எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டுள், அன்ன மகளிர் இறைவனையும், இறைவியையும் பலபடியாகப் பாடி ஆடுதல் கூறப்படுகின்றது. ``சிற்றம்பலம் பாடி`` என்றது தொடங்கி, ``பாதத் திறம் பாடி`` என்றதுகாறும் உள்ளவற்றை முதற்கண் கூட்டுக. காது ஆர் - காதில் பொருந்திய. `பைங் கலன்` என இயையும். பசிய பொன்னாற் செய்யப்பட்டமையின், கலனும் பசுமையுடைத் தாயிற்று. `கலன்` என்பது பொதுச் சொல்லாதலின், ``பூண்கலன்`` என அடைபுணர்க்கப்பட்டது. பூண்கலன், வினைத்தொகை. கோதை - மாலை. `மாலை கூந்தலின்கண் ஆட` என்க. `கோதைக் குழலாட` எனவும் பாடம் ஓதுவர். சீதப் புனல் - தண்ணிய நீர். இஃது, `ஆடுதற்கு இனிதாம்` எனக்குறித்தவாறு. `புனலின்கண்` என ஏழாவது விரிக்க. வேதப் பொருள் - வேதத்துள் கூறப்பட்ட முதற் பொருளின் இயல்பு. அப்பொருள் - அவ்வியல்பையுடைய பொருள். ஆமாறு - ஆமாற் றினை; என்றது, `சிவபெருமானிடமே அவ்வியல்பு காணப்படுமாற் றினை` என்றபடி. ``ஆமாறு`` என்றதனை `ஆதி` என்றதற்கும், கூட்டுக. `சோதி` என்றது `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சூழ் - மார் பினைச் சூழ்ந்துள்ள. `தார்` என்றது, அதனது சிறப்பினை. ஆதியும், அந்தமும் ஆதல், `உலகிற்கு` என்க. பேதித்தல் - ஒருகாலைக் கொருகால் அறிவு வேறாகச் செய்தல். `வளர்த்து` என்றதனால், இது ஆக்க மாய வேறுபாட்டையே குறிக்கும். எடுத்த - உயர்த்திய. இறை வனது அருட் சத்தியே முன்னர் மறைப்புச் சத்தியாயும், பின்னர் விளக்கற் சத்தியாயும் நின்று அறிவை வளர்த்தலின், ``வளர்த்தெடுத்த பெய்வளை`` என்றார். மறைத்தல் அதற்கியல்பாகாது விளக்குதலே இயல்பாகலின், விளக்கத் தொடங்கும் நிலையே, `சத்திநிபாதம்` எனப்படுகின்றது. மறைத்தலேயன்றி, விளக்குதலாகிய சத்தி நிபாதமும், `மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம்` என நால்வகைப் பட்டு, அவற்றுள் ஒன்று நான்காயும், மற்றும் அவ்வாற்றால் பலவாயும் நிகழ்தலின், ``பேதித்து`` என்று அருளிச் செய்தார். புனல் ஆடி ஆடு - நீரின்கண் விளையாடி மூழ்கு. ``சிற்றம்பலம்பாடி`` என்றதனால், இது, கோயிற்றிருக்குளம் ஆடுவார் கூறியதாம். இத் திருக்குளம், `சிவகங்கை` எனப்படுகின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చెవులకు అలంకరింపబడిన చెవికమ్మలు