எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
    தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
    ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

குறிப்புரை:

இது முதலாக வரும் நான்கு பாடல்கள், அன்ன மகளிர் இறைவனைப் பாடிக்கொண்டே நீராடுவன. இவற்றுள், ஒருவரை முன்னிலைப்படுத்தியேனும், பலரையும் உளப்படுத்தியேனும் சில சொல்லி ஆடுவர்.
ஆர்த்த - பிணித்துள்ள. `துயர்` என்றது வெப்பத்தை. ஆர்த்து- ஆரவாரித்து; `மகிழ்ந்து` என்றபடி. தீர்த்தன் - தீர்த்தமாய் உள்ளவன். தீ ஆடும் - தீயோடு ஆடுகின்ற. கூத்தப் பெருமான் திருக்கைகளில் ஒன்றில் தீயேந்தியிருத்தல் அறிக. குவலயம் - பூ மண்டலம். ``எல்லோமும்`` எனத்தன்மை யிடத்தால் ஓதினமையின், `நம் எல்லோரையும்` என்று உரைக்க. ``நம்`` என்றது மக்கள் எல்லாரையும் உளப்படுத்து. இவ்வாறு மக்கள் இனத்தை வேறு கூறினர், அவர் சிறப்புடைய உலகமாதல் பற்றி. `இறைவனால் ஆட்கொள்ளப்படும் பேற்றால், தேவரினும் மக்களே சிறப்புடையர்` என அடிகள் பல விடத்தும் ஓதியருளுதல் காண்க. ``விளையாடி`` என்றது, முன்னர், ``கூத்தன்`` என்றதனோடு இயைந்து நின்ற பெயர். `கூத்தனும், விளையாடியும் ஆகியவனது வார்த்தை` என்க. வார்த்தை - செய்தி; புகழ், `வார்த்தையும்` என்ற உம்மை சிறப்பு. சிலம்ப - ஒலிக்க. வார் - நீண்ட. மேகலைகளை, ``கலைகள்`` என்றது, முதற்குறை. ஆர்ப்பு - ஆரவாரிப்பு. அரவம் - ஒலி `ஆரவாரிப்பாகிய ஒலி` என்க. `குடைந்த பின்` என்பது, ``குடைந்து`` எனத் திரிந்து நின்றது. குடைந்து - முழுகி. ``உடையான் பொற்பாதம் ஏத்தி`` என்றதன்பின், வளைசிலம்புதல் முதலியவற்றைச் சுட்டும், `அவ்வாறு, என்பது வருவிக்க. நீராடு மகளிர், பொய்கை, சுனை, அருவி, மடு, யாறு, கடல் என்னும் அனைத்திலும் ஆடுதல் இயல்பு. அவற்றுள், இது சுனையாடுவார் கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రమ్యమైన తిల్లైనగరమున, ఙ్ఞాన సభయందు అగ్నిపై నటనమాడు నటరాజువు నీవు! దేవలోకమును, భూమండలమును, బీజములనుండి అంకురము మొలకెత్తు విధమున మమ్ములనందరినీ జన్మమొందునట్లుజేసి, లయమొనరించి, ఆటలాడుకొను నిన్నుజేరుటకై, నీపై గానముజేయుచు, నీయొక్క కీర్తిని స్తుతించుచూ, ముంజేతి గాజులు శబ్ధము చేయుచుండ, నడుమునకు అలంకరింపబడు ‘మేఖల’ అనబడు దివ్యాభరణములు కదలాడుచు శబ్ధమొనరించుచుండ, అందమైన జఠముడులపై, భ్రమరములు చుట్టూచేరి ఝంకారము చేయుచుండ, సుగంధ పుష్పములు తేలియాడుచుండు పొయ్ గై నదిలో నటనమాడి, మాయొక్క భగవంతుడైన ఈశ్వరునియొక్క స్వర్ణ చరణములందు శరణువేడి ఆనందపారవశ్యముతో పర్వతశిఖరమువంటి ఎత్తుకు పోవు రీతిన ఆతనిని మన గానామృతముతో కొనియాడెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನಮ್ಮನ್ನು ಕಾಡುತ್ತಿದ್ದ ಭವದ ವೇದನೆಯು