எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
    பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
    சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
    கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
    ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

குறிப்புரை:

`நேரிழையாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது, அப்போது பரஞ்சோதிக்குப் பாசம் என்பாய்; இப்போது, ஆரமளிக்கே நேசமும் வைத்தனையோ` என்க. அன்பு `நார்` எனப் படுதல் பற்றி இங்கு அதனை, ``பாசம்`` என்று அருளினார்.
`பரஞ்சோதிக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. இதன்பின், உரியது என்பதும், `எப்போது` என்றதன் பின்னர், `அப்போது` என்பதும் எஞ்சி நின்றன. ``இராப்பகல்`` என்றது, `இரவாக, பகலாக` என்றபடி. ஆரமளி - அரிய படுக்கை. `நேசமும்` என்ற சிறப்பும்மையால்` அன்பு முழுவதையும்` என்பது பெறப்பட்டது. `நீ, பாசம் பரஞ்சோதிக்கு` எனினும் உண்மையில் அது நேரிழைக்கே என்றற்கு, ``நேரிழையாய்`` என்றனர். இதுகாறும், சென்ற மகளிர் கூறியன.
இனி வருவன, இங்ஙனம் நகையாடிக் கூறியவர்களை நோக்கி உறங்கினவள் கூறுவன. தன்னை, `நேரிழையாய்` என்றவர் களைத் தானும் அவ்வாறு அழைத்தாள். `சீசீ` என்ற ஒரு சொல்லடுக் கில், பின்னின்றது, குறுக்கல் விகாரம் பெற்றது. `சீசீ` என்றே பாடம் ஓதுவாரும் உளர். எள்ளற் குறிப்பிடைச் சொல்லாகிய `சீ` என்பது, இங்குப் பெயர்த் தன்மைப்பட்டு, `சீ எனல்` எனப் பொருள் தந்தது. ``சீ ஏதும் இல்லாது என் செய்பணிகள் கொண்டருளும்`` (தி.8. திருக்கோத்தும்பி 12) என்னுமிடத்தும் இஃது இவ்வாறு நிற்றல் காண்க. இங்ஙனமாகவே, `சீசீ என்றலாகிய இவையும் சிலவோ` என்றது பொருளாயிற்று. சிலவோ - நண்பரிடத்துச் சொல்லுகின்ற சொற்களுள் சிலவோ. ``இடம்`` என்றது, பொழுதை. வாளா, `ஏசுமிடம்` என்னாது, ``விளையாடி ஏசுமிடம்`` என்றதனால், `நகை யாடிப் பேசுதற்கும் இது சமையமன்று` என்றதாம். கூசுதல் - நாணுதல்.
``நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``
(தி. 5.ப.90.பா.9)என வந்தமை காண்க `நாணுதல்` என்பது, நாணிக் காட்டாதொழிதலாகிய தன் காரியந் தோன்ற நின்றது. `தேவர் களுக்குக் காட்டாது மறைக்கும் திருவடியை நமக்குத் தர வருபவன்` என்றபடி, ``ஈசனார்`` என்பது, ஒருமைப் பன்மை மயக்கம். `பாசம் பரஞ்சோதிக்கு` என்று சொல்லுபவள் `நான் மட்டும் அன்று; நம் எல்லோருந்தாம்` என்பாள், ``ஈசனார்க் கன்பார் யாம் ஆர்`` என்றாள். ``ஆர்`` என்றது, `அன்பரல்லது மற்று யார்` என்றபடியாம்.
இனி, `விண்ணோர்கள் ஏத்துதற்கு` என்பது முதலியவற்றை, சென்றோர் மறித்தும் கூறியவாறாக வைத்து, அதற்கேற்பத் தாம் தாம் வேண்டுஞ் சொற்கள் பலவற்றை வருவித்து உரைப்பாரும் உளர்.