ఊగుచుండ, పచ్చటి పసిడితో చేయబడిన ఆభరణములు ఇటునటు కదలాడుచుండ, తలపై పెట్టుకున్న పూమాలలు అటునిటు జరుగుచుండ, ఆ పూమాల చుట్టూ భ్రమరముల గుంపులు ఝూంకారములతో కదలుచుండ, ఆ చల్లటి నీటిలో మునిగి, తిల్లై నగరమందు వెలసియున్న చిదంబరనాథుని కొనియాడుచు గానముచేసి, ఆ దైవము మనకు సొంతమగువిధమున ఆ పరంజ్యోతిస్వరూపముపై గానముచేసి, ఆతని ఎరటి జఠలపై అలంకరింపబడిన కొండ్రైపుష్పములను వర్ణించి గానము చేసి, ఆది దైవమైన ఆతని పురాతనత్వమును కొనియాడుచు గానముచేసి, ఆతని లయమొనరించు గుణముపై గానముచేసి, మనసును పరిపక్వము గావించుకుని, మనలను ఉన్నతస్థితికి తీసుకునివచ్చు ఆ స్వర్ణాభరణములు ధరించిన పార్వతీ అమ్మయొక్క లేత తమలపాకులవంటి దివ్య చరణారవిందముల సౌందర్యమును గానముచేయుచు, ఆడెదముగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕಿವಿಯಲ್ಲಿರುವ ಓಲೆಗಳು ಅಲುಗಾಡುತ್ತಿರೆ, ಅಪರಂಜಿ ಚಿನ್ನದಿಂದಾದ ಆಭರಣಗಳು ತೊನೆದಾಡುತ್ತಿರೆ, ಹೂಮಾಲೆ ಕೂದಲಿನಲ್ಲಿ ಓಲಾಡುತ್ತಿರೆ, ಅದರ ಸುತ್ತಲೂ ಅಳಿಗಳು ಝೇಂಕರಿಸುತ್ತಿರೆ, ತಂಪಾದ ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗಿ ತಿಲ್ಲೈನ ಸಿಟ್ರಂಬಲಂಗೆ ಹೋಗಿ ವೇದಗಳ ಸಾರವಾದ ಶಿವನನ್ನು ಸ್ತುತಿಸೋಣ. ಆ ಶಿವನು ನಮ್ಮವನಾಗುವಂತೆ ಅವನ ಪರಂಜ್ಯೋತಿ ಸ್ವರೂಪವ ಹಾಡೋಣ. ಶಿವನ ಮುಡಿಯಲ್ಲಿರುವ ಕೊನ್ರೈ ಹೂಮಾಲೆಯ ಸ್ತುತಿಸೋಣ ಅವನ ಆದಿ ಗುಣವ ಸ್ತುತಿಸೋಣ. ಅವನ ಅಂತ್ಯಗುಣವ ಸ್ತುತಿಸೋಣ. ಪ್ರಾಪಂಚಿಕ ಬಂಧನಗಳನ್ನು ನೀಗಿಸಿ ನಮ್ಮನ್ನು ರಕ್ಷಿಸಿದ ಪವಿತ್ರ ಪಾದಗಳ ಹಿರಿಮೆಯನ್ನು ಸ್ತುತಿಸೋಣ. ನಾವೂ ನಿನ್ನೊಡನೆ ನೀರಾಟವಾಡುವೆವು. ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ ಮೇಲೇಳು. ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കാതണിക്കുഴയാട പൈം പൂ കലം ആട
കോതണിക്കുഴലാട വിനങ്ങളാട
ശീതപ്പുനലാടി ചിറ്റമ്പലം പാടി
വേദപ്പൊരുള്‍ പാടി അപ്പൊരുള്‍ ആമാറുപാടി
ജ്യോതി ചൂഴ് തിറം പാടി കൊത്താരണി പാടി
ആദി ശക്തിയെപ്പാടി അന്തമതും പാടി അളവില്ലാ ജീവ സ്വരൂപങ്ങളായി
ഭേദിച്ചു നമ്മെ വളര്‍ത്തി എടുത്ത പെയ്‌വളയാള്‍ തന്‍
പാദ ശക്തിയെപ്പാടി ആറാടാമെന്‍ ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සව‍නේ අබරණ රඟද්දී, අනෙක් දිළෙන රන් අබරණ ද රඟද්දී,
මල් දම් පැළඳි මුහුලස රඟද්දී, බමරු කැල ද, එක්ව රඟද්දී,
සිහිල් ජලයේ දිය කෙළිමු, ‘සිත්තම්බලම’ ගායනා කරමු.
වේද‍යේ වස්තුව, ශිව දෙව් ගුණය ගායනා කරමු. සමිඳු අනුහස් ගායනා කරමු.
