எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
    செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

குறிப்புரை:

விளிகளை எல்லாம் முதலிற் கூட்டி, `வழியடியோம் பொய்கை புக்கு முகேர் என்னக் குடைந்து உன் கழல்பாடி வாழ்ந் தோம்` எனவும், `நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்ந்தொழிந் தோம்; இனி எம்மை எய்யாமற் காப்பாய்` எனவும் வினைமுடிக்க. மொய் ஆர் - மொய்த்தல் (நெருங்குதல்) பொருந்திய. மொய்த்தலுக்கு வினைமுதல் நீராடுவோர். மலர்களை நாடி வரும் வண்டுகளையும் கொள்வர். தடம் பொய்கை - பெரிய குளம். ``முகேர்`` என்றது, ஒலிக்குறிப்பு. குடைதல் - துழாவுதல். பாடும் பொழுது நீரைக் கையால் துழாவிநிற்றல் இயல்பு. வழியடியோம் - குடிமுழுதுமாகத் தொன்றுதொட்டு அடியராயினோம். காண், முன்னிலை அசை. ``கழல்பாடி வாழ்ந்தோம்`` என்றது, `பாடுதலாகிய பேற்றைப் பெற்றோம்` என்றபடி. இவை, முன்னர் நிகழ்ந்தன. ஆரழல் போல் செய்யன் - அணுகுதற்கரிய தீப்போலச் சிவந்த திருமேனியை யுடையவன். ``ஆட்கொண்டருளும் விளையாட்டு`` என்றது, `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என்னும் ஐந்தொழிலையுமாம் என்பது, வருகின்ற திருப்பாட்டுள், `காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` என்பதனால் விளங்கும். ஐந் தொழில்களுள் அருளலையன்றி ஏனையவற்றையும் ஆட்கொண் டருளுதலாக அருளிச் செய்தது, அவையெல்லாம் அருளலுக்கு ஏதுவாம் முறைமை பற்றியே செய்யப்படுதலாம். இத் தொழில்களை இறைவனுக்கு விளையாட்டு என்றல், `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தற்கு விளையாட்டு` என்பது போல, எளிதிற் செய்தல் பற்றியே யாம் என்பதனை, மாதவச் சிவஞான யோகிகள் சிவஞான போத மாபாடியத்தும், சிவஞான சித்தி உரையிடத்தும் இனிது விளக்கிப் போந்தமை காண்க. உய்வார்கள் உய்யும் வகை, அவரவர் நிலைக் கேற்ப, மண்ணுலக இன்பங்களையும், விண்ணுலக இன்பங்களையும், வீட்டுலக்தில் உடம்பொடுநின்று நுகரும் இன்பங்களையும் பெறும் நிலைகளாம். வகை எல்லாம் - வகையால் எல்லாம். ``உய்ந்தொழிந் தோம்`` என்றதில் ஒழிதல், துணிவுப் பொருள்பற்றி வந்தது. எய்த்தல்- பிறவியிற் சென்று இளைத்தல். எனவே, மேற்கூறியவாறு உய்ந்தவை அனைத்தும் பிறவி நீங்கிய நிலையாகாமை பெறப்பட்டது. இங்ஙனம் எல்லாவற்றையும் வெறுத்து, பிறவியற்ற நிலையாகிய பரமுத்தியை வேண்டுதல் அடிகளது விருப்பமேயாம். எனினும், இதனைப் பெண்கள் கூற்றாக அவர் அருளிச் செய்தமையின், ``எய்யாமல் காப்பாய்`` என்றதற்கு, அப் பெண்கள் இந்நிலையினையே விரும்பும் ஆடவருக்கே தாம் வாழ்க்கைப்படுமாறு அருளுதல் வேண்டும் என