறுதி மன்னுமே.

பொழிப்புரை :

யாவரும் நினைக்கப்படா நின்ற பிரமஞ்சேரப் பிரபஞ்சமாகாது சிறிது பேதித்துப் பிரபஞ்சமானதென்று நீ சொல்லுகின்றாயாகில், அங்ஙனமாயிற் பிரபஞ்சஞ் சிறிதுகாலம் நிலைபெற்று நின்று அழியா நிற்கும். அப்படியழிந்து மீளவும் மாயையிலே தோன்றிவருகையால் மாயையிலே ஒடுங்கி மாயையிலே தோன்றும். அற்றன்று, ஒடுங்குங் காலத்திலும் பிரமத்திலேயொடுங்கித் தோன்றுங் காலத்திலும் பிரமத்திலே தோன்றுமென்னில், இப்படித்தோன்றி யொடுங்குவதாகிய பிரபஞ்சம் பிரமத்திலே பேதமாயில் பிரமமும் அசேதநமாக வேண்டுமாகையால், அகம்பிரமம் என்கிற உன்னுடனே பிரபஞ்சமுந் தோன்றுகையும் ஒடுங்குகையுஞ் செய்கையால் மெய்யன்று, ஜடமென்றே சொல்லுதலை மெய்யாகவுடைத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை விளம்பி னாய்உவமை வேறுநீ
நித்த மென்றவுரை பொய்த்து நீடுசட மாய்எ ழுந்தழியும் நின்பரம்
ஒத்தெ ழும்பொழுது வித்தினுக் கவனி யுண்டு தாரகமு னக்கெனா
பித்த னென்றுல குரைத்தி டும்பிரம மாயி னாய் இவைபி தற்றிலே.

பொழிப்புரை :

மரங்கெட்டவிடத்து வித்திலேநின்று மரமுண்டானாற் போல, பிரபஞ்சம் அழிந்தவிடத்தும் பிரமத்திலேநின்று பிரபஞ்சமுண்டாமென்று உவமை கூறினாய். அங்ஙனமாயின், அந்த வித்து மரத்திலேயுள்ளதுமாய்ப் பின்புதானே பரிணமிக்குங் காலத்து மரந்தோன்றத் தான்கெட்டுத் தோன்றினதற்குப் பரிணாமமுண்டாய் அந்த மரம் மீளவும் வித்தையுண்டாக்கினாற்போல, பிரமமும் பிரபஞ்சத்துக்கு வேறாய் நித்தமாய் நிற்குமென்ற உரையும் பொய்யாய்ப் பிரமமும் பிரபஞ்சத்தையுண்டாக்கியும் பிரபஞ்சமும் பிரமத்தையுண்டாக்கியும் சடத்தின் பகுதியாய்த் தோன்றிக் கெடும் நின்பிரமம். அதுமன்றி, அந்த வித்து மரமாம் பொழுது பூமிதரிப்பாகத் தோன்றும். அதுபோல, உன்னுடைய பிரமம் பிரபஞ்சமாம்பொழுது தரிப்பது யாது? பிரமமாயினாய் இப்படி மயங்கக் கூறுவையாயின் உன்னைப் பேயனென்று மிக்கோர் சொல்லா நிற்பார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

சூட கம்கடகம் மோதிரம் சவடி தொடரொ டாரம்முடி தோடுநாண்
ஆட கந்தருவ தாகும் அப்படிய னைத்து மப்பிரம மாகுமேல்
நீடும்அப்பணிகள் செய்து ளோர்அவைபு னைந்து ளோர்களை நிகழ்த்திடும்
நாடிடும்சகமி யற்று வோர் கொடு நடத்து வோர்உளர்ந விற்றிலே.

பொழிப்புரை :

சூடகமுதல் நாணீறாகச் சொல்லப்பட்ட பேதமான பணிகளைப் பொன்னொரு முதலாக நின்று பேதித்தாற் போல, பிரமமும் பிரபஞ்சபேத மெல்லாமாகப் பேதித்து முதல்கெடாமல் நிற்குமென்று கூறின், அப்பணிபோலப் பேதித்து எல்லாம் பிரமமாய் நிற்குமாகில், அப்பணிபேதஞ் செய்தோரையும் அப்பணி யணிந் தோரையும் அப்பணி தானேயுண்டாக்கி நிற்றலால் அதுபோல, ஒரு முதலைக் கொண்டு சகத்தை யுண்டாக்குவோரையும் அதனை நடத்துவோரையுஞ் சங்கரிப்போரையுஞ் சொல்லுங் காலத்து அறிந்திடுந் தன்மையை யுடைத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

அறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால்
உறுதி யானபிர மத்தி னோடழிய ஒன்ற லாமென உரைத்திகாண்
இறுதி யேல்அதனொ டிசைவதின்றிசைவ துள்ள தாயின்அவ் வின்பமே
பெறுதி நீஉடலொ டுயிர்க ளாய்அறிவு பிரியு மாறுசெயல் பெறுவதென்.

பொழிப்புரை :

ஞானக்கிரியைகள் மாறினால் வீட்டின்பம் அணைதற்கு அரிது; ஞானக்கிரியைகள் இரண்டினாலுஞ்சென்று அவற்றிற் காதாரமாகிய பிரமத்திலே அழியக் கூடலாமென்று கூறினாய்; ஞானக்கிரியைகள் நிற்கப் பிரமத்தைச் சென்று கூடுதலுமில்லை ; அந்த ஞானக்கிரியைகள் கெட்டாற் பிரமத்தோடு கூடுதற்கு ஒரு முதலும் இல்லையாம்; அன்றி அந்த ஞானக்கிரியைகள் கெடாம லொன்றுவ துள்ளவாமாயின், நீ எப்பொழுதும் அந்தச் சுகத்தை அநுபவிப்பதன்றிக் காயத்தோடு உயிர்களின் மிக்க அறிவு நீங்கும்படி அவத்தையின் செய்தியைப் பெறுவானேன்; ஆதலால், ஆன்மாவென்று ஒன்றுண்டு.
உடலொ டுயிர்களாயது பிறக்குமாறு செயல் பெற்றியால் எனப் பாடமாயின், இன்பத்தைப் பெற்று நிற்றலன்றி நீயும் உடலோடு உயிர்களாய் வந்து பிறக்குமரபு பெற்றாயெனப் பொருள் கொள்க. இதனால் உலகமும் உயிருமாய்ப் பிறந்திறந்துழலும் அவனன்றோ நீ யென்றதெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி
தூல சூக்கம் பரமாயச் சுத்த புருடன் சந்நிதியில்
பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்கும்
சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே.

பொழிப்புரை :

பிரகிருதி புமானென்னும் இரண்டில், பிரகிருதியானது மூலமென்றும் புரியட்டகமென்றும் விகிர்தியென்றும் மூன்று பெயரையுடைத்தாய், தூலமாயும் சூக்குமமாயும் பரமாயும் நிற்கும் ; புமானாகிய சுத்தபுருடன் பிரகிருதியின் சந்நிதியிலே மழவின் செய்தியைப்போல அறியாமையைப் பொருந்திப் பிரபஞ்சமும் யோநி பேதங்களும் நானெனவிரிந்து நின்றவிடத்து, தனக்கு விவேக ஞானம் வந்து சர்வமும் பிரகிருதிக்குள்ளது தனக்குள்ளதன்றென்று காணவே, பிரபஞ்ச வியாபாரம் நன்றாக நீங்குமென்று நிரீச்சுவர சாங்கியன் சொன்னான்.
மூலம் - சித்தம். புரியட்டகம் - சத்தாதிகள் ஐந்து மனம் புத்தி அகங்காரம் மூன்று ஆக எட்டாம். விகிர்தி - தூலதேகமுங் பிரபஞ்சமும். இம்மூன்று வகையாகப் பிரகிருதி பேதிக்க இதனைப் புமான் தனதென்று கொண்டு நிற்பன். இந்தப் பதினாறு கருவிகளோடுங் கூடிப் பிரபஞ்சத்தைப் பிரகிருதிக்குள்ளதென்று நீங்கப் புமானென்றும் புருடனென்றும் வேறற்று நிற்பன். அதுவே முத்தியாம் என்பது கருத்து. நிரீச்சுர சாங்கியம் - கபிலன் மதம். இதில் விகிர்தியென்றமையால், ஆங்கார பேதத்திற்றோன்றிய ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் சத்தாதிகளிற்றோன்றிய பூதங்களும் இருபத்துநாலு தத்துவங்களும் மற்றும் பேதமுமெனக் கொள்க. இதில் ஈசுரசாங்கியன் என்றும் நிரீச்சுர சாங்கியன் என்றும் இரண்டு வகையர். இதிலே சிவசாங்கியரையும் விஷ்ணு சாங்கியரையும் ஈசுர சாங்கியரெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி
பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால்
கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல்
முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம்.

பொழிப்புரை :

நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை ஆன்மபுருடன் சுத்தமான அறிவை யுடையனாமாகில் அவனை அசுத்தமாகிய பிரகிருதி வளையாதாகும். அன்றியும், பெத்தனாய் நின்றவிடத்தினும் இவனைப் பந்தியாது அஞ்ஞானம். அது பிரகிருதிக்குள்ளதாய் நிற்குமென்னில், பெத்தம் நீங்கினவிடத்திலும் அறியாமல் நின்றானாகையால், பெத்தத்தைத் பொருந்தினவனாவன் ; மிக்க அறிவாகிய பரையோடு கூடி நின்றும் பொல்லாங்கைப் பொருந்தின பிரகிருதியின் செயலைத் தரிசித்து நீங்கமாட்டானாயின் அஞ்ஞானம் பிரகிருதிக்குள்ளதென்று காணுந் தகுதியையுடையனல்லனாகையால், பரையுடனே கூடிநின்று பிரகிருதியை நீங்கானாயின் முத்தியடையும் ஆன்மாவாகான். சுத்தனாயிருக்கிற பிரமத்துக்கு மூலப்பிரகிருதி யுண்டாகாது ; மூலப்பிரகிருதி கூடுவதும் நீங்குவதும் ஆன்மாவுக்கென் றறிவாயாக. (கத்தம் - பொல்லாங்கு).

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

புருடன் பிரகி ருதிபெற்றால் போதம் சிறிதங் குண்டாகிக்
குருடன் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி
இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும்
மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம்.

பொழிப்புரை :

சுத்தபுருடனென்ற ஆன்மபுருடன் பிரகிருதியைக் கூடினவிடத்துப் பிரகிருதியாலே சிறிது அஞ்ஞான அறிவுண்டாய், அந்தகன் முதுகிலே முடவனிருந்து அந்தகனை நடாத்தினாற்போல, கன்மத்துக்கீடான பிரகிருதியாலே சிறிது அஞ்ஞானம் பெற்ற புருடனைப் பிரகிருதி கூடி அவனிடத்தேயிருந்து கன்மத்துக்கீடான தொழிலை நடாத்தும். ஆகையாற் பிரகிருதியுடன் கூடி நிற்பான் ஆன்மாவேயாம் ; கர்த்தாவன்று. அந்த ஆன்மபுருடனையும் அவனைக் கூடிநிற்கிற பிரகிருதியையுங் கூட்டி அஞ்ஞானமே தனக்கு உருவமாகக் கொண்டு நடக்கும்படியாக நடாத்துவித்து ஆன்மாக்கள் செய்த கன்மத்தையும் அறிந்து அதற்குத் தக்க பயனையும் கொடுப்பான் மலரகிதனாகிய அரனே.
பிரகிருதிக்கு அஞ்ஞானமே சொரூபமாகையால் அவ்வஞ் ஞானத்தைப் பொருந்திநின்ற புருடனை மருடனென்று கூறப்பட்டது. அமலனென்கையால் கர்த்தா மலரகிதனென்பது கருத்து. புருடனாவான் பிரகிருதி கூடினாற் சிறிதறிவுண்டாய்க் குருடனுடைய முதுகிலே முடவனிருந்து நடாத்தினாற்போலப் பிரகிருதியாகிய இருள் தனிடத்தே புருடனிருந்து வழங்கும் ; கன்மத்தாலே வேறு கர்த்தாவா லன்றெனில், அப்பிரகிருதி புருடனாகிய இரண்டையும் அருள்தன் உருவாய் நின்று சேட்டிப்பித் தறியாநிற்கும் அமலனாகிய பரமேசுவரனென்க. குருடன் முதுகில் முடவனிருந் தூர்கையாவது ஒன்றுக்குள்ள குணம் ஒன்றுக்கில்லாமல் சேட்டை கூடாதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தினுக்குக்
குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில்
செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம்
நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால்.

பொழிப்புரை :

ஆன்மபுருடன் தானாயொன்றையும் அறியமாட்டான். பிரகிருதியுஞ் சடம் ; ஆதலால், இவை காரியப்படுதற்குக் காரணமாகிய கர்த்தா ஒருவனுளனென்று குறிப்பாயாக. நீ முத்தியென்று சொல்லப்பட்டது பந்தம் நமக்குள்ள தன்றென்றறியும் விவேகஞான மென்னில், எல்லாவற்றையும் அறியுமிடத்துப் பாசஞானமும் பசுஞானமுங் கூடி அறிய வேண்டுமாகையாற் பாசபந்தம் நீங்காதாம். அந்தப் பாசம் நீங்குமிடத்து முன்பு கூட்டினோனே நீக்க வேண்டும். அந்தப் பாசத்தைக் கூட்டின கர்த்தாவின் காருண்ணியத்தாலே பாசபந்தம் நீங்கும். அது நீங்கும்படிக்குச் சரியை கிரியா யோக ஞானங்களாகிய வழிகளிலே நின்று தொண்டு செய்து நீ கர்த்தாவினாலே உன் பாசபந்தத்தை நீக்கிக் கொள்வாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு)
அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.

பொழிப்புரை :

புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்னும் நான்கனுள் அகச்சமய மொழித் தொழிந்த முக்கூற்றுப்புறங்களிற் றனித்தனி யறுவகைப்பட்ட சமயங்களி னின்றுகொண் டவற்றள்ளும் பல வேறுவகைப்பட வோர்த்துணர்கின்ற அவரவர்கொண்ட முதற் பொருளாய், அவரின்வேறாகிய பாடாணவாத முதலிய அகச்சமயத் தார்க்கு இலயம் போகம் அதிகாரமென்னும் மூன்றவத்தையின் முறையே சத்தியும் உத்தியோகமும் பிரவிருத்தியுமென்னுந்தொழில் வேறுபாடுபற்றிச் சிவன் சதாசிவன் மகேசனென்னும் பெயருடைய அருவம் அருவுருவம் உருவமென்னுந் தடத்தக்குறியே குறியாக உடைத்தாய்ச், சித்தாந்த சைவர்க்கு அத்தடத்தக்குறியேயன்றி வேதாகமங்களின் கருத்திற் கதீதமாய், உயிர்க்குயிராய், உயிர்கட்கெல்லா மறிவைப் பிறப்பிக்கும் அம்மையப்பனுமாகி, எங்கணு மெக்காலமுஞ் செறிந்து வியாபகமாய் நின்ற சிவபிரான் திருவடியைச் சிரமேற் கொள்வாம்.
பரபக்கத்துட் புறப்புறச்சமயத்தாரையும் புறச்சமயத்தாரையும் மறுப்பவே, அம்முறைபற்றி அகப்புறச்சமயத்தாரும் மறுக்கப்பட் டாரேயாவரென்னுங் கருத்தான், அவரையுமுடன்தழுவ அறுவகைச் சமயத்தெனப் பொதுப்படக் கூறினார். ஓர்த்தல் ஆராய்தல். விசேடியமடியாகலின் உடைத்தாயென்றார். சிவனடியென்றது உபசாரம். இதனுள், அறுவகைச்சமயத்தோர்க்கு மவ்வவர் பொருளாயெனவே மேற்கூறிப்போந்த பரபக்கத்துப் பொருளும், வேறாங்குறியது வுடைத்தாயெனவே முதற்சூத்திர முதலிய வைந்து சூத்திரத்திற் பெறப்படுந் தடத்தப்பொருளும், வேதாகமங்களின் குறியிறந் தெனவே இரண்டுமன்றி யேனைச்சொரூபலக்கணங் கூறும் ஆறாஞ் சூத்திரப்பொருளும், அறிவினிலெனவே ஆன்மசொரூபங் கூறுமேழாஞ் சூத்திரப்பொருளும், அருளான் மன்னியெனவே ஞானதரிசனங் கூறுமெட்டாஞ் சூத்திரப்பொருளும், அம்மையோடப்பனாகி யெனவே ஞானமுஞேயமுஞாதிருவுமாகக் காணப்படுமொன்பதாஞ் சூத்திரப் பொருளும், செறி வொழியாது நின்றவெனவே ஏகனாகி நிற்றல் கூறும் பத்தாஞ் சூத்திரப்பொருளும், சிவனடிசென்னி வைப்பா மெனவே அரன் மலரடிக்கீழிருத்தல் கூறும் பதினொராஞ் சூத்திரப் பொருளும், சென்னிவைப்பாமென்னுஞ் சொல்லியல்பான் அணைந்தோர் தன்மை கூறும் பன்னிரண்டாஞ் சூத்திரப்பொருளுங் குறிப்பானறியக் கிடந்தன. இங்ஙனந் தொகுத்துக் காட்டுதல் மங்கல வாழ்த்துக்கு இலக்கணமென வுணர்க. இனி, இதனுட் கூறப்படு மறுவகை வினையெச்சங்களானும் முதல்வனுடைய அறுவகைக் குணங்களுங் கூறப்பட்டனவென் றுரைத்தலுமொன்று. அதுகாட்டுதும்: அவ்வவர்பொருளா யென்றதனால் அங்ஙனம் பலவேறு வகைப்பட நிற்கும் அநந்தசத்தியாகிய அளவிலாற்றுலுடைமை கூறப்பட்டது ; வேறாங்குறியது வுடைத்தா யென்றதனால் அநாதி போத மநாதி முத்தத்தன்மை யெனப்படும் இயல்பாகவே பாசங்களினீங்குதல் கூறப்பட்டது - நிராமயான்மா வெனப்படும் இயற்கை யுணர்வினனாதலு மீண்டேயடங்கும்; வேதாகமங்களின் குறியிறந் தென்றதனாற் சுதந்திரனெனப்படுந் தன்வயத்தனாதல் கூறப்பட்டது; அறிவினி லருளான் மன்னி யென்றதனாற் சருவஞ்ஞத்துவமெனப்படும் முற்றுமுணர்தல் கூறப்பட்டது; ஆம்மையோடப்பனாகி யென்றதனால் அலுத்தசத்தியெனப்படும் பேரருளுடைமை கூறப்பட்டது - விசுத்ததேக மெனப்படுந் தூயவுடம்பினனாதலு மீண்டேயடங்கும்; செறிவொழியாதென்றதனாற் பூர்த்தியெனப்படும் வரம்பிலின்ப முடைமை கூறப்பட்டதென்றுணர்க. இன்னும் விரிப்பிற் பெருகும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

என்னைஇப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே
தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும்
மின்னமர் பொழில்சூழ்வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான் நூல்
சென்னியிற் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்றாம்.

பொழிப்புரை :

பவமாயக்கடலி லழுந்துகின்றவென்னை அதன்கணழுந் தாதவண்ணங் கருணைக்கையாலெடுத்து என்னறிவின்கண்ணே தற்சொரூபத்தை விளக்குதற் கெழுந்தருளிவந்து திருவடி சென்னியிற் சூட்டித் தீக்கைசெய்தருளிய வெண்ணெய் மெய்கண்டதேவன் மொழிபெயர்த்துரைத்தருளிச்செய்த சிவஞானபோதநூலை, ஏனை யாசிரியன்மார் செய்த பிரமாண நூல்கட்கெல்லாஞ் சிரத்தானமாகக் கொண்டு, அதனிற்கூறப்படுஞ் சைவாகமப் பொருட்கூற்றை விளக்குவாம்.
இந்நூலுக்கு வழி கூறியவாறு. எடுத்தென்றது குறிப்புருவகம். வைத்தென்றது உபசாரவழக்கு; *திருக்குறள் - அன்புடைமை -3``அன்போடியைந்த வழக்கு” என்றாற்போல. சென்னியின் - இன் உவமவுருபு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்.

பொழிப்புரை :

சாமுசித்தர் வைநயிகர் பிராகிருதரென்னுமிவருள், ஆற்றலுமறிவுங்காதலுமில்லாத பிராகிருதரையொழித்து, ஒழிந்த விருவரின் முற்செய் தவவிசேடத்தாற் சாமுசித்தராய்ப் பிறந்து வீடு காதலிக்குஞ் சிவபத்தரை விஞ்ஞானாகலர் பிரளயாகலரைப் போல நூல்வழியானன்றித் தானே சிவகதியிற் சேர்த்துவனாகலின் அவர்க்கு நூல் வேண்டாமையான், முறைமையின் மந்ததர முதலிய சத்திநிபாத முடையவராய் நூல்வழியான் முத்திபெற விரும்பும் வைநயிகராயினார்க்குச் சிவகதி கூடுமுறையினை ஈண்டு வகுத்துக் கூறுகின்றாம்.
சன்மார்க்கரை மார்க்கரென்றது தலைக்குறை. சன்மார்க்க ராவார் ஞானிகள். கண்ட நூல் அவர்களெல்லாம் பிரமாணமென்றறிந்து கைக்கொண்டநூல். இதனானே நுதலியபொருளுங் கேட்போரும் பயனுங் கூறியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும்
குறைவிலா அளவி னானுங் கூறொணா தாகி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே.

பொழிப்புரை :

வேதமுதலியவற்றானு மறிதற்கரிய முதல்வன தியல்பை யான் சொல்லுவலென்றெழுந்த எனது புல்லியவாசை, சால்புடையா ரெல்லாம் ``ஏயே யிஃதோவிவ னறிவு !” என்றெள்ளி நகையாடுதற் கேதுவாம்.
அயனான் மாலான் மனத்தினான் வாக்கானென்புழி, ஆனுருபு முன்னையவிரண்டும் வினைமுதற் பொருண்மையினும், பின்னைய விரண்டும் கருவிப் பொருண்மையினும் வந்தன: சாத்தனாற் கண்ணானோக்கப்பட்ட தென்றாற்போல. ஈண்டு அளவென்றது அனுமானப் பிரமாணத்தை. அயன்மாலென்றது உபலக்கணம். கூறொணாதென்றது உபசாரம். இனி, அயனென்றது அவ்வேதத்திற்கங்கமாய் அயனாற்செய்யப்பட்ட பதினெண் புராண நூலையும், மாலென்றது மாயோனவதாரமாகிய வியாதனாற் செய்யப்பட்ட இதிகாச நூலையும், மனமென்றது மனுமுதலிய இருடிகளான் மனத்தானினைந்து செய்யப்பட்ட மிருதிநூலையும், வாக்கென்றது அவ்வேதத்தைக் கருமகாண்டம் ஞானகாண்டமென் றிருவகைப்படுத்தெடுத்துக்கொண்டு அதன் பொருளை நிச்சயித்துரைக்கும் சாத்திரமாகிய பூருவமீமாஞ்சை உத்தரமீ மாஞ்சைகளையும், அளவென்றது அளவை நூலாகிய தர்க்கசாத்திரத்தையும் ஆகுபெயரானுணர்த்தினவெனக் கொண்டு, வேதத்தானு மதற்கங்கமான புராணமிதிகாச மிருதி மீமாஞ்சை தருக்கங்களானுங் கூறொணாத பாதமென்றுரைத்தலு மொன்று. அவையடக்கங் கூறியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

அருளினால் ஆக மத்தே அறியலாம் அளவி னாலும்
தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே
மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா
இருளெலா மிரிக்க லாகும் அடியரோ டிருக்க லாமே.

பொழிப்புரை :

இறைவனியல்பு அப்பெற்றித்தாயினும், அவனை அவ்விறைவனூலெனப்படும் வேதசாரமாகிய சிவாகமத்தி னனுபவ முடைய தேசிகரருளிச்செய்யும் உபதேசத்தாற் கேட்டறியலாம்; கேட்டதனை அதற்கனுகூலமான வளவையாற் சிந்தித்துமறியலாம்; சிந்தித்ததனைத் தன்னறிவின்கண்ணே சிவஞானத்தான் மாசறத் தெளிந்துமறியலாம்; அதனாற் பாசக்ஷயம்பண்ணி நிட்டைகூடிச் சிவானந்தானுபூதியும் பெறலாம்.
உம்மை எண்ணின்கண் வந்தது. மேல் அவையடக்கத்துட் கூறியதுபற்றி நிகழுமாசங்கையை நீக்கிற்று. இக்கடவுள் வணக்க முதலாயினவெல்லாம் பரபக்கத்து நூன்முகத்தாற் கூறிப் போந்தனவே யாயினும், பரபக்கஞ் சுபக்கமென இதனை இருநூலாதலுங் கொள்ள வைத்தமையின் ஈண்டும் வேறு கூறினார். அறுவகைச்சமயத்தென்னு முதற்செய்யுளிற் கடவுள்வணக்கங் கூறுமுகத்தாற் சுபக்கத்தினிறைவனாவானிவவென்பதூஉம், ஏனை நான்குசெய்யுளினும் வழி முதலியன கூறுமுகத்தான் அவ்விறைவனாலியம்பப்படும் நூலிவை யென்பதூஉம், அவற்றுட் பொது நூல் சிறப்புநூலென்னும் வேறுபாடு முணர்த்தப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்
அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு)
அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்
அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே.

பொழிப்புரை :

பிரமாணமாவது காட்சிமுதல் அறுவகைப்படு மென்பாரும், அவ்வறுவகைப் பிரமாணங்கட்குமேலும் பாரிசேட முதலிய நான்கு பிரமாணமுளவென்பாரும், அப்பத்துக்கு மேலும் பிரமாணங்களுள வென்பாருமுளர். அவையெல்லாம் பிரமாணமேயாயினுங் காட்சி முதலிய மூன்றனுளடங்குவனவன்றி வேறாவனவல்ல.
இம்முறைபற்றி ஆகமமும் அனுமானத்திலடங்குமெனப் புத்தர் முதலாயினார் கூறுப. அஃததனுளடங்காதென்பது சித்தியார் பரபக்கம் - 106. ``நூலுரைத் தானொருவனுளன்” என்னும் பரபக்கத்துச் செய்யுளானுணர்க. இது சொற்பொருட் பின்வருநிலை. இதனானே பிரமாணமினைத் தென்பது கூறப்பட்டது.

குறிப்புரை :

அளவை - இனி சித்தியார் பரபக்கம் - 11 நிறுத்தமுறையானே பொருளுண்மைக்களவு கூறுவான் றொடங்கி, அவ்வளவையினியல்புணர்ந்தார்க்கன்றி அதனையெடுத்துக்காட்டலாகாமையின், முதற்கண் அளவையினியல்பு பதினான்கு செய்யுளாற் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 7

மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விகற்ப முன்னா
ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம்
பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும்
காசறு முறையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும்.

பொழிப்புரை :

அம்மூன்றனுள், நிருவிகற்பவுணர்வைத் தனக்கு முன்னாகக்கொண்டு ஐயவுணர்வும் விபரீதவுணர்வுமின்றி விடயங்களை நேரே யறிவதாகிய ஆன்மாவினது ஞானசக்தி காட்சியளவையெனப் படும். அங்ஙனம் நேரேயறியப்படுவதன்றிச் சாதித்துப் பெறற்பாலதாய் மறைந்து நின்ற பொருளை அதனை விட்டுநீங்காது யாண்டு முடனாய் நிகழுமேதுவைக்கொண்டு அவ்வாறுணர்வதாகிய ஆன்மாவினது ஞானசத்தி கருதலளவை யெனப்படும். இவ்விரண்டானு மறியப்படாத பொருள்களை ஆத்தவாக்கியங்கொண்டு அவ்வாறுரைச் செய்வதாகிய ஆன்மாவினது ஞானசத்தி உரையளவை யெனப்படும்.
அடங்கிடாப் பொருள் பரலோக பாதாளலோக முதலாயின. இம்மானத் தடங்கிடும் பொருளையும் ஆத்தவாக்கியங் கொண்டறிவது அருத்தவாதம். ஐயந்திரிவின்றி விகற்பமுன்னாவென்பதனை யாண்டுங் கூட்டி யுரைத்துக்கொள்க. விகற்பமென்றது தலைக்குறை. இதனானே அம்மூன்றற்கும் இலக்கணங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே
கொண்டல் திரிவாம் பெயர்ச்சாதி குணமே கன்மம் பொருளெனஐந்
துண்ட விகற்ப உணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின்
விண்ட லில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த நிருவிகற்ப முதலிய நான்கனுள், பெயர் முதலியவற்றாற் பகுத்தறிதலின்றி இஃதொன்று தோன்றா நின்றதெனப் பொருளுண்மை மாத்திரையேயறியும் ஞானசக்தி நிருவிகற்பமெனப்படும். அங்ஙனமறிந்த பொருளை இஃதியாதோ வென ஒன்றிற்றுணிவு பிறவாதாராயும் ஞானசக்தி ஐயமெனப்படும். அதனை அதனோடொப்புமையுடைய வேறு பொருளாக மயங்கி நிச்சயிக்கும் ஞானசக்தி திரிவெனப்படும். பெயர்முதலியவைந்தும் பொருடோறு முண்மையின் அவ்வைந்தும் அப்பொருட் கண்ணுள்ள வாறினிது விளங்கவுணரும் ஞானசக்தி சவிகற்ப மெனப்படும்.
முன்கண்ட வாதனைபற்றித் தோற்றுவதாகிய நினைவுணர்வு இவ்விடத்துக் கண்ட பொருளின்க ணிகழ்வதன்மையின், அதனை ஈண்டெடுத்தோதி விலக்காராயினார். இதனானே காட்சிமுதலிய மூன்றினுஞ் சேறற்குரிய நிருவிகற்பமுதலிய நான்கினிலக்கணங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்
மாண்ட உரைதந்த் ரமந்த்தரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்
பூண்ட அளவைக் கெதிர்புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே.

பொழிப்புரை :

அம்மூன்றனுள், காட்சியளவை வாயிற்காட்சி முதல் நான்கு வகைப்படும் ; கருதலளவை தன்பொருட்டுப் பிறர்பொருட்டென இருவகைப்படும்; உரையளவை தந்திரகலை முதன் மூவகைப்படும். இப்பிரமாணங்களானறியப்படும் பிரமேயங்களதியல்பு சிறப்பியல்பு பொ துவியல்பென இருவகைப்படும்.
இதனானே, காட்சிமுதலிய மூன்றும் படும் பாகுபாடும், அவற்றானளக்கப்படும் பொருள்களின் பாகுபாடும், தொகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

அன்னிய சாதி யும்தன் சாதியும் அகன்று நிற்றல்
தன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்தல்
துன்னிய பொதுஇ யற்கை சொன்னஇவ் விரண்டி னுள்ளே
மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடு மான முற்றால்.

பொழிப்புரை :

சிறப்பியல்பு பொதுவியல்பென்ற இரண்டனுள், ஒரு பொருட்கு வேற்றுச்சாதிப் பொருளினுந் தன்சாதிப் பொருளினுஞ் செல்லாது தனக்கு மாத்திரையேயுரித்தாய் நிலைபெறுந்தன்மை சிறப்பியல்பெனவும், வேற்றுச்சாதிப் பொருண்மாத்திரையிற் செல்லாது தன்சாதிப் பொருட்கெல்லாம் ஒப்பநிலைபெறுந்தன்மை பொது வியல்பெனவுங் கூறப்படும். காட்சிமுதலிய பிரமாணங்களாற் பிரமேயப் பொருள்களை யறியலுறுமிடத்து அவையெல்லாம் இவ்விரண்டியல்பினுளொன்றுபற்றி அறியப்படும்.
எனவே, இவ்விரண்டின் வேறாகிய வேற்றியல்புபற்றி அறியப்படுமாயின், அவ்வறிவு பிராமாணியமன்றாய்ப் போமென்பதாயிற்று. பிரமேயத்தை யறிந்த வறிவே தான் பிராமாணியமென்பதனையு மறியுமெனவும், தான் பிராமாணியமாகாதவழி அவ்வாகாமை மாத்திரையே பிறிதொன்றானறியப் படுமெனவும், இவ்வாறன்றித் தனது பிராமாணியம் பிறிதொன்றானறியப் படுவதேயென்னுந் தார்க்கிகர் முதலியோர் மதம் அடாதெனவுங் கொள்க. இவற்றை வடநூலார் சுதத்துவம் பரதத்துவமென வழங்குப. சாதியாவது ஒரு நிகரனவாகிய பலபொருட்குப் பொதுவாவதோர் தன்மை. இதனானே, மேற்றன்னியல்பு பொதுவியல்பென்றவற்றி னிலக்கணங் கூறப்பட்டது. இச்செய்யுள் சூசிகடாக நயம்பற்றி முன்வைத்தவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

உயிரினோ டுணர்வு வாயில் ஒளியுரு வாதி பற்றிச்
செயிரொடு விகற்ப மின்றித் தெளிவதிந் திரியக் காட்சி
அயர்விலிந் திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து யிர்க்கண்
மயர்வற வந்த ஞானம் மானதக் காண்ட லாமே.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த காட்சி நான்கனுள்ளும், தன்னை நோக்கிநிற்கு மறிவாகிய ஆன்மாவினின்றும் விடயங்களை நோக்கி யோடு மறிவாகிய சிற்சத்தி, கண்முதலிய பொறிகளையும், அவற்றிற்குத் துணையாய் வலிசெய்துடனிற்குந் தேயுமுதலிய பூதங்களையும், அப்பூதங்களுக்கு முதற்காரணமாய் அவற்றைவிட்டு நீங்குதலின்றி உடனாய உருவமுதலிய தன்மாத்திரைகளையும் அதிட்டித்துக் கொண்டு, ஐயவிபரீதக் குற்றங்களும் பெயர்சாதி முதலிய விகற்பமுமின்றி, உருவமுதலிய வைம்புலன்களை நிருவிகற்பமாயறியுமறிவு வாயிற்காட்சி யெனப்படும்; அங்ஙனமைம்புலன்களை இயைந்தறிந்த பின்னர் மீள மறத்தலின்றிச் சித்தத்தாற் சிந்திக்கப்பட்டு நிலைபெறுவதாகிய அவ்வாயிற்காட்சியறிவு, பெயர்சாதி முதலியவற்றான் விபரீதமாதலின்றி நிச்சயமாய்ப் புத்திதத்துவத்தின்கண் வருதலானாகிய சவிகற்பவுணர்வாய் உயிரினோடுணர்வு தெரிவது மானதக்காட்சி யெனப்படும்.
ஐம்புலன் சார்ந்தயர்வி லிந்திரிய ஞானமென மாறுக. இன் ஐந்தாமுருபு. ஓடுணர்வு வினைத்தொகை. ஒளி ஆகுபெயர். ஆதி யென்பதனை ஒளியோடுங் கூட்டுக. சார்ந்தபினென்பது சார்ந்தெனத் திரிந்து காரியத்தின்மேனின்றது. உயிர்க்குப் பற்றுக் கோடாகிய புத்தியை உயிரென்றுபசரித்தார். வந்தஞானமென்னும் பெயரெச்சம் ஆறுசென்ற வெயரென்றாற் போல நின்றது. மனத்தின்றொழிற்பாடு முன்னாக நிகழ்தலின் மானதக்காட்சி யெனப்பட்டது. அதிகாரமுறைமையென்னுமுத்தியான் உயிரினோடுணர்வு தெரிவதென்பதனை அளவையதிகாரமுழுதினு முய்த்துரைக்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

அருந்தின்பத் துன்பம் உள்ளத் தறிவினுக் கராக மாதி
தரும்தன்வே தனையாங் காட்சி சமாதியான் மலங்கள் வாட்டிப்
பொருந்திய தேச கால இயல்பகல் பொருள்க ளெல்லாம்
இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே.

பொழிப்புரை :

அம்மானதக்காட்சி விசேடம்பற்றி மேம்பட்டு நிகழுஞ் சத்துவகுண முதலியவற்றின் விளக்கமாகிய இன்பதுன்பங்கள் புருடனதறிவிற்கு விடயமாம்படி அராகமுதலியவைந்து தத்துவங்களானும் புணர்க்கப்படுமதனை உயிரினோ டுணர்வு தெரிவது தன்வேதனைக் காட்சியெனப்படும்; இவ்வாறன்றி அறிவைத் தடை செய்து நின்ற மலசத்திகளை இயமநியம முதலிய அட்டாங்க யோக சமாதியான் ஒருவாறு கெடுத்து ஓரிடத்தொருகாலத் திருந்தாங்கிருந்து மூவிடத்து முக்காலத்துப் பொருள்களையுங் காண்கின்ற காட்சியாய் உயிரினோடுணர்வு தெரிவது யோகக்காட்சியெனப்படும்.
இவையிரண்டு செய்யுளானும் மேலெடுத்துக்கொண்ட நால்வகைக் காட்சிகளதியல்பு கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

பக்க மூன்றின் மூன்றேது வுடைய பொருளைப் பார்த்துணரத்
தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்டாம் அனுமானம்
தொக்க இவற்றாற் பிறர்தெளியச் சொல்ல லாகும் அச்சொல்லும்
மிக்க வந்நு வயத்தினொடு வெதிரே கச்சொல் லெனஇரண்டாம்.

பொழிப்புரை :

இயல்பு முதலிய மூன்றனுள் ஓரேதுவுடைய சாத்தியத்தைப் பக்கமுதலிய மூன்றின் வைத்து அவிநாபாவம் பற்றி ஆராய்தற்குரிய ஞானமாய் உயிரினோடுணர்வு தெரிவது தன்பொருட்டனுமானமாம்; அவ்வேதுக்களானே தானறிந்ததனைப் பிறரறியப் போதித்தலை உயிரினோடுணர்வு தெரிவது பிறர்பொருட்டனுமானமாம். அங்ஙனம் பிறரறியப் போதிக்குஞ் சொல்லும் உடம்பாடு மறையென்று இருவகைப்படும்.
இதனானே மேலெடுத்துக்கொண்ட இருவகையனுமானங்கள தியல்பு கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

மூன்று பக்கம் பக்கம்நிகர் பக்கம் நிகரில் பக்கமெனத்
தோன்றும் பக்கந் துணிபொருளுக் கிடமாம் உவமை நிகர்பக்கம்
ஆன்ற பொருள்சென் றடையாத விடமா நிகரில் பக்கமுதல்
என்ற இரண்டும் பொருளுண்மைக் கிடமாம் ஒன்று பொருளின்றாம்.

பொழிப்புரை :

பக்கம் மூன்றாவன: பக்கஞ் சபக்கம் விபக்கமென்பனவாம். அவற்றுள், ஐயுற்றுக் துணியற்பாலதாய பொருளிருக்குமிடம் பக்கமெனப்படும்; அதற்கெடுத்துக் காட்டப்படுவதாய்த் துணியப்பட்ட பொருளிருக்குமிடம் சபக்கமெனப்படும்; அப்பொருளில்லாதவிடம் விபக்கமெனப்படும். இம்மூன்றனுட் பக்கஞ் சபக்க மிரண்டும் பொருளுண்டென அறிதற்கிடமாம்; விபக்கம் அஃதில்லை யென்றறிதற்கிடமாம்.
துணிபொருள் எதிர்காலவினைத்தொகை. அவினாபாவமறிதற்கண் ஐயமறுத்தற்பொருட்டுச் சபக்கம் விபக்கமிரண்டும் வேண்டப்படு மென்பார், முதலேன்ற விரண்டும் பொருளுண்மைக் கிடமா மொன்று பொருளின்றாமெனவுங் கூறினார். இதனாலே மேற்பக்க மூன்றென்றவற்றின் பெயருமியல்புங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை
ஓதி னியல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம்புகைதன்
ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தியது
சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடிலே.

பொழிப்புரை :

மேலெடுத்துக்கொண்ட மூன்றேதுவாவன இயல்புங் காரியமும் அநுபலத்தியுமாம். அவற்றுள், மா முதலிய சொற்கள் மரமுதலிய பொருளையுணர்த்துதற்கண் வேறு காரணமின்றி அச் சொற்களினியல்பானுளதாகிய ஆற்றல் சகசவேதுவெனப்படும்; புகை முதலிய காரியங்கள் நெருப்புமுதலிய தத்தங் காரணங்களை யுணர்த்துதற்கண் அவை காரிய ஏதுவெனப்படும்; குளிரில்லாமை முதலிய காரியாபாவங்கள் பனியில்லாமை முதலிய காரணாபாவங்களை உணர்த்துதற்கண்ணும் பனியில்லாமை முதலிய காரணாபாவங்கள் குளிர்வாராமை முதலிய காரியாபாவங்களை யுணர்த்துதற்கண்ணும், அவை அநுபலத்தி ஏதுவெனப்படும்.
இங்ஙனம் உணர்ச்சி மூவகைப்படுதலின் ஏதுவும் மூவகைப்பட்டன.காரிய ஏதுக்கூறவே, ஒற்றுமைபற்றிக் காரண ஏதுவுங் கொள்ளப்படும். அஃதாவது, இடித்து மின்னி இருண்டெழுந்த மேகம் மழைபெய்தலைக் காட்டுதல் போல்வது. சீதமின்மை பனியின்மை காட்டலென்பது திரிகடுகம் -7 ``வாளைமீனுள்ளறலைப்படல்” என்றாற் போல நின்றது. போலும் அசை. இதனானே ஏது மூன்றென்றவற்றின் பெயரும் இயல்புங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

புகையால் அனலுண் டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம்
வகையாம் அனலி லாவிடத்துப் புகையின் றாகும் மலரினொடு
முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொல்இவை
தொகையார் உறுப்பைந் தொடுங்கூடச் சொல்லு வாரு முளர்துணிந்தே.

பொழிப்புரை :

மேலெடுத்துக்கொண்ட சொல்லிரண்டனுள், புகை யுள்ளவிடத் தனலுண்டென உடம்பாடுபற்றி அட்டிலை உவமை கூறுஞ்சொல் அந்நுவயச் சொல்லாம்; நெருப்பில்லாதவிடத்துப் புகையில்லையென மறுதலைபற்றித் தாமரையோடையை உவமை கூறுஞ் சொல் வெதிரேகச் சொல்லாம். இவ்விருவகைச் சொற்களையும் மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் உபநயமும் நிகமனமுமென்னும் ஐவகையுறுப்புக்களான் இணங்கவைத்துத் தெளியக் கூறுவாருமுளர். அவ்வாறு சொல்லுவர் தார்க்கிகர் முதலியோர். இதனானே சொல்லிரண்டென்றவற்றின் இயல்பு கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

போது நாற்றத் தால்அறிதல் பூர்வக் காட்சி அனுமானம்
ஓது முறையா லறிவின்அள வுணர்தல் கருதல் அனுமானம்
நீதி யான்முற் கண்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி
ஆதி யாக வரும்பயனென் றறிதல் உரையால் அனுமானம்.

பொழிப்புரை :

நாற்றமுதலிய ஏதுபற்றிப் போது முதலிய காட்சிப் புலனாதற்குரியபொருளை உயிரினோடுணர்வு தெரிவ தெல்லாம் பூருவக் காட்சியனுமானமெனப்படும். உரை முதலிய ஏதுபற்றி அறிவினளவு முதலிய கருத்துப் புலனாதற்குரிய பொருள்களைத் தன் குறிப்போடு சார்த்தி உயிரினோடுணர்வு தெரிவதெல்லாம் கருதலனுமான மெனப்படும். இவ்விரண்டினும் வேறாய் இதமகிதங்கண் முன்னர் அச்செயலானா லிங்குமவைசெயின் மேலைக்காகும் என்றாற்போல, வேதாகமங்களுட் சொல்லியது கொண்டு சொல்லாத பொருளையும் ஒப்புமைபற்றி யூகித்துத் துணிவதாய் உயிரினோடுணர்வு தெரிவ தெல்லாம் உரையனுமான மெனப்படும்.
ஆகமத்துட் கூறும் பதி முதலிய பொருள்களை அவ்வாகமத்திற் கியைபுடைய அனுமானத்தின் வைத்தறிவதூஉம் உரையனுமான மெனப்படும் என்பாருமுளர். இதனானே அவையிற்றின்மேலுமறைவர் எனப்பட்ட அளவைகள் காட்சியனுமானத்தோடொப்ப வைத்து அனுமானத்துளடக்கிக் காட்டப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

அநாதியே அமல னாய அறிவன்நூல் ஆக மந்தான்
பின்ஆதிமா றின்றிப் பேணல் தந்திர மந்தி ரங்கள்
மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகும்
தனாதிஈ றிலாதான் தன்மை யுணர்த்துதல் உபதே சந்தான்.

பொழிப்புரை :

அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வன் அருளிச்செய்த வேதாகமங்கள் கருமகாண்டம் உபாசனாகாண்டம் ஞானகாண்டமென மூவகைப்படும். அவற்றள், கருமகாண்டம்பற்றிப் பின்னொடு முன் மாறுகோளின்றி அனுட்டித்தலை உயிரினொடுணர்வு தெரிவது தந்திர வுரையளவை யெனப்படும் ; உபாசனாகாண்டாம் பற்றி மனாதிகளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மையை உயிரினோடுணர்வு தெரிவது மந்திரவுரையளவை யெனப்படும் ; ஞானகாண்டம்பற்றித் தனக்கு முதலு முடிவுமில்லாத இறைவன் தன்னின் வேறல்லாத எண்குணமுடையனாதல் தன்னின் வேறாகிய பசுபாசங்களை யுடையனாதல் முதலிய தன்மைகளைத் தானுணருமாறும் பிறர்க்குணர்த்துமாறும் உயிரினோடுணர்வு தெரிவது உபதேச உரையளவையெனப்படும். வேதமும் ஆகமமெனப்படுமென்பது சீகண்ட பாடியம். 2. 2. 38 சீகண்டபாடியத்துள்ளுங் காண்க. ஆத்தவாக்கிய மென்ப துணர்த்துதற்கு அநாதியே அமலனாய் அறிவனென்றார். அறிவனூலென்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. இவ்வாறன்றி, பதிபசுபாசங்களுக்குப் பிரமாணமும் இலக்கணமும் பின்முன் மாறுகோளின்றிப் பாதுகாத்துக்கூறும் ஆகமவாக்கியங்களைத் தெரிவது தந்திரவுரை யெனவும், மனாதிகளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யெனப்படுஞ் சாதனமாகிய வேண்டுஞ்செய்தி முறைமைகளைக் கூறும் ஆகமவாக்கியங்களைத் தெரிவது மந்திரவுரையெனவும், தனாதியீறிலாதான் தன்மை யுணர்த்துதலெனப்படும் நிட்டையினியல்பு கூறும் ஆகமவாக்கியங்களைத் தெரிவது உபதேசவுரை யெனவும், இவ்வாறு ஞானகாண்ட மொன்றனையே மூவகைப்படுத் துரைப்பாருமுளர். அவர்க்கு மற்றை உபாசனாகாண்டமுங் கன்மகாண்டமும் பிரமாணத்துளகப்படாமை யறிக. இனித் தார்க்கிகர் முதலியோர் குடம் படம் முதலிய உலகச் சொற்கள்பற்றி அவ்வப்பொருள்களை யுணர்தலும் உரையளவை யென்பர். அவை, காட்சியனுமானங்களின் அடங்கிடாப் பொருளைக் காட்டுவனவன்மையின், மா மரத்தைக் காட்டல் போலும் இயல்பேதுபற்றி யறிவதாகிய அனுமான விசேடமாவனவன்றி உரையளவையாதற் கேலாமையறிக. சொல்லானறிந்தேன் என்றனுபவ நிகழ்தலின் அது வேறளவையாவதன்றி அனுமானத்துள் அடங்காதென்பார்க்கு, குளிரின்மை பனியின்மை முதலியன அநுபலத்தியால் அறிந்தேனென்று அநுபவ நிகழ்தலின், இன்னோரன்னவற்றை வேறு பிரமாண மென்னாது காட்சி முதலியவற்றுள் அடக்குதல் பொருந்தாதாய் முடியுமென்றொழிக. இதனானே உரையளவை மூன்றென்றவற்றதியல்பு கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றாய்
வேண்டும் எழுமூன் றாகும்விளங் குவமைப் போலி யீரொன்பான்
காண்டுந் தோல்வித் தானம்இரண் டிருபத் திரண்டாம் கருதிலிவை
யாண்டு மொழிவர் அவையெல்லாம் அளக்கில் அறுபத் தைந்தாகும்.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த அனுமான சாமக்கிரியைகளுள் துணி பொருட்கிடனாதலாகிய பக்கலக்கணத்திற் குறைபாடுடைத்தாயும் ஒருபுடையொத்துப் பக்கம்போலத் தோன்றுவதாகிய பக்கப்போலி, துணியும்பொருட்கு இடனாகாததூஉம், துணியும் பொருட்கொரு மருங்கு இடனாகாததூஉம், துணிந்தபொருட்கு இடனாவதூஉம், துணிந்தபொருட் கொருமருங்கு இடனாவதூஉமென நான்கு வகைப்படும். சாத்தியப் பொருளோடு வியாத்தியுடைத்தாய்ப் பக்கத்திலிருத்தலாகிய ஏதுவிலக்கணத்திற் குறைபாடுடைத்தாயும் ஒருபுடையொத்து ஏதுப்போலத் தோன்றுடுவதாகிய ஏதுப்போலி, துணியப்படாததூஉம் மறுதலைக்கட்படுவதூஉம் ஒருதலைப்படாத தூஉமென மூவகைப்பட்டு, விரியான் இருபத்தொன்றாம். அவையாவன :- சார்பில்லதூஉம் சார்புண்மை யறியப்படாததூஉமெனச் சார்புபற்றிய குற்றமிரண்டும், சொரூபமில்லதூஉம் சொரூப முண்மை யறியப்படாததூஉம் சொரூபத்தின் விசேடணமில்லதூஉம் விசேடணமுண்மை யறியப்படாததூஉம் விசேடியமில்லாததூஉம் விசேடியமுண்மை யறியப்படாததூஉம் ஒருமருங்கில்லதூஉம் ஒருமருங் குண்மையறியப் படாததூஉம் பரனுக் குடம்பாடில்லதூஉமெனச் சொரூபம் பற்றிய குற்றமொன்பதும், சாத்தியத்தோடு வியாத்தியுண்மை யறியப்படாததூஉம் செயற்கைபற்றி வியாத்தி யுடையதூஉமென வியாத்திபற்றிய குற்றமிரண்டும் ஆகிய பக்கவிருத்தி துணியப்படாத ஏதுப்போலியின் விரி பதின்மூன்றும், மறுதலைப்பொருள் சாதிப்பதூஉம் மறுதலைப்பொருள் சாதிப்பதாய்ப் பிறிதோரேதுவை உடன்கொண்டு வருவதூஉம் காட்சியளவையான் மறுக்கப்பட்டுக் கொண்டுவருவதூஉம் கருத்தளவையான் மறுக்கப்பட்டுக் கொண்டுவருவதூஉம் உரையளவையான் மறுக்கப்பட்டுக் கொண்டு வருவதூஉமென மறுதலைத்தலையுடைய ஏதுப்போலி விரியைந்தும், பக்க சபக்க மாத்திரையினன்றி விபக்கத்துஞ் சேறலுடையதூஉம் சபக்கத்திற் சேறலின்றிப் பக்க மாத்திரையினுள்ளதூஉம் சபக்க விபக்கங்கள் கிடைக்கப் பெறாததூஉமென ஒருதலைப்படாத ஏதுப்போலி விரி மூன்றுமாம். இனி வியாத்தி நிச்சயித்தற் கிடனாதலாகிய உவமையிலக்கண மின்றியும் உவமைபோலத் தோன்றுவதாகிய உவமைப்போலி, அந்நுவயம் பற்றியும் வெதிரேகம்பற்றியும் இருவகைப்பட்டு, விரியானொரோ வொன்றொன்பதாய்ப் பதினெட்டு வகைப்படும். அவையாவன :- சாத்திய முடைத்தாகாததூஉம் சாத்தியமுடைமை நிச்சயிக்கப்படாததூஉம் ஏதுவுடைத்தாகாததூஉம் ஏதுவுடைமை நிச்சயிக்கப்படததூஉம் இரண்டுமுடைத்தாகாததூஉம் இரண்டுமுடைமை நிச்சயிக்கப்படாததூஉம் சொரூபமில்லதூஉம் சொரூபமுண்மை பரனுக்குடம்பா டாகாததூஉம் செயற்கையானாகிய வியாத்தியுடையதூஉமென அந்நுவய வுவமைப்போலி விரி ஒன்பதும், சாத்தியமின்மை யுடைத்தாகாததூஉம் சாத்திய மின்மையுடைத் தென்பது நிச்சயிக்கப்படாததூஉம் ஏதுவின்மை யுடைத்தாகாததூஉம் ஏதுவின்மையுடைத் தென்பது நிச்சயிக்கப்படாததூஉம் இரண்டின்மையும் உடைத்தாகாததூஉம் இரண்டின்மையும் உடைத்தென்பது நிச்சயிக்கப்படாததூஉம் சொரூபமில்லதூஉம் சொரூபமுண்மை பரனுக்குடம்பாடாகாததூஉம் வெதிரேக வியாத்தி செயற்கையானுடையதூஉமென வெதிரேகவுவமைப் போலி விரி யொன்பதுமாம். இனித் தருக்கவாதத்தின்கட்பேசத் தெரியாமையாகிய தோல்வித்தானம், மயங்கப்பேசுதலும் வாளாவிருத்தலுமென் றிருவகைப்பட்டு, விரியான் இருபத்திரண்டாம் ; அவையாவன :- தானெடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதிக்க மாட்டாமல் அதற்குக் கேடுவரப் பேசுதலும், பிறிதொரு மேற்கோளைக் கூறுதலும், மேற்கோளுக்கு மறுதலைப்படப் பேசுதலும், மேற்கோளை விட்டுவிடுதலும், தான்கூறிய ஏதுவுக்குக் குற்றம் வந்துழி வேறோராற்றான் ஏதுக் கூறுதலும், தனக்கு வருந் தோல்வியைப் பிறிதொன்று பேசி மறைத்தலும், பயனொடுபடாதன பேசுதலும், பொருள் இனிது விளங்காத சொற்களை யெடுத்துக்கொண்டு பேசுதலும், அவாய்நிலை தகுதி யண்மை யில்லனவாய்ப் பேசுதலும், மேற்கோண் முதலிய வைந்தினையும் முறை பிறழப் பேசுதலும், அவற்றுட் சில குறையப் பேசுதலும், ஒன்றற்குப் பல கூறுதலும், சொல்லை இரட்டித்துச் சொல்லுதலும், பொருளை யிரட்டித்துச் சொல்லுதலும், பிறன்கூறிய பொருளை அநுவதிக்க மாட்டாமையும், பிறன்கூறிய பொருளையறிந்தும் அறியான்போன்று வினாதலும், விடைசொல்லத் தெரியாது வேறொரு கருத்துடையன் போன்றிருத்தலும், வாதத்தை விட்டுப் பிறிதொன்றனைச் சொல்லிப் பொழுது போக்கலும், சுபக்கத்துக்குச் சொல்லிய குற்றத்தைப் பரிகரியாதுடம்பட்டுப் பரபக்கத்துக்குக் குற்றம் பேசுதலும், தோல்வித்தான மெய்தியோனைத் தோல்வித்தான மெய்தினா யென்றறிந்து கூறாதிருத்தலும், தோல்வித்தான மெய்தாதானை எய்தினாய் என்று கூறுதலும், தன் சித்தாந்தத்திற் கிணங்காதவற்றைச் சொல்லிச் சித்தாந்தஞ் சாதித்தலுமென இவை. இங்ஙனம் நான்கும் இருபத்தொன்றும் பதினெட்டும் இருபத்திரண்டுமாகிய அறுபத்தைந்தும் அனுமான அளவைக்குக் குற்றங்களாம். இவை குற்றமாகலின் ஆகம அளவைக்கு முன்னாக வையாது இறுதிக்கண் வைத்தார். இவற்றிற்குதாரணம் உய்த்துணர்ந்து கொள்க. ஈண்டு விரிப்பிற் பெருகும். இன்னும் இப்பக்க ஏது வுவமைகளை எடுத்துச் சொல்லும்வழிப் படுஞ் சொற்குற்றங்களெல்லாந் தோல்வித் தானத்துளடங்கும். ஈண்டுக்கூறும் பக்கப்போலி உவமைப் போலிகளெல்லாம் ஏதுப்போலியுள் அடங்குமெனத் தார்க்கிகர் கூறுவர். பக்கவுவமைகளின் இலக்கணத்தை நோக்கிக் காணும்வழி, அவை பக்கப்போலி யுவமைப்போலி யெனப்படுவனவன்றி ஏதுப்போலி யெனப்படாமையறிக. இதனானே அனுமானப் பிரயோகத்தின்கட்படுங் குற்றங்கள் இவையென்பது தெரித்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

ஒருவனோ டொருத்தி ஒன்றென் றுரைத்திடும் உலக மெல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே
தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி
மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.

பொழிப்புரை :

அவன் அவள் அது என்னும் அவயவப் பகுப்புடைய பிரபஞ்சந் தோன்றுதற்குரிய சற்காரிய முறையாற்றோன்றி நின்று அழிதலுடைமையால், அது தன்னைத் தோற்றுவிப்பானொரு வினை முதலை அவாய் நிற்கும் ; ஆகலான், அவ்வுலகம் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற சங்கார காரணனே அஃதொடுங்கிய பின்னும் அநாதி முத்த சித்துருவாய் நிலைபெற்று நின்று அநாதிபெத்த சித்துருவின் பொருட்டு மீளவும் அவ்வுலகத்தை முன் போல மருவுவிக்கும் ; அதனால் அவனே யுலகிற்கு முதற் கடவுள்.
``கொள்ளப்படாது மறப்பதறிவிலென் கூற்றுக்களே” என்பதனுட் கொள்ளப்படா தென்பது போல, போவதென்னும் ஒருமை அத்தொழின்மேல் நின்றது. உம்மை இறந்தது தழீஇயிற்று. ஒருவனையென்னு மிரண்டாவதும் தானேயென்னும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தாற் றொக்கன. ஈறு ஆகுபெயர். உம்மை சிறப்பு. ஆகி என்பது பெயர். மருவுவித்தல் முன்போலவே தோன்றச் செய்தல். + ``குடிபொன்றிக் - குற்றமு மாங்கே தரும்” என்றாற் போல விவ்விகுதி விகாரத்தாற் றொக்கது. முழுவதும் ஒடுங்கியபின் முதல்வன் எவ்வாறு நிற்பனென்னுங் கடாவை விடுத்தற்கு அநாதிமுத்த சித்துருவாய் மன்னிநின்று என்றார். ஆக்கச் சொல் வருவித்துரைக்க. அநாதி முத்த சித்துருவென இனம்பற்றியடையடுத்தலின், அநாதி பெத்த சித்துருவும் உண்டென்பதூஉம் மீளவும் மருவுவித்தல் அதன்பொருட் டென்பதூஉம் பெற்றாம். 1``மலத்துளதாம்” என்றார் முதனூலாசிரியரும். ஒருவனோ டொருத்தியொன்றென் றுரைத்தலாகிய அடைமொழி, வந்துநின்று போதலாகிய ஏதுவைச் சாதிக்குங் குறிப்பேதுவாய் நின்றது. இது மூன்றெழுவாயும் மூன்று பயனிலையும் உடைத்தாய் முதனூன் முதற் சூத்திரம்போல முக்கூற்றதாமாறு காண்க. இனி அம்மூன்றனுள் முதற் கூற்றை இருபத்தேழு செய்யுளான் வலியுறுத்துவான் தொடங்கினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

உதிப்பதும் ஈறுமுண்டென் றுரைப் பதிங் கென்னைமுன்னோர்
மதித்துல கநாதி யாக மன்னிய தென்ப ரென்னின்
இதற்கியான் அனுமா னாதி யெடேனிப்பூ தாதி யெல்லாம்
விதிப்படி தோற்றி மாயக் காணலான் மேதி னிக்கே.

பொழிப்புரை :

உலோகாயத நூலுணர்ந்தோர் காட்சியளவைக் கெய்தாதன பிரமாணமாகாவென மதித்து உலகம் நித்தமென் பாராகலான், நிலைத்தொழி லொன்றேயன்றி ஏனையிரண்டு திருக்கோவையார் - 87 + திருக்குறள் - 171 1. சிவஞான போதம் - சூத். 1 தொழில்கள துண்மை பெறப்படாதெனின்,- ஈண்டு நீ விதித்த விதியாகிய நிலைத் தொழில் போhலவே ஏனையிரண்டு தொழிலும் உடன்நிகழக் காண்டலான், இதனைச் சாதித்தற்கு நீ கொண்ட காட்சியளவையொன்றே அமையுமாகலின், ஈண்டு வேறு பிரமாணங்களெடுத்துக் காட்டல் வேண்டாம்.
படி உவமவுருபு. ``தோற்றமுமீறு முள்ளதன்பாலே கிடத்தலின்” என்றார் முதனூலாசிரியரும். மேதினிக்கென்பது உருபுமயக்கம். இதனானே உலோகாயதன் மதம்பற்றி நிகழும் ஆசங்கையைப் பரிகரித்து முத்தொழிலுண்மை சாதிக்கப்பட்டது. பரபக்கத்துட் சித்தாந்தப்பார்வையாற் பரபக்கத்தாரை மறுத்தார்; ஈண்டுப் பரபக்கப் பார்வையால் அவர் கூறும் மறுப்பைப் பரிகரித்துச் சித்தாந்தத்தை நாட்டுகின்றார். இவை தம்முள் வேற்றுமையாகலிற் கூறியது கூறலன்மை யுணர்க. வேதாந்தநூ லிரண்டாமத்தியாயத்துள் இரண்டாம் பாதத்தினும் முதற்பாதத்தினுங் கூறியனவு மிவ்வாறே கொள்ளப்படும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடின் இயல்பி னுக்குச்
செயலதின் றியல்பு செய்தி செய்தியேல் இயல்ப தின்றாம்
இயல்பதாம் பூதந் தானே இயற்றிடுஞ் செய்தி யென்னில்
செயல்செய்வான் ஒருவன் வேண்டுஞ் செயற்படும் அசேத னத்தால்.

பொழிப்புரை :

அத்தோற்றக்கேடுகள் உலகிற்கியல்பாகலின் அவற்றிற்கு வினைமுதல் வேண்டப்படுவதன்றெனில்,- தோன்றலுங் கெடுதலும் விகாரமாகலின் விகாரமாதலியல்பிற்குக் கூடாது. அங்ஙனம் விகார மாதலே உலகிற்கியல்பெனின்,- அவ்வாறியம்புவார்க்கு விகாரத்தின் வேறாய் இயல்பென்பதொன்றில்லை யெனப்படும்; படவே தோற்றி மாய்கை இயல்பென்பது விட்டுப்போய்த் தோல்வித்தானமாய் முடியும். இனி இயல்பும் விகாரமும் வேறெனவே கொண்டு, பூதநான்கும் இயல்பாயுள்ளன, அவை தோற்றிமாய்தலாகிய விகாரத்தைச் செய்யுமெனின்,- நன்று சொன்னாய் ; அவை அங்ஙனந் தொழிலுற்று நிற்குஞ் செயப்படுபொருளாகலிற் செயப்படு பொருட்கு வினைமுதல் வேறு வேண்டப்படும்.
படுமென்பது செய்யுமென்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம். அசேதனமென்பது செயப்படுபொருளென்னுந் துணையாய் நின்றது. சாத்தன் தன்னைக் குத்தினானென்புழியும், குத்தியது கையுங் குத்தப்பட்டது பிறிதோர் உறுப்புமாகலின், வினைமுதலுஞ் செயப்படு பொருளுமொன்றாதல் யாண்டும் இன்மையுணர்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 4

நிலம்புனல் அனல்கால் காண நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும்
பலந்தரு மொருவ னிங்குப் பண்ணிட வேண்டா வென்னின்
இலங்கிய தோற்ற நிற்றல் ஈறிவை இசைத லாலே
நலங்கிளர் தோற்ற நாசம் தனக்கிலா நாதன் வேண்டும்.

பொழிப்புரை :

நான்கு பூதங்களுள், வாயு ஏனை மூன்று பூதங்களையும் நிலைபெறுத்தித் தான் அவற்றது சமுகத்தினிலைபெறும் ; அங்கி ஏனை மூன்று பூதங்களையு மழித்துத் தான் அவற்றது சமுகத்தினழி வெய்தும்; அப்பு ஏனை மூன்று பூதங்களையுந் தோற்றித் தான் அவற்றது சமுகத்திற்றோன்றும்; பிருதிவி ஏனை மூன்று பூதங்களினின்று நுகரப்படும் பயனைப் பயப்பித்துத் தானும் அவற்றது சமுகத்திற் பயன்படுதலை யுடைத்தாம். இங்ஙனஞ் செயப்படுபொருட்கு வினை முதல் வேறாய் நின்று காரிய நிகழ்த்துதல் கண்கூடாக நிகழ்தலின் இவையே தம்முள் ஒன்றனையொன்று பண்ணவமையும், வேறொருவன் ஈண்டைக்கு வினைமுதலாதன் மிகையாமெனின்,- அற்றன்று; இந்நான்கு பூதங்களுமொப்ப முத்தொழிற்படுதலான் இவை ஒன்றனைக் காரியப்படுத்துமாற்றல் உடையனவன்மையின், இவைபோல முத்தொழிற்படுதலின்றி மேம்பாடுடையானொருவனே இவற்றைத் தொழிற்படுத்தற்பொருட்டு வேண்டப்படும்.
எதிர்நிரனிறையாக வைத்துரைக்க. இவ்வாறன்றி மேலைச் செய்யுளின் பொருளே பொருளாகக்கொண்டு, கூறியது கூறலென்னும் வழுப்பட வுரைப்பாருமுளர். நலங்கிளர் நாதனென இயையும். நலம் - மேம்பாடு.
இவையிரண்டு செய்யுளானும், உலகம் முத்தொழி லுடைத் தென்பதனை யுடம்பட்டுத் தருபவனொருவன் வேண்டாவென்னும் உலோகாயதரிலொருசாரார் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரிக்கப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 5

சார்பினில் தோன்று மெல்லாம் தருபவன் இல்லை யென்னில்
தேரின்இல் லதற்கோ தோற்றம் உள்ளதற் கோநீ செப்பாய்
ஒரின்இல் லதுவுந் தோன்றா துள்ளதேல் உதிக்க வேண்டா
சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே.

பொழிப்புரை :

கணபங்கமாகிய எல்லாப் பொருள்களுள்ளும் முற்கணத்திற்றோன்றிய பொருள் பிற்கணத்திற்றோன்றும் பொருட்குச் சார்பாய் மேம்படுதலின், எல்லாப்பொருளும் வித்தின்கேட்டின் அங்குரம்போல அவ்வச்சார்பிலே தோன்றுமெனச் சவுத்திராந்திகர் முதலியோர் மதம்பற்றிக் கூறவமையும், இதற்கொரு கருத்தாத் தோற்றநாசமின்மைபற்றி மேம்பாடுடையனாயுளனாதல் வேண்டா வெனின்,- அற்றன்று ;நீ சார்பில்தோற்றங் கூறியது இல்பொருட்கோ உள்பொருட்கோ? இல்பொருட்காயின் அது முயற்கோடுபோல ஒரு ஞான்றுந் தோன்றுமாறில்லை. அற்றேற் குடம் போல உள்பொருட்குந் தோற்றம் வேண்டாமையின் மாத்தியமிகர் மதம்பற்றி இல்லதுமன்றி யுள்ளதுமன்றி அநிர்வசனமாய் நிற்பதொரு பொருள் தோன்றுமெனக் கோடும்.
இல்லதுவும் என்னும் உம்மை சிறப்பு. உடம்படுமெய் பெறுதல் இலேசாற் கொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 6

உள்ளது மிலது மின்றி நின்றதொன் றுளதே லுண்டாம்
இல்லதே லில்லை யாகும் தோற்றமும் இசையா தாகும்
உள்ளகா ரணத்தி லுண்டாம் காரிய முதிக்கும் மண்ணில்
இல்லதாம் படங்க டாதி எழில்தரு மியற்று வானால்.

பொழிப்புரை :

அங்ஙனம் அநிர்வசனமாய்க் கூறப்படும் பொருள்தானொன்று உண்டோ இல்லையோவெனக் கடாயினார்க்கு, உண்டெனில் உள்பொருளேயாம் இன்றெனி லில்பொருளேயாமெனப்பட்டு அநிர்வசனமென்றது போலியாயொழியும்; அல்லதூஉம் அநிர்வசனப் பொருள் சூனியமாகலின் அதற்குத் தோற்றமுங் கூடாது; இவ்வாறு சவுத்திராந்திகர் முதலியோர் கூறும் இல்பொருட்கும் மாத்தியமிகர் முதலியோர் கூறும் அநிர்வசனப் பொருட்குந் தோற்றங் கூடாமையின், பாரிசேடவளவையாற் காரணங் காரியமிரண்டும் உள்பொருளேயாய்க் காரணத்தினின்றுங் காரியம் ஒரு கருத்தாவால் வெளிப்பட்டுத் தோன்றுமென்பது, குயவனாவான் திகிரிமுதலிய துணைக்காரணங்களை மண்ணாகிய முதற்காரணத்தின்கண் உய்ப்ப, அதனினின்றும் ஆடைமுதலிய காரியந் தோன்றாது குடஞ் சால் கரகமுதலிய காரியமே வெளிப்பட்டுத் தோன்றுதலின், அவ்வெதிர் மறை முகத்தானும் உடம்பாட்டு முகத்தானும் அறியப்படும்.
உள்ளது மிலதுமின்றி நின்றதொன் றுளதே லென்றது அநுவாதஞ் செய்துகொண்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 7

ஒருபொரு ளொருவ னின்றி உளதில தாகு மென்னில்
தருபொரு ளுண்டே லின்றாம் தன்மையின் றின்றே லுண்டாய்
வருதலின் றிலது கார்ய முதலுள தாகு மென்னில்
கருதுகா ரியமு முண்டாய்த் தோற்றமுங் கருத்தா வாலாம்.

பொழிப்புரை :

அற்றேல், அவையிரண்டும் ஏலாமையிற் காரியப்படுவ தோர் பொருள் உண்டுமாய் இல்லையுமாய் நிற்கும் ஈரியல்புடைய தாகலின், இதற்கொரு கருத்தா வேண்டப்படுவானல்லனெனச் சமணர்மதம்பற்றிக் கோடுமெனின்,- அற்றன்று; உண்டும் இல்லையுமாமென மாறுபட்ட இரண்டு தன்மை ஒருபொருட் கிசைதல் கூடாது. இனிக் காரணரூபமாயுண்டு காரிய ரூபமாயில்லை யென்பதே உண்டும் இல்லையு மென்றற்குப் பொருளெனின்,- நன்று சொன்னாய் ; காரண காரியங்கட்குத் தம்முள் வேற்றுமை யின்மையிற் காரணம் உள்பொருளாகவே காரியமும் அதன்கட் சூக்கும ரூபமாயுள்ளதாய் அது பின்னர்த் தூலரூபமாய் விளங்கித் தோன்றுதல் ஒரு வினைமுதலா னாமென்பது தானே போதரும்.
இன்னுமிச் சற்காரிய வாதத்தின்கட்படுங் கடாவிடைகளெல்லாம் ``தந்து முதல்காரகம்” என்னும் ஞானாமிர்த முதலியவற்றுட் காண்க.
இவை மூன்று செய்யுளானும், முறையே இல்லது தோன்று மென்னுஞ் சவுத்திராந்திகர் முதலியோர் மதமும், இல்லது முள்ளதுமல்லது தோன்றுமென்னும் மாத்தியமிகர் முதலியோர் மதமும், இல்லது முள்ளதுமாயது தோன்றுமென்னுஞ் சமணர் மதமும்பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து, வருமுறை யென்பதனாற் பெறப்பட்ட சற்காரியவாதத்தை வலியுறுத்தி, தருபவனொருவன் வேண்டுமென்பது சாதிக்கப்பட்டது. இதுகாறும் வந்துநின்று போவதென்றதூஉம், வருமுறை யென்றதுஉம், தருபவனொருவன் வேண்டுமென்றதூஉம், வைதிகப்புறத்தார் மதத்தான் இகந்துபடாமைக் காத்தார்; இனி வைதிகத்துட்பட்ட மீமாஞ்சகர் தார்க்கிகர் சாங்கியர் மதத்தான் முறையே அவை யிகந்துபடாமற் காக்கின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 8

காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம் உலகிற் காணா
நீஇத்தை உரைத்த வாறிங் கென்னெனில் நிகழ்ந்து முண்மை
மாயத்த உலகம் பூநீர் தீவளி வான மாதி
யாயித்தா னொன்றி னொன்று தோன்றிநின் றழித லாலே.

பொழிப்புரை :

காயமும் உலகு மென்னும் இருகூற்றப் பிரபஞ்சத்துள், ஆண் பெண் அலியென மேற்கூறிய அவயவப் பகுப்புக் காயத்திற்கேயன்றி ஏனையுலகத்திற் கின்மையால், அவயவப் பகுப்புடைமைபற்றித் துணியப்படுந் தோற்றக் கேடுகளுங் காயத்திற்கே யன்றி உலகிற்கில்லை யென்பது துணியப்படுவதாயிருக்கத் தோற்றக் கேடுகள் இரண்டற்கும் ஒப்பக் கூறுதல் அமையாதென்று நீ சொல்லில்,- ஞானாமிர்தம் - ³ 22 அற்றன்று; இவ்வாறுனக்கு மயக்கத்தைச் செய்வதாகிய வுலகமும் நிரவயவமாகலின்றி, நில நீர் தீ வளி வான மென்றற் றொடக்கத்துப் பகுப்புடைத்தாகிய இதனான், அவ்வுண்மையே நீ கூறும் இருகூற்றுப் பிரபஞ்சத்து ளொன்றாகிய வுலகமும் ஏனைக் காயம்போலத் தோன்றிநின்றழிதலை உணர்த்தும்.
ஆயவென்னும் பெயரெச்சத்துளகரமும், இதனானென்பதனுள் அன்சாரியையும், விகாரத்தாற்றொக்கன ; ``பெற்றத்தாற் பெற்ற பயன்” என்றாற்போல. ஆயிற்றானென்று பாடம் ஒதுவாருமுளர். ஒன்றினென்னும் இன் உவமவுருபு. + ``ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வாயின் - மெய்யுருபு தொகாவிறுதியான” என்பதோத்தாகலின், இரண்டாவது இறுதிக்கட்டொக்கது. ஆல் அசை. ஒன்றினொன்று தோன்றி நின்றழிதலால் என்பதற்கு வான முதலிய ஐந்தும் முறையே ஒன்றினொன்று தோன்றி நின்றழியு மென்னுஞ் சுருதி உனக்குப் பிரமாணமாதலாலென் றுரைப்பாருமுளர். வேதத்துள் விதிவாக்கியம் ஒழித்து ஒழிந்தன வெல்லாம் புனைந்துரை வகையானன்றிப் பிரமாண மாகாவெனக் கொண்ட மீ மாஞ்சக மதத்தார்க்கு அவ்வுபநிடதச்சுருதி பிரமாணமன்றென்பது அவரறிந்திலர். அல்லதூஉம் ஈண்டுக் கூறுவன வெல்லாம் பொருந்துமாறு பற்றி யன்றி ஆகமவளவை பற்றி யன்மையானும் அவ்வுரை போலியாதலறிக.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 9

ஓரிடம் அழியப் பின்னும் ஓரிடம் நிற்கும் ஒக்கப்
பாரிடம் அழிவ தின்றாம் என்றிடிற் பயில்வித் தெல்லாம்
காரிட மதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில்
சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்.

பொழிப்புரை :

நிலம் மலை கடல் முதலிய வடிவிற்றாகிய வுலகமுங் காயம்போல அவயவப் பகுப்புடைமையான் அதுபோலத் தோன்றி நின்றழிதல் பெறப்படுமென்ற தொக்கும்; அங்ஙனமாயினும், திருக்குறள் -524 +தொல்காப்பியம் - சொல் - வேற்றுமை மயங்கியல் -22 பார்த்தறியப்படும் உலகமெல்லாம் ஒருங்கேயழியுமெனின், உலகம் அநாதியென்னுஞ் சுருதியொடு முரணுதலானும், மீளத் தோன்றுதற் கோரியைபின்றாய் முடியுமாகலானும் அவ்வாறன்றி உலகத்தினொரு பக்கம் அழியினும் ஒரு பக்கம் நிற்குமென்றலே பொருத்தமுடைத் தெனின்,- அற்றன்று; தம்முளொரு சாதிப் பலபொருளாகிய வித்து முதலிய சடங்கள் ஒவ்வொரு காலவிசேடத்தின் ஒருங்கே தோன்றுதலும் ஒருங்கே யழிதலுங் கண்டாமாகலின் அவ்வியல்பிற்றாகிய வுலகமும் அவ்வக்காலம் வந்துழி, அவ்வாறு முழுவது மொருங்கே தோன்றி ஒருங்கே யழியும்.
பாரிடம் வினைத் தொகை. சீர் உவமவுருபு, அச்சீரென்றாற் போல.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 10

காலமே கடவு ளாகக் கண்டனம் தொழிலுக் கென்னில்
காலமோ அறிவின் றாகும் ஆயினுங் காரி யங்கள்
காலமே தரவே காண்டும் காரணன் விதியி னுக்குக்
காலமுங் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண்.

பொழிப்புரை :

காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து சேறலான் அத்தோற்றக் கேடுகட்குக் காலமே கருத்தாவாய் முடியுமெனின்,- அஃதொக்கும்; அங்ஙனமாயினும் அது சடமாகலாற் கருத்தாவாகாது சேதனனாகிய கருத்தாவினது ஏவலான் அவன் செய்யும் அத்தொழிற்குத் துணைக்காரணமாம் என்றறிவாயாக.
இது சொற்பொருட் பின்வருநிலை. ஓகாரஞ் சிறப்பின்கண் வந்தது. காலமேதரவேயென்னும் ஏகாரமிரண்டினுள், முன்னையது பிரிநிலைக் கண்ணும், பின்னையது தேற்றத்தின்கண்ணும் வந்தன.
இவை மூன்று செய்யுளானும் மீமாஞ்சகர் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து, வந்து நின்று போவது சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 11

அழிந்தபின் அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று
கழிந்திடுங் கன்மத் தென்னில் கன்மமும் அணுவுங் கூட
மொழிந்திடுஞ் சடமே யாகி மொழிதலான் முடியா செய்தி
ஒழிந்திடும் அணுரூ பங்கள் உலகெலா மொடுங்கு மன்றே.

பொழிப்புரை :

உலகம் அழிந்தபின்னர் மீளப் பரமாணுக்கள் தாமே கன்மமேதுவாகப் பிரபஞ்சமாய்த் தோன்றிநின்றழியும் கன்மங் காலங்கள்போல் இறைவனிச்சையும் ஒரு காரணமாம் அத்தனையே பிறிதில்லையெனின், அற்றன்று ; கன்மமும் அணுவுஞ் சடமேயாகலான், அவை தம்முட்கூடித் தொழிற்படுதல் சித்தாகிய முதல்வன் தொழிலையின்றி அமையாது. அதுவன்றியும், உலகம் ஒடுங்கும் போது அணுவுங் கூடவே யொடுங்குமாதலால், அது பின் அகிலமாய் வந்து கழியுமாறு யாண்டையது.
இவ்வணுகாரணவாதஞ் சவுத்திராந்திகர் வைபாடிகர் ஆசீவகர்க்கும் ஒக்குமேனுந் தலைமைபற்றித் தார்க்கிகர்மேல் வைத்து மறுத்தவாறு.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 12

காரண அணுக்கள் கெட்டாற் காரிய உலகின் றென்னில்
காரண மாயை யாகக் காரியங் காண லாகும்
காரண மாயை யென்னை காண்பதிங் கணுவே யென்னில்
காரண மாயை யேகாண் காரியம் அணுவிற் கண்டால்.

பொழிப்புரை :

சத்திரூப சமுகமாய் நிலைபேறுடைய மாயையே உலகிற்கு முதற்காரணமாதலால் அணுக்கள் அழிந்தமைபற்றி உலகுமீளக் காரியப்படுதற்கோரிழுக்கில்லையெனவும், அணுக்கள் காரியப் பொருளாகலால் அவை யுலகிற்கு முதற்காரணமாதல் செல்லா தெனவும் உணர்க.
இது சொற்பொருட்பின்வருநிலை. காண்டலால் என்பது கண்டெனத் திரிந்தது. ``மயலாகு மற்றும் பெயர்த்து” என்றாற்போல. ஆல் அசை.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 13

காரிய மென்ப தென்னை காரண அணுவை யென்னில்
காரியம் அவய வத்தாற் கண்டனங் கடாதி போலக்
காரிய உருவ மெல்லாம் அழிதருங் கார ணத்தால்
காரிய உறுப்பின் மாயை தருமெனக் கருதி டாயே.

பொழிப்புரை :

அணு காரியப்பொருளாய் அழிதன்மாலைத் தென்பதூஉம் மாயை காரியப்பொருளாதலின்றி நிலைபேறுடைய தென்பதூஉம், முறையே அவயவமுடைமையானும் அஃதின்மையானும் அறியப்படும்.
இதுவுஞ் சொற்பொருட்பின்வருநிலை. அணுக்களுக்கு அவயவ முண்டென்பது சையோகப்படுதலாற் பெறப்படும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 14

தோற்றமும் நிலையு மீறும் மாயையின் தொழில தென்றே
சாற்றிடு முலகம் வித்துச் சாகாதி அணுக்க ளாக
ஏற்றதே லீண்டு நிற்கும் இல்லதே லியைவ தின்றாம்
மாற்றநீ மறந்தா யித்தால் மாயையை மதித்தி டாயே.

பொழிப்புரை :

மாயைதருமென்றதற்கு, மாயையே பிரகிருதியென்றறிக என்னும் வேதமொழியும், வித்துச் சாகாதி முதலியவற்றின் வைத்து உடம்பாட்டானும் எதிர்மறையானும் வழங்குகின்ற உலக மொழியும் சான்றாதலின், இதனானும் அணுகாரண வாதத்தை விட்டு மாயையே காரணம் என்பதனை அறிவாயாக.
பிரமாணங் கூறி வலியுறுத்தியவாறு வேதத்தின் தொழில் அதனையுணர்ந்தார் மேலேற்றிக் கூறப்பட்டது. ஏனையவற்றைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இத்தால் என்புழி விகாரத்தாற்றொக்கவும்மை, காரியவுறுப்பின்மை மாத்திரையே யன்றியென இறந்ததுதழீஇயிற்று.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 15

மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும்
நீயதிங் கில்லை யென்னில் நிகழ்த்திடு முயலிற் கோடு
போய்உகும் இலை களெல்லாம் மரங்களிற் புக்குப் போதின்
ஆயிடும் அதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே.

பொழிப்புரை :

அதுவன்றியுஞ் சற்காரிய காரணங்கொள்ளாது இல்லது உற்பத்தியாம் என்பார்க்கு முயலின் கண்ணுங் கோடுளதாதல் வேண்டும்; அற்றேல் உள்ள பிரபஞ்சமே மாயையின் ஒடுங்கி மீளத்தோன்றுமென்பார்க்கும், அவ்வாறே மரத்தினின்று உதிர்ந்த இலை தானே மரத்தின் ஒடுங்கி மீளத் தோன்றுதல் வேண்டுமெனின்,- அஃதொக்கும்; அங்ஙனம் உதிர்ந்த இலைகள் சத்திரூபகாரணமாய் நிலைபேறுடைமையின் அது மீளத் தோன்றுதற்குரிய பிற காரணங்களேல்லாம் அதனோடொருங்கு கூடியிவழி அவ்வாறே தோன்றும், அல்லுழித் தோன்றாதாகலின் அதுபற்றிக் கடாவென்னை?
தருக்கங் கூறி வலியுறுத்தியவாறு. பிரபஞ்சம் வஞ்சமெனக் குறைந்து நின்றது. பி ற காரணங்களாவன: கன்மங் காலம் முதலாயின. கிடத்தல் முதற்காரணத்தோடு ஒருங்கியைதல். கிடக்கவாமென்பது மழைபெய்யக் குளநிறையுமென்றாற்போல நின்றது. அதுவே தோன்றுதற்குரிய காரணவியைபு இல்வழியும் மரத்தின்கண் அதுபோல மற்றுஞ் சத்திகள் பலவுளவாகலின், இயைபுடைய வேறுவே றிலைகள் தோன்றதற் கிழுக்கின்மையும் உணர்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 16

கருதுகா ரணமுண் டாகக் காரிய முள்ள தாகி
வருதலால் அநாதி வைய மற்றொரு கடவு ளித்தைத்
தருதலால் ஆதி யாகச் சாற்றலு மாகு மாயைக்
கொருவனா ரென்னிங் கென்னின் உள்ளவா றுரைப்பக் கேள்நீ.

பொழிப்புரை :

அற்றேல் இங்ஙனஞ் சற்காரியவாதங் கூறுவார்க்கு உலகம் அழிபொருளென்றல் பொருந்தததாய் முடியுமெனின், அற்றன்று; காரணங்காரியமிரண்டும் உள்பொருளேயென்பது மேற் கூறிய வாற்றான் இனிது விளங்குதலிற் காரியப்பிரபஞ்சமும் நித்தப் பொருளேயாம். ஒரு கருத்தாவால் ஒரு காலத்து விளங்குதலும் ஒரு காலத்து மறைதலுமாகிய அவத்தை வேறுபாடுபற்றி அழிபொருளென்றுஞ் சாற்றப்படும். அவ்வவத்தை வேறுபாடு கருதாதவழி உம்மையால் நித்தப்பொருள் என்பதே துணிபு.
‘மாயைக் கொருவனா ரென்னிங்கென்னின் உள்ளவாறுரைப் பக்கேள் நீ’ என்பதொழித்து, “அழிந்தபின் அணுக்கள் தாமே’ என்பது முதல் இவையாறு செய்யுளானுந் தார்க்கிகர் மதம் பற்றி யாசங்கித்துப் பரிகரித்து, வருமுறையென்பதனாற் பெறப்பட்ட சற்காரிய வாதத்தின் இயல்பு வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 17

புத்திமற் காரி யத்தால் பூதாதி புருடன் தானும்
அத்தனு கரணம் பெற்றால் அறிதலால் அவற்றை மாயை
உய்த்திடும் அதனான் மாயைக் குணர்வொன்று மில்லை யென்றே
வைத்திடு மதனால் எல்லாம் வருவிப்பா னொருவன் வேண்டும்.

பொழிப்புரை :

ஈண்டுக் கூறியவற்றுள் ஏனையவெல்லாம் ஒக்கும், மற்றொரு கடவுளித்தைத் தருதலாலென்றது பொருந்தாது; மாயையே தன் காரியத்தைத் தரும்; இதற்கொரு கரத்தா எற்றுக்கெனின்,- அறியாது கூறினாய்; குடங் குயவனாற் செய்யபடுங் காரியமானாற் போலப் பூத முதலிய பிரபஞ்சமெல்லாம் ஒரு சேதனப் பொருளாற் செய்யப்படுங் காரியமேயாகலானும், புருடன் சேதனப் பொருளாயினும் அவன் அப்பூதாதியானாகிய தனுகரணாதிகளைப் பெற்றாலன்றியறிய மாட்டாமையானும், மாயை அவற்றிற்கு முதற்காரணமாகலின் அது சேதனப் பொருளாதல் செல்லாமையானும், பாரிசேட அளவையான் இவ்வனைத்தினும் வேறாய் மாயையினின்றும் பூத முதலிய பிரபஞ்சம் எல்லாவற்றையுந் தோற்றுவிப்பான் ஒரு கடவுள் வேண்டப்படுவன்.
புத்திமற் காரியமென்பது வடசொன்முடிபு. ஆண்டுத் தொக்கு நின்ற ஆறனுருபு காரகப் பொருண்மையின் வந்தது. புத்திமான் சேதனன் என்பன ஒரு பொருட் கிளவி. ஒன்றுமென்பது சிறிதுமென்னும் பொருள்பட நின்றது. ஏகாரந் தேற்றம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 18

காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணுமவன்முதல் துணைநி மித்தம்
தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம்.

பொழிப்புரை :

அல்லதூஉம், ஒருகாரிய நிகழ்ச்சிக்கு முதல் துணை நிமித்தம் என்னுங் காரணமூன்றந் தம்முளொன்றையின்றி யமையாவென்பதூஉம் மூன்றுந் தம்முள் வேறாதலுங் குடமுதலிய காரியத்திற் காட்சிப்புலனா யறியப்படுதலானும், பிரபஞ்ச காரியத்திற்கும் அவ்வாறே முதற்காரணந் துணைக்காரணங்களின் வேறாய் நிமித்த காரணமும் ஒருதலையான் வேண்டப்படும்.
காரியகாரணங்களென்னும் ஆறாம் வேற்றமைத்தொகை வடநூன் முடிபு. ‘மாயைக் கொருவனா ரென்னிங்கென்னி னுள்ளவாறுரைப்பக் கேள்நீ’ என்பதுளப்பட இவையிரண்டு செய்யுளானும் சாங்கியர் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து, தருபவன் ஒருவன் வேண்டுமென்பது வலியுறத்தப்பட்டது.
இங்ஙனம் ‘உதிப்பது மீறும்’ என்பது முதல் இத்துணையும், உலோகயதர் புத்தர் சமணரெனும் வைதிகப் புறத்தார் மதம் பற்றியும், மீமாஞ்கசர் தார்க்கிகர் சாங்கியரென்னும் வைதிகத்துட்பட்ட முத்திறத்தார் மதம் பற்றியும் ஐய நிகழாமல் ‘வருமுறை வந்து நின்று போவதுமாதலாலே தருபவனொருவன் வேண்டும்’ என்ற முக்கூற்றுப் பொருளையுங் காத்துக்கொண்டு, இனி, அக்காரண காரியங்கள் தருபவனொருவனால் தரப்படுமாறும் அவற்றதியல்பும் யாங்ஙனமென்பார்க்கு, ‘ஆரியன் குலாலனாய் நின்றாக்கு’ மாறு ஒன்பது செய்யுளால் தொகுத்துணர்த்துகின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 19

விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம்
வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை
முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம்
தந்திடுஞ் சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே.

பொழிப்புரை :

சுத்தஞ் சுத்தாசுத்தம் அசுத்தமெனக் காரியப்பிரபஞ்சம் முத்திறப்படுதலின், அவற்றிற்கு முதற்காரணங்களுந் தம்முள் வேறாதல் பெற்றாம். அவற்றுள், மலகன்மங்களோடு விரவாது முதற்காரணமாய் நிற்பது சுத்தமாயையென்றும், அஃது ஏனை இரண்டனையும் வியாபித்து மேலாய் நிற்ப அவ்விந்துவின் கீழாயடங்கி மலகன்களோடு விரவி முதற்காரணமாவது அசுத்தமாயையென்றும், அவ்வசுத்த மாயையது தூலபரிணாமமாய்த் தோன்றுவது பிரகிருதி மாயையென்றும் கூறப்படும். அம்மூன்றனுள், சுத்தமாயையினின்றுஞ் சங்கார முறைபற்றி வைகரிமுதல் வைத்தெண்ணப்படும் நாலுவாக்குந்தோன்றும்; அசுத்தமாயையினின்றுஞ் சங்கார முறைபற்றி அராகமுதல் வைத்தெண்ணப்படும் காரணதத்துவம் ஐந்துந் தோன்றும்; பிரகிருதி மாயையியினின்றுஞ் சிருட்டி முறைபற்றிக் குணதத்துவமுதல் வைத்தெண்ணப்படும் போக்கிய தத்துவம் இருபத்து நாலுந் தோன்றும். இங்ஙனஞ் சடரூபமான விந்து மோகினி மான் மூன்றுந் தத்தங் காரியங்களைச் சிவசத்தி சங்கற்ப ரூபசந்நிதியினின்றுந் தோற்றுவிக்கும்.
‘விந்துவின் மாயையாகி’ என்புழிக் கீழென்னும் பொருள்பட வந்த கண்ணுருபு விரித்துரைக்க. இன் சாரியை. அதோமாயை என்றதும் இப்பொருள்பற்றியென்க. இஃதறியாதார் விந்துவைப் போல மாயையாகியென உவமையுருபாகக் கொண்டுரைப்பாரும் விந்துவினின்று மாயை தோன்றியென நீக்கப்பொருட்டாகக் கொண்டுரைப்பபாருமாயினார். இரத்தினத்திரயமென்னும் வட நூலின் அவ்விரண்டனையும் பிறர் கருத்தாக வைத்தோதுதலின் அவை பொருந்தாமையறிக. அநந்தர் சீகண்டர் செய்யுந் தொழிலுஞ் சிவ சந்நிதியை யின்றியமையாவென்னுங் கருத்தான் மூன்றற்குஞ் சிவ சந்நிதியே கூறினார். அவன், பகுதிப் பொருள் விகுதி. இதனானே முதற்காரண மூன்றாமாறும், அவை தத்தங் காரியங்களைத் தோற்றுவிக்குமாறும், அது முதல்வனை யின்றியமையாதவாறுந் தொகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 20

வைகரி செவியில் கேட்ப தாய்அத்த வசன மாகி
மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம்
பொய்யற அடைவு டைத்தாய்ப் புந்திகா ரணம தாகி,
ஐயமில் பிராண வாயு அடைந்தெழுந் தடைவு டைத்தாம்.

பொழிப்புரை :

மேற்கூறிய வைகரியாதி நான்கனுள், வைகரியாவது தன் செவிக்கும் பிறர் செவிக்குங் கேட்கப்பட்டு நினைந்த பொருளைச் சொல்லுஞ் சொல்லாய்ச் சொல்வானுக்குங் கேட்பானுக்குஞ் சவிகற்ப வுணர்வுண்டாதற்கு ஏதுவாதலும், உதானனென்னுங் காற்றான் உந்தப்பட்டு மத்திமைத்தானத்துச் சூக்கும ரூபமாய்ப் பிரிந்து தோன்றிய அக்கரங்கள் அகங்காரத்தாற் செலுத்தப்படும் பிராண னென்னுங்காற்றான் உந்தப்பட்டெழுந்து புறத்தே யடைதல் உடைத்தாதலும் ஆகிய இரண்டும் இலக்கணமாக உடைத்து.
‘மெய்தரும் உதானவாயு மேவிட விளைந்த வன்னம்’ என்றது அனுவாதம். விளைதல் உருவெவையுந் தெரித்தல், மெய் உடம்பு. பொய் விபரீதம். ஐயமில் பிராணவாயு - மனத்தின் தொழிற்பாடாகிய ஐயமின்றாதற்கேதுவாய் அகங்காரத்தாற் செலுத்தப்படும் பிராணவாயுவென ஏதுப்பெயர் கொண்ட குறிப்பு வினைத்தொகை. எழுந்து பொய்யற அடைவுடைத்தாயென மேலே கூட்டுக. அடைவு பின்னையது இலக்கணம். ஈண்டுப் புந்தியென்றது ஏற்புழிக்கோடலாற் பிறர்க்குரிய சவிகற்ப உணர்வின்மேற்றாயிற்று.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 21

உள்ளுணர் ஓசை யாகிச் செவியினில் உறுதல் செய்யா(து)
ஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடைய தன்றித்
தெள்ளிய அக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி
மெள்ளவே எழுவ தாகும் மத்திமை வேற தாயே.

பொழிப்புரை :

செவியிற் கேட்கப்படாததாயும் மெல்லோசையாய்க் கண்டத்திலே விளங்குதல் உண்மையாற் சொல்லுவான்றன்னுள்ளே யுணருஞ் சவிகற்ப வுணர்வுக்கேதுவாய் உள்ளே யுணரப்படும் ஓசையாதலும், பிராணவாயுவின் தொழிற்பாடின்றி உதான வாயுவின் தொழிற்பாடு மாத்திரையே ஆண்டுண்மையிற் சூக்கும ரூபமாய் அக்கரங்கள் பிரிந்து தோன்றினும், பல்லிதழ் நாவண்ணங்களிற் பட்டுச் சிதறிப்போதல் இன்மையுமாகிய அவ்விரண்டிலக்கணத்தானும் முறையே பைசந்திக்கும் வைகரிக்கும் வேறாயறியப் படுவது மத்திமை வாக்கு.
இரட்டுற மொழிதலான் உணரோசையென்னும் வினைத் தொகையின் ஓசையென்பது எதுப்பெயராயுஞ் செயப்படுபொருட் பெயராயும் நின்றது. தெள்ளுதல், ஈண்டு வடிவு விளக்குதல். அது விரண்டும் பகுதிப்பொருள் விகுதி. உயிரிற் * “சேர்ந்துவரு மவை மருவும் உருஎவையுந் தெரித்து முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளுணர்வா யோசை முழங்கியிடு மத்திமை’’ என்றார் புடைநூலாசிரியரும். உயிரிற்சேர்ந்து வருமவை யென்றது முன்னர்க் கூறப்படும் வைகரியை.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 22

வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித்
தோற்றுதல் அடைவொ டுக்கிச் சொயம்பிர காச மாகிச்
சாற்றிடு மயிலி னண்டம் தரித்திடும் சலமே போன்றங்(கு)
ஆற்றவே உடைய தாகிப் பைசந்தி அமர்ந்து நிற்கும்.

பொழிப்புரை :

பைசந்தி வாக்காவது, மேல் விளங்கித் தோன்றுவனவாகிய பஞ்சவன்னங்களையுஞ் சூக்குமரூபமாய் அடைவுபடவொடுக்கி நிற்கும் மயில் முட்டையின் நீர்போலப் பலவகைப்பட்ட எழுத்துக்கண் மத்திமைத்தானத்துப் பிரிவுபட விளங்கித்தோன்று முறைமையினை அடக்கி மிகவுஞ் சூக்கும ரூபமாய்க் கொண்டு சிந்தையின்கண் நிற்றலும் நிருவிகற்ப உணர்விற்கு எதுவாதலுமாகிய இரண்டும் இலக்கணமாக உடைத்து.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 23

சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி
ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால்
நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டையத்தாய்ப்
போக்கோடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம்.

பொழிப்புரை :

பரசரீரத்தினுள்ளாக நாதமாத்திரையாய் விளங்குதலும் ஞானமாத்திரைக் கேதுவாதலுமாகிய இலக்கணத்தையுடையது சூக்கும வாக்கு. அதுதான், பைசந்தி மத்திமை வைகரியாய் விருத்திப் படுவதாகிய தன்னதிகார மாத்திரைக்கே யழிவுண்டாக, தான் சுத்த மாயாரூபமாய்க் கேடின்றி நிலைபெறுவதாம். தவவிசேடத்தால் அதனை உள்ளபடி காணப்பெறுவார்க்குச் சுத்தமாயா புவனத்தின் கண்ணதாகிய அபரமுத்திப் பெரும்போக முண்டாம்.
ஆய் இன்றி ஆக்கிடுமெனவும், கண்டால் உடைத்தாய் இன்றாமெனவும் வேறுவேறு வினைமுடிபு செய்க. அழிவினை வினைத்தொகை. புருடனென்பது * “காலமுலகம்’’ என்னுஞ் சூத்திர விதியால் அஃறிணைச் சொல்லாயிற்று. சுத்தமாயா புவனத்தின் கண்ணதாகிய அபரமுத்திப் பெரும் போகத்தின் இயல்பிதுவென அதன் பெருமை கூறுவார் , ‘நீக்கமில் அறிவானந்த முதன்மை நித்தியமுடைந்தாய்ப் போக்கோடு வரவிளைப்பும் விகாரமும் புருடனின்றாம்’’ என்றார். தானழிவதின்றித் தன்னதிகாரமாத்திரைக்கு அழிவினைச் செய்யுமெனவே, அது சிவதத்துவம்போலச் சுத்தமாயையின் வேறன்மை பெற்றாம். தன்னை உள்ளபடி காண்டலாவது, அதிசூக்கும வாக்கினை வியஞ்சக வோசைபற்றித் தூலமாய்க் காணும் நம்மனோர் போலன்றி, நம்மனோர்க்குக் குடம்பட முதலியன காட்சிப் புலனாமாறு போலத் தன்னியல்பான் இனிது விளங்கக் காண்டல். கண்டாலெனவே அங்ஙனங் காண்டல் அரிதென்பது பெற்றாம். இவ்வாறின்றி + “ஓவிடவிந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேற் சேயுயர் கொடியி னான்றன் சேவடி சேரலா’’ மென்பதே ஈண்டைக்கும் பொருளாகக் கொண்டு, கண்டலாக்கிடுமெனக் கூட்டித் தமக்கு வேண்டியவாறே உரைப்பாருமுளர். அவர், அழிவதின்றி அழிவினையாக்கிடுமென்னுந் தொடர் அவ்வாறு பொருள்படுதற் கேலாமையும், கூறியது கூறலாதலும், உண்மையதிகாரத்திற் கூறப்படும் பரமுத்தி இலக்கணம் ஈண்டு வகுத்துக் கூறுதற்கோர் இயைபின்மையும் நோக்கிலர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 24

நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாகச் செயல்பரி ணாம மன்று
புகழ்ந்திடும் விருத்தி யாகும் படங்குடி லானாற் போல
மகிழ்ந்திடும் பிரம மன்று மாமாயை என்பர் நல்லோர்.

பொழிப்புரை :

இங்ஙனம் கூறிப் போந்த வைகரி முதலிய நான்கு வாக்குகளும் நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகள்பற்றுக்கோடாகச் சார்ந்து ஐவகைப்பட்டுச் சிவதத்துவ முதலிய பஞ்சத்தத்துவங்களினிருக்கும். இவை சுத்தமாயையினின்றும் விருத்தியாய்க் காரியப்படுவனவன்றி அசுத்தமாயாகாரியம்போலப் பரிணாமமாய்க் காரியப்படுவனவல்ல. இவ்வாக்குகளைச் சத்தப் பிரமவாதிகள் பிரமமென்பர், சைவசித்தாந்திகள் பிரமமாதலின்றிப் பிரமத்திற்கு நேரே பரிக்கிரகசத்தியெனப்படுஞ் சுத்தமாயா ரூபமாமென்று கூறுவர்.
காரியப்பாட்டிற்கு எள்ளானாய குப்பைபோலப் புத்தர் சமணர் கூறுஞ் சமுதாயவாதமும், நூலானாகிய ஆடைபோலத் தார்க்கிகர் கூறும் ஆரம்பவாதமும், பேய்த் தேரானாய நீர்த்தோற்றம் போல மாயா வாதிகள் கூறும் விவர்த்தன வாதமுஞ் சித்தாந்தத்திற் கேலாமையின், அவற்றை யொழித்து, சித்தாந்தத்திற் கொள்ளப்படும் பரிணாமம் விருத்தியென்னும் இரண்டினுள் இச்செயல் யாதோ என்னும் ஐயநீக்குதற்பொருட்டுப் பரிணாமமன்று விருத்தியாகுமென்றும், அற்றேற் பிரமம்போலும் என்னுங் கடாவை யாசங்கித்துப் பிரமமன்று, மாமாயையாமென்றுங் கூறினார். அன்றியென்னும் வினையெச்சத்து இகரம் உகரமாய்த் திரிந்தது. ஆகு மென்றது பின்னருஞ் சென்றியையும். பரிணாமம் விருத்தியென்னும் இரண்டனுள், மலகன்மங்களோடு விரவாத சுத்தமாயையின் காரியம் படங்குடிலானாற் போல விருத்தியெனவே, ஏனைப் பரிணாமம் அவற்றொடு விரவிய அசுத்த மாயையின் காரியத்திற் கென்பதூஉம் பெறப்பட்டது. பாலினுண்டாகிய தயிர் போல முழுவதும் பரிணமித்தலும், நெய்யினுண்டாகிய புழுப்போல ஏகதேசத்திற் பரிணமித்தலுமெனப் பரிணாமம் இருவகைப்படும். அவற்றுட் பின்னையதே அசுத்தமாயிற் கொள்ளப்படுவதூஉமென்க. விருத்தியென்பது சூக்கும பரிணாமமென்ப நிவிர்த்தாதி கலையைப்பற்றித் திகழ்ந்திடுமஞ்சதாக என்பதற்கு, நிவிர்த்தி கலையுட்பட்ட புவனவாசிகட்குத் தூலதமமாயும், பிரதிட்டையுட் பட்ட புவனவாசிகட்குத் தூலதரமாயும், வித்தையுட்பட்ட புவனவாசிகட்குத் தூலமாயும், சாந்தியுட்பட்ட புவனவாசிகட்கு சூக்குமமாயும்சாந்திய தீதகலையுட்பட்ட புவனவாசிகட்குத் சூக்குமதரமாயும் இங்ஙனம் நால்வகைவாக்கும் ஐவகைப்படும் என்றுரைத்தலும் ஒன்று.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 25

வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்றி வர்க்கு
வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்தி ரங்கள்
தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாமெ லாமும்
உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே.

பொழிப்புரை :

சுத்தமாயை முதற்காரணமாவது ஈண்டுக் கூறிப்போந்த வாக்குமாத்திரைக்கேயன்று, மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணுசதாசிவர் முதலிய அபரமுத்தர்க்கு வேண்டப்படுஞ் சுத்தாத்து வாக்கள் எவற்றினுக்கும் முதற் காரணமாம்.
விந்துவை வைந்தவமென்றது பகுதிப்பொருள் விகுதி பெற்றது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 26

மூவகை அணுக்க ளுக்கு முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம்
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே.

பொழிப்புரை :

மேற்கூறிப் போந்த வாக்குகள் சவிகற்ப ஞானத்துக் கேதுவாகலால், ஈண்டுக் கூறியது சுத்தப் பிரபஞ்சம்போல வித்தைகள் வித்தையீசர் சதாசிவர் மாத்திரைக்கேயன்றி, விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சகலர்க்கும் ஒருதலையான் வேண்டப்படும் சவிகற்ப ஞானத்திற்கேதுவாகிய அவ்வாக்குகள் தன்னின் வேறாகக் காணப் பட்டு நீங்க அதற்கு மேலாகிய பேரறிவு ஒருவனுக்கு விளங்குமாயின், அவ னப்பொழுதே பரமுத்தியைத் தலைப்படுவன்.
எனவே, இவ்வாக்குகள் பரமபந்த மென்பதாயிற்று. முறைமையின் மேலாதலாவது, வித்தைகள் வித்தையீசர் முதலியோர் போலன்றிச் சகலர் முதலிய மூவர்க்கும் வியஞ்சக வேறுபாடுபற்றி, முறையே தூலதமமாயுந் தூலதரமாயுந் தூலமாயும் பொருந்துதல். ஞானத்திற் கேதுவாகிய வாக்கை ஞானமென்று உபசரித்தார். பிரளயாகலர் விஞ்ஞானாகலர்க்குத் தனுவில்லையென மயங்கிக் கூறுவாறுமுளர். அஃது ஆகம வசனங்களோடு முரணுதலின் அவசித்தாந்தமென்றொழிக.
இவை ஏழு செய்யுளானுஞ் சுத்தமாயையில் தோன்றுங் காரியங்களும் அவற்றதியல்பும் வகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 27

அருவினில் உருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி
உருவினில் உருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம்
பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்
ஒருவனே யெல்லா மாகி அல்லவா யுடனு மாவன்.

பொழிப்புரை :

சூக்குமமாகிய மாயையினின்றும், தூலமாகிய கலாதியும்,அவற்றினுந் தூலமாகிய மூலப்பகுதியும், அதனினுந் தூலங்களாகிய குணதத்துவ முதலாயினவுந் தோன்றும். அத்தூலங்களின்றுந் தோன்றுங் காரியம்அவற்றினுந் தூலமேயாம். இவ்வாறே காரியப் பிரபஞ்சமெல்லாந் தோன்றி, நிலம், நீர், தீ, வளி, விசும்பு, ஆண், பெண், அலி என்றற்றொடக்கத்து அவயவப் பகுப்புடையனவாய் வளர்ந்தும் தேய்ந்தும் பரிணமித்து வரும். இத்தன்மையவாகிய காரிய காரணங்கட்குத் தம்முட் பெரும்பாலும் வேற்றுமை கூறும் நையாயிகர் முதலியோர் மதம் அடாது. மற்றென்னெனில், பரிணாமமாதலை நோக்கிப் பேதாபேதமாம் ; சற்காரிய மாதலை நோக்கி அபேதமாம். மேற் சிவனவன்றன் சந்நிதி தன்னினின்றே தோன்றுமென்பதானாற் பெறப்பட்ட நிமித்த காரணனாகிய முதல்வன், அநந்தர் சீகண்டர் முகத்தான் அவற்றைக் காரியப்படுத்துங்கால், கலப்பினாலொன்றாயும் பொருண்மையால் வேறாயுஞ் செலுத்துதலான் உடனாயு நிற்பன்.
எல்லாமென்றதனாற் சுத்த மாயா விருத்தியினும் அவ்வாறு நிற்பனெதன்பது பெறுதும், உருவினில் உருவாய்த் தோன்றாதெனப் பிரித்தமையின், ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. ஒருவனேயென்னும் ஏகாரந் தேற்றம். அங்காங்கி பாவமாகிப் பெகிடுஞ் சுருங்குமெனக் கூட்டுக. ‘அநிர்வசனத்தின் உலகந் தோன்று’ மென்னும் மாயாவாதத்தை மறுப்பார், அருவினில் உருவந் தோன்றியென்றும், ‘அவயவமே பொருளாய்த் தோன்றுவதன்றி அவயவி யென்பதொன்றில்லை’ என்னுஞ் சமுதாய வாதத்தை மறுப்பார், அங்காங்கி பாவமாகியென்றும், ‘நிலமுதலிய உருவப் பொருளினின்றுங் கந்தகுண முதலிய அருவந்தோன்று’ மென்னும் ஆரம்ப வாதத்தை மறுப்பார், உருவினில் உருவமாயே உதித்திடுமென்றுங் கூறினார். பெருகிடுஞ் சுருங்குமென்றதும், பெருக்கஞ் சுருக்கம்பற்றி ஒரு பொருட்கே பெரும்பாலும் வேற்றுமை கூறும் அவ்வாதத்தை மறுத்தற் பொருட்டு. பிறவுமன்ன. இதனானே ‘மாயை முந்திடும் அராகமாதி முக்குணமாதி மூலந் தந்திடும்’ (உஎ) என்றதன் கட்படு மியல்பு தொகுத்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 28

அருஉரு ஈனா தாகும் விகாரமும் அவிகா ரத்தின்
வருவது மில்லை என்னின் வான்வளி யாதி பூதம்
தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும்
உருவமின் உருமே றெல்லாம் உதித்திடும் உணர்ந்து கொள்ளே.

பொழிப்புரை :

அருவெனவே அவிகாரமாதலும் பெறப்பட்டமையின், அப்பெற்றித்தாகிய மாயையினின்றும் உருவமாய் விகாரியுமாகிய பிரபஞ்சந்தோன்றுமென்றல் பொருந்தாதெனில்,- அறியாது கூறினாய்; உன் மதத்தில் அருவமும் அவிகாரியுமாகிய ஆகாயத்தினின்றும் உருவமும் விகாரியுமாகிய வாயு முதலிய பூதங்கள் முறையே தோன்றும்; அதுவேயுமன்றி அவ்வாகாயத்தினின்றும் பல முகில்களும், முகிலின்கட் பல விகாரங்களும் பலவோசைகளும் பல மின்களும் பல இடிகளும் இன்னும் அவை போல்வன பலவுந்தோன்றுமாகலான், அதனை மறந்து அங்ஙனங் கூறுதல் உனக்கே வழுவாய் முடியும்.
சற்காரியங்கொண்ட எமக்காயின், அது வழுவன்றென்பது கருத்து. இதனானே மாயாவாதி மதம்பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து மேலது வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு, ‘உதிப்பதும் ஈறும்’ (உஉ) என்பது முதல் ‘அருவுரு’ வென்ப தீறாகிய இருபத்தேழு செய்யுளானும், முதற்செய்யுளின் ‘ஒருவனோ டொருத்தியொன்றென்றுரைத்திடும் உலகமெல்லாம் வருமுறை வந்துநின்று போவது மாதலாலே தருபவன் ஒருவன் வேண்டும்’ (உக) என்ற முதற்கூற்றை, முறையே அவ்வவர் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து வலியுறுத்தி, இனி ஈறுமாகி அநாதிமுத்த சித்துருவாய் மன்னிநின்று மருவு வித்திடுமென்னும் இரண்டாங் கூற்றை அவ்வாறு வலியுறுத்துவான் தொடங்கினார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 29

மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே
எண்ணிய உருவ மெல்லாம் இயற்றுவன் ஈசன் தானும்
கண்ணுகா ரியங்க ளெல்லாம் காரண மதனிற் காண்பன்
பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேள்நீ.

பொழிப்புரை :

இங்ஙனம் அகிலமெல்லாம் ஆரியன் குலாலன்போல் நின்று ஆக்குவனாயின், குலாலன் கடாதி காரியங்களையெல்லாம் அவற்றிற்குக் காரணமாகிய அந்நிலத்தினின்றும் செய்யக் கண்டோமே, ஆரியன் யாங்ஙன நின்று செய்வன்?
‘மண்ணினிற் கடாதியெல்லாம் வருவது குலாலனாலே எண்ணிய உருவமெல்லாம் இயற்றுவன் ஈசன்றானும்’ என்றது அனுவாதம். ஆயினென்பது சொல்லெச்சம். காரணமென்றது நிலமென்னுந் துணையாய் நின்றது. காண்டல் செய்தல். நின்றென்பது மேலும் கூட்டப்பட்டது. இது வினா. இதற்குப் பிறரெல்லாங் கூறியது கூறலென்னும் வழுப்பட உரைத்தார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 30

சீலமோ உலகம் போலத் தெரிப்பரி ததனால் நிற்கும்
கோலமும் அறிவா ரில்லை ஆயினுங் கூறக் கேள்நீ
ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே.

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 31

கற்றநூற் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும்
பெற்றியும் சாக்கி ராதி உயிரினிற் பிறந்தொ டுக்கம்
உற்றதும் போல வெல்லா உலகமும் உதித்தொ டுங்கப்
பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே.

பொழிப்புரை :

கரணங்களானாகிய சாக்கிரமுதலிய அவத்தைகள் ஆன்மாவினொடுங்கித் தோன்றும் வழி ஆன்மாவும் அவத்தைபட்டுத் துடக்குறுதல் போல, முதல்வன் எல்லாவுலகமுந் தன்பாலொடுங்கியுதிப்பத் தானுமதுபற்றி இலயம் போகம் அதிகாரமென்னும் அவத்தைப்பட்டுத் துடக்குறுவோனாகியும், கற்றநூற்பொருளுஞ் சொல்லும் வாதனாரூமாய்ப் புத்தி தத்துவத்தை யொட்டிநின்று ஆன்மபோதத்தின்கண் ஒடுங்கித் தோன்றும்வழி அவ்வான்மபோதம் அதுபற்றித் துடக்குறாதவாறுபோல, ஆண்டுத் துடக்குறுதலின்றியே நின்றனன்.
எதிர் நிரனிறையாகக் கொள்க. ஈண்டுக் கருத்தென்றது உயிருணர்வை. பற்று முதுனிலைத் தொழிற்பெயர். இவை மூன்று செய்யுளானும் மன்னிநின்றே மருவிடுமென்றது தடைவிடைகளால் தெரித்துணர்த்தப்பட்டது. இயைபுபற்றி இதனை முன்வைத்தார்.
இனி ஆறுசெய்யுளான் ஈறுமாகி மருவிடுமென்றதனை வலியுறுத்துகின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 32

உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில்
செயிருறு மலத்தி னாகும் சிதைந்ததே தென்னிற் சித்தத்(து)
அயர்வொழிக் காரி யங்கள் அழியுங்கா ரணங்கி டக்கும்
பயில்தரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்.

பொழிப்புரை :

ஈறாகியோனால் ஈறெய்திய உலகம் ஈறெய்தியவாறே யொழியாது மீளவும் அவன்பால் நின்று தோன்றுதல் எற்றுக்கெனின், - மலபரிபாகம் வரும்பொருட்டுத் தோன்றும். அற்றேல், மீளவுந் தோன்றற்பாலது முன்னழியாது நிலைபெறவேயமையும். அவ்வாறன்றி, அழிதலெற்றுக்கெனில்.- உயிரினிளைப்பு ஒழித்தற் பொருட்டு. முன் இளைப்பினைச் செய்து நின்ற காரியங்கள் அழியுமாகலான், அழிந்தவழியும் முன்னை வினைத்தொடர்ச்சிக்குரியனவாய்த் தத்தங் காரணங்களிற் கன்மத்தோடு பயின்று கிடக்கின்ற அக்காரியங்களை ஒடுங்கியவாறே உதிக்கச் செய்வன்.
‘ஆக்க மவ்வவர் கன்மமெல்லாங் கழித்திடல்’ என முன்னர்க் கூறுவாராகலின், அதற்குரிய இயைபு ஈண்டேயுணர்த்துவார், ‘காரணங் கிடக்கும் பயில்தருகாரியம்பின் பண்டுபோற் பண்ணுமீசன்’ என்றார். உயிரவை உயிரோடுங் கூடிய உலகமென்றவாறு. ஏதென்பது எற்றுக்கென்னும் பொருட்டாய் நின்றது. சித்தத்தயர்வு அறிவின் கண்ணதாகிய இளைப்பு. ஒழியbவுன்னும் வினையெச்சசத்தகரம் விகாரத்தாற்றொக்கது. கிடக்குமென்பது பெயரெச்சம். இதற்குப் பிறரெல்லாஞ் சற்காரியத்தியல்பின்வைத்துக் கூறியது கூறலென்னும் வழுப்படவுரைத்தார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 33

தோற்றுவித் தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
போற்றவே உடைய னீசன் புகுந்தது விகார மென்னில்
சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலருங் காந்தம்
காற்றிடும் கனலை நீரும் கரந்திடும் காசி னிக்கே.

பொழிப்புரை :

ஒரு கடவுள் மூன்று தொழில் இடையறாது செய்வானாயிற் பாரமெய்தி விகாரியாவான்போலும் என்பார்க்கு அஃதில்லையென்பது, தனக்குரிய முத்தொழில் செய்தும் அதுபற்றி விகாரமெய்தாத ஞாயிற்றின் வைத்து அறியப்படும்.
காசினிக்கென்பது, உருபு மயக்கம். இவையிரண்டு செய்யுளானும் புத்த மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து ஈறுமாகி மருவு வித்திடுமாறு வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 34

உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் குலகம் ஓத
வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின்
விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள்
புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ணலாலே.

பொழிப்புரை :

அயன்மாலிருவரும், புண்ணிய விசேடத்தான் முதல்வனுடைய அதிகாரசத்தி அவனதேவலாற் பெற்றுடையரன்றி, அத்தொழிற்குச் சுதந்திரர் அல்லராகலான், முத்தொழிலுஞ் செய்தற்குரிய சுதந்திரம் ஈறுமாகி யொருவனுக்கே யுண்டு.
“நல்வினைக்கண் வாழ்நாளின் மாலா யயனாகி’’ என்றார் புடைநூலாசிரியரும். வேதம் புராணம் இதிகாசம் முதலியவற்றிற்கும் இதுவே கருத்தென்பது சதுர்வேத தாற்பரிய சங்கிரக முதலியவற்றுட் காண்க. வரைந்து வரைத்தென வலித்தது. புரைத்தவென்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தாற் றொக்கது. புரைத்தல் உயர்தல்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 35

இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம்
உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதா னுண்டா காதாம்
அறுதியில் அரனே யெல்லாம் அழித்தலால் அவனா லின்னும்
பெறுதுநாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே.

பொழிப்புரை :

சங்கார காலத்தில் இருவருந் தத்தம் ஆற்றலோடு நிலைபெறுவாராயின் உலகஞ் சங்காரமாதல் இன்மையான், அக்காலத்து அவ்விருவரும் உளரல்லரென்பது பெற்றாம். அல்லதூஉம் சங்காரக் கடவுளெனப்படுவோன் சிலவற்றையொழித்துச் சங்கரிப் பானல்லன்; அப்பெற்றியனாகிய சங்காரக் கடவுளை வேறு சங்கரிப் பாரில்லையாகாலான், முழுவதுஞ் சங்கரித்தவழி அவனொருவனே எஞ்சி நிற்றல் பெறப்படுதலானும், ஒடுங்கிய உலகங்கட்குப் பெரியதோ ராதாரம் அவனேயாகாலும் ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவித்தற்கும் நிறுத்துதற்கும் அவனே உரியனென்பது தானே போதரும்.
அறுதியில் அரனென்னும் பெயரடையானும் ஓரெதுக் கூறியவாறு. இன்னும் மீளவும், ஆதாரம் அதிகரணமென்பன ஒரு பொருட் கிளவி. பேரதிகரணமென விசேடித்தார், முதற்காரணமும் அதிகரணமாதலுண்மையின். இவையிரண்டு செய்யுளானும், பௌராணிகர் மதம்பற்றி நிகழும் கடாவை முறையே ஆகம அளவை பற்றியும் பொருந்துமாறு பற்றியும் பரிகரித்து, மேலது வலியுறுத்தப்பட்டது. இதனானே பாஞ்சராத்திரிமதம் இரணியகருப்ப மதங்களைப் பரிகரித்த வாறுமாயிற்று.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 36

சொன்னஇத் தொழில் களென்ன காhரணந் தோற்ற வென்னின்
முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாம்உ யிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும் சொல்ல லாமே.

பொழிப்புரை :

சங்காரக்கடவுள் இங்ஙனங் கூறிப்போந்த தோற்ற முதலிய தொழில்களைச் செய்தற்குக் காரணம் யாதெனில், * “காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி’’ என்பது முதலிய திருவாக்குக்கள் பற்றி,ஒருசாரார்,அத்தொழிற்குக் காரணம் திருவிளையாடற் கருத்தென்பர்; ஒரு சாரார், + “ ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்’’ என்பது முதலிய திருவாக்குக்கள்பற்றி, விளையாட்டென்றது, ஐங்கலப் பாரஞ்சுமத்தல் சாத்தனுக்கு விளையாட்டென்பதுபோல அத்துணை யெளிதிற் செயப்படுதலை நோக்கியேயாகலின், அக்கருத்தும் உயிர்கட்குப் பெத்தகாலத்துச் சுவர்க்காதி போகமும் பதமுத்திகளும் முத்தி காலத்து வீடுபேறுங் கொடுத்தற் பயந்ததென்பர். அவ்விரண்டுந் தம்முள் முரணாமையான் உயிர்கள்மேற் சென்ற கருணையே ஆண்டைக்குக் காரணம்.
‘மொழிதலும்’ என்னும் உம்மை, எதிரது தழீஇயது; ஏனைய எண்ணும்மை. வழங்கவுமென்னும் உம்மையொடு இயைதற்கேற்பத் துடைப்பதாகவுமென ஆக்கச்சொல் வருவித்துரைக்க. அருளால் என்பதனை மேலுங் கூட்டுக. காரணமென்னையெனக் கடாயினார்க்குப் பயன் கூறிவிடுத்தல் செப்புவழுவாம்போலுமெனின்,- ஆகாது; அருளாலெனவே வழங்கவுந் துடைப்பவும் வைத்த அவ்வருள் காரணமென்பது தாற்பரியமாகலின். அற்றாயினும், அனுக்கிரகம் ஒழித்தொழிந்த தொழில்களெல்லாம் பிறப்பிறப்புக்களிற் படுத்துத் துயருறுத்துவன வாகலின், அவற்றைச் செய்வது அருளாமாறு யாங்ஙனமெனின், அதற்கன்றே வருஞ்செய்யுள் எழுந்ததென்பது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 37

அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானும்
பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம்.

பொழிப்புரை :

ஒடுக்கந் தோற்றம் நிலை மறைப்பு அருளென்னும் ஐந்தும், முறையே இளைப்பாற்றலும், கன்மங் கழியுமுகத்தான் மலபாகம் வரச்செய்தலும், கன்மங் கழியுமாறு அதனை நுகர்வித்தலும், கன்ம வொப்பு வருவித்து மலங்களை முதிர்வித்தலும், பந்தம் விடுவித்தலுமாகிய உறுதிப்பயத்தனவாகலான், ஐந்தொழிலும் அருட்செயலேயாகலின், இவற்றுட் சில மறத் தொழிலே போலுமெனப் பழித்தலை யொழிவாயாக.
மேன் முத்தொழில் கூறி ஈண்டு ஐந்தொழிலென்றல் மலைவாம்; பிறவெனின், - ஆகாது; மறைப்பையும் அருளையும் நிலையிறுதிகளின் அடக்கி ஆண்டு முத்தொழிலென்றார், தம்முள் வேற்றுமையுடைமை பற்றி ஈண்டு ஐந்தொழி லென்றாராகலின்.
இவை இரண்டு செய்யுளானும், சங்காரக் கடவுள் செய்யுந் தொழில் மறமாய் முடியுமென்னும் நாத்திகர் மதமும், வீண்தொழிலென்னும் மாயாவாதிகள் மதமும், தன்பொருட்டென்னும் பரிணாமவாதிகள் மதமும் பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து, மேலது சிறப்பிக்கப்பட்டது. இங்ஙனம் ஆறுசெய்யுளான் ‘ஈறுமாகி மருவிடு’ மென்றதனை வலியுறுத்தி இனி ‘அநாதிமுத்த சித்துரு’வென்றதனை இருபத்திரண்டு செய்யுளான் வலியுறுத்துகின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 38

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.

பொழிப்புரை :

ஐந்தொழில் செய்யும் முதல்வனுக்கு, வடிவம் இன்றியமையாமையின், அவ்வடிவமாவது அருவ முதலிய மூன்றனுள் யாதெனின், அவனுக்கு அம்மூன்றும் வடிவேயாம்.
இது சொற்பொருட் பின்வருநிலை. உள்ளவென்றது அன்பெறாத வகரவீற்றுப் பலவறிசொல். சொன்னவொருவன் - அநாதி முத்த சித்துருவென மேற்கூறப்பட்ட ஒருவன். இதனனே, அநாதி முத்த சித்துருவாகிய சங்காரக் கடவுளுக்குத் தடித்த வடிவமில்லையென்பது கூறப்பட்டது. இனி இம்மூன்றற்கும் சிலர் கூறுங் குற்றங்களைப் பரிகரிப்பாராய், உருவத்தின்கட் கூறுங் குற்றம் பரிகரிக்கவே ஏனையவும், பரிகரிக்கப்பட்டனவாமென்னுங் கருத்தான் உருவத்தின்கண் ஆசங்கித்துப் பரிகரிக்கின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 39

நண்ணிடும் உருவ மென்னின் நமக்குள உருவம் போலப்
பண்ணிட ஒருவன் வேண்டும் இச்சையேற் பலரும் இச்சை
கண்ணிய உருவங் கொள்ளேம் யாம்பெருங் கடவுள் தானும்
எண்ணிய யோக சித்தர் போலுரு இசைப்பன் காணே.

பொழிப்புரை :

முதல்வனுக்கு உருவமுண்டென்னின், உருவமெல்லாம் ஒரு பெற்றியவாகலின் உருவமுடைய நம்மனோர்க்குளதாகிய பரதந்திரம் முதல்வனுக்கும் உளதாதல் வேண்டும்; அஃதன்றாயின் முதல்வனுக்குளதாகிய சுதந்திரம் நம்மனோர்க்கும் உளதாதல் வேண்டும். இனி, நம்மனோர்க்கும் யோகிகட்கும் உளதாய வேறுபாடு பெரிதாயினாற் போல, யோகிகள் முதலிய நம்மனோர்க்கும் முதல்வனுக்கும் உளதாகிய வேறுபாடு பெரிதாகலின், ஒப்புமை கூறுதல் பொருந்தாதெனின், அங்ஙனமாயினும், உருவடிவெல்லாம் ஒரு பெற்றியவாகலின், உருவத்தின் வேற்றுமையில் வழி அவ்வேறுபாட்டாற் போந்த பயன் என்னை?
‘வித்தக யோகசித்தர் வேண்டுருக் கொள்ளுமாபோல் உத்தமன் கொள்வனென்னின்’ என்றது அனுவாதஞ் செய்து கொண்டது. இவை இரண்டு செய்யுளுந் தடை; இனி விடை.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 40

வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோல்
உத்தமன் கொள்வ னென்னின் அவர்களி லொருவ னாவன்
அத்தகை யவர்க ளெல்லாம் ஆக்குவ தருளா லாங்கு
வைத்தது மாயை யென்னின் வடிவெலா மாயை யாமே.

பொழிப்புரை :

முதல்வனுக்கு உருவமுண்டென்னின், உருவமெல்லாம் ஒரு பெற்றியவாகலின் உருவமுடைய நம்மனோர்க்குளதாகிய பரதந்திரம் முதல்வனுக்கும் உளதாதல் வேண்டும்; அஃதன்றாயின் முதல்வனுக்குளதாகிய சுதந்திரம் நம்மனோர்க்கும் உளதாதல் வேண்டும். இனி, நம்மனோர்க்கும் யோகிகட்கும் உளதாய வேறுபாடு பெரிதாயினாற் போல, யோகிகள் முதலிய நம்மனோர்க்கும் முதல்வனுக்கும் உளதாகிய வேறுபாடு பெரிதாகலின், ஒப்புமை கூறுதல் பொருந்தாதெனின், அங்ஙனமாயினும், உருவடிவெல்லாம் ஒரு பெற்றியவாகலின், உருவத்தின் வேற்றுமையில் வழி அவ்வேறுபாட்டாற் போந்த பயன் என்னை?
‘வித்தக யோகசித்தர் வேண்டுருக் கொள்ளுமாபோல் உத்தமன் கொள்வனென்னின்’ என்றது அனுவாதஞ் செய்து கொண்டது. இவை இரண்டு செய்யுளுந் தடை; இனி விடை.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 41

மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும்
மாயஆ ணவம கன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே
காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால்.

பொழிப்புரை :

நீ அங்ஙனங் கூறுதல் பொருந்தாது. அங்கிகளது ஏற்றத்தாழ்வால் அங்கங்களும் ஏற்றத் தாழ்வுடையனவன்றித் தம்முள் ஒப்பனவல்ல. அற்றேல், அவ்வேற்றத் தாழ்வுகள் என்னையெனிற் கூறுதும்; யோகிகள் நம்மனோரெல்லாரும் மலத்தைப்பற்றிக் கிடக்கும் பசுக்கள்; அதுவன்றியும் ஒன்றையேயறிதலும் ஒன்றையே செய்தலும் ஒன்றிலே முதன்மையாதலுமாகிய அற்ப ஞானத் தொழின் முதலுடையராம்; முதல்வனாவான்அம்மல நீங்கிய அறிவில் தங்கி நின்று உணர்த்துவோனாகிய பசுபதி; அதுவுமன்றி எல்லா அறிவும் எல்லாத் தொழிலும் எல்லா முதன்மையும் உடையன். இங்ஙனம் அங்கிகட்குத் தம்முள் ஏற்றத்தாழ்வுண்மையின்,அதற்கேற்ப மலத்தைப் பற்றிய பசுக்களுக்கு அதனோடியைபுடைத்தாய் ஏகதேச அறிவைச் செய்யும் மாயை யுருவமும், அநாதிமுத்த சித்துருவாகிய பசுபதிக்கு மல நீங்கியவுயிர்க்கு வியாபக அறிவைச் செய்யுஞ் சத்தியுருவமுமாதலே அமைவுடைமையின் அங்கங்களினுந், தம்முள் ஏற்றத் தாழ்வுண்மை இனிது விளங்குதலான், அதனையறியாது இச்சையேற் பலரும் இச்சையென்றும், மாயையென்னில் வடிவெலா மாயையாகு மென்றுங் கூறுதல் அடாது.
தானென்பது அனுவதித்தலையுணர்த்தி நின்றது. பற்றியென்பது பெயர். “ஐந்தவித்தானற்றல்’’ என்புழிப்போலப் பற்றிக்கென்னும் நான்கனுருபு விரித்துரைக்க. நாயகனெல்லா ஞானத்தொழின் முதல் நண்ணலாலெனவே, உயிர்கள் ஒரு ஞானத் தொழின் முதலே நண்ணுவன என்பது பெற்றாம். அகறல் நீங்குதல், ஆர்தல் பொருந்துதல்; அஃது உபசாரத்தாற் காரியத்தின் மேல் நின்றது. ஓகாரம் சிறப்பின்கண் வந்தது. ஏகதேச அறிவைச் செய்தல் எகதேசப்படுந் தகுதியுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று. வியாபக அறிவைச் செய்தல் வியாபகப் பொருட்கேயன்றி ஏகுதேசப்படுந் தகுதியுடையதற்கு உரித்தன்று. ஆகலான், ஏகதேசத்தில் அறியும் பசுக்களுக்கு ஏகதேசப்படுந் தகுதியுடைய மாயையே உருவமாயிற்று; வியாபகமாயறியும் பசுபதிக்கு அதுபோல் ஏகதேசப்படுந் தகுதியில்லாத சத்தியே உருவமாயிற்றெனக் கொள்க. இனி, ஆணவமகன்ற அறிவொடு தொழிலையார்க்கும் என்பதற்கு, வியாபகஞானத் தொழில்களை ஆணவமலந்தடுக்கு மென்றுரைப்பாருமுளர். முன்னும் பின்னும் பொருளியைபுபடுதற்கேலாது நின்றுவற்றுமாகலின், அஃதுரையன்மை யறிக.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 42

சத்தியே வடிவென் றாலும் தான்பரி ணாம மாகும்
நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே யென்னின்
அத்துவா மார்க்கத் துள்ளான் அலனிவன் அருமை தன்னைப்
புத்திதா னுடையை போல இருந்தனை புகலக் கேள்நீ.

பொழிப்புரை :

அங்ஙனமாயினும், உருவமெல்லாங் கண்டிதப் பொருளாகலிற் பரிணமித் தழிவெய்துமது சிவசத்திக்குத் தகாமையால் அநாதி முத்த சித்துருவாகிய முதல்வன் முதற்கட் கூறப்படும் அருவப் பொருளாதன் மாத்திரை யென்றலே அமைவுடைத்தெனின்,- ஆறத்துவாவையுங் கடந்த பொருளை அவற்றோடொப்ப வைத்து அங்ஙனங் கூறுதல் பொருந்தாது.
புத்திதானுடையபோல இருந்தனை என்பது, இழித்தற்கண் வந்த குறிப்பு மொழி. அன்றென்பது பாடமாயின், அத்துவா மார்க்கத்துள்ளானென்பது, அத்துவா மார்க்கத்துள் ஒன்றாகக் கருதப்படானென்றுரைத்து அன்றிவனென்பது அவ்வத்துவாக்கள தியல்போடு மாறுபட்ட இவனென வினைத்தொகையாக வைத்துரைக்க, அன்றுதல் அப்பொருட்டாதல்; “அன்றினார் புரமெரித்தார்க்கு’’ என்பதனானுமறிக. அற்றேல், முதல்வன் அருவமேயெனில், அத்துவாக்களில் ஒருவனாய் முடியுமென்றல் யாங்ஙனமெனின், அது, வருஞ் செய்யுளிற் கூறப்படும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 43

உலகினில் பதார்த்த மெல்லாம் உருவமொ டருவ மாகி
நிலவிடு மொன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல
அலகிலா அறிவன் றானும் அருவமே யென்னி லாய்ந்து
குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்திடாயே.

பொழிப்புரை :

ஆகாயம் முதலிய அருவப்பொருள் உருவத்தின் இயல்யுடைய தாகாது; நிலமுதலிய உருவப்பொருள் அருவத்தின் இயல்புடைய தாகாது; சந்திரன் முதலிய அருவுருவப்பொருள் அருவியல்பே யுடையதுமாகாது, உருவியல்பே யுடையதுமாகாது. இங்ஙனம் ஆறத்துவாவுட்பட்ட பொருள்களேல்லாம் ஒன்று பிறிதொன்றின் இயல்புடையதாகமாட்டாது. ஆகலான், அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வனை அருவப்பொருளேயெனின், அவனுமவைபோல மாட்டாமை யுடையனெனப்பட்டு அவற்றுளொருவனாய் முடியும்.
உருவமோ டருவ மென்பதனை இரட்டுறமொழிந் துரைத்துக் கொள்க. ஒன்றினியல்பு ஒன்றுடைத்தாகா தென்பார், ஒன்றொன்றாகாவென உபசரித்தார். இவ்வாறுரையாதார்க்குச் சற்காரியவாதம் முரணுமாறுணர்க. இதனானே நின்மலன் அருவேயென்பார் மதமும், அருவுருவே யென்பார் மதமும் மறுக்கப்பட்டவாறுமாயிற்று. அஃதங்ஙனமாக, சத்தியே வடிவென்றால் பரிணாமமாகவே அநித்தமுமாய் விடுமெனக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமென்னையெனின், அதுவருஞ் செய்யுளிற் பெறப்படும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 44

பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்
அந்தமும் ஆதி யில்லான் அளப்பில னாத லாலே
எந்தைதான் இன்ன னென்றும் இன்னதா மின்ன தாகி
வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே.

பொழிப்புரை :

அநாதிமுத்த சித்துருவாகிய எந்தை, கட்டு வீடென்னும் பதங்களையுடைய பசுபாச பதார்த்தங்களது இயல்புடையன் அல்லனாகலானும், எழுவாயிறுவாய் இலனாகலானும், அவையிலனாகவே அளவைகட்கெட்டாமையானும், அருவம் உருவம் அருவுருவமென்னும் முக்கூற்றுள் இன்னனாவனென்றுதான், அம்முக்கூறும்படும் விருத்தி பரிணாமம் விவர்த்தனம் என்பவற்றுள் ஒன்றிற்படுவன் படானென்றுதான் கூறுதற்கோர் ஆசங்கையுமில்லை. ஆசங்கையின்மையின் அதற்கு மறுமொழியாகிய பரிகாரமுமில்லை.
அருவமெல்லாம் உருவமாய்த் தோன்றுதலும் உருவமெல்லாம் அருவமாயழிதலும் ஒருதலை. அதுபற்றி அவை அளவைகட்கு வரம்பு படுவனவுமாம். அநாதிமுத்த சித்துருவாகிய எந்தைக்குத் தோற்றக் கேடுகளின்மையானும், அவையின்மையின் அளவைகட்கு வரம்பு படாமையானும், அவன் முக்கூற்றுள் ஒருகூற்றினும் வைத்து மொழியப்படானென்பார், அந்தமும் ஆதியில்லான் அளப்பிலனாதலாலே எந்தைதான் இன்னனென்று சொல்ல வழக்கோடு மாற்றமின்றே என்றும், கட்டுவீடுகளிலனாகலின் எவ்வாறுமாமென்பார், பந்தமும் வீடுமாய பதபதார்த்தங்களல்லான் இன்னதா மின்னதாகி வந்திடானென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்றமின்றே யென்றும் கூறினார். எதிர்நிரனிறை, “எந்தையாரவர் எவ்வகை யார் கொலோ’’ என்றருளிச் செய்த பாசுரமுமிது. பதபதார்த்த மென்றது குழைக்காது போல் இரண்டாம் வேற்றுமைத்தொகை. பதம் அவ்வச்செவ்வி. ஆதியுமென்னும் உம்மை விகாரத்தாற்றொக்கது. அற்றேல், உருவமுடையாரெல்லாம் விகாரப்படுதலும் ஏகதேசமாதலுந் துடக்குறுதலும் உடையராதல் காணப்பட்டமையின், முதல்வனுக்கு உருவமுண்டாயின் அவையும் உளவெனப்பட்டு வழுவாமாலெனின், அவ்வாசங்கை நீக்குதற் கெழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 45

குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்போடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே.

பொழிப்புரை :

விகாரப்படுதற்குக் காரணம் பரதந்திரமும், ஏகதேசமாதற்குக் காரணஞ் சிற்றுணர்வு சிறுசெயல்களும், துடக்குறுதற்குக் காரணம் விருப்பு வெறுப்புக்களுமேயாகலின், அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வன்மாட்டு அவ்வு பாதிகளின்மையின் அக்குற்றங்களுக்குச் சேயனாகிய அவன், ஆணவமகன்ற அறிவொடு தொழிலையார்த்து நிற்றலின், தான்நினைந்ததொரு திருமேனியைத் தனதாகக் கொண்டருளுவன்.
குறித்ததொன்றாகமாட்டாக்குறைவே பரதந்திரமாவதென்றறிக. அற்றேல், அக்குற்றங்களிலனாகிய முதல்வன் உருவமின்றி நின்றே எத்தொழிலுஞ் செய்ய வல்லுமாகாலான், உருவங்கோடலாற் போந்த பயனென்னையெனின், அஃதுணர்த்துதற்கன்றே வருஞ் செய்யுள் எழுந்ததென்பது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 46

ஆரணம் ஆக மங்கள் அருளினால் உருவு கொண்டு
காரணன் அருளா னாகில் கதிப்பவ ரில்லை யாகும்
நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
சீரணி குருசந் தானச் செய்தியும் சென்றி டாவே.

பொழிப்புரை :

உயிர்க்குத் தன்னுடம்பை இயக்குதற்கண் வேறொர் உருவம் வேண்டாமைபோல, அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வனுக்குத் தன்னுருவமாகிய உலகத்தைச் தொழிற்படுத்தற் பொருட்டு வேறொர் உருவம் வேண்டப்படுவதன் றாயினும், பிரளயாகலர் சகலரென்னும் பசுவர்க்கம் இரண்டும் முறையே முன்னிலையினும் படர்க்கையினும் நின்றுணர்த்தினாலன்றி உணரமாட்டாமையின், உயிர்வர்க்கங்கள் பொருளியல்புணர்ந்து வீடுபெறுமாறு வேதாகமங்களைக் கோவைபடச் செய்தற்பொருட்டும், அதனைக் குருபரம்பரையின்கண் வைத்தற் பொருட்டும், திருமேனி ஒருதலையான் வேண்டப்படும்.
கதித்தல் கதியடைதல். அற்றேல், இவ்வாற்றல் அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வனுக்குத் தனுவுண்டாகவே, தனுவிற்குரிய தொழில் கரணம் புவனம் போகங்களும் உளவாமாகலின், அவை பற்றி நம்மனோர்போலச் சுட்டியுணரப்பட்டு வாக்குமனாதீதனென்றல் வழுவாம்போலுமெனின், அவ்வாசங்கை நீக்குதற்கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 47

உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும்
கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம்
தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி
அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே.

பொழிப்புரை :

அரன்றனுரு அருளாகலான், உயிர்கட்கு உணர்வளிப்பதாய அவ்வுருவிற் றோன்றுந் தொழில்களுங் குணங்களுமாகிய கரணமும் அருள்வடிவே; கைகால் முதலிய வுறுப்புக்களும் அருள்வடிவே உபாங்கமாகிய புவனபோகங்களும் அருள்வடிவே ; இவ்வருள் வடிவெல்லாம் உயிர்களின் பொருட்டன்றித் தன் பொருட்டன்மையான் இவை பற்றிச் சிந்திதனாயினும் அசிந்திதனே.
அருளுரு முன்னையது வினைத்தொகை; ஏனையது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. குணம் வாய்மை முதலியன. அவையே அவனுக்குச் சூலம் மழுமுதலிய படைக்கலமாகலின், அவை கரணமெனப்பட்டன. கரசரணாதி சாங்கந் தருமருளென்பது முன் வைக்கற்பாலதாயினும், செய்யுளாகலின் முறைபிறழவைத்தார். ஆதியென்றதனால் ஏனையங்கப் பிரத்தியங்கங்களுந் தழுவப்பட்டன. இவற்றைச் சாங்கமென்றது உபசாரம். அசிந்தனென்னும் வடசொல் அன்மொழித்தொகை. அன்றே அசை.
இவையொன்பது செய்யுளானும் முதல்வனுக்கு உருவத்திருமெனி யுண்டென்பது பிறர் கூறும் குற்றங்களான் இகந்துபடாமைக் காத்து வலியுறுத்தப்பட்டது.
இனி, சிந்திதனாகியும் அசிந்திதனேயென்றதனை வலியுறுத்து முகத்தான், அவ்வுருவடிவின் பேதங்களும் அவற்றின்கண் நிகழுந்தொழில்களும் அவற்றானாய பயன்களுந் தொகுத்துணர்த்துகின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 48

உலகினை இறந்து நின்ற தரன்உரு வென்ப தோரார்
உலகவ னுருவில் தோன்றி ஒடுங்கிடு மென்றும் ஓரார்
உலகினுக் குயிரு மாகி உலகுமாய் நின்ற தோரார்
உலகினி லொருவ னென்பர் உருவினை யுணரா ரெல்லாம்.

பொழிப்புரை :

சிந்திதனாயினும் அசிந்திதனேயென்பதற்கு, வேதத்துள் உருத்திரன் விச்சுவாதிகனென்றும், விச்சுவகாரணனென்றும், விச்சுவத்திற் கந்தரியாமியென்றும், விச்சுவரூபியென்றுங் கூறுஞ் சுருதிகளே சான்று.
மாயையில் தோன்றியொடுங்கும் உலகம், அதற்காதாரமாய் நின்ற முதல்வனுருவில் தோன்றி ஒடுங்கியதூஉமாமென்பது கிழங்கினின்றுந் தோன்றிய தாமரையைப் பங்கயம் என்பதனானும் அறிக.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 49

தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர்
ஆவது முணரார் ஆதி அரிஅயற் கறிய வொண்ணா
மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார்.

பொழிப்புரை :

விச்சுவாதிகனென்பது முதலிய நான்கு சுருதிகளையும் முறையெ வலியுறுப்பனவாய் அரியுமயனும் அடிமுடி தேடியறியா வண்ணம் நீண்ட திருவுருவின்நிலை கூறும் புராணவசனமும், மும்மூர்த்திகளுந் தன்னுறுப்பிற்றோன்றி நின்ற வடிவின் இயல்பு கூறும் புராணவசனமும், அவன் வடிவிலே விளைந்த வண்ணமே உலகிற்கு விளைவு கூறும் புராணவசனமும், அர்த்தநாரீசுர வடிவு கூறும் புராண வசனமுமாகிய இவையுமதற்குச் சான்று.
இவை யிரண்டு செய்யுளும் அசிந்திதன் என்றதற்கு உரையளவை காட்டியவாறு.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 50

போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஒரார்
யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர்.

பொழிப்புரை :

முதல்வன்கொண்ட திருமேனிகளிற் சில திருமேனி போகவடிவமும், சில திருமேனி கோரவடிவமும், சில திருமேனி யோகவடிவமுமாகக் கொண்டது, முறையே, உயிர்கட்குப் போகம் புரிதற்பொருட்டும், வினையினை வீட்டுதற்பொருட்டும், யோகமுத்தியுதவுதற் பொருட்டுமாம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 51

ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
நின்றலால் உலக நீங்கி நின்றனன் என்று மோரார்
அன்றி அவ்வேட மெல்லாம் அருள்புரி தொழிலென் றோரார்
கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணமென் றோரார்.

பொழிப்புரை :

அங்ஙனம் போகவடிவுங் கோரவடிவும், யோகவடிவுமாய்த் தம்முள் மாறுபட்ட பலவடிவம் ஒருவனே கொண்டுநிற்றலும், தம்முள் மாறுபட்ட அப்பலவடிவங்களும் அங்ஙனம் போகமும் வீடும் யோகமும் உதவுமுகத்தான் அனுக்கிரகமொன்றற்கே ஏதுவாதலும், தீமை செய்வது நன்மையைப் பயத்தலும், உலகத்தின் வைத்தறியப் படாத அதிசய நிலையாகலான், இதுவுமதற்குச் சான்று.
உலகினையிறந்துநின்றது அரனுருவமென்பதூஉம் ஈண்டினிது விளக்கியதூஉமாயிற்று. நிற்றல் நின்றலென விகாரம். அன்றியவென்னும் பெயரெச்சவீறு விகாரத்தாற் றொக்கது.
இவையிரண்டு செய்யுளானும் அசிந்திதனாதற்கு ஏதுக்காட்டியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்.

பொழிப்புரை :

அவ்வேடமெல்லாம் அருள்புரி தொழிலென்பதற்கு முதல்வி திருக்கண் புதைத்த திருவிளையாட்டின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியே சான்று.
நயப்பு - மகிழ்ச்சி. பாய்தல் - பரத்தல். தேயம் - உலகம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு
விண்ணுறு தேவ ராதி, மெலிந்தமை ஓரார் மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்.

பொழிப்புரை :

பலவேறு வகைப்பட்ட அருள்புரிதொழிலும் அவ்வேடத்தை இன்றியமையாமைக்குக் கண்ணுதல் யோகிருந்துழி உலகத்தின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியே சான்று.
உலகினுக்குயிருமாய் நின்றவற்றை இவ்விருவகைத் திருவிளையாட்டின் வைத்து இனிது விளக்கியதூஉமாயிற்று. ‘ஒன்றொடொன்றொவ்வாவேடம் ஒருவனே தரித்துக் கொண்’டதும் இதனுட் கண்டு கொள்க.
இவையிரண்டு செய்யுளானும் மேலதனைக் கண்கூடாகத் தெளிவித்துச் சிந்திதனாயும் அசிந்திதனேயென்றதனை வலியுறுத்தியவாறு. சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும் பெயர்களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்பவுளவென்பது வாயுசங்கிதையுட் கூறப்படுதலின், ஈண்டுக் கூறியனவெல்லாம் முதல்வனுக்கு உரியனவேயாமெனக் கொள்க. அற்றாகலின்றே ஈண்டுக் கூறி வடிவங்களெல்லாம் மகேசுரமூர்த்தம் இருபத்தைந்தனுள் வைத்தெண்ணப்பட்டன என்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 54

படைப்பாதித் தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும்
இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும்
அடைப்பானாம் அதுவும் முத்தி யளித்திடு மியோகும் பாசந்
துடைப்பானந் தொழிலும் மேனி தொடக்கானேற் சொல்லொ ணாதே.

பொழிப்புரை :

ஆரணம் ஆகமமென்னுஞ் செய்யுளிற் கூறிப்போந்த உபதேசமாத்திரைக்கேயன்றி ‘உலகவனுருவிற்றோன்றி யொடுங்கிடு’ மென்பது முதலாக இங்ஙனங் கூறிப்போந்த தோற்ற மறைப்பு நிலையருளிறுதியென்னும் ஐந்தொழில் செய்தற்கும் அவ்வடிவம் இன்றியமையாச் சிறப்பினவாய் வேண்டப்படும்.
படைப்புக்கு வாதுளாகமத்தின் ஓதியவாறே, இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளுமாகிய உலகங்கள் முதல்வனது திருமேனியில் ஒவ்வோர் உறுப்புக்களினின்று தோன்றுமாறு செய்ய வேண்டுதலானும், மறைப்புக்கு ஊனநடனம் இயற்றவேண்டுதலானும், திதிக்கு மாதராளோடியைய வேண்டுதலானும், அனுக்கிரகத்திற்கு யோகிருந்து காட்டவேண்டுதலானும், சங்காரத்திற்குத் தோன்றியன முறையே அவ்வவ்வுறுப்புக்களின் ஒடுக்கவேண்டுதலானும், உபதேசமாத்திரைக்கேயன்றி இவற்றிற்கும் உருவத் திருமேனி இன்றியமையாச் சிறப்பினவென்பது கண்டுகொள்க. ஏனைத் தொழில்களைக் கிளந்து கூறுதலிற் படைப்பாதியென்பதற்குப் படைப்பாகிய ஆதித்தொழிலென் றுரைக்க. பக்தர்க்கருளும் பாவனையென்பது பத்தர்க்கு இருவினையொப்பின் அருளுதற் பொருட்டுச் செய்யும் பாவனையெனத் திரோதானத் தொழிலையுணர்த்திற்று. பாவனையென்றார், அஃதவனுக்கு இயல்பன்மையின். நூலுமென்பது நூலைச்செய்யுமெனப் பெயரடியிற் பிறந்த பெயரெச்சவினையாய் இடப்பாகமாதராளுக்கு அடையாயிற்று. இவ்வாறன்றி, எண்ணும்மை யேற்ற சொல்லாகவே வைத்து, மேற்கூறிப் போந்த ஆரணவாகமங்களைப் பிரித்துக் கூட்டலென்னும் உத்தியால் ஈண்டுமுடன் வைத்து எண்ணிணாரென் றுரைப்பினுமாம். பாசந்துடைப்பானாந் தொழிலென்றது ஈண்டுச் சங்காரத்தின்மேற்றென்பது, ‘கொன்றது வினையைக் கொன்று நின்றவக்குண’ மென்பதனான் அறிக. அடைப்பான் துடைப்பானென்பன பானீற்று வினையெச்சம். செய்யுளாகலின் முறைபிறழ வைத்தார். இவையனைத்துஞ் சுத்தமாயையிற் படுங் காரியங்களை நோக்கிக் கூறியதென்றுணர்க. ‘உலகினை’ யென்பது முதல் இவ்வேழு செய்யுளானும் மேலைச்செய்யுளின் அசிந்திதன் என்றதனை வலியுறுத்துமுகத்தான், அவ்வருளுருவின் பேதங்களும் அவற்றானாய தொழில்களும் பயனும் அவை இன்றியமையாச் சிறப்பினவாமாறுந் தொகுத்துப் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 55

உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.

பொழிப்புரை :

திருமேனியெல்லாம் ஒரு நிகரனவாகலின், ஏனையவர் உருவத் திருமேனி அருவுருவத் திருமேனிகளதுண்மையும் அவையும் அவ்வியல்பினவாமாறும் உருவத்திருமேனிக் கோதிய நயமே பற்றி அறியப்படும்.
உருவமெனப்படுந் தூலப்பொருட்கெல்லாம் அருவமெனப்படுஞ் சூக்கும அவத்தை ஒருதலையான் உண்டென்னுஞ் சற்காரியத்தின் இயல்புபற்றி, உருமேனி தரித்துக்கொண்டதென்றலும் உருவிறந்த அருமேனியதுவுங் கண்டோமென்றும், அவ்வுருவம் எனப்படுஞ் சூக்குமப்பொருள் பின் உருவமெனப்படுந் தூலாவத்தை எய்தும்போது அவ்விரண்டற்கும் பொதுவாயதோர் அவத்தையும் உண்டென்பது, தானே போதருமென்பதுபற்றி அருவுருவானபோது திருமேனி யுபயம் பெற்றொமென்றும், வேறுபொருளன்மையான், அவையும் அவ்வுருவடிவோடு ஒக்குமென்பதுபற்றி, மூன்றும் நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவென்றும் கூறினார். இதனானே ஏனைத் திருமேனிகளிரண்டினது உண்மையும் அவற்றதியல்பும் உருவத் திருமேனியோடுளதாகிய இயையுபற்றிச் சாதிக்கப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 56

அத்துவா மூர்த்தி யாக அறைகுவ தென்னை என்னின்
நித்தனாய் நிறைந்த வற்றின் நீங்கிடா நிலைமை யானும்
சித்துடன் அசித்திற் கெல்லாம் சேட்டித னாத லானும்
வைத்ததாம் அத்து வாவும் வடிவென மறைக ளெல்லாம்.

பொழிப்புரை :

ஈண்டுக் கூறியவாற்றான் முதல்வனுக்குக் கருணை வடிவேயன்றி மாயை வடிவு இல்லையாயின், ஆகமங்களின் அத்துவாக்களாறும் முதல்வனுக்கு வடிவமென்ற தென்னையெனின்,- அது, எல்லாமாகி யல்லவா யுடனுமாம் இயல்புடைய முதல்வனுக்குத் தனது திரோதான சத்தியா னவற்றொடு உளதாகிய இயைபு நோக்கிக் கூறும் உபசாரமே யாம்.
அத்துவாவு மென்னும் உம்மை உபசார வடிவென்ப துணர்த்தி நின்றது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 57

மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத்
தந்ததென் அரனுக் கென்னில் சகத்தினுக் குபாதா னங்கள்
விந்துமோ கினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச்
சிந்தையா ரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும்.

பொழிப்புரை :

அத்துவாக்களுள்ளும் மந்திர வடிவத்தைச் சிறந்தெடுத்தோதியது, தலைமையும் பயனும் பற்றி விசேடவுரிமையாதல் நோக்கி.
சகத்தினுக்கு உபாதானங்கள் விந்து மோகினி மான் மூன்றாமென்றது அனுவாதம், ஆரதீதம் பண்புத்தொகை. சேர்ந்து சேரப்பட்டு. விந்துத்தன்னிற் றோன்றின என்பது ‘விந்துத்தன்பால் வைகரியாதி’ எனக்கூறிப் போந்தவாற்றானறிக. பிரேரித்தல் சாதகராவார் கணிக்குமாறு செலுத்துதல். அதிட்டித்தல் கணித்தபின் பயன்கொடுத்தற்பொருட்டு அவற்றை வாயிலாகக் கோடல். விசேடவுரிமையாதல் பற்றி அரனுக்கென்றே வைத்தவென்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 58

சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றிய ஆத லானும்
சத்திதான் பிரேரித் துப்பின் தானதிட் டித்துக் கொண்டே
அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே
வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்.

பொழிப்புரை :

அத்துவாக்களுள்ளும் மந்திர வடிவத்தைச் சிறந்தெடுத்தோதியது, தலைமையும் பயனும் பற்றி விசேடவுரிமையாதல் நோக்கி.
சகத்தினுக்கு உபாதானங்கள் விந்து மோகினி மான் மூன்றாமென்றது அனுவாதம், ஆரதீதம் பண்புத்தொகை. சேர்ந்து சேரப்பட்டு. விந்துத்தன்னிற் றோன்றின என்பது ‘விந்துத்தன்பால் வைகரியாதி’ எனக்கூறிப் போந்தவாற்றானறிக. பிரேரித்தல் சாதகராவார் கணிக்குமாறு செலுத்துதல். அதிட்டித்தல் கணித்தபின் பயன்கொடுத்தற்பொருட்டு அவற்றை வாயிலாகக் கோடல். விசேடவுரிமையாதல் பற்றி அரனுக்கென்றே வைத்தவென்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 59

மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத் தாலும்
அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே.

பொழிப்புரை :

மந்திர வடிவுள்ளும் பஞ்சப்பிரம வடிவைச் சிறந்தெடுத்தோதியது, ஏனைய மந்திரங்கட் கெல்லாம் முற்படத் தோன்றி முற்படக் கொண்ட வடிவாதல் பற்றி.
தந்திரம் ஆகமம். இங்ஙனம் கூறிய அத்துவாமூர்த்தி மந்திரமூர்த்தி பஞ்சப்பிரம மூர்த்திகளெல்லாம் அவற்றைச் செலுத்தி நிற்குந் திரோதான சத்திக்கிசையச் செய்த உபசார வடிவென்பார், சத்தியாதிக்கிசைத்தலுமாகுமென இறுதிக்கட் கூறினார். சத்தியாதியென்பது முன்பின்னாகத் தொக்க இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஆதிசத்தியெனினுந் திரோதான சத்தியெனினும் ஒக்கும்.
உம்மை சிறப்பின் கண் வந்தது. இவை நான்கு செய்யுளானும் முதல்வனுக்கு உபசாரத் திருமேனி இவையென்பது கூறப்பட்டது. ‘அருவமோ’வென்பது முதல் இதுகாறுந்திருமேனியின் இயல்பு கூறுமுகத்தால் அநாதிமுத்த சித்துருவாதலைத் தெரித்துணர்த்தியவாறு. அற்றேல் அயன் முதலியோரையும் அத்துவா மூர்த்திமான்களாக வைத்துத் தத்தம் எல்லையளவும் அவரவர் வடிவின் அத்துவநியாசஞ் செய்யுமாறும் ஆகமங்களின் விதித்தலின் அவருருவும் அரசனுருவோடொக்கும் போலுமென்னின்,- அதற்கு விடை வருஞ்செய்யுளிற் பெறப்படும்.
இங்ஙனம் ‘மண்ணினிற் கடாதி’யென்பது முதன் ‘மந்திரமதனில்’ என்பதீறாகிய முப்பத்தொரு செய்யுளானும், முதற்செய்யுளின் ‘ஈறுமாகி மருவிடும் அநாதிமுத்த சித்துரு மன்னிநின்றே’ என்ற இரண்டாங் கூற்றை, அவ்வவர் மதம்பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து வலியுறுத்தி, இனித் ‘தான் முத’ லென்ற மூன்றாங் கூற்றை அவ்வாறு வலியுறுத்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 60

அயன்றன் ஐஆதி ஆக அரனுரு வென்ப தென்னை
பயந்திடுஞ் சத்தி யாதி பதிதலாற் படைப்பு மூலம்
முயன்றனர் இவரே யாயின் முன்னவ னென்னை முற்றும்
நயந்திடும் அவனி வர்க்கு நண்ணுவ தொறோவொன் றாமே.

பொழிப்புரை :

அயனுருவம் அரியுருவம் முதலியவற்றையும் அரனுருவோடொத்த உருவாக வைத்து வேதாகமங்களில் தத்தம் எல்லையளவும் அத்துவநியாசம் மந்திரநியாசம் முதலாயின விதித்தலின், சங்காரக் கடவுளோடொப்ப அவரும் முதல்வராவான் செல்வர்போலுமென மலையற்க, படைப்பாதிதொழில் செய்யுஞ் செனனி முதலிய சிவசத்திகள் ஒரோவொன்று அவர் மாட்டுப் பதிந்து நின்று செலுத்துதலான் அவ்வியைபுபற்றி வேதாகமங்களின் அவ்வாறு உபசரித்து ஓதப்பட்டன.
அற்றேல், ஒரு தொழிற்கு இருவராதல் ஏற்றுக்கென்பாரை நோக்கி, அமைச்சர் முதலாயினார்க்கு அரசனையின்றி அமையாமை போல, அயனரி முதலாயினார்க்கு அரனருளையின்றி அமையாமை தருக்கமுகத்தான் விளக்குவார், படைப்புமூலம் முயன்றனர், இவரேயாயின் முன்னவனென்னை என்றும், அரசனுக்கு அமைச்சர் முதலாயினார்போல அரனுக்கு அயனரி முதலாயினாரும் வேண்டப்படுவரென்பது ஏதுமுகத்தான் விளக்குவார், முற்றுநயந்திடு மவனிவர்க்கு நண்ணுவதொரோவொன்றாமே என்றுங் கூறினார். உவமை, வருஞ் செய்யுளிற் பெறப்படும். ஐ அழகு. அஃதாகுபெயரான் அழகுடையுருவத்தின்மேல் நின்றது. இரண்டனுருபாக வைத்துரைப்பார், முடிக்குஞ் சொல்லோடு இயைபின்மை நோக்கிலர். ஆக அரனுருவென்னும் உவமைத்தொகை பையரவல்குல் போல் நின்றது. ஆகம் உடம்பு. பயத்தல்- படைத்தல். படைப்பு மூலம் படைப்பாதி யென்க. பயந்திடுஞ் சத்தியாதி பதிதலைப் பிரித்துவைத்துக் கூறுகின்றமையின், இவரேயென்னும் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. ‘உரைத்த இத்தொழில்க’ளென்னுஞ் செய்யுள், பௌராணிகரை நோக்கி இயைபின்மை மாத்திரநீக்கி ‘ஈறுமாகி மருவிடு’ மென்றதனை வலியுறுத்தியது. இஃது அநேகேசுரவாதிகளை நோக்கிப் பிறிதினியைபு நீக்கித் தான் முதலென்றதனை வலியுறுத்தியது. இவை இரண்டற்குந் தம்முள் வேற்றுமை. அற்றேல் அநேகேசுரவாதம் பரிகரித்தற்பொருட்டுப் பயந்திடுஞ் சத்தியாதியெனச் சத்திக்குப் பன்மை கூறவே, சத்திமான் ஒருவனாதல் செல்லாமையின், இது தேளுக்கஞ்சிப் பாந்தள் வாயின் விழுந்தாலொப்ப மறித்தும் அநேகேசுரவாதமாய் முடியும் போலுமெனின், அவ்வாசங்கை நீக்குதற்கன்றே வருஞ் செய்யுள் எழுந்ததென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 61

சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக
வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம்.

பொழிப்புரை :

அரசன் சத்தியொன்றே அமைச்சர் படைத்தலைவர் பாடிகாவலர் முதலாயினார்மாட்டுநின்று செய்யுங் காரியவேறுபாட்டாற் பல வேறு வகைப்பட்டாற்போல, சிவசத்தியொன்றே அவ்வவர் மாட்டு நின்று செய்யுங் காரியவேறுபாட்டாற் செனனி முதலியவாய்ப் பலவேறு வகைப்படும். சிவசத்தியொன்றேயென்பதும் அதுவே கடவுளர்மாட்டு நின்று நடாத்துமென்பதும் அமைச்சர் முதலாயினார் எவையெவை செய்யினும் அரசன் நினைந்தவாறன்றியாகாமைபோல, போகம் வீடுபேறுகளெல்லாம் அரன் நினைந்தவாறன்றி யாகாமைபற்றி அறியப்படும்.
தானொன்றே அரனுடையதாகிக் காரியத்தால் அநேகமாக வைத்திடுமென இயையும். அரன் நினைந்தவாறன்றி யாகாமை, தக்கன் வேள்வி, மார்க்கண்டி வாழ்நாள், ஆலாலத் தோற்றரவு முதலியவற்றால் இனிது விளங்கக் கிடைத்தலின், வகுத்துக் கூறாராயினார். அற்றேல், ஈண்டுக் கூறியவாற்றாற் செனனி முதலிய பேதமெல்லாஞ் சிவசத்திக்குத் தடந்த மென்றாயவழிச் சொரூபமென்னையோவெனின், அஃதுணர்த்துதற்கன்றே வருஞ் செய்யுளெழுந்ததென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞான மாகும்
உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின்
எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி
வைத்தலான் மறைப்பில் ஞானால் மருவிடுங் கிரியை எல்லாம்.

பொழிப்புரை :

உயிர்கட்கு அனுக்கிரகமாத்திரங் குறித்துப் பொது வகையானறிந்தும் அறிவித்து நிற்பதாகிய ஞானமொன்றே சிவசத்தியின் சொரூபம். அதுவே பராசத்தியெனப்படும். அந்த ஞானம், உயிர்கட்கு மலபாகம் வருதற்பொருட்டு ஐந்தொழில் செய்தலைக் குறித்துச் சிறப்புவகையான் வியாபரிக்குங்கால், ஒருகூற்றானே திரோதான சத்தியென நின்று இச்சா ஞானக் கிரியையென முத்திறப்பட்டு வியாபரிக்குமாகலான், இச்சைகிரியைகளும் ஞானத்தின் வேறன்மையாற் காரியத்தால் அநோகமாகிய செனனி முதலிய வியாபார சத்திகளெல்லாம் முற்கூறப்பட்ட பராசத்தி ரூபமாகிய ஞானமொன்றான் உளவாவனவேயாம்.
தடை - தடுத்தல்; மறைப்பென்றதும் அது. தடுத்தற்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. தடையிலா ஞானமெனவெ, தடைசெய்யும் ஞானமும் உண்டென்பது போந்தமையின், அதுவே திரோதானசத்தியெனப்படும். இதனாற் பஞ்சசத்திகளுங்கண்டு கொள்க. ஞானத்துள் என்புழி, நீக்கப்பொருட்கண் வரும் இன்னுருபு விரித்துரைக்க. உளவாதல் ஈண்டுத் தோன்றுதன்மேற்று.
ஏனையபோலத் தோன்றினவல்ல என்பார், எத்திற ஞானமுள்ள தத்திறம் இச்சை செய்தியென்றார். ஞானத்தின் வியாபார விசேடங்களே அவையென்பதாம். “நீடு பராசத்தி நிகழிச்சா ஞான நிறைகிரியை தர’’ என்றதூஉம், + “கிரியையறி விச்சை கிளந்த சத்தியேதோ - பெரியபரா சத்தியெனப் பேசாய்’’ என்றதூஉம் இக்கருத்தே நோக்கியென்க. ஞானமென்பது அக்முக்கெட்டுருபேற்று ஞானலென நின்றது. அம்முக் கெடுதல் “பெற்றொன் றுயர்த்த பெருமான்’’, 1“ கோணாகணையான்’’ என்றாற் போல்வனவற்றுள்ளுங் காண்க. அத்துச்சாரியை விகாரத்தாற்றொக்கதெனினுமாம். கிரியை வியாபாரம். இதனாற்போந்த பொருளென்னையெனின், அது, வருஞ்செய்யுளிற் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 63

ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி
நின்றிடுஞ் சத்தி இச்சை உயிர்க்கருள் நேச மாகும்
நன்றெல்லாம் ஞான சத்தி யால்நயந் தறிவன் நாதன்
அன்றருட் கிரியை தன்னால் ஆக்குவன் அகில மெல்லாம்.

பொழிப்புரை :

பராசத்தியாவது, தடையிலா ஞானமெனப் பொதுமையான் ஒன்றாய், இச்சாஞானக்கிரியையென வியாபார பேதத்தான் மூன்றாய், அவையே மற்றுமவ்வக்காரிய பேதத்தாற் பலதிறப்படும். அம்மூன்றும் முறையே, உயிர்கட்கு மலத்தை நீக்கிச் சிவத்தையளித்தற்கண்ணுளதாகிய கருணையும், அதற்குச் செய்யக்கடவதான உபாயங்களையெல்லாம் அறியுமறிவும், அவற்றையவ்வாறே சங்கற்பித்துச் செய்யுஞ் சங்கற்பமுமாம்.
2“உள்ளியதெல்லாம்’’ என்றாற்போல நன்றெலா மென்பது ஒருமைப்பன்மை மயக்கம். நன்மை உபாயம். அன்று அறிந்த போதே யென்க. இவை நான்கு செய்யுளானும், ‘அயன்றனையாதியாக அரனுரு’ வென்றல் பற்றியுஞ் சத்திபலவாதல் பற்றியுந் தானொருவனே முதற்கடவுளென்றல் செல்லாதென்னும் அநேகேசுரவாதி மதத்தை ஆசங்கித்துப் பரிகரித்துப் தான் முதலென்றது வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 64

சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பான்
ஆவனென் றிடின்அ நாதி மலம்இவற் றினைம றைக்கும்
காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன்
பாவியாம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும்.

பொழிப்புரை :

இச்சை முதலிய மூன்றும் முதல்வனோடொப்ப உயிர்க்கும் உளவென்பது மாத்திரையேபற்றி உயிர்களும் முதல்வனோடொக்கும் போலுமென மலையற்க; இவை அவைபோலன்றிக் கேவலத்தின் மூலமலத்தான் மறைபடுதற்குரிய தன்மையும், சகலத்திற் கன்மத்தளவின் ஏகதேசப்பட்டு நிகழ்தற்குரிய தன்மையும், அக்கன்மத்தால் வரக்கடவதாகிய போகப் பயன்போலச் சுத்தத்தின் அதனின் வேறாகிய முத்திப் பயனும் முதல்வன் கொடுப்பவே கொள்ளுமுரிமைத்தன்மையும் உடைமையான், இத்தன்மைகளில்லாத முதல்வனுடைய இச்சாஞானக்கிரியைகளோடு இவற்றிடை வேற்றுமை பெரிதாகலின்.
பண்பு - தன்மை. பாவி வடசொல். புத்திபோலென்னும் உவமவுருபு விகாரத்தாற்றொக்கது. இங்ஙனம் உரையாதார் கன்மத்தளவினிற் கொடுப்பக் காண்டலே புத்திப்பயன் கோடலென்பதுணர்ந்திலர். இதனானே, சிவசமவாதிமதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து, மேலது வலியுறுத்தப்பட்டது. அற்றாயினும், ஆகமங்களின் இலயசிவன் போகசிவன் அதிகாரசிவனெனச்சிவப்பன்மை கூறுதலின் தான் முதலென்று ஒருபொருள்மேல் வைத்தோதுதல் அமையாது போலுமெனின், அஃதுணர்த்துக்கன்றே வருஞ்செய்யுட்கள் எழுந்தன என்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

ஞானமே யான போது சிவன்தொழில் ஞான மொக்கின்
ஈனமில் சதாசி வன்பே ரீசனாந் தொழில தேறின்
ஊனமேற் கிரியை வித்தை உருத்திரன் இலய போகம்
ஆனபே ரதிகா ரத்தோ டதிகர ணத்த னாமே.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த சிவசத்தி மூன்றனுள், யாண்டுமொரு பெற்றித்தாய் வியாபரிக்கும் இச்சையை யொழித் தொழிந்த ஞானக்கிரியைகளிரண்டும், தனித்தனி வியாபரித்தலானும், ஒத்து வியாபரித்தலானும், தம்முளேறிக் குறைந்து வியாபரித்தலானும், சிவஞ் சத்தி சதாசிவம் மகேசுரஞ் சுத்தவித்தையென்று ஐவகைப் பட்டு, இலயம் போகமதிகாரமென மூன்றயடங்கு மவத்தைகளையும், அவத்தைக் கேதுவாய் அங்ஙனம் வேறுபட்ட ஆதாரங்களையுமுடையனாய உருத்திரனொருவனே அவ்வப்பெயர் பெற்று நிற்பன்.
உருத்திரனாமென இயையும். ஈண்டு உருத்திரனென்றது மா சங்காரக் கடவுளாகிய பரமசிவனை ; அவனுக்கும் உருத்திரனென்னும் பெயருண்மையின். அவ்விலயபோகமெனச் சுட்டு வருவித்துரைக்க. ஆனபோ தென்பதனையும் பிரிநிலை ஏகாரத்தையுந் தொழில் என்பதனோடுங் கூட்டுக. பின்வந்த ஞானஞ் சத்திக்குப் பரியாயப்பெயராய் நின்றது. ஒக்கிலென்பதற்கு, இவ்விரண்டுமென எழுவாய் வருவித்துரைக்க. பேரீசன் மகேசனென்னும் பொருட்டு. ஆதாரம் அதிகரணம் என்பன ஒரு பொருட்கிளவி என்பது மேலும் உரைத்தாம்; கடைப்பிடிக்க. அற்றேல், அவ்விலயபோக அதிகாரங்கட்கு ஏதுவாய்நின்ற அதிகரணங்கள் யாவை அவற்றியல்பென்னையோ எனின், அது வருஞ் செய்யுளிற் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 66

வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ்
சுத்ததத் துவஞ்சி வன்தன் சுதந்திர வடிவ மாகும்
நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே
வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தாலே.

பொழிப்புரை :

அவ்வவ்வியாபாரங்கட்கு இடமாய் ஐவகைப்பட்டு மேற்கூறிப்போந்த அவ்வப்பெயரே பெயராக உடையனவாஞ் சுத்த தத்துவம் ஐந்தும் அவ்விறைவனுக்குச் சுதந்திரமாகிய அதிட்டானமுமாம். முன் பின்னாக நிகழும் ஞானசத்தி கிரியாசத்திகளின் வியாபார பேதம்பற்றி இவற்றிற்கு முற்பிற்பாடு கூறப்படினும், இவ்வைந்துந் தோன்றிய பின்னர்த் தோன்றுவதாய காலதத்துவம் இவற்றது தோற்றத்திற்கு ஏதுவாகாமையிற் காலம்பற்றி முற்பிற்பாடு கூறுதல் செல்லாது, காலவரையறையைக் கடந்து நிற்றலால்; அதுபற்றி இவை சிவனுக்கு நித்திய அதிட்டானமென்றுரைக்கப்படும்.
அநந்ததேவர் முதலியோர் வாயிலாக நின்று அதிட்டிக்கப்படும் ஏனை மாயேயம் போலன்றித் தானே அதிட்டிக்கப்படுதலின், இவை சுதந்திர வடிவமெனப்பட்டன. அதிட்டானத்தை வடிவமென்று உபசரித்தார். தோற்றக் கேடுகளுடையனவாய தத்துவங்கள் இறைவனுக்குச் சுதந்திர வடிவமாமாறு யாங்ஙனமென்னுங் கடாவை ஆசங்கித்து, நித்தமென் றுரைப்பர் என்றும், நித்தமாதற்கேதுக் கூறுவார் காலநீங்கிய நிலைமையாலென்றும், அற்றேற் காலநீங்கிய வழி இவற்றின் தோற்றத்திற்கு முற்பிற்பாடு கூறுதல் செல்லாதென்பாரை நோக்கி ஈண்டு முற்பிற்பாடு கூறியது காலம்பற்றி அன்றென்பார் வைத்திலர் முற்பிற்பாடு வருவித்தார் கருமத்தாலென்றுங் கூறினார். ஈண்டுக் கருமமென்றது மேலைச் செய்யுளிற் கூறிய வியாபார பேதங்களை. அந்த வியாபாரங்கட்குக் காரணங் கலையித்திரியெனப் பெயர்பெற்றுக் காலத்தானமாய் நிற்குஞ் சிவசத்தியேயாகலின், ஆண்டுக்காலமின்மைபற்றி முற்பிற்பா டுண்மைக்கு இழுக்கின்மையும் அறிக. அற்றேல் இலயசிவன் முதலிய மூவருந் தம்முள் வேறென்னாது சுத்த சிவனொருவனே இவ்வதிகரணங்களைப் பற்றிய வியாபார பேதத்தால் அங்ஙனம் மூன்றவத்தை எய்துவனெனின், விகாரியாவான்போலுமெனின், அவ்வாசங்கை நீக்குதற்கெழுந்தது வருஞ் செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

ஒருவனே இராவ ணாதி பாவக முற்றாற் போலத்
தருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையும் திரியா னாகும்
வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும்
இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்.

பொழிப்புரை :

ஒருவன் கூத்திற்குரிய பலவேடங்கட்டி நடித்தானாயினுந் தன் தன்மையிற் சிறிதுந் திரியாமைபோல, முதல்வன் ஐந்தொழிற்குரியனவாய் இங்ஙனம் கூறிப்போந்த பேதமெல்லாம் எய்தியும் அவ்வேறுபாடெல்லாங் குணகுணி பாவமாய் உடன்நிற்குந் தனது சத்தியிற் காணப்படுவனவாகலின், அதுபற்றித் தன் தன்மை வேறுபட்டு விகாரியாவா னல்லன்.
ஏகாரந்தேற்றம். தன்மையும் என்னும் உம்மை சிறப்பின்கண் வந்தது. இருமையென்றது ஈண்டெண்ணின்மேல் நின்றது. சத்தியிற் காணப்படுவனவற்றைச் சத்தியென் றுபசரித்தார். அற்றேல், தனது சத்தியிற் காணப்படுவது தனக்காமாறு யாங்ஙனமெனின், அது வருஞ் செய்யுளிற் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

பொன்மைநீ லாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின்
தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேத மெல்லாம்
நின்மலன் தானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன்
முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே.

பொழிப்புரை :

பொன்மை நீலாதிகளைத் தன்னிறமே பற்றத் தானும் அத்தன்மைகள் அனைத்துமாய்த் தோன்றி வேற்றுமையின்றி நிற்கும் படிகம்போல, முதல்வனுந் தனது சத்தியிற் காணப்படும். அப்பேதமெல்லாந் தானாகத்தோன்றி வேற்றுமையின்றியே நிற்பன்; அவன்யாண்டுஞ் சத்தியினிடமாகவே தோன்றுவானன்றித் தானாக வேறு தோன்றனாகலான்.
வன்னம் படிகநிறம். ஏகாரந் தேற்றம். தன்னென்றது இடைச்சொல். கிரியை தன்னாலாக்குவன் என்றாற்போல, ஆகவென வருவித்துரைக்க. இவை நான்கு செய்யுளானுஞ் சிவபேத வாதிகள் கூறுங் கடாவை ஆசங்கித்துப் பரிகரித்து மேலது சாதிக்கப்பட்டது. ‘இம்முத்திறத்தொன்பது செய்யுளுந் தான்முதல்’ என்றதனை வலியுறுத்தியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 69

சத்தியுஞ் சிவமு மாய தன்மைஇவ் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
வைத்தனன் அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
இத்தையும் அறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்.

பொழிப்புரை :

இறைவன் இவ்வாறு சத்தியுஞ் சிவமுமெனத் தன்னுள்ளே இருவேறு வகைப்பட்ட தன்மைகள் வைத்தலானன்றே, பலவேறு வகைப்பட்ட உயிர் வடிவங்களனைத்துங் குறியானுங் குணத்தானும் ஆண்பெண்ணென அவ்வவியோனிக்குள் இருவேறு வகையாயடங்கித் தம்முட் கூடிக்களித்து வாழா நின்றனவாகலான், இப்படியே ஈண்டுக் கூறிப்போந்த வாழ்வுகளெல்லாஞ் சிவசத்தி மணந்ததனாலாகிய வாழ்வென்பதறியப்படும். அச்செலாம் இலிங்காங்க பகாங்கமாம்படி சிவமுஞ் சத்தியுங் கொண்டருளிய பீடலிங்கவடிவமே அங்ஙனம் இருவேறு வகைப்பட வைத்தனைக் கண்கூடாக அறியச்செய்தல் சான்று.
ஒத்தொவ்வாமையாவது, அவ்வப் பிறப்புக்கியைய வடிவங்களெல்லாம் ஒத்துங் குறிகுணங்கள் ஒவ்வாது இருவேறு வகைப்படுதல் ஆண்பெண்ணென்பன குறியுணர நின்றன. உணர்குண குணியுமாகி யென்பது, அவ்வக்குறிகட்கேற்ப உணரப்படும் இருவேறுவகைக் குணங்களையுடைய குணியுமாகியென்பதாம். இருவேறுவகைக் குணமுடையனவாதலாவது, ஆணெனப்பட்டன எல்லாம் ஆண்மைக் குணமும் பெண்ணெனப் பட்டன எல்லாம் அமைதிக் குணமும் உடையனவாதல். ஈண்டுக் குணியென்றது வாளாபெயராய் நின்றது, கரிகரம் பணிபணம் என்றாற்போல. ஈண்டுக் கூறிப்போந்த வாழ்க்கையாவன, உலகமெல்லாம் அவயவப் பகுப்புடையனவாதலும், முத்தொழிலுடையனவாதலும், கருத்தாவையுடையனவாதலும், சங்காரக் கடவுளினின்றுந் தோன்றுவனவாதலும் அவனையே முதற்கடவுளாக வுடையனவாதலும் என்னுமிவை. இதனானே, தான்முதலாதலைக் கண்கூடாக விளக்கு முகத்தான் முதல்வனுக்குரிய பொது வியல்பனைத்துந் தொகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

சிவன்அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்களொன்றும் பண்ணிடு வானும் அல்லன்
தவமுத லியோக போகம் தரிப்பவ னல்லன் தானே
இவைபெற இயைந்து மொன்றும் இயைந்திடா இயல்பி னானே.

பொழிப்புரை :

ஈண்டுக் கூறிப் போந்தவை யனைத்தும் முதல்வனுக்குத் தடத்தலக்கணமாதலின், சொரூபலக்கணமெனப்படுந் தன்னுண்மை இவற்றின் வேறாம்; அஃது உண்மையதிகாரத்திற் பெறப்படும்.
இதனானே முதல்வனுக்குரிய பொதுவியல்பு தொகுத்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே
நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்.

பொழிப்புரை :

மேற்கூறிப் போந்த சிவன், புனருற்பவஞ் செய்யுங்கால் உயிர்களிடத்து உடலுயிர் கண்ணருக்கன் அறிவொளிபோற் பிறிவருமத்துவிதமாய் அவ்வவுயிர்களின்வழி நிற்பதாகிய சத்திரூபமாகியும், தனதாணையான் வரும் இருவினைக்கேற்ப அவ்வுயிர்கள் ஐந்தொழிலிற்பட்டுச் செல்லுங்கால் அவ்வைந்தொழில் நடாத்துவதாகிய பதிரூபமாகியும், அத்தன்மைகளின் வேறாய் அவற்றொடுந் தாதான்மியமாய், எவ்விடத்துந் தானே சொயம்பிரகாசரூபமாம் இயல்புடையனாய் நிற்பன்.
அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வன், ஒன்றினுந் தோய்வின்றித் தானே சொயம் பிரகாசமாய் நிற்குந் தன்னுண்மையிற் சிவமெனவும், ‘உலகெலாமாகி வேறாயுடனுமாய்’ இவ்வாறுயிர்களின் வழி நிற்குந் தன்மையிற் சத்தியெனவும், தாதான்மியத்தான் இருதிறப் பட்டு, பின் ஐந்தொழில் செய்யுந் தன்மையிற் பதியெனப் பெயர் பெற்று நிற்பனென்னுஞ் சிவாகமநூற் றுணிபுணர்த்துவார், இவ்வாறு பகுத் தோதினார். ஈண்டுலக மென்றது உயிர்களை. ஒளியென்றது சத்தியை. தலைவனெனினும் பதியெனினும் ஒக்கும். நீங்காமை தாதான்மியம். இச்செய்யுள் முதனூல் இரண்டாஞ் சூத்திரம் போல் நாற்கூற்ற தாமாறு கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே.

பொழிப்புரை :

வேதத்துள் ஆன்மா ஏகனேயென்பதற்குப் பரமான்மா ஒருவனே யென்பது தாற்பரியமாகலான் அதுபற்றி முரணுத லின்மையான், மேலைச் செய்யுளின் வேறாயென்றதூஉம், ஒன்றாகிய அகரம் பலவெழுத்துக்களின் விரவி நிற்றல் காணப்படுதலின், ஒருவனாகிய பரமான்மாப் பலவுயிர்களின் விரவி நிற்றல் யாங்ஙனமென்னும் ஆசங்கைக்கு இடமின்மையான், உடனுமாயென்றதூஉம் அமைவுடையன.
உம்மை சிறப்பின் கண் வந்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே.

பொழிப்புரை :

முதல்வன் அங்ஙனம் வேறாகியும் உலகெலாமாகி நிற்றல் அமைவுடைத்தென்பது உடம்பின் கண்ணதாகிய உயிரியல்பின் வைத்துக் கண்டு கொள்க.
ஐ சாரியை. அவை பகுதிப்பொருள் விகுதி. நின்று வருபவனென இயையும். இவையிரண்டு செய்யுளானும், பேதவாதம் பேதாபேதவாதம் அபேதவாதமாகிய முக்கூற்று மதங்களையும் பரிகரித்து, ‘உலகெலாமாகி வேறாய் உடனுமாய்’ என்ற முதற்கூற்றுப் பொருள் வலியுறுத்தப்பட்டது. இன்னும் இதன்கட்படுங் கடா விடைகளெல்லாம் முன்னர் விரித்துக் கூறப்படுமென்பதுபற்றி ஈண்டு விரித்திலர். இனி ஒளியாயோங்குதற்கட்படுங் கடாவிடைகளே மேலைச் சூத்திரத்துள் இயைபுபற்றிக் கூறிப் போந்தமையின் ஈண்டுத் தெரித்திலர். அஃதங்ஙனமாக, முதல்நூற்பொருளை முதனூலிற் கிடந்தவாறன்றித் தொகுத்தன் முதலிய நால்வகையாப்பினுள் ஒன்றுபற்றிச் செய்தலன்றே வழிநூலாவது ; அவ்வாறன்றி, ‘அன்றவை பதிதானொன்றென்றறையும்’ எனவும், உருவொடு கருவியெல்லாமெனவும், பிறாண்டுஞ் சிலவற்றை முதனூலிற் கிடந்தவாறே கூறுதல் வழிநூற்கு மரபன்று போலுமெனின், “முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் - பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கு - முன்னோரின் - வேறுநூல் செய்து மெனும் மேற்கோளில் என்பதற்குங் - கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்” என்பவாகலின், அப்பயன்பற்றி ஒரோவழி யாங்ஙனங் கூறுதலும் வழிநூற்கு மரபாமென விடுக்க. இதனானே கூறியது கூறலென்னும் வழுவின்மையுங் கண்டு கொள்க.
இனி நாற்பத்தேழு செய்யுளான் ‘அலகிலாவுயிர்கள் கன்மத் தாணையினமர்ந்து செல்ல’ வென்ற இரண்டாங் கூற்றை அவ்வவர் மதம் பற்றி யாசங்கித்துப் பரிகரித்து வலியுறுத்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து
வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள்
தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.

பொழிப்புரை :

மேற்கூறிப் போந்த உயிர், முற்பிறவியிற் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கீடாக இப்பிறவியின் வரும் இன்பத்துன்ப நுகர்ச்சியான் மேலும் வினையேறுதலின் அதனான் மீளமீளப் பிறந்திறத்தலும் துறக்க நிரயங்களிற் சென்று மீள்தலும் உடைத்தாகலான், உடம்போடு நிலைபெறும் அவ்வினைப் பயன்களை மருத்துவனும் வேந்தனும்போல முதல்வனே அவ்வுயிர்க்குத் தனதாணையாற் கூட்டுவன். அவ்வாறன்றிச் சடமாகிய அவை தாமே மறுமைக்கண் வந்து கூடமாட்டா.
தரணமென்னும் வடமொழி, கடத்தலென்னும் பொருட்டாகலான், நோயைக் கடப்பித்தலின் மருத்துவனுக்குத் தரணியெனக் காரணக் குறியாயிற் றென்பது; அற்றாகலினன்றே மருத்துவன் உரைத்த நூலினென முன்னர் வகுத்துக் கூறுவாராயினாரென்பது. இதனானே முதல்வன் அவ்வாறு மூவகையுமாய் நிற்றலானாய பயன் இதுவென்ப துணர்த்து முகத்தான் இரண்டாங் கூற்றின்கட் படுமியல்பெல்லாந் தொகுத்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின்
ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி
வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை
தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே.

பொழிப்புரை :

ஒரு பொருட்குத் தம்முள் மாறுபட்டட இரண்டு தன்மை காரணத்தானன்றி உளவாகாமையானும், தண்ணீருக்கு வாசமும் வெப்பமுஞ் செயற்கையான் உளவாயின ஆகலின் அதுவே ஈண்டைக்கு உவமையாய் முடிதலானும், இன்ப துன்ப நுகர்ச்சி சித்துக்கன்றிச் சடத்துக்குக் கூடாமையானும், அவ்வின்ப துன்பம் இரண்டற்குங் காரணம் வேண்டப்படுமாகலான், இருவினை எனப்படுஞ் சஞ்சிதமே ஆண்டைக்குக் காரணம்.
என்னையென்னும் வினா இன்மை குறித்து நின்றது. அது வென்னும் பகுதிப் பொருள் விகுதி அப்பண்பின் மேல் நின்றது. தன்னியல்பு தட்பம். உணர்விலாத அசித்தென்றது. “அடியளந் தான்றாயது” என்றாற் போலக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின்
மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும்
உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத
துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே.

பொழிப்புரை :

ஒரு பொருட்குத் தம்முள் மாறுபட்டட இரண்டு தன்மை காரணத்தானன்றி உளவாகாமையானும், தண்ணீருக்கு வாசமும் வெப்பமுஞ் செயற்கையான் உளவாயின ஆகலின் அதுவே ஈண்டைக்கு உவமையாய் முடிதலானும், இன்ப துன்ப நுகர்ச்சி சித்துக்கன்றிச் சடத்துக்குக் கூடாமையானும், அவ்வின்ப துன்பம் இரண்டற்குங் காரணம் வேண்டப்படுமாகலான், இருவினை எனப்படுஞ் சஞ்சிதமே ஆண்டைக்குக் காரணம்.
என்னையென்னும் வினா இன்மை குறித்து நின்றது. அது வென்னும் பகுதிப் பொருள் விகுதி அப்பண்பின் மேல் நின்றது. தன்னியல்பு தட்பம். உணர்விலாத அசித்தென்றது. “அடியளந் தான்றாயது” என்றாற் போலக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம்
இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி
இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல்
இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே.

பொழிப்புரை :

அற்றேல் அக்காரணமாவது முயற்சியேயாம் என்பது உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்துக் கண்கூடாக அறியக் கிடத்தலின், அதுவே அமையும், வேறுமோர் காரணங் கோடல் மிகையாமென்றது பொருந்தாது. அஃதொரோவழிப் பிறழ்தலும் அவ்விருதிறத்தினும் வைத்தறியக்கிடத்தலின், நியதகாரணம் வேறுண்டென்பது பெறப்படுதலால், அதுவே ஆண்டைக்குப் புலனாகாத சஞ்சிதவினை யென்று அறியப்படும்.
ஒருவினை செய்யாதோரும் உடையராதல் கிழியீடு நேர்படப் பெற்றார் முதலாயினார் மாட்டுக் காணப்படும். ஈண்டுடையரென்றது செல்வரை ; அஃது + “உடையார் முன் இல்லார்போல்” என்பதனானு மறிக. இவை நான்கு செய்யுளானும் உலோகாயதர் மதம் பற்றி ஆசங்கித்துப் பரிகரித்துச் சஞ்சிதமெனப்படும் இருவினை உண்மை காரிய ஏதுவின் வைத்துச் சாதிக்கப்பட்டது. அற்றேல், இருவினையே அமையுமாகலின் “முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை - இன்மை புகுத்திவிடும்” என்பது பற்றிச் செல்லும் மனவெழுச்சிக்குப் பயனில்லைபோலும் எனின், அது முன்னர்க் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி
வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித்
தருவினை யதனில் அத்தந் தானறும் துயருந் தங்கும்
ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே.

பொழிப்புரை :

அற்றேல் அக்காரணமாவது முயற்சியேயாம் என்பது உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்துக் கண்கூடாக அறியக் கிடத்தலின், அதுவே அமையும், வேறுமோர் காரணங் கோடல் மிகையாமென்றது பொருந்தாது. அஃதொரோவழிப் பிறழ்தலும் அவ்விருதிறத்தினும் வைத்தறியக்கிடத்தலின், நியதகாரணம் வேறுண்டென்பது பெறப்படுதலால், அதுவே ஆண்டைக்குப் புலனாகாத சஞ்சிதவினை யென்று அறியப்படும்.
ஒருவினை செய்யாதோரும் உடையராதல் கிழியீடு நேர்படப் பெற்றார் முதலாயினார் மாட்டுக் காணப்படும். ஈண்டுடையரென்றது செல்வரை ; அஃது + “உடையார் முன் இல்லார்போல்” என்பதனானு மறிக. இவை நான்கு செய்யுளானும் உலோகாயதர் மதம் பற்றி ஆசங்கித்துப் பரிகரித்துச் சஞ்சிதமெனப்படும் இருவினை உண்மை காரிய ஏதுவின் வைத்துச் சாதிக்கப்பட்டது. அற்றேல், இருவினையே அமையுமாகலின் “முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை - இன்மை புகுத்திவிடும்” என்பது பற்றிச் செல்லும் மனவெழுச்சிக்குப் பயனில்லைபோலும் எனின், அது முன்னர்க் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும்
ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால் தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே.

பொழிப்புரை :

எடுத்ததோர் உடம்பின் வரக்கடவனவாகிய இன்பதுன்பங்கட்கு ஏதுவாகிய செல்வ வறுமைகளும் அவற்றான் வரும் உயர்விழிவுகளும் அவற்றானாய இன்ப துன்பங்களு மாகியவாறும், முன்னேதானே சூக்குமமாய்க் கருவினுள் அமைந்து கிடந்தனவன்றி அப்போதப்போது உளவாவனவல்ல ; அவை பின்னர்த் தூலமாய் வந்து கூடுதல் அவற்றை அனுபவித்தற்குத் துணையாகிய முயற்சியானாம் ; அங்ஙனம் அனுபவித்தற்குத் துணையாக எழுந்த முயற்சியும் அவ்வளவின் ஒழியாது மற்றோர் உடம்பிற்படும் அவ்வறு வகைக்கும் வித்தாய் நிலைபெறும் ; முற்பிறவியில் நிகழ்ந்த முயற்சி இப்பிறவியின் வருமவ்வாறற்கும் ஏதுவாயினாற் போலும் அத்தனையே முயற்சியானாகக் கடவது பிறிதில்லை.
பிணியென்றது ஈண்டுத் துன்பமாத்திரையே உணர்த்தி நின்றது. “நோயும் இன்பமும்” என்றார் தொல்காப்பியனாரும். ஈண்டு மூப்பென்றது உயர்ச்சியின் மேற்று ; அது “விண்ணோர்க்கெல்லா மூப்பாய்” என்பதனானும் ‘மூத்த திருப்பதிகம்’ என்பதனானும் உணர்க. சாக்காடு போறலின் இழிவைச் சாக்காடென்று உபசரித்தார். ஏனை மூப்புச் சாக்காடுகள், பேறிழவு இன்பம் பிணிபோலத் தம்முள் மறுதலை யாகாமையானும், அவற்றின் மறுதலைப் பொருள்களை உடன் கூறாமையானும், இவற்றுள் அடங்குதலின் வேறு கூறவேண்டாமையானும், காலம்பற்றி ஒருதலையான் வரும் மூப்பின்கண் ஐயமறுத்தல் வேண்டாமையானும், அவற்றை உடன் வைத்தெண்ணி உரைசெய்தல் பொருந்தாமை அறிக. ஓடு எண்ணின்கண் வந்தது. சூக்கும அவத்தையிற் பாகுபாடின்மை பற்றிப் பட்டதென்று ஒருமைப்பாலாற் கூறினார். கூறவே ஏறிடுமென்பது தூலமாய் விளங்கும் என்பதாயிற்று. இது சற்காரியவாதம். அனுபவமெனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற்கேது என்றது எடுத்துக்காட்டுவமை. ஈண்டுக் கன்மமென்றது முயற்சியை. மேலே வினையென்றதுமது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.

பொழிப்புரை :

அங்ஙனம் உடலும் வினையும், வித்தும் மரமும்போலத் தம்முட் காரணகாரியமாய்த் தொன்றுதொட்டுப் பிரவாகாநாதியாய் வருதலின், அவற்றிற்குத் தம்முள் முற்பிற்பாடு முடியாது.
அற்றேல், வரம்பின்றியோடி அநவத்தையாம்போலுமென மலையற்க. அவ்விரண்டற்கும் மூலமாகிய சூக்கும உடம்பு வேறுண்மையின்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான்
இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர் பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி.

பொழிப்புரை :

அற்றேல் இத்துணையுங் கூறியவாற்றான் முன்பு செய்த கன்மம் இங்கிவற்றிற்கு ஏதுவென்பதூஉம் அவற்றை யனுபவித்தற்குத் துணையாதன் மாத்திரையே முயற்சியென்பதூஉம் ஒக்குமாயினும், அவ்வாறு வினைப்பயனுக் கீடாக வருகின்ற முயற்சி மேலுடற் சேருதற்குரிய வினையாமாறு யாங்ஙனமெனில், - நன்று சொன்னாய் ; முன்வினையெனப்படும் இதமகிதமாவன முற்பிறவியின் அவ்வாறு நிகழும் முயற்சியேயன்றி வேறின்மையான் அதனை யுடம்பட்டாய்க்கு அந்நயம்பற்றி இங்கும் அம்முயற்சி நிகழ்ந்தால் அது மேலைக்கு வினையாமென்பது தானே போதரும். அற்றேல் ஒரோவழி முயற்சியின்றி யிருப்பார்க்கு மேல் வரக்கடவதொன்று இல்லை போலுமெனின், - அற்றன்று ; அனுபவமாவது முயற்சியை யொட்டியே நிகழ்வதொன்றாகலிற் பிராரத்தவினை யனுபவமுள்ளளவும் முயற்சியும் ஒருதலையா லுண்டென்பது பெறப்படுதலின், அனுபவ முள்வழி மேலைக்கு வரக்கடவதொன்றில்லை யென்றல் யாண்டைய தென்றொழிக.
‘ஒருவினை செய்யாதோரும் உடைய’ ரென்றதும் வருந்திச் செய்யவேண்டாது எளிதிற் பெறுவது நோக்கியே பிறிதன்றென்பது கருத்து. மரங்கள் முதலியவற்றிற்குந் தண்ணீர் முதலியவற்றை ஏற்றுக்கோடற்குரிய சூக்குமமுயற்சி யுண்டென்பது உணர்ந்து கொள்க. யாண்டும் பிறழாமை யுணர்த்துதற்கன்றே பிற்செயாதனுப விப்பதின்று என எதிர்மறை முகத்தான் வரைசெய்து கூறினாரென்பது. ஆனாலென்பது தெளிவின்கண் வந்தது ; காண்பவன் சிவனே யானால் என்றாற்போல. அற்றேல், ஒன்றன் பொருட்டு வந்தது மற்றொன்றன் பொருட்டாதல் கண்டிலமாதலின், இதமகிதங்கள் முன்னர் அச்செயலாயவாறுதான் யாங்ஙனமெனின், அஃதுணர்த்துதற்கன்றே வருஞ்செய்யுள் எழுந்ததென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி
ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம்
மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம்
மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே.

பொழிப்புரை :

உலகத்தின் உணவின் பொருட்டு விளைந்த கனிமுதலாயின உணவுமாய் வித்துமாதல் கண்டாமன்றே ; அதுபோல், நாமென்னு முனைப்பாற் செய்யப்படுவதாகிய முயற்சியுஞ் செயல் வகையான் வினைக்கீடாக வரும் அனுபவத்தைப் பயக்கும், கருத்து வகையான் இதமகிதமெனப்படும் ஆகாமிய வினையைப் பயக்கும்.
இவ்வியல்பு தொன்று தொட்டு வீடுபேறெய்துமளவும் இடையறவுபடாது தொடர்ச்சியாய் வருமென்பார், என்று மென்றார். மூலத்த தென்னும் ஒருமை அத்தருமத்தின்மேல் நின்றது. இதமகி தங்களென்பது என வருகின்றதும் அது. “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்” என்றாற் போல ஈண்டு ஒடு ஆனாயிற்று.
இவை நான்கு செய்யுளானும், முயற்சிக்குப் பயன் இதுவென்பது உணர்த்து முகத்தான், வருவாயின்மையின் வினையுண்மை பெறப்படாதென்னு மவர்மதம் பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து, வருவாயின் இயல்புகூறி மேலது வலியுறுத்தப்பட்டது. அற்றேல், அம்முயற்சியினுளவாகிய இதாகிதங்களது இயல்பாமாறும் அவை பின்னர்ப் பயப்படுமாறும் யாங்ஙனமெனின், அது முன்னர்க் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து)
இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை
இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு)
இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே.

பொழிப்புரை :

உயிர்க்குறுதியென வேதாகமங்களின் விதித்தவற்றைச் செய்தலே இதம் ; அவற்றது மறுதலையைச் செய்தலே அகிதமாகலான், அவ்விரண்டனையும் அறியவல்ல முதல்வனே அவற்றைக் கைக்கொண்டு பயனளிப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின்
இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும்
அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்பவன்
மறமலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன்.

பொழிப்புரை :

முதல்வன் அவற்றையேற்றுக் கோடற்குக் காரணம் உயிர்கள் வீடுபேறெய்தற் பொருட்டு வைத்த கருணையேயாம். கருணை யாயினும் காரணம் இருவேறு வகைப்பட நிகழ்ந்தமையிற் பயனும் இருவேறு வகைப்படச் செய்வன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து)
அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும்.

பொழிப்புரை :

அங்ஙனம் அகிதஞ்செய்தாரைக் கண்டித்தல் நல்வழிப் படுத்தற் பொருட்டேயாகலின் அதுவுங் கருணையாதற்கிழுக்கில்லை.
தான் அசை. உம்மை இறந்தது தழீஇயிற்று; சிறப்புமாம். திரோபவித்தல் சங்கரித்தலுட்பட்ட செயல்களும் அருளேயென்பார், எக்கிரமத்தினாலும் இறைசெயல் அருளேயென்றார். ஏகாரந் தேற்றம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின்
வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும்
இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும்.

பொழிப்புரை :

இன்னோரன்னவை செயல் வகையான் வெகுளிபோலத் தோன்றினும் கருத்துவகையான் அருளேயாதல் கடைக்காலறியப்படும்.
நீர்முறைமை உவமைத்தொகை ; நீர்மை இயல்பு.
இவை நான்கு செய்யுளானும் மீமாஞ்சகர் மதம்பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து, ‘மன்னிய வினைப்பயன்கள் தருமர’ னென்றது பொருந்துமாறும் அதுபற்றி அவனுக்கு இழுக்கின்மையுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின்
முயலுமிச் செயல்க ளிங்கே முழுவமும் அழியு மெங்கே
பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே
வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல.

பொழிப்புரை :

அற்றாயினும், வினைகளே தம்பயனைத் தோற்றுவிக்க வல்லுமாகலின் ஆண்டைக்கு முதல்வன் மிகையாம்போலுமென்றல் பொருந்தாது; செய்தவினை செய்தபொழுதே கெட்டொழிவதாகலிற் பின்னின்று பயன்தருதல் செல்லாமையானும், கெட்டுப் பயன் தருதலே உலகத்துப் பொருள்களிற் கண்டாமெனில் கெட்டவை பயன் தருமென்பது சிலவற்றினன்றி யாண்டுஞ் செல்லாமையானும்.
செய்க்கிடுந் தழையுந் தின்னுந் திரவியமதுவும் போல வுய்த்திடுஞ் செய்திகெட்டே யுறுவிக்கும் பலத்தையென்றது, அனுவாதஞ் செய்து கொண்டது. மெய்த்திடும் பலம் மெய்யின்கண்ணதாய் வரும் பலம். அற்றேல், கெட்டுப் பயன்தருதல் சிலவற்றினாயினுங் காணப்படுதலின் வினையும் அவ்வாறு கெட்டுப் பயன்தருமென்பது அமைவுடைத் தென்பாரை நோக்கி அதனை மறுத்தற் கெழுந்தது வருஞ் செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல
உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னின்
வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின் மாய்ந்தால்
மெய்த்திடும் பலம் உனக்கு மலமலான் வேறு முண்டோ.

பொழிப்புரை :

அற்றாயினும், வினைகளே தம்பயனைத் தோற்றுவிக்க வல்லுமாகலின் ஆண்டைக்கு முதல்வன் மிகையாம்போலுமென்றல் பொருந்தாது; செய்தவினை செய்தபொழுதே கெட்டொழிவதாகலிற் பின்னின்று பயன்தருதல் செல்லாமையானும், கெட்டுப் பயன் தருதலே உலகத்துப் பொருள்களிற் கண்டாமெனில் கெட்டவை பயன் தருமென்பது சிலவற்றினன்றி யாண்டுஞ் செல்லாமையானும்.
செய்க்கிடுந் தழையுந் தின்னுந் திரவியமதுவும் போல வுய்த்திடுஞ் செய்திகெட்டே யுறுவிக்கும் பலத்தையென்றது, அனுவாதஞ் செய்து கொண்டது. மெய்த்திடும் பலம் மெய்யின்கண்ணதாய் வரும் பலம். அற்றேல், கெட்டுப் பயன்தருதல் சிலவற்றினாயினுங் காணப்படுதலின் வினையும் அவ்வாறு கெட்டுப் பயன்தருமென்பது அமைவுடைத் தென்பாரை நோக்கி அதனை மறுத்தற் கெழுந்தது வருஞ் செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள்
விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை
பரவிநீ பார்நீர் அங்கி பாத்திரத் திட்ட வெல்லாம்
கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே.

பொழிப்புரை :

ஈண்டெடுத்துக் காட்டிய தழை முதலிய பொருள்களுந் தாங் கிடந்தவிடத்தே கெட்டு ஆண்டே பயன் தருவனவாம்; வினை யவ்வாறன்றி இவ்வுடம்பிற் செய்வ தீண்டே கெட்டு மற்றோ ருடம்பிற் பயன் தருமாகலின், அவை யிரண்டுந் தம்முளொவ்வாமையானும், அற்றேற் சேர்ந்தவிடத்திற் பயன் தாராது கேடுமாத்திரமுடைய பொருள்களும் பல உளவாகலின், அவை மற்றோரிடத்துப் பலிக்குமெனக் கொண்டு அவற்றோடு உவமிக்க அமையுமெனின், ஓரிடத்திற் கெட்ட பொருள் மற்றோரிடத்திற் பலித்தலில்லை என்பது தீயொழுகக் காய்ந்த கலத்தில் வாக்கிய நீர் முதலியவற்றிற் காணப்படுதலானும், வேறிடத்துப் பயனாதற்குரிய வினை தானே பயனாய் வருமென்றல் கூடாது.
செய்திக் கென்பது செய்திக் கண்ணென உருபு மயக்கம். பரவிப் பார்த்தல் புடைபடவொற்றி ஆராய்தல். அற்றேல், இம்மை யம்மை யாதல்பற்றி வேறிடமென வேண்டாம் இருமையினும் வினை செய்தாரின் வேற்றுமை இன்மையிற் செய்தார் வினை செய்தவர் அறிவின் கண்ணே அடங்கிச் செய்க்கிடுந் தழை முதலியனபோல ஆண்டே பயனைத் தோற்றுவிக்குமென அமையுமாகலின் திரவியம் உவமையன்றென மறுத்தல் பொருந்தா தென்பாரை நோக்கி, அதனைப் பரிகரித்தற்கெழுந்தது வருஞ் செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர்
எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம்
பொய்யர்வாழ் நரகம் பூழி புந்தியிற் கிடந்து போந்த(து)
ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே.

பொழிப்புரை :

வினைக்குப் பயனாவன துறக்க நிரய நிலமென்னும் அவற்றுட்பட்ட பல வேறுவகைப் புவனபோகங்களாமன்றே. அவையனைத்தும் வயலின் விளைவுபோல ஆன்மபோதத்தின்கட் கிடந்துளவா மென்றல் சொன்மாத்திரையே யன்றிப் பொருள்படாது.
ஐயனே என்பது இழித்தற்கண் வந்த குறிப்புமொழி. செய்தவர் மனத்தைக் கூறவே, இனம்பற்றி ஏற்போர் மனமுங் கொள்ளப்படும். அற்றாகலினன்றே மறுத்தற்கட் புந்தியிற் கிடந்து போந்ததெனப் பொது வகையான் எடுத்தோதி விடுத்ததூஉமென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி
ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும்
ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால்
நூனங்கள் அதிக நோக்கி நுகர்விப்பன் வினைநோய் தீர.

பொழிப்புரை :

அற்றேல், அவ்வச்செய்தி அவ்வச் செயப்படுபொரு ளிற்கிடந்து பின்னர்ப் பயன்தருமெனக் கோடுமெனின்,- செயப் படுபொருள் முதலிய அனைத்தும் நிலைபேறின்றிக் கெட்டொழிவனவே யாகலான், நிலைபேறுடையனாய்ப் பயன்தரும் முதற்கடவுள் வேறு வேண்டப்படும். அற்றேல், முதற்கடவுள் பயன்தருதற் கியைபென்னை யெனின், - முயற்சியாவது முன்னைவினை அனுபவித்தற் பொருட்டுத் தரப்படும் முதல்வனது ஏவல்வினை யாகலான், அதனை நாமாக முனைத்துநின்று செய்தால் அது தீர்தற்பொருட்டு அச்செய்தியானாய பாவபுண்ணியங்களை யறிந்து அவை தீர்தற்குரிய பயன்தருதல் அவ்வேவுவானுக்குக் கடப்பாடு.
தானஞ் செய்பொருளென்றது உபலக்கணம். அற்றேல் இச்செய்தி ஈசனிடும் பணியென்றற்குப் பிரமாணமென்னை யெனின், அது காட்டுதற்கன்றே வருஞ்செய்யுள் எழுந்ததென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி
பலவிவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்பதா னால்
நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து)
அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே.

பொழிப்புரை :

வினைமுதற்காரகமாகியவுயிர், ஏனையேழு காரகங்களுந் தனக்குத் துணையாகக் கொண்டு வினைகளை யீட்டலும் நுகர்தலும் உடைத்தென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், உயிரையின்றி யமைந்து தொழிற்படமாட்டாத சடமாகிய அக் காரகங்களாதல் அவற்றையின்றி யறியமாட்டாத சிற்றறிவுடைய அவ்வுயிராதல் தாமே கூடமாட்டாமையிற் பாரிசேட அளவையானே சுதந்திர அறிவனாகிய முதல்வனே தனதாணையாகிய திருவருளால் அவற்றை யவ்வுயிர்க்குப் பொருத்திச் செய்விப்பனென்பது பெறப்படுதலின், அச்செயலெல்லாம் அவன் பணியேயாம்.
ஆதலால் அச்செயலெல்லாம் அவன் பணியே யென்பது குறிப்பெச்சம். ஈண்டு உலகென்றது உயிர்களை. “இன்னதற்காகஇது பயனாக” வென்னும் இரண்டு காரகங்களையும் நியதியென்பதனால் தழீஇயினார். பண்ணுவது உண்பதென்னும் ஒருமைகள் அத்தொழின் மேல் நின்றன. அற்றேல் அப்பணி நூனங்கள் அதிகமாமாறு யாங்ஙன மெனின், அது வருஞ் செய்யுளிற் பெறப்படு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி
இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள்.

பொழிப்புரை :

ஒழுக்கம் முதலிய பதினாறும் மற்றுமவை போல்வனவு மாகிய நன்மைகள் ஒருவனுக்குளவாயின், இரங்குவானது பணியாகிய அம்முயற்சி அறமாய் முடியும்.
எனவே, இவ்வொழுக்கம் முதலியவற்றை மறுதலைத்த தீமைகள் ஒருவனுக்குளவாயின், அம்முயற்சி பாவமாய் முடியுமென்பதூஉம் பெற்றாம். ஒழுக்கமென்றது ஈண்டு உலகத்தோடு ஒட்டவொழுகுதலை. ஈண்டுத் துறவென்றது எல்லா நிலையினுஞ் சேறற்குரிய பிறர்மனை விழையாமை, வரைவின்மகளிர் விழையாமை முதலிய ஆண்டகைமையே யென்றுணர்த்துவார், அழுக்கிலாவென விசேடித்தர். அறிவாவது தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல். “இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றி” யெனப் பின் வருதலின், ஈண்டு வந்தித்தல் வணங்கல் அர்ச்சித்த லென்பன தன்னின் மூத்தார் மாட்டுச் செய்வனவற்றை யெனக் கொள்க. ஓடு எண்ணின்கண் வந்தது. இவ்வொழுக்க முதலிய வெல்லாம் இயம நியம மென்னும் இருவகையுளடங்கி அறஞ்செய்வார்க்கெல்லாம் பொதுவகையான் வேண்டப்படும் அங்கமாகலின் இவற்றை வேறெடுத் தோதினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்
சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும்
முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே.

பொழிப்புரை :

அவ்வொழுக்க முதலிய நன்மைகளையுடையனாய் அவற்றை மறுதலைத்த தீமைகளை நீக்கி யொழுகுவான் ஒருவனுக்குத் தன் கருத்திற் கியைந்ததொரு கடவுளை மனமொழி மெய்களான் வழிபட்டு வாழுஞ் செயலாகிய அறமும் உளதாயின், ‘முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொரு’ ளாகிய சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை யேற்றுக் கொண்டு பயனுதவும்.
போற்றி வாழுஞ் செயலென வியையும். அகற்றியென்பது பெயர். அகற்றிக்கென்னும் நான்கனுருபு விகாரத்தாற் றொக்கது. சினமுதலகற்றுதல் கூறவே, ஒழுக்க முதலியனவுடைமை பெற்றாம். மேற்கூறிய வொழுக்க முதலிய அங்கங்கட்கு ஈண்டுக் கூறிய அறம் அங்கியாகலின் உடனெடுத் தோதினார். அற்றேல், வழிபட்டார்க்கு வழிபடப்பட்ட அவ்வத் தெய்வமே பயன் கொடுக்கு மென்றாற்படும் இழுக்கென்னை யென்பாரை நோக்கி யெழுந்தது வருஞ் செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே.

பொழிப்புரை :

நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பன யாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொருளென்னும் இதுவொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமை யறியவாராத அவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப் படுதலானும், சிவனுக்கஃதுண் டென்பது யாண்டானும் கேட்கப்படாமையானும், சிவனொருவனே வினைவயத்தனாதலின்றி அவ்வத்தேவரிடமாக நின்று உயிர்கட்கு அவற்றையறிந்து கூட்ட வல்லுவன்; ஏனைத்தேவர் அது செய்யமாட்டாரென்பது தானே போதரும்.
மற்று வினைமாற்று. பொதுவகையான் எடுத்துக் காட்டிச் சிறப்பு வகையாற் கூறினாராகலிற் பால்வழுவின்மை யுணர்க. அற்றேல் ஒருவரை வழிபட மற்றொருவர் பயன் கொடுத்தல் உலகத்திற் கண்டில மென்பாரை நோக்கி அது காட்டுதற் கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்(து)
அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண்
எங்கும்வாழ் தெய்வ மெல்லாம் இறைவ னாணையினால் நிற்பது
அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன்.

பொழிப்புரை :

பசு பார்ப்பார் தந்தை தாய் முதலாயினாரை இம்மைக் கண் வழிபட்டார்க்கு அஃதறிந்து மறுமைக்கட் பயன்தருங் கடவுள் வேறென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், ஈண்டு மவ்வாறோதல் அமையும். அற்றேல் தம்மை வழிபட்டார்க்கு அவ்வத்தேவரே எதிர்தோன்றி நின்று பயன்கொடுத்தாரெனவும் ஆண்டாண்டுக் கேட்கப்படுதலின் அவரும்அதற்கு வல்லுவர் போலுமென மலையற்க ; அரசனாணையே அமைச்சர் முதலாயினார் மாட்டு நின்று பிறர்க்களிக்கு மாறுபோல, முதல்வனே தன்னாணையைத் தன்னேவல்வழி நிற்கும் அவ்வக்கடவுளர் மாட்டு வைத்துப் பயன் கொடுப்பன்; அவ்வாறன்றித் தாமே வினைத்துடக்கிற்பட்டுப் பரதந்திரராய் நிற்கும் அக்கடவுளர் பிறர்க்குப் பயன் கொடுக்குமாறு யாண்டையது.
அற்றேல் அவ்வக்கடவுளர்மாட்டுச் செய்யும் வழிபாடுஞ் சிவபிரானே ஏற்றுக்கொண்டு பயனளிப்பனாயிற் பசு புண்ணியமுஞ் சிவபுண்ணியமாவான் செல்லும்போலுமெனின், - பசு புண்ணியஞ் சிவ புண்ணியமெனப் பாகுபட்டது செய்வோர் கருத்துவகையானன்றிக் கொள்வோர் கருத்துவகையான் அன்றாகலாற் செல்லாதென விடுக்க. நிற்பதென்னுமொருமை அத்தொழின்மேல் நின்றது.
இவை நான்கு செய்யுளானும், ஈசனிடும்பணி நாஞ்செய்தலான் நூனங்கள் அதிகமாமாறும், அவை நோக்கி நுகர்விக்குமாறும் பொதுவகையானுஞ் சிறப்புவகையானுந் தெரித்துணர்த்தப்பட்டன. இனி அவை நூனங்கள் அதிகமாதற்படும் விசேடங் கூறுகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன் றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே.

பொழிப்புரை :

இத்துணையுங் கூறியவாற்றால் ஏனைக் கடவுளர் மாட்டுச் செய்யும் வழிபாடுகளையும் ஏற்றுக் கொண்டளிப்பவன் சிவபிரானென்பது பெறப்படவே, அவனை வழிபடுதலே நல்லதோரறம், அவனையன்றிச் செய்வனவெல்லாம் வீணென்பது போதருதலானும், புண்ணியமாவது வேதாகமங்களின் அவ்விறைவனால் விதிக்கப்படும் விதியாகலானும், ஒன்றினும் விருப்பிலனாகியும் உயிர்கள்மாட்டுக் கருணை பூண்டு விருப்பஞ் செய்யும் அவ்விறைவன் திருவடிப் பூசனையே ஒரு தலையாகச் செய்யற்பாற்று.
இல்லான் பூண்டனன் என்பன முற்றெச்சங்கள். சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. அற்றேல், வாக்குமனாதீத கோசரமாகிய இறைவன் திருமேனி கொண்டருளிய வழியுஞ் சுத்ததத்துவ புவனத்தினன்றி ஈண்டு வைகுதலின்மையின், அவனை யீண்டுள்ளார் எங்ஙனங் கண்டு பூசிக்குமாறெனின், அஃதுணர்த்துதற் கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

தாபர சங்க மங்க ளென்றிரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்
நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை
யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே.

பொழிப்புரை :

சதாசிவ தத்துவத்தின் வைகும் இறைவன், புறத்தே திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனியுந் திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக்கொண்டு நின்றும் ஈண்டுள்ளார் செய்யும் பூசைகொண்டருளுவனாகலான், அஃதறிந்தவ் விடங்களின் வழிபடுக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே.

பொழிப்புரை :

அறம் பாவங்கள் பயன் தருவது கொள்வாரது வன்மை மென்மைபற்றியன்றிச் செய்வாரது வன்மை மென்மை பற்றியாதல் செய்வினைகளது வன்மை மென்மை பற்றியாதல் அன்றென்பதற்கு உடம்பாட்டினும் எதிர்மறையினுந் தக்கனுந் சண்டீச நாயனாருமே சான்றாகலானும் சிவபிரானையே அர்ச்சிக்கற்பாற்று.
இவைமூன்று செய்யுளானும் நூனங்கள் அதிக நோக்கி நுகர்வித்தற்கட்படும் விசேடங் கூறப்பட்டது. இத்துணையும் மீமாஞ்சகர் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து இருவினைகளதியல்பு கூறுமுகத்தானும், அவை இறைபணியாமாறு கூறுமுகத்தானும், அவற்றை நாஞ்செய்யுமாறு கூறுமுகத்தானும், அவை பயன்படுமாறு கூறுமுகத்தானும், ‘தாமே மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே’ என்றதனை வலியுறுத்தியவாறு. இனித் ‘தரணியொடு தராபதிபோ’ லென்ற உவமைப் பொருளைத் தெரித்துணர்த்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

மறைகளீ சன்சொல் அச்சொல் வழிவாரா உயிரை வைக்கும்
சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும
உறையும்மா பதிகள் உம்ப ருலகங்கள் யோனிக் கெல்லாம்
இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவ தாகும்.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றான் இருவினை முதலாயின அழிவெய்துவன வாகலானும், இதமகிதங்களெல்லாஞ் சிவபிரானே ஏற்றுக் கோடலானும், அவனே இன்பத் துன்பங்கள் ஈவனென்பது போந்தது. அதுவன்றியும், வேதாகமங்களாவன சிவபிரான் கற்பித்தருளிய வாய்மொழியே, நரகமாவது அம்மொழிவழி நடவாதாரைத் தண்டித்தற் பொருட்டு அவனால் அமைக்கப்பட்ட சிறைக்களமே, துறக்கவுலகமாவது அம்மொழிவழி நடப்போரை வாழ்வித்தற் பொருட்டு அவனால் அமைக்கப்பட்ட கோனகரமேயாகலானும், உயிர்கட்கு இன்பத் துன்பங்கள் அவனாலாகற் பாலனவே.
இயைவதென்னும் ஒருமை அத்தொழின்மேல் நின்றது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை
ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன்
ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி
ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண்.

பொழிப்புரை :

உலகத்து வேந்தர் ஆணையாற் கிளந்த தமதுமொழி வழி நடவாதாரை ஒறுத்துத் சிறைக்களப்படவும் வைப்பர்; அம்மொழி வழி நடப்போரை வாழ்வித்துத் தங்கீழதிகாரமுஞ் செய்ய வைப்பர். அமைச்சர் முதலாயினார் மாட்டு அவ்வாறு காணப்படுமாணையும் அவ்வேந்தர தாணையேயாம். அதுபோல முதல்வன் மாட்டுங் கண்டு கொள்க.
ஈண்டு மறையென்றது, மொழி மாத்திரையையுணர்த்தி நின்றது. ஏகாரம் முன்னையது தேற்றம்; பின்னையது அசைநிலை. இஃது ஒட்டென்னும் அலங்காரம். அற்றேல், அரசனாணை வேறுள்வழி இறைவனாணையே யாண்டுமென்றல் செல்லாதென்பாரை நோக்கி அஃதுணர்த்துதற் கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள்
தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத்
துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம்.

பொழிப்புரை :

அரசதண்டம் வைத்தது, நரகதண்டம் வாராமற் பாதுகாத்தற் பொருட்டாகலானும், நரகதண்டத்தை அறிவுறுத்தற் பொருட்டாகலானும், அவ்வரசனாணையும் முதல்வனாணையின் வழித்தாவதன்றிச் சுதந்திரமன்று.
பாவஞ்செய்யிற் றண்டலின் வைத்துத் தண்டத்துரைசெய்து தீர்ப்பன் நிரயமுன்னீர்மை யீதாமெனவே, புண்ணியஞ் செய்யின் அதற்குரிய வரிசையின் வைத்துத் தீர்ப்பன், அந்தத் துறக்கமுன்னீர் மையீதாமென்பதூஉம் பெற்றாம். நிரயமும் என்னும் உம்மை சிறப்பு. தண்டத் துரைசெய்தலாவது மேலும் பாவஞ்செய்யின், இத்துணையினன்றி இன்னுங் கொடிதாகச் செய்வலென அத்தண்டத்தையெடுத்துச் சொல்லி அச்சுறுத்தல். சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது வருதல் இலேசாற் கொள்க. மோனையெழுத்துக் கேற்பத் தண்டமாகிய துரையைச் செய்தெனினும் அமையும். துரை மிகுதிப்பாடு; அது“என்னுடைய துரைமாண்டவாபாடி” என்பதனானுமறிக. முன் நீர்மை ஏதுப்பெயரோடு முடிந்த வினைத்தொகை. நீர்மையுடையதனை நீர்மையென்றுபசரித்தார்.
இவை மூன்று செய்யுளானுந் தராபதிபோலத் தருமாறு தெரித்துக் கூறப்பட்டது. அற்றேல், பாவமாத்திரையேயன்றிப் புண்ணியத்தையுந் தீர்த்தலெற்றுக் கெனின், அது முன்னர்க் கூறப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின்
இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்
மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன்.

பொழிப்புரை :

வேதாகம நூல்வழி நில்லாமை பாவம், நூல்வழி நின்று அருள்வழி நில்லாமை புண்ணியம். இரண்டும் உயிர்க்கு நோயாகலான் அவற்றாற் பந்த முறாமைப் பொருட்டுச் சிவபிரானாகிய வைத்தியன் இன்பத்துன்பங்களாகிய மருந்தை நுகர்விப்பன்.
இஃது ஏகதேச வுருவகம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா
வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத்
திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன்
உரைத்தநூற் சிவனு மின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன்.

பொழிப்புரை :

வாகடநூல்வழி யொழுகாது தப்பிய வழியொழுக அங்ஙன மான்மிகத்தானும் பௌதிகத்தானும் வரும் பிணிகளை அதற்குத் தக்க மருந்துகளைத் திருத்தியும், தப்பியவழி யொழுகா திருப்பவுந் தைவிகத்தான் வரும் பிணிகளை அவற்றிற்குத் தக்க உபாயங்களிலே செலுத்தியும் தீர்த்திடுவன் மருத்துவன். இவ்வாறே, சிவபிரானும் உயிர்கட்கு வரும் இருவினையைப் பலதிறத்தானு மூட்டித் தீர்ப்பன்.
மேலுருவகஞ் செய்ததனைத் தெரித்துணர்த்தியவாறு. தப்பிய வழியுமென்றவும்மை இழிவு சிறப்பின்கண் வந்தது. திருத்தினனென்பது முற்றெச்சம். நன்மருந்தென்பதூஉம் பாடம். சென்றும் உம்மை இறந்தது தழீஇயிற்று. சென்றுமென்புழி விவ்விகுதி விகாரத்தாற் றொக்கது ; “குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்” என்றாற் போல. அவற்றிற்குத் தக்கவுபாயங்களிலே யென்பது அவாய் நிலையான் வந்தது. அவ்வுபாயங்களாவன தானம் பூசை யோம முதலாயின. செய்யாதென்னும் எதிர்மறை செயவெனெச்சத்திரிபு. அற்றாயினும், துன்பநுகர்ச்சியேயன்றி இன்ப நுகர்ச்சியும் மருந்தோடொக்குமாறு யாங்ஙன மென்பாரை நோக்கி அஃதுணர்த்துதற் கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும்
திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம்
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்
அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன்.

பொழிப்புரை :

அவ்வந்நோய்கட் கேற்ப மருத்துவன் செய்யும் இருவேறு வகையும் மருந்தாதல் உலகத்துக் காணப்படுதலின், அவ்வாறே முதல்வன் நுகர்விக்கும் இன்பத் துன்பம் இரண்டும் மருந்தாதல் உணர்ந்து கொள்க.
இவை மூன்று செய்யுளானுந் தரணிபோலத் தருமாறு தெரித்துக் கூறப்பட்டது. இனி, அண்ணல் அருத்தும் அவ்வின்பத் துன்பங்களை உயிரருந்து முறைமை எவ்வாறென்பார்க்கு ‘இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதா’ மாறு கூறுகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே
யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம்
நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம்.

பொழிப்புரை :

இத்தூலவுடம்பு கழிந்தவழித் தானும் உடன் கழிதலின்றி நிலை பெற்றுள்ளதாகிய சூக்குமவுடம்பினின்றும் அவ்வினைப் பயன்களை அனுபவித்தற்குரிய வெவ்வேறு உடம்புகளுளவாதலான், உயிர்களவ்வுடம்போடு நாதனாராணை செலுத்தச் சென்று துறக்க நிரயத் தின்பத் துன்பங்களை நுகர்ந்து பின்பு அவ்வினைச் சேடம் அனுபவித்தற் பொருட்டுச் சூக்குமவுடம் போடு நிலத்திற் சென்று கருப்பா சயத்தைத் தலைப்படும்.
ஆகியென்பது காரிய காரணப் பொருள்பற்றி வருஞ் செயவெனெச்சத் திரிபு. பொன்விலங்கு போறலின் துறக்கவுடம்பையும் யாதனாசரீர மென்றார். நிலவுலகத்து வரும்போது அணுவாயோனி சேர்ந்திடுமெனவே, துறக்கநிரயங்களிற் செல்லும் போதும் யாதனா சரீரத்தைப் பற்றியே செல்லுமென்பது பெற்றாம். இங்ஙனம் பூதனா சரீரம் போனவழி யாதனாசரீரத்தைப் பற்றுதற்கும் யாதனாசரீரம் போனவழிப் பூதனாசரீரத்தைப் பற்றுதற்கும் காலம் இடையீடில்லை போலுமெனின், அஃதுணர்த்துதற்கன்றே வருஞ் செய்யுள் எழுந்த தென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற்
படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து
கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு)
இடருறும் உருவங் கன்மத் தளவினில் எடுக்கு மன்றே.

பொழிப்புரை :

அவ்வவ்வினைகளது வன்மை மென்மைகட்கேற்பப் பூதனாசரீரம் போயவாறே யாதனாசரீரத்தை யெடாது மற்றுமோர் பூதனா சரீரத்தை யெடுத்தலுமுண்டு; யாதனா சரீரம் போயவாறே பூதனா சரீர மெடாது மற்றுமோர் யாதனா சரீரத்தை யெடுத்தலு முண்டு. இவையெல்லாம் இடைவிடாது நிகழ்தலுமுண்டு; இடைவிட்டு நிகழ்தலுமுண்டு.
உம்மை எதிரது தழீஇயது. பாவப்பயன் கூறவே, இனம் பற்றிப் புண்ணியப்பயனும் அவ்வாறாதல் பெறப்படும். அற்றேல் இறந்த வுயிர்தானே மீளப் பிறக்குமெனின், - உடம்பு முதலியனவும் இறந்தவை தானே மீளத்தோன்றுமெனல் வேண்டும்; அஃதின்மையின், அதுவுமில்லையெனக் கிரீடாப்பிரமவாதி முதலியோர் கூறுங்கூற்றை யாசங்கித்து உவமை முகத்தாற் பரிகரித்தற் கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர்
துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல
உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு
மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல்.

பொழிப்புரை :

முன்னைத் தோல் முதலியவற்றை விட்டுச் சென்று மற்றொன்றைப் பற்றும் பாம்பு முதலியனபோல, உயிர்களும் முன்னுடம்பு விட்டு வானெறிச் சென்று மற்றோருடம்பில் நிலைபெறும், நனவுணர்வு மாறிக் கனவுணர்வைத் தலைப்படுமாறுபோல் அறிவு வேறுபட்டு.
சென்றென்பது சொல்லெச்சம். அறிவு வேறுபட்டென்பது அவாய்நிலையான் வந்தது. நனவு கனவென்பன ஆகுபெயர். பன்னக முதலிய நான்குந் தான் வேறாதலின்றியுந் தன்னுடலும் இடமும் அச்சும் அறிவும் வேறாதற்கும் முறையே உவமையாயின. இவை மூன்று செய்யுளானும் இவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதாமாறு வகுத்துக் கூறப்பட்டது. இவ்வாறு ‘இருவினை யென்னை’ யென்பது முதற் ‘பன்னகம் அண்டசம்’ என்பதீறாகக் கிடந்த முப்பத்து நான்கு செய்யுளும், ‘இருவினை இன்பத்துன்பத்’ தென்னும் மேலைச் செய்யுளிற் கூறிய பொருள்களை அவ்வம்மதம் பற்றி யாசங்கித்துப் பரிகரித்து வலியுறுத்தி வகுத்துக் கூறினவெனக் காண்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

தன்மமோ டதன்ம மாகித் தானிரு பயனுந் தந்து
நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண
முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக்
கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்.

பொழிப்புரை :

இத்துணையுங் கூறியவாற்றாற் போந்த கன்மம் எனப்படுவது, சதசத்தாற் செய்யப்படுதலின், அறம் பாவமென்றிரு வகைத்தாய் இருவகைக்குமுரிய பயன் தருதலாற் செயப்படு பொருளாகிய தனக்கு முதற்காரணம் உண்டென்பது காட்டிக் கான்மிய மலமெனப்பட்டுப் பந்தமுறுத்துதல் ஒப்புமையான் மும்மலத்துள் ஒன்றென உடன்வைத் தெண்ணப்பட்டுக் காரண ஏதுவானுங் காரிய ஏதுவானும் அனுமித்தறியுமாறு நிற்கும்.
மூலகன்மங் காரியமாய்ப் பரிணமித்தன்றிப் பயன் தாராமையின், ஏனைய போல வேறு வைத்தெண்ணப்படாதாயிற்று. உம்மை சிறப்பு. கான்மியம் காமியமென மரீஇயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம்
வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத்
தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி
அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும்.

பொழிப்புரை :

அவ்வினைதான் நாசோற்பத்தி பண்ணப்பட்டுச் சந்தானமாய் வருதலாற் காரியப் பிரபஞ்சம்போல் ஆதியந்த முடைத்தாயும் பிரவாகாநாதியாய் ஏனையிரு மலங்களின் காரியங்களோடு கூடி உயிரைப் பந்தித்துத் தனது காரிய வேறுபாட்டிற்கேற்ப அவ்வுயிர்க்குப் பல வேறுவகைப்பட்ட யோனிகளைத் தோற்றுவித்துச் சூக்குமமாய் நின்று இறைவன் ஆணையின் நடக்கும்.
அரன்தன் ஆணையினமர்ந்து செல்லுமென்றது முடிந்தது முடித்தல். இவை இரண்டு செய்யுளானும் அவ்விரு வினையின் சொரூபம் இதுவென்பது கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா
அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின்
இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம்
அங்குவான் சுரர்க ளாயோ நரர்க ளாய் அருந்து வாரோ.

பொழிப்புரை :

வினைக்கீடாக அவ்வவ்வுயிர் அவ்வவ் யோனியின் மாறிப் பிறத்தலன்றி அச்சுமாறி மற்றொரு யோனியிற் பிறத்தலில்லை யென்பார்க்குக் கன்ம நுகர்ச்சியாமாறு யாங்ஙனம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம்
சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும்
சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது
நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே.

பொழிப்புரை :

கன்ம நுகர்ச்சிக்கண் இம்மை மறுமைகளது இயல்பறிய வல்லார்க்கு அச்சுமாறுதல் உண்மை இனிது விளங்கும்.
அற்றேல், நரர்வடிவு முதலாயின சுரர்வடிவு முதலியனவாய் வேறுபடும் வழியும் அவ்வவாகாரம் மாறுதலில்லையெனக் கொள்வார்க்கு அதுபற்றி இழுக்கென்னை யென்பாரை நோக்கி வேறுமெடுத்துக் காட்டுதற் கெழுந்தது வருஞ்செய்யுள் என்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப்
பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும்
கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே
கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீகொண்ட தெங்கே.

பொழிப்புரை :

இம்மையிலும் வண்டு முதலியன அச்சுமாறுதல் கண்கூடா யறியக் கிடத்தலானும், இஃதெல்லாச் சமய நூல்கட்கு மொப்ப முடிந்ததாகலானும், அக்காட்சி யளவையோடும் உரை யளவையோடும் முரணிக் கூறுவார் கூற்றுப் போலி.
அற்றாயினும், வண்டு முதலியனவற்றின் அவ்வச்சே பிறிதொன்றாய்ப் பரிணமிப்பதன்றி அஃதழிந்து வேறு தோன்றுவ தன்றாகலான், அவற்றை ஈண்டெடுத்துக் காட்டுதல் அமையாதென் பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுள் என்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான்
பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு
நிகரிலா அரச னாகும் சிலந்திநீ டுலகம் போற்றச்
சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே.

பொழிப்புரை :

அச்சு அழிந்தே மாறுதலும் அகலியை முதலியோர் மாட்டுக் கேட்கப்படுதலான் யாண்டுமவ்வாறே தெளியப்படும்.
அகலியை முதலியோர்க்கு அங்ஙனம் மாறியதுஞ் சாபவருள்க ளானாயதன்றிக் கன்ம மாத்திரையானாய தன்றாகலான், அதுவே பற்றி யாண்டுமவ்வாறு கோடல் பொருந்தா தென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால்
வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின்
எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே
முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும்.

பொழிப்புரை :

மறைகள் ஈசன் சொல்லென்பது முதலாக மேற்கூறிப் போந்தமையின், வினைப்பயனெனப்பட்டன வெல்லாம் முதல்வனுடைய சாப அருள்களேயாகலின் விசேடமின்மையான் ஓரிடத்திற் கண்டது யாண்டுமொக்கும்.
விதியென்றுது ஈண்டுச் சாப அருட்கண்மேற்று.
இவை ஐந்து செய்யுளானும் மீமாஞ்சகரில் ஒருசாரார் மதம் பற்றி ஆசங்கித்துப் பரிகரித்துத் ‘தான்பல பேதங்காட்டி’ யென மேற்கூறியது சாதிக்கப்பட்டது. அற்றேல் நோக்கிற்றை நோக்கி நிற்கும் உயிர் மற்றோரச்சினைப் பற்றுதல் யாங்ஙனஞ் செல்லும் என்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும்
செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா
இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த
எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே.

பொழிப்புரை :

மாயை வினைகளைக் காரியப்படுத்தி உயிர்க்குச் சேர்த்துவான் இறைவனேயென்பது மேற் பாரிசேட அளவையாற் பெறப்பட்டமையின், அஃது உயிர் முதலியவற்றின் செயலன்மையான் இறைவன் செய்த அச்சை இறைவன் மாற்றுதற்கண் ஆசங்கை யென்னை.
இவ்வென்பது வகரவீற்றுப் பலவறிசொல். இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது. அற்றேல் இவ்வாறு அச்சு மாறித் தோன்று மாயிற் சற்காரியவாதத்திற்கு இழுக்காம் போலும் என்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில்
கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின்
வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும்
தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும்.

பொழிப்புரை :

செய்வானதாற்றலான் ஒரு பொன் வெவ்வேறணி கலங்களாய்ப் பரிணமிக்குமாறு போல, இறைவன தாற்றலான் ஒரு சூக்கும உடம்பு வெவ்வேறு அச்சுக்களாய்ப் பரிணமித்துத் தோன்றுதல் உண்மையின், ஆண்டுச் சற்காரியவாதத்திற் கிழுக்கில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 48

சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின்
ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு)
ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று
நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல்.

பொழிப்புரை :

அங்ஙனஞ் சூக்கும வுடம்பினின்றும் இத்தூலவுடம் பெல்லாம் வருவது, ஆரம் வீரசங்கிலியானாற் போல ஒன்று பிறிதொன்றாவதுமன்று, வித்து மரமானாற் போல ஒன்று கெட்டு ஒன்று தோன்றுவதுமன்று, மதிக்கெழு கலைகள்போல ஒன்றின்கண் ஒன்று கிடந்து தோன்றுவதுமன்று ; மற்றென்னை யெனின், - மரவேரின் மற்றொரு மரம்போலச் சூக்குமவுடம்பில் தூலவுடம்புகள் சத்திரூபமா யிருந்து தோன்றுவன.
சற்காரியமாதற்கட்படும் விசேடங் கூறியவாறு. யோக்கியம் ஓக்கியமென மரீஇயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 49

விதிப்படிச் சூக்கு மத்தே உருவமும் வினையா லிங்கே
உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில்
கதிக்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க
மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே.

பொழிப்புரை :

மரந்தோன்றுதல் வித்தையின்றி யமையாதவாறு போல, அத்தூலவுடம்பு தோன்றுதலுந் தனக்கொரு முதலில்வழிக் கூடாதென்னும் அருத்தாபத்தியால் அஃதுண்டென்பது அறியப்படும்.
சூக்கமவுடம்புண்மைக்குப் பிரமாணங் கூறியவாறு. ஆண்டுத் தோன்றும் ஆசங்கையை நீக்குதற்பொருட்டு மதிக்கெழு கலைகள் போல வருவதுபோவதாமெனவு முடன்கூறினார். அற்றேல், தூல வடிவுக்குக் காரணம் ஐம்பெரும்பூதமே யமையும். சூக்குமவடிவு எற்றுக்கெனின், - அறியாது கூறினாய் ; சற்காரிய வாதத்தில் தூலப் பொருட்குக் காரணஞ் சூக்குமமேயாவதன்றிப் பிறிதில்லை யெனவும், அச்சூக்கும வுடம்பாவது சூக்கும பூதமெனப்படுந் தன்மாத்திரையான் இயன்ற வடிவாகலின், அதன் காரியமாதல்பற்றியே தூலவுடம்பை ஐம்பெரும் பூதவடிவென்பதெனவும் தெற்றெனவுணர்ந்து கொள்க. உருவருமரங்கள் வித்திற் கதித்தெழுமென்பது எடுத்துக்காட்டுவமை. மரமும் வித்துங் கழியுமென்பதுமது. அழியுஞ் சூக்கும மென்னி லென்று உரைத்துக் கொள்க. சூக்கம் பாகதச்சிதைவு.
இவை மூன்று செய்யுளானுஞ் சூக்குமவுடம்பு முதற்காரண மாமாறுணர்த்தித் தான் பலபேதங் காட்டுதல்பற்றிச் சற்காரிய வாதத்திற்கு இழுக்கின்மை கூறப்பட்டது. அற்றேல், இப்பெற்றித்தாகிய சூக்குமவுடம்புக்கு மூலம் வேறில்லை போலுமெனின், அவ்வாசங்கை நீக்குதற்கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 50

தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு
மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான்
மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம்
சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது.

பொழிப்புரை :

தூலவுடம்பிற்கு முதற்காரணஞ் சூக்குமவுடம்பு ; அதற்கு முதற்காரணம் மூலப்பகுதி ; அதற்கு முதற்காரணம் மோகினி. அதுவே பரமமுதற்காரண மெனப்படும். ஏனைக்குண்டலினி சத்தியோவெனின், அது சுத்தமாய் இவையனைத்திற்கும் வியாபகமாய் நிற்கும். இவ்விருவகைப் பிரபஞ்சமும் ஆன்மாச் சிவத்தினைச் சார்தற்கேதுவாகிய பக்குவகாலஞ் சாலுதற்பொருட்டு இப்பெத்த காலத்துளவாவன.
அதன்முதற் றானென்பது அம்மூலப்பகுதிக்கு முதலாகிய தானென இருபெயரொட்டுப் பண்புத்தொகையாய் மோகினியின் மேல் நின்றது. அதன் முதற் றானென்றனுவதித்து மேலதாமெனப் பரமமுதற் காரணமாதல் கூறப்பட்டது. இவ்வாறன்றி முதலென்றதனை எழுவாயாக வைத்துரைப்பார்க்கு றகரமிரட்டித்தல் பொருந்தாமையுஞ் சித்தாந்தத்திற்கு ஏலாமையுமுணர்க. சிவமென்றது முன்னையது சுத்தமென்னும் பொருட்டு. சாலவாகுமென வியையும். சாலுதல் அமைதல். சார்ந்தவென்னும் பெயரெச்சம் ஏதுப்பெயர் கொண்டது. இதனானே மேலதன்கண் நிகழும் ஆசங்கை நீக்கி வருஞ் செய்யுட்குத் தோற்றுவாயுஞ் செய்யப்பட்டது. ‘இருவினை யின்ப’ வென்னுஞ் செய்யுள் முதல் இதுகாறும் முதற்செய்யுளின் ‘அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையினமர்ந்து செல்ல’ என்ற இரண்டாங் கூற்றை வலியுறுத்தியவாறு.
இனி, இருபத்திரண்டு செய்யுளான் மூன்றாங் கூற்றின்கட் படும் முறைமையெல்லாந் தெரித்துணர்த்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 51

அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே
தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம்
வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப்
பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும்.

பொழிப்புரை :

எல்லாஞ் சிவத்தினைச் சார்ந்தபோது சாலவின்றாத லாகிய அதுவும் இலயம் போகம் அதிகாரமென்னும் அவத்தைகளினின்ற இறைவன் செய்யுஞ் செய்தியென்றும் அது கருணையே யென்றுந் தொகுத்தும் வகுத்தும் மேலே கூறிப்போந்தாமாகலின், அத்தனுகரணாதிகள் மலகன்மங்களாகிய நோய்க்கு மருந்தாக அவனால் அமைக்கப்பட்டன; அவற்றால் அந்நோய் தீர்ந்தவழிப் பரஞானத்தை விளக்கிச் சிவானந்தப் பெரும்பேறும் அவனால் தரப்படும்.
கதியென்பது ஞானத்தினையுணர்த்தல் வடமொழி மதம். முன்னே யறைந்தனம் என்றதனால் அமர்ந்து செல்லத் தலைவனாதற்கட்படும் இயல்பெல்லாம் ஈண்டே கூறற்பாலன வாயினும், ஒவ்வோரியைபு பற்றி ஆண்டாண்டு ஒருங்கு வைத்தோதப்பட்டன. அவையெல்லாம் ஈண்டுய்த் துரைத்துக் கொண்டுணர்க என்பதூஉமாயிற்று. மாயாகாரியமெல்லாஞ் சிவத்தினைச் சார்தற் பொருட்டாமாறு யாங்ஙன மென்னும் ஆசங்கையை நீங்குதற் பொருட்டு அநாதி மலங்களிம் மருந்தாற்றீர்த்துப் பரகதியதுவுந் தந்து பாதபங்கயமுஞ் சூட்டு மென்றார். மலந்தீர்க்கு முகத்தால் அவையங்ஙனமா மென்றவாறாயிற்று. “இலனென்று தீயவை செய்யற்க” என்றாற் போல அன் ஈறு ஈண்டு தன்மைக் கண் வந்தது. மேல் இன்பத்துன்ப மருத்தியே வினையறுப்பனென்ற ஆசிரியர், ஈண்டு மாயாகாரியங்களை மருந்தென்றல் மலைவாம் போலுமெனின், - ஆகாது ; நோய் தீர்தற்கு ஏதுவாயின வெல்லாம் மருந்தெனப்படுமாகலின், அது “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் - றப்பானாற் கூற்றே மருந்து” என்பதனானுமறிக. இஃது ஏகதேசவுருவகம். இதனானே மேற்கூறிப் போந்த தூலம் சூக்குமம் மான் மோகினி விந்துவெல்லாம், மருத்துவனுக்கு மருந்துபோல, மலவயித்தியனாகிய அரனுக்குப் பரிக்கிரக விபூதியால் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற்
கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில்
செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை
முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன்.

பொழிப்புரை :

அழுக்கைக்கொண்டு அழுக்கை நீக்க வேண்டுதலின், மாயேயமலம் ஏனை மலங்கட்கு மருந்தாகக் கூறப்பட்டது.
மலம் அழுக்கு என்பன ஒருபொருட்கிளவி. இதனானே மேலது வலியுறுத்தப்பட்டது. இனி, அம்மாயை மாயேயங்களது இயல்பாவது என்னையென்பார்க்கு, அதனை வகுத்துக் கூறுவான் தொடங்கினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே.

பொழிப்புரை :

உலகிற்கு முதற்காரணம் எனப்படும் மாயையாவது நித்தமாதல் முதலிய இலக்கணங்களை யுடையது.
மாயையின் சொரூபங் கூறுவார், புவனபோகந் தனுகரணமும் உயிர்க்காயென்றும், அதுவும் மாத்தியமிகர் மதம்பற்றிச் சூனியத்திற் செல்லாமைப்பொருட்டு உலகத்திற்கோர் வித்துமா யென்றும், அதுவும் கணிக வாதிகள் மதம்பற்றிச் சார்பினிற் செல்லாமைப் பொருட்டு நித்தமாயென்றும், அதுவும் உலோகாயதர் மதம்பற்றி பூதங்களிற் செல்லாமைப்பொருட்டு அருவாயென்றும், அதுவும் வைசேடிகர் முதலியோர் மதம்பற்றிப் பரமாணுக்களிற் செல்லாமைப் பொருட்டு எங்கும் வியாபியாயென்றும், அதுவுஞ் சாங்கியர் மதம்பற்றி முக்குணங்களிற் செல்லாமைப் பொருட்டு ஏக நிலையதாயென்றும், அதுவும் பாற்கரியர் மதம்பற்றிப் பிரமத்திற் செல்லாமைப்பொருட்டு விமலனுக்கோர் சத்தியாயென்றும், அதுவும் சிவாத்துவித மதம்பற்றிச் சிற்சத்தியிற் செல்லாமைப்பொருட்டு அசித்தாயென்றும், அதுவும் மாயாவாதி மதம்பற்றி அநிருவசனத்திற் செல்லாமைப்பொருட்டு வைத்ததோர் மலமாயென்றும், இத்தன்மைத்தாகிய மாயை ஆணவமலம்போல மயக்கமே செய்யுமென்னுஞ் சைவருள் ஒரு சாராரை மறுத்தற்பொருட்டு மயக்கமுஞ் செய்யுமென்றுங் கூறினார். செய்யுளாகலின் முறை பிறழ வைக்கப் பட்டன. ஈண்டு மயக்கமென்றது விபரீத உணர்வை. மயக்கமும் என்னும் உம்மை, அது தன்னியல்பன்மை யுணர நின்றது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 54

மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும்
ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக்
காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி
நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம்.

பொழிப்புரை :

அத்தன்மைத்தாகிய மாயையினின்றுங் கால முதலிய தத்துவங்களுளவாம். அவற்றுட் காலமாவது முதல்வனாணை முத்திறப்பட்டுத் தனக்குக் கீழுள்ள காரியப் பிரபஞ்சம் அனைத்தையுங் காலவரையறையிற் படுத்திக் கன்மத்தை வரைசெய்து நிற்கும்.
எண்ணும்மை முன்னருஞ் சென்றியையும். நாயகன் ஆணையாலே என்பதனைத் தத்துவாதிகார முழுதினும் உய்த்துரைக்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 55

நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும்
அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின்
செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை
உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும்.

பொழிப்புரை :

நியதிதத்துவம் அக்காலத்தின் பின்னாக மாயையி னின்றுந் தோன்றி அவரவர் செய்த கன்மம் அவரவரே நுகருமாறு நியமிக்கும். அதன்பின் அம்மாயையினின்றே கலைதோன்றி ஆணவத்தை ஏகதேசத்தின் நீக்கி ஆன்மாவின் கிரியா சத்திரியை விளக்கி வினைக்கீடாக வரும் போகத்திற் செலுத்தி நிற்கும். அக்கலையினின்றும் வித்தை தோன்றி அவ்வான்மாவினது ஞானசத்தியை ஏகதேசத்தில் விளக்கி அதன்கட் செலுத்தி நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 56

விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண்
இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும்
வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா
நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே.

பொழிப்புரை :

அவ்வித்தையினின்றும் அராகந் தோன்றி இச்சாசத்தியை விளக்கி அப்போகத்திற் செலுத்தி நிற்கும். இவ்வாறு கலை முதலிய மூன்றுந் தொழின் முதலிய மூன்றனையும் விளக்கியவழி, கன்மத்தை வரையறுத்தலும் நியமித்தலுஞ் செய்யுமுகத்தான் உபகரிப்பனவாய காலநியதிகளும் உளப்படப் பஞ்சகஞ்சுகமுடைய உயிர், அவ்விச்சை முதலிய மூன்றனையும் ஏகதேசத்தின் மருவிப் பொதுவகையாற் புருட தத்துவமெனப் பெயர்பெற்று அப்போகத்தி லுன்முகமாய் நிற்கும்.
சிறப்பு வகையாற் புருடதத்துவமென நிற்றல் மூலப்பகுதியிற் றோன்றும் அவிச்சை முதலிய பஞ்சக்கிலேசமும் உடைத்தாய வழியே என்பார், ஈண்டுப் பொதுமையின் நிற்பனென்றார். போகத் துன்முகமாகிய உயிரே புருட தத்துவமென நிற்பதன்றி வேறில்லை யென்ப துணர்த்துவார், நிச்சயம் புருடனாகி என்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 57

வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித்
தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும்
இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப்
பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே.

பொழிப்புரை :

அதன்பின் மூலப்பகுதி கலையினின்றும் அவ்வியத்த குண வடிவாய்த் தோன்றித் தன்கணின்றும் வியத்தமாய்த் தரப்படுங் குணதத்துவஞ் சாத்துவிக முதலிய மூவகையாய் அவற்றுளொவ்வொன்று முத்திறப்பட்டு ஒன்பது வகையாம். போகத்திற்குச் சாதனமாய தன்கட்டோன்றும் புத்தி முதலிய தத்துவங்களும் குணவடிவேயாய் உயிரைப் பந்திக்கும். அதனாற் போகநுகரும் இடமெங்கணும் உயிரும் அக்குண ரூபமாய் நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 58

சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ்
புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப்
பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்.

பொழிப்புரை :

குணதத்துவத்திற்குக் காரணமெனச் சித்திக்கப்பட்ட மூலப்பகுதி, அக்குண தத்துவத்தைத் தோற்றுவித்தலேயன்றி, விபரீதவுணர்வுடையதாகிய அவிச்சையினையுந் தோற்றுவிக்கும். அதன் பின்பு புத்திதத்துவம் அந்தக் குணதத்துவத்தினின்றுந் தோன்றி அவ்வவ்வுயிர்கள் செய்த புண்ணிய பாவங்கள் தன்பாற் சாரப்படுதலும், அவ்விருவினைக்கீடாக வந்த விடயத்தை இஃதின்னதென நிச்சயித்தலும், நிச்சயித்தபின் சுகதுக்கமோக் வடிவாய்ப் பரிணமித்தலும், பரிணமித்த வழி உயிரின் அறிவு தொழில்கட்கு விடயமாதலு முடைத்தாய் நிற்கும்.
‘சித்தமாம் அவ்வியத்தஞ் சிந்தனையதுவுஞ் செய்யும்’ என்பதனைச் சித்தத்தின்மேல் வைத்துரைப்பாருமுளர். “சிந்தை நினைவையம் வந்துதருமனமொழிய வகுப்பொணாதே” எனப் புடைநூலாசிரியர் ஓதுதலின், மனத்தின் பின்னதாயதன்கண் அடங்குஞ் சித்தத்தை ஈண்டுக் கூறுதற்கோரியைபின்மையானும், புடைநூலாசிரியர் அவ்வாறோதாமையானும், சிவாகமங்களோடு முரணுதலானும், அவ்வுரை போலியென்றொழிக. ஈண்டுச் சிந்தனையென்றது ஏற்புழிக்கோடலான் விபரீதவுணர்வின் மேற்றாயிற்று. உம்மை இறந்தது தழீஇயது. கன்மாலென்றாற்போல வியத்தமென்பது அம்முக்கெட்டு உருபேற்று வியத்திலென நின்றது. அகரம் சுட்டுப்பொருட்டு. சார்ந்து சாரப்பட்டு. பேணி பேணப்பட்டு. பித்துப்போல உயிரை மயக்குதலாற் சுகதுக்க மோகங்களைப் பித்தென்றார். மயங்குதல் ஈண்டுப் பரிணமித்தல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 59

ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய்
ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே
நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர்
பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே.

பொழிப்புரை :

அப் புத்திதத்துவத்தினின்றும் அகங்காரத் தத்துவந் தோன்றி, என்னோ டொப்பாரில்லையென அகந்தைப் படுதற்குக் காரணமாய் வாயிற்காட்சிக்கு விடயமாய்த் தோன்றிய தொன்றதனை இஃதின்னதென்று புத்திதத்துவம் நிச்சயிக்கும்படியாக யானென்றும் எனதென்றும் அதன்கண் ஒருப்பட்டெழுந்து ஆன்மாவோடும் வேற்றுமையின்றி நிற்கும். அதுவுங் குணவேற்றுமைபற்றிப் பூதாதி முதலிய வேறுபாட்டான் முத்திறப்படும்.
அகங்காரம் ஆங்காரமென மரீஇயிற்று. நீங்காது நிற்குமெனவே, அது கலைபோல வினைமுதற்காரகமென்று உபசரிக்கப் படுமென்பதாயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 60

மனமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி
நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே
இனமலி தோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம்
முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர்.

பொழிப்புரை :

அம்மூன்றனுள், தைசத அகங்காரத்தினின்றும் மனந்தோன்றி எதிர்ப்பட்டதொரு விடயத்தை இஃது யாதாகற்பாற் றெனச் சித்தரூபமாய் நின்று சிந்தித்தும், பின்னதன்கண் ஐயுற்று நிச்சயித்தற்கண்ணதாகிய வேட்கையை விளைத்தும் நிற்கும் ; மனத்தின் பின்னதாக ஞானேந்திரியங்களும் அத்தைசத அகங்காரத்தினின்றே தோன்றும். ஏனை வைகரி யகங்காரத்தினின்றுங் கன்மேந்திரியம் ஐந்துந் தோன்றும்.
சோத்திராதி தோன்றுமெனச் சொல்லெச்சம் வருவித் துரைக்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 61

நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர்
புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச்
சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும்
வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே.

பொழிப்புரை :

அவ்விருவகை இந்திரியங்களுள் ஞானேந்திரியங் களாவன சோத்திர முதலிய ஐந்துமாம். அவற்றிற்கு விடயமாவன முறையே சத்தமுதலிய பூதகுணம் ஐந்துமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து
நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே
ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம்
ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே.

பொழிப்புரை :

ஏனைக் கன்மேந்திரியங்களாவன வாக்கு முதலிய ஐந்துமாம். இவை தொழில் செய்யுங் கருவியாகலின் ஞானேந் திரியங்களின் வேறாக வைத்துக் காணப்படும். இவற்றின் தொழிலாவன முறையே வசன முதலிய ஐந்துமாம்.
அற்றேல், ஆன்மாவின் ஞானக் கிரியைகளை விளக்குதற்கு இந்திரியம் அந்தக்கரணங் கலாதியென்னும் முத்திறத்துள் ஒன்றே யமையுமாகலின் ஏனைய மிகையாம்போலுமெனின், அஃதுணர்த்து தற்கெழுந்தது வருஞ் செய்யுள் என்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 63

வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும்
ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும்
ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர்
மாயாள் தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா.

பொழிப்புரை :

அவ்விருவகை இந்திரியங்களும் ஒன்றனை விடயிக்கலுறுவார்க்கு உடம்பின் புறத்தே தோன்றி விடயிக்கும் புறக்கருவிகள் ; மனமுதலாயின அவ்விந்திரியங்களால் தரப்பட்ட விடயத்தை உடம்பின் அகத்தே நின்று விடயிக்கும் உட்கருவிகள்; ஏனைக் கலாதிகளாவன அவ்வந்தக்கரணங்களான் விடயிக்கப்பட்டு வந்த பயனை ஆன்மாவின் இச்சாஞானக்கிரியைகட்குப் பொருத்துவனவாய உள்ளந்தக்கரணங்களாம்; இவை தம்முள் வேற்றுமையாகலின் இம்முத்திறக் கருவிகளும் ஒருதலையான் வேண்டப்பட்டு உயிரைப் பந்தித்து நிற்கும்.
மாயாளெனப் பெண்பாலாகக் கூறியது வடமொழி மதம் பற்றி; உருவகஞ் செய்தற் பொருட் டெனினுமாம். ஓயாமை மனத்துக்கடை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 64

ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று
பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின்
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்
ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான்.

பொழிப்புரை :

அவ்விருவகை இந்திரியங்களுந் தோன்றியபின் ஏனைப் பூதாதி யகங்காரத்தினின்றுஞ் சத்த முதலிய தன்மாத்திரை ஐந்துந் தோன்றி அவ்விந்திரியங்கள் தத்தம் விடயங்களை விடயிக்குமாறு ஊக்கஞ் செய்வித்து உடனிற்கும். இத் தன்மாத்திரைகள் ஐந்தும் அந்தக் கரணங்கள் மூன்றுமாகிய எட்டுங் கூடிப் புரியட்டக உடம்பா மென்றறிக.
மாத்திரையென்றது தலைக்குறை. விடயவடிவாகிய சத்தாதி கட்குந் தன்மாத்திரை வடிவாகிய சத்தாதிகட்குந் தம்முள் வேற்றுமை காணமாட்டாதாருக்கு வேற்றுமை காட்டுவார், மனாதி தன்மாத்திரை புரியட்டகமென்பதூஉ முடன் கூறினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன் றங்(கு)
ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும்
ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே.

பொழிப்புரை :

அச் சத்த முதலிய தன்மாத்திரைகள் ஐந்தினும் நின்று முறையே ஆகாய முதலிய தூலபூதம் ஐந்துந் தோன்றி அவற்றுடன் பிரிப்பின்றி முறையே ஒன்றற்கொன்றேற்றமாகிய சத்த முதலிய குணங்கள் வியத்தி ரூபமாக உடையனவாய் நிற்கும். இவ்வைம்பெரும் பூதங்கள் தன்மாத்திரையோடு கூடி நின்று இந்திரியங்களின் தொழிற்பாட்டை யூக்குதற்கு இவற்றின் காரிய பூதங்களாகிய தாத்துவிகங்கள் அறுபதும் அங்காங்கி முறைமையவாய் உடனிற்கும்.
ஆற்றுதல் வல்லுதல். விடயமென்றது ஈண்டுக் காரியமென்னுந் துணையாய் நின்றது.
இவை பதினான்கு செய்யுளானுந் தத்துவங்க ளொன்றினொன்று தோன்று முறைமையும் அவற்றின் தொழிற்பாடும் பயனுந் தாத்து விகங்களதியல்புங் கூறப்பட்டன. இந்தத் தத்துவங்களெல்லாம் அகமும் அகப்புறமும் புறமுமென மூவகைப்படும் ; அவற்றுள் பூதங்களின் வைத்துப் புறப்பூதங்களிற்படும் விசேடங் கூறுகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 66

இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப்
பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும்
நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும்
உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே.

பொழிப்புரை :

ஆகாய முதலிய ஐம்பெரும் பூதங்கள் முறையே வெளியாதல் இடங்கொடுத்தன் முதலிய குணமுந்தொழிலும் உடையன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

மண்புனல் அனல்கான் வான்பால் வடிவுநாற் கோண மாகும்
தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம்
வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூம வன்னம்
எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே.

பொழிப்புரை :

அவை நிலமுதலாகக் கொண்டு முறையே நாற்கோண முதலிய ஐவகை வடிவும் பொன்மை முதலிய ஐவகை நிறங்களும் லகர முதலிய ஐவகைப் பீசங்களுமாகிய இவையுமுடையன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி
அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி
செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம்
நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை.

பொழிப்புரை :

வச்சிர முதலிய அடையாளம் ஐந்தும் அயன் முதலாகிய அதிதெய்வம் ஐந்துமாகிய இவையும் அப்பூதங்கள் முறையே யுடையனவாம்; இவை நிவிர்த்தி முதலிய கலைகட்கும் இவ்வாறே கூறப்படும்.
இவை மூன்றுசெய்யுளானும் புறப்பூதங்கள தியல்பு வேறெடுத்துக் கொண்டு வகுத்துக் கூறப்பட்டது. ஏனை யகப்பூதங்கள தியல்பு ‘நேச இந்திரியங்கட்கு நிகழறிவிதனாற் காண்டு’ மெனவும், அகப்புறப் பூதங்களதியல்பு ‘ஆசைசேர் மனாதி தன்மாத்திரை புரியட்டகந்தா’ னெனவும், சூக்கும பூதமாகிய தன்மாத்திரைக் கோதியவாறு பற்றி அறியக் கிடந்தன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 69

சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும்
இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத்
தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து
சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில்.

பொழிப்புரை :

இயைபுபற்றி மேலைச் சூத்திரத்துட் கூறிப்போந்த சுத்த தத்துவங்கள் ஐந்துடன் ஈண்டுக் கூறிய தத்துவ முப்பத்தொன்றும் உளப்படத் தொகையான் முப்பத்தாறு தத்துவமாம். இவற்றுள், முன்னைய ஐந்துஞ் சடமாயினுஞ் சிற்சத்திக்குச் சுதந்திர வடிவாகலிற் சைதன்னிய மெனப்படும்; ஏனை முப்பத்தொன்றனுட் புருட தத்துவஞ் சார்ந்ததன் வண்ணமாய்ச் சித்தசித்தெனப்படும்; அஃதொழிந்த முப்பதும் அசித்தெனவேபடும்.
சித்தசித்தென்றது தமிழ் நூலின் முடிபு. இதனான் மேற்கூறிப் போந்த தத்துவங்களுக்குத் தொகையும் அவற்றதியல்புங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந்
தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு
வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு)
அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே.

பொழிப்புரை :

இத்தத்துவம் முப்பத்தாறனுள், முன்னைந்தும் நடுவண் ஏழும் பின்னிருபத்து நான்கும், முறையே சுத்தம் மிச்சிரம் அசுத்த மெனவும், பிரேர காண்டம் போகசயித்திரு காண்டம் போக்கிய காண்டமெனவுங் காரணக்குறி பெற்று முத்திறப்படும்.
முன்னைய ஐந்துஞ் சுத்தமாதல் மேற்கூறிப் போந்தமையின் ஈண்டு அனுவதித்தொழிந்தார். போகசயித்திருவென்னும் வடசொல்லினுள் உகரமும் அதனோடென்பதனுள் அன்சாரியையும் விகாரத்தாற்றொக்கன. அது பகுதிப்பொருள் விகுதி. இவை காரணக் குறியாமாறு உய்த்துணர்ந்து கொள்க. இதனானே அம்முப்பத்தாறு தத்துவமும் மூவினமாதல் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 71

தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம்
தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும்
தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில்
தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண்.

பொழிப்புரை :

அருவுமுருவும் அருவுருவுமாயுள்ள காரியப் பிரபஞ்சம் அனைத்தும் இத்தத்துவ வடிவேயாம். இம்முப்பத்தாறுந் தூலதத்துவஞ் சூக்குமதத்துவம் அதிசூக்கும தத்துவமென ஒரோவொன்று மூவகைப்பட்டுப் பொதுவும் பொதுச்சிறப்புஞ் சிறப்புமாய் நிற்கும். இத்தன்மையவாய தத்துவங்களை யதிட்டிக்கும் அணுபக்க சம்புபக்கத்து அதிதெய்வங்களும் அவ்வத் தத்துவப் பெயர் பெறுமாகலான் எல்லாப் பொருளையுந் தத்துவங்களின் வைத்துக் காண்க.
எனவே, இத்தத்துவம் முப்பத்தாறும் உணர்ந்தானுக்கு எல்லாப் பொருளும் இனிது விளங்குமென்பதாயிற்று. இச்செய்யுளிற் கூறிய பொருளனைத்துஞ் சிவாகமங்களின் விரித்துணர்ந்து கொள்க. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப. இதனானே தத்துவங்கள் ஒருதலையான் உணரற்பாலன என்பது கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 72

தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும்
வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும்
நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற
சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும்.

பொழிப்புரை :

இம்முப்பத்தாறு தத்துவங்களுஞ் சங்கார காலத்துத் தத்தங் காரணங்களின் ஒடுங்கும் வழி, நிலமுதன் மூலப்பகுதி யீறாகிய இருபத்துநான்கு தத்துவங்களுஞ் சீகண்ட ருத்திரனாலொடுங்கும்; மூலப்பகுதிக்கு மேலுள்ள ஆறு தத்துவமும் வித்தை ஈசராகிய அனந்தராலொடுங்கும் ; அவற்றின் மேலுள்ள சுத்ததத்துவம் முதலிய மூன்று தத்துவமும் இலயத்தினின்ற சிவனாலொடுங்கும்; ஏனைச் சத்தி தத்துவஞ் சிவதத்துவம் இரண்டுஞ் சுத்த சிவனால் ஒடுங்கும்; இவை புநருற்பவமாங்காலும் அவ்வவை அவ்வவராலாம். இவருட் சுத்தசிவன் ஒருவனே நித்தியன்; ஏனை மூவரையும் அவ்வாறு நித்தியர் என்பாருமுளர் ; அஃதுபசாரமே.
மூலப்பகுதிக்குங் குணதத்துவத்திற்குந் தம்முள் வேற்றுமை அவ்வியத்தமாதலும் வியத்தமாதலு மாத்திரையே யன்றி ஏனைய போலப் பரிணாம விசேடமின்மையின், அதுபற்றி அவை இரண்டனையும் ஒன்றாக வைத்தெண்ணினார். ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபு ஏனையிடங்களினும் விரித்துரைக்க. ஆன்மாவுக்கு அதிதெய்வமாகிய தத்துவம் ஆன்ம தத்துவமென உருத்திரனுக்குப் பெயராயிற்று. ஈண்டான்மாவென்றது ஏற்புழிக்கோடலாற் சகல வர்க்கத்தின்மேல் நின்றது. தத்துவமென்பது பொதுச்சொல். ஆன்ம தத்துவம் வித்தியாதத்துவம் சிவதத்துவமென அவ்வக் காரணக் கடவுளர் பெயர் இயைபுபற்றி அவ்வத் தத்துவங்களுக்குமாயின என்பதுணர்த்துவார், அவரை அவ்வப் பெயரால் கூறினார். இனி, நவந்தருபேதங் கூறுவான் புகுந்த ஆசிரியர் அதற்குத் தோற்றுவாயாக இச்செய்யுளை ஈண்டு வைத்தாராயினும், இயைபுபற்றி, ஐந்து சுத்தத்தினென மூவகைப்படுத் தோதிய செய்யுளின் பின்னாக வைத்துக் கண்டு கொள்க. இதனானே அத்தத்துவங்களைத் தோற்றி யொடுக்குங் காரணக் கடவுளர் இவரென்பது வகுத்துக் கூறப்பட்டது. இத்துணையும் மூன்றாங் கூற்றிற் படுமுறைமை யெல்லாந் தொகுத்துக் கூறியவாறு.
இனி ஏழு செய்யுளான் நாலாங் கூற்றைத் தெரித்துணர்த்து கின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 73

மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப்
பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று
மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி
எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே.

பொழிப்புரை :

சாருவாகமுதல் ஐக்கியவாதசைவம் ஈறாகிய புறப்புறச் சமயமும் புறச்சமயமும் அகப்புறச் சமயமும் என்னும் முக்கூற்றுச் சமயத் தெய்வங்களெல்லாம் பூதமுதல் அசுத்த மாயாதத்துவ மீறாக ஒவ்வொரு தத்துவங்களின் நிலைபெறும். சிவாகமங்களுட் கூறப்படும். “ஏகனநேகனிருள்கரும மாயையிரண்டு” என்னுமாறு பொருட்கும் உண்மைத் தன்மை விளக்குகின்ற சைவமெனப்படுந் தலையாகிய அறுவகைச் சமயத் தெய்வமாய் நின்ற அதிகாரபோகலய சிவபேதங்கள் சுத்தவித்தை முதலிய ஐந்து தத்துவங்களுள் ஒவ்வொன்றின் நிலைபெறும். சித்தாந்த சைவத் தெய்வமாகிய சுத்தசிவம் இம்முப்பத்தாறையும் கடந்து நிற்கும்.
அமலனாதலைத் தெரித்துணர்த்தியவாறு. அவ்வத் தெய்வங்கள் நிலைபெறுந் தத்துவமே அவ்வச் சமயத்தார்க்கு முத்தித்தானமென் பதூஉம் இதனாற் பெறுதும். அவ்வவற்றின் மேலுள்ள தத்துவங்கள் அவ்வச்சமயத்தார்க் குணர்ச்சி செல்லாமையின், அவ்வத்தத்துவத்தினளவினன்றி அவருக்கு மேற்சேரல் கூடாமை யறிக. சமயத் தெய்வங்களைச் சமயமென் றுபசரித்தார். இருமூன்றும் என்றதுமது. ஆணவமலத்துண்மை கொள்ளமாட்டாத ஐக்கியவாத சைவரை நீக்குதற்கு, மெய்தரு சைவமென்றும், ஆதியிருமூன்றென்றும் விசேடித்தார். பாடாணவாத சைவமுதற் சுத்த சைவம் ஈறாகக் கிடந்த ஏழனுள் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்குந் தம்முள் வேற்றுமை சிறிதாதல் பற்றி அவையிரண்டனையும் ஒன்றாக வைத்து இருமூன்றெனத் தொகை கூறியவாறு. இவ்வாறன்றி யுரைப்பனவெல்லாஞ் சிவாகமங்களோடு முரணுமென்றொழிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 74

சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப்
பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர்.

பொழிப்புரை :

அங்ஙனமொன்றுமின்றி நிற்கும் எம்மிறைவன் ஒன்றி னொன்றாகத் தோன்றி ஒவ்வொரு தத்துவங்களி னின்றுகொண்டு தத்தந் தொழில்களைச் செய்யுஞ் சிவமுதல் அயனீறாகிய முத்திறத் தொன்பதுவர்க்கத்தினும் வேற்றுமையின்றி நின்று அவ்வத்தொழில் களைச் செய்வன்.
ஏகாரம் தேற்றம். ‘மேல் ஒருவனே இராவணாதி பாவகமுற்றாற் போல’ என்றதனை ஈண்டும் அறிவுறுத்துவார், நடிப்பனென்றார். செவ்வெண்டொகை விகாரத்தாற் றொக்கது. இவ்வொன்பது பேதத்துட் சத்திவிந்துவென்னும் இரண்டும் சத்திபேதமாயினும், ஏனை மனோன்மனி முதலிய பேதம்போலன்றி ஒன்றினொன்றாகப் பவந்தரு முறையிற் காரணமாயிடைநிற்றல்பற்றிச் சிவபேதத்துடன் வைத்தெண்ணி நவந்தருபேத மெனப்பட்டன. ‘நவந்தருபேதமேக நாதனே நடிப்பன்’ என்றதும் ஒற்றுமை நயம்பற்றிப் பொதுவகையாற் கூறிய தென்பது. அவை முறையே சிவத்துக்கும் நாதத்துக்குமுரிய சத்தி பேதமேயாதலென்பது வருஞ்செய்யுளிற் காண்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 75

சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.

பொழிப்புரை :

மேற்கூறிய சிவபேதம் ஏழற்குமுரிய சத்திபேதமும், முறையே சத்திமுதல் வாணியீறாக ஏழுவகைப்படும். எம்மிறைவனாகிய பரமசிவன் சிவபேதம் ஏழினும் நின்று நடாத்துமாறெல்லாம் அவனோடு தாதான்மியமாய் நிற்கும் பராசத்தியும் இச்சத்திபேதம் ஏழினும் அவனுக்குத் துணையாய் நின்று நடாத்தும்.
அற்றேல், மேலைச் சூத்திரத்தின் வரும் வடிவமெல்லாஞ் சத்தி எனக்கூறி ஈண்டுச் சிவபேதஞ் சத்திபேதமென வேறுவைத்து எத்திற நின்றான் ஈசன் அத்திற மவளுநிற்பளென்றல் மலைவாம்போலுமென மயங்காமைப் பொருட்டு அஃதுணர்த்துதற் கெழுந்ததுவருஞ் செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 76

சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச்
சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர்
சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தி தானே.

பொழிப்புரை :

மரமுங் காழ்ப்பும்போல ஒப்பவியைந்து நிற்றலின் எல்லாத் திருமேனியுஞ் சத்திசிவம் இரண்டற்கும் பொதுவடிவேயாமாயினும், சத்தனுக்குச் சத்தி தேவியுமாமாகலான் அதற்குரிய வடிவு விசேடங் குணவிசேடம் பற்றிச் சிவபேதஞ் சத்திபேத மென்றாயின.
ஆகலான் அதற்குரிய வடிவுவிசேடங் குணவிசேடம்பற்றிச் சிவபேதஞ் சத்திபேதமென்றாயின என்பது குறிப்பெச்சம். சத்தனுக்கோர் சத்தியாமென்றது வல்லவனுக்கு வல்லபையாய் நிற்குமெனச் சிவசத்திகட்கு நாயகநாயகீபாவங் கூறியவாறு. நாயக நாயகீபாவமாதலை வலியுறுத்துவார், சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தியெனச் சத்தியின் பெருமை கூறினார். வேண்டிற் றெல்லாமென்றது ஒருமைப்பன்மை மயக்கம். இவை மூன்று செய்யுளுந் தாதான்மியமாய் நீங்காது நிற்றலைத் தெரித்துக் கூறியவாறு. அற்றேல், மேல் `ஒன்றினொன்றாய்ப் பவந்தரு’ மெனப்பட்ட சத்திசிவங்களை ஈண்டுத் தலைவனுந் தலைவியுமாய்த் தம்முட் புணருமென்பது முறையன்றுபோலும் என்பாரை நோக்கி அதனை யுணர்த்துதற்கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 77

சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே.

பொழிப்புரை :

சத்தியுஞ் சிவமுஞ் செய்யுமிச் செயல்களெல்லாம் நம்மனோர் பொருட்டாக நடித்துக் காட்டும் நாடகமாத்திரையே யன்றிப் பிறிதில்லை.
உம்மை சிறப்பு, `பந்தமும் வீடுமாய பதபதார்த் தங்களல்லான்’ என்பது முதலாக மேலைச்சூத்திரத்தின் விரித்துக் கூறியவற்றை ஈண்டுருவகஞ் செய்யுமுகத்தால் தொகுத்துணர்த்தி, இவற்றின் தன்மை தனக்கெய்தலின்றாதலைத் தெரித்துக்கூறியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 78

தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று)
அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள்
இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி
நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன்.

பொழிப்புரை :

தனுகரண புவனபோகங்களும், அவைமூலமாயுள்ள பெத்தமுத்திகளும்,அப்பெத்தமுத்திகளிற்படும் பேதங்களனைத்தும், மேற்கூறிப்போந்த தத்துவங்களானாயினவென்றும், அத்தத்துவங்கள் உயிர்களோடு இயைவனவன்றி முதல்வனோடு இயைவனவல்லவென்றும் நூல்களானும் பொருந்துமாற்றானுந் தெளியவுணர்ந்து, அத்தத்துவங்களைக் கழியுமுறையின் வைத்துக் கழித்து, அவற்றிற்கு மேலாய் நிற்பதொன்றனை ஐயந்திரிபின்றி யுணரப்பெற்றோன் யாவன் அவன் `பவன் பிரமசாரி’யும் `பான்மொழி கன்னி’யுமாமென்னும் அவ்வுண்மை யறிவுடையனாவன்.
`தவந்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான் தெரிபு’ மென்றதனைத் தெரித்துணர்த்தி மேலதனை வலியுறுத்தியவாறு. தற்பரமென்னும் வடசொல் அப்பொருட்டாதல் தாற்பரியம் என்பதனானும் அறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 79

எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்த தென் அணுவுக் கென்னில்
தொல்லாய கன்ம மெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின்
நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற
பொல்லாத ஆண வத்தைப் போக்கவும் புகுந்த தன்றே.

பொழிப்புரை :

அங்ஙனந் தத்துவங்கள் அணுவினோ டெல்லாமாகி யடைந்ததூஉம், இருவினைகளை நுகர்வித்து நீக்குதற்பொருட்டும், அதனாற் பருவமெய்தியவழி மேலைக்கு வித்தாகாதவாறு தீக்கையானவற்றை முதிர்வித்துப் பற்றறக் கழித்தற்பொருட்டும், அவை கழியுமுகத்தால் எல்லா அநத்தங்கட்கு மூலமாகிய ஆணவமலத்தைப் போக்குதற்பொருட்டுமாம்.
எனவே, தத்துவங்களான் நீக்கப்படுவனவாகிய மலகன்மங்கள் அணுவுக்கேயன்றிச் சிவத்துக்கின்மையான், அத்தத்துவங்களும் அணுவினோடன்றிச் சிவத்தோடு இயைபிலவாயினவென அதன்கண் ஆசங்கை நீக்கியவாறாயிற்று. அணுவுக்கேயென்னும் பிரிநிலை ஏகாரமுந் தொன்மையென்னும் மகரஐகாரவிகுதியும் விகாரத்தாற் றொக்கன.
இவை ஏழு செய்யுளானும் நாலாங் கூற்றிற்படும் முத்திறப் பொருளும் வகுத்துக்கூறப்பட்டன. அற்றேல் ஈண்டெடுத்துக் கொண்ட ஆணவமலம் யாது? அதனால் வரும் பொல்லாமை யாது? அதனைப் போக்குமாறு யாங்ஙனம் ? என்பாரை நோக்கிப் பதினேழு செய்யுளான் ஒழிபு கூறுகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 80

ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி
அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து
நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து)
என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே.

பொழிப்புரை :

எண்ணிறந்த சத்திகளான் எண்ணிறந்த உயிர்களினுஞ் செம்பிற் களிம்புபோல் அநாதியே விரவிநிற்ப தொன்றாய்க் கேவலத்தில் ஆவாரகசத்தியானுஞ் சகலத்தில் அதோநியாமிகாசத்தியானும் அஞ்ஞான நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்பது மேற்கூறிப்போந்த ஆணவமலம்.
போத்திருத்துவம் போக நுகர்ச்சிக்கு வினை முதலாதற்றன்மை. இதனானே மலத்தின் சொரூபங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 81

மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின்
இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை
விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி
உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே.

பொழிப்புரை :

உயிரோடொற்றித்து நின்று அறிவிச்சைசெயல்களை மறைப்பதாகிய மலத்துக்கும் வேறு நின்று அவற்றை விளக்குவ தாகிய மாயைக்குந் தம்முள் வேற்றுமை பெரிதாகலான், அஃதறியாது மாயையே மலமென்பார் மதம் போலி.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 82

மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைந்து நிற்கும்
தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப்
போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக்
காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே.

பொழிப்புரை :

மாயை உலகுடல்காரணமாய் வேறுநின்றே உயிரை மறைத்தலமையுமென்பது உடம்பாட்டினும் எதிர்மறையினும் பரிதி முகிலுவமையின் வைத்தறியப்படுமென்றது பொருந்தாது. மேகம் போல மாயை மறைக்குமாயின், மறைத்தலானாகிய காரியம் பரிதியிற்போல உயிரின்கண் நிகழ்தல் வேண்டும்; அஃதீண்டில்லை யென்பது உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து அறியப்படுதலான் அவ்வுவமை யீண்டைக்கேலாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 83

பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல்
உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஒளிக்கு மாகும்
கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால்
மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே.

பொழிப்புரை :

மாயை உலகுடல்காரணமாய் வேறுநின்றே உயிரை மறைத்தலமையுமென்பது உடம்பாட்டினும் எதிர்மறையினும் பரிதி முகிலுவமையின் வைத்தறியப்படுமென்றது பொருந்தாது. மேகம் போல மாயை மறைக்குமாயின், மறைத்தலானாகிய காரியம் பரிதியிற்போல உயிரின்கண் நிகழ்தல் வேண்டும்; அஃதீண்டில்லை யென்பது உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து அறியப்படுதலான் அவ்வுவமை யீண்டைக்கேலாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 84

போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண்
ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே
காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை
ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே.

பொழிப்புரை :

அல்லதூஉம், மலத்தானாகிய அஞ்ஞானம், முகிலானாகிய மறைவுபோலன்றி, உயிரோடு வியாபகமாய் விரவிக் குணம்போலத் தோன்றி நிற்பதொன்றாகலானும், தொழிற்பாட்டின்கண் ஒளியிருள் போல மாயையோடு இகலி நிற்பதாகலானும், அப்பெற்றித்தாகிய ஆணவமலமே உயிருணர்வின் காரியப்பாட்டைத் தடுக்கவல்லதெனத் தெற்றென உணர்க.
குணமும் என்னும் உம்மை எதிர்மறைக்கண் வந்தது.
இவை நான்கு செய்யுளானும், ஐக்கியவாதி பாசுபதி முதலியோர் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து, ஆணவமலத்தினது உண்மை சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 85

புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும்
குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய்
மருள் தன்றன் குணமதாகி மலம்அசித் தாகி நிற்கும்
தெருள் தன்றன் குணமதாகிச் சித்தென நிற்கும் சீவன்.

பொழிப்புரை :

உயிரினுள் விரவி நிற்பதனை உயிரின் குண விசேட மென்றல் பொருத்தமுடைத்தெனின்,- அறியாது கூறினாய்; ஒரு பொருளின்கட் குணத்தோடொப்பக் குற்றமும் உடன் விரவி நிற்கப் பெறுமென்பது குருட்டுக் கண்ணிற் காணப்படுதலின், விரவி நிற்றலே பற்றிக் குற்றமுங் குணமாதல் செல்லாமையானும், அஞ்ஞானத்திற்குக் குணிப்பொருள் சடமாவதன்றிச் சித்தாகாமையானும், உயிர் அறிதற்றொழிலுடைய சித்தேயாகலானும், உயிரின்கட் குற்றமாய்க் காணப்படும் அறியாமைக்குக் குணிப்பொருள் மலமென வேறுண்டு.
இதனானே, அறியாமை உயிர்க்குக் குணமென்னும் பாடாண வாதிகள் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து மலத்தினுண்மை சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 86

மும்மலம் நெல்வி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்
இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும்.

பொழிப்புரை :

மேலே `தன்மமோடு அதன்மமாகி’ யெனக் கூறப்பட்ட கன்மமலமும் அதன் பின்னாக `நித்தமாய் அருவா’ யெனக் கூறப்பட்ட மாயாமலமும் ஈண்டுக் கூறப்பட்ட ஆணவ மலமுமாகிய இம்மூன்று மலங்களும், நெல்லுக்கு முளை தவிடுமிபோல் உயிரைப் பந்தித்து நின்று முறையே போகமும் பந்தமும் போத்திருத்துவமும் பண்ணுவனவாம். இம்மலங்கள் மூன்றனோடுங் கூடிநின்று பந்திப்பன வேறும் இருமலங்களுள.
இது நிரனிறை. கன்மமலம் போகம்பண்ணுதலாவது, நெல்லின்கணுளதாகிய முளைத்தற் சத்தி முளையைத் தோற்றுவிக்குமாறு போல, உயிரின்கட் சுகதுக்கங்களை முதற்காரணமாய் நின்று தோற்றுவித்தல். மாயாமலம் பந்தம் பண்ணுதலாவது, முளைத்தற்கு அனுகூலஞ்செய்து உடன் நிற்குந் தவிடுபோல, அச்சுகதுக்கங்கள் ஆண்டுத் தோன்றுதற்குத் துணைக் காரணமாய்த் தன் காரியமாகிய தனுகரண முதலியவற்றையும் உயிரையும் இயைவித்து நிற்றல். ஆணவமலம் போத்திருத்துவம் பண்ணுதலாவது, அம்முளை ஆண்டுத் தோன்றுதற்கு நிமித்தகாரணமாகிய உமிபோல அத்தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் அவற்றை முறுகுவித்து நின்று அச்சுகதுக்கங்களை உயிர் நுகருமாறு நிலைபெறுத்துதலெனக் கொள்க. ``பந்தம் போகம் போக நிறுத்தலும் வந்தது மாயை வினைமலத்து” என்றார் ஞானாமிர்த நூலுடையாரும். முனை ஆகுபெயர். முளை தவிடுமிகள் பந்தத்திற்குங் காரணமாதல் மாத்திரைக்கும் உவமையாயின.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 87

மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும்
ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும்.

பொழிப்புரை :

வேறும் இருமலம் எனப்படுவன அச்சுகதுக்க விளைவு கட்கெல்லாம் இடமாய் நின்று வியாபகமாகிய ஆன்மாவின் அறிவிச்சை செயல்களை ஏகதேசப்படுத்துவதென மேற்கூறிப்போந்த மாயாகாரியமும், அவ்வம்மலங்களை யவ்வத்தொழிலிற் படுத்திப் பாகம் வருவிக்குஞ் சிவசத்தியுமாம். அவற்றுள், மாயாகாரியம் மாயையில் அடங்குமாயினும், பந்தித்தற்கட்படும் வேற்றுமைபற்றி மாயேய மலமென வேறுவைத் தெண்ணப்படும்; அம்மலங்கட்கு அனுகூலமாய் நின்று செய்யுஞ் சிவசத்தி பராசத்தியின் அடங்குமாயினும், தொழில் வேற்றுமைபற்றி உபசாரத்தால் திரோதாயியென வேறுவைத் தெண்ணப்படும். இவ்வாறிவ்வைந்து மலமும் உயிர்தோறும் நின்று செய்யும் பந்த வேறுபாடு கண்டுகொள்க.
திரோதான கரியென்பது திரோதானத்தைச் செய்வதென்னும் பொருட்டாய வடசொல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 88

மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச்
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும்
நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண்
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த பிறப்பிறப்புக்கள் எல்லாவற்றிற்குங் காரணம் இவ்வைவகை மலங்களுமாம்.
மன்னி அலமாருமென்பது மழைபெய்து குளநிறைந்த தென்றாற் போலக் காரணகாரியப் பொருட்டாய் நின்றது. அலமரும் அலமாருமென நீட்டும்வழி நீட்டல். இறைவன் ஆணையால் உயிர் நடக்குமென ஈண்டுங் கூறியது அவ்வலமரலை நீக்கும் வாயிலுணர்த்துதற் பொருட்டு. அது முன்னர் வகுத்துக் கூறப்படும்.
இவை மூன்று செய்யுளானும், மலங்கள் இத்துணைய என்பதூஉம் அவை பந்திக்குமாறுங் கூறுமுகத்தான் ஆணவ மலத்தானாகிய பொல்லாமை கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 89

அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு)
எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண்.

பொழிப்புரை :

நால்வகைத் தோற்றத் தெழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதத்தினின்றும் விரிந்த பேதங்கள் அளவின்றியுள்ளன; அவற்றுள் மானுடப் பிறவியே அவ்வலமரலை நீக்குதற்கு வாயில்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 90

நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில்
விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும்
தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே.

பொழிப்புரை :

மானுடப் பிறவியினும் உத்தம சமயத்துக்குரித்தாய் உத்தமநாட்டிற் பிறக்கும் உத்தமசாதியே அதற்கு வாயில்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 91

வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே
போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே.

பொழிப்புரை :

உயர்ந்த சாதியினும் உயர்ந்த குடிப்பிறப்பே அதற்கு வாயிலாம். அவ்வுயர்ந்த குடியிற் பிறந்து சைவத்தினெய்திச் சித்தாந்த நெறியுணர்ந்து சிவபிரானை வழிபடப் பெறுவாருளராயின், அவர் மலத்தானாகிய அவ்வலமரலை நீக்கி வீடுபேறெய்துவர்.
வாழ்வாவன : குலம் இளமை கல்வி செல்வம் அதிகாரமென்னும் இவை. மையல் செருக்கு. வாழ்வெனுமையலெனவும், வறுமையாஞ் சிறுமையெனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.
இவை மூன்று செய்யுளானும் அம்மலபந்தத்தைப் போக்குதற்குரிய வாயில் இவை என்பது கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 92

மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனை அர்ச் சிப்பர்
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ.

பொழிப்புரை :

அவ்வலமரலை நீக்குதற்பொருட்டுச் செய்யப்படும் அரன் பணி ஏனைப் பிறவிகளில் கூடாமையாற் பிறவி விசேடம் வேண்டப்படும் ; அவ்வரன்பணி பயன்படுதல் ஏனையுலகங்களிற் கூடாமையால் தேயவிசேடம் வேண்டப்படும். இவ்வுண்மை ஏனையோர் அறிய மாட்டாமையிற் சாதிவிசேடம் குடிப்பிறப்பு விசேடம் வேண்டப்படும்.
இதனானே அவை வாயிலாதற்கு உரிமை கூறப்பட்டது. வாக்காயமென்னுந் தொகைச்சொல் வடநூன் முடிபு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 93

கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும்
பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும்
தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும்
உருவமே யழிவே யானால் உள்ளபோ தேபார் உய்ய.

பொழிப்புரை :

மானுட யாக்கை அத்துணைப் பெருமைத்தாயினும், இத்துணைப்பொழுது நிற்குமென்றறிய வாராது நீர்க்குமிழிபோல் எப்பொழுதும் அழிதன்மாலைத்தாகலின், இவ்வாக்கைநிலையாமை இளமைநிலையாமைகளை உணரவல்லார்க்கே அவற்றானாகிய மையலை விடுதல் கூடும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 94

ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும்
ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை
மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே.

பொழிப்புரை :

அவ்வாக்கையின் கண்ணதாகிய அறிவும் விடயங்களை ஒவ்வொன்றாய் அறிவதன்றி ஒருங்கே அறியமாட்டாது. ஒருவிடயத்தின்கண்ணும் விட்டுவிட்டறிவதன்றி இடையீடின்றி அறியமாட்டாது. அதுவும் உறக்கம் மூர்ச்சை முதலியவற்றிற் சிறிதுமில்லையாய்விடும். அஃதன்றி இவ்வாக்கையின் பொருட்டுளதாகிய செல்வத்துழனியும் முறையே மயக்கப்பொருளுங் கனாப்பொருளும் போலத் தோன்றியபொழுதே மாய்வதுமாம் ; இடையே மாய்வதுமா மாகலான், இவ்வறிவு நிலையாமை செல்வ நிலையாமைகளை உணரவல்லார்க்கு அவற்றானாகிய மையலை விடுதல் கூடும்.
உணரினுண்டாமென்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க. பயன் அறிதற்பயன். அல்லதென்பது அன்றியென்னும் வாய்பாட்டு வினையெச்சக் குறிப்பு. மருள்போல அன்றே மாயும் கனவுபோலப் பின்னும் மாயுமென்று உரைத்துக்கொள்க. மருளும் கனவும் ஆகுபெயர். வாழ்க்கை என்புழியும் பின்னென்புழியும் இறந்ததுதழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 95

அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப்
பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட
வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு
பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர்.