ජෝති ප්‍රදීපය තතු ගය ගයා, පැළඳ සිටින ඇසළ මල් දම් හැඩ ද ගයනෙමු,
ආදි මූලය ගුණ ගයමු. නිමාවේ සිටින්නා ගැන ගයමු.
වෙන වෙනම අප ඇති දැඩි කළ, වළලු පැළඳි උමයගෙ
සිරි පා සිරි ගයා,දිය නා ගනිමු, සතුටින් සුරතලියේ 14

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Supaya anting-anting berayun,
Barang kemas diperbuat daripada emas bergerak,
Kalung bunga di kepala bergoyang, dan
Kumpulan kumbang yang mengkerumuni kalung bunga bergerak;
Nyanyikanlah kemuliaan Thillai Sitrambalam dengan menyelami air dingin,
Nyanyikanlah Siva yang menjadi kandungan Veda,
Nyanyikanlah sifat ketuhanan supaya perkara tersebut menjadi milik kita,
Nyanyikanlah kalungan bunga Kondrai yang menghiasi kepala Tuhan,
Nyanyikanlah sifat permulaannya,
Nyanyikanlah sifatnya yang menjadi penghujung.
Marilah menari dengan menyanyi kemuliaan telapak Dewi Uma yang bergelang tangan,
Yang meningkatkan taraf kita dengan membezakan sifat individu kita.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
कर्णाभूषण हिले, शुद्ध स्वर्णाभूषण झूले,
पुष्प सुशोभित केशराशि फहरे,
केशगुच्छ पर मोहित भृंगों का झुण्ड नृत्य करे।
हम शीत जल में स्नान कर, नटराज की स्तुति गाते हुए,
वेदमंत्र रूपी ईश की यशो-गाथा गाते हुए,
उनको प्राप्त करने की रीति के गीत गाते हुए,
आदि स्वरूप व अंत स्वरूप की महिमा गाते हुए,
हम अलग-अलग, सुपालित कंकणधारी उमादेवी की महिमा गाते हुए
जल क्रीड़ा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
कर्णेषु कुण्डलाः दोलयन्ति, कनकाभरणाः स्पन्दन्ति केशेषु पुष्पमालाः परिघूर्णन्ति, भ्रमराः नृत्यन्ति
शीतलजले स्नात्वा चिदम्बरस्थं गात्वा वेदनायकं प्रशंस्य तेन सायुज्यं चिन्त्य
परं ज्योतिः संकीर्त्य तस्य शिरस्थ कोऩ्ऱै मालां अभिनन्द्य आद्यन्तपुरुषं स्तुत्वा
यथार्हं अस्मान् पालयितारौ नूपुरभूषितपादौ अभिस्तुत्य नृत्यामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Daß die Juwelen im Ohre,
Die Schmucksachen auch von Gold
Sich auf -und niederbewegen,
Wie auch der Zopf, der geschmückt ist
Mit Blumen von süßem Duft,
Daß die glänzenden Käfer fliegen
Wild schwärmend hin und her,
So tanze im kühlen Wasser!
Auf Chidambaram, auf den,
Der der Inhalt der Veden ist, singe!
Sing’ auf die Entstehung der Veden,
Auf des Lichtes Herrlichkeit,
Auf die Cassiablumen, die schmücken
Das herrliche Haupthaar ihm,
Auf sein Wesen, das ohne Anfang,
Das ohne Ende ist,
Auf die Herrlichkeit des Fußes
Der Herrin, die vernichtet
In uns die eitle Weltlust,
Die liebend sich unserer annimmt,
Singe! O, singe! Mädchen!
