பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
03 முதற் காண்டம் - 2.தில்லைவாழந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


பதிக வரலாறு :

தொகை `இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
(தி.7 ப.39 பா.1) தொகை, பொ-ரை: (சிவனடியார்க்குத்) தம்மிடத்துள்ளது எப்பொருளாயினும் அதனை இல்லை என்னாமல் வழங்கிய இயற்பகை நாயனாருக்கும் அடியேன்.
வகை
செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன்றவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்து ளியற்பகையே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 3
வகை, பொ-ரை: சிவபெருமானை நினைந்து நினைந்து இன்புறு தலையே தவமாகச் செய்துவரும் சிவனடியார்கள் எது வேண்டினும் தவறாது கொடுத்துவரும் சிவபெருமான், தவவேடமுடன் வந்து `நின் மனைவியைத் தருக` எனக் கூறவும், மை தீட்டிய கண்களை உடைய தம் மனைவியை ஈந்தவரும், அதனால் பெரும்புகழ் வந்து எய்தப் பெற்றவரும் ஆக விளங்கியவர் காவிரிப் பூம்பட்டினத்து இயற்பகையார் ஆவர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.