பொழிப்புரை :

அதிகாரஞ்செய்து செருக்குறுவார் செத்தாரின் வேறல்ல ரென்பது ஆண்டுநிகழும் நிகழ்ச்சிபற்றி அறியவல்லார்க்கு அதனானாகிய மையலை விடுதல் கூடும்.
உணரினுண்டாமென்றதனை ஈண்டுந் தந்துரைக்க. பெரியவ ரென்றது இழித்தற்கண்வந்த குறிப்புமொழி. பெருமை அதிகாரத்தானாயது.
இவை மூன்று செய்யுளானும் வாழ்வெனும் மையல் விடுதற்கு உபாயங் கூறியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 96

பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல
உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம்
கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால்
வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன்.

பொழிப்புரை :

சிவபிரானை வழிபட்டுப்பெறும் இறவாச் செல்வத்தை நோக்கக் கணத்தின் அழிதன்மாலைத்தாகிய உடம்பின்பொருட்டு வருந்தியீட்டப்படும் சிறுசெல்வஞ் செல்வம் அன்றென்ப துணரவல் லார்க்கு, இச்சிறு செல்வத்தை வேண்டி அவ்வதிகாரச் செருக்குடையார் பின்சென்றுநின் றேக்குறுஞ் சிறுமையின் நீங்குதல் கூடும்.
உடலுயிருணர்வு மெல்லா முணக்கியென இயையும். இதனானே வறுமையாஞ் சிறுமை தப்புதற்கு உபாயங் கூறியவாறு. `ஒன்றதா’ யென்பது முதல் இத்துணையும் ஒழிபு கூறியதெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச்
செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப்
பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்
துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம்.

பொழிப்புரை :

உயிர் சூனியமெனின் அவ்வாறு சொல்வதொன்றுளதாய் நிற்றலானும், உடம்பே உயிர் எனின் உடம்பகத்தே பொருந்தி நின்று யானெனதென்னுஞ் செருக்குறுதலானும், ஐம்பொறியே உயிரெனின் ஞானமாத்திரையேயன்றி ஞானங்கிரியை இச்சையென்னு மூன்றும் உடைத்தாகலானும், சூக்கும உடம்பே உயிரெனின் கனவொடு பயின்றதனை நனவின்கண் உற்றறிந்து நிற்றலானும், பிராணவாயுவே உயிரெனின் இன்பத் துன்பப் பயன் ஒடுங்கிய விடத்தின்றி யொடுங்காதவிடத்து நுகர்ந்து நிற்றலானும், பிரமமே உயிரெனின் அறிந்தாங்கறிதலின்றி ஐந்தவத்தைப்பட் டறிதலானும், அனைத்துங் கூடிய சமுதாயம் உயிரெனின் அனைத்தும் நீங்கிய துரியாதீதத்தும் உண்மையானும், இந்த உடலின்கண் உயிரெனப்படுவது இவையனைத்திற்கும் வேறு.
உயிரெனப்படுவதென்றது சாதியொருமை. துயிலொடும் பயில்வுறுமென இயையும். துயிலென்றது ஈண்டுக் கனவின் மேற்று. பயில்வுறுமென்புழி இரண்டாவது விரித்துரைக்க. பயில்வு ஆகு பெயர். பார்க்கில் நுகருமென மாற்றுக. பார்க்கில் விழித்தவிடத் தென்றவாறு. ``ஐயுங்கண்ணு மல்லாப் பொருள்வயின் - மெய்யுருபு தொகாஇறுதியான” என்பதோத்தாகலின், ஏழாவது இறுதிக்கட் டொக்கது. துரியாதீதத்தில் உயிருண்டென்பது விழித்த பின்னர்ச் சுகமாகத் துயின்றேன் என்று உணர்வு நிகழ்தல்பற்றித் தெளியப்படும். உளதாயென்பது முதலிய ஏழுங் குறிப்பேதுவாகலான், அவற்றை இங்ஙனம் விரித்துரைத்து முதனூலின் மூன்றாஞ் சூத்திரம்போல இச்செய்யுள் ஏழு கூற்றதாயவாறு கண்டுகொள்க. அற்றேல், சூனியமுதலியவற்றுள் ஏனையவெல்லாம் அறியுமென்பது காட்சியளவைக்கு எய்தாமையின் உயிர் அவற்றின் வேறெனக் கொள்ளினும் உடம்பாதல் உடம்பின் கணுளவாகிய ஐம்பொறிகளாதல் அவ்வைம் பொறிகளையூக்கி இயங்குவதாய பிராணவாயுவாதல் அறியுமென்பது காட்சியளவையான் அறியக்கிடத்தலின், உயிர் அம்மூன்றனுள் ஒன்றாகற்பாற் றென்றலே பொருந்தமுடைத்துப் போலும் என்பாரை நோக்கி அம்மூன்றனையுஞ் சிறந்தெடுத்தோதி மறுத்தற்கெழுந்தன வருஞ்செய்யுட்க ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின்
உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான்
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக் கென்னின்
உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே.

பொழிப்புரை :

அவயவங்களின் ஒன்றானுங் குறைபாடின்றிக் கிடக்கும் பிணக்கிடையினும் நீ கூறும் பூதக்கூட்டத்தின் ஒன்றானுங் குறைவின்றிக் கிடக்கும் உறக்கத்தினும் அறிவு நிகழக் காணாமையான், உடம்பறியுமாறு யாண்டையது.
போகாதவென்னும் பெயரெச்சத்தகரம் விகாரத்தாற் றொக்கது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும்
அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின்
அறிவுக ளொன்றையொன் றங் கறிந்திடா ஐந்தை யுங்கொண்(டு)
அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறிஅறிந்தி டாவே.

பொழிப்புரை :

பிணமாம்போது கெட்டொழிவதாகிய ஐம்பொறிகளே அவ்வுடம்பினின்று நனவின்கண் அறியும் உறக்கத்தின்கண் அறிதலின்றி ஒடுங்கி நிற்குமெனின், அது பொருந்தாது ; நனவின்கண் அவை அறிவதும் ஒவ்வொரு பொறியாய் அறிவதன்றி ஒருங்கே யறிவனவல்ல வாதலானும், ஒன்றொன்றாய் அறியுமதுவே அவற்றியல் பெனின், அங்ஙனமாயினும் இந்திரியங்கள் ஒன்றறிந்த தொன்றி யாமையானும் இவ்வைந்தினானும் ஐம்புலன்களையும் அறிவதொன்று உளதாகலானும்.
அறிவது ஐம்பொறியே உறக்கத்தின் அறியவாகுமென்னின் என வியையும். அறிவதென்பது அத்தொழின்மேல் நின்றது. உம்மை சிறப்பு. அறிவுகள் ஆகுபெயர். அஃதென்னும் ஆய்தம் விகாரத்தாற்றொக்கது. இவ்வாறன்றி, அறிவது ஐம்பொறியே என்னின் உறக்கத்தின் அறியாவாகும் அறிவதும் ஒன்றொன்றாக ஒன்றொன்றா யறியுமென்னின் என்பதற்கு, `என்னுடம்பகத்து நின்றறிவது ஐம்பொறிகளேயாம் அவையுறக்கத்தின் அறியாதவாகும்; நனவின்கண் ஒவ்வொரு விடயமாக அறிவதும் இருவர் மதத்தினும் ஒக்கும் ; அதுபற்றி என்னை யாசங்கித்தல் கூடாமையான் அவ்வைம் பொறிகளே யொருதலையாக அறியும்; வேறுமோர் உயிர் கோடன் மிகையாமென்பையாயின்’ என்றுரைத்தலுமொன்று. உறக்கத்தின் அறியாமை யிழுக்கன்றென்பான் வாகென்றானென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால்
அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை
அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா
அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா.

பொழிப்புரை :

பிராணவாயு அடங்குதல் விடுதல் செய்தாலே அறிவு நிகழக் காண்டலின், அதுவே அவ்வைந்தையுங் கொண்டறிவதாகிய உயிரெனவமையும், உறக்கத்திலஃதியங்கினும் ஆண்டுக் கருவியின்மையான் அறியாதாயிற்றெனின்,- அது பொருந்தாது ; கரணமுதலி நிற்புழிக் கரணம் போதல் கூடாமையிற் கரணங்களையுந் தன்னையுங் கொண்டறிவதாகிய வுயிர் வேறுண்டென்பது பெறப்படுதலான்.
இவை மூன்றுசெய்யுளானும், முறையே உடல் பொறி பிராணவாயுவென்னும் மூன்றனையுங் காட்சியளவையான் அறியக் கிடந்த விசேடம்பற்றி வேறெடுத்தாசங்கித்துப் பரிகரித்து, இந்த உடலினுயிரெனப்படுவது வேறென்பது சாதிக்கப்பட்டது. ஏனைய வெல்லாம் வருஞ்சூத்திரத்தில் ஆண்டாண்டியைபு பற்றிக் கூறக் கிடத்தலானும், `உளதா’ யென்னு முதற்கூற்றில் ஆசங்கை விசேட மின்மையானும் அவற்றை யீண்டு விரித்திலர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே (று)
அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப்
புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி
இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா.

பொழிப்புரை :

இனி அந்தக்கரணமே உணருமென்பார்க்கு, இவையும் ஐம்பொறிபோலொன்றனை யொன்றுணராவாகலான், உயிர் இவற்றின் வேறாகியும், யானெனதென்னுஞ் செருக்குக்கேதுவாகிய ஆணவமலம் உடனாயிணைந்து நிற்குமாகலான் தனக்கென அறிவின்றி, இவ்வந்தக்கரணங்களானாய நான்கு தொழிலையும் இவற்றொடு கூடியறிந்து இவற்றை யடக்கவேண்டுழி யடக்கி உட்கருவிகளாக்கியும், ஆக்கவேண்டுழியாக்கிப் புறக்கருவிகளிற் போக்கியும், வெவ்வேறு அவத்தைகளையணையும்.
எனவே, ஆணவமலத்திற் பிணிப்புண்டு அவத்தையுறுதல் ஆன்மாவுக்கு இலக்கணமென்றவாறாயிற்று. இது தடத்தலக்கண மெனப்படும் பொதுவியல்பு. உணராவாகலான் இவற்றின் வேறாகியும், யானெனதென்ப திணைதருமாகலான் அறிந்தடக்கியாக்கி ஆக்கிப் போக்கி வெவ்வேறு அணைதருமென வினைமுடிபு செய்க. அடக்குதல் சொப்பனாவத்தையிற் செலுத்துதல். ஆக்குதல் சாக்கிராவத்தையிற் செலுத்துதல். இனம்பற்றி ஏனையவத்தைகளுங் கொள்ளப்படும். அவையடக்கியாக்கிப் புணரும் உட்கருவியாக்கிப் புறக்கருவியினும் போக்கியென்பது நிரனிறைப்பொருள்கோள். வேறாயுமெனச் சிறப்பும்மை விரித்துரைக்க. என்பதெனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். யானெனதென்பதென்னும் பெயரடை, அதனுண்மை சாதித்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இச்செய்யுள் முதனூல் நாலாஞ்சூத்திரம்போல முக்கூற்றதாமாறு கண்டுகொள்க. இனி அம்முக்கூற்றுள், உணர்வன கரணமென்னில் ஒன்றையொன்று உணராவாகலான் ஆன்மா இவற்றின் வேறாமென்னும் முதற்கூற்றை வலியுறுத்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும்
மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு)
ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர்
தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம்.

பொழிப்புரை :

மனமுதலிய நான்கும், ஒருவிடயத்தை அறிதற்குக் கருவியாக மருவி, இவையே கருத்தாவென்னும்படி உயிரோடு ஒற்றித்து நின்று நிகழ்வனவாம். கண்ணுக்கு விளக்குப்போல இவை உயிர்க்குக் கருவியாய் வேறு நிற்பனவென்றறிந்து நீங்கி நின்று இவற்றைக்கொண்டறியுங் கருத்தாவினுண்மை யாதென்றாராய்ந் தார்க்கு ஆன்மசொரூபம் இனிது விளங்கும் ; அதன்பின்பு அங்ஙனம் ஆராயும் அறிவு பசுஞானமாகலான் அதனைத் தரும் பொருள் யாதெனத் தேர்வார்க்குச் சிவஞானம் அதற்கு மேலாய் விளங்கும்.
ஈண்டு ஆன்மாவென்றது கருத்தாவென்னுந் துணையாய் நின்றது, `தமையுணர்ந்தோ’ ரென முன் வருதலின், இதனானே அந்தக் கரணங்கள் கருத்தாவல்லவென்பது தம்மையுந் தலைவனையும் அறியு மாற்றின் வைத்துக் காட்டப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்காரங்கள்
செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும்
ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்கு மாறும்
பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும்.

பொழிப்புரை :

அவை கருவியாவதூஉம் அகரமுதலிய எழுத்துக்கள் உடனின்று செலுத்தியவழியேயா மாகலான், சமட்டியிற் பிரணவ ரூபமாம் இவ்வைந்தெழுத்தானும் உயிரின்கண் உணர்வுமாறிமாறித் தோன்றுதல், கடலின்கண்ணே திரை புதிது புதிதாகத் தோன்றியும் ஒடுங்கியும் வருமாறுபோலாம். சவிகற்ப வுணர்விற்குக் காரணம் நிவர்த்தாதி கலையைப்பற்றி ஐந்தாய்த் திகழும் நால்வகை வாக்குக்கள் என்பதனை உற்று நோக்கின் இவ்வியல்பு இனிது விளங்கும்.
ஒற்றுமைபற்றி எழுத்துக்களே அவையாக உபசரித்தார். புருட தத்துவமும் அதனைச் செலுத்தும் அக்கரமும் ஈண்டொப்புமைபற்றி உடன் கூறியவாறு. புருடதத்துவத்தைச் செலுத்துதலாவது புருட தத்துவமாந்தன்மையை நிகழ்வித்தல். ``அகார உகாரம் அகங்காரம் புத்தி - மகாரம்” என முதனூலுட் கூறுதலானும், துகளறுபோதத்தும் (கச) அவ்வாறே கூறுதலானும், ஈண்டு அவ்வுட னுவ்வுமம்வு மனம்புத்தி யகங்காரங்கள் என்றது எதிர்நிரனிறை யெனக்கொள்க. பிரணவமாகலின் உள்ளவாறே வெளிப்படக் கூறாது ஒவ்வெனக் கடைக்குறைத்துக் குறுக்கல் விகாரமாக்கிக் கூறினார். ஐந்தானு மென்னும் ஆனுருபு விகாரத்தாற் றொக்கது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள்
உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப்
பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில்
சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும்.

பொழிப்புரை :

அவ்வெழுத்துக்களை முறையே அயன் முதலிய ஐவரும் அதிதெய்வங்களா யதிட்டித்து நிற்பராகலான், இவ்வாறு கரணமும் அக்கரமும் அதிதெய்வமும் என்னும் இம்முத்திறத்தைந் தொடும் ஆன்மாப் பரவியவழி யறிதற்பயனுறும், பரவாவிடிற் சடம் போல் அறிவிலதாம் ; இவ்வியல்பும் இருவகை வளியுமடக்கிச் செய்யும் யோகப் பயிற்சியுடையார்க்கு இனிது விளங்கும்.
அசித்தோடொக்குமென்பார் அசித்தாமென்றுபசரித்தார். பரவாவிடிலென்பது சொல்லெச்சம். இவையிரண்டு செய்யுளானும் அவை கருவியாதற்கட்படு முறைமையும் அதனையறிதற்கு உபாயமுங் கூறப்பட்டன. அற்றேல், இம்முத்திறத்தைந்துங் கூடிய கூட்டத்தின் நிகழ்வதே அறிவாகலின், இப்பலபொருட் கூட்டமே அவ்வறிவுக்கு முதலாதலமையும். இடையே உயிரென வொன்று கோடல் எற்றுக்கென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில்
பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மை யாகும்
சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை
ஒர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேற தாமே.

பொழிப்புரை :

கூட்டமென வொருபொருள் இன்மையானும், கூடுவனவாய பல பொருள்களும் வேறாயறியப்பட்டு நிற்றலானும், அறியப்படுவதும் அறிவதுந் தம்முளொன்றாதல் செல்லாமையானும், இப்பதினைந்தினையும் இவை கூடியவாற்றையும் அறிவதாகிய வுயிர் வேறுண்டென்பது பெறப்படுதலான், இப்பலபொருளின் கூட்டம் உயிராதல் யாண்டையது.
இதனானே அவை உயிரின் வேறாதல் வலியுறுத்தப் பட்டது. மேலைச்சூத்திரத்தின் உண்மை `துரியாதீத’ மென்ற இறுதிக்கூற்றைச் சவுத்திராந்திகர் மதம்பற்றி ஆசங்கித்துப் பரிகரித்து வலியுறுக்குமாறும் இதனானே பெறுதும்.
இவை நான்கு செய்யுளானும் அந்தக்கரணங்கள் கருத்தா வல்லவாமாறும், கருவியாதற்கட்படு முறைமைகளும் அவை உயிரின் வேறாமாறும் உணர்த்தி முதற்கூற்றை வலியுறுத்தவாறு.
இனி இருபத்தாறு செய்யுளான், பரமதங்களை யெடுத்தோதிப் பரிகரித்து ஆன்மாவிற்கு இலக்கணங் கூறுமுகத்தால், `யானெனதென்ப திணைதரு’ மென்ற இரண்டாங் கூற்றை வலியுறுத்துவான் தொடங்கினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அறிவிச்சை செயல்க ளெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல்
குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி
நெறியுற்று நிற்கு மென்னில் நிகழ்புலன் கரண மெல்லாம்
செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமோ சீவ னார்க்கே.

பொழிப்புரை :

சீவான்மாக்களெல்லாம் பிரமப்பொருளின் பரிணாம மாய்த் தோன்றி அறிவிச்சை செயல்களையடைந்து தீயுஞ் சூடும்போலப் பேதாபேதமாகிய குணகுணித்தன்மையுற்றுப் பலவேறு வகைப்பட்டு நிற்குமெனப் பரிணாமவாதிகள் கூறுவர். கருவிகளை யன்றி யறியமாட்டாத சீவான்மா அவ்வாறாதல் யாண்டையது.
எல்லாம் அங்ஙனங் குறியுற்றறிவிச்சை செயல்க ளடைந்தனல் வெம்மையும்போல் ஏகாநேக குணகுணி பாவமாகி நெறியுற்று நிற்கு மெனக்கொண்டு கூட்டியுரைக்க. ஏகாநேகம் பேதாபேதம். ஆர்விகுதி இழித்தற்குறிப்பின் வந்தது. இதனானே மேலைச்சூத்திரத்தின் ஆறாங்கூற்றை வலியுறுத்தவாறுமாயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

குணங்களை யின்றி யொன்றாம் குறியுடைத் தான்மா வென்னின்
இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட்
பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம்
உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே.

பொழிப்புரை :

இனிச் சாங்கியர் குணகுணித்தன்மையின்றிக் கேவலம் அறிவுமாத்திரையாய் நிற்றல் உயிரியல்பென்றும், அவ்வுயிரின் சந்நிதியின் உடம்பின்கண்ணே நின்று கரணங்கள் செயற்படுமென்றும், அதனால் தொழிலறிவிச்சைகள் அவ்வுடம்பின்கண் நிகழுமென்றுங்கூறுவர்; பிணத்துமுறக்கத்துஞ் சந்நிதிக்குக் கேடின்றாகவும் உடம்பின்கண் அவை நிகழக் காணாமையின் சந்நிதிமாத்திரையான் அவை நிகழ்தல் யாண்டையது.
இன்றென்னு மொருமை அப்பண்பின்மேல் நின்றது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம்
முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம்
உன்னுத லொடுங்கல் ஒடல் இருத்தலே கிடத்தல் நிற்றல்
என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே.

பொழிப்புரை :

வியாபகமாய் நிற்கப்பெறுதன் மாத்திரையே சந்நிதி யன்று, மற்றுக்காந்தமுன் இரும்புபோல உயிர்முன் உடம்பு தொழிற்படுதற்கு ஏதுவாயதொரு குணவிசேடஞ் சந்நிதியெனக் கொண்டாமாகலின் அக்குற்றம் ஈண்டைக்கெய்தாதெனின், அங்ஙனமாயினும் ஒரு குணம் ஒருதொழிலன்றித் தம்முள் மாறுபட்ட பலதொழில் செய்யுமாறு யாண்டையது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும்
வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும்
கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின்
மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே.

பொழிப்புரை :

இனிப் பௌராணிகர் உயிர் உருவப் பொருளென்பர். பரிணமித்தழிதலும் காட்சிப் புலனாதலும் இல்லாத பொருள் அவ்வியல்புடைய பூதங்களோடொப்ப உருவாமாறு யாண்டையது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம தாகும்
ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின்
நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின்
ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே.

பொழிப்புரை :

பூதம்போலக் காட்சிப் புலனாதற்குரிய தூலவுருவாதலின்றிச் சூக்குமவுருவாய் நிற்பது உயிரெனின், அது தூலவுருவைத் தோற்றவிக்குஞ் சடமாகிய புரியட்டகவுடம் பேயாகலானும், அப்புரியட்டகதேகத்துள் அதிசூக்குமவுருவாய் நிற்பது உயிரெனின், அது கலையாதி மண்ணந்தமாயுள்ள பரவுடம்பாகலானும், அவ்வுருவங்களனைத்தும் அசித்தாதலும் அசத்தாதலும் ஒருதலையாகலானும், அவ்வியல்பில்லாத வுயிர் உருவப்பொருளாமாறு யாண்டையது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

அருவுரு வென்னின் ஆன்மா அருவுரு வாவ தின்றாம்
உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே.

பொழிப்புரை :

இனிக் கவுளர் அருவுருவப்பொருள் உயிரென்பர். ஒன்று பிறிதொன்றாகாமையானும், மறுதலைப்பட்ட இரண்டு தன்மை ஒரு பொருட்கின்மையானும், காட்டமும் வன்னியுந் தம்முள் வேறாதலின் ஈண்டைக்கு எடுத்துக் காட்டாதல் செல்லாமையானும், அது பொருந்தாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின்
வந்துநங் கண்ணிற் றோன்றும் வடிவுள தாமு யிர்க்கும்
இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில்
பந்மமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே.

பொழிப்புரை :

தலையுவாவின் அருவாய்நின்றே பின் முறைமுறையான் வளர்ந்து பூரணையில் தூலவுருவாய் விளங்குதன் மதியின்கட் கண்டா மன்றே; அதுபோல உயிரும் அருவாய்நின்றே கருவுட்பதிந்து முறை முறையான் வளர்ந்து இவ்வுடம்புருவாய்த் தோன்றுமாற்றான் அருவுருவென அமையுமெனின்,- சித்தாய் நித்தியமாய்ப் பந்தத்திற்பட்டு நீங்குவதாகிய வுயிர், அசித்தாய்ப் பூதகாரியமாய்ப் பந்தமாவதாகிய உடம்புருவமாமாறு யாண்டையது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின்
உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி
மருவிநிற் பித்தி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும்
பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே.

பொழிப்புரை :

இனிப் பாதஞ்சலர் ஆகாயம்போல் அருவாய் அவிகாரியாய் நிற்பது உயிரென்பர். அது பொருந்தாமை காட்சியளவை யான் உடம்பின்கண் நிகழும் நிகழ்ச்சிபற்றி யறியப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

அசித்தெனின் உணரா தான்மா அசித்துச்சித் தாகு மென்னின்
அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை
அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய் நில்லா(து)
அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம்.

பொழிப்புரை :

சடப்பொருள் சித்தாதலுஞ் சித்துப்பொருள் சடமாதலும் உலகத்தின்மையால் உயிர் சடமென்றும் அதுபின் மனத்தோடுங்கூடிச் சித்தாயறியுமென்றுங் கூறும் வைசேடிகர் முதலியோர் மதமும், மாறுபட்ட இரண்டு தன்மை ஒருங்கு நில்லாமையால் உயிர் சித்தசித்தென்னுஞ் சைவரில் ஒரு சாரார் மதமும், அசித்தாகிய கருவியை இன்றி அறிதல் செல்லாமையால், உயிர் சித்தேயாமென்னும் பட்டாசாரியர் மதமும் அடா.
உறாதவென்னும் பெயரெச்சத்தீறு விகாரத்தாற் றொக்கது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும்
பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து)
அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும்
இயல்புறும் அலய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே.

பொழிப்புரை :

இனி உடம்பகத்துப் பரமாணு அளவிற்றாய் நிற்பது உயிரென்னும் பாஞ்சராத்திரிகள் மதமுமடாது. என்னை? அணுவாயின் ஒரு துவாரத்தால் ஒடிப்போவதன்றி, உடம்பிற் கட்டுண்டற்கும் பாரந் தாங்கற்கும் உடம்படாதென்பது முதலிய குற்றந்தங்குமாகலான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும்
படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில்
சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும்
அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டு மன்றே.

பொழிப்புரை :

இனி மிருதி நூலார்உயிராவது உடம்பகத்துப் புன்னுனித் துளிபோல் ஏகதேசமாய் இதயத்தானத்தில் நிற்ப, அவ்வுயிரின் அறிவு விளக்கொளிபோல யாங்கணும் வியாபிக்குமென்பதும் அடாது. என்னை? உயிர் ஏகதேசமாயின் மேல் ‘உருவுயி’ரென்றார்க்கு ஓதிய குற்றமனைத்தும் எய்துமாகாலானும், குணங் குணியளவினன்றி மேற்செல்லாமையானும், விளக்கினொளியாவது விளக்கினது சூக்கும வடிவேயன்றிக் குணமன்றாகலான் அஃது ஈண்டைக்கு உவமையாகாமையானும், ஆமேனவே கொள்ளினும் அதனோ டிதனிடை வேற்றுமை பெரிதாகலானும்.
உயிரினை அணுவென்பார்க்கும் இஃதொக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின்
மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும்
பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண்
வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயு மன்றே.

பொழிப்புரை :

இனிச் சமணர் உடம்பளவில் நிறைந்து நின்று உணர்வது உயிரென்பர். அவர், உறக்கமுறுதலும், ஐம்பொறியினும் ஒருங்கேயறிவு நிகழாமையும், அவ்வவ்வுடம்பளவிற்குத் தக்க அறிவாதலின்மையும், குறைப்பக் குறையாமையுமாகிய இன்னொரன்னவற்றை நோக்கிலராகலால், அவர் மதமும் அடாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும்
இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும்.

பொழிப்புரை :

இனி ஐக்கிய வாதிகள் முதல்வன்போல் எங்கணும் வியாபியாய் நின்று அறிவனான்மாவென்பர். அங்ஙனங் கூறுவார்க்கு, அவத்தை போக்குவரவுகளுறுதலும், ஐம்புலனும் ஒருங்கே யறியாமையும், எல்லாமாய் வியாபித்தல் ஒழிந்தானாகி, உடம்பினுள் ஏகதேசமாய் நிற்றலும் எவ்வாறு கூடும்?
ஒழிந்தானென்றது முற்றெச்சம். எல்லாமென்றது வியாபகமுணர நின்றது. ஆக்கச்சொல் வருவித்துரைக்க. ஒழிந்தாலெனப்பாடமோதி, சங்காரகாலத்தின் எல்லாப்பொருளும் அழிந்தவழி நிற்ப தெங்ஙன மென்றுரைத்து, மூர்த்தப் பொருளனைத்தினுஞ் சையோகமாதலே வியாபகமெனவும் அவையனைத்தினையும் அறிதலே முற்றுணர்வெனவுங் கொண்டு, அங்ஙனங் கூறுவார் மதத்தை அவர் மதமேபற்றி மறுத்தாரெனினும் அமையும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின்
வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம்
ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம்
பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே.

பொழிப்புரை :

உயிர் எங்கும் வியாபகமாய் நின்று அறிவதாயினும் மாயாகாரியம் அவ்வறியைத் தடைசெய்து நிற்றலின் உறக்க முதலியனவுற்று ஏகதேசப்படுவதாயிற்றென விடுப்பின்,- அது பரிகாரமன்று; அறிவு விளங்குதற்கு ஏதுவாய மாயாகாரியம் அதற்கு மறுதலையாய்த் தடைசெய்தல் கூடாமையானும், முன் சுத்தமாயிருந்த உயிரை அது பந்தித்ததெனின், வீடுபெற்ற வழியும் உறுமெனப்பட்டு முத்தியென்பது இன்றாய் முடியுமாகலானும், வீடுபெற்றபின் உறாதெனின், அநாதி நிலையோடு இதனிடை வேற்றுமை யின்மையான் அநாதியே பந்தமுறுதலின்றி முத்தனாய் விளங்குதல் வேண்டுமாகலானும்.
‘அறிவிச்சை செயல்க’ளென்னுஞ்செய்யுள் முதல் இத்துணையும் உயிருண்மை கொண்டு ஆணவமலத்துண்மை கொள்ளாத சமயிகள் தத்தம் மதத்துக்கேற்பக் கூறும் உயிரிலக்கணங்களும் அவை பொருந்தாமையும் காட்டப்பட்டன. இன்னும் அவ்வம்மதத்தார் வேறுபடக் கூறும் உயிரிலக்கணங்களெல்லாம் இங்ஙனம் கூறியவற்றுள் வைத்துக் கண்டுகொள்க. அற்றேல், மற்றென்னையோ, வுயிருக்கு இலக்கணமாவதென்னுமவ் வைக்கியவாதசைவரை நோக்கிச் சித்தாந்தங் கூறுமுகத்தால் யானெனதென்பதிணைதருமாற்றைச் சாதித்தற்கெழுந்தது வருஞ் செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய்
வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி
நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும்
பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா.

பொழிப்புரை :

ஒருவாற்றானும் அசித்தாலரிய வியாபகப்பொருள் போலஒளபச்சிலேடிகவியாபகமாதலும் அதுபற்றி அதிசூக்குமசித்தாதலுமின்றி, அதுவதுவாய் வசிப்புண்ணும் வியாபகமாதலும், அநாதியே பசுத்துவமெனப்படும் ஆவணமலத்தின் மறைப்புண்டு கிடக்கும் இச்சா ஞானச் கிரியைகளை யுடைத்தாய்ப் பசுவெனப் படுந் தூலசித்தாதலுமுடையது உயிர்.
+ “உறற்பால - தீண்டா விடுதலரிது’’ என்றாற்போல அருமை ஈண்டு இன்மை குறித்து நின்றது. அருவமென்றது, + “இல்லா வருவாகி நின்றானை’’ என்றாற்போல, அதிசூக்குமமாதலை யுணர்த்தி ஆகுபெயராய் நின்றது. இதற்குப் பிறரெல்லாம் இயைபறவுரைத்தார். இதனானே உயிருக்கு அநாதிநிலையாகிய தன்னுண்மை கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை
ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு)
ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம்
காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா.

பொழிப்புரை :

அங்ஙனம் பசுத்துவமாத்திரையாற் கேவலப்பட்டு நின்ற ஆன்மா, அதன்பின் அசுத்தமாயையில் அனந்ததேவராற் கலக்குண்ட பாகமாகிய காரணசரீரத்தைப் பொருந்தி, அவ்வறிவிச்சை செயல்கள் பொதுவகையாயாற் சமட்டிரூபமாய் விளங்கப்பெறும். அதன்பின் அம்மாயாதத்துவத்தினின்றுந்தோன்றுங் கலாதிகளாகிய சஞ்சுகசரீரத்தைப் பொருந்தி அவை வியட்டிரூபமாய்ப் பிரிந்து தோன்றிச் சிறப்புவகையான் விளங்கப்பெறும். அதன்பின் அந்தக் கரணமுதலியவற்றைத் தம்முளடக்கி நிற்கும் முக்குணங்களாகிய குணசரீரத்தைப் பொருந்தி அவ்வறிவிச்சை செயல்கள் முன்னர்க் கூறப்படும் இருசரீரங்களிடமாக வரும் விடயங்களின் வியாபரிக்கப் பெறும்.
இங்ஙனம் பரசரீரம் மூவகைப்படுமெனக் கொள்க. மாயையிற் கலக்குண்ட பாகத்தை வயிறாக உருவகஞ் செய்மார். மேலே மாயாடன் வயிற்றென்றதுமது. அதுவே அசுத்தமாயா தத்துவமெனத் தத்துவங்களிடை வைத்தெண்ணப்படுவதூஉமென்க. மன்னி வருமென்னும் வினையெச்சமுடிபு காரணகாரியப்பொருட்டாய் நின்றது. ஏகதேசத்தினேய்ந்தென முன் வருதலின் ஈண்டு வருமென்பதற்கு அது பொருளாதறிக. “அன்பிலாரெல்லாந் தமக்குரியர்’’ என்றாற்போல, எல்லாவற்றானுமென்னுஞ் சாரியையும் உருபும் விகாரத்தாற் றொக்கன. காயம் ஆகுபெயர். ஆகிக்கலந்து நிற்குமென ஒற்றுமைபற்றிக் குணவினை குணிமேல் ஏற்றப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச்
சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும்
போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம்
ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா.

பொழிப்புரை :

அம்மூன்றையும் முறையான் எய்தியபின், சூக்கும தேகத்தைப் பொருந்திப் போக்குவரவு செய்து சூக்கும வினைப்பயன்களை ஈட்டியும் நுகர்ந்தும், தூலசரீரத்தைப் பொருந்திப்போக்குவரவு செய்து தூலவினைப் பயன்களை ஈட்டியும் நுகர்ந்தும், இவ்வாறு அதீத முதல் அஞ்சவத்தைப்பட்டு நிற்கும்.
சாக்கிர முதலென்றது ஒடுங்குமுறைபற்றிக் கூறியதெனவறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம்
ஒருவாந் தன்மை யுண்டாய்முன் ஒன்றுக் கொன்று சூக்குமமாய்
வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும்
அருவா யான்மா ஐங்கோசத் தார்ப்புண் டவற்றின் அகம்புறமாம்.

பொழிப்புரை :

காரணசரீர முதலிய அவ்வைந்தும், அவ்வாறு மாயையினின்றுந் தோன்றி ஆன்மாவுக்கு வடிவாய் முறையே ஆனந்தமயகோச முதலிய ஐவகைப்பெயர்பெற்று ஒன்றற்கொன்று தூலமாய் நிற்க, கேவலத்தில் ஒன்றுமின்றி மலமாத்திரையாய் நின்ற ஆன்மா இவ்வைங்கோசங்களில் அதுவதுவாய் வசிப்புண்டு ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்து நிற்கும்.
கேவலத்தில் ஒன்றுமின்றி நின்ற ஆன்மா, மாயையில் அங்ஙனங் கலக்குண்ட பாகத்தை முதற்கட்பொருந்தி அறிவிச்சை செயல்கள் பொதுமையான் அவ்வளவு விளங்கப்பெற்ற மாத்திரையே அம்மயக்கறிவால் ஓரானந்த முண்டாகப் பெறுதலின், அஃதானந்தமயகோசமெனப்பட்டது. ஏனையவுங் காரணக்குறியாமாறு உய்த்துணர்ந்து கொள்க. இவ்வைங்கோசங்கட்கு வேறுவேறு பொருள் கூறுவார் மதங்களை யெல்லாம் மறுத்தற்பொருட்டு, இவ்வாறெடுத்தோதி மாயை முதற்காரணமாகுமென்றுங் கூறினார். ஆன்மா வித்தரைக் கீழ்மேலுங் கொள்ளிவட்டம் கறங்கென நிமிடத்தின் கண் அலமரும்படிகொண்டு திரிதரல்பற்றி. இவ்வைங்கோசங்களை ஐந்து பறவையாகவும் அவற்றுள் ஒரோவொன்றை ஐவகைப்படுத்து முகமுதலிய வுறுப்புக்களாகவும் வேதத்துள் உருவகஞ் செய்துணர்த்தியவா றென்க. ஆன்மாவின் உண்மை யுணர்தற்கு இவற்றை இங்ஙனம் பகுத்தறிதலும் ஒரு சாதனமெனக் கொள்க.
இவை மூன்று செய்யுளானும், பசுத்துவவுபாதியான் மறைப்புண்டு நின்ற அவ்வறிவிச்சை செயல்கள் பின் ஒருபுடை விளங்கி அவத்தை போக்குவரவு முதுலிய வுறுதற்குரிய உபாதி கூறுமுகத்தால் வசித்திட வருமாறு தெரிந்துணர்த்தப்பட்டது. இன்னும் ஆன்மாச் சார்ந்ததன் வண்ணமாய் வசித்திட வருமாற்றிற்குச் சருவஞானோத்தரத்தில் (ருஅ) அவ்வச்சார்பு விசேடம்பற்றிப் பூதான்மாமுதல் அறுவகைப்படுத்துத் தொகுத்தும் விரித்தும் ஓதியதூஉம் ஈண்டு உய்த்துணர்ந்து கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த்
தேர்ப்பாரிற் செலவும் வேறாய்ச் செலுத்துவோர் செய்தி தானும்
பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும்
ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே.

பொழிப்புரை :

அன்னமயகோச முதலிய ஐந்தினும் ஆன்மா வேற்றுமையின்றி நின்று செலுத்துமாறு, முறையே, தேர்ப்பாரிற் செலவும் மரப்பாவையிக்கமுந் தோற்பாவைக் கூத்தும் வேறாய்ச் செத்துவோர் செய்தியும் வேடங்கட்டியாடுவோர் பரிசும் போலும்.
வேறாய்ச் செலுத்துவோர் செய்தியென்றது பரகாயப்பிரவேசத்தை. இவை ஐந்தும் முறையே ஒன்றற்கொன்றந்தரங்கமாய் அவ்வைங் கோசங்களினும் ஆன்மா நின்று செய்யுமாற்றிற்கு உவமையாமாறு தெரிந்துணர்ந்து கொள்க. செய்யுளாகலின் முறை பிறழ வைத்தார். காயம் சாதியொருமை. இதனானே, ஆன்மா அங்ஙனம் வசித்திடவரினும் அவ்வேகதேசப் பொருள்கட்கு வேறாய் வியாபியெனும் வழக்குடையனாதல் அவற்றைச் செலுத்துமாற்றின் வைத்துணர்த்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால்
தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம்
நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின்
உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி.

பொழிப்புரை :

தன் மனை முதலியவற்றோடொப்ப எனதென்று வழங்கப்பட்டுச் சில நீங்குதலும் காணப்படுதலால், இதனானும் ஆன்மா அவற்றிற்கு வேறென்பது அறியப்படும்.
உன்னின என்பது இன்சாரியை பெற்றவகரவீற்றுப் பலவறிசொல். அற்றேல் உடல்பொறி முதலியவற்றை எனதென்பது, தன்மனை முதலியவற்றை எனதென்றது போலன்றி இராகுவினது தலை யென்றாற் போல அபேதம்பற்றிக் கூறுங் கருத்தேயாகலின் உரைப்போர் குறிப்பொடுபடுத்துக் காணுங்கால் அவ்விருவகை வழக்கிற்குந் தம்முள் வேறுபாடுண்மையின், அவை தம்முளொக்குமாறு யாங்ஙன மென்பாரை நோக்கி வேறு உவமையெடுத்துக்காட்டியுணர்த்துதற்கெழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு)
என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது
நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில்
அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே.

பொழிப்புரை :

உடல்பொறி முதலியவற்றை எனதென்றல், இராகுவினது தலையென்றாற்போலச் சிறுபான்மை வழக்கமாதலின்றிப் பெரும்பாலும் யாண்டும் யாரும் வழங்கக் காண்டலின், அவற்றை அபேதம் பற்றிய கருத்தாலெனதென்றன் மெய்ப்படுத்த அணிகல முதலியவற்றை அவ்வாறெனதென்றல் போல அறிந்து பிரிந்து பாராத மடமையே பிறிதன்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான
கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்கை
இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ
திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண்.

பொழிப்புரை :

ஆன்மாவை எனதென்றல் வேறாகக் காணுங்கருத்தின்றி இராகுவினது தலையென்றால்போல ஒரு சாரார் கூறுஞ் சிறுபான்மை வழக்காகலின் அஃதபேதம்பற்றிய வழக்கென அமையும். விஞ்ஞானமயகோசம் ஆனந்தமயகோசங்களை எனதென்றல் ஏனைக்கோசங்கள்போல வேறாகக் காணுங் கருத்தால் எல்லாரானும் வழங்கப்படும் பெரும்பான்மை வழக்காகலின் அஃததுபோல் அபேதம் பற்றிய வழக்கென அமையாமையின் அவையும் ஏனையபோல உயிரின் வேறேயாம்.
விஞ்ஞானமயகோசம் உயிரின் வேறாதல் கூறவே இனம்பற்றி ஆனந்தமயகோசம் உயிரின் வேறாதலும் அதனாற் கொள்ளப்படும். உணர்வென்னதென்கை வேறுகண்டாகலான் இந்த வுணர்வு யானல்லவான கடனெனக் கூட்டுக. கண்டிடாரென்பது முற்றெச்சம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும்
சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும்
முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும்
வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண்.

பொழிப்புரை :

அல்லதூஉம், உள்ளவாறு நோக்குவார்க்கு என்றனான்மாவென்னும் வழக்கில் ஆன்மாவென்றது தன்னோடியைபுடைய பிறிதொன்றின்மேல் ஆகுபெயராய் நிற்குமாகலான், அவ்வழக்குப் பற்றி நின்கருத்து நிரம்புமாறில்லை.
ஆகலான் அவ்வழக்குப்பற்றி நின்கருத்து நிரம்புமாறில்லையென்பது குறிப்பெச்சம். அவ்வாறு ஆகுபெயராய் ஆண்டாண்டு வருதலை எடுத்துக்காட்டுவார், புந்தியை மனமதென்றும் மனமது புந்தியென்றுஞ் சிந்தையைச் சீவனென்றுஞ் சீவனைச் சிந்தையென்றும் முந்தனையான்மாவென்றும் ஆன்மாவை முந்தனென்றும் வந்திடு மென்றார். ஏனை மூவகைச்கோச மாத்திரையே வேறெனக்கொண்டு விஞ்ஞானமயகோசம் ஆனந்தமயகோசம் இரண்டும் முறையே சீவான்மாவும் பரமான்மாவுமாமென்பார் மதத்தை மறுத்தற்பொருட்டு, அவற்றை இங்ஙனம் வேறெடுத்தோதி வலியுறுத்தவாறு.
இவை நான்கு செய்யுளானும் உலகவழக்கின் வைத்துணர்த்தி மேலது வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர்
எறிசுடர் விளக் கிருக்கு மிடத்தையும் விளக் கென்றாற்போல்
பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப்
பிறிதரா தறிவ தான்மா அறிபொருள் பின்ன மாமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் வேறாகிய அவ்வைங்கோசங்களை ஆன்மாவென வுபநிடதங்களிற் கூறியதூஉம், விளக்குத்தகழியை விளக்கென்றாற்போலத் தானியாகுபெயராதற்குரிய இயைபுபற்றியேயன்றிப் பிறிதில்லையாகலால், அவையெல்லாவற்றின்கண்ணும் அபேதமாய்ப் பிரிதலின்றி யறிவதாகிய ஆன்மா அவற்றிற்கு வேறு.
அறிவுடல் சிந்தையென்றதும் பொறிபுலன்கரண மென்றதும் உபலக்கணம். எல்லாவற்றின் கண்ணென்னும் ஏழாவதும் அறிபொருட்கென்னும் நான்காவதும் விகாரத்தாற்றொக்கன. அபேதமாகிப் பிறிதராதென்றது “ஞானதிரோதகமாய் மறைத்துக்கொடு நிற்றல்’’ என்றாற்போலக் கொள்க. இதனானே ஐங்கோசங்களை ஆன்மாவென்னும் உபநிடதத்திற்குத் தாற்பரியங் கூறி, மேலது வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம்
உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து
கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய்
உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும்.

பொழிப்புரை :

அன்னமயகோச முதலிய நான்கனையும் ஒரோவொன்றாக விட்டுவிட்டு அஞ்சவத்தைப்பட்டு விழித்தபின், அவை கூடிநின்றறிவிக்க முறையே சொல்லியுங் கருதியும் உண்டிவினையுறுதலாகிய மறுதலையின் வைத்தும் அங்ஙனம்அவத்தைப்பபட்டவாற்றை அறியா நிற்குமாகலால், இதனானும் உயிரவற்றின் வேறேனத் தெளியப்படும்.
அவை கூடியபின்னன்றி அறிவுநிகழாமையால் அறிதற்கு அவை ஏதுவாதல் பெறப்பட்டது. ஒடுக்கமென்றது சுழுத்தியை . அது கனவுபோற் சொல்ல வாராமையிற் கருதியுணர்தற்பாலதாயிற்று. சித்தமுஞ் சொல்லாத ஏனையிரண்டுங் கருதவும் வாராமையின் மறுதலையின் வைத்துணர்தற்பாலவாயின. உணர்ந்தபின் என்றது உணர்ந்தெனத் திரிந்துநின்றது. உணர்தல் ஈண்டுத் துயிலெழுதன்மேற்று. இதனானே அவத்தைப்படும் இயல்பின் வைத்துணர்த்தி மேலது வலியுறுத்தப்பட்டது. `தோற்பாவை’ யென்பதுமுதல் இத்தனையுங் கூறியவாற்றான் மேலைச்சூத்திரத்தின் `உற்றுச்செயிருறு’ மென்பது முதலிய நாற்கூற்றுப் பொருளையும் வலியுறுத்தவாறுமாயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம்
தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி
வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன்
அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன்.

பொழிப்புரை :

ஆன்மா முதல்வன்போலச் சுத்தசித்தேயாகின் மாயா காரியங்களைப் பற்றிநின்றறிதல் வேண்டா ; அவ்வாறன்றி அமைச்சரும் அரசும்போ லுடனின்று மாயாகருவிகளைப்பற்றி யறிதலுண்மையால் அநாதியே யாணவமலத்தின் மறைந்து அருவனாய் நிற்றல் பெறப்படும்.
தேற்றேகாரத்தை அறிவனென்பதனோடுங் கூட்டியுரைக்க. என்னென்பது ஈண்டு வேண்டாமை குறித்து நின்றது. போல்வ னென்பது முற்றெச்சம். பின்வரும் அனுமானத்தை வலியுறுத்தற் பொருட்டுப் புருடனேயறிவனாகிற் பொறிபுலனாதிபோதந் தருவ தென்னெனத் தருக்கமெடுத்தோதினார். இதனானே ஞானச்செய்தி அநாதியே மறைத்துநிற்கும் பசுத்துவமுடையனாதல் காரியானு மானத்தின் வைத்துணர்த்தி வலியுறுத்தப்பட்டது. `அறிவிச்சை செயல்க’ ளென்பது முதல் இத்துணையும் பரமதங்களைப் பரிகரித்து ஆன்மாவுக்கிலக்கணங் கூறுமுகத்தால் இரண்டாங் கூற்றை வலியுறுத்தவாறு.
இனி ஒன்பது செய்யுளான் மூன்றாங் கூற்றைத் தெரித்துக் கூறுகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில்
கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர்
அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா
உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக.

பொழிப்புரை :

புருடன் அவற்றோடமைச்சருமரசும் போறலின் அரசன் போலவற்றை விட்டுவிட்டுச் சென்று ஐவகையவத்தையுறும்.
இதனானே வெவ்வேறவத்தை அணைதருமாறு மேற்கூறிய உவமையோடு படுத்து வகுத்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில்
ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று
நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி
நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே.

பொழிப்புரை :

ஆன்மா அரசன்போல விட்டுவிட்டுச் சேறற்கட்படு மவத்தையாவன: சாக்கிரமுதலியனவாம். அவ்விடங்களாவன: இலாடமுதலியனவாம். ஆண்டாண்டு நிற்குங் கருவிகளாவன: முறையே முப்பத்தைந்தும் இருபத்தைந்தும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாம்.
அசிந்திய விசுவசாதாக்கியத்தில் அவத்தைக்கு நிற்குங் கருவிகளிற் கலாதிகளையுமுடன் கூட்டியெண்ணி நாற்பத்தொன்று முதலியனவாகத் தொகைகூறுதலானும், கலாதிகளுளவாகவே சுத்ததத்துவங்களின் தொழிற்பாடும் ஆண்டுளவென்பது பெறப்படுதலானும், கலாதிகளில்வழிப் புருடதத்துவமொன்றென வைத்தெண்ணப்படுதல் செல்லாமையானும், ஈண்டு முப்பத்தைந்து முதலியனவாகத் தொகைகூறியது மiவாம்போலுமெனின்,- ஆகாது ; `கடை தொறும் விட்டுவிட்’ டென்ற உவமைக்கேற்ப விடப்படுதன் மாலையவாய் நிற்குங் கருவிகள் மாத்திரைக்கே ஈண்டுத் தொகைகூறப் புகுந்தாராகலானும், அதுபற்றிக் கலாதிகளின் ஐயஞ் செல்லாமைப் பொருட்டு அவற்றைப் புருடதத்துவத்துளடக்கி அதனையும் உடன் வைத்தெண்ணினாராகலானும் என்க. துரியாதீதத்திற் காரணசரீர மாத்திரையேயன்றிக் கஞ்சுக சரீரமில்லையென்றது, ஆண்டுக் கலாதிகள் வேறு நில்லாது அதனோடொற்றித்து நிற்குமென்னுங் கருத்தே பிறிதில்லையெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும்
ஒருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று
பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுத் திடுமி யோகில்
தருவதோர் சமாதி தானும் தாழ்ந்துபின் சனனஞ் சாரும்.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த சாக்கிரமுதலிய ஐந்தும் கீழ்நோக்கிச் சென்றொடுங்கு முறையும் மேனோக்கித் தோன்றுமுறையும் பற்றி இருவகைப்படும். அவற்றுள் ஒடுங்குமுறையது கன்மார்ச்சிப்புக்கேது வாகலாற் கீழ்ச்செலுத்திப் பிறவிக்கு வித்தாம் ; தோன்றுமுறையது கன்ம நுகர்ச்சிக்கேதுவாகலாற் பரம்பரையிற் பிறவியறுத்தற்குக் காரணமாய் மேற்படும். இனி இதயமுதல் துவாதசாந்தம் ஈறாகிய தானங்களிற் புறக்கரணம் உட்கரணங்களைப் பற்றியும் பற்றாதும் பிரத்தியாகாரமுதல் ஐவகைப்பட்டு நிகழும் யோகாவத்தையும் அதுபோல ஒடுங்கியுந் தோன்றியும் அவ்வாறே பயன்தருவதன்றிப் பிறிதன்று.
யோகில் தருவதோர் சமாதியுண்டென்பதும் அனுவாதமுகத்தான் ஈண்டேபெற்றாம். தாழ்தல் இழிதல். சனனஞ்சார்தல் ஏறுதல். இந்த யோகாவத்தையைத்தானே மீட்சியில்லாதாகிய ஞானாவத்தை போலுமெனக்கொண்டு மயங்குவார்க்கு அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு இதனை யதனோடொப்பவைத் தீண்டுக்கூறினார். இச்செய்யுளிற் கூறிய மூன்று பேதமும் முறையே சகலத்திற் கேவலம் சகலத்திற் சகலம் சகலத்திற் சுத்த மெனப்படுமென்க. இதனுள் இருவகைப் பிறப்பறுத்திடுமென்றது தாப்பிசையாய் `அறிதரு முதலவத்தை யடைதருமிடத்தே ஐந்துஞ் செறிதரு’ மென வருகின்றதனோடுஞ் சென்றியைந்து பொருள்தரு மாகலான் அதற்கும் இவ்வாறுரைத்துக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுங் கண்டு கொள்நீ
பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே
குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட.

பொழிப்புரை :

சாக்கிராதி யவத்தையென மேற்கூறிப்போந்த ஐந்தனுள் முதலவத்தையாகிய சாக்கிரத்தானத்தின் கண்ணேயுஞ் சாக்கிரமுத லைந்தவத்தையுளவாம். அவை கருவியான் விடயங்களை யறியுஞ் செய்கைதோறும் அதிநுணுக்கமா யிடையீடின்றி நிகழுமாறு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளப்படும். இனி இவையே யன்றிக் கேவல சகலங்கள் நீங்கிய சுத்தத்தினும் அவ்வாறே ஐவகை யவத்தையுள. அவையுண்மை யதிகாரத்துள் உணர்த்த நின்றன.
முதலவத்தை அடைதரும் இடமாவது மேற்கூறிய இலாடத்தானம். அறிதருமிடத்தேயென வியையும். சுத்தாவத்தையின் இயல்பு ஈண்டுக் கூறுதற்கோ ரியைபில்லையாயினும் அவத்தை யெனப்படுவன ஈண்டுக் கூறியவை மாத்திரையே போலுமென மலையாமைப்பொருட்டு இவ்வாறு கூறியொழிந்தார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று
வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம்
தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும்
உந்திடுங் கரணந் தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே.

பொழிப்புரை :

அறிதரு `முதலவத்தை யடைதரு மிடத்தே’ யென மேற்கூறிப்போந்த சாக்கிராதி யவத்தைகள் ஐந்துனுள், சாக்கிரத்திற் சுத்தவித்தை யீறாகிய ஐந்து கருவியும், சொப்பன முதலிய நான்கினும் முறையே அவற்றுள் ஒரோவொன்றொழித் தொழிந்த கருவியுங் கலாதிகளைச் செலுத்திநிற்கும்.
தானந்தோறும் கலாதிகள் தொழிற்படும். இடந்தோறும். உந்துதல் செலுத்துதல். இச்செய்யுள் பிறிதோரவத்தைக் கோதியது போலுமென மலையாமைப் பொருட்டுக் `கரணந்தன்னிற் செயல்தொறுங் கண்டு கொள்’ ளென மேற்கூறியவதனை ஈண்டும் மறித்துணர்வு நிகழக்கூறினார். இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே யுரைப்ப. ஈண்டைந்து நான்கு மூன்றிரண் டொன்றென்றது செலுத்துங் கருவிகளை யென்பது. உந்திடு மென்றதனானும் ``சுத்தக் கருவிகள் ஐந்துங்கொண்டே சொல்லவத்தை ஐந்துஞ் சித்திக்கும் போதத்தி லொன்றொன்று சென்றிடும்” என்பதனானும் அறிக. இனி இவ்வாறன்றி `அறிதருமுதலவத்தை யடை தருமிடத்தே யைந்துஞ் செறிதரு’ மென மேற்கூறிப் போந்ததனையே ஈண்டு ஐந்துசாக்கிரத்தினென் றனுவதித்து ஏனைச் சொப்பன முதலியவற்றின் முறையே அவை நான்கு மூன்றிரண்டொன்று பொருந்து மென்றவாறாகக் கொண்டுரைத்தலுமொன்று ; இப்பொருட்குச் சாக்கிராதியவத்தைகள் ஐந்தெனக் கூட்டுக ; தானம்நுதல் முதலியவிடம் ; உந்துதல் பொருந்துதல். இவை நான்கு செய்யுளானும் மேலைந்தவத்தை யென்றவற்றின் பெயரும் வகையு மிடமும் அவற்றதியல்பு மிவையென்பது கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா
மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம்
காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம்
ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே.

பொழிப்புரை :

ஆன்மா அவ்வாறு நிகழுங் காரிய அவத்தைகளை உறுதற்குக் காரணமாகக் கேவலஞ் சகலஞ் சுத்தமென மூன்றவத்தை எய்துவன். அவற்றுட் கேவலமாவது தன்னிச்சா ஞானக் கிரியைகளின் நிகழ்ச்சி சிறிதுமின்றித் தான் மாத்திரையே யுளனாதல்; பின்பு தனுகரணாதியோடுங் கூடி அவையொருபுடை விளங்குமவதரஞ் சகலம் ; பின்பு பஞ்சமலங்களும் நீங்கிச் சிவத்தோடுகூடி அவ்விச்சாஞானக் கிரியைகளெங்குமாய் வியாபித்து விளங்கும் அவதரஞ் சுத்தமெனப்படும்.
இதனானே மேற்கூறிப்போந்த அவத்தைகட்குக் காரணமிவை யென்பதூஉம் அவற்றதியல்புங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான்
குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்
பிறிவிலன் மலத்தி னோடும் வியாபி கேவலத்தில் ஆன்மா.

பொழிப்புரை :

வரக்கடவனவாய அறிதன் முதல் ஏகதேசியாத லீறாகிய பத்துக்காரியங்களுள் ஒன்றுமின்றி ஆணவமலத்தோடு மாத்திரையே கூடிநிற்பது கேவலம்.
ஈண்டு அமூர்த்தமென்றது உடம்பின் பிராகபாவத்தை; நித்த மென்றது தோற்றக்கேடுகளின் பிராகபாவத்தை; வியாபகமென்றது ஏகதேசத்தின் பிராகபாவத்தை. ஏனையின்மைகளும் அவ்வப் பிராக பாவங்களைக்குறித்து நின்றனவாகலான், இவ்விலக்கணங்கள் ஏனை யவத்தைகளிற் செல்லாமையின் இவற்றுளொன்றே கூற அமையுமாயினும் `கேவலந்தன்னுண்மை’ யென்றது விளங்குதற்பொருட்டு இவையனைத்தும் வகுத்துக் கூறினார். பிறிவிலன் மலத்தினோடும் என்றதும் அதன் பொருட்டு. ஈண்டுக் குறியென்றது முதனிலைத் தொழிற் பெயராய் இச்சையையுணர்த்தி நின்றதென்பது செயலினைத் சாரவைத்தலானறிக. அறிவிலனென்றதனையு மீண்டுத்தந்துரைக்க. அராகாதிகுணமென்றது புத்திகுணம் எட்டினையும். அராகாதிகுணங்களென்ற உபலக்கணத்தால் ஏனைப்போக்கியகாண்டக் கருவிகளுங் கொள்ளப்படும். இதனானே தன்னுண்மை கேவலமாதல் காட்டப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல்
வருசெயல் மருவிச் சத்த மாதியாம் விடயம் தன்னில்
புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று
திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே.

பொழிப்புரை :

மேற்கூறிய இன்மைகள் பத்துக்கும் மறுதலையாகிய இப்பத்துக் காரியமும் உடையனாய்ச் சீவித்து நிற்பது சகலம்.
போககாண்டமாகிய கலாதியைப் போகமென்றும் போக்கிய காண்டமாகிய புத்தியாதியைப் போக்கியமென்றுங் கூறினார். உன்னலென்றது ஈண்டு விரும்புதன்மேற்று. செப்பலென்றது செப்பப்படுவனவாய நால்வகை வாக்குக்களையும் உணர்த்தி அவை காரணமாய் நிகழும் அறிவின்மேல் ஆகுபெயராய் நின்றது. புரிவது மென்றவும்மையான் நுகர்வதுமென்றதெஞ்சிநின்றது. உருவினைக் கோடல் அமூர்த்தனாதற்கும், போகபோக்கியத்துச்செறிதல் கலாதி யோடுஞ்சேர்விலன் அராகாதி குணங்களோடுஞ் செறிவிலனாதற்கும், உன்னல் செப்பல் வருசெயன்மருவுதல் அறிவிலன் செயல்களில்லான் குறியிலனாதற்கும், சத்தமாதியாம் விடயந்தன்னிற் புரிவ துஞ்செய்தல் கருத்தாவல்லனாதற்கும், உம்மையாற் போந்த நுகர்வதுஞ் செய்தல் போகத்திற் கொள்கையில்லானாதற்கும், எல்லாயோனியும் புக்குழலுதல் நித்தனாதற்கும், சென்றுதிரிதரல் வியாபியாதற்கும் மறுதலையாயவாறு கண்டுகொள்க. இதனானே மெய்ப்பொறிகளெல்லாங் காவலன் கொடுத்தபோது சகலனாதல் வகுத்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம்
பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய பத்தனுள், சத்தமாதியாம் விடயந்தன்னிற் புரிவதுஞ் செய்தல்கழிதற்கேதுவாகிய இருவினையொப்பும், போக போக்கியகருவிகளின் செறிவுகழிதற்கேதுவாகிய சத்திநிபாதமும், உருக்கழிதற்கேதுவாகிய குருவருளும், எல்லாயோனியும் புக்குழலுதல் கழிதற்கேதுவாகிய ஞானசாதனமும், சென்றுதிரி தருதலாகிய ஏகதேசத்தன்மைகழிதற்கேதுவாகிய மும்மலநீக்கமும், சத்தமாதியாம் விடயந்தன்னில் நுகர்வது கழிதற்கேதுவாகிய வாதனை நீக்கமும், பாசவறிவிச்சைசெயல்கள் கழிதற்கேதுவாகிய ஞானப்பெருக்கமும் முறையே கிடைப்ப, அவற்றான் அக்காரியம் பத்தும் நீங்கப்பெற்றுத் திருவருளைக் கூடுதல் சுத்தம்.
சத்திநிபாதத்திற்கு மூலமாகிய மலபரிபாகமும் இருவினை யொப்புக்கு மூலமாகிய சிவபுண்ணியமுமென்னும் இன்னோரன்னவற்றை ஈண்டுக் கூறாதொழிந்தார். மேற்கூறிய காரியம்பத்தும் நீங்குதற்கேதுவாவன மாத்திரையே யீண்டுக் கூறப்புகுந்தாரன்றி அனைத்துங் கூறப் புகுந்தாரல்லராகலின் அவையெல்லாம் முன்னர்க் கூறப்படும். இதனானே மலங்களெல்லாமோவினபோது சுத்தமுடையனாமாறு வகுத்துக் கூறப்பட்டது. `புருடனே யறிவனாகி’ லென்றது முதல் இத்துணையும் `வெவ்வேறணைதரு’ மென்ற மூன்றாங் கூற்றை வகுத்தோதியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை
அறிதரா அவையே போல ஆன்மாக்க ளனைத்து மெங்கும்
செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா
அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன்.

பொழிப்புரை :

தன்னை யறியமாட்டாத பொறி முதலியவற்றைத் தானறிந்தறிவித் துடனிற்கும் புருடன்; அதுபோலத் தன்னை யறிய மாட்டாத அப்புருடனை அறிந்தறிவித்து உடன்நிற்பது சிவம்.
சிவனேயெல்லாம் அறிந்தறிவித்து நிற்பனெனப் பொருட்கணோதி அதனை உவமையினும் ஏற்குமாறியைவித்து உரைத்துக் கொள்க. திரோதான சத்தியின் இயல்பை உபசாரத்தாற் சிவன்மேலேற்றிக் கூறியவாறு. அறிதருஞ்சிவன் முடிவின்கண் உண்மையறிவைத் தரக்கடவோனாகிய சிவன். அறி முதனிலைத் தொழிற்பெயர். இச்செய்யுள் முதனூலஞ்சாஞ் சூத்திரம்போல இரு கூற்றதாமாறு கண்டுகொள்க. அவற்றுள் முதற்கூற்றுப் பொருளை உள்ளடக்கி நிற்கும் இரண்டாங்கூற்றை அவ்வம்மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து வலியுறுத்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும்
குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா
முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல்
அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி.

பொழிப்புரை :

அறிவித்தற்பொருட்டு இறைவன் வேண்டப்படுமெனக் கொள்வார்க்கும், அறிவுகள் ஒரு பெற்றியவாதலின்றி ஏற்றத்தாழ்வுகளாய் நிகழ்தற்குக் காரணங் கன்மமெனக் கொள்ளவேண்டுதலின் அதுவேயமையும் வேறுமாரறிவிப்பானைக் கோடன் மிகையாமாலெனின், - அற்றன்று ; பங்கயத்தின தலர்ச்சிக்குப் பங்கயமேயன்றி இரவியும், உழவு முதலிய செயல்களின் பயனுக்கு அச்செயலேயன்றி விளைநிலமுங் காரணமாதல் கண்டாமன்றே; அவைபோல் அவ்வக்கன்மம் பக்குவமாதலும், பயன்தருதலும் வேறோரிறைவனையின்றி யமையாமையின் மிகையாதல் யாண்டையது.
குறைவதிகங்கள் தத்தங்கன்மமெனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். செயல் ஆகுபெயர். முறைதருசெயல், உழுதல் எருப்பெய்தல் வித்தல் கட்டல் நீர்கால்யாத்தல் காத்தலென் றிம்முறையால் தரப்படுஞ் செயலென்க. அற்றேற் கன்மத்தோடுங் கூடியவுயிரே அதற்குக் காரணமாதலமையும், வேறுமோ ரிறைவன் எற்றுக்கென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும்
அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும்
அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே
அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே.

பொழிப்புரை :

இந்நான்கேதுக்களானும் அறிவு நிகழ்ச்சிக்குப் பொறிபுலன் முதலியவற்றோடொப்ப வேறு காரணத்தை அவாய்நிற்பதன்றி உயிர்தானேயறியவற்றன்று.
ஒன்றை யொன்றினாலறிதலே, அதனியல்பென்பாரை நோக்கி அறிந்தவை மறத்தலானுமென்றும், அறிந்ததனைப் பின்னறிய வேண்டாமையின் மறக்கலாயிற்றென்பாரை நோக்கி மீள அறிவிக்க அறிதலானுமென்றும், எவ்வாற்றானும் அறிதலில் திரிபில்லையன்றே என்பாரை நோக்கி அறிந்திடுந்தன்னையுந் தானறியாமையானுமென்றுங் கூறினார். இதனானே சாங்கியர்மதம் பரிகரித்து முதற்கூற்றை வலுயுறுத்தவாறுமாயிற்று. விதந்துகூறாது ஒன்றையொன்றினாலெனப் பொதுப்படக் கூறியதும் அதன்பொருட்டு, அற்றேல், ஈண்டொன்றினால் எனப்பட்ட மாயேயமே அதற்கமையும் இறைவன் எற்றுக்கென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால்
உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும்
அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும்
ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே.

பொழிப்புரை :

கருவிமுதலிய எட்டும் ஒரு சேதனப் பொருளுங் கூடி நின்றொருவிடயத்தை யுணர்த்த உயிருணர்தலானும், அல்லுழி யுணராமையானும், இவையனைத்தையுங் கொண்டுகூட்டி யறிவிப்பானொரு சேதனன் வேறு வேண்டப்படுமாகலான், இறைவனையின்றி அறிதலமையாது.
கருவி உயிர்செலுத்தப்படும் ஆன்மதத்துவம். பொருள் தாத்துவிகம். காட்டு உயிரினறிவிச்சை செயல்களை விளக்குவனவாய கலை முதலியன. காலம் கன்மத்தை முந்தாது பிந்தாது வரையறுத்துச் செலுத்துங்காலதத்துவம். கருமம் கன்மத்தை யேறாது குறையாது நிறுத்தும் நியதிதத்துவம். உரு உடம்பு. அளவை - பிரமாணம். நூல் - நூல்கட்குக்காரணமாய நால்வகை வாக்கு. ஒருவிடயத்தை அறிதற்கண் இவற்றுள் ஒன்றையின்றியும் அமையாமை கண்டுகொள்க. கருமமும் நூலும் ஆகுபெயர். இயற்பெயர்ப் பொருளாக வைத்துரைப்பாருமுளர். தன்னுண்மை உண்மையெனத் தலைகுறை. உண்மையில் ஒன்றுமிலனாதல்பற்றி அருவனென்றார்.
இவை மூன்றுசெய்யுளானும், முறையே கன்மமும் உயிரும் மாயேயமுமென்னும் இவையே ஆண்டைக்கமையுமென்னும் ஆருகதர் மீமாஞ்சகர் சாங்கியர் முதலியோரை மறுத்துப் பாரிசேடவளவையான் ‘அறிதருஞ் சிவனே எல்லாம் அறிந்தறிவித்து நிற்றல்’ வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும்
உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி
அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய்
ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன்.

பொழிப்புரை :

இறைவனுக்குக் கருவிமுதலியன கூடி அறிவு நிகழ வேண்டாமையின், உயிர்கட்குப்போலத் தனக்கு மேலொருவன் அவாவப்படும் போலுமென்னும் அநவத்தைக்கிடமின்றித் தானே தமியனாயறிந்தும் ஆக்கியும் உணர்த்தியும் நிற்கும்.
உலகெலாம் அறிந்தென்றது கேவலத்திற் சூக்கும ஐந்தொழில் செய்தன்மேற்று. ஆக்கியெனவே இனம்பற்றி ஏனை நான்குதொழில்களும் உடன்கொள்ளப்படும். அவை தூலஐந்தொழிலென்பது. உணர்த்தி நிற்பனென்றது முதலவத்தை யடைதருமிடத்தே செயற்பாலனவாய் ஈண்டெடுத்துக் கொண்ட அதிசூக்கும ஐந்தொழின்மேற்று. அறிதலும் ஆக்குதலுமாகிய இருதிறத்து ஐந்தொழிலும் முதல்வன் செயலாதல் மேற்கூறிப் போந்தமையின் அவைபோலிவையும் முதல்வன்தொழிலே யாமென்பார்,அறிந்தாக்கியுணர்த்தி நிற்பன் என உடன் கூறினார். இதனானே மேற்கூறியதுபற்றி அநவத்தையின்றாமாறு கூறப்பட்டது. அற்றாயினும், கருவியறிதலால் வரும் பயன் உயிர்க்காயவாறுபோல உயிரறிதலால் வரும் பயனும் அதனோடு உவமிக்கப்படும் இறைவனுக்காவான் செல்லும், செல்லவே, இறைவனும் பந்தமுறுவனெனப்பட்டு வழுவாமாகலின் இறைவன் உயிர்போல் அறிவிப்பனென்றல் இழுக்காம்போலுமென்னும் அவ்வாதிகளை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும்
மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண்
உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம்
நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே.

பொழிப்புரை :

இறைவனாலன்றி உயிர் சேட்டியாமைக்கு மேற்காட்டிய பாரிசேட அளவையேயன்றி ஆகம அளவையும் இனிது விளங்கக் கிடத்தலின் அதனையும் அறியாது மறித்து மறித்துப் பிணங்குகின்ற பேதாய் ! எல்லாவற்றினும் நிறைந்துநின்ற இறைவன் சந்நிதியில் நிகழும் அவ்வறிவின் பயன், வினைக்கீடாய் வரும் வடிவுடைய உயிர்கட்கே உண்டாமதுவன்றி இறைவனுக்காதல் செல்லாது, சடமாகிய வுலகம் அவனெதிர் முனைத்து நிற்றலாற்றாமையான்.
மறந்தாயென்பது விளியுருபேற்ற பெயர். மாயையும் உணர்வும் ஆகுபெயர். உயிர்கட்கு உதிக்குமென இயையும். பிரிநிலையேகாரம் விரித்துரைக்க. ஐம்பொறிபோலன்றி உணர்தற்பயன் உயிர்க்கேயாதற்கு ஏதுக்கூறுவார், உருவுடையுயிரென விசேடித்தார். சந்நிதிக்கண் நீடுணர்வுதிக்கு மென்றதும் அதன்பொருட்டு. “வினையாற் கண்டறிந்து நிற்குங்கா-ணெண்ணான் சிவனசத்தையின்று’’ என்றார் முதனூலாசிரியரும். இதனானே அறிவித்தல்பற்றி இறைவனுக்குத் துடக்கின்மை கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
அலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன்.

பொழிப்புரை :

புருடன் உடம்பு முதலியனவற்றைக் கொண்டுநின்று உணருமாறுபோல, இறைவன் உலக முதலியனவற்றைக் கைக்கொண்டு நின்றுணர்த்துவன்.
எனவே, தன் உடல்பொறிகரணங்களைச் செலுத்துதற்கண் உயிர்க்கு விகாரமில்லாமைபோல இறைவனுக்கதுபற்றி விகாரமில்லை யென்றவாறாயிற்று. புலன் ஆகுபெயர். இறைவன் ஐந்தொழில் செய்தல் உயிர்கள்போலக் கரணத்தானன்றிச் சங்கற்ப மாத்திரையாற் செய்வ தென்பதுதோன்ற, நாடக நடிப்பனென்றார். ஈண்டு ஐந்தொழிலென்றது அறிவித்தற்கட்படும் அதிசூக்கும ஐந்தொழிலை.
இதனானே அதுபற்றி விகாரமின்மை கூறப்பட்டது. அற்றேல் இவை நலமிகுதொழிலாமாறு யாங்ஙனம் என்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப்
புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி
திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம்
விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன்.

பொழிப்புரை :

இறைவன் இங்ஙனம் ஏகதேச அறிவை நிகழ்வித்துச் சிறுபோகங் கொடுத்துப் பிறவியிற் படுத்துதல், அதனால் பருவ முதிர்வித்து வியாபக அறிவை நிகழ்வித்துப் பரபோகமுங் கொடுத்தற்பொருட்டு.
ஏகதேச அறிவு நிகழ்ந்தன்றிச் சிறுபோக நுகர்ச்சி செல்லாமையும், வியாபக அறிவு நிகழ்ந்தன்றிப் பரபோக நுகர்ச்சி செல்லாமையும் உணர்த்துவார், புரிந்திடும் உணர்வினோடு போகமுங் கொடுத்தென்றும், விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் என்றுங் கூறினார். இதனானே தூல ஐந்தொழிற்கட்படுவதாகிய அவ்வதிசூக்கும ஐந்தொழிற்குப் பயன் கூறப்பட்டது. அற்றேனும் அதனால் இறைவனுக்காகக் கடவதென்னை என்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்
தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு)
இருளினை ஒளியா லோட்டும் இரவியைப் போல ஈசன்.

பொழிப்புரை :

அங்ஙனம் கொடுத்துக் காட்டியளிப்பதாகிய அக்கருணை இறைவனுக்கு இயற்கைக் குணமெனப்படுஞ் சத்தியாகலான், குணங் குணியைவிட்டு நீங்காமையின் ஞாயிற்றிற்கொளி போல இறைவனுக் கவ்வருட்குணம் மேம்படுதலின் வேறாய் யாண்டைக்காகக்கடவது பிறிதில்லை.
இதனானே அவ்வருள் இறைவனுக்கு அணிகலமாதல் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா தவனோ வென்னின்
அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும்
செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்
நெறிதருஞ் சத்தின் முன்னர் அசத்தெல்லாம் நின்றி டாவே.

பொழிப்புரை :

சிவன் சுட்டியறியப்படும் பொருளாயிற் சடமாயழிந்து போவதுமாம் ; ஒருவாற்றானும் அறியப்படாத பொருளாயிற் சூனியமாம்; நெறியாகிய சிவஞானத்தால் தரப்படுஞ் சிவத்தினெதிர் அசத்தாகிய பாசஞானஞ் சிறிதும் நில்லாமையிற் சிவம் அவ்விரண்டு தன்மையுமின்றிச் சித்துசத்தாகி நிற்கும்.
இருவர் கூற்றாய் வேறு முடிபு கோடலில் தினைவழுவின்மையுணர்க. அசத்தெனவே அசித்தாதலும் அடங்குமாயினும், விளங்குதற்பொருட்டு வேறு கூறினார். சித்தொடு சத்தாய் நிற்குமென்றதுமது ; சடத்தை நீக்குதற் பொருட்டுமாம். தருதல் ஈண்டு விளக்குதன்மேற்று. ஆண்டுச் சத்தென்றது சிவமென்னுந் துணையாய் நின்றது. அசத்து முன்னில்லாமையின் அறிபொருளாதலும் நெறிதரு சத்தாகலின் அறியாப்பொருளாதலும் இல்லையென்பார், நெறிதருசத்தின் முன்னர் அசத்தெல்லாம் நின்றிடாவாகலான் இரண்டுமின்றியென்றார். ஆகலானென்பது சொல்லெச்சம். முதல்வனுக்குத் தடத்தலக்கணமெனப்படும் பொதுவியல்பு மேற்புனருற்பலம் வருமாறுணர்த்து முகத்தாற் பெறுவிக்கப்பட்டமையால், இது சொரூபலக்கண மெனப்படுஞ் சிறப்பியல்பெனக் கொள்க. அற்றாகலினன்றே உண்மையதிகாரத்தைச் சார ஈண்டு வைத்தோதியதூஉமென்க. முதனூல் ஆறாஞ் சூத்திரத்திற் கொண்ட இரு கூற்றொடும் அறியாததின்றாம் என்றதனை வேறு கோடலால் இச்செய்யுள் முக்கூற்றதாயவாறு கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஆவதாய் அழிவ தாகி வதலால் அறிவு தானும்
தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி
மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி
ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம்.

பொழிப்புரை :

சுட்டறிவாவதுகாலத்தான் ஏகதேசமாதலும் இடத்தான் ஏகதேசமாதலும் அதுவதுவாய்ப் பல வேறுவகைப்படுதலும் மலத்தொடு விரவுதலும் வேறுபடுதலுமாகிய இவ்வியல்புகளுடைமையான் அசத்தேயாகலின், இவ்வறிவினால் அறியப்பட்டன அனைத்தும் அசத்தாவனவன்றி அவற்றினுள் ஒருபொருளுஞ் சத்தாதல் செல்லாது.
அசித்தாம் என்பதூஉம் பாடம். உம்மை முன்னையது இழிவு சிறப்பு. இதனானே அறிபொருள்களின் ஒரு சாரனவே யன்றி அனைத்தும் அசத்தாதவில்லையென்னுந் தார்க்கிகரை நோக்கி அறிபொருளனைத்தும் அசத்தென்பது அவ்வறியியல்புபற்றித் தெரித்துணர்த்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும்
எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம்
கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி
உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்து மென்பர்.

பொழிப்புரை :

காணப்பட்டன அனைத்தும் இந்திரசால முதலியன போல நெடுங்கால நிலைபெறுவனபோலத் தோன்றி அங்ஙனம் விரையக் கெட்டு மறைந்துபோம் இயல்பு பற்றி அவற்றை அசத்தென்றல் அமைவுடைத்து.
அசத்துமென்னும் உம்மை, பொருட்டன்மையாற் சத்தென்பதுபட நின்ற எதிர்மறை. இந்திரசாலம் தோன்றும்பொழுதே இல்லையாய் வேறாவனவற்றிற்கும் கனாக்காட்சி கடைபோதலின்றி இடையே அழிவனவற்றிற்கும், கழுதிரதம் ஒரு காரணங்காட்டி அழிவெய்துவனவற்றிற்கும் உவமையாயின. இதனானே, சற்காரிய வாதத்தில் அசத்தென ஒன்றின்மையின் ஈண்டறிபொருள் அசத்தென்றல் அமையுமாறு யாங்ஙனமென்னுஞ் சாங்கியரை நோக்கி அறிபொருள் அசத்தாமாறு உவமையோடு படுத்துக் காட்டப்பட்டது.
இவை இரண்டு செய்யுளானும் ‘அறிபொருள் அசித்தசத்தாம்’ என்ற முதற்கூற்றை வலியுறுத்தவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும்
புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும்
தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து)
இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும்.

பொழிப்புரை :

அறிபொருள்போல அறியப்படாத பொருட்குத் தோற்றக்கேடு முதலியன இன்மையான் அதனைச் சத்தெனக் கொண்டாற்படும் இழுக்கென்னை எனின்,- அங்ஙனங் கொண்டதனாற் பெறக்கடவதோர் பயனில்லை; ஒரு ஞான்றும் அதனோடெமக்கோர் இயைபுண்டாமாறும் இல்லை; அதனாலாகக் கடவதோர் செயலுமில்லையென்பது, ஆகாயப் பூவானியன்ற மாலை, ஆமை மயிரானியன்ற கயிறு முதலிய உணராத பொருள்களின் வைத்தறியப்படுதலான், அது பொருளன்று.
ஆகாயத்தினும் ஆமையினும் பூவுமயிரும் புலனாதலின்றி அதிசூக்குமமாயுள அவற்றானாகற்பாலனவும் உளவெனக்கொண்டு பிணங்குவார் உளராயினும், அவரை மறுத்தற்பொருட்டு அறிந்து செய்வதொரு வினை முதலை இன்றியமையாத காரியப் பொருள்மேல் வைத்துக் கூறினார். இதனானே, அறியாதது உண்டென்றாற்படும் இழுக்கென்னை என்னும் மாணாக்கனை நோக்கி இரண்டாங் கூறு வலியுத்தப்பட்டது. அற்றேல் இவ்விரண்டுமின்றி நிற்கும் பொருளை அநிருவசனீயமென்னாது சித்தொடுசத்தாய் நிற்குமென்றது யாங்ஙனமென்னும் மாயாவாதியை நோக்கி எழுந்ததுவருஞ்செய்யுள் என்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

தத்துவம் சத்(து)அ சத்துச் சதசத்து மன்றென் றாலென்
உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில்
வைத்திடும் சத்தே யாகும் மனத்தோடு வாக் கிறந்த
சித்துரு அதுஅ சித்தாம் மனத்தினால் தேர்வ தெல்லாம்.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்த இருதிறனுமல்லாத பிரமப் பொருளாவது உள்பொருளுமன்று இல்பொருளுமன்று இரண்டுமாவது மன்று வேறுமன்று என்று அநிர்வசனமாகக் கூறிற் படுமிழுக்கென்னையெனின்,- நன்று சொன்னாய்; அங்ஙனம் அனிர்வசனமாய்க் கூறப்படும் பொருளொன்று உண்டோ இல்லையோவென வினவினார்க்கு இல்லையென்னில் உணராதபொருட் கோதிய குற்றமாமென்றஞ்சி உண்டென்று கூறுவாயாகின், பிரமம் உள்பொருளாவதன்றி, அநிர்வசனமாதல் இன்றென்பதற்கு உன் வாய்மொழியே சான்றாயிற்று. உள்பொருளாயின், அறியப்படுகவெனிற் சுட்டுணர்விற் பட்டன வெல்லாஞ் சடமாய் அழிவெய்திடுமாதலாற் சுட்டுணர்வினைக் கடந்துநின்ற சேதனப் பொருளேயது.
தேர்வதெல்லாமென்பது “ உள்ளிய தெல்லா முடனெய்தும்’’ என்றாற்போல ஒருமைப்பன்மை மயக்கம். அற்றேல் அறிபொருளுமன்று அறியாததுமன்றென விடுப்பதூஉம் சத்து அசத்துச் சதசதத்துமன் றென்பதுபோல் அநிர்வசனமாய் முடியுமன்றே என்னும் அவ்வாதியை நோக்கி அவ்வாசங்கை நீக்குதற்கெழுந்தது வருஞ் செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத் தென்னின்
அறிபவன் அறியா னாகில் அதுஇன்று பயனு மில்லை
அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன்
அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும்.

பொழிப்புரை :

மேற்கூறிப்போந்தவாற்றால் அவ்விருதிறனும் இழுக்குப்படுமென்னுமதனை அறியவல்லான் ஒருவனுக்கு அச்சிவப்பொருள் அதனோடொற்றித்து நின்று அவ்வருளானே அறியற்பாலதாம். அங்ஙனம் அறியப்படும் பொருளாகிய அதுதான் அவ்வறிவேயாய் வேறுமாய் உடனுமாய் நிற்பதோரியல்பிற்றாகலான்.
அறியுமாறிதுவென்பது பாரிசேடப்பிரமாணத்தான் உணர்த்து வார், அறிபொருளசித்தாய்வேறாம் அறிவுறாப்பொருள் சத்தென்னின் அறிபவனறியானாகிலதுவின்று பயனுமில்லையென மேற்போந்ததனை அனுவதித்துக்கொண்டு கூறினார். கிழவனறிந்தான் கிழத்தியறிந்திலள் என்புழிப்போல அதனையென்னும் உருபேற்ற சுட்டுப்பெயர் வருவித்துரைக்க. அறிவருளுருவாய் நிற்குமெனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். உடனாய் நின்றன்றி யறிவையருளுதல் செல்லாமையின் அஃததற்குக் காரணமாதலறிக. அநந்நியமாயவழிக் காண்பானும் காட்சிப்பொருளாமாறும் அருளான் உபகரிக்கப்படுமாறும் யாங்ஙனஞ் செல்லுமென்பாரை நோக்கி, அறிவேயாதலும் வேறாதலும் உடனாதலுமாகிய முத்திறமும் தன்கட்டோன்றநின்றதோர் அத்துவித இiபுயுடைமையின் அவ்வாறாதல் செல்லுமென்பார், அறிபொருள் அறிவாய் வேறாய் அறிவருளுருவாய் நிற்குமியல்பும் உடன்கூறினார். இவையிரண்டு செய்யுளானும் மாயாவாதிமதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து மூன்றாங்கூறு வலியுறுத்தப்பட்டது. அற்றேல் அருளால் அநந்நியமாகக் காண்டல் எற்றுக்கு யோகபாவனை செய்து காணவேயமையுமென்னும் பாதஞ்சலரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடக்கிற் பாவம்
பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப்
பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று
பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே.

பொழிப்புரை :

நீ கூறும் பாவனையாவது, கருவிளோடுங்கூடி நின்று செய்வதெனிற் சகலமாய்ப் போகலானும், கருவிகளை நீங்கி நின்று பாவிப்பதென்னில், அப்பொழுது கேவலம் வந்து தலைப்படுமாகலானும், இரண்டுமின்றிப் பாவிப்பதென்னில் அஃதநிர்வசனீயமெனப்பட்டுப் பாழாய் முடியுமாகலானும், அவ்வாறன்றிப் பாவனைக்கு எய்தாத பொருளை எய்தியதாகவைத்தப் பாவிக்கும் பொருள் யானென்று தன்மேல் வைத்தப் பாவிப்பதென்னில் அதனானாவதோர் பயனில்லை யாகலானும், அப்பாவனையனைத்தும் நாடகமாத்திரையேயாமாகலான் மேற்கூறியவாறு அநந்நியமாய்நின்று அவ்வருளாற் காண்டலே யீண்டைக்குரிய பாவனையாவதன்றிப் பிறிதில்லை.
பாவிக்குமதுநானென்னிற் பாவகமென்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க. பாவம் பாவகம் நாடகமென்பன ஒருபொருட்கிளவி.இதனானே பாதஞ்சலர் மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து மேலது வலியுறுத்தப்பட்டது. அற்றாயினும் பரம்பரனருளினாலே பாவிக்கப் படுவதென்னாது மலமாக தீர்ந்தவழிச் சிவத்தோடொப்பதாய உயிர் அறவே அதனை அறியுமென்றாற் படும்இழுக்கென்னை என்னும் சமவாதசைவரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும்
உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும்
என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும்
தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன்.

பொழிப்புரை :

அச்சிவம் ஒன்றாய் வேறாய் உடனுமாய்நிற்ப தொன்றாகலானும், அந்நிலை அறிவானும் அறிபொருளும் அறிவுமெனப் பகுத்தறிய வாராமையானும், அஃதுயிரறிவால் அறியப்படுவதொன்றன்று.
உன்னிய வெல்லா முண்ணின் றுணர்த்துவ னென்பதற்கு, மேல் அறிவளுருவாய் நிற்குமென்பதற்கு உரைத்தாங்குரைக்க. செருக்காலுண்டாகிய பகுத்துணர்வைச் செருக்கெனவுபசரித்தார், அற்றேல் அம்முத்திறம் ஆண்டுளவென்பதெற்றாற் பெறுதுமென்னும் அவரை நோக்கி அஃதுணர்த்துதற்கெழுந்தது வருஞ்செய்யு ளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே
நின்றனன் வேறாய்த் தன்னின் நீங்கிடா நிலைமை யாலே
பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே
என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே.

பொழிப்புரை :

சிவமும் உயிரும் ஒன்றென்பாரை நோக்கி அங்ஙன மறிவதொரு பொருள் உண்டடென்பதுபற்றி வேறாய்நிற்றல் பெற்றாம். வேறென்பாரைநோக்கி அறிவுக்கறிவு பிரிந்து தோன்றாமை பற்றி வேறென்னும் அறிவுக்கெட்டாது உடனாதல் பெற்றாம். அவ்வளவே கூறுவாரை நோக்கி அவ்வறிவினுள்ளாக நீர்நிழல்போல் ஒற்றித்து நிற்றல்பற்றி உயிரே சிவமெனும்படி ஒன்றாதல் பெற்றாம் ; ஆகலான் அப்பெற்றித்தாய அத்துவிதநிலையை அருளினாலே அநந்நியமாகக் காண்டலே தக்கது.
இவையிரண்டு செய்யுளானுஞ் சிவசமவாதி மதம்பற்றி யாசங்கித்துப் பரிகரித்து மேலது வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின்
முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல்
நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும்
தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே.

பொழிப்புரை :

மேலைச்சூத்திரத்து வரைசெய் துணர்த்திய சத்தசத்துக்களைப் பகுத்தறியும் பொருள் யாதென வினாயினார்க்கு, சத்தாகிய சிவமே அசத்தாகிய பாசமனைத்தினையும் அறிவதெனச் சிவாத்துவித சைவர் விடுப்பின், சத்தாகிய சிவம் வியாபக அறிவாதலால் எவற்றினையும் ஒருங்கே யறிந்து நிற்பதன்றி ஏகதேசமாய்ப் பகுத்து ஒன்றை யறியுமாறில்லை; அற்றேல், சிவம் வியாபகவறிவாயினும் உயிரின் பொருட்டு அசத்தெனப்படுங் கருவிகரணங்களிடமாக நின்று அங்ஙனம் பகுத்தறிதல் கூடுமெனின், இரவிமுன் னிருள்போலச் சத்தெதிர் அசத்து முனைத்து நில்லாமையின் அசத்திடமாய்நின்று அங்ஙனம் அறியுமென்பதுங் கூடாது; இனி விகாரமின்றி நிற்கும் ஆன்மசந்நிதியில் அசத்தாகிய கருவியே சத்தாகிய சிவத்தைச் சிவகரணமாய் நின்றறிவதெனச் சிவசங்கிராந்தவாதிகள் விடுப்பின், சத்தெதிர் முனைத்து நில்லாதென மேற் கூறினமையானும் பிறிதொன்றுணர்வதற்குத் தான் கருவியாய் நிற்பதன்றித் தனக்கோரறி வில்லாதாகலானும் அசத்துச் சத்தை யறியுமென்பதுங் கூடாது.
எனவே, பாரிசேட அளவையான் இவ்விரண்டினும் வேறாய் எஞ்சிநின்ற பசுப்பொருளே இவ்விரண்டினையும் பகுத்தறியுமென்பது பெறப்பட்டது. படவே, முதனூல் ஏழாஞ்சூத்திரம் போல இச்செய்யுளும் முக்கூற்றதாயவாறு காண்க. அனைத்தையுமென இரண்டாவது விரித்துரைக்க. அறிவதென்பது அவாய்நிலையான் வந்தது; அஃதசத்தாலென்பதனோடுங் கூட்டியுரைக்கப்பட்டது. முனைத்திடா மையாவது, இஃது குடம் இஃது ஆடையென நம்மனோராற் சுட்டி அறியப்படுமாறுபோல முதல்வனாற் சுட்டிஅறியப்படுவதாய் வேறு நில்லாமை. இதனுட் போந்த முக்கூற்றினுள், முன்னை இருகூற்றினும் விரிக்கக்கடவதாய விசேடமின்மையின் அவற்றை ஈண்டே வினாவிடைகளால் தொகுத்துணர்த்தி, ஏனை மூன்றாங் கூற்றை மூன்று செய்யுளான் விரித்துணர்த்துகின்றார். அவற்றுட் பாரிசேட அளவையாற் பெறப்பட் டெஞ்சிநின்ற பொருளை இனிது விளக்கி அதனியல்பு வரைசெய்துணர்த்துதற் கெழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று
நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும்
ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது
வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும்.

பொழிப்புரை :

தம்முள் உரிமையில்லாத அவ்விரண்டினையும் அறிவது ஆன்மாவேயாம்; அதுதான் அவ்விரண்டற்கும் வேறாய் இரண்டன் பாலும் மலரின்கண் நாற்றம்போல் அதுவதுவாய் நின்று சதசத்தாவதோர் உரிமையுடைத்தாகலான்.
உயிர் அவ்விரண்டின் வேறாயும் அதுவதுவாய் நிற்பதொன் றென்ற விதனானே, சத்தசத்தறிவதாகிய ஆன்மாத் தன்னை அறியுமோ அறியாதோவெனக் கடாயினார்க்கு அவைபோலத் தனித்தறியப்படுவதொன்றன்றி அவ்விரண்டினையும் அறியுமுகத்தான் அறியப்படுவதாமெனத் தன்னை அறியுமாறு கூறியதூஉமாயிற்று. அற்றேல், சிவன்சீவன் இரண்டுஞ் சித்தாகவும், சிவனெதிர் முனைத்துநிற்றலாற்றாத அசத்துச் சீவனால் அறியப்படுவதாய் அதனெதிர் முனைத்து நிற்றலாற்றுதற்கு என்னையோ காரணமென்பாரை நோக்கிஎழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம்
ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே
சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம்
வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும்.

பொழிப்புரை :

அநாதியாகிய முப்பொருள்களுட் சிவமுயிர் இரண்டும் நித்த வியாபகசித்தாதற் பொதுமையான் ஒக்குமாயினும் அவற்றுட் சிவம் அதிசூக்குமசித்தாதலின் ஆண்டு அசத்து நிற்றலாற்றாது, உயிர் தூலசித்தாதலின் அதனெதிர் முனைத்து நிற்றலாற்றுமென்பது, கடலும் நீருந் தூயனவேயாகவுங் கடலின் மருவலாற்றாது கடல்நீரின் மருவிநிற்கும் உப்புப்போலு மாகலான் ஆண்டைக்கு வேறுகாரணமில்லை.
இலவணமென்பதன் இகரம் விகாரத்தாற் றொக்கது. சுத்த மெய்ஞ்ஞானமேனிச் சோதிபால் அசத்தஞ்ஞான மொத்துறாவென்ற விதனானே முன்னை இருகூற்றையும் ஒருவாற்றானே வலியுறுத்த வாறுமாயிற்று. தூலசித்தென்பது உயிரென்னும் பெயரானும் உவமையானும் பெறுதும். அற்றேல், சிவம் அதிசூக்குமசித்தென்பதும் உயிர் தூலசித்தென்பதும் எற்றாற்பெறுதும் என்பாரை நோக்கி யெழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும்
குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன்
நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன அன்றே
பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின் னுயிர்க் கருளினாலே.

பொழிப்புரை :

தன்னறிவு நிகழ்ச்சிக்கு வியஞ்சகத்தையன்றி அமையாமையால் உயிர் தூலசித்தென்பதூஉம், அவ்வுயிரின் கண்ணதாகிய மலத்தை நீக்கி யறிவிக்கும் வியஞ்சகப் பொருளாகலாற் சிவம் தனக்கொரு வியஞ்சகம் வேண்டாத அதிசூக்கும சித்தென்பதூஉம் இனிது விளங்கும்.
இவ்வியல்பு கண்ணொனி ஞாயிற்றினொளிகளின் வைத்துக் கண்டுகொள்க. சித்தியல்புபோற் சத்தியல்பினும் வேற்றுமை காட்டுவார், அழிவின்றி நிற்றலாற் சத்துங் கூறுவதென்றார். அறிவிக்க அறிதலானும் அறிந்தபின் அழிவின்றி நிற்றலானும் என்றுரைக்க. அறிந்தபின்னென்றது ஆற்றலான் வந்தது. சுத்தசித் தென்புழியுஞ் சத்தென்பது கூட்டியுரைக்கப்படும். பிறிவிப்பன் மலங்களெல்லாம் பின்னுயிர்க்கருளினாலே என்றவிதனால் வருகின்ற சூத்திரத்திற்குத் தோற்றுவாய் செய்ததூஉமாயிற்று. இவை மூன்று செய்யுளானும், முறையே உயிர்க்குச் சத்தசத்திரண்டினையும் அறியும் உரிமை யுண்மையும், அதற்குக் காரணமும், அஃதாண்டுளாதாமாறுந் தெரித்துணர்த்திப் பாரிசேட அளவையாற் பெறப்பட்ட மூன்றாங் கூற்றுப்பொருள் வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்(து)அவனை அறியாது மயங்கி நிற்பப்
பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப்
பெருமையொடும் தானாக்கிப் பேணு மாபோல்
துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத்
துணைவனையும் அறியாது துயருறும்தொல் லுயிரை
மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி
மலம்அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்.

பொழிப்புரை :

உயிர் தன்னிலையிற் பிறழ்ந்து ஐம்பொறிகளுட்பட்டு அறிவிழந்து வருந்துமாற்றை, நித்தமுத்தசுத்தசித்தெனப்படும் அவ்வீசன் குருவடிவங்கொண் டெழுந்தருளிவந்து தவமுதிர்ச்சி நோக்கி யுணர்த்தி மீட்டுத் தொன்னிலையிற் பிறழாது வைத்து வாழ்விப்பன்.
இங்ஙனம் வாழ்வித்தல் ஈசனுக்குக் கடப்பாடாதல் இனிது விளக்குவார், பிள்ளைமைப்பருவத்து மடமையால் வேடருட்பட்டுப் பரதந்திரனாய்த் தன்சாதிக்குரிய பெருந்தகைமை இழந்து இழி தொழில் பயிற்றி வருந்தும் மன்னவகுமாரனாவான் ஒருவனுக்கு அவன் தந்தை செய்யும் உதவியை எடுத்துக்காட்டிக் கூறினார். மும்மலச்சுழலிற்பட்டு வருந்துதல் காட்சிப்புலனாதல் செல்லாமையின், அதனையொழித்துக் காட்சிப்புலனாய் எளிதின் அறியப்படுவதாய ஐம்பொறிச் சுழலிற்படுதலே ஈண்டெடுத்துக் கூறினார், தூல வருந்ததிநயம்பற்றிச் சோபானமுறையின் வைத்துணர்த்துதல் மரபாகலின். துணைவனையும் என்னும் உம்மை தன்னையறியாமையேயன்றியென இறந்தது தழீஇயது ; சிறப்புமாம். மன்னுமருளென்றது ஈண்டிறப்பில் தவத்தின் மேற்று. மூன்றாவது விரித்துரைக்க. என்மகன் நீ என்றென உவமையுட் கூறுதலாற் பொருளினும் உணர்த்தியென்பது வருவித்துரைக்கப்பட்டது. ``தவத்தினினுணர்த்த” என்றார் முதனூலாசிரியரும். இங்ஙனம் உரைத்தவாற்றான் முதனூல் எட்டாஞ் சூத்திரம்போல இச்செய்யுளும் நாற்கூற்றதாமாறு கண்டுகொள்க. இவற்றுட் `குருவாகிவந் துணர்த்தி’ யென்ற முதற்கூற்றுப்பொருளை ஒன்பதுசெய்யுளான் வகுத்துக் கூறுவான் தொடங்கினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம்
உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர்
நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை
நிற்கும்முத லிருவர்க்கு நிராதார மாகிக்
கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால்
கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம வொப்பில்
தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித்
தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திநிபா தத்தால்.

பொழிப்புரை :

எண்ணரிய வுயிர்களெல்லாம் பந்த வேறுபாட்டான் மூவகைப்படும். அவற்றுள் மும்மலங்களுமுடைய சகலவர்க்கத்திற்கு நால்வகைச் சத்திநிபாத முறைமையின்வைத்து அரிதுணர்த்த வேண்டுதலின், அவ்வுயிர்கட்கே `குருவாகி வந்துணர்த்தி’ யென மேற்கூறிய சாதாரதீக்கை செய்வது. ஒருமலம் இருமலமுடைய மற்றை இருவர்க்கத்திற்குத் தீவிரந் தீவிரதரமென்னும் இருவகைச் சத்தி நிபாதத்தின் வைத்துணர்த்த அமையுமாதலின், சகலவர்க்கம்போற் குருவடிவின் மறைந்துநின்று படர்க்கையான் உணர்த்தப்பட் டரிதுணரவேண்டாது அவ்விருதிறத்துயிர்கட்கும் முறையே உள்நின்றும் முன்னின்றும் உணர்த்துவதாகிய நிராதாரதீக்கை செய்யப்படும்.
இதனானே தீக்கை இருவகைத்தென்பதூஉம் அவ்விருவகைக்கு முரியார் இவரென்பதூஉங் கூறப்பட்டன. இனி இவ்விரண்டனுள் ஈண்டெடுத்துக்கொண்ட சாதாரதீக்கையிற்படும் பாகுபாடும் அவற்றதியல்பும் கூறுதற்கெழுந்தன வருஞ்செய்யுட்களென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும்
படிநயனத் தருள்பரிசம் வாசகம்மா னதமும்
அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராதி
அநேகமுள அவற்றினௌத் திரிஇரண்டு திறனாம்
இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால்
இயற்றுவது கிரியைஎழிற் குண்டமண்ட லாதி
நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும்
நீர்ப்பீசம் சபீசமென இரண்டாகி நிகழும்.

பொழிப்புரை :

அவ்வுயிர்க்கண்ணதாகிய மலபரிபாகம் பலவகைப்படுதலின், அம்மலத்தை மோசிக்குஞ் சாதாரதீக்கையும் அதற்கேற்பத் திருநோக்க முதலியனவாகப் பலவேறுவகைப்படும். அவற்றுள் ஏனைத் தீக்கைகளெல்லாந் தனக்கங்கமாகவுடைத்தாய்ச் சிறந்த ஒளத்திரி தீக்கையாவது ஞானவதி கிரியாவதி யென்றிரு வகைப்படும். அவற்றுள் குண்டமண்டலம் அங்கி நெய்சுருக்குச் சுருவமுதலிய அனைத்தும் மனத்தாற் கற்பித்துக்கொண்டு விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்வது ஞானவதி; அவையனைத்தும் புறத்தே நிலவக்கொண்டு புறம்பே அக்கிரியை செய்வது கிரியாவதி யெனப்படும். இங்ஙனம் இருவகைப்பட்ட ஒளத்திரிதீக்கைதான் இன்னும் நிர்ப்பீசஞ் சபீசமென வெவ்வேறிருவகைப்படும்.
கிரியை இயற்றுவதென மாற்றுக. ஒளத்திராதியென்றதனாற் சாம்பவதீக்கை முதலியனவுந் தழுவப்பட்டன. நயன தீக்கைமுதலிய ஆறும், சுதந்திமாய்ச் செய்யப்படுவனவும் அவுத்திரிக்கங்கமாய்ச் செய்யப்படுவனவும் என்றிருவகைப்படும். அவற்றுள் முன்னையவை ஒளத்திரிக்குரியரல்லாதார்க்குச் செய்யப்படுவனவெனக்கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார்
பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும்
சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம்
திகழ்சுத்தி சமயிபுத் திரர்க்கு நித்தத்(து)
ஏலுமதி காரத்தை இயற்றித் தானும்
எழில்நிரதி காரையென நின்றிரண்டாய் விளங்கும்
சாலநிகழ் தேகபா தத்தி னோடு
சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே.

பொழிப்புரை :

அவ்விரண்டனுள் நிர்ப்பீசதீக்கையாவது, மலபரிபாக முடையவராயுந் தீக்கைப் பின் ஒருதலையான் வழுவின்றிச் செய்யக் கடவனவாய சமயாசாரங்களை அனுட்டிக்கும் ஆற்றல் அறிவிலராயினார்க்கு, ஆசாரியனாவான் அதனை உணர்ந்து ஏனைக் கன்மங்களோடுகூடச் சமயாசாரத்தையும் ஆகுதியாற் சுத்திசெய்தொழித்து, நித்திய கன்மமாத்திரையின் ஏன்றவாறு அனுட்டிக்கும் அதிகார முடையராகச் செய்வதாம் ; ஆயினும் சமயாசாரங்களைச் சுத்திசெய்தொழித்தமையின் நைமித்திகத்துங் காமியத்தும் அதிகாரங் கொடாமையான், இது நிரதிகார தீக்கை எனப்படும். அத்தீக்கை மூன்றனுட் சமயமும் விசேடமும் ஒரோவொன்றேயாம்; ஏனை நிருவாண தீக்கை தேகாந்தத்தின் முத்தியைப் பயக்கும் அசத்தியோநிருவாண மெனவும் அப்பொழுதே முத்தியைப் பயக்குஞ் சத்தியோநிருவாண மெனவும் இருவகைப்படும்.
சமயாசார சுத்தியோடு செய்யப்படும் நிருவாண தீக்கையும் அதற்கங்கமாயுஞ் சுதந்திரமாயுஞ் செய்யப்படும் சமயவிசேடங்களும் நிர்ப்பீசதீக்கையெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஒதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல
உத்தமக்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை
நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின்
நிறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதும் செய்து
சாதகரா சாரியரும் ஆக்கி வீடு
தருவிக்கும் உலோகசிவ தருமிணியென் றிரண்டாம்
ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம்
நிருவாணம் அபிடேகம் இவற்றடங்கு மன்றே.

பொழிப்புரை :

இனிச் சபீசமாவது, மலபரிபாகத்தோடு கூடக் கற்றறிவு மாற்றலும் மிக்குடையராயினார்க்கு, ஆசாரியனாவான் அஃதறிந்து சமயாசார கன்மமாத்திர நிறுத்தி ஏனையவற்றைச் சுத்தி செய்தொழித்து நித்தியகன்ம முதலிய மூன்றினும் பேரதிகார முடையவராகச் செய்வதாம் ; ஆகலின் இது சாதிகாரதீக்கையெனவும் பெயர்பெறும். இத்தீக்கைப் பேறுடையார் தீக்கை வேறுபாட்டாற் சாதகரும் ஆசாரியருமென் றிருதிறப்படுவர். இந்தச் சபீச தீக்கைதான் இல்லறமுடையார்க்குத் திரோதான சுத்தி ரூப சிகாச்சேதமின்றிச் செய்வதாய உலக தருமிணியுந் துறவற முடையார்க்குத் திரோதானசுத்தி ரூப சிகாச்சேதத்தோடு செய்வதாகிய சிவதருமிணியுமென் றிருவகைப்படும். இவை முறையே பௌதிக தீக்கை நைட்டிக தீக்கை எனவும் பரியாயப் பெயர் பெறும். சமய விசேட நிருவாணம் அபிடேகமென்னும் பேதமெல்லாம் நிர்ப்பீசஞ் சபீச மென்னும் இவ்விரண்டனுள் அடங்கும்.
சமயாசார சுத்தியின்றிச் செய்யும் நிருவாண தீக்கையும் அதற்கங்கமாய்ச் செய்யப்படுஞ் சமயவிசேடங்களுஞ் சபீசதீக்கையெனக் கொள்க. உத்தமத்தில் உத்தமரென்பார், நல்ல உத்தமரென்றார். ஒதியுணர்தலும் ஒழுக்கநெறி இழுக்காமையுமாகிய இரண்டுமுடையார் உத்தமத்தில் உத்தமரெனவே, அவ்விரண்டினுள் ஒன்றில்லாதார் உத்தமத்தில் மத்திமர் என்பதூஉம், இரண்டுமில்லாதார் உத்தமத்தில் அதமரென்பதூஉம் பெற்றாம். பெறவே, நிர்ப்பீசஞ் சபீசமென் றிருதிறப்படுஞ் சாதார தீக்கைக்குரியார் இவ்வாறு முத்திறப்படுவ ரென்பதாயிற்று. இங்ஙனங் கூறியவாற்றால் ஒளத்திரியெனத் தொகையான் ஒன்றும் ஞானவதி கிரியாவதியென வகையான் இரண்டும், ஞானவதி நிர்ப்பீசஞ்சபீசம் கிரியாவதி நிர்ப்பீசஞ்சபீசமென விரியான் நான்குமாயவாறு காண்க. நிர்ப்பீசஞ் சபீசமென்னும் இவற்றின் விரியாகிய சமய விசேட முதலியவற்றின் இயல்பெல்லாம் ஆகமங்களுட் காண்க.
இவை மூன்று செய்யுளானுஞ் சாதார தீக்கையின் வகையும் அவற்றியல்புகளுக் தொகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான்
ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி
ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம்
உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒருமூ வர்க்கும்
வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்
கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி
கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் கண்ணாம்.

பொழிப்புரை :

அரன், குருமூர்த்தியை அதிட்டித்துநின்று, மந்திர முதல் அறுவகைப்படும் அத்துவாக்கள் ஒன்றினொன்றடங்க இறுதிக் கண்நின்ற கலை திரோதானசத்தியினும் அது சிவத்தினும் அடங்குமாறுணர்ந்து அவ்வாறடக்கி நிர்ப்பீசஞ் சபீசமெனத் தனித்தனி இருவகைப்படுமென மேற்கூறிப்போந்த ஞானவதி கிரியாவதியென்னும் இரண்டனுள் ஒரு தீக்கையானே உத்தமத்திலுத்தமர் முதலிய அம்மூவர்க்கும் அறுவகை அத்துவாக்களையுஞ் சோதிக்குமுகத்தாற் பிறவிக் கேதுவாகிய மலத்தைக் கெடுத்துச் சிவம் பிரகாசித்தற்கேது வாகிய ஞானத்தைக் கொடுக்கும்.
கிரியை ஆகுபெயர். `ஒளத்திரி இரண்டுதிறனாமிலகு ஞானங் கிரியை’ என முதற்கண் எடுத்துக்கொண்டு முடிவின்கண் அழிவிலாக் கிரியையினானாதல் சத்திமத்தானாதலென முடித்தமையின், இடைக்கட் கூறப்பட்டனவெல்லாம் இவ்விரண்டற்கும் பொதுவாமாறு காண்க. சோமசம்புபத்ததி வருணபத்ததி முதலியவற்றினும் இவ்வாறே கூறப்பட்டன. இதனானே ஆசிரியன் தீக்கை செய்யுமாறு தொகுத்துக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

மந்திரங்கள் முதல்ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி
மருவும்மந் திரமிரண்டு பதங்கள் நாலேழ்
அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு)
அவனிதத் துவமொன்று நிவிர்த்திஅயன் தெய்வம்
வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ்
வன்னங்கள் நாலாறு புரம்ஐம்பத் தாறு
தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று
தரும்பிரதிட் டாகலைமால் அதிதெய்வம் தானாம்.

பொழிப்புரை :

அத்துவாக்கள் ஒன்றினொன்று வியாத்தியாய் முறையானே பஞ்சகலைகளுள் அடங்குமாறு யாங்ஙனமெனின்,- அசுத்தம் மிச்சிரஞ் சுத்தமென்னும் மூவகை அத்துவாக்களும் ஐவகைப்பட்டுப் பஞ்சகலைகளுள் அடங்குமாறு சங்காரமுறையின் வைத்தெண்ணி இவ்வாறு கண்டு கொள்க.
மந்திரமுதலியவற்றிற்குங் கலையில் வியாத்திகூறியது பரம் பரையின் வியாப்பியமாதல்பற்றியாதலான், மேல்ஒன்றினொன்று வியாத்தி யென்பதனோடு முரணாமையறிக. சாந்தியாதீதகலை நீட்டும் வழி நீட்டல்.
இவை மூன்று செய்யுளானுந் தீக்கைசெய்தற்கண் அத்துவாக்கள் ஒன்றினொன்று வியாத்தியாதல் அறிந்தடக்குமாறு வகுத்துக் கூறப்பட்டது. அற்றேல், இறைவனிங்ஙனங் குருமூர்த்தியை அதிட்டித்து நின்று செய்யுந் தீக்கையில் ஏனை மலசுத்திகளை யொழித்து அத்துவசுத்தியே மிகுத்துக் கூறியது என்னையென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்து
விரவும்எழுத் தேழுபுரம் இருபத் தேழு
தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம்
தாவில்உருத் திரனாகும் சாந்தி தன்னில்
வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று
வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும்
உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும்
உணரில்அதி தேவதையும் உயரீச னாமே.

பொழிப்புரை :

அத்துவாக்கள் ஒன்றினொன்று வியாத்தியாய் முறையானே பஞ்சகலைகளுள் அடங்குமாறு யாங்ஙனமெனின்,- அசுத்தம் மிச்சிரஞ் சுத்தமென்னும் மூவகை அத்துவாக்களும் ஐவகைப்பட்டுப் பஞ்சகலைகளுள் அடங்குமாறு சங்காரமுறையின் வைத்தெண்ணி இவ்வாறு கண்டு கொள்க.
மந்திரமுதலியவற்றிற்குங் கலையில் வியாத்திகூறியது பரம் பரையின் வியாப்பியமாதல்பற்றியாதலான், மேல்ஒன்றினொன்று வியாத்தி யென்பதனோடு முரணாமையறிக. சாந்தியாதீதகலை நீட்டும் வழி நீட்டல்.
இவை மூன்று செய்யுளானுந் தீக்கைசெய்தற்கண் அத்துவாக்கள் ஒன்றினொன்று வியாத்தியாதல் அறிந்தடக்குமாறு வகுத்துக் கூறப்பட்டது. அற்றேல், இறைவனிங்ஙனங் குருமூர்த்தியை அதிட்டித்து நின்று செய்யுந் தீக்கையில் ஏனை மலசுத்திகளை யொழித்து அத்துவசுத்தியே மிகுத்துக் கூறியது என்னையென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள்
தாம்மூன்று பதமொன்(று)அக் கரங்கள்பதி னாறு
வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு
மருவும்அதி தேவதையும் மன்னுசதா சிவராம்
ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள்
எண்பத்தொன் றக்கரங்கள் ஐம்பத்தொன் றாகும்
ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம்
அறிதருதத் துவம்முப்பத் தாறுகலை ஐந்தே.

பொழிப்புரை :

அத்துவாக்கள் ஒன்றினொன்று வியாத்தியாய் முறையானே பஞ்சகலைகளுள் அடங்குமாறு யாங்ஙனமெனின்,- அசுத்தம் மிச்சிரஞ் சுத்தமென்னும் மூவகை அத்துவாக்களும் ஐவகைப்பட்டுப் பஞ்சகலைகளுள் அடங்குமாறு சங்காரமுறையின் வைத்தெண்ணி இவ்வாறு கண்டு கொள்க.
மந்திரமுதலியவற்றிற்குங் கலையில் வியாத்திகூறியது பரம் பரையின் வியாப்பியமாதல்பற்றியாதலான், மேல்ஒன்றினொன்று வியாத்தி யென்பதனோடு முரணாமையறிக. சாந்தியாதீதகலை நீட்டும் வழி நீட்டல்.
இவை மூன்று செய்யுளானுந் தீக்கைசெய்தற்கண் அத்துவாக்கள் ஒன்றினொன்று வியாத்தியாதல் அறிந்தடக்குமாறு வகுத்துக் கூறப்பட்டது. அற்றேல், இறைவனிங்ஙனங் குருமூர்த்தியை அதிட்டித்து நின்று செய்யுந் தீக்கையில் ஏனை மலசுத்திகளை யொழித்து அத்துவசுத்தியே மிகுத்துக் கூறியது என்னையென்பாரை நோக்கி எழுந்தது வருஞ்செய்யுளென்பது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு
முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின்
ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து)
அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித்
தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத்
துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே சோதித்(து)
ஏன்றஉடற் கன்மம்அநு பவத்தினால் அறுத்திங்(கு)
இனிச்செய்கன் மம்மூல மலம்ஞானத் தால்இடிப்பன்.

பொழிப்புரை :

அநாதிமறைப்பாகிய ஆணவமலமும் வாதனைபற்றி நிகமும் ஆகாமியவினையும் ஒளிமுன் இருள்போல இறைவனது ஞானசத்தியால் ஒழியற்பாலன; அவ்வாணவ மலத்தை முதிர்வித்தற்பொருட்டு ஈட்டிய முறையானன்றிப் பக்குவமுறையான் நுகர்விக்கப்பட் டெஞ்சிக்கிடந்த கன்மமலமும் அதற்குப் பற்றுக்கொடுத்து நிற்கும் முன்னிலையாகிய மாயேயமலமுங் கிரியாசத்தியால் ஒழியற்பாலன; உடம்பு முகந்துகொண்ட பிராரத்த கன்மம் அனுபவத்தால் ஒழியற்பாலன; இங்ஙனமாகலாற் கிரியாசத்திவிருத்தியாகிய தீக்கையால் எஞ்சிநின்ற கன்மங்களைச் சுத்தி செய்தற்பொருட்டு, அவற்றிற்குப் பற்றுக் கோடாகிய அத்துவாசுத்தியே ஈண்டுக் கூறப்பட்டன.
இவ்வாறு வகுத்தோதற்பாலனவற்றை விரிவஞ்சி ஒரு முடிபாக வைத்தோதினார். இரண்டும் ஒருபொருள் வினையாதற்குரிய இயைபு தோன்ற அருத்தியறுத்துத் தோன்றியறுத்தென உடன் கூறினார். ஆன்றமுறை பக்குவமானமுறை. மலமுதிர்தலாவது தனது சத்தி தேய்தற்குரிய துணைக்காரணங்கள் எல்லாவற்றோடுங் கூடிப் பதனழியுஞ் செவ்வித்தாதல். உயிர் பருவமடைதலாவது அறிவித்தவாறே அறியவல்லுஞ் செவ்வித்தாதல். அரும்பருவமென்றார், எய்தற்கருமை நோக்கி. அது வருஞ் செய்யுளிற் பெறப்படும். பருவமடைதலுமே ஆசானாகித் தோன்றி என்றதனானே, பருவமடையாதார்க்குத் தீக்கை செய்தலும் அடைந்தார்க்கு அது செய்யாமையும் பழுதென்பது பெற்றாம். இதனானே அத்துவசுத்தியின் சிறப்புக் கூறப்பட்டது. `உரை தரு’ மென்பது முதல் இத்துணையுங் `குருவாகி வந்துணர்த்தி’ என்னும் முதற்கூற்றுப் பொருளை விரித்துணர்த்தியவாறு. இனி, `மன்னு மருளாலுணர்த்தி’ யென்னும் இரண்டாங் கூற்றினை இருபத்தைந்து செய்யுளான் விரித்துணர்த்துகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்.

பொழிப்புரை :

மேற்கூறிய அரும்பருவமடைதல், இங்ஙனங் சோபான முறையாற் பல பிறவிகளினும் ஏற்பட்டு நிகழ்ந்து முற்றுப் பெறுவதன்றி, ஒருங்கே யொருகாலத்து முற்றுப்பெறுவதன்று.
சைவத்திறமென்றது சைவக்கூற்றின் முடிபாகிய சித்தாந்த சைவத்தை. சென்றாலென்பது சேறலருமை விளக்கி நின்றது. இதனானே மேற்கூறிய பருவமடையுமுறைமை கூறுமுகத்தான் `மன்னு மரு’ ளென்றதன் வகையும் அவற்றிற்கு வாயிலிவை என்பதூஉம் வகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும்
ஏந்திழையார் முத்தியென்றும் இருஞ்சுவர்க்க முத்தி
அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம்
அறக்கெடுகை யென்றும்அட்ட குணமுத்தி யென்றும்
மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும்
விவேகமுத்தி யென்றும்தன் மெய்வடிவாம் சிவத்தைச்
செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள்
சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே.

பொழிப்புரை :

ஏனைச் சமய நூலார் கூறும் முத்திகளாவன சோபான முறையால் நிலமுதல் நாதமீறாய்க் கிடந்த முப்பத்தாறு தத்துவங்களிடைக்கட்படுவனவாய அரிவையர் இன்புறுமுத்தி (சிவப்பிரகாசம்,50 ) முதலாயினவாம். வேதாகம நூலுண்மை யுணர்ந்த யாங் கூறும் முத்தியாவது முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற் பட்ட சிவனடியைச் சேரும் முத்தியாம்.
ஏந்திழையை என்னும் இரண்டாவது விகாரத்தாற் றொக்கது ஆர் முத்தி வினைத்தொகை. உம்மையை எதிரது தழீஇயிற்றாக்கி ஈண்டுக் கூறாத சமய முத்திகளையும் இவற்றுடன் வைத்துக்` கூறிக்கொள்க. இதனானே புறச்சமயநெறி நிற்றல் முதலியன வெல்லாஞ் சைவத்திறத்தடைதற்குச் சோபான முறையான் வாயிலாமாறு அவற்றது பயன் கூறுமுகத்தானே இனிது விளக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில்
இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி
நீதியினால் இவையெல்லாம் ஒரிடத்தே காண
நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல்
ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே
அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்.

பொழிப்புரை :

கண்ணில்லார் பலர் குழீஇக்கொண்டு வேழநின் றுழித்தலைப்பட்டுக் கையினால் தைவந்து வேறுவேறு கூறும் இலக்கணங்களெல்லாங் கண்ணுள்ளானொருவன் கண்டு கூறும் அதன் இலக்கணத்துள் ஏகதேசமாய்க் காணப்பட்டடங்குமாறுபோல, ஏனைச் சமய நூலார் தத்தஞ் சிற்றறிவுக்குப் புலனாயவாறுபற்றி அவ்வந்நூல்களிற் கூறும் பொருளியல்புக ளெல்லாம் முற்றுணர்வுடைய முதல்வனாற் செய்யப்பட்ட வேதாகமங்களிற் கூறும் பொருளியல்பின் ஏகதேசமாய்க் காணப்பட்டு அவற்றுள் அடங்கும். சிவபிரானாற் செய்யப்பட்டு அவனையே தமக்கு முதலாகக் கொண்டுரைக்கும் அவ்விருவகை நூலும் அவ்விறைவன் திருவடியி லடங்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான்
அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள்
தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளவில்
தர்க்கமொடுத் தரங்களினாற் சமயம்சா தித்து
மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்
மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம்
சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை
சொல்லுவார்த மக்கறையோ சொல்லொ ணாதே.

பொழிப்புரை :

நூலெனப்படுவன வெல்லாம் ஒரு நிகரனவாதலின்றி முதல்நூல் வழிநூல் சார்புநூல் பூருவபக்கநூல் எனப் பலவேறு வகைப்பட்டு மேன்மேன் நூல்களை நோக்கிக் கீழ்க்கீழ் நூல்கள் மென்மை யுடையனவாம். அவற்றுள் ஏனைச் சமய நூல்களெல்லாம், முதல் நூலாகிய வேதாகமப்பொருளை முழுவதும் உள்ளவாறுணரமாட்டாதார் அவற்றுட் சில பொருளைச் சமுத்திரகலச நயம் பற்றி ஆண்டாண் டெடுத்துக்கொண்டு தத்தம் அறிவளவுக்கேற்பத் தொகுத்தும் விரித்துஞ்செய்த நூலாகலான் அவையெல்லாம் பூருவபக்க நூலெனப்படும். சமய நூலல்லவாகிய மிருதி புராணங் கலைகள் மற்று மென்பதனால் தழுவப்படும் உபாகம முதலாயின வெல்லாம் அவ்வேதாகமப் பொருளை உள்ளவாறுணர்ந்தோர் அவற்றைப் பிறர்க்கு இனிது விளக்குதற் பொருட்டு நால்வகை யாப்பினுள் ஒன்றான் வழிப்படுத்துச்செய்த நூலாகலான் அவை வழி நூலெனப்படும். ஏனைக் காருடந் தக்கிணம் முதலிய ஆகமாங்கங்களும், சிக்கை கற்பசூத்திரம் முதலிய வேதாங்கங்களும், முறையே அவ்விரண்டனையும் உள்ளவாறுணர்தற்குச் சார்பாய்ப் புடைபட்டு நிகழ்தலின், அவை சார்புநூலெனப்படும். இவ்வாறன்றி வேதாகமங்களின் அடங்காத பொருளாயொன்றனை எடுத்துக்கொண்டு சுதந்திரமாய்ச் செய்யும் நூல் ஒன்றுமில்லை. உண்டென்று சொல்லிப் பிணங்கும் பேதைகள் என்கடவார்.
சமுத்திரகலச நயம்பற்றி எடுத்துக்கொண்டு தருதற்கும் அவர் சுதந்திரர் அல்லரென்பார், அரனருளாலென்றார். பிறநூறிகழ் பூர்வமென முன் வருதலின் ஈண்டு வேறு கூறாதொழிந்தார். சாதித்துத் தருவர்களென இயையும். ஆமென்பதனை மேலுங் கூட்டுக. ஆகமாங்கத்தை அங்கமென்றது தலைக்குறை. ஒன்றுமென்னுமும்மை விகாரத்தாற் றொக்கது. அறை உத்தரம். எல்லாம் அருமறை யாகமத்தே காணப்பட் டடங்குதலை இனிது விளக்கியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ லிரண்டும்
ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது நீள்மறையி னொழிபொருள்வே தாந்தத்
தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல்
திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்.

பொழிப்புரை :

வேதஞ் சிவாகமம் இரண்டும், ஏனையோர் செய்யப்படும் வழிநூல் சார்புநூல் பூருவபக்க நூல்களின் ஒன்றாக வைத் தெண்ணுதற்கு ஒருவாற்றானும் இயைபின்றி அவையனைத்திற்கும் முதல் நூலாகி அநாதிமுத்தனாகிய இறைவனால் தரப்படுநூலாக, இவ்விருவகை நூலுமே நூலென்றுயர்த்துக் கூறப்படுவனவாம். அற்றேல், முதல்வனால் தரப்படும் முதனூலை ஒன்றாக வைத்தெண்ணாமல் இங்ஙனம் இருவகைப்படுத் தெண்ணியது என்னையெனின்,- அஃதொக்கும்; முதல்வன் பெருங்கருணையாளனாகலின், உலகத்தார் உய்தற்பொருட்டுஞ் சத்திநிபாதமுடையார் உய்தற்பொருட்டுந் திருவுளத்திற் கருதி, பொருள் பலபடத் தோன்றுஞ் சூத்திரமும் அதனை அவ்வாறாகவொட்டாது தெளித்துரைக்கும் பாடியமும் போல, முறையே வேதமுஞ் சிவாகமமுஞ் செய்யப்பட்டனவாகலான் அவை இரண்டும் முறையானே பொதுநூல் சிறப்புநூலெனப்பட்டுச் சூத்திரமும் பாடியமும்போல வேறுவைத் தெண்ணப்பட்டன. இங்ஙனம் வேதத்திற்கூறுங் கருமகாண்டப் பொருள்கட்கு இன்றியமையாது வேண்டப்பட் டெஞ்சிநின்றனவாய பொருள்களையும் வேதமுடிபாய உபநிடதத்தின் சாரமாயுள்ள பொருள்களையும் வேறெடுத்துக்கொண்டு இனிது விளக்குவது சிவாகமமாகலான், இதனின் வேறாய வேதத்தின் பூர்வபக்கப் பொருளைச் சொல்லும் ஏனை நூல்களெல்லாம் பூர்வபக்க நூலெனவும் அதன் சித்தாந்தப் பொருளைச் சொல்லுவதாய சிவாகமஞ் சித்தாந்த நூலெனவுமாம்.
சிவாகமத்தின் சிறப்புக்கூறியவாறு. இவ்வாறன்றி யுரைப்பன வெல்லாம்போலியென்பது சொற்கிடக்கை முறையானும் மகுடாகம முதலியவற்றானும் அறிக. இவை மூன்று செய்யுளானும் அவ்வந் நூல்களதியல்பு கூறுமுகத்தான் மேலது வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனமொன்றி லேசீவன் முத்த ராக
வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து
முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி.

பொழிப்புரை :

இத்துணைப் பெருமைத்தாகிய சித்தாந்தநெறி வீடுபேற்றிற்கு நேர்வழியென உபமன்னியன் அகத்தியன் முதலிய உயர்ந்தோரெல்லாம் வாயுசங்கிதை சிவகீதை முதலியவற்றுள் விரித்தெடுத்தோதவும், அதனைத் தெளியமாட்டாது தத்தமக்கு வேண்டியவாறெல்லாந் துரபிமானங்கொண்டு பிதற்றும் அவ்வுலகத்தார் என்கடவர்.
ஒளத்திராதியென்றாற்போல முத்தியந்தம் முத்தாந்தமென மரீஇயிற்று. பித்தாந்தம் பித்தமுடிபு ; பெரும்பித்தென்பதாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா
முதன்மைஅனுக் கிரகமெல்லா மியல்புடையான் இயம்பு
மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும்
மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும்
முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே
முதன்மையெலாம் அறிந்துமுயங் கிரண்டு போகத்
திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே
சேரும்அனுக் கிரகமெலாம் காணுதும்நாம் சிவற்கே.

பொழிப்புரை :

முற்றுணர்வு முதலிய மூன்றுஞ் சிவபிரானுக்கே யுளவென்பது மேற்கூறியவாற்றாற் பெறப்பட்ட மறையாகமம் இயம்புதல் முதலிய மூன்றேதுவானும் முறையே அறியக் கிடத்தலான், அங்ஙனம் இம் மூன்றுகுணம் இயல்பாகவுடைய அம்முதல்வன் செனனமொன்றிலே திருக்கடைக்கண் சேர்த்தி ஞானவாரிமடுத்தானந்தம் பொழிதற்கும் அச்செனனமொன்றிலேதானே மலங்கழுவிச் சீவன் முத்தராகவைத்தாண்டு வரும் பிறப்பை யறுத்தற்கும் பாதமலர்க்கீழ் வைத்தற்கும் வல்லவனாவான்.
இறைவனென்றது வல்லவனென்னுந் துணையாய் நின்றது. பல சனனங்களிலும் ஆகாதவற்றையெல்லாம் ஒரு சனனத்திலே தானே அங்ஙனமாகச் செய்யுமாறு யாங்ஙனமென்பாரை நோக்கி அவ்வாசங்கை நீக்கி மேலதனை வலியுறுத்தியவாறு. இதற்குப் பிறரெல்லாம் ஒரியைபின் றாதன்மேலுங் கூறியதுகூறலென்னும் வழுப்பட வைத்துரைப்ப. இவை இரண்டு செய்யுளானுஞ் சைவத் திறத்தடைதற் சிறப்புக் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம்
முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபத மென்பர்.

பொழிப்புரை :

அங்ஙனஞ் சைவத்திறத்தடைந்தார் சிவனடியைச் சேர்தற்குரிய நெறி தாதமார்க்கம் முதலிய நான்குவகைப் படுதலின், அவையே சரியை முதலிய பெயரான் வழங்கப்படும். அவற்றிற்குப் பயன் முறையே சாலோகமுதலிய அபரமுத்தியுஞ் சாயுச்சியமாகிய பரமுத்தியுமாம்.
சாலோக்கிய முதலியவற்றிக்குப் பொருள், வருகின்ற செய்யுட்கள் நான்கினும் ஆசிரியர் தாமே மொழிபெயர்த்துரைக்கின்ற வாற்றானறிக. இதனானே, சைவத்திறத்தடைந்தாராற் செலுத்தப்படுஞ் சரியை முதலிய நான்கும் முத்திநெறியாதற்கட்படும் பேதமும் அவற்றின் பயனுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில்
தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப்
போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்
தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும்
செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ(து)
யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும்
இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசனுல கிருப்பர்.

பொழிப்புரை :

புறத்தொழின்மாத்திரையானே உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு சரியை எனப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது
புகையொளிமஞ் சனம்அமுது முதல்கொண் டைந்து
சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம்
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் காலே.

பொழிப்புரை :

புறத்தொழில் அகத்தொழிலென்னும் இரண்டானும் அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு கிரியை எனப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும்
சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்
கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர்.

பொழிப்புரை :

அகத்தொழின் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு யோகமெனப்படும்.
சகமார்க்கம் உழத்தலென வினைமுடிக்க. இவ்வியோகம் உழந்தவரென எடுத்துக்கொண்டுரைக்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

சன்மார்க்கம் சகலகலை புராண வேத
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே.

பொழிப்புரை :

புறத்தொழில் அகத்தொழில் இரண்டுமின்றி அறிவுத் தொழின்மாத்திரையானே அம்மூன்று திருமேனிக்கும் மேலாய் அகண்டாகார நித்தவியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நிற்கின்ற சிவபிரானிடத்திற் செய்யும் வழிபாடு ஞானமெனப்படும்.
அவ்வழிபாடிவையென்பது முன்னர் வகுத்துக் கூறப்படும். ஈண்டு வேதமென்றது வேதஞ் சிவாகமமென்னும் இரண்டினுமுள்ள கருமகாண்டத்தை. சிவாகமமும் வேதமென வழங்கப்படும். கீழுள்ள வற்றைக் கீழெனக் கண்டு கழித்தாலன்றி மேலுள்ளன பயன்படா வென்பார், கீழாகவென்றார். கழித்தென்பது சொல்லெச்சம். பயன்படா வென்பர், கீழாகவென்றார். கழித்தென்பது சொல்லெச்சம். பதிபசுபாசந் தெரித்தலாவது அம்மூன்று பொருளையுந் தடத்தலக்கணத்தின் வைத்து வகுத்துணர்த்துதல். பரசிவனைக் காட்டலாவது, அம்மூன்றனுட் பதிப்பொருள் ஏனைப் பாசபசுக்களுக்கு மேலாதல் இனிது விளங்கச் சொரூபலக்கணத்தின் வைத்துணர்த்துதல். ஈண்டு ஞானமென்றது ஞானசாத்திரத்தின்மேற்று. தெரித்துக் காட்டு ஞானநூலெனவே, ஞானகாண்டமெல்லாந் தூலாருந்ததி நியாயம்பற்றி இங்ஙனம் இருபகுதிப்பட நிகழுமென்பதாயிற்று. நாடுதல் சிந்தித்தல், நாடியெனவே, நாடுதற்கு வேண்டப்படும் ஒதல் கேட்டல்களும் உடன்கொள்ளப்படும். பின் மார்க்கச்சிவன் வினைத் தொகை. பின்னுதல் அத்தவிதமாய் இயைதல். நாடாவண்ணம் பின்னிய சிவனென்றுரைக்க. மார்க்கம் இடைப்பிறவரல். சன்மார்க்கமாவதுணர்ந்து கழித்து நாடியுடனாம் பெற்றியென வினைமுடிபு செய்க. மேல் இச்சரியை இக்கிரியையென்றாற்போல ஈண்டும் இஞ்ஞானப் பெருமையெனச் சுட்டு வருவித்துரைக்க.
இவை நான்கு செய்யுளானும் மேல் எடுத்துக்கொண்ட சரியை முதலிய நான்கிற்கும் இலக்கணங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

ஞானநூல் தனையோதல் ஒது வித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்.

பொழிப்புரை :

சிவதருமோத்திரத்திற் கூறியவாறே ஒன்றற்கொன் றேற்றமாகிய கன்மவேள்வி தவவேள்வி செபவேள்வி தியானவேள்வி ஞானவேள்வி என்னும் ஐந்தனுள்,முன்னைய நான்கும் போகத்தை யூட்டுவனவாக, ஓதல்முதல் ஐவகைப்பட்ட ஞானவேள்வி யொன்றுமே வீடுபேற்றைத் தருவதாகலான் அஃதுணர்ந்தோரால் அங்ஙனம் ஐவகை ஞானவேள்வியே வேட்டற்பாற்று.
தெளிதற்கும் நிட்டைக்கும் நூல் வேண்டாமையின் நூலானாகற் பாலனவாய ஏனை ஐந்துமே ஈண்டு வேள்வியென்றெடுத்துக் கொள்ளப்பட்டன. நற்பொருளைத்தான் கேட்டல் கேட்பித்தலெனக் கேட்டற்குப்பின் வைத்தோதாமையான், ஈண்டுக் கேட்பித்தலென்றது, ஆசிரியனை வழிபட்டுத் தான் கேட்டலின்றியும் ஓதவும் ஓதுவிக்கவும் பெற்று நூலின்கண் அதிகாரமுடையராயினார் அந்நூற்பொருளைத் தமது மதி நுட்பத்தாலுணர்த்து தம்மாலோதுவிக்கப் பட்டார்க்கு உரைத்தலையென்பது பெற்றாம். கேட்டற்குப் பின்னர்த்தாகிய ஏனைக் கேட்பித்தல், பிறர்க்குரையிடத்தே நூற்கலப்பானா மென்பவாகலிற் சிந்தித்தற்பயத்தாய் அதனுள் அடங்குதலின், வேறுவைத் தெண்ண வேண்டாவாயிற்று. அற்றாகலினன்றே வருஞ் செய்யுளிற் கேட்டற்குப்பின் சிந்தித்தலே கூறியொழிந்ததூஉமென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்
வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள்
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்(கு)
ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம்
இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல்
நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால்
ஞானநிட்டை அடைந்தடைவர் நாதன் தாளே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஞானவேள்வி ஐந்தனுள் முன்னைய மூன்றினும் ஆசிரியன் அறிவுறுக்கும் உண்மைஞானம் நிகழாமையின், உண்மை ஞானமெனப்படுவன ஏனைக் கேட்டல் சிந்தித்தல்களும் சிந்தித்ததனைப் பின்னர்த் தெளிதலுந் தெரிந்தவாறே அதன் பின் நிட்டை கூடுதலுமென்னும் நான்கேயாம். இம்முறையே வந்து நிட்டைபொருந்தினோர் வீட்டினைத் தலைப்படுவர். இந்நான்கினுள் மேவுதலின்றித் தீக்கையில் அத்துவ சுத்தி பண்ணப்பட்டு ஓதல் ஓது வித்தல் கேட்பித்தல் மாத்திரையினின்று தப்பினவர், பதமுத்திகளின் வைகிநீங்கிய துணையானே ஆசிரியன் மாட்டுக் கேட்டல் முதலிய நெறியால் நிட்டையினைத் தலைக்கூடி வீடுபேறெய்துவர்.
ஓதல் முதலிய மூன்றில் நின்றார்க்குங் கேட்டல் முதலிய ஆசிரியனையின்றி யமையாவென்பது உணர்த்துதற்பொருட்டு, இந்தப்பார்மேல் நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்தென்ற துணையே யாகலின் அதுவே நியத மன்றெனக்கொள்க. சரியை முதலியவற்றில் நின்றாரும் `அங்கு நாதனே முன்னிற்கின் நணுகுவர் நற்றாளே’ எனவருஞ் செய்யுளிற் கூறப்படுதலின். இனி மேவாது தப்பினவர் என்பதற்குக் கேட்டல் முதலிய மூன்றினின்று தப்பினவரென்று உரைப்பாருமுளர். கேட்டபின்னர்க் கேட்க வேண்டாமையானும், சிந்தித்தபின் நூல் வேண்டாமையானும், தெளிந்தவழி நிட்டை மேவுதற்கு இடையீடின்மையானும், கேட்டல் முதலியவற்றினின்றார், சுத்ததத்துவ புவனங்களின் அபரமுத்தராக வைகியவாறே பரமுத்தியைத் தலைப்படுவதன்றி மீளுதலின்மையானும், அவர்களைச் சரியை முதலியவற்றின் நின்றாரோடொப்ப வைத்து அங்ஙனமுரைத்தல் சிறிதும் ஏலாமையானும், மேலைச்செய்யுளோடு இயைபுபடாமையானும், அவருரைப்பனவெல்லாம் போலியென்றொழிக.
இவை இரண்டு செய்யுளானும் மேற்கூறிய ஞானமாவது இத்துணைப் பகுதித்தென்பதூஉம் அவற்றுட் பொதுச்சிறப்பாமாறும் அவற்றிற்குரிய பயன்வேறுபாடு முணர்த்தியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள்
சாந்திவிர தம்கன்ம யோகங்கள் சரித்தோர்
ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர்
ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
ஒடுங்கும்போ தரன்முன்நிலா தொழியின்உற்ப வித்து
ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு
நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற் றாளே.

பொழிப்புரை :

மேலேமேலே போயும் மீளுதற்கேதுவாகிய பசுபுண்ணியம்போலன்றி, மேம்பட்ட சரியை முதலிய சிவபுண்ணியங்களை விதிவழி அனுட்டித்தோரும், மேவாது தப்பினவரோடொப்பத் தத்தமக்குரிய பதமுத்திகளின் நெடுங்காலம் வைகி முடிவின்கண் எவ்வாற்றாலும் ஞானநெறியைத் தலைப்பட்டே வீடெய்துவர்.
இதனானே சரியை முதலியவற்றிற்குப் பயன் மேற்கூறிய சாலோகமுதலிய பதமுத்திமாத்திரையேபோலும் என்னும் ஆசங்கையை நீக்கியதூஉமாயிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப்
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே.

பொழிப்புரை :

விதிவழியின்றிப் பத்திவழியினின்று பதமுத்தியைப்பெற் றோரும் முடிவின்கண் ஞானநெறியைத் தலைப்பட்டே வீடெய்துவர்.
பத்திநெறியில் நின்றோர்க்குப் பக்குவமிகுதிப்பாட்டாற் சரியை கிரியாயோகம் எளிதிற் கைகூடி முற்றுப்பெறுவனவன்றி ஏனேர்க்குப்போலக் காலநீட்டிப்பும் அருமையுமுடையனவல்ல வென்பார், சரியைகிரியாயோகந் தன்னினுஞ்சாராமே என்றார். ஆகலின் சரியை கிரியாயோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வரென மேற்கூறிய சோபபானமுறையோடு முரணாமையறிக.
இவை நான்கு செய்யுளானும் ஐவகைவேள்வி யாற்றினோர் பெறும் பயனும் சரியை முதலியவற்றிற் சரித்தோர் பெறும் பயனும் சிவஞானிகட்குச் செய்யுந் தானப்பெருமை கூறுமுகத்தாற் பத்திநெறியில் நின்றோர் பெறும் பயனும் உணர்த்துமுகத்தானே, எந்நெறியில் நின்றோர்க்கும் வீடுபேறெய்துதற்கண் ஞானநெறியாகிய சன்மார்க்கம் இன்றியமையாச் சிறப்பிற்றென்பது கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமஞ்சொல்ல அல்லவா மென்னும்
ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான்
ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல்
அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி யாகும்
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்
இறைவனடி ஞானமே ஞான மென்பர்.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றல் ஏனையவெல்லா ஞானத்தைப்பயப் பிக்கும் ஞானமொன்றே வீடுபேற்றிற்குச் சிறந்த காரணமாமென்பது வேதமுதலிய பிரமாண நூல்கட்கெல்லாந் துணிபாகவும், அவற்றோடு பிணங்கி வீடுபேற்றிற்குத் தீக்கைமாத்திரையே அமையும் ஐவகை வேள்விமுதலிய கன்மங்களே அமையும் பத்திநெறிமாத்திரையே அமையுமென்று இவ்வாறு பிதற்றும்பேதைநீரார் ஒருவாற்றானுந் தெருட்டற்பாலரல்லரெனவும், ஞானமல்லாதனவெல்லாம் அஞ்ஞானமாகலின் அவ்வஞ்ஞானப்பகுதிகளாற் பந்தமுறுதலின்றி வீடுபேறடைதல் கூடாதெனவும், அவ்வஞ்ஞானப்பகுதிகளெல்லாம் ஒளிமுன் இருள்போல ஞானத்தின் முன்னர்ச் சத்திகெட்டொழியும், அவை யொழியவே, அவற்றானாய பந்தம் நீங்கும், அது நீங்கவே, முத்திநிலை கைகூடுமாகலான் ஞானமொன்றே முத்திக்குச் சிறந்த காரணமெனவும் ஞானத்துள்ளுந் தார்க்கிகர் சாங்கியர் மாயாவாதி முதலியோர் கூறும் ஞானங்களெல்லாம் பாசஞான பசுஞானங்களாகலான், அவையும் பந்தமுறுத்துவனவேயன்றி வீடெய் துவிக்க மாட்டாமையின், அவற்றின் வேறாய திருவடி ஞானமொன்றே அப்பெற்றித்தாகிய ஞானமாவ தெனவுங் கூறுவர் அந்நூல்களின் உண்மை யுணர்ந்தோர்.
ஏகாரம் இரண்டும் பிரிநிலைக்கண் வந்தன. சொல்லவுமெனச் சிறப்பும்மை விரித்துரைக்க. தான் இரண்டும் அசை. ஆனத்தால் ஆனவதனாலென்க. ஆனவென்பதனுளகரமும் அதனாலென்பதனுள் அன்சாரியையுந் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன ;“பெற்றத்தாற் பெற்ற பயன்” என்றாற் போல. ஆதல் உண்டாதல். இதனானே, பிறவெல்லாம் வீடுபேற்றிற்குச் சிறந்த காரணமல்லவாதல் இனிது விளக்கி மேலது வலியுறுத்தப்பட்டது. இத்துணையும் ஞானத்தினியல்பும் அதன் பயனும் பொதுவகையாற் கூறி, இனிச் சிறப்பு வகையாற் கூறுகின்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத்
தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும்
தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும்
நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்
நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும்.

பொழிப்புரை :

தனது கிரணத்தோடுந் தோன்றும் ஞாயிற்றின் சந்நிதி மாத்திரையானே சூரியகாந்தக் கல்லின்கண் நெருப்பு விளங்கித்தோன்றுமாறுபோல, கேட்பித்தலோடுந் தோன்றும் ஆசிரியன் சந்நிதி மாத்திரையானே மாணாக்கன்மாட்டு, மேல் ‘ஈரிரண்டாங் கிளக்கின் ஞான’ மென்றவற்றுள் முந்திய ஞானமாகிய கேட்டலறிவு விளங்கித் தோன்றும்; அது தோன்றவே, பதி முதலிய முப்பொருளும் அவை யொன்றினொன்று வியாபக வியாப்பியங்களாமாறும் நிருவிகற்பமாய்த் தோன்றும்.
அருளான் என்புழி ஆன் உடனிகழ்ச்சிப் பொருட்கண் வந்தது ; “தூங்குகையா னோங்குநடைய” என்றாற்போல. ஈண்டு அருளென்றது ஏற்புழிக் கோடலாற் கேட்பித்தலை யுணர்த்திற்று. ஆசிரியன் நூற்பொருள் உரைக்கும்வழி ஆசிரியன் ஞானமே மாணாக்கன் மாட்டுச் சென்று பற்றுவதுபோலு மென்னும் ஆசங்கை அறுத்தற் பொருட்டுத் தோன்றத் தோன்று மென்றார். உவமை கூறியதுமது. சடத்துக்கன்றிச் சித்துக்குச் சங்கிரமங் கூடாதென்பது சிவாகம நூற்றுணிபென்க. அணுவோரண்டமாம்படி நேரியனாகலால் உயிர்க் குயிராதலும் அண்டமோரணுவாம்படி பரியனுமாதலால் எங்கு நிற்றலும் பெறப்படு மென்பார், நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும் நின்ற நிலை என்றார். முன்னிகழ்ந் தென்பதனை யாண்டுங் கூட்டுக. முன்னிகழுந் தோற்றமாவது சவிகற்பத்துக்கு முன்னாக நிகழும் நிருவிகற்பத் தோற்றம். இதனானே கேட்டலாமாறும் அதன்கண் நிகழும் அனுபவமுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம்
மேவுதலும் ஞானம்விளைந் தோர்குருவின் அருளால்
புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள்
பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகித்
தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில்
தபனியத்தில் சமபுத்தி பண்ணிச்சங் கரனோ(டு)
ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே
உடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே காண்பர்.

பொழிப்புரை :

பக்குவ முதிர்ச்சியானாலாஞ் சத்திநிபாத மேவப்பெற் றார்க்கு அக்கேட்டலறிவு மந்தமாதலின்றி முதிர்ந்து முறுக விளையும் ; அப்பொழுது தம்மாசாரியராதல் தம்மோடொரு சாலை மாணாக்கராய்த் தம்மின் மூத்தாருளொருவராதல் சிந்திப்பிக்கப் பெறும் அந் நூற்பொருளின் கண்ணே கருத்தொருங்கி நுழைந்து முன்னொடு பின் மலைவற ஏது திருட்டாந்த முதலியவற்றாற் சிந்தித்து நிட்டை கூடுதற் கண் வேட்கை மிக்குடையராகப் பெற்றார், சிந்தித்தற் கருமமே மேற்கொண்டு மற்றொன்றினும் பற்றொன்றின்றிச் சீவன் முத்தரோ டொத்துப் பேரறிவாகிய சிவமுஞ் சிற்றறிவாகிய தாமும் ஞாயிற்றி னொளியுங் கண்ணொளியும் போல் அத்துவிதமாய் நிற்றலான், ஆண்டுத் தாமுளராதல் அறியப்பெறாது சிவத் தோற்றமொன்றே காணப்பெற்று நிருவிகற்பஞ் சவிகற்ப மென்னும் இரண்டிற்குமிடை நிலத்தே நிற்பர்.
மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்திநிபாத மேவுதலுஞானம் விளைந்தெனவே, அஃதங்ஙனம் மேவாதவழி அக்கேட்டலறிவு முறுகுதலின்றி அஃகி நிகழுமென்பதாயிற்று. விளைந்தவழி என்பது விளைந்தெனத் திரிந்தது. ஓர் குருவெனப் பொதுப்படக் கூறினார், ஒருசாலை மாணாக்கராய்த் தம்மின் மூத்தாரையுந் தழுவுதற்கு. புரிதல் விரும்புதல். சீவன் முத்தராகி யென்புழி ஆக்கச்சொல் உவமப் பொருள் குறித்துநின்றது ; “ஆள்வாரிலி மாடாவேனோ” என்றாற் போல. உடந்தையாய் உறைந்து காண்பரென்றது, மழைபெய்து குளம் நிறைந்த தென்றாற் போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. உம்மை சிறப்பு. ஏகாரம் பிரிநிலை. + “அடைபவர் சிவமே யாகுமதுவன்றித் தோன்றுமென்ற கடனதேன்” என்பதும் இந்நிலை யெனக் கொள்க. இதனானே சிந்தித்தலாமாறும் அதன்கண் நிகழும் அனுபவமுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து
குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில்
பிறியாத சிவன்தானே பிறிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி
நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே.

பொழிப்புரை :

ஆசிரியன் திருவருளால் இருவகைப் பாசங்களும் நீங்கிக் கேட்குமுறையிற் கேட்டுச் சிந்திக்கு முறையில் சிந்தித்துப் பின் அன்பு செய்தடங்கி நிற்கப் பெறுவார்க்கு, முதல்வன் இயல்பு கேட்டற் காலத்துப் பொருட்டன்மைபற்றிப் பேதமாய்த் தோன்றிச் சிந்தித்தற் காலத்துக் கலப்புப்பற்றி அபேதமாய்த் தோன்றித் தெளிந்தபின் இவ்விரண்டு மின்றி நேரியனும் பரியனுமாயதோர் முறைமைபற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றினும் பற்றிலனாய் வேறு தோன்றும்.
நின்று நிராதாரனாய்த் தோன்றிடுவனெனக் கூட்டுக. தெளிதலாமாறும் அதன்பயனும் இனிது விளக்குதற் பொருட்டு மேற்கூறிப் போந்தவற்றையும் அனுவதித்து உடன் கூறினார். கூடாதே வாடாதேயென ஈண்டுக் கூறவே, ஏனைக் கேட்டல் சிந்தித்தல்களின் ஒரோவழிக் கூடுதலும் வாடுதலும் நிகழுமென்பதாயிற்று. அற்றாகலினன்றே ஆண்டிவ்வாறினிது விளங்கப் பெறாதாயிற்றென்பது. இருத்தலருமை நோக்கி இருப்பையாயினென்றார். இதனானே தெளிதலாமாறும் அதன்கண் நிகழும் அனுபவமுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்.

பொழிப்புரை :

வியாபகமாகியவுயிர் அவ்வியல்பிழந்து கீழுமேலும் ஏகதேசப்பட்டுச் சேறற்குக் காரணம், அங்ஙனஞ் சென்று அவ்வப்பயன் நுகரச் செய்யும் இருவினைத் தளையேயாகலின், அத்தளை இரண்டனையும் ஞானநூலோதல் முதற் சிந்தித்தலீறாகிய ஞானபூசையின் பயனாய் நிகழ்ந்த தெளிதலுணர் வெனப்படும் அரத்தான் அறுக்கப்பெற்றார்க்கு, காரணமின்மையிற் காரியமாகிய ஏகதேசச் செலவும் இன்றாயொழிவும்; அஃதொழியவே, அவர் கரணங்களின் வயத்தராதலின்றி மேலங்ஙனந் தோன்றிய இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்றானுங் குறைவின்றி இம்மையே சீவன்முத்தராகி, மாசு நீங்கியவழி ஆடையின் வெண்மை ஆடைமுழுதும் விளங்கினாற் போல, இங்குளிவாங்குங் கலம்போல் உழல்வதாகிய இவ்வுடம்பு நீங்கப்பெறும் பரமுத்தி நிலையில் தமது வியாபகமெங்கணும் அறிவு விளங்கப்பெற்று முதல்வனோடொத்து நிற்பர்.
சிவசமமாதற்குரிய சாதாரண தன்மியாவதிஃதென்பார், எங்கு மாயென்றார். தெளிந்தார்க்குக் கண்ணுதல் தன் நிறைவதனிற் கலத்தற்கண் இடையீடின்மை இனிது விளக்குவார், இடையீடாவன இவை என்பதூஉம் அவை கழிந்தவாறும் உடன் கூறினார். கண்ணுதல் தன் நிறைவதனிற் கலந்தார்க்குப் பண்டை ஏகதேசவுணர்வு தூர்ந்து போதலின், ஏகதேச வுடம்பில் நிகழும் இன்பத்துன்பத்திற்கு ஏதுவாகிய உற்பாத முதலியவற்றை நோக்கி வரக்கடவதோர் கவலையின்மையின், “எங்கெழிலென் ஞாயி றெமக்” கென்று குறைவின்றி நிற்பாராயினாரென்பது. +“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந் தார்க் கல்லான் - மனக்கவலை மாற்றலரிது” என எதிர்மறை முகத்தாற் கூறியதும் இதுபற்றியென்க. கலந்து முத்திபெறு மிவனென வியையும். இதனானே நிட்டையாமாறும் அதன் பயனுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு
நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை
கோலமிலை புலனில்லை கரண மில்லை
குணமில்லை குறியில்லை குலமு மில்லை
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப்
பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்.

பொழிப்புரை :

இந்த நிட்டையுடையார்க்கு விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் வேண்டாம் : அவர் செய்தன வெல்லாந் தவமாம்.
பாலர்குணம் அறவொழிதற்கும், உன்மத்தர்குணம் ஒருகாற் செய்தொருகாலொழிதற்கும், பிசாசர்குணஞ் செயலிழப்பினின்று செய்தற்கும் உவமையாயின. இவ்வாறன்றி, மேலுணவு தேடாமை முதலியவற்றிற்கு அம்மூன்றும் உவமையாயின என்பாருமுளர். இச்செய்யுளின் எடுத்துக் கொண்டபொருளோ டியைபின்மையானும், “பாலருன்மத்தர் பிசாசரிலெனவு - முறங்கினோன்கை வெறும் பாக் கெனவுந் - தானேதவிராதானால்” எனப் பிறாண்டுந் தவிர்தன் மாத்திரைக்கே அவற்றை எடுத்துக் காட்டியவாற்றானும், அஃதீண்டைக் கேலாமை யறிக. பாடலினொடாடலிவை பயிறல் பரமானந்த மேலீடு நோக்கி நிகழ்வதென்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச்
செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்(கு)
ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல்
உறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல்
மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின்
வருத்தத்தில் திருத்தத்தில் மைதுனத்தில் சினத்தின்
ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம்
அடைந்தாலும் ஞானிகள்தாம் அரனடியை அகலார்.

பொழிப்புரை :

விகாரமுறுதற் கேதுவாகத் தம்முள் மாறுபட்ட தொழில் பலவற்றையுஞ் செய்தாராயினும், அவைபற்றி அவர் சிறிதும் விகார முறுவாரல்லர்; உண்மையானோக்குவார்க்கு அவர் செய்யுஞ் செயல் வேறாகலான்.
செய்யாச் செயலதனைச் செய்தற்கு வேறொரு நியதியும் வேண்டாமென்பார், தேசமிடங் காலந் திக்காசனங்களின்றி என்றார். இன்றிச் செய்வதெனவும் அடைந்தாலு மூசல்படு மனமின்றி யெனவு மியையும். அடைந்தாலுமென்னும் உம்மை சிறப்பின் கண் வந்தது ; “உவரிதோன்றிவாழ் தொழிலவாயினு மயிலை தீஞ்சுவையுப்பின்” என்றாற் போல. இவை இரண்டு செய்யுளானும் நிட்டை மேவினோர்களது ஆசாரங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன்
இடத்தினினும் ஈசனெல்லா விடத்தினினும் நின்ற
அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி
அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து
மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே
மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத்
துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம்
தோன்றமுயல் சிவானுபவம் சுவானுபூ திகமாம்.

பொழிப்புரை :

இங்ஙனங் கூறிய முறையானே, அகம்புற மென்னாமல் எங்கணும் ஏகநிலையாய்க் கண்டு இறைநிறைவில் அழுந்துவதாகிய நிட்டை மேவுதல் அரிதாய்ப் பண்டைப் பயிற்சிவயத்தாற் சுட்டுணர்வு பற்றிப் பிரபஞ்சங் காட்சிப்பட வருமாயின் அதனைக் காணும் பொழுதே இறைவனதற்குள்ளாயும் புறமாயுநிற்குநிலையுமுடன்கண்டு, அவ்வாறண்டத்தின் நிற்குநிலை அறிதலரிதாயிற் பிண்டத்தின் நிற்குநிலையுள் ஒன்றின்வைத்தறிந்து அதுவாயிலாகப் புகுந்தாதல் அவ்வியல்பைத் தலைப்பட்டறிந்து ஆண்டுக் “காணுங் கரணங்க ளெல்லாம் பேரின்ப”மாகப் பேணி, இவ்வாறு கருவிகளோடுந் தொழிற்பட்டு நிற்பதாகிய சகலசாக்கிரத்திற்றானே கருவியொன்ற னோடுங் கூடாது தொழிலிறந்து நிற்கும் நின்மல துரியாதீத நிலை கைகூடும்படி முயல்வார், சிவானுபவந் தமதாகக் கொண்டு அனுபவிக்கப் பெறுவார்.
அந்நிலையை அறிந்தென்றது அண்டத்தின் வைத்தறிதலை எனவும், அறிவதொருகுறி குருவினாலறிந்தென்றது அவ்வறிவிற் கேதுவாய்ப் பிண்டத்தின் வைத்தறிதலை எனவுமுணர்க. சிவன் ஆகுபெயர். அகரச்சுட்டு வருவித்துரைக்க. முயலென்பது முன்னிலை யேவல். சிவானுபவஞ் சுவானுபூதிகம் என்புழித் தொக்குநின்ற வாறாவது முறையே செயப்படுபொருண்மைக்கண்ணும் வினைமுதற் பொருண்மைக் கண்ணும் வந்த காரகம் ; அமிழ்தவுண்டி கடவுளர் உண்டி என்றாற்போல. இதனானே அந்நிட்டை மேவப் பெறாதார்க்கு அது பெறும் உபாயங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு)
அனுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே.

பொழிப்புரை :

இங்ஙனம் பசுகரணஞ் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரத்தினின்று கொண்டுதானே கரணங் கடந்த அதீதத்தைப் புரிந்தார், கருவிகளின் நீங்கி நிட்டை மேவினோரோ டொப்பச் சிறந்தாரேயாவர் ; அவ்வுண்மை யறிந்தார் உண்டுடுத்துப் பூசி முடித்துச் செய்யுந் தொழிலொப்புமையேபற்றி அவரை உலகத்தாரோடு வைத்தெண்ணற்க.
பராவுதல் சஞ்சரித்தல். இதனானே அங்ஙன முயன்றாரது பெருமை கூறப்பட்டது. ஞானவதிகாரப்பட்டமைபற்றி ஈண்டுக் கேட்டலுடன் வைத்து ஒருவாற்றாற் றொகுத்தோதிய இன்னோரன் னவை யெல்லாம் வருகின்ற சூத்திரங்களான் விரித்துக் கூறப்படும். ‘புறச்சமய நெறி’ என்பது முதல் இத்துணையும் இரண்டாங் கூற்றைத் தெரித்துணர்த்தியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார்
காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள்
மருவிஇரு வரும்புணர வந்த இன்பம்
வாயினாற் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர்
உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை
உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண்
அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர்
அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே.

பொழிப்புரை :

இருவரும் புணர வந்த இன்பம் பேசரிதாயினும் மணந்தவர் தாம் உணர்வர், அக்காமரசங் கன்னிகை காணாள்; அதுபோல அருள்பெறில் அவ்விருவரையும் அறிவிறந்தங்கறிவர், காணமாட்டாத அபக்குவர் அதனைக் காணார்தாமேயாகலான் அவருக்கு உணர்த்தும் வாயிலில்லை. இது நிற்க. பன்னிறங்களான் மயங்கித் தன்னொளி இழந்த படிகம்போல உருவான் மயங்கியே ஆன்மசொரூபம் உணரப் பெற்றிலர்; அதனை யுணராதார் அப்பெற்றித் தாகிய உருவுணர்வால் அவ்வான்மாவுக்குள்ளாகிய சிவனையும் அறிவாமென்றல் பாவகமாத்திரையே யாகலாற் கருவியறிவிறந்து நின்று அருளானறியப் பெறாதார்க்கு ஏகதேசமாகிய கருவியுள்ளளவும் ஏகதேசக் காட்சி நீங்காமையாற் பிறவியொழியாது ; பிறவிக்கு மூலமாகிய ஆணவமலமும் பற்றறக் கழியாது.
இஃது எடுத்துக் காட்டுவமை. ஈண்டுருவென்றது கலையாதி மண்ணந்தமாகிய கருவிக்கூட்டத்தை. இன் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாமுருபு. அது பகுதிப்பொருள் விகுதி. உணராதார் சிவனை யுணர்வதென இயையும். உயர்வு சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. உணராதாரென்றது சிவசங்கிராந்தவாதிகளை நோக்கிக் கூறியது. காணிரண்டுங் கட்டுரைக்கண் வந்த வசைநிலை. இதனானே பசு கரணங்கள் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரத்தைப் பெற்றார் அதன் மேலுங் கரணங்கடந்த அதீதத்தைப் புரிதற்கு அறிவு செல்லுமாறு யாங்ஙன மென்னுஞ் சிவசங்கிராந்தவாதிகளை மறுக்குமுகத்தால், ‘துன்னிய ஐம்புலவேடர் சுழலிற்பட்டுத் துணைவனையும் அறியாது துயருறுந் தொல்லுயிர்’ என்ற மூன்றாங் கூறு வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்போல் உள்ளம்
பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசுபார்த் திட்(டு)
இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன்
எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப்
பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான்
பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை
முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி
முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா முறைபோல்.

பொழிப்புரை :

தன்னை அடுத்த பன்னிறங்களின் இயல்பே தன் மாட்டுக் காட்டி நிற்கும் பொதுவியல்புடைய படிகம்போல, ஆன்மாவுந் தன்னாற் சாரப்பட்ட கருவிகளின் இயல்பே தன் மாட்டுக் காட்டி நிற்கும். தனது பொதுவியல்பை முன்னர்ச் சிந்தித்தறிந்து கொண்டு, பின்னர் அப்படிக ஒளி அவற்றின் வேறுளதாயினாற் போல, தனது சிறப்பியல்பு இவற்றின் வேறாயுண்டென்பதும் உணர்ந்து பின்னங்ஙனம் பொதுவியல்பையே தன்னியல்பாகச் செய்துநிற்கும் அக்கருவிஞானம் பொதுவியல் பேயாயொழியும்படி தன்னியல்பு விளங்குதற்கு ஏதுவாகிய உண்மையுணர்ந்தான் அத்தன்னியல்பின் விளங்கித் தோன்றுஞ் சிவத்தையுறுவன்; மீள அக்கருவிக் கூட்டத்திற் செல்வானல்லன். சிறைப்பட்ட நீர் முறிந்தவழிக் கடலிற் சென்றடங்கி மீளாதவாறு போலும்.
கருவிகள் அப்பெற்றியவாயவழி அவற்றை நீங்கி அருள்பெறு மாறு யாங்ஙனமென்று நோதலுறுவார்க்கு உபாயங் கூறியவாறு. சேர்தற்கு இடையீடின்மை விளக்குவார், முடுகியோடி என்றார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா
எங்குமிலன் என்னின்வே றிறையு மல்லன்
அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து)
அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா
இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து)
இறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த
துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல்
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.

பொழிப்புரை :

உயிர் கரணங்களெல்லாஞ் சிவமயமேயெனின் வேற்றுமையின்மையாற் கருவிவழிச் செல்லுஞ் சகலநிலையைக் கைவிட்டுத் திருவடியைத் தலைக்கூட வேண்டாமையானும், அதுபற்றி எல்லாஞ் சிவமாதலில்லையெனின் எவற்றினும் வியாபகமா யுடன்நின்று செலுத்துவதாகிய அவனதிறைமைக்கு இழுக்காய் முடியுமாகலானும் இருவகையுமின்றிக் கலப்பினால் உடம்பின்கண் உயிர்போல ஒப்பநிற்பன் என்பது பெறப்படுமாகலான், உடம்பின்கண் உளவாகிய ஐந்திந்திரியங்களினும் உயிர் ஒப்ப நிற்பினும், ஏனை இந்திரியங்கள் நான்கும் ஒளியால் அவ்வான்ம போதத்தோடும் விரவிச் சேய்மைக் கண்ணதாகிய விடயத்தையும் வியாபித்தறியுங் கண்ணிந்திரியம் போல வியாபித்தறிய மாட்டாவாய்த் தம்மாட்டு வந்த விடயங்களை நின்றாங்கு நின்று இயைந்தறிவனவேயாமன்றே. அதுபோல ஆன்மாவினுந் தத்துவங்களினும் வைத்துப் பார்த்து வேற்றுமை யறிந்து கொள்ளப்படுமாகலான், அப்பெற்றித்தாகிய உயிர் அப்பெற்றித்தாகிய கருவிஞானத்தைக் கைவிட்டு இறைஞானந் தந்து திருவடிகளை யீயப்பெறுதல் ஒளியிழந்தகண் மாசுநீங்கியவழித் தன்னொளியையுந் தனக்கு உள்ளொளியாய் நின்று செலுத்தும் ஆன்மபோதத்தையும் ஒருங்கே பெற்றாற் போலுமாகலின், அவ்வழி இறைவன் ஆன்மாவின் அறிவுக் கறிவாய்த் தோன்றுவானன்றி ஏகதேசமாகிய ஏனைக் கருவியறிவுக்குள் அறிவாய்த் தோன்றுவானல்லன்.
இறைவனொப்ப நிற்பினும் ஏகதேசப்பொருள் ஏகதேசப் பொருளே வியாபகப்பொருள் வியாபகப்பொருளேயென்பார், உவமை எடுத்துக்காட்டி ஆன்மாவினும் நாமியம்புந் தத்துவங்களினும் இங்கு வைத்தறிவ தென்றார். நாமென்னுமுளப்பாட்டுத் தன்மை “நாமரை யாமத்தென்னோ வந்துவைகி நயந்ததுவே” என்றாற்போல ஈண்டிழித்தற்குறிப்புத் தோன்ற முன்னிலைக்கண் வந்தது. அறிவதென்றது வியங்கோள்; +“கொள்ளப்படாது மறப்பது” என்பது போல இங்கென்பது உவமவுருபுதோன்ற நின்றது. ஈதல் ஆகுபெயர். இழந்தவென்னும் அன்பெறாத வகரவீற்றுப் பலவறிசொல் விழிகளையுணர்த்திப் பெற்றாற்போலென்னும் பயனிலை கொண்டது. மாசுநீக்கந் தோன்றத் துங்கவிழிச் சோதியென்றார். யாண்டுமொப்ப நிற்குஞ் சிவத்தினொடும் பொருந்தினவன் மீளினும் அதுபற்றி இழுக்கென்னை யென்னுஞ் சிவாத்துவித சைவரை நோக்கி ஒப்ப நிற்கும் வழியும் வேற்றுமை யுண்டென்பது உவமை முகத்தான் இனிது விளக்கிப் ‘போதான் பின்னை’ யென்றதனை வலியுறுத்தியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும்
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்
நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர்
அரும்பாச மறுக்கும்வகை அருளின்வழி யுரைப்பாம்.

பொழிப்புரை :

சிவத்தைப் பொருந்தியவன் ஒரோவழிக் கருவிகளின் மீளவருமாயின் அது நீர்ப்பாசிபோல அற்றம் பார்த்து வந்து தலைப்படும் வாதனைபற்றி நிகழ்வதாகலின், அவ்வாதனை முன்னர்க் கூறப்படு முபாயத்தைக் கடைப்பிடித்துச் செய்து நீக்கிக்கோடற்பாற்று.
இவை மூன்று செய்யுளானும் ‘அவரினீக்கி மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ்வைப்ப’ னென்ற நாலாங்கூற்றுப் பொருள் வலியுறுத்துப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று)
அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும்
ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலா மோட.

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றால் ஏனை இருவகை ஞானங்களானும் எய்துதற்கரியனாகிய பரம்பரனை அவனது திருவடிஞான மொன்றானே தன்னறிவின்கண் வைத்தாராய்ந்து, நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கப்பெறாதவழிப் பற்றுச்செய்தற் கேதுவாகிய எத்திறப்பட்ட பிரபஞ்சமும் நின்றுழி நில்லாது பெயருங் கானற்றேரின் இயல்பினவாகக் கண்டுகழிப்பவே, அத்திருவடிஞானம் விளங்கி அந்நிலை கைகூடப் பெறும். அதன்பின்னும் அவ்வாறு பாசத்தை யொருவி ஞானத்தைப் பெற்று ஞேயத்தைக் கண்ட காட்சி யொரோவழி வாதனைபற்றிச் சலியாமைப்பொருட்டு, அப்பொருள் பயக்குந் திருவஞ்செழுத்தை அவ்விதிப்படி யறிந்து உச்சரிக்க.
ஈண்டு ஊனமென்றது வாதனாமலத்தை. நில்லாதே நீங்கிப் போதினெனவே, அவ்வாறு நிற்றலும் அனுவாத முகத்தான் ஈண்டு விதிக்கப்பட்டதாயிற்று. ஆகவே, இச்செய்யுள் முதல்நூல் ஒன்பதாஞ் சூத்திரம்போல முக்கூற்றதாயவாறு கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்
நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே
காதலினால் நான்பிரம மென்னு ஞானம்
கருதுபசு ஞானம்இவ னுடலிற் கண்டுண்(டு)
ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம்
ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே.

பொழிப்புரை :

மேற்கூறிப் போந்த மூவகை ஞானங்களுட் பாசஞான மாவது நால்வகை வாக்கின் பகுதியவாகிய வேத முதலிய சொற்பிர பஞ்சமும், நிலமுதல் நாதமீறாகிய பொருட்பிரபஞ்சமும் என்னும் இவைபற்றி நிகழும் ஏகதேச ஞானம் அனைத்துமாமெனவும் ; ஏனைப் பசுஞானமாவது இவற்றைப் பொருந்திய ஆன்மா இவை அனைத்துந் தன்கீழ் வியாப்பியமென் றறிந்து நீங்கித் தான் அவற்றிற்கு மேற்படுதலான் அங்ஙனம் அதுபற்றி நிகழ்வதோர் செருக்கால் அநாதி முத்தனைப் போல முத்தனாகிய யானும் அவ்வாறு பிரமமாவேனெனச் சடுதியின் மதிக்க வருவதோர் சிவசமவாத ஞானமெனவும் உணர்க.
ஞான வேற்றுமை தெரித்துக் கூறியவாறு. அற்றேல், அறிந்து நீங்குதலின் வேற்றுமையின்மையாற் சமப் பிரமமென்றற் கிழுக்கென்னை என்னும் ஆசங்கை நீக்குதற் பொருட்டு அநாதிமுத்தனோடு ஆதிமுத்தன் இடையறிந்து நீங்குதலின் வேற்றுமை பெரிதாதல் காட்டுவார், இவனுடலிற்கட்டுண் டோதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் காணே என்றார். பசுத்துவ நீங்கிய வழியும் அவ்வாறு மதித்தல் பசுத்துவ வாதனைபற்றியாகலான் அது பசுஞானமே யாமென்பது. நான் பிரமம் என்னும் ஞானம் ஏகான்மவாதம்பற்றி நிகழுஞானமெனினுமாம். நாடலாலெனவும் உணர்ந்திடலாலெனவும் உணர்ந்திடுவனெனவுங் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். நாதமுடிவான வெல்லாமென்றதும் அது. நணுகிய என்னும் பெயரெச்சத்தகரம் விகாரத்தாற் றொக்கது;“தகுவரியன்பு” என்றாற்போல. ஒன்றாகச் சிவனியல்பி னுணர்ந்திடுவன் காணே என்றதனாற் பதிஞானத்தியல்பு இதுவென்பதூஉம் பெறப்பட்டது. அஃதங்ஙனமாக வைகரியாதித் திறங்களெல்லாம் பாசஞானமெனக் கழிப்பின், வைகரியாதித்திறத் துட்பட்ட ஞான நூல்தனை ஓதல் ஓதுவித்தல் முதலியன ஞான பூசையென மேற்கூறியது போலியாய் முடியும் போலுமெனின்,- முடியாது; பதிஞானம் விளங்குதற்கு ஏதுவாமுகத்தாற் பயன்படுத லுடைமையின்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில்
கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள்
மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க
வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச்
சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி
தவிராது மலமிதுவும் பசுஞான மாகும்
அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு)
அறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே.

பொழிப்புரை :

அங்ஙனம் நான் பிரமமென நிகழுஞானமேயன்றி ஆன்மா இவைகீழ்நாடி நீங்குதன்மாத்திரையே முத்தியாதலமையுமென அதற்கு முன்னாக நிகழும் பாடாணவாதஞானமும், சேய்மைக்கட் சென்ற ஒருவன்நிழல் உச்சிப்போதின்கண் அங்ஙனஞ் சேறலொழிந்து அவனடியுள் வந்தொடுங்கினாற்போலக் கரணங்களிற் சென்ற தன்னறிவு பக்குவம் வந்துழி அங்ஙனஞ் சேறலொழிந்து தன்மாட்டு வந்தொன்றி நிராதாரமாய் நிற்குமதுவே முத்தியாதலமையுமெனப் பாடாணவாதஞானத்தின் பின்னாக நிகழும் பேதவாத ஞானமுமென்னும் இவையும் பசுஞானமாம். இவ்வாறு நிகழும் பசுஞானங்களுக் கேதுவாகிய பசுத்துவவாதனை, இவற்றைக் கைவிட்டுச் சிவஞானத்தாற் சிவனையுந் தம்மையும் அறியப் பெற்றார்க்கன்றி நீங்காது.
இதுவும் உம்மை இறந்தது தழீஇயிற்று. கதியாகுமென்றது செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சங்களோடு தனித்தனிச் சென்றியையும். சினைமுட்டை கருமரத்தினுயிர்கண் மருவவென்றுரைக்க. மருவவென்பது சொல்லெச்சம். முத்தியாமென்னில் என்பதனைத் தனையடையுஞ் சமாதி என்பதனோடுங் கூட்டுக. ஞாயிற்றைக் காணப்பெறாதார்க்கு இருள் நீங்காதவாறுபோலத் தனையடையுஞ் சமாதி முத்தியென்பார் சிவனையறியப் பெறாமையின் அவர்க்கு மலந் தவிராதாயிற்றென்பது. கதியாகுமெனவுந் தவிராது மலமெனவும் ஈண்டுக் கூறியது, மேலைச் செய்யுளின் ‘உணர்ந்திடலாற் பசுவாமொன்றாகச் சிவனியல்பி னுணர்ந்திடுவ’ னென்றாற்போல ஆசங்கை நீக்கி அவை பசுஞானமாதலை வலியுறுத்தற் பொருட்டு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச்
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம்
அவனையணு காவென்றும் ஆத லானும்
அவனடிஅவ் வொளிஞான மாத லானும்
இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை
என்புமச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
அவமகல எனையறியேன் எனும்ஐய மகல
அடிகாட்டி ஆன்மாவைக் காட்ட லானும்.

பொழிப்புரை :

ஈண்டுக் கூறிப்போந்த ஞானங்களுள் முப்பொறி முதலியனபற்றி ஏகதேசமாய் நிகழுஞ் சுட்டுணர்வாகிய பாசஞானத்திற்கும், தற்சொரூபமே அறியமாட்டாது பலதலைப்பட் டையுற்று நிற்பதாகிய பசுஞானத்திற்கும், தானே தற்பிரகாசமும் பரப்பிரகாசமுமாய் எல்லாப் பொருளையும் இனிது விளக்குவதாகிய பதிஞானம்போல, விளக்குமாற்றல் செல்லாமையால் அப்பெற்றித்தாகிய பதிஞானம் ஒன்றானே பதிப்பொருளை அங்ஙனம் அறியற்பாற்றென மேற்கொண்டது.
சிவஞானத்தாலன்றி அறியப்படாமைக்கு ஏதுக்காட்டியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா
கரணங்கள் தமைக்காணா உயிருங் காணா
உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து)
உயிர்க்குயிராம் ஒருவனையுங் காணா தாகும்
கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக்
கண்ணாகிக் கரணங்கள் காணாமல் நிற்பன்
கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம்
கூடாது கூடிடினும் குறித்தடியின் நிறுத்தே.

பொழிப்புரை :

பாசபசுஞானங்கள் பரப்பிரகாசமாய் நிற்பினுந் தற்பிர காசமாய் நிற்றல் செல்லாதென்பது கண்மேல் வைத்தறியக் கிடத்த லானும், ஏனைப் பதிஞானத்திற்குத் தற்பிரகாசமாய் நிற்றலுஞ் செல்லுமென்பது தானவ்விரண்டற்குங் காட்டாய்த் தனக்கொரு காட்டு வேண்டாது நிற்றல்பற்றி அறியப்படுதலானும், சிவனை அவன் திருவடிஞானத்தாற் சேறலே பொருத்தமுடைத்து.
மேலதற்குத் தரிசனங் காட்டியவாறு காணாதென்னுந் துவ்வீறு விகாரத்தாற் றொக்கது. கண்டிடும் என்பதனைக் கரணங்கள் என்பதனோடுங் கூட்டுக. கண்டிடுதல் ஈண்டுப் பரப்பிரகாசமாதன் மேற்று. உண்டியமர்தலும் அது. எடுத்துக்காட்டுவமை. தனைக்காட்டி உயிருங்காட்டிக் கண்டசிவனென இயையும். காட்டிக்கண்ட சிவனென்றது அனுவாதம். கண்ணாகியென்பது காட்டாகியென்றவாறு;“சொன்னசிவன் கண்ணா” என்றாற்போல. கரணங்களாற் காணாமலென மூன்றாவது விரித்துரைக்க.
கரணங்களெனவும் உயிரெனவும் சிவனெனவும் அவ்வப்பொருண்மேல் வைத்து உபசரித்தார். இரண்டாங் கூற்றுக்குத் தோற்றுவாய் செய்வார், பாசங் கூடாது கூடிடினும் குறித்தடியில் நிறுத்தே என்றார். இவை நான்கு செய்யுளானுங் முதற்கூற்றின் பொருள் விளக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி
கோகனதன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம்
வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க
வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லான்
நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு
நினைப்பரியான் ஒன்றுமிலான் நேர்படவந் துள்ளே
பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே
புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே.

பொழிப்புரை :

குருவின் அருளாலறிவதொரு குறியின் கண் உறைத்து நின்றுகொண்டு, காலாக்கினி புவனமுதல் அநாசிருத புவனமீறாயுள்ள எவ்வகைப்பட்ட புவனமும் இதற்குமுன் அனுபவித்துக் கழித்தமையிற் கான்ற சோறெனக் கண்டு அருவருத்துவிட்டு, அறுவகை அத்துவாவுட்பட்ட மூவகைப் பிரபஞ்சமுங் காரணரூபத்திற் சிறிதுங் காணப்படாமையாற் பித்திகை வடிவங் காண்பார்க்குக் காணப்படாதாய் அதன்கண் மறைந்த சித்திர வடிவம்போல முழுப்பொய்யெனக் கண்டு அவ்வாறு கண்ட காட்சி சலியாதிருக்கப்பெறின், அப்பிரபஞ்சத்திற்கு இலக்கணமான ஞானசொரூபம் ஆண்டினிது விளங்கித் தோன்றும் ; தோன்றவே, வறியார்க்கு நிதிவாய்த்துழிப்போல அதன்கண் பெருங்காதல் மீதூரும்; அது மீதூரவே “இன்பி லினிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம் - அன்பின் நிலையே அது” ஆகலான் அவ்வன்பின் வழியே பேரின்பமயமாய்ப் புகுந்து உயிரின்கண் விளங்கித் தோன்றும் அந்த ஞானத்திற்கு முதலாகிய ஞேயம்.
அட்டகுணம் எட்டுச்சித்தி கோகனதனென்றது பைசாச பதத்தின் அட்டமாசித்தியை நோக்கி எண்மடங்கேற்றமாகிய அட்டசித்தியுடைய பிரமபதமென அதன் பெருமை கூறியவாறு. கோகனதன் ஆகுபெயர். ஒற்றுமிகாமை வடநூன்முடிபு. வாழ்வு குலவுபதம் திப்பியமகளிரும் அதிவிசித்திரமாகிய மாடமுமாளிகையும் முதலிய போக்கியப் பொருட் சிறப்புக்களான் அழகு பெற்றபதம். ஒற்றுமை பற்றிக் குணம் குணியாக உபசரிக்கப்பட்டது. இதனானே ‘ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தேராம்’ என்றறிந் தகலுமாறும் அந்நிலையே யாமாறும் வகுத்துணர்த்தி இரண்டாங் கூறு வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக்
கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
பண்டைமறை களும்அதுநா னானே னென்று
பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே.

பொழிப்புரை :

உடம்பே நானென்றும் அது நீங்கியவழிப் பிரமம் நானென்றும் இங்ஙனம் விபரீதமானவுணர்கின்ற உயிராவது, சுட்டுணர்வுட்பட்ட அப்பாசமுமன்று, சுட்டுணர் விறந்துநின்ற அப்பதிப் பொருளுமன்று இரண்டற்கும் வேறெனக் கண்டு, வேறாகிய பாசத்தை மேற்கூறியவாற்றால் ஒருவி, ஏனைப்பதிப் பொருள் வேறாயினும் வியாப்பிய வியாபகபாவத்தாற் கண்ணொளியும் ஞாயிற்றினொளியும் போல வேற்றுமை சிறிதுந் தோன்றாதவாறு ஒற்றித்து நிற்றற்குரிய தனது தொண்டினையும் இறைவன் கலப்பினையும் நோக்கி நின்று, கருடோகம் பாவனை போலச் சிவோகம் பாவனை யொருவன் செய்யப் பெறுமாயின், அக்கருடன் அம்மாந்திரிகனுக்கு வேறாதலின்றி அத்துவிதமாய்த் தோன்றி விடத்தை நீக்கித் தெளிவு செய்யுமாறுபோல, சிவனும் இவனில் வேறாதலின்றி அத்துவிதமாய்த் தோன்றி மலங்களை நீக்கிச் சுத்தனாகச் செய்வன்; வேதாந்த மகாவாக்கியத்திற்கும் இதுவே பொருளாகக் கொள்க.
இப்பாவனை இன்றியமையாச் சிறப்பிற்றென்ப துணர்த்துவார், பயனுமுடன் கூறினார். பரமுமென்ற உம்மை இறந்தது தழீஇயது. பரம் அவனெனத் திணைமயங்கிற்று. தொண்டாவது சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய உயிர் கழிபரமும் நானல்லேனெனக் கருதியவழி முன்போல முனைத்தலின்றி ஓங்குணர்வின் உள்ளடங்கி அதன்வழித்தாய் நிற்றல். முனைத்து நின்று செய்யும் உலகத்தொன்டின் நீக்குதற்குக் கசிந்த தொண்டென விசேடித்தார். வேறாயவழியுஞ் சோகமெனப் பாவித்தற்குரிய இயைபு இருவர்மாட்டுமுண்மை விளக்குவார், கசிந்த தொண்டினொடு முளத்தவன்றான் நின்ற கலப்பாலே என்றார். கருடபாவனையை எடுத்துக் காட்டியதும் அதன்கண் ஐயநீக்குதற் பொருட்டென்பது. எனவே, கருடோகமெனப் பாவிக்கும் அத்துவித பாவனைக்கு மந்திரத்தினது ஆற்றலும் அவ்வாற்றல்வழி நின்று பாவிக்கும் மாந்திரிகனதாற்றலும் ஒருதலையான் வேண்டப்பட்டு ஆண்டைக்கு நிலைபெறுமாறுபோல, சிவோகமெனப் பாவித்து நிற்கும் அத்துவிதநிலைக்கு இறைவனது கலப்பும் இவனது தொண்டும் ஒருதலையான் வேண்டப்படுமென்பது போந்தமையால், அங்ஙனந் தொண்டு செய்தற்குரிய ஆன்மாவினது ஞானக்கிரியைகளும் கலத்தற்குரிய இறைவன் ஞானக்கிரியைகளும் ஆண்டுக் கேடின்றி நிலைபெறுமென்பதூஉம் அருத்தாபத்தியான் உணர்ந்து கொள்க. “உன்றன் குலமிரண் டென்குல மிரண்டுங் குறுகிடாவண்ணம் இன்பமாயென்பாற் கூத்தையுங் கொண்ட தெப்படி” என வியந்து கூறியதூஉம் இவ்வுண்மை நோக்கியென்க. இப்பெற்றித்தாகிய சுத்தாத்துவிதவுண்மை யுணர மாட்டாதார், ஒருபொருள் மற்றொரு பொருளாதல் யாண்டுமின்மையின் அதுநானானேன் என்னும் ஒருவார்த்தைப் பொருள்படுமாறு யாங்ஙன மென்றாசங்கித்தார்க்கு, ஒன்று கெட்டு ஒன்றாமெனக் கொண்டுபரிணாமங் கூறுவாரும், அது நானென்னும் இருபெயரும் விட்டும் விடாத ஆகுபெயரெனக் கொண்டு கேவலாத்துவிதங் கூறுவாரும், அவற்றுள் ஒன்றனை மாத்திரம் ஆகுபெயரெனக் கொண்டு விசிட்டாத்துவிதங் கூறுவாருமாய் இடர்ப்படுவர். அங்ஙனம் இடர்ப்பட்டு உரைப்பனவெல்லாம் பொருளல்லவென்பார், பண்டை மறைகளும் அதுநானானேன் என்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே என்றார். எனவே, வேதாந்த மகாவாக்கியமுஞ் சித்தாந்த மகாவாக்கியமும் பொருளான் ஒன்றென்பதூஉம் பெறப்பட்டது. ஈண்டுக் கருடனென்றது கருடனுக் கதிதெய்வமாகிய மந்திர சொரூபத்தையாகலின், அப்பாவனை மெய்யாதற் கிழுக்கின்மை யுணர்க. இதனானே திருவஞ்செழுத்தை விதிப்படி உச்சரிப்பார்க்கு வேண்டப்படும் பாவனை கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும்
அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு)
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி
ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து)
அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி
அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று)
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன்
அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே.

பொழிப்புரை :

‘கசிந்த தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே சோகமெனப்’ பாவித்தற்கண் ஆன்மாவுஞ் சிவமும் அங்ஙனம் உடைமையும் உடையானுமாய் நிற்கும் பரிசை ஐந்தெழுத்தோது முறையின் வைத்துணர்ந்து, “ஆடும்படிகேள்” எனவும் + “சேர்க்குந்துடி சிகரம்” எனவும் ஓதியவாறே அவன் திருமேனி அஞ்செழுத்தால் அமைந்த பரிசும் உணர்ந்து, அம்முறையே அங்கநியாச கரநியாசங்களும் அவ்வைந் தெழுத்தாற் செய்து கொண்டு, இதயம் உந்தி புருவநடுவென்னும் மூன்றும் பூசைத்தானம் ஓமத்தானந்தியானத்தானமாகக் கற்பித்துக் கொண்டு, அங்ஙனம் வழிபட்டு நின்றுகொண்டு அவ்வஞ்செழுத்தை விதிப்படியேமாறி நெஞ்சழுத்தி உச்சரித்தல் செய்க. இவ்வாறு சிவோகம் பாவனையுந் திருவஞ்செழுத்து மந்திரமும் அந்தரியாகக் கிரியையுமென்னும் இம்மூன்றானும் ஒரு வழிப்பட நின்றுகொண்டு அதனைக் கணிக்கப் பெறுவார்க்கு, நவக்கோள்களுள் ஏனை ஏழும்போலக் காண்டல் செல்லாத ராகு கேதுக்கள் உபராகத்திற் சந்திராதித்தர்மாட்டுக் காணப்படுமாறு போல, முப்பொருள்களுள் யான் இதனையறிந்தேன் அறிகின்றிலேன் என்னும் அறிவிற்கு விடயமாய்த் தோன்றும் ஏனைப் பசுபாசங்கள் போலப் புலனாகாதவழிப் பதிப்பொருள் அவ்வுச்சரிப்பில் ஆன்மாவின் மாட்டு விளங்கித் தோன்றும்.
அறிந்திட்டென்பதனை மேலுங் கூட்டுக. ஆன்மாவை அரனுடைய பரிசுமென்ற உம்மையால் ஆன்மா அரனுக்குடைமையாம் பரிசும் அறிதலினாலறிந்திட்டென்பதூஉம் பெற்றாம். அரனுருவு மென்ற உம்மை சிறப்பு. அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையுமறிதல் இதயத்தில் ஆன்மாவில் அவ்வாறுகண்டு அர்ச்சித்தற்பொருட்டென்க. இனி உம்மையை எண்ணும்மையாக்கி, அஞ்செழுத்தால் ஆன்மாவை யரனுடைய பரிசும் அரனுருவும் அறிந்திட்டெனக் கண்ணழித்து, ஆன்மாவையும் அரனுடைய பரிசாகிய திருவருளையுஞ் சிவசொரூபத்தையும் அஞ்செழுத்தால் உணர்ந்தென்றும், அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்டென்பது அமைந்தொழிந்த மலங்களையும் ஐந்தெழுத்தில் உணர்ந்தென்றும் உண்மை விளக்கஞ் சிவப்பிரகாச முதலியவற்றுள் ஓதியவாறுபற்றி உரைத்தலுமொன்று. இப்பொருட்குக் “கற்பனவும் இனியமையும்” என்றாற்போல அமைதல் வேண்டாதொழிதன் மேற்று. மை, அஞ்சனம், மலம் என்பன ஒரு பொருட்கிளவி. ஈண்டு மலமென்றது ஆணவ திரோதங்களை. இவை கழிந்தொழிந்தமைபற்றி வேறுவைத் தெண்ணப்பட்டன. அணைந்து தியானித்தெனற்பாலது அணைந்தென்று உபசரிக்கப்பட்டது. அல்லுழிப்பயன்படாமை யுணர்த்துவார், விதிப்படியென ஈண்டுங் கூறினார். இதனானே ஆண்டைக்கு வேண்டப்படும் மந்திரமுங் கிரியையுங் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய்
ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய்
மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய்
முழுவிதழ்எட் டக்கரங்கள் முறைமையினின் உடைத்தாய்க்
காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும்
கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் சத்தி
வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி
மேலாகி நிற்பன்இந்த விளைவறிந்து போற்றே.

பொழிப்புரை :

இதயத்தர்ச்சித்தற்கு, நிலமுதற் சத்திதத்துவம் ஈறாகிய முப்பத்தைந்தினையுங் கிழங்குமுதற் பீசமீறாகிய அவயவங்களாக வுடைய இதயகமலம் ஆசனமும், அதன்மேற் சத்தி மூர்த்தியும் சிவன் மூர்த்திமானுமாம்.
சிவதத்துவஞ் சத்திதத்துவங்கட்குத் தம்முள் வேறுபாடு சிறிதாதல் பற்றிச் சிவதத்துவத்தை வேறெண்ணாது சத்தி தத்துவத்துள் அடக்கிக் கூறினார். சத்தி மேலாகியென்றதனாற் சத்தி மூர்த்தி யென்பதூஉம் பெறப்பட்டது. அற்றேல், மேல் ஐந்தெழுத்தால் அமைந்தவுருவெனக் கூறி அதன்பின் ஆன்மாவில் அர்ச்சித்தெனவுங் கூறி ஈண்டுச் சத்தி மூர்த்தியென்றல் மலைவாம் போலுமெனின், - ஆகாது; அம்மூன்றும் முதல்வனுக்கு முறையே தூலவடிவுஞ் சூக்குமவடிவும் அதிசூக்கும வடிவுமெனக் கோடலாலென்பது. அண்டமோரணுவாம் பெருமை கொண்டு கரணங்களெல்லாங் கடந்து நின்ற அவ்விறைவனே அணுவோ ரண்டமாஞ் சிறுமைகொண்டு ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு உடம்பினுள்ளும் அவ்வாறு நிற்கின்றான். அதனை யறிந்து செய்யாதவழிப் பூசையாற் பயனில்லையென்பார், ‘இந்த விளைவறிந்து போற்றே’ என்றார். தன்னின முடித்தலால் ஓமித்தல் தியானித்தல்களினும் இவ்வாறே யுணர்ந்து செய்யப் படுமெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

அந்தரியா கந்தன்னை முத்திசா தனமாய்
அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி யாகும்
கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக்
கண்டனஎ லாம்மனத்தாற் கருதிக் கொண்டு
சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால்
சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க
வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே
வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே.

பொழிப்புரை :

கண்ணாடிக்குப் பொடியிட்டு விளக்க விளக்க ஒளிமேலிட்டு மாசு நீங்குமாறு போல, ஆன்மாவில் அவ்வாறு ஞானத்தால் அர்ச்சித்தலும் ஓமித்தலுந் தியானித்தலுஞ் செய்யச் செய்ய ஆண்டுச் சிவம் மேலிட்டு மேலிட்டுவந்து விளங்கித் தோன்றும்; தோன்றவே, ஆணவமலந் தேய்ந்து தேய்ந்து பற்றறக் கழியும் ; அங்ஙனம் ஆன்ம சுத்திக்கு ஏதுவாகலான் அவ்வந்தரியாகம் ஒருதலையான் வேண்டப்படும் முத்தி சாதனமென்றறிக.
அதுதானும் ஆன்மசுத்தியாகுமென ஒற்றுமைபற்றிக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். உம்மை சிறப்பு. கந்தமலர் புகையொளி மஞ்சனமமுது முதலாக் கண்டனவெலா மனத்தாற் கருதிக் கொண்டு சிந்தைதனி லர்ச்சிக்கவெனவே, அவற்றையங்ஙனங் கற்பித்துக் கோடலும் அனுவாத முகத்தாற் பெற்றாம். மனத்தாற் கருதுமாறு “காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக” என்பது முதலிய திருவாக்குக்களாலுமறிக. ஞானத்தாலென்பதனை அர்ச்சிக்க என்பதனோடுங் கூட்டுக. சிந்திக்க என்றது முன்னையது ஓமித்தன்மேற்று. இவையிரண்டு செய்யுளானும் அந்தரியாகஞ் செய்யுமாறும் அஃதாண்டைக் கொருதலையான் வேண்டப்படுவதென்ப தூஉம் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில்
பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு
சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச்
சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்துப் போற்றி
அறம்பாவங் கட்குநாம் என்கடவே மென்றும்
ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே
திறம்பாமே பணிசெய்து நிற்கை யன்றோ
சீரடியார் தம்முடைய செய்தி தானே.

பொழிப்புரை :

அகத்தாதல் புறத்தாதல் ஒரு குறியின்கண் இறைவனைக் காணப்பெறின், அகம்புறமென்றிரண்டால் அர்ச்சனை புரியுமிந்தச் சகம்போலப் புண்ணிய பாவங்களைக் குறித்தலின்றி அதுவே றிதுவே றெனப் பிரித்துக் காண்டலுமின்றி யாண்டுமொரு பெற்றியராய் இட்டபணி செய்து நிற்றலே மெய்யடியார் செய்தியாகலான், அகத்தே காணும்படி புறத்தேயும் ஒரு குறியிற்கண்டு அரன் கழல் பூசிக்கற்பாற்று ; அதற்குபகரணம் வேண்டுமாயின், முயன்று வருந்துதலும் பிறவுயிர்களை வருத்துதலு மாகாமையான், மரத்தின்கீழ் உதிர்ந்த பூக்களும், ஆறு குளம் முதலியவற்றினுளதாகிய நீரும், அயாசகமாய் வந்த அமுது முதலாயினவுமே ஆண்டைக்கமையும்.
போற்றிப் பூசிக்கவென இயையும். புறம்பேயுமென்ற வும்மை இறந்தது தழீஇயிற்று. போதுகளுமென்ற வும்மை எதிரது தழீஇயது. இதனானே புறப்பூசையும் ஆண்டைக்கு அங்கமாதல் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம்
எள்ளின்க ணெண்ணெயும்போல் எங்குமுளன் இறைவன்
வந்தனைசெய் தெவ்விடத்தும் வழிபடவே அருளும்
மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற்
சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித்
தீஇரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப்
பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப்
பரப்பெல்லாங் கொடுbபோந்து பதிப்பனிவன் பாலே.

பொழிப்புரை :

இறைவன் அகம்புறமென்னும் பிரிவின்றி யாங்கணும் உளனாகலான், மேற்கூறியபடி அகத்தாதல் புறத்தாதல் யாண்டுவழி படினும் அனுக்கிரகிக்கு மென்பதே தேற்றம். அங்ஙனமாயினும் ஆன்மாவின்கண்ணதாகிய வாதனாமலம் நீக்கலுறுவார்க்கு அகப்பூசையால் அவ்வாறு வழிபடுதல் ஒருதலையான் வேண்டும்; இறைவன் விளங்கித் தோன்றி வாசனையைப் பற்றறத் துடைத்தற்குந் தன் வண்ணமாக்கித் தனது பேரானந்தப் பெருஞ்செல்வ முழுவதும் இவனதாகச் செய்தற்கும் உரிமையுடைய விசேட இயைபு ஆண்டைய தாகலான்.
இந்தனத்தினெரி உலகத்தார்க்குச் சிறிதுந் தோன்றாதவாறு மறைந்து உடனாய் நிற்றற்கும், பாலினெய் மந்ததர மலபாகமுடையார்க்கு ஒருவாற்றாற் றோன்றியுந் தோன்றாதும் மறைந்து உடனாய் நிற்றற்கும், பழத்தினிரதம் மந்தமலபாக முடையார்க்கு உய்த்துணரும் வழி விளங்கித் தோன்றுவதாய் உடனாய் நிற்றற்கும், எள்ளின்கண் எண்ணெய் தீவிரமலபாக முடையார்க்கு இனிது விளங்கித் தோன்றினும் பிரித்தறியப்படாது உடனாய் நிற்றற்கும் உவமையாயின. எங்கு முளனிறைவனென்றது எவ்விடத்தும் வழிபடவே அருளுதற்குரிய இயைபு விளங்குதற்கும், மலமறுப்போரென்றதுந் தோன்றியறுத் தாக்கிப் பதிப்பனென்றதும் ஆன்மாவிற் சிந்தனை செய்தர்ச்சித்தற்குரிய இயைபு விளங்குதற்கும், மலமறுப்போரென்றதுந் தோன்றியறுத் தாக்கிப் பதிப்பனென்றதும் ஆன்மாவிற் சிந்தனை செய்தர்ச்சித்தற்குரிய விசேட இயைபு விளங்குதற்கும் ஏதுவாய் நின்றன. தன்னுருவப் பரப்பெல்லாம் இவன்பாலே பதிதலாவது, தீ இரும்பைச் செய்வது போல இறைவனுக்குரிய முற்றுணர்வு முதலிய எண்குணங்களும் படிகம் போலச் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய ஆன்மாவுக்குரிய குணமாம்படி அத்துவித இயைபானே இவன்மாட்டு விளங்கித் தோன்றுதல், அதுவே சிவானந்த மேலிடுத லென்பது. அர்ச்சிக்க வென்றது வியங்கோள் ; முடிபு வேறாகலிற் பால் வழுவின்மை யுணர்க. அர்ச்சிக்க என்பதனை எச்சமாகக் கொண்டு பாடமோதுவார் பால் வழுவாதலையும் நோக்கிற்றிலர் போலும். ‘மேல் அந்தரியாகந் தன்னை’ யென்ற செய்யுளிற் பெறப்பட்டதனை ஈண்டுங் கூறுதல் கூறியது கூறலாம் போலுமென மலையற்க. வேண்டாது கூறி வேண்டியது முடித்தற்கெழுந்தது இச்செய்யுளாகலின். இதனானே அப்புறப் பூசையில் அகப்பூசை விசேட முடைத்தென அதன் பெருமை கூறப்பட்டது.
இவை ஆறுசெய்யுளானும் மூன்றாங் கூற்றின் பொருளைத் தெரித்துணர்த்தியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம்
இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி
அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம்
சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.

பொழிப்புரை :

பதிஞானத்தால் அங்ஙனங் காணப்பட்ட இறைவன் பெத்த நிலையிலுடனாய் நிற்பினும் வேறு காணப்படுமாறின்றி ஆன்மா வேயாய் ஒற்றுமைப்பட்டு ஆன்மாவின் வழிநின்ற முறைமை போல, ஈண்டான்மா அம்முதல்வனோடுடனாய் நின்றறியினுந் தானென வேறு காணப்படாதவாறு அவனோடொற்றுமைப்பட்டு அவ்விறை பணியின் வழுவாது நிற்கப்பெறின், அங்ஙனம் ஏகனாகி நிற்றலான், யானென தென்னுஞ் செருக்கறுதலின் அவ்விறைவனும் இவன் செய்யும் இதமகிதங்களெல்லாம் யான் செய்யும் இதமகிதங்களென உடனாய் நின்று ஏன்று கொள்வன். அரன் பணியின் நிற்றலான், இந்திரியங்களின் வசமாய் நிற்கும் பரதந்திரியமொழிதலின், அவ்விறைவனும் இவனுக்கின்பத்துன்ப நுகர்ச்சியாமாறு பிறர் செய்யும் இதமகிதங்களெல்லாம் எனக்கு நுகர்ச்சியாமாறு செய்தனவேயாமென உடனாய் நின்று ஏன்று கொள்வன். இவ்விருதிறத்தானும் முறையே, இவன் செய்யும் இதமகிதங்கள் இவனுக்குப் பணியாய் முடியும். இவனுக்கு இதமகிதஞ் செய்தார்மாட்டு அவ்விதமகிதங்கள் அவ்வளவினன்றி மிகுதிப்படுதற்கு முறையே துணைக் காரணமாயியையும். இங்ஙனம் ஆர்ச்சிப்பும் நுகர்ச்சியும் இவனைப் பந்தியா தொழியவே, ஏனைச் சஞ்சிதவினையும் மாயையும் ஆணவமுமாகிய குற்றங்கள் மூன்றும் இவனைப் பந்திக்க மாட்டாவாய் விண்டொழியும்.
நின்றிட என்பதனை ஈரிடத்துங் கூட்டி நிரனிறையாக வைத்து, என்றென்னும் எச்சங்களைக் கொள்வனென்பதனோடுந் தனித்தனிக் கூட்டி, இவனுலகிலென்னும் முதலடியைப் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே என்றதன் பின்னாக வைத்துரைத்துக் கொள்க. நின்றிடவு மென்றவும்மை சிறப்பு. பாதகத்தைச் செய்திடினு மென்ற உம்மையாற் புண்ணியத்தைச் செய்திடிற் பணியாக்கிவிடுதல் கூற வேண்டாவாயிற்று. அவை மிகுதிப்படுதற்குத் துணைக்காரணமா யியையுமென்பது ஆற்றலாற் பெற்றாம். அது அவர்தாஞ்செய்வினை தன்னால் நலமுடனே பிறர்செய்வினையூட்டி யொழிப்பானாயென முன் வருகின்றவாற்றான் அறிக. அச்செய்யுளின் கருத்தும் உணராது இவன் செய்த இதமகிதங்களே இவன்மாட்டுச் செய்தார்க் கியையுமென்றுரைப்பின், இவன் மாட்டுச் செய்தவருடைய இதமகிதங்கள் வேறென்னாய் முடியுமெனக் கடாயினார்க்கு விடையின்மையும், நியதிதப்புதலும், சிவஞானச் செயலுடையோர் கையிற் றானந் திலமளவே செய்திடினு மத்தானமே நிலமலைபோற்றிகழுமென்றாற் போல்வனவற்றோடு முரணுதலுமாகிய குற்றங்களுளவாமாறுணர்க. உலகத்தார் பார்வைக்கு இவன் செய்தனவாகவும் அச்செயல் இதமகிதமாகவுந் தோன்றப்படுவனமாத்திரையேயன்றிப் பிறிதில்லை யென்பர், உலகிலென்றார். அவனென்பதும் இவனென்பதும் மகாவாக்கிய வழக்கு. இவ்வாறன்றி, நின்றிடவென்னும் எச்சத்தை அகலுமென்பதனோடு முடிய வைத்துரைப்பார்க்கு, ஏனையன தம்முளவாய் நின்று ஒரு பொருண்மேல் வருவனவல்லவாய் முடிதலின், முதல் நூலோடொத்து ஒரு பொருணுதலிய சூத்திரமாதற்கேலாமை யறிக. இச்செய்யுளிற் கூறப்படும் முக்கூற்றுள், ஒருவாற்றான் ஈண்டு வலியுறுக்கப்படும் இறுதிக்கூறு பதினொராஞ் சூத்திரத்தில் இயைபுபற்றி எடுத்துக்கொண்டு தடைவிடைகளாற் சாதிக்க நின்றமையின், முன்னே இரு கூறுமே வேறெடுத்துகொண் டோதப்படுவனவெனக் கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும்
இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத்
தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே
தனையளித்து முன்நிற்கும் வினையொளித்திட் டோடும்
நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி
நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால்
ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே.

பொழிப்புரை :

யானெனதென்னுஞ் செருக்கற்றாலன்றி, இறைவனுடனாய் நின்று கோடலும் அதுபற்றி வினை நுகர்ச்சியும் ஆர்ச்சிப்பும் இவனுக்கில்லாதாதலும் அதுபற்றிக் குற்றமகலுதலுமாகிய இவை முறையே நிகழ்தல் செல்லாமையால், அச்செருக்கறுதியைப் பயப்பதூஉம் அவனிவனாய் நின்றமுறை ஏகனாகி நிற்கும் ஞானமொன்றே யன்றிப் பிறிதின்மையின், அச்செருக்கறுதியின் பொருட்டு அவ்வாறு நிற்கும் ஞானம் ஒருதலையான் வேண்டற்பாற்று.
வலியுறுத்தற் பொருட்டு உடம்பாட்டு முகத்தானும் எதிர்மறை முகத்தானுங் கூறினார். உருவகஞ் செய்ததும் அதனையின்றி அமையாமை விளக்குதற் பொருட்டு. ஞானமென்றது ஈண்டேற்புழிக் கோடலால் ஏகனாகி நிற்கு ஞானத்தின் மேற்றாயிற்று. இதனானே, மேலைச் சூத்திரத்தோதியவாறு ஞாதிருவு ஞானமு ஞேயமுமாக நின்று காணுங் காட்சியே அமையும், அதன்மேலும் ஏகனாகி நிற்றல் எற்றுக் கென்பாரை நோக்கி, அவ்வாறு நின்றாலன்றி யானென தென்னுஞ் செருக்கறுதல் முதலியன முறையே நிகழ்ந்து முத்தியைத் தலைக்கூடுதல் செல்லாதென முதற்கூறு வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

இந்திரிய மெனைப்பற்றி நின்றேஎன் வசத்தின்
இசையாதே தன்வசத்தே எனையீர்ப்ப திவற்றைத்
தந்தவன்ற னாணைவழி நின்றிடலால் என்றும்
தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் தாள்கள்
வந்தனைசெய் திவற்றின்வலி அருளினால் வாட்டி
வாட்டமின்றி இருந்திடவும் வருஞ்செயல்க ளுண்டேல்
முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள்
மூளாஅங் காளாகி மீளா னன்றே.

பொழிப்புரை :

உலகத்துப் பாடிகாவலராயினார் பிழைசெய்துள்ளாரைத் தம்முளடக்கித் தாமீர்த்தவாறெல்லாம் பரதந்திரமாய்க் கிடப்பச் செய்வது தம்மை அவ்வாறு செய்விக்கும் அரசன தாணைவழி நிற்கும் அவ்வாற்றல் கொண்டதன்றிப் பிறிதின்மையின், அதனையறிந்து அப்பாடிகாவலர்க்குந் தமக்கும் இறைவனாகிய அவ்வரசனைத் தலைக்கூடப்பெற்று அவன் கருத்தின்வழி யொழுக வல்லராயவழி, அவர் அப்பரதந்திரநீங்கி அரசனருளாற் பாடிகாவலரையுந் தம்மாணைவழி நிற்பித்துக் கொள்ளவல்ல சுதந்திரராவர். அதுபோல, வினைசெய்தமை பற்றி இந்திரியங்களென்னைத் தம்முளடக்கி ஈர்த்த வழியெல்லாம் பரதந்திரப்பட்டுக் கிடப்பச் செய்வதும் அவற்றை அவ்வாறு செய்விக்கும் முதல்வன தாணைவழி அவை நிற்றலான், அவ்வாற்றல் கொண்டன்றிப் பிறிதில்லையென் றிவ்வாறுணர்ந்து அவ்விந்திரியங்களையுந் தன்னையுமுடையனாகிய அம்முதல்வன் தாள்களைத் தலைக்கூடப்பெற்று அவன் பணியினின் றொழுக ஒருவன் பெறுமாயின், அவன் அம்முதல்வன் திருவருளால் அவ்விந்திரியங்களைத் தன்னாணைவழி நிற்பித்துக்கொள்ளவல்ல சுதந்திரனாவன். அவ்வாறு முதல்வன் வழியினுறைத்து நிற்புழியும் பயிற்சிபற்றி ஒரோவழி அவ்விந்திரியங்களின் குறும்பு நிகழுமாயின், இந்திரியங்களுக்கும் எனக்கும் ஒரு சுதந்திரமின்மையின் அதுவும் முதல்வன் செயலே யென்று வரைசெய்து பணியின் வழுவாதொழுகவே, அது வாயிலாகப் புகுந்து கூடித் துடக்கவல்ல வினைகள் அங்ஙனமாகமாட்டாவாய் மடங்கி யொழியுமாகலான், அவ்வாறடிமைத் திறத்தின் நின்றோன் மறித்துப் பொறிகளின் வழிப்பட்டுப் பரதந்திரனாவானல்லன்.
குறிப்புருவகம். ஏகனாகி நிற்றலேயமையும். அதன் மேலும் அரன் பணியினிற்றல் எற்றுக்கென்பாரை நோக்கி, ஏகனாகி நிற்பினுந் தன்பணி மடங்கினாலன்றி வினைத்துடக்குறுதற்கேதுவாய் இந்திரியங்களின் வழிப்பட்டுச் செல்லும் பரதந்திர நீங்காமையின், அது நீங்குமாறு தான் பணியை நீத்தற்பொருட்டு அரன் பணியினிற்றலும் ஒரு தலையான் வேண்டப்படுமென் றுணர்த்தியவாறு. நின்றிடலால் ஈர்ப்ப தென்றறிந்திட்டென இயையும். தான் அசை. ஈர்ப்பதென்பது அத்தொழின்மேல் நின்றது. என்றுமென்னுமும்மை, அவ்வீர்த்தலை மாற்றுதற்கு உபாயமாவது யாமும் அவ்வாணைவழி நிற்றலென்னும் அறிந்தென எதிரது தழீஇயிற்று. இவற்றினொடுந் தனையுடையா னென்றது குறிப்பேதுவாய் நின்ற பெயர். வந்தனை செய்தல் ஈண்டு அரன் பணியி னிற்றன் மேற்று. வருஞ் செயல்களுண்டேல் என்பது ஒருமைப் பன்மை மயக்கம். வாட்டமின்றி யிருந்திடவும் வருஞ்செயல் களுண்டேல் முந்தனுடைச் செயலென முடித்தொழுகுதல், “யானுமதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே” என்ற திருவாக்கினுமறிக. அவ்வாறு முடித்தொழுகவும் வருஞ் செயல்களுளவாம் போலுமென்பாரை நோக்கி அங்ஙனம் வரம்பின்றி அநவத்தை யாதலில்லை யென்பார், ஆளாகி மீளானென்றுங் கூறினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத்
தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால்
நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய்
நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்
உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும்
நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்
நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே.

பொழிப்புரை :

நீயே எனக்குள் நின்று செய்கின்றாயாகலின் என்னாற் செய்யப்படும் இதமகிதமெல்லாம் நீ செய்யுஞ் செயலேயென்றும், நீயே பிறரைக் கொண்டு செய்வித்துஞ் செய்கின்றாயாகலிற் பிறரால் எனக்கு வரும் இதமகிதங்களும் நீ செய்யுந் செயலே பிறிதில்லை யென்றும், இங்ஙனம் அவனருளையல்லது ஒன்றனையுங் கருதாராய்த் தம்மை இழந்து நிற்கப்பெறுவார் மாட்டு, அஞ்ஞானகன்மம் பிரவேசிக்க மாட்டாதாய் ஒழிந்து விடுமாகலான், அப்பெற்றித்தாகிய மெய்யுணர்வான் அடைக்கலம்புக்காரைத் தன்னைப் போலச் சுத்தராகச் செய்து பாதுகாத்தலும், மந்திரவலியானடங்கி இரை நுகரப் பெறாது கிடக்கும் பாந்தள் யாதானுமோர் இலக்கு வந்து வாய்த்துழி வறிது கிடவாதவாறுபோல, அவர்மாட் டெழுந்தும் அவரைச் சாரமாட்டா தொழிந்து கிடந்த அவ்வாகாமிய வினை, அவர்க்கு இதமகிதங்களைச் செய்வார் பிறருளராயவழி அவ்வியைபு பற்றி ஆண்டவ்வித மகிதங்களுக்குத் துணையாய்த் தலைக்கூடற்பாலதாகலின்,அதனைஅவ்வாறு செலுத்திப் பிறர் செய்யும் அவ்விதமகிதங்களை மிகுவித்து நுகர்வித்தொழித்தலுஞ் செய்வனாகலான், அதுபற்றி இறைவன் சலமுடையனாவானல்லன்.
ஆக்கிக் காப்பனென இயையும். பிறரை யூட்டி யொழித்தலே அவரை வினை நணுகாமற் காப்பதெனக் கொள்க. பிறரை யங்ஙனம் ஊட்டுதலும் கருணையேயாமென்பார், ஊட்டி யென்றொழியாது ஒழிப்பானா யென்றும் நலமுடனே என்றுங் கூறினார். உலகினில் என்செயல் எல்லாம் உன்விதியே நீயே உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாயென்று நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும் நினைவார்க்கென்றதனால், அரன்பணியினின்றிடலாவது இதுவெனத் தெரித்துக் கூறியதுஉமாயிற்று. இறைபணியில் நிற்கும் இவன் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கிவிட்டு இவனுலகில் இதமகிதஞ் செய்தவெல்லாம் இதமகிதமிவனுக்குச் செய்தார் பாலிசையச் செய்தல் இறைவனுக்குச் சலமாய் முடியும்போலு மென்பாரை நோக்கி, அதனைத் தெரித்துணர்த்திச் சலமின்மை காட்டியவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்.

பொழிப்புரை :

ஏனைப் பெரும் பேறெல்லாங் கொடுக்க வல்லனவாய எத்துணை நன்மைகளும், இங்ஙனம் அரன்பணியினிற்றலாகிய மெய்த் தொண்டு செய்யும் ஞானத்தாற் றரப்படும் பேற்றைக் கொடுக்க வல்லுவனவல்ல; எல்லாப் பெரும் பேற்றையுங் கெடுக்க வல்லனவாய எத்துணைத் தீமைகளும், இதனாற்றரப்படும் பெரும் பேற்றைக் கெடுக்க வல்லனவுமல்ல ; அத்துணைப் பெரியதோர் சிறப்பிற்று இவ்விறை பணி நிற்கும் ஞானம்.
அரன்பணி நிற்றலது ஆற்றல் கூறியவாறு. `சாக்கிரத்தே யதீதத்தை’ என்னுஞ் செய்யுளில், சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்கள் சாக்கிரத்தின் நிற்றலொப்புடை மாத்திரையேபற்றி அவரை யெல்லாரோடும் ஒப்பவைத்திகழற்கவென அவரது பெருமை யுணர்த்துவார், `ஆக்குமுடிகவித்தரசாண்டு நுங்கிடாவே’ யென ஆண்டுக் கூறினார்; அதனையே அரன்பணியினிற்றலா னாகற்பாலதன்கண் மற்றொன்றாற் செய்யக்கடவதொன்றில்லை யென அத்தொண்டின் பெருமையுணர்த்துவார், ஈண்டுமெடுத்தோதினார். இங்ஙனங் கருத்து வகையாற் பொருள் வேறுபாடுண்மையிற் கூறியது கூறலாகாமை கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும்
ஒளடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா
எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்(கு)
இருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத்
தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த
சக்கரமும் கந்தித்துச் சுழலு மாபோல்
மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா
மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே.

பொழிப்புரை :

சுடுதற்கேதுவாகிய அங்கியைத் தம்பனஞ்செய்யவல்லார் அவ்வங்கியுள் முழுகிக்கிடப்பினும் அதுபற்றி அவர்மாட்டுச் சூடுநிகழாதவாறும், கொலைத் தொழிற்கேதுவாகிய விடங்களைத்தடுக்கவல்ல மந்திரமருந்துகளைப் பெற்றுடையார் அவ்விடங்களை யெல்லாம் நிறையப்பருகினும் அதுபற்றி யவர்மாட்டுக் கொலைத்தொழில் நிகழாதவாறும்போல், விருப்புவெறுப்புக்கள் நிகழ்தற்கேதுவாகிய இந்திரியங்களை மேற்கூறிய முறையினின்று தம்வழிப்படுத்த வல்லஞானிகள் எவ்விந்திரியங்களினின்று எத்தொழிலைச் செய்தார்களாயினும் அதுபற்றி அவர்மாட்டு விருப்புவெறுப்பு நிகழ்ந்து மேலைக்கு வித்தாதல் செல்லாமையானும், ஏனைப் பிராரத்தவினையுந் தற்பணி நீத்த வவர்மாட்டுத் தலைக்கூடமாட்டாது வெந்தபடம்போலச் சத்திகெட்டே போய் வாசனைமாத்திரையாய் நின்று சிறிதே தாக்குமவ்வளவேயன்றி வாதனையாற் செய்யக்கடவது பிறிதில்லையாதல், காயமிருந்தொழிந்த பாத்திரத்தில் அவ்வாதனை கிடந்து கந்தித்தும் ஒரு கறிக்குபயோக மாதலின்மையுங் குயவனாவான் குடத்தை வனையுமளவுஞ் சுழற்றிவிட்ட திகிரியில் அவ்வாதனை கிடந்து தன் வேகமுள்ளவளவும் அதனை மெலிதாகச் சுழல்வித்து மற்றொன்றனை வனைதற்கு உபயோகமாதலின்மையும் போலு மாகலானும், வாதனைமாத்திரைக்குத் துணையாய்நின்ற ஏனை மலவாதனைகளும் அவ்வுடம்பு மாயுங் காலத்து வேறொருபற்றின்மையான் அதனோடு மாய்ந்தொழியும்.
இங்குத் தங்கிப்போம் பாத்திரம் தீவிரவாதனைக்கும், வினைதவிர்ந்த சக்கரம் மந்தவாதனைக்கும் உவமையாயின. எங்கென்பது எங்கித்தையென மரீஇயிற்று. நின்றென்பது சொல்லெச்சம். கந்தித்தென்னும் வினையெச்சம் எச்சப்பொருள் தாராது செவ்வெண்மாத்திரையே குறித்து நின்றது ;``பயந்துகாத் தழிக்குமற்றை மூவர்” என்றாற்போல. மங்கியென்றொழியாது போயென்றார், வலியுறுத்துதற்கு. உவமையெடுத்துக் காட்டியதும் அதனைத் தெளிவித்தற் பொருட்டு. இதனானே மேல் ஒருவாற்றான் வலியுறுத்தப்பட்ட மூன்றாங்கூற்றை வருஞ்சூத்திரத்தின் இயைபுபற்றி எடுத்துக்கொண்டு தடைவிடைகளாற் சாதித்தற்பொருட்டு ஈண்டுத் தோற்றுவாய் செய்துகொள்ளு முகத்தானே, மேலைச்செய்யுளின் `எறிவிழியின்படு கடைக்கே கிடந்துங்கும்பிட்டேயிருப்பர்’ என்றதனை உவமைகளின் வைத்துணர்த்தி இனிது விளக்கியவாறு.
இவை நான்குசெய்யுளானும் இரண்டாங்கூற்றின்கட் படுமா றெல்லாம் வகுத்துக் கூறப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக்
காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய கண்ணுக்(கு)
ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன் இத்தை
ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய
அந்நிலைமை இந்நிலையின் அடைந்தமுறை யாலே
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன்
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே.

பொழிப்புரை :

கண்ணிந்திரியம் ஓருருவத்தைக் காணும்படி உயிரத்துடனாய் நின்று காட்டுதன்மாத்திரையேயன்றி அக்கண் ணொளியோடு கூடச் சென்று அவ்வுருவத்தைக் காணுதலுஞ்செய்து உபகரிக்கும்; அதுபோல, உயிரொரு விடயத்தையறியும்படி முதல்வ னுடன்நின்றறிவித்தன் மாத்திரையேயன்றி அவ்வுயிருணர்வோடுகூட அத்துவிதமாய்ச்சென்று அவ்விடயத்தை அறிதலுஞ் செய்துபகரித்துவரும் ; ஆகலான், எல்லா மலங்களும் `பின்காயமொடு மாயு’ மென மேலைச் சூத்திரத்திறுதியிற் கூறியவாற்றாற் காய மொழிந்தான் மும்மலங்களும் நீங்கப்பெற்றுச் சுத்தனாவோனாகியஆன்மா, முதல்வன் இங்ஙனம் அத்துவிதமாய்நின்று உபகரித்துவரும் உரிமையைக் கடைப்பிடித்தறிந்துகொண்டு நிற்கப்பெறின், அத்தொடர்புபற்றிய அம்முதல்வன் திருவடிகளைத் தலைப்படுதற்கண் இச்சை இடையறாது நிகழும்; அங்ஙனம் அறிவிச்சைகளிரண்டும் பிறிதொன்றிற் சேரலின்றி அவ்வத்துவிதநிலை யொன்றே பற்றி முதல்வன் திருவடிக் கண்ணவாய் ஒருங்கு நிகழவே, காயமொழிந்தபின் மலநீங்கிச் சுத்தனாய்நிற்கு முறைமை காயத்தோடு நிற்புழித் தானே கைகூடப் பெறுதலால், ஏனைக்கிரியையுமே எல்லா மலங்களையும் இம்மையே நீத்தொழித்து அவ்வறிவிச்சைகளோடொப்ப ஒருவழிக்கொண்டு அம்முதல்வன் திருவடியைத் தலைக்கூடப்பெற்று, சிவானுபூதியே சுவானுபூதியாகக்கொண்டு வாழ்வன்.
அத்துவிதிநிலை விளக்குவதாகிய காணுமுபகார மாத்திரையே ஈண்டுக் கூறப்புகுந்தார், இனிது விளங்குதற் பொருட்டு ஐந்தாஞ் சூத்திரத்துட் கூறிப்போந்த காட்டுமுபகாரத்தையும் அனுவதித்துடன் கூறினார். ஈண்டுக் காணுமுபகாரமாத்திரையே கூறுதல் கருத்தென்பது முதனூலின் ``உள்ளத்தைக் கண்டுகாட்டல்” என்பதற்கு ``அவனுமவற்ற துவிடயத்தையுணருமென்றது” எனக் காணுமுபகாரமாத்திரையே வேறெடுத்துக்கொண் டுரைத்த கண்ணழிப்புரையானுமுணர்க. காட்டுமுபகாரமாத்திரையேயன்றி அதன் பின்னாக வுடனின்று காணுமுபகாரமும் வேண்டப்படுமென்பது எவ்விடத்துமென்னுஞ் செய்யுளின் விளங்கக் காட்டுதும் ; ஆண்டுக்காண்க. காயமொழிந்தாற் சுத்தனாகியான்மா இத்தையாயுமறிவுடையனாயென இயையும். ஆகியென்றது பெயர். அந்நிலை யென்பதற்கு வேறு வேறுரைப்பாருமுளர். அகரச்சுட்டு அடுக்கநின்றதனையொழித்து வேறொன்றனைச் சுட்டுதல் செல்லாமையும் பிறவும் அவர் நோக்கிலர். இருவகைப்பயனுமொருங்கே சேரவைத்து விளக்குவாராய், மேலைச்சூத்திரத்து வேறுகூறாக வையாது, ஒருவாறு வலியுறுக்கப்படு மூன்றாங்கூற்றைக் காயமொழிந்தாற் சுத்தனாகியெனவும், அந்நிலைமை இந்நிலையிலடைந்த முறையாலே மாயமெலா நீங்கியெனவும், அத னொழிபாக ஈண்டெடுத்துக்கொண்டாராகலின், அதனோடுளப்பட இச்செய்யுள் முக்கூற்றதாயவாறு கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க
வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்
வாச்சியவா சகஞானம் வைந்தவத்தின் கலக்கம்
தருஞானம் போகஞா திருஞான ஞேயம்
தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்
திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம்
ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்.

பொழிப்புரை :

இத்தையாயுமறி வெனப்பட்ட பரஞானத்தால் அதனைத் தெளிய நோக்கி அன்பு செய்யப்பெற்றார், அவ்வொன்றனையே யுணர்ந்துகொண்டு நிற்பரன்றி மேற்கூறிய பிராரத்தவாதனை தாக்கு தற்குரிய ஏனைப் பதார்தங்களைச் சிறிதுங் காண்பாரல்லர் ; அவற்றைக் காணவரு ஞானங்களாவன: கருவிகளைப் பற்றிநின்றறியுங் காட்சி யனுமான முறையெனப் பலவகைப்பட்ட அளவை ஞானங்கள்; அவையெல்லாஞ் சுட்டுணர்வின் பேதமாகலானும், ஏனைக் கேட்டலின்கண்ணதாகிய சாத்திரஞானம் நால்வகை வாக்கைப்பற்றி நிகழும் விந்துஞானமேயாகலானும், சிந்தித்துத் தெளிதற்கண்ணதாகிய பேதஞானமும் பாவனைஞானமாதலேயன்றி அனுபூதி ஞானமாகாமையானும், இவையனைத்திற்கும் மேலாய் ஈண்டுக் கூறப்பட்ட இச்சிவஞானமொன்றே பதார்த்தங்களைப் பார்க்கவாராத சிறப்புடைய ஞானமாகலான், இதனைப் பெற்ற சீவன்முத்தர் சிவமொன்றே கண்டிருப்பரன்றி ஏனைப் பதார்த்தங்களை நோக்கிப் பிராரத்தவாதனையிற் படுவாரல்லர்.
சிவமே கண்டிருப்பரென்றது முடிந்தது முடித்தல். ஏகாரம் பிரிநிலை. ஈண்டு அஞ்ஞானமென்றது சுட்டுணாவின் மேற்று. கலக்கம் ஐயம். கேட்டலறிவு மேற்சிந்தித்துத் தெளியும்படி ஐயத்தை விளைத்தல்பற்றி, அதனைக் கலக்கந்தருஞான மென்றார். போகந்தங்கிய ஞானமென்றது அக்கலக்கந்தருஞானம் போம்படி அவ்வாறு தங்கிய ஞானமென்றவாறு. சீவன் முத்தர் பிறிதொன்றனைப் பாராரென வற்புறுத்தோதிய இதனானே, பிராரத்தவினை மங்கிப்போய வழியும் மங்காது நின்றுழல்விப்பதாகிய அதன் வாதனை பற்றறக்கழியுமாறு சாதிக்கப் பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால்
ஆயழிந்து வருதலால் அந்த மில்லை
பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப்
பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும்
இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல்
இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம்
மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி
மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் காணே.

பொழிப்புரை :

உடம்பாவது அநாதியாயுயிரைப்பற்றி நீரோட்டம் போலத் தொடர்ச்சியாய் வருவதாகலான், அதற்கொரு முடிபு கூறுதல் பொருந்தாமையின், முத்தியினும் இவைபோலன்றி நித்திய சுத்தமங்களமயமான திப்பிய சரீரமுண்டென்னும் உருவசிவசமவாதிகள் மதமடாது. உடம்புளதாகவே அதற்குக் காரணமாகிய மாயையும் அதன்கண் நிகழும் உண்டிவினைகட் கேதுவாகிய கன்மமும் அதனை இயைவிப்பதாகிய ஆணவமலமும் விட்டு நீங்குதலின்மையின் அதுவும் இன்னாமையைப் பயக்குநிலையேயாககலானும், ஆகவே, அதனை முத்தியென்பதற்குத் தாற்பரியம் பதமுத்தியென்பதேயாமாகலானும், மனமுதலிய புரியட்டக உடம்பினின்றுந் தோன்றுவதாகிய இவ்வுடம்பு அக்காரியப்பாட்டால் ஆதியாய் அநாதியாகிய மலநோய் தீர்தற்கு மருந்தாய்வரும்; இஃது அக்காரண நீங்கியவழித் தானும் உடன்நீங்குவதன்றி நிற்றற்கோ ரியைபின்மையான், அந்தமாதற்கண் ஆசங்கையின்மையானும்.
இதனானே மாயாமலம் பற்றறக் கழியுமாறு தடைவிடைகளாற் சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே
சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும்
உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும்
ஒள்ளெரியின் ஒளிமுன்னர் இருளுந் தேற்றின்
வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி
மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம்
திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ்
சேராத வகைதானுந் தேயு மன்றே.

பொழிப்புரை :

மேற்கூறிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்றவழியும், அதனாற் சிவம் பிரகாசித்தவழியும், அதனாற் சீவன்முத்தராயவழியும், முறையே தேற்றின் வருபரல்சேர் நீர்மருவுகலங்கல் முதலிய மூன்றும்போல ஆணவமலந் தனது சத்திகெட்டு வாதனை மாத்திரையாய் அவ்வுடம்புள்ளவளவு நின்று, மற்றொரு பிறவிக்கு ஏதுவாதலின்றி அதனோடு கழிந்தொழியும்.
தேற்றின்வரு பரல்சேர் நீர்மருவு கலங்கல் பரஞானஞ் சேரப் பெற்றார்மாட்டு மாய்ந்துகிடக்கு மலசத்தி ஒருகாரணத்தான் மேற்படினும் ஒட்டின்றி அங்ஙனம் விண்டொழிதற்கும், சிவம் பிரகாசித்தார்மாட்டு ஒள்ளெரியினொளிமுன் இருள் அஃதாண்டைக்குச் சிறிதாயினும் இயைபின்றியுஞ் சேய்மைக்கண்ணுள்ளதுபோலத் தோன்றுதற்கும், ஒளடதத்தாற் றடுப்புண்டவிடம் சீவன்முத்தராகப் பெற்றார் மாட்டு ஒருவாற்றானும் இயைபின்றியும் அந்நிலையின் மெலிவு பார்த்திருத்தற்கும் உவமையாயின. எதிர்நிரனிறையாக வைத்துக் கண்டுகொள்க. ஒள்ளெரியென விசேடித்ததனால் விளக்கு முதலிய அற்ப எரியினொளிகள் நீக்கப்பட்டன. இதனானே ஆணவமலம் பற்றறக் கழியுமாறு கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும்
அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற்
காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப்
பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே.

பொழிப்புரை :

இரதகுளிகை பரிசித்த மாத்திரையே செம்போடு சகசமாய் நின்ற களிம்பு நீங்கச் செம்புரு வேறுநிற்றல் கண்டமாகலின், அதுபோல மெய்ஞ்ஞானஞ் சார்ந்தமாத்திரையே உயிர்வேறாய் நிற்ப, உயிரோடு சகசமாய் நின்ற ஆணவமலம் நசிக்குமென்றற்கோரிழுக் கின்மையான், முத்தியினுஞ் சகசமல நீங்குமாறில்லை யென்னும் பாடாணவாத சைவர் மதமும், அருக்கனொளி மேவினும் அருக்கனொடு கண்ணொளி கலந்தாலன்றி இருள் பற்றறக் கழியாதவாறு போல மெய்ஞ்ஞானஞ் சேரினுஞ் சிவம் பிரகாசித்துத் திருவடியை உயிர் பொருந்தினாலன்றி ஆணவமலம் பற்றறக் கழியுமாறின்மையின், மெய்ஞ்ஞானஞ் சேர்ந்த மாத்திரையே மலநீங்கப் பெறும் அதுவே முத்தியாதலமையும், அதன்மேலுந் திருவடியைக் கலத்தல் வேண்டாவென்னும் பேதவாத சைவர் மதமும் அடா.
இதனானே தடைவிடைகளான் மேலது சாதிக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே
நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர்
சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை
தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி டாவாம்
மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை
மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே நீங்கும்
நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை
நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே.

பொழிப்புரை :

அரிசியொடுஞ் சகசமாய்நின்ற முளைதவிடுமிகள் கெட்டொழிய அரிசி கேடின்றி நிலைபெறுதல் கண்டாம் ; அவ்வரிசி முன்போல வேறொரு நெல்லுத் தோன்றுதற்குக் காரணமாதல் செல்லாமையான் அவை அவ் விரிசியின் கணடங்கிநிற்கு மென்றற்கு ஓரியை பின்மையின், அவை ஆண்டில்லையென்பதே தேற்றம். அவைபோல அநாதியே உயிர்களோடு சகசமாய் நின்ற மும்மலங்களும் முத்திநிலைக்கண் விண்டொழியுமென்றே கொள்க. ஆண்டு விண்டொழியினும் ஏனைப் பெத்தரிடத்துக் காணப்படுதலால் அவை நித்தப்பொருளாதற்கும் இழுக்கில்லை.
`இத்தை விளைவித்தன் மல’ மென்பதூஉமறிக. மெய்ஞ்ஞானஞ் சேர்ந்த மாத்திரையே மலம் பற்றறக்கழியும் என்பாரையும் ஈண்டு மறுப்பார், மெல்லவிவை விடுமறவே யென்றுங் கூறினார். ஏகாரந் தேற்றம். இனம்பற்றியும் உவமேயம் பற்றியும் முளையுமுடன் வைத்துரைக்கப்பட்டது. இதனானே இரதகுளிகை பரிசித்த செம்பிலுங்களிம்பு தொக்கிருக்குமெனக் கோடுமென்பாரை நோக்கித் தொக்கிருத்தல் செல்லாமை அநுபலத்தி யேதுவின் வைத்துணர்த்தற் பொருட்டு, வேறுமோருவமை கூறுமுகத்தான் அம்மூன்று மொருங்கே வலியுறுத்தப்பட்டன. இவை ஐந்துசெய்யுளும் மேலைச் சூத்திரத்தின் அகலுங்குற்றமென்ற இறுதிக் கூற்றினொழிபாய் இயைபுபற்றி ஈண்டு வைக்கப்பட்டன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை
அறிந்தியற்றி யிடாஉயிர்க ளிறைவன் றானும்
செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்
இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா
இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும்
அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம்
அரனடியை அகன்றுநிற்ப தெங்கே யாமே.

பொழிப்புரை :

ஆன்மாவுக்கு அறிவுசெயல்கள் விளங்குதலும் விளங்கிய பின் விடயத்திற்சென்று பற்றுதலும் இறைவன் திருவடியையின்றி அமையமாட்டா; அதுபற்றி இறைவனும், அக்கரங்களை இயக்குதற் பொருட்டு அவற்றுடனிற்கும் அகரம்போல, அறிவுசெயல்கள் விளங்குதற் பொருட்டு உயிர்களோடுங் கலந்து நிற்பன். அங்ஙனம் விளங்கிய அறிவுசெயல்கள் பின் விடயத்திற் சென்று பற்றுதற்பொருட்டு அவ்வுயிர்களை அதிட்டித்துக்கொண்டு அவை செல்லுமாறெல்லாம் அறிந்து செலுத்தி அவ்விடயங்களினு முடனாகக் கலந்து நிற்பனாகலால் ஆணவமலத்தினீங்கி வேறுநின்ற வுயிர்கள் அதுபோல இறைவனைவிட்டுத் தனித்து நிற்றல் ஒரிடத்துமில்லை.
எவ்விடத்தும் பெத்தமுத்தி இரண்டினுமென்க. இதனுள் உயிர்களறிந் தியற்றியிடாவெனவும் இறைவன்றானுஞ் செறிந்துநிற்ப னெனவுங் கூறியது ஆன்மாவி னறிவுசெயல்கள் விடயித்தற்கட்படு மியல்பிற்கும், தோற்றும்போதவனையின்றித் தோற்றாவெனவும் இறைவனவ்வுயிர்போல் நின்றிடுவனெனவுங் கூறியது அவை விளங்குதற்கட்படு மியல்பிற்கு மெனக் கொள்க. இவ்விருதிறத்துள் உயிரிற் கலந்துநின்று அறிவுசெயல்களை விளக்குதலே காட்டுமுபகாரமெனவும், அவ்வுயிரை அதிட்டித்துக் கொண்டு சென்று விடயத்திற்கலந்து நிற்றலே காணுமுபகாரமெனவுங் கொள்க. உயிர் ஒன்றனைவிடயித்தல் இறைவனவ் விடயத்து முடன்சென்று கலந்தாலன்றி உயிரிற் கலத்தன்மாத்திரையாலமையாதென்பது; கண்ணொளி விளக்கின் சோதியோடு கலந்தும், விளக்கொளி கலந்தவற்றையன்றிக் காண்டல் செல்லாமையின் வைத்துணர்ந்துகொள்க. ``அறிவானுந் தானே அறிவிப்பான்தானே” என்றபின் ``அறிவாயறிகின்றான் தானே” என்ற அம்மை திருவந்தாதியுமிது. இதனானே, அநாதியுடனின்ற ஆணவமலத்தை விட்டுநீங்கி இறைவனொடு கூடுமாயின் அம்முறை பற்றி இறைவனையுமொரோவழி விட்டுநீங்கப்பெறும் போலுமென்னு மவ்வாதிகளை நோக்கி, அதுகூடாமைக்கு ஏதுக் கூறுமுகத்தான் `ஈசனுயிர்க்குக்காட்டிக் கண்டிடுவ’ னென்ற முதற் கூறு தெரித்துணர்த்தி வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில்
எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில்
இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும்
ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம்
பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப்
பரிதிஅலர்த் திடுவதுபோல் பருவஞ்சே ருயிர்க்குத்
துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.

பொழிப்புரை :

முதல்வன் அத்துணைக் கலப்புடையனா யெங்குஞ் செறிந்து நின்று உபகரித்துவரினும், அஃதருட்கண்ணுடையார்க் கன்றி அறியவாராது; அவ்வருட்கண்ணும் பக்குவமுடையார்க்கன்றிக் கிடைக்கப்பெறாது; அப்பேறும் முதல்வனையின்றி யமையாது; ஆகலான், அப்பெற்றித்தாகிய அருட்கண்ணை முதல்வன் பருவம் பார்த்திருந்து கொடுக்கப்பெற்றுடையார்க்கே அவனறிவுக்கறிவாய் நின்று அவ்வாறுபகரித்துவரும் அத்துவிதநிலை இனிதுவிளங்கும்.
இத்தையாயுமறிவுடையனாதற்கு உரிமை கூறியவாறு. பருவ மெய்தாததூஉ மெய்தியதூஉம் ஒரிடத் தொருங்கு காட்டுவார், பங்கந்தானெழும்பதுமமென வேறுவமை கூறினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில்
சென்றணையும் அவன்முதலி சிவத்தைஅணைந் தொன்றாய்
நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம்
நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட தென்னில்
பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ
பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்த னன்றாம்
ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின்
ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே.

பொழிப்புரை :

அரன் கொடுத்துத் தோன்றுவானெனல் வேண்டா, பதிகராற் சென்றணையப்படும் மரநிழல்போல முதல்வன் விகாரமின்றி நிற்ப, உயிர்தானே பருவஞ்சேர்ந்தவழி ஞானக்கண்ணைப் பெற்று அரனைத் தலைக்கூடுமென அமையுமென ஈசுவரவிகாரவாதி மதம்பற்றிக்கூறின், மரநிழலுக்குச் சுதந்திரமின்றிச் சென்றணை வாருக்கு அச்சுதந்திரமாமாறுபோல, முதல்வனுக்குச் சுதந்திரமில்லை அவனைத் தலைக்கூடுவதாகிய உயிர்க்கே சுதந்திரமெனப்பட்டு வழுவாம். இனிப் பரிணாமவாதிகள் உயிர் கெட்டுக் கூடி அரனடியில் ஒன்றாய்ப் போமென்பர். கெட்டாற் கூடுமாறின்மையானும் கெடாது நின்று கூடுமெனின் அவ்வாறு நின்று கூடியவழிக் கேடின்மையின் ஒன்றாதல் பெறப்படாமையானும், கூடியபின் கெட்டதெனிற் கெட்டவழி முத்தி பெறுவதொன்றின்மையானும், கேடே முத்தியெனின் உயிர் நித்தமாதல் செல்லாமையானும், அதுவும் வழுவாம். இனி ஐக்கவாதிகள் நீரிலே நீர்சேர்ந்தாற்போல உயிர் அரனடியைச் சேர்ந்து ஒன்றாமென்பர். நீருநீரும்போல முதல்வனு முயிருந் தம்முட் சமமாதல் செல்லாமையின் அவர்மதமும் அடாது.
அரன்மலரடிக்கீ ழிருக்குமியல்பு வேறுவேறாகக்கூறு மவ்வம் மதங்களைப் பரிகரித்தவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச்
செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன்
நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன்
நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி
அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும்
அக்குளிகை தானும்பொன் னாகா தாகும்
உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன்
உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே.

பொழிப்புரை :

களிம்புள்ளளவுஞ் செம்பு பொன்னுடனொத்து ஒன்றா மாறில்லையாயினுங் களிம்பு நீங்கியவழி ஒத்தொன்றாதல் செல்லு மென்பதும் அடாது; உயிர்க்கு மலத்தை நீக்குமாற்றலையுடைய முதல்வனைச் செம்பிற்குக் களிம்பு நீக்குமாற்றலுடைய இரதகுளிகை களோடொப்புறுத்துதலன்றி அவ்வாற்றலில்லாத பொன்னோ டொப்புறுத்துதல் ஈண்டைக் கேலாமையானும், மலநீங்கிய வழியுஞ் சிவானுபவமொன்றற்கே சுதந்திரமாயவுயிர் ஐந்தொழி லெல்லாவற்றிற்குஞ் சுதந்திரனாகிய முதல்வனோடொத் தொன்றாதல் செல்லாயையானும்.
ஒன்றினுக்கு மென்னுமும்மை முற்றும்மை. சிவானுபவ மொன்றினுக்கு முரித்தேயென்ற இதனானே, சிவானுபவத்திற்கு முரித்தன்றென்னுஞ் சுத்தசைவர்மதமும் மறுக்கப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில்
சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் தவன்றான்
பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற்
படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான்
அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும்
அணைந்தாலு மொன்றாகா தநந்நியமா யிருக்கும்
இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி
இதுஅசித்தென் றிடில்அவனுக் கிவனும்அசித் தாமே.

பொழிப்புரை :

இருபொருளுஞ் சித்தேயாகலான் ஒத்தொன்றாமென்றலே யமைவுடைத்தன்றி, உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தேயென வேற்றுமைப்படுத்துக் கூறுதல் ஆண்டைக்கமை யாதாலெனின்,- அற்றன்று ; ஒளியென்னும் பொதுமையால் ஒத்தொன்றாமாயினும் வியஞ்சகத்தை இன்றியமையாதாய் அதுவதுவாய் முந்திக் காணுங் கண்ணொளிக்கும் அதுபோலத் தனக்கொரு வியஞ்சகம் வேண்டாது தானே வியஞ்சகமாய் எல்லாவற்றையு மொருங்கே விளக்கிநிற்கும் ஞாயிற்றினொளிக்குந் தம்முள் வேற்றுமை பெரிதாயினாற்போல, சித்திரண்டற்குந் தம்முள் அந்தரங்கவேற்றுமை பெரிதுமுண்மையான், அவ்விருபொருளுந் தம்முட் கூடியவழியும் அத்துவிதமாய் நிற்றலேயன்றி ஒன்றாய்ப் போமாறில்லை.
நீருநீரும்போல ஒத்தொன்றாய் நிற்குமென்னும் ஐக்கவாதிகளை மறுத்தற்கெழுந்தவிவ் விரண்டுசெய்யுளும், ஒத்து வேறாய்நிற்குமென்னும் அருவசிவசமவாதிகளை மறுத்தற்கு முரியவாறு காண்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை
எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி
அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை
அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோ லணைந்து
விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி
மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக்
கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக்
கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் கலந்தே.

பொழிப்புரை :

காந்தம் விகாரமின்றி நின்றே இரும்பை வலிப்பவுங் கண்டாம்; அதுபோல இறைவனும் விகாரமின்றியே உயிரைத் தன் வழிப்படுத்து நிற்பனாகலாற் சென்றணையுநிழல்போலச் சிவனில் லாமைபற்றிச் சிவன் நிருவிகாரியாதற் கிழுக்கில்லை. எரி இரும்பைக் கெடுத்தலின்றித் தன்வண்ணமாக்கித் தன்வண்ணமாக்குதற்குரித் தாகாது இவ்விரும்பின்கணுடன் தோன்றி நிற்குங் கறைமாத்திரங் கெடச்செய்யும்; அதுபோல இறைவனும் உயிரைத் தன்வண்ணமாகச் செய்து தன்வண்ணமாக்குதற் குரித்தாகாது அவ்வுயிரின் கண்ணுடன்றோன்றி நிற்கும் மலமாத்திரங் கெடச் செய்யுமாகலால், பொன்றுகை முத்தியாகாமைபற்றி யொன்றாதற் கிழுக்கில்லை. நீரோடுசேர்ந்த வுப்புத் தன் சுவைமுழுவது மந்நீர்க்காக்கித் தன்னோ டொப்பச் சமஞ்செய்து நிற்கும் ; அதுபோல உயிரைச்சேர்ந்த இறைவனுந் தனக்குரிய எண்குணங்களையும் அவ்வுயிரின்கட் பதிப்பித்துத் தன்னோடொப்பச் செய்து நிற்பானாகலான், நீரொடு நீர் சேர்ந்தாற் போலல்லாமைபற்றிச் சிவசமமாதற் கிழுக்கில்லை. இரதகுளிகை செம்பையுருக்கித் தன்னொடு கூட்டி வேதித்துப் பொன்னாகச் செய்தும் பொன்னியல்பைக் காட்டாது தன்னுளடக்கி நிற்குமாறுபோல, இறைவன் உயிரை அவ்வாறெல்லாஞ் செய்தும் அதனியல்பு சிறிதுந் தோன்றாது அறிவிறந்து நிற்குமாறு தனது வியாபகத்துளடக்கிநிற்குமாகலான், அப்பணைந்த உப்பேபோலணைந்து ஒப்பச் செய்தமை பற்றி உம்பர்பிரானொருவனே உற்பத்தியதிகளுக் குரியனாதற்கிழுக்கில்லை. கருப்பஞ்சாறு முதலிய சுவைப் பொருளெல்லாம் ஒன்றாகக் கலந்தவழி யுளதாகிய சுவை இவ்வியல்பிற்றெனப் பிரித்தறிய வாராமைபோல, இறைவனும் உயிரின்கண் அங்ஙனங் கலந்தவழி இவ்வியல்பிற்றெனப் பிரித்தறிய வாராது ஆனந்த சொரூபமாய் நிற்பனாகலான், அறிவிறந்து நிற்றல்பற்றி உயிர்தானுஞ் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தாதற்கு இழுக்கில்லை.
`சென்றணையும் நிழல்போலச் சிவன் நிற்ப’ னென்பது முதலாகக் கூறும் அவ்வாதிகளை மேலே மறுத்தவழி அவர் கூறும் ஆசங்கைகளை முறையே பரிகரித்துச் சித்தாந்தம் வலியுறுத்தற்பொருட்டு, இங்ஙனம் வெவ்வே றுவமைகளின் வைத்துக் காட்டி ஒருங்கு கூறியவாறு. மலரடிக்கீழ் வைப்பனெனவும், பாதநிழற்கீழ் இருவெனவும், ஏகனாகி நின்றிடவெனவும், அரன் மலரடிக்கீழ் இருப்பனெனவுங் கூறிய இந்நான்கு சூத்திரங்கட்குந் தம்முட் பொருள்வேற்றுமை இல்லைப்போலுமென மயங்காமைப்பொருட்டு இறுதிக்கண் அவற்றைத் தொகுத் தெடுத்துக்கொண்டு சிவரூப முதலிய நான்காக வகுத்துணர்த்தியவாறுமாம். நின்மலசாக்கிர முதலிய ஐந்தவத்தையுந் தெரித்துக் கூறியவாறென்றலும் ஒன்று. மதங்கத்துட் கூறப்படும் எழுவகை முத்திகளை வகுத்துக் கூறியதென்றுரைப்பாருமுளர். இத்தரும் பிந்தனமெனவும் ஆகியடக்கியெனவும் கலந்தொத்தெனவும் இயையும். இத்தென்புழி அன்சாரியையும் இல்லுருபும் விகாரத்தாற் றொக்கன. அனலால் அழிக்கப்படுதல் ஒப்புமைபற்றி இரும்பின் கறையை இந்தனமாக உருவகஞ் செய்தார். அணைந்தெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். மேளித்தல் கூட்டுதல். ஆகியுமெனச் சிறப்பும்மை விரித்துரைக்க. கலந்தவழியென்பது கலந்தெனத் திரிந்து நின்றது. அரும்பித்திந்தனத்தை அனலழிப்பதுபோ லென்பதற்கு இவ்வாறுரைக்க அறியாது விறகின்மேல் வைத்து உரைப்பாருமுளர். விறகை அழித்தற்கட்படும் விசேட மின்மையானும், ஏனையபோல உயிரோடியைபுடைத் தாதற்குரிய உவமையின்மையானும், அரும்பித்தென ஒரு சொல்லின்மையானும், அவ்வுரை போலியென்றொழிக. அல்லதூஉம், தீ இரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப் பந்தனையை யறுத்துத் தானாக்கியென அறுத்தல் ஆக்குதலிரண்டும் இரும்பின்மேல் வைத்தே மேற்கூறிய ஆசிரியர்க்கு, ஈண்டுமதுவே கருத்தாத லுணர்ந்துகொள்க. மேளித்துத் தானெல்லாம் வேதிப்பானாகி என்றதனை அடக்கி என்பதனோடியையாது வேறுவைத்துரைப்பின், ஏனையவற்றிற்கெல்லாம் உவமை தனித்தனி எடுத்துக்காட்டி இது மாத்திரைக்குவமை கூறாமை குன்றக்கூறலாய் முடியுமென்றொழிக. இவை ஐந்து செய்யுளானும் இரண்டாங் கூற்றிற்கு அவ்வம்மதம்பற்றி நிகழும் ஆசங்கைகளைப் பரிகரிக்குமுகத்தாற் சித்தாந்தங் கூறப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத்
திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட்(டு)
அங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம்
அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி
எங்குமியாம் ஒருவர்க்கு மெளியோ மல்லோம்
யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித்
திங்கள்முடி யார்அடியார் அடியோ மென்று
திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே.

பொழிப்புரை :

பற்றறக் கழிந்த மும்மலங்கள், விளக்கற்றம்பார்க்கும் இருள்போல, அறிவற்றம் பார்த்து நிற்பனவாகலான் அவற்றை அஞ்சிப் பரிகரித்தலும், பரிகரித்தற்குத் துணையாகிய மெய்யன்பரொடுபயிறலும், பயிற்சி நிலைபெறும்படி அவரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் அரனெனக் கண்டு வழிபடுதலுமுடையராய் இப்பேறு பெறமாட்டாரது சிறுமையும் பெற்றாரது பெருமையும் நோக்கிக் களித்து வாழ்தல், சீவன்முத்தர்க்குரிய இயல்பு.
ஒட்டாவென்னும் பெயரெச்சமறை ஏதுப்பெயர் கொண்டு முடிந்தது. இச்செய்யுள் முதனூற் பன்னிரண்டாஞ் சூத்திரம்போல முக்கூற்றதாமாறு கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார்
எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும்அன் பில்லார்
பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற்
பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ
ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு)
அவர்கருமம் உன்கரும மாகச் செய்து
கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே.

பொழிப்புரை :

கழிகாமத்தராயினார்க்கு, அத்தொடர்புடையார திணக்கம் அக்காமப் பைங்கூழை வளர்க்கும் நீராதல்பற்றி அதன்கட் கழிபேருவகையும், அல்லாரதிணக்கம் அதனைப் பாறச்செய்யுங் களையாதல் பற்றி அதன்கண் வெறுப்புமிகுதியும் உளவாமாறுபோல, மாறாத சிவானுபவம் மருவிக்கொண்டு அரன் மலரடிக்கீழ் இருக்கப்பெற்றார்க்கு, அதனை வளர்க்கும் நீர்மையராகிய அத்தொடர்புடையரோடிணங்குதற்கண் உவகை மிகுதியும், அதனைக் கெடுக்கும் நீர்மையராகிய பிறரோடிணங்குதற்கண் வெறுப்புமிகுதியும் இயல்பானுளவாம்.
விதிமுகத்தாற் கூறினார், சுவைப்பொருட்டுண்ணப்படும் பால் மருந்துமாமாறுபோலச் சாதனமுமாமா றுணர்த்துதற்கு. முன் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். காமுகனாவானொருவன், ஒரு வனிதையிடத்தன்புடையனென்பது, அவளொக்கலைக் கண்டுழி நிகழும் அன்பின் அளவுபற்றியே தெளியப்படும் ; அதுபோல ஈசனுக்கன்புடைமை அவனடியவரைக் கண்டுழி நிகழும் அன்பின் அளவுபற்றியே தெளியப்படுமாகலான், அடியவர்க்கன்பில்வழி ஈசனுக்கன்புடையார்போ லொழுகுதல் நாடகமாத்திரையே பிறிதில்லையென்பார், அடியவர்க்கன்பில்லார் ஈசனுக்கன்பிலார் என்றும் எவ்வுயிர்க்கண்ணும் உளனாகிய ஈசனிடத்து அன்புடையார்க்கே அத்தொடர்புபற்றி எவ்வுயிர்க்கும் அன்புடையராதல் கூடுமென்பார், ஈசனுக்கன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லாரென்றும், இவ்விடங்களில் அன்பில்லாதார் தம்முயிர்க்குறுதி செய்துகொள்வா ரல்லரென்பார், தமக்கும் அன்பில்லாரென்றுங் கூறினார். ``அன்பிலா ரெல்லாந் தமக்குரியர்” என்புழித் தம்மென்றது உடம்பை நோக்கியாகலின், ஆஃதீண்டைக்கு முரணாமை அறிக. இதன் எதிர்மறைமுகத்தால் அடியவர்க்கன்புடையாரது பெருமையுங் கண்டுகொள்க. அவர்கருமம் உன்கருமமாகச் செய்தலுந் தற்போத முனைத்துநின்று செய்யிற் குற்றமா மென்பார், அருள்ஞானக்குறியினென்றார். கூசுதல் அவருயர்வும் தன்னிழிபும் நோக்கி நிகழ்வது. கும்பிடுதலுந் தட்டமிடுதலுங் கூத்தாடுதலும் உவகை மிகுதியில் நிகழும் மெய்ப்பாடு. இதனானே இரண்டாங்கூறு தெரித்துணர்த்தப்பட்டது. முதற்கூறு `செங்கமலத் தாளிணைகள் சேரலோட்டாத் திரிமலங்க’ ளென ஆண்டே உடம்பொடு புணர்த்தோதி வலியுறுத்தினமையின், வேறு கூறிற்றிலர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி
அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத் தருளால்
செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும்
சிவோகம்பா விக்கும்அத்தாற் சிவனு மாவர்
குறியதனால் இதயத்தே அரடினக் கூடும்
கொள்கையினால் அரனாவர் குறியொடுதாம் அழியும்
நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றால்
நேசத்தால் தொழுதிடுநீ பாசத்தார் விடவே.

பொழிப்புரை :

வேடத்தானும் பாவனையானுஞ் செயலானுந் தன்மையானுந் திருவேடமுடைய மெய்யன்பர் சிவமேயாதல் தெளியக் கிடத்தலின், அதுபற்றி அவரை அரனெனவே தேறி வழிபடுக, ஏனைய பாசப்பற்றுடையாரது பற்று விட்டொழிதற்பொருட்டு.
சிவமாதல் தெளிந்துகோடற்கு வேடமுதலியவற்றுள் ஒன்றே அமையுமென்பார், சிவமாதலை அவற்றோடு தனித்தனிக் கூட்டிக் கூறினார். அவ்வேடமுடையாரென் றெடுத்துக்கொண் டுரைக்க. பாசத்தார் ஆகுபெயர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே
உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்
உளனெங்கும் இலன்இங்கும் உளனென் பார்க்கும்
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும்
உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல்வெளிப்பட் டருளுவன்அன் பர்க்கே.

பொழிப்புரை :

பகுத்துணர்தலின்றிச் சிவலிங்கமுதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுஞ் சரியையாளர்க்குச் சிவன் ஆண்டு வெளிப்படாதுநின்று அருள்செய்வன். அருவப்பொருளாகிய சிவன் ஈசானாதி மந்திரங்களாற் சிவலிங்கமுதலிய திருவுருக்கோலினானெனக் கருதி மந்திரநியாசத்தால் வழிபடுங் கிரியையாளர்க்கும், யோகிகளுள்ளும் எங்கணும் இல்லமாக வாழுஞ் சிவன் இத்திரு மேனியிலும் இருந்து பூசைகொண்டருளுவனெனக் கருதிச் சாத்திய மந்திரங்களால் வழிபடும் யோகிகட்கும், கடைந்தவழித் தோன்றும் எரியும் கறந்தவழித் தோன்றும் பாலும்போல, அவ்வம்மந்திரங்களால் அவரவர் விரும்பிய வடிவாய் அத்திருமேனிகளில் அவ்வப்போது தோன்றி நின்று அருள்செய்வன். அவர்போல் ஏகதேச மாய்க் குறித்தலின்றி அன்புமாத்திரையான் ஆண்டு வழிபடு ஞானிகட்கு, கன்றைநினைந்த புனிற்றாவின் முலைப்பால்போல, கருணை மிகுதியால் அவ்வன்பே தானாய் எப்போதும் ஆண்டு வெளிப்பட்டு நின்று அருள்செய்வன் ; ஆகலான் அஃதறிந்து வழிபடுக.
ஆகலானஃதறிந்து வழிபடுக வென்பது குறிப்பெச்சம். அங்கே யென்பது யாண்டுஞ் சென்றியையும். மந்திரத்தால் உருக்கோலியென மாறுக. கோலியென்பது பெயர். உளன் உள்ளம். இலனென்பது இல்லெனும் இடப்பெயரடியாகப் பிறந்த குறிப்புவினைமுற்று. இங்கு மென்னு மும்மை இறந்தது தழீஇயிற்று. அன்பர்கட்கு விம்மி யொழுகுவது போலெனவே யோகிகட்குக் கறக்கவொழுகும் பால்போலென்பது பெறப்பட்டது. அன்பரென்றது ஈண்டு ஞானிகள் மேற்று, ``அன்பரொடு மரீஇ” என்புழிப்போல. திருவேடஞ் சிவனெனத் தெளியுமாறு தொழப்படுவாரது கருத்துவகை பற்றிக் கூறினார். சிவாலயத்தைச் சிவனெனத் தெளியுமாறு தொழுவாரது கருத்துவகைபற்றிக் கூறினாரெனவுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஞானயோ கக்கிரியா சரியை நாலும்
நாதன்தன் பணிஞானி நாலினிக்கும் உரியன்
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகிகிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
ஆனஇரண் டினுக்குரியன் சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேஉரியன் ஆதலினால் யார்க்கும்
ஈனமிலா ஞானகுரு வேகுருவும் இவனே
ஈசனிவன் தான்என்றும் இறைஞ்சி ஏத்தே.

பொழிப்புரை :

மேலைச்செய்யுளிற் கூறிய நால்வகைக்கருத்தும் அவரவர்மாத்திரைக்கே உரித்தாயிருக்கச் சரியையாளரைப்போல ஞானி வழிபடுதல் எற்றுக்கெனின், நாலுபாதத்தில் நிகழுங் கிரியையெல்லாங் கர்த்தாவின துண்மைப்பணியாகலால், உலகின் மருவாத இன்பத்துள் வைத்த குருவினுபகாரத்தைக் கருதி நால்வகைத் தொழிலும் ஞானி செய்தலே கடப்பாடென்பது உட்டொழில் செய்வார் புறத்தொழிற்கும் உரியரென்னு முறைபற்றியும், ஏனையோர் தத்தந் தொழிற்கே யுரியரென்பது புறத்தொழில் செய்வார் உட்டொழிற் குரியரல்லரென்னு முறைபற்றியும் உணர்ந்து கொள்ளப்படுவன இனி, அந்நால்வகைப் பாதத்தில் நிற்கும் மாணாக்கர்க்கு ஆசிரியன்மார் உபதேசித்தற்கட்படும் உரிமையும் இவ்வாறே வைத்துணர்ந்து, எல்லார்க்கும் உபதேசித்தற்குரிய ஞானகுருவே தலையாய குருவென்றும், ஈண்டுக் கூறியதாவரசங்கமங்களும் இக்குருவடிவின் வேறல்ல வென்றுந் தேறி, அவ்விரண்டினும் வழிபடுக.
மேற்கூறிய நால்வகைக் கருத்துக்கும் உரியராவாரைக் கூறுவார், அவற்றையுள்ளடக்கிநிற்கும் ஞானமுதலியவற்றை யுடையாரது இயல்பின்மேல் வைத்துக் கூறினார், சொற்பல்காது மாட்டேற்றின்மேல் வைத்துணர்ந்துகோடற்பொருட்டு. ஆகலினால் இறைஞ்சி ஏத்தே என்பதனையும் ஈண்டுடன் கூறினார். திருவேடம் ஆலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சுதற்கட்படும் விசேடங் கூறியவாறு. ஈசனிவனென்புழி இவனென்பது பகுதிப்பொருள் விகுதி. ஈண்டு ஈச னென்றது திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனியை. என்றுமென்னும் உம்மையை எதிரது தழீஇயிற்றாக்கித் திருவேடமும் இவனே யென்றிறைஞ்சியேத்தெனவு முரைத்துக் கொள்க. இவை மூன்று செய்யுளானும் மூன்றாங்கூறு தெரித்துணர்த்தி வலியுறுத்தப்பட்டது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால்
மணிஇரத குளிகையினால் மற்றும் மற்றும்
தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத
சகலகலை ஞானங்கள் திரிகால ஞானம்
அந்தமிலா அணிமாதி ஞானங்க ளெல்லாம்
அடைந்திடும்ஆ சான்அருளால் அடிசேர் ஞானம்
வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகும்
மற்றவையும் அவனருளால் மருவு மன்றே.

பொழிப்புரை :

ஏனைஞானங்ளெல்லாம் ஆசிரியனையின்றி யுமமையும்; திருவடிஞானம் ஒருவாற்றானு மாசிரியனையின்றி யமையாது ; ஆகலால் இவனேயீசனிவன்றா னென்று மிறைஞ்சியேத்து.
ஆகலால் இவனே யீச னிவன்றானென்று மிறைஞ்சியேத் தென்பது குறிப்பெச்சம். அவ்வாறேத்துதற்குரிய பெருமை கூறியவாறு. மற்றவையுமவனருளான் மருவுமென்றது இயைபின்மை நீங்குதற் பொருட்டு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

பரம்பிரமம் இவனென்றும் பரசிவன்தா னென்றும்
பரஞானம் இவனென்றும் பராபரன்தா னென்றும்
அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
அருட்குருவை வழிபடவே அவனிவன்தா னாயே
இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டம் சினையை
இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும்
பரிந்திவைதா மாக்குமா போல்சிவமே யாக்கும்
பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் தானே.

பொழிப்புரை :

சிவபேதமனைத்துங் குருமூர்த்தமேயெனத் தேறி ஞானாசாரியனை வழிபடுக; அங்ஙனம் வழிபடப்பெறின், சிவன் இக்குருவை யாவேசித்து நின்று நாடோறுஞ்செய்யும் பரிசமுதலிய மூன்றானும் அவ்வுயிரைத் தன்வண்ணமாகச் செய்தருளுவன்.
அவ்வாறேத்தினார்க்கு வரும் பயன் கூறியவாறு. பரம்பிரம மென்றது சொரூபசிவத்தையெனவும், பரசிவனென்றது தடத்த சிவத்தை யெனவும், பரஞானமென்றது ஆகுபெயரான் அதனை யுடையாரையெனவும், பராபரனென்றது ஏனைத்தாபரமூர்த்தத்தை யெனவும், அரன்தருஞ் சீர்நிலையென்றது அறுபத்துமும்மை நாயன்மார் முதலிய சிவபத்தர் பொருட்டாக ஆண்டாண்டு வெளிப்பட்டருளி மறையும் மூர்த்தங்கள் எல்லாவற்றினையுமெனவுங் கொள்க. பரஞானமிவ னென்றும் பராபரன்தானென்றும் வழிபடுதலதிகாரப் பட்டமையின் ஏனையவு முடன் கூறினார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

பொழிப்புரை :

நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.

குறிப்புரை :

உள்ளத்துக்கண் என்றது உள்ளத்தைக் கண்போலவும் சிவனை ஆதித்தன் போலவும் வேறின்மை கண்டா ரென்றுமாம். இச்செய்யுள் குரு அறிவிற்கு முறைமை கூறிற்று.

பண் :

பாடல் எண் : 2

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ
காரார் கிரகக் கலியாழ் வேனைநின்
பேரா வின்பத் திருத்திய பெரும

5. வினவ லானா துடையேன் எனதுளம்
நீங்கா நிலைமை யூங்கு முளையால்
அறிவின் மைமலம் பிறிவின் மையெனின்
ஓராலினை யுணர்த்தும் விராய்நின் றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய்

10. சுத்தன் அமலன் சோதி நாயகன்
முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா
வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப்
பேறுமின் றாகும் எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்

15. பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்
வேறோ வுடனோ விளம்பல் வேண்டுஞ்
சீறி யருளல் சிறுமை யுடைத்தால்
அறியாது கூறினை யபக்குவ பக்குவக்
குறிபார்த் தருளினங் குருமுத லாயெனின்

20. அபக்குவ மருளினும் அறியேன் மிகத்தகும்
பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னாற்
பக்குவ மதனாற் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தா தன்னோ
தன்னொப் பாரிலி யென்பதுந் தகுமே

25. மும்மலஞ் சடமணு மூப்பிள மையின்நீ
நின்மலன் பருவம் நிகழ்த்திய தியார்க்கோ
உணர்வெழு நீக்கத்தை ஓதிய தெனினே
இணையிலி யாயினை யென்பதை யறியேன்
யானே நீக்கினுந் தானே நீக்கினுங்

30. கோனே வேண்டா கூறல் வேண்டுங்
காண்பார் யார்கொல் காட்டாக் காலெனும்
மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞா னத்தின்
ஆட்பா லவர்க்கருள் என்பதை யறியே.

பொழிப்புரை :

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென இடமகன்ற புடவியில் ஆதித்தனையொக்க (இதன்றிக் கண்ணை விட்டு இருள் மறைப்பு நீங்கிய உலகத்தை இரவி கிரணத்தாலே இருளோட்டி அந்த ஞாலத்தைக் காட்டிய முறைமைபோல என்பாரு முளர்); வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ ஆணவமலத்தாலே மறைப்புண்டுகிடந்த என்னைக் காட்டுதற்குத் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றியருளும் மெய்கண்டதேவனே; காரார் கிரகக் கலி யாழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும கலியாகிய அஞ்ஞானச் சிறையிலே யகப்பட்டுத் துக்கமுற்றழுந்தும் என்னை உனது நீங்காத ஆனந்தத்திலே யிருத்திவைத்த தலைவனே; வினவ லானா துடையேன் அடியேன் தேவரீரை யொருவினாவுத லுடையேனாகின்றேன் அமையாதவனாதலால், அவ்வினாவாவது; என துளம் நீங்கா நிலைமை யூங்கும் உளையால் என்னிடத்து விட்டு நீங்காமல் நிற்குமுறைமை அனாதியிலுமுண்டாவையாகையால்; அறிவின்மை அப்பொழுது தேவரீரை யறியாதிருப்பானேனென்ன; மலம் பிறிவின்மை யெனின் மலம் நீங்காமையால் தெரிந்திலையெனின்; ஒராலினை யுணர்த்தும் ஆனால் இப்பொழுது தேவரீர் இந்த அறியாமல் (=அறியாமை) போமளவும் ஓரிடத்தொதுங்கி நின்றீரோவென வினாவில்; விராய் நின்றனையேல் எவ்விடத்தும் நிறைந்து நிற்பேனென்று சொல்லுகின்றீராயின்; திப்பியம் அந்தோ பொய்ப்பகை யாகாய் ஈதொரு தெய்வீகமானதோர் ஆச்சரியம், அப்படி யிருளோடு கூடி நிற்கிலும் இருட்குப் பகையாவனென்பது மில்லையாம், அதுவுமின்றி; சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பர னெனும்பெயர் முடியா அனாதிசுத்தன் நின்மலன் ஓங்கொளி பாசப்பகைவன் ஆன்ம நாயகன் முத்தசித்து மேலாகிய பரன் என்னும் பெயர் உமக்குண்டாகாது; வேறுநின் றுணர்த்தின் வியாபக மின்றாய்ப் பேறு மின்றாகும் எமக்கு எம் பெரும அத்தன்மை கூடிநிற்றலின்றி வேற்றுமையாக நின்று அறிவிப்பே னென்னின் வியாத்தனென்பது மில்லையாய்ச் சாயுச்சியப் பேறும் எமக்கில்லையாம், எங்கோவே; (வியாத்தமின்றாய் என்பதற்கு ஆன்மாவை நீங்கி நின்றறிவிப்பேனென்னின் ஆன்மாவுக் கறிவில்லை யென்று சொல்லுவாருமுளர்.) இருநிலந்தீநீர் இயமானன் காலெனும் பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின் ‘இருநிலனாய்த் தீயாகி’(அப்பர் 6 : 94 :1) என்னுந் திருப்பாட்டின்படி நின்றவையுடையே னென்கிறதுந் தலைவனே யுனக்கில்லை யாதலால்; வேறோவுடனோ விளம்பல்வேண்டுஞ் சீறியருளல் சிறுமையுடைத்தால் தேவரீர் நிலைமை வேற்றுமையாயோ வேறறக்கூடியோ நிற்பதென்று அருளல் வேண்டும், ஆன்மாவுக்கு அஞ்ஞானமே குணம் ஆதலில் தேவரீர் திருவுள்ளங் கோபமுண்டாவதல்ல; அறியாது கூறினை அபக்குவ அபக்குவனாகையாலே இரவியுங் கண்ணும் இருளும்போல நின்ற நிலைமையறியாது கூறினை; பக்குவக்குறி பார்த்தருளினம் குருமுதலாய் எனின் பக்குவமாகியவனைப் பார்த்து நாம் குருவாய் வந்து தோன்றுவோமென்று அருளினையாயின்; அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் பக்குவம் வேண்டிற் பயனிலை நின்னால் தேவரீல் குருவாயெழுந்தருளி யுபதேசிக்கிலும் அபக்குவனாதலாலறியேன், மிக்க பக்குவம் வேணுமாயின் தேவரீரை வழிபட வேண்டாம், அந்தப் பக்குவத்தையே வழிபட வேண்டுமத்தனை; பக்குவ மதனாற் பயன் நீ வரினே அப்படியன்று, பக்குவமுண்டாவதுந் தேவரீர் எழுந்தருளுகின்றதென் றருளினீராகில்; நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ தன்னொப்பாரிலி என்பதுந் தகுமே தேவரீரைப் பக்குவம் அறிவிக்க மாட்டாது, அறிவிக்குமாகில் அந்தப் பக்குவம் முதலியாம், அதனால் தேவரீர் இணையிலியென்பதும் நன்றாமே; மும்மலஞ் சடமணு மூப்பிளமையில் நீ நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ அந்தப் பக்குவம் மலங்கட்கென்னில் அவை சடமாதலால் அதற்கு வேண்டாம், ஆன்மாவுக் கென்னின் மூப்பிளமை யில்லையாதலால் ஆன்மாவுக்கும் வேண்டாம், தேவரீர்க்கென்னின் தேவரீர் நின்மலனாதலால் தேவரீர்க்கும் வேண்டாம், இப்பக்குவம் யார்க்கு நிகழ்த்தியதோ வென்னின்; உணர்வெழும் நீக்கத்தை ™ஓதியதெனினே இருவினை யொப்புஞ் சத்திநிபாதமுண்டாய் ஞானம் பிரகாசிக்குமிடத்து மறைப்பு நீங்கு மவதரத்தைக் காணப் பக்குவ மென்றீராயின்; இணையிலி யாயினை யென்பதை யறியேன் தேவரீர்க்கும் இணையிலி யென்பதில்லையாமது யாதெனின்; யானே நீக்கினுந் தானே நீங்கினுங் கோனே வேண்டா கூறல் வேண்டும் அவ்விருள் பக்குவத்திலே தானே நீங்குமாயினும் நானே நீக்குவேனாயினுந் தேவரீர்வேண்டாவாம், இத்தன்மை யருளவேண்டும் அது வருமுறைமை; காண்பார் யார்கொல் காட்டாக்கால் எனும் மாண்புரை யுணர்ந்திலை மன்ற பாண்டியன் கேட்பக் கிளர்த்த மெய்ஞ்ஞானத்தின் ஆட்பாலவர்க்கருள் என்பதை யறியே ‘ஆட்டு வித்தாலாரொருவ ராடாதாரே’ (அப்பர் 6 :95:3) என்னுந் திருப்பாட்டிலே ‘காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாடக்கலே’ யென்றதை நிச்சயமாக அறிந்தாயில்லை, அதுவுமன்றிப் பாண்டியன் காண எழுதி வைகையிலிட்ட மெய்ம்மைப் பொருளில் ‘ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும்’ (சம்பந்தர் 3 : 54 : 4) என்னுந் திருப்பாட்டின்படிக் கொள்வதுமே அறிவேனென்றவாறு.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

அறிவறி யாமை யிரண்டும் அடியேன்
செறிதலான் மெய்கண்ட தேவே - அறிவோ
அறியேனோ யாதென்று கூறுகேன் ஆய்ந்து
குறிமாறு கொள்ளாமற் கூறு.

பொழிப்புரை :

அறிவு அறியாமை யிரண்டும் அடியேன் செறிதலால் மெய்கண்ட தேவே அறிவோ வறியேனோ யாதென்று கூறுகேன் ஆய்ந்து குறிமாறு கொள்ளாமற் கூறுதேவனே கண்போல இருளிலே கூடினபோது இருளாய் அறிவற்று ஒளியோடு கூடினபோது ஒளியாய் அறிவுண்டாயுஞ் செய்யுங் கண்போலவென்றீர், மெய்கண்டதேவனே, அறிவும் அறியாமையும் அடியேன் கூடியறிதலால் இந்த அறிவாகிய சிவமோ யான் அறியாமையாகிய பாசமோவென்ன எனதுண்மையை மாறுபடாமல் இந்த வழியை ஆராய்ந்தருளென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், அறிவோடு கூடினபோது அறிவாயும் அறியாமையோடே கூடினபோது அறியாமலுமாகில் ஆன்மாவின் உண்மையாதென்றதற்கு உத்தரம்; ஆன்மா அறிவிக்க அறியும், அறிவு கூடி அதுதானாயிருக்கும்; இதற்குச் சதசத்தென்றும் பெயராம்.

பண் :

பாடல் எண் : 4

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலையஞர் மதநகை
விராயெண் குணனுமா ணவமென விளம்பினை
5. அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
10. அறுவகைக் குணனுங் கருமத் தருளினை
ஆங்கவை தானும் நீங்காது நின்று
தன்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி யென்பதொன் றின்றா மன்ன
ஊரும் பேரு முருவுங் கொண்டென்
15. ஊரும் பேரு முருவுங் கெடுத்த
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியிற்
சைவ சிகாமணி மெய்யர் மெய்ய
மும்மலஞ் சடமென மொழிந்தனை யம்ம
மாறுகோள் கூறல் போலுந் தேறுஞ்
20. சடஞ்செய லதனைச் சார்ந்திடு மெனினே
கடம்பட மதனுட் கண்டில விடம்படும்
ஊன்றிரள் போன்ற தாயில் தோன்றி
யணைந்தாங் ககறல் வேண்டுங் குணங்களும்
பன்மையின் றாகும் எம்மைவந் தணையத்
25. தானே மாட்டா தியானோ செய்கிலன்
நீயோ செய்யாய் நின்மல னாயிட்டு
இயல்பெனிற் போகா தென்றும் மயல்கெடப்
பந்தம் வந்த வாறிங்கு
அந்த மாதி யில்லாய் அருளே.

பொழிப்புரை :

கூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கின் விகற்பங் கற்பங் குராதம் மோகங் கொலை யஞர் மத நகை விராய் எண் குணனும் ஆணவமென விளம்பினை சொல்லப்பட்ட மும்மலங்களின் குணம் ஆணவமலத்துக்கு வேற்றுமையாகச் சொல்லுமிடத்து, பிடித்தது விடாதாகை - க, மோகமிகுத்துச் சொல்லுகை - உ, கோபமி டையறாமை - ங, அறியாமை விஞ்சுதல் - ச, கொலைத் தொழில் நினைவு விஞ்சுதல் - ரு ,எப்பொழுதும் வருத்தமுறுதல் - சா, யானெனது விஞ்சுதல் - எ, மாச்சரியம் விடாநகை - அ; இவை எட்டும் ஆணமலத்தின் குணமாமம் ; அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசால குநியம் மாச்சரியம் பய மாவேழ்குணனும் மாயைக் கருளினை பலகலை கற்றும் அறியாமை - க, களவு செய்கை - உ, கண்டது மறுத்தல் - ங, அறிந்தது மறுத்தல் - ச, அழகு பொருந்த உண்டாயும் ஈயானாகை - ரு, அத்தத்தின் மேலே மாச்சரியம் - சா, அழுக்கறாமை - எ; இவை ஏழும் மாயைக்குள்ள குணமாம்; இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும் விடுத்தலும் பரநித்தை மேவல் என்று எடுத்த அறுவகைக் குணனுங் கருமத் தருளினை மடிவந்திருத்தல் - க, பொசிப்பற்றுக் கிடக்கை - உ, புண்ணியத்தைச் செய்கை - ங, பாவத்தைச் செய்கை - ச, தொழிலைச் செய்யாமல் விடுகை - ரு, பரநிந்தனை செய்கை - சா என ஆறு குணங்களுங் கன்மத்துக் கென்றருளிச் செய்தாய்; ஆங்கவை தானும் நீங்காது நின்று தன்வழிச் செலுத்தித் தானே தானாய் என்வழியென்பதொன் றின்றாம் மன்ன எட்டு ஏழு ஆறு குணங்களையுடைய ஆணவம் மாயை கன்மென்று சொல்லப்பட்டவை அறியாமையாயுந் தனுகரணாதியாயும் மனோவாக்குக் காயங்களால் வரும் இதமகிதங்களாயும் நீங்காமல் நின்று தன்தன் வசங்களிலே என்னையாக்கித் தானே தானாகி நின்று என்னை நீங்கியறிய என்வழி யில்லையாகா நின்றது, தலைவனே; ஊரும் பேரும் உருவுங்கொண்டு என் ஊரும் பேரும் உருவுங் கெடுத்த பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம்பதியிற் சைவ சிகாமணி மெய்யர் மெய்ய உனக்குத் தனித்தொரு ஊருமில்லையாயினும் ஊரின்னதென்றும், எல்லாம் பேராயிருக்கவும் பேரின்னதென்றும், எல்லாம் உருவாயிருக்கவும் உருவின்னதென்றுங் கொண்டெழுந்தருளி வந்து, தானொழிந்தெனக்கு ஊரும் பேரும் உருவுமில்லை என்னும்படி நீக்கிப் பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வெண்ணெய்நல்லூரில் வந்தவன் சைவசித்தாந்தத்துக்கோர் அபிடேக இரத்தினமாகியவன் மெய்யர்க்கு மெய்யனாகிய மெய்கண்டதேவனே முன்னே; மும்மலஞ் சடமென மொழிந்தனையம்மமாறுகோள் கூறல் போலும் மூன்று மலமுஞ் சடமெனக் கூறினாய் ஈதோராச்சரியம், முன்னொடுபின் மாறுபடுமதாகாநின்றது; தேறுஞ் சடஞ்செயலதனைச் சார்ந்திடு மெனினே கடம்பட மதனுட் கண்டில இப்படி யிருபத்தொரு விதமான ஆணவம் மாயை கன்மங்களுஞ் செயலைச் சாராது சாருமாயில் சடமாகிய கடபடாதிகளிடத்துக் காணப்பட்டதில்லையே யெனின்; விடம்படும் ஊன்றிரள் போன்றதாயில் தோன்றி யணைந்தாங்கு அகறல்வேண்டும் உடலைக் கரந்த நஞ்சு உடலைப் பேதித்துத் தனக்கறிவில்லையாயினும் விகாரங்களைச் செய்விக்குமா போலவென்னின், அவை போல ஒரு கால் தோன்றி நீங்கிவிட வேண்டும் அதுவுமின்றி; குணங்களும் பன்மையின்றாகும் வெவ்வேறாக எட்டும் ஏழும் ஆறுமாகப் பலவகைக் குணங்களு மில்லையாம்; எம்மை வந்து அணையத் தானோ மாட்டாது இம்மலங்கள் என்னை வந்து தானே கூடமாட்டாது; யானோ செய்கிலன் யான் மலங்களை யறிந்து கூடிக் கொள்வதில்லை; நீயோ செய்யாய் நின்மலனாயிட்டு உன்னாற் செய்விக்கப்படுமெனின் நீ நின்மலனாதலாற் கூடிச் செய்விப்பதுமில்லையாம்; இயல்பெனிற் போகாது ஆன்மாக்களுக்குத் தானே வந்து கூடுவது இயல்பெனில் முத்தியிலும் வந்து கூடும்; என்றும் மயல்கெட எப்போதும் மயக்கங்கெட; பந்தம் வந்தவாறு இங்கு அந்தமாதியில்லாய் அருளே எமக்குப் பாசங்கூடிய வழியை முடிவும் ஈறுமில்லாதவனே சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாவுக்குப் பாசம் கூடியமுறைமையும் நீங்கிய முறைமையும் எப்படி என்று வினாவ அதற்குத்தரம்; செம்புக்குக் களிம்புபோல ஆணவம் பொருந்தியது காரணமின்றி அனாதியேயுள்ளதாம்; அது அனாதியாகவே செம்புக்குக் களிம்பும் அனாதியாக சிவப்பும் நாற்ற(மு)ங் கூடிக் கிடக்குமாப்போல மும்மலங்களும் ஆன்மாவுக்கு அனாதியாம், சத்தியாலே கூட்டியும் பிரித்துஞ் செய்வனென்பது கருத்து. பாசத்துக்கு நின்ற நிலைமை கண்டதொழிந்து அதற்குப் போக்குவரத்தில்லையென்பது பொருந்தப் பொருளாம்.

பண் :

பாடல் எண் : 5

அருள்முன்பு நில்லா தடியேற்குக் கண்ணின்(று)
இருள்கண்ட வாறென்கொல் எந்தாய் – மருள்கொண்ட
மாலையா வெண்ணெய்வாழ் மன்னவா என்னுடைய
மாலையா மாற்ற மதி.

பொழிப்புரை :

அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று இருள் கண்டவாறு என்கொல் எந்தாய் மருள் கொண்ட மாலையாய் வெண்ணெய் வாழ் மன்னவா என்னுடைய மால் ஐயா மாற்ற மதி - இப்படிக் கூறிய மலங்களை இப்பொழுது நீக்குமளவில் அருள்கூடில் இருளும் வெளியுமாய் நில்லாது அடியேனுக்கு அருளொழிய வேறிடமில்லை நின்று நீக்க ஆதலால் இருளையறிந்தவழி எப்படி, எம்முடைய சுவாமியே, மணம் பொருந்திய மாலையினையுடையாய், திருவெண்ணெய் நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவனே, எனக்குண்டாகிய மயக்கத்தை ஐயா போம்படி இதுவென்று புத்தி பண்ணுவாயாக என்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், சதசத்தாகிய ஆன்மா இருளை நீங்கின தெப்படி யென வினாவ அதற்குத்தரம்; ‘சத்தி கொடுநித்தன் தானறியா நின்ற முறை வைத்தலது சுத்தியா வை.’

பண் :

பாடல் எண் : 6

மதிநுதல் பாக னாகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்தென்
உளம்வெளி செய்துன் அளவில் காட்சி
காட்டியெற் காட்டினை எனினும் நாட்டிஎன்
5. உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்
பாதாள சத்தி பரியந்த மாக
ஓதி யுணர்ந்த நானே ஏக
முழுத்தும்நின் றனனே முதல்வ முழுத்தும்
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
10. ஆங்கைந் தவத்தையும் அடைந்தனன் நீங்கிப்
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத் துண்மையும் இவ்விடத் தாதலுஞ்
செல்லிடத் தெய்தலுந் தெரித்த மூன்றினும்
ஒன்றெனக் கருளுல் வேண்டும் என்றும்
15. இல்ல திலதாய் உள்ள துளதெனுஞ்
சொல்லே சொல்லாய்ச் சொல்லுங் காலைச்
சிறுத்தலும் பெருத்தலு மிலவே நிறுத்தி
யானை யெறும்பி னானது போலெனின்
ஞான மன்றவை காய வாழ்க்கை
20. மற்றவை யடைந்தன வுளவெனின் அற்றன்று
விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டுவந் தனவென வேண்டும் நட்ட
பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையு
முரியது நினக்கே யுண்மை பெரியோய்
25. எனக்கின் றாகும் என்றும்
மனக்கினி யாயினி மற்றது மொழியே.

பொழிப்புரை :

மதிநுதல் பாகனாகிக் கதிதர வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்து என்னுளம் வெளிசெய்து உன் அளவில் காட்சி காட்டி எற் காட்டினை மதிபோலும் நுதலினையுடையாளைப் பாகத்திலுள்ள நீ எனக்கு முத்திதரவேண்டித் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றி என்னை யாண்டருள்வதாய் உள்புகுந்து என்னுள்ளத்தை வெளியாக்கி எனக்கு உனதெல்லையற்ற காட்சியைத் தெரிசிப்பித்து எண்னுண்மையைக் காட்டினா யாயின்; எனினும் நாட்டி என் உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் பாதாளசத்தி பரியந்தமாக ஓதியுணர்ந்த நானே அப்படி யாயினீராயின், எனது தலைவனே, என் முற்பட்ட சிறுமையும் இப்பொழுதுண்டான பெருமையும் எனக்கே சொல்லில் பாதாளசத்தி முதலாகத் தலைவன் தன்மையீறாக நானே ஓதியறிந்ததுண்டாதலால்; ஏக முழுத்தும் நின்றனனே முதல்வ அறிவோடு கூடினபொழுது அறிவுதானாக நிறைந்து நின்றேனாயில், தலைவனே; முழுத்தும் புலன்கடைப் பூழை நுழைந்தனன் என்குணமான புலன்களினுழை வழியிலே எப்பொழுதும் நுழைந்து திரிவேனாம்; கலங்கி ஆங்கு ஐந்தவத்தையும் அடைந்தனன் இவ்வளவும் அறியு மாத்திரத்தானுங் கலங்கிப் பஞ்சவத்தைப்பட்டு நிற்பேன்; நீங்கிப் போக்குவரவு புரிந்தனன் அதுவுமின்றி யிவ்வுடல் நீங்கில் வானிலும் நிரையங்களினும் போக்குவரத்துஞ் செய்து திரிவேன் ; தூக்கி இவையிற்றை ஆராயுங்காலத்து ; எவ்விடத்துண்மையும் இவ்விடத்தாதலுஞ் செல்லிடத் தெய்தலுந் தெரித்து மூன்றினும் ஒன்றெனக்கு அருளல் வேண்டும் யான் முன் எல்லாவற்றையு மோதியுணர்ந்த எல்லாவிடத்தும் நீங்கினவிடத்துந் தன்னுண்மையும். செல்லப்பட்ட பரத்தொடு கூடிநிற்றலும் ஆகிய மூன்றையும் விசாரித்து இதனிலே யொன்றை உண்மையாக எனக்கருளல்வேண்டும்; என்றும் இல்லது இலதாய் உள்ளது உளதெனுஞ் சொல்லே சொல்லாய்ச் சொல்லுங்காலை உலகத்து உள்ளதுளதாய் இல்லதில்லையா மென்னுஞ் சொல் தவறாது கொள்ளுமளவில்; சிறுத்தலும் பெருத்தலுமிலவே நிறுத்தி ஒருகாற் சிறுத்தும் ஒருகாற் பெருத்துஞ் செய்யாது ஒரு பொருள் நிறுத்தி; யானை எறும்பினானது போலெனின் ஞானமின்றிவை காயவாழ்க்கை யானையும் எறும்பும் போலப் பெருத்துஞ் சிறுத்து மிருக்குமெனின் உடற்பெருமையுஞ் சிறுமையுமொழிந்து ஞானமல்ல அச்சொல்லை விடுக; மற்றவையடைந்தன வுளவெனின் அவ்விடத்தில் அவ்வுடலடைந்த ஆன்மாவு மவ்வுடலளவுஞ் சிறுத்தும் பெருத்துமுளதே யென்கின்றீராயின்; அற்றன்று சொல்லுகிற முறைமைபோலல்லர் காணும்; விட்ட குறையின் அறிந்து தொன்றுதொட்டு வந்தனவெனவேண்டும் எடுத்த உடலுக்கடுத்த வறிவாதலால் தான் பொசித்து விட்ட குறையை யறிந்து உடல் பெருமை சிறுமை தொந்தித்து வந்தனவாக வேண்டும்; நட்ட பெரியதிற் பெருமையுஞ் சிறியதிற் சிறுமையும் உரியது நினக்கே உண்மை பொருத்தப்பட்ட பெரியதற்குப் பெருமையாயுஞ் சிறியதற்குச் சிறுமையாயு மிருத்தலும் உனக்குள்ளதாமுண்மையாம்; பெரியோய் எனக் கின்றாகும் என்றும் மனக்கினியாய் இனி மற்றது மொழியே தம்பிரானே, எனக்குக் குணமில்லையாமாதலால் மனதுக்கு என்றும் இனிமை தங்கி யொருதன்மையாக உள்ளவனே இந்த முறையை யருளென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள்; ஆன்மாக் கூடினது தானாவனாதலால் அருளொடு கூடினபோது அருளாய் நிற்பவன் என்றதனை வினாயது; அதற்குத்தரம்; இருளொடு கூடி இருளாய் விழித்த விழி ஒளியொடு கூடினபோது ஒளிதானாய் நின்றது கண்டாற்போல, ஆன்மாவும் எப்போதுங் கூடினதுதானாய் நிற்பன், அருளிலும் மலத்திலும் அப்படியே, அருளொடு கூடினவற்கு அருளும் மலத்தொடு கூடினவற்கு மலமும் இல்லையென்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 7

மொழிந்த அவத்தை முதலடியேன் நின்றாங்(கு)
ஒழிந்தன நான்கும் உணர - இழிந்தறிந்(து)
ஏறிற்றிங் கில்லை எழில்வெண்ணெய் மெய்த்தேவே
தேறிற்றென் கொண்டு தெரித்து.

பொழிப்புரை :

மொழிந்த அவத்தை முதலடியேன் நின்றாங்கு ஒழிந்தன நான்கும் உணர இழிந்தறிந்து ஏறிற்றிங்கில்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே தேறிற்றென் கொண்டு தெரித்து இப்படியே நீங்கித் தெரிசிக்கும் அவதரத்தில் அவத்தைகளை அடியேன் அறிந்து நீங்குமளவில் முற்படு மதீதத்தில் அடியேன் தானேயாய் நின்ற விடத்தினின்றுந் துரியஞ் சுழுத்தி சொப்பனஞ் சாக்கிரமென்னும் நாலவத்தையும் ஆராயுமிடத்துச் சாக்கிரத்திற் கருவிகள் வந்து யிறங்கி யேறியதில்லை; தேவரீரது ஞானமும் வந்து பொருந்தாது; ஆதலால் அவ்விடத்திலே எது கருவியாக அறிந்தேன், அழகு பொருந்திய திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டதேவனே, அருளவேணுமென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், அவத்தை நீங்குமிடத்து ஆன்மாவுக்குக் கருவியேதென வினவ, அதற்குத்தரம்:‘அஞ்சாகுஞ் சாக்கிரத்தில் நான்குகனா மேலடைவே எஞ்சாது மூன்றி ரண்டொன் றென்.’

பண் :

பாடல் எண் : 8

தெரித்ததென் கொண்டெனை யுருத்திர பசுபதி
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவங் கொண்டு முடிவுகாட் டில்லாப்
பெண்ணை யாளும் வெண்ணெய் மெய்ய
5. அவத்தையிற் றெரித்தன னாயின் அவத்தை
தெரிந்தாங் கிரித்தலு மிலனே திருத்துங்
காலம் முதலிய கருவி யாயின்
மாலும் பிரமனும் வந்தெனை யடையார்
ஓதுங் காலை யொன்றையொன் றுணரா
10. சேதந மன்றவை பேதைச் செயலுமிச்
சேதந வானாற் செயல் கொள வேண்டும்
போத மவற்றைப் புணர்வதை யறியேன்
கருவித் திரளினுங் காண்பதோ ரொன்றாம்
ஒருவுத லறியேன் உணர்வில னாதலின்
15. நிற்கொடு கண்டன னாயின் எற்குக்
கருவி யாயினை பெருமையு மிலவே
யானே பிரமங் கோனே வேண்டா
இன்னுங் கேண்மோ மன்ன நின்னின்
முன்ன மென்றன் உணர்வில னாதலின்
20. என்னைக் காண்பினுங் காண்பல காணாது
உன்னைக் காண்பினுங் காண்பல வுன்னோடு
ஒருங்கு காண்பினுங் காண்பல அருந்துணை
கண்ட வாறே தெனது கண்ணே
அண்ட வாண அருட்பெருங் கடலே.