Und Loblieder singend, tanze!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
( အပ်ိဳစင္ တစ္သိုက္မွ ေရခ်ိဳးေနၾကစဥ္ ေတြ႔ၾကံဳၾကရသည့္ အျဖစ္အပ်က္တို႔အား အစဥ္လိုက္ ေဖာ္ျပပါအံ့။ )
ပ်ိဳေမတို႔ေရ ! နား၌ ပန္ဆင္ ေရႊနားေထာင္းတို႔က ပုခံုးထက္ဝယ္ တြဲေလာင္းခို၍ ယိမ္းက၍ေနစဥ္၊ လည္တိုင္္ေက်ာ့၌ ဆင္ျမန္းထားေသာ ေရႊလည္ဆြဲ ေက်ာက္စီဘယက္မ်ား တဖ်တ္ဖ်တ္ႏွင့္ လင္းလက္ေနၾကစဥ္၊ ေကသာဆံဝယ္ ပန္ဆင္အလွ ပန္းခိုင္၊ ပန္းကုံး လွမဆံုးပဲ ယမ္းခါ ယိမ္းထိုးေနၾကစဥ္၊ ေရကန္ထဲမယ္ ဖူးဖြင့္ေဝဆာ ေရာင္စံုပန္းမ်ားထက္ဝယ္ ဝဲပ်ံပိတုန္းျမဴးၾကစဥ္၊ ေအးျမျမ ကန္ေရျပင္၌ ငုပ္လွ်ိဳး ေရခ်ိဳး ကူးခပ္ရင္းႏွင့္ ရွင္ေတာ္ျမတ္ဘုရား သီရုခ်ီ(တ္)ရ(မ္)ပလ(သ္)သား(န္)ကို ဖူးေျမာ္ၾကပါစို႔…။
မျမင္အပ္သည့္ စြမ္းအင္တစ္ရပ္ အျဖစ္တည္ေန သီဝအရွင္အား လကၤာရသီကံုး ဖြဲ႔ဆိုရာဝယ္၊ ရွင္ေတာ္ဘုရား ငါ့၌ အပိုင္ဟု ဖြဲ႔ဆိုကာ ေလာကတစ္ခြင္ အလင္းေဆာင္သည့္ ရုပ္ဆင္းအဂၤါ က်က္သေရ မဂၤလာကို စီကာပတ္ကံုး ဖြဲ႔ႏြဲ႔ကာျဖင့္ ရွင္ေတာ္ျမတ္ဘုရား ေရႊခႏၶာအား ဆင္ျမန္းလွပ မေရြးပန္းဂုဏ္ ဖြဲ႔ႏြဲ႔သီကံုး မဆံုးကာႏွင့္ ေရွးေရွးအလြန္ ေရတြက္မကုန္ သီဝဂုဏ္ကို ေအာက္ေမ့တသ ဝမ္းေျမာက္လွကား အကၽြန္တို႔ဘဝ ဆယ္ယူအျမဲ ကယ္၍ရွိေန မယ္ေတာ္အား ( ပါ(ရ္)ဝသီ ) ၏ ေျခေတာ္ဖမိုး လက္စံုမိုး၍ ရွိခိုးကန္ေတာ့ သီကံုးပူေဇာ္ၾကပါစို႔။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
কৰ্ণভূষণ লৰিছে, যুদ্ধৰ স্বৰ্ণাভূষণ দুলিছে,
পুষ্প সুশোভিত কেশৰাশি উৰিছে,
কেশগুচ্ছত মোহিত হৈ ভোমোৰাই একগোট হৈ নৃত্য কৰিছে।
আমি শীতল জলত স্নান কৰি, নটৰাজৰ স্তুতি গাই,
তাক প্ৰাপ্ত কৰাৰ ৰীতিৰ গীত গাই,
আদি স্বৰূপ তথা অন্ত স্বৰূপৰ মহিমাৰ গাঁথা গাই,
আমি বেলেগ-বেলেগ, সুপালিত কংকনধাৰী উমাদেৱীৰ মহিমা গাই জলক্ৰীড়া কৰোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Ear-pendants are a-dangle;
jewels wrought of fresh gold sway;
Chaplets on tresses flutter;
swarms of chafers dance:
It is thus we bathe in cool water,
sing of Chitrambalam,
So hymn the import of the Veda that it becomes ours,
Melodies the valiancy of Siva – the Flame -,
hail in verse His wreath of Konrai,
extol in song His being The First as well as the Last and celebrate in solemn strain The greatness of the bebangled Uma`s sacred feet Who severally and commensurate with our attainment,
Fosters us.
