ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : கொல்லி

நாவலூரர் , திருமுதுகுன்றத்தில் ஆற்றிலிட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துப் பரவையாருடன் திருவாரூரில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் நாள்களில் , இறைவரைப் போற்றும் ஆனந்தம் மேலிட அடியார்களுடன் பேரருள் திறம் வினவிப் பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 140, 141) குறிப்பு : இத்திருப்பதிகம் , திருவாரூர்ப் பெருமானாரைப் பணிவதால் உண்டான பேரின்பம் பெரிதும் சிறந்தோங்கினமையால் , அவரது இயல்புகளை அடியார்களை வினவுமுகத்தாற் பாராட்டி அருளிச் செய்தது என்பது , சேக்கிழார் நாயனாராலே குறிப்பிடப்பட்டது . துணிந்து திட்பம் எய்திய பொருளை அங்ஙனம் திட்பம் எய்தாததுபோல வினாவுதல் , அங்ஙனம் வினவுவதனால் விளையும் இன்பத்தை நுகர்தல் வேட்கையாலேயாம் . திருநாவுக்கரசு சுவாமிகளும் , இவ்வாறு தமது திருத்தாண்டகங்களுள் அருளிச் செய்தமை அறிக .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.