ನೀಗುವಂತೆ, ನಾವು ಸಂತಸದಿ ಆಡುವ ಪವಿತ್ರ ತೀರ್ಥದಂತವನು. ಮನೋಹರವಾದ ತಿಲ್ಲೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಜ್ಞಾನ ಸಭೆಯಲ್ಲಿ ಅನಲವನ್ನಿಡಿದು ನರ್ತಿಸುವ ನಟರಾಜ. ದೇವಲೋಕ ಭೂಲೋಕಗಳನ್ನು ಮತ್ತು ನಮ್ಮೆಲ್ಲರನ್ನೂ ಸೃಷ್ಟಿಸುವ, ಕಾಯುವ, ಲಯಗೊಳಿಸುವ ದೇವನ ಕೀರ್ತಿಯನ್ನು ಸ್ತುತಿಸೋಣ. ಬಳೆಗಳು, ಒಡ್ಯಾಣಗಳು ದನಿಗೈಯುತ್ತಿರೆ, ಸುಂದರವಾದ ಕೇಶರಾಶಿಗೆ ದುಂಬಿಗಳು ಮುತ್ತುತ್ತಿರೆ. ಹೂಗಳಿಂದ ಶೋಭಿಸುವ ಕೆರೆಯಲ್ಲಿ ನೀರಾಟವಾಡಿ ಶಿವ ಪರಮಾತ್ಮನ ಹೊನ್ನಿನಂತಹ ಪಾದಗಳನ್ನು ಸ್ತುತಿಸಿ ಜಲಪಾತದ ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗೋಣ ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ ಮೇಲೇಳು. ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ആര്‍ ജന്മപാപം അകിട നമ്മളില്‍ ആര്‍ാടും
തീര്‍ത്ഥന്‍ നറ്റില്ല ചിറ്റമ്പലത്തില്‍ അഗ്നിനടമാടും
കൂത്തന്‍ ഇവ്വാനും കുവലയവുമെല്ലാം
കാത്തും പടച്ചും കരും കളിയാടുവോന്‍
വാര്‍ത്തകള്‍ ചൊല്ലി വാര്‍കലം ചിലമ്പൊളി വളകള്‍
ആര്‍ഭാരവം ചെയ്തിട അണി കുഴലതില്‍ വുകള്‍ വമിട
പൂത്തുലയും പൊയ്ക കുടഞ്ഞു ഉടയോന്‍ പൊര്‍പാദം
ഏത്തിപൈം ചുന നീരാടുവോം നാം ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
උපත් භව දුක මිදී යන්නට, අප සතුටින් රඟන
තීර්තයාණනි, උතුම් තිල්ලෙයි සිදම්බරයේ ගිනි සිළුව ලෙළදෙන
රඟ දෙන, අහස් ගැබ ද , මිහි තලය ද , අන් සියල්ල ද,
මවා, සුරැක, නසන, සිරි රංගනයෙහි නිරතව සිටින සමිඳුනේ,
වදන් දොඩා, ගිගිරි වළලු මධුර නද නංවා,දිගු අබරණ
නාදය ද සමගින්, කුසුම් ගවසා ඇති කෙස් කළඹේ බමරු ද නද දෙත්
පියුම් පිරි පුෂ්කරණියේ ගිලිහෙන රන් පා ඇති සමිඳුන ගෙ
තුති පැසසුම් ගයමින්, සුවිසල් පොකුණ තුළ දිය කෙළිමු තුටින්, සුරතලියේ 12

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Kuuththa piraan (Tuhan tarian) yang menari di Thillai dengan menatang api
Menjelma sebagai air kolam yang kita bermain dengan gembira,
Demi mengatasi kesedihan kelahiran.
Dunia langit (syurga), bumi dan kita semua
Dicipta, dikekal dan disingkir oleh-Nya sebagai suatu permainan.
Marilah berkata tentang kemuliaan-Nya;
Marilah kita bermain air dengan gegelang tangan berbunyi,
Perhiasan seperti kain panjang dan sebagainya bergerak dan berbunyi
Kumbang-kumbang yang berbunyi di atas rambut cantik,
Di kolam yang mempunyai pelbagai bunga;
Tengelamlah dalam air kolam besar dengan
Menyembah telapak ibarat emas kepunyaan Tuhan kita.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
जन्म बन्धन का दुख मिटाने हेतु
मंगल स्नान करने हम आईं, नीर रूप में सुशोभित ईश!
सुन्दर तिल्लै ज्ञान सभा के मध्य, अग्नि धारण कर नृत्य करनेवाले प्रभु!