Sing of these and bathe,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Ear-rings swing;jewels of beaten gold glimmer;
Flower-lace on locks loll;bees swarm in dance;
Chilled in cool pool,singing chitrambalam,
Chanting Veda`s Ens,getting one with chant,
Hymning lux oritur,the cassia lace around,
The primordial power and entelechy,
The feet of bangled Uma`s that raised , Hark!,
Us in chosen faith, may we immerse, o, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


Kuzhai ear rings swing; carat gold jewels glisten shaking; flower wreaths on
the locks glide; bees swarm and flit between; by then, immerse in cool
waters and hymn the praise of Tillai Spatium of Conscious; sing Lord Siva,
the primal Ens in Vedas; sing how grasp the Ens by Sakthi`s descent; sing
Supreme Lumen Lord is; sing the cassia lace on the crest of His, the Beginning
He is; sing His Ultimacy; sing bangle adorned arms of Uma, Her holy feet
that exalt us by creative elan through differential revealing to reveal more;
having sung thus of Her His-ness, may you dip and dip to rise up, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀢𑀸𑀭𑁆 𑀓𑀼𑀵𑁃𑀬𑀸𑀝𑀧𑁆 𑀧𑁃𑀫𑁆𑀧𑀽𑀡𑁆 𑀓𑀮𑀷𑀸𑀝𑀓𑁆
𑀓𑁄𑀢𑁃 𑀓𑀼𑀵𑀮𑀸𑀝 𑀯𑀡𑁆𑀝𑀺𑀷𑁆 𑀓𑀼𑀵𑀸𑀫𑀸𑀝𑀘𑁆
𑀘𑀻𑀢𑀧𑁆 𑀧𑀼𑀷𑀮𑀸𑀝𑀺𑀘𑁆 𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆 𑀧𑀮𑀫𑁆𑀧𑀸𑀝𑀺
𑀯𑁂𑀢𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀧𑀸𑀝𑀺 𑀅𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀸 𑀫𑀸𑀧𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑁄𑀢𑀺 𑀢𑀺𑀶𑀫𑁆𑀧𑀸𑀝𑀺𑀘𑁆 𑀘𑀽𑀵𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆 𑀢𑀸𑀭𑁆𑀧𑀸𑀝𑀺
𑀆𑀢𑀺 𑀢𑀺𑀶𑀫𑁆𑀧𑀸𑀝𑀺 𑀅𑀦𑁆𑀢𑀫𑀸 𑀫𑀸𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑁂𑀢𑀺𑀢𑁆𑀢𑀼 𑀦𑀫𑁆𑀫𑁃 𑀯𑀴𑀭𑁆𑀢𑁆𑀢𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀧𑁂𑁆𑀬𑁆𑀯𑀴𑁃𑀢𑀷𑁆
𑀧𑀸𑀢𑀢𑁆 𑀢𑀺𑀶𑀫𑁆𑀧𑀸𑀝𑀺 𑀆𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাদার্ কুৰ়ৈযাডপ্ পৈম্বূণ্ কলন়াডক্
কোদৈ কুৰ়লাড ৱণ্ডিন়্‌ কুৰ়ামাডচ্
সীদপ্ পুন়লাডিচ্ চিট্রম্ পলম্বাডি
ৱেদপ্ পোরুৰ‍্বাডি অপ্পোরুৰা মাবাডিচ্
সোদি তির়ম্বাডিচ্ চূৰ়্‌গোণ্ড্রৈত্ তার্বাডি
আদি তির়ম্বাডি অন্দমা মাবাডিপ্
পেদিত্তু নম্মৈ ৱৰর্ত্তেডুত্ত পেয্ৱৰৈদন়্‌