`இவ்வாறு, ஒருவர் ஒன்றுகூற, மற்றொருவர் அதற்கு மாறு சொல்லுதலாக வரும் பொருள், கலிப்பாவினாற் பாடப்படும்` என்றும், அஃது, `உறழ் கலிப்பா` எனப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுதலை,
``ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே``
(தொல்.பொருள்.435) எனவும்,
``கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்து
போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே``
(தொல். பொருள். 458) எனவும் வரும் நூற்பாக்களான் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
“విలువైన వస్త్రములను ధరించిన ఓ వనితా! రేయింబవళ్ళూ మనము మాటలాడుకొను సమయములందు”, “నా ఆలోచనలన్నియూ, ఎల్లప్పుడూ ప్రేమమయమై, ఉన్నతమైన జ్యోతిస్వరూపుడైన ఆ భగవంతునికే చెందినవైయుండు"నని చెప్పెదవు. “కానీ, ప్రస్తుతం నీ ప్రేమనంతటినీ నీవు నిద్రించుచున్న ఆ పడకపైననే చూపుచున్నావు..అది ఏల!?” “ఓ స్త్రీలారా! ఛీ! చీ! మీరు మాటలాడుకొను పరిహాస్యపు మాటలలో భగవంతుని గూర్చి మాటలాడు మాటలు కొద్దిమాత్రమే కలిసియుండునా!?’’ “నాతో ఆటలాడుకుంటూ నన్ను హేళనచేయుటకు ఇది తగిన సమయమా!?” “దేవతలుకూడ ఆరాధనచేయుటకై తపించుచుండు, ఆ పరమేశ్వరుని, తామర పుష్పములవంటి పాదపద్మములను, ఆతడు తన భక్తులకు అందుబాటులోనుంచి, అనుగ్రహించుచుండును. ఆ భగవంతుని, ప్రేమతో కొనియాడు మేము మీకు ఎవ్విధమైన బంధము గలవారము!?”

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಅಮೂಲ್ಯ ಆಭರಣಗಳ ತೊಟ್ಟವಳೇ ! ಮಹಾಜ್ಯೋತಿ ಸ್ವರೂಪನಾದ ಶಿವಪರಮಾತ್ಮನ ಮೇಲೆ ಪ್ರೀತಿಯಿಟ್ಟು, ಹಗಲೂ ಇರುಳೂ ಅವನನ್ನೇ ಬಯಸುತ್ತಿದ್ದೆ. ಈಗ ಹಾಸಿಗೆಯನ್ನು ಪ್ರೀತಿಸುವಂತಾದೆಯಾ? ಹೆಂಗಳೆಯರೇ ! ಛೀ ಛೀ ನೀವುಗಳು ನುಡಿವ ಅಪಹಾಸ್ಯದ ನುಡಿಗಳಲ್ಲಿ ಇದು ಕೆಲವೇ ! ನನ್ನೊಡನೆ ಆಟವಾಡಿ ತೆಗಳುವ ಸಮಯವೇ ಇದು? ದೇವರುಗಳೂ ಪೂಜಿಸಲು ನಾಚುವ ತಾವರೆ ಹೂವಿನಂತಹ ಪವಿತ್ರ ಪಾದಗಳನ್ನು ಪ್ರೀತಿ ಪಾತ್ರರಿಗೆ ನೀಡಿ ದಯೆಗೈವ ಕಾಂತಿ ಸ್ವರೂಪನು. ತಿಲ್ಲೈಕ್ಷೇತ್ರದ ಸಿಟ್ರಂಬಲಮ್ನ ಒಡೆಯನಲ್ಲಿ ನಾವು ಹೊಂದಿರುವ ಪ್ರೀತಿ ಎಂತಹದ್ದು? ನಾವು ಎಂತಹವರು? ನಮ್ಮ ಹೆಣ್ಣೇ ಮೇಲೇಳು. ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പാശമെല്ലാം പരം ജ്യോതിക്കേ എു രാപ്പകല്‍
വാശിയോടുരചെയ്തിരിക്കും നീ എപ്പൊഴീ പോതമളിയില്‍
നേശമാര്‍ുവോ ചൊല്‍ നേരിഴയാളേ ! നേരഴിയോരേ !
ശി ! ശ്ശി ! ഇതു ശരിയോ കളിയാടി നിു
ഏശുമിടമല്ലിത് വിണ്ണോര്‍ക്കും അരുളിട
ക്കൂശും മലര്‍പ്പദം തരുളവരും തേജന്‍
ശിവലോകന്‍ തില്ലച്ചിറ്റമ്പലമുള്ളിലിരിക്കും
ഈശന്‍ വു കൂടുമിപ്പുനിതയിടം എ േചൊല്‍ ഏലേലം പാവേ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සෙනෙහස පරම ජෝතියට යැයි කියයි, රෑ දවල් අප
දොඩන විට, කොයි මොහොතෙද මේ පුෂ්ප යහනට
ඇල්මක් දැක්වූයේ, අබරණ පැළඳි ලඳුනි?