इस विश्व को, देवलोक की, हम सब की स्थिति,
उत्पत्ति विनाश स्वरूप भगवान की स्तुति करते हुए,
कंकण निनादित करते हुए,
सुन्दर कारीगरी से युक्त आभूषणों को ध्वनित करते हुए,
सुन्दर केशराशि में भृंग मधु गुंजार करते हुए,
पुष्पों से आच्छादित जलाशय में स्नान कर,
हमारे अपने ईश के स्वर्ण चरणों की वन्दना करें,
पर्वत के जलाशय कुण्डों में जल क्रीड़ा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
जन्मबन्धनार्तिनाशनाय अस्माभिः स्नातः तीर्थस्वरूपी आनन्ददायकः सुन्दरतिल्लै चिदम्बरक्षेत्रे करधृताग्निः
नृत्यति। आकाशभूम्यादिसर्वस्य सृष्टिस्थितिसंहार क्रीडा रचयिता,
तस्य कीर्तिं प्रशंस्य कङ्कणान् मेखलान् च नादयन् भ्रमरगुञ्जितकेशिन्यः
तडागे स्नान्ति। स्वामिनः स्वर्णपादौ प्रशंस्य स्नानं कुर्वन्ति।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Der Lehrer, dem zu Ehren
Wir alle jauchzend tanzen,
Damit das drohende Unglück
Des Wiedergeborenwerdens
Von uns genommen werde,
Das ist zu Chidambaram
Der auf Feuer tanzende Tänzer!
Spielend schafft und erhält,
Spielend vernichtet er uns,
Und alle Bewohner des Himmels
Und auch Bewohner der Erde!
So daß die Armringe klirren,
Die Gürtel hell erklingen,
Und über dem leuchtenden Haupthaar,
Geschmückt mit Edelsteinen,
Viel glänzende Käfer summen,
So tanze im glänzenden Wasser!
Verkündige seinen Ruhm!
O, bade in dem Teiche,
Der von Blumen hell erglänzt,
Preise die goldenen Füße
Des Herrn, des herrlich Erhab’nen,
Ergötz’ dich im großen Teiche!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
အကၽြန္တို႔၌ အစဥ္မပ်က္ ပူးတြဲ စီးဆင္းလ်က္ ရွိေနခဲ့ေသာ ေမြးဖြားျခင္းတည္း ဟူေသာ ဇာတိ ဒုကၡမွ ကင္းလြတ္ေစရန္ အကၽြန္တို႔ ဝမ္းေျမာက္ ရႊင္လန္းစြာ ေရခ်ိဳးသန္႔စင္ၾကေသာ မဂၤလာေရကန္ေတာ္ႏွင့္ ပမာရွိသည့္ ရွင္ေတာ္ျမတ္ဘုရား…။ ေတာက္လွ်ံေနသည့္ မီးအိုးကို လက္ဝါးေတာ္ျမတ္၌ ေတာ္ဝင္အကျဖင့္ ျမဴးၾကြလွ်က္ ရွိေနခဲ့ေသာ သီရုခ်ီ(တ္)ရ(မ္)ပလ(မ္)၏ ပန္တ်ာ အရွင္သခင္ ျမတ္ဘုရား…။
ကမၻာေျမႀကီးႏွင့္ မိုးေကာင္းကင္တို႔ အပါအဝင္ ၾသကာသေလာက သတၱေလာက၊ အကၽြန္တို႔ႏွင့္ အတူ အျခားအရာ အားလံုးကို ဖန္ဆင္း ေစာင့္ေရွာက္ ပတ္သက္ စိုးမိုးေနခဲ့သူ ရွင္ေတာ္ျမတ္ဘုရား….၊ ထိုဂုဏ္ႏွင့္ ၿပီးျပည့္စံုသူကပင္ ဘုရားရွင္ ျဖစ္ေပသည္။ ဘုရားရွင္၏ အနက္သေဘာရွိေသာ ဂုဏ္ေတာ္မ်ားကို ပြားမ်ား၍ အကၽြန္တို႔ လက္ဝယ္ရွိ လက္ေကာက္သံ တလြင္လြင္ျမည္သံႏွင့္အတူ လွပသြယ္လ်ေသာ အကၽြန္တို႔ ဆံေကသာထက္ဝယ္ ပ်ား၊ ပိတုန္းမ်ား ဝဲပ်ံ ျမည္တြန္ ရင့္က်ဴးေနခဲ့ၾကၿပီး၊ ပန္းေပါင္းစံု ဖူးပြင့္ေဝဆာေနသည့္ ကန္ေတာ္မဂၤလာ ေရျပင္ဝယ္ အကၽြန္တို႔ ငုပ္လ်ိဳး ကူးခပ္ရင္းႏွင့္ ရွင္ေတာ္ျမတ္ဘုရား၏ ေရႊဖဝါးေတာ္ျမတ္အား ႏွဳတ္မွ က်ဴးရင့္ သီဆိုကာ ဘုရားရွင္ေတာ္ျမတ္၏ အႏွိဴင္းမဲ့ ႀကီးမားေသာ ေတာင္ႀကီးပမာျဖစ္ေသာ ဗ်ာတိတ္ေတာ္ ေရတံခြန္၌ ငုပ္ဝင္ေပ်ာ္ေမြ႔ၾကပါစို႔။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
জন্ম বন্ধনৰ দুখ আঁতৰাবলৈ,
মংগল স্নান কৰিবলৈ আমি আহিলোঁ, হে জলৰ ৰূপত সুশোভিত ঈশ্বৰ!