வேண்டினார் என உரைத்துக்கொள்க. `காவாய்` என்னும் ஏவல் வினையை மரூஉ வழக்காக, `காப்பாய்` என முன்னிலை வினை போல அருளினார், இளமகளிர் கூற்றாதல் பற்றி. இத் திருப்பாட்டு, இல்லங்களினின்றும் போந்த மகளிர் நீராடுதற்கண் இறைவனைப் பரவியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిండుగ మండుచుండు అగ్నివంటి ఎర్రటివర్ణపు తిరుమేనిగలవాడా! స్వఛ్ఛమైన తెల్లటి విభూతిపొడిలో మునిగియుండువాడా! ఓ ఈశ్వరా! సన్నటి నడుముభాగము, కాటుకపూయబడిన విశాలమైన నేత్రములుండు ఉమాదేవియొక్క భర్తవు; అందమైనవాడా! భ్రమరములు గుంపులుగ తిరుగుచుజేయు ఝూంకారధ్వనితో నిండియున్న తటాకమందు, అలలు ఎగసిపడుచు ఉరకలువేయుచు జేయు ధ్వనితో కలసిపోయిన విధమున, మేమంతా కరములు చరచి, (చేతులతో చప్పట్లు కొట్టుచూ) తాళము వేయుచూ, నీయొక్క పాదపద్మములను స్తుతించుచూ, తరతరములుగ నీయొక్క భక్తులమైయుండి జీవిస్తున్నాము; ఓ మా నాయకుడా! నీవు మమ్ములను నీ సేవకులుగజేసుకుని, మమ్మనుగ్రహించుచు, నీ దివ్యలీలను కాన్పరచుచూ, మా కష్టములను తొలగించుచూ, మాకు అంచెలంచెలుగ సుఖ సంతోషములను ఒసగుచు మాకు మరుజన్మలేని విధమున మమ్ములను రక్షించెదవుగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಪ್ರಜ್ವಲಿಸಿ ಉರಿವ ಅಗ್ನಿಯಂತೆ ಕೆಂಪು ವರ್ಣವುಳ್ಳವನೇ ! ಬಿಳುಪಾದ ವಿಭೂತಿಯಲ್ಲಿ ಮುಳುಗಿದವನೇ ! ಈಶನೇ ! ಬಡನಡುವನ್ನೂ, ಕಾಡಿಗೆ ಪೂಸಿದ ದುಂಡು ಕಂಗಳನ್ನೂ ಉಳ್ಳ ಉಮೆಯ ಪತಿಯೇ ! ಗುಂಯ್ ಗುಡುತ್ತಿರುವ ದುಂಬಿಗಳು ಮುತ್ತಿರುವಂತಹ ವಿಶಾಲವಾದ ತಟಾಕದಲ್ಲಿ ಕೈಯಿಂದ ಪಕ್ಕಕ್ಕೆ ಸರಿಸಿ ಮುಳುಗಿ ನಿನ್ನ ಪವಿತ್ರ ಪಾದಗಳನ್ನು ಸ್ತುತಿಸಿ ಹಾಡಿ, ಪುರಾತನ ಶರಣರಾದ ನಾವು ಬದುಕಿದೆವು. ಒಡೆಯನೇ ನೀನು ನಮ್ಮನ್ನು ಆಳ್ಗೊಂಡು ದಯೆಗೈದ ಲೀಲೆಯ ಕಾರಣ ವೇದನೆಯಿಂದ ಮುಕ್ತಿ ಪಡೆದು ಆನಂದವ ಪಡೆವರು. ಅವರು ಪಡೆವ ಬಗೆಗಳೆಲ್ಲವನ್ನೂ ನಾವು ಪಡೆದೆವು. ಭವದ ಬಂಧನಕ್ಕೆ ಬೀಳದಂತೆ ನಮ್ಮನ್ನು ಕಾಯ್ದು ರಕ್ಷಿಸು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

മൊയ്ക്കും ചെന്താമരപ്പൊയ്ക പുക്കു മുക്കിളിച്ചു
കൈയാല്‍ കുടഞ്ഞു നിന്‍ കഴല്‍ പാടി
അയ്യാ നിന്‍ വഴിയതിലായാടി നാം വാഴുക കാ ! ആരഴല്‍ പോലും
ചെയ്യാ വെണ്ണീറണിഞ്ഞ വിമലാ ചിറ്റിട
മൈത്തടം ക മങ്ക മണാളാ
അയ്യാ നീ ആള്‍കൊരുളും നിന്‍ കേളിയിതില്‍
ഉയ്‌േവാരെല്ലാം ഉയ്തവരല്ലോ ഉയ്യുക എല്ലാം ഉയ്‌തൊഴിഞ്ഞ നമ്മെയും
എയ്യാതിനി കാത്തരുളുക നീ എന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සරනා බිගුන් පිරි පියුමාරයට බැස, ‘මුකෝර්’ දියබුං
හඬ දෑතින් නඟා, ඔබ සිරි පා කමල් ගයා,
සුරිඳුනේ පරපුරින් පැවත එන සව්වන් සේ දිවි ගෙවුයේ බලනු, මැන අග්නිය බඳු
රත් පැහැ සුරිඳුනේ, සුදු පැහැ තවරාගත් සමිඳුනේ, ඊශ්වරය, සිහිනිඟැ’ති
නෙත’ඳුන් තැවරූ. පුළුල් නෙත් ඇති, සොඳුරියගෙ සැමියනි!