චී.... චී.... මෙසේ දොඩ දොඩා, සෙල්ලම් කර,
දොස් නගන තැන. මෙතැනදෝ? සුරයන් පසසන්නට
පසුබට වන පියුම් පා, දෙවා වදාරන්නට වඩිනු මැන,
බබළන්නා, ශිවලෝ සමිඳා, තිල්ලෙයි සිත්තම්බලම තුළ රඳනා
දෙවිඳුන්ට බැතිපෙම් ඇති අපි, කෙබඳු අයවෙම් ද සුරතලියේ. 02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis yang memakai barangan kemas
Setiap kali kita bercakap siang atau malam
Anda menyatakan bahawa mengkasihi Tuhan yang Maha terang
Tetapi, kini adakah anda lebih mengkasihi katil yang bertaburan bunga?
(ujaran gadis di luar rumah)
Wahai gadis-gadis adakah ini sebahagian daripada gurauan kamu dan
Adakah ini masa untuk berpura-pura memarahi saya?
(ujaran gadis di dalam rumah)
Siva, Raja Sivaloka yang berada di Thillai Sitrambalam
Sudi memberkati penganut-Nya dengan memaparkan
Tapak ibarat bunga yang segan dipuja oleh para Deva di langit (syurga)
Kami penganut-Nya. Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!
(ujaran gadis di luar rumah)

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
एक सखीः सुन्दर आभूषणधारी सखी!
वार्तालाप करते समय, कहा करती थी
सदा मेरा प्रेम ईश पर ही रहेगा।
अब क्या हुआ?
कब से तुम पुष्प शय्या पर मोहित हो पड़ी हो।

दूसरी सखीः जागकर (लेटी हुई है) अलंकृत सखी! छी! छी! क्या कह रही हो?
परिहास कर खेलने के लिए क्या तुमको यही स्थान मिला है?
अन्य सखियॉ :- प्यारी सखी! नींद में उल्टा सीधा मत बको।
अमर लोगों की वन्दना करने पर भी वे अगोचर हैं।
उन श्रीचरणों को हमें देने के लिए
ईश गुरु वेष में पधारे।
शिव, तिल्लै नटराज ईश की कृपा के लिए
हमारा प्रेम किस प्रकार होना चाहिए?
हम कौन हैं? सोचो तो जरा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
“पुरा यदा त्वं अभाषयः, मम प्रेम केवलं परं ज्योतिष इति अहोरात्रं अवदः । कदा त्वं अस्मिन् पुष्पशय्यायाः
प्रेमिणी अभवः, आभरणभूषिते”। “अहो, आभरणकचिता मम सख्यः, हन्त, किमयं खेलनविषयः,
निन्दनास्थानमिदं न। देवैः ह्रिया पूजितौ पुष्पपादौ अस्मभ्यं प्रदानाय आगच्छति तेजोमयः।
शिवलोकवासिनः तिल्लै चिदम्बरेशस्य प्रेमिणीं मां विद्धि”।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Sarvabhūtadamanī-Šakti zur Balapramathanī-Šakti:
Sage, o Mädchen, ist dies nicht die Zeit,
Wo, schwindend dahin vor Liebem
Man singen muß dem höchsten Licht,
Ihm Tag und Nacht muß singen?
Geht denn dein ganzes Verlangen allein
Nur auf dein Blumenbett, Mädchen?
Balapramathanī zur Sarvabhūtadamanī und ihren Gefährtinnen:
Pfui ihr Mädchen! Was ist’s, das ihr tut?
Sagt, muß man euch verachten?
Sarvabhūtadamanī zur Balapramathanī:
Ist heute dir Zeit, um zu spielen,
Ist heute die Zeit, um zu schmäh’n?
Was ist denn uns’re Liebe
Zu dem Herrn von Chidambaram,
Zu dem König des Šivahimmels,
Zu dem, der hell erglänzet,
Der herabstieg, zu offenbaren
Seinen duftenden Lotusfuß,
Den zu verehren sich scheuen
Die hohen Himmlischen selbst?
Was sind, o was sind denn wir?
O hör’ doch, höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(အျခားေသာ အေဖာ္ျဖစ္ေသာ အပ်ိဳစင္တစ္ေယာက္အိမ္သို႔ ေရာက္ရွိလာပါသည္။ ထိုအိမ္မွ သူမကိုလည္း ႏိွဳးၾကပါသည္။
လံုမပိ်ဳေလး တစ္ေယာက္က…..