সুন্দৰ তিল্লৈৰ জ্ঞান সভাৰ মাজত, অগ্নি ধাৰণ কৰি নৃত্য কৰা হে প্ৰভূ!
এই বিশ্বক, দেৱলোকৰ, আমি সকলোৰে স্থিতি,
উৎপত্তি বিনাশ স্বৰূপ সেই ভগৱানৰ স্তুতি কৰি,
কংকন নিনাদিত কৰি,
কাৰিকৰিক দিশৰপৰা অতি সুন্দৰ অলংকাৰসমূহ ধ্বনিত কৰি,
সুন্দৰ কেশৰাশিত ভোমোৰা মৌ গুঞ্জৰিত কৰি,
পুষ্পৰে ঢাকি থকা জলাশয়ত স্নান কৰি,
আমাৰ অতি আপোন ঈশ্বৰৰ স্বৰ্ণ চৰণৰ বন্দনা কৰোঁ,
পৰ্বতৰ জলাশয় কুণ্ডত জলক্ৰীড়া কৰোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
He is the holy ford where we can bathe in joy and get rid Of our fettering embodiment.
He is the God that dances In the Hall of Gnosis at beautiful Tillai,
holding fire In His hand.
He is the God who evolves,
fosters and resolves The heaven,
the earth and all of us,
as if it were a play.
Let us hymn His glory and bathe in the flowery pool The while chafers circle and bombinate over our jewelled tresses,
Our bangles tinkle and our fastened girdles And ornaments sway and jingle.
Lo,
may you hail The auric feet of the Lord and plunge in the great Spring,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


For birthing-bane to perish, in the sacred fount of His;
May we bathe. In goodly Tillai Chitrambalam He is
The Dancer flame-in-arms; Heavens, Cosms and All
He creates, conserves,and hides in play; let bangles jingle,
Cingulums shake,loosen bee-buzzed locks
Plunge in the floral pool,let us,let us,
Delve and cling to and praise His auric Feet Hark!