සමිඳුනේ, ඔබ සරණ රංගනයෙන්
මිදෙන්නන් මිදෙන සේ, මුදවනු ලැබුවෙමු.
දෙව් නැමදුමෙන් දුබල නොවන සේ අප සුරකිනු මැන, සුරතලියේ 11

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Bergenerasi kami hidup sebagai hamba-Mu;
Dengan bunyi kuat, memasuki kolam luas yang dikerumuni kumbang;
Menyelam menggunakan tangan sebagai gerudi, memuji tapak mulia-Mu.
Oh Tuhan! Berwarna merah ibarat bara api!
Yang menyelam dalam abu suci berwarna putih!
Si-Kacak yang berpasangan wanita berpinggang ramping dan bermata besar bercelak!
Dalam permainan mulia-Mu yang mengabdikan kami,
Secara berperingkat telah kami mengetahui
Cara orang melepaskan diri daripada penderitaan dan memperoleh kebahagian.
Berkatilah kami supaya tidak lagi menderita dalam kehidupan ini.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
सघन आग सदृश रक्ताभ वर्णवाले! त्रिपुड्र्धारी! मेरे प्रभु!
क्षीण कटि व काजल अंजित विशाल नयनोंवाली उमादेवी के पति,
नायक, भृंगों से भरे विशाल जलाशय में कलकल ध्वनि सहित स्नान करके,
तुम्हारे श्रीचरणों की स्तुति करने आई हैं।
कई पीढ़ियों से हम यहॉं निवास कर रही हैं।
भक्तों पर अनुग्रह करने के लिए तुम्हारे दिव्य खेल से प्रभावित,
परमानंद को प्राप्त करने के लिए सभी प्रयत्न कर चुकीं।
हमें अपनी कृपा दर्शाये बिना दुखी मत बनाओ। प्रभो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
भ्रमरगुञ्जितदीर्घदीर्घिकायां हस्तैः जलं प्रसार्य अवगाह्य स्नानं कृत्वा ईश्वरस्य पादौ प्रशंस्य,
नाथ परम्परागतदास्यः वयं जीवामः। अग्निरिव अरुणवर्ण, भस्मोद्धूलित सुन्दर,
तलिनोदरविशालाक्षीपते, यत्त्वं अस्मान् क्रीडया अनुगृह्णाषि, तेन भक्ताः यथा आनन्दं प्राप्नुयुः
ते सर्वं वयं जानीमः। अस्मान् रक्ष यथा वयं न कृशीभवेयुः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
In Scharen sind wir gegangen
Zu dem großen Teiche hin,
Und mit den Händen plätschernd
Haben dort wir gebadet,
Wir haben dort gesungen
Und, Herr, deinen Fuß gepriesen!
Wie hell aufloderndes Feuer,
So rot bist du, o Herr,
O du, der du, o Erhab’ner
Geschmückt bist mit hell’ger Asche,
O Reicher, der du bist Herr
Der Frau mit dem schlanken Leibe,
Mit Augen groß und schwarz
Weil dir es gefallen, Šiva,
Zu Sklavinnen uns zu machen,
Zu deinen Sklavinnen, Herr,
Darum nur leben wir,
Wie die Erlös’ten leben!