পাদত্ তির়ম্বাডি আডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
कादार् कुऴैयाडप् पैम्बूण् कलऩाडक्
कोदै कुऴलाड वण्डिऩ् कुऴामाडच्
सीदप् पुऩलाडिच् चिट्रम् पलम्बाडि
वेदप् पॊरुळ्बाडि अप्पॊरुळा माबाडिच्
सोदि तिऱम्बाडिच् चूऴ्गॊण्ड्रैत् तार्बाडि
आदि तिऱम्बाडि अन्दमा माबाडिप्
पेदित्तु नम्मै वळर्त्तॆडुत्त पॆय्वळैदऩ्
पादत् तिऱम्बाडि आडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಕಾದಾರ್ ಕುೞೈಯಾಡಪ್ ಪೈಂಬೂಣ್ ಕಲನಾಡಕ್
ಕೋದೈ ಕುೞಲಾಡ ವಂಡಿನ್ ಕುೞಾಮಾಡಚ್
ಸೀದಪ್ ಪುನಲಾಡಿಚ್ ಚಿಟ್ರಂ ಪಲಂಬಾಡಿ
ವೇದಪ್ ಪೊರುಳ್ಬಾಡಿ ಅಪ್ಪೊರುಳಾ ಮಾಬಾಡಿಚ್
ಸೋದಿ ತಿಱಂಬಾಡಿಚ್ ಚೂೞ್ಗೊಂಡ್ರೈತ್ ತಾರ್ಬಾಡಿ
ಆದಿ ತಿಱಂಬಾಡಿ ಅಂದಮಾ ಮಾಬಾಡಿಪ್
ಪೇದಿತ್ತು ನಮ್ಮೈ ವಳರ್ತ್ತೆಡುತ್ತ ಪೆಯ್ವಳೈದನ್
ಪಾದತ್ ತಿಱಂಬಾಡಿ ಆಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
కాదార్ కుళైయాడప్ పైంబూణ్ కలనాడక్
కోదై కుళలాడ వండిన్ కుళామాడచ్
సీదప్ పునలాడిచ్ చిట్రం పలంబాడి
వేదప్ పొరుళ్బాడి అప్పొరుళా మాబాడిచ్
సోది తిఱంబాడిచ్ చూళ్గొండ్రైత్ తార్బాడి
ఆది తిఱంబాడి అందమా మాబాడిప్
పేదిత్తు నమ్మై వళర్త్తెడుత్త పెయ్వళైదన్
పాదత్ తిఱంబాడి ఆడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාදාර් කුළෛයාඩප් පෛම්බූණ් කලනාඩක්
කෝදෛ කුළලාඩ වණ්ඩින් කුළාමාඩච්
සීදප් පුනලාඩිච් චිට්‍රම් පලම්බාඩි
වේදප් පොරුළ්බාඩි අප්පොරුළා මාබාඩිච්
සෝදි තිරම්බාඩිච් චූළ්හොන්‍රෛත් තාර්බාඩි
ආදි තිරම්බාඩි අන්දමා මාබාඩිප්
පේදිත්තු නම්මෛ වළර්ත්තෙඩුත්ත පෙය්වළෛදන්
පාදත් තිරම්බාඩි ආඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
കാതാര്‍ കുഴൈയാടപ് പൈംപൂണ്‍ കലനാടക്
കോതൈ കുഴലാട വണ്ടിന്‍ കുഴാമാടച്
ചീതപ് പുനലാടിച് ചിറ്റം പലംപാടി
വേതപ് പൊരുള്‍പാടി അപ്പൊരുളാ മാപാടിച്
ചോതി തിറംപാടിച് ചൂഴ്കൊന്‍റൈത് താര്‍പാടി
ആതി തിറംപാടി അന്തമാ മാപാടിപ്
പേതിത്തു നമ്മൈ വളര്‍ത്തെടുത്ത പെയ്വളൈതന്‍
പാതത് തിറംപാടി ആടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
กาถาร กุฬายยาดะป ปายมปูณ กะละณาดะก
โกถาย กุฬะลาดะ วะณดิณ กุฬามาดะจ
จีถะป ปุณะลาดิจ จิรระม ปะละมปาดิ
เวถะป โปะรุลปาดิ อปโปะรุลา มาปาดิจ
โจถิ ถิระมปาดิจ จูฬโกะณรายถ ถารปาดิ
อาถิ ถิระมปาดิ อนถะมา มาปาดิป
เปถิถถุ นะมมาย วะละรถเถะดุถถะ เปะยวะลายถะณ
ปาถะถ ถิระมปาดิ อาเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာထာရ္ ကုလဲယာတပ္ ပဲမ္ပူန္ ကလနာတက္
ေကာထဲ ကုလလာတ ဝန္တိန္ ကုလာမာတစ္
စီထပ္ ပုနလာတိစ္ စိရ္ရမ္ ပလမ္ပာတိ