And immerse in the sweet spa, O, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Isn`t our Lord a Mercy Hill spa-pool for to bathe in bliss, to break woeful birthing
manacles! Isn`t He Dancer fanning fires in an arm concerting His chores
on the Gnostic Hall of Fair Tillai Spatium! Divine enigma is His play to make worlds
above, below and of Beings, to maintain all He makes, and to unmake them
in obscure naught; His glory, hail;with bangles to jingle, expansive cingulum
to swing, locks to wave off bees hummimg over them, swim, splatter,
spray and stroke the flower rich lake-in-the wake; you hymn and clasp the auric
holy feet of Lord and dip deep inside the hillside spa of waters you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀭𑁆𑀢𑁆𑀢 𑀧𑀺𑀶𑀯𑀺𑀢𑁆 𑀢𑀼𑀬𑀭𑁆𑀓𑁂𑁆𑀝𑀦𑀸𑀫𑁆 𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀝𑀼𑀫𑁆
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀷𑁆𑀦𑀶𑁆 𑀶𑀺𑀮𑁆𑀮𑁃𑀘𑁆𑀘𑀺𑀶𑁆 𑀶𑀫𑁆𑀧𑀮𑀢𑁆𑀢𑁂 𑀢𑀻𑀬𑀸𑀝𑀼𑀫𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆𑀇𑀯𑁆 𑀯𑀸𑀷𑀼𑀫𑁆 𑀓𑀼𑀯𑀮𑀬𑀫𑀼𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑁄𑀫𑀼𑀫𑁆
𑀓𑀸𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀧𑀝𑁃𑀢𑁆𑀢𑀫𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑀺𑀴𑁃𑀬𑀸𑀝𑀺
𑀯𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁂𑀘𑀺 𑀯𑀴𑁃𑀘𑀺𑀮𑀫𑁆𑀧 𑀯𑀸𑀭𑁆𑀓𑀮𑁃𑀓𑀴𑁆
𑀆𑀭𑁆𑀧𑁆𑀧𑀭𑀯𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬 𑀅𑀡𑀺𑀓𑀼𑀵𑀮𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀧𑁆
𑀧𑀽𑀢𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀓𑁃 𑀓𑀼𑀝𑁃𑀦𑁆𑀢𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀸𑀢𑀫𑁆
𑀏𑀢𑁆𑀢𑀺 𑀇𑀭𑀼𑀜𑁆𑀘𑀼𑀷𑁃𑀦𑀻 𑀭𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আর্ত্ত পির়ৱিত্ তুযর্গেডনাম্ আর্ত্তাডুম্
তীর্ত্তন়্‌নট্রিল্লৈচ্চিট্রম্বলত্তে তীযাডুম্
কূত্তন়্‌ইৱ্ ৱান়ুম্ কুৱলযমুম্ এল্লোমুম্
কাত্তুম্ পডৈত্তম্ করন্দুম্ ৱিৰৈযাডি
ৱার্ত্তৈযুম্ পেসি ৱৰৈসিলম্ব ৱার্গলৈহৰ‍্
আর্প্পরৱঞ্ সেয্য অণিহুৰ়ল্মেল্ ৱণ্ডার্প্পপ্
পূত্তিহৰ়ুম্ পোয্গৈ কুডৈন্দুডৈযান়্‌ পোর়্‌পাদম্
এত্তি ইরুঞ্জুন়ৈনী রাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
आर्त्त पिऱवित् तुयर्गॆडनाम् आर्त्ताडुम्
तीर्त्तऩ्नट्रिल्लैच्चिट्रम्बलत्ते तीयाडुम्
कूत्तऩ्इव् वाऩुम् कुवलयमुम् ऎल्लोमुम्
कात्तुम् पडैत्तम् करन्दुम् विळैयाडि
वार्त्तैयुम् पेसि वळैसिलम्ब वार्गलैहळ्
आर्प्परवञ् सॆय्य अणिहुऴल्मेल् वण्डार्प्पप्