பொழிப்புரை :

தெரித்ததென் கொண்டெனை உருத்திரபசுபதிஅவத்தைக்குச் சுத்தத்துவங்கள் கொண்டறிந்தேனாகில், சங்கார கர்த்தாவாகிய பசுபதியே, என்னை யான் அறியுமிடத்து யாது கொண்டறிந்தேன்; செடியனேனையும் அடிமை செய்யப் படிவங் கொண்டு முடிவு காட்டில்லாப் பெண்ணையாளும் வெண்ணெய் மெய்ய அஞ்ஞானியாகிய என்னையும் அடிமை கொள்ள வேண்டி யாவருங்காணத் திருமேனி கொண்டருளி எல்லையிறந்த பல்லேருழவு பயில்தல் விளங்கிய திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவனே; அவத்தையில் தெரித்தனனாயின் அவத்தை தெரித்தாங்கு இரித்தலுமிலனே அவத்தையைப் போல அறிந்தேனாயின் எல்லாம் நீங்கியவிடத்தும் அவத்தை காண்டலும் இருத்தலு முண்டாகாது; திருத்துங் காலம் முதலிய கருவியாயின் மாலும் பிரமனும் வந்தெனை யடையார் அறிவிக்கப்படுங் காலத்தத்துவங்களைக் கொண்டறிந்தேன் என்னில் பிரம விட்டுணுக்களும் எனக்கொவ்வாதாம்; ஓதுங்காலை யொன்றையொன் றுணரா அதுவுமன்றியும் அந்தக் கலாதிகளும் அந்தக்கரணங்களுஞ் சொல்லுமிடத்து ஒன்றையொன்று உணராது; சேதனமன்றவை பேதைச் செயலுமிச் சேதனவானாற் செயல்கொள வேண்டும் அதுவுமன்றி அவை அறிவுடையவு மல்லவாய்ச் சடமுமாய் ஆன்மாக் கூடியல்லது செயற்படாது ஆதலாற் கருவி கொண்டறிந்தவல்லவாம்; போதமவற்றைப் புணர்வதை யறியேன் இப்படிக் கூடியறியச் செய்தே நாமல்லோ கூடியறிகிறோமென்று நானறியேனே; கருவித்திரளினுங் காண்பதோ ரொன்றாம் அவை தன்னை யறியுமிடத்து ஓரொரு கருவியாகவல்லது அறியமாட்டேன்; ஒருவுதலறியேன் உணர்விலனாதலின் அக்கருவிதான் கூடுதலும் நீங்குதலு மறியேன் அறிவிலேன் ஆதலாலே; நிற்கொடு கண்டனனாயின் எற்குக் கருவியாயினை பெருமையுமிலவே நின்னைக் கொண்டு கண்டேனாயின் எனக்கு நீ யறிதற்குக் கருவியாயினாய், நின் பெருமையுமிலையாம்; யானே பிரமம் கோனே வேண்டாம் உன்னை நான் கருவியாகக் கொண்டறிவேனாயின் நானே தலைவனாம், நீ தலைவனாக வேண்டுவதில்லை; இன்னுங்கேண்மோ மன்ன இவையுமன்றி யின்னமுங் கேட்பாயாகத் தலைவனே; நின்னின் முன்னம் என்றன் உணர்விலனாதலின் என்னைக் காண்பினுங் காண்பல என்னை யறியுமிடத்து உன்னை உதவியாகக் கொண்டு காணுமுறைமை யில்லாதபடியாலே கண்டதில்லை; காணாது என்னையானறிவேனாகில் நானென்றும் அறிவென்றும் இரண்டாம்; உன்னைக் காண்பினுங் காண்பல கருவிகளைக் கொண்டு உன்னைக் காண்பினுங் கண்டதல்லவாம்; உன்னோடு ஒருங்கு காண்பினுங் காண்பல அவை யிரண்டுமின்றி உன்னைக் கொண்டு எல்லாவற்றையுங் காண்பினுங் கண்டதல்ல; அருந்துணை கண்டவாறு எது எனது கண்ணே அண்டவாண அருட்பெருங்கடலே உன்னைத் துணையாகக் கொண்டறிவேனாகவேண்டும், அஃதல்லவாயின் என்னை யானறிந்தபடி எப்படி, தேவர்கள் தேவனே யாவரும் பருகுங் கருணைக்கடலே அருளே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாத் தன்னையறியுமிடத்துக் கருவி யேதென வினாவ, அதற்குத்தரம்: ‘கண்ணாடி தானிடமாக் கண்ணதனைக் கண்டதுபோல் உண்ணா டொளியுன் னொளி.’

பண் :

பாடல் எண் : 9

கடலமுதே வெண்ணெய்க் கரும்பேயென் கண்ணே
உடலகத்து மூலத் தொடுங்கச் – சடலக்
கருவியா தாங்குணர்த்தக் காண்பதுதா னென்னை
மருவியா தென்றுரைக்க மன்.

பொழிப்புரை :

கடலமுதே வெண்ணெய்க் கரும்பே என் கண்ணே உடலகத்து மூலத்தொடுங்கச் சடலக் கருவியாதாங் குணர்த்தக் காண்பதுதானென்னை மருவியாதென்றுரைக்க மன்கடலிடத்தமுதத்தை யொப்பானே வெண்ணெய் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானேவெண்ணெல் நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே வெண்ணெய்நல்லூரில் யாவர்க்கும் இனிய கரும்பை யொப்பானே எனக்கறிவே நானறிவிக்க அறிந்தவனாயின் அவத்தையில் மூலதாரத்திலே யானறியுமிடத்துக் கருவிகளேது அவ்விடத்துணர்த்தக் காணப்பட்டது (யாது) இவற்றைத் தெரிய இன்னதென்று சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாவுக் கதீதத்திலும் உணர்த்துமுறைமை எப்படியென்ன வினாவ அதற்குத்தரம் : அதீதத்துப் பிரகிருதி கூடி நிற்கையால் காலம் நியதி கூடும்; துரியத்துக் கலை வித்தை அராகங்கூடும். இதற்குதாரணம் (போற்றிப்பஃறெடை 2936) :மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
கால நியிதி யதுகாட்டி – மேலோங்கு
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு – தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமு மெய்தி – மருளோடு
மன்னு மிதயத்துச் சித்தத்தாற் கண்டபொருள்
இன்ன பொருளென் றியம்பவொண்ணா – அந்நிலைபோய்க்
கண்ட வியன்கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுக்கப் – பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை யங்கே மருவி - உருவுடனின்
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
போங்கரவி யெல்லாம் புகுந்தீண்டி – நீங்காத
முன்னை மலத்தினிருள் மூடா வகையகத்துள்
துன்னுமிருள் நீக்குஞ் சுடரேபோல் – அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய
ராக்கிப் பணித்த வறம்போற்றி.
இது அதீதத்திலுணர்த்து முறைமை கண்டு கொள்க.

பண் :

பாடல் எண் : 10

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நிய மாக்கி அருள்வழி யதனான்
என்னுள் புகுந்தனை யெனினே முன்னைத்
திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு
5. ஒருவுத லின்றி யுடந்தையே யாகும்
பெருநிலை யாகல் வேண்டும் மருவிடு
மும்மல மதனால் எம்முள்நின் றிலையெனின்
அம்மலத் திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழற்
சேர்த்தலு மிலவாய்ச் சார்பவை பற்றிப்
10. பெயர்வில னாகும் பெரும தீர்வின்று
அமைந்த கருமத் தியைந்ததை யல்லது
சமைந்தன விலவெனச் சாற்றில் அமைந்த
மாயேயங் கன்ம மாமல மூன்றும்
மாயா தாகவே யார்ச்சந மாயையின்
15. உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று
நிற்சம மாயி னல்லது நிற்பெறல்
இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு
மேயா தாகும் நாயே னுளத்து
நின்றனை யென்பனோ நின்றிலை யென்பனோ
20. பொன்றிய பொன்றிற் றிலமல மென்பனோ
ஒன்றினை யுரைத்தருள் மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி
கைகண் தலைவாய் கால்செவி மூக்குயர்
மெய்கொண் டென்வினை வேரறப் பறித்த
25. மெய்கண்ட தேவ வினையிலி
மைகொண்ட கண்ட வழுவிலென் மதியே.

பொழிப்புரை :

மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியமாக்கி அருள்வழியதனான் என்னுள் புகுந்தனையெனினே தலைவனே நீ கன்மந் துலையொத்தபோது நீதானே மலத்தை நீக்கி என்னையுந் தெரிசிப்பித்து எனக்குள்ளுமாய் நின்றாயாதலால்; முன்னைத் திரிமலந் தீர்த்த தேசிக நின்னோடு ஒருவுதலின்றி உடந்தையேயாகும் பெருநிலையாகல் வேண்டும் இப்பொழுது மலங்களை நீக்கிய பரமகுருவே உன்னைவிட்டு நீங்குதலின்றி ஒன்றுபட்டு மிகுந்த நிலையாகல் வேண்டும்; மருவிடு மும்மலமதனால் எம்முள் நின்றிலையெனின் அனாதியே ஆணவம் மாயை கன்மமெனு மலங்கள் என்னைக்கூடி நிற்கையால் எனக்குள்ளே நின்றா யில்லையாயின்; அம்மலத்திரிவுஞ் செம்மலர்த் தாள்நிழல் சேர்தலுமிலவாய்ச் சார்பவை பற்றிப் பெயர்விலனாகும் அந்தமலங்கள் ஒரு காலத்திலும் விட்டு நீங்குதலில்லையாய்ச் செந்தாமரைப் பூவையொத்த திருவடி நிழலிலே கூடுதலுமில்லையாய்ச் சேர்ந்த மலத்தின் செய்தியைப் பற்றி நீங்குதலின்றி நிற்கவேண்டும்; பெரும தீர்வின்று அமைந்த கருமத்தியைந்ததை யல்லது சமைந்தனவிலவெனச் சாற்றில் தலைவனே உடலுக்கமைத்த பிராரத்த கன்மமாகிய புண்ய பாவம் பொசித்துத் துலையொக்குமளவில் மலம் பொருந்தி நிற்கும், புண்ணிய பாவங்கள் துலை யொவ்வாத அவதரத்தும் மலம் விட்டு நீங்காதென்னின்; அமைந்த மாயேயங்கன்ம மாமலம் மூன்றும் மாயாதாகவே ஆர்ச்சனமாயையின் உற்பவந் தீரா வொழுகுமொன் றொன்று அந்தக் கன்ம மாயை முதலியவாகிய அறத்துவாவிலும் நிறைந்து நிற்றலால் மலமூன்றுங் கெடாமல் நின்றே புண்ணிய பாவங்களை ஆர்ச்சிக்கவேண்டுமாதலால் 1(மாயையின் தோற்றமாயுள்ள சரீர தொந்தனை ஒன்றுக்கொன்று விடாமல் மேன்மேலும் தொன்றுதொட்டு வரும்); நிற்சமம் உன்னைப்போல் அந்த மலங்களும் அனாதியாம்; ஆயின் நிற்பெறல் இல்லென மொழிந்த தொல்லறந் தனக்கு மேயாதாகும் அப்படியாகையால் உனக்கொப்பொன்றில்லையென்ற பழைய நூலுக்கு இத்தன்மை பொருந்தாததனால்; நாயேனுளத்து நின்றனை யென்பனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ;நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றா யென்பேனோ; நின்றிலை யென்பேனோ - அடியேனிடத்தில் அனாதியிலே நின்றாயில்லை யென்பேனோ; பொன்றிய பொன்றிற்றில மலமென்பனோ - மலமானது கெட்டதென்பதுவோ நின்றதென்பதுவோ யாதுசொல்வேன்; ஒன்றினை யுரைத்தருள் மன்ற - இவற்றினொன்றை யெனக்குத் தெரிய நிச்சயமாக அருள்வாயாக; குன்றாப் பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க் கதிபதி கை கண் தலை வாய் கால் செவி மூக்கு உயர் மெய்கொண்டு என்வினை வேரறப்பறித்த மெய்கண்டதேவ வினையிலி மைகொண்ட கண்ட வழுவில் என் மதியே கேடுபடாத பெண்ணையாற்றுப் புனல் சூழப்பட்ட வயலையுடைத்தாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமே கையுங் கண்ணுந் தலையும் வாயுங் காலுஞ்செவியும் மூக்குமென்னும் அவயவங்களை யுடையதொரு திருமேனியைக் கொண்டு எனது வினையை வேரறப் பறித்த (மெய்க்கண்ட தேவனே கன்ம தொந்தனையில்லாதவனே) நீலகண்டனே பழுதில்லாத என்னறிவாயுள்ளவனே அருள்வாயாக என்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் மலம் அனாதியென்னு முறைமையும் முக்தியைப் பெற்ற ஆன்மாக்களிடத்து மலமில்லையென்னு முறைமையும் அறிவித்தது.

பண் :

பாடல் எண் : 11

மதிநின்பா லிந்த மலத்தின்பால் நிற்க
விதியென்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய – பதிநின்பால்
வந்தா லிதில்வரத்தில் வந்திரண்டும் பற்றுகிலேன்
எந்தா யிரண்டாமா றென்.

பொழிப்புரை :

மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க விதியென்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய பதி நின்பால் வந்தாலிதில் வரத்தில் வந்திரண்டும் பற்றுகிலேன் எந்தாய் இரண்டாமாறென் என்னறிவானது நின்னறிவாலே யறியுமதாய் நிற்கப் பாசஞானத்திலே வந்து உன்னறிவை விட்டு அவையாய் நிற்கைக்குக் காரணமென்ன திருவெண்ணெய்நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவனே இப்பாசஞானத்தை விட்டுப் பசுஞானத்திற் பற்றற்றுப் பதிஞானமாகிய நினதருளிற் கூடிய காலத்து இந்தப் பாசஞானமும் பசுஞானமும் பற்றுகின்றேனில்லை எம்முடைய சுவாமியே என்னுடைய அறிவு இப்படி இரண்டு தன்மை யாவானேன் இதை இன்னதென அருள்வாயாக என்றவாறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

எண்டிசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டக மலாத்தி மூதறி வருளும்
மேதினி யுதய மெய்கண்ட தேவ
கோதில் அமுத குணப்பெருங் குன்ற
5. என்னி னார்தலும் அகறலும் என்னைகொல்
உன்னிற் றுன்னியுன் னாவிடிற் பெயர்குவை
யென்னு மதுவே நின்னியல் பெனினே
வியங்கோ ளாளனு மாகி யியங்கலு
முண்டெனப் படுவை எண்தோள் முக்கண்
10. யாங்கணும் பிரியா தோங்குநின் னிலையின்
யான்வந் தணைந்து மீள்குவ னாயின்
ஆற்றுத்துய ருற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற் றிழிதர வேண்டலும் வெறுத்தலு
மின்றச் சாயைக்கு நன்றுமன் னியல்பே
15. அனையை யாகுவை நினைவருங் காலை
இந்நிலை யதனின் ஏழையேற் கிரங்கி
நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்
அருள்மா றாகும் பெருமஅஃ தன்றியும்
நிற்பெற் றவர்க்கும் உற்பவ முண்டெனுஞ்
20. சொற்பெறும் அஃதித் தொல்லுல கில்லை
அவ்வவை யமைவுஞ் சால்பும் மயர்வறச்
சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல்லிறந் தோயே.

பொழிப்புரை :

எண்டிசைவிளங்க இருட்படாம் போக்கி முண்டகம். மலர்த்தி மூதறிவருளும் மேதினி யுதய மெய்கண்டதேவ கோதில் அமுத குணப்பெருங் குன்ற பிரபஞ்சத்தை மறைத்த இருளாகிய பீடையை நீக்கி எல்லாருங் காணப்பண்ணியுங் காந்தக் கல்லில் அக்கினியைத் தோற்றுவித்தும் தாமரையை யலர்வித்தும் உலர்வித்துஞ்செய்யும் முறைமை போலவும் மிக்க அறிவைத் தரும் ஆதித்தனைப் போல உலகத்துக்கு வந்த ஞானதித்தனாகிய மெய்கண்ட தேவனே எனக்குத் துராலறத் (=துன்பமறத்) தரும் அமுதனே குணமாகிய பெரிய மலையே; என்னினார்தலும் அகறலும் என்னைகொல் என்னிடத்தில் ஒருகாற் பிரகாசிக்கிறதும் ஒருகாற் பிரகாசியாமலிருக்கிறதும் எப்படியென்ன; உன்னிற்றுன்னி யுன்னாவிடிற் பெயர்குவை யென்னுமதுவே நின்னியல்பெனினே உன்னைச் செறிந்தபோது செறிந்தும் உன்னைச் செறியாதபோது நீங்கியுஞ் செய்வை யென்பதுதானே உன்னியல்பென்று கூறின்; வியங்கோளாளனுமாகி இயங்கலுமுண்டெனப்படுவை கருணையாளனென்கிற மேற்கோளையுடையவனென்கிறதும் உண்டாம்படி எப்படி; எண்தோள் முக்கண் யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின் யான் வந்தணைந்து மீள்குவனாயின் மூன்று நய னமும் எட்டுப்புயமும் முதலியவற்றைக் கரந்து மானிடயாக்கையில் வெளிப்பட்டு வந்த மெய்கண்டதேவனே ஓரிடத்திலும் நீக்கமற நின்ற நினது நிறைவிலே யான் வந்தணைந்து மீள்குவனாயின்; ஆற்றுத்துயருற்றோர் அணிநிழல் நசைஇ வீற்று விற்றிழிதரவேண்டலும் வெறுத்தலுமின்றச் சாயைக்கு நன்று மன்னியல்பே நானுனது திருவடியிலே சேர்ந்து மீள்குவேனாயின் கோடைக்காலத்து வழித்துயருற்றோர் நிழல் கண்டால் அந்நிழலையடைந்திருக்க விரும்புதலும் அதனை நீங்கிப் போகுதலுஞ் செய்யுமிடத்து அந்தச் சாயையானது வழி நடந்து துயருற்றோரை வாவென்றழைத்ததுமில்லைத் தனது கோட்டைக் குறைத்தோரை வெறுத்துத் தள்ளினது மில்லை யதுபோல ஆன்மாச் சென்று நீங்கச் சிவன் நினைவற்றிருந்தவனாம்; அனையை யாகுவை அதுவுமின்றி அந்நிழல் போல நீயும் சடமாவை; நினைவருங்காலை இந்நிலையதனில் ஏழையேற்கிரங்கி நின்னை வெளிப்படுத் தொளிப்பை நீயேல்நினைதற்கரிய பொருளாகிய நீதான் முன்சொன்ன சாயை (போல) அறிவற்ற எனக்கிரங்கி உன்னை யொருகாற் பிரகாசிப்பித்தும் ஒருகாற் பிரகாசியாமலும் இருப்பையாமாகில்; அருள்மாறாகும் பெரும உன்னருள் நீக்கமற்ற தென்பதற்கு மாறுபாடாகுந் தலைவனே; அஃதின்றியும் நிற்பெற்றவர்க்கும் உற்பவமுண்டெனுஞ் சொற்பெறும் அதுவல்லாமலும் உனது திருவடியிலே சேர்ந்தவர்களுக்குஞ் செனனமுண்டென்னுஞ் சொல்லுண்டாம்; அஃது இத்தொல்லுலகில்லை உபாதியை நீங்கித் திருவடியடைந்த ஆன்மாக்களுக்குச் செனனமுண்டாமென்பதுதான் இந்த உலகத்துளில்லை; அவ்வவையமைவுஞ் சால்பும் மயர்வறச் சொல்லிற் சொல்லெதிர் சொல்லாச்சொல்லே சொல்லுக சொல்லிறந்தோயே அனாதியில் அந்த மலங்களின் கூட்டமும் அனாதியில் உன்னை விட்டு நீங்காத முறைமையினையும் மயக்கமறப் பாதகப்படாமல் சொல்லுமிடத்து எதிர்த்துச் சொல்லாத சொல்லே சொல்லுவாயாகச் சொல்லுக் கெட்டாதவனே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், ஆன்மாச் சிவனிடத்துக் கூட்டுமளவில் மலங்கெட்டதோ நின்றதோ ஆன்மாத்தான் கூடி மீள்குவதோ நீதான் கூடி மீள்குவையோ ஏதென்று சொல்லென வினாயதற்கு உத்தரம்:

பண் :

பாடல் எண் : 13

அறிவிப்ப தொன்றறிவ தொன்றும் அறிவித்
தறியாத தொன்றென் றறிந்தும் – அறிவித்
தறிபொளூ டேகூடித் தன்னறிவு மாய்ந்து
பிறிவற்று நிற்பதே பேறு. இறந்தோய் கரணங்க ளெல்லாம் எனக்குச்
சிறந்தோ யெனினுமெய்த் தேவே பிறந்துடனாங்
காயங் கொளவுங் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத் தற்று.

பொழிப்புரை :

இறந்தோய் கரணங்களெல்லாம் எனக்குச் சிறந்தோய் எனினும் மெய்த்தேவே பிறந்துடனாங் காயங்கொளவுங் கொளாமலுங் கண்டது நீ ஆயன் கொல் பாதவத்தற்று கருவி கரணங்களெல்லாங் கழன்று நின்ற நீ என்னிடத்து விட்டுநீங்காத சிறப்புண்டாயிருந்தாயாமாகிலும் மெய்கண்டதேவனே அடியேனொரு சரீரத்தை யெடுத்து அந்த உடம்பு தானாக நிற்கவும் அதிற் கூடாமலை (=கூடாமையை) நீ யுண்டாக்கின முறைமை எத்தன்மைத் தென்னின் இடையன் குறைத்த மரத்துக்கொக்கு மென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், மீளத்தோற்றிய பிரபஞ்சம் பேய்த்தேர்போலப் பொய்யாயிருந்ததெனக் கண்டு கூறியது.

பண் :

பாடல் எண் : 14

அற்றதென் பாச முற்றதுன் கழலே
அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத
வேறென் றிருந்த வென்னை யான்பெற
வேறின்மை கண்ட மெய்கண்ட தேவ
5. இருவினை யென்ப தென்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கெனும் மூன்றின்
இதமே யகித மெனுமிவை யாயில்
கணத்திடை யழியுந் தினைத்துணை யாகா
காரணஞ் சடமதன் காரிய மஃதால்
10. ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்
செயலென தாயினுஞ் செயலே வாராது
இயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்
பின்னையின் றாகும் அன்னது மிங்குச்
செய்திக் குள்ள செயலவை யருத்தின்
15. மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன
ஒருவரே யமையு மொருவா வொருவற்கு
இருவரும் வேண்டா இறைவனு நின்றனை
நின்னது கருணை சொல்லள வின்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்
20. உள்ளது போகா தில்லது வாராது
உள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்
கொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்
வள்ளன் மையெலா முன்னிட வமையும்
ஈய வேண்டு மெனும்விதி யின்றாம்
25. ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமுங் கரும பந்தமுந்
தெருள வருளுஞ் சிவபெரு மானே.

பொழிப்புரை :

அற்றதென் பாசம் உற்றதுன் கழலே அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத வேறென்றிருந்த என்னை யான் பெற வேறின்மை கண்ட மெய்கண்டதேவ இருவினையென்பதை என்னை கொல் ஊசல் கயிறறத் தரை தாரகமாவதுபோல என்னுடைய அறியாமை திருத்தமாகவே அடியேன் பொருந்தினது உன்னுடைய பாதமே, திருவெண்ணெய்நல்லூரைத் திருப்படை வீடாகப் பெற்ற இன்பசொரூபியாகிய தலைவனே, இருளும் வெளியும்போல இரண்டென்றிருந்த என்னை (அடிமை யென்கிற முதலுங் கெடாமல்) உனக்கு இரவியும் நயனமும் போல அனன்னியமாகிய முறைமையுணர்த்திய மெய்கண்ட தேவனே புண்ணியபாவமென்று சொல்லப்பட்டதெப்படி யென்னில் அதற்குத்தரம்; அருளிய மனமே காயம் வாக்கெனும் மூன்றின் இதமே யகித மெனுமிவை யாயில் புண்ணிய பாவமாவது ஏதென்று வினாவில் பொருந்தப்பட்ட மனோவாக்குக் காயங்களால் ஏறும் இதமுமகிதமு மென்கின்றீராயின்; கணத்திடையழியுந் தினைத்துணையாகா இமைப்பொழுதிலே வேறுவேறுப் பலவாகப் புரியும் மனது இத்தன்மையெல்லாம் ஆகமாட்டாது; காரணஞ் சடம் அதன் காரியம் அஃதால் ஆர் அணங்காம் வழி யடியேற் கென்னைகொல் இந்தக் கன்மத்தை யுண்டாக்குங் காரணமாகிய மனோவாக்குக் காயங்கள் சடமாதலால் அடியேனுக்கு இது துக்கசுகங்களாக வருத்தும்படி எப்படி; செயல் எனதாயினுஞ் செயலே வாராது அதனை ஆன்மாவாகிய வெனது செயலென்கின்றீராயின் யான் செய்த செயல்தான் வடிவுகொண்டு அனுபவிப்பதில்லையாம், அதுவொழிந்து என்னுடைய செயலாலே புண்ணிய பாவமேறுமெனின் என்செயலும் நின்செயலன்றி வாராது என்றுமாம்; இயமன் செய்தி இதற்கெனின் அமைவும் இந்தச் சுக துக்கங்களையறிந்து செய்விப்பன் இயமனாகில் அச்சொல்நிற்க அமையுமது எதுதானென்னில்; பின்னையின்றாகும் அன்னதுமிங்கு இயமனே துக்கமுஞ் சுகமுஞ் செய்விப்பானாகில் உலகத்து இராசா செய்விப்பதில்லையாம், அது வொழிந்து இவ்விடத்து இயமனே புண்ணிய பாவங்களையறிந்து பொசிப்பிப்பானாகில் பின்பு பொசிக்கக் கன்ம முண்டாகாதாகும் என்று சொல்வாருமுளர்; செய்திக்குள்ள செயலவை யருத்தின் மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன அதனாற் செய்த கன்மத்துக்குத் தக்கது எல்லாம் பொசிப்பித்து மயக்கத்தைத் தீர்க்குமதற்கு முதன்மை இயமனுக்கில்லையாம், தலைவனே; ஒருவரேயமையும் ஒருவாவொருவர்க் கிருவரும் வேண்டா அப்படியன்று, இராசாவும் இயமனுமாகிய இருவருந் துக்கசுகம் அருத்துவானேன் என்னின், கன்ம நீங்காத எனக்கு ஒருவரமையாதோ இருவரும் வேண்டுவதில்லை; இறைவனும் நின்றனை இவ்விருவருமின்றி நீயுமொருவன் நின்றாய்; நின்னது கருணை சொல்லளவின்றே நீயேயவர்களையுங் கொண்டு செய்விக்கின்றாயாமாகில் செய்விக்குங் காருண்ணியஞ் சொல்லுங்காலத்து அளவில்லையாம், அதெப்படியென்னின்; அமைத்தது துய்ப்பின் எமக்கணைவின்றாம் உனக்குள்ளதை நீ யனுபவிக்கிறாயென்கின்றாயாமாயின் அந்தக் கன்மம் எனக்குத் தானே வந்து கூடமாட்டாது, கூடுமாயின் நீரெனக்குச் சுவாமியாக வேண்டுவதில்லை; உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே யுள்ளதெனு முரையதனால் அதுவல்லது உள்ள துன்னாலும் நீக்க வொண்ணாது, இல்லாதது உன்னாலுங் கூட்டவு மொண்ணாது உள்ளதே உள்ளதெனுமாகையால்; கொள்ளும் வகையாற் கொளுத்திடுமாயின் வள்ளன்மை யெல்லா முள்ளிட வமையும் நீயவற்றுக்குச் செய்ததேதெனின் அவற்றைக் கூட்டும் வகையறிந்து கூட்டினாயாயின் உன் பெருமையை நினைக்கப் போதும் அதுவுமன்றி; ஈயவேண்டுமெனும் விதியின்றாம் நீ யிந்தக் கன்மங்களை யெனக்குச் செலுத்த வேணுமென்கிற முறைமையுமில்லையாம்; ஆயினும் என்னை அருந்துயர்ப்படுத்த நாயினேற்கு நன்று மன் என் குறையாற் செய்கின்றாயாயின் அடியேனைத் துயரத்திட்டுப் பார்த்திருப்பது உமது காருண்ணியத்துக்கு மிகவும் நன்று ஆதலால்; மாயக் கருமமுங் கரும பந்தமுந் தெருளவருளுஞ் சிவபெருமானே அனாதியே கன்மமுண்டென்னின் அது கன்மமும் அது வருகைக்கு முன்னமேயாகிய மாயையும் முன்பின் மயங்காமல் அருளிச்செய்யவேண்டும் எனக்குச் சுவாமியாக வந்த சிவனே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் கன்மங் கூட்டு முறைமையை வினாயது; உத்தரம் :செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா
எய்யா தவனாலும் எல்லையறச் - செய்தவினை
எங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறும்
அங்கே யறிவான் அரன்.

பண் :

பாடல் எண் : 15

மானமருஞ் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன
போனவினை தானே பொருந்துமோ – யானதனில்
ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான்
தேவனே யாதுக்கோ தேர்.

பொழிப்புரை :

மானமருஞ் செங்கை மதில் வெண்ணெய் வாழ் மன்ன போனவினை தானே பொருந்துமோ யான் அதனில் ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான் தேவனே யாதுக்கோ தேர் மானை யேந்துற சிவந்த கரத்தையுடையவனே, மதில்சூழுந் திருவெண்ணெய்நல்லூரில் வாழுந் தலைவனே, யான் புசித்துத் தொலைந்த வினை மீண்டு பொருந்தியதோ, யான்சென்று அதனைக் கூடினேனோ, தேவரீரும் விகாரியாய்க் கூடுதலில்லையே, ஆதலால் (நின்மலராகிய உம்முடைய) அருள் யாது செய்வதாக நின்றது சுவாமியே விசாரித்தருளென்றவாறு. எனவே வினை பொசிக்குமளவும் யானெனது விஞ்சுதலுண்டாய தெனவறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

தேரா துரைப்பன் தெருமர லுளத்தொடு
பேரா தருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்ப தென்னுண் மையே
நின்னது நேர்மை சொல்மனத் தின்றே
5. எழுவகைத் தாதுவின் ஏழ்துளை யிரண்டும்
பெருமுழைக் குரம்பையிற் பெய்தகத் தடக்கி
நீக்கி யென்றனைப் போக்கற நிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பது நிற்க
10. வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ்
சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும்
நல்லவுந் தீயவு மெல்லா மறிந்து
முறைபிற ழாமற் குறைவுநிறை வின்றாய்க்
காலமுந் தேசமும் மாலற வகுத்து
15. நடுவுநின் றருத்தலின் நடுவனா குதியே
சான்றோர் செய்தி மான்றிருப் பின்றே
சாலார் செயலே மாலா குவதே
அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
20. நீங்கின வென்னை யூங்கூழ் வினைகளும்
ஆங்கவை யருத்தவ தாரைகொல் அதனாற்
கருமமு மருத்துங் கடனது வின்றாந்
தருமம் புரத்தல் பெருமைய தன்றே
கண்ணினுண் மணிய கருத்தினுட் கருத்த
25. வெண்ணெய் வேந்த மெய்கண்ட தேவ
இடர்ப்படு குரம்பையுள் இருத்தித்
துடைப்பதில் லாவரு டோன்றிடச் சொல்லே.

பொழிப்புரை :

தேராதுரைப்பன் தெருமரலுளத்தொடு பேராதருளுதல் பெரியோர் கடனே - பெரியோய் யான் இன்னமொன்று விசாரியாமல் விண்ணப்பஞ் செய்கிறேன் தெளிவில்லாத உள்ளத்தொடுங் கூடுதலாலே, அஃதாவதுதான், நீங்காது நிற்பது உனது முறைமையா தலால்; நின்னைக் கலப்பதென் னுண்மையே - உன்னை நான் இப்போது புதிதாகக் கூடுவேனென்பது எதுண்மையாம்; நின்னது நேர்மை சொல் மனத்தின்றே - நீதான் இதற்கு நேர்வையோவெனின் வாக்கு மனத்துக்கு மெட்டாததாம்; எழுவகைத் தாதுவின் ஏழ்துளையிரண் டும் பெருமுழைக் குரம்பையிற் பெய்து அகத்தடக்கி நீக்கி என்றனைப் போக்கற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பு அது நிற்க - எனக்கு நீ சத்த தாதுக்களும் இவ்வாயிலேழும் பெருவாயி லிரண்டுமாகிய பெரிய குவைப் பாழிலே என்னை யாக்கி அதனகத்தடக்கி அவ்வறியாமையை நீக்கி மீண்டுந் தனது ஆக்கினையாலே போக்கற நிறுத்தி எனது இச்சாஞானக்கிரியைகளை நீயே யெழுப்பி அவையிற்றை நடத்தியிடும் வித்தை மிகவும் ஆச்சரியமாம்; அது நிற்க; வாக்கும் மனமும் போக்குள தனவுஞ் சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும் நல்லவுந் தீயவும் எல்லாமறிந்து முறை பிறழாமற் குறைவு நிறைவின்றாய்க் காலமுந் தேசமும் மாலற வகுத்து நடுவு நின்று அருத்தலின் நடுவனாகுதியே - அவரவர் மனவாக்குக் காயங்களானும் நீங்காச் சிறையாகிய அவ்வுடலானும் நினைத்துச் சொல்லிச் செய்தவற்றின் நன்மை தின்மையெல்லாம் நீ யறிந்து அது முன்பின் மாறுபடாமல் (புண்ணிய பாவ பலன்களை அனுபவிக்கத் தக்க காலங்களையும் அவற்றைப் பொசிக்கைத் கிருப்பிடமான தேசங்களையும் மயக்கமற வகுத்துப்) பொசிப்பித்துத் தனது பிரேரக முறைமை ஏறியுங் குறைந்துமில்லாமல் நடவனுமாகி நின்றாய் அதனாலும்; சான்றோர் செய்திமான்றிருப்பின்றே சாலார் செயலே மாலாகுவதே - ஞாதாக்கள் செயலறச் செய்கையாலே அவர்களுக்கு விரிவு கூட்டமில்லை, பொருந்தார் செய்தியே கூட்டுவது மயக்கம் ஆதலானும்; அத்துவா மெத்தி அடங்கா வினைகளுஞ் சுத்தி செய்தனையே ஒத்த கன்மத்திடை கன்மவொப்பில் - மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவங் கலையென்று சொல்லப்பட்ட ஆறத்துவாவிலும் நீ நிறைந்திருக்கப்படா நின்ற சஞ்சித கன்மத்தையுஞ் சோதிக்கையால்; நீங்கின என்னை ஊங்கு ஊழ்வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரை கொல் அதனால் - அவ்விடத்து ஊழ்வினைகளும் என்னை விட்டு நீங்கினவாகையாலே அவை யாரை வந்து பொசிப்பித்தன அதனால்; கருமமும் அருத்துங் கடனதுவின்றாந் தருமம்புரத்தல் பெருமையதன்றே - கன்மந்தானும் அனுபவிப்பனிடத்துத் தானே பொருந்துவது மில்லையாம், நீ அக்கன்மத்துக் கீடாக நடத்துவையாகில் உன் பெருமைக்கும் அது பொருந்தாது, ஆகையால் கன்மம் நீங்கி அருளாமாறு எப்படி; கண்ணினுள் மணிய கருத்தினுட் கருத்த வெண்ணெய் வேந்த மெய்கண்டதேவ இடர்ப்படு குரம்பையுள் இருத்தித் துடைப்பதில்லா அருள்தோன்றிடச் சொல்லே - கண்ணிற் பாவைபோலவுங் கருத்துள் அறிவு போலவுமாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமாகிய மெய்கண்டதேவனே துக்கவுடலுள் வைத்து நீங்காத் திருவருள் ஏது சொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் கன்மம் நீங்கு முறைமையும் நீங்கினால் அவை போகிற முறைமையும் வினாயது; உத்தரம்: ‘உடலுக் கமைத்த லுயிரொடு நீங்கா - திடவரு(ள் கன்ம ம) ருத்தும்.’

பண் :

பாடல் எண் : 17

சொற்றொழும்பு கொள்ளநீ சூழ்ந்ததுவும் நிற்செயல்கள்
மற்றவர்கள் நின்நோக்கின் மாய்ந்தவுயிர்க் – குற்ற
மொளித்தியாங் கைய வுயர்வெண்ணெய் நல்லூர்க்
குளித்தமதுக் கொன்றையெங் கோ.

பொழிப்புரை :

சொற்றெழும்பு கொள்ளநீ சூழ்ந்ததுவும் நிற்செயல்கள் மற்றவர்கள் நின் நோக்கின் மாய்ந்த வுயிர்க்குற்ற மொளித்தியாங்கு ஐய உயர் வெண்ணெய்நல்லூர் குளித்த மதுக்கொன்றை எங்கோ - உயர்ந்த வெண்ணெய் நல்லூருக்குக் கர்த்தாவாகி மதுவின் மூழ்கிய கொன்றை மலரைப் புனைந்த எம்முடைய சுவாமியே, நீ கன்மம் நீக்குமளவில் உனது சொல்வழி யடிமையாகச் செய்யலாமாயின், உன் செயலென்னாத பெத்தரும் நினது பான்மையை நீங்காதுநிற்க உயிர் கேடுபடாநின்றது, உன்னை நீங்காது நிற்பாரெல்லாருமொப்பச் சிலர்க்குக் குற்றமெவ்விடத்தே போயது கொல்லென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள், செயலற நிற்க மலம்போனபடி எப்படியென்று வினாயது; உத்தரம்: நின்செயலிற் றம்மைக் கொடுத்தார் வினைதீர்த்தார்
துன்பமற மாயைத் துடக்கறுமே – முன்புமலந்
தான்கெடாச் சத்தி கெடுமாமிக் காயவிருள்
வான்கெடா வாளொளிவந் தால். இத்துணையும் வினாவாக்கி மேற்கூறியவையிற்றுக்கு உத்தரவாதமாக நின்றது.

பண் :

பாடல் எண் : 18

கோலங் கொண்ட வாறுண ராதே
ஞாலங் காவலன் யானெனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்
தோடாப் பூட்கை நாடி நாடா
5. என்னுட் கரந்தென் பின்வந் தருளி
என்னையுந் தன்னையு மறிவின் றியற்றி
என்னது யானெனு மகந்தையுங் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
10. மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை யன்னோ
அருள்மிகு வுடைமையின் அருட்டுறை வந்து
15. பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங்
கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத்
தன்னுட் கரந்து தான்முன் னாகித்
தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கித்
20. தன்னையு மென்னையுந் தந்து தனது
செய்யா மையுமென் செயலின் மையும்
எம்மான் காட்டி யெய்தல்
அம்மா எனக்கே அதிசயந் தருமே.

பொழிப்புரை :

கோலங் கொண்டவாறு உணராதே ஞாலங் காவலன்யான் எனக் கொளீஇப் பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து ஓடாப் பூட்கை நாடி நாடா - தேவரீர் திருமேனி கொண்ட முறைமையை யுணராமல் பிரபஞ்சத்தக்கு நானே கர்த்தாவென்னக் கொண்டு, பிரபஞ்சத்தை ஊராத பேய்த்தேரின் செலவை விசாரித்து அறியாதாரைப்போல, அசத்தாகிய பிரபஞ்சத்தைச் சத்தெனக் கருதிக் கொண்டிருக்கிற; என்னுள் கரந்து - எனக்குள்ளே மறைந்து; என்பின் வந்தருளி - என்னை முன்னாக்கித் தான் எனக்குப்பின் வந்து; என்னையுந் தன்னையும் அறிவின்றியற்றி - தன்னையும் என்னையும் அறியாதபடி யியற்றி; என்னது யானெனும் அகந்தையுங் கண்டு - யானெனதென்னும் அகந்தையு முண்டாக்கி; யாவயின் யாவையுங் யாங்கணுஞ் சென்று புக்குழிப்புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து - எந்த யோனியிலும் எந்த வுலகத்தும் நான் சென்று புக்கவிடமெங்கும் புக்கு மீண்டவிடமெங்குந் தானும் மீண்டு; மிக்க போகம் விதியால் விளைத்திட்டு - எனக்கு மிகுந்த புசிப்புக்களைத் தப்பாமல் விளைத்து; எற்பணியாளாய் எனைப் பிரியாதே - எனக்குப் பண்ணைக்காரனாகிய ஏவலாளாய் என்னை விட்டு நீங்காதே; ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை - வில்லொடு குத்தி விளையாட விடுமா போல ஓடித் திரியும் ஆடலைக் கண்டு முன்னெல்லாம் என் வழி நின்றாய், எனக்குச் சுவாமியாயுள்ளவனே; அன்னோ - அய்யோ அய்யோ; அருள் மிக வுடைமையின் அருட்டுறை : திருவெண்ணெய்நல்லூரிலுள்ள சிவாலயம் ; ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா’ என்பது சுந்தரர் தேவாரம். அருட்டுறை வந்து தனக்கு அருளே மிகுத்த செல்வமாயிருக்கையாலே திருவெண்ணெய்நல்லூரிலே திருமேனி கொண்டு வந்து; பொருள் மிக அருள்தலும் பொய்ப்பகையாதலுங் கை கண்டு கொள்ளெனக் கடலுலகறிய மெய்கண்டதேவன் எனப் பெயர் விரீஇ நீ எல்லாப் பொருளையுங் கூட்டுதலும் கூட்டியும் பொய்க்குப் பகையும் மெய்க்கு உறவுமாய் நிற்றலை எனக்குக் காண்பிப்பான் பொருட்டுத் தண்கடல் சூழ்ந்த உலகமறிய மெய்காணாத ஆன்மாக்களுக்கு மெய்யைக் காண்பித்த தெய்வமென்னும் பெயரை விரித்து நிறுத்தி; தன்னுட் கரந்து தான் முன்னாகி தன்னதுந் தானுமாய் என்னை இன்றாக்கி தனக்குள்ளே என்னையடக்கித் தான் என்பின் செல்வதன்றித் தன் செயலுந் தானுமல்லது என் செயலையும் என்னையும் இன்றாக்கி; தன்னையு மென்னையுந்தந்து என்னுண்மையுந் தண்னுண்மையும் அறியும்படி யுணர்த்தி; தனது செய்யாமையும் என் செயலின்மையும் எம்மான் காட்டி தான் சகல வித்தையும் ஆன்மாக்களுக்குக் கன்மத்துக் கீடாகக் கூட்டிப் பொசிப்பிக்கையிலே தான் அதிற் பணியற்று நிற்கிற முறைமையையும் யான் அதிலே கூடி அதுவதுவாக மொத்துண்கையிலே எனக்கொரு செயலற்று நிற்குந் தன்மையையுந் தலைவன் காட்டினது; எய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே எனக்கு ஏறப் பொருந்துகையாலே ஆச்சரியம் எனக்கே தருமென்றவாறு. அம்மா வென்றது கேட்பிக்கும்; பூட்கைக் கிளவி மேற்கோளாம்.

குறிப்புரை :

இச்செய்யுள் சிவன் நின்று நடத்துகிற முறைமை யறிவித்தது.

பண் :

பாடல் எண் : 19

தருமா தருமத் தலைநின்றாழ் வேனைக்
கருமா கடல்விடமுண் கண்டப் – பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உருவென்ன வந்தெடுத்தா னுற்று.

பொழிப்புரை :

தரும அதருமத் தலைநின்று ஆழ்வேளைக் கருமா கடல் விட முண் கண்டப் பெருமான் திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத் தான் உருவென்ன வந்தெடுத்தான் உற்று - புண்ணிய பாவங்களின் எல்லை நீங்காது திரியும் என்னை அவ்வினை துலையொப்பறிந்தவனாதலாலே, மால்பிரமன் முதலிய தேவர் இறந்து போகாமற் கருணையாலே பெரிய கடலில் விடத்தை யுண்டு உய்யக் கொண்ட நீலகண்டனாகிய தலைவன் திருவெண்ணெய் நல்லூரிலெழுந்தருளிச் சுவேதவனப் பெருமாளென்னும் பிள்ளைத் திருநாமத்தையுமுடைய மெய்கண்டதேவன் இவ்வடிவிலே யான் ஈடேறும்படி என்னையடிமையாகக் கொண்டான் பற்றி யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் பரமேசுவரன் பக்குமறிந்து இரட்சிப்பனென்பது சொல்லிற்று.

பண் :

பாடல் எண் : 20

உற்றவர் பெற்றவ ரற்றவர் முற்றும்
அற்றவர்க் கற்றவன் அல்லவர்க் கல்லவன்
அந்த மாதி யில்லவன் வந்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
5. பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு
இருள்வெளி யாகும் மருளினை யறுத்து
வந்து புகுதலுஞ் சென்று நீங்கலு
மின்றி யொன்றாய் நின்றஅந் நிலையில்
ஒன்றா காமல் இரண்டா காமல்
10. ஒன்று மிரண்டு மின்றா காமல்
தன்னது பெருமை தாக்கா னாயினும்
என்னது பெருமை யெல்லா மெய்தித்
தன்னை யெனக்குத் தருவதை யன்றியும்
என்னையு மெனக்கே தந்து தன்னது
15. பேரா நந்தப் பெருங்கட லதனுள்
ஆரா வின்ப மளித்துத் தீரா
உள்ளும் புறம்பு மொழிவின்றி நின்ற
வள்ளன்மை காட்டி மலரடி யருளிய
மன்ன னெங்கோன் வார்புனற் பெண்ணை
20. வெண்ணெய் காவலன் மெய்கண்ட தேவன்
அண்ணல் அருளா லயத்தன் நண்ணிய
மலமுத லாயின மாய்க்கும்
உலக வுயிர்க்கெல் லாமொரு கண்ணே.

பொழிப்புரை :

உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றம் அற்றவர்க்கற்றவன் அல்லவர்க் கல்லவன் அந்தமாதியில்லவன் வந்து - ஆசாரியனருளிச் செய்த உண்மையிலே பொருந்தினவர்கள் அதனைச் சிந்திக்கப் பெற்றவர்கள் அந்த உண்மையிலே முழுதுந் தன்னைக் கொடுத்துத் தானதுவாய்த் தன் செயலற்றவர்க்குத் தான் அவர் செயலாய் நிற்கிறவன் தானென்றும் அவனென்றும் இரண்டுபட்டவர்களுக்கு வேறுபட்டிருக்கிறவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன் திருமேனி கொண்டு வந்து; குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும் பரப்பைக் குவித்துநிறுத்திப் பிடித்திட்டு - குரங்குபோலே ஓரிடத்து நிலையில்லாத மனத்தையுடைய கொடிய வினையேன் உழன்று திரியும் வருத்தத்தைக் கெடுத்து ஒரு நிலையிலே நிறுத்தி என்னை யடிமை பிடித்து என்னும்படிக் காட்டி; இருள் வெளியாகும் மருளினை யறுத்து - வெளியும் இருளுமாகிய மயக்கத்தைக் கெடுத்து இவை யிரண்டுமல்லவாய் நின்ற நிலை காட்டி; வந்து புகுதலுஞ் சென்று நீங்கலுமின்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில் - கண்ணிற்படலத்தை ஒருவன் வந்துரித்த விடத்துக் கண்ணொளியைச் சூரியப்பிரகாசம் வந்து கூடவுமில்லை சூரியப்பிரகாசத்திலே கண்ணொளிபோய்க் கூடினதுமில்லையதுபோல, தானும் புதிதாக வந்து பொருந்துதலுங் கூடினவர் சென்று நீங்கிப் போகலும் இல்லாதபடி, ஏகமாய் அப்படி நின்றநிலை தான்; ஒன்றாகாமல் - பொன்னும் பணியும்போல ஒன்றென்னும் மாயாவாதமுமல்லவாய் உடலும் உயிரும்போல வொன்றாய்; இரண்டாகாமல் - இருளும் வெளியும்போல இரண்டாயிருக்கிற பேதவாதமுமல்லவாய் கண்ணும் ஆதித்தனும் போலவிரண்டாய்; ஒன்றுமிரண்டு மின்றாகாமல் - சத்தமும் அத்தமும் (=பொருளும்) இரண்டாயிருந்து பின்பு ஒன்றானதுபோல அன்மாவென்றுஞ் சிவனென்றும் இரண்டாயிருந்து முத்தியில் ஒன்றாமென்னும் பாற்கரியன் மதமுமல்லவாய் ஆன்மாவும் ஆன்மஞானமும்போல இரண்டாயிருந்து ஒன்றாவதாய்; தன்னதுபெருமை தாக்கானாயினும் என்னது பெருமை எல்லா மெய்தி - தனது முதன்மையாகிய பஞ்சகிருத்தியம் எனக்குத் தாரானாயினும் எனக்குப் பெருமையாகிய பாச சாலங்களெல்லாந் தான்முன்னின்று மேற்போட்டுக்கொண்டு தன்னை எனக்குத் தருவதையன்றியும்; என்னையும் எனக்குத் தந்து - தன்னுண்மை யான் பெறுவதன்றி என்னுண்மை யான் பெறும்படித் தந்து; தன்னது பேரானந்தப் பெருங்கடலதனுள் ஆராவின்பம் அளித்து - தனதாகிய பேரானந்தக் கடலுள் அமையாத அமுதம் எனக்குத் தந்து; தீரா உள்ளும் புறம்பும் ஒழிவின்றி நின்ற வள்ளன்மை காட்டி மலரடி யருளிய - நீக்கமற்று உள்ளேனும் புறம்பேனுந் தெரியாதபடி யொழிவற நிறைந்த தலைமையைக் காட்டித் தனது திருவடியைத் தந்த; மன்னன் - ஞானராசா; எங்கோன் - எம்முடைய சுவாமியாயுள்ளவன்; வார்புனற் பெண்ணை வெண்ணை காவலன் மெய்கண்டதேவன் அண்ணல் அருளாலயத்தன் - ஒழுக்கறாத புனல்பொருந்திய பெண்ணையால் சூழப்பட்ட திருவெண்ணெய்நல்லூருக்குத் தலைவனாகிய மெய்கண்டதேவன், சருவான்மாக்களுக்குங் கருத்தா, என்னுடைய உள்ளமே (தன் அருளே?) கோயிலாகக் கொண்டவன்; நண்ணிய மலம் முதலாயின மாய்க்கும் உலக உயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே - பொருந்திய ஆணவமலத்தை லிங்கமூர்த்தமாய் வந்து கெடாமற் கெடுத்தும் மாயையைக் குருமூர்த்தமாய் வந்து கெடாமற்கெடுத்தும் கன்மத்தைச் சங்கம மூர்த்தமாய் வந்து கெடாமற் கெடுத்தும், இப்படி வந்த மூன்று முதலும் பிரபஞ்சத்துக்கும் ஆன்மாக்களுக்கு மிடமும் ஒரு முதலே யென்றவாறு.

குறிப்புரை :

இச்செய்யுள் கர்த்தா விரிவித்த முறைமை கூறியது.இருபா விருப துரையெழுதி னோன்முன்
ஒருவா விகற்ப முணர்ந்தோன் – அருளுடம்பாம்
பண்புடைய சிற்றம் பலநாடி தாள்பணிவோன்
சண்பைநகர்த் தத்துவநா தன். (குறிப்பு : - அருணந்தி சிவாசாரியார் செய்தருளிய இருபா விருபது, திருவாவடுதுறை நமச்சிவாயத்தம்பிரான் செய்தவிரிவுரையோடு சமாஜத்தின் சித்தாந்த சாத்திர முதற் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது; இந்தப் பதிப்பில் சீகாழித் தத்துவநாதர் செய்த காண்டிகை யுரை முதன் முதலாக வெளியிடப்படுகிறது. இவர் சிற்றம்பல நாடிகள் சீடரென்பது உரையிறுதியில் காணும் செய்யுளால் விளங்கும். இவரே சிந்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் செய்தார் என்பது காலஞ்சென்ற திரு. அனவரதவிநாயகம் பிள்ளையவர்களால் முதற்பதிப்பின் 980-982 பக்கங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதியின் துணை கொண்டு இவ்வுரை இங்கு பதிப்பிக்கப்படுகிறது. - மு. அருணாசலம்)

பண் :

பாடல் எண் : 1

வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்.

பொழிப்புரை :

வண்மை... உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற்பொருட்டும், பந்தம் அற பாசங்கள் நீங்குதற்பொருட்டும், திண்மதம்.... ஐங்கரனை செக்கர்வானம் போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை, புந்தியுள் வைப்பாம் சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா
மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினா
ஐயாநீ தான்கேட் டருள்.

பொழிப்புரை :

பொய் காட்டி... மெய்கண்டாய் பக்குவர்க்குத் தேகா திப் பிரபஞ்சத்தைப் பொய்யென விளக்கி, அப்பொய்யை நீக்கி, அறிவிலே ஆனந்தசொரூபமாயிருக்கிற உண்மையை விளக்கும் மெய் கண்டநாதனே, பொய்காட்டா... வித்தகா அபக்குவர்க்குப் பொய்யை விளக்காத சத்தியத்தையுடையவனே, திருவெண்ணெய்நல்லூரிலே எழுந்தருளியிருக்கின்ற ஞானாசாரியனே, ஐயா ஐயனே சுத்தவினா விண்ணப்பம் நீதான் கேட்டருள் அடியேனது சுத்த வினாவாகிய விண்ணப்பத்தினை நீ திருச்செவி சாத்தியருள வேண்டும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 2

ஆறாறு தத்துவமே தாணவமே தன்றேதான்
மாறா வினையேது மற்றிவற்றின் வேறாகா
நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தானேது தேசிகனே சாற்று.

பொழிப்புரை :

ஆறாறு தத்துவம் ஏது முப்பத்தாறு தத்துவம் யாது, அன்றே தான் மாறா ஆணவம் ஏது அநாதியே விட்டு நீங்காத ஆணவ மலம் யாது, வினை ஏது வினை யாது, மற்று இவற்றின் வேறாக நான் ஏது இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது, நீ ஏது உன்னுடைய சொரூபம் யாது, நாதன் நடம் (ஏது) பரமேசுவரனுடைய திருநடம் யாது, அஞ்செழுத்துத் தான் ஏது பஞ்சாக்கரத்தின் உண்மை யாது, தேசிகனே சாற்று குருமூர்த்தியே நீ அருளவேண்டும்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உன்றனக்கு
வள்ளல்அரு ளால்அன்று வாய்மலர்ந்து – தெள்ளியசீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ்புதல்வா உற்று.

பொழிப்புரை :

ஆனந்தயோகம் நிகழ் புதல்வா - விளங்குகின்ற ஆனந்த யோகத்திலே (அடங்கி நிற்கும்) மாணவகனே, வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து சொன்ன சீர் ஆகமங்கள் உள்ளபடி தெள்ளிய அடைவிலே பரமசிவன் கருணையினாலே அநாதியே திருவாய் மலர்ந்தருளிய சிறந்த ஆகமங்களிலே யுள்ளபடி செவ்விய முறையாக, உன்றனக்கு உனக்கு, இத்தை உரைக்க உற்றுக்கேள் இதனை யாஞ் சொல்ல நீ நன்கு கேட்பாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் – ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று.

பொழிப்புரை :

பூமி நாற்கோணம் பிருதிவியானது நாலு கோணமாயிருக்கும், புனல் மதியின் பாதி நண்ணும் அப்புவானது அர்த்தசந்திரனைப் போன்றதாயிருக்கும், அனல் முக்கோணம் ஏற்கும் தேயுவானது மூன்று கோணமாயிருக்கும், கால் எப்போதும் அறுகோணம் ஆர்க்கும் வாயுவானது எக்காலமும் அறுகோணமாயிருக்கும், ஆகாயம் வட்டம் ஆகாயமானது வட்டமாயிருக்கும், ஆன்மா உற்று உறு காயம் இவற்றால் ஆம் ஆன்மாவுக்குப் பரிணாமமாய்ப் பொருந்துவதால் சரீரம் இத்தூல பஞ்ச பூதங்களினின்றும் உண்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது.

பொழிப்புரை :

பார் பொன் பிருதிவியானது பொன்னிறமாயிருக்கும், புனல் வெண்மை அப்புவானது வெள்ளை நிறமாயிருக்கும், பொங்கும் அனல் சிவப்பு மிகுகின்ற தேயுவானது சிவந்த நிறமாய் நிற்கும், வன்கால் கருமை வலிய வாயுவானது கருமை நிறமாயிருக்கும், வளர்வான் தூமம் மிகுந்த ஆகாயமானது புகைநிறமாயிருக்கும்,என்பார் என்று பெரியோர் சொல்லுவர், பாராதிக்கு ல வ ர ய அ எழுத்து பிருதிவி முதலியவற்றிற்கு முறையே லகாரமும் வகாரமும் ரகாரமும் யகாரமும் அகாரமும் ஆகிய எழுத்து, என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது, எப்போதும் பலமாய்ப் பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

குறிகுலிசம் கோகநதம் கொள்சுவத்தி குன்றா
அறுபுள்ளி ஆரமுத விந்துப் – பிறிவின்றி
மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேயென்(று)
ஒண்புதல்வா ஆகமம் ஓதும்.

பொழிப்புரை :

ஒண் புதல்வா நல்ல மாணவகனே, மண் புனல் தீ கால் வானம் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம்ஆகிய இவற்றிற்கு, அடைவே முறையே, குறி குலிசம் கோகநதம் கொள் சுவத்தி குன்றா அறுபுள்ளி ஆர் அமுத விந்து அடையாளம் வச்சிரமும் தாமரைப்பூவும் பொருந்திய சுவத்திகமும் குறையாத அறுபுள்ளியும் பொருந்திய அமுத விந்துவும், பிறிவின்றி மன்னும் என்று ஆகமம் ஓதும் நீங்காது நிலைபெறுமென்று சிவாகமஞ் செப்பும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

பாராதி ஐந்துக்கும் பன்னும்அதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்.

பொழிப்புரை :

பாராதி ஐந்துக்கும் பன்னும் அதிதெய்வங்கள் ஆர் ஆர் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஐந்துக்குஞ் சொல்லப்பட்ட அதி தேவதைகள் பொருந்திய யாவர் எனின், அயனாதி ஐவராம் முறையே பிரமாவும் விஷ்ணுவும் உருத்திரரும் மகேசுவரரும் சதாசிவரும் என ஐந்து பேராம், சொல்லுங்கால் அவர்க்கு ஓரோர் தொழில் சொல்லுமிடத்து அவருக்கு ஒவ்வொரு தொழிலேயாம், தோற்றம் முதல் ஐந்தும் பழுது அறவே பண்ணுவர் காண் பார் அவர் சிருஷ்டி திதி சங்காரந் திரோபவம் அநுக்கிரகமாகிய ஐந்தும் குற்றமறச் செய்வார்களென்று அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

படைப்பன் அயன்அளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்பன் உருத்திரனும் சொல்லில் – திடப்பெறவே
என்றுந் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும்
அன்றே அநுக்கிரக ராம்.

பொழிப்புரை :

அயன் படைப்பன் பிரமா சிருஷ்டிப்பன், பங்கயக் கண் மாயன் அளிப்பன் செந்தாமரைமலர்போலுங் கண்ணையுடைய விஷ்ணு இரக்ஷிப்பன், சொல்லில் உருத்திரனுந் துடைப்பன் சொல்லுமிடத்து உருத்திரமூர்த்தி சங்கரிப்பர், திடப்பெறவே ஈசர் என்றுந் திரோபவிப்பர் நிச்சயமாக மகேசுவரமூர்த்தி எக்காலமுந் திரோபவம் பண்ணுவர், அன்றே சதாசிவரும் அநுக்கிரகராம் அநாதிதொடங்கிச் சதாசிவமூர்த்தி அநுக்கிரகம் பண்ணுபவராம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம்
ஒண்கனல்சுட் டொன்றுவிக்கும் ஓவாமல் – வண்கால்
பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கில்ஆ காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.

பொழிப்புரை :

மண்கடினமாய்த் தரிக்கும் பிருதிவியானது விடயங்களிலே கடினகுணத்தைக் கொடுத்துக்கொண்டு நிற்கும், வாரி குளிர்ந்தே பதமாம் அப்புவானது விடயங்களிலே நெகிழ்ந்த குணத்தைக் கொடுத்துக்கொண்டு நிற்கும், ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஒள்ளிய தேயுவானது விடயங்களிலே சுட்டு ஒன்றுதலைப் பண்ணிக்கொண்டு நிற்கும், வண்கால் ஓவாமற் பரந்து சலித்துத் திரட்டும் வளப்பத்தையுடைய வாயுவானது நீங்காது பரந்து சலித்து விடயங்களைத் திரட்டும், பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து நிற்கும் விசாரிக்குமிடத்து ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து விடயங்களுக்கெல்லாம் இடங்கொடுத்துக்கொண்டு நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் – மெள்ளவே
ஓசை பாசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே யாம்.

பொழிப்புரை :

உன்றனக்கு உள்ளபடி மாபூதம் ஓதினோம் உனக்கு உண்மையாகப் பஞ்ச மகா பூதங்களுஞ் சொன்னோம், கள்ளமிகும் ஐம்புலனும் மெள்ளவே கட்டுரைக்கில் கள்ளமிகுந்த பஞ்சவிடயங்களை மெல்லச் சொல்லுமிடத்து, ஓசை பரிசம் உருவஞ் சுவை நாற்றம் ஆசைதரும் ஐம்புலனேயாம் சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய இவை ஆசையைத் தருகின்ற அவ்வைம்புலன்களாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா – ஈனமாம்
சத்தாதி யைஅறியும் தானம் செவிதோல்கண்
அத்தாலு மூக்கென் றறி.

பொழிப்புரை :

ஞானேந்திரியங்கள் நன்றா உரைக்கக்கேள் ஞானேந்தியங்களை நன்றாகச் சொல்லுகிறோங் கேள், ஊனம் உற்று மிகு பூதம் இடமா குறைவு பொருந்தி மிகுகின்ற பஞ்சபூதங்களிடமாக நின்று, ஈனமாஞ் சத்தாதியை அறியும் அவை தாழ்வாகிய சத்தாதி விடயங்களை அறியும், தானம் செவி தோல் கண் அத்தாலு மூக்கென்று அறி அவற்றிற்குத் தானம் சுரோத்திரம் துவக்கு சட்சு அந்தச் சிகுவை ஆக்கிராணமென்று அறிவாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதனை
ஈனமிகுந் தோல்கால் இடமாக – ஊனப்
பரிசம் தனைஅறியும் பார்வையிற்கண் அங்கி
விரவிஉரு வங்காணு மே.

பொழிப்புரை :

வானிடமா நின்று செவி மன்னும் ஒலியதனை அறியும் ஆகாயத்தினிடமாக நின்று சுரோத்திரம் பொருந்திய சத்தத்தையறியும், கால் இடமாக நின்று ஈனமிகுந் தோல் ஊனப் பரிசம் தனை அறியும் வாயுவினிடமாக நின்று ஈனத்துவமிக்க தொக்கு குறைவுடைய பரிசத்தை யறியும், அங்கி விரவிப் பார்வையிற் கண் உருவங் காணுமே தேயுவினிடமாக நின்று பார்வையினையுடைய சட்சு உருவத்தை யறியும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

நன்றாக நீரிடமா நாஇரதந் தான் அறியும்
பொன்றா மணம்மூக்குப் பூவிடமா – நின்றறியும்
என்றோது மன்றே இறைஆ கமம்இதனை
வென்றார்சென் றாரின்ப வீடு.

பொழிப்புரை :

நன்றாக நீரிடமா (நின்று) நா இரதந்தான் அறியும் நன்மையாக அப்புவினிடமாக நின்றுசிகுவை இரசத்தையறியும், பொன்றாப் பூவிடமா நின்று மூக்கு மணம் அறியும் கெடாத பிருதிவியினிடமாக நின்று ஆக்கிராணங் கந்தத்தை யறியும், என்று இறை ஆகமம் அன்றே ஓதும் என்று சிவாகமங்களிலே அநாதியே சொல்லும், இதனை வென்றார் இன்ப வீடு சென்றார் இந்தப் பஞ்சேந்திரியங்களை நிக்கிரகம் பண்ணினவர்களே ஆனந்த வீட்டினை அடைந்தார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

கண்ணுதல்நூ லோதியிடும் கன்மேந் திரியங்கள்
எண்ணும்வச னாதிக் கிடமாக – நண்ணியிடும்
வாக்குப்பா தம்பாணி மன்னு குதம்உபத்த
மாக்கருது நாளு மது.

பொழிப்புரை :

வாக்குப் பாதம் பாணி மன்னு குதம் உபத்தமாக் கருதும் கன்மேந்திரியங்கள் வாக்குப் பாதம் பாணி பொருந்திய பாயு உபத்தமாகக் கருதுகின்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், எண்ணும் வசனாதிக்கு இடமாக நாளுமது நண்ணியிடும் மதிக்கின்ற வசனமும் கமனமும் தானமும் விசர்க்கமும் ஆனந்தமுமாகி யவற்றிற்கு இடமாக நாடோறும் பொருந்தும் என்று, கண்ணுதல் நூல் ஓதியிடும் சிவாகமம் செப்பும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

வாக்காகா யம்இடமா வந்துவச னிக்குங்கால்
போக்காரும் காற்றிடமாப் புல்கிஅனல் – ஏற்கும்
இடுங்கை குதநீ ரிடமா மலாதி
விடும்பா ரிடம்உபத்தம் விந்து.

பொழிப்புரை :

ஆகாயம் இடமா வாக்கு வந்து வசனிக்கும் ஆகாயமிடமாக நின்று வாக்குப் பொருந்தி வார்த்தை சொல்லும், காற்று இடமாகக் கால் போக்கு ஆரும் வாயுவினிடமாக நின்று பாதம் கமனஞ் செய்யும், அனல் புல்கி கை இடும் ஏற்கும் தேயுவினிடமாக நின்று பாணி இடுதல் ஏற்றல் செய்யும், நீரிடமாக்குதம் மலாதி விடும் அப்புவினிடமாக நின்று பாயு மலசலங்களைப் பிரித்தல் செய்யும், பாரிடம் உபத்தம் விந்து விடும் பிருதிவியினிடமாக நின்று உபத்தம் விந்துவை விடுத்து ஆனந்தஞ் செய்விக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் – சிந்தையிவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர்.

பொழிப்புரை :

அந்தக் கரணம் அடைவே உரைக்கக் கேள் அந்தக்கரணங்களை முறையே சொல்லக்கேள், அந்த மனம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தை இவை அம்மனமும் புத்தியும் அகங்காரமும் சித்தமுமாகிய இவையாம், பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு உற்றது சிந்திக்கும் உணர் (அவற்றுள் மனம்) பற்றியதனை (புத்தி) நிச்சயித்து (அகங்காரம்) பலமுறை (அபிமானித்து) எழுந்து (சித்தம்) அங்கே யுற்றதனைச் சிந்திக்குமென்று அறிவாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

ஓதியிடும் நாலாறும் உன்றான்ம தத்துவமென்(று)
ஆதி அருள்நூல் அறையுங்காண் – தீதறவே
வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள்
உத்தமனே நன்றா உனக்கு.

பொழிப்புரை :

ஓதியிடும்... அறையுங்காண் சொல்லப்பெற்ற இருபத்து நாலும் பொருந்தி ஆன்ம தத்துவமாமென்று சிவாகமநூல் சொல்லு ம், உத்தமனே வித்தியாதத்துவங்கள் தம்மை உனக்கு தீது அறவே நன்றா விளம்பக்கேள் உத்தம மாணாக்கனே! வித்தியா தத்துவங்களை உனக்குக் குற்றமற நன்றாகச் சொல்லக்கேளாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

காலம் நியதி கருதும் கலைவித்தை
ஏலஇரா கம்புருட னேமாயை – மால்அறவே
சொன்னோம் அடைவாகச் சொன்னஇவை தன்னுண்மை
உன்னி உரைக்கும்நாம் உற்று.

பொழிப்புரை :

காலம்... மாயை காலமும் நியதியும் கருதுகின்ற கலையும் வித்தையும் பொருந்த இராகமும் புருடனும் மாயையுமாம், மால் அறவே அடைவாகச் சொன்னோம் (இவற்றை) மயக்கமற முறையாக (உனக்கு)ச் சொன்னோம், சொன்ன இவைதன் உண்மை உற்று உன்னி நாம் உரைக்கும் கூறிய இவற்றின் உண்மையை உற்றுநோக்கி (இனி) நாம் சொல்லுவோம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

எல்லை பலம்புதுமை எப்போதும் நிச்சயித்தல்
அல்லல் தருங்கிரியை ஆன்மாவுக்(கு) – ஒல்லை
அறிவாசை ஐம்புலனும் ஆரவருங் காலம்
குறியா மயக்கென்று கொள்.

பொழிப்புரை :

எல்லை பலம் புதுமைகாலதத்துவமானது கழிகாலத்தெல்லையையும் நிகழ்காலத்துப் பலத்தையும் எதிர்காலத்துப் புதுமையையும் பொருத்துவிக்கும், எப்போதும் நிச்சயித்தல் நியதி தத்துவமானது எந்தக் காலமும் கன்மத்தை இவ்வளவென்று நிச்சயம் பண்ணி நிறுத்தும், அல்லல் தருங்கிரியை கலையானது ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவுக்குக் கிரியையை யெழுப்பும், ஆன்மாவுக்கு ஒல்லை அறிவு வித்தியா தத்துவமானது ஆன்மாவுக்கு சீக்கிரத்திலே அறிவை யெழுப்பும், ஆசை இராகதத்துவமானது பெற்ற பதார்த்தங்களைச் சிறிதாக்கிப் பெறாததிலே இச்சையை யுண்டாக்கும், ஐம்புலனும் ஆரவருங் காலம் ஆன்மா பஞ்சேந்திரியங்களிடமாகச் சத்தாதிவிடயங்களைப் புசிக்க வருகின்ற அவதரத்தில் புருடதத்துவமானது விடயத்திலே யழுத்துவிக்கும், குறியாமயக்கென்று கொள் மாயையானது ஒன்றை நினைக்கவொட்டாமல் மயக்கத்தைச் செய்யுமென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் – நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நற்
சத்திசிவங் காண்அவைகள் தாம்.

பொழிப்புரை :

வித்தியா... கேள் வித்தியா தத்துவங்கள் ஏழுஞ்சொன்னோம், சுத்தமாயிருக்கிற சிவதத்துவங்கள் ஐந்தையுஞ் சொல்லுகிறோங் கேள், நித்தமாம்... தாம் அவை நித்தியமாயிருக்கிற சுத்தவித்தை ஈசுரம் பின்கூறும் சாதாக்கியம் நன்மையாகிய சத்தி சிவம் என்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் – ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்.

பொழிப்புரை :

சுத்தவித்தை ... ஆக்கியிடும் சுத்தவித்தை ஞானமேறிக் கிரியை குறைந்திருக்கும், பழமையாகிய ஈசுவரத்தத்துவமானது சிவஞானங் குறைந்து கிரியையேறியிருக்கும், சாதாக்கியம் இவை ஒத்தல் சாதாக்கிய தத்துவம் ஞானமுங் கிரியையும் ஒத்திருக்கும், என்றும் சத்தி கிரியை சிவம் ஆதார ஞான உருவாம் எப்போதும் சத்தி தத்துவம் கிரியையாயிருக்கும், சிவதத்துவம் ஆதாரஞானமாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் – கூறில்
அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினையென்று கொள்.

பொழிப்புரை :

ஆறாறு தத்துவமும் அடைவாகச் சொன்னோம் முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகச் சொன்னோம், மாறா மலம் இரண்டும் சொல்ல வா விட்டு நீங்காமலிருக்கின்ற ஆணவமலத்தையும் கன்மமலத்தையும் சொல்லுகிறோங் கேள், கூறில் அறியாமை ஆணவம் சொல்லுமிடத்து அறியாமையைப் பண்ணிக் கொண்டு நிற்பது ஆணமலம், சுகதுக்கங் குறியா நீயான வினையென்று கொள் சுகதுக்கமொன்றையும் நினையாமல் நீ தானாயிருப்பது தானே கன்ம மலமென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
மாறா அருளால் வகுத்துரைத்தீர் – வேறாகா
என்னை எனக்கறியக் காட்டீர் இவைகண்டேன்
உன்னரிய தேசிகரே உற்று.

பொழிப்புரை :

உன்னரிய தேசிகரே நினைத்தற்கரிய ஆசாரியரே, ஆறாறு தத்துவமும் முப்பத்தாறு தத்துவத்தையும், ஆணவமும் ஆணவமலத்தையும், வல்வினையும் வலிய கன்மமலத்தையும், மாறா அருளால் வகுத்து உரைத்தீர் விட்டு நீங்காத கிருபையினாலே வகுத்தருளிச் செய்தீர், இவை கண்டேன் இம்மலங்களைத் தரிசித்தேன், வேறாகா என்னை எனக்கு அறியக் காட்டீர் (உற்று) (இனி) இந்த மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கின்ற என்னுடைய சொரூபத்தையும் (பொருந்தி) அருளிச் செய்ய வேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

நன்றா உரைக்கக்கேள் நல்லசித்தின் முன்அசித்திங்(கு)
ஒன்றாது சித்தசித்தை ஓராது – நின்றிவற்றை
அன்றே பகுத்தறிவ தான்மாவே என்றுமறை
குன்றாமல் ஓதுங் குறித்து.

பொழிப்புரை :

நன்றா உரைக்கக்கேள் நீ கேட்ட ஆன்ம தரிசனத்தை நன்றாகச் சொல்லுகிறோங்கேள்; நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன்றாது நல்லசித்தாகிய சிவத்தின்முன்னே அசித்தாகிய பாசம் நில்லாது, சித்து அசித்தை ஓராது சித்தாகிய சிவத்துக்கு, அசித்தாகிய பாசத்தை அறிய வேண்டுவதில்லை, இவற்றை அன்றே நின்று பகுத்தறிவது ஆன்மாவே சித்தாகிய சிவத்தையும் அசித்தாகிய பாசத்தையும் அநாதியிலே பொருந்தி விசாரித்தறிவது ஆன்மாவே, என்று மறை குன்றாமல் குறித்து ஓதும் என்று சிவாகமங்களிலே குன்றாது சுட்டிச் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்றறியா
எத்தன்மை என்னில் இயம்பக்கேள் – சுத்தமாம்
ஆறு சுவையும் அறியாது தன்னைத்தான்
கூறில் அவைஇவைபோற் கொள்.

பொழிப்புரை :

தத்துவங்கள்... கேள் முப்பத்தாறு தத்துவங்களும் ஜடமாகையினாலே தம்முடைய சொரூபத்தைத் தாமறியா, எந்த முறைமையென்று கேட்கிறாயானால் சொல்லுகிறோங்கேள், சுத்தமாம்... கொள் சுத்தமாயிருக்கிற அறுவகைச் சுவையுந் தன்னுடைய சொரூபத்தைத் தானறியாது, சொல்லுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களுஞ் சுவைகளைப் போலத் தம்முடைய சொரூபத்தைத் தாமறியா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை
வேறொருவன் கூறியிடும் மேன்மைபோல் – ஆறாறும்
ஒன்றொன்றா நாடிஉணர்ந் தோதில்அதில் உற்றறிவாய்
நின்றபொருள் தானேகாண் நீ.

பொழிப்புரை :

ஆறுசுவையும்... மேன்மைபோல் அறுவகைச் சுவையும் புசித்துக் கைக்கிறது கார்க்கிறது கூர்க்கிறது துவர்க்கிறது புளிக்கிறது இனிக்கிறதெனக் கண்டுணர்ந்து ஒருவன் சொல்லுகிற முறைமைபோல, ஆறாறும் ஒன்றொன்றா நாடி உணர்ந்து முப்பத்தாறு தத்துவங்களையும் ஒன்றொன்றாக விசாரித்தறிந்து, ஓதில் சொல்லுமிடத்து, அதில் உற்று அறிவாய் நின்ற பொருள்தானே காண் நீ அம்முப்பத்தாறு தத்துவங்களிலும் பொருந்தி அறிந்து வருகிற அறிவுகாண் நீயாகிய ஆன்மா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு
பொன்றாத நும்முருவம் போதியீர் – நின்றருக்கன்
கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனதறிவின்
நண்ணிஅறி வித்திடுவோம் நாம்.

பொழிப்புரை :

குன்றா அருளாலே... போதியீர் கெடாத கிருபையினாலே அடியேனுடைய சொரூபத்தை அருளிச் செய்தீர், கெடாத தேவரீருடைய சொரூபத்தையும் அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்; நின்று... போலே ஆதித்தப் பிரகாசமானது கண்ணுக்குப் பதார்த்தங்களைக் காட்டிக்கொண்டு நிற்பது போல, நாம் உனது அறிவின் நண்ணி அறிவித்திடுவோம் நாம் உனதறிவிலே பொருந்தி நின்று அறிவித்து வருவோம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

அன்றியுங்கேள் ஆன்மாவால் ஆய்ந்தறியும் ஐம்பொறிகள்
இன்றி அறியா இவையென்ன – நின்றதுபோல்
ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன்னறிவில்
மேவாமல் மேவிநா மே.

பொழிப்புரை :

அன்றியுங் கேள் அல்லாமஞ் சொல்லுகிறோங்கேள், ஆன்மாவால் ஆய்ந்தறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவையென்ன ஆன்மாவினாலே நன்றாக அறிந்து காரியப்பட்டு வருகிற பஞ்சேந்திரியங்களும் ஆன்மாவினாலேயறிந்து காரியப்பட்டு வருகிறோமென்றறியா, நின்றது போல் அங்ஙனம் நின்ற பஞ்சேந்தியங்கள்போல், நாமே உன்னறிவில் மேவாமல் மேவி நாம் உன்னறிவிலே பொருந்தாமற் பொருந்தி நின்று, ஓவாமல் உன்னை உணர்த்துவோம் விட்டு நீங்காமல் உனக்கறிவிப்போம் (அதனை நீ அறியாய்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் – எக்கண்ணும்
நில்லா இடத்துயிர்க்கு நில்லா தறிவென்று
நல்லா கமம்ஓதும் நாடு.

பொழிப்புரை :

அக்கரங்கட்கெல்லாம் அகர உயிர் நின்றாற்போல் ஏனைய எல்லா அக்கரங்கட்கும் அகரமாகிய அக்கரம் உயிராய் நின்றது போல், மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் சர்வான்மாக் களிடத்திலேயும் அறிவுக் கறிவாய்ப் பொருந்தி நின்றோம், எக்கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு அறிவு நில்லாதென்று சடசித்துக்களெல்லாவற்றினும் கர்த்தா நிறைந்துநின்று அறிவித்தா வல்லது உயிர் அறியாதென்று, நல்லாகமம் ஓதும் நாடு சிவாகமங்களிலே சொல்லுமென்று விசாரித்தறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத் தஞ்செழுத்தால்
உற்றுருவாய் நின்றாடல் உள்ளபடி – பெற்றிடநான்
விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே
தண்ணார் அருளாலே சாற்று.

பொழிப்புரை :

நற்வத்தோர் தாம் காண நல்ல தவத்தையுடைய ஆன்மாக்கள் தரிசிக்கத் தக்கதாக, நாதாந்தத்து அஞ்செழுத்தால் உருவாய் உற்று நின்றாடல் நாதமுடியிலே சிவபிரான் பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு நிருத்தஞ் செய்கிற முறைமையை, உள்ளபடி நான் பெற்றிட உண்மையாக அடியேன் தரிசிக்கத்தக்கதாக, விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே ஆகாயத்தை அளாவியிருக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரே திருப்பதியாகக் கொண்டெழுந்தருளியிருக்கிற மெய்கண்ட தேவனே, தண்ணார் அருளாலே சாற்று குளிர்ந்த கிருபையினாலே அருளல் வேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்.

பொழிப்புரை :

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் எட்டும் இரண்டும் உருவாயிருக்கிற யகாரமாகிய ஆன்மாவிடத்திலே செய்யும் நடனத்தை, புதல்வா நவிலக் கேள் மாணவகனே சொல்லக் கேள், சிட்டன் பரமசிவன், சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே, அவாயம் அற நின்று ஆடுவான் சிகாரமாதி பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்கள் பிறவியறத்தக்கதாக நிருத்தஞ் செய்வன். (எட்டும் இரண்டும் அகரம் உரகம்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியி லேநகரம் – கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.

பொழிப்புரை :

ஐயனே நல் அம்பலத்தான் ஆடும்படி கேள் மாணாக்கனே பொன்னம்பலமுடையான் நிருத்தஞ் செய்கிற முறைமையைச் சொல்லுகிறோங்கேள், நாடுந் திருவடியிலே நகரம் நாடாநின்ற ஸ்ரீபாதத்திலே நகாரமாகவும், கூடும் உதரம் மகரம் பொருந்தப்பட்ட திருவுந்தியிலே மகாரமாகவும், வளர்தோள் சிகரம் வளராநின்ற திருத்தோளிலே சிகாரமாகவும், பகருமுகம் வா சொல்லப்பட்ட திருமுகத்திலே வகாரமாகவும், முடி ய பார் திருமுடியிலே யகாரமாகவும் கொண்டருளித் திருநிருத்தஞ் செய்வானென்று விசாரித்தறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

சேர்க்கும் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்(கு)
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்.

பொழிப்புரை :

ஆர்க்குந் துடி சேர்க்குங் (கரம்) சிகரம் ஒலிக்கின்ற டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்திலே சிகாரமாகவும், சிக்கன வீசு கரம் வா நன்றாக வீசிய ஸ்ரீ அத்தத்திலே வகாரமாகவும், அபயகரம் யகரம் அமைத்த ஸ்ரீ அத்தத்திலே யகாரமாகவும், பார்க்கில் அங்கி இறைக்கு நகரம் பார்க்குமிடத்து அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்திலே நகாரமாகவும், முயலகனார் தங்கும் அடிக்கீழ் மகரமதுதான் முயலகனை மிதித்த ஸ்ரீ பாதத்திலே மகாரமாகவும் கொண்டருளித் திருநிருத்தஞ் செய்வானென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்.

பொழிப்புரை :

ஓங்காரமே நல்திருவாசி பிரணவந்தானே நல்ல திருவாசியாகவும், உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறை சுடராம் பொருந்தி அப்பிரணவத்தை விட்டு நீங்காத பஞ்சாக்கரமே நிறைந்த உள்ளொளியாகவும், ஆங்காரம் அற்றார் அறிவர் யான் எனது என்னுஞ் செருக்கற்றவர்கள் அறிவார்கள், அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பின் பிறப்பு அற்றார், அழகிய திருவம்பலத்தான் செய்யும் நிருத்தமாகிய இதனைத் தரிசித்தவர்களே பின்பு சனன மரண மற்றவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி
நான்ற மலப்பதத்தே நாடு.

பொழிப்புரை :

துடியதனில் தோற்றம் டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்திலே சிருஷ்டியாகவும், அமைப்பில் தோயும் திதி அமைத்த ஸ்ரீ அத்தத்திலே ஆன்மாப் பொருந்தும் இரடிக்ஷயாகவும், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் சொல்லப்பட்ட அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்திலே மலசங்காரமாகவும், ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் உறுதியாக ஊன்றிய மலர்போலும் பொருந்திய ஸ்ரீ பாதத்திலே பிரபஞ்சத்தை மறைக்குந் திரோதமாகவும், நான்ற மலர்ப்பதத்தே முத்திநாடு தூக்கிய மலர்போலும் ஸ்ரீபாதத்திலே அநுக்கிரக முத்தியாகவும் திருக்கூத்துச் செய்வனென்று விசாரித்தறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து – நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பாதம் தான்.

பொழிப்புரை :

ஒரு பிரதியில் இது ‘மன்னதிகை’ என்ற கடைசிப் பாட்டின் பின் காணப்படுகிறது. மாயைதனை உதறி டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்தினாலே மாயையை நீக்கி, வல்வினையைச் சுட்டு அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்தினாலே கன்ம மலத்தைச் சுட்டு, மலம் சாய அமுக்கி ஊன்றிய ஸ்ரீ பாதத்தினாலே மலம் மேலிடாமல் அழுத்தி, அருள்தான் எடுத்து தூக்கிய ஸ்ரீ பாதத்தினாலே அருளே தனுவாக நிறுத்தி, நேயத்தால் ஆநந்த வாரிதியில் ஆன்மாவைத்தான் அழுத்தல்தான் கிருபையினாலே அமைத்த ஸ்ரீ அத்தத்தினாலே ஆநந்தவெள்ளத்திலே ஆன்மாவை அழுத்துவதுதான், எந்தையார் பாதந்தான் எம்முடைய பிதாவாகிய பரமேசுவரனுடைய திருக்கூத்து முறைமை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் – ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும்அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து.

பொழிப்புரை :

அந்த மோன மாமுனிவர் மும்மலத்தை மோசித்து முடிவான மௌனமுடைய ஞானிகள் கர்த்தாவினுடைய கிருபையினாலே மூன்று மலங்களையும் நீக்கி, தான் அந்தமான இடத்தே தங்கியி டும் ஆன்மபோதம் முடிந்தவிடத்திலே உதயமாகும், ஆனந்தம் மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் ஆனந்த வெள்ளத்தை முகந்து கொண்டநுபவிப்பதுதான், அருள் மூர்த்தியாக் கொண்ட திருவம்பலத்தான் கூத்து ஆன்மாக்களை இரக்ஷிக்கவேண்டுமென்னும் காருண்ணியமே திருமேனியாகக் கொண்ட திருவம்பலத்தான் திருநிருத்தஞ் செய்யும் முறைமையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் – வரைமகள்தான்
காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
பேணுமவர்க் குண்டோ பிறப்பு.

பொழிப்புரை :

உரை உணர்வுக் கெட்டா ஒருவன் மனவாக்குக் காயங்க ளுக் கெட்டாத ஒப்பற்ற பரமேசுவரன், மிகு பஞ்சாக்கரத்தால் கருணை உருக்கொண்டு மேலான பஞ்சாக்கரத்தினாலும் கருணையினாலும் திருமேனி கொண்டு, பரை இடமா (நின்று) 1‘உரையுணர்வுக் கெட்டா ஒருவன்மிகு பஞ்சாக் கரத்தால் வரைமகள் தான் பாதி பரையிடமாக் காணும்படியே’ என்பது முன் அச்சிட்ட பாடம். மேலே கண்ட திருத்தமான பாடம் அரசாங்கத் தொன்னூல் நிலயத்துள்ள மிகப் பழைய ஏடொன்றிலும் என்னிடமுள்ள ஏடொன்றிலும் கண்டது.
பராசக்தியாகிய திருவம்பலமிடமாக நின்று, வரைமகள்தான் காணும்படியே பாதியாகிய மலையரையன் மகள் காணும்படிக்கு, ஆடல் பேணுமவர்க்குப் பிறப்பு உண்டோ திருக்கூத்தை விரும்பினவர்களுக்குப் பின்பு பிறவியில்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்
ஓதீர் எழுத்தஞ்சும் உள்ளபடி – தீதறவே
அஞ்செழுத்தீ தாகில் அழியுமெழுத் தாய்விடுமோ
தஞ்ச அருட்குருவே சாற்று.

பொழிப்புரை :

நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர் தத்துவாதீதமாயிருக்கிற திருக்கூத்து முறைமையை நன்றாய் அருள்செய்தீர், அஞ்செழுத்து ஈதாகில் அழியுமெழுத்தாய் விடுமோ ஓதீர் பஞ்சாக்கரமெழுத்துக்களிலே ஒன்றாயிருக்குமாகில் அழிகிற எழுத்துக்களாமோ, தஞ்ச அருட்குருவே புகலிடமாயிருக்கிற கிருபையுடைய தேசிகனே, தீதறவே எழுத்தஞ்சும் உள்ளபடி சாற்று குற்றமற்ற பஞ்சாக்கரத்தினுண்மையை யுண்டானபடியே அடியேனுக்கருள் செய்ய வேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

உற்ற குறிஅழியும் ஓதுங்கால் பாடைகளில்
சற்றும் பொருள்தான் சலியாது - மற்றதுகேள்
ஈசனருள் ஆவி எழிலார் திரோதமலம்
ஆசில்எழுத் தஞ்சின்அடை வாம்.

பொழிப்புரை :

ஓதுங்கால் சொல்லுமிடத்து, உற்றகுறி அழியும் பொருந்தப்பட்ட எழுத்துக்களுடைய குறிகளழியும், பாடைகளிற் பொருள்தான் சற்றுஞ் சலியாது பதினெண் பாஷைகளிலே உண்டான பொருள்கள்சற்றுங்கெடாது,மற்றதுகேள்ஆதலால் அப்பஞ்சாக்கரத்தினுண்மையைச் சொல்லுவோங் கேள், ஈசன் அருள் ஆவி எழில்ஆர் திரோதம் மலம் ஆசில் அஞ்சு எழுத்தின் அடைவாம் சிவன் அருள் ஆன்மா அழகுபொருந்திய திரோதம் மலம் ஐந்துங் குற்றமில்லாத பஞ்சாக்கரத்தின் பொருண்முறைமையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று
நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள்
சிம்முதலா வோதுநீ சென்று.

பொழிப்புரை :

சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும் அவன் அஞ்சு எழுத்தின் அடைவாம் சிவன் அருள் ஆன்மா திரோதம் மலம் ஐந்தும் பரமேசுவரனுடைய பஞ்சாக்கரத்தின் பொருள்முறைமையாயினும், இவன் நின்று பக்குவப்பட்ட ஆன்மா நின்று, நம் முதலா ஓதில் அருள் நாடாது நகாரமுதலாக உச்சரிக்கில் அருள் பொருந்தாது, சிம்முதலாக நீ சென்று ஓது அருள்நாடும் சிகாரமுதலாக நீ பொருந்தி உச்சரிப்பாயானால் அருள் பொருந்தும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில் இராப்பகலற் றின்பத்தே – நண்ணி
அருளா னதுசிவத்தே யாக்கும் அணுவை
இருளா னதுதீர இன்று.

பொழிப்புரை :

அண்ணல்முதலா அழகார் எழுத்து ஐந்தும் எண்ணில் சிவமுதலாகச் சொல்லும் பொருளுடைய அழகு பொருந்திய அக்கரம் அஞ்சையும் (இடைவிடாது) தியானித்தால், அருளானது நண்ணி அருளானது பொருந்தி, அணுவை இன்று இருளானது தீர இராப்பகல் அற்ற இன்பத்தே சிவத்தே ஆக்கும் ஆன்மாவை இப்போது மலவிருள் நீங்கும்படி கேவல சகலங்கள் நீங்கிய விடத்தே ஆனந்த வருவத்தையுடைய சிவத்தின் கண்ணே சேர்க்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

ஆதி மலம்இரண்டும் ஆதியாய் ஓதினால்
சேதியா மும்மலமுந் தீர்வாகா – போதம்
மதிப்பரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி
விதிப்படியோ தஞ்செழுத்து மே.

பொழிப்புரை :

ஆதிமலம் இரண்டும் ஆதியாய் ஓதினால் சேதியா மும்மலமுந் தீர்வாகா ஆதியாகிய நகாரமும் மலமாகிய மகாரமும் இரண்டுமடியாக வுச்சரித்தால் உறுதியாக மும்மலமும் நீங்கி ஆன்மா அருளைப் பொருந்திப் பேரின்பவாழ்வை யுறமாட்டாது. உறுமுறைமை கூறுமிடத்து, மாறி விதிப்படி யோதஞ்செலுத்தும் (ஓதினால்) போதம் மதிப்பரிதாம் இன்பத்தே வாழலாம் நகாரமுதலாகவுச்சரிக்கும் முறைமையை மாறிச் சிவமுன்னாக அத்திருவெழுத் தஞ்சையும் விதிப்படி யுச்சரிக்க ஆன்மபோதத்தால் மதித்தற்கரிதாகிய பேரின்பவாழ்வில் எய்தி வாழலாம், நீயும் சிவமுன்னாக உச்சரிப்பாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும் – அஞ்செழுத்தே
ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம்
மோனந்த மாமுத்தி யும்.

பொழிப்புரை :

அண்ணல் அருமறையும் ஆகமமும் அஞ்செழுத்தே பரமேசுவரன் அருளிய அரிய வேதாகமங்களும் பஞ்சாக்கரமே, ஆதிபுராணம் அனைத்தும் அஞ்செழுத்தே முதன்மைபெற்ற புராணங் களனைத்தும் பஞ்சாக்கரமே, ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம் மோனந்த மாமுத்தியும் அஞ்செழுத்தே ஆனந்த நடனமும் தத்துவாதீதமாகிய மௌனமாயிருக்கும் பரமுத்தியும் பஞ்சாக்கரமே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

முத்தி தனைஅடைந்தோர் முந்துபழம் போதங்கி
வித்தகமாம் வீணை இவையிற்றின் – ஒத்த
இரதமணம் வெம்மை எழில்நாதம் போல
விரவுவரென் றோதும் விதி.

பொழிப்புரை :

முந்து பழம்போது அங்கி வித்தகமாம் வீணை இவையிற்றின் ஒத்த இரதம் மணம் வெம்மை எழில் நாதம்போல முதியபழமும் மலரும் அக்கினியும் விசித்திரமாகிய வீணையும் ஆகிய இவற்றின் (முறையே) இணங்கிய இரதமும் மணமும் வெம்மையும் அழகிய ஒசையும் போல, முத்திதனை அடைந்தோர் விரவுவர் என்று விதி ஓதும் பரமுத்தியைப் பெற்றவர் இரண்டறச் சிவத்திற் கலந்திருப்பரென்று வேதாகமங்கள் விதியாகச் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

தத்துவங்க ளெல்லாம் சகசமா ஆன்மாவிற்
பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் – முத்திதனிற்
சித்தமல மற்றார் செறிந்திடுவர் என்றுமறை
சத்தியமா ஓதியிடுந் தான்.

பொழிப்புரை :

பெத்தத்தில் தத்துவங்களெல்லாம் ஆன்மாவின் சகசமா நிற்கின்ற பெற்றிபோல் பெத்த தசையிலே தத்துவங்களெல்லாம் ஆன்மாவினிடத்திலே இரண்டற நிற்கு முறைமைபோல, முத்திதனிற் சித்த மலம் அற்றார் செறிந்திடுவரென்று சத்தியமா மறை ஓதியிடுந் தான் முத்திதசையிலே சகசமல மற்றவர்கள் சிவனிடத்திலே இரண்டறப் பொருந்தி நிற்பார்களென்று சத்தியமாக வேதாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

ஆதவன்தன் சந்நிதியில் அம்புலியின் ஆர்சோதி
பேதமற நிற்கின்ற பெற்றிபோல் - நாதாந்தத்(து)
அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்தின்பக்
கண்ணில் அழுந்தியிடும் காண்.

பொழிப்புரை :

ஆதவன்தன் சந்நிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் ஆதித்தப்பிரகாசத்தின் முன்னே சந்திரப்பிரகாசமானது இரண்டற நிற்கும் முறைமை போல, நாதாந்தத்து அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்து தத்துவாதீதமாயிருக்கின்ற சிவபிரான் திருவடியிலே ஆன்மாப் பொருந்தி, இன்பக் கண்ணில் அழுந்தியிடுங்காண் பேரின்பத்திலே இரண்டறப் பொருந்து மென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 48

சென்றிவன்றான் ஒன்றில் சிவபூ ரணம்சிதையும்
அன்றவன்றான் ஒன்றும்எனில் அந்நியமாம் – இன்றிரண்டும்
அற்றநிலை யேதென்னில் ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றமற நின்றதுபோற் கொள்.

பொழிப்புரை :

இவன்றான் சென்று ஒன்றில் சிவபூரணஞ் சிதையும் ஆன்மா சிவனைச் சென்று பொருந்துவனாகில் சிவனுக்குப் பூரணத்துவமில்லையாக வேண்டும், அவன்றான் ஒன்றுமெனில் அன்று அந்நியமாம் சிவன் ஆன்மாவைச் சென்று பொருந்துவனாகில் அப்போது ஆன்மா வேறாயிருக்க வேண்டும், இரண்டும் அற்ற நிலை ஏதென்னில் இரண்டு முறைமையுமல்லாமல் நின்ற நிலை எங்ஙனமெனில், இன்று ஆதித்தன் அந்தன் விழிக்குற்றம் அற நின்றதுபோற் கொள் இப்போது அந்தகனுக்குப் படலம் நீங்கின காலத்து ஆதித்தனொளியுங் கண்ணொளியும் இரண்டறக் கலந்து நின்றாற்போலுமெனக் கொள்வாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 49

வாக்கு மனமிறந்த வான்கருணை யாளன்உருத்
தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா – நீக்காப்
பதியினைப்போல் நித்தம் பசுபாச மென்றாய்
கதியிடத்து மூன்றினையுங் காட்டு.

பொழிப்புரை :

வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத் தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா மனவாக்குகளுக் கெட்டாத அருளே வடிவாய் உலகத்திலே தாக்கற்று நிற்கும் ஒப்பற்ற கர்த்தாவே, நீக்காப் பதியினைப் போற் பசுபாசம் நித்தமென்றாய் விட்டு நீங்காமலிருக்கும் பதியினைப்போற் பசுவும்பாசமும் நித்தியமென் றருளிச் செய்தாய், கதியிடத்தும் மூன்றினையுங் காட்டு முத்தியிலும் அம்மூன்று முதலும் அழியாமல் நிற்கிற முறைமையை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 50

முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள்
சுத்தஅநு போகத்தைத் துய்த்தல்அணு – மெத்தவே
இன்பங்கொ டுத்தல்இறை இத்தைவிளை வித்தல்மலம்
அன்புடனே கண்டுகொள்அப் பா.

பொழிப்புரை :

முத்திதனில் மூன்றும் முதலும் மொழியக்கேள் அப்பா அப்பனே முத்தியிலும் பதிபசுபாசமூன்று முதலுமழியாமல் நிற்கிற முறைமையைச் சொல்லுகிறோங் கேள், சுத்த அநுபோகத்தைத் துய்த்தல் அணு பேரின்பத்தைப் புசிக்கிறது ஆன்மா, மெத்தவே இன்பங் கொடுத்தல் இறை பேரின்பத்தை மிகுதியுங் கொடுக்கிறது கர்த்தா, இத்தை விளைவித்தல் மலம் பேரின்பத்தை மேன்மேலும் விளைக்கிறது மலம், அன்புடனே கண்டு கொள் அன்பினாலேயறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 51

அப்பாஇம் முத்திக் கழியாத காரணந்தான்
செப்பாய் அருளாலே செப்பக்கேள் – ஒப்பில்
குருலிங்க வேடமெனக் கூறில்இவை கொண்டார்
கருவென்றி நில்லார்கள் காண்.

பொழிப்புரை :

இம்முத்திக்கு அழியாத காரணந்தான் அருளாலே செப்பாய் அப்பா செப்பக் கேள் இப்பரமுத்திக்கு அழியாத ஏதுவைக் கருணையினாலே அருளென்ற மாணவகனே சொல்லக் கேளாய், ஒப்பில் குருலிங்கவேடமெனக் கூறில் (அக்காரணம்) ஒப்பில்லாத குரு லிங்க சங்கம வழிபாடென்று (சிவாகமம்) செப்புமானால்; இவை கொண்டார் இம்முப்பொருளின் வழிபாட்டை உண்மையாகக் கொண்டவர், கரு ஒன்றி நில்லார்கள் காண் கருப்பத்திலே பொருந்திப் பிறந்திறவார்களென்று அறிவாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

கற்றா மனம்போல் கசிந்துகசிந் தேஉருகி
உற்றாசான் லிங்கம் உயர்வேடம் – பற்றாக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும்
பத்திதனில் நின்றிடுவர் பார்.

பொழிப்புரை :

கற்றா மனம்போல் கசிந்து கசிந்தே உருகி உற்று ஈன்றண்ணிய கன்றையுடைய பசுவைப்போலப் பெரிதுங் கசிந்துருகி அமைந்து, ஆசான் லிங்கம் உயர்வேடம் பற்றாக சிவதேசிகரையும் சிவலிங்கப் பெருமானையும் உயர்ந்த சிவவேடத்தாரையும் பொருளாகக் கொண்டு, முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனில் நின்றிடுவர் பார் சீவன்முத்தியில் நிற்குந் தலைவரும் மலவாசனை முற்றும் ஒழித்தற்கேதுவாகிய அன்புசெய்யும்வழியே ஒழுகுவர் (ஆதலால் நீயும் அவ்வன்பின் வழியை) நோக்குவாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

வாழ்ந்தேன் அருட்கடலே வற்றாப் பவக்கடலில்
வீழ்ந்தே அலையாமல் மேதினியில் – சூழ்ந்துவிடா
வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே
உண்மைத் தவப்பயனே உற்று.

பொழிப்புரை :

சூழ்ந்துவிடா வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே (மெய்யன்பர்) சூழ்ந்து நீங்காத திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருக்கின்ற சுவேதவனப்பெருமாளென்னும் பிள்ளைத் திருநாமத்தையுடைய மெய்கண்டதேவனே, அருட்கடலே கிருபா சமுத்திரமே, உண்மைத் தவப்பயனே உண்மையாகிய சரியை முதலிய தவத்தினர்க்குப் பயனாயுள்ளவனே, வற்றாப் பவக்கடலில் வீழ்ந்தே மேதினியில் அலையாமல் உற்று வாழ்ந்தேன் வற்றாத பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து உலகவியலிற் சுழலாது (முத்திரைக்கரையாகிய உனது திருவடியை) அடைந்து வாழ்ந்தேன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 54

மன்னதிகை வாழும் மனவா சகங்கடந்தான்
மின்னனையார் வாழ்விலுறா மெய்கண்டான் – பன்மறைகள்
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மைவிளக் கஞ்செய்தான் உற்று.

பொழிப்புரை :

(மேலே ங அம். பாடலில் குறிப்பிட்ட இரண்டு ஏடுகளிலும் நூலிறுதியில் இப்பாடல் ருச என்ற எண்ணோடு காணப்படுகிறது. அ)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.

பொழிப்புரை :

நிட்களமாய் ஒருவராலும் அறிதற்கரியதாகிய சிவம் ஆசாரிய மூர்த்தமாகி வந்ததென்று கருதி உம்முடைய குற்றத்தினின்று நீங்குவீராக. ஞானத்தைத் தான் விரும்பாமல் தானே வலியக் கொடுத்ததென்று கருதி உம்முடைய குற்றத்தினின்று நீங்குவீராக.
உந்தீபற வென்பதற்கு மேற்செய்யுள்களுக்கும் இப்படிப் பொருளுரைக்க. பறவென்றது ஒருமைப்பன்மை மயக்கம். இப்படியன்றிப் பறக்கவென்னும் வியங்கோளைப் பறவென்று விகாரமாக்கிக் கர்த்திருவாலே உம்முடைய தீமைகளெல்லாம் பறக்கக் கடவதெனினு மமையும். இதற்கும் அப்படியன்றிப் பறக்கவென்னு மெச்சத்தைப் பறவென விகாரமாக்கி உம்முடைய தீமைகளெல்லாம் பறந்துபோம்படிக்குக் கருதி நிற்பீரெனினுமமையும். இதற்கு நிற்பீரென்பது வருவிக்க. இம்மூவகையன்றிப் பொருளுண்டாயினுங் காண்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

பழக்கந் தவிரப் பழகுவ தன்றி
உழப்புவ தென்பெண்ணே யுந்தீபற
ஒருபொரு ளாலேயென் றுந்தீபற.

பொழிப்புரை :

விடயங்களிலே பழகின பழக்கந் தவிரும்பொருட்டு ஒப்பற்ற திருவருளாலே சரியை கிரியாயோகங்களிலே பழகுவதை விட்டு அந்த விடயங்களுக்காக முயற்சி பண்ணுவது என்ன புத்தியாயிருந்தது நெஞ்சமே.
ஆன்மாவைப் பெண்ணென்றது சிவனாகிய தலைவனோடே கூடி இன்பத்தை யனுபவிக்கையால்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்
பிண்டத்து வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.

பொழிப்புரை :

கண்ணிலே காணப்பட்ட ஆசாரியரைக் கொண்டு தம்மு டைய செயலைக் கொடுத்தவர் இப்போது எடுத்த சரீரவசமாய் நில்லார்கள். மேலும் இவர்களுக்குப் பிறப்புமிறப்புமில்லை.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 4

இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியும் அறிவதன் றுந்தீபற.

பொழிப்புரை :

நான் பெற்ற பேரானந்த அறிவை இப்படியிருந்த தென்று எப்படிச் சொல்லப்போகிறேன். அதுபோலே யிருந்தது, அது வேறேயுமில்லை, அந்த அறிவும் ஆன்மபோதத்தா லறியப்பட்ட அறிவல்ல.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 5

ஏகனு மாகி அனேகனு மானவன்
நாதனு மானானென் றுந்தீபற
நம்மையே ஆண்டானென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மாவிலே கலந்திருக்கையால் ஏகனுமாகி, அவனவளதுவாய்ப் பயன்கொடுத்தலால் அனேகனுமானவன் ஆசாரியனுமானான். அப்படித் திருமேனி கொண்டவிடத்தும் எண்ணிறந்த ஆன்மாக்களெல்லாமிருக்க நம்மையே அடிமை கொண்டான்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 6

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற.

பொழிப்புரை :

நம்முடைய செய்தியுமற்று இப்படிச் செய்தியற்றோமென்கிற போதமுமற்ற பின்னர் நம்முடைய செயலையெல்லாங் கர்த்தன் தன்னுடைய செயலாக ஏற்றுக் கொண்டான். அது மட்டுமோ, இதுவரையும் பெறாததனை இப்போது நமக்குத் தந்தான்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 7

உள்ள முருகி யுடனாவர் அல்லது
தெள்ள அரியரென் றுந்தீபற
சிற்பரச் செல்வரென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மா(க்கள்) சிவனுடனே கூடிநிற்குமுறைமை எப்படியென்னில், ஆன்மா(க்கள்) அக்கினியைச் சேர்ந்த மெழுகு போல உருகிச் சிவனுடனே கூடிநிற்கிறதல்லாமல் தம் போதத்தாற் சிவனை யறிதலிலர்; அதுவுமன்றி மேலாகிய ஞானச் செல்வத்தினை யுடையவர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 8

ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல வுந்தீபற
விமலற் கிடமதென் றுந்தீபற.

பொழிப்புரை :

மனம் பலவற்றிலும் வியாபியாமல் 1ஆறாதாரங்களிலும் அந்தந்தத் தேவதைகளைத் தியானித்த பழக்கத்தினலே நிராதாரமாகிய மனசலனமற்றவிடத்தே நீ சென்று மேலிடமாகிய திருவருளினிடத்திலே செல்லுவாயாக; கர்த்தாவுக்கிருப்பிடம் அந்தத் திருவருளே.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 9

ஆக்கில்அங் கேயுண்டாய் அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கிற் பரமதன் றுந்தீபற
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆறாதாரங்களிலே தியானிக்கும்பொழுது அவ்விடத்திலே யுண்டாய்த் தியானந் தப்பின காலத்து அவ்விடத்திலே இல்லையாய், உண்டானபொழுதும் விசாரித்துப் பார்க்குமிடத்து மேலான பொருளுமல்லவாமாகையால், நம்முடைய பாவனைக் கெட்டாத பொருள்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 10

அஞ்சே யஞ்சாக அறிவே யறிவாகத்
துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற
துய்ய பொருளிதென் றுந்தீபற.

பொழிப்புரை :

பஞ்சபூத பரிணாமமாகிய சரீரத்தைப் புறம்பேயிருக்கிற பஞ்சபூத பரிணாமங்களைப் போல அன்னியமாகக் கருதித் தன்னுடைய போதத்தை விட்டுத் திருவருளே தனக்கறிவாகக் கருதி மலவாதனையாலே மயங்காமல் கர்த்தாவை உணர்ந்திருப்பாயாக. தூய்மையாயிருக்கிற பொருள் இப்படி யறியப்பட்ட பொருளே.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 11

தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரம்
நோக்கிற் குழையுமென் றுந்தீபற
நோக்காமல் நோக்கவென் றுந்தீபற.

பொழிப்புரை :

சடசித்துக்கள் எல்லாவற்றிலும் பொருந்தியிருக்கச் செய்தேயும் ஒன்றிலுந் தோய்வற்று நிற்கிற ஒப்பற்ற மேலான கர்த்தாவை உன்னுடைய போதத்தாற் பார்க்கில் கைகூடான். உன்னுடைய பார்வையை விட்டு அருளினாலே பார்க்கக் கைகூடும். குழையுமென்பது குறிப்புமொழி. கைகூடுமென்பது வருவிக்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 12

மூலையி ருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற
தவத்தில் தலைவரென் றுந்தீபற.

பொழிப்புரை :

தத்துவங்களாகிய மூலைகளிலே கிடந்த ஆன்மாக்களைச் சிவானுபவமாகிய முற்றத்திலே கொண்டு வந்து விட்டவர் மிகவும் பெரியவர்; அந்தப் பெரியவருந் தவத்தினாலே காணப்பட்ட பெரியவர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 13

ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற் றிடஞ்சிவம் உந்தீபற
தேடும் இடமதன் றுந்தீபற.

பொழிப்புரை :

சலனமில்லாமல் எங்கும் வியாபித்து நின்ற திருவருளாகிய ஊரிலே சென்று அப்பால் வேறொன்றையுந் தேடாமல் நின்றவிடஞ் சிவானுபவம்; அந்த இடமும் ஆன்ம போதத்தாலே தேடப்பட்ட இடமல்ல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனேநின் றுந்தீபற
உன்னையே கண்டதென் றுந்தீபற.

பொழிப்புரை :

அனாதியே உன்னிடத்திலே பொருந்தின திருவருளைக் கர்த்தா ஆசாரியனாக வந்து அதிட்டித்து எழுப்புதலாலே நீ அந்தத் திருவருளுடனே கூடி நிற்றலாலே அந்தக் கர்த்தா உன்னையே கண்டு கொண்டு நிற்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றில்அப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
பாவிக்கில் வாராதென் றுந்தீபற.

பொழிப்புரை :

விடயங்களிலே யிருக்கிற பற்றை யறுப்பதாகிய ஒப்பற்ற திருவருளை நீ பற்றினாயாகில் அந்தத் திருவருளாகிய பற்றைக் கர்த்தா அறுத்துத் தானாக்கிவிடுவன்; இந்தத் தன்மை உன்னுடைய பாவனையால் வாராது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

உழவா துணர்கின்ற யோகிகள் ஒன்றோடுந்
தழுவாது நிற்பரென் றுந்தீபற
தாழ்ந்த மணிநாப்போ லுந்தீபற.

பொழிப்புரை :

விடயங்களுக்கு முயற்சி பண்ணாமல் திருவருளை மாத்திரமறிந்திருக்கிற சிவயோகிகள் கன்மவசத்தால் விடயம் பொருந்தினாலும் நாக்கு விழுந்த மணியினது செயலறுதிபோல ஒரு விடயத்திலும் பொருந்தாது நிற்பர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற
நேர்பட அங்கேநின் றுந்தீபற.

பொழிப்புரை :

திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலியாகிய பிரகாச ஒளிவழியே சென்று அவ்விடத்திலே செவ்விதாக நின்று கர்த்தாவைக் கண்டு தெரிசிப்பாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

மருளுந் தெருளும் மறக்கும் அவர்கண்
அருளை மறவாதே யுந்தீபற
அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற.

பொழிப்புரை :

கர்த்தாவினிடத்திலேயுள்ள திருவருளை நீ மறவா திருந்தாயாயின் உன்னுடைய நினைப்பு மறப்பும் அற்றுப்போம்; இவ்விடத்திலே நீ செய்ய வேண்டியது அது வொன்றுமே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

கருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்
ஒருமகள் கேள்வனென் றுந்தீபற
உன்ன அரியனென் றுந்தீபற.

பொழிப்புரை :

திருவருளுடனே கூடி நிற்கும்பொழுது சிவனைக் கூட வேணுமென்று விரும்புதற்கு முன்னே உன்னுடைய விருப்பங் கெடும்படிக்கு உன்னுடனே வந்து பொருந்துவன் ஒப்பற்ற பராசக்தியினுடைய கணவன்; இப்படியன்றி உன்னுடைய போதத்தாற் கிட்டுதற்கரியன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

இரவு பகலில்லா இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற
விரைய விரையநின் றுந்தீபற.

பொழிப்புரை :

இரவாகிய ஆணவமும் பகலாகிய மாயையுமில்லாத இன்பவெளியாகிய திருவருளுடனே சீக்கிரத்திலே கூடிநின்று உந்தீபற. விரவி விரவியென்பதும் விரைய விரையவென்பதும் அடுக்கு. இருமலமுஞ் சொல்லவே வினைமலமும் அடங்கிற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்(கு)
அல்லனாய் ஆனானென் றுந்தீபற
அம்பிகை பாகனென் றுந்தீபற.

பொழிப்புரை :

உண்டென்று சொல்லப்பட்ட கடபடாதிப் பொருள்களும் உண்டென்று சொல்லப்படாத ஆகாயப்பூ முயற்கோடாதிப் பொருள்களுமாகிய இவ்விரண்டு தன்மையுமில்லனாய் வேறே ஒரு தன்மையானான்; அவன் யாரென்னிற் பராசத்தியினுடைய கணவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினில்
ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற
அல்லாத தல்லாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

யோகப் பயிற்சியினாலே பிராணவாயுவை உள்ளடக்கித் தன்னுடைய போதத்தைத் திருவருளிடத்திலே செலுத்துவதே வெற்றி; அல்லாத முயற்சிகளெல்லாம் இழிவு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்
வெள்ள வெளியாமென் றுந்தீபற
வீடும் எளிதாமென் றுந்தீபற.

பொழிப்புரை :

மயக்கவல்ல கள்ளத்துடனே மயங்கவல்ல வீட்டுடையவன் கூடினது போலத் திருவருளுடனே ஆன்மா கூடினால் அந்த ஆன்மாவினுடைய இதயம் மலமாயை கன்மம் நீங்கி வெட்டவெளியாயிருக்கும். அப்பால் சிவனைப் பொருந்துகிறதும் எளிதாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

எட்டுக்கொண் டார்தம்மைத் தொட்டுக்கொண் டேநின்றார்
விட்டா ருலகமென் றுந்தீபற
வீடேவீ டாகுமென் றுந்தீபற.

பொழிப்புரை :

அட்ட மூர்த்தத்தைக் கொண்ட சிவனைச் சார்ந்து நின்றவர்கள் தேக முதலிய பிரபஞ்ச பதார்த்தங்களிலே பற்று விட்டவர்கள். இப்படிப் பற்றுவிட்டவர்களே பற்றுவிட்டவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே
ஒத்ததே யொத்ததென் றுந்தீபற
ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மாவும் முன்னே பொல்லாங்கு விளைக்கப்ட்ட அந்தக்கரணங்களுந் திருவருளுடனே பொருந்துதலே இருவினையொத்தது. இருவினை யொவ்வாததனாலே திருவருளைப் பொருந்துதல் கூடாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

உள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே
மொள்ளா அமுதாமென் றுந்தீபற
முளையாது பந்தமென் றுந்தீபற.

பொழிப்புரை :

சரியை கிரியைக்காரரைப்போல ஏகதேசப் படுத்திப் புறம்பே தியானிக்கும் தியானமும் யோகக்காரரைப் போல ஏகதேசப்படுத்தி உள்ளே தியானிக்குந் தியானமும் அற்றால் உன்னிடத்திலே ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத சிவானுபவம் உண்டாம். அப்பால் பாசஞானம் பசுஞானமாகிய பெந்தம் உன்னிடத்திலே பொருந்தாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்(கு)
அவிழுமிவ் வல்லலென் றுந்தீபற
அன்றி அவிழாதென் றுந்தீபற.

பொழிப்புரை :

பிரபஞ்சத்திலே வியாபித்திருப்பினும் அதிலே பெந்த மில்லாமலிருக்கிற திருவருளுடனே கூடி நிற்கிறவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்திலேயுள்ள துன்பங்களெல்லாம் நீங்கும். திருவருளுடனே கூடினாலொழிந்து துன்பங்கள் நீங்காது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற
பெறுவதிங் கென்பெண்ணே யுந்தீபற.

பொழிப்புரை :

வித்தாகிய ஞானாசாரியனைத் தேடிப் பாசஞானம் பசுஞானமாகிய முளை யிழந்தவர்கள் திருவருளாகிய பித்துக் கொண்டவர்கள். இப்படியன்றி முன்சொன்ன இருவகை ஞானங்களாலும் பெறுகிற பிரயோசனம் ஏதிருக்கிறது, நெஞ்சமே, சொல்லாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

சொல்லும் இடமன்று சொல்லப் புகுமிடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால்நா மென்செய்கோ முந்தீபற.

பொழிப்புரை :

சிவனுடைய எல்லையானது ஆன்மாக்களாலே சொல்லப்பட்ட எல்லையல்ல, ஆசாரியர் சொல்ல ஆன்மாக்கள் புகுதுகிற எல்லையே; இப்படியாகையால் நாம் அந்த எல்லையை ஏதாகச் சொல்லப் போகிறோம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

வீட்டில் இருக்கிலென் நாட்டிலே போகிலென்
கூட்டில்வாள் சாத்தியென் றுந்தீபற
கூடப் படாததென் றுந்தீபற.

பொழிப்புரை :

அனாதியே ஆன்மாவாகிய கூட்டிலே (வாள் சாத்தி=) வாழ்ந்திருக்கப்பட்ட திருவருளைவிட்டு வீடாகிய துறவறத்திலே நின் றாலும் பயனில்லை, தீர்த்தம் முதலானவற்றைக் குறித்து நாடுகளிலே சென்றாலும் பயனில்லை; இவ்விருவகையாலுங் கூடப்படாத பொருளாயிருக்குஞ் சிவம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவி யறாதேயென் றுந்தீபற
அவ்வுரை கேளாதே யுந்தீபற.

பொழிப்புரை :

விசாரிக்கு மிடத்துச் சைவசித்தாந்த மொன்றுமே யொழிந்து மற்றச் சமயங்களெல்லாஞ் சாவியாகப் போமாகையால், அந்தச் சமயங்கள் நிலையிலே நின்று நரகத்திலே விழுந்து துன்பப்படாதே; அந்தச் சமயங்களுடைய நூல்களையுங் கொள்ளாதே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

துரியங் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரந்
துரியமாய் நின்றதென் றுந்தீபற
துறந்தார் அவர்களென் றுந்தீபற.

பொழிப்புரை :

நின்மல துரியத்தைக் கடந்த சிவனடியார்கட்குச் சாக்கிரமும் மேலான திருவருளால் நின்றது. இப்படி நின்றவர்களே முற்றத் துறந்தவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் றுந்தீபற.

பொழிப்புரை :

திருவருளைப் பெற்ற காலத்துண்டாகிய சிற்றின்பங்களெல்லாஞ் சிவானுபவமாய் முடியும்படிக்கு வரும்; இந்த முறைமையாலே பின்பு தனுகரண போகங்கள் இவனுக்குண்டாகாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

பேரின்ப மான பிரமக் கிழத்தியோ(டு)
ஓரின்பத் துள்ளானென் றுந்தீபற
உன்னையே ஆண்டதென் றுந்தீபற.

பொழிப்புரை :

முன்போலப் பல துக்கங்களையும் பல சுகங்களையும் விட்டுத் தொட்டுமிராமல், இப்போது பெரிய இன்பமான சிவசத்தியுட னே கூடி ஒப்பற்ற இன்பத்தை யுடையவனானாய்; உன்னையே இப்படி யாண்டான், எல்லார்க்குங் கிடையாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டாரென் றுந்தீபற
காணாதார் காணாரென் றுந்தீபற.

பொழிப்புரை :

பெண்டிராகிய ஆன்மா பேயின் வசமாய்ப் பிடிபட்டவனைப் போலவும் ஆண்மக்களாகிய சிவன் பிடித்த பேயைப் போலவும் பெற்றவர்களே அருட்கண்ணாலே கண்டவர்கள். இப்படிப் பெறாத பேர்கள் அந்தக் கண்ணாலே காணாத பேர்கள். பிடியென்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயர், ஆன்மா, பெண்டிரைப் போலவும் பிடிபட்டவனைப் போலவும் சிவன் ஆண்மக்களைப் போலவும் பேயைப் போலவும் எனினும் அமையும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

நாலாய பூதமும் நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாமென் றுந்தீபற
நாதற் கிடமதென் றுந்தீபற.

பொழிப்புரை :

நாலாம் பூதமாகிய வாயுவையும் நாதமாகிய சத்தப் பிரமத்தையும் ஆசாரியர் உபதேசித்த முறையே யறிந்திடில் நாலாம் நிலையாகிய திருவருள் கைகூடும். சிவன் இருத்தற்கிடம் அந்தத் திருவருளே. யோகப்பயிற்சி வேண்டுமென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி
நின்ற பரிசறிந் துந்தீபற
நீசில செய்யாதே யுந்தீபற.

பொழிப்புரை :

நீ விடயங்களிலே செல்லும் வழியெல்லாஞ் சிவனிடத்திலே செல்லும் வழியாம்படிக்குச் சிவன் செலுத்துவிக்கிற முறைமையையும் நீ செல்லுகிற முறைமையையும் அறிந்து கர்த்தா செலுத்தாமல் நாமே செல்லுகிறோமென்கிற செய்தியைப் பொருந்தாதே.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 38

பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீயறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ண முந்தீபற.

பொழிப்புரை :

பொற் கொழுக் கொண்டு வரகுக் குழுவதுபோல முத்திக்கேதுவாயிருக்கிற மனவாக்குக் காயங்களைக் கொண்டு விடயங்களுக்கு முயற்சி பண்ணுவது என்ன பயன். அக்கொழுப் போன்ற மனவாக்குக் காயங்களினுடைய அருமையை யறிந்து அவையாலே சரியைகிரியாயோகங்களைச் செய்து பின்பு திருவருளையறிந்து வேறொன்றையும் அறியாவண்ணம் நில். நில்லென்பது வருவிக்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 39

அதுவிது வென்னா தனைத்தறி வாகும்
அதுவிது வென்றறிந் துந்தீபற
அவிழ்ந்த சடையானென் றுந்தீபற.

பொழிப்புரை :

அதுவிதுவென்று சுட்டி யறியாமல் எல்லாவற்றையும் ஒரு காலத்திலே அறியுமறிவாகிய அந்தக் கர்த்தாவை அதுவே பொருளென்று ஐயந்திரிபற அறிந்து உந்தீபற; அந்தப் பொருள் யாதென்னில் அவிழ்ந்த சடையினையுடையானென்று உந்தீபற.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 40

அவனிவ னான தவனருளா லல்ல(து)
இவனவ னாகானென் றுந்தீபற
என்றும் இவனேயென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மா சிவனானது அந்தச் சிவனுடைய கிருபையினாலேயல்லாமல் வேறொன்றினாலும் ஆன்மா சிவனாகான்; அப்படியான காலத்தும் பேரின்பத்தை யனுபவிப்பதொழிந்து சிவனுடைய கிருத்தியத்தைப் பண்ணமாட்டான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

முத்தி முதற்கொடி மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்ததென் றுந்தீபற
அப்பழ முண்ணாதே யுந்தீபற.

பொழிப்புரை :

முத்தியடைதற் கேதுவாகிய ஆன்மாவாகிய கொடியிலே ஆசையாகிய கொடி படர்ந்து அத்திப்பழம்போல இதாகிதங்கள் மிகுதியு முளவாயின; அந்த இதாகிதங்களைப் பொருந்தாதே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

அண்ட முதலாய் அனைத்தையு முட்கொண்டு
கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற
குறைவற்று நின்றதென் றுந்தீபற.

பொழிப்புரை :

) பிருதிவியண்ட முதலாகிய ஆறத்துவாவையும் உனக்குச் சரீரமாகக் கொண்டிருந்து இப்போது கொண்டிருக்கிற சரீரத்தைப் பொருளென்று கொள்ளாதே; இத்தன்மையே குறைவற்று நின்ற தன்மை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற
வரட்டுப் பசுக்களென் றுந்தீபற.

பொழிப்புரை :

ஆன்மாவாகிய சரீரத்துக்குள்ளே உயிராயிருக்கப்பட்ட சிவஞானமாகிய தேனையுண்டு பேரின்பத்தை யனுபவிக்க மாட்டாமல் மெய்போன்ற விடயமாகிய கள்ளையுண்டு மயங்குவர்கள்; அவர்கள் யாரென்னில் வரட்டுப் பசுக்களே போன்று பயன்படாத ஆன்மாக்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

சிந்தையி லுள்ளுமென் சென்னியி லுஞ்சேர
வந்தவர் வாழ்கவென் றுந்தீபற
மடவா ளுடனேயென் றுந்தீபற.

பொழிப்புரை :

தன்னுடைய திருவடித் தாமரையானது என்னுடைய இதயத்திடத்திலேயும் என்னுடைய தலையிடத்திலேயுஞ் சேரும்படிக்கு ஆசாரியனாகத் திருமேனி கொண்டுவந்த சிவன் எக்காலமும் பராசத்தியுடனே கூடி வாழ்ந்திருக்கக் கடவது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

வைய முழுதும் மலக்கயங் கண்டிடும்
உய்யவந் தானுரை யுந்தீபற
உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற.

பொழிப்புரை :

உய்யவந்த தேவநாயனார் செய்த திருவுந்தியாரென்னும் நூலினுடைய உண்மையை யறிந்தவர்கள் பிரபஞ்ச முழுதையும் (மலக் கயம்=) அஞ்ஞான சாகரமாகக் காணக்கடவது.
(குறிப்பு : திருவுந்தியார் கி.பி. 1147லும் திருக்களிற்றுப்படியார் 1177 லும் செய்யப்பட்டன. நூலாசிரியர்களைக் குறித்து வழங்கும் வரலாற்றை, சமாஜத்து சித்தாந்த சாத்திர முதற்பதிப்பின் உஎ, உஅம் பக்கங்களிற் காணலாம். இவ்விரு நூல்களுக்கும் அங்கே பதிக்கப்பட்ட உரை திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் செய்த விரிவுரை. இந்தப் பதிப்பில் வெளியிடப்படுவது வேறு உரை. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. உரைகளின் இறுதியில் எழுதப் பெற்றுள்ள ‘அம்பலவாண குருவே துணை’, ‘நமச்சிவாய குருவே துணை’ என்ற தொடர்களினால் இவ்வுரையாசிரியர் திருவாவடுதுரையாதீனத்தைச் சேர்ந்தவர் என்று கருதலாம். இவருரையைத் தழுவியே தம்பிரானது விரிவுரை செய்யப் பெற்றது; இருவர் உரையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். நூல்கள் இரண்டும் பழைய தமிழ் முறையில் எளிய செவ்விய நடையில் அமைந்திருப்பதற்கேற்ப, இவ்வுரையாசிரியரும் எளிமையாக இலக்கியச் சுவைபொருந்தத் தம் பொழிப்புரையைச் செய்திருக்கிறார். உரைத் தொடக்கத்தில் நூலாசிரியர்களின் ‘சந்தான பரம்பரை’யைக் கூறுகிறார். வழக்கிலுள்ள வரலாற்றுக்கு இது சிறிது மாறுபட்டிருக்கிறது. சில பாடல்களுக்கு இவர் வேறான பாடம் கொண்டிருக்கிறார்; இவற்றுட் பெரும்பாலான சிறந்தவை. காலஞ்சென்ற திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் எழுதி வைத்திருந்த காகிதப்பிரதியே இப்பதிப்புக்கு ஆதாரமானது; திருவுந்தியாருரையை மட்டும் அவர்களே காலஞ் சென்ற திரு. எம்.பி.எயி. துரைசாமி முதலியாரவர்களுடைய ஏட்டோடு ஒப்பு நோக்கித் திருத்தி வைத்திருந்தார்கள். திருகளிற்றுப்படியாருக்கு இவ்வுரையன்றி, சிறந்த அனுபூதிமானொருவர் எழுதிய வேறு பழைய உரையொன்றும் உண்டு; இது இன்னும் அச்சில் வெளிவரவில்லை.) அருணாச்சலம்

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

பொழிப்புரை :

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.

பொழிப்புரை :

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

என்னறிவு சென்றளவில் யானின்(று) அறிந்தபடி
என்னறிவி லாரறிக என்றொருவன் - சொன்னபடி
சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான் எனக்கதனைச்
சொல்லக்கேள் யானுனக்(கு) அச் சொல்.

பொழிப்புரை :

என்னறிவு சென்றளவில் யான் நின்று அறிந்தபடி என்னுடைய போதங் கழன்றவிடத்து யான் மாத்திரம் நின்று சிவஞானத்தை யறிந்த முறைமை யெப்படி என்னில்; என்னறிவிலார் அறிக என்று ஒருவன் சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கதனை என்னறிவென்கிற தன்மையில்லாதவர்களே கேட்பீராக என்றொருவன் சொன்ன முறையே அந்த உபதேசத்தை எனக்குச் சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான்; சொல்லக்கேள் யான் உனக்கு அச்சொல் அந்த உபதேசத்தை யான் உனக்குச் சொல்லுகிறேன் கேட்பாயாக.
இதனுள், குருபரம்பரை இல்லாமற் சிவஞானம் பிரவேசியாதென்பதும் இந்நூல் குருபரம்பரை யுபதேசத்தைப் பெற்றுப் பாடின நூலென்பதுங் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து.

பொழிப்புரை :

அகளமயமாய் நின்ற அம்பலத்தெங் கூத்தன் - அரூபியாய் நின்ற சிவனானவன்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு; நிகளமாம் - ஆணவ மூலமலம் அகல ஆண்டான் காண் மாணவக என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து விலங்குபோலும் ஆணவமாகிய மூலமலமானது என்னை விட்டு நீங்கும்படிக்கு அடிமையாகக் கொண்டான். சீடனே, இந்த அதிசயத்தை அறிவாயாக.
ஆணவம் அகலவே கன்மமும் மாயையும் அகலுதல் கூற வேண்டாமென்பது கருத்து. இதனுள் சிவன் திருமேனி கொண்டாலொழிய ஆன்மாக்களுக்கு முத்தியில்லை யென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்க ளெங்கே உணர்வெங்கே - பாகத்(து)
அருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு.

பொழிப்புரை :

ஆகமங்கள் எங்கே அறுசமயந் தானெங்கே யோகங்கள் எங்கே உணர்வெங்கே - இருபத்தெட் டாகமங்களையும் ஆரறிவார், சித்தியார் சுபக்கம் 1ம் பாட்டுரையிற் காண்க. ஆறு சமயங்களினுடைய நீதியையும் ஆரறிவார், யோகப்பயிற்சியையுஞ் சிவனுடனே கூட்டத்தையும் ஆரறிவார், சிவஞானத்தினுடைய முறைமையையும் ஆன்மபோதத்தினுடைய முறைமையையும் ஆரறிவார்; பாகத்து அருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு மலபரிபாகத்திலே அருளாகிற திருமேனியுந் தானுமாக வந்து அடிமை கொள்ளாதே போனால் முடிவாகிற பேரின்பத்தை ஒருவராலும் அறியக்கூடாது; கூடுமாயிற் சொல்லுவாயாக.
புறச்சமயமாறெனினும் பக்கத்தருளெனினும் அந்தப் பேரின்பமெனினுமாம். இதனுள், சிவன் திருமேனி கொள்ளாதே போனால் ஆகமமுதலாகிய கலைகளையும் அன்னிய சமயங்களினுடைய இழிபையும் யோகமுதலிய கிரியைகளையும் அறியக்கூடாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.

பொழிப்புரை :

மேகத்தின் வாய்ப்பட்ட தண்ணீரைச் சிறிது குடித்தாலும் தாகம் தணிகிறதுபோலச் சமுத்திரத்து நீரைப் பெருகக் குடித்தாலுந் தாகந் தணியாது; இதுபோல, நல்ல குருவினுடைய சில வார்த்தைகளினாலே உள்ளந் தெளிகிறதுபோல வெகுநூல்களைக் கற்றாலும் உள்ளந் தெளியாது; தெளியுமானால், தெள்ளிய அறிவினையுடைய சீடனே, சொல்லுவாயாக.
இதனுள், குருவையின்றி நூல்களைக் கற்கிற் பயனில்லையென்று கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீக்கினதாங் – கென்றால்
உருவுடையான் அன்றே உருவழியப் பாயும்
உருவருள வல்லான் உரை.

பொழிப்புரை :

இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில் நின்ற மலமனைத்தும் நீக்கினது - இப்பொழுது கோமயமல்லவோ இப்பூமியின் கண்ணுள்ள பல விகார முதலிய ஆசூசங்களை நீக்குவது; ஆங்கென்றால் ஆசாரியர் திருமேனி கொண்டு பிறவியறுக்கிறதும் அதுபோலவானால்; உருவுடையான் அன்றே உருவழியப் பாயும் உருவருள வல்லான் உரை சிவன் நம்மைப் போல சரீரத்தையுடையனல்லவே, நம்முடைய பிறவி அழியும்படிக்குத் தோன்றுந் திருவருளாகிய திருமேனியெடுக்கவல்லவனே; இதற்கு மாறுபாடுண்டாகிற் சொல்லுவாயாக.
இதனுள், ஆசாரியர் திருமேனி இருமாயையிலே யுண்டான சரீரமல்லவென்பது உவமையினாலே கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்த தென்னாதே – அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று.

பொழிப்புரை :

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே கண்ணிலே காணப்பட்ட ஆசாரிய மூர்த்தத்தைக் கொண்டு தங்களுடைய போதத் தொழிலைக் கெடுத்தவர்களே; அண்டத்தின் அப்புறத்த தென்னாதே சீவன்முத்தித் தன்மை யுடையதிது பரமுத்தித் தன்மையினையுடையதிது என்று இரண்டு தன்மையையு மிடையிட்டுக் காணாமல்; அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆர் அறிவுஞ் சென்றறியும் எப்புறமுங் கண்டவர்கள் இன்று பரமுத்தியையுஞ் சீவன் முத்தியையும் எல்லா ஞானவான்களுடைய அறிவும் பொருந்தி யறியுந் திரிபதார்த்தங்களையும் (=பதி பசு பாசங்களையும்) இப்பொழுதே மயக்கமற அறிந்தவர்கள்.
இதனுள், ஆன்மபோதம் இறந்தாலொழியச் சுபாவதெரிசனமுண்டாகாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

பொழிப்புரை :

அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச் சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை - அனாதி தொடுத்துக் கர்த்தாவுக் காளாய்த் திருவருளுடனே கூடிப் பின்பு நேயத்திற் சென்றவருக்குள் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்ல இதுவரையும் உவமை பொருந்தினதில்லை யாகையால்; இன்று இதனை இவ்வாறிருந்ததென்று எவ்வண்ணஞ் சொல்லுகேன் அவ்வாறிருந்த தது இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன், அந்தச் சிவானுபவம்போல இருந்தது.
இதனுள், சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்
கொன்றுங் குறியொன்றி லாமையினால் - ஒன்றோ(டு)
உவமிக்க லாவதுந் தானில்லை ஒவ்வாத்
தவமிக்கா ரேயிதற்குச் சான்று.

பொழிப்புரை :

ஒன்றுங் குறியே குறியாதலால் அதனுக்கு ஒன்றுங் குறியொன்றிலாமையினால் - நேயத்தைப் பொருந்து முறைமையே யனுபவவுண்மை யாதலால் அந்த அனுபவத்துக்குப் பொருந்தும் அடையாள மில்லாதபடியினாலே; ஒன்றோடு உவமிக்கலாவதுவுந் தானில்லை ஒவ்வாத் தவம் மிக்காரே இதற்குச் சான்று ஒரு பொருளோடு உவமை பண்ணிச் சொல்லவும்படாது, தவத்தினாலே ஒப்பற்ற பெரியோர்களே இந்த அனுபவத்துக்குச் சாட்சி.
இதனுள், அனுபவத்தைத் தவத்தினாலன்றிக் காணப்படாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை
மாற்றிஅவ் வாற்றான் மறித்தாற்போல் – தோற்றிப்
புலன்களெனப் போதம் புறம்பொழியில் நந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.

பொழிப்புரை :

ஆற்றால் அலைகடற்கே பாய்ந்த நீர் அந்நீர்மை மாற்றி அவ்வாற்றான் மறித்தாற்போல் திரையையுடைய சமுத்திரத்தினிடத்திலே ஆறென்கிற பூமிவழியாக வந்து பாய்ந்த இனிமைத் தன்மையையுடைய நீரானது அந்த இனிமைத் தன்மையை விட்டு உவர்த்தன்மை பெற்று ஆற்றின் வழியே மீண்டாற்போல ; தோற்றிப் புலன்களெனப் போதம் புறம்பொழியில் நந்தம் மலங்களற மாற்றுவிக்கும் வந்து ஞானவான்கள் போதம் நேயத்திலே பொருந்திய பின்பு பெத்தான்மாக்கள் போதம்போலப் பிரபஞ்சத்திலே சென்றால் நம்மைப் பொருந்தியிருக்கிற மலமாயை கன்மங்கள் நீங்கும்படிக்கு நீக்குவிக்கும்.
ஒழியிலென்னுமெச்சம் ஒழியாதென்பது தோன்ற நின்றது. வந்த தென்பதை ஆற்றாலென்பதனோடு கூட்டுக. உவமை யுவமேயங்களை விரித்துணர்ந்து கொள்க. இதனுள் முத்தருடைய போதம் பெத்தருடைய போதம் போல வல்ல வென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட – பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்.

பொழிப்புரை :

பாலை நிலம் நெய்தல் நிலமாகப் பாடிய தன்மையையும் பாம்பு விடந்தீரும்படிக்குப் பாடிய தன்மையையும் முன்பு முதலை விழுங்கின சிறுபிள்ளையுடைய மரணத்தைப் பின்பு காலனை யேவித்தீர்த்த தன்மையையும் அறிந்து, அந்தத் தெய்வத்தன்மையுடையவர்களுக்கு நம்முடைய கருவிகள் போல வல்லாமையைத் தெரிவாயாக.
பாம்பு ஆகுபெயர். அறிந்தென்னும் எச்சம் வருவிக்க. இதனுள், முன்னூற் சூத்திரத்திற் றொகையை விரித்தது கண்டுகொள்க. இக்கதையைப் பெரிய புராணத்திற் கண்டு கொள்க. (பாலை நெய்தல் பாடியது சம்பந்தர், பாம்பொழியப் பாடியது அப்பரும் சம்பந்தரும், கராங்கொண்ட பாலன் மரணந் தவிர்த்தது சுந்தரர்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்ட உறங்குவர்கள் – ஆங்கதுபோல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதற்பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

பொழிப்புரை :

நித்திரை வந்தவர்களை நல்ல மெத்தையிலே கிடத்தின் பின்பு தாங்கள் தானே சீக்கிரத்தில் உறங்குவார்கள்; அதுபோல ஞானசாரியருடைய கிருபாகடாட்சம் அடிமைகொண்ட பின்பு அந்த அருள் வந்து பொருந்திக் கிரமத்திலே நேயமும் வந்து பொருந்துமென்றறிவாயாக.
சட்ட : திசைச்சொல். உவமையுவமேயம் உய்த்துணர்ந்து கொள்க. இதனுள், ஆசாரியருடைய தீட்சையில்லாமல் ஞானம் வாராதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 14

உள்ள முதலனைத்தும் ஒன்றாய் ஒருவவரின்
உள்ளம் உருகவந் துன்னுடனாம் – தெள்ளி
உணருமவர் தாங்கள் உளராக என்றும்
புணருவா னில்லாப் பொருள்.

பொழிப்புரை :

உள்ள முதலனைத்தும் ஒன்றாய் ஒருவவரின் உள்ளம் உருகவந்து உன்னுடனாம் பிருதிவி முதல் நாதமீறாகிய தத்துவங்களைப் பொருந்து முறைமையை யன்னியமாக்க வந்தால் ஆன்மாவாகிய அரக்கு நெகிழும்படிக்கு நேயமாகிய அக்கினி வந்து உன்னுடனே கூடி நிற்கும்; இப்படியன்றி; தெள்ளி உணருமவர் தாங்கள் உளராக என்றும் புணருவானில்லாப் பொருள் கருவிகளுடனே கூடி விசாரித்தறிகிற பேருண்டானால் எக்காலமும் விட்டு நீங்காமல் நிற்கிற கர்த்தா வில்லாத பொருள் போல மறைந்து நிற்பன்.
இதனுள், கருவிகளினாலே சிவனைக் காணப்படாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 15

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனுங் காணா அரன்.

பொழிப்புரை :

நல்ல சிவன்தன்மமான சரியையையுடையவன் கிரியையையுடையவன் நல்ல சிவயோக தன்மத்தையுடையவன் நல்ல சிவஞானத்தையுடையவன் இவர்களில் யாவரானாலும் நானென்கிற தன்மை கெட்ட வல்லமையினாலே அன்பு செய்தார்களாயின் அவர்களிடத்திலே, ஆன்மபோதமுள்ளவர்களுக்குள்ளே ஒருவராலுங் காணுதற்கரிதான சிவன் அப்பொழுதே வந்து கூடுவானென்றறிவாயாக.
இதனுள்ளே, ஆன்மபோதங் கெட்டவர்கள் எந்தப் 1பாதத்திலே நின்றாலும் ஞானபாதமென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

மெல்வினையே யென்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே யென்ன வருமிரண்டும் – சொல்லிற்
சிவதன்மம் ஆமவற்றிற் சென்றதிலே செல்வார்
பவகன்மம் நீங்கும் படி.

பொழிப்புரை :

மெல்வினையென்று சொல்லவும் விசாலம் பொருந்திய பூமியினுள்ளார் செய்தற்கரிதாகிய வல்வினையென்று சொல்லவும் வரப்பட்ட இரண்டும் ஆகமத்திலே சொல்லப்பட்ட சிவன் தன்மமாம்; அவையிரண்டிலே அவரவர் மனம் பொருந்தினதிலே போவார், செனனமும் அந்தச் செனனத்துக்குக் காரணமாகிய கன்மும் நீங்கும்படிக்கு.
எழுவாய் வருவிக்க. இதனுள், ஞானமானது மெல்வினையென்றும் வல்வினையென்றும் இருவகைப்படுமென்பது கண்டுகொள்க. பத்திவைராக்கிய மெனினுமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 17

ஆதியை அர்சித்தற் கங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும் – வேதியனே
நல்வினையாம் என்றே நமக்கும்எளி தானவற்றை
மெல்வினையே யென்றதுநான் வேறு.

பொழிப்புரை :

கர்த்தாவை - வழிபடுதற்கங்கமான அந்தரியாகம் - மனத்திற்குள் செய்யும் வழிபாடு, மானச பூசை; பகிரியாகம் - வெளிப்படச் செய்யும் வழிபாடு. அந்தரியாக பூசையையும் பகிரியாக பூசையையும் அந்தந்த அவசரங்களிலே செய்யும் பஞ்ச சுத்தி முதலான கூறுபாட்டையுடைய குற்றமற்ற பல கிரியைகளையும் அனுட்டான முதலான கிரியைகளையும் நான் வேறுபடுத்தி மெல்வினையென்று சொன்னது, சித்தசித்துக்களோடு கலந்திருக்கிறவனே, அரிய தொழில் செய்யப்படாத நமக்கும் எளிதாயிருக்கிற இவற்றை நல்வினையா மென்று கருதி.
இதனுள் மெல்வினைக்கு வகை சொன்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 18

வரங்கள் தரும்செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே
கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானதனை
வல்வினையே யென்றதுநான் மற்று.

பொழிப்புரை :

பலன்களைத் தரப்பட்ட சிறப்பாக வயிரவ வேடத்தைக் பூண்ட சிவனுக்குக் கறியமுது சமைக்கும் பொருட்டுத் தயவில்லாமல் ஆதியிலே மாதா பிதாக்கள் தங்கள் கைகளினாலே பிள்ளையை யறுத்தலைச் செய்யுங் கொடிய வினையையே நான் வல்வினையென்று சொன்னது. மற்றுஅசை, செயப்படுபொருள் வருவிக்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 19

பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் – சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
தண்டீசர் தஞ்செயலால் தான்.

பொழிப்புரை :

சண்டேசமூர்த்தி ஒருவர் ஏவாமல் தம்முடைய பத்தியினாலே கொலைத் தொழிலென்றுந் தோடமென்றும் விசாரியாமல் தகப்பனாகிய பிராமணனுடைய காலிரண்டையுஞ் சிவத்துரோகத்தினாலே வெட்டிப் போடுதலைக் கர்த்தாவானவர் கண்டு சிவனாயிருக்கிற முறைமையைக் கொடுத்தார். இந்தப் பத்தியை அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 20

செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை
ஐய இதுவமுது செய்கென்று - பையவிருந்(து)
ஊட்டி யறுத்தவர்க்கே ஊட்டி அறுத்தவரை
நாட்டியுரை செய்தவே நாம்.

பொழிப்புரை :

நாம் பத்தி பண்ணினவர்களுக்குள்ளே மேம்பட்டவரென்று நாட்டிச் சொல்லுவது யாரையென்றால், கமர்நிலத்தின் கண்ணே சொட்டுதலாலே மாறிப்போன படிக்கட்டளையை ‘ஐயனே, இப்ப டிச் சோர்ந்து போனதை அமுது செய்வாயாக’ என்று மனதிலே பயமில்லாமல் தம்முடைய கழுத்தையறுத்து அந்தக் கர்த்தாவுக்குப் புசிப்பித்து மூன்று பாசத்தையும் விடுத்தவரையே. இவை மூன்று செய்யுளில் வல்வினைக்கு வகை சொன்னது.இப்படிப் பலபல வகை யுண்டென்பது கருத்து. அவையெல்லாம் பெரிய புராணத்தறிக. (அரிவாட்டாய நாயனார் புராணம்)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 21

செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் – ஐயா
உழவும் தனிசும் ஒருமுகமே யானால்
இழவுண்டோ சொல்லாய் இது.

பொழிப்புரை :

சீடனே, உழவுத் தொழில் செய்கிறவனுக்கும் அதனை ஏவுகிற கர்த்தாவுக்கும் புத்தி ஒருபடித்தாய் இருந்ததேயானால் அந்தத் தொழில் செய்கிறவனுக்கு ஒருகாலும் குறைவாராது; இதுபோலத் தாங்கள் செய்யுஞ் செயலிலே கர்த்தாவினுடைய செயலாகப் பொருந்தித் தங்களைக் கிரமத்திலே கர்த்தாவுக்குக் கொடுத்தவர்களே ஆன்மபோதமாகிற சுமையை யிறக்கிச் சுகமாயிருப்பார்கள்.
உழவுக்குப் பெயர் தனிசு; திசைச் சொல். இதனுள், ஆன்ம போத மிறந்த அறுபத்துமூவர் முதலான பெரியோர்களைப் பொதுப்படக்கூறி வல்வினைக்கு விரிவு சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

ஆதார யோக நிராதார யோகமென
மீதானத் தெய்தும் விதியிரண்டும் - ஆதாரத்(து)
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாமொன்(று)
ஆக்காப் பொருளேயொன் றாம்.

பொழிப்புரை :

மேம்பட்ட சுகத்தை யனுபவிக்கிற முறைமை ஆதாரயோகமென்றும் நிராதார யோகமென்றும் இருவகைப்படும்; அதேதென்னில், பிரபஞ்சத்தை உண்டாக்கப்பட்ட திருவருளாலே கொடுக்குஞ் சுகமொன்று திருவருளினாலே கொடுக்கப்படாமற் சிவனாலே கொடுக்குஞ் சுகமொன்று என்றிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 23

ஆக்கி ஒருபொருளா ஆதாரத் தப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் – பார்க்கில்
இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத்(து)
அவனாகை ஆதார மாம்.

பொழிப்புரை :

பிரபஞ்சத்திலே யுண்டான விடயங்களை விசாரித்தறிந்து இவையெல்லாம் பலபல வல்ல மாயை யொன்றுமே யென்று அன்னியமாக்கித் தன்னிலே தன்னை விளங்க விசாரித்தானாகில், நம்முடைய போதத்தினாலே சீவித்தோமென்கிற தன்மை கெட்டுத் திருவருளோடே யொன்றாவன்; அப்படி யொன்றாகிற தன்மையே ஆதாரமாம்.
இதனுள் ஆதாரயோகத்துக்கு உபாயஞ் சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 24

கொண்ட தொருபொருளைக் கோடிபடிடக் கூறுசெய்யிற்
கொண்டதுவும் அப்பரிசே கூறுபடும் – கொண்ட
இருபொருளும் இன்றியே இன்னதிது வென்னா(து)
ஒருபொருளே யாயிருக்கும் உற்று.

பொழிப்புரை :

தான் பொருந்தப்பட்ட ஒப்பற்ற திருவருளைப் புதுமையுண்டாக நீக்கினானாயில் திருவருளும் வந்த முறையை விட்டு நீங்கும்; அப்பாற் பொருந்தின சிவனுந் தானும் இரண்டொன்கிறதுமின்றி இந்தக் கூட்டம் இன்னதுபோல விருந்ததென்று சொல்லப்படாமல் ஒரு பொருளாகப் பொருந்தியிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 25

ஆக்கப் படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றோடும் தாக்காதே – நீக்கியுடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதா மாம்.

பொழிப்புரை :

ஒருவராலே யுண்டாக்கப்படாத பொருளாய் எல்லாவற்றினுந் தோய்ந்துந் தோயாமல் தனக்கு அன்னியமாக நீக்கிக் கூடிநிற்குந் திருவருளுடனே பொருந்துஞ் சிவனைக் கூடிநிற்குந் தன்மையே நிராதாரமாம். இவை இரண்டு செய்யுளானும் நிராதாரயோகத்துக்கு உபாயஞ் சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 26

அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றிருந்தே – அஞ்செழுத்தை
ஓதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன்
கேதமற வந்தளிக்குங் கேள்.

பொழிப்புரை :

பஞ்சாட்சரமே சத்தியையுஞ் சிவனையும் காட்டுகிற படியினாலே அந்தப் பஞ்சாட்சரத்தைப் பேரின்பத்துக்கு வழியென்று கொண்டு, ஒரு தானத்திலே அசைவற்றுத் தியானத்தோடேயிருந்து பஞ்சாட்சரத்தைச் செபிக்கத் தொடுத்தால், ஆன்மபோதங்கெடும்; கெட்டவுடனே கர்த்தாவந்து குற்றமறக் கிருபை பண்ணுவன்; இந்த உண்மையைக் கேட்பாயாக. இதனுள், முன்சொன்ன உபாயங் கூடாதே போனால் வேறோர் உபாயங் கூறியது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 27

காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.

பொழிப்புரை :

காணுந் தொழிலையுடைய ஆன்மாவைத் தெரிசித்த பெரியோர்களே சிவனைக் காணாமற் காண்பர்கள்; காணாமற் காண்கின்ற தெப்படியென்னில், காண்கின்ற பேர்கள் காண்கின்றவனுங் காணப்பட்ட பொருளுமென்கிற இரண்டு தன்மையு மில்லாமற் காண்கையினாலே காணாமற் காண்பர்களென் றறிவாயாகா.
இதனுள் நேயத்தழுந்தல் சொன்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 28

பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யுள் பெரும்பெருமான் – பேசாதே
எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால்
உண்ணின்றும் போகான் உளன்.

பொழிப்புரை :

பேசாமையாகிய அருளைப் பெற்று அந்த அருளாலே பேசாமையாகிய சிவனைக் கண்டவர்களுக்குப் பேசாமையை யுண்டாக்குங் கர்த்தாவானாவன் பேசாம லனுபவம் பொருந்தும் படிக்கு இருக்கிற பெரியோர்களிடத்திலே நின்று நீங்காமல் நிற்பன்.
இதனுள் சிவனுக்கிருப்பிடம் பெரியோர்களென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 29

ஓட்டற்று நின்ற உணர்வு பதிமூட்டித்
தேட்டற்று நின்ற இடஞ்சிவமாம் – நாட்டற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்.

பொழிப்புரை :

சலனமில்லாமலிருக்கிற திருவருளாகிய பதியைப் பொருந்தி அப்பால் தேட்ட மில்லாமலிருக்கிற இடம் சிவமாம். ஞானக்கண் இல்லாமல் நானாவிதமாக விசாரிக்கும் பொருளெல்லாவற்றையுந் தேடுமிடமல்ல சிவம்.
இதனுள் திருவருளைக் கூடிநிற்கு முறைமை சொன்னது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 30

பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற – பற்றதனைப்
பற்றிவிடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றமிது சொன்னேன் அறி.

பொழிப்புரை :

ஐம்பொறிகளினின்றுஞ் சீவிக்கப்பட்ட பஞ்ச இந்திரியங்களை நீக்குகிற ஒப்பற்ற திருவருளை யறிந்து அந்த அருளை இன்பமாகக் கொண்டிருந்து அப்பாற் பார்க்கின்ற சிவத்திலே பொருந்திப் பற்றுவிடாதிரு. அப்பொழுதே பேரின்பந் தோன்றும். இந்த உபதேசத்தை முடிவாகச் சொன்னேன் அறிவாயாக.
இதனுள் திருவருளைக் கழன்று நிற்கு முறைமை சொன்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 31

உணராதே யாதும் உறங்காதே உன்னிற்
புணராதே நீபொதுவே நிற்கில் – உணர்வரிய
காலங்கள் சொல்லாத காத லுடன்இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு.

பொழிப்புரை :

சிவானுபவத்தின்கண் வேறொன்றையும் உணராமல் நிருவிகாரி யாகாமலும் உன்னுடைய பெந்தத்தோடுங் கூடாமற் சிவத்துக்கும் அனுபவத்துக்கும் பொதுவாக நிற்பாயாகில், பாசம் ஆன்மா அருள் இவை மூன்றினுடைய அதிகார காலங்களை விசரித்தறிந்து இந்தக் காலங்கள் செல்லாத பெத்தரால் அறிதற்கரியதாகிய விருப்பத்தோடுங் கூடியிருப்பை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 32

அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாமென்(று)
அறிவின் அறிவவிழ்த்துக் கொண்டவ் – அறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோல் தான்.

பொழிப்புரை :

சீடனே, மானிடரில் நாவையிழந்த மணியைப் போலப் பிரபஞ்சத்தை விட்டவர்கள் ஆன்மா ஆன்மபோதத்தின் வழியாய் நின்றால் அறிவு பலவகைப்படுமென்றறிந்து, திருவருளினாலே ஆன்மபோதத்தை யிழந்த அறிவினராய்ச் சிவானுபவத்தோடுங் கூடி வாழ்ந்திருப்பர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 33

ஓசையெலாம் அற்றால் ஒலிக்குந் திருச்சிலம்பின்
ஓசைவழிச் சென்றங் கொத்தொடுங்கில் – ஓசையினின்
அந்தத்தான் அத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து.

பொழிப்புரை :

ஆன்மபோதமெல்லாமற்றால் உண்டாக்கப்பட்ட அருளின் பிரகாசத்தின் வழியே சென்று அந்தத் திருவருளிலே பொருந்தி யொடுங்கில், ஆன்மபோதத்தின் முடிவிலே ஆனந்தத்தைக் கொடுக்கப்பட்ட சிவன் மகிழ்ந்து அம்பலமாகிய ஆன்மாவினிடத்திலே வந்து பொருந்தி, அருளோடுங்கூடி யானந்த நிருத்தத்தைப் பண்ணுவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 34

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் – சார்பு
கெடவொழுகில் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.

பொழிப்புரை :

திருவருளை யுணர்ந்து திருவருள் நீக்கும்படிக்கு ஒழுகினாலென்று திருவள்ளுவர் உரைத்தப்படியினாலே (குறள் ஙருகூ), திருவருளை யுணருகிறதே தியானமுமாம்; திருவருள் நீங்கும்படிக்கு ஒழுகினால் அதுவே நல்ல சமாதியுமாம். இவை கைகூடினால் நாம் துன்பப்படும்படிக்கு வினை பாசம் நம்மை வந்து பொருந்துவதில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 35

அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்கும் – சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு.

பொழிப்புரை :

உனக்கு ஆவசியகமன்றி வரும் பஞ்சேந்தியங்களும் உன்னுடை ய போதமுஞ் சலனமில்லாமல் ஒருபடித்தாய் நிற்கவே சென்று நினைக்கிறதற்கு முன்னே அந்த நினைவழியும்படிக்குப் பொருந்தும் ஒப்பற்ற திருவருளுக்கு முதன்மையாகிய சிவன் உனக்கு முன்னிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 36

உண்டென்னில் உண்டாகும் இல்லாமை இல்லையெனில்
உண்டாகும் ஆனமையின் ஒன்றிரண்டாம் – உண்டில்லை
என்னு மவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை
உன்னில்அவன் உன்னுடனே யாம்.

பொழிப்புரை :

அனுபவமுண்டென்னில் அனுபவிப்பானுமுண்டாகும், அது இல்லையெனில் அனுபவமுமில்லை; ஆகையால் ஒன்றென்றும் இரண்டென்றுஞ் சொல்லப்படும் உண்டில்லையென்னும் முறைமை தவிர்ந்த இன்பத்தைப் பொருந்தும் வகை விசாரிக்கில் கர்த்தா உன்னுடனே கூடி ஒன்றாயிருப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 37

தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல்நான்கும் – மேலைச்
சிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.

பொழிப்புரை :

தூல சரீரமாகிய அசுத்த மாயையிலுண்டாகிய முப்பத்தொரு தத்துவமும் அதற்கு மூலசரீரமாகிய முதல் நான்கு தத்துவமும் அதற்கு மேலாகிய சிவதத்துவமும் இப்படியாகப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களினுடைய முறைமைகளையும் விசாரித்தறிந்தார் இதுவரையும் பொருந்தி வந்த பிறவியாகிற பேற்றை யறுப்பார்; இதை உண்மையாக அறிவாயாக. இதனுள். பிறவியறுத்தற்கு ஏது தத்தவ விசாரமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 38

எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையும் சென்றங்(கு) அளவாதே – சித்தமெனும்
தூதுதனைப் போக்கிற்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.

பொழிப்புரை :

தத்துவங்கள் எவ்வளவோ தெரியாது, ஒவ்வொரு தத்துவங்கள் எந்தெந்தக் கோட்பாட்டை யுடையதோ தெரியாது; அத்தனையும் பொருந்தி அளவிடாமற் சத்தாதிகளிடத்திலே தூது சொல்லுகிற உன்னுடைய போதத்தை விட்டாயானால், விசாரிப்பற்ற திருவருளிடத்திலே போய் அதற்குப் பாதியாயிருக்கிற சிவனைத் தெரிசிக்கலாம். அதை உண்மையாக அறிவாயாக.
இதனுள், தத்துவ விசாரத்திலே தானே முழுதும் நிற்க வேண்டாமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

சாம்பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேஅடைய ஆசையறில் – சோம்பிதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லும் துணையாகும் சென்று.

பொழிப்புரை :

ஆன்மபோதம் ஆணவ மலத்தோடே கூடும்பொழுது ஆன்மாவுக்குச் சற்றும் விசாரமில்லை; அப்படி யொடுங்கினதுபோலக் கருவிகளுடனே கூடும்பொழுது நன்றாக ஆசையறவேணுமானால் அப்படி ஆசையறுதற்கு விருப்பு வெறுப்பற்றிருக்கிற சோம்பைத் துணையென்று ஆகமங்கள் சொல்லும். அதற்கு மாத்திரமோ துணை, உரையிறந்த மோட்சத்திலே செல்லுதற்குப் பொருந்தித் துணையாகும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.

பொழிப்புரை :

வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்டவேணுமென்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமையொன்றுமே வேண்டுவது; விரும்பாமையை விரும்ப விரும்பினது வருமென்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக.
இதனுள், அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 41

அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமும் காலும்கை கூடும் – புரணமது
கூடாமை யுங்கூடுங் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமை யுங்கூடும் வந்து.

பொழிப்புரை :

அரணாகிய திருவருளினிடத்திலே நின்று ஆன்மபோதத்தை நீக்கில் தத்துவங்களும் பிராணவாயுவும் இவன் வசமாகக் கைகூடும். இதுவரையுங் கூடாதிருக்கிற பரிபூரணமான கர்த்தாவும் வந்து கூடுவன். அவன் கூடினவுடனே அவனுக்குக் கூடாகிய ஆன்மாவுக்கு வாடாமையுங் கூடும். (புரணம் பூரணம் ; பரிபூரணமான கர்த்தா.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

இன்றிங் கசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடருமவன் சென்றிடத்தே – என்றுந்தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று.

பொழிப்புரை :

இப்பொழுது இவ்விடத்தில் சீவன்முத்தனானனவன் செய்யப்பட்ட சடமாகிய இவ்விருவினையும் அந்தமுத்தனெனப் பொருந்தின நேயத்ததிலே சென்று பொருந்தும்; எக்காலமுந் தன்னுடைய போதத்தையுந் தன்னையு மிழப்பாகக் கண்டவனானால் சிவனாகிய பதி கைவிடாமல் ஏற்றுக் கொள்ளுவன்; ஒன்றிலுந் தோய்வில்லாத கர்த்தா இவனோடு கலப்பானோவென்னில் திருவருளோடே கலந்திருக்கிறவனல்லவோ, ஆகையாற் கலப்பன். இதனுள் ஞானிக்கு வினையில்லையென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 43

அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதியெனப் பெற்ற அணுவை – அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ(டு) எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்.

பொழிப்புரை :

எல்லா ஆன்மாக்களும் அனாதியே தொடுத்துச் சிவனுக்கு உடைமையாகையால் சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற ஆன்மாவை அனாதியே பெந்தித்த மலமாயை கன்மமென்கிற துன்பம் நீங்கும்படிக்குத் திருவருளுடனே கூடிப் பெத்தத்திலும் முத்தியிலுங் காத்துக் கொள்ளுதல் சிவனுக்குக் கடனேயென்றறிவாயாக.
இதனுள், பெத்தத்திலும் முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லையென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 44

தம்மிற் சிவலிங்கம் கண்டதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் – தம்மையொரு
பூவாகப் பூவழியா மேகொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே யுளன்.

பொழிப்புரை :

தம்மிடத்திலே அருளாகிய சிவலிங்கத்தைக் கண்டு அந்தச் சிவலிங்கத்தைத் தாம் பணிந்து தம்முடைய பத்தியாகிய திருமஞ்சனத்தை அபிஷேகம் பண்ணித் தம்மை ஒப்பற்ற திருப்பள்ளித்தாமமாக்கித் தாமென்கிற முதலழியாமல் சாத்திப் பூசித்தால் அப்பொழுதே இடைவிடாமல் உன்னிடத்திலே நேயம் பொருந்தும்.
இதனுள் ஞானபூசை கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 45

தன்னைப் பெறுவதன்மேற் பேறில்லைத் தானென்றும்
தன்னைத்தான் பெற்றவன்தான் ஆரென்னில் – தன்னாலே
எல்லாந்தான் னுட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கு மிவன்.

பொழிப்புரை :

பல பேறுகளுக்குள்ளேயுந் தன்னைப் பெறுதற்கு மேற்பட்ட பேறு ஒன்றுமில்லை; தன்னைப் பெற்றவன் ஆரென்னில் தன்னாலே எல்லாமாகிய திருவருளைத் தன்னிடத்திலே பெற்று முன்னே கொண் ட ஆன்மபோதத்தை விட்டு எக்காலமும் எவ்விடத்தும் வியாபித்து நிற்பன்; இப்படிப்பட்டவனே தன்னைப் பெற்றவன்.
இதனுள். இந்த நிலைமையை ஆன்மாவுக்குள்ள தன்னியல்பென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கில் – என்பதனால்
நின்வசனா யேயிருக்கில் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்.

பொழிப்புரை :

ஆன்மா மலமாயை கன்மங்கள் வசமாய்த் துவண்டானானால் இவனுக்கு வருகிறதெல்லாந் துன்பமேயல்லாமல் இன்பஞ் சற்றுமில்லை, தன்வசமாயிருந்தானானால் இவனுக்கு வருகிறதெல்லாம் இன்பமேயல்லாமல் துன்பஞ் சற்றுமில்லையென்று வேதாகமங்கள் சொல்லுகையால், நீ மலவசத்தனல்லாமல் உன்வசத்தனாயிருந்தாயானால் அருள் வசமாயிருக்கப்பட்ட கர்த்தா உன்னுடனே வந்து பொருந்துவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ(டு)
ஒத்தாரே யோகபர ரானவர்கள் – எத்தாலும்
ஆராத அக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்
பேராமற் செல்வர்அதன் பின்.

பொழிப்புரை :

கருவிகளை விடுகிறதே முத்தியென்னில் அவர்கள் அனுபவத்தை யிழந்தவர்களே; கருவிகளுடனே பொருந்தியிருக்கச் செய்தே அந்த நேயத்திலே பொருந்தியிருக்கிறவர்களே அத்துவிதத்திலே மேம்பட்டவர்; எந்தவிதத்தாலும் இவன் வசமாகப் பொருந்தாத கருவிகளினாலே கட்டப்பட்டு நேயத்திலே பொருந்தாதவர்கள் இடைவிடாமற் கருவிகளின் வழியே சென்று செனனமரண துக்கப்படுவர்.
இதனுள், பெத்தத்துக்கும் முத்திக்குங் கருத்து வேறுபாடல்லாமற் கருவியன்றென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 48

கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர – நண்ணி
வடம்அடக்கி நிற்கும் வடவிடத்தே போல
உடனடக்கி நிற்பர்கள்காண் உற்று.

பொழிப்புரை :

இந்திரியங்களுக்கும் அந்தக்கரணங்களுக்கும் அப்பாற்பட்ட பொருளானாலும் தங்கள் ஞானத்தாலும் சிவஞானத்தாலும் மகிழும்படிக்கு நேயத்தைப் பொருந்தி, ஆலமரத்தை யடக்கி நிற்கும் ஆலவித்துப் போல, சிவானுபவத்தைத் தங்களிடத்திலே யடக்கி நிற்பர்கள் ஞானவான்கள். இந்த உண்மையைச்சிவஞானத்தைப் பொருந்தி யறிவாயாக. இதனுள், சிவானுபவம் ஞானவான்களிடத்திலே யன்றி மற்றிடங்களிலே நில்லாதென்பது உவமையாற் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 49

வானகமும் மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமதென் என்றனையேல் – ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு.

பொழிப்புரை :

வானினிடத்தும் மண்ணினிடத்தும் வியாபித்திருக்கிற கர்த்தாவை ஏகதேசப்பட்டவனைப் போல ஊனாகிய சரீரத்திலே தியானிப்பானேன் என்பையாகில், அவன் வியாபித்திருக்கினும் சரீரத்திலே பெந்தித்திருக்கிற வாதனை நீக்கும்பொருட்டுத் தியானிக்க வேணும்; அதன்றியும் பிருதிவிமுதல் நாதமீறாகிய தத்துவங்கள் கர்த்தாவுக்கு ஆசனமல்லவோ, ஆகையாலுந் தியானிக்க வேணும்.
இதனுள், நேயத்தை யுள்ளபடி பெற்றிருந்தாலும் இடைவிடாமல் தியான சமாதிகளுடனே கூடியிருக்க வேணுமென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 50

கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் – சொல்லும்
அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா
சகமார்க்கத் தாலன்றே தான்.

பொழிப்புரை :

சீடனே, மலவாதனை கெடுகிற நீதியைச் சொல்லுமிடத்து, கல்லினிடத்தும் கமர் நிலத்தினிடத்தும் பிரகாசம் பொருந்திய வாளினிடத்தும் சந்தனச் சாணையினிடத்தும் பெலத்த பலகையினிடத்தும் திருக்குறிப்புத் தொண்டரும் அரிவாட்டாய நாயனாரும் கோட்புலி நாயனாரும் மூர்த்தி நாயனாரும் மூர்க்கநாயனாரும் சரீரத் தொண்டினாலே மலவாதனையைக் கெடுத்தார்கள், சகமார்க்கமாகிய யோக பாதத்தாலல்லவே. (கல் காலந்தவறியதால் திருக்குறிப்புத் தொண்டர் கல்லில் தலையை மோதிக்கொண்டார்; கமர் அரிவாட்டாயர் நிவேதனப் பொருள் கமர்நிலத்தே சிந்தியதனால் தம் கழுத்தை யரிந்தார்; வாள் சிவபூசைக்குரிய நெல்லையுண்ட சுற்றத்தாரைக் கோட்புலி வாளால் கொன்றார்; சாணை சந்தனக்கல்லில் மூர்த்தி தம் கையை அரைத்தார்; வல்லுப்பலகை சூதாட்டத்தாற் பொருள்பெற்று மூர்க்கர் அடியாரை வழிபட்டார்; வல்சூதாடு கருவி.)
இதனுள், யோகத்தைப் பெற்றிருந்தாலும் சரியை கிரியையாகிய திருத்தொண்டு செய்ய வேணுமென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 51

உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் – தெள்ளி
அறிந்தொழிவா யன்றியே அன்புடையை யாயில்
செறிந்தொழிவாய் ஏதேனுஞ் செய்.

பொழிப்புரை :

நீ எங்கும் ஒருபடித்தாய் வியாபித்திருக்கையால் உள்ளென்றும் புறம்பென்றும் நினையாதிருந்தால் உன்னிடத்திலே திருவருளோடுங் கூடிச் சிவன் பொருந்துவன். நினையாமைக்கு உபாயமேதென்னில் ஞானசாத்திரங்கள் ஆராய்ந்தறிந்து நினைவை யொழிதலல்லாமலும் அன்புண்டானால் அறுபத்துமூவரைப் போலத் திருத்தொண்டிலே பொருந்தி நினைவை யொழி. இவையிரண்டுங் கூடாதென்றால் இயன்றமாத்திரஞ் சிவ பணிவிடைகளைச் செய்வாயாக.
இதனுள் ஆன்மா விகாரமற்றிருத்தற்கு மூவகை யுபாயஞ்சென்னது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 52

கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்
கண்ணப்ப னொன்பதோ ரன்பதனைக் – கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்(று)
யாமறியும் அன்பன் றது.

பொழிப்புரை :

கண்ணப்பருடைய அன்புபோல ஓரன்பு மில்லை யென்று மாணிக்கவாசக மூர்த்தி திருவுளம்பற்றின படியினாலே (கோத்தும்பிச), கண்ணப்பரன்பு போன்ற அன்பைக் கண்ணப்பநாயனாரறிதலுங் காளத்தியாரறிதலு மல்லாமல் நாமறியப்பட்ட அன்பல்ல அந்த அன்பு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க – அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பில்
சேந்தனார் செய்த செயல்.

பொழிப்புரை :

நைந்து குழிந்த சீலையிலே நழுவக்கட்டி அருவருக்கத்தக்க சோற்றைப் பாவனைகழன்ற மனதினாலே யவிழ்க்கத்தக்கதாகத் தாழ்ந்த சடையினையுடைய சிவனுக்கு அந்தச் சோறு நல்லமுதாக இருந்தது. இது ஆருடைய செய்தியென்னின் மெய்யன்பினையுடைய சேந்தனார் செய்த செயல்.
இக்கதையை ஐதிகத்தாற் கேட்டறிக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 54

சுரந்த திருமுலைக்கே துய்யதிரு ஞானம்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் – சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தப் பிள்ளையார் கண்ணிலே நீர்சுரந்து பரமேசுவரியுடைய திருமுலையினிடத்திலே சுரந்த தூய்மையாயிருக்கிற திருஞானமாகிய பாலைக் குடித்தாரென்று அவரவரே சொல்லத்தக்கதாகப் பாவனை கழன்ற மனமுடையாளாகிய தென்பாண்டிமாதேவி யன்பிருந்தபடியினாலே பால் சுரந்த தனத்தையுடையவளானாள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 55

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.

பொழிப்புரை :

சிவனை அன்பே என்னன்பே யென்று அன்பினாலேயழுது கூப்பிட்டு அந்தச் சிவனாகிய அன்பே தனக்கன்பாகத் தன்னுடைய போதங் கெடுகிறதே தனக்கன்பு. இதல்லாமல் தீர்த்தமாடுகிறதும் சிவார்ச்சனை முதலாகப் பல பணிகள் செய்கிறதும் அன்பாகிய மரம் வளருகிறதற்குச் சொல்லப்பட்ட வித்தல்லவோ.
இதனுள், சரியை கிரியா யோகங்களெல்லாம் அன்பு வருகிறதற்குக் காரணமென்பது கண்டு கொள்க. இந்நான்கு செய்யுளினும் அன்பின் இலக்ணங் கண்டுகொள்க

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 56

எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லு மிடத்தளவும் சென்றறிந்தேன் – வல்லபடி
வாதனையை மாற்றும் வகையதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட திது.

பொழிப்புரை :

பன்னிரண்டு சமயத்தாருடைய அறிவுகளின் முடிவை என்னுடைய அறிவு செல்லுமிடமட்டும் யான் சென்று விசாரித்தறிந்தேன். அந்தச் சமயங்களுக்குள்ளே எந்த விதத்தினாலும் மல வாதனையை நீக்கிக் கொள்ளுகிற முறைமை யொன்றுமே குற்றமறக் கண்ட கொள்கை. மற்றக் கொள்கையெல்லாங் குற்றமுடையதாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 57

வித்தும்அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும்அதன் அங்குரமும் மெய்யுணரில் – வித்ததனிற்
காணாமை யால்அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யால்அற்றார் பேறு.

பொழிப்புரை :

ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானம் பிரவேசித்தவிடத்துச் சிவனும் ஆன்மாக்களும் எப்படியிருப்பார்களென்னில் வித்தும் வித்தினிடத்திலே அடங்கியிருக்கப்பட்ட அங்குரமும் போன்றிருப்பார்கள். வித்தையும் அங்குரத்தையும் விசாரிக்குமிடத்து வித்தினிடத்திலே அங்குரமென்றொரு முதல் காணாதபடியினாலே சிவனிடத்திலே தம்மை ஒருமுதலாகக் காணார்; தம்மை ஒரு முதலாகக் கண்டவர் சிவனைப் பேணாராகையாலே சிவானுபவத்தை இழந்தவர்கள்.
இதனுள், நேயத்திலே தான் பொருந்தியிருந்தாலும் தானென்றொரு முதலாகாமலிருக்க வேணுமென்பது உவமையாற் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 58

ஒன்றன்(று) இரண்டன்(று) உளதன்(று) இலதன்று
நன்றன்று தீதன்று நானென்று – நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன்(று) அடியன்று தான்.

பொழிப்புரை :

சிவனும் ஆன்மாவுங் கூடி நிற்கிற நிலைமை எப்படி யென்னில் ஒன்றுமல்ல இரண்டுமல்ல உள்ளதுமல்ல இல்லதுமல்ல நன்றுமல்ல தீதுமல்ல ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையுமல்ல சிவனுமல்ல சிவஞானமுமல்ல ஆதியுமல்ல அந்தமுமல்ல.
இந்த வகையெல்லாம் அல்லவென்றால் நாசமோ வென்னில் உரைக்கப்படா (த) தென்றது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 59

செய்யாச் செயலைஅவன் செய்யாமற் செய்ததனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் - எய்யாதே
மாணவக அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் அற்றால் அறி.

பொழிப்புரை :

ஒருவராலுஞ் செய்யாத செயலைச் சிவன் செய்யாமல் நீயாகச் செய்து சாதித்துப் பின்பு அந்தச் செயலை நீ செய்யாத செயலினாலே சிவனிடத்திலே செலுத்தினால் அப்பொழுதே ஆசையை வளர்க்கும் ஆணவமலம் அறும். அற்றால் சீடனே இடை விடாமற் சிவானுபவத்தை அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 60

ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கா சனமுமாம் – ஏதேனும்
செய்தா லொருவலுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமற் செய்யும் பொழுது.

பொழிப்புரை :

ஒருவராலுஞ் செய்யப்படாத செயலைத்தான் செய்யாமற் செய்தானாயில் அவனுக்கு எந்தக் காலமுமாம் எந்தத் தேசமுமாம் எந்தத் திக்குமாம் எந்த ஆசனமுமாம் எந்தத் தொழிலைச் செய்தாலும் விடுதலுமாம். இந்த முறைமை பெத்தரிடத் துண்டாகிற் பதிதராவரென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 61

செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் – ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு.

பொழிப்புரை :

ஆன்மபோதத்தால் செய்தற்கரிய செயல்கள் பல வற்றையுஞ் செய்து திருநீலகண்டக் குயவனார் முதலாகிய சில நாயன்மார் பெறுதற்குரிய பேற்றைப் பெற்றார்கள். சீடனே, நாம் அவர்களைப்போலே ஆன்ம போதத்தால் செய்யாமற் செய்து வினையை யறுக்கலாயிருக்க நாம் செய்யாதிருத்தலாகாத முறைமை.
இப்படியன்றி, அறுபத்துமூவர் செயல் செய்து பெற்றார்கள், நாம் செயல் செய்யாமற் பெறலாமென்று பொருள் கூறில், அறுபத்து மூவருக்கும் அறிவில்லையென்று பொருள்படுமாகையால் அது பொருளன்மை யுணர்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

இப்பொருள்கள் யாதேனும் ஏதெனினும் ஒன்றுசெய்தல்
எப்பொருளும் செய்யா தொழிந்திருத்தல் - மெய்ப்பொருளைக்
கண்டிருத்தல்செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னா உரை.

பொழிப்புரை :

உலகத்திலே காணப்பட்ட மனிதரெல்லாந் தமக்குள்ள பதார்த்தங்களுக்குள்ளே எந்தப் பதார்த்தமானாலும் அதிலே சிறிதானாலும் ஒருபொழுதானாலும் குருலிங்க சங்கமத்துக்குச் செய்தல் ஒரு பதார்த்தமுந் தான் தேடாமல் துறந்திருத்தல் சிவனைக் கண்டிருத்தல் இவை மூன்றும் செய்யாதே, உண்டு சரீரத்தைப் பேணி வாழ்ந்திருக்கிறது ஏது காரிய நிமித்தமோ சொல்லுவாயாக மாணாக்கனே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 63

வீட்டிலே சென்று வினையொழித்து நின்றிடினும்
நாட்டிலே நல்வினைகள் செய்திடினும் – கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த
மாத்திரமே யாங்கண்டாய் வந்து.

பொழிப்புரை :

துறவறத்திலே சென்று தீவினைகளை யொழித்து நின்றாலும் நாட்டிலே வந்து பொருந்தி நல்வினைகளைச் செய்தாலுங் கூடாகிய சிவனிடங்களாகிய உன்னை யடக்காதேபோனால் அந்தக் கிரியைகளெல்லாம் தக்கன் செய்த வேள்வி தீவினையாவதுபோலத் தீவினையா மென்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 64

சிவன்முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடைய தென்னறிவ தென்றும் - சிவனவன(து)
என்செயல தாகின்ற தென்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.

பொழிப்புரை :

சிவனுடைய இச்சையன்றி நமக்கிச்சை யில்லையென்றும் சிவனுடைய அறிவன்றி நமக்கறிவில்லை யென்றும் சிவனுடைய கிரியையன்றி நமக்குக் கிரியையில்லையென்றும் இவைகளைத் தன்னுடைய செய்தியாகக் கொள்ளாமையே சீவன் முத்தித்தன்மை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

இன்(று) இச் சமயத்தின் அல்லதுமற் றேழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் – இன்றிங்கே
அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவர்கள்
எங்குமிலை கண்டாய் இது.

பொழிப்புரை :

இந்தக் கலியுகத்துக்குள்ளே சைவசமயத்தி லல்லது திருவம்பலத்திலே ஊமைப் பெண்ணைப் பேசுவித்து அவளுடனே வார்த்தை சொல்லிநின்ற பேருண்டோ, அல்லாமலும் இந்தப் பூமியிலே எலும்பு உயிர் பெறும்படிக்குத் தமிழ் பாடினவர்கள் எந்தச் சமயத்திலுமில்லை. இந்த உண்மை அறிவாயாக. இதனுள் சைவசமயமே சிறப்பென்பது கண்கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 66

ஆதனமும் ஆதனியு மாய்நிறைந்து நின்றவனைச்
சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் – சேதனனைச்
சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராய்இருப்பர்
ஏதமறக் கண்டவர்கள் இன்று.

பொழிப்புரை :

ஆதனமாகிய ஆன்மாவும் ஆதனியாகிய தானுமாய் வியாபித்து நின்ற கர்த்தாவாகிய எல்லா ஞானமுடையவனாலே நன்றாய்த் தெளிந்து ஆன்மாவைச் சிவனிடத்திலே பொருத்தி மேலாகிய சிவனாயிருப்பார் ஆரென்னில் இப்போது திரிபதார்த்தங்களைக் குற்றமறத் தெரிசித்தவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 67

விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும்
தெரிந்தும் தெரியாது நிற்பர் – தெரிந்தும்
தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும்
பிரியாது நின்றவனைப் பெற்று.

பொழிப்புரை :

வியாபித்து நின்றுஞ் சரீரத்திலே நின்றுங் கர்த்தாவை யுள்ளடக்கிக்கொண்டு நிற்பர், அல்லாமலும் விடயங்களை யறிந்து மறியாதிருப்பர், பிரபஞ்சத்தை யறிந்தும் விகாரமற்றிருக்கிற திருவருளைப்பிரியாத சிவனைப் பெற்று.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 68

தாமடங்க இந்தக் தலமடங்குந் தாபதர்கள்
தாமுணரில் இந்தத் தலமுணரும் – தாமுனியில்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.

பொழிப்புரை :

ஞானவான்கள் இந்திரியங்களை யடக்கினார்களானால் இப் பூமியிலுள்ள பக்குவான்மாக்களும் அப்படி யடங்குவார்கள். தாம் ஏதொரு பொருளை விசாரித்தார்களானால் பக்குவரும் அப்பொருளை விசாரிப்பார்கள். தாம் வெறுத்தார்களானால் செல்வமும் புகழுங் கலை ஞானமும் விரும்பி நில்லாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 69

துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் – துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்.

பொழிப்புரை :

நின்மல துரியத்தைக் கடந்த திருவருளோடே கூடி யிருக்கிக்கிற கர்த்தா தன்னையடைந்த அன்பர்க்குச் சாக்கிரத்திலே துரியத்தைக் கொடுத்துத் தன்னுடைய கிருத்தியங்களையுங் கொடுப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 70

ஓடம் சிவிகை உலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்(பு)
என்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைகாண்
ஓங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல்.

பொழிப்புரை :

ஓடங் கரையேற்றுதல் முத்துச் சிவிகையேறுதல் உலவாக்கிழி பெறுதல் திருமறைக்காட்டில் கதவடைத்தல் ஆண்பனையைப் பெண்பனையாக்குதல் பொற்றாளம் பெறுதல் பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்குதல் ஆற்றில் ஏடு எதிரேறப் பண்ணுதல் பாண்டியனுக்கு வெப்புத் தவிர்த்தல் எலும்புக்குயிர் கொடுத்தல் இந்தக் கிரியைகளெல்லாம் மிகுந்த புகழையுடைய சம்பந்தப் பிள்ளையார் செய்தி. ஏடெரி என்றும் பாடம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 71

கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற் கொலைதவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல்
திருவாகீ சன்றன் செயல்.

பொழிப்புரை :

யானையினாலேயும் நீற்றறையினாலேயும் நஞ்சினாலேயும் உண்டான கொலையை நீக்குதல் கல்லுத் தெப்பமாகக் கடலை நீந்துதல் வாசனை கமழப்பட்ட திருமறைக்காட்டிலே வாசலைத் திறப்பித்தல் இவையெல்லாந் திருநாவுக்கரசருடைய செய்தி.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 72

மோகம் அறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் – தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன் தொண்டுதனை
ஏதாகச் சொல்வே னியான்.

பொழிப்புரை :

ஆசையற்றால் நாம் மோட்சங் கொடுப்போமென்று ஆகமங்கள்தோறுஞ் சொன்ன கர்ர்தாவைப் பெண்களிடத்தில் தூதாளாக அனுப்பின சுந்தரமுர்த்தி தொண்டினை நான் நன்றென்று சொல்வேனோ தீதென்று சொல்வேனோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 73

பாய்பரியொன்(று) அந்தப் பரமானந்தப் பரனைத்
தூயதிரு வாய்மலராற் சொற்செய்து – மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தேன்.

பொழிப்புரை :

பரமேசுவரன் கொடுக்கப்பட்ட மேலாகிய ஆனந்தமாகிய பிரயோசனத்தைத் தூய தாமரைமலர் போன்ற திருவாக்கினாலே செய்யுளாக்கி மாயமாகிய கருக்குழித்துன்பத்தை நாமறியாதபடிக்கு அனுக்கிரகம் பண்ணினான் காண் தேன்போன்ற மாணிக்க வாசகன். இவை நான்கு செய்யுளினும் ஞானவான்களுடைய மகத்துவங் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 74

அம்மையிலும் இம்மையிலும் அச்சந் தவிர்த்தடியார்
எண்மையுமாய் எங்கும் இயங்குதலான் – மெய்ம்மைச்
சிவயோக மேயோகம் அல்லாத யோகம்
அவயோக மென்றே அறி.

பொழிப்புரை :

பரமுத்தியினிடத்திலுஞ் சீவன்முத்தியினிடத்திலும் உண்டான அச்சங்களையுந் தீர்த்துச் சிவனடியாருக் கடிமையுமாய் எங்கும் வியாபித்திருக்கையால் உண்மையாகிய சிவனோடே பொருந்துதலே நல்ல பொருத்தம். இல்லாத கன்மயோகங்க ளெல்லாம் அவயோக மென்றிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 75

மன்னன்அருள் எவ்வண்ணம் மானிடர்பால் மாணவக
அன்ன வகையே அரனருளும் – என்னில்
அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே எல்லாம் அறி.

பொழிப்புரை :

(மாணவனே) மனிதரிடத்திலே நன்மை தீமைகளையறிந்து (மன்னன் அருள் செய்யுமாறுபோலக்) கர்த்தாவுங் கிருபை பண்ணுவன். அப்படி உவமை சொன்னாலுஞ் சர்வான்மாக்களுங் கர்த்தாவுக்கே யடிமை. அப்படியானாலுங் கர்த்தாத் திருமேனி கொண்டு நம்மைப் போல்வரானாற் பெத்தர் நீங்கலாக முத்தான்மாக்களே யடிமை யென்றறிவாயாக. இதனுள், சிவன் பெத்தருக்கு அருவமாயும் முத்தருக்கு உருவமாயும் இருப்பனென்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 76

உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில் – தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை
இளைப்பதுமொன் றில்லை இவர்.

பொழிப்புரை :

உடம்புடனே கூடின சீவன்முத்தர்கள் தங்களிடத்திலே பொருந்தின விஷயமடங்கலையுந் தமக்குப் பேரின்பமாகிய சிவனிடத்திலே கொடுத்தலினாலே, அவர்கள் ஆகாமியத்திலே பொருந்தி மேற்சரீர மெடுப்பதுமில்லை ஆணவமலத்திலே யொடுங்குகிறதுமில்லை தத்துவச் சேட்டைகளிலே யிளைக்கிறதுமில்லை. ஒன்றென்பது சற்றென்னும் பொருள்பட நின்றது. இதனுள், பரமுத்தித்தன்மை சீவன்முத்தியிலே பெறுவர்களென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 77

பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத் துள்ளானை உள்ளபடி – பேரின்பம்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே உண்டார் சுவை.

பொழிப்புரை :

பாற்கடலிலே யுதிக்கப்பட்ட அமுதத்தை யுண்டவர்களே அதனுடைய சுவையை யறிந்தவர்கள். அதுபோல, இன்பமான சத்தியுடனேகூடி ஒப்பற்ற இன்பத்தையுடைய சிவனை உள்ளபடி தெரிசித்தவர்களே பேரின்பத்தை யடைந்தவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 78

நங்கையினான் நாமனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும் – நங்கையினும்
நம்பியாய்த் தான்நடுவே நாட்டப் பெறுமிதுகாண்
எம்பெருமா னார்தம் இயல்பு.

பொழிப்புரை :

நம்முடைய கையினாலே நாம் எல்லாத் தொழிலையுஞ் செய்தாற்போல. ஆறத்துவாவையுஞ் சத்தியினாலே யுண்டாக்கப்பட்ட சிவனும் அந்தச் சத்திக்கு நடுவே யிருப்பனென்று நாட்டப்படுவன். எம்முடைய கர்த்தாவினியல்பு இப்படி.
சிவன் கிருத்தியம் பண்ணானென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 79

பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிற அண்ணலும் அம்பிகையும் – செந்நிறத்தள்
எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும்
அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு.

பொழிப்புரை :

பொன்னிறம் போன்ற கர்த்தாவுஞ் சத்தியும் எப்படியிருப்பார்களென்னில், பொன்னிறம் பொற்கட்டியிடத்தும் பொற்பூணினிடத்தும் ஒரு தன்மையா நின்றதுபோல சிவந்த நிறத்தையுடைய சக்தி எவ்வண்ணமாயிருந்தாலும் எம்முடைய கர்த்தாவாகிய சிவன் அந்த இடங்கள் தோறும் அவ்வண்ணமாகவே இருப்பன். திருவருளாகிய சத்தியையன்றிச் சிவனாகிய கர்த்தாவுமில்லையென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 80

தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்
தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் – தாரத்தின்
நாதாந்தத் தேயிருப்பர் நற்றானத் தேயிருப்பர்
வேதாந்தத் தேயிருப்பர் வேறு.

பொழிப்புரை :

சிவன் சக்தியோடே ஒன்றாக இருப்பன், சத்திக்கு ஒருகூறாக இருப்பன், சத்தியோடே ஆறத்துவாவிலும் வியாபித்து நிற்பன், சத்தியினாலே இன்பத்தின் முடிவிலே யிருப்பன், நல்ல தானமாகிய ஆன்மாவிடத்திலே யிருப்பன், வேதத்தின் முடிவிலே யிருப்பன். இப்படியிருப்பினும் அவற்றுக்கெல்லாம் வேறுமாயிருப்பன்.
எண்ணிறந்த லீலையையுடைய னென்பது. இவை மூன்று செய்யுளினும் பஞ்கிருத்தியம் நடத்து முறைமை கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 81

ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக
நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் – இன்றுரைக்க
என்னால் இயன்றிடுமோ என்போல்வார் ஏதேனும்
சொன்னால்தான் ஏறுமோ சொல்.

பொழிப்புரை :

ஒரு நூல் சொல்லப்பட்ட பொருளை ஒரு நூல் சொல்லாது; சாத்திரங்கள் பலவும் நியமமாகப் பூமியின்கண்ணே நின்று இது பொருளென்று நிச்சயித்துச் சொல்லமாட்டா; ஆகையால் என்னாலே இது பொருளென்று சொல்லப்படுமோ, படாது. என்னைப் போன்றவர்களாய் யாதானுமோர் சொல்லைச் சொன்னார்களாயினும் அந்தச் சொற்பொருளினாலே சொல்லுமோ சொல்லாதோ, இதற்கு உத்தரமுண்டாகிற் சொல்லுவாயாக.
இதனுள், சாத்திரங்களாலே கர்த்தாவை யறியப்படாதென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 82

யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும்
யாதேயும் பாகன் இலச்சினையே – ஆதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதாபே தஞ்செய்வாய் பின்.

பொழிப்புரை :

எல்லா வுலகங்களினும் எந்த ஏதுவிலேயானாலும் நடக்கிற கிரியைகளெல்லாம் எல்லாவிடங்களிலும் பொருந்தியிருக்கிற கர்த்தாவினுடைய ஆக்கினையே யாகையால் சடசித்துக்களிரண்டுக்குஞ் செய்தியில்லை. இத்தன்மையறிந்து பின்பு சிவனைப் பேதமாக்கித் தியானத்தைச் செய். அதுவன்றியும் ஐக்கியமாக்கி அவையன்றியும் நீக்கம் ஐக்கியம் இரண்டுமாக நிற்பாய். நீ இவை மூன்றிலே ஒன்றனைச் செய்வாயாக. நீ சுட்டற்று நிற்கவே நிலைமை கூடுமென்பது கருத்து

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 83

நின்றபடி நின்றவர்கட் கன்றி நிறந்தெரியான்
மன்றினுள்நின் றாடல் மகிழ்ந்தானும் – சென்றுடனே
எண்ணுறும்ஐம் பூதமுதல் எட்டுருவாய் நின்றானும்
பெண்ணுறநின் றாடும்பிரான்.

பொழிப்புரை :

அருட்சக்தியோடுகூடி ஊனக்கூத்து ஞானக்கூத்து நடிக்கப்பட்ட கர்த்தா ஞானாசாரியன் கற்பித்த நிலையிலே நின்றவர்களுக்கல்லாமல் நிலை தப்பினவர்களுக்கு வெளிப்படான். திருவம்பலத்திலே நிருத்தத்தைப் பண்ணினவனும் எண்ணப்பட்ட பஞ்சபூத முதலாக அட்டமூர்த்தமாகப் பொருந்தி அவையிற்றிலே வியாபித்து நின்றானும் அந்தக் கர்த்தாவே. காணப்பட்ட ரூபங்களெல்லாம் கர்த்தாவின் வடிவே யென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 84

சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச்
சிவமாகி யேயிருத்த லன்றிச் - சிவமென்(று)
உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று
புணர்வாரு முண்டோ புவி.

பொழிப்புரை :

பெத்தத்திலே ஆன்மபோதஞ் சீவித்தாற்போலச் சிவ மொன்றுமே பொருளாக அந்தப் பொருளாகியே யிருத்தலல்லாமல் சிவமென்றொரு பொருளைப் பாவிக்கிறவர்களும் ஆன்மபோதங்கெடப் பொருளிலே சென்று பொருந்துகிறவர்களும் பூமியின் கண்ணேயுண்டோ. இவையிரண்டுங் கேவலசகலச் குற்றமென்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 85

அதுவிது வென்றும் அவன்நானே யென்றும்
அதுநீயே யாகின்றா யென்றும் – அதுவானேன்
என்றும் தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்லுவரோ உற்று.

பொழிப்புரை :

அதுவென்றும் இதுவென்றும் அவனென்றும் நானென்றும் அது நீ யாகின்றாயென்றும் அது நானாகின்றேனென்றும் இப்படி இரண்டாயிருக்கவும், ஆன்மதெரிசனைப்பட்ட பெரியோர்களெல்லாம் மனம்பொருந்தி ஒன்றென்று சொல்லுவார்களோ, சொல்லார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 86

ஈறாகி அங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் – வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றுங்
கடனா யிருக்கிறான் காண்.

பொழிப்புரை :

சங்கார காலத்திலே நிட்களமாயும் சிருட்டி காலத்திலே நிட்களசகளமாயும் அட்டமூர்த்தியாயும் இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக்கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள்வடிவுடைமையைக் கர்த்தா எக்காலமும் முறைமையாகக் கொண்டிருப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 87

உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாய்நீ உற்றனையோ – மன்னுயிர்கள்
அவ்வகையே காண்இங் கழிவதுவும் ஆவதுவும்
செவ்வகையே நின்றசிவன் பால்.

பொழிப்புரை :

உன் வயிற்றிலே பிறந்த புழுக்கள் சுகந் துக்கமெல்லாம் உன்னுடைய சுகதுக்கமென்றுஞ் சொல்லாய்; அந்தச் சுகதுக்கத்தை நீ பொருந்தினவனுமல்ல; செவ்வையாக வியாபித்து நின்ற சிவனிடத்திலே நிலைபெற்ற உயிர்கள் பிறப்பதும் இறப்பதுஞ் சுகதுக்கப்படுவதும் இப்படிப்போல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 88

அவனே அவனிமுத லாகிநின் றானும்
அவனே அறிவாகி னானும் – அவனேகாண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும்
காணாமல் நின்றானுங் கண்டு.

பொழிப்புரை :

கர்த்தாப் பிருதிவி முதலாகிய தத்துவங்களாயிருந்தாலும் ஆன்மாவினுடைய இச்சா ஞானக் கிரியைகளா யிருந்தாலும் ஆண் பெண் அலியாயிருந்தாலும் நீ அவனைக் காணாதபடிக்கு உன்னை அவன் கண்டு நிற்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 89

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்தே கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ – என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து.

பொழிப்புரை :

சீடனே, இப்போது நீ உன்னைக் கண்டு பின் என்னைக் கண்டாயோ அல்லது நான் என்னைக் கண்டு பின்பு உன்னைக் கண்டேனோ என்று சொல்லுவாயானால் அரிய திரோதான சத்தியை யீன்ற பராசத்தியையுடைய பாகனை யார் காணப்போகிறார், பெரிய மாயையாலே மறைக்கத்தக்க மறைப்பையெல்லாந் தப்பி.
கர்த்தா காண்பிக்க ஆன்மா காண்பான் என்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 90

கடல்அலைக்கே ஆடுதற்குக் கைவந்து நின்றுங்
கடலளக்க வாராதாற் போலப் – படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்.

பொழிப்புரை :

கடலானது அலையினாலே ஒருவன் முழுகுகிறதற்கு அளவுபட்டு நின்றாலும் அக்கடல் அளவைக் கடங்காதாற்போல, பூமியின் கண்ணே பத்தி பண்ணின அடியாருக்குக் கர்த்தா கிருபை பண்ணுகிறதும் அவர்கள் அளவைக் கடங்காதவனாய்க் கிருபை பண்ணுவன். கர்த்தா முத்தியிலும் அளவுபடான் என்பது கருத்து.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 91

சிவனெனவே தேறினன்யான் என்றமையால் இன்றும்
சிவன்அவனி வந்தபடி செப்பில் – அவனிதனில்
உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டாய் அவன்.

பொழிப்புரை :

மாணிக்கவாசகமூர்த்தி சிவனெனவே தேறினன் யான் என்று ஆசாரியமூர்த்தத்தைச் சிறப்பித்துத் திருவுளம் பற்றினபடியினாலே (அண்டப்பகுதி வரி சாஉ), இப்போது சிவன் ஆசாரிய மூர்த்தமாகப் பூமியின் கண்ணே எழுந்தருளின முறைமையைச் சொல்லில் உப்பானது கூர்த்தற் சுவையாகிய அருவப் பொருளென்று பெயர்பெற்று உருவமாய் வந்ததுபோலக் காணப்படாத கர்த்தாவுமாகிறாரென்று பெயர்பெற்றுக் காணப்பட்டு வருவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 92

அவனிவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து)
எவனவனாய் நிற்கின்ற தேழாய் – அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லாய் இது.

பொழிப்புரை :

ஆன்மா சிவமாய் நிற்கிறது சிவன் கிருபையினாலேயல்லாமல் வேறே எந்த ஏதுவினாலே நிற்கும், மாணாக்கனே, சொல்லுவாயாக. அன்றியும் மாமரத்திலே புல்லூரி முளைத்தால் அது மாமரத்தின் பழத்தைப் பழுக்க மாட்டாதது போல ஆன்மாகளுஞ் சிவனை யடைந்தால் பிற ஆன்மாக்களுக்கு இன்பங் கொடுக்க மாட்டார்கள்.
இதனுள், ஆன்மா தன் முயற்சியினாலே சிவானுபவந் தேட மாட்டான் என்பதும் ஆன்மாக்களுக்குச் சிவானுபவங் கொடுக்க மாட்டானென்பதுங் கண்டு கொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 93

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடியெழுங்காண் இன்று.

பொழிப்புரை :

முத்தியைப் பெறுவதற்கு முதலாகிய ஆன்மா வென்னுங் கொடியிலே அனாதியே மறைக்கத்தக்க பாசமென்னுங் கொடி தழைத்து வளர்ந்து அத்திமரம்போல மிகுதியாகப் பழுத்தது. ஞானசத்தியாகிய திருவருளென்னுங் கத்தியினாலே அந்தப் பாசமென்னுங் கொடியின் வேரை யறுக்க அது சோர்ந்தொழிந்து, ஆன்மாவினிடத்திலே சிவானந்தக் கனி மேன்மேலும் பழுக்கும். சிவமென்றும் ஆன்மா வென்றும் இரண்டல்லாத ஒரு நீர்மையான கொடி அப்பொழுதே தோன்றாநிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 94

அகளத்தில் ஆனந்தத் தானந்தி யாயே
சகளத்தில் தையலுடன் தோன்றி – நிகளத்தைப்
போக்குவதுஞ் செய்தான்தன் பொன்னடியென் புன்தலைமேல்
ஆக்குவதும் செய்தான் அவன்.

பொழிப்புரை :

அகளத்திலே ஆனந்தமாகிய கர்த்தா சகளத்திலே (திருமேனியு) டையவர்களைப் போலக் கிருபையோடுங்கூடி ஆசாரிய மூர்த்தமாக வெளிப்பட்டு மலமாயா கன்மங்களைப் போக்கினான், தனது திருவடியை என் தலை மேலேயும் வைத்தான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 95

குற்றமறுத் தென்னையாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத் துடனுறைவர் – முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடின்அக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து.

பொழிப்புரை :

ஆசாரியன் என்னைப் பொருந்தின மூன்று மலங்களையும் அறுத்து என்னையும் அடிமையாகக் கொண்டு நான் நினைத்த தியானத்துடனே என்னிதயத்திலே பொருந்துவன்; (இந்த நிலை முதிர வருகின்ற நேயத்திலே தான் பேரின்பமாய் நிற்பன்;) இது வன்றியும் நான் விடயங்களைப் பற்றினால் அந்த விடயமாய் நிற்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 96

ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேஅறியும்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் – நாளும்
திருவியலூர் ஆளுஞ் சிவயோகி இன்றென்
வருவிசையை மாற்றினான் வந்து.

பொழிப்புரை :

பக்குவான்மாக்களை யாளப்பட்டவன் என்னைப் போன்ற அசத்தியரையும் (=அசக்தரையும்) ஆளப்பட்டவனே. நானறிதற்கேதுவாகியிருக்கப்பட்ட தாளாகிய திருவருளையுடையவன், எக்காலமும் அடியார்க்கெல்லாம் மேம்பட்ட காவலாளன், திருவியலூரிலே எழுந்தருளியிருக்கப்பட்ட சிவயோகி போன்றவன் இப்போது என்முன்னே வந்து நான் தத்துவங்கள் தோறுந் திரிகிற விசையை மாற்றினான். (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனர் திருவுந்தியார் செய்தவர். அவர் மாணாக்கராகிய ஆளுடையதேவ நாயனார் இந்நூலாசிரியருக்கு ஆசிரியர்.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 97

தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே நின்று துளங்காமல் – காலத்தால்
தாளைத்தந் தென்பிறவித் தாளை அறவிழித்தார்க்
காளன்றி யென்மா றதற்கு.

பொழிப்புரை :

தூலமாகிய பஞ்சவன்னங்களை யடுத்த படிகத்தினுடைய சலனம்போலத் தூலமாகிய தத்துவங்கள் தோறுஞ் சென்று நான் சலனப்படாமல் (இருவினை யொப்பும் மலபரிபாகமும் உண்டான காலத்து) தனது தாளாகிய திருவருளை எனக்குத் தந்து என்பிறவி வேர் அறும்படிக்கு அருட்பார்வை பார்த்த ஆசாரியர்க்குக் கைம்மாறு அடிமையாடயிருத்தலன்றி வேறே கைம்மாறொன்றுமில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 98

இக்கணமே முத்தியினை எய்திடினும் யான்நினைந்த
அக்கணமே ஆனந்தந் தந்திடினும் – நற்கணத்தார்
நாயகற்கும் நாயகிக்கும் நந்திக்கும் யானடிமை
ஆயிருத்த லன்றியிலேன் யான்.

பொழிப்புரை :

நான் இப்பொழுதே மோட்சத்தைப் பெற்றாலும் நான் விரும்பினபொழுதே பேரானந்தத்தைத் தந்தாலும் நல்ல சிவயோகி களுக்கும் சிவனுக்கும் திருவருளுக்கும் நந்திதேவர்க்கும் நான் அடி மையாயிருத்தலன்றி வேறே கைம்மாறு ஒன்றுஞ் செய்ய மாட்டேன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 99

என்னை உடையவன்வந் தென்னுடனாய் என்னளவில்
என்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் – என்னை
அறியப்பெற் றேன்அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று.

பொழிப்புரை :

அனாதியே என்னை அடிமையாக உடையவன் இப்போது மானிடனாய் வந்து எனக்கு நட்பாகி எனது போதம் நீங்கி யான் மாத் திரம் நின்றளவில் ஒரு பணியுஞ் செய்யாத என்னையும் தனக்கடிமையாகக் கொள்ளுகையால் என்னுடைய சுபாவத்தையறிந்தேன், சிவயோகிகள் கூட்டத்திற் சென்று அவர்களுக்கு ஆளாய் அவர்களுடனே கூடியிருக்கப் பெற்றேன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 100

சிந்தையிலும் என்றன் சிரத்தினிலும் சேரும்வண்ணம்
வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் – தந்தவனை
மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
ஏதுசொலி வாழ்த்துவே னியான்.

பொழிப்புரை :

எனது இதயத்திலும் தலையிலுந் தனது திருவடி (யை வைத்து) நாமினிப் பிறவாவண்ணம் தனது ஞானத்தைத் தந்தவனைத் திருவருளுடனே கூடி எக்காலமும் வாழ்ந்திருக்கக் கடவனென்று வாழ்த்துவதேயல்லாமல் வேறே எந்த வார்த்தை சொல்லி வாழ்த்தப் போகிறேன் யான்.
இது பிற்காலத் தான்றோர் வாக்கு:
ஆதார மாகி அருளொடு நிற்கின்ற
சூதான இன்பச் சுகவடிவை – ஓதாமல்
உள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால்
தெள்ளவா ராதே சிவம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
களியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே.

ஒளியிது காப்பருட் கணபதி கழலிணை
தெளிபவ ருளம்வினை சேரா வென்றது.

பொழிப்புரை :

ஒளியான திருமேனி ஞானப்பிரகாசமான திருமேனியிலே; உமிழ்தானம் மிகமேவு களியார வரும் ஆனை பொழியாநின்ற மதத்தினை மிகவும் பொருந்தப்பட்டுக் கர்வமிகுதியாலே யெழுந்தருளா நின்ற யானைமுகத்தினையுடைய மூத்த நாயனார்; கழல் நாளும் மறவாமல் அவனது ஸ்ரீ பாதத்தை நாடோறும் மறவாமல்; அளியாளும் மலர் தூவும் அடியார்கள் வண்டுகளை யாட்சியாகவுடைய பூக்களினாலே அர்ச்சித்து வழிபடுகிற தொண்டராயுள்ளவர்கள்; உளமான வெளியாகும் உள்ளமானது அஞ்ஞானமாகிய இருள்நீங்கிச் சிவஞானம் பிரகாசியாநிற்கும். ஆகையாலே; வலிதாய வினை கூட நினையாவே அவர்களை மிக்க வினைகளானதும் பொருந்த விசாரியாது. இந்நூல் காப்பது நிமித்தமாக வழிபடாநின்றேமென்பது கருத்து.
ஞானமென்றது அறிவென அறிக. தானமென்றது மதமென அறிக. அடியார்களென்றது தங்கள் சுதந்தரஹானியையறிந்து வழிபடுந் தொண்டர்களென அறிக. சுதந்தரஹானியாவது யானெனது கெட நிற்கையென அறிக. வலிதாய வினையென்றது பிராரத்தம் புசிக்கச் செய்தே யேறுகிற ஆகாமியகன்மமென அறிக. இதற்குப் பிரமாணம், திருவருட்பயனில் “ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினைதோன்றி லருளே சுடும்” (98) என்பது கண்டுகொள்க. இதன் கருத்து இந்நூலுக்குக் காப்பென அறிக.

குறிப்புரை :

உரையாசிரியர் செய்த காப்பு
திருமேவு முண்மைச் சிவப்பிகா சத்தின்
மருமேவு பேருரைக்கு மாணாச் செருமேல்
தொடக்குஞ் சமர்க்கட் சுரிகுழல்மான் தந்த
கடக்குஞ் சரக்கன்றே காப்பு.
இந்தச் சிவப்பிகாசமென்று சொல்லப்பட்ட நூலுக்கு வரலாறாவது : பூரணகர்த்தாவாயிருக்கப்பட்ட ஸ்ரீகண்டபரமேசுவரன் தானருளிச் செய்த முன்னூலாகிய சிவாகமத்தில் ஞானகாண்டமா யிருக்கப்பட்ட பதிபசு பாசத்தினுண்மையை ஸ்ரீநந்திதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அந்த உபதேசத்தின் பயனாயிருக்கப்பட்ட சிவஞானபோதமாகிய மூலக்கிரந்தம் பன்னிரண்டையும் ஸ்ரீ நந்திதேவ தம்பிரானார் சநற்குமாரபகவான் முதலாயுள்ள இருடிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தச் சநற்குமாரபகவான் சத்தியஞானதரி சனிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தச் சத்தியஞானதரிசனிகள் பரஞ் சோதிமாமுனிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தப் பரஞ்சோதிமாமுனிகள் திருவெண்ணெய்நல்லூரே திருப்படை வீடாகவுடைய மெய்க ண்டதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அந்த மெய்கண்டதேவ தம்பிரனார் அந்த மூலக்கிந்தரம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து அந்நூற்பெயராலே சிவஞானபோதம் என்னுந் திருநாமத்தினையுஞ் சாத்தி வழிநூலாகச் செய்தருளித் தமது திருவடியைப் பெற்ற அருணந்திதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அவர் அந்நூலை ஆராய்ந்து பார்த்தருளி அந்நூல் சொற்சுருங்கி அத்தமாழ்ந்திருக்கையினாலே அந்நூலின் அத்தத்தை விரித்துச் சிவஞானசித்தி யென்னுந் திருநாமத்தினையுஞ் சாத்தி வழிநூலாகச் செய்தருள, இந்த இரண்டு நூலையுங் கொற்றவன்குடியில் எழுந்தருளிய உமாபதிதேவ தம்பிரானார் திருவுள்ளத் தடைத்தருளி, அந்த இரண்டு நூலின் அத்தமுந் தீவிரதரமுள்ள புத்திமான்களுக் கொழிந்து மற்றொருவர்க்குந் தெரியாதென்று கண்டு யாவர்க்கும் எளிதாய் அறியத்தக்கதாக அந்த இரண்டு வழிநூலின் அத்தமும் முன்னூலாகிய சிவாகமத்தின் அத்தமுந் தம்மிடத்தில் விளைவதாயிருக்கப்பட்ட திருவருள்ஞானமுங் கூட்டிப் பொது ஐம்பது செய்யுளாகவும் உண்மை ஐம்பது செய்யுளாகவும் ஆகத் திருவிருத்தம் நூறாகக் கொண்டு சிவப்பிரகாசம் என்னுந் திருநாமத்தினையுஞ் சாத்திச் சார்பு நூலாகச் செய்ததென அறிக.
என்றிங்ஙனஞ் சிவாகமம் முன்னூலென்பதற்கும் சிவஞான போதமுஞ் சிவஞானசித்தியும் வழிநூலென்பதற்கும் இந்தச் சிவப்பிகாசஞ் சார்புநூலென்பதற்கும் பிரமாணமாவது: “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்.” “முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும்.” “இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநு லாகும்” (நன்னூல், சூத்திரம் 6,7,8), “தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுப்பின் எதிர்நூ லென்ப ஒருசாரோரே” என்னும் இலக்கண விதியைப் பற்றி; “வினையி னீங்கி... முதனூலாகும்” என்னும் விதியால் சிவாகமம் முன்னூலானதென அறிக; இரண்டாவது “முன்னோர்... வழி நூலாகும்” என்னும் விதியால் சிவஞானபோதமுஞ் சிவஞானசித்தியும் வழிநூலாதென அறிக; மூன்றாவது “இருவர் நூற்கும்... புடை நூலாகும்” என்னும் விதியால், முன்னூலாகிய சிவாகமத்தின் அந்தமும் வழிநூலாகிய சிவஞானபோதஞ் சிவஞானசித்தியின் அந்தமுங் கருதிலுறை திருவருளாகிய வேற்றுமை அத்தமுங்கூட்டி யருளிச் செய்கையால் இந்தச் சிவப்பிரகாசஞ் சார்புநூலானதென அறிக.
என்றிங்ஙனஞ் சிவாகமம் முன்னூலென்பதற்குஞ் சிவஞான போதமுஞ் சிவஞானசித்தியும் வழிநூலென்பதற்குஞ் சிவப்பிரகாசம் புடையாகிய சார்புநூலென்பதற்கும் பிரமாணமேதென்னில் 1ஞானதீக்கைத் திருவிருத்தத்தில், “தேசுமிகு மருட்பயின்ற சிவப்பிரகாசத்தில் திருந்துபொதுச் சங்கற்ப நிராகரணந் திருத்தி, ஆசிலருள் வினாவெண்பாச் சார்பு நூலா லருளெளிதிற் குறிகூட வளித்து ஞானப் பூசை தக்க, காரணமுன் புகன்றதனிற் புரிந்து புணர்விக்கச் சிவஞானபோத சித்தி வழிநூன், மாசில்சத மணிக்கோவை முன்னூல்சான்று மருவு திரு முறைத்திரட்டு வைத்தனன்மன் னுயிர்க்கே” என்பது கண்டு கொள்க. அன்றியும் இந்தச் சார்பு நூலாகிய சிவப்பிரகாசமென்னும் நூலிலே முன்னூலின் அத்தமும் வழிநூலின் அத்தமும் அது நிங்கலாக வேற்றுமை அத்தமுங்கூட்டி யருளிச் செய்ததற்குப் பிரமாணம்: இந்நூலிலே, “தெரித்தகுரு முதல்வருயர்” (11) என்ற செய்யுளிலே “இறைவனூலுங் கலந்து” என்றமையான் முன்னூலின் அத்தமுங் கூடினதென அறிக; “விளம்பியநூ லவையிரண்டும் விரும்பிநோக்கி” என்றமையால் வழிநூலின் அத்தமுங் கூடினதென அறிக; “கருத்திலுறை திருவருளும்” என்றமையால் திரிபுவேறுடைய வேற்றுமையத்தமுங் கூடினதென அறிக. ஆக மூன்று வகையும் இங்ஙனங் கண்டு கொள்க.
இந்தச் சிவப்பிரகாசமாகிய நூலிற் செய்யுள் நூற்றுக்குங் கருத்து ஏதென்னில்; பாயிரமீ ராறு பதியாறு பல்லுயிரொன், றேயுந் திரோதமல மொன்றென்பர் தூயபத, முத்திதரு மாமாயை யொன்றாகும் மூவுலகிற், புத்திதரு மாயைப் புணர்ப்பாறு பெத்தம்விட, நன்றுதீ தாகும்வினை நாலாகும் நாடோறுந், துன்று மலத்தின் தொகையொன்று பொன்றவருங், கேவல மைந்து கிளக்கி லுயிருக்குப், பாவுணர்த்தும் வைகரியின் பாலிரண்டு தேவர்களுங், கூடுஞ்சகலநா லைந்தாகுங் கூடுமலம், வீடுகின்ற சுத்த வியப்பொன்று நீடுமின்ப, முத்தியொன் றாக மதித்தருளால் முன்னோர்கள், பத்தியாற்சொன்ன பரிசினால் இத்தலமேல், உண்மையுரைக்கி லுயிருண்மை ஒன்பதாம், நண்ணவத்தை மூன்று நலமாக எண்ணரிய, தன்னையுணர்த்துந் தகையைந்து தன்னுணர்த்து, மன்னுணர்வின் ஞானவகை மூன்று பின்னுயிரை, மாசறவே காணும் வகையைந்து மற்றதனில், ஆசொழிக்குந் தன்மை யதுநான்கு தேசனுருப், பார்வையறப் பார்க்கும்வகை பத்தாம்பஞ் சாக்கரத்தைத், தேரும்வகை மூன்று தெரியுங்கால்சீர்மருவும், அன்பாற் சிவனை அநுபவிக்குமெய்யடியார், இன்பப் பகுதி யிருமூன்று துன்பமறச், சொற்றருநூலின் கருத்தொன்று சொற்றருநூல், நற்றவருக் கீயு நலமொன்று முற்றவரும், பந்த மறுத்த சகநாதன் பார்வையென, வந்தளித்த சம்பந்த மாமுனிவன் எந்தைபதஞ், சென்னியின்மேல் வைத்துச் சிவப்பிரகா சக்கருத்தை, யன்ன வயற்காவை யம்பலவன் நன்னயத்தாற், சொன்னா னெழுபிறப்புந் தொல்லைவினை யுந்தீர, மன்னாகமத்தை மதித்து எ து கண்டு கொள்க.
அன்றியும். இந்நூலுக்குத் திருவடிவரைவும் அதிகாரமுமொக்கவரும் வகையாவது : “ஓங்கு பரந்த நலம்வளந் தேவர்பார் ஈங்கிவை யாறும் இறைவன் வணக்கம் புறச்சம யத்தவர் நூற் கருத் தாகும். மூவகை விரும்பிய கிரியையென மூன்று மாவது தீக்கா மறைமைய தாகும் தெரித்த தொன்மை யெனவிவ் விரண்டும் விரித்த நூன் மர பவைய டக்கமே பலகலை நீடிங் குலகங்க கந்த மேற்ற விவ்வாறு மிறைவ னிலக்கணம் எண்ணரி தொன்றும் பசுவி னிலக்கணம் ஏகமா யொன்று மலமுந் திரோதமும உன்ன லொன்றுங் குடிலையி னியல்பாம் உருவாதி யென்னை படைத்த வல்லல் அருத்தி மன்னிய வாறு மசுத்தத் திருத்தகு மாயையின் செய்திய தாகும் நண்ணிய கன்ம மேலை யுற்றவென் றெண்ணிய நான்குங் கன்மத் தியல்பே மோக மிகவென் றெண்ணிய வொன்றும் வேக மிகுமல மைந்தின் விதியே ஓங்கின்மை மாயை யந்நியம் புகலும் ஈங்கிவை யைந்துங் கேவலத் தியல்பே வந்தடைந் தித்தகை பேசரி யைவகை அந்தமி லலகில் குணமான தனுவுடன் சொன்ன முந்தி யிந்நிலை தோற்றி யன்ன பத்துஞ் சகல வவத்தையே இனைய நாடி யென விவ் விரண்டும் முனைவன் சுத்த முறைமைய தாகும் அரிவைய ரொன்றும் பரசம யத்தவர் மருவிய முத்தியின் வாய்மையதாகும் என்னும் பொதுவியல் விருத்த மைம்பதின் மன்னிய கருத்தை வகுத்தன னிப்பால் ஈங்கிவை யொன்று முண்மையிற் பாயிரஞ் செறிந்திடு முருவுண ரறிவெனில் வாயில் அறிவினா லெவ்வறி வசத்தறிந் ததுவுஞ் சத்திது கண்ணொளி யோரிடத் தெட்டும் இத்திற மான்ம விலக்கண மாகும் எண்ண விவ்வகை நிக்கமின் மூன்றும் அண்ண லளித்த வவத்தைய தாகும் மருவிய தனக்கெனக் கண்டறி புலன்கள் இருள்நனி யறிந்திடு மிவையோ ரைந்தும் பொருவிலான் மாவை யுணர்த்தல் புகலுங் காட்டிடும் பன்னிற மாயையிம் மூன்றும் ஊட்டு ஞான வாய்மையை யுரைக்குந் தேசுற மும்மையின் பாரிப்ப தாகுந் தன்னறி தத்துவ முறைதரு சுத்தம் இன்னவை நான்கு மன்னுயிர்த் தரிசனம் புகலரு மின்றுநோக் கிந்நிலை யடைபவர் இகலறு நான்கு மிலங்குயிர்ச் சுத்தி பொற்புறு மொடுங்கிடா பற்றிடு முந்திய சொற்பெறு பாசம் விளம்பிய பாவிக்கில் ஒன்றிரண் டாகி யழிந்திடு மெல்லை என்றிவை பத்து மிலங்குயி ரிலாபம் பந்தத் திருவெழுத் தைந்தி லாசுறும் அந்தமின் மூன்று மைந்தெழுத் தருணிலை தீங்குறு குறிப்பக மண்டமண் தொண்டரென் றாங்கிவை யாறு மணைந்தோர் தம்மை நிலவுல கொன்று நூற்கருத்தாகும் திருவரு ளொன்று மருளுறை நூலைக் கொடுக்கு முறைமைப் பகுதிய தாகுமென் றிப்படி யுமாபதி தேவ னுரைத்த மெய்ப்படு சிவப்பிர காச விருத்தக் கருத்தின துண்மை விரித்துரைத் தருளினன் சண்பையில் வாழுந் தவகுரு நாதன் பண்பமர் சிற்றம்பலவன் தானே” எ து கண்டுகொள்க.
என்றிங்ஙனங் கூறிவந்தவகையில் முன்னுள்ள சிவஞானபோதத்தின் அத்தமும் சிவஞானசித்தியின் அத்தமும் இந்தச் சிவப்பிரகாசவழிநூலின் அத்தமுங் கூடினதேயானால் அந்நூல்களைப் போலச் சூத்திரம் பன்னிரண்டும் இந்நூலினின்ற முறைமையெங்ஙனே யென்னில் அவை வருமாறு : “ஓங்கொளியா” யென்ற விருத்தந் தொடங்கி “தொன்மையவா”மென்னும் விருத்தமுடிவாகிய செய்யுள் பன்னிரண்டும் பாயிரமாக வகுத்தருளிச் செய்து, மேற் பதியிலக்கணமாகிய “பலகலையென்ற” விருத்தந் தொடங்கி “ஏற்றவிவையென்ற” விருத்தமுடிவாகிய செய்யுளாறும் முதற்சூத்திரமாகவும், பசுவிலக்கணமாகிய “எண்ணரிதா” யென்ற விருத்தந் தொடங்கி “அரிவைய ரின்புறு முத்தி” யென்ற விருத்தமுடிவாகிய செய்யுள் முப்பத்திரண்டும் இரண்டாஞ் சூத்திரமாகவும் ஆகப் பொதுவைம்பதும் இங்ஙனம் வகுத்து, மேல் உண்மை யைம்பதில் “இங்கிவை”யென்ற விருத்தமொன்றும் இந்த உண்மைக்கு அதிகார வகுப்பாகவும், மேல் ஆன்ம இலக்கணமாகிய “செறிந்திடு”மென்ற விருத்தந் தொடங்கி “ஓரிடத்திருத்த”லென்ற விருத்த முடிவாகிய செய்யுளெட்டும் ழன்றாஞ் சூத்திரமாகவும், அவத்தைத் தன்மையாகிய “எண்ணவொன்றிலாததீதம்,” “இவ்வகையவத்தை”, “நீக்கமிலதீதம்” ஆகச் செய்யுள் மூன்றும் நாலாஞ் சூத்திரமாகவும், உணர்த்து முறைமையாகிய “மருவிய பொறியி”லென்ற விருத்தந்தொடங்கி “அறிந்திடுமனாதி” யென்ற விருத்தமுடிவாகிய செய்யுளைந்தும் ஐந்தாஞ் சூத்திரமாகவும், ஞான வாய்மையாகிய “காட்டிடுங் கரணம்”, “பன்னிறங்கவரு”, “மாயை மாமாயை” யென்னும் விருத்தமூன்றினுள் “காட்டிடுங் கரண” மொன்றும் ஆறாஞ்சூத்திரமாகவும், நின்ற விருத்தமிரண்டும் மேலதற்கோர் புறனடையாகிய ஏழாஞ் சூத்திரமாகவும், மேல் அதன் பயனென்னும் அதிகாரத்தினுள் “தேசுறமருவு” மென்ற விருத்தந் தொடங்கி “எல்லையில் பிறவி”யென்னும் விருத்தமுடிவாகிய செய்யுள் பத்தொன்பதும் “புனிதனாம”மென்னு மதிகாரமாகிய “பந்தமானவை,” “திருவெழுத்து”, “ஆசுறு” என்னும் விருத்தமூன்றும் ஆக முன்னுங் கூட்டிச் செய்யுள் இருபத்திரண்டினுள் “தேசுறமருவு” மென்ற விருத்தமொன்றும் இவையிற்றுக்கு அதிகார வகுப்பாகவும், ஆன்ம தரிசனமாகிய “தன்னறிவதனா”லென்ற விருத்தந் தொடங்கிச் “சுத்தமாஞ்சத்தி”யென்ற விருத்தமுடிவாகச் செய்யுள் நாலும் எட்டாஞ் சூத்திரமாகவும், ஆன்மசுத்தியாகிய “புகலரு மசத்தர் தம்பா” லென்ற விருத்தந்தொடங்கி “அடைபவர் சிவமேயாகு” மென்ற விருத்த முடிவாகிய செய்யுள் நாலும் பஞ்சாக்கர தரிசனத்தில் விருத்தமூன்றும் ஆக முன்னுங் கூட்டிச் செய்யுளேழும் ஒன்பதாஞ் சூத்திரமாகவும், ஆன்மலாபமாகிய “பொற்புறு கருவி” யென்ற விருத்தந் தொடங்கி “எல்லையில் பிறவி”யென்ற விருத்தமுடிவாகிய செய்யுள் பத்தும் பத்தாஞ் சூத்திரமாகவும்,மேல் அணைந்தோர் தன்மையாகிய “தீக்குறு மாயை” யென்ற விருத்தந் தொடங்கித் “தொண்டர்களிட”மென்ற விருத்தமுடிவாகச் செய்யுள் ஆறினுள் “தீங்குறு”, “குறிப்பிடம்”, “அகம்புறம்”, “அண்டம்”, “மண்முத”லென்னும் விருத்தமைந்தும் பதினொன்றாஞ் சூத்திரமாகவும், சூசூதொண்டர்களிட”மென்ற “விருத்தமொன்றும் பன்னிரண்டாஞ் சூத்திரமாகவும் நின்றதென அறிக. இங்ஙனஞ் சூத்திரம் பன்னிரண்டும் வகுத்து, “நிலவுலகாயதாதி”யென்னும் விருத்தமொன்றும் இந்நூலின் கருத்தாகவும் “திருவருள் கொடுத்து” என்னும் விருத்தமொன்றுஞ் சீடனுக்கு நூலும் அத்தமுங் கொடுக்குமுறையாகவும் வகுத்து இந்நூலருளிச் செய்ததென அறிக. ஆக இங்ஙனஞ் சூத்திரங்கள் வகுத்ததற்கு மேலெழுதுகிற வியாக்கியிலே அந்தந்த அதிகாரங்கள் தோறுஞ் சிவஞானபோதத்திலுஞ் சிவஞானசித்தியிலும் வருஞ்சூத்திரத்தின் ஏதுக்களுங் காட்டியெழுதுகிற முறைமையிலே சூத்திரம் பன்னிரண்டுங் கண்டு கொள்க.
உரை வரலாறு
இந்த வியாக்கியானஞ் செய்தது மெய்கண்ட சந்ததியில் காவையம்பலநாதத் தம்பிரானார் திருவடி மரபில் ஆசாரியரில் மதுரையில் ஞானப்பிரகாசத் தம்பிரானார் திருவடியடியாரில் சிவப்பிரகாசன் செய்த வியாக்கியானமென அறிக. இந்தச் சிவப்பிரகாசமாகிய நூலுக்கு முன்னோர்களும் வியாக்கி செய்திருக்க இப்பொழுது இந்த வியாக்கிசெய்யவேண்டுங் காரணமேதென்னில், முன்னுள்ள தம்பிரான்களெழுதின வியாக்கிகளெல்லாம் பொழிப்புரையாக எழுத அதனோடு சமயிகள் கருத்துக்களுங் காட்டி என் தம்பிரான் ஞானப்பிரகாசத்தம்பிரானார் எழுதின வியாக்கியின் வழியே தொந்தனையும் பாட்டுஞ் சேர்த்து, அது நீங்கலாகக் காவை யம்பலநாதத் தம்பிரானார் இந்நூலின் கருத்தாகச் செய்தருளின குறள்வெண்பா நூறும் இந்நூலிற் பாட்டுக்கள் தோறும் பகுத்துச் சேர்த்து அந்தக் குறளின் கருத்தாகிய அத்தங்களுக்குந் தவறுவராமல் முன்னுண்டான வியாக்கிகளின் பொழிப்போடும் விரிவோடும் நுட்பமும் அகலமுங் காட்டி வழி நூல்களிலுண்டான சூத்திரம் பன்னிரண்டும் இந்நூலிலே வகுத்து வியாக்கி செய்ததென அறிக. இங்ஙனம் பல வகையாக வியாக்கியெழுதுகைக்கு விதியேதென்னில், அஃதாவது: “பொழிப்பகலம் நுட்பநூல் எச்சமென் றாறாக், கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் பழிப்பின், நிரையாமா சேக்கு நெடுங்குன்ற நாட, உரையாமோ நூலுக்கு நன்கு” (நாலடி, 319) என்றமையான் நூல்களுக்கு நால்வகைப் பொருள்களுங்கூட்டி வியாக்கி செய்யும் விதியுண்டாகையால் அவ்விதியைப் பற்றிப் பொழிப்பும் அகலமும் நுட்பமும் நூலெச்சமுங் காட்டி வியாக்கியயெழுதினதென அறிக. அஃதாவது “பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப் பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே” எ ம், “அகல மென்ப தாசறக் கிளக்கின் விகல மின்றி விரித்துரைப் பதுவே” எ ம், “நுட்பமென்பது நுழை பொரு ளியாவுந் திட்ப மாகத் தெளியக் கூறல்” எ ம், “எச்ச மென்ப திருபொரு ளொழிவு மிச்ச மாக விரித்துரைப் பதுவே” எ ம் வரும் இலக்கண விதியைப்பற்றியென அறிக. இதிற் பொழிப்பாவது சத்தத்துக்கு அத்தமாகத் தொகுத்தெழுதுகையென அறிக; அகலமாவது அதனை விரித்தெழுதுகையென அறிக; நுட்பமாவது கடாவுக்கு விடைகொடுத்தெழுதுகையென அறிக. எச்சமாவது பாட்டிற் புகுதாத பொருள்களை யமைத்தெழுதுகையென அறிக.
மேற்பாயிரம் வருமாறு. இங்ஙனம் இந்த நூல்களுக்கு முந்தப் பாயிரங் கூறுகைக்கு விதியே தென்னில்; “ஆயிரமுகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே” (நன்னூல், 53) என்னும் விதியைப்பற்றி முந்தப் பாயிரம் அருளிச் செய்யவேண்டி, இந்நூலுக்குக் காப்பு ஒரு செய்யுளாகவும் பாயிரம் பன்னிரண்டு செய்யுளாகவும் அருள்செய்வா னெடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

ஓங்கொளியாய் அருள்ஞான மூர்த்தி யாகி
உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை
திகழரவம் வளர்சடைமேற் சேர வைத்து
நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றிமையோர் துதிசெய்ய நிருத்தம் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வாம்.

மன்னிய கடவுள் பொன்னடி வாழ்த்தி
முன்னவ னுண்மை முறைமை மொழிந்தது.

பொழிப்புரை :

ஓங்கொளியாய் நின்மல சொரூபமா யிருக்கப்பட்ட பரமசிவமானது மிகுந்த பிரகாசமான பரையினது சொரூபமாகிய பேரொளியாய்ப் பிரிவற நிற்கச்செய்தே பிரபஞ்சங் காரியப்படுத்துமவதரத்து; அருள்ஞான மூர்த்தியாகி தனது காருண்ணியத்தினாலே இச்சா ஞானக் கிரியாசொரூபனாய்; உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணபிரபஞ்சத்தையெல்லாம் இரக்ஷித்தருளுகிற உமாபரமேசுவரியார் திருக்கண் சாத்தியருள; தேங்கமழும் மலரிதழி திங்கள்கங்கை திகழரவம் வளர்சடைமேல் சேர வைத்து மணம் விட்டு வீசாநின்ற கொன்றை மலரினையும் திருஇளம்பிறையினையும் கங்காபரமேசுவரியையும் பணாமணிகளினாலே விட்டுவிளங்காநின்ற நாகத்தினையும் நீண்ட திருச்சடாபாரத்திலே பொருந்தவைத்து; நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க ஆன்மாக்களால் விட்டு நீங்குதற்கரியதாகிய பிறவித் தொந்தனை விட்டு நீங்குகைப் பொருட்டாக; இமையோர் துதிசெய்ய மன்றுள் நின்று நிருத்தஞ்செய்யும் தேவர்களாயுள்ளோர்கள் தோத்திரம் பண்ணத் திருவம்பலத்தின்கண்ணே நின்று திருக்கூத்தாடல் செய்தருளுமவனது; பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின்மேலும் புந்தியினும் உற வணங்கிப் போற்றல் செய்வாம் பொலிவினையுடைத்தாகிய தாமரை மலர் போன்ற ஸ்ரீ பாதங்களை இந்நூல் செய்து முடிவது பொருட்டாக எனது தலைமேலும் இதயத்திலும் அழுந்த வைத்துத் தோத்திரம் பண்ணா நின்றேன்.
ஓங்கொளியாய் என்பதற்கு அந்தப் பரமசிவமானது பரையினதுசொரூபமாகிய பேரொளியாயிருக்குமென்று பொருள் கூறிய தேதென்னில், அஃதாவது : ஆய் என்ற விகாரச்சொற்கொண்டே அந்தப் பராசத்தி யுடம்பாகப் பரமசிவம் நிற்கையாலே யப்படிச் சொல்லப்பட்டதென அறிக. அதற்கு வழியேதென்னில், தனக்கென்றொரு நிறமில்லாத சுத்த படிகமானது கூடினதன் நிறமாயிருந்தாற் போலத் தனக்கென்றொரு சொரூபமில்லாத அந்தப் பரமசிவமானது தனது பரையினது சொரூபமாகிய பேரொளி யாகையாலேயும் அந்தச் சத்தியிடமாக இச்சாஞானக்கிரியா சொரூபனாகையாலேயும் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இதற்கு பிம் சிவஞானசித்தியாரில் “பொன்மை நீலாதி வன்னம்... முளையானன்றே” (1.68) எது கண்டுகொள்க. அன்றியும் அந்தப் பரமசிவமானது தனக்கென்றொரு சொரூபமாயிராதென்பதற்கு பிம் சித்தியாரில் “குறித்தடியி னின்றட்ட குண மெட்டுச் சித்தி” (9,6) என்னுஞ் செய்யுளில் “மேலொடுகீ ழில்லான், நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வருக்கு நினைப்பரியா னொன்று மில்லான்” எம் கண்டு கொள்க. அன்றியும் இந்நூலினும் “பலகலை” (13) என்னுஞ் செய்யுளிலே “பதிபரமே யதுதா னிலவும்அரு வுருவின்றிக் குணங்குறி களின்றி நின்மலமாய்” எம், தேவாரத்தினும் “இன்னதன்மைய னென்றறியொணா எம்மானை” (7 59 1) எம், திருவாசகத்தினும் “ஒருநாம மோருருவ மொன்றுமிலார்.” (8. 11. 1) எ ம் இப்பொருள்பற்றியென அறிக. அன்றியும் அந்தப் பரமசிவமானது அப்படிப் பேரொளியாயிருக்குமென்றது அது சோமசூரியாக்கினி நக்ஷத்திரங்கள் முதலாயுள்ளவையிற்றுக்கும் ஒளிகளையுங் கொடுப்பதாய் சக்ஷவிந்திரியத்தை மறைக்கப்பட்ட புறவிருளைப்போலன்றி மற்றுள்ள விடயவிந்திரியங்களையும் மறைப்பதாய் ஆன்மாக்களுடைய இச்சா ஞானக் கிரியைகளையும் மறைக்கப்பட்ட பேரந்தகாரமாகிய ஆணவமலத்தை நீக்குகையாலே அப்படிச் சொன்னதென அறிக. அப்படிச் சிவன் பேரொளியுமாயிருப்பனென்பதற்குப் பிம் தேவாரம் சூசூகாரொளிய திருமேனிச் செங்கண் மாலும்” (6. 1.10) என்னுந் திருப்பாட்டிலே “பேரொளியைப் பெரும்பற்றப் புலியுரானை” எது கண்டுகொள்க. அன்றியும் திருவாசகத்தில்சூசூவெளிவந்திலேனை விடுதிகண்டாய் மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்” (8. 6.15) எ ம், கோவைத் திருவாசகத்தில் “உருகுதலைச்சென்ற வுள்ளத்து மம்பலத்தும் மொளியே, பெருகுதலைச்சென்று நின்றோன்” (104) எ ம் கண்டு கொள்க. அன்றியும், சிவன் சோமசூரியாக்கினி நக்ஷத்திரங்கள் முதலாயுள்ளவையிற்றுக்கும் ஒளிகளைக் கொடுப்பானென்பதற்கு பிம் சித்தியாரில் “நாயகன் கண்ணயப்பால் தேயமா ரொளிகளெல்லாஞ் சிவனுருத் தேசதென்னார்” (1.52) எது கண்டுகொள்க. இனி அருள்ஞான மூர்த்தியாகி எகு ஞானமொன்றையுஞ் சொல்ல இச்சாஞானக்கிரியா சொரூபனென்று பொருள்கூறிய தேதென்னில் ஞானமுண்டான விடத்திலே இச்சையுங்கிரியைமுண்டாகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “எத்திற ஞானமுள்ள தத்திற மிச்சைசெய்தி, வைத்தலான் மறைப்பின் ஞானால் மருவிடுங் கிரியையெல்லாம்” (1.62) எது கண்டுகொள்க. இனி, திங்கள் கங்கை திகழரவம் வளர்சடைமேற் சேரவைத்து எகு இவைகளைப் பொருந்தவைத்து என்றேதேதென்னில் பாம்புஞ் சந்திரனுந் தம்மிற் பகையாயிருக்கவும் அவையிற்றைப் பகையற வைக்கையாலென அறிக. இதற்கு பிம் தேவாரத்தில் “பாம்பொடு திங்கட்பகை தீர்த்தாண்டாய்” (6.99.2) எது கண்டுகொள்க. நிருத்தமென்றது பஞ்சகிருத்தியத்தையென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “உலகமே யுருவமாக... ஐந்து, நலமிகு தொழில்களோடு நாடக நடிப்பனாதன்” (5.7) எது கண்டு கொள்க. பவத்தொடர்ச்சி நீங்க நிருத்தஞ்செய்யுமென்றதும் இப்பொருள்பற்றியென அறிக. அப்படிச் சிவன் பஞ்கிருத்தியஞ் செய்யவே ஆன்மாக்களுக்கு மலபரிபாகம் வந்து முத்தியைப் பெறுவார்களென்பதற்கு பிம் சித்தியாரில் “சொன்னவித் தொழில்க ளென்ன... மலங்க ளெல்லாந் துடைப்பதுஞ் சொல்லலாமே” (1.36) எது கண்டுகொள்க. இனி, சிரத்தின் மேலும் புந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம் எகு வயிது ஒன்றாயிருக்க சிரத்தின்மேலும் புத்தியினுமென்று இருவகையானதேதென்னில் தீக்கையிலுண்டான சகளத்தையுந் தியானத்திலுண்டான நிட்களத்தையுமென அறிக. அவையாவன : சகளமென்றது ஆசாரிய மூர்த்தியாகி வந்து அறிவித்துத் திருவடியை வைத்ததென அறிக; நிட்களமென்றது உயிர்க்குயிராய் நின்றறிவிக்கிற பேரறிவையென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “என்னையிப் பவத்திற் சேராவகை யெடுத் தென்சித் தத்தே, தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும்” (பாயிரம் 3) எம், திருக்களிற்றுப்படியாரில் “சிந்தையினு மென்றன் சிரத்தினிலுஞ் சேரும்வகை, வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் தந்தவனை” (100) எம் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது நின்மலசொரூபியாயிருக்கப்பட்ட பரமசிவமானது தனது பரையினது சொரூபமாகிய பேரொளியுமாய் இச்சா ஞானக் கிரியா சொரூபியுமாய்த் திருவம்பலத்தின்கண்ணே நின்று திருநடஞ்செய்த அவதரத்தை நோக்கி இந்நூற் செய்து முடிவது பொருட்டாகத் தோத்திரம் பண்ணுமுறைமையை யறிவித்தது.
இங்ஙனந் திருநடஞ்செய்தருளுகிற சிவனுக்குண்டான கிருத்தியங்களுக்கெல்லாம் உடனாயிருக்கப்பட்ட பராசத்தியை நோக்கித் தோத்திரம் பண்ணுவான் எடுத்துக்கொண்டருளியது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 2

பரந்தபரா பரையாதி பரன திச்சை
பரஞானம் கிரியைபர போக ரூபம்
தருங்கருணை உருவாகி விசுத்தா சுத்தத்
தனுகரண புவனபோ கங்கள் தாங்க
விரிந்தஉபா தானங்கள் மேவி ஒன்றாய்
விமலமாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்து
அரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும்
அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
.
புத்தியும் முத்தியும் பொருந்திநின் றளிக்குஞ்
சத்திதன் பேதத் தகைமை சாற்றியது.

பொழிப்புரை :

பரந்தபராபரை எங்கும் பரிபூரணமாயிருக்கிற மேலான பராசத்தியானது; ஆதி திரோதசத்தியுமாய்; பரனதிச்சை பரஞானங்கிரியை பரனுடைய இச்சாசத்தியென்றும் மேலான ஞான சத்தியென்றுங் கிரியாசத்தியென்றும்; பரபோகரூபந் தருங்கருணை உருவாகி மேலான சிவபோகத்தைத் தன்னடியார்க்குக் கடாக்ஷித்தருளுகிற காருண்ணியசத்தி இப்படி இச்சா ஞானக் கிரியா சொரூபமாகி; (இந்தப் பதத்துக்கு இதுவன்றியும் மேலான சுகசொரூபத்தைத் தன்னடியார்க்குக் கடாக்ஷித்தருளுகிற காருண்ணிய கர்த்தாவுக்குத் திருமேனியுமாய் என்பாருமுளர்) விசுத்தா சுத்தத் தனுகரணபுவன போகங்கள் தாங்க விரிந்த உபாதானங்கள் மேவி சுத்தமாயையிலுண்டான தனுகரணபுவன போகங்களையும் அசுத்தமாயையி லுண்டான தனு கரண புவன போகங்களையுந் தருகிற்பதாகப் பரந்து விந்து மோகினி மானென்கின்ற மூன்று உபாதானங்களையும் பொருந்தி; ஒன்றாய் இங்ஙனம் பெயருந்தொழிலும் பலவாயிருந்தும் தான் ஒன்றாயிருப்பதாய்; விமலமாய் இந்த உபாதானங்களோடு கூடியிருந்தாலுந் தான் நின்மலமா யிருப்பதாய்; ஐந்தொழிற்கும் வித்தாய் சிவன் செய்யப்பட்ட சிருஷ்டி திதி சங்கராந் திரோபவம் அநுக்கிரகம் என்னப்பட்ட பஞ்சகிருத்தியங்களுக்குங் காரணமாய்; ஞாலத்தரந்தை கெட மணிமன்றுள் ஆடல் காணும் பிரபஞ்சத்தினுள்ளார் பிறவிக் கிலேசம் நீங்குகைப்பொருட்டாக அழகிய திருவம்பலத்தின்கண்ணே சிவனைத் திருக்கூத்துக் கண்டருளும்; அன்னை அருட்பாத மலர் சென்னி வைப்பாம் இந்த இயல்புகளையுடைய உலக மாதாவினது கிருபை பொருந்தின ஸ்ரீபாதகமலத்தை எனது தலைமேலே வைத்துக் கொள்ளாநின்றேன்.
பரந்த பராபரை எகு பூரணமாகிய மேலான பராசத்தியென்றதேதென்னில் பூரண கர்த்தாவாகிய பரமசிவனுக்குச் சத்தியாய் நிற்கையாலென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “எத்திறம்” நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்” (2.75) எது கண்டுகொள்க. இனி ஆதியென்றதைத் திரோதசத்தி யென்றது; திரோதசத்திக்கு ஆதியென்ற பேரானதேதென்னில் அந்தத் திரோதம் அவதரசத்தியாகி ஓரவதரத்திலே தோன்றுகையாலென அறிக. இனி மற்றுள்ள இச்சா ஞானக் கிரியா சத்திகளைப் பரனதிச்சை பரஞானங் கிரியை யென்று இந்தச் சத்திகளுக்குச் சிவனைக் கூட்டிச் சொன்னதேதென்னில் சிவனுக்கு இந்தச் சக்திகள் இச்சா ஞானக் கிரியாசத்திகளாய் நிற்கையாலென அறிக. அவையாவன: சிவன் ஆன்மாக்களை இரக்ஷிக்க வேணுமென்று திருவுளத்திலே யொரு நினைவெழுந்திருந்த அவதரத்துக்கு இச்சாசத்தியாகையாலும், அதிலேயொரு அறிவெழுந்திருந்த அவதரத்துக்கு ஞானசத்தியாகையாலும், அந்த ஆன்மாக்களைப் பிரபஞ்சகாரியப்படுத்தும் அவதரத்துக்குக் கிரியாசத்தியாகையாலும் அப்படிச் சொன்னதென அறிக. இங்ஙனஞ் சொன்னதற்கு பிம் சித்தியாரில் “ஒன்றதா யிச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி நின்றிடுஞ் சத்தி யிச்சை யுயிர்க்கருள் நேச மாகும், நன்றெலாம் ஞான, சத்தியால்நயந் தறிவன்நாதன், அன்றருட் கிரியை தன்னா லாக்குவன் அகிலமெல்லாம்” (1.63) எது கண்டு கொள்க. இனி பரபோகரூபந்தருங் கருணை யுருவாகி எகு மேலான சுகசொரூபமாகிய சிவபோகத்தைத் தன்னடியார்க்குக் கடாக்ஷித்தருளுகிற சத்தியென்று பொருள் கூறியதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “பவமே வியநெறி பந்திக்கு மீசன் பசுக்கள் தம்மை” யென்னுஞ் செய்யுளில் “சத்திகண்ணாச் சென்று சார்ந்து பின்னர்ச், சிவமேவுவ ரென்றுகாண் கொச்சைக் காவலன் சித்திரிப்பே’ எம், இந்நூலினும் “முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி யத்தனை யருளும்” (75) எம், திருவாசகத்தினும் “அவனரு ளாலே யவன்தாள் வணங்கி” (8, 1, 18) எம் கண்டு கொள்க. இனி விசுத்தாசுத்தத் தனுகரண புவனபோகங்கள் தாங்க விரிந்த உபாதானங்கள் எகு விந்துமோகினிமானென்று பொருள்கூறியதேதென்னில், விந்து என்றது சுத்தமாயையில் தோன்றப்பட்ட விந்துசத்தியென அறிக; மோகினியென்றது அசுத்த மாயையென அறிக; மானென்றது அவ்வியத்தமாகிய பிரகிருதிமாயையென அறிக. இவ்வுபாதான மூன்றுக்கும் பிம் சித்தியாரில் “மந்திரம் அத்துவாவின் மிகுத்தொரு வடிவ மாகத், தந்ததென் அரனுக் கென்னிற் சகத்தினுக் குபாதா னங்கள், விந்துமோகினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச், சிந்தையா ரதீத மான சிவசக்தி சேர்ந்து நிற்கும்” (1.57) எது கண்டு கொள்க. இனி ஒன்றாய் எகு பெயருந் தொழிலும் பலவாயிருந்துந் தானொன்றா யிருப்பதாயென்று பொருட்படுத்தினதற்கு பிம் சித்தியாரில் “சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே யனேகமாக, வைத்திடுங் காரியத்தால்” (1.61) எது கண்டு கொள்க. இனி ஐந்தொழிற்கும் வித்தாய் எகு சிவன் செய்யுங் கிருத்தியங்களுக்கெல்லாம் இந்தச் சத்தி காரணமாயிருப்பளென்று பொருள்கூறியதேதென்னில் சிவன் யாதாமொன்றைச் செய்யுமிடத்து இந்தச் சத்தியைக் கூடாமற் செய்யானாகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் திருக்களிற்றுப்படியாரில் “நங்கையினால் நாமனைத்துஞ் செய்தாற்போல் நாடனைத்தும், நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும்” (78) எம், “நேரிழையாள் தன்வசனா யேயிருப்பன் தான்” (46) எம், சித்தியாரிலும் “அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்” (1.69) எம் வருமேதுக்களைக் கண்டு கொள்க. இனி அன்னை யருட் பாதமலர் சென்னி வைப்பாம் என்ற பதத்தில் அன்னையென்றதை உலகமாதா என்று பொருள் கூறியதேதென்னில், இந்தச் சத்தி சர்வான்மாக்களையுந் தோற்றுவித்து ஊட்டி யுறக்கி யநுக்கிரகித்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “பேசரிய வுயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போக மவையளித்துப் பிறப்பினையு மொழித்திட், டாசகலு மடியருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னிவைப்பாம்” (பரபக்கம், பாயிரம் 3) என்பதனுள் “ஆசகலு மடியருளத் தப்பனுட னிருக்கும் அன்னை” எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது பராசக்தியானது திரோதசத்தியுமாய் இச்சாஞானக்கிரியா சத்தியுமாய்ச் சிவனுக்குத் திருமேனியுமாய்ச் சுத்தமாயையும் அசத்தமாயையுமாகிய விந்து மோகினி மானென்கிற உபாதானங்களையுங் கூடிநின்று காரியப்படுத்திச் சிவன் செய்யும் பஞ்சகிருத்தியங்களுக்குங் காரணமாய் ஆன்மாக்கள் ஜனன நீங்குகைகைப் பொருட்டாகத் திருவம்பலத்தின்கண்ணே சிவனைத் திருக்கூத்துக் கண்டருளுகிற பராசத்தியை நோக்கித் தோத்திரம் பண்ணின முறைமையை யறிவித்தது. இவையிரண்டும் வழிபடுதெய்வ வணக்கம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

நலந்தர நூல் இருந்தமிழின் செய்யுட் குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்கள் இகழ்ந்தகயற் கண்ணியொடும் இறைவன்
கலந்தருள வரும்ஆனை முகத்தான் மும்மைக்
கடமருவி யெனநிலவு கணபதியின் அருளால்
அலந்துமது கரமுனிவர் பரவவளர் கமலம்
அனையதிரு வடியிணைகள் நினைதல் செய்வாம்.
.
சொற்றரு நூலிற் குற்றமணு காவகை
பொற்புறு கரிமுகன் நற்பதம் பணிந்தது.

பொழிப்புரை :

நலந்தர நூல் இந்நூலுக்கு எல்லா நன்மைகளு முண்டாம்படியும்; இருந்தமிழின் செய்யுட்குற்றம் நண்ணாமை பெரிய தமிழாகிய தொல்காப்பிய முதலாயுள்ள இலக்கணங்களின் நீக்கபட்ட பஞ்சவதிகாரக் குற்றங்களும் வந்து பொருந்தாதபடியும்; இடையூறு நலியாமை கருதி இந்நூல் செய்து முடிகைக்கு இராஜீக தெய்வீகங்களினால் ஒரு விக்கிநங்களும் வாராமலும் விசாரித்து; இலங்கும் இரு குழையருகு பொருதுவரி சிதறி இணைவேல்கள் இகழ்ந்த கயற்கண்ணியொடும் இறைவன் கலந்தருள வரும் ஆனை முகத்தான் விளங்கப்பட்ட இரண்டு மகரக்குழையளவுஞ் சென்று மோதிச் செவ்வரி பரந்து தனக்குவமையாகச் சொல்லப்பட்ட வேல்களையும் பழித்த கயல்போன்ற கண்ணினையுமுடைய பரமேசுவரியோடும் பரமேசுவரன் கூடியருள எழுந்தருளின யானைமுகத்தினையுடைய; மும்மைக் கடம் அருவியென நிலவு கணபதியின் அருளால் இரண்டு கன்னங்களாலும் உபத்தத்தினாலும் பாயும் மதமானது மலையிலே நின்றும் அருவி பாய்ந்தாற்போல என்னும்படிப் பொருந்தப்படாநின்ற விக்கிநேசுவரன் அநுக்கிரகத்தாலே; அலந்து மதுகர முனிவர் பரவ வளர் கமலம் அனைய திருவடியிணைகள் நினைதல் செய்வாம் முனிவராகிய வண்டுகள் ஆசைப்பட்டுத் தோத்திரம் பண்ண நிறம் வளராநின்ற செவ்வித் தாமரை மலர்போன்ற அவனது ஸ்ரீபாதங்களைச் சிந்தியா நின்றேன்.
நலந்தரநூல் எத்தகு நன்மையுண்டாக என்றதேதென்னில் சைவசித்தாந்த அத்தத்துக்கு மலைவுவராமலென்றதென அறிக. இருந்தமிழின் செய்யுட்குற்றம் நண்ணாமல் எகு பஞ்சவதிகாரக் குற்றங்களும் பொருந்தாமலென்றதேதென்னில், எழுத்துஞ் சொல்லும் பொருளும் யாப்பும் அலங்காரமுமென்னப்பட்ட இலக்கண விதிகளுக்குக் குறைவுபடாம லென்றதென அறிக. இடையூறு நலியாமை எகு இராஜீக தெய்வீகங்களினால் இடையூறுவராம லென்றதேதென்னில் இராஜீகமென்றது படைக்கலங்களினாலுண்டான விக்கிநமென அறிக; தெய்வீகமென்றது பசிகளினாலும் நோய்களினாலுமுண்டான விக்கிநமென அறிக. வரும் ஆனைமுகத்தான் எகு எழுந்தருளின யானைமுகத்தானென்ற தேதென்னில் எழுந்தருளினதென்றது திருவவதாரஞ் செய்ததென அறிக.
இதனாற் சொல்லியது இந்நூற் செய்து முடியுமிடத்து இந்நூலுக்கு நன்மையுண்டாம்படியும், இலக்கணவிதியிலுண்டான குற்றங்கள் பொருந்தாதபடியும், இடையூறு வாராதபடியும் விசாரித்து விக்கிநேசுவரனை நோக்கித் தோத்திரம் பண்ணுமுறைமையினை யறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

வளநிலவு குலஅமரர் பதியாய் நீல
மயிலேறி வரும்ஈசன் அருள்ஞான மதலை
அளவில்பல கலைஅங்கம் ஆரணங்கள் உணர்ந்த
அகத்தியனுக் கோத்துரைக்கும் அண்ணல்விற லெண்ணா
உளமருவு சூரனுரம் எனதிடும்பை ஓங்கல்
ஒன்றிரண்டு கூறுபட ஒளிதிகழ்வேல் உகந்த
களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த
கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம்.
.
அருமறைச் சிரப்பொருள் அகத்தியற் குரைத்த
முருகன திருபதம் பரிவுடன் மொழிந்தது.

பொழிப்புரை :

வளம்நிலவு குலஅமரர் பதியாய் புதுமை பொருந்தியிருக்கிற தேவர்கள் கூட்டத்திற்குக் கர்த்தாவாயிருக்கப்பட்ட; நீலமயிலேறிவரும் ஈசன் அருள்ஞான மதலை நீலநிறத்தையுடைய மயிலை வாகனமாகவுடையனுமாய பரமேசுவரன் தந்தருளும் ஞானப்பிள்ளை; அளவில் பல கலை யங்கம் ஆரணங்கள் உணர்ந்த அகத்தியனுக்கு ஓத்துரைக்கும் அண்ணல் அளவில்லாத பலகலையாகிய ஞானங்களையும் சிடிக்ஷ நிருத்தம் சந்தசு சோதிடம் கற்பம் வியாகரணம் என்னப்பட்ட ஆறங்கமாகிய அங்கமும் இருக்கு எஜுர் சாமம் அதர்வணம் என்னப்பட்ட நாலுவேதமும் ஓதியுணர்ந்த அகத்தியமஹாவிருடிக்குப் பிரணவ சொரூபத்துக்கு வியாக்யாநஞ் செய்த சுவாமி; விறலெண்ணா உளம் மருவு சூரனுரம் எனதிடும்பை ஓங்கல் ஒன்றிரண்டு கூறுபட ஒளிதிகழ்வேலுகந்த பிறருடைய வெற்றியினை விசாரியாத மனத்தினையுடைய சூரபத்மாவினுடைய மார்பையும் என்னுடைய பிறவிக்கிலேசத்தினையும் அசுரரொதுங்கப்பட்ட கிரவுஞ்ச பர்வதத்தையும் ஒவ்வொன்று இவ்விரண்டு கூறுபடத் தக்கதாகப் பிரகாசம் விளங்காநின்ற வேலிலே திருவுளம் வைத்தருளின; குறமகள்தன் களபமலி மணிமுலைகள் கலந்த கந்தன் வள்ளிநாச்சியாருடைய களபச்சேறு மிகவும் பொருந்தின ஒளியையுடைய திருமுலைத்தலங்களிலே முயங்கியருளின சுப்பிரமணியப்பிள்ளையாரது; மலரடியிணைகள் சிந்தை செய்வாம் தாமரை மலர்போன்ற ஸ்ரீபாதங்களையும் இந்நூல் விக்கிநமறச் சென்று முடிவது பொருட்டாக நினையா நின்றேன்.
தேவர்களுக்கதிபதியென்றது அவர்களுக்குக் கர்த்தாவாகையாலென அறிக. நீலமயிலேறி வருமென்றது அஞ்ஞானமாகிய இருட்சியை விட்டுத் தோய்வற நிற்கையாலென அறிக. ஞானமதலையென்றது ஒருவர் அறிவியாமல் தானே யறிகைக்குண்டான மகத்துவத்தினாலென அறிக. இடும்பையிரண்டுபட என்றது பிறவித்துக்கமாகிய இடும்பை ஆன்மாவினோடுங்கூடி நின்று ஜநநமரணப்படுத்தி வருகையினாலே அருளோடுங் கூடி வழிபடுமவதரத்து அது நீங்குகையாலென அறிக. ஒளிதிகழ் வேலுகந்த என்றது தன்னை வழிபடும் அடியார்க்குண்டான துக்கங்களை ஜயிக்க வேணுமென்று திருவுள்ளத்தடைத்து வேலை எடுக்கையினாலென அறிக.
இதனாற் சொல்லியது இந்நூல் இடையூறுவராமல் முடியவேண்டி ஈசனருள் ஞானமதலையாகிய சுப்பிரமணியப் பிள்ளையாரை நோக்கித் தோத்திரம் பண்ணுமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட
திருநந்தி அவர்கணத்தோர் செல்வர் பாரிற்
பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியாம் வெண்ணெய்
மேவியசீர் மெய்கண்ட திறலான் மாறா
விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத்
தாவில்அருள் மறைஞான சம்பந்தர் இவர்இச்
சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே.
.
ஆதிமா முனிவர்க் கம்பிகா பதிஅருள்
கோதிலா ஞானக் குருமர புரைத்தது.

பொழிப்புரை :

தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட திருநந்தி தேவர்களுக்குக் கர்த்தாவாகிய ஸ்ரீகண்டபரமேயிவரன் எழுந்தருளியிருந்துள்ள மிக்க கயிலாயத் திருமலையைக் காக்கிறதே விரதமாகப் பூண்ட ஸ்ரீ நந்திகேயிவரநாயனார்; அவர் கணத்தோர் செல்வர் அவரது திருவடியைப் பெற்ற மஹாவிருடிகளில் ஒப்பில்லாத ஞானச் செல்வத்தையுடைய சநற்குமாரபகவான்; பாரிற் பாவிய சத்தியஞான தரிசனிகள் அவர் திருவடியைப் பெற்றுப் பூமியிலே எழுந்தருளின சத்தியஞானதரிசனிகள்; அடிசேர் பரஞ்சோதிமாமுனிகள் அவரது ஸ்ரீபாதத்தைப் பெற்ற பரஞ்சோதி மாமுனிகள்; சீர்வெண்ணெயாம் பதி மேவிய மெய்கண்ட திறலான் சிறப்புமிக்க திருவெண்ணெய்நல்லூரே திருப்படைவீடாகவுடைய மெய்கண்டதேவநாயனார்; மாறா விரவுபுகழ் அருணந்தி அவரது திருவடியைப் பெற்ற அழியாத புகழைக் கலந்த அருணந்திதேவநாயனார்; விறலார் செல்வத் தாவில் அருள் மறைஞானசம்பந்தர் அவரது திருவடியைப் பெற்று வெற்றி பொருந்தின செல்வமாகிய குற்றமில்லாத அருளைப்பெற்ற மறைஞானசம்பந்த நாயனார்; இவர் இச்சந்தானத்து எமையாளுந் தன்மையோரே இவர்கள் ஆறு திருப்பெயரும் இந்த மெய்கண்ட சந்தானத்து எம்மையடிமையாக ஏவற் செய்வித்துக் கொள்ளும் முறைமையினை யுடையோர்கள்.
தேவர்பிரானென்றது பிரமவிட்டுணுக்கள் முதலாயுள்ள தேவர்களுக்குங் கர்த்தா என்றதென அறிக. வளர்கயிலையென்றது உயர்ந்த கயிலையென்றதென அறிக. அந்தக் கயிலையைக் காவல்பூண்ட திருநந்தியென்றதேதென்னில், சிலாதரமுனி புத்திரனில்லாமல் தவஞ்செய்யுமவதரத்து அவனுக்குச் சிவன் முன்னின்று உனக்கு வேண்டியதேதென்று கேட்டருளத் தேவரீரைப் போலச் சாவாமூவா இயல்பினையுடைய புத்திரன் வேண்டுமென்று கேட்ப, அப்படிப் புத்திரனாகக் கொடுத்தருளியபடி வருகையா லே அவர் கன்ம பூமியிலேயிருக்க வொண்ணாதென்று திருவுள்ளத் தடைத்தருளி அவர்க்கு நந்திகேயிவரநாயனாரென்று ஞானாபிடேகமுஞ் செய்து மற்றுள்ள இருடிகளுக்கு ஞானோபதேசங் கொடுக்கக் கற்பித்து அவர்க்குக் கயிலாயத் திருமலையுங் காக்கிறது விரதமாக அன்றே கொடுத்தருளிதென அறிக. மெய்கண்ட திறலானென்றது உண்மைஞானமாகிய சத்தியத்தைத் தரிசித்த சாமர்த்தியத்தை யுடையவனென்றதென அறிக. விறலார்செல்வம் எகு வெற்றிபொருந்தின செல்வமென்றது அருட்செல்வத்தையென அறிக; அருட்செல்வ மென்றதேதென்னில் அருட்செல்வம் மேற்பட்ட செல்வமாகையாலும் அருட்செல்வ முடையவர்கள் பொருட்செல்வம் கொள்ளாதபடியாலும் அப்படிச் சொன்னதென அறிக. இவ்விரு செல்வத்தினுள்ளும் அருட்செல்வம் பொருட் செல்வத்தினும் மேற்பட்டதென்பதற்கு பிம் திருவள்ளுவப்பயனில் “அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள” (திருக்குறள் 241) என்னும் பொருள்பற்றி நின்றதென அறிக. அன்றியும் அருட்செல்வமுடைவர்கள் பொருட்செல்வங்கொள்ளார்களென்பதற்கு பிம் தேவாரத்தில் “துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ் சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே” (6.98.2) எம், பெரியபுராணத்தில் “கேடுமாக்கமும் கெட்ட திருவினார், ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்” (12.5.8) எ ம், சித்தியாரில் “ஓட்டில் தபனியத்திற் சமபுத்தி பண்ணிச் சங்கரனோ, டொக்கவுறைந் திவரவனை யவனிவரை விடாதே யுடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே காண்பர்” (8.29) எம் கண்டு கொள்க. இச்சந்தானமென்ற சுட்டு கொண்டே மற்றுமுள்ள சந்ததிகளுக்கும் இப்படிப் பாரம்பரியமாக ஆசாரிய மரபுண்டாகையால் இந்தமெய்கண்ட சந்ததியென்று பொருள்படுத்தினதென அறிக.
இதனாற் சொல்லியது இந்த மெய்கண்ட சந்ததிக்குச் சைவ சித்தாந்த அத்தம் பாரம்பரியமாக உபதேசஞ் செய்தருளின சந்தான குரவரொழுங்கினை யறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

பார்திகழ வளர்சாம வேதம் மல்கப்
பராசரமா முனிமரபு பயில ஞானச்
சார்புதர வந்தருளி எம்மை யாண்ட
சைவசிகா மணிமருதத் தலைவன் அந்தண்
கார்மருவு பொழில்புடைசூழ் மதின்மீதே மதியம்
கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையும் கடந்தைச்
சீர்நிலவு மறைஞான சம்பந்தன் எந்தை
திருவளரு மலரடிகள் சென்னி வைப்பாம்.
.
மன்னிய வொருபொருள் வடிவுகொண் டிருப்பதஞ்
சென்னியின் வைத்த தேசிகன் வணக்கம்.

பொழிப்புரை :

பார் திகழ பூமி விளங்குவதாகவும்; வளர்சாம வேதம் மல்க ஆயிரஞ்சாகைகளாக விரியப்பட்ட சாமவேதம் வர்த்தியா நிற்கவும்; பராசரமா முனிமரபு பயில பராசரப் பிரமவிருடி கோத்திரந் தழைக்கவும்; ஞானச் சார்புதர வந்தருளி எம்மையாண்ட சைவசிகாமணி ஞானவொழுக்கமுண்டாகும்படி எழுந்தருளி ஒன்றுக்கும் பற்றாத என்னை அடிமையாகக் கொண்டருளின சைவசமயத்துக்கு ஓர் அபிடேக மாணிக்கம்; மருதத்தலைவன் மருதூர்க்குக் கர்த்தாவானவன்; அந்தண் கார்மருவு பொழில் புடைசூழ் மதின்மீதே மதியம் கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையுங் கடந்தைச் சீர்நிலவு மறைஞானசம்பந்தன் அழகினையுங் குளிர்ச்சியினையுமுடைய மேகம் பொருந்தப்பட்ட சோலைப்பக்கங்களிலே சூழ்ந்த பெரிய மதிலுக்கு மேலே சந்திரனோடாமல் நெடிய கொடியினது கைகளாலே தகையப்பட்ட சிறப்புடைய திருப்பெண்ணாகடத்துச் சிறப்பு விளங்காநின்ற மறைஞான சம்பந்தனென்கின்ற திருநாமத்தினையுடைய; எந்தை திருவளரும் மலரடிகள் சென்னி வைப்பாம் எம்முடைய சுவாமியது அழகு வளராநின்ற தாமரை மலர்போன்ற ஸ்ரீபாதங்களை யெனது தலைமேலே வைத்துக் கொள்ளா நின்றேன்.
பார்திகழ எகு பூமி விளங்க என்றதேதென்னில் பிரபஞ்சத்திலுண்டான ஆன்மாக்களுக்கு ஞானம் பிரகாசிக்க என்றதென அறிக. சாமவேதமல்க எகு சாமவேதம் வர்த்திக்க என்றதேதென்னில் மற்றுள்ளவேத மூன்றினும் இந்நூல் செய்துடையார்க்கு இது பாரம்பரியமாக அதிகரித்து வருகையாலென அறிக. பராசரமாமுனி மரபு பயில எகு பராசரப் பிரமவிருடி கோத்திரந் தழைக்க என்றதேதெனில் அநாதியே இந்நூல் செய்துடையார் ஆசாரியர் அந்தக் கோத்திரமாய் வருகையாலென அறிக. ஞானச் சார்புதர வந்தருளி எகு ஞானவொழுங்குண்டாக என்றதேதென்னில் இந்நூல் செய்துடையாரை ஞானவுபதேசத்தைச் செய்து அந்த ஒழுங்கிலே நிறுத்துகையாலென அறிக. மருதூரென்றும் பெண்ணாகடமென்றும் திருப்படைவீடு இரண்டாக வேண்டுவானேனென்னில் மருதூர் திருவவதாரஞ் செய்த ஊரென அறிக; பெண்ணாகடம் ஆசாரியர் அபிடேகஞ்செய்த ஊரென அறிக.
இதனாற் சொல்லியது இந்நூல் மலைவறச் சென்றுமுடிய வேண்டித் தம்மை இரக்ஷித்த ஆசாரியரை நோக்கி வழிபடுமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப்
புகல்அளவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும்சொற் பொருள்போல்
பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடலுயிர்கண் அருக்கன்
அறிவொளிபோல் பிறிவரும்அத் துவித மாகும்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்க லுற்றாம்.
.
வளம்பயில் நூலின் மதிப்புடன் வகுத்து
விளம்புறு பொருளின் மேன்மையை விரித்தது.

பொழிப்புரை :

புறச்சமயத்தவர்க்கு இருளாய் பரசமயிகளாயுள்ள உலோகாயதன் முதல் பாஞ்சராத்திரியீறாகச் சொல்லப்பட்ட சமயிகளுக்குத் தெரியாததாய்; அகச்சமயத்தொளியாய் உட்சமயமாயுள்ள சைவமுதல் வைரவமீறாகச் சொல்லப்பட்ட சமயங்களாறுக்குஞ் சைவத்திற் பேதமாயுள்ள சமயிகள் எட்டுப் பெயர்க்கும் அறியப்படுவதாய்; புகழளவைக்களவாகி சர்வராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட அளவைப் பிரமாணங்களினாலே அளவிடப்படுவதாய்; பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் கர்த்தாவும் பிரபஞ்சமும் பொன்னொன்றாய்ப் பணிபலவனாற்போல இருக்குமென்கிற அபேதசித்தாந்தமுமடாததாய்; இருள்வெளிபோற் பேதமுஞ் சொற்பொருள்போற் பேதாபேதமுமின்றி கர்த்தாவும் பிரபஞ்சமும் இருளும் வெளியும்போல ஒன்றோடொன்று கூடாமல் வேறாயிருக்குமென்கிற பேதவாதிகள் சித்தாந்தமும் சொல்லும் பொருளும்போலச் சத்தத்தைச் சொன்னபொழுது அந்தச் சத்தந்தானே யத்தமாய்த் தோன்றியும் அத்தத்தைக் கண்டபொழுது அந்தச் சத்தம் வேறாயும் அத்தம் வேறாயும் ஒன்றுமாயிரண்டுமாயிருந்தாற்போலக் கர்த்தா பிரபஞ்சமுமாயல்லவுமா யிருப்பானென்கிற பேதாபேதவாதிகள் சித்தாந்தமுமடாததாய்; பெருநூல் சொன்ன அறத்தினால் விளைவதாய் பெரிய நூலாகிய வேதாகமங்களிற் சொல்லப்பட்ட சரியைகிரியாயோகங்களை அநுட்டித்ததனாலே யுண்டாகப்படுவதாய்; உடலுயிர் கண்அருக்கன் அறிவொளிபோற் பிரிவறும் அத்துவிதமாகுஞ் சிறப்பினதாய் யாதாமொன்றை யறியுமிடத்து உடலுமுயிருந் தன்னில் ஒன்றுபட்டறியும் அறிவைப் பிரிக்க வொண்ணாதாற் போலவும் யாதாமொன்றைக் காணுமிடத்துக் கண்ணினொளியும் ஆதித்தப் பிரகாசமுந் தன்னிலொன்றுபட்டு நிற்குந் தன்மையைப் பிரிக்கவொண்ணாதாற் போலவும் கர்த்தாவையும் பிரபஞ்சத்தையுந் தன்னிற் பிரித்தற்கரியதாய் அநந்நியமாயிருக்கிற சிறப்பினையுடைத்தாகிய; வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் வேதத்தின் முடிவில் தெளிவாயுள்ள சைவ சித்தாந்தத்தின் உண்மையாகிய அத்தத்தை இந்நூலிலே விளங்கச் சொல்லா நின்றேன். (வேதத்தின் முடிவிற்றெளிவென்றது வேதாந்தம் உடம்புஞ் சித்தாந்தம் உயிருமாய் நிற்கையாலென அறிக.)
புறச்சமயிகளுக்கு இருளென்றதேதென்னில் அவர்கள் திரிபதார்த்த நிர்ணயமுடையவர்களல்ல வாகையாலுஞ் சிவனைக் கர்த்தா என்று கொள்ளுகையும் இல்லாதவர்களாகையாலுமென அறிக. அகச்சமயிகளுக்கு ஒளியென்றதேதென்னில் இவர்கள் பதிபசுபாசமூன்று முண்டென்று நாட்டுகையாலுஞ் சிவனைக் கர்த்தாவாகக் கொள்ளுகையாலுமென அறிக. இவர்களும் அம்மாத்திரமொழிந்து சைவசித்தாந்த உண்மைக்குரியவர் களல்லவென அறிக. அஃதெங்கே காணப்பட்டதென்னில் சங்கற்ப நிராகரணத்தில் ஐக்கியவாதி முதல் சிவாத்துவிதியாகிய சைவர்முடிவாகவுள்ள பேதமெட்டினுமுண்டான அத்தங்களை மறுத்தவொழுங்கிலே கண்டுகொள்க. அளவைகளினால் அளவிடப்படுவதாயென்றதேதென்னில் அளவைப் பிரமாணமாகிய காண்டல் கருதல் உரையென்னப்பட்ட பிரத்தியக்ஷம் அநுமானம் ஆகமம் என்கின்ற மூன்று வகையினாலும் அளவிட்டறியப்படுவதா யென்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில், “அளவை காண்டல் கருதலுரை அபாவம் பொருளொப் பாறென்பர், அளவை மேலும்ஒழி புண்மை யைதீ கத்தோ டியல்பெனநான், களவை காண்ப ரவையிற்றின் மேலு மறைவ ரவையெல்லாம், அளவை காண்டல் கருதலுரை யென்றிம் மூன்றி னடங்கிடுமே” (அளவை1) எது கண்டு கொள்க. எனவே சித்தாந்தம் இம்மூன்று வகையாலும் அறியப்படுமென்பது கருத்து. இனி,பொற்பணிபோ லபேதப் பிறப்பிலதாய் எகு பொன்னிலே நின்றும் பணி பலவானாற்போலக் கர்த்தாவினிடத்திலே பிரபஞ்சமுண்டாமென்கிற அபேத சித்தாந்தமு மடாததா யென்றதேதென்னில், கர்த்தாவோ என்றால் சித்தாயிருப்பானொருவன், பிரபஞ்சமோ என்றால் ஜடமாயிருப்பதொன்று, ஆகையாற் சித்தினிடத்துச் சடந்தோன்றாதது கொண்டே சிவனிடத்துப் பிரபஞ்சந் தோன்றா தென்றதென அறிக. இருள்வெளிபோற் பேதமும் எகு இருளும்வெளியும் போலக் கர்த்தாவும் பிரபஞ்சமுந் தன்னில் வேறாயிருக்குமென்கிற பேதசித்தாந்தமும் அடாததாயென்றதே தென்னில் இந்தப்பிரபஞ்சங் காரியப்படுமிடத்துக் கர்த்தாவாலே காரியப்படவேண்டுகையால் அப்படி வேறென்று சொல்ல வொண்ணாதென அறிக. இனி, சொற்பொருள்போற் பேதாபேதமும் எகு சொல்லும் பொருளும் போலக் கர்த்தாவும் பிரபஞ்சமுந் தன்னிலொன்றுமாயிரண்டுமா யிருக்குமென்கிற பேதாபேத சித்தாந்தமும் அடாததாயென்றதேதென்னில் சித்தாயுள்ள சிவனிடத்துச் சடமாயுள்ள பிரபஞ்சந் தோன்றாதாகையால் ஒன்றெனவொண்ணாதென்றுஞ் சடமாயுள்ள பிரபஞ்சஞ் சித்தாயுள்ள சிவனாலே காரியப்படவேண்டுகையால் வேறெனவொண்ணாதென்றுஞ் சொன்னதென அறிக. பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் எ கு அறத்திறனாலென்றதை குருபூசை சிவபூசை மஹேஸ்வர பூசைகளினால் உண்டாவதா யென்னவு மாமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே, நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து” (8.31) எம், “தாபர சங்கமங்க ளென்றிரண் டுருவி னின்று, மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்” (2.28) எம் கண்டு கொள்க. இதில் தாபரமென்றது இலிங்கமூர்த்தமென அறிக. சங்கமமென்றது குருவையும் மஹேயிவரரையுமென அறிக. இனி, உடலுமுயிருங்கூடின அறிவையுங் கண்ணுமருக்கனுங் கூடின ஒளியையும் பிரிக்கவொண்ணாதாற்போலக் கர்த்தாவையும் ஆன்மாக்களையும் பிரிக்கவொண்ணாதாய் அத்துவிதமா யிருக்குமென்றதேதென்னில் சிற்றறிவாயுள்ள ஆன்மாக்களைப் பேரறிவாயுள்ள சிவன் அறிவுக்குமிடத்து இரண்டறிவையும் பிரிக்கவொண்ணாதென்றதென அறிக. அத்துவிதமென்றதேதென்னில் ஒன்றுமல்ல இரண்டுமல்ல என்றதென அறிக. அஃதாவது ஒன்றல்ல என்றது ஆன்மாவுஞ் சிவமுமொன்றல்ல என்றதென அறிக. இரண்டல்ல என்றது ஆன்மாக்கள் சீவிக்குமிடத்துச் சிவனறிவிக்க அறிந்து பிரிவற நின்று சீவிக்கையாலென அறிக. இதற்கு பிம் இருபாவிருபதில், “ஒன்றா காமல் இரண்டா காமல், ஒன்று மிரண்டு மின்றா காமல்” (20, 910 ) எது கண்டுகொள்க. சிறப்பென்றது அத்தத்தின் மான்மியமென அறிக. வேதத்தின் முடிவிற் றெளிவென்றது சொல்லிறந்த பொருளென அறிக. இதற்கு பி ம் கோயிற்புராணத்தில் “ஆரணங்கள் முடிந்த பதத் தானந்த வொளியுலகிற், காரணங் கற்பனை கடந்த கருணை” (பாயிரம் 2) எம், இந்நூலினும் “ஈங்கிதுவென் றதுகடந்த இயல்பினானும்” (15) எம் கண்டுகொள்க. அன்றியும் வேதாந்தத் தெளிவென்றதை வேதாந்தப் பொருளை விடப்பட்ட சித்தாந்தமென்பாருமுளர். அஃதத்தமன்று. அதுவேனென்னில் வேதாந்தம் உடம்புஞ் சித்தந்தம் உயிருமாய் நிற்கையால் அப்படி நீக்கஞ் சொல்லவொண்ணாதென்றதென அறிக. இதற்கு பிம் இந்நூலில் “வேதத் தலைதரு பொருளாய்” (99) எது கண்டு கொள்க. சைவசித்தாந்தமென்ற தேதென்னில் சைவமென்றது சிவாகமத்தையென அறிக; சித்தாந்தமென்றது அந்தச் சிவகாமத்தின் கருத்தாகி வந்த அத்தத்தையென அறிக.
இதனாற் சொல்லியது இந்நூலிலே சொல்லுகிற அத்தமானது புறச்சமயமாகிய உலகாயதனுக்கும், புத்தரிற் சௌத்திராந்திகன் யோகாசாரன் மாத்தியமிகன் வைபாடிகன் ஆகப்பேர் நால்வருக்கும், அமணரில் நிகண்டவாதி ஆசீவகன் ஆகப்பேர் இருவருக்கும் மீமாஞ்சிகரில் பட்டாசாரியன் பிரபாகரன் நையாயிகன் ஆகப்பேர் மூவருக்கும் அகம்பிரமவாதியான மாயாவாதி பாற்கரியன் நீரிச்சரசாங்கியன் ஆகப்பேர் மூவருக்கும், வைணவனாகிய பாங்சராத்திரிக்கும் ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட சமயம் ஆறினால் பேதமாகச் சொல்லும் பேர்பதினாலுக்குந் தெளிவில்லாததாயிருக்கு மென்னு முறைமையும், உட்சமயமாகிய சைவம் பாசுபதம் மாவிரதம் காளாமுகம் வாமம் வைரவமென்னப்பட்ட சமயமாறுக்கும் முதற்கூறப்பட்ட சைவத்திற்பேதமாயுள்ள ஐக்கியவாதி பாடாணவாதி பேதவாதி சமவாதி சங்கிராந்தவாதி ஈயிவரவவிகாரவாதி பரிணாமவாதி சிவாத்துவிதியாகிய சைவர் ஆகப்பேர் எட்டுக்குந் தெளிவாயிருக்குமென்னு முறைமையும், அளவைப் பிரமாணமாகச் சொல்லப்பட்ட பிரத்தியக்ஷம் அநுமானம் ஆகமமென்கிற மூன்று வகையினாலும் அளவிடப்பட்டிருக்குமென்னு முறைமையும், பொன்னும் பணியும்போலிருக்கு மென்கிற அபேதசித்தாந்தங்களும் இருளும் வெளியும் போலென்கிற பேத சித்தாந்தங்களும் சொல்லும் பொருளும் போலென்கிற பேதாபேத சித்தாந்தங்களும் ஆக மூன்று வகையும் முன்னெண்ணப்பட்ட அகச்சமயத்தினும் புறச்சமயத்தினும் அடங்கியிருக்கையால் அந்த அத்தங்களுமல்லவா யிருக்குமென்னு முறைமையும், இந்தச் சைவசித்தாந்தம் சிவபுண்ணியத்தினலே யுண்டாவதாய் வேதத்தின்முடிவிற் றெளிவுமாம் அத்துவிதமுமாயிருக்கிறதே சைவசித்தாந்தமென்னு முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

மூவகைஆ ருயிர்வர்க்கம் மலத்தார் கன்ம
மூலமலத் தார்மூன்று முடையா ரன்றே
தீவகமாம் எனவுருவாய் வந்து நாதன்
திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால்
பாவனையால் மிகுநூலால் யோகப் பண்பால்
பரவிவரும் அவுத்திரியாற் பாச நாசம்
மேவஅரு ளுதவும்அவுத் திரியிரண்டு திறனாம்
வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே.
.
மூவகை யுயிரின் முறைமையும் அவர்க்குக்
காவல னருள்புரி கடனும் நவின்றது.

பொழிப்புரை :

மூவகையாருயிர்வர்க்கம் நிரம்பியிருக்கிற ஆன்மாக்கள் மூன்று வகைப்பட்டிருப்பார்கள். அஃதாவது; மலத்தார் ஆணவமலமொன்றையுடைய விஞ்ஞான கலரென்றும்; கன்மமூலமலத்தார் கன்மமலமும் ஆணவமலமுமுடைய பிரளயாகலரென்றும்; மூன்றுமுடையார் ஆணவமலமுங் கன்மமலமும் மாயாமலமுமுடைய சகலரென்றுஞ் சொல்லப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த மலங்கள் எந்த அவதரத்திலே யுண்டானதோவென்னில்; அன்றே இவை யநாதியேயுள்ளதாயிருக்கும், அவர்களுக்கிந்த மலங்கள் நீங்கும்வழி எப்படியோவென்னில்; நாதன் தீவகமாமென உருவாய் வந்து சிவன் இந்த மூவகை யான்மாக்களுக்கு முண்டான மலங்களைப் பாகம் வருத்துமிடத்து யாதாமொரு பக்ஷிகளை மிருகங்களைப் பிடிக்கவேண்டினவர்கள் அதற்கதற்கேற்ற பார்வையைக் காட்டிப்பிடித்தாற்போல ஒரு மலத்தையுடைய விஞ்ஞானகலருக்கும் இரண்டுமலத்தையுடைய பிரளயாகலருக்கும் மூன்று மலத்தையுடைய சகலருக்கும் அவரவர் நின்ற நிலைக்குத் தக்கதாகத் திருமேனிகொண்டு இரக்ஷிக்குமிடத்து விஞ்ஞானகலமும் பிரளயாகலரும் இந்த பூததேக சம்பந்தமற நிற்கையால் அவர்களை நிராதாரமாகிய திருமேனி கொண்டு இரக்ஷித்து இந்தச் சகலரை இரக்ஷிக்குமிடத்து இவர்கள் இந்தப்பூததேகசம்பந்தமாய் நிற்கையால் அவர்களைப்போலச் சாதாரணமாகிய மானுடச் சட்டைசாத்திவந்து இரக்ஷிக்கும். இங்ஙனம் இரக்ஷிக்குமிடத்து; திருநோக்காற் பரிசத்தால் திகழும் வாக்காற் பாவனையால் மிகுநூலால் யோகப்பண்பாற் பரவிவரும் அவுத்திரியாற் பாசநாசம் மேவஅருளுதவும் திருநோக்கால் திருக்கண்சாத்தியும் ஸ்ரீபாத ஸ்ரீஹயிதங்களால் பரிசித்தும் விளங்க வுபதேசித்துந் தன்னைப் போல நின்மலமாக பாவித்தும் மகத்தாகிய நூலுரைத்துக் காட்டியும் பொருளோடு கூட்டியுங் குண்டமண்டலமிட்டுச்செய்யுந் தீக்கைகளாலும் பாசநாசமாம்படி பொருந்த ஞானத்தையுண்டாக்கும். இவையிற்றில்;அவுத்திரி இரண்டு திறனாம் அவுத்திரியாகிய தீக்கை இரண்டு வகைப்பட்டிருக்கும். அஃதாவது; வியன் கிரியை ஞானமென விளம்புமாறே வியப்பத்தையுடைய கிரியாவதியென்றும் மனோ பாவத்தாற் செய்கிற ஞானாவதியென்றுஞ் சிவாகமங்கள் சொல்லும்.
மூவகையாருயிர் வர்க்கம் எகு ஒரு மலத்தையுடைய விஞ்ஞான கலரென்றும் இரண்டு மலத்தையுடைய பிரளயாகலரென்றும் மூன்று மலத்தையுடைய சகலரென்றும் பொருள்கூறியதற்கு வகையேதென்னில், முற்கூறிய ஒரு மலத்தையுடைய விஞ்ஞான கலராவார்பக்குவரென்றும் அபக்குவரென்றும் இரண்டு வகைப்பட்டிருப்பார்கள்; இதிற் பக்குவரானவர்கள் மலபரிபாகத்தின் மிகுதியாலே சிவனுடைய அநுக்கிரகத்தைப் பெற்றுச் சாயுச்சியத்தை யடைவர்களென அறிக. மற்ற அபக்குவர்களும் மலபரிபாகத்தின் மந்தத்தாலே சிவனுடைய அநுக்கிரகத்தைப் பெற்றும் அதிகார மலத்தோடுங் கூடியிருப்பார்கள். அவர்களும் அணுசதாசிவரென்றும் அட்டவித்தேசுரரென்றும் சத்தகோடி மகாமந்திரேசுரரென்றும் மூன்று வகைப்பட்டிருப்பார்கள். இதில் அணுசதாசிவர் சிவனுடைய அநுக்கிரகத்தைப் பெற்றுச் சாதாக்கி ய தத்துவத்திலே இருப்பார்கள். மற்ற அட்டவித்தேசுரர்களுஞ் சுத்தமாயாகிருத்தியத்துக்கு அதிகாரமாய் மயேசுரதத்துவத்திலே இருப்பார்கள். சத்தகோடி மஹாமந்திரேசுர்களும் அட்டவித்தேசுரராலே பிரரேரிக்கப்பட்டுச் சுத்தவித்தியாதத்துவத்திலே யிருப்பார்கள். அவர்களும் இருவகைப்படுவார்கள்; அஃதாவது: மூன்றரைக்கோடி பேர் சிவன் குருமூர்த்தத்தை யதிட்டித்துச் சகலரை இரக்ஷிக்குமிடத்து அதற்குக் காரணமாக இருந்து மகாபிரளய காலத்திலே மோக்ஷத்தையடைவார்கள்; மற்றைய மூன்றரைக்கோடிப் பேரும் சிவன் குருமூர்த்தத்தை யதிட்டியாமல் நிராதாரமாய் நின்று விஞ்ஞானகலரையும் பிரளயாகலரையும் அநுக்கிரகிக்குமிடத்து அதற்குக் காரணமாயிருந்து அதிகாரத்திலுள்ள வைராக்கியத்தாலே சிருட்டிக்குப்பின்பாக மோக்ஷத்தையடைவார்களென அறிக. இங்ஙனங் கூறிவந்த வகைகளுக்கு பிம் தத்துவவிளக்கத்தில் “அறிந்தவர் தீர்ந்த துகளினர் தீராத் துகளர்முன்னர்ச், செறிந்தவர் விஞ்ஞைக்கு நாயகர் எண்ம ரெனச்சிறந்தோர், பிறந்தவர் மந்திர ராமெழு கோடியர் பேரொலியால், மறிந்த திரைப்புனல் வெங்குரு வாணர் வகுத்தவரே” (14) எது கண்டுகொள்க. இங்ஙனங் கூறப்பட்ட விஞ்ஞானகலரில் முற்கூறிய அபக்குவர் தன்மை எங்ஙனேயென்னில் கேவலத்தில் ஆன்மா நிற்குந்தன்மைபோல ஒரு வடிவுமற்று ஆணவமல சொரூபராய்ச் சுத்த மாயையிலே தோற்றமுமொடுக்கமும் ஆகையாற் சுத்தமாயையாலே ஆணவமலபரிபாகம் வருமளவும் பெத்தராயிருப்பார்களென அறிக. இவர்களுக்கு இந்த விஞ்ஞானகலப்பிராப்தி எதனாலுண்டானதென்னில், ஞானமற்ற துறவாலும் யோகத்தாலும் அகம்பிரமமென்கிற ஞானத்தாலுங் கன்மக்ஷயம் வந்துஞ் சிவஞானம் பிரகாசியாதபடியாலே ஆணவமோசனம் பிறவாமல் வந்துகூடின நிலையென அறிக. இந்த விஞ்ஞானகல சத்தத்துக்குப்பொருளாவது அகம் பிரமமென்கிற விசிட்டஞானத்தாலே மாயாகாரியமான கலாபெந்த மற்றவர்களெனக் கொள்க. இங்ஙனங் கூறிவந்தவகையில் அணுசதாசிவர்க்கும் அட்டவித்தேசுரருக்கும் சத்தகோடி மகாமந்திரேசுரருக்கும் வயிந்தவ சரீரமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “வித்தைகள் வித்தை யீசர் சதாசிவ ரென்றி வர்க்கும், வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்திரங்கள், தத்துவஞ் சரீரம் போகங் கரணங்கள் தாமெ லாமும், உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே” (1.25) எது கண்டுகொள்க.
இனி இரண்டு மலத்தையுடைய பிரளயாகலர் தன்மை எங்ஙனே யென்னில் அவர்களும் பக்குவரென்றும் அபக்குவரென்றும் இரண்டு வகைப்படுவார்கள். அதில் பக்குவரானவர்களை மலபரிபாகத்தின் மிகுதியாலே சிருட்டி காலத்திலே சிவன் இரட்சித்தருளுவன்; இவர்களும் பரமுத்தி பெற்றவர்களென்றும் அபரமுத்தி பெற்றவர்களென்றும் இரண்டு வகைப்படுவார்கள்; இவர்களில் பரமுத்தி பெற்றவர் மலபரிபாகத்தின் மிகுதியாலே சாயுச்சியத்தைப் பெற்றவர்களென அறிக; மற்ற அபரமுத்தி பெற்றவர்கள் சிவனாலே அநுக்கிரகத்தைப் பெற்று மலபரிபாகத்தின் மந்தத்தாலே அதிகார மலத்தோடுங்கூடி அட்டவித்தேசுரராலே பிரேரிக்கப்பட்டுப் பிரகிருதி மாயைக்குக் கீழுண்டான கிருத்தியங்களும் பண்ணிக்கொண்டு கலாமத்தியமத்திலே இருப்பார்களென அறிக. அப்படிப் பிரகிருதிமாயையோடுங் கூடியிருந்தாற் சகலரைப்போலக் கலாதியால் வாதைப்படார்ளோவென்னில்அதுவுண்டாகாது; அதுவென்போலவென்னில் பாம்பினிடத்திலுண்டான விடமானது பிறரை வருத்தஞ் செய்தும் அந்தப் பாம்பை வருத்தாதுபோலவென அறிக. இந்தப் பிரளயாகலார்க்கு ஆணவமலமுங் கன்மமலமுமென்று சொல்லியிருக்க மாயாமல சம்பந்தம் வருவானேனென்னில், அவர்களிற் சிலர் முற் செய்த தபோபலத்தால் ஆமணமலமுங் கன்மமலமும் பரிபாகமாகிற அவதரத்திலே விஞ்ஞானகலரில் மந்திரேசுரர் பதத்தைப் பெற்றுச் சுத்தவித்தையை ஆர்ச்சித்திருந்து சிவனாலே யதிகாரத்தைப் பெற்று அந்த அதிகாரம் நடத்தவேண்டுகையாலே அந்த மாயையோடுங்கூடி நடத்தினாலும் அதில் தோய்வற நிற்பார்களென அறிக. அஃதெங்ஙனே யென்னில் சிவன் பிரபஞ்சத்தை நடத்துகைச் செய்தே அதில் தோய்வற நின்றாற் போலவென அறிக. அவர்களாவது மண்டலரெட்டு குரோதரெட்டு வீரரொன்று ஸ்ரீகண்டரொன்று உருத்திரர் நூறு ஆக நூற்றொருபத்தெட்டுப் பெயரென அறிக. இதற்கு பிம் தத்துவவிளக்கத்தில் “பெற்ற தவப்பய னாற்பிர ளயாகல ரிற்சிலரைக், குற்றமில் மந்திர நாயக ராக்குமெங் கொச்சையர்கோன், மற்றவர் மண்டலர் குரோதா திபர்வீரர் ஸ்ரீகண்டர்சீ, ருற்ற உருத்திர ரெட் டெட்டொன் றொன்றுநூ றெண்ணிவர்க்கே” (77) எது கண்டுகொள்க. இங்ஙனங் கூறப்பட்ட பிரளயாகலரில் பக்குவரானவர்கள் கன்மத்துக்கீடாகச் சிருட்டிகாலத்திலே சூக்குமதேகத்தோடுங்கூடிச் சகலராயும் விடுவர்களென அறிக. இதற்கு பிம் தத்துவவிளக்கத்தில் “வகுத்தவ ரிற்புவ னாதிப ரேனையர் மற்றவர்பின், தொகுத்த வரிற் பந்த முற்றினர் தூய்நெறிச் செல்வர்பின்பால், மிகுத்தவர் தாம்புரி யட்டகத் தோடும் வினைவழியிற், பகுத்த பிறப்பிற் சகலர்முப் பாசமும் பற்றினரே” (15) எது கண்டு கொள்க.
இனி, சகலருடைய தன்மை எங்ஙனேயென்னில், அவர்களும் ஆணவம் மாயை காமியமென்னும் மூன்று மலத்தோடுங்கூடி யண்டஜஞ் சுவேதஜம் உற்பீஜஞ் சராயுஜமென்கிற நால்வகைத் தோற்றத்திலே சுரர் நரர் மிருகம் பசு பக்ஷி தாவரம் நீருறைவனவாகிய எழுவகைப் பிறப்பினையுமெடுத்து இருநூற்றிருபத்து நாலு புவனங்களினுமுழன்று திரியுமவதரத்திலே இருவினையொப்பு மலபரிபாகமுமுண்டாய்ச் சத்திநிபாதம் விளைந்து பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குச் சிவன் அவர்களைப்போலே மானிடச்சட்டை சாத்திக்கொண்டுவந்து உண்மை ஞானத்தைக் கடாக்ஷித்துத் தனது பூரண ஞானத்தோடுங் கூட்டிக்கொள்ளுவனென அறிக. இதற்கு பிம் தத்துவவிளக்கத்தில் “எண்ணும் வினைப்பய னாற்புவ னந்தொறும் போகமென்று, நண்ணி வருஞ்சக லர்க்கொரு கால நயந்தங்ஙனே, பண்ணிய கன்மந் துலையொத்துச் சத்திநி பாதமுறக், கண்ணிய லுங்குரு வாய்க்காழி வேந்தன் கதிதருமே” (18) எது கண்டு கொள்க.
இனி, தீவகமாமென வுருவாய்வந்து எகு மூவகை யான்மாக்களையுங் கர்த்தா இரக்ஷிக்குமிடத்து விஞ்ஞானகலரையும் பிரளயாகலரையும் நிராதாரமாக நின்று இரக்ஷித்தருளுவனென்றும் சகலரைச் சாதாரமாகவந்து இரக்ஷித்தருளுவனென்றும் பொருள் கூறியதற்கு பிம் சித்தியாரில் “உரைதருமிப் பசுவர்க்க முணரின் மூன்றாம் உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர், நிரையின் மல மலங்கன்ம மலங்கன்ம மாயை நிற்குமுத லிருவர்க்கு நிராதார மாகிக், கரையிலருட் பரன்துவிதா சத்திநி பாதத்தாற் கழிப்பன்மலஞ் சகலர்க்குக் கன்ம வொப்பில், தரையிலா சான்மூர்த்தி யாதார மாகித் தரித்தொழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநி பாதத்தால்” (8.2) எம், சிவார்ச்சனா போதத்தினும் “வைத்தமல மலங்கன்ம மலங்கன்ம மாயை மருவுவிஞ் ஞானகலர் பிரளய கலாசகலர், இத்தகைமை யிவர்க்கீச னிவை யகல வருளால் இயற்றுவதோர் செய்தியிரண் டாகுந்தீ விரதச், சத்தியினால் முன்னிருவர்க் காசான் மூர்த்தி தரியாதே தான்பண்ணு நிராதாரந் தரித்து, வித்தகமா மந்தத்தீ விரத்தாற் பின்னர் விளம்புவர்க்குச் செய்தியுஞ்சா தார மன்றே” எம் கண்டு கொள்க. அன்றியும் மூவகை யான்மாக்களையும் அவரவர் நின்ற நிலையிலே சிவன் கூடிநின்று இரக்ஷித்தருளுவனென்று பொருள் கூறியதற்கு பிம் போற்றிப் பஃறொடையில் “நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையும், அந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் பின்னன்பு, மேவா விளங்கும் பிரளயா கலருக்குத், தேவாய் மலகன்மந் தீர்த் தருளிப் பூவலயந், தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல, முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை யன்னவனுக் காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ், சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் பாதியாம், பச்சை யிடமும் பவளச் திருச்சடைமேல், வைச்ச நதியும் மதிக்கொழுந்தும் அச்சமற, ஆடு மரவு மழகார் திருநுதன்மேல், நீடுருவ வன்னி நெடுங்கண்ணுங் கேடிலயங், கூட்டுந் தமருகமுங் கோல எரியகலும், பூட்டரவக் கச்சும் புலியதளும் வீட்டின்ப, வெள்ளத்தழுத்தி விடுந்தா ளினுமடியார், உள்ளத்தி னும்பிரியா ஒண்சிலம்புங் கள்ளவினை, வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும், ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி என்றும், இறவாத வின்பத் தெமை யிருத்த வேண்டிப், பிறவா முதல்வன் பிறந்து” (6069) எது கண்டு கொள்க. அன்றியும்அவரவர் நின்றநிலைக்குத் தக்கதாகத் திருமேனி கொண்டு இரக்ஷிப்பன் எகு பிம் பூசாகரணத்தில் “எவ்வுல கத்து மூர்த்தி யேதுகொண் டிவனியங்கு, மவ்வுல கத்து மேனி யதுகொண்டங் கமரு மீசன்” (13) எது கண்டுகொள்க.
இனி ‘திருநோக்கால்’ என்ற பதந்தொடங்கிப் ‘பரவி வருமவுத்திரியால்’ என்ற பதமுடிவாகிய எழுவகைத் தீக்கைக்கும் வகையேதென்னில்: திருநோக்காலென்றது மச்சமானது சினையைப் பார்த்து நிற்க அந்தச் சினை அந்த மச்சத்தின் சொரூபம் பெற்றாற் போல ஆசாரியனுண்மையிலே சித்தத்தை வைத்து ஞான திருட்டியாலே பார்க்குமவதரத்து அத்துவாக்களிற் கட்டுண்ட கன்மங்களைத் தகித்து இராகுவினாலே விழுங்கி விடப்பட்ட சந்திரனைப்போல மலத்திரயங்களின் மறைப்புண்டு கிடந்த ஆன்மாவையும் அந்த மலங்களின் நீக்குகையென அறிக. இனி, இரண்டாவது பரிசத்தாலென்ற தீக்கையும் பஞ்சப் பிரம சடங்கங்களின் சொரூபமாயிருக்கிற ஸ்ரீபஞ்சாக்கரத்தை வலக்கையிலே நெதித்து இந்தப் பிராரத்தவாதனையை நீக்குவது பொருட்டாகச் சீடனுடைய தலையிலே சோதிமயமாக வைத்து அந்தச் சோதியையும் அவனுடைய உள்ளும் புறம்பும் பூரணமாகத் தியாநித்து அந்த ஸ்ரீஹயிதத்தாலே அவனுடையவுடம்பிற் பஞ்சகலாத்தானங்களையும் பரிசித்து வாதனையை யொழிக்குமதுவென அறிக. இனி மூன்றாவது திகழும் வாக்காலென்றது வாசகதீக்கையென அறிக; அஃதாவது பதிபசுபாசத்தினுண்மையான ஸ்ரீபஞ்சாக்கரத்தை ஞானவொளியுடனே கூட உபதேசிக்கையென அறிக. இனி நாலாவது பாவனையாலென்றது சீடனைத் தன்னைப்போல நின்மலமாகப் பாவித்துப் பிரபஞ்சப் பற்றற்ற மலத்திரயங்களில் தோய்வற நிறுத்துகையென அறிக. இனி ஐந்தாவது மிகு நூலாலென்றது இந்த முறைமைகளெல்லாம் இவனுக்குச் சந்தேகந்தீரச் சாத்திரங்களிலே யொப்புக் கொடுத்துக் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாயுள்ள மூவகையினும் நிறுத்துகையென அறிக. இனி ஆறாவது யோகப்பண்பாலென்றது அட்டாங்கயோகத்தினாலே மனோவிகாரத்தை யடக்குவித்து நிட்டையைப் புரிவிக்கை யென அறிக. இங்ஙனஞ் சொல்லப்பட்ட தீக்கை யறுவகையும் பக்குவர்க்குச் செய்வதென அறிக. இனி யேழாவது அவுத்திரியென்ற தீக்கை குண்டமண்டலமிட்டு அக்கினிகாரியமுஞ் செய்து பாசக்ஷயம் பண்ணுவதென அறிக; இது அபக்குவர்க்குச் செய்யுந் தீக்கையென அறிக. அதுவும் ஞானாவதியாகவுங் கிரியாவதியாகவுஞ் செய்யப்படுமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “பலவித மாசான்பாச மோசனந்தான் பண்ணும் படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமும்” (8.3) எம், “பாலரொடு வாலீசர் விருத்தர் பனிமொழியார்... நிர்வாணமெனச் சாற்றுங் காலே “ (8.4) எம், சிவார்ச்சனாபோதத்தல் “செய்யும்வகை யிரண்டுபடி யாகுந் தேரில் திகழ்ஞான வதிகிரியா வதியென்று செப்பி, உய்யும்வகை யுவந்து மனோபாவ கத்தான் மலங்கள் ஓட்டுவது ஞானவதி ஒண்கிரியா வதிதான், வையநிகழ் குண்டமண் டலமிட்டு மற்றும் மருவுதிரு மேற்கட்டி கட்டிவளர் தருப்பை, கொய்யுமல ராற்செய்த மாலைகளுந் தூக்கிக் கும்பகல சங்களுங்கொண் டியற்றுவன குறித்தே” எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மவர்க்கம் மூன்று வகைப்பட்டிருக்குமென்றும் அவர்களுக்கு இந்த மலம் அநாதியென்றும் இந்த மலங்களைச் சிவன் நீக்குமிடத்து விஞ்ஞானகலருக்கும் பிரளயாகலருக்கும் நிராதாரமாய் நின்றுபோக்குவனென்றும் சகலருக்கு மானிடச்சட்டை சாத்தி ஆசாரிய மூர்த்தியாகி வந்து மலங்களை நீக்கி இரக்ஷிப்பனென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

விரும்பியமந் திராதிகாரம் அர்ச்சனாதி காரம்
மேவுமியோ காதிகாரம் எனச்சமய விசேடம்
வரும்பொருவில் நிருவாண மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்
இரங்கடைவில் தொகைபதினொன் றெண்பத்தொன் றைம்பத்தொன்
றிருநூற்றோ டிருபத்து நாலாறா றைந்திற்
பரந்தநெறி அறுவகையும் ஒருவிநினை வரிதாம்
பரபதத்துள் உயிர்விரவப் பயிற்று மன்றே.
.
தக்க சரியை கிரியையோகத் தன்மையும்
மிக்க ஞான விதியையும் விரித்தது.