ေဝထပ္ ေပာ့ရုလ္ပာတိ အပ္ေပာ့ရုလာ မာပာတိစ္
ေစာထိ ထိရမ္ပာတိစ္ စူလ္ေကာ့န္ရဲထ္ ထာရ္ပာတိ
အာထိ ထိရမ္ပာတိ အန္ထမာ မာပာတိပ္
ေပထိထ္ထု နမ္မဲ ဝလရ္ထ္ေထ့တုထ္ထ ေပ့ယ္ဝလဲထန္
ပာထထ္ ထိရမ္ပာတိ အာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
カーターリ・ クリイヤータピ・ パイミ・プーニ・ カラナータク・
コータイ クララータ ヴァニ・ティニ・ クラーマータシ・
チータピ・ プナラーティシ・ チリ・ラミ・ パラミ・パーティ
ヴェータピ・ ポルリ・パーティ アピ・ポルラア マーパーティシ・
チョーティ ティラミ・パーティシ・ チューリ・コニ・リイタ・ ターリ・パーティ
アーティ ティラミ・パーティ アニ・タマー マーパーティピ・
ペーティタ・トゥ ナミ・マイ ヴァラリ・タ・テトゥタ・タ ペヤ・ヴァリイタニ・
パータタ・ ティラミ・パーティ アーテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
gadar gulaiyadab baiMbun galanadag
godai gulalada fandin gulamadad
sidab bunaladid didraM balaMbadi
fedab borulbadi abborula mabadid
sodi diraMbadid dulgondraid darbadi
adi diraMbadi andama mabadib
bediddu nammai falarddedudda beyfalaidan
badad diraMbadi adelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
كادارْ كُظَيْیادَبْ بَيْنبُونْ كَلَنادَكْ
كُوۤدَيْ كُظَلادَ وَنْدِنْ كُظامادَتشْ
سِيدَبْ بُنَلادِتشْ تشِتْرَن بَلَنبادِ
وٕۤدَبْ بُورُضْبادِ اَبُّورُضا مابادِتشْ
سُوۤدِ تِرَنبادِتشْ تشُوظْغُونْدْرَيْتْ تارْبادِ
آدِ تِرَنبادِ اَنْدَما مابادِبْ
بيَۤدِتُّ نَمَّيْ وَضَرْتّيَدُتَّ بيَیْوَضَيْدَنْ
بادَتْ تِرَنبادِ آديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
kɑ:ðɑ:r kʊ˞ɻʌjɪ̯ɑ˞:ɽʌp pʌɪ̯mbu˞:ɳ kʌlʌn̺ɑ˞:ɽʌk
ko:ðʌɪ̯ kʊ˞ɻʌlɑ˞:ɽə ʋʌ˞ɳɖɪn̺ kʊ˞ɻɑ:mɑ˞:ɽʌʧ
si:ðʌp pʊn̺ʌlɑ˞:ɽɪʧ ʧɪt̺t̺ʳʌm pʌlʌmbɑ˞:ɽɪ
ʋe:ðʌp po̞ɾɨ˞ɭβɑ˞:ɽɪ· ˀʌppo̞ɾɨ˞ɭʼɑ: mɑ:βɑ˞:ɽɪʧ
so:ðɪ· t̪ɪɾʌmbɑ˞:ɽɪʧ ʧu˞:ɻxo̞n̺d̺ʳʌɪ̯t̪ t̪ɑ:rβɑ˞:ɽɪ
ˀɑ:ðɪ· t̪ɪɾʌmbɑ˞:ɽɪ· ˀʌn̪d̪ʌmɑ: mɑ:βɑ˞:ɽɪp
pe:ðɪt̪t̪ɨ n̺ʌmmʌɪ̯ ʋʌ˞ɭʼʌrt̪t̪ɛ̝˞ɽɨt̪t̪ə pɛ̝ɪ̯ʋʌ˞ɭʼʌɪ̯ðʌn̺
pɑ:ðʌt̪ t̪ɪɾʌmbɑ˞:ɽɪ· ˀɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
kātār kuḻaiyāṭap paimpūṇ kalaṉāṭak
kōtai kuḻalāṭa vaṇṭiṉ kuḻāmāṭac
cītap puṉalāṭic ciṟṟam palampāṭi
vētap poruḷpāṭi apporuḷā māpāṭic
cōti tiṟampāṭic cūḻkoṉṟait tārpāṭi
āti tiṟampāṭi antamā māpāṭip
pētittu nammai vaḷartteṭutta peyvaḷaitaṉ
pātat tiṟampāṭi āṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
кaтаар кюлзaыяaтaп пaымпун калaнаатaк
коотaы кюлзaлаатa вaнтын кюлзаамаатaч