Herr, wollte uns behüten,
Auf daß wir fallen nicht!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
မီးေရာင္ကဲ့ ရဲရဲနီၿပီး လွပေသာ ရုပ္ခႏၶာရွင္ ဘုရားရွင္ေတာ္ျမတ္ႀကီးရယ္….! ေဖြးေဖြးျဖဴေသာ သီရုနီးရု (ျပာ) ကို တစ္ကိုယ္လံုး၌ လိမ္က်ံထားသူ သီဝအရွင္ရယ္၊ ပါ(ရ္)ဝသီ မယ္ေတာ္၏ ခင္ပြန္းေကာင္းရယ္…ဟူ၍
ပိတုန္းမ်ား ပ်ံဝဲေနရာ ေအးျမသည့္ ကန္ေတာ္မဂၤလာ ေရျပင္က်ယ္သို႔ ဆင္းသက္ကာ….၊ ေရကို ခြင္း၍ ခြင္း၍ ေရျဖင့္ ပက္ဖ်န္း ငုပ္လွ်ိဳရင္းႏွင့္ ဘုရားရွင္၏ ေျခေတာ္အစံု ရွိခိုးဖူးေမွ်ာ္ သီဆိုေနၾကျခင္း…ေဆြစဥ္ မ်ိဳးဆက္မျခား အဆပ္ဆက္မွ ဘုးရားကၽြန္အျဖစ္ႏွင့္ အကၽြန္တို႔က ဘဝတည္ေနသူမ်ားပါေပ….
ရွင္ေတာ္ျမတ္ ဘုရား…အရွင့္ကၽြန္ ( သာဝက ) မ်ားကို ဒုကၡကင္း၍ သုခခ်မ္းသာ ရရွိႏိုင္ရန္ အလို႔ အကၽြန္တို႔ အလုပ္အေကၽြး ျပဳေနခဲ့ၾကပါသည္။ ဤဘဝတည္း၌ ႏွစ္မြန္းက်င္လည္ေနခဲၿပီး လံုးပါးပါး မသြားေစရန္ ဗ်ာတိတ္ေတာ္ျဖင့္ ေစာင့္ေရွာက္ေတာ္မူပါ ရွင္ေတာ္ျမတ္ဘုရား……..။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
তীব্ৰ জুই সদৃশ ৰক্তাভ বৰ্ণযুক্ত প্ৰভূ! হে ভস্মধাৰী! মোৰ প্ৰভূ!
ক্ষীণ কঁকাল আৰু কাজলেৰে ৰঞ্জিত বিশাল নয়নযুক্ত উমাদেৱীৰ পতি,
নায়ক, ভোমোৰাৰে ভৰি থকা বিশাল জলাশয়ত কলকল ধ্বনিৰে স্নান কৰি
তোমাৰ শ্ৰীচৰণৰ স্তুতি কৰিবলৈ আহিছোঁ।
কেইবা পুৰুষ ধৰি আমি ইয়াত বাস কৰি আছোঁ।
ভক্তৰ ওপৰত অনুগ্ৰহ কৰাৰ বাবে তোমাৰ দিব্য খেলৰ দ্বাৰা প্ৰভাৱিত হৈ
পৰমানন্দক প্ৰাপ্ত কৰিবলৈ সকলোৱে যত্ন কৰি আছোঁ।
আমাক কৃপা প্ৰদৰ্শন নকৰাকৈ দুখী নকৰিবা। হে প্ৰভূ!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O One whose hue is ruddy like the fiercely burning fire !
O One fully bedaubed with the white Holy Ash !
O opulent One !
O Consort of Her whose broad eyes are Touched with khol and whose waist is willowy !
O Sire,
the wide pool swarmed over by chafers,
We enter dinsomely,
and with arms outstretched,
We plunge and plunge,
hailing Your divine feet.
Thus do we,
Your traditional servitors thrive.
O Sire,
by Your divine sport of enslaving,
they that are Freed from misery.
have come by salvific joy.
We too have gradually gained such redemptive grace.
Pray,
save us from our wearying embodiment.
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


In the drone-hovered pool`s deep, we dip and drill;
Stroke our arms in the plunge; we seek your kazhal
There and hail,we of servitor-lineage indeed
Survive by your taking, from bonds freed,
Gaining Grace, redeemed thereof!
O, flame-red one O, Rich,O, spouse of Uma
Collyrium eyed,slim waisted, Hark!
Save us flesh-fallen, we, the frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Flame Red Siva, coated in silvery holy ash! O, Supreme Lord!
O, Slim waisted, collyrium lined long eyed Uma`s HALF! O, Fair ONE!
In the bee slobbering lovely lotus lake, we dive and dabble
deep with splashing sounds; our arms stroking, delving, we immerse;
and hail your holy feet, and have lived as age-old servitors buoyed in service.
By your taking us as part of your five-act sacred sport,
we felt all good of joy as those rid of woe might feel weal, by route of grace!