பொழிப்புரை :

விரும்பிய மந்திராதிகாரம் சிவபுண்ணியத்துக்குரியவர்கள் சருவரும் விரும்பி இச்சிக்கப்பட்ட மந்திரங்களையதிகரிக்கை; அர்ச்சனாதிகாரம் பூசைகளை யதிகரிக்கை; மேவும் யோகாதிகாரம் பொருந்தப்பட்ட யோகங்களையதிகரிக்கை; எனச் சமய விசேடம் வரும் இங்ஙனஞ் சொல்லப்பட்ட மூன்று பாதமுஞ் சமயதீக்கையினும் விசேடதீக்கையினும் உண்டாகா நிற்கும்; பொருவில் நிருவாணம் ஒப்பில்லாத நிருவாண தீக்கையாவது; மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள் மந்திரங்களென்றும் பதங்களென்றும் அக்கரங்களென்றும் புவனங்களென்றும் தத்துவங்களென்றும் கலைக ளென்றும் இங்ஙனஞ் சொல்லப்பட்ட வகைகளாறுக்கும்; இரங்கடைவில் தொகை கூறுமடைவில் தொகையாவது; பதினொன்று எண்பத்தொன்று ஐம்பத்தொன்று இருநூற்றோடிருபத்து நாலு ஆறு ஐந்தில் மந்திரங்கள் பதினொன்றென்றும் பதமெண்பத்தொன்றென்றும் அக்கரம் ஐம்பத்தொன்றென்றும் புவனம் இருநூற்றிருபத்து நாலென்றும் தத்துவம் முப்பத்தாறென்றும் கலைகள் ஐந்தென்றும் ஆக இங்ஙனம்; பரந்தநெறி அறுவகையும் ஒருவி விரிந்த வழி ஆறு பிரகாரமாகிய அத்துவாக்களையும் விட்டு நீங்கி; நினைவரிதாம் பரபதத்துள் உயிர்விரப் பயிற்றுமன்றே மனத்தினால் நினைத்தற் கரிதாகிய மேலான சிவபதமாகிய சாயுச்சியத்திலே ஆன்மாவைப் பொருந்தும்படிச் செய்விக்கும்.
விரும்பிய மந்திராதிகாரம் எகு சருவரும் விரும்பி இச்சிக்கப்பட்ட மந்திரங்களென்றதேதென்னில் ஞானவான்களன்றியே மற்றுள்ளவர்களு மதிகரிக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இனி அர்ச்சனாதிகாரம் எகு பூசைகளையதிகரிக்கை யென்றதேதென்னில் குருபூசை சிவபூசை மஹேசுரபூசை முதலாயுள்ளவையிற்றையென அறிக. இனி மேவும் யோகாதிகாரம் எகு பொருந்தப்பட்ட யோகங்களை யதிகரிக்கையென்றதேதென்னில் இயமம் நியமம் ஆதனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி என்னப்பட்ட அட்டாங்கயோகங்களும், அன்றியும், ஆதாரயோகம் நிராதார யோகமென்னும் யோகங்களுமென அறிக. இனி சமயவிசேடம் வரும் எகு இங்ஙனஞ் சொல்லப்பட்ட தீக்கைகளிரண்டினுள்ளும் மூன்று பாதமும் அடங்குமென்றதேதென்னில் சமயதீக்கையில் சரியையொன்றுமென அறிக; விசேடதீக்கையிலே கிரியையும் யோகமும் அடங்கி வருகையால் அப்படிச் சொன்னதென அறிக; அப்படிச் சமயதீக்கைக்குச் சரியையொன்றுமிருக்க விசேட தீக்கைக்குக் கிரியையும்யோகமுமாம் ஒரு தீக்கையிலே இரண்டு பாதமும் அடங்கிநின்ற வழி யெங்ஙனேயென்னில், விசேட தீக்கைக்குப் பூசைகளை யதிகரிக்கை வேண்டுகையாற் பூசைகளை யதிகரிக்குமிடத்துப் பிராணாயாமமும் அந்தரியாகமுமாகிய உட்பூசையுஞ் செய்யவேண்டுகையால் அவையிரண்டும் யோகத்திலடங்கி வருகையாலே விசேட தீக்கைக்குக் கிரியையும் யோகமுங் கூடிவருமென்றதென அறிக. இதற்கு பிம் ஞானவந்திரட்டையில் “மற்றதனில் தர்ப்பணாதி சரியை கிரியை பூசை மருவு பிராணாயம மன்னிவளர் யோகம்” எது கண்டு கொள்க. சமயத்துக்குத் தர்ப்பண முதலானதொழிலும் விசேடத்துக்குப் பூசைகளும் பிராணாயாமம் முதலான யோகங்களுங் கூடி வருகையாலே யப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இனி பொருவில் நிருவாணம் எகு ஒப்பில்லாத நிருவாண தீக்கையென்றதேதென்னில் நிருவாண தீக்கை சாயுச்சியத்துக்கேதுவாக்குகையாற் சாயுச்சியத்திற்கு வேறொப்பில்லாதபடியாலே அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இனி இரங்கடைவில் தொகை எகு இரங்குதலோசையென்றும் ஓசை சொல்லென்றும் சொன்னதென அறிக. இதற்கு பிம் இந்நூலில் “ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன்னாக வோசைகொள்” (92) எது கண்டுகொள்க. இனி மந்திரம் பதினொன்றென்றதேதென்னில் ஈசானமுதல் அத்திரமுடிவாகிய மந்திரங்களை யென அறிக. பதமெண்பத்தொன்றென்றதேதென்னில் பிரணவமாகிய ஓங்காரமுதல் நமோநம அந்தமென அறிக. அக்கரம் ஐம்பத்தொன்றென்றதேதென்னில் அகாரமுதல் க்ஷகார முடிவென அறிக. புவனம் இருநூற்றிருபத்து நாலென்றதேதென்னில் அநாசிருதை முதல் காலாக்கினியந்தமென அறிக. தத்துவ முப்பத்தாறென்றதேதென்னில் பிருதிவிமுதல் நாதமுடிவாகிய தத்துவங்களை யென அறிக; அவையாவன; ஆன்மதத்துவம் இருபத்து நாலும் வித்தியா தத்துவமேழும் சிவத்தத்துவம் ஐந்துமென அறிக; கலைகளைந்தென்ற தேதென்னில் நிவிர்த்திகலை பிரதிட்டாகலை வித்தியாகலை சாந்திகலை சாந்தியாதீதகலை யென்னுங் கலைகளென அறிக. இனி பரந்தநெறி யறுவகையுமொருவி நினைவரிதாம் பரபதத்துளுயிர் விவரப்பயிற்று மன்றே எகு ஆறுவழியாக விரியப்பட்ட அத்துவாக்களை விட்டு நீங்கி மேலான சிவபதத்திலே ஆன்மா பொருந்தும்படிச் செய்விக்குமென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், ஒருபுற்றிற் கிடக்கும் பாம்பினை யோட்டிவிட வேண்டினவர்கள் அந்தப்புற்றில் நிலைகுலையத் தக்க உபாயஞ் செய்யவே அந்தப் புற்றை விட்டுப் பாம்புதானே போனாற்போல ஆசாரியனுஞ் சீடனைக் கலாசோதனை செய்து திருநோக்கத்தினாலே பார்க்கவே ஆன்மாக்களும் அத்துவாக்களை விட்டு நீங்கித் திருவருளைப் பொருந்திச் சாயுச்சியத்தை யடையுமென்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “மூன்றுதிறந் தணுக்கள் செயுங் கன்மங் கட்கு முன்னிலையா மூவிரண்டா மத்து வாவின், ஆன்றமுறை யவையருத்தி யறுத்துமல முதிர்வித் தரும்பருவ மடைதலுமே யாசா னாகித், தோன்றி நுக ராதவகை முற்செய் கன்மத் துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே சோதித், தேன்றவுடற் கன்மமனு பவத்தினா லறுத்திங் கினிச்செய் கன்மம் மூலமல ஞானத்தா லிடிப்பன்” (8.10) எம், இருபாவிருபஃதினும், “அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ், சுத்திசெய் தனையே” (16. 1819) எம், “காரார் கிரகக் கலியாழ் வேனைநின் பேராவின்பத் திருத்திய பெரும” (2. 34). எம், ஞானாமிர்தத்தினும் “என்னை அன்னதாய தொன்முது பிறவி யறைபோக் கொழியக் குலமுழுதும் வளையி ஞான வொள்வாள் பூமுக மழுங்கக் கொன்றுசினந் தணியாத் தண்டாச் சீற்றத்து மறவனை யல்லையோ நீயே யிறைவ” (53. 1217) எம், வருமேதுக்களைக் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது சமயதீக்கையினும் விசேடதீக்கையினுஞ் சரியையுங் கிரியையும் யோகமுமடங்குமென்றும் நிருவாண தீக்கையிலே சாயுச்சியமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

கிரியையென மருவுமவை யாவும் ஞானம்
கிடைத்தற்கு நிமித்தமெனக் கிளக்கும் உண்மைச்
சரியைகிரி யாயோகத் தன்மை யோர்க்குச்
சாலோக சாமீப சாரூ பங்கள்
மருவியிடும் உயர்ஞான மிரண்டாம் மாறா
மலமகல அகலாத மன்னு போதத்
திருவருளொன் றொன்றதனைத் தெளிய வோதும்
சிவாகமமென் றுலகறியச் செப்பும் நூலே.
.
மூவித மான முத்திப் பதமும்
மேவிய வருளுமெய் யாகம மென்றது.

பொழிப்புரை :

கிரியையென மருவும் அவை யாவுஞ் ஞானங்கிடைத்தற்கு நிமித்தமெனக் கிளக்கும் சிவத்தொழிலாகப் பொருந்தப்பட்டவையனைத்தும் ஞானமுண்டாகைக் கேது என்று சிவாகமங்களிற் சொல்லப்பட்டிருக்கும்.அப்படியாகில் அந்த நிருவாண தீக்கையுள்ளவர்களைப்போல இவர்களுக்குச் சாயுச்சிய முண்டோவென்னில் அப்படியாகாது, பின்னே எங்ஙனே யென்னில்; உண்மைச் சரியை கிரியாயோகத் தன்மையோர்க்குச் சாலோக சாமீப சாரூபங்கள் மருவியிடும் சிவாகமங்களால் நிச்சயித்து அறுதியிடப்பட்ட சரியைத் தொழிலுங் கிரியைத் தொழிலும் யோகத்தொழிலும் வழுவறச் செய்யுமவர்களுக்கு அந்தந்த ஒழுங்கிலே சாலோகபதஞ் சாமீபபதஞ் சாரூபபதமென்னும் பதமுத்திகளுண்டாய் வரும்; அப்படியானால் முன்னே சிவத்தொழில்களினாலே ஞானமுண்டாமென்று சொல்லி இப்போது பதமுத்திகளுண்டாமென்று சொல்லலாமோ என்னில், அப்படி ஞானத்துக்கேதுவாமென்று சொன்னதும் அந்தந்தத் தொழில்களினாலே பதமுத்திகளைப் பெற்று ஞானத்துக்கேதுவாமென்று சொன்னதாயிருக்கும்; அப்படியுண்டாகிய ஞானந்தான் முற்கூறிய சரியை கிரியா யோகங்களைப்போலப் பலவழியாயிருக்குமோ ஒருவழியா யிருக்மோவென்னில்; உயர்ஞானமிரண்டாம் மேலான ஞானமும் இரண்டு வகைப்பட்டிருக்கும்; அஃதெப்படியென்னில்; மாறா மலமகல அகலாத மன்னுபோதத் திருவருளொன்று அநாதியே தன்னைவிட்டு நீங்காத ஆணவமல மறைப்பு விட்டு நீங்கும்படி தன்னை விட்டு நீங்காத திருவருளோடுங்கூடி யிரண்டறநின் றநுபவிக்கிற ஞானமொன்று; ஒன்றதனைத் தெளியவோதுஞ் சிவாகமம் மற்றொரு ஞானமாவது அந்தத் திருவருள் ஞானத்தைத் தெளிய அறிந்தநுபவிக்கத்தக்கதாகச் சிவாகமங்களை யோதியுணர்ந்தது; என்று உலகறியச் செப்பும் நூலே என்று இங்ஙனம் உயர்ந்தோர் அறியத்தக்கதாக நூல்கள் சொல்லும்.
கிரியையென்றது தொழில்களுக்கெல்லாம் பொதுப்படச் சொல்லியிருக்கச் சிவத்தொழிலொன்றையுஞ் சொல்லவேண்டுவான் ஏனென்னில் இது சிவனைப்பெறுகைக்குத் தொழில் சொல்லுகையால் சிவத்தொழிலென்று சொன்னதென அறிக. உண்மைச் சரியை கிரியா யோகம் எகு சிவாகமஞ்சொன்ன முறைமைக்குத் தவறுவராமலென்றதேதென்னில் திருவலகு திருமெழுக்கு திருநந்தனவனம் முதலாயுள்ள சரியைத் தொழில்களுக்கும் சிவபூசை குருபூசை மஹேசுரபூசை முதலான பூசைத் தொழில்களுக்கும் ஆதாரயோகம் அட்டாங்கயோகம் முதலான யோகத்தொழில்களுக்குந் தவறுவராம லென்றதென அறிக. இவை மூன்றுக்கும் பிம் சித்தியாரில் “தாதமார்க்கஞ் சாற்றில்.... சரியை செய்வோர் ஈசனுல கிருப்பர்” (8 19) எது சரியைக்குக் கண்டு கொள்க; “புத்திரமார்க்கம் புகலில்... கிரியையினை இயற்றுவோர்கள் நின்மலன்றன் அருகிருப்பர் நினையுங் காலே” (8.20) எது கிரியைக்குக் கண்டுகொள்க; “சகமார்க்கம்.. அட்டாங்க யோகமுற்றும் உழத்தலுழந்தவர் சிவன்ற னுருவத்தைப் பெறுவர்” (8.21) எது யோகத்திற்குக் கண்டு கொள்க. உயர்ஞானம் எகு மேலான ஞானமென்ற தேதென்னில், அந்த ஞானத்துக்குரித்தானவர்கள் நூல்களை யோதி யுணர்ந்து சமய பேதங்களையும் அறிந்து மேலான பதிபசு பாசங்களையுந் தரிசித்து சாலோகமாதியான பதமுத்திகளையுங் கடந்து மேற்பட்ட சாயுச்சியத்தைப் பெறுகையாலே யப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “சன்மார்க்கஞ் சகலகலை புராண வேத சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவு முணர்ந்து, பன்மார்க்கப்பொருள்பலவுங் கீழாக மேலாம் பதிபசுபா சந்தெரிந்து பரசிவனைக் காட்டும், நன்மார்க்க ஞானத்தால் நாடி ஞான ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம், பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப் பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் காணே” (8.22) எது ஞானத்துக்குக் கண்டு கொள்க. என்றிப்படியிருக்க இந்த ஞானத்தை உயர்ஞானம் இரண்டாம் என்று கூறியதற்குத் திருவருள்ஞானம் ஒருஞானமென்றும் சிவாகமங்களை யோதியறிகிற ஞானம் ஒருஞானமென்றும் பொருள்படுத்திக் கூறினதற்கு வழியேதென்னில், திருவருள் ஞானமாவது முதலிகள் மூவர் காரைக்காலம்மை முதலாயினோர்க் குண்டாகிய ஞானமென அறிக. சிவாகாமங்களை யோதியறிந்து வருகிற ஞானமாவது ஸ்ரீநந்திதேவநாயனார் முதலாயுள்ள சமயகுரவர்க்குண்டாகிய ஞானமென அறிக. இவையிரண்டிற்கும் பிம் சித்தியாரில் “பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப் பத்திபண்ணுந், தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர், கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்க்கட்கீசன், புண்டரீ கத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்” (பாயிரம் 4) எம், “போதமிகுத் தோர்தொகுத்த பேதைமைக்கே பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல, ஏதுநெறி யெனுமவர்கட்கறிய முன்னாள் இறைவனருள் நந்திதனக் கியம்ப நந்தி, கோதிலருட் சநற்குமா ரற்குக் கூறக் குவலயத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு, தீதகல எமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தியென்றே” (பரபக்கம் 10) எம் கண்டுகொள்க.
இதனால் சொல்லியது சரியை கிரியா யோகங்களை முற்றச் செய்பவர்களுக்கு அந்தந்த முறைமையிலே சாலோக சாமீப சாரூப மென்னும் பதமுத்திகளுண்டாமென்றும், ஞானத்துக்குச் சாயுச்சிய முண்டாமென்றும் அந்த ஞானம் இரண்டுவகைப் பட்டிருக்குமென்றும், இதில் திருவருள் ஞானம் ஒருஞானமென்றும் சிவாகமங்களை யோதியறிகிற ஞானம் ஒருஞானமென்றும் வருமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

தெரித்தகுரு முதல்வர்உயர் சிவஞான போதம்
செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி
விரித்தனர்மற் றவர்கள்திரு வடிகள் போற்றி
விளம்பியநூல் அவையிரண்டும் விரும்பி நோக்கிக்
கருத்திலுறை திருவருளும் இறைவன் நூலும்
கலந்துபொது உண்மையெனக் கருதி யானும்
அருத்திமிக உரைப்பன்வளர் விருத்தம் நூறும்
ஆசில்சிவப் பிரகாசம் ஆகு மன்றே.
.
உன்னரும் பொருளை யுரையா னுணர்த்திய
முன்னவ ரருளால் நூற்பெயர் மொழிந்தது.

பொழிப்புரை :

தெரித்த குருமுதல்வர் உயர் சிவஞான போதம் செப்பினர் முற்கூறப்பட்ட ஆசாரியரில் விசேடத்துவத்தையுடைய மெய்கண்டதேவ தம்பிரானார் மேலான சிவஞானபோதமாகிய மூலக்கிரந்தம் பன்னிரண்டினுமுள்ள அத்தத்தைத் தமிழாக விரித்துப் பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து அந்த நூலின் பெயராலே சிவஞானபோதமென்று செய்தருளினார்; அன்றியுந் தமிழாகிய சிவஞானபோதம் ஒன்றிலேயு மேற்றிப் பொருளுரைப்பினுமாம்; பின்பு அவர் புதல்வர் சிவஞானசித்தி விரித்தனர் அதற்குப் பின்பாக அவரது திருவடியைப் பெற்ற சண்பையர் தலைவநாயனாராகிய அருணந்திதேவ தம்பிரானார் சிவஞானசித்தியென்னும் நூலை விரித்துச் செய்தருளினார்; மற்றவர்கள் திருவடிகள் போற்றி அந்த இரண்டு தம்பிரானார்கள் திருவடியையுந் துதித்து; விளம்பிய நூலவையிரண்டும் விரும்பி நோக்கி அவர்களால் அருளிச்செய்யப்பட்ட நூல்கள் இரண்டினையும் ஆசையோடும் ஆராய்ந்து பார்த்து அதிலண்டான அத்தமும்; அதுவுமன்றி; கருத்திலுறை திருவருளும் இறைவன் நூலுங் கலந்து என்னுடைய இதயத்திலே பொருந்தி நின்று நிகழ்த்துகிற திருவளையுந் தம்பிரானார் அருளிச்செய்த சிவாகமத்திலுண்டாகிய அத்தத்தையும் இந்நூலிலே விரவி; பொது உண்மையெனக் கருதி இந்நூற்செய்யுமிடத்துப் பொதுவென்றும் உண்மையென்றும் இரண்டு பகுதியாக விசாரித்து; யானும் அருத்திமிக உரைப்பன் ஒன்றுக்கும் பற்றாத நானும் ஆசை மிகுதியாலே ஒரு சாத்திரமாகச் சொல்லுவன்; வளர் விருத்தம் நூறும் சிறப்பு வளரப்பட்ட விருத்தப்பாவாகிய செய்யுள் நூற்றினையும்; ஆசில் சிவப்பிரகாசம் ஆகுமன்றே இந்நூலுக்குத் திருநாமங் குற்றமற்ற சிவப்பிரகாசமாம்.
உயர் சிவஞானபோதம் என்றதை மேலான சிவஞான போதம் என்றதேதென்னில் மற்றுள்ள சமயங்களிற் சொல்லப்பட்ட அத்தங்கள் எல்லாவற்றினும் மேற்பட்ட உண்மை ஞானத்தைச் சொல்லுகையா லெனக்கொள்க. சிவஞானசித்தியை விரியச் செய்தாரென்றதேதென்னில் முற்கூறப்பட்ட நூலாகிய சிவஞான போதம் சொற்சுருங்கி அத்தமாழ்ந்திருக்கையாலே அந்தச் சிவஞானசித்தியிற் சொல்லும் அத்தமும் விரியச் செய்கையினாலெனக் கொள்க. இதற்கு பிம் சித்தியாரில் “குவலயத்தி னவ்வழியெங் குருநாதன் கொண்டு, தீதகல எமக்களித்த ஞானநூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தியென்றே” (பரபக்கம் 10) எது கண்டுகொள்க. கருத்திலுறை திருவருளும் என்றது உயிர்க்குயிராய் நின்று நிகழ்த்துகிற அநுபவ ஞானத்தையென அறிக. இதற்கு பிம் சித்தியாரில், “அந்நிய மிலாமையானும் அறிவினுள் நிற்றாலானும், உன்னிய வெல்லா முள்நின் றுணர்த்துவ னாதலானும்” (6.8) எம்,சூசூமதியருக்க னணை யரவம் போற்றோன்று மான்மாவி லரனே”எம் பூசாகரணத்தில், “ஞானிக் குயிரினிற் குயிரு மன்றே” (22) எம் வரும் ஏதுக்களும் இப்பொருள்பற்றி யென்பதைக் கண்டுகொள்க. இனி இறைவன் நூலுங் கலந்தென்றது அந்த இரண்டு நூலினும் வாராத அத்தங்களைக் கூட்டி அநுபவமாக அருளிச்செய்கையினாலெனக் கொள்க. பொது என்றது பதி பசு பசாங்களைச் சமானியமாக அருளிச் செய்கையினாலெனக் கொள்க. உண்மையென்றது ஆன்மதரிசனம் சிவதரினம் முதலாயுள்ளவற்றை யநுபவமாக அருளிச் செய்கையினாலெனக் கொள்க. வளர்விருத்தம் நூறுமென்றது இந்நூல் ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் அத்தம்மென்மேலும் வளருகையாலெனக் கொள்க. இதற்கு பிம் திருவள்ளுவப் பயனில், “நவில்தொறும் நூல் நயம்போலும்” (783) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, இந்நூலிலே முன்னூலாகிய சிவாகமத்தின் அத்தமும் வழிநூலாகிய சிவஞானபோதத்திலுஞ் சிவஞானசித்தியிலுமுண்டான அத்தமுங் கருத்திலே கூடிநின்று காரியப்படுத்துகிற அநுபவஞானத்தினையுங் கூட்டிச் செய்தேமென்னும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியுமதன் களங்கம்
நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந்
தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கட் சார்வராய்ந்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவார்ஏ திலருற்
றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.
.
சான்றோர் செய்தியுஞ் சால்பிலார் தன்மையுந்
தோன்று மாறு சொல்லவை யடக்கம்.

பொழிப்புரை :

தொன்மையாவாமெனும் எவையும் நன்றாக நூல்கள் பழையதேயாயினும் பதிபசு பாசத்தின் உண்மையைத் தெரியச் சொல்லாதபோது எவராலே சொல்லப்பட்டதாயினும் நன்மையுண்டாகாது; இன்று தோன்றிய நூலெனு மெவையுந் தீதாகா இப்பொழுத புதிதாகச் சொல்லப்பட்ட நூலாயினும் பதிபசு பாசங்களைத் தெரியச் சொல்லுமாயின் அந்த நூலுக்குக் குற்றமுண்டாகாது; ஆகையால் இவையிரண்டினுள் புதுநூல்கொள்ளுமிடத்து; துணிந்த நன்மையினார் சித்தாந்த வழக்கினை யறிந்து உறுதிவந்த நல்லோர்கள் நூலின் புதுமைகொள்ளார்கள்; அதென்போலவென்னில்; நலங்கொள்மணி பொதியுமதன் களங்கம் நவையாகாவென உண்மை நயந்திடுவர் நல்ல இரத்தினமானது பொல்லாததொன்றிலே பொதிந்திருந்தாலும் இரத்தினம் அறிந்தவர்கள் பொதிந்ததன் குற்றம் பாராமல் இரத்தனத்தினையே கொண்டாற்போலப் பொருளினுண்மையைக் கைக்கொள்ளுவார்கள். அன்றியும்; நடுவாந் தன்மையினார் மத்திமராயுள்ளவர்கள் உத்தமரைப்போல நூலைக்கண்ட மாத்திரத்திலே பொருளைக் கொள்ளமாட்டார்களாதலாலே; பழைமை யழகாராய்ந்து தரிப்பர்பழையதாயுள்ள ஆகமங்களின் அத்தத்தையும் இப்பொழுதுண்டான நூலின் அத்தத்தையும் ஆராய்ந்து பார்த்து, கொள்ளும் பகுதியானாற் கொள்ளுவார்கள். இவையிரண்டு பகுதியுமின்றி; தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந்து அறிதல் இன்மையினார்நூலுக்குண்டாகிய குற்றமிது குணமிது என்று பொருளினிடத்திலே பொருந்தின முறைமையை ஆராய்ந்து பார்ர்தறியமாட்டாத அறிவீனராயுள்ளவர்கள்; பலர்புகழில் ஏத்துவர்நூலின் பயனறிந்த உத்தமர் கொண்டாடினாற் கூடியிருந்து கொண்டாடுவார்கள்;ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர்இந்நூற் செய்தற்குப் பொறாமையாக அந்நியர் இகழ்ந்துரைக்குமிடத்து அதற்குங்கூடி யிகழ்ந்துரையாநிற்பர்கள். அவர்களாரோ என்னில்;தமக்கென வொன்றிலரேநன்று தீது என்றறியத் தங்களுக்கெனவோர் அறிவில்லாதவர்கள்.
எவையும் நன்றாகா என்றதுகொண்டே பழைய நூல்களிற் குற்றங்குறையுமெனக்கொள்க. எவையுந்தீதாகா என்றதுகொண்டே புதிய நூல்களில் நன்மை குறையுமெனக்கொள்க. களங்கம் நவை என்றிருவகைக் குற்றமாகச் சொன்னதேதென்னில் இரத்தினத்தைப்பொதியப்பட்டது குற்றமுடையதானாலும் இரத்தினத்தைக் குற்றமாகக் கொள்ளார்களென்றதென அறிக. உண்மைநயந் திடுவரென்றதை நூலின் புதுமை விசாரியாமற் பொருள் கொள்ளுவார்கள் என்றது அத்தத்தின் மான்மியங் கண்டுகொள்வார்கள் என்றதெனக் கொள்க. தமக்கென வொன்றிலரே என்றதை தமக்கென வோரறிவில்லாதவர்கள் என்றதேதென்னில் முன் ஜநநத்தில் தமக்கென்ன ஒரு தவமில்லாதவர்கள் என்ற தென்னவு மாமெனக் கொள்க. இதனாற் சொல்லியது இந்நூற்கொள்ளுமிடத்து அறிவாலுயர்ந்த பெரியோர்கள் கொள்ளுமுறைமையும் மத்திமராயுள்ளவர்கள் கொள்ளுமுறைமையும் அறிவீனராயுள்ளவர்கள் கொள்ளு முறைமையுஞ் சொல்லி அவையடக்கமும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

பலகலைஆ கமவேதம் யாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான்
நிலவும்அரு உருவின்றிக் குணம்குறிக ளின்றி
நின்மலமாய் ஏகமாய் நித்த மாகி
அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி
அகண்டிதமாய் ஆநந்த உருவா யன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே.
.
விதிப்படி முதனூல் விளம்புமுப் பொருளின்
பதித்திறந் தெரிந்நு பாரித் துரைத்தது.

பொழிப்புரை :

பலகலை ஆகமவேதம் யாவையினுங் கருத்து பலகலை ஞானங்களாகச் சொல்லப்பட்ட ஆகமங்களுக்கும் வேதங்களுக்கும் இவையிற்றின் விரிந்த நூல்களுக்கும் துணிவாவது; பதி பசு பாசந்தெரித்தல் பதியையும் பசுவையும் பாசத்தையுங் கூறு செய்தல். இவையிற்றின் முதற்கூறப்பட்ட பதியின்தன்மை யெங்ஙனெயென்னில்; பதிபரமே அந்தப் பதியாவது எல்லாவற்றிற்கும் மேலாயிருப்பதொன்று; அதுதான் அந்தப் பரமேயென்று சொல்லப் பட்ட பதியானதன் இயல்பு எங்ஙனேயென்னில்; நிலவும் அருவுருவின்றிவிளங்கக்காணப்படுவதுங் காணப்படாததுமல்லவாய்; நிலவுமென்றது பொருந்தவெனவுமாமென அறிக; குணங்குறிகளின்றி ஒரு குணங்களும் ஓரடையாளங்களு மில்லையாய்;நின்மலமாய்மலரகிதமாய்; ஏகமாய் ஒன்றாயிருப்பதாய்; நித்தமாகி அழியாததாய்; அலகிலுயிர்க் குணர்வாகி எண்ணிறந்த ஆன்மாக்களுக்கும் அறிவாய்; அசலமாகி சலிப்பற்றதாய்; அகண்டிதமாய் கண்டிக்கப்படாததாய்; ஆநந்த உருவாய் இன்ப சொரூபமாய்;அன்றிச் செலவரிதாய்; மாறுபட்டவர்களுக்குச் சென்று கூடுதற் கரிதாய்; செல்கதியாய் வழிபட்டவர்களுக்குச் சென்று பொருந்துகைக்கு இடமாகிய முத்திநெறியாய்; சிறிதாகிப் பெரிதாய் அணுவுக்கணுவாய் மகத்துக்கு மகத்தாய்;திகழ்வது தற்சிவமென்பர்இப்படி விளங்காநின்றது உண்மையான சிவமென்று சொல்லுவார்கள்; தெளிந்துளோரே சித்தாந்தத் தெளிவுவந்த பெரியோர்கள்.
பலகலை எகு வேதாகமங்களைச் சொல்லாமல் அவையிற்றைத் தவிர வேறே சில நூல்களென்று சொல்லுவாருமுளர்; அப்படியானா லும் இந்தச் செய்யுளில் பலகலைகளை முந்தக் கூறி ஆகமமும் வேதமும் பிற்படக்கூறுகையாலே அதுபொருளல்லவென அறிக. அல்லது பின்னை யெங்ஙனேயென்னில் வேதாகமங்களும்அவையிற்றினின்றும் விரியப்பட்ட நூல்களுமென்பதொழிந்து வேறாகச்சொல்ல வொண்ணாதென அறிக. அதற்கு வழியேதென்னில் கலைஞானமென்பது சர்வநூலுக்கும் பொதுப் பெயராகையால் அப்படிச் சொன்னதென அறிக. அதற்கு பிம் சித்தியாரில் “வேதசாத்திரமிருதி புராணகலை ஞானம் (9.2) எம், சங்கற்ப நிராகணத்தில் “பெருங்கட லதவுங் கருங்கடு வாங்கிக் கந்தரத் தமைத்த அந்தமில் கடவுள் பாலரை யுணர்த்து மேலவர் போலக் கேட்போ ரளவைக் கோட்படு பொருளால் அருளிய கலைக ளலகில அதனால்” (2.15) எம், திருவருட்பயனில் “நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங் கற்குஞ் சரக்கன்று காண்” (காப்பு) எம் வருமேதுக்களைக் கண்டு கொள்க. யாவையினும் எகு வேதத்தினும் ஆகமத்தினும் விரியப்பட்டது மற்றுள்ள நூல்களெல்லாமென்று பொருட்படுத்தினதற்கு பிம் சித்தியாரில் “வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நுலிவற்றின் விரிந்த நூல்கள்” (8.15) எது கண்டு கொள்க. பதிபரமே எகு எல்லாவற்றிற்கும் மேற்பட்ட பொருளென்றதேதென்னில் அண்டாண்ட பகிரண்டங்களுக்கும் அப்பாற்பட்ட பொருளென்றதென அறிக. இதற்கு பிம் திருப்பல்லாண்டில் “அண்டங்கடந்த பொருளள வில்லதோ ராநந்த வெள்ளப்பொருள்” (2) எது கண்டு கொள்க. நிலவும் அருவுருவின்றி எகு காணப்பட்ட பொருளுமல்ல காணப்படாத பொருளுமல்ல என்றேதேதென்னில், காணப்படும் பொருளென்றால் தோன்றி நின்று அழியப்படும் பொருளாம்; காணப்படாத பொருளென்றால் முயற்கோடு போலவும் ஆகாயப்பூப் போலவும் இல்லாததொரு பொருளா மென்றதென அறிக. இவையிரண்டுக்கும் பிம் சித்தியாரில் “அறிதரும் பொருளோவீச னறிவுறா தவனோ வென்னில், அறிபொருள் சித்தசத்தா மறியாத தின்றா மெங்குஞ், செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்” (6.1) எது கண்டுகொள்க. இதில் ஆகாயப்பூப்போலக் காணாதபொருளாம் எகு பிம் சித்தியாரில் “வானத் திணரார்பூந் தொடையு மாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும்” (6.4) எது கண்டுகொள்க. அன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய் எகு வழிபடாதவர்கள் சென்று கூடுதற்கரிதாயென்றும் வழிபட்டவர்கள் சென்று கூடுதற்கெளிதாயென்றும் பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில் சிவாகமங் சொன்னவொழுங்கிலே நின்று அநுட்டியாதவர்களுக்குக் கூடலரிதென்றும் அநுட்டித்தவர்களுக்குக் கூடலெளிதென்றுஞ் சொன்னதென அறிக. இவையிரண்டுக்கும் பிம் சித்தியாரில் “இறைவனாவான்” (8.17) என்ற செய்யுளில், “மறையாக மங்களினா லறிவெல்லாந் தோற்றும், வரைவின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும், முறைமையினா லின்ப துன்பங் கொடுத்தலால்” எது கண்டு கொள்க. சிறிதாகிப் பெரியதாய் எகு அணுவுக்கணுவாய் மஹத்துக்கு மஹத்தாயென்றதேதென்னில் சர்வான்மாக்களுக்கும் எடுக்கப்பட்ட அச்சுக்களுக்கெல்லாம் அதற்கதற்குத் தக்கதாகக் கூடி நின்று சேட்டிக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் இருபவிருபஃதில் “யாவர் யாவையும் யாங்கணுஞ் சென்று புக்குழிப் புக்கு” (18.8 9) எது கண்டுகொள்க. தற்சிவம் எகு உண்மையான சிவமென்றதேதென்னில் ஒருவிகற்பங்களுமின்றித் தற்சுபாவமாய் நின்ற சொரூபத்தைச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு நினைப்பரியா னொன்றுமிலான்” (9.6) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது பல கலை ஞானமாகச் சொல்லப்பட்ட வேதாகமபுராண சாத்திரங்களெல்லாம் பதிபசுபாசத்தின் உண்மையைச் சொல்லுமென்றும் இதிற் பதியானது நிஷ்கள சொரூபியாய் நிற்குமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் பாயிரம் அருளிச்செய்து, மேல் முதற்சூத்திரமாகிய பதியிலக்கணம் அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது. இந்தப்பதியிலக்கணத்தில் முதற்சூத்திரம் நின்றமுறைமையெங்ஙனே யென்னில், பதியிலக்கணமாக வகுத்த “பலகலை” என்ற விருத்தந்தொடங்கி “ஏற்றவிவை” என்னும் விருத்த முடிவாகிய செய்யுளாறும் சிவஞானபோதத்தினுஞ் சிவஞானசித்தியினும் முதற் சூத்திரத்தில் வருங் கருத்தாகையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்படி யந்தநூல்களில் முதற்சூத்திரத்திலுண்டான கருத்து இந்த விருத்தம் ஆறினும் நின்றதற்கு வழியேதென்னில்:சிவஞான போதத்தில் முதற்சூத்திரமாகிய “ அவனவ ளதுவெனு மவைமூ வினைமையில், தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாம், அந்த மாதி யென்மனார் புலவர்” (1) என்னுஞ் சூத்திரத்துக்குக் கருத்து ‘சங்காரகாரணனை முதலாவுடைத்திவ் வுலக’ மென்பதனால் சிவனே கர்த்தாவென்னுங்கருவைப்பற்றி இந்நூலினும் இச்செய்யுட்கள் ஆறினுள்ளும் “பீடுபெற நிறுவியவை யொடுக்குமேனி” எம், “அவையெங் கடவுள்தானே யந்தமுற அழித்திடுவன்” எம், “ஏற்றலிவை யரனருளின் திருவிளையாட் டாக இயம்புவர்கள்” எம், சிவனே கர்த்தா என்று வருகையாலும், சித்தியாரில் முதற்சூத்திரத்தின் விருத்தங்களில்” “சிவனரு உருவுமல்லன்” (1.70) என்னும் விருத்ததின் கருவைப்பற்றி இந்நூலினும் சூசூபலகலை” என்ற விருத்தத்தில் “பதிபரமேயதுதானிலவுமரு வுருவின்றி” என்று வருகையாலும், “பொன்மை நீலாதிவன்னம்” (சித்தி.1.68) என்னும் விருத்ததின் கருவைப்பற்றி இந்நூலினும் “நீடுபராசத்தி” என்னும் விருத்தம் வருகையாலும், “குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாதலானும்” (சித்தி.1.45) என்னும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “ஈங்கிது என்றது கடந்த இயல்பினானும்” என்னும் விருத்தம் வருகையாலும், “ஒருவனோ டொருத்தி”(சித்தி.1.1) என்னும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “உலகமெலா மொருவனோ டொருத்தி” என்னும் விருத்தம் வருகையாலும் ,”தோற்றுவித் தளித்துப் பின்னுந் துடைத்தருள் தொழில்கள் மூன்றும் போற்றவே யுடையன் ஈசன்” (சித்தி.1.33) எம் “உரைத்தவித் தொழில்கள் மூன்றும் மூவருக் குலக மோத, வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை” (யூ 1.34) எம் வரும் விருத்தங்களின் கருவைப்பற்றி இந்நூலினும் “கந்தமல ரயன்படைக்கும்” என்னும் விருத்தம் கருகையாலும், “சொன்னவித் தொழில்களென்ன காரணந்தோற்ற வென்னின் முன்னவன் விளையாட்டென்று மொழிதலுமாம்” எம், “அழிப்பிளைப் பாற்றல்” (யூ 1..36,37) எம் வரும் விருத்தங்களின் கருவைப்பற்றி இந்நூலினும் “ஏற்றவிவை யரனருளின் திருவிளையாட்டாக இயம்புவார்கள்”என்னும் விருத்தம் கருகையாலும், இந்தப் பதியிலக்கணமாக அருளிச் செய்த விருத்தமாறும் அந்நூல்களிற் கருத்து ஒத்துவருகையால் முதற்சூத்திரமாக நின்றதென அறிக. இங்ஙனம் சித்தியாரில் முதற்சூத்திரத்தில் விருத்தங்களா யேதுகாட்டின செய்யுட்களை விருத்தங்கள்தோறும் முடியவொட்டிக் கண்டு கொள்க.
மேல் முதற்சூத்திரமாக வகுத்த பதியிலக்கணமாகிய செய்யுள் ஆறினுள்ளும் முற்கூறிய ‘பலகலை’ யென்ற விருத்தத்துக்குத் தொந்தனை வருமாறு: முன்னே பாயிரத்திற் கூறிய “ தெரித்தகுரு முதல்வர்உயர் சிவஞான போதஞ் செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி விரித்தனர்” என்றும் “இறைவன் நூலுங் கலந்து” என்றும் வரப்பட்ட முன்னூல் வழிநூல்களினும் இப்பொழுது கூறப்பட்ட இந்தச் சார்புநூலாலும் அருளிச் செய்கிற அத்தமேதென்று வினவ மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

நீடுபரா சத்திநிகழ் இச்சா ஞானம்
நிறைகிரியை தரஅதனை நிமலன் மேவி
நாடரிய கருணைதிரு உருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரண புவன போகம்
பீடுபெற நிறுவிஅவை ஒடுக்கு மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.
.
முன்னருட் சத்தி மூவித மான
தன்மையில் நிட்கள சகள முரைத்தது.

பொழிப்புரை :

நீடு பராசத்தி அந்த நிஷ்கள சுபாவமாயுள்ள சிவத்துடனே நிலைபெற்றுள்ள மேலான சத்தியானது அந்தச் சிவனுக்குத் திருமேனியாக; நிகழிச்சா ஞான நிறை கிரியைதர விரிந்து தோன்றப்பட்ட இச்சாசத்தியென்றும் ஞானசத்தியென்றும் நிறைந்த கிரியாசத்தியென்றும் ஒன்றிலேயொன்றாக வுண்டாக்க; அதனை நிமலன் மேவி அந்தச் சத்திகளை நிமலனாகிய சிவன் பொருந்தி; நாடரிய கருணைதிரு உருவமாகி குறித்தற்கரிய காருண்ணியத்தினாலே யப்படி இச்சா ஞானக் கிரியா சொரூபனுமாய்; ஒளிவளர் குடிலை கூடுநாத விந்துவாதி பலகலை நவின்று பிரகாசம் வளராநிற்கிற குடிலையாகிய சுத்தமாயையைப் பொருந்தி நாதவிந்து முதலான தத்துவங்களையுந் தோற்றுவித்துப் பலகலையாகிய வேதாகாமங்களையும் அருளிச் செய்து; மாயைமேவிக் கொடுவினைகொள் தனுகரணபுவனபோகம் பீடுபெற நிறுவி அசுத்தமாயா காரணத்தையும் பொருந்திக் கொடிய வினைக்குக் கொள்கலமாக இருக்கிற சகலராயுள்ள ஆன் மாக்களுக்குத் தனுகரணபுவன போகங்களையும் பெருமை பெற நிறுத்தி; அவையொடுக்கும் இங்ஙனஞ் சொல்லப்பட்டவற்றையெல்லாந் தோற்றின முறைமையிலே யொடுக்குவிக்கும்; மேனி திருமேனியானது; பிறங்கிய நிட்கள சகளப் பெற்றியாமே விளங்கப்ட்ட நிஷ்கள மென்றுஞ் சகளமென்றுஞ் சொல்லுமுறைமையினை யுடைத்து.
நீடு பராசத்தி எகு அந்தச் சிவத்துடனே நிலைபெற்றுள்ள சத்தியென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில் அந்தப் பராசத்தியானது அந்தப் பரமசிவனைப்போலே தனக்கொரு போக்குவரவின்றியே எப்பொழுதும் ஒரு தன்மையாய் நிற்கையாலே யப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “எத்திற நின்றா னீச னத்திற மவளு நிற்பள்” (2.75) எது கண்டுகொள்க. ஒளிவளர் குடிலை என்றதைப் பிரகாசத்தினையுடைய மாமாயையென்றது ஏதென்னில் சிவன் கொள்ளப்பட்ட திருமேனியெல்லாம் அதனிடமாகக் கொள்ளுகையாலென அறிக. நிட்கள சகளப் பெற்றியாமே என்றதை இங்ஙனஞ் சொல்லப்பட்ட திருமேனி நிஷ்களமுமாஞ் சகளமுமா மென்றதேதென்னில் தோற்றுகிற திருமேனி சகளமா மென்றும் ஒடுக்குகிற திருமேனி நிஷ்களமாமென்றுஞ் சொன்னதென அறிக.
இதனாற் சொல்லியது சிவன் பிரபஞ்ச சிருஷ்டியாகச் சகளீகரிக்குமிடத்துத் தனது சத்தியே வடிவாகத் திருமேனி கொண்டு சுத்தமாயையைப் பொருந்தி யதிலுண்டான நாதவிந்து முதலான தத்துவங்களையுந் தோற்றுவித்துப் பல கலைஞானமாகிய வேதகமங்களையும் அருளிச்செய்து அசுத்தமாயையிலுண்டான தனுகரணபுவன போகங்களையும் நடத்தி மீளவுமொடுக்குவனென்றும் இங்ஙனம் நடத்துகிற திருமேனி சகளமென்றும் ஒடுக்குகிற திருமேனி நிஷ்களமென்றும் வருமுறைமையும் அறிவித்தது.
அப்படி உம்முடைய சிவன் சகளீகரிக்குமிடத்து அவனைப் பிரமா சிருஷ்டிக்கிற தொழியத்தானே சகளீகரிப்பானென்னலாமோ என்ற பாஞ்சராத்திரியை நோக்கி யருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

குறிப்புரை :

இங்ஙனம் நிஷ்கள சுபாவமாயிருக்கப்பட்ட சிவன் பிரபஞ்ச சிருஷ்டியை நடத்துமுறைமை யெங்ஙனேயென்று வினவத் தனது சத்திகளிடமாகத் திருமேனிகொண்டு நடந்துவனென்னும் முறைமையை மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

ஈங்கிதுஎன் றதுகடந்த இயல்பி னானும்
ஈறுமுதல் நடவொன்று மிலாமை யானும்
ஓங்கிவளர் ஞானமயன் ஆத லானும்
உண்மைபிறர்க் கறிவரிய ஒருமை யானும்
தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாம்
சார்வரிய தனிமுதல்வன் ஆத லானும்
நீங்கலரும் உயிர்க்குயிராய் நிற்ற லானும்
நிறுத்திடுவன் நினைத்தஉரு நிமலன் தானே.
.
துடைப்பவன் உருவாய்த் தோன்றுவ தன்றிப்
படைக்க வரிதாம் பரிசினை யுரைத்தது.

பொழிப்புரை :

ஈங்கிது என்றது கடந்த இயல்பினானும் இவ்விடத்திது என்று ஆன்மபோதத்தாற் குறிக்கப்பட்டதற்கு அப்பாற்பட்டிருக்கிற முறைமையினை யுடையவனாகையாலும்; முதல் நடு ஈறு ஒன்று மிலாமையானும் தேன்றி நின்று அழியப்பட்ட முதலும் நடுவும் முடிவுமில்லாதவனாகையாலும்; ஓங்கிவளர் ஞானமய னாதலானும் மிக்கு வளராநின்ற அறிவே வடிவாக வுடையவனாகையாலும்; உண்மை பிறர்க்கு அறிவரிய வொருமையானும் தன்னுண்மையைப் பிறரால் அறிதற்கரிய நிலைமையினை யுடையவனாகையாலும்; தாங்கரிய வெறுப்பினொடு விருப்புமெல்லாஞ் சார்வரிய தனிமுதல்வனாதலானும் ஆன்மாக்களைப் போலப் பொறுத்தற்கரிய பிரியாப்பிரியங்களெல்லாம் பொருந்துதற்கரிய வொப்பில்லாத முதலியாதலானும்; நீங்கலரும் உயிர்க்குயிராய் நிற்றலானும் தன்னை விட்டுப் பிரிந்து தனித்தொரு முதலாய் நில்லாத சர்வான்மாக்களுக்கும் பிராணனாய் நிற்கையாலும்; நிறுத்திடுவன் நினைந்த உரு நிமலன்தானே இங்ஙனஞ் சொல்லி வந்த முறைமைகளை யுடையவனாதலாலே அவனுக்கு ஒருவர் ஒருவடிவு கொடுக்க வேண்டுவதில்லை, தனக்குத்தானே பொருந்தின வடிவை எடுத்துக்கொள்ளுவன்.
இந்தச் செய்யுளுக்கிட்ட தொந்தனையிலே, சிவனையும் பிரமா சிருஷ்டிப்பானென்று பாஞ்சராத்திரி சொன்னானென்பதற்கு பிம் சித்தியாரில் “உந்தியில் அயனை யீன்றங் கவனைக்கொண்டுலகுண் டாக்கி, அந்தநல் லுலகழிக்க அரனையு மாக்கு வித்துத், தந்திடுஞ் சகத்தினுக்குத் திதிகர்த்தா தானே யாகி, வந்திடுந் தோற்றமீறு நிலைமையும் பண்ணு மாயன்” (பரபக்கம் 265) எது கண்டு கொள்க. அவனப்படிச் சொன்னதனை மறுத்ததற்கு பிம் சித்தியாரில் “அயன்தனை பயந்தானென்றாய் அரியயன் சிரஞ்சேதிப்பப் பயந்திடான் தலைமால் தானும் படைத்திடான் சிரத்தைக் கிள்ளுஞ், சயந்தரு மரனைத் தந்தா னயனென்கை தப்பே யன்றோ, தியங்கிடா துணரா யெல்லாஞ் சிவன்செய லென்று தேர்ந்தே” (யூ 275) எது கண்டுகொள்க. இனி ஈங்கிது என்றது கடந்த இயல்பினான் எகு ஆன்மபோதத்தாற் சுட்டி யறிதற்கரியவனென்று பொருள் கூறியதற்கு பிம் சித்தியாரில் “குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும்” (1.45) எம், “தன்னறி வதனாற் காணுந் தகைமைய னல்ல னீசன்” (6.8) எம் கண்டு கொள்க. ஈறுமுதல் நடுவொன்று மிலாமையான் எகு தோன்றி நின்று அழிதலில்லாதவனென்ற தேதென்னில் ஆன்மாக்களைப்போல யோனிசம்பந்தம் உள்ளவனல்ல என்றதென அறிக. ஓங்கிவளர்ஞானமயன் எகு மிக்கு வளராநின்ற அறிவென்றதேதென்னில் அண்டாண்ட பகிரண்டங்களுக்கெல்லாம் அப்பாலுமிப்பாலு முண்டாகிய இயல்புகளையெல்லாம் அறியப்பட்ட பேரறிவனாகையாலென அறிக. உண்மை பிறர்க்கறிவரிய வொருமையான் எகு தன்னுண்மை பிறருக்கறிய அரியவனென்றதேதென்னில் பிரமவிஷ்ணுக்கள் முதலாயுள்ளவர்களுக்குந் தன்னை யறிதற்கரியவனென்றதென அறிக. இதற்கு பிம் கோவைத் திருவாசகத்தில் “நடனாம் வணங்குந் தொல்லோ னெல்லை நான்முகன் மாலறியாக், கடனா முருவத்தரன்” (77) எது கண்டுகொள்க. நிறுத்திடுவன் நினைந்த உரு நிமலன் தானே எகு தனக்குப் பொருந்தின வடிவு தானேயெடுத்துக் கொள்ளுவனென்ற தேதென்னில் பத்தியினால் வழிபடுவோர்க்கு அதற்கதற்குத் தக்க திருமேனிகொண்டு இரட்சிக்கையாலென அறிக. இதற்கு பிம் பூசாகரணத்தில் “எவ்வுல கத்து மூர்த்தியேது கொண் டவனியங்கும், அவ்வுல கத்துமேனி யதுகொண்டங் கமரு மீசன்” (13) எது கண்டு கொள்க. அதுவன்றியும் மந்திரங்கள் இரத்தமாகவும் பதங்கள் தசையும் நரம்புமாகவும் வன்னங்கள் துவக்காகவும் புவனங்கள் உரோமமாகவும் தத்துவங்கள் அத்தி மச்சை சுக்கில முதலான தாதுக்களாகவும் கலைகள் ஐந்தாகிய சாந்தியாதீதகலைமுதல் திருமுடியாகவுந் திருமேனியாகக் கொண்ட அத்துவாமூர்த்தியென்னவு மாமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “அத்துவா மூர்த்தி யாக அறைகுவ தென்னை யென்னில்.... சேட்டித னாதலானும், வைத்ததா மத்துவாவும் வடிவென மறைக ளெல்லாம்” (1.56) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது நின்மல சொரூபனாகிய சிவன் வாக்கு மனாதீத னாகையாலுந் தோன்றிநின் றழியாதவனாகையாலும் ஞான சொரூபனாகையாலுந் தனக்குப்பொருந்தின திருமேனி தானேயெடுத்துக் கொள்ளுவனென்னும் முறைமையை அறிவித்தது.
இங்ஙனங் கூறிவந்த செய்யுட்களில் ‘பலகலை’ யென்ற விருத்தமுதலாகிய செய்யுள் மூன்றினுள்ளும் ஒரு கர்த்தாவை யுண்டென்று நாட்டி அவன் நிஷ்கள சொரூபியா யிருப்பனென்றும்,அவன் பிரபஞ்சத்தை நடத்துவது பொருட்டாகத் தனது சத்தியிடமாகச் சகளீகரித்து நடத்துவனென்றும், அப்படியவன் சகளீகரிக்குமிடத்துத் தனக்குப்பொருந்தின திருமேனி தானாயெடுத்துக் கொள்ளுவனென்றுஞ் சொல்லுகிறதென்ன, அப்படி யொருகர்த்தா இல்லையென்றும் இந்தப் பிரபஞ்சமும் ஒரு காலத்தினும் அழியாமல் நித்தமாயிருக்கு மென்றுஞ் சொல்லுகிற உலோகாயதனை நோக்கி இந்தப் பிரபஞ்சம் அநித்தியமென்றும் இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து நடத்தி யொடுக்குகைக்கொரு கர்த்தாவுண்டென்றும் மேல் மறுத்தருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

உலகமெலாம் ஒருவனோ டொருத்தி ஒன்றென்(று)
உளதாகி நின்றளவில் ஒடுங்கும் பின்னும்
மலமதனால் உளதாகும் உருவ மாறி
வருவதுபோ வதுசெல்வ தாத லானும்
அலைவில்அசே தனமாயை ஆத லானும்
அணுக்களுரு அடையும்அறி விலாமை யானும்
நிலவுதொழில் மருவிஉரு நிற்ற லானும்
நின்றெவையும் அளித்திடுவன் நிமலன் தானே.
.
ஒருவ னொருத்தி யொன்றென் றுணர்வரும்
உருவம் அவனால் வந்த தென்றது.

பொழிப்புரை :

உலகமெலாம் ஒருவனோ டொருத்தி யொன்றென் றுளதாகி நின்றளவி லொடுங்கும்நீ நித்தியமென்ற பிரபஞ்சமனைத்தும் அவனென்றும் அவளென்றும் அதுவென்றுந் தோன்றி நின்று எல்லையிலே யழியாநிற்குமாகையாலே இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டிக்கவுந் திதிக்கவுஞ் சங்கரிக்கவுமொரு கர்த்தா வேண்டுமென்றறிவாயாக; அப்படி யும்முடைய கர்த்தாவாலே சங்காரப்பட்டொடுங்கின பிரபஞ்சம் மீளவுந் தோன்றுவா னேனென்னில்; பின்னும் மலமதனா லுளதாகும் ஆன்மாக்களுக்கு ஆணவமலபாகம் வருகைப் பொருட்டாக மீளவுந் தோன்றா நிற்கும்; அஃதாவது இந்தப் பிரபஞ்சமென்றது ஆன்மாக்களும் பாசங்களுங்கூடியே பிரபஞ்சமாகையால், அவையிற்றுள் ஆன்மாக்கள் அநாதியே மலசகசராகையாலே யந்த மலபாகம் வந்தே முத்தியைப் பெறவேண்டுகையால் அந்த மலபாகம் வருமிடத்து மாயாசரீரங்களை யெடுத்துக் கன்மங்களைப் புசித்தே மலபாகம் வரவேண்டுகையால், அந்த முத்தியைப் பெறுமளவுஞ் சங்காரகாலம் மாயாகாரணத்திலே யொடுங்கியும் சிருஷ்டிகாலம் அந்தக் காரணமாயையினின்றுந் தோன்றப்பட்ட காரிய மாயையாகிய கலையாதி தத்துவங்களோடும் ஒக்கத் தோன்றி சீவித்து வருகையாலே யப்படிச் சொன்னதென அறிக; அப்படி யான்மாவென்பதும் ஒன்றுண்டாய் அதனை மறைக்கப்பட்ட ஆணவமலமென்பதும் ஒன்றுண்டாய் அந்த மலபாகம் வருகைப்பொருட்டாக ஒடுங்கின பிரபஞ்சம் மீளவுந் தோன்றுமேயாகில், அதுதானே யொடுங்கியுந் தோன்றியும் வாராதோ அதற்குக் கர்த்தா என்றொருவன் வேண்டுமென்றதேதென்னில்; உருவமாறி வருவதுபோவது செல்வதாதலானும் ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாக அச்சுமாறித் தேகத்தை வந்தெடுத்தும் பிராரத்தந் தொலைந்தவாறே அந்தத் தேகத்தை விட்டுப் போயும் புண்ணிய பாவங்களுக்கீடாகச் சுவர்க்க நகரங்களிலே சென்றநுபவிக்கையினாலும்; அன்றியும்; அலைவிலசேதன மாயையாதலானும் இந்த மாயாரூபங்கள் சடமான படியாலே இவையிற்றுக் கியக்கமுமறிவு மில்லாதபடியாலும்; அன்றியும்; அணுக்கள் உருவடையும் அறிவிலாமையானும் ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாக ஒவ்வொரு சரீரங்களையெடுக்குமிடத்து அந்தச் சரீரங்களிலேசென்று பொருந்துகைக்குத் தங்களுக்கென்ன வோரறிவில்லாதபடியாலும்; அன்றியும்; நிலவு தொழில் மருவி உரு நிற்றலானும் ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாக அப்படி யெடுக்கப்பட்ட சரீரங்களோடுங் கூடிநின்று பொருந்தப்பட்ட தொழில்களிலே யாதாமொரு தொழில்களைச் செய்து நிற்கையாலும், இவையெல்லாந் தாமாகக் காரியப்படமாட்டாததுகொண்டே; நின்று எவையும் அளித்திடுவன் நிமலன் தானே தனக்கொரு போக்குவரவின்றியே நின்று எல்லாவற்றையுஞ் செய்வித்து இரக்ஷித்தருளுவன் நின்மலனாகிய சிவன்தானே.
இந்தச் செய்யுளுக்கிட்ட தொந்தனையிலே, உலகாயதன் கர்த்தாவில்லையென்றானென்றும் இந்தப் பிரபஞ்சம் ஒரு காலத்தினும் அழியாமல் நித்தியமாய் நிற்குமென்றானென்றுஞ் சொன்னதனை மறுத்து உலகமெலா மொருவனோ டொருத்தி யொன்றென் றுளதாகி நின்றளவி லொடுங்கும் எகு பொருள்கூறிய விடத்து இந்தப் பிரபஞ்சம் அவன் அவள் அதுவாய் நின்று காரியப்படுமிடத்துத் தோன்றி நின்றழிகையாலே இவையிற்றைக் காரியப்படுத்திச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்தும் வருகைக்கொரு கர்த்தாவேணுமென்றவனை மறுத்ததற்கு பிம் சித்தியாரில் உலகாயதன் மறுப்பாகிய செய்யுளில் “பூதமானவை நித்த மென்று புகன்ற தென்னை.... மாருதச் செய்கையே” (பரபக்கம் 37) எம், “பூதமானவை காரியங்கள் ...குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே” (யூ 56) எம் வருமது கண்டு கொள்க. அன்றியும் சுபக்ஷத்திலும் உலகாயதன் கருத்தை மறுத்த விருத்தத்தில், “ஒருவனோ டொருத்தி யொன்றென் றுரைத்திடும் உலகமெல்லாம், வருமுறை வந்து நின்று போவது மாதலாலே தருபவ னொருவன் வேண்டுந் தான்முத லீறுமாகி, மருவிடு மநாதி முத்தச் சித்துரு மன்னிநின்றே” (1.1) எது கர்த்தா பிரபஞ்சத்தை நடத்துவனென்பதற்குக் கண்டு கொள்க. இனி பிரபஞ்சந் தோன்றியும் அழிந்தும் வருமென்றவனை மறுத்ததற்கு பிம் சித்தியாரில் “உதிப்பது மீறுமுண்டென் றுரைப்பதிங் கென்னை முன்னோர், மதித்துல கநாதியாக மன்னிய தென்பரென்னில், இதற்கு யான் அநுமானாதி யெடேனிப் பூதாதியெல்லாம், விதிப்படி தோன்றி மாயக் காணலான் மேதினிக்கே” (1.2) எது கண்டு கொள்க. இனி இந்தப் பிரபஞ்சமாவது ஆன்மாக்களும் பாசங்களுங் கூடியே பிரபஞ்சமென்று பேர் பெற்று நின்றதென்று விதப்பாகப் பொருள் கூறியதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “கருமலி பாச மசேதனங் கட்டுண்பர் சேதனரென், றிருமையில் வைய மடங்குமென் றெண்ணுக” (9) எது கண்டுகொள்க. இனி யப்படி யொடுங்கின பிரபஞ்சம் மீளத் தோன்றுவானேன் என்று உலகாயதன் வினாயதற்குத்தரமாகப் பின்னும் மலமதனாலுளதாகும் எகு ஆன்மாக்கள் அநாதியே மலசகசராகையாலே யந்த மலபாகம் வருகைப்பொருட்டாகப் பிரபஞ்சம் மீளவுந்தோன்றுமென்று விதப்பாகப் பொருள் கூறியதற்கு பிம் சிவஞானபோதத்தில் “அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற், றோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதாம்” (சூ. 1) எம், “இலயித்த தன்னிலி லயித்ததா மலத்தால்” (சூ. 1 வெ. 2) எம் வருமது கண்டுகொள்க. அன்றியும், ஆணவமலபாகம் வாராத ஆன்மாக்கள் மாயாரூபங்க ளொடுங்குங்காலங் காரணமாயையிலே யொக்கவொடுங்கியும், தோன்றுங்காலம் அந்த மலபாகம் வருகைப்பொருட்டாக மீளவும் அந்தக் காரணமாயையினின்றுங் காரியமாயையோடே யொக்கத் தோன்றுவார்களென்றும் விதப்பாகப் பொருள்படுத்தினதற்கு பிம் சித்தியாரில் “உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதெ னரன்பா லென்னிற், செயிருறு மலத்தி னாகுஞ் சிதைந்ததே தென்னிற் சித்தத், தயர்வொழிக் காரி யங்க ளழியுங்கா ரணங்கி டக்கும், பயில்தரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்” (1.32) எது கண்டு கொள்க. இந்நூலினும் “மற்றத் தோற்றமலபாகம் வர” என்பதும் இப்பொருள்பற்றியென அறிக. இங்ஙனம் ஆன்மாவுக்குத் தோற்றஞ் சொல்லவே யுடம்போடுங்கூடித் தோன்றுகையால் பிரபஞ்சத்தோற்றஞ் சொல்லுகை கருத்தென அறிக. இனியந்த ஆணவமலபாகம் வருமிடத்து மாயாரூபங்களை யெடுத்தே மலபாகம் வரவேணுமென்பதற்கு பிம் சித்தியாரில் “எழுமுடல் கரண மாதி யிவைமல மலம லத்தாற், கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னிற், செழுநவு யறுவை சாணி யுவர்செறி வித்த ழுக்கை, முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன்” (2.52) எது கண்டுகொள்க; இனி யப்படிப் பிரபஞ்சந் தோன்றுமிடத்துத் தானே தோன்றாதோ கர்த்தாவும் வேணுமோ என்று உலகாயதன் வினாயதற்குத்தரமாக உருவமாறி யென்றபதந்தொடங்கி மற்றுள்ள பதங்களுக்கெல்லாம் பொருள் கூறுமிடத்து மாயாகன்மங்கள் சடமானபடியாலும் ஆன்மாக்கள் தங்களுக்கென்னவோ ரறிவில்லாதபடியாலும் அவையிற்றைக் கூட்டிக் காரியப்படுத்துவது சிவனே யென்றும், நின்றெவையுமளித்திடுவன் நிமலன் தானே எகு சர்வமுஞ் சிவனே செய்வித்து இரக்ஷித்தருளுவனென்றும் பொருள்கூறியதற்கு பிம் சித்தியாரில் “உலகுடல் கரணங் கால முறுபல நியதி செய்தி, பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால், நிலவிடா விவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா, அலகிலா வறிவ னாணை யணைத்திடு மருளி னாலே” (2.22) எது கண்டு கொள்க.
ஆக இங்ஙனங் கூறிவந்த பதங்களில் உருவமாறி வருவது போவது செல்வது எகு பொருள்கூறுமிடத்து வருவது சிருஷ்டி யென்றும் போவது சங்காரமென்றுஞ் செல்வது திதியென்றும் பொருளுரைப்பாருமுளர். அதுபொருளல்லவென அறிக. அதுவேனென்னில், இச்செய்யுளின் முதற்பதத்தில் உளதாகி நின்றளவிலொடுங்கும் எகு தோன்றி நின்றழியுமென்று சிருஷ்டியுந் திதியுஞ் சங்காரமுமாகப் பொருள்கூறி இதற்குமப்படிப்பொருளுரைக்கில் ஒரு செய்யுளிலே இரட்டித்த பொருள்கூறுகை வழக்கல்லாதபடியால் அப்படிச் சொன்னதென அறிக. ஆகையால் செல்வதென்றது ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாகச் சுவர்க்க நரகங்களிலே செல்வார்களென்பதே பொருளென அறிக. அன்றியும், அணுக்களுருவடையும் அறிவிலாமையானும் எகு பூத அணுக்கள் நாலும் ஆன்ம அணுவொன்றும் ஆக ஐந்தணுவுந் தம்மிற்கூடி யுருப்படுமென்று பொருளுரைப்பாருமுளர், அப்படியானாலும் அணுக்கள் உருவடையுமென்ற சொல்லுக்கு அந்த அணுக்களென்றது வேறே யோருடம்பிலே சென்று பொருந்துமென்று பொருளாமொழிய அவைதம்மிற்கூடி யுடம்பாமென்று பொருளாகாதபடியால், ஆன்மாக்களாகிய அணுக்கள் வேறே யோருடம்பிலே சென்று பொருந்துமென்பதொழிய ஆன்ம அணுவும் பூத அணு நாலுந் தம்மிற் பொருந்திக் காரியப்படுமென்பது இந்தப் பதத்துக் காகாதென்றதென அறிக. அணுக்களென்பது ஆன்மாக்களென்பதே இந்தப் பதத்துக்குச்சொல்லப்படுமென்பதற்கு இந்நூலிற் பின்சென்ற நூலாகிய திருநெறி விளக்கத்தினும் இந்த விருத்தத்துக் கெதிரடை விருத்தமாகிய “வையமெலாம் ஆண்பெணலி யென்னத் தோன்றி வல்வினையா லுழன்றொடுங்கி மலத்தாற் பின்னும், மெய்யணையும் வெகுவிதரூ பங்கள் மாறி விடுவதுபற் றுவதாகி விரித லானும், பொய்யனைய மாயைசட மாதலானும் போதமுரு வறிந்துபொருந் தாமை யானுஞ், செய்வினை செய் துயிருருவி னிற்றலானுஞ் சகமுழுது நின்றுசிவன் செய்வன் காணே” என்னுமிதில் போதமுருவறிந்து பொருந்தாமையானும் என்ற பதத்தை அணுக்களுருவடையும் அறிவிலாமையானும் என்ற பதத்துக்குக் கண்டு கொள்க. இந்தத் திருநெறிவிளக்கம் பின்னூலாயிருக்க இதனை ஏதுக்காட்டியதேதென்னில் இந்தச் சிவப்பிரகாசத்துக்குப் பின்சென்ற நூலாகையால் சத்தம் வேறுபட்டும் அத்தமொன்றுபட்டும் வருகையாலே அது காட்டவேண்டியதென அறிக. இந்த நூலில் இவை வந்தவிடமெல்லாம் இதுவே கருத்தென்பது கண்டுகொள்க. அன்றியும், அணுக்களென்பதை ஆன்மாக்களென்று தனித்துஞ் சொல்லப்படுமென்றதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “அமையா நிலைமை யணுக்களொர் மூன்றுவகை யவைதாங், கமையா நிறைந்த விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர்” (12) எம், “மூவகை யணுக்க ளுக்கு முறைமையால் விந்து ஞான மேவின” (1.26) என்று சித்தியாரினுங் கண்டு கொள்க. ஆகையால் இந்தப் பதத்துக்கு அணுக்கள் உருவடையுமென்றது ஆன்மாக்களென்பதே துணிவென அறிக. அன்றியும், நிலவுதொழில் மருவியுரு நிற்றலானும் எகு அறுவகைத் தொழிலிலே பொருந்தப்பட்டதொரு தொழிலைச்செய்து நிற்றலானுமென்று பொருளுரைப்பாருமுளர். அப்படி அறுவகைத் தொழில் மானுடர்க்கொழிய மற்றுள்ள ஆன்மாக்களுக்குப் படாதாகையால் இவ்விடத்துச் சர்வான்மாக்களையும் நோக்கிப் பொதுப்படக் கூறுகையாலே நிலவுதொழிலென்பது பொருந்தப்பட்ட தொழிலென்று பொருள்படுத்துகையே வழக்கென அறிக. அறுவகைத் தொழிலென்றால், மானுடர்க்கென்றதேதென்னில், அறுவகையாவது; உழவு தொழில் வரைவு வாணிபம் வித்தை சிற்பம் ஆகையால் அப்படிச் சொன்னதென அறிக.
என்றிங்ஙனங் கூறப்பட்ட செய்யுளில் உலகமெலாம் ஒருவனோ டொருத்தி யொன்றென் றுளதாகி நின்றளவில் ஒடுங்குமென்ற பதமொன்றையும் உலகாயதனை மறுத்ததாக்கி மற்றப் பதம் ஐந்தும் மற்றுள்ள புறச்சமயிகளை மறுத்ததாகப் பொருளுரைப்பாருமுளர். அது பொருளல்லவென அறிக. அது ஏனென்னில், இச்செய்யுள் பதந்தோறும் ஒருவன் கருத்தைப்பற்றித் தொடர்ந்து சொல்லுகையாலும் இச்செய்யுளுக்குக் கருத்தாகச் சேர்த்த குறட்பாவும் உலகாயதனொருத்தன் கருத்தைப்பற்றி நிற்கையாலும் அப்படிச் சொன்னதென அறிக. அப்படி மற்றுள்ள சமயிகளை மறுத்துக் கூறப்பட்டதானால் உலகாயதன் ஒருவனையும் நோக்கிச் சிவனையும் ஆன்மாவையும் ஆணவ மலத்தையுங் கன்மமலத்தையும் கூறவேண்டுங் காரணமேதென்னில் அவையிற்றை அவன் இல்லையென்று சொல்லுகையால் அப்படிச் சொன்னதென அறிக. அவையிற்றை யவனில்லையென்று சொன்னதற்கு பிம் சித்தியாரில் “இப்படி யன்றிக் கன்ம முயிரிறை வேறுண் டென்று,செப்பிடு மவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்றமென்னோ, ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறி, தப்பிலா காயப்பூவைப் பறித்தமை சாற்றி னாரே” (பரபக்கம். 17) எது அவன் மதத்திலே கண்டு கொள்க. இனி அவையெல்லாமுண்டென்று நாட்டி யவனை மறுத்துக் கூறினதற்கு பிம் சித்தியாரில் “அநாதியேலமை வின்றெனின்மல மாயைகன்ம மணுச்சிவன், அநாதிகன்ம மணுக்கள்செய்ய அறிந்துகன்ம முடற்செயா, அநாதிகாரிய மாமுடற்க ளசேதனம் அணையாவறிந், தநாதியாதி யமைக்கவேண்டும் அமைப்பினோடும் அநாதியே” (ஷெ. 50) எது அவன் மறுப்பிலே கண்டு கொள்க. ஆகையால் இச்செய்யுள் இங்ஙனங் கூறிவந்த உவமானங்களினாலும் பிரமாணங்களினாலும் உலகாயதனை நோக்கி மறுத்ததென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது இதற்கு முன்னர்ச் செய்யுட்களிலே யுண்டென்று நாட்டபட்ட கர்த்தாவை இல்லையென்றும் இந்தப் பிரபஞ்சம் நித்தியமென்றுங் கூறிய உலகாயதனை நோக்கி மறுத்து இந்தப் பிரபஞ்சம் அவன் அவள் அதுவாகத் தோன்றி நின்றழிகையாலே இவையிற்றைக் காரியப்படுத்துகைக்கு ஒரு கர்த்தா உண்டென்னும் முறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

கந்தமலர் அயன்படைக்கும் உலக மெல்லாம்
கண்ணன்அளித் திடும் அவைஎம் கடவுள் தானே
அந்தமுற அழித்திடுவன் ஆத லாலே
அயன்அரியும் அவனதுயர் அதிகா ரத்து
வந்தமுறை தன்தொழிலே மன்னுவிப்பன் எல்லாம்
வருவிப்பன் விகாரங்கள் மருவான் வானின்
முந்திரவி எதிர்முளரி அலர்வுறுமொன் றலர்வான்
முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே.
.
படைப்பு நிலையவன் படைப்பா தலினால்
துடைப்பவன் முதலெனத் தோன்ற வுரைத்தது.

பொழிப்புரை :

கந்தமலர் அயன்படைக்கும் உலகமெல்லாங் கண்ணனளித்திடும் மணம் பொருந்தின தாமரை மலரிலே யிருக்கப்பட்ட பிரமா உலகங்க ளனைத்தையுஞ் சிருஷ்டிப்பவன், அந்த உலகங்களை விஷ்ணு இரக்ஷியா நிற்பன்; அவை எம் கடவுள் தானே யந்தமுற அழித்திடுவன் அவர்களால் படைத்தளிக்கப்பட்ட உலகங்களைச்சேர எம்முடைய கர்த்தாவாகிய உருத்திரன் முடிந்துபோம்படி சங்கரிப்பவன்; ஆதலாலே அந்தத் தொழில்களைச் சிவனப்படிச் சங்கரிக்கையாலே; அயனரியு மவனதுய ரதிகாரத்து வந்தமுறை அந்தப் பிரம விஷ்ணுக்களும் அந்தச் சிவனுடைய மிக்க ஆக்கினை வழியிலே வருகிற முறைமையினையுடைய அதிகார கர்த்தாக்களாயிருக்கும்; அப்படியானால் அந்தத் தொழில்களும் பிரமவிஷ்ணுக்களுக்கும் அநாதியேயுடையதோ உம்முடைய கர்த்தாவாகிய சிவன் கொடுத்ததோ என்னில்; தன்தொழிலே மன்னுவிப்பன் எ னம்முடைய சிவன் தனக்குண்டான தொழில்களிலே யந்தப் பிரமவிஷ்ணுக்களையும் நிறுத்துவன்; அவை யப்படி உம்முடைய சிவனுடைய தொழிலேயானால் அவையிற்றை யவனழிப்பானேனென்னில்; எல்லாம் வருவிப்பன் அப்படி யவனழித்தாலுந் தன்னுடைய கிருத்தியங்களை நடத்தவேண்டுங் காலத்துக் கெல்லாவற்றையும் மீளவுமண்டாக்கியுங் கொள்ளுவன்; அப்படியானால், ஒருத்தன் ஒரு தொழில் செய்ய மாட்டுகிறானில்லை, பலதொழிலுமொருவன் செய்வனாகில் உம்முடைய சிவன் விகாரப்படானோவென்னில்; விகாரங்கள் மருவான் அப்படியெம்முடைய சிவன் பல தொழிலும் நடத்தினாலும் அவனுக்கு விகாரங்களுண்டாகாது; அது என்போலவென்னில்; வானின் முந்திரவியெதிர் முளரி யலர்வுறுமொன் றலர்வான் முகையாமொன் றொன்றுலரு முறையினாமே ஆகாசத்திலே தோன்றிச் செல்லும் ஆதித்தன் சந்நிதியில் தாமரையானது முதிர்ச்சிக் குறையொப்புக் கீடாகக் காரியப்படுத்துமிடத்து, ஒன்றலராநின்றது ஒன்றலருகைக்குப் பக்குவமாகாநின்றது ஒன்றுலராநின்றது; இப்படித் தாமரை மூன்று தொழிற்பட்டு நிற்கச் செய்தே ஆதித்தனுக்கு விகாரமில்லாதாற்போல.
இந்தச் செய்யுளுக்கிட்ட தொந்தனையிலே, சிருஷ்டிக்குந் திதிக்குஞ் சங்காரத்துக்கும் பிரமா விஷ்ணு உருத்திரனையுஞ் சொல்லியிருக்க உம்முடைய சிவனொருவனையுங் கர்த்தா என்பானேனென்று பாஞ்சராத்திரி வினவினான் என்பதற்கு பிம் சித்தியாரில், “உரைத்தவித் தொழில்கள் மூன்று மூவருக் குலக மோத, வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னில், விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள், புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே” (1.54) என்று அவன் வினாயதற் குத்தரமாகக் கூறியது கண்டுகொள்க. இனி, கந்தமலரயன் எகு பூவுக்குப் பெயர் கூறாமல் மலரென்று பொதுவாகச் சொல்லியிருக்கத் தாமரைமலரென்று பொருள்கூறியதேதென்னில் பிரமாவுக்கிருப்பிடந் தாமரைமலரென்று நூல்களிற் சொல்லிவருகையாலே ஆசரணைப்பற்றி யழைத்துப் பொருள்கூறியதென அறிக.அப்படி வருமதற்கு பிம் “அலரோன் நெடுமால் அமரர்கோன்” எம், “பூவார் திசைமுகன்” எம் முளரியன் எம் தாமரையோன் எம் வருமேதுக்களைக் கண்டு கொள்க. இனியவையெங் கடவுள் தானே அந்தமுற அழித்திடுவன் எகு அவையென்ற சுட்டுகொண்டே அந்தத் தொழில்களன்றியே அந்தத் தொழில்களுக்குக் கர்த்தாவாயுள்ள பிரம விஷ்ணுக்களையும் அழிப்பனென்னவு மாமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “இறுதியாங் காலந் தன்னி லொருவனே யிருவ ருந்தம் உறுதியாய் நின்றா ரென்னி லிறுதிதா னுண்டா காதாம், அறுதியி லரனே யெல்லா மழித்தலா லவனா லின்னும், பெறுதுநா மாக்க நோக்கம் பேரதி கரணத் தாலே” (1.55) எம், “அழிப்பரி யேவ லென்றா யரிதனை யழிக்கு மன்றங், கழிப்பது தவிர்க்க மாட்டானங்கமு மழித்தே பூண்டான், அழிப்பரி யேவலென்றங் கறைந்தது மழிந்த தன்றோ, அழித்திடு மரனே யாக்க நோக்கமு மாக்கு வானே” (பரபக்கம் 278) எம் வருமேதுக்களைக் கண்டு கொள்க. இனி அயனரியு மவனதுய ரதிகாரத்துவந்த முறை எம் எல்லாம் வருவிப்பன் எம் வருகையாலே அந்தந்தத் தொழில்களையன்றியே யந்தந்தத் தொழில்களுக்குக் கர்த்தாவாயுள்ள பிரமவிஷ்ணுக்களையுஞ் சிவனே யுண்டாக்குவனென்னவுமாமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “சீவன்கள் சனனம்போலச் சிலர்வயிற்றுதித்த மாலைத், தேவென்றே வையங் காக்கச் சுவேச்சையாற் சனித்தா னென்பீர், பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக், கோவந்து முகத்திற் றோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல் கூறும்” (யூ 276) எது கண்டுகொள்க. இனி யெங்கடவுள்தானென்றதுகொண்டே சிவனே கர்த்தா என்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “நாரணன் அயனை யீன்றும் அயனும் நாரணனை யீன்றுங், காரண மொருவ ருக்கங் கொருவர்தா மிருவருக்கும், வாரண முரிதத வள்ளல் காரண மென்று மன்ற, ஆரணமுரைக்கும், பக்கதத் தவர்களு மடைந்தா ரன்றே” (யூ. 277) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது பிரம விஷ்ணுக்ளுடைய சிருஷ்டியையுந் திதியையுஞ் சிவனே யழித்துப் போடுவனென்றும் மீளவுமுண்டாமிடத்துச் சிவனே யுண்டாக்குவனென்றும் வருமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

அப்படி யிங்ஙனங் கூறப்பட்ட முன்னர்ச்செய்யுள் முடிவிலே ‘நின்றெவையு மளித்திடுவன் நிமலன்றானே’ என்றதற்குச் சர்வமுஞ் சிவனே செய்விப்பனென்று நீர் சிவனொருவன் மேலேயும் வைத்துச் சொல்லுகிறதென்ன, இந்தப் பிரபஞ்சத்தைப் பிரமா சிருஷ்டிப்பனெறும் விஷ்ணு இரக்ஷிப்பனென்றும் உருத்திரன் சங்கரிப்ப னென்றும் மூன்றுதொழிலுக்கு மூவரையு மென்றல்லோ சொல்லுவது என்கிற பாஞ்சராத்திரியை நோக்கி மூன்று தொழிலுக்குஞ் சிவனே கர்த்தாவென்னும் முறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 6

ஏற்றஇவை அரனருளின் திருவிளையாட் டாக
இயம்புவர்கள் அணுக்கள்இடர்க் கடல்நின்றும் எடுத்தே
ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக
உரைசெய்வர் ஒடுக்கம்இளைப் பொழித்தல் மற்றைத்
தோற்றமல பாகம்வரக் காத்தல் போகம்
துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும்
போற்றலரும் அருள்அருளே யன்றி மற்றுப்
புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே.
.
மன்னுயிர்க் கிரங்கி வகுத்தவைந் தொழிலும்
முன்னவ னருளெனு முறைமை மொழிந்தது.

பொழிப்புரை :

ஏற்றவிவை யரனருளின் திருவிளையாட்டாக இயம்புவர்கள் இங்ஙனம் பொருந்தப்பட்ட தொழில்கள் தம்பிரானார் அநுக்கிரகத்தாலே செய்யுந் திருவிளையாட் டென்று பெரியோர்கள் சொல்லவார்கள்; அப்படியானால் உம்முடைய கர்த்தாவானவன் பாலரைப் போலப் பயனற்ற காரியஞ் செய்வானோ என்னில், அப்படியல்ல, எம்முடைய கர்த்தாவானவன் அந்தத் தொழில்களைப் பாராமலெளிதாகச் செய்கையினாலே விளையாட்டென்றதாம்; அவன் அவையிற்றை ஏது காரியமாகச்செய்கிறானென்னில்; அணுக்களிடர்க் கடல்நின்றும் எடுத்தே ஊற்ற மிக அருள்புரித லேதுவாக உரைசெய்வர் ஆன்மாக்களைத் துக்கசாகரமாகிய ஜநநக் கடலிலே நின்றுங் கரையேற்றித் தனது நிலைபேறாயுள்ள திருவடியிலே கூட்டிக் கொள்ளுகை காரணமாக என்று சொல்லுவார்கள், அறிவாலுயர்ந்த பெரியோர்கள்; அப்படி உம்முடைய கர்த்தா அனுக்கிரகஞ் செய்கிறவனேயானால் சங்கரிப்பானென்பான் ஏனென்னில்; ஒடுக்க மிளைப்பொழித்தல் அப்படிச் சங்கரிக்கிறது கன்மத்தினால் அலைப்புண்ணும் ஆன்மாக்களை யிளைப்பாற்றுகை; அப்படி யிளைப்பாற்றிக் கிடவாமல் மீளவுந் தோற்றுவிப்பான் ஏனென்னில்; மற்றைத் தோற்றம் மலபாகம் வர மீளவுஞ் சிருஷ்டிக்கிறத மலநீங்காதபடியாலே அந்த மலநீங்குகைப் பொருட்டாகத் தனுகரண புவனபோகங்களோடுங் கூட்டுகிறதாயிருக்கும்; அப்படிச் சிருஷ்டித்தபோதே அந்த மலத்தைப் பாகம் வருத்தித் தன்னிடத்திலே கூட்டிக் கொள்ளாமல் நெடுங்காலந் திதியென்கிற தொழிலிலே நிறுத்துவானேனென்னில்; காத்தல் போகந் துய்ப்பித்தல் அப்படி நெடுங்காலந் திதியென்கிற தொழிலிலே நிறுத்தினது ஆன்மாக்களுக்குக் கன்மங்கள் மிகுதியாயிருக்கை யினாலே அந்தக் கன்மங்களைப் புசிப்பித்து இயல்பிலே மலபாகம் வருத்துகிறதாயிருக்கும். அப்படிச் செய்கிற கர்த்தா மறைப்பானேனென்னில்; திரோதாயி நிறுத்தலாகும் திரோதமாகிய மறைப்பாவது அந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கன்மங்களைத் தொலைப்பிக்கத்தக்கதாக அளவுகளிலே நிறுத்தினதாயிருக்கும்; அப்படியானால் அநுக்கிரகமேதென்னில்; போற்றலரும் அருளருளே சொல்லுதற்கரிய அநுக்கிரகமாவது ஆன்மாக்களைத் தனது திருவடியிலே கூட்டிக்கொள்ளுவதுதான் அநுக்கிரகமாயிருக்கும்; இதுவொழிந்து முன்சொல்லப்பட்ட நாலு தொழிலுமேதென்னில்; அன்றி மற்றுப் புகன்றவையும் அருளொழியப் புகலொணாதே இவ்வநுக்கிரகமன்றி முன்சொல்லப்பட்ட சிருஷ்டி திதி சங்காரந் திரோபாவமென்னப்பட்ட நாலுந் தனது திருவடியிலே கூட்டிக் கொள்ளுகை நிமித்தமாக மலபாகம் வருத்துகிற அநுக்கிரகமொழிய மற்றொன்றாகச் சொல்லவொண்ணாது.
அரனருளின் திருவிளையாட்டு என்றதை உம்முடைய கர்த்தா பாலரைப் போலப் பயனற்ற காரியஞ்செய்வானோ என்று புத்தன் சொன்னானென்றதற்கு பிம் சித்தியாரில், “பெறுவதிங் கென்படைத்துப் பெற்றது விளையாட் டென்னிற், சிறுமழ விறைய தாகுஞ் செய்திடுங் கன்மத் தென்னி, னுறுபெருங் கன்மஞ் செய்வோர் முன் புளராவ ருண்மை, யறிவுறின் ஞாலமெல்லா மநாதியென் றறிந்தி டாயே” (பரபக்கம், 87) எது அவன் மதத்திலே கண்டு கொள்க. இனி இந்தத் தொழில்களைப் பாராமற் செய்தது கொண்டே யவனுக்கு இது விளையாட்டாமென்று உத்தரமாகக் கூறினதற்கு பிம் திருவாசகத்தில் “ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந், தீர்த்தனற் றில்லைசிற் றம்பலத்தே தீயாடுங், கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமுங், காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி, வார்த்தையும் பேசி” (7.12) எம், “ஐயா நீயாட்கொண் டருளும் விளையாட்டில்” (7.11) எம் வருமேதுக்களைக் கண்டுகொள்க. அன்றியும் சிவனே பஞ்சகிருத்தியஞ் செய்வனென்பதற்கு பிம் திருவாசகத்தில் “போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம், போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள், போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள், போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம், போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்” (7.20) எது கண்டுகொள்க. இதனுள் தோற்றமாம் பொற்பாதம் எது சிருஷ்டியென அறிக; போகமாம் பூங்கழல்கள் எது திதியென அறிக; ஈறா மிணையடிகள் எது சங்காரமென அறிக; மால் நான்முகனுங் காணாத புண்டரிகம் எது திரோபாவமென அறிக; யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் எது அநுக்கிரகமென அறிக. ஆக ஐந்து கிருத்தியத்துக்கும் இங்ஙனங் கண்டுகொள்க. அன்றியுங் கர்த்தா இந்தத் தொழில்களிலே ஆன்மாக்களைக் கூட்டிப் பஞ்சகிருத்தியப்படுத்துமிடத்துப் பாராமலெளிதாக விளையாட்டாய்ச் செய்வனென்றும் அப்படிச் செய்யவே ஆன்மாக்களுக்குண்டான மலபாகமும் வந்து திருவடிக்கு முரித்தாவார்கள் என்பதற்கு பிம் சித்தியாரில் “சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற வென்னின், முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாமுயிர்க்கு, மன்னிய புத்தி முத்தி வழங்கவு மருளான் முன்னே, துன்னிய மலங்க ளெல்லாந் துடைப்பதுஞ் சொல்ல லாமே” (1.36) எது கண்டு கொள்க. “அணுக்களிடர்க் கடல் நின்று மெடுத்தே யூற்றமிக அருள்புரித லேதுவாக வுரைசெய்வர்” எகு ஆன்மாக்களை ஜனனக்கடலிலே நின்றுங் கரையேற்றித் தனது திருவடியிலே கூட்டிக் கொள்ளுகை நிமித்தமாகக் கர்த்தா இந்தத் தொழில்களைச் செய்வனென்று புத்தனை நோக்கிச் சொன்னதற்கு பிம் சித்தியாரில் “அநாதிமுத்த னாய்ப்பரனா யசலனாயெல்லா வறிவுதொழி லனுக்கிரக முடையவரன் கன்ம, நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாதம் நுழைவித்து மலங்களெலா நுங்கநோக்கி, மனாதிகர ணங்களெலா மடக்கித் தன்னை வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால், இனாதபிறப் பினினின்று மெடுத்து மாறா வின்பமுத்திக் கேவைப்ப னெங்கள் முத்தியிதுவே” (பரபக்கம். 134) எது அவன் மறுப்பிலே கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது உம்முடைய கர்த்தா இந்தத் தொழிகள் என்ன பயனைக் கருதிச் செய்கிறானென்ற புத்தனை நோக்கி ஆன்மாக்களை மலபாகம் வருத்தித் தனது திருவடியிலே கூட்டிக் கொள்ளுகைப் பொருட்டாக என்றும் அப்படிச் செய்யுமிடத்துப் பாராமலெளிதாக விளையாட்டாய்ச் செய்வனென்றும் வருமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

அப்படி இந்தத் தொழில்களை உம்முடைய கர்த்தா என்ன பயனைக் கருதிச் செய்கின்றானென்ற புத்தனை நோக்கி மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவை அவரா யதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.
.
எண்ணிலா வுயிர்க ளிறந்துபிறந் தொருகால்
நண்ணிடு மரனடி யருளா லென்றது.

பொழிப்புரை :

எண்ணரிதாய் ஆன்மாக்கள் இலக்கத்தினால் அளவு படுத்துதற்கரியதாய்; நித்தமாய் ஒரு காலத்தினும் அழியாததாய்; இருள் மலத்தின் அழுந்தி அஞ்ஞானமாகிய ஆணவமலத்தினாலே மறைப்புண்டு கிடந்து; இருவினையின் தன்மைகளுக்கீடான யாக்கை அண்ணல் அருளால் நண்ணி அவரவர்களுக்குண்டான புண்ணிய பாவங்களுக்கீடானதோர் உடல்களைத் தம்பிரானார் காருண்யத்தினாலே பொருந்தி; அவையவராய் அவன் அவள் அதுவாகிய அந்தவுடம்பென்னத் தானென்னத் தோன்றாமற் பிரிவற்று நின்று; அதனால் அலகினிகழ் போகங்களருந்து மாற்றாற் புண்ணியபாவம் புரிந்து அந்த உடம்புகளோடுங் கூடுகையாலே யெண்ணிறந்த போகங்களைப் புசித்து அந்தப் புசிப்பாலுண்டாகிய ஹிதாஹிதங்களினாலே மீளவும் புண்ணிய பாவங்களை யார்ச்சித்துக் கொண்டு அதனாலே; போக்குவரவுடைத்தாய் இறந்து பிறந்து வருவதாய்; புணரும் இங்ஙனம் பொருந்திவாரா நிற்கும். இப்படி வரச்செய்தே; இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளா லுண்ணிலவு மொளி அநாதியே யான்மாவை மறைக்கப்பட்ட ஆணவமலமானது க்ஷயம் வந்த அவதரத்துச் சிவனுடைய அருளாலே யந்த ஆன்மாவினிடத்திலே ஞானம் பிரகாசியா நிற்கும்; அன்றியும், புணருமிருள் மலபாகமென்று பதங் கூட்டி யான்மாக்களோடுங் கூடிநிற்கிற ஆணவமலமென்று பொருளுரைப்பினுமாம்; அதனால் இருளகற்றிப் பாத முற்றிடு நற்பசுவர்க்கம் அங்ஙனம் பிரகாசிக்கப்பட்ட ஞானத்தினாலே யந்த ஆணவமல மறைப்பை நீங்கிச் சிவனுடைய திருவடியிலே பொருந்திடும் பக்குவப்பட்ட சுத்தான்மாக்கள்; எனவுரைப்ப ருணர்ந்தே என்றிங்ஙனஞ் சொல்லுவார்கள் அறிவாலுயர்ந்த பெரியோர்கள்.
எண்ணரிதாய் எகு ஆன்மாக்களை யிலக்கத்தினால் அளவுபடுத்தற் கரிதென்றதேதென்னில், ஒவ்வொரு யோனி வர்க்கங்கள் தோறுமுண்டான ஆன்மாக்களை யளவுபடுத்தப்படாதது கொண்டே எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதத்திலுண்டான ஆன்மாக்களையும் அளவுபடுத்தப்படாத படியாலும், அன்றியும் அவதரந் தோறுந் திருவடியிலே கூடின ஆன்மாக்கள் மீளவும் ஜநநங்களில் வாராதிருக்கவும் பிரபஞ்ச காரியப்பட்டு வருகிற ஆன்ம வர்க்கந்தொலையாதது கொண்டும் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் கோயிற்புராணத்தில் “எத்தகைய போகங்க ளெவற்றினுக்குங் காரணமாய், வைத்தபடி யிடம்போதா வகைநெருங்கு மன்னுயிர்கள்” எம், “கற்பங்கள் தொறுநடஞ்செய் கழலணைந்தோர் கணிப்பில்லார்” (22) எம் வருமது கண்டு கொள்க. இனி நித்தமாய் எகு ஒரு காலத்தினும் அழியாததென்றதேதென்னில் பதிபசுபாச மென்னப்பட்ட முதல் மூன்றும் நித்தியமென்று நூல்கள் சொல்லுகையாலும் முத்தியிலும் ஆன்மாக்களுக்கு அழிவில்லாதபடியாலும் அப்படிச் சொன்னதென அறிக. இங்ஙனம் பதிபசுபாச மூன்றும் அநாதியென்பதற்கு பிம் திருமந்திரத்தில் பதிபசுபாசமெனப் பகர்மூன்றும், பதியினைப் பே டற்பசு பாச மநாதி” (115) எது கண்டு கொள்க. அன்றியும் முத்தியிலும் ஆன்மாக்கள் அழியாதென்றதற்கும் பிம் உண்மை விளக்கத்தில் “முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள், சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு மெத்தவே, யின்பங் கொடுத்தலிறை யித்தை விளை வித்தல்மலம், அன்புடனே கண்டுகொ ளப்பா” (50) எது கண்டு கொள்க. அன்றியும் சித்தியாரிலும் “கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியையொத் திருப்பனந்த முத்தியினிற் கலந்தே” (11. 12) என்றமையால் ஆன்மாவில்லாத பொழுது அநுபவிப்பானில்லா தாகையால் அநுபவமுண்டானது கொண்டே யான்மாவும் உண்டென்பதை யநுபவத்தாற் கண்டு கொள்க. இனி யிருண்மலத்தினழுந்தி எகு ஆன்மா ஆணவமலத்தான் மறைப்புண்டு கிடக்குமென்றதேதென்னில் கேவலப்பட்டு மாயை தாரகமாக ஒடுங்கிக் கிடக்கும் அவதரத்துக் கலையாதி தத்துவங்களாயுள்ள காரிய மாயையும் நீங்கி யாணவமல மறைப்பாகக் கிடைக்கையாலே யப்படிப்சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “அறிவில னமூர்த்த னித்த னராகாதி குணங்க ளோடுஞ், செறிவிலன் கலாதி யோடுஞ் சேர்விலன் செயல்க ளில்லான், குறியிலன் கர்த்தா வல்லன் போகத்துக் கொள்கை யில்லான், பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகே வலத்தி லான்மா” (4.38) எம், “மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல், மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று” (2.86) எம் கண்டுகொள்க. இனி அவை யவராய் எகு அவன் அவள் அதுவாயென்றது ஏதென்னில் உயர்திணை யஃறிணையாகிய யோனி பேதங்களினுள் அவனென்றது ஆண்பாலென அறிக; அவளென்றது பெண்பாலென அறிக; அதுவென்றது ஆணும் பெண்ணுமல்லாத அலியென அறிக. உயர்திணை யஃறிணை யென்றதேதென்னில் உயர்திணையாவது தெய்வயோனி மானுடயோனியென அறிக; அஃறிணையென்றது மற்றுள்ள யோனிகளையென அறிக. இனி யிருள்மலபாகம் பொருந்தியக்கா லருளா லுண்ணிலவு மொளி எ=கு மலபாகம் வந்த ஆன்மாக்களிடத்திலே சிவனருளாகிய ஞானம் பிரகாசிக்குமென்றது ஏதென்னில் பக்குவப்பட்ட சுத்தான்மாக்களுக்கு இருளாகிய அஞ்ஞானம் நீங்கி ஒளியாகிய ஞானம் பிரகாசிக்கையாலே யப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் கோவைத் திருவாசகத்தில் “உருகுதலைச் சென்ற உள்ளத்து மம்பலத்தும் மொளியே, பெருகுதலைச் சென்று நின்றேன்” (104) எது கண்டு கொள்க. இனி அதனாலிருளகற்றிப் பாதமுற்றிடு நற்பசுவர்க்கம் எகு அந்த ஞானத்தினாலே சிவனுடைய ஸ்ரீபாதத்தையடையும் பக்குவப்பட்ட சுத்தான்ம வர்க்கமென்றது ஏதென்னில் அங்ஙனம் பக்குவப்பட்ட ஆன்மாக்களிடத்தில் பிரகாசிக்கப்பட்ட சிவனருளாகிய ஞானமே பற்றாக அந்தச் சிவத்தோடுங்கூடுகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “பவமே வியநெறி பந்திக்கு மீசன் பசுக்கள் தம்மை, யவமே வியநெறிப் போகங்க ளால்முற்ற வந்நிலையே, தவமே வியநெறி சத்திகண் ணாற்சென்று சார்ந்து பின்னைச், சிவமே வுவரென்று காண்கொச்சை காவலன் சித்திரிப்பே” எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மவர்க்கம் எண்ணிறந்திருக்கு மென்றும் நித்தமாயிருக்குமென்றும் ஆணவமலத்தான் மறைப்புண்டு கேவலப்பட்டுக் கிடக்குமென்றும் புண்ணிய பாவங்களுக்கீடான சரீரங்களை யெடுத்து மலபாகம் வந்தவாறே சிவனருளாகிய ஞானத்தினாலே சிவனைப் பெறுமென்றும் வருமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் முதற்சூத்திரமாகிய பதியிலக்கணம் அருளிச்செய்து மேல் இரண்டாஞ் சூத்திரமாகிய பசு இலக்கணமும் பாச இலக்கணமும் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.
இதற்கு வழியேதென்னில், முதற்சூத்திரமாகிய பதியிலக்கணத்தில் முதல் விருத்தமாகிய “பலகலை” (13) என்ற செய்யுளில் “பசு பாசந்தெரித்தல்” என்ற பதத்துக்குப் பொருள் பதியையும் பசுவையும் பாசத்தையும் பிரித்துச் சொல்லியறிகிறதே பயனென்றமையால், பதியிலக்கணமாகிய “ஏற்றவிவை” என்ற செய்யுள் முடிவாகிய விருத்தமாறுக்கு மேலாகப் பசு இலக்கணமும் பாச இலக்கணமுங் கூறுமதே வழியாகையால், சிவன் ஆன்மாக்களை மாயா கன்மங்களோடுங் கூட்டிக் காரியப்படுத்தி மலபாகம் வருத்தி முத்திக் கேதுவாக்குவன் என்னப்பட்ட பசு இலக்கணமும் பாச இலக்கணமுமாகிய “எண்ணரிதாய்” (19) என்ற விருத்தந்தொடங்கி “அரிவையரின்புறு முத்தி” (50) என்னும் விருத்த முடிவாகிய செய்யுள் முப்பத்திரண்டும் இரண்டாஞ் சூத்திரமாக வகுத்ததென அறிக. இந்தச் செய்யுட்கள் முப்பத்திரண்டும் இரண்டாஞ் சூத்திரமாக நின்றதற்கு வழியேதென்னில் சிவஞானபோதத்தினுஞ் சிவஞானசித்தியாரினும் இரண்டாஞ் சூத்திரத்துக்குண்டான கருத்து இந்தச் செய்யுட்களினும் வருகையால் இவையிற்றையும் இரண்டாஞ் சூத்திரமாக வகுத்ததென அறிக. அது எங்ஙனேயென்னில் சிவஞானபோதத்தில் இரண்டாஞ் சூத்திரமாகிய “அவையே தானே யாயிரு வினையிற், போக்கு வரவு புரிய வாணையி, னீக்கமின்றி நிற்குமன்றே” எம் சிவஞானசித்தியாரில் இரண்டாஞ் சூத்திரமாகிய “உலகெலா மாகி வேறா யுடனுமா யொளியா யோங்கி, யலகிலா வுயிர்கள் கன்மத் தாணையி னமர்ந்து செல்லத், தலைவனா யிவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே, நிலவுசீ ரமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்” (2.1) எம் இரண்டு செய்யுட்களினும் வருங்கருத்து இந்நூலினும் “எண்ணரிதாய்” என்னும் விருத்தம் வருகையாலும் சித்தியாரில் இரண்டாஞ் சூத்திரத்தில் மலமாயை கன்மங்களின் காரண காரியத்துக்கு வரும் விருத்தங்களில் “ஒன்றதா யனேக சத்தி யுடையதாய்” (2.80) எம் ஆணவ மலத்திற்குச் சொல்லும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளு மெண்ணரிய சத்தியதாய்” (20) எம் இந்த ஆணவமலத்தைத் திரோதாயி பாகம் வருத்துகைக்கு “ஏயுமும் மலங்கள் தத்தந் தொழிலினை யிற்ற ஏவுந், தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்” (சித்தி 2.87) வரும் விருத்தத்தின் கருவைப் பற்றி இந்நூலினும் “பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வர்” எம் வருகையாலும், இனி யசுத்தமாயாகாரணத்துக்குச் சொல்லப்பட்ட “நித்தமா யருவாய்” (சித்தி 2, 53) என்னும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “உருவாதி சதுவிதமாய்” (22) என்னும் விருத்தம் வருகையாலும், இங்ஙனஞ் சொல்லப்பட்ட மாயை யென்றொரு முதலில்லையென்றும் சிவன் வேண்டுவதில்லை கன்மங்கள் தானே யான்மாக்களைக் காரியப்படுத்துமென்றுஞ் சொல்லுகிற சமயிகளை மறுத்து மாயையுண்டென்றும் இந்த மாயையுங் கன்மமும் சடமாகையால் தானே காரியப்படமாட்டாது இவையிற்றைக் கூட்டிக் காரியப்படுத்துகைக்கு ஒரு கர்த்தா வுண்டென்றும் வருங்கருத்தாகிய “உலகுடல் கரணங் கால முறுபல நியதி செய்தி, பலவிவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்ப தனால், நிலவிடா திவைதாஞ் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா, தலகிலா அறிவ னாணை யணைத்திடும் அருளி னாலே” (சித்தி. 2.22) என்னும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “என்னையிதுவெனில்” எம், “படைத்த தொருபடி” எம், “அல்லன்மிக வுயிர்க்கிவைதான்” (23, 24, 25) எம் வரும் விருத்தங்கள் மூன்றும் வருகையாலும், அன்றியும் ஆன்மாக்களுக்கு மூன்று மலமும் அநாதி யென்பதற்குச் சிவஞானபோதத்தில் இரண்டாஞ் சூத்திரத்து வெண்பாவில் “நெல்லிற்குமியு நிகழ்செம்பி னிற்களிம்புஞ், சொல்லிற் புதிதன்று தொன்மையே” (2.7) எம், சித்தியாரினும் “மும்மல நெல்லினுக்கு முளையொடு தவடுமிப்போல், மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று” (2.86) என்னும் இவ்விரண்டினுள்ளுமுள்ள கருவைப்பற்றி இந்நூலின் முற்கூறிய “அல்லன்மிக” (25) என்னுஞ் செய்யுள் முடிவிலே “நெல்லின்முளை தவிடுமிப்போ லநாதி யாக” எம் வருகையாலும், முற்கூறிய அசுத்தமாயையின் காரியமாயுள்ள கலையாதி தத்துவங்களின் தோற்றங்களையுங் காரியப்படுகையுஞ் சொல்லப்பட்ட “மாயையிற் காலமோடு” (சித்தி. 2.54) என்னும் விருத்தந் தொடங்கி “குறிகள்வச் சிரத்தினோடு” (யூ 2.68) என்னும் விருத்த முடிவாகிய செய்யுள் பதினைந்தினும் உண்டாகிய தோற்றத்தின் கருவைப் பற்றி இந்நூலினும் “அருத்திமிகுங் கலைகாலம்”; “மன்னியகன் மேந்திரியம்” (26, 27) என்னும் விருத்தமிரண்டும் வருகையாலும், கன்மத்தின் காரண காரியத்துக்கு “தன்மமோ டதன்ம மாகி” எம், “இருவினை யநாதி” எம் “உடற்செயல் கன்மம்” எம், “மேலைக்கு வித்து மாகி” எம், “முற்செயல் விதியை” (சித்தி. 2, 39, 40, 10, 12, 11) எம் வரும் விருத்தங்களின் கருவைப்பற்றி இந்நூலினும் “நண்ணியிடும்” எம், “கன்மநெறி” எம், “மேலைக்கு வருவினை” எம், “உற்றதொழில்” (2831) எம் வரும் விருத்தம் நாலும் வருகையாலும், இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலங்களின் தொகையாகிய “மலமாயை கன்ம மாயேயந் திரோதாயி மன்னிச், சலமாரும் பிறப்பிறப்பிற் றங்கி” (சித்தி. 2.88) என்னும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “மோகமிக வுயிர்கள்தொறு முடனாய் நிற்கும்” (32) என்னும் விருத்தம் வருகையாலும், இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலம் ஐந்தினுள்ளும் ஆணவமலம் ஆன்மபோதத்தை மறைக்குமென்றும் அப்படி யாணவமலம் என்பதொன்றில்லை மாயாசரீரங்களே யான்ம போதத்தை மறைக்குமென்றும் மாயாகாரியமான கலையாதி தத்துவங்களினாலே சிவன் ஆணவமலத்தைப் பாகமாக்குவனென்றும் வருங்கருத்தாகிய “போதகா ரியமறைத்து நின்றது புகல்ம லங்காண்” எம், “மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னில்” எம் “மாயையே யான்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும் “எம், “பரிதியை முகின்ம றைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல்” எம், “எல்லாமாய்த் தத்து வங்க ளிசைந்ததெ னணுவுக்கு” (சித்தி. 2, 84, 81, 82, 83, 79) எம், “எழுமுடல் கரணமாதி:” (யூ 2.52) என்னும் விருத்தத்தில் “மாயைகொடு மலமொழிப்பன் முன்னோன்” எம் வரும் விருத்தங்களின் கருவைப் பற்றி இந்நூலினும் “ஓங்கி வரும் பலவுயிர்கள்” (33) என்னும் விருத்தந் தொடங்கி “புகலுமல மொழித்தற்குக் கலாதி முதன்மாயை பொருந்தியிடு மரனருளால்” (37) என்னும் விருத்த முடிவாகிய செய்யுள் ஐந்தும் வருகையாலும், அந்தக் கலையாதி தத்துவங்களோடும் ஆன்மாக்கள் கூடிப் பிரபஞ்ச காரியப்படுகைக்கு முற்கூறிய “மாயையிற் காலமொடு” (சித்தி 2.54) என்னும் விருத்தந் தொடங்கி “ இரந்தரமாகி வான்றான்” (யூ. 2.66) என்னும் விருத்த முடிவாகிய செய்யுள் பதின்மூன்றினுள் தத்துவங்கள் காரியப்படுங் கருத்தைப்பற்றி இந்நூலினும் “இத்தகைமை யிறையருளால்” (39) என்னும் விருத்தத்தில் “அசுத்த மாயை வைத்தகலைதான் மூலமலஞ் சிறிதே நீக்கி” என்னும் பதந்தொடங்கி “முந்திய ஐம்பூதங்கள் வானாதியாக” (45) என்னும் விருத்தமுடிவாகிய செய்யுளேழும் வருகையாலும், அன்றியும் தத்துவம் முப்பத்தாறின் தொகைக்கு மூவகைத் தத்துவங்களுக்கும் ஆன்மாக்கள் யோனிவிட்டு யோனிபற்றி ஜநந மரணப்படுகிறதற்கும் நால்வகைத் தே டற்றத்துக்கும் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதத் தொகைக்கும் சித்தியாரில் வரும் விருத்தங்களாகிய “சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும், இத்தகை மையி னியம்பு மிவைமுப்பத் தொன்றுமாகத் தத்துவ முப்பத் தாறாம்” எம், “ஐந்துசுத் தத்தின் கீழேழ்சுத்தா சுத்த மசுத்தந், தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வர்க்கும்” (சித்தி. 2, 69, 70) எம் சிவஞானபோதத்தில் இரண்டாஞ் சூத்திரத்து வெண்பாவில் “அரவுதன் றோலுரிவு மக்கனவும் வேறு, பரகாயம் போய்வருமப் பண்பும்” (2.9) எம், சித்தியாரில் “பன்னகம் அண்டசங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர், துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போலே” (2.38) எம், “அண்ட சஞ் சுவேத சங்க ளுற்பீசஞ் சராயு சத்தோ, டெண்தரு நாலெண்பத்து நான்குநூ றாயிரத்தால், உண்டுபல் யோனி” (2.89) எம் வரும் விருத்தங்களின் கருவைப்பற்றி இந்நூலினும் “இந்நிரையி லைந்து சுத்தம்” எம், “தோற்றியிடு மண்டசங்கள்” (46, 47) எம் விருத்தமிரண்டும் வருகையாலும், அன்றியும் இங்ஙனம் ஆன்மாக்கள் பிரபஞ்ச காரியப்பட்டு மலபாகம் வந்து முத்திக்கேதுவாவார்களென்பதற்குச் சித்தியாரில் “அரன்விதி யருள தென்றே யறைந்தன மதுவு முன்னே, தரைநர கருந்துறக்கந் தனுகர ணாதி யெல்லாம், வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தாற் றீர்த்துப், பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமுஞ் சூட்டும்” (2.51) எம் வரும் விருத்தத்தின் கருவைப்பற்றி இந்நூலினும் “இனையபல பிறவிகளின்” எம், “நாடிய சத்திநிபாதம்” எம், “அரிவைய ரின்புறு முத்தி” (48, 49, 50) எம், விருத்தமூன்றும் வருகையாலும், “எண்ணரிதாய்” (19) என்ற விருத்தந்தொடங்கி “அரிவைய ரின்புறு முத்தி” (50) என்னும் விருத்த முடிவாகிய செய்யுட்கள் இத்தனைக்கும் முன்னுள்ள நூல்களில் இரண்டாஞ் சூத்திரத்திற் செய்யுட்கள் ஏதுக்காட்டி வருகையால் இவையும் இரண்டாஞ் சூத்திரமாக நின்றதென அறிக.
அப்படியானால் இந்நூலில் இரண்டாஞ் சூத்திரமாக வகுத்த செய்யுள் முப்பத்திரண்டினுள்ளுஞ் சுத்தமாயா காரண காரியத்துக்கு வகுத்த “உன்னலரும் பரமசிவன்ற னருளாலே நாத முதிக்கு மிகுங் குடிலைதனில்” (21) எம் வாக்குக்கள் நாலுக்கும் “வந்தடைந்து பின்னமாய்” (38) எம் வரும் விருத்தங்கள் இரண்டுக்கும் ஏதுக்காட்டாத தேதென்னில் அந்தச் சுத்தமாயையின் பிரசங்கஞ் சித்தியாரில் முதற் சூத்திரத்திலே வருகையாலே அதற்கு யேதுக் காட்டினதில்லையென அறிக. அப்படிச் சுத்தமாயையைச் சித்தியாரில் முதற் சூத்திரத்திலே சொல்லியிருக்க இந்நூல் இரண்டாஞ் சூத்திரத்திலே கூட்டுகைக்கு வழியேதென்னில் அந்தச் சுத்த மாயையானது சிவன் கொள்ளப்பட்ட திருமேனிக்குடம்பாய் நிற்கையாலும் மலங்களொடுங் கூடி வருகையாலும் சித்தியார் செய்தருளினவர் அந்நூலின் முதற் சூத்திரம் பதியிலக்கணமாடிகாயல் அந்தப் பதியாகிய சிவனுக்குச் சுத்தமாயை திருமேனியென்னுங் கருத்தைப் பற்றி “வித்தையோ டீசர் சாதாக்கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ், சுத்ததத் துவஞ்சிவன்றன் சுதந்திர வடிவமாகும்” (1.66) எம் சுத்த மாயையை முதற் சூத்திரத்திலே கூட்டியருளிச் செய்தாரென அறிக. இந்தப் சிவப்பிரகாசஞ் செய்தருளினவர் சுத்த மாயையை மலமாயைகன்மங்களை வகுத்தருளிச் செய்து சொல்லுகிற வொழுங்கிலே கூட்டியருளிச் செய்கையினாலும், அன்றியும் மலத்தொகைக் கருளிச் செய்த விருத்தமாகிய “மோகமிக வுயிர்கள்தொறும்” (32) என்னும் விருத்தத்தின் முடிவிலே “தேகமுறு கரணமொடு புவனபோகச் செயலாரு மாமாயைத் திரட்சி யொன்றென், றாகமல மைந்தென்பர்” எம் வருகையாலும், இரண்டாஞ் சூத்திரத்தின் கருவைப்பற்றிச் சிவன் ஆன்மாக்களை மாயா கன்மங்களோடுங்கூட்டிக் காரியப்படுத்தி மலபாகம் வருத்து முறைமையைச் சொல்லுகையாலும் இந்தச் சுத்த மாயை மலத்தோடுங் கூடி வருகையால் இதனை இரண்டாஞ் சூத்திரத்திலே கூட்டப்பட்டதென அறிக. அப்படிச் சுத்தமாயையை மலத்தோடுங் கூட்டுகைக்கு அநுபோகமேதென்னில் முத்தியைப் பெறும் ஆன்மாக்களுக்குத் தத்துவ முப்பத்தாறும் நீங்கியே முத்தியென்னும் விதியைப்பற்றித் தத்துவம் முப்பத்தாறினுள் சுத்த தத்துவங்களுங் கூடி வருகையால் அவையும் நீங்கியே முத்தியைப் பெறவேண்டுமென்பதைப்பற்றி அப்படி வைக்கப்பட்டதென அறிக. அப்படியானால் இந்நூல் சித்தியாரைப் பின்சென்ற நூலாயிருக்கச் சுத்தமாயையைச் சிவனுக்குத் திருமேனியென்று அந்நூல் முதற்சூத்திரத்திலே சொல்லியிருக்க அதனை இந்நூலின் மலத்தோடுங்கூட்டி வேற்றுமை கூறுதற்கு விதியேதென்னில் சித்தியார் வழிநூலாகையாலும் இந்நூல் சார்பு நூலாகையாலும் “இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும்” (நன்னூல். 8) என்பதைப் பற்றி அப்படி வேற்றுமை கூறினதென அறிக.
ஆக இங்ஙனங் கூறிவந்த வகைகளால் “எண்ணரிதாய்” என்னும் விருத்தந் தொடங்கி “அரிவைய ரின்புறு முத்தி” என்னும் விருத்தமுடிவாகிய செய்யுள் முப்பத்திரண்டும் இரண்டாஞ் சூத்திரமாக நிற்குமென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. இங்ஙனம் இரண்டாஞ் சூத்திரமாக வகுத்த செய்யுள் முப்பத்திரண்டினுள்ளும் முதல் விருத்தமாகிய “எண்ணரிதாய் நித்தமாய்” என்னும் விருத்தஞ் சிவஞானபோதத்தில் இரண்டாஞ் சூத்திரமாகிய “அவையேதானே” என்ற முதற்செய்யுளின் கருத்தைப் பற்றி நிற்குமேயானால், அந்நூலில் இந்தச் சூத்திரத்தில் வருஞ் செய்யுட்களின் கருத்து அந்தச் சூத்திரத்துக்கு அதிகாரமாகிய முதற்செய்யுளிலே நின்றாற்போல் இந்நூலினும் இங்ஙனம் இரண்டாஞ் சூத்திரமாக வகுத்த செய்யுட்களில் வருங் கருத்து சூசூஎண்ணரிதாய்” என்னும் விருத்தமாகிய முதற் செய்யுளிலே வருமுறைமை யெங்ஙனேயென்னில், அஃதாவது : “எண்ணரிதாய் நித்தமாய்” என்றதற்கு மேலாக “இருண்மலத்துளழுந்தி” என்றது ஆன்மாக்களுக்கு ஆணவமல மறைப்புக்குச் சொன்ன “ஏகமாய்” என்னும் விருத்தம் வகுத்த செய்யுள் முப்பத்திரண்டினுள்ளும் முதல் விருத்தமாகிய “எண்ணரிதாய் நித்தமாய்” என்னும் விருத்தம் சிவஞானபோத்தில் இரண்டாஞ் சூத்திரமாகி அதின் கருவைப்பற்றி நிற்கையாலும், “இருவினையின் தன்மைகளுக்கீடான யாக்கை யண்ணலருளால் நண்ணி” எது சிவனருளாலே யான்மாக்கள் மாயா கன்மங்களோடுங் கூடுவார்க ளென்பதற்குச் சொன்ன “உன்னலரும் பரசிவன்ற னருளாலே” என்னும் விருத்தமுடிவாகிய செய்யுட்களின் கருவைப்பற்றி நிற்கையாலும், “அவையவரா யதனா லலகினிகழ் போகங் களருந்து மாற்றாற் புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்” எது ஆன்மாக்கள் கேவல சகலப்பட்டும் யோனி விட்டு யோனி பற்றி ஜனன மரணப்பட்டும் வருவர்களென்பதற்குச் சொன்ன “ஓங்கிவரும் பலவுயிர்கள்” என்னும் விருத்தந்தொடங்கி “மோகமிக” என்றும் “இனையபல பிறவிகள்” என்னும் விருத்தமுடிவாகிய செய்யுட்களின் கருவைப் பற்றி நிற்கையாலும், “புணருமிருள் மலபாகம் பொருந்தியக்கா லருளால், உண்ணிலவு மொளியதனா லிருளகற்றிப் பாத முற்றிடுநற் பசுவர்க்கம்” எது ஆன்மாக்கள் மலபாகம் வந்து திருவருளுண்டாய் முத்திக் கேதுவாவார்களென்பதற்குச் சொன்ன “நாடிய சத்திநிபாதம்”, “அரிவைய ரின்புறு முத்தி” என்னும் விருத்தங்களின் கருவைப்பற்றி நிற்கையாலும், “எண்ணரிதாய்” என்னும் விருத்தம் இங்ஙனம் இரண்டாஞ் சூத்திரமாக வகுத்த செய்யுட்களுக்கு அதிகாரமாக நின்றதென அறிக.
இங்ஙனங் கூறப்பட்ட “எண்ணரிதா”யென்ற செய்யுள் முதற் சூத்திரமாகிய பதியிலக்கணத்துக்கு மேலாகப் பசு இலக்கணமாக நிற்கையால் அந்தப் பசுவிலக்கண மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும்
எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட
மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த
மூலமல மாய்அறிவு முழுதினையும் மறைக்கும்
பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி
பண்ணுதலான் மலமெனவும் பகர்வர்அது பரிந்து
நாகம்மா நதிமதியம் பொதிசடையான் அடிகள்
நணுகும்வகை கருணைமிக நயக்கும் தானே.
.
மோகமா மூல மலத்தின் முறைமையும்
பாகமாந் திரோதப் பகுதியும் பகர்ந்தது.

பொழிப்புரை :

ஏகமாய் ஆணவமலமானது எண்ணிறந்த ஆன்மாக்களோடுங்கூடிநின்று மறைத்தும் தான் ஒன்றாயிருப்பதாய்; தம்கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் ஆன்மாக்களுடைய பக்குவா பக்குவங்களுக்குத் தக்கதாக அவரவரிடங்களிலே மறைத்து நின்று அந்தந்த ஆன்ம போதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிற தன் காரியமான எண்ணிறந்த சத்திகளையுடையதாய்; இருளொளிர இருண்ட மோகமாய் செறிந்த இருளும் வெளியென்னும்படி நின்று ஆன்மாக்களுக்கு மிக்க மறைப்புகள் செய்யுமதாய்; செம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமலமாய் செம்பினுடன் கூடியிருக்கப்பட்ட காளிதமானது அந்தச் செம்புள்ளவன்றே அதனை மறைத்து உள்ளும் புறம்புங் கலந்து வெட்டுவாய் தோறும் நின்றாற் போல ஆன்மபோதத்தோடுங் கலந்து மறைந்து நிற்கிற அழியாத அநாதி மலமாய்; அறிவு முழுதினையும் மறைக்கும் இங்ஙனம் ஆன்மாவில் இச்சா ஞானக்கிரியைகள் சற்றும் சீவியாதபடி மறைத்து நிற்கும். இங்ஙனம் ஆணவமலத்தின் இயல்பை அருளிச்செய்து இந்த மலத்தைப் பாகம் வருத்துகிற திரோதாயி சத்தியின் இயல்பு மேலருளிச் செய்கின்றது; பாகமாம் வகை அந்த ஆணவ மலமானது க்ஷயமாம்படி; நின்று திரோதாசக்தி பண்ணுதலான் சிவனுடைய அருட்சத்தியானது அந்த ஆணவமலத்தோடுங் கூடித் திரோபவித்து நின்று காரியப்படுத்துகையால்; மலமெனவும் பகர்வர் இந்தத் திரோதாயி சத்தியை அந்த மலத்தோடுங் கூட்டி மலமென்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள். இங்ஙனம் மலமெனவும் என்ற உம்மை கொண்டே அந்தத் திரோதாயி சத்தியே அருளென்பது துணிவு. இங்ஙனந் திரோதமாய் நின்று காரியப்படுத்தி மலபாகம் வருத்தின அருளானது இங்ஙனம் மலபாகம் வந்த ஆன்மாக்களுக்கு உண்டாக்கும் பயனேதென்னில்; அது பரிந்து அந்த அருள் அவர்களிடத்திலே கிருபை ஜநித்து நின்று; நாகம்மா நதி மதியம் பொதி சடையான் அடிகள் நணுகும்வகை கருணை மிக நயத்குந்தானே பாம்பினையும் மகத்தாயிருக்கிற கங்காபரமேஸ்வரியையும் சந்திரனையும் சூழ்ந்திருக்கப்பட்ட திருச்சடாபாரத்தையுடைய தம்பிரானார் திருவடிகளிலே பொருந்து முறைமையை யுண்டாக்குந் தனது காருண்ணியத்தினாலே.
ஏகமாய் எகு ஆணவமலம் ஒன்றாயிருக்கவும் எண்ணிறந்த ஆன்மாக்களையுங் கூடிநின்று மறைக்கு மென்றதற்கு வழியேதென்னில், இருளானது தான் ஒன்றாயிருந்தும் பல கண்களையும் மறைத்தாற்போலவென அறிக. அப்படி மலம் ஒன்றாயிருந்தும் பல ஆன்மாக்களையும் மறைக்குமென்பதற்கு பிம் திருவருட்பயனில் “பலரைப் புணர்ந்துமிருட் பாவைக்குண் டென்றுங் கணவற்குந் தோன்றாத கற்பு” (25) எம், இந்நூலினும் “மோகமிக வுயிர்கள் தொறும் உடனாய்நிற்கும் மூலவா ணவமொன்று” (32) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி, தங்கால எல்லைகளின் மீளும் எகு ஆன்மபோதங்களின் மீட்சியிலே நீங்குகிற சத்திகளென்ற தேதென்னில், போதத்தன் மீட்சியாவது பிரபஞ்சத்தைப் பொய்யென்று கண்டு நீங்குகையென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “ஆசைதரு முலகமெலாம் அலகைத்தே ராமென் றறிந்தகல வந்நிலையே யாகும்” (9.1) எது கண்டு கொள்க. அப்படி மலமொன்றாயிருக்கவும் அந்த மலத்தின் சத்திகள் எண்ணிறந்திருக்குமென்றது ஏதென்னில், அந்த மலத்தோடுங் கூடியிருக்கப்பட்ட ஆன்மாக்கள் எண்ணிறந்திருக்கையாலும் அந்த ஆன்மாக்கள் தோறும் வெகுவிதமான சத்திகள் பதிந்து நிற்கையாலும் அப்படிச் சொன்னதென அறிக. அப்படி ஆன்மாக்கள் தோறும் அந்த மலத்தின் சத்தி வெகுவிதமாகப் பதிந்து நிற்குமென்றதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “கதிதருங் காழிமன் காட்டுமப் பாசங்கள் மூன்றவைதாம், பொதிதரு மாணவம் போகஞ்செய் கன்மமு மாயையுமாம், முதியது தானொன்று முன்பினி லாதது சேதனன்கண், ணதிக மறைப்பன ஆயிரகோடி விருத்திகளே” (19) எது கண்டு கொள்க. இனி இருளொளிர இருண்ட மோகமாய் எகு செறிந்த இருளும் வெளியென்னும்படியிருளாயிருக்கும் அந்தமலமென்றதேதென்னில் இருளானது பண்ட பதார்த்தங்களை மறைத்துந் தான் தோன்றி நிற்கையாலும் இந்த மலமானது தன்னையுங்காட்டாமல் பொருளையுங் காட்டாமல் நிற்கையாலும் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இதற்கு பிம் திருவருட்பயனில் “ஒரு பொருளுங் காட்டா திருளுவருங் காட்டும் இருபொருளுங் காட்டா திது” (23) எம் கண்டு கொள்க. இனி செம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமலமாய் எகு செம்பிற் காளிதம்போல ஒரு காலத்தினும் அழியாத அநாதிமலமென்றதேதென்னில் செம்பென்கிற பொருளுள்ளவுங் காளிதம் நின்றாற்போல ஆன்மபோதமுள்ளமட்டும் அந்த மலத்தின் மறைப்புப் போகாதென்றதென அறிக. இதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “விருத்திகளான் மறைக்கின்றவவ் வாணவம் வெங்குருமன், கருத்திய நூன்முறை தேரிற் கலந்துடனாயணுவை, யருத்திய நஞ்சென்ன மோகஞ்செய் தாசை யநுபவத்திற், பெருத்திடச் செம்பினிற் காளிதம் போலப் பிணைந்துளவே” (20) எது கண்டு கொள்க. நித்த மூலமலமென்றது முத்தியினும் மலமழியாதென்றதென அறிக. இதற்கு பிம் உண்மை விளக்கத்தில் “முத்திதனின் மூன்று முதலும்” (50) என்ற செய்யுளின் முடிவிலே “இத்தைவிளை வித்தல் மலம்” எது கண்டுகொள்க. இனி அறிவு முழுதினையும் மறைக்கும் எகு ஆன்மாவின் இச்சாஞானக்கிரியைகளைச் சற்றும் சீவிக்க வொட்டாத படி மலம் மறைக்குமென்று பொருள்படுத்தினதற்கு பிம் சித்தியாரில் “சீவனு மிச்சாஞானக் கிரியையாற் சிவனை யொப்ப, னாவனென் றிடிலநாதி மலமிவற் றினைமறைக்கும்” (1.64) எது கண்டு கொள்க. இனி, பாகமாம் வகை நின்று திரோதானசத்தி பண்ணுதலால் எகு சிவனுடைய அருட்சத்தியானது திரோதாயியாய் நின்று மலங்களைக் காரியப்படுத்துமென்று பொருள்படுத்தினதற்கு பிம் சித்தியாரில் “ஏயுமும் மலங்கள் தந்தந் தொழிலினை யியற்ற வேவுந், தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்” (2.87) எம் வருமது கண்டு கொள்க. இனி, அதுபரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையா னடிகள் நணுகும்வகை கருணை மிக நயக்குந் தானே எகு அந்த அருளானது திரோதமாய் நின்று ஆன்மாக்களுக்கு மலபாகம் வருத்தி மீளவும் பழைய அருளாய்க் கிருபை ஜநிக்குமென்ற தெங்ஙனேயென்னில் மாதாவானவள் பிள்ளைகளிடத்திற் குற்றங்கண்டு கோபித்து மீளவுங் குணங்கண்டவாறே பிரியப்பட்டாற்போலவென அறிக. இதற்கு பிம் திருவாசகத்தில் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத்திறம்பாடி யாடேலோ” (7.14) எம், இந்நூலினும் “முற்சினமருவு திரோதாயி கருணை யாகி” எம் வருமேதுக்களைக் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஆணவமலமானது ஆன்மாவை மறைக்கு முறைமையும் அந்த மலத்தை யருட்சத்தியானது திரோதாயியாய் நின்று பாகம் வருத்தி மீளவும் பழைய அருளாய்க் கிருபை ஜநித்து அப்படி மலபாகம் வந்த ஆன்மாக்களைச் சிவனுடைய திருவடியிலே கூட்டுவிக்கும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் பசு இலக்கணம் அருளிச் செய்து, ‘பதிபசு பாசந்தெரித்த’லென்னும் விதியைப் பற்றி மேற் பாச இலக்கணங் கூறுமதே முறைமையாகலான் முற்கூறிய ஆன்மாக்களோடும் அநாதியே கூடியிருக்கப்பட்ட மலமாயா கன்மங்களின் இயல்பைக் கூறுமிடத்து ஆணவம் மாயை காமியமென்னும் ஒழுங்கைப்பற்றி முந்த ஆன்மாக்களை மறைக்கப்பட்ட ஆணவ மலத்தினியல்பும் அந்த மலத்தின் மறைப்பை நீக்குகிற திரோதாயியின் இயல்பும் அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

உன்னலரும் பரசிவன்தன் அருளாலே நாதம்
உதிக்கும்மிகுங் குடிலைதனில் விந்துவரும் நாதந்
தன்னில்அதி னொளிவளரும் சதாசிவராம் அவரில்
தயங்கவரும் ஈசர்வித்தை தனிஅளிப்பர் அதனால்
மன்னுவர்இவ் வகைஐவர் வாய்மையினால் முன்னே
வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே
முன்னுதவும் சூக்குமாதி ஒருநான்கும் என்று
மொழிந்திடுவர் அருங்கலைகள் முதிர்ந்து ளோரே.
.
வைத்தமா மாயையின் வாக்கு நான்குஞ்
சுத்ததத்துவ மைந்துந் தோன்று மென்றது.

பொழிப்புரை :

உன்னலரும் பரசிவன்தன் அருளாலே மிகுங் குடிலைதனில் நாதம் உதிக்கும்மனத்தினால் நினைதற்கரிய பரமசிவனுடைய பராசத்தியாலே குடிலையாகிய மாமாயையிலே நாததத்துவந் தோன்றும்; நாதந்தன்னில் விந்துவரும் முற்கூறிய நாதத்திலே விந்துதத்து வந்தோன்றும்; அதினொளி வளருஞ் சதாசிவராம் அந்த விந்துவிலே பிரகாசமிக்க சாதாக்கியதத்துவந் தோன்றும்; அவரில் தயங்கவரு மீசர் அந்தச் சாதாக்கியத்திலே விளக்கமாக வரும் ஈசுர தத்துவந் தோன்றும்; வித்தைதனை யளிப்பர்அந்த ஈசுரருஞ் சுத்த வித்தையைத் தோற்றுவிப்பர்; அதனால் இவ்வகை ஐவர் மன்னுவர் முற்கூறிய வகைகளாற் குடிலையுபாதானமாக இந்தத் தத்துவங்கள் ஐந்துந் தோன்றின வொழுங்கிலே தத்துவ கர்த்தாக்கள் ஐவருந் தோன்றி இந்தத் தத்துவங்களோடும் பொருந்தி நிற்பர்கள்; வாய்மையினால் முன்னே வந்திடுமென்றுரை செய்த விந்துஉண்மையாக முன்பே நாதத்திலே தோன்றுமென்று சொல்லப்பட்ட விந்துவிலே; வழாவகையே சூக்குமாதி ஒரு நான்கும் முன்னுதவும் தப்பாத முறைமையினாலே சூக்கும முதலாகிய வாக்குக்கள் நாலையும் முற்கூறிய சிவசத்திகள் தோற்றுவிக்கும்; என்று மொழிந்திடுவர் அருங்கலைகள் முதிர்ந்துளோரே என்றிங்ஙனஞ் சொல்லுவர்கள் அரிய நூல்களையுணர்ந்த பெரியோர்கள்.
உன்னலரும் பரசிவன் எகு மனத்தினால் நினைத்தற்கரிய பரமசிவனென்று பொருள்கூறியது ஏதென்னில் அந்த நிஷ்களசொரூபியாயிருக்கின்ற பரமசிவனை ஆன்மபோதத்தாற் சுட்டியறிய வொண்ணாதபடியாலே அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில், “தன்னறிவதனாற் காணுந்தகைமைய னல்ல னீசன்” (6.8) எம், கோயிற்புராணத்தில் “காரணங் கற்பனை கடந்த கருணை” (3) எம், இந்நூலினும் “நாடாறிய கருணை” (14) எம் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க. பரசிவன் அருளாலே எகு பரமசிவனுடைய பராசத்தியாலே குடிலையிலே நாதந் தோன்றுமென்று பராசத்தியின் மேல் வைத்துப் பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில் அந்தப் பரமசிவமானது பிரபஞ்சத்தைத் காரியப்படுத்துமிடத்துத் தனது சத்தியை விரித்து அதுவே யுடம்பாகநின்று காரியப்படுத்துகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “முன்னருட் சத்திதன்பால் முகிழ்க்குந்தான் முளையானன்றே” (1.68) எம், இந்நூலினும் “நீடுபரா சத்தி நிகழிச்சா ஞான நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி, நாடரிய கருணை திருவுருவ மாகி” (14) எம், ஞானபூசைத் திருவிருத்தத்தில் “இன்புருவச் சிவன் படைத்தற் கிச்சை காலத் திசைவுழிவித் தியாதேகி யாகியெழிற் கிரியை, முன்பெருகக் குடிலையினை யடைந்து நாதமுந்துவிந்தக் கரமனுநன் மொழிமுறையே வகுத்துத், தன்பொருவில் மந்திரத்தாற் சதாசிவாதி யுதவி” (12) எம் வருமது கண்டு கொள்க. இங்ஙனஞ் சொல்லப்பட்ட சிவசத்திகளாலே குடிலையிலே தோன்றுமென்ற நாதவிந்து முதலாகிய தத்துவங்களுக்கு வகுப்பே தென்னில் நாதமென்றது சர்வான்மாக்களுக்கும் அறிவை யெழுப்பு வித்து நிற்கிற ஞானமென அறிக. விந்து என்றது சர்வான்மாக்களுக்கு முண்டாகிய தொழிலை யெழுப்புவித்து நிற்கிற கிரியையென அறிக. சாதாக்கியமென்றது அந்த ஞானமுங் கிரியையுமாகிய நாதவிந்துக்கள் இரண்டுங் கூடின அவதரமென அறிக; ஈசுரமென்றது கிரியையேறி ஞானங் குறைந்துநின்ற அவதரமென அறிக; சுத்தவித்தையென்றது ஞானமேறிக் கிரியை குறைந்து நின்ற அவதரமென அறிக. இவையிற்றுக்கு பிம் தத்துவ விளக்கத்தில் “ஆய்ந்தவத் தத்துவம் ஐந்தா வனசிவ தத்துவத்தோ, டேய்ந்தவச் சத்தி சதாசிவ மீசனும் வித்தையுமென், றோர்ந்தறி வித்தினுக் குண்ணெகிழ்ப் பானது சத்தியத்திற், போந்தெழு மங்குர மைமுகத்தோனென்று போற்றுவரே” என்றதை இந்தத் தத்துவங்கள் ஐந்துஞ் சிவசத்தியாலே குடிலையிலே தோன்றுமென்பதற்குக் கண்டு கொள்க. இந்தத் தத்துவங்கள் ஏறியுங் குறைந்தும் ஒத்து நின்றதற்கு பிம் தத்துவ விளக்கத்தில், “போற்றும் பரத்திற் பொதிகின்ற ஞானங்கிரியை பெற்றுத், தோற்றுஞ் சதாசிவ முன்னதை ஞானங் கிரியை குன்றில், தேற்றிய வித்தை யிவற்றின் திரிவு மகசேன்மயல், மாற்றுஞ் சிரபுரத் தெங்கோ னெறியில் வகுத்தனவே” எம் சித்தியாரிலும் “ஞானமே யானபோது சிவன்றொழில் ஞானமொக்கில், ஈனமில் சதாசிவன்பே ரீசனாந் தொழில தேறில், ஊனமேற் கிரியை வித்தை யுருத்திர னிலய போக, மானபே ரதிகா ரத்தோ டதிகர ணத்த னாமே” (1.65) எது கண்டு கொள்க. இவையிற்றின் முற்கூறிய விந்துவும் நாதமுஞ் சர்வான்மாக்களுக்கும் அறிவையுந் தொழிலையும் உண்டாக்குமென்று முன்சொன்னதற்கு பிம் சித்தியாரில் “மூவகை யணுக்களுக்கு முறைமையால் விந்து ஞான, மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம்” (1.26) எது கண்டு கொள்க. அதனால் மன்னுவர் இவ்வகை ஐவர் எகு முற்கூறிய வகையாற் குடிலையுபாதானமாகத் தத்துவங்கள் ஐந்துந் தோன்றின ஒழுங்கிலே தத்துவ கர்த்தாக்கள் ஐவருந் தோன்றி இந்தத் தத்துவங்களோடும் பொருந்தி நிற்பார்களென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், முற்கூறிய வகையாவது அந்தச் சிவமும் சத்தியுங் குடிலையிலே பொருந்தின அவதரத்து அந்தக் குடிலை யுபாதானமாகச் சிவதத்துவங்கள் தோன்றுகையால் அந்தச் சிவமுஞ் சத்தியும் அந்தத் தத்துவங்கள் உடம்பாகவும் அதிஷ்டித்துத் தத்துவ கர்த்தாக்கள் ஐவராக நிற்கையாலே யப்படிச்சொன்னதென அறிக; அதற்கு வழியேதென்னில், நாததத்துவ முடம்பாகச் சிவமதிஷ்டித்து நிற்கையாலும், விந்து தத்துவம் உடம்பாகச் சத்தி யதிஷ்டித்து நிற்கையாலும், அந்த நாதமும் விந்துவுங்கூடின சாதாக்கியம் உடம்பாக அந்தச் சத்தியுஞ் சிவமுங்கூடி சதாசிவமாக அதிஷ்டித்து நிற்கையாலும், கிரியையேறி ஞானங்குறைந்து ஈசுரம் உடம்பாக மஹேசுரம் அதிஷ்டித்து நிற்கையாலும், ஞானமேறிக் கிரியை குறைந்து சுத்தவித்தையுடம்பாக உருத்திரன் அதிஷ்டித்து நிற்கையாலும், தத்துவங்கள் உடம்பாகத் தத்துவ கர்த்தாக்கள் பொருந்தி நிற்பர்களென அறிக. என்றிங்ஙனந் தத்துவம் உடம்பாகத் தத்துவ கர்த்தாக்கள் பொருந்தி நிற்பார்களென்பதற்கு பிம் சித்தியாரில் “வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ், சுத்ததத் துவஞ்சி வன்றன் சுதந்தர வடிவ மாகும், நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே, வைத்திலர் முற்பிற்பாடு வருவித்தார் கருமத் தாலே” (1.66) எது கண்டு கொள்க. என்றிங்ஙனஞ் சிவன்றன் சுதந்தர வடிவமாகுமென்று சிவமொன்றையுஞ் சொல்லியிருக்கச் சத்தியையுங் கூட்டித் தத்துவ கர்த்தாவாகச் சொன்னதேதென்னில் அந்தச் சிவமுஞ்சத்தியும் பின்னமற்றிருக்கையால் சிவத்தைச் சொல்லவே சத்திக்குமாமென்பது கருத்து. அப்படிச் சத்தி சிவமிரண்டும் பின்னமற்றிருக்கும் என்பதற்கு பிம் சித்தியாரில் “சத்திதா னாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச், சத்திதா னாதி யாகுந் தருவடி வான வெல்லாஞ், சத்தியாஞ் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தி தானே” (2.76) எது கண்டு கொள்க. என்று இங்ஙனம் முற்கூறிய வகைகளால் நாதவிந்து இரண்டு தத்துவமும் ஐந்தாக விரிகையால் சத்திசிவமிரண்டுந் தத்துவ கர்த்தாக்கள் ஐவராக நிற்பதை யநுபவத்தாற் கண்டுகொள்க. என்றிப்படித் தத்துவமென்றுந் தத்துவ கர்த்தாக்களென்றும் இருவகையாயிருக்கத் தத்துவங்களின்பேர் தத்துவ கர்த்தாங்களுக்குச் சொல்லியும் வருகைக்கு வழியேதென்னில் தத்துவங்கள் உடம்புந் தத்துவ கர்த்தாக்கள் உயிருமாய் நிற்கையாலே உடம்புக்கிட்ட பேர் உயிருக்கு நின்றாற்போலத் தத்துவங்களின் பேர் தத்துவ கர்த்தாக்களுக்கு நிற்கையாலும், விளக்குச் சுடரெரியுந் தகளி விளக்கென்று பேர்பெற்றாற்போலத் தத்துவ கர்த்தாங்களின்பேர் தத்துவங்களுக்கு நிற்கையாலும் அப்படிச் சொன்னதென அறிக.
இனி, விந்து வழாவகையே முன்னுதவு சூக்குமாதி யொரு நான்கும் எகு விந்துவிலே நின்றுந் தோன்றப்பட்ட வாக்குக்கள் நாலையுஞ் சிவசத்திகள் தோற்றுவிக்குமென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில் அந்த விந்துவானது சடமானபடியால் அது தானாகத் தோற்றுவிக்க மாட்டாதாகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “விந்துவின் மாயை யாகி” (1.19) என்ற விருத்தத்தில் “விந்துத்தன் பால் வைகரியாதி” எம், “சிவனவன்றன் சந்நிதி தன்னினின்றே” எம் வருகையால் அப்படிச் சொன்னதென அறிக. சந்நிதியென்றது அந்தச்சிவனுடைய சத்தியையென அறிக. அன்றியும் முன்னதவு சூக்குமாதி யொருநான்கு மென்ற வும்மைகொண்டே வேறேயுஞ் சிலதோன்றுமென்பது கருத்தென அறிக. அஃதாவது, முன்சொன்ன விந்துவில் தோற்றமாகிய வாக்குக்கள் நாலுமன்றியே ஐம்பத்தோரக்கரமும் எண்பத்தொரு பதமுஞ் சத்தகோடி மஹா மந்திரங்களும் வேதாகம புராண சாத்திரங்களும் விஞ்ஞானகலர் பிரளயாகலருக்குத் தனுகரண புவன போகங்களுந் தோன்றுமென்பது கருத்தாகையால் அப்படிச்சொன்னதென அறிக. இவையிற்றுக்கு பிம் கோயிற் புராணத்தில் “சத்திகளிற் கருத்திருத்தித் தாவிலரு மாமாயை, உய்த்ததனி நாதாதி யைவகையு முதிப்பித்து, வைத்தெமுத்து மொழிமறைநூன் மந்திரமே முதலான, சுத்தவழி விரித்த சுத்த தத்துவங்கள் தொகுமுதலில்” (231) எம், சித்தியாரில் “வித்தைகள் வித்தை யீசர் சதாசிவ ரென்றி வர்க்கு, வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்திரங்கள், தத்துவஞ் சரீரம் போகங் கரணங்கள் தாமெலாமும், உய்த்திடும் வயிந்த வந்தான் உபாதான மாகி நின்றே” (1.25) எது கண்டுகொள்க. வயிந்தவமென்றது குடிலையாகிய சுத்த மாயையையென அறிக. சுத்தமாயை படங்குடிலானாற் போலக் காரணமுங் காரியமுமாக நிற்கையால் சுத்த மாயையைச்சொல்லவே அதன் காரியமாகிய விந்துவுக்குமாமென்பது கருத்தென அறிக. இனி, அருங்கலைகள் முதிர்ந்து ளோரே எகு அரிய நூல்களை யுணர்ந்த பெரியோர்களென்று பொருள்படுத்தினது ஏதென்னில் அரிய நூல்க ளை யுணர்ந்தவர்கள் இங்ஙனங் கூறிய பொருளுக்கு மாறுபாடு சொல்லுவர்கள் என்பதனால் அப்படிச்சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “சுத்தவடி வியல்பாக வுடைய சோதி” (பரபக்கம். 9) என்னும் விருத்தத்தில் “பித்தர்குண மதுபோல வொருகா லுண்டாய்ப் பின்னொருகா லறிவின்றிப் பேதையோராய்க், கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வார்” எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது மேனலா சிவசத்திகளாலே சுத்தமாயையிலே நின்று நாத விந்து முதலான தத்துவங்கள் தோன்றுமென்றும், அந்தத் தத்துவங்கள் உடம்பாக முற்கூறிய சிவசத்திகள் இரண்டுந் தத்துவ கர்த்தாக்களாக அதிஷ்டித்து நிற்பர்கௌன்றும், அதிலே விந்து சத்தியிடமாகச் சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி யென்னும் வாக்குக்கள் முதலானவைகள் எல்லாந் தோன்றுமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட அருளாகிய திரோதாயிசத்தி அந்த ஆணவமலத்தைப் பாகம் வருத்து முறைமை எங்ஙனேயென்று வினவ அந்தத் திரோதாயி சத்தியானது இச்சா ஞானக் கிரியாசத்திகளைத் தோற்றுவித்து அவையிற்றைக் கொண்டே சுத்தமாயையிலும் அசுத்தமாயையிலுமுண்டான தனுகரண புவனபோகங்களைத் தோற்றுவிக்குமிடத்து அவையிற்றோடும் ஆன்மாக்களைக் கூட்டிக் கன்மத்தைப் புசிப்பித்து மலபாகம் வருத்தவேண்டுகையால் அதில் சுத்தமாயையின் தோற்ற முந்த அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

உருவாதி சதுவிதமாய் ஒன்றொன் றொவ்வா
உண்மையதாய் நித்தமாய் ஒன்றா யென்றும்
அருவாகிக் கன்மமார் அணுக்கள் யார்க்கும்
ஆவார மாய்அசித்தாய் அசல மாகி
விரிவாய தன்செயலின் வியாபியாய் எல்லாம்
விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை ஒடுங்க
வருகாலம் உயிர்களெல்லாம் மருவிடமாய் மலமாய்
மன்னியிடும் அரனருளால் மாயை தானே.
.
உன்னிய சகலர்க் குடம்பு முதலாய்
மன்னிய வசுத்த மாயையை வகுத்தது.

பொழிப்புரை :

உருவாதி சதுவிதமாய் தேக முதலானவை நாலு பிரகாரமாவதேதென்னில் தனுவென்றுங் கரணமென்றும் புவனமென்றும் போகமென்றும் வரும். அவையாவன: தனுவென்றது பஞ்சபூதங்களும் அவையிற்றின் காரியங்கள் இருபத்தஞ்சுகூடின பூததேகத்தையென அறிக; கரணமென்றது உட்கரணங்கள் புறக்கரணங்களென அறிக; புவனமென்றது கன்மம் புசிக்கைக்குண்டான இருப்பிடத்தையென அறிக; போகமென்றது இவனுக்குப் புசிப்பாயுள்ள சத்தாதி விடயங்களையென அறிக; ஒன்றொன் றொவ்வா வுண்மையதாய் அவை நாலினு மொன்றையொன் றொவ்வா முறையினையுடைத்தாய்; ஒன்றையொன் றொவ்வா முறைமையாவது தனுப்போலல்ல கரணம், கரணம் போலல்ல புவனம், புவனம் போலல்ல போகம் என அறிக; நித்தமாய் ஒரு காலத்தினும் அழியாததாய்; ஒரு காலத்தினும் அழியாததாவது தன் காரியமாயுள்ளவை சங்கார காலத்தழியினும் அப்பொழுதும் அழியாமல் நிலைபேறாய் நிற்பதாயென்றதென அறிக; ஒன்றாய் அப்படித் தனுகரண புவனபோகங்களாய் நின்றுங் காரியப்பட்டும் மூலகாரணமொன்றாயிருப்பதாய்; என்றும் அருவாகி எக்காலமும் அரூபமாயிருப்பதாய்; எக்காலமுமாவது அந்தத் தனுகரண புவனபோகங்களாகப் பிரபஞ்ச காரியப்படுங்காலத்தும் அவையொழிந்த காலத்துந் தான் கட்புலனுக்குக் தெரியாதாகையாலேயென அறிக; கன்மமார் அணுக்கள் யார்க்கும் ஆவாரமாய் கன்மமானது பொருந்த நின்று புசித்து முடிந்துபோம்படிக்கு ஏதுவாயுள்ள ஆன்மாக்களுக்கெல்லாந் தாரகமாய்; அஃதாவது ஆன்மாக்கள் கன்மந் தொலைந்தே முத்திபெற வேண்டுகையால் அந்த கன்மமானது முடிந்து போம்படி புசிக்குமிடத்து மாயாசரீரமெடுத்து அதனோடுங்கூடிநின்று புசித்துத் தொலைய வேண்டுகையால் இந்த மாயையந்தக் கன்மங்களுக்கேற்ற சரீரங்களைக்கொடுத்து நிற்கடியால் அப்படிச் சொன்னதென அறிக; அசித்தாய் சித்தல்லவாய்; சித்தல்லவாவது இந்த மாயை அப்படி யான்மாக்களுக்குத் தாரகமாயிருந்துந் தனக்கொன்னவோர் அறிவுமில்லையாய்ச் சுத்த சடமுமா யிருக்கையாலென அறிக; அசலமாகி சலநமில்லாததாய்; சலநமில்லாததாவது எண்ணிறந்த ஆன்மாக்களுக்கும் எடுக்குமெடுக்கும் ஜநநங்கள் தோறும் அதற்கதற்கேற்ற வெகுவிதமான சரீரங்களைக் கொடுத்துந் தான் சலிப்பற்று நிற்கையாலென அறிக; விரிவாய தன் செயலின் வியாபியாய் பரப்பாயுள்ள தன் செயலாலே சுத்தமாயைக் கப்பாலளவும் வியாபகத்தையுடையதாய்; சுத்த மாயைக் கப்பாலென்றது அதனைப்போல வியாத்தமன்றியே தன் காரியமாயுள்ள முப்பத் தொன்றுக்குமுள்ள வியாத்தந் தனக்கும் உடையதென்றதென அறிக; எல்லாம் விரிந்தவகை புரிந்தடைவின்மேவி தன் காரியமாயுள்ளவையெல்லாந் தோன்றின அடைவிலே தானும் ஒக்கக்கூடிநின்று; தன் காரியமாவது கலையாதி மண்ணாந்தம் அளவாகவுள்ள முப்பத்தொரு தத்துவமும் அவையிற்றில் அடங்கி வரப்பட்ட நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்புமென அறிக; அவை ஒடுங்கவரு காலமும் உயிர்க ளெல்லாம் மருவிடமாய் அந்தக் காரியங்களெல்லாந் தன்னிடத்திலே யொடுங்கத்தக்கதாக வருகிற சங்காரகாலம் அந்தக் காரிய ரூபத்தைப் பற்றி நின்ற ஆன்மாக்களுக்குந் தன்னிடத்திலே பொருந்துகைக்கிடமுமாய்; அன்றியும் இதனை எல்லாம் விரிந்த வகை புரிந்தடைவின் மேவி யவையொடுங்க வருகால முயிர்களெல்லா மருவிடமாய் என்றொரு பதமாக்கி, இதற்குத் தன்னிடத்திலே தோன்றப்பட்டவெல்லாம் ஒடுங்குங்காலந் தோன்றின அடைவிலே யொன்றிலே யொன்றாகப் பொருந்தி யவையெல்லாந் தன்னிடத்திலே யொடுங்கத்தக்கதாக வருகிற சங்கார காலம் அந்தப் பிரபஞ்ச ரூபத்தைப் பற்றி நின்ற ஆன்மாக்களுந் தன்னிடத்திலே பொருந்துகைக்கும் இடமுமாய் என்ற பொருளுரைப்பினும் அமையும். ஆன்மாக்கள் பொருந்துகைக் கிடமென்றது எதாலென்னில், ஆன்மாக்கள் அநாதியே மலசகசராகையாலே யந்த ஆணவமலபாகம் வந்தே சிவனுடைய திருவடியைக் கூட வேண்டுமாகையால் அவ்வளவும் “ஒடுக்குமிளைப் பொழித்தல் மற்றைத் தோற்ற மலபாகம் வர” (சிவப்பிரகாசம், 18) என்றும், “மாயை கொடு மலமொழிப்பன் முன்னோன்” (சித்தி. 2.52) என்றும் நூல்களிலே சொல்லி வருகையால் ஒடுங்குங்காலங் காரண மாயையிலே யொடுங்கியும் தோன்றுங்காலங் காரிய மாயையோடுந் தோன்றியும் வருகையால் அப்படிச்சொன்னதென அறிக; மலமாய் எண்ணப்பட்ட மலங்களிலே தானுமொரு மலமாய்; எண்ணப்பட்ட மலமாவது ஆணவம் மாயை காமியம் என்றும், அன்றியும் மலமாயை கன்மம் மாயேயந் திரோதாயி என்றும் எண்ணப்பட்ட மலங்களிலே தானுமொரு மலமாயென்றதென அறிக; மன்னியிடும் இங்ஙனம் நிலைபெற்றுவரும்; நிலைபேறாவது இந்த மாயையானது சிருஷ்டி காலத்துக்குஞ் சங்கார காலத்துக்குந் தனக்கொரு போக்குவரவின்றியே தன்னுடைய வியாத்தி நிலைகுலையாமல் அசைவற்று நிற்கையாலே யப்படிச் சொன்னதென அறிக; அரனருளால் மாயை தானே இங்ஙனம் நிலைபெற்று வருகிறதுதான் யாராலேயென்னில் தம்பிரானார் காருண்ணியத்தினாலே நிலைபெற்று வரும் அசுத்த மாயைதான். அரனருளால் என்பதற்குத் தம்பிரானார் சத்தியாலே யென்று பொருளுரைப்பினுமாமென அறிக.
இங்ஙனஞ் சங்கார காலம் ஆன்மாக்கள் காரண மாயையிலே யொடுங்குவார்களென்று சொல்லியிருக்கக் கேவலக்குறி சொல்லுமிடத்து “மலத்தினோடும் வியாபி கேவலத்தி லான்மா” (சித்தி. 4.38) என்றும், “மலமின்றி யொன்று மில்லை” (சிவப். 33) எம், “இயல்பாய்” எம், “கேவலத்தி லாணவ மலமொழிய மற்றொன்று மில்லை” எம் நூல்களிற் சொல்லுவான் ஏனென்னில், அஃதாவது ஆணவ மலத்துக்குச் சுபாவஞ் செம்பைக் காளிதம் மறைத்தாற்போலவும் அக்கினியைக் காட்டம் மறைத்தாற்போலவும் ஆன்ம போதத்தை மறைத்து அறியாமையைப் பண்ணி நிற்பதாதலாற் கேவலத்தில் அறிகருவியாயுள்ள தத்துவங்களும் நீங்கி அறியாமையே வடிவாய்க் கிடக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்படியானால் அந்த ஆணவமல மறைப்புத்தான் ஒடுக்கமாகாதோ, சங்கார காலத்துக்கு ஆன்மாக்கள் மாயை ஆதாரமாக ஒடுங்குவார்களென்பான் ஏனென்னில், அப்படி யாணவத்தால் மறைப்புண்டு கிடந்தாலும் அந்த மறைப்புத் தாரகமாகா தென்றபடியால் மாயை தாரகமாக ஒடுங்க வேண்டுகையாலே யப்படிச் சொன்னதென அறிக. அப்படி யாணவமலம் மறைத்தாலும் மாயை தாரகமாக ஒடுங்குகைக்கு வழியேதென்னில், முற்கூறிய உபமானத்தில் காளிதத்தால் மறைப்புண்ட செம்பு உருக்கும் பொழுது பூமி முதலான தாரகங்களைப் பற்றி யிருந்தாற்போலவும் மற்றக் காட்டமும் அப்படிக்குப் பூமி முதலான தாரகங்களைப் பற்றி யிருந்தாற் போலவும் ஆன்மா நித்திரையிற் கேவலப்பட்டுக் கிடக்கும் அவதரத்து சீவிக்குங் கருவிகளெல்லாம் நீங்கி அணவமலத்தான் மறைப்புண்டு உடல் தாரகமாக மூலாதாரத்திலே ஒடுங்கிக் கிடக்கையாலுஞ் சங்கார கேவலத்துக்கும் அப்படி மாயையிலே ஒடுங்குமென்று சொன்னதென அறிக. அப்படி நித்திரையிற் கேவலத்துக்கு ஆன்மா உடல் தாரகமாக ஒடுங்குமென்பதற்கு பிம் சிவஞானபோதத்தில் “அவ்வுடலி னின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாங்கிடப்பச், செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி” (34) எம் சித்தியாரில் “உடலினி லஞ்ச வத்தை யுறுமுயிர் காவலாக” (4.32) எம் இருபாவிருபஃதில் “உடல கத்து மூலத் தொடுங்க” (9) எம் வருமேதுக்களைக் கண்டு கொள்க. அன்றியும் கேலவத்தில் ஆணவமலமன்றியே மாயாகாரணம் உண்டென்பதற்கு அநுபவம் ஏதென்னில், அந்த ஆணவமல மறைப்பாக மூலாதாரத்திலே ஒடுங்கிக் கிடக்கும் அவதரத்து அவ்விடத்திலே காரிய மாயையாயுள்ள கலையாதி தத்துவங்கள் தோன்றி அந்த ஆணவமல மறைப்பை நீக்குகையாலே முளையுள்ள இடத்திலே கிழங்குண்டென்று கண்டாற் போலக் கலையாதி தத்துவங்கள் தோன்றுகைக்குக் காரணமாயுள்ள மாயையும் அவ்விடத்திலே யுண்டென்பது கண்டு கொள்க. அப்படிக் கேவலத்தில் மாயையிலே நின்றுங் கலையாதி தத்துவங்கள் தோன்றும் என்பதற்கு பிம் திருமந்திரத்தில் “மாயை யெழுப்புங் கலாதியை மற்றதில், ஏய வராகாதி யெய்துந் துரியத்துத், தோயுஞ் சுழுனை கனாவொடுந் துன்னியே, ஆயின னந்தச் சகலத்து ளானே” (2168) எது கண்டு கொள்க. என்னவே துரியத்தில் அராகாதியென்பது கொண்டே அதீதத்திற் கலாதிகளென்பது கண்டுகொள்க. அன்றியும் சித்தியாரிலும் “மாயையிற் காலமோடு நியதி பின்கலாதி தோன்றும்” (2.54) எம், “மாயையின் வயிற்றுண் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை, ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்து” (4.21) எம் வருவதும் இப்பொருள் பற்றியென அறிக.
அப்படிக் கேவலத்தில் மலமும் மாயையுங் கூடி நிற்குமேயானால் மலத்தை இருளென்றும் மாயையை ஒளியென்றும் நூல்களிற் சொல்லியிருக்க இருளாகிய கேவலத்திலே ஒளியாகிய மாயையுங் கூடிநிற்கும் என்னலாமோவென்னில், அப்படி ஒளியென்று சொல்லப்பட்டது அந்தக் காரண மாயையிலே நின்றுந் தோன்றி ஆணவமல மறைப்பை நீக்கப்பட்ட கலையாதி தத்துவங்களாகிய காரிய மாயையையென அறிக. அப்படி ஆணவமல மறைப்பை நீக்குகிற கலையாதி தத்துவங்களை ஒளியென்பதற்கு பிம் சித்தியாரில் “போதகா ரியமறைத்து நின்றது புகல்மலங்காண், ஓதலாங் குணமு மாக வுயிரினுள் விரவ லாலே, காதலா லவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை, ஆதலா லிரண்டுஞ் சோதி யிருளென வேறா மன்றே” (2.84) எ ம், இந்நூலினும் “புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதல் மாயை பொருந்தியிடும்” (37) என்ற செய்யுளில் “இகலிவரு மிவையுணரி லிருள்வெளியாந் தன்மை யெய்தும்” எ ம் கண்டு கொள்க. அன்றியும் இச்செய்யுளின் கருத்தாகிய “மலநிலை யொதுங்க மாயா காரியங் குலவிடு மிருளொளி குறியிதற் கென்றது” எம், கலையாதி தத்துவங்களை ஒளியென்பதற்குச் சிவஞான போதத்தினும் “கலையாதி மண்ணந்தங் காணிலவை மாயை நிலையாவாந் தீபமே போல” (3.7) எம், “மாயா தனுவிளக்காய்” (4.5) எம், திருவருட் பயனிலும் “விடிவா மளவும் விளக்கனைய மாயை வடிவாதி” (30) எம் வரும் ஏதுக்களையுங் கண்டு கொள்க. ஆக இங்ஙனங் கலையாதி தத்துவங்களாகிய காரிய மாயையை ஒளியென்றது கொண்டே ஆன்மாக்கள் கேவலத்தில் மாயா காரணந் தாரகமாக ஒடுங்குவார்களென்பதை அநுபவத்தாற் கண்டு கொள்க. அப்படி நித்திரையிற் கேவலத்துக்கு ஆன்மாக்கள் மாயையிலே ஒடுங்குவார்க ளென்பது கொண்டே சங்கார கேவலத்துக்கும் மாயையிலே ஒடுங்குவார்களென்று சொல்லலாமோவென்னில், முன்னே நித்திரையிற் கேவலத்துக்கு “மலமன்றி யொன்று மில்லையெனு மியல்பாய்” (33) என்று ஆணவ மறைப்புக்குச் சொன்னதைச் சங்கார கேவலத்துக்கு உபமானமாகக் கேட்கையால் இதற்கும் அப்படிச் சொல்லப்படுமென அறிக. அன்றியும், நித்திரையிற் கேவலம் போல இருக்குஞ் சங்கார கேவலமும் என்பதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “எல்லியி னித்திரைப் போலிளைப் பாற்றும் அணுக்களையே” எம், இந்நூலினும் “நீக்கமி லதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை” (62) எம் கண்டு கொள்க. ஆகையால் ஆன்மாக்களுக்கு ஆணவமலம் போல மாயையும் அநாதி காரணமாகையால் மலம் மறைக்க மாயை தாரகமாக ஒடுங்குவார்களென்பதை அநுபவத்தாற் கண்டு கொள்க. அப்படியானால் ஒரு மலத்தையுடைய விஞ்ஞானகலர் அந்த ஆணவமலமொன்றோடு நின்றாற் போலச் சகலருங் கேவலத்துக்கு ஆணவமலமொன்றோடுங் கூடிநில்லார்களோ என்னில், அந்த ஒரு மலத்தையுடைய விஞ்ஞானகலரும் அந்த ஆணவமலபாகம் வருமிடத்து சீவிக்குங்காலஞ் சுத்த மாயா காரியத்தோடுங் கூடிச் சீவித்தும் ஒடுங்குங்காலம் அந்தச் சுத்தமாயா காரணத்திலே ஒடுங்கியும் நிற்கையால் அவர்களுக்கு ஆணவமல மொன்றென்று சொல்ல வேண்டுவதில்லையென அறிக. அவர்களுஞ் சுத்த மாயையோடுங் கூடி வருவார்களென்பதற்கு பிம் சித்தியாரில் “வித்தைகள் வித்தை யீசர் சதாசிவ ரென்றிவர்க்கு, வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்திரங்கள், தத்துவஞ் சரீரம் போகங் கரணங்கள் தாமெலாமும், உய்த்திடும் வயிந்த வந்தா னுபாதான மாகி நின்றே” (1.25) எம், தத்துவப் பிரகாசத்தினும் விஞ்ஞானகலருக்கு ஆணவமலமன்றியே திரோதமுஞ் சுத்தமாயையும் உண்டென்பதற்கு பிம் “இவ்வுயிர்கள் மூவகையாம் விஞ்ஞானகலர்க ளெழிற் பிரள யாகலர்கள் சகலர்க ளென்றிவரி, னவ்வகையே யாணவமு மாணவமும் வினையும் ஆணவமும் வினையுமா யையுமூன் றாகுஞ், செவ்வையிலே திரோதமுடன் சுத்தமாயை சேர்மூ வகைக்குமுள” எம் நூல்களிற் சொல்லி வருகையால் அவர்களும் ஆணவமல மொன்றோடுங் கூடிநின்றாலுஞ் சுத்த மாயையாலே காரியப்பட்டுப் பாகம் வரவேண்டுகையால் சகலரும் மாயையிலே ஒடுங்கியுந் தோன்றியும் வருவார்களென்பதே துணிபென அறிக. இனி இந்தச் செய்யுளுக்குப் பதந்தோறும் பொருள் படுத்தி வந்த அவதரத்து அவையொடுங்க வருகாலம் உயிர்களெல்லா மருவிடமாய் எகு அந்தக் காரிய ரூபங்கள் காரணத்திலே ஒடுங்குவதான சங்கார காலம் அந்தக் காரியவுருவத்தைப் பற்றிநின்ற ஆன்மாக்களும் அந்தக் காரணத்திலே ஒடுங்குவார்களென்று பொருள் படுத்தினதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “புல்லிய பாசங்க ளுய்த் திடப் போகம் புமானுகர்ந்து, செல்லிய காயத் துறுஞ்செல்ல னீங்கிச் சிரபுரக்கோன், சொல்லிய மண்முத லாயின மாயையி லேதொகுத்தங், கெல்லியி னித்திரைப் போலிளைப் பாற்று மணுக்களையே” எது கண்டு கொள்க. அன்றியும் அந்தப் பதத்துக்கு ஆணவமல பாகம் வாராத ஆன்மாக்கள் ஒடுங்குங்காலங் காரண மாயையிலே ஒடுங்கியுந் தோன்றுங்காலம் அந்த ஆணவமல பாகம் வரக் காரிய மாயையோடுந் தோன்றியும் வருமென்று பொருள் படுத்தினதற்கு பிம் சித்தியாரில் “உயிரவை ஒடுங்கிப் பின்னு முதிப்பதென் அரன்பா லென்னிற், செயிருறு மலத்தி னாகுஞ் சிதைந்ததே தென்னிற் சித்தத், தயர்வொழி காரியங்க ளழியுங்கா ரணங்கி டக்கும், பயில்தரு காரியம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்” (1.32) எது கண்டு கொள்க.
என்றிங்ஙனம் உதாரணமாகக் காட்டின இந்தச் சித்தியாரின் செய்யுளிலே ஆன்மாக்கள் ஆணவமலபாகம் வருமளவுஞ் சங்கார கால மாயா காரணத்திலே ஒடுங்கியும் சிருஷ்டிகால மாயாகாரியத்தோடு தோன்றியும் வருவார்களென்பதற்குப் பொருளாவது : உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில் உம்முடைய கர்த்தாவின் ஆக்கினையின் பகுதியாலே சங்காரகாலம் பிரபஞ்சமு மழிந்து ஆன்மாக்களும் ஒடுங்குமே யாமாகில், மீளவுந் தோன்றுவா னேனென்று நீ கேட்கில் ; செயிருறு மலத்தினாகும் அப்படித் தோன்றுகிறது குற்றம் பொருந்தின ஆணவமலபாகம் வாராத ஆன்மாக்கள் அந்த மலபாகம் வருகைப் பொருட்டாக மீளவும் மாயையிலே தோன்றா நிற்பார்கள் ; சிதைந்த தேதென்னில் அப்படி ஆன்மாக்கள் மாயையிலே தோன்றுவார்களாகில் உம்முடைய கர்த்தாவாலே சங்கார காலத்தில் அழிக்கப்பட்ட தேதென்று நீ கேட்கில்; சித்தத்து அயர்வொழி காரியங்கள் அழியும் சித்தமாகிய ஆன்மாவை அயர்வாக மறைக்கப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்து கைக்குத் தத்துவமாயுள்ள காரிய மாயை அழியும். அப்படி அழிந்து போன காரிய மாயை மீளவுஞ் சிருஷ்டியில் தோன்றுகைக்கு வழியேதென்று நீ கேட்கில் ; காரணங் கிடக்கும் அப்படிக் காரியங்கள் தோன்றியும் அழிந்தும் வருகைக்கு உபாதானமாயுள்ள காரண மாயை சங்கார காலத்திலும் அழியாமற் கிடக்கு மாகையாலே ; பயில் தரு காரியம்பின் பண்டுபோற் பண்ணுமீசன் ஆன்மாக்கள் போகம் புசித்தற்கு உடம்பாகப் பொருத்தப்பட்ட காரிய மாயையை முன்பு போல அந்தக் காரண மாயையிலே நின்றுஞ் சிருஷ்டிப்பன் சிவன் தான் என்று பொருளுரைத்துக் கொள்க. அன்றியும் சிவாகமத்தில் “மாயா தத்வம் ஜகத்பீஜ மவிநாஸ்சிய சிவாத்மகம் விஸ்வேகம் அமலம் ஸூக்ஷ்மம் அநாஸ்தவ்வியயம் ஈஸ்வரம்”, “ததேகம் சிவம் பீஜம் ஜகத்சித்ர சத்திமது சத்காரியாதி காராந்த சம்ரோதி வியாபி மீஸ்வரம்” எது கண்டு கொள்க.
எல்லாம் விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை ஒடுங்க வருகால முயிர்களெல்லா மருவிடமாய் எகு ஆன்மாக்கள் சங்கார காலங் காரண மாயையிலே ஒடுங்குவார்க ளென்பது வழக்கல்ல என்று எல்லாம் விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை ஒடுங்க என்று பதமுறித்து அதனைச் சங்கார காலமாக்கி வருகாலம் உயிர்களெல்லா மருவிடமாயென்ற பதத்தைச் சிருஷ்டி காலமாக்கிப் பொருளுரைப்பாருமுளர். அது வழக்கல்லவென அறிக. அதுவேனென்னில் இந்தச் செய்யுளுக்குப் பதந்தோறும் யகரவொற்று முடிவாகப் பதமுதித்து வருகையாலும், ஒடுங்க என்று பதமுதியாத படியாலும், அன்றியும் முன்னர்ப் பதங்களெல்லாஞ் சிருஷ்டியைச் சொல்லி வந்து மேற்சங்காரத்தைச் சொல்லி முடித்து விடுகிறதொழிய மீளவுஞ் சிருஷ்டியைச் சொல்ல வழக்கல்லாத படியாலும், அன்றியும் இச்செய்யுள் காரண மாயையைச் சொல்லுகையால் அதனுடைய செய்தியைக் கூறுகிறதொழியக் காரிய மாயையின் பிரசங்கம் இவ்விடத்துக் கூறப்படாதாகையாலும், ஒடுங்க என்று பதமுறித்து வருகாலமென்பதைச் சிருஷ்டிகாலமென்று பொருள்படுத்துகை வழக்கல்லவென அறிக. ஆகையால், அவை ஒடுங்க வருகாலம் உயிர்களெல்லா மருவிடமாய் என்றொரு பதமாக்கிச் சங்காரகாலம் ஆன்மாக்கள் மாயையிலே ஒடுங்குவார்களென்பதே சித்தாந்த வழக்கென அறிக. அன்றியும், இந்தப் பதத்துக்கிதுவே வழக்கென்பதற்கு முற்கூறிய உபமானங்களன்றியே இந்நூலைப் பின்சென்ற நூலாகிய திருநெறி விளக்கத்தினும் இந்தச் செய்யுளுக் கெதிரடை விருத்தமாகிய “மெய்யாதி நால்வகையா யொன்றுக் கொன் றொவ்வா வெகுவிதமா யேகமாய் வீதலகன் றருவாய், எய்யாமல் வினையிலுழ லாருயிர்க ளெவைக்கு மிருப்பாகி யசேதன மாய்ச் சலிப்பிலதாய்த் தனது, பொய்யாய நிலையளவும் பூரணமா யாவும் பொருந்தவடை வேபுரிந்து பொருந்திவினை யொன்றுஞ், செய்யாத விறுகாலஞ் சேதனங்கட் கெல்லாஞ் சேர்விடமா மாயை யெனச் செப்பு நூலே” என்பதனுள் “வினையொன்றுஞ் செய்யாத விறுகாலஞ் சேதனங்கட் கெல்லாஞ் சேர்விடமா மாயை” என்ற பதத்தை அவையொடுங்க வருகால முயிர்களெல்லா மருவிடமாய் என்ற பதத்துக்குக் கண்டு கொள்க. அதற்கு வழியேதென்னில் வினை யொன்றுஞ் செய்யாத விறுகாலம் சங்கார கால மாகையாலும்; சேதனங்கள் ஆன்மாக்களாகையாலும்; சேர்விடம் ஒடுங்குமிட மாகையாலும்; மாயை அசுத்த மாயா காரணமாகையாலும் சங்கார காலம் ஆன்மாக்கள் மாயையிலே ஒடுங்குவார்களென்னும் பொருள் பெற்று நிற்கையால் அந்தப் பதத்துக்கு உவமிக்கப்பட்டதென அறிக. இந்தத் திருநெறிவிளக்கம் பின்னூலாயிருக்கவும் இதனை யேதுக் காட்டிய தேதென்னில் அந்நூல் சிவப்பிரகாசத்தைப் பின்சென்ற நூலா யிருக்கையினாலும், அன்றியும், விருத்தந்தோறும் விருத்தந்தோறுஞ் சத்தம் பேதித்து வருகையேயன்றி யத்தமொன்றுபட்டு வருகையாலும் அது காட்டவேண்டி, உருவாதி சதுவிதம் எகு மெய்யாதி நால்வகையா யென்ற சத்தம்போல அவை ஒடுங்க வருகாலம் உயிர்களெல்லா மருவிடமாய் எகு வினையொன்றுஞ் செய்யாத விறுகாலஞ் சேதனங்கட் கெல்லாஞ் சேர்விடமாம் என்பது காட்டவேண்டி ஏதுவாகவிட்டதென அறிக. ஆகையால் முற்கூறிய உபமானங்களினாலும் ஏதுக்களினாலும் ஆன்மாக்கள் சங்கார காலம் ஆணவ மலத்தால் மறைப்புண்டு மாயையிலே ஒடுங்குவார்க ளென்பதே சித்தாந்த வழக்கென்பதை யநுபவத்தாற் கண்டு கொள்க. இதுவே பொருளென்பதற்கு கற்பகாலத்துப் பிரமாவுக்கு மாயையிலே ஒடுக்க மென்பதற்குச் சூதசங்கிதை என்னுங் கிரந்தத்திற் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது அசுத்த மாயையானது சிருஷ்டி காலந் தன்னிடத்திலே நின்றுந் தோன்றப்பட்ட காரியங்களோடே கூடி நிற்குமென்றும் அந்தக் காரியங்க ளெல்லாந் தன்னிடத்திலே ஒடுங்கத்தக்கதாக வருகிற சங்காரகாலம் அந்தக் காரிய ரூபத்தைப் பற்றி நின்ற ஆன்மாக்களுந் தன்னிடத்திலே பொருந்துகைக்குத் தாரகமா யிருக்குமென்றும் வருமுறைமையை அறிவித்தது.
இங்ஙனஞ் சொல்லப்பட்ட தேகாதி பிரபஞ்சந்தோன்று மிடத்தும் பரப்பிரமத்திலே நின்றுந் தோன்றி அதிலே ஒடுங்கும தொழிந்து அப்படி யசுத்த மாயா காரணமென்று ஒரு முதல் நாட்டிக் கொள்ள வேண்டுவதில்லை என்கிற மாயாவாதியை நோக்கிச் சித்தாயுள்ள பிரமத்தினிடத்துச் சடமாயுள்ள பிரபஞ்சந் தோன்றா தென்று மறுத்தருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

என்னையிது எனில்உலகுக் குபாதான மில்லை
இறைவனல தெனின் அசித்துச் சித்தினிடத் துதியா
மன்னியுள தேல்முதல்வன் என்கொல் என்னின்
மாயைதான் அசித்துருவாய் மருவ மாட்டா(து)
அன்னவனும் இதுவொழிய ஆக்க மாட்டான்
அசத்தனாம் எனின்அதுவும் அவன்போல் நித்தம்
முன்னவன்அவ் வசித்தைவிரித் தெவையும் ஆக்கும்
முதன்மைஅது கொடுத்ததென மொழிந்தி டாரே.
.
உலகு பிரமத் துதித்தொடுங் கிடுமெனுங்
கலதிதன் மொழியைக் காட்டி மறுத்தது.

பொழிப்புரை :

என்னையிது எனில் பிரபஞ்சந் தோன்றுகைக்கு இங்ஙனஞ் சொல்லப்பட்ட மாயாகாரணமென்று ஒருமுதலை நாட்டிக் கொள்ள வேண்டுவதில்லையென்று நீ சொல்லில்; உலகுக்கு உபாதானமில்லை பிரபஞ்சந் தோன்றுகைக்கு இந்த மாயையன்றி வேறொரு காரணமுமில்லையாம்; இறைவனலதெனின் கர்த்தா வல்லவோ பிரபஞ்சந் தோன்றுகைக்குக் காரணமென்று நீ சொல்லில் ; அசித்துச் சித்தினிடத் துதியா அசேதனமாயுள்ள பிரபஞ்சஞ் சேதனமாயுள்ள கர்த்தாவினிடத்துத் தோன்றாது. ஆகையால் மாயை வேண்டுமென அறிக ; மன்னியுளதேல் முதல்வனென் கொலென்னின்அப்படி மாயை யென்பதொன்று நிலைபெற்றுடையதாகில் தலைவனாயுள்ள கர்த்தா என்ன காரணத்துக்கென்று நீ கேட்கிறாயாமாகில்; மாயைதான் அசித்துருவாய் மருவமாட்டாது அந்த மாயையானது சடமாயிருந்தபடியாலே தானே யுருக்களாகப் பொருந்தமாட்டாது. ஆகையாலே கர்த்தாவேண்டுமென அறிக; அன்னவனும் இதுவொழிய ஆக்கமாட்டான் அசத்தனாம் எனின் அந்தக் கர்த்தாவும் இந்த மாயையைக் கொண்டல்லது பிரபஞ்சம் நடத்தமாட்டான். ஆனபடியாலே அவனுஞ் சத்தி ஹீனனாவனென்று நீசொல்லில்; அதுவும் அவன்போல் நித்தம் அந்த மாயையும் அவனைப்போலே நித்தியமா யிருப்பதொன்று. ஆகையாலே ; முன்னவன் அவ்வசித்தை விரித்தெவையு மாக்கும் அநாதியாயிருக்கப்பட்ட கர்த்தாவுந் தன்னைப்போலே அநாதியாயிருக்கப்பட்ட காரண மாயையிலே நின்றுங் காரியமாயையா யிருக்கிற பிரபஞ்சத்தை விரிவிலே தோற்றுவித்துச் சர்வத்தையும் உண்டாக்குவன். அதுகொண்டே; முதன்மையது கொடுத்ததென மொழிந்திடாரே அப்படி யந்த மாயையைக்கொண்டு கர்த்தா பிரபஞ்சத்தை உண்டாக்குகிற சாமர்த்தியமும் அந்த மாயைதான் உண்டாக்கினதென்று பெரியோர்கள் சொல்லார்கள்; என்னவே, முதன்மையது கொடுத்ததென மொழிந்திடாரே என்பது அதனால் அரூபமாயிருக்கப்பட்ட மாயையிலேநின்று முழு ரூபமாயிருக்கிற பிரபஞ்சத்தை யுண்டாக்குகிற கர்த்தா அந்த மாயை யில்லாதபொழுதும் உண்டாக்கிக்கொள்ள வல்லனென அறிக.
உதாரணம்: கர்த்தாவினிடத்திலே பிரபஞ்சந் தோன்றி ஒடுங்குமதொழிந்து மாயா காரணமென ஒன்றுண்டென்ன வேண்டுவ தில்லையென்று மாயாவாதி சொன்னதற்கு பி ம் சித்தியாரில் சூசூதாங்கு முலகுக் குபாதானஞ் சத்தாஞ் சிலம்பி நூல்தன்பால், வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாந் தன்பக்கல், ஓங்கவுதிப்பித் துளதாக்கி நிறுத்தி யொடுக்கத் திலதாக்கு, மாங்கு வந்த வாறதனாற் சத்தாஞ் சகத்தி னமைவெல்லாம்” (பரபக்கம், 225) எ து கண்டுகொள்க. அசித்தாயுள்ள பிரபஞ்சஞ் சித்தாயுள்ள கர்த்தாவினிடத்துத் தோன்றாதென்று அவனை மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூமாயநூ லதுசிலம்பி வாயினிடை வந்தவா றதனை மானவே, யாயவே யுலக மானதும் பிரம மதனிலேயெனி லடங்கிநின், றேயு மாகுமொரு சித்து மத்துட னிலாத தென்றுபி னியம் பில்நீ, பேயனேகட மிருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே” (யூ243) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது அப்படி மாயாகாரண மென்றொரு முதலில்லை கர்த்தாவினிடத்திலே பிரபஞ்சந் தோன்றுமென்ற மாயா வாதியை மறுத்துச் சிந்தாயுள்ள சிவனிடத்திலே சடமாயுள்ள பிரபஞ்சந் தோன்றாதாகையால் மாயையுண்டென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படியே பிரபஞ்சத்தை உம்முடைய கர்த்தாவே காரியப்படுத் துவனாமாகிற் சர்வான்மாக்களையும் ஒரு தன்மையாகச் செய்வியா திருப்பானேனென்ற பட்டாசாரியனை நோக்கி மேலருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 5

படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நாராய்ப்
பண்ணியதென் முன்னைவினைப் பான்மை யென்பர்
அடுத்தவினை உளதாயின் இறையேன் என்னில்
அசேதனம்மற் றவைஆவிக் கமைத்த தாகும்
எடுத்தவினை உருவுறுவ துயிரேல் தானே
இருவினைக்குத் தக்கஉடல் எய்து மென்னில்
சடத்திரளும் அகர்த்தாவாய் அறிவொன் றில்லாத்
தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே.
.
பல்லுரு வாகப் படைப்பதற் கேது
தொல்லை வினையின் தொடர்ச்சியைச் சொன்னது.

பொழிப்புரை :

படைத்ததொரு படியின்றிப் பறவை பசு நரராய்ப் பண்ணியதென் உம்முடைய கர்த்தா படைக்குமிடத்துச் சர்வான்மாக்களையும் ஒரு தன்மையாகப் படையாமல் நரர் மிருக பசு பக்ஷி தாபராதிகளாயுள்ள நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்புமாகச் சிருஷ்டிப்பானேனென்று நீ கேட்கிறாயாமாகில்; முன்னைவினைப் பான்மையென்பர் ஆன்மாக்க முன்ஜநநத்திற் செய்த வினையின் பகுதிக் கீடாகவென்று சொல்லுவர்கள் பெரியோர்கள்; அடுத்த விளையுளதாயின் இறையேன் என்னில் ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கீடாகச் சரீரங்களுண்டாமாகில் அந்தக் கன்மமே யமையாதோ கர்த்தா வொருவன் வேணுமோ என்னில்; அசேதனமற்றவை யாவிக் கமைத்ததாகும் அந்தக் கன்மங்களுக்கு அறிவில்லாதபடியாலே தானாக உடம்புகளை யுண்டாக்கமாட்டா தாகையால் கர்த்தா ஆன்மாக்கள் செய்த வினைக்கீடான உடம்புகளை யுண்டாக்கினதாம்; எடுத்த வினை யுருவுறுவ துயிரேல் தானே யிருவினைக்குத் தக்கவுடலெய்துமென்னில்அந்தக் கன்மத்துக்கீடாக எடுக்கப்பட்ட சரீரத்திலே நின்று அநுபவிக்கிறது ஆன்மாவேயாகில் தான் செய்த புண்ணிய பாவங்களுக்கீடான சரீரத்தைத் தானே எடுத்துக்கொள்ளுமென்னில்; சடத்திரளும் அகர்த்தாவா யறிவொன்றில்லாத் தன்மையனுங் கூடவொரு சங்கையின்றே சடமாயுள்ள உடலினது கூட்டங்களுங் கர்த்தாவல்லனுமாய்த் தானே யறிகைக்கோர் அறிவில்லாத ஆன்மாவுந் தம்மிற்கூடி யறிகைக்கோர் காணமுமில்லை; என்னவே, சிவனே சர்வமுமறிந்து நின்று ஆன்மாக்கள் செய்த கன்மத்துக்கீடான சரீரங்களைக் கொடுப்பனென்பது கருத்து.
சூபடைத்ததொரு படியின்றிப் பறவை பசு நரராய்ப் பண்ணியதென்சூ என்று பட்டாசாரியன் கேட்டது பிரபஞ்சம் ஒருவழிப்பட்டிராதது கொண்டே கர்த்தா படைக்கிற படைப்பால் பக்ஷபாதியாவனென்பது அவனுக்குக் கருத்து. என்னவே, பிரபஞ்சம் அநாதியேயுடையதென்பதும் அது ஒருவர் படைக்க வேண்டுவதில்லை யென்பது மவனுக்குப் பக்ஷம். இதந்கு பிம் சித்தியாரில் “போக்கொடு வரவுகால மொன்றினிற் புணர்வ தின்றி, யாக்கவே றொருவ ரின்றி யநாதியா ™யணுக்க ளாகி, நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி, யூக்கமா ருலக மென்று முள்ளதென் றுரைக்க லாமே” (பரபக்கம், 187) எது கண்டுகொள்க. அதனை முன்னை வினைப் பான்மையென்ப ரென்று மறுத்ததற்கு அடுத்தவினை யுளதாயின் இறையேனென்று மீளவுமவன் சொன்னதற்கு பிம் சித்தியாரில் “செயல்களே பலத்தைச் செய்யுந் தெய்வம்வேண் டாவிங் கென்னின், முயலுமிச் செயல்க ளிங்கே முழுவது மழியு மெங்கே, பயனளிப்ப வனழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே, வயலிடுந் தழையிந்தின்னு மருந்தும்பின் பலிக்கு மாபோல்” *(2.17) எது கண்டுகொள்க. இனி, அசேதமகற் றலையாவிக் கமைத்த தாகும் என்று மறுத்ததற்கு எடுத்தவினை யுருவுறுவ துயிரேற் றானே யிருவினைக்குத் தக்கவுடல் எய்துமென்று மீளவும் அவன் சொன்னான் என்பதற்கு பிம் சித்தியாரில் சூசூநித்தமா யெங்கு முண்டாய் நீடுயிரறிவு தானாய்ப், புத்திதா னாதி யாய கருவியின் புறக்க தாகிச் சுத்தமா ருருவம் மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக், கொத்ததோ ருருவம் பற்றிப் புலன்வழி யுணர்ந்து நிற்கும்சூசூ (பரபக்கம், 188) எ=து கண்டுகொள்க.என்றிங்ஙனம்பட்டாசாரியன் சொன்னதைச்சடத்திரளும் அகர்த்தாவாய் அறிவொன்றில்லாத் தன்மையனுங்கூட ஒரு சங்கையின்றே என்றவனை மறுத்ததள்கு பும் சித்தியாரில் “உலகுடல் கரனங் கால முறும்பல நியதி செய்தி, பலவிவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்ப தானால், நிலவிடா விவை தாஞ் சென்று நினைந்துயிர் நிறுத்திக்கொள்ளா, அலகிலா அறிவனாணை யணைத்திடு மருளினாலே” (2.22) எது கண்டு கொள்க. ஆனபடியினாலே சிவன் ஆன்மாக்கள் செய்த கன்மங்களையறிந்து அதற்கதற்கேற்ற சரீரங்களைக் கூட்டிப் புசிப்பிக்கையாலே பக்ஷபாதியல்ல நடுவன் என்பதற்கு பிம் இருபாவிருபஃதில் “வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ்சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும்நல்லவுந் தீயவும் எல்லா மறிந்து முறை பிறழாமற் குறைவுநிறை வின்றாய்க் காலமுந் தேசமு மாலற வகுத்து நடுவு நின் றருத்தலின் நடுவனா குதியே” (16.1015) எது எண்டு கொள்க. இதனாற் சொல்லியது, பிரபஞ்சம் நித்தியமா யிருப்பதொன்றெம்றும் அதுதானே காரியப்படுமதொழிந்து கர்த்தாவேண்டுவதில்லையென்றும் ஆன்மாதானே செய்த கன்மத்துக்கீடான சரீரத்தைத்தானே யெடுத்துக்கொள்ளுமென்றுஞ் சொன்ன பட்டாசாரியனை மறுத்துக் கன்மமுஞ் சரீரமும் சடமானபடியாலும் ஆன்மா தனக்கென்னவோர் அறிவில்லாதபடியாலும் இவையிற்றைக் கூட்டிக் காரியப்படுத்துகிறது சிவனேயேன்னும் முறைமையை அறிவித்தது.
அப்படியே கன்மத்துக்கீடாக ஆன்மாக்களுக்குத் கர்த்தா மாயா சரீரங்களைக் கூட்டிப் புசிப்பிக்கும் அவதரத்துக் கன்மமுண்டாயே மாயா சரீரம் உண்டானதோ மாயா சரீரமுண்டாயே கன்மமுண்டானதோ என்று வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின்உளதாம் உயிருண் டாவே
உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதி யாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே.
.
சாலியின் முளையுந் தவிடும் உமியும்
போலமும் மலமும் புராதன மென்றது.

பொழிப்புரை :

அல்லல் மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன் அருவினைகள் அருந்துதற்கோதுக்கமிக வுண்டாக ஆன்மாக்களுக்கு இந்த உடம்புகளைத் தம்பிரானார் கூட்டினது அரூபமாயிருக்கிற கன்மங்களைப் புசித்தற்கோ, அப்படியாமானால்; வினையோ வன்றிச் சொல்லிவரு மாயையோ அணுவைமுந்தச் சூழ்ந்தது கன்மமோ அது ஒழிந்து சொல்லப்பட்டு வருகிற மாயையோ ஆன்மாவை முந்த வந்து பொருந்தினது; எனும் உரை என்று சொல்லுகிறது; முதலோர் தொடக்கிலார்பால் ஒல்லைவருமெனி னுளதாம் அநாதியே யொருதொந்தனையு மில்லாதாரிடத்திலே மாயா கன்மங்கள் உண்டானாலல்லவோ அதற்கு உத்தர முளதாவது. இந்த மாயையுங் கன்மமுமொழிய வேறுள தேதென்னில்; உயிருண்டாவே யுளது மலம் ஆன்மா என்றுண்டு அன்றேயுள்ளது ஆணவ மலமும்; அப்படியானால் மாயையுங் கன்மமும் பின்புண்டானதோ என்னில்; மலமுளதாயொழிந்த எல்லாம்அந்த ஆணவமல முண்டாகவே மற்றுள்ள மாயா மலமுங் கன்ம மலமும்; நெல்லின் முளை தவிடுமிபோல் அநாதியாக நிறுத்திடுவர் நெல்லிலே யுண்டாக்கப்பட்ட முளையுந் தவிடும் உமியு மொக்க உண்டானாற்போல இவையும் அநாதியென்று பெரியோர்கள் நிச்சயிப்பார்கள்; இது சைவம் நிகழ்த்துமாறேஇப்படிச் சிவாகமஞ் சொல்லும்.
அல்லல்மிக வுயிர்க்கிவைதான் அணைத்ததீச னருவினைக ளருந்துதற்கோ என்று நிகண்டவாதி சொன்னானென்னவுமாம்; அது எங்ஙனேயென்னில், கர்த்தா கிருபாமூர்த்தியாகையாலே அவன் ஆன்மாக்கள் துக்கங்களை அநுபவிக்கத் தக்கதாக உடம்புகளைக் கூட்டான்; ஆன்மா தானே சரீரத்தோடுங்கூடி அநுபவிக்குமென்பது கருத்தாகையாலும் அன்றியுங் கர்த்தா பொன்னெயில் வட்டத்திலே பிரபஞ்சந் தோய்வற்றிருப்பா னென்கையாலுமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் சூசூஅந்த வாய்மொழியி னாலவன் சரண மாதியோகமுத லான நூல், இந்த மாநில மயங்கி டாதவகை யிங்கியம்பின னிதன்பொருள், வந்த காலமுயிர் தன்ம தன்மியற மற்றும் விண்மருவு புற்கலம், பந்தம் வீட்டினோ டநாதி யாயிவை படைப்ப தின்றியுள பத்துமேசூசூ எம், சூசூகருவி கண்படு துடக்கொ ழிந்துவரு கால மூன்றிநிகழ் காரியம், பெருக நின்றொரு கணத்தி லேயுணர் பெருந்தவக் கடவுள் பீடினான், மருவி நின்றுவழி பட்ட வர்க்குமலை வுற்றவர்க்கு மன மொத்திடுங், குரிசி லெங்களிறை யென்று பின்னுநிகழ் குற்ற மின்மையது கூறுவான்” (பரபக்கம். 147, 145), இது கர்த்தா விகாரமற் றிருப்பானென்று அவன் சொன்னானென்பதற்குக் கண்டு கொள்க. இனி உயிர் உண்டாவே உளது மலம் எது ஈஸ்வர ஐக்கிய வாதியை நோக்கிச் சொன்னதெனவு மாமென அறிக. அதற்கு வழியேதென்னில், ஆணவமலமென்ப தொன்றில்லை மாயையுங் கன்மமுமேயுள்ளது என்பது அவன் கருத்தாகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூமாயையுருவிரு வினையால் வருமிரு வினையு முருவாலன்றி மருவா திவற்றின்முந்திய தேதோ வந்தணை வதற்கோ ரேது வேண்டும்சூசூ (6.26) என்றவன் வினவியதற்கு உத்தரமாக ஆணவமலமுண்டென்று நாட்டுதற்கு சூசூமூல மலத்தாற் சாலு மாயை கருமத் தளவிற் றருமுரு விறைவன்சூசூ (6.3233) என்றும் அவனை நோக்கிக் கூறியது கண்டுகொள்க. இனி, நெல்லின்முளை தவிடுமி போல் என்று உபமானங் கூறிய வகையேதென்னில் முளை கன்மத்துக்கு உவமையென அறிக; தவிடு ஆணவ மலத்துக்கு உவமையென அறிக; உமி மாயைக்கு உவமையென அறிக; அரிசி ஆன்மாவுக்கு உவமையென அறிக. என்றிங்ஙனங் கூறப்பட்ட உபமானத்துக்கு பிம் திருமந்திரத்தில் சூசூஆணவ மாயையுங் கன்மமு மாமலங், காண முளையுந் தவிடுமி யான்மாவுந், தாணுவொவ் வாமலே தண்டுல மாய்நிற்கும், பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தேசூசூ (2192) எம் வீட்டுநெறிப் பாலினும் சூசூஆணவம் பிண்டி யருமாயை தான் உமி, காமியம் மூக்கென்று காண்சூசூ எம் கண்டுகொள்க. அன்றியும் நெல்லின்வரு தவிடுமிபோலென்று பாடமோதுவாருமுளர். அப்பாடமானால் நெல்லிலே வருகிற முளையென்று பொருளுரைத்துக் கொள்க.
இதனாற் சொல்லியது கர்த்தா ஆன்மாக்கள் கன்மந்தொலைய வேண்டிச் சரீரங்களைக் கூட்டிப் புசிப்பிப்பனென்று; அப்படிப் புசிப்பிக்குமிடத்து மாயையோ கன்மமோ முந்தக்கூடினதென்று கேட்க, ஆன்மாவுள்ளவன்றே ஆணவமல முண்டென்றும் ஆணவமல முள்ள அன்றே மாயா கன்மங்களும் அநாதியென்றும் வரும் முறைமையை நெல்லிலே முளையுந் தவிடும் உமியும் அநாதியானாற்போல இருக்கு மென்று அறிவித்தது.
இங்ஙனஞ் சொல்லிவந்த அசுத்த மாயா காரணத்தினின்றும் உண்டாக்கப்பட்ட காரியமாயுள்ள தத்துவங்களின் தோற்றம் அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

அருத்திமிகும் கலைகாலம் நியதியுடன் வித்தை
அராகம்இவை அனந்தரால் மாயைதனி லாகும்
உருத்திரராற் கலையதனில் பிரகிருதி குணங்கள்
உளவாகும் ஆங்காரம் புந்திதனில் உதிக்கும்
தெரித்தவிது திரிவிதமாந் தைசதவை காரி
திகழ்தருபூ தாதியெனத் திருந்தியசாத் துவிதம்
விரித்தகுண மனம்புத்தி இந்திரிய மென்று
விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே.

கன்றிய மாயையிற் கலைமுத லாக
ஒன்றுதத் துவம்பதி னைந்துற் பவித்தது.

பொழிப்புரை :

மாயைதனி லனந்தரா லருத்திமிகுங் கலை கால நியதியுடன் வித்தை யராகமிவையாகும்அதோ மாயையிலே நின்றும் அனந்ததேவ நாயனார் அருளினாலே புசிப்பை மிக உண்டாக்குங் கலையுங் காலமும் நியதியோடே வித்தையும் அராகமுந் தோன்றும்; அருந்திமிகும் என்பதற்கு ஆசைமிக உண்டாக்குமென்னவு மாமென அறிக; உருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்க ளுளவாகும்உருத்திரதேவ நாயனார் அருளினாலே முற்கூறிய கலையிலே மூலப்பிரகிருதி குணசொரூபங்களாகத் தோன்றும். குணசொரூபங்களாவன: சாத்துவித குணமென்றும் இராசத குணமென்றுந் தாமத குணமென்றும் பெயராய், அந்தக் குணங்கள் ஏற்றக்குறைவின்றித் தம்மிலொத்து நின்றவிடஞ் சித்தமென்றும் ஒரு குணமேறினவிடம் புத்தியென்றும் வருமென அறிக. ஆகையால் பிரகிருதி தத்துவந்தானே சித்தமும் புத்தியுமாய் நிற்குமென அறிக. இதனை மேல் நுட்பத்தில் காட்டுகிற உதாரணத்திலே கண்டுகொள்க; ஆங்காரம் புந்திதனிலுதிக்கும் அகங்கார தத்துவமும் முற்கூறிய புத்தி தத்துவத்திலே தோன்றும். என்றிங்ஙனங் கூறப்பட்ட முன்னர்ப் பதத்திலே புத்திக்குத் தோற்றம் சொல்லாமலிருக்கவும் இந்தப் பதத்திலே யாங்காரம் புத்தியிலே தோன்றுமென்பது கொண்டே பிரகிருதி தானே குணசொரூபங்களாய் சித்தமும் புத்தியுமாய் நிற்குமென்பதை யநுவத்தாற் கண்டுகொள்க; தெரித்த இது திரிவிதம் இங்ஙனஞ் சொல்லப்பட்ட ஆங்கார மூன்று வகையாயிருக்கும். அஃதெங்ஙனே யென்னில்; திகழ்தரு தைசத வைகாரி பூதாதி விளக்கத்தையுடைய தை சத ஆங்காரமென்னும் வைகாரி ஆங்காரமென்றும் பூதாதி ஆங்காரமென்றும் பொருளுடைத்தாம். இவையிற்றுள் தைசதம் அறிவென்று அறிக; வைகாரி தொழிலென அறிக; பூதாதி உருவமென அறிக; திருந்திய சாத்துவிதம் விரித்த குணமுதல் விளங்கியிடு மனம் புத்தி இந்திரியமென்று விளம்பிய சோத்திராதி விரிந்தே நன்மை பொருந்தின அறிவாகிய சாத்துவித குணம் விரிந்து பொருந்தின முந்தக் கூறிய தைசத ஆங்காரத்திலே மனதும் ஞானேந்திரியமாகிய சோத்திராதிகள் ஐந்தும் பிரகாசித்து விரிந்து தோன்றும். முதல் விளங்கியிடும் என்றதை முந்தக் கூறின தைசத ஆங்காரமென்றதென அறிக. அஃதாவது ஆங்காரந் தோன்றின ஒழுங்கு தைசத வைகரி பூதாதியென்றமையால் தைசத ஆங்காரம் முந்தக் கூறுகையால் அப்படிச் சொன்னதென அறிக.
அருத்திமிகுங் கலைகாலம் எகு புசிப்பு மிக உண்டாக்குங்கலாதிகளென்று பொருள் கூறியது ஏதென்னில் ஆன்மாக்கள் புசிப்புக்கீடாகக் கலாதிகள் தோன்றுகையால் அப்படிச் சொன்னதென அறிக. அன்றியும் அருத்திமிகுமென்றது ஆசை மிக உண்டாக்குமென்றதேதென்னில், இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவங்களில் அராகதத் துவங்கூடத்தோன்றுகையால் அராகம் இச்சையை எழுப்புகையால் ஆசையை மிகவும் உண்டாக்கு மாமென அறிக. இனி உருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்களுளவாகும் எகு கலையிலே பிரகிருதி குணங்கள் தோன்றுமென்று சொல்லியிருக்க அந்தக் குணங்கள் தம்மிலொத்தவிடஞ் சித்தமென்றும் ஒரு குணமேறினவிடம் புத்தியென்றும் விதப்பாகப் பொருட்படுத்துகைக்கு வழி ஏதென்னில், பிரகிருதி தத்துவம் உபாதானமாக ஆன்ம தத்துவம் இருபத்துநாலுந் தோன்றுமென்று முன்னூல்களிற் சொல்லியிருக்கையால் அதிலே சித்தமும் புத்தியும் ஒழிய மற்றுள்ள தத்துவங்களின் தோற்றம் மேற்சொல்லுகையாலே அந்தச் சித்தமும் புத்தியும் இந்தக் குணபேதத்தில் அடங்கிவருகையாலே இந்நூற் செய்தருளினவர் அதனை யடக்குவாய் செய்து அருளிச்செய்ததை விரித்துப் பொருள்படுத்தினதென அறிக. அப்படிப் பிரகிருதி தத்துவங் குணசொரூபங்களாகத் தோன்ற அந்தக் குணங்கள் தம்மிலொத்தவிடஞ் சித்தமென்றும் அதிலே ஒருகுண மேறினவிடம் புத்தியென்றும் பொருட்கூறியதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் சூசூகூறிய மூலப்பகுதியிற் றோன்றுங் குணமவைதான், தேறிய சாத்திக ராசத தாமத மென்றுசெப்பு, மூறிய முக்குண மொத்தவை மூன்று முயர் விழிவற், றேறியக் காற்புத்தி தத்துவ மாகுமென் றெண்ணுவரேசூசூ எம் சித்தியாரிலும் சூசூசித்தமா மவ்வியத்தஞ் சிந்தனை யதுவுஞ் செய்யும்சூசூ (2.58) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி சர்வமுஞ் சிவசத்திகளாலே தோன்றுமென்று நூல்களிற் சொல்லி யிருக்க இந்தத் தத்துவங்கள் அனந்ததேவ நாயனாராலும் உருத்திர தேவ நாயானாராலுந் தோன்றுமென்றதற்கு வழியேதென்னில், அஃதாவது: விஞ்ஞானகலரில் அபக்குவரான அஷ்டவித்தேசுரராகிய அனந்தன் சூக்குமன் சிவோத்தமன் ஏகநேத்திரன் ஏகவுருத்திரன் திரிமூர்த்தி சிகண்டன் சிகண்டி என்னப்பட்ட எண்மருக்குஞ் சிவன் ஆசாரிய கிருத்தியமும் உண்டாக்கி அவர்களுக்குப் பிரபஞ்சம் நடத்தும் அதிகாரமுங் கொடுத்தருளுகையில் அவர்களில் அனந்ததேவ நாயனாருக்கும் உருத்திரதேவ நாயனாருக்கும் அந்த அதிகாரங்கொடுத்ததென அறிக. என்றிங்ஙனஞ் சொல்லப்பட்ட எட்டுப் பேரும் விஞ்ஞானகலரில் அபக்குவரென்பதற்கும் அவர்கள் சிவனுடைய ஆக்கினை வழியே நடத்தும் அதிகாரமும் உடையவர்கள் என்பதற்கும் பிம் தத்துவவிளக்கத்தில் சூசூஅறிந்தவர் தீர்ந்த துகளினர் தீராத் துகளர் முன்னர், செறிந்தவர் மந்திர ராமெழு கோடியர் பேரொலியால், மறிந்த திரைப்புனல் வெங்குரு வாணர் வகுத்தனரேசூசூ (14) என்பதனுள் விஞ்ஞைக்குநாயகர் எண்மரென்பதனை யிதற்குக் கண்டு கொள்க.
இனி ஆங்காரம் புந்திதனி லுதிக்குந் தெரித்த இது திரிவிதமாம் எகு புந்தியிலே ஆங்கார மொன்றாய்த் தோன்றி மூவகை ஆங்காரமாக விரிந்ததற்கு வழியேதென்னில், இந்த ஆங்காரங் காரியப்படுத்தும் அவதரத்து முற்கூறிய குணங்களோடுங் கூடிக் காரியப்பட வேண்டுகையால் அந்தக் குணங்களும் மூவகையாகையாலே இதனையும் அப்படி மூவகையாகச் சொன்னதெக அறிக. அதற்கு வழியே தென்னில் சாத்துவிதகுணம் அறிவும் இராசத குணம் விகாரமும் தாமதகுணம் மயக்கமுமாகையாலும், தைசத ஆங்காரம் விளக்கமும் வைகாரி ஆங்காரந் தொழிலும் பூதாதி ஆங்காரம் உருவமு மாகையாலும் அந்தந்த வகைகளிலே கூடிநின்று காரியப்பட்டதென அறிக. இவை தம்மிற்கூடிக் காரியப்படுந் தோற்றங்களினுங் கண்டு கொள்க. அஃதாவது: அறிவாகிய சாத்துவித குணமும் விளக்கமாயுள்ள தைசத ஆங்காரமுங்கூடி அறிவாயுள்ள மனத்தையும் ஞானேந்திரியமாகிய சோத்திராதிகள் ஐந்தையுந் தோற்றுவிக்கையாலும், மேல்வருகிற செய்யுளிலே விகாரமாயுள்ள ராசத குணமுந் தொழிலாயுள்ள வைகரி ஆங்காரமுங் கூடித் தொழிலாயுள்ள கன்மேந்திரியமாகிய வாக்காதிகள் ஐந்துந் தோன்றுகையாலும், மயக்கமாகிய தாமதகுணமும் உருவமாகிய பூதாதி ஆங்காரமுங்கூடிப் பூதங்களுக்குக் காரணமாகிய சத்தாதிகள் தோன்றுகையாலும் அப்படிச் சொன்னதென அறிக. என்றிங்ஙனம் அறிவுந் தொழிலும் மயக்கமும் உண்டாகையால் சாத்துவித குணமுந் தைசத ஆங்காரமும் அறிவைப்பற்றி நின்றதென அறிக; இராசத குணமும் வைகரி ஆங்காரமுந் தொழிலைப்பற்றி நின்றதென அறிக; தாமதகுணமும் பூதாதி ஆங்காரமும் மயக்கமாகிய உருவத்தைப்பற்றி நின்றதென அறிக. ஞானேந்திரியமாகிய சோத்திராதிகள் அறிவைப்பற்றி நிற்கையாவது, சோத்திராதிகளாயுள்ள செவி மெய் கண் நா நாசி என்னப்பட்ட இந்திரியம் ஐந்துஞ் சத்த பரிச ரூப ரச கந்தங்களைக் கொள்ளுமிடத்துச் சீரீரந்தொழிற்பட்டுச் சீவியாமல் அறிவாய் நிகழுகையால் அப்படிச் சொன்னதென அறிக. இனி, கன்மேந்திரியமான வாக்காதிகள் தொழிற்படுகையாவது, அவை காரியப்படுமிடத்துச் சரீரந்தொழிற்பட்டு நின்று காரியப்படுகையால் அப்படிச் சொன்னதென அறிக.
இனி, இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவங்கள் மாயையிலே தோன்றுமிடத்துச் சித்தியாரில் காலமுதலாகத் தோன்றுமென்று சொல்லியிருக்க இந்நூலிற் கலைமுதலாகத் தோற்றஞ் சொன்ன தேதென்னில், சித்தியார் செய்தருளினவர் பிரபஞ்சத் தோற்றஞ் சொல்லுகையால் காலமுண்டாகவே பிரபஞ்சந் தோற்றுகையாலே காலமுதலாகச் சொன்னதென அறிக. இந்நூல் செய்தருளினவர் ஆன்மாக்களுக்கு உணர்த்து முறையைச் சொல்லுகையாலே உணர்த்துகைக்குக் கலை முந்தி யெழுப்ப வேண்டுகையால் கலையை முந்திக் கூறியதென அறிக. அப்படி வேற்றுமை கூறியதேதென்னில் இது சார்பு நூலாகையால் “திரிபுவே றுடையது புடைநூ லாகும்” (நன்னூல், 8) என்னும் விதியைப்பற்றியென அறிக. அன்றியும் இந்தத் தத்துவத் தோற்றம் அனந்ததேவ நாயனாரொருவர் நடத்துகையால் அப்படி முன்பின் கூறியதெனவுமாமென அறிக.
இதனாற் சொல்லியது இந்த அசுத்த மாயையில் நின்று தோன்றப்பட்ட தத்துவங்களில் இந்தச் செய்யுளில் காலமும் நியதியுங் கலையும் வித்தையும் அராகமும் ஆக ஐந்தும், பிரகிருதி குணங்களாகிய அவ்வியத்தமுஞ் சித்தமும் புத்தியும் ஆக மூன்றும், புத்தியிலே ஆங்காரமும் ஆங்காரத்திலே மனதும் ஞானேந்திரியமாகிய சோத்திராதிகள் ஐந்தும் ஆக ஏழுங்கூடி, ஆகத் தத்துவம் பதினைந்துந் தோன்று முறைமையை அறிவித்தது.
இங்ஙனம் பதினைந்து தத்துவத்திற்குத் தோற்றமருளிச்செய்து மேற்பதினைந்து தத்துவத்திற்குத் தோற்றமருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

மன்னியகன் மேந்திரிய மானஇரா சதஞ்சேர்
வாக்காதி வைகாரி மருவிவரும் சத்தம்
தன்னைமுத லாகியதா மதமிகுமாத் திரைபின்
தருமிதனில் வான்அநிலம் அனல்புனல்மண் சத்தம்
முன்னதனில் வெளியாதி ஒன்றொன் றாகும்
முறையிலுறும் இருமைஅயன் முடிவா முன்னே
உன்னுசதா சிவராதி அதிபதிகள் ஒடுக்கம்
உதித்தஅடை வெளஉரைப்பர் உணர்ந்து ளோரே.
.
பின்னுமூ வைந்து பிறக்கும் நெறியுஞ்
சொன்னவா றொடுக்கமுந் தோற்றமுஞ் சொன்னது.

பொழிப்புரை :

மன்னிய கன்மேந்திரியமான வாக்காதி இராசதஞ்சேர் வைகாரி மருவி வரும் நிலைபெற்று வருகிற கன்மேந்திரியமாகிய வாக்காதிகளாயுள்ளவை ஐந்தும் இராசத குணத்தைப் பொருந்தியிருக்கிற வைகரி ஆங்காரத்திலே பொருந்தித் தோன்றும். பொருந்தித் தோன்றுமென்றது வைகரி தொழிலாகையாலும் கன்மேந்திரியந் தொழிற்பட்டு வருகையாலும் அப்படிச் சொன்னதென அறிக; சத்தந் தன்னை முதலாகிய மாத்திரை தாமத மிகுபின் தரும் சத்த மென்கின்ற விடயத்தை முதலாகவுடைய தன்மாத்திரைகள் ஐந்துந் தாமத குணத்தை மிகுத்திருக்கிற பிற்பட்ட பூதாதி ஆங்காரத்திலே தோன்றும். பின்தரு மென்றதைப் பிற்பட்ட ஆங்காரமென அறிக. அஃதாவது, முன்னர்ச்செய்யு ளாங்காரத்தினது தோற்றஞ் சொல்லுமிடத்து சூதைசத வைகரி திகழ்தரு பூதாதிசூ யென்று பூதாதி ஆங்காரத்தைப் பிற்படக் கூறுகையால் அப்படிச் சொன்னதென அறிக. அன்றியும், பூதாதி ஆங்காரத்திலே தன்மாத்திரைகளாகிய சத்தாதிகள் ஐந்துந்தோன்றுமென்றதும் பூதாதி ஆங்காரம் உருவத்தைப்பற்றி நிற்கையாலும் சத்தாதிகள் பூதரூபங்கள் தோன்றுகைக்குக் காரணமாகையாலுமென அறிக; இதனில் இங்ஙனம் முற்பதத்திலே சொல்லப்பட்ட தன்மாத்திரைகளாகிய சத்தாதிகள் ஐந்தினும்; வான் அநிலம் அனல் புனல் மண் ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி என்னப்பட்ட பூதங்கள் ஐந்துந் தோன்றுமிடத்து; சத்தம் முன்னதனில் சத்தமுதலா யிருக்கப்பட்ட முதற்கூறிய தன்மாத்திரைகள் ஐந்தினும்; வெளியாதி ஆகாய மாதியாக; ஒன்றொன்றாகும் ஒன்றிலே யொன்றாக வுண்டாம். அஃதாவது, சத்தத்திலே ஆகாயந்தோன்றும், பரிசத்திலே வாயு தோன்றும், உரூபத்திலே தேயுதோன்றும், இரசத்திலே அப்புதோன்றும், கந்தத்திலே பிருதிவிதோன்றும் என்றதென அறிக; முன்னே உன்னு சதாசிவராதி யிருமையயன் முடிவாய் அதிபதிகள் முறையிலுறும் அநாதியே யெண்ணப்பட்ட சதாசிவமுதல் பெரிய பிரமா ஈறாக அதிதேவதைகள் ஐவரும் அந்தந்த ஓழுங்கிலே பொருந்துவார்கள். அந்தந்த ஒழுங்காவது ஆகாசத்துக்குச் சதாசிவமும் வாயுவுக்கு மயேசுரனும் தேயுவுக்கு உருத்திரனும் அப்புவுக்கு விஷ்ணுவும் பிருதிவிக்கு பிரமாவுமென அறிக; ஒடுக்கம் உதித்த அடைவென வுரைப்ப ருணர்ந்துளோரே இங்ஙனந் தோற்றமாகச் சொல்லிவந்த தத்துவங்களுக்குந் தத்துவ கர்த்தாக்களுக்கும் ஒடுக்கமும் தோன்றின ஒழுங்கிலேயென்று சொல்லுவார்கள் அறிவாலுயர்ந்த பெரியோர்கள்.
மன்னிய கன்மேந்திரிய மென்றதை நிலைபெற்ற கன்மேந்திரியமென்று பொருள் கூறியதேதென்னில், ஆன்மா ஒரு சரீர சம்பந்தியாய் நிற்குநாளெல்லாம் இந்நிரியங்கள் விடப்படாமல் நிற்கையாலே யப்படிச் சொன்னதென அறிக. இந்த வாக்காதிகளைக் கன்மேந்திரியமென்ற தேதென்னில் கன்மந் தொழிலென்னும் பொருளைப் பற்றித் தொழிற்பட்டுச் சீவிக்கையாலே யப்படிச் சொன்னதென அறிக. தொழிற்படுகையாவது வாயுங் காலுங் கையும் மலம்பிரிக்கிற துவாரமுஞ் சலம்பிரிக்கிற துவாரமும் வசன கமன தான விசர்க்காநந்த மென்னும் விடயங்களோடுங்கூடிச் சீவிக்குமிடத்துச் சரீரந் தொழிற்பட்டுச் சீவிக்கையாலே யப்படிச் சொன்னதென அறிக. வாக்காதி ஐந்தினும் வாக்கென்ற இந்திரியத்தை வாயென்றதற்கு பிம் “கைகாலவை தருவாயொடு பாயுருபத்தமென் றாங்கவையேசூசூ எம், சித்தியாரில் சூசூவாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவியாகும்” (2.63) எம் வருமது கண்டுகொள்க. இனி, இராசதஞ்சேர் வாக்காதி வைகாரி மருவிவரும் என்பதற்கும் சத்தந்தன்னை முதலாகிய தாமதமிகு மாத்திரை பின்தருமென்பதற்கும் நுட்பம் முன்னர்ச் செய்யுளில் வந்த விதப்பிலே கண்டுகொள்க. அந்தத் தாமத குணத்தில் தோன்றப்பட்ட சத்தாதிகள் ஐந்தையுந் தன்மாத்திரைகளென்று பெயர் கூறியதேதென்னில், அந்தந்த இந்திரியங்களுக்குத் தக்கதாக நின்று காரியப்படுகையாலும் அப்படிக் காரியப்படுமிடத்துத் தத்தங் குணங்களுக்கு ஏற்றக்குறைவின்றி நிற்கையாலும் அப்படிச் சொன்னதென அறிக. இனி, சத்த முன்னதனில் வெளியாதி யொன்றொன்றாகும் எ கு சத்தாதிகள் ஐந்தினும் பூதாதிகள் ஐந்துந் தோன்றுமென்ப தன்றியே, சத்தத்திலே பரிசமும் பரிசத்திலே உருவமும் உருவத்திலே இரதமும் இரத்ததிலே கந்தமுமாக ஒன்றிலே ஒன்றாகத் தோன்றுமென்றும், அன்றியும் ஆகாயத்திலே வாயுவும் வாயுவிலே தேயுவும் தேயுவிலே அப்புவும் அப்புவிலே பிருதிவியுமாக ஒன்றிலே ஒன்றாகத் தோன்றுமென்றும் பொருளுரைப்பாருமுளர். அன்றியும் பூதங்கள் ஐந்துக்கும் ஒவ்வொரு குணங்கள் ஏறியிருக்கும் என்பாருமுளர். ஒவ்வொரு குணம் ஏற்றமாவது ஆகாசத்துக்குச் சத்தமும், வாயுவுக்குச் சத்தமும் பரிசமும், தேயுவுக்குச் சத்தமும் பரிசமும் ரூபமும், அப்புவுக்குச் சத்தமும் பரிசமும் ரூபமும் இரதமும், பிருதிவிக்குச் சத்தமும் பரிசமும் ரூபமும் இரதமுங் கந்தமுமென அறிக.
ஆக இங்ஙனங் கூறப்பட்ட மூவகையாயுள்ள பொருளும் அப்படியுண்டானாலும், சத்தமுன்னதனில் வெளியாதி யொன்றொன்றாகும் எகு சத்தாதிகள் ஐந்தினும் வெளியாதி ஐந்து பூதங்களுந் தோன்றுமென்பதொழிய அந்தப் பொருள்கள் இந்தச் சத்தத்துக்கு அகப்படாதென அறிக. அப்படிச் சத்தாதிகள் ஐந்தினும் பூதங்கள் ஐந்துந்தோன்றுமென்பதொழிய மற்றுப் பொருள்கள் இந்தச் செய்யுளுக்கு அகப்படாதென்பதற்கு, இந்நூலைப் பின்சென்றநூலாகிய திருநெறி விளக்கத்தில் இதற்கெதிரடை விருத்தமாகிய சூசூஎண்ணியகன் மேந்திரிய மென்றுசொல்லப் பட்ட இராசதமார் வாக்காதி யெய்திடும் வைகாரி, நண்ணியிடும் பூதாதி தாமதன்மாத் திரையால் நவிலுறு சத்தாதியினை நல்கியிடுஞ் சத்தக், கண்ணதனில் வெளிபரிசங் காலுருவந் தன்னிற் கனலிரதத் தேபுனனற் கந்தத்தே தரையா, மண்ணிறுதி கலைமுதலா வந்தவகை மடங்கு மாலயனா திகள்வடிவும் வந்தமைபோ லொடுங்கும்” (என்பது காண்க). இந்தச் செய்யுளில் சத்தாதிகள் ஐந்தினும் வெளியாதியாகிய பூதம் ஐந்துந் தோன்றுமென்றபடியா லதற்கும் இப்படிக் கண்டுகொள்க. அன்றியுந் தத்துவ விளக்கத்தினும் சூசூகொள்ளுமத் தத்துவம்” என்ற செய்யுளின் பிற்பதத்தில் சூசூபின், தெள்ளிய தன்மாத்திரை யின்வருஞ் சேர்ந்ததன் மாத்திரையின், ஒள்ளிய பூதங்க ளைந்துக்கு மாமென்ப ருற்பவமே” என்பதனாலுஞ் சத்தாதிகள் ஐந்தினும் வெளிபாதியாயுள்ள பூதங்கள் ஐந்துந் தோன்றுமென்பதே யந்தப் பதத்துக்குப் பொருளென அறிக. இந்த மாயா காரியமான தத்துவம் முப்பத்தொன்றென்று நூல்களிற் சொல்லியிருக்க முன்னர்ச் செய்யுளில் தோன்றுந் தத்துவம் பதினைந்தும் இந்தச் செய்யுளில் தோன்றுந் தத்துவம் பதினைந்தும் ஆகத் தத்துவம் முப்பதொழியப் புருட தத்துவம் ஒன்றுக்குந் தோற்றஞ் சொல்லாத தேதென்னில், அது தத்துவ சமூகத்தில் தோற்றமாகையால் சூசூஐவகையா லுறுபயன்கள் நுகரவருங் கால மதுபுருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர்” (சிவப்பிரகாசம், 41) என்று காரியப்படும் அவதரத்துத் தோற்றமாகையால் இவ்விடத்துச் சொன்னதில்லையென அறிக; அன்றியும் ஒடுக்கஞ்சொல்லும் அவதரத்தும் சூசூதத்துவ மெண்மூன் றுஞ்சென் றான்மதத் துவத்தொ டுங்கும் வித்தையி லொடுங்கு மாறும்சூசூ (சித்தி, 2.72) என்றமையால் வித்தியா தத்துவம் ஏழாயிருக்கவும் வித்தையில் ஒடுங்குமாறுமென்றது கொண்டே புருடதத்துவத்துக்கு ஒடுக்கஞ் சொன்னதில்லையென அறிக.
இதனாற் சொல்லியது இராசத குணத்தைப் பொருந்தின வைகரி ஆங்காரத்திலே கன்மேந்திரியங்களாகிய வாக்காதிகள் ஐந்துந் தோன்றுமென்றும் தாமதகுணத்தைப் பொருந்தின பூதாதி ஆங்காரத்திலே தன்மாத்திரைகளாகிய சத்தாதிகள் ஐந்துந் தோன்று மென்றும் அந்தச் சத்தாதிகள் ஐந்தினும் பூதங்கள் ஐந்துந் தோன்று மென்றும் அந்தப் பூதங்களுக்கு அதிதேவதைகள் சதாசிவமுதல் பிரமா ஈறாகிய தெய்வங்களென்றும் இவையிற்றுக்கு ஒடுக்கமுந் தோன்றின அடைவிலே யென்றும் வருமுறைமையை அறிவித்தது.
‘உருவாதி’ (22) யென்ற விருத்தமுதல் இந்த விருத்த முடிவாகிய செய்யுளாறும் அசுத்தமாயா இலக்கணம்.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லிவந்த மாயையாலுண்டான சரீரத்தை ஆன்மாக்கள் பொருந்திக் கன்மத்தைப் புசிக்கையினாலே யந்தக் கன்மத்தினியல்பு மேற்செய்யுள் நான்கினால் அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 9

நண்ணியிடும் உருவதனுக் கேது வாகி
நானாபோ கங்களாய் நாசோற் பத்தி
பண்ணிவரும் ஆதலால் அனாதி யாகிப்
பலவாகி அணுக்கள்தொறும் படர்வ தாகி
எண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்றும்
இயல்பினதாய் மதிகதமாய் இருபயனாம் பாவ
புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்.
தீங்கும் நலனுஞ் செய்தவா றடையும்
பாங்குறு வினையைப் பாரித் துரைத்தது.

பொழிப்புரை :

கன்மநெறி திரிவிதம் ஆன்மாக்களுக்கு வந்து கூடுங் கன்மத்தின்வழி மூன்று பிரகாரமாயிருக்கும். அவையாவன: நற்சாதியாயுப்போகக் கடனதெனவரும் நல்லசாதி பொல்லாச்சாதியென்றும் ஏறின ஆயுள் குறைந்த ஆயுள் என்றும் நல்ல போகம் பொல்லாப் போகம் என்றும் வாரா நிற்கும். இவை எப்பொழுதுண்டானதென்னில்; மூன்றுமுயி ரொன்றிற் கலத்தல் தொன்மை இந்தக் கன்மங்கள் மூன்றும் ஓரான்மாவிலே கூடுகிறது அநாதியேயுள்ளதாம். சாதியு மாயுளும் முன்னேயுள்ள வூழானாலும் போகம் இப்பொழுதுண்டான முயற்சியல்லவோ என்னில்; அது ஊழல்லதுணவாகா அந்தப் புசிப்புந் ஊழ்வினையாலல்லாது உண்டாகாது. அதுதான் முன்பே யார்ச்சித்த முறையிலே வருமோ முற்பிற்பாடாக மாறிவருமோ என்னில்; தானும் அப்படி யார்ச்சித்த ஒழுங்கிலே வருகிறதுமுண்டு. அன்றியும்; தொடங்கடைவின் அடையாதே தோன்றும் மாறி அப்படி வாராமல் வன்மை மென்மைகளுக்கீடாக மாறிவருகிறதுமுண்டு. அப்படி வருகிற கன்மத்தின் விதி எங்ஙனே என்னில்; தன்மைதரு தெய்விக முற்பௌதிக மான்மிகமாந் தகையிலுறும் இயல்பிலே வரப்பட்ட கன்மங்கள் தெய்வத்தாலும் பஞ்ச பூதங்களினாலும் ஆன்மாக்களாலும் வரும்; அவை வருமிடத்து; அசேதன சேதனத்தாலுஞ் சாரும் அறிவில்லாதவையாலும் அறிவுள்ளவையாலும் வரும். ஆகையால்; நன்மையோடு தீமைதருசேதனனுக்கு இவண் ஊண் நாடில் இங்ஙனம் நன்மை தீமைகளைப் பொருந்தி வருகிற ஆன்மாவுக்கு இவ்விடத்திற் புசிப்பை விசாரிக்கில்; அதன் ஊழ்வினையாய் நணுகுந்தானே முன் ஜநநத்திற் புசிக்கச் செய்தே யேறின ஆகாமியந் தானே இந்த ஜநநத்துக்குப் புசிப்பாக வந்து பொருந்தும். மூன்றும் உயிரொன்றிற் கலத்தல் எகு ஓரான்மாவினிடத்திலே மூன்று காரியம் நிற்குமென்று பொருள்கூறியதேதென்னில், ஆன்மாக்கள் யாதாமொரு சரீரங்களைக் கன்மத்துக்கீடாக எடுக்குமிடத்து யாதாமோரு சரீரவர்க்கங்களும் வயதுகளும் புசிப்புக்களுமல்லாமல் எடாதாகையாலே யப்படிச் சொன்னதென அறிக. இனி அது ஊழல்லது உணவாகா எகு இப்பொழுதுண்டான புசிப்புக்களும் ஊழாலொழிய வுண்டாகாதென்று பொருள்கூறியதற்கு வழியேதென்னில், ஆன்மாக்கள் யாதாமொரு கன்மங்களைப் புசிக்குமிடத்து வந்து கூடினதற்குந் தவறு வருகையாலும் நினையாதது வந்து கூடுகையாலும் ஊழாலல்லது புசிப்புண்டாகாதென்றதென அறிக. இதற்கு பிம் திருவள்ளுவப்பயனில் “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்’’ (380) எது கண்டுகொள்க. இனி தொடங்கடைவி னடையாதே தோன்றும் மாறி எகு கன்மத்தின் வழி வன்மை மென்மைகளுக்கீடாக மாறி வருகிறதும் உண்டென்று பொருள்கூறியதேதென்னின் முந்தச்செய்த கன்மம் பிற்பட்டும் பின்பு செய்த கன்மம் முற்பட்டும் வருகையாலே யப்படிச் சொன்னதென அறிக. அது எங்ஙனேயென்னில் ஒருவன் பயிர் செய்யுமிடத்து முந்த வல்விதையை விதைத்துப் பின்பு இளவிதையை விதைத்தாலும் அந்த இளவிதைமுந்தப் பயன்படுத்துமாறு போலக் கன்மத்தின் மிகுதி முந்தக் பயன்படுமென அறிக. இனி, தன்மைதரு தெய்விக முற்பௌதிக மான்மிகமாம் எகு தெய்வத்தாலும் பஞ்ச பூதத்தாலும் ஆன்மாக்களாலும் வருமென்றதற்கு வழியேதென்னில் தெய்விக கன்மமாவது மாதாவின் கருப்பக்கோளகையிலே இவனிருக்குமிடத் துண்டான விதனம் ஜநநமரணத்தில் உண்டான விதனம் யமதண்டம் நரகவேதனை இவை முதலாக உள்ளவையிற்றிலே துக்கப்படுதலென அறிக. இனி பஞ்சபூதங்களால் வருகிற பௌதிக கன்மமாவது குளிர் வெப்பம் மழை காற்று மின் இடி சுவர்விழுதல் கல்விழுதல் இவை முதலாக உள்ளவையிற்றிலே துக்கப்படுதலென அறிக. இனி ஆன்மிக கன்மம் ஆன்மாக்களால் வருகையாவது சரீரத்தினாலும் மனத்தினாலுந்துக்கப்படுகை. இதற்கு வழியேதென்னில் தத்தஞ் சரீரத்திலுண்டான வியாதிகளினாலும், மிருகங்களினாலும், பறவைகளினாலும் இராக்ஷதராலும் பசாசுகளாலும் கள்வராலும் மற்றுள்ள மனிதராலும் இவை முதலாயுள்ள சரீர துக்கங்களென அறிக. இனி மற்ற மனோ துக்ககமாவது பிறருடைய கல்வியுஞ் சௌந்தரியமுஞ் செல்வமுங் கண்டு பொறாமை அபிமானங்கெடுதல் எழுந்தது புத்தியாகச் செய்தல் கோபியாய்த் திரிதல் என்னும் இவை முதலாயுள்ளவையென அறிக. மற்றச் சுக கன்மங்களும் இங்ஙனஞ் சொல்லிவந்த ஒழுங்கிலே கண்டு கொள்க.
ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட மூவகைத் துக்கமாகிய கன்மங்களுக்கு பிம் ஞானாமிர்தத்தில் “ஆதி தெய்விக மாதி பௌதிக மாதி யத்தி யான்மிக மென்ன ஓதிய துக்க மூன்றினத் தியான்மிக மெய்யில் மனத்தி லையமி லிரண்டே வளியிற் பித்தில் விளையா ஈளையி னூனுகு தொழுனைகயி லுதகக் கொட்டில் வெப்பிற் சூலையின் மக்களின் விலங்கின் அலகையிற் கள்வரிற் பறவையின் நிருதரில் மைந்தரின் மகளிர் மணத்திடை தணப்பிற் பேரறம் வளர்ப்பிற் பெருந்திரு நுகர்விற் சீரிய யாக்கை மாதுயர் மாசு மனத்துறு துயரம் நினைப்பருஞ் சோகம் அறிவுருவாக்க மடையுநற் பொறாமை மான மாக்கலம் பூணாது மறுத்த லிச்சையை நினைத லிருஞ்சின மிகுத்தல் இனையவை முதலா நினைவருந் திறத்த ஆதி பௌதிகஞ் சீத மாமழை யுருப்பவிர் வேனில் உட்குவரு கடுங்கா லிருள்கீ ழிடுமின் பெருவிற லசனி மன்னுயிர்க் குறுகண் துன்னியா றருந்தல் ஆதி யாய வீவருந் திறத்த ஆதி தெய்விகம் பேதையர் வையின்அக் கருங்குழி யழுங்கல் பிறப்புறும் போது திரைவருந் தீமை வரைவில் பேதைமை மடங்கலாருயிர் தொடங்கின வவ்வலின் யாவரும் விழையாக் கோள்வாய் நிரயத்து வீழ்ந்தன ரெழாஅ வான்கழி துன்ப மினைய மாலைய துயரிடை வினைநகர் கருங்கைக் கைமைக் களிறுகைத் திரும்புலப் பெரும்படை விரிந்து சூழத் திருந்தா நாற்கதிப் பவனி யுலாஅய் ஆர்த்தவிழ் திறம்பிற போற்றும்மதி புரிந்தே ‘’ (26) எது கண்டு கொள்க. அன்றியும் இங்ஙனங் கூறிவந்த மூவகைத் துக்கஞ் சிவாகமத்தில் கிரந்தத்திலே யெடுத்து சதிர்த்தின சங்கிரகத்திலே சேர்ந்த கிரந்ததத்தினுங் கண்டுகொள்க. அந்தக் கிரந்தத்தின் அத்தமும் முற் கூறிய ஞானாமிர்தத்தின் அத்தமும் ஒப்புநோக்கிக் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது, கன்மமானது காரியப்படுமிடத்து ஆயுளும் போகமும் சாதியுமாகநின்று காரியப்படுமென்றும் அது ஊழ் வினையாலொழிய வாராதென்றும் அது வருமிடத்து ஆர்ச்சித்த ஒழுங்கிலெ வருமென்றும், அன்றியும் வன்மை மென்களுக்கீடாக மாறியும் வருமென்றும் அது தெய்விக கன்மமாகவும் பௌதிக கன்மமாகவும் ஆன்மிக கன்மமாகவும் வருமென்றும் புண்ணிய பாவங்களுக்குடனாய் நிற்கிற ஆன்மாக்களுக் கிவையெல்லாம் ஊழ்வினையால் வருமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் எடுத்த உடலிலே புசிக்கிறதெல்லாம் ஊழேயானால் மேலைக்கு ஜநநத்துக்கேதுவாகிய ஆகாமியம் உண்டாகிற வகையெப்படியென்று வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 10

மேலைக்கு வருவினைஏ தென்னில் அங்கண்
விருப்புவெறுப் பெனஅறிஅவ் வினையும் எல்லாம்
மூலத்த வினைப்பயில்வாம் என்னின் நாம்ஏன்
முற்றிஅதன் பயன்உனக்கு முளைக்கு மென்பர்
ஞாலத்து வினைகள்இரு திறனாகும் புந்தி
நண்ணாத வினை நணுகும்வினையென வொன் றிரண்டாம்
ஏலத்தான் இதம்அகித மாம்இதனால் வழுவா(து)
எய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே.
.
மன்னிய விருப்பு வெறுப்பால் வல்வினை
பின்னும் விளையும் பெற்றியை யுரைத்தது.

பொழிப்புரை :

மேலைக்கு வருவினை யேதென்னில் இந்த உடலிலுண்டாகிய புசிப்பெல்லாம் ஊழேயாகில் மேலைக்கு ஜநநமுண்டாகத்தக்க கன்மத்துக்கேது எப்படியென்னில்; அங்கண் விருப்பு வெறுப்பென அறிக அந்த ஊழாகிய சுகதுக்கம் புசிக்கிற அவதரத்திலே யுண்டாகிய பிரியாப்பிரியங்கள் வித்தாக மேலைக்கு ஜநநமுண்டாமென அறிவாயாக; அவ்வினையுமெல்லாம் மூலத்த வினைப் பயில்வாமென்னில் அப்படிப் பிரியாப்பிரியப்பட்டுப் புசிக்கிறது முன்னை வினையின் பகுதியல்லவோ என்னில், அப்படியானாலும்; நாமேன் முற்றி அதன் பயனுனக்கு முளைக்கு மென்பர் நாம் முன்பு பண்ணின கன்மமல்லவோ இப்பொழுது புசிக்கிறோமென்று விசாரியாமல் நாம் செய்தோம் பிறர் செய்தாரென்று நீ சுட்டுகையாலே யந்தச் சுட்டாலுள்ள பயன் மேலைக்கு உற்பவிக்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆகையால் ; ஞாலத்து வினைகள் இருதிறனாகும் பிரபஞ்சத்திற் புண்ணிய பாவங்கள் இரண்டு வகைப்பட்டிருக்கும். அஃதெங்ஙனே என்னில்; புந்தி நண்ணாத வினை நணுகும் வினையென ஒன்றிரண்டாம் புத்தி பூர்வமாகச் செய்ததென்றும் அபுத்தி பூர்வமாகச் செய்ததென்றும் இரண்டு வகைப்பட்டிருக்கும். அன்றியும் புத்திக்குப் பொருந்திய காரியமென்றும் பொருந்தாத காரியமென்றுஞ் சொல்லவுமாம். அதனை விசாரிக்குமிடத்து; ஏலத்தான் இதமகிதமாம் அநாதியே ஹிதமென்றும் அஹிதமென்றும் இரண்டு வகையாம் ; இதனால் வழுவா தெய்தியிடும் புண்ணிய பாவங்க ளென்றே இந்த ஹிதத்தாலும் அஹிதத்தாலுந் தப்பாமற் பொருந்தியிடும் புண்ணிய கன்மமும் பாவ கன்மமும்.
இப்பொழுது புசிக்கிறதெல்லாம் ஊழேயானால் மேலைக்கு ஆகாமிய முண்டாகிற தெப்படியென்று கேட்டதற்கு இந்தப் பிராரத்தம் புசிக்கச்செய்தே யுண்டான விருப்பு வெறுப்பாகிய ஹிதாஹிதங்களாலே ஆகாமியங் கட்டுப்படுமென்று ஆசாரியர் விடைகொடுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூமுற்செயல் விதியை யிந்த முயற்சி யோடநுப வித்தா, லிச்செயல் பலிக்கு மாறென் னிதமகி தங்கள் முன்னர், அச்செய லானா லிங்கு மவைசெயின் மேலைக் காகும், பிற்செயா தநுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி” (2.11) எம், அந்த விருப்பு வெறுப்பும் அநாதியே தொன்றுதொட்டு வருமென்பதற்கு பி ம் சித்தியாரில் சூசூமேலைக்கு வித்து மாகி விளைந்தவை யுணவு மாகி, ஞாலத்து வருமா போல நாஞ்செயும் வினைக ளெல்லாம், மேலத்தான் பலமாச் செய்யு மிதமகி தங்கட் கெல்லாம், மூலத்த தாகி யென்றும் வந்திடு முறைமை யோடே” (2.12) எம் கண்டு கொள்க. அப்படி முன்புசெய்த கண்மத்துக்கீடாகவல்லவோ பிறர்செய்தாரென்று சுட்டுகையால் அந்தச் சுட்டாலுள்ள பயன் மேலைக்கு விளைவாமென்பதற்கு பி ம் சித்தியாரில் சூசூயான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்னு மிக்கோணை ஞானஎரி யால் வெதுப்பி நிமிர்த்துத், தான்செவ்வே நின்றிடவத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும், நான் செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம், ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பி னல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே” (10.2) எது கண்டுகொள்க. ஞாலத்து வினைகளாகிய இருவகைப் பயனாகிற புண்ணிய பாவங்கள் புத்தி பூர்வத்தாலும் அபுத்தி பூர்வத்தாலும் உண்டாமென்ற தேதென்னில், அபுத்தி பூர்வமாவது ஒரு பொல்லாங்குகளிலாவது நன்மைகளிலாவது மனதும்வாக்குந் தன்னையறியாமல் ஓடினாற் பின்பு நம்மை அறியாமல் இப்படி வந்ததாயிருந்ததெனக் கொள்கை ; புத்தி பூர்வமாவது ஒருவருக்கு ஒரு நன்மை தீமைகளைச் செய்யுமிடத்து இவர்களுக்கென்ன பொல்லாங்கு செய்வோமென்றும் என்ன நன்மை செய்வோமென்றும் மனதும் வாக்குங் காயமுங்கூடி நினைத்துஞ் சொல்லியுஞ் செய்தும் வருகையென அறிக.
இதனாற் சொல்லியது, இந்த உடலிலே புசிக்கிறதெல்லாம் பிராரத்தமானால் மேலைக்கு ஆகாமியம் உண்டாம்வழி எப்படியென்று வினவ இப்பொழுது புசிக்கிறது முன்புள்ள ஊழ்வினையின் பயனல்லவோ என்று விசாரியாமல் நான் செய்தேன் பிறர் செய்தாரென்ற விருப்பு வெறுப்பாகிய சுட்டால் மேலைக்கு ஜநநமுண்டாமென்றும் அவை வருமிடத்துப் புத்தி பூர்வத்தாலும் அபுத்தி பூர்வத்தாலும் வருமென்னும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் உண்டாக்கப்பட்ட ஆகாமியத்தாற் புண்ணிய பாவங்கள் உண்டாம்வழி எப்படியென்றும் அதுபோம்வழி எப்படி என்றும் வினவ மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 11

உற்றதொழில் நினைவுரையின் இருவினையும் உளவாம்
ஒன்றொன்றால் அழியாதூண் ஒழியா துன்னில்
மற்றவற்றின் ஒருவினைக்கோர் வினையால் வீடு
வைதிகசை வம்பகரும் மரபில் ஆற்றப்
பற்றியது கழியும்இது விலையால் ஏற்கும்
பான்மையுமாம் பண்ணாது பலிக்கும் முன்னம்
சொற்றருநூல் வழியின்வரின் மிகுதி சோரும்
சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே.
.
ஒழியா விருவினை யொன்றினா லொன்றிங்
கழியா தநபவ மாகு மென்றது.

பொழிப்புரை :

உற்றதொழில் நினைவுரையி னிருவனையு முளவாம் பொருந்தப்பட்ட உடம்பின் தொழிலாலும் மனதின் நினைவாலும் வாக்கின் சொல்லாலும் புண்ணிய பாவங்கள் இரண்டுமுண்டாம். அப்படி உண்டாமிடத்து ஒரு கன்மங்கொண்டு ஒரு கன்மத்தைப் போக்கிக் கொள்ளலாமோ இரண்டும் இரண்டாக அநுபவிக்க வேணுமோ என்னில்; ஒன்றொன்றால் அழியாதூண் ஒழியா துன்னில் புண்ணியத்தாற் பாவமும் போகாது, பாவத்தாற் புண்ணியமும் போகாது, ஆகையாலே விசாரிக்குமிடத்துப் புசிப்புந் தவிராது. அப்படியானால் ஒருவர் செய்த பாவ கன்மங்களைப் போக்கிக் கொள்ளுகைக்கு வழியில்லையோ என்னில் ; மற்றவற்றின் ஒருவினைக்கோர் வினையால் வீடு வைதிக சைவம் பகரும் அப்படிச் செய்யப்பட்ட வினைகளில் ஒரு வினையைக்கொண்டு ஒரு வினையைப் போக்குதற்கு உபாயம் வேதாகமங்கள் சொல்லா நிற்கும், மாபிலாற்றப்பற்றியது கழியும் அந்த வேதாகமங்கள் சொன்ன முறைமையிலே செய்தாற் கூடின கன்மங்கள் நீங்கும். அப்படிச் செய்யமாட்டாதவர்களுக்கு இந்தத் தோஷங்கள் நீங்கும் வழி எங்ஙனே யென்னில்; இது விலையாலேற்கும் பான்மையுமாம் பண்ணாது பலிக்கும் இந்தத் தோஷங்கள் நீங்குகைக்குத் தான்செய்து கொள்ளமாட்டா னில்லையாகிலும், சில திரவியங்களைக் கொடுத்துச் செய்ய வல்லவர்களைக் கொண்டு செய்வித்துக் கொள்ளுகையாலே தான் செய்யாதிருக்கிலுந் தனக்குப் பயனாகப் பலிக்கும். இங்ஙனம் உண்டான தோஷங்களைப் போக்கிக்கொள்ளலாமென் றிருக்கச்செய்தே ஒன்றொன்றால் அழியா தென்றதேதென்னில், அஃதவாது; முன்னம் சொற்றரு நூல் வழியின்வரின் மிகுதிசோரும் முன்னே சொல்லப்பட்ட வேதாகமங்களின் முறைமையிலே ஒருவன் தான் செய்த தோஷத்துக்குத்தக்க பிராயச்சித்தஞ் செய்தாலும் அந்தத் தோஷத்தின் கௌரவங் கெட்டுத் தோஷமாத்திர நிற்கும். அதேதென்னில், ஒருவன் பிரமஹத்தி கோவதை முதலாயுள்ள தோஷங்கள் செய்து அதற்குத்தக்க பிராயச்சித்தஞ் செய்தாலும் நரகவேதனைக்குள்ள கௌரவங்கெட்டுக் கொலைத் தோஷமாத்திரம் நிற்குமென அறிக. அப்படிக் கொலைமாத் திரமாக நின்றது ஏதுசெய்யு மென்னில்; சோராதங் கது மேலைத் தொடர்ச்சி யாமே நீங்கிப்போகாத கன்மம் மேலுடல் எடுக்கைக்குத் தொந்தனையாம். ஆகையினாலே ஒன்றொன்றால் அழியாதெனக் கொள்க.
உற்ற தொழில் நினைவு உரையாகிய மனவாக்குக் காயங்களால் உண்டாகிய கன்மங்களாவன: அருள்நினைவு பொறை பிறர்பொருள் விரும்பாமை செய்ந்நன்றி மறவாமை அபிமானம்பேணல் அழுக்காறின்மை அவாவறுக்கை பிறர்விதனங்கண் டிரங்குதல் பிறருக்கு அறிவுஞ் செல்வமும் அழகும் மோக்ஷமுமாகிய இவை நான்குந் தம்மினும் மிகுதியாக வேணுமென்று விரும்பி நினைக்கை ஆக இவையித்தனையும் மனதிலுண்டாகிய நல்வழி நினைவென அறிக; இவையித்தனைக்கும் மாறுபட நினைக்கை தீவழிநினைவென அறிக. இனி, வாக்கினால் உண்டாகிய கன்மமாவது தன்மம் ஞானங்கூறுதல் புறங்கூறாமை உண்மையே சொல்லுதல் நூலுரைகூறல் இனியன சொல்லுதல் கடுஞ்சொல் விடுதல் வேதாகமங்களை ஓதல் ஆக இவையித்தனையும் வாக்கினாலுண்டாகிய நல்லுரையென அறிக ; இவையிற்றுக்கு மாறுபடக் கூறுகை தீய வசனங்களென அறிக. இனி, காயத்தினாற் செய்யுங் கன்மமாவது அரிதாய தவங்களைச் செய்தல் பூசைகள் ஓமங்கள் செய்கை பகுத்துண்ணல் பூமரங்கள் தோப்புகள் வைக்கை பிறர்மனை விழையாமை குளம்வெட்டுகை கூவல்தோண்டல் தன்மசாலை பள்ளிக்கூடம் திருக்கோயிலெடுக்கை மடங்கட்டுகை ஆக இவையித்தனையுங் காயத்தினாற்செய்யும் நற்றொழில்களென அறிக ; இவையிற்றுக்கு மாறுபாடாகச் செய்கையெல்லாந் தீவழித்தொழிலென அறிக. இங்ஙனம் மனத்தினால் நினைத்தும் வாக்கினாற் சொல்லியுங் காயத்தினாற் செய்தும் வருமென்பதற்கு பி ம் ஞானாமிர்தத்தில் சூசூபொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி யுள்ளும் உள்ளச் செய்தி தெள்ளிதிற் கிளப்பின் இருள்தீர் காட்சி அருளொடு புணர்தல் பெரும்பொறை தாங்கல் பிறன்பொருள் விழையாமை செய்தநன்றறிதல் கைதவங் கடிதல் பால்கோ டாது பகலிற் றோன்றல் மான மதாணி யாணிற் றாங்கல் அழுக்கா றின்மை யவாவிற் றீர்தல் அருந்துய ருயிர்கட் கிருத்த காலை யழல்தோய் வன்ன ராதி யானாக் கழலு நெஞ்சிற் கையற் றினைதல் பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் துடக்கிற் கறிவும் பொறியுங் கழிபெருங் கவினும் தெறற்கருந் துறக்கமும் மறப்ப ஆங்குத் தம்மினும் வேண்டும் எண்ணரும் பெருங்குணம் வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள அறம்பெரி துரைத்தல் புறங்கூ றாமை வாய்மை கல்வி தீமையிற் றிறம்பல் இன்மொழி யிசைத்தல் வன்மொழி மறுத்தல் அறிவுநூல் விரித்த லருமறை கழறல் அடங்கிய அறைதல் கடுஞ்சொல் விடுதல் பயனீன்ற படிக்கல் படிற்றுரை கெடுதல் காயத் தியைந்த வீயா வினையுள் அருந்தவந் தொடங்கல் திருந்திய தானங் கொடையுடம் படுதல் படையுடம் படாமை யமரர்ப் பேண லாகுதி யருத்தல் ஒழுக்க மோம்பும் விழுப்பெருங் கிழமை யுடம்பிடி யேந்தி யுடல் தணிந் திடுமா றடைந்த காலை யவணியல் துயரந் தேரா ரல்லர் தெரிந்து மாருயிர் பெரும்பிறி தாகலி னிரும்பிண மிசைஞரி னொராங்கு படாஅ மாசில் காட்சி ஐம்பெரும் பாதகத் தாழி நீந்தல் இந்தியப் பெரும்படை யிரிய நூறும் வன்தறு கண்மை வானினிட் டாங்கு நோவன செயினு மேவன விழைதல் தவச்சிறி தானு மிகப்பல விருந்து பாத்தூண் செல்வம் பூக்கம ழிரும்பொழில் தன்மனைக் கிழத்தி யல்லதைப் பிறர்மனை யன்னையிற் றீரா நன்ன ராண்மை கார்கோ ளன்ன கயம்பல கிளைத்தல் கூவல் தொட்டல் ஆதுலர் சாலை யறங்கரை நாவி னான்றோர் பள்ளிக் கடவுட் கண்ணிய தடவுநிலை கோட்டம் இனையவை முதலா நினைவருந் திறத்த புறத்தன மாதோ அறத்துறை மறத்துறை யிவற்று வழிப்படா தெதிர்வன கெரீஇ யுஞற்றென மொழிப வுணர்ந்திசி னோரே” (24) எ து கண்டுகொள்க. ஒருவினைக்கோர் வினையால் வீடு என்றது சமயாசார முதலாயுள்ளதற்குத் தவறுவந்தால் அதற்குப் பிராயச்சித்தஞ் செய்துகொள்ளவுமா மென்றதென அறிக.
இதனாற் சொல்லியது மனவாக்குக் காயங்களினாலே கன்மமேறு மென்றும் அப்படி ஏறின கன்மங்களை நீக்கிக்கொள்ளுகைக்குப் பிராயச்சித்தமும் அந்தப் பிராயச்சித்தத்தாற் போகாத கன்மத்துக்கு மேலும் ஜனனதொந்தனை உண்டாமென்னு முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் பஞ்ச மலங்களின் காரண காரியங்களை சூஏகமாய்’ என்னும் விருத்தந்தொடங்கி இவ்வளவும் அருளிச்செய்து, மேலிந்தப் பஞ்ச மலங்களின் தொகையும் இவையிற்றுடன் கூடிநிற்கும் ஆன்மாக்களுக்கு இவை நீங்கியே அருளைப் பெறவேணுமென்னும் முறைமையையும் அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

மோகமிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கும்
மூலஆ ணவம்ஒன்று முயங்கி நின்று
பாகமிக உதவுதிரோ தாயி ஒன்று
பகர்மாயை ஒன்றுபடர் கன்ம மொன்று
தேகமுறு கரணமொடு புவன போகச்
செயலாரும் மாமாயைத் திரட்சி ஒன்றென்(று)
ஆகமலம் ஐந்தென்பர் ஐந்தும் மாறா(து)
அருளென்ப தரிதென்பர் அறிந்து ளோரே.
.
அலக்கண் படுமுயிர்க் கைந்து வகையா
மலத்தின் பகுதியை வளப்புற வகுத்தது.

பொழிப்புரை :

மோகமிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கு மூல ஆணவ மொன்று அறியாமை மிகவுண்டாம்படி ஆன்மாக்கள் தோறுஞ் சகசமுமாய் அநாதியுமாய் இருக்கப்பட்ட ஆணவமலமொன்று ; முயங்கி நின்று பாகமிக உதவு திரோதாயி ஒன்று அந்த ஆணவ மலத்தோடுங்கூடி நின்று அது பக்குவமாமளவும் ஆன்மாவை மறைந்து அந்த மலத்தைப் பாகம் வருத்துகிற திரோதமலமொன்று; பகர்மாயையொன்று ஆன்மாக்களுக்குத் தனுவாதிகளைக் கொடுக்கு மென்று சொல்லப்பட்டு வருகிற மயக்கத்தைச் செய்யும் அசுத்த மாயாகாரண மலமொன்று ; படர் கன்மமொன்று ஆன்மாக்கள் தோறும் விரிந்து அநுபவமாய் நிற்குங் கன்ம மலமொன்று; தேகமுறு கரணமொடு புவனபோகச் செயலாரும் மாமாயைத் திரட்சி யொன்று ஆன்மாக்கள் எடுக்கப்பட்ட பூததேகமாகிய தனுவும் அதனோடுற் றிருக்கப்பட்ட கரணமும் அதனோடுங் கூடிவரும் புவனமும் போகமும் ஆன்மாக்க ளோடுங்கூடி காரியப்படும் அவதரத்து அவையிற்றை முற்கூறிய அசுத்த மாயா காரணத்திலே நின்று சிவசத்திகள் தோற்றுவிக்கும் அவதரத்து அவையிற்றோடும் பொருந்தி நடத்தப்பட்ட சுத்தமாயையின் திரட்சியாகிய சுத்த தத்துவங்களென்னும் மலமொன்று. அன்றியும் இந்தப் பதத்துக்குப் பொருள்சொல்லு மிடத்து வித்தைகள் வித்தை யீசர் சதாசிவரென்ற விஞ்ஞானகலர்க்குத் தனுகரண புவன போகங்களைச் கொடுத்து நிற்கிற சுத்த மாயையென்பாருமுளர். அஃதிவ்விடத்துச் சொல்லவேண்டுவ தில்லையென அறிக. அதற்குக் குற்றமேதென்னில் இச்செய்யுள் சகலரை நோக்கிப் பஞ்ச மலங்களின் தொகை சொல்லுகையாலும் இந்தச் செய்யுளில் விஞ்ஞானகலர் பிரசங்கமில்லாதபடியாலும் பஞ்சமலங்கள் விஞ்ஞானகலர்க்கு இல்லாதபடியாலும் அப்படிச் சொல்லப்படாதென அறிக ; என்றாக மலம் ஐந்தென்பர் ஆகக் கூட்டி இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலம் ஐந்தென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆகையால் ; ஐந்தும் மாறா தருளென்ப தரிதென்ப ரறிந்துளோரே இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலம் ஐந்தையும் விட்டு நீங்காமல் ஆன்மாக்களுக்குத் திருவருளுண்டாகாதென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். மோகமிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கும் மூல ஆணவ மொன்று எகு ஆணவமல மொன்றாயிருக்க ஆன்மாக்கள்தோறுங் கூடிநின்று மறைக்குமென்று பொருள்படுத்துகைக்கு வழியேதென்னில், இருளானது ஒன்றாயிருந்தும் பல கண்களையும் மறைத்தாற்போல ஆணவ மலமும் அப்படியொன்றாயிருந்தாலும் பல ஆன்மாக்களையும் மறைக்குமென்றதென அறிக. இதற்கு பி ம் திருவருட்பயனில் சூசூபலரைப் புணர்ந்துமிருட் பாவைக்குண் டென்றுங் கணவற்குந் தோன்றாத கற்பு” (25) எ து கண்டுகொள்க. இனி முயங்கிநின்று பாகமிக வுதவு திரோதாயி யொன்று எகு அருளாகிய திரோதசத்தி ஆன்மாக்களை மறைக்கப்பட்ட இருளாகிய ஆணவ மலத்தோடுங் கூடிநின்று பாகம் வருத்துமென்று பொருள்கூறிய தேதென்னில், காணுங் கண்ணானதை மறைக்கப்பட்ட படலத்தை நீக்கப்பட்ட ஒளஷதமானது கண்ணோடுங்கூடி நின்று விதனமாக்கி அந்தக் கண்ணைத் தெரிவித்தாற்போல சிவனுடைய அருளானது திரோதமாய்நின்று ஆன்மாக்களை மறைக்கப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்தி அந்த மலபாகம் வந்தவாறே ஆன்மாக்களுக்கு ஞானம் பிரகாசிக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஏயுமும் மலங்கள் தத்தந் தொழிலினை யியற்ற ஏவுந், தூயவன் றனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்” (2.87) எ ம், இந்நூலினும் சூசூமுற் சினமருவு திரோதாயி கருணை யாகி” (48) எ ம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி பகர் மாயையொன்று எ கு அசுத்த மாயா காரண மலமொன்றென்று பொருள் கூறியதேதென்னில், ஆன்மாக்கள் சங்காரப்பட்டு ஒடுங்கும் அவதரத்துத் தாரகமாய் நின்றும் சிருட்டிகாலம் ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களாகிய கலையாதி தத்துவங்கள் தன்னிடத்திலே தோன்றுகைக்கு உபாதானமுமாயிருக்கிற காரணமாயை என்றதென அறிக. இதற்கு பி ம் தத்துவ விளக்கத்தில் சூசூஓதிய வல்வினை யூட்டக் கருவி யுடம்புலக, மாதிய போகமு மாய் நின்ற மாயை மயக்குவித்தே, போதந் தரும்பொரு ளாகிநிற் கும்புவ னாதிகளுக், காதியு மாய்விரிந் தந்தமு மாகி ஒடுங்கியதே” (22) எ ம், சித்தியாரில் சூசூநித்தமா யருவா யேக நிலையதா யகிலத் துக்கோர், வித்துமாய்ச் சித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர், சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமுமுயிர்க்காய், வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே” (2.53) எ ம், இந்நூலினும் சூசூஉருவாதி சதுவிதமாய்” (22) என்னும் விருத்தமும் ஆக இங்ஙனம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி, படர்கன்மம் ஒன்று எகு எங்கும் விரிந்திருக்கப்பட்ட கன்ம மலமொன்றென்று பொருள் கூறியதேதென்னில், ஆன்மாக்கள் எடுக்கப்பட்ட அச்சுக்கள் தோறுங் கூடிநின்று அவரவர்க்குண்டான புண்ணிய பாவங்களுக் கீடான புசிப்புக்களைக் கொடுத்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் தத்துவ விளக்கத்தில் சூசூபிணைந்தவக் கன்மம் பெருகிய வாசை யணுநுகர்தற், கணைந்தன கன்மம் இருவகைத் தாமறம் பாவமென்ப, தணந்து மணந்துந்தன் சார்பினிற் றோன்றுமன் சந்நிதியால், உணர்ந்தவர் வித்தும் விளைவு மொப்பாமென ஓதுவரே” (21) எ ம், சித்தியாரில் சூசூஇரு வினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம், வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்து” (2.40) எ ம், இந்நூலினும் சூசூஅணுக்கள் தொறும் படர்வ தாகி” (28) எ ம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி, தேகமுறு கரணமொடு புவனபோகச் செயலாரு மாமாயைத் திரட்சியொன்று எகு ஆன்மாக்களுக்கு உண்டான தனு கரண புவன போகங்களை நடத்துகிற சுத்த மாயையின் திரட்சியாகிய சுத்த தத்துவமல மொன்றென்று பொருள் கூறியதே தென்னில் அசுத்த மாயா காரியமாகிய கலையாதி தத்துவங்களைப் பிரேரிக்கப்பட்ட சுத்த மாயா காரியமாகிய சுத்த வித்தை யீசுரம் சாதாக்கியம் சத்தி சிவமென்னப்பட்ட சுத்த தத்துவங்கள் ஐந்தும் ஒருமல மென்றதென அறிக. அவையிற்றைப் பிரேரிப்பித்தது கொண்டே சுத்த தத்துவங்களை மலமென்னலாமோ என்னில் அப்படிச் சொல்லப்படுமென அறிக. அதற்கு வழியேதென்னில், சிவனுடைய அருட்சத்தியானது திரோதமாய் நின்று மலத்தைக் காரியப்படுத்த அது மலமென்று பெயர் பெற்றாற்போல இதற்கும் அப்படிச் சொல்லப்படுமென அறிக. இனி, ஐந்தும் மாறா அருளென்ப தரிதென்பர் அறிந்துளோரே எகு இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலங்கள் ஐந்தும் நீங்கினாலொழிய இந்த மலங்கள் ஐந்தோடுங்கூடி நிற்குமளவும் ஆன்மாக்களுக்கு ஜநநந் தொலையாதது கொண்டே அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் திருவாசகத்தில் சூசூமலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு மத்துறவே” (6.29) எ து கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, ஆன்மாக்களோடும் அநாதியாய் மறைக்கப்பட்ட ஆணவமலம் ஒரு மலமென்றும், அதனோடுங்கூடி அந்த மலத்தைப் பாகம் வருத்துவதான திரோதாயி ஒருமலமென்றும், அதனோடுங்கூடி வருகிற அசுத்த மாயா காரண மலமொன் றென்றும், அதனோடுங்கூடி விரிந்து வரப்பட்ட கன்ம மலமொன் றென்றும், அதனோடுங்கூடி வரப்பட்ட அசுத்த மாயா காரியமாகியதனு கரண புவன போகங்களை நடத்தகிற சுத்த மாயா காரியமாகிய சுத்த தத்துவங்கள் ஒரு மலமென்றும், ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலங்கள் ஐந்தும் நீங்காமல் ஆன்மாக்கள் முத்தியைப் பெறுகைக்கு வழியுண்டாகாதென்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள் என்னும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட பஞ்ச மலங்களோடுங் கூடிநிற்கிற ஆன்மாக்கள் அவையிற்றை நீங்கி அருளைப்பெறுகைக்கு வழி எங்ஙனே என்று வினவ அந்த மலங்கள் காரியப்பட்டுப் பாகம்வந்தே அருளைப் பெறவேண்டுகையால் அவை காரியப்படுகைக்கு வழியாகக் கேவலசகல சுத்தமென்று மூன்றவத்தையை வைத்துக்கொண்டு, இதிற்கேவலாவத்தையை முந்த அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

ஓங்கிவரும் பலஉயிர்கள் மூன்றவத்தை பற்றி
உற்றிடுங்கே வலசகல சுத்தமென உணர்க
ஈங்குவரும் கலாதியொடு குறிஉருவம் ஒன்றும்
இன்றிமல மன்றியொன்று மில்லையெனும் இயல்பாய்
ஆங்கறிவை அறிவரியன் அறிகருவி அணையா
ஆதலினால் இருள்மருவும் அலர்விழிபோல் அதுவாய்
நீங்கும்வகை யின்றிநித்த வியாபகமாய் அங்கண்
நிற்பதுகே வலமென்று நிகழ்த்தும் நூலே.
.
ஆருயிர் மூவகை யவத்தை யுறுமதிற்
கூரிரு ளவத்தைக் குறியிது என்றது.

பொழிப்புரை :

ஒங்கிவரும் பல உயிர்கள் மூன்றவத்தை பற்றி உற்றிடும் அநாதியே நிலைபேறாகி எண்ணிறந்து மிக்கு வருகிற ஆன்மாக்கள் மூன்று வகைப்பட்டிருப்பதாகிய அவத்தைகளோடுங்கூடி அநுபவியா நிற்பார்கள். அது ஏதென்னில்; கேவல சகல சுத்தமென உணர்க கேவலாவத்தை என்றுஞ் சகலாவத்தை என்றுஞ் சுத்தாவத்தை என்றும் அறிக. இவையிற்றின் முற்கூறிய கேவலாவத்தையாவது ; ஈங்கு வருங் கலாதியொடு குறியுருவமொன்று மின்றி மலமன்றி யொன்று மில்லையெனும் இயல்பாய் இவ்விடத்து விளங்கா நின்ற கலையாதி தத்துவங்களோடுங் கூடியறியப்பட்ட ஒரு நினைவுகளும் ஒரு காட்சிகளும் இல்லாமல் அறியாமையாயுள்ள ஆணவமல மொழிய வேறொன்று மில்லையென்றாற்போலும் இயல்பாயிருப்பதாய்;ஆங்கறிவை யறிவரியன் அவ்விடத்தில் ஆன்மா சிற்றறிவாயறியப்படும் பொருளாகிய தன்னையும் அறியமாட்டானாய் ; அறிகருவி யணையா அறிகருவிகளாகிய சுத்த தத்துவங்களும் அவ்விடத்துப் பொருந்தாது ; ஆதலினால் இருள் மருவும் அலர்விழி போலதுவாய் அப்படி நிற்கையாலே இருளைப் பொருந்தி நின்று விழித்துச் சீவிக்கிற கண்ணானது அந்த இருளின் வடிவு தானாய் நின்றாற்போல ; நீங்கும் வகையின்றி அந்த மலத்தைவிட்டு நீங்குகைக்கோர் உபாயமுமில்லையாய் ; நித்த வியாபகமாய் அவ்விடத் தழியாமல் அந்த மலத்தோடும் வியாபித்திருப்பதாய் ; அங்கண் நிற்பது கேவலமென்று நிகழ்த்தும் நூலே அப்படிக் கேவலத்துக்குத் தலமாயுள்ள அவ்விடத்திலே முற்கூறி வந்தபடியே நிற்கிற அதனையே கேவலாவத்தையென்று சொல்லும் திவ்வியாகமம்.
ஒங்கிவரும் பலவுயிர் எ கு அநாதியே நிலைபெற்று மிக்கு வருகிற ஆன்மாக்களென்று பொருள் கூறியதேதென்னில் அநாதியென்றது சிவனுள்ளவன்றே ஆன்மாக்களும் உண்டாகையால் அநாதி யென்றதென அறிக. நிலைபேறென்றதுஞ் சிவனைப்போல ஒருகாலத்தினும் அழியாமல் நிற்கையாலென அறிக. மிக்க உயிரென்றது பிரமவிஷ்ணுக்கள் முதலாயுள்ள ஆன்மாக்களைப்பற்றியென அறிக. இனி, மூன்றவத்தை என்பதற்குக் கேவலமென்றுஞ் சகலமென்றுஞ் சுத்தமென்றும் பொருள்கூறியதே தென்னில் கேவலமென்றது மாயா கருவிகளாயுள்ள காரிய மாயையும் நீங்கி ஆணவ மலத்தான் மறைப்புண்டு காரண மாயை தாரகமாக ஒடுங்கின அவதரத்தையென அறிக; இனி சகலமென்றது அப்படி நீங்கப்பட்ட தத்துவ முப்பத்தா றோடுங்கூடிச் சீவித்து நின்ற அவதரத்தையென அறிக; இனி சுத்தமென்றது முற்கூறிய கேவல சகலமிரண்டும் நீங்கிச் சிவனுடைய அருள்காட்டாகச் சென்று அந்தச் சிவத்தோடுங் கூடிநின்ற அவதரமென அறிக. இங்ஙனங் சொல்லப்பட்ட அவத்தை மூன்றுக்கும் பி ம் சித்தியாரில் சூசூகேவல சகல சுத்த மென்றுமூன் றவத்தை ஆன்மா, மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய்ப் பொறிக ளெல்லாங், காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம், ஓவினபோது சுத்த முடையனுற் பவந்து டைத்தே” (4.37) எ து கண்டு கொள்க. இனி, ஈங்கு வருங்கலாதி எ கு இவ்விடத்து விளங்கப்பட்ட கலாதிகளென்று சுட்டிப் பொருள் கூறியதேதென்னில் ஆசாரியன் அருளிச்செய்யச் சீடன் கேட்டிருக்குமவதரங் கருவிகளோடுங் கூடியிருந்துகேட்டறிந்து வருகையால் இவ்விடமென்ற சுட்டுக்கருவிகளோடுங் கூடியிருந்து சீவித்து வருகிற சகலாவத்தையென அறிக. இனி குறியுருவமொன்றுமின்றி எ கு ஒரு நினைவுகளும் ஒரு காட்சிகளும் இல்லையென்று பொருள் கூறியதேதென்னில் இவன் சகலனாகி நின்று சீவிக்கும் அவதரத்து உட்கரணங்களினாலே நினைத்தும் புறக்கரணங்களினாற் கண்டுங் கேட்டும் வருகையால் அந்தக் கேவலத்துக்கு அவையில்லாதபடியாலே அப்படிச் சொன்னதென அறிக. என்றிங்ஙனங் கேவலப்பட்டுக் கிடக்குமிடத்துக் காரிய மாயையாயுள்ள கலையாதி தத்துவங்களோடுங்கூடிச் சீவிக்கிற குணங் குறிகளுமில்லை யென்பதற்கு பி ம் சித்தியாரில் “அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடுஞ், செறிவிலன் கலாதி யோடுஞ் சேர்விலன் செயல்க ளில்லான், குறியிலன் கர்த்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான், பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகே வலத்தில் ஆன்மா” (4 38) எ து கண்டு கொள்க. இனி மலமின்றி யொன்றுமில்லை யெனும் இயல்பாய் எ.கு. கேவலத்துக்கு ஆணவமல மொன்று மொழிந்து மற்றொன்று மில்லை யென்றாற் போலும் இல்லையா யிருப்பதாய் என்று சந்தேகமாய்ப் பொருள் படுத்தினதற்கு வழியே தென்னில், மலமன்றி ஒன்று மில்லை யெனும் என்ற உம்மை கொண்டும் இயல்பாயென்ற ஐயச்சொற்கொண்டும் செத்த மனிதரைப்போலக் கிடக்கின்றார்கள் பட்டமரம்போலே நிற்கிறது என்ற சொல் அவையிற்றுக்கு உயிருண்டென்பதை விளைத்து நின்றாற் போல அதுவும் ஆணவ மலமன்றியே மற்றுள்ள மலங்களும் உண்டென்பதை விளைத்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அஃதெங்ஙனேயென்னில் கேவலத்தில் ஆன்மா ஆணவ மல மறைப்பாக ஒடுங்குமிடத்து மாயை தாரகமாக ஒடுங்குகையால் அப்படிச் சொன்னதென அறிக.
அவ்விடத்து மாயை உண்டென்பதற்கு அநுபோகமேதென்னில், நித்திரையிற் கேவலப்பட்டுக் கிடக்கு மிடத்து உடல் தாரகமாகக் கிடக்கச் செய்தே கூப்பிட்டெழுப்பவும் எழுந்திராமற் கிடந்து அந்த உடலைத் தட்டியெழுப்பு மிடத்துக் கலாதிகள் எழுந்திருக்கையால் அந்தக் கலாதிகள் மாயையில் தோற்ற மாகையால் காரியமுள்ள இடத்திலே காரணமுண்டான தாகையாலே கேவலத்தில் ஆணவமல மறைக்க மாயை தாரகமாக ஆன்மா ஒடுங்குமென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. அப்படி நித்திரையிற் கேவலப்பட்டுக் கிடக்குமிடத்து உடம்பு தாரகமாக ஒடுங்குமென்பதற்கு பி ம் சிவஞானபோதத்தில் “அவ்வுடலி னின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாங்கிடப்ப, செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி” (3.4) என்பதனுள்” செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி” எ ம், போற்றிப் பஃறொடையினும் சூசூமூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்ப” (27) எ ம் கண்டுகொள்க. என்றிங்ஙனம் நித்திரையிற் கேவலத்துக்கு மலமறைக்க உடல் தாரகமாக மூலாதாரத்திலே ஒடுங்கினாற்போலச் சங்கார கேவலத்துக்கு மாயா காரணந் தாரகமாக ஒடுங்குமென்பது கண்டுகொள்க. ஆகையால், ஆணவத்துக்கு மறைக்கையே தொழில், மாயைக்குத் தாரகமாக நிற்கையே தொழில் என அறிக. அப்படி ஆணவத்துக்கு மறைப்பே தொழில் என்பதற்கு பி ம் தத்துவ விளக்கத்தில் சூசூசேதனன் கண்ணதிக மறைப்பன ஆயிர கோடி விருத்திகளே” (19) எ ம் சித்தியாரில் சூசூபோதகா ரியம்மறைத்து நின்றது புகல்ம லங்காண்” (2.84) எ ம், சூசூமுன்னை மலத்தினிருள் மூடாவகை” (போற்றிப் பஃறொடை, 34) எம் இந்நூலினும் சூசூசெம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமல மாயறிவு முழுதினையும் மறைக்கும்” (20) எ ம், சூசூஞானத்தின் கண்ணை மறைத்த கடியதொழில் ஆணவத்தால்” (போற்றிப் பஃறொடை, 910) எ ம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி, மாயை தாரகமாய் நிற்கும் என்பதற்கு பி ம் தத்துவ விளக்கத்தில் சூசூபுல்லிய பாசங்க ளுய்த்திடப் போகம்பு மானுகர்ந்து, செல்லிய காலத்துறுஞ்செல்ல னீங்கச் சிரபுரக்கோன், சொல்லிய மண்முத லாயின மாயையி லேதொகுத்தங், கெல்லியி னித்திரைப் போலிளைப் பாற்று மணுக்களையே” எ ம் இந்நூலினும் சூசூஉருவாதி சதுவிதமாய்” என்ற இருபத்திரண்டாஞ் செய்யுளிலே சூசூஒடுங்க வருகால முயிர்க ளெல்லா மருவிடமாய் மலமாய் மன்னியிடு மரனருளான் மாயை தானே” எ து கண்டுகொள்க. இனி ஆங்கறிவை யறிவரியன் எகு கேவலப்பட்டுக் கிடக்கும் அவ்விடத்து ஆன்மா அறியப்படும் பொருளாயிருக்கிற தன்னையும் அறியமாட்டானென்று பொருள் கூறியதேதென்னில், அப்படிக் கேவலத்தில் ஆன்மாவுக்கு அறிவாயுள்ள நாமிப்படி அறிவற்றுக் கிடக்கிறோமேயென்கிற நினைவு மில்லாததுகொண்டே அப்படிச்சொன்னதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஅறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்களோடுஞ், செறிவிலன் கலாதி யோடுஞ் சேர்விலன் செயல்க ளில்லான்” (4.38) எ ம், “அறிந்திடுந் தன்னையுந் தானறியாமை யானும்” (5.3) எம் கண்டுகொள்க. இனி யறிகருவி யணையா எ கு கேவலமாகிய அவ்விடத்துச் சுத்ததத்துவங்களும் பொருந்தாதென்று பொருள் கூறியதேதென்னில் அப்படிச் சுத்த தத்துவங்களைக் கூடின இடம் சகலமாகையால் அப்படிச் சொன்னதென அறிக. அது எங்ஙனே என்னில், அப்படிக் கேவலப்பட்டுக் கிடக்குமிடத்துச் சிவசத்திகள் அந்தச் சுத்த தத்துவங்களைக்கொண்டு அசுத்தமாயா காரணத்திலே நின்றுங் கலையாதி தத்துவங்களைத் தோற்றுவித்து ஆன்மாக்களோடுங் கூடிக் காரியப்படுத்துகையால் அது சகலமாகையாலே அந்தக் கேவலத்திற் சுத்த தத்துவங்களும் பொருந்தா தென்றதென அறிக. இதற்கு பி ம் இந்நூலில் சூசூஇத்தகைமை இறையருளால்” (39) என்னும் விருத்தத்தையொட்டிக் கண்டுகொள்க. இனி இருள்மருவு மலர்விழிபோ லதுவாய் எ கு இருளைப் பொருந்தின விழி அந்த இருளின் வடிவு தானாய் நின்றாற்போல என்று பொருள் கூறியதே தென்னில், குற்றமறக் காணுங் கண்ணானது இருளோடுங் கூடின அவதரத்து வேறொன்றுங் காணாமல் அந்த இருளின் வடிவுதானாய் நின்றாற்போல அறிவுடயுள்ள ஆன்மாவுங் கேவலப்பட்டு மலத்தினால் மறைப்புண்டு கிடக்குமிடத்து அந்த மலந்தன்னைப்போல அறியாமையே வடிவாய்க் கிடக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்படிக் கண்ணை இருள் மறைத்தாற்போல ஆன்மாவையுங் கேவலத்தில் ஆணவ மலமொன்று மறைக்குமென்று திருஷ்டாந்தமாயிருக்கக் கேவலத்தில் ஆணவமல மறைப்பதன்றியே மாயை தாரகமாக ஒடுங்குமென்றதேதென்னில், அப்படி இருளினால் மறைப்புண்டு அந்த இருளின் வடிவு தானாய்நின்ற கண்ணிற் சோதியாயுள்ள பிரபையுந் தனக்குடம்பா யிருக்கப்பட்ட குவளை தாரகமாக நின்றாற்போல ஆணவமலத்தான் மறைப்புண்டு கேவலப்பட்டுக் கிடக்கும் ஆன்மாவும் மாயை தாரகமாகக் கிடக்குமென்பதை முற்கூறிய வகைகளினாலும் அநுபவத்தினாலுங் கண்டுகொள்க. அப்படிக் கேவலத்தில் ஆணவ மலமன்றியே மற்றுள்ள மலங்களும் உண்டென்பதற்கு பி ம் சித்தியாரில் “மும்மலம் நெல்லினுக்கு முளையொடு தவிடுமிப்போல், மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று” (2.86) எ து கண்டுகொள்க. இனி, நித்த வியாபகமாய் எகு அழியாத வியாபகத்தையுடையதாயென்று பொருள் கூறியதே தென்னில் அப்படி ஆணவ மலத்தினாலே மறைப்புண்டு மாயை தாரகமாகக் கிடந்தாலும் அவ்விடத்தில் ஆன்மா அழிவதுஞ் செய்யாமல் அந்த மலந் தன்னைப்போல அறியாமையாய் வியாபித்திருக்குமென்ற தென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “மலத்தி னோடும் வியாபி கேவலத்தி லான்மா” (4.38) எ து கண்டுகொள்க. இனி, அங்கண் நிற்பது கேவலம் எ கு கேவலத்துக்குத் தலமாயுள்ள அவ்விட மென்று பொதுப்படப் பொருள் கூறியதேதென்னில், நித்திரையிற் கேவலத்துக்கு உடல் தாரகமாகவும் மூலாதாரம் இடமாகவும் சங்கார கேவலத்துக்குக் காரண மாயை தாரகமாகவும் நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. என்னுமிவை யிரண்டுக்கும் பி ம் இருபா விருபஃதில் சூசூகடலமுதே வெண்ணெய்க் கரும்பேயென் கண்ணே உடலகத்து மூலத் தொடுங்க” (9) எ து நித்திரையிற் கேவலத்துக்குக் கண்டுகொள்க. ஆன்மாக்கள் இந்நூலில் சூசூஒடுங்க, வருகால முயிர்க ளெல்லா மருவிடமாய் மலமாய் மன்னியிடும் அரனருளான் மாயை தானே” (22) எ ம், தத்துவ விளக்கத்தில் சூசூசொல்லிய மண் முதலாயின மாயையி லேதொகுத்தங், கெல்லியி னித்திரைப் போலிளைப் பாற்று மணுக்களையே” எ ம் சங்கார கேவலத்துக்குக் கண்டு கொள்க. இதனாற் சொல்லியது, ஆன்மாக்கள் கேவல சகல சுத்தமென்று மூன்றவத்தைப்படும்; அதில் கேவலாவத்தையாவது மாயா கருவிக ளெல்லாங் கழன்று ஆணவ மலத்தான் மறைப்புண்டு மாயை தாரகமாக ஒடுங்குவார்களென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி ஆணவ மலமென்பது ஒன்றில்லை மாயா மலமுங் கன்ம மலமுமேயுள்ளது ஆன்மாவும் அநாதியே சுத்தனென்கிற ஐக்கியவாதி மதம் மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

இன்மைமலம் மாயைகன்மம் என்றிரண்டே இறைதான்
இலங்குபல உயிர்களும்முன் புரிந்தஇரு வினையின்
தன்மைகளால் எவர்களுக்குந் தனுகரண புவனம்
தந்திடும்இங் கதனாலே இருபயனும் சார்ந்து
கன்மமெலாம் நேராக நேராதல் மருவக்
கடவுள்அரு ளால்எவையுங் கழித்திடுவன் அதனாற்
பின்மலமா னவைஅணுகா பெருகொளிமுன் புளதே
பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே.
மலமென வேறிலை மாயையுங் கன்மமும்
நிலவிடு முயிர்கெனு மவர்நெறி யுரைத்தது.

பொழிப்புரை :

இன்மை மலம் அப்படி ஆணவ மலமென்பதொன்றில்லை. பின்னையுள்ளதேதென்னில் ; மாயை கன்மமென் றிரண்டே மாயா மலமென்றுங் கன்ம மலமென்றும் இரண்டுமேயுள்ளன. ஆனாலிவை ஆன்மாவினிடத்திலே வந்து பொருந்தின முறைமை எங்ஙனே என்னில்; இறைதா னிலங்கு பல வுயிர்களும் முன் புரிந்த இருவினையின் தன்மைகளால் எவர்களுக்குந் தனு கரண புவனந் தந்திடும் கர்த்தாவானவன் சுத்தராயிருக்கப்பட்ட ஆன்மாக்கள் முன்னே செய்யப்பட்ட புண்ணிய பாவங்களுக்கீடாகச் சர்வர்க்கும் உடம்புகளையுந் தத்துவங்களையும் இருப்பிடங்களையும் புசிப்புக்களையும் உண்டாக்குவன். புசிப்பென்றது கூட்டுப் பொருளென அறிக. அது ஒழிபுகொண் டறியப்பட்டது; இங்கு அதனாலே இருபயனுஞ் சார்ந்து இவ்விடத்தந்த உடம்பு முதலானவையாலே புண்ணிய பாவங்களைப் பொருந்தி அநுபவித்து மேலார்ச்சித்தும் இப்படிப் பிறந்திறந்து வருகிற அவதரத்திலே ; கன்மமெலாம் நேராக நேராதல் மருவ கன்மங்களெல்லாம் வெட்டனவில்லையாம்படித் துலையொத்த அவதரத்து ; கடவுளருளால் எவையுங் கழித்திடுவன் கர்த்தாவுந் தனது காருண்ணியத்தினாலே அந்தக் கன்மங்களையும் மாயையையும் போக்குவன்; அதனாற் பின் மலமானவை அணுகா ஆகையாலே ஆன்மாவுக்குப் பின்பு மாயா கன்மங்கள் பொருந்தாது ; பெருகொளி முன்புளதே பெற்றிடும் ஆன்மாவும் பழைய பிரகாசத்தை யுடைத்தாம் ; என்று இத்திறமென் பேசு மாறே என்றிப்படி நீ சொல்லுகிற முறைமை எப்படியிருந்தது.
ஈசர ஐக்கியவாதி அப்படி ஆணவமல மென்பதொன்றில்லை சுத்தனாயிருக்கிற ஆன்மாவை மாயையுங் கன்மமும் பின்பு வந்து மறைக்குமென்றான் என்பதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூகருமுகி லடர இரிதரு கதிர்போன் றறிவா முயிரிற் பிறியா தேயும்” (5.78) எம் சித்தியாரில் “மலமென வேறொன்றில்லை மாயாகாரியம தென்னில், இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைக ளெழுப்பும் மாயை, அலகிடு மலமிவற்றை வேறுமன் றதுவே றாகி, உலகுடல் கரண மாகி யுதித்திடு முணர்ந்து கொள்ளே’’ (2.81) எ ம் ; இது மறுப்பென்பது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது ஈசர ஐக்கியவாதி ஆணவமலம் இல்லை யென்றும் மாயா கன்மங்களே யுள்ளதென்றும் சுத்தராயுள்ள ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கீடாகக் கர்த்தா உடம்பு முதலாயினவற்றைக் கொடுக்க அதனாலே ஜநந மரணப்பட்டுக் கன்ம வொப்புவந்து ஆன்மாப் பண்டுபோலே சுத்தனாமென்றுஞ் சொன்ன முறைமையும் இது சித்தாந்த வழக்கல்லவென்று அவனை மறுத்த முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி நான் சொன்ன அத்தத்தை ‘இத்திறமென் பேசுமாறே’ என்று உதாசினமாகச் சொல்லவேண்டுவான் ஏனென்று ஈசுர ஐக்கிய வாதி கேட்க, அப்படி ஆணவமலமில்லை மாயையுங் கன்மமுமே யுள்ளதென்று நீ சொல்லுகிறது கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே வருமென்று மறுத்து, மேல் ஆணவமலம் உண்டென்னும் முறைமையை அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

மாயைமுத லெனவினையின் பான்மைமுத லெனவே
மன்னுபனை விதைமரபின் மயங்கும்மலம் சுத்தற்(கு)
ஏயுநெறி யென்கொல்அதன் இயல்பாயின் முத்தி
என்பதென்மற் றிவைநிற்க இருங்கலாதி உணர்வாய்
மேயபின்நற் றன்னுருவம் விளங்காமை விளக்கும்
மிகும்உலகந் தனில்என்னில் இவைவிடுங்கால் உணர்வுள்
தோயுநெறி இலதாதல் அறியாமை யெனநீ
சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே.
.
அறிவுறுங் கலாதியா லறியா நிலையைச்
செறிவுறு மதுமலச் செய்தியா மென்றது.

பொழிப்புரை :

மாயை முதலென வினையின் பான்மை முதலெனவே அநாதியிற் சுத்தனான ஆன்மாவினிடத்திலே இந்த மாயா கன்மங்கள் கூடுமிடத்து மாயாதேகம் உண்டாகக் கன்மம் உண்டானதோ கன்மம் உண்டாக மாயா தேகம் உண்டானதோ இதில் எதுதான் முந்தின தென்னுமிடத்து ; மன்னு பனைவிதை மரபின் மயங்கும் நிலைபேறாகப் பொருந்தப்பட்ட பனை முந்தவுண்டாக விதையுண்டானதோ விதை முந்தவுண்டாகப் பனை யுண்டானதோ என்று மயங்குந் தன்மைக்கொக்கும். இந்தக் குற்றம் அன்றியும் ; மலம் சுத்தற்கேயு நெறியென்கொல் நீ சொன்ன மாயா மலமுங் கன்ம மலமுஞ் சுத்தனான ஆன்மாவினிடத்திலே பொருந்துகைக்குக் காரணமே தாம்; அதன் இயல்பாயின் அதற்கு வேறொரு காரணமுமில்லை, அது இயல்பாக வந்து கூடுமாயின்; முத்தி யென்பதென் அப்படி யியல்பேயாகில் வீடுபேறுண்டென்று சொல்லவேண்டுவதில்லை. அது ஏனென்னிற் சுத்தனாயிருக்கப்பட்ட ஆன்மாவை மாயா கன்மங்கள் இயல்பாகச் சென்று பொருந்துமாகிற் சாயுச்சியம்பெற்ற இடத்தினும் மாயா கன்மங்கள் சென்று பொருந்துகைக்கு வழக்குண்டாம். அது கொண்டே முத்தியுன்டென்று சொல்ல வேண்டுவதில்லை யென்றதென அறிக. ஆகையால்; மற்றிவை நிற்க (மற்று வினைமாற்று.) நீ சொல்லுகிற இவையிற்றை விடுவாயாக. அன்றியும்; இருங்கலாதியுணர்வாய் மேயபின் நற்றன்னுருவம் விளங்காமை பெரிய கலையாதியாயுள்ள தத்துவங்கள் முப்பத்தொன்றும் உனக்கறியும் பகுதிக்கு உதவியாகப்பொருந்திச் சீவிக்கும் அவதரத்து ஆன்மரூபத்தை அறியாமல் இருப்பானேனென்னில்; விளக்குமிகும் உலகந்தனில் ஆன்மரூபந் தெரியாதபடி மாயா கருவிகள் மறைத்துத் தன்வடிவை மிகுதியாக விளக்கிக்கொண்டு நிற்கும் பிரபஞ்சத்திலே ; என்னிலிவை விடுங்கால் உணர்வுள் தோயு நெறியிலது அப்படியானால் அந்தத் தத்துவங்களை நீங்கின இடத்திலும் அறிவினோடுங் கூடிப்பற்றும் நெறியில்லாமல் இருப்பானேன்; ஆதலறியாமை அப்படியானது அறியாமையாலென்று நீ சொல்லில்; என நீ சொல்லியது மலமென்பர் துணிந்துளோரே என்று நீ சொல்லப்பட்ட இதனையே ஆணவமலமென்று சொல்லுவார்கள் நூலினை யுணர்ந்து அறுதிப்பட்ட பெரியோர்கள்.
உதாரணம் : தாலவீச நியாயமாகிய கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்பதுபோல, மாயை முற்பட்டதோ கன்மம் முற்பட்டதோ என்று ஈசுர ஐக்கியவாதியை மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூசுத்த அறிவெனிற் பாசஞ் செறியா மாயை யுருஇரு வினையால் வருமிகு வினையும் உருவா லன்றி மருவா திவற்றின் முந்திய தேதோ வந்தணை வதற்கோர் ஏது வேண்டும்” (6.16) எது கண்டுகொள்க. இனி, இயல்பாயின் முத்தியென்பது ஏனென்று மறுத்தது வெள்ளைப் புடவைக்கு அழுக்கேறினாற்போல முத்தியினும் மாயா கன்மங்கள் மீளவுங் கூடுமென்றதென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூதானியல் பென்னில் வீடுற் றவரினுங் கூடக் கூடும்” (6. 6 7) எ து கண்டுகொள்க. இனி, என் நீ சொல்லியது மலமென்ப ரென்று மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூஅறிவிலாமையென் றனையது மலமாக் குறிகொ ளாள ரறைகுவ ரன்றே” (6.23 24) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, ஆணவமலம் என்பது ஒன்றில்லை சுத்தனாயுள்ள ஆன்மாவை மாயா கன்மங்கள் இயல்பாக வந்து பொருத்து மென்ற ஐக்கிய வாதியை நோக்கி, அப்படியானால் கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே வருமென்றும், இயல்பாயின் முத்தியைப் பெற்ற இடத்தும் மீளவும் மாயா கன்மங்கள் கூடுமென்றும் மறுத்து ஆணவமலம் உண்டென்று நாட்டின முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

அப்படியே ஒர் ஆணவ மலமென்பது ஒன்றுண்டானால் என்னாற் காணப்படாதோ என்று மீளவும் ஐக்கியவாதி வினவ அந்த ஆணவ மலமானது திருவருட்பிரகாச முண்டானவர்களாலே காண்கிறதொழிய உன்னாற் காணப்படாதென்று அவனை மறுத்தருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

அந்நியமா னவை உணர்த்தி அநந்நியமாய் நிறைந்த
அறிவறியா மையினானும் அருள்நிலவும் காலம்
தன்னில்அவ னேயாவு மாய்நின்ற தொன்மை
தாமுணர்த லானும்உயிர் தானெனவொன் றிலதாய்
மன்னியிடும் மலமாயை கன்மங்கள் மாறி
வந்திடும்இங் கிதுவழுவா தாதலினான் மனத்தால்
உன்னரிய திருவருளை ஒழியமலம் உளதென்(று)
உணர்வரிதால் அதனுண்மை தெரிவரிதாம் உனக்கே.
.
பற்றுதல் விடுதல்மற் றவற்றுள தொன்றாய்
உற்றிடு மலமுனால் உணர்வரி தென்றது.