ထြန္းလင္းေတာက္ပေနေသာ ဘုရားရွင္အတြက္သာလွ်င္ ငါ၏ ေမတၱာျဖစ္ေစရမည္ ဟူ၍ ေန႔၊ ညမျပတ္ ေျပာဆိုေနခဲ့သည့္ ပ်ိဳမေရ…ခုေတာ့ ပန္းခင္းေမြ႕ယာထက္ဝယ္ အိပ္ေပ်ာ္ေမြ႕ေနေလၿပီေလာ…?
အိပ္ေပ်ာ္ေနခဲ့သူက…
ဟင့္အင္း…ေကာင္းကင္ဘံုသားတို႔ကို ၾကည္ညိဳေစေသာ နင္(ညည္း)တို႔ရဲ႕ ပါးစပ္ဝယ္ ငါ့အား ကဲ့ရဲ႕ျပစ္တင္ရေကာင္းသေလာ…..?
အျခားလံုမပ်ိဳတစ္ေယာက္က…..
ျမင့္မားတဲ့ ေရာင္ျခည္ေတာျဖစ္သူ၊္ကို ျဖန္႔ေဝလို႔ ရွိေနသူ၊ သီဝေလာက၏ အဓိပတိျဖစ္သူ၊ သီ(လ္)လိတ္ သီရုေျမရဲ႕ ဗ်ာဒိတ္ေတာ္ရွင္အျဖစ္ ေပၚထြန္းခဲ့တဲ့ အက(ပန္တ်ာ) အႏုပညာရဲ႕ အရွင္သခင္ အတြက္သာလွ်င္ ငါတို႔ေမတၱာက အစဥ္အၿမဲ ေပးဆပ္မည္ဟူ၍ ဆိုၾကပါစို႕လားကြယ္…..?

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
এগৰাকী সখী : সুন্দৰ আভূষণধাৰী সখী!
বাৰ্তালাপ কৰি থকা সময়ত কয় যে
সদায় মোৰ প্ৰেম ঈশ্বৰতেই থাকিব।
এতিয়া কি কৰোঁ?
কেতিয়াৰপৰা তুমি পুষ্প সজ্জিত বিচনাত মোহিত হৈ পৰি আছা?
দ্বিতীয়গৰাকী সখী : জাগি (কিন্তু বাগৰি আছে) হে অলংকৃত সখী! ছি!ছি! কি কৰি আছা?
পৰিহাস কৰি খেলিবলৈ তুমি এই স্থানেই পালা নেকি?
অন্য সখীসকল : হে মৰমৰ সখী! টোপনিত যি মন যায় তাকে নক’বা।
অমৰ লোকে বন্দনা কৰাৰ পিছতো তেওঁ অগোচৰ হৈ আছে।
তেওঁৰ শ্ৰীচৰণ আমাক দিয়াৰ বাবে
ঈশ্বৰ গুৰুৰ বেশত আহিলে।
হে শিৱ, তিল্লৈ নটৰাজ ঈশ্বৰৰ কৃপাৰ বাবে
আমাৰ প্ৰেম কেনে হোৱা উচিত?
আমি কোন? এবাৰ ভাবাচোন।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
In Our confabulation during night as well as day,
You would say:
``My love is for Siva,
the supernal Flame.
`` Lo,
did you now transfer your love to your flower-strewn bed,
O you bejewelled belle?
``Fie,
fie on you,
O ye bejewelled?
Are these a few Of your denigrating remarks?
Is this the time To sport and make fun?
He whose form is Light,
Has deigned to come down to grace us with His lotus-like feet which shy away when the celestials Hail them.
He is the Lord of Siva-loka;
He is The Lord-God of the Chitrambalam at Tillai.
Who indeed are His loving devotees?
Who indeed are we,
Empaavaai !
``
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


`Passion mine is for Super Lux Oritur`
Day and night in our chat didn`t you swear?
Tush Jewel of a girl, why to floral bed then?
Tush, bejeweled, why play here mockery and fun?
Tillai chitrambalam Lord is Sivaloka-lumen to gaze;
He`s willed to loving servitors His Feet-lotus-grace
Not open even to Celestial`s prayers! Hark!
Are we in service true or are you, o, frail flock?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, well bejeweled maid, all day and night in chat
you have sworn your love is for all lumen Lord!
Are you in dotage with this foam bed now! Girls!
Is her swearing flim flam part of your light talk!
Is this the hour apt for foul play and ridicule !