Hence, may we be raised and supported from falling into birthing, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁄𑁆𑀬𑁆𑀬𑀸𑀭𑁆 𑀢𑀝𑀫𑁆𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃 𑀧𑀼𑀓𑁆𑀓𑀼 𑀫𑀼𑀓𑁂𑀭𑁂𑁆𑀷𑁆𑀷𑀓𑁆
𑀓𑁃𑀬𑀸𑀶𑁆 𑀓𑀼𑀝𑁃𑀦𑁆𑀢𑀼 𑀓𑀼𑀝𑁃𑀦𑁆𑀢𑀼𑀷𑁆 𑀓𑀵𑀮𑁆𑀧𑀸𑀝𑀺
𑀐𑀬𑀸 𑀯𑀵𑀺𑀬𑀝𑀺𑀬𑁄𑀫𑁆 𑀯𑀸𑀵𑁆𑀦𑁆𑀢𑁄𑀗𑁆𑀓𑀸𑀡𑁆 𑀆𑀭𑀵𑀮𑁆𑀧𑁄𑀶𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑀸𑀝𑀻 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀸 𑀘𑀺𑀶𑀼𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀮𑁆
𑀫𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀝𑀗𑁆𑀓𑀡𑁆 𑀫𑀝𑀦𑁆𑀢𑁃 𑀫𑀡𑀯𑀸𑀴𑀸
𑀐𑀬𑀸𑀦𑀻 𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀯𑀺𑀴𑁃𑀬𑀸𑀝𑁆𑀝𑀺𑀷𑁆
𑀉𑀬𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀉𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀯𑀓𑁃𑀬𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀉𑀬𑁆𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑁄𑀫𑁆
𑀏𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑀶𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀸𑀬𑁆 𑀏𑁆𑀫𑁃𑀬𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মোয্যার্ তডম্বোয্গৈ পুক্কু মুহেরেন়্‌ন়ক্
কৈযার়্‌ কুডৈন্দু কুডৈন্দুন়্‌ কৰ়ল্বাডি
ঐযা ৱৰ়িযডিযোম্ ৱাৰ়্‌ন্দোঙ্গাণ্ আরৰ়ল্বোর়্‌
সেয্যাৱেণ্ ণীর়াডী সেল্ৱা সির়ুমরুঙ্গুল্
মৈযার্ তডঙ্গণ্ মডন্দৈ মণৱাৰা
ঐযানী আট্কোণ্ টরুৰুম্ ৱিৰৈযাট্টিন়্‌
উয্ৱার্গৰ‍্ উয্যুম্ ৱহৈযেল্লাম্ উয্ন্দোৰ়িন্দোম্
এয্যামর়্‌ কাপ্পায্ এমৈযেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
मॊय्यार् तडम्बॊय्गै पुक्कु मुहेरॆऩ्ऩक्
कैयाऱ् कुडैन्दु कुडैन्दुऩ् कऴल्बाडि
ऐया वऴियडियोम् वाऴ्न्दोङ्गाण् आरऴल्बोऱ्
सॆय्यावॆण् णीऱाडी सॆल्वा सिऱुमरुङ्गुल्
मैयार् तडङ्गण् मडन्दै मणवाळा
ऐयानी आट्कॊण् टरुळुम् विळैयाट्टिऩ्
उय्वार्गळ् उय्युम् वहैयॆल्लाम् उय्न्दॊऴिन्दोम्
ऎय्यामऱ् काप्पाय् ऎमैयेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಮೊಯ್ಯಾರ್ ತಡಂಬೊಯ್ಗೈ ಪುಕ್ಕು ಮುಹೇರೆನ್ನಕ್
ಕೈಯಾಱ್ ಕುಡೈಂದು ಕುಡೈಂದುನ್ ಕೞಲ್ಬಾಡಿ
ಐಯಾ ವೞಿಯಡಿಯೋಂ ವಾೞ್ಂದೋಂಗಾಣ್ ಆರೞಲ್ಬೋಱ್
ಸೆಯ್ಯಾವೆಣ್ ಣೀಱಾಡೀ ಸೆಲ್ವಾ ಸಿಱುಮರುಂಗುಲ್
ಮೈಯಾರ್ ತಡಂಗಣ್ ಮಡಂದೈ ಮಣವಾಳಾ
ಐಯಾನೀ ಆಟ್ಕೊಣ್ ಟರುಳುಂ ವಿಳೈಯಾಟ್ಟಿನ್
ಉಯ್ವಾರ್ಗಳ್ ಉಯ್ಯುಂ ವಹೈಯೆಲ್ಲಾಂ ಉಯ್ಂದೊೞಿಂದೋಂ