பொழிப்புரை :

அந்நியமானவை உணர்த்தி அநந்நியமாய் நிறைந்த அறிவறியாமையினானும் தனக்கு வேறான பிரபஞ்சத்தை அறிவித்துத் தனக்கு வேறற நிறைந்து நிற்கிற திருவருளைத் தானறியாதபடியாலும் ; அருள் நிலவும் காலந் தன்னில் அவனே யாவுமாய் நின்ற தொன்மை தாமுணர்தலானும் அந்தத் திருவருட்பிரகாசமுண்டான காலத்துத் தன்னிடத்திலே நிற்கிற சிவமுதல் தானே எவ்விடத்தினும் நிறைந்து நிற்கிற பழமையைத் தானறிகையாலும்;உயிர்தானென ஒன்றிலதாய் மன்னியிடும் மலம் ஆன்மா என்றொரு முதலில்லை என்னும்படி நிலைபெற்று நிற்கும் ஆணவ மலமானது. ஆணவமென்றொன்று வேணுமோ மாயைதான் மறையாதோ என்னில் ; மாயை கன்மங்கள் மாறி வந்திடும் மாயா மலமுங் கன்ம மலமுங் காரணத்தினுங் காரியத்தினும் விட்டும் பற்றியும் வரும் ; இங்கிது வழுவாது இவ்விடத்திந்த மாயையுங் கன்மமு மாறி வருகிறதும் மலமெவ்விடத்துஞ் சகசமாய் ஆன்மாவோடு நிலைபெற்று நிற்கிறதுந் தப்பாது ; ஆதலினான் மனத்தால் உன்னரிய திருவருளை ஒழிய மலமுள தென் றுணர்வரிது இப்படி ஆணவ மலஞ் சகசமாய் நிலைபெற்றுள்ளதாகையால், மனத்தினால் நினைத்தற்கரிய திருவருள் பிரகாசித்த காலத்தல்லது ஆணவ மலமொன்று உண்டென்றறியப்படாது. (ஆல் அசை). அதனுண்மை தெரிவரிதாம் உனக்கே அந்தத் திருவருள் உனக்கில்லாதபடியாலே அந்த ஆணவ மலத்தின் உண்மை உன்னால் அறியப்படாது.
அந்நியமானவை உணர்த்தி அநந்நியமாய் நிறைந்த அறிவறியாமையினானு மென்றது ஐக்கியவாதியை மறுத்து இப்பொழுது இந்த மாயா கன்மங்கள் கூடின சகலத்துச் தேகாதிப் பிரபஞ்சத்தை அறிந்தும் இந்த மாயாகன்மங்கள் கூடுவதற்கு முன்பு நீ சுத்தனென்று சொன்ன அவதரத்து ஆன்மாவினோடு ஐக்கியமாய் எங்கும் நிறைந்து நிற்கிற திருவருளைத் தரிசியாது இருந்தபடியாலும் அநாதியே அக்கினியைக் காட்டம் மறைத்து நின்றாற்போல ஆன்மா என்றொரு முதலில்லையென்னும்படி ஆன்வமலம் மறைக்கையினாலுமென அறிக. என்று இங்ஙனமவனை மறுத்தததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “முன்பு நன்றுட னொன்றிய காலை யின்ப மெய்துதற் கிலதுயி ராகலின் நீயலை பொருத மாயா வாதி யாயினை யமையும்’’ (6.28 31) எ ம், “மூல மலத்தாற் சாலு மாயை கருமத் தளவிற் றருமுரு இறைவன்’’ (6.3233) எ ம் கண்டு கொள்க. இனி, மாயை கன்மங்கள் மாறி வந்திடுமென்பதும் இந்த ஆணவ மலம்போல மாயா மலமுங் கன்ம மலமும் ஆன்மாவை அநாதியே பற்றி நிற்கவும் அவையிற்றின் காரியங்கள் விட்டும் பற்றியும் வருமென்றதென அறிக. அப்டிக் காரணமல மூன்றும் ஆன்மாவை அநாதியே கூடிநிற்குமென்பதற்கு பிம் சித்தியாரில் “மும்மலம் நெல்லினுக்கு முளையோடு தவிடு மிப்போல். மம்மர்செய் தணுவினுண்மை வடிவினை மறைத்து நின்று’’ (2.86) எ து கண்டு கொள்க. அப்படி அந்த ஆணவமலம் அநாதியே ஆன்மாவை மறைத்து நிற்க மாயாகாரியமான கலையாதி தத்துவங்கள் அந்த மறைப்பை நீக்குமென்பதற்கு பிம் சித்தியாரில் “போத காரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண், ஓதலாங் குணமு மாக வுயிரினுள் விரவ லாலே, காதலா லவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை, யாதலா லாரண்டுஞ் சோதி யிருளென வேறா மன்றே’’ எ ம், “மலமென வேறொன் றில்லை மாயாகாரியம தென்னில், இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைக ளெழுப்பு மாயை, விலகிடு மலமி வற்றை’’ எ ம், “பரிதியை முகின் மறைப்பப் பாயொளி பதுங்கி னாடற்போல், உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைக ளொளிக்கு மாகுங், கருதிடு மிச்சா ஞானக் காரியங் காயம் பெற்றால், மருவிடு முயிர்க்குக் காயம் வந்திடா விடின் மறைப்பே’’ (2.84, 81,83) எ ம் கண்டுகொள்க. இதனாற் சொல்லியது ஆணவமலம் இல்லையென்ற ஐக்கியவாதியை நோக்கி அந்த மலமுண்டென்று அநுபவத்தினாற் காட்டின முறைமையும் அந்த மலமுந் திருவருட் பிரகாசம் உள்ளவருக்கொழியக் காணப்படாதென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இப்படி உண்டென்று நாட்டப்பட்ட ஆணவமலம் நீங்கும்வழியேதென்று வினவச் சிவன்றன் அருளாலே மாயா காரியமாகிய கலையாதி தத்துவங்களைச் கூட்டி மலபாகம் வருத்துவனென்னும் முறைமையைம் மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

புகலுமலம் ஒழித்தற்குக் கலாதிமுதல் மாயை
பொருந்தியிடும் அரனருளாற் போதம் தீபம்
சகலமெலாம் உடனாய வாறு போலத்
தரும்அருளை மலம்உயிர்கள் சாராமல் மறைக்கும்
இகலிவரும் இவையுணரின் இருள்வெளியாந் தன்மை
எய்தும்இவை தன்செய்தி இலங்கும் விந்துப்
பகர்வரிய உணர்வாகி ஒளியாய் உள்ளப்
பான்மையினால் ஒருநாதம் படருந் தானே.

மலநிலை யொதுங்க மாயா காரியங்
குலவிடு மிருளொளி குறியிதற் கென்றது.

பொழிப்புரை :

புகலுமலம் ஒழித்தற்குக் கலாதிமுதல் மாயை பொருந்தியிடும் அரனருளால் முன்னே சொல்லப்பட்ட ஆணவமலத்தைப் போக்குதற்குக் கலையாதி தத்துவங்களாகிய காரியமாயை ஆன்மாவோடுங் கூடுந் தம்பிரானார் காருண்ணியத்தினாலே; அது என்போல என்னில்; போதம் தீபம் சகலமெலா முடனாய வாறுபோல ஆன்ம போதம் சீவிக்குமிடத்து விளக்கானது பிரகாசித்தெரியுங்கால் தகளியுந் திரியும் நெய்யுங் கூடிப் பிரகாசித்தெரிந்தாற்போல; அப்படி ஆன்மாவையுங் கருவிகளையும் அந்த அருளே கூட்டிச் சீவிப்பிக்குமாகில் அந்த அருளை இந்த ஆன்மாவாலறிந்து கூடப்படாதோ என்னில்; தரும் அருளை மலம் உயிர்கள் சாராமல் மறைக்கும் அப்படிக் கூடி நின்று அறிவிக்கிற திருவருளை ஆன்மா அறியாதபடி ஆணவ மலமானது மறைத்து நிற்கும்;இகலிவரும் இவையுணரின் இருள்வெளியாந் தன்மை எய்தும் இங்ஙனம் மாறுபட்டு வருகிற ஆணவ மலமும் மாயா காரியமும் லிசாரித்துப் பார்க்குமிடத்து இருளையும் ஒளியையும் உவமிக்கிற குறியை யுடைத்தா யிருக்கும்; இவைதன் செய்தி இந்த மலங்களின் முறைமை யிப்படியா யிருக்கும். அன்றியும் இந்தப் பதத்துக்கு இங்ஙனஞ் சொல்லப்பட்ட செய்யுள் ஐந்தும் கேவலத்தின் முறைமையாமென்று பொருளுரைப்பினுமாம். அஃதாவது “ஓங்கிவரும் பலவுயிர்கள்’’ (33) என்ற செய்யுளில் “ஈங்கு வரும்’’ என்ற பதந்தொடங்கி இவ்வளவுங் கேவலாவத்தையின் முறைமையைச் சொல்லுகையினாலென அறிக. மேற் சகலாவத்தைக்குச் சுத்த மாயையிற் காரியமாகிய விந்துசத்தியில் தோற்றமாகிய வாக்குக்கள் காரியப்படும் முறைமை அருளிக் செய்கின்றது. இலங்கும் விந்து பகர்வரிய உணர்வாகி ஒளியா யுள்ளப் பான்மையினால் ஒரு நாதம் படருந்தானே விளங்காநின்ற விந்துசத்தி சொல்லுதற்கரிதாகிய அறிவுமாய் விளக்கமுமாய் ஆன்மாக்களிடத்திலே அவரவரர்களுக்குண்டான கன்மங்களுக்கீடாக வாக்குக்களைத் தோற்றுவிக்கைப் பொருட்டாக ஒருநாதத்தை உண்டாக்கும். புகலுமலம் ஒழித்தற்குச் கலாதிமுதன் மாயை பொருந்தியிடும் எ கு ஆணவமலபாகம் வருகைக்கு மாயா காரியங்கள் ஆன்மாவை வந்து பொருந்துமென்று ஐக்கிய வாதியை மறுத்தற்கு பிம் சிவஞானபோதத்தில் “மாயா தனுவிளக்காய்’’ (4.5) எம், சித்தியாரில் “எழுமுடல் கரணமாதி யிவைமல மலம லத்தாற், கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னிற், செழுநவை யறுவை சாணி யுவர்செறி வித்த ழுக்கை, முழுவதுங் கழிப்பன் மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன்’’ (2.52) எ ம் கண்டு கொள்க. இனி தருமருளை மலமுயிர்கள் சாராமல் மறைக்கும் எ கு அருளானது விகாரப்படாது நிர்விகாரியா யிருக்கும், ஆன்மாத்தானே விகாரப்பட்டறியுமென்கிற அவிகாரவாதியை நோக்கி மறுத்துச் சொன்னதாகவுமாம். இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச் சேர்ந்தவர்க் கின்பம் வாய்த்திடு மென்றனை பாதவ மென்றுஞ் சேதன மின்மையின் இளைத்தோர் வம்மி னென்பது துன்பம் விளைத்தோர் தம்மில் வெறுப்புஞமொன் றிலதே’’ (11.38 42) எ து கண்டு கொள்க. இனி இருள் ஒளியாந் தன்மை எய்தும் எது ஆணவ மலத்துக்கு ஆன்மாவை மறைக்கிறது சுபாவம்,மாயாகாரியமான கலாதிகளுக்கு அந்த மறைப்பை நீக்குகிறது சுபாவம் என்று பொருள் கூறியதற்கு பிம் சித்தியாரில் “போதகா ரியம்மறைத்து நின்றது புகல்ம லங்காண், ஓதலாங் குணமு மாக உயிரினில் விரவ லாலே, காதலா லவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை, ஆதலா லிரண்டுஞ் சோதி யிருளென வேறா மன்றே’’ (2.84) எது கண்டு கொள்க. இனி இலங்கும் விந்து பகர்வரிய உணர்வாகி எ கு விளக்கத்தைச் செய்கிற அறிவுமாயென்று பொருள் கூறிய தேதென்னில் இது மூவகை ஆன்மாக்களுக்கும் அறிவைக் கொடுக்கையினாலேயென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “மூவகை அணுக்க ளுக்கு முறைமை யால் விந்து ஞானம், மேவின தில்லை யாயின் விளங்கிய ஞான மின்றாம்’’ (126) எ து கண்டுகொள்க. இனி, உள்ளப்பான்மையினால் ஒருநாதம் படரும் எ து சூக்குமை வாக்கென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “சூக்கும வாக்க துள்ளோர் சோதியா யழிவதின்றி’’; (1.23) எ து கண்டுகொள்க. இதனாற் சொல்லியது ஆணவமலம் நீங்குதற்கு மாயா காரியமான கலையாதி தத்துவங்களைச் சிவன் கூட்டுவனென்றும்., அப்டிக் கூட்டி அறிவிக்கிற சிவனை ஆன்மா அறியாதபடி ஆணவமலம் மறைக்குமென்னும் முறைமையும், இங்ஙனங் கேலாவத்தையை முடித்து, மேற் சகலாவத்தையிற் சூக்குமை வாக்குத் தோற்றும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

மேற் பைசந்தி மத்திமை வைகரி யென்னும் வாக்குக்கள் மூன்றுங் காரியப்படு முறைமை அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம்
வரும்அடைவு படஒடுக்கி மயிலண்ட சலம்நேர்
சிந்தைதனில் உணர்வாகும் பைசந்தி உயிரிற்
சேர்ந்துவரும் அவைமருவும் உருஎவையும் தெரித்து
முந்தியிடும் செவியில்உறா துள்ளுணர்வாய் ஓசை
முழங்கியிடும் மத்திமைதான் வைகரியில் உதானன்
பந்தமுறும் உயிரணைந்து வந்தமொழிச் செவியின்
பால் அணைய நிறைந்தபொருள் பகரும் தானே.

சூக்குமை முதலாச் சொற்பத மீறா
ஆக்கிடும் வாக்கி கடைவினை வகுத்தது.

பொழிப்புரை :

வந்தடைந்து அந்தநாதமாகிய அறிவுதானே வடிவாகச் சூக்குமை வந்து உந்தித்தானத்திலே பொருந்தி ; பின்னமாய் வன்னங்கள் தோற்றம் வருமடைவு பட ஒடுக்கி வெவ்வேறாய் வரும் அக்கரங்களினுடைய சொரூபங்கள் தோன்று முறைமை தெரியாதபடி மறைத்து நிற்கும்; மயிலண்ட சலம் நேர் மயில் முட்டைக்குள் சலமானது புறம்பே மயிலினிறமாய்ந் சொரூபீகரித்துத் தோன்றச் செய்தே யுடைத்தால் சலமாய் விடுமாப்போல; சிந்தைதனில் உணர்வாகும் பைசந்தி பைசந்தி வாக்கானது ஆன்மாவினிடத்திலே நினைவு மாத்திரையாய் நிற்கும் ; உயிரிற்சேர்ந்து வரும் அவை மருவும் உரு எவையும் தெரித்து முந்தியிடுஞ் செவியில்உறா துள்ளுணர்வாய் ஓசை முழங்கியிடு மத்திமைதான் மத்திமை வாக்கானது மேற்சொல்லப் போகிற அக்கரங்களினுடைய சொரூபங்களைப் பிராணவாயுவோடுங் கூடி ஒழுங்குபட நிறுத்திச் செவிக்குங் கேளாதே ஆன்மாவினிடத்திலே உள்ளறிவுமாய்த் தொனியுமுண்டாய் முற்பட்டு நிற்கும்; வைகரியில் உதானன் பந்தமுறும் உயிரணைந்து வந்தமொழிச் செவியின் பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே வைகரி வாக்கானது முற்கூறிய பிராணவாயுவோடுங் கூடிவந்து உதான வாயுவிலேயும் பந்தித்துச் செவிப்புலனிடத்திலே கேட்கத் தக்கதாக நினைவிலுண்டான வசனத்தைச் சொல்லும்.
இங்ஙனஞ் சொல்லப்பட்ட வாக்குக்களுக்குத் தானமும் வடிவுமாவது; சூக்குமைக்குத் தானம் நாபியடியும் நாததத்துவம் வடிவுமென அறிக; பைசந்திக்குத் தானம் உந்தியும் பிராணவாயு வடிவுமென அறிக; மத்திமைக்குத் தானம் நெஞ்சுங் கண்டமுமாய் நின்று பிராணவாயு வடிவமென அறிக; வைகரிக்குத் தானம் தாலு மூலமும் பிராணவாயுவும் உதானவாயுவும் வடிவென அறிக. ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட வாக்குக்கள் நாலுக்கும் பிம் சித்தியாரில், “சூக்கும வாக்க துள்ளோர் சோதியா யழிவ தின்றி’’ எம், “வேற்றுமைப் பட்ட வன்னம்’’ எம், “உள்ளுணர் ஓசையாகி’’ எம், “வைகரி செவியிற் கேட்பதாய்’’ (1.23,22,21,20) எம், விருத்தம் நாலையு மொட்டிக் கண்டுகொள்க. இந்த வைகரி வாக்குக் காரியப்படுமிடத்து நாக்கு உண்ணாக்கு பல் உதடு மூக்கு இவையோடுங் கூடி நின்று காரியப்படுமென அறிக. இவையிற்றுக்கு பிம் நேமிநாதத்தில்,
“உந்தியிற் றோன்றி யுதான வளிபிறந்து
கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து வந்தபின்
நாசிநா வண்ண மிதழெயிறு மூக்கென்னப்,
பேசு மெழுத்தின் பிறப்பு” (6)
எது கண்டுகொள்க. ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட வாக்குக்கள் நாலுந் தோன்றுகைக்குக் காரணமாகப் பஞ்சமை யென்றொரு வாக்குண்டென்றும் அதற்குத் தானம் மூலாதாரமென்றும் அது பிரணவ சொரூபமாயிருக்கு மென்றுஞ் சொல்லுவாருமுளர். அதனை ஆராய்ந்து கண்டுகொள்க. இந்த வாக்குக்கள் காரியப்படுமிடத்துச் சாந்தியாதீத முதலான கலைகள் ஐந்தினோடும் பற்றுக்கோடாக நின்று காரியப்படுமென அறிக. அப்படிக் காரியப்படுமிடத்துப் பராசத்தியுந் திரோதசத்தியும் இச்சாசத்தியும் ஞானசத்தியுங் கிரியாசத்தியுங் கூடிநின்று காரியப்படுத்துமென அறிக. இதில் சூக்குமை வாக்குச் சாந்தியாதீத கலையுஞ் சாந்திகலையும் பற்றாக நிற்கப் பராசத்தியுந் திரோத சத்தியுங் காரியப்படுத்துமென அறிக. இனி பைசந்தி வாக்கு வித்தியாகலை பற்றாக நிற்க இச்சாசத்தி காரியப்படுத்துமென அறிக. இனி மத்திமை வாக்குப் பிரதிட்டாகலை பற்றாக நிற்க ஞானசத்தி காரியப்படுத்துமென அறிக. இனி வைகரி வாக்குக்கு நிவிர்த்திகலை பற்றாக நிற்கக் கிரியாசத்தி காரியப்படுத்துமென அறிக. அன்றியும் முற்கூறிய பஞ்சமையென்னும் வாக்குக் கூட்டுகில் பராசத்தியுஞ் சாந்தியாதீதகலையும் அதற்குக் கூட்டிக்கொள்க. இங்ஙனஞ் சொல்லப் பட்ட வாக்குக்கள் நாலுங் கலைகள் ஐந்தினோடுங் கூடிக் காரியப்படும் என்பதற்கு பிம் சித்தியாரில் “நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித், திகழ்ந்திடும் அஞ்ச தாக’’ (1.24) எது கண்டுகொள்க. இதனுள் ‘நிகழ்ந்திடும் வாக்கு நான்கும்’ என்றது கொண்டே நிகழாத வாக்கும் ஒன்றுண்டென்பது கருத்தாகப் பஞ்சமை என்னும் வாக்கு உண்டெனதென அறிக. இங்ஙனங் கூறப்பட்டவையிற்றில் சத்திகள்இவையிற்றைக் காரியப்படுத்துமென அறிக. இதற்கு பிம் இந்நூலில் மேல் வருகிற “இத்தகைமை இறையருளால்’’ (39) என்னும் விருத்தத்தை முடியவொட்டிக் கண்டு கொள்க. இனி உயிரிற்சேர்ந்து வருமவை மருவும் எ து உயிரென்பது கொண்டே ஆன்மா என்பாருமுளர். அது பிராணவாவுவென அறிக. அப்படிப் பிராணவாயுவை உயிரென்பதற்கு பிம் சித்தியாரில் வாக்குக்கள் காரியப்படுமிடத்துச் சொன்ன விருத்தத்தில் “உள்ளுணர் ஓசை யாகிச் செவியினி லுறுதல் செய்யா, தொள்ளிய பிராண வாயு’’ (1.21) எம், “ஐயமில் பிராணவாவு அடைந்தெழுந் தடைவு டைத்தாம்’’ எம் கண்டுகொள்க. உயிர் வாயுவென்றுஞ் சொல்லப்படுமென்பதற்கு பிம் “உயிரொலி வங்கூழ் சலநம் வாதம் வளி மாருதம்’’ என்னும் இலக்கணங்களினுங் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது சூக்குமை வாக்கு நாத வடிவாக உந்தியை வந்துகூடி யாதாமொன்றைச் சொல்லுமிடத்துப் பைசந்தி வாக்கானது அந்த வசனத்துக்குரித்தாகிய அக்கரங்களை மயில் முட்டையில் ஜலம்போலத் தோற்றுவித்து நிற்குமென்றும், மத்திமை வாக்கானது பிராணவாயுவையுங் கூடி உள்ளே தொனியாய் நிற்குமென்றும், வைகரி வாக்கானது பிராணவாயுவோடு உதானவாயுவையுங் கூடிச் செவிப்புலனுக்குக் கேட்பதாக வசனிக்குமென்றும் வருமுறைமையை யறிவித்தது.

குறிப்புரை :

இந்த வாக்குக்கள் நாலொடுங் கூடி ஆன்மா அருளாலே காரியப்படுமிடத்துச் சுத்த தத்துவங்கள் ஐந்தினாலே காரியப்படுமென்றும் அந்தச் சுத்த தத்துவங்களிலே அசுத்த மாயையில் தோற்றப்பட்ட கலையாதி தத்துவங்களிற் கலையும் வித்தையுங் காரியப்படும் முறைமையும் மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

இத்தகைமை இறைஅருளால் உயிர்அறியும் அறிவுக்(கு)
ஈடாக வாடாதே ஈரிரண்டில் உரைத்த
வித்தைமுதல் ஐவரான் விளங்கு ஞானம்
மேவியிடும் எனஉரைப்பர் அசுத்த மாயை
வைத்தகலை தான்மூல மலம்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதர வித்தையிடை நின்றறிவை உயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே.
.
சுத்ததத் துவத்தால் தொல்லுயிர் உணர
வைத்திடுங் கலைவித்தை மருவு மென்றது.

பொழிப்புரை :

இத்தகைமை வாடாதே ஈரிண்டில் இறையருளால் உயிரறியும் அறிவுக்கீடாக இந்த முறைமையாலே கெடாதே வருகிற வாக்குக்கள் நாலினுங் கூடித் தம்பிரானார் காருண்ணியத்தினாலே ஆன்மா அறியுமறிவுக்குத் தக்கதாக; உரைத்த வித்தை முதல் ஐவரான் விளங்கு ஞானம் மேவியிடுமென உரைப்பர் முன்னே சுத்த மாயையிற் றோற்றமாகச் சொல்லப்பட்ட சுத்த வித்தை ஈசுவரம் சாதாக்கியஞ் சத்தி சிவம் என்கிற தத்துவங்கள் ஐந்தினாலும் பிரகாசிக்கிற அறிவு பொருந்தியிடுமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அன்றியும்; அசுத்த மாயை வைத்த கலைதான் மூலமலம் சிறிதே நீக்கி மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனை அசுத்த மாயையிலே யுண்டாக்கப்பட்ட கலையானது அந்தச் சுத்த தத்துவத்திற் சத்தி தத்துவம் உதவியாகக்கொண்டு ஆன்மாவை மறைக்கப்பட்ட ஆணவ மலத்தைச் சற்றே ஒதுக்கி இந்திரியங்களின் பயனாகிய விடயங்களை ஆன்மாப் பொருந்தும்படி எழுப்புவிக்கும்; வித்தை யிடை புத்திதர உயிர்க்கு நின்றறிவை பொருந்தியிடும் வகை புணரும் சுத்த மாயையில் தோற்றமாயுள்ள சுத்த வித்தை உதவியாகக்கொண்டு சொல்லப்பட்ட அசுத்த மாயையில் தோற்றமாயுள்ள வித்தையானது அந்த விடயங்களை ஆன்மா கொள்ளுமிடத்து இன்னதென்று நிரூபித்து அறியத்தக்க ஞானத்தை ஆன்மாவுக்கும் விடயங்களுக்கும் நடுவேநின்று அறிவுண்டாம்படி கூட்டும். இதுதான் கூட்டு முறைமை யாராலே யென்னில் ; புனித சத்தி புணர்ந்தே சுத்தனாகிய சிவனுடைய சத்திகள் தொழிலாகப் பூண்டுநின்று செலுத்த அதனோடுங் கூடிக்கொண்டு நின்று. உரைத்த வித்தைமுதல் ஐவரான் விளங்கு ஞானம் எகு சுத்த தத்துவம் ஐந்தினாலும் ஆன்மாக்களுக்கு ஞானமுண்டாமென்ற தெங்ஙனே என்னில், சிவசத்திகள் சுத்த தத்துவங்களைக் காரியப்படுத்தச் சுத்த தத்துவங்கள் அசுத்த மாயையிற் கலாதிகளைக் காரியப்படுத்த அவையிற்றினாலே ஆன்மாக்களுக்கு அறிவுண்டாமென்றதென அறிக. அஃதாவது கிரியாசத்தி சத்தி தத்துவத்தை எழுப்பச் சத்தி தத்துவங் காலமும் நியதியுங் கலையையும் எழுப்பக் கலை தழற்பொடி நீங்கினாற்போல ஆணவமலத்தைச் சிறிதே நீக்கி அந்தக் கலையே வடிவாக ஆன்மாவுக்குச் சிறிதறிவை உண்டாக்க ஞானசத்தி சுத்த வித்தையை யெழுப்ப சுத்தவித்தை வித்தையையெழுப்ப வித்தை ஆன்மாவுக்கு அறிவை உண்டாக்குமென்றதனை அறிக. இனி, புத்திதர வித்தை யிடைநின்று எ கு புத்திதர என்பதை புத்திதத்துவம் என்பாருமுளர். அது பொருளாகாதென அறிக. “புந்தி பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே’’ (42) என்று புத்தி தத்துவத்தின் காரியப்பாடு பின்பே வருகையால் அதனை இவ்விடத்துக் கூறவேண்டுவதில்லையென அறிக. ஆகையால் புத்திதர என்பதை ஆன்மா அந்த விடயங்களை நிரூபித்தறியவென்று பொருள் கூறுமதே வழியென அறிக. இதனாற் சொல்லியது முன்னர்ச் செய்யுளிற்கூறிய வாக்குக்கள் நாலிலும் ஆன்மாக்கள் அறியுமிடத்துச் சிவ தத்துவங்களினாலே அறியுமென்னும் அவையாலே அசுத்த மாயையிற் கலையும் வித்தையுங் காரியப்படும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

மேல் அராக தத்துவமும் நியதிதத்துவமுங் கால தத்துவமுங் காரியப்படுமுறைமை அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாய்ப்
பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும் நியதி
தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல
நேசமுறு தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்
நிகழ்காலம் கழிகாலம் எதிர்கால மென்றே
ஓசைதர வருங்காலம் எல்லைபலம் புதுமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே.
.
மாலுறும் அராகமும் மன்னிய நியதியுங்
காலமு மூன்றின் கருத்தையு முரைத்தது.

பொழிப்புரை :

பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாய்ப் பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும். சொல்லுதற்கரிய அராக தத்துவம் ஆன்மாக்கள் செய்த கன்மத்துக்கு ஈடாகப் பெற்றதிலே நின்றும் பெறாததற்கு ஆசையை மிகவும் உண்டாக்கும்; நியதி தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்கைபோல நேசமுறு தம் கன்மம் நிச்சயித்து நிறுத்தும் நியதி தத்துவமானது பொதுவாக இராச்சியம் பண்ணும் இராசாவினுடைய ஆக்கினையைக் கொண்டு உலகில் ஆன்மாக்கனை எல்லைவிட்டுக் கடவாதபடி அந்த ஆக்கினையிலே நிறுத்தி நடத்தும் மந்திரியைப்போல இவ்வான்மாக்கள் செய்த கன்மத்தின் வழியன்றி ஏறக்குறையப் போகாதபடி அறுதியாக நிறுத்தும்; நிகழ்காலம் கழிகாலம் எதிர்கால மென்றே ஓசைதர வருங்காலம் எல்லை பலம் புதுமை உறுவிக்கும் கால தத்துவமானது நடக்கிறகாலமென்றும் இறந்தகாலமென்றும் வருகிற காலமென்றுஞ் சொல்லப்பட்டு, போன காலத்தில் உண்டாகிய எல்லையையும் நடக்கிற காலத்தில் உண்டாகிய பலத்தையும் வருகிற காலத்தில் உண்டாகிய புதுமையையும் உண்டாக்கி நிற்கும். இவைதான் ஆராலே யுண்டாக்குமென்னில்; இறை சத்தி உடனாய் நின்றே கர்த்தாவினுடைய திருவருளான சத்தி கூடிநின்று காரியப்படுத்தும்.
பேசரிய அராகம் எ து ஆசையின் மிகுதி சொல்லுதற் கரிதென்றதென அறிக. கழிகாலத்துக்கு எல்லையென்றது ஆண்டு திங்கள் நாளென அறிக. நிகழ்காலத்துக்குப் பலனென்றது தனக்கு அநுபவமான புசிப்பாயுள்ள விடயங்களையென அறிக.
எதிர்காலத்துக்குப் புதுமையென்றது தானறியாததன்றி அறிந்தவற்றையும் புதுமையென்றதென அறிக. இனி இறை சத்தி உடனாய் நின்றே என்றது இச்சாசத்தி ஈசுவர தத்துவத்தை எழுப்ப ஈசுவர தத்துவம் அராக தத்துவத்தை எழுப்ப அராக தத்துவம் ஆன்மாவுக் கிச்சையை எழுப்புமென்றதென அறிக. இனி நியதி யாதாமொரு பொருளை நிச்சயிக்குமிடத்துக் கிரியாசத்தி சத்தி தத்துவத்தைக் கொண்டு நியதியை எழுப்ப நியதி யாதாமொரு பொருளை நிச்சயிக்குமென்றதென அறிக. இனி காலங்கூட்டுமென்றது கிரியாசத்தி தத்துவத்தைக் கொண்டு காலத்தை எழுப்பக் காலம் ஆன்மா புசிக்கும் அவதரங்களைக் கூட்டுமென்றதனை அறிக.
இதனாற் சொல்லியது அராக தத்துவம் கன்மங்களுக்கீடாகப் பெற்றதைச் சிறிதாக்கிப் பெறாததிலே ஆசையை மிகவும் உண்டாக்குமென்றும், நியதி தத்துவம் இராசாக்கினைபோலக் கன்மத்தை நிச்சயித்து நிறுத்துமென்றும், கால தத்துவம் கழிகாலத்தின் எல்லையையும் நிகழ்காலத்திற் பலத்தையும் எதிர்காலத்திற் புதுமையையும் உண்டாக்குமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவம் ஐந்துங் காரியப்படுகிற சமுகந்தானே புருட தத்துவமென்றும் பிரகிருதி தத்துவம் காரியப்படும் அவதரத்து மூன்று குணமாக நின்று காரியப்படும் முறைமையும் மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம்
அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர்
மெய்வகைய கலாசுத்தி தனின்இதற்கும் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பியநூல் விளம்பும்
செய்வகையின் தொடர்ச்சியிங்குத் தோன்றுவிக்கும் குணத்தின்
சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமாம் அவைதாம்
இவ்வகையிற் சாத்துவித ராசததா மதமாய்
இயம்புவர்கள் ஒன்றிரண்டு குணம்ஏற்க உடைத்தே.
.
புகன்றவ ற்றால் வரு புருடதத் துவமும்
அகன்ற மானு மதன்ழுணம் விரித்தது.

பொழிப்புரை :

ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம் அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர் ஆன்மாவானது காலம் நியதி கலை வித்தை அராகம் இவை ஐந்துந் தனக்கு உடம்பாகக் கொண்டு இந்திரியங்களுடனே கூடிச் சத்தாதி விடயங்களைப் புசிக்க வருகிற அவதரத்தைப் புருட தத்துவமென்று சொல்லுவார்கள் பெரியோர்கள்; மெய்வகைய கலாசுத்தி தனின் இதற்கும் சுத்தி மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல் விளம்பும் உண்மையாகச் சொல்லப்பட்ட மந்திர முதலான ஐந்தும் நிவிரித்திமுதலான கலைகள் ஐந்தினுமடைந்து சுத்தி பண்ணுமிடத்து இந்தப் புருட தத்துவத்தையுஞ் சுத்தி பண்ணப்படுமென்று நம்மால் விரும்பப்பட்ட திவ்வியாகமங்கள் சொல்லும்; அன்றியும், மெய்வகைய கலாசுத்தி எ கு மெய்யாகிய சரீரத்தில் ஐவகைப்பட்ட கலாசோதனை செய்யுமிடத்துமென அறிக; செய்வகையின் தொடர்ச்சி யிங்குத் தோன்றுவிக்குங் குணத்தின் சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமாம் ஆன்மாக்கள் முன் ஜநநத்திற் செய்த கன்மத்துக்கு ஏதுவாயுள்ள சுக துக்கங்களை இப்பொழுதுண்டாக்குங் குணங்களின் வடிவாய்ப் பொருந்துகிற பிரகிருதி மூன்று வகையாகிய குணமாம்; அவைதாம் அந்தக் குணங்களின் பெயராவன; இவ்வகையிற் சாத்துவித ராசத தாமதமாய் இயம்புவார்கள் இந்த முறைமையிலே சாத்துவித குணமென்றும் இராசத குணமென்றுந் தாமத குணமென்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள்; ஒன்றிரண்டு குணமேற்க வுடைத்தே இந்தக் குணங்கள் மூன்றுக்கும் ஒவ்வொன்றுக் கிவ்விரண்டு குணமாக ஆறு குணமும் அநாதியே பொருந்தும் இயல்பினை யுடைத்து.
மெய்வகைய கலாசுத்தி எ கு மெய்யாகிய சரீரத்தில் ஐவகைப் பட்ட கலாசோதனை செய்யுமிடத்து மென்னவுமாமென்று பொருள் கூறியது ஏதென்னில், ஆசாரியன் தீடிக்ஷ செய்யும் அவதரத்துக் கலாசோதனை செய்யவேண்டுகையால் அதற்கு நிவர்த்தி முதலான கலைகள் ஐந்தினையுஞ் சீடன் சரீரத்திலே ஐந்துவகைப்படுத்திச் செய்யவேண்டுகையால் அப்படிச் சொன்னதென அறிக.
அதற்கு வகை எங்னே என்னில் மூலாதாரந் தொடங்கி உந்திக்குமேல் எண் விரலளவு நிவிர்த்திகலைக்கு எல்லையென அறிக. அதற்கு மண்டலம் அக்கினி மண்டலம். ஆதாரம் மூலாதாரமுஞ் சுவாதிட்டானமும். அக்கரம் அகாரம்.பிரகாசஞ் சொரிதழற்கொழுந்து. மலம் மாயாமலம். அவத்தை சாக்கிரம். மாத்திரை ங. மந்திரம் இருதயமுஞ் சத்தியோசாதமும். பதம் ஓநமோ முதல் மாதேவ ரந்தமாக உஅம். வன்னம் க்ஷகாரமொன்றும். புவனம் காலாக்கினி முதல் வீரபத்திரர்கள் முடிவாகிய 108 தத்துவம் பிருதிவியொன்றும். தெய்வம் பிரமா. தொழில் சிருஷ்டி என்று இங்ஙனம் நிவிரித்திகலைக்குக் கண்டுகொள்க.
இனி, பிரதிட்டாகலைக்கு இருதயந் தொடங்கிக் கண்டத்தளவும் எல்லையென அறிக. அதற்கு மண்டலம் ஆதித்த மண்டலம். ஆதாரம் மணிபூரகம். அக்கரம் உகாரம். பிரகாசம் அக்கினியும் ஆதித்தனுங் கூடின பிரகாசம். மலம் கன்ம மலம். அவத்தை சொப்பனம். மாத்திரை உ மந்திரம் சிரசும் வாமதேவமும். பதம் மகேசுர முதல் அரூபினி முடிவாகிய உகம். வன்னம் உடி முதல் அந்தம் உசம் புவனம் அமரேசர் முதல் சிகண்டி முடிவாகிய ருசாம். தத்துவம் பிருதிவி நீங்கலாக ஆன்ம தத்துவம் உஙம் தெய்வம் விஷ்ணு. தொழில் திதி என்றிங்ஙனம் பிரதிட்டா கலைக்குக் கண்டுகொள்க. இனி, வித்தியாகலைக்குக் கண்டத்துக்குமேல் தாலு மூலத்தளவு மெல்லை நாலங்குலமென அறிக. அதற்கு மண்டலம் ஆதித்த மண்டலம். ஆதாரம் அநாகதம். அக்கரம் மகாரம். பிரகாசம் மின். மலம் மாயேய மலம். அவத்தை சுழுத்தி. மாத்திரை க. மந்திரம் சிகையும் அகோரமும். பதம் வியாபினி முதல் தியானகாரிய முடிவாகிய உயம். வன்னம் முதல் அந்தமாகிய ஏழும். புவனம் தியானம் முதல் வாமம் முடிவாகிய உஎம். தத்துவம் வித்தியா தத்துவம் ஏழும். தெய்வம் உருத்திரன். தொழில் சங்காரம் என்றிங்ஙனம் வித்தியாகலைக்குக் கண்டுகொள்க.
இனி, சாந்திகலைக்குத் தாலுமூலத்துக்குமேற் புருவ மதத்தியத்தளவுமெல்லை நாலங்குலமென அறிக. இதற்கு மண்டலம் சோம மண்டலம். ஆதாரம் விசுத்தி. அக்கரம் விந்து. பிரகாசம் விளக்கொளி. மலம் திரரோதாயி. அவத்தை துரியம். மாத்திரை அரை. மந்திரம் கவசமுந் தற்புருடமும். பதம் நித்திய நியோகினி முதல் வியோம வியாபினி முடிவாகிய ககம். வன்னம் முதல் அந்தமாக ஙம் புவனம் முதல் சதாசிவ முடிவாகிய கஅ ம். தத்துவம் சுத்தவித்தையும் ஈசுரமும் சாதாக்கியமும். தெய்வம் மகேசுரம். தொழில் திரோபாவம் என்றிங்ஙனஞ் சாந்திகலைக்குக் கண்டுகொள்க.
இனி, சாந்தியாதீதகலைக்குப் புருவ மத்தியத்துக்குமேல் மூன்றங்குலம் எல்லையென அறிக. இதற்கு மண்டலம் சோம மண்டலம். ஆதாரம் ஆக்கினை. அக்கரம் நாதம். பிரகாசம் வாளொளி. மலம் ஆணவமலம். அவத்தை துரியாதீதம். மாத்திரை கால். மந்திரம் நேத்திரமும் அத்திரமும் ஈசானமும். பதம் பிரணவம் ஒன்றும். வன்னம் முதல் அந்தம் கசா ம். புவனம் நிவர்த்தி முதல் சமனாந்தம் முடிவாகிய கரும். தத்துவம் சத்தியுஞ் சிவமும். தெய்வம் சதாசிவம். தொழில் அநுக்கிரகம். என்றிங்ஙனஞ் சாந்தியாதீதகலைக்குக் கண்டுகொள்க. ஆக இங்ஙனங் கலைகள் ஐந்துக்கும் கண்டுகொள்க.
இங்ஙனங் கூறிவந்த பொருள்களிற் கலாசோதனைக்கும் மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள் என்று சொல்லியிருக்க இவை நீங்கலாக மற்றுள்ள ஆதார முதலான பொருள்கள் கூறவேண்டியதேதென்னில் அஃதாவது கலாசோதனை செய்யுமிடத்துச் சரீரத்தில் ஐவகைப்படுத்திச் செய்ய வேண்டுகையால் அந்தத் தத்துவங்கள் தோறும் நிற்கும் பொருள்களை வகுத்துக் கூறியதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “மந்திரங்கள் முதலைந்துங் கலையைந்தில் வியாத்தி’’ (8.7) என்னும் விருத்தம் முதலாகிய செய்யுள் மூன்றிலும் இது காவை அம்பலவாணத் தம்பிரான் செய்தது. உரையோடு அச்சிடப்பட்டிருக்கிறது. பிரசாத அகவலினும் தத்துவப் பிரகாசத்தில் “இவ்வகையு மண்விகற்ப மெட்டு மேவிலெழிலலகா ரமுநிறஞ் சொரிதழல்மாத் திரையும்’’ (134) எம் விருத்தம் முதலாகிய செய்யுள் எட்டினுங் கண்டுகொள்க. இனி ஒன்றிரண்டு குணமேற்க வுடைத்தே எகு ஒவ்வொரு குணத்திலே இவ்விரண்டு குணம் ஏற்க உண்டாமென்று பொருள் கூறியதற்கு வகுப்பேதென்னில், சாத்துவிதத்தில் இராசதமுஞ் சாத்துவிதத்தில் தாமதமும் இராசதத்திற் சாத்துவிதமும் இராசதத்தில் தாமதமும் தாமதத்தில் இராசதமும் தாமதத்தில் சாத்துவிதமும் என்றிங்ஙனங் கண்டுகொள்க. இதற்கு பிம் சித்தியாரில் “வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையிற் றோன்றித், தருங்குண மூன்றா யொன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும், இருங்குண ரூப மாகி இசைந்திடு மெங்கு மான்மாப், பெருங்குணவடிவாய்ப் போக சாதனம் பெத்த மாமே’’ (2.57) எது கண்டுகொள்க. குணத்தின் சேர்வுபுரி பிரகிருதி என்பதற்கும் இந்தப் பிரமாணத்திலே கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது காலமும் நியதியுங் கலையும் வித்தையும் அராகமுங் கூடின சமுகந்தானே புருட தத்துவமென்றும் தீடிக்ஷயிலே கலாசோதனை செய்யுமிடத்து இந்தப் புருடதத்துவத்துக்குஞ் சோதனை பண்ணவேண்டுமென்றும் குணசொரூபமாயுள்ள பிரகிருதி தானே மூன்று குணமாகக் காரியப்படுமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட குண மூன்றும் ஒன்பது வகையாகக் காரியப்படுகைக்கு வகுப்பெங்ஙனேயென்று வினவ அவை காரியப்படும் முறைமையும் மேல் புத்தி தத்துவங் காரியப்படும் முறைமையும் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 5

அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா பிருதி
அடர்ச்சிமிகுங் கவுரவம்அ நியமம்இவை அடைவே
நிலவியிடும் மும்மூன்றும் உயிரொன்றில் கலந்தே
நிற்கும் இவை நிறைபுலனின் பயன்எவையும் கவரும்
குலவிவரு போகங்க ளிடமாய் மாறாக
குறைவில்ஒளி யாம்அலகில் புலனிடத்தின் ஒருமை
பலவகையும் உடையதாய்ப் பரனருளாற் புந்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே.
.
விளம்பிய குணம்நவ மாக விரிந்தும்
வளந்திகழ் புத்தியைம் பதுவகைத் தென்றது.

பொழிப்புரை :

அலகில் குணம் எண்ணிறந்திருக்கப்பட்ட இந்தக் குணத்தின் விரிவைச் சொல்லுமிடத்து முன்சொல்லப்பட்ட பிரதானமான குணம் மூன்று மொழிந்து ஏறின குணம் ஆறுக்கும் வகையாவன; பிரகாசம் பிரகாசமாயிருக்கும். அஃதாவது சாத்துவிகத்திலே இராசதங் கூடினால் அந்தச் சாத்துவிகத்தைப் பிரகாசித்துக்கொண்டு நிற்கு மென்றதென அறிக ; லகுதை நொய்தாயிருக்கும். அஃதாவது சாத்துவிகத்திலே தாமதங் கூடினால் நல்லொழுங்குகளை மறைத்துக்கொண்டு அந்தப் பிரகாசத்தை நொய்தாக்கிக்கொண்டு நிற்குமென்றதென அறிக; வியாபிருதி தெரியாமல் மறைத்து நிற்கும். அஃதாவது இராசதத்திலே தாமதங்கூடினால் நல்லொழுங்குகளை மறைத்துக்கொண்டு நிற்குமென்றதென அறிக; அடர்ச்சிமிகும் செறிவித்து நிற்கும். அஃதாவது இராசதத்திலே சாத்துவிகங் கூடினால் நன்மைகளைச் செறிவித்து நிற்கு மென்றதென அறிக; கவுரவம் பெருமையை உண்டாக்கும். அஃதாவது தாமதத்திலே இராசதங் கூடினால் கர்வத்திலே பெருமையைப் பண்ணி நிற்குமென்றதென அறிக ; அநியமம் நல்ல நியம் மல்லாததைச் செய்வித்து நிற்கும். அஃதாவது தாமதத்திலே சாத்துவிகங் கூடினால் அந்நிய நியமங்களைச் செய்வித்துக் கொண்டு நிற்குமென்றதென அறிக; இவை யடைவே நிலவியிடும் இந்தக் குணங்கள் இங்ஙனஞ் சொன்ன முறைமையிலே பொருந்தி நிற்கும். இவை வெவ்வேறாய் நிற்குமோ கூடி நிற்குமோ என்னில்; மும்மூன்றும் உயிரொன்றில் கலந்து நிற்கும் இவை ஒன்பது குணமுமொரு ஆன்மாவிலே கூடிநிற்கும்.
ஒன்பது குணமாவது சாத்துவிகத்திற் சாத்துவிகமென்றும் சாத்துவிகத்தில் இராசதமென்றும் சாத்துவிகத்தில் தாமதமென்றும், இராசதத்தில் இராசதமென்றும் இராசதத்திற் சாத்துவிகமென்றும் இராசதத்தில் தாமதமென்றும், தாமதத்தில் தாமதமென்றும் தாமதத்திற் சாத்துவிகமென்றும் தாமதத்தில் இராசதமென்றும் இங்ஙனம் ஒன்பது வகைப்படும். அதற்கு வகையேதென்னில் சாத்துவிகத்திற் சாத்துவிகமாவது துறவும் சாந்தமும் மோக்ஷத்திலே மிகுந்த தாகமுமாகையென அறிக. சாத்துவிகத்தில் இராசதமாவது துறவும் சாந்தமும் இடையே நழுவ முத்தியில் முயலுகையுமாமென அறிக. சாத்துவிகத்தில் தாமதமாவது துறவும் சாந்தமும் மோக்ஷத்திலே முயலுகைகையுமன்றி விடயவிருப்பமும் உண்டாகையென அறிக. இனி இராசதத்தில் இராசதமாவது தன்மத்தில் ஆசையயோடுங் கூடி இடைவிடாமற் செய்கையென அறிக. இராசதத்திற் சாத்துவிகமாவது யாவர்க்குங் கிருபையோடே அறங்களைச் செய்கையென அறிக. இராசதத்தில் தாமதமாவது இவையிற்றினை இகழ்தலும் பாவத்தொழில்களைச் செய்தலுமென அறிக. இனி தாமதத்தில் தாமதமாவது மயக்கமும் இகழ்ச்சியும் பாவமும் ஆசையும் பயமும் உறக்கமுமென அறிக. தாமதத்தில் இராசதமாவது தகாதன செய்தலும் உண்ணாதன உண்ணலுங் களிப்பும் வெகுளியுமெனஅறிக. தாமதத்திற் சாத்துவிகமாவது வேதாகமங்களில் விருத்தமாயிருக்கிற கிருத்தியமான சிறு தேவதைகளைப் பிரபத்தி பண்ணுகையென அறிக. இப்படி எண்ணிறந்த குணங்களை உடைத்தாகையாலே அலகில் குணமென்று சொல்லப்பட்டதென அறிக.
இங்ஙனங் குணபேதங்களாகக் கூடிநின்று செய்யுமிடத்து; இவை நிறைபுலனின் பயனெவையுங் கவரும் இந்தக் குணங்கள் ஒன்பதும் நிறைந்து நிற்கிற இந்திரியங்களின் பயனான விடயங்களைத் தன்னிடத்திலே கவர்ந்து கொள்ளும்; குலவிவரு போகங்களிடமாய் மாறாக் குறைவில் ஒளியாம் சர்வராலுங் கொண்டாடப்பட்டு வருகிற புசிப்புக்களை ஆன்மாக் கொள்ளுகிற இடமுமாய் உடல்முழுதும் விட்டு நீங்காத குறைவற்ற பிரகாசமுமாய் நிற்கும். இவ்வளவும் வித்தியா தத்துவத்தின் கலை தொடங்கிப் பிரகிருதி மாயையாகிய குணங்கள் காரியப்படுகையை அருளிச்செய்து மேல் ஆன்ம தத்துவத்திற் புத்தி தத்துவங் காரியப்படுகையை அருளிச் செய்கின்றது; அலகில் புலனிடத்தின் ஒருமை பலவகையும் உடையதாய்ப் பரனருளாற் புந்தி பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே எண்ணிறந்த விருத்தியாகிய விடயங்களை இந்திரியங்களைக் கொண்டு ஆன்மாக் கொள்ளுமிடத்து நிச்சயித்தலைப் பலவகையாலும் உண்டாவதாய்ச் சிவனுடைய அநுக்கிரகத்தினாலே புத்தியானது ஐம்பது ஐம்பது பேதங்களை ஒவ்வொரு குணங்கள் தோறுஞ் செய்து நிற்கும்.
இந்தப் புத்தியின் விருத்தி எங்ஙனே என்னில், அவ்வியத்தமாவது மூன்று குணங்களுந் தோன்றாமல் வடவித்துப்போலெயிருந்த அவதரமென அறிக. குணதத்துவமாவது வடவித்திலே நின்றும் அங்குரந் தோன்றினாற் போல அவ்வியத்தித்திலே மூன்றாய்த் தோன்றிச் சமமாய் அலைவறநின்ற அவதரமென அறிக. வேறுபட்ட குணங்களையுடைத்தாய் ஏற்றக்குறைச்சல் புத்தி முதலான தத்துவங்களென அறிக. புத்தி தத்துவமாவது இராசதமுந் தாமதமுங் குறைந்து சாத்துவிககுணம் மேலிட்ட அவதரமென அறிக. இந்தப் புத்தியினது காரியமாவது தன்ம ஞான வைராக்கிய ஐஸ்வரியமென்றும் அதன்ம அஞ்ஞான அவைராக்கிய அநைஸ்வரியமென்றும் எட்டு வகையாம். இதில் தன்மத்திலே நின்றும் பத்து பாவகந் தோன்றும். ஞானத்திலே நின்றும் நூற்றெண்பது பாவகந்தோன்றும். வைராக்கியத்திலே நின்றும் அறுபத்துநாலு பாவகந்தோன்றும். ஐஸ்வரியத்திலே நின்றும் நூற்றெழுபத்தாறு பாவகந்தோன்றும். மற்ற அதன்மத்திலே நின்றும் முப்பத்தெட்டு பாவகந்தோன்றும். அஞ்ஞானத்திலே நின்றும் முப்பத்தெட்டு பாவகந் தோன்றும். அவைராக்கியத்திலே நின்றும் நூறு பாவகந்தோன்றும். அநைஸ்வரியத்திலே நின்றும் எட்டு பாவகந்தோன்றும். ஆக புத்தியினுடைய காரியம் அறுநூற்றொருபத்து நாலென அறிக. அப்படியிருக்க இந்நூலிலே பஞ்சாசற்பாவகமென்று நானூற்றைம்பதாகச் சொல்லுவான் ஏனென்னில் அப்படியுஞ் சில ஆகமங்களிலே சொல்லுகையாலென அறிக. அன்றியும் பஞ்சாசற்பாவகமுமென்ற உம்மைகொண்டே மற்றதும் உண்டென அறிக. இனி, புத்தி தத்துவத்தை அலகில் புலனிடத்தி னொருமை பல வகையுமுடையதாய் என்றதேதென்னில் அது கன்மாகன்மங்களும் உடையதாய்ச் சத்தாதி விடயங்களிலே நிச்சயித்தலும் உடையதாய் இன்பதுன்பங்களிலே மோகத்தையும் உடையதாய் அறிவு தொழில்களுமுடையதாய் நிற்கையினாலே அப்படிச் சொன்னதென அடிறிக. இதற்கு பிம் சித்தியாரில் “சித்தமா மவ்வி யத்தஞ் சிந்தனை யதுவுஞ் செய்யும், புந்தியவ் வியத்திற் றோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து, வத்துநிச்சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப், பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்’’ (2.58) எது கண்டுகொள்க. இனி, புந்தி பஞ்சாசற்பாவகமும் பண்ணுவிக்கும் எகு புத்தி தத்துவமானது குணங்களோடுங்கூடிச் சம்பந்தமா யிருக்கையினாலே ஒரு குணத்துக்கு ஐம்பது வகையாக ஒன்பது குணத்துக்கு நானூற்றைம்பது வகையாகப் பேதித்ததென அறிக. என்றிங்ஙனம் புத்தி குணத்தோடு சம்பந்தமாய் நிற்கும் என்பதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “எண்ணிய புத்தியில் முக்குணஞ் சேரியல் பாற்கரந்து’’ எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது குணதத்துவம் ஒன்பது வகையாகக் காரியப்படும் முறைமையும் புத்திதத்துவம் ஒன்பது குணத்துக்கும் ஒவ்வொரு குணத்துக்கு ஐம்பது ஐம்பதாக நானூற்றைம்பது பாவகமாகக் காரியப்படும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

மேல் ஆங்காரமும் மனதுஞ் சித்தமுங் காரியப்படும் முறைமையை அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 6

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின்
இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முந்தியுறும் இச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா னதுநிற்கும் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே.
.
அகந்தைக் கிடமா மாங்கா ரத்துட
னிகழ்ந்தெழு மனஞ்சித்த மிவ்வகைத் தென்றது.

பொழிப்புரை :

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய் யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின் இல்லையெனும் இயல்பினதாய் ஆங்கார தத்துவமானது ஆன்மாக்கள் கன்மத்துக்கீடாக உண்டான சரீரத்திலே பொருந்திப் போதும்; வாயுவையும் இயங்கும்படி நிறுத்தி நீங்காத மமதைக்கு மூலமாய் நானேயொழியப் பிறர் எனக்கொப்பார் பூமியிலில்லையெனும் இயல்பினையும் உடையதாய் நிற்கும். இனி மனது காரியப்படும் வகையாவது; இந்திரியம் புலன்கள் தாம் நுகரும் அளவிலதின் முந்தியுறும் இச்சை தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து மானதமானது நிற்கும் இந்திரயங்களானது விடயமாகிய புலன்களைப் புசிக்குமிடத்து அதற்கு முந்திச் செல்லுமதா யிருக்கிற இச்சையே தனக்கு வடிவாய்த் தனக்கு வேண்டினதிலே சதாகாலமுஞ் சங்கற்பித்துக் கொண்டு நிற்கும் மனதானது. இனி சித்தங் காரியப்படும் வகையாவது; சிந்தை நினைவு சித்தமானது நினைவு மாத்திரமாய் நிற்கும். இங்ஙனமிவை காரியப்படுமிடத்து ; ஐயம் வந்துதரு மனமொழிய வகுப்பொணாதே யாதாமொன்றின்மேலே செல்லுமிடத்து ஆமோ அல்லவோவென்று ஐயப்பாட்டையுமுடைய மனதாலொழிய அவை காரியப்படமாட்டாது.
இதனாற் சொல்லியது யானெனதென்னும் மமதையையுடைய ஆங்காரமும் ஆமோ அல்லவோ என்கிற சந்தேகத்தினையுடைய மனதும் நினைவுமாத்திரமாயிருக்கிற சித்தமுங் காரியப்படும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

மேல் சோத்திராதியுஞ் சத்தாதியும் வசனாதியும் வாக்காதியு மாகத் தத்துவம் இருபதுங் காரியப்படும் முறைமையை அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 7

சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்
துண்டம்இவை ஐந்திற்கும் தொகுவிடய மாக
மன்னியசத் தப்பரிச ரூபரச கந்தம்
மருவியிடும் இவைஅடைவே வாக்குப் பாதம்
பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்
பேசலுறும் ஐந்திற்கும் பிறங்கொலிகொள் வசனம்
உன்னரிய கமனதா னவிசர்க்கா னந்தம்
உற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.
.
ஞானமுங் கன்மமும் நண்ணுமிந் திரியமும்
ஊனமில் விடயமுந் தொழிலு முரைத்தது.

பொழிப்புரை :

சொன்னமுறை செவி துவக்கு நோக்கு நாக்குத் துண்டம் இவை ஐந்திற்கும் தொகுவிடயமாக முன் சொல்லிவந்த முறைமையிலே உட்கரணங்களன்றியே புறக்கரணமாயுள்ள சோத்திரம் தொக்கு சக்ஷ சிங்ஙுவை ஆக்கிராணமென்னுமிவை ஐந்துக்குங் கூடத்தக்க விடயமாக ; மன்னிய சத்தப் பரிச ரூப ரச கந்தம் மருவியிடும் நிலைபெற்ற சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் இவை ஐந்தும் பொருந்தியிடும் ; இவை அடையே வாக்குப் பாதம் பின்னர் வருபாணி மிகு பாயுவினோ டுபத்தம் பேசலுறும் ஐந்திற்கும் வாக்கும் பாதமும் பின்வரப்பட்ட பாணியும் மிகுதலையுடைய பாயுவும் இதனோடு உபத்தமுமென்று சொல்லப்பட்ட கன்மேந்திரியம் ஐந்திற்கும்; பிறங்கொலிகொள் வசனம் உன்னரிய கமனதான விசர்க்கானந்தம் உற்றதொழில் பெற்றிடுவ துண்மையாமே விளங்கப்பட்ட ஓசையையுடைய வசனமும் நினைத்தற்கரிய கமனமும் தானமும் விசர்க்கமும் ஆநந்தமுமென்று பொருந்தப்பட்ட ஐந்து தொழிலும் அடைவே உண்டாகிறது முறைமையாம்.
வாக்கென்றது வாயென அறிக. இவை அடைவே என்றதற்கு வகையாவது: சோத்திரத்தின் வழித்து வாக்கு. தொக்குவின் வழித்துப்பாதம். சக்ஷவின் வழித்துப்பாணி. சிங்ஙுவின் வழித்துப் பாயுவு. ஆக்கிராணத்தின் வழித்து உபத்தம். என்னும் இவையிற்றைக் காரியப்படுத்தும் அவதரத்திலும் கண்டுகொள்க.

குறிப்புரை :

இதனாற் சொல்லியது புரக்கரணமாயுள்ள ஞானேந்திரியமாகிய சோத்திராதியும் அதன் விடயமாகிய சத்தாதியுங் கன்மேந்திரியமாகிய வாக்காதியும் அதன் தொழிலாகிய வசனாதியும் ஆக இருபதும் காரியப்படும் முறைமையை அறிவித்தது.
மேற்பூதங்கள் ஐந்துக் காரியப்படும் முறைமையை அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 8

முந்தியஐம் பூதங்கள் வானாதி யாக
முயங்கியநற் செவிநாசி கண்ணாமெய்ம் முறையால்
இந்தவயி னின்றுவரும் ஐம்புலனும் உயிர்தாம்
எய்தும்வகை தம்முருவின் இலங்கியிடும் புறத்தும்
வந்தடைய இடங்கொடுக்கும் நிரந்தரமாய் வானம்
வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டும்தீ வெம்மை
தந்தவைசுட் டொன்றுவிக்கும் நீர்குளிர்ந்து பதமே
தரும்உரத்துத் தரிக்கும்இது தரணி தானே.
.
ஒன்றுமைம் பூதங்க ளுள்ளும் புறம்பும்
நின்றுகா ரியப்படும் நெறியிது வென்றது.

பொழிப்புரை :

முந்திய ஐம்பூதங்கள் வானாதி யாக தத்துவங்கள் எல்லாவற்றினும் முந்தத் தரிசனப்பட்டு வருகிற ஆகாசம் ஆதியான பூதங்கள் ஐந்தினும்; முயங்கிய நற் செவி நாசி கண்ணா பொருந்தப்பட்ட சோத்திர முதல் ஆக்கிராணம் ஈறாகவுள்ள இந்திரியங்கள் ஐந்துமிடமாக ; மெய்ம்முறையால் இந்த வயினின்று வரும் ஐம்புலனும் உண்மையாக அடைவே இந்த விடயங்களிலே நின்று கூடாநிற்கும் விடயங்கள் ஐந்தும். அன்றியும், இந்தப் பதத்துக்கு இந்திரியங்கள் ஐந்திற்கும் அடைவிலே பொருள் சொல்லவேண்டுகில், முயங்கிய நற்செவி மெய் கண் நாசி முறையால் இந்த வயனின்று வரும் ஐம்புலனும் என்று பாடமோதி பொருள்படுத்து மிடத்து பொருந்தப்பட்ட நன்மைப் பகுதியினையுடைய சோத்திரம் தொக்கு சக்ஷ சிங்ஙுவை ஆக்கிராணம் இவை யடைவே நின்று வருகிற சத்தாதியாகிய விடயங்கள் ஐந்துமென்று பொருள்படுத்திக்கொள்க; உயிர்தாம் எய்தும்வகை தம்முருவின் இலங்கியிடும் ஆன்மாக்கள் பொருந்தும்படித் தத்தஞ் சரீரங்களிலே விளங்கா நிற்கும் ; புறத்தும் உள்ளன்றியே புறம்பேயும் பூதங்கள் சீவிக்கும் படியாவது ; வந்தடைய இடங்கொடுக்கும் நிரந்தரமாய் வானம் ஆகாசமானது சர்வமுந் தன்னிடத்திலே வந்து பொருந்துகைக்கு இடத்தினையுங் கொடுத்து வெளியாய் நிற்கும் ; வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டும் வாயுவானது எல்லாவற்றையும் மிகுதியாக இயக்குவித்துக்கூட்டும்; தீ வெம்மை தந்தவை சுட்டொன்றுவிக்கும் அக்கினியானது உஷ்ணத்தையும் உண்டாக்கித் தன்னோடுங் கூடினவையிற்றையுஞ் சுட்டொன்றுபடுத்தும்; நீர் குளிர்ந்தது பதமே தரும். அப்புவானது தன்னோடுங் கூடினவையிற்றைக் குளிர்வித்து நெகிழ்ச்சியாக்கும் ; உரத்துத் தரிக்கும் இது தரணி தானே பிருதிவியானது கடினமாய் எல்லாவற்றையுந் தாங்கிநிற்கும்.
முந்திய ஐம்பூதங்கள் தம்முருவின் இலங்கியிடும் என்றது ஆன்மாக்கள் சோத்திராதிகளைக் கொண்டு சத்தாதிகளை அறியுமிடத்துப் பூதங்களிடமாக நின்று கொள்ளவேண்டுகையாலென அறிக. அதற்கு வகையாவது ஆன்மா ஆகாசமிடமாகநின்று சோத்திரத்தைப் பொருந்திச் சத்தத்தை அறிவன்; வாயுவிடமாக நின்று தொக்கைப் பொருந்திப் பரிசத்தை அறிவன்; தேயுவிடமாக நின்று சக்ஷவைப் பொருந்தி உருவத்தை அறிவன்; பிருதிவியிடாக நின்று ஆக்கிராணத்தைப் பொருந்தி கந்தத்தை அறிவன். இப்படியே ஞானேந்திரியங் காரியப்பட்டாற்போல ஆகாசமாதியான பூதங்களிடமாக நின்று கன்மேந்திரியமான வாக்காதிகள் காரியப்படும் முறைமையை அநுபவத்தாற் கண்டுகொள்க. தம்முருவின் என்றது பூதரூபமென்றுமாம். புறத்துமென்ற உம்மை கொண்டே உள்ளுமம்படிக் காரியப்படுமென்றதென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மா சத்தாதிகளை அறியுமிடத்துப் பூதங்களிடமாக நின்றறியுமென்றும் அந்தப் பூதங்கள் காரியப்படுமிடத்து உள்ளும் புறம்புமாக நின்று காரியப்படுமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவம் முப்பத்தாறுஞ் சுத்தமா யிருப்பதொன்றோ அசுத்தமாயிருப்பதொன்றோ என்றும் இந்தத் தத்துவங்களோடு ஆன்மா கூடிநிற்குமிடத்து இவர்களுக்குண்டாகிய பயனேதென்றும் வினவ மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 9

இந்நிரையின் ஐந்துசுத்தம் ஏழ்சுத்தா சுத்தம்
எண்மூன்றும் அசுத்தமெனும் இவைமுப்பத் தாறாம்
மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தாம்
மருவும்உரு நிலையழிய வரும்பொழுது வரியார்
பன்னகம்அண் டசம் கனவு படர்வகையே முன்னம்
பகரவரும் கலாதிநிலை பரவியசூக் குமமாம்
தன்உருவில் அணைந்துபயன் அருந்திஅரன் அருளால்
தரையினிடை வருமென்று சாற்றும் நூலே.
.
தூல வுடல்விட்டுச் சூக்கும வுருவுடன்
மேலுறு பயன்துய்த்து மீளு மென்றது.

பொழிப்புரை :

இந்நிரையில் இந்த முறைமையிலே ; ஐந்து சுத்தம் முன்னே “உன்னலரும் பரசிவன்தன் அருளாலே’’ (21) என்னும் விருத்தத்தில் தோற்றமாகச் சொல்லப்பட்ட சிவதத்துவம் ஐந்துஞ் சுத்த தத்துவமென்று பேராம்; ஏழ்சுத்தா சுத்தம் வித்தியா தத்துவம் ஏழும் சுத்தா சுத்தமென்று பேராம் ; எண் மூன்றும் அசுத்தம் ஆன்ம தத்துவம் இருபத்துநாலும் அசுத்தமென்று பேராம்; எனும் இவை முப்பத்தாறாம் என்றிங்ஙனம் மூன்று வகையாகச் சொல்லப்பட்ட தத்துவங்களினது தொகை முப்பத்தாறென்று நாட்டப்பட்டிருக்கும்; மன்னிய தத்துவங்களிடை மயங்கி இப்படி நிலைபெற்ற தத்துவங்களின் நடுவே ஆன்மா மயக்கமுற்று; நெடுந்துயர்தாம் மருவும் உரு நிலையழிய வரும்பொழுது மிகவுஞ் சுகதுக்க வேதனைகள் பொருந்தப்பட்ட தூல சரீரத்திலேயுள்ள கன்மந் தொலைந்து இதனை விட்டுப்போங் காலத்து; வரியார் பன்னகம் அண்டசம் கனவுபடர் வகையே வரி பொருந்தின பாம்பு தோலுரித்துப் போமாறு போலவும் முட்டையில் ஐநநமாயுள்ளவை அந்தத் தோடுவிட்டு நீங்குமாறு போலவும் நனவிலேயுள்ளவர்கள் கனவிலே அடையுமாறு போலவும்; முன்னம் பகரவருங் கலாதிநிலை பரவிய சூக்குமமாம் தன் உருவில் அணைந்து பயன் அருந்தி முன்னே சொல்லப்பட்டு வருகிற கலையாதியுள்ள தத்துவம் முப்பத்தொன்றும் விரிந்திருக்கப்பட்ட சூக்கும தேகமான யாதனாசரீரத்தைப் பொருந்திச் சுவர்க்க நரகங்களிலுண்டான இன்ப துன்பங்களைப் புசிசித்து; அரன் அருளால் தரையினிடை வருமென்று சாற்றும் நூலே தம்பிரானார் காருண்ணியத்தினாலே மீளவும் பூமியின்கண்ணெ வருமென்று சாத்திரங்கள் சொல்லும். சிவதத்துவம் ஐந்தையுஞ் சுத்தமென்றது ஏதென்னில், அது சுத்த மாயையில் தோற்றமாகையாலும் கர்த்தா கொள்ளப்பட்ட திருமேனியெல்லாம் அதினிடமாகக் கொள்ளுகையாலும் வேதாகமங்கள் தோற்றுகையாலுமென அறிக. இனி வித்தியா தத்துவம் ஏழையுஞ் சுத்தாசுத்த மென்றதேதென்னில், இவையிற்றைச் சுத்த தத்துவங்கள் காரியப்படுத்துகையாலும் அசுத்த மாயையில் தோற்றமாகையாலுமென அறிக. இனி ஆன்ம தத்துவம் இருபத்து நாலையும் அசுத்தமென்றதேதென்னில் அது பிரகிருதியில் தோற்ற மாகையாலும் மும்மலத்தையுடைய சகலர்க்குத் தனு கரண புவன போகங்களா யிருக்கையாலுமென அறிக. இனி வரியார் பன்னகம் அண்டசமென்றது தூல உடல்விட்டுச் சூக்கும தேகத்தோடும் போகிறதற்கு உவமையென அறிக. இனி கனவு படர்வகையே யென்றது ஒரு உடலிற்செய்த காரியம் மற்றோருடலில் தெரியாததற்கு உவமையென அறிக. இனி கலாதிநிலை பரவிய சூக்குமமா மென்றது கலையாதி தத்துவம் முப்பத்தொன்றுங் கூடியே சூக்கும தேகமா மென்றதென அறிக. இனி பயனருந்தி யென்றது தூலதேகத்தோடுங் கூடிநின்று செய்த புண்ணிய பாவத்துக்குத் தக்கதாகச் சூக்கும தேகத்தோடுங்கூடி இயம தண்டத்தினும் நரக சுவர்க்கங்களிலுள்ள இன்ப துன்பங்களினும் அநுபவிக்கிறதென அறிக. இனி தரையினிடை வருமென்றது அப்படித் தொலைந்துந் தொலையாத சேடகன்மத்தைப் புசிப்பதற்காக மீளவுங் தூல தேகத்தை வந்தெடுக்கையென அறிக.
இதனாற் சொல்லியது தத்துவம் முப்பத்தாறும் சுத்தமென்றுஞ் சுத்தாசுத்தமென்றும் அசுத்தமென்றும், இந்தத் தத்துவங்களினோடுங் கூடி நிற்கப்பட்ட ஆன்மாக்கள் தூல தேகத்தைவிட்டுப் போய்ச் சூக்கும தேகத்தோடுங்கூடி இன்ப துன்பங்களை இயம தண்டத்தினும் நரக சுவர்க்கங்களினும் அநுபவித்து மீளவும் பூமியின் கண்ணேவந்து தூல தேகத்தை எடுப்பார்களென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் ஜநந மரணப்பட்டு வருகிற ஆன்மாக்கள் எடுக்கப்பட்ட யோனிபேதம் எத்தனை வகைப்பட்டிருக்குமென்று வினவ நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமுமா யிருக்குமென்னும் முறைமையை மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 10

தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கின்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானிடர்ஒன் பதின்மர்
ஏற்றியொரு தொகைஅதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
.
பாயிர மாகவெண் பத்து நான்குநூ
றாயிர யோனிக் கடைவிது என்றது.

பொழிப்புரை :

தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்து வரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கின் ஆன்மாக்கள் ஜனனமெடுக்குமிடத்து முட்டையில் தோன்றுவன வேர்வையில் தோன்றுவன பூமியிற் செறிந்துவருகிற வித்தில் தோன்றுவன பைக்குடரிலே தோன்றுவன. இந்த நால்வகைத் தோற்றத்திலும் உண்டாகப்பட்ட எழுவகைப் பிறப்பாவன ; ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்பதென்றும் மிகவும் உறுதிபெற்றுடைய தாபரவர்க்கங்கள் பத்தொன்பது நூறாயிர வர்க்கமென்றும் ; ஊர்வ பதினைந்து ஊர்ந்து திரிவன பதினைந்து நூறாயிர வர்க்கமென்றும்; அமரர் பதினொன்றோடுலவா மாற்றரு நீர் உறைவன நற்பறவைகள் நாற்காலி மன்னியிடும் பப்பத்து தேவர்கள் பதினொரு நூறாயிர வாக்கமென்றும் ஒருகாலத்திலும் நீரைவிட்டு நீங்காமல் உண்டாகப்பட்டவை பத்து நூறாயிர வர்க்கமென்றும் நல்ல பறவைகள் பத்து நூறாயிர வர்க்கமென்றும் நாலு காலையுடையவை பத்துநூறாயிர வர்க்கமென்றும்; மானிடர் ஒன்பதின்மர் மனிதர் ஒன்பது நூறாயிர வர்க்க மென்றும் ; ஏற்றியொரு தொகை அதனில் இயம்புவர்கள் ஆக இவை ஒன்றாக எண்ணி ஒருதொகைப் படுத்துவர்கள் பெரியோர்கள்.அது ஏதென்னில், யோனி எண்பத்து வான்கு நூறாயிரமென்றெடுத்தே யோனி பேதங்கள் எண்பத்து நான்கு நூயிரமென்று வகையினைத் தெரித்து.
அண்டசமென்ற தோற்றம் பறவை பாம்பு முதலாயுள்ளவையென அறிக. சுவேதசமென்ற தோற்றம் கிருமி கீடம் விட்டில் பேன் முதலானவையென அறிக. உற்பீசமென்ற தோற்றம் மரம் பூண்டு கொடி முதலானவையென அறிக. சராயுசமென்ற தோற்றம் நாற்காலிகள் மானுடர் தேவ வர்க்க முதலானவையென அறிக. ஆகத்தோற்றம் நால்வகையென அறிக. இதில் எழுவகைப் பிறப்புக்கு வகையாவன: தேவர் நரர் மிருகம் பக்ஷி ஊர்வன நீருறைவன விருக்ஷமென அறிக.
இதனாற் சொல்லியது நால்வகைத்தோற்றமும் எழுவகைப் பிறப்பும் இதிலுண்டான யோனிபேதம் எண்பத்து நான்கு நூறாயிரமாக விரிந்த முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் ஆன்மாக்கள் ஜநநமரணப்பட்டு வரும் அவதரத்து மலபாகம் வந்து சத்திநிபாத முண்டாகும் முறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

இனையபல பிறவிகளின் இறந்துபிறந் தருளால்
இருவினைகள் புரிந்தருந்தும் இதுசகலம் அகலா
முனம்மருவும் இருபயனும் ஒருகாலத் தருந்த
முந்தநுக ருந்துபயன் அந்தமுற வந்த
வினையும்எதிர் வினையும்முடிவினை உதவு பயனால்
நேராக நேராதல் மேவுங் கால்முற்
சினமருவு திரோதாயி கருணை யாகித்
திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே.

உருவுடன் போகத் துற்றிடுஞ் சகலமும்
மருவிய சத்தி நிபாதமும் வகுத்தது.

பொழிப்புரை :

இனைய பல பிறவிகளின் இறந்து பிறந்தருளால் இரு வினைகள் புரிந்தருந்தும் இது சகலம் ஆன்மாக்கள் இத்தன்மைதாகிய எண்பத்து நான்கு நூறாயிர யோனிகள் தோறுஞ் சிவனுடைய அருளாலே பிறந்திறந்து புண்ணிய பாவங்களைச் செய்து இன்ப துன்பங்களை அநுபவிக்கிறது சகலாவத்தை. முன்னர் “புகலுமல மொழித்தற்கு’’ (37) என்ற செய்யுளில் “இலங்கும் விந்து பகர்வரிய உணர்வாகி’’ என்ற பதந்தொடங்கி இவ்வளவுஞ் சகலாவத்தையை அருளிச்செய்ததென அறிக. மேற் சுத்தாவத்தையை அருளிச் செய்கின்றது: அகலாமுனம் மருவும் இரு பயனும் ஒரு காலந் தருந்த இங்ஙனஞ் சொல்லப்பட்ட சகலாவத்தையைவிட்டு நீங்காமல் முன் ஜநநங்கள் தோறும் பொருந்தி வருகிற புண்ணிய பாவங்கள் இரண்டும் ஒரு ஜநநத்திலே புசித்துத் தொலையத் தக்கதாக; முந்த நுகருந்து பயன் முன் ஜநநத்திலே புசிக்கச் செய்தே ஏறி ஆர்ச்சிதமாய் அத்துவாவிலே கட்டுப்பட்ட சஞ்சிதமும்; அந்தமுற வந்த வினையும் இப்பொழுது புசித்து முடிவதாகவந்த உடலிலே கட்டுப்பட்ட பிராரத்த கன்மமும்; எதிர் வினையும் இப்பொழுது புசிக்கச் செய்தேயுள்ள ஹிதாஹிதங்களிலே யேறுகிற ஆகாமியமும்; முடிவினை உதவு பயனால் நேராக நேராதல் மேவுங்கால் இந்தக் கன்மங்கள் இவனுக்கு முடிந்துபோம்படி சிவபுண்ணியத்தின் அதிகத்தாலே எல்லாஞ் சேரத் துலையொக்கப் பொருந்தின இடத்து; முற்சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்திய சத்திநிபாதந் திகழுமன்றே முன் கோபம்போலே மறைத்துநின்ற திரோதாயி சத்தி காருண்ணியத்தைச் செய்து நன்மையுடைய சத்திநிபாதம் விளைக்கும்.
சத்திநிபாதமாவது சத்தி செலுத்தாமல் நிற்கிறதென அறிக. அஃதாவது புண்ணிய பாவந் துலையொத்த ஆன்மாக்களைத் திரோதான சத்தி நிக்கிரகமும் அநுக்கிரகசத்தி பதிதலுமாமென அறிக. இனி முந்தநுக ருந்துபய னென்றது முன் ஜநநங்களில் எடுக்கப்பட்ட உடம்புகளோடுங் கூடிநின்று புசிக்கச்செய்தே இந்த உடம்புகளெடுக்கைக்கு ஏதுவாகக் கட்டுப்பட்ட சஞ்சித கன்மமென அறிக. இனி அந்தமுற வந்தவினை என்றது இந்தத் தேகாந்தமட்டும் புசிக்கிற பிராரத்த கன்மமென அறிக. இனி எதிர்வினை யென்றது இந்தப் பிராரத்தம் புசிக்கச்செய்தே உண்டாகிய ஹிதாஹிதத்தாலே விளைகிற ஆகாமிய கன்மமென அறிக. இங்ஙனஞ் சொல்லப்பட்ட கன்மங்களுக்கு பிம் சித்தியாரில் “முற்செயல் விதியை இந்த முயற்சியோ டநுப வித்தால், இச்செயல் பலிக்கு மாறென் னிதமாகி தங்கள் முன்னர், அச்செய லானால் இங்கு மவைசெயின் மேலைக் காகும்’’ எம், “மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி, ஞாலத்து வருமா போல நாஞ்செயும் வினைக ளெல்லாம், மேலத்தான் பலமாச் செய்யு மிதமகி தங்க ளெல்லாம், மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடெ’’ (2.11,12) எம் கண்டு கொள்க. இனி முடிவினை யுதவு பயனால் நேராக நேராதல் எது சிவபுண்ணியத்தினாலே பசுபுண்ணியமும் பாவமுந் துலையொத்ததென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே, நண்ணிய ஞானத்தினால் இரண்டினையு மறுத்து ஞாலமொடு கீழ்மேலு நண்ணானாகி, எண்ணுமிக லோகத்தே முத்திபெறு மிவன்தா னெங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக், கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயங் கழிந்தக்கா லெங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்’’ (8.31) எது கண்டுகொள்க. இனி சினமருவு திரோதாயியென்றது ஆன்மாக்களுக்குண்டான மலங்களைப் பாகம் வ™ருத்த வேண்டிப் புண்ணிய பாவங்களைச் செய்வித்துச் சுவர்க்க நரகங்களிலே செலுத்திப் பாகம் வருந்துகையாலென அறிக. திரோதாயி என்றது அவதரப்பெயரென அறிக. இனி, திருந்திய சத்திநிபாதந் திகழுமென்றது முன்னர்ப் பிரபஞ்சத்தைப் பொருளென்று காட்டி ருசிப்பித்து நின்ற திரோதாயி தானே அருளாய்ப் பிரகாசித்துப் பழைய பிரபஞ்சத்தை உவர்ப்பித்துச் சிவனளவிலுந் திருவேடத்தாரளவிலுஞ் சிவாகமங்களிலும் பிரியத்தை உண்டாக்குவித்து நிற்கையென அறிக. இதற்கு பிம் போற்றிப் பஃறொடையில் “அன்பரைக்கண் டின்புறுதல், உய்யு நெறிசிறிதே உணடாக்கிப் பையவே, மட்டாய் மலராய், வருநாளின் முன்னைநாள், மொட்டாய் உருவாம் முறைபோலக் கிட்டியதோர், நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும் வினை, எல்லை இரண்டு மிடையொப்பிற் பல்பிறவி, அத்தமதிலன்றோ அளவென்று பார்த்திருந்து, சத்தி பதிக்குந் தரம் போற்றி’’ (5659) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது முன்னர்ப் பதத்திலே சகலாவத்தையின் முறைமை முடிந்ததென்றும், சஞ்சிதம் பிராரத்தம் ஆகாமிய மென்னப்பட்ட மூவகைக் கன்மங்களுஞ் சிவபுண்ணியத்தின் மிகுதியாலே நீங்குமென்றும் அப்படி நீங்குமிடத்து இருனிவினை யொப்புண்டாமென்றும் அப்படி இருவினை யொப்புண்டாகவே திரோதாயியாய் நின்ற அருள் காருண்ணிய சத்தியான முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நாடியசத் திநிபாதம் நாலு பாதம்
நண்ணும்வகை எண்ணரிய ஞான பாதம்
கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக்
கூத்தன்ஒரு மூர்த்திகொடு குறுகி மோகம்
நீடியகே வலசகலம் நிகழா வாறு
நிறுத்திமலம் அறுக்கும் இது நிலையார் சுத்தம்
கேடில்புகழ் தரும்சரியை கிரியா யோகக்
கேண்மையரேல் இவைஉணர்த்தக் கிளக்கும் நூலே.

கேவல சகல மேவலுற் றொருநிலை
யாவது சுத்தா வத்தை யென்றது.

பொழிப்புரை :

நாடிய சத்திநிபாதம் நாலு பாதம் முன்னெடுத்துக் கூறப்பட்ட சத்திநிபாதம் நாலு பிரகாரமாயிருக்கும்; நண்ணும் வகை எண்ணரிய ஞானபாதம் கூடுமவர் தமக்கு அந்தச் சத்தி நிபாதம் நாலினும் பொருந்தும் வகையே நினைத்தற்கரிதாகிய ஞான பாதத்தைச் சேருகைக்கு உரித்தான நாலாஞ் சத்திநிபாதம் உள்ளவர்களுக்கு; உணர்வாய் நின்ற ஞானக்கூத்தன் ஒரு மூர்த்தி கொடுகுறுகி உயிர்க்குயிராய் நிற்கிற ஞான நடனத்தினையுடைய தம்பிரான் ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்து ; மோகம் நீடிய கேவலசகலம் நிகழாவாறு நிறுத்தி மறைப்பை மிக உண்டாக்குகிற கேவலாவத்தையையும் விகற்பத்தையுடைய சகலாவத்தையையுந் தோற்றாதபடி அருளிலே நிறுத்தி ; மலம் அறுக்கும் இது நிலையார் சுத்தம் இங்ஙனம் மலத்தைப் போக்குகிற இது நிலைபெற்ற சுத்தா வத்தையாம். இது யாவர்க்காமென்னில் ; கேடில் புகழ் தரும் சரியை கிரியா யோகக் கேண்மையரேல் இவை உணர்த்தக் கிளக்கும் நூலே அழிவில்லாத புகழைத் தருவதாயுள்ள சரியை கிரியா யோகமென்னும் நிலைகளைக் குறைவறச் சரித்தவர்கள் உண்டாமாகில் அவர்களுக்கு இந்தச் சுத்தாவதையின் முறைமையை உணர்த்தப்படுமென்று சொல்லுந் திவ்வியாகமம். சத்திநிபாதம் நாலென்றதற்கு வகை ஏதென்னில் மந்தமென்றும் மந்ததரமென்றும் தீவிரமென்றுந் தீவிரதரமென்றும் வருமென அறிக. அஃதாவது முதற் சத்திநிபாதமாகிய மந்தம் வாழைத் தண்டிலே நெருப்புப் பற்றினாற்போலென அறிக. இனி இரண்டாஞ் சத்திநிபாதமாகிய மந்ததரம் பச்சை விறகிலே நெருப்புப் பற்றினாற் போலென அறிக. இனி மூன்றாஞ் சத்திநிபாதமாகிய தீவிரம் உலர்ந்த விறகிலே நெருப்புப் பற்றினாற்போலென அறிக. இனி நாலாஞ் சத்திநிபாதமாகிய தீவிரதரங் கரியிலே நெருப்புப் பற்றினாற் போலென அறிக. இவையிற்றுக்கு பி ம் சூசூநாலுவகைச் சத்தி நிபாதத்து நற்பருவ, மூல குருவே மொழியெனக்குக் கோல, வரம்பைத்தண் டொண்பச்சைக் காட்டமுலர் காட்ட, நிரம்புகரி நேரா நினை” (சிவானந்தமாலை, 40) எது கண்டுகொள்க. இந்தச் சத்திநிபாதம் நாலுக்கும் அநுபோகமாவது: முதற் சத்திநிபாதமாவது நமக்குப் பேறாயுள்ளதொரு கர்த்தா உண்டென்று அறிவெழுந் திருக்கையென அறிக. இரண்டாஞ் சத்திநிபாதமாவது அந்தக் கர்த்தாவைப் பெறுகைக்கு வழியெப்படியென்று ஆராய்கையென அறிக. இனி மூன்றாஞ் சத்திநிபாதமாவது அப்படி ஆராய்ந்தறிந்த கர்த்தாவைப் பெறவேணுமென்று பிரபஞ்சத்தை யுவர்த்துப் புளியம்பழமும் அதன் தோடும்போல நிற்றலென அறிக. இனி நான்காஞ் சத்திநிபாதமாவது பிரபஞ்சத்தை முற்றத்துறந்து ஆசாரியனே பொருளென்று கொண்டு தானறநின்று வழிபடுகையென அறிக. அப்படிப் பிரபஞ்சத்தை முற்றத்துறக்க என்பதற்கு பி ம் சித்தியாரில் சூசூஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்றறிந்தகல அந்நிலையே யாகும்” (9.1) எது கண்டுகொள்க. ஆசாரியனைப் பொருளென்று கொண்டு வழிபடுகைக்கு பி ம் சித்தியாரில் “பரம்பிரம மிவனென்றும் பரசிவன்றா னென்றும் பரஞானமிவனென்றும் பராபரன்றா னென்றும், அரன் தருஞ்சீர் நிலைஎல்லா மிவனே யென்றும் அருட்குருவை வழிபடவே யவனிவன்றா னாயே, இரங்கியவா ரணமாமை மீனண்டஞ் சினையை இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும், பரிந்தவைதா னாக்குமாபோற் சிவமேயாக்கும் பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துந் தானே” (12.7) எ ம், சூசூபன்னரிய பரமகுரு மற்றவனை நாளும் பணிந்துபணி செய்ய வந்துபலிக்கு மன்றே” எம் கண்டுகொள்க. இனி, உணர்வாய் நின்ற ஞானக்கூத்த னொருமூர்த்திகொடு குறுகி எகு அரூபியாய் நின்ற கர்த்தா உரூபியாய் வந்தானென்று பொருள்கூறியதற்கு பி ம் திருவாசகத்தில் “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி அருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையை (4. 75 78) எம், போற்றிப் பஃறொடையில் சூசூபூவலயந், தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல, முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை யன்னவனுக், காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ், சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் பாதியாம், பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல், வைச்ச நதியும் மதிக் கொழுந்தும் அச்சமற, ஆடும் அரவும் அழகார் திருநுதல்மேல், நீடுருவ வன்னி நெடுங்கண்ணுங் கேடிலயங், கூட்டுந் தமருகமுங் கோல எரியகலும், பூட்டரவக் கச்சும் புலியதளும் வீட்டின்ப, வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார், உள்ளத்தி னும்பிரியா ஒண்சிலம்புங் கள்ளவினை, வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும், ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி யென்றும், இறவாத இன்பத் தெமையிருத்த வேண்டிப், பிறவா முதல்வன் பிறந்து நறவாருந், தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று, பேரிலா நாதனொரு பேர்புனைந்து பாரோர்தம், உண்டி யுறக்கம் பயமின்ப மொத் தொழுகிக், கொண்டு மகிழ்ந்த குணம்போற்றி” (61 71) எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது சத்திநிபாதம் நாலுவகைப்பட்டிருக்கும் முறைமையும் அந்தச் சத்திநிபாதத்துக்கு ஈடாகக் கர்த்தா ஆசாரிய மூர்த்தமாகவந்து இரக்ஷிக்கும் முறைமையும் அப்படி இரக்ஷிக்கு மிடத்துக் கேவலாவத்தையுஞ் சகலாவத்தையும் நீக்கிச் சுத்தாவத்தையிலே நிறுத்துவனென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட சத்திநிபாதம் எத்தனை வகைப்பட்டிருக்குமென்றும் இந்தச் சத்திநிபாதம் உண்டானவர்களுக்குக் கர்த்தா அநுக்கிரகஞ்செய்யும் முறைமை எப்படியென்றும் வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
மேல் மற்றுமுண்டான உலகாயதன் முதலாயுள்ள சமயிகளுக்கும் இப்படிச் சுத்தாவத்தையிலே நின்றே முத்தியென்றிருக்குமோ வெவ்வேறு வழிகளாயிருக்குமோ என்ற மாணவகனை நோக்கி அவர்களுக்குண்டான நிலைகளும் முத்திகளும் இன்னபடியென்றும், அவை குற்றத்தையுடைய முத்திகளாமென்றும் மேலருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்தும்
அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி
விரிவுவினை கெடுமுத்தி மலம்போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
பாடாண முத்திஇவை பழிசேர் முத்தி
திரிமலமும் அகலஉயிர் அருள்சேர் முத்தி
திகழ்முத்தி யிதுமுத்தித் திறத்த தாமே.

தவமென் றவநெறி சரிப்பார் முத்தியுஞ்
சிவகதி தனையும் முறையுற வகுத்தது.

பொழிப்புரை :

அரிவையர் இன்புறு முத்தி மகளிரிடத்துண்டான போகமே முத்தியென்கிற உலகாயதன் முத்தியும்; கந்தம் ஐந்தும் அறுமுத்தி உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானம் என்கிற பஞ்ச கந்தங்களுங் கெடுகிறதே முத்தியென்கிற புத்தரிற் சௌத்தி ராந்திகன் முத்தியும்; திரிகுணமும் அடங்குமுத்தி முக்குணங் கெடுகிறதே முத்தியென்னும் அமணரில் நிகண்டவாதி முத்தியும்; அன்றியும் மாயாவாதத்தின் நிரீச்சுர சாங்கியன் முத்தியுமாம்; விரிவு வினை கெடுமுத்தி எங்கும் விரிந்திருக்கப்பட்ட கன்மங்கள் கெடுகிறதே முத்தியென்கிற பிரபாகரன் முத்தியும் ; மலம்போம் முத்தி ஆணவமலங் கெடுகிறதே முத்தியென்கிற அகச்சமயத்திற் பேதவாதி முத்தியும் ; விக்கிரக நித்தமுத்தி இந்தச் சரீரம் முத்தியிலும் அழியாது நித்தியமா யிருக்குமென்கிற அகச்சமயத்திற் சிவசமவாதி முத்தியும் ; விவேக முத்தி இந்தச் சரீரந் தொந்தனைப்பட்டு நிற்கிற சீவான்மாவுக்கு விவேகஞானம் உண்டாகிறது தானே முத்தி யென்கிற மாயாவாதி முத்தியும்; பரவுமுயிர் கெடுமுத்தி சொல்லப்பட்டு வருகிற ஆன்மா கெடுகிறதே முத்தியென்கிற மாயாவாதத்திற் பாற்கரியன் முத்தியும்; சித்தி முத்தி பசுகரணங் கெட்டுச் சிவகரணமாகிறதே முத்தியென்கிற அகச்சமயத்திற் சங்கிராந்தவாதி முத்தியும் ; அன்றியும் இதற்கு அட்டமாசித்தி யென்னவுமாம்; பாடாண முத்தி ஆன்மா கேவலத்திற் கிடக்குந் தன்மைபோல முத்தியிலும் ஒன்றும் அறியாமற் பாடாணம்போற் கிடக்குமென்கிற பாடாணவாதி முத்தியும்; இவை பழிசேர் முத்தி என்றிங்ஙனஞ் சொல்லப்பட்ட பத்துவகை முத்திகளுங் குற்றத்தையுடைய முத்திகளாம். பின்னை நன்மையாகிய முத்தி ஏதென்னில்; திரிமலமும் அகல உயிர் அருள்சேர் முத்தி திகழ்முத்தி ஆணவம் மாயை காமியமென்கிற மூன்று மலங்களும் நீங்கி ஆன்மா அருளோடுங் கூடி நிற்கிறதே விளங்குதலையுடைய முத்தியாம்; இது முத்தித் திறத்த தாமே இதுவே முத்தியென்று சொல்லப்பட்டவை எல்லா வற்றிலுந் திறப்பாட்டினையுடைய முத்தியாம்.
உலகாயதன் அரிவையர் இன்புறுமுத்தி என்றதேதென்னில், அவன் பிரத்தியக்ஷமொழிய அநுமானங் கொள்ளாதபடியாலே கன்மமும் ஆன்மாவுஞ் சிவனுமில்லையென்று சொல்லி இம்மைப் பயனாகிய மகளிரிடத் துண்டாகிய சிற்றின்பமே பொருளெனக் கொண்டானென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஊடுவ துணர்வ துற்ற கலவிமங் கையரை யுள்ளி, வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின், கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யாகி, நீடுவ தின்ப முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர்” (பரபக்கம் 31) எம், அவன் மறுமைப்பயன் கொள்ளான் என்பதற்கு பிம் சூசூவாசமார் குழலார் தங்கள் மணியல்குற் றடத்தே மூழ்கி, நேசமார் குமுதச் செவ்வா யமுதினை நிறைய வுண்டு, தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்தி டாதே. மாசுலா மனத்தோ ரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ” எம், சூசூவீட்டினை யுளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு, காட்டு வோர் கண்டோர் கேட்டோர் கரியவை யுண்டேற் காட்டீர், நாட்டினி லரச னாணைக் கிசையவே நடந்து நாளும், ஈட்டிய பொருள் கொண் டிங்கே யின்பத்து ளிசைந்தி டீரே” (யூ29,32) எம் கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தியென்று மறுத்ததேதென்னில், பன்றியானது கன்மத்துக் கீடாக விட்டையை விரும்பிப் புசித்தாற்போல அவனும் அசுத்தமாயிருக்கிற மகளிரிடத்துண்டாகிய சிற்றின்பத்தை அநுபவிக்கிறது தானே முத்தியென்கையினாலென அறிக. என்றிங்ஙனம் மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூஆசை யுற்றுழல் சூகரங்கள் அசுத்த மேவி யளைந்துதின், றேசு கித்தன வாயி டுஞ்சுக மேழை யோடுறு மின்பநீ, மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண், ஈச னுக்கடி மைத்தி றத்தி னியைந்து நாம்பெறு மின்பமே” (யூ60) எம், ஸ்திரீகளை அசுத்தமென்பதற்கு பி ம் சித்தியாரில் சூசூதோலி ரத்த மிறைச்சி மேதை எலும்பு மச்சை சுவேதநீர், ஆலெடுத்த முடைக்குரம்பை அழுக்கி னோடு புழுக்குழாம், நூலொ ழுக்கிடு கோழை யீரல் நுரைக்கு மூத்திர பாத்திரஞ், சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்மலத்திரள் திண்ணமே” எம், சூசூபொன் குலாவு மணிக்க லன்கள் மலம்பு கிற்கை பொருந்திடா, மின்கு லாமிடையார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள், புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம், என்கொ லாமிவர் மேல்விழுந்த திவற்றி னென்பெற எண்ணியே” (யூ59, 58) எம் கண்டுகொள்க. அன்றியும் இம்மைப்பயனுஞ் சிவனாலே உண்டாக வேணுமென்று அவனை மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் “வேத னாரண னார ணம்மறியாவி ழுப்பொருள் பேதைபாற், றூத னாயிரு கான டந்திடு தோழன் வன்மைசெய் தொண்டனுக், காத லாலடி யார்க ளுக்கெளி யானடிக்கம லங்கள்நீ, காத லாலணை யீண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே” (யூ 57) எது கண்டுகொள்க. இனி, இரண்டாவது புத்தரிற் சௌத்திராந்திகன் கந்தம் ஐந்தும் அறுமுத்தி யென்றது ஏதென்னில், பிருதிவி அப்பு தேயு வாயு என்கிற பூதம் நாலும் வலி கந்தம் இரதம் வன்னம் என்கிற உபாதானரூபம் நாலும் ஆக உருவகந்தமெட்டும், குசலாவேதனை அகுசலா வேதனை குசலாகுசலா வேதனை என்கிற வேதனைக்கந்தம் மூன்றும், சோத்திரம் துவக்கு சக்ஷ சிங்ஙுவை ஆக்கிராணம் மனது என்கிற குறிப்புக்கந்தம் ஆறும், பொய்சொல்லல் கோட்சொல்லல் கோபித்துச் சொல்லல் பயனிலசொல்லல் என்கிற வாக்கின்குணம்நாலும், களவுக்குப்போதல் வறிதே தொழில் செய்தல் கொலைசெய்தல் என்கிற காயத்தின் குணம்மூன்றும், கொலைநினைக்கை காமப்பற்று ஆசை என்கிற மனத்தின்குணம் மூன்றும் ஆகக்கூறிய வகைமூன்றினுஞ் செய்யப்பட்ட தீக்குணம் பத்தும் அன்றியும் மெய்யுரை நல்வார்த்தை இனியனகூறல் பயன்படுசொல்லலென்கிற வாக்கின் குணம் நாலும் பள்ளி வலம்வருதல் தவம்புரிதல் தானஞ்செய்கை யென்கிற காயத்தின்குணம் மூன்றும் அருள்நினைவு ஆசையறுத்தல் தவப்பற்று என்கிற மனத்தின் குணம்மூன்றும் ஆக நற்குணம் பத்தும் ஆக வகை இரண்டினுக்கும் உண்டாகப்பட்ட பாவனைக்கந்தம் இருபதும், சத்தம் பரிசம் ரூபம் இரதம் கந்தம் சித்தம் என்கிற விஞ்ஞான கந்தம் ஆறும், ஆக இங்ஙனம் நாற்பத்து மூன்று வகையாக எண்ணப்பட்டு வருகிற பஞ்ச கந்தங்கள் ஐந்துங் காரணங்கெட்டுக் காரியங்கிடக்கும் என்கிறது மிகுத்துரையில் வழக்குமாய்ப் பந்ததுக்கமுமாய இது குற்ற வீடென்றும் கந்தங்கள் ஐந்தும் நேராகக் கெட்டு வீட்டையடையும் என்பதுவே முத்தி இன்பமெனக் கொண்டானென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பினோடுந், தாங்குபா வனைவிஞ் ஞானந் தாமிவை ஐந்துங் கூடிப், பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம், ஆங்கவை பொன்றக் கேடா யழிவது முத்தி இன்பம்” (பரபக்கம் 93) எது கண்டுகொள்க. அன்றியும், இந்தப் பஞ்ச கந்தங்களும் நாற்பத்து மூன்றுவகையாய் நிற்குமென்பதற்கு பி ம் புத்தநூலில் சூசூஎட்டிவை உருவ மூன்று வேதனை யாறு ஞானம், ஒட்டிய குறிப்போராறு செய்கையு மிருப தாகக், கட்டிய பஞ்ச கந்தங் கணத்தினிற் பங்க மாகித், தொட்டநாற் பத்து மூன்றும் சுத்தநூற் றுணிவு தானே” எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தியென்று மறுத்ததேதென்னில், அவன் ஆன்மா வில்லை என்கையினாலும் அப்படி உண்டென்று நாட்டப்பட்ட பஞ்ச கந்தங்களுங் கற்பூரத் தீபம்போலே அறக்கெட்டுப்போம் என்கையினாலும் அந்த முத்தியைப் பெறுவானில்லாதபடியாலுமென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஐந்துகந்தஞ் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக்கெடுகை முத்தியின்ப மென்றறைந்தாய் கந்தம், ஐந்துமழிந்தால்முத்தி யணைபவரா ரென்ன அணைபவர்வே றில்லையென்றா யார்க்குமுத்தி இன்பம், ஐந்தினுணர் வினுக்கென்னி னொழியாதவ் வுணர்வுண் டாகவே எவ்விடத்து முருவாதி கந்தம், ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி யரந்தைதரும் முத்தியின்ப மறிந்திலைகாண் நீயே” (பரபக்கம் 133) எது கண்டுகொள்க.
இனி, மூன்றாவது திரிகுணமும் அடங்குமுத்தி என்றது அமணரில் நிகண்டவாதி சொன்னதென்றது ஏதென்னில் ஞானாவரணியம் தரிசனாவரணியம் வேதனீயம் மோகனீயம் ஆயுசு நாமம் கோத்திரம் அந்தராயம் என்கிற குணங்கள் எட்டும், பசித்தல் தாகம் பயம் செற்றல் உவகை மோகம் சிந்தனை பழித்தல் நோய் நசித்தல் வேர்வை கேதம் மதம் வேண்டல் அதிசயித்தல் உருசிப்பு பிறப்பு உறக்கம் என்கிற குணங்கள் பதினெட்டும், அரசிகம் இரதி அரதி சோகம் சுகுச்சை பயம் என்கிற குணங்கள் ஆறும் ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்டு வருகிற மூவகைக் குணங்களையும் விட்டுப் பூர்வ கன்மத்திலுண்டாகிய கன்மங்கள் புசித்துத் தொலைந்த அவதரந்தானே வீட்டின்பமெனக் கொண்டானென அறிக. இங்ஙனஞ் சொல்லப்பட்ட மூன்றுவகைக் குணங்களினும் முதற்சொன்ன ஞானாவரணியம் ஆதியாயுள்ள குணங்கள் எட்டுக்கும் பி ம் சித்தியாரில் சூசூஈறி லாதன அநந்த ஞானமுத லெண்கு ணங்களெனு மொண்குணம், மாறி லாதமதி மேவு சீதமென மன்னி வானவர் வணங்கவே, வேறு லாவுகுண ஞான ஆவரணி யாதி எட்டினையும் விட்டசீர், ஏறு பான்மையுடன் நீடு வாழருக னெங்களுக் கிறைவ னென்றனன்” (பரபக்கம் 144) எம், இரண்டாவது சொன்ன பசித்தலாதியாயுள்ள குணங்கள் பதினெட்டுக்கும் பி ம் சித்தியாரில் சூசூபசித்தல் தாகபய செற்றமோ டுவகை மோக சிந்தனை பழித்தனோய், நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம் வேண்ட லீண்டதி சயித்தலும், புசிப்பு வந்திடு பிறப்பு றக்கமிவை விட்டொ ரட்டகுண பூதனாய், வசித்த வன்னுலகின் மேலிருந் தொருசொ லிகலனுக் கருளு மென்றனன்” (யூ146) எம், மூன்றாவது சொன்ன அரசிக மாதியாயுள்ள குணங்கள் ஆறுக்கும் பிம் சித்தியாரில் சூசூஏணு மொன்றுடைய வாகி யெங்குமணு வாயிரும்புகல் மரங்களும், பூணு மங்குரு வெலாமு மாகுமவை புற்கலப் பொருள்க ளென்னலாங், காணு மங்கறு வகைத்தொ ழிற்களவை கட்டு விட்டநெறி கன்மமேல், மாண நின்றுவரு மாறிமாறி முன் வரைந்த துண்டுவிட மாட்சியே” (யூ150) எம் கண்டு கொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர்முத்தி யென்று மறுத்ததேதென்னில் குணங்களை விட்டவிடந் தவமாகா தாகையாலும் பூர்வகன்மம் நிச்சயித்துப் புசிக்கைக்கு இவ்விடத்து ஆன்மாவுக்குத் தனக்கென்னவோர் அறிவு மில்லாதபடியாலுமென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூபூர்வகன்ம மற்றிடப் புசித்த பின்பு பொன்னெயில், நேர்வ தென்னி னக்கன் மத்து நிச்சய மிலாமையிற், றீர்வதின்மை தீரின் வாயில் சேர்த லின்மை தெண்கடல், நீர்வறந்த பின்பு பூஞை மீனருந்த நின்றதே” (யூ163) எது கண்டுகொள்க.
அன்றியும், திரிகுணமு மடங்கு முத்தி என்பதற்கு மாயாவாதத்திற் பேதமாயுள்ள நிரீச்சுரசாங்கியன் முத்தி என்னவு மாமென அறிக. அஃதெங்ஙனே என்னில், பிரகிருதி தத்துவமானது தூலசூக்குமமுமாய் எல்லாப் பதார்த்தங்களுக்குங் காரணமுமாய் முக்குணங்களும் ஒத்துநிற்கிறதே தனக்கு வடிவுமாய் அமூர்த்த மாயிருக்கும் புத்திமுதல் பிருதிவி ஈறாகிய தத்துவம் இருபத்து மூன்றும் இதனுடைய வியாத்தியாயிருக்கும். அதனோடுங்கூடின சுத்தபுருடனும் பாலனாகிய பிள்ளைகளைப்போலச் சேட்டையுண்டாய்ப் பல யோனிகளையும் எடுத்து இந்தக் குணங்களோடும் அநாதியே கூடிப் புத்தியை யுடைத்தாய் அவித்தையின் வசத்திலே ஒழுகி ஜநந சம்பந்தமுண்டாயிருக்கிற சுகதுக்கமான குணங்களும் உண்டாயிருக்கும். இது பெத்தம். இனி யவன் முத்தியிலிருக்கும்படியாவது, அந்தப் பிரகிருதியினுடைய தன்மையை அறிந்து புத்தியை அடைந்திருக்கிற அறியாமைபோய் விகிருதியாலுண்டான சுகதுக்கங்களைப் பிரகிருதிக்குண்டான தென்று கண்டு இது ஆன்மாவுக்கில்லையென்று குணத்திரயங்கள் அடங்க இருப்பது. இதுவே மோக்ஷமென்று சொல்லுவனென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூமூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி, தூலஞ் சூக்கு மம்பரமாய்ச் சுத்தப் புருடன் சந்நிதியிற், பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்குஞ், சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே” (யூ260) எது கண்டுகொள்க. இதனைப் பழிசேர் முத்தி என்று மறுத்ததேதென்னில், அப்படி ஆன்மா அநாதியே சுத்தனானால் பிரகிருதியால் மறைப்புண்டு கிடக்கமாட்டான்;அன்றியும் அது நீங்கி முத்தியைப் பெற்றாலும் முன்புபோலே மீளவுங்கூடும். ஆகையால் இவையிற்றைக் கூட்டுகைக்கு ஒரு கர்த்தாவும் வேண்டுகையால் அது பொருளல்லவென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூசுத்த னறிவன் புருடனெனிற் சூழா தாகும் பிரகிருதி, பெத்த நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவாற், கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல், முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம்.” எம், சூசூஅறியான் புருடன் பிரகிருதி யசேத னங்கா ரியத்தினுக்குக், குறியாய் நாத னுளனென்று கூறு முத்தி விவேகமெனிற், செறிவாந் தளைபோ காதறியிற் சேர்த்தோன் வேண்டுஞ் செயலிற்போம், நெறியாற் பணிசெய் துடற்பாச நீக்கிக் கொள்நீ நின்மலனால்” (யூ261, 263) எம் கண்டுகொள்க.
இனி, நாலாவது விரிவு வினைகெடு முத்தி யென்று பிரபாகரன் சொன்னதேதென்னில், அவனரிதாகச் செய்யப்பட்ட கன்மத்தின் முடிவிலே ஞானமென்பது ஒன்றுண்டாய் அந்தக் கன்மத்திலே அறிவுகூடிநின்று தொழிற்பட்டு அந்தக் கன்மமும் ஞானமுங்கெட்டு ஆன்மா மண்போலவுங் கல்லுப்போலவுங் கிடக்கிறதே முத்தியென்று கொண்டானென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனு மதுதோன்றித், தருஞ்செயலே நின்றழியிற் றான்பலிப்ப தாகுமது, வருஞ்செயலொன்றின்றியே மண்சிலைபோ லாமுத்தி, தருஞ்செயலீ தெனவுணர்ந்து தாரணிமே லவன்சாற்றும்” (யூ205) எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தியென்று மறுத்ததேதென்னில், கன்மம் மறுமைப்பயனைத் தருமென்று வேதஞ் சொல்லுகைச் செய்தே அந்தக் கன்மங் கெட்டுப்போமென்று அவன் சொல்லுகையினாலும் அந்தக் கன்மத்தாலுண்டாகிய ஞானமுங் கெட்டுக் கல்லுப்போலவும் மண்போவுங் கிடக்குமென்று அவன் சொல்லுகையால் அவ்விடத்துப் பேறில்லாத படியாலென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூவேறுபலன் தருவதுதான் வினையென்று வேதங்கள், கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை, மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால் தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம்” எம், “ஆனந்தங் கதியென்ன அறிவழிகை வீடென்கை, ஊனம்பி னுணர்வழிந்தோர்க் குளதாகு முயர்முத்தி, தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை, ஞானங்கெட் டுயிர்நிற்கு மெனுமுரைதா னண்ணாதால்” (யூ206, 207) எம் கண்டுகொள்க.
இனி, ஐந்தாவது மலம்போம் முத்தியென்றதைப் பேதவாதி சொன்னானென்றது ஏதென்னில், அவன் செம்பானது இரதகுளிகையினாலே காளிதங்கெட்டுப் பொன்னான தன்மைபோலச் சிவனுடைய அருளாலே ஆன்மாவுக்கு மலமானது கெட்டுப் பெறுவானும் பேறுமாக முத்தியிலே இருப்பதே பொருளெனக் கொள்ளுகையினாலென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூஈசன தருளாற் பாசத் தொகுதி செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு குளிகை தாக்க ஒளிபெற் றாங்கு நித்த சுத்த முத்த ராக வைத்தன ருலகின் மறைவல் லோரே” (7. 16 20) எது கண்டு கொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தி என்றதேதென்னில் வேதாகமங்கள் பதி பசு பாச மூன்றும் நித்தியமென்று சொல்லச் செய்தே ஆணவ மலங் கெடுமென்கையினாலுமென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் அவன் மறுப்பிலே “மறைக ளாகமத் துறைகள்மற் றெவையும் நாசமில் பதிபசு பாசமென் றுரைத்தல் அயர்த்தோர் குளிகைச் சயத்தாற் றாமிரக் காளித நாசம் பாசத் தேய்த்தல் கூடா தன்றியுங் குளிகை சீருணம் நீடா தழித்த நிலைநிலை யாகலிற் பேத வாதமோதுதல் பிழையே” (10. 1 7) எது கண்டுகொள்க.
இனி, ஆறாவது விக்கிரக நித்தமுத்தி எகு சிவசமவாதி சுத்தமாயா சரீரம் அழியாமல் நித்தியமாயிருக்கிறதே முத்தியென்றான் என்றதேதென்னில், வேட்டுவாளியானது ஒன்றுமறியாத பச்சைப் புழுவையெடுத்துத் தற்சொரூபமாக்கின தன்மைபோல ஒன்று மறியாத ஆன்மாவையுஞ் சிவனுடைய அருளெடுத்துக்கொண்டு தற்சொரூபமாக்க அந்த மாயா உடல்தானே நித்தியத்துவத்தைப் பெற்றிருப்பதுதானே முத்தியென்று கொள்கையினாலென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூமுன்னோன் தனது முதிரொளி ஞானம் அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த வண்டென உயிரைக் கொண்டிடு முயிரது தன்னை நோக்கித் தானது வாகி ஐவகைத் தொழிலு மெய்வகை யுணர்வும் பிரியா வாறு பெற்றுத் திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே” (11. 1925) எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தியென்றதேதென்னில், அருள்பொருந்தின ஆன்மாக்களுடைய மாயா தேகந்தானே நித்தியத்துவத்தைப் பெற்றிருக்கிறது பதமுத்தியாகிய சாரூபமொழிந்து சாயுச்சிய மாகாதாகையாலும், அன்றியும் யாதாமொரு சரீரதொந்தனையுள்ளமட்டும் மூன்று மலமும் போகா தாகையாலும் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூமுத்தி யுற்ற நற்றவ ரவையிடைச் சேர்வ ரென்றனை சார்தரு முத்தி சாலோக் கியமோ சாயுச் சியமெனிற் பந்த முற்ற கந்தல கழித்தல் அறிவினோ டறிவு பிறியாப் பெற்றி வேண்டு மென்பதற் கீண்டிவ ரிவ்வா றிருப்ப ரென்பதற் குருத்தான் வேண்டும்” (12. 73 79) எம், சித்தியாரில் சூசூஅநாதியுடல் ஒன்றினைவிட் டொன்று பற்றிக் கன்மா லாயழிந்து வருதலா லந்தமில்லை, பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப் பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும், இனாதுநிலை இதுதானுங் காயமுண்டேல் இருங்கன்ம மாயைமல மெல்லாம்உண்டாம், மனாதிதரும் உடலாதி காரியத்தால் அநாதி மலம்அறுக்கு மருந்தற்றால் உடன்மாயுங் காணே” (11.3) எம் கண்டுகொள்க.
இனி, ஏழாவது விவேகமுத்தி எ கு மாயாவாதி இவனுக்கு விவேகஞானம் உண்டாகிறதே முத்தி என்றானென்று பொருள் கூறியதற்கு வகையேதென்னில், அவன் கருத்து நிர்மலமாயிருக்கிற ஆகாசத்தை மேகம் மறைத்த தன்மைபோலச் சுத்தமாயிருக்கிற பரப்பிரமமும் மாயா உபாதிகளினாலே வாதிக்கப்பட்டு இந்த உடலிலே மயங்கி நிற்கிறதே சீவான்மாவாவது; அந்த ஆகாசத்திலே ஒரு காற்றுத்தோன்றி அந்த மேகத்தை நீக்கின தன்மைபோல இந்தச் சீவான்மாவினிடத்திலே ஒரு விவேக ஞானந்தோன்றி அந்த மாயாவத்தையை நீக்குகிறதே முத்தியெனக் கொண்டானென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “இவ்வியற் பந்தப் பௌவம தகல விண்முதல் தந்த கொண்மூப் படலத் திருளற வுதித்த கால்தக விவேகந் தன்னிற் றோன்றிச் சாதக மனைத்தையும் மன்னகப் பிரிப்பும் மடியிழை வாங்கலும் போல ஞாலம் பொய்யறக் கழீஇத் தானே தானாய்த் தன்னிற் றன்னைத் தானே கண்டு தன்னல முற்று வசையில் தத்துவ மசிபதத் தெளிவால் அகமே பிரம மாயினன் எனஅறிந் தசல னாகிநற் சலசல மதியெனக் கண்டிடு முடலம் விண்டகல் கடத்து மங்குல துடைதர வெங்குமாந் தகைத்தே” (3. 37 49) எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தி என்றதேதென்னில், இந்தச் சீவான்மாவினிடத்து உண்டாகிய விவேக ஞானம் முன்பே உள்ளதாகில் இவனுக்கு மயக்கம் வர வழக்கில்லை. பின்புள்ளதாகில் ஆகாயப் பூப்போல இல்லாதது உண்டாகாது ஆகையாலென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “பந்தம தகல முந்து விவேகம் வான்வளி யெனத்தனிற் றானே தோன்றின் முன்புளதாயின் மயங்கா திலதெனிற் பின்புள தாகா திலதுள தெனின் வெளி மலரது தரும்அனல்” (4. 174 178) எது கண்டுகொள்க.
இனி, எட்டாவது பரவுமுயிர் கெடுமுத்தி எகு மாயாவாதத்திற் பாற்கரியன் ஆன்மா கெடுகிறதே முத்தி என்றானென்று பொருள்கூறியதற்கு வகையேதென்னில், அவன் கருத்து பரப்பிர மந்தானே பிரபஞ்சமுமாய் ஆன்மாவுமாய் நின்று காரியப்படுகிற இடத்து ஆன்மா கன்மத்தை அநுஷ்டித்து ஞானமுண்டானவாறே பிரமத்தோடுங் கூடி ஆன்மா அழிந்துபோகிறதே முத்தியெனக் கொண்டானென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “சித்தே யுலகாய்ப் பரிணமித்துச் சீவ னாகித் திகழ்ந்தமையாற், சத்தே எல்லா முத்தியினைச் சாரக் கண்ட ஞானங்கள், வைத்தே மொழியு மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால், ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே” (பரபக்கம் 254) எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தி என்றதேதென்னில் அந்தப் பரப்பிரமம் பிரபஞ்சமாகாதபடியாலும்; அன்றியும் ஆன்மாவாகாதபடியாலும் முத்தியில் ஆன்மாக் கெட்டுப்போமென்கையினாற் பெறுவான் இல்லாதபடியாலுமென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஇயம்பு கின்றதுல காயி டாதுசட மென்று மின்றுசட மாகியே, முயங்கு கின்றமையி னிலவ ணத்திரத முழுது மேகமதை முயல்கைபோற், பயந்த தென்னிறியப்படும் பொருளு மறிவு மென்றுபல வாகுமோ, தியங்கு கின்றதெனு ரைத்திடாய் கடின மாதியாகவரு சித்தனே” எம், சூசூஅறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவை இரண்டினால், உறுதி யானபிர மத்தி னோடழிய லொன்ற லாமென வுரைத்திகாண், இறுதி யேலதனொ டிசைவ தின்றிசைவ துள்ள தாயிடினவ் வின்பமே, பெறுதி நீயுடலொ டுயிர்க ளாயறிவு பிறக்கு மாறு செயல் பெறுவதென்”. (யூ255, 259) எம் கண்டுகொள்க.
இனி, ஒன்பதாவது சித்தி முத்தியென்று அகச்சமயத்திற் சங்கிராந்தவாதி ஆன்மா பசுகரணங்கெட்டுச் சிவகரணமாகிறதே முத்தி என்றானென்று பொருள்கூறியதற்கு வகையதேதென்னில், அவன் ஆன்மாவுக்கு மலபாகம் வந்த இடத்துக் கண்ணாடியிற் காட்டின நிழல் அந்தக் கண்ணாடியிற் பொருந்தினாற்போலச் சிவனுடைய அருள் ஆன்மாவிலே பிரகாசித்த அவதரத்துக் காட்டத்தைப் பொருந்தின அக்கினிபோலவும் உப்பளத்தைப் பொருந்தின புல்லும் வைக்கோலும் போலவும் பசுத்துவங்கெட்டுச் சிவத்துவமாய்ப் பசுகரணங்கெட்டுச் சிவகரணமாகிற சித்தியதே முத்தியெனக் கொள்ளுகையினாலென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூபழமல நீங்க நிகழுங் காலை வேற்றோர் முகவொளி தோற்றுங் கலனெனத் தலைவன தருளுயிர் நிலவிடும் நிலவக் காட்டத் தங்கி மாட்டத் தங்கிய தன்மையு மளத்த புல்வையி னீப்பும் போன்றது வாகித் தோன்றிடு மதனாற் பசுகர ணங்கள் சிவகர ணங்கள் ஆகமாறி யறிவும் ஏக மாமுயிர் யானென தின்றே” (13.103 111) எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தி என்றதேதென்னில், அப்படிக் கண்ணாடியானது கொடுத்தது கொள்ளுந் தன்மை யுண்டாகையினாலும் ஆன்மாவுக்கு அது இல்லாதபடியாலும் மாயாகருவிகள் சடமானபடியாலே அது சிவசொரூபமாகாதபடியாலுமென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூநோக்கு முகவொளி நீக்காத் தானெனக் கவருந்தன்மை முகுரம் போலக் கொடுத்தது கோடற் கடுத்ததுண் டன்றே காட்டத் தங்கி கூட்டக் கூடும் இந்தனத் தியற்கை வெந்தழல் தாங்கா வுப்பளத் தடுத்த புற்பலா லங்கள் சடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந் தன்மை யுண்டுனக் கின்மைய தன்றே யவமுறு கருவி சிவமய மாமெனக் கூறின தாகம் வேறுருக் கவரா தென்பதெ னவைமுற் றுன்பந் துடைக்குந் திருவருள் மருவ வுரியன வென்னில் அருளுரு மாயா இருளின தாங் கொல்” (14. 22 34) எது கண்டுகொள்க.
அன்றியும், இங்ஙனஞ் சொல்லப்பட்ட சித்திமுத்தி என்பதற்கு அட்டமாசித்தி என்னவுமாமென்று பொருள்கூறியதற்கு வழியேதென்னில், அணும டமகிமா லகுமா கிரிமா ஈசத்துவம் வசித்துவம் பிராத்தி பிராகாமியம் என்னும் பெயர்களாயிருக்கும். இவையிற்றினுள் முதற்கூறிய அணுமா சித்தியாவது இவன் சூக்கும தேகமாக வேண்டுமென்றாற் சூக்கும தேகமாகையென அறிக. இனி இரண்டாவது மகிமா சித்தி யென்றது இவன் மகாமேருபோலப் பெருகவேணுமென்றால் அப்படியே பெருக்கையென அறிக. இனி மூன்றாவது லகுமா சித்தியென்றது பதிநாலுலகங்களினுந் தடைபடாமல் மனவேகம் போல இவன் நினைத்த இடத்திலே போயிருக்கையென அறிக. இனி நாலாலது கிரிமா சித்தியென்றது ஐராவதம் முதலாயுள்ளவை அசைப்பினும் இவன் அசைவற் றிருக்கை யென அறிக; இனி ஐந்தாவது ஈசத்துவம் என்றது சர்வான்மாக் களையுந் தன்னுடைய ஆக்கினையிலே நடத்துவித்துக் கொள்ளுகை யென அறிக. இனி ஆறாவது வசித்துவ சித்தியென்றது பூலோகத்தைத் தெய்வலோகமாக்கியுந் தெய்வலோகத்தைப் பூலோகமாக்கியும் வருகையென அறிக. இனி ஏழாவது பிராத்தி சித்தியென்றது அரிபிரமாதியான தேவர்களின் போகங்கள் தனக்கு வரவேணு மென்று மனதிலே நினைத்தால் அப்பொழுதே சித்திக்கிறதென அறிக. இனி எட்டாவது பிராகாமிய சித்தியென்றது ஒருகணப் பொழுதிலே அனேக நூடறாயிரம் ஸ்திரீகளைச் சிருஷ்டித்து அப்பொழுதே அந்த ஸ்திரீகளுக்குப் பர்த்தாவாய நுபவிக்கையென அறிக. ஆகச் சித்தி எட்டும் இங்ஙனங் கண்டுகொள்க. இது முத்தியாகா தென்று மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூகுறித்தடியி னின்றட்ட குணமெட்டுச் சித்தி கோகனகன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம், வெறுத்துநெறி அறுவகையு மேலொடுகீ ழடங்க வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லான், நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு நினைப்பரியா னொன்றுமிலா னேர்படவந் துள்ளே, பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே புகுந்திடுவ னெங்குமிலாப் போகத்தைப் புரிந்தே” (9.6) எது கண்டு கொள்க. இதனுள் எட்டுச் சித்தி என்பதை அட்டமா சித்தியும் நன்முத்தியாகாதென்பதற்குத் கண்டுகொள்க. அன்றியும் தேவிகாலோத்திரத்தில் சூசூஅட்டமா சித்திமுதல் அனைத்துள்ள பேறுகளுங், கட்டமாங் கதிகள்தரும் பரகதி காணக் கொடா” எம், கோயிற்புராணத்தில் சூசூமுத்தியு முடிவிலாத போகமு நாலி ரண்டாஞ், சித்தியு மென்செய” (115) எம் வரும் ஏதுக்களினுங் கண்டுகொள்க.
இனி, பத்தாவது பாடாணமுத்தி எகு இவன் பாடாணம் போலே கிடக்கிறதே முத்தியென்று பாடாணவாதி சொன்னா னென்று பொருள்கூறியதேதென்னில், அவன் அறிவில்லாத ஆன்மாக்கள் அதீதாவத்தைப்பட்டுக் கிடக்குந் தன்மைபோலச் சுத்தா வத்தையினும் ஆன்மா ஒன்றுமறியாமற் கல்லுப்போலே கிடக்கு மென்று கொள்ளுகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூகொத்தை மாந்த ருய்த்திடு துயில் போற் காட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி யெனவகுத் தனரே” (7 . 8 10) எது கண்டுகொள்க. அவன் இங்ஙனஞ் சொன்ன முத்தியைப் பழிசேர் முத்தி என்றதேதென்னில், ஆன்மா கேவலப்பட்டுக் கிடக்குந்தன்மைபோல முத்தியிலும் ஒன்றுமறியாமற் கிடப்பனென்கையினால் சிவாநுபோகம் இல்லாத படியால் அது நன்முத்தி யாகாதென்றதென அறிக. இதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூகாட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி யெனவகுத் துரைக்கிற் கரணா பாவம் மரணங் கருமரம் ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா தனிதரு துயர மெனுமிது திடமே பாடா ணத்திற் கூடா முத்தி” (7. 9 15) எது அவனை மறுத்ததிலே கண்டுகொள்க.
இனி, திரிமலமும் அகல உயிர் அருள்சேர் முத்தி திகழ்முத்தி என்ற பதத்தில் திரிமலமும் அகல எகு ஆணவம் மாயை காமிய மென்று சொல்லப்பட்ட மலங்கள் மூன்றும் நீங்க என்று பொருள் கூறியதேதென்னில் அந்த மலங்கள் மூன்றும் நீங்கின இடமே சிவஞானத்தைப் பெற்ற இடமாதலால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் சிவஞானபோதத்தில் “புண்ணிய பாவம் பொருந்து மிக்காமியமும், மண்முதன் மாயைகாண் மாயையுங் கண்ணிய, அஞ்ஞானங் காட்டுமிவ் வாணவமு மிம்மூன்றும், மெய்ஞ்ஞானிக் காகாவிடு” (12.2) எது கண்டுகொள்க. அப்படி மூன்று மலங்களும் விட என்றதும் அந்த மலத்தின் குணபேதமான காரியங்களைவிட என்றதென அறிக; அவையாவன, ஆணவத்தின் குணம் எட்டும் மாயையின் குணம் ஏழுங் காமியத்தின் குணம் ஆறுமென அறிக. இவையிற்றுக்கு பி ம் இருபாவிருபஃதில் சூசூகூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கின் விகற்பங் கற்பங் குரோதம் மோகங் கொலையஞர் மதநகை விராயென் குணனுமா ணவமென விளம்பினை அஞ்ஞா னம்பொய் யயர்வே மோகம் பைசா சூந்நிய மாச்சரி யம்பய மாயவேழ் குணனு மாயைக் கருளினை இருத்தலுங் கிடத்தலும் இருவினை இயற்றலும் விடுத்தலும் பரநிந்தை வேமலென் றெடுத்த அறுவகைக் குணனுங் கருமத் தருளினை” (4. 1 10) எது கண்டுகொள்க. உயிரருள்சேர் முத்தி திகழ் முத்தி எகு ஆன்மா அருளோடுங் கூடின இடமே விளங்குதலையுடைய முத்தியா மென்று பொருள்கூறிய தேதென்னில், ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்துச் சிவனுடைய அருட்சத்தியினிடமாகச் சென்று பெறவேண்டுகையால் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இதற்கு பி ம் தத்துவ விளக்கத்தில் “பவமே வியநெறி பந்திக்கும் ஈசன் பசுக்கள் தம்மை, அவமே வியநெறிப் போகங்களால் முற்ற அந்நிலையே, தவமே வியநெறி சத்தி கண்ணாய்ச்சென்று சார்ந்து பின்னைச், சிவமே வுவரென்று காண்கொச்சை காவலன் சித்திரிப்பே” எம், சிவபுராணத்தில் சூசூஅவனரு ளாலே அவன்தாள் வணங்கி” (8.1.18) எம் இப்பொருள் பற்றியேயென அறிக. இனி, இது முத்தித் திறத்ததாமே எகு இதுவே முத்திகளென்று சொல்லப் பட்டவை எல்லாவற்றினுந் திறப்பாட்டினையுடைய முத்தியா மென்று பொருள் கூறியதேதென்னில் மற்றுள்ள முத்திகளென்று சொல்லப்பட்ட பத்துவகை முத்திகளும் அழியப்படுமாகையால் அப்படிச் சொன்னதென அறிக. அவைகளெல்லாம் நன்முத்தியல்ல என்பதற்கு பி ம் சித்தியாரில் “இம்மையே ஈரெட்டாண் டெய்தி எழிலாரும் ஏந்திழையார் முத்தி யென்றும் இருஞ்சுவர்க்க முத்தி, அம்மையே என்றுமுத்தி ஐந்து கந்த மறக்கெடுகை என்றுமட்ட குண முத்தியென்றும், மெய்ம்மையே பாடாணம் போல்கை முத்தியென்றும் விவேகமுத்தி யென்றுந்தன் மெய்வடிவாஞ் சிவத்தைச், செம்மைடியே பெறுகை முத்தி யென்றுஞ் செப்புவர்கள் சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே” (8. 12) என்றமையால் சிவனடியைச் சேருமுத்தி இவை நீங்கலாக வேறேயும் உண்டென்பது கருத்தென அறிக. அஃதாவது சித்தியாரில் சூசூஇரும்பைக்காந் தம் வலித்தாற் போலியைந்தங் குயிரை எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தானாக்கி, அரும்பித்திந் னத்தையனல் அழிப்பதுபோல் மலத்தை அறுத்தமல னப்பணைந்த வுப்பேபோ லணைந்து, விரும்பிப்பொன் னினைக் குளிகை ஒளிப்பதுபோல் அடக்கி, மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக், கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியையொத் திருப்பனந்த முத்தியினிற் கலந்தே” (11. 12) எது கண்டுகொள்க. ஆகையால், முத்திக்கு ஏதுவான ஆன்மாக்களுக்குச் சிவன் தனது திருவடிஞானத்தைக் கடாக்ஷிக்கும் அவதரத்து அவர்களுக்கு உண்டான மலமாயா கன்மங்களை நீக்கித் தன்னுடைய திருவடியிலே கூட்டிக்கொள்ளுவன் என்பதே சைவசித்தாந்த முத்தியென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூபடிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாச மோடு பதித்திறம், எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே, விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும்பொரு ளீண்டருள், முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே” எம், “அநாதிமுத்த னாய்ப் பரனா யசலனா யெல்லா அறிவுதொழி லநுக்கிரக முடையஅரன் கன்மம், நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாதம் நுழைவித்து மலங்களெலா நுங்க நோக்கி, மனாதிகர ணங்களெலா மடக்கித்தன்னை வழிபடுநல் லறிவருளி மாக்கருணைக் கையால், இனாதபிறப் பினினின்று மெடுத்து மாறா இன்பமுத்திக் கேவைப்ப னெங்கள் முத்தி இதுவே” (பரபக்கம் 63, 134) எம் கண்டுகொள்க. இதனாற் சொல்லியது, ஆன்மாக்கள் முத்தியைப் பெறுமிடத்து மகளிரிடத் துண்டாகிய போகமே முத்தி என்கிற உலகாயதனும், பஞ்ச கந்தங்களுங் கெடுகிறதே முத்தி என்கிற புத்தரிற் சௌத்திராந்திகனும், மூன்றுவகையாகச் சொல்லப்பட்ட குணங்கள் கெடுகிறதே முத்தி என்கிற அமணரில் நிகண்டவாதியும், எங்கும் விரிந்திருக்கப்பட்ட கன்மங் கெடுகிறதே முத்தி என்கிற பிரபாகரனும், ஆணவமலங் கெடுகிறதே முத்தி என்கிற அகச்சமயத்திற் பேதவாதியும், முத்தியிலுஞ் சரீரம் அழியாதென்கிற அகச்சமயத்திற் சிவசம வாதியும், இந்த உடலிலே சீவித்து நிற்கிற சீவான்மாவுக்கு விவேகஞான முண்டாகிறதே முத்தி என்கிற மாயாவாதியும், இந்த ஆன்மா கெடுகிறதே முத்தி என்கிற பாற்கரியனும், ஆன்மா பசுகரணங் கெட்டுச் சிவகரணமாகிறதே முத்தி என்கிற சங்கிராந்தவாதியும் முத்தியிலும் ஒன்றுமறியாமற் கிடக்கு மென்கிற பாடாணவாதியும் ஆக இப்படிச் சொல்லப்பட்ட பத்துவகை முத்தியும் மறுத்து, இவை எல்லாங் குற்றத்தையுடைய முத்திகளென்று காட்டி, ஆன்மா ஆணவம் மாயை காமியம் என்னப்பட்ட மும்மலங்களும் நீங்கிச் சிவனுடைய திருவருள் ஞானத்தைப் பெற்றுச் சிவாநுபவமாய் நிற்கிறதே சைவ சித்தாந்த முத்தி என்னும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இங்கிவை பொது இயம்பும் என்பர்கள் இதன்மே லான்மாத்
தங்கிய அஞ்ச வத்தை தன்னுண்மை உணர்த்துந் தன்மை
பொங்கொளி ஞான வாய்மை அதன்பயன் புனிதன் நாமம்
அங்கதின் அணைந்தோர் தன்மை அறைகுவன் அருளி னாலே.

உண்மை நிலையி லொன்பது திறனும்
வண்மை யுடனே வனப்புற வகுத்தது.

பொழிப்புரை :

இங்கிவை பொது இயம்பும் என்பர்கள் இவ்விடத்து இங்ஙனங் கூறப்பட்ட செய்யுள் ஐம்பதும் பெத்தநிலையைக் கூறுகையாலே பொருள்களைச் சாமாநியமாகக் கூறினதென்று பெரியோர்கள் சொல்லுவார்கள் ; இதன்மேல் இந்தப் பொது ஐம்பதிற்கு மேலாகக்கொண்டு உண்மையாவது ; ஆன்மா ஆன்ம இலக்கணம் ஓரதிகாரத்தானும்; தங்கிய அஞ்சவத்தை ஆன்மா தங்கப்பட்ட சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி துரியந் துரியாதீதமென்னும் அஞ்சவத்தையின் முறைமை ஓரதிகாரத்தானும் ; தன்னுண்மை உணர்த்துந் தன்மை ஆன்மாக்கள் ஆணவமலத்தாலே மறைப்புண்டு மூலாதாரத்திலே கேவலப்பட்டுக் கிடக்கிற அவதரத்துச் சிவன் கலையாதி தத்துவங்களைக் காரண மாயையிலே நின்றுந் தோற்றுவித்து அதனாலே அந்த ஆணவ மலத்தை நீக்கி அறிவிக்கிற முறைமை ஓரதி காரத்தானும் ; பொங்கொளி ஞானவாய்மை மிகுந்த பிரகாசமாகிய பேரறிவாய் நிற்கிற சிவனுடைய ஞானத்தின் உண்மையை ஓரதி காரத்தானும் ; அதன் பயன் அந்த ஞானத்தைப் பெறுமவர் பயனாகிய ஆன்ம தரிசனம் ஆன்ம சுத்தி ஆன்ம லாபம் என்னப்பட்ட மூன்று வகையும் மூன்றதிகாரத்தானும் ; புனிதன் நாமம் சுத்தனாயிருக்கிற சிவனுடைய திருநாமமாகிய அஞ்செழுத்தருள் நிலை ஓரதிகாரத்தானும்; அங்கதின் அணைந்தோர் தன்மை அவ்விடத்து அந்த உண்மையாகிய சிவத்துடனே கூடிநின்று அநுபவிக்கிற சீவன்முத்தர் இலக்கணம் ஓரதிகாரத்தானும்; அறைகுவன் அருளினாலே ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட அதிகாரம் ஒன்பதினாலுஞ் சொல்லாநின்றேன் தம்பிரானார் அநுக்கிரகத்தாலே இந்த உண்மை ஐம்பதையும்.
பொதுவியல்பு எகு முற்கூறிய செய்யுள் ஐம்பதினும் உண்டாகிய பொருள்களைச் சாமாநியத்திலே பெத்தநிலைகளைச் சொன்ன தென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், சிவன் ஆன்மாக்களை மலபாகம் வருத்துமிடத்து மலமாயா கன்மங்களோடுங் கூட்டி ஜநந மரணப்படுத்தி மலபாகம் வருத்தும் முறைமையைக் கூறுகையால் அப்படிச் சொன்னதென அறிக. மற்ற ஐம்பதும் உண்மை என்றதும் அந்தப் பெத்திநிலையை நீங்கி முத்திக்கு ஏதுவாயுள்ள உண்மைநிலையைப் பெறவேண்டும் பக்குவான்மாக்களை நோக்கிக் கூறுகையாலென அறிக. இவை இரண்டுக்கும் பி ம் கோவைத் திருவாசகத்தில் “பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூரரன்” (146) எ ம், சூசூபொதுக்கடிந் தினிது காக்கும்” (12.3.35) எ ம் சித்தியாரில் சூசூஆரணநூற் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்” (8.15) எ ம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி தன்னுண்மை உணர்த்துந் தன்மை எகு கேவலாவத்தை ஆன்மாவுக்கு உண்மையென்றது ஏதென்னில் செம்பைக் காளிதம் மறைத்தாற் போலவும் அக்கினியைக் காட்டம் மறைத்தாற்போலவும் ஆன்மாவை ஆணவமலம் அநாதியே மறைத்து நிற்கையால் அப்படிச்சொன்னதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூகேவல சகல சுத்த மென்றுமூன் றவத்தை ஆன்மா, மேவுவன் கேவ லந்தன் னுண்மை” (4.37) எ ம், இந்நூலினும் சூசூஉறுந்தனி யதீத முண்மை யுயிர்க்கு” (52) எ ம் வருவதும் இப்பொருள் பற்றியென அறிக.
இதனாற் சொல்லியது முற்கூறப்பட்ட செய்யுள் ஐம்பதும் பொதுவென்றும், மேல் உண்மை ஐம்பதினும் ஆன்ம இலக்கண முதலாக ஒன்பது அதிகாரமாக வருமுறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனங் கூறப்பட்ட முத்தியைப் பெறுமிடத்து உண்மையை அறிந்து முத்திபெற வேண்டுகையால் மேல் உண்மையை அருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.
இந்த உண்மையில் முதற்செய்யுளுக்குத் தொந்தனையாவது : இங்ஙனம் பொதுவாக அருளிச்செய்யப்பட்ட செய்யுள் ஐம்பதினும் பொருள்களைச் சாமாநியத்திலே உண்டென்று நாட்டினதொழிய விசேட அத்தங்களை அருளிச்செய்யாததேதென்று வினவின மாணாக்கனைநோக்கி அவைகளெல்லாம் பெத்தநிலையைக் கூறிவருகையால் பெத்தங் கூறுமிடத்து முத்திநிலையாகிய விசேட அத்தங்களைக் கூற வழக்கல்லாதபடியாலும் அன்றியும் பதியை இல்லையென்றும் பசுவை இல்லையென்றும் பாசத்தை இல்லையென்றுஞ் சொல்லப்பட்ட சமயிகள் எதிர்ப்படுகையால் அவர்களை நோக்கி மறுத்துக் கூறுமிடத்துப் பொருள்களைச் சாமாநியத்திலே உண்டென்று நாட்டுமதொழிய ஆன்மதரிசனம் சிவதரிசனம் முதலாகவுள்ள விசேட அத்தங்களைக் கூற வழக்கல்லாதபடியாலும் முற்கூறிய செய்யுட்கள் ஐம்பதும் பொதுவாகக் கூறினோமென்றும், ஆன்மதரிசனம் சிவதரிசனம் முதலாகவுள்ள விசேட அத்தங்களை மேல் உண்மையிலே சொல்லுகிறோ மென்னும் முறைமையையும் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

செறிந்திடும் உடலுள் மன்னிச் சேர்புலன் வாயில் பற்றி
அறிந்ததில் அழுந்தும் ஒன்றும் அறிந்திடா அறியுந் தன்மை
பிறிந்தடை அஞ்ச வத்தை பெருகிய மலத்தாற் பேணி
உறுந்தனி அதீதம் உண்மை உயிர்க்கென உணர்த்து மன்றே.

தொல்லை வினையாற் றுவக்குண் டுழலும்
பல்லுயிர்த் தன்மை பாரித் துரைத்தது.

பொழிப்புரை :

செறிந்திடும் உடலுள் மன்னி கன்மத்துக்கீடாகச் செறிந்து கூடின சரீரத்திலே நிலைபேறாய் நின்று ; சேர்புலன் வாயில் பற்றி அறிந்ததில் அழுந்தும் பொருந்தத்தக்க விடயங்களை இந்திரியங்களினாலும் பூதங்களினாலும் அந்தக்கரணங்களினாலுங் கலாதிகளினாலுஞ் சுத்த தத்துவங்களினாலும் பொருந்தி அறிந்து அனுபவியாநிற்கும்; ஒன்றும் அறிந்திடா இப்படி இந்தத் தத்துவங்களினாலே அறிந்து அநுபவிக்கச்செய்தேயும் இவையிற்றாலே யல்லவோ அறிகிறோமென்று அறியமாட்டாது ; அறியுந் தன்மை பிறிந்து அப்படி விசுவ வியாத்தனாய் நிற்கச்செய்தே அறிகருவிகள் பதினாறு நீங்கி நின்ற கருவிகளோடுங்கூடி; அடையஞ்சவத்தை பெருகிய மலத்தாற் பேணியுறும் ஒழுங்கிலே சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி துரியந் துரியாதீதம் என்னப்பட்ட ஐந்தவத்தைகளினும் மிக்க ஆணவத்தான் மறைப்புண்டு அழுந்தாநிற்கும். இதுவன்றியும் இங்ஙனம் பொருள் கூறிவந்த பதமிரண்டையும் ஒன்றும் அறிந்திடா அறியுந் தன்மை பிறிந்தடை அஞ்சவத்தை பெருகிய மலத்தாற் பேணி யுறும் என்றொரு பதமாக்கி ஒன்று மறிந்திடா எகு ஒன்றும் அறியாமற் கேவலப்பட்டுக் கிடக்கத் தக்கதாக அறிகருவிகளும் நீங்கி அடைவே அவத்தைப்பட்டு வருமென்று வருகாலமாகப் பொருளுரைப்பினுமாம்; தனி அதீதம் உண்மை ஆன்மாவின் இயற்கையான சுபாவத்தை விசாரிக்குமிடத்து, சீவிக்குங் கருவிகளெல்லாம் நீங்கி முற்கூறிய ஆணவ மலத்தான் மறைப்புண்டு மூலாதாரத்திலே பிரகிருதி தத்துவம் உடம்பாகக் கிடந்தழுந்துமதே அதீதமாம். இவைகளெல்லாம் யார்க்கென்னில் ; உயிர்க்கென உணர்த்து மன்றே இந்த முறைமைகள் ஆன்மாவுக்கென்று சிவாகமங்கள் சொல்லாநிற்கும்.
செறிந்திடும் உடலுள் மன்னி எகு கன்மத்துக் கீடாகச் செறிந்து கூடின உடம்பென்று பொருள்கூறியது ஏதென்னில் ஆன்மாக்கள் கன்மத்தைப் புசிக்குமிடத்து ஒவ்வொரு சரீரங்களை எடுத்து அதனோடுங்கூடிப் புசிக்கவேண்டுகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “உடல்விடா யோனி பற்றி” (2.37) என்ற செய்யுளின் முடிவிலே “இடருறு முருவங் கன்மத் தளவினி லெடுக்கு மன்றே” எ ம், இந்நூலினும் “எண்ணரிதாய்” (19) என்னுஞ் செய்யுளில் “இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை அண்ணலரு ளால் நண்ணி” எம் வருமது கண்டுகொள்க. இனி, சேர்புலன் வாயில் பற்றி அறிந்ததி லழுந்தும் எகு ஆன்மா கூடி அனுபவிக்கத்தக்க விடயங்களை இந்திரியங்களினாலும் பூதங்களினாலும் அந்தக்கரணங்களினாலுங் கலாதிகளினாலுஞ் சுத்த தத்துவங்களினாலும் அறிந்து அனுபவிக்குமென்றதேதென்னில் அப்படி ஆன்மா இந்திரியங்களைக்கொண்டு விடயங்களைக் கொள்ளுமிடத்துப் பூதங்களினிடமாக நின்றறிகையினாலென அறிக.
அந்தக்கரணங்களினால் என்றது, மனது பற்ற ஆங்காரம் எழுப்பப் புத்தி நிச்சயிக்கச் சித்தஞ் சிந்தித்ததென அறிக. இனி, கலாதிகளினால் அறிய என்றது காலங்கூட்டியும் நியதிவரைந்துங் கலை தொழிற்படுத்தியும் வித்தை அறிவை எழுப்பியும் அராகம் இச்சையை எழுப்பியும் புருடன் போகவிச்சாவாகியும் பிரகிருதி யழுந்துவித்தும் வருகையென அறிக. இனி, சிவதத்துவங்களினால் அறிய என்றது அவையிற்றைப் பிரேரிப்பிக்கையினாலென அறிக. இனி, யொன்றும் அநிற்திடா எகு அந்தத் தத்துவங்களினாலே கூடியறிந்து வருமிடத்து இவையிற்றாலேயல்லவோ கூடியறிந்து வருகிறோ மென்று ஆன்மா அறியமாட்டாதென்று பொருள் கூறியதேதென்னில், ஆன்மா தத்துவங்களோடுங் கூடினவிடம் மயக்க அறிவாகையாலே தன்செயலறுதி தோன்றாமல் யானெனதென்கிற மமதை பற்றி நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இனி அறியுந் தன்மை பிறிந்து எகு ஆன்மா விசுவ வியாத்தனாய் நிற்கச்செய்தே அறிகருவிகள் பதினாறு நீங்கி நின்ற கருவிகளோடுங்கூடி அவத்தைப் படுமென்று பொருள் கூறிய தேதென்னில், ஆன்மா தத்துவம் முப்பத்தாறோடுங் கூடி விசுவ வியாத்தனாய் நிற்கச்செய்தே அவத்தைப்படும் அவதரத்து அறிகருவியாகிய சுத்த தத்துவம் ஐந்தும் வித்தியா தத்துவம் ஏழில் பிரகிருதி தத்துவம் நீங்கலாகக் கலாதிகள் ஆறும் பூதங்கள் ஐந்தும் ஆகப் பதினாறு நீங்கி நின்றகருவி இருபதும் தொண்ணூற்றாறு வகையில் வாயுக்கள் பத்தும் வசனாதிகள் ஐந்தும் ஆக முப்பத்தைந்தோடுங் கூடிச் சாக்கிரத்தில் முப்பத்தைந்து கருவியும் சொப்பனத்தில் இருபத்தைந்து கருவியும் சுழுத்தியில் மூன்று கருவியும் துரியத்தில் இரண்டு கருவியும் அதீதத்தில் ஒரு கருவியுமாக நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்படியானாலும் அவத்தைக்கு அறிகருவிகள் பதினாறும் நீங்குமென்பதொழிய வாயுக்கள் பத்தும் வசனாதிகள் ஐந்தும் சாக்கிரத்தினுங் கூடிநிற்கச் செய்தே அவத்தையிற் கூடுமென்ற தேதென்னில், அப்படிச் சாக்கிரத்திற் கூடிநின்றாலும் அவத்தைக்கு அவை மேலிட்டுச் சீவிக்கையினாலே அப்படிச் சொன்னதென அறிக.
அது எங்ஙனேயென்னில், அந்தத் தசவாயுக்களுக்குங் குணமாவது பிராணவாயு மேல்நோக்கியும் அபானவாயு கீழ்நோக்கியும் வியானவாயு கலந்தும் உதானவாயு விக்கியும் சமானவாயு சமமாக்கியும் நாகவாயு தும்மியுங் கூர்மவாயு கொட்டாவிவிட்டுஞ் சோம்பியும் கிரிகரவாயு கண்ணையிமைப்பித்தும் தேவதத்தவாயு நகைப்பித்தும் தனஞ்சயவாயு நாடிகளைத் திறப்பித்து உடலை வீக்கியும் வருமாகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பி ம் தத்துவ சரிதையில் சூசூசெப்புமிடை பிங்கலைநற் சுழுமுனைகாந் தாரி திகழத்தி சிங்ஙுவையு மலம்புடையும் புருடன், ஒப்பரிய சங்கினியுங் குதமு மாகும் ஒருபத்திற் பிராணன் அபானன் பின்னும் வியானன், தப்பிலுதா னன்சமான னாகன் கூர்மன் தருகிரிக ரன்தேவ தத்தன்தனஞ் செயனாம் பத்தில், ஒப்பினாசி குதங்கலத்தல் விக்கல்சமந் தும்மல் உயர் சோம்பு கண்ணேற்றல் நகைமலர்ச்சீ விக்கே” எ து கண்டு கொள்க. அவை எல்லாம் விசுவ வியாத்தியில்லையோ என்னில், அவையுண்டானாலும் ஆன்மபோதம் மேலிட்டு நிற்கையால் அவை அடங்கியும் அவத்தையில் ஆன்மபோதம் மலத்தினாலே மறைந்து அடங்கி நிற்கையால் அவை மேலிட்டும் நிற்குமென்றதென அறிக. அதற்கு அநுபோகம் ஏதென்னில் விசுவ வியாத்தியில் அடங்கிநின்று இயங்கின வாயுக்கள் அவத்தையிலே மேலிட்டுப் பெருமூச்செறிந்து நின்று காரியப்படுமாகையால் அப்படிச் சொன்னதென அறிக. வாயுக்கள் அப்படியானாலும் வசனாதிகள் ஐந்தும் விசுவ வியாத்தியிலும் உண்டாயிருக்க அவத்தையிலே மேலிட்டுநின்று சீவிக்குமென்றது ஏதென்னில், விசுவ வியாத்தியிலுங் கன்மேந்திரியமான வாக்காதிகளுக்கு விடயமாக நின்று சீவித்தாலும் அவத்தைப்படும் அவதரத்துஞ் சொப்பனத்தில் அந்த வாக்காதிகள் நீங்கினாலும் வசனாதிகள் நின்று சீவிக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அஃதெங்ஙனே யென்னில், ஆன்மா சொப்பனத்தனான அவதரத்தும் இந்தப் பூதவுடல் அசைவற்றுக் கிடக்கச்செய்தேயும் ஒருவரோடு வைதும் வாழ்த்தியும் சிலவிடங்களுக்குப் போயும் மீண்டுஞ் சிவபண்டங்களை இடுதல் ஏற்றல் செய்தும் விசர்க்கித்தும் வீட்டித்தும் மைதுனம் பண்ணியும் சிறுநீர் போக்கியும் வருகையால் அவத்தையிலும் வசனாதி யுண்டாகையால் அப்படிச் சொன்னதென அறிக. ஆகையால் அவத்தையில் வாயுக்கள் பத்தும் வசனாதிகள் ஐந்தும் மேலிட்டு நின்று சீவிக்குமென்பதை அனுபவத்தாற் கண்டுகொள்க.
இனி, அடை அஞ்சவத்தைப் பெருகிய மலத்தாற் பேணியுறும் எ கு அவத்தைகளின் அடைவே சாக்கிராவத்தைக்கு முப்பத்தைந்து கருவியென்றும் சொப்பனாவத்தைக்கு இருபத்தைந்து கருவியென்றும் சுழுத்தி அவத்தைக்கு மூன்று கருவியென்றும் துரியாவத்தையில் இரண்டு கருவியென்றும் அதீதாவத்தையில் ஒரு கருவியென்றும் பொருள் கூறியதற்கு பி ம் சித்தியாரில் சூசூசாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில், ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுனை மூன்று, நீக்கிய இதயந் தன்னில் துரியத்தில் இரண்டு நாபி, நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே” (4.33) எ து கண்டு கொள்க. அன்றியும் பெருகிய மலம் எகு மிக்க மலமென்று பொருள்கூறியது ஏதென்னில் அந்த ஆணவமலம் ஒன்றாயிருந்துஞ் சர்வான்மாக்களையும் மறைத்து நிற்கையாலும் அநாதியே தொடங்கி மேலும் ஆன்மவர்க்க முள்ளமட்டும் அந்த மலம் நீங்காதாகையாலும் அப்படிச் சொன்னதென அறிக. இனி தனியதீத முண்மை எகு கருவிக ளொன்றுமில்லை என்றிருக்கப் பிரகிருதிதத்துவமும் உடம்பாகக்கிடக்கிறதே யதீதமென்று பொருள்கூறிய தேதென்னில், அந்தப் பிரகிருதி தத்துவம் மற்றுள்ள கருவிகளைப்போல ஆன்மாவை விட்டும் பற்றியும் வாராமற் கேவல சகலம் இரண்டினும் உயிரும் உடலும் போலப் பிரிவற்று நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்படியானால் தனியதீத மென்பானேனென்னில், அஃதாவது யாதாமொருவர் தனித்திருக்கிறார்களென்றால் அவர்களுயிரும் உடம்பும் இரண்டாயிருக்கவும் ஒருவரென்றும் தனியரென்றும் பெயர் பெற்றாற்போலவென அறிக. இதற்குமேல் “எண்ணவொன் றிலாததீதம்” (60) என்னும் விருத்தத்துக்கு எழுதுகிற நுட்பத்தினுங் கண்டுகொள்க. இனி, அதீதத்தை ஆன்மாவுக்கு உண்மையென்பான் ஏனென்னில் கருவிகளோடுங் கூடிநின்று சீவித்தவிடம் செயற்கை அறிவாகையாலும் சீவிக்குங் கருவிகள் நீங்கினவிடம் இயற்கை அறிவாகையாலும் அப்படிச் சொன்னதென அறிக. அப்படி ஆன்மாவுக்கு இயற்கையான சுபாவமே உண்மை என்பதற்கு பி ம் “கேவலந்தன் னுண்மை” (சித்தியார், 4.37) எம், “விஞ்சிய சுபாவ மலத்துடன் மேவுதல்” எ ம் வருமது நூல்களிலே கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மாக்கள் ஒவ்வொரு சரீரங்களிலே கூடி நிற்குமிடத்து இந்திரியங்களோடுங் கூடிநின்று சீவிக்கும் முறைமையும் அப்படி நிற்கச்செய்தே அறிகருவிகள் நீங்கி அவத்தைப்படு முறைமையும் அதீதத்திற் கேவலாவத்தைக்குஞ் சீவிக்குங் கருவிகளெல்லாம் நீங்கி ஆணவத்தான் மறைப்புண்டு மூலாதாரத்திலே கிடக்குமுறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் முன்னம் அருளிச்செய்த செய்யுள் ஐம்பதினுள் பாயிரம் பன்னிரண்டு செய்யுளும் நீக்கி மற்றுள்ளவை எல்லாம் முதற் சூத்திரம் இரண்டாஞ் சூத்திரமுமாக வகுத்தருளிச் செய்து, மேலுண்மையிலே நீக்கியுள்ள மூன்றாஞ் சூத்திரம் முதலாகப் பத்துச் சூத்திரமும் வருகையால் அதில் மூன்றாஞ் சூத்திரமாகிய ஆன்ம இலக்கணம் அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
அப்படி ஆன்ம இலக்கணம் மூன்றாஞ் சூத்திரமாகைக்கு வழி ஏதென்னில் சிவஞானபோதத்தினுஞ் சிவஞான சித்தியாரினும் மூன்றாஞ் சூத்திரம் ஆன்ம இலக்கணமாக நிற்கையால் இவையிற்றையும் அப்படி வைக்கப்பட்டதென அறிக. அவை எங்ஙனேயென்னில் சிவஞானபோதத்தில் சூசூஉளதில தென்றலின் என துடல் என்றலின், ஐம்புலன் ஒடுக்கம் அறிதலில் கண்படில், உண்டிவினை யின்மையின் உணர்த்த உணர்தலின், மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா” (3) எ ம், சிவஞானசித்தியாரில் சூசூஉயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச், செயிருறும் இச்சா ஞானச் செய்திகளுடைய தாகிப், பயில்வுறும் இன்ப துன்பப் பலன்களும் நுகரும் பார்க்கில், துயிலொடும், ஐந்த வத்தைப் படும்உண்மை துரியா தீதம்” (3.1) எ ம் மூன்றாஞ் சூத்திரம் ஆன்ம இலக்கணத்துக்கு அருளிச்செய்கையால், இந்நூலினும் “செறிந்திடும்” (52) என்ற விருத்தந் தொடங்கி சூசூஓரிடத் திருத்தல்” (59) என்னும் விருத்த முடிவாகிய செய்யுள் எட்டினும் ஆன்ம இலக்கணத்தை அருளிச் செய்கையால் இதுவும் அப்படி மூன்றாஞ் சூத்திரமாக நின்றதென அறிக.
இவ்வதிகாரத்துக்கு வகுத்த செய்யுட்களில் ஆன்மப் பிரகாசம் வரும் முறைமைக்கும் வகுப்புகளுக்கும் வகையேதென்னில், “தனியதீத முண்மை உயிர்கென உணர்த்து மன்றே” (52) எ ம், “அருவினை யுடலு ளாவி அறிவினால் அறியு மன்றே” (53) எ ம், “ஆன்மா அறிவில தாகு மீச னசேதனத் தளித்தி டானே” (54) எ ம், “அசத்தைச் சத்துட னின்று நீங்குந் தன்மையாற் சதசத் தாமே” (57) எ ம் ஆன்மாவின் பிரசங்கம் வருகையால் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. அவை வருமாறு மேல் வருமிடத்திற் கண்டுகொள்க.
மேல்வரும் விருத்தத்துக்குத் தொந்தனையாவது இங்ஙனஞ் சொல்லப்பட்ட ஆன்மா ஒரு சரீரத்தோடுங்கூடிச் சீவிக்கும் முறைமையை அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

உருஉணர் விலாமை யானும் ஓரொரு புலன்க ளாக
மருவிநின் றறித லானும் மனாதிகள் தம்மின் மன்னித்
தருபயன் நுகர்த லானும் உயிர்சட மாத லானும்
அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியு மன்றே.

புகலுயி ரில்லெனும் புறச்சம யத்தவர்
தகவி லுரையைச் சாற்றி மறுத்தது.

பொழிப்புரை :

அப்படி ஆன்மா என்பதொன்றில்லை இந்தப் பூததேகந் தானே அறியுமென்கிற உலகாயதன் கருத்தை மறுத்தருளிச்செய்கின்றது. உரு உணர்விலாமையானும் இந்தச் சரீரமானது உறக்கமானபொழுதுஞ் சவமானபொழுதும் அறியாதபடியாலே இவையிற்றைக்கொண் டறிகைக்கு ஒரு ஆன்மா உண்டென்று அறிவாயாக. அன்றியும் இரண்டாவது இந்திரியங்கள் அறியுமென்ற மாத்தியமிகன் கருத்தை மறுத்து அருளிச்செய்கின்றது ; ஓரொரு புலன்களாக மருவிநின்றறி தலானும் இந்திரியங்கள் உறக்கத்தின் அறியாத படியாலும், அன்றியும் இவை ஒன்றறிந்தது ஒன்றறியாதபடியாலும் இந்த இந்திரியங்களைக் கொண்டறிகைக்கு ஒரு ஆன்மா உண்டென்று அறிவாயாக. அன்றியும் மூன்றாவது அந்தக்கரணங்கள் அறியுமென்கிற மாயாவாதி கருத்தை மறுத்தருளிச் செய்கின்றது ; மனாதிகள் தம்மின் மன்னித் தருபயன் நுகர்தலானும் மனம் புத்தி ஆங்காரஞ் சித்தமென்னப்பட்ட அந்தக்கரணங்கள் ஒன்றை ஒன்று அறியாத படியாலும் அன்றியும் ஒன்றறிந்தது ஒன்றறியாதபடியாலும் இவையிற்றைக் கொண்டு அறிகைக்கு ஒரு ஆன்மா உண்டென்று அறிவாயாக. அன்றியும் நாலாவது வாயுப்பூதம் அறியுமென்று மீளவும் உலகாயதன் சொன்ன கருத்தை மறுத்தருளிச் செய்கின்றது; உயிர்சட மாதலானும் உறக்கத்தின்கண் வாயுப்பூதம் இயங்கச் செய்தேயும் அறிவற்றுக் கிடக்கையாலும் இதனைக்கொண்டு அறிகைக்கு ஒரு ஆன்மா உண்டென்று அறிவாயாக. இங்ஙனம் இவை அறியா தாகையால்; அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியுமன்றே கட்புலனுக்குத் தெரியாமலரூபமா யிருக்கப்பட்ட கன்மத்துக்கீடாக உண்டான உடம்பிலே நிற்கிற ஆன்மா கர்த்தாவின் திருவருளினாலே அறிவிக்க அறிந்து சீவியாநிற்கும்.
இங்ஙனம் நாட்டப்பட்ட சமயிகளுக்கு உதாரணம் : உருவுணர் விலாமையானும் எகு இந்தப் பூததேகமானது சவமான பொழுது அறியாதென்றும் அன்றியும் உறக்கத்தின்கண் வாயுப்பூதம் அறியா தென்றும் உலகாயதன் கருத்தை மறுத்ததற்கு பி ம் சிவஞான சித்தியாரில் “அறிவு பூதம தென்னில் வேறு புறத்த றிந்தமை கண்டிலம், செறிவு தான்உட லத்தெ னில்சவ மான போதுடல் தேருமோ, குறிகொ ளாதுடல் வாயு வானது கூடிடா மையின் என்னின்நீ, பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்கம் என்பிற வாததே” (பரபக்கம், 42) எது கண்டுகொள்க. இனி, ஓரொரு புலன்களாக மருவி நின் றறிதலானும் எகு இந்திரியங்கள் அறியாதென்றும் புத்தரில் மாத்தியமிகன் கருத்தை மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூகருவியும் ஒளியும் வேறு கண்டிடுங் கருத்தும் நிற்கப், பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றாம், மருவிடும் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானால், பொருளுள தாகு மாகப் போதமும் உள்ள தாமே” (140) எம், சூசூஅறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறிவா வாகும், அறிவதும் ஒன்றொன்றாக ஒன்றொன்றாய் அறியு மென்னில், அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தை யுங்கொண், டறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே” (3.3) எது கண்டுகொள்க. இனி, மூன்றாவது மனாதிகள் தம்மின் மன்னித் தருபயன் நுகர்தலானும் எகு அந்தக் கரணங்கள் அறியாதென்று மாயாவாதி கருத்தை மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் “வேற தாகும்உரு வத்திலேபரம் வெளிப்ப டும்மென விளம்பில்நீ, ஊறி லாஉருஅ சத்தி லேபிரம முண்டுதா னுணர்விலாததென், மாறி வாயுவு மனாதி யானவையும் வந்தி டாமையினிலின்றெனின், ஈறு தானுடைய தாயதோ பிரம மென்கொ லோவிவை யிறப்பதே” (பரபக்கம், 244) எது கண்டுகொள்க. இனி, நாலாவது உயிர் சடமாதலானும் எகு வாயுப்பூதம் அறியா தென்று உலகாயதனை மறுத்ததற்கு முற்பதத்திலே இவனை மறுத்த உதாரணத்திலே கண்டுகொள்க. அன்றியும் உயிர் சடமாதலானும் எகு பிராணவாயு என்று பொருள்படுத்தி அகச்சமயத்திற் சங்கிராந்தவாதி என்பாருமுளர். அதற்கு இந்தச் செய்யுளின் கருத்து “புகலுயி ரில்லெனும் புறச்சம யத்தவர், தகவி லுரையைச் சாற்றி மறுத்தது” என்று புறச்சமயிகள் அத்தத்தை மறுக்கையினாலே அது அத்தமல்லவென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மா என்பது ஒன்றில்லை யென்று சொல்லகிற உலகாயதன், மாத்தியமிகன், மாயாவாதி இவர்கள் மூவர் அத்தத்தையும் மறுத்து, மாணவகனை நோக்கி ஆன்மா உண்டென்று நாட்டி, இந்த ஆன்மாவுஞ் சிவனறிவிக்க அறிந்து இந்த உடலிலே நின்று சீவிக்குமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படிச் சிவனறிவிக்க ஆன்மா அறியுமென்பது பொருளல்ல ஆன்மா தானேயல்லவோ அறிந்து சீவித்து நிற்கும் என்கிற அவிகார வாதியையும், அதுவல்ல ஆன்மாவுக்கு அறிவில்லையென்கிற சங்கி ராந்தவாதியையும், அதுவல்ல ஆன்மாவுக்கு இந்திரியங்கள் அறிவைக் கொடுக்குமென்கிற சிவசமவாதியையும், அதுவல்ல ஆன்மாவுக்கென்ன ஒரு சிற்றறிவுஞ் சற்றுமில்லை சிவனறிவு கொடுத்தறிவித்தால் அறியுமென்கிற பரிணாமவாதியையும் மறுத்தருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே.

உயிருள தென்னு முட்சம யத்தவர்
செயிருறு மொழியைத் தெரிந்து செப்பியது.

பொழிப்புரை :

அப்படிச் சிவனறிவிக்கவேண்டா ஆன்மா தானே அறியுமென்கிற ஈஸ்வர அவிகாரவாதியை மறுத்தருளிச் செய்கின்றது. அறிவெனில் வாயில் வேண்டா அப்படி ஆன்மாவை அறிவென்பையாமாகில் ஒன்றை அறியுமிடத்து இந்திரியங்களைக் கொண்டு அறிய வேண்டுவதில்லையாம். ஆகையால் தற்சுதந்தரமா யறிகிறவன் அல்ல என்பது கருத்து. அன்றியும் இரண்டாவது ஆன்மாவை அறிவல்ல என்கிற சங்கிராந்தவாதியை மறுத்தருளிச் செய்கின்றது; அன்றெனில் அவைதாம் என்னை ஆன்மாவை அறிவல்ல என்பையாமாகில் அந்தஇந்திரியங்களால் இவனுக்கு ஒருபயனுமில்லையாகவேண்டும். ஆகையால் இவனுக் கறிவில்லையென்னவும் ஒண்ணாதென்பது கருத்து. அன்றியும் மூன்றாவது இந்திரியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்குமென்ற சிவசமவாதியை மறுத்தருளிச் செய்கின்றது ; அறிவதை உதவுமென்னில் அசேதனம் அவைதாம் இந்திரியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்கு மென்பையாமாகிற் சேதனனாயுள்ள ஆன்மாவுக்கு அசேதனமாயுள்ள இந்திரியங்கள் அறிவைக் கொடுக்கமாட்டாது. ஆகையால் இந்திரியங்களைக்கொண்டு ஆன்மா அறியுமென்பது கருத்து. இனி நாலாவது ஆன்மாவுக் கெனவோர் சிற்றறிவுதானுமில்லை சிவனறிவு கொடுத்தால் அறியுமென்ற பரிணாமவாதியை மறுத்தருளிச் செய்கின்றது; எல்லாம் அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னிலான்மா அறிவில தாகும் சர்வத்தையும் ஒரு நிகழ்ச்சியாய் அறிகிற சிவன்தானே ஆன்மாவுக்கு அறிவைக் கொடுப்பனென்று நீ சொல்லில் முன்பு ஆன்மாவுக்குச் சிற்றறிவுதானு மில்லையாக வேண்டும். அப்படி ஆன்மாவுக்கு முன்பு அறிவுண்டாமாகில் சிவன் அறிவிக்க வேண்டுமோ என்று நீசொல்லில்; ஈசன் அசேதனத்தளித்தி டானே சிவன் அறிவுள்ள முதலுக்கு அறிவைக் கொடுப்பதொழிந்து அறிவில்லாத கடபடாதிகளுக்கு அறிவைக் கொடான்.
உதாரணம் : இங்ஙனங் கூறப்பட்ட சமயிகள் மதமும் அதற்கு மறுப்புஞ் சங்சற்பநிராகரணத்திலே காட்டுதும். ஈஸ்வரவவிகாரவாதி ஆன்மாவை அறிவென்றதற்கு பி ம் சூசூபஃறுளைக் கடத்தி னுள்விளக் கேய்ப்ப அறிவுள தாகும் உருவுறும் உயிர்கள்” (10.48 49) எது அவன் மதத்திலே கண்டுகொள்க. அப்படி ஆன்மா அறிவல்லவென் றவனை மறுத்ததற்கு பி ம் சூசூஇருந்ததுன் கேள்வி திருந்திடும் உயிர்கள் அறிவின வாயிற் பொறிபுலன் என்னை மற்றவை பற்றி உற்றறிந் திடுதலின் அறிவென வழங்கும் உயிரென உரைத்தல் காணுங் கண்ணினன் கைகொடு தடவிப் பூணும் பொருளின் பெயர்பல புகறல் என்னுங் கிளவி தன்னொடு தகுமே” (11. 1 7) எ து அவன் மறுப்பிலே கண்டுகொள்க. இனி, இரண்டாவது ஆன்மாவை அறிவல்லவென்று சங்கிராந்தவாதி சொன்னதற்கு பி ம் சூசூநீங்காது ஒளிர்உயிர் விளக்கென நிற்கும் அளப்புறும் அறிவின்று” (9. 91 92) எது அவன் மதத்தில் கண்டுகொள்க. இனி ஆன்மாவுக்கு அறிவுண்டென்றவனை மறுத்ததற்கு பி ம் சூசூஇன்றுன துரையின் நன்றி உயிர்ஒளித் தீபம் போலத் தாபந் தரில்இருள் செறியுந் தன்மை என் அறிவில தாகில் ஒளியென உரைத்த தெளிவதற் கேதாம்” (10.1 4) எது அவன் மறுப்பிலே கண்டுகொள்க. இனி மூன்றாவது இந்திரியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்குமென்று சிவசமவாதி சொன்னதற்கு பி ம் சூசூபாசம் ஐம்புலன் தேசுற உணர்த்தப் பசுத்தனி ஞானம் பொசித்திடு மன்றே” (8.13 14) எது அவன் மதத்தில் கண்டுகொள்க. இனி இந்திரியங்கள் ஆன்மாவுக்கு அறிவைக் கொடுக்கமாட்டாதென்று அவனை மறுத்ததற்கு பி ம் சூசூபொறிபுலன் தானோ அறியா” (9.78) எ து அவன் மறுப்பிலே கண்டுகொள்க. இனி நாலாவது ஆன்மாவுக்குச் சிற்றறிவு தானு மில்லை சிவனறிவு கொடுத்தாலல்லது அறிவில்லையென்று பரிணாமவாதி சொன்னதற்கு பி ம் சூசூஅறிவோன் தானும் அறிவிப்போனும் அறிவாய் அறிகின் றோனும் அறிவுறு மெய்ப்பொருள் தானும் வியந்திது வெனப்படும் அப்பொருள் யாவும் அவனே என்றும்” (11.7780) எது அவன் மதத்திலே கண்டுகொள்க. இனி, ஆன்மாவுக்கு அநாதியே சிற்றறிவுண்டென்று அவனை மறுத்ததற்கு பி ம் “அறிவொன் றில்லோர்க் கிறையருள் உதவுதல் பிறிவறிவரிய செறிஇருள் இடத்தோர் அந்தகர்க் காண வந்தோர் எம்மை நீவிருங் காண வேணும் என்றாங் கெடுத்தொரு தீபங் கொடுத்ததை ஒக்கும் இச்செயற் கிறைவன் கொச்சையன் அன்றே” (12.115120) எ து அவன் மறுப்பிலே கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, ஆன்மா தானே அறியுமென்ற அவிகாரவாதியையும், ஆன்மாவுக்கென்னவோர் அறிவில்லை என்ற சங்கிராந்த வாதியையும், ஆன்மாவுக்கு இந்திரியங்கள் அறிவைக் கொடுக்கு மென்ற சிவசமவாதியையும், ஆன்மாவுக்குச் சிற்றறிவுதானுமில்லை சிவனறிவித்தால் அறியுமென்ற பரிணாமவாதியையும் மறுத்தருளிச் சிற்றறிவாயுள்ள ஆன்மாவுஞ் சிவனறிவித்தால் அறியுமென்னும் முறைடிமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி ஆன்மாவுக்கென்ன ஓரறிவுண்டாமாகில் அப்படி அறிவிக்கின்ற சிவனை இவனால் அறியப்படாதோ என்கின்ற பரிணாமவாதியையுஞ் சிவனை ஆன்மாவால் ஒரு காலத்தினும் அறியப்படாதென்கின்ற பாடாணவாதியையும் மறுத்து, ஆன்மா இந்திரியங்களுடனே கூடி அறியும் அறிவால் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறியும தொழிந்து சிவனை அறியமாட்டாதென்னும் முறைமையை மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி யென்றும்
அறிவினால் அறியொ ணாதேல் ஆவதொன் றின்மை தொன்மை
அறிவுதான் ஒன்றை முந்தி அதுவது வாகக் காணும்
அறிவுகாண் அசத்து மற்ற தறிவினுக் கறியொண் ணாதே.

பொறியா லுயிரறி பொருளசத் தந்த
அறிவா லமலனை யறிவரி தென்றது.

பொழிப்புரை :

ஆன்மாவைச் சிவன் அறிவித்தாலும் இந்த ஆன்மாவுக்கு அறிவு உண்டாகில் அந்தச் சிவனை இவனால் அறியப்படாதோ என்கிற பரிணாமவாதியை மறுத்தருளிச் செய்கின்றது. அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி ஆன்மபோதத்தாற் சுட்டி அறியப்பட்ட பொருள்களெல்லாம் அசத்தாய் அழிந்துபோகிறது உண்மையென்று அறிவாயாக. ஓகோ, வாக்கு மனாதீதகோசரனாய் இருக்கப்பட்ட சிவனை இவனால் அறியப்படுமோ என்ற பாடாணவாதியை நோக்கி மறுத்தருளிச் செய்கின்றது ; என்றும் அறிவினால் அறியொணாதேல் ஆவதொன் றின்மை இந்தப் பெத்தத்தி லொழிந்து முத்தியினும் இவன் சிவனை அறியானாமாகில் இந்த ஆன்மாவுக்கு ஒரு பயனுமில்லையாம். அப்படிச் சொல்லுகிறதென்ன, முற்பதத்திலே ஆன்மபோதத்தால் அறியப்பட்டதெல்லாம் அசத்தாய் அழிந்துபோமென்று சொல்லி, இப்பொழுது இவனாற் சிவனை அறியப்படாதாமாகில் இவனுக்கு ஒரு பயனுமில்லை என்பான் ஏனென்று மீளவுங் கேட்ட பரிணாமவாதியை மறுத்தருளிச் செய்கின்றது; தொன்மை அறிவுதான் ஒன்றை முந்தி அதுவதுவாகக் காணும் அறிவுகாண் அசத்து பழைய ஆன்மபோதமானது இந்திரியங்களுடனே கூடி அந்த விடயந் தானாய் முற்பட்டு நின்று காண்கிற அறிவைகாண் அசத்தாய் அழிந்துபோமென்றோம். ஆனால் பின்னை எங்ஙனே என்னில் ; மற்றது அறிவினுக் கறியொண்ணாதே (மற்று வினைமாற்று) அந்த ஞானமானது இந்த இந்திரியங்ளோடு கூடி அறியும் அறிவால் அறியப்பட்டாது.
அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி எகு அப்படிச் சிவன் அறிவித்து நிற்கச்செய்தேயும் ஆன்மபோதத்தால் அறிகிற தெல்லாம் அசத்தாமென்று பரிணாமவாதியை மறுத்ததேதென்னில், சிவன் அறிவிக்கச்செய்தேயும் ஆன்மாவால் அப்படி அறிவிக்கிற சிவனை அறியப்படாதென்றதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும், உன்னிய வெல்லாம் உண்ணின் றுணர்த்துவன் ஆதலானும், என்னது யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும், தன்னறி வதனாற் காணுந் தகைமையன் அல்லன் ஈசன்” (6.8) எது கண்டு கொள்க. இனி இரண்டாவது, என்றும் அறிவினால் அறியொணாதேல் ஆவதொன்றின்மை எகு முத்தியிலுஞ் சிவனை ஆன்மாவால் அறியப்படாதாயின் இவனுக்கொரு பயனுமில்லையென்று பாடாண வாதியை மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூகாட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி எனவகுத் துரைக்கிற் கரணா பாவம் மரணம் கருமரம் ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா தனிதரு துயரம் எனும் இது திடனே பாடா ணத்திற் கூடா முத்தி” (7.915) எ து கண்டுகொள்க. இனி மூன்றாவது, தொன்மை அறிவுதான் ஒன்றை முந்தி அதுவதுவாகக் காணும் அறிவுகாண் அசத்து என்று மீளவும் பரிணாமவாதியை மறுத்ததற்கு பி ம் முற்செய்யுளில் இரண்டாம் பதத்தில் “அறிவதை யுதவு மென்னில் அசேதன மவைதாம்” (54) எது கண்டுகொள்க. இனி நாலாவது, மற்றது அறிவினுக்கு அறியொணாதே என்றதை அந்த ஞானமானது இந்திரியங்களோடுங் கூடி அறியும் அறிவால் அறியப்படாதென்றதற்கு பி ம் திருவாசகத்தில் சூசூஅனைத்துலகு மாயநின்னை ஐம்புலன்கள் காண்கிலா” (5.76) எம், காளத்தி யந்தாதியினும் சூசூநிறைந்தெங்கு நீயேயாய் நின்றாலு மென்றும் அமைந்தைம் புலன்காண வாராய்” (11 . 9 . 48) எம் கண்டுகொள்க. இதனாற் சொல்லியது ஆன்மாவுக்குச் சிற்றறிவு உண்டாமாகில் தன்னை அறிவிக்கிற சிவனை அவனறியானோ என்ற பரிணாம வாதியையும் ஆன்மாவால் ஒருகாலத்தினுஞ் சிவனை அறியப்படா தென்ற பாடாணவாதியையும் மறுத்து, பெத்தமொழிய முத்தியினும் ஆன்மா அறிந்து அநுபவியாதபொழுது அவனுக்கொரு பயனும் உண்டாகாதென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி அசத்தாகிய பிரபஞ்சத்தை ஆன்மபோதத்தால் அறியப்படுமோ என்று பரிணாமவாதி ஆசாரியரை வினவ, அப்பொழுது ஈஸ்வர அவிகாரவாதி வந்து அசத்தாகிய பிரபஞ்சத்தை ஆன்மா அறியாமற் பின்னை அறிகிறதேதென்று கேட்க, அப்படியல்ல பிரபஞ்சத்தை அறிகிறது சிவனே அறிவவென்று மீளவும் பரிணாமவாதி சொல்லுகையும், அதனை அல்லவென்று மறுத்து இந்திரியங்கள் அறியுமென்று சங்கிராந்தவாதி சொல்லுகையும், அதனை அல்ல என்று மறுத்து ஆன்மாவும் இந்திரியங்களுங் கூடி அறியுமென்று சிவசமவாதி சொல்லுகையும், அதனை அல்லவென்று மறுத்து ஆன்மாவும் அருளுங் கூடி அறியுமென்று ஈஸ்வர ஐக்கியவாதி சொல்லுகையும், அதனை அல்லவென்று மறுத்து அருளும் இந்திரியங்களுங் கூடி அறியுமென்று சைவர் சொல்லுகையுமான அவதரத்து இவர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபாடாகச் சொல்லுகிற இதிலே அசத்தாகிய பிரபஞ்சத்தை அறிகிறதுதான் எந்த அறிவென்று ஆசாரியரை நோக்கி மாணவகன் வினவின அவதரத்து இவர்கள் ஆறுபேருஞ் சொல்லுகிற அர்த்தங்களெல்லாஞ் சித்தாந்தத்துக்கு வாராதென்று அவரவர் சொல்லப்பட்ட அத்தங்களெல்லாவற்றையும் மறுத்துக் காட்டி அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 5

எவ்வறி வசத்த றிந்த தெனில்உயிர் அறியா தீசன்
அவ்வறி வறியான் அல்ல தசேதனம் அறியா தாவி
செவ்விய கருவி கூடித் தெரிவுறா தருளிற் சேரா
ஒவ்விரு வகைய தென்னில் ஒளியிரு ளொருங்கு றாவே.

அந்த அசத்தை யசத்தென் றறிந்தது
எந்த அறிவென் றியம்புக என்றது.

பொழிப்புரை :

எவ்வறி வசத்தறிந்ததெனில் இந்தச் சமயிகள் ஆறுபேருஞ் சொல்லுகிற இதிலே அசத்தாகிய பிரபஞ்சத்தை அறிகிறது எந்த அறிவென்று நீ கேட்கிறாயாமாகில்; உயிர் அறியாது அசத்தை ஆன்மாவால் அறியப்படாது. அதுவேனென்னில், ஆன்மா தனக்கென்ன ஓரறிவிலாதபடியாலே பிரபஞ்சத்தைத் தானாக அறிய மாட்டாதாகையாலென அறிக. அன்றியும்; ஈசன் அவ்வறி வறியான் சிவனுக்கும் அப்படி அறிகிற அறிவில்லை. அது ஏனென்னில், அவனெங்கும் பூரணனாயிருக்கையாலே அவனுக்கொன்றையுஞ் சுட்டி அறியவேண்டுவதில்லை யாகையாலென அறிக; அல்லதசேதனம் அறியாது அவை இரண்டையுமன்றி இந்திரியங்களுந் தானாக அறியமாட்டாது. அது ஏனென்னில் அவை சடமானபடியாலே தானாக அறியமாட்டாதாகையாலென அறிக. அன்றியும் ; ஆவி செவ்விய கருவி கூடித் தெரிவுறாது ஆன்மாவும் நேர்பட்ட கருவிகளுங் கூடி அறியமாட்டாது. அது ஏனென்னில், ஆன்மா தனக்கென்னவோர் அறிவில்லாதபடியாலும் இந்திரியங்கள் சடமானபடியாலுந் தம்மிற் கூடி அறியமாட்டாதாகையாலென அறிக. அன்றியும்; அருளிற் சேரா ஆன்மா அருளோடுங் கூடி அசத்தை அறியவேண்டுவதில்லை. அது ஏனென்னில், ஆன்மா அருளோடுங் கூடின இடம் முத்திக்கு ஏதுவாகையால் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறியவேண்டுவதில்லை யாகையாலென அறிக. அன்றியும்; ஒவ்விரு வகையதென்னில் இங்ஙனஞ் சொல்லிவந்த ஒழுங்கிலே பதி பசு பாசம் மூன்றினுள்ளும் ஒவ்வொன்றாக அறியுமென்றும் இவ்விரண்டாக அறியுமென்றுஞ் சொல்லிவந்த வகையில் ஒழிந்துள்ள அருளும் இந்திரியங்களுங்கூடி அசத்தாகிய பிரபஞ்சத்தை அறியு மென்னில் அப்படி யறியாது. அதுவேனென்னில் ; ஒளியிருள் ஒருங்குறாவே ஒளியாகிய ஞானமும் இருளாகிய அஞ்ஞானமும் ஓரிடத்திற்கூடி நில்லாதாகையால்.
என்னவே சிவன் தோய்வற நின்றுணர்த்த ஆன்மா பிரபஞ்சத்தோடுங் கூடி அறியுமென்பது கருத்து. இதற்கு பி ம் இந்நூலிலே சூசூதனக்கென அறிவி லாதான் தானிவை அறிந்து சாரான், தனக்கென அறிவி லாத வாயில்தான் அறியா சாரத், தனக்கென அறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன், தனக்கென அறியா னால்இச் சகலமும் நுகருந் தானே” (64) எது கண்டுகொள்க. உதாரணம் : இந்தச் சமயிகள் ஆறுபேருடை மதத்துக்கும் மறுப்புக்கும் உண்டான பிரமாணங்கள் சங்கற்ப நிராகரணத்தில் காட்டுதும். அவை வருமாறு : இச்செய்யுளின் முதற் பதத்திலே அசத்தாகிய பிரபஞ்சத்தை உயிரறியுமென்று ஈஸ்வர அவிகாரவாதி சொன்னதற்கு பி ம் “பஃறுளைக் கடத்தி னுள்விளக் கேய்ப்ப அறிவுள தாகும் உருவுறும் உயிர்கள் கண்ணா லோசையுங் கரணமுங் கருத வொண்ணா தென்னும் உணர்வுடை மையினால் அவ்வவ புலன்கட் கவ்வவ பொறிகள் செவ்விதின் நிறுவிச் சேர்ந்தவை நுகரும்” (15 .1 16) எது கண்டுகொள்க. அசத்தை உயிரறியாதென்று அவனை மறுத்ததற்கு பி ம் “அவ்வவ புலன் கட்கவ்வவ பொறிகளைச் செவ்விதின் நிறுவலின் அறிவெனச் செப்பினை அறிவி லாமைகண் டனம்அணை புலற்குப் பொறிகள் ஏவலின் அறிவொடு பொருந்தில் கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டும்” (16. 8 12) எ து கண்டுகொள்க. இனி, அசத்தாகிய பிரபஞ்சத்தைச் சிவனறிவனென்று இரண்டாவது பரிணாமவாதி சொன்னதற்கு பி ம் “அறிவோன் தானும் அறிவிப் போனும் அறிவாய் அறிகின் றோனும் அறிவுறு மெய்ப்பொருள் தானும் வியந்திது வெனப்படும் அப்பொருள் யாவும் அவனே என்றும்” (17. 28 31) எது கண்டுகொள்க. இனி, அசத்தைச் சிவனுக்கு அறியவேண்டுவ தில்லையென்று அவனை மறுத்ததற்கு பி ம் “தனக்கெனில் அஃதும் இசைப்பதொன் றன்றே தன்போல் அறிஞருந் தலைவரும் இலரால் மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே” (17. 13 15) எது கண்டுகொள்க. இனி, அசத்தாகிய பிரபஞ்சத்தை இந்திரியங்கள் அறியுமென்று மூன்றாவது சங்கிராந்தவாதி சொன்னதற்கு பி ம் “பூட்டைப் பலவகை உறுப்பும் இலகிய தொழில்போல் ஐம்பொறி புலன்கள் இன்புறு மன்றே” (13. 5 7) எது கண்டுகொள்க. அப்படி இந்திரியங்களாற் பிரபஞ்சத்தை அறியப்படாதென்று அவனை மறுத்ததற்கு பி ம் “புலன்ஐம் பொறியில் நிலவிடும் என்றனை அஞ்சும் ஒருகால் துஞ்சா தறிதற் கழிவென்” (14. 12 14) எம், “இதுவே யல்லது கதுமென இருசெவி இருகூற் றொருகால் தெரியாத் தன்மைவந் தெய்தும் மனாதியும் மெய்யிற் செயலுந் தனக்கிலை யொருவர்க் கெனத்தெளி கிலையே” (14.18 21) எம் கண்டுகொள்க. இனி, அசத்தாகிய பிரபஞ்சத்தை ஆன்மாவும் இந்திரியங்களுங் கூடி அறியுமென்று நாலாவது சிவசமவாதி சொன்னதற்கு பி ம் “பாசம் ஐம்புலன் தேசுற வுணர்த்த்தப் பசுத்தனி ஞானம் பொசித்திடு மன்றே” (11.13 4) எது கண்டுகொள்க. அப்படி அவை இரண்டுங் கூடினாலும் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறியமாட்டாதென்று அவனை மறுத்ததற்கு பி ம் “அந்நியம் அறியா மன்னுயிர் பொறிபுலன் தானோ அறியா” (12. 78) எது கண்டுகொள்க. இனி, அசத்தாகிய பிரபஞ்சத்தை அருளும் ஆன்மாவுங் கூடி அறியுமென்று ஐந்தாவது ஈஸ்வர ஐக்கியவாதி சொன்னதற்கு பி ம் “உலகத் தாயவன் உயிர்க்கு மாயையின் அருளால் இருவினைத் தகையின் உருவினைத் தருமால் கருமுகில் அடர இரிதரு கதிர்போன் றறிவாம் உயிரிற் பிறியா தேயும்” (5. 48) எது கண்டுகொள்க. அப்படி அருளும் ஆன்மாவுங் கூடின அவதரந்தானே முத்தியா மென்று அவனை மறுத்ததற்கு பி ம் “அறிவிற் கறிவு செறியவேண் டின்றே உண்மையில் இருமையும் ஒளியே எனில்ஒரு தன்மை யாகமுன் சாற்றின ரிலரே” (6. 25 27) எது கண்டுகொள்க. இனி, அசத்தாகிய பிரபஞ்சத்தை அருளும் இந்திரியங்களுங்கூடி அறியுமென்று ஆறாவது சைவர் சொன்னதற்கு பி ம் “அண்ணல் கலைமுத லாக நிலவிய கருவிகள் விளக்கென உதவுந் துளக்கறப் பொருந்தி” (9. 2 4) எது கண்டுகொள்க. அப்படியல்ல இந்திரியங்கள் ஆன்மாவோடு சம்பந்தமொழியச் சிவனோடு சம்பந்த மில்லையென்று அவரை மறுத்ததற்கு பி ம் சூசூமலம்இருள் இறையொளி தான்அமர் விளக்கில் தகுமருட் கலாதிகள் ஈனமில் இவனிடத் தெவ்வா றிசைந்தன” (20.8 10) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, அசத்தாகிய பிரபஞ்சத்தை உயிர் அறியுமென்ற ஈஸ்வர அவிகாரவாதியையும் சிவமறியுமென்ற பரிணாம வாதியையும் இந்திரியங்கள் அறியுமென்ற சங்கிராந்தவாதியையும் ஆன்மாவும் இந்திரியங்களுங்கூடி அறியுமென்ற சிவசமவாதியையும் ஆன்மாவும் அருளுங்கூடி அறியுமென்ற ஈஸ்வர ஐக்கியவாதியையும் அருளும் இந்திரியங்களுங்கூடி அறியுமென்ற சைவரையும் மறுத்த முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் பிரபஞ்ச காரியப்பட்டு நிற்கிற ஆன்மாவை முற்கூறிய விருத்தங்களில் அறிவென்ற சமயிகளையும் மறுத்தீர், அறிவல்ல என்ற சமயிகளையும் மறுத்தீர், பின்னை இதனை ஏதென்று சொல்லப்படும், சத்தாகிய அறிவனென்று சொல்லப்படுமோ அசத்தாகிய அறியாதவனென்று சொல்லப்படுமோ என்று வினவின மாணவகனை நோக்கி அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 6

சத்திது வென்ற சத்துத் தானறி யாத சத்தைச்
சத்தறிந் தகல வேண்டா அசத்திது சத்தி தென்றோர்
சத்திருள் ஒளிய லாக்கண் தன்மைய தாம்அ சத்தைச்
சத்துடன் நின்று நீக்குந் தன்மையாற் சதசத் தாமே.

சத்தசத் தறியா தம்மிலவ் விரண்டையும்
உய்த்தறி வதுசத சத்தென் றுரைத்தது.

பொழிப்புரை :

சத்திதுவென்று அசத்துத் தானறியாது சத்தாகிய சிவத்தை இது சிவமென்று அசத்தாகிய பாசங்கள் அறியமாட்டாது ; அசத்தைச் சத்தறிந் தகலவேண்டா அசத்தாகிய பாசங்கள் சிவத்தைப் பொருந்தாதபடியாலே அவையிற்றைச் சத்தாகிய சிவம் இது பொல்லாதென்றறிந்து நீங்க வேண்டுவதில்லை. ஆகையால் ; அசத்திது சத்திதென்றோர் சத்து அசத்தாகிய பாசத்தோடு கூடின பொழுது அந்தப் பாசந் தானாய் நின்றறிந்தும் சத்தாகிய சிவத்தோடுங் கூடினபொழுது அந்தச் சிவந்தானாய் நின்றறிந்தும், இங்ஙனம் இவையிரண்டுடோடுங் கூடி அறிந்து வருகிற ஆன்மாவும் அறியுஞ் சத்தாம். அதென்போல என்னில்; இருளொளியலாக் கண்தன்மைய தாம் இருளோடுங்கூடி அந்த இருள்தானாய் நின்று விழித்தும் ஒளியோடுங்கூடி அந்த ஒளி தானாய்நின்று விழித்தும் நின்றகண் அவ்விருளும் ஒளியும் அல்லாது நின்ற தன்மைபோல ஆன்மாவும் அந்தச் சத்தும் இந்த அசத்துமன்றித் தனித்தொரு முதலாய் நிற்கும். ஆனால் இந்த ஆன்மாவைச் சத்தென்று சொல்லலாமோ அசத்தென்று சொல்லாமோ என்னில் ; அசத்தைச் சத்துடன் நின்று நீக்குந் தன்மையாற் சதசத் தாமே முன்பு கூடிநின்ற பாசங்களைச் சிவத்தோடுங்கூடி நின்று நீக்கும் முறைமையாலே ஆன்மாவுக்குச் சதசத்தன் என்கிறதே இயல்பாம். என்னவே அறிவித்தால் அறிவனென்பது கருத்து.
சத்தாகிய சிவத்தை அசத்தாகிய பாசம் அறியாதென்றது எங்ஙனே யென்னில் உடலும் உயிருங் கூடியிருந்து சீவிக்கச் செய்தேயும் உயிரை உடலறியா திருந்தாற்போலவென அறிக. அசத்தாகிய பாசத்தைச் சத்தாகிய சிவனறிந்து அகல வேண்டா என்றது இந்திரசாலங் காட்டுமவனை அது பிரமிப்பிக்க மாட்டாதாற்போலப் பாசங்கள் சடமானபடியாலே சிவனை மறைக்கமாட்டாதாகையால் அவனுக்கு இதையறிந்து அகல வேண்டா என்றதென அறிக. ஆன்மாவை இருளும் ஒளியுமல்லாத கண்ணின் தன்மைபோல என்றது தானாக அறிகிறவனுமல்ல அறிவித்தால் அறியாமலிருக்கிறவனுமல்ல என்றதென அறிக. சதசத்தென்றது சிவனறிவித்தால் ஆன்மா அறிவனென்றதென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஅறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும், அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும், அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே, அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே” (5.3) எது கண்டகொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மா அறியும் பகுதிக்கு உரியவனோ அறியாப் பகுதிக்கு உரியவனோ என்று வினவின மாணாக்கனை நோக்கி இவன் தானாக அறிகிறவனுமல்ல சிவன் அறிவிக்க அறியாம லிருக்கிறவனுமல்ல ஒளியோடுகூடிக் கண்ட கண்போல அருளோடுங்கூடி அறியுமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி ஆன்மா இருளும் ஒளியுமல்லாத கண்ணினது தன்மை போலே இருக்குமென்ற திருஷ்டாந்தத்தினால் விளக்கு காட்டக் கண் கண்டது கொண்டே சிவனறிவு கொடுத்தால் அறிகிறதொழியத் தனித்தறிவில்லையென்ற பரிணாமவாதியை மறுத்து, ஆன்மாவுக்குச் சிவனறிவிக்க அறிந்தாலுஞ் சிற்றறிவுண்டென்னும் முறைமையை மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 7

கண்ணொளி விளக்க ளித்துக் காட்டிடு மென்னின் முன்னம்
கண்ணொளி ஒன்று மின்றாம் விளக்கொளி கலந்த வற்றைக்
கண்ணொளி அகல நின்றே கண்டிடும் வேறு காணாக்
கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே.

அற்றமி லுயிர்க்கறி விலையெனல் அடாது
சிற்றறி வென்றுமுண் டென்று செப்பியது.

பொழிப்புரை :

கண்ணொளி விளக்களித்துக் காட்டிடு மென்னில் கண்ணினது பிரகாசத்தையும் விளக்கு கொடுத்துக் காட்டுமென்று நீ சொல்லில்; முன்னங் கண்ணொளி யொன்று மின்றாம் விளக்கு காட்டுவதற்கு முன்பு கண்ணுக்குப் பிரகாசமொன்று மில்லையாக வேண்டும். அப்படி விளக்கு வருவதற்குமுன் கண்ணுக்கு ஒளியுண்டோ என்று நீ கேட்கில்; விளக்கொளி கலந்தவற்றைக் கண்ணொளி அகல நின்றே கண்டிடும் விளக்கின் பிரகாசங் கூடிக் காட்டுகிற பதார்த்தங்களைக் கண்ணின் பிரகாசமானது விளக்கின் பிரகாசத்தோடுங் கூடாமல் இருளிலே நின்று காண்கையால் கண்ணுக்குத் தனியே ஒளியுண்டென்று அறிவாயாக. அப்படி இருளுக்குள்ளே நின்று கண் கண்டதாகிலும்; வேறு காணா காண்கிற பதார்த்தங்களை விளக்கொளியோடுங் கூடி நின்று காண்கிறதொழியத் தனித்துத் காணமாட்டாதென்று நீ சொல்லுகிறாயாமாகில் அப்படி விளக்கோடு கூடிக் கண் கண்டதாமாகிலும்; கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே கண்ணினுடைய பிரகாசம் விளக்கினுடைய பிரகாசத்தோடுங் கூடியே நின்று சீவித்ததாகிலும் கருத்து வேறுபாடுண்டு. அஃதெங்ஙனே என்னில், விளக்கு எல்லாவற்றையுஞ் சுட்டறநின்று காட்டும்; கண் எல்லாவற்றையுஞ் சுட்டிநின்று காணும் ; அதுபோலச் சிவனுஞ் சுட்டற நின்று அறிவிப்பன் ; ஆன்மாவும் சுட்டிநின்று அறியும். ஆகையால் ஆன்மாவுக்குஞ் சிவனுக்கும் அறிவொன்றல்ல. அன்றியும், விளக்கு கண்ணுக்கொளியைக் கொடுத்துக் காட்டுமேயானால் விழிகண் குருடனுக்கும் விளக்கு காட்டவேணும்; அதுவில்லாதது கொண்டே கண்ணுக்கு விளக்கு ஒளியைச் கொடுத்துக் காட்டுமென்கிறது சித்தாந்த விரோதமென அறிக.
உதாரணம் : கண்ணுக்கு விளக்கு ஒளியைக் காட்டினாற் போல முன்னே சிற்றறிவுதானு மில்லாத ஆன்மாவுக்குச் சிவன் அறிவைக் கொடுத்து அறிவிப்பனென்று பரிணாமவாதி சொன்னதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “கண்ணின தொளிஅக் கண்ணின தெனில்அது திண்ணிய இருளிற் செறிபொருள் தெரித்தலும் இன்மை மின்மினி யெனஇரு கண்மணித் தன்மை தானுந் தாவில ததனால் கண்ணின துருவும் அதிற்கதிர் ஒளியும் நண்ணருஞ் சத்தி சத்தர்கள் நடிப்பே” (17. 14 19) எது கண்டு கொள்க. அப்படியே சிவனறிவிக்க ஆன்மா அறிந்தாலும் அநாதியே ஆன்மாவுக்குச் சிற்றறிவுண்டென்று அவனை மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூகண்ணின துருவும் அதிற்கதிர் ஒளியும் நண்ணருஞ் சத்தின் நாடகம் எனில்அதற் கேதுவும் பயனும் ஒத வேண்டும் நின்மொழி விரோதமும் பாட பேதம் விரோதம் நீடுல கியற்கையும் தன்மசா த்திரமுஞ் சகலமும் என்செயும்” (18. 70 74) எம், “அறிவொன் றில்லோர்க் கிறையருள் உதவுதல் பிறிவறி வரியச் செறிஇருள் இடத்தோர் அந்தகர்க் காண வந்தோர் எம்மை நீவிரும் காண வேணும் என்றாங் கெடுத்தொரு தீபங் கொடுத்ததை ஒக்கும் இச்செயற் கிறைவன் கொச்சையன் அன்றே” (18. 115 120) எம் கண்டுகொள்க. இனி, கருத்தொன்றன்றே எகு சிவனுக்கும் ஆன்மாவுக்கும் ஓரறிவல்ல என்றதற்கு பி ம் சித்தியாரில் சூசூசிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் தவன்றான், பவங்கெடு புத்தி முத்தி பண்ணுஞ்சித் திவற்றிற் படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான், அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும் அணைந்தாலும் ஒன்றாகா தநந்நியமா யிருக்கும், இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி இதுவசித்தென் றிடில்அவனுக் கிவனும்அசித் தாமே” (11. 11) எ து கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது கண்ணுக்கு விளக்கு காட்டக் கண்கண்டது கொண்டே ஆன்மாவுக்குச் சிற்றறிவு தானு மில்லையென்ற பரிணாமவாதியை மறுத்து விளக்கோடு கூடிக் கண் கண்டதாமாகினும் விளக்கினொளி கண்ணில் தாக்காமல் இருளிலே நின்று காண்கையால் ஆன்மாவுக்குச் சிவனறிவித்தாலும் அநாதியே சிற்றறிவுண் டென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சிற்றறிவனென்று சொல்லி நாட்டப்பட்ட இந்த ஆன்மா ஒரு சரீரத்தோடுங் கூடிநின்று சீவிக்குமிடத்து ஒரு தானத்திலே நின்றறியுமென்றும், சரீரமெங்கும் நிறைந்தறியுமென்றும், எங்கும் பூரணமாய் நின்றறியுமென்றும், தானே விளங்கின அறிவாய் நிற்குமென்றும், அறியாமையா யிருக்குமென்றும், இங்ஙனம் பலவகைகளாகச் சில சமயிகளா யுள்ளவர்கள் சொல்லும் அத்தங்களின் உண்மையாகச் சொல்லுவதேதென்று வினவின மாணவகனை நோக்கி இவைகளெல்லாஞ் சித்தாந்த வழக்கினை அறிந்த நல்லோர்கள் சொல்லார்களென்று மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 8

ஒரிடத் திருத்தல் மாயா உருநிறைந் திடுதல் ஒன்றாம்
பேரிடத் துறைதல் தானே பிறங்கறி வாகி நிற்றல்
சோர்வுடைச் சடநி கழ்த்தல் எனுமிவை சொல்லார் நல்லோர்
ஓர்விடத் துணரும் உண்மை ஒளிதரும் உபலம் போலும்.

தொடுத்தஐ வகையின் தொல்லுயிர்த் தன்மை
அடுத்தத னியல்பியல் பாகு மென்றது.

பொழிப்புரை :

ஒரிடத்திருத்தல் ஆன்மா ஓருடலிலேநின்று அறியு மிடத்து ஒரு தானத்திலேநின்று அறியுமென்றும்; மாயாஉரு நிறைந்திடுதல் இந்த மாயா தேகமெங்கும் நிறைந்தறியுமென்றும்; ஒன்றாம் பேரிடத்துறைதல் எங்கும் பூரணமாய் நின்றறியுமென்றும் ; தானே பிறங்கறிவாகி நிற்றல் ஒருவர் அறிவியாமல் தானே விளக்க முடைய அறிவாயிருக்குமென்றும்; சோர்வுடைச் சடநிகழ்த்தல் குற்றத்தையுடைய அசேதனமாயிருக்கு மென்றும் ; எனுமிவை சொல்லார் நல்லோர் என்றிங்ஙனஞ் சொல்லார் நல்லோர் என்றிங்ஙனஞ் சொல்லப்பட்ட அர்த்தங்களைச் சித்தாந்த வழக்கை அறிந்த பெரியோர்கள் சொல்லார்கள். பின்னை எங்ஙனேயென்னில்; ஓர்விடத்து உணரும் உண்மை ஒளிதரும் உபலம்போலும் விசாரிக்குமிடத்து ஆன்மா ஒரு சரீரத்திலே நின்று அறிகிற முறைமை பிரகாசத்தினையுடைய படிகம்போலக் கூடினதன் தன்மையாய் நிற்கும்.
ஓரிடத்திருத்தல் என்றதை நல்லோர் சொல்லாரென்று மறுத்தது ஏதென்னில் அப்படி ஆன்மா ஒரு தானத்திலே நின்றறியு மானால் உருப்பட் டழிவதுஞ்செய்யும், சரீரமெங்கும் பரிசித்தாலும் அறியமாட்டாதென அறிக. என்று இங்ஙனம் மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூஉடலினின் ஏகதேசி உயிரெனின் உருவாய் மாயும், படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில், சுடர் தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிட அறிவுண் டாகும், அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டு மன்றே” (4. 16) எது கண்டு கொள்க. ஆகையால் இப்படி இல்லாததுகொண்டே ஏகதேசஞ் சொல்ல வழக்கில்லையென அறிக.
இனி இரண்டாவது, மாயாவுரு நிறைந்திடுதல் என்றதை நல்லோர் சொல்லாரென்று மறுத்ததேதென்னில் அப்படி ஆன்மா ஒரு சரீரமெங்கும் நிறைந்துநின்று அறியுமேயாமாகிற் கீழாலவத்தைப் பட்டு மூலாதாரத்திலே ஒடுங்கிக் கிடக்கவும் வழக்கில்லை. அன்றியுஞ் சத்தாதி விடயங்களை அறியுமிடத்துப் புலன்களெல்லாம் ஒக்கச் சீவிக்கவும் வேணும். அன்றியுஞ் சரீரத்திலே சில குறைவுபட்டால் அதற்குத் தக்கது ஆன்மாவிலுஞ் சில குறைவுபடவும் வேணும். என்றிங்ஙனம் மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூஉருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின், மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும், பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண், வருமுடல் குறைக்க வொக்கக் குறைந்து பின் மாயு மன்றே” (4.17) எது கண்டுகொள்க. ஆகையால் அப்படியில்லாதது கொண்டே சரீரமெங்கும் நிறைந்துநின்று அறிய வழக்கில்லையென அறிக.
இனி மூன்றாவது, ஒன்றாம் பேரிடத் துறைதலென்றதை நல்லோர் சொல்லாரென்று மறுத்ததேன்னில் அப்படி ஆன்மா எங்கும் பூரணமாய் நின்றறியுமேயானால் அவத்தைப்படவும் வழக்கில்லை, ஜனன மரணப்படவும் வழக்கில்லை. அன்றியுஞ் சத்தாதி விடயங்களைக் கொள்ளுமிடத்து ஒவ்வொரு புலன்களாகச் சீவிக்கவும் வழக்கில்லையாகவும் வேண்டும். என்றிங்ஙனம் மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூஎங்குந்தான் வியாபி யாய்நின் றுணருமிவ் வான்மா வென்னில், தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும், பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும், இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும்” (4.18) எது கண்டுகொள்க. ஆகையால், அப்படி யில்லாதது கொண்டே எங்கும் பூரணமாய் நின்றறியுமென்பது வழக்கில்லை யென அறிக.
இனி நாலாவது, தானே பிறங்கறிவாகி நிற்றலென்றதை நல்லோர் சொல்லாரென்று மறுத்ததேதென்னில் அப்படி ஆன்மா தானே அறியுமேயானால் சத்தாதி விடயங்களைக் கொள்ளுமிடத்துப் புலன்களைக்கொண்டு அறியவேண்டுவதில்லை. அன்றியும் அந்தக்கரணங்களைக் கொண்டும் அறியவேண்டுவதில்லை. என்றிங்ஙனம் மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூஅறிவிச்சை செயல்க ளெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல், குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி, நெறியுற்று நிற்கு மென்னில் நிகழ்புலன் கரண மெல்லாம், செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமோ சீவனார்க்கே” (4.6) எது கண்டுகொள்க. ஆகையால் அப்படி இல்லாதது கொண்டே ஆன்மா தானே அறிவனென்பது வழக்கில்லையென அறிக.
இனி ஐந்தாவது, சோர்வுடைச் சட நிகழ்த்த லென்றதை நல்லோர் சொல்லாரென்று மறுத்ததேதென்னில் அப்படி ஆன்மா அறியாமையாய் இருக்குமேயானால் ஒருவர் அறிவித்தாலும் அறிய வழக்கில்லை. அன்றியும் உபாதியை நீங்கி முத்தியைப் பெற்று அநுபவிக்கவும் வழக்கில்லையாம், என்றிங்ஙனம் மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் சூசூஅசித்தெனில் உணரா தான்மா அசித்துச்சித் தாகுமென்னின், அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை, அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய் நில்லா, தசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம்” (4.14) என்பதனுள் “அசித்தெனல் உணரா தான்மா” எது கண்டு கொள்க. ஆகையால் அப்படி இல்லாதது கொண்டே ஆன்மாவை அறிவல்ல என்னவும் வழக்கில்லையென அறிக. ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட வகைகள் ஐந்தினையும் மறுத்து ஓரிடத் துணருமுண்மை ஒளிதரு முபலம்போலும் எகு ஆன்மா வானது சுத்தபடிகம்போலக் கூடினதன் தன்மையா யிருக்குமென்று பொருள்படுத்தினதற்கு அநுபவமேதென்னில், சுத்தபடிகமானது இருள்வந்து மேலிட்ட அவதரத்து அந்த இருளோடுங்கூடி இருளின் நிறமாயிருந்தும் பஞ்ச வன்னங்களோடு கூடின அவதரத்து அந்தப்பஞ்ச வன்னங்களின் நிறமாயிருந்தும் ஒளிமேலிட்ட பொழுது அந்த ஒளியோடுங்கூடி ஒளிதானாயிருந்தும் வரும். அதுபோல ஆன்மாவும் ஆணவமலமேலிட்டு மறைத்த அவதரத்து அந்த மலத்தோடுங் கூடி அறியாமையாய்க் கிடந்தும், அப்படிக் கிடக்கச் செய்தே கலையாதி தத்துவங்களோடுங்கூடிப் பிரபஞ்ச காரியப்பட்டுச் சகலனாகியும், இவையிரண்டு பகுதியும் நீங்குவதாக அருள்மேலிட்ட அவதரத்து அந்த அருளோடுங்கூடி அறிவாய்நின்றும், இங்ஙனங் கேவலனாகியுஞ் சகலனாகியுஞ் சுத்தனாகியுங் கூடினதன் தன்மையாய் நிற்கையாலே படிகத்தை உவமை சொன்னதென அறிக. இங்ஙனஞ் சொல்லப்பட்ட அவத்தை மூன்றுக்கும் பி ம் சித்தியாரில் சூசூகேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை ஆன்மா, மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய்ப் பொறிக ளெல்லாங், காவலன் கொடுத்த போதுசகலனா மலங்க ளெல்லாம், ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே” (4.37) எது கண்டுகொள்க. இதுவன்றியுஞ் சகலம் ஒன்றையும்பற்றி ஆன்மா படிகம்போலக் கூடினதன் தன்மைக்குப் பஞ்ச இந்திரியங்களோடுங் கூடிநிற்பதே சொல்லலாம். அதுவன்றியும் மூன்றவத்தைக்கும் அநுபவங் காட்டிச் சொன்னது படிகம் முற்றுவமையாகையாலென அறிக. இப்படிக் கூடினதன் தன்மையாயுள்ள ஆன்மாவினுண்மை நிலைமையும் ஆசாரியன் காட்டக் கண்டு அதை அறிந்து கொள்ளுக.
இதனாற் சொல்லியது, ஆன்மா ஒரு சரீரத்தோடுங் கூடிநின்று சீவிக்குமிடத்து நிற்குமுறைமை எப்படியென்று வினவின மாணவகனை நோக்கி ஒரு தானத்திலே நின்றறியுமென்றும், சரீரமெங்கும் நிறைந்து நின்று அறியுமென்றும், எங்கும் பூரணமாய் நின்று அறியு மென்றும், விளங்கின அறிவாயிருக்குமென்றும் அறியாமையாயிருக்கு மென்றும், இங்ஙனம் பலவகையாகச் சொல்லப்பட்ட சமயிகள் கருத்துக்களை மறுத்து, ஆன்மா இவையிற்றோடுங்கூடி அறியுமிடத்துப் படிகமானது பஞ்சவன்னங்களோடுங்கூடி அதுவதுவாய் நின்று காரியப்படுவதுபோல ஆன்மாவுங் கூடினதன் தன்மையாய் நின்று சீவிக்குமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

எண்ணஒன் றிலாத தீதம் எய்திய துரியத் தொன்று
நண்ணிடும் சுழுத்தி தன்னின் நயந்துள தொன்று பின்னும்
அண்ணிடும் கனவு தன்னில் ஆறேழாம் சாக்கி ரத்தின்
கண்ணுறும் அஞ்சா றாய கருவிகள் காணுந் தானே.

உடலிடை யுயிருறு மோரைந் தவத்தையி
னடையுறு கருவியி னடைவினை வகுத்தது.

பொழிப்புரை :

எண்ண ஒன்றிலா ததீதம் ஆன்மாவானது ஆணவ மல மறைப்பாகக் கீழாலவத்தைப்பட்டுச் செல்லும் அவதரத்துப் பிரகிருதி தத்துவம் உடம்பாகச்சென்று மூலாதாரமாகிய அதீதத் தானத்தில் சென்றொடுங்கும் அவதரத்து அவ்விடத்துச் சீவிக்குங் கருவிகள் ஒன்றுமின்றி அந்தப் பிரகிருதியென்னத் தானென்னப் பிறிவற்றுக் கிடந்து அழுந்துமதே யதீதமாம். என்னவே, அழுந்துந் தொழில் பிரகிருதிக்கு உடையதாகையால் அதீதத்திற் பிரகிருதி உண்டென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. அன்றியும், இதற்கு மேல் இச்செய்யுளுக் கெழுதுகிற நுட்பத்திலே ஏதுக்களும் பிரமாணங்களுங் காட்டி எழுதுகிற வகையினுங் கண்டுகொள்க; எய்திய துரியத்தொன்று அந்த மூலாதாரத்துக்கு மேலாகப் பொருந்தப் பட்ட நாபியாகிய துரியத்தானத்திலே நிற்குங் கருவி பிராணவாயு வொன்று. பிராணவாயு நிற்கையாவது ஆன்மா துரியத்திலே பிரகிருதி தத்துவம் உடம்பாகப் பிராணவாயுவோடுங் கூடி நிற்கும் அவதரத்து அந்தத் துரியத்தைவிட்டு அதீதத்திலே பிரகிருதி தத்துவம் உடம்பாகச் செல்லுமிடத்து அந்தத் துரியத்திலே பிராணவாயு நின்று விடுகையால் அப்படிச் சொன்னதென அறிக; நண்ணிடுஞ் சுழுத்தி தன்னின் நயந்துள தொன்று அந்தத் துரியத்துக்கு மேலாகப் பொருந்தப்பட்ட இதயமாகிய சுழுத்தித் தானத்திலே விருப்பத்துடனே நிற்குங் கருவி சித்தமொன்று. சித்தம் நிற்கையாவது ஆன்மா அந்தச் சுழுத்தியிலே பிரகிருதிதத்துவம் உடம்பாகச் சித்தத்தோடும் பிராணவாயுவோடுங்கூடி நிற்கும் அவதரத்து அந்தச் சுழுத்தியைவிட்டுப் பிரகிருதி தத்துவம் உடம்பாகப் பிராணவாயுவோடுங்கூடித் துரியத்திற் செல்லுமிடத்து அந்தச் சுழுத்தியிலே சித்தமொன்று நின்று விடுகையால் அப்படிச் சொன்னதென அறிக ; அண்ணிடும் கனவு தன்னில் பின்னுமா றேழாம் அந்தச் சுழுத்திக்கு மேலாக அடுத்த கண்டமாகிய சொப்பனத்தானத்திலே (பின்னுமென்ற விதப்பால் முற்கூறிய பிராணவாயுவுக்குப் பின்னுள்ள ஒழிந்த வாயுக்களொன்பதும்) ஆறேழாகிய சத்தாதிகள் ஐந்தும் வசனாதிகள் ஐந்தும் அந்தக் கரணங்களிற் சித்தம் நீங்கலாக மனம் புத்தி ஆங்காரமும் ஆகப் பதின்மூன்றும், ஆக முன்னுங்கூட்டி இருபத்திரண்டு நிற்கும். அன்றியும், இந்தப் பதத்துக்குப் பின்னுமென்றது வாயுக்கள் ஒன்பதுக்குப் பொருள்படாதென்று சூபின்னு மண்ணிடுங் கனவிலாறே ழொன்பதா’ மென்று பாடமோதி இருபத்திரண்டு கருவி சொப்பனத் தானத்திலே நிற்குமென்று தொகைப்படுத்திப் பொருளுரைப்பாருமுளர். இந்தப் பொருளுக்கேற்க அந்தப்பாடத்தைக் கூட்டிக்கொள்க. சொப்பனத்தானத்தில் நிற்குங் கருவி இரு பத்திரண்டாவது ஏதென்னில், ஆன்மா அந்தக் கண்டத்தானத்திலே வாயுக்கள் பத்தும் வசனாதி ஐந்தம் சத்தாதி ஐந்தும் அந்தக் கரணங்கள் நாலும் ஆக இருபத்து நாலோடுங்கூடிய பிரகிருதி தத்துவம் உடம்பாக நிற்குமிடத்து அந்தக் கண்டமாகிய சொப்பனத் தானத்தை விட்டுப் பிரகிருதி தத்துவம் உடம்பாகப் பிராணவாயுவோடுஞ் சித்தத்தோடுங்கூடி இதயமாகிய சுழுத்தித் தானத்திலே செல்லும் அவதரத்து முற்கூறிய கருவிகள் இருபத்திரண்டுஞ் சொப்பனத் தானத்திலே நின்று விடுகையால் அப்படிச் சொன்னதென அறிக ; சாக்கிரத்தின் கண்ணுறும் அஞ்சாறாய கருவிகள் கண்டத்துக்கு மேலாகிய இலாடத்தானமாகிய சாக்கிரத்தானத்திலே பூதங்கள் ஐந்தின் வழித்தாகிய ஞானேந்திரியமாகிய சோத்திராதிகள் ஐந்துங் கன்மேந்திரிய மாகிய வாக்காதிகள் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகளுஞ் சாக்கிரத்திலே நிற்கும். பத்துக் கருவிகள் நிற்றலாவது ஆன்மா தத்துவம் முப்பத்தாறோடுங்கூடி விசுவ வியாத்தனாய் நிற்கச்செய்தே அதிலே அறி கருவிகளாகிய சிவ தத்துவம் ஐந்தும் வித்தியா தத்துவமேழிற் பிரகிருதிதத்துவம் நீங்கலாகக்கலாதிகளாறும் ஆன்ம தத்துவம் இருபத்து நாலிற் பூதங்கள் ஐந்தும் ஆகப் பதினாறு நீங்கலாக நின்ற கருவி இருபதும் தொண்ணூற்றாறு வகையில் வாயுக்கள் பத்தும் வசானதி ஐந்தும் ஆக முப்பத்தைந்தோடுகூடி ஆன்மா ஒடச் சமைந்தோடுகிற தேர் இயற்றுவான் கைவிட்டு நின்றாற்போல அந்த இலாடத்தானத்திலே சாக்கிராவத்தைப்பட்டு நிற்கச்செய்தே, ஆன்மா அதனைவிட்டுச் சொப்பனத் தானத்திற் செல்லுமிடத்து வாயுக்கள் பத்தும் வசனாதி ஐந்துஞ் சத்தாதி ஐந்தும் அந்தக்கரணங்கள் நாலும் ஆக இருபத்து நாலோடுங்கூடிப் பிரகிருதி தத்துவம் உடம்பாகச் செல்லுகையால் இந்த இருபத்தைந்து நீங்கலாக மற்றுள்ள சோத்திராதி ஐந்தும் வாக்காதி ஐந்தும் அந்த இலாடத்தானத்திலே நின்றுவிடுகையால் அப்படிச் சொன்னதென அறிக; அஞ்சாறாய கருவிகள் பூதங்கள் ஐந்தின் வழித்தாகிய கருவிகளென்றதேதென்னில், ஆன்மா இந்திரியங்களைக்கொண்டு விடயங்களைக் கொள்ளுமிடத்துப் பூதங்களிடமாக நின்று கொள்ளுகையால் அப்படிச் சொன்னதென அறிக. காணுந் தானே ஆன்மா அவத்தைப்பட்டுச் செல்லும் அவதரத்து அந்தந்தத் தானங்கள் தோறும் அந்தந்தக் கருவிகளை விட்டுவிட்டுப் போம் முறைமையை இங்ஙனம் இப்படி அறியப்படும்.
இங்ஙனம் பொருள் கூறிவந்த வகையில், பின்னு மண்ணிடுங் கனவுதன்னி லாறேழாம் எகு பின்னுமென்றது வாயுக்கள் ஒன்பதுக்கும் பொருள்படாதென்று பின்னுமண்ணிடுங் கனவி லாறேழொன்பதாம் என்று பாடமோதுவாருமுளரென்றதற்கு வழியே தென்னில், இந்தச் செய்யுளுக்குக் கருத்து ஆன்மா அவத்தைப் பட்டுச் செல்லும் அவதரத்து அந்தந்தத் தானங்கள்தோறும் விட்டுவிட்டுப்போங் கருவிக்குத் தொகை சொல்லுகையால் சொப்பனத் தானத்தில் விட்டுப்போங் கருவி இருபத்திரண்டுக்குத் தொகை சொல்லுமிடத்துப் பின்னு மண்ணிடுங் கனவுதன்னி லாறேழாம் என்று பதின்மூன்றுக்குத் தொகைசொன்னதொழிய மற்றவொன்பதுக்குத் தொகைசொல்லாதபடியால் பின்னு மண்ணிடுங் கனவிலாறே ழொன்பதாம் என்று பாடமோதி இருபத்திரண்டென்று பொருள் கூறுகை கருத்தாகையால் அப்படிப் பாடமோதினதென அறிக. அப்படியானால், முன்னே பிராணவாயுவைச் சொல்லி வருகையாற் பின்னுமென்றது பிற்பட்ட வாயுக்களொன்பது மென்று பொருள் கூறுகைக்குத் தொகையாகாதோ என்னில், அப்படி முன்னே பிராணவாயுவென்றதும் வியாக்கியாநஞ் செய்தவர்கள் சொன்னதொழியப் பாடத்திற் சொல்லாததாகையால் அதுவும் பொருளல்ல என்பது கருத்தென அறிக. இங்ஙனம் பொருள் கூறி வந்தவகைக்கு உதாரணங்கள் வருமாறு : அஃதாவது, ஆன்மா அவத்தைப்பட்டுச் செல்லுமிடத்துச் சாக்கிரந்தொடங்கி அதீதம் அளவும் அந்தந்தத் தானங்கள் தோறுங் கூடிநிற்குங் கருவிகள் இன்னின்ன தென்று தொகை சொன்னதற்கு பி ம் திருமந்திரத்தில் “முப்பதோ டைந்தாய் முதல்விட்டங் கைஐந்தாய்ச், செப்பதின் மூன்றாய்த் திகழ்ந்திரண் டொன்றதா, யிப்பதி நின்ற வியல்பை அறிந்தவர், அப்பதி கொள்பவ ராய்ந்துகொள் ளீரே” (2143) எம், சித்தியாரில் “சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில் ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுனை மூன்று, நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி, நோக்கிய துரியா தீதம் நுவலின் மூலத்தி லொன்றே” (4.33) எம், மெய்ஞ்ஞானவிளக்கத்தில் “நனவு தனிற்கருவி முப்பத்தைந் தாகுங், கனவிருபத் தோரைந்தாங் காணில் முனிசுழுத்தி, மூன்றாகுங் காலை முழுந்துரிய மோரி ரண்டே, யூன்றுமதீ தந்தருமா னொன்று” எம் வருமேதுக்களைக் கண்டுகொள்க.
என்றிங்ஙனம் அவத்தைக்குக் கருவி முப்பத்தைந்தென்று சொல்லியிருக்கிற இதிலே முப்பத்துநாலு கருவியென்றும் ஒன்று ஆன்மா என்றுஞ் சில நூல்களிற் சொல்லுவா னேனென்னில், அப்படிச்சொன்னதும் பிரகிருதி தத்துவத்தை ஆன்மா என்று சொன்னதென அறிக. அதற்கு வழியேதென்னில், பிரகிருதி தத்துவம் மற்றுள்ள கருவிகளைப்போல ஆன்மாவை விட்டும் பற்றியும் வாராமற் கேவல சகலமிரண்டினும் உயிரும் உடம்பும்போலப் பிறிவற்று நிற்கையால் உடலுக்கிட்ட பெயர் உயிருக்கு நின்றாற்போலப் பிரகிருதி தத்துவத்தின்பெயர் ஆன்மாவுக்குச் சொல்லியும், விளக்குச் சுடரொளியுந் தகளியும் விளக்கென்று பெயர்பெற்றாற்போல ஆன்மாவின் பெயர் பிரகிருதி தத்துவத்திற்குச் சொல்லியும் வருகையால் இவ்விடத்துக்கும் ஆன்மாவின் பெயர் பிரகிருதி தத்துவத்துக்குஞ் சொன்னதென அறிக. அப்படி ஒன்றின் பெயர் ஒன்றிற்கு மாறி வருகைக்கு பி ம் சிவஞானபோதத்தின் மூன்றாஞ் சூத்திரத்தின் சூரணையில் “ஒடுங்கினவிடத் தின்பதுன்ப சீவனம் பிரகிருதிக்கின்மையின் ஒடுங்காவிடத் தின்பதுன்பம் சீவியாநிற்ப துளதாதலின் அதுவே யவ்வான்மாவாம்” என்றதனுள் “ஒடுங்கின விடத்தின்ப துன்ப சீவனம் பிரகிருதிக்கின்மையின்” என்பதைப் பிரகிருதி தத்துவத்தின் பேர் ஆன்மாவுக்கு வருமது கண்டுகொள்க. இனி, ஆன்மாவின் பெயர் பிரகிருதி தத்துவத்துக்கு வருமதற்கு பி ம் சித்தியாரில் இரண்டாஞ் சூத்திரத்தில் தத்துவத்தின் தொகை சொல்லுமிடத்துண்டாகிய விருத்தத்தில் “சுத்ததத் துவங்களென்று முன்னமே சொன்ன ஐந்தும், இத்தகை மையின் இயம்பும் இவைமுப்பத்தொன்று மாகத், தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து, சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில்” (2.69) ; இதிற் சித்தசித் தான்மா வொன்று மென்பதைக் கண்டுகொள்க. இதனையுஞ் சித்தசித் தான்மாவென்று ஆன்மாவின் பெயர் வருகையால் ஆன்மா என்பாருமுளர். அது வழக்கல்லவென அறிக. அதுவே யென்னில், தத்துவங்களுக்குத் தொகை சொல்லிச் செலவு சொல்லு மிடத்து மீளவுந் தத்துவங்களைச் சொல்லாமல் ஆன்மாவைச் சொல்லுகை வழக்கல்லா தபடியால் அதனைச் சொல்லவொண்ணாதென்ற தென அறிக. அன்றியும் சித்தசித் தான்மா என்றதைப் புருட தத்துவ மென்பாருமுளர். அது வழக்கல்லவென அறிக. அதுவே னென்னில், அதனைத் தத்துவ சமுகத்திற் றோன்றுங் கருவியென்று சூசூநிச்சயம் புருட னாகிப் பொதுமையி னிற்கு மன்றே” (சித்தியார் 2.56) எம், “ஐவகையா லுறுபயன்கள் நுகரவருங் கால மது புருடதத்துவம்” (சிவப்பிரகாசம் 41) எம் நூல்களிற் சொல்லி வருகையால் ஆன்மா தத்துவங்களோடுங் கூடிநின்று சகலனாகச் சீவிக்கு மவதரத்து உண்டாகுங் கருவியாகையாலும் பிரகிருதி தத்துவம்போல ஆன்மாவை விடப்படாமற் கேவல சகல மிரண்டினுங்கூடி நில்லாதாகையாலும் அதனை யாகாதென்றதென அறிக. அன்றியும் புருட தத்துவந்தன்னை ஆன்மா என்றாலும் ஆன்மாவின் பெயர் தத்துவத்துக்கும் வருமென்பது கண்டுகொள்க. என்றாலுஞ் சித்தசித் தான்மா என்றது பிரகிருதி தத்துவமே துணிபென அறிக. அப்படியானாலும் அவத்தைப்பட்டுச் செல்லும் அவதரத்து மற்றுள்ள தத்துவமுடம்பாகச் செல்லாதோ பிரகிருதி தத்துவம் வேணுமோ வென்னில், அப்படி மற்றுள்ள தத்துவம் உடம்பாகத் துரியமளவும் வந்து சென்றதாகிலுந் துரியத்திலே பிராணவாயு நின்றுவிடுகையால் துரியத்தைவிட்டு அதீதத்திலே செல்லுமிடத்து ஆன்மா வானது தனித்துச் செல்லாது. அஃதெப்படி யென்னில், சூசூஅங்கியானது தானுமொன்றை யணைந்துநின்று நிகழ்ந்திடும், பங்கியா துயிர்தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா” (சித்தியார், பரபக்கம் 52) என்று நூல்களிற் சொல்லி வருகையால் ஆன்மாவானது ஒன்றோடு கூடி நிற்பதொழியத் தனித்து நில்லாதாகையால் அவ்விடத்துக்குப் பிரகிருதி தத்துவம் உடம்பாகச் செல்லவேண்டுகையால் அது வேண்டுமென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. அப்படியானால் ஆன்மாவுக்கு ஆணவமலஞ் சகசமாய் நிற்கையால் அந்த ஆணவ மலந் தாரகமாகச் சென்றொடுங்காதோ பிரகிருதி தத்துவம் வேணுமோவென்னில், அந்த ஆணவமலமும் ஆன்மாவோடுங் கூடி நின்று மறைக்கிறதொழியத் தாரகமாகாதாகையால் அதனைச் சொல்ல வேண்டுவதில்லையென அறிக. ஆகையால் அவ்விடத்துக்குப் பிரகிருதி தத்துவம் உடம்பாகச்சென்று அதீதத்திலும் பிரகிரதி தத்துவமும் ஆன்மாவுங் கூடிக் கிடக்குமென்பதே வழக்கென அறிக. அப்படி அதீதத்தில் இரண்டுங்கூடிக் கிடக்குமேயானால் சித்தியாரில் அவத்தைக்குச் சொல்லுமிடத்து “படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில், கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னை, அடைதருந் தனியே யந்தப் புரத்தினில் அதுபோலான்மா, உடலினில் ஐந்த வத்தை உறுமுயிர் காவ லாக” (4.32) எம், இந்நூலினும் சூசூஅடையஞ்சவத்தைப் பெருகிய மலத்தாற் பேணி, உறுந்தனி அதீதம் உண்மை உயிர்க்கென உணர்த்து மன்றே” (52) எம் அதீதத்தி லொருமுதலாகச் சொல்லுவானேனென்னில் அப்படி ஒன்றென்றதும் பிரகிருதியையும் ஆன்மாவையுங் கூட்டியே ஒன்றென்றதென அறிக. அதற்கு வழியேதென்னில் ஓரான்மா ஓருடலோடுங்கூடி இருக்குமிடத்து உடலென்றும் உயிரென்றும் இரண்டும் முதலாயிருக்கச் செய்தேயும் அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் ஒன்றாய் நின்றாற்போல ஆன்மாவும் பிரகிருதியுந் தேகமுந் தேகியும்போலப்பிறிவற்று இரண்டுமுதலு மொன்றாய் நின்றதென அறிக. அப்படி ஆன்மாவைவிட்டுப் பிருகிருதி தத்துவம் நில்லாதென்றும் பிரகிருதி தத்துவத்தைவிட்டு ஆன்மா நில்லாதென்றுஞ் சொன்னதற்கு பிம் சித்தியாரில் “புருடன் பிரகிருதி பெற்றாற் போதஞ் சிறிதங் குண்டாகிக், குருடன் முதுகில் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி, இருள் தனிடத்தே இருந்தியங்கும்” (பரபக்கம் 262) எது கண்டுகொள்க. அப்படிப் புருடன் பிரகிருதி பெற்றாலென்பது கொண்டே பிறகு வந்து கூடினதாமே யென்னில், அப்படிச் சொன்னது அந்த அதீதந் தன்னிலே அந்தப் பிரகிருதியழுந்த அந்தப் பிரகிருதியுங் கழன்று மாயாகாரணத்திலே கிடந்து உணர்த்து முறைமையிற் கூடினதென அறிக. ஆகையாற் கேவல சகலம் இரண்டினும் ஆன்மாவும் பிரகிருதியும் ஒன்றை ஒன்று விடப்படாமல் உயிரும் உடலும் போலப் பிரிவற்று நிற்கு மென்பதே வழக்கென அறிக. அப்படிக் கேவலத்திற் பிரகிருதி தத்தவமுண்டாமாகில் தத்துவத் தோற்றஞ் சொல்லுமிடத்துச் சித்தியாரில் “வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித், தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன்றாகும்” (2.57) எம், இந்நூலினும் “உருத்திரராற் கலையதனில் பிரகிருதி குணங்கள் உளவாகும்” (26) எம் தோற்றஞ் சொல்லுவான் ஏனென்னில், அப்படித் தோற்றஞ் சொன்னதும் ஆன்மாவானது அதீதத்தில் சீவியாமற் கிடந்து சகலனாகச் சீவிக்கும் அவதரத்து இச்சா ஞானக் கிரியா சொரூப னானாற்போல, அந்தப் பிரகிருதி தத்துவமும் ஆன்மாக்கள் ஒடுங்கும் அவதரத்து உபாதானமாகச் சீவியாமனின்றும் தோன்றும் அவதரத்துக்குக் குணசொரூபமாகத் தோன்றிச் சீவித்தும் வருகையாலும் அப்படிச் சொன்னதென அறிக. அப்படிப் பிரகிருதி தத்துவம் மோகினியிற் றோற்றமாகிய காரிய மாயையோடுந் தோன்றியும் ஒடுங்கியும் வரச்செய்தே இதுவொன்றும் உபாதானமாய் நிற்குமுறைமை எங்ஙனேயென்னில், அது சுத்த மாயையிற் காரியமாகிய விந்து சத்தி சூக்குமை வாக்கு முதலானவையிற்றுக்கு உபாதானமாய் நின்றொடுங்குமதுபோலவென அறிக. அப்படியானால் ஒருபாதனத்திலே ஒருபாதானம் ஒடுங்கு முறைமை எங்ஙனே என்னில், அஃதொருவரிடத்திலே மற்றுமோர் ஆன்மா கர்ப்பத்திலே பதிந்து கிடந்தாற்போலவென அறிக. அப்படியானாற் கருவி கூடினவிடமெல்லாம் ஆன்மாவுக்குச் சீவிப்புண்டென்று சொல்லியிருக்கக் கேவலத்திற் பிரகிருதி தத்துவங் கூடிநிற்குமேயாகில் ஆன்மா சீவிப்பற்றுக் கிடக்குமுறைமை எங்ஙனேயென்னில், ஆன்மா ஒரு சரீர சம்பந்தமாய் நின்றவிடமெல்லாம் சீவிக்குமென்று சொல்லியிருக்கவுங் கேவலப்பட்டுக் கிடக்கும் அவதரத்துச் சரீர சம்பந்தமாய்க் கிடந்து சீவியாமல் நிற்குமதுபோலவென அறிக. ஆகையால், பிருகிருதி தத்துவம் ஆன்மாவோடுங்கூடி எவ்விடத்தினும் உயிரும் உடலும்போலப் பிரிவற்றுநின்று சகலத்திற் குணசொரூபமாய் நின்று காரியப்பட்டுங் கேவலத்தில் உபாதானமாய் நிற்குமென்பது முற்கூறிவந்த உபமானங்களினாலும் அநுபவத்தினாலுங் கண்டுகொள்க.
அன்றியும், இச்செய்யுளில் சூசூஎண்ணவொன் றிலாத தீதம்” என்கையால் அதீதத்திற் கருவிகளொன்றுமில்லை மற்றுள்ள நாலவத்தைக்குமே கருவியுள்ள தென்பாருமுளர். அதீதத்திற் பிரகிருதி தத்துவம் உண்டென்பதைப்பற்றி முக்கூறி வந்த வகைகளில் இந்நூலுக்குக் கருத்தாகக் காவையம்பலநாதத் தம்பிரானார் அருளிச்செய்த குறட்பாவில் இச்செய்யுளுக்கு வகுத்த குறட்பாவாகிய சூசூஉடலிடை யுயிருறு மோரைந் தவத்தையி னடைவுறு கருவியி னடைவினை வகுத்தது’’ என்று ஐந்தவத்தைக்குங் கருவியுண்டென்று அருளிச் செய்கையாலும் அதீதத்திலுங் கருவியுண்டென்பது கண்டுகொள்க. என்னவே அதீதத்திற் பிரகிருதி தத்துவம் உண்டென்பது கருத்து. அன்றியும் அப்படி ஆன்மாவைக் கேவல சகலமிரண்டினும் விடப்படாமல் வருங்கருவி பிரகிருதி தத்துவமல்ல புருட தத்துவம் என்பாருமுளர். அது வழக்கல்லவென அறிக. அதுவேனென்னில், ஆன்மா விசுவவியாத்தியை விட்டு அவத்தைப்படும் அவதரத்து அறிகருவி பதினாறுநீங்கி அவத்தைப் படுகையால் அதிலே காலமும் நியதியுங் கலையும் வித்தையும் அராகமுங்கூடி நீங்குகையால் அந்த ஐந்து கருவிகளுங்கூடிச் சீவிக்குஞ் சமூகத்தில் தோன்றுங் கருவி புருட தத்துவமாதலால் அந்தக் கலாதிகள் ஐந்தும் அவத்தைப்படும் அவதரத்துக் கூடாததுகொண்டு அந்தச் சமூகத்தில் தோற்றமாகிய புருட தத்துவமும் அவத்தையிற் கூடாதென அறிக. அன்றியும், புருட தத்துவத்தையும் பிரகிருதி தத்துவத்தையும் ஒரு கருவியென்றும் அது ஆன்மா அவத்தைப்படும் அவதரத்துத் துரியமளவும் புருட தத்துவமென்று பெயர் பெற்று நின்று அதீதத்திற் பிரகிருதி தத்துவமென்று பெயராய் நிற்குமென்பாருமுளர். அஃதிரண்டும் ஒரு கருவியென்பது வழக்கல்லவென அறிக. அது எங்ஙனேயென்னில், இந்நூலிலே தத்துவத்தோற்றஞ் சொல்லுமிடத்தில் “அருத்திமிகுங் கலைகாலம்” (26) என்னுந் திருவிருத்தத்திலே “உருத்திரராற் கலைய தனிற் பிரகிருதி குணங்கள் உளவாகும்’’ என்று பிரகிருதிக்குத் தோற்றஞ் சொல்லியும் “ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம் அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர்” (41) என்று புருட தத்துவந் தத்துவ சமூகத்திற்றோன்றுங் கருவியென்று சொல்லுகையாலும் புருட தத்துவம் வேறு பிரகிருதி தத்துவம் வேறென அறிக. அன்றியும், இதுவே கருத்தென்பதைப்பற்றிக் காவை அம்பலநாதத் தம்பிரானார் இந்நூலுக்குக் கருத்தாக அருளிச்செய்த குறள் வெண்பாவில் “ஐவகையா லுறுபயன்கள் நுகரவருங் கால மதுபுருட தத்துவம்” என்னுஞ் செய்யுளின் கருத்தாகிய “புகன்றவற் றாலவர் புருடதத் துவமு மகன்ற மானு மதன்குணம் விரித்தது” என்று தத்துவங்கள் காரியப்படுமிடத்துப் புருட தத்துவமும் பிரகிருதி தத்துவமும் வேறு வேறாகச் சொல்லுகையாலும் அவை இரண்டையும் ஒரு கருவியாகச் சொல்லவொண்ணாதென அறிக. அன்றியும், தத்துவம் முப்பத்தாறுக்குத் தொகை சொல்லுமிடத்து ஆன்ம தத்துவம் இருபத்துநாலு வித்தியா தத்துவம் எழு சிவ தத்துவம் ஐந்தென்று சொல்லுமிடத்து அவை இரண்டும் ஒரு கருவியானால் முப்பத்தாறுக்குத் தொகையில்லாதபடியாலும், அன்றியும் அத்துவாசோதனையிற் கலைபடைப்புக்குச் சித்தியாரில் “தத்துவமு மோரேழு” (8.8) என்று வித்தியாகலைக்கு வித்தியா தத்துவம் ஏழாகையாலும், அவை இரண்டையும் ஒரு கருவியென்ன வொண்ணாதென அறிக. அப்படி யானால் வித்தியா தத்துவம் ஏழென்பதற்குக் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயையென்று நூல்களிற் சொல்லுகையால் புருடனையும் பிரகிருதியையும் ஒரு தத்துவமாக்கி மாயை என்பதை ஒரு தத்துவமாக்கி ஆக வித்தியா தத்துவம் ஏழென்று தொகைப்படுத்தி ஆகத் தத்துவம் முப்பத்தாறென்று சொல்லப்படாதோவென்னில் அப்படி மாயை யென்றதும் பிரகிருதி தன்னையேயென அறிக. ஆகையாற் புருடன் வேறு பிரகிருதிவேறென அறிக.
அப்படிப் பிரகிருதி தன்னையே மாயையென்ப தொழிய மாயையென்றொரு கருவி தனித்தில்லை யென்பதற்கு வகையே தென்னில் தத்துவத்தோற்றஞ் சொல்லுமிடத்துக் காலம் நியதி கலை வித்தை அராகம் பிரகிருதியென்று ஆறுக்குத் தோற்றஞ்சொல்லி வருகையாலும், புருட தத்துவத்தோற்றம் சூசூஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம் அதுபுருட தத்துவமென்று” (41) அவ்விடத்தில் தோற்றஞ் சொல்லுகையாலும், மாயையென்று ஒரு கருவிக்குத் தோற்றமோரிடத்திலுஞ் சொல்லாதபடியாலும், அன்றியுந் தத்துவங்கள் காரியப்படுமிடத்து மாயையென்று ஒரு கருவி காரியப்படுகை சொல்லாதபடியாலும், பிரகிருதி தன்னையே மாயையென்பதொழியத் தனித்தொரு கருவி மாயையாகச் சொல்லப்படாதென அறிக. ஆகையால் புருடன் வேறு பிரகிருதி வேறென அறிக. அப்படிப் புருடன் ஒரு கருவியும் பிரகிருதி ஒரு கருவியுமானால் ஒடுக்கஞ் சொல்லுமிடத்து சூசூவித்தையி லொடுங்கும் ஆறும்” (சித்தியார் 2.72) என்று ஆறாகச் சொன்னதேதென்னில் புருட தத்துவந் தத்துவ சமூகத்தில் தோற்றமாகையாலும் மற்றுள்ள காலமும் நியதியுங் கலையும் வித்தையும் அராகமும் பிரகிருதியுங் காரண மாயையில் தோற்றமாகையாலுந் தோன்றின ஒழுங்கிலே ஒடுக்கஞ் சொல்லவேண்டுகையாற் புருட தத்துவத்துக்குக் காரண மாயையில் தோற்றமில்லாதபடியாலும் மற்றுள்ள ஆறு தத்துவமுங் காரண மாயையில் ஒடுங்குகையால் சூசூவித்தையி லொடுங்கும்ஆறும்” என்றதென அறிக. ஆகையாற் புருட தத்துவம் வேறு பிரகிருதி தத்துவம் வேறென அறிக. அன்றியும் சூசூசித்தமா மவ்வியத்தம்” (யூ2.58) என்று நூல்களிற் சொல்லி வருகையால் அவ்வியத்தமான பிரகிருதி தானே சித்தமுமாய்த் தோன்றுகையால் பிரகிருதியையுஞ் சித்தத்தையும் ஒரு கருவியாக்கி அவத்தைக்குக் கருவி முப்பத்துநாலென்று சொல்லுவாருமுளர். அதுவும் பொருளல்ல வென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், அப்படிப் பிரகிருதியுஞ் சித்தமும் ஒரு கருவியானால் ஆன்மதத்துவம் இருபத்துநாலினுஞ் சித்தத்தை ஒரு கருவியாகவும் வித்தியாதத்துவம் ஏழினும் பிரகிருதியை ஒரு கருவியாகவுஞ் சொல்லித் தத்துவம் முப்பத்தாறென்கையாலும், அன்றியும் இவை காரியப்படுமிடத்துச் சித்தமானது நினைவு மாத்திரமாய் நின்று காரியப்படுமென்றும் பிரகிருதி முக்குணங்களால் ஒன்பது வகையாக நின்று காரியப்படுமென்றுஞ் சொல்லி வருகையால் இரண்டையுமொரு கருவியாகச் சொல்ல வொண்ணாதென அறிக. அன்றியும் பிரகிருதிதானே சித்தமாமென்னும் வழக்கைப்பற்றி இரண்டுமொன்றாமென்றாலும் பிரகிருதியினின்றுஞ் சித்தமுண்டாகையாற் சித்தமானது சுழுத்தியில் நினைவு மாத்திரமாய் நிற்குமென்று நூல்களிற் சொல்லுகையாலும் பிரகிருதி காரணமாய்ச் சித்தந் தோன்றுகையாற் பிரகிருதிகெட்டுச் சித்தம் நிற்க வழக்கில்லாத படியினாலும் அப்படிச் சொல்லவொண்ணாதென அறிக. அப்படிப் பிரகிருதி காரணமாகச் சித்தந்தோன்று மென்றது ஆன்ம தத்துவம் இருபத்துநாலும் பிரகிருதியிலே தோன்றி மீளவும் அதிலே ஒடுங்குகையாலும் அது வழக்கல்லவென அறிக. அப்படிப் பிரகிருதியிலே ஆன்ம தத்துவம் இருபத்துநாலுந் தோன்றி மீளவும் அதிலே ஒடுங்குமென்பதற்கு பி ம் இந்நூலில் “உருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்கள் உளவாகும் ஆங்காரம் புந்தியினில் உதிக்கும்” (26) என்று தோற்றத்துக்குச் சொல்லியும் சித்தியாரில் “தத்துவம் எண்மூன்றுஞ் சென்றான்ம தத்துவத் தொடுங்கும்” (2.72) என்று ஒடுக்கத்துக்குச் சொல்லியும் வருமது கண்டுகொள்க. ஆகையாற் புருட தத்துவம் வேறு பிரகிருதி தத்துவம் வேறு சித்தம் வேறென அறிக. அன்றியும் அவத்தையிற் பிரகிருதி தத்துவங் கூடாதென்னில் அதில் தோற்றமாயுள்ள அந்தக்கரணங்களும் இந்திரியங்களும் அவத்தைத்தானங்களினின்று காரியப்படுகையாற் காரணமில்லாத பொழுது காரியம் சீவியாதாகையால் அவத்தையிற் பிரகிருதி உண்டென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. என்னவே, ஆன்மா அவத்தைப்படுமிடத்துப் பிரகிருதிதத்துவம் உடம்பாகச் சென்று மூலாதாரத்திலே அந்தப் பிரகிருதியோடும் அழுந்திக் கிடக்குமென்கிறதே சித்தாந்தப்பொருளென அறிக.
என்றிங்ஙனஞ் சொல்லிவந்த வகையில் அவத்தைக்குக் கருவி முப்பத்தைந்தென்பதும் ஆன்மா அதீதத்திற் பிரகிருதி தத்துவம் உடம்பாகச் சென்றொடுங்குமென்பதே வழக்கென்பதுங் கண்டு கொள்க. இதற்கு பி ம் சிற்றம்பலநாடித் தம்பிரானார் அருளிச் செய்த அச்சிடப்பட்டுள்ள சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்தில் இந்நூல் காணப்படவில்லை. ஞானப்பஃறொடையில் “ஐயாறு மைந்து மணைகருவி, என்று மிதிற்புருவத் திடைபத்தும போக்கிருபத், தைந்தோ டேகளத்திற் றங்கிச், சுழுத்தி தனிள்மூன்றும் துரியத் திரண்டும், விழித்தநினை வற்றுயிரை விட்டு அழுத்தியிடு, மூலப் பிரகிருதி யோடேயம் மூலமலம், கோலக் கிடந்துணர்த்தக் கூறுங்கால்” என்றருளிச்செய்ததுங் கண்டுகொள்க. அன்றியும் சிவாகமத்தில் அசிந்திதமென்கிற ஆகமத்தின் கிரந்தத்திலே அவத்தைக்குக் கருவி முப்பத்தைந்தென்பதற்குப் பிரமாணங் கண்டுகொள்க. ஆன்ம தத்துவம் இருபத்துநாலுக்கும் பிரகிருதி தத்துவம் பிரதானமாகையால் பிரகிருதியைக் கேத்திரக்கினனென்றதென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மா கீழாலவத்தைப்பட்டுப் பிரகிருதி தத்துவம் உடம்பாகச்சென்று மூலாதாரத்திலே ஒடுங்குமவதரத்துச் சாக்கிரத்தானத்தில் விட்டுப்போங் கருவி பத்தென்றும் சொப்பனத்தானத்தில் விட்டுப்போங் கருவி இருபத்திரண்டென்றும் சுழுத்தித்தானத்தில் விட்டுப்போங் கருவி மூன்றென்றும் துரியத்தானத்தில் விட்டுப்போங் கருவி ஒன்றென்றும் வருமுறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனங் கூடினதன் தன்மையாயுள்ள ஆன்மாவுக்கு அவத்தைப்படும் முறைமையும் உண்டாகையால் ஆன்ம இலக்கணத்துக்கு மேலாக நாலாஞ் சூத்திரமாகிய அவத்தைத் தன்மை யென்னும் அதிகாரம் வைக்கப்பட்டது.
இவ்வதிகாரம் நாலாஞ்சூத்திரமாக நின்ற முறைமை எங்ஙனே யென்னில் சிவஞானபோதத்தில் நாலாஞ் சூத்திரமும் அவத்தைத் தன்மையை அருளிச்செய்கையினால் இதுவுமப்படி வைக்கப்பட்டதென அறிக. அது எங்ஙனேயென்னில் : “அந்தக் கரணம் அவற்றினொன் றன்றவை, சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா, தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே” (4) என்னுஞ் சூத்திரத்துக்கு சூசூஇவ்வான்மாக்கள் சகச மலத்தினால் உணர்வின்று” (யூவார்த்திகம்) என்பது கருத்தாகையால் இந்நூலினும் இவ்வதிகாரமாகிய “எண்ணவொன் றிலாததீதம்”, “இவ்வகை யவத்தை”, “நீக்கமிலதீதம்” (60, 61,62) என்னும் விருத்தம் மூன்றும் அவத்தைத் தன்மையைச் சொல்லுகையால் இதுவும் நாலாஞ் சூத்திரமாக நின்றதென அறிக. அப்படி உண்டாகப்பட்ட அவத்தை எத்தனை வகைப்பட்டிருக்குமென்னில் அது பதினெட்டுவகை அவத்தை யுண்டாய் வரும். அதற்கு வழியேதென்னில் காரணாவத்தை மூன்றுங் காரியாவத்தை பதினைந்துமாய் வருமென்றறிக.
இதிற் காரணாவத்தை மூன்றேதென்னில் காரண கேவலமென்றுங் காரண சகலமென்றும் காரண சுத்தமென்றும் வரும். இதிற் காரண கேவலமாவது சர்வ சங்கார காலத்து ஆன்மாக்கள் சுத்த மாயா காரணத்தில் ஒடுங்கிச் சிருஷ்டி காலமளவும் ஆணவமலத்தான் மறைப்புண்டு ஒன்றுமறியாமற் கிடக்கும் அவதரமென அறிக. காரண சகலமேதென்னிற் சிருஷ்டி தொடங்கிச் சர்வ சங்காரம் வருமளவும் ஆன்மாக்கள் யோனிவிட்டு யோனிபற்றி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதத்திலும் பிறந்திறந்து திரிகிற அவதரமென அறிக. காரண சுத்தமேதென்னில் இங்ஙனங் கேவல சகலப்பட்டுப் பிறந்திறந்து திரியும் அவதரத்து ஆணவ மலபாகம் வந்த ஆன்மாக்களுக்கு இருவினையொப்புஞ் சத்திநிபாதமும் உண்டாமாகையால் அந்த அவதரத்துச் சிவன் ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி இரக்ஷித்துத் தனது திருவருளான ஞானத்தையுங் கடாக்ஷித்து நிஷ்டாபரராக்கிப் பிராரத்தந் தொலைந்தவாறே தனது பூரண நிலையோடுங் கூட்டிக்கொண்ட அவதரமென அறிக. இங்ஙனங் கூறப்பட்ட காரணாவத்தை மூன்றுக்கும் பி ம் சித்தியாரில் “அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும், செறிவிலன் சலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான், குறியிலன் கர்த்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான், பிறிவிலன் மலத்தினோடும் வியாபிகே வலத்தில் ஆன்மா” (4.38) எது கேவலத்துக்குக் கண்டுகொள்க. “உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல், வருசெயல் மருவிச் சத்த மாதியாம் விடயம் தன்னிற், புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று, திரிதருஞ் சகல மான அவத்தையிற் சீவன் சேர்ந்தே” (4.39) எது சகலத்துக்குக் கண்டுகொள்க. சூசூஇருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக், குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத், திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம், பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே” (4.40) எது சுத்தத்துக்குக் கண்டுகொள்க.
இனி, காரியாவத்தை பதினைந்துக்கும் வழியேதென்னில் கீழாலவத்தை ஐந்தும் நிலையிற்படும் அவத்தை ஐந்தும் நின்மலாவத்தை ஐந்துமென அறிக. இவை பதினைந்துக்கும் பி ம் சிவஞான போதத்தில் சூசூஇலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம், இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் இலாடத்தே, அவ்வவ இந்திரியத் தத்துறைகள் கண்டதுவே, அவ்வவற்றின் நீங்கலது வாங்கு” (4.7) எம், சித்தியாரில் சூசூஅறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்துஞ், செறிதருங் கரணந் தன்னிற் செயல்தொறும். உணர்ந்து கொள்நீ, பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே, குறியொடு அஞ்சவத்தை கூடுவர் வீடு கூட” (4.35) எம், இந்நூலினும் சூசூஇவ்வகை யவத்தை தன்னில்” (61) என்ற விருத்தமும் இப்பொருள் பற்றியென அறிக. ஆக முன்னுங் கூட்டி அவத்தைப் பதினெட்டும் இவ்வதிகாரத்து வகுத்த செய்யுள் மூன்றினுங் கண்டு கொள்க. அவை வருமாறு.
இங்ஙனஞ் சொல்லப்பட்ட அவத்தைகளிற் கீழாலவத்தையிற் காரியாவத்தை ஐந்தஞ் சாக்கிர முதலாக அருளிச் செய்யாமல் அதீத முதலாக அருயிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
இங்ஙனஞ் சொல்லப்பட்ட அவத்தைகள் ஐந்தும் அடியேனுக்குத் தரிசனம் வந்ததில்லையென்ற மாணவகனை நோக்கிச் சகலாவத்தையிற் காரியமாயுள்ள நிலையிற்படும் அவதரத்திலுண்டான ஐந்தவத்தைகளினுந் தரிசனப்படுத்தி யதுகொண்டே திருவருட்பிரகாச முள்ள புண்ணியவான்களுக்குண்டான மேலாலவத்தையும் ஆசாரியன்கண்ணாக அறியவேணுமென்னும் முறைமையும் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

இவ்வகை அவத்தை தன்னில் எய்திடும் கரண மெல்லாம்
மெய்வகை இடத்தி லுற்று மேவுமா கண்டு மிக்க
பொய்வகைப் பவம் அகற்றப் புரிந்திடில் அருளா லாங்கே
ஐவகை அவத்தை உய்க்கும் அறிவினால் அறிந்து கொள்ளே.

தத்துவ சமூகந் தன்னிலைந் தவத்தையுஞ்
சுத்தம தாமைந் தவத்தையுஞ் சொன்னது.

பொழிப்புரை :

இவ்வகை அவத்தை தன்னில் எய்திடுங் கரணமெலாம் இந்த அடைவிலே முற்கூறப்பட்ட அவத்தைகள் ஐந்தினும் உண்டான கருவிகள் ஏற்றக் குறைச்சலாய் நின்ற முறைமைகளெல்லா வற்றையும் ; மெய்வகை இடத்திலுற்று மேவுமா கண்டு மெய்யிலே வகைப்பட்ட இலாடத்தானத்திலே அஞ்சவத்தைப்படும் முறைமையை அறிந்து ; மிக்க பொய்வகைப் பவம்அகற்றப் புரிந்திடில் மிகவும் பொய்யாயிருக்கப்பட்ட ஜநந மரண துக்கங்களை நீக்க விசாரிக்கில் ; அருளாலங்கே ஐவகை அவத்தை உய்க்கும் தம்பிரானார் காருண்ணியத்தினாலே மேலான சுத்தாவத்தைகள் ஐந்தையும் அந்த இலாடத்தானத்திலே செலுத்தாநிற்கும். அதனை அறியுமுறைமை எங்ஙனெயென்னில்; அறிவினால் அறிந்துகொள்ளே ஆசாரியன் கண்ணாக அறிந்துகொள்ளுக. அன்றியும் ஐவகைஅவத்தை உய்க்கும் அவிவினால் அறிந்துகொள்ளே என்றொரு பதமாக்கி முற்கூறிய கீழாலவத்தை கொண்டும் நிலையிற்படும் அவத்தைகொண்டும் மேலாலவத்தையும் அறியப்படுமென்னவுமாமென அறிக.
மெய்வகை யிடத்திலுற்று மேவுமா கண்டு எது சாக்கிரத் தானத்திலே உண்டாகிய நிலையிற்படும் அவத்தை ஐந்தையுங் கண்டென்றதென அறிக. அஃதாவது, ஒருபண்டத்தை மறந்தவன் அந்தப்பண்டங் காணாதபொழுது பிராணவாயுவும் இயங்காமல் மூர்ச்சித் திருந்த அவதரம் நிலையிற்படும் அவத்தையிற் சாக்கிர துரியாதீத மென அறிக. இனி, அந்தப் பிராணவாயு இயங்கத்தக்கதாகப் பெருமூச்செறிந்து விசாரித்தறிவோமென்று நின்ற அவதர நிலையிற்படும் அவத்தையிற் சாக்கிர துரியமென அறிக. இனி, அவ்விடத்திலே யல்லவோ போனோமென்று நினைவெழுந்திருந்த அவதரநிலையிற்படும் அவத்தையிற் சாக்கிர சுழுத்தியென அறிக. இனி, இன்னவிடத்திலே அல்லவோ பண்டம் வைத்தோமென்று விசாரப்பட்டறிந்த அவதர நிலையிற்படும் அவத்தையிற் சாக்கிர சொப்பனமென அறிக. இனி, அந்தப் பண்டம் வைத்த இடத்திலே சென்று கண்டது நிலையிற்படும் அவத்தையிற் சாக்கிர சாக்கிரமென அறிக. இந்த நிலையிற்படும் அவத்தைக்குக் கருவிகளாவன சுத்த தத்துவங்கள் ஐந்துமென அறிக. அது எங்ஙனே யென்னில், அதீதத்துக்குச் சிவ தத்துவமொன்று மென அறிக ; துரியத்துக்குச் சிவ தத்துவமுஞ் சத்தித் தத்துமுமென அறிக; சுழுத்திக்குச் சிவ தத்துவமுஞ் சத்தி தத்துவமுஞ் சாதாக்கிய தத்துவமுமென அறிக ; சொப்பனத்துக்குச் சிவ தத்துவமும் சத்தி தத்துவமுஞ் சாதாக்கிய தத்துவமும் ஈசுரதத்துவமுமென அறிக ; சாக்கிரத்துக்குச் சுத்த தத்துவம் ஐந்துமென அறிக ; இதற்கு பி ம் சித்தியாரில் “ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினிற் சுழுனை மூன்று வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதந், தந்திடுஞ் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும், உந்திடுங் கரணந் தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே” (4.36) எது கண்டுகொள்க. இனி, இந்த நிலையிற்படும் அவத்தைகொண்டே கீழாலவத்தை அறியப்படு மென்பதற்கும் இந்த நிலையிற்படும் அவத்தையிற் கருவிகள் நீங்குகிறது தானே சுத்தாவத்தையா மென்பதற்கும் பி ம் சித்தியாரில் “அறிதரு முதலவத்தை அடைதரு மிடத்தே ஐந்தும், செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுங் கண்டு கொள்நீ, பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளாலாங்கே, குறியொடும் ஐந்தவத்தை கூடுவர் வீடு கூட” (4.35) எம், சிவஞானபோதத்தில் சூசூஇலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம், இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் இலாடத்தே, அவ்வவ இந்திரியத் தத்துறைகள் கண்டதுவே, அவ்வவற்றின் நீங்கலது வாங்கு” (4.7) எம் கண்டுகொள்க. என்னவே இந்தச் சகலாவத்தையில் உண்டான கருவிகள் ஏற்றக்குறைச்சல்கள்போல அந்தக் கீழாலவத்தைக்குமென அறிக. இது சகலாவத்தையிற் காரியாவத்தையைச் சொன்னதென அறிக. இனி, அருளாலங்கே ஐவகை அவத்தை உய்க்கும் என்றது சுத்தாவத்தையென அறிக. அவை வருமாறு : நின்மல சாக்கிர நின்மல சொப்பன நின்மல சுழுத்தி நின்மல துரிய நின்மல துரியாதீதமென அறிக. அஃதாவது சுத்த தத்துவம் ஐந்தில் சுத்த வித்தை நீங்கின அவதரஞ் சாக்கிரத்திற் சாக்கிரம் ; சுத்த வித்தையும் ஈசுரமும் நீங்கின அவதரஞ் சாக்கிரத்திற் சொப்பனம் ; சுத்த வித்தையும் ஈசுரமுஞ் சாதாக்கியமும் நீங்கின அவதரஞ் சாக்கிரத்திற் சுழுத்தி ; சுத்த வித்தையும் ஈசுரமுஞ் சாதாக்கியமுஞ் சத்தியும் நீங்கின அவதரஞ் சாக்கிரத்தில் துரியம் ; சுத்ததத்துவம் ஐந்தும் நீங்கின அவதரஞ் சாக்கிரத்தில் அதீதமென அறிக. இவை ஐந்து தத்துவமும் நீங்க என்றது கொண்டே இவை ஐந்தும் பிரேரிக்கப்பட்ட கருவிகளும் நீங்கவென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. இதற்கு பி ம் சிவஞானபோதத்தில் “இலாடத்தே சாக்கிரத்தை” (4.7) என்ற செய்யுள் முடிவில் “அவ்வவற்றின் நீங்கலது வாங்கு” எது கண்டுகொள்க. இது சுத்தாவத்தையிற் காரியாவத்தையென அறிக.
இதனாற் சொல்லியது கீழாலவத்தை ஐந்தையுந் தரிசனப்படுத்த வேண்டிச் சகலாவத்தையிற் காரியவத்தையாகிய நிலையிற்படும் அவத்தைகொண்டே தரிசிப்பித்த முறைமையும் அதுகொண்டே சுத்தாவத்தையிற் காரியாவத்தை ஐந்தையுந் தரிசிப்பித்த முறைமையும் அறிவித்தது. நிலையிற்பிடும் அவத்தையென்றது மத்தியா லவத்தையென அறிக. மேலாலவத்தை யென்றது சுத்தாவத்தையென அறிக.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட காரியாவத்தைகள் தரிசிப்பித்தாற் போல முற்கூறிய காரணாவத்தைகள் மூன்றுந் தரிசிப்பிக்கவேணு மென்று மாணவகனை நோக்கிக் காரியாவத்தையில் உண்டான கேவல சகல சுத்தம்போல இருக்குங் காரணாவத்தையில் உண்டான கேவல சகல சுத்தமென்னும் முறைமையை மேலருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

நீக்கமில் அதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை
சாக்கிரங் கலாதி சேர்ந்த சகலமாந் தன்மை யாகும்
நீக்கமில் இரண்டும் கூடா தொழியவோர் நிலையில் நீடும்
சாக்கிர அதீதம் சுத்தத் தகைமைய தாகுந் தானே.

கேவல சகல சுத்தமென் றுரைத்த
மூவகை தெளியு முறைமை மொழிந்தது.

பொழிப்புரை :

நீக்கமில் அதீத மாசு நிறைந்த கேவலமா நீர்மை ஆன்மாக்கள் மாயா கருவிகளெல்லாம் நீங்க நீங்காத ஆணவ மலத்தாலே மறைப்புண்டு மூலாதாரத்திலே கிடக்கிற அதீதம்போலே இருக்குஞ் சர்வசங்காரத்தும் காரண மாயையிலே தத்துவங்க ளெல்லாமொடுங்க அதிலே சர்வான்மாக்களுமொடுங்கி ஆணவ மலத்தாலே மறைப்புண்டு கிடக்கிறதே காரணமாகிய கேவலாவத்தையின் முறைமை; கலாதி சேர்ந்த சகலமாந் தன்மை யாகுஞ் சாக்கிரம் ஆன்மாக்கள் கலையாதியாயுள்ள தத்துவங்களுடனே கலந்து ஒவ்வொரு விடயங்களிற் கூடிநின்று பிரிகிற காரியமாகிய சாக்கி ராவத்தைக்கு ஒக்கும், கன்மத்துக்கீடாக எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிகள் தோறும் பிறந்திறந்து திரிகிற சகலாவத்தையாகிய காரணாவத்தையின் முறைமை; நீக்கமில் இரண்டுங்கூடா தொழியவோர் நிலையில் நீடும் சாக்கிர அதீதஞ் சுத்தத் தகைமைய தாகுந் தானே ஒன்றைவிட் டொன்றுபற்றி ஆன்மாவை விட்டு நீங்காமல் வருகிற பெருமை பொருந்திய கேவல சகல மிரண்டினுங் கூடாமல் அருளுடனேகூடி இரண்டற நிலைபெற்று நேயத்துடனே அழுந்துகிற சாக்கிராதீதத்துக்கு ஒக்கும், பரமுத்தியான சுத்தாவத்தையாகிய காரணமும்.
அதீதமென்றது சீவிக்குங் கருவிகளெல்லாங் கழன்ற விடமென அறிக. கேவலமென்றது சர்வ சங்காரமென அறிக. சாக்கிரமென்றது கலையாதி தத்துவங்களோடுங்கூடிச் சீவித்து நிற்கையென அறிக. சகலமென்றது சிருஷ்டி தொடங்கிச் சங்காரமளவும் பிறந்திறந்து வருகிறதென அறிக. சாக்கிராதீதமென்றது கருவிகள் முப்பத்தாறுங் கழன்று கேவல சகலத்தினும் அழுந்தாமல் அருளிடமாகச் சென்று ஞேயத்தழுந்தலாகிய உண்மை நிட்டையையென அறிக. சுத்தமென்றது திருவடியிலே இரண்டறக்கூடிநின்ற பரமுத்தியை யென அறிக. இவையிற்றுக்கு பி ம் சித்தியாரில் “கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா, மேவுவன்” எம், “அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும் செறிவிலன்” எம், “உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல்” எம், “இருவினைச் செயல்க ளொப்பில் ஈசன் தன் சத்தி தோய” (4.37, 38, 39,40) எம் வரும் விருத்தங்களைக் கேவல சகல சுத்தம் மூன்றுக்குங் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மா தத்துவங்களெல்லாங் கழன்று ஆணவமலத்தான் மறைப்புண்டு பிரகிருதி தத்துவம் உடம்பாக மூலா தாரத்திலே கிடக்கிற அதீதம்போலே கிடக்கும் சர்வ சங்கார கேவலத்திலென்றும், ஆன்மா கலையாதி தத்துவங்களோடுங் கூடி ஒவ்வொன்றாகச் சீவிக்கிற சாக்கிரம்போல இருக்கும் யோனிவிட்டு யோனிபற்றிப் பிறந்திறந்து வருகிற சகலமென்றும், இந்தக் கேவல சகல மிரண்டும் நீங்கின சாக்கிராதீதம்போல இருக்குந் திருவடியிலே இரண்டறக் கூடின சுத்தமான பரமுத்தியென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

மருவிய பொறியில் ஒன்றும் மாபூதம் ஐந்தி லொன்றும்
கருவிகள் நான்கும் நீங்காக் கலாதிகள் ஐந்தும் கூடி
ஒருபுலன் நுகரும் இந்த ஒழுங்கொழிந் துயிரும் ஒன்றைத்
தெரிவுறா தவனொ ழிந்தத் திரள்களும் செயலி லாவே.

உணர்த்து முறைமையில் ஒருபுல னுகர
இணக்குறு கருவிகள் இவையா மென்றது.

பொழிப்புரை :

ஆன்மா இந்திரியங்களைக்கொண்டு விடயங்களைக் கொள்ளுமிடத்து; மருவிய பொறியில் ஒன்றும் அப்பொழுதைக்குப் பொருந்தப்பட்ட இந்திரியங்களிலே யொன்றும்; மாபூதம் ஐந்தி லொன்றும் பெரிய பூதங்களாகிய பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாச மாகிய இவையிற்றிலே அப்பொறிகளுக்கேற்ற பூதமொன்றும், கருவிகள் நான்கும் மனம் புத்தி ஆங்காரஞ் சித்தம் என்கிற அந்தக் கரணங்கள் நான்கும்; நீங்காக் கலாதிகள் முற்கூறிய கரணங்களை விட்டு நீங்காத கலை காலம் நியதி வித்தை அராகம் புருடன் பிரகிருதி மாயை என்கின்ற வித்தியா தத்துவம் ஏழும் ; ஐந்தும் சுத்த வித்தை ஈஸ்வரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்கின்ற சிவ தத்துவம் ஐந்தும்; கூடி ஒரு புலன் நுகரும் ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவங்கள் பதினெட்டுங் கூடியே ஆன்மா ஒரு விடயத்தைப் புசிப்பன்.இந்தக் கருவிகள் கூடாதபொழுது ஆன்மாவுக்குப் புசிப்பில்லையோ வென்னில்; இந்த ஒழுங்கொழிந் துயிரும் ஒன்றைத் தெரிவுறாது இந்த முறைமையிலே சொல்லப்பட்ட கருவிகள் கூடினாலொழிய ஆன்மாவும் ஒன்றைப் புலப்பட அறியமாட்டாது. அந்த ஆன்மா கூடாதபொழுது அந்தக் கருவிகள் தானாக அறியாதோ என்னில் ; அவனொழிந்து அத்திரள்களும் செயலிலாவே அந்த ஆன்மாவைக் கூடாமல் அந்தக் கருவிகளுந் தானாக அறியமாட்டா. இங்ஙனம் பொருள் கூறிவந்த வகையில் ஆன்மா யாதொரு விடயத்தைப் புசிக்குமிடத்து அந்த விடயங்களுக்கேற்ற இந்திரியங்களிலே யாதாமொன்றும் அதற்கேற்ற பூதங்களிலே யாதாமொன்றும் அந்தக்கரணங்கள் நாலும் கலாதிகள் ஏழும் சுத்த தத்துவம் ஐந்தும் ஆகப் பதினெட்டுக் கருவிகளுங் கூடியே புசிக்கவேணு மென்று பொருள் கூறியதற்கு வழியேதென்னில், அஃதாவது, சிவனுடைய சத்திகள் சுத்த தத்துவம் ஐந்தையுங்கொண்டு வித்தியா தத்துவமாகிய கலாதிகள் ஏழையும் காரியப்படுத்தியும் அந்தக் கலாதிகள் ஏழும் ஆன்ம தத்துவம் இருபத்துநாலையுங் காரியப்படுத்தியும் வருகையால் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. அவை ஒன்றினாலொன்று காரியப்படு முறைமை எங்ஙனே என்னில், சிவனுடைய சத்திகள் சுத்த தத்துவம் ஐந்தையும் நடத்தும் வகையாவது, இச்சா சத்தி ஈஸ்வரத்தை நடத்தும் ; கிரியா சத்தி சத்தி தத்துவத்தையுஞ் சாதாக்கியத்தையும் நடத்தும், ஞான சத்தி சிவதத்துவத்தையும் சுத்த வித்தையையும் நடத்துமென அறிக. இதற்கு பி ம் “இச்சை நடத்தியிடு மீச்சுர தத்துவத்தை, மெய்ச்சத்தி சாதாக்ய மேவியிடும் நிச்சயமே, ஏன்ற கிரியை நடத்தியிடு மெய்ஞ்ஞான, மான்றசிவஞ் சுத்தவித்தை யாம்” எது கண்டுகொள்க. இனி, சுத்த தத்துவம் ஐந்தாலும் வித்தியா தத்துவமாகிய கலாதிகள் ஏழுங் காரியப்பட்டு வருகையாவது நாதசொரூபமாகிய சிவதத்துவம் அதோ மாயையிலே நின்று ஆன்ம தத்துவம் இருபத்து நாலுக்கும் உபாதானமாகிய பிரகிருதி மாயையைத் தோற்றுவித்தும், அதற்கு அந்தமாகிய விந்து வடிவாகிய சத்திதத்துவத்தைக்கொண்டு காலமும் நியதியுங் கலையுந் தோற்றுவித்தும், சுத்தவித்தை வித்தையைத் தோற்றுவித்தும், ஈஸ்வரம் அராகத்தைத் தோற்றுவித்தும் ஆக இங்ஙனந் தோன்றப்பட்ட காலமும் நியதியுங் கலையும் வித்தையும் அராகமுங் கூடின சமுகத்திலுண்டான புருடதத்துவத்தைச் சாதாக்கிய தத்துவங் காரியப்படுத்தியும் வருமென்பதை நூல்களினாலும் அனுபவத்தினாலும் கண்டுகொள்க. இவையிற்றுக்கு பி ம் “கால நியதி கலைசத்தி தானடத்து மேலும்வித்தை வித்தையரா கம்மீசர் சாலவே, மாயை சிவம்புருடன் சாதாக் கியமேவி, நேய முடனடுத்து நின்று” எது கண்டுகொள்க. இனி இந்த வித்தியா தத்துவம் ஏழாலும் ஆன்ம தத்துவம் இருபத்துநாலுங் காரியப்படும் வகை எங்ஙனே என்னில், கலையானது முற்கூறிய பிரக்ருதி மாயையை எழுப்பி அதிலே நின்றுங் குணங்களைத் தோற்றுவிக்க, அந்தக் குணங்களிடமாக அந்தக்கரணங்களும் இந்திரியங்களும் விடயங்களும் பூதங்களும் ஒன்றிலே ஒன்றாகத் தோன்றி விரிந்த அவதரத்து, அந்தக் கலையானது சித்தத்துக்கும் உட்கருவியாய் நின்று போகங்களிலே நினைவை எழுப்பியும், நியதி புத்திக்கும் உட்கருவியாய் நின்று போகங்களை நிச்சயித்து அறுதிப்படுத்தியும், வித்தை ஆங்காரத்துக்கும் உட்கருவியாய் நின்று போகங்களிலே அறிவை எழுப்பியும், அராகம் மனதுக்கும் உட்கருவியாய் நின்று போகங்களிலே ஆசையாகப் பற்றியும், புருடன் இந்திரியங்களை எழுப்பிப் போகங்களைப் புசிப்பித்தும், பிரகிருதி போகங்களிலே அழுத்துவித்தும், காலம் இவை எல்லாவற்றையுங் கூட்டியும் வருகையால் அப்படிச் சொன்னதென அறிக.
என்றிங்ஙனம் பொருள்கூறிவந்த வகையிற் கலை சித்தத்துக்குட்கருவி யென்றும் நியதி புத்திக் குட்கருவியென்றும் வித்தை ஆங்காரத்துக் குட்கருவி என்றும் அராகம் மனத்துக் குட்கருவி என்றும் சொன்னதற்கு வழியேதென்னில், சூசூஅந்தக்கரணங்களின் குணம் நினைந்தாராய்ந்து துணிந்து செயல் மணந்து” எம், சூசூநியதி சிந்தித்தா ராய்ந்து துணிந்து செயற்படும், அந்தக் கரண வமைச்சரும்” எம் நூல்களிற் சொல்லி வருகையாற் சித்தம் நினைவை எழுப்புங் கருவியாயும் ஆங்காரம் அறிவை மேலிடுவிக்குங் கருவியாயும் புத்தி நிச்சயிக்குங் கருவியாயும் மனது பற்றுங் கருவியாயுமிருக்கும் ; இவையிற்றுக்கு உட்கருவியென்ற கலையும் வித்தையும் நியதியும் அராகமும் நிற்கும் வகையாவது கலை ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கி அறிவை எழுப்புங் கருவியாகையாலும் வித்தை அறிவை மேலிடுவிக்குங் கருவியாகையாலும் நியதி நிச்சயிக்குங் கருவியாகையாலும் அராகம் ஆசையை எழுப்புங் கருவியாகையாலும் அப்படிக் கூறப்பட்ட தென அறிக. என்னு மிவையிற்றுக்கு பி ம் இந்நூலில் “அசுத்த மாயை, வைத்தகலை தான்மூல மலஞ் சிறிதே நீக்கி மருவும் வகை தெரிவிக்கும்” (39) எம், சித்தியாரில் “சித்தமாம் அவ்வி யத்தஞ் சிந்தனை யதுவுஞ் செய்யும்” (2.58) எம் வருமது கலையுஞ் சித்தமும் நினைவை எழுப்புங் கருவி என்பதற்குக் கண்டுகொள்க. இனி, வித்தையும் ஆங்காரமும் அறிவை மேலிடுவிக்குங் கருவியென்பதற்கு பிம் சூசூவித்தை உயர் கலையதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும்” எம், “ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய், ஈங்கார்தான் என்னோ டொப்பார்” (சித்தியார் 2.55, 59) எம் வருமது கண்டுகொள்க. இனி, நியதியும் புத்தியும் நிச்சயிக்குங் கருவியென்பதற்கு பி ம் “நியதிபின் தோன்றிக் கண்ம நிச்சயம் பண்ணி நிற்கும்” (யூ 2. 55) எம், “புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து, வத்துநிச் சயமும் பண்ணி” (யூ 2.58) எ ம் வருமது கண்டுகொள்க. இனி, மனதும் அராகமும் ஆசையைப் பற்றுவிக்குங் கருவி என்பதற்கு பி ம் “விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண், இச்சையைப் பண்ணி நிற்கும்” எம், “மனமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி, நினைவதுஞ் செய்து” (யூ 2.56, 60) எம் வருமது கண்டு கொள்க. ஆகையால், அந்தக்கரணங்கள் நாலுக்கும் சித்தத்துக்குக் கலையும் ஆங்காரத்துக்கு வித்தையும் புத்திக்கு நியதியும் மனத்துக்கு அராகமும் உட்கருவியாய் நிற்குமென்பதை அநுபவத்தாற் கண்டு கொள்க.
இனி, சுத்த தத்துவங்கள் ஐந்தும் வித்தியா தத்துவங்கள் ஏழையுங் காரியப்படுத்துமென்றும் வித்தியா தத்துவம் ஏழும் ஆன்ம தத்துவம் இருபத்துநாலையுங் காரியப்படுத்து மென்றுஞ் சொன்னதற்கு வழியேதென்னில், சிவ தத்துவம் ஐந்தும் பிரேர காண்டமென்றும் வித்தியா தத்துவம் ஏழும் போக சயித்திரிய காண்டமென்றுஞ் ஆன்ம தத்துவம் இருபத்து நாலும் போக்கிய காண்டமென்றுஞ் சொல்லுகையால் அப்படிச் சொல்லபட்டதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “ஐந்து சுத்தத்தின் கீழேழ் சுத்தா சுத்தம் அசுத்தம், தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வர்க்கு, வந்திடும் பிரேர காண்டம் மருவு போக சயித்தி ரத்தோ, டந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே” (2.70) எது கண்டு கொள்க. இனி, வித்தியா தத்துவம் ஏழும் ஆன்ம தத்துவம் இருபத்து நாலையுங் காரியப்படுத்து மென்பதற்கு பிம் சித்தியாரில் “வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவியாகும், ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும், ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர், மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா” (2.63) எது கண்டு கொள்க. இனி, சிவ சத்திகளாலே இந்தத் தத்துவங்களொன்றை யொன்று காரியப்படுத்துமென்றும் அப்படிக் காரியப்பட்டுத் தோன்றுமிடத்துச் சுத்த மாயையாலே அசுத்த மாயை காரியப்படுமிடத்து அதிலே பிரகிருதி மாயையானது ஆன்ம தத்துவம் இருபத்து நாலுக்கும் உபாதானமாகத் தோன்றுமென்றும் மற்றுள்ள தத்துவங்களும் அவையிற்றிலே தோன்றுமென்றுங் கூறியதற்கு பிம் சித்தியாரில் “விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம், வந்திடும் விந்து தன்பால் வைகரி யாதி மாயை, முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம், தந்திடுஞ் சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே” (1.19) எது கண்டு கொள்க. இங்ஙனம் பிரகிருதி மாயையை அவ்வியத்தமென்றும் மூலமென்றும் பெயர் கூறிய தேதென்னில், பிரகிருதி மாயைக்கு மூலப் பிரகிருதி என்றும் அவ்வியத்தமென்றும் புமானென்றும் மானென்றும் மாயையென்றும் உள்ளமென்றும் ஆன்ம தத்துவமென்றும் பெயராகையால் அப்படிச் சொன்னதென அறிக. என்று இங்ஙனங் கூறிவந்த வகைகளால் ஆன்மா ஒருவிடயத்தைக் கொள்ளுமிடத்துப் பதினெட்டுக் கருவியுங் கூடியே புசிக்கவேணும் என்பதை அநுபவத்தாற் கண்டு கொள்க.
இங்ஙனம் பொருள் கூறிவந்த இந்தச் செய்யுளின் முதற்பாகமாகிய “மருவிய பொறியில் ஒன்றும் மாபூதம் ஐந்தில் ஒன்றும் கருவிகள் நான்கும் நீங்காக் கலாதிகள் ஐந்துங் கூடி யொரு புலனுகரும்” என்ற பதத்தை ஐக்கியவாதியை நோக்கி மறுத்துக் கூறிய தென்னவுமாம். அஃதெங்ஙனேயென்னில், உணர்த்து முறைமைக்குச் சொல்லுமிடத்து ஆணவ மலத்தான் மறைப்புண்டு கிடக்கும் ஆன்மாவைச் சிவன் மாயா கருவிகளைக் கூட்டி உணர்த்துவ னென்றமையால், அப்படி ஆணவமலமென்பது ஒன்றுமில்லை மாயா கருவிகளே ஆன்மபோதத்தை மறைக்குமென்பது ஐக்கியவாதி கருத்தாகையால், மாயா கருவிகள் கூடியே ஆன்ம போதம் சீவிக்குமென்று இந்தப் பதம் நடக்கையால் அவனை மறுத்துக் கூறினதென்றதென அறிக. இனி, அந்த ஒழுங்கொழிந்து உயிருமொன்றைத் தெரிவுறாதென்ற பதமும் அவிகாரவாதியை நோக்கி மறுத்துக் கூறினது என்னவுமாம். அஃதெங்ஙனே என்னில், அவன் ஆன்மா தானே அறியுமென்று சொல்லுகையால் இந்தப் பதங் கருவிகள் கூடியே ஆன்மா அறியுமென்றமையால் அவனை மறுத்த தென்றதென அறிக. இனி, அவனொழிந் தத்திரள்களுஞ் செயலிலாவே என்ற பதமும் சங்கிராந்தவாதியை நோக்கி மறுத்துக் கூறின தென்னவுமாம். அஃதெங்ஙனே என்னில், அவன் ஆன்மா அறியாது கருவிகள் அறியுமென்று சொல்லுகையால் இந்தப் பதம் ஆன்மாவைக் கூடாமற் கருவிகள் அறியாதென்று மறுத்துக் கூறுகையால் அவனை மறுத்ததென அறிக. இந்த மூன்று வகைக்கும் உதாரணம் சங்கற்ப நிராகரணத்திலே கண்டு கொள்க. இதனாற் சொல்லியது சிவன் ஆன்மாக்களை உணர்த்தும் முறைமையில் ஆன்மாக்கள் பதினெட்டுக் கருவிகள் கூடி அறியுமென்றும் கருவிகளைக் கூடாமல் ஆன்மா அறியாதென்றும் ஆன்மாவைக் கூடாமற் கருவிகள் தாமாக அறியாதென்றுஞ் சொன்ன முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் முற்கூறிய வகையே அவத்தைப்பட்டுக் கிடக்கும் ஆன்மாக்களுக்குச் சிவன் உணர்த்து முறைமையும் உண்டாமாகையால் அவத்தைக்குமேல் ஐந்தாஞ் சூத்திரமாகிய உணர்த்து முறைமை யென்னும் அதிகாரம் வைக்கப்பட்டது. இவ்வதிகாரத்தில் ஐந்தாஞ் சூத்திரம் நின்ற முறைமை எங்ஙனே யென்னில், சிவஞானபோதத்தில் சூசூவிளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு, அளந்தறிந் தறியா ஆங்கவை போலத், தாந்தம் உணர்வின் தமியருள், காந்தங் கண்ட பசாசத் தவையே” என்னும் ஐந்தாஞ் சூத்திரத்துக்கு சூசூஇவ்வான்மாக்களிடத்துத் தமது முதலுபகாரம் உணர்த்துதனுதலிற்று” என்றமையால், இந்நூலினும் இவ்வதிகாரத்து சூசூமருவிய பொறியில் ஒன்றும்” (63) என்ற விருத்தந் தொடங்கி சூசூஅறிந்திடும் மனாதி” (67) என்ற விருத்தம் முடிவாகிய செய்யுள் ஐந்தும் ஆன்மாக்களைச் சிவனுணர்த்து முறைமையைச் சொல்லுகையால் இதுவும் ஐந்தாஞ் சூத்திரமாக நின்றதென அறிக. இச்செய்யுட்களில் அவை வருமாறு எங்ஙனே யென்னில், “தனக்கென அறிவி லாதான்” (64) என்ற செய்யுளில் “தனக்கென வறியா னாலிச் சகலமு நுகருந் தானே” எம், சூசூஅறிந்திடும் மனாதி” (67) என்ற செய்யுளில் “கன்மத் தொன்மை அறிந்தவை நுகரு மாறும் அருளுவன் அமலன் தானே” எம் வருகையால் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இங்ஙனம் இவ்வதிகாரத்துக்கு வகுத்த செய்யுட்களிற் சில விருத்தங்களைச் சூத்திரத்துக்கு உவமை காட்டி மற்ற விருத்தங்களுக்கு உவமைகாட்டாத தேதென்னில், அஃதாவது அவை இந்தப் பொருளுக்கு மாறுபாடு சொல்லுஞ் சமயிகள் கருத்துக்களை மறுத்த செய்யுட்களாகையாலென அறிக. மேல்வருஞ் சூத்திரங்களுக்கும் இங்ஙனங் கண்டுகொள்க.
இனி, இவ்வதிகாரத்துக்கு முதற் செய்யுளாகிய “மருவிய பொறியி லொன்றும்” என்ற செய்யுளுக்குத் தொந்தனை வருமாறு : அப்படி அவத்தைப்பட்டுக் கிடக்கும் ஆன்மாக்கள் உணருமுறைமை எங்ஙனேயென்று வினாயதற்கு உத்தரம் அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
அப்படி ஆன்மாவுங் கருவிகளுந் தம்மிற் கூடி அறியுமாற்றாற் கர்த்தா உணர்த்துவனென்பான் ஏனென்று வினவின மாணவகனை நோக்கி அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

தனக்கென அறிவி லாதான் தானிவை அறிந்து சாரான்
தனக்கறி விலாத வாயில் தான்அறி யாது சாரா
தனக்கென அறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன்
தனக்கென அறிவா னால்இச் சகலமும் நுகருந் தானே.

தத்துவஞ் சடமுயிர் தானா வறியாது
ஒத்துணர் வதுபதி யுணர்வா லென்றது.

பொழிப்புரை :

தனக்கென அறிவி லாதான் தான் இவை அறிந்து சாரான் ஒருத்தர் அறிவியாமல் தனக்கெனவோர் அறிவில்லாத ஆன்மா அதீதப்பட்டுக் கிடக்கும் அவதரத்துத் தானாக இந்தத் தத்துவங்களைக் கூடி அறியமாட்டான்; தனக்கறி விலாதவாயில் தானறி யாது சாரா தனக்கென்ன ஒரு காலத்திலும் அறிவற்றுச் சடமாயிருக்கப்பட்ட இந்திரியங்கள் அதீதப்பட்டுக் கிடக்கிற ஆன்மாவை அறிந்து கூடமாட்டாது. அப்படியானாலும் ; தனக்கென அறிவிலாதான் தத்துவ வன்ன ரூபன் தனக்கென்னவோர் அறிவில்லாத ஆன்மா பஞ்சவன்னங்களை யடுத்த படிகம்போலத் தத்துவங்களினது சொரூபமே தனக்கு வடிவாய் நிற்பன். இப்படிக் கூடினதன் தன்மையாய் நிற்கிறவனாகையால் தற்சுதந்தர முள்ளவனல்ல. ஆனால் இவைதன்னிற் கூடியறிந்தபடி எங்ஙனே என்னில்; தனக்கென அறிவானால் இச் சகலமும் நுகருந்தானே தனக்கொருவர் அறிவியாமல் தானே சர்வத்தையும் அறியத்தக்க சிவனாலே ஆன்மா சர்வத்தையும் அறிந்து சீவியாநிற்பன். ஆன்மா சர்வத்தையும் அறிவனென்றது அந்தக் கரணங்களோடுஞ் சோத்திராதிகளோடுங் கூடிச் சத்தாதிகளை அறிவனென்றதென அறிக.
ஆன்மாவைத் தனக்கென அறிவிலாதான் என்றது அதீதப்பட்டுக் கிடக்கும் அவதரத்துச் சரீர சம்பந்தனாயிருந்தும் ஒன்றையும் அறியாமற் கிடக்கையினாலென அறிக. இதற்கு பிம் சிவஞான போதத்தில் “அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாங்கிடப்பச், செவ்விதின் அவ்வுடலிற் சென்றடங்கி” (3.4) எது கண்டு கொள்க. இனி, கருவிகளைச் சடமென்றதும் அப்படி ஒன்றையும் அறியாமற் கிடக்கையினாலென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மாவுக்குத் தனக்கென ஓர் அறிவில்லாத படியாலே தானாகத் தத்துவங்களைக் கூடி அறியமாட்டா தென்றும் கருவிகள் சடமாகையாலே அவை தானாக ஆன்மாவைக் கூடி அறியமாட்டாதென்றும் இவை இரண்டையுங் கூட்டிக் காரியப் படுத்துவது சிவனேயென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி ஆன்மாவையுங் கருவிகளையுஞ் சிவனே கூட்டி அறிவிப்பனென்கிறதென்ன சிவன் விகாரமறநிற்க அவனருளைக் கொண்டு ஆன்மா தானே சுட்டி அறிந்து வருமென்கிற அவிகாரவாதியையும் அப்படி அல்லவென்று ஆன்மாவுக்காகச் சிவன் தானே பிரபஞ்சத்தைச் சுட்டியறிந்து நிற்பனென்ற பரிணாமவாதியையும் மறுத்தருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

கண்டறி புலன்கள் காணும் கருத்தினால் ஒருத்தன் ஞானம்
கொண்டுளம் அறியு மென்னில் கொள்பவன் முதலி யாகும்
மண்டிய உணர்வு யிர்க்கா மன்னிநின் றறியு மென்னில்
உண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே.

இப்பரி சன்றி யிகலுறு சமயிகள்
செப்பிய மொழியைத் தப்பென மறுத்தது.

பொழிப்புரை :

கண்டறி புலன்கள் காணுங் கருத்தினால் கண்டு கேட் டுண்டுயிர்த்து உற்றறியப்பட்ட இந்திரியங்களைக் கொண்டு ஆன்மா தனக்கேற்ற விடயங்களைக் கொள்ளும் முறைமை போல; ஒருத்தன் ஞானம் கொண்டுளம் அறியுமென்னில் எங்குந்தா னொருவனுமாய் நின்று சர்வான்மாக்களுக்கும் உயிர்க்குயிராயும் நின்று சேட்டிப்பிக்கிற சிவனுடைய ஞானத்தைக் கொண்டு ஆன்மா அறியு மென்று நீ சொல்லில்; கொள்பவன் முதலியாகும் என்றிங்ஙனம் அறிந்து கொள்ளுகிற ஆன்மாவே கர்த்தாவாவன். அப்படியல்ல ஆன்மாவுக்காகச் சிவனறிவனென்ற பரிணாமவாதியை மறுத்தருளிச் செய்கின்றது ; மண்டிய உணர்வுயிர்க்கா மன்னிநின் றறியுமென்னில் சிவனுடைய மிகுத்த ஞானமானது ஆன்மாவுக்கா நிலைபெற் றறியுமென்று நீ சொல்லில் ; உண்டிட வேண்டுவானுக் கொருவன்வே றுண்டலாமே பசித்திருப்பான் ஒருவனுக்காக அயலே ஒருவனுண்டானென்னுந் தன்மைக் கொக்கும். ஆதலாற் சிவனுடைய ஞானத்தைக் கொண்டு ஆன்மா முதன்மையாக நின்றறிவது மில்லை ஆன்மாவுக்காகச் சிவனறிந்து நிற்பதுமில்லை என்பது கருத்து.
என்னவே சிற்றறிவாயுள்ள ஆன்மாவைப் பேரறிவாயுள்ள சிவனறிவிக்க அந்த அறிவே ஆதாரமாக ஆன்மா அறிவனென்றதெனக் கொள்க. இதற்கு பிம் திருவாசகத்தில் “அவனரு ளாலே அவன்தாள் வணங்கி” (1.18) எம், தேவாரத்தில் “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” (6.95.3) எம் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க.
உதாரணம் : ஆன்மா இந்திரியங்களைக் கொண்டு விடயங்களை அறிந்தாற் போலச் சிவன் விகாரமற நிற்க அவனருளைக் கொண்டு ஆன்மா முதன்மையாக நின்றறிவனென்று அவிகாரவாதி சொன்னதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச் சலம்இல னாகிச் சார்ந்தவர்க் கென்றும் நலம்மிக நல்கும் நாதனை அணைந்து பூழி வெம்மை பொருந்தா துயர்ந்த நீழல் வாழும் நினைவினர் போலத் திருவடி நீழல் சேர்ந்து கருவுறு துயரங் களைந்திருந் திடுமே” (15.59.65) எது கண்டு கொள்க. இது அத்தமாகாதென் றவனை மறுத்ததற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “பாதவம் என்றும் சேதனம் இன்மையின் இளைத்தோர் வம்மின் என்பதும் துன்பம் விளைத்தோர் தம்வயின் வெறுப்பும்ஒன் றிலதே பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம் வெய்ய பூழியின் நொய்யென பாடபேதம் உள்ளுற அழுங்கி ஆற்றுதல் இன்றி யாறியங் குநர்முன் தோற்றிடும் என்று சொல்லவும் இலதால் இவ்வகை கடவுட் கியம்புதல் தவறே” (16.40.47) எது கண்டு கொள்க. ஆன்மாவுக்குச் சிற்றறிவுதானுமில்லை அவனுக்காகச் சிவன் அறிவனென்று பரிணாமவாதி சொன்னதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “அறிவோன் தானும் அறிவிப் போனும் அறிவாய் அறிகின் றோனும் அறிவுறு மெய்ப்பொருள் தானும் வியந்திது வெனப்படும் அப்பொருள் யாவும் அவனே என்றும்” (17.28.31) எது கண்டு கொள்க. இது அத்தமல்லவென் றவனை மறுத்ததற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “அறிவொன் றில்லோர்க் கிறையருள் உதவுதல் பிறிவறி வரிய செறிஇருள் இடத்தோர் அந்தகர்க் காண வந்தோர் எம்மை நீவிரும் காண வேணும் என்றாங் கெடுத்தொரு தீபம் கொடுத்ததை ஒக்கும் இச்செயற் கிறைவன் கொச்சையன் அன்றே” (18.115.120) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது சிவன் விகாரமற நிற்கச் சிவனுடைய ஞானத்தைக் கொண்டு ஆன்மா அறிவனென்ற அவிகார வாதியையும் அப்படியல்ல ஆன்மாவுக்காகச் சிவனறிகிறதொழிய ஆன்மாவுக்கென்ன ஒரு சிற்றறிவுதானும் இல்லையென்கிற பரிணாம வாதியையும் மறுத்த முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இப்படியே சிவனறிவிக்கச்செய்தே அந்தச் சிவன் செய்விக்கிறதை யறியாமல் ஆன்மாக்கள் நான் செய்தேன் பிறர் செய்தாரென்று சுட்டிக் கொண்டு அந்தச் சிவனை இழந்து நிற்கிற முறைமை யெப்படியென்று வினவின மாணவகனை நோக்கித் திருஷ்டாந்த முகமாக அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

இருள்நனி இரவி தான்வந் திரித்தலும் இரவில் எண்ணும்
பொருள்நிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல
மருள்நிலை யெங்கு நீங்க மகிழ்ந்துயிர் தன்னுள் மன்னும்
அருளையும் ஒழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே.