Aren`t we in love- knot with Tillai Spatium Lord
of luminous Form ablaze to grace the servitors
His blushing Lotus Feet pair holy, Devas craze to worship, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀘𑀫𑁆 𑀧𑀭𑀜𑁆𑀘𑁄𑀢𑀺𑀓𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀬𑁆 𑀇𑀭𑀸𑀧𑁆𑀧𑀓𑀮𑁆𑀦𑀸𑀫𑁆
𑀧𑁂𑀘𑀼𑀫𑁆𑀧𑁄 𑀢𑁂𑁆𑀧𑁆𑀧𑁄𑀢𑀺𑀧𑁆 𑀧𑁄𑀢𑀸𑀭𑁆 𑀅𑀫𑀴𑀺𑀓𑁆𑀓𑁂
𑀦𑁂𑀘𑀫𑀼𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀷𑁃𑀬𑁄 𑀦𑁂𑀭𑀺𑀵𑁃𑀬𑀸𑀬𑁆 𑀦𑁂𑀭𑀺𑀵𑁃𑀬𑀻𑀭𑁆
𑀘𑀻𑀘𑀺 𑀬𑀺𑀯𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑀺𑀮𑀯𑁄 𑀯𑀺𑀴𑁃𑀬𑀸𑀝𑀺
𑀏𑀘𑀼 𑀫𑀺𑀝𑀫𑀻𑀢𑁄 𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑀭𑁆𑀓𑀴𑁆 𑀏𑀢𑁆𑀢𑀼𑀢𑀶𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀽𑀘𑀼 𑀫𑀮𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀢𑀦𑁆 𑀢𑀦𑁆𑀢𑀭𑀼𑀴 𑀯𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆
𑀢𑁂𑀘𑀷𑁆 𑀘𑀺𑀯𑀮𑁄𑀓𑀷𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀘𑁆𑀘𑀺𑀶𑁆 𑀶𑀫𑁆𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀴𑁆
𑀈𑀘𑀷𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀷𑁆𑀧𑀸𑀭𑁆𑀬𑀸𑀫𑁆 𑀆𑀭𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পাসম্ পরঞ্জোদিক্ কেন়্‌বায্ ইরাপ্পহল্নাম্
পেসুম্বো তেপ্পোদিপ্ পোদার্ অমৰিক্কে
নেসমুম্ ৱৈত্তন়ৈযো নেরিৰ়ৈযায্ নেরিৰ়ৈযীর্
সীসি যিৱৈযুঞ্ সিলৱো ৱিৰৈযাডি
এসু মিডমীদো ৱিণ্ণোর্গৰ‍্ এত্তুদর়্‌কুক্
কূসু মলর্প্পাদন্ দন্দরুৰ ৱন্দরুৰুম্
তেসন়্‌ সিৱলোহন়্‌ তিল্লৈচ্চিট্রম্বলত্তুৰ‍্
ঈসন়ার্ক্ কন়্‌বার্যাম্ আরেলোর্ এম্বাৱায্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்


Open the Thamizhi Section in a New Tab
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

Open the Reformed Script Section in a New Tab
पासम् परञ्जोदिक् कॆऩ्बाय् इराप्पहल्नाम्
पेसुम्बो तॆप्पोदिप् पोदार् अमळिक्के
नेसमुम् वैत्तऩैयो नेरिऴैयाय् नेरिऴैयीर्
सीसि यिवैयुञ् सिलवो विळैयाडि
एसु मिडमीदो विण्णोर्गळ् एत्तुदऱ्कुक्
कूसु मलर्प्पादन् दन्दरुळ वन्दरुळुम्
तेसऩ् सिवलोहऩ् तिल्लैच्चिट्रम्बलत्तुळ्
ईसऩार्क् कऩ्बार्याम् आरेलोर् ऎम्बावाय्
Open the Devanagari Section in a New Tab
ಪಾಸಂ ಪರಂಜೋದಿಕ್ ಕೆನ್ಬಾಯ್ ಇರಾಪ್ಪಹಲ್ನಾಂ
ಪೇಸುಂಬೋ ತೆಪ್ಪೋದಿಪ್ ಪೋದಾರ್ ಅಮಳಿಕ್ಕೇ
ನೇಸಮುಂ ವೈತ್ತನೈಯೋ ನೇರಿೞೈಯಾಯ್ ನೇರಿೞೈಯೀರ್
ಸೀಸಿ ಯಿವೈಯುಞ್ ಸಿಲವೋ ವಿಳೈಯಾಡಿ