ситaп пюнaлаатыч сытрaм пaлaмпааты
вэaтaп порюлпааты аппорюлаа маапаатыч
сооты тырaмпаатыч сулзконрaыт таарпааты
ааты тырaмпааты антaмаа маапаатып
пэaтыттю нaммaы вaлaрттэтюттa пэйвaлaытaн
паатaт тырaмпааты аатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
kahthah'r kushäjahdap pämpuh'n kalanahdak
kohthä kushalahda wa'ndin kushahmahdach
sihthap punalahdich zirram palampahdi
wehthap po'ru'lpahdi appo'ru'lah mahpahdich
zohthi thirampahdich zuhshkonräth thah'rpahdi
ahthi thirampahdi a:nthamah mahpahdip
pehthiththu :nammä wa'la'rththeduththa pejwa'läthan
pahthath thirampahdi ahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
kaathaar kòlzâiyaadap pâimpönh kalanaadak
koothâi kòlzalaada vanhdin kòlzaamaadaçh
çiithap pònalaadiçh çirhrham palampaadi
vèèthap poròlhpaadi apporòlhaa maapaadiçh
çoothi thirhampaadiçh çölzkonrhâith thaarpaadi
aathi thirhampaadi anthamaa maapaadip
pèèthiththò nammâi valharththèdòththa pèiyvalâithan
paathath thirhampaadi aadèèloor èmpaavaaiy 
caathaar culzaiiyaatap paimpuuinh calanaataic
coothai culzalaata vainhtin culzaamaatac
ceiithap punalaatic ceirhrham palampaati
veethap porulhpaati apporulhaa maapaatic
cioothi thirhampaatic chuolzconrhaiith thaarpaati
aathi thirhampaati ainthamaa maapaatip
peethiiththu nammai valhariththetuiththa peyivalhaithan
paathaith thirhampaati aateeloor empaavayi 
kaathaar kuzhaiyaadap paimpoo'n kalanaadak
koathai kuzhalaada va'ndin kuzhaamaadach
seethap punalaadich si'r'ram palampaadi
vaethap poru'lpaadi apporu'laa maapaadich
soathi thi'rampaadich soozhkon'raith thaarpaadi
aathi thi'rampaadi a:nthamaa maapaadip
paethiththu :nammai va'larththeduththa peyva'laithan
paathath thi'rampaadi aadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
কাতাৰ্ কুলৈয়াতপ্ পৈম্পূণ্ কলনাতক্
কোতৈ কুললাত ৱণ্টিন্ কুলামাতচ্
চীতপ্ পুনলাটিচ্ চিৰ্ৰম্ পলম্পাটি
ৱেতপ্ পোৰুল্পাটি অপ্পোৰুলা মাপাটিচ্
চোতি তিৰম্পাটিচ্ চূইলকোন্ৰৈত্ তাৰ্পাটি
আতি তিৰম্পাটি অণ্তমা মাপাটিপ্
পেতিত্তু ণম্মৈ ৱলৰ্ত্তেটুত্ত পেয়্ৱলৈতন্
পাতত্ তিৰম্পাটি আটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.