எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருவாசகம்-திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
    புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
    எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.

குறிப்புரை:

முதல் - நிதி. ``என்`` என்றது, ``முதல்`` என்றதனோடு இயைய, ``வாழ்`` என்றது இடைநிலையாய், ஏதுப் பொருண்மேல் வந்த வினைத்தொகை நிலைபட அதனோடு தொக்கது. இனி, ``வாழ்`` என்றதனை முதனிலைத் தொழிற் பெயராகக் கொண்டு, `வாழ்விற்கு` என உருபு விரித்தலுமாம். இப்பொருட்கு, முதல், `காரணம்` என்னும் பொருளதாம். `நின் பூங்கழற்கு இணையான துணைமலர்களைக் கையில் கொண்டு ஏற்றி` என்க. ``துணை`` என்றது கூட்டத்தை. ``மலர்கள்`` என்றது, பலவகை மலர்களையும். பொலிவு பற்றி எம் மலரும் இறைவனது திருவடிகளுக்கு ஒப்பாவனவாம். ஏற்றி - தூவி. மலரும் - வெளிப்படுகின்ற. `மலரைக் கொடுத்து, நகையைப் பெறு வோம்` என்பது நயம். `சேற்றின்கண் மலரும்` என இயையும். `ஏற்றுக் கொடி, உயர் கொடி` எனத் தனித்தனி இயைக்க. `முதலாகிய பொருளே, சிவபெருமானே,கொடி உடையாய், எனை உடையாய்,` எம்பெருமானே, போற்றி! (நீ எழுந்தருளினால் நாங்கள்) மலர் கொண்டு ஏற்றி, நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; பள்ளி எழுந்தருளாய்` என வினைமுடிக்க. ``போற்றி`` என்றது, தலைவர்க்கு ஒரு காரியம் சொல்லுவார், முதற்கண் அவர்க்கு வாழ்த்தும், வணக்க மும் கூறுதலாகிய மரபுபற்றியாம். ``எனை உடையாய்`` என்றதனால், இஃது ஒருவர் கூற்றாகவே அருளிச் செய்யப்பட்டதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరువాసహం-తిరుప్పళ్ళియెళుచ్చి


నాయొక్క ఈ జీవితమునకు కారణభూతమైన ఓ పరమాత్మా! బురదలోనుండి వెలువడు ఆకులపై పూయు తామరపుష్పములు పుష్పించుచున్న శీతలమైన జలముతో కూడియుండు పొలములచే ఆవరింపబడియున్న , తిరుప్పెరుందురై దివ్యస్థలమందు వెలసి అనుగ్రహించుచున్న ఓ పరమేశ్వరా! ఎత్తైన వృషభచిహ్న పతాకమును విజయకేతనముగ గలవాడా! నన్ను నీయొక్క సేవకునిగ చేసుకున్నవాడా! మాయొక్క నాయకుడా! నీకు వందనములు! పొద్దు పొడిచింది; తామర పుష్పమువంటి అందమైన దివ్య చరణారవిందములకు ఈడైన రెండు ఎర్రతామరపుష్పములను గైకొని ఆ దివ్యపాదారవిందములైనుంచి, అందులకు ప్రతిగ, ఈయొక్క ముఖారవిందమున, మాకు అనుగ్రహముతో వికసించిన సౌందర్యవంతమైన చిరుమందహాసమును జూచి, నీయొక్క పాదములను శరణు వేడుకొనుచున్నాము. దయచేసి నిద్రనుండి మేల్కొని మమ్ము దీవించ రమ్ము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
20. ತಿರುಪಳ್ಳಿ ಎೞುಚ್ಚಿ
(*ನಿದ್ರೆಯಿಂದ ಏಳಿಸುವುದು)

(* ನಿದ್ರೆಯಿಂದ ಏಳಿಸುವುದು. ಮಲಗಿರುವ ಅರಸರನ್ನು ಮುಂಜಾನೆಯಲ್ಲಿ ಏಳಿಸಲು ಸೂದರ್ ಎಂಬ ಕೆಲಸದವರು ಹೊಗಳುತ್ತಾ ಹಾಡಿ ಎಬ್ಬಿಸುವುದನ್ನು ತಿರುಪಳ್ಳಿ ಎೞುಚ್ಚಿ ಎನ್ನುತ್ತಾರೆ.)