ಏಸು ಮಿಡಮೀದೋ ವಿಣ್ಣೋರ್ಗಳ್ ಏತ್ತುದಱ್ಕುಕ್
ಕೂಸು ಮಲರ್ಪ್ಪಾದನ್ ದಂದರುಳ ವಂದರುಳುಂ
ತೇಸನ್ ಸಿವಲೋಹನ್ ತಿಲ್ಲೈಚ್ಚಿಟ್ರಂಬಲತ್ತುಳ್
ಈಸನಾರ್ಕ್ ಕನ್ಬಾರ್ಯಾಂ ಆರೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್
Open the Kannada Section in a New Tab
పాసం పరంజోదిక్ కెన్బాయ్ ఇరాప్పహల్నాం
పేసుంబో తెప్పోదిప్ పోదార్ అమళిక్కే
నేసముం వైత్తనైయో నేరిళైయాయ్ నేరిళైయీర్
సీసి యివైయుఞ్ సిలవో విళైయాడి
ఏసు మిడమీదో విణ్ణోర్గళ్ ఏత్తుదఱ్కుక్
కూసు మలర్ప్పాదన్ దందరుళ వందరుళుం
తేసన్ సివలోహన్ తిల్లైచ్చిట్రంబలత్తుళ్
ఈసనార్క్ కన్బార్యాం ఆరేలోర్ ఎంబావాయ్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාසම් පරඥ්ජෝදික් කෙන්බාය් ඉරාප්පහල්නාම්
පේසුම්බෝ තෙප්පෝදිප් පෝදාර් අමළික්කේ
නේසමුම් වෛත්තනෛයෝ නේරිළෛයාය් නේරිළෛයීර්
සීසි යිවෛයුඥ් සිලවෝ විළෛයාඩි
ඒසු මිඩමීදෝ විණ්ණෝර්හළ් ඒත්තුදර්කුක්
කූසු මලර්ප්පාදන් දන්දරුළ වන්දරුළුම්
තේසන් සිවලෝහන් තිල්ලෛච්චිට්‍රම්බලත්තුළ්
ඊසනාර්ක් කන්බාර‍්‍යාම් ආරේලෝර් එම්බාවාය්


Open the Sinhala Section in a New Tab
പാചം പരഞ്ചോതിക് കെന്‍പായ് ഇരാപ്പകല്‍നാം
പേചുംപോ തെപ്പോതിപ് പോതാര്‍ അമളിക്കേ
നേചമും വൈത്തനൈയോ നേരിഴൈയായ് നേരിഴൈയീര്‍
ചീചി യിവൈയുഞ് ചിലവോ വിളൈയാടി
ഏചു മിടമീതോ വിണ്ണോര്‍കള്‍ ഏത്തുതറ്കുക്
കൂചു മലര്‍പ്പാതന്‍ തന്തരുള വന്തരുളും
തേചന്‍ ചിവലോകന്‍ തില്ലൈച്ചിറ് റംപലത്തുള്‍
ഈചനാര്‍ക് കന്‍പാര്യാം ആരേലോര്‍ എംപാവായ്
Open the Malayalam Section in a New Tab
ปาจะม ปะระญโจถิก เกะณปาย อิราปปะกะลนาม
เปจุมโป เถะปโปถิป โปถาร อมะลิกเก
เนจะมุม วายถถะณายโย เนริฬายยาย เนริฬายยีร
จีจิ ยิวายยุญ จิละโว วิลายยาดิ
เอจุ มิดะมีโถ วิณโณรกะล เอถถุถะรกุก
กูจุ มะละรปปาถะน ถะนถะรุละ วะนถะรุลุม
เถจะณ จิวะโลกะณ ถิลลายจจิร ระมปะละถถุล
อีจะณารก กะณปารยาม อาเรโลร เอะมปาวาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာစမ္ ပရည္ေစာထိက္ ေက့န္ပာယ္ အိရာပ္ပကလ္နာမ္
ေပစုမ္ေပာ ေထ့ပ္ေပာထိပ္ ေပာထာရ္ အမလိက္ေက
ေနစမုမ္ ဝဲထ္ထနဲေယာ ေနရိလဲယာယ္ ေနရိလဲယီရ္
စီစိ ယိဝဲယုည္ စိလေဝာ ဝိလဲယာတိ
ေအစု မိတမီေထာ ဝိန္ေနာရ္ကလ္ ေအထ္ထုထရ္ကုက္
ကူစု မလရ္ပ္ပာထန္ ထန္ထရုလ ဝန္ထရုလုမ္
ေထစန္ စိဝေလာကန္ ထိလ္လဲစ္စိရ္ ရမ္ပလထ္ထုလ္
အီစနာရ္က္ ကန္ပာရ္ယာမ္ အာေရေလာရ္ ေအ့မ္ပာဝာယ္


Open the Burmese Section in a New Tab
パーサミ・ パラニ・チョーティク・ ケニ・パーヤ・ イラーピ・パカリ・ナーミ・
ペーチュミ・ポー テピ・ポーティピ・ ポーターリ・ アマリク・ケー