पूत्तिहऴुम् पॊय्गै कुडैन्दुडैयाऩ् पॊऱ्पादम्
एत्ति इरुञ्जुऩैनी राडेलोर् ऎम्बावाय् 
Open the Devanagari Section in a New Tab
ಆರ್ತ್ತ ಪಿಱವಿತ್ ತುಯರ್ಗೆಡನಾಂ ಆರ್ತ್ತಾಡುಂ
ತೀರ್ತ್ತನ್ನಟ್ರಿಲ್ಲೈಚ್ಚಿಟ್ರಂಬಲತ್ತೇ ತೀಯಾಡುಂ
ಕೂತ್ತನ್ಇವ್ ವಾನುಂ ಕುವಲಯಮುಂ ಎಲ್ಲೋಮುಂ
ಕಾತ್ತುಂ ಪಡೈತ್ತಂ ಕರಂದುಂ ವಿಳೈಯಾಡಿ
ವಾರ್ತ್ತೈಯುಂ ಪೇಸಿ ವಳೈಸಿಲಂಬ ವಾರ್ಗಲೈಹಳ್
ಆರ್ಪ್ಪರವಞ್ ಸೆಯ್ಯ ಅಣಿಹುೞಲ್ಮೇಲ್ ವಂಡಾರ್ಪ್ಪಪ್
ಪೂತ್ತಿಹೞುಂ ಪೊಯ್ಗೈ ಕುಡೈಂದುಡೈಯಾನ್ ಪೊಱ್ಪಾದಂ
ಏತ್ತಿ ಇರುಂಜುನೈನೀ ರಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 
Open the Kannada Section in a New Tab
ఆర్త్త పిఱవిత్ తుయర్గెడనాం ఆర్త్తాడుం
తీర్త్తన్నట్రిల్లైచ్చిట్రంబలత్తే తీయాడుం
కూత్తన్ఇవ్ వానుం కువలయముం ఎల్లోముం
కాత్తుం పడైత్తం కరందుం విళైయాడి
వార్త్తైయుం పేసి వళైసిలంబ వార్గలైహళ్
ఆర్ప్పరవఞ్ సెయ్య అణిహుళల్మేల్ వండార్ప్పప్
పూత్తిహళుం పొయ్గై కుడైందుడైయాన్ పొఱ్పాదం
ఏత్తి ఇరుంజునైనీ రాడేలోర్ ఎంబావాయ్ 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආර්ත්ත පිරවිත් තුයර්හෙඩනාම් ආර්ත්තාඩුම්
තීර්ත්තන්නට්‍රිල්ලෛච්චිට්‍රම්බලත්තේ තීයාඩුම්
කූත්තන්ඉව් වානුම් කුවලයමුම් එල්ලෝමුම්
කාත්තුම් පඩෛත්තම් කරන්දුම් විළෛයාඩි
වාර්ත්තෛයුම් පේසි වළෛසිලම්බ වාර්හලෛහළ්
ආර්ප්පරවඥ් සෙය්‍ය අණිහුළල්මේල් වණ්ඩාර්ප්පප්
පූත්තිහළුම් පොය්හෛ කුඩෛන්දුඩෛයාන් පොර්පාදම්
ඒත්ති ඉරුඥ්ජුනෛනී රාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
ആര്‍ത്ത പിറവിത് തുയര്‍കെടനാം ആര്‍ത്താടും
തീര്‍ത്തന്‍നറ് റില്ലൈച്ചിറ് റംപലത്തേ തീയാടും
കൂത്തന്‍ഇവ് വാനും കുവലയമും എല്ലോമും
കാത്തും പടൈത്തം കരന്തും വിളൈയാടി
വാര്‍ത്തൈയും പേചി വളൈചിലംപ വാര്‍കലൈകള്‍
ആര്‍പ്പരവഞ് ചെയ്യ അണികുഴല്‍മേല്‍ വണ്ടാര്‍പ്പപ്
പൂത്തികഴും പൊയ്കൈ കുടൈന്തുടൈയാന്‍ പൊറ്പാതം
ഏത്തി ഇരുഞ്ചുനൈനീ രാടേലോര്‍ എംപാവായ് 
Open the Malayalam Section in a New Tab
อารถถะ ปิระวิถ ถุยะรเกะดะนาม อารถถาดุม
ถีรถถะณนะร ริลลายจจิร ระมปะละถเถ ถียาดุม
กูถถะณอิว วาณุม กุวะละยะมุม เอะลโลมุม
กาถถุม ปะดายถถะม กะระนถุม วิลายยาดิ
วารถถายยุม เปจิ วะลายจิละมปะ วารกะลายกะล
อารปปะระวะญ เจะยยะ อณิกุฬะลเมล วะณดารปปะป
ปูถถิกะฬุม โปะยกาย กุดายนถุดายยาณ โปะรปาถะม
เอถถิ อิรุญจุณายนี ราเดโลร เอะมปาวาย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာရ္ထ္ထ ပိရဝိထ္ ထုယရ္ေက့တနာမ္ အာရ္ထ္ထာတုမ္
ထီရ္ထ္ထန္နရ္ ရိလ္လဲစ္စိရ္ ရမ္ပလထ္ေထ ထီယာတုမ္
ကူထ္ထန္အိဝ္ ဝာနုမ္ ကုဝလယမုမ္ ေအ့လ္ေလာမုမ္
ကာထ္ထုမ္ ပတဲထ္ထမ္ ကရန္ထုမ္ ဝိလဲယာတိ
ဝာရ္ထ္ထဲယုမ္ ေပစိ ဝလဲစိလမ္ပ ဝာရ္ကလဲကလ္
အာရ္ပ္ပရဝည္ ေစ့ယ္ယ အနိကုလလ္ေမလ္ ဝန္တာရ္ပ္ပပ္