ನನ್ನ ಬಾಳಿನ ನಿಧಿಯೇ! ಕೆಸರಿನಲ್ಲಿ ಪಕಳೆಗಳುಳ್ಳ ತಾವರೆ ಹೂಗಳು ಅರಳುವ ತಂಪಾದ ಬಯಲುಗಳಿಂದಾವೃತವಾದ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ಶಿವ ಪರಮಾತ್ಮನೇ ! ಎತ್ತರವಾದ ವೃಷಭದ ಪತಾಕೆಯನ್ನು ಉಳ್ಳವನೇ ! ನನ್ನನ್ನು ಅಡಿಯಾಳಾಗಿಸಿಕೊಂಡವನೇ, ನನ್ನೊಡೆಯನೇ ನಿನಗೆ ನಮಸ್ಕಾರ. ಹೊತ್ತು ಮೂಡಿತು, ಎಣೆಯಿಲ್ಲದ ಸೊಬಗಿನಿಂದ ಕೂಡಿರುವ ತಾವರೆಯಂತಹ ಪಾದಗಳಿಗೆ ಎಣೆಯಾದ ಎರಡು ಹೂಗಳನ್ನು ಅರ್ಪಿಸುವೆ. ಆಗ ನಿನ್ನ ಶ್ರೀಮುಖದಿ ದಯೆಯಿಂದ ವಿಕಸಿಸುವ ಸುಂದರ ನಗೆಯನ್ನು ಕಂಡು ನಿನ್ನ ಪರಮ ಪಾದಗಳ ನಮಿಸುವೆವು. ನಿದ್ದೆಯಿಂದೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

20. തിരുപ്പള്ളി ഉണര്‍ത്തല്‍ ഗീതങ്ങള്‍


പോറ്റുു നി െഞാന്‍ എന്റെ ജീവന്റെ ജീവനാം മൂലപ്പൊരുളേ
പുലരിയായതറിഞ്ഞില്ലേ നിന്‍ പൂങ്കഴല്‍ ഇണയടി തുണയാര്‍ു
ഏറ്റി മലര്‍തൂവി നില്‍ക്കുു ഞാന്‍ തിരുമുഖം മലര്‍ു
എഴില്‍ പുഞ്ചിരി തൂകി അരുളുവാന്‍ നിന്‍ തിരുവടി തൊഴുു ഞാന്‍
ചേറ്റിനില്‍ മലരും കമലങ്ങള്‍ പൂത്തുലയും പാടങ്ങള്‍ ചൂഴും
തിരുപ്പെരും തുറ ഉറയുമെന്‍ ശിവ പുരാനേ
ഏറ്റുയര്‍ കൊടിയുടയോനേ എന്‍ ഉടയോനേ
എം പെരുമാനേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිරුවාසගම්
අට වැනි තිරුමුරෙයි තිරුප්පල්ලි එළුච්චි


ඔබ පසසමින්, මා දිවියේ මූලාකාරය,
හිරු උදාවනවිට දෙව් රන් පා කමල මත, පියුම් පුදනෙමු,
සමිඳුන් මුව කමලෙහි ආසිරිය, අප හද තුළ දල්වමු
මදහසින් තුටුව ඔබ සිරි පා නමදිමු,
මඩෙහි පිපි පියුම්, සිසිල් වෙල් යාය ද වට වූ,
තිරුප්පෙරුංතුරයේ වැඩ සිටිනා, සිව දෙවිඳුනේ
ලෙළ දෙන මනරම් වසු දදය දරනා, මට ද පිහිට වූ
අප දෙවිඳුනේ, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 01