ネーサムミ・ ヴイタ・タニイョー ネーリリイヤーヤ・ ネーリリイヤーリ・
チーチ ヤヴイユニ・ チラヴォー ヴィリイヤーティ
エーチュ ミタミートー ヴィニ・ノーリ・カリ・ エータ・トゥタリ・クク・
クーチュ マラリ・ピ・パータニ・ タニ・タルラ ヴァニ・タルルミ・
テーサニ・ チヴァローカニ・ ティリ・リイシ・チリ・ ラミ・パラタ・トゥリ・
イーサナーリ・ク・ カニ・パーリ・ヤーミ・ アーレーローリ・ エミ・パーヴァーヤ・
Open the Japanese Section in a New Tab
basaM barandodig genbay irabbahalnaM
besuMbo debbodib bodar amaligge
nesamuM faiddanaiyo nerilaiyay nerilaiyir
sisi yifaiyun silafo filaiyadi
esu midamido finnorgal eddudargug
gusu malarbbadan dandarula fandaruluM
desan sifalohan dillaiddidraMbaladdul
isanarg ganbaryaM arelor eMbafay
Open the Pinyin Section in a New Tab
باسَن بَرَنعْجُوۤدِكْ كيَنْبایْ اِرابَّحَلْنان
بيَۤسُنبُوۤ تيَبُّوۤدِبْ بُوۤدارْ اَمَضِكّيَۤ
نيَۤسَمُن وَيْتَّنَيْیُوۤ نيَۤرِظَيْیایْ نيَۤرِظَيْیِيرْ
سِيسِ یِوَيْیُنعْ سِلَوُوۤ وِضَيْیادِ
يَۤسُ مِدَمِيدُوۤ وِنُّوۤرْغَضْ يَۤتُّدَرْكُكْ
كُوسُ مَلَرْبّادَنْ دَنْدَرُضَ وَنْدَرُضُن
تيَۤسَنْ سِوَلُوۤحَنْ تِلَّيْتشِّتْرَنبَلَتُّضْ
اِيسَنارْكْ كَنْبارْیان آريَۤلُوۤرْ يَنباوَایْ


Open the Arabic Section in a New Tab
pɑ:sʌm pʌɾʌɲʤo:ðɪk kɛ̝n̺bɑ:ɪ̯ ʲɪɾɑ:ppʌxʌln̺ɑ:m
pe:sɨmbo· t̪ɛ̝ppo:ðɪp po:ðɑ:r ˀʌmʌ˞ɭʼɪkke:
n̺e:sʌmʉ̩m ʋʌɪ̯t̪t̪ʌn̺ʌjɪ̯o· n̺e:ɾɪ˞ɻʌjɪ̯ɑ:ɪ̯ n̺e:ɾɪ˞ɻʌjɪ̯i:r
si:sɪ· ɪ̯ɪʋʌjɪ̯ɨɲ sɪlʌʋo· ʋɪ˞ɭʼʌjɪ̯ɑ˞:ɽɪ
ʲe:sɨ mɪ˞ɽʌmi:ðo· ʋɪ˞ɳɳo:rɣʌ˞ɭ ʲe:t̪t̪ɨðʌrkɨk
ku:sɨ mʌlʌrppɑ:ðʌn̺ t̪ʌn̪d̪ʌɾɨ˞ɭʼə ʋʌn̪d̪ʌɾɨ˞ɭʼɨm
t̪e:sʌn̺ sɪʋʌlo:xʌn̺ t̪ɪllʌɪ̯ʧʧɪr rʌmbʌlʌt̪t̪ɨ˞ɭ
ʲi:sʌn̺ɑ:rk kʌn̺bɑ:rɪ̯ɑ:m ˀɑ:ɾe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯
Open the IPA Section in a New Tab
pācam parañcōtik keṉpāy irāppakalnām
pēcumpō teppōtip pōtār amaḷikkē
nēcamum vaittaṉaiyō nēriḻaiyāy nēriḻaiyīr
cīci yivaiyuñ cilavō viḷaiyāṭi
ēcu miṭamītō viṇṇōrkaḷ ēttutaṟkuk
kūcu malarppātan tantaruḷa vantaruḷum
tēcaṉ civalōkaṉ tillaicciṟ ṟampalattuḷ
īcaṉārk kaṉpāryām ārēlōr empāvāy
Open the Diacritic Section in a New Tab
паасaм пaрaгнсоотык кэнпаай ырааппaкалнаам
пэaсюмпоо тэппоотып поотаар амaлыккэa
нэaсaмюм вaыттaнaыйоо нэaрылзaыяaй нэaрылзaыйир
сисы йывaыёгн сылaвоо вылaыяaты
эaсю мытaмитоо выннооркал эaттютaткюк
кусю мaлaрппаатaн тaнтaрюлa вaнтaрюлюм