ပူထ္ထိကလုမ္ ေပာ့ယ္ကဲ ကုတဲန္ထုတဲယာန္ ေပာ့ရ္ပာထမ္
ေအထ္ထိ အိရုည္စုနဲနီ ရာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
アーリ・タ・タ ピラヴィタ・ トゥヤリ・ケタナーミ・ アーリ・タ・タートゥミ・
ティーリ・タ・タニ・ナリ・ リリ・リイシ・チリ・ ラミ・パラタ・テー ティーヤートゥミ・
クータ・タニ・イヴ・ ヴァーヌミ・ クヴァラヤムミ・ エリ・ロームミ・
カータ・トゥミ・ パタイタ・タミ・ カラニ・トゥミ・ ヴィリイヤーティ
ヴァーリ・タ・タイユミ・ ペーチ ヴァリイチラミ・パ ヴァーリ・カリイカリ・
アーリ・ピ・パラヴァニ・ セヤ・ヤ アニクラリ・メーリ・ ヴァニ・ターリ・ピ・パピ・
プータ・ティカルミ・ ポヤ・カイ クタイニ・トゥタイヤーニ・ ポリ・パータミ・
エータ・ティ イルニ・チュニイニー ラーテーローリ・ エミ・パーヴァーヤ・ 
Open the Japanese Section in a New Tab
ardda birafid duyargedanaM arddaduM
dirddannadrillaiddidraMbaladde diyaduM
guddanif fanuM gufalayamuM ellomuM
gadduM badaiddaM garanduM filaiyadi
farddaiyuM besi falaisilaMba fargalaihal
arbbarafan seyya anihulalmel fandarbbab
buddihaluM boygai gudaindudaiyan borbadaM
eddi irundunaini radelor eMbafay 
Open the Pinyin Section in a New Tab
آرْتَّ بِرَوِتْ تُیَرْغيَدَنان آرْتّادُن
تِيرْتَّنْنَتْرِلَّيْتشِّتْرَنبَلَتّيَۤ تِيیادُن
كُوتَّنْاِوْ وَانُن كُوَلَیَمُن يَلُّوۤمُن
كاتُّن بَدَيْتَّن كَرَنْدُن وِضَيْیادِ
وَارْتَّيْیُن بيَۤسِ وَضَيْسِلَنبَ وَارْغَلَيْحَضْ
آرْبَّرَوَنعْ سيَیَّ اَنِحُظَلْميَۤلْ وَنْدارْبَّبْ
بُوتِّحَظُن بُویْغَيْ كُدَيْنْدُدَيْیانْ بُورْبادَن
يَۤتِّ اِرُنعْجُنَيْنِي راديَۤلُوۤرْ يَنباوَایْ 


Open the Arabic Section in a New Tab
ˀɑ:rt̪t̪ə pɪɾʌʋɪt̪ t̪ɨɪ̯ʌrɣɛ̝˞ɽʌn̺ɑ:m ˀɑ:rt̪t̪ɑ˞:ɽɨm
t̪i:rt̪t̪ʌn̺n̺ʌr rɪllʌɪ̯ʧʧɪr rʌmbʌlʌt̪t̪e· t̪i:ɪ̯ɑ˞:ɽɨm
ku:t̪t̪ʌn̺ɪʋ ʋɑ:n̺ɨm kʊʋʌlʌɪ̯ʌmʉ̩m ʲɛ̝llo:mʉ̩m
kɑ:t̪t̪ɨm pʌ˞ɽʌɪ̯t̪t̪ʌm kʌɾʌn̪d̪ɨm ʋɪ˞ɭʼʌjɪ̯ɑ˞:ɽɪ
ʋɑ:rt̪t̪ʌjɪ̯ɨm pe:sɪ· ʋʌ˞ɭʼʌɪ̯ʧɪlʌmbə ʋɑ:rɣʌlʌɪ̯xʌ˞ɭ
ˀɑ:rppʌɾʌʋʌɲ sɛ̝jɪ̯ə ˀʌ˞ɳʼɪxɨ˞ɻʌlme:l ʋʌ˞ɳɖɑ:rppʌp
pu:t̪t̪ɪxʌ˞ɻɨm po̞ɪ̯xʌɪ̯ kʊ˞ɽʌɪ̯n̪d̪ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ po̞rpɑ:ðʌm
ʲe:t̪t̪ɪ· ʲɪɾɨɲʤɨn̺ʌɪ̯n̺i· rɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 
Open the IPA Section in a New Tab
ārtta piṟavit tuyarkeṭanām ārttāṭum
tīrttaṉnaṟ ṟillaicciṟ ṟampalattē tīyāṭum
kūttaṉiv vāṉum kuvalayamum ellōmum
kāttum paṭaittam karantum viḷaiyāṭi
vārttaiyum pēci vaḷaicilampa vārkalaikaḷ
ārpparavañ ceyya aṇikuḻalmēl vaṇṭārppap
pūttikaḻum poykai kuṭaintuṭaiyāṉ poṟpātam
ētti iruñcuṉainī rāṭēlōr empāvāy 
Open the Diacritic Section in a New Tab
аарттa пырaвыт тюяркэтaнаам аарттаатюм
тирттaннaт рыллaычсыт рaмпaлaттэa тияaтюм
куттaныв ваанюм кювaлaямюм эллоомюм