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Engkau lah yang segala-galanya untuk diriku
Engkau menjelma di atas bunga teratai;
tapak sawah padi yang suasana sejuk iaitu di Thiruperunthurai.
Aku adalah hambaMu dan Engkau adalah Pemimpinku;
aku menyembah padaMU
Di awal pagi ini kami menyembah dengan memujaMu
dengan bunga teratai; dengan muka manis.
Bangun dan menjelma di hadapan kami

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
तिरुप्पळ्ळि ऍलुच्चि
(तिरोधान षुद्धि)
(उद्बोधन गीत)


(भगवान के पंच कृत्यों में तिरोधान भी एक है। तिरोधान का षब्दार्थ है ‘छिपाना‘। तात्पर्य यह है कि स्वरूप ज्ञान को तमोगुण आच्छादित कर लेता है। प्रातःकाल जागते ही प्रार्थना के द्वारा वन्दना करने से तमोगुण हटकर मन षुद्ध हो जाता है। इस तिरोधान षुद्धि को ही दस गीतों में (प्रातःकाल के वन्दना गीत) के द्वारा दर्षाया गया है।

जागृतावस्था, स्वप्न, सुशुप्ति इन तीनों के आधार-स्वरूप भगवान हैं। वे निद्रा से परे हैं।उनको जगाना निमित्त मात्र है। जीवात्मा को सत्वगुण की ओर प्रवृत्त कराना इसका लक्ष्य है। प्रभु को प्रातःकाल जगानेवाले प्रभाती गीतों का यह दषक तिरुवाचकम् का विषिश्ट अंग है। इसमें सत्य के साक्षात्कार का वर्णन है।)

मेरे जीवन के आधार-स्वरूप् मूलाधारक निलय! तुम्हारी जय हो।
पौ फट गई। तुम्हारे दिव्य श्रीचरणों के अनुरूप दो पुश्पों को
उनपर समर्पित कर अलंकृत कर दिया है।
तुम्हारे दिव्य मुखमण्डल पर षोभायमान मंदहास द्वारा कृपा पाकर
तुम्हारे श्रीचरणों की वन्दना करेंगे।
षोभित पंकज दलों से पुश्पित षीतप्रद खेतों से आवृत तिरुप्पेॅरुंतुरै में
प्रतिश्ठित महादेव प्रभुः वृशभ ध्वजाधारी!
मेरे आराध्यदेव। मेरे प्रियतम।
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
20. तिरुप्पळ्ळिऎऴुच्चि


नमस्ते मम जीवहेतो, तवपुष्पपादसंनिभेन कमलेन वयं त्वां अर्चामः।
तव सुन्दरमुखे अस्माकं अनुग्रहार्थं यो सुहासो विकसति तेन तव पादौ नमामः।
पङ्कजसंकुलशीतलोर्वरावृत तिरुप्पॆरुन्दुऱै वासिन्, हे शिव,
उच्छ्रितध्वजवन्, मम स्वामिन्, मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
TIRUPPALLIYELUCCI
DAS HEILIGE WECKEN
DIE REINIGUNG VON DER VERDUNKELUNG
Kundgegeben in Tirupperunturai


Gepriesen seiest du,Šiv!
Gepriesen; o höchstes Gut!
Du Grund meiner Seligkeit!
Der Tag ist angebrochen,
Blumen bringen wir dir,
Deinem heiligen Lotusfuße,
Würdig und angenehm!
Die Opfergaben breiten
Vor dir, o Šiva, wir aus,
Und anbetend fallen wir nieder
Vor seinem heiligen Fuß,
Das liebliche Lächeln sehend
Auf deinem Angesicht,
Mit dem du uns Gnade schenkst!
O Šiva, erhabener Gott,
Der in Tirupperunturai
Du wohnst, das umgeben ist
Von wasserreichen Feldern,
In deren Schlamme blühen
Schimmernde Lotusblumen,
Reich an Blättern und Duft,
Und wo der gewaltige Stier,
Der schöne, sich ergeht!
O du mein Herr, o mein Fürst,
Stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
20. তিৰুপ্পল্লি এলুচ্চি