பருதி யுதவியைப் பாரறி யாபோல்
அருளுத வியையுயிர் அறியா தென்றது.

பொழிப்புரை :

இருள்நனி இரவி தான்வந் திரித்தலும் இருளினது மிகுதியை ஆதித்தன் வந்து நீக்கினவிடத்து ; இரவி எண்ணும் பொருள் நிலைகண்டு மாந்தர் பொருந்திடுமாறு போல ஆன்மாக்கள் இராக்காலத்தில் விசாரித்த காரியங்களெல்லாம் அவன் சந்நிதியிலே கண்டு தத்தந் தொழில்களைச் செய்யுமிடத்து இந்த ஆதித்தன் காட்டவல்லவோ நாம் கண்டோ மென்று நினையாமல் அந்த ஆதித்தனை இழந்து நின்று தங்கள் சாமர்த்தியமாகக் கண்டு செய்து வருமாறு போல; மருள்நிலை யெங்கும் நீங்க மகிழ்ந்துயிர் தன்னுள் மன்னும் அருளையும் ஒழிய ஆணவ மலத்தின் மறைப்பு எவ்விடத்தினும் விட்டு நீங்க விருப்பத்துடனே ஆன்மாவினிடத்திலே நிலை பெற்றுப் பிரகாசிக்கிற அருளாலே ஆன்மாக்கள் அறிந்து சீவித்து நிற்க இந்த அருளாலொழிந்தறிந்து புசிக்கக்கூடாதென்று அறியாமல் தாம் தஞ் சாமர்த்தியத்தினாலே அல்லவோ அறிந்து புசிக்கிறோமென்று விசாரித்திருக்கிறது எப்படியென்னில் ; ஞாலத்தறிந்தவாறு அறியுமன்றே முன் சொன்னபடியே பிரபஞ்சத்தில் ஆன்மாக்கள் ஆதித்தன் சந்நிதியிலே கண்டுந் தத்தந் தொழில்கள் செய்யச் செய்தேயும் அந்த ஆதித்தனை இழந்து நின்று தாங்கள் செய்தோமென்னும் முறைமை போலும்.
மருள்நிலை எங்கும் நீங்க என்றது ஆன்மாக்கள் புசிக்குமிடம் எங்கும் அவதரந்தோறும் மலநீங்கு மென்றதென அறிக. இதற்கு பிம் “நிலைக்குணங் கணந்தொறு மவத்தை நீடுதல்” எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது சர்வான்மாக்களும் ஆதித்தனாலே இருளானது நீங்கத் தத்தம் தொழில்கள் செய்யச் செய்தேயும் அவனை இழந்து தாங்கள் செய்தோமென்னுந் தன்மைபோலச் சிவனாலே அறிந்து சர்வமும் சீவிக்கச் செய்தேயும் அந்தச் சிவனை இழந்து தாங்கள் செய்தோமென்று நிற்கிறதும் அத்தன்மைக்கு ஒக்குமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இந்த அத்தத்தை இன்னமும் ஒரு அநுபோக திருஷ்டாந்தமாக அருளிச் செய்கின்றது.

பண் :

பாடல் எண் : 5

அறிந்திடும் மனாதி வாயி லானவை அவன்ற னாலே
அறிந்திடும் என்றும் ஒன்றும் அறிந்திடா அவைபோல் யாவும்
அறிந்திடும் அறியுந் தன்மை அறிந்திடா கன்மத் தொன்மை
அறிந்தவை நுகரு மாறும் அருளுவன் அமலன் தானே.

பொறியுங் கரணமும் போலுயிர் அருளால்
அறியுந் தன்மை யறியா தென்றது.

பொழிப்புரை :

அறிந்திடும் மனாதி வாயிலானவை யாதாமொன்றை அறியத்தக்க அந்தக்கரணங்களும் இந்திரியங்களுமென்று சொல்லப் பட்ட கருவி கரணங்கள்; அவன்றனாலே அறிந்திடும் ஆன்மாவி னாலே பிரபஞ்சவிடயத்தை அறியாநிற்கும். அப்படி அறியச் செய்தேயும்; என்றும் ஒன்றும் அறிந்திடா எக்காலமும் ஆன்மாவினாலே அல்லவோ நாமறிகிறோமென்று அந்தக்கரணங்களும் இந்திரியங்களுஞ் சிறிதும் அறியமாட்டாது ; அவைபோல் தனக்குக் காட்டாக உள்ள ஆன்மாவை அந்தக் கருவி கரணங்கள் அறியாதிருந்தாற்போல ; யாவும் அறிந்திடு மறியுந்தன்மை அறிந்திடா சர்வான் மாக்களுந் தங்களுக் கறிய வேண்டியதெல்லாம் சிவனுடைய ஞானத்தாலே அறிந்து புசியா நிற்கச் செய்தேயும் அந்த அருளாலே அல்லவோ அறிந்து புசிக்கிறோமென்று அறியமாட்டார்கள். ஆகையால் அதுவுமன்றி; கன்மத் தொன்மை அறிந்தவை நுகருமாறும் அருளுவன் அமலன் தானே பழையதாக ஊட்டுகிற கன்ம பலன்களையும் ஆன்மாக்கள் தாமே அறிந்து புசிக்கமாட்டார்கள். அது கொண்டே அவையிற்றைப் புசிக்கிற முறைமைகளையுங் கூட்டுவன் நிமலனாகிய சிவன் தானே.
கன்மத் தொன்மை அறிந்தவை நுகருமாறும் அருளுவன் அமலன் தானே எது சைவர் அத்தத்தை மறுத்ததென்னவுமாம். அஃதெங்ஙனே யென்னில், அவர்கள் ஊழாயுள்ள கன்மங்களைப் புசிக்குமிடத்து ஆன்மாக்கள் தாமே அறிந்து புசிக்கும், சிவன் கூட்ட வேண்டுவதில்லை யென்கையாலென அறிக. அஃதாவது சிவன் ஆன்மாவையுங் கருவிகளையுங் கூட்டினாற் பின்னைத் தானே சீவிக்கு மென்பது கருத்து. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “அண்ணல் கலைமுத லாக நிலவிய கருவிகள் விளக்கென உதவுந் துளக்கறப் பொருந்தி இருவினை நுகர்வில் வருவினை செய்து மாறிப் பிறந்து வருநெடுங் காலத்து” (18.143.147) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது அந்தக்கரணங்களும் இந்திரியங்களும் ஆன்மாவினாலே அறிந்து புசிக்கச் செய்தேயும் அந்த ஆன்மாவினாலே யல்லவோ அறிகிறோமென்று அறியாதாற்போல ஆன்மாக்களுஞ் சிவனாலே அறிந்து சீவிக்கச் செய்தேயும் அந்தச் சிவனை இழந்து நிற்கிறதும் அப்படி யென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

காட்டிடும் கரண மொன்றும் இல்லையேற் காணொ ணாதாம்
நாட்டிய இவற்றான் ஞானம் நணுகவும் ஒண்ணா முன்னம்
ஈட்டிய தவத்தி னாலே இறைஅரு ளுருவாய் வந்து
கூட்டிடும் இவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே.

முற்பவத் துயிர்கள் முயன்றநற் றவத்தால்
அற்புதன் திருவுரு வாவ னென்றது.

பொழிப்புரை :

காட்டிடும் கரணமொன்றும் இல்லையேற் காணொணா தாம் உனக்குக் காட்டாகவுள்ள கருவிகளொன்று மில்லாத பொழுது பழைய அறிவுதானும் இல்லையாய்ச் சுத்த கேவலமே முத்தியென்கிற பாடாணவாதி யத்தமுமாய் முடியும்; நாட்டிய இவற்றான் ஞானம் நணுகவும் ஒண்ணா இங்ஙனஞ் சொல்லப்பட்ட தத்துவங்களோடுங் கூடி அறியுமென்னில் ஒரு காலத்தும் அருளிற்சென்று கிட்டவும் ஒண்ணாது. இது சங்கிராந்தவாதி அத்தமுமாய் முடியும். இந்த இரண்டு வகையுமன்றி அந்த ஞானத்தை அறிந்து பெறுமுறைமை எங்ஙனே என்னில் ; முன்னம் ஈட்டிய தவத்தினாலே இறை அருளுருவாய் வந்து கூட்டிடும் ஆன்மாக்கள் முன் ஜநநங்களிற் செய்த சிவபுண்ணியத்தின் மிகுதியாலே தம்பிரானார் ஆசாரிய மூர்த்தமாகத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து கூட்டா நிற்கும் ; இவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே இங்ஙனம் முன்சொன்ன கேவல சகலம் இரண்டையும் நீக்கி ஆரவாரத்தை யுடைத்தாகிய வீரக்கழல் பொருந்தின ஸ்ரீபாதத்தைச் சென்று பொருந்தும் முறைமையை.
உதாரணம் : கருவிகளெல்லாங் கழன்ற கேவலம் பாடாண வாதி யத்தமாமென்று மறுத்ததற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “காட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி என வகுத்துரைக்கிற் கரணா பாவம் மரணங் கருமரம் ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே யனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா தனிதரு துயரம் எனும்இது திடனே பாடா ணத்திற் கூடா முத்தி” (7.9 15) எம், சித்தியாரில் “கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள், மரணங்கொண் டிடஉறங்க மயங்கிமூர்ச் சிக்க வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச், சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி தவிராது மலமிதுவும் பசுஞான மாகும், அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங் கறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே” (9.3) எது கண்டு கொள்க. இனி, கருவிகளோடுங் கூடிநின்று அறிகிற சகலஞ் சங்கராந்தவாதி அத்தமாமென்று மறுத்ததற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “நிறைந்து நீயாய் நின்றனை யேனும் மறைந்தைம் புலனாய் வாரா யென்றும் கரணம் எல்லாங் கடந்தனை என்றும் மரணம்ஐ ஐந்தின் அப்புறத் தென்றும் முன்னருட் டலைவர் பன்னினர் எனவும் இனையவை ஒழிய அறிகுவ தெவ்வா றென்ற நிற்கலிக் கொன்றிய இன்பம் கூறுதல் தருமருட் பேறினை அன்றே” (14.37.44) எது கண்டு கொள்க. அன்றியும், இந்த விருத்தம் ஆறாஞ் சூத்திர மென்பதற்கு பிம் சித்தியாரில் “அறிவுறும் பொருளோ ஈசனறிவுறா தவனோ வென்னில், அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும், செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்” (6.1) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது கருவிகளெல்லாம் நீங்கின கேவலத்தினாலுங் கருவிகளைக் கொண்டறிகிற சகலத்தினாலுஞ் சிவசொரூபத்தை அறியப்படாதென்னும் முறைமையும் ஆன்மாக்கள் முற்செய்த தவத்தினாலே கர்த்தா ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி அந்த உண்மை ஞானத்தைக் கடாக்ஷித்தருளுவனென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் உணர்த்து முறைமையிற் பிரபஞ்ச காரியப்பட்டு வரும் ஆன்மாக்களுக்கு மலபாகம் வந்து முத்தியும் உண்டாமாகையால், இவ்வதிகாரத்துக்கு மேலாக ஆறாஞ் சூத்திரமும் மேலதற்கோர் புறனடையாகிய ஏழாஞ் சூத்திரமுமாகிய ஞான வாய்மை யென்னும் அதிகாரம் வைக்கப்பட்டது.
இவ்வதிகாரத்துக்குச் சூத்திரம் இரண்டு நின்ற முறைமை யெங்ஙனே யென்னில், “காட்டிடுங் கரணம்” (68) என்ற விருத்த மொன்றும் ஆறாஞ் சூத்திரமாகவும், “பன்னிறங் கவரும்” (69) “மாயைமா மாயை” (70) என்ற விருத்தம் இரண்டும் ஏழாஞ் சூத்திரமாகவும் நின்றதென அறிக. இதற்கு வழியேதென்னில் சிவஞானபோதத்தில் ஆறாஞ் சூத்திரமாகிய “உணருரு அசத்தெனில் உணரா தின்மையின், இருதிற னல்லது சிவசத் தாமென, இரண்டு வகையின் இசைக்கும்மன் னுலகே” எகு சத்தும் அசத்தும் வரைசெய்து நிற்றலானும், “ஈண்டறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து” (வார்த்திகம்) ஆகையினாலும், “அறிவுறும் பொருளோ வீச னறிவுறா தவனோ” எம் “உணராத பொருள்சத் தென்னி லொருபய னில்லை” (6.1.4) எம் சித்தியாரில் ஆறாஞ் சூத்திரத்தில் வருகையாலும், “இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீத கோசரமா யுள்ளது சத்தாயுள்ள சிவம் (சூ. 6, வார்த்திகம்) என்கையாலும், இந்நூலினும் “காட்டிடும் கரண மொன்றும் இல்லையேற் காணொணாதாம், நாட்டிய இவற்றால் ஞானம் நணுகவும் ஒண்ணா” (68) எம் சத்தும் அசத்தும் வரைசெய்து நிற்றலால் இதுவும் ஆறாஞ் சூத்திரமாக நின்றதென அறிக. மற்றுள்ள விருத்தம் இரண்டும் மேலதற்கோர் புறனடையாகிய ஏழாஞ் சூத்திரமாக நின்ற முறைமை எங்ஙனேயென்னில், சிவஞான போதத்தில் ஏழாஞ் சூத்திரமாகிய “யாவையும் சூநியம் சத்தெதிர் ஆகலின், சத்தே அறியா தசத்தில தறியா, திருதிற னறிவுள திரண்டலா ஆன்மா” எகு “மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்” (வார்த்திகம்) எம், உதாரணத்திலும் “அந்நியமி லாமை யரற்கொன் றுணர் வின்றாம், அந்நியமி லானசத்தைக் காண்குவனேல் அந்நியமாக், காணான் அவன்முன் கதிர்முன் னிருள்போல, மாணா வசத்தின்மை மற்று” (7.1) எம் வருங் கருத்தால் இந்நூலினும் “பன்னிறங் கவரும்” (69) என்ற விருத்தத்தில் “வளரொளி போல வையம், தன்னகம் பயிலும் நற்சிற் சடங்களின் தன்மை தாவா” என்கையாலும், “இனி அசத்தினுக்கு உணர்வின்று” (வார்த்திகம்) என்னுங் கருத்தால் “இவ்விரண்டையும் அறிவதாய் உபதேசியா நின்றவறிவு இரண்டின்பாலும் உளதாயுள்ள அதுவே அவ்வான்மாவாம்” (வார்த்திகம்) என்றதால் இந்நூலினும் “மாயை மாமாயை (70) என்னும் விருத்தம் “இருதிற னறிவுள திரண்டலா ஆன்மா” என்னுங் கருத்தைப் பற்றி “மருளெனி லிருளாய் நிற்கும், அருளெனி லொளியாய் நிற்கும்” எம் ஆன்மாவுக்குக் கூடினதன் தன்மைக் கருளிச் செய்கையால் இவையும் ஏழாஞ் சூத்திரமாய் நின்றதென அறிக.
மேல் “காட்டிடுங் கரணம்” என்னும் விருத்தத்துக்குத் தொந்தனையாவது இங்ஙனம் இவ்வதிகாரத்தால் அருளிச் செய்யப்பட்ட ஞானத்தின் உண்மையை அடியேன் போதங் கொண்டு அறியப்படும் பொருளாய் இருக்குமோ அறியப்படாத பொருளாயிருக்குமோ என்று வினவின மாணவகனை நோக்கி அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

பன்னிறங் கவரும் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை
மன்னிலங் கியல்பும் தந்த வளரொளி போல வையம்
தன்னகம் பயிலும் நற்சிற் சடங்களின் தன்மை தாவா
நன்னலம் பெறநி றைந்த ஞானமே ஞான மென்பர்.

பன்னிறம் பளிங்கிற் பற்றிடப் பற்றாப்
பொன்னொளி போலும் மன்னரு ளென்றது.

பொழிப்புரை :

பன்னிறங் கவருந் தொன்மைப் படிகநீ டொளியும் பல நிறங்களையுந் தன்னிடத்திலே கவர்ந்து கொள்ளுகிற அநாதியே யுடைத்தாகிய படிகத்தினது நிலைபெற்ற பிரகாசத்தினையும்; பன்மை மன்னிலங் கியல்பும் அந்தப் படிகத்திலே பொருந்தப்பட்ட பல வன்னங்களும் அதிலே பிரதிபிம்பஞ்செய்து நிற்கிற முறைமையும்; தந்தவள ரொளிபோல அவை இரண்டையுங் கூட்டிக் காரியப் படுத்துகிற ஆதித்தப் பிரகாசம் போல; வையம் தன்னகம் பயிலும் நற்சித்து பிரபஞ்சமாகிய பாசங்களையும் ஆன்மாக்களையுந் தன்னுடைய சேட்டையாலே கூட்டிக் காரியப்படுத்தி நிற்குந் திருவருள் ஞானமானது அப்படிக் கூட்டிக் காரியப்படுத்தி நிற்கச் செய்தே முற்கூறிய உபமானத்திற் படிகத்தையும் வன்னங்களையுங் கூட்டிக் காரியப்படுத்தின ஆதித்தப் பிரகாசமும் அவையிற்றில் தோய்வற்று நின்றாற்போல ; சடங்கள் தன் தன்மை தாவா நன்னலம் பெற நிறைந்த ஞானமே ஞானமென்பார் சடமாகிய பாச மயக்கந் தன்னை வந்து பொருந்தாதபடி தோய்வற நிற்கிற திருவருள் ஞானத்தையே மேலான உண்மை ஞானமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
பன்னிறங் கவருந் தொன்மைப் படிக நீடொளியும் பன்மை மன்னிலங்கியல்புந் தந்த வள ரொளிபோல என்று படிகத்தையும் வன்னங்களையும் ஆதித்தப் பிரகாசத்தையும் உபமானமாகக் கூறியது படிகம் ஆன்மாவுக்கு உவமையென அறிக; வன்னங்கள் பாசத்துக்கு உவமையென அறிக; ஆதித்தப் பிரகாசந் திருவருள் ஞானத்துக்கு உவமையென அறிக. இனி, வையந்தன்னகம் பயிலும் எகு வைய மென்றது ஆன்மாக்களும் பாசங்களுமென்று பொருள் கூறியதற்கு பிம் தத்துவ விளக்கத்தில் “கருமலி பாசம சேதனங் கட்டுண்பர் சேதனரென், றிருமையில் வைய மடங்குமென் றெண்ணுக” (9) எது கண்டு கொள்க. இனி, நற்சித்து எகு இந்நூலிலே “இருளகற்றிப் பாதம் உற்றிடு நற்பசு வருக்கம்” (19) என்னுங் கருத்தைப் பற்றி ஆன்மாவிலே வைத்துக் கொண்டு மலபாகம் வந்த ஆன்மா என்று பொருளுரைப்பாரு முளர். அப்படியானாலும், இந்தச் செய்யுள் ஞானவாய்மையென்னும் அதிகாரத்தில் உள்ளதாகையால் அந்தத் திருவருள் ஞானத்திலே கூட்டிப் பொருளுரைப்பது ஒழிய ஆன்ம ஞானத்திற் கூட்டிப் பொருள் கூறுகை வழியல்லவென அறிக. அன்றியும், நற்சித்து என்பதைத் திருவருள் ஞானமென்பதே பொருளாமென்பதற்கு பிம் இந்நூலைப் பின்சென்ற நூலாகிய திருநெறி விளக்கத்திலே இந்தச் செய்யுளுக்கு எதிரிடை விருத்தமாகிய “பற்றிய நிறங்க ளாகும் பளிங்கின தொளியும் பற்றி, நிற்றலை யளிக்கும் வெய்யோ னீடொளி யதுவும் போல, முற்றுல கதற்குச் சார்வாய் முயற்றினும் முந்நீர் விண்போற், சிற்றினிற் சடங்கள் தோயா என்பர்சிற் சத்தி சேர்ந்தோர்” என்பதற்குப் பொருள் திருவருள் ஞானம் பிரபஞ்ச காரியப்படுத்தி நிற்கச் செய்தே தோய்வற்று நிற்குமென்பதற்குச் சமுத்திரத்திற் கூடின ஆகாயத்தைப் போலத் தோய்வற நிற்குமென்று கூறுகையால், நற்சித்து என்றதைத் திருவருள் ஞானமென்பதே பொருளென அறிக. அன்றியும், இச்செய்யுளின் கருத்தாகிய குறள் வெண்பாவிலும் “பன்னிறம் பளிங்கிற் பற்றிடப் பற்றாப் பொன்னொளி போலு மன்னரு ளென்றதும்” இப்பொருள் பற்றி நின்றதென அறிக. அல்லதூஉம், சதுர்த்த சங்கிரகத்திலே இந்தச் செய்யுளுக்குச் சேர்த்த கிரந்தத்தினுங் கண்டு கொள்க. இனி, நன்னலம் பெற நிறைந்த ஞானமே ஞானம் எகு சிவனுடைய நலத்தை மற்றொருவர் பெற வேண்டுகையால் இந்தச் செய்யுளுக்குச் சேர்த்த கிரந்தமும் அப்பொருளைப் பற்றி நின்றதென அறிக. அன்றியும், இதற்கு மலபாகம் வந்த ஆன்மாக்களுக்குத் திருவருள் ஞானமுண்டாம்படி யென்று பொருள் உரைப்பினுமாம். அதற்கு வழியேதென்னில், முற்கூறிய உபமானத்தில் ஆதித்தப் பிரகாசத்தினாலே படிகத்திலே வன்னங்கள் பிரதிபிம்பஞ் செய்யுமிடத்து அந்த ஆதித்தன் சாயவோடும் பொழுது அதிலே பிரதிபிம்பஞ் செய்தும் அந்த ஆதித்தன் மத்தியானமான பொழுது அந்தப் படிகத்தின் உச்சியிலே நேர்பட்ட அவதரத்து அந்த வன்னங்கள் கூடியிருக்கச் செய்தே அந்தப் படிகம் வன்னங்களிற் பற்றாமல் ஆதித்தப் பிரகாசத்தைக் கவர்ந்து கொண்டு நின்றாற் போல அந்தத் திருவருள் ஞானமும் ஆன்மாக்களுக்கு மலபாகம் வாராத நாளெல்லாம் பிரபஞ்சத்திலே புசிப்பித்து மலபாகம் வந்த அவதரத்து அந்தப் பிரபஞ்சப் பற்றறும்படி நேர்பட்டுத் தனது திருவருளைக் கடாக்ஷித்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் திருவருட் பயனில் “தனக்கு நிழலின்றாம் ஒளிகவருந் தம்ப மெனக்கவர நில்லா திருள்” (67) எது கண்டு கொள்க. அன்றியும் அந்தத் திருவருள் ஞானம் ஆன்மாக்களைப் பெத்த முத்தி இரண்டினுங் காரியப்படுத்தி நிற்கும் என்பதற்கு பிம் இந்நூலில் “ஏற்ற விவை” (18) என்னுஞ் செய்யுளிலே “போற்றலரும் அருளருளே யன்றி மற்றுப் புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே” எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஆதித்தப் பிரகாசமானது படிகத்தையும் வன்ன பேதங்களையும் கூட்டிக் காரியப்படுத்தி நிற்கச் செய்தே அந்த வன்னங்களில் தோய்வற நின்றாற்போலச் சிவனுடைய திருவருள் ஞானமும் ஆன்மாக்களையும் பாசங்களையுங் கூட்டிப் பிரபஞ்ச காரியப்படுத்தி நிற்கச் செய்தேயும் அந்தப் பிரபஞ்ச பாசங்களில் தோய்வற நிற்கின்ற ஞானத்தையே உண்மைஞான மென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இவ்வதிகாரத்துக்குமேல் வரும் விருத்தம் இரண்டு ஏழாஞ் சூத்திரத்தின் கருத்தாகையால் மேலதற்கோர் புறனடையாகிய ஏழாஞ் சூத்திரத்தில் வைத்துக்கொண்டு அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.
மேல் வரும் விருத்தத்துக்குத் தொந்தனையாவது அப்படி ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்து கடாக்ஷித்தருளுகிற ஞானமேதென்று வினவ மேலொரு திருஷ்டாந்த முகமாக அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்.

இருண்மல மொழிய ஏனைய ஒளியாய்
அருளுடன் மருவு மவர்திற முரைத்தது.

பொழிப்புரை :

மாயைமா மாயை மாயாவரு மிருவினையின் வாய்மை ஆய ஆருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும் அசுத்த மாயையில் தோற்றப்பட்ட தத்துவம் முப்பத்தொன்றுஞ் சுத்த மாயையில் தோற்றப்பட்ட தத்துவம் அஞ்சுமாகத் தத்துவம் முப்பத்தாறுங் கெடாதே வரப்பட்ட புண்ணிய பாவங்கள் மேன்மேல் வர்த்தியா நிற்கிற ஆன்மாவினிடத்திலே ஆணவ மலமாகிய அறியாமை மேலிட்ட பொழுது ஆன்மாவும் அறியாமையாய் நிற்கும்; மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை ஆய ஆருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும் அசுத்த மாயையில் தோற்றப்பட்ட தத்துவம் முப்பத்தொன்றுஞ் சுத்த மாயையில் தோற்றப்பட்ட தத்துவம் ஐந்தும் ஆகத் தத்துவம் முப்பத்தாறும் மாய்ந்து போவதாகப் புண்ணிய பாவங்கள் க்ஷயம் வந்த ஆன்மாவிடத்திலே அருள்மேலிட்ட பொழுது ஆன்மாவும் அறிவாய்ப் பிரகாசித்து நிற்கும்.
உதாரணம் : இந்தச் செய்யுளுக்கிட்ட தொந்தனையில் ஆன்மாவை அருளும் மலமும் அநாதியே கூடிநிற்கு மென்பதற்கு பிம் சித்தியாரில் ஏழாஞ் சூத்திரத்தில் “சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால்” (7.3) என்ற செய்யுளின் முடிவிலே “சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம், வைத்திடும் அநாதியாக வாரிநீர் லவணம் போலும்” எது கண்டு கொள்க. இந்தச் செய்யுளின் முற்பதத்திலும் பிற்பதத்திலும் இருளெனில் மருளாய் நிற்கும், அருளெனில் ஒளியாய் நிற்கும் என்றது ஆன்மா மலத்தோடும் அருளோடும் கூடி அதுவதுவாய் நிற்கு மென்றது. இதற்கு பிம் சிவஞான போதத்தில் ஏழாஞ் சூத்திரமாகிய “யாவையுஞ் சூநியம்” என்ற செய்யுளின் பிற்பதத்தில் “இருதிற னளிவுள திரண்டலா ஆன்மா” எது கண்டு கொள்க. இனி, அருளானது ஆன்மாவோடும் அநாதியே கூடியிருக்கச் செய்தே மலபாகம் வாராத ஆன்மாக்களுக்கு அந்த அருள் கூடி நிற்கச் செய்தேயும் பிரகாசியாதென்று பொருள் கூறியதற்கு பிம் திருவருட் பயனில் “ஊமன்கண் போல வொளியு மிகஇருளே, யாமன்கண் காணா தவை” (19) எது கண்டு கொள்க. ஊனமென்றது கூகையென அறிக. ஒளியும் மிக இருளே யென்றது கூகைக்குப் பகற்காலத்திற் கண் தெரியாதென்பது கருத்து. திருவள்ளுவ தேவரும் “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை” (குறள் 481) என்றதும் இப்பொருள் பற்றியென அறிக. அன்றியும் சித்தியாரிலேயும் “இங்குந்தான் அந்த கருக் கிரவி இரு ளாகும் ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம்” (11.8) என்பதும் இப்பொருள் பற்றியென அறிக. இனி இந்தச் செய்யுள் மாயை மாமாயையென்றும் மிதித்ததை மிதித்து ஒரு சொல்லை இருகாற் சொல்லியதே தென்னில், “கூறிய பொருளைக் கூறலுமாகும் வேறொரு பொருளை விளைக்கு மாகில்” என்னும் விதியைப் பற்றியென அறிக. வேறொரு பொருளை விளைத்த லாவது முற்பதத்துக்கு மாயாவென்றது மாயா கன்மங்கள் க்ஷயம் வாராத ஆன்மா என்றதென அறிக. பிற்பதத்துக்கு மாயா என்றது மாயா கன்மங்கள் க்ஷயம் வந்த ஆன்மா என்றதென அறிக. அப்படி ஒரு சொல் இரண்டாவது எங்ஙனேயென்னில், வாராப்போனானென்ற சொல் வந்து போனதற்கும் வாராமற் போனதற்கும் நின்றாற் போலவென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மாக்கள் மாயா கன்மங்கள் க்ஷயம் வாராத நாள்களெல்லாம் மலத்தோடுங் கூடி அறியாமையாய் நிற்பார்களென்றும் மாயா கன்மங்கள் க்ஷயம் வந்த நாளுக்கு அருளோடுங் கூடிப் பிரகாசமாய் நிற்பார்களென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் அநாதியே கூடிநின்று காரியப்படுத்தி நிற்கிற அருளானது இற்றைவரையும் பிரகாசியாமல் இருந்ததேனென்று வினவின மாணவகனை நோக்கி ஆன்மாக்களுக்கு அருளும் மலமும் அநாதியே கூடிநிற்கிறதே முறைமை ஆகையால் அந்த மல மேலிட்டபொழுது அருள் மறைந்துநின்று காரியப்படுத்துமென்றும் அந்த மலபாகம் வந்த அவதரத்து அந்த அருள் பிரகாசித்து நிற்கிறதும் இயல்பாகையால் அந்த மலம் நீங்கியே அருள் பிரகாசிக்கு மென்னும் உத்தரம் மேல் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

தேசுற மருவும் ஆன்ம தெரிசனம் ஆன்ம சுத்தி
ஆசிலா ஆன்ம லாபம் ஆகமூன் றாகும் மூன்றும்
பாசம தகல ஞானம் பற்றல்தான் பணியை நீத்தல்
ஏசில்நே யத்த ழுந்தல் எனுமிவற் றடங்கு மன்றே.

உயர்தவஞ் செய்தவர்க் குற்றமூ வகையாம்
பயனுறும் வழியைப் பாரித் துரைத்தது.

பொழிப்புரை :

தேசுற மருவும் ஆன்ம தரிசனம் ஆன்மசுத்தி ஆசிலா ஆன்ம லாபம் ஆன மூன்றாகும் விளக்கமுண்டாகப் பொருந்தப்பட்ட ஆன்மாவைத் தரிசிக்கை என்றும் ஆன்மாவைச் சுத்திபண்ணுகை யென்றும் குற்றமில்லாத ஆன்மாவினுடைய பிரயோசனமென்றும் ஆக மூன்று வகையாம் ; மூன்றும் இந்த மூன்று வகையுமேதென்னில் ; பாசம தகல ஞானம் பற்றல் பாசங்களாகிய தேகாதிப் பிரபஞ்சங்களா யுள்ளவை நீங்கும்படி இவையிற்றைக் கூடின அருளோடும் பொருந்துகை ஆன்ம தரிசனமாம் ; தான் பணியை நீத்தல் தன்னுடைய இச்சா ஞானக் கிரியைகளை விட்டு அந்த அருளிலே மூழ்குகிற தற்போதம் சீவியாமல் நிற்கிறதுதானே ஆன்ம சுத்தியாம் ; ஏசில் நேயத் தழுந்தல் குற்றமில்லாத சிவ சொரூபமாகிய ஞேயத்திலே அழுந்துகிறது தானே ஆன்மாவினுடைய இலாபமாவது ; எனுமிவற் றடங்கு மன்றே என்றிங்ஙனஞ் சொல்லப்பட்டஞாதுரு ஞான ஞேய மென்னும் மூன்றினுள்ளும் அடங்கும்.
ஆன்ம தரிசனமாவது தனக்கறிவாகக் கூடிநின்று காரியப்படுத்துகிற பிருதிவி முதலான தத்துவங்களை நாமல்லவென்று கழித்து அந்த அருளே தனுவாகப் பொருந்தி அந்தத் தத்துவங்களையுந் தன்னையும் அந்த அருளையுந் தரிசித்து நின்றவிடமென அறிக. அன்றியும், ஆன்மசுத்தி யென்றது அந்த அருள்காட்டத் தான் காண்கிற காட்சியை இழந்து அந்த அருளே தலைமறைவாக நின்றவிடமென அறிக. அன்றியும், ஆன்மலாபமென்றது அந்த அருள்மேலீடாக நிற்கச் செய்தே அவ்விடத்திலே ஓரின்பம் விளைதலென அறிக. என்றிங்ஙனம் மூன்றுவகையாகச் சொன்னதற்கு பி ம் உரூப சொரூப அகவல் சூசூமன்னருள் தன்னின் மன்னுயிர் மன்னுதல் இன்னுயிர்த் தரிசன மென்பர் நல்லோர் சுத்திதன் போதந் தோன்றா திருக்கை அத்தகு மிலாபம் நேயத் தழுந்தல்” எது கண்டுகொள்க. இதனாற் சொல்லியது அந்த உண்மை ஞானத்தை ஆன்மாக்கள் பெறுமிடத்து ஆன்ம தரிசனமென்றும் ஆன்ம சுத்தியென்றும் ஆன்ம லாபமென்றும் மூன்று வகையாக நின்று பெறுமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

முன் அதிகாரத்தில் அருளிச் செய்த ஞானத்தினுண்மை பயன் படுமிடத்து ஆன்ம தரிசனமென்றும் ஆன்மசுத்தியென்றும் ஆன்ம லாபமென்றுந் தெரித்துப் பயன்பட வேண்டுகையால், மேல் அதன் பயன் என்னும் அதிகாரம் வைக்கப்பட்டதென அறிக.
அப்படி அதிகாரம் ஒன்றாயிருக்க மூன்று வகையாக வேண்டுவா னேனென்னில், இவ்வதிகாரத்தில் மூன்று சூத்திரம் அடங்கி வருகையால் அப்படி வைக்கப்பட்டதென அறிக. அஃதெங்ஙனே யென்னில், ஆன்ம தரிசனம் எட்டாஞ் சூத்திரமாகவும், ஆன்ம சுத்தி ஒன்பதாஞ் சூத்திரமாகவும், ஆன்ம லாபம் பத்தாஞ் சூத்திரமாகவும் நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அதற்கு வழியேதென்னில், சிவஞானபோதத்தில் எட்டாஞ் சூத்திரம் ஆன்ம தரிசனமாகவும் ஒன்பதாஞ் சூத்திரம் ஆன்ம சுத்தியாகவும் பத்தாஞ் சூத்திரம் ஆன்ம லாபமாகவும் வருகையால் இதுவுமப்படி வைக்கப்பட்டதென அறிக. அஃதெங்ஙனே யென்னில், “தேசுற மருவும்” (71) என்ற விருத்தந் தொடங்கி “எல்லையில் பிறவி” (89) என்ற விருத்த முடிவாகிய செய்யுள் பத்தொன்பதினுள்ளும் “தேசுற மருவும்” என்ற விருத்தமொன்றும் இவ்வதிகாரங்கள் மூன்றுக்கும் வகுப்பாக அருளிச்செய்து, மேல் “தன்னறிவதனால்” (72) என்ற விருத்தந்தொடங்கி “சுத்தமாஞ் சத்தி” (75) என்ற விருத்த முடிவாகிய செய்யுள் நாலும் ஆன்ம தரிசனமாகவும், சூசூபுகலரும் அசத்தர்” (76) என்ற விருத்தந் தொடங்கி “அடைபவர் சிவமேயாகும்” (79) என்ற விருத்தமுடிவாகிய செய்யுள் நாலும் ஆன்ம சுத்தியாகவும், “பொற்புறு கருவி” (80) என்ற விருத்தந் தொடங்கி “எல்லையில் பிறவி” (89) என்ற விருத்த முடிவாகிய செய்யுள் பத்தும் ஆன்ம லாபமாகவும் வருகையால், சிவஞானபோதத்தில் “ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத், தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட், டந்நிய மின்மையி னரன்கழல் செலுமே” என்ற எட்டாஞ் சூத்திரத்தின் கருத்து “இவ்வான்மாக்களுக்கு ஞானத்தினை உணர்த்து முறைமையினை உணர்த்துதனுதலிற்று” (வார்த்திகம்) என்பதனால், இந்நூலினும் ஆன்மதரிசனத்துக்கு வகுத்த செய்யுட்களில் “தன்னறிவதனால்” என்ற விருத்தத்தில் “தன்னையுந் தானே காணுந் தானது வாகிநின்றே” என்பதனால் ஆன்ம தரிசனமென்னும் அதிகாரம் எட்டாஞ் சூத்திரமாகுமென்றதென அறிக.
மேல் ஒன்பதாஞ் சூத்திரத்துக்கும் சிவஞானபோதத்தில் “ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினிற் சிந்தைநாடி, உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத், தண்நிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே” (9) என்னுஞ் சூத்திரத்தின் கருத்து “ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதனுதலிற்று” (வார்த்திகம்) என்பதனால் இந்நூலினும் ஆன்ம சுத்திக்கு வகுத்த செய்யுள்களில் “இந்நிலை” (78) என்னும் விருத்தத்தில் “கரணம் ஆகா வகையதில் அறிவடங்கி மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்று மன்றே” என்பதனால் ஆன்ம சுத்தியென்னும் அதிகாரம் ஒன்பதாஞ் சூத்திரமாக நின்றதென அறிக.
மேற் பத்தாஞ் சூத்திரத்துக்கும் சிவஞானபோதத்தில் “அவனே தானே ஆகிய அந்நெறி, ஏக னாகி இறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே” (10) என்னுஞ் சூத்திரத்தின் கருத்து “யானெனதென்னுஞ் செருக்கற்று அவனது ஸ்ரீபாதத்தை அணையும்” (வார்த்தகிம்) என்பதனால் இந்நூலினும் ஆன்ம லாபத்துக்கு வகுத்த செய்யுள்களில் “தோன்றி நின்ற, சிற்பர மதனால் உள்ளச் செயலறுத் திட உதிக்குந், தற்பரம்” (80) எம், “மற்றதும் பகல்விளக்கின் மாய்ந்திட வருவ துண்டேல், பெற்றிடும் அதனை” (82) எம், “பாவிக்கவேண்டா ஆண்ட பரனருள்பற்றி னோர்க்கே” (86) எம் தற்போதங்கெட நிற்பதுவே கருத்தாகையால் இதுவும் பத்தாஞ் சூத்திரமாக நின்றதென அறிக. அப்படியானால் முன்னே முகவுரையில் சூத்திர வகுப்பிலே இதற்குப் பின்னே வருகிற ஐந்தெழுத்து அருள் நிலையை ஒன்பதாஞ் சூத்திரத்திற் கூட்டினதேதென்னில் அஃதாவது சிவஞானபோதத்தில் ஒன்பதாஞ் சூத்திரமாகிய “ஊனக்கண்பாச முணராப் பதியை” என்னுஞ் சூத்திரத்தின் பிற்பக்கத்திலே “பாசமொருவத், தண்நிழலாம் பதி விதி யெண்ணுமஞ் செழுத்தே” என்பதனாலும், சித்தியாரிலும் ஒன்பதாஞ் சூத்திரமாகிய “பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும்” (1) என்ற செய்யுளிலேயும் “ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க” என்பதனாலும் அந்தப்பஞ்சாக்கரத்தையும் ஒன்பதாஞ் சூத்திரத்திலே கூட்டி வைக்கப்பட்டதென அறிக. அப்படி ஒன்பதாஞ் சூத்திரத்தின் பகுதியாயிருக்க இந்நூலிலே பத்தாஞ் சூத்திரமாகிய ஆன்ம லாபத்துக்குப் பின்பாகப் பஞ்சாக்கரமாகிய ஐந்தெழுத்தருள்நிலை வைக்கவேண்டுவான் ஏனென்னில், அந்தப் பத்தாஞ் சூத்திரமாகிய ஆன்ம லாபமென்பதனில் சிவனோடுங்கூடிப் பிறிவறநின்று சிவா நுபவத்தை அநுபவிக்கப்பட்ட சிவஞானிகள் அந்த நிலைகுலைந்த அவதரத்தும் வேறு பிரபஞ்ச வாதனையிற் கூடாதபடி அதுவும் ஓருபாய நிட்டையாகக்கொண்டு மீளவும் பழைய ஆன்ம சுத்தியில் நிற்கவேண்டுகையாற் பத்தாஞ் சூத்திரத்துக்கு மேலாகவும் ஒன்பதாஞ் சூத்திரத்தின் பகுதியாகிய ஐந்தெழுத்தருள்நிலையை வைக்கப்பட்டதென அறிக. இந்தப் பஞ்சாக்கர தரிசனத்தை முற்கூறப்பட்ட நூல்களைப்போல ஒன்பதாஞ் சூத்திரத்தினோடுங் கூட்டி வையாமல் இந்நூலில் வேறே பகுத்து வைக்கைக்கு விதியேதென்னில், இந்தச் சிவப்பிரகாசஞ் சார்பு நூலாகையால் “இருவர் நூற்குமொருசிறை தொடங்கித் திரிபுவேறுடையது புடைநூலாகும்” (நன்னூல் 8) என்னும் இலக்கண விதியைப்பற்றி அந்நூல்களின் ஒழுங்கில் வாராமல் முற்பிற்பாடாக வைக்கப்பட்டதென அறிக. ஆகையால் முற்கூறிய “அதன்பயன்” என்ற செய்யுள் முதலிய பத்தொன்பதும் இந்தப் பஞ்சாக்கர தரிசனத்தின் பகுதியான விருத்தம் மூன்றும் ஆகச் செய்யுளிருபத்திரண்டும் ஆன்ம தரிசனமாகிய எட்டாஞ் சூத்திரமும் ஆன்ம சுத்தியாகிய ஒன்பதாஞ் சூத்திரமும் ஆன்ம லாபமாகிய பத்தாஞ் சூத்திரமுமாக நின்றதென அறிக. இங்ஙனம் வகுத்தருளிச் செய்யப்பட்ட எட்டாஞ் சூத்திரமாகிய ஆன்ம தரிசனத்துக்கும் ஒன்பதாஞ் சூத்திரமாகிய ஆன்ம சுத்திக்கும் பத்தாஞ் சூத்திரமாகிய ஆன்ம லாபத்துக்கும் அதிகார வகுப்பருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

தன்னறி வதனால் ஏதும் தனக்கறி வில்லை யேனும்
தன்னறி வாக எல்லாம் தனித்தனி பயன ருந்தும்
தன்னறி வறியுந் தன்மை தன்னாலே தனைய றிந்தால்
தன்னையும் தானே காணும் தானது வாகி நின்றே.

பவமா றாவிதன் பரிசினை யுணர்ந்துபின்
சிவமாய் நிற்கவுயிர் தெரியு மென்றது.

பொழிப்புரை :

தன்னறி வதனால் ஏதுந் தனக்கறி வில்லை யேனும் ஆன்மாவுக்குத் தன்னுடைய அறிவாலே யாதாமொன்றை அறிகைக்குத் தனக்கென்ன ஓரறிவு மில்லையாமாயினும்; தன்னறிவாக எல்லாந் தனித்தனிப் பயனருந்தும் தான் இந்திரியங்களுடனே கூடி நின்றறிகிற அறிவுகளெல்லாவற்றையுஞ் சிவன் கூட்டி அறிவிக்கிற தென்று அறியாமல் தன்னாலே அறிந்ததாக ஒவ்வொரு விடயங்களிலே யொற்றித்துநின்று அநுபவியாநிற்கும்; தன்னறி வறியுந் தன்மை இப்படி அறிகிறது ஆன்ம போதத்தின் முறைமையாம். இங்ஙனம் மாறுபாடாக அறிகிற முறையை விட்டு; தன்னாலே தனையறிந்தால் அந்தச் சிவனுடைய ஞானத்தாலே சிவனை யறிந்தால்; தன்னையுந் தானே காணும் ஆன்மாவினுடைய செயலறுதியையும் அந்த ஆன்மா தன்னாலே காணவும்படும். அஃதெங்ஙனே யென்னில் ; தானதுவாகி நின்றேஆன்மாவானது அந்தச் சிவஞானத்தோடுங் கூடிநின்ற அவதரத்து.
தன்னையுமென்ற இழித்துரைகொண்டே ஆன்மா தற்சுதந்தர மாக அறியமாட்டானென்பது கருத்தென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் சூசூஅறிந்திடும் ஆன்மா வொன்றை மற்றொன்றால் அறிதலானும், அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும், அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே, அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே” (5.3) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மா பெத்தத் தன்மையிலே நின்றும் பிரபஞ்சத்தோடுங்கூடிச் சீவிக்குமிடத்துத் தனக்கென ஒரு செயலில்லாமல் இருக்கச்செய்தேயுந் தன் செயலாகச் செய்கிறோமென்று நின்ற முறைமையும் முத்தித் தன்மையிலே சிவனுடைய அருளாலே தற்றெரிசனம் வந்தவிடத்து அந்த அருளோடுங் கூடி அறிகிறதொழிந்து நமக்கென்றொரு செயலில்லையென்று தன்னுடைய செயலறுதியை அறிந்த முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட மூன்று பகுதியினுள்ளும் எட்டாஞ் சூத்திரமாகிய ஆன்ம தரிசனத்தை முந்த அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

தத்துவ மான வற்றின் தன்மைகள் உணருங் காலை
உய்த்துணர்ந் திடஉ திப்ப தொளிவளர் ஞான மாகும்
அத்தன்மை அறியு மாறும் அகன்றிட அதுவாய் ஆன்மாச்
சுத்தமாம் சுத்த ஞானத் தொருமுதல் தோன்று மன்றே.

அதனை நிரூபித் தந்தமூ வகைப்பயன்
விதமுட னிதுவென விளங்க வுரைத்தது.

பொழிப்புரை :

தத்துவ மானவற்றின் தன்மைகள் உணருங்காலை உய்த்தறிந் திடஉதிப்ப தொளிவளர் ஞானமாகும் தத்துவங்களினுடைய உரூப சொரூப சுபாவத்தை அறியுமிடத்து அவையிற்றை அந்நியமாக அறிந்திடத் தோன்றுவது பிரகாசத்தினை மிகுதியாகவுடைய அருளென்றே சொல்லப்படுவது ; அத்தன்மை அறியுமாறும் அகன்றிட அப்படி அந்த அருள் காட்டக் காண்கிற காட்சியை நீங்கி ; அதுவாய் ஆன்மா சுத்தமாம் அந்த அருளோடுங் கூடி அது தானாய்த் தற்போதம் சீவியாமல் நிற்கவே ஆன்ம சுத்தியாம். அப்படி நிற்கவே ; சுத்தஞானத் தொருமுதல் தோன்றும் அன்றே அப்பொழுதே நின்மலமாகிய அருளுக்கு முதலாயுள்ள சிவமாகிய ஞேயந் தோன்றும். தத்துவங்களின் உண்மையை உணர என்றது அவையிற்றைச் சடமென்று காண்கையென அறிக. இனி உய்த்தறிந்திட என்றது தேகாதிப் பிரபஞ்சங்களை நீங்குகையென அறிக. அத்தன்மை அறியு மாறும் அகன்றிட என்றது தன்னுடைய போதத்தின் மேலீடாகிய இச்சா ஞானக் கிரியைகளை விடுகையென அறிக.
இதனாற் சொல்லியது ஆன்மாவானது தத்துவங்களைச் சடமென்று கண்டுநீங்கி அருளே தனுவாய் நின்றவிடம் ஆன்ம தரிசனமென்றும் அப்படி நிற்கச் செய்தே அந்த அருளே மேலீடாகத் தற்போதம் சீவியாமல் நின்றவிடம் ஆன்ம சுத்தி என்றும் அப்படி நிற்கச்செய்தே அந்தஞானத்துக்கு முதலாகிய சிவமான ஞேயந் தோன்றுகிறதே ஆன்மலாபமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இன்னமும் இந்த மூவகை யத்தத்தைத் தெளிய அருளிச் செய்யவேணுமென்று வினவ மேலருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

உறை தரும்உணர்வு மன்றி அதன்முதல் உள்ள தென்றிங்(கு)
அறைவதென் என்னில் அண்ணல் அருளெனு மதுவே யன்றி
நிறையொளி முதல தன்றி நின்றிடா நிமல னாகும்
இறையவன் முதல வன்றன் இலங்கருள் சத்தி யாமே.

அன்ன பேரொளிக் காதவன் முதலாந்
தன்மைபோல் அருட்கரன் தன்முத லென்றது.

பொழிப்புரை :

உறைதரும் உணர்வுமன்றி அதன்முதல் உள்ள தென்றிங் கறைவதென் என்னில் ஆன்மாவி னிடத்திலே பொருந்தி நிற்கிற அருளாகிய ஞானமொழிய அதற்கு முதலாக ஒரு ஞேயமுண் டென்று சொல்லுவானேனென்று நீ கேட்கில்; அண்ணல் அருளெனும் அது தம்பிரானாரருளே யென்று சிவாகமங்கள் சொல்லும். அப்படி அந்த அருளென்றுஞ் சிவமென்றும் இரண்டா யிருக்குமோ என்னில்; அதுவேயன்றி அந்தச் சிவத்தை யொழிந்து அருள்தனித் தொருமுதலாய் நில்லாது. அதென்போல வென்னில் ; நிறையொளி முதலதன்றி நின்றிடா மிக்க பிரகாசமனாது அதற்கு முதலாகிய ஆதித்தனையன்றித் தனித்துண்டாகாது. அதுபோல; நிமலனாகும் இறையவன் முதல் நின்மல சொரூபமாகிய சிவன் அந்த ஞானத்துக்கு முதலாகிய காரணமாய் நிற்பன். அப்படியந்த அருளுஞ் சிவமும் பிறிவற்று நிற்குமாகில் அந்த அருளே அமையாதோ என்றுநீ கேட்கில் அப்படிப் பிறிவற்று நின்றாலும் ஆன்மாக்கள் பயன்படு மிடத்து அந்த அருள் கொண்டே போதாது. அதேனென்னில்; அவன்றன் இலங்கருள் சத்தியாமே அப்படி யந்தச் சிவனிடத்து விளங்காநின்ற அருளானது அந்தச் சிவனுக்குச் சத்தியாம்.
என்னவே, சத்தியாமே என்ற இழித்துரையால் இந்தச் சத்தியால் ஆன்மாக்களுக்கு இன்பம் விளையாதென்பது கருத்து. அதே னென்னில், இந்தச் சத்தியும் பெண், அந்தச் சிவனோடுங்கூடி ஆன்மாவோர் இன்பத்தை அநுபவிக்க வேண்டுகையால் ஆன்மாவும் பெண்; ஆகையால் இரண்டு பெண்கள் தம்மிற்கூடி அநுபவித்தால் இன்பம் விளையாதது போலவென அறிக. இதற்கு பி ம் திருவருட்பயனில் “இருவர் மடந்தையருக் கென்பயன்இன் புண்டாம் ஒருவன் ஒருத்தி உறின்” (72) எது கண்டுகொள்க. ஆன்மாவையும் பெண்ணென்பதற்கு பி ம் திருப்பாட்டில் “தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” (6. 25. 7.) என்னும் ஏதுக்களைக் கண்டுகொள்க.
உதாரணம் : அந்த அருளைப்பெற்ற ஆன்மாக்களும் அந்த அருளோடுங் கூடி, உப்பளத்தைப் பொருந்தின புல்லும் வைக்கோலும் உப்பாந்தன்மைபோல, அந்த அருளே சொரூபமாய் நிற்கிறதொழிய அதற்கு மேலாக வேறொரு ஞேயமென்பது ஒன்றில்லையென்று சங்கிராந்தவாதி சொன்னதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “ஏற்றோர் முகஒளி தோற்றும் கலனெனத் தலைவன தருளுயிர் நிலவிடும் நிலவக் காட்டத் தங்கி மாட்டத் தங்கிய தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும் போன்றது வாகித் தோன்றிடும் அதனாற் பசுகர ணங்கள் சிவகர ணங்க ளாக மாறி அறிவும் ஏகமாம்உயிர் யானென தின்றே” (13. 104 111) எது கண்டுகொள்க. இது அத்தமல்லவென்றவனை மறுத்தற்கு பி ம் “நோக்கும் முகஒளி நீக்காத் தானெனக் கவருந் தன்மை முகுரம் போலக் கொடுத்தது கோடற் கடுத்ததுண் டன்றே காட்டத் தங்கி கூட்டக் கூட்டும் இந்தனத் தியற்கை வெந்தழல் தாங்கா உப்பளத் தடுத்த புற்பலா லங்கள் சடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந் தன்மை உண்டுனக்கு இன்மைய தன்றே” (14. 22 29) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மாக்கள் முத்தியைப் பெறுமிடத்து அருளாகிய ஞானத்தோடுங் கூடுகிறதொழியச் சிவமாகிய ஞேயமென்ப தொன்றில்லை யென்ற சங்கிராந்தவாதியை மறுத்து, அருள் சத்தியாகையாலே அந்தச் சிவத்தோடுங் கூடியே ஆன்மநாயகி இன்பம் அநுபவிக்கையால் சிவம் வேணுமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படியிருந்த ஞானத்துக்கு முதலாய் ஒரு ஞேயந் தோன்று மென்கிறதென்ன இந்த ஞானமாகிய அருளோடுங் கூடி அந்த அருளே தானாய் நிற்கிறதல்லவோ பயனென்கிற சங்கிராந்தவாதியை மறுத்து, அந்த அருளையுந் தவிர வேறே ஞேயமாகிய சிவமுண் டென்று மேலருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

சுத்தமாம் சத்தி ஞானச் சுடராகும் சிவமொ ழிந்தச்
சத்திதான் இன்றாம் முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி
அத்தனை அருளும் எங்கும் அடைந்திடும் இருள் அகற்றி
வைத்திடும் இரவி காட்டும் வளரொளி போல்ம கிழ்ந்தே.

ஒத்துறு பருதியை ஒளிதரு வதுபோற்
சத்தியும் பிரானைத் தருமென் றுரைத்தது.

பொழிப்புரை :

சுத்தமாஞ் சத்திஞானச் சுடராகும் நின்மல சொரூபமாய் இருக்கப்பட்ட சத்தியானது ஞானப்பிரகாசமாயிருக்கும். அப்படி இருக்கவும் சிவம் வேணுமென்பா னேனென்னில்; சிவமொழிந்தச் சத்திதான் இன்றாம் அந்தச் சிவமில்லாமல் இந்தச் சத்திதானுண்டாக மாட்டாது. ஆனால் இந்தச் சத்தியாற் பயனில்லையோ வென்னில்; முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி அத்தனை அருளும் அநாதியே வரப்பட்ட குற்றத்தை யுடைத்தாகிய மலங்களின் கௌரவத்தைக் கெடுத்துத் தனக்கு முதலா யிருக்கிற சிவனோடும் ஆன்மாக்களைக் கூட்டும். அதென்போல என்னில் ; எங்கும் அடைந்திடும் இருள் அகற்றி வைத்திடும் இரவிகாட்டும் வளரொளிபோல் மகிழ்ந்தே எவ்விடத்தினுஞ் செறிந்திருக்கிற இருளின் மேலீட்டைக் கீழ்ப்படுத்தித் தனக்கு முதலாயிருக்கிற ஆதித்தனைக் காட்டுகிற பெரிய பிரகாசம் போல அந்தச் சத்தியுங் கிருபையுடனே. என்னவே, ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்து அருளாகிய சத்தியிடமாகப் பெறவேணுமென்பது கருத்து. இதற்கு பி ம் தத்துவ விளக்கத்தில் “பவமே வியநெறி பந்திக்கு மீசன் பசுக்கள் தம்மை, யவமே வியநெறி போகங்க ளால்முற்ற அந்நிலையே, தவமே வியநெறி சத்திகண் ணாற்சென்று சார்ந்து பின்னைச், சிவமே வுவ ரென்றுகாண் கொச்சை காவலன் சித்திரிப்பே” எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது திருவருளாகிய சத்தி ஆன்மாக்களுக் குண்டாகிய மலங்களைப் பாகம்வருத்தித் தனக்கு முதலாகிய சிவத்துடனே கூட்டும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படியானால் அந்தச் சத்தியாற் பயனில்லையோ என்று மீளவும் அவன் வினவ அப்படி அநுபவத்துக்குப் பயனில்லை என்னலா மொழிய ஆன்மாக்களுக்கு உண்டாகிய அநாதி மலங்களை நீக்கி அந்தச் சிவத்தோடுங் கூட்டுகைக்கு அந்தச் சத்தியே வேணுமென்னும் முறைமையை ஒரு திருஷ்டாந்த முகமாக அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

புகலரும் அசத்தர் தம்பால் பொருந்திய அலகை யேபோல்
அகிலமும் உணரு மீசன் அருளுயிர் மேவ லாலே
சகலமும் நிகழ வேண்டுந் தலைவன்ஐந் தொழிலுந் தானே
இகலற இயற்றல் வேண்டும் என்றது நன்றி யின்றே.

அருளுயிர் தன்னி லலகைசேர் குறிபோல்
மருவிடு முதன்மை வாய்மையன் றென்றது.

பொழிப்புரை :

புகலரும் அசத்தர் தம்பால் பொருந்திய அலகையே போல் ஒரு நற்குணமும் உண்டென்று சொல்லுதற்கரிய அஞ்ஞானிகளிடத்திலே பொருந்திநின்ற பசாசுபோல; அகிலமும் உணருமீசன் அருளுயிர் மேவலாலே சர்வத்தையும் ஒரு நிகழ்ச்சியாக அறிகிற சிவனுடைய அருளானது ஆன்மாவிலே பொருந்து கையினாலே அந்தப் பேய்க்குள்ள தன்மைகளெல்லாம் பிடியுண்டவர்களுக்கும் உண்டானாற்போல; சகலமும் நிகழவேண்டுந் தலைவன் ஐந்தொழிலுந்தானே இகலற இயற்றல் வேண்டும் என்றது நன்றியின்றே அந்தச் சிவனருளைப் பெற்றவர்களுக்கும் அந்தச் சிவனைப் போலச் சர்வஞ்ஞத்துவம் உண்டாமென்றும் பஞ்சகிருத்திய மாறுபாடில்லாமல் செய்வதுஞ் செய்யு மென்றும் நீ சொன்னது சித்தாந்த அத்தத்துக்கு நன்றா யிருந்ததில்லை.
இச்செய்யுளுக்கு இங்ஙனம் பொருள்படுத்தி வந்த வகையில், சகலமும் நிகழவேண்டும் தலைவன் ஐந்தொழிலுந் தானே இகலற இயற்றல் வேண்டும் எகு பேய் பிடியுண்டவன் அப்பேய் செய்யுங் கிருத்தியங்களை எல்லாஞ் செய்வதுபோலச் சிவனைப் பெற்றவர்களுஞ் சிவனைப்போலச் சர்வஞ்ஞத்துவமும் பஞ்ச கிருத்தியமுஞ் செய்யவேண்டுமென்று சமயிகள் மதத்தை மறுத்ததாகப் பொருளுரைப்பாருமுளர். அது கருத்தல்ல. அஃதெங்ஙனே யென்னில், அப்படிச் சொன்னது அந்த அருளைப் பெற்றவர்களுக்குச் சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமும் உண்டாமென்று அந்தச் சமயிகள் மதமாகச் சொன்னாரென்பதே கருத்தென அறிக. அதுவே கருத்தென்பதற்கு பி ம் இந்நூலைப்பின்சென்ற நூலாகிய திருநெறிவிளக்கத்தினும் இந்த விருத்தத்துக்கு எதிரிடை விருத்தமாகிய சூசூபூசுரர்க் கடிய சத்தன் தன்னிடைப் பொருந்தல் போல, ஈசன தருளுயிர்ப்பால் எய்தலால் இவனே யாவும், மாசற அறியுமென்றும் ஐந்தொழில் புரியு மென்றும், பேசுத லுண்மை ஞான மன்றிது பிராந்தி ஞானம்”; இதனுள் சூசூஈசன தருளுயிர்ப்பால் எய்தலா லிவனே யாவும், மாசற அறியுமென்றும் ஐந்தொழில் புரியுமென்றும், பேசுத லுண்மை ஞான மன்றிது” என்றமையால் அவன் சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமும் உண்டாமென்றான் என்றதையே மறுத்ததென்பதை அநுபவத்தாற் கண்டுகொள்க. ஆகையால், பேய் பிடியுண்டவன் அந்தப் பேய்க்குள்ள கிருத்தியங்களெல்லாஞ் செய்தாற்போல அருளைப் பெற்ற ஆன்மாக்களும் அந்த அருளுக்கு உண்டான சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமுஞ் செய்வார்களென்பதே கருத்தென அறிக. அப்படியானால் அந்தப் பேய்க்குண்டான தன்மைகளெல்லாம் பிடியுண்டானவனுக்கு உண்டானதுபோலச் சிவனுக்கு உண்டான தன்மையுஞ் சிவனருளைப் பெற்ற ஆன்மாக்களுக்கும் உண்டாகுமென்று சமவாதி சொன்னதற்கு வழியேதென்னில், அப்படிப் பேய்பிடியுண்டவன் இன்னான் இன்ன பண்டங் கொண்டுவருகிறானென்றும் இந்நாள் மழைபெய்யுமென்றும் நெருப்பை மிதித்துநின் றாடியும் சுடுகிற பாற்சோற்றிலே கையையிட்டுத் துழாவியும் நின்றாற் போல, அந்த அருளைப் பொருந்தின ஆன்மாக்களுக்குஞ் சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமும் உண்டாமென்று சொன்னானென்ற தென அறிக. அவனப்படிச் சொன்னானென்பதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில்,சூசூமுன்னோன் றனது முதிர்ஒளி ஞானம் அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த வண்டென உயிரைக் கொண்டிடும் உயிர்அது தன்னை நோக்கித் தான்அது வாகி ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும் பிரியா வாறு பெற்றுத் திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே” (11. 9 15) எது கண்டு கொள்க. என்றது நன்றியின்றே என்றவனை மறுத்ததற்கு பி ம் மேல் வருகிற செய்யுளுக்குக் காட்டி மறுக்கிற உதாரணத்திலே கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது பசாசு பிடியுண்டவனுக்கு அந்தப் பசாசின் குணமுந் தொழிலும் உண்டானாற்போலச் சிவனருளைப் பெற்ற ஆன்மாக்களுக்குஞ் சிவனுடைய சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமும் உண்டாமென்று சமவாதி சொன்னானென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

மேல் ஒன்பதாஞ் சூத்திரமாகிய ஆன்மசுத்தி வருமாறு. அஃதாவது ஆன்மா தத்துவங்களோடுங் கூடிநின்று சீவிக்கிற முறைமையை விட்டு அந்த அருளோடுங்கூடி அது மேலீடாக மூழ்கித் தற்போதம் சீவியாமல் நிற்கிற அவதரத்தைச் சொல்லுவதென அறிக.
அப்படி அருளைப்பெற்றவர்கள் தற்போதம் சீவியாமல் நிற்பர்கஞள்ன்ன வேண்டுவதில்லை, பசாசு பிடியுண்டவன் அந்தப் பசாசு செய்யுங் கிருத்தியங்களெல்லாஞ் செய்துநின்றாற்போல அந்த அருளைப் பெற்றவர்களும் அந்த அருளுக்குண்டான கிருத்தியங்க ளெல்லாஞ் செய்து நிற்பர்களென்கிற சமவாதியை நோக்கி மறுத்தருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

இன்றுநோக் குரைந டக்கும்
இயல்பிலோற் கினைய வாய்ந்து
நின்றதோர் அலகை நேர்ந்தால்
நிகழ்வதென் அதுபோ லுள்ளத்(து)
ஒன்றிய உணர்வு தம்பால்
உள்ளது நிகழ்த்தும் ஈசன்
தன்தொழில் நடாத்தும் மேனி
தனக்கெனக் கொண்டு தானே.

பற்றிய அலகையின் பரிசுயிர்க் குளதெனுஞ்
சொற்பழு துறும்வகை தோன்ற மறுத்தது.

பொழிப்புரை :

இன்று நோக்குரை நடக்கும் இயல்பிலோர்க்கினைய வாய்ந்து நின்றதோர் அலகை நேர்ந்தால் நிகழ்வதென் இப்பொழுது குருடனுமாய் ஊமையுமாய் முடவனுமாய் இருப்பானொருவனைப் பசாசு பிடித்தபொழுது அவன் காணவல்லவன் ஆனானோ பேச வல்லவன் ஆனானோ நடக்க வல்லவன் ஆனானோ; அதுபோல் அத்தன்மை போல்; உள்ளத்தொன்றிய உணர்வு தம்பால் உள்ளது நிகழ்த்தும் ஆன்மாவினிடத்திலே பொருந்தின அருளானது அவர்களுக்குண்டான இச்சா ஞானக் கிரியைகளுக்கு ஈடாக அறிவித்து நிற்குமாகையால் ; ஈசன் தன் தொழில் நடாத்தும் மேனி தனக்கெனக் கொண்டு தானே பரமேஸ்வரனுந் தனக்குப் பொருந்தினதொரு திருமேனியைத் தானே எடுத்துக்கொண்டு தனக்கு முறைமையான கிருத்தியங்களையும் நடத்துவன்.
உள்ளத்தொன்றிய உணர்வு எது உயிர்க்குயிராய் நிற்கிற திருவருளையென அறிக. தம்பாலுள்ளது நிகழ்த்தும் எது ஆன்மாவுக் குண்டான சிற்றறிவுக்குத் தத்கதாக அறிவித்து நின்றதென அறிக. இங்ஙனஞ் சமவாதி சொன்ன திருஷ்டாந்தத்தையும் பொருளையும் மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “அவன் இவன் ஆகில் இவன் அவன் செய்தி என்று செய்வான் ஒன்றிய மதத்தால் எல்லாம் அறிதல் செல்லா துயிர்கள் சிற்றறி வெனும்இச் சொல்தவ றாகும் என்பதென் அலகை தன்பத மடைந்தோர் கொண்ட வாறு கண்டனம் என்னில் மூங்கை அந்தருற் றோங்கிய குணங்குறி செய்ததென் இன்னும் பவ்வமுற் றழுந்தினும் நாழி கொள்ளா தாழியில் அலைபுனல் அதனாற் கருத்து முதலுள தாக வேண்டும் அன்றே” (12. 57 67) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது அருளைப் பொருந்தின ஆன்மாக்கள் அந்த அருள் செய்யுங் கிருத்தியங்களெல்லாஞ் செய்வர்களென்று சொன்ன சமவாதியை மறுத்து, அப்படி அருளோடுங் கூடினாலும் ஞேயந் தோன்றாத இடத்து அவர்களுக்கு உண்டாகிய சிற்றறி வொழிந்து பேரறிவுண்டாகாதென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி ஆணக்ஷபமாக்கிக் கொண்டு நன்றியின்றே யென்றதே தென்று மீளவுஞ் சமவாதி கேட்க நீ சொன்ன திருஷ்டாந்தத்தால் அந்த அருளைப் பெற்றவர்களுக்குச் சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமும் உண்டாகாதென்னும் முறைமையை மேல் அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

இந்நிலை தன்னில் மன்னி எய்திடும் கலாதி போதம்
தன்னள வறிந்து நிற்கும் தகவிலா மலங்கள் நீத்த
அந்நிலை கரணம் ஆகா வகையதில் அறிவ டங்கி
மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்று மன்றே.

உளத்தறி வடங்க ஒடுங்கு மெல்லையில்
துளக்கறு பரனுந் தோன்று மென்றது.

பொழிப்புரை :

இந்நிலை தன்னில் மன்னி எய்திடுங் கலாதி போதம் தன்னளவறிந்து இந்த ஆன்ம சுத்தியாவது ஆன்மாவுங் கருவிகளுங் கூடிச் சீவிக்குமிடத்து கலையாதியாயுள்ள தத்துவங்களினாலே ஆன்ம போதம் சீவிக்குமதுவும் அந்தத் தத்துவங்கள் சடமென்பது முணர்ந்து ; நிற்கும் தகவிலா மலங்கள் நீத்த அந்நிலை கரணம் ஆகா வகையதில் அறிவடங்கி மன்னிட இங்ஙனங் கூடி நிற்கப்பட்ட குற்றத்தையுடைய தத்துவங்களை நீக்கி அந்த அருளே மேலீடாகத் தற்போதம் சீவியாமல் நிற்கிறதே ஆன்மசுத்தியாவது. இந்த ஆன்ம சுத்தியிலே நிற்கவே ; வியாபியாய வான்பயன் தோன்றும் அன்றே எவ்விடத்தும் நிறைந்து நிற்கிற சிவமாகிய சுகரூபந் தனக்குத் தோன்றும். தகவிலா மலங்கள் நீத்த அந்நிலை என்பது ஆன்ம தரிசனமென அறிக. கரணமாகாவகை யதிலறிவடங்கி மன்னிட என்பது ஆன்ம சுத்தியென அறிக. வியாபியாய வான்பயன் தோன்றும் என்பது ஆன்ம லாபமென அறிக.
இதனாற் சொல்லியது அருளானது தன்னையும் ஆன்மாவையும் மலங்களையுங் காட்ட ஆன்மா கண்டுநிற்கிற அவதரம் ஆன்மதரிசன மென்றும், ஆன்மா அந்த அருளோடுங்கூடித் தற்போதம் சீவியாமல் அந்த அருளே மேலீடாக மூழ்கி நிற்கிற இடம் ஆன்ம சுத்தியென்றும், அப்படித் தற்போதம் சீவியாமல் நிற்கவே மேல் ஆன்மலாபம் உண்டாமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

அப்படியானால் இந்த ஆன்ம சுத்தியாற் பயனேதென்று வினவின மாணவகனை நோக்கி மேலருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

அடைபவர் சிவமே யாகும் அதுவன்றித் தோன்று மென்ற
கடனதே னென்னில் முன்னம் கண்டிடார் தம்மைப் பின்னும்
தொடர்வரும் அருளி னாலே தோன்றுமா காணா ராயின்
உடையவன் அடிசேர் ஞானம் உணர்தலின் றணைத லின்றே.

ஒன்றா வுறுபய னுணரா துயிரெனின்
நன்றாம் முத்தியை நாடரி தென்றது.

பொழிப்புரை :

அடைபவர் சிவமேயாகும் அதுவன்றிச் தோன்று மென்ற கடனதேனென்னில் அப்படியே சிவத்தோடுங் கூடின ஆன்மாக்கள் சிவமாய்ப் போகிறதொழிந்து அவ்விடத்து வேறுமொரு பயன் தோன்று மென்ற காரணமேதென்னில்; முன்னங் கண்டிடார் தம்மை முன்பு பெத்தத்திலே மல மாயா கன்மங்களோடுங் கூடிமயங்கி நிற்கையினாலே தங்களுடைய உண்மையை அறிந்தாரில்லை. என்னவே தங்கள் உண்மையை அறியாதது கொண்டே சிவனையும் அறியமாட்டார்கள்; பின்னுந்தொடர்வரும் அருளினாலுந்தோன்றுமாகாணா ராயின் அந்தப் பெத்தத்தை நீங்கின பின்புந் தமக்குக் கிட்டுதற்கு அரிதாகிய ஞானத்தைப்பெற்ற அவதரத்துச் சிவதரிசனப் பட்டுச் சிவபோகத்தை அநுபவியாராமாகில்; உடையவன் அடிசேர் ஞானம் உணர்தலின் றணைதலின்றே சர்வான்மாக்களையும் அடிமையாகவுடைய சிவனது திருவடியைக் கூடுகைக்குக் காரணமான ஞானத்தை அறிந்ததுமில்லை, அந்த ஞானத்தாலே சிவனுடைய திருவடியிலே இரண்டறக் கூடினது மில்லையாம்.
உதாரணம் : ஆன்மா சிவத்தோடுங் கூடித் தற்போதங் கெட்டுச் சிவமாய் விடுமென்று சைவர் சொன்னதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூதன்னையும் அதனையும் தன்முதற் பொருளையும் இன்னதென் றறியா இருவரும் முயங்கி ஒன்றாய் உறுபயன் உவப்பும் இன்றாய் நிற்கும் இதுசிவ கதியே” (19. 13 15) எது கண்டுகொள்க. இது அத்தமாகாதென்று சைவரை மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூஇருவருங் கூடி ஒருபயன் ஆய்த்தென் றருளினை இவ்வா றபேதிகள் நிலையே ; ஒன்றாம் என்ற லன்றியும் உவப்பும் இன்றாம் என்றால் என்பயன் இயம்புக” (20. 53 54 64 65) எது கண்டுகொள்க.
இத்திருவிருத்தத்தால் ஆன்மா சிவத்தோடுங்கூடித் தற்போதங் கெட்டுச் சிவமாய் விடுகிறதே முத்தியென்கிற சைவரை மறுத்து, அப்படியானாற் பெறுவானும் பேறுமில்லையாய்ச் சாயுச்சியமுமில்லை யென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி அந்த அருளிடமாகச் சிவத்தோடுங் கூடினவர்கள் அந்தச் சிவத்துடனே ஒன்றுபட்டுப் போகிறது ஒழிந்து அங்கே ஒருஞேயந் தோன்றுமென்கிறது பொருளல்ல என்ற சைவரை மறுத்தருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

பொற்புறு கருவி யாவும் புணராமே அறிவி லாமற்
சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற
சிற்பர மதனால் உள்ளச் செயலறுத் திட உதிக்கும்
தற்பர மாகி நிற்றல் சாக்கிரா தீதந் தானே.

நீக்கமில் சிவத்துடன் நிலைபெற நிற்குஞ்
சாக்கிரா தீதத் தன்மை சாற்றியது.

பொழிப்புரை :

பொற்புறு கருவி யாவும் புணராமே அந்தச் சிவத்தோடுங்கூடி அநுபவிக்கும் அவதரத்துப் பொலிவினை உடைத்தாகிய கருவிகள் முப்பத்தாறோடும் பொருந்தி விகற்பியாதே ; அதுவன்றியும் ; அறிவிலாமற் சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே அறியாமை யென்னுஞ் சொல் பெற்றிருக்கிற ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதீதாவத்தைப்பட்டுக் கிடவாதே; இங்ஙனஞ் சொல்லப்பட்ட சகலாவத்தையுங் கேவலாவத்தையும் விட்டு நீங்கின அவதரத்து; தோன்றி நின்ற சிற்பரமதனால் உள்ளச் செயலறுத்திட உதிக்கும் தற்பரம் ஆன்மாவினிடத்திலே அநாதியே கூடிநின்று பக்குவத்திலே பிரகாசிக்கப்பட்ட மேலான அருளானது காட்டத் தான் காண்கிற காட்சியைவிட்டு அந்த ஞானந் தானாய் நிற்கவே அந்த ஞானமாகிய அருளுக்கு முதலாயிருக்கப்பட்ட சிவமாகிய ஞேயந் தோன்றிப் பிரகாசியா நிற்கும் ; ஆகி நிற்றல் சாக்கிராதீதந் தானே அங்ஙனம் உதயஞ் செய்யப்பட்ட அந்தச் சிவத்தோடுங்கூடிச் சிவபோகமாய் நிற்கிறது தானே சாக்கிரத்தில் அதீதம்.
பொற்புறு கருவி யாவும் புணராமே எகு கருவிகள் முப்பத்தாறும் பொருந்தி விகற்பியாதே யென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், சகலாவத்தைப்பட்டு நில்லாதே என்பதுமன்றி யாவும் என்ற சுட்டினாலே கலையாதி மண்ணந்தமாயுள்ள தத்துவம் முப்பத்தொன்றும் நீங்கலாகச் சுத்த மாயையில் தோற்றமாயுள்ள சிவதத்துவங்கள் நீங்கியே முத்தியென்பதைப்பற்றியென அறிக. அப்படி அந்தச் சிவதத்துவங்கள் ஐந்தையுங் குறித்துச் சொல்லவேண்டுங் காரணமேதென்னில், அந்தச் சிவதத்துவங்கள் ஐந்தினுந் தத்துவகர்த்தாக்கள் ஐவரும் அதிஷ்டித்து நிற்கையால் முத்தியைப் பெறுமவர்களுக்குப் பிரமசாயுச்சியமென்றும் விஷ்ணு சாயுச்சியமென்றும் உருத்திர சாயுச்சிய மென்றும் மகேஸ்வர சாயுச்சிய மென்றும் சதாசிவ சாயுச்சிய மென்றும் விந்து சாயுச்சிய மென்றும் நாதசாயுச்சியமென்றும் வருகையால் அவையெல்லாஞ் சுத்த மாயையில் அடங்கி வருகையாலே, அவை சைவ சித்தாந்தத்துக்கு விரோதமாகிய சமயிகள் கருத்தைப்பற்றி நிற்கையாலும் அது பதமுத்தியிலே கூடி வருகையாலும் அது சாயுச்சியத்துக்கு ஆகாதபடியாலே அதனை ஆகாதென்றதென அறிக. அப்படிச் சுத்த தத்துவங்களும் நீங்கியே சாயுச்சியமென்பதற்கு பி ம் சித்தியாரில் “மூவகை அணுக்க ளுக்கு முறைமையால் விந்து ஞானம், மேவினதில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம், ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல், சேவுயர் கொடியினான்தன் சேவடி சேர லாமே” (1.26) என்பதனுள் “விந்து ஞான மோவிட” என்று அநுவயித்துப் பொருள்கூட்டி விந்து நாத முதலாயுள்ள தத்துவங்களும் நீங்கியே முத்தியென்றதென அறிக. இனி, தத்துவங்களுந் தத்துவ கர்த்தாக்களும் நீங்கியே முத்தியென்பதற்கு பி ம் புராண சாரத்தில் சூசூபாரணவும் புலனந்தக் கரண மொன்றும் படராமே நடுநாடி பயிலு நாதங், காரணபங் கயன்முதலா மைவர் வாழ்வுங் கழியுநெறி வழிபடவுங் கருதி மேலைப், பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிவு நோக்கி” (65) எம், திருவாசகத்தில் “ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால் ஐயனே யென்றுன் அருள்வழி யிருப்பேன்” (23. 5) எம், தத்துவம் முப்பத்தாறும் நீங்கியே முத்தி யென்பதற்குக் கோயிற்புராணத்தில் “தரைமுதலாறா றெனவரு நாதாதியின் மீதே” (179) எம், திருக்களிற்றுப்படியாரில் “நாதாந்தத் தேயிருப்பர்” (80) எம், திருப்புகழில் “விந்துநாத வோசைக்குத் தூரமானது” எம் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க. இனி, அந்தச் சுத்த தத்துவங்கள் சுத்த மாயையில் தோற்ற மாகையாற் சுத்த மாயையைப்பற்றி நின்றவிடம் பதமுத்தியாகையால், பதமுத்தியைச் சாயுச்சியமென்கிற சமயிகள் கருத்தாமென்று சொன்னதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சிவசம வாதியை மறுக்கும் அவதரத்தில் “செடியுடல் அணுகாக் குடிலை கொடுக்குமென் றோதினை நீயே பேதாய் பகட்டுரல் ஒளிர்சினை முச்சித் தளிர்எனும் இதுதகும் இச்சா ரூபம் நச்சினர் என்னின் மும்மலத் தேதும் இன்மைய தன்றே இதுவளர் முத்திப் பதமென இயம்புவர்” (12. 84 89) எம், சித்தியாரிலும் “அநாதி உடல் ஒன்றினைவிட் டொன்று பற்றிக் கன்மால் ஆயழிந்து வருதலால் அந்த மில்லைப், பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப் பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும், இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல் இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம், மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் காணே” (11.3) என்பதனுள் “நித்தவுரு வத்தைப் பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே யிதுவும்” எது கண்டுகொள்க. என்றிங்ஙனம் முத்தியைப் பெறுமிடத்துச் சுத்ததத்துவம் நீங்கியே முத்தியாகையால் தத்துவம் முப்பத்தாறும் நீங்கியே முத்தியென்பது கருத்து. இதற்கு பி ம் ஞானாமிர்தத்தில் “முப்பது முதலா மூவிரண் டோவா வொப்பில் தத்துவ மொரீ இய திப்பியன்” (55. 56) எம், திருமந்திரத்தில் “முப்பது மாறும் படிமுத்தி யேணியா, யொப்பிலாப் பேரண்டத் துள்ளில் வெளிபுக்குச், செப்ப வரிய சிவங்கண்டு தாந்தெளிந், தப்பரி சாகி யமர்ந்திருந் தாரே” (126) எம் கண்டுகொள்க. ஆகையால், கருவி யாவும் புணராமையென்பது ஆன்ம தத்துவம் இருபத்துநாலும் வித்தியா தத்துவம் ஏழுஞ் சிவ தத்தவம் ஐந்தும் ஆகத் தத்துவம் முப்பத்தாறு மென அறிக.
இனி, அறிவிலாமற் சொற்பெறுமதீதம் வந்து தோன்றாமே எ து அறியாமை யென்கிற அதீதாவத்தைப் பட்டுக்கிடவாதேயென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், முத்தியைப் பெறுமவர்கள் தத்துவம் முப்பத்தாறையுங் கழன்று அந்தச் சிவத்தோடுங்கூடிச் சாக்கிராதீதம் புரிந்திருக்கும் அவதரத்துக் கருவிகளெல்லாங் கழன்றவிடங் கேவலத்துக் கிடமாகையால் அறியாமையோடுங் கூடிக் கேவலப்பட்டு வீழாதே யென்றும் சொன்னதென அறிக. அன்றியும், ஆன்மா முத்தியிற் பாடாணம்போலே கிடக்குமென்று சொல்லுகிற அகச்சமயத்திற் பாடாணவாதி புறச்சமயத்திற் பிரபாகரன் என்னும் இவர்கள் கருத்தைப்பற்றியும் அதனையாகாதெனவுமாமென அறிக. அவர்கள் அப்படிச் சொன்னதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூகாட்சி என்னக் காணாத் துயர மாட்சியை முத்தி எனவகுத்தனரே” (7. 9 10) என்று பாடாணவாதி சொன்னதற்குக் கண்டுகொள்க. அதனை ஆகாதென்று அவனை மறுத்ததற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் “காட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி எனவகுத் துரைக்கிற் கரணா பாவ மரணம் கருமரம் ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா தனிதரு துயரம் எனுமிது திடனே பாடா ணத்திற் கூடா முத்தி” (8. 915) எது கண்டுகொள்க. மற்றப் புறச்சமயத்திற் பிரபாகரன் முத்தியிற் பாடாணம் போலக் கிடக்கு மென்றதற்கு பி ம் சித்தியாரில் “அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அதுதோன்றித், தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது, வருஞ்செயல் ஒன்றின்றியே மண்சிலைபோ லாமுத்தித், தருஞ்செயலீ தெனவுணர்ந்து தாரணிமே லவன் சாற்றும்” (பரபக்கம் 205) எது கண்டுகொள்க. அதனை ஆகாதென்று அவனை மறுத்ததற்கு வழியேதென்னில், ஆன்மா அப்படி முத்தியிற் போதங்கெட்டுப் பாடாணம்போற் கிடக்குமென்றால் முத்தி பெற்று அநுபவிக்கப் போதமில்லாத பொழுது அநுபவமாகாதபடியால் அதனை யாகாதென்றதென அறிக. அப்படிப் பிரபாகரனை மறுத்ததற்கு பி ம் சித்தியாரில் “ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை, ஊனம்பின் உணர்விழிந்தோர்க் குளதாகும் உயர்முத்தி, தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை, ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால்” (207) எது கண்டு கொள்க. அன்றியும், முத்தியில் ஆன்மா போதங்கெட்டுப் பாடாணம்போற் கிடக்கு மென்பது சித்தாந்தப் பொருளுக்கு விரோத மென்பதற்கு பி ம் சித்தியாரில் சூசூகரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள், மரணங் கொண்டிட உறங்கி மயங்கிமூர்ச் சிக்க வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச், சரணங்கள் புகுநிழல்போல் தனை அடையுஞ் சமாதி தவிராது மலமிதுவும் பசுஞான மாகும், அரணங்கள் எரித்தவன்தன் அடியைஅறி விறந்தங் கறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே” (9.3) எது கண்டுகொள்க.
இனி, தோன்றி நின்ற சிற்பர மதனால் உள்ளச் செயலறுத்திட உதிக்குந் தற்பரம் என்ற பதத்தில் தோன்றி நின்ற சிற்பரம் எகு தன்னிடத்திலே கூடிப் பிரகாசித்து நிற்கிற ஞானமென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், அஃதாவது கண்களுக்கு ஆதித்தப் பிரகாசங் காட்டாக நின்றாற்போலச் சர்வான்மாக்களுக்கும் உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கிறது பூரணமாகிய திருவருளேயென அறிக. அப்படிக் கண்களுக்கு ஆதித்தன் காட்டாக நின்றாற்போலத் திருவருள் ஞானம் நின்று ஆன்மாக்களை அறிவிக்குமென்பதற்கு பி ம் சித்தியாரில் “மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட், கிருளினை ஒளியா லோட்டும் இரவியைப் போல ஈசன்” (5.9) எது கண்டுகொள்க. இனி, அதனாலுள்ளச் செயலறுத்திட உதிக்கும் தற்பரம் எகு ஆன்மா அந்த அருளானது காட்டத் தான் காண்கிற காட்சியை இழந்து ஞானந்தானாய் நிற்கவே அந்த ஞானத்துக்கு முதலாகிய சிவமாகிய ஞேயந் தோன்றுமென்று பொருள் படுத்தினதற்கு வழியேதென்னில், அந்த நிஷ்கள சொரூபமாயுள்ள சிவமானது தன்னை ஆன்ம போதத்தாற் சுட்டியறியு நாளெல்லாங் கூடிநிற்கச் செய்தேயும் மறைந்து நின்று அந்த ஆன்மாவானது தன்செயல் அறுதியைக் கண்டு தற்சேட்டை கெடநிற்கும் அவதரத்து அந்தச் சிவம் பிரகாசிக்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இவை இரண்டுக்கும் பி ம் சிவஞானபோதத்தில் சூசூநானவன்என் றெண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல், தானென ஒன் றின்றியே தானதுவாய் நானெனவொன், றில்லென்று தானே எனுமவரைத் தன்னடிவைத், தில்லென்று தானாம் இறை” (10. 1) எது கண்டுகொள்க. அன்றியும், திருக்களிற்றுப் படியாரிலும் சூசூஉள்ள முதலனைத்தும் ஒன்ற உருகவரின், உள்ளம் உருகவந் துன்னுடனாம் தெள்ளி, உணருமவர் தாங்கள் உளராக என்றும், புணருவா நில்லா பொருள்” (14) எது கண்டுகொள்க. இனி, தற்சேட்டை கெடநின்றதே சிவாநுபவம் என்பதற்கு பி ம் தேவாரத்தில் “தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” (6. 25.7) எம், திருவாசகத்தினும் “ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட் டென்னுள்ளமும்போய், நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ” (11. 18) எது கண்டு கொள்க. அன்றியும் திருவள்ளுவர் “யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்” (குறள் 346) என்பதும் இப்பொருள் பற்றியென அறிக.
இனி, ஆகிநிற்றல் சாக்கிராதீ தந்தானே என்ற பதத்தில் ஆகிநிற்றல் எகு ஆன்மா அந்தச் சிவத்தோடுங்கூடிச் சிவமாய் நிற்கவென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், அப்படிச் சொன்னது அந்தச் சிவத்தோடுங்கூடிப் பிறிவற நிற்கவென அறிக. அஃதெங்ஙனேயென்னில், ஆதித்தப்பிரகாசங் காட்டாகப் பிரபஞ்ச ரூபத்தைப் பற்றி நின்ற கண்ணானது அந்த உருவங்களை விட்டு அந்தப் பிரகாச மிடமாகச் சென்று அந்தப் பிரகாசத்துக்கு முதலாயிருக்கிற ஆதித்தனைக்கண்டு பிறிவற நின்றாற்போல, ஆன்மாவும் அருளிடமாகக் கூடிநின்று சத்தாதி விடயங்களைப் புசித்து நிற்கச்செய்தே அதனையும் விட்டு மனோவிகாரமுமடங்கி அந்த அருளுக்கு முதலாயிருக்கிற சிவத்தோடும் அந்த அருள் காட்டாகச் சென்றுகூடிப் பிறிவற்று இரண்டற நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்படிப் பிரபஞ்ச ரூபத்தைப் பற்றிநின்ற கண்ணானது திரும்பி ஆதித்தனை நோக்குமளவில் அந்தப் பிரபஞ்ச ரூபங்கள் தெரியாததுபோல என்று உபமானங் கூறினதற்கு பி ம் ஞானாமிர்தத்தில் “தீதறு நெடுங்கண் ணாதவ னாட்டத் தயலொன் றின்மை போலவும்” (18. 37 38) எது கண்டுகொள்க. அன்றியும், ஆன்மா சிவத்தோடுங்கூடிச் சிவமாய் நிற்குமென்பதற்கு பி ம் திருவாசகத்தில் சூசூஅவமாய தேவர் அவகதியி லழுந்தாதே, பவமாயங் கெடுத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி, நவமாய செஞ்சுடர் நல்குதலு நாமொழிந்து, சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ” (11.4) எது கண்டு கொள்க. என்னவே, சிவமாயென்றது ஆன்மா தற்போதமாய் நிற்பதுஞ் செய்யாமல் தானென்கிற முதல் கெடுவதுஞ் செய்யாமல் தற்போதங் கெட்டு அந்தச் சிவத்தோடுங்கூடி இரண்டறநின்று அநுபவித்ததென அறிக. அப்படிச் சிவமாயென்ற சொல் அந்தச் சிவமாவதுஞ் செய்யாமற் பிறிந்து நிற்பதுஞ் செய்யாமல் நிற்கையென்பதற்கு பி ம் சங்கற்ப நிராகரணத்தில் சூசூஆனாய் என்ப தனைத்தும் அவ்வவை தான்ஆ காமையைச் சாற்றிடும் என்க தாமே எனும் இத் தனியே காரம் அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட் டொழிந்திலர் பிறிவிலர் எனும்இவை உணர்த்தும்” (18. 80 84) எது கண்டுகொள்க.
இனி, சாக்கிராதீ தந்தானே எகு கேவலசகலம் இரண்டையும் நீங்கி நிற்கவென்று பொருள்படுத்தினதற்கு வழியேதென்னில், அஃதாவது கீழாலவத்தைப்பட்டு ஆணவ மலத்தான் மறைப்புண்டு அறியாமையாய்க் கேவலாதீ தமாய்க் கிடப்பதுஞ் செய்யாமல் உட்கரணம் புறக்கரணங்களோடுங்கூடிச் சகலனாய்ச் சத்தாதி விடயங்களோடுகூடிச் சீவிப்பதுஞ் செல்லாமல் நின்றவிடமென அறிக. இதற்கு பி ம் சித்தியாரில் “அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து, குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில், பிறியாத சிவன்தானே பிறிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி, நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே” (8.30) எம், தேவிகாலோத்திரத்தில் “திருத்தரு சமாதியைச் செய்யுங் காலத்துக், கருத்தெழுந் தடங்காது கலங்கு மாயினும், வருத்தமாய் நித்திரை மருவு மாயினுந், திருத்தறி வுறுத்துத்தன் னிலையிற் சேர்கவே” எம், “நித்திரையும் பராக்கினையு நீக்கிச் சித்த, மொரு நிலையு நீங்காம னிறுத்திக் கொண்டால்” எம், கோயிற்புராணத்தில் “கரண மனைத்தும் புலனிவை காணா கைவிட்டால், மரண மெமக்கிங் கிதுதமி யேம்வாழ் வருண்மாறிற், றிரணழு மெய்ச்சஞ் சலமில தென்றா லொன்றானின், புரண மெனக்கொண் டருளுக வென்றார் நின்றார்கள்” (180) எம், திருக்களிற்றுப்படியாரில், “உணராதே யாதும் உறங்காதே உன்னிப், புணராதே நீபொதுவே நிற்கில்” (31) எம், திருமந்திரத்தில் “நினைப்பு மறப்பு மிலாத விடத்தே, வினைப்பற் றறுக்கும் விமல னிருப்பன், வினைப்பற் றறுக்கும் விமலனை நாடி, நினைக்கப் புகிலவ னீளிய னாமே” (2970) எம், “இரவும் பகலு மிலாத விடத்தே, குரவஞ் செய்கின்ற குழலியை நாடி, அரவஞ்செய் யாதவ ளோடுஞ் சந்திக்கிற், பரவஞ் செயா வகைப் பாலனு மாமே” (1134) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. ஆகையாற் கேவல சகலம் இரண்டினும் கூடாமல் அந்தச் சுத்தத் தோடுங்கூடி நின்றவிடமே சாக்கிராதீதமென அறிக. அதற்கு வழியேதென்னில், தத்துவம் முப்பத்தாறோடுங்கூடி நிற்கச்செய்தே அவையிற்றோடுங்கூடிச் சீவிப்பதுஞ் செய்யாமல் அறிவு கெடுவதுஞ் செய்யாமல் நின்றவிடமென அறிக. இதற்கு பி ம் திருமந்திரத்தில் “நின்றவச் சாக்கிரந் துரியம தானால், மன்றனு மங்கே மணஞ் செயா நின்றிடு, மன்றன் மணஞ்செயின் மாயையு மாய்ந்திடும், மன்றே யிவனும் அவனென லாமே” (2277) எம், சித்தியாரில் “சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் சர்வசங்க நிவர்த்தி வந்த தபோதனர்கள் இவர்கள், பாக்கியத்தைப் பகர்வது வென் இம்மையிலே உயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ (8. 35) என்றதும் இப்பொருள்பற்றியென அறிக. அன்றியும் இதனைக் குருமுகாந்திரமாகப் பெற்று அநுபவித்த பெரியோர்கள் திருவாக்கினும் கண்டுகொள்க. அஃதாவது, “அதிரைம் புலன்கரிகள் ஆயுமனந் திண்டேர், கதிரொன் றியகுணமாக் காலாள் சதுரங்கம், பூட்டினாற் போலிருக்கப் புக்கடிநிற் கும்புதுமை, காட்டினா னம்பலவன் காண்” (சிற்றம்பல நாடிகள் வெண்பா, 65) என்றமையால், இதனை இருவினை யொப்புஞ் சத்திநிபாதமு முண்டான பக்குவான்மாக்கள் ஞானாசாரியனிடத்திலே ஞான உபதேசத்தைப் பெற்றுச் சாத்திரங்களை ஒதியுணர்ந்து பதி பசு பாசத்தின் வழக்குக்களையும் பிறித்தறிந்து ஞான சாத்திரங்களைக் கேட்டுஞ் சிந்தித்துந் தெளிந்தும் வருமவதரத்து நிஷ்டாபர ராகைக்குப் பக்குவரானவர்கள் அந்த ஆசாரியனிடத்திலே உண்மையைப் பெற்று அநுபவத்தில் அறிகிறதொழிய நூல்களினால் அறியப்படாதாகையால் அந்த உண்மையை ஆசாரியன் கண்ணாகக் கண்டுகொள்க. அப்படியாக உண்மையை ஆசாரியன் முகாந்திரமாக அறிகிறதொழிய நூல்களினாலே அறியப்படா தென்பதற்கு பி ம் ஒளவையார் “நல்லன நூல்பல கற்கினுங் காண்பரிதே, யெல்லை யிலாத சிவம்” (குறள் 206) எம், திருமந்திரத்தில் “காட்டுங் குறியுங் கடந்தவர் காரண, மேட்டின் புறத்தி லெழுதிவைத் தென்பயன், கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது, ஆட்டின் கழுத்தி னதர்கறந் தற்றே” (2937) கண்டுகொள்க. அன்றியும், கேட்டுஞ் சிந்தித்துந் தெளிந்தும் நின்றாலும் நிஷ்டை கூடும்பொழுது ஆசாரியனாலே கூடவேணுமென்பதற்கு பி ம் சித்தியாரில் சூசூகேட்டலொடு சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம், வீட்டையடைந் திடுவர் நிட்டை மேவி னோர்கள் மேவாது தப்பினவர் மேலாய பதங்கட், கீட்டியபுண் ணியநாத ராகி இன்பம் இனிது நுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல், நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் ஞானநிட்டை அடைந்தடைவர் நாதன் தாளே” (8.24) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது சிவனுடைய அருளிடமாக நின்று ஆன்மசுத்திபண்ணி நிற்குமவர்கள் அந்த அருளுக்கு முதலாகிய சிவத்தோடுங் கூடி ஞேயத்தழுந்தி ஆன்மலாபம் பிறந்திருக்குமிடத்துக் கேவல சகல மிரண்டும் நீங்கிச் சுத்தத்தோடுங் கூடுகைக்குத் தத்துவம் முப்பத்தாறோடுங் கூடி நிற்கச்செய்தே அவையிற்றோடுங் கூடிச் சீவிப்பதுஞ் செய்யாமல் அறிவு குலைவதுஞ் செய்யாமல் நிற்கிறதே சாக்கிரத்தில் அதீதமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

மேல் பத்தாஞ் சூத்திரமாகிய ஆன்மலாபம் அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது. அஃதாவது சிவனுடைய அருளோடுங் கூடித் தற்போதம் சீவியாமல் நிற்கவே அந்தச் சிவமாகிய ஞேயந் தோன்றுமாதலால் அந்தச் சிவத்தோடுங் கூடி ஆன்மா சிவாநுபவத்தைப் பெற்றிருக்கும் முறைமையைச் சொன்னதென அறிக.
மேல் வரும் விருத்தத்துக்குத் தொந்தனையாவது அந்த ஞேயமாகிய சிவத்தோடுங் கூடி அநுபவிக்கும் முறைமை எப்படி என்று வினவின மாணவகனை நோக்கி அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே.

பொழிப்புரை :

ஒடுங்கிடா கரணம் தாமே கரணங்கள் தாமாக ஒடுங்கமாட்டாது; ஒடுங்குமா றுணர்ந்தொடுக்க ஒடுங்கிடும் என்னில் கரணங்களொடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கு மென்னில்; நின்ற தொடுங்கிடா நீ அறிந்து ஒடுக்குகையினாலே அறிகைக்குத் துணைக் கருவிகளாயுள்ளது ஒடுக்குதல் இல்லையாம்; கரணமெல்லாம் ஒடுங்கிட ஒடுங்க தத்துவங்களெல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது; உள்ள உணர்வுதா னொழியும் பழைய சிற்றறிவுதானு மில்லையாய்ச் சுத்த கேவலமே முத்தியென்கிற பாடாணவாதி அத்தமாய்விடும். அப்படியானால் அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எங்ஙனே என்னில் ; வேறாய் ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொணாதே இந்தக் கரணங்கள் அந்நியமாய் விடும்படி உனக்குத் தரிசனமான ஞானத்தோடுங் கூடி நின்றாலொழிந்து அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்க வொண்ணாது.
உதாரணம் : கரணங்க ளெல்லாம் ஒடுங்கின இடம் பாடாணவாதி யத்தமாம் என்பதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “கரணா பாவம் மரணம் கருமரம் ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே” (7.11.12) எம், சித்தியாரில் “கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள், மரணங்கொண் டிடஉறங்கி மயங்கி மூர்ச்சிக்க வாயுத்தம்பனை பண்ண வல்விடத்தை அடையச், சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி தவிராது மலமிதுவும் பசுஞான மாகும்” (9.3) எது கண்டு கொள்க. வேறாய் ஒடுங்கிடினன்றி என்றதற்கும் பிம் சித்தியாரில் முன்னிலுதாரணக்குறை “அரணங்கள் எரித்தவன்தன் அடியைஅறி விறந்தங் கறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே” (9.3) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மா தத்துவாதீதனாய் நின்று சிவாநுபவத்தை அநுபவிக்குமிடத்து அந்தத் தத்துவங்கள் தானாக ஒடுங்கா தென்றும், அறிந்தொடுக்கிக் கொள்ளும் அவதரத்து நீயறிந்தொடுக்குகையினாலேஅறிகைக்குத் துணைக்கருவியாயுள்ளது ஒடுங்காதென்றும், ஆனால் ஒடுங்குகைக்கு வழி எங்ஙனேயென்று வினவ இவை இரண்டினுங் கூடாமல் ஒடுங்குகைக்கு வழி வேறேயென்னு முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி அருளிச்செய்த முறைமையிலே கரணங்களொடுங்குமோ என்று பார்த்தவளவில் ஓரவதரத்திலும் ஒடுங்குகைக்கு வழியில்லை, இனி அடியேன் தானாக அறிந்து ஒடுக்கிக்கொள்ளுவது பயனோ தற்சுபாவத்திலே ஒடுங்குகிறது பயனோ என்ற மாணவகனை நோக்கி அருளிச்செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

பற்றிடும் கருவியாவும் படர்ந்துணர் வளிக்குங் காலை
உற்றறிந் திடுவ தொன்றின் உணர்வினின் உண்மை யாகும்
மற்றது பகல்வி ளக்கின் மாய்ந்திட வருவ துண்டேல்
பெற்றிடும் அதனை மாயப் பிறப்பினை அறுக்க லாமே.

பற்றிடுங் கருவிகள் பகல்விளக் கெனவே
பொற்பழி வுறவருள் பொருந்து மென்றது.

பொழிப்புரை :

பற்றிடும் கருவி யாவும் படர்ந்துணர் வளிக்குங் காலை ஆன்மா பிரபஞ்சத்தோடுங் கூடத்தக்க கருவிகளெல்லாங்கூடி விரிந்தறி விக்குமிடத்து; உற்றறிந் திடுவதொன்றின் உணர்வினின் உண்மையாகும் அந்தத் தத்துவங்களோடுங்கூடி அதுவதுவாய் நின்றறிந்து சீவிக்கிறது ஆன்ம போதத்தின் உண்மையாம் ; மற்றது பகல் விளக்கின் மாய்ந்திட வருவ துண்டேல் அந்தக் கருவிகளும் ஆன்மாவும் ஆதித்தன் சந்நிதியில் எரிகிற விளக்குப் பிரகாசங்கெட்டு நின்றெரிந்தாற் போலத் தத்தம் நிலை குலையாமல் நிற்கச் செய்தே தம்மிற்கூடிச் சீவியாதபடி அருட்பிரகாசம் மேலிடத்தக்கது உண்டாமாகில் ; பெற்றிடும் அதனை ஆன்மா அந்தச் சிவாநுபவத்தைப் பெறுவதுஞ் செய்யும். அப்படிப் பெற்றால்; மாயப் பிறப்பினை அறுக்க லாமே மயக்கத்தைச் செய்கின்ற ஜநநத்தையும் போக்கலாம்.
மற்றதுமென்ற உம்மை கொண்டே ஆன்மாவுங் கருவிகளுமென அறிக. என்னவே, கருவிகளும் ஆன்மாவும் பகல் விளக்குப்போல் நின்றே சிவனைப் பெறவேணுமென்பதும் இரண்டுங்கூடிச் சீவியாமல் நிற்க வேணுமென்பதுங் கருத்து. இதற்கு பிம் திருக்களிற்றுப்படியாரில் “அன்றிவரும் ஐம்புலனும் நீயும்அசை யாதே, நின்றபடி யேநிற்க முன்னிற்கும்” (35) எது கண்டுகொள்க. பகல் விளக்குப்போல என்பது தற்போதங் கெட்டு நிற்கையென அறிக. இதற்கு பிம் திருவாசகத்தில் “வான்கெட்டு மாருதமாய்ந் தழல்நீர் மண் கெடினுந், தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக், கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட் டென்னுள்ளமும் போய், நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ” (11. 18) எம், திருமந்திரத்தில் சூசூஒத்திட் டிருக்க வுடம்போடு யிர்தான், செத்திட் டிருப்பர் சிலசிவ யோகிகள்” (121) எம் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது தத்துவங்களும் ஆன்மாவுந் தம்மிற் கூடிச் சீவிக்கும் முறைமையும், அப்படிச் சீவித்து நிற்கச்செய்தே அவை இரண்டும் பகல் விளக்குப்போலத் தற்போதம் சீவியாமல் நிற்கவே அந்த அருள்மேலிட்ட அவதரத்து ஆன்மா அந்த அருளோடுங்கூடி அந்தச் சிவாநுபவத்தைப் பெறுமுறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி அந்தத் தத்துவங்களோடுங் கூடிச் சீவிப்பதுமன்றிக் கேவலப்பட்டு ஒன்றும் அறியாமற் கிடப்பதுமன்றி வேறாய் ஒடுங்கி அந்தச் சிவனைப் பெறுகைக்கு வழி எப்படியென்று வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்
சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அதுதா னாக
வந்தவா றெய்தல் நிட்டை மருவுதல் என்று நான்காம்
இந்தவா றடைந்தோர் முத்தி எய்திய இயல்பி னோரே.

கேட்டல் முதலாக் கிளர்ந்த நால்வகையும்
வாட்டரு முத்தியை மருவு மென்றது.

பொழிப்புரை :

முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் முன் ஜநநங்களிற் செய்துவந்த சரியை கிரியா யோகங்களினது முற்றுதலினாலே ஆசாரியன் அருளிச் செய்த ஞான உபதேசங்களை ஏகாக்கிர சித்தனாயிருந்து விரும்பிக் கேட்டல் ; கேட்டல் சிந்தனை செய்தல் முன் சொல்லப்பட்ட ஞான உபதேசமாகிய திரிபதார்த்தங்களை இப்படியோ பதியின் உண்மை, இப்படியோ பசுவின் உண்மை, இப்படியோ பாசத்தின் உண்மையென்றும் ஆராய்ந்து சிந்தித்தலாம்; உண்மை தெளிந்திடல் அப்படி ஆராயப்பட்ட மூன்றினுள்ளும் பாச ஞானம் அஞ்ஞானம் பசு ஞானஞ் சுதந்தர ஹீனம்; ஆகையால், இவை இரண்டையுங் கூட்டிச் சேட்டிப்பிக்கிறது பதிஞானம், அதுவே உண்மையாக உள்ளதென்று கண்டு அதுவே பொருளாகத் தெளிதலே தெளிதலாம் ; அது தானாக வந்தவாறெய்தல் நிட்டை மருவுதல் அந்தப் பதியானது பெத்தான்மாக்களோடுங் கூடிநின்று காரியப்படுத்தச் செய்தே தானொரு முதலில்லை என்னும்படி தோன்றாமல் நின்று காரியப்படுத்தினாற்போல நீயும் அந்த ஞானத்தினாலே அல்லவோ காரியப்பட்டு வருகிறோமென்கிறதை அறிந்து ஆன்மபோதம் சீவியாமல் ஞானந்தானாய் நின்றுவிடுதலே நிஷ்டையாம் ; என்று நான்காம் என்றிப்படி கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிஷ்டையென்று நாலு வகையாம் ; இந்த வாறடைந்தோர் முத்தி எய்திய இயல்பி னோரே இந்த ஒழுங்கிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிஷ்டையைக் கூடினவர்களே முத்தி நெறியைப் பொருந்தினவர்கள்.
உதாரணம் : அது தானாக வந்தவா றெய்தல் நிட்டை மருவுதல் எகு பெத்தத்திற் சிவன் தோற்றமற்று ஆன்மாவின் தோற்றமாய் நின்றாற்போல முத்தியில் ஆன்மாவின் தோற்றமற்றுச் சிவதோற்றமாய் நிற்க என்றதற்கு பிம் இருபாவிருபஃதில் “நாடா என்னுட் கரந்தென் பின்வந் தருளி என்னையுந் தன்னையும் அறிவின் றியற்றி ஏன்னது யானெனு மகந்தையுங் கண்டு யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்த்து மிக்க போகம் விதியால் விளைத்திட் டெற்பணி யாளா யெனைப்பிறி யாதே ஓடி மீள்கென ஆடல் பார்த்திட் டென்வழி நின்றன னெந்தை” (18.4.13) இது பெத்தம். இனி முத்திக்கு பிம் முன்னில் உதாரணக்குறை “அன்னோ அருள்மிக வுடைமையின் அருட்டுறை வந்து பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங் கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய மெய்கண்ட தேவ னெனப்பெயர் விரீஇத் தன்னுட் கரந்து தான் முன் னாகித் தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கி” (18.13.19) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மாக்கள் முத்திபெறுமிடத்துக் கேட்டுஞ் சிந்தித்துந் தெளிந்தும் நிஷ்டை கூடியு முத்தியைப் பெறும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனந் தற்போதம் சீவியாமல் நின்று அந்தச் சிவாநுபவமாகிய முத்தியைப் பெறுகைக்கு அடியேன் செய்துவருகிற இயற்கை யேதென்று வினவ அதற்கு வழி மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும்
ஈசனை உணர வொண்ணா திறைஅருள் ஞானம் நண்ணித்
தேசுறும் அதனால் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து
நேசமோ டுயர்ப ரத்து நிற்பது ஞான நிட்டை.

பலகலை ஞானமும் பல்லுயிர் ஞானமுந்
தலைவனை யணுகாத் தன்மை சாற்றியது.

பொழிப்புரை :

பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும் ஈசனைஉணர வொண்ணாது வேதாகம புராண சாத்திரங்களென்று சொல்லப்பட்டவையிற்றால் அறியும் பாச ஞானத்தாலுந் தத்துவங்களெல்லாங் கழன்றவிடத்து ஆன்மாதானே சிவமாமென்று சொல்லுகிற பசு ஞானத்தாலுஞ் சிவனைக் கூடவொண்ணாது. பின்னை எங்ஙனே யென்னில் ; இறையருள் ஞானம் நண்ணித் தேசுறும் அதனால் கர்த்தாவினுடைய திருவருளாலே அந்த ஞானத்தைப் பொருந்தி அவ்விடத்துப் பிரகாசித்துநின்ற திருவருளாலே; முன்னைச் சிற்றறி வொழிந்து. சேர்ந்து பழைய இச்சா ஞானக் கிரியைகளாகிய ஆன்மபோதத்தை விட்டு அந்தச் சிவஞானத்திலே பொருந்தி ; நேசமோ டுயர் பரத்து நிற்பது ஞான நிட்டை விருப்பத்துடனே அந்த ஞானத்துக்கு மேலான சிவத்துடனே நிற்குமதுவே ஞான நிஷ்டையாம்.
வேதாகம புராண சாத்திரங்களைப் பாச ஞானமென்றது அவையிற்றை அறியுமிடத்துத் திரிவித கரணங்களைக் கொண்டு அறிய வேண்டுகையினாலென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “வேத சாத் திரமிருதி புராணகலை ஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம், நாதமுடி வானவெலாம் பாச ஞானம்” (9.2) எது கண்டு கொள்க. ஆன்மா தத்துவங்களெல்லாங் கழன்றவிடந்தானே சிவமென்று சொல்லுகிறதைப் பசுஞான மென்றது ஆன்மா அவ்விடத்தொரு பொருளோடுங்கூடி அநுபோகப்படாதது கொண்டென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் முன்னில் உதாரணக் குறை “நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே, காதலினால் நான்பிரம மென்னு ஞானம் கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண், டோதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே” (9.2) எது கண்டு கொள்க. ஆகையால் ஆன்மா சிவமாகாதெனக் கொள்க. ஆன்மா சிவமாமென்னிற் சகச ஞானம் உண்டாகவும் வேணுமென அறிக. இறையருள் ஞானம் நண்ணி என்றது ஆன்மா சிவனை அறியுமிடத்து அந்தச் சிவனுடைய ஞானத்தைக் கொண்டு சிவனை அறியவேண்டுமென்றதென அறிக. இதற்கு பிம் திருவாசகத்தில் “அவனரு ளாலே அவன்தாள் வணங்கி” (1.18) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்துப் பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பதியைக் கூடவொண்ணா தென்றும் அந்தப் பதிஞானங் கொண்டே பதியைக் கூடவேணு மென்னும் முறைமையையும் அறிவித்தது.

குறிப்புரை :

அப்படி நிஷ்டைகூடி முத்தியைப் பெறுகிறதொழியச் சாத்திரங்களையோதிக் கேட்டுஞ் சிந்தித்துந் தெளிந்தும் நின்றால் அது கொண்டே முத்தியாகாதோ என்ற மாணவகனை நோக்கி அவை பாச ஞானமும் பசு ஞானமும் ஆகையால் அதனால் முத்தியுண்டாகாது, அந்தப் பதி ஞானத்தோடே கூடுகிறதே நிஷ்டையென்றும் அந்த நிஷ்டையுண்டாகிறதே முத்தியென்றும் வரும் முறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

விளம்பிய வகையில் நிட்டை மேவிடல் அரிதேல் முன்னம்
அளந்தறி வளித்த வற்றின் அளவுமற் றவற்றி னாலே
உளங்கொளுந் தனையு முள்ளபடியுமுற் றுணர்ந்து செவ்வே
தளர்ந்திடா துவப்ப மற்றத் தன்மைய தாகுந் தானே.

போற்றரு நிட்டை பொருந்தா தவருக்
கூற்ற முளதா முபாய முரைத்தது.

பொழிப்புரை :

விளம்பிய வகையில் நிட்டை மேவிடல் அரிதேல் முன் சொன்ன முறைமையினாலே உண்டான நிஷ்டை கூடுதற் கரிதாமாயின் ; முன்னம் அளந்தறி வளித்த வற்றின் அளவும் முன்பு பெத்த நிலையிலே தனக்கு வேண்டின புசிப்புக்குத் தக்கதாக அறிவித்துக் கொண்டுநின்ற தத்துவங்களினது உண்மையையும் ; மற்றவற்றினாலே உளங்கொளுந் தனையும் அந்தத் தத்துவங்களினாலே அறிந்து இன்பதுன்பங்களைப் புசித்து வருகிற தன்னுடைய உண்மையையும் ; உள்ளபடியும் கன்மத்துக் கீடாகத் தத்துவங்களையுந் தன்னையுங் கூட்டிப் புசிப்பிக்கிற கர்த்தாவின் முறைமையும் ; உற்றுணர்ந்து இவை மூன்றையும் அநுபவத்தினாலே அறிந்து ; செவ்வே தளர்ந்திடா துவப்ப இவையிற்றுக்குச் சலிப்பின்றித் தவறு வராமல் நேரேநின்று அந்தப் பொருளை விரும்பவே; மற்றத் தன்மையதாகுந் தானே முன்சொல்லப்பட்ட நிஷ்டையின் முறைமையாகும்.
தத்துவங்களின் உண்மையறிய என்றது தத்துவங்கள் ஆன்மா கூடினாலொழிய அறியாதாகையால் அவையிற்றைச் சடமென்றதென அறிக. ஆன்மாவின் உண்மையை அறிய என்றது ஆன்மா தானாக அறிகைக்குச் சுதந்தர மில்லாதது கொண்டே சுதந்தர ஹீனனென்றதென அறிக. கர்த்தாவின் உண்மையை அறிய என்றது அந்தத் தத்துவங்கள் சடமாகையாலும் ஆன்மா தற்சுதந்தரமில்லா தவனாகையாலும் இவை இரண்டையுங் கூட்டிப் புசிப்பிக்கிறது கர்த்தாவென்பதென அறிக. என்னும் இவையிற்றுக்கு பிம் போற்றிப் பஃறொடையில் “நாட்டுகின்ற, எப்பிறப்பும் முற்செய் இருவினையால் நிச்சயித்துப் பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப், புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் எல்லைப் படாஉதரத் தீண்டியதீப் பல்வகையால், அங்கே கிடந்த அநாதியுயிர் தம்பசியால் எங்கேனு மாக எடுக்குமென வெங்கும்பிக், காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக் கேயக்கை கால்முதலாய் எவ்வுறுப்பும் ஆசறவே, செய்து திருத்திப்பின் பியோகிருத்தி முன்புக்க வையவழி யேகொண் டணைகின்ற பொய்யாத, வல்லபமே போற்றியம் மாயக்கால் தான்மறைப்ப நல்ல அறிவொழிந்து நன்குதீ தொல்லையுறா, அக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித் துக்காவி சோரத்தாய் உள்நடுங்கி மிக்கோங்குஞ், சிந்தை உருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால் வந்து மடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் பந்தித்த, பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க நேசத்தை வைத்த நெறிபோற்றி ஆசற்ற, பாளைப் பசும்பதத்தும் பாலனாம் அப்பதத்தும் நாளுக்கு நாட் சகல ஞானத்து மூள்வித்துக், கொண்டாள ஆளக் கருவி கொடுத் தொக்கநின்று பண்டாரி யான படிபோற்றி” (13.24) எது கண்டு கொள்க. செவ்வே தளர்ந்திடா துவப்ப எகு சலிப்பற்று நேரேநிற்க என்றது எல்லாஞ் சிவசேட்டையென்று கண்டு யானெனதுகெட நிற்கையென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “யான் செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத், தான்செவ்வே நின்றிட அத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்நிற்கும் வினை யொளித்திட் டோடும், நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம், ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே” (10.2) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது முன்பு கற்பித்த நிஷ்டை கைகூடாதென்ற மாணவகனை நோக்கி வேறுமோர் உபாய நிஷ்டையாகக் கொண்டு தத்துவங்களைச் சடமென்று கண்டும் ஆன்மாவைத் தனக்கென்ன அறிவில்லாதவனென்று கண்டும் இவை இரண்டையுஞ் சிவனே கூட்டிக் காரியப்படுத்துவனென்பதுங் கண்டு தற்சேட்டை கெட நிற்கவே பண்டு கற்பித்த நிஷ்டை தானே கைகூடுமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அப்படித் தற்போதம் சீவியாமல் நிற்கவென்றால் அது முடியாது அடியேன் நின்று சாதித்துப் பெறத்தக்கதாக எளிதாக ஒருவழி கற்பித்தருள வேணுமென்ற மாணவகனை நோக்கி முன் கற்பித்த நிஷ்டை கைகூடுகைக்கு வேறே உபாய நிஷ்டையாக ஒரு வழி அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரணம் நீத்துப்
பாவிப்பன் என்னில் என்ன பழுதுள பாவ கத்தால்
பாவிக்க ஒண்ணா னென்று பாவிப்பன் என்னின் நீயென்
பாவிக்க வேண்டா ஆண்ட பரனருள் பற்றி னோர்க்கே.

நீக்கமில் பாவக நிலையெப் பொருளுந்
தாக்கரு ஞானஞ் சாரா தென்றது.

பொழிப்புரை :

பாவிக்கின் மனாதி வேண்டும் அந்த உண்மையை நீ தியானிக்குமிடத்து அந்தக்கரணங்களாகிய மனாதிகள் கூடியே தியானிக்க வேண்டும். ஆகையால் அது; பயனிலை அந்த உண்மையாகிய சிவம் வாக்குமனாதீ தமாயிருக்கையால் அதனைக் கரணங்களைக் கொண்டு நீ தியானிக்குமளவில் உனக்கொரு பிரயோசனமு மில்லையாம் ; கரணம் நீத்துப் பாவிப்பனென்னில் அந்தக்கரணங்களை நீக்கியே அந்தப் பொருளைப் பாவித்துக் கொள்ளுவேனென்று நீ சொல்லில்; என்ன அதனாற் பயனேதுண்டாவது ; பழுதுள அந்தக் கரணங்கள் நீங்கினவிடங் குற்றத்தையுடைய கேவலமுமாய் முத்திப் பழுது சொல்லுகிற பாடாணவாதி அத்தமுமாமாகையால் அது பயனல்ல ; பாவகத்தால் பாவிக்க ஒண்ணானென்று பாவிப்பன் என்னில் அப்படியல்ல அடியேன் பாவிக்கிற பாவகங்களால் அந்தப் பொருளைப் பாவிக்கப்படாதென்று பாவித்துக்கொள்ளுவேனென்னில் ; நீயென் அந்தப் பொருள் உன்னுடைய பாவகங்களாற் பாவிக்கப்படாதேயானால் உன்னுடைய முயற்சி ஏன். ஆகையால் ; பாவிக்கவேண்டா ஆண்ட பரன் அருள் பற்றினோர்க்கே அப்படி ஆன்ம போதத்தால் ஒன்றையுஞ் சுட்டிப் பாவிக்க வேண்டுவதில்லை நம்மையாண்ட தம்பிரானார் அநுக்கிரகித்த திருவருளைப் பெற்ற அடியாராயுள்ளவர்களுக்கு.
உதாரணம் : கரணம் நீத்துப் பாவிப்பன் என்றது பாடாணவாதி அத்தமாமென்று சொன்னதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “காட்சி என்னக் காணாத் துயர மாட்சியை முத்தி என வகுத்தனரே” (7. 910) எது கண்டு கொள்க. அதனைப் பழுதென்று மறுத்ததற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “காட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி எனவகுத் துரைக்கிற் கரணா பாவம் மரணம் கருமரம் ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா தனிதரு துயரம் எனும் இது திடனே பாடா ணத்திற் கூடா முத்தி” (8. 915) எம் சித்தியாரில் “கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள், மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச், சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி தவிராது மலமிதுவும் பசுஞான மாகும், அரணங்கள் எரித்தவன் தன் அடியைஅறி விறந்தங் கறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே” (9.3) எது கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது அந்த உண்மை ஞானத்தைப் பாவகத்தினாலே தியானித்து வருகிறேனென்ற மாணவகனை நோக்கி அதனை நீ தியானிக்குமிடத்துக் கரணங்கள் கூடித் தியானிக்கையால் அதுவும் அத்தமல்ல என்றும், கரணங்களை நீக்கித் தியானிக்குமிடத்துக் குற்றத்தையுடைய கேவலமே முத்தியென்கிற பாடாணவாதி அத்தமாமென்றும், சிவனருளைப் பெற்ற அடியார்களுக்கு ஒரு பாவகங்களும் வேண்டாமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் அருளிச் செய்த நிஷ்டையை அடியேன் பாவித்துக் கொண்டு வருகிறேனென்று வினவின மாணவகனை நோக்கி அப்படி நீ பாவிக்கிற பாவகங்களால் அந்தப் பொருளைப் பெறவரிதென்றும், தம்பிரானார் திருவருளைப் பெற்ற அடியார்களுக்கு ஒரு பாவகங்களும் இல்லாமல் எளிதாகப் பெறலாமென்றும் வருமுறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றிரண் டாகி ஒன்றின் ஒருமையாம் இருமை யாகி
ஒன்றிலொன் றழியும் ஒன்றா தென்னின்ஒன் றாகா தீயின்
ஒன்றிரும் புறழின் அன்றாம் உயிரின்ஐந் தொழிலும் வேண்டும்
ஒன்றிநின் றுணரு முண்மைக் குவமைஆ ணவத்தோ டொன்றே.

குற்ற மருவுங் கோட்பா டகற்றி
முற்றிய கதியின் முறைமையீ தென்றது.

பொழிப்புரை :

ஒன்றிரண்டாகி ஒன்றின் ஒருமையாம் எங்கும் ஒரு முதலாக விரிந்திருக்கப்பட்ட பிரமமானது சீவான்மாவாக விரிந்து மீளவும் ஒன்றுபட்டுப் போமென்னில், அது சீவான்மாவாக விரிந்த அவதரத்தும் அந்தப் பிரமத்தின் செய்திகளெல்லாம் உண்டாக வேணும். அப்படியில்லையாகையால் அது அத்தமல்லவென அறிக; இருமையாகி ஒன்றிலொன்றழியும் அநாதியே ஆன்மாவுஞ் சிவமும் இரண்டு முதலாய் நின்று முத்தியில் ஒன்றாய்விடுமென்னில், அப்பொழுது ஆன்மா அழியவேண்டும். அதனாற் பெறுவானில்லையாம். ஆகையால் அதுவும் அத்தமல்லவென அறிக; ஒன்றாதென்னின் ஒன்றாகா ஆன்மா முத்தியிலுஞ் சிவத்தோடுங் கூடாமல் இரண்டுபட்டு நிற்குமென்னில், அப்பொழுது முத்தியில் ஒன்றுபட்டு அநுபவிக்கிறதே பயனென்கிற பேறும் இல்லையாமென அறிக ; தீயின் ஒன்றிரும் புறழின் அன்றாம் அக்கினியைச் சேர்ந்த இரும்பு அக்கினியானாற்போல ஆன்மாவும் அந்தச் சிவத்துடனே கூடிச் சிவமாமென்னில், அப்படியாகாது. அதேதென்னில் ; உயிரின் ஐந்தொழிலும் வேண்டும் ஆன்மாவுக்குப் பிராணனாய் நின்று சேட்டிப்பிக்கிற சிவனுடைய பஞ்சகிருத்தியமும் அந்தச் சிவனைப் பெற்ற ஆன்மாக்களுஞ் செய்ய வேண்டும். அத்தன்மை ஆன்மாக்களுக்கு இல்லையாகையால் அது அத்தமல்லவென அறிக. அப்படியானால் ஆன்மாக்கள் சிவனைப்பெற்று நிற்குமுறைமை எங்ஙனனே என்னில் ; ஒன்றிநின் றுணரும் உண்மைக் குவமை ஆணவத்தோ டொன்றே அந்தச் சிவத்தோடுங் கூடி முத்தியைப்பெற்று இன்பத்தை அநுபவிக்கிறதற்கு உவமையாவது, ஆணவ மலத்தோடுங் கூடி அதீதப்பட்ட ஆன்மாக்கள் அந்த மலத்தோடும் ஒன்றுபட்டு அழிந்துபோவதுஞ் செய்யாமல் இரண்டுபட்டு நீங்குவதுஞ் செய்யாமல் நின்றாற்போலக் கூடி அனுபவிக்கும்.
உதாரணம் : இங்ஙனஞ் சொல்லப்பட்ட சமயிகள் நால்வர்க்கும் உண்டான மதத்துக்கும் மறுப்புக்குஞ் சங்கற்ப நிராகரணத்திலே காட்டுதும். அவை வருமாறு : ஒன்றிரண்டாகி யொன்றும் என்று மாயாவாதி சொன்னதற்கு பிம் “பொற்பணி யியல்பினின் வான்வளி அனல்நீர் மண்மருந் தன்ன மான தாது ஆறைங் கோசத் தொகுதி யாக்கைப் பகுதிய தொருபுடை” (3.1013) எம், மீளவும் பரத்திலே ஒடுங்குமென்றவன் சொன்னதற்கு பிம் “வானா ரந்திரை நுரைதரு வாய்மையிற் கூடும்” (3.1920) எம் கண்டு கொள்க. அந்தப் பரத்திலேநின்று தோன்றிச் சீவான்மாவாக நின்று மீளவும் பரத்திலே ஒடுங்குமென்றதை அந்தப் பரத்துக்குண்டான இயல்பெல்லாம் இந்தச் சீவான்மாவுக்குண்டாக வேணுமென்று அவனை ஒருமையாமென்றும் மறுத்ததற்கு பிம் “பரத்துள தேல் இவை யும்பர மார்த்தம் பரத்தில தேல்ஒழி முன்பகர் மாற்றம்” (4.6364) எது கண்டு கொள்க.
இனி இரண்டாவது, இருமையாகி யொன்றும் என்று ஐக்கியவாதி சொன்னதற்கு பிம் “நீரும் நீரும் சேருந் தகைமையின் அறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி ஒன்றாம்” (5.1618) எது கண்டு கொள்க. அதனை மறுத்ததற்க பிம் “உண்மையில் இருமையும் ஒளியே எனில்ஒரு தன்மை யாகமுன் சாற்றின ரிலரே” (6.2627) எது கண்டு கொள்க. அன்றியும் இருமையாகி யொன்றும் என்று சைவர் சொன்னதற்கு பிம் “கருவியும் மலமும் பிறிவுறப் பிறியா ஞானம் நல்கலும் தான்அது நோக்கித் தன்னையும் அதனையும் தன்முதற் பொருளையும் இன்னவென் றறியா இருவரும் முயங்கி ஒன்றாய் உறுபயன் உவப்பும் இன்றாய் நிற்கும் இதுசிவ கதியே” (19. 1015) எது கண்டுகொள்க. அப்படி முத்தியில் ஒன்றுபட்டுப் போமென்னில் ஆன்மா அழிந்து போமாகையினால் அது அத்தமல்லவென்றும் ஒன்றினொன் றழியுமென்றும் அவனை மறுத்ததற்கு பிம் “இருவரும் கூடி ஒரு பயன் ஆய்த்தென் றருளினை இவ்வா றபேதிகள் நிலையே” (20.5354) எது கண்டுகொள்க. அன்றியும், சித்தியாரிலும் “அணைந்து கெட்ட தென்னில், பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ, பொன்றுகையே முத்தியெனில் புருடன் நித்த னன்றாம்” (11.9) எது கண்டுகொள்க.
இனி மூன்றாவது, ஒன்றாதென்று சமவாதி சொன்னதற்கு பிம் “முன்னோன் தனது முதிர்ஒளி ஞானம் அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த வண்டென உயிரைக் கொண்டிடும் உயிர்அது தன்னை நோக்கித் தான்அது வாகி ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும் பிறியா வாறு பெற்றுத் திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே” (11. 915) எது கண்டுகொள்க. அப்படிக் கூடி அனுபவியாத பொழுது சாயுச்சிய மாகாதாகையால் ஒன்றாகாதென்று அவனை மறுத்ததற்கு பிம் “முத்தி உற்ற நற்றவ ரவையிடைச் சேர்வர் என்றனை சார்தரு முத்தி சாலோக் கியமோ சாயுச் சியமெனில் பந்த முற்ற கந்தல கழித்த அறிவினோ டறிவு பிறியாப் பெற்றி வேண்டும்என் பதற்கு ஈண்டிவர் இவ்வா றிருப்பர் என்பதற் குருத்தான் வேண்டும் அண்ணல தருளின் நண்ணினர் இருப்பினும் சீவன் முத்தரென் றோதினர் அகன்று நீங்கியும் உருவம் நீங்கா தாயின் ஓங்கிய முத்தி யாவதென் உரைக்க” (12.7383) எது கண்டுகொள்க. இனி, தீயின் ஒன்றிரும் புறன் அன்றாம் என்று மீளவும் அவன் சொல்ல, அப்படி யாகாது, ஆமென்னில் உயிரின் ஐந்தொழிலும் வேண்டும் என்று நாலாவது அவனை மறுத்ததற்கு பிம் “முன்னவன் தன்மை யெய்தினர் எல்லாச் செய்தியுஞ் செய்வர் இரும்பெரி எய்தித் தருஞ்செயல் தகவெனிற் பொருள்நிலை கிடக்க ஒருதிட் டாந்தப் பேறே ஆயிற் சீறாக் கதுவிய புனல்ஒரு புடைசேர் கனல்தகு மாயினும் வேறொரு பொருளை நீறாக் கிலதே நெருப்பெனும் இதனின் உருத்தனி காட்டுக அங்கியும் ஒன்றைத் தங்கிநின் றல்லது தன்தொழில் நடத்தா தென்றறி இனிநீ இரும்பனற் செய்தி தரும்பரி சுளதே” (12.3747) எது கண்டுகொள்க.
இனி, ஐந்தாவது ஒன்றுபட்டு முத்தியிலே அநுபவித்து நிற்கிறதற்குத் திருஷ்டாந்தம் ஆணவ மலத்தோடுங்கூடி அதீதப்பட்டுக் கிடக்குமாபோலே என்றது ஆன்மா சிவத்தோடுங்கூடி ஒன்றுபட் டழிவதுமில்லை இரண்டுபட்டு நீங்குவதுமில்லை என்றதென அறிக. இதற்கு பிம் இந்நூலிலே முன்னே “உடலுயிர் கண்ணருக்கன் அறிவொளிபோற் பிறிவரு மத்துவிதம்” (7) என்றதும் இப்பொருள் பற்றியென அறிக. அன்றியும், திருவருட்பயனில் “ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா, தென்றாலுமொன் றிரண்டு மில்” (75) எம், “தாடலைபோற் கூடியவை தான்நிகழா வேற்றின்பக், கூடலைநீ யேகமெனக் கொள்” (74) எம், இந்நூல்களன்றித் திருவருளைப் பெற்று அநுபவித்த அடியார்கள் திருவாக்குக்களிலும் உண்டான கருத்து சிவாநந்தமாலையில் “தாணுவினோ டத்துவிதஞ் சாதிக்கு மாணவுனை, ஆணவத்தோ டத்துவித மாக்கின ரார் கோணறவே, யென்னாணை யென்னாணை யென்னாணை யேக மிரண் டென்னாமற் சும்மா விரு” (276) என்னும் வகைகளிலும் இப்பொருளைக் கண்டுகொள்க. ஆகையால், திருஷ்டாந்தத்தினாலும் அநுபவத்தினாலுஞ் சிவனைப் பெற்ற ஆன்மாக்கள் முத்தியில் ஒன்றுபட்டு அழிவதுஞ் செய்யாமல் இரண்டுபட்டு நீங்குவதுஞ் செய்யாமல் அத்துவிதமாய் நின்றே அநுபவிப்பார்களென்பது கருத்து.
இதனாற் சொல்லியது ஆன்மா அந்தப் பரத்திலே நின்றுந் தோன்றி மீளவும் அந்தப் பரத்திலே ஒன்றுபட்டுப் போமென்கிற மாயாவாதியும், அதல்ல ஆன்மா அநாதியில் இரண்டாயிருந்து முத்தியில் ஒன்றாமென்கிற ஐக்கியவாதியும், சைவரும், அதல்ல முத்தியிலும் இரண்டுபட்டுச் சிவனைப்போலுஞ் சமமாயிருக்குமென்றும் அன்றியும் அக்கினியைச் சேர்ந்த இரும்பு அந்த அக்கினி செய்யும் முறைமைகளெல்லாஞ் செய்தாற் போலச் சிவனைப் பெற்றவர்களுஞ் சிவனைப் போலப் பஞ்ச கிருத்தியங்களுஞ் செய்வார்களென்ற சமவாதியும், தத்தம் மதங்களைச் சொல்ல அவர்கள் அத்தங்களை மறுத்துக் காட்டிச் சைவ சித்தாந்த உண்மை ஆன்மா ஆணவ மலத்தோடுங் கூடின தன்மைபோல இருக்குமென்னு முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட நிஷ்டையாலும் முன்சொன்ன உண்மை நிஷ்டையாலும் அந்தச் சிவனைப் பெற்ற ஆன்மாக்கள் அந்தச் சிவனோடுங்கூடி ஒன்றுபட்டுப் போவார்களோ இரண்டுபட்டு நிற்பார்களோ என்று மாணவகன் ஆசாரியரை வினவின அவதரத்து, மாயாவாதி அநாதியில் ஒன்றாயிருந்து பொன்னிலேயிருந்து பணிகள் விரித்தாற்போல சீவான்மாவும் பிரபஞ்சமுமாக இரண்டாய் விரிந்து மீளவும் ஒன்றுபட்டுப் போமென்று சொல்லுகையும், அதனை அதல்லவென்று சைவர் வந்து அநாதியில் ஆன்மாவுஞ் சிவமும் இரண்டாயிருந்து முத்தியில் நீரும் நீருங் கூடி ஒன்றானாற் போல ஒன்றுபட்டுப் போமென்று சொல்லுகையும், அன்றியும் ஐக்கியவாதி வந்து அநாதியில் ஆன்மாவுஞ் சிவமும் இரண்டாயிருந்து முத்தியில் நீரும் நீருங் கூடி ஒன்றானாற்போல ஒன்றுபட்டுப் போமென்று சொல்லுகையும், அதனை அல்லவென்று சமவாதி வந்து ஆன்மாவுஞ் சிவமும் முத்தியிலும் இரண்டாயிருக்கு மென்று சொல்லுகையும், அன்றியும் மீளவும் அவன் அக்கினியைச் சேர்ந்த இரும்பு அக்கினியானாற்போலச் சிவனைச் சேர்ந்த ஆன்மாக்கள் சிவமாமென்று சொல்லுகையுமான அவதரத்து இவர்கள் சொன்னதெல்லாஞ் சித்தாந்த அத்தமல்லவென்று அவரவர் அத்தங்களை மறுத்துக்காட்டிச் சித்தாந்த உண்மையை ஓர் உபமானங் காட்டி மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 4

அழிந்திடும் பாசம் என்னில்
நித்தமென் றுரைத்தல் வேண்டா
அழிந்திடா தென்னின் ஞானம்
அடைவது கருத வேண்டா
அழிந்திடும் சத்தி நித்தம்
அழிந்திடா ஒளியின் முன்னர்
அழிந்திடும் இருளும் நாசம்
அடைந்திடா மிடைந்தி டாவே.

மொழிந்திடு மூல மலத்தின் சத்தி
அழிந்திடுந் தன்னியல் பழியா தென்றது.

பொழிப்புரை :

அழிந்திடும் பாசம் என்னில் முத்தியைப் பெற்ற ஆன்மாக்களிடத்து உண்டாகிய ஆணவ மலமானது அழிந்துபோம் என்று சொல்லுகில்; நித்தமென்றுரைத்தல் வேண்டா பதி பசு பாசமென்று சொல்லப்பட்ட முதல் மூன்றும் அநாதி நித்தமென்று வேதாகமங்கள் சொல்லவேண்டுவதில்லையாம். ஆகையால் அது அத்தமல்ல ; அழிந்திடாதென்னில் முத்தியிலும் அழியாதென்னில் ; ஞானமடைவது கருத வேண்டா ஆணவ மலம் அறியாமையைப் பண்ணி நிற்கையால் அது ஆன்மாவோடுங் கூடி மறைத்து நிற்குமட்டும் அறிவாயுள்ள சிவத்தோடுங் கூடி அநுபவிக்க என்கிறது சற்றும் நினைக்க வேண்டுவதில்லையாம். ஆகையால் அதுவும் அத்தமல்ல. பின்னை எங்ஙனேயென்னில் ; அழிந்திடும் சத்தி நித்தம் அழிந்திடாது ஆன்ம போதத்தை அநாதியே மறைக்கப்பட்ட அந்த மலத்தின் காரியமாயுள்ள சத்தியழியும் அதனுடைய காரணமாகிய நித்தியத்துக்கு அழிவில்லையாம். அஃதென்போலவென்னில் ; ஒளியின் முன்னர் அழிந்திடும் இருளும் நாசம் அடைந்திடா மிடைந்திடாவே ஆதித்தப் பிரகாச முதலாயுள்ள ஒளிகளில் முன்னில்லாத இருளானது அழிந்ததுமில்லை மறைந்து நின்றதுமில்லை.
என்னவே, ஒளியின் மேலீடுகொண்டு இருளடங்கித் தோற்றமு மற்றுக் காரியப்படாமல் நின்றாற்போல அருளின் மேலீடு கொண்டு மலம் கீழ்ப்பட்டு நின்றதென அறிக. இதற்கு பிம் போற்றிப் பஃறொடையில் “சேண்ஆர் இருள்வடிவும் செங்கதிரோன் பால் நிற்பக் காணா தொழியும் கணக்கேபோல் ஆணவத்தின், ஆதி குறையாமல் என்பால் அணுகாமல் நீதி நிறுத்தும் நிலைபோற்றி” (7778) எது கண்டுகொள்க.
பாசம் அழியும் என்பதைப் பேதவாதி கருத்தென்றது அவன் செம்பிற் காளிதமானது குளிகையினாலே கெட்டுப் பொன்னான தன்மைபோல ஆன்மாவுக்கு உண்டான ஆணவ மலமும் அருளினாலே கெட்டுச் சிவமயமாமென்றானென அறிக. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில், “ஈசன தருளாற் பாசத் தொகுதி செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு குளிகை தாக்க ஒளிபெற் றாங்கு நித்த சுத்த முத்தராக வைத்தனர் உலகின் மறைவல் லோரே” (9.1620) எது கண்டுகொள்க. இதனை ஆகாதென்று மறுத்ததேதென்னில், பதிபசு பாசம் மூன்றும் நித்தியமென்று இருக்கையாலே பாசம் அழியவொண்ணா தென்றதென அறிக. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “மறைக ளாகமத் துறைகள்மற் றெவையும் நாசமில் பதிபசு பாசமென் றுரைத்தல் அயர்த்தோர் குளிகைச் சயத்தால் தாம்பிரக் காளித நாசம் பாசத் தேய்த்தல் கூடாதன்றியும் குளிகை சீருணம் நீடா தழித்த நிலைஇலை ஆதலிற் பேத வாதம் ஓதுதல் பிழையே இன்னும் இன்னுயிர் ஏமங் குளிகை தன்னில் அந்நியம் தருவது திடமே” (10.19) எது கண்டுகொள்க. பாசம் அழியாதென்றது சமவாதி கருத்தென்றதேதென்னில், அவன் முத்தியைப் பெற்றவிடத்துஞ் சரீரம் அழியாதென்கையினாலும் சரீரம் உள்ளமட்டும் மும்மலமும் போகா தென்கையினாலும் அதனை ஆகாதென மறுத்ததென அறிக. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “அகன்று நீங்கியும் உருவம் நீங்காதாயின் ஓங்கிய முத்தி யாவதென் உரைக்க செடியுடல் அணுகாக் குடிலை கொடுக்குமென் றோதினை நீயே பேதாய் பகட்டுரல் ஒளிர்சினை முச்சித் தளிரெனும் இதுதகும் இச்சா ரூபம் நச்சின ரென்னின் மும்மலத் தேதும் இன்மைய தன்றே இதுவளர் முத்திப் பதமென இயம்புவர்” (9.8189) எது கண்டுகொள்க. இனி, மலத்தின் சத்தியாகிய காரியம் அழியும், நித்தமாகிய காரணம் அழியாதென்பதற்கு பிம் சித்தியாரில் “தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும், உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும் ஒள்ளெரியின் ஒளிமுன்னர் இருளுந் தேற்றின், வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி மாயாதே தன்சத்தி மாய்ந்து காயந், திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ் சேராத வகைதானுந் தேயு மன்றே” (11.4) எது கண்டுகொள்க. அன்றியும், ஞானாமிர்தத்திலும் “மிக்க விடங்கெழு பெருவலி யுளங்கொள மந்திரத் தடங்கிய தன்மையும் அற்றே குடங்கரிற் கலங்கல் நீரின் நலங்கிளர் விழுக்காழ் அளைந்த மாறென விளங்கிறந் தகன்ற பாசப் பெருவலி தீர்த்தனன் மாசில் ஞானமன் பெருந் தகையே” (52.1319) எது கண்டுகொள்க.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட உண்மை ஞானத்தைப் பெற்ற ஆன்மாக்களிடத்து உண்டாகிய பாசமான ஆணவ மலம் அழியுமோ நிற்குமோவென்று வினவின மாணவகனை நோக்கிப் பாசமழியு மென்னிற் பேதவாதி அத்தமாமென்றும் பாசமழியாதென்னிற் சமவாதி அத்தமாமென்றும் இந்த இரண்டு வகையும் மறுத்துக் காட்டி மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 5

எல்லையில் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும் ஏன்ற உடற்பழ வினைய தூட்டும்
தொல்லையில் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே.

மும்மையாம் வினையும் முயங்கிய மாயையுஞ்
செம்மையா லகலுந் திறந்தெரிந் துரைத்தது.

பொழிப்புரை :

எல்லையில் பிறவி நல்கும் இருவினை அளவிடப்படாத ஜநநங்களைத் தருகிற புண்ணிய பாவமாகிய சஞ்சித கன்மங்கள்; எரிசேர் வித்தின் ஒல்லையின் அகலும் அக்கினியைச் சேர்ந்த விதைகளைப்போல ஆசாரியன் செய்யப்பட்ட தீடிக்ஷகளினாலே விரைவிலே கெட்டுப்போம் ; ஏன்ற உடற் பழவினைய தூட்டும் எடுத்த உடலுக்கு அமைத்த பிராரத்தம் அந்த உடலுள்ளதனையும் புசித்து அந்த உடலோடே ஒக்கக் கெட்டுப்போம்; தொல்லையில் வருதல்போலத் தோன்றிரு வினைய துண்டேல் முன்புண்டான ஜநநங்கள் தோறும் பிராரத்த கன்மம் புசிக்கச் செய்தே ஆகாமிய கன்மம் ஏறினாற் போல, இப்பொழுது பிராரத்த கன்மம் புசிக்கச் செய்தே ஆகாமியங் கட்டுப்படாதோ என்னில், அப்படி உண்டாகாது. வாதனா பலத்தாலும் அபுத்தி பூர்வத்தாலும் புண்ணிய பாவங்கள் மேலைக்கு ஜநநமாகக் கட்டுப்படுமாகில் ; அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே விளக்கின் முன் இருள் போனாற் போல இவனிடத்தி லுண்டாயிருக்கப்பட்ட ஞானாக்கினியினாலே அழிந்துபோம்.
எல்லையில்லாத ஜநநங்களைத் தருகிற இருவினை யென்றது எங்ஙனே யென்னில் ஒவ்வொரு ஜநநங்களை எடுத்தால் அந்த ஜநநங்கள் தோறும் வெகுவிதமான ஜநநங்களைக் கட்டுப்படுத்து மென்றதென அறிக. இதற்கு பிம் இருபாவிருபஃதில் “அத்துவா மெத்தி யடங்கா வினைகள்” (16.18) எம், இந்நூலினும் “முந்தநுக ருந்துபயன்” (48) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இங்ஙனங் கட்டுப்பட்டுக் கிடக்கிற சஞ்சித கன்மங்களை ஆசாரியன் தீடிக்ஷகளினாலே போக்குவன் என்றதற்கு பிம் சித்தியாரில் “மூன்று திறத் தணுக்கள் செயும் கன்மங் கட்கு முன்னிலையாம் மூவிரண் டாம் அத்து வாவின், ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித் தரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித், தோன்றி நுகராதவகை முற்செய் கன்மத் துகளறுத்தங் கத்துவா தொடக்கறவே சோதித், தேன்றவுடற் கன்மம்அநு பவத்தினால் அறுத்திங் கினிச்செய் கன்மம் மூலமலம் ஞானத்தால் இடிப்பன்” (8.10) எம், போற்றிப்பஃறொடையினும் “ஞ638639சய்யதிருக், கண்ணருளா னோக்கிக் கடியபிறப் பாற்பட்ட புண்ணு மிருவினையும் போயகல” (7475) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது சஞ்சித கன்மம் ஆசாரியன் செய்யப் பட்ட தீடிக்ஷகளினாலே போமென்றும் பிராரத்த கன்மம் உடலுள்ள மட்டும் புசித்து உடலோடே ஒக்க மாயுமென்றும் ஆகாமிய கன்மம் உண்டானாலும் இவனிடத்தில் உண்டாயிருக்கப்பட்ட ஞானாக்கினி யினாலே போமென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இதனாற் சொல்லியது பாசம் அழியுமோ, என்றும் அழியாதோ என்று கேட்ட மாணவகனை நோக்கிப் பாசம் அழியில் நித்தியத்துக்கும் அழிவுண்டாமென்றும் பாசம் அழியாதென்னில் ஞானம் பிரகாசியாதென்றும் மறுத்து, பாசத்தின் சத்தி அழியுமன்றி நித்தியம் அழியாதென்று வருமுறைமையை அறிவித்தது.
மற்றுண்டான கன்மமும் மாயையும் போகைக்கு வழி எங்ஙனே என்று வினவ மேல் அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

பந்தமா னவைஅ றுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும்
அந்தம்ஆ திகள்இ லாத அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே.

உடலுறு நுகர்வும் உற்றிடும் வினையும்
இடர்பட அஞ்செழுத் தியம்புக வென்றது.

பொழிப்புரை :

பந்தமானவை அறுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச் சந்தியா தொழியாது தீடிக்ஷகளினாலே கன்மங்களைப் போக்கினாலும் பிராரத்த கன்மம் இந்தப் பூததேகம் உள்ள மட்டும் பொருந்துதல் தவிராது. அஃதென்போலவென்னில்; இங்குத் தன்மைபோல் பெருங்காயத்தின் இயல்பு போல. அஃதாவது பாத்திரத்திலே இட்டு வைத்த பெருங்காயமானதை வைத்த எடை குறையாமல் வாங்கிப் பாத்திரத்தைத் தூயதாய்க் கழுவிப் போட்டாலும் அந்தப் பாத்திரம் உள்ள மட்டும் அதிலுள்ள கந்தத்தின் வாசனை போகாதாற்போல என்றதென அறிக. அப்படிப் பிராரத்த கன்மம் உண்டாகவே; வினையுஞ் சாரும் ஆகாமிய கன்மமும் ஏறாதிராது. அப்படி இங்ஙனம் பொருந்தப்பட்ட பிராரத்தமும் அதனாலுண்டாகிய ஆகாமியமும்; அந்தம் ஆதிகள் இலாத அஞ்செழுத்தருளினாலே வந்தவாறுரை செய்வாரை முடிவு முதலு மில்லாத ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஆசாரியன் கடாக்ஷித்த முறைமையிலே உச்சரிக்கப்பட்ட சிவஞானிகளை ; வாதியா பேதியாவே அந்தப் பிராரத்த கன்மம் புசிப்பு மாத்திரமாய் வந்து போகிறதொழிய அவர்கள் ஈடுபடத்தக்கதாக மேலிட்டு வருத்தாது. அவர்கள் அப்படி ஈடுபட்டு வருந்தாதது கொண்டே மற்ற ஆகாமிய கன்மமும் ஏறாது. அப்படியே ஏறிற்றாகிலும் பேதமாக்குவித்து ஜனனத்தை உண்டாக்காது.
அன்றியும், இந்தப் பதத்துக்குப் பிராரத்த கன்மம் வாதியாது ஆகாமிய கன்மம் பேதியாதென்றதைப் பிராரத்தமொன்றிலேயும் வைத்துக் கொண்டு ஒருமையாகக் கூறுவாருமுளர். அது வழக்கல்லவென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், அப்படிப் பிராரத்த கன்மம் வாதியாதென்றால் ‘பவுதிக முழலுமெல்லைச் சந்தியா தொழியாது’ என்ற பதத்துக்குப் பிராரத்த கன்மம் பூததேக முள்ளமட்டும் பொருந்துதல் தவிராதென்று அறுதி கூற வழக்கில்லையாமென அறிக. அன்றியும், சித்தியாரில் “ஏன்ற உடற் கன்மம்அநு பவத்தினால் அறுத்து” (8.10) எம், திருவருட் பயனில் “ஏன்றவினை யுடலோ டேகும்” (98) எம் நூல்களில் வரும் பொருளுக்கும் விரோதமுமாமென அறிக. இதுவன்றியும், பிராரத்த கன்மம் பேதியாது ஆகாமிய கன்மம் வாதியா தென்பாருமுளர். அதுவும் வழக்கல்லவென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், பேதியாதென்பது போகாதென்னும் பொருள் பெற்று நிற்கையால் பூத தேகமுள்ளமட்டும் பிராரத்த கன்மம் பொருந்துதல் தவிராதென்று முற்கூறுகையாலே மீளவும் அதனை இரட்டித்துப் பொருள் படுத்த வேண்டியதில்லையாம். அல்லதூஉம், பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கிறவர்களுக்குப் பிராரத்த கன்மம் போகாதென்பது வழக்கல்ல. அஃதெங்ஙனே என்னில், பஞ்சாக்ஷரத்தை உச்சரித்தால் கன்மம் நீங்குமென்பதன்றிப் போகாதென்பது எதுபோல என்னில் ஒளஷதங் கொண்டாலும் வியாதி போகாதென்பதற்கு ஒக்குமென அறிக. ஆகையால், பிராரத்த கன்மம் பேதியாதென்பது வழக்கல்லவென அறிக. அன்றியும், வாதியா பேதியா என்பதை ஆகாமிய மொன்றிலேயும் வைத்துக்கொண்டு, பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கிற சிவஞானிகளுக்கு ஆகாமிய கன்மம் வாதியாது, அல்லாமல் வாதித்ததாகிலும் அதனாலே பேதித்து ஜநநமுண்டாக்கா தென்பாருமுளர். அதுவும் வழக்கல்லவென அறிக. அதற்குக் குற்றமேதென்னில், இச்செய்யுளிலே ‘பவுதிக முழலுமெல்லைச் சந்தியாதொழியாது’ என்று பிராரத்த கன்மத்துக்குச் சொல்லுகையினாலும், வினையுஞ் சாருமென்று ஆகாமிய கன்மத்துக்குச் சொல்லுகையினாலும், அன்றியும் இதுவே கருத்தென்பதைப் பற்றி அம்பலநாதத் தம்பிரானார் இச்செய்யுளுக்குக் கருத்தாக அருளிச் செய்தது. “உடலுறு நுகர்வும் உற்றிடும் வினையும், இடர்பட அஞ்செழுத் தியம்புக என்றது” என்று பிராரத்தத்திற்கும் ஆகாமியத்திற்குமாக அருளிச் செய்கையினால், ஆகாமியம் ஒன்றிலுங் கூட்டிப் பொருள் படுத்துகை வழக்கல்லவென அறிக. ஆகையால், பிராரத்த கன்மமானது சிவஞானிகளுக்கு வாதனாபலத்தால் புசிப்பு மாத்திரமாய் நிற்பதொழிய, சிவஞானிகளை மேலிட்டு அவர்கள் ஈடுபடத்தக்கதாக வருத்தாதென்பதே வாதியாதென்பதற்கு வழக்கென அறிக.
அப்படிப் பிராரத்த கன்மம் வந்து தாக்கினாலும் அதனாலீடு பட்டு வருத்தப்படாமல் நின்றவர்களும் உண்டோவென்னில், அப்படியுண்டு. அஃது யாரோவென்னில் அப்பரென்னுந் திருநாவுக்கரசு தம்பிரானார் சமண சமயத்தை விட்டுச் சைவத்திலே வந்ததற்கு அந்தச் சமணர் வெகுண்டுகொண்டு வேண்டும் வருத்தங்கள் செய்த வளவிலும் அதனாலீடுபட்டு வருந்தாமல் நின்றதுண்டு. அதற்கு பிம் திருக்களிற்றுப் படியாரில் “கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற் கொலை தவிர்த்தல், கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் நல்ல, மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல், திருவாமூராளி செயல்” (71) எது கண்டு கொள்க. அப்பர் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு நிற்கவே அந்த அமணர் செய்யப்பட்ட வருத்தங்கள638639டல் ஈடுபட்டதில்லை என்பதற்கு பிம் தேவாரத்தில் “சொற்றுணை வேதியன் சோதி வானவன், பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக், கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சிவாயவே” (4.11.1) எது கண்டுகொள்க. அன்றியும், சிவஞானிகளிடத்திலே கன்மங்கள் வந்து தாக்கினாலும் அதனால் வருந்தார்கள் என்பதற்கு பிம் சித்தியாரில் “அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடாதாகும் ஒளடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா, எங்குற்ற கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக் கிருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத், தங்கிப் போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த சக்கரமும் கந்தித்துச் சுழலு மாபோல், மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே” (10.6) எம், ஞானாமிர்தத்தில், “மண்வினை மாக்கள் தம்வினை முடியா திகிரி யுருட்டி யொருவி யாங்கு வருத லோவா மற்றுங் குவிவாய்த் தசும்புரை யிங்காங் கசும்புறத் துடைத்து இருங்கடி யிகவாப் பெருங்கட னல்லதை யுடையதை யுடையரோ வினையுணர்ந் தோரே” (48.11.16) எது கண்டுகொள்க.
அந்த மாதிகளிலாத ஐந்தெழுத்து எகு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைத் தோற்றமும் ஈறுமில்லாதென்றதேதென்னில், சிவனுக்குத் தோற்றமும் ஈறுமில்லாதது கொண்டே ஸ்ரீ பஞ்சாக்ஷரமுஞ் சிவனுடைய திருநாமம் ஆகையால், அதனையும் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இந்தப் பஞ்சாக்ஷரத்தைக் குருமுகாந்தரமாக அறிந்து உச்சரிக்கிற சிவஞானிகளை அந்தக் கன்மங்கள் மேலிட்டு வருத்தாதென்றதற்கு பிம் தேவாரத்தில் “விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல், உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம், பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை, நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே” (4.11.3) எம், அன்றியும் அந்தப் பஞ்சாக்ஷரத்தை அறிந்து உச்சரிக்கிறவர்களிடத்திலே சிவன் சாந்நித்தியமாவன் என்பதற்கு பிம் தேவாரத்தில் “ஏது மொன்று மறிவில ராயினும், ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப், பேத மின்றி யவரவ ருள்ளத்தே, மாதுந் தாமு மகிழ்வர்மாற் பேறரே” (5.60.1) எம், அன்றியும் சித்தியாரில் ஒன்பதாஞ் சூத்திரத்தில் “அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க மதியருக்கன் அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே” (9.8) எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, ஆன்மாக்களுக்கு உண்டாக்கப்பட்ட கன்மங்களை தீடிக்ஷயினாலே ஆசாரியன் கிருபைசெய்து போக்கினாலும் பிராரத்த கன்மம் உடலுள்ள மட்டும் புசித்தே தொலையுமென்றும், அங்ஙனம் பிராரத்த கன்மம் உண்டாகவே ஆகாமிய கன்மம் உண்டாமென்றும், அப்படி உண்டாக்கப்பட்ட கன்மங்கள் இரண்டும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குருமுகாந்தரமாகப் பெற்று உச்சரிக்கிற சிவஞானிகளுக்குப் பிராரத்த கன்மம் புசிப்பு மாத்திரமாய் வந்துபோகிற தொழிய மேலிட்டு வருத்தாதென்றும், அது அப்படி வருத்தாதது கொண்டே அதனால் உண்டாகிய ஆகாமிய கன்மமும் பேதித்துக் கிளைத்து ஜநநத்தை உண்டாக்காதென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சஞ்சித கன்மமானது தீடிக்ஷகளினாலே போமென்றும், பிராரத்த கன்மம் இந்த உடலுள்ள மட்டும் புசித்துத் தொலைய வேணுமென்றும், அதனாலுண்டாக்கப்பட்ட ஆகாமிய கன்மமானது அவர்களிடத்து உண்டாகிய ஞானத்தினாலே போமென்றும் முன்னர்ச் செய்யுளிலே அருளிச் செய்கையினால் அப்படி வாதிக்கப்பட்ட கன்மங்கள் போக்கிக் கொள்ளுகைக்கு அந்த ஞானநிலைமை கைகூடாத அவதரத்தும் பரிபாகமாக ஆன்ம லாபமாகிய பத்தாஞ் சூத்திரத்துக்கு மேலாக முற்கூறின ஆன்ம சுத்தியாகிய ஒன்பதாஞ் சூத்திரத்தின் பகுதியாகிய பஞ்சாக்ஷர தரிசனமாகிய ஐந்தெழுத்து அருள்நிலையென்னும் அதிகாரம் வைக்கப்பட்டது.
அஃதாவது, பதி பசு பாசமென்று சொல்லப்பட்ட மூன்று முதலும் ஐந்து வகையாக நிற்கையால் அந்த ஐந்தினையும் சிவனுடைய திருநாமமாகிய பஞ்சாக்ஷரமும் ஐந்தெழுத்தாகையால் அதிலே அடைத்துத் தரிசிப்பித்ததென அறிக. அது ஐந்திலும் நின்றமுறைமை மேல் “திருவெழுத்தைந்தில்” (91) என்னுஞ் செய்யுளிலே கண்டுகொள்க. இவ்வதிகாரத்துக்கு முந்தின செய்யுளாகிய “பந்தமானவை யறுத்து” என்னுஞ் செய்யுளுக்குத் தொந்தனை வருமாறு: அஃதாவது, அப்படிச் செய்யப்பட்ட தீடிக்ஷகளினாலே சஞ்சித கன்மம் போனாற் போல மற்றுள்ள கன்மங்கள் போகாதிருப்பான் ஏனென்ற மாணவகனை நோக்கிப் பிராரத்த கன்மம் இந்த உடலுள்ளமட்டும் புசித்தே தொலையுமென்பதற்கு ஒரு திருஷ்டாந்தமுகமாக அருளிச் செய்து, அப்படி வாதிக்கப்பட்ட கன்மங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைக் குருமுகாந்தரமாக அறிந்து உச்சரிக்கிற சிவஞானிகளுக்குப் புசிப்புமாத்திரமாய் வந்து போகிறதொழிய அவர்களை மேலிட்டு வருத்தமாட்டாதென்னும் முறைமையை மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

திருவெழுத் தஞ்சில் ஆன்மாத் திரோதமா சருள்சி வஞ்சூழ்
தரநடு நின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மையாகி
வருமந மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக்
கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே.

தீதிலா உண்மைத் திருவைந் தெழுத்தையுங்
காதலா மவருக் கோதலா மென்றது.

பொழிப்புரை :

திருவெழுத் தஞ்சில் ஆன்மாத் திரோதமாசருள் சிவம் சிவனுடைய திருநாமமாகிய நமசிவய என்ற ஐந்தக்ஷரத்தினும் ஆன்மாவுந் திரோதசத்தியும் மலமும் அருளும் சிவமும் என்று சொல்லப்பட்ட ஐந்து முதலும் நிற்கும். அவையாவன : யகாரத்திலே ஆன்மாவும் நகாரத்திலே திரோதசத்தியும் மகாரத்திலே மலமும் வகாரத்திலே அருளும் சிகாரத்திலே சிவமுமாக நின்றதென அறிக. இவை ஐந்து முதலினுஞ் சிவமுன்னாக உச்சரிக்கும்பொழுது ; சூழ்தர நடுநின்றது திரோதமும் மலமும் ஒருபாலும் அருளுஞ் சிவமும் ஒருபாலுமாக முன்பின் சூழ்ந்துநிற்க நடுநின்றது ஆன்மா ; ஒன்றாந் தன்மையுந் தொன்மையாகி வரும் நடுவேநின்ற ஆன்மாவானது அந்த அருளறிவித்தால் அதனாலே அறிந்தும், மற்ற மலம் மறைத்தால் அதனாலே மறைப்புண்டும், இங்ஙனம் இரண்டோடுங் கூடி ஒன்றுபட்டு அதுவதுவாய் நின்றாலும், தானொரு முதலாய் வருகிறது அநாதியேயுடையது. அப்படியிருக்கவும் ; மநமிகுதியாலே மவ்வாகிய மலமும் நவ்வாகிய திரோதசத்தியும் மேலிட்டு நிற்கையாலே ; வாசியில் ஆசையின்றிக் கருவழிச் சுழலும் வவ்வாகிய அருளிலுஞ் சிவ்வாகிய சிவத்திலும் ஆசையற்று ஜநந மரணத் துக்கத்திலே நின்றழுந்தும் ; மாறுங் காதலார்க் கோதலாமே அந்த மலத்தின் கௌரவ நீங்கி அருளிலே ஆசையுடையவர்களுக்கு இந்தப் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கலாம்.
பதி பசு பாசமென்று சொல்லப்பட்ட மூன்று முதலும் ஐவகையாக நின்றதற்கு வழியேதென்னில், சிவ்விலும் வவ்விலும் நவ்விலும் பதியின் கூறாகிய சிவமும் அருளுந் திரோத சத்தியும் நின்றதென அறிக. யவ்விலே பசுவாகிய ஆன்மா நின்றதென அறிக. மவ்விலே பாசமாகிய மலம் நின்றதென அறிக. இதிலே, முற்கூறிய பதியின் கூற்றுக்குப் பாசத்தின் பகுதியாயிருக்கப்பட்ட திரோத சத்தியைக் கூட்டினது ஏதென்னில், அஃதாவது ஆன்மாவை மறைக்கப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்தவேண்டி அருளானது திரோதமாய் நின்று காரியப்படுத்துகையால் அதனையும் பதியின் கூறாகச் சொல்லப்பட்டதென அறிக. அப்படியானால் அந்த அருளுக்குத் திரோத சத்தியென்று பேராக வேண்டுவான் ஏனென்னில், அந்த மலத்தோடுங் கூடிக் காரியப் படுத்துகையால் அவதரப் பெயரானதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “தூயவன் தனதோர் சத்தி திரோதான கரியதென்றும்” (2.87) எம், அன்றியும் இந்நூலினும் “முற்சினமருவு திரோதாயி கருணையாகி” (48) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. நடுநின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மையாகி வரும் எது ஆன்மா அருளோடும் மலத்தோடுங் கூடி ஒன்றுபட்டு வருமென்பதற்கு பிம் சித்தியாரில் “சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்து மசத்துமன்று, நித்தனாய்ச் சதசத்தாகி நின்றிடு மிரண்டின் பாலும்” (7.2) எது கண்டுகொள்க. மந மிகுதியாலே வாசியி லாசையின்றிக் கருவழிச் சுழலும் எகு நவ்வாகிய திரோதத்தோடும் மவ்வாகிய மலத்தோடுங் கூடிப் பிரபஞ்சப் பற்றுவிடாமல் நிற்குமளவும் ஜநந மரண துக்கத்திலே நின்று அழுந்து மென்றதற்கு பிம் சித்தியாரில் “மலம்மாயை கன்ம மாயே யந்திரோ தாயி மன்னிச், சலமாரும் பிறப்பி றப்பிற் றங்கி” (2.88) எது கண்டுகொள்க. மாறுங் காதலார்க் கோதலாமே எகு பிரபஞ்சப் பற்றுவிட்டு அருளிலே ஆசைப்பட்டவர்களுக்கென்றதற்கு பிம் திருவாசகத்தில் “அருளைப் பெறுவா னாசைப் பட்டேன் கண்டா யம்மானே” (25.1) எம், “ஆசைப்பட்டே னாட்பட்டே னுன்னடியேனே” (5.82) எம் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே பதி பசு பாச மூன்றும் ஐந்தாக நின்ற முறைமையும், இதில் பசுவாகிய ஆன்மா அந்த அருளை இழந்து மலத்தோடுங்கூடி ஜநந மரணதுக்கப்பட்டு நிற்குமுறைமையும், இந்த மலத்தின் மேலீடு நீங்கி அருளிலே ஆசைப்பட்டவர்களுக்கு இந்தப் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கலா மென்னும் முறைமையும் அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட பஞ்சாக்ஷரத்திலே பதி பசு பாசங்கள் மூன்றும் ஐந்து வகையாக நின்ற முறைமை எங்ஙனே யென்றும் இதனை யார் உச்சரிக்கப்படுமென்றும் வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக
ஓசைகொள் அதனில் நம்மேல் ஒழித்தரு ளோங்கும் மீள
வாசியை அருளும் மாயா மற்றது பற்றா உற்றங்(கு)
ஈசனில் ஏக மாகும் இதுதிரு எழுத்தின் ஈடே.

ஓங்கிய திருவெழுத் தினையுணர்ந் துரைப்பவர்
நீங்கருஞ் சிவத்தினை நீங்கா ரென்றது.

பொழிப்புரை :

ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக ஓசை கொள் அஞ்ஞானமாகிய மலமும் அதனோடுங் கூடி இருக்கப்பட்ட திரோதான சத்தியும் ஆன்மாவைப் பொருந்தாமல் நீங்கும்படி சிவத்தை முன்னாக உச்சரிக்க ; அதனில் நீயுமப்படி உச்சரிப்பையாமாகில் ; நம்மேல் ஒழித்தருளோங்கும் நவ்வாகிய திரோத சத்தியும் மவ்வாகிய மலத்தின் மேலீட்டை நீக்கி அருளாக நின்று பிரகாசிக்கும். அதுவுமன்றியே ; மீள வாசியை அருளும் அங்ஙனம் மலத்தினின்று மீளவிட்ட வவ்வாகிய அருளும் சிவ்வாகிய சிவத்தையுஞ் தாராநிற்கும் ; மா யா அப்படி மலபாகம் வந்த மகத்தான ஆன்மா; மற்றது பற்றா உற்றாங்கு ஈசனில் ஏகமாகும் முன் சொன்ன அருள் தாரகமாகச் சென்று அந்தச் சிவத்தோடுங் கூடி இரண்டறநின் றனுபவிக்கும் ; இது திருவெழுத்தின் ஈடே இங்ஙனஞ் சொல்லப்பட்ட இது ஸ்ரீபஞ்சாக்ஷரத்தின் முறைமையாம்.
ஆசென்றதைக் குற்றத்தையுடைய மலமென்றதேதென்னில், ஆணவமலம் ஆன்மபோதத்தோடுங் கூடி அஞ்ஞானத்தை விளைத்து நிற்கையாலென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “என்றும் அஞ்ஞாங் காட்டும் ஆணவ மியைந்து நின்று” (2. 80) எது கண்டுகொள்க. உறு திரோதமென்றதை ஆணவ மலத்தோடுங் கூடி நின்று பாகம் வருத்தப்பட்ட திரோதாயியென்றது ஏதென்னில், ஆன்மாவோடும் அநாதியே கூடி வரப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்த வேண்டி அருளாகிய கிருபாசத்தி அதனோடுங் கூடித் திரோதமாய் மறைத்து நின்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “தூயவன் தனதோர்சத்தி திரோதான கரியதென்றும்” (2.87) எம், அன்றியும் இந்நூலினும் “பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வர்” (20) எம் கண்டுகொள்க. சிவமுன்னாக ஓசைகொள் என்பது சர்வமும் சிவசேட்டையாலொழிய முடியாதாகையாலே சிவத்தை முன்னிட்டுக் கொண்டு நிற்கவென்றதென அறிக. இதற்கு பிம் திருக்களிற்றுப் படியாரில் “சிவன் முதலே யன்றிமுத லில்லையென்றும்” (64) எது கண்டுகொள்க. நம்மேலொழித்தருளோங்கும் எகு நவ்வாகிய திரோதசத்தி மவ்வாகிய மலத்தின் மேலீட்டை நீக்கி அருளாய் நின்று பிரகாசிக்கு மென்றதற்கு பிம் இந்நூலில் “முற்சின மருவு திரோதாயி கருணை யாகித் திருந்தியசத் திநிபாதந் திகழும்” (48) எம், திருவெம்பாவையில் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்” (8.7.14) எம் வருமது கண்டுகொள்க. மா யா என்றதை மகத்தான ஆன்மாவென்றதேதென்னில் அந்தச் சிவத்தை முன்னிட்டு நின்று உச்சரிக்கையினாலென அறிக. இதற்கு பிம் திருவாசகத்தில் “யானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்” (38.10) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது அந்த மலங்கள் நீங்கத்தக்கதாகச் சிவமுன்னாக உச்சரித்தால் முன்பு திரோதமாய் நின்ற அருளானது அந்தச் சிவத்துடனே கூட்ட ஆன்மா அந்தச் சிவத்தோடுங் கூடிப் பிரிவறநிற்கும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட மலமுந் திரோதாயியும் நீங்கி அந்த அருளையுஞ் சிவத்தையும் பெறும்வழி எப்படியென்று வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவி தத்தால்
நீங்கிட நீங்கா மூல நிறைஇருள் இரிய நேயத்(து)
ஓங்குணர் வகத்த டக்கி உளத்துளின் பொடுங்க நேரே
தூங்குவர் தாங்கி ஏகத் தொன்மையில் துகளி லோரே.

தீங்குடல் வினையுஞ் செறிவுறு மலமும்
நீங்கிட அருளொடு நீங்கா ரென்றது.

பொழிப்புரை :

தீங்குறு மாயை சேரா வகை ஆன்மாவானது குற்றத்தையுடைய மாயா தேகத்தை மேலெடாதபடி; வினை திரிவிதத்தால் நீங்கிட பிராரத்தம் புசிக்கச் செய்தே உண்டாக்கப்பட்ட ஹிதாஹிதங்களாலே யேறுகிற ஆகாமியமான புண்ணிய பாவங்களாகிய வினை மூன்று வகையாக அறியப்பட்ட ஞானத்தினாலே விட்டுப் போக ; மூன்று வகையாவது தன்னை வினையைத் தலைவனை அறிகிற ஞானமென அறிக. அஃதேதென்னில், ஆன்மாவையுங் கன்மத்தையுஞ் சிவனையும் அறிகிறதாயிருக்கும்; அறிகிறதாவது ஆன்மாவோ என்றால் தனக்கென அறிவில்லாதவனென்று அறிந்தும் கன்மமோ என்றால் சடமாயிருப்பதென்று அறிந்தும் இவை இரண்டையுங் கூட்டிக் காரியப்படுத்துகிறது சிவனேயென்றுங் கண்டு, தங்களுக்கு யாதாமொன்றால் வருகிற இன்ப துன்பங்களெல்லாஞ் சிவச்சேட்டையாலொழிய உண்டாகாதென்று கண்டு, அவர்கள் விருப்பு வெறுப்பற்று இருப்பார்களென்றதென அறிக ; நீங்கா மூல நிறை இருள் இரிய ஆன்மாவை ஒரு காலத்திலும் விட்டு நீங்காமல் அநாதியே வியாத்தமாய் மறைக்கப்பட்ட அஞ்ஞானமாய் இருண்ட ஆணவம் விட்டு நீங்கத்தக்கதாக; நேயத்து ஓங்குணர்வு அகத்தடக்கி தங்களுள்ளத்திலே உதயஞ் செய்யப்பட்ட மிகப் பிரகாசமாகிய பேரறிவுக்குள்ளே அடங்கித் தற்போதம் சீவியாமல் நின்று ; அன்றியும், இந்தப் பதத்துக்கு ஓங்குணர்வகத்தடங்கி யென்று பாடமோதி, அந்த அருளிலே தங்களை ஒடுக்கியென்று பொருளுரைப்பாருமுளர் ; இதிற் பொருளுக்கேற்க அந்தப் பாடத்தைக் கூட்டிக் கொள்க ; உளத்துளின் பொடுங்க தங்களிடத்திலே சிவபோதமாகிய பேரின்பம் பதிந்து விளையத்தக்கதாக; நேரே தூங்குவர் தாங்கி தாங்கள் கொண்ட சமாதிக்குத் தவறு வரத்தக்க மயக்க விகற்பங்களிற்படாமல் உறங்காது உறங்கியிருப்பார்கள். அவர்களாரென்னில்; ஏகத் தொன்மையில் துகளிலோரே ஆன்மாவினிடத்திலே ஒன்றுபட்டுப் பழையதாய் வரப்பட்ட திரோத மறைப்பு நீங்கிய கலியாணர்களாகிய சிவஞானிகள்.
தீங்குறு மாயை சேரா எகு குற்றத்தையுடைய மாயாதேகம் மேலெடாதபடி என்று பொருள் கூறியதேதென்னில், ஆன்மாக்கள் மாயாதேக மெடுத்தால் மேலும் ஜநநத்துக்கு ஏதுவாயுள்ள கன்மங்களை யார்ச்சித்துக் கொள்ளுகையாலே அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் ஞானாமிர்தத்தில் “முடமலி யாக்கையின் வினைபிணிப் பானால் வினைப்பொதி யெறுழ்த்தோ றணிப்போ வின்றே” (30.5.6) எது கண்டுகொள்க. இனி, வினை திரிவிதத்தால் நீங்கிட எகு தன்னை வினையைத் தலைவனையறிகிற ஞானத்தினாலே வினைகளை நீக்கிக் கொள்ளலாமென்று பொருள் கூறிய தன்றியே, வினை திரிவிதத்தால் நீங்கிட என்பதைக் கழிகாலமாக்கி, மூவகை வினைகளிலும் பொதுப்படவேற்றி, ஆசாரியன் செய்யப்பட்ட தீடிக்ஷயினாலே சஞ்சிதகன்மம் போமென்றும், பிராரத்த கன்மம் உடலுள்ள மட்டும் புசித்தே தொலையுமென்றும், ஆகாமிய கன்மம் அவர்களிடத் துண்டான ஞானத்தினாலே போக்கிக் கொள்ளுவார்களென்னவுமாமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “ஆசா னாகித், தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத் துகளறுத்தங் கத்துவா தொடக்கறவே சோதித், தேன்றவுடற் கன்மமநு பவத்தினால் அறுத்திங், கினிச்செய்கன் மமூல மலம்ஞானத் தாலிடிப்பன்” (8.10) எது கண்டுகொள்க. அன்றியும், வினை திரிவிதத்தால் நீங்கிட எகு சிவனை நோக்கி மனத்தினால் தியானித்தும் வாக்கினால் உச்சரித்துங் காயத்தினால் தொழில்களைச் செய்தும் வினைகளை நீக்கிக்கொள்ளலா மென்னவுமாமென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல, இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச், சினமுத லகற்றி வாழுஞ் செயலற மானால் யார்க்கும், முனமொரு தெய்வ மெங்குஞ் செயற்குமுன் னிலையா மன்றே” (2.24) எது கண்டுகொள்க. இனி, நீங்கா மூல நிறையிரு ளிரிய எகு ஆணவமலம் ஒன்றாயிருக்கவும் ஒருகாலத்தினும் விட்டு நீங்காத மலம் விட்டு நீங்க என்று பொருள் கூறியது ஏதென்னில் அந்த மலத்தின் காரியமான சத்திகளழியக் காரணமாகிய நித்தியம் அழியாதென்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமு மொள்ளெரியி னொளிமுன்ன ரிருளுந் தேற்றின், வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி மாயாதே தன்சத்தி மாய்ந்து காயந், திரியுமள வும்முளதாய்ப் பின்பு காயஞ் சேராத வகைதானுந் தேயு மன்றே” (11.4) எம், இந்நூலினும் “அழிந்திடுஞ் சத்தி நித்த மழிந்திடா” (88) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. இனி, நேயத்தோங் குணர்வகத் தடக்கி எகு எப்பொழுதும் பேரறிவாயுள்ள சிவத்தினுள்ளே இவனொடுங்கித் தற்போதம் சீவியாமல் நிற்க என்று பொருள் கூறியது ஏதென்னில், இவன் பழைய பிரபஞ்ச வாதனையோடுங் கூடிச் சத்தாதி விடயங்களில் சீவியாமல், தற்போதத்தை மீட்டு அருளிலே ஒடுங்குகையென அறிக. இதற்கு பிம் திருவருட்பயனில் “புல னடக்கித் தம் முதற்கட் புக்குறுவார் போதார், தலம்நடக்கு மாமை தக” (94) எம் திருவள்ளுவப் பயனில் “உரனென்னுஞ் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து” எம், ஞானாமிர்தத்தில் “மாணா வரும்படை தாங்கிக் கிளர தராதரத் தெறிவே லிளைஞர் போலப் பொறிவாழ் புலப்பகை தாங்கிப் பிறப்பற வெறியு மறப்பெயர் வாட்கையும் வாட்கை” எம் கண்டுகொள்க. இனி, உளத்துளின் பொடுங்க எகு தங்களிடத்திலே பேரின்பம் பதிந்து விளையத் தக்கதாக நிற்பார்களென்ற தேதென்னில், அந்தச் சிவஞானம் விளைந்த சீவன் முத்தராயுள்ளவர்கள் தங்கள் உள்ளத்திலே சிவனைத் தியானிக்குமிடத்து அந்தச் சிவன் அங்கே பதிந்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “இந்தனத்தி னெரிபாலின் நெய்பழத்தின் இரதம் எள்ளின்க ணெண்ணையும்போ லெங்குமுளன் இறைவன், வந்தனைசெய் தெவ்விடத்தும் வழிபடவே யருளு மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற், சிந்தனைசெய் தர்ச்சிக்கிற் சிவனுளத்தே தோன்றித் தீயிரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப், பந்தனையை யறுத்துத்தா னாக்கித்தன் னுருவப் பரப்பை யெலாங் கொடுபுகுந்து பதிப்ப னிவன்பாலே” (9.12) எம், கோவைத் திருவாசகத்தில் “நினைவித்துத் தன்னையென் னெஞ்சத் திருத்திநின் றம்பலத்துப், புனைவித்த வீசன்” (140) என்றதும் இப்பொருள் பற்றியென அறிக. இனி, நேரே தூங்குவர் தாங்கி எது மயக்க விகற்பங்களிற் படாமல் உறங்கா துறங்கி இருப்பார்களென்று பொருள் கூறியது ஏதென்னில், அவர்கள் கேவல சகலம் இரண்டினுஞ் செல்லாமல் அருள் நித்திரையாய் இருப்பார்களென்றதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “அந்தக் கரணங்க ளோடுங் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில்” (8.30) எம், அருள் நித்திரை என்றதற்கு போசனவிதியில் “ஆரமுதா நீரருந்தி யெச்சி லச்ச மகற்றி யடைகாய்நற் கடுக்காய்சுக் கடுத்ததொன்றை மென்று, கூரியபே ருணர்வுடனே தூங்கிக் கங்குற் குளிர்வெம்மைக் கிசைபூசை கொள்ள நல்கி, ஓருணர்வு நிவேதியா துண்ணா வாய்மை யுடையையா யுயர்ஞான போக முற்றுச், சாருமருள் நித்திரையு முற்றுணர்க ஞானச் சரிதையிது மெய்கண்டான் சந்தா னத்தே” (4) எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது சிவஞானிகளாயுள்ள சீவன்முத்தர்கள் பிராரத்தந் தொலையுமளவுஞ் சிவனோடும் பிரிவற நின்று வியாபரிக்கு மிடத்து மலமாயா கன்மங்களை நீக்கிக்கொள்ளும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

மேல் இங்ஙனம் முன் அருளிச் செய்யப்பட்ட உண்மை நிஷ்டையாலும் உபாயநிஷ்டையாலும் இப்பொழுதருளிச் செய்த ஐந்தெழுத்து அருள் நிலையாலுங் கன்மக்ஷயம் வந்த சீவன் முத்தர்களது தன்மை உணர்த்துவான் எடுத்துக்கொண்டருளியது.
இதற்கு வகையேதென்னில், “மாயா மற்றது பற்றா வுற்றிங், கீசனி லேக மாகும்” (92) எது ஆன்மா சிவனோடே பொருந்தப் பட்டு நிற்குமென்னும் விதியைப் பற்றிச் சிவனோடும் இரண்டறக் கூடிநின்றே மலமாயா கன்மங்களைப் போக்கிக் கொள்ள வேண்டுகையால், ஐந்தெழுத்தருள் நிலைக்கு மேலாகப் பதினொராஞ் சூத்திரமும் பன்னிரண்டாஞ் சூத்திரமுமாகிய அணைந்தோர் தன்மையென்னும் அதிகாரம் வைக்கப்பட்டது. இவ்வதிகாரத்துக்கு அந்தச் சூத்திரம் இரண்டும் நின்றதற்கு வழியேதென்னில், சிவஞானபோதத்தில் “காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற், காண வுள்ளதைக் கண்டு காட்டலின், அயரா அன்பின் அரன்கழல் செலுமே” என்கிற பதினொராஞ் சூத்திரத்துக்குக் கருத்துப் ‘பரமேஸ்வரன் ஸ்ரீபாதங்களை யணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று’ என்றதனாலும், பன்னிரண்டாஞ் சூத்திரமாகிய “செம்மலர் நோன்றாள் சேரலொட்டா, அம்மலங்கழீஇ அன்பரொடு மரீஇ, மாலற நேய மலிந்தவர் வேடமும், ஆலயந் தானு மரனெனத் தொழுமே” என்பதற்குக் கருத்து அசிந்திதனாய்நின்ற பதியைச் சிந்திதனாய்க் கண்டு வழிபடுகைக்கு அருளிச் செய்கையினாலும், இந்நூலினும் இவ்வதிகாரத்துக்கு வகுத்த செய்யுளாகிய “தீங்குறுமாயை” (93) என்ற விருத்தந் தொடங்கி “தொண்டர்களிடத்தும்” (98) என்ற விருத்தம் முடிவாகிய செய்யுள் ஆறினுள்ளும் “தீங்குறு”, “குறிப்பிடம்”, “அகம்புறம்”, “அண்டம்”, “மண்முதல்” என்னுஞ் செய்யுள் ஐந்தினும் பரமேஸ்வரனது ஸ்ரீபாதங்களை அணைந்து நிற்கும் முறைமையை அருளிச் செய்கையால் பதினொராஞ் சூத்திரமாகவும், “தொண்டர்கள்” என்ற செய்யுளொன்றும் அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு நிற்கப்பட்ட திருவேடமும் சிவாலயமும் சிவனெனக் கண்டு வழிபடுகைக்கு அருளிச் செய்கையால் இது பன்னிரண்டாஞ் சூத்திரமாகவும் நின்றதென அறிக. அப்படி இந்தச் சூத்திரங்கள் இரண்டினும் நின்ற கருத்து இவ்வதிகாரத்துக்கு வகுத்த செய்யுட்களில் நின்ற முறைமை எங்ஙனே என்னில், “நேயத் தோங்குணர் வகத்த டக்கி” (93) எம், “உறக்குறு பவர்போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே” (94) எம், “ஞானந், திகழ்ந்தகம் புறமெ னாத செம்மையார் நன்மை யாரே” (95) எம், “கண்டதோர் பொருளை யந்தக் கருத்தினாற் காணிற் றானே, அண்டநா யகனார் மேனி யானதேல் ஐய மின்றே” (96) எம், “ஞானக், கண்ணினி லூன்றி யந்தக் கருத்தினா லெவையும் நோக்கி” (97) எம் பரமேஸ்வரனோடும் இரண்டறக் கூடி நிற்கும் முறைமையை அருளிச் செய்கையால், இச்செய்யுள் ஐந்தும் பதினொராஞ் சூத்திரமாக நின்றதென அறிக. அன்றியும், “தொண்டர்களிடத்தும்” என்ற விருத்தமும் திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் “அண்டருங் கண்டி லாத அண்ணலே” யென வணங்கி நிற்கைக்கு அருளிச் செய்கையால் இதுவொன்றும் பன்னிரண்டாஞ் சூத்திரமாக நின்றதென அறிக.
இந்தச் செய்யுள் ஆறினுள்ளும் “தீங்குறு மாயை” என்ற செய்யுளுக்குத் தொந்தனை வருமாறு. இங்ஙனம் முற்கூறியவகைகளாற் கன்மக்ஷயம் வந்த சீவன்முத்தர்கள் வாதனாபலத்தால் மல மாயா கன்மங்கள் மேலிடாமல் உயிர்க்குயிராய் நிற்கிற சிவனுடைய திருவருள் ஞானத்தோடுங் கூடி இரண்டற நிற்கு முறைமையை அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 2

குறிப்பிடம் காலம் திக்கா சனம்கொள்கை குலம்கு ணம்சீர்
சிறப்புறு விரதம் சீலம் தபம்செபம் தியானம் எல்லாம்
மறுத்தற வொழிதல் செய்தல் மருவிடா மன்னு செய்தி
உறக்குறு பவர்போல் வாய்மை ஒழிந்தவை யொழிந்து போமே.

மெய்ப்பொரு ளுணர்ந்தவர் விரதந் துயில்பவர்
கைப்பொரு ளெனவே கழலு மென்றது.

பொழிப்புரை :

குறிப்பிடம் கங்கை குமரி முதலாயுள்ள தீர்த்தங்களையுங் காசி திருவம்பலம் முதலாயுள்ள சிவத்தானங்களையும் நாடியிருக்கை; காலம் விஷசு அயனம் சங்கிரம முதலாயுள்ள காலங்களிலே செய்யுங் கிரமங்கள் ; திக்கு இந்த நாளைக்கு இன்ன திசையிலே போகலாம் இருக்கலாம் இன்ன மந்திரம் இன்ன திசையைப் பார்த்து ஜபிக்கலாமென்னும் முறைமைகள்; ஆசனம் பதுமாதனம் கூர்மாதனம் முதலாயுள்ள ஆதனங்க ளிட்டிருக்கை; கொள்கை வாய்மை ஒப்புரவு ஈகை முதலாயுள்ள கொள்கைகள் ; குலம் பிராமணர் முதலாகச் சண்டாளர்கள் ஈறாகிய குலநீதி முதலாயுள்ளவை ; குணம் யாவராயினும் அவரவர் சீலத்தினும் ஒழுகுதல், ஒருவரை நிந்தியாமை, புறங்கூறாமை முதலாயுள்ள குணங்கள்; சீர் அந்தந்தச் சாதியொழுங்கு குலையாமல் நடக்கை ; சிறப்புறு விரதம் கொல்லா விரதம் அஷ்ட விரதம் முதலாயுள்ள விரதங்கள்; சீலம் சாதித்தொழில் குணத்தொழில் பொறையுடைமை அருளுடைமை முதலாயுள்ள சீலங்கள் ; தவம் பஞ்சாக்கினிநடு சலத்தின்நடு முதலாகச் செய்யுந் தவங்கள் ; செபம் தேவதை மந்திரங்கள், சத்தி மந்திரங்கள், எதிரேறு மந்திரம், திருவம்பல வித்தை முதலாயுள்ள ஜபங்கள்; தியானம் ஆதாரம் நிராதாரம் பிரசாத முதலாயுள்ள தியானங்கள்; எல்லாம் இப்படிக் குறிப்பிடம் முதல் தியானமீறாகச் சொல்லப்பட்ட நியமங்களெல்லாம் ; மறுத்தற வொழிதல் செய்தல் மருவிடா அந்த உண்மை ஞானத்தைப் பெற்றிருக்கிற சிவஞானிகள் அந்த நியமங்களை விட்டுவிட வேணுமென்று தீர விட்டுவிடுவது மில்லை, செய்து வரவேணுமென்று செய்வதுமில்லை. பின்னை எங்ஙனே என்னில்; மன்னு செய்தி அவர்கள் அந்த உண்மையிலே பெறநின்று ; உறக்குறுபவர்போல் வாய்மை ஒழிந்தவை யொழிந்து போமே நித்திரை செய்யுமவர்கள் கையிற் பிடித்திருக்கப் பட்ட பதார்த்தமானது அவர்கள் வேணுமென்று பிடித்திருக்கச் செய்தே அவர்களை அறியாமல் தானே நழுவினாற்போல அந்தச் சிவஞானத்தைப் பெற்ற சீவன்முத்தர்க்கும் அந்த உண்மை ஞான மொழிய மற்றுள்ள நியமங்களுந் தானே போம்.
உதாரணம் : அந்த உண்மை ஞானமொழிய மற்றுள்ள நியமங்களெல்லாம் உறங்கினவர்கள் கையிற் பிடித்திருந்த பண்டங்கள் போலத் தானே போமென்றதற்கு பிம் திருவருட்பயனில் “ஒண்பொருட்கண் ணுற்றார்க் குறுபயனே யல்லாது கண்படுப்போர் கைப்பொருள்போற் காண்” (78) எம், அன்றியும், சங்கற்ப நிராகரணத்திலே மாயாவாதியை மறுக்கிற அவதரத்திலே “ஞால நீதியும் நான்மறை நீதியும் பாலர்உன் மத்தர் பசாசரி லெனவும் உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந் தானே தவிரா தானாற் புரியா தொழிந்திடு நிரையத் தழுந்துதல் திடமே” (4.232236) எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது அந்த உண்மை ஞானத்தைப் பெற்ற சீவன்முத்தர்கள் முன்பு செய்துவந்த நியமங்களெல்லாந் தாங்கள் வேண்டாமென்று விட்டுவிடுவதுமில்லை, செய்துவர வேணுமென்று நியமித்துச் செய்வதுமில்லை, உறங்குவார் கையிற் பதார்த்தங்கள் அவர்களை அறியாமல் தானே போனாற்போல அந்த உண்மை ஞான மொழிய மற்றுள்ள நியமங்கள் தானே போமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட சீவன்முத்தராயுள்ளவர்கள் முன்பு செய்துவந்த நியமங்களாயுள்ளவை எல்லாஞ் செய்து வருவார்களோ விட்டுவிடுவார்களோ என்று வினவ மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 3

அகம்புற மென்றி ரண்டால் அர்ச்சனை புரியும் இந்தச்
சகந்தனில் இரண்டு மின்றித் தமோமய மாகி எல்லாம்
நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார் போல ஞானம்
திகழ்ந்தகம் புறம்எ னாத செம்மையார் நன்மை யாரே.

உத்தம ஞான முணர்ந்த ஞான
வித்தகர் தன்மை விளங்க உரைத்தது.

பொழிப்புரை :

அகம்புற மென்றிரண்டால் அருச்சனை புரியும் இந்தச் சகந்தனில் இந்த உலகத்தின் கண்ணே சிவனை வழிபடுகிறவர்கள் உள்ளே கண்டும் பூசிப்பார்கள் புறம்பே கண்டும் பூசிப்பார்கள் ; இரண்டுமின்றி இங்ஙனஞ் சொல்லப்பட்ட உட்பூசை புறப்பூசை என்கிற இரண்டு பூசையும் இல்லாமல்; தமோ மயமாகி எல்லாம் நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார் போல அஞ்ஞானமே வடிவாயிருக்கிற ஆணவ மலத்தின் மேலீட்டினாலே தத்துவம் முப்பத்தாறோடுங் கூடிச் சிற்றின்பமாகிய மோகமே யொழிய மற்றொன்றுந் தோன்றாத முறைமையினையுடைய பெத்தரைப்போல் ; ஞானம் திகழ்ந்து பழைய பிரபஞ்ச வாதனை சற்றுந் தோன்றாமல் ஞானமே பிரகாசித்து, அந்த ஞானமானது எங்கும் பூரணமாயொழிவற நிற்கிற நிகழ்ச்சியோடுங் கூடி அநுபவித்து; அகம் புறம் எனாத செம்மையார் நன்மையோரே அந்தரியாகமாக உள்ளே கண்டு பூசித்தும் பகிரியாகமாகப் புறம்பே கண்டு பூசித்தும் வருகிற முறைமை இரண்டுஞ் சற்றுந் தோன்றாமல் நினைவு கெட்டுப்போன பெரியோர்களே அந்த உண்மை ஞானத்தைப் பெற்ற நல்லோர்கள்.
உதாரணம் : இந்தச் சகத்திலுள்ளவர்கள் உட்பூசை யென்றும் புறப்பூசையென்றும் பூசித்து வருவார்களென்பதற்கு பிம் சித்தியாரில் “நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய் ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய், மூட்டுமோ கினி சுத்த வித்தைமல ரெட்டாய் முழுவிதழெட் டக்கரங்கள் முறைமையினின் உடைத்தாய்க், காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும் கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் சத்தி, வீட்டை அருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி மேலாகி நிற்பன் இந்த விளைவறிந்து போற்றே” (9.9) எம், “கந்தமலர் புகையொளி மஞ்சனம் அமுது முதலாக் கண்டன எல்லாம் மனத்தாற் கருதிக்கொண்டு, சிந்தையினிற் பூசித்து” (9.10) எம் உட்பூசைக்குக் கண்டுகொள்க. இனி, புறப்பூசைக்கு பிம் சித்தியாரில் “புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது புகையொளி மஞ்சனம் அமுது முதல்கொண் டைந்து, சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாஞ் சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த, பத்தியினா லர்ச்சித்துப் பரவிப் போற்றிப் பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி, நித்தலுமிக் கிரியையினை இயற்று வோர்கள் நின்மலன் தன் அருகிருப்பர் நினையுங் காலே” (8.20) என்றது கண்டுகொள்க. இங்ஙனஞ் சொல்லப்பட்ட பூசைகளிரண்டும் அந்தச் சிவஞான மேலிட்டவர்களுக்கு இல்லையென்பதற்கு பிம் பூசாகரணத்தில் “ஞானவா ரமிர்தமுண்டார் நயந்தது நுகர்ந்து வாழ்வார், ஊனமில் யோகச் செய்தி யொழிவதுண் டாக வுண்டாம், ஈனமில் தொழில்பின் இன்றா முண்டெனி லெய்திற் றின்றா, மானபின் ஞானயோக மல்ல தொன் றறியா தாரே” (24) எது கண்டுகொள்க. எல்லாம் நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார்போல என்றது சிவஞானிகளுக்கு பசுஞானிகளை ஒப்பிட்டதே தென்னில், அந்தப் பசுஞானிகளுக்குத் இந்தப் பிரபஞ்ச மயக்கங்கொண்டே அந்த திருவருளின் தோற்ற மற்று நின்றாற்போல, இந்தச் சிவஞானிகளுக்கும் அந்தத் திருவருளின் மேலீடு கொண்டே இந்தப் பிரபஞ்சந் தோன்றாமல் நின்றதென அறிக. இதற்கு பிம் மெய்ஞ்ஞான விளக்கத்தில் “அறியார்களு மறியார்மிக வறிவார்களு மறியார், அறியார்களு மறியார்களு மொன்றோதமிலன்றாம், அறியார்களும் பசுபாசமென் னிருளான்மறைந் தறியார், அறிவார்களும் பரமானந்த ஒளியால் நிறைந்தறியார்” எது கண்டுகொள்க. அந்தப் பசு ஞானிகளுக்கு இந்தத் திருவருள் தோன்றாதென்றது ஏதென்னில், நமக்குக் கர்த்தாவாக ஓர் சிவனுண்டென்றும், அந்தச் சிவனுக்கு அடிமையாக நாமோரான்மா வுண்டென்றும், இந்த ஆன்மாவாலே செய்யப்பட்டதொரு புண்ணிய பாவங்களாகிய கன்மமுண்டென்றும், அதனாலொரு நரகசுவர்க்க முண்டென்றுந் தோன்றாமல் நின்றதென அறிக. அந்தச் சிவஞானிகளுக்கு இந்தப் பிரபஞ்சந் தோன்றாதென்றதே தென்னில், மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்னப்பட்ட மூன்றாசையும் விட்டு யாவரோடும் விருப்பு வெறுப்பற்று யானெனதுகெட நிற்கையினாலென அறிக.
இதனாற் சொல்லியது, அந்தச் சிவஞானம் மேலிட்டு நிற்கிற சீவன் முத்தர்கள் அந்தச் சிவஞானத்தின் மேலீட்டினாலே உட்பூசை புறப்பூசை என்கிற பூசைகள் இரண்டினையும் விடாமல் விட்டு அந்தச் சிவஞானமே தனுவாய் நிற்கிற முறைமை, பிரபஞ்ச வாதனை மேலிட்டு நிற்கிற பசுஞானிகள் அந்தத் திருவருளின் தோற்றஞ் சற்றுந் தோன்றாமல் நிற்குமதுபோலே இருக்குமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இந்த உண்மை ஞானத்தைப் பெற்ற சீவன் முத்தரானவர்கள் அந்தச் சிவத்தை உள்ளே கண்டிருப்பார்களோ புறம்பே கண்டு வழிபடுவார்களோ என்று வினவின மாணவகனை நோக்கி மேலருளிச் செய்வான் எடுத்துக்கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

அண்டம்மே விட அனைத்தும் அனைத்தையும் அண்டம் மேவிக்
கொண்டல்போல் எவையும் ஞானங் குறைவிலா நிறைத லாலே
கண்டதோர் பொருளை அந்தக் கருத்தினால் காணில் தானே
அண்டநா யகனார் மேனி யானதேல் ஐய மின்றே.

அவ்வியல் புறாதவர்க் ககன்ற ஞானத்தின்
செவ்விய யோகத் திகழ்வினை யுரைத்தது.

பொழிப்புரை :

அண்டம் மேவிட அனைத்தும் ஆகாசமிடமாகச் சரிக்கப்பட்ட பிருதிவி முதலான நாலு பூதங்களும் அதற்கு உட்பட்டவையும் அந்த ஆகாசத்தோடும் பொருந்தி வியாத்திபண்ணி நிற்க; அனைத்தையும் அண்டம்மேவிக் கொண்டல்போல் அந்த ஆகாயந்தான் அவையெல்லாந் தன்னிடத்திலே கவளீகரித்துநின்ற கோட்பாடுபோல ; எவையும் ஞானங் குறைவிலா நிறைதலாலே எல்லா ஆன்மாக்களிலும் அவையிற்றோடுங் கூடி இருக்கப்பட்ட அத்துவாக்களினும் பூரணனாயுள்ள சிவனுடைய ஞானமானது தன்னிடத்திலே அடக்கிக் கவளீகரித்துக்கொண்டு நிற்கையாலே ; கண்டதோர் பொருளை அந்தக் கருத்தினாற் காணில் தான் ஹிதா ஹிதப் படத்தக்கதாகச் சத்தாதி விடயங்களிலே யாதாமொன்று தன்னிடத்திலே வந்து தாக்கினாலும் முன்சொன்ன உபமானம்போலே சிவனுடைய ஞானத்தினாலொழிய மற்றொன்றினாலும் வாராதென்று கண்டு விருப்பு வெறுப்பற்று நிற்கில் ; தானே அண்ட நாயகனார் மேனி யானதேல் அங்ஙனங் கண்ட பொருள் தானே தேவர்களுக்குக் கர்த்தாவாயிருக்கப்பட்ட சிவனுடைய திருமேனியாம். அப்படிக் காணவே ; ஐயமின்றே அங்ஙனந் தாக்கின விடயங்களாலே மேலைக்கு ஜனனமுண்டாகா தென்கிறது சந்தேகமில்லை.
அன்றியும், “தானே, அண்டர் நாயகனார் மேனியானதேல் ஐயமின்றே” என்றொரு பதமாக்கி அப்படிக் கண்ட சிவஞானிகள் சிவனுடைய திருமேனியாகிய ஞானத்தோடுங் கூடிச் சாயுச்சியத்தைப் பெறுகைக்குச் சந்தேகமில்லை யென்னவுமாமென அறிக. ஆனதேல் என்றதனால் ஆன்மா சிவனாவனோ என்னில், அப்படிச் சிவனாகான், அந்தச் சிவத்தோடுங் கூடுமென்பது கருத்து. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “ஆனாய் என்ப தனைத்தும் அவ்வவை தான்ஆ காமையைச் சாற்றிடும் என்க தாமே எனும்இத் தனியே காரம் அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட் டொழிந்திலர் பிறிவிலர் எனும்இவை உணர்த்தும்” (18.8084) எது கண்டுகொள்க.
கண்டதோர் பொருளை அந்தக் கருத்தினாற் காணில் எது எல்லாஞ் சிவச்சேட்டையென்று கண்டுநிற்கிற சிவஞானிகளுக்கு அதற்குத் தக்கதாகச் சிவன் நின்று சாந்நித்தியஞ் செய்வனென்பதற்கு பிம் சித்தியாரில் “யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத், தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன் தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும், நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி, நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம், ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே” (10.2) எம், திருப்பாட்டில் “யாதே செய்தும் யாமலோ நீயென்னி, லாதேயேயு மளவில் பெருமையன்” (5.50.6) எது கண்டுகொள்க. தன்னிடத்திலே தாக்குகிற விடயங்களெல்லாஞ் சிவசொரூபமென்று கண்டு நிற்க என்றதற்கு பிம் திருவாசகத்தில் “கூறுநாவே முதலாகக் கூறுங்கரண மெல்லாநீ” (3.5) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது அந்தச் சிவஞானத்தோடுங் கூடி அநுபவிக்கிற சீவன்முத்தர்கள் அந்த நிலை குலையத்தக்கதாகப் பிரபஞ்ச வாதனை மேலிட்டுச் சத்தாதி விடயங்களில் தாக்கினாலும் அவைகளெல்லாஞ் சிவச்சேட்டையாலொழிய ஆன்ம சேட்டையால் வாராதென்பது கண்டு ஒருவரோடும் விருப்பு வெறுப்பற்று நிற்கவே, அப்படித் தாக்கின விடயங்களாலே மேலைக்கு ஜனனத்துக்கு ஏதுவாகிய ஆகாமியங் கட்டுப்படாதென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

அந்த உண்மை ஞானத்தைப்பெற்று அதனோடுங் கூடி அநுபவிக்கிற சீவன் முத்தர்களுக்குப் பழைய வாதனாபலத்தாலே பிரபஞ்ச வாதனை மேலிட்டாலும் அதனோடுங் கூடி மயங்காமல் அதனைத் தோன்றின மாத்திரத்திலே நீக்கிக்கொண்டு அந்த ஞானநிலை குலையாமல் நிற்கைக்கு மேல் ஞானத்தில் யோகத்தை அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

மண்முதற் கரண மெல்லாம் மறுஅசத் தாக்கி ஞானக்
கண்ணினில் ஊன்றி அந்தக் கருத்தினால் எவையும் நோக்கி
எண்ணிஅஞ் செழுத்து மாறி இறைநிறை வுணர்ந்து போற்றல்
புண்ணியன் தனக்கு ஞான பூசையாய்ப் புகலு மன்றே.

மாசணு காது மனமிறந் தியற்றும்
பூசனை ஞான பூசனை யென்றது.

பொழிப்புரை :

மண்முதல் கரணமெல்லாம் மறு அசத்தாக்கி பிருதிவி முதலாயுள்ள தத்துவங்களெல்லாம் நாமல்ல, குற்றத்தையுடைய சடமென்று கண்டு; சடமெனக் காணவென்றது இது தானாகக் காரியப்படமாட்டாதென்று காண்கையென அறிக. என்னவே, இது பூத சுத்தியாம் ; ஞானக்கண்ணினில் ஊன்றி அப்படி அறிகிறதும் அந்தத் திருவருளா லொழிய ஆன்ம போதத்தால் அறியப்படாதென்று கண்டு ; அப்படிக் காணவே, அது ஆன்மசுத்தியாம் ; அந்தக் கருத்தினால் எவையும் நோக்கி அப்படி ஆன்மபோதத்தாற்றானே அறிகைக்குச் சேட்டையில்லை யென்று கண்டதுகொண்டே ஆன்மாவுக்கு அறிவில்லையென அறிந்து கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறிந்து நிற்கிறதெல்லாம் அந்தத் திருவருளென்று கண்டு ; அப்படிக் கண்டு நிற்கவே அது திரவிய சுத்தியாம்; ஐந்தெழுத்து மாறி ஐந்தெழுத்தையும் ஐந்தெழுத்தாகக் கொள்ளாமல் மாறிக்கொள்ள ; மாறிக்கொள்ளலாவது சிவ்விலே சிவமும் வவ்விலே அருளும் யவ்விலே ஆன்மாவும் நவ்விலே திரோதமும் மவ்விலே மலமுமாகக் கொண்டு, ஐந்து எழுத்தையும் விட்டு ஐந்து முதலாக விசாரித்துக் கண்டு ; அப்படிக் காணவே மந்திரசுத்தியாம். அன்றியும் ; எண்ணி இன்ன உருவென்று எண்ணித் தொகைப்படுத்திச் செபிக்க என்னவுமாம்; இறை நிறைவுணர்ந்து கர்த்தாதானே எங்கும் பூரணமாய் நின்று மற்றுண்டான சித்தசித்துக்கள் இரண்டினும் பிரிவற நின்று சேட்டிப்பித்து நிற்கிறதை அறிந்து; அப்படிச் சித்தசித்துக்கள் இரண்டினுஞ் சிவன் நிறைந்து நிற்கிறதை இந்த இலிங்கத்தினும் உண்டென்று காணவே இலிங்க சுத்தியாம் ; போற்றல் இங்ஙனம் ஐந்து வகையாகச் சொல்லப்பட்ட பூத சுத்தி ஆன்ம சுத்தி திரவிய சுத்தி மந்திர சுத்தி இலிங்க சுத்தி என்னும் முறைமைகளுக்குத் தவறு வாராமல் வழிபட்டு; இங்ஙனம் வழிபடவே; புண்ணியன் தனக்கு ஞானப் பூசையாய்ப் புகலு மன்றே இங்ஙனம் பஞ்ச சுத்திகளாகச் சொல்லப்பட்ட தெல்லாஞ் சிவனுக்கு ஞான பூசையாமென்று சிவாகமஞ் சொல்லும்.
இங்ஙனஞ் சொல்லப்பட்ட பஞ்ச சுத்திகளுக்கு எழுதின பொருளுக்கு உதாரணம் ஞானபூசைத் திருவிருத்தத்திலே காட்டுதும். அவை வருமாறு : மண்முதல் கரணமெல்லாம் சடமென்று கழித்ததற்கு பிம் “அஞ்சலிசெய் திருந்துடல் நானல்லன்” எம், “புஞ்ச மலி தனுகரணம் புவனம் போகம் பொய்” எம், “எடுத்த வீடு தானழியு மளவும் அதிற் றங்குவோர் போல” (8) எம் வரும் ஏதுக்களைப் பூதசுத்திக்குக் கண்டுகொள்க. ஞானக்கண்ணினில் ஊன்றி யென்றது ஆன்மசுத்தி யென்றதற்கு பிம் “தீங்கிலுயிர் சிவலிங்கஞ் சிவன் சீவன் யாதுஞ் செயவேண்டாம் பசுஞானம்” எம், “மெய்ப்பணி மடங்கத் தூங்கிடும்” (9) எம் கண்டுகொள்க. அந்தக் கருத்தினால் எவையும் நோக்கி யென்றதை தான் காண்கிற தெல்லாஞ் சிவன் காண்கிறானென்று காணவே திரவியசுத்தி யாமென்றதற்கு பிம் “நாலிரண்டு திருவுருவ நோக்கநோக்கால் நலங்கொள் திரவியசுத்தி நயந்து” (11) எது கண்டுகொள்க. எண்ணி ஐந்தெழுத்துமாறி என்றதை மந்திர சுத்தியென்று ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஐந்தெழுத்தாகக் கொள்ளாமல் ஐந்து முதலாகக்கண்டு எண்ணிச் செபிக்க என்றதற்கு பிம் “பத்துரு மந்திரசுத்தி பயிற்று” (12) எது கண்டுகொள்க. இறைநிறைவுணர்ந் தென்றதை இலிங்க சுத்தியென்றது, கர்த்தா எங்கும் பூரணனாயிருக்கையாலே நம் பொருட்டாகப் பூசைகொள்ளக் கொண்ட திருமேனியிலும் உண்டென்று காண என்றதென அறிக. இதற்கு பிம் “நாதன், மேலுகந்த மலரொதுக்கி யுருவ நோக்கி விமலனிறை வுணர்ந் தெவையும் மேனி யான, சீலமுமிங் கருவுதிரு வுருவ மான சிறப்பு முணர்ந் திலிங்க சுத்தி சேர்த்தி டாயே” (11) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, முன்சொன்ன ஞானயோகத்தில் நிற்குமவர்களுக்கு அந்தநிலை குலையத்தக்கதாகப் பிரபஞ்சவாதனை மேலிட்டாலும் அதனோடு கூடாமல் அதனை நீக்கிக்கொள்ளத் தக்கதாக ஞானக்கிரியையைச் செய்யுமிடத்துப் பஞ்ச சுத்தி செய்ய வேண்டுகையால், அதற்குத் தத்துவங்களை யெல்லாம் சடமென்று காணவே பூதசுத்தியாமென்றும், அப்படிக் கண்டு நீக்கிக்கொள்ள நமக்கென்ன ஒரு சேட்டையில்லையென்று காணவே ஆன்ம சுத்தியாமென்றும், அப்படித் தனக்கென்ன ஒரு செயலில்லையென்று கண்டு தான் காண்கிற தெல்லாஞ் சிவதிருஷ்டி யென்று காணவே திரவிய சுத்தியாமென்றும், ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஐந்து முதலாகக் காணவே மந்திர சுத்தியாமென்றும், எங்கும் பூரணனாயிருக்கிற சிவன் இந்தச் சிவலிங்கத்தினும் உண்டென்று காணவே லிங்க சுத்தியாமென்றும், இங்ஙனஞ் சுத்திசெய்து வழிபடவே சிவனுக்கு ஞானபூசையாமென்றும் வருமுறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனஞ் சொல்லப்பட்ட ஞானயோகத்தில் நிற்கப்பட்ட சீவன் முத்தர்களுக்கு இந்தப் பிரபஞ்சவாதனை யப்படித் தோன்றின மாத்திரத்திலே நீக்கிக்கொள்ள வொட்டாமல் வாதனாபலத்தால் நீட்டிக்க மேலிட்ட அவதரத்தும் அதனோடும் ஆன்மபோதத்தைச் செலுத்தாமற் சிவசிந்தனையாக நிற்கத் தக்கதாக மேல் ஞானக் கிரியை அருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

தொண்டர் களிடத்தும் வானோர் தொழுந்திரு மேனி தானும்
அண்டரும் கண்டி லாத அண்ணலே எனவ ணங்கி
வெண்தர ளங்கள் சிந்த விழிமொழி குழறி மெய்யே
கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே.

சிவமாம் வேடஞ் சிவாலய மெனத்தொழுந்
தவமா ஞானச் சரியை சாற்றியது.

பொழிப்புரை :

தொண்டர்களிடத்தும் மகேசுவரரிடத்திலும் வானோர்; தொழுந் திருமேனி தானும் பிரம விஷ்ணுக்கள் முதலாயுள்ள தேவர்களும் வந்து வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கப் பெருமானிடத்திலும் ; அண்டருங் கண்டிலாத அண்ணலே என வணங்கி அந்தத் தேவர்களாலுங் காணப்படாத சிவனல்லவோ நம் பொருட்டாகத் திருமேனி கொண்டு எழுந்தருளினானென்று இந்த இரண்டிடத்திலும் வழிபட்டுத் தெண்டனிட்டு; விழி வெண் தரளங்கள் சிந்த கண்களானது முத்துப்போலே நீரை யுதிர்க்க ; மொழி குழற வார்த்தை தழுதழுக்க ; மெய்யே கண்டு கொண்டிருப்பர் உண்மையாகக் கண்டு தியானித்துக் கொண்டிருப்பார்கள்; ஞானக் கடலமு தருந்தி னோரே அருள் வெள்ளமாகிய சமுத்திரத்திலே விளைந்த சிவபோகமாகிய அமுதினைப் புசித்த சிவஞானிகள்.
தொண்டர்களிடத்தும் எகு திருவேடத்தாரைச் சிவனெனக் கண்டு வழிபட என்று பொருள் கூறியது ஏதென்னில், அவர்கள் கொண்ட வேடத்தினாலுந் தியான சமாதியினாலும் அவர்களிடத்திலே சிவன் சாந்நித்தியமாகச் செய்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத் தருளாற், செறிதலினால் திருவேடஞ் சிவனுருவே யாகுஞ் சிவோகம்பா விக்கும் அத்தாற் சிவனும் ஆவர், குறியதனால் இதயத்தே அரனைக் கூடுங் கொள்கையினால் அரனாவர் குறியொடுதா மழியும், நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவர் என்றால் நேசத்தால் தொழுதிடுநீ பாசத்தார் விடவே” (12.3) எது கண்டுகொள்க.
இனி, வானோர் தொழுந் திருமேனிதானும் எகு சிவலிங்கப் பெருமானைச் சிவனெனக் கண்டு வழிபட என்று பொருள் கூறியது ஏதென்னில், இந்தச் சிவலிங்க மூர்த்தமானது சிவனுடைய வடிவாகிய சத்தி சிவான்மீகமாயிருக்கையாலும், மந்திர தந்திரங்களினாலும் வழிபடுவோர்க்குக் காட்டத்தில் அக்கினி கடைந்த இடத்திலே பிரகாசித்தாற் போலவும் பசுவினிடத்துண்டாகிய பால் அப்பசுவினுடலெங்கும் நின்றாலும் அந்தப் பசுவின் முலைக்கண்ணிலே தோன்றினாற் போலவும் அந்த இலிங்க மூர்த்தத்திலே பூரணமாகிய சிவம் பிரகாசிக்கையாலும், அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே, உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும் உளனெங்கும் இலன்இங்கும் உளனென் பார்க்கும், விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல் மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும், உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி ஒழுகுவது போல்வெளிப்பட் டருளுவன்அன் பர்க்கே” (12.4) எது கண்டுகொள்க.
மற்றுள்ள நூல்களெல்லாம் மூன்று முதலையுஞ் சிவனெனக் கண்டு வழிபடவென்று வருகையாலே இந்நூல் மகேசுவரரையுஞ் சிவலிங்கப் பெருமானையும் வழிபடச் சொன்னதொழிய ஆசாரியனை வழிபடச் சொல்லாதிருப்பான் ஏனென்னில், அது ஆசாரியன் முன்னிலையாக எழுந்தருளிச் செய்யச் சீடன் தெண்டம்பண்ணி வழிபட்டுக் கேட்டு வருகையால் அதனைச் சொல்ல வேண்டுவதில்லை என்பது கருத்து. ஆனாலும், ஆசாரியனையுஞ் சிவனெனக் கண்டு வழிபடுகைக்கு பிம் சித்தியாரில் “பரம்பிரமம் இவனென்றும் பரசிவன் தானென்றும் பரஞானம் இவனென்றும் பராபரன்தா னென்றும், அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும் அருட்குருவை வழிபடவே அவனிவன் தானாயே, இரங்கியவா ரணம்யாமை மீனண்டம் சினையை இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும், பரிந்திவைதா மாக்குமாபோற் சிவமே யாக்கும் பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துந் தானே” (12.7) எது கண்டுகொள்க. இந்தப் பூமியின்கண்ணே எழுந்தருளியிருக்கப்பட்ட இலிங்க மூர்த்தத்தை வானோர் தொழுந் திருமேனி என்றதேதென்னில், தேவர்களும் முத்தியைப் பெறுமவதரத்து இந்தப் பூமியின்கண்ணே வந்து சிவனை அருச்சித்துப் பெறவேண்டுகையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “வானிடத் தவருமண்ணில் வந்தரன் தனையர்ச்சிப்பர்” எம், திருவாசகத்தினும் “புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்கு கின்றோம்” (20.10) எம் கண்டுகொள்க. அப்படியிருக்க இந்த இலிங்க மூர்த்தத்தை அண்டருங் கண்டிலாத அண்ணலே என்றதேதென்னில், இந்த இலிங்க மூர்த்தத்தை வழிபடுமவர்கள் அந்த உண்மை ஞானமாகிய பூரணத்தை இலிங்கத்தினிடத்திலே தியானித்து வழிபட வேண்டுகையால் அந்த உண்மை ஞானத்தை அவர்கள் அறியாத படியாலே அப்படிச் சொன்னதென அறிக. அஃதெங்ஙனேயென்னில், அவர்கள் சிவனை இழந்து நின்று செய்த பசு புண்ணியத்தினாலே தெய்வபதத்தைப் பெற்றுச் சிற்றின்பமாகிய போகங்களை அநுபவித்திருக்கையால் அந்த உண்மை ஞானத்தை அறியாதவர்கள் என்றதென அறிக. இதற்கு பிம் திருவாசகத்தில் “வான நாடரும் அறியொ ணாதநீ” (5.95) எம், “கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்” (11.10) எம், “அளவறுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்” (5.35) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க.
இனி, இங்ஙனஞ் சிவனை வழிபடுகிறவர்கள் பிரியப்பட்டு வகை கூறாமல் விதனப்பட்டு ‘வெண்டரளங்கள் சிந்த விழிமொழி குழறி’ என்ன வேண்டுவான் ஏனென்னில், யாதாமொரு விதனமுற்றவர்கள் தங்கள் விதனம் நீக்கத்தக்க முதியோரைக் கண்டவிடத்துத் தாங்கள் பட்ட விதனத்தின் மேலீட்டினாலே தங்கள் விதனத்தைச் சொல்லி யாறுமிடத்து அவர்கள் மெய்யறியாமற் கண்ணீருங் குதித்து நாவுந் தழுதழுத்து நின்றாற்போல, மோக்ஷகாமிகளா யுள்ளவர்களுந் தாங்கள் ஜநந மரண துக்கத்திலே அழுந்தியும் இயம தண்டப்பட்டும் நரகவேதனைப் பட்டும் வருகிற விதனத்தை உபதேசக் கிரமங்களினாலே கண்ட அவதரத்துச் சிவசந்நிதியிலே தங்கள் விதன மாற வேண்டுகையால் வாக்கு மனாதீதமாயுள்ள சிவன் நம் பொருட்டாகத் திருமேனிகொண் டருளினானென்று கண்டு தங்கள் விதனத்தின் மேலீட்டை அந்தச் சந்நிதியிலே விண்ணப்பஞ் செய்யச் செய்தே அவர்கள் மெய்யறியாமல் உண்டாகிய கண்ணீருங் குழறுதலுமென அறிக. என்னவே, மனதிலுண்டான விதனங் கண்ணீராலே அறியப் படுமென்பது கருத்து. அஃதெங்ஙனே யென்னில் “அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” (குறள் 71) என்று திருவள்ளுவ தேவரும் அருளிச் செய்ததும் இப்பொருள் பற்றியேயென அறிக. சிவனைப் பெறவேண்டுமென்று விதனமுற்றவர்களுக்குக் கண்ணீருங் குழறுதலும் உண்டாமென்பதற்கு பிம் திருவாசகத்தில் “மெய்தா னரும்பி விதிர் விதிர்த்துன் விரையார் கழற்கென், கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி” (5.1) எம், “உள்ளந்தாள் நின்றுச்சி யளவுநெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணா யண்ணா, வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாங் கண்ணிணையு மரமாந் தீவினையினேற்கே” (5.21) எம், “வேண்டுந்தனையும் வாய்விட்டலறி விரையார் மலர்ப் பாதம், பூண்டுகிடப்ப தென்று கொல்லோ என்பொல்லா மணியைப் புணர்ந்தே” (27.3) எம் பெரிய புராணத்தில் “ஈசனையே பணிந்துருகி இன்பமிகக் களிப்பெய்தப், பேசிய வாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை, மாசிலா நீறழிந்தங் கருவிதர மயிர்சிலிர்ப்பக், கூசியே யுடல்கம்பித் திடுவார்மெய்க் குணமுள்ளார்” (பத்தராய்ப் பணிவார் 6) எம், பாணராற்றுப் படையில் “முதுமலை நோக்கிக் கதுமெனச் செல்வுழி யுவகைப் பேரியாறு தவலறப் பெருகி யுண்மனந் தளிர்ப்ப உரோமஞ் சிலிர்ப்பக் கண்ணெனு மதகின் கண்ணீருடைய என்பிடை யுருகி நன்குடல் விதிர்ப்ப வேர்த்துமெய் யரும்பி நாத்தழு தழுப்ப” எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க.
இனி, மெய்யே கண்டு கொண்டிருப்பர் எகு உண்மையாகக் கண்டு தியானித்துக் கொண்டிருப்பார்களென்று பொருள் கூறியது ஏதென்னில், பூரண கர்த்தாவாய் உயிருக்குயிராய் நின்று அறிவிக்கிற சிவமானது குருலிங்க சங்கமமாகப் புறம்பே கொள்ளப்பட்ட திருமேனியிலும் உண்டென்று வழிபடுகையால் அப்படிச் சொல்லப்பட்டதென அறிக. இதற்கு பிம் தேவாரத்தில் “என்னிலாரு மெனக்கினி யாரில்லை, என்னி லும்மினி யானொரு வன்னுளன், என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக், கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே” (5.21.1) எம், திருவருட்பயனில் “உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக் கெள்ளுந் திறமேது மில்” (96) என்றதும் இப்பொருள் பற்றி நின்றதென அறிக. அன்றியும், பூசாகரணத்திலும் இதுவே பொருளென் பதைப்பற்றி “ஆருயிர் சிவத்தை விட்டுப் புறச்சிவ மர்ச்சிப் பானேல், ஈருயிர்ச் சிவமுண் டாகி லிசைவதன் றெங்கு முள்ள, தோருயிர்ச் சிவமே மற்றுப் புறச்சிவ முருச்சி வத்திற், பேருயிர்ச் சிவமே தென்னிற் பெறாததுப் பிணக்கு நூலே” (16) என்பதனாலும், அந்தச் சிவமுதலை யுள்ளும் புறம்பும் ஒரு தன்மையாகக் கண்டவர்களே சிவஞானிகள் என்பதனைக் குருமுகாந்தரமாகக் கண்டுகொள்க. இனி, ஞானக் கடலமு தருந்தினாரே என்றது ஞானத்துக்குச் சமுத்திரத்தை உவமையாகக் கூறியதேதென்னில், சமுத்திரம் போல ஞானமும் அளவுபடாத படியாலும், தன்னிடத்திலே கூடின ஆன்ம ஜாலங்களை அந்தச் சமுத்திரம் போல உள்ளடக்கி நிற்கையாலும், அந்தச் சமுத்திரம்போல அமுதம் விளைகையினாலும், அப்படிச் சொன்னதென அறிக. அப்படிச் சமுத்திரம் போல ஞானம் அளவுபடாதென்பதற்கு பிம் திருக்களிற்றுப் படியாரில் “கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றுங், கடலளக்க வாராதாற் போலப் படியில், அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம், கருத்துக்குச் சேயனாய்க் காண்” (90) என்பதனுள் “கடலளக்க வாராதாற் போல” என்பதைக் கண்டுகொள்க. அன்றியும், சமுத்திரம் போலச் சிவனும் ஆன்ம ஜாலங்களை யுள்ளடக்கி நிற்பானென்பதற்கு பிம் சித்தியாரில் “இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி, அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோல ணைந்து, விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக், கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியைஒத் திருப்பனந்த முத்தியினிற் கலந்தே” (11.12) என்பதனுள் “விரும்பிப்பொன் னினைக்குளிகை ஒளிப்பதுபோல் அடக்கி” என்பதைக் கண்டுகொள்க. இனி, சமுத்திரம் போல அமுதம் விளைகையாலு மென்பதற்கு பிம் ஞானாமிர்தத்தில் “மந்தர மத்தென நிறுவி நாணென ஐந்தலை யரவு சுற்றி நஞ்சொடு பணாமணி பிதுங்கப் பற்றி யவுணரோ டமரரு மியக்க வாற்றா நாள்செல முகுந்தன் தனா அது முழுவலி யெறுழ்த்தோன் வருந்த ஆங்கு வாய்விட் டலறி நுரைத்தலை விரித்துஅத் திரைபெருங் கையெடுத் தின்றுங் கூப்பிட வன்றுவந் தெழுந்த துவரி யமுத மென்ப” (6.19) எது கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுகைக்குச் சிவஞான சித்தியில் பன்னிரண்டாஞ் சூத்திரமாகிய “செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட், டங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி, எங்குமியாம் ஒருவருக்கும் எளியோ மல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித், திங்கள்முடி யார்அடியார் அடியோ மென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே” என்னும் விதியைப் பற்றி, சிவஞானிகளா யுள்ளவர்கள் திருவேடத்தாரையுஞ் சிவலிங்கப் பெருமானையுஞ் சிவனெனக் கண்டு வழிபடுமுறைமையை அறிவித்தது.
ஆக இங்ஙனஞ் சொல்லப்பட்ட உண்மை ஐம்பதினும் ஆன்ம இலக்கணமுதல் அணைந்தோர் தன்மை முடிவாகச் சொல்லப்பட்ட அதிகாரம் ஒன்பதும் இவ்வளவிலே முடிந்தது.

குறிப்புரை :

இங்ஙனம் பஞ்ச சுத்திகளுஞ்செய்து அந்த ஞானபூசையைச் செய்துவரும் அவதரத்து, அதிலும் ஆன்மபோதங் குவியாமல் வாதனாபலத்தாலே திரிவித கரணங்களோடுங் கூடிப் பிரபஞ்சத்திலே ஓடினாலும் பழைய பிரபஞ்சத்தொழிலாய் நின்று சீவியாமல் அருள்தொழிலாய் நிற்கத்தக்கதாக மேல் பன்னிரண்டாஞ் சூத்திரமாகிய ஞானச்சரியையை அருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

பண் :

பாடல் எண் : 1

நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக்
குலவின ரளவ ளாவாக் கொள்கைய தாகி வேதத்
தலைதரு பொருளா யின்பாய்த் தாவில்சற் காரியத்தாய்
மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே.

அந்தமில் சமயத் தளவா தருமறை
அந்த முறுபொருள் அறைந்தேனென்றது.

பொழிப்புரை :

நிலவுல காயதாதிநிகழ்சிவாத் துவாதந் தத்து புறச்சமயமாகப் பொருந்தப்பட்ட உலகாயதன் முதல் அகச்சமயமாக விளங்கும் சிவாத்துவிதம் ஈறாக

குலவினர் அளவ ளாவாக் கொள்கைய தாகி: அவர்கள் கொண்டாடப்பட்ட அத்தங்களாகிய அளவுகளுக்கு அளவுபடாத கோட்பாட்டை யுடைத்தாய்

வேதத் தலைதரு பொருளாய் - வேதத்தின் முடிவிலே யுண்டாக்கப்பட்ட அத்தமாய்

இன்பாய்-பரமாநந்தமாகிய பேரின்பமாய்

தாவில் சற்காரியத்தாய்-கேடில்லாத சற்காரிய வாதமுமாய்; சற்காரியமாவது உள்ளதேயுள்ளதென்றும் இல்லாதது ஒருகாலத்தினும் இல்லையென்றும் நின்றதென அறிக. அஃதாவது பதி பசு பாசம் மூன்றி னுள்ளும் யாதொரு பொருளை ஓரிடத்திலே யுண்டென்று நாட்டிப் பின்னை மற்றோரிடத்திலே இல்லையென்கிறது சித்தாந்த விரோதமாகையால் அஃதிந் நூலுக்கு இல்லையென்றதென அறிக

மலைவறும் உணர்வால்-சிவனுடைய குற்றமற்ற பேரறிவாகிய திருவருளினாலே

பெத்த முத்திகள் மதித்தாம் அன்றே - இந்நூலைப் பெத்தமாகிய பொதுவென்றும் முத்தியாகிய உண்மை யென்றுஞ் சொல்லா நின்றேம். அன்றியும், பெத்த முத்தி யென்றது போகமோக்ஷ மென்னனவுமாமென அறிக.

உலகாயதன்முதற் சிவாத்துவிதி ஈறாகச் சொல்லப்பட்ட சமயிகளுக்குத் தொகை இவ்வளவென்று அறிகைக்கு முன்சொன்ன பொதுவிலே \"புறச்சமயத் தவர்க்கிருளா யகச்சமயத் தொளியாய்\" (7) என்ற செய்யுளுக் கெழுதின நுட்பத்திலே கண்டுகொள்க. பெத்தமுத்தியென்றது ஏதென்னில், பெத்தம் பாசத்தோடுங் கட்டுப்பட்டு நிற்கை. முத்தி அந்தக் கட்டுவிடுகையென அறிக. திருவாசகத்தில்

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ,
றிட்ட வன்பரோடி யாவருங் காணவே,
பட்டி மண்டப மேற்றினை யேற்றினை,
எட்டினோ டிரண்டும்மறி யேனையே\" (5. 49) என்பது கண்டுகொள்க

இதனாற் சொல்லியது:
இந்நூலிற் சொல்லப்பட்ட சைவ சித்தாந்த அத்தம் உலகாயதன்முதற் சிவாத்துவிதி ஈறாகச் சொல்லப்பட்ட சமயிகள் கொள்ளுங் கோட்பாட்டை யுடையதல்லவாய் வேதாந்தத் தெளிவாய் அநுபோக அத்தமாய் முன்னொடுபின் மலைவற்ற பொருளா யிருக்கப்பட்ட அத்தத்தைச் சிவனுடைய திருவருளினாலே பொதுவென்றும் உண்மை யென்றுஞ் சொல்லா நின்றேனென்றும் முறைமையை அறிவித்தது. இது நூற்கருத்து.

இனி வருவது :
இங்ஙனம் பெத்தமாகவும் முத்தியாகவுஞ் சொல்லப்பட்ட இந்த நூலினையும் இதனால் விளங்கப்பட்ட சைவசித்தாந்த அத்தமும் ஆசாரியார் சீடனுக்குச் கொடுக்கும் முறைமையும் மேலருளிச்செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல்
விரிவது தெளியு மாற்றால் விளம்பிய ஏது நோக்கிப்
பெருகிய உவமை நான்கின் பெற்றியில் நிறுவிப் பின்முன்
தருமலை வொழியக் கொள்வோன் தன்மையிற் சாற்ற லாமே.

பெருநூற் பொருளைப் பின்முன் மலைவற
அருளுடன் கொள்பவர்க் கறைக என்றது.

பொழிப்புரை :

திருவருள் கொடுத்து மலபாகமும் வந்து சத்திநிபாதமும் உண்டாய் வந்தான் ஒரு சீடனுக்கு ஆசாரியன் தனது திருவடியை வைத்து; மற்றிச் சிவப்பிரகாச நன்னூல் விரிவது (மற்று வினைமாற்று) இங்ஙனஞ் சிவப்பிரகாச மென்னும் நல்ல நூலினது அத்தத்தின் விரிவானதை; தெளியுமாற்றால் அறிந்து தெளியும் வழியால் ; விளம்பிய ஏது நோக்கி நூல்களில் சொல்லப்பட்ட இயல்பு காரியம் அனுபலத்தி யென்கிற ஏதுவாகிய காரண காரியங்கள் ஆராய்ந்து பார்த்து ; பெருகிய உவமை நான்கின் பெற்றியில் நிறுவி மிகவும் உவமையாகச் சொல்லப்பட்ட வினை பயன் மெய் உருவென்று சொல்லப்பட்ட வினையாலுவமை பயனாலுவமை பண்பாலுவமை உருவாலுவமையாகிய நால்வகையிலுண்டாகிய இயல்பிலே கருத்தை நிறுத்தி ; பின்முன் தரு மலைவொழியக் கொள்வோன் தன்மையிற் சாற்ற லாமே இந்நூலில் உண்டாகிய அத்தத்தை முன்னொடுபின் மலைவறக் கொள்ளத்தக்க முறைமையினை யுடையவரிடத்திலே தெளியச் சொல்லலாம்.
திருவருள் கொடுத்தென்றது தீடிக்ஷயினாலே பாச க்ஷயம் பண்ணி உண்மை ஞானத்தைக் கடாட்சித்தென அறிக. நன்னூ லென்றது “கருத்திலுறை திருவருளும் இறைநூலுங் கலந்து” (11) என்னும் பொருளைப் பெற்று நின்றதென அறிக. விரிவது தெளியுமாற்றால் என்றது “வளர்விருத்தம்” (11) என்னும் பொருள் பெற்றதென அறிக. அஃதாவது, இந்நூலிற் சொற்சுருங்கி அத்தம் விரிந்திருக்கையினாலும் ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் அத்தம் மேன்மேலும் விரிந்து வருகையினாலுமென அறிக. விளம்பிய ஏது நோக்கி என்றதை இயல்பென்றுங் காரியமென்றும் அநுபலத்தியென்றுஞ் சொன்னது ஏதென்னில், இயல்பேது என்றது பொருள் தன்னையே உவமை யாக்கி மாப்பூத்ததென்றால் மரமென அறிகையெனக் கொள்க. காரிய ஏதுவென்றது புகையைக் கண்டதுகொண்டே இவ்விடத்து அனலுண்டென அறிதல். அநுபலத்தி யேதுவாவது குளிரில்லாதது கொண்டே பனியில்லை யென்றதென அறிக. இவையிற்றுக்கு பிம் சித்தியாரில் “ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தி யிவை, ஓதின் இயல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம் புகைதன், ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தி யது, சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பி டிலே” (அளவை 10) எது கண்டுகொள்க. உவமை நான்காவது “வினைபயன் மெய்யுரு என்ற நான்கே, வகைபெற வந்த உவமைத் தோற்றம்” (தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல் 1) என்னும் விதியைப் பற்றிக் கார்போலுங் குழல், தருப்போலுங்கை, புலிபோலப் பாய்ந்தான், பொன்போலும் ஆவாரம்பூ என்று வருவதென அறிக. இங்ஙனம் ஏதுவும் உவமையுஞ் சொன்னதேதென்னில், பதி பசு பாச மென்ற மூன்றினுள் யாதாமொரு பொருளை அறியுமிடத்து ஏதுக்களினாலும் உவமைகளினாலும் அறிய வேண்டுகையாலென அறிக. இதற்கு பிம் சங்கற்ப நிராகரணத்தில் “வாத செற்பை விதண்டையும் ஏதுவும் ஓது நால்வகை உவமையுந் திகழ் தர அருள்சேர் மாந்தர் வெருள்சே ராமல் தர்க்கமும் விடயமுங் கற்க நற்கவி மாந்தர் நகநவிற் றுவனே” (2.4549) எது கண்டுகொள்க. பின்முன் தருமலைவொழியக் கொள்வோன் தன்மையிற் சாற்ற லாமே எகு முன்னொடுபின் மலைவறக் கொள்ள வல்லவன் என்றது ஆரென்னில், முன் ஜநநங்களிலே சரியை கிரியை யோகங்களை முற்றும் அநுட்டித்துவந்த புண்ணியவான்கள் என்றதென அறிக. இதற்கு பிம் துகளறுபோதத்தில் “உற்ற சரியை ஒழியாத நற்கிரியை, குற்றமிலா யோகக் குறிநெறியும் முற்றிப், பிறந்தார்கள் தாமறியப் பேசுகேன் அன்றிப், பிறந்தார் அறியாத பேறு” (2) எம், இந்நூலினும் “கேடில் புகழ் தருஞ் சரியை கிரியா யோகக் கேண்மையரேல் இவையுணர்த்தக் கிளக்கு நூலே” (49) எம் கண்டுகொள்க.
இதனாற் சொல்லியது, சமயாசாரமுஞ் சந்தான ஆசாரமும் உண்டாய் வந்தான் ஒரு சீடனுக்கு ஆசாரியன் திருவடியை வைத்து இந்தச் சிவப்பிரகாசமென்னுந் திருநாமத்தினையுடைய நல்ல நூலிலே விரியப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உண்மையான அத்தத்தை ஏதுக்களினாலும் உவமையினாலும் நிச்சயித்து அந்த அத்தத்தை முன்னொடுபின் மலைவறக் கொள்ளத்தக்க பக்குவனுக்குக் கிரமத்திலே கொடுக்கலாமென்னும் முறைமையை அறிவித்தது.

குறிப்புரை :

இங்ஙனம் பெத்தமாகவும் முத்தியாகவுஞ் சொல்லப்பட்ட இந்த நூலினையும் இதனால் விளங்கப்பட்ட சைவசித்தாந்த அத்தமும் ஆசாரியர் சீடனுக்குக் கொடுக்கும் முறைமையும் மேலருளிச் செய்வான் எடுத்துக் கொண்டருளியது.

இப்பிறப்பே சீவன்முத்தி யெய்துவிக்கும் மேற்பிறக்கும்
அப்பிறப்பும் இங்கே அறுத்தருளி ஒப்பறவே
உண்மையருள் கொற்றங் குடிவாழ் உமாபதி தன்
வண்மையருட் குண்டோகைம் மாறு.

உரைச் சிறப்புப் பாயிரம்
1. தொந்தனையாற் சூத்திரத்தாற் சொற்பொருளாய் அம்பலவன்
தந்தகுற ளாற்றொகையாற் றன்னருளாற் சிந்தையின்மெய்
காணச் சிவப்பிரகா சங்கரைக்கண் டான்ம துரைத்
தாணுச் சிவப்பிரகா சன்.

2. ஓதுபுகழ் சகாத்தமா யிரத்து நானூற்
றொருபதின்மேற் செல்கின்ற காலந் தன்னின்
மாதுபயில் மதுரையில்வாழ் சிவப்பிர காசன்
வண்மையருள் நிகழ்ச்சியினால் உண்மை யாக
ஈதுமலம் ஈதுவினை ஈது மாயை
ஈதுயிர்பின் ஈதுசிவம் என்றே காட்டித்
தீதில்சிவப் பிரகாசச் செய்யுள் நூறுந்
தேர்ந்துரையிட் டேயுலகிற் சிறப்பித் தானே.
திருச்சிற்றம்பலம்

பண் :

பாடல் எண் : 1

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்.

பொழிப்புரை :

நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம் கற்கும் சரக்கு அன்று காண் வேதாகம புராண கலைகள் யாவும் கற்கிறதற்கு அரியனவல்ல, அறிவாயாக.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 2

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில்இறை நிற்கும் நிறைந்து.

பொழிப்புரை :

அகர உயிர்போல் ஐம்பத்தோ ரக்கரங்களுக்கும் அகர மாகிய அக்கரம் உயிராக நின்றது போல் ; அறிவாகி சர்வான்மாக்க ளுக்கும் அறிவுக்கறிவாகி; எங்கும் சடசித்துக்களெல்லாம் இடைவிடாமல் ; நிகரில்இறை நிற்கும் நிறைந்து ஒப்பில்லாத கர்த்தா இப்படி நிறைந்து நிற்பன்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

தன்நிலைமை மன்உயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொழிப்புரை :

தன் நிலைமை மன் உயிர்கள் சார தனது நிலைமை யாகிய கர்த்தாவினுடைய திருவடித் தாமரையிலே நிலைபெற்ற ஆன்மாக்கள் பொருந்த; தரும் சத்தி அவனுடைய சத்தியானது கொடுக்கும் ; சத்தியென்றும் அவனென்றும் பின்னமோ அபின்னமோ என்னில் பின்னமிலான் வேறாயிருக்கிறவ னல்லன் ; எங்கள் பிரான் எங்கள் கடவுள்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 4

பெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொழிப்புரை :

பெருமைக்கும் தனது சத்தியைக் கொண்டு பஞ்ச கிருத்தியம் நடத்துகிற மகத்துவத்துக்கும்; நுண்மைக்கும் நுட்பத்துக்கும்; பேர் அருட்கும் சர்வான்மாக்களையும் இரட்சிக்க வேண்டுமென்கிற மிகுந்த கிருபைக்கும்; பேற்றின் அருமைக்கும் சரியை கிரியா யோகங்களைச் செய்து அவனைப் பெறுகிற அருமைக்கும் ; ஒப்பின்மையான் ஒப்பில்லாத கர்த்தா.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 5

ஆக்கி எவையும் அளித்தா சுடன்அடங்கப்
போக்கும்அவன் போகாப் புகல்.

பொழிப்புரை :

ஆக்கி எவையும் எல்லாப் பிரபஞ்சத்தையும் பிரமாவைக் கொண்டு சிருட்டிப்பித்தும்; அளித்து விட்டுணுவைக் கொண்டு இரட்சிப்பித்தும்; ஆசுடன் அடங்கப் போக்கும் அவர்களையும் அவர்களாலே யுண்டாக்கப்பட்டு இரட்சிக்கப்படும் பிரபஞ்சத்தையும் மலத்தோடுங் கூடச் சங்கரிப்பன் ; ஆகையினாலே அவன் போகாப் புகல் அந்தக் கர்த்தா விட்டு நீங்காமல் உயிர்க்குயிராய்த் தாரகமாய் நிற்பன்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 6

பல்லா ருயிர்உணரும் பான்மையென மேல்ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை.

பொழிப்புரை :

இப்படித் திருமேனி யுண்டானபோதே அவனுக்கு மேலாக ஒரு கர்த்தா கொடுக்க வேண்டு மென்னில்,
பல் ஆருயிர் உணரும் பான்மையென சர்வான் மாக்களும் அவன் அறிவிக்க அறிந்து வருகிற முறைமைபோல; மேல் ஒருவன் இல்லாதான் தனக்கு மேலாக ஒரு பொருளும் இல்லாதவன் ; எங்கள் இறை எம்முடைய கர்த்தா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொழிப்புரை :

இப்படிக்கொத்த கர்த்தா எங்கே நிற்பன் என்னில்,
ஆனா அறிவாய் நீங்காத பேரறிவாய்; அகலான் அடியவர்க்கு தன்னை அடைந்த அடியார்களிடத்திலே விட்டு நீங்காதவன்; வானாடர் காணாத மன் தேவர்களாலுங் காணப்படாத நிலைபெற்ற கர்த்தா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கும்அவன் தானே தனி.

பொழிப்புரை :

அடியாரிடத்திலே நின்று மற்றப் பேரிடத்திலே இல்லையோ சிவன் ஏகதேசியோ என்னில்,
எங்கும் எல்லா உலகங்களினும் ; எவையும் சடசித் துக்களெல்லாம் ; எரியுறு நீர்போல் அக்கினியைச் சேர்ந்த நீரைப் போல் ; ஏகம் தங்கும் வேறறக் கலந்து நிற்பன் ; அவன் தானே தனி அந்தக் கர்த்தாவுக்கு அவன் தானே ஒப்பு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.

பொழிப்புரை :

கர்த்தா நீக்கமற நிற்க, பிறப்பு உண்டாவானேன் ஆன்மாக்களுக்கு என்னில்,
நலமிலன் நண்ணார்க்கு தன்னைப் பொருந்தாத பேர்களுக்கு நன்மையைக் கொடாதவன்; நண்ணினர்க்கு நல்லன் தன்னைப் பொருந்தின பேர்களுக்கு இன்பத்தைக் கொடுப்பன் ; ஆனால் பட்சப் பிரதிபட்சமோ என்னில் சலமிலன் விருப்பு வெறுப்பில்லாதவன்; பேர் சங்கரன் ஆன்மாக்களுக்கு உயிர்ச் சுகத்தையும் உடற்சுகத்தையுங் கொடுக்கும் சங்கரனென்னுந் திருநாமத்தை யுடையவன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

உன்னுமுள தையம் இலதுணர்வாய் ஓவாது
மன்னுபவம் தீர்க்கும் மருந்து.

பொழிப்புரை :

இப்படி இருக்கிற கர்த்தா வணங்கி வழிபட்டால் விளங்கானோ என்னில்,
உன்னும் நினையுங்கோள்; உளது உண்டாக்கப் படாத பொருள் ; ஐயம் இலது சந்தேகமில்லை ; உணர்வாய் ஓவாது அறிவாய் விட்டு நீங்காது ; மன்னு பவம் தீர்க்கும் மருந்து நிலைபெற்ற செனன மரணத்தைத் தீர்க்கிறதற்கு ஓர் அவுடதம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

பொழிப்புரை :

இந்தப் பரமமான அவுடதத்தைக் கொண்டு திருவடியைப் பொருந்தின ஆன்மாக்களுக்குத் தொகை உண்டோ என்னில், பிறந்த நாள் ஆன்மாக்கள் முன்பு பிறந்த நாளுக்கும் ; மேலும் பிறக்கும் நாள் போலும் இனிமேல் பிறக்கப் போகிற நாளுக்கும் இத்தனையென்று தொகை இல்லாதது போல ; துறந்தோர் துறப்போர் தொகை தேகாதிப் பிரபஞ்சத்தைத் துறந்தடைந்த பேர்களுக்கும் இனிமேல் துறந்தடையப் போகிற பேர்களுக்கும் ஓர் அளவில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

திரிமலத்தார் ஒன்றதனிற் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தார் ஆயும் உளர்.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் எத்தனை விதமாக இருக்குமென்னில், திரிமலத்தார் ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலத்தினையுமுடைய சகலரென்றும் ; ஒன்று அதனிற் சென்றார்கள் மாயாமலம் நீங்கலாக ஆணவ மலத்தினையுங் கன்ம மலத்தினையு முடைய பிரளயாகல ரென்றும்; அன்றி ஒரு மலத்தார் ஆயும் அல்லாமலும் ஆணவ மலத்தினையுடைய விஞ்ஞானகலரென்றும் ; உளர் ஆராயுமிடத்து ஆன்மாக்கள் மூன்று விதமாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணை.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் ஒருத்தருக் கொருத்தர் அடிமையோ என்னில், மூன்று திறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள் மூவகைப்பட்ட ஆன்மாக்களும் ஆணவ மலத்தினை யுடையவர்கள் ; தோன்றலர் தொத்து உள்ளார் துணை தோன்றாத் துணையாயிருக்கிற கர்த்தாவுக்குத் தொத்தடிமை ; ஒருத்தருக் கொருத்தர் அடிமையல்ல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

கண்டவற்றை நாளும் கனவிற் கலங்கியிடுந்
திண்டிறலுக் கென்னோ செயல்.

பொழிப்புரை :

ஆண்டவ னென்றும் அடிமை யென்றும் சொல்லுவானேன் ஆன்மாத்தானே பிரமமென்னில், கண்டவற்றை நாளும் கனவிற் கலங்கியிடும் நனவிலே கண்ட காட்சியை நாடோறுங் கனவிலே மயங்கியறிகிற ; திண் திறலுக்கு என்னோ செயல் திண்ணிய திறத்தினையுடைய ஆன்மாக்களுக்கு என்ன செயல் உண்டு !

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பொறியின்றி ஒன்றும் புணராதே புந்திக்(கு)
அறிவென்ற பேர்நன் றற.

பொழிப்புரை :

ஆன்மா சர்வஞ்ஞனா யறியும் என்னில், பொறி இன்றி ஒன்றும் புணராத புந்திக்கு பஞ்ச இந்திரியங்களை யல்லாமல் ஒரு விடயத்தையு மறியாத ஆன்மாவுக்கு ; அறிவு என்ற பேர் நன்று அற சர்வஞ்ஞனா யறியு மென்று சொல்லுகிற பெயர் மிகவும் நன்றாயிருக்கிறது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

ஒளியும் இருளும் உலகும் அலர்கட்
டெளிவி லெனில்என் செய.

பொழிப்புரை :

ஆன்மாவுக்கு அறிவில்லையோ என்னில், ஒளியும் சோமசூரியாக்கினிப் பிரகாசமும் ; இருளும் அந்தகாரமாகிய பூத இருளும் ; உலகும் பிரபஞ்சமும் ; அலர்கண் தெளிவு இல் எனில் என் செய இப்படி விரிந்த இடத்து இவற்றைப் பகுத்துக் காணப்பட்ட கண்ணுக்குப் பிரகாச மில்லையாகில் அவற்றாலுண்டாகிய பிரயோசன மென்ன !

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கண் இவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.

பொழிப்புரை :

முப்பொருளிலேயும் அறியும் பொருள் ஏதென்னில், சத்து அசத்தைச் சாராது சத்தாகிய சிவத்துக்கு அசத்தாகிய பாசத்தைப் பொருந்தி யறிந்து பொய்யென்று நீங்க வேண்டுவதில்லை ; அசத்து அறியாது. அசத்தாகிய பாசம் சடமாகை யினாலே ஒன்றையும் அறியச் செய்யாது ; அங்கண் அவ்விடத்திலே ; இவை உய்த்தல் சதசத்தாம் உயிர் சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய பாசத்தையும் விசாரித்தறிகிறது சதசத்தாகிய ஆன்மா.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

இருளில் இருளாகி எல்லிடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி.

பொழிப்புரை :

சத்து மல்லவாய் அசத்து மல்லவாய் நிற்பதற்கு ஓர் உவமை உண்டோ என்னில், இருளில் இருளாகி இருளோடே கூடி இருளாய் இருளல்லாமலும் ; எல்லிடத்தில் எல்லாம் ஒளியோடே கூடி ஒளியாய் ஒளியல்லாமலும் ; பொருள்கள் இலதோ புவி இப்படிப்பட்ட பொருள் பூமியினிடத்திலே இல்லையோ கண்படிக மாகாசம் போல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

ஊமன்கண் போல ஒளியும் மிகஇருளே
யாம்மன்கண் காணாத வை.

பொழிப்புரை :

ஆனால் சிவத்தை அறியா திருப்பானேன் என்னில், ஊமன் கண்போல ஒளியும் மிக இருளேயாம் கூகையின் கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசம் மிகுந்த அந்தகாரமானாற் போலாம்; மன் கண் காணாதவை நிலைபெற்ற ஞானக் கண்ணினாலே காணாத ஆன்மாக்களுக்கு ஞானமெல்லாம் அஞ்ஞானமாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள்தெரிவ(து)
என்றளவொன் றில்லா இடர்.

பொழிப்புரை :

இந்த அஞ்ஞானம் என்று நீங்கும் என்னில், அன்றளவும் அநாதியே தொடங்கி இற்றை வரையும் ; அளவொன்றில்லா இடர் ஓரளவு மில்லாத பிறவியாகிய துன்ப சாகரத்தை ; ஆற்றும் உயிர் அந்தோ ஆன்மாக்கள் அனுபவியா நிற்கின்றன, ஐயோ ; அருள் தெரிவது என்று திருவருளைப் பொருந்துகிறது எந்தக் காலம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்
இன்றென்ப தெவ்வாறும் இல்.

பொழிப்புரை :

இடராகிய மலம் என்ன செய்யும் என்னில், துன்றும் பவத் துயரும் நெருங்கி வாராநின்ற செனன மரணத் துக்கத்தையும் ; இன்பும் அது நீங்கினவிடத்து உண்டாகிய சுகத்தையும்; துணைப்பொருளும் உயிர்த்துணையாகிய கர்த்தாவையும்; இன்று என்பது எவ்வாறும் இல் இப்போது உண்டென்பதை யெல்லாம் எந்த முறைமையினாலும் ஆணவ மலமானது ஆன்மாக்களுக்கு இல்லையெனப் பண்ணிக் கொண்டு நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள்.

பொழிப்புரை :

மலமறைப்புத்தான் எப்படி யென்னில், இருள் ஆனது அன்றி இலது எவையும் பூத இருளானது சர்வ பதார்த்தங்களையும் தனக்குள்ளே கவளீகரித்துக் கொண்டு இருள் தானாய் நின்றது போல ; ஏகப் பொருளாகி நிற்கும் பொருள் ஆணவமலமானது சர்வான்மாக்களையுந் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு ஆணவமலந்தானாய் நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

ஒருபொருளுங் காட்டா திருள்உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டா திது.

பொழிப்புரை :

இந்தப் பூத இருளைப் போலத்தானோ மறைக்கும் என்னில், ஒரு பொருளும் காட்டாது இருள் ஒரு பதார்த்தத்தையும் காட்டாது பூத இருளானது ; உருவம் காட்டும் தற்சொரூபத்தைக் காட்டா நிற்கும்; இருபொருளும் காட்டாது இது இந்த ஆணவ மலமானது தன்னையுங் காட்டாது, தான் மறைத்த ஆன்மாவையுங் காட்டாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அன்றளவி உள்ளொளியோ டாவி யிடையடங்கி
இன்றளவும் நின்ற திருள்.

பொழிப்புரை :

இந்த மலந்தான் ஆதியோ அநாதியோ என்னில், அன்றளவி அநாதியே சகசமாய் ; உள் ஒளியோடு ஆவி உள்ளொளியா யிருக்கிற சிவஞானத்தோடே ஆன்மாவைப் பொருந்த வொட்டாமல் ; இடை அடங்கி ஆன்மாவினிடத்திலே பொருந்தி ; இன்றளவும் நின்றது இருள் இருவினையொப்பு வருமளவும் ஆன்மாவை மறைத்து நின்றது ஆணவமலம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு.

பொழிப்புரை :

அநாதியாகிய மலத்தை அறியா திருப்பானேன் என்னில், பலரைப் புணர்ந்தும் சர்வான்மாக்க ளிடத்திலேயும் பொருந்தி யிருந்தும் ; இருட் பாவைக்கு ஆணவமல சத்திக்கு ; உண்டு என்றும் கணவற்கும் தோன்றாத கற்பு எந்தக் காலமும் புருடனுக்குந் தோன்றாத கற்பு உண்டு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத
தன்மையிரு ளார்தந் தது.

பொழிப்புரை :

இந்த மலத்தை அறிகிறது எப்படி என்னில், பன்மொழிகள் என் பலவாய்ச் சொல்லுவது ஏது ; உணரும் பான்மை தெரியாத தன்மை தன்னை வினையைத் தலைவனை அறியும் முறைமையை அறியாதபடி கேவல சகல மிரண்டிலும் மறைத்து நிற்பது ; இருளார் தந்தது ஆணவமலம் கொடுத்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

இருள்இன்றேல் துன்பென் உயிரியல்பேல் போக்கும்
பொருள்உண்டேல் ஒன்றாகப் போம்.

பொழிப்புரை :

மலமில்லை யென்னில், இருள் இன்றேல் ஆணவமலமானது இல்லை யென்று சொல்லுவாயானால்; துன்பு என் செனன மரணத் துக்கம் வருவானேன்; உயிரியல்பேல் ஆன்மாவுக்குச் சுபாவமென்று சொல்லுவாயானால் ; போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம் ஆணவ மலத்தைப் போக்கத் தக்கதாகத் திருவருள் உண்டான காலத்தில் அப்போது ஆன்மாவுங் கூடக் கெட்டுப்போம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

ஆசாதி யேல்அணைவ காரணம்என் முத்திநிலை
பேசா தகவும் பிணி.

பொழிப்புரை :

மலம் ஒரு காலத்திலே வந்ததோ என்னில், ஆசாதியேல் ஆணவமலமானது ஒரு காலத்திலே வந்து பொருந்திற் றென்று சொல்லுவாயானால் ; அணைவ காரணம் என் முன்னே சுத்தனா யிருக்கிற ஆன்மாவினிடத்திலே வந்து பொருந்துதற்குக் காரணம் ஏது ; இயல்பாய் வந்து பொருந்து மென்று சொல்லுவாயாகில் முத்திநிலை பேசாது அகவும் பிணி மோட்ச நிலை உண்டென்று சொல்ல வேண்டுவதில்லை, மீளவும் வந்து பொருந்தும் ; ஆதலால்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

ஒன்று மிகினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலா திருள்.

பொழிப்புரை :

மலந்தான் நீங்காதோ என்னில், ஒன்று மிகினும் பூத இருளானது மேலிட்ட காலத்தில் ; ஒளி கவராதேல் விளக்கும் மின்மினிக்கு இடங்கொடா திருந்ததே யானால் ; உள்ளம் என்றும் அகலாது இருள் ஆன்மாவை ஆணவ மலமானது ஒரு காலமும் விட்டு நீங்காது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.

பொழிப்புரை :

மாயை மறைக்கும் என்னில், விடிவா மளவும் விளக்கு அனைய பூத இருள் நீங்கு மளவும் விளக்கானது கண்ணுக்குப் பதார்த்தங்களைக் காட்டிக் கொண்டு நிற்கிறதுபோல; மாயை வடிவாதி கன்மத்து வந்து ஆணவமலம் நீங்குமளவும் ஆன்மாக்களின் கன்மத்துக் கீடாக மாயையானது தனுகரண புவன போகங்களாய் வந்து பொருந்தும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும்
பொருளிற் றலையிலது போல்.

பொழிப்புரை :

இந்த அருளுக்கு மேலாம் ஒரு பொருள் உண்டோ என்னில், அருளிற் பெரியது அருளுக்கு மேலாக ஒரு பொருள் இல்லை, அது எப்படிப்போல; அகிலத்தில் வேண்டும் பொருளில் தலையிலதுபோல் பூமியின் கண்ணே உண்டாகிய ஆன்மாக்கள் தேக சம்பந்தத்தினால் விரும்பும் பதார்த்தத்துக்கு மேல் ஒரு பொருள் இல்லாதது போல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

பெருக்க நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கன்என நிற்கும் அருள்.

பொழிப்புரை :

அருள்தான் என்ன செய்யும் என்னில், பெருக்க ஆன்மாக்கள் கன்மங்கள் ஆர்ச்சிக்கவும் ; நுகர்வினை எடுத்த தேகத்திலே அடுத்த பிராரத்தம் புசிக்கத்தக்க தாகவும் ; பேரொளியாய் எங்கும் எவ்விடத்திலும் மிகுந்த பிரகாசமாய் ; அருக்கன் என நிற்கும் அருள் ஆதித்தனைப் போலத் திருவருளும் இப்படி உபகரித்து நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

ஊன்அறியா தென்றும் உயிர்அறியா தொன்றும் இவை
தான்அறியா தார்அறிவார் தான்.

பொழிப்புரை :

அருள் காரியப்படுத்த வேண்டுமோ ஆன்மாக்கள் தாமே அறிவார்கள் என்னில், ஊன் அறியாது என்றும் சரீரம் சடமாகையினாலே எந்தக் காலமும் ஒன்றையும் அறியச் செய்யாது ; உயிர் அறியாது ஒன்றும் ஆன்மா கிஞ்சிஞ்ஞனாகையினாலே அறிவித்தாலல்லது தானாக ஒன்றையும் அறியச் செய்யான்; தான் அறியாது திருவருளுக்குப் புதிதாக ஒன்றையும் அறிய வேண்டுவதில்லை ; இவை ஆர் அறிவார் தான் இவையெல்லாம் அறிந்து கூட்டி முடிக்கிறது திருவருளையல்லாமல் பின்னை யார்தாம் அறிந்து கூட்டி முடிக்கப் போகிறார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

பால்ஆழி மீன்ஆளும் பான்மைத் தருள்உயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து.

பொழிப்புரை :

இப்படி உபகரிக்கிற திருவருளை அறியாமல் இருப்பானேன் என்னில், பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து பாற்சமுத்திரத்திலே ஆட்சியாகவுடைய மச்சங்கள் பாலைக் குடித்துச் சுகத்தையடையாமல் தமக்குச் சிறியவாயிருக்கும் செந்துக்களை விரும்பும் பகுதி போல ; அருள் உயிர்கள் மால் ஆழி ஆளும் மறித்து அருளிடமாக வாழும் ஆன்மாக்கள் அருளையடைந்து இன்புறாமல் மயக்கமாகிய பிறவிச் சாகரத்திலே விழுந்து புலன்வழித் திரியாநிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

அணுகு துணையறியா ஆற்றோனில் ஐந்தும்
உணர்வை உணரா துயிர்.

பொழிப்புரை :

திருவருளிடமாகக் காரியப்படுகிறதை அறியாதிருந்தது எப்படி என்னில், அணுகு துணை அறியா பொருந்தும் துணையை அறியாது ; ஆற்றோனில் ஐந்தும் ஆன்மாவின் வழித்தாய் அறிந்து காரியப்பட்டு வருகிற பஞ்சேந்திரியங்களும் ஆன்மாவினாலே அறிந்து காரியப்பட்டு வருகிறோமென்று அறியச் செய்யாதது போல ; உணர்வை உணராது உயிர் திருவருளிடமாக அறிந்து காரியப்பட்டு வருகிற ஆன்மாக்களும் திருவருளினாலே அறிந்து காரியப்பட்டு வருகின்றோமென்று அறியச் செய்யார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை உணரார் புவி.

பொழிப்புரை :

பூமியிலே உவமை உண்டோ என்னில், தரையை அறியாது தாமே திரிவார் பூமி தாரகமாய்ச் சஞ்சரிக்கிற ஆன்மாக்கள் பூமி தாரகமென் றறியாமல் தத்தஞ் சாமர்த்தியத்தினாலே சஞ்சரிக்கிறதாக விசாரித்தாற்போல ; புரையை உணரார் புவி அருள் தாரகமாய் அறிந்து புசியாநிற்கிற ஆன்மாக்கள் அருள் தாரகமென் றறியாமல் தமது செயலென்றிருக்கிற முறைமையும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானம்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொழிப்புரை :

அருளைத் தேடி அறிகிறேன் என்னில், மலைகெடுத்தோர் மலையிலே யிருந்து மலை கெட்டுத் தேடுவார் போலவும் ; மண்கெடுத்தோர் பூமியிலே யிருந்து பூமி கெட்டுத் தேடுவார் போலவும் ; வான் கெடுத்தோர் ஆகாயத்திலே யிருந்து ஆகாயங் கெட்டுத் தேடுவார் போலவும் ; ஞானம் தலை கெடுத்தோர் தற்கேடர் தாம் ஞானத்துக்குள்ளே யிருந்து ஞானத்தை அறியாது தேடினதும் தன்னாலேதான் கெட்டதும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்திருளாம்
கள்ளத் தலைவர் கடன்.

பொழிப்புரை :

ஞானத்துள்ளே இருந்தும் ஞானத்தை அறியாதிருப்பானேன் என்னில், வெள்ளத்துள் நாவற்றி மார்பளவு தண்ணீரிலே போகிறவன் தண்ணீர்த் தாகமாய் இருக்கச் செய்தேயும், ஒரு விடயத்தை நாடிப் போகையினாலே அத்தண்ணீர் அள்ளிக் கொள்ள மாட்டாதது போலவும்; எங்கும் விடிந்து இருளாம் எவ்விடத்திலும் ஆதித்தப் பிரகாசமாய் இருக்க செய்தேயும் அந்தகனுக்கு இருளானது இருக்கிறது போலவும்; கள்ளத்தலைவர் கடன் எவ்விடத்திலும் திருவருள் பிரகாசித்திருக்கவும் அதனை அறியாமல் ஆன்மாக்கள் இந்திரியங்களுடனே கூடி நிற்கிற முறைமை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

பரப்பமைந்து கேண்மின்இது பாற்கலன்மேல் பூசை
கரப்பருந்த நாடும் கடன்.

பொழிப்புரை :

அருளை அறியாதிருந்தது எப்படி என்னில், பரப்பு அமைந்து கேள்மின் இது தேகாதிப் பிரபஞ்சப் பரப்பைவிட்டு இதனை இன்பமாகக் கேளுங்கோள் ; இல்லாதிருந்தா லோ பாற்கலன் மேல் பூசை கரப்பு அருந்த நாடும் கடன் பாலிருக்கிற பாண்டத்தின் மேலே யிருக்கிற பூனையானது பாலைக் குடித்துச் சுகத்தை அடையாமல் முன்பு வாதனைப்பட்ட கரப்பைப் (காரெலியைப்) புசிக்க இறப்பைப் பார்த்திருக்கிற முறைமைபோல, திருவருள் தனக்கு உயிராய் இருக்கவும் ஆன்மாக்கள் அதனை விரும்பாது விடயங்களிலே பொருந்தி நிற்கிற முறைமை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

இற்றை வரைஇயைந்தும் ஏதும் பழக்கம்இலா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொழிப்புரை :

அமையாதிருந்தால் அறியப் போகாதோ என்னில், இற்றைவரை இயைந்தும் அநாதி தொடங்கி இற்றை வரையும் திருவருள் கூடிநின்று உபகரித்து நிற்கச் செய்தேயும் ; ஏதும் பழக்கம் இலா வெற்றுயிர்க்கு சற்றும் திருவருளிலே பொருந்துதலில்லாத விருதாவாகிய ஆன்மாக்களுக்கு ; வீடு மிகை மோட்ச வீடு பகை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அறியாமை உள்நின் றளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ.

பொழிப்புரை :

பகையில்லாத மோட்சத்தைக் கொடுக்கிறவர் ஆர் என்னில், அறியாமை உள் நின்று அளித்ததே காணும் தற் சொரூபத்தை அறியாத பெத்த காலத்திலே உள்ளும் புறம்பும் விட்டு நீங்காமல் நின்று ஊட்டி உறக்கிக் கிடத்தி நடத்தி உபகரித்து வந்த கர்த்தாத் தானே காணும் ; குறியாக நீங்காத கோ இருவினை யொப்பு வந்த காலத்திலே கட்புலனாலே காணும்படிக்கு ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்து இரட்சிப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

அகத்துறுநோய்க் குள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொழிப்புரை :

உள்ளே நின்று அறிவிக்கிற கர்த்தாத் தானே திருமேனி கொண்டு வரவேண்டுமோ கற்றபேர் கேட்டபேர் ஆகாதோ என்னில், அகத்து உறு நோய்க்கு உள்ளினர் அன்றி சரீரத்திலே ஒரு வியாதி வந்து பொருந்தினால் சரீரத்துக்கு உடனாயிருக்கிற ஆன்மா அறிகிறதே யல்லாமல் ; அதனைச் சகத்தவரும் காண்பரோ தான் பெண்டாட்டி பிள்ளை பிதா மாதா சுற்றத்தார் அறிவார்களோ ; அப்படிப் போல ஆன்மாவினிடத்திலே யிருக்கிற அறியாமையை உயிர்க்குயிராய் இருக்கிற பரமசிவனே ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்து நீக்குகிறதே யல்லாமல் கற்றபேர் கேட்ட பேராலே ஆகாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள்ஆர் அறிவார் புவி.

பொழிப்புரை :

இப்படிக்கொத்த ஆசாரியரை அறியாதிருப்பானேன் என்னில், அருளா வகையால் அருள்புரிய வந்த பொருள் அருளல்லாத முறைமையாக அனுக்கிரகம் பண்ணவந்த ஆசாரிய மூர்த்தத்தை ; ஆர் அறிவார் புவி ஆர் தாம் அறியப் போகிறார் இந்தப் பூமியினிடத்திலே.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

பொய்இருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்இரண்டும் காணார் மிக.

பொழிப்புரை :

திருமேனி கொண்டு வந்த ஆசாரியரை அறியார்களென்பானேன் என்னில், பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் அஞ்ஞானமே மிகுந்திருக்கின்ற சித்தத்தையுடைய அறிவில்லாத பேர்கள் ; போதமாம் மெய் இரண்டும் காணார் மிக உயிர்க்குயிராய் இருக்கிறது கர்த்தா என்றும் அதுதானே ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்ததென்றும் சற்றும் அறியச் செய்யார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.

பொழிப்புரை :

அவரை எல்லார்க்கும் அறியலாமோ என்னில், பார்வையென மானைக் காட்டி மானைப் பிடித்தாற் போல; மாக்களை முன்பற்றிப் பிடித்தற்காம் பக்குவப்பட்ட ஆன்மாக்களை முன் நிற்கப்படுத்தித் தன் வசமாக்கிக் கொள்வதற்காக ; போர்வை யெனக் காணார் புவி மானிடச்சட்டை சாத்திக்கொண்டு ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்ததென்று ஆன்மாக்கள் அறியச் செய்யார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

எமக்கென் எவனுக் கெவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

பொழிப்புரை :

எல்லார்க்கும் அறிய விளக்கவொண்ணாதோ என்னில், எமக்கு என் திருவருளிலே சற்றும் பழக்கமில்லா தவனுடைய அறிவைத் திருப்ப நமக்கென்ன ; எவனுக்கு எவை தெரியும் பரிபாகமில்லாதவனுக்கு அறிவித்தால் அவனுக்கு என்ன தெரியும் ; அவ்வத்தமக்கு அவரவர் பக்குவத்துக்கீடாக ; அவனை வேண்டத் தவிர் பரிபாகமில்லாதவனை விரும்ப வேண்டுவதில்லை; அறியாமையை நீக்கிக் கொள்ள வேண்டுமென்று தேடி வந்தவனுக்கே அறியாமையை நீக்கலாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவதிவன் கண்.

பொழிப்புரை :

அறிவுக்கறிவா யிருக்கிறது போதாதோ புறம்பேயும் திருமேனி கொண்டு வரவேண்டுமோ என்னில், விடம் நகுலம் மேவினும் விஷம் தீண்டினவனுக்குக் கீரியைக் கொண்டு வந்து கழுத்திலே கட்டினாலும் விஷம் தீராது ; மெய்ப்பாவகனின் மீளும் கடனில் நல்ல கீரிப்பாவக வல்லனாலே விஷம் நீங்குகிற முறைமைபோல ; இருள் போவது இவன்கண் ஞானாசாரியர் திருநோக்கத்தினாலே ஆணவமலம் நீங்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

அகலத் தரும்அருளை ஆக்கும் வினைநீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.

பொழிப்புரை :

மூவகை ஆன்மாக்களுக்கும் ஒருபடித்தாய்த் திருமேனி கொண்டு வருவாரோ என்னில், அகலத் தரும் அருளை ஆக்கும் ஆணவ மலத்தினை யுடைய விஞ்ஞானகலர்க்கு ஆணவ மலத்தை நீக்கி அறிவுக்கறிவாய் அனுக்கிரகம் பண்ணி மோட்சத்தை அடைவிப்பன் ; வினை நீக்கும் ஆணவ மலத்தினையும் கன்ம மலத்தினையும் உடைய பிரளயாகலருக்கு அவர்களைப்போல மானும் மழுவும் சதுர்ப்புயமும் காளகண்டமும் திரிநேந்திரமுமாக எழுந்தருளி வந்து ஆணவ மலத்தினையும் கன்ம மலத்தினையும் நீக்கி அனுக்கிரகம் பண்ணி மோட்சத்தை அடைவிப்பன் ; சகலர்க்கு வந்தருளும் தான் ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலத்தினையும் உடைய சகலர்க்கு அவர்களைப் போல மானிடச் சட்டை சாத்திக்கொண்டு ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்து ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலங்களையும் நீக்கி அனுக்கிரகம் பண்ணி மோட்சத்தை அடைவிப்பன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

ஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேரறிவான் வாராத பின்.

பொழிப்புரை :

வருத்தப்படத் திருமேனி கொள்ளுவானேன் என்னில், எல்லாம் அகன்ற நெறி அருளும் மனம் வாக்குக் காயங்களுக்கு எட்டாத பொருளை அனுக்கிரகம் பண்ணும் ; பேரறிவான் வாராத பின் பேரறிவானாகிய கர்த்தா ஆசாரிய மூர்த்தமாகத் திருமேனி கொண்டு எழுந்தருளி வாராத இடத்து ; ஆர் அறிவார் அவனை ஆரால் அறியப்படும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

ஞானம் இவன் ஒழிய நண்ணியிடும் நற்கல்அனற்
பானு ஒழியப் படின்.

பொழிப்புரை :

ஞானாசாரியன் வரவேண்டுமோ நான்தானே அறிவேன் என்னில், ஞானம் இவன் ஒழிய நண்ணியிடும் ஞானாசாரியனை அல்லாமல் ஒருவனுக்கு ஞானம் உண்டாம்; நல் கல் அனல் பானு ஒழியப்படின் நல்ல சூரியகாந்தக் கல்லினிடத்திலே ஆதித்தனை யல்லாமல் அக்கினி சொலிக்குமேயானால்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நீடும் இருவினைகள் நேராக நேராதல்
கூடும்இறை சத்தி கொளல்.

பொழிப்புரை :

ஞானசாரியர் எந்தப் பக்குவத்திலே திருமேனி கொண்டு வருவார் என்னில், நீடும் இருவினைகள் நேராக கூடும் மிகுந்து வாராநின்ற புண்ணிய பாவமிரண்டும் சமத்துவமாக ; நேராதல் நேராக்குகிற சிவபுண்ணியம் வந்து பொருந்தின விடத்திலே ; இறை சத்தி கொளல் கர்த்தா ஆசாரிய மூர்த்தமாகத் திருமேனி கொண்டு எழுந்தருளி வருவர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஏகன் அநேகன் இருள்கருமம் மாயையிரண்
டாகஇவை ஆறாதி யில்.

பொழிப்புரை :

அந்த ஆசாரியர் வந்து என்னத்தை அறிவிப்பார் என்னில், ஏகன் கர்த்தாவும் ; அநேகன் ஆன்மாவும் ; இருள் ஆணவமலமும் ; கருமம் சுகதுக்கமாகச் சொல்லப்பட்ட வினையும் ; மாயை இரண்டு சுத்தமாயை அசுத்தமாயை இரண்டும் ; ஆக இவை ஆறு ஆதியில் ஆக இவை ஆறும் அநாதியே யுள்ளன.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வானும் உளன்என் றுணர்.

பொழிப்புரை :

இதில் அறியும் பொருள் ஏது என்னில், செய்வானும் வினையைச் செய்கின்ற ஆன்மாவும் ; செய் வினையும் செய்யப்பட்ட வினையும் ; சேர் பயனும் கன்மத்தினாலே உண்டான பிரயோசனமும் ; சேர்ப்பவனும் இதுவெல்லாம் கூட்டி முடிக்கிற கர்த்தாவும் ; உய்வானும் மோட்சத்தை அடைகிறவனும் ; உளன் என்று உணர் உண்டு என்று அறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

ஊன்உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடுயிர்
தான்உணர்வோ டொன்றாம் தரம்.

பொழிப்புரை :

திருவருளிடமாக ஆன்மா இருந்து வாழ்கிறது எப்படி என்னில், ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே சரீரம் ஆன்மாவினுடனே ஒன்றுபட்டு ஆன்மாவினாலே வாழ்கிற முறைமை போல ; ஊனொடு உயிர் தான் உணர்வோடு ஒன்றாம் தரம் சரீரத்திலே ஒன்று பட்டிருக்கிற ஆன்மா சிவஞானத்துடனே கூடி வாழ்கிறதும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

தன்நிறமும் பல்நிறமும் தானாம்கற் றன்மைதரும்
பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ.

பொழிப்புரை :

திருவருள் அத்துவிதமாய் நின்றதொழிந்து ஆன்மாவிலே தோயுமோ என்னில், தன் நிறமும் படிகத்தினுடைய பிரகாசத்தையும்; பல் நிறமும் பல வன்னங்களையும் ; தானாம் கல் தன்மை தரும் பொன் நிறம் போல் கூட்டி முடித்து அதிலே சற்றும் தோய்வற நிற்கிற ஆதித்தப் பிரகாசத்தைப் போல; மன் நிறம் இப் பூ திருவருளும் ஆன்மாக்களையும் தத்துவங்களையும் கூட்டி முடித்து அதிலே சற்றும் தோய்வற நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

கண்தொல்லை காணும்நெறி கண்உயிர் நாப்பண்நிலை
உண்டில்லை அல்ல தொளி.

பொழிப்புரை :

திருவருள் நின்று காரியப்படுத்த வேண்டுமோ ஆன்மாக்கள் தாமே காரியப்படுவார்கள் என்னில், கண் தொல்லை காணும் நெறி கண்ணுக்கு அநாதியே காண்கிற முறைமை உண்டு ; கண் உயிர் நாப்பண் நிலை கண்ணுக்கும் ஆன்மாவுக்கும் நடுவே ; உண்டு இல்லை அல்லது ஒளி ஒளி உண்டோ கண்ணுக்குத் தெரிவுண்டு, ஒளி இல்லையோ கண்ணுக்குத் தெரிவில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயல தாக மதி.

பொழிப்புரை :

அருளினாலே காரியப்படுகிறது எப்படி என்னில், புன்செயலினோடு புலன் செயல்போல் ஆன்மாவினாலே அறிந்து காரியப்பட்டு வருகிற பஞ்சேந்திரியங்களைப் போல; நின் செயலை மன் செயலதாக மதி நீயும் நின்னுடைய செயலைத் திருவருளினாலே அறிந்து காரியப்பட்டு வருகிறோம் என்றறி வாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

ஓராதே ஒன்றையும்உற் றுன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்ததனைப் பார்.

பொழிப்புரை :

அருளாகிய அறிவே துணையென்னில், ஓராதே முன்சொன்ன முறைமையைச் சந்தேகமாய் விசாரியாதே ; ஒன்றையும் உற்று உன்னாதே ஒரு விடயத்தையும் பொருந்தி நினையாதே ; நீ முந்திப் பாராதே விடயங்கள் கூடின விடத்து உன்னுடைய போதம் முந்திச் சீவியாதே ; பார்த்ததனைப் பார் கேவலத்திலே கிடக்கிற உன்னைப் பரிபாகப்படத் தக்கதாகப் பார்க்கிற திருவருளைப் பார்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

களியே மிகுபுல மாய்க்கருதி ஞான
ஒளியே ஒளியா ஒளி.

பொழிப்புரை :

களிப்புண்டே என்னில், களியே மிகுபுலமாய்க் கருதி உன்னுடைய களிப்பை இந்திரியங்களைப் போல அறிந்து நீங்கி ; ஞான ஒளியே ஒளியா ஒளி ஞானப்பிரகாசந் தானேயாய் அழுந்திவிடு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

கண்டபடி யேகண்டு காணாமை காணாமல்
கொண்டபடி யேகொண் டிரு.

பொழிப்புரை :

போதம் அடங்கி அறிகிறது எப்படி என்னில், கண்டபடியே கண்டு கேவல சகலத்தை நீக்கி உன்னைக் காட்டின திருவருளையே கண்டு ; காணாமை காணாமல் காணாமை யாகிய தேகாதிப் பிரபஞ்சத்தைக் காணாமல் நீங்கி ; கொண்ட படியே கொண்டு இரு திருவருள் உன்னை எந்தப்படிக் கொண்டிருந்ததோ அந்தப்படி இரு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

தூநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தான்அதுவாய் நிற்குந் தரம்.

பொழிப்புரை :

ஞானத்திலே அழுந்துகிறது எப்படி என்னில், தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் ஆதித்தன் உச்சியிலே வந்த காலத்துப் பவித்திரமாகிய ஆதித்தனுடைய நிழல் அதற்குள்ளே அடங்குகிறதற்கு ஒருத்தரும் உபசாரம் சொல்ல வேண்டுவதில்லை ; தொகும் இதுபோல் இந்த முறைமையைப் போல ; தான் அதுவாய் நிற்கும் தரம் இருவினையொப்பு வந்த காலத்துத் திருவருள் வந்து அவனைக் கவளீகரித்துக் கொள்ளுதற்கு ஒருவர் சொல்ல வேண்டுவதில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்
பித்தத்தில் தான்தவிர்ந்த பின்.

பொழிப்புரை :

எல்லார்க்கும் இப்படி அறிவிக்க வொண்ணாதோ என்னில், திருந்திடும் நா பித்தத்தில் திருத்தத்தை யுடைய நாவிலே பித்தம் மேலிட்ட காலத்து ; தித்திக்கும் பால்தானும் கைக்கும் தித்திக்கும் பாலும் கசக்கும் ; தான் தவிர்ந்த பின் பித்தம் நீங்கின காலத்துப் பால் தித்திக்கும் ; அப்படிப் போல ஆன்மாவினிடத்திலே மலம் மேலிட்டால் சிவானுபவம் தோன்றாது, மலம் நீங்கினால் சிவானுபவம் தோன்றும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

காண்பான் ஒளிஇருளிற் காட்டிடவும் தான்கண்ட
வீண்பாவம் எந்நாள் விடும்.

பொழிப்புரை :

அருள் ஏதுக்கு நான்தானே அறிவேன் என்னில், காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் காணும் தன்மையை உடைய கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசமானது பூத இருளை நீக்கிப் பதார்த்தங்களைக் காட்டக் கண்டும் ; தான் கண்ட வீண்பாவம் எந்நாள் விடும் நான்தானே கண்டேன் என்கிற விருதாவாகிய பாவம் எந்தக் காலம் தீரும்; அதுபோல அறியும் தன்மையை உடைய ஆன்மாக்களுக்குத் திருவருளானது பாசத்தை நீக்கித் தன்னைக் காட்டத்தக்கதாகக் கண்டும் தானே கண்டேன் என்கிறது எந்தச் செனனத்திலே நீங்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல்.

பொழிப்புரை :

தெளிந்தார் செயலும் தெளியாதார் செயலும் எப்படி யென்னில், ஒளியும் இருளும் ஒருமைத்து அந்தகர் கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசமும் அந்தகாரமும் ஒரு படித்தா யிருக்கும் ; பன்மை தெளிவு தெளியார் செயல் பதி பசு பாசத்தினுடைய தன்மையை விளங்க அறியாதவர்களுடைய செய்தியும் அப்படிப் போல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று.

பொழிப்புரை :

அந்தப் பொருள் கிடையாதோ என்னில், நற்கேண்மையார்க் கல்லால் சரியை கிரியா யோக பாதங்களை அனுட்டித்து முடித்து ஞானபாதக் கேள்வியையுடைய பேர்களுக் கல்லாது ; எடுத்துச் சுமப்பானை உடல் பொருளாவி மூன்றுங் கொடுக்கச் சுமக்கிறவனை ; கிடைக்கத் தகுமே இன்று இப்போது உனக்குக் கிடைக்கத் தகுமோ.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

வஞ்ச முடன்ஒருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல்.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் தானே பிரம மென்னில், வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவர வஞ்சகமாக ஒருவன் ஒரு பதார்த்தத்தைக் கொண்டு வந்து வைத்து அவனை அறியாமல் எடுத்துக் கொண்டு போய்த் திரும்பவந்து கேட்டவிடத்து நீ எடுத்துப் போனாய் என்று சொல்லமாட்டாமல்; துஞ்சினனோ போயினனோ சொல் அவத்தைப் பட்டானோ அவ்விடத்தை விட்டு எங்கேயானாலும் போயினானோ சொல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

தனக்கு நிழல்இன்றாம் ஒளிகவரும் தம்ப
மெனக்கவர நில்லா திருள்.

பொழிப்புரை :

பாசத்தைப் பொருந்தாமல் நிற்கிறது எப்படி யென்னில், தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பமென மத்தியான காலத்துப் படிகமானது ஆதித்தப் பிரகாசத்தைக் கவர்ந்து பஞ்சவன்னங்களையும் பற்றாமல் தன்னிடத்திலே களங்கமற நின்றாற்போல ; கவர நில்லாது இருள் ஆன்மா சிவஞானத்துடனே கூடி அதுவாய் நிற்கவே பாசம் நில்லாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

உற்கைதரும் பொற்கை யுடையவர்போல் உண்மைப்பின்
நிற்க அருளார் நிலை.

பொழிப்புரை :

அருளை முன்னிட்டுக் கொண்டு நிற்கிறது எப்படி யென்னில், உற்கைதரும் பொற்கை யுடையவர்போல் அழகிய உள்ளங்கையிலே விளக்கை முன்னிட்டுப் பதார்த்தங்களைக் காண்கிறவர்களைப் போல ; உண்மைப் பின் நிற்க அருளார் நிலை தற்போதஞ் சீவியாமல் சிவஞானத்தை முன்னிட்டு நிற்கிறதே அருளை யடைந்தவர்கள் முறைமை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

ஐம்புலனாற் றாம்கண்ட தென்றால் அதுவொழிய
ஐம்புலன்ஆர் தாம்ஆர் அதற்கு.

பொழிப்புரை :

திருவருள் வேணுமோ நான்தானே அறிவேன் என்னில், ஐம்புலனால் தான் கண்டது என்றால் பஞ்சேந்திரி யங்களினாலே ஆன்மா ஒரு விடயத்தை யறிந்ததல்லாமல் ; அது ஒழிய அந்தப் பஞ்சேந்திரியங்கள் நீங்கின விடத்து ; ஐம்புலன் ஆர் தாம் ஆர் பஞ்சேந்திரியங்கள் தான் ஆர் ஆன்மாத்தான் ஆர் ; அதற்கு அந்த ஞேயத்தைப் பொருந்துதற்கு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத
லாமே இவன்ஆர் அதற்கு.

பொழிப்புரை :

என்னுடைய அறிவினாலே அறிவேன் என்னில், தாமே தருபவரை ஒரு பதார்த்தத்தைத் தானே தருதற் குரியாரை ; தம் வலியினாற் கருதலாமே தன்னுடைய போதத்தை முந்தி எட்டி நினைக்கலாமோ ; இவன் ஆர் அதற்கு அந்தப் பேரின்பத்தைப் பொருந்துததற்கு இவன் ஆர்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இன்புறுவார் துன்பார் இருளின் எழுஞ்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின்.

பொழிப்புரை :

அந்த ஞேயத்து அழுந்துமவர் நிலைமை எப்படி யென்னில், எழுஞ் சுடரின் பின் புகுவார் விளக்கை முன்னிட்டுக் கொண்டு பின்னே செல்லுகிறவர்களைப் போல்வார் ; இன்புறுவார் இன்பத்தைப் பொருந்தினவர்கள் ; இருளின் முன் புகுவார் விளக்கைப் பின்னிட்டு இருட்டை முன்னிட்டுக் கொண்டு செல்லுகிறவர்களைப் போல்வார் ; துன்பார் பின் துன்பத்தைப் பொருந்துவார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

இருவர் மடந்தையருக் கென்பயன்இன் புண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்.

பொழிப்புரை :

இருவர் மடந்தையருக்கு என் பயன் இரண்டு ஸ்திரீகள் கூடினால் அவர்களுக்கு என்ன பிரயோசனம் ; இன்புண்டாம் ஒருவன் ஒருத்தி உறின் ஒருவனும் ஒருத்தியுங் கூடின விடத்துச் சுகமுண்டாம் ; அப்படிப் போல அருளும் ஆன்மாவுங் கூடினவிடத்துச் சுகமில்லை, ஆன்மாவுஞ் சிவமுங் கூடின விடத்துச் சுகமுண்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

இன்பதனை எய்துவார்க் கீயும் அவர்க்குருவம்
இன்பகன மாதலினால் இல்.

பொழிப்புரை :

கர்த்தாவுக்கும் ஆன்மாவினாலே சுகமுண்டோ என்னில், இன்பதனை எய்துவார்க்கு ஈயும் பொருந்துகிற பேர்களுக்கு இன்பத்தைக் கொடுப்பன் ; அவர்க்கு உருவம் இன்பகனம் கர்த்தாவுக்குத் திருமேனி இன்பக்கட்டி ; அதென்போல என்னில், சர்க்கரையைப் புசிக்கிறவன் ரசம் பெறுவதொழிந்து அவன் சர்க்கரைக்குக் கொடுக்கும் ரசமில்லை ஆதலினால் ஆகையினாலே ; இல் ஆன்மா கர்த்தாவுக்கு இன்பத்தைக் கொடுக்க வேண்டுவதில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ ஏகமெனக் கொள்.

பொழிப்புரை :

சர்க்கரையுஞ் சர்க்கரையைப் புசிக்கிறவனும் போல இரண்டா யிருக்குமோ என்னில், தாடலைபோற் கூடி தாள் தலையென்று நின்ற விடத்து ளவ்வுந் தவ்வுங் கெடாமல் தாடலையென்றே சீவித்து ஒன்றாய் நின்ற முறைமைபோல ; அவை தான் நிகழா வேற்றின்பக் கூடலை நீ ஏகமெனக் கொள் ஆன்மாவுஞ் சிவமும் வேறறக் கலந்து இன்பமாய் நிற்கிறதை ஒன்றெனக் கொள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

ஒன்றாலும் ஒன்றா திரண்டாலும் ஓசையெழா(து)
என்றால்ஒன் றன்றிரண்டும் இல்.

பொழிப்புரை :

ஆன்மாவும் சிவமும் ஒன்றாயிருக்குமோ இரண்டா யிருக்குமோ என்னில், ஒன்றாலும் ஒன்றாது ஆன்மாவுஞ் சிவமும் ஒரு பொருளாகில் ஒருவருங் கூடவேண்டுவதில்லை ; பெறுவானும் பேறுமில்லை இரண்டாலும் ஓசை எழாது இரண்டாய் நிற்குமென்று சொல்லுவாயானால் அங்கே சாயுச்சியமென்று சொல்ல வேண்டுவதில்லை ; என்றால் ஒன்றன்று இரண்டும் இல் ஒன்றுமல்ல இரண்டுமல்லவென்று வேதாகமங்கள் சொல்லுகையினாலே அத்துவிதமாயிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

உற்றாரும் பெற்றாரும் ஓவா துரைஒழியப்
பற்றாரும் அற்றார் பவம்.

பொழிப்புரை :

அந்தப் பொருளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர்களுக்கு மோட்சமாகாதோ என்னில், உற்றாரும் அந்தப் பொருளைப் பொருந்தின பேர்களும் ; பெற்றாரும் தெளியப் பெற்ற பேர்களும் ; ஓவாது நிட்டையைப் பொருந்தாவிடில் செனன மொழியாது ; உரை ஒழிய இங்ஙனஞ் சொன்னதெல்லாம் நீங்க ; பற்றாரும் அற்றார் பவம் எல்லாப் பற்றையும் விட்டு நிட்டையைப் பொருந்தினவர்களே பின்பு செனனமற்றவர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

பேய்ஒன்றுந் தன்மை பிறக்கு மளவும் இனி
நீஒன்றுஞ் செய்யாது நில்.

பொழிப்புரை :

அந்த நிட்டை கூடுவது எப்படி யென்னில், பேய் ஒன்றும் தன்மை ஒருவனைப் பிசாசு பிடித்த போது அவன் அதன் வசமானாற்போல ; பிறக்கும் அளவும் இனி நீ ஒன்றுஞ் செய்யாது நில் சிவானுபூதியான நிட்டை கூடுமளவும் உன் போதஞ் சீவியாமல் நில்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

ஒண்பொருட்கண் உற்றார்க் குறுபயனே யல்லாது
கண்படுப்போர் கைப்பொருள்போற் காண்.

பொழிப்புரை :

அந்த நிட்டை கூடினவர்களுக்குச் சங்கற்ப விகற்பங் கூடாதோ என்னில், ஒண் பொருட்கண் உற்றார்க்கு அந்த நேயத்தைப் பொருந்தினவர்களுக்கு; உறுபயனே யல்லாது பொருந்தப்பட்ட நேயமல்லாது; கண்படுப்போர் கைப்பொருள்போல் காண் உறங்கினவன் கையிற் பதார்த்தம் போலச் சங்கற்ப விகற்பமெல்லாம் நீங்கிப்போம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

மூன்றாய தன்மைஅவர் தம்மின் மிகமுயங்கித்
தோன்றாத இன்பமதென் சொல்.

பொழிப்புரை :

ஞான ஞேயங்களொழிய ஒரு பொருள் தோன்றாதோ என்னில், மூன்றாய தன்மை ஞாதுரு ஞான ஞேயங்கள் தோன்றாமல் ; அவர் தம்மின் மிக முயங்கி அந்த ஞேயத்தில் மிகவும் பொருந்தி ; தோன்றாத இன்பமது என் சொல் தோன்றாத இன்பத்தை என்னென்று சொல்லுவது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம்
அன்பு நிலையே அது.

பொழிப்புரை :

இந்த இன்பத்தை இம்மையிலே அறியலாமோ என்னில், இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்பத்து ளெல்லாம் மேலாகிய பரம சுகத்தைப் பெறுதற்கு அதிதாகம் இன்று உண்டானால் ; இன்றுண்டாம்இப்போது உண்டாம் ; அன்பு நிலையே அது அதனைப் பெறவேணுமென்று ஆதரவு செய்யவே அந்த இன்பம் உண்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள்நூல் தெரியப் புகின்.

பொழிப்புரை :

பஞ்சாக்கரத்தின் உண்மை எப்படி என்னில், அருள் நூலும் பரமசிவன் திருவுளம்பற்றின இருபத் தெட்டுத் திவ்வியாகமங்களும்; ஆரணமும் நாலு வேதமும் ; அல்லாதும் மற்று முண்டாகிய நூல்களும் ; ஐந்தின் பொருள் நூல் தெரியப்புகின் ஆராயப்புகுமிடத்துப் பஞ்சாக்கரத்தின் உண்மையை விளங்கச் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி
உறநிற்கும் ஓங்காரத் துள்.

பொழிப்புரை :

இந்தப் பஞ்சாக்கரத்திலே நிட்டைகூடும் உபாயம் எங்ஙனே என்னில், இறை கர்த்தாவும் ; சத்தி அருளும் ; பாசம் ஆணவ மலமும் ; எழில் மாயை பெருமை (அழகு) பொருந்திய திரோதமும் ; ஆவி ஆன்மாவும் ; உற நிற்கும் ஓங்காரத்துள் பிரணவத்தை விட்டு நீங்காத எழுத்தஞ்சிலேயும் பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞானநடம் தான்நடுவே நாடு.

பொழிப்புரை :

ஆன்மா பாசத்தை நீங்கிப் பதியைக் கூடும் முறைமை எங்ஙனே என்னில், ஊன நடனம் ஒருபால் மலமுந் திரோதமும் ஒரு பாலாகவும் ; ஒரு பாலாம் ஞானநடம் அருளுஞ் சிவமும் ஒரு பாலாகவும் ; தான் நடுவே நாடு ஆன்மா நடுவேயாகவும் விசாரித்தறி வாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரிற் பெறும்.