кaттюм пaтaыттaм карaнтюм вылaыяaты
ваарттaыём пэaсы вaлaысылaмпa вааркалaыкал
аарппaрaвaгн сэйя аныкюлзaлмэaл вaнтаарппaп
путтыкалзюм пойкaы кютaынтютaыяaн потпаатaм
эaтты ырюгнсюнaыни раатэaлоор эмпааваай 
Open the Russian Section in a New Tab
ah'rththa pirawith thuja'rkeda:nahm ah'rththahdum
thih'rththan:nar rillächzir rampalaththeh thihjahdum
kuhththaniw wahnum kuwalajamum ellohmum
kahththum padäththam ka'ra:nthum wi'läjahdi
wah'rththäjum pehzi wa'läzilampa wah'rkaläka'l
ah'rppa'rawang zejja a'nikushalmehl wa'ndah'rppap
puhththikashum pojkä kudä:nthudäjahn porpahtham
ehththi i'rungzunä:nih 'rahdehloh'r empahwahj 
Open the German Section in a New Tab
aarththa pirhavith thòyarkèdanaam aarththaadòm
thiirththannarh rhillâiçhçirh rhampalaththèè thiiyaadòm
köththaniv vaanòm kòvalayamòm èlloomòm
kaaththòm patâiththam karanthòm vilâiyaadi
vaarththâiyòm pèèçi valâiçilampa vaarkalâikalh
aarpparavagn çèiyya anhikòlzalmèèl vanhdaarppap
pöththikalzòm poiykâi kòtâinthòtâiyaan porhpaatham
èèththi irògnçònâinii raadèèloor èmpaavaaiy 
aariththa pirhaviith thuyarketanaam aariththaatum
thiiriththannarh rhillaicceirh rhampalaiththee thiiiyaatum
cuuiththaniv vanum cuvalayamum elloomum
caaiththum pataiiththam carainthum vilhaiiyaati
variththaiyum peecei valhaiceilampa varcalaicalh
aarpparavaign ceyiya anhiculzalmeel vainhtaarppap
puuiththicalzum poyikai cutaiinthutaiiyaan porhpaatham
eeiththi iruignsunainii raateeloor empaavayi 
aarththa pi'ravith thuyarkeda:naam aarththaadum
theerththan:na'r 'rillaichchi'r 'rampalaththae theeyaadum
kooththaniv vaanum kuvalayamum elloamum
kaaththum padaiththam kara:nthum vi'laiyaadi
vaarththaiyum paesi va'laisilampa vaarkalaika'l
aarpparavanj seyya a'nikuzhalmael va'ndaarppap
pooththikazhum poykai kudai:nthudaiyaan po'rpaatham
aeththi irunjsunai:nee raadaeloar empaavaay 
Open the English Section in a New Tab
আৰ্ত্ত পিৰৱিত্ তুয়ৰ্কেতণাম্ আৰ্ত্তাটুম্
তীৰ্ত্তন্ণৰ্ ৰিল্লৈচ্চিৰ্ ৰম্পলত্তে তীয়াটুম্
কূত্তন্ইৱ্ ৱানূম্ কুৱলয়মুম্ এল্লোমুম্
কাত্তুম্ পটৈত্তম্ কৰণ্তুম্ ৱিলৈয়াটি
ৱাৰ্ত্তৈয়ুম্ পেচি ৱলৈচিলম্প ৱাৰ্কলৈকল্
আৰ্প্পৰৱঞ্ চেয়্য় অণাকুলল্মেল্ ৱণ্টাৰ্প্পপ্
পূত্তিকলুম্ পোয়্কৈ কুটৈণ্তুটৈয়ান্ পোৰ্পাতম্
এত্তি ইৰুঞ্চুনৈণী ৰাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.