(বিৰোধান শুদ্ধি)
(উদ্বোধন গীত)
(ভগৱানৰ পাঁচটা কৃত্যৰ ভিতৰত তিৰোধান এটা। তিৰোধান শব্দৰ অৰ্থ হ’ল লুকোৱা। ইয়াৰ তাৎপৰ্য হ’ল স্বৰূপ জ্ঞানক তমোগুণ আচ্ছআদিত কৰি লয়। ৰাতিপুৱা শুই উঠিয়ে প্ৰাৰ্থনাৰ দ্বাৰা বন্দনা কৰিলে তমোগুন আঁতৰি মন শুদ্ধ হৈ যায়। এই তিৰোধান শুদ্ধিকে এই দহটা গীতৰ (ৰাতিপুৱাৰ বন্দনা গীত) দ্বাৰা বৰ্ণনা কৰা হৈছে। জাগৃতাৱস্থা, স্বপ্ন, শুশুপ্তি – এই তিনিওটাৰ আধাৰ স্বৰূপ ভগৱান। তেওঁ নিদ্ৰাত নিমগ্ন। তেওঁক জগোৱা নিমিত্ত মাত্ৰ। জীৱাত্মাক সত্বগুণত প্ৰবৃত্ত কৰোৱাই তাৰ লক্ষ্য। ঈশ্বৰক ৰাতিপুৱাই জগোৱা প্ৰভাতী গীতৰ এই দশক তিৰুবাচকম্ৰ বিশিষ্ট অংগ। ইয়াত সত্যৰ সাক্ষাত বৰ্ণনা আছে।)