ಎಯ್ಯಾಮಱ್ ಕಾಪ್ಪಾಯ್ ಎಮೈಯೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
మొయ్యార్ తడంబొయ్గై పుక్కు ముహేరెన్నక్
కైయాఱ్ కుడైందు కుడైందున్ కళల్బాడి
ఐయా వళియడియోం వాళ్ందోంగాణ్ ఆరళల్బోఱ్
సెయ్యావెణ్ ణీఱాడీ సెల్వా సిఱుమరుంగుల్
మైయార్ తడంగణ్ మడందై మణవాళా
ఐయానీ ఆట్కొణ్ టరుళుం విళైయాట్టిన్
ఉయ్వార్గళ్ ఉయ్యుం వహైయెల్లాం ఉయ్ందొళిందోం
ఎయ్యామఱ్ కాప్పాయ్ ఎమైయేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මොය්‍යාර් තඩම්බොය්හෛ පුක්කු මුහේරෙන්නක්
කෛයාර් කුඩෛන්දු කුඩෛන්දුන් කළල්බාඩි
ඓයා වළියඩියෝම් වාළ්න්දෝංගාණ් ආරළල්බෝර්
සෙය්‍යාවෙණ් ණීරාඩී සෙල්වා සිරුමරුංගුල්
මෛයාර් තඩංගණ් මඩන්දෛ මණවාළා
ඓයානී ආට්කොණ් ටරුළුම් විළෛයාට්ටින්
උය්වාර්හළ් උය්‍යුම් වහෛයෙල්ලාම් උය්න්දොළින්දෝම්
එය්‍යාමර් කාප්පාය් එමෛයේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
മൊയ്യാര്‍ തടംപൊയ്കൈ പുക്കു മുകേരെന്‍നക്
കൈയാറ് കുടൈന്തു കുടൈന്തുന്‍ കഴല്‍പാടി
ഐയാ വഴിയടിയോം വാഴ്ന്തോങ്കാണ്‍ ആരഴല്‍പോറ്
ചെയ്യാവെണ്‍ ണീറാടീ ചെല്വാ ചിറുമരുങ്കുല്‍
മൈയാര്‍ തടങ്കണ്‍ മടന്തൈ മണവാളാ
ഐയാനീ ആട്കൊണ്‍ ടരുളും വിളൈയാട്ടിന്‍
ഉയ്വാര്‍കള്‍ ഉയ്യും വകൈയെല്ലാം ഉയ്ന്തൊഴിന്തോം
എയ്യാമറ് കാപ്പായ് എമൈയേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
โมะยยาร ถะดะมโปะยกาย ปุกกุ มุเกเระณณะก
กายยาร กุดายนถุ กุดายนถุณ กะฬะลปาดิ
อายยา วะฬิยะดิโยม วาฬนโถงกาณ อาระฬะลโปร
เจะยยาเวะณ ณีราดี เจะลวา จิรุมะรุงกุล
มายยาร ถะดะงกะณ มะดะนถาย มะณะวาลา
อายยานี อาดโกะณ ดะรุลุม วิลายยาดดิณ
อุยวารกะล อุยยุม วะกายเยะลลาม อุยนโถะฬินโถม
เอะยยามะร กาปปาย เอะมายเยโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေမာ့ယ္ယာရ္ ထတမ္ေပာ့ယ္ကဲ ပုက္ကု မုေကေရ့န္နက္
ကဲယာရ္ ကုတဲန္ထု ကုတဲန္ထုန္ ကလလ္ပာတိ
အဲယာ ဝလိယတိေယာမ္ ဝာလ္န္ေထာင္ကာန္ အာရလလ္ေပာရ္
ေစ့ယ္ယာေဝ့န္ နီရာတီ ေစ့လ္ဝာ စိရုမရုင္ကုလ္
မဲယာရ္ ထတင္ကန္ မတန္ထဲ မနဝာလာ
အဲယာနီ အာတ္ေကာ့န္ တရုလုမ္ ဝိလဲယာတ္တိန္
အုယ္ဝာရ္ကလ္ အုယ္ယုမ္ ဝကဲေယ့လ္လာမ္ အုယ္န္ေထာ့လိန္ေထာမ္
ေအ့ယ္ယာမရ္ ကာပ္ပာယ္ ေအ့မဲေယေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
モヤ・ヤーリ・ タタミ・ポヤ・カイ プク・ク ムケーレニ・ナク・
カイヤーリ・ クタイニ・トゥ クタイニ・トゥニ・ カラリ・パーティ
アヤ・ヤー ヴァリヤティョーミ・ ヴァーリ・ニ・トーニ・カーニ・ アーララリ・ポーリ・
セヤ・ヤーヴェニ・ ニーラーティー セリ・ヴァー チルマルニ・クリ・