பொழிப்புரை :

இந்தப் பஞ்சாக்கரத்தை அறியா திருப்பானேன் என்னில், விரிய மந மேவி யவ்வை மீளவிடா விரிந்து வாரா நின்ற மலமுந் திரோதமும் ஆன்மாவினிடத்திலே பொருந்திச் சிவத்தைப் பொருந்த வொட்டாது ; சித்தம் பெரிய வினை தீரிற் பெறும் சித்தத்திலே யிருக்கிற மலமும் வினையும் நீங்கின விடத்துச் சிவத்திலே பொருந்தியிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின்.

பொழிப்புரை :

இப்படி உச்சரித்தாலல்லது மலம் நீங்காதோ என்னில், மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ மயக்கத்தைச் செய்யாநின்ற மலமுந் திரோதமும் நீங்குமோ ; மேலாகி மீளாவிடின் மேலான சிவ முதலாக உச்சரியா திருந்தால் ; சிவ முதலாகவே உச்சரிப்பாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு
பாராது மேல்ஓதும் பற்று.

பொழிப்புரை :

இப்படி உச்சரித்தால் சிவனைக் கூடலாமோ என்னில், ஆராதி ஆராதனை பண்ணுவாய் ; ஆதாரம் அந்தோ அது சர்வான்மாக்களுக்கும் தாரகமாயிருக்கிற பொருள், ஐயோ ; ஆன்மாக்களைச் செனன மரணத்திலே விடாது மீண்டு பாராது மேல் ஓதும் பற்று அந்த மலமுந் திரோதமும் திரும்பிப் பாராது ; மேலான சிவமுதலாக உச்சரிப்பாய்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

சிவமுதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்இதுநீ ஓதும் படி.

பொழிப்புரை :

இந்தப் பஞ்சாக்கரத்திலே நிட்டை கூடத்தக்கதாக ஓதும் முறைமை எப்படி என்னில், சிவ முதலே ஆமாறு சேருமேல் சிவமுதலாக உச்சரித்து நிட்டையைப் பொருந்தினால் ; தீரும் பவம் செனன மரணத் துன்பம் நீங்கும் ; இது நீ ஓதும்படி உச்சரிக்கிற முறைமை இது என்றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

வாசி யருளியவை வாழ்விக்கும் மற்றதுவே
ஆசில் உருவமுமாம் அங்கு.

பொழிப்புரை :

சிவனைக் கூடுமிடத்திலும் இந்த முறைமை குலையாமல் பஞ்சாக்கரம் நிற்குமோ என்னில், வாசி யருளியவை வாழ்விக்கும் வகாரமாகிய அருள் சிகாரமாகிய சிவத்தை ஆன்மாவுக்குக் கொடுத்து மேலாகிய பரம சுகத்தை விளையாநிற்கும் ; மற்றதுவே ஆசில் உருவமும் ஆம் அந்த ஆன்மா குற்றமில்லாத திருமேனியாம் ; அங்கு அந்தச் சிவத்துக்கு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

ஆசில்நவா நாப்பண் அடையா தருளினால்
வாசியிடை நிற்கை வழக்கு.

பொழிப்புரை :

ஆன்மா நிற்கும் முறைமை எப்படி என்னில், ஆசில்நவா நாப்பண் அடையாது ஆன்மா மலத்துக்குந் திரோதானத்துக்கும் நடுவே பொருந்தாமல்; அருளினால் ஆசாரியருடைய அனுக்கிரகத்தினாலே ; வாசியிடை நிற்கை வழக்கு அருளுக்கும் சிவத்துக்கும் நடுவே நிற்கிறது முறைமை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து.

பொழிப்புரை :

இப்படிப் பலவிதமாய்ச் சொல்லுவானேன் என்னில், இவன் அகன்று நில்லா வகையை நினைந்து ஆன்மாக்கள் கர்த்தாவை நீங்கி நில்லாத முறைமையை நினைந்து ; எல்லா வகையும் இயம்பும் எல்லா நூல்களுஞ் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

ஓங்குணர்வில் உள்ளடங்கி உள்ளத்தில் இன்பொடுங்கத்
தூங்குவர்மற் றேதுண்டு சொல்.

பொழிப்புரை :

நிட்டை கூடினவர் நிலைமை எப்படி என்னில், ஓங்கு உணர்வில் உள்ளடங்கி மிகுந்த ஞானத்துள்ளே தம் அறிவானது அடங்கி; உள்ளத்தில் இன்பு ஒடுங்க தம்மிடத்திலே யுண்டான கெற்சிதமுங் கெட ; தூங்குவர் நேயத்திலே இரண்டறப் பொருந்துவார்கள் ; மற்று ஏது உண்டு சொல் இதற்கு மேலாக ஒரு பேறு உண்டாகிற் சொல்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகநுகர்
வெந்தொழிலும் மேவார் மிக.

பொழிப்புரை :

அடைந்தவர்கள் பஞ்சகிருத்தியர்களைச் செய்வாரோ என்னில், ஐந்தொழிலும் பஞ்ச கிருத்தியமும் ; காரணர்களாம் தொழிலும் காரண கர்த்தாக்களாகிய தொழிலும் ; போகம் நுகர் வெம் தொழிலும் போகங்களைப் புசிக்கிற கொடிய சொர்க்காதி போகங்களும் ; மேவார் மிக சற்றும் பொருந்தார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 3

எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர்ஒன்
றல்லா தறியார் அற.

பொழிப்புரை :

சர்வஞ்ஞனுடனே போய்ப் பொருந்தினால் அவன் செய்தி செய்யாரோ என்னில், எல்லாம் அறியும் அறிவுறினும் எல்லாவற்றையும் அறிந்து வாராநின்ற கர்த்தாவினுடைய திருவடித் தாமரையிலே பொருந்தினாலும் ; ஈங்கு இவர் ஒன்று அல்லாது அறியார் அற இவ்விடத்திலே அவர்கள் சிவமே யல்லாது வேறொன்றையும் அறியச் செய்யார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

புலன்அடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார்
தலம்நடக்கும் ஆமை தக.

பொழிப்புரை :

விடயங்கள் மேலிட்டாற் போதம் அடங்குகிறது எப்படி என்னில், புலன் அடக்கி பஞ்சேந்திரியங்களையும் தம்முள்ளே அடக்கி ; தம் முதற்கண் புக்கு உறுவார் தமக்கு முதன்மையாகிய கர்த்தாவினுடைய திருவடித் தாமரையைப் பொருந்தின பேர்கள் ; போதார் ஒரு விடயத்தையும் பொருந்த நினையார்கள் ; அஃது எப்படிப் போல வென்னில் தலம் நடக்கும் ஆமை தக பூமியிலே நடக்கிற ஆமையானது ஒருவரைக் கண்ட மாத்திரத்திலே அவயவங்களை யெல்லாம் தனக்குள்ளே அடக்கிக் கொண்டாற் போல.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

அவனைஅகன் றெங்கின்றாம் ஆங்கவனாம் எங்கும்
இவனையொழிந் துண்டாதல் இல்.

பொழிப்புரை :

அந்த விடயம் மேலிட்ட போது சிவனுக்கு அன்னியமாவார்களோ என்னில், ஆங்கு அவனாம் எங்கும் எவ்விடத்திலும் விட்டு நீங்காமல் கர்த்தா பரிபூரணமாய் நிற்கையினாலே ; அவனை அகன்று எங்கு இன்றாம் ஆன்மாக்கள் கர்த்தாவை விட்டு எங்கே நிற்பார்கள் ; இவனை ஒழிந்து உண்டாதல் இல் கர்த்தா ஆன்மாக்களை விட்டு நீங்கி நில்லான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்(கு)
எள்ளுந் திறம்ஏதும் இல்.

பொழிப்புரை :

இந்திரியங்களை யறியும் அறிவாற் சிவனைத் தெரிசிக்கலாமோ என்னில், உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு உயிர்க் குயிராயிருக்கிற கர்த்தாவென்றும் அது தானே ஆசாரிய மூர்த்தமா யெழுந்தருளி வந்ததென்றும் ஒரு தன்மையாய்க் காண்கிற பேர்களுக்கு ; எள்ளும் திறம் ஏதும் இல் இகழ்கிற முறைமை சற்றுமில்லை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

உறுந்தொழிற்குத் தக்க பயன்உலகந் தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.

பொழிப்புரை :

சிவனைக் கூடலாமோ என்னில், உறுந் தொழிற்குத் தக்க பயன் உலகம் சரியை கிரியா யோகங்களுக்குப் பிரயோசனம் சாலோகாதி பதம் ; தத்தம் வறுந் தொழிற்கு வாய்மை பயன் செயலறுதி வந்த ஞாதாக்களுக்கு ஞேயம் ஒன்றுமே பிரயோசனம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

ஏன்ற வினைஉடலோ டேகும்இடை யேறும்வினை
தோன்றில் அருளே சுடும்.

பொழிப்புரை :

இந்த ஞானந் தெரிந்தவர்கள் மீளவுங் கன்மத்தை அனுபவிப் பாரோ என்னில், ஏன்ற வினை உடலோடு ஏகும் எடுத்த தேகத்துக்கு அடுத்த பிராரத்தம் சரீரம் உள்ளளவும் புசித்துத் தொலையும் ; இடையேறும் வினை தோன்றில் அருளே சுடும் நடுவே ஆகாமியம் உண்டாமேயானால் சிவஞானஞ் சுட்டுப் போக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்(கு)
அம்மையும் இம்மையே யாம்.

பொழிப்புரை :

இந்தப் பிராரத்தம் புசிக்கவேணுமாகில் மனம் வாக்குக் காயங்களால் உண்டான கன்மம் ஏறுமே என்னில், மூதறிவார்க்கு முதிர்ந்த அறிவான் மிக்க ஞாதாக்களுக்கு ; மும்மைதரும் வினைகள் மூளாவாம் மனம் வாக்குக் காயங்களாற் செய்வினை யேறாது ; அம்மையும் இம்மையே யாம் மறுமையிலே மோட்சமும் இப்போது உண்டாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை
வெள்ளத் தலைவர் மிக.

பொழிப்புரை :

விடயங்கள் நீங்காவோ என்னில், கள்ளத் தலைவர் துயர் கருதி இந்திரியங்களோடே கூடி நிற்கிற ஆன்மாக்கள் படுந்துன்பத்தைப் பார்த்து ; தம் கருணை வெள்ளத்து அலைவர் மிக கிருபா சமுத்திரத்திலே யழுந்தின ஞாதாக்கள் மிகவும் இரங்குவார்கள்.
திருவருட்பயன் சிந்தனையுரை முற்றும்

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நீடும் ஒளியும் நிறையிருளும் ஓரிடத்துக்
கூடல் அரிது கொடுவினையேன் - பாடிதன்முன்
ஒன்றவார் சோலை உயர்மருதச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.

பொழிப்புரை :

நீடும் ஒளியும் நிறை இருளும் ஓரிடத்துக் கூடல் அரிது விரிந்த பிரகாசமும் நிறைந்த இருளும் ஓரிடத்திலே கூடமாட்டாது ; கொடுவினையேன் பாடு இதன்முன் கொடுவினையேன் பக்கல் தரிசிப்பதற்கு முன் ; வார் சோலை உயர் மருதச் சம்பந்தா நீ ஒன்ற நின்றவாறு எவ்வாறு அழகிய சோலை யுயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனிவனே, தேவரீர் அடியேனிடத்துப் பொருந்த நின்றதெப்படி.
அந்தகன் கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசம் வியாத்தமா யிருந்தும் தெரியாத தன்மைபோலென்பது கருத்து.

குறிப்புரை :

உதாரணம் : சிவஞானபோதத்தில் (11.3) ‘அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க், கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன்’ என்பது கண்டுகொள்க. மலம் ஆன்மாவைச் சகசமாய் மறைத்திருக்கையிலே சிவம் ஆன்மாவைப் பொருந்தி நின்ற தெப்படியென்றும் வினா. உம் : சிவஞான போதத்தில் (7.5) ‘மெய்ஞ்ஞானந் தன்னில் ... தான்’ ; சிவதருமோத்தரத்தில் ‘பரமசிவம் பராசத்தி பல்லுயிர்க்கும் பயின்றிருக்க, விரவுவதெ னிருளெனிற்கேள் வெய்யவழல் பசுமரத்தில், விரவியதே பசுமரமும் வெந்தவல வெந்து விழும், பருவமுறக் கரணமுறப் பதியுமுறப் பழுதறவே’ என்பன கண்டுகொள்க.

பண் :

பாடல் எண் : 2

இருளில் ஒளிபுரையும் எய்தும் கலாதி
மருளின் நிலையருளும் மானுங் - கருவியிவை
நீங்கின் இருளாம் நிறைமருதச் சம்பந்தா
ஈங்குன்அரு ளால்என் பெற.

பொழிப்புரை :

இருளில் ஒளி புரையும் ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒழிந்து நிற்கும் ; எய்தும் கலாதி மருளின் நிலை யருளும் கலாதிகளைப் பொருந்தின விடத்திலும் ஆணவத்தையே தந்தது ; மானுங் கருவி யிவை நீங்கின் இருளாம் என்னுடனே கூடிநின்ற கருவி நீங்கின பொழுது இருளாயிருந்தது ; நிறை மருதச் சம்பந்தா ஈங்கு உன் அருளால் என்பெற நிறைந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, இவ்விடத்து உன்னருளால் பிரயோசனம் என்ன.
கேவல சகலத்திலுமல்ல சுத்தத்திற் பிரயோசன மென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (68) ‘காட்டிடுங் கரண மொன்று’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞானம்
அல்லதில துள்ளதெனில் அந்நியமாம் - தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்.

பொழிப்புரை :

புல்லறிவு நல்லுணர்வது ஆகா சிற்றறிவு பேரறிவாகாது ; பொது ஞானம் அல்லது (விடய ஞானமும் அன்று அது. இங்ஙனம்) ஞானம் மூன்று விதமாயிருக்கும் ; இலது உள்ளதெனில் அந்நியமாம் முன்பு இல்லாத சிவஞானம் மலபரிபாகத்திலே யுண்டாமென்னில் சற்காரிய வாதமாகாமல் அந்நியமாம் ; தொல்லை இருள் ஊனம் மலையாவாறு உயர் மருதச் சம்பந்தா ஞான மலை ஆவாய் நவில் பழைமையாக வருகிற ஆணவமலக் குற்றத்தினாலே மயங்காத முறைமை உயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்தமாமுனியே மலைபோல ஞானத்தையுடையவனே திருவுளம் பற்றவேணும். விடய ஆன்மஞானம் சிவஞானமாகா தென்பது கருத்து.
தத்துவங்களுடைய சுபாவத்தை இது பொய்யென்று அறிவிக்கிறது சிவஞானம். இப்படி யறிகிற வேற்றுமையும் விட்டு, அது வாய் அந்த ஞானமாய் நிற்பது சுத்தம். உம் : சிவப்பிரகாசத்தில் (73) ‘தத்துவ மான வற்றின் தன்மைகள்’ என்னும் பாடத்திற் கண்டு கொள்க. சித்தியாரில் (11.11) ‘சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் சிவனருட்சித் திவனருளைச் சேருஞ்சித்’ தென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 4

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா - முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்.

பொழிப்புரை :

கனவு கனவென்று காண்பரிதாம் கனவிலே நின்று கனவைத் தெரிசிக்கப்படாது ; காணில் நனவில் அவை சிறிதும் நண்ணா நனவிலே காணும் கண்டதென்னில், நனவில் அந்தக் கருவிகள் இல்லாத படியாலே காணவில்லை; முனைவன் அருள்தான் அவற்றில் ஒன்றா அருளிலே நின்று கண்டதென்னில், அருள் அவத்தைகளிற் பொருந்தாது; தட மருதச் சம்பந்தா யான் அவத்தை காணுமாறு என் தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே நான் அவத்தைகளைத் தரிசிக்கும்படி எப்படி. சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (39) ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 5

அறிவறிந்த தெல்லாம் அசத்தாகு மாயின்
குறியிறந்த நின்உணர்விற் கூடா - பொறிபுலன்கள்
தாமா அறியா தடமருதச் சம்பந்தா
யாம்ஆர் அறிவார் இனி.

பொழிப்புரை :

அறிவு அறிந்த தெல்லாம் அசத்தாகுமாயின் என்னுடைய அறிவினாலே அறியப்பட்ட தெல்லாம் அசத்தாய் அழிந்து போமேயாயின்; குறி இறந்த நின் உணர்விற் கூடா வாக்கு மனத்துக்கும் எட்டாமல் குறியிறந்து நிற்கிற தேவரீருடைய ஞானத்திலே பொருந்தப் போகிறதே யில்லை ; பொறிபுலன்கள் தாமா அறியா பொறிபுலனாகிய தத்துவங்கள் தாமாய் அறியமாட்டா; தட மருதச் சம்பந்தா யாம் ஆர் அறிவார் இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே யான் ஆரை யறியப் போகிறது தான் இனி. கண்ணானது இருளோடே கூடி இருளாயும் ஒளியோடே கூடி ஒளியாயும் நின்றது போலப் பாசத்தோடே கூடிப் பாசமாய் நின்ற ஆன்மா அருளோடே கூடிப் பாசம் நீங்கி அருளாய் நிற்குமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (57) ‘சத்திது வென்ற சத்துத் தானறியா’ தென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 6

சிற்றறிவு முற்சிதையிற் சேர்வார்இன் றாம்சிறிது
மற்றதனில் நிற்கில்அருள் மன்னாவாம் - துற்றமுகில்
மின்கொண்ட சோலை வியன்மருதச் சம்பந்தா
என்கொண்டு காண்பே னியான்.

பொழிப்புரை :

சிற்றறிவு முன் சிதையிற் சேர்வார் இன்றாம் சிற்றறிவு முன்னே கெடுமாயின் பின் அருளைப் பொருந்தப் போகிற பேரில்லை ; சிறிது மற்றதனில் நிற்கில் அருள் மன்னாவாம் சிற்றறிவு கொஞ்சமாக நின்றாலும் அருள் பொருந்தாது ; துற்ற முகில் மின்கொண்ட சோலை வியன் மருதச் சம்பந்தா என்கொண்டு காண்பேன் யான் மேகங்கள் நெருங்கின ஆகாசத்தை யளாவிய சோலை சூழ்ந்த வியன் மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே எதைக்கொண்டு காணவல்லேன் யான்.
சிற்றறிவு கெட்டதுமன்று முன்போல் இருந்தது மன்று, பாசபந்தம் நீங்கித் திருவடியிலே கலந்து கிடக்குமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (11.10) ‘செம்பிரத குளிகையினாற் ... சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே’ என்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

உன்னரிய நின்உணர்வ தோங்கியக்கால் ஒண்கருவி
தன்அளவும் நண்ணரிது தானாகும் - என்அறிவு
தான்அறிய வாரா தடமருதச் சம்பந்தா
யான்அறிவ தெவ்வா றினி.

பொழிப்புரை :

உன்னரிய நின் உணர்வது ஓங்கியக்கால் நினைத்தற் கரிதாகிய தேவரீரருள் தோன்றின காலத்து ; ஒண் கருவி தன் அளவும் நண்ணரிது தானாகும் அழகு பொருந்திய முப்பத்தாறு தத்துவங்களாற் பொருந்தப்படாது ; என்னறிவு தான் அறிய வாராது என்னுடைய பசு ஞானத்தாலும் அறியப்படாது ; தட மருதச் சம்பந்தா யான் அறிவது எவ்வாறு இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அடியேங்கள் அறிகிறது எப்படித்தான் இனி.
பசுகரணங்களும் சிவகரணமாய் ஆன்மாவும் அருளாய்ப் பொருந்திநின் றறியுமென்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (70) ‘மாயைமா மாயை மாயா’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

அருவேல் உருவன் றுருவேல் அருவன்(று)
இருவேறும் ஒன்றிற் கிசையா - உருஓரிற்
காணில் உயர்கடந்தைச் சம்பந்தா கண்டஉடற்
பூணும்இறைக் கென்னாம் புகல்.

பொழிப்புரை :

அருவேல் உருவன்று உருவேல் அருவன்று இருவேறும் ஒன்றிற்கு இசையா கர்த்தா திருமேனி அருவமானால் உருவமாக மாட்டாது, உருவமானால் அருவமாகமாட்டாது, அருவுமுருவும் ஆனால் ஒரு பொருளுக்கு இரண்டு தன்மை இசையாது ; உரு ஓரிற் காணில் உயர் கடந்தைச் சம்பந்தா கண்ட உடல் பூணும் இறைக்கு என்னாம் புகல் திருமேனியை விசாரித்துக் காணில், உயர்ந்த கடந்தைநகர் வாழ் சம்பந்த மாமுனியே, கொண்ட திருமேனியைப் பூணப்பட்ட கர்த்தாவுக்குத் திருமேனி என்னத்திலே உண்டானது, திருவுளம் பற்றவேணும்.
ஞானத்திலே திருமேனி கொள்ளுவனென்பது கருத்து.
உதாரணம் : சிவஞான சித்தியில் (1.41) ‘மாயை தான் ... சத்தி தன்னால்’ என்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

இருமலத்தார்க் கில்லை உடல்வினைஎன் செய்யும்
ஒருமலத்தார்க் காராய் உரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக உள்ளார் உயர்மருதச் சம்பந்தா
அன்றாகில் ஆமா றருள்.

பொழிப்புரை :

இருமலத்தார்க்கு உடல் இல்லை வினை என் செய்யும் இரண்டு மலமுடைய பிரளயாகலருக்கு மாயை யில்லாதபடியினாலே உடம்பு இல்லை, வினை புசிக்கும்படி எப்படி ; ஒரு மலத்தார்க்கு ஆராய் உரைப்பேன் ஒரு மலமுடைய விஞ்ஞானாகலர்க்கு உரை யாராகச் சொல்லுவாம் ; திரிமலத்தார் ஒன்றாக உள்ளார் மும்மலமுடைய சகலருக்கன்றோ ஒன்றாக உள்ளது ; உயர் மருதச் சம்பந்தா அன்றாகில் ஆமாறு அருள் உயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அப்படியல்லவாகில் ஆகும்படி அருளவேண்டும்.
விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சரியை கிரியை யோகமுடைய சகலருக்குச் என்பது திருநெல்வேலிப் பிரதியில் அதிக பாடம். பிரளயாகலருக்குச் சுத்தமாயையிலே தேகமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞான சித்தியில் (1.25) ‘வித்தைகள் வித்தையீசர்’ என்ற பாட்டு முழுதுங் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

ஒன்றிரண்டாய் நின்றொன்றில் ஓர்மையதாம் ஒன்றாக
நின்றிரண்டா மென்னில்உயிர் நேராகுந் - துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
ஓங்கியவா றெவ்வா றுரை.

பொழிப்புரை :

ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒரு பொருள் விவகாரத்திலே இரண்டாய் நின்று ஒன்றா மென்னில் ஒன்று பொருந்தமாட்டாது ; ஒன்றாக நின்று இரண்டா மென்னில் உயிர் நேராகும் ஒன்றாய் நின்று இரண்டா மென்னில் ஒன்றிலே ஒன்று அழிந்துபோம் ; துன்றிருந்தார் தாங்கிய வாழ் தண் கடந்தைச் சம்பந்தா யானாகி ஓங்கியவாறு எவ்வாறு உரை ஞானத்தைப் பொருந்திய பெரியோரால் தாங்கிய வாழப்பட்ட குளிர்ந்த கடந்தை நகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் சிவமாகி ஓங்கிய முறைமையைத் திருவுளம்பற்ற வேணும்.
ஆணவத்தைப் பொருந்தின ஆன்மாப்போல என்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (87) ‘ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

காண்பானுங் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டும்நெறி வாரா தவர்.

பொழிப்புரை :

காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை காண்பார்கள் காண்கின்ற ஆன்மாவும் காட்டுகின்ற சிவனும் காணப் படுகின்ற பொருளும் விட்டு உண்மையைத் தரிசிப்பார்களென்னில் ; நல் முத்தி காணார்கள் நல்ல முத்தியைக் காணார்கள் ; காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் தண் கடந்தைச் சம்பந்தன் வாட்டும் நெறி வாராதவர் ஆனால் காண்கின்றவனும் காட்டுகின்றவனும் காணப்படுகின்ற பொருளுமாகவோ காண்பார்கள் என்னில் அப்படிக் காணப்படுகின்றவர்களும் குளிர்ச்சி பொருந்தின கடந்தைநகர் வாழ் சம்பந்தமா முனி வாட்டும்வழி வாராதவர்.
ஞாதுருஞானஞேயம் என்கிற சங்கற்பனைகளை விட்டு ஒன்றாகச் சிவனியல்பின் உணருகிற ஞானமே பெறவேண்டுமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (8.22) ‘சன்மார்க்கஞ் சகல கலை புராண வேதம்’ என்ற திருவிருத்தத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

ஒன்றி நுகர்வதிவன் ஊணும் உறுதொழிலும்
என்றும் இடையில் இடமில்லை - ஒன்றித்
தெரியா அருள்மருதச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.

பொழிப்புரை :

ஒன்றி நுகர்வது இவன் ஊணும் உறுதொழிலும் (ஆன்மா வினைப்போகத்தையும் செயலையும் கர்த்தாவைச் சேர்ந்தல்லது நுகர்வதில்லை); என்றும் இடையில் இடமில்லை (எக்காலத்தும் கர்த்தாவுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் நின்று பிறிதொன்று புசிப்பிக்கு மென்பதற் கிடமில்லை); ஒன்றித் தெரியா அருள் மருதச் சம்பந்தா சர்வவியாபியா யிருக்கையிலேயும் தோன்றாத கிருபை பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே; சேர்ந்து பிரியாவாறு எவ்வாறு பேசு தேவரீர் திருவடியைச் சேர்ந்து பிரியாமற் போகங்களைப் புசிக்கும் முறைமையைத் திருவுளம் பற்ற வேண்டும்.
அவன் சர்வ வியாபியாகையினாலும் இவன் சுதந்தர ஹீனனாகையாலும் அவனே போகங்களைப் புசிப்பிக்கிறவ னென்பது கருத்து.
உதாரணம் : திருவருட்பயனிலே (95) ‘அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு, மிவனையொழிந் துண்டாத லில்’ என்றும், சிவஞானபோதத்தில் (11.1) ‘ஈண்டிவ்வான்மாக்கள் அவனை யின்றியமைந் தொன்றையும் விஷயியாவாகலால் அவனும் அவற்றது விஷயத்தை யுணரும்’ என்றும், உண்மை நெறி விளக்கத்தில் (6) ‘பாதகங்கள் ....... பிதுவே’ என்றும் வருவன கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

அருளால் உணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா
வினாவெண்பா உண்மை வினாவாரேல் ஊமன்
கனாவின்பால் எய்துவிக்கும காண்.

பொழிப்புரை :

அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப் பொருளாகி நிற்கும் பொருந்தி ஆசாரியர் அநுக்கிரகம் பெற்ற ஞானவான்களுக்கு விட்டு நீங்கி மலைவு வாராமல் செம்மைப் பொருளாகவே பொருந்தி நிற்கும்; தெருளா வினாவெண்பா உண்மை வினாவாரேல் ஊமன் கனாவின்பால் எய்துவிக்கும் காண் அறியத் தக்கதாக வினாவெண்பாவின் உண்மையை வினாவி யறியாதவர் ஊமன் கனவிலே பால் குடித்தது போல.
ஒன்றுந் தெரியாதென்பது கருத்து.இராசாங்கத்துக் கையெழுத்து நூல் நிலயப் பிரதியில் ‘முற்றும்’ என்பதன்பின் “பால் குடித்ததற்கு ஒக்குமென்றது ஞான மிகுதியுடையார்க்குச் சத்தியமாகவே தோன்றுமென்றும் அல்லாதபேர் எத்தனை சாத்திரம் படித்தாலும் வினா வெண்பா பாராதவனுக்கு ஊமன் கனாவிலே பால் குடித்தது” என்று எழுதப்பட்டுள்ளது.

குறிப்புரை :

உரைத் தொடக்கத்தில் காணப்படும் வரலாறு : “இந்நூலுக்கு வரலாறு பரிபூர்ணகர்த்தாவாயிருக்கிற ஸ்ரீ கண்டபரமேஸ்வரன் அருளிச் செய்த சிவாகமத்திலே ஞானகாண்டமாயிருக்கிறதை நந்திகேசுர சுவாமிக்குக் கடாட்சித்தருள, நந்திகேசுர சுவாமி சனற் குமாரபகவானுக்குக் கடாட்சித்தருள, சனற்குமாரபகவான் சத்தியஞான தரிசனிகளுக்குக் கடாட்சித்தருள, சத்தியஞான தரிசனிகள் பரஞ்சோதி மாமுனிகளுக்குக் கடாட்சித்தருள, பரஞ்சோதிமாமுனிகள் மெய்கண்டதேவநாயனார்க்கு அனுக்கிரகம் பண்ண, மெய்கண்ட தேவநாயனார் அருணந்திதேவர்க்குக் கடாட்சித்தருள, அருணந்தி தேவர் மறைஞானசம்பந்தமா முனிக்கருள, மறைஞான சம்பந்தமா முனி யனுக்கிரகம் பெற்ற கொற்றங்குடி முதலியார் அந்த உபதேசத்தைச் சங்கற்ப நிராகரணமென்று எட்டு வாதிகளை வைத்து மறுத்து, அந்த அர்த்தம் விளங்கச் சிவப்பிரகாசமென்று திருநாமமுஞ் சாத்தி வழி நூலாக அனுக்கிரகம் பண்ணி, அந்தச் சிவப்பிரகாசத்தின் சாரம் விளங்கப் பதின்மூன்று வெண்பாவாக வினாவினதென அறிக. இந்நூலுக்கு வியாக்கியை செய்ய வேண்டி மெய்கண்ட சந்ததியில் திருவாவடுதுறை நமச்சிவாய அய்யர் ஆசாரியமரபில் வேலப்ப பண்டாரம் அனுக்கிரகம் பெற்ற நமச்சிவாய வேலப்ப பண்டாரம் அனுக்கிரகித்த உபதேசத்தை முன்னுள்ள ஞாதாக்கள் இந்நூலுக்கு விருத்தி பண்ணாமையாலேஅசடீளு பிங்களய் வைகாசிமீ பவுரணையில் பண்ணினதென்று அறிக.”
இவ்வரலாறும் இப்பதிப்புக்கு மூலமாயுள்ள உரையும் திருநெல்வேலி திரு. எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரவர்கள் அனுப்பி வைத்த பிரதியிற் காணப்படுவன. சென்னைச் சிவஞானபோத யந்திர சாலையில் அச்சிட்ட பிரதியும் இராசாங்கக் கையெழுத்து நூல் நிலயத்துள்ள பிரதியும் ஒப்பு நோக்கப் பயன்பட்டன. இறுதிப் பிரதியில் சகாத்தம் 1600 எனக்காலம் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிப் பிரதி குறித்தது கொல்லமாண்டு. சகாத்தம் 1600க்கு நேரானது கி.பி. 1677. கொல்லமாண்டு 840க்கு நேரானது கி.பி. 1665. எனினும் இரண்டு பிரதிகளிலும் பிங்கல வருஷமென்றே எழுதப்பட்டிருப்பதால், அதற்கு நேரான கி.பி. 1677 ஐயே உரையின் காலமாகக் கொள்ள வேண்டும்.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை
வினாவெண்பா உரை முற்றும்
திருச்சிற்றம்பலம்

பண் :

பாடல் எண் : 1

பூமன்னு நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் - நாமன்னும்
வேதம்வே தாந்தம் விளக்கஞ்செய் விந்துவுடன்
நாதம்நா தாந்தம் நடுவேதம் - போதத்தால்
ஆமளவும் தேட அளவிறந்த அப்பாலைச்
சேம ஒளிஎவருந் தேறும்வகை - மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத
பல்லுயிர்வெவ் வேறு படைத்தும் அவைகாத்தும் 5
எல்லை இளைப்பொழிய விட்டுவைத்துந் - தொல்லையுறும்
அந்தம் அடிநடுவென் றெண்ண அளவிறந்து
வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற
நெல்லுக் குமிதவிடு நீடுசெம்பிற் காளிதமுந்
தொல்லைக் கடல்தோன்றத் தோன்றவரும் - எல்லாம்
ஒருபுடைய யொப்பாய்த்தான் உள்ளவா றுண்டாய்
அருவமாய் எவ்வுயிரும் ஆர்த்தே - உருவுடைய
மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்
தான்அடக்குங் காட்டத் தகுதியும்போல் - ஞானத்தின்
கண்ணை மறைத்த கடியதொழி லாணவத்தால் 10
எண்ணுஞ் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும் - உள்நாடிக்
கட்புலனாற் காணார்தம் கைக்கொடுத்த கோலேபோற்
பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்
தனுகரண மும்புவன முந்தந் தவற்றால்
மனமுதலால் வந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்
காட்டி அதனாற் பிறப்பாக்கிக் கைக்கொண்டும்
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற
எப்பிறப்பும் முற்செய் இருவினையால் நிச்சயித்துப்
பொற்புடைய தந்தைதாய் போகத்துட் - கர்ப்பமாய்ப்
புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் 15
எல்லைப் படாஉதரத் தீண்டியதீப் - பல்வகையால்
அங்கே கிடந்த அநாதியுயிர் தம்பசியால்
எங்கேனு மாக எடுக்குமென - வெங்கும்பிக்
காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்
கேயக்கை கால்முதலாய் எவ்வுறுப்பும் - ஆசறவே
செய்து திருத்திப்பின் பியோகிருத்தி முன்புக்க
வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத
வல்லபமே போற்றியம் மாயக்கால் தான்மறைப்ப
நல்ல அறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா
அக்காலந் தன்னில் பசியையறி வித்தழுவித்(து) 20
உக்காவி சோரத்தாய் உள்நடுங்கி - மிக்கோங்குஞ்
சிந்தை உருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த
பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறிபோற்றி - ஆசற்ற
பாளைப் பசும்பதத்தும் பாலனாம் அப்பதத்தும்
நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
கொண்டாள ஆளக் கருவிகொடுத் தொக்கநின்று
பண்டாரி யான படிபோற்றி - தண்டாத
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில் 25
அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள
உண்மை நிலைமை ஒருகால் அகலாது
திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து
மூலஅருங் கட்டில்உயிர் மூடமாய் உட்கிடப்பக்
கால நியதி யதுகாட்டி - மேலோங்கு
முந்திவியன் கட்டில்உயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு - தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமும் எய்தி - மருளோடு
மன்னும் இதயத்திற் சித்தத்தாற் கண்டபொருள் 30
இன்ன பொருளென் றியம்பவொண்ணா - அந்நிலைபோய்க்
கண்டவியன் கட்டிற் கருவிகள்ஈ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை அங்கே மருவி - உருவுடன்நின்(று)
ஓங்கு நுதலாய ஓலக்க மண்டபத்திற்
போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத
முன்னை மலத்திருளுள் மூடா வகையகத்துட்
டுன்னும்இருள் நீக்குஞ் சுடரேபோல் - அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய 35
ராக்கிப் பணித்த அறம்போற்றி - வேட்கைமிகும்
உண்டிப் பொருட்டால் ஒருகால் அவியாது
மண்டிஎரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் - திண்டிறல்சேர்
வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரித
லெல்லாம் உடனே ஒருங்கிசைந்து - சொல்காலை
முட்டாமற் செய்வினைக்கு முற்செய்வினைக் குஞ்செலவு
பட்டோலை தீட்டும் படிபோற்றி - நட்டோங்கும்
இந்நிலைமை மானுடருக் கேயன்றி எண்ணிலா
மன்னுயிர்க்கும் இந்த வழக்கேயாய் - முன்னுடைய
நாள்நாள் வரையில் உடல்பிரித்து நல்வினைக்கண் 40
வாணாளின் மாலாய் அயனாகி - நீள்நாகர்
வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
நானா விதத்தால் நலம்பெறுநாள் - தான்மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட - இற்றைக்கும்
இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச் - சொல்லிஇவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீர்என்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையல்தருஞ்
செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் 45
தக்கநெருப் புத்தூண் தழுவுவித்தும் - மிக்கோங்கு
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்தும் நாஅரிந்தும்
ஈராஉன் ஊனைத்தின் என்றடித்தும் - பேராமல்
அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
வெங்கோபம் மாறாத வேட்கையராய் - இங்கொருநாள்
எண்ணிமுதற் காணாத இன்னற் கடுநரகம்
பன்னெடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்நாடிக்
கண்டு கடன்கழித்தல் காரியமாம் என்றெண்ணிக்
கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்
காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதியம் 50
ஈய்த்துத்தாய் தந்தைதமர் இன்புறுதல் - வாய்த்தநெறி
ஓடியதே ரின்கீழ் உயிர்போன கன்றாலே
நீடுபெரும் பாவம் இன்றே நீங்குமென - நாடித்தன்
மைந்தனையும் ஊர்ந்தோன் வழக்கே வழக்காக
நஞ்சனைய சிந்தை நமன்தூதர் - வெஞ்சினத்தால்
அல்ல லுறுத்தும் அருநரகங் கண்டுநிற்க
வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்
இன்ன வகையால் இருவினைக்கண் நின்றருத்தி
முன்னைமுத லென்ன முதலில்லோன் - நல்வினைக்கண்
எல்லா உலகும் எடுப்புண் டெடுப்புண்டு 55
செல்காலம் பின்நரகஞ் சேராமே - நல்லநெறி
எய்துவதோர் காலம்தன் அன்பரைக்கண் டின்புறுதல்
உய்யும் நெறிசிறிதே உண்டாக்கிப் - பையவே
மட்டாய் மலராய் வருநாளில் முன்னைநாள்
மொட்டாய் உருவாம் முறைபோலக் - கிட்டியதோர்
நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை
எல்லை யிரண்டும் இடையொப்பிற் - பல்பிறவி
அத்தமதி லன்றோ அளவென்று பார்த்திருந்து
சத்தி பதிக்கும் தரம்போற்றி - முத்திதரு
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் 60
அந்நிலையே உள்நின் றறுத்தருளிப் - பின்அன்பு
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயந்
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
முன்நின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக்
காதிகுண மாதலினால் ஆடுந் திருத்தொழிலுஞ்
சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
வைச்ச நதியும் மதிக்கொழுந்தும் அச்சமற
ஆடும் அரவும் அழகார் திருநுதல்மேல் 65
நீடுருவ வன்னி நெடுங்கண்ணுங் - கேடிலயங்
கூட்டுந் தமருகமுங் கோல எரியகலும்
பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
வெள்ளத் தழுத்தி விடுந்தாளி னும்அடியார்
உள்ளத்தி னும்பிரியா ஒண்சிலம்பும் - கள்ளவினை
வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்
ஒன்றும்உருத் தோன்றாமல் உள்ளடக்கி - என்றும்
இறவாத இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று 70
பேரிலா நாதன்ஒரு பேர்புனைந்து - பாரோர்தம்
உண்டி உறக்கம் பயம்இன்பம் ஒத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம்போற்றி - மிண்டாய
ஆறு சமயப் பொருளும்அறி வித்தவற்றிற்
பேறின்மை எங்களுக்கே பேறாக்கித் - தேறாத
சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்
அத்தகைமை தானே அமையாமல் - வித்தகமாஞ்
சைவ நெறியிற் சமய முதலாக
எய்தும் அபிடேகம் எய்துவித்துச் - செய்யதிருக்
கண்ணருளால் நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட 75
புண்ணும் இருவினையும் போய்அகல - வண்ணமலர்க்
கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - ஒத்தொழுகும்
சேண்ஆர் இருள்வடிவும் செங்கதிரோன் பால்நிற்பக்
காணா தொழியும் கணக்கேபோல் - ஆணவத்தின்
ஆதி குறையாமல் என்பால் அணுகாமல்
நீதி நிறுத்தும் நிலைபோற்றி - மேதக்கோர்
செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்
எய்துஞ்சீர் முத்திபதம் எய்துவித்து - மெய்யன்பாற்
காணத் தகுவார்கள் கண்டால் தமைப்பின்பு 80
நாணத் தகும்ஞான நன்னெறியை - வீணே
எனக்குத் தரவேண்டி எல்லாப் பொருட்கும்
மனக்கும் மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்
தூரம்போ லேயணிய சுந்தரத்தாள் என்தலைமேல்
ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்
தந்தபொருள் ஏதென்னில் தான்வேறு நான்வேறாய்
வந்து புணரா வழக்காக்கி - முந்திஎன்றன்
உள்ளம்என்றும் நீங்கா தொளித்திருந்து தோன்றிநிற்குங்
கள்ளம்இன்று காட்டும் கழல்போற்றி - வள்ளமையால்
தன்னைத் தெரிவித்துத் தன்றாளி னுட்கிடந்த 85
என்னைத் தெரிவித்த எல்லையின்கண் - மின்ஆரும்
வண்ணம் உருவம் மருவுங் குணமயக்கம்
எண்ணுங் கலைகாலம் எப்பொருளும் - முன்னம்எனக்(கு)
இல்லாமை காட்டிப்பின் பெய்தியவா காட்டிஇனிச்
செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - எல்லாம்போய்த்
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி
எம்மைப் புறங்கூறி இன்புற்றுச் - செம்மை
அவிகாரம் பேசும் அகம்பிரமக் காரர்
வெளியாம் இருளில் விடாதே - ஒளியாய்நீ
நின்ற நிலையே நிகழ்த்தி ஒருபொருள்வே 90
றின்றி யமையாமை எடுத்தோதி - ஒன்றாகச்
சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இப்பிறவிப்
பேதந் தனில்இன்பப் பேதமுறாப் - பாதகரோ(டு)
ஏகமாய்ப் போகாமல் எவ்விடத்துங் காட்சிதந்து
போகமாம் பொற்றாளி னுட்புணர்த்தி - ஆதியுடன்
நிற்க அழியா நிலைஇதுவே என்றருளி
ஒக்க வியாபகந்தன் னுட்காட்டி - மிக்கோங்கும்
ஆநந்த மாக்கடலில் ஆரா அமுதளித்துத்
தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊன்உயிர்தான்
முன்கண்ட காலத்தும் நீங்காத முன்னோனை 95
என்கொண்டு போற்றிசைப்பேன் யான்.

பொழிப்புரை :

1-4. பூமன்னும் நிருத்த நிலை போற்றி :
(உரை) பொற்றாமரைப் பூவில் நிலைபெற்று நான்கு முகத்தோ டெழுந்தருளி யிருக்கின்ற பிரமனும், தேவர்களும், அவர்களுக்கு மன்னனாகிய தேவேந்திரனும், திருமகள் பொருந்திய மார்பில் மிகுந்த பிரகாசமுடைய கௌத்துவ மணி தரித்திருக்கிற விஷ்ணுவும், சகல பொருண்மையும் நாவிலிருந்து சொல்லுகிற வேதங்களும், வேத முடிவான உபநிடதங்களும், சகல அறிவும் விளக்கஞ் செய்கிற விந்துவும், அதற்குள்ளொளியாகிய நாதமும் குடிலையும் தத்தம் இதயத்தில் தோன்றிய போதச் செயல்களால் ஆமளவுந் தேடவும் அளவுபடாமல் அப்பாற்பட்டிருக்கிற பேரின்பவொளியாகிய பதி ஆன்மாக்களை இரக்ஷிக்க வேண்டுமென்கிற கிருபை ஜனித்து எவர்களும் பத்தியுடனே தரிசித்து மலமயக்கம் நீங்கித் தெளிந்து தேறும்படிக்கு மிகுந்த இரத்தின மணிகள் சூழ்ந்து விளங்காநின்ற அழகிய திருச்சிற்றம்பலத்துள் ஞானப்பிரகாசம் நிறைந்து தோன்ற நின்று ஆன்மாக்களுடைய பிறவித் தொடர் பறுக்கச் செய்யும் ஆனந்த நிருத்தநிலை எம்மை இரக்ஷிக்க.
4-6. குன்றாத பெரியவழி போற்றி :
(உரை) அநாதியாய் எண்ணிறந்த ஆன்மாக்கள் மோக்ஷமடைந் திருக்கவும் குறைவில்லாமல் நித்தியமாய் அளவிறந்திருக்கிற பெத்தான் மாக்களைக் கன்மத்துக்கீடான தேகங்களில் சராயுஜம் அண்டஜம் சுவேதஜம் உத்பீஜம் ஆகிய நால்வகை யோனிகளிலும் மாறி மாறி வேறு வேறாகப் படைத்தும் அவ்வான்மாக்களுக்குள்ள அரிய வினைப் போகங்களை ஏறாமற் குறையாமற் கூட்டிப் புசிப்பித்தும் சர்வ சங்கார காலத்தில் ஆன்மாக்கள் சகலாவத்தைப் பட்டுப் பிறந்து இறந்து அலைந்து திரிந்த இளைப்பு நீங்கும்படிக்குக் காரண கேவலாவத்தையில் ஒடுக்குவித்தும் அநாதியே தொடுத்து ஆதியாய்ச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்தும் அளவிறந்து ஆதி நடுவந்தமற்று வருகிற பெரிய கிருத்திய வழி எம்மை இரக்ஷிக்க.
6-13. முந்துற்ற வினைபோற்றி :
(உரை) ஆன்மாக்கள் நித்தியமாயிருக்கச் சிருஷ்டிப்பட்டுந் திதிப் பட்டுஞ் சங்காரப்பட்டும் வருவானேனென்னில், அநாதியிலே மலத்திலே பந்திக்கப் பட்டிருக்கையினாலே மலம் நீங்கும் படிக்குக் கர்த்தா கிருபையினாலே செய்வித்ததாயிருக்கும். ஆனால் மலம் ஆன்மாக்களைப் பந்தித்த தெப்படியென்னில், முன்னேயுண்டான நெல்லுக்கு உமிதவிடு முளை முற்பிற்பாடில்லாமல் அநாதியிலே கூடத்தோன்றினதாயிருக்கும். இதில் ஆணவமலம் ஆன்மாவின் அறிவை மறைத்த தெப்படியென்னில், செம்பினுடைய நிறத்தைக் காளிதங் கூட உதித்து மறைத்தது போன்றிருக்கும். கர்த்தாவினுடைய வியாபகத்திலே ஆன்மாக்கள் நிறைந்திருக்கவும் ஆணவமலம் உயிரை மறைத்தது எப்படியென்னில், பழமையாகிய கடல் வியாபகத்திலே நிறைந்திருக்கிற தண்ணீரை உப்புக் கலந்து பிடித்திருப்பது போன்றிருக்கும். இப்படி யெல்லாம் வெவ்வேறாய் ஒருபுடை யொப்பாகக் கர்த்தா உள்ளவன்றே யுண்டாய் அருவமாய் மூவகையான்மாக்களையும் ஆணவமலம் பிடித்து உருவையுடைய மகத்தான மாணிக்க மணியை நஞ்சுவாய்க்கு ளடக்கின மகத்தாகிய சர்ப்பம் போலவும் பச்சையாய் முளைத்து விறகாகுமட்டும் அக்கினியைத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த காஷ்டம் போலவும் ஆன்மாவினுடைய ஞானக் கண்ணை மறைத்த கடுந்தொழிலையுடைய ஆணவமலத்தினாலே அறிவுஞ் செயலும் இறந்த சகல உயிர்களுக்குங் கர்த்தா கிருபையினாலே நன்றாய் அவர்களிச்சையை நாடிப் பார்த்துக் கட்புலனாற் காணாத பிறவியந்தகர்க்கு உரிமையுள்ளவர்கள் இச்சித்த படிக்குக் கோலைக் கொடுத்து இச்சித்த இடங்களிலே கொண்டுபோய் விடுகிறது போலப் பொலிவினையுடைய மாயையின் காரியமான தனுகரண புவன போகங்களையும் முன்னே யுண்டாக்கிக் கொடுத்து இச்சித்த புவனங்களிலே இச்சித்த வினைப் போகங்களையும் கூட்டி முடித்துப் புசிப்பிக்கையினும் அந்த ஆணவமல மயக்கத்தாற் கர்த்தா வுபகாரத்தை மறந்து நாமென்கிற அந்தக்கரண விகார ஹிதாஹித முண்டாகையாற் புண்ணிய பாவமிரண்டும் உண்டாம்படி காட்டி அந்தப் புண்ணிய பாவத்தினாற் பிறக்கும் பிறவியுண்டாக்கி அதனாற் செய்யு மிருவினைகளையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் அந்த வினைப் போகங்களைப் புசிப்பதற்குக் கலாதி ஞானங்களையுங் காட்டுங் கிருபைத் தொழில் எம்மை இரக்ஷிக்க.
13-19. நாட்டுகின்ற வல்லபமே போற்றி :
(உரை) கர்த்தா ஆன்மாக்களுக்கு வினைப்போகங்களைப் புசிப்பிக்கிறதற்குத் தேகங்களைக் கூட்டுகிற முறைமை சொல்லுமிடத்து முன்பு ஆகமங்களிலே சொல்லப்பட்ட எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதப் பிறப்பின் வகையெல்லாம் முன் செய்த இருவினைக் கீடாக உண்டாம்படி திருவுள்ளத்திலே நிச்சயித்துப் பல பிரகாரம் வெவ்வேறு தேகபேதங்களை யுண்டாக்குவதுமல்லாமல் மானுட தேகமுண்டாக்குவ தெப்படியென்னின், அழகு பொருந்திய தந்தையுந் தாயுங் காமவிகாரம் தீரும்படிக்குச் சையோகபோகஞ் செய்யுங் காலத்து அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டு இல்லையென்பதும் அறிந்து தாயினுடைய கருப்பத்தில் தந்தை புல்லினுனியிற் றங்கிய பனித்திவலை போன்ற விந்துவை விடும்போது அதற்குள் உயிரை யடக்கி உட்கருப்பாசயத்திற் சுரோணிதத்துடனே கலப்பித்து இருத்தி அந்த விந்து தாய் வயிற்றில் அளவற்றிருக்கின்ற உதராக்கினியினால் எரிசுவற்றாமலும் பல வகையாகிய அந்த வயிற்றுக்குட் கிடந்த அநாதி யுயிர்களாகிய புழுக்கள் தங்கள் பசியினாலே அந்த விந்துவை விரைவிலே யெடுத்துப் புசியாமலும் வெய்ய கும்பிநரகம் போன்ற காயக் கருக்குழியிற் காத்திருந்து வினைக்கீடான கை கால் முதலாகிய சகல உறுப்புங் குற்றமறச் செய்து அழகு பொருந்தத் திருத்திப் பின்பு அத்தேகத்தை யெடுத்து நேரே யோகத்தி லிருத்தித் திரிகால வர்த்தமானங்களையும் அறியும்படிக்கு உணர்வையுங் கொடுத்துப் பத்துமாதவரைக்கும் புசிப்புங் கொடுத்துப் பின்பு பூமியிலே பிறக்கும்போது இரண்டு கையுஞ் சிரசிலே குவித்த பாவனையாய்த் தலைகீழாய் வரும்படி செய்து முன் புகுந்த சிறுவழியைப் பெருவழியாக்கி அவ்வுயிர் துன்புற்று இறவாமல் உயிருக்குயிராய் அணைத்திருந்து வெளியிலே யிழுத்துக்கொண்டு வருகிற மெய்ம்மையாகிய வல்லபம் எம்மை இரக்ஷிக்க.
19-22. அம்மாயக்கால் நெறி போற்றி :
(உரை) தாய் வயிற்றை விட்டுப் பூமியிலே பிள்ளை பிறந்தவுடனே சரீரத்துக்குக் காரணமான மாயை சண்டமாருதம் போல் அலைத்து மயக்க, முன் கருப்பத்தினிருக்கும்போது இப்பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமென்று அவ்விடத்திலே நினைத்திருந்த நல்ல நினைவையும் மறந்து உயிர் தேக மயமாய் நல்வினை தீவினைத் துன்பத் தொடர்ச்சியாற் பகுத்தறிவில்லாமல் அக்காலத்தில் உயிர் புசிப்பிச்சையுற் றிருப்பதை யறிந்து பசிதெரியும்படி அறிவித்துக் கதறியழும்படி செய்வித்துப் பிள்ளை யழுவதுகண்டு உடனே பெறும்போதுற்ற வருத்தத்தையுந் தாயானவள் மறந்து உட்கி ஆவிசோரும்படி யுள்ளே நடுங்கி மிகுந்தோங்கிய அன்பினாலே அவள் சிந்தையிரங்கி யுருகப் பச்சுடம்பிலிருந்த இரத்தஞ் சிவப்பு மாறி வெண்ணிற அமுதமாய்க் கொங்கையில் வந்து சுரக்கிற அந்தத் தீஞ்சுவைப் பாலைப் பிள்ளை வாய்வைத்துக் குடித்து முகஞ்செழித் திருப்பது கண்டு தாய் மகிழ்ந்திருக்கும்படி செய்வித்து இப்படிப் பிள்ளையாசை யென்கிற பெருங் கயிற்றாற் கட்டிச் சகல உயிர்களுக்குங் குழந்தைகளை வளர்க்கும்படிக்கு ஆன்மாக்கள் தோறும் நேசத்தை வைத்தருளிய நெறி எம்மை இரக்ஷிக்க.
22-24. ஆசற்ற படிபோற்றி :
(உரை) தாயன்பாயிருந்து இரக்ஷித்த கர்த்தா இப்படி ஜநித்து வரும் உயிர்களுக்குக் கருப்பத்திலிருக்கிற பசும்பருவத்தும் பாலனாயிருக்கிற அந்தப் பருவத்தும் நாளுக்கு நாள் பரிணமித்து வளரும் பாலகுமார விருத்தப்பருவத்துஞ் சகலாவத்தைப்படுத்திப் பருவத்துக் கேதுவான கலாதிஞானத்தைக் கொடுத்துச் செயலற்ற உயிர்கள் வாங்கிக்கொள்ள ஆள்வதற்கேற்ற முப்பத்தாறு வகைக் கருவிகளையுங் கொடுத்து உயிர்க்குயிராய் இமைப்பொழுதும் நீங்காமல் நின்று பண்டாரியாய் உயிர்க்கு ஏவல் செய்யும் கிருபை எம்மை இரக்ஷிக்க.
24-35. தண்டாத அறம் போற்றி :
(உரை) கர்த்தா பண்டாரிபோல நின்று தத்துவங்களைக் கூட்டி இரக்ஷிக்கும்படி எப்படியென்னில், நீங்காமற் புன்புலால் நாறுந் தோல் போர்த்த புழுக்கூடான சரீரமாகிய பெரியமனைக்குள் கிருபையினாலே துரியாதீதந் துரியம் சுழுத்தி சொப்பனம் சாக்கிரமென்னும் பெயரையுடைய ஐந்துகட்டாக்கி, ஆன்மாவுக்கு அநாதியிலே பொருந்தின உண்மை நிலைமையான ஆணவமல மறைப்புச் சற்றும் நீங்காமல் திண்மையாய் உயிரைச் சிறைப்படுத்தி நிற்கும் மூலாதாரமாகிய வீட்டில் அதீதப்பட்டு உயிர் மூடமாய் உட்கிடப்ப அவ்விடத்தில் இளைப்பாறு மட்டுங் காலத்தை நியதியினால் நிறுத்தி, அப்பால் மேலே ஓங்கியிருக்குந் துரியமான நாபித்தான வீட்டில் உயிரைப் பிராணவாயு வுடனே கூடச்சேர்த்து அவ்விடத்திலே கலை வித்தை இராகத்தினால் முன்னே ஆன்மாவினுடைய தொழில் அறிவு இச்சை மூன்றையும் எழுப்பி அதற்குத் துணையாகப் பிரகிருதிமாயையி லுண்டான அழகு பொருந்திய சாத்துவிக ராசத தாமத மென்னும் முக்குணங்களையுஞ் சேர்த்து, அப்பால் மேலே சுழுத்தி வீடாகிய இருதயத் தானத்திற் சித்தக் கருவியுடனே கூட்டி, அவ்விடத்திற் சித்தத்தாற் கண்ட பொருள் இன்ன பொருளென் றறியாமல் மயங்கி நின்ற உயிரைச் சொப்பன வீடாகிய கண்டத்தானத்திற் சேர்த்து அவ்விடத்திலே சத்தாதியைந்தும் வசனாதியைந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் வாயுக்கள் பத்தும் புருடனுமான இருபத்தைந்து கருவியுங் கூட்டி முன்னே செய்த இருவினைக்கீடாக முன் சாக்கிரத்திலே இன்ப துன்பத்தைப் புசிப்பித்த முறைமைபோலச் சொப்பனத்திலும் இருவினைப் போகம் உண்டானதுமறிந்து சுத்ததத்துவங்களினாற் பிரேரித்துப் புசிப்பித்து, பின்பு அதற்கு மேலாய தூலதேகத்தின்கண் வளர்ந்து நிற்கிற சாக்கிர வீடென்னும் நுதற்றானமாகிய ஓலக்கமண்டபத்தின்முன் கேவலாவத்தைக்குக் கூடாமல் நின்ற பூதங்கள் ஐந்தும் புருடதத்துவம் நீங்கலாக நின்ற வித்தியாதத்துவம் ஆறுஞ் சிவதத்துவம் ஐந்தும் ஆகப் பதினாறும் முன் சாக்கிரத்திலிருந்த ஞானேந்திரியம் ஐந்துங் கன்மேந்திரியம் ஐந்துஞ் சொப்பனத்திலிருந்து வந்த இருபத்தைந்து கருவியும் மற்றப் புறக்கருவிகள் நாற்பத்தைந்தும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் பொருத்தி ஜீவிக்கும்படி செய்வித்து, முன்னே விட்டு நீங்காமல் ஐந்தவத்தையினும் மறைந்து நின்ற ஆணவமல இருள் கூடாதபடி மனையிலே நெருங்கியிராநின்ற இருளை நீக்கும் விளக்கைப் போலச் சூக்குமாதி வாக்குடனே கூடிப் பிரகாசித்து நிற்குஞ் சகலாவத்தையில் உயிரை நிறுத்திக் கன்மத்துக் கேதுவான சத்தாதி விடயங்களைக் காட்டி ஆன்மாக்கள் யானென தென்று கர்ஜித்து நின்றவர்கள் வெவ்வேறு தொழிற்குரியராம்படி செய்விக்குஞ் சிவதருமம் எம்மை இரக்ஷிக்க.
35-38. வேட்கைமிகும் படிபோற்றி:
(உரை) கர்த்தா சகலாவத்தையிற் கருவி கூட்டி முடிக்கும் உபகாரத்தை மறந்து ஆன்மாக்கள் பிரபஞ்ச ஆசை மிகுந்து புசிப்பு நிமித்தம் ஒருகண நேரமானாலுங் கெடாமல் வயிற்றிலே மண்டியெரிந்து கொண்டிருக்கிற வடவாமுகாக்கினி போன்ற பசியைத் தணிக்கும் பொருட்டுத் திண்ணிய ஆங்காரப் பலன்களால் அவரவர் வல்லமைக் கேற்ற தொழில்கள் செய்யுமிடத்து அவர்களுக்குத் தோன்றாமல் உடன் நிகழ்ச்சியான ஒருமைப்பாடாய்க் கூடி நின்று அவரவர் நினைவின்படி செய்வித்துக் கொடுத்து ஆன்மாக்கள் யானெனதென்று இடையறாது செய்யும் வினை மிகுதியான ஆகாமியத்துக்கும் முன்செய்த ஆறத்து வாவிலுங் கட்டுப்பட்டிருக்கிற சஞ்சிதத்துக்கும் அதிலே பாகப்பட்டுப் புசிப்புக்கு வந்த பிராரத்துவச் செலவுக்கும் அவரவர் கணக்கப்பிள்ளை யாயிருந்து பட்டோலை யெழுதி யொப்பிக்குங் கருணை இரக்ஷிக்க.
38-53. நட்டோங்கும் மறம்போற்றி :
(உரை) கர்த்தா ஆன்மாக்கள் செய்த இருவினைக்குங் கணக்கெழுதின படிக்குப் புண்ணிய பாவத்துக்குள்ள பலன்களைக் கூட்டுகிறது எப்படியென்னில், பொருந்தி மிகுந்த இருவினை முறைமை பூமியிலுள்ள மானுடருக்கே யல்லாமலும் எண்ணில்லாத தனுக்களிலே பொருந்தியிருக்கிற பல உயிர்களுக்கும் இந்த முறைமையாக வினைகளை நிச்சயித்தறிந்து முன் அமைத்த ஆயுள் முடிவில் உடல்களைப் பிரித்து நல்வினை பாகப்பட்ட உயிர்களையெல்லாம் பூதசரீரமான திவ்விய சரீரத்துடனே காலநீட்டிப்பாய் வாழ்ந்திருக்கும்படிக்கு விஷ்ணுவுலகத்தில் விஷ்ணு ரூபமாயும் பிரமலோகத்திற் பிரமரூபமாயுந் தேவலோகத்தில் தேவேந்திர ரூபமாயுந் தேவர்களாயும் வந்த பெரிய பதப்பிராப்திகளிலே நானாவிதமான போகங்கள் புசித்திருக்கும்படி செய்வித்தும், பூமியிலே இராஜ ஐசுவரியத்துடனே வாழும்படி செய்வித்து மிருக்கும் நாராயண(?) புண்ணிய கன்மபலன் புசித்து முடிந்து பாவகன்ம பலன் புசிக்கும் நாள் அடுத்தவுடனே அங்கங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் அந்தந்தத் தேகத்தை விட்டு மாளும்படிக்குக் கர்த்தாவினுடைய ஆக்கினையினாலே வெற்றி பொருந்திய யமதூதர்கள் வேகத்துடனே வந்து பாசத்தினாற் கட்டிப் பிடித்துக் கொண்டு போய்த் தங்கள் யஜமானாகிய தருமராஜாவின் முன்புவிடத் தருமராஜர் வந்து ஆன்மாக்களைப் பார்த்து இரங்கி, ‘பாவிகாள் ! உங்களுக்கு இற்றைவரைக் குள்ளாகப் பிறவாநெறி பெறவேண்டுமென்று கர்த்தாவை விரும்பும் அறிவு பிறக்கவில்லையோ’ என்று நல்ல இன்சொல்லாக நடுவுநிலைமையாய்ப் பேசிப் பின்பு அவர்கள் செய்த பாவத்துக்கேற்ற செயல்களைச் செய்யுமென்று கோபத்துடனே கிங்கரர்களைப் பார்த்துச் சொல்ல, விடைபெற்றுப் பூதசரீரமான யாதனா சரீரத்திலே உயிரை நிறுத்தித் துன்பமுறும்படிக்குச் செக்கிலேயிட் டாட்டியும், தீவாயிலிட் டெரித்தும், பெரிய நெருப்புத் தூணைத் தழுவிக் கிடக்கும்படிச் செய்தும், மிகுந்து நீண்டிருக்கிற நாராசங்களைக் காய்ச்சிச் செவியிலே செலுத்தியும், நாக்கைக் கருவிகொண்டறுத்தும், அவரவர் ஊனை அவரவர் தின்னும்படிக்கு அரிந்து கொடுத்து அடித்தும், பேராதபடி ஆழ்ந்த நரகங்களிலே அழுத்துவித்தும், பின்னுந் தங்களுடைய கடுங்கோபமாறாத இச்சையுடையராய் அவற்றிலே ஒருநாள் போல் துன்பத்தைக் கொடாநின்ற கொடிய நரகங்களிலே பல நெடுநாள் செல்லுமட்டும் இயமகிங்கரர்கள் பணி செய்யக் காருண்ணிய வடிவாகிய கர்த்தா சிற்றுயிர்களை யமகிங்கரர்களிடத்திலே காட்டிக் கொடுத்து அவர்கள் துக்கப்படுகிறதைப் பார்த்திருப்பானேனென்னில், உலகத்திலே தந்தை தாயான பேர்கள் பிள்ளையினுடைய நோய் மிகுதியை உள்ளே நாடியறிந்து நோய் தீரும்படிக்கு அதற்கேற்ற முறைமை செய்வது கடனென்று நினைந்து பிள்ளையை நோயறிந்து மருந்து கொடுத்துத் தீர்க்கும் வைத்தியத் தொழில் செய்கிறவனிடத்திலே ஒப்புவித்து, அவன் இருப்பு நாராசங் காய்ச்சிச் சுடவும் சத்திரமிட்டு அறுக்கவும், கண்படலத்தை உரிக்கவும், இப்படிப் பல கிரியையுஞ் செய்யப் பிள்ளை வருத்தப்பட்டாலும் நோய் தீர்ப்பதை யறிந்து அந்த வைத்தியனுக்கு நல்ல திரவியமுதலான வெகுமானம் பண்ணிச் சந்தோஷத்துடனே அவர்கள் கண்டு நிற்பதுபோலவும், மனுச்சக்கிரவர்த்தியான சோழராஜா தான் அரிய தவம் பண்ணிப் பெற்ற அருமையான ஒரு மகன் திருவாரூர்த் தெருவழியே தேரேறிப் போம்பொழுது மாயமாகத் தேர்க்காலில் வீழ்ந்து இறந்த பசுவின் கன்றினிமித்தம் அந்தப் பாவந் தீரும்படிக்கு எத்தனை பேர்கள் மாறுபாடாய்த் தடுக்கவுங் கேளாமற் பிள்ளையைக் கன்று தங்கின படிக்குத் தேர்க்காலிலே போட்டு நசுக்கிப் போடவேண்டு மென்று துணிந்து தேரிலே தாய்ப்பசுவை வைத்து ஊர்ந்து கொன்றது மகனை யமன்பிடித்து வருத்தாதபடிக்குச் செய்த கிருபையே யாகையால் அந்த வழக்குப்போலவும், விடம்போன்ற சிந்தையையுடைய நமன் தூதர் மிகுந்த கோபத்துடனே பாவஞ்செய்த உயிர்களைக் கொடிய நரக வாதனைப் படுத்துவதைச் சகல உயிர்களுக்குந் தந்தையுந் தாயுமாயிருக்கிற சிவமுஞ் சத்தியும் மலநோய் தீர்ந்தாற் போதுமென்று சந்தோஷத்துடனே கண்டு நிற்கிற வல்லபமான கருணை மறம் எம்மை இரக்ஷிக்க.
53-59. பல்லுயிர்க்கும் தரம்போற்றி :
(உரை) கர்த்தா இங்ஙனஞ் சொன்ன ஒன்பது வகையினாலும் இரக்ஷிக்கப்பட்ட ஆன்மாக்களுக்குப் பெத்தகாலம் முடிவாகுமட்டும் இருவினைப் பலன்களை அவன் அவள் அது முன்னிலையாக நின்றருத்தித் தனக்குமேல் ஒரு கர்த்தா இல்லாத சகல புவனகர்த்தாவாகிய சிவன் அந்த இருவினைகளுக்கு இருப்பிடமான மாயாவுலகங்களை எடுப்புண்டு எடுப்புண்டு மாறிமாறி வரும்படிக்கு ஆதியாய் அநாதிதொடுத்துச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்துந் திரோபவித்தும் அநுக்கிரகித்துந் தமது சத்தியினாலே பஞ்சகிருத்தியங்களைச் செய்வித்தும் மலபரிபாகப்பட்டதை அறிந்து பின் நரகத்திற் செல்லும் பெத்தத்தை நீக்கி, ஆன்மாக்களுக்கு முத்திக் காலத்தை ஏற்படுத்த வேண்டித் தனக்கு அன்பராகிய மெய்யடியார்களைக் கண்டவுடனே தன்னைக் கண்டதுபோல அந்த ஆன்மாக்கள் இன்புற்று அவர் ஏவின பணிவிடை கேட்டுய்யும் படிக்குச் சிறிது நல்லவழியை யுண்டாக்கிக் காட்டி, அதின் நல்வழியே சிவபுண்ணியமானது புத்தி பூர்வத்தினும் அபுத்தி பூர்வத்தினும் உபாயச் சரிதையாதியிலும் உண்மைச் சரிதையாதியிலுமாகக் கிரமத்திலே செய்யப்படுத்தி, அந்தமட்டாய் மலர விருக்கிற அரும்புப் பருவம் நீங்கிய வரும்பருவத்துக்கடுத்த முதனாள் மொட்டாயிருக்கிற மலர்போல் மலம் பரிபாகம் பிறந்த தன்மை சமீபத்திற் கண்டு ஒப்பற்ற நல்ல சிவசமயத்திற் பத்திமிகுந்த இடத்திலே பிறப்பித்து நாட்டப்பட்ட இருவினையும் ஏககாலத்தில் இரண்டுந் தராசு நுனிபோலச் சமனான பருவத்திலே பல பிறவியும் அந்தமாம் படிக்குத் தமது தீவிரதரம் பொருந்தின அருட்சத்தியை அவ்வுயிர்களின் மலம் நீங்கும்படிக்குப் பதிக்குந் தரம் எம்மை இரக்ஷிக்க.
59-71. முத்திதரும் குணம் போற்றி :
(உரை) இருவினையொப்பு மலபரிபாகம் சத்திநிபாதம் பெற்ற பக்குவான்மாக்களுக்குக் கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் அநுக்கிரகம் பண்ணுகிற முறைமை எப்படியென்னில், முத்தியைக் கொடுக்கும் நல்வழியையுடைய விஞ்ஞானாகலர்க்கு அவர்கள் பற்றியிருக்கிற ஆணவமல மொன்றினையும் அவர்களறிவுக்குட் பேரறிவாய்ப் பிரகாசித்துத் தோன்றி நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்திலழுந்தும்படி கடாக்ஷிப்பர். பின்பு பொருந்தி விளங்காநின்ற பிரளயாகலருக்குத் திருவுருக்காணும் படிக்கு மானும் மழுவுஞ் சதுர்ப்புஜமுங் காளகண்டமுந் திரிநேத்திரமுமுடைய திருமேனி கொண்டிருந்து, அவர்களைப் பற்றியிருக்கிற ஆணவமலங் கன்மமலம் இரண்டையும் நீக்கி அருள்வடிவாக்கி, ஞேயத்தி லழுந்தும்படி கடாக்ஷிப்பர். அசுத்த மாயையிற் றோன்றி பூலோகத்தை விட்டு நீங்காமலிருக்கிற சகலருக்கு அவர்களைப் போல மானுடச்சட்டை சாத்தி, மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போல, முன்நின்று தரிசனை கொடுத்து அவர்களைப் பற்றியிருக்கிற ஆணவம் கன்மம் மாயையென்னும் மூன்று மலங்களையுந் தீக்ஷடக்கிரமங்களினாலே தீர்த்து அருள்வடிவாக்கி அடிமையாக்கிக் கொள்ளுதல் அந்தக் கர்த்தாவுக்கு ஆதிகாலத்திலே யுண்டான குணமாதலால், திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நின்றாடுகிற திருநடனத் தொழிலும், பிரகாசம் பொருந்திய நீலமணி போன்று இலங்குகிற காளகண்டமும், திருமேனியிற் பாதியாய்ப் பச்சை வடிவு கொண்டிலங்குஞ் சிவகாமி தங்கிய இடப்பாகமும், பவளக்கொடி படர்ந்து கிடப்பதுபோன்ற திருச்சடா பாரத்தின்மேல் தரித்திருக்கிற கங்கையும், பாலசந்திரப் பிரபையும், வெருவும்படிக்குப் படம்விரித்தாடுகிற சர்ப்பமும், அழகுமிகுந்த திருநுதல் நடுவில் மேல்நோக்கி நீண்டு கிடந்திலங்கும் அக்கினி நேத்திரமும், வலக்கையிற் பிடித்திருக்கிற கேடில்லாத லயத்துடனே முழங்குந் தமருகமும், அழகு பொருந்திய இடக்கையிற் பிடித்திருக்கிற அக்கினி குண்டமும், அரையிலே கட்டியிருக்கிற ஐந்தலையரவக் கச்சும் புள்ளிபொருந்திய புலித்தோலுடையும், பக்குவான்மாக்களை மோட்சமாகிய பேரின்ப வெள்ளத் தழுத்துதற்கு ஊன்றின பாதத்தினும் அடியாருள்ளத்திற் கலந்து இன்ப பூரணமாயிருக்கிற ஞான குஞ்சிதபாதத்தினும் பிரியாமற் றரித்திருக்கிற திருவருட் பிரகாசம் பொருந்திய சிலம்பும், உயிர்களைச் சோரத்தனமாய்க் களவு கொண்டு தன் வசப்படுத்துகிற முன்னை வினையை வென்று பிறவித் துன்பங்களை யறுப்பதற்கு மலவைரி நாமென்று முழந்தாளில் தரித்துக் கொண்டிருக்கிற வீரகண்டாமணியும் இவைகளொன்றும் உருத்தோன்றாதபடி உள்ளேயடக்கி ஒளித்துக்கொண்டு, என்றும் முடிவில்லாத பேரின்ப மோக்ஷத்தில் எம்போல்வாரையும் உறுத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து வந்தானென்று அதிசயமாய்ச் சொல்லும்படிக்குத் திருமேனி கொண்டு, தேன்பொருந்திய செங்கழுநீர் மாலை யுலாவும் புயத்தையுடைய மறைஞானசம்பந்த நாதனென்று ஒரு பெயருஞ் சுபாவத்திலில்லாத நாதன் ஒரு திருப்பெயருஞ் சாத்திக் கொண்டு பூமியிலுள்ளவர்களைப் போல உண்பதும் உறங்குவதும் அஞ்சுவதும் விடயபோகம் இன்பமுறுவதும் ஒத்தொழுகிக் கொண்டெழுந்தருளி மகிழ்ந்திருந்த குணம் எம்மை இரக்ஷிக்க.
71-78. மிண்டாய நிலைபோற்றி :
(உரை) இப்படி மானுடரைப்போலத் திருமேனி கொண்டு ஆசாரியமூர்த்தமாய்ப் பெண்ணாகடத்தின்கண் எழுந்தருளியிருந்து, எங்களுக்கு அகங்காரம் பொருந்திய புறச்சமயப் பொருள்களெல்லாம் அறிவித்து, அதிலே ஒரு பிரயோஜனமு மில்லையென்று அறிகிற திடமே பேறாகும்படி செய்வித்து, தேறாமலிருந்த சித்தந் தெளியும் படிக்குத் திருமேனி தரிசனை கொடுத்தருளிய அந்தத் தகைமையும் போகாமல் மேம்பாடாகிய மெய்கண்ட சந்தானச் சுத்தசைவ நெறியில் விட்டகுறை யறிந்து சமயவிசேட நிருவாணம் பொருந்தப்பட்ட அபிடேகமென்னும் நான்குவகைத் தீடிக்ஷயும் பண்ணி, சிவந்த தாமரை மலர் போன்ற திருக்கண்ணருளினாற் பார்த்து துன்பப் பிறப்பினாற் பட்ட புண்ணுடம்புத் துன்பமும் இருவினைத் துன்பமும் உயிரை விட்டு நீங்கும்படிக்கு அழகு பொருந்திய தாமரை மலர் போன்ற திருக்கைத் தலத்தைச் சிரசிலே வைத்தருளி, கற்போன்றிருந்த நெஞ்சை அக்கினியைச் சேர்ந்த மெழுகுபோல உருக்கி, திரிபதார்த்த மெய்த்தகைமைப் பொருள்களெல்லாம் விரித்தோதி யுபதேசித்து, ஒற்றுமையாக ஆகாயத்தை மறைத்த பூதவிருள்வடிவானது அந்த ஆகாயத்திற் சிவந்த சூரியன் உதயமானவுடனே பூதவிருட் பிரகாசமாய் மறைந்து நீங்க ஆகாயம் சூரியவொளி வடிவாகி நின்ற முறைமைபோல உபதேசித்த ஞானப்பிரகாசத்தைப் பற்றி மும்மலமும் நீங்கி ஆன்மபோதம் அருளிலடங்கச் செய்து, மலம் ஆன்ம போதத்தையும் பற்றாமல் தன்னுடைய அநாதி நித்தியமுங் கெடாமல் நீதியாக நிறுத்தின நிலைமை எம்மை இரக்ஷிக்க.
79-84. மேதக்கோர் கழல்போற்றி :
(உரை) உலகப்பற்று அற மேம்பாட்டுடனே தாதமார்க்கஞ் சற் புத்திரமார்க்கஞ் சகமார்க்கஞ் சன்மார்க்கமென்னும் நான்கு வழியினும் நின்று உண்மைச் சரியை கிரியா யோகங்களை விதிதப்பாமல் அநுட்டித்துச் செய்த அடியார்களுக்குச் சிறப்பு மிகுந்த பதமுத்தியான சாலோக சாமீப சாரூபம் எய்தும்படி செய்வித்து அதனால் ஞானதாகமுற்ற அடியார்கள் அநுக்கிரகத்தைப் பெற்று மெய்யன்பினாலே சிவ ரூபத்தில் ஆன்மதரிசனை பண்ணிச் சிவதரிசனத்தில் ஆன்மாவின் தன்னியல்பை யறிந்து பின்பு பெத்தமுத்தி இரண்டினும் உபகரித்து இரக்ஷிக்கிற கர்த்தாவினுடைய கருணையை மறந்து நாம் ஒரு முதலென்றிருந்தோமேயென்று லஜ்ஜைப்பட்டு நாணிப் பதைப்பற அருளினழுந்தி இரண்டற் றநுபவிக்குஞ் சிவாநுபவத்தைத் தடுமாறியானாலுஞ் சிவசிவாவென்று நினையாத எனக்கும் வீணே இரங்கி அநுக்கிரகம் பண்ணவேண்டி வேதாகமபுராண சாத்திரங்களிற் சொல்லப்பட்ட எல்லாப் பொருளுக்கும் மனத்துக்குந் தாமரைமலரி னெழுந்தருளி யிருக்கும் பிரமாவிஷ்ணு முதலாகிய தேவர்கள் நினைப்புக்குந் தெரியப்படாத தூரம்போல நின்றும் ஜடசித்துக்களிடத்தினும் அணித்தாய் நிறைந்திருக்கிற அழகு பொருந்திய சீர்பாத கமலத்தை அடியேன் சிரசின்மீதிருந்து பிரகாசிக்கும்படிக்கு வைத்துப் பெரிய மஹாதேவரென்னும் பெயரையுடைய மறைஞானசம்பந்த ஞானாசாரியர் எனக்கு அநுக்கிரகம் பண்ணிய பொருள் ஏதென்னில், தான்வேறு நான்வேறாய் வந்து பொருந்தினதில்லை யென்னும் வழக்கை யறிவித்து, அநாதியே தொடுத்து உன்னிடத்திலே யொளித்திருந்து நீ நம்மைப் காணாதிருக்க நாம் என்றும் உன்னைக் கண்டு கொண்டிருந்தோமென்கிற கள்ளத்தை இப்போது உயிர்க்குயிராய்ப் பிரகாசித்துநின்று அறிவித்த பாதமானது எம்மை இரக்ஷிக்க.
84-87. வள்ளமையால் செயல்போற்றி :
(உரை) வளப்பமிகுந்த கிருபையினாற் கர்த்தா தன்னைத் தெரிவித்துத் தன் பாததாமரையான திருவருளுக்குள்ளே பிரியாமல் என்றுங் கிடந்த என்னையுந் தெரிவித்த எல்லைக்கண் மின்போன்று தோன்றி யழிகிற வண்ணத்தையுடைய தேகமுந் தேகத்தைப் பொருந்திய குணமயக்கங்களும் அறிவை விளக்கப்பட்ட கலைகால முதலாகிய தத்துவங்களும் முன்னில்லாத கேவலாவத்தையை முன்னே அறிவித்துப் பின்பு தேக முதலிய கருவி கரணாதிகளுங் கூடின சகலாவத்தையையும் அறிவித்து இனி அருளை விட்டுத் தேக முதலான கருவிகரணாதிகளிற் செல்லாத சுத்தாவத்தையையும் அறிவித்த செயல் எம்மை இரக்ஷிக்க.
87-95. எல்லாம் போற்றிசைப்பேன் யான் :
(உரை) எல்லாத் தத்துவங்களையும் பொய்யென்று கண்டு நீங்கித் தம்மைத் தெளிந்தோ மென்றும், நமக்கு மேலே வேறொரு பொருளில்லை யென்றும், சைவ சித்தாந்திகளுடனே கூடலாகாது அவர் நமக்குப் புறம்பென்றும் பேசித் தன் இன்பத்தை தானே புசித்திருப்போ மென்று மகிழ்ச்சியுற்றுச் செவ்விதான நிருவிகாரி நாமேயென்று பேசி அகமே பிரமமென்னும் வாதிகள் தன்னையும் அறியாமல் தலைவனையும் அறியாமல் மயங்கி நிற்கிற வெளிபோன்ற இருளில் என்னை விடாமல், ஞானசொரூப வொளி வடிவாய் இப்போது நீ நிற்கிற நிலையென்று நிகழ்த்தி, இதற்கு மேலே வேறொரு பொருளின்றி யமையாமையும் எடுத்தோதி, ஆன்மாவைச் சிவத்துடனே ஒன்றாகும்படி சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இந்தப் பிறவிப் பேதமாகிய சரீரத்திலேதானே ஜீவன் முத்தித் தன்மையும் பரமுத்தித் தன்மையும் சரியாகக் கண்டு வெற்றின்பமான சிவபோகம் புசியாமல் சமவாதம் பேசி ஆன்ம சத்தியுடனே கூடி இன்பம் புசிப்போமென்கிற பாதகரோடுங்கூடி ஏகமாய்ப் போகாமல் எனக்கு எவ்விடத்துங் குருலிங்க சங்கமமாய்க் காட்சிகொடுத்து, மேலான போகமுண்டாகிற திருவருட் பாதத்திற் பிரியாமல் உள்ளேயடங்கிக் கிடக்கும்படி பொருந்துவித்து, ஞேயத்தி லழுந்திநிற்கும் அழியாத சாயுச்சியநிலை இந்த அருள் நிலையென்று விகற்பந்தோன்றாமல் அநுக்கிரகித்து, தமது பரிபூரண வியாபகத்துள்ளே யானும் ஒக்க வியாபித்து நிற்குந் தன்மையுங் காட்டி, மிகுந்தோங்கி அளவுபடாமல் நிறைந்து நின்ற தமது பேராநந்தத் திருவருட் கடலில் விளைந்த ஆராத ஞேயவமுதத்தைப் புசித்துக் களித்திருக்கும்படி தாமே என்னைத் தேடிவந்து கொடுத்த பெருங்கருணைத் தகுதியினால் ஊனுயிர் தானே முதன்மையென்று நின்ற பெத்தகாலத்தும் அதற்கு முதன்மையுங் கொடுத்து நீங்காமல் நின்ற முன்னோனை எந்த விதங்கொண்டு புகழ்ந்து போற்றுவேன் யான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்
போற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணியநூல் - போற்றியெங்கள்
வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற
சம்பந்த மாமுனிபொற் றாள்.

பொழிப்புரை :

அழகிய தில்லை நகரம் எம்மை இரக்ஷிக்க. சிவபோகம் எம்மை இரக்ஷிக்க ; அவனருளிச் செய்த மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் எம்மை இரக்ஷிக்க ; எம் கொடிய பாசபந்தங்களுக்கு வேறாகி வந்து உள்ளே யெழுந்தருளியிருந்த சம்பந்தமாமுனியின் அழகிய பாதங்கள் எம்மை இரக்ஷிக்க.

குறிப்புரை :

போற்றிப்பஃறொடை யுரை முற்றியது திருச்சிற்றம்பலம் (போற்றிப்பஃறொடை யுரை சென்னைச் சிவஞான போத யந்த்ரசாலைப் பதிப்பி லுள்ளபடியே இன்றியமையாத சில திருத்தங்களோடு இங்குப் பதிப்பிக்கப்பட்டது. இதற்குக் கையெழுத்துப் பிரதிகள் அகப்படவில்லை. உரை விளக்கமாகவுள்ளது. உரை செய்தார் பெயர், உரைசெய்த காலம் முதலியன விளங்கவில்லை. இறுதியிலுள்ள வெண்பாவினுரை மெய்கண்ட சாத்திர வுரைப்பதிப்பிலுள்ள உரையைத் தழுவி எழுதப்பட்டது. எஸ். அனவரத விநாயகம் பிள்ளை.)

பண் :

பாடல் எண் : 1

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே.

பொழிப்புரை :

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றே ; ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் ஞானம் மேலிட்ட காலத்து ஆணவம் ஒளித்து நிற்கும், ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒளித்து நிற்கும் ; எனினும் இருள் அடராது ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளித்து நின்றாலும் ஞானத்தை ஆணவம் பொருந்தாது ; உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் பூர்வ வாதனா விசேஷத்தாலே உள்ளே கிடந்த சிவஞானம் சற்று விளங்குமானாலும் மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கு மல்லாமல் அது கொண்டே நீங்கமாட்டாது ; உயிர் அருள் கூடும்படி கொடிகட்டினனே இப்படி மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கிற ஆன்மா அருள் கூடும்படிக்குத் தீட்சைக் கிரமங்களினாலே மலங்களைப் போக்கத் துவசங்கட்டினேன்.

குறிப்புரை :

ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றாயிருக்கத் தனது காரணங் கெடாமலிருக்கிற மலத்தைத் தீட்சைக் கிரமத்தினாலே போக்கி மோட்சத்தை அடைவிப்போம்.

பண் :

பாடல் எண் : 2

பொருளாம் பொருளேது போதேது கண்ணே(து)
இருளாம் வெளியே திரவே(து) - அருளாளா
நீபுரவா வையமெலாம் நீஅறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

பொழிப்புரை :

பொருளாம் பொருள் ஏது பொருளிலே அழியாத பொருள் ஏது ; போது ஏது கிரணமாகிய சுத்தி ஏது ; கண் ஏது கண்போல ஆன்மா ஏது; இருளாம் வெளி ஏது இரவு ஏது அஞ்ஞானமாகிய சகல கேவலந்தான் ஏது; அருளாளா அருளையுடையவனே ; நீ புரவா வையமெலாம் நீ அறிய வையமாகிய மலமாயாதி கன்மங்களிலே பொருந்தாமல் ஆன்மாக்களினிடமாகப் பொருந்தியிருக்கிற தேவரீர் அறிய ; கோபுர வாசற் கொடி கட்டினேன் கோபுரவாசலிலே கொடி கட்டினேன்.
கர்த்தா ஏது சத்தி ஏது ஆன்மா ஏது கேவலசகலம் ஏது இது சொல்வார் உளரோ என்று கொடி கட்டினோம்.
அழியாத பொருள் ஏதென்னில், அகண்ட பரிபூரணமாய் உயிர்க்குயிராய் ஆனந்த ரூபமாயிருக்கிறது தற்சிவம். அதற்கு உம் : சிவப்பிரகாத்தில் (13) ‘பலகலையா கமவேதம்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க. கிரணவொப்பாகிய சத்திதான் ஏதென்னில், சத்தியென்பது தனியே ஒரு முதலல்ல, சூரியனுங் கிரணமும் போல மரமும் காழ்ப்புப் போலத் தடையற்ற ஞானமாயிருக்கும். அதற்கு உம் : சிவப்பிரகாசத்தில் (75) ‘சுத்தமாஞ் சத்திஞானச் சுடராகும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க. சித்தியாரில் (1.62) ‘சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகு’ மென்றும், (1.67) ‘ஒருவனே யிராவ ணாதி’ யென்ற பாடத்தில், ‘வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும், இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்’ என்றும் வருவன கண்டுகொள்க. கண்ணொப்பாகிய ஆன்மா ஏதென்னில், அது அதுவாய் அடுத்ததன் தன்மையாய் வசிப்பைப் பற்றின வியாபகமாய்க் கண்படிகம் ஆகாசம்போல ஒப்பையுடையதாய் அக்கினியைப்போலப் பற்றி நிற்கிற தல்லாமல் தனித்துநிற்கிற முதலல்லவாய் அருவம் உருவம் ரூபாரூபமல்லவாய்ப் பூவிற் கந்தம் போன்றதாயிருப்பது ஆன்மா. இதற்கு உம் : சிவஞான போதத்தில் (4.5) ‘மாயா தனுவிளக்காய் மற்றுள்ள’ மென்ற பாடத்திலும், சிவப்பிரகாசத்தில் (59) ‘ஓரிடத்திருத்த’ லென்ற பாடத்திலும், சித்தியாரில் (4.20) ‘அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய், வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி’ என்றும் ; திருவருட் பயனில், (18) ‘இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம், பொருள்க ளிலதோ புவி’ யென்றும், சித்தியாரில் (பரபக்கம் 52) ‘அங்கி யானது தானு மொன்றை யணைந்து நின்று நிகழ்ந்திடும், பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடாது’ என்றும், சிவஞான போதத்தில் (7.3) ‘தோன்றல் மலர்மணம்போற் றொக்கு’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. அஞ்ஞானமாகிய கேவலசகலந்தான் ஏதென்னில் : அதிற் கேவலமாவது தத்துவங்களோடே பொருந்தாமல் போகத்திற் கொள்கை யில்லாதவனாய் அறிவில்லாதவனாய் அந்தகாரத்திலே அலரவிழித்த விழிபோன்றதாய், மலமொன்றுமேயாய் அதுவாய் அந்த மல மாய்கையைவிட்டு நீங்குமுறைமை யில்லாததாயிருப்பது கேவலம். இதற்கு உம் : சிவப்பிரகாசத்தில் (33) ‘ஓங்கிவரும் பலவுயிர்கள்’ என்ற பாடத்திலும், சித்தியாரில் (4.38) ‘அறிவில னமூர்த்த னித்த னரா காதி குணங்க ளோடும்’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. சகலமாவ தேதென்னில், சகலத்துக்கு வெளியென்றும் தீபமென்றும் பெயர். வெளி தீபமென்றிருக்கிற சகலத்தை அஞ்ஞானமென்று சொல்லுவானேனென்னில்(“சகலத்திலே அஞ்ஞானமாகிய மாயா போகத்தைப் புசிப்பிக்கு மல்லாமல் ஞானத்தினை யுணர்த்தாது; ஞானம் சுத்தத்திலே யல்லாமல் உண்டாகாது; ஆகையால் சகலமும் போகத்தைப் புசிப்பிக்கிற நிமித்தமாகக் கேவலத்திற்கு இது தீபமென்றும் வெளியென்றும் சொன்னதல்லாமல் இதுவும் அஞ்ஞனமே தப்பாது”)சகலம் மாயா போகத்தைப் புசிப்பிக்கத் தீபமாக வந்தது, தனக்கு வேண்டிய தன்னை வினையைத் தலைவனை உணர்த்தாதாகையாலும் அஞ்ஞானமே இயக்குவிக்கு மென்பதினாலும் அறிக.சிவப்பிரகாசத்தில் (37) ‘புகலுமல மொழித்தற்கு’ என்ற பாடத்திலும், இருபாவிருபதில் (206) ‘இருள் வெளியாகு மருளினை யறுத்து’ என்பதிலும் அறிக. அருளாளா கிருபை யுடையவனே. நீ புரவா வையமெலாம் நீ யறியக் கட்டினேன். * சர்வத்ர பரிபூரணனாக இருக்கப் பிரபஞ்சத்திலே பொருந்தாமல் உயிர்களிடமாய் நிறைந்திருக்கிறது எப்படியென்னில், சூரியன் அந்தகாரத்தைப் பொருந்தாமல் எங்கும் வியாபித்து நிற்கிறது போலும் ; உயிரும் சிவமும் கலப்பாக இருக்க ஆன்மாக்களை மலம் பொருந்தினது எப்படியென்னில், சமுத்திரமும் சலமும் உப்பும்போல. உம் : நெஞ்சுவிடுதூதில் (8) ‘படநாகம் பூண்ட பரமன் பசுவி, னிடமாய் நிறைந்த இறைவன்’ என்றும், சித்தியாரில் *(7.1) ‘அனைத்துஞ்சத் தென்னி னொன்றை’ யென்றும், (7.3) ‘சுத்தமெய்ஞ் ஞானமேனிச் சோதிபா’ லென்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. கோபுர வாசற் கொடி அந்தக் கர்த்தாவே கர்ண பரம்பரையாக அநுக்கிரகம் பண்ணி யறிகிறதென்பது கருத்து.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்கா துணர்வரிய தம்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்கும் அருள்நல்கக் கொடி.

பொழிப்புரை :

வாக்காலும் ... தன்மையனை வாக்கு மனங்களாலும் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற் கரிதாகிய தன்மை யுடையவனை ; நோக்கி விசாரித்துப் பார்த்து ; பிறித்து பகுக்கு மிடத்து ; அறிவு ... கொடி அறிவுக்கறிவா யிருக்கிறதைப் பிரியாமற் குறித்து அருள் பொருந்தத்தக்கதாகக் கொடி கட்டினேன்.
வாக்கு மனங்களுக்கும் எட்டாமல் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற்கரிதாகிய அறிவுக்கறிவாயிருக்கிற பொருளை இவனிடத்திலே பொருந்தத் தக்கதாகக் கொடி கட்டினேன்.
மனம் வாக்குக் காயங்களினாலே ஒருகாலுந் தாக்கா தவனென்றும் ஆன்மபோதத்தா லறியப்படாதவனென்றும் சொன்னதற்கு உம் : சித்தியாரில் (பாயி. 4) ‘மறையினா லயனால் மாலால் ... கூறொணா தாகி நின்ற விறைவனா’ ரென்றும், சிவப்பிரகாசத்தில் (84) ‘பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும், ஈசனை யறிய வொண்ணா’ என்றும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. விசாரித்துப் பார்க்குமிடத்தில் என்றது இப்படி மனம் வாக்குக் காயங்களுக்கும் ஆன்மபோதத்துக்கும் எட்டாத சிவனை ஆசாரியர் தீடிக்ஷக்கிரமங்களினாலே மலமாயாதி கன்மங்களைப் போக்க பசு கரணங்களைச் சிவகரணமாக்கி மலத்திலே பற்றாக இருந்த அறிவைத் திருப்பி அருளிலே பற்றாக்கி என்றதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (90) ‘பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம், நீத்தான் நினைவுவே றாக்கினான்’ என்பது கண்டுகொள்க. அறிவு தம்மிற் பிரியாமை தானே குறிக்கும் என்றது இப்படி மலங்களைப் போக்கி அறிவை அருளினாலே திருப்பின ஆசாரியர் அனுக்கிரகத்தினாலே ஞாதுரு ஞான ஞேயங்களாகிய சங்கற்பனை ஞானங்களிலே போகாமல் தன்னிடத்திலே உயிர்க்குயிராய் அநாதியே தோன்றாமற் பொருந்தியிருக்கிற திருவருளிலே அறிவு தாரகமாக நிறுத்தி என்றதற்கு உம் : சித்தியாரில் (11.2) ‘ஞாதுரு ஞான ஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனை ஞான மாகுந், திருஞான மிவையெல்லாங் கடந்த சிவ ஞான மாதலாற் சீவன் முத்தர் சிவமேகண் டிருப்பர்’ என்பது கண்டுகொள்க. அருள் நல்கக் கொடி என்றது இப்படி ஆசாரியர் அனுக்கிரகம் பெற்ற அனுட்டானத்தினாலே சிவன் ஆன்மாவைக் கவளீகரித்துக் கொள்ளுவனென்றும் இந்த முறையிலே யல்லாமல் மோக்ஷம் அடையப்படாதென்றும் கொடிகட்டினோ மென்பது கருத்து. அருள் பொருந்து மென்றிருக்கச் சிவன் கவளீகரிப்பனென்று சொல்லுவானே னென்னில், அருளென்றும் சிவமென்றும் வேற்றுமையில்லை யென்றது. ஆன்மாவைச் சிவன் கவளீகரித்ததெப்படி யென்னில், ரசகுளிகை பொன்னைத் தனக்குள்ளே அடக்கிக் கொண்டது போலவும் ; தானாக்கினது எப்படியென்னில், அக்கினி இரும்பைத் தானாக்கினது போலவும் ; சிவன் ஆன்மாவை வசித்து விடாதது எத்தன்மையென்னில், காந்தம் இரும்பை வசித்தால் ஒருகாலும் விடாது அத்தன்மைபோலவும் ; சிவன் ஆன்மாக்களுக்கு மலத்தைப் போக்கித் திருவடியிலே கூட்டினது எப்படியென்னில், அக்கினி காட்டத்தைக் கெடுத்தது போலவும் சூரியன் அந்தகாரத்தைப் போக்கினது போலவும் மலத்தைப் போக்கி உப்பை யணைந்த அப்பைப் போல ஒன்று பட்டுத் திருவடியிலே கலந்திருப்பது. ஆன்மா சிவனைப் பொருந்திச் சிவனாய் நீங்காமலிருக்கிறது எப்படி யென்னில், குளத்திலே கட்டுப்பட்ட தண்ணீர் அணையை முறித்துக்கொண்டு சமுத்திரத்திலே சேர்ந்தபோது அந்தச் சமுத்திர சலமேயாய் அந்தச் சமுத்திரத்தை விட்டு நீங்காத முறைமை போலவும் ஆன்மாச் சிவனைப் பொருந்திச் சிவமேயாய்ச் சிவனைவிட்டு நீங்காமல் சிவனுடைய திருவடியிற் கலந்து கிடக்கிறது இந்த முறைமைத்து. இதற்கு உம் : சித்தியாரில் (11.12) ‘இரும்பைக் ... கலந்தே’ என்றும், சிவஞான போதத்தில் (11.4) ‘மன்னு மிருளை மதிதுரந்த’ என்ற பாடத்திலும், (11.5) ‘நசித்தொன்றி னுள்ளம்’ என்ற பாடத்திலும், (8.7) ‘சிறைசெய்ய நின்ற’ என்ற பாடத்திலும் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.

பொழிப்புரை :

அஞ்செழுத்தும் ... நாலெழுத்தும் சிவாயநம என்கிற அஞ்செழுத்தும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தும், ஓம் நமசிவாய என்கிற ஆறெழுத்தும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தும் ஆன இப்படி உச்சரிக்கிற விதிப்படியே உச்சரித்து ; பிஞ்செழுத்தும் ... நெஞ்சழுத்தி விதிப்படி உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை யறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும் மேலைப் பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் தன்னுடைய இருதயத்திலே வைக்கில் ; பேசும் ... கொடி பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டறக் கூசாமல் அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
பஞ்சாக்கர முதலாகிய மந்திரங்களை உச்சரித்து அதன் பிறகு அந்த மந்திரத்தினுடைய அட்சர சொரூபத்தை அறிந்து சத்தி சிவான்மகமாயிருக்கிற அட்சரத்தை இருதயத்திலே வைத்தால் அந்தச் சத்தி தானே சிவனை இரண்டறக் கலப்பிப்பளென்று பஞ்சாக் கரத்தினாலே மோட்சத்தை அடையும் படிக்குக் கொடி கட்டினேன்.
அஞ்செழுத்தும் ... நெஞ்சழுத்தி பஞ்சாட்சரம் உச்சரிக்கிற முறைமையிலே தூல பஞ்சாட்சரம் சூக்கும பஞ்சாட்சரம் அதிசூக்கும பஞ்சாட்சரம் சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று உச்சரிக்கிற முறைமை நாலுவித முண்டு. அந்த முறைமை உச்சரித்து அந்தப் பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து அது ஏதென்னில், சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை யறிற்து இதிலே ஊன நடனமாகிய நகார மகாரத்திலே சென்று செனன மரணத்திலே போகாமல் ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்திச் சிகார முதலாக உச்சரித்து அப்படி உச்சரிக்கிற முறைமையும் விட்டு வகாரமாகிய ஞானந் தானாக நிற்கவே சிகாரமாகிய ஞேயத்திலே அழுத்துவிக்கும். அது எப்படி யென்னில், சத்தியாகிய வகார மிடமாகச் சிவமாகிய சிகாரத்தி னிடையிலே அழுந்தவே அத்தன்மை யுண்டாக்கும். அதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (93) ‘அஞ்செழுத்தை, யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி யுணர்த்தியதன், வைச்சிருக்கு மந்த வழியாக்கி’ என்றும், சிவப்பிரகாசத்தில் (91) ‘திருவெழுத்தஞ்சில்’ என்ற பாடத்திலும், திருவருட்பயனில் (83) ‘ஊன நடன,’ (89) ‘ஆசினவா’ என்ற குறள்களிலும் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க. ஆனால் பஞ்சாட்சரத்தை உச்சரித்தாற் போதாதோ உச்சரிக்கவும் அதன்மேலே சத்தி சிவான்மகமாகிய எழுத்தினிடத்திலே நிற்கவும் அதன்மேலே மோட்சமுண்டாமென்றது ஏதென்னில், பஞ்சாட்சரத்தை உச்சரித்ததனாலே அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசிக்கும். அதற்கு உம் : சிவஞானபோதச் சூரணையில் (9) ‘பஞ்சாட்சரத்தை விதிப்படி உச்சரிக்க’ என்றது இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானம் வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாதலின் அது நீக்குதற்கெனக் கொள்க. இந்தப் பஞ்சாட்சர உச்சரிப்பிலே விளங்கின ஞானத்திலே நகார மகாரந் திரோதமலமென்றும் யகாரம் ஆன்மபோத மென்றும் மூன்றெழுத்தும் நீங்கி ஞானமேயாய் அந்த ஞானத்தினாலே சிகார வகாரத்தி னிடையிலே நின்றழுந்துகிறது வைச்சிருப்பு. அதற்கு உம் : திருவருட்பயனில் (89) ‘அருளினால் வாசியிடை நிற்க வழக்’ கென்பது கண்டுகொள்க. இப்படி ஞானத்திலே அழுந்துகிறோ மென்கிறதையும் விடவே சிவன்தானே இவனைக் கிரகித்துக் கொண்டும் இவன் செயலெல்லாந் தன் செயலாகவும் இவனுந் தானாகவே நிற்பன். இதற்கு உம் : திருவுந்தியாரில் (6) ‘நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன், தன்செயல் தானேயென் றுந்தீபற, தன்னையே தந்ததென் றுந்தீபற’ ஆக மூன்றுவகையுங் கண்டுகொள்க.

குறிப்புரை :

கொடிக்கவி யுரை முற்றும்
(இங்குப் பதிப்பித்த கொடிக்கவியுரை திருநெல்வேலி திரு. எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரவர்கள் அனுப்பி வைத்த ஏட்டுப் பிரதியிலுள்ளது. இதனை யொப்பு நோக்கற்குத் துணையாயிருந்தன இராசாங்கத்துக் கையெழுத்து நூல் நிலயத்துப் பிரதியும் அதனைப் பெரிதும் ஒத்த சிவஞான போத யந்திர சாலைப் பதிப்பும். இவ்வுரை விளக்கமாயுள்ள விரிந்தவுரை. இதனை யியற்றியவர் பெயர், இயற்றிய காலம் முதலியன விளங்கவில்லை.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை)

பண் :

பாடல் எண் : 1

பூமேவும் உந்திப் புயல்வண்ணன் பொற்பதுமத்
தார்மேவும் மார்பன் சதுமுகத்தோன் - தாம்மேவிப்
பன்றியும் அன்னமுமாய்ப் பாரிடந்தும் வான்பறந்தும்
என்றும் அறியா இயல்பினான் - அன்றியும்
இந்திரனும் வானோரும் ஏனோரும் எப்புவியும்
மந்தர வெற்பும் மறிகடலும் - மந்திரமும்
வேதமும் வேத *முடிவின்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினான் - ஓத
அரியான் எளியான் அளவிறந்து நின்ற 5
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா
அருவான் உருவான் அருவுருவ மல்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாய பொய்யினான் - ஐயன்
படநாகம் பூண்ட பரமன் பசுவி
னிடமாய் நிறைந்த இறைவன் - சுடரொளியான்
என்றுமுளன் அன்றளவும் யானும் உளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்றுசென்று
தோற்றியிடும் அண்டசஞ் சுவேதசங்கள் பாரின்மேற் 10
சாற்றும்உற் பீசஞ் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்தும் இறந்தும் இருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறிவு பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று * குடிப்பழியே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி இடையும் மனந்தனக்கும் - நாடிஅது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் 15
ஆன திறலார் அகந்தைக்கும் - மேனி
அயர அயர அழிய அழியும்
உயிரின் துயரம் உரையேன் - வயிரமே
கொண்டதொரு காமனுக்குங் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்குந் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்கள் ஐந்துக்குஞ் சிந்தைகவர்
மூன்றுகுற்றம் மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
ஏன்றுநின்று செய்யும் இருவினைக்குந் - தோன்றாத
வாயுஒரு பத்துக்கும் மாறாத வல்வினையே 20
யாய கிளைக்கும் அருநிதிக்கும் - நேயமாம்
இச்சை கிரியை யிவைதரித்தங் கெண்ணிலா
அச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி
வாரில்அகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை ஒழிய உறவில்லை என்னுமது
தன்னை அறிவை தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவ ரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவர்உரைத்த 25
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும்
ஆவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமற்
பாவமெனும் பௌவப் பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்(கு)
உண்மை நிலையுணர்ச்சி ஓராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோறுஞ்
சாவிற் பிறப்பில் தலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல்அரணம் 30
செந்தழலில் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
ஆதி யமலன் நிமலனருட் - போத
அறிவி லறிவை அறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவன் - நெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியில்
ஒளியில் ஒளியில் ஒளியன் - ஒளியில்
அளியில் அளியில் அளியன் அளியில்
அளவில் அளவில் அளவன் - அளவிறந்து
நின்றான் அனைத்தும் நிறைந்தான் நினைப்பவர்பாற் 35
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா
விளக்காய் நிறைந்த விரிசுடரான் மண்மேல்
துளக்காமல் நின்றபெருஞ் சோதி - உளக்கண்ணுக்
கல்லாது தோன்றா அமலன் அகிலமெலாம்
நில்லாமல் நின்ற நிலையினான் - சொல்ஆரும்
ஈசன் பெருமை இருவினையேன் இன்றுனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்
பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோன் - இலகவே
செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து 40
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையங்
களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லாம் அழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே எங்கும் முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரும் ஆகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்(கு)
ஓடுபல் பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாஅகற்றி - நையும்இயல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவும் 45
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய
பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கும்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்திவிழ
மோதி அருணீர்மை ஓங்கிவிறல் முக்குணமுங்
காதி உரோமமெலாங் கைகலந்து - சீதப்
புளகம் அரும்பப் புலன்மயக்கம் போக்கி
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன
மாதர் மயக்கம் அறுத்துவளர் மண்டலத்துச்
சோதியொரு மூன்றினையுஞ் சோதித்து - நீதியினால்
ஆதாரம் ஆறினுஞ்சென் றாறிஅடல் வாயுக்கள் 50
மீதான பத்தும் மிகப்பரந்து - காதிப்
பிருதிவியப் புத்தேயு வாயுஆ காய
உறுதி நிலமைந்தும் ஓடி - மறுவிலா
நான்முகன்மால் ஈசன் மகேசன் நலஞ்சிறந்த
தான்முகம் ஐந்தாஞ் சதாசிவமும் - ஆனதொரு
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரும்
அவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்டம் உள்ளடக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்திட் - டெவ்வறிவுந்
தானாய வீடளித்துத் தன்னிற் பிறிவிலா 55
ஊனாகி எவ்வுயிர்க்கும் உள்புகுந்து - மேனியிலா
அஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தான்அந்தம் இல்லாத தண்ணளியால் ஓங்கிவரும்
ஆனந்தம் என்பதோர் ஆறுடையான் - ஆனந்தம்
பண்ணும் பயன்சுருதி ஆகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண அரியதொரு நாடுடையான் - எண்ணெண்
கலையால் உணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால் 60
ஓட்டற்று வீற்றிருக்கும் ஊருடையான் - நாட்டத்தால்
தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்(து)
உண்ணீர்மை யெய்த உரோமமெலாம் - நண்ணும்
புளகம் புனைமெய் யர்பொய் யிற்கூடாமல்
உளகம்பங் கொண்டுள் உருகி - அளவிலா
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கஅருள்
மேலாய் விளங்கலங்கல் மெய்யினான் - தோலாத
வானம் புவனம் மலைகடல்ஏழ் பாதாளம்
ஊன்ஐந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமாய்
எல்லாமாய் அல்லவாய் எண்ணுவார் எண்ணத்து 65
நில்லாமல் நிற்கும்நீள் வாசியான் - சொல்ஆரும்
பாதாளம் ஊடுருவிப் பாரேழும் விண்ணேழும்
ஆதார மாகி அகண்டம்நிறைந் - தோத
அரிதாய் எளிதாய் அருமறையா றங்கத்
துருவாய் உயிராய் உணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - ஐயமுறுங்
காமக் * குரோதலோப மோகமதங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் தலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டறுத்துத் 70
தத்தம் பயங்கொலைகள் ஆங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படஅடித்துப் பாவையர்தம்
ஆசைக் கருத்தை அறவீசி - நேசத்தால்
ஆனவே கங்கொண் டருள்மும் மதத்தினால்
ஊனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டால்
மருவித் திகழ்ஞான ஆனையான் - இருமுச்
சமையங் கடந்து தனக்கொப் பிலாது
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி 75
இம்மை மறுமை இரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை ஓடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையும் அங்கே யுறஅமைத்துத் - தேயுவால்
என்றும் ஒரு தகைமை யாயிருக்கும் இன்பருளே
நின்று முழங்கும் நெடுமுரசோன் - அன்றியும்
மாலும் அயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலும்அதற் கப்பாலும் எப்பாலும் - மேலை
யுலகும் உலகால் உணரவொண்ணா ஊரும்
இலகி நடக்கும்எழில் ஆணையான் - அலகிறந்த
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான 80
ஆட்சியான் ஆட்சிக்கும் ஆயினான் - சூட்சியான்
பாருந் திசையும் படரொளியா லேநிறைந்தான்
தூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்கள் தானாகிச் - சுத்த
வெறுவெளியாய் பாழாய் வெறும்பாழுக் கப்பால்
உறுபொருளாய் நின்ற ஒருவன் - பொறியிலியேன்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் தம்பிரான் - அம்புவியோர்
போற்றுந் திருவடியென் புன்தலைமே லேபொறித்தோன் 85
ஏற்றின் புறத்தமைந்த எங்கோமான் - சாற்றுவார்
சாற்றும் பொருளான் தனிமுதல்வன் தானல்லான்
வேற்றின்பம் இல்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையான்
எட்டுமவர்க் கெட்டா இயல்பினான் - மட்டவிழ்தார்
வானோன் பவனி வரக்கண்டு வல்வினையேன்
ஏனோரும் ஏத்துதல்கண் டேத்தினேன் - தான்என்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம் 90
நீத்தான் நினைவுவே றாக்கினான் - ஏத்தரிய
தொண்ணூற் றறுவர்பயில் தொக்கிற் றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய
அஞ்செழுத்தின் உள்ளீ டறிவித்தான் அஞ்செழுத்தை
நெஞ்சழுத்தி நேய மயலாக்கி - அஞ்செழுத்தை
உச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி அதன் உச்சரிப்பு
வைச்சிருக்கும் அந்த வழியாக்கி - அச்சமறச்
சென்று விளக்கை எழத்தூண்டிச் செஞ்சுடரின் 95
ஒன்றி ஒருவிளக்கின் உள்ளொளியாய் - நின்ற
பெருவிளக்கின் பேரொளியாய் உள்ளே பிரசம்
மருவும் மலர்போல் மதித்தங் - கருவினுருக்
கொள்ளா அருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா இடத்தே இளைப்பாற்றி - விள்ளாத
உள்ளம் முதலாக உள்ளதெலாம் வாங்கஅருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ளம்
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லாம்
இறப்பித்தான் என்பிறவி ஈர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கும் எழுதா இயற்குணங்க 100
ளெட்டானை ஆற்றா எழுத்தினான் - மட்டாரும்
பாடலார் ஆடலார் பண்பலார் நண்பலார்
ஆடலா ராடல் அகன்பதியாம் - கூடலார்
காணக் கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர்க் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த உருவான் திருமாலுக் கெட்டான்
நிறைந்த திருவுருவில் நிற்போன் - கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்டமெனு
மாறு கருணையினால் மாற்றினான் - நீறணிந்த
மெய்யன் நிமலன் அமலன்அருள் வீடளிக்கும் 105
ஐயன் அறிவுக்கறி வாயினான் - பொய்யர்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தம் நெஞ்சத்து
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவன்
அத்தன்பால் நீசென் றடையும் இடத்தையெலாஞ்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி
ஆசைதனிற் பட்டின்ப ஆர்கலிக்குள் - நேசமுற
நின்று திளைக்கும் இதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கும் அதுமுத்தி - யன்றென்(று)
இலகா இருளலகை போல்இகலே பேசும் 110
உலகா யதன்பால் உறாதே - பலகாலும்
தாம்பிரமங் கண்டவர்போல் தம்மைக்கண் டாங்கதுவே
நான்பிரமம் என்பவர்பால் நண்ணாதே - ஊன்தனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல என்றுகுறித்(து)
என்றும்அற மேதெய்வம் என்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொல்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போல் மன்னுடம்பில் மன்னும்உரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தான்அகற்றி - ஆழ்விக்கும்
அஞ்சும் அகற்றும் அதுமுத்தி என்றுரைக்கும் 115
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை
ஆதிமறை ஓதி அதன்பயன்ஒன் றும்அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே - ஆதியின்மேல்
உற்றதிரு நீறுஞ் சிவாலயமும் உள்ளத்துச்
செற்ற புலையர்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசைஅருள் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
அழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரைப் பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை ஆண்டருளுஞ் சம்பந்த மாமுனிவன் 120
அந்தங் கடந்தப்பா லாய்நின்றோன் - எந்தைபிரான்
வீற்றிருக்கும் ஓலக்கம் எய்திஅடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - ஆர்த்தகரி
அன்றுரித்தாய் நின்பவனி ஆதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன் அம்புபட வீழ்வரோ - நின்றிடத்து
நில்லாத செல்வம் நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகிற் புகுவரோ - பல்லோரும்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகால் திகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்பம் 125
மருவி மயங்கி வருவரோ - இருபொழுதும்
நாள்இருபத் தேழும் நவக்கிரக மும்நலியுங்
கோள்இதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
எரித்த விழியாய்நின் இன்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீராய் எனஉரைத்துச் செங்கமலப் பூந்திருத்தாள்
தாராய் எனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - ஏர்ஆரும்
பூங்கொன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
ஈங்கொன்ற வாராய் இனி.

பொழிப்புரை :

1-2. பூமேவும் இயல்பினான் :
(உரை) அழகிய உதரத் திலஞ்சியிலே பிரமா உதிப்பதற் கிடமாகிய தாமரைப் பூவையும் மேகநிறமாகிய திருமேனியையுமுடைய திருமாலும், ஸ்வர்ண நிறத்தையுடைய தாமரை மாலை நீங்காப் புயத்தையும் நான்கு திருமுகத்தையுமுடைய பிரமாவும், இவர்களிருவரும் இகலாற் பொருந்தி விஷ்ணு வராகரூபமாகியும் பிரமா ஓதிமமாகிய பக்ஷிரூபமாகியும் நிரைநிரையே பூமியை யிடந்து சப்தபாதாளங் களையுங் கீண்டு திருவடியைச் சோதித்துக் காணாத திருவடியும் சப்தலோகங்களினும் பறந்துதேடிக் காணாத திருமுடியும், இவர்கள் சங்கற்பத்தினாற் காண்பா மென்கையால் எக்காலத்திலும் அவர்களுக் கறியப்படாத இயல்பினை யுடையவன்.
பொற்பமைந்த, நாமேவு மாதுபுணர் நான் முகத்தோன் பாட பேதம்.
(இதற்குப் பிரமாணம்) “தேட்டற்று நின்றவிடஞ் சிவமாம்” (திருக்களிற்றுப் படியார், 29) என்பதறிக.
2-8. அன்றியும் சுடரொளியான் :
(உரை) இருதொழிற் கடவுளராகிய இவர்களிருவரு மல்லாமல் தேவேந்திரனும், தேவர்களும், அன்றி ஸ்வர்க்க மேலடுக்குக்களிலே பலப்பிராப்திகள் பலவிதத்திலே யிருக்கப்பட்ட பேர்களும், மந்திர சஞ்சாரரும், பூமி முதலாய அதோமுக அடுக்குக்களி லிருக்கப்பட்ட பலவகை யான்மாக்களும், உலகரடிக்ஷ காரணமாக ஒப்பற்ற ஸ்வர்ண மலை ரூபமாகத் தாங்கியிருக்கப்பட்ட மஹோமேருவும், ஜலரூபமாகி விரிந்து திரைக்கரங்களையுடைய சமுத்திராதிபரும், சப்தகோடியாய் விரிந்திருக்கப்பட்ட மந்திரமூர்த்திகளும், இருக்கு யஜுஸ் சாமம் அதர்வணமென்று பெயர் பெற்றுச் சப்தரூபமாக விரிந்த வேதாதிபரும், அந்த வேதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயா சத்திகளும் ஓசை வடிவாகிய நாதாதிகளும், முந்த இந்த நிலைமைகள் தாமே கதியென்றும் கடவுளென்றும் பற்றிநிற்கிற ஆன்மகோடிகளுங் காணப்படாததே குணமாகவுடையவன். சொல்லிறந்தவிடத்துத் தோன்றலானாகையால் வாக்குகளாலே யெட்டாதவன். போதருதற்குச் சற்றும் பிரயாசமில்லாத காட்சியான். தர்க்கங்களினாலே அளந்தறிதற் களவுபடாப் பெருமையினாலே தர்க்க நிர்ணயங்கடந்த பெருமையான். அணுவுக்குத்தான் அணுவாய் நுணங்குவனாதலாற் சிறுமையையுடையவன். இப்படிப் பெரிதுஞ் சிறிதுமுடைய பெற்றியனாயினும் பிரத்தியக்ஷத்திற் காணும்படி அடியவர்க்குத் தனது காருண்ய சத்தியை வாமபாகத்திலுடையவன். வாயுப்போல ஆகாயம் போலத் தோன்றாத அருவமே திருமேனியானவன் அன்றியும், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதமாயுள்ள நான்கு பேதத் திருமேனியுமானவன். அசுத்தமாயை, பிரகிருதி மாயை யதிட்டித்துச் சிருஷ்டி நடத்தும் போது மகேசுரர் உருத்திரர் விஷ்ணு பிரமாவென்று நான்கு பேதமாகப் பிரத்தியக்ஷத் திருமேனியை யுடையவன். உத்தியுக்தராய்ச் சதாசிவமூர்த்தமு மல்லாமற் பேரொளியாய் விளங்குந் திருவுருவத்தையு முடையவன்; அன்றியும் இப்படிப்பட்ட திருமேனியையுங் கடந்தவ னென்றுமாம். நித்தமுத்த சுத்தனாகையாற் சாதலாயது எக்காலமு மில்லாதவன்; அன்றியும் ஒன்றைத் தனக்குச் சுட்டியறிய வேண்டும் பகுதியில்லாதவன். அப்படிப்பட்டவனாயினும், பிறந்திறந்து திரிகிற ஆன்மகோடிகளி னுயிர்க்கு உயிரானவன்; அன்றியும் தன்னை நினைக்குமவ ருள்ளம் நீங்காதவன். தனதிடத்து ஆராமை பூண்ட சத்தியர்க்குச் சத்திய தரிசனனானவன். சரியை கிரியை யோகமென்னுந் தந்திரத்து நின்றவர்களுக்கு ஸ்வதந்தரந் தானாய் நின்றவன். சாருவாகன் புத்தன் முதலாய திரிபதார்த்த நிர்ணயமில்லாத அசத்தியர்க்கெல்லாம் அசத்தியனாயுள்ளவன்; அன்றியும் நாஸ்திவிரத்திகளுக்கும் இல்லாமையாகவே யானவன். எப்படிப் பட்ட ஆன்மாக்களுக்கும் பிதாவானவன். தாருகாவனத்து அவிசார ஓமத்துண்டாய்ச் சங்கரிக்க இருடிகளேவலால் வரப்பட்ட பெரும்பாம்பைத் தானே தனக்கு ஆபரணமாகத் தரித்த எல்லாவற்றிற்கும் மேலானவன். ஆன்மாக்கள் எண்ணிறந்திருந்தாலுந் தானொருவனேயாயினும் ஆன்மகோடிகளுள்ள மட்டும் பூரணனாகிலும் ஓவாது மேலாய்க் கர்த்தனாகப் பட்டவன். சோமசூரியாக்கினி முதற் பலவாகிய பிரகாசத்துக் கெல்லாம் ஒளியைக் கொடா நின்றவன்.முடிவும்விளை பாட பேதம்.
9-16. என்றுமுளன் உரையேன் :
(உரை) இப்படிப்பட்ட சிவனானவன் ஆதியாகத் தோன்றாது நித்தனாக இருக்கப்பட்டவன்றே அவனைப்போல அனாதியாய் யானும் நித்தனாகிலும், அவனைப்போல் அனாதிமலரகிதனாகாத படியாலே அனாதியே அவனுடனே கலந்திருந்துஞ் சலிப்பற நில்லாமல் மலனாகையால் ஏகதேசப்பட்டுச் சிருஷ்டிகள் தோறுங் கர்த்தாவாலே யுண்டாக்கப்பட்ட தோற்றம் நால்வகையாய் அதிலமைந்த பிறப்புத் தாபரம் ஊர்வன தேவர் நீர்வாழ்வன பறவைகள் நாற்காலிகள் மானுடர் உட்பட்ட எழுவகை யெண்பத்து நான்கு நுறாயிரம் யோனிகள் தோறுஞ் ஜனித்தும் மரித்தும், அந்தந்த ஜன்மங்கள்தோறுந் திரிவித கரணங்களால் தரிசிக்கப்பட்ட புண்ய பாவத்தின் பகுதியாகிய பலபதத்தை யுண்டாக்கப்பட்ட தானத்தையுடையேன்; நூலுணர் வில்லாத பாச அறிவால் மிக்குச் சாருவாகன் மதத்தைப் பொருந்துங் கிஞ்சிஞ்ஞவுணர்வனாகி, கோரமாகப் போகுமிடத்துத் தனுவினின்றும் புறப்பட்ட பகழியினது வேகம்போலப் போய், மயக்க மிகுதியாலே தொன்றுதொட்டுப் புண்யபாவத் தாழ்ச்சி யுயர்ச்சியினாலே வரப்பட்ட ஜாதியினது பேதமும் பாராமற் பிறர்மனையால் வருங் குற்றமும் நோக்காமற் பிறனில் விழைந்தும், இந்தப் பூமியினிடத்து நல்லோர்களாலும் நீதி நூல்களாலும் நீக்கப்பட்டுச் சற்றுங் கிருபை யில்லாமற் பண்ணப்பட்ட வதைத் தொழிலும், பிறர் பொருளென்று ஒன்றையும் புத்திபண்ணாது அதற்கான மார்க்கஞ்செய்து அபகரிப்பும், காலம் இடம் வேளை பாராமல் மயக்கமாகிய மாதர் புணர்ச்சி வேட்கையும் இவைகளினிமித்தமாகத் தேசந் திக்கு நாடுகளில் முசிப்பில்லாமல் திரிந்தும், சகல உயிர்ச் செய்தியும் இயற்கையாகக் கண்டு அவைகளை அதற்கேற்றபடி முறை பிறழாது ஊட்டி உறக்கி நடத்திப் பாராமல் நிற்கிற பேரறிவாகியும் அந்தந்த அறிவுக் கீடாக அத்தனுக்கள் அடங்கின திருவருளை நாடாது, தான் பிறவிக்குச் சேரவுமில்லை அப்படிச் செய்தும் வந்ததில்லையென்னும் நினைவு தொழிலினாற் சோம்பி யிடையுங் கருவிகளில் தலைமையாகி மனதுக்கும், மனதாகிய கருவி விளங்காமற் பற்றிய விடயங்களை மறத்தல் பண்ணாது அதற்கேற்றபடி நிச்சயம் பண்ணும் புத்திக்கும், யானென தென்று மேற்செல்லும் வலியினையுடைத்தாய்ப் புந்தியினின்று மூன்றாய ஆங்கார தத்துவத்துக்கும், வாராது நினைத்து நிச்சயித்ததொரு விடயத்தினது குற்றம்பாராது முடித்தலால் அந்த விடயத்திலே வேறொன்றுந் தெரியாமற் படுத்தி நிற்குஞ் சித்தத்துக்கும் இந்தக் கரணங்களுக்குந் தலைமையாய் அதன்வழிக்காய் அவைகள் ஒன்றுசெய்தது ஒன்று செய்யாது மாறுபட்டுத் தனித்தனி செயல்களுக்கெல்லாந் தான் ஏகனாய் நித்தியனாயிருந்து அந்தரங்கத்திற் படும் விதனமுமன்றிப் பிறப்பிற் கருவியாய தனுவின் மூப்பாற் சோர்வுண்டாயபோது அயர்ந்தும் அந்தத் தனுக் கெடும்போது படுந் துயரப்பகுதி முற்றும் படும் ஆன்மாவினது துயரசாகரத்தை யுரைப்பதற்கு வரையறை பண்ண மாட்டேன்.அருவுருவுமில்லான் பாடபேதம்.
16-22. வயிரமே மயங்கினேன் :
(உரை) பதியுள்ளவன்றே தொடங்கி இற்றை வரையும் எடுத்த தனுக்களில் ழைவு முதலாய இன்பத்தை முள்ளிப் பூவினது மதுவெனக் கண்டுங் கேட்டும் ஒழியாது நாடோறும் முற்றிப் பலமுடைய ஆசைப்பற்றுக்கும், சிறிதுஞ் சாந்தியில்லாமல் விரோதமே விளைக்கின்ற கோபனுக்கும், தான் பொருந்திய விடயத்தினது நலம் தீமை காணாது அதுதானாக மயக்குவிக்கும் மோகனுக்கும், மிகுந்த கர்வத்தையுஞ் செய்து பிறர்மாட்டு விரோதங் காட்டாது அனுகூலம் போல இருந்து விரோதத்தை முற்றுவிக்கும் மாச்சரியனுக்கும், மாறுபடாத வல்லமையே வெற்றியாகவுடைய சோத்திரந் தொக்கு சக்ஷசிங்ஙுவை ஆக்கிராணமாகிய ஞானேந்திரியங்களைந்தும் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தமாகிய கன்மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தாகிய இவைகளுக்கும், சத்த பரிச ரூப ரச கந்தமும் வசன கமன தான விசர்க்கம் ஆனந்தமுமான பத்துக்கும், தனுவுள்ள மட்டுங் காரிய காரணங்களாய் அழியாது நின்றுபகரிக்கும் பிருதிவி அப்பு தேயுவாயு ஆகாசமென்னும் பூதமைந்துக்கும், சித்தத்தை நல்வழி சிந்தியாதபடி பற்றிக் கொண்டு நோக்காடு செய்யும் ஆதிதைவிகம் ஆதி பௌதிகம் ஆதியாத்மிகமாகிய துக்கத்திரயங்களுக்கும் அன்றியுங் காமம் வெகுளி மயக்கமுமாமென அறிக சாத்துவிகம் இராசதந் தாமதமாகிய முக்குணங்களுக்கும், முதற்காரணமாகிய ஆணவமும் மாயையும் கன்மமுமாகிய மூன்றுக்கும், கேவல சகல மத்தியமாகிய மூன்றவத்தைகளுக்கும், தனது சுதந்தரமாக வந்த வேளை முறை பிறழாது பொருந்திப் புசிப்பிக்கும் புண்ணிய பாவங்களுக்கும், பிரத்தியக்ஷமல்லாத பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் ஆகப் பத்தாய வாயுகளுக்கும், ஒருகாலும் இதஞ்சொல்லாது பெற்றதினும் அமையாது குறைகளைச் சொல்லி ஆதியே தொன்று தொட்டு வரப்பட்ட மாதா பிதா மாதுலன் முதலாயினோர்க்கும், மிகவும் வருந்தித் தேடப்பட்ட திரவியத்தின் பொருட்டும், அன்புடனே பற்பலவாய இவைகளின் பொருட்டாக இச்சாஞானக் கிரியா சொரூபனாகி, அவ்விடத்துத் தன்னை வினையைத் தலைவனை ஊன்றிப் பாராமல் விஷயாதியின் பொருட்டு அவைகளுக் கேற்ற தொழில் செய்யுமிடத்து எப்படியாமோ என்னுஞ் சங்கையில்லாத பயத்துடனும் அவை முடித்தற் பொருட்டுச் சாருந் தாக்ஷண்யம் இல்லாமையுங் கலனாகத் தரித்து, அரையிலே மஹாநாகத்தைக் கச்சையாகச் சாத்தியருளுஞ் சிவன் அருளிச் செய்த திவ்யாகமங்களினுண்டான வசனத்துவழி ஆதரியாமல், ஒன்று போயவழி ஒன்று போகாமலிருக்க அதனாலே அம்பெடுத்துப் பல்வகையான தத்துவங்களின் சூதாய சூழ்ச்சி வார்க்குத்தியிற் பொருத்தி மருண்டேன்.குடிப்பழுதே பாடபேதம்.
22-29. தேருங்கால் புகலக்கேள் :
(உரை) விசாரிக்குமிடத்து எனக்குச் சகாவாய் யான் படும் பலவாய துயர் நீக்குகைக்கு நீயன்றியிலே ஒருவரு மில்லையென்பதை நீதானே யறிவையே ; அதாவது, எனக்கு விட்டு நீங்காத தானமாக வுடையையாகலின் நீ அறிவையே பாச அறிவு பசு அறிவு போலாது எப்போதும் ஒரு படித்தாய் எல்லா அறிவுக்குந் தான் முதன்மையாய்த் தனக்கொரு சகாவேண்டு மென்பதில்லா ஒப்பற்ற சிவஞானத்தைப் பூர்வத்தில் ‘புறப்பற்றாகிய பொருட்பற்றும் அகப்பற்றாகிய இரண்டுடம் பிற் பற்றும் முற்றத் துறந்தவர்களே சிவஞானம் பெற்றவர்கள். இதில் யாதானு மொன்றிற் சிறிதாயினும் பற்றிருந்ததாயின் அவர்களே ஜனன மரணமாகிய பந்தமுற்றவர்கள்’ என்று தமிழ் நிலையிட்டுச் சங்கப்பலகை யிடங்கொடுத் தேறியிருந்த நாற்பத்தொன்பது பேர்களையும் விழத்தள்ளித் தனக்கு மாத்திரஞ் சங்கப்பலகையாகக் குறுக்கின குறள் வெண்பாவின் சொல்லும் பொருளும் நாவிடங் கொண்ட தெய்விக வித்வானான அழகிய வள்ளுவ நாயனார் ஓதியருளின சத்திய வாசகப் பயனை ஆசையாகப் பாராமல், பஞ்சேந்திரியங்கள் அது அது வேண்டிய விஷயத்திற் செல்வதற் கன்யமாக மாறுபடாமல் அதற்கேற்பப் பொருந்தி அதன் வரம்பு கடவாது நிற்க அதனால் விளைந்த பாவமாகிய நரகசமுத்திரத்திலே தாழக்கரைகாணாத வண்ணம் அமுக்குண்டு, மீண்டு வெளிப்பட்டவிடத்தினும் மெல்லியராகிய மாதர் தம் மான்விழி போன்ற விழிப்பிறழ்வின் பாசப்பிணிப்பினுக்குள்ளாய் அவர்களுடனே கூடுதற்கு வேண்டிய அமருகம் கொக்கோகம் முதலிய நூலின் பயனைப் புத்தி பண்ணி, மெய்யாகிய ஞானத்தைத் தரப்பட்ட நூல்களைப் படித்தறியாமல், அறிவு சிறிதும் புகட்டப்படாமற் சிக்கென்ற நெஞ்சாகையால் நாவாற் கடினமான கற்றுக் கதறியும், தினந்தினம் இந்தப்படி இறக்கிறதும் பிறக்கிறதுமே மேம்பாடாகப் பூண்டு திரியும், இப்படி இன்னதுவன்றியிலே சரிக்கும் ஆன்மாவாகிய நான் அசைவற ஒன்றினும் படாமலிருக்கும் நிலைக்கான உபாயஞ் சிந்தியாய், நீயே நானே யென்று பேதமில்லாத சத்தியாகிய மனமே ! அதற்கு வகையாவது எப்படியாமென்று கேட்பாயாகில், உனக்கு நன்றாய் அழகுறத் தெரியும்படி நான் சொல்லுகிறேன் கேள்.
29-38. வெற்பின்மிசை பேணிக்கேள் :
(உரை) தென்றிசை புனிதமாகவும் தேவர்கள் இருடிகள் பொருட்டாகவும் திவ்யமான திருமேனியாக உமையுடனே வெள்ளி மயமாகிய கைலாய மலையினுச்சியிலே எழுந்தருளியிருக்குந் தகுதியை யுடையவன். அதுவன்றியிலும் தங்கள் தவ மிகுதியின் கர்வத்தாலுங் கோட்டைவலியின் பலத்தாலுந் தேவர்கள் இருடிகள் ஒருவரும் எண்ணிக்கையில்லாதது போல அவர்களுட னொப்பாக நினைந்திருந்த முப்புராதிகளும் அவர்களுடைய கோட்டையுஞ் சிவந்த அக்னி சமுத்ரத்தினாலே காணாமற் போம்படி கோபாக்னியாகிய சிறு நகை செய்தருளின ஸ்வாமி. அப்படிப் பிரத்யக்ஷமான திருமேனியாயினும் சர்வ சப்தங்களையுந் தனக்குள்ளே யடக்கி முடிவில்லாமல் நிற்கும் வேதத்தின் தாற்பரியத்தின் பொருளுக்குத் தொனியர்த்தமான அறிவானது. முதலே மலமில்லாத நின்மலனாயினுங் கிருபையானவன். எல்லா அறிவுக்கும் மேலான ஞானமும் அதற்குத் தலைமையுந் தரிசித்த ஞானானந்திகள் திருமேனிகள் திருமேனியே தனது திருமேனியாகவுடைய இயற்கையன். பிருதிவி ஈறாக அடைவே தரப்பட்ட ஆகாச வெளிக்கும் வெளியாகிய பிரகிருதி வெளி அதற்குக் காரணமாகிய கலையான வெளியிலே நிலையானவன். அந்தக் கலாதத்துவத்திலிருந்தும் அதில் தோய்விலாதவன். அந்தக் கலைக்கு மேலாகிய ஒளியான அசுத்தமாயையொளி அதற்கு மேலாகிய சுத்தவித்தை யொளி அந்தச் சுத்தவித்தை யொளிக்கு மேலாகிய விந்துவாகிய வொளியிலிருந்து சகலமும் உண்டாக்கப்பட்டவன். அந்த விந்துவுக்கு மேலாய் அனுக்ரகமே தொழிலான சதாசிவனுக்கு மேலாய்க் கிருபை தானான பராசத்தி அந்தப் பராசத்திக்குக் காரணமாய பரமசிவம். அப்படிக் கிருபையனாயினும் காண்டல் கருதல் உரையென்னும் அளவளந்த அறிஞரளவிற்கு அளவானவன். ஆகிலும் அறிஞர் அளந்தறிந்ததில் அமிழ்ந்தாது அவ்விடத்து விரகு பிறக்கிற் சற்றுந் தோற்றாதாய் நீங்குஞ் சத்தியுடையவன். அளவையினாலே அளப்பதற்கும் அளப்பரிதாய நிலையையுடைத்தாய் ஜடசித்தாகிய எல்லாம் பூரணமாகி இப்படி ஒருபொருள் உண்டென்று நிச்சயிக்கப்பட்டவர்கள் மனதிலே புதிதாகத் தோன்றப் பட்டவனாகிலும் ஆன்மபோதத்தால் அறியப்படாதவன். ஒருகாலத்து ஓரிடத்து விளங்கியும் ஓரிடத்து ஓர்கால் நந்தியும் வாராது ஒருபடித்தாய் அசைவற்ற சீர்த்தியாய் இருளறுக்கும் விளக்குப்போல ஆன்மாக்கள் மலவிருள் இரிக்கைக்கு விளக்காய் ஏகதேசப் படாமற் சர்வான்மாக்களிடத்தும் நிரம்பி மேன்மேற் பிரகாசிக்கப்பட்ட தேஜசாய்ப் பூமியின்க ணன்றியிலுஞ் சர்வ தேவர்களுக்குந் தேவனாகச் சலனமற்று ஒளியாய் வழங்குவதற் கெல்லாந் தான் ஒளி கொடுப்பதாய்ப் பெருமையுடைய பிரபை. தற்றெரிசனிகள் அறிவின் கண்ணே தோன்றுவதன்றிக் கடபடாதிகள் போல ஊனக் கண்களுக்குக் காணப்படாதவன். அனாதி மலமில்லாதவன். அண்டங்கள் புவனங்கள் யாவையினும் அதன்கண் வாழுந் தாபரசங்கமங்கள்மாட்டுந் தோன்றாத் துணையாய் நிற்பதுதானே நிலைமையானவன். கன்ம மலம் மாயாமலம் இரண்டும் நீங்கின அஞ்ஞான ஆன்மாக்கள் எண்ணிறந்தபடியாக வேதாகமங்களாலே திருவுளம் பற்றப்பட்ட புகழையுடைய சிவனது சரித்திரத்தைப் புண்ணிய பாவப் பகுதியாகிய கன்மமல மாயாமல பந்தனாகிய யானும் இப்போதும் என்னாலியன்ற மரியாதை உனக்கின்னும் ஒருவகைத் தகுதிப்படச் சொல்லுகிறேன். அதை நன்றாகப் புத்தி பண்ணிக் கேட்பாயாக.
38-39. பாசம் குன்றோன் :
(உரை) காமியம் மாயை ஆணவமென்னு மும்மலத்தின் காரிய காரணங்களை யறிந்து நீங்கின உபசாரத்துடன் சிவஞான சம்பந்தரான ஆன்மாக்கள் இருதயமான பொதுவெளியிலே விளங்கி நின்ற குணமான மலையான் ; இதுவன்றி, எண்ணிறந்த படித்தாகும் பிணிப்பை யுடைய ஐவகைச் சத்திகளினது வியாத்தி வியாபகங்களுக்கப்பாலாகியும் அதனுட் கட்டுற்று இலக்கமிலவாய உயிர்க ளிவைக் கந்தரம் போற் றலையளிசெய்யும் பேரறிவா யதுவே பொருந்தும் தில்லைப் பொதுவில் யாவருங் கண்டு மகிழ்வுண்டாக நட்டம் பயில்வனவே குணமான மலையென்றுமாமென்க.விண்மேல் பாட பேதம்.
39-57. இலகவே ஆறுடையான் :
(உரை) விளங்கச் செய்யப்பட்ட சிவபுண்ணியமான மலையிலே யிறங்கி, அபரஞானத்தின் தலைமைகண்டவரது கூர்ந்த அறிவுக்குப் பிரயோசனமாகி யேத்தும்படிக்குச் சந்தோஷத்துடனே வேகமுடைத்தாய், ஒன்றை யொன்றாகத் திரியக் காணுதலையும் அங்குத் தோன்றுபுத் தோன்றுமாக நினைக்குதலையும் அச்சப்படுதலையும் ஆசைப்பற்றையும் பிறவுயிர் வதையையும் அகங்காரத்தையும் முறுக்கி, சத்தி அனந்தமான புண்ணிய பாவங்களையெல்லாங் கெடுத்து, களிப்புடனே ஜடசித்துக்கள் முற்றும் இயல்பாய் நாதமுழக்கஞ் செய்து வேகத்தினாலே நடந்து ஞானத்தின் பகுதியாய்த் திவ்யாகமங்களில் நன்றாய் அறிவாய்ச் சென்று, ஆணவம் மாயை காமியமென்று விரிந்திருண்ட காட்டு விருத்தி நாசமாம்படி அதற்குக் காரணமாகிய கிழங்கைப் பிடுங்கி, சர்வமுமாய்ச் சகல சத்தங்களுஞ் சகல சத்தத்தின் பொருள்களும் உண்டாக்கியறிகையால் அதுவெல்லாந் தனக்குக் கீழாகையாலும் அதனளவில் அளவுபடாமையாலுங் கல்வியினது வரம்பையும் உடைத்து, பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயமென்னும் ஐந்து பூதமும் ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்றென்னும் அதன் ஜடப் பிரஞ்ஞைக் குணங்களின் விரிவையும் போக்கி, அநித்யமான ஊரும் பேரும் குடிமையும் அழகும் பெரியனென்னுங் கீர்த்தியும் நிறுத்தப்பட்ட ஆன்மாக்கள் சரீரத்தில் நிற்கும் பரிசத்தினது தன்மையும் வாயினிடமாக நின்ற சிங்ஙுவையின் தன்மையும் நேத்திரத்தினிடமாய் நின்ற ரூபத்தினது தன்மையும் துண்டத்தினிடமாக நின்ற ஆக்ராணத்தினது தன்மையும் கர்ணத்தினிடமாக நின்ற சோத்ரத்தினது தன்மையும் இப்படிப் பலவாய தன்மையாய்ச் சிங்கம் போன்று ஐந்து வாயினானும் விழைவை விரும்பும் ஞானேந்திரியங்களாற் பற்றும் ஆசையைப் போக்கி, தன்னைப் பெருமைக்காகாது கீழப்படுத்துவிக்கு மியல்பினை யுடைத்தாகிக் கடின பாடணமாகச் சொல்லினின் விளக்கும் வாக்கையும் பாவவேதுவான காரியத்திலே செல்லக் கால் நின்று கமனிக்கும் பாதத்தையும் கியாதிலாப் பூச்சியங்களைத் தழுவாத புண்ணியத்திற் செய்யாது ஆர்வங் கண்ணோட்டமாகிய பசுத் தர்மத்திலே யிடுதலும் இது ஏற்கவொண்ணாதென்று விசாரியாமல் ஏற்குங் கையினின்று செய்யும் பாணியினையும் உதரத்தினின்று ஜலத்தையுங் கட்டத்தையும் வேறுவேறுபடுத்தும் பாயுருவையும் விடயானந்தத்தை இருவகையான கோசபவக் குறியினின்று விளைக்கும் உபத்தத்தையும் இப்படிப் பலபேதப்பட்ட கன்மேந்திரியங்களைந்தையும் விடுவித்துத் தான் நெருங்கி அந்தத் தானங்களெல்லாம் நிரம்புவித்து, என்றும் நீக்கப்படாத சங்கற்ப விகற்பமாகிய பொழிற் செறிவை வெளியாக உருவியும் நிறைந்தோடி, நான்கு நான்கு பேதமாக ஆட்டுக்காணும் அந்தக்கரணங்களினுடைய தற்குணங்கெடத் தாக்கி, பற்பலவாகச் செய்யுந் தத்துவங்களின் சேட்டையை நிறுத்தி யாவுஞ் சிவஞானத்தின் தன்மையேயாகிப் பெருக வளரப்பண்ணி, சாத்விகம் ராசதம் தாமதமென்னும் பெயரினையுடைய குணத்ரயங்களின் செயல் பதி மாறிமாறிவரும் மிகுவெற்றியையெல்லாந் தனது ஒருபடித்தாய இன்பநிறையாற் கோபித்து, உடல் முழுவ துள்ளும் நிரம்பி மிகுதியாற் புறம்பு புக்கோடி மூன்றரைக்கோடி யுரோமவழி யெல்லாஞ் சுகம்பிறந்து மயிர்கள் சிலிர்ப்ப மாயாதனுவின் நித்யகுணமான தாபசோபமும் அனாதி ஜனனமரண அழலிக்கையும் நீக்கித் தட்பமுடையவாய பெருஞ்சுகம் விளையப் புலன்களைந்தின் சிறுதொழிலான் மருட்டுவழிச் சார்தல் அறப்பண்ணி, அண்டத்துந் தனு கரணங்களுக்குக் காரணமாகிய வினைகள் நிரம்பிய சந்திரமுதற் கலையீறா அறுவகை நிலங்களும் அடங்கச்சென்று பாய்ந்து, பசுங்கூட்டாகிய சந்தனங்களினாற் பொதிந்து நெருங்கிய கொங்கைகளையுடைய அங்கனையார்கள் செய்யுங் கோலக்கோட்டிகளால் விழைவுற்றுச் செல்லும் அறியாமையை நீக்கி, அண்டத்தும் பிண்டத்தும் எழுதல் இயல்பாகி வாதனையுடைய அக்னிமண்டலம் ஆதித்தமண்டலஞ் சந்த்ரமண்டலமாகிய முச்சுடர்களுந் தனது காருண்ய ஆணைப்படியே சர்வத்துக்கும் பொதுவாய் நடுவுநிலைமையாயே நில்லாது அதிகார மலத்தால் விகாரப்படாமல் பார்த்து நிறுத்தி, மூலாதாரஞ் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆஞ்ஞையென்னும் ஆதாரத்தினடைவே முற்றும் நிறைந்து, ஒன்றோடொன்று மாறுபட்டுப் பொருதல் புரியும் பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயனென்னு மேலாய மாருதமும் அண்டத்துக் காரணவாயுப் பத்தும் விளங்க மேற்கொண்டோடி மேலடாது கோபித்து, தேகத்தின் காரியமாய்ப் பஞ்சபூதத்தின் காரணமாகிய அண்டத்து அதோமுகமாய் நீடுநிற்கும் ஐவிதமான பூதத்தானங்கள் கலைகளெங்கும் பரந்துநின்று, அண்டத்தும் பிண்டத்தும் உற்பவநாச குற்றந்தீரா ஆன்மாக்கள் போலாது கடவுளாகி நிராதார அதிட்டிதமாகி நிவர்த்திகலை யதிபரான பிரம சிருஷ்டியையும் பிரதிட்டாகலையினின்று திதிபெற்றுச் செய்யும் விஷ்ணுவின் திதியையும் வித்தியாகலையினிருந்து சங்காரத்தைச் செய்யும் உருத்திரமூர்த்தி சங்காரத்தையும் சாந்திகலையினிலையாகித் திரோபவத்தைப் பண்ணும் மஹேசுரர் மறைப்புச் செய்தலையும் ஆகாயபூத வியாபகவந்தமான சாந்தியாதீதகலைக்குக் காரணராகி அனுக்கிரகத்தை ஐவகை நிறமுடைய முகங்களாற் புரியுஞ் சதாசிவ மூர்த்தி யனுக்கிரகத்தையும் இந்தக் கலைகளும் இந்தச் சதாசிவ மூர்த்திகளுந் தனுகரண முதலியவையாகக் காரணமான சுத்தமாயையின் அதோமுகமான விந்துவான பராசத்தியையும் அந்தச் சுத்த மாயையில் ஊர்த்துவமுகமாய் ஓசைவடிவாகிய அபரநாதத்தையும் பிறகிட்டு மேற்சென்று, சுத்தமாயா காரணங்கடந்து நின்மலமாகி, நிராமயமான பரவிந்துவென்னும் பராசத்தியினது முடிவிலா வியாத்தியாகிச் சித்தஞ் செல்லாத சூனியமெங்குங் குறைவர நிரம்பி, அவ்வளவிலும் நில்லாது பரந்து, ஞானபாதங்களில் முதற் பேசப்பட்ட பராசத்தி ஞானத்து மேலாகிப் பூரணமான பரநாதத்தையுந் தனக்குள்ளேயாக மேல் தனதெல்லையளவு செறிந்தோடும் நீர்மையாய்ச் சுத்தப்பேரறிவேயாகி வேறு சந்தேகமில்லாது தீர்ந்து, பாதாளசத்தி தொடங்கிப் பரந்த வியாபகமும் பலவாய சத்திகளுமன்றி ஜடசித்தாகிய எல்லாப் பொருள்களின் ஞானங்களும் தன்னதேயாகியவாயினுஞ் சேர்ந்த உயிர்களுக்குச் சுத்த முத்தியுங் கொடுத்துத் தனக்கு அபின்னமான நிரதிகாரத்துக்குத் தான் திருமேனியாயிருந்தாலும் மூவகையுமல்லாத உயிர்களுக் குயிராய் நிற்குந் தன்மையுங் குன்றாதுமாகி, கண்டிக்கப்படாததாய்ச் சர்வமும் நிரம்பித் தூலசூக்குமமான இருவகையிற் சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகங்களாய ஐந்தவதரமும் இல்லாததாகிப் பரமாய் நிர்மலமாய் நித்தமாய் ஒன்றாய்ச் சருவப் பிராணிகளுக்கும் அறிவாகி அசலமாகிப் போதங்களாற் செப்பவரிதாய்த் தற்சிவமாகிய மிகுந்த ஒளியே தனக்குக் காரணமாய்க் கதியாக அதனுடன் இரண்டறப் போய்ப் புக்கு இதுவன்றியுஞ் சுத்தாவத்தையி லுண்டாகிய பஞ்சபேதமான அவத்தையுங் கடந்த பேரொளியே கதியாகச் சென்று பாய்ந்தெனவுமாம். , சொல்லிப் போந்தவை யாவுஞ் செய்யுமிடத்துச் சர்வப் பிராணிகளுக்கும் தத்தம் வினையால் வேறுபாடு காண்டலல்லது தான் செய்தால் பக்கஞ் சார்தலின்றி முடிவும் முதலென்பதும் இலவாகிச் சகல உயிர்களையுந் தனதியல்பில் நிறுத்துமென்னும் நினைவாய் அளவிறந்த காருண்யந் தானே மேன்மேலும் வளர்கின்ற மிகுமின்ப சுகந்தானே தசாங்கப் பொருளுக்கு ஆறாய பகுதியுடைவன்.மோதி யலைக்கும் அருணீர்மை முக்குணமும் பாடபேதம். 57-58. ஆனந்தம் நாடுடையான் :
(உரை) அருளாய் அடைந்த ஆன்மாக்களுக்குஞ் சுகசொரூபமே செய்வதற்குக் காரணமாகி அருநிலைமை அறிதற்குக் காரணக் கருவியான நான்கு வேதமும் இருபத்தெட்டுத் திவ்வியாகமமுங் களங்கமற ஓதி அதன் தாற்பரியமுடிவை யறியச் செய்த மஹத்துக்களுக்கும் அந்த அறிவாற் பொருந்தப்படாது நுண்ணியதான சிற்சத்தித் தானமே தனக்கும் சுத்தமான நாடாக உடையவன்.திகைப்பொழிந்தங் கெவ்வறிவுக் பாடபேதம்.
58-60. எண்ணெண் ஊருடையான் :
(உரை) விரிந்த அபர ஞானமாகிய அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளினது ஞானங்களை ஆராய்ந்து ஒன்றின் கருத்து ஒன்று சொல்லாது வெவ்வேறு பேதப்பட்டுச் சொல்லுகையாற் பயன் நிலையாமை கண்டு மனமுருகி நொந்து திரிவித கரணங்களும் எப்போதும் பற்றாக ஆசைப்படுஞ் சுத்தமாயா பீடத் திருத்தல் முதலிய கீழுள்ள போகத்தானங்கள் முடிய அநித்யமென்று நீத்து அருளுருவாற் சலிப்பற நின்ற ஆன்மாக்களிடத்திலே அவ்விடத்து உதிக்குஞ் சிவஞான மதுவே தனுவாக ஆன்மசகா விதமாகிய போக்குவரவற்ற பூரணத்துவம் வந்தவிடத்து அழகு செறியும் அனுபூதியாய பகுதிக்கு நாயகன்.
60-63. நாட்டத்தால் மெய்யினான் :
(உரை) என்பதை பொய்யிற் கூடாமற் சிந்தைமயக்கந் தெளிந்து நாட்டத்தால் தெண்ணீர் அருவிவிழ உண்ணீர்மையெய்த வுரோம மெலா நண்ணும் புளகம்புனை மெய்ய ருளகம்பங்கொண் டுள்ளுருகி யளவிலா மாலா யிருக்குமவர் மனத்தை வாங்க அருள் மேலாய் விளங்கலங்கல் மெய்யினான் எனமாறுக. பொருளாவது : மலையினுச்சியி னட்டுத் தெளிந்த நறுநீரானது இடையறாது விழுமாப் போல இரண்டு கண்களினாலுங் கண்ணீர் தாரைவிட ஆன்மாவினுடைய ஐயுறவு நீங்கி உள்ளே ஞானம் விளங்க மயிர்க்கால் தோறுஞ் சுகபுளக முண்டாகுஞ் சத்தியத் திருமேனியானவர் இந்தப் பிரபஞ்சப் பொய்யை நீத்தவர்களிடத்திலே கம்பிதமான ஆனந்தமுண்டாகத் தான் ஒருபொருளென்னுந் தன்மைபோய் நீராளமாய்க் கரையிறந்த பற்றாம் வாஞ்சையுடைய ஆன்மாக்கள் செயலானது விஷயாதிகளிற் செல்லாமல் நிறுத்தித் தன்வயத்தாக்கும் அருளே யாவைக்கும் அதிகமாகத் தோற்றப்பட்டவையை அழகு செறிய மாலையாகத் தரித்து அறிவுதானே தடித்தனவே திருமேனியாக உடையவன்.
63-65. தோலாத வாசியான் :
(உரை) பேரிருளாய் வழங்குதலில்லாத வெறுவெளிகளும் இரு நூற்றிருபத்துநான்கு புவனங்களும் அஷ்டகுல பர்வதங்களுஞ் சப்த சமுத்திரங்களுஞ் சப்தபாதாளங்களும் ஆன்மகோடிகளுக் குடம்புண் டாகைக்கு மூலமுங் காரியப்படுவதுமான பஞ்சபூதமும் அந்த ஆன்ம கோடிகள் யாவைக்கும் அறிவு எவ்வளவோ அவ்வளவுக்குத் தேர்தலுள வவ்வளவவ்வளவ தன்றியேயாகியுஞ் சொல்லப் போந்தவை யித்தனையுந் தன்னிடத்திலே யுண்டாக்கி உண்டாக்கியும் வினைப்பகுதியால் விளக்குகையால் தானல்லவுமாய்ப் போதமிக்கால் பகுத்தறியும் அறிவினர் பகுத்துக் காண்கைக்குக் காணாமையுங் காட்டுவதுமான சித்தாய் மனவேகமான இச்சை கிரியை ஞானசத்திகள் இத்தன்மைய வானதே கடுங்குதிரையாக உடையவன்; இதுவன்றி அப்படித் தோய்ந்தும் தோயாமையுமான விசித்திரமான வாசியே வாசியா யுடையனென்க.
65-73. சொல்லாரும் ஆனையான் :
(உரை) ஈசுவரவாக்யங்களாலே அதோமுக உலோகங்களெங்குந் தடையறப் புகுந்து அதன்மேல் ஆதிநடுவாய் அதிற் பிலக்கத்தீவு முதல் புண்டரீகத்தீவு ஈறாகச் சப்ததீவுள்ளும் அதன்மேலாகி ஊர்த்தமுகமான பூலோகமுதலாக அடைவே உயர்ந்த சத்யலோக மீறாக ஏழுமேலுலோகங்க ளுள்ளவாய்த்தான் நிலையாக நிற்கைக்குத் தானமாகி, அன்றியும் அதன்மேலாய வுலோகங்களாய்க் கண்டிதமன்றி அருவாயிருக்குஞ் சுத்த மாயாலோகம் யாவும்நிறைந்து, இப்படியிருந்தாலுஞ் சுட்டிச் சொல்வதற்குக் காட்சியிற் படாது. ஆனால் இல்லாததோ வென்னிற் சுட்டிறந்தாற் சொல்லிற் பட்டதாய், அன்றியும் மேலோர்க் கல்லது உச்சரிக்கப்படாத வேதம் நான்கும் சிடிக்ஷ கற்பம் வியாகரணம் நிருத்தஞ் சோதிடஞ் சத்தமென்று சொல்லப்பட்ட அங்கங்க ளாறும் இவைக்குத் தானல்லதுவேறுயிரின விலதாய் அதிற்பிரித்துப் பிரபஞ்ச சருவமுஞ் சொல்லுவதாய் அதுவே அதனுக்குயிராய் அதிலே நிச்சயமான தாற்பரியமே அந்த உயிர்க்கு ஞானமாய் இந்த விதத்தாலாய சரீரமே மிகப்பருத்து, தனது மெய்யடியார்களிடத்தில் கடினப் பிரவிர்த்தியான பொல்லாத பந்தகட்டை அற்றுப்போம்படி செய்து, திரிவித கரணங்களினால் ஏறுசெய்திக்கீடான பற்பல ஜனிப்புத்தாப சோபமாய்ப் பற்றுக்கோடாய்க் கரையிறந்து நிலைகாணாத சாகரத்தைப் போலப் பயனிலவாய ஜனன சாகரத்தை நன்றாய் நசையீரஞ் சிறிது மில்லாது துகளெழக் கடந்து, சந்தேகப்படுவனவும் விஷய விருப்பும் அதனால் வரும் வெகுளி ஈயாமை யாதுந் தெரியாமல் மயக்கிற்படுகை தன்னை மதித்துக் கெர்வித்தல் முதலானவைகளை வெகுண்டு நெருக்கி, மரித்து மரித்துத் திரிவதற்குக் காரணமாய புவன போகத்தை நசுங்க மிதித்து, வேறுவேறு பெயரிட்டு கொள்ளே அச்சம் பொருந்தி தீர்க்கப் பிரயோசன மில்லாத நூலாகிய பற்பல வார்த்தையாகக் குரைக்கும் புறச்சமயிகளாகிய புன்மையார் கோவைசெய் தகுதியின் வெற்றியைச் சின்னாபின்னமாகத் துணித்து, தன்திறமற்று அச்சமுறல் பிறவுயிர் கோறல் முதலிய செய்வதற்கிசைதலை நாசஞ்செய்து, நாடோறும் நாடோறும் புனைந்த செயலுரைகளின் பிணிப்பாற் பெருகிவரும் புத்ரர் முதலாயின பற்றும் வேரற அடர்த்து மோதி, களத்ரப் பற்றைச் சிறிதுமில்லாமலறுத்து, அளவற்ற கருணையினால் எந்த விதத்தினாலே ஆன்மகோடிகளின் பந்தம் நீங்குமென்கிற நினைவான கடுமைதானே குணமாகி ; அதுவன்றியும் அந்தக் கிருபை தானே மிக்க ஆராமையாகிய மயக்குற்று ; உமை திரு வாணியென்னும் மூன்று சத்திகளையும் மும்மதமாகப் படைத்து அந்த மதங் கரைக்குங் கர்வத்தாற் சாதாரணமாகிய தேக காரியமான தத்துவம் எவ்வளவுள அவ்வளவும் அதனுட் செறிந்து அந்தத் தத்துவங்களுடம்பாய உயிர்கள் அவைகளினாலே விஷய நுகர்ச்சி நுகர்தற்குரியன உட் கலந்து நிற்றலாலே அந்தப் புவனபோகங்களில் தனக்கு யோக்யமான நிர்மலமாய சுத்தமாயா போகத்தில் உண்டோ இல்லையோவெனச் சிறிதே தேன்போன்ற தெளிவைக் குடித்து அதனால் மிகுசல்லாப மடைந்து வீறிட்டு மிகவும் உன்னதமான யாவையினும் நீண்டு வெகு விதமான வேதங்களெல்லாவற்றையுங் தனக்கு நாலு கொம்பாகப் பொருந்தி விளங்காநின்ற கிரியை இச்சா ஞானமே தனக்கு அங்கமான கொலுயானையான உடையவன்.குரோதமத மாச்சரியம் பாடபேதம்.
73-74. இருமுச்சமையம் துவசன் :
(உரை) உட்சமயங்களான வாமம் வைரவம் மஹாவிரதம் காளாமுகம் பாசுபதம் சைவம் ஆறினுங் கொண்ட பொருள்நிலைக்கு மேம்பட்டு அந்த நிலை அந்த அருளினர் நிலைக்கல்லது பின்னை யாவர்க்கும் கட்டாமையால் ஒப்பற்றுச் சர்வதொழிலையுஞ் சுமத்திக் கொண்டு துன்புறும் உயிர்களினை வைத்துத் தாம் யாவைக்கும் பிராத்திகனென்னும் அறிவை விளக்கி அந்தத் துன்பச்சுமை யில்லாதபடி செய்தலால் அவையே அவனுக்குக் கொடியாக உடையவன்.
74-77. கமையொன்றி நெடுமுரசோன் :
(உரை) விஷயப் பகுதியாற் புலன்வழிச் சேறலை யடக்கித் தாப சோபமாற்றி உயிரென்று வேறேயொன் றில்லை பிராணவாயுவே யென்று அறுதியிட்டு முக்கோணமான மூலாதாரத் தக்கினியை ஜொலிப்பதற்காம் வகையாலே ஜொலிக்கப் பண்ணி இந்தப் பூததனுவிற் புசிப்பும் இதுவன்றி நீங்கித் தேவலோகம் முதலான தானங்களுக்கான உடம்பிற் புசிப்பும் இவையிரண்டுமல்லவாய் இந்தத் தனுவிலே சுபாவமாக நடக்கும் இடைபிங்கலையான வாயுக்கள் இரண்டும் நடவாது தம்பிக்கச்செய்து, அதுவன்றியும் புறம்பாய் இதற்குச் சகா காரணமாயுள்ள பூதவாயுவின் சகாயத்தையும் நிறுவித்துச் சுழுமுனை நாடியி னுண்டாய வாயுவாலே மூலாதாரத்தில் ஜொலிக்கிற அக்கினியை யெழுப்பி இலாடத்தானத்துச் சந்திர மண்டலத்திலே தாக்கி அதிலுண்டாய அமிர்த கசிவாய புசிப்பால் உள்ளெங்கு மின்பாய் அதுவே புசித்து முன்னுள்ள தனுவுக்குள் நரை திரை மூப்பு மிருத மற்று அந்த உடம்பே வஜ்ரகாயமாய் இளமைபெற்று அளவிறந்த காலம் நித்யராயிருக்கும் மஹாத்மாக்களுள்ளே நீங்காமல் எப்பொழுதும் விளங்கிய பேரொலியே பெரிய பேரிகையொலியா யுடையவன்.
77-79. அன்றியும் ஆணையான் :
(உரை) அல்லது பிரமாவினாலே சிருஷ்டிக்கப்பட்டு விஷ்ணுவினாலே இரக்ஷியா நிற்கின்ற பிரகிருதிக்குக் கீழ்ப்பட்ட உலகமெங்கும் பெருகினதன்றி அசுத்தமாயையினுடைய உருத்திர மூர்த்திகளாலே நடக்கப்பட்ட உலகங்களும், அன்றியினுந் தனித்தனியாகக் கீழும் மேலும் உண்டாய உலகங்களும் அதற்குக் காரணர்கள் மாட்டு யாவைக்கும் மேலாய் அசுத்த மாயையினுண்டாய உலகங்களினும் அதில் அதிபரிடத்தும் ஆன்மாக்க ளறிவால் அறியப்படாத குய்யத் தானங்களினும் விளங்கப் பிரகாசித்துச் செல்லும் அழகிய ஆக்கினையினை உடையவன்.
79-81. அலகிறந்த தோன்றலான் :
(உரை) எண்ணிறந்த ஆன்மாக்களுக்குந் தான் ஒருவனே புகலிடமாக இருந்தாலும் ஒருபடித்தாகாமல் அவரவர் கோட்பாடுகளுக்குத் தக்கதாக வேறுவேறு ஒன்றோடொன்று இசையாத படியாகக் காணுந் தன்மையன். உயிர்கட்கு மேலாய ஞானங் கொண்டல்லது தற்போதங்களினாற் காணப்படாதவன். வேதாகமங்களின் பொருளினனாக நிச்சயிக்கப்பட்டுள்ளவன். அந்த வேதாகமங்களினால் நிச்சயம் நிலையிடப்பட்டவைக்கெல்லாந் தான் நிலையாதவன். தான் மேலாய ஸ்வரூபியா யிருக்கினும் சர்வான்மாக்களுக்கும் அதுவே பேறாக்குகையின் பொருட்டு அவ்வவர்கள் மதத்துக் கீடாக நன்மைதீமை புசிப்பதற்கு வேதனை விதமான காரியங்களையும் உண்டாக்கப்பட்டுடையவன். பூலோக மெங்கும் எட்டுத்திக்கும் கீழும் மேலுஞ் சஞ்சரிக்கப்பட்ட பரிதி அங்கி இந்து மற்றுமுள்ள ஒளிகட்குத் தான் ஒளியுமாய் அந்த ஒளி மூர்த்திகளுக்கும் பிரபை கொடுத்துள்ளவன்; ஒரு முதல் சொல்லப்படு மிடத்து அதற்கு அடி முடி உண்டாகையால் அப்படிப் போல்வதோர் அடி நடு அந்தமிலாதாகித் தானே தோன்றிய முதலானவன்.
81-83. வேராகி ஒருவன் :
(உரை) தாபர சங்கமமென்னும் இருவகைத் திணையில் தாபரங்களுக்குப் பொருந்தும் உயிர்காறுங் கருவிமுதற் காரணமாகிய பீஜமும் அதற்கு நிலையாகிய மூலமும் அதன்மே லெழுந்துண்டாம் பணை சினை அடை தளிர் பலங்களுமாக்கி, சங்கமங்களுக்குப் பொருந்து முயிர்க்கு அது அதுகளுக்கேற்குங் காரணங்களுந் தனுக்களுமுண்டாக்கி, அதற்குள் நடத்துங் காரண பூதங்களையும் படைத்து, அந்தப் பூதாதிக்குக் காரணமாய தன் மாத்திரையாய்ச் சத்த முதலியவற்றைப் பூதாதியாங்காரத்தினும் உண்டாக்குவித்து, அப்படிப் பிரகிருதி மாயா காரியத்தை அதிஷ்டித்து ஆக்கினானாயினும் அவனுண்மை சொல்லுமிடத்துச் சுத்தமென்ற அபர விந்துவையும் வெறுவெளியாய அபர நாதத்தையும் பாழாய பரவிந்துவையும் வெறும்பாழாய பரநாதத்தை யுங்கடந்து இவைகளிற் றோய்ந்த குணமில்லையாய்த் துகள்தீர்ந்த ஆன்மாக்கள் பெறும் பேறாய்ச் சலனமற்ற தனி முதல்வன். அபரவிந்துவைச் சுத்தமென்றது சதாசிவ முதலிய மூர்த்திகளுக்குத் தனுவாகையினானுஞ் சுத்தமாயா மந்திரம் இதிற் பிறக்கையானுஞ் சிவசத்திகள் இதிற் றோய்ந்திட்டிருக்கையானு மென அறிக. அபரநாதத்தை வெறுவெளியென்ற தென்னையெனில், சிவசத்திகள் தாக்கின் மேற்கொண்டு பராசத்தி வெளியிற் படருகையாலும் அருவாகையாலுஞ் சுத்தமாயையில் ஊர்த்தமுக மாகையாலும் அவ்விடத்துண்டாவது யாது மில்லையாகையாலுமென அறிக. பரவிந்துவைப் பாழென்றது அவ்விடத்துப் பொருந்திய ஆன்மாக்களின் சத்தி செயலில்லாதாகை யாலும் நித்தநிராமயமாகிய நிர்மலமாகையாலு மெனக் கொள்க. பரநாதத்தை வெறும்பாழென்றது அந்தத் தானங்களிற் பற்றிய உயிர்கள் உயிரென்பதொரு முதலுமற்று ஞேயந்தானே யாகுகையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்பாலுறு பொருளாய் நின்ற ஒருவனென்பது திரிபுடியும் நஷ்டமான பெறும்பேறாய் ஏகாந்தனாய் நிறைந்த அசலமென்றதென அறிக இப்படிப்பட்டவன்,
83-88. பொறியிலியேன் இயல்பினான் :
(உரை) அப்படிச் சர்வசூன்யனாகி மறைந்தவனாயினும் பிரத்யக்ஷ மாகப் பிரபஞ்சத்திலே சத்தாதியாய இந்திரியம் நிற்க மெய் வாய்கண் மூக்குச் செவியென்னுந் தானங்களும் வழக்கமில்லாத யான்; அது வன்றியினும் அவன்செய்த காரியத்துக்குப் பிராத்தியான பாத்ரமில்லாத யான்; துயர அழலினாலே வாட்டும் பிறவிக்கடலில் அழுந்தாமல் மோக்ஷத்தைத் தந்து சம்பந்தமாமுனி யென்னும் மஹத்தாய நாமத்தினையும் புனைந்து எனக்குச் சாமியுமானோன். இம்மட்டுமல்லாமல்,சமுத்திரஞ் சூழ்ந்து அழகிய உலகிலுண்டான மஹத்துக்களும் மானுடராயினோர் யாவரும் வந்தனை செய்யப்பட்ட தனது அழகிய பாதமிரண்டும் ஒன்றுமாகாத ஈனமான என்னுடைய சிரசில் ஒருகாலும் மறையாமல் விளங்கவைத்தவன். அவன் நாமரூபியாயிருந்தாலும் அறிவால் விசாரிக்கில் புண்ணிய ரூபமான இடபநந்தி முதுகின்மேலே யிருக்கப்பட்ட என்னுடைய கர்த்தன். பற்பலவாய சமயிகள் அவரவர்கள் வேறு வேறாகச் சொல்லுஞ் சொற்கு அர்த்தமானவன். ஒன்றோடுங் கூடாது ஒருவனாகச் சர்வத்துக்குங் காரணனாயினும் அப்படிச் சுட்டிக் காணப்படாதவன். நிர்மலமாய் அழியாததாய் வேறொன்று வந்து பொருந்தாததாய் ஒப்பற்றதாயிருக்கப்பட்ட சுகசொரூபமாய்ப் பிரகாசிக்கப்பட்டவன். இப்படி நிகழ்த்தலாய்ப் பிரகாசத்தை யுடையனாயினும், மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரமென்னும் நான்கு சத்தினி பாதமும் பொருந்திய சகலரை இரக்ஷிக்கை நிமித்தமாக அவர்கள் அறிந்து வழிபடத்தக்க ஆசிரியரூபத்தைத் தரித்துளனாயினும் நாம ரூபக் குணங் குறியிலதாகி எங்கும் நிரம்பி ஒழியாத திருமேனியான பெரிய கர்த்தன். நால்வகைத் தோற்றத்தின் எழுவகைப் பிறப்பினும் அதற்கதற் கேற்ற யோனிகளினுருவாகைக்குக் காரணமான கன்மமல ஆணவமல அனாதிப்பிணிப்பைச் சுத்தமாக அரிந்தவன். வேதாகம சம்பன்னராயுள்ளவர்கள் நிரம்பிய வாழ்வுடைய சிதம்பரமாகிய தில்லைவனமே தனக்கு ஊராக உடையவன்; நூலறிவாலே மிக்கவர்களைப் பிரபஞ்ச வாழ்க்கையில் வாழுதலிலதாகச் செய்பவனெனவுமாம் ; பிரமாவிஷ்ணு இருவருஞ் சபத மிட்டுக்கொண்டு அடிமுடி யறுதியிடுவோமென்று தேட இன்னுங் காணாதவன்; அன்றியும் தற்போத மிகுத்தோர் அளவை கொண்டு மட்டிட அந்த மட்டில் அடங்காதவன்.
88-91. மட்டவிழ்தார் காட்டினான் :
(உரை) ஞானசூரியனாக என்னுடைய ஸ்வாமி எழுந்தருளு கையால் மலபந்தமாய்த் திணிந்த பூதவிருளாய் அந்தகாரமாய் மூடிக்கொண்டிருக்கும் ஆன்மாக்க ளிதயமாகிய மொக்கை விகசிதமாக்கி மலர்த்துதலால் அதில் ஞானாமிர்த மதுக்களை யுண்டு தேக்கிடப் பெற்ற பிரகாசம் பொருந்திய ஞானசிற்சத்தி வடிவாகிய கொன்றைமாலை மார்பிலிலங்க எழுந்தருளி வாராநின்ற பெண்ணாகடந் திருப்படை வீடாகிய மறைஞானசம்பந்த மாமுனி ஒன்றுக்கும் பற்றாத என்னை அடிமைகொள்ளும்படி பவனிவரக் கண்டு நல்வினை வல்வினை யிரண்டும் அறியாத எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதத்தில் மொத்துண்ட உயிர்கள் யாவருங் கண்டு ஆனந்தபரவசமடையும் பகுதியில் யானும் ஓர் உயிராகக் கண்டு தொழுதேன். அடியேன்பேரிற் சிவோகம் பாவித்துப் பூரண திருஞானப் பார்வை செய்து யானெனதென்னும் பழவினையாகிய மூலஆணவமலம் திரோதை மாயை கன்மம் மஹாமாயை இவ்வைந்தினுடைய மூலக்கிழங்கை ஞானாக்கினியினாற் பசையற எரித்துப் பாழ்படுத்தி, யான் ஒரு நாயகபுருடனாகவுந் தமது திருவருளே நாயகியாகவும் அளிகள் மத்தமதுக்களை யுண்டு மயங்கிக் கிடப்பதுபோல என்மனத்து எனக்குத் தெரியாமையாய்ப் பற்றற வேறாக்கிப் பசுகரணஞ் சிவகரண மாக்கி இரதகுளிகையைச் சேர்ந்த செம்புபோல என்னைத் தன்வசமாக்கித் தத்துவக் குப்பைகளாகிய தொண்ணூற்றறுவரையுங் கீழ்ப்படுத்திச் சரீரத்துவக் குப்பைகளனைத்தையும் பதைப்பற அறுத்து ஞானானந்தத் திருநோக்கினாலே பேரின்ப வெள்ளத்தை என்னுள்ளும் புறம்பும் ஒழுகும்படி காட்டினான். தனது சிற்சத்தி விளங்காநின்ற திருவடியை அடியேனுக்கு உள்ளபடி காட்டினான்.
9192. வெண்ணீறும் மனையுமே :
(உரை) பராபரமாகிய வஸ்துவே திருவெண்ணீறும், அகப்பற்றுப் பாழ்படுத்திய அடியார்கள் திருவேடமும், பஞ்சசுத்தி செய்து சித்திர தீபம்போல மனதை நிறுத்திச் செய்கிற பூஜையுமே மெய்யென்றும், பொய்யான திரவியமும் பிரபஞ்ச வாழ்க்கையும் மனைகளும் பொய்யென்றும் ;
92-99. நாடரிய ஈர்த்தான் :
(உரை) சம்பிரதாய வழியிற் கர்ணபாரம்பரையல்ல தறிய அரிதாகிய அஞ்சக்கரத்துக்கு அதிதெய்வஞ் சிவமுதல் மலமீறாக ஐந்து காரணமும் அடைவே நிற்குந் தன்மையுணர்த்தி; அதன்றி அந்த மந்திரம் இருதயத்திலே நீங்காதபடி வடுப்படச்செய்து அதினுண்டாம் அனுபவத்துக்கும் ஆசைப்பற்றுண்டாக்கி; இப்படியல்லது நெஞ்சுள் நடுவாக உயிரடையாளம் நிறுத்தி மேல் தாலு இலாடத்தானத்தில் ஞானநேயத்தை நிறுத்தி அதனோடு பொருந்துமாசையை யுண்டாக்கி யெனவுமாம்; இலாடந் தாலு இருதயம் நாபி மூலமாகிய அஞ்சு கரணத்திலுஞ் சிகாரமுதலாய் அமைத்தபடியே உச்சாரணம் பண்ணும் வகையையும் அனாதியுள்ளபடி யறிந்து அந்த உச்சாரணம் பண்ணுகைக்கே அக்கரமும் அதன் மூர்த்திகளும் நிறுத்தி மார்க்கத்திலே மனதினுடைய சஞ்சலத்தை நிறுத்தி இந்தச் செய்தொழிலிலே பிரவர்த்தித்து, எரியுந் தீபத்தைக் கோல்கொடு தூண்டியபோது உண்டாய மிகுபிரபை போன்றதாகச் சிகார அக்கரத்தையும் அதனை நீங்காத சத்திரூபமான வகரம் நிலையொத்த தீபநிறமாகவும் அதற்குள்ளே கனற்பொறி நிறம் பெற்று நின்ற யகரமாகிய ஆன்மாவை வகர வொளியானது பற்றி மேலாய் மிகுந்த சிகரமாகிய தீடிக்ஷயிலே உச்சரிப்புக் கூட்டி இலாடமுதல் இருதயமீறாக உள்ளேதான் பாவிப் பித்து, இப்படிப் பாவிக்குமிடத்துப் பூவினுண்டாய தேன் போக்கு வரத்தில்லாமல் அவ்விடத்துப் பருவத்தாயதுபோலப் பாவித்து, இப்படிப் பாவிப்பித்தவிடத்து அந்தப் பாவனை இறக்க அவ்விடத்துண்டாகிய மாயையில் தோயாத அருளைப் பிரவேசிப்பித்து, அருளொழியினும் நில்லாது காண்டலும் உணர்ச்சியிற் படலும் இல்லாதாகிய தானத்திலே என்னுடைய ஜனனமரண தாபசோபத்தைப் போக்கின ஞேயமான சுகத்தில் நிறுத்தி, வாயே திறக்க வழக்கில்லாமல் என் உயிர் உடல் பொருளாயதெல்லாந் தான்கொண்டதனுக்கு அவனால் தரப்பட்டது தன்னுடைய கிருபாசமுத்திரமாகத் தலையளி செய்த பற்றே பற்றாக வாழ்ந்து மயங்க எனக்குத் தந்து இரண்டற்ற உணர்ச்சியாகக் கூடினான். எனக்குளதாய அஞ்சவத்தையெல்லாம் போக்கிப் பேரறிவேயாகச் செய்து என் கரணச் செயல் யாவையுங் கெடுத்து எனக்குள்ளதாய நடந்த ஜனனத்தையும் அறுத்தான்.
99-100. விறற்சொல்லுக்கு எழுத்தினான் :
(உரை) சர்வசொற்களுக்கும் மூலமாய் மேலாய வேதங்களுக்கும் அறுதியிடப்படாதவன். ஒருவராலுஞ் செய்துமுடியாக் கிரமமும் யாவராலும் ஒப்பு தீட்டாச் சரீரமு முடையவன். பிரபஞ்ச சிருஷ்டி இரடிக்ஷ காரணமாகிய மாயாகாரியத்துக் காரியமாகிய குணங்களைப் பொருந்தினானாயினும் அதில் தோய்விலாதவன். ஆகில் அதற்கு அறுதி எப்படி என்னில், என்றும் பசுஞானங்களைப் பொருந்தி னானாயினும் அதில் தோய்விலாதவன். ஆகில் அதற்கு அறுதி எப்படியென்னில், நாற்செய்தியுந் தொழிலுஞ் சரித்திரமுங் காட்டலுமே அதுதானே இயற்கையாகிய சர்வகர்த்திருத்துவமுடையவன் என்க; இப்படிப் பட்டவனாகிலும் வழிபடுமடியார் விதியானவன்; அன்றியும் சர்வத்துக்கும் உற்பத்திக் காரணமான பிரணவாக்ஷரகாரணன்.பேரொளியினுள்ளே பாடபேதம். 100-102. மட்டாரும் பலகையிட்டான் :
(உரை) என்பதை ஆடலாராடல் அகன்பதியாங் கூடலார் மட்டாரும் பாடலா ராடலார் பண்பலார் நண்பலார் பாணற்கிலகு பலகையிட்டான் காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான் என்று பொருளுக்கேற்க மாறுக. பொருளாவது : தாளவகை முழுவதும் நவநாடக வீதி முழுவதும் அறிந்து, எந்த வேளையினும் நடம் புரியாது பெருகி மிக்க நகரமாகிய மதுரையிலே மந்தரம் மத்திமை தாரகமென்னும் அறுதியையுடைய பண்கள் இராகங்கள் யாவையுங் கரை கண்டு அந்தப் பண்களுக்குள்ள தாளவகையையும் நூற்றெட்டுத் தாண்டவத்தையும் நிலையிட்டதுமன்றிப் பலபேதமாகிய பண்பு முழுவதுங் குணங்கள் யாவையினும் அதிகமான நண்பாய வகையாவும் நிறைந்த அடியாராகிய யாழ்ப்பாண நாயனார் ஏறியெழுந்தருளியிருந்து தம்மைப்பாடி யாழ்வாசிக்க யுகந்தோறும் யுகந்தோறும் வித்வமுத்திரையா லுயர்ந்தோர் பலரும் ஏறியிருக்க இடங்கொடுத்து விளங்கப் பட்டுவருஞ் சங்கப்பலகை யாசனம் போட்டருளினவன் ; அன்றியிலும் பொற்பலகை போட்டருளினா னெனவுமாம்; எந்தெந்தத் தந்திரங்களினாலுங் காண்போமென் பவர்க்குங் காணப்படாதவன். தனதருட் காட்சியார்க்குப் பிரத்தியக்ஷமானவன்.
103-107. சேணிற் செப்பக்கேள் :
(உரை) அதுவன்றியிலும் அந்திவானில் விளங்குஞ் சிவப்புப் போன்ற திருமேனியனாயினும் பூமிமுதல் ஆகாயமளவாக வளர்ந்த விஷ்ணுவுக்கு முயர்ந்தவன். அதுவுமன்றிச் சர்வ அண்டங்களிலும் சர்வ புவனங்களிலும் எண்ணில் உயிர்கள்மாட்டும் ஒழியாது அழகுபெற நிரம்பியவன். தாபரம் ஊர்வன தேவர்கள் நீர்வாழ்வன பறப்பன நாற்காலுடையன மானுடர் ஆகிய எழுவகை ஜனனத்துள் எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி வகையினுங் காற்றாடி, சுழற்காற்று, வட்டஞ் சுற்றும் வண்டு, கையிற் பிடித்து வீசும் உற்கை இவையின் வேகம்போல மாறிமாறிப் பிறக்கும் வேகச்சுற்றைத் தனது கிருபையினாலே போக்கிச் சலிப்பற நிறுத்தினான். விபூதி தூளனவொளி மிளிருந் திருமேனியன். நிர்மலமானவன். அனாதியே மலமில்லாதவன். தனது ஞானத்தை எனக்கு நிலையாகத் தந்த முன்னோன். சர்வ பிராணிகளும் அறியும் பகுதியாய் கீர்த்திக்குத் தான் காரணனாயுள்ளவன். அஞ்ஞானிகளாயுள்ள ஆன்மாக்களுக் கெல்லாந் தான் உண்மை ஞானமாகச் சூன்யமாயும், தன்னை முதலென்றறிந்து வழிபட்ட ஆன்மாக்க ளுளத்திற் சத்தியமாகத் தோன்றப்பட்டவன். இப்படிப்பட்டவனாகிலுஞ் சீறி யுத்தத்திலே தாருகாவனத்து இருடிகள் கோபித்துச் சங்கரிக்க விட்ட பரசைத் தானே தனக்காயுதமாகச் சதாகாலமுந் தரிக்கப்பட்டவன். என்னுடைய ஸ்வாமி. அவன் பக்கலில் நீ போமிடத்து நடுவே நடுவே இடையூறுகளுண்டு. அவைகளை உனக்கு உளவாகச் சொல்லுகிறேன். அந்தக்கரணங்களின் பகுதியிற் படும் எனதுள்ளமாகிய சத்தியே, சொல்லக் கேட்பாயாக.
107-110. நித்தலுமே உறாதே :
(உரை) நாடோறும் நாடோறும் அநித்தியமாய்க் குற்றமான சரீரத்தை நித்தியமாகக் குணமெனக்கருதி நலமாகச் சந்தனகளப கஸ்தூரிகளால் திமிர்ந்து கொண்டு சுகந்தவகை மாலைகளையும் முடித்து நல்ல சாலியன்னத்துடனே பால் முதலிய வஸ்துக்கள் கூடின அறுசுவை யமைந்த ஐவகை யுண்டியும் புசித்து மேலாய பருத்திவர்க்கம் பட்டு பீதாம்பர முதலிய தரித்துப் பற்பல வாசனையுடனே கூடி நெய்த்திருண்ட குழலினையுடைய மாதர்களுடனே சரசலீலை பிரியாத பற்றாகப் போதிக்கப்பட்டு அவ்விடத்தினுண்டாம் இணைவிழைச்சாய சங்கமச் சிற்றின்ப சமுத்திரத்துக்குள் அழுந்தி விடாத பண்பு பெருக அனுபவிப்பதே பிரத்தியக்ஷமுத்தி; இதுவேயல்லது இந்தச் சரீரத்திலே நித்யனாக ஓர் ஆன்மா உண்டென்றும், பிரத்தியக்ஷமான ராசாவேயல்லது கரணரகிதமாகக் காணும் ஒரு சிவன் உண்டென்றும் அந்தச் சிவயோகத்தை அந்த ஆன்மா அசரீரியாய் இரண்டற்றுப் புசிப்பனென்றும் வேதாகமங்களிற் சொல்லுகிறதெல்லாம் அல்லவென்று கொள்ளிக்கு நீக்கங் கொடாத மைபோன்று அறியாமையே குணமாய்ப் பசாசுகள்போலக் குற்றமே இயல்பாய்ச் செய்து திரியுஞ் சாருவாகனுடைய வெறும் அசத்தாய காட்சியிற் பட்டு நின்றுவிடாதே.வட்டமென மாறில் பாடபேதம். 110-111. பலகாலும் நண்ணாதே :
(உரை) எந்த வேளையினும் எந்தக் காலத்தினும் எந்த அவத்தை யினும் மறவாது தன்னையும் பரத்தையும் பிறித்தறிந்து பெறுவானும் பேறுமாக இரண்டற்றிருக்கும் ஜீவன் முத்தரைப்போலக் கருவி நீக்கத்து ஆன்மாவைத் தரிசித்துத் தானே அகம்பிரமமென்னும் மாயாவாதிகள் பக்கல் போய்விடாதே.
111-113. ஊன் தனக்கு விழாதே :
(உரை) உடம்பு வளர்க்கும் பொருட்டாக நாற்காலுடையவை பறவைகள் சில ஜந்து முதலியவைகளைத் தன்பொருட்டாக ஒருவன் வதைத்துப் புசிப்பதால் தனக்குப் பாவ மில்லையென்று சிருஷ்டித்துக் கொண்டு தன்வயத்தான ஆன்மகோடிகளுக்கும் உபதேசமாகச் செய்ததுமன்றித் தெய்வமென்பது அனாதியாகப் புண்ணியமே தெய்வமாக உள்ளதென்று நூலுடனும் நிச்சயித்து, அந்தப் புண்ணியப் பொருளைப் பெறுவதற்குக் காரணம் வெற்றியாக நட்புபகை யிரண்டினிடத்தும் விருப்பு வெறுப்பற்று ஒத்திருப்பதாதலால் அந்தப் புண்ணியம் பெறலாம் அதுவே நிஜமான முத்தியென்னும் பௌத்தர் பாவத்துக் கேதுவான ஈனவார்த்தையின் வகையிலே பற்றாய் மயக்குற்றுத் தடுமாற்றப்பட்டு நின்று விடாதே.
113-115. நிறைமேவி மருவாதே :
(உரை) பக்கஞ்சார் துலைநாப் போன்று எவ்வுயிர்க்கும் ஒத்துத் துக்கஞ்செயாது நாடோறும் நடப்பாரைப் போலப் புறந்தூய்மையும் நீராற் றூய்மை செய்யாது உள்ளம்போல உடம்பும் அழுக்கடைந்து புழுதி படைத்துத் தலைமுதலாகத் தன் சரீரத்துப் பொருந்திய மயிரெல்லாந் தனது உயிர் வருத்தமுறப் பிடுங்கி உயிர்க்கொலையைத் தவிர்ந்து உடையை நீத்துச் சீவரந் தாங்கித் தாழ்வாகிய பிறப்புக் கேது வாய உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானமென்னும் பஞ்சகந்தங் கெட இருப்பது மோக்ஷமென்னும் சூழ்ச்சியினைத் தவிராது முன்னிலும் மிகவுடையனாய சமணனாகுமவன் பிரயோசனத்திலே சென்று விடாதே.
115-116. செஞ்சொல்புனை மேவாதே :
(உரை) வேறு சந்தேகப்படுவதற் கிடமில்லாமல் விதிவாக்யமே சத்யமாக எவர்க்கும் பொருந்திய பிரமாணமாய்ச் சர்வ நூலுக்கும் பிரதானமாகிக் கடவுட்டன்மையுடைய வேதத்தை நன்றாக அத்யயனம் பண்ணியும் அதன் தாற்பரியத்தை முன்னொடுபின் சீர்தூக்கி மறவாது பார்த்துப் பொருள் நிச்சயிக்கமாட்டாது கருமமே துணையென்னும் பாட்டப்பிரபாகராதி வைதிகர் சொல்லும் போதகத்தைச் சத்தியமென்று புத்திபண்ணி அவர்கள் பக்கலிற் போய்விடாதே.
116-117. ஆதியின்மேல் செல்லாதே :
(உரை) சர்வகடவுளர்க்குஞ் சர்வாதிகாரத்துக்கும் முதலாகிய சிவன் தனது காருண்யமேனியிற் சாத்தியருளும் பெருமையுடைய விபூதியினையும் மஹாலிங்கங்களாய் ஸ்வயம்பு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் அழகிய கோயில்களையும் அன்புடனே தரித்தலும் வணங்கலுமின்றி அவ்விரண்டினுந் துவேஷமான மனதினையுடைய பிரத்தியக்ஷமான அறிவினுக்கு அவரே நீசர் அவள்களண்டையிலே போய்விடாதே.
117-118. நற்றவஞ்சேர் முயங்காதே :
(உரை) ‘மாலற நேய மலிந்தவர் வேடமும்’ (சிவஞானபோதம், 12) என்றும், ‘அந்தரி யாகந்தன்னை முத்திசாதனம்’ (சித்தியார், 9.10) என்றும், ‘அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து’ (சித்தியார், 8.30) என்றும், ‘ஆசா னருளா லடிசேர் ஞானம்’ (சித்தியார் 12.6) என்றும், இத்தன்மையுடைய மஹத்துக்களுடன் உசாவியிருத்தலால் ஆன்ம லாபமும் உயிருக்குறுதியுந் தானே விளையும் ; அந்த வழியில் நில்லாமல் என்போலிகள் போன்ற பாஷண்டியான மூடருடன் கூடினால் நல்லறிவு உனக்கு வரமாட்டாது, அஃதெப்படி யென்றால், ஆன்ம சத்தி கூடினதுடனே கூடி நிற்குந் தன்மை அதன் சுபாவ மாகையால், வீணாய் அலக்கழிந்து திரியாதே.
118-119. நீட பாராதே :
(உரை) சகல ஆன்மாக்களையும் சிருஷ்டி திதி தேவதைகளையும் தேவேந்திரன் முதலிய தேவர்களையும் சரம் அசரங்களையும் சர்வமுஞ் சிருஷ்டி திதி சங்காரப்படுத்திச் சகல ஆன்மாக்களுக்கும் ஜனன மரண இளைப்பொழித்துத் தமது திருவடி நீழலில் இருக்கும்படி செய்யுங் கர்த்தவ்யத்தைப் பழித்துச் சொல்லப்பட்ட பேரை நீ பாராதே ; ‘வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி’ (சித்தியார், 2.29) என்றார் மேலோர். அன்றியும், ‘ஈசனை யன்றித் தேவர் கணத்திடை யாரேயோ’ என்றார் மேலோர்.
119-120. விழித்தருளைத் லாய்நின்றோன் :
(உரை) சகலமுந் தனது காருண்யமாய் விளங்காநின்ற பொற் பிரகாசமாய்ப் பொருந்தியிராநின்ற திருவடியிற் பொருந்தும்படி முன்னமே சத்யோநிருவாண தீடிக்ஷக்கிரமத்திலே ஆறத்துவா சோதித்துக் கலாசோதனை பண்ணும்போது அடியேனுடைய பொல்லாத கருக்குழிக்கும்பியில் குருஸ்வாமி நாடீசந்தான வழியாய் உள்புக்கு அவ்விடத்து ஞானசூரியனாகி எழுந்தருளியிருந்து அத்துவாவிற் கட்டுப்பட்டிருந்த சஞ்சித பிராரத்த கன்மத்தைத் தனது ஞானாக் கினியினாலே பசையற அருள்கூர்ந்து திருநோக்கம்பாலித்து அருட்சத்தியை நிலைக்கும்படி நிறுத்தி என்னையுந் தன்னையுங் காட்டி அடிமை படைக்கவும் மலங்களைப் போக்கவும் நாம் வயிரியென்றும் வீரகண்டாமணியையும் துவசக்கொடியையுங் கட்டியிருக்கிறோ மென்றும் ஆன்மாவைத் தனது திருவடிநீழலின்கீழ் இரண்டறப் புணர்ந்து பொருந்தும்படி செய்தான்.‘முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன்’ (சித்தியார். 8.16) என்றும், ‘ஆரியனா மாசான்வந் தருளாற் றோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றுந் தோன்றத், தூரியனாஞ் சிவன்தோன்றுந் தானுந் தோன்றும்’ (சித்தியார், 8.28) என்றார் மேலோர். அன்றியும், பரம்பரையாகையால் குருகொள்லீலை யுபரிசுரதலீலை சையோகஞ் சம்பிரதாய மென்றார். அன்றியும், ‘அன்னத்தின் மேலேறி யாடு மணிமயில்போ, லென்னத்த னென்னையு மாட்கொண்டான்’ என்றார் மேலோர். அன்றியும், அந்த அந்தரங்கத்தில் அடியேனுக்குத் சிந்தாமணி போலுஞ் சிரோரத்னம் போலும் உள்ளங்கை நெல்லிக்கனி போலும் கருவூலமாகப் போதனென்னும் ஒரு பிள்ளையைக் கட்டளையிட்டாராகையால் அடிமைக்குங் குருவுக்குஞ் சம்பந்த மென்பதற்கு ஓர் உத்தரம் வாய்திறந்து சொல்ல வேண்டுவதில்லை. அன்றியும் முனிவனென்னுங் கருத்து குரு அடியேனை அடிமை படைக்க எழுந்தருளி உள்ளபடி கட்டுப்பட்டிருந்த வினைகளை ஞானாக்கினியினாலே பசையற எறித்த தனாலென்றறிக. ‘கட்டறுத்தெனை யாண்டு’ (திருவாசகம், திருச்சதகம், 49) கொண்டானென்றார் மேலோர். ‘பூதவிருள் போமடியிற் பொருந்தமலம் போ’ மென்றார் மேலோர். அண்டங்கடந் தப்பாலாய் நின்றானென்பதற்கு அச்சமயிகள் அவரவர் கொண்ட கோட்பாட்டுக் கேற்ற பொருளாய் அவைகளுக்கும் வேறாய்க் குருகாட்டுங் குறியுடைத்தாய் வேதாகமங்க ளளவைப் பிரமாணங்களின் அளப்பரி தாய்க் குறியிறந்தறியும் அறிவினுள் அறிவாய் அப்பாலுக் கப்பாலாய் இருந்தான் குரு.
120-121. எந்தைபிரான் ஓலக்கம் :
(உரை) ஏகாந்தமாய்க் குருவிருந்த இடம் மனவாக்குக் காயங்களினாலே அளவு பிரமாணஞ் சொல்லி முடியாது. அந்த இடம், ‘அத்தன் பரதத்துவன்’ என்னுந் திருவிருத்தத்திற் கண்டுகொள்க. அன்றியும், ‘ஓங்கார மேநற் றிருவாசி’ (உண்மை விளக்கம், 35) என்றும், ‘உய்யவென் னுள்ளத்தி னோங்காரமாய்’ (திருவாசகம், சிவபுராணம், 33) என்றுமிருப்பது கண்டுகொள்க. குரு இருந்தகோலம் ‘ஓமெனு மோங்காரத்து’ ளென்றும், ‘ஓங்காரத்துட் பொருள்’ (திருவாசகம், அச்சோ. 7) என்றும், ‘துரிய மிறந்திடம்’ என்றும், ‘அத்துவிதப் பொரு’ ளென்றும், ‘முப்பாழும் பா’ ழென்றும், ‘அம்மானிருந்தது’ மென்றும், ‘தான்றான் றம்பிரா’ னென்றும், ‘ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று, மீதானத்தே’ (திருவுந்தியார், 8) யென்றும், ‘குரவுவா ரளகி கணவகே ளொன்றுக்கொன்று குழிமார’ என்றும், ‘நின்றவை சாக்கிரத்துரிய’ மென்றும், ‘முற்றார்ந்த வீதி’ யென்றும், ‘உடையா ளுன்ற னடுவிருக்கும் முடியா முதலே’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 1) யென்றும், பின்னும் ‘அளவிறந்த பொரு’ ளென்றும் மேலோர் சொல்லுவார்கள். ‘குருஇருந்த கோலங் கூறரி’ தென்றார் மேலோர். அந்த ரகசியமான இடத்தில் ;
121. எய்திஅடி போற்றியென :
(உரை) தங்கள் நாயகன் இருந்த இடத்துக்குச் செல்லுகிறதற்குத் தங்குதடை யிடையில்லையென்று நீ ஆன்மசத்தி வேகமாய்ப் போகாதே, கைகட்டி வாய்புதைத்து முந்தானை யொதுக்கிப் பையப் பையச்சென்று இடது பாகத்தில் ஓவியம்போல நில்லு, அந்த அவசரத்திற் சிற்பரன் திரும்பி நிரம்பிய கிருபையுடன் அருள்நோக்கம் பாலிக்க அந்தத் திரும்பின முகத்திற் சிற்சத்தி நிற்பள், அந்த அவதரத்தில் உள்ளும் புறம்பும் ஒருதன்மையாக அட்டாங்க பஞ்சாங்க திரிவிதாங்க த்விதாங்க ஏகாங்கமாக உன் உடையவிழ உடலவிழ உரையவிழ உயிரவிழ உணர்வவிழ உளமவிழ இந்த ஜடகாரியமும் அவிழும்படியாகத் தண்டனிட்டு, ‘என் கருத்து முடியும் வண்ணமுன்னின்று’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 1) என்றும், ‘ஏகமாய் நின்றே யிணையடிகள் ... உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணாவோ வுற்று’ (சிவஞானபோதம், 11.2) என்றும், ‘இரும்பைக் காந்தம் வலித்தாற் போல்’ (சித்தியார், 11.12) என்றும் திருவுள்ளத் துதிக்கும் அந்த அவதரத்தில் எக்காலமும் நிறைகுறைவில்லாமல் நீ இப்படியே வாழ்க வாழ்க அளவிறந்த அடிமைகளுக்கும் இனிமேலுந் திருவடிக்காளாய் வருகிற அடியார்களுக்கும் அடிமையாக்கி என்னைப் பாதுகாத்து ரக்ஷிக்க வேண்டுமென்று “இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க”, (திருவாசகம், சிவபுராணம் 2) என்றார் மேலோர். திரிகரண சுத்தியாய்ச் சிரசின் பேரிற் கைகூப்பி அபிநயமாய் அடியேன் படும் இடர்களெல்லாம் விண்ணப்பஞ்செய.
121-122. ஆர்த்தகரி வீழ்வரோ :
(உரை) தாருகாவனத்து ருஷிகள் மஹாகோபத்துடன் அபிசார ஹோமஞ் செய்து அந்த ஹோமத்தில் வரப்பட்ட பெருமை பொருந்திய கன்னமதங் கபோலமதங் கோசமதம் மூன்றும் வெள்ளமாய்ப் பெருக வெகு ஆங்காரத்துடன் வருகின்ற வெறுமலையென்னும் யானையைக் கங்காள வேடமாய் வந்த ஸ்வாமியை விழுங்கும்படி யனுப்ப, அப்படியே யானை ஸ்வாமியை விழுங்க, அதுகண்டு உமையவள் அஞ்சி விநாயகனை முன் நடத்திக் கந்தனை யிடுக்கிக் கொண்டு த்வஜஸ்தம்ப மட்டும் போய்த் திரும்பிப் பார்க்க, ஸ்வாமி மான் மழு சூல கபாலங் கடகங் கேடயம் வரதம் அபயமுடைய அஷ்டபாணியாய் வீரட்டேசுர மூர்த்தமாய் யானை வீறிட்டலறும்படி தலைகீழாக மிதித்து அட்டகாசஞ்செய்து யானையைக் கிழித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டு குருஸ்வாமி ஆனந்த நிருத்தஞ் செய்ததைக் கண்டு, உமையவள் ஸ்வாமி பக்கத்தில் வந்து திருவாய் மலர்ந்தருளினாள். ஆதலால் இரண்டாயிரந் தந்த பந்தியையுடைய ஐராவதத்தின்மேல் எழுந்தருளிப் பவனிவருகிற ஸ்வாமியைக் கண்டு தேவர்கள் பொன்மாரி புஷ்பமாரி பொழியத் தேவதுந்துபி முழங்க மூன்று லோகத்தாரும் அடியார்களுந் தோத்திரஞ் செய்து தொழுது பேரானந்தப் பெருவெள்ளத் தழுந்தித் தேக்கிட்டுப் பரவசராகி யிருந்தார்கள். தென்றல் தேராகவும், இரவு யானையாகவும், தத்தை குதிரையாகவும், பெண்கள் பதாதியாகவும், சந்திரன் குடையாகவும், சமுத்திரம் பேரியாகவும், ரதி தேவியாகவும், பூஞ்சோலை பாசறையாகவும், கரும்பு வில்லாகவும், வண்டு நாணாகவும், அரவிந்தம் சூதம் அசோகு முல்லை நீலோற்பலம் பாணமாகவும், இப்படி வெற்றி பொருந்தி மூன்று லோகத்தாரையுந் தனது வசப்படுத்த வல்லமையுடைய மன்மதன் மாய்கையில் வீழார்கள் உம்முடைய பவனி கண்ட பேர். ‘யானை யிரதம் பரியாளவை யில்லை, தானு மனங்கன் றனுக்கரும்பு தேனார், மலரம்பால் வென்று வடுப்படுத்தான் மாரன், உலகங்கள் மூன்று மொருங்கு’ என்றார் மேலோர். இப்படி நொய்யவனாகையால் ‘மதனம்புக் கிளையா’ ரென்றார் மேலோர்.
122-123. நின்றிடத்து புகுவரோ :
(உரை) பிரமவிஷ்ணுக்கள் தேவேந்திரன் முதலாகியார் செல்வமும் அதோமுக அடுக்குகளி லிருக்கப்பட்ட பேர்கள் செல்வமும் பெரிதென்று மனவாக்கு காயத்திலும் எண்ணுவதில்லை. ‘செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே’ (சம்பந்தர் 1.80.5) என்றார் மேலோர். அப்படி யெண்ணாமல் அவர்கள் செல்வத்துக் கவாவாகி நரக வேதனைப் பட்டுழலார்கள் உம்முடைய திருவடி கண்டபேர்.
123-124. பல்லோரும் திகைப்பரோ :
(உரை) சகல வேதாகம புராண கலைஞானம் சமைவாக்கு மற்றுமுள்ள சாத்திரங்கள் இவைகளனைத்தும் சைவ சித்தாந்த சமயமே சமயம் பரமசிவமே அதற்குக் காருண்யமான பொருளென்று சொல்லி முறையிடப் பதிபசு பாசத்தினுண்மையை விளங்கச் சொல்லும் மெய்கண்ட சந்தானமே சந்தானம் அதைப் பெரிதென் றெண்ணாமல் மனம் பலகாலுந் திகைத்துத் திரியார்கள். ‘தலைப்படு சால்பினுக்குந் தளரார்’ (திருக்கோவையார், 25) என்றார் மேலோர். அன்றியும் புறச்சமயிகள் மார்க்கத்திற் செல்லார்கள். ‘வாழ்வெனு மையல்விட்டு ... போழிள மதியினானைப் போற்றுவா ரருள்பெற் றாரே’ (சித்தியார், 2.91) என்றார் மேலோர்.
124-125. முத்தம் வருவரோ :
(உரை) பேதைமுதற் பேரிளம் பெண்ணந்தஞ் சிறியன தந்த பந்திகளைக் கண்டு முல்லையரும்பும் மாதுளம் பழவித்தும் இகலி வெட்கி நாணும், பெண்கள் பாதாதி கேசமளவுங் கரும்புரசனை என்று அவர்களின்பங் கிஞ்சித இன்பம் அதைப் பெரிதென்றெண்ணி மயங்கித் திரியார்கள்.‘இறைவன் கழலேத்து மின்ப மின்பமே’ (சம்பந்தர் 1.80.4) என்றார் மேலோர்.
125-126. இருபொழுதும் குறிப்பரோ :
(உரை) இரவும் பகலும் இருபத்தேழு நக்ஷத்திரமும் நவக்கிரகமுங் கோள்களினாலே வரப்பட்ட நலந்தீங்குகளென்று குறியார்.
126-127. வேளை தையல் :
(உரை) முன்னஞ் சொல்லப்பட்ட வெற்றியையுடைய மன்மதனை யெரித்த பாலநேத்திரத்தினுடைய உண்மையை இவ்வளவென்று சொல்லி முடியாது. அது என்னெனில், ‘தூயநேத் திரத்தினாலே சுட சுடரொளி கொடுத்த பண்பாற், றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச’ தென்றார் (சித்தி. பர. 72) மேலோர். அந்த இடம் நிறைவு குறைவில்லாத இடம். அஃதெப்படியென்றால், அதனுடைய நுட்பம் ‘விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழ, லுண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்’ (அப்பர் 4.11.3) என்றார் மேலோர். சகல ஆன்மாக்களையும் இருவினையொப்பு மலபரிபாகம் வரும்படி எம்முடைய குரு கருணை கூர்ந்துவிட நேயத்தழுத்த லென்றும் பேரின்பவெள்ளத்து இன்ப மிருக்குமிடமிதுவென்று சுட்டிக் காண்பிக்கு மிடமாய்ப் ‘பிறவி வழக்கறுத் தானந்தவாரியி னேயத்தழுத்த’ லென்றார் மேலோர். அந்த இடம் தான் பெற வேணுமென்று தன் மதி மறந்து பேரானந்தப் பெருவெள்ளத்தின்பம் என்று கிடைக்குமோவென்று சகோர பக்ஷி சந்திர கிரணத்தைப் புசிக்கக் காத்திருந்தது போலும், தலையீற்றுக் கன்றானது கறவை எப்போது வருமென்று அமுதம் புசிக்கக் காத்திருந்தது போலும், பேதைமுதற் பேரிளம்பெண் பருவமட்டும் இந்தத் தையலாகிய பெண் முன்னங் குருபரன் செய்த சகாயத்தை மறந்தவ ளாகையாற் பார்த்துப் பார்த்து ஏங்கி யேங்கியிடருற்றாள்; அன்றியும், முன்னந் தீடிக்ஷயென்னும் இயற்கைப் பெயரையுடைய சிவசத்தியால் என்னை அநாதியிற் பசுத்துவத்தினால் அஞ்ஞானியா யிருக்கின்ற ஜனன மரணத்துக் கேதுவாகிய மலமாயா கன்மங்களோடு பொருந்தாம லிருக்க ஷடத்துவா சோதனைசெய் தெடுத்துச் சமனாந்தம் பாசக்கூட்டங் கூடாதவகை சின்மாத்திரஞ் சுத்தகேவலமாய் சேட்டிக்கப் பண்ணிய குருவுக்குந் தெரியும்படி சொல்.
127-128. வருத்தமெலாம் தாழ்ந்திறைஞ்சி :
(உரை) அடியேன்படுந் துயரமெல்லாந் தீர்க்கவேணுமென்று நீ குருபரனுக்குத் தெரியும்படி சொல்லிப் பொற்பிரகாசம் பொருந்தி ஆயிரத்தெட் டிதழையுடைய செங்கமலப் பூவினுஞ் சிறந்த திருத்தாளைத் தரவேணுமென்று சிரசின்பேரிற் கைகூப்பி மும்முறையே தண்டனிட்டுத் தொழுது தோத்திரஞ் செய்து மயிர்க்கூச் செறிய அந்தத் திருவடியினுடைய பெருமையின் நுட்பமும் யாவராலும் மட்டிட்டுச் சொல்லி முடியாதென்று மேலோர் சொல்லுவார்கள். என்னவெனில், ‘ஏகமாய் நின்றே யிணையடிகள்’ (சிவஞானபோதம், 11.2) என்றும், ‘மெய்ச்சுடருக்கெல்லா மொளிவந்த பூங்கழ’ லென்றும் ‘மின்னே ரனைய பூங்கழல்கள்’ (திருவாசகம், ஆனந்தமாலை, 1) என்றும், ‘போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்’ (திருவெம்பாவை, 20) என்றும் ஆதியெழு பருவமு மென்றும், ‘விரவியெனை யெடுத்தாண்ட செய்யதிருவடி’ யென்றும், ‘ஆனந்த வாரியி லான்மாவைத் தானழுத்தல், தானெந்தை யார்பரதந் தான்’ (உண்மைவிளக்கம், 37) என்றும், ‘உள்ளும் புறம்பு மொழிவின்றி நின்ற, வள்ளன்மை காட்டு மலரடி’ (இருபாவிருபது, 20) யென்றும், ‘ஆட வெடுத்திட்ட பாதமன் றோநமை யாட்கொண்டதே’ (அப்பர் 1.81.10) என்றும் இப்படிச் சொல்லப்பட்ட திருவடியைத் தரவேணுமென்று திருவடியிலே தாழ்ந்து தண்டம் பண்ணிக் கேள். ‘வேண்டுவார் வேண்டியது மெய் தருகுவா’ னென்றார் மேலோர்.
128-129. ஏராரும் இனி :
(உரை) அழகு பொருந்திய அருட்சத்தியாகிய சிவகந்தம் பரிமளிக்கவும் ஆன்மவர்க்கமாகிய மதுகரங்கள் தேன்களை யுண்டு தேக்கிட்டுச் சிவோகம் பாவிக்கப்பட்டவுமான கொன்றை மாலையை வாங்கும் படியாய்ப் புகழ்ந்து, இன்பத்தைச் செய்யும் நெஞ்சமே, மீட்டும் என்னுடன் பொருந்தும்படி இவ்விடத்து வந்து இனிச் சேருவாயாக.புகழ்வது என்னவென்றால், ‘வேண்டுக வேண்டுக மறவாமை’ யென்றும், ‘இந்நிலை யதனி னேழையேற் கிரங்கி’ (இருபாவிருபது, 12), ‘நின்னது கருணை சொல்லளவின்று’ (யூ14) என்றும், ‘உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணானோ வுற்று’ (சிவஞான போதம் 11.2) என்றும், ‘பெண்டான் சமைந்து பெரியவ ளாகுநாட கொண்டா னறிவான் குணாகுணத்தை’ யென்றும், ‘எழுதாத புத்தகத் தேட்டின் பயனைப் ... பிறவாத வண்டு மணமுண்ட வாறே’ (திருமந்திரம், 2885) யென்றும், ‘பேரா தருளுதல் பெரியோர் கடனே’ (இருபாவிருபது, 16) யென்றும், ‘ஈய வேண்டுமென் னும்விதி யின்றாம்’ (யூ14) என்றும், ‘ஒன்றா காம லிரண்டாகாம, லொன்று மிரண்டு மின்றா காமல்’ (யூ20) என்றும், ‘மாலையா மாற்ற மதி’ (யூ5) என்றும், ‘உரையும் பொருளு முடலு முயிரும் ; விரையு மலரும் போல் விம்மிப் புரையின்றி’ (கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, 27) யென்றும், ‘மாலை வருகு’ தென்றும், ‘மாலாகினால் கொன்றை மாலைவரக் கண்டு மகிழ்ந்தா’ னென்றும், ‘தான்றான் றம்பிரா’ னென்றும் இங்ஙனஞ் சொல்லி வந்த காரணகாரியங்களெல்லாம் அடியேன் உனக்குச் சொன்ன காரணம் மறந்து மயங்கியிருக்கப் போகிறாயென்று உனக்குத் திடம்வரச் சொன்னது. அடியேன் செய்த பாக்கியம், குருபரனை நீ கண்டு, அவருடைய ‘திருவடியைக் கண்ட பேருக்குத் தீங்கில்லை’ யென்றார் மேலோர். ‘உன் கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலம்’ (திருவெம்பாவை, 19) ‘வெஞ்சே லனைய கண்ணார்தம் ...... பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால், அஞ்சே லென்ன ஆசைப்பட்டேன் கண்டா யம்மானே’ (திருவாசகம், ஆசைப்பத்து, 10) ‘அன்றே யென்ற னாவியுமுடலு முடைமை யெல்லாமுங், குன்றே யனையா யென்னை யாட் கொண்ட போதே கொண்டிலையோ, இன்றோ ரிடையூ றெமக் குண்டோ வெண்டோள் முக்க ணெம்மானே, நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே’ (திருவாசகம், குழைத்த பத்து, 7), ‘கூசி மொழிந் தருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே’ (சித்தியார், 12.2), ‘மாதாளும் பாகத் தெந்தை, யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோ மியாது மஞ்சோ, மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன் மேலுங் குடைந்தாடி யாடு வோமே’ (திருவாசகம், திருச்சதகம், 30), ‘செங்கமலத் தாளிணைகள் சேரலொட்டாத் திரிமலங்க ளறுத்தீச னேசரோடுஞ் செறிந்திட், டங்கவர்தந் திருவேட மாலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப்பாடி, யெங்குமியா மொருவர்க்கு மெளியோ மல்லோ மியாவர்க்கு மேலானோ மென்றிறுமாப் பெய்தித், திங்கண்முடி யாரடியா ரடியோ மென்று’ (சித்தியார், 12.1) இப்படியெல்லாம் மேலோர் திருவுளம் பற்றினார்கள். அன்றியும், ‘அருளி னருளே யருளாபே ரின்பப், பொருளின் பொருளாம் பொருளேகுருவாம், மருதத் தலைவர் கொன்றை மாலைதனை நெஞ்சே, தருகவெனக் கின்று தகும்’, ‘வாராது வாராது வள்ளிதழேய் பூங்கொன்றைத், தாரார் புயமருதச் சம்பந்தன் சீரார்ந்தே, எங்கிலுந் தான்சடசித் தாயிருந் தான்நெஞ்சே, இங்கினியு முண்டோ விடர்’ என்பன கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - யம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாம்அகல
நெஞ்சமே வாராய் நினைந்து.

பொழிப்புரை :

நெஞ்சுவிடுதூதிற்கு இங்குப் பதிப்பிக்கும் உரைக்கு மூலமாயது கொ. ஷண்முகசுந்தர முதலியார் சிவஞானபோத யந்திர சாலையிற் பதிப்பித்து வெளியிட்டதேயாகும். இதற்குக் கையெழுத்துப் பிரதிகள் கிடைத்தில. உரை சாத்திரப் பயிற்சி மிக்க ஆசிரியர் ஒருவரியற்றிய பழைய உரையாகும்.
எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

மண்முதற் சிவமதீறாம் வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவமதீறாம் மலம்சடம் என்றல் காட்சி
மண்முதற் சிவமதீறாம் வகைதனில் தான்நி லாது
கண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருது மன்றே.

பொழிப்புரை :

மண்முதற் ... ரூபம் பிருதிவி தத்துவ முதலாகச் சிவதத்துவமீறாக வரும் முப்பத்தாறு தத்துவத்தின் வடிவை இம்முறையிலே காண்பதுவே தத்துவ ரூபம் ; மண்முதற் ... காட்சி இப்படி வந்த தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா கூடியறியினல்லாது தானாக அறியாதாகையால் சடமென்று காண்பதுவே தத்துவ தரிசனம் ; மண்முதற் ... மன்றே சிவன் ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்து மண் முதலாகச் சிவமீறாக வரும் பூதம் பொறி அந்தக்கரணம் கலாதி சுத்ததத்துவமென்று அஞ்சுவகையாம் முப்பத்தாறு தத்துவமும் அசத்தாய்ச் சடமா யழிந்து போயிறதென் றறிவிப்பதா லொக்கு மெனப் பொருந்தி, ஆன்மா பூதமல்லவென்று பழித்தும் பொறி யல்லவென்று உணர்ந்தும் அந்தக் கரணமல்லவென்று நீக்கியுங் கலாதி ஞானமல்லவென்று நிராகரணம் பண்ணியுஞ் சுத்ததத்துவ மல்லவென்று தூடணஞ் செய்தும், இவையிற்றின் நில்லாது நீங்கித் தத்துவாதீதமாய் இந்தத் தத்துவத்தின் மீண்டுங் கூடாமல் விஞ்ஞானகலத்துவம் பிறந்து சகல தரிசனமாய் நிற்றல் தத்துவ சுத்தியாம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 2

பாயிருள் நிங்கி ஞானந்
தனைக்காண்டல் ஆன்ம ரூபம்
நீயும்நின் செயலொன் றின்றி
நிற்றலே தெரிச னந்தான்
போய்இவன் தன்மை கெட்டுப்
பொருளிற்போய் அங்குத் தோன்றா
தாய்விடில் ஆன்ம சுத்தி
அருள்நூலின் விதித்த வாறே.

பொழிப்புரை :

பாயிருள் ... ரூபம் பரந்த இருளாகிய கேவலம் அதீதமாய் அவ்விடத்துண்டாகிய ஞானத்தைத் தானென்று காணுதல் ஆன்ம ரூபமாம் ; நீயும் ... தான் நீ கண்ட ஞானத்துக்கே செயலெனக் கண்டு உனது செயல் சற்றேனுமின்றி நீயும் அந்த ஞானமுமாய் நிற்றல் ஆன்ம தரிசனமாம் ; போய் ... வாறே அந்தச் சிவஞானத்தோடு ஒத்து நில்லாது பரையிற் போய் இவன் தன்மையாகிய போதப் பதைப்புக் கெட்டு அவன் தன்மையாய் அதில் அழுந்திச் சிவமெனும் பேறுபெற்றோமென்னும் பரமானந்தப் பொருளிற் போய்த் தரிசித்து அவ்விடத்துத் தான் தோன்றாது அந்தப் பரமானந்தப் பொருளோடு கூடி அதுவாய் விடில் ஆன்ம சுத்தியாமென்று சிவாகமங்களில் விதித்தவாறு இவ்வாறாம்.
‘பாயிருள் நீங்கி’ என்றது தத்துவங்களெல்லாம் நீங்க வருந் தன்னுண்மையாங் கேவலத்தைச் செம்பிற் களிம்பு போல் ஒன்றாய் நீரில் நிழற்போல் தோன்றாது இன்றளவும் நின்றது இதுவோவென்று தரிசித்து அதீதமாவதை. ‘நீயும்நின் செயலொன் றின்றிநிற்றல்’ என்றது ஞானசொரூபியாய் நின்ற நீயும் அந்த ஞானத்தோடொத்து உனது போதம் சற்றேனுமின்றி நிற்குமதை. ‘போய் இவன் தன்மை கெட்டு’ அவன் தன்மையா யென்றது தற்றெரிசனம் பண்ணிநின்ற உன்னிடத்திலே, மலரும் பக்குவம்வர மேலே மணம் பிரகாசித்தாற் போல, உன்னறிவிலே பிரகாசித்து நீ யொத்து நின்ற ஞானத்தை இதுவாகிலும் நமக்கு அறிவித்ததென்று தரிசித்துக் கண்பெற்றார் கண்ட கதிரொளிபோல மற்றொன்றையுங் காணாது உள்ளும் புறம்பும் இந்த ஞானம் பூரணமான பரையையும் தரிசித்துக் கண்ணிற் கதிரோன் கலந்தாற்போல தெரிசித்த பரையிலே வியாத்தமாய், விண்ணின் விகற்பமற மேவிய கால் நின்றது போலவும் திரையற்ற நீர்போலவும் விகற்பமற ஒன்றாய் நிற்கும் பராயோகமாய், அப்படித் திரையற்ற நீர்போல நின்று தெளிவு பெற்றுப் பராபோகமாய், உண்மை ஞானப் பயனாந் தசகாரியம் ஒன்றுமில்லாத சுழுத்தியில் உன்னைவிட்டு நீங்காமல் நிற்க நீ கண்ட பரை பஞ்சகிருத்தியஞ் செய்து உன்னை மோட்சத்திலே விடவேண்டுமென்று விரும்பின அதன் விருப்பத்தை மிகுதியும் நீ பொருந்தினதால் அதைப்போல நாமும் பஞ்சகிருத்தியஞ் செய்ய வேண்டுமென நின்ற சுத்த பராயோகமாய், அந்தச் சுழுத்தியிலுள்ள பரையினது விருப்பத்தி லழுந்தின மயக்கந் தீர்ந்து கண்ணுஞ் சூரியனும் போல உன்னையும் பரையையுங் கண்டு பரையினது கிரியையைப் பொருந்திப் பணிசெய்து நிற்கும் முத்திச் சாக்கிரமாய், சிவனையன்றிப் பரைசெய்யமாட்டாத பஞ்ச கிருத்தியத்துக்குப் பரைக்குக் கருவியாயிருந்த நமக்குப் பணிசெய்வதற்கும் ஒரு செயலுண்டோவெனப் பணிசெய்யாது விட்டுச் சாக்கிரா தீதமாய், இப்படிப் பணியையும் பணியறுதியையும் பாராது பஞ்ச கிருத்தியம் பண்ணுதற்குப் பரைக்குமேலும் ஒரு முதலுண்டோ அதெப்படி யறியப் போகிறோமென்று இச்சை கிரியை ஞானம் மூன்றையும் விட்டுப் பரையாதீதமாய், ஒன்றுங்குறியாது திகைக்குஞ் சுத்தாவத்தையிற் போய் இவன் தன்மையாகிய போதப் பதைப்பற்றுச் சோகம் பிறந்த போது சிவன் தனது தன்மையாஞ் சுகந்தோன்றுவதை. ‘பொருளிற் போய் அங்குத் தோன்றா தாய்விடில்’ என்றது இந்தச் சுகமும் சிவனுக்கு ஓர் இன்பசத்தியென்று கண்டு அது நீங்குஞ் சுகாதீதத்தின் உண்மையாஞ் சிவத்தைக் கிட்டி அதனாலே வரும் பரமானந்த வெள்ளப் பொருளிற் போய்த் தரிசித்து அவ்விடத்துத் தான் தோன்றாது அந்தப் பரமானந்தப் பொருளதுவாய்விடும் பரமானந்த யோகத்தையென விரித்துணர்ந்து கொள்க.
நீயும் நின் செயலொன்றின்றி யென்னும் உம்மை உயர்வு சிறப்பின் கண்ணும், நிற்றலே யென்னும் ஏகாரம் தேற்றத்தின் கண்ணும் வந்தன. இவன் தன்மைகெட்டு அவன் தன்மையாயெனச் சொல்லெச்சமாய் வருவிக்கப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

எவ்வடி வுகளும் தானாம் எழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே.

பொழிப்புரை :

எவ்வடிவு ... ஆகி சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விட்டுணு பிரமா மற்றுமுள்ள வடிவுகளெல்லாந் தானே யாகின்ற சிறந்த பரைவடிவே தனக்கு வடிவாகி ; கவ்விய ... ஆக்கி மலத்தைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அவ்வான்மாக்கள் ஆர்ச்சித்த வினைகளையும் அறிந்து பொசிப்பிப்பது காரணமாக மாயா காரியமாகிய உடலுந் தத்துவங்களும் புவனங்களும் பொசிக்கும் பதார்த்தங்களுமாக விசாரித்து நிறுத்திப் பொசிப்பித்துத் தொலைப்பிக்கு மளவிலே, வேலை கொள்வானொருவன் வேலை செய்வானொருவ னிளைப்புக்கண்டு நடுவே யிளைப்பாற்றி வேலை கொள்ளும் முறைமை போல, மலத்திடைப்பட்டுக் கிடக்குந் துயரந் தீருமளவும் மாயையின் காரியத்தை யொடுக்கிப் பின்னுமுண்டாக்கி ; பவ்வம் ... அன்றே அப்படித்தாகு முறைமையை அடைவிலே தொலைப்பித்து இரட்சிப்பானொரு பரமேசுரன் வடிவு பரையென்றும் அது உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளையே இடமாக நின்று காணுதல் சிவரூபமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

4. பரைஉயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகும் என்றங்
குண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன் றின்றித்
தரைமுதலிற் போகாது நிலையினில்நில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதத்தி னாகுந்
தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே.

பொழிப்புரை :

பரை உயிரில் ... அடியாம் முன் உயிர்க்குயிராய் நின்றறிவித்த அடிஞானமாகிய பரையானது உயிரிலே யானெனதென்பதற நின்றது திருவடியாமென்றும் ; பார்ப்பிடம் ... முகமாம் சோகந் தோன்றிச் சுகத்திற்பட்டுப் பார்க்கப்பட்ட பாசப் பரப்பெங்குஞ் சோதிக்குட் சோதியாஞ் சிவமாய்த் தோன்றலது முகமாமென்றும் ; உரையிறந்த ... என்று தரிசித்த அந்தச் சிவப்பேற்றில் வாக்கு மனாதீதமாய் ஒரு ஆனந்தமுண்டாம் அதுவே முடியாமென்றும் ; அங்குண்மையினை ... நூலே சிவனுக்குத் திருவடி யென்றுந் திருமுகமென்றுந் திருமுடி யென்றுஞ் சொல்லப்படுமவைகளின் உண்மையை மிகவுந் தெளிந்து அதுவே பொருளாய் மண் முதலான தத்துவங்களின் மீண்டும் போகாது, துறந்து நின்ற நான் பிரமமென்னும் பசுஞானமான தன்னிலையிலேயும் நில்லாது, மேலான பரையிலேயும் நின்றழுந்தாது, சிவப்பேற்றிலாகும் அறிதற்கரிய பரமானந்தத்தே சேர்தல் சிவனை உள்ளபடி தரிசிப்பதாஞ் சிவதரிசனமென்று சிவாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

எப்பொருள்வந் துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்
கெய்தும்உயிர் தனைக்கண்டிவ் வுயிர்க்கு மேலாம்
ஒப்பில்அருள் கண்டுசிவத் துண்மை கண்டு
உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதும்அதுவே நினைப்பும்அது தானே
தரும்உணர்வும் பொசிப்பும்அது தானே யாகும்
எப்பொருளும் அசைவில்லை யெனஅந்தப் பொருளோ
டியைவதுவே சிவயோகம் எனும்இறைவன் மொழியே.

பொழிப்புரை :

எப்பொருள் வந்து உற்றிடினும் அந்தப் பரமானந்த நிலை குலைந்து உலகமே வந்து பொருந்தினும்; அப்பொருளைப் பார்த்து அந்த உலகப்பொருளை அசத்தாய்ச் சடமாய் அழிந்து போகிற பாசமெனப் பார்த்து; இங்கு எய்தும் உயிர்தனைக் கண்டு இந்தப் பாசத்துட் பொருந்தாநின்ற உயிருக்குச் சுதந்தரமாய் ஒரு செய்தியும் இல்லையெனப் பார்த்து; இவ்வுயிர்க்கு மேலாம் ஒப்பில் அருள் கண்டு இவ்வான்மாவுக்கு ஒரு செயலற்றுந் தனக்கு மேலாய் ஒப்பற்ற அருள் கண்ணாக நிற்குமதனைக் கண்டு; சிவத்துண்மை கண்டு அவ்வருளினுட் பரையை அடியாகவுஞ் சுகத்தை முகமாகவும் ஆனந்தத்தை முடியாகவுங் கொண்டு நின்ற சிவத்தினது உண்மையைக் கண்டு ; உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கி பொருந்திய உலகப் பொருளாகிய அவன் அவள் அதுவென்னுஞ் சடசித்துக்க ளெல்லாவற்றையும் அந்தச் சிவத்தினாலேதானே பற்றிப் பார்த்து ; தப்பினை ... மொழியே மறப்பினைச் செய்வதும், நினைப்பினைச் செய்வதும், அறிவிக்க அறியும் ஆன்மபோதமும், கர்மப் பொசிப்புஞ் சிவன் தானேயென அறிந்து, அவனை யொழிய வேறொரு திரணமும் அசைவில்லை யெனக் கண்டு, அகமும் புறமும் அந்தச் சிவத்துடனே கூடி நிற்றலே சிவயோகமாமென்று சிவாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
தனக்கெனஓர் செயலற்றுத் தான்அதுவாய் நிற்கில்
நாதன்இவன் உடல்உயிராய் உண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி இதுவே.

பொழிப்புரை :

பாதகங்கள் செய்திடினும் அப்படித் தற்செயலற்று நின்றவன் ‘காமங் கோபங் கசடுறு முலோபந், தீமன மோகஞ்சேர் மதமச்சம்’ (சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூரகவல்) இவை முதலிய பாதகங்கள் செய்யினும் ; கொலைகளவு கள்ளுப் பயின்றிடினும் பஞ்சமாபாதகமாகிய ‘கடுங்கொலை வெறும்பொய் களவுகட்காமம்’ செய்யினும்; நெறியல்லா நெறி பயிற்றி வரினும் நெறியல்லாத அவநெறியைத் தவறாது நடத்திவரினும்; சாதிநெறி தப்பிடினும் தனதான சாதி முறைமை குலையினும்; தவறுகள் வந்திடினும் ஒரு குற்றம் தன்னை யறியாமல் வந்துற்ற காலத்தும்; தனக்கென ஓர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில் தான் அதுவாய் ஏகனாகி இறைபணி வழுவாது தனக்கென ஓர் செயலற்றே நிற்பானாகில் ; நாதன் இவன் ... இதுவே அந்தச் சிவன் இவனுடலும் உயிருமாய் நின்று உண்டு உறங்கி நடந்து பிராரத்தமாகிய நானாவித விடயபோகங்களையும் சிவபோகமாகவே செய்து இவனைப் பேதமற நின்று தானாக்கி விடுவன்; இது ஆன்மலாபமான பரமானந்தத்தைப் பொசித்து நிரம்பி அது பொங்கி மேலிட்டது கரைபுரண்டு அவசமுறுஞ் சிவபோகமென்று சிவாகமங்கள் சொல்லும்வழி இதுவாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)
உண்மை நெறிவிளக்கம் ஓதினான் - வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்.

பொழிப்புரை :

வண்ணமிலாத் தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும் நண்பாய தத்துவநாதன் மாயாவுருவின்றிச் சச்சிதானந்த சொரூபியாய்க் குளிர்ச்சி பொருந்திய காழி நகர்க்குத் தலைவனான தத்துவனார் தமது சீபாதங்களையே சிரசிலே சூட்டியருளும் விருப்பத்தைப் பெறாநின்ற தத்துவநாதனென்னும் திருநாமத்தை யுடையோன்; எண்ணும் அருள்நூல் தமதாசிரியர் கருதிச் செய்யும் ஆகம சித்தாந்தமாம் முப்பது அவதரத்தையும் ; எளிதின் அறிவாருக்கு உண்மை நெறிவிளக்கம் ஓதினான் எளிதாக அறியும் பக்குவ ஆன்மாக்களுக்கு ஆறு திருவிருத்தத்திலே பத்து அவதரமாகத் தொகுத்து உண்மை நெறிவிளக்க மென்னுந் திருநாமத்தினையுஞ் சாத்தித் திருவுளம் பற்றினான்.
துகளறுபோதம் முப்பது அவதரமும் உண்மைநெறிவிளக்கம் ஆறு பாட்டினுந் தசகாரியமாய் அடங்கி வருவதற்கு வகை :
பூதப்பழிப்பு, பொறியற வுணர்தல், அந்தக்கரண சுத்தி, கலாதி ஞான நிராகரணம், சுத்த தத்துவ தூடணம், தத்துவாதீதம், சகலதரிசனம் ஆக ஏழும் முதற்பாட்டில் அடங்கி வருவது காண்க.
இனி இரண்டாம் பாட்டில், கேவலம், கேவல தரிசனம், கேவலா தீதம், தன்னுண்மை ஆக நான்கும் ‘பாயிருணீங்கினபின் தானென்று ஞானந்தனைக் காண்ட லான்மரூபம்’ என்பதனு ளடங்குவது காண்க. சைதன்னிய தரிசனம், ஞானதரிசனமாம் இரண்டும் ‘பாசவடிவை விட்டு ஞானமே வடிவாம் நீயும் நின்செய லொன்றின்றி நிற்ற’ லென்பதனி லடங்குவது காண்க. பரைதரிசனம், பரையில் வியாத்தம், பராயோகம், பராபோகம், சுத்தபராயோகம், முத்திசாக்கிரம், சாக்கிரா தீதம், பரையில தீதம், சுத்தாவத்தை, சுகரூபம், சுகாதீதம், சிவப்பேறு ஆகும் இப்பன்னிரண்டும் ‘போய் இவன் தன்மைகெட்டு அவன் தன்மையாய்’ என்பதினு ளடங்குவது காண்க. இவன் தன்மைகெட்டு என்பதனால் அவன் தன்மையாவதென வருவிக்கப்பட்டது. பரமானந்த தரிசனம், பரமானந்த யோகமாமிரண்டும் ‘பொருளிற்போய் அங்குத் தோன்றாதாய்விடி’ லென்பதினு ளடங்குவது காண்க. ஆக இரண்டாம் பாட்டில் இருபது அவதரமும் அடங்குவதறிக. சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் ஆக மூன்றும் முற்கூறிய இரண்டாம் பாட்டில் ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தியி லடங்கி வருமென அறிக.
ஆறாம் பாட்டில் பரமானந்த போகம், பரமானந்த மேலீடு, பரமானந்த அவசம் ஆக மூன்றும் அடங்குவது காண்க.
இங்ஙனங் கூறும் ஆறு பாட்டிலும் பாசவவதரம் ஏழும் பசுவவதரம் பதினைந்தும் பதியவதர மெட்டுமாம் முப்பதவதரத்தையுந் தசகாரியமாக அடக்கிக் கூறியது காண்க. ‘தற்காண்டல் சாக்கிரமாந் தற்பரையே சொப்பனமாந், தற்காணா வெற்றவெறுந் தற்பரையே நற்சுழுத்தி, ஞானானந் தந்துரியம் ஞானசுகா தீதத்தே, தானாகா வுண்மையதீ தம்’ (சிவானந்தமாலை, 36) என்றும், ‘பாயிரு ணீங்கி ஞானந் தனைக் காண்டல் ஆன்ம ரூபம்’ (?) என்றும் வரும் வசனப்படி அவதர முப்பதும் ஞானதெரிசனமாஞ் சாக்கிரத்திற் பதின்மூன்றும், பரைதரிசனமாஞ் சொப்பனத்தில் நாலும், சுத்த பரயோகமாஞ் சுழுத்தியில் நாலும், பரமானந்த யோகமாந் துரியத்திலாறும், பரமானந்த போகமாந் துரியாதீதத்தில் மூன்றுமாக அஞ்சவத்தையிலும் அஞ்சவதரமாய் அடங்கி வருவது காண்க.
(நெடுநாளாக உண்மை நெறிவிளக்கம் உமாபதி சிவாசாரியர் அருளிச் செய்ததாக வழங்கி வந்திருக்கிறது. ‘உந்திகளிறு’ என்ற செய்யுள் ‘உண்மைநெறி’ யென இந் நூலை மாத்திரஞ் சுட்டியதே யன்றி இதன் ஆசிரியர் பெயரைக் கூறாதொழிந்தது. சிவப்பிரகாசம் முதற் சங்கற்ப நிராகரணம் இறுதியாகவுள்ள எட்டு நூல்களையும் சித்தாந்தாஷ்டகம் என்னும் பெயரோடு கொ. ஷண்முகசுந்தர முதலியார் பதிப்பித்து, அவை யெல்லாம் உமாபதி சிவாசாரியர் அருளியனவாகக் கொண்டனர்.
இனி, ஆசிரியர் பெயருரைக்கும் ‘எண்ணும் அருள்நூல்’ என்னும் பாயிரச் செய்யுள் இங்குக் காணும் சிந்தனையுரையில் மாத்திரமே யன்றி, இராசாங்கக் கையெழுத்து நூல் நிலயத்துள்ள சிவஞான போதவுரையிடைத் தசகாரியத்தை விளக்கும் பொருட்டுக் காட்டப்படும் இந்நூல் மூலத்திறுதியிலும், இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை திருவாரூர் சோமசுந்தர தேசிகரவர்களிடத்துள்ள வேறு உரைப் பிரதியின் ஈற்றிலும் காணப்படுகிறது. சீகாழித் தத்துவநாதர்க்குக் குருவாக உரைக்கப்படும் சீகாழித் தத்துவனார் சீகாழிச் சிற்றம்பல நாடிகளேயென்று துணிந்துரைத்தற்குத் தக்க ஆதாரமில்லையாயினும் உரைகாரர் இந்நூலைத் துகளறுபோதத்தின் வழி வந்ததென்று குறிக்கின்றமையின் அதன் ஆசிரியராகிய சீகாழிச் சிற்றம்பல நாடிகளே இவ்வாசிரியர்க்குக் குருவாவர் என்றுரைக்க வேண்டியிருக்கின்றது. இச்சீகாழித் தத்துவநாதர் இருபாவிருபதிற்கு ஓர் சிறந்தவுரை யியற்றியுள்ளார். (601633பக்கங்கள் பார்க்க.) அவ்வுரையிறுதியிற் காணப்படும் வெண்பா சீகாழித் தத்துவநாதர், சிற்றம்பல நாடிகள் சீடரென்று தெளிவாக உரைத்தது.
உண்மைநெறி விளக்கத்துக்குப் பல வுரைகளுண்டு. இங்குப் பதிப்பிக்கும் சிந்தனையுரை என்னிடமுள்ள ஓலைச் சுவடியொன்றில் காணப்படுவது.
இவ்வுரை யியற்றியார் பெயர் கிடைத்திலது. வேறு பல்லுரைகள் சென்னை முதலிய பிறவிடங்களில் அகப்படினும் இச் சிந்தனை யுரைப் பிரதிகள் வேறு அகப்படவில்லை.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை.)

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

மறைக ளாகமத் துறைகள்மற் றெவையும்
நாசமில் பதிபசு பாசமென் றுரைத்தல்
அயர்த்தோர் குளிகைச் சயத்தால் தாமிரக்
காளித நாசம் பாசத் தேய்த்தல்
கூடா தன்றியும் குளிகை சீருணம் 5
நீடா தழித்த *நிலைஇலை ஆதலிற்
பேத வாதம் ஓதுதல் பிழையே
இன்னும் இன்னுயிர் ஏமங் குளிகை
தன்னில் அன்னியந் தருவது திடமே
வீடித் திறத்தினிற் கூடக் கூடா. 10

பொழிப்புரை :

மறைகள் ஆகமத் துறைகள் மற்று எவையும் நாலு வேதங்கள்முதல் ஆகமமும் வேதாகமங்களினதுவழிகள் புராணங்கள் மற்றுமுண்டான சாத்திரங்கள் இவையெல்லாம் ; நாசம் இல் பதிபசு பாசமென்று உரைத்தல் பதிக்கும் பசுவுக்கும் பாசத்துக்கும் அழிவில்லையென்று சொல்லுகிறதை ; அயர்த்து ஓர் குளிகைச் சயத்தால் தாமிரக் காளித நாசம் பாசத்து ஏய்த்தல் கூடாது நீ இப்பொழுது மறந்துவிட்டு, ஓர் இரத குளிகையினது சாமர்த்தியத்தினாலே செம்பிலுண்டாகிய காளிதமானது கெட்டுப் போகிறதைப் பாசத்துக்கு நீ உவமையாகச் சொன்னது சாத்திர விரோதமாகையால் பாசங் கெடுமென்கிறது அர்த்தமாகாது ; அன்றியும் குளிகை சீருணம் நீடாது அழித்த நிலை இலையாதலிற் பேதவாதம் ஓதுதல் பிழையே பாசம் கெடுமென்று சொன்ன தோஷமன்றியும் இரத குளிகையானது செம்பை நிலைநிற்கவொட்டாமல் அதை யழித்துப் பொன்னாக்கின திட்டாந்தநிலை உனக்குத் தாட்டாந்தத்து இல்லையாகையால், பசுமுதல் கெடாது பெறுவானும் பேறுமாயிருக்கு மென்று நீ முன்னே பேதவாதஞ் சொன்னது பழுதாம் ; இன்னும் இன் உயிர் ஏமம் குளிகை தன்னில் அன்னியந் தருவது திடமே அன்றியும் இன்னமும் ஒரு குற்றமுண்டு. அது என்னெனில், செம்பானது தன்னைச் சுத்தமாக்கின குளிகையு மாகாமல் தன்னுடைய தன்மையுங் கெட்டு நடுவே பொன்னான தன்மைபோல ஆன்மாவுந் தன்னைச் சுத்தமாக்கின சிவனுடைய சொரூபமுமாகாமல் தன்னுடைய தன்மையும் கெட்டு வேறே ஒரு சொரூபமாகவேண்டும். ஆகையால் அது குற்றமுண்டென்றது தப்பாது; வீடு இத்திறத்தினில் கூடக் கூடா மோக்ஷமென்கிறது செம்பும் இரதகுளிகையும் போலுமென்று நீ சொன்னவகையிற் கூடுமென்கிறது உண்டாகாது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

பெருங்கடல் உதவுங் கருங்கடு வாங்கிக்
கந்தரத் தமைத்த அந்தமில் கடவுள்
பாலரை யுணர்த்தும் மேலவர் போலக்
கேட்போ ரளவைக் கோட்படு பொருளால்
அருளிய கலைகள் அலகில வால்அவை 5
பலபல சமயப் பான்மைத் தன்றே
அஃதால் அந்நூற் றன்மை யுன்னிய
மாந்தர் இதுவே பொருளென் றதன்நிலை
அறைதலின் வேற்றோர் பனுவல் ஏற்றோர்க்
கிசையா மாறுபாடு கூறுவர் அதனாற் 10
புறச்சம யங்கள் சிறப்பில வாகி
அருளில் மாந்தரை வெருளுற மயக்கி
அலகைத் தேரின் நிலையில் தீரும்
ஈங்கிவை நிற்க நீங்காச் சமயம்
மூவிரு தகுதி மேவிய தாமும் 15
ஒன்றோ டொன்று சென்றுறும் நிலையில்
ஆறு மாறா வீறுடைத் திவற்றுள்
எவ்வ மில்லாச் சைவநற் சமயத்(து)
அலகில் ஆகமம் நிலவுத லுளஅவை
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் 20
தனம்நிதி ஆடகம் தமனியம் என்றிப்
பலபெயர் பயப்பதோர் பொருளே போலப்
பதிபசு பாச விதிமுறை கிளக்கும்
வாய்ந்த நூல்கள் ஆய்ந்தன ராகி
ஆசா னாகி வீசிய சமத்துடன் 25
ஏழஞ் சிறுநூ றெடுத்த ஆயிரம்
வாழுநற் சகனம் மருவா நிற்பப்
பொற்பொது மலிந்த அற்புதன் ஆனி
யாறாம் விழவிற் பொற்றே ராலயத்(து)
ஏறா *அறுவர் நிரையி லிருப்ப 30
மயங்கு வாத மாயா வாதி
முயங்கிட ஒருதலை முதுவெதிர் மணிசேர்
பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதிதிகழ்
மெய்கண் டவன்அருள் கைகண் டவர்களில்
ஒருவர் ஓர்தலை மருவி யிருப்ப 35
வஞ்சப் பிறவிக் கஞ்சிவந் தொருவன்
ஏதிறை யருளென இதுவெனும் மாயா
வாதியை அயலினர் மறுதலைத் தருள்தர
மற்றவ ரயலினர் அவருரை மறுத்துச்
சொற்றர அயலரில் அவருந் தொலைவுற்(று) 40
இன்னே *எழுவரும் முன்னே கழியுழி
ஆங்கய லிருந்த அருளினர் அழகிது
நீங்கள் சங்கற்பம் நிராகரித் தமையென
மற்றவர் உரைத்த சொற்றரு பொருள்கொடு
வாத செற்பை விதண்டையும் ஏதுவும் 45
ஓது நால்வகை உவமையுந் திகழ்தர
அருள்சேர் மாந்தர் வெருள்சே ராமற்
தர்க்கமும் விடையமுங் கற்க
நற்கவி மாந்தர் நகநவிற் றுவனே.

பொழிப்புரை :

பெருங்கட லுதவுங் கருங்கடு வாங்கிக் கந்தரத் தமைத்த அந்தமில் கடவுள் பெரிதாயுள்ள திருப்பாற்கடலிலே நின்றும் உண்டாக்கப்பட்ட கறுத்த நஞ்சினைத் தனது சீகத்தத்திலே வாங்கி அமுதுசெய்து கண்டத்திலே தரித்துக்கொண்டிருக்கச் செய்தேயுந் தனக்கு முடிவில்லாத கடவுள். என்னவே கர்த்தாவை நீக்கி முற்காலத்திலே தேவர்கள் அமுதங் கடைய அதிலே நஞ்சு பிறந்து அதனாலே அவர்கள் பீடைப்படுகையினாலே துட்டநிக்கிரகமும், அவர்கள் கர்த்தாவை நோக்கி அபயமிட அஞ்சாதேயென்று அந்த நஞ்சை அமுது செய்து அவர்களை இரட்சிக்கையினாலே சிட்ட பரிபாலனமுமாய் நின்றதெனக் கொள்க. இப்படித் துட்டநிக்கிரகமுஞ் சிட்ட பரிபாலனமுமுடைய கடவுளானவன் ; பாலரை யுணர்த்தும் மேலவர் போல தங்கள் பிள்ளைகளுக்கு அந்தந்தப் பக்குவங்கள்தோறும் அறிவையுந் தொழிலையுங் கொளுத்திவந்த மாதாபிதாக்களைப் போல ; கேட்போ ரளவைக் கோட்படு பொருளால் அருளிய கலைகள் அலகில கேட்கிற ஞாதாக்களுடைய எல்லைக் கோட்பாடுகளுக் கீடாயுள்ள அர்த்தங்களைக் கொண்டு அருளிச் செய்யப்பட்டிருக்கிற சாத்திரங்கள் எண்ணிறந்திருக்கும் ; ஆல்அவை பலபல சமயப் பான்மைத் தன்றே அப்படியிருக்கையால் அந்தச் சாத்திரங்கள் வெகுவிதமாயுள்ள சமயப் பகுதிகளோடுங் கூடியிருக்கும் ; அஃதால் அந்நூற் றன்மை உன்னிய மாந்தர் இதுவே பொருளென் றதன்நிலை யறைதலின் ஆகையால் அந்தச் சாத்திரங்களினது உண்மையை ஆராய்ந்தறிந்த ஆன்மாக்கள் இதுவே சாத்திரமும் இதுவே அர்த்தமுமென்று அந்தச் சமயத்தையே பெலமாகச் சொல்லி நிற்கையினாலே ; வேற்றோர் பனுவல் ஏற்றோர்க் கிசையா மாறுபாடு கூறுவர் மற்றொரு சாத்திரங்களை யாராய்ந்தறிந்தவர்களுக்கு அவன் சொல்லுகிற சாத்திரமும் அர்த்தமும் பொருந்தாது, ஆகையால் அவன் சொன்னது இவனுக்குப் பொருந்தாமல் இவன் சொன்னது அவனுக்குப் பொருந்தாமல் ஒன்றுக் கொன்று மாறுபடச் சொல்லா நிற்பர்கள் ; அதனாற் புறச் சமயங்கள் சிறப்பில வாகி அருளில் மாந்தரை வெருளுற மயக்கி அலகைத் தேரின் நிலையில் தீரும் அப்படி யிருக்கையினாலே உலகாயதன், புத்தன், சமணன், மீமாங்கிசன், மாயாவாதி, பாஞ்சராத்திரி என்று சொல்லப்பட்ட புறச்சமயங்களினுள்ள அர்த்தங்கள் உண்மைப் பகுதியில்லாதாய்ச் சிவனுடைய அனுக்கிரகத்துக்கேது வல்லாத அபக்குவான்மாக்களை ஈது ஓர் அர்த்தம் இருந்தபடியென் என்று அச்சப்படத் தக்கதாக மருட்டி, பேய்த்தேரைத் தண்ணீரென்று கருதி இத்தைக் குடித்துத் தாகந்தீரலாமென்று வந்தவனுக்கு அந்தக் தண்ணீர் பொய்யாய்ப் பேய்த்தேர் மெய்யான தன்மைபோல, இந்தச் சாத்திரங்களும் அர்த்தங்களுஞ் சத்தியம்போலத் தோன்றி அசத்தியமாய் முடியும் ; ஈங்கிவை நிற்க நீங்காச் சமய மூவிரு தகுதி மேவிய தாமும் ஆகையால் இவ்விடத்திற் சொல்லப்பட்ட சமயங்களும் அர்த்தங்களும் நமக்கு வேண்டுவதில்லை, தன்னில் ஒன்றோடொன்று கூடிக் கொண்டிருக்கிற சைவம், பாசுபதம், மகாவிரதம், காளாமுகம், வாமம், வயிரவம் என்கிற உட்சமயங்களாறும்; ஒன்றோடொன்று சென்றுறும் நிலையில் ஆறும் மாறா வீறுடைத்து இவை ஒரு சமயத்தோடொரு சமயந் தாக்கிப் பார்க்குமளவில் இந்த ஆறு சமயமுந் தனித்தனியே மகத்துக்களா யிருக்கும் ; இவற்றுள் எவ்வமில்லாச் சைவ நற் சமயத் தலகில் ஆகமம் நிலவுத லுள இந்தச் சமயங்களில் வைத்துக் கொண்டு ஒரு சற்றுங் குற்றஞ் சொல்லவொண்ணாம லிருக்கிற சைவமாகிய நல்ல சமயமொன்றையும் நோக்கித் தம்பிரானார் அருளிச் செய்யப்பட்டிருக்கிற ஆகமங்கள் எண்ணிறந்து பொருந்தா நிற்கும். ஒரு சமயத்தை நோக்கிப் பல சாத்திரம் அருளிச் செய்வானே னென்னில்; அவை, கனகம் இரணியம் காஞ்சனம் ஈழந் தனம் நிதி ஆடகம் தமனியம் என்று இப்பலபெயர் பயப்பது ஓர்பொருளே போலப் பதிபசுபாச விதிமுறை கிளக்கும் அப்படிப் பலவாக அருளிச் செய்ததும் ஒரு பொருளைப் பற்றியிருக்கும் ; அதெங்ஙனென்னில், கனகமென்றும், இரணியமென்றும், காஞ்சனமென்றும், ஈழமென்றும், தனமென்றும், நிதியென்றும், ஆடகமென்றும், தமனியமென்றும் இங்ஙனம் பலபெயராகச் சொல்லப்பட்டவையெல்லாம் பொன்னாகிய ஒரு பொருளைப்பற்றி நின்றாற்போல, அந்தச் சாத்திரங்களும் பதியினது லட்சணத்தையும், பசுவினது லட்சணத்தையும், பாசத்தினது லட்சணத்தையுமே சொல்லா நிற்கும் ; வாய்ந்த நூல்கள் ஆய்ந்தனராகி ஆசானாகி வீசிய சமத்துடன் இங்ஙனம் பொருந்தப் பட்டிருக்கிற ஆகமங்களைக் கற்றாராய்ந்த போதவான்களாய்ச் சமயம் விசேடம் நிருவாணம் ஆசாரிய அபிஷேக மென்கிற நாலு தீட்சைகளையுமுடை யவர்களாய் எங்கும் பிரகாசிக்கப் பட்டிருக்கிற பட்சப் பிரதிபட்சமில்லாத சமபோதவான்களாயுள்ள இந்தப் பெரியோர்கள் ; ஏழஞ்சிரு நூறெடுத்த ஆயிரம் வாழுநற் சகனம் மருவா நிற்ப சகாத்தம் ஆயிரத்திருநூற்று முப்பத்தஞ்சாவது செல்லாநிற்கிற காலத்திலே; பொற்பொது மலிந்த அற்புதன் ஆனியாறாம் விழவில் பொன்னினாலே செய்யப்பட்ட திருவம்பலத்தின்கண்ணே நிறைந்தெழுந்தருளி யிருக்கிற ஆச்சரியனாயுள்ள திருவம்பலமுடைய தம்பிரானாருடைய ஆனி மாதத்திலாறாந் திருவிழாவிலே; பொற்றே ராலயத்து ஏறா அறுவர் நிலையிலிருப்ப பொலிவினையுடைத் தாயிருக்கிற தேர் மண்டபத்திலே யேறி முன்சொல்லப்பட்ட ஆசாரியன்மார் ஆறுதிருப்பேர் ஒழுங்கிலே யெழுந்தருளியிருக்கிற அவதரத்திலே; மயங்குவாத மாயாவாதி முயங்கிட ஒருதலை சற்காரிய வாதமின்றி ஒருகாற் சொன்னது ஒருகாற் சொல்லாமல் முன்னொடுபின் மலைந்து வருகிற அர்த்தத்தோடுங் கூடியிருக்கிற மாயாவாதி என்கிற சமயி ஒரு புறத்திலே வந்து கூடியிருக்க ; முதுவெதிர் மணிசேர் பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதிதிகழ் மெய்கண்டவ னருள் கை கண்டவர்களில் ஒருவர் ஓர்தலை மருவியிருப்பமுதிர்ந்த மூங்கில்களி னுண்டாகிய வெண்ணெயம் பதிதிகழ் மெய்கண்டவ னருள் கைகண்டவர்களில் முத்துக்களோடுங் கூடிவருகிற பெண்ணையாறு சூழப்பட்ட திருவெண்ணெய்நல்லூரென்கிற திருப்படை வீட்டிலே திருவவதாரஞ் செய்யப்பட்ட மெய்கண்டதேவ நாயனாருடைய அனுக்கிரகத்தைப் பெற்ற அடியார்களிலே ஒருவர் அந்தக் கூட்டத்தின் ஒரு புறத்திலே பொருந்தி எழுந்தருளியிருக்கிற அவதரத்திலே ; வஞ்சப் பிறவிக்கு அஞ்சி வந்து ஒருவன் ஏது இறை யருள் என பொல்லாங்கை விளைப்பதாயிருக்கிற பிறவிப் பிணிக்குப் பயப்பட்டானொரு பக்குவன் வந்து இவர்களைத் தெண்டன் பண்ணித் தம்பிரானாருடைய திருவருள் எப்படியிருப்பதென்று அவன் வினவ ; இதுவெனும் மாயாவாதியை அயலினர் மறுதலைத் தருள்தர தன்னுடைய அர்த்தத்தைப் பாரித்து அதுவே பொருளென்று நாட்டின மாயாவாதியை அருகே யெழுந் தருளியிருந்தவர் அவன் சொன்ன அர்த்தத்தைக் கண்டித்து அது அர்த்தமல்லவென்று தள்ளித் தம்முடைய அர்த்தத்தை இதுவே பொருளென்று நாட்ட ; மற்றவர் அயலினர் அவருரை மறுத்துச் சொற்றர அவருடைய பக்கத்திலே யிருந்தவர் அவர் சொன்ன அர்த்தத்தைக் கண்டித்துத் தம்முடைய அர்த்தத்தை இதுவே பொருளென்று நாட்ட ; அயலரில் அவருந் தொலைவுற்று அவருடைய அருகே யிருந்தவராலே அவருங் கண்டிக்கப்பட்டு; இன்னே எழுவரும் முன்னே கழிவுழி இப்படி ஒருவரையொருவர் மறுத்து ஏழுபேரும் முன்னே தள்ளுண்ட அவதரத்து ; ஆங்கயல் இருந்த அருளினர் அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமையென மற்றவர் உரைத்த சொற்றரு பொருள்கொடு அவ்விடத்து அவர்களருகே யெழுந்தருளி யிருந்த ஆசாரியர் அவர்களைப் பார்த்து நீங்கள் உங்களர்த்தங்களைச் சங்கற்பித்து மதத்தை நிராகரித்தது மிகவும் நன்றாயிருந்ததென்று ஆசியஞ்செய்து அவர் சொன்ன சொல்லி லுண்டாகிய பொருளை யெடுத்துக் கொண்டு, யான் ; வாத செற்பை விதண்டையும் ஏதுவும் ஓது நால்வகை உவமையுந் திகழ்தர வாதமென்ற சொல் தான் கெட்டு விதாரமென்றும் விசியுழியென்று மிரண்டாம். இதில் விதாரமென்றது குருவுஞ் சீஷனுமாகுதல் தன்னோடொத்த பக்ஷடதனோடாகுதல் மாறுபாடின்றிப் பிரமாணங்களி லுண்டாகிற தர்க்கங்களைத் தர்க்கித்து அதிலுண்டாகிய குற்றங்களை நீக்கிச் சத்தியமான அர்த்தத்தை நியமிக்கப்படுவதெனக் கொள்க. விசியுழி யென்ற சொல் தான் கெட்டுச் செற்பை யென்றும் விதண்டை யென்றும் இரண்டாம். இதிற் செற்பை யென்றது பிறருடைய அர்த்தங்களை நிராகரித்துத் தன்னுடைய பொருளை மலைவற நாட்டுதலெனக் கொள்க. விதண்டை யென்றது பிறருடைய அர்த்தங்களை நிராகரித்துத் தன்னுடைய அர்த்தந் தோன்றாமல் நின்று சாதிக்கப்படுவதெனக் கொள்க. ஏது என்றது அளவைப் பிரமாணங்களிலே விதிக்கப்பட்டிருக்கிற பல ஏதுக்களும், வினை பயன் மெய் உரு என்று சொல்லப்பட்ட நால் வகை உவமையும் இந்த நூலிலே விளங்கத்தக்கதாக; அருள்சேர் மாந்தர் வெருள் சேராமல் திருவருளுக் கேதுவாயுள்ள பக்குவான்மாக்களுக்கு அர்த்தமலைவென்கிற அச்சம் வந்து பொருந்தாமல்; தர்க்கமும் விடையமுங் கற்க நற்கவி மாந்தர் நக நவிற்றுவனே முன்னூலி லுண்டாகிய தர்க்கங்களையும் விடயங்களையும் கற்கத்தக்கதாகவும் நல்ல கவித்துவத்தோடுங் கூடியிருக்கிற வித்துவான்கள் இவனும் ஒரு நூல் செய்வதேயென்று சிரிக்கத்தக்கதாகவும் இந்த நூலைச் சொல்லா நின்றேன்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நவிற்றிய நிரையில் அவித்தையி னோன்உரை
நித்தன் அறிவன் சுத்தன் அகண்டிதன்
நிருவி கற்பன் நிர்த்தத்துவன் நிரஞ்சனன்
சொல்வகை எவையுந் தொடராத் தூய்மணி
வரம்பில் வேதச் சிரந்தரு பரம்பொருள் 5
சத்தாய் எவையுந் தானாய் அவித்தை
தொத்தா துயர்ந்த தொல்சுடர் மூவா
இன்ன தன்மையன் ஏகன் அநேகன்
கன்னற் பெருஞ்சுவை தன்னிற் பிறவாப்
பெற்றியி னிருந்து பொற்பணி யியல்பினின் 10
வான்வளி அனல்நீர் மண்மருந் தன்ன
மான தாது ஆறைங் கோசத்
தொகுதி யாக்கைப் பகுதிய தொருபுடை
சுத்தி வெள்ளி யொத்தென மித்தையிற்
றானென லாகுந் தன்மைத் துலூதையிற் 15
சின்னூற் றகையின் வேற்றுமை மரீஇய
தென்னப் பன்மைய தெனின்இலை பழம்பூத்
தோல்நார் வயிரந் தருத்தருந் தொன்மையின்
வானா ரந்திரை நுரைதரு வாய்மையிற்
கூடும் அசித்தைச் சித்துத வாதெனின் 20
நெற்பதர் பலாலத் திற்பரம் தரும்இது
தன்னியல் பென்றும் விளையாட் டென்றும்
முன்னுள மறைகள் மொழிதலின் ஒருநூற்
பன்மணி நிலையும் பசுப்பால் எனவும்
பலஅகல் நீரில் அலர்கதிர் எனவுங் 25
கூவல் ஆழி குளம்சிறு குழிகால்
வாவி யாவையும் வருபுனல் எனவும்
அவ்வவற் றடங்கி ஆடியுள் நிழலெனத்
தோன்றி யாக்கைநற் காந்தத் திரும்பும்
கனவிற் றீங்குங் கங்குலிற் கயிறும் 30
புனலிற் றோன்றும் பேய்த்தேர்ச் செய்தியும்
*அன்னதும் பின்னர் நன்னிறப் பளிங்கெனப்
பதினாற் கரணத் தொருமூன் றவத்தை
நாளும் நாளும் நயந்துறும் இருபயன்
தன்னிற் சாராத் தொன்மைத் தன்மை 35
தற்பண நிழற்கண் குற்றிபாய்ந் தற்றே
இவ்வியற் பந்தப் பவ்வம தகல
விண்முதல் தந்த கொண்மூப் படலத்(து)
இருள்அற உதித்த கால்தக விவேகந்
தன்னில் தோன்றிச் சாதக மனைத்தையும் 40
மன்அகப் பிரிப்பும் மடியிழை வாங்கலும்
போல ஞாலம் பொய்யறக் கழீஇத்
தானே தானாய்த் தன்னில் தன்னைத்
தானே கண்டு தன்நலம் உற்று
வசையில் தத்துவ மசிபதத் தெளிவால் 45
அகமே பிரம மாயினன் எனஅறிந்(து)
அசல னாகிநற் சலசல மதியெனக்
கண்டிடும் உடலம் விண்டகல் கடத்து
மங்குல துடைதர எங்குமாம் தகைத்தே
இவ்வகை யுணர்ந்து செய்தொழில் அறாத 50
மடவோர் தாமும் கடனா இயற்றுங்
கன்ம காண்டத் தொன்மைப் புரிவால்
தோற்றிய வித்தை மேற்கண்ட அரணியில்
எழுந்தெரி அவற்றை விழுங்கிய தென்னத்
தன்னொழிந் துள்ள தானா யொழியும் 55
அந்நிலை யன்றி அழிவறி முத்தி
ஏயா தென்றுதன் இயல்பை
மாயா வாதி வகுத்துரைத் தனனே.

பொழிப்புரை :

நவிற்றிய நிரையில் அவித்தையினோன் உரை முன் சொல்லப்பட்ட ஒழுங்கில் மாயாவுபாதிகளினாலே வாதிக்கப்பட்டுப் பரப்பிரமம் இப்படி மயங்கி நிற்குமென்று சொல்லுகிற மாயாவாதியுடைய மதமிருக்கிறபடி; நித்தன் அறிவன் சுத்தன் அகண்டிதன் ஒருகாலும் அழியாதவனுமாய் சருவக்கியனுமாய் நின்மலனுமாய்க் கண்டிக்கப்படாதவனுமாய்; நிருவிகற்பன் நிர்த்தத்துவன் நிரஞ்சனன் விகற்பமில்லாதவனுமாய்த் தத்துவாதீதனுமாய் மறைப்பில்லா தவனுமாய்; சொல்வகை எவையுந் தொடராத் தூய்மணி சொல்லும் பொருளுமாயிருக்கிற சாத்திரங்க ளொன்றாலுஞ் சென்று கிட்ட வொண்ணாமலிருக்கிற சுத்தரத்தினமாய்; வரம்பில் வேதச்சிரந்தரு பரம்பொருள் அந்தச் சாத்திரங்களால் அளவிடப் படாமலிருந்துளதா மாயினும் எல்லையற்றிருக்கிற வேதத்தினது தலையிலே சுமந்துதரப் பட்ட எல்லாவற்றுக்கும் மேலாயிருக்கிற அர்த்தமாய் ; சத்தாய் சுத்த சைதன்னியமாய் ; எவையுந் தானாய் எல்லா உபாதிகளுந் தானேயாய்; அவித்தை தொத்தா துயர்ந்த தொல்சுடர் அப்படியிருந்ததாமாயினும் அந்த உபாதிகள் தன்னைத் தொந்தியாதபடி மிக்குப் பழையதாயுள்ள பிரகாசமாய்; மூவா இன்ன தன்மையன் ஒருகாலும் போதுசெய் யாமலிருக்கிற இந்த ஞாயத்தோடுங் கூடியிருப்பவனாய்; ஏகன் அநேகன் ஒருத்தனுமாய்ப் பல யோனிகளிலும் நிற்கிறவனுமாய் ; கன்னற் பெருஞ்சுவை தன்னிற் பிறவாப் பெற்றியினிருந்து கரும்பிலுண் டாகிய மிக்க இரதமானது அந்தக் கரும்புக்குத் தோன்றாத இயல்பு போலத் தன்னிடத்திலுண்டாகிய இன்பத்தையுந் தான் அறியாம லிருந்துள்ள பரப்பிரமமானது பிரபஞ்சலீலையை யுண்டாக்குமிடத்து ; பொற்பணி இயல்பினில் பொன்தானே பல ஆபரணங்களா யிருந்த தன்மைபோல; வான் வளி அனல் நீர் மண்மருந்தன்ன மானதாது ஆறைங் கோசத் தொகுதி யாக்கைப் பகுதியது ஒருபுடை பரப்பிரமந் தானே ஆகாசமும், வாயுவும், அக்கினியும், அப்புவும், பிருதிவியும், அவுஷதிகளும், உணவுகளும், இதனாலுண்டாகப்பட்ட தாதுக்களாறும், அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமய மென்கிற ஐங்கோசங்களும் ஒரு பட்சம் இவையெல்லாமாகக் கூடியிருக்கிற சரீரத்தின் பகுதியதாயிருக்கும். இங்ஙனந் தோன்றப்பட்ட பிரபஞ்சம் நித்தியமோ அநித்தியமோ, அநித்தியமென்னில் இது நித்தியமாய்த் தோன்றுவானே னென்னில் ; சுத்தி வெள்ளி யொத்தென மித்தையில் சுத்தியானது வெள்ளியை யொத்துத் தோன்றிற்றென்று சொல்லலாம், மதிப்பிரமையினாலே அநித்திய மாயுள்ள பிரபஞ்சமும் நித்தியமாய் தோன்றும். ஆனால் அந்தப் பரப் பிரமமும் இந்தப் பிரபஞ்சமுந் தன்னில் வேறோவென்னில்; தானென லாகுந் தன்மைத்து அந்தப் பரப்பிரமந்தானே இந்தப் பிரபஞ்சமென்று சொல்லுந் தன்மையை யுடையதாயிருக்கும். அந்தப் பிரமத்தைப் போலே யிராமல் இந்தப் பிரபஞ்சம் வேற்றுமையாயிருப்பானே னென்னில் ; உலூதையிற் சின்னூற் றகையின் வேற்றுமை மரீஇயது சிலந்தியினிடத்துண்டாகிய சிறிய நூலினை யொக்கப் பிரபஞ்சமும் பிரமத்துக்கு வேற்றுமையைப் பொருந்தியிருக்கும்; என்னப் பன்மையதெனின் சிலம்பிநூல் போலே என்று நீர் சொல்ல அது ஒரு தன்மையாயிருந்தது, பிரபஞ்சம் பல பிரகாரமாயிருப்பானே னென்னில்; இலை பழம் பூத்தோல் நார் வயிரந் தருத்தரும் தொன்மையில் வானா ரந்திரை நுரைதரு வாய்மையிற் கூடும் இலையும் பழமும் பூவுங் காயுந் தோலும் நாரும் வயிரமு மிவையெல்லாம் மரமானது தந்த தன்மைபோலவும் பெருமையுடைய தண்ணீரானது திரையையும் நுரையையுந் திவலையையுங் குமிழியையுந் தந்த உண்மைபோலவும், இப்படிப் பிரபஞ்சமும் பலவாகச் சொல்லப்படும் ; அசித்தைச் சித்து உதவாதெனில் அசித்தாயுள்ள பிரபஞ்சஞ் சித்தாயுள்ள பிரமத்திலே தோன்றாதென்னில் ; நெற்பதர் பலாலத்திற் பரம் தரும் நெல்லானது பதரையும் வைக்கோலையுந் தந்த தன்மைபோலச் சித்தாகிய பிரமமுஞ் சடமாகிய பிரபஞ்சத்தைத் தாராநிற்கும். இந்தப் பிரமம் இப்படிச் செய்யவேண்டுவானே னென்னில் ; இது தன்னியல்பென்றும் இப்படிச் செய்து வருகிறது இந்தப் பிரமம் தன்னுடைய இயல்பா யிருப்பதொன்றென்றும், பிரமம் இந்த உபாதிகளினாலே வாதிக்கப்பட்டிருப்பானெனென்னில் ; விளையாட்டென்றும் இந்த உபாதிகளோடும் கூடிக்கொண்டு நிற்கிறதைப் பிரமத்துக்கு விளையாட்டாய் இருப்பதொன்றென்றும் ; பரப்பிரமத்துக் கியல்பென்றும் விளையாட்டென்றும் எங்கே காணப்பட்டதென்னில்; முன்னுள மறைகள் மொழிதலின் அனாதியேயுள்ள வேதங்கள் சொல்லுகையினாலே; இந்த உபாதிகள் பலவாகக் காணப்பட்டாற்போல அந்தப் பிரமமும் இப்படிப் பலவாகக் கண்டிருக்கப் பட்டிருக்குமோ வென்னில் ; ஒரு நூல் பன்மணி நிலையும் பசுப்பால் எனவும் பலஅகல் நீரில் அலர் கதிர் எனவுங் கூவல் ஆழி குளம் சிறுகுழி கால் வாவி யாவையும் வருபுனல் எனவும் அவ்வவற்றடங்கி மணிகள் பலநிறமாயிருந் தாயினும் அதிலே கோப்புண்ட நூல் ஒரு தன்மையா யிருந்தாற்போலவும், பசுக்கள் பல வன்னங்களாயிருந்ததா மாயினும் பால் ஒரு நிறமாயிருந்த தன்மை போலவும், நீர் பொருந்திய பாத்திரங்கள் பலவாயிருந்ததா மாயினும் அவையிற்றிற் பிரதிவிம்பஞ் செய்த ஆதித்தன் ஒன்றாயிருந்த தன்மைபோலவும், கிணறுங் கடலுங் குளமுஞ் சிறிதாயுள்ள குழிகளுங் வாய்க்கால்களும் வாவிகளு மிவையெல்லாம் பலபேதமா யிருந்ததாமாயினுந் தண்ணீர் ஒன்றாயிருந்த தன்மைபோலவும், இப்படியே யோனிகள் பலவாயிருந்ததாமாயினும் அறிவு ஏகமாய் அந்தந்த யோனிகள் தோறுங் கூடியிருக்கும். அப்படி யோனிகள்தோறும் அறிவு கூடியிருந்ததாமாயின் அந்த உடல்கள் தோறும் பந்திக்கப்படாதோவென்னில் ; ஆடியுள் நிழலெனத் தோன்றி யாக்கை கண்ணாடியிலே நிழலானது தோன்றி நிற்கச் செய்தேயும் அதில் தோய்வற நின்றாற் போல உடலிலே அறிவானது தோன்றி நிற்கச்செய்தேயும் அந்த உடலில் தானுந் தோய்வற நிற்கும். அப்படி அந்த அறிவு உடலில் தோய்வற நிற்குமாமாகில் இந்த உடல் காரியப்படும்படி எப்படியென்னில் ; நற்காந்தத்து இரும்பும் நல்ல காந்தமானது தோய்வற நிற்க அதன் சன்னிதியில் இரும்பானது காரியப்பட்டாற்போலப் பிரமந் தோய்வற நிற்க அதன் சன்னிதியிலே உடலானது காரியப்படாநிற்கும். அந்த அறிவும் இந்த உடலிலே நின்று சுகதுக்கங்களை அனுபவிக்கிறதே, அது வருவானே னென்னில் ; கனவில் தீங்குங் கங்குலிற் கயிறும் புனலில் தோன்றும் பேய்த்தேர்ச் செய்தியும் ஒருவன் சொப்பனங் காண்கிற விடத்து அவனை ஒர் ஆனை பின் பிடித்துக்கொண்டுவர அதற்குப் பயப்பட்டு இவன் ஒடச்செய்தே முன்னே ஒரு கிடங்கு அனேக ஆழமாயிருந்தது அதுகொண்டு அங்கும் போகமாட்டாமல் இங்கும் நிற்கமாட்டாமல் நின்று தவிக்கச்செய்தே விழித்த அவதரத்தில் இவையெல்லாம் பொய்யாயிருந்த தன்மை போலவும், ஒருவன் இராக்காலத்திலே ஒரு புற்றின் வாசலிலே கயிறு கிடக்கிறதைக் கண்டு ஒரு பாம்பு கிடக்கிறதைப் பாரீரென்று பிரமித்து நிற்கச்செய்தே விடிந்த அவதரத்து அந்தப் பாம்பு பொய்யாய்க் கயிறு மெய்யான தன்மைபோலவும், ஒருவன் தண்ணீர்த் தாகத்தின் மிகுதிகொண்டு கானலைத் தண்ணீரென்று புத்திபண்ணிக் கொண்டு வந்தான் அதினுடைய உண்மையைப் பார்த்தபொழுது அவனுக்குத் தண்ணீர் பொய்யாய்க் கானல் மெய்யான தன்மைபோலவும், இந்தப் பிரமம், உடலோடுங் கூடிநின்று சுகதுக்கங்களை யனுபவித்தாற்போல இருக்குமதொழிந்து தன்னுண்மையைப் பார்க்குமிடத்து இந்தச் சுகதுக்கங்களும் அந்த அறிவுக்குண்டாகாது. இப்பொழுது பிரத்தியக்ஷமாகச் சோத்திராதிகளோடுங் கூடி அதுதானாய்க் கன்மங்களைப் பொசிக்கிறது காணப்பட்டிருக்கிறதே யென்னில் ; அன்னதும் பின்னர் நல்நிறப் பளிங்கென அப்படியே அந்த இந்திரியங்கள் தானாய் நின்றதாயினும் பிரமத்துக்கு அந்த அனுபோக முண்டாகாது ; அதென்போல வென்னில், படிகமானது நல்ல பஞ்ச வன்னங்களோடுங்கூடி அதுதானாயிருந்த தாமாயினும் அவையிற்றோடும் படிகம் ஒரு சற்றுஞ் சம்பந்தமற நின்றாற்போலுமெனக் கொள்க.*அன்ன துன்பின் பாடபேதம். இதன்றியும் ; பதினாற்கரணத்து ஒருமூன்று அவத்தை நாளும்நாளும் நயந்துறும் சோத்திராதிகள் ஐந்தும் வாக்காதிகள் ஐந்தும் அந்தக் கரணங்கள் நாலும் ஆகப் பதினாலோடுங் கூடிப் புருவமத்தியத்திலே சாக்கிராவத்தையும், இதிலே சோத்திராதியும் வாக்காதியும் நிற்க அந்தக் கரணங்களோடுங் கூடிக் கண்டத்தானத்திலே சொப்பனாவத்தையும், இதிலே மனோபுத்தி யாங்காரம் நிற்கச் சித்தத்தோடுங் கூடி இதயத்தானத்திலே சுழுத்தியவத்தையும், இந்த அவத்தைகளிலே நாடோறும் நாடோறும் பொருந்தியனுபவியா நிற்கும். அறிவானது இந்த அவத்தைகளோடுங் கூடி யனுபவிக்குமாயின் இதற்குப் புண்ணிய பாவத் தொந்தனை யில்லையாமோ வென்னில் ; இருபயன் தன்னிற் சாராத் தொன்மைத் தன்மை தற்பண நிழற்கண் குற்றி பாய்ந்தற்றே இந்த அவத்தைகளோடுங் கூடிநின்றதாமாயினும் அனாதியே புண்ணிய பாவத் தொந்தனை இந்தப் பிரமத்தைச் சாராது. அது எத்தன்மைத் தென்னிற் கண்ணாடியிலே ஒருவன் முகம் பிரதிவிம்பஞ் செய்தவிடத்து அந்த முகத்திற் கண்ணிலே பாரைகொண்டு பாய்ந்தவிடத்து அந்தக் கண்ணாடி யுடைந்த தொழிந்து கண்ணுக்கு ஈனம் வாராதிருந்தாற்போலுமெனக் கொள்க. இது பெத்த தசை.
மேல் முத்திதசை யருளிச்செய்கிறார் : இவ்வியற் பந்தப் பவ்வமது அகல இப்பொழுது நான் சொல்லிவந்த முறைமையிலே இந்தப் பிரமத்தை வாதிக்கப்பட்ட மாயாவுபாதிகளி லுண்டாகிய பிறவித் தொந்தனை இதற்கு நீங்குகை நிமித்தமாக; விண் முதல் தந்த கொண்மூப் படலத்து இருள்அற உதித்த கால் தக ஆகாசமென்கிறதிலே நின்று மேகமானது தோன்றி அந்த ஆகாசத்தை மறைக்க, அதனாலுண்டாகிய இருளானது நீங்குகை நிமித்தமாக அந்த ஆகாசத்திலே நின்றுந் தோன்றி அந்த மேகங்களை நீக்கி ஆகாசத்தை நின் மலமாக்குவித்த வாயுவைப்போல; விவேகந்தன்னில் தோன்றி அந்தப் பிரமத்திலே நின்றும் விவேககியானந் தோன்றி; சாதக மனைத்தையும் இந்தப் பிரமத்துக் குண்டான மறைப்புக்க ளெல்லாவற்றையும்; மன்அகப் பிரிப்பும் மடியிழை வாங்கலும்போல ஞாலம் பொய் அறக் கழீஇ நிலைபெற்று வாராநிற்கிறதொரு வீட்டை ஒருத்தன் ஓரொரு வைக்கோலாகவும் ஓரொரு கழியாகவும் ஓரொரு மரமாகவும் நாளிலே பிடுங்கிப்பிடுங்கிப் போட்டபின்பு அந்த வீடென்கிற சொரூபம் இல்லையாய்ப்போன தன்மைபோலவும் ஒரு புடைவையை ஒருத்தன் ஓரோ ரிழையாக நாளிலே பிடுங்கிப் பிடுங்கிப் போட்டபின்பு அந்தப் புடைவை யென்கிற சொரூபம் இல்லையாய்ப் போன தன்மைபோலவும், பிரபஞ்சமாகிற பொய்யையும் பிருதிவி முதலாகக்கொண்டு இது நானல்ல இது நானல்லவென்று நேதி பண்ணி நாளிலே நீக்கிக்கொண்டு ; தானே தானாய் தன்னில் தன்னைத் தானே கண்டு தன் நலமுற்று இப்படி அந்த உபாதிகள் நீங்கின விடத்து அந்த அறிவானது அந்தப் பிரமந் தானேயாய்த் தன்னிடத்திலே தற்சொரூபத்தைத் தானே தரிசித்துத் தன்னிடத்திலுண்டாகிய இன்பத்தைத் தான் தானே அனுபவித்து ; வசையில் தத்துவமசி பதத் தெளிவால் அகமே பிரமமாயினன் என அறிந்து குற்றமற்றிருக்கிற தத்துவமசி பத மென்கிற மகா வாக்கியத்தின் தெளிவு கொண்டு அந்தப் பிரமம் நானானேன் என்கிற பிரமக்கியானத்தைத் தீரவிளங்கி; அசலானகி இந்தப் பிரமக்கியான முண்டான விடத்துப் பின்னைச் சற்றுஞ் சலனமில்லாதவனாய்; உபாதிகளோடுங் கூடிச்சத்தாதி விடயங்களைப் பொசிக்கச்செய்தே சலனமில்லையென்றதென்னெனில்; நற் சலசல மதியெனக் கண்டிடும் உபாதிகளோடுங் கூடிச் சத்தாதி விஷயங்களைப் பொசிக்கச்செய்தே அந்த உண்மைக்குச் சலனமில்லாதது, நல்ல சலமானது அசைந்த விடத்து அத்தோடுங் கூடின சந்திரனும் ஒக்க அசைந்தாற்போலே; அந்தச் சந்திரனுண்மையைப் பார்த்தவிடத்து அது அங்கில்லையானாற்போல அப்படி இந்த அறிவையுங் காணப்படும். இது சீவன்முத்த ரிலக்கணம்.
இனிப் பரமுத்த ரிலக்கணம் : உடலம் விண்டகல் கடத்துமங்குல் அது உடைதர எங்குமாந் தகைத்தே இந்தச் சரீரதொந்தனை விட்ட அவதரத்து இந்த அறிவும் அந்தப்பிரமமுந் தன்னி லொன்று பட்டுவிட்டது என்போல வென்னில், இடவிதாயிருக்கிற குடத்துக் குள்ளே அகப்பட்டு நின்ற ஆகாயம் இந்தக் குடமானது உடைந்த அவதரத்து அந்தப் பராகாசமுந் தானும் ஒன்றுபட்டாற் போலவாமெனக் கொள்க. இது பரமமுத்தி ; இவ்வகை யுணர்ந்து செய்தொழில் அறாத மடவோர் தாமும் அது நானானேன் என்கிற பிரமக்கியானத்தை யறிந்து தான் முன்பு செய்துவந்த கன்மங்க ளெல்லாவற்றையும் விட்டுவிட மாட்டாத அறிவில்லாதவர்கள் தாங்களும் ; கடனா இயற்றுங் கன்மகாண்டத் தொன்மைப் புரிவால் தோற்றிய வித்தை அந்தப் பிரமஞானமுண்டாகை நிமித்தமாகச் சாதன சதுட்டயமாகிய கன்மங்களை யனுட்டித்து அந்தத் தொழில்களைப் பழகச் செய்து வரவே விவேகக்கியானமானது அவர்களுக்கு உண்டாகாநிற்கும் ; மேற்கடை அரணியில் எழுந்து எரி அவற்றை விழுங்கியதென்னத் தன்னொழிந் துள்ள தானா யொழியும் அப்படி யுண்டான விவேகமுந் தீக்கடைக்கோலை மேலே வைத்துக் கடைய அந்தத் தொழிலினாலே யுண்டாகிய நெருப்பு அந்த அரணியையுங் கோலினையுஞ் சேரச் சுட்டுப்போட்ட தன்மைபோலத் தான் ஒன்றுமொழிந்து மற்றுண்டாகிய கன்மங்க ளெல்லாவற்றையும் அழித்துப் போடாநிற்கும் ; அந்நிலையன்றி அந்த நிலையிலே நின்றுவிடக் கடவன் ; அது ஒழிந்து; அழிவறு முத்தி ஏயாதென்று தன் இயல்பை மாயாவாதி வகுத்து உரைத்தனனே நிலைபெற்றுடைய தாயிருக்கிற முத்திப் பேறு பொருந்தாது. இப்படியே தன்னுடைய பெத்தத்திலும் முத்தியிலு முண்டாகிய முறைமையினை மாயாவாதியானவன் வித்தரித்துச் சொன்னான். மேல் ஐக்கியவாதி மறுக்கிறான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண்
வருபிர மாணம் மறையெனில் அருமறை
ஒன்றென்ற தன்றி இருபொருள் உரைத்தல்
நன்றன் றபேதம் நாடிய பொருளேற்
பேதமும் அபேதமும் ஒத வேண்டா 5
பேத மெனினும் அபேத மெனினும்
பேதா பேத மெனினும் அமையும்நின்
ஐயமில் உரையிற் பையவந் துளதாம்
திகழ்பிர மாண இகழ்வுமுண் *டன்றிப்
பெத்தம் பேத முத்தி அபேதமேல் 10
அநவத் திதமாம் அவைஇரு திறனும்
இனிஅப் பழமொழி இரண்டல ஒன்றேல்
அன்றியும் பெத்தம் பேதத் தறைதலும்
ஒன்றிய முத்தி அபேதத் துரைத்தலும்
பழுதாம் இத்திறன் பதையா தாய் கமற்(று) 15
எழுதா மொழியெனும் இப்பிர மாணம்
ஆர்உரை தானே யாயின தேல்உன
தேகம் அநேக முறும்இயம் பாமற்
சத்த ரூபந் தகாதெனில் வானத்(து)
ஒத்தொலி உறழும் எனில்வறி துதியா(து) 20
அன்றியும் பதமும் பாழியும் அனைத்தும்
இன்றிஒர் ஒலியாய் எழுந்திடும் அதனுக்(கு)
அறிவில துருவில தறியா தறையா(து)
அன்றியும் அவ்வகை யகண்டிதம் அதுஇது
என்றது குறிப்ப தெவ்வகை யாவும் 25
ஒன்றெனும் உரையும் ஒழிந்தனை யன்றே
அருமறை பிரம வுரையெனில் அதற்குத்
தந்தம் தாலு முதல்நவில் பொறியில(து)
என்னில் ஒர் உடற்கண் மன்னிய அலகை
அறைந்தற் றென்ப தார்சொல தமலத் 30
திறம்பெற் றின்றே செய்தோர் பெயராற்
சுயம்பு வென்றுல கியம்பும்என் றறிஇனித்
தற்கீழ்த் தலைவரைத் தான்தொழு துரைக்குஞ்
சொற்கேல் புரவலன் ஏவ லமைச்சரை
*அடியேம் மற்றெம் குடிமுழு தாள்மின்என்(று) 35
ஏத்தி இறைஞ்சிற் காப்பர்கள் என்றாங்(கு)
ஈசன் நாம்செயப் பேசினன் அன்றி
இனையவை பிறரிற் கனவினும் இலனே
தன்னைத் துதிக்குஞ் சொன்னலந் தானுமத்
துறைஅறி வாணர்க் கறைவதொன் றன்றியும் 40
தனக்குத் தானே நன்நலம் பகரா(து)
அசத்துக் குரையா தார்க்குரை உயிர்க்கெனில்
உரைபிர மாணம் இறைபிர மேயம்
நீபிர மாதா நின்பிர மிதியென
நால்வகை யுளதுன தேகம்நன் றன்றே 45
நற்பிர மாணம் நிற்பதொன் *றாய்த்தன்(று)
அப்பிர மேயமும் அதன்இயல் பன்றே
கன்னற் சுவையில் அன்னியம் இலதால்
இனிமை தோன்றாத் +தன்மைத் தென்றனை
அறிவிற் குவமை அசத்தாம் கட்டி 50
பிறிவித் தொட்டினும் பேற துறாதே
தற்பர விரிவு பொற்பணி தகுமெனிற்
செய்வேர ரின்றிச் செய்வினை இன்மையிற்
பொன்பணி யாகை தன்பணி யன்றே
செய்வோர் போலாச் செயப்படு பொருள்முதற் 55
செய்வோர் ஏயாச் செய்யவும் படுமே
சுத்தி வெள்ளியிற் றோன்றிற் றாயினுஞ்
சத்துல கேதும் தாரா தருமெனின்
உலகம் மித்தையென் றோரா துரைத்தனை
நிலவும்நின் மரபு நினைந்திலை யாம்கொல் 60
விவகா ரத்தில் வேண்டுதும் உலகம்
பரமார்த் தத்தில் பகரா மென்னில்
பரத்துள தேல்இவை யும்பர மார்த்தம்
பரத்தில தேல்ஒழி முன்பகர் மாற்றம்
அதன்முதல் இதுவென உதவுக அன்றியும் 65
விவகரிக் குங்கால் திகழ்பர மார்த்த
நிலைஅது தெரியின் இதுநீ நீயேல்
தெரியா தாயின் அஃதுந் தெரியாது
உரையார் அளவையும் ஒழிந்தனை அன்றே
அளவை காண்டல் கருதல் உரையென 70
உளதவை மூன்றின் மொழிவழி நுழையின்
நின்பிர மேயம் என்பதெ னாம்கொல்
பொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னே யாம்நின்
தற்பரம் அசித்தைத் தருமா றென்னெனச்
சிலம்பி நூல்தரு நலம்போற் றோன்றும் 75
என்றனை அதுவும் தன்தொழில் அன்றியும்
ஒன்றதன் இயல்புல கோரியல் பன்றெனப்
பலமிலை பழம்பூப் பாதவந் தரும்நீர்
திரை நுரை திவலை சிலதரும் இவைபோல்
தானே பலவாம் எனநீ சாற்றினை 80
சத்தசத் தாகவும் சத்தினில் அசத்தின்
கொத்துள தாகவும் கூறினர் இலரால்
வித்திலை கனிநனி விழுதால் தருநெறி
சத்தல தொன்று தான்தர வேண்டும்
நெற்பதர் பலாலத் திற்குபா தானம்என் 85
காரண மின்றிக் காரியம் பிறவா
பாரிடை ஒருபடம் பண்ணவும் படுமே
அந்தமில் பிரமம் அவித்தைகா ரணமெனத்
தந்தனை அவித்தை தானெய் துறுதல்
தன்னியல் பென்னில் வன்னிதன் வெம்மையிற் 90
சத்தின தியல்புஞ் சத்தே அசத்தெனில்
வைத்ததன் இயல்பெனும் வழக்கொழி அன்றியும்
இருள்பொதி விளக்கென வரும்இரு விளக்கிற்
கருமை பயந்த பெருகொளி தகுமெனில்
தன்னியல் *பன்றென் உபாதி வசத்தால் 95
மன்னிய தன்றிமைத் தான்தனின் மாயாது
ஒன்றா னசுத்த னன்றா மன்றே
ஆங்கொரு காலத் தோங்கிய தாயின்
அந்தமில் அவித்தை வந்தணை வதற்கோர்
ஏது வேண்டும் புயலியல் பெனின்வீடு 100
ஒத வேண்டா ஒழிந்தோ ரினுமுறும்
களங்கம தறஉறும் அவித்தைதற் கவித்தல்
விளங்கிய பிரம விளையாட் டாயின்
அவித்தை யென்பதொன் றன்னியந் தன்னில்
உதிக்கு மென்றமுன் உரையும் மறந்தனை 105
நுண்ணூற் குடம்பை நுந்துழி போல்உட்
படுநெறி அதனால் விடுநெறி இலதால்
தலைமையும் அறிவும் இலதென் அவித்தையை
விடுத்தெடுத் தாணரும் வேற்றோ ரன்றே
ஒளிகொள் தாமிரங் குளிகைபெற் றாங்கதன் 110
அவித்தையை வித்தை தவிர்க்குமென் றுரைக்கில்
நித்தன் அறிவன் சுத்தன்என் றுரைத்த
வித்தகம் என்நீ வித்தையும் *வேறென்
எம்ம னோரில் ஒருவன் நின்இறை
அம்ம சைவந் தவன்நீ யன்றே 115
பன்மணி பசுநற் பரத்திர மெனவும்
நன்னூல் பால்நீர் நற்கதிர் எனவும்
உடலையும் உணர்வையும் உவமித் தனையேல்
தடமணி சரடொடு தாம்கூ டலவே
உணர்வுணர் வொழியின் உலகுணர் வுறின்நின் 120
பாலும் பசுவுஞ் சாலுஞ் சாலக்
கலம்பல வன்றிச் சலம்பல இலதெனக்
காணுந ரின்றி வீண்நீ விளம்பினை
ஆடியுள் நிழல்போற் கூடுதல் கூறின்
தன்நிழல் கொண்டு தற்பணஞ் சலிக்கின் 125
மன்நிழல் கொண்டுடல் வந்தகன் றிடுமே.
மன்அயக் காந்த மெனவுடல் பிரம
சன்னதி யளவிற் சலித்திடு மாயின்
*அகண்டிதஞ் சன்னதி யலதில தெவையும்
நடந்திட வேண்டுங் கிடந்திடப் பெறாவே 130
காந்தத் திரும்பு காட்டுநர்ப் பெறில்அயம்
சேர்ந்திடும் நீக்குஞ் செயல்அதற் கிலதே
கனாத்துயர் கயிற்றர வெனாச்சில தொடுத்தனை
கனவின் பயனும் நனவின் பயனும்
வினையின் பயன்அவை பொய்யென வேண்டா 135
உடல்மா றாட்டக் கடனது கருதுக
உற்ற புற்றும் மற்றதிற் கயிறும்
உடலுங் கூடமுச் சடமென அறிதி
அறிவு கயிறென் றறியா தன்றே
அச்சம தடைதல் கொச்சமை யுடைத்தே 140
இன்னும்அக் கனவில் இருளுறு கயிற்றிற்
பின்னும்நின் பிரமம் பிரமித் திடுமே
துன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத்
தானாந் தகைமை யானால் மலரென
ஒருபய னன்றிப் பலபயன் மரீஇயது 145
இருவினை தருபயன் எனநனி வேண்டில்
ஆண்ட வித்தையும் அவித்தைகொ டாக்கையும்
ஈண்டிரு வினையும் இயம்பினை பரத்தைக்
கள்வரைப் பிணிக்குங் காவல ரெனமுயல்
தொல்வினைத் துடக்கில் தோன்றுடற் சிறையிட்டு 150
இருவினை யூட்டும் அருளுறும் *எம்மான்
அருவினை உடற்கண் அவத்தைகள் உரைத்தனை
ஆர்உறு பவர்பரம் அகண்டிதம் அடங்காது
ஒர்வில துடல்சடம் உறுநெறி யாதென
மன்னிய கரண மாறாட் டத்திற் 155
பன்னினம் என்னின் இவையோ பரமோ
முதலிய தாயின் இவைபிறழ் வெய்தாது
இவையெனில் உனது மொழிபழு துளதே
உடற்படு பிரமம் உறுமேற் சாளரத்து
இடத்தகும் உறுவிரல் நுதியளி எறிதுயர் 160
அங்குலி தானே அருந்திடில் உடற்கண்
தங்கிய அறிவு தனித்துறு மன்றே
தற்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றால்
நற்கணிற் றுயரம் நணுகாத் தகைத்தெனில்
நின்மொழி விரோதமுங் காட்சி விரோதத் 165
தன்மையும் உறும்அவை தவறில ஆகா
யாம்உடைப் பதிவகை யாவரும் பலகலை
சொல்லுதல் எளிதரி தத்தொழில் புரிவெனப்
புல்லிய பழமொழி புதுக்கினை யன்றே
அகண்டித மெனநீ பகர்ந்தமை தனக்குப் 170
பந்தம் இதுவெனத் தந்தமை கருதில்
வானில் நடக்குங் காலினைப் பிடித்துப்
பருவிலங் கிட்ட ஒருவன் நீயன்றே
பந்தம தகல *முந்து விவேகம்
வான்வளி யெனத்தனில் தானே தோன்றின் 175
முன்புள தாயின் மயங்கா திலதெனிற்
பின்புள தாகா திலதுள தெனில்வெளி
மலரது தரும்அனல் மரக்கண் இன்றாகித்
தருவது தகுமெனில் தானே தோன்றா
விறகின் உதித்த கனல்தகு மாயின் 180
அவித்தையின் உதித்த வித்தை அம்மரத்து
உதித்த விவேகம் வித்தையென் றுரைத்த
வெந்தழ லனைய விவேக மதுதித்த
இந்தன மனைய இறையிலன் றற்றே
இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் எவற்றையும் 185
இதுவன் றிதுவன் றெனக்கழி காலை
அதுவே தானே யாயின தென்றனை
வித்தை முன்னர் அவித்தையும் அவித்தைமுன்
வித்தையும் நில்லா வியன்ஒளி இருளென
இருளல ஒளிக்கும் ஒளியல இருட்கும் 190
ஒருகா லத்தும் ஒருபயன் இலதால்
இரண்டையும் நுகரும் முரண்தரு விழியென
வித்தையும் அவித்தையும் உய்த்ததொன் றுளதே
தானே தானா மானாற் பயனென்
தன்னில் தன்னைத் தானே காணிற் 195
கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே
தன்நல மதனைத் தானே நுகரும்
என்னின் முன்நலம் எய்தா திருந்ததென்
கட்டி போலெனக் கதறினை இன்பம்வந்து
*ஒட்டிடும் வத்தை யுடையையா யிடினே 200
தத்துவ மசியென வைத்தமுப் பதத்திற்கு
ஒன்றே பொருளென் றன்றே பகர்வது
நீபுலி யாயினை யென்றாங் குணரில்
ஆயினை என்றதும் ஆகு வமைத்தால்
நோயா யினமெனல் ஆயா யென்றால் 205
அகமே பிரம மாயின தென்றால்
சகமே அறியத் தான்வே றன்றே
உண்மையிற் சலமிலம் உடற்சலம் சலமுறும்
வெண்மதி போல விளங்கின மென்றனை
அசல னாகிச் சஞ்சல சலத்துச் 210
சலனம் மேவினம் எனமதி காண
வேண்டும தன்றிக் காண்பவர் பிறரேல்
ஈண்டுன தேகம்என் செய்த தியம்புக
உடல்விடக் கடத்துட் படுவெளி போலெனில்
விட்டென் பெறஉடற் பட்டென் படமற்று 215
இகலற ஒருவன் இவ்வகை *தெளிய
அகிலமும் முத்தி யடைந்திட வேண்டும்
அறிந்தோர் முத்தி யடைந்தோ ராயின்
பிறிந்தோர் உயிர்பல பேதத் தன்றே
கன்ம காண்டங் காரண மாக 220
மன்னும் விவேகம் என்னில் அவித்தைக்கு
ஏது காரணம் ஒதினை யில்லை
இதற்குக் காரணம் விதித்தல்வேண் டின்றே
அரணியி லுதித்த கனலவை கவர்வென
விரதத் துதித்த விவேகம தழித்தல் 225
வருந்தி யாயினுந் திருந்திய வேத
நீதி யெல்லாம் நீத்துப் போதமொன்று
அறியார் தாமும்இகழ் அவ்வழி நடத்தல்
பொறியோ போத நெறியோ இதுபவம்
நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல் 230
நன்றி கொன்ற லன்றே அன்றியும்
ஞால நீதியும் நான்மறை நீதியும்
பாலர்உன் மத்தர் பசாசரி லெனவும்
உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும்
தானே தவிரா தானாற் புரியாது 235
ஒழிந்திடின் நிரயத் தழுந்துதல் திடமே
உய்த்தோ னின்றி முத்தி யுரைத்தல்
பித்தோ பிரமஞ் செத்தோ பெறுவது
உடலையும் நீயே சடமெனச் சாற்றினை
வையினும் வாழ்த்தினுங் கொய்யினுங் கொளுத்தினும் 240
வணங்கினும் உதைப்பினும் பிணங்குதல் செய்யாப்
பிரமத் தன்மை பெறுவதெக் காலம்
இருக்கு நாள்சில எண்ணில்நூல் கதறித்
தருக்கம் பேசித் தலைபறி யுற்றுக்
கண்டோர் ஈந்த பிண்டமுண் டலறிப் 245
பல்நோய் யாக்கை தன்நோ யுற்றுடல்
விடவரும் என்று நடுநடு நடுங்கி
விட்டோர் தெய்வத் தொட்டின் றன்றியும்
யானே எவரு மானேன் என்றலின்
அவ்வவர் சீறி அவ்வவர் வாழ்நாள் 250
செவ்விதின் நிரயஞ் சேர்த்துவர் அதனால்
மாயா வாதப் பேயா உனக்குத்
தேவரில் ஒருவர்உண் டாக
மேவரு நரகம் விடுதலோ அரிதே.