тэaсaн сывaлоокан тыллaычсыт рaмпaлaттюл
исaнаарк канпааряaм аарэaлоор эмпааваай
Open the Russian Section in a New Tab
pahzam pa'rangzohthik kenpahj i'rahppakal:nahm
pehzumpoh theppohthip pohthah'r ama'likkeh
:nehzamum wäththanäjoh :neh'rishäjahj :neh'rishäjih'r
sihzi jiwäjung zilawoh wi'läjahdi
ehzu midamihthoh wi'n'noh'rka'l ehththutharkuk
kuhzu mala'rppahtha:n tha:ntha'ru'la wa:ntha'ru'lum
thehzan ziwalohkan thillächzir rampalaththu'l
ihzanah'rk kanpah'rjahm ah'rehloh'r empahwahj
Open the German Section in a New Tab
paaçam paragnçoothik kènpaaiy iraappakalnaam
pèèçòmpoo thèppoothip poothaar amalhikkèè
nèèçamòm vâiththanâiyoo nèèrilzâiyaaiy nèèrilzâiyiier
çiiçi yeivâiyògn çilavoo vilâiyaadi
èèçò midamiithoo vinhnhoorkalh èèththòtharhkòk
köçò malarppaathan thantharòlha vantharòlhòm
thèèçan çivalookan thillâiçhçirh rhampalaththòlh
iiçanaark kanpaaryaam aarèèloor èmpaavaaiy
paaceam paraigncioothiic kenpaayi iraappacalnaam
peesumpoo theppoothip poothaar amalhiickee
neeceamum vaiiththanaiyoo neerilzaiiyaayi neerilzaiyiir
ceiicei yiivaiyuign ceilavoo vilhaiiyaati
eesu mitamiithoo viinhnhoorcalh eeiththutharhcuic
cuusu malarppaathain thaintharulha vaintharulhum
theecean ceivaloocan thillaicceirh rhampalaiththulh
iiceanaaric canpaariyaam aareeloor empaavayi
paasam paranjsoathik kenpaay iraappakal:naam
paesumpoa theppoathip poathaar ama'likkae
:naesamum vaiththanaiyoa :naerizhaiyaay :naerizhaiyeer
seesi yivaiyunj silavoa vi'laiyaadi
aesu midameethoa vi'n'noarka'l aeththutha'rkuk
koosu malarppaatha:n tha:ntharu'la va:ntharu'lum
thaesan sivaloakan thillaichchi'r 'rampalaththu'l
eesanaark kanpaaryaam aaraeloar empaavaay
Open the English Section in a New Tab
পাচম্ পৰঞ্চোতিক্ কেন্পায়্ ইৰাপ্পকল্ণাম্
পেচুম্পো তেপ্পোতিপ্ পোতাৰ্ অমলিক্কে
নেচমুম্ ৱৈত্তনৈয়ো নেৰিলৈয়ায়্ নেৰিলৈয়ীৰ্
চীচি য়িৱৈয়ুঞ্ চিলৱোʼ ৱিলৈয়াটি
এচু মিতমীতো ৱিণ্ণোৰ্কল্ এত্তুতৰ্কুক্
কূচু মলৰ্প্পাতণ্ তণ্তৰুল ৱণ্তৰুলুম্
তেচন্ চিৱলোকন্ তিল্লৈচ্চিৰ্ ৰম্পলত্তুল্
পীচনাৰ্ক্ কন্পাৰ্য়াম্ আৰেলোৰ্ এম্পাৱায়্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.