マイヤーリ・ タタニ・カニ・ マタニ・タイ マナヴァーラア
アヤ・ヤーニー アータ・コニ・ タルルミ・ ヴィリイヤータ・ティニ・
ウヤ・ヴァーリ・カリ・ ウヤ・ユミ・ ヴァカイイェリ・ラーミ・ ウヤ・ニ・トリニ・トーミ・
エヤ・ヤーマリ・ カーピ・パーヤ・ エマイヤエローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
moyyar dadaMboygai buggu muherennag
gaiyar gudaindu gudaindun galalbadi
aiya faliyadiyoM falndonggan aralalbor
seyyafen niradi selfa sirumarunggul
maiyar dadanggan madandai manafala
aiyani adgon daruluM filaiyaddin
uyfargal uyyuM fahaiyellaM uyndolindoM
eyyamar gabbay emaiyelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
مُویّارْ تَدَنبُویْغَيْ بُكُّ مُحيَۤريَنَّْكْ
كَيْیارْ كُدَيْنْدُ كُدَيْنْدُنْ كَظَلْبادِ
اَيْیا وَظِیَدِیُوۤن وَاظْنْدُوۤنغْغانْ آرَظَلْبُوۤرْ
سيَیّاوٕنْ نِيرادِي سيَلْوَا سِرُمَرُنغْغُلْ
مَيْیارْ تَدَنغْغَنْ مَدَنْدَيْ مَنَوَاضا
اَيْیانِي آتْكُونْ تَرُضُن وِضَيْیاتِّنْ
اُیْوَارْغَضْ اُیُّن وَحَيْیيَلّان اُیْنْدُوظِنْدُوۤن
يَیّامَرْ كابّایْ يَمَيْیيَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
mo̞jɪ̯ɑ:r t̪ʌ˞ɽʌmbo̞ɪ̯xʌɪ̯ pʊkkɨ mʊxe:ɾɛ̝n̺n̺ʌk
kʌjɪ̯ɑ:r kʊ˞ɽʌɪ̯n̪d̪ɨ kʊ˞ɽʌɪ̯n̪d̪ɨn̺ kʌ˞ɻʌlβɑ˞:ɽɪ
ˀʌjɪ̯ɑ: ʋʌ˞ɻɪɪ̯ʌ˞ɽɪɪ̯o:m ʋɑ˞:ɻn̪d̪o:ŋgɑ˞:ɳ ˀɑ:ɾʌ˞ɻʌlβo:r
sɛ̝jɪ̯ɑ:ʋɛ̝˞ɳ ɳi:ɾɑ˞:ɽi· sɛ̝lʋɑ: sɪɾɨmʌɾɨŋgɨl
mʌjɪ̯ɑ:r t̪ʌ˞ɽʌŋgʌ˞ɳ mʌ˞ɽʌn̪d̪ʌɪ̯ mʌ˞ɳʼʌʋɑ˞:ɭʼɑ:
ˀʌjɪ̯ɑ:n̺i· ˀɑ˞:ʈko̞˞ɳ ʈʌɾɨ˞ɭʼɨm ʋɪ˞ɭʼʌjɪ̯ɑ˞:ʈʈɪn̺
ʷʊɪ̯ʋɑ:rɣʌ˞ɭ ʷʊjɪ̯ɨm ʋʌxʌjɪ̯ɛ̝llɑ:m ʷʊɪ̯n̪d̪o̞˞ɻɪn̪d̪o:m
ʲɛ̝jɪ̯ɑ:mʌr kɑ:ppɑ:ɪ̯ ʲɛ̝mʌjɪ̯e:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
moyyār taṭampoykai pukku mukēreṉṉak
kaiyāṟ kuṭaintu kuṭaintuṉ kaḻalpāṭi
aiyā vaḻiyaṭiyōm vāḻntōṅkāṇ āraḻalpōṟ
ceyyāveṇ ṇīṟāṭī celvā ciṟumaruṅkul
maiyār taṭaṅkaṇ maṭantai maṇavāḷā
aiyānī āṭkoṇ ṭaruḷum viḷaiyāṭṭiṉ
uyvārkaḷ uyyum vakaiyellām uyntoḻintōm
eyyāmaṟ kāppāy emaiyēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
мойяaр тaтaмпойкaы пюккю мюкэaрэннaк
кaыяaт кютaынтю кютaынтюн калзaлпааты
aыяa вaлзыятыйоом ваалзнтоонгкaн аарaлзaлпоот
сэйяaвэн нираати сэлваа сырюмaрюнгкюл
мaыяaр тaтaнгкан мaтaнтaы мaнaваалаа
aыяaни ааткон тaрюлюм вылaыяaттын
юйвааркал юйём вaкaыеллаам юйнтолзынтоом