பொழிப்புரை :

உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வரு பிரமாணம் மறையெனில் நீ பெத்தமாகவும் முத்தியாகவும் கூறின உன்னுடைய மதத்தின் தாற்பரியம் பிரமமொன்றுமே யுள்ளதென்று சொல்லுமிடத்து ஒன்றென்றதற்குப் பிரமாணம் ஏதென்னில், வேதமே பிரமாணமாயிருக்கு மென்னில்; அருமறை ஒன்றென்ற தன்றி இருபொருள் உரைத்தல் நன்றன்று அரிய வேதமானது பிரமமொன்றுமே யுள்ளதென்று சொல்லுவதன்றிச் சீவபரமென்று இரண்டாகச் சொல்லச்செய்தே நீ இட்ட பிரமாணத்துக்கு நன்றாகாது ; அபேதம்நாடிய பொருளேல் வேதம் அப்படி இரண்டென்றதும் அபேத சித்தாந்ததைச் சொன்னதாயிருக்கு மென்னில் ; பேதமும் அபேதமும் ஓதவேண்டா நீ ஒன்றென்றதற் கிட்டபிரமாணம் இரண்டென்றும் இரண்டல்லவென்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை ; பேதமென்றும் அபேதமென்றும் பேதாபேத மென்றும் வேதஞ்சொல்கிற தெல்லாம் அந்தப் பிரமமொன்றையுமே யென்னில் ; பேதமெனினும் அபேதமெனினும் பேதாபேதமெனினும் அமையும் நின் ஐயமில் உரையிற் பையவந் துளதாம் திகழ்பிரமாண இகழ்வும் வேதம் இரண்டென்றாலும் இரண்டல்லவென்றாலும் இரண்டுமாய் இரண்டல்லவு மாயிருக்குமென்றாலும் அமைவு பிரிந்திருப்பதா யிருக்கிற உன்னுடைய சந்தேகமற்றிருக்கிற சாத்திரத்திலே விசாரித்துப் பார்க்குமிடத்துக் கிரமத்திலே விளங்கப்பட்ட பிரமாண விரோதமும் உண்டாகாநிற்கும் ; உண்டன்றிப் பெத்தம் பேதம் முத்தி அபேதமேல் அப்படிப் பிரமாண விரோதம் உண்டாகாது காணும், அந்த வேதம் பெத்தத்திற் பேதமென்றும் முத்தியில் அபேதமென்றுஞ் சொல்லு மென்னில் ; அநவத்திதமாம் அவை இருதிறனும் சாத்திரம் பெத்தத்திற் பேதமென்றும் முத்தியில் அபேதமென்றுஞ் சொன்ன இரண்டு வகையையும் விசாரித்துப் பார்க்குமிடத்து உன்னுடைய சாத்திரம் அறுதியில்லாததாம். ஆகையால் சாத்திர விரோத முண்டென்கிறது தப்பாது ; இனி அப் பழமொழி இரண்டல ஒன்றேல் நான் அநவத்திதமா யிருக்குமென்றதுகொண்டு நீ இப்பொழுது அந்தப் பழைய மொழியாகிய வேதம் இரண்டென்று சொல்லாது ஒன்றென்றே சொல்லுமென்னில்; அன்றியும் பெத்தம்பேதத் தறைதலும் ஒன்றிய முத்தி அபேதத் துரைத்தலும் பழுதாம் இத்திறன் பதையாது ஆய்க முன்னே இரண்டென்று சாத்திரஞ் சொல்லி இப்பொழுது ஒன்றென்று சொன்ன தோஷமன்றியும் பெத்த தசையிற் சீவபரமென்று இரண்டாயிருக்கு மென்றதும் முத்தி தசையிற் சீவபர மிரண்டும் ஒன்றாயிருக்கு மென்றதுங் குற்றத்தை யுடைத்தாயிருக்கும்.
இப்படி நான் சொன்ன வகையைப் பதறாமல் ஆராய்ந்து பார்ப்பாயாக; மற்று எழுதா மொழியெனும் இப்பிரமாணம் ஆர் உரை அது ஒழிந்து எழுதப்படாத வேதமாகிய இந்தப் பிரமாணம் ஆராலே சொல்லப்பட்டது; தானே ஆயினதேல் அது ஒருவராற் சொல்லப்பட்டதல்ல, சுயம்புவாயுள்ள தொன்றென்னில்; உனது ஏகம் அனேகம் உறும் நீ பிரமம் ஒன்றென்றது போய்ப் பிரமம் ஒரு முதலும் வேதம் ஒரு முதலுமாக உன்னுடைய ஏகம் அனேகமாகப் பொருந்தா நின்றது. இதன்றியும் ; இயம்பாமற் சத்த ரூபந் தகாதெனில் ஒருவர் உச்சரியாமற் சத்தத்தினுடைய சொரூபந் தானாகத் தோன்றா தென்னில்; வானத்து ஒத்து ஒலி உறழுமெனில் ஆகாசத்திலே ஒருவர் உச்சரியாமற் சத்தமானது உண்டானாற் போல வேதமும் ஒருவர் சொல்லாமல் தானே உண்டாகாநிற்குமென்னில் ; வறிது உதியாது ஆகாயத்திலே வாயு ஏதுவாகக் கொண்டு சத்தம் உண்டாவ தொழிந்து சும்மா சத்தந் தோன்றாது ; அன்றியும் பதமும் பாழியும் அனைத்து மின்றி ஓர் ஒலியா யெழுந்திடும் அதனுக்கு அறிவிலது அதன்றியும், பதமென்றுங் கிரமமென்றும் பாழியென்றும் பின்னும் பல சத்தங்களும் அர்த்தங்களுமாயிருக்கும் வேதமானது; இப்படியன்றி ஆகாசத்திற் சத்தம் ஒரு பிரகாரமாயிருக்கும், அந்தச் சத்தத்துக்கு அறிவென்பதொன் றில்லை ; இந்த வேதம் அறிவாயிருப்பதொன் றாகையால் அந்த ஆகாசத்தி லுண்டாகிய சத்தம்போலும் இந்த வேதமென்று சொல்லலாகாது வேதந்தானே உண்டாகாதென்றால் இந்த வேதத்தைச் சொன்னார் சிலர் வேண்டும். இதற்கு; உருவிலது அறியாது அறையாது இந்தச் சரீரத்தாலே சொல்லப்பட்டது வேதமென்னில், இது சுத்தசடமா யிருந்தபடியாலே ஒரு சத்தத்தையும் அர்த்தத்தையுஞ் சொல்லமாட்டாது ; அன்றியும் அவ்வகை அகண்டிதம் அதுஇது என்று அது குறிப்பது எவ்வகை அந்தச் சரீரத்தின் பகுதியையன்றியும் பிரமத்தினுடைய தன்மையை விசாரிக்கில் அது கண்டிக்கப் படாததாய் அகண்டிதமாயிருந்தபடியாலே சத்தத்தையும் அர்த்தத்தையுஞ் சுட்டிச் சொல்லும் பகுதி எப்படி; யாவும் ஒன்றெனும் உரையும் ஒழிந்தனை யன்றே ஆகையால் எல்லாம் ஒன்றேயென்று சொன்ன ஒழிந்தனை யன்றே ஆகையால் எல்லாம் ஒன்றேயென்று சொன்ன சொல்லையும் விட்டுவிட்டாயாகும் ; அருமறை பிரம வுரையெனில் அரிய வேதமானது அந்தப் பரப்பிரம்மத்தாலே உச்சரிக்கப்பட்ட தென்னில் ; அதற்குத் தந்தம் தாலுமுதல் நவில்பொறி இலது அந்தப் பிரமம் அகண்டிதமாகையால் பல் நாக்கு முதலாக இதற்குச் சொல்லப்பட்ட கருவிகள் இல்லாதபடியால் அந்தப் பிரமத்தாற் சொல்லப்படாது ; என்னில் ஒர் உடற்கண் மன்னிய அலகை அறைந்தற்று அந்தப் பிரமத்தாலே வேதஞ் சொல்லப்படாதென்னில், பேயானது ஒருவன் சரீரத்திலே நிலைபெற்றுநின்று வருகாலத்தின் நிகழ்ச்சிகளைச் சொன்னாற்போல, அந்தப் பிரமமும் ஒருவருடலைச் சார்ந்து நின்று வேதத்தைச் சொல்லும்; என்பது ஆர்சொல் அது அமலத்திறம்பெற்றின்றே அப்படி ஓர் உடலைச் சார்ந்து நின்று வேதத்தைச் சொல்லு மென்றது ஒரு தேவரைச் சார்ந்தோ, ஒரு ரிஷியைச் சார்ந்தோ, ஆரைச்சார்ந்து நின்று வேதத்தைச் சொல்லப்பட்டதுள? அப்படி ஒருவரைச்சார்ந்து நின்று சொன்னதாமாகில், அது பசுவாக்கியம். ஆகையால் அந்தச் சொல்லுக்கு நின்மலத்துவ முண்டாகாது. பின்னை வேதத்தைப் பிரபஞ்ச மெல்லாஞ் சுயம்பு வென்று சொல்வதே னென்னில் ; செய்தோர் பெயராற் சுயம்பு வென்று உலகு இயம்பு மென்று அறி இனி நிஷ்களமாய் நின்ற கர்த்தா சகளீகரித்து அவனாலே பிறந்து அவ்வேதம் உச்சரிக்கப்படுகையாலே இதைச்சொன்னவன் சுயம்பு வாகையால் இந்த வேதத்தையுஞ் சுயம்புவென்று உலகஞ் சொல்லாநிற்கும். இது இப்படியிருக்கு மென்று மேலறிவாயாக; தற்கீழ்த் தலைவரைத் தான் தொழுதுரைக்குஞ் சொற்கேல் வேதம் உம்முடைய கர்த்தா சொன்னதாகில், அவன் தனக்குக் கீழாயுள்ள தேவதைகளைச் தான் நமஸ்கரித்துச் சொல்ல வேண்டுவானேனென்னில் ; புரவல னேவலமைச்சரை அடியேம் மற்றெம் குடி முழுதாள்மின் என்று ஏத்தி இறைஞ்சின் காப்பர்களென்றாங்கு ஈசன் நாம்செயப் பேசினன் இராசாவினுடைய குடியாயுள்ளவர்க ளெல்லாரும் அந்த இராசாவைக்கண்டு தங்கள்மேற்கருமஞ் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். வாசலிற் காரியப்பேர்களைக் கண்டு அடியோங்கள் தேவரீர்க்குப் பழைய அடிமையாயிருக்குமென்று வணங்கினவிடத்து அவர்களுக்குண்டாகிய மேற்கருமம் அந்தக் காரியப்பேர்களாலே தீர்க்கப்பட்டாற் போல, கர்த்தாவும் எல்லாரும் பக்குவ ரல்லாதது கொண்டே அபக்குவராயுள்ளவர் வழிபாடுசெய்யத்தக்கதாக அந்தக் தேவதைகளையுஞ் சொன்னதாயிருக்கும் ; அன்றி இனையவை பிறரிற்கனவிலும் இலனே இது ஒழிந்து பிற தெய்வங்களை அவன் நமஸ்கரித்துச் சொன்னா னென்கிறது அவனுக்குச் சொப்பனத்திலுங் கூட உண்டாகாது. உம்முடைய கர்த்தா தன்னைத்தானே தோத்திரம் பண்ணுவானே னென்னில்; தன்னைத் துதித்குஞ் சொல் நலந்தானும் அத்துறை அறிவாணர்க்கு அறைவ தொன்று கர்த்தா தன்னைத்தான் நன்றாகத் தோத்திரம் பண்ணுவானென்கிறதும் பக்குவான்மாக்களா யுள்ளவர்கள் தன்னை வழிபாடு செய்யத்தக்கதாகச் சொன்ன தாயிருக்கும் ; அன்றியும் தனக்குத்தானே தன்நலம் பகராது அசத்துக்கு உரையாது ஆர்க்கு உரை உயிர்க்கெனில் இதுவன்றியும் கர்த்தா தன்னுடைய பெருமையைச் சொல்லுமிடத்து வேறே ஒருத்தர் கேட்கச்சொல்லுவதொழிந்து தனக்குத்தான் தன்னுடைய பெருமையைச் சொல்லிக் கொள்ளாது. பின்னைச் சரீரஞ் சடமானபடியாலே அந்தச் சரீரத்தை நோக்கிச் சொல்லாது. பின்னை இவனுடைய பெருமையைச் சொன்னது ஆரை நோக்கி ? அது பிறரை நோக்கிச் சொன்னா னென்னில் ; உரை பிரமாணம் இறை பிரமேயம் நீ பிரமாதா நின்பிரமிதி என நால்வகை யுளது உனது ஏகம் நன்றன்றே சாத்திரமாகிய பிரமாணம், கர்த்தாவாகிய பிரமேயம், ஆன்மாவாகிய பிரமாதா, ஆன்மாவின் அறிவாகிய பிரமிதி என்று நாலுவகையாகக் காணப்பட்டது. ஆகையால் நீ ஒன்றென்றது நன்றா யிருந்தது ; நற் பிரமாணம் நிற்பதொன் றாய்த்தன்று ஆகையால் நன்றாக இதற்குப் பிரமாணமென்று நாட்டின வேதமும் ஒன்றென்று சொல்லி நிலை நிற்கப்பட்டதில்லை ; அப் பிரமேயமும் அதன் இயல்பன்றே இந்தப் பிரமாணத்தாலே அளவிடப்பட்டதாய் மேல் மறுக்கப்பட்டது போற் பிரமேயமும் அந்தச் சாத்திரத்தினுடைய இயல்பாகப்படும். இது வேதஞ் சுயம்புவென்றதை மறுத்தது.
மேற் பிரமேயத்தை மறுக்கிறார் : கன்னற் சுவையில் அன்னிய மிலதால் இனிமை தோன்றாத் தன்மைத்து என்றனை கரும்பிலுண்டாகிய இரதம் தன்னில் வேறுபாடில்லாதது கொண்டு தன்னுடைய இரதந் தனக்குத் தோன்றாமலிருந்த தன்மை போலும் பிரமமும் தன்னுடைய இன்பத்தைத் தான் அறியாதென்று நீ உன் மதத்திலே சொன்னாய் ; அறிவிற்கு உவமை அசத்தாம் கட்டி பிறிவித்து ஒட்டினும் பேறது உறாதே அறிவாயுள்ளதற்கு உவமை சொல்லுமிடத்து அறிவாயுள்ளதைச் சொல்லாமற் சமமாயுள்ள கரும்பில் இரதம்போலுமென்று சொன்னாய், அந்தத் தோஷமன்றியுங் கரும்பிலுண்டாகிய கட்டியைத் தன்னிலே பிறித்து வைத்து மேல் ஓர் அவதரத்திலே கூட்டினவிடத்து இத்தனை நாளும் இந்த இரதத்தை யிழந்தோமே இப்பொழுது இந்த இரதத்தைப் பெற்றோமே என்கிற தன்மை இந்தக் கட்டிக்கு உண்டாகாது ; ஆகையால் இது பிரமத்துக்கு உவமையன்று. இதன்றியும்; தற்பர விரிவு பொற்பணி தகுமெனில் பரப்பிரமந் தேகாதிப் பிரபஞ்சமாகப் பலவாயிருந்த தன்மை பொன்னானது பணி பலவாயிருந்த தன்மை போலுமென்று நீ சொல்லில்; செய்வோரின்றிச் செய்வினை இன்மையின் பொன் பணியாகை தன் பணியன்றே இந்தப் பிரபஞ்சத்திலே செய்வோ ரொருவரையின்றிச் செய்தொழிலானது காணப்படாதாற்போலப் பொன்னானதும் ஒருவன் பண்ணப் பல பணியாயிருந்த தொழிந்து தானாகப் பல பணியாகாது. பிரமம் பிரபஞ்சமாய் விரிந்ததும் வேறே யொருவனாலே செய்யப்பட்டதாக வேண்டும். அப்படியன்றுகாணும், எல்லாவற்றையுஞ்செய்தது பிரமந்தானேயென்னில்; செய்வோர்போலாச் செயப்படுபொருள் முதல் இந்த உலகத்திற்செய்கிறவர்களைப் போலே யிராது இவர்களாற் செய்யப்படும் பொருள்களுக்கு முதலாயுள்ள உபாதானமும். அதென்போல வென்னில், குலாலனைப்போலே யிராது சால் குடஞ் சட்டி பானைக்கு உபாதான மாகிய மண்ணும். ஆகையால் இந்தப் பிரமத்தை யின்றிப் பிரபஞ்சத்துக்கு உபாதானம் வேறே யொன்று உண்டாகவேண்டும். அப்படி ஒர் உபாதானமுண்டாகில் அதுவே அமையாதோ இந்தப் பிரமம் ஏனெனில் ; செய்வோர் ஏயாச் செய்யவும் படுமே அந்த உபாதானஞ் சடமாயிருந்தபடியாலே அது தானாகப் பிரபஞ்சமாகாது ; அந்த உபாதானத்தைக் கொண்டு செய்கைக்குக் கர்த்தாவேண்டும். அதன்றிப் பிரபஞ்சத்தில் யாதொரு பொருள்களுஞ் செய்வோரொரு வரையில்லாமல் அந்தத் தொழில்கள் தானே செயற்பட்டு வருவது முண்டாமே ; சுத்தி வெள்ளியில் தோன்றிற்றாயினுஞ் சத்து உலகேதும் தாரா சுத்தியானது வெள்ளியாகத் தோன்றினாற்போலக் கண்டவர்களுக்கு அசத்தியமாயுள்ள பிரபஞ்சமுஞ் சத்தியமாகத் தோன்றிற்றாயினும் அறிவாயுள்ள பிரமம் சடமாயுள்ள பிரபஞ்சத்தை ஒரு பிரகாரத்தால் உண்டாக்காது ; தருமெனில் பிரமத்தின்முன் அசத்தியமாயுள்ள பிரபஞ்சமுஞ் சத்தியமாகத் தோன்று மென்னில் ; உலகம் மித்தையென்று ஓராது உரைத்தனை நீ முன்னே இந்த உலகத்தைப் பிராந்தியென்று சொன்னது விசாரியாமற் சொன்னாயாக வேண்டும்; நிலவும் நின் மரபு நினைந்திலையாம் கொல் இப்படி மலைவு வருதலாற் பொருந்தப்பட்ட உன்னுடைய அர்த்தத்தினுடைய கிரமத்தினையும் மறந்தாயாகவேண்டும் ; விவகாரத்தில் வேண்டுதும் உலகம் பரமார்த்தத்திற் பகராம் என்னில் இந்தப் பிரமம் உபாதிகள் வசத்தினாலே தன்னைச் சீவனென்று பிரமாணம் பண்ணிக்கொண்டு நிற்கிற இந்த விவகாரதசைக்கு உலகமென்று கொள்ளப்படுமதொழிந்து நான் பிரமமென்றறிந்த பரமார்த்த தசையில் எல்லாம் பொய்யாயிருந்தபடியாலே அவ்விடத்து உலகமென்று சொல்லப்பட்டிராதென்னில் ; பரத்துளதேல் இவையும் பரமார்த்தம் இந்த உலகம் பரமார்த்தமாயுள்ள பிரமத்திலேநின்றும் உண்டானதாயின் அசத்தியமாயுள்ள பிரபஞ்சமுஞ் சத்தியமாயுள்ள பிரம மாக வேண்டும் ; பரத்திலதேல் உலகம் பொய்யாயிருந்தபடியாலே இது அந்தப் பரமார்த்தத்துக்குப் பணியல்லவென்னில் ; ஒழி முன்பகர்மாற்றம் உலகம் பிரமத்திலே நின்றுந் தோன்றிற்றென்று நீ முன்னே சொன்ன வார்த்தையை ஒழிந்து விடுவாயாக ; அதன் முதல் இதுவென உதவுக இந்த உலகம் பிரமத்திலே தோன்றின தல்லவாயின் அது தோன்றின உபாதானம் உனக்குத் தெரியுமாயின் இன்னதென்று சொல்லுவாயாக; அன்றியும் விவகரிக்குங்கால் திகழ் பரமார்த்த நிலை அது இந்தத் தோல்வியன்றியும் இன்னமுஞ் சொல்லுமிடத்து, நின்மலமாய் எல்லா உபாதிகளையுங் கழன்ற பரமார்த்த நிலையாயிருப்பதொன்று அந்தப் பிரமம் ; தெரியில் இது நீ விசாரித்துப் பார்க்குமிடத்து மலமாயிருக்கிற இந்த மாயா வுபாதிகளோடுஞ் சம்பந்தியாயிருப்பா னொருத்தன் நீ, ஆகையால் இந்தச் சீவனுந் தனியே ஒரு முதலென் ; நீயேல் அந்தப் பிரமந்தான் காணும் நானென்னில் அது அறிவாயிருக்கிறது, இது அறியாமலிருப்பானேன்; தெரியாது இது உபாதிகள் வசத்தினாலே தெரியாமலிருக்கும் ; ஆயின் அஃதுந் தெரியாது நீயும் அந்தப் பிரமமும் ஒரு முதலாயிருக்கச்செய்தே இது உபாதிவசத்தினாலே அறியாதிருக்கு மாயின்; அந்தப்பிரமமும் அறியாததாகவேண்டும்; உரையார் அளவையும் ஒழிந்தனை யன்றே உன்னுடைய அர்த்தத்தை அளவிட்டுச் சொல்லிவருகிற பிரமாணத்தையும் விட்டுவிட்டாய். அதென்னெனில் அது ஒன்றைச்சொல்ல நீ ஒன்றைச் சொல்லுகையால். அந்தச் சாத்திரத்தின்படியே காணும் நான் சொன்னதுமென்னில் ; அளவை காண்டல் கருதல் உரையென உளது பிரமாணமாவது பிரத்தியக்ஷமென்றும் அனுமானமென்றும் ஆகமமென்றும் மூன்று வகைப்படும் ; அவை மூன்றின் மொழிவழி நுழையின் நின் பிரமேயமென்பது எனாம் கொல் அங்ஙனஞ் சொல்லப்பட்ட பிரத்தியக்ஷத்தின் வழியாலும் அனுமானத்தின் வழியாலும் ஆகமத்தின் வழியாலும் நுழைந்து ஒன்றை யறிந்துகொண்டுவருமாயின் வாக்குக்கும் மனத்துக்கு மெட்டாத உன்னுடைய பிரமேயமென்று சொல்லப்பட்டது என்னமாய் முடியும். இது பிரமேயத்தை மறுத்தது.
மேல் சித்தினிடத்து அசித்துத் தோன்றுமென்றதனை மறுக்கிறார்; பொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னேயாம்நின் தற்பரம் அசித்தைத் தருமாறு என்னென பொன்னும் பணியும்போலப் பிரமமும் பிரபஞ்சமு மென்றாய், பணியானது பின்பு பொன்னோடு கூடப் பொன்னாய் நின்றது கண்டோம், பிரபஞ்சமானது பின்பு பிரமத்தோடு கூடிப் பிரமமாய் நின்றது கண்டோமில்லை. ஆகையால், உன்னுடைய அந்தச் சத்தாயுள்ள பிரமம் அசத்தாயுள்ள பிரபஞ்சத்தைத் தந்த பிரகாரம் எப்படியென்று நான் முன்னே உன் மதத்திலே கேட்டபொழுது ; சிலம்பி நூல் தரும் நலம்போல் தோன்றும் என்றனை சித்தாயுள்ள சிலந்தி சடமாயுள்ள நூலைத் தந்த தன்மை போலுஞ் சித்தாயுள்ள பிரமத்திலே சடமாயுள்ள பிரபஞ்சம் தோன்றிற்றென்று சொன்னாய் ; அதுவும் தன்தொழில் அந்த நூலை அனவரதமுந் தோற்றுவித்துக்கொண்டு நிற்கிறது அந்தச் சிலந்திக்குள்ள தொழில்; பிரபஞ்சம் பிரமத்திலே நின்று ஒர் அவதரத்திலே தோன்றுமதொழிந்து அனவரதமுந் தோன்றிக்கொண்டு நில்லாது ; அன்றியும் ஒன்று அதன் இயல்பு உலகு ஒர் இயல்பன்று என அதன்றியும் சிலந்தியினிடத்திலே தோன்றின நூல் ஒரு தன்மையாகக் காணப்பட்டது, பிரமத்தினிடத்திலே தோன்றின பிரபஞ்சம் ஒரு தன்மையாகக் காணப்பட்டதில்லை யென்று நான் முன்னே சொன்னபொழுது ; பலம் இலை பழம் பூ பாதவம் தரும் நீர் திரை நுரை திவலை சில தரும் இவைபோல் தானே பலவாம் எனநீ சாற்றினை காயையும் இலையையும் பழத்தையும் பூவையும் மரமானது தந்த தன்மைபோலவும் திரையையும் நுரையையுந் திவலையையும் குமிழியையும் நீரானது தந்த தன்மைபோலவும் பிரமந்தானே பலவிதமாயுள்ள பிரபஞ்சமா யிருக்குமென்று உன் மதத்திலே நீ சொன்னாய் ; சத்து அசத்தாகவும் சத்தினில் அசத்தின் கொத்துள தாகவும் கூறினர் இலரால் ஆல்அசை. அறிவாயுள்ளது அறியாமையாயிருக்குமென்றும் அறிவினிடத்திலே அறியாமையினது கூட்டங்கள் தோன்றுமென்றும் நீ சொன்ன இந்த மலைவு புத்தர் சமணர் முதலானவர்களுஞ் சொல்லார்கள். பின்னை இந்தப் பிரபஞ்சம் தோன்றினபடி எப்படி யென்னில் ; வித்து இலை கனி நனி விழுது ஆல் தருநெறி சத்தல தொன்று தான் தர வேண்டும் சூக்குமமாயுள்ள வித்தானது இலையையும் பழத்தையும் மிகுதியாயுள்ள விழுதையுமுடைய தூலமாகிய ஆலமரத்தைத் தந்த தன்மைபோலத் தூலமாய்ப் பலவாயிருக்கிற பிரபஞ்சத்தையும் சூக்குமமாய் அசத்தாயிருக்கிறதோர் உபாதானம் தந்ததாகவேண்டும். அப்படியன்று காணும், நெல்லிலே நின்றும் வைக்கோலும் பதரும் தோன்றினாற்போலச் சித்திலேநின்றும் சடமான பிரபஞ்சந் தோன்றுமென்னில்; நெற்பதர் பலாலத்திற்கு உபாதானம் என் நெல் சூக்குமமாய்ச் சடமாயிருக்கையால் அது வைக்கோலுக்கும் பதருக்கும் உபாதானமென் றறிவாயாக; காரணமின்றிக் காரியம் பிறவா ஆகையால் தனதாவுடைய காரணத்தில்நின்றுங் காரியந் தோன்றும தொழிந்து அன்னிய காரணத்திலே நின்றுங் காரியந் தோன்றாது. அப்படித் தோன்றுமென்பையாகில் ; பாரிடை ஒரு படம் பண்ணவும் படுமே பருத்தி காரணமாகப் புடைவை யுண்டாவ தொழிந்து மண் காரணமாகப் புடைவை பண்ணவும் வேண்டும். ஆகையாற் சடங்காரணமாகச் சடமுண்டாவ தொழிந்து சித்துக் காரணமாகச் சடமுண்டாகாது. இப்படி யிருக்கச்செய்தே நீ ; அந்தமில் பிரமம் அவித்தை காரணமெனத் தந்தனை சடமாய் அழிந்துபோவதா யிருக்கிற தேகாதிப் பிரபஞ்சத்துக்குச் சித்தாய் அழிவில்லாம லிருப்பதாகிய பிரமம் காரணமென்று நீ சொன்னாய் ; அவித்தை தானெய்துறுதல் சித்தாயுள்ள பிரமத்திலே சடமாயுள்ள பிரபஞ்சம் தோன்றவேண்டுவானேன் ; தன் இயல்பு என்னில் இந்தப் பிரபஞ்சம் உண்டாகிறது அந்தப் பிரமத்துக்கு இயல்பா யிருப்ப தொன்றென்று நீ சொல்லில் ; வன்னிதன் வெம்மையிற் சத்தின தியல்புஞ் சத்தே அக்கினிக்கு உட்டணம் இயல்பானாற்போல நீ சித்துக்கு இயல்பென்று சொன்ன பிரபஞ்சமுஞ் சித்தேயாகவேண்டும்; அசத்தெனில் பிரபஞ்சத்தைச் சடமென்னில்; வைத்த தன் இயல்பெனும் வழக்கு ஒழி சத்தாக வைக்கப்பட்ட பிரமத்தினுடைய இயல்பு இந்தப் பிரபஞ்ச மென்று சொன்ன வழக்கை விடுவாயாக ; அன்றியும் இருள்பொதி விளக்கென வரும் இந்தக் குற்றமன்றியுஞ் சித்தாயுள்ள பிரமத்துக்குச் சடமாயுள்ள பிரபஞ்சம் இயல்பென்று நீ சொல்லுகிறது பிரகாசமாயுள்ள விளக்கு இருளானதைப் பொதிந்துகொண்டு நின்ற தென்றதை ஒக்கும். அப்படியன்று காணும்; இரு விளக்கிற் கருமை பயந்த பெருகொளி தகுமெனில் பெரிய விளக்கினிடத் துண்டாகிய மிக்க பிரகாசமானது கறுத்த மையைத் தந்த தன்மையை யொக்கும், சித்தாயுள்ள பிரமம் சடமாயுள்ள பிரபஞ்சத்தைத் தந்ததென்று நீ சொல்லில் ; தன் இயல்பு அன்று என் உபாதி வசத்தால் மன்னியது அங்ஙனம் விளக்கினிடத்திலே கறுத்த மையானது தோன்றினது விளக்கினுடைய இயல்பல்ல என், திரியென்றும் நெய்யென்றுஞ் சொல்லப்பட்ட உபாதிகள் வசத்தினாலே மையென்று நிலைபெற்றதென்று கொள்; அன்றி மைத் தான் தனின் மாயாது அதன்றியும் பிரமத்திலே தோன்றின பிரபஞ்சம் மீளவும் பிரமத்திலே ஒடுங்காநிற்கும். விளக்கினில் தோன்றின மையானது மீள அந்த விளக்கிலே சென்றொடுங்காது. இதன்றியும்; ஒன்றான் அசுத்தனன்றா மன்றே இந்தப் பிரமமென்று சொல்லப்பட்ட ஒப்பில்லாதவன்தான் சுத்தனொழிந்து அசுத்தனா யிருப்பானொருத்த னல்லவே. அப்படி யிருக்கச்செய்தே இந்த மாயாவுபாதிகளோடுங் கூடியிருக்க வேண்டுவானேன் ; ஆங்கு ஒரு காலத்து ஓங்கியதாயின் அந்தப் பிரமத்தினிடத்திலே ஒர் அவதரத்திலே இந்த உபாதிகள் வந்து கூடினதாயின்; அந்தமில் அவித்தைவந்து அணைவதற்கு ஓர் ஏது வேண்டும் முடிவில்லாத இந்த மாயாவுபாதி ஓர் அவதரத்திலே பிரமத்தை வந்து கூடுதற்கு முன்னே ஒரு காரணம் உண்டாகவேண்டும்; புயலியல்பு எனின் நின்மலமாயிருக்கிற ஆகாசத்தை மேகமானது வந்து மறைத்த தன்மைபோலச் சுத்தமாயுள்ள பிரமத்தையும் மாயாவுபாதிகள் இயல்பாக வந்து கூடுவதொழிந்து இதற்கு ஒரு காரணம் வேண்டுவதில்லை யென்னில் ; வீடு ஓதவேண்டா இந்த உபாதிகள் இயல்பாக வந்து பொருந்தின் மோட்சமென்று சொல்லவேண்டுவல்லை. அதேனென்னில்; ஒழிந்தோரினும் உறும் எல்லா உபாதிகளையும் நீக்கிப் பழையசுத்தத்தைக் கூடினவர்களிடத்தும் இந்தஉபாதிகள் இயல்பாக வந்து பொருந்தும். அப்படியன்று காணும் ; களங்கமது அற உறும் அவித்தை தற் கவித்தல் விளங்கிய பிரம விளையாட்டாயின் பிரமத்துக்கு ஞானமுண்டாகத் தக்கதாகப் பொருந்தப்பட்ட மாயாசரீரம் இந்தப் பிரமத்தைப் பொருந்திக்கொண்டது மிக்க பிரமத்தினுண்டாய விளையாட்டாக இருப்பதொன்றாயின் ; அவித்தை யென்ப தொன்று அன்னியந் தன்னில் உதிக்குமென்ற முன் உரையும் மறந்தனை விளையாடுகிறவர்களுக்கு விளையாடப்பட்ட பொருள் வேறானாற்போல பிரமத்தினுடைய விளையாட்டாகிய மாயாசரீரமும் பிரமத்துக்கு வேறாயிருப்பதொன்று, ஆகையாற் பிரமத்தினிடத்திலே உபாதிகள் தோன்றிப் பிரமத்தை மறைக்குமென்று நீ முன்னே சொன்ன சொல்லையும் மறந்தனையாக வேண்டும்; நுண்நூற் குடம்பை நுந்துழிபோல் உட்படு நெறியதனால் விடுநெறி இலதால் தலைமையும் அறிவும் இலதென் உலண்டுப் புழுவானது தன்னிடத்திலே நின்றுந் தோன்றின நுண்ணிய நூலாலே தனக்குக் கூடாகப் பண்ணித் தான் அதற்குள்ளே புகுந்து பின்னைப் புறப்படமாட்டாமல் அதற்குள்ளே செத்த தன்மைபோலப் பிரமமும் மாயா சரீரத்துக்குள்ளே விளையாட்டாக வந்து புகுந்து பின்னைத் தானாகப் புறப்பட மாட்டாமல் நிற்கையால் அந்தப் பிரமத்துக்குச் சர்வ முதன்மையுஞ் சர்வக்கியத் துவமு மில்லையென்று சொல்; அவித்தையை விடுத்து எடுத்து ஆணரும் வேற்றோ ரன்றே இது பாசபந்தியா யிருக்கையாலே இந்த மாயா சரீரத்தைத் தானாக விடுவித்துக்கொள்ள மாட்டாமல் நின்மலமா யிருக்கிறதொரு குருமுதல் இந்த மாயாசரீரத்தை நீக்கிப் பாவக்குழியிலே நின்று மெடுத்துத் தனக்கடிமையாக ஆண்டு கொள்கையினால் இந்தச் சரீரத்தோடுங் கூடிநிற்கிறது பிரமமாகாது. அப்படியன்று காணும் ; ஒளிகொள் தாமிரம் குளிகை பெற்றாங்கு அதன் வித்தையை வித்தை தவிர்க்குமென்று உரைக்கில் பிரகாசத் தோடுங் கூடியிருக்கிற செம்பானது இரத குளிகையோடுங் கூடின விடத்துக் காளிதம் நீங்கிப் பொன்னான தன்மைபோல அந்தப் பிரமத்துக்கு உண்டாகிய சரீர சம்பந்தத்தையும் அதனிடத்திலே தோன்றின விவேகக்கியானம் நீக்க அந்தப் பிரமம் சுத்தமாமென்று நீ சொல்லில் ; நித்தன் அறிவன் சுத்தனென்று உரைத்த வித்தகம் என் இப்படி அசுத்தமாயிருக்கிற முதலை நீ முன்னே நித்தியனென்றுஞ் சர்வக்கினனென்றும் நின்மலனென்றுஞ் சொன்ன சாமர்த்தியம் என்தான் ; நீ வித்தையும் வேறு என் நீ விவேகமென்று சொல்லுகிறது இந்த அவித்தையோடுங் கூடிக்கொண்டு நிற்கிற அதை வேறே முதலென்று சொல்லு. இதுதான் காணும் அதுவென்று நீ சொல்லில் ; எம்மனோரில் ஒருவன் நின் இறை நீ கர்த்தாவென்று. சொல்லுகிற முதல் பாசபந்திகளா யுள்ள எங்களிலே ஒருத்தனாக வேண்டும் ; அம்ம நான் சொல்லுகிற சொல்லைப் புத்திபண்ணிக் கேட்பாயாக ; சைவந்தவன் நீ யன்றே யாதொருத்தனைப் பொல்லாதவனென்று சொல்லப்பட்டது அப்படிச் சொல்லப்பட்டவன் நீயாகவேண்டும். இது பிரமிதியை மறுத்தது.
இதன்றியும் பன்மணி பசுநற் பாத்திரமெனவும் நல்நூல் பால் நீர் நற்கதிர் எனவும் உடலையும் உணர்வையும் உவமித்தனையேல் இரத்தினங்கள் பலவாயிருந்ததாமாயினும் அதிற் கோக்கப்பட்ட சரடு ஒரு தன்மையா யிருந்தாற்போலவும், பசுக்கள் பலவாயிருந்ததாமாயினும் அவையிற்றி னுண்டாகிய பால் ஒரு தன்மையா யிருந்தாற் போலவும், பாண்டங்கள் பல தன்மையா யிருந்ததாமாயினும் அவையிற்றிலே பிரதிபிம்பஞ் செய்துகொண்டு நிற்கிற ஆதித்தன் ஒரு தன்மையா யிருந்தாற்போலவும், கூவல் ஆழி குளம் சிறுகுழி கால்கள் பலவாயிருந்ததாமாயினும் அவையிற்றி லுண்டாகிய தண்ணீர் ஒரு தன்மையாயிருந்தாற்போலவும் என்று யோனிபேதங்களாயுள்ள உடல்களுக்கும் அவையிற்றிலே கூடிநிற்கிற பிரமத்துக்கும் உவமையாகச் சொன்னாய். அப்படியாகில் ; தடமணி சரடொடு தாம் கூடலவே பிரகாசத்தினாலே மிகுத்திருக்கிற மணிகளும் சரடும் தாமாகக் கூடினதில்லை, அவையிற்றை வேறே ஒருத்தன் கோக்கக் கோப்புண்டு நின்ற தன்மைபோல உன்னுடை பிரமத்தையும் இந்த உடல்களையுங் கூட்டினவன் வேறே ஒருத்தன் உண்டாகவேணும். அதன்றியும் ; உணர்வு உணர்வொழியின் உலகு உணர்வுறின் நின் பாலும் பசுவுஞ் சாலும் உன்னுடைய பிரமமானது அறியாததாயும் அது கூடிநிற்கிற தேகாதிப் பிரபஞ்சம் அறிவேயாயும் இருந்ததாமாயின் நீ பாலையும் பசுவையும் உவமையாகச் சொன்னது ஒக்கும். அதன்றியும் சாலக் கலம் பல அன்றிச் சலம் பல இலதெனக் காணுநரின்றி வீண் நீ விளம்பினை மிகவும் பாத்திரங்களிற் பின்னமொழிந்து ஆதித்தனிற் பின்னமில்லை யென்றும், கூவல் ஆழி குளம் சிறுகுழி கால்களிற் பின்னமொழிந்து சலத்திற் பின்னமில்லை யென்றுங் கண்டு சொல்வார்கள் சிலரையின்றி விருதாவிலே மிகவுஞ் சில வார்த்தைகளை நீ சொன்னது திட்டாந்த விரோதமாகையால் இது அர்த்தமாகாது ; ஆடியுள் நிழற்போல் கூடுதல் கூறின் கண்ணாடிக்குள் நிழலானது தோய்வற நின்றாற்போலச் சரீரத்துக்குள்ளே பரப்பிரமந் தோய்வற நிற்குமென்று நீ உன் மதத்திலே சொன்னதை நான் சொல்லுமிடத்து; தன் நிழல்கொண்டு தற்பணஞ் சலிக்கின் மன்னிழல் கொண்டு உடல் வந்து அகன்றிடுமே தன்னிடத்திலே நிற்கிற பிரதிபிம்பம் பிதானமாகக் கொண்டு கண்ணாடியானது சலித்ததா மாயில் பரப்பிரமத்தினுடைய பிரதிவிம்பம் பிரதானமாகக் கொண்டு இந்த உடல் கூடியும் பிரிந்தும் நிற்கும். இவையிற்றுக் கில்லாதபடி யாலே இது அர்த்தமன்று ; மன் அயக் காந்தமென உடல் பிரம சன்னதி யளவிற் சலித்திடுமாயின் நிலைபெற்று வாராநிற்கிற இரும்பானது காந்தம் விகாரமறநிற்க அதனுடைய சன்னதிமாத்திரத்திலே விகாரப்பட்ட தன்மைபோலப் பரப்பிரமமும் விகாரமற நிற்க அதனுடைய சன்னதி மாத்திரத்திலே உடலானது போக்குவரத்தைச் செய்யா நிற்குமாயின் ; அகண்டிதம் சன்னதியலது இலது எவையும் நடந்திட வேண்டும் கிடந்திடப் பெறாவே பரப்பிரம மென்று சொல்லுகிறது கண்டிதமல்லாமல் அகண்டிதமானபடியாலே அதனுடைய சன்னதியல்லாதவிடம் ஓரிடமுமில்லை. ஆகையால் கடபடாதிகளா யுள்ளவை யெல்லாஞ் சன்னதி மாத்திரத்திலே போக்குவரத்தைச் செய்யவேண்டும். அதன்றி உடலானது சேட்டித்துங் கடபடாதிகள் சேட்டையின்றிக் கிடக்கிறதுஞ் சன்னதியிலே யெல்லாங் காரியப்படுமென்று சொல்லுகிறதுக்குப் பெறாது ; காந்தத்து இரும்பு காட்டுநர்ப் பெறில் அயம் சேர்ந்திடும் காந்தமும் இரும்புங் கூடிக்கிடந்த தாமாயினும் அவை தானாகக் காரியப்படமாட்டா. அவையிற்றை முகமொக்கக் காட்டுவார் சிலரைப் பெற்றகாலத்து இரும்பானது காந்தத்தைச் சென்று பொருந்தாநிற்கும். ஆகையால் உன்னுடைய பிரமத்தையும் உடலையுங் கூட்டிக் காரியப்படுத்துகிறதொரு முதல் வேறே உண்டென்று கொள்ளுவாயாக. இதன்றியும் ; நீக்குஞ் செயல் அதற்கு இலதே காந்தமானது இரும்பைக் கூட்டிக்கொள்ளுகிற தொழிந்து அதை நீக்கிக் கொள்ளுந்தன்மை அதற்கு உண்டாகாது. பிரமத்தின் சன்னதியிலே உடல் பிறந்தும் வருகையால் நீ காந்தமிரும் பென்றது திட்டாந்தவிரோதமாகையால் அது அர்த்தமன்று. இதன்றியும் ; கனாத்துயர் கயிற்றரவு எனாச் சில தொடுத்தனை சொற்பனத்திலே அதிபயங்கரமாயுள்ள காரியங்களைக் காண்கிறவன் விழித்த விடத்தில் அது பொய்யான தன்மைபோலவும், இராக்காலத்திலே புற்றின் வாசலிலே கயிறு கிடக்கிறதைக் கண்டு பாம்பென்று புத்திபண்ணிப் பயப்பட்டவனுக்கு விடிந்த அவதரத்துப் பாம்பு பொய்யான தன்மைபோலவும் சுகதுக்கங்களாலுண்டாகிய அனுபோகங்களும் அந்தப் பிரமத்துக்கு உண்டாகாதென்று சொன்னாய் ; கனவின் பயனும் நனவின் பயனும் வினையின் பயனவை பொய்யென வேண்டா சொற்பனத்திலே சூக்குமதேகத்தோடுங் கூடி இவன் சத்தாதி விஷயங்களைப் பொசித்ததும், சாக்கிரத்திலே தூலதேகத்தோடுங்கூடிச் சத்தாதி விஷயங்களைப் பொசித்ததும் இரண்டும் இவன் முன்னே செய்த பிராரத்தம் பொசித்ததொழிந்து சாங்கிரத்திற் பொசித்தது மெய்யென்றும் சொற்பனத்திற் பொசித்தது பொய்யென்றும் நீ சொல்ல வேண்டுவதில்லை ; உடல்மாறாட்டக் கடனது கருதுக சாக்கிரத்துக்குத்தூல தேகத்தோடுங்கூடி யனுபவிக்கும், சொற்பனத்துக்குச் சூக்கும தேகத்தோடுங்கூடி யனுபவிக்கும். ஆகையால் சரீரவேற்றுமை உள்ளதென்றறிவாயாக ; உற்ற புற்று மற்றதிற் கயிறும் உடலுங்கூட முச்சடமென அறிதி இவன் சென்று இராக்காலம் பொருந்தப்பட்ட புற்றும் அதன் வாசலிலே கிடக்கிற கயிறும் இவனுடைய சரீரமுமாக மூன்றுஞ் சடமென்கிறது நீயும் அறிவாய் ; அறிவு கயிறென்று அறியா தன்றே அறிவாயுள்ள பிரமம் கயிற்றைக் கயிறென்றறியமாட்டாமற் பிரமிக்குமாகில் அதை அறிவென்று சொல்லப்படாது; அச்சமது அடைதல் கொச்சமை யுடைத்தே பிரமம் கயிற்றைப் பாம்பென்று பயப்படுமாகில் அதைக் கர்த்தாவென்று சொல்லப்படாது. இதன்றியும் ; இன்னும் அக் கனவில் இருளுறு கயிற்றிற் பின்னும் நின் பிரமம் பிரமித்திடுமே இன்னமும் ஒரு குற்றமுண்டு. கனவில் தீங்கு பொய் யென்றறிந்தும் கங்குலிற் கயிறு பாம்பல்லவென் றறிந்து மிருக்கச் செய்தே மீளவுங் கனவைக் கண்டவிடத்தும் கங்குலிலே கயிற்றைக் கண்டவிடத்தும் உன்னுடைய பிரமமானது அச்சப்படுகிறது தகுமோ? ஆகையால் இந்த உடம்போடுங்கூடி இப்படி மயங்கி நிற்கிறது பிரமமன்று. இதன்றியும்; துன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத் தானாந் தகைமையானால் சிவந்த பூவோடுங் கூடியிருக்கிற படிகம் தனது தன்மையிழந்து அந்த வன்னமா யிருந்ததாமாயினும் அதில் ஒருசற்றுந் தோய்வற நின்றாற்போலப் பிரமமும் நெருங்கி வருகிற கன்மங்களைப் பொசிக்குமிடத்து அந்த விஷயங்கள் தானாயிருந்ததாமாயினும் அதில் ஒரு சற்றுந்தோய்வற நிற்குமாமாயின்; மலரென ஒரு பயனன்றிப் பல பயன் மரீஇயது இருவினை தரு பயனென நனி வேண்டில் படிகம் பூவோடு கூடியிருந்தபொழுது சிவந்த வன்ன மொன்றுமேயா யிருந்தாற்போல வினையோடுங் கூடின பிரமமும் ஏகப்பிரகாரமா யிராமல் நானாவிதமாகக் கொண்டு இருப்பானே னென்ன, அது புண்ணிய பாவங்கள் பலவாயிருக்கையினாலே அதையனுபவிக்க வேண்டிப் பிரமமும் வெகுவிதமாயிருந்ததென்று மிகவு முனக்குப் பக்ஷமாயின் ; ஆண்ட வித்தையும் அவித்தைகொ டாக்கையும் ஈண்டு இருவினையும் இயம்பினை இவ்விடத்து இவனை அடிமையாக ஆண்டு இரக்ஷித்துக்கொள்ளுகிறதொரு விவேகஞானமும் அறியாமை யோடுங் கூடியிருக்கிறதொரு சரீரமும் உண்டென்றாய், பலவிதமாயிருக்கிற புண்ணிய பாவங்களும் உண்டென்றாய். ஆகையால் ; பரத்தைக் கள்வரைப்பிணிக்குங் காவலரென முயல்தொல்வினைத்துடக்கில் தோன்று உடற் சிறையிட்டு இருவினை யூட்டும் அருளுறும் எம்மான் இவ்விடத்துக் களவு கண்ட கள்ளரைக் கொண்டுவந்து சிறைசெய்து அதற்குத் தக்க தண்டங்களைச் செய்கிற இராசாக்களைப்போல முற்செனனங்களிலே செய்த பழைய வினையினது தொந்தனையாலேயுண்டாக்கப்பட்ட உடலாகிய சிறைச்சாலையிலே உன்னுடைய பிரமத்தையிட்டுப் புண்ணிய பாவங்களென்கிற தண்டங்களைப் பொசிப்பிக்குஞ் சர்வான்மாக்க ளளவினும் மிகவுங் கிருபை செனித்திருக்கிற எம்முடைய சுவாமியாயுள்ள கர்த்தா. இதன்றியும் ; அருவினையுடற்கண் அவத்தைகள் உரைத்தனை அரிதாயுள்ள வினைக்கீடாக எடுக்கப்பட்ட உடலத்திலே மூன்று அவத்தைப்படுமென்றுநீ உன்மதத்திலே சொன்னாய் ; ஆர்உறுபவர் பரம் அகண்டிதம் அடங்காது இந்தச் சரீரத்தோடு உண்டாகிய மூன்றவத்தையும் அனுபவிக்கிறவர் யார்தான்? பரப்பிர மமோவென்னில், அது பரிபூரணமாயிருந்தபடியாலே நனவு கனவு சுழுத்தியென்கிற அவத்தைகளில் அடங்காது ; ஓர்விலது உடல் சடம் உறுநெறி யாது என உடல் சடமாயிருந்தபடியாலே அவத்தைப்படு மென்கிற முறைமை அதற்கு உண்டாகாது. பின்னை இந்த அவத்தைப் படுகிற வழி ஏதென்று நான் கேட்க ; மன்னிய கரண மாறாட்டத்திற் பன்னினம் என்னின் நிலைபெற்று வாராநிற்கிற அந்தக்கரணங்கள் பிரிந்தவிடத்து உண்டாகிய மயக்கமாயிருக்கும் யாம் அவத்தை யென்று சொல்லப்பட்டதென்னில்; இவையோ பரமோ முதலியது அந்தக்கரணங்களோ பரப்பிரமமோ இந்தச் சரீரத்துக்கு முதன்மையை யுடையது? பரப்பிரமமே முதன்மையை யுடையதென்னில் ; ஆயின் இவை பிறழ்வு எய்தாது பரப்பிரமம் முதன்மையை யுடைய தாயின் அந்தப் பரப்பிரமம் நிற்க இந்த அந்தக்கரணங்கள் நீங்கமாட்டாது ; இவையெனில் உனதுமொழி பழுதுளதே இந்த அந்தக்கரணங்கள் முதன்மையையுடையதெனில் எல்லா முதன்மையு முடையது பரப்பிரமமென்று தேவஞ்சொன்னது பழுதாகவேண்டும் ; உடற்படு பிரமம் உறுமேல் அப்படியன்று காணும் அவத்தை யுறுகிறது உடற்குள்ளே அகப்பட்டு நிற்கிற பிரமமேயாகில் ; சாளரத்து இடத்தகும் உறுவிரல்நுதி அளி எறி துயர் அங்குலி தானே யருந்திடில் உடற்கண் தங்கிய அறிவு தனித்துறு மன்றே பலகணி வாசலிடத்திலே புறம்பே நின்று உள்ளே ஒரு விரலை நீட்ட அந்த விரலின் நுனியிலே ஒரு குளவியானது கொட்ட அதனாலுண்டாகிய விதனம் அந்த விரல் தானே அனுபவித்ததாமாயின் இந்த உடலினிடத்திலே பொருந்தி நிற்கிற பிரமமும் அவத்தையைத் தனியே அனுபவித்த தென்று சொல்லலாம் ; அந்த விரலின் நுனியிலே குளவி கொட்டின கடுப்புப் பாதாதிகேச மளவாக நின்று கடுக்கிறபடியாலே உடலினிடத்திலே தங்கி நிற்கிற அறிவுதனிலே அவத்தையை யுறுமென்று நீ சொன்னது அர்த்தமாகாது. இதன்றியும் ; தற்பண நிழற்கட்குற்றி பாய்ந்தற்றால் நற்கணில் துயரம் நணுகாத் தகைத்தெனில் கண்ணாடியிடத்திலே தோன்றின நிழலினது கண்ணிலே கூச்சுக் கொண்டு சாடினவிடத்துக் கண்ணாடி யுடைந்த தொழிந்து கண்ணுக்கு வயம் வாராத் தன்மை போலச் சுகதுக்கங்களா லுண்டாகிய அனுபோகங்களும் உடலுக்கொழிந்து பிரமத்துக் கில்லை யென்னில் ; நின்மொழி விரோதமுங் காட்சி விரோதத் தன்மையும் உறும் அவை தவறில ஆகா உன்னுடைய சாத்திரஞ் சுகதுக்கங்களை யனுபவிக்கிறது அறிவென்று சொல்லச்செய்தே நீ இப்பொழுது உடலுக்கொழிந்து அறிவுக்கு அனுபோகமில்லை யென்கையாலே சாத்திர விரோதமும், பிரத்தியக்ஷமாக அறிவு சுகதுக்கங்களை அனுபவிக்கச்செய்தே அனுபோகமில்லை யென்கையால் பிரத்தியக்ஷ விரோதமும் இவை யிரண்டுந் தப்பாமல் உண்டாகாநிற்கும் ; யாம் உடைப்பதிவகை யாவரும் பலகலை சொல்லுதல் எளிது அரிது அத்தொழில் புரிவெனப் புல்லிய பழமொழி புதுக்கினையன்றே நாம்வத்து நிர்ணயமாக நாட்டப்பட்டது சூசொல்லுதல் யார்க்கு மெளிய அரியவாஞ், சொல்லிய வண்ணஞ் செயல்’ என்று பொருந்தப்பட்ட திருவள்ளுவப்பயனிற் குறளை நீ இப்பொழுது புதுக்கியனாயாகவேண்டும். நாமென்றது அலக்ஷியச் சொல். இதன்றியும் ; அகண்டிதமெனநீ பகர்ந்தமை தனக்குப் பந்தம் இதுவெனத் தந்தமை கருதில் பரப்பிரமம் என்றாலுங் கண்டிக்கப்படாது அகண்டிதமாயிருப்பதொன் றென்று நீ முன்னே சொன்னதற்கு இப்பொழுது மாயாவுபாதிகளினாலே பந்திக்கப்பட்டு நிற்குமென்று நீ சொன்னதை விசாரித்துப் பார்க்கில் ; வானில் நடக்குங் காலினைப் பிடித்துப் பருவிலங்கிட்ட ஒருவன் நீ யன்றே ஆகாயத்தின்கண்ணே வியாபரிக்கிற காற்றினைப் பிடித்து அங்கிங் கசையாத வண்ணம் பெருத்ததொரு விலங்கையிட்டு வைத்தவன் யாவனொருவன் நீ யென்று சொல்லப்படும். இது பிரமாதாவை மறுத்தது. இது அவனுடைய பெத்தமாம்.
மேல் அவனுடைய முத்தியை மறுக்கிறான் : பந்தமது அகல முந்து விவேகம் வான் வளியெனத் தனில் தானே தோன்றின் பிரமம் மாயாவுபாதிகளினாலே பந்திக்கப்பட்டிருக்குமென்று சொன்ன அந்தப்பந்தம் பிரமத்துக்கு இப்பொழுது நீங்கத்தக்கதாக வந்து தோன்றின விவேகக்கியானம் ஆகாயத்தினிடத்திலே ஒரு வாயுத் தோன்றி அந்த ஆகாயத்தை மறைத்துநின்ற மேகங்களை யொதுக்கி அதனை நின்மல மாக்கின வாயுவைப்போல இந்த விவேகக்கியானமும் பிரமத்தினிடத்திலேநின்றுந் தானே தோன்றினதாயின் ; முன்புளதாயின் மயங்காது இந்த விவேகம் பிரமத்துக்கு முதலே யுள்ளதாயின் அது நிற்கச்செய்தே பிரமத்துக்கு நடுவே மயக்கம் வாராது ; இலதெனில் இந்த விவேகம் பிரமத்துக்கு முதலேயுள்ளதல்ல நடுவே ஓர் அவதரத்திலே வந்து உண்டானதென்று நீ சொல்லில் ; பின்புளதாகாது முன்பு இல்லாதது பின்பு ஓர் அவதரத்திலே யுண்டாகாது ; இலது உளதெனில் முன்பு இல்லாதது பின்பு உண்டாமென்னில் ; வெளி மலரது தரும் இல்லாதது உண்டாமென்கிறது ஆகாயத்திலே ஒரு பூ உண்டாயிற்றென்று சொல்லுதலை யொக்கும். அப்படி யன்று காணும்; அனல் மரக்கண் இன்றாகித் தருவது தகுமெனில் அக்கினியினது பிரகாசம் மரத்தினிடத்திலே முன்பு காணப்படாமலிருந்து பின்பு ஒர் அவதரத்திலே காணப்பட்டாற்போல முன்பு இல்லாத விவேகமும் பின்பு உண்டாங்காணுமென்று நீ சொல்லில்; தானே தோன்றா விறகினிடத்து முன்பு இல்லாத அக்கினி பின்பு உண்டாமிடத்து ஒரு அரணியை வைத்துக் கடைய உண்டானதொழிந்து தானாக உண்டாகாது. ஆகையால் உன் பிரமத்துக்கும் பின்பு உண்டாகிய விவேகக்கியானமும் வேறே ஒருத்தன் உண்டாக்க உண்டானதென்று கொள். இதன்றியும்; விறகின் உதித்த கனல் தகுமாயின் அவித்தையின் உதித்த வித்தை அன்னுவயம் : அவித்தையின் உதித்த வித்தை விறகின் உதித்த கனல் தகுமாயின் என மாறுக. இதன் பொருள் : அறியாமையாகிய பெத்தநிலையிலே தோன்றின விவேகம் விறகினிடத்திலே தோன்றின அக்கினியை யொக்குமாயின் ; அம்மரத்து உதித்த விவேகம் வித்தையென்று உரைத்த வெந்தழல் அனைய அன்னுவயம் : வித்தையென்று உரைத்த விவேகம் அம் மரத்துதித்த வெந்தழலனைய என மாறுக. இதன் பொருள் : வித்தையென்று சொல்லப்பட்ட விவேகக்கியானம் அந்த விறகிலே தோன்றின வெவ்விய தழலை யொக்கும். விவேகமது உதித்த இந்தனம் அடியை விவேகக்கியானந் தோன்றின தானம் அந்த விறகினை யொக்கும். ஆகையால்; இறையிலன் றற்றே விவேகக்கியானந் தோன்றினது பிரமத்திலே யென்று சொல்லப்பட்டது, மாயா அவித்தையிலே யாகவேண்டும். இது திட்டாந்த விரோதமாகையால் நீ சொன்னது அர்த்தமாகாது. இதன்றியும் ; இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் எவற்றையும் இதுவன்று இதுவன்று எனக் கழி காலை அதுவே தானே ஆயினது என்றனை வீடானதை ஓரொரு வைக்கோலாகவும், ஓரொரு கழியாகவும், ஓரொரு மரமாகவும் நாளிலே பிடுங்கிப் போடப்பின்பு வீடென்கிற சொரூபமில்லையாய்ப் போன தன்மைபோலவும், புடவையானதை நாளிலே ஓரொரு இழையாகப் பிடுங்கிப் போட்ட பின்பு புடவையென்கிற சொரூபமில்லையாய்ப் போன தன்மை போலவுஞ் சரீரமாகக் கூடிக்கொண்டிருக்கிற எல்லா உபாதிகளையும் இது நாமல்ல இது நாமல்லவென்று நேதிபண்ணி நீங்கினவிடத்து அந்தப் பரந்தானே இந்தச் சிவனாயிருந்ததென்று நீ சொன்னாய் ; வித்தை முன்னர் அவித்தையும் அவித்தைமுன் வித்தையும் நில்லா அறிவாகிய பிரமத்தின் முன்னே அறியாமையாகிய தேகாதிப்பிரபஞ்சம் தோன்றி நில்லாது. அறியாமையாகிய தேகாதிப் பிரபஞ்சத்தின் முன்னே அறிவாகிய பிரமமுந் தோன்றி நில்லாது. அதென்போல வென்னில் ; வியன் ஒளி இருளென மிக்க பிரகாசத்தையுடைய ஆதித்தன் முன்னே அந்தகாரம் நில்லாதாற் போலவும் அந்தகாரத்தின் முன்னே ஆதித்தன் நில்லாதாற்போலவுமெனக் கொள்க ; இருளல ஒளிக்கும் ஒளியல இருட்கும் ஒரு காலத்தும் ஒரு பயன் இலது இருளல்லாத சுத்த ஒளிக்கும் ஒளியல்லாத சுத்த இருளுக்கும் ஒரு காலத்திலும் இவையிற்றுக்கு ஒருபயனும் உண்டாகாது ; ஆல் அப்படி யிருக்கையால் ; இரண்டையும் நுகரும் முரண்தரு விழியென இருளோடுங்கூடி இருளை யனுபவித்தும் வெளியோடேகூடி வெளியை யனுபவித்தும் அவை யிரண்டு முதலு மாகாமல் தனியே ஒருமுதலாய் நின்ற பெரிய கண்ணினது தன்மையைப் போலவும் ; வித்தையும் அவித்தையும் உய்த்ததொன்று உளதே அறிவாயுள்ள பதியோடுங்கூடி இது பதியென்றறிந்தும் அறியாமையாயுள்ள பாசத்தோடுங்கூடி இது பாசமென்றறிந்தும் அவையிரண்டுமல்லாமற் பசுவென்று தனியே ஒருமுதலுண்டென்று அறிவாயாக ; தானே தானாமானாற் பயன் என் இந்தப் பிரமந்தானே பிரமமானதால் இந்தப் பிரமத்துக்கு உண்டாகிய பிரயோசனம் என்னதான் ; தன்னில் தன்னைத் தானே காணில் இந்தப் பிரமமானது தன்னிடத்திலே தன்னுடைய இயல்பைத் தானே காணப்படுமாயின் ; கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே கண்ணானது தன்னிடத்திலே தன்னுடைய சொரூபத்தைத் தானே காணுமென்று சொல்லவும் படுமே? அது உண்டாகாது. ஆகையால் நீ பிரமம் தன்னிலே தன்னைக் காணுமென்று சொன்னது அர்த்தமன்று. இதன்றியும்; தன் நலமதனைத் தானே நுகரும் என்னின் பிரமம் தன்னிடத்தி லுண்டாகிய சுகத்தைத் தானே அநுபவியாநிற்குமென்று நீ சொல்லில்; முன் நலம் எய்தா திருந்தது என் கட்டிபோலெனக் கதறினை பிரமம் இந்தப் பெத்தமுண்டாவதற்கு முன்னே தன்னிடத்தி லுண்டாகிய சுகத்தைத் தான் அனுபவியாம லிருப்பானேனென்று நான் கேட்டதற்குக் கருப்புக்கட்டியானது தன்னிடத்தி லுண்டாகிய இரதத்தைத் தான் அனுபவியாம லிருந்தாற்போலுமென்று நீ கத்தினாய் ; இன்பம் வந்து ஒட்டிடும் வத்தையுடையை ஆயிடினே அந்தப் பிரமத்தி லுண்டாகிய சுகம் உனக்கு இந்த முத்தியிலே யனுபோகமானது நீ தனியே பசுவென்று ஒரு முதலாய் அதிலே பாச பந்தியாயிருந்து இப்பொழுது அந்தப் பாசம் நீங்கிப் பதியோடு கூடுகையினாலேயெனக் கொள்க ; தத்துவமசியென வைத்த முப்பதத்திற்கு தத் அது துவம நீ அசி ஆகிநின்றா யென்கிற மகாவாக்கியத்துக்குப் பொருள் விசாரிக்கு மிடத்து ; ஒன்றே பொருளென் றன்றே பகர்வது ஒன்றேயாயிருக்கும் இதற்கு அர்த்தமென்றல்ல அந்த மகாவாக்கியஞ் சொல்லுவது. பின்னை எங்ஙனே யென்னில்; நீ புலியாயினை யென்று ஆங்கு உணரில் ஒருவன் ஒருவனுடைய வீரத்தைக் கண்டபொழுது நீ புலியாயினை யென்று அவன் அங்ஙனஞ் சொன்ன சொல்லை விசாரித்துப் பார்க்கில்; ஆயினை என்றதும் ஆகு உவமைத்தால் ஆயினையென்ற தற்குவமைத்தேயென்று லக்ஷணைவிதியிற் சூத்திரங்கள் சொல்லுகையினால் அவன் புலியாகின்றானல்லன். இதன்றியும் ; நோயாயின மெனல் ஆயாய் ஒருவன் ஒருவனைப் பார்த்து நீ இப்படிப் பொல்லாதா யிருப்பானேனென்ன நாம் நோயாய்க் கிடந்தோம் கண்டீரே யென்று அவன் சொன்ன சொல்லுக்கு அர்த்தத்தை நீ தானே ஆராய்ந்து பாராய். அவன் கொண்ட வெதுப்புக்குளிர் அவனாகிற தில்லையே ; என்றால் அப்படியிருக்கையால் ; அகமே பிரமமாயின தென்றால் அகம் தானே பிரம மாகாநின்றதென்று மகாவாக்கியஞ் சொல்லுகையால் ; சகமே யறியத் தான்வே றன்றே ஒருவர் இருவரன்றி இந்தப் பிரபஞ்ச மித்தனையும் அறியத்தக்கதாக இவன் அந்தப் பிரமத்துக்கு வேறென்கிறது தப்பாதென் றறிவாயாக. அன்றியும்; உண்மையிற் சலமிலம் உடற்சலம் எம்முடைய உண்மையைப் பார்க்குமிடத்து அதிலே நமக்குச் சலனமில்லை. இந்த உடலிலுண்டாகிய சலனம் உடலுக்காயிருக்கும். அதென்போலவென்னில் ; சலமுறும் வெண்மதிபோல சலத்தோடே கூடியிருக்கிற மதி அந்தச் சலம் அசைந்தபொழுது தானும் அசைந்தாற்போலே யிருந்த தொழிந்து அதனுடைய உண்மையைப் பார்க்குமிடத்து அந்த மதிக்கு அசைதலில்லையானாற்போல; விளங்கினம் என்றனை இங்ஙனம் இந்த முத்திதசையில் விளங்காநின்றோமென்று நீ சொன்னாய் ; அசலனாகிச் சஞ்சல சலத்துச் சலனம் மேவினம் என மதி காண வேண்டும் நாம் சலனமில்லாம லிருப்பானொருந்தன், ஆற்றிலே ஓடுகிற சலத்தினுடைய சஞ்சலங்கொண்டு நாமுஞ் சலித்தாற் போலே யிருந்ததொழிந்து நமக்கு அந்தச் சலனமில்லையென்று அந்த மதியானது காணவேண்டும். அப்பொழுது நீ சொன்ன திட்டாந்தமும் ஒக்கும் ; அதன்றிக் காண்பவர் பிறரேல் அதொழிந்து இந்த மதிக்கு அசைதலில்லை தண்ணீருக்கே அசைதலென்று அந்த மதியை யொழிந்து வேறே யொருத்தன் கண்டு சொன்னாற்போல அந்தப் பிரமத்துக்குச் சலனமில்லை உடலுக்கே சலனமென்று அந்த பிரமத்தை யொழிய வேறே யொருந்தன் கண்டு சொல்லுகையினாலே ; ஈண்டு உனது ஏகம் என் செய்தது இயம்புக இவ்விடத்துப் பிரமமொன்றுமே உள்ளதென்று நீ சொன்ன சொல் ஏதாய் முடிந்தது சொல்லாய். இது அவனுடைய சீவன் முத்தியை மறுத்தது.
மேல் அவனுடைய பரமுத்தி மறுப்பு : உடல்விடக் கடத்துள் படுவெளிபோல் எனில் பரமுத்தியானது இந்தச் சரீரம் நீங்கின விடத்து இந்தச் சரீரத்திலே நின்ற அறிவு தன்னில் ஒன்றுபட்டு நின்றது கடத்துக்குள்ளே அகப்பட்டு நின்ற ஆகாயம் அந்தக் கடமுடைந்த அவதரத்து அந்தக் கடத்துக்குள்ளே நின்ற ஆகாயமும் மற்றப் பராகாசமுந் தன்னில் ஒன்றுபட்டு நின்றாற்போலுமென்று நீ சொல்லின் ; விட்டு என்பெற உடற்பட்டு என்பட ஆகாயங் குடாகாயமாய் நின்ற காலத்து ஒரு துக்கத்தை யனுபவித்ததுமில்லை, குடமுடைந்தகாலத்தும் ஒரு சுகத்தை யனுபவித்தமில்லை. அது போலப் பிரமமும் உடலுக்குள்ளே அகப்பட்டு நின்ற காலத்து ஒருதுக்கத்தை யனுபவித்தது மில்லையாக வேணும், இந்த உடல் விட்ட காலத்தும் ஒரு சுகத்தை யனுபவித்தமில்லையாக வேணும். இதன்றி இந்த உடலிலே நிற்கிற அறிவு பிரத்தியக்ஷமாக இப்பொழுது துக்கத்தை அனுபவித்துவிட்ட காலத்துச் சுகத்தை அனுபவித்து நிற்கையால் நீ குடாகாய ஆகாயம்போலு மென்றது அர்த்தமன்று ; மற்றுஇகலற ஒருவன் இவ்வகை தெளிய அகிலமும் முத்தி அடைந்திட வேண்டும் இதொழிந்தும் நீ சொன்ன சாத்திரப் பிரமாணத்திலே மாறுபாடற ஒருத்தன் நான் பிரமமென்று தெளிந்த காலத்து எல்லா அறிவுகளும் ஒன்றென்று சொல்லுகையால் சர்வான்மாக்களும் முத்தியை அடையவேண்டும் ; அறிந்தோர் முத்தியடைந் தோராயின் பிரமக்கியான முண்டானவர்கள் முத்தியை யடைந்தவர்கள், அல்லாதவர்கள் முத்தியை யடையார்களாயின் ; பிறிந்தோர் உயிர் பல பேதத்தன்றே அறிந்தவர்களென்றும் அறியாதவர்க ளென்றுஞ் சொல்லுகையால் அந்தப் பிரமத்தை யொழிந்து சொல்லப்பட்ட சீவான்மவர்க்கமும் பல பேதமாயிருக்குமென்று கொள்ளு வாயாக. இது பரமுத்தியை மறுத்தது.
மேல் அந்தத் தன்மை கூடாதவர்களுக்குச் சாதன சதுட்டயங்களினாலே பிரமக்கியானம் உண்டா மென்பதனை மறுக்கிறான் : கன்ம காண்டங் காரணமாக மன்னும் விவேகம் என்னில் இந்தத் தன்மை கூடாதவர்கள் யாகாதிகளாயுள்ள கன்ம காண்டங்களை அனுட்டிக்க அது காரணமாக அவர்களுக்குப் பின்பு விவேகக்கியான முண்டா மென்று சொல்லில் ; அவித்தைக்கு ஏது காரணம் ஒதினையில்லை பிரமத்தை மாயா அவித்தைகள் வந்து ஓரவதரத்திற் பொருந்தி அதை மயக்கிக்கொண்டு நிற்குமென்று நீ சொன்னதற்கு இது இன்ன காரணமாகப் பிரமத்தை வந்து பொருந்திற்றென்று ஒன்றைச் சொன்னாயில்லை ; இதற்குக் காரணம் விதித்தல் வேண்டின்றே கன்மம் காரணமாக விவேகம் உண்டா மென்றதுபோலப் பிரமத்துக்கு முன்னே இப்படி இருப்பதொரு குற்றமுண்டு, அது காரணமாக இந்த அவித்தைகள் வந்து இப்பொழுது பொருந்திற்றென்று ஒன்றை நாட்ட வேண்டும் ; அரணியில் உதித்த கனல் அவை கவர்வென விரதத்து உதித்த விவேகம் அது அழித்தல் தீக்கடை கோலை மரத்தில் வைத்துக் கடைய அந்தத் தொழிலினாலே யுண்டாகிய அக்கினி அந்த இரண்டு காட்டத்தையுஞ் சுட்டுப்போட்டதென்று சொல்லலாமாகக் கன்மங்களைச் செய்ய அதனாலே யுண்டாகிய விவேகம் அந்தக் கன்மங்களை யில்லையாக்கிப் போடுமென்கிறது ; வருந்தியாயினுந் திருந்திய வேத நீதியெல்லாம் நீத்து சதாசார சன்மார்க்கங்களை நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிற வேதவொழுக்கமெல்லாம் வருந்தியுங் கைவிட்டு ; போதமென்று அறியார் தாமும் இகழ்அவ்வழி நடத்தல் பிரமக்கியான மென்கிறது ஏகதேசமுங்கூட அறியாதவர்களும் பிரமக்கியான முண்டாயிற்று எங்களுக்கு ஆசாரம் வேண்டுவதில்லை யென்று அனாசாரங்களைச் செய்துகொண்டு திரிகிற இது; பொறியோ போத நெறியோ இவர்களுடைய தலையிலெழுத்தோ அல்லது அறிவுக்கீனந் தானோ; இது பவம் நீங்கிடும் நெறிதரு பாங்கினைப் பழித்தல் இவனைவிட்டு ஒருகாலத்திலும் நீங்காமல் தொந்தித்துக்கொண்டு வருகிற பிறவித் துன்பங்கள் நீங்குகைக்கு ஏதுவாயுள்ள இந்தக் கன்மத்தின் பகுதிகளை எனக்கு ஆகாது இதுவென்று இதனைக் கைவிட்டு விடுகிற இது ; நன்றி கொன்ற லன்றே சூஎந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைச், செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்று திருவள்ளுவதேவர் சொன்ன செய்ந்நன்றி கொன்ற இதுவா யிருக்கும். விரதத்துதித்த விவேகம தழித்தல் நன்றிகொன்றலன்றேயென்று பொருள் கூட்டுக ; அன்றியும் ஞாலநீதியும் நான் மறை நீதியும் இதன்றியும், லோகாசாரங்களும் நாலு வேதத்திற் சொல்லப்பட்ட ஆசாரங்களும் இவை ; பாலர் உன்மத்தர் பசாசரி லெனவும் உறங்கினோன் கைவெறும் பாக்கெனவும் தானே தவிராது யாதொன்றையும்விகற்பியாமல் நிருவிகற்பமாகக் காண்கிற பாலரைப் போலவும், வைதாரையும் வாழ்த்தினாரையுஞ் சுட்டியறியாத மதுபானஞ் செய்தவர்களைப்போலவும், ஆகாரம் நித்திரை பயம் மைதுன மென்கிற நாலுகாரியமுமில்லாத பசாசரைப் போலவும், நித்திரை செய்கிறவன் கையிலேபிடித்திருந்த பாக்குப்போலவும் உனக்குப் பிரமக்கியான மில்லாதபடியினாலே அந்த அசாரங்களும் தானாகப் போக அறியாது ; ஆனால் புரியாது ஒழிந்திடின் நிரயத்து அழுந்துதல் திடமே அவை தானே போகாதென்றால் இவன்தானே எனக்கு அந்த ஆசாரங்கள் வேண்டுவதில்லை யென்று விட்டால் தேகாந்தத்திலே மீளா நரகிலே போய்க் கிடந்து துக்கங்களை யனுபவிப்ப னென்கிறது தப்பாது ; உய்த்தோனின்றி முத்தியுரைத்தல் பித்தோ அந்த ஆசாரத்திலே உனக்குப் பிரமக்கியானம் உண்டாகாமல் நான் முத்தன் என்று நீ சொல்லுகிறது பித்து மேலிட்டுக் கொண்டோ; பிரமஞ் செத்தோ பெறுவது இவன்இருக்கச்செய்தே பிரமக்கியான முண்டாகவேணும தொழிந்து இவன் செத்துப்போய் பிரமத்தைப் பெறப் போகிறதில்லை. அது எனென்னில் ; உடலையும் நீயே சடமெனச் சாற்றினை இந்த உடலினை நீ தானே சடமென்று சொல்லி வைத்தாய் ; வையினும் வாழ்த்தினுங் கொய்யினுங் கொளுத்தினும் வணங்கினும் உதைப்பினும் பிணங்குதச் செய்யாப் பிரமத் தன்மை பெறுவது எக்காலம் ஒருவன் இவனை வைதவிடத்தும் வாழ்த்தினவிடத்தும் காலினைக் கையினைத் தறித்தவிடத்தும் இவன் மேலே எண்ணெய்ச் சீலையைச் சுற்றி நெருப்பைக் கொளுத்தினவிடத்தும் இவனைத் தெண்டன் பண்ணினவிடத்தும் கால்கொண்டு உதைத்தவிடத்தும் இதம் அகிதப்படாமலிருக்கிற பிரமக்கியானம் இவனிடத்து இற்றைவரை யளவாகக் காணப்பட்டதில்லை. அந்தப் பிரமக்கியானம் இவனுக்கு இனி எந்தக் காலத்திலே யுண்டாகப்படுவது. இருக்கும் நாள் சில புருஷயாயிசு நூறு. இதிலே பாதி நித்திரையிலே போம். நீக்கி நின்ற ஐம்பதிலே வாலிபமாய்ப்போம் பதினைந்து. விருத்தனாய்ப்போம் பதினைந்து. நின்ற இருபதிலே ஆலசமாய்ப்போம் சில நாள். இதற்கு நடுவே ; எண்ணில் நூல் கதறித் தருக்கம் பேசித் தலை பறியுற்று எண்ணிறந்த சாத்திரங்களை யெல்லாங் கற்று அதுகொண்டு கண்டார் நின்றாரோ டெல்லாந் தர்க்கங்கள் பேசி அதனாலே தலை பறியுண்டு; கண்டோர் ஈந்த பிண்டம் உண்டு அலறி இவர் நல்ல அத்தியான்மி யென்று கண்டவர்கள் இடப்பட்ட அசனங்களைப் புசித்து பிரமக்கியானஞ் சொல்லுகிறேனென்று அவரிடங்களிலேயுஞ் சிலவற்றைக் கூப்பிட்டு ; பல்நோய் யாக்கை தன் நோயுற்று உடல்விட வரும் என்று நடுநடு நடுங்கி பல நோய்களுங்கூடி ஒன்றாயெடுக்கப் பட்ட சரீரத்துக்கு அடைத்த வியாதி இவனை வந்து பொருந்தின பொழுது இதனாலே நமக்குச் சாக்காடு வருமென்று பதைபதை பதைத்து ; விட்டோர் தெய்வத் தொட்டின்று அன்றியும் உடல்விடுகிற காலத்து நீ பயப்படாதே நான் உண்டென்று சொல்லி உன்னை இரட்சித்துக் கொள்ளுகைக்கு ஒரு தெய்வதொந்தனையு மில்லையாயிருக்கிறது. அன்றியும் ; யானே எவருமானேன் என்றலின் நான்தானே பிரம்மாவும் விட்டுணுவும் உருத்திரனும் இந்திரனும் இயமராசனும் மற்றுமுள்ளவர்க ளெல்லாருமாயிருந்தேனென்றுஞ் சொல்லுகையால் ; அவ்வவர் சீறி அவ்வவர் வாழ்நாள் செவ்விதின் நிரயஞ் சேர்த்துவர் அந்தந்தத் தேவதைகள் நம்மையெல்லாம் இவன் தானென்று சொன்னானென்று உன்னோடே கோபித்துக்கொண்டு தங்களுக்குச் சொல்லா நிற்கிற காலங்களெல்லாம் நன்றாகக்கொண்டு ஆழ்ந்த நரகங்களிலே தள்ளிவிடாநிற்பர்கள் ; அதனால் மாயாவாதப் பேயாஉனக்குத் தேவரில் ஒருவர் உண்டாக மேவரு நரகம்விடுதலோ அரிதே அங்ஙனமிருக்கையால் மாயாவாத மென்கிற பேய்ச் சமயத் தையுடைவனே, உனக்கு எல்லாருஞ் செத்துப் போய்த் தேவவர்க்கத்திலே ஒருத்தர் இருந்தாராயினும் ஒருவராலுங் கிட்டுதற்கரிதாயிருக்கிற நரகம் உனக்கு விட்டு நீங்குதலுண்டாகாதென் றறிவாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அரிதேர்ந் துணராப் பெரியோன் உரைத்த
பதிபசு பாசம் விதிமுறை கிளக்கில்
ஈசன் ஏகன் எண்ணிலி பசுக்கள்
பாசம் இருவகைப் பரிசின துலகத்
தாயவன் உயிர்க்கு மாயையின் அருளால் 5
இருவினைத் தகையின் உருவினைத் தருமால்
கருமுகில் அடர இரிதரு கதிர்போன்று
அறிவாம் உயிரிற் பிறியா தேயும்
ஈட்டும் இருபயன் ஊட்டிடும் நியதி
ஒருபோ திருபயன் நுகர்வுற மருவுதல் 10
இன்மை *யாதல் முன்னிய காலைச்
சத்தி னிபாதம் உற்றிறை யருளால்
உரவுகொ டுலகு தெரிவுற மருவி
மாசுறு தூசு தேசுற விளக்குந்
தன்மையின் உணர்த்தும் புன்மைகள் நீக்கி 15
நீரும் நீரும் சேருந் தகைமையின்
அறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி
ஒன்றாம் என்பதை உலகோர்
நன்றா முத்தி எனநவிற் றினரே.

பொழிப்புரை :

அரி தேர்ந்து உணராப் பெரியோன் உரைத்த பதி பசு பாசம் விதிமுறை கிளக்கில் விட்டுணுவானவன் பூமியெல்லாங்கீன்று ஆராய்ந்து பார்த்தவிடத்து இப்படியிருக்கும் இவனுடைய சொரூபமென் றறியப்படாத பெரியவனென்று சொல்லப்பட்டிருக்கிற சிவனாலே அருளிச்செய்யப்பட்டபதியினது உண்மையினையும் பசுவினது உண்மையினையும் பாசத்தினது உண்மையினையும் உள்ளபடி சொல்லு மிடத்து; ஈசன் ஏகன் எண்ணிலி பசுக்கள் பாசம் இருவகைப் பரிசினது பதியென்று சொல்லப்பட்ட பரமேசுரன் ஒரு முதலாயிருப்பா னொருத்தன், பசுவென்று சொல்லப்பட்ட ஆன்மாக்கள் பல முதலா யிருப்பதொன்று, பாசமென்று சொல்லப்பட்டது மாயை என்றும் + கன்மம் என்றும் இரண்டு வகைப்பட்டிருப்பதொன்று; உலகத் தாயவன் உயிர்க்கு மாயையின் அருளால் இருவினைத் தகையின் உருவினைத் தரும் ஆல் பிரபஞ்சத்துக்கு மாதாவாயுள்ள சிவன் தனது காருண்ணியத்தினாலே ஆன்மாக்களுக்குப் புண்ணிய பாவங்களுக் கீடான சரீரங்களை மாயையிலே நின்றுங் கொடாநிற்பன். ஆல் அசை; கருமுகில் அடர இரிதரு கதிர் போன்று அறிவாம் உயிரிற் பிறியாது ஏயும்கறுத்த மேகமானது பிரகாசத்தினையுடைய ஆதித்தனிடத்திலே சென்று பொருந்தின விடத்து அந்த ஆதித்தனுடைய கிரணங்களெல்லாம் நீங்கின தன்மை போல முதலே சுத்தமாய் அறிவாயிருக்கிற ஆன்மாவினிடத்திலே அந்த மாயா தேகம் ஒருகாலும் நீங்காமற் பொருந்தி வாராநிற்கும் ; ஈட்டும் இருபயன் ஊட்டிடும் நியதி முன்னே செய்த புண்ணிய பாவங்களை இந்தச் சரீரத்திலே கர்த்தாவானவன் இவனுக்கு நாடோறும் பொசிப்பியாநிற்பன்; ஒருபோது இருபயன் நுகர்வுற மருவுதலின்மையாதல் முன்னிய காலைபுண்ணியபாவ மிரண்டுந் துலையொத்து ஒரு சனனத்திலே எல்லாக் கன்மங்களும் பொசித்துத் தொலையத் தக்கதாக ஏதேனுமொரு சிவபுண்ணியம் வந்து எதிர்ப்பட்ட அவதரத்து ; சத்தினிபாதம் உற்று இவனுக்குச் சத்தினிபாத மென்ப தொன்று உண்டாய், அந்த அவதரத்திலே ; இறையருளால் உருவுகொடு உலகு தெரிவுறமருவி கர்த்தாவானவன் தனது காருண்ணியமே தனக்குத் திருமேனியாகக் கொண்டருளி உலகத்திலுண்டான வர்களெல்லாருங் காணத்தக்கதாக ஆசாரியனாக எழுந்தருளி வந்து ; மாசுறு தூசு தேசுற விளக்குந் தன்மையின் உணர்த்தும் அழுக்கினாலே மிகுந்திருக்கிற புடைவையை நன்றாக வெள்ளாவி வைத்து அந்த அழுக்கை நீக்கித் தூயதாக வெள்ளையாக்கின தன்மைபோல இவனிடத்துண்டாகிய பாசங்களைத் தீடிக்ஷபண்ணிக் கிரமத்திலே போகத்தக்கதாக உபதேசங்களை யருளவே ; புன்மைகள் நீங்கி நீரும் நிரும் சேருந் தகைமையின் அறிவினோடு அறிவு செறிவுறப் பொருந்தி ஒன்றாம் இவனிடத்து உண்டாகிய குற்றங்களெல்லாம் நீங்கிச் சுத்தனாகித் தண்ணீரும் தண்ணீரும் தன்னிலேகூடி ஐக்கியமாய் ஒன்றுபட்டு நின்ற தன்மைபோலச் சிவனுடைய அறிவோடே தன்னுடைய அறிவு கூடி ஐக்கியம் பிறந்து ஒன்றுபட்டு நிற்கும் ; என்பதை யுலகோர் நன்றா முத்தியென நவிற்றினரே என்று இங்ஙனஞ் சொல்லப்பட்டதை உயர்ந்தோராயுள்ளவர்கள் முத்திகளெல்லாவற்றிலும் வைத்துக் கொண்டு இதுவே நல்ல முத்தியென்று சொல்லா நிற்பார்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

முத்தி என்பதை எவனோ சுத்த
அறிவெனிற் பாசம் செறியா மாயை
உருஇரு வினையால் வரும்இரு வினையும்
உருவா லன்றி மருவா திவற்றின்
முந்திய தேதோ வந்தணை வதற்கோர் 5
ஏது வேண்டும் தான்இயல் பென்னின்
வீடுற் றவரினுங் கூடக் கூடும்
ஈங்கிவை நிற்க நீங்காக் கருவிகள்
கொண்டறி வறியக் கண்டது மன்றி
மருவிய உருவு துயில்பெருங் காலைச் 10
சிறுபொறித் தறுகட் கறையணற் சுடிகைத்
துத்திக் கடுவுள் துளையெயிற் றுரகக்
கொத்தயல் கிடப்பினுங் குவைதரு நவமணி
ஒருபாற் றுதையினும் பெருகார் வத்தினோடு
அச்சமும் அணுகாக் கொச்சமை என்னோ 15
கருவி யாவும் பிரிவுறு நிலையேற்
பொறிபுல னாதி குறைவற நிறைந்து
காட்சிய தளிக்கு மூட்சியின் முன்னாக்
கொடுத்தோர் ஆழி *விடுத்தவன் நாடிக்
கொள்வோர்க் காணா துள்கி மீண்டுழித்
தந்தவற் கண்டாங் கந்தமில் அதனைத்
தருக என்னும் பெருமதி பிறங்குமது
அறிவி லாமைஎன் றனைஅது மலமாக்
குறிகொ ளாளர் அறைகுவ ரன்றே
அறிவிற் கறிவு செறியவேண் டின்றே 25
உண்மையில் இருமையும் ஒளியே எனில்ஒரு
தன்மை யாகமுன் சாற்றின ரிலரே
முன்பு நன்றுடன் ஒன்றிய காலை
இன்பம் எய்துதற் கிலதுயிர் ஆதலின்
நீயலை பொருத மாயா வாதி 30
ஆயினை அமையும் அருள்நிலை கேண்மதி.

பொழிப்புரை :

முத்தி யென்பதை எவனோ இதை நீ முத்தியென்று சொன்னது என்ன தான், அது பின்பு சொல்லுகிறோம் ; சுத்த அறிவெனிற் பாசம் செறியா ஆன்மா அனாதியிலே சுத்தமுமாய் அறிவுமாயிருக்குமென்று சொல்லின் நடுவே ஒர் அவதரத்திலே சுத்தமாயிருக்கிற ஆன்மாவைப் பாசம் வந்து பொருந்துகைக்கு வழக்கில்லை; மாயையுரு இருவினையால் வரும் இந்த மாயா சரீரமானது இவனை வந்து பொருந்து மிடத்து இவன் முன்னே செய்த புண்ணிய பாவங்களுக் கீடாக வந்து பொருந்துவ தொழிந்து தானாக வந்து கூடாது; இருவினையும் உருவாலன்றி மருவாது அந்தப் புண்ணிய பாவங்கள் தான் உண்டாமிடத்து ஒரு மாயா சரீரமுண்டாய் அதிலுண்டாகிய திரிவித கரணங்களினாலே இவன்செய்து கொள்ள உண்டாவ தொழிந்து தானே யுண்டாகாது. ஆகையால் ; இவற்றின் முந்தியது ஏதோ இந்த மாயை கன்ம மிரண்டினும் வைத்துக்கொண்டு இவனை முந்த வந்து கூடின பாசம் எதுதான் ? இதன்றியும் ; வந்து அணைவதற்கு ஒர் ஏது வேண்டும் இந்தப் பாசங்கள் நடுவே ஒர் அவதரத்திலே இவனை வந்து பொருந்துமென்பதற்கு அனாதியிலே இவனுக்கு மலமென்ப தொன்று உண்டாய் அது காரணமாக வந்து கூடிற்றென்று சொல்ல வேண்டும் ; தான் இயல்பென்னின் அப்படி மலமென்பது ஒன்று இல்லை, இந்தப் பாசங்கள்தான் நடுவே வந்து இவனைப் பொருந்தினது வெள்ளைப்புடவைக்கு அழுக்கேறினாற்போல இயல்பாக வந்து பொருந்துமென்று நீ சொல்லில் ; வீடுற்றவரினுங் கூடக் கூடும் இந்த மாயா கன்மங்கள் நீங்கி மோக்ஷத்தைப் பெற்றிருக்கிறவர்களிடத்திலும் இந்த மாயா கன்மங்கள் இயல்பாக வந்து பொருந்தப்படும் ; ஈங்கு இவை நிற்க இவ்விடத்து நான் சொன்னதற்கு ஓர் உத்தரமும் உனக்குச் சொல்லக்கூடாது. ஆகையால் இவை நிற்க ; நீங்காக் கருவிகள் கொண்டு அறிவு அறியக் கண்டதுமன்றி அனாதியிலே உன்னைவிட்டு நீங்காமல் நிற்கிற மலசம்பந்தத்தை இந்த மாயா கருவிகள் வந்து நீக்க அந்தக் கருவிகளைக் கொண்டு உன்னுடைய அறிவு சத்தாதி விஷயங்களை யறிந்து வருகிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கச்செய்தேயும் மலமென்பதொன்று இல்லை யென்றாய். இதன்றியும்; மருவிய உருவு துயில் பெருங் காலை அனாதியே இவனுக்கு மலமென்ப தொன்று இல்லை நடுவே இயல்பாக வந்து பொருந்திற்றென்று நீ சொன்ன இந்த உடம்பு இவன் நித்திரை செய்கிற அவதரத்து; சிறுபொறித் தறுகட் கறை அணல் சுடிகைத் துத்திக் கடுவுள் துளையெயிற்று உரகக்கொத்து அயல் கிடப்பினும் உடம்பிலே சிறிதாயிருக்கிற பொறிகளையு முடையதாய் தறுகண்மையினையு முடையதாய்க் கறுத்திருக்கிற கண்டத்தினையுந் தலையிலே துத்தியினையு முடையதாய் உள்ளே துளையாயிருக்கிற பல்லுகளிலே நஞ்சினையு முடையதாயிருக்கிற பாம்பினது கூட்டங்கள் ஒருபக்கத்திலே வந்து கிடந்ததாயினும் ; குவைதரு நவமணி ஒருபால் துதையினும் கூட்டமாக நவரத்தினங்கள் ஒரு பக்கத்திலே மிகவுங் கிடந்ததாயினும் ; பெருகு ஆர்வத்தினோடு அச்சமும் அணுகாக்கொச் சமை என்னோ இந்த ரத்தினங்கள் கிடக்கிறதைக் கண்டு மிகவும் பிரியம் வாராமலும் அந்தப் பாம்புகள் கிடக்கிறதைக் கண்டு மிகவும் அச்சம் வாராமலுமிருந்த இந்த அறியாமை இதென்னதான்; கருவி யாவும் பிரிவுறு நிலையேல் எல்லாக் கருவிகளும் நீங்குகையினாலே அவ்விடத்தில் விருப்பு வெறுப்புக் காணப்பட்டதில்லையாகில் பொறி புலனாதி குறைவற நிறைந்து காட்சியது அளிக்கும் மூட்சியின்; பொறியும் புலனுமாதியாயுள்ள கருவிகளெல்லாம் ஒன்றுங் குறையாமல் நிறைந்து நின்று இவனுக்கு அறிவைக்கொடுக்க இவனுடைய அறிவு சத்தாதி விஷயங்களிலே மூண்டு சீவியா நிற்கிற அவதரத்திலே ; முன்னாக் கொடுத்து ஓர் ஆழி விடுத்தவன் நாடி கொள்வோர்க் காணாது உள்கி மீண்டுழித் தந்தவற் கண்டு ஆங்கு அந்தமில் அதனைத் தருக என்னும் பெருமதி பிறங்கும் அரை நாழிகைக்கு முன்னாக ஒருத்தன் கையிலே ஒரு மோதிரத்தைக் கொடுத்து இந்த மோதிரத்தை விற்றுக்கொண்டு வாருமென்று சொல்லிப் போக விட அந்த மோதிரத்தைக் கொள்வோ ரொருத்தரையுங் காணாமல் இந்த மோதிரம் நம்முடைய கையிலே வைத்துக்கொண்டிருக்கக் கடவோ மல்ல வென்று விசாரித்து உடனே உன்னிடத்திலே மீண்டு வந்து அவன் தந்த மோதிரத்தை வாங்கி வைத்துக் கொண்டு பின்னும் அரை நாழிகைக்குள்ள அந்த மோதிரந் தந்தவனைக் கண்டு நான் முன்னே உம்முடைய கையிலே விற்கத் தந்த விலைமதிக்க வொண்ணாத மோதிரத்தைத் தருவீராக வென்று சொன்ன புத்திப் பெருமை மிகவும் உடண்டானது என்ன தான் ! பெருமதி யென்றது ஆசியச் சொல்லு ; அது அறிவிலாமை யென்றதனை அப்படி இவனுக்கு மயக்கம் வந்தது அறியாமைகொண்டு என்று சொல்லில் ; அது மலமாக் குறிகொளாளர் அறைகுவரன்றே அப்படி அறியாமையென்று நீ சொன்னதுதன்னைக் காண் ஆணவமலமாகக்கொண்டு திரிபதார்த்த நிண்ணயம் வந்த பெரியோர்கள் சொல்லுவார்கள். அன்றென்றது ஆமென்றதெனக் கொள்க. இது ஐக்கியவாதியுடைய பெத்தநிலையை மறுத்தது.
மேல் முத்தி நிலையை மறுக்கிறான் : அறிவிற்கு அறிவு செறிய வேண்டின்றே ஆன்மா அறிவேயாயிருக்கில் வேறே ஒரறிவோடே சென்று கூடவேண்டுவதில்லை. இதன்றியும் ; உண்மையில் இருமையும் ஒளியே யெனில் முத்தியில் நீரும் நீரும் கூடினாற்போலப் பதியும் பசுவும் இரண்டுங் கூடிப் பிரகாசமாயிருக்குமென்று நீ சொல்லில் ; ஒரு தன்மையாக முன் சாற்றினர் இலரே அவன் சர்வக்கியன் இவன் கிஞ்சிக்கியன், அவன் பரிபூரணன் இவன் ஏகதேசி, அவன் நிர்மலன் இவன் மலசகசன், அவன் பதி இவன் பசு : இப்படி யிருக்கையால் சிவனையும் ஆன்மாவையும் ஒரு தன்மையாகக் கொண்டு இதற்கு முன்பு ஒருவருஞ் சொன்னவர்களில்லை ; முன்பு நன்றுடன் ஒன்றிய காலை இன்ப மெய்துதற்கு இலது உயிர் ஆதலின் அனாதியே சுத்தமாயிருக்கிற ஆன்மா பின்பு கூடின அசுத்தங்கள் நீங்கி முத்தியிற் சிவனோடு கூடி இன்பத்தை அனுபவிக்குமென்றாய். இந்த மாயா கன்மங்கள் கூடுதற்கு முன்னே ஆன்மா சிவனோடு கூடி நிற்கச் செய்தே இன்பத்தை அனுபவிக்கக் கண்டோ மில்லையே. ஆகையால்; நீயலை பொருத மாயாவாதியாயினை அமையும் அருள்நிலை கேள்மதி நீயும் பிரமந்தானே குடாகாச மாகாசம் போல நின்று இந்த உடல் நீங்கின அவதரத்து இரண்டு பிரமமும் ஒன்றாய் நிற்குமென்று உன்னோடே வழக்கிட்டுக்கொண்ட மாயாவாதிதானாய் விட்டாய். ஆகையால் நீ சொன்ன தெல்லாம் அமையும். மேல் திருவருளினது உண்மையை நான் சொல்லக் கேட்பாயாக. மதியென்றது அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

மூல மலத்தாற் சாலு மாயை
கருமத் தளவில் தருமுரு இறைவன்
செறிந்திரு பயனும் நுகர்ந்திடும் உயிர்கள்
இருளுறு மலத்திற் பருவரற் படுதலின்
இடைஇரு நோக்குந் தடைபட் டோரில் 5
துயருறும் அதனாற் செயிருறு துன்பம்
கொத்தை மாந்தர் உய்த்துறுந் துயில்போற்
காட்சி என்னக் காணாத் துயர
மாட்சியை முத்தி எனவகுத் தனரே
.

பொழிப்புரை :

மூல மலத்தாற் சாலும் மாயை அனாதியே ஆன்மாவுக்கு ஆணவமலமென்பதொன்று உண்டு. அந்த மலத்தைப் போக்குகை நிமித்தமாக மாயை அவனை வந்து பொருந்தும் ; கருமத்தளவில் தரும் உரு இறைவன் ஆன்மா முன்னே செய்த கன்மத்துக் கீடான சரீரங்களைக் கர்த்தாவானவன் கொடுப்பன் ; செறிந்து இரு பயனும் நுகர்ந்திடும் உயிர்கள் அந்தச் சரீரங்களைப் பொருந்தித் தங்களுக்கு உண்டான புண்ணியபாவ மிரண்டையும் உயிர்களானது பொசித்து வாரா நிற்கும்; இருளுறு மலத்திற் பருவரற்படுதலின் இப்படி அனுபவித்து வரச்செய்தே ஆணவ மலத்தினாலே மறைப்புண்கையினாலே ; இடை இரு நோக்கும் தடைபட்டோரில் துயர் உறும் முன்பு கண்டு வந்த கண்ணானது நடுவே காசம் மேலிட்டு இதனாலே காணாமலிருந்தவர்களைப்போல அவத்தைப்படும் ; அதனாற் செயிர் உறு துன்பம் அப்படி அவத்தைப்பட்டு வருகையினாற் குற்றத்தை யுடைத்தாகிய பிறவித் துக்கமானது மேன்மேலும் உண்டாகாநிற்கும். இது பெத்தம்.
கொத்தை மாந்தர் உய்த்துறுந் துயில்போல் அஞ்ஞானிகளாக இருக்கிற ஆன்மங்கள் எல்லா அவத்தைகளும் நீங்கி அதீதாவத்தையிலே அழுந்திக் கிடக்குந் தன்மைபோல; காட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தியென வகுத்தனரே அவ்விடத்துச் சுட்டிக் காண்கைக்கு ஒரு காட்சியும் இல்லையாய்ச் சகதுக்கங்களினுடைய அனுபோகங்களும் இல்லையா யிருக்கிற அவதரத்தை முத்தியென்று நல்லோர்கள் சொல்லாநிற்பர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

வகுத்துரை பெருகத் தொகுத்திடு முத்தி
நன்று நன்றிருள் ஒன்றிய மலத்தாம்
உளத்திற் குறுபொறி செறிபுலன் நுகர்தல்
விளக்கிற் றிகழும் தேன்மைய தன்றே
கருவிகள் அகல்வுழி மருவிய துயரமும் 5
நன்றென லாகுந் துன்றிய படலத்
திடைதடைப் பட்ட சுடர்விழி மாந்தர்
படலம் நீங்குதல் கடனா தலினே
காட்சி யென்னக் காணாத் துயர
மாட்சியை முத்தி எனவகுந் துரைக்கிற் 10
கரணா பாவம் மரணம் கருமரம்
ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே
இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா
தனிதரு துயரம் எனும்இது திடனே
பாடா ணத்திற் கூடா முத்தி. 15

பொழிப்புரை :

வகுத்து உரை பெருகத் தொகுத்திடு முத்தி நன்று நன்று இருள் ஒன்றிய மலத்தாம் சொல்லைப் பலவாக வகுத்துச் சில திட்டாந்தங்களையுஞ் சொல்லி முடிவில் ஆணவ மலத்தோடுங் கூடிநிற்கிற கேவலக் கிடையை முத்தியென்று நீ சொன்னது நல்லது. இப்படி ஒருத்தருஞ் சொன்னவர்களில்லை. நன்று நன்றென்றது ஆசியச் சொல்லு ; உளத்திற்கு உறுபொறி செறிபுலன் நுகர்தல் விளக்கில் திகழும் மேன்மையதன்றே சகலத்தில் ஆன்மாவுக்குப் பொருந்தப்பட்ட இந்திரியங்கள் காட்டாக அந்த ஆன்மாச் செறிந்திருக்கிற சத்தாதி விஷயங்களைப் பொசித்துக்கொண்டு வருகிறது கண்ணுக்கு விளக்கானது காட்டக் கண்டு வருகிற தன்மை போலுமாகையாற் சகலம் குற்றமறச் சொன்னாய் ; கருவிகள் அகல்வுழி மருவிய துயரமும் நன்றெனலாகும் விளக்குப்போல இவனுக்குக் காட்டாக நிற்கிற கருவிகள் நீங்கினவிடத்து ஆணவமலத்திலே அழுந்திக் கிடக்கிற கேவலமும் முன்னே சொன்ன சகலம்போல நன்றென்று சொல்லலாமாகும். அது எதுகொண்டு என்னில் ; துன்றிய படலத்திடை தடைப்பட்ட சுடர்விழி மாந்தர் படலம் நீங்குதல் கடன் ஆதலினே மிக்க படலத்தினாலே நடுவே காட்சி தடைப்பட்ட கண்ணினையுடைய ஆன்மாக்களுக்குப் பின்பு ஓர் அவதரத்திலே அவுஷதப் பிரயோகங்களினாலே அந்தக் கண்ணிற் படலம் நீங்குகிறது முறைமையா யிருக்கையினாலெனக் கொள்க. இது பெத்தத்தை மறுத்தது.
காட்சி யென்னக் காணாத்துயர மாட்சியை முத்தியென வகுத்துரைக்கில் கட்டிக் காணுதற்கு ஒரு காட்சியுமின்றித் துக்கங்களினுடைய அனுபோகங்களுமின்றி யிருக்கிற இந்த அவதரத்தை முத்தியென்று நீ பலவாக வகுத்துச் சொல்லில் ; கரணாபாவம் மரணம் கருமரம் ஏய்ந்தவர் முத்திசேர்ந்தவர் அன்றே கரணங்களினுடைய பிறிவினைப் பொருந்தினவர்கள் மரணம் பொருந்தினவர்கள் கருவைப் பொருந்தினவர்கள் மரங்களைப் பொருந்தினவர்கள் இவர்கள் இத்தனை பேரும் முத்தியைப் பொருந்தினவர்களாக வேண்டும் ; இனைய கதிக்கு ஓர் முனைவரும் வேண்டா இப்படிப் கொத்த முத்தியைப் பெறுகைக்கு ஓர் ஆசாரியனும் வேண்டுவதில்லை ; தனிதரு துயரம் எனும் இது திடனே இந்த முத்தி எல்லாக் கருவிகளும் நீங்கி ஆணவமலத்தோடுங்கூடி ஒன்றுமறியாமற் கிடக்கிற கேவலத் துயரமென்பது தப்பாது. ஆகையால் ; பாடாணத்திற் கூடாமுத்தி கல்லுப்போலே ஒன்றும் அறியாமற் கிடக்கிறது முத்தியென்று சொல்லப்பட்டாது. இது பாடாணவாதி முத்தியை மறுத்தது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

ஈசன தருளாற் பாசத் தொகுதி
செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு
குளிகை தாக்க ஒளிபெற் றாங்கு
நித்த சுத்த முத்த ராக
வைத்தனர் உலகில் மறைவல் லோரே.

பொழிப்புரை :

ஈசனது அருளாற் பாசத் தொகுதி செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு குளிகைதாக்க ஒளிபெற்றாங்கு அன்னுவயம் : செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு குளிகை தாக்க ஒளி பெற்றாங்கு ஈசனதருளாற் பாசத் தொகுதி என மாறுக. இதன் பொருள்: குகைக்குள்ளே செறிந்துகொண்டிருக்கிற செம்பிடத் துண்டாகிய கருமை பொருந்தியிருக்கிற காளிதமானது இரதகுளிகை சென்று கூடினவிடத்து அந்தக் காளிதம் கெட்டுப் பத்துமாற்றுப் பொன்னான தன்மைபோலப் பக்குவப்பட்ட ஆன்மாக்களுங் கர்த்தாவினுடைய காருண்ணியத்தினாலே ஆணவம் மாயைகாமியமென்று சொல்லப்பட்டு வருகிற மலங்களினது கூட்டங்கெட்டு; நித்த சுத்த முத்தராக வைத்தனர் உலகில் மறைவல்லேரே அழியாததாய் நிர்மலமாயிருக்கிற முத்தியினைப் பெற்றுப் பெறவானும் பேறுமாயிருப்பார்களென்று சொல்லிவைத்தனர் உலகத்தின் கண்ணே வேதத்தினுடைய உண்மையைப் பொருந்தின பெரியோர்கள்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

திருந்திய அருந்தவம் பொருந்துபல் முனிவர்
கமையாக் காதல் அமையாது பழிச்சும்
நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த
புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத்
தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை. 5
வாட்டரு மும்மை நாட்டம் நால்வாய்ப்
பாசம் அங்குசம் தேசுறும் எயிறொண்
கனியிவை தாங்கும் புனித நாற்கரத்(து)
அங்கதம் கடகம் பொங்கிழை யாரம்
நிறைமணிச் சுடிகைக் கறையணற் கட்செவி
கொண்ட திண்பெரும் பண்டிக் குறுந்தாட்
களிறுதன் இருகழல் கருதா
வெளிறுறு துயரம் வீட்டினம் பெரிதே.

பொழிப்புரை :

திருந்திய அருந்தவம் பொருந்து பல்முனிவர் சாத்திரங்களில் உத்தமப் பிரகாரமாக விதிக்கப்பட்டுள்ள அரிய தவசுகளோடுங் கூடியிருந்துள்ள மகருஷிகள் பலருங்கூடி ; கமையாக் காதல் அமையாது பழிச்சும் ஒருகாலும் நிரம்பாத ஆசையோடுங் கூடி அனவரதமுந் தோத்திரங்களைப் பண்ணும்; நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டு ஒப்பில்லாம லிருக்கிற செக்கர்வானம்போன்ற சிவந்த புகரோடுங் கூடியிருக்கிற முகத்திலே தோன்றப்பட்ட ஈன்றணித்தாயுள்ள வெள்ளிய பிறைபோலும் ஒப்பில்லாத பெரிய கொம்பினையு முடையதாய் ; தழை செவி மழைமதப் புழைநெடுந் தடக்கை தழைந்த செவியினையுங் கார்போலும் பொழியாநின்ற மதத்தினையும் இரண்டு துவாரத்தோ டுங்கூடி நெடிதாய்ப் பருத்திருக்கிற துதிக்கையினையு முடைத்தாய் ;வாட்டரு மும்மை நாட்டம் நால்வாய் ஒளியினையுடைய மூன்று கண்ணினையும் நான்ற வாயினையு முடையதாய்; பாசம் அங்குசம் தேசுறும் எயிறு ஒண்கனி இவை தாங்கும் புனித நாற்கரத்து பாசத்தினையுந் தோட்டியினையும் பிரகாசத்தையுடைய கொம்பினையும் அழகிய மாங்கனியினையும் இவையிற்றைத் தரித்துக் கொண்டிருக்கிற சுத்தமாயுள்ள நாலுகையினையு முடையதாய்; அங்கதம் கடகம் பொங்கிழை யாரம் நிறையணி சுடிகைக் கறையணற் கட்செவி கொண்ட திண்பெரும் பண்டிக் குறுந்தாள் தோள்வளையினையும் இரத்தின கடகத்தினையும் மிக்க நவரத்தினங்களை யழுத்தி யிழைக்கப்பட்டிருக்கிற ஆரத்தினையுங் குறைவற அணிந்து இரத்தினத்தையுடைய தலையினையுங் கறுத்திருக்கிற கண்டத்தினையு முடைத்தாய்க் கண்ணே செவியாகக் கேட்கிற பாம்பு கொண்டு கட்டப்பட்டுச் சிக்கென்று பெரிதாயிருக்கிற வயிற்றினையுங் குறுகியிருக்கிற காலினையு முடைய தாயிருக்கிற ; களிறுதன் இருகழல் கருதா இப்படிக்கொத்த யானையினது இரண்டு பாதங்களையும் மனதார நினைந்து; வெளிறுறு துயரம் வீட்டினம் பெரிதே குற்றத்தோடுங் கூடியிருக்கிற துக்கங்களை மிகவும் விடுவியா நின்றேம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

பாசமும் பசுவும் ஈசனும் என்றிம்
மூவகை உணர்வு தாம்முதன் மையவாய்ப்
பாசம் ஐம்புலன் தேசுற உணர்த்தப்
பசுத்தனி ஞானம் பொசித்திடு மன்றே
இனைய ஞானம் பிரிவுற எரியாச் 5
செந்தழல் தகும்நெறி அந்தம்இல் உயிரும்
அறிவாய் ஒன்றும் அறியா தன்றே
இவ்வாறு ஒழுகும் ஏனைய உயிர்க்கு
முன்னோன் தனது முதிர்ஒளி ஞானம்
அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த 10
வண்டென உயிரைக் கொண்டிடும் உயிர்அது
தன்னை நோக்கித் தான்அது வாகி
ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும்
பிரியா வாறு பெற்றுத்
திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே. 15

பொழிப்புரை :

மேல் சிவசமவாதி தன் மதம் கூறுகின்றான் :
பாசமும் பசவும் ஈசனும் என்று இம் மூவகை யுணர்வுதாம் முதன்மையவாய் பாசமென்றும் பசுவென்றும் பதியென்றும் சொல்லப்பட்டு வருகிற மூன்று முதலுக்கும் பாசஞானமென்றும் பசு ஞானமென்றும் பதிஞானமென்றும் சொல்லப்பட்ட மூன்றுவகை ஞானமும் அனாதியேயுள்ளதொன்றாயிருக்கையால் ; பாசம் ஐம்புலன் தேசுற உணர்த்தப் பசுத் தனிஞானம் பொசித்திடுமன்றே பாச ஞானமானது இந்திரியங்களைப் புலனாகிய சத்தாதி விஷயங்களை மயக்கமற அறிவிக்கப் பசுவுக்கு உண்டாகிய ஒப்பில்லாத ஞானமானது அந்த விஷயங்களைப் பொசித்து வாராநிற்கும் ; இனைய ஞானம் பிரிவுற எரியாச் செந்தழல் தகும் நெறி அந்தம் இல் உயிரும் அறிவாய் ஒன்றும் அறியாதன்றே இந்த இரண்டுவகை ஞானமும் நீங்கினவிடத்துக் கொழுந்துவிட் டெரியாமற் சும்மா கிடக்கிற சிவந்த தழலை யொக்குமென்று சொல்லலாமாக அவத்தையில் அழிவில்லாம லிருக்கிற ஆன்மாவும் அறிவா யிருக்கச்செய்தே இதுவென்று ஒன்றைச் சுட்டியறியும் பகுதி இதற்கு உண்டாகாது. இது பெத்தம்.
மேல் முத்தி : இவ்வாறு ஒழுகும் ஏனைய உயிர்க்கு இப்படியே நாடோறும் கேவல சகலப்பட்டு வருகிற இந்த ஆன்மாவுக்கு ; முன்னோன் தனது முதிர் ஒளி ஞானம் மூன்று முதலுக்குள்ளே முதன்மையாகிய சிவனுடைய மிக்க அறிவாயிருக்கிற ஞானமானது ; அறியாப் பச்சைச் சிறபுழுக் கவர்ந்த வண்டென உயிரைக் கொண்டிடும் ஒன்று மறியாமற் கிடக்கிற பச்சை நிறத்தினையுடைய சிறிய புழுவினை வந்து எடுத்துக்கொண்ட வேட்டுவாளியைப் போல் ஒன்றும் அறியாத ஆன்மாவை வந்து எடுத்துக்கொள்ளாநிற்கும் ; உயிர் அது தன்னை நோக்கித் தான் அதுவாகி புழுவானது தன்னை எடுத்து வந்த வேட்டுவாளியை நினைத்துக்கொண்டிருந்து அந்த வேட்டுவாளியான தன்மைபோலச் சிவனுடைய ஞானம் கைக்கொள்ளப்பட்டிருக்கிற உயிரும் அந்தச் சிவனையே தியானம்பண்ணித் தான் அந்தச் சிவனுடைய சொரூபமாகி ; ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும் பிரியாவாறு பெற்றுத் திரியாப் பெரியோர் திரட்சி சேர்ந்திடுமே வேட்டுவாளியான புழு அந்த வேட்டுவாளி செய்துவந்த தொழிலெல்லாம் தானும் செய்து வேட்டுவாளியினுடைய சொரூபம் நீங்காமல் முன்புள்ள வேட்டுவாளிகளுடைய கூட்டத்தோடும் கூடியிருந்த தன்மைபோல, இந்த ஆன்மாவும் சிவனுடைய பஞ்சகிருத்தியத்தையும் சர்வக்கியத்துவத்தையும் இரண்டுந் தன்னைவிட்டு நீங்காதவாறு பெற்று, முன்னே இந்த அறிவு தொழில் இரண்டையும் பெற்று நீங்காமலிருக்கிற பெரியோர்களது கூட்டத்தோடுஞ் சென்று கூடி நிற்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமும்
ஒருகா லன்றித் திரிவுற நிற்கில்
ஒண்பொருள் காணும் பண்பினுக் கொருகாற்
பரிதியும் மதியும் எரிதரு விளக்கும்
வேண்ட லின்றே காண்தகு காலை 5
ஒன்றொன் றாக நின்றறி வுறுமெனில்
அன்னியம் அறியா மன்உயிர் பொறிபுலன்
தானோ அறியா தலைவர்க் குலகினை
ஆனா அறிவால் அறியவேண் டின்றே
கொழுந்தழல் தகுமேல் அழுந்திடும் அவத்தையில் 10
திரியாத் தலைவற் றெரியாத் தன்மைவந்து
எய்தல் ஆகா மெய்யுறு பொருட்கு
முன்னர்க் கீடந் தன்னென எடுத்த
வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே
வண்டிறும் பெடாஉட் கொண்டது தனக்கு 15
மந்திர வாதந் தந்ததும் இலதே
எடுத்திடும் அதனால் அடுத்ததென் றறையிற்
கருமயிர்க் குட்டி இருசிறைப் பறவை
யாயின தெடுத்த தாயர்சாற் றிலரே
பிறவிப் பேதத் துறையிவை கிடக்க 20
ஏயும் இத்திறன் ஆயுங் காலை
யோகத் தகுதி யாகத் தகுமே
ஞான மின்மையென் றோதுவ தெவன்எனில்
உயிரும் உணர்வும் பயிலுத லின்றி
வேட்டுவன் உருவம் மென்புழு உணர்வு 25
கூட்டுத லால்உருக் கூடுத லானும்
முத்தியில் இறையிற் பற்றுத லின்றித்
தன்உரு அணைந்த பின்அதன் நினைவு
மாறுத லானும் ஊறுடைத் தன்றே
ஈசன தியல்பரு ளெய்துயிர் இயற்றல் 30
பேசுதல் தவறெனப் பெருமுறை அறைய
ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே
ஆவதென் முன்நாள் நாவலர் பெருமான்
பண்டொரு முதலை உண்ட மைந்தனை
வரவழைத் தனன்என் றாப்பிழைப் பிலததூஉம் 35
தந்திட வேண்டும் என்றன ரன்றே
உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமு மாயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
இன்னவை கிடக்க முன்னவன் தன்மை
எய்தினர் எல்லாச் செய்தியுஞ் செய்வர்
இரும்பெரி எய்தித் தருஞ்செயல் தகவெனிற்
பொருள்நிலை கிடக்க ஒருதிட் டாந்தப் 40
பேறே ஆயிற் சீறாக் கதுவிய
புனல்ஒரு புடைசேர் கனல்தகு மாயினும்
வேறொரு பொருளை நீறாக் கிலதே
நெருப்பெனும் இதனின் உருத்தனி காட்டுக
அங்கியும் ஒன்றைக் தங்கிநின் றல்லது 45
தன்தொழில் நடத்தா தென்றறி இனி நீ
இரும்பனற் செய்தி தரும்பரி சுளதே
அதுவென்ஒர் அலகை பொதிதருங் காலை
அதன்செயல் அனைத்தும் இவன்செயல் ஆமால்
அவன்இவன் ஆகில் இவன்அவன் செய்திக்கு 50
என்அவை என்னிற் பின்னுறு செயலும்
அதன்செய லன்றி இவன்செய லாகில்
இவன்செயல் பேயின் தன்செயல் ஆகி
இருந்த வாஎனத் தெரிந்திட வேண்டும்
தெரியா தாயிற் புரியிற் கடுங்கனல் 55
எரிந்த தென்னும் இதுதகும் அன்றியும்
அவன்இவன் ஆகில் இவன்அவன் செய்தி
என்று செய்வான் ஒன்றிய மதத்தாய்
எல்லாம் அறிதல் செல்லா துயிர்கள்
சிற்றறி வெனும்இச் சொல்தவ றாகும் 60
என்பதென் அலகை தன்பத மடைந்தோர்
கொண்ட வாறு கண்டனம் என்னில்
மூங்கை அந்தருற் றோங்கிய குணங்குறி
செய்ததென் இன்னும் பவ்வமுற் றழுந்தினும்
நாழி கொள்ளா தாழியில் அலைபுனல் 65
அதனாற் கருத்து முதலுள தாக
வேண்டும் அன்றே ஈண்டினி அமையும்
எல்லாம் எனும்இச் சொல்லாற் படும்பொருள்
அனைத்துந் தாக்காத் தனிப்பரத் துற்றவர்க்கு
எவ்வகை உணர்வு செய்வதென் செப்புக 70
ஒன்றின் ஒன்றாம் ஒன்றா துலகில்
நின்ற போதுயிர் நேராம் அன்றே
முத்தி உற்ற நற்றவர் அவையிடைச்
சேர்வர் என்றனை சார்தரு முத்தி
சாலோக் கியமோ சாயுச் சியமெனில் 75
பந்த முற்ற கந்தல கழித்த
அறிவினோ டறிவு பிறியாப் பெற்றி
வேண்டும்என் பதற்கு ஈண்டிவர் இவ்வாறு
இருப்பர் என்பதற் குருத்தான் வேண்டும்
அண்ணல தருளின் நண்ணினர் இருப்பினும் 80
சீவன் முத்தரென் றோதினர் அகன்று
நீங்கியும் உருவம் நீங்கா தாயின்
ஓங்கிய முத்தி யாவதென் உரைக்க
செடியுடல் அணுகாக் குடிலை கொடுக்குமென்று
ஒதினை நீயே பேதாய் பகட்டுரல் 85
ஒளிர்சினை முச்சித் தளிர்எனும் இதுதகும்
இச்சா ரூபம் நச்சினர் என்னின்
மும்மலத் தேதும் இன்மைய தன்றே
இதுவளர் முத்திப் பதமென இயம்புவர்
ஈங்கிவை நிற்க. 90

பொழிப்புரை :

மேல் சங்கிராந்தவாதி மறுக்கிறான் :
சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமும் இங்ஙனஞ் கூடி வருகிற பதி பசு பாசம் மூன்றினுக்கும் பொருந்தப்பட்ட மூன்றுவகை ஞானமும் ; ஒருகாலன்றிக் திரிவுற நிற்கில் ஓரோர் அவதரத்திலே ஓரொன்று காரியப்படுமதொழிந்து மூன்றுவகை ஞானமும் ஒக்கக் கூடிநின்றே ஒரு முதல் காரியப்பட வேண்டுமாயின் ; ஒண்பொருள் காணும் பண்பினுக்கு ஒருகால் பரிதியும் மதியும் எரிதரு விளக்கும் வேண்டலின்றே காண்தகு காலை கண்ணானது அழகிய பதார்த்தங்களிலே ஒன்றைக் காணவேண்டின ஒழுஙகினுக்கு விசாரித்துப் பார்க்குமிடத்து ஆதித்தனாகுதல் சந்திரனாகுதல் நன்றாக எரிகிற விளக்காகுதல் ஒன்று காட்டக் கண் காணுமதொழிந்து இவை மூன்றுங் கூடிநின்று காட்டக் கண் ஒன்றைக் காணவேண்டுவதில்லை ; ஆகையால் மூன்றுவகை ஞானமுங் கூடிநின்றே ஆன்மா ஒன்றை அறிய வேண்டுமென்று நீ சொன்னது அர்த்த மன்று ; ஒன்று ஒன்றாக நின்று அறிவுறும் எனில் அப்படியன்று காணும், ஓரொன்றாகத் தனித்தனியே நின்று நின்று ஓரொரு விஷயங்களை யறிந்து வாரா நிற்குமென்று நீ சொல்லில் ; அன்னியம் அறியா மன்னுயிர் நிலைபெற்று வருகிற ஆன்மாவுக்கு விஷயங்கள் வேறாயிருக்கையினாலே பசு ஞானம் தானாக ஒரு விஷயங்களை அறிய மாட்டாது ; பொறிபுலன் தானோ அறியா இந்திரியங்கள் சடமாயிருந்த படியாலே பாசஞானம் தானாக ஒரு விஷயங்களை அறியமாட்டாது ; தலைவற்கு உலகினை ஆனா அறிவால் அறிய வேண்டின்றே பதிஞானம் அனாதியே கெடாமலிருக்கிற பேரறிவாயிருக்கையினாலே கர்த்தாவுக்குப் பிரபஞ்ச விஷயங்களைப் புதிதாகச் சுட்டியறியவேண்டுவதில்லை ; கொழுந்தழல் தகுமேல் அழுந்திடும் அவத்தையில் கருவிகளெல்லாம் நீங்கி ஆணவமலத்தினாலே மறைக்கப்பட்டிருக்கிற அவத்தையில் ஆன்மா அறியாமல் கொழுந்துவிட் டெரியாமற் கிடக்கிற கொழுவிய தழலையொத் திருந்ததாமாயின் ; திரியாத் தலைவற் றெரியாத் தன்மை வந்து எய்தலாகா ஒருகாலத்திலம் இவனை விட்டு நீங்காமல் எப்பொழுதும் இவனோடு கூடி நிற்கிற கர்த்தாவை இவன் தெரியாமலிருக்கிற முறைமை வந்துண்டாகிறது இவனுக்கு ஆகாது. இது அவன் பெத்தத்தை மறுத்தது.
மெய்யுறு பொருட்கு முன்னர்க்கீடந் தன்னென எடுத்த வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே நீ சிவனோடேகூடி ஒன்றுபட்டிருக்கிற முத்தித்தன்மைக்கு முன்னே ஒன்று மறியாமற் கிடக்கிற பச்சைப் புழுவைத் தன்னுடைய சொரூபமாக வேணுமென்று சென்றெடுத்த வேட்டுவாளியினது இயல்பு உவமையாகக் கூட்டிச் சொல்லுகிறது பெறாது; வண்டு இறும்பு எடா உட்கொண்டு அதுதனக்கு மந்திரவாதந் தந்ததும் இலதே சிவன் இந்த ஆன்மாக்களுக்கு மந்திர வுபதேசங்களைச் செய்து தற்சொரூபமாக்கினாற்போல வேட்டுவாளி புழுவையெடுத்துக் கொண்டுபோய்த் தன்னுடைய கூட்டுக்குள்ளே வைத்து ஒரு மந்திர உபதேசங்களைச்செய்து தற்சொரூப மாக்கினதாகச் சொல்லப்படாது. ஆகையால் நீ வேட்டுவாளியையும் புழுவையும் முத்திக்கு உவமை சொன்னது அர்த்தமாகாது ; எடுத்திடும் அதனால் அடுத்ததென்று அறையில் அப்படியன்று காணும், அந்த வேட்டுவாளி சென்று எடுத்தது தான் உபதேசமாக அந்தப் புழுதற்சொரூபமானதென்று நீ சொல்லில் ; கருமயிர்க்குட்டி இருசிறைப் பறவையாயினது எடுத்த தாயர் சாற்றிலரே கருமை பொருந்தியிருக்கிற மயிர்க்குட்டிப் புழுவானது தனது வாயில் நூலாலே கூடுகட்டி அதற்குள்ளே யிருந்து சிலநாட்சென்ற பிறகு பெரிய சிறகினையுடைய பறவையாய்ப் பறந்துபோன இதற்கு ஒரு தாயார் வந்தெடுத்து அது உபதேசமாக இது பறவையானதென்று ஒருத்தர் சொல்லுவாரில்லை. ஆகையால் ; பிறவிப் பேதத்துறை இவை கிடக்க புழு வேட்டுவாளியானதும் மயிர்க்குட்டி பறவையானதும் கன்மத்துக்கீடாக அச்சுமாறிப்போனது, முத்திக்கு உவமையாகாது. ஆகையால் இவையிற்றை விட்டுவிடுவாயாக. இதன்றியும் ; ஏயும் இத்திறன் ஆயுங்காலை யோகத் தகுதியாகத் தகுமே புழு வேட்டுவானியானாற் போல ஆன்மாவுஞ் சிவசொரூபமானதை ஆராயுமிடத்து யோகத்துக்குச் சொல்லலா மொழிந்து ஞானத்துக்குப் பணியன்று ; ஞான மின்மை யென்று ஓதுவது எவன் எனில் இது ஞானத்துக்குப் பணியல்ல வென்று சொன்னது ஏனென்னில் ; உயிரும் உணர்வும் பயிலுதலின்றி ஆன்மாவும் சிவனும் கூடி ஒன்றுபட்டிருக்கிறதே முத்தியென் றிருக்கச்செய்தே ஆன்மாவும் சிவமும் வேறுபட்டிருக்கு மென்று நீ சொன்ன தோஷமுமன்றி ; வேட்டுவன் உருவம் மென் புழு உணர்வு கூட்டுதலால் உருக் கூடுதலானும் வேட்டுவாளியினுடைய சொரூபத்தை மெல்லிய புழுவினுடைய நினைவானது கூட்டுதலாலே உனக்கு முத்தியிலே ஒரு சரீரம் கூடுகையினாலும் ; முத்தியில் இறையிற் பற்றுதலின்றி முத்தித்தானத்திலே நீ ஒரு சொரூபத்தை யெடுத்தும் சிவனோடும் கூடியிருத்தலன்றி வேறாயிருக்கு மென்று சொன்ன தோஷமன்றியும் ; தன்உரு அணைந்தபின் அதன் நினைவு மாறுதலானும் வேட்டுவாளியினுடைய சொரூபத்தைப் புழுவானது பெற்றதற்குப் பின்பு முன்னே புழுவாயிருந்த நாம் இப்பொழுது இந்த வேட்டுவாளியின் சொரூபத்தைப்பெற்று இந்தத் தொழில்களைச் செய்யப் பெற்றோமே என்கிற நினைவு அதற்கு இல்லாதபடியாலும் ; ஊறுடைத்தன்றே இதை ஞானத்தாலுண்டாகிய முத்தியென்று சொல்லுகிறது குற்றத்தையுடைத்தாம். இது முத்தியில் ஆன்மா ஒரு சரீரத்தோடு கூடியிருக்கு மென்பதனை மறுத்தது.
ஈசனது இயல்பு அருள் எய்து உயிர் இயற்றல் பேசுதல் தவறெனப் பெருமறை அறைய கர்த்தாவுக்கு உண்டாகிய பஞ்சகிருத்தியம் திருவருளைப் பெற்ற ஆன்மாக்கள் செய்யுமென்று சொல்லுகிறது குற்றமென்று பெரிய வேதமானது சொல்லச் செய்தே; ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே மகத்துக்கு மகத்தாயிருக்கிற சிவனாலே செய்யப்பட்டு வருகிற பஞ்சகிருத்தியம் அணுவாயிருக்கிற ஆன்மாவினாலே செய்யப்படுமென்கிறது தகாது ; ஆவது என் முன்நாள் நாவலர் பெருமான் பண்டு ஒரு முதலையுண்ட மைந்தனை வரவழைத்தனன் என்றாய் அப்படி நீ சொல்லுகிறது என்னதான் ! முற்காலத்திலே வித்துவான்களுக்ளெல்லாம் இராசாவாயுள்ள நம்பியாரூரன் திருப்புக்கொளியூரிலே இரண்டு பிராமணப் பிள்ளைகள் ஒரு குளத்திலே குளிக்கச் செய்தே ஒரு பிள்ளையை முதலை விழுங்கி மூன்று வருஷஞ் சென்றதற்குப் பின்பு மீளவும் அந்த முதலை வாயிலே நின்றும் அழைத்தன னென்று நீ சொன்னாய் ; பிழைப்பிலது அதூஉம் தந்திடவேண்டும் என்றனரன்றே அப்படி நீ சொன்னது குற்றமில்லை. அந்த முதலை வாயிலேநின்று பிள்ளையை மீள அழைத்ததற்குத் திருப்பாட்டு : (சுந்தரர் : அவிநாசி 4)
இப்படித் தேவரீர் இந்தப் பிள்ளையைத் தந்தருள வேணு மென்று சொன்னதொழிந்து தாமாக அழைத்ததில்லை. ஆகையால், திருவருளைப் பெற்ற ஆன்மா பஞ்சகிருத்தியஞ் செய்யுமென்று நீ சொன்னது அர்த்தமன்று ; இன்னவை கிடக்க முன்னவன் தன்மை எய்தினர் எல்லாச் செய்தியும் செய்வர் இவையெல்லாம் மேல் நீர் சொல்லுகிறீர், இது கிடக்கிறது, கர்த்தாவினுடைய திருவருளைப் பெற்றவர்கள் அவன் செய்கிற சிருட்டி திதி சங்கார திரோபவஅனுக்கிரக மென்கிற தொழில்களெல்லாவற்றையுஞ் செய்வர்கள். அது எங்ஙனே யென்னில் ; இரும்பு எரி எய்தித் தருஞ் செயல் தகவெனில் இரும்பானது அக்கினியோடுங் கூடி அக்கினியினது சொரூபத்தைப் பெற்றவிடத்து அந்த அக்கினி செய்கிற தொழில்க ளெல்லாவற்றையும் இரும்பு செய்தாற்போல என்று நீ சொல்லில் ; பொருள்நிலை கிடக்க ஒரு திட்டாந்தப் பேறேயாயில் திருவருளைப் பெற்ற சுந்தர நாயனாராற் பஞ்சகிருத்தியஞ் செய்யப்பட்டதில்லை யென்று பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கச்செய்தே அதைப் போட்டு இரும்பும் அக்கினியும்போல வென்று திட்டாந்தத்தினாலே உனக்குச் சாதிக்கலா மாகில் ; சீறாக் கதுவிய புனல் ஒரு புடைசேர் கனல் தகுமாயினும் கோபத்தோடுங் கூடியிருக்கிற செலவினையுடைய தண்ணீரானது ஒரு பக்கத்திலே பொருந்தியிருக்கிற அக்கினியோடுங் கூடி ஐக்கியம் வந்திருந்ததாயினும்; வேறொரு பொருளை நீறு ஆக்கிலதே அக்கினியைச் சேர்ந்த இரும்புபோல இந்த வெந்நீர் வைக்கோல் முதலாயின வற்றைச் சுட்டுப் பொடியாக்கமாட்டாது. அது தண்ணீரோடுங் கூடி நிற்கையினாலே வைக்கோல் முதலாயினவற்றைச் சுட்டதில்லைக் காணும், தனியே நின்றதாயிற் சுடுமென்று நீ சொல்லில் ; நெருப் பெனும் இதனின் உருத்தனி காட்டுக நெருப்பென்று சொல்லப்பட்ட இந்தப் பூதத்தினுடைய சொரூபம் தனியே நின்று காரியப் பட்ட துண்டாமாயிற் காட்டுவாயாக; அங்கியும் ஒன்றைத் தங்கி நின்றல்லது தன்தொழில் நடத்தாதென்று அறி இனி நீ அக்கினியும் ஒருவிறகை இரும்பைச் சார்ந்து நின்று தன்னுடைய தொழிலைச் செய்யுமதொழிந்து தனியே ஒரு முதலாக நின்று தன்னுடைய தொழிலைச் செய்யமாட்டாது என்றறிவாயாக. ஆகையால் ; இரும்பு அனற் செய்தி தரும் பரிசு உளதே அக்கினி இரும்பைச் சார்ந்து நின்று தன்னுடைய தொழில் செய்து போனதொழிந்து இரும்பு அக்கினியினுடைய தொழிலைச் செய்யும் பரிசுண்டாகாது. ஆகையால், திருவருளைப் பெற்ற ஆன்மாக்கள் பஞ்சகிருத்தியங் செய்வார்களென்று நீ சொன்னது அர்த்தமன்று ; அது என் ஒர் அலகை பொதிதருங் காலை அதன் செயலைனைத்தும் இவன் செயலாமால் அப்படி நீர் பஞ்ச கிருத்தியஞ் செய்யாதென்று சொல்லுகிற தென்ன, ஒரு பேயானது ஒருத்தனை வந்து பிடித்துக்கொண்டவிடத்து, அந்தப் பேயினுடைய செயலாயுள்ளதெல்லாம் இவனுடைய செயலாகக் காணப்பட்டதோ இல்லையோ ? ஆகையால், அருளைப்பெற்ற ஆன்மாக்கள் பஞ்சகிருத்தியஞ் செய்வர்களென்று நீ சொல்லில் ; அவன் இவனாகில் இவன் அவன் செய்திக்கு என் அந்தச் சிவன் இந்த ஆன்மாவாயிருந்து தன்னுடைய தொழில்களைச் செய்தானாமாகில் இந்த ஆன்மா அந்தச் சிவனுடைய தொழிலைச் செய்கைக்கு என் கொண்டது ; அவையென்னில் அந்தச் செயல்களைச் செய்கைக்கு இந்த ஆன்மா உரித்தென்று நீ சொல்லில்; பின் உறு செயலும் அதன் செயலன்றி இவன் செயலாகில் இவன் செயல் பேயின் தன் செயலாகி இருந்தவா வெனத் தெரிந்திடவேண்டும் ஒருவனைப் பேய் பிடித்துக்கொண்டிருந்து அவனை அந்தப் பேய் விட்டு நீங்கின அவதரத்துப் பின்பு உண்டாகிய செயல்ளெல்லாம் இவனுடைய செயலாமோ அந்தப் பேயினுடைய செயலாமோ ? அதெல்லாம் இவனுடைய செயலாமாகில் அந்தப் பேய் பிடித்துக்கொண் டிருக்கிற பொழுது இவன் செய்த தொழில்களெல்லாம் அந்தப் பேயினுடைய செயல்களாகி யிருந்ததா மென்று அறிந்திட வேண்டும் ; தெரியாதாயின் அப்படிப் பேயினுடைய செயலாயிருந்த தென்று அறியப்படாதாயின் ; புரியிற் கடுங்கனல் எரிந்த தென்னும் இது தகும் புரியினிடத்துக் கடிதாயுள்ள அக்கினியானது கூடி நின்று தன்னுடைய தொழில்களைச் செய்து போனாற் போலச் சிவனும் ஆன்மாவினிடத்திலே பதிந்து நின்று தன்னுடைய தொழில்களைச் செய்துபோன தொழிந்து ஆன்மா சிவனுடைய தொழிலைச் செய்யமாட்டாது ; அன்றியும் அவன் இவனாகில் இவன் அவன் செய்தி என்று செய்வான் இதன்றியும் அந்தச் சிவனோ வென்றால் ஒரு காலத்திலும் நாசமில்லாம லிருப்பானொருத்தன், இந்த ஆன்மாவோ என்றால் கணப்பொழுதிற்குள்ளே நாசமடைந்து போவானொருந்தன், இப்படிக்கொத்த ஆன்மா அப்படிக் கொத்த சிவனுடைய தொழில்களைச் செய்தானாமாயினும் எந்தக் காலத்திலே செய்து நிறைவேற்றுவான் ; ஒன்றிய மதத்தாய் பொருந்தப்பட்டிருக்கிற உன்மத்தத்தோடுங் கூடியிருந் துள்ளவனே, இதற்கு உத்தரமுண்டாகிற் சொல். இது ஆன்மா பஞ்சகிருத்தியஞ் செய்யுமென்பதனை மறுத்தது.
எல்லாம் அறிதல் செல்லாது உயிர்கள் முத்தியிற் பஞ்சகிருத்தியஞ் செய்யுமென்று சொன்னதை யன்றியும் ஆன்மாவுக்குச் சர்வக்கியத்துவமும் உண்டாமென்று நீ சொன்னாய். எல்லாவற்றையும் அறியுமென்கிற பகுதி ஆன்மாவினிடத்து உண்டாகாது, எல்லாவற்றையும் அறிந்திருக்கிற திருவருள் இவனிடத்திலே பதிகையினாலே இவனும் எல்லாவற்றையும் அறிவனென்று நீ சொல்லில் ; சிற்றறிவெனும் இச் சொல் தவறாகும் இந்த ஆன்மாவைக் கிஞ்சிஞ்ஞனென்று வேதாகம புராண சாத்திரங்கள் சொல்லுகிறது பழுதாம் ; என்பது என் அலகை தன் பதமடைந்தோர் கொண்டவாறு கண்டனம்என்னில் என்று நீர் சொல்லுகிறதென்னை? பேயினுடைய பதவியைப் பெற்றவர்கள் அந்தப் பேய்க்குண்டாகியவருகாலநிகழ்ச்சி களையெல்லாம் தங்களிடத்திலே கொண்டு சொன்னவாறெல்லாடம் கண்டோமே என்னில் ; மூங்கை அந்தர் உற்றோங்கிய குணம் குறி செய்ததென் ஊமையுமாய்க் கண்ணிரண்டுந் தெரியாதவனுமா யிருந்தா னொருத்தன், அவனிடத்திலே இவையெல்லாங் குறைவற்றிருக்கிறதொரு பேய்வந்து பொருந்தினவிடத்து, அவன்நா வழங்கி ஒன்றைச் சொன்னதுமில்லை, கண் தெரிந்து ஒன்றைக் கண்டதுமில்லை. ஆகையால் பேயின் தன்மையெல்லாம் பிடியுண்டவனுக்கு உண்டாகாது; இன்னும் பவ்வமுற்று அழுந்தினும் நாழிகொள்ளாது ஆழியில் அலை புனல் இதன்றியும் சமுத்திரத்தோடுகூடி ஆழ முகந்ததாயினும் நாழியானது அந்தச் சமுத்திரத்திலே அலையப்பட்டிருக்கிற புனலெல்லாங் கொள்ளமாட்டாது; அதனாற் கருத்து முதலுளதாகவேண்டும் அப்படியிருக்கையில் பேரறிவோடு கூடியிருந்தாலும் பசுவுக்குள்ள அறிவுண்டா மொழிந்து பதிக்கு உண்டான அறிவெல்லாம் உண்டாகாதாகவேண்டும்; அன்றே ஈண்டு இனி அமையும் ஆனாதியே இப்படி வருகையால் நீ அருளோடுங் கூடின ஆன்மா எல்லாவற்றையும் அறியுமென்று சொன்ன சொல்லை இனி விட்டு விடுவாயாக ; எல்லாம் எனும் இச் சொல்லாற்படும் பொருளனைத்துந்தாக்காத் தனிப்பரந்து உற்றவர்க்கு ஆகையால், ஒப்பில்லாததாய் எல்லாவற்றிற்கும் மேலாயிருக்கிற சிவத்தோடுங் கூடினவர்களுக்குச் சர்வ மென்று சொல்லப்பட்ட சொல்லினா லுண்டாகிய பயனெலாம் உண்டாகாது. அன்றியும், பெத்தம் நீங்கி முத்தனானபடியினாலே பழைய தன்மையென்னவும் ஒண்ணாது. ஆகையால்; எவ்வகை உணர்வு செய்வது என் செப்புக திருவருளைப் பெற்றவர்களுடைய அறிவு எப்படி யிருப்பது தொழில் எப்படி யிருப்பதென்று சொல்லுவாயாக ; இது சிவனைப் பெற்ற ஆன்மாக்களுக்குச் சர்வஞ்ஞத்துவம் உண்டாம் என்பதனை மறுத்தது. இதுவன்றியும் ; ஒன்றின் ஒன்றாம் ஒன்றாது உலகில் நின்ற போது உயிர் நேராமன்றே முத்தியில் ஆன்மாவுஞ் சிவமும் ஒன்றாமென்னில் ஒரு முதல் இல்லையாம். அப்படிப் பரமுத்தியடையாமல் சரீரத்தோடுங் கூடிச் சீவன்முத்தனாய் நின்றதென்னில் அப்படி நின்ற ஆன்மா சிவனுக்குச் சமமாம். ஆகையால் இது அர்த்தமன்று. இதன்றியும் ; முத்தியுற்ற நற்றவர் அவையிடைச் சேர்வர் என்றனை திருவருளைப் பெற்றவர்கள் முன்னே முத்தியைப் பெற்றிருக்கிற நல்ல தவத்தையுடைய பெரியோர்கள் கூட்டத்தின் நடுவே சென்று கூடியிருப்பர்களென்று நீ சொன்னாய் ; சார்தரு முத்தி சாலோக்கியமோ இப்படிச் சென்று பொருந்தினார்க ளென்று நீ சொன்ன முத்தி சரியைத் தொழிலுக்கு உண்டாகிய சாலோக முத்தியைச் சொன்னாயோ ; சாயுச்சியம் எனில் அப்படியன்று காணும், ஞானபாதத்துக்கு உண்டாகிய சாயுச்சியத்தைக் காணுஞ் சொன்னேனென்னில் ; பந்தமுற்ற கந்தலகழித்த அறிவினோடு அறிவு பிறியாப் பெற்றி வேண்டும் என்பதற்கு தான் நீக்கவந்த சரீரத்தோடுங் கூடி நிற்கிற ஆணவமலத்தினாலே மறைக்கப்பட்டிருக்கிற சிற்றறிவுடனே பேரறிவு கூடினவிடத்து இரண்டும் தன்னிற் பிறியாமல் ஒன்றுபட்டு நிற்க வேண்டு மென்கிற இயல்பினுக்கு ; ஈண்டு இவர் இவ்வாறு இருப்பர் என்பதற்கு உருத்தான் வேண்டும் இவ்விடத்து அந்தப் பரமுத்தியைப் பெற்றவர்கள் முத்தியைப் பெற்றிருக்கிற பெரியோர்களது கூட்டத்தோடுங் கூடிக்கொண்டிருப்பார்க ளென்று நீ சொல்லுகிற இதற்கு இவர்களுக்கு ஒரு சரீரம் உண்டாகவேண்டும். இதன்றியும் ; அண்ணலது அருளின் நண்ணினர் இருப்பினும் சீவன்முத்தரென்று ஓதினர் கர்த்தாவினுடைய திருவருளோடுங் கூடினவர்கள் பரமுத்தியை யடையாமல் இந்தச் சரீரத்தோடுங் கூடியிருந்தார்களாயினும் அவர்களுக்குச் சரீரத்தொந்தனையில்லை. அவர்களைச் சீவன்முத்தரென்று நல்லோர்கள் சொன்னார்கள். இப்படி நல்லோர்களாலே சொல்லப்பட்டிருக்கச்செய்தே ; அகன்று நீங்கியும் உருவம் நீங்காதாயின் ஓங்கிய முத்தியாவது என் உரைக்க இந்தச் சரீரத்தொந்தனையை நீங்காமலிருக்குமாயின் மிகுந்திருக்கிற பரமுத்தியாவது எப்படிக் காண், சொல்லு. அப்படியன்று காணும் ; செடியுடல் அணுகாக் குடிலை கொடுக்குமென்று ஓதினை நீயே அந்த முத்தி இந்த அசுத்தமாயா சரீரம் பொருந்தாது, சுத்தமாயாசரீரத்தைக் கொடுக்க அந்தச் சரீரத்தோடுங்கூடி யிருப்பர்களென்று நீ சொன்னாய் ; பேதாய் பகட்டுரல் ஒளிர்சினை முச்சித்தளிரெனும் இதுதகும் அறிவில்லாதவனே, நாலு மூன்று தலைமுறையாக அரிசி நெல்லுக் குத்திவருகிற பெரிய உரலினிடத்திலே ஒளி பொருந்தின கொம்புகளும் அதனுடைய நுனியிலே இனைய தளிர்களும் உண்டானதென்று சொல்லுகிறதை யொக்கும் நீ மூன்று மலங்களும் நீங்கிப் பரமுத்தியைப் பெற்றவிடத்திலே ஒரு சரீரம் உண்டாமென்று சொன்னது. இதன்றியும் ; இச்சாரூபம் நச்சினர் என்னின் சுவேச்சையினாலே யெடுக்கப்பட்டிருக்கிற சரீரத்தோடுங் கூடிப் பிரியப்பட்டிருந்தார்களென்று நீ சொல்லின் ; மும்மலத்து ஏதும் இன்மையதன்றே ஒருவனுக்கு ஒரு சரீர முண்டாமிடத்துக் கன்மத்தாலே யொழிந்து உண்டாகாது ; அந்தக் கன்மந்தான் ஆணவமலங் கிடந்தாலொழிந்து உண்டாகாது. ஆகையால் முத்தியில் மலமாயா கன்மமான மூன்று மலத்தில் ஒரு மலமும் உனக்குப் போனதில்லையாம் ; இது வளர்முத்திப் பதமென இயம்புவர் இப்படி ஒரு சரீரத்தோடுங் கூடிக்கொண்டிருக்கிற முத்தியைச் சாயுச்சியத்துக்கு ஏதுவாயிருக்கிற சாலோக்கியாதியாயுள்ள பதமுத்திகளென்று காண் நல்லோர்கள் சொல்லுவார்கள் ; ஈங்கு இவை நிற்க இவ்விடத்து நீ பழுதாகச் சொல்லிவந்த பெத்தமுத்திகளை விட்டு நான் சொல்லுகிறதைப் புத்திபண்ணிக் கேட்பாயாக.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

நீங்காது ஒளிர்உயிர்
விளக்கென நிற்கும் அளப்புறும் அறிவின்று
இறைவற் கேதும் அறியவேண் டின்றே
மன்னும் ஆன்ம சன்னதி அளவிற்
காந்த பசாசத் தேய்ப்ப வாய்ந்த
உயிர்உடல் இயக்குஞ் செயலுறு பூட்டைப் 5
பலவகை உறுப்பும் இலகிய தொழில்போல்
ஐம்பொறி புலன்கள் இன்புறு மன்றே
இனைய வாயிலின் நிகழ்தரு பயனவை
அந்தக் கரணம் முந்தி உணர்ந்திடும்
இவைஅகல் வுழிஐம் பொறிபுலன் நிகழா 10
துயிர்நீங் கிடில்உடல் செயல்இல தன்றே
இவ்வகை வினையின் செவ்விதின் நடத்தும்
பழமலம் நீங்க நிகழுங் காலை
ஏற்றோர் முகஒளி தோற்றும் கலனெனத்
தலைவன தருளுயிர் நிலவிடும் நிலவக் 15
காட்டத் தங்கி மாட்டத் தங்கிய
தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும்
போன்றது வாகித் தோன்றிடும் அதனாற்
பசுகர ணங்கள் சிவகர ணங்க
ளாக மாறி அறிவும்
ஏக மாம்உயிர் யானென தின்றே. 20

பொழிப்புரை :

மேல் சங்கிராந்தவாதி தன் மதம் கூறுகின்றான் :
நீங்காது ஒளிர் உயிர் விளக்கென நிற்கும் அளப்புறும் அறிவு இன்று ஆன்மாவானது நீங்காத பிரகாசத்தோடுங் கூடிக்கொண்டிருக்கிற விளக்கைப்போலே சுட்டற நிற்கும், அது இது என்று அளவிட்டுச் சுட்டியறிகிற அறிவு இதற்கு இல்லை ; இறைவற்கு ஏதும் அறிய வேண்டின்றே கர்த்தா நிர்விகாரியானபடியாலே அவனுக்கு ஒன்றும் அறிய வேண்டுவதில்லை ; மன்னும் ஆன்ம சன்னதி யளவில் காந்தபாசத்து ஏய்ப்ப வாய்ந்த உயிர் உடல் இயக்கும் நிலை பெற்று வாராநிற்கிற ஆன்மாவினுடைய சன்னதி மாத்திரத்திலே காந்தமானது அசைவற நிற்க அதன் சன்னதியிலே இரும்பு காரியப் பட்டாற்போல ஆன்மா விகாரமற நிற்கப் பொருந்தப்பட்ட பிராண வாயுவானது உடலைக் காரியப்படுத்தாநிற்கும் ; செயலுறு பூட்டைப் பலவகை உறுப்பும் இலகிய தொழில்போல் ஐம்பொறி புலன்கள் இன்புறுமன்றே சமைக்கப்பட்ட பூட்டைகளிடத்துப் பட்டடை யென்றும் தவிலென்றும் கதிரென்றும் சந்திரவளையமென்றும் பூணியென்றும் பலபல வகையாகச் சொல்லப்பட்டு வருகிற உறுப்புக்கள் தோறும் மிகுத்து வாராநிற்கிற தொழில்களைப்போல் இந்திரியங்கள் ஐந்துஞ் சத்தாதி விஷயங்களை அனுபவியாநிற்கும் ; இனைய வாயிலின் நிகழ்தரு பயனவை அந்தக்கரணம் முந்தி உணர்ந்திடும் மெய் வாய் கண் மூக்குச் செவியென்று சொல்லப்பட்ட இந்திரியங்களாலே கொண்ட சத்தாதி விஷயங்களை மனோபுத்தியாங்கார மென்கிற உட் கரணங்கள் அறியாநிற்கும் ; இவை அகல்வுழி ஐம்பொறி புலன் நிகழாது இந்த அந்தக்கரணங்கள் நீங்கின விடத்து ஐம்பொறிகளோடும் பஞ்சவிஷயங்கள் பொருந்தாது. இது சகலம் ; உயிர் நீங்கிடில் உடல் செயலிலதன்றே பிராணவாயு நீங்குமாயின் உடல்சேட்டையின்றி அவத்தைப்பட்டுக் கிடக்கும். இது கேவலம் ; இவ்வகை வினையின் செவ்விதின் நடத்தும் இப்படி ஆன்மாவின் சன்னதி மாத்திரத்திலே பிராணவாயுவானது பிராரத்தத்தைப் பொசிப்பித்துக் கொண்டு வாராநிற்கும். இது பெத்தம்.
மேல் முத்தியானது : பழமலம் நீங்க நிகழுங் காலை இப்படிப் பிராரத்தம் பொசித்துக்கொண்டு வரச்செய்தே இவனுக்குச் சகசமாயுள்ள ஆணவமலம் நீங்கத்தக்கதாக இருவினை யொப்பும் சத்தினி பாதமும் உண்டான காலத்து ; ஏற்றோர் முக ஒளி தோற்றுங் கலனெனத் தலைவனது அருள் உயிர் நிலவிடும் எடுத்துப் பார்த்தவர்கள் முகத்தினது பிரதிவிம்பந் தோன்றப்பட்ட கண்ணாடியைப் போலக் கர்த்தாவினுடைய திருவருளும் ஆன்மாவினிடத்திலே பொருந்தாநிற்கும் ; நிலவக் காட்டத்து அங்கிமாட்டத் தங்கிய தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும்போன்று அதுவாகித் தோன்றிடும் இப்படி ஆன்மாவினிடத்திலே அந்தத் திருவருள் பொருந்தவே விறகினிடத்திலே நெருப்பைக் கொளுத்தினபோது அந்தவிறகுக்கு உண்டாகிய தன்மை போலவும் உப்பளத்தில் புல்லும் வைக்கோலுங் கூடின விடத்து இவை தன்னுடைய தன்மை கெட்டு உப்பான தன்மை போலவும் இந்த ஆன்மாவும் தன்னுடைய தன்மை கெட்டு அந்த அருட் சொரூபமாய்த் தோன்றாநிற்கும்; அதனாற் பசுகரணங்கள் சிவகரணங்களாக மாறி அறிவும் ஏகமாம் உயிர் யான் எனது இன்றே அப்படி இந்த ஆன்மாப் பசுத்துவங் கெட்டுச் சிவத்துவமானபடியாலே பசுகரணங்களா யுள்ளவையுந் தன் தன்மை கெட்டுச் சிவகரணங்களாக மாறி அறிவும் இரண்டாக நில்லாமல் அருளோடுங் கூடி ஒன்றாம். பின்னை இந்த ஆன்மாவுக்கு யான் எனது என்கிற பகுதி இல்லையாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இன்றுன துரையின் நன்றி உயிர்ஒளித்
தீபம் போலத் தாபந் தரில்இருள்
செறியுந் தன்மைஎன் அறிவில தாகில்
ஒளியென உரைத்த தெளிவதற் கேதாம்
சன்னதி யளவில் மன்னுஞ் செயல்உடல் 5
காந்தம் போல வாய்ந்த தென்ற
தன்மையும் உணராப் புன்மையை யன்றே
உயிருடல் இயக்கில் துயில்பெறுங் காலைச்
செய்ததென் மனாதி எய்துயிர் பொறிபுலன்
நடத்த ஆவியும் சடத்தன ஆயின் 10
பூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே
புலன்ஐம் பொறியில் நிலவிடும் என்றனை
அஞ்சும் ஒருகால் துஞ்சா தறிதற்கு
அழிவென் னற்றருச் செழுமலர் இலைபலம்
கனிதரு வதுபோல் இனையவை ஐந்தும் 15
ஒன்றொன் றாக நின்றறி வுறுமெனில்
ஒன்றின் பயன்நனி ஒன்றறி யாதால்
இதுவே யல்லது கதுமென இருசெவி
இருகூற் றொருகால் தெரியாத் தன்மைவந்து
எய்தும் மனாதியும் மெய்யிற் செயலுந் 20
தனக்கிலை யொருவற் கெனத்தெளி கிலையே
நோக்கும் முகவொளி நீக்காத் தானெனக்
கவருந் தன்மை முகுரம் போலக்
கொடுத்தது கோடற் கடுத்ததுண் டன்றே
காட்டத் தங்கி கூட்டக் கூடும் 25
இந்தனத் தியற்கை வெந்தழல் தாங்கா
உப்பளத் தடுத்த புற்பலா லங்கள்
சடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந்
தன்மைஉண் டுனக்கு இன்மைய தன்றே
அவமுறு கருவி சிவமய மாம்எனக் 30
கூறினை தாகம் வேறுருக் கவராது
என்பதென் அவைமுற் றுன்பந் துடைக்குந்
திருவருள் மருவ உரியன என்னில்
அருளுரு மாயா இருளின தாங்கொல்
சத்தப் பரிச ரூபரச கெந்தமென்று 35
எத்திறத் தினதருள் இயம்புக அன்றியும்
நிறைந்து நீயாய் நின்றனை யேனும்
மறைந்தைம் புலனால் வாரா யென்றும்
கரணம் எல்லாங் கடந்தனை என்றும்
மரணம்ஐ யைந்தின் அப்புறத் தென்றும் 40
முன்னருட் டலைவர் பன்னினர் எனவும்
இனையவை ஒழிய அறிகுவ தெவ்வாறு
என்ற நிற்கலிக் கொன்றிய இன்பம்
கூறுதல் தகும்மருட் பேறினை அன்றே
ஏகம் உயிர்அறி வாக மொழிந்தனை 45
இருபொருள் ஒருமை மருவிய திலதே
இவ்வகை கிடக்க மெய்வகை கேண்மதி.

பொழிப்புரை :

மேல் ஈசுவர அவிகாரவாதி மறுக்கிறான் :
இன்று உனது உரையின் நன்றி இப்பொழுது நீ பலவாகச் சொல்லி வந்த பெத்த முத்தியினது நன்மையை விசாரித்துப் பார்க்குமிடத்து; உயிர் ஒளித் தீபம்போலத் தாபம் தரில் ஆன்மாவானது ஒளிபொருந்தியிருக்கிற விளக்குப்போலத் தாவுதலைச் செய்யுமாயின் ; இருள் செறியுந் தன்மை என் இப்படிப் பிரகாசித்து நிற்கிற ஆன்மாவுக்கு அஞ்ஞானமாகிய இருள் பொருந்தின தன்மை என்னதான் ; அறிவிலதாகில் இந்த ஆன்மாவுக்கு அறிவில்லாதது கொண்டு இருள் பொருந்தினதாகில் ; ஒளியென உரைத்த தெளிவு அதற்கு ஏதாம் ஆன்மா விளக்குப்போலே ஒளியாயிருக்குமென்று சொன்ன தேறுதல் ஆன்மாவுக்கு அறிவில்லாதது கொண்டு இருள் பொருந்தியிருக்குமென்று சொன்னதற்கு இது எப்படியாகும். நீதானே விசாரித்துப்பார் ; சன்னதி யளவில் மன்னுஞ் செயல் உடல் காந்தம்போல வாய்ந்ததென்ற தன்மையும் உணராப் புன்மையை யன்றே ஆன்மாவினுடைய சன்னதி மாத்திரத்திலே பொருந்தப்பட்ட பிராணவாயுவானது காரியப்படுத்த உடல் காரியப்பட்டுவரும். அதென்போல வென்னில், காந்தத்தின் சன்னதியிலே இரும்புகாரியப்பட்டாற்போல வென்று நீ முன்னே சொன்ன தன்மையினையும் இப்போது விசாரியாத சிறுமையினை யுடையவனானாய். இதன்றியும் ; உயிர் உடல் இயக்கில் துயில்பெறுங் காலைச் செய்தது என் பிராணவாயுவானது உடலைக் காரியப்படத்து மாயின் நித்திரைசெய்கிற அவதரத்துப் பிராணவாயுவும் ஒக்கநிற்கச் செய்தே உடல் காரியப்படக் கண்டோமில்லை. ஆகையால் ஆன்மா உடலைக் காரியப்படுத்துமதொழிந்து பிராணவாயுக் காரியப்படுத்த மாட்டாது. ஆன்மா அவிகாரியாயிருப்ப தொழிந்து இவையிற்றைக் காரியப்படுத்தாதென்று நீ சொல்லில் ; மனாதி எய்து உயிர் பொறி புலன் நடத்த ஆவியும் சடத்தன ஆயின் மனம் புத்தி யாங்கார சித்தமென்கிற அந்தக்கரணங்கள், பொருந்தப்பட்ட பிராணவாயு, சோத்திரம் தொக்கு சட்சு சிங்ஙுவை ஆக்கிராண மென்கிற இந்திரியங்கள் சந்தப் பரிச ரூப ரச கந்தங்கள் என்கிற விஷயங்கள் இவையெல்லாவற்றையுங் காரியப்படுத்திக்கொள்ளுதற்கு ஆன்மாசடமாயிருக்கு மாயின் ; பூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே பூட்டையினிடத்து உண்டாகிய பூணியினாலே மற்றுண்டான உறுப்புக்ளெல்லாங் காரியப்பட்டு வருகையினாலே நீ பூணியை ஆன்மாவுக்கு உவமைசொன்னது திட்டாந்த விரோதம். ஆகையால் இது அர்த்தமாகாது. பூணியைப் போல ஆன்மா, தவிலைப்போல அந்தக்கரணம், கதிரினைப்போல பிராணவாயு, சந்திரவளையத்தைப்போல இந்திரிங்கள், சலத்தைப் போல இந்திரிய விடயங்கள், பட்டடையைப்போலச் சரீரமாகையால் எனக்கொள்க. இதன்றியும் ; புலன் ஐம்பொறியில் நிலவிடும் என்றனை சத்தாதி விஷயங்கள் ஐந்தும் இந்திரியங்கள் ஐந்தினும் வந்து பொருந்துமென்று நீ சொன்னாய் ; அஞ்சும் ஒருகால் துஞ்சாது அறிதற்கு அழிவு என் ஐந்து விஷயங்களையும் ஐந்து இந்திரியங்களுங் கொள்ளுமாயின் ஐந்தும் ஏககாலத்திலே அறியவேண்டும், விஷயங்கள் ஐந்தில் ஒன்று சீவித்து மற்றை நாலுஞ் சீவியாமலிருக்கைக்குக் குறைவென்; நற்றருச் செழுமலர் இலைபலங் கனிதருவதுபோல் இனையவை ஐந்தும் ஒன்றொன்றாகநின்று அறிவுறும் எனில் நல்ல தொரு மரமானது ஒருகாலத்திலே இலைகளைத் தோற்றுவித்தும் ஒரு காலத்திலே கொழுவிய மலர்களைத் தோற்றுவித்தும் ஒருகாலத்திலே காய்களைத் தோற்றுவித்தும் ஒரு காலத்திலே பழங்களைத் தோற்றுவித்தும் நின்ற தன்மைபோல இந்திரியங்கள் ஐந்தும் ஒரொரு விஷயங்களாகக் காரியப்பட்டு வருமென்று நீ சொல்லின் ; ஒன்றின் பயன் நனிஒன்று அறியாதுஆல் இதுவேயல்லது கதுமென இருசெவி இருகூற்று ஒருகால் தெரியாத் தன்மை வந்து எய்தும் ஒரு கொம்பிலே ஒரு காலத்திலே இலையும் ஒரு காலத்திலே பூவும் உண்டானாற்போல ஓர் இந்திரியத்துள்ள விஷயத்தை மற்றோர் இந்திரியம் அறியக்கண்டோமில்லை. இந்தத் தோஷமுமன்றி நீ ஒன்றொன்றாக அறியும் என்றதற்கு இன்னமும் ஒரு தோஷம் உண்டு. அது ஏதென்னில், ஓர் இந்திரியமாயிருக்கிற இரண்டு செவியினுஞ் சடக்கென இரண்டுசத்தம் ஒருகாலத்திலேசொல்ல ஒருவன் சொன்னதை யறிந்தும் ஒருவன் சொன்னதை யறியாமலுமா யிருக்கையாலும் ; மனாதியும் மெய்யிற் செயலுந் தனக்கு இலை ஒருவற்குஎனத் தெளிகிலையே அந்த இந்திரியங்களினுடைய தொழில் தனக்கின்றி ஆன்மாவுக்கானாற்போல அந்தக்கரணங்களுக்கு உண்டாகிய தொழிலும் சரீரத்துக்கு உண்டாகிய தொழிலும் இவையிற்றுக்கின்றி ஆன்மாவுக்கு உள்ளதென்று தெளிவாயாக. எனவே, ஆன்மா அவிகாரியல்ல விகாரியென்பது கருத்து. இது பெத்தத்தை மறுத்தது.
மேல் முத்தியை மறுக்கிறான் : இதன்றி நீ முத்தித் தன்மை சொல்லுகிற இடத்திலே கண்ணாடியிலே பார்த்தவர்களுடைய முகத்தில் ஒளி அந்தக் கண்ணாடியிலே தோன்றினாற்போலக் கர்த்தாவினுடைய திருவருளும் இந்த ஆன்மாவிலே பிரகாசிக்குமென்று நீ சொன்னாய் ; நோக்கும் முக ஒளி நீக்காத் தானெனக் கவருந் தன்மை முகுரம்போலக் கொடுத்தது கோடற்கு அடுத்தது உண்டன்றே பார்த்தவர்கள் முகத்திலுண்டாகிய ஒளியைத் தள்ளிவிடாமல் கண்ணாடிதானே யென்னத்தக்கதாகத் தன்னிடத்திலே கவளி கரித்துக்கொண்டு நிற்கிற கண்ணாடியினது தன்மைபோலக் கொடுத்தது கொள்ளுந் தன்மை உனக்கு அடுக்குமதொன்றன்று இதன்றியும் ; காட்டத்து அங்கி கூட்டக்கூடும் இந்தனத்து இயற்கை வெந்தழல் தாங்கா விறகினிடத்து உண்டாகிய நெருப்பை ஆன்மாவோடுங் கூடிநிற்கிற அருளுக்கு உவமை சொன்னாய். நெருப்புவிறகைச் சுட்டுப் போடுகையினால் அது அர்த்தமன்று. இதன்றியும் ; உப்பளத்து அடுத்த புற்பலாலங்கள் சடத்தவேனுங் கொடுத்தது கொள்ளுந் தன்மை யுண்டு உனக்கு இன்மையதன்றே அளத்திலே கூடின புல்லும் வைக்கோலுஞ் சடமாயிருந்ததாயினும் அவையிற்றுக்குக் கொடுத்தது கொள்ளுந் தன்மையுண்டு ; உனக்குக் கொடுத்தது கொள்ளுந் தன்மையுண்டாகாது. இதன்றியும் ; அவமுறு கருவி சிவமயமாம் எனக் கூறினை அசுத்த மாயையிலேநின்றுந் தோன்றப்பட்டுப் பொல்லாங்குகளுக்கு ஏதுவாயிருக்கிற இந்தக் கருவிகளைச் சிவசொரூபமாமென்று உன்மதத்திலே சொன்னாய் ; தாகம் வேறு உருக் கவராது அது இந்தச் சரீரத்தோடு உண்டாகிய ஆசை நீ சொன்னாய். அதொழிந்து அந்தச் சிவசொரூபஞ் சுத்த நின்மலமாயும் இந்த மாயா ரூபம் மலமாயு மிருக்கையால் இது அதுவாகாது ; என்பதென் அவைமுன் துன்பந்துடைக்குந் திருவருள் மருவ உரியன என்னில் என்று நீர் சொன்ன தென்னை, அந்த மாயாகருவிகள் அனாதியே தொன்றுதொட்டு வருகிற செனன துக்கத்தை நீக்கிவிடுகிற திருவருளைப் பொருந்தி அருட் சொரூபமாகைக்கு உரியன காணுமென்று நீ சொல்லில் ; அருளுரு மாயா இருளினதாம் கொல் திருவருளும் மாயையிலே தோன்றப் பட்டிருக்கிற இருட் சொரூபங்களிலே ஒன்றாக வேண்டும் ; சந்தப் பரிச ரூப ரச கெந்தமென்று எத்திறத்தினது அருள் இயம்புக சத்தப் பரிச ரூப ரச கந்தங்களோடுங் கூடி இவையிற்றை அறிந்து வருகிறது மாயா கருவிகள், இந்த விஷயங்களுக்கும் மனம் வாக்குக்கும் எட்டாத திருவருள் எத்தனை தூரம். இதற்கு உத்தர முண்டானாற் சொல்லுவாயாக; அன்றியும் நிறைந்து நீயாய் நின்றனையேனும் மறைந்து ஐம்புலனால் வாராயென்றும் கரணமெல்லாம் கடந்தனை யென்றும் மரணம் ஐயைந்தின் அப்புறத்தென்றும் முன்னருட் டலைவர் பன்னினர் எனவும் இனையவை யொழிய அறிகுவது எவ்வாறு என்ற நிற்கு அலிக்கு ஒன்றிய இன்பங்கூறுதல் தகும் இதன்றியும் (கைலைபாதி காளத்திபாதி) அந்தாதி (48) சூநிறைந்தெங்கு நீயேயாய் நின்றாலு மொன்றி, மறைந்தைம் புலன்காண வாராய் சிறந்த, கணியாருந் தண்சோலைக் காளத்தி யாள்வாய், பணியாய லென்னும் பரிசு என்றும், திருவாசகம் (திருக்கோத்தும்பி, 9) சூகரணங்க ளெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன், சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு, மரணம் பிறப்பென் றிவை யிரண்டின் மயக்கறுத்த, கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ’ என்றும், (அப்பர்) திருப்பாட்டு (4.4.10) சூபையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுளத்தானும், கையைஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும், பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந் தார்க்கருள் செய்யும், ஐயைஞ்சி னப்புறத் தானும் ஆரூ ரமர்ந்த வம் மானே’ என்று முற்காலத்திலே திருவருளைப் பெற்ற பெரியோர்கள் அருளிச் செய்தார்களென்று நான் சொல்லவும், இந்த இந்திரியங்களை விட்டால் இவனுடைய அறிவு சீவியாதாகையால் அந்த இந்திரியங்களை யின்றித் திருவருளை யறியும் பகுதி எப்படி யென்று கேட்கிற உனக்குச் சொல்லுகிறது ஒருவனும் ஒருத்தியுங் கூடி அனுபவித்த இன்பத்தைத் தான் அனுபவிக்கமாட்டா அலியாயுள்ளவனுக்குச் சொல்லுகிறதை யொக்கும் ; மருட்பேறினை யன்றே மாயைக்குள்ளே மயங்கப்பட்டு வருகிற பொருள்களை அறிகிறது தானே பேறாகக் கொண்டாயாகையால் இது அர்த்தமன்று. இதன்றியும் ; ஏகம் உயிர் அறிவாக மொழிந்தனை அருளும் ஆன்மாவுங் கூடின விடத்து இரண்டும் ஒன்றாய் விடுமென்று நீ சொன்னாய் ; இருபொருள் ஒருமை மருவிய திலதே இந்தப் பிரபஞ்சத்திலே ஒரு முதல் கெட்டு ஒரு முதலாகுதல் அல்லது இரண்டு முதலாகுதலொழிந்து இரண்டு முதல் கூடி ஒரு முதலாய் நிற்கு மென்பது உண்டாகாது. ஆகையால் அருளும் ஆன்மாவுங் கூடி ஒரு முதலாய் நிற்குமென்பது உண்டாகாது. ஆகையால் அருளும் ஆன்மாவுங்கூடி ஒன்றாய்நிற்குமென்பது அர்த்த மாகாது ; இவ்வகை கிடக்க மெய்வகை கேள்மதி இங்ஙனம் நீ பலவகையாகச் சொன்ன அர்த்தங்களைப் போட்டு நான் சொல்லப் போகிற சத்தியத்தைப் புத்திபண்ணிக் கேட்பாயாக. மதியென்றது அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

பஃறுளைக் கடத்தி னுள்விளக் கேய்ப்ப
அறிவுள தாகும் உருவுறும் உயிர்கள்
கண்ணா லோசையுங் கரணமுங் கருத
ஒண்ணா தென்னும் உணர்வுடை மையினால்
அவ்வவ புலன்கட் கவ்வவ பொறிகள் 5
செவ்விதின் நிறுவிச் சேர்ந்தவை நுகரும்
மூல மலத்தின் பாகம்வந் துதவுழி
இருள்தரும் இற்புக் கொருபொருள் கவரத்
தீபம் வேண்டு மானவா போல
மோக மாமலம் போக ஞான 10
விளக்கரன் அருளால் துளக்கறப் பெற்று
நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச்
சலம்இல னாகிச் சார்ந்தவர்க் கென்றும்
நலம்மிக நல்கும் நாதனை அணைந்து
பூழி வெம்மை பொருந்தா துயர்ந்த 15
நீழல் வாழும் நினைவினர் போலத்
திருவடி நீழல் சேர்ந்து
கருவுறு துயரங் களைந்திருக் திடுமே.

பொழிப்புரை :

மேல் ஈசுவர அவிகாரவாதி தன் மதம் கூறுகின்றான்:
பல் துளைக் கடத்தினுள் விளக்கு ஏய்ப்ப அறிவுளதாகும் உருவுறும் உயிர்கள் பல துவாரத்தோடுங் கூடியிருக்கிற குடத்துக் குள்ளே ஏற்றிவைத்த விளக்கிளைப் போல நவத்துவாரங்களோடுங் கூடியிருக்கிற சரீரத்துக்குள்ளே நிற்கிற ஆன்மாக்களும் அறிவேயாயிருக்கும்; கண்ணால் ஒசையும் கரணமும் கருதவொண்ணாது என்னும் உணர்வுடைமையினால் கண்ணைக் கொண்டு ரூபத்தைக் காணும தொழிந்து சத்தத்தையும் பரிசத்தையும் கெந்தத்தையும் இரதத்தையும் அறிய வொண்ணாதென்கிற அறிவு இந்த ஆன்மாவுக்கு உள்ளதாயிருக்கையினாலே ; அவ்வவ பலன்கட்கு அவ்வவ பொறிகள் செவ்விதின் நிறுவிச் சேர்ந்தவை நுகரும் இந்த ஆன்மா தனக்குக் கொள்ளவேண்டின அந்தந்த விஷயங்களுக்கேற்ப அந்தந்த இந்திரியங்களை மாறுபாடற நிறுத்தி அவையிற்றிலே பொருந்தப்பட்டு வருகிற விஷயங்களைப் பொசியாநிற்கும். இது பெத்தம்.
மேல் முத்தி : மூலமலத்தின் பாகம் வந்து உதவுழி இப்படிக் கன்மத்தைப் பொசித்துகொண்டு வருகிற அதனாலே ஆணவமலத்தினுக்குப் பாகம் வந்து உண்டானவிடத்து ; இருள் தரும் இல்புக்கு ஒரு பொருள் கவரத் தீபம் வேண்டுமானவா போல இருண்டு கொண்டிருக்கிற வீட்டுக்குள்ளே சென்று ஒரு பதார்த்தத்தை எடுக்க வேண்டின விடத்து ஒரு விளக்கை முன்னிட்டுக்கொண்டு சென்று அந்தப் பதார்த்தத்தை யெடுத்த தன்மைபோல ; மோகமாமலம் போக ஞான விளக்கு அரனருளால் துளக்கறப்பெற்று இந்த ஆன்மா தனக்கு உண்டாகிய அஞ்ஞான இருளாகிய ஆணவமலம் நீங்கத்தக்கதாக ஞானமாகிய தீபத்தைச் சிவனுடைய அனுக்கிரகத்தினாலே அசைவறப் பெற்று ; நீர் நிழல் அனைய சீர்பெறு கடவுளை தண்ணீரைப் போலவும் நிழலைப் போலவும் ஒருவரளவினும் பக்ஷப் பிரதிபக்ஷமின்றி மிக்க சிறப் பினோடுங் கூடிக் கொண்டிருக்கிற கர்த்தாவை ; சலம் இலனாகிச் சார்ந்தவர்க்கு என்றும் நலம் மிகநல்கும் நாதனை அணைந்து அப்படிப் பக்ஷப் பிரதிபக்ஷமில்லாம லிருக்கச்செய்தேயுந் தன்னை வந்து பொருந்தின பக்குவப்பட்ட ஆன்மாக்கள் பொல்லாங்கைச் செய்தார் களாயினும் அது தனது திருவுளத்திற்காணாமல் அவர்களுக்கு வேண்டின நன்மைப் பகுதிகளை மிகவுங் கொடுக்குஞ் சுவாமியாயுள்ளவனைச் சென்றுகூடி ; பூழிவெம்மை பொருந்தாது உயர்ந்த நீழல் வாழும் நினைவினர்போல மத்தியானகாலத்திலே வழி நடந்தவர்களுக்கு அந்த வழியிலுண்டாகிய பொடிச்சூடு நீக்கத்தக்கதாக உயர்ந்த மரத்தின் நிழலிலே வந்து பிரியப்பட்டிருக்கிற நினைவினையுடையவர்களைப் போல ; திருவடி நீழல் சேர்ந்து கருவுறு துயரம் களைந்திருந்திடுமே இந்த ஆன்மா கர்த்தாவினுடைய திருவடிநீழலைப் பொருந்தித் தனக்கு உண்டாகிய செனன துக்கங்களையெல்லாம் நீக்கிக்கொண்டிருக்கும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இருந்ததுன் கேள்வி திருந்திடும் உயிர்கள்
அறிவின வாயிற் பொறிபுலன் என்னை
மற்றவை பற்றி உற்றறிந் திடுதலின்
அறிவென வழங்கும் உயிர்என உரைத்தல்
காணுங் கண்ணினன் கைதொடு தடவிப் 5
பூணும் பொருளின் பெயர்பல புகறல்
என்னுங் கிளவி தன்னொடு தகுமே
அவ்வவ புலன்கட் கவ்வவ பொறிகளைச்
செவ்விதின் நிறுவலின் அறிவெனச் செப்பினை
அறிவி லாமைகண் டனம்அணை புலற்குப் 10
பொறிகள் ஏவலின் அறிவொடு பொருந்தில்
கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டும்
உதவிய தொன்றாற் கதுமென இயற்றினர்
உண்டோ என்னிற் கண்டது மேல்நாள்
கடவுளிற் கடிமலர் முடுகிய மதனன் 15
அங்கம் அனங்கம் தங்கிடக் கிடந்தது
வையின் திரளிற் செய்ய சிறுபொறி
மாட்டி மூட்டிய தன்றே மீட்டுந்
தேனமர் தவிசில் நான்முகன் உச்சி
அறுத்ததும் கருவி பொறுத்தோ அன்றே 20
ஈசனது இயல்பு பேசுதல் தவிர்க
காழி மாநகர்க் கவுணியர் கடவுள்
ஞான மாகிய நற்பதி கங்கள்
எழுதுறு மன்பர்தம் இன்புறு மொழியால்
களிறென அணைந்த கல்மனப் புத்தன் 25
முருட்டுச் சிரம்ஒன்று உருட்டினர் அன்றி
வாய்ந்த வாளொன்று ஏந்தினர் இலரே
என்றதும் ஈர்வாள் கொன்றதென் பதுபோல்
தனித்துணை அருளால் துணித்தனர் என்பர்
ஆதலின் வாயில் அளவினில் அறிதலின் 30
ஏதமில் அறிவுயிர்க் கெய்துதல் இலதே
இருட்கு விளக்கொன்று ஏந்தினர் போல
மருட்கு ஞானம் மன்னுதல் உன்னும்
என்றனை கருவிகள் யாவும் அசேதனம்
துன்றிய உயிருந் துரியத் தண்மையன் 35
ஆதலின் அந்தர் அனைவரும் கூடித்
தீதற அருநெறி தெரியுமென் றற்றே
நீர்நிழல் அனைய சீர்பெறு கடவுளைச்
சேர்ந்தவர்க் கின்பம் வாய்ந்திடும் என்றனை
பாதவம் என்றும் சேதனம் இன்மையின் 40
இளைத்தோர் வம்மின் என்பதும் துன்பம்
விளைத்தோர் தம்வயின் வெறுப்பும்ஒன் றிலதே
பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம்
வெய்ய பூழியின் உள்ளுற அழுங்கி
ஆற்றுதல் இன்றி யாறியங் குநர்முன் 45
தோற்றிடும் என்று சொல்லவும் இலதால்
இவ்வகை கடவுட் கியம்புதல் தவறே
பாச அஞ்ஞானப் பழிவழி ஒழிக
ஈசன தருள்வழி இயம்புவன் கேண்மதி.

பொழிப்புரை :

மேற் பரிணாமவாதி மறுக்கிறான்:
இருந்தது உன்கேள்வி இப்படி யிருந்தது நீ கேட்ட கேள்வி. நான் சொன்னதற்குக் குற்றமென்னை ; திருந்திடும் உயிர்கள் அறிவினவாயின் பொறிபுலன் என்னை ஆன்மாவென்று ஒரு முதல் காணப்படாம லிருக்கச்செய்தே நீ உண்டென்று சொல்லப்பட்ட உயிர்கள் அறிவினோடுங் கூடியிருந்ததாமாயிற் சத்தாதி விஷயங்களைக் கொள்ளுகைக்கு இந்திரியங்கள் வேண்டுவதில்லை. இந்திரியங்களைக் கொண்டு அறிகையினாலே ஆன்மாவுக்கு அறிவில்லையென்பது கருத்து. அப்படியன்று ; மற்று அவைபற்றி உற்றறிந்திடுதலின் அறிவென வழங்கும் உயிர் என உரைத்தல் அந்த இந்திரியங்களை ஆன்மா பொருந்தி ஒருவிஷயங்களை உற்றறிந்து வருகையினாலேஇந்த ஆன்மாவை அறிவென்று சொல்லப்படுமென்று நீ சொல்லுகிறது ; காணுங்கண்ணினன் கைகொடு தடவிப்பூணும் பொருளின் பெயர்பல புகறல் என்னுங் கிளவி தன்னொடு தகுமே கண்ணிரண்டுங் கொண்டு காண்பா னொருந்தன் கண்ணைக் கொண்டு பார்த்துப் பதார்த்தங்களைச் சொல்லாமற் கைகளைக்கொண்டு தடவிக் கைகளிலே தட்டின பண்டங்களினுடைய பல பெயர்களையுஞ் சொன்னான் என்கிறசொல்லோ டொக்கும், ஆன்மா அறிவா யிருக்கச் செய்தே தான் விஷயங்களைக் கொள்ளமாட்டாமல் இந்திரியங்களைக் கொண்டு விஷயங்களைக் கொண்டதென்று நீ சொல்லுகிற இது. இதன்றியும் ; அவ்வவ புலன்கட்கு அவ்வவ பொறிகளைச் செவ்விதின் நிறுவலின் அறிவெனச்செப்பினை ஆன்மாவுக்குக் கொள்ளவேண்டின அந்தந்த விஷயங்களுக்கேற்ற அந்தந்த இந்திரியங்களை மாறுபாடறச் செவ்வையிலே நிறுத்திக்கொள்ளுகையினாலே ஆன்மாவை அறிவென்று உன்னுடைய மதத்திலே நீ சொன்னாய் ; அறிவிலாமை கண்டனம் இதுகொண்டே ஆன்மாவுக்கு அறிவில்லையென்றது கண்டோம். அது ஏனென்னில், தான் அறிவாயிருக்கச்செய்தே தனக்குக் கொள்ளவேண்டின விஷயத்துக்குப் பொறிகளை ஏவுதலினாலே ; அணைபுலற்குப் பொறிகள் ஏவலின் அறிவொடு பொருந்தில் மற்றுஞ் சடமாயுள்ளதொன்று இந்திரியங்களைக் கொண்டு ஒரு விஷயங்களை அறியப்பெற்றோ மில்லையே ; ஆகையால், தன்னொடு பொருந்தவேண்டின விஷயங்களுக்கேற்ற இந்திரியங்களை ஏவிக்கொள்ளுகையினாலே ஆன்மா அறிவோடுங்கூடியிருக்குமென்று நீ சொல்லில் ; கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டும் ஆன்மா அறிவேயாகில் அந்த அவதரத்துக்குக் கிட்டினதொரு இந்திரியத்தைக்கொண்டு தனக்கு வேண்டின விஷயத்தைப் பொசிக்கவேண்டும் ; அது இல்லாதபடியாலே ஆன்மா அறிவன்று ; உதவியதொன்றாற்கதுமென இயற்றினர் உண்டோ என்னில் சோத்திரத்தைக்கொண்டு சத்தத்தைக் கொள்ளுவதொழிந்து யாதொன்றுங்கிட்டின இந்திரியங்களைக் கொண்டு சடக்கென ஒரு தொழிலைச் செய்தவர்களும் இந்தப் பூமியிலே உண்டோவென்னில் ; கண்டது அப்படிக் கண்டது உண்டு. அது எங்கே காணப்பட்ட தென்னில் ; மேல்நாள் கடவுளிற் கடிமலர்முடுகிய மதனன் அங்கம் அனங்கம் தங்கிடக் கிடந்தது வையின் திரளிற் செய்ய சிறுபொறி மாட்டிமூட்டி யதன்றே முற்காலத்திலே கர்த்தா யோகத்திலே எழுந்தருளியிருக்க அவனிடத்திலே மன்மதனானவன் அந்தயோகத்தைக் குலைக்கவேண்டித் தன்னுடைய மணம்பொருந்தின புஷ்ப பாணங்களைக் கொண்டு கிட்டினபொழுது அவனுடைய சரீரமானது அசரீரம் பொருந்தத் தக்கதாகச் சாம்பலாய்ப் போய்விட்டது, கண் கொண்டு செய்த தொழிந்து அவன்மேலே வைக்கோற்றிரையைக் கொண்டு வந்து குவித்துச் சிவந்திருக்கிற சிறிய நெருப்புப் பொறியை நயந்த வைக்கோலிலே மாட்டி ஊதி யெரித்த தல்லவே ; மீட்டும் இதன்றியும்; தேனமர் தவிசில் நான்முகன் உச்சி அறுத்ததுங் கருவிபொறுத்தோ அன்றே வண்டுகள் பொருந்தப்பட்டிருக்கிற தாமரைத் தவிசிலேயிருக்கிற பிரம்மாவினுடைய நடுவிற்சிரசைக் கையில் நகங்கொண்டு கிள்ளிப்போட்ட தொழிந்து ஒரு வாள்கொண்டு அறுத்துப்போட்ட தில்லையே. ஆகையால் ஆன்மாவுக்கு அறிவுண்டாகாது ; ஈசனது இயல்பு பேசுதல் தவிர்க நான் ஆன்மாக்களுக்குச் சொல்ல நீர் கர்த்தாவைக் கொண்டுவந்து சொல்லலாமோ அதை விடும், ஆன்மாக்களிலே யுண்டாகிற் சொல்லும் ; காழிமா நகர்க் கவுணியர் கடவுள் ஞானமாகியநற்பதிகங்கள் எழுதுறும் அன்பர்தம் இன்புறுமொழியாற் களிறென அணைந்த கல்மனப்புத்தன் முருட்டுச் சிரமொன்று உருட்டினரன்றி வாய்ந்த வாளொன்று ஏந்தினர் இலரே சீகாழி யென்கிற பெரிய நகரிடத்துண்டாகிய கவுணிய கோத்திரத்துள்ளவர்களெல்லார்க்குந்தலைவராயுள்ள நல்ல சம்பந்தராலே அருளிச்செய்யப்பட்ட ஞானமாயிருக்கிற நல்ல திருப்பதிகங்களைக் கைத்திருவெழுத்துச் சாத்துகிறதே விரதமாகக்கொண்டுள்ள மிகவும் பத்திமானாயிருக்கிற சம்பந்தசரணாலயருடைய இனிய வாக்கினாலே மதத்த யானையைப் போல வாது செய்யவேண்டுமென்று எதிர்த்துவந்த புத்தனுடைய மொட்டைத்தலை உருண்டுவிழத்தக்கதாகச் செய்தது வாக்குக்கொண் டல்லது கூர்மைபொருந்தி யிருக்கிறதொரு வாளையெடுத்துக் கொண்டல்லவே. ஆகையாலே ஆன்மாக்களுங் கண்டதோர் பொறியாற் கொண்டிட வல்லர்களென்று சொல்லும் ; என்றதும் ஈர்வாள் கொன்றதென்பதுபோல் தனித்துணையருளால் துணித்தனர் என்பர் என்று இப்படி இவர் செய்தாரென்று சொல்லப்பட்டதும் இந்த ஈர்வாள் எத்தனைபேரைக் கொன்றதென்றால் வாள்கொன்றதாகாமல் அந்த வாளைக்கொண்டு ஒருத்தன் கொன்றதனாற்போல ஒப்பில்லாத கர்த்தாவினுடைய அனுக்கிரகத்தினாலே புத்தனுடைய தலையைத் துண்டித்துப் போட்டாரென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். ஆதலின் வாயில் அளவினில் அறிதலின் ஏதமில் அறிவு உயிர்க்கு எய்துதல் இலதே ஆகையினால் இந்திரியங்களினுடைய எல்லையிலே நின்றறிந்து வருகையினாலே குற்றமற்றிருக்கிற அறிவு ஆன்மாவுக்குப் பொருந்துதல் உண்டாகாது. இது பெத்தத்தை மறுத்தது.
மேல் முத்தியை மறுக்கிறான் : இருட்கு விளக்கொன்று ஏந்தினர்போல மருட்கு ஞானம் மன்னுதல் உன்னும் என்றனை இருளினிடத்திலே ஒரு பண்டம் எடுக்க வேண்டினவர் கையிலே விளக்கைப் பிடித்துக்கொண்டு சென்று அந்தப் பண்டமெடுத்தாற் போல இவனுடைய அஞ்ஞான இருள் நீங்குதற்கு ஞான விளக்கு நிலைபெற்று நிற்கத் தக்கதாகக் கர்த்தா அனுக்கிரகஞ் செய்யுமென்று நீ சொன்னாய்; கருவிகள் யாவும் அசேதனம் துன்றிய உயிரும் துரியத்து அண்மையன் கருவிகள் முப்பத்தாறையும் விசாரித்துப் பார்க்குமிடத்துச் சுத்தச் சடமாயிருப்பதொன்று, அஞ்ஞானத்தினாலே நெருங்கியிருக்கிற ஆன்மாவின் தன்மையை விசாரித்துப் பார்க்குமிடத்துத் துரியத்துக்கு அண்மையன், எனவே துரியாதீ தத்திலே நிற்பானொருத்தன் ; ஆதலின் அந்தர் அனைவரும் கூடித் தீதறவருநெறி தெரியுமென்றற்றே ஆகையால் இவை தன்னிற் கூடித் திருவருளைப் பெற்று அது காட்டாகச் சிவனைப் பெறுமென்கிறது, அனேகங் குருடர் தம்மிற் கூடிக் குற்றமற்றிருக்கிறதொரு பெருவழியைக்கண்டு அந்த வழியேபோய் ஓரூரிலேசென்று தலைப்பட்டார்களென்று சொல்லுகிறதற்கொக்கும். இதன்றியும் ; நீர் நிழல் அனைய சீர்பெறு கடவுளைச் சேர்ந்தவர்க்கு இன்பம் வாய்ந்திடு மென்றனை நீரைப்போலவும் நிழலைப்போலவும் பக்ஷப்பிரதிபக்ஷமின்றி யிருக்கிற சிறப்போடுங் கூடியிருந்துள்ள கர்த்தா தன்னைவந்து கூடின பக்குவான்மாக்களுக்குப் பேரின்பம் உண்டாகத்தக்கதாக அனுக்கிரஞ் செய்யுமென்று நீ சொன்னாய் ; பாதவம் என்றும் சேதனமின்மையின் இளைத்தோர் வம்மினென்பதும் துன்பம் விளைத்தோர் தம்வயின் வெறுப்பும் ஒன்றிலதே மரமானது ஒருகாற் சடமாயும் ஒருகாற் சித்தாயும் இராமல் எப்பொழுதுஞ் சடமாயிருந்தபடியாலே வெயிலாலுந் தண்ணீர்த் தாகத்தாலும் இளைத்துப் போகிறவர்களை ஐயோ இங்கே வாருங்கோள் என்னுடைய நிழலிலேயிருந்து இளைப்பாறிப் போங்கோளென்று பிரியப்பட்டுச் சொல்லுவதுமில்லை, தன்னை அடியோடே வெட்டிச் சாய்த்துப் போட்டவர்களளவில் ஐயோ இப்படிச் செய்தார்களென்று அகிதப்பட்டதுமில்லை. இதன்றியும் ; பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம் வெய்ய பூழியின் உள்ளுற அழுங்கி ஆற்றுதலின்றி ஆறு இயங்குநர் முன் தோற்றிடுமென்று சொல்லவும் இலதால் உள்ளங்காலிலே கொப்புட்கொண்டு அது உடைந்த வாயிலே சுடுகிற புழுதியிலே பட்டழுந்தி அதனாலே ஆற்ற மாட்டாமல் எங்கே தண்ணீர் காண்போம் எங்கே ஒருநிழற் காண்போமென்று மத்தியானத்திலே வழியிலே நடந்து வருகிறவர்கள் முன்னே மரமானது சென்று தோன்றி அவர்கள் விதனத்தைத் தீர்த்துவிட்ட தென்கிற சொல்லும் இதற்கு இல்லாதபடியாலே ; இவ்வகை கடவுட்கு இயம்புதல் தவறே நீரும் நிழலும் போலுமென்கிற அவிகாரவாதம் கர்த்தாவுக்கு நீ சொன்னது மிகவும் பழுதாம். பாச அஞ்ஞானப் பழிவழி யொழிக ஈசனது அருள்வழி இயம்புவன் கேண்மதி சரீரசம்பந்தமும் நீங்காமற் கர்த்தாவையும் அவிகாரவாதஞ் சொன்ன இந்தக் குற்றத்தை யுடைத்தாகிய முத்திநெறியை விட்டு ஞான கர்த்தாவினுடைய திருவருளின் வழியைச் சொல்லுகிறேன். நீ புத்தி பண்ணிக் கேட்பாயாக. மதியென்றது அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

புவனம் யாவையும் புனிதன துருவாம்
சிவமுஞ் சத்தியும் எனத்தெளி அவற்றுள்
அசேதனம் என்றொன் றறைதற் கிலதது
சேதனன் நுகர்பொழு திரண்டும்ஒர் திறத்தே
இதுவெனும் ஒன்றை அதுவாய்ப் படுத்துப் 5
பொதுமையில் நிற்கும் போதம்என் றறிக
பொற்பணிப் பேதம் புரைவழி ஒருவழி
நற்பொனில் திகழ்வென் நயப்பதொன் றன்றால்
ஆவதும் ஆகா தொழிவதும் என்றிப்
பாவகம் உண்மை பாரா தோர்க்கே 10
பாரா தோர்எனப் பகர்தலிற் பல்லுயிர்
ஆராய்ந் துரைக்கின் அவைபிற அல்ல
பலபல பேதம் இலஎன் போரும்இல்
கண்ணின தொளிஅக் கண்ணின தெனில்அது
திண்ணிய இருளிற் செறிபொருள் தெரித்தலும். 15
இன்மை மின்மினி யெனஇரு கண்மணித்
தன்மை தானுந் தாவில ததனால்
கண்ணின துருவும் அதிற்கதிர் ஒளியும்
நண்ணருஞ் சத்தி சத்தர்கள் நடிப்பே
உலகேழ் எனத்திசை பத்தென ஒருவன் 20
பலவாய் நின்ற படிஇது என்றும்
ஊனாய் உயிராய் உணர்வாய் என்றும்
மானக் கண்ணே மணியே என்றும்
தாமே தானாச் செய்தனன் என்றும்
நாமே சிவமாய் நண்ணினம் என்றும் 25
காயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வும்
ஒயா துண்போன் தானே என்றும்
அறிவோன் தானும் அறிவிப் போனும்
அறிவாய் அறிகின் றோனும் அறிவுறு
மெய்ப்பொருள் தானும் வியந்திது வெனப்படும் 30
அப்பொருள் யாவும் அவனே என்றும்
தாய்தலைப் பட்டங் கொன்றாய்த் தென்றும்
ஏத மறநான் கெட்டேன் என்றும்
இன்னும் இன்னும் இறையோர் அளித்தவை
பன்னில் எண்ணரும் பான்மைத் தாதலின் 35
தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொருள் இவ்வியல் உவப்பென உணர்க
நுகர்பொருள் சத்திது நுகர்வோன் சத்தன்என்று
இகலறும் உணர்வுவந் தெய்துதல் அரிதே
நான் அவன் எனும்இது நவைவழி நல்வழி 40
தான்அவன் ஆகை இதுசா யுச்சியம்
இத்திறன் தெளிய உய்த்திடு மளவும்
யாதொரு வகையால் நீதிய தாகத்
தான்அறி வழியே தலைநின் றென்றும்
ஊன்உயிர் சிவத்தில் ஒடுங்கிட நடத்தி 45
மூடு முழுமலம் வீடுங் காலைக்
கருவிகள் அளவில் புரிதரும் அறிவு
சாக்கிரம் கனவு நீக்கமில் சுழுனை
துரியம் என்றிவை பயில்தரும் அறிவு
துரியா தீதம் திரியாத் தன்மையில் 50
இறையருள் உதவும் கறையற மாறி
அறிவே யாகும் பிறியாக் கருவிகள்
நிறைமுதல் அவத்தையில் அறிவில தாகத்
துரியா தீதந் தோற்றத்
திரியா ததுநற் சிவகதித் திறனே. 55

பொழிப்புரை :

மேல் நிமித்தகாரணபரிணாமவாதி தன் மதம் கூறுகின்றான்:
புவனம் யாவையும் புனிதனது உருவாம் சிவமும் சத்தியும் எனத் தெளி இந்தப் பிரபஞ்சமாகக் காணப்பட்ட உலகங்கள் இத்தனையுஞ் சிவசொரூபமாயிருப்பதொன்று, இதில் திருசியமாயுள்ள தெல்லாஞ் சத்தியின் கூறென்றும் அதிருசியமாயுள்ள தெலாஞ் சிவத்தின் கூறென்றும் நீ தெளிவாயாக ; அவற்றுள் அசேதனமென்று ஒன்று அறைதற்கு இலது அந்த இரண்டு வகைக்குள்ளும் அசேதனமாகச் சொல்லப்பட்டதொரு பொருளுமில்லை ; அது சேதனன் நுகர்பொழுது இரண்டும் ஒர் திறத்தே அதிருசியமாய் அறிவாயிருக்கிற இவன் அனுபவிக்குமிடத்து அந்த இரண்டு வகையும் ஒரு பகுதியாயிருக்கும்; இதுவெனும் ஒன்றை அதுவாய்ப் படுத்துப் பொதுமையில்நிற்கும் போதம்என்று அறிக இதுவென்று சுட்டப்பட்டதொரு விஷயத்தை அனுபவிக்குமிடத்து அதே விஷயந் தானேயாய் அந்த அறிவானது தானென்றும் விஷயமென்றும் இரண்டாகாமற் பொதுமையிலே நிற்குமென்று அறிவாயாக. இதன்றியும் ; பொற்பணிப் பேதம் புரைவழி யொருவழி பொன் ஒடன்றா யிருக்கச்செய்தே பொன்னுக்கும் பணிக்கும் பின்னஞ் சொன்னாற்போல அறிவுக்கும் பிரபஞ்சத்துக்கும் ஒருபக்ஷம் இப்படியுஞ்சொல்லலாம் ; நற்பொனில் திகழ்வு என் நயப்பதொன் றன்றால் நல்ல பொன்னினுண்டாகிய மாற்றுப் பணியினிடத்துக் காண்கையாற் பொன்னும் பணியும் ஒரு தானமாயிருக்கப் பொன்னையும் பணியையும் அறிவுக்கும் பிரபஞ்சத்துக்கும் உவமை சொன்னது என்னை யென்று நீ கேட்கில் ; ஆவதும் ஆகா தொழிவதும் என்று இப்பாவகம் உண்மை பாராதோர்க்கே இந்த உவமை ஆம்பகுதி இந்த உவமை ஆகாப்பகுதி யென்று சொல்லுகிற இந்தப்பாவகம் உண்மையைத் தரிசியாதவர்களுக்காயிருக்கும், உண்மையைத் தரிசித்தவர்களுக்கு எல்லா உவமையும் தானா யிருக்கும். உண்மைபாராதவர்களென்றும் உண்மைபார்த்தவர்களென்றும் சொன்னது கொண்டே அறிவிலே பின்னமுண்டு என்னீர் என்ன ; பாராதோரெனப் பகர்தலிற் பல்லுயிர் ஆராய்ந்துரைக்கின் அவைபிற வல்ல உண்மை தரிசியாதவர்க ளென்று நான் சொன்னதுகோண்டே நீ ஆன்மாக்களைத் தனியே ஒரு முதலென்று சொல்லிற் பலவாகச் சொல்லப்பட்டு வருகிற ஆன்மாக்களுடைய தன்மையை விசாரித்து நான் சொல்லுமிடத்து அந்த ஆன்மாக்கள் சிவனுக்கு வேறாயிருப்ப தொன்றல்ல, எல்லாஞ் சிவமுதலென்று அறி. இதன்றியும் ; பலபல பேதம் இலஎன்போரும் இல் சிவம் ஒருமுதல், ஆன்மாக்கள் ஒருமுதல், பிரபஞ்சம் ஒரு முதலென்று பலபல பேதங்களாகச் சொல்லுவார்களும் உண்டு, அது சத்தியமன்று. கண் என்று ஒரு முதல் கண்டு வருமாப்போல ஆன்மா என்று ஒரு முதல் தனித்து அறிந்துவரச் செய்தே இதை இல்லையென்பானேன் என்னில் ; கண்ணினது ஒளி அக்கண்ணினது எனில் அது திண்ணிய இருளிற் செறிபொருள் தெரித்தலும் இன்மை கண் ஒன்றைக்கண்டு வருகிற காட்சி அந்தக் கண்ணுக்கு உள்ளதாமாயின் அப்படிக்காண்கிற கண் நெருங்கியிருக்கிற இருளுக்குள்ளே பொருந்தியிருக்கிற பண்டங்களில் இது இன்ன பண்டமென்று ஒன்றைக்காணும்பகுதி கண்டோமில்லையே. இதன்றியும் ; மின்மினியென இருகண்மணித் தன்மை தானுந் தாவிலது ஒரு மின்மினி இருளை நீக்கின மரியாதி இரண்டு கண்ணின் மணியுங்கூடி இருளை நீக்கக் கண்டோமில்லையே ; அதனாற் கண்ணினது உருவும் அதிற் கதிரொளியும் நண்ணருஞ் சத்தி சத்தர்கள் நடிப்பே ஆகையால் கண்ணினுடைய வடிவும் அதனிடத்து ஆதித்தப்பிரகாசத்தால் உண்டாகிய காட்சியும் இவையெல்லாம் மனதினால் எட்டுதற்கரிய சிவம் சத்திகளுடைய நாடகமென்று அறிவாயாக. இது எங்கே காணப்பட்ட தென்னில் ; உலகு ஏழ் எனத்திசை பத்தென ஒருவன் பலவாய் நின்றபடி இதுவென்றும் திருவாசகம் சூநிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான், உலகேழெனத்திசை பத்தெனத்தானொருத் தனுமே, பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ’ என்றும் ; ஊனாயுயிரா யுணர்வா யென்றும் (அப்பர்) திருப்பாட்டு ‘ஊனாகி உயிராகி யதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயே ஆனாய், நானேது மறியாதே யென்னுள் வந்த நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய், தேனாருங் கொன்றையனே நின்றி யூராய் திருவானைக் காவிலுறை சிவனே ஞான, மானாய்நின் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியே னென்செய்கேனே’ என்றும் ; மானக் கண்ணே மணியேயென்றும் (அப்பர் தேவாரம்) ‘திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சொதி மிக்க, உருவேயென் னுள்ளுறவே ஊனே ஊனி னுள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற, கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய், அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே’ என்றும் ; தாமே தானாச் செய்தனன் என்றும் (சம்பந்தர் தேவாரம்) சூபத்திப்பேர் வித்திட்டே பரந்தவையம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவாப் பகையறும் வகைநினையா, முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக்கு ணங்கள்வாய், மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச், சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங், கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே’ என்றும் ; நாமே சிவமாய் நண்ணின மென்றும் (திருவாசகம்) சூஅவமாய தேவ ரவகதியி லழுந்தாமே, பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி, நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து, சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ’ என்றும்; காயாய்ப்பழமாய்ச் சுவையாய் நுகர்வு மோயா துண்போன்றானேயென்றும் (திருப்பாட்டு) சூதீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித், தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக், காயாகிப் பழமாகிப் பழத்தி னின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி, நீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே’ என்றும் ; அறிவோன்தானும் அறிவிப்போனும் அறிவாய் அறிகின்றோனும் அறிவுறு மெய்ப்பொருள் தானும் வியந்திது எனப்படும் அப்பொருள் யாவும் அவனே என்றும் (அற்புதத்திரு அந்தாதி) ‘அறிவானுந் தானே அறிவிப்பான் தானே, அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற மெய்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாச, மப்பொருளுந் தானே யவன்’ என்றும் ; தாய்தலைப்பட்டங் கொன்றாய்த்து என்றும் (கருவூர்த்தேவர்) திருவிசைப்பா ‘மோதலைப்பட்ட கடல்வயி னுதித்த முழுமணித் தரளம தாங்கே, தாதலைப் பட்டங் குருகியொன் றான தன்மையி னென்னைமுன் னீன்ற, நீதலைப்பட்டால் யானுமவ் வகையே நிசிசர ரிருவரோ டொருவர், காதலிற்பட்ட கருணையாய் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே’ என்றும் ; ஏதமற நான்கெட்டேன் என்றும் திருவாசகம் ‘வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந், தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக், கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென்னுள்ளமும்போய், நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ’ என்றும் ; இன்னும் இன்னும் இறையோர் அளித்தவை பன்னில் எண்ணரும் பான்மைத்து முதலே சொல்லி வந்த திருவாக்குக்களன்றி இன்னமும் மேலும் அனுக்கிரகம் பெற்ற அடியார்கள் அருளிச்செய்த செயல்களைச் சொல்லு மிடத்து எண்ணிறந்த பகுதியை யுடைத்து ; ஆதலின் தருபொருள் கொள் பொருள் தருவோன் கொள்வோன் ஒரு பொருள் இவ்வியல் உவப்பென உணர்க ஆகையால் ஒருவன் ஒருத்தனுக்குக் கொடுக்கிற பொருள், தான் கொள்ளுகிற பொருள், ஒரு பொருளைக் கொடுக்கிறவர்கள், அந்தப் பொருளைக்கொள்ளுகிறவர்கள் அவையெல்லாம் ஒரு பொருளாயிருக்கும். அந்த முறைமையுள்ளதாகிய அர்த்த மென்றறிந்து பிரியப்படுவாயாக. ஆகையால் ; நுகர்பொருள்சத்து இது நுகர்வோன் சத்தன் என்று இகலறும் உணர்வுவந்து எய்துதல் அரிதே இது இவனாற் பொசிக்கப்பட்டிருக்கிற சத்தாதி விஷயங்களும் சைதன்னியம், அந்த விஷயங்களைப் பொசிக்கிற இவனும் சைதன்னியன், இவையிரண்டும் வேறல்லவென்று மாறுபாடற அறிகிற அறிவு ஒருவனுக்குண்டாகிறது மிகவும் அரிது. இது பெத்தம்.
மேல் அவனது முத்தி : நான் அவன் எனும் இது நவைவழி நல்வழி தான் அவன் ஆகை இது சாயுச்சியம் ஆன்மாவும் தனியே ஒருமுதல் சிவமும் தனியே ஒரு முதல் என்று இங்ஙனஞ் சங்கற்பித்துக்கொண்டு நிற்கிறது குற்றத்தை யுடைத்தாகிய வழியாயிருக்கும், நல்வழியாகச் சொல்லப்படுவதுதான் ஒருமுதலறச் சிவமுதலேயாய் நின்று வருகை, சாயுச்சியமென்று சொல்லுவது இப்படிச் சரித்துக் கொண்டு வருகிறதாக இருக்கும் ; இத்திறன் தெளிய உய்த்திடு மளவும் இப்படி நான் சொன்ன உண்மை இவனுக்கு அறுதிவரத்தக்கதாக இவன் போதஞ் செலுத்துமளவும் ; யாதொரு வகையால் நீதியதாகத் தான் அறி வழியே தலைநின்று மக்கள் ஒக்கல் சம்சாரத்தோடுங் கூடியிருப்பனாகிலும், அவையிற்றை விட்டுத் தான் அறிவனாகிலும் தான் நின்றது நீதியாகக்கொண்டு இது நமக்கு முத்திக்கு வழியென்று தன்னுடைய போதத்துக்குத் தோன்றின வழியிலே தலை நின்றுகொண்டு ; என்றும் ஊன் உயிர் சிவத்தில் ஒடுங்கிட நடத்தி நனவிலுங் கனவிலும் இந்த உடம்பையும் உயிரையும் சிவத்துக்குள்ளே ஒடுங்கத்தக்கதாக இவையிற்றினுடைய தோற்றமற நடத்திக்கொண்டு வரக்கடவன் ; மூடு முழுமலம் வீடுங்காலை இதனாலே ஒன்றையும் அறியவொட்டாமற் பொதிந்துகொண்டு நின்ற ஆணவ மலமாலனது நீங்கின அவதரத்து ; கருவிக ளளவிற் புரிதரும் அறிவு சாக்கிரங் கனவு நீக்கமில் சுழுனை துரியமென்று இவை பயில்தரும் அறிவு சாக்கிரஞ் சொற்பனம் சுழுத்தி துரியமென்று சொல்லப்பட்ட நாலு அவதரத்திலும் அறிகிற அறிவுகருவிகள் அந்த அவத்தைகள் தோறும் ஏற்றக்குறைச்சல்களாக நின்று அறிகிறதாயிருக்கும். ஆகையால் இந்தக் கருவிகளெல்லாங் கழன்று ஒன்றும் அறியாமற் கிடக்கிற அவதரம் துரியாதீதம். இது கேவலம்.
துரியாரீதம் திரியாத் தன்மையில் இறையருள் உதவுங் கறையற மாறி அறிவேயாகும் இந்தத் துரியாதீதமாயிருக்கிற ஐஞ்சாம் அவத்தை இவனை விட்டு நீங்காமல் நிற்கிற அவதரத்திலே கர்த்தாவினுடைய திருவருளானது கருவிகளைக் கூட்டி இவனுடைய போதத்தைச் சீவிக்கப்பண்ணும் பொழுது ஆணவமலமானது நீங்கிக் கருவிகளோடுங் கூடி அறிவாக நிற்கும். இது சகலம்.
மேல் சுத்தாவத்தை : பிரியாக் கருவிகள் நிறை முதல் அவத்தையில் அறிவிலதாகத் துரியாதீதந் தோற்றத் திரியாதது நற்சிவகதித்திறனே இவனை விட்டு நீங்காமல், நிற்கிற கருவிகள் முப்பத்தாறும் நிறைந்து நிற்கிற சாக்கிராவத்தையிலே எல்லாக் கருவிகளுங் கழன்றிருக்கிற துரியாதீதம் தோன்றினவிடத்து அந்த அவதரம் நீங்காமல் நிலைபெற்றிருக்கிறது சிவனுடைய பகுதி.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

திறம்பெற நீஇங் கறைந்தமை கருதில்
புவனம் யாவையும் புனிதன துருஎனில்
அவன்முதற் காரணம் அன்றாம் என்னில்
நிமித்த காரணம் இனிநிகழ்த் தெனநீ
அவனே காரணம் அனைத்துமென் றறைந்தனை 5
மண்தனிக் குலாலன் தண்டசக் கராதி
காரணம் மூன்றும் ஓர்பே ரணைந்ததித்
தாரணி அதனிற் கண்டது சாற்றுக
அத்தன் இயற்றும் இத்தொழில் பிறர்க்கோ
தனக்கோ வீணோ எனக்கீ தியம்புக 10
வீண்எனிற் பித்தர் மாணுறு தொழில்போல்
தலைமையும் அறிவும் இலதென இகழ்வர்
தனக்கெனில் அஃதும் இசைப்பதொன் றன்றே
தன்போல் அறிஞருந் தலைவரும் இலரால்
மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே 15
பிறர்க்கெனிற் பிறரும் பிறர்க்காம் பொருளும்
பொருட்கமை கருவியும் அதற்குபா தானமும்
செய்கையும் என்றோர் ஐவகைத் தானொடு
மாறாச் சைவர் கூறார் என்றால்
நின்சித் தாந்தம் அவசித் தாந்தம் 20
என்சித் தான்ற வசித்தைமற் றீனாது
அசித்தில தென்னில் வசித்ததென் உலகில்
உலகா யதனும் பூதக் கூட்டஞ்
சலமேற் கொப்புள் தகுமெனச் சாற்றினன்
தீய கருமச் சீனர்சா வகர்பிறர் 25
நேயம் இல்லென நிகழ்த்தினர் இலரே
காண்டல் விரோத நிற்பிறர் கதித்திலர்
ஈண்டுன துரைக்குமற் றியார்கரி உடலும்
சித்தோ சித்தின் சேர்வாற் சித்தெனில்
கடப டாதியும் உடற்கட் சிதைவென் 30
தாவர உயிர்போல் தனுஒழிந் தவற்றுள்
மேவிய உணர்வு விரவிடும் என்னிற்
சடத்துயிர் போலெனச் சாற்றினை ஆகலின்
உடற்குயிர் இறையை ஒழிந்துண் டன்றே
தருதிட் டாந்தமுந் தாட்டாந் திகமும் 35
ஒருபொரு ளாகில் உவமை பெறாதே
ஒன்றே ஆகில் உடற்கிறை தாபரத்து
ஒன்றிய நிலையில் விசேடமென் உரைக்க
பூதச் சேர்வைப் பேதமென் றறையிற்
சேர்வைப் பேதம் என்கொடு செப்புக 40
கருமத் தளவில் வரும்எனிற் பித்தர்
உரையில் திகழும் உணர்வொழிந் தனையே
கருமஞ் செய்வோன் கடவுளன் றுடலும்
மருவிநின் றிருவினை வாளா நுகரா
கடவுளும் உடலின் கண்படல் துஞ்சல் 45
இடர்நலம் உறுதல் இறங்குதல் ஏறுதல்
எவ்வகை யேனுஞ் செய்கைஇன் றாதலும்
பலகலை உலகில் நிலவுத லானும்
எண்ணரும் பொருளும் இரவியும் ஒழியக்
கண்ணென ஒன்று காண்கையி னாலும் 50
பாசப் பகுதியும் ஈசனும் ஒழியப்
பசுவும் உண்டென் நிசையவேண் டின்றே
இதுவெனும் ஒன்றை அதுவாய்ப் படுத்தது
பொதுமையில் நிற்கும் மாயையின் பொற்பெனப்
பொற்பணி யாவும் பொன்னாந் தன்மையின் 55
நிட்கள சகளத் திருவுரு நிலையும்
ஈச னேஎனப் பேசுவர் அன்றி
அருஉரு வாகி வரும்உல கென்னில்
அனைத்தும் மாயை எனத்தெளி கிலையே
ஆவதும் ஆகா தொழிவதும் இலதெனும் 60
பாவகம் உலகா யதனது பான்மை
கட்கொலை வெகுளி காமம் களவுகள்
உட்படும் இவைவிட மொழியா தார்இலர்
சோம பானம் சுராபா னங்கள்
ஆமென நூல்கள் ஆர்செவிப் பறைந்தன 65
மறையோன் புலைச்சியை மருவும் என்பது
முறையோ எனில்அது புனைமொழி யென்னில்
சாதி பேத +நீயினித் தவிரினும்
மேதியை ஏறு விழையா விரும்பும்
கண்ணின துருவும் அதிற்கதிர் ஒளியும் 70
நண்ணரும் சத்தின் நாடகம் எனில்அதற்
கேதுவும் பயனும் ஒத வேண்டும்
நின்மொழி விரோதம் நீடுல கியற்கையும்
தன்மசாத் திரமுஞ் சகலமும் என்செயும்
உலகே ழெனஇறை பலவாந் தன்மை 75
கடமொடு சராவம் +கலச மாதிகள்
அடலுறு குயவன் ஆயினன் என்றால்
தாமே யாகா அவைதான் ஆகான்
ஆயினன் என்ப தாக்கினன் எனவே
ஆனாய் என்ப தனைத்தும் அவ்வவை 80
தான்ஆ காமையைச் சாற்றிடும் என்க
தாமே எனும்இத் தனிஏ காரம்
அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட்டு
ஒழிந்திலர் பிறிவிலர் எனும்இவை உணர்த்தும்
காயும் பழமும் சுவையும் நுகர்வ 85
தாயவன் தானும் அவன்முதற் றென்னும்
அகிலமுந் தெளிய அறிவோன் தானும்
அகிலமும் அறிஞரை அறிவிப் போனும்
அறிஞர்க் கறிவாய் அறிகின் றோனும்
அறிவிற் கறிபொருள் ஆவோன் தானும் 90
அகிலமும் மேனி யானவன் என்னும்
தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொரு ளாயின் உவப்புண் டென்க
நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டில்
இகலறக் கிடையா தொழிந்ததென் நிரயமும் 95
வேண்டா ராயினும் மெய்யுறு வியாதிகள்
ஈண்டா தொழியா திறைக்கிவை ஈடல
சத்தியுஞ் சிவமும் தாமே நுகரும்என்று
இத்திறன் உணர்வுவந் தெய்துவ தெவர்க்கே
தமக்கே என்னில் தாம்உண ராமையும் 100
அமைப்பற உணர்தலும் அவர்க்கடை வன்றே
நானும் அவனும் நவையும் நலனும்
தான்அவன் ஆகையும் நின்சா தனத்தில்
சகயோ கத்தைச் சாயுச்சி யம்எனப்
பகர்வது பதிபசு பாசத் தவர்க்கே 105
யாதொரு வகையென ஓதிய திறைநூல்
சொன்னவற் றொன்றன் றென்னில்வீ டெளிதே
தான்அறி வழியே தலைப்பொருள் பிடிக்கின் மேல்நிகழ் பலமும் வீடளித் திடுமே
நிலையாக் கருவியை நிலையாக் கருதிப் 110
புலையா டுதலும் உலகா யதன்பொருள்
குட்டியம் இன்றிநற் கோலம் எழுதுதல்
இட்டம தாயிற் கருவியும் இடங்களும்
கருத்துற உரைக்கத் தெரித்திடும் மதித்தது
அறிவொன் றில்லோர்க் கிறையருள் உதவுதல் 115
பிறிவறி வரிய செறிஇருள் இடத்தோர்
அந்தகர்க் காண வந்தோர் எம்மை
நீவிரும் காண வேணும் என்றாங்கு
எடுத்தொரு தீபம் கொடுத்ததை ஒக்கும்
இச்செயற் கிறைவன் கொச்சையன் அன்றே 120
கருவி வசத்தில் தெரிவுறக் காண
வேண்டுநர் இலரால் ஈண்டறிவு யாவுஞ்
சிவமே என்று செப்பினை அவம்உறு
பொறிபுலன் அறியா அறிவது பிரமம்
என்றோர்க் குன்போல் இடர்ப்படல் இலதே 125
ஏற்றம் கருவி இருபதோ டிரண்டும்
போற்றும்ஓர் அவத்தையும் புகல்திரி மலமும்
ஈசனும் உயிரும் பேசினை அஃதொழிந்து
ஒன்றே யாகும் என்ற நின்இயல்பு
தாயர் மனைவியர் தாதியர் தவ்வையர் 130
ஆயவர் எவரையும் ஓர்மையிற் காணும்
கோகழி தூர்த்தர் கொடுந்தொழில் தகுமே
ஆக மற்றதன் அருள்நிலை தன்நிலை
ஏக நாயகன் ஆகிய இறைநிலை
நாசமில் பாசம் வீசிய வியன்நிலை 135
இனையவை யொன்றும் நினைவினும் இன்றி
உண்டெனும் உணர்விற் கண்டது கருதில்
இழுக்கெனும் புலன்வழி ஒழுக்கமும் அதுவாய்க்
கொண்டு பண்டையில் எண்தரு மடங்கு
வந்தவா செய்யத் தந்ததை யன்றே 140
புன்மைகள் நீங்க உண்மை கேண்மதி.

பொழிப்புரை :

மேல் அவனைச் சைவன் மறுக்கிறான்:
திறம்பெற நீ இங்கு அறைந்தமை கருதில் நீ நன்றாகக்கொண்டு இவ்விடத்து உன் பெத்த முத்திகள் சொன்னவற்றை விசாரிக்குமிடத்தில் எப்படியிருந்தது ; ஏன் இதற்குக் குற்ற மென்னை; புவனம் யாவையும் புனிதனது உருவெனில் இந்தப் பிரபஞ்சமாகக் காணப்பட்டிருக்கிற உலகங்களெல்லாம் சுத்தனாயுள்ள சிவனுடைய சொரூபமென்று சொல்லில்; அவன் முதற் காரணம் விசுவாதீதனாயுள்ள அந்தச் சிவன் முதற் காரணமாக வேண்டும் ; அன்றாமென்னில் அவன் முதற்காரணமல்லவென்று நீ சொல்லின் ; நிமித்த காரணம் இனி நிகழ்த்தென நீ அவனே காரணமனைத்தும் என்று அறைந்தனை அவனை நிமித்த காரணமென்று சொல்லென்று நான் சொல்ல நீ பின்னையும் அந்த விசுவாதீதனாயுள்ள சிவன் தானே நிமித்தகாரணமும் துணைக்காரணமும் முதற்காரணமு மெல்லாமென்று சொன்னாய் ; மண் தனிக் குலாலன் தண்டசக்கராதி காரண மூன்றும் ஓர் பேர் அணைந்தது இத் தாரணியதனிற் கண்டது சாற்றுக மண்ணாகிய முதற்காரணமும் ஒப்பில்லாத குயவனாகிய நிமித்தகாரணமும் அவனுக்குக் கருவியென்று சொல்லப்பட்ட தண்ட சக்கராதியாயுள்ள துணைக்காரணமும் இவை மூன்றும் மூன்று காரணமாயிருப்பதொழிந்து மூன்று காரணமும் ஒருகாரணமா யிருக்கிறது இந்தப் பூமியினிடத்துக் கண்டதுண்டாகிற் சொல்லுவாயாக. நிமித்த காரணமென்றது சிவனை, துணைக்காரண மென்றது சத்திகளை, முதற்காரண மென்றது விந்து மோகினி மான் என்கிற உபாதானங்களை. இதன்றியும் ; அத்தன் இயற்றும் இத்தொழில் பிறர்க்கோ தனக்கோ வீணோ எனக்கு ஈது இயம்புக கர்த்தா செய்கிற இந்தப் பஞ்சகிருத்தியம் பிறர் நிமித்தமாகச் செய்து வருகிறானோ, அல்லது தன் நிமித்தமாகச் செய்து வருகிறானோ, இவை யிரண்டுமன்றிச் சும்மா பயனற்றதாகச் செய்து வருகிறானோ இதை எனக்குத் தெரியச் சொல்லுவாயாக. சொல்லமாட்டாயாகில் நான் சொல்லக் கேட்பாயாக ; வீண் எனில் பித்தர் மாணுறு தொழில்போல் தலைமையும் அறிவும் இலதென இகழ்வர் சும்மா பயனற்றதாகச் செய்தானாமாகிற் பித்தராயுள்ளவர்கள் மாட்சிமைப்படச் செய்த தொழிலினைப்போல இருக்கையாற் கர்த்தாவுக்குச் சர்வ முதன்மையும் சர்வஞ்ஞத்துவமுமில்லை யென்று சொல்லிப் பெரியோர்கள் இகழாநிற்பர்கள். ஆகையால் வீணாகச் செய்தானென்று சொல்ல வொண்ணாது ; தனக்கெனில் அஃதும் இசைப்பதொன் றன்றே கர்த்தா தன் நிமித்தமாகச் செய்தா னென்னில் அதுவும் முன் சொன்னதுபோல பொருந்துவ தொன்றன்று. அதேதென்னில் ; தன்போல் அறிஞருந் தலைவரும் இலரால் மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே தன்னைப் போலச் சர்வஞ்ஞத்துவமுஞ் சர்வ முதன்மையும் பிறரொருவர்க்கு இல்லாதபடியாலே இவன் மின்போலுந் தோன்றி மறைந்து போகிற பிரபஞ்ச இயற்கையை வேண்டிச் செய்தா னென்னும் அது மிகவும் பழுதாம். ஆகையால் தன் நிமித்தமாகச் செய்தானென்று சொல்லவு மொண்ணாது ; பிறர்க்கெனில் பிறரும் பிறர்க்காம் பொருளும் பொருட்கு அமை கருவியும் அதற்கு உபாதானமும் செய்கையும் என்று ஒர் ஐவகைத்தானொடு மாறாச் சைவர் கூறார் இந்தத் தொழில் கர்த்தா பிறர் நிமித்தமாகச் செய்தா னென்னில் தன்னையொழிந்து பிறரென்று ஒரு முதலும், அந்தப் பிறரென்று சொல்லப்பட்டவர்களுக்கு வேண்டின விஷயமும், அந்த விஷயங்களைப் பிறர் பொசிக்கத்தக்கதாக அதற்கேற்ற கருவிகளும், அந்த இந்திரியங்கள் தோன்றுதற்கு ஒர் உபாதானமும், இந்த உபாதானத்திலேநின்றும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கிற சிவனோடுங்கூட இந்த ஐந்துவகைக்கும் மாறுபாடாகச் சைவராயுள்ளவர்கள் சொல்லார்கள் ; என்றால் நின் சித்தாந்தம் அவசித்தாந்தம் என் என்று இப்படி யிருக்கையால் நீ கொண்டிருக்கிற சித்தாந்தம் சித்தாந்த மல்ல வென்று நீதானே சொல்லு. இதன்றியும் ; சித்து ஆன்ற அசித்தை மற்று ஈனாது பிரபஞ்சமெல்லாஞ் சிவனிடத்திலே தோன்றுமென்றாய், சித்தாயுள்ள சிவம் அசித்தாயுள்ள பிரபஞ்சத்தைத் தன்னிடத்திலே நின்றுந் தோற்றுவியாது ; அசித்து இலது என்னில் அசித்தென்கிற வசனம் பிரபஞ்சத்துக்கில்லைக் காணும், எல்லாஞ் சிற்சொரூபந் தானே யென்னில் ; வசித்தது என் உலகில் இந்த உலகத்தின் கண்ணே பிரபஞ்சம் சடமாயிருப்ப தொன்றென்று சாத்திரங்கள் சொல்லுவானேன்? இதன்றியும் ; உலகாயதனும் பூதக்கூட்டஞ் சலமேற் கொப்புன் தகுமெனச் சாற்றினன் உலகாயதன் அளவாகப் பூதக்கூட்டமா யிருக்கிற தேகாதிப் பிரபஞ்சத்தை நீர்க்குமிழிபோல நிலைநிற்பதொன் றல்லவென்று சொன்னான் ; அப்படி யிருக்கச் செய்தே நீ இந்தப் பிரபஞ்சத்தைத் சிற்சொரூபமென்று சொன்னது அர்த்தமன்று.
மேல் அவன் ஆன்மா இல்லையென்ன உண்டென்று மறுக்கிறான்: தீய கருமச் சீனர் சாவகர் பிறர்நேயம் இல்லென நிகழ்த்தினர்இலரே பொல்லாத் தொழிலுக்கு ஏதுவாயிருக்கிறபுத்தர்கள் சமணர்கள்மற்று முண்டான சமயிகள் இவர்கள் அனைவரும் இந்தச் சரீரத்திலே ஓர் அறிவு உண்டென்று சொல்லுவார்கள் ; அத்தனை யொழிந்து உன்னைப் போலே ஆன்மா இல்லையென்று சொல்லுவார் இல்லை ; காண்டல் விரோதம் நிற்பிறர் கதித்திலர் பிரத்தியக்ஷ விரோதம் நீ நாட்டினாற் போலப் புறச்சமயத்தி லுள்ளவர்களும் இப்படிச் சொன்னவர்கள் இல்லை ; ஈண்டு உனது உரைக்கு மற்று யார் கரி இவ்விடத்து நீ ஆன்மா இல்லையென்று சொல்லுகிற இதற்கு ஆர் சாட்சி? இன்னார் சாட்சி யென்று ஒருவரைக் காட்டு. இதன்றியும்; உடலும் சித்தோ இந்தச் சரீரமும் அறிவோ அல்லவோ; சித்தின் சேர்வாற் சித்தெனில் அறிவோடுங் கூடி வாதனைப்பட்டு வருகையினாலே இந்த உடலும் அறிவென்று நீ சொல்லில்; கடபடாதியும் உடற்கண் சிதைவு என் சால் குடஞ் சட்டி யாதியா யுள்ளவையும் புடைவை சீலையாதியாயுள்ளவையும் இந்த உடலைப்போல அவையும் ஒர் உடல்களா யிருக்கச்செய்தே இந்த உடலைப்போலே சஞ்சாரமின்றிக் கிடப்பானேன்; தாவர உயிர்போல் தனு ஒழிந்தவற்றுள் மேவிய உணர்வு விரவிடும் என்னில் இந்த உடலிலே பொருந்திநிற்கிற பேரறிவு எல்லா உரூபங்களிலுங் கலந்துகொண்டு நிற்கும்படி நிற்கச் செய்தேயும் இந்த உயிர்கூட நிற்கிற உடம்பிலே தாக்கி நிற்கிறாப்போல மற்றுள்ள உரூபங்களிடத்திலே தாக்கி நில்லாதென்று நீ சொல்லில் ; சடத்து உயிர்போலெனச் சாற்றினையாகலின் உடற்கு உயிர் இறையை ஒழிந்துண்டன்றே உயிர் நிற்கிற உடம்புபோல உயிரில்லாத உடம்புகளில் அந்தப் பேரறிவு பொருந்தாதென்று நீ சொன்னாயாகில், இந்த உடலுக்குக் கர்த்தாவை யொழிந்து ஓர் உயிர் உண்டாகவேணும். நான் திட்டாந்தஞ் சொன்னது கொண்டு ஏன் அப்படிச் சொல்லுகிறீரென்று நீ சொல்லில் ; தரு திட்டாந்தமுந் தாட்டாந்திகமும் ஒரு பொருளாகில் உவமை பெறாதே ஒன்றுக்கு உவமையாகச் சொல்லப்பட்ட திட்டாந்தமும் அந்த உவமை பற்றி நின்ற தாட்டாந்தமும் ஒரு பொருளா யிருக்குமாயின் பொன் போலுங் கொன்றை என்கிற உவமை இந்த உலகத்தின்கண் உண்டாகாது ; ஒன்றேயாகில் உடற்கு இறை தாபரத்து ஒன்றிய நிலையில் விசேடம் என் உரைக்க நீ சொன்னாற்போலே பசுமுதலின்றிப் பதிமுதல் ஒன்றுமேயாக அந்தப் பதி முதல் எங்கும் ஒத்துநிற்கச்செய்தே தாபரங்களைப் பார்க்க இந்த உடலுக்கு விசேஷமுண்டானது ஏதென்று சொல்லுவாயாக ; பூதச்சேர்வைப் பேதமென்று அறையில் பூதங்கள் உரூபங்களாகக் கூடுகிற கூட்டத்தில் உண்டாகிய பேதங்கள் கொண்டு இருக்கும் இந்த உடலுக்கு விசேஷமுண்டான தென்று நீ சொல்லில் ; சேர்வைப் பேதம் என்கொடு செப்புக பூதங்கள் கூடுகிற இடத்திலே பேதந்தான் வந்தது ஏதுகொண்டென்று நீ சொல்லுவாயாக ; கருமத்தளவில் வருமெனில் கன்மத்தைச் செய்தபடியினாலே அந்தக் கன்மத்துக்கீடாக விசேஷமும் விசேஷ ஹீனமும் உண்டானதென்று நீ சொல்லில் ; பித்தர் உரையில் திகழும் உணர்வு ஒழிந்தனையே நீ கன்மத்துக்கீடாக வருமென்றது பித்தர் சொல்லுஞ் சொல்லுப்போல விளங்காநின்றது. நீயும் அறிவு கெட்டவனாயிருந்தாய் ; கருமஞ் செய்வோன் கடவுளன்று யாதொரு கருமத்தைச் செய்து வருகிறவனைக் கர்த்தாவென்று சொல்லப்படாது, ஆகையால் இந்தக் கன்மஞ் செய்தது சிவமல்ல ; உடலும் மருவி நின்று இருவினை வாளா நுகரா இந்த உடலுஞ் சடமாயிருந்தபடியாலே ஓர் ஏதுவின்றிப் பிராரத்த கன்மத்தைத் தானாகப் பொசிக்க மாட்டாது. சிவன் கூடி நின்று பொசித்தா னென்னில் ; கடவுளும் உடலின்கண் படல் துஞ்சல் இடர் நலம் உறுதல் இறங்குதல் ஏறுதல் எவ்வகையேனுஞ் செய்கை இன்றாதலும் வாக்குமனாதீதனா யிருக்கிற சிவனும் கன்மத்துக் கீடாக ஓர் உடலினிடத்து வந்து பொருந்துதல், பிராரத்தம் பொசித்துத் தொலைந்தவாறே அந்த உடலை விட்டு விடுதல், இந்த உடலோடுங் கூடிநின்று புண்ணிய பாவங்களைப் பொசித்துக்கொண்டு வருதல், சாக்கிராதியாயுள்ள அவத்தைகளிலே இறங்கி யதீதப்பட்டுக் கிடத்தல், மீளவும் உணர்த்து முறைமையினாலே ஏறிச் சாக்கிரத்தானத்திலே வருதல் இவையெல்லாம் எந்தப் பிரகாரத்திலுங் கடவுளுக்கில்லாத படியாலும் ; பலகலை உலகில் நிலவுதலானும் கடவுள் சர்வஞ்ஞனான படியாலே அவனுக்கு வேண்டுவதில்லை, பாசஞ் சடமானபடியாலே அதற்கும் வேண்டுவதில்லை, இந்த இரண்டு வகைக்குமின்றிப் பலவகையாகச் சொல்லப்பட்டிருக்கிற சாத்திரங்கள் இந்தப் பிரபஞ்சத்திலே பொருந்தி வருகையினாலும் ; எண்ணரும் பொருளும் இரவியும் ஒழியக் கண்ணென ஒன்று காண்கையினாலும் எண்ணிறந்த பொருள்களாயிருக்கிற பிரபஞ்சப் பதார்த்தங்களும், இவையிற்றையெல்லாம் விளக்கஞ் செய்துகொண்டு நிற்கிற ஆதித்தனும் இவையிரண்டையு மின்றிக் கண் என்று ஒருமுதல் நடுவே நின்று கண்டு வருகையினாலும் ; பாசப் பகுதியும் ஈசனும் ஒழியப்பசுவும் உண்டென்று இசைய வேண்டின்றே பாசத்தினுடைய பகுதியும் பதியினுடைய பகுதியும் இரண்டு மொழியப் பசுவினுடைய பகுதியும் உண்டென்று நீ பொருந்த வேண்டும் ; இதுவெனும் ஒன்றை அதுவாய்ப்படுத்து அது பொதுமையில் நிற்கும் மாயையின் பொற்பு என இதுவென்று சுட்டப்பட்டதொரு விஷயத்தை யனுபவிக்குமிடத்து அந்த விஷயந்தானேயாய் அந்த அறிவானது பொதுவிலே நிற்குமென்னும் அதை மாயா மயக்கினுடைய பெருமையென்று அறிவாயாக ; பொற்பணி யாவும் பொன்னாந் தன்மையின் நிட்களசகளத் திருவுரு நிலையும் ஈசனே எனப் பேசுவர் பொன்னிலேநின்றும் உண்டாகப்பட்ட பணிகளெல்லாம் அந்தப் பொன்னையின்றி வேறோரு முதலாயிராமல் அந்தப் பொன்னேயாயிருந்த தன்மைபோல, அந்த மா அரூபமாயுள்ள நிட்களமும் அந்த நிட்களத்திலேநின்றுந் தோன்றின சகளமாகிய இச்சா ஞானக் கிரியா சொரூபமும் இவை யிரண்டுஞ் சிவனுடைய சொரூபமாயிருக்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள் ; அன்றி அரு உருவாகிவரும் உலகு என்னில் அதன்றி அருவாயுள்ள சிவம் உருவாயுள்ள பிரபஞ்சமா யிருக்குமென்று நீ சொல்லில் ; அனைத்தும் மாயையெனத் தெளிகிலையே பிரபஞ்சம் மாயையாயிருக்கையால் இந்தப் பிரபஞ்சத்துக்கு உபாதானமாயிருக்குமென்ற சிவமும் மாயையென்று தெளிகிறாயில்லை. எனவே, பிரபஞ்சத்துக்கு உபாதானம் சிவமல்ல மாயை யென்பது கருத்து. இதன்றியும் ; ஆவதும் ஆகாது ஒழிவதும் இலதெனும் பாவகம் உலகாயதனது பான்மை இது ஆம்பகுதி இது ஆகாப்பகுதி இவை யிரண்டுமில்லை என்கிற பாவகம் சைவராயுள்ளவர்கள் கொள்ளும் பகுதியல்ல, உலகாயதனுடைய பக்ஷமாயிருக்கும். ஞானவான்களுக்கு ஒன்று மில்லையென்னில்; கள் கொலை வெகுளி காமம் களவுகள் உட்படும் இவைவிட மொழியாதார் இலர் மதுபானஞ் செய்கிறது, கொன்று பறிக்கிறது, கோபித்துச் சொல்லுகிறது, பரதாரகமனஞ் செய்கிறது பிறருடைய சொத்தைக் களவு காண்கிறது, இப்படி இன்னுஞ் சொல்லப்பட்ட பொல்லாங்குக ளெல்லாவற்றையும் ஆகாது இவையிற்றைவிட்டுவிடுங்கோளென்று சொல்லாமலிருப்பார் ஒருவருமில்லை. இப்படிக்கொத்தவை யெல்லாவற்றையுஞ் செய்தாலும் ஞான வான்களுக்கும் தோஷம் ஏறாதென்று சாத்திரஞ் சொல்லுமெனில் ; சோமபானம் சுராபானங்கள் ஆம் என நூல்கள் ஆர் செவிப் பறைந்தன சோமபானஞ் செய்கிறது சுராபானஞ் செய்கிறது இவை இரண்டுங் கொள்ளுகிறது ஆமென்று ஒருத்தரும் அறியாமல் நூல்களானது ஆருடைய செவியிலே சொல்லிவைத்துப் போயிற்று ? இவை யிருக்க ; மறையோன் புலைச்சியை மருவுமென்பது முறையோ வெனில் பிராமணனாயுள்ளவன் பறைச்சிக்கு ஆசைப்பட்டு அவளைக் கிரீடிக்கிறது முறைமையோ முறைமைக்கீனமோ வென்று நான்கேட்க ; அது புனைமொழி யென்னில் பிராமணன் பறைச்சியைப் பரிசிக்கலாகாதென்று சொல்லுகிறது ஒரு வரம்புகட்டிச் சொன்ன தொழிந்து பிராமணன் பறைச்சியோடுங் கூடினால் அவளிடத்திலே இவனுக்கு இன்பம் விளைந்தில்லையோ என்று நீ சொல்லில் ; சாதி பேதம் நீ இனித்தவறினும் மேதியை ஏறுவிழையா பிராமணனென்றுஞ் சண்டாளனென்றும் இத்தனை காலமும் வழங்கிவந்த சாதித் தன்மையை நீ தவிர்ந்துவிட்டாயாயினும் எருமையை இடபமானது விஷயமாக விரும்பாது. ஆகையால் ஞானவான்களுக்கு எல்லாம் ஆம் என்கிறது அர்த்தமாகாது ; விரும்புங் கண்ணினது உருவும் அதிற் கதிரொளியும் நண்ணருஞ் சத்தின் நாடகமெனில் நீவிரும்பப்பட்ட கண்ணினுடையவடிவும் அதிலுண்டாகிய ஆதித்தனுடையகாட்சியும் மனதினாற் கிட்டவொண்ணாதிருக்கிற சத்தாகிய சிவத்தினுடைய நடிப்பாயிருக்குமென்று நீ சொல்லில் ; அதற்கு ஏதுவும் பயனும் ஓத வேண்டும் அப்படிச் சிவன் கண்கொண்டு ஒரு ரூபத்தைக் கண்டு வந்தானாமாயின் சிவனுக்கு அப்படிஒரு குற்றமுண்டென்றும், அந்தக் குற்றம் நீங்கிக் கொள்ளுகைக்கு இப்படிப் பொசித்தானென்றும் சொல்லவேண்டும் ; நின் மொழி விரோதம் நீடுலகியற்கையும் தன்ம சாத்திரமுஞ் சகலமும் என் செயும் சிவன் விசுவா தீதனா யிருக்கச் செய்தே அவன் இப்படிப் பொசித்து வருவனென்று நீ சொல்லுகிற சொல் விரோதம். இன்னான் நல்லவன் இன்னான் பொல்லாதவ னென்று நிலைபெற்று வராநிற்கிற உலகிலுள்ளார் அங்கீகரித்துக் கொண்டு வருகிற முறைமையும், இன்னதுசெய்யப் புண்ணியம் இன்னது செய்யப் பாவம் இந்தப் பாவஞ் செய்தவர்களை இராசாவானவன் தண்டஞ் செய்யக்கடவனென்று தன்மசாத்திரஞ் சொல்லுகிற முறைமையும் மற்று இப்படிச்சொல்லப்பட்டவையும் ஆன்மாவென்று ஒன்றில்லையாயின் இவையெல்லாம் என்ன செய்யும் ? இதன்றி ; உலகேழென இறை பலவாம் தன்மை ‘உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருத்தனுமே, பலவாகி நின்றவா’ (8. திருத்தோணோக்கம் 5) என்ற திருவாக்கின் தன்மை ; கடமொடுசராவம் கலசமாதிகள் அடலுறு குலவன் ஆயினனென்றால் தாமே ஆகாஅவை தான் ஆகான் ஆயினன் என்பது ஆக்கினனெனவே குடத்தோடே கூடச் சட்டிகள் கலசங்கள் இவையாதியாகச் சொல்லப்பட்டு வருகிற பாத்திரங்களெல்லாம் வெற்றிபொருந்தி யிருக்கிற குயவனாயினானென்று சொன்னால் இந்தக் குயவன் அந்தப்பாத்திரங்களாகினா னல்லன், அந்தப் பாத்திரங்கள்தான் இந்தக் குயவனாகிறதல்ல ; ஆயினனென்பது ஆக்கினனெனவே என்று இலக்கணங்களிற் சூத்திரஞ் சொல்லுகையால் ; ஆனாயென்பது அனைத்தும் அவ்வவை தான் ஆகாமையைச் சாற்றிடுமென்க வானானாய் மண்ணானாய் என்று (விரோதமும். +அகல்சால் காகம், கலசாதி கணங்கள் பாடபேதம்.) இப்படி ஆனாய் ஆனாய் என்று சொல்லப்பட்டதெல்லாம் அந்தச் சிவன்தான் அந்த வானும் மண்ணுமாகா னென்பதனைச் சொல்லியிடுமென் றறிக ; தாமே யெனும்இத் தனியேகாரம் தாமேதா மாய்ச் செய்யுமென்கிற ஒப்பில்லாத ஏகாரத்தோடுங் கூடிக்கொண்டிருக்கிற திருவாக்கு; அழிந்திலர் அதுவே யாய்த்திலர் அதுவிட்டு ஒழிந்திலர் பிறிவிலர் எனும் இவை உணர்த்தும் தாங்கள் அழிந்தார்களுமில்லை அந்தச் சிவமுதலானார்களுமில்லை, அந்தச் சிவமுதலையின்றிக் காரியப்பட்டார்களுமில்லை, அந்தச் சிவமுதலுக்கு வேறாயிருந்தார்களு மில்லையென்று இப்படியிருக்கும் சொல்லு ; காயும் பழமும் சுவையும் நுகர்வதாயவன்தானும் அவன் முதற்று என்னும் (அப்பர் : 6. 94.5) சூகாயாகிப் பழமாகிக் பழத்துள்நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானேயாகி’ என்ற திருவாக்குக் காயும் அவனாலே உண்டானது, பழமும் அவனாலே உண்டானது, பழத்தின் இரதமும் அவனாலே உண்டானது, அந்த இரதங்களை நுகர்வானும் அவனாலே உண்டானவன், ஆகையாலே அவையெல்லாஞ் சிவன்முதலாக உண்டானதென்று சொல்லும் ; அகிலமும் தெளிய அறிவோன் தானும் அகிலமும் அறிஞரை அறிவிப் போனும் அறிஞர்க்கு அறிவாய் அறிகின்றோனும் அறிவிற்கு அறிபொருளாவோன் தானும் அகிலமும் மேனியானவன் என்னும் எல்லாவற்றையும் மயக்கமற அறிவானாயுள்ளவனும், அறியும் பகுதியுள்ளவர்களுக்கு எல்லாவற்றையும் அறிவிப்பவனா யுள்ளவனும், அறியும் பகுதியை யுள்ளவர்களுக்கு அவர்களுடைய அறிவாய் நின்று அறி யும் பகுதியை யுடையவனும், அறிகிறவர்களுடைய அறிவிற்கு அறியப்படும் பொருளாயுள்ளானும் என்ற திருவாக்கு சர்வத்தையுஞ் சிவன் திருமேனியாக உடையவனென்று சொன்னதாயிருக்கும் ; தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன் ஒருபொருளாயின் உவப்பு உண்டென்க ஒருவன் கொடுக்கப்பட்ட பொருள், தான் கொள்ளப்பட்ட பொருள், ஒரு பொருளைக் கொடுக்கிறவன், அந்தப் பொருளைக் கொள்ளப்பட்டவன் இவையெல்லாம் ஒரு பொருளாயிருக்குமாயின் மிகவும் பிரியம் வருமென்க. இப்படியுஞ் சொல்லுவார்களோ; நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டில் இகலறக் கிடையாது ஒழிந்ததென் நிரயமும் பொசிப்பானொருவனுக்கு ஒருபொருளைப் பொசிக்க வேண்டினவிடத்து அந்தப்பொருள் அவனுக்கு மாறுபாடின்றி வந்து கூடுவதில்லை. எல்லாப் பொருளும் ஒரு பொருளாயிருக்குமாயின் அவன் நினைத்தபொழுதே பொசிக்கவேண்டாமோ ? அது கண்டோமில்லை. ஆகையால் எல்லாம் ஒன்றாயிருக்குமாயின் நரகதுக்கமுண்டாகாது. அதேனென்னில் ; வேண்டாராயினும் மெய்யுறு வியாதிகள் ஈண்டா தொழியாது குன்மம் சூலைமுதலாயின வியாதிகளை அனுபவிக்க வேண்டா என்றிருப்பர்கள் இருந்தாலும் சரீரத்திலே உண்டாகப்பட்டிருக்கிற வியாதிகள் இவர்களை வந்து பொருந்தி அனுபவியாமல் விடாது. ஆகையால் நீ எல்லாம் ஒன்றென்று சொன்னது அர்த்தமன்று. ஆன்மா இல்லை எல்லாஞ் சிவமே அனுபவிக்கிறதென்றாய் ; இறைக்கு இவை ஈடல வேண்டின பொருள் கிட்டாமலும் வேண்டாத வியாதிகள் வந்து கிட்டியும்இவையிற்றினால் உண்டாகிய வருத்தம் ஆன்மாவுக் கொழிந்து கர்த்தா வாக்கு மனாதீதகோசரமா யிருக்கையினாலே அவனுக்கு உண்டாகாது. இப்படி இருக்கச்செய்தே ; சத்தியுஞ் சிவமுந் தாமே நுகருமென்று (உவப்பின் றென்க பாடபேதம்) இத்திறன் உணர்வு வந்து எய்துவது எவர்க்கே ஆன்மா இல்லை, சத்தி சிவங்கள் எல்லாச் சுகதுக்கங்களையும் அனுபவிக்கு மென்று நீ சொன்ன இந்தப் பகுதியிலுண்டாகிய ஞானம் இந்தப் பிரபஞ்சத்துக்குள்ளே ஆர்க்குத்தான் வந்துண்டாவது ? என்றது ஆணக்ஷபம் ; தமக்கே என்னில் தாம் உணராமையும் அமைப்பற உணர்தலும் அவர்க்கு அடைவன்றே சத்தி சிவங்களுக்கே இந்த அனுபோக மென்னில், அந்தச் சத்தி சிவங்கள் இந்தப் பிரபஞ்சத்தை அறியாத படியாலும் அறியுமிடத்துச் சுட்டியறியாமல் தடையற எல்லாவற்றையும் ஒக்க அறிகையினாலும் இந்தச் சுகதுக்கங்களால் உண்டாகிய அனுபோகம் ஆன்மாவுக்கொழிந்து அந்தச் சத்தி சிவங்களுக்கு உண்டாவதொன்றல்ல. இது பெத்தத்தை மறுத்தது.
மேல் முத்தியை மறுக்கிறான் : நான் ஒருமுதல் அவன் ஒருமுதலென்று நிற்கிற இது குற்றத்தையுடைய வழியென்றும் இவன் அவனாய் விடுகிற இது சாயுச்சியமாகிய நல்வழியென்றுஞ் சொன்னாய் ; நானும் அவனும் நவையும் நலனும் தான் அவனாகையும் நின் சாதனத்து இல் நானென்கிற ஆன்மாவும், அவன் என்கிற சிவனும், நவையென்கிற குற்றமும், நலனென்கிற நன்மையும், இந்த ஆன்மா அந்தச் சிவனாக வேணுமென்கையும் நீ எல்லாம் ஒன்று என்கிறவனாகையால் உன்னுடைய சாதனத்துக்குட்பட்டதல்ல. இதன்றியும்; சகயோகத்தைச் சாயுச்சியம் எனப் பகர்வது பதிபசுபாசத்தவர்க்கே யோகமார்க்கத்துக் குண்டான முறைமையை நீ சாயுச்சிய மார்க்கமாகச் சொல்லுகிற இது திரிபதார்த்த நிண்ணயம் வந்தவர்கள் கொள்ளும் பகுதியாமே ! இதன்றி ; யாதொரு வகையென ஓதியது இறை நூல் சொன்னவற்று ஒன்றன்று இந்த முத்தித் தன்மை கூடுமளவும் மக்களொக்கல் சமுசாரத்தோடுங் கூடித்தான் இருப்பான், இவையிற்றை விட்டுத்தானிருப்பான், நின்றதே நிலையாகக் கொண்டு சாதித்து வரக்கடவனென்று நீ சொன்னது, சிவாகமம் மோக்ஷத்துக் கேமுவாயுள்ளவர்கள் சரிக்க வேண்டின முறைமை பலவழியுஞ்சொல்லும் அவையிற்றில் ஒருவழிக் குட்பட்டதல்ல ; என்னில் வீடு எளிதே அப்படிச் சரிக்கிறதுதான் காணும் முத்தி சாதனமென்னில், மோக்ஷத்தை அரிதென்று சொல்லவேண்டுவதில்லை, எல்லார்க்கும் எளிதாகப் பெற்றுவிடலாமென்று சொல்லு. இதன்றியும்; தான் அறி வழியே தலைப்பொருள் பிடிக்கின் மேல் நிகழ் பலமும் வீடளித்திடுமே ஒரு ஆசாரியன் நல்லவழி கற்பிக்க அந்த வழியே ஒழுகிவராமல் தன்னுடைய போதத்துக்குத் தோன்றின வழியே தலையான பொருளாகப் பிடித்து அந்த வழியே ஒழுகிவர அதனால் உண்டாய பலமும் வீட்டின்பத்தைத் தருமே ; நிலையாக் கருவியை நிலையாக் கருதிப் புலையாடுதலும் உலகாயதன் பொருள் நிலை நில்லாமைக்குச் சாக்ஷியாயுள்ள தேகாதிப் பிரபஞ்சத்தை நிலைநிற்குமென்று கருதிச் செய்யாக் காரியத்தைச் செய்துகொண்டு வருகிறது உலகாயதன் கொள்ளும் பொருளா மொழிந்து சைவராயுள்ளவர்கள் கொள்ளும் பொருளல்ல ; குட்டியமின்றி நற்கோல மெழுதுதல் இட்டமதாயின் சுவரில்லாமற் சித்திர மெழுதுகிறது ஒருவருஞ் செய்ய வொண்ணாதது, உனக்கு இட்டமாயிருக்குமாயின் ; கருவியும் இடங்களுங் கருத்துற உரைக்க தனுவுங் கரணமும் புவனமும் போகமும் ஆன்மாவுக்கே யென்று சாத்திரஞ் சொல்லச்செய்தே ; தெரித்திடும் மதித்தது மதித்தது தெரித்திடும் என மாறுக. இதன் பொருள் : சிவன் விசுவாதீதனா யிருக்கையினாலே அவனுக்கு இவை வேண்டுவதில்லை. இவை வேண்டினது ஆன்மாவுக்கா யிருக்கச்செய்தே, ஆன்மா இல்லை இவை அந்தரத்தே நிற்குமென்று உன்னுடைய போதம் சற்றும் கூசாமல் நினைத்துச் சொல்லும். இதன்றி ; அறிவொன்றில்லோர்க்கு இறையருள் உதவுதல் ஓர் ஏகதேசமும் அறிவில்லாத ஆன்மாக்களுக்குக் கர்த்தாவினுடைய அருள் அறிவைக் கொடுக்குமென்றாய், அங்ஙனம் அது செய்தல் ; பிறிவறிவரிய செறியிருளிடத்து ஒர் அந்தகர்க் காணவந்தோர் எம்மை நீவிருங் காணவேணும் என்றாங்கு எடுத்து ஒரு தீபம் கொடுத்ததை ஒக்கும் ஒரு சற்றும் நீக்கிக் காணவொண்ணாமற் செறிந்து கொண்டிருக்கிற இருளினிடத்திலேயிருக்கிற அந்தகராயுள்ளவரைக் காணவந்தவரொருவர் விளக்கைக் கொண்டுவந்து கண்டு அந்த விளக்கை அந்தகர் கையிலே கொடுத்து என்னையும் நீர் காணவேணுமென்று சொல்ல, அவரை இவர் கண்டாரென்கிறதற்கொக்கும் அறிவில்லாத ஆன்மாவுக்கு அருள் அறிவைக் கொடுக்க அறிந்ததென்று நீர் சொன்னது; இச் செயற்கு இறைவன் கொச்சையனன்றே அறிவில்லாத ஆன்மாவுக்குத் தன்னுடைய அருளைக்கொண்டு அறிவைக் கொடுத்தான் என்கிறது கர்த்தாவும் இந்த ஆன்மாவைப்போல அறிவில்லாதவனாக வேண்டும். இதன்றியும்; கருவி வசத்தில் தெரிவுறக் காணவேண்டுநர் இலரால் கருவிகள் சடமா யிருந்தபடியாலே இவையிற்றைக் கொண்டு தேகாதிப் பிரபஞ்சத்தை நன்றாகக் காண்கிற காட்சி சிவஞானிகளா யுள்ளவர்களுக்குள் ஒருவரும் வேண்டியிருப்பார் இல்லை. அப்படியிருக்கச்செய்தே ; ஈண்டு அறிவு யாவுஞ் சிவமே யென்று செப்பினை இவ்விடத்துக் கருவிகளைக் கொண்டு தேகாதிப் பிரபஞ்சத்தை அறிந்துவருகிற அறிவெல்லாஞ் சிவமேயென்று நீ சொன்னாய் ; அவம் உறு பொறிபுலன் அறியா அறிவது பிரமம் என்றோர்க்கு உன் போல் இடர்ப்படல் இலதே இந்திரியங்கள் தானாக விஷயங்களை அறியமாட்டாதது கொண்டு சடமாயிருந்தபடியாலே எல்லாவற்றையும் அறிகிறது பிரப்பிரமமென்று சொன்ன மாயாவாதிக்கும் உன்னைப்போலக் குற்றஞ் சொல்லத்தக்கது இல்லை. அதேனென்னில், அவன் பிரமத்தை அறிவென்றும் பிரபஞ்சத்தைச் சடமென்றுஞ் சொன்னான், நீ எல்லாவற்றையுஞ் சித்தென்கையினாலே. இதன்றியும்; ஏற்றம் கருவி இருபதோடு இரண்டும் போற்றும் ஓர் அவத்தையும் புகல் திரிமலமும் ஈசனும் உயிரும் பேசினை அந்த மாயாவாதி பதினாலு கருவியும் நாலவத்தையுஞ் சொன்னான். நீ அவனிலும் பார்க்க ஏற இருபத்திரண்டு கருவியுஞ் சைவராயுள்ளவர்கள் பரிகரித்துக் கொண்டு வருகிற ஓர் அவத்தையும் இவர்களாலே சொல்லப்பட்டு வருகிற மூன்றுமலமும் கர்த்தாவும் ஆன்மாவும் உண்டென்று சொன்னாய் ; அஃது ஒழிந்து ஒன்றேயாகும் என்ற நின் இயல்பு அவையிற்றை யெல்லாம்விட்டு இப்பொழுது எல்லாம் அந்தச் சிவமொன்றுமேயென்று நீ சொல்லுகிற இயல்பு எதற்கொக்கும் ; தாயர் மனைவியர் தாதியர் தவ்வையராயவர் எவரையும் ஓர்மையிற் காணுங் கோகழி தூர்த்தர் கொடுந்தொழில் தகுமே தன்னுடைய தாய் சிறிய தாய் பெரிய தாயானவர்கள், தன் பெண்சாதி தமையன் பெண்சாதி தம்பி பெண்சாதியா யுள்ளவர்கள், தன் வெள்ளாட்டிமுன் சொன்ன வர்களுடைய வெள்ளாட்டியாயுள்ளவர்கள், தன்னுடைய தங்கைமார் தமக்கைமார் இங்ஙனஞ் சொல்லப்பட்டவர்க ளெல்லாரையுந் தன்னுடைய பெண்சாதியைப் பார்க்குமாப்போலே இவர்களெல்லாரையும் ஒக்க விஷயப் பார்வையாகப் பார்க்கும் கோகழியுள் நடுக்கண்ணானது தன் எல்லையில் நில்லாமல் இறந்து கண்டு வருகிற தூர்த்தனுடைய கொடிய தொழிலை யொக்கும் ; ஆகமற்றதன் நீ சொல்லி வந்த ஞானத்தினது தன்மை இப்படித் தவறாகக் கிடக்க ; அருள் நிலை தன்நிலை ஏகநாயகனாகிய இறைநிலை நாசமில் பாசம் வீசிய வியன்நிலை அருள் சர்வத்தையுங் காரியப்படுத்தி வருகிற முறைமை, ஆன்மா தனக்கென ஒர் சுதந்தரமில்லாமல் நிற்கிற முறைமை, கர்த்தா எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கச்செய்தே ஒன்றிலுந் தாக்கா நிற்கிற முறைமை, அழிவில்லாமலிருக்கிற பாசம் சர்வான்மாக்களைப் பந்தித்துக்கொண்டு நிற்கிற முறைமை ; இனையவை ஒன்றும் நினைவினும் இன்றி இங்ஙனஞ் சொல்லப்பட்டவை யொன்றும் உன்னுடைய நினைவிலுங்கூட இல்லாமல் ; உண்டெனும் உணர்விற் கண்டது கருதில் ஆன்மாவுக்கு அறிவில்லை சிவனே எல்லாவற்றையும் அறிகிறவனென்று நீ நாட்டப்பட்ட அறிவினாலே நீ அனாசாரமாகச் சொன்னதை விசாரிக்கில் ; இழுக்கெனும் புலன்வழி ஒழுக்கமும் அதுவாய்க்கொண்டு இந்திரிய வாதனை பொல்லாதென்று சொல்லச்செய்தே அந்த இந்திரியவாதனை தானே நீ ஞானாசாரமாகக் கொண்டு ; பண்டையில் எண்தருமடங்கு வந்தவா செய்யத் தந்ததை யன்றே நீ பெத்த தசையிலே நிற்கிற நாள் செய்து வந்த அனாசாரத்திலும் பார்க்க முத்தித்தசையிலே எண்மடங்கு அனா சாரத்தைச் செய்துகொண்டு திரியத் தக்கதாக உனக்கு இந்த மயக்கந்தந்த அஞ்ஞானத்தை வெறுக்கிற தல்லது உன்னை வெறுக்க வழக்கில்லை ; புன்மைகள் நீங்க உண்மை கேள்மதி இப்படிக் கொத்த அஞ்ஞானங்கள் உனக்கு நீங்கத் தக்கதாக நான் சத்தியத்தைச் சொல்லுகிறேன், அதைப் புத்திபண்ணிக் கேட்பாயாக. மதியென்றது அசை.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

அறிவாய் அறியும் அறிவுயிர் கேவலத்து
அறிவிலன் இருளொடும் பிறிவிலன் அண்ணல்
கலைமுத லாக நிலவிய கருவிகள்
விளக்கென உதவும் துளக்கறப் பொருந்தி
இருவினை நுகர்வில் வருவினை செய்து 5
மாறிப் பிறந்து வருநெடுங் காலத்து
இருள்மல பாகமும் சத்தினி பாதமும்
மருவுழி அருளுரு மன்னவன் அணைந்து
செல்கதி ஆய்ந்து பல்பணிப் படுத்திக்
கருவியும் மலமும் பிரிவுறப் பிரியா 10
ஞானம் நல்கலும் தான்அது நோக்கிக்
தன்னையும் அதனையும் தன்முதற் பொருளையும்
இன்னவென் றறியா இருவரும் முயங்கி
ஒன்றாய் உறுபயன் உவப்பும்
இன்றாய் நிற்கும் இதுசிவ கதியே. 15

பொழிப்புரை :

மேற் சைவவாதி தன்மதம் கூறுகின்றான்:
அறிவாய் அறியும் அறிவு உயிர் அனாதியே அறிவாய் அறிந்து கொண்டு வருகிற அறிவாயிருப்பதொன்று ஆன்மா ; கேவலத்து அறிவிலன் இருளொடும் பிறிவிலன் இப்படி அறிவாயுள்ள ஆன்மாவுக்குக் கேவலாவத்தையில் ஒரு சற்றும் அறிவில்லை. அவ்விடத்து ஆணவமலத்தோடுங் கூடி நீக்கமின்றியிருக்கும் ; அண்ணல் கலைமுதலாக நிலவிய கருவிகள் விளக்கென உதவும் இப்படி ஒன்றும் அறியாமற் கேவலப்பட்டுக் கிடக்கிற அவதரத்திலே கர்த்தாவானவன் கலைமுதலாகப் பொருந்தப்பட்டு வருகிற கருவிகள் முப்பத்தொன்றையுங் கண்ணுக்கு விளக்குக் காட்டான தன்மைபோல இந்த ஆன்மாவுக்குக் காட்டாகக்கொண்டு கூட்டும் ; துளக்கறப் பொருந்தி இருவினை நுகர்வில் வருவினை செய்து அந்தக் கருவிகளோடும் அசைவறக் கூடிப் பிராரத்த கன்மமான புண்ணிய பாவங்களைப் பொசிக்கச் செய்தே ஆகாமியத்தை ஆர்ச்சித்துக்கொள்ளும் ; மாறிப் பிறந்து வரு நெடுங்காலத்து இந்தக் கன்மத்துக்கீடாக அச்சுமாறிப் பிறந்து வாராநிற்கும். இப்படி நெடுங்காலம் பிறந்து இறந்து வரச்செய்தே இருள் மலபாகமுஞ் சத்தினிபாதமும் மருவுழி சிவபுண்ணியம் உண்டாயதனாலே ஆணவமலத்துக்குப் பாகமும் சத்தினிபாதமும் பொருந்தினவிடத்து ; இது பெத்தம்.
மேல்முத்தி : அருளுருமன்னவன் அணைந்து செல்கதி ஆய்ந்து பல்பணிப்படுத்தி கர்த்தா அருளே திருமேனியாகக்கொண்டு ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்து இவன் சென்று பொருந்தப்பட்டகதிக்கு ஏதுவாயுள்ளவையிற்றை ஆராய்ந்து பல் பணியாகிய சரியை கிரியா யோகங்களிலே நிறுத்தி கருவியும் மலமும் பிரிவுறப் பிரியா ஞானம் நல்கலும் அந்தச் சரியை கிரியாயோகங்களை முற்றச்செய்கையிலே கேவல சகலமிரண்டையும் நீக்கி அனாதியே இவனை விட்டு நீங்காமல் உபகரித்துக்கொண்டு வருகிற உண்மை ஜ்ஞானத்தைப் பிரசாதியாநிற்கும். அப்படி செய்தமாத்திரத்திலே ; தான் அது நோக்கித் தன்னையும் அதனையும் தன்முதற் பொருளையும் இன்னவென்றறியா இருவரும் முயங்கி இந்த ஆன்மா அந்த உண்மை ஜ்ஞானத்தைத் தரிசித்து ஞாதுருவாகிய தன்னையும் ஞானமாகிய அந்த உண்மை ஜ்ஞானத்தையும் அந்த ஞானத்துக்கு முதலாயுள்ள நேயத்தையும் இந்த மூன்று முதலையும் அவ்விடத்திற் சுட்டியறியாமல் இந்த ஆன்மாவுஞ் சிவமுந் தன்னிலே கூடி ; ஒன்றாய் உறுபயன் உவப்பும் இன்றாய் நிற்கும் இது சிவகதியே இரண்டும் ஒருமுதலாய் அவ்விடத்து உற்றதொரு பயனும் பிரியமும் இரண்டும் இல்லையாய் இப்படி நிற்கிற அவதரத்தைச் சிவசாயுச்சியமென்று சொல்லப்படுவது.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 1

இதுகதி யாக முதல்அறி வுயிரேல்
பொறிபுலன் நீங்க அறிவுயிர் அன்றே
அடைகாய் நூறி னிடைசேர் சிவப்பென
இந்தியத் தொகையின் வந்தறி வொன்றுநின்று
இன்றாம் என்றல் அன்றே எந்தை 5
அறிவிலன் அதீதச் செறிவில் என்றுரைத்த
நின்மொழி விரோதமும் பின்முன் மலைவும்
மன்வயின் நிகழா மலம்இருள் இறையொளி
தான்அமர் விளக்கில் தகும்மருட் கலாதிகள்
ஈனமில் இவனிடத் தெவ்வா றிசைந்தன 10
இசைந்த தாயினும் இசையா தாயினும்
அசைந்திடும் முத்தி சாதனம் அவமே
சத்தினி பாதமோ தகுமல பாகமோ
உய்த்த காரண காரியம் ஓதுக
பாகம் காரண மாகில் மற்றது 15
காலா வதியிற் காயா வதியில்
மேலா மென்னும் வினையுறும் அவதியில்
துயரென உயிர்க்குத் தோன்றிடும் அவதியில்
நயமிகும் இறையவன் நல்கிடும் அவதியில்
ஏதிற் கூடும் ஓதுக இருவினை 20
ஒத்த எல்லையில் வைத்தனர் என்னில்
அருவினை தூக்க உருவினை நில்லாது
ஒருவினை புரிகால் இருவினை ஆகா
ஒப்புறு மாறு செப்புக தேசிகன்
அருளுரு என்ற பொருளினை ஆயின் 25
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான் ஏய்ந்தவர் எம்ம னோரே
பல்பணி ஞான காரணம் என்னில்
தொல்பணி தொறும்பயன் தொடுப்பத னாலும்
ஒருபணி செய்யாச் சிரபுரச் சிறுவரும் 30
அரச ராகிய தருணத் தலைவரும்
முதிர்பர சமயத் திதமுறும் அரசரும்
ஞானம் பெற்ற நன்மையி னாலும்
ஈனமில் பணிஅருட் கேதுவன் றென்றால்
ஞானோற் பத்தி நிமித்தம்இத் தொழிலென 35
ஏனோர்க் கிறைநூல் இயம்பிற் றென்னாம்
கருவியும் மலமும் பிரிவுற அருள்தரும்
என்றனை கேவலத் தேதும் அறிவிலன்
துன்றிய சகலத் தருள்நிலை தோன்றாது
எவ்வவத் தையில் இறையருள் பெறுகுவம் 40
செவ்விய ஞான தெரிசன மாவது
நால்வகை மாயைப் பால்வரு ஞானம்
பண்டை ஞானம் இதுபறி தரவரக்
கண்ட ஞானம் இதுவாக் காணில்
ஈனமில் ஞானிக ளென்போர் யாருமில் 45
ஞான வேற்றுமை நாடலும் அரிதே
தானும் ஞானமும் தலைவனும் என்றனை
ஆனபின் இவனும் இவனது ஞானமும்
பாசமும் பாச ஞானமும் என்றிவை
பேசுவர் ஒன்றாப் பெற்றிய ஆகலின் 50
மும்மைப் பொருட்கும் மும்மைத் தன்மை
செம்மைத் தென்னிற் செலவுகள் எழுதுக
இருவரும் கூடி ஒருபயன் ஆய்த்தென்று
அருளினை இவ்வா றபேதிகள் நிலையே
பதிபசு பாசம் முதிர்அறி வுகளுடன் 55
ஆறா முன்னர்க் கூறாப் பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்
ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம்என்று
இசைய மூன்றாய்ப் பசுபதி என்றவற்று
இரண்டாய் இரண்டும் ஒன்றின்ஒன் றாகத் 60
திரண்டாம் பயனெனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிறை இயற்கை இயம்புதல் தகுமே
ஒன்றாம் என்றல் அன்றியும் உவப்பும்
இன்றாம் என்றால் என்பயன் இயம்புக 65
என்றனை வினவும் யாவும் விளங்க
வென்றிகொள் கருத்தில் வேண்டினை யாயின்
நதிக்கரை ஆன்எனக் கொதித்தல் மறந்து
வெண்ணெயம் பதிதிகழ் மெய்கண் டவன்அருள்
உள்நிலை யுடையோன் ஒருவன் உரைத்த 70
தவப்பிர காசத் தன்மையில் விதித்த
சிவப்பிர காசத் செழுந்தமிழ் உண்மையை
அருளுடன் ஆய்ந்து கொள்ளத்
திருவருள் வினவல் திருந்திடும் அன்றே.

பொழிப்புரை :

மேல் சித்தாந்தியார் மறுக்கிறார்:
இது கதியாக முதலறிவு உயிரேல் நீர் இப்பொழுது சொல்லிமுடித்த இது முத்தியானாலும், அது பின்புசொல்லுகிறோம். ஆன்மா அனாதியே அறிவாயிருப்பதொன்றாகில் ; பொறிபுலன் நீங்க அறிவு உயிரன்றே இந்திரியங்களும் அதனாலே அறியப்பட்ட விஷயங்களும் இரண்டு வகையும் நீங்க ஆன்மாவானதற்கு அறியும் பகுதி உண்டாமே! அது இந்திரியங்கள் கூடினபோது அறிந்தும் அவை நீங்கினபொழுது அறியாமையும் ஆன்மாவுக்குள்ள முறைமையென்று நீ சொல்லின்; அடைகாய்நூறின் இடைசேர் சிவப்பென இந்தியத் தொகையின் வந்து அறிவொன்று நின்று இன்றாமென்றலன்றே எந்தை பாக்கும் வெற்றிலையும் கண்ணாம்பும் கூடி மத்தித்தவிடத்திலே அவையிற்றினுடைய தன்மையின் நடுவே ஒருசிவப்பு எழுந்தாற் போலச் சடமாயுள்ள இந்திரியங்களினுடைய கூட்டத்தின் நடுவே ஓர் அறிவு தோன்றி உடனே அழியுமென்று கணபங்கஞ் சொன்ன புத்தனையொப்பீர் தேவரீர். இதன்றியும் ; அறிவுஇலன் அதீதச் செறிவில் என்றுஉரைத்த நின்மொழி விரோதமும் பின்முன் மலைவும் மன்வயின் நிகழா அறிவாய் அறிந்து வருகிற ஆன்மாவானதற்கு மலத்தினாலே நெருங்கியிருக்கிற அதீதத்தானத்தில் அறிவில்லையென்று சொன்ன உம்முடைய சொல்விரோதமும் ஒருகால் அறிவென்றும் ஒருகால் அறிவல்லவென்றும் நீர் முன்னொடுபின் மலையச்சொன்ன இவையும் நிலைபெற்று வாராநிற்கிற நல்லோர்களுடைய கூட்டத்தினிடத்துக் கொள்ளப்படாது. இதன்றியும் ; மலம் இருள் ஆணவமோ என்றாற் சுத்த இருளாயிருப்பதொன்று ; இறை ஒளிதான் கர்த்தாத்தானே என்னில் மகாப் பிரகாசமா யிருப்பா னொருத்தன் ; அமர்விளக்கில்தகும் மருட்கலாதிகள் பொருந்தப்பட்ட விளக்குப்போலும் இவனுக்குக் காட்டாயுள்ள கலை முதலாகிய முப்பத்தொரு தத்துவமும் மாயா கருவிகளா யிருக்கையினாலே மயக்கமாயிருப்பதொன்று. ஆகையால் இந்தக் கருவிகள் ; ஈனமில் இவனிடத்து எவ்வாறு இசைந்தன இருளாயிருக்கிற கேவலத்தானத்திலே ஆன்மா அழிவின்றி நிற்க இவனிடத்திலே மகாப்பிரகாசமாயிருக்கிற சிவனாலே மயக்கமாயிருக்கிற கருவிகள் சென்று பொருந்தினபடி எப்படி ; இசைந்ததாயினும் இசையாதாயினும் அசைந்திடும் முத்தி சாதனம் அவமே அந்தக் கருவிதான் கூடி யுணர்ந்தானாயினுங் கருவிகள் கூடாமற் கேவலந் தன்னிலே கிடந்தானாயினும் அது நிற்கிறதும் நீர் நிலை நிற்கமாட்டாமல் முத்தி சாதனஞ் சொன்னது மிகவும் நன்றாயிருந்ததில்லை. இது பெத்தத்தை மறுத்தது. மேல் முத்தியை மறுக்கிறார் : சத்தினிபாதமோ தகுமல பாகமோ உய்த்த காரண காரியம் ஓதுக முன்னே இருண்மல பாகமும் சத்தினி பாதமும் மருவுழி என்றீர், இதில் சத்தினிபாதங் காரணமாக மலபாகம் உண்டாச்சுதோ, மலபாகம் காரணமாகச் சத்தினிபாதம் உண்டாச்சுதோ, இவையிற்றைச் செலுத்தப்பட்ட காரணகாரியம் யாதென்று சொல்லுவீராக ; பாகம் காரணமாகில் மலபாகம் காரணமாகச் சத்தினிபாதம் உண்டானதென்னில் ; மற்றது காலாலவதியிற் காயாவதியில் மேலாமென்னும் வினையுறும் அவதியில் துயரென உயிர்க்குத் தோன்றிடும் அவதியில் நயமிகும் இறையவன் நல்கிடும் அவதியில் ஏதிற் கூடும் ஓதுக அந்த மலபாக மென்று சொன்னது எண்ணிறந்த காலஞ் செல்லச் செய்தே அதிலே இன்ன காலத்திலே இவனுக்கு முத்தி யென்றிருக்குமே அந்தக் காலத்தினுடைய எல்லையிலேயோ, எண்ணிறந்த சரீரம் எடுத்துப்போட்டு வருகிறதற்குள்ளே இன்ன சரீரத்திலே முத்தியென்றிருக்குமே அந்தச் சரீரத்தினுடைய எல்லையிலேயோ, ஒன்றுக்கொன்று மேலாய்வருகிற புண்ணிய பாவங்கள் இரண்டுந் துலையொப்பு வந்த எல்லையிலேயோ, எண்ணிறந்த காலம் பிறந்திறந்து வருகிற ஆன்மாவுக்கு இந்தச் செனனம் துக்கமென்று தோன்றிற்று அந்த எல்லையிலேயோ, இந்த ஆன்மாக்கள் மேலே மிகவும் பிரியத்தையுடைய கர்த்தா இவனை இன்ன அவதரத்திலே இரட்சிப்பனென்று உண்டே அந்த எல்லையிலேயோ, இவையிற்றில் எந்த அவதரத்திலே கூடுமென்று சொல்லுவீராக ; இருவினை ஒத்த எல்லையில் வைத்தனரென்னில் புண்ணிய பாவ மிரண்டுங் துலையொத்த அவதரத்திலே மலபாகம் உண்டாமென்று பெரியோர்கள் சொல்லுவார்களென்று நீ சொல்லின் ; அருவினை தூக்க உருவினை நில்லாது கன்மம் அருவமாயிருந்தபடியாலே புண்ணியம் ஒரு தட்டிலும் பாவம் ஒரு தட்டிலும் போட்டு இரண்டும் ஒத்ததோவென்று தூக்கிப் பார்க்க உருவாகக் காணப்படாது. இதன்றியும் ; ஒருவினை புரிகால் இருவினை ஆகா ஒரு புண்ணியத்தைச் செய்யுமிடத்து அதிலே பாவம் பாதியாகவும் புண்ணியம் பாதியாகவும் பகுத்து நில்லாது, ஒரு பாவத்தைச் செய்யுமிடத்திலே புண்ணியம் பாதியாகவும் பாவம் பாதியாகவும் பகுத்து நில்லாது, புண்ணியமும் புண்ணியமாகவே வரும் பாவமும் பாவமாகவே வரும் ; ஒப்புறுமாறு செப்புக புண்ணிய பாவம் இரண்டுந் துலையொக் கிறபடி எப்படி யென்று நீர் சொல்ல வேண்டும். இதன்றியும் ; தேசிகன் அருளுரு என்ற பொருளினை ஆயின் ஆசாரியனுடைய வடிவு அருள்வடிவா யிருக்குமென்று நீர் சொன்னதினுடைய அர்த்தத்தை விசாரிக்கு மிடத்து ; மாயா உருவினன் மாயா வுருவினை ஏயான் கர்த்தாவோ என்றால் ஒருகாலும் அழியாத திருமேனியினை யுடையவன், அவன் அழிந்து போவதாயிருக்கிற இந்த மாயா சரீரத்தைப் பொருந்தான். அப்படியன்று காணும், ஆன்மாக்களை இரக்ஷிப்பான் பொருட்டாக இந்த மாயா சரீரத்தைப் பொருந்துவன் என்னில் ; ஏய்ந்தவர் எம்மனோரே யாரொருத்தர் இந்த மாயா சரீரத்தைப் பொருந்தினவர்கள் ஆன்ம வர்க்கர்த்திலே ஒருத்தரொழிந்து வேறொன்றாகச் சொல்லப்படாது. இதன்றி ; பல்பணி ஞான காரணம் என்னில் பலவாகச் சொல்லப்பட்ட சரியை கிரியை யோகங்களைச் செய்வது காரணமாக ஞானம் உண்டாம் என்னில் ; தொல்பணி தொறும் பயன்தொடுப்பதனாலும் பழையதாகச் சொல்லப்பட்டு வருகிற சரியை கிரியா யோகங்களைச் செய்து அதுகாரணமாகச் சாலோக சாமீப சாரூபங்கள் உண்டாமென்று திருவாக்குச் சொல்லியிருக்கையினாலும் ; ஒரு பணி செய்யாச் சிரபுரச் சிறுவரும் அரசராகிய தருணத் தலைவரும் முதிர் பரசமயத்து இதமுறும் அரசரும் ஞானம் பெற்ற நன்மையினாலும் சரியைக்குள்ளுங்கிரியைக்குள்ளும் யோகத்துக்குள்ளும் இவையொன்றுக்குள்ளும் ஒரு தொழிலுஞ் செய்யாத சீகாழிக்குத் தலைவரா யிருந்துள்ள நல்ல சம்பந்தரும், இராச குமாரராய் வாலிபத்துக்கெல்லாந் தலைவரா யிருந்துள்ள சேரமான் பெருமாள் நாயனாரும், மிக்க அமண் சமயத்திலே நின்றும் அது சமயமல்ல வென்று போந்து சைவமே சமயமென்று அறுதியிட்டுக்கொண்டு நிற்கிற திருநாவுக்கரசு நாயனாரும், இவர்கள் ஒரு தொழிலுஞ் செய்யாமல் ஞானத்தைப் பெற்று நின்ற நன்மைப் பகுதியினாலும் ; ஈனமில் பணி அருட்கு ஏதுவன்று என்றால் குற்றமற்றிருக்கிற சரியை கிரியை யோகங்கள் ஞானத்துக் கேதுவென்று சொல்லப்படாது என்றால் நானல்லவென்று சொல்லி யிருக்கச்செய்தே நீர் ஆமென்று சொன்னால் ; ஞானனோற்பத்தி நிமித்தம் இத்தொழில் என ஏனோர்க்கு இறை நூல் இயம்பிற்று என்னாம் ஞானோற்பத்திக்கு நிமித்தமாயிருப்ப தொன்று இந்தத் தொழில்கள், ஞானத்துக்குக் காரணமன்று என்று உம்மை யொழிந்துள்ளோ ரெல்லார்க்கும் கர்த்தா நூல்களிலே அருளிச்செய்து வைத்தது என்னவாக முடியும் ? இதன்றியும் ; கருவியும் மலமும் பிரிவுற அருள்தரும் என்றனை அறிவாயுள்ள கருவிகளும் அறியாமையாயுள்ள மலமும் இரண்டும் நீங்கத் தக்கதாக அருட்பிரகாச முண்டாமென்று நீ சொன்னாய் ; கேவலத்து ஏதும் அறிவிலன் மல சம்பந்தமாயிருக்கிற கேவலாவத்தையில் ஆன்மா ஒன்றும் அறியானாகையால் இவ்விடத்து அருட்பிரகாசம் உண்டாகாது ; துன்றிய சகலத்து அருள்நிலை தோன்றாது கருவிகளோடுங் கூடிச் சத்தாதி விஷயங்களினாலே நெருங்கியிருக்கிற சகலாவத்தையில் அருட்பிரகாசமுண்டாகாது ; எவ்வவத்தையில் இறையருள் பெறுகுவம் முன் சொன்ன இரண்டு அவதரத்திலும் அருட்பிரகாச முண்டாகாதென்றால் பின்னை எந்த அவதரத்திலேதான் நாம் கர்த்தாவினுடைய திருவருளைப் பெறுவோம்; செவ்விய ஞான தெரிசனமாவது மயக்கமற நீர் தெரிசித்த ஞானமாவது ; நால்வகை மாயைப்பால் வருஞானம் தனு கரண புவன போகமென்கிற நால்வகையோடுங் கூடிக் கொண்டிருக்கிற மாயையின் பகுதியிலே நின்றும் அறிந்துவருகிற ஞானமாகவேண்டும்; பண்டைஞானமிது பறிதரவரக் கண்ட ஞானம் இதுவாக் காணில் இந்த மாயையினாலே அறிந்துவருகிற ஞானமிது எப்பொழுதும் உள்ள ஞானம், இது நீங்கத்தக்கதாக மேல் வருகிற ஞானம் இதுதானாகக் காணப்படில் ; ஈனம் இல் ஞானிகளென்போர்யாரும் இல் ஞானவான்கள் மூன்று லோகத்திலும் இல்லையென்று ஒருத்தரும் சொல்லுவாருமில்லை, நீர் சொல்லுகிற வழக்கெல்லாம் ஞானவான்களாக வேண்டும். ஞானந் திரிலோக்கிய துர்லபமென்கிற திருவாக்குப் பழுதாம். என்னவே, இவர்கள் மடமும் மடப்புறமும் மடவடியாருந் தேவாரமுந் திருமுட்டுந் திருவாபரணமும் இவை தானே ஞானமாகக் கொண்டு நிற்பர்கள் என்பது கருத்து ; ஞான வேற்றுமை நாடலும் அரிதே ஞானத்தினுடைய வேறுபாடறியும் பொழுது எத்தனை பாக்கியஞ்செய்யவேணும், எளிதாக உண்டாகாது. இதன்றியும் ; தானும் ஞானமும் தலைவனும் என்றனை ஆன்மாவும் சிவனுடைய ஞானமும் சிவனும் என்று மூன்றாகச் சொன்னாய் ; ஆனபின் இவனும் இவனது ஞானமும் பாசமும் பாசஞானமும் என்றிவை பேசுவர் ஒன்றாப் பெற்றிய ஆகலின் சிவனும் சிவனுடைய ஞானமுமென்கையால் ஆன்மாவும் ஆன்மாவினுடைய ஞானமும் பாசமும் பாசத்தினுடைய ஞானமும் இவையெல்லாம் ஒன்றாகக் கூட்டிப் பெரியோர்கள் சொல்லுகிறது முறைமையானபடியாலே; மும்மைபொருட்கும் மும்மைத்தன்மை செம்மைத்தென்னில் செலவுகள் எழுதுக இவை மூன்று முதலுக்கும் மூன்று ஞானமும் உள்ள தொன்றாகில் அந்தப் பசுஞானமும் பாசஞானமும் போனபடி எப்படியென்று சொல்லவேண்டும். இதன்றியும் ; இருவருங் கூடி ஒருபயன் ஆய்த்து என்று அருளினை ஆன்மாவுஞ் சிவனுங்கூடி ஒரு முதலாயிற்று என்று நீ சொன்னாய் ; இவ்வாறு அபேதிகள் நிலையே இப்படிப் பெத்தத்தில் இரண்டாய் முத்தியில் ஒன்றாயிருக்குமென்கிற சித்தாந்தம் அபேத சித்தாந்தஞ் சொல்லுகிற மாயாவாதிகள் சித்தாந்தமா யிருக்கும் ; பதி பசு பாசம் முதிர் அறிவுகளுடன் ஆறா முன்னர்க் கூறா பதியும் பசுவும் பாசமும் பதியினுடைய ஞானமும் பசுவினுடைய ஞானமும் பாசத்தினுடைய ஞானமும் இந்த மிக்க ஞானங்களோடே ஆறுவகையாக முன்னே சொல்லி ; பின்னர் இரு பொருள் நீத்து மற்றொரு நால்வகையையும் அந்த ஆறினும் பசு ஞானத்தையும் பாசஞானத்தையும் விட்டுப் பின்பு நாலாக்கி அந்த நாலுவகையையும் ; ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று இசைய மூன்றாய் இதிலே பாசமொன்றையும் விட்டுக் குற்றமில்லாத ஞாதுரு வென்றும் ஞானமென்றும் ஞேயமென்றும் இங்ஙனம் பொருந்தத் தக்கதாக மூன்றாக்கி ; பசுபதி யென்று அவற்று இரண்டாய் அவையிற்றில் ஞானத்தை நீக்கிப் பசுவென்றும் பதியென்றும் இரண்டாக்கி ; இரண்டும் ஒன்றின் ஒன்றாகத்திரண்டாம் பயனெனுந் திருவருள் தெளியில் இந்த இரண்டும் ஒன்றினிடத்திலே ஒன்று சென்று கூடி இரண்டும் ஒரு பயனாய் நிற்குமென்று நீ சொல்லுந் திருவருளின் பகுதியைத் தெளியுமிடத்து ; சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் என்று இறையியற்கை இயம்புதல் தகுமே திருவாசகம் சூஇன்றெனக்கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று, நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை, சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே, யொன்றுநீயல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே’ என்று திருவாதவூர் நயினார் கர்த்தாவினுடைய தன்மையை அருளிச் செய்தது நீர் சொன்ன அர்த்தத்துக்குத் தகுமே ! என்ன, தகா தென்பது கருத்து. இதன்றியும் ; ஒன்றாமென்ற லன்றியும் உவப்பும் இன்றாம் என்றால் என் பயன் பசுமுதலும் பதிமுதலும் இரண்டு முதலாயிருக்க, இரண்டு முதலுங் கூடி ஒரு முதலாமென்று நீ சொன்ன தோஷமன்றி அவ்விடத்து ஒர் இன்பமும் இன்பத்தாலுண்டாகிய பிரியமும் இல்லையாமென்றால் இதனால் உனக்குப் பிரயோசன மென்னை ? என்னவே, பெறுவானில்லை யென்பது கருத்து; இயம்புக நான் சொன்ன அர்த்தத்தைத் தானே அல்லவென்றீரே, பின்னை இந்தச் சித்தாந்த அர்த்தம் எப்படியிருப்ப தொன்றென்று நீர் சொல்லுவீராக ; என்றனை வினவும் யாவும் விளங்க வென்றிகொள் கருத்தில் வேண்டினையாயின் பின்னை எப்படி யென்று என்னை நீ கேட்கிறவையெல்லாந் தெரியத் தக்கதாக உன்னுடைய திடமுள்ள கருத்திலே வேண்டுமென்ப தொன்று உண்டாயின் ; நதிக்கரை ஆன் எனக் கொதித்தல் மறந்து காவேரிக் கரையிற் பசுப்போல அங்காமோ இங்காமோவென்று நீ பதறிக்கொண்டு தரிகிறதைவிட்டு ; வெண்ணெயம் பதி திகழ் மெய்கண்டவன் அருள் உள்நிலை யுடையோ னொருவன் உரைத்த திருவெண்ணெய்நல்லூ ரென்கிற திருப்படைவீட்டிலே திருவவதாரஞ் செய்யப்பட்டிருக்கிற மெய்கண்டதேவ தம்பிராடிடருடைய கடாக்ஷத்தில் உண்மையினைப் பெற்றுடையனா யிருந்துள்ள மறைஞானசம்பந்த நாயனார் எனக்கு அருளிச்செய்த அர்த்தத்தைக் கொண்டு ; தவப்பிரகாசத் தன்மையில் விரித்த சிவப்பிரகாசச் செழுந்தமிழ் உண்மையை முற்செனனத்திலே செய்த தவத்தின் மிகுதிகொண்டு நான் செய்யப்பட்ட சிவப் பிரகாச மென்கிற நாமத்தோடுங் கூடிக்கொண் டிருக்கிற செழுவிய தமிழிலுண்டாகிய அர்த்தத்தை ; அருளுடன் ஆய்ந்துகொள்ள ஆசாரியனுடைய அனுக்கிரகத்துடனே கூடி ஆராய்ந்துகொள்ளவே ; திருவருள் வினவல் திருந்திடுமன்றே இந்தத் திருவருளின் பகுதி எப்படியிருப்ப தொன்றென்று என்னை நீ கேட்ட சந்தேகங்க ளெல்லாம் நன்றாக உனக்கு விளங்காநிற்கும்.
பாயிரத்திலே ஆறுபேரென்று சொல்லி அகவலிலே எட்டுப் பேரானது பாடாணவாதி பேதவாதி சமவாதி இவர்கள் மூன்று பேருடைய பெத்தம் மூன்றும் ஒன்றாயிருக்கையினாலும் மூன்று பேருடைய முத்தியும் பேதவாதமா யிருக்கையினாலும் இவர்கள் மூன்று பேரும் ஒன்று, அவிகாரவாதம் ஒன்று ; சங்கிராந்த வாதம் ஒன்று, ஐக்கியவாதம் ஒன்று, பரிணாமவாதம் ஒன்று, சைவர் ஒன்று ஆகச் சமயிகள் ஆறு.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 2

தராவலயத் துள்ளோர்கள் தந்தசங் கற்ப
நிராகரணம் என்னால் நிகழ்த்தும் பிரானைஇனி
வெம்பந்தம் நீங்கத் தொழுமின் வியன்மருதச்
சம்பந்தன் வந்தருளும் தான்.

பொழிப்புரை :

வெண்பா: தராவலயத்து உள்ளோர்கள் தந்த இந்தப் பூமியிலுண்டான சமயிகளாலே சொல்லப்பட்ட ; சங்கற்ப நிராகரணம் சங்கற்ப நிராகரண மென்கிற சாத்திரத்தை ; என்னால் நிகழ்த்தும் பிரானை இனி வெம்பந்தம் நீங்கத் தொழுமின் ஒன்றும் அறியாத என்னைக்கொண்டு சொல்லுவிக்குஞ் சுவாமியாயுள்ள என்னுடைய ஆசாரியனை இனி உங்களுடைய வெவ்விய செனன துக்கங்களெல்லாம் நீங்கத்தக்கதாகத் தெண்டன்பண்ணி வழிபட்டு வாருங்கோள் ; வியன்மருதச் சம்பந்தன் வந்து அருளும் தான் மிக்க சிறப்போடுங் கூடியிருக்கிற மருதத்தூர்க்குக் கர்த்தாவாயிருந்துள்ள மறைஞான சம்பந்தனென்கிற திருநாமத்தினையுடைவன் எழுந்தருளி உங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்யாநிற்கும்.

குறிப்புரை :

பொற்பம ராப்பல சொற்றுறை யோரைப் பொதிந்தனசங்
கற்ப நிராகர ணத்துரை காட்டினன் காற்றியங்கில்
அற்ப விராவிடை மங்கைபங் கின்றி யணைந்தஎங்கோன்
சிற்பன் நிராமயன் ஞானப்ர காசன்நம் தேசிகனே.
திருச்சிற்றம்பலம்
(சங்கற்பநிராகரணம் : கொ. சண்முகசுந்தர முதலியாராலும் காஞ்சி நாகலிங்க முதலியாராலும் உரையோடு பதிப்பிக்கப்பட்டிருப்பினும், இருவரும் சூஉரையிட்டார் பெயர்கிடைத்திலது’ என்று எழுதி வைத்தனர். இரண்டு பதிப்பிலும் காணப்படும் உரைகளுட் பேதம் சிறிதும் இல்லை. இரண்டுக்கும் மூலமாய உரைப்பிரதி இரா சாங்கக் கையெழுத்து நூல் நிலயத்திலுள்ளது. சிறிதும் மாறுதலின்றி அதிலுள்ளபடியே உரை இங்குப் பதிப்பிக்கப்படுகின்றது. இது ஞானப்பிரகாச தேசிகர் உரையென அப்பிரதியிறுதியிற் காணப்படும் செய்யுள் கூறுகின்றது. ஞானப்பிரகாசரென்னும் பெயருடையார் பல்லோர் விளங்கியிருக்கின்றனராகலின், இவர் இன்னாரென்று துணிந்துரைக்கக் கூடவில்லை. சீகாழிச் சிற்றம்பலநாடிகள் சீடர்களுள் ஒருவரும் காஞ்சி ஞானப்பிரகாசராதீன முதல்வரும் ஒரு ஞானப்பிரகாசர். இருபாவிருபதிற்கும் சிவப்பிரகாசத்திற்கும் உரையிட்ட மதுரைச் சிவப்பிரகாசர்க்குக் குரு ஒரு ஞானப்பிரகாசர். தருமபுராதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்க்கு ஞான குருவாகிய கமலை ஞானப்பிரகாசரென்னும் பெரியார் திருவாரூரில் இருந்தவர். சிவஞானசித்தியார் பரபக்கத்துக்கு உரையிட்டார் திருவொற்றியூர் ஞானப்பிரகாசரென்று தெரிகிறது. சுபக்ஷத்துக்கு உரையிட்டாருள் ஒருவர் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர். இவர் ஐவரும் வேறு வேறு இடத்தையும் மரபையுஞ் சார்ந்தவர்கள். இவ்வுரை இயற்றியவர் இறுதியகவலில் சூநதிக்கரை ஆன் என’ என்றதற்குக் காவேரிக்கரையிற் பசுப்போலே என்று வேறு நதியைக் குறிக்காது, காவேரியைச் சுட்டலால், அவர் தேசம் காவேரிக் கரையிலுள்ளதொன்றாகவேண்டுமென்று தோன்றுகிறது.
எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை)
மெய்கண்ட சாத்திரங்கள் மூலமும் உரையும் முற்றும்.
சிற்பி