эйяaмaт кaппаай эмaыеaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
mojjah'r thadampojkä pukku mukeh'rennak
käjahr kudä:nthu kudä:nthun kashalpahdi
äjah washijadijohm wahsh:nthohngkah'n ah'rashalpohr
zejjahwe'n 'nihrahdih zelwah ziruma'rungkul
mäjah'r thadangka'n mada:nthä ma'nawah'lah
äjah:nih ahdko'n da'ru'lum wi'läjahddin
ujwah'rka'l ujjum wakäjellahm uj:nthoshi:nthohm
ejjahmar kahppahj emäjehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
moiyyaar thadampoiykâi pòkkò mòkèèrènnak
kâiyaarh kòtâinthò kòtâinthòn kalzalpaadi
âiyaa va1ziyadiyoom vaalznthoongkaanh aaralzalpoorh
çèiyyaavènh nhiirhaatii çèlvaa çirhòmaròngkòl
mâiyaar thadangkanh madanthâi manhavaalhaa
âiyaanii aatkonh daròlhòm vilâiyaatdin
òiyvaarkalh òiyyòm vakâiyèllaam òiyntho1zinthoom
èiyyaamarh kaappaaiy èmâiyèèloor èmpaavaaiy 
moyiiyaar thatampoyikai puiccu mukeerennaic
kaiiyaarh cutaiinthu cutaiinthun calzalpaati
aiiyaa valziyatiyoom valzinthoongcaainh aaralzalpoorh
ceyiiyaaveinh nhiirhaatii celva ceirhumarungcul
maiiyaar thatangcainh matainthai manhavalhaa
aiiyaanii aaitcoinh tarulhum vilhaiiyaaittin
uyivarcalh uyiyum vakaiyiellaam uyiintholziinthoom
eyiiyaamarh caappaayi emaiyieeloor empaavayi 
moyyaar thadampoykai pukku mukaerennak
kaiyaa'r kudai:nthu kudai:nthun kazhalpaadi
aiyaa vazhiyadiyoam vaazh:nthoangkaa'n aarazhalpoa'r
seyyaave'n 'nee'raadee selvaa si'rumarungkul
maiyaar thadangka'n mada:nthai ma'navaa'laa
aiyaa:nee aadko'n daru'lum vi'laiyaaddin
uyvaarka'l uyyum vakaiyellaam uy:nthozhi:nthoam
eyyaama'r kaappaay emaiyaeloar empaavaay 

Open the English Section in a New Tab
মোয়্য়াৰ্ ততম্পোয়্কৈ পুক্কু মুকেৰেন্নক্
কৈয়াৰ্ কুটৈণ্তু কুটৈণ্তুন্ কলল্পাটি
ঈয়া ৱলীয়টিয়োম্ ৱাইলণ্তোঙকাণ্ আৰলল্পোৰ্
চেয়্য়াৱেণ্ ণীৰাটী চেল্ৱা চিৰূমৰুঙকুল্
মৈয়াৰ্ ততঙকণ্ মতণ্তৈ মণৱালা
ঈয়াণী আইটকোণ্ তৰুলুম্ ৱিলৈয়াইটটিন্
উয়্ৱাৰ্কল্ উয়্য়ুম্ ৱকৈয়েল্লাম্ উয়্ণ্তোলীণ্তোম্
এয়্য়ামৰ্ কাপ্পায়্ এমৈয়েলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.