মোৰ জীৱনৰ অধাৰ-স্বৰূপ হে মূলাধাৰক আশ্ৰয়দাতা! তোমাৰ জয় হওক।
ৰাতি পুৱাল। তোমাৰ দিব্য শ্ৰীচৰণৰ অনুৰূপ দুই ফুলক
তাৰ ওপৰত আলংকৃত কৰি দিলোঁ।
তোমাৰ দিব্য মুখমণ্ডলত শোভায়মান ঈষৎ হাঁহিৰ কৃপা লাভ কৰি
তোমাৰ দিব্য শ্ৰীচৰণৰ বন্দনা কৰিম।
শোভিত পদুমৰ পাহিৰপৰা বিশাল খেতিপথাৰেৰে আবৃত তিৰুপ্পেৰুন্তুৰৈত
প্ৰতিষ্ঠিত মহাদেৱৰ বৃষভ ধ্বজাধাৰী।
মোৰ আৰাধ্যদেৱ! মোৰ প্ৰিয়তম।
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O supreme Ens which is the source of my life, praise be !
It has dawned; we will hail Your flowery, ankleted!
Feet twain with a pair of flowers matching them. !
Blessed with the gracious and beautiful smile!
That burgeons in Your visage, we will adore Your sacred feet. !
O God Siva who abides at sacred Perunturai girt!
With cool fields where, from the mire, petalled lotuses!
Blossom ! O One that has a flag inscribed!
With a signum of the Bull ! You own us. O our God be pleased!
To arise from off Your couch and grace us. !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O, Primal Ens, the Cause of all Causes to live in you, praise be!
Meet with your floral Feet Pair, pick and fetch do we choice twin flowers,
offering them to yours; hail and worship do we to view
the graceful blossom of a smile on your ruddy lips; it`s dawn kenspeckle!
O, Siva Lord, abiding in Tirupperunthurai
enwreathed with blue green
fields abloom with lotuses bare in the alluvial marshes!
O, One with a lofty standard with Taurus strident in his loping!
O, Possessor mine, O, kindly Leader of Light!
From off your recumbence , may you will to rise and grant grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀏𑁆𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀫𑀼𑀢 𑀮𑀸𑀓𑀺𑀬 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁂
𑀧𑀼𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀢𑀼 𑀧𑀽𑀗𑁆𑀓𑀵𑀶𑁆 𑀓𑀺𑀡𑁃𑀢𑀼𑀡𑁃 𑀫𑀮𑀭𑁆𑀓𑁄𑁆𑀡𑁆
𑀝𑁂𑀶𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀓𑀢𑁆 𑀢𑁂𑁆𑀫𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀫𑀮𑀭𑀼𑀫𑁆
𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀦𑀓𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑁄𑀫𑁆
𑀘𑁂𑀶𑁆𑀶𑀺𑀢𑀵𑁆𑀓𑁆 𑀓𑀫𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀮𑀭𑀼𑀦𑁆𑀢𑀡𑁆 𑀯𑀬𑀮𑁆𑀘𑀽𑀵𑁆
𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂
𑀏𑀶𑁆𑀶𑀼𑀬𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀼𑀝𑁃 𑀬𑀸𑀬𑁆𑀏𑁆𑀷𑁃 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোট্রিএন়্‌ ৱাৰ়্‌মুদ লাহিয পোরুৰে
পুলর্ন্দদু পূঙ্গৰ়র়্‌ কিণৈদুণৈ মলর্গোণ্
টেট্রিনিন়্‌ তিরুমুহত্ তেমক্করুৰ‍্ মলরুম্
এৰ়িল্নহৈ কোণ্ডুনিন়্‌ তিরুৱডি তোৰ়ুহোম্
সেট্রিদৰ়্‌ক্ কমলঙ্গৰ‍্ মলরুন্দণ্ ৱযল্সূৰ়্‌
তিরুপ্পেরুন্ দুর়ৈযুর়ৈ সিৱবেরু মান়ে
এট্রুযর্ কোডিযুডৈ যায্এন়ৈ যুডৈযায্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே


Open the Thamizhi Section in a New Tab
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

Open the Reformed Script Section in a New Tab
पोट्रिऎऩ् वाऴ्मुद लाहिय पॊरुळे
पुलर्न्ददु पूङ्गऴऱ् किणैदुणै मलर्गॊण्
टेट्रिनिऩ् तिरुमुहत् तॆमक्करुळ् मलरुम्
ऎऴिल्नहै कॊण्डुनिऩ् तिरुवडि तॊऴुहोम्
सेट्रिदऴ्क् कमलङ्गळ् मलरुन्दण् वयल्सूऴ्
तिरुप्पॆरुन् दुऱैयुऱै सिवबॆरु माऩे
एट्रुयर् कॊडियुडै याय्ऎऩै युडैयाय्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये
Open the Devanagari Section in a New Tab
ಪೋಟ್ರಿಎನ್ ವಾೞ್ಮುದ ಲಾಹಿಯ ಪೊರುಳೇ
ಪುಲರ್ಂದದು ಪೂಂಗೞಱ್ ಕಿಣೈದುಣೈ ಮಲರ್ಗೊಣ್
ಟೇಟ್ರಿನಿನ್ ತಿರುಮುಹತ್ ತೆಮಕ್ಕರುಳ್ ಮಲರುಂ
ಎೞಿಲ್ನಹೈ ಕೊಂಡುನಿನ್ ತಿರುವಡಿ ತೊೞುಹೋಂ
ಸೇಟ್ರಿದೞ್ಕ್ ಕಮಲಂಗಳ್ ಮಲರುಂದಣ್ ವಯಲ್ಸೂೞ್
ತಿರುಪ್ಪೆರುನ್ ದುಱೈಯುಱೈ ಸಿವಬೆರು ಮಾನೇ
ಏಟ್ರುಯರ್ ಕೊಡಿಯುಡೈ ಯಾಯ್ಎನೈ ಯುಡೈಯಾಯ್
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ
Open the Kannada Section in a New Tab
పోట్రిఎన్ వాళ్ముద లాహియ పొరుళే
పులర్ందదు పూంగళఱ్ కిణైదుణై మలర్గొణ్
టేట్రినిన్ తిరుముహత్ తెమక్కరుళ్ మలరుం
ఎళిల్నహై కొండునిన్ తిరువడి తొళుహోం
సేట్రిదళ్క్ కమలంగళ్ మలరుందణ్ వయల్సూళ్
తిరుప్పెరున్ దుఱైయుఱై సివబెరు మానే
ఏట్రుయర్ కొడియుడై యాయ్ఎనై యుడైయాయ్
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෝට්‍රිඑන් වාළ්මුද ලාහිය පොරුළේ
පුලර්න්දදු පූංගළර් කිණෛදුණෛ මලර්හොණ්
ටේට්‍රිනින් තිරුමුහත් තෙමක්කරුළ් මලරුම්
එළිල්නහෛ කොණ්ඩුනින් තිරුවඩි තොළුහෝම්
සේට්‍රිදළ්ක් කමලංගළ් මලරුන්දණ් වයල්සූළ්
තිරුප්පෙරුන් දුරෛයුරෛ සිවබෙරු මානේ
ඒට්‍රුයර් කොඩියුඩෛ යාය්එනෛ යුඩෛයාය්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ


Open the Sinhala Section in a New Tab
പോറ്റിഎന്‍ വാഴ്മുത ലാകിയ പൊരുളേ
പുലര്‍ന്തതു പൂങ്കഴറ് കിണൈതുണൈ മലര്‍കൊണ്‍
ടേറ്റിനിന്‍ തിരുമുകത് തെമക്കരുള്‍ മലരും
എഴില്‍നകൈ കൊണ്ടുനിന്‍ തിരുവടി തൊഴുകോം
ചേറ്റിതഴ്ക് കമലങ്കള്‍ മലരുന്തണ്‍ വയല്‍ചൂഴ്
തിരുപ്പെരുന്‍ തുറൈയുറൈ ചിവപെരു മാനേ
ഏറ്റുയര്‍ കൊടിയുടൈ യായ്എനൈ യുടൈയായ്
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ
Open the Malayalam Section in a New Tab
โปรริเอะณ วาฬมุถะ ลากิยะ โปะรุเล
ปุละรนถะถุ ปูงกะฬะร กิณายถุณาย มะละรโกะณ
เดรรินิณ ถิรุมุกะถ เถะมะกกะรุล มะละรุม
เอะฬิลนะกาย โกะณดุนิณ ถิรุวะดิ โถะฬุโกม
เจรริถะฬก กะมะละงกะล มะละรุนถะณ วะยะลจูฬ
ถิรุปเปะรุน ถุรายยุราย จิวะเปะรุ มาเณ
เอรรุยะร โกะดิยุดาย ยายเอะณาย ยุดายยาย
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာရ္ရိေအ့န္ ဝာလ္မုထ လာကိယ ေပာ့ရုေလ
ပုလရ္န္ထထု ပူင္ကလရ္ ကိနဲထုနဲ မလရ္ေကာ့န္
ေတရ္ရိနိန္ ထိရုမုကထ္ ေထ့မက္ကရုလ္ မလရုမ္
ေအ့လိလ္နကဲ ေကာ့န္တုနိန္ ထိရုဝတိ ေထာ့လုေကာမ္
ေစရ္ရိထလ္က္ ကမလင္ကလ္ မလရုန္ထန္ ဝယလ္စူလ္
ထိရုပ္ေပ့ရုန္ ထုရဲယုရဲ စိဝေပ့ရု မာေန
ေအရ္ရုယရ္ ေကာ့တိယုတဲ ယာယ္ေအ့နဲ ယုတဲယာယ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ


Open the Burmese Section in a New Tab
ポーリ・リエニ・ ヴァーリ・ムタ ラーキヤ ポルレー
プラリ・ニ・タトゥ プーニ・カラリ・ キナイトゥナイ マラリ・コニ・
テーリ・リニニ・ ティルムカタ・ テマク・カルリ・ マラルミ・
エリリ・ナカイ コニ・トゥニニ・ ティルヴァティ トルコーミ・
セーリ・リタリ・ク・ カマラニ・カリ・ マラルニ・タニ・ ヴァヤリ・チューリ・
ティルピ・ペルニ・ トゥリイユリイ チヴァペル マーネー
エーリ・ルヤリ・ コティユタイ ヤーヤ・エニイ ユタイヤーヤ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ
Open the Japanese Section in a New Tab
bodrien falmuda lahiya borule
bularndadu bunggalar ginaidunai malargon
dedrinin dirumuhad demaggarul malaruM
elilnahai gondunin dirufadi doluhoM
sedridalg gamalanggal malarundan fayalsul
dirubberun duraiyurai sifaberu mane
edruyar godiyudai yayenai yudaiyay
eMberu manballi elundaru laye
Open the Pinyin Section in a New Tab
بُوۤتْرِيَنْ وَاظْمُدَ لاحِیَ بُورُضيَۤ
بُلَرْنْدَدُ بُونغْغَظَرْ كِنَيْدُنَيْ مَلَرْغُونْ
تيَۤتْرِنِنْ تِرُمُحَتْ تيَمَكَّرُضْ مَلَرُن
يَظِلْنَحَيْ كُونْدُنِنْ تِرُوَدِ تُوظُحُوۤن
سيَۤتْرِدَظْكْ كَمَلَنغْغَضْ مَلَرُنْدَنْ وَیَلْسُوظْ
تِرُبّيَرُنْ دُرَيْیُرَيْ سِوَبيَرُ مانيَۤ
يَۤتْرُیَرْ كُودِیُدَيْ یایْيَنَيْ یُدَيْیایْ
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ


Open the Arabic Section in a New Tab
po:t̺t̺ʳɪʲɛ̝n̺ ʋɑ˞:ɻmʉ̩ðə lɑ:çɪɪ̯ə po̞ɾɨ˞ɭʼe:
pʊlʌrn̪d̪ʌðɨ pu:ŋgʌ˞ɻʌr kɪ˞ɳʼʌɪ̯ðɨ˞ɳʼʌɪ̯ mʌlʌrɣo̞˞ɳ
ʈe:t̺t̺ʳɪn̺ɪn̺ t̪ɪɾɨmʉ̩xʌt̪ t̪ɛ̝mʌkkʌɾɨ˞ɭ mʌlʌɾɨm
ʲɛ̝˞ɻɪln̺ʌxʌɪ̯ ko̞˞ɳɖɨn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· t̪o̞˞ɻɨxo:m
se:t̺t̺ʳɪðʌ˞ɻk kʌmʌlʌŋgʌ˞ɭ mʌlʌɾɨn̪d̪ʌ˞ɳ ʋʌɪ̯ʌlsu˞:ɻ
t̪ɪɾɨppɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e:
ʲe:t̺t̺ʳɨɪ̯ʌr ko̞˞ɽɪɪ̯ɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ɛ̝n̺ʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
pōṟṟieṉ vāḻmuta lākiya poruḷē
pularntatu pūṅkaḻaṟ kiṇaituṇai malarkoṇ
ṭēṟṟiniṉ tirumukat temakkaruḷ malarum
eḻilnakai koṇṭuniṉ tiruvaṭi toḻukōm
cēṟṟitaḻk kamalaṅkaḷ malaruntaṇ vayalcūḻ
tirupperun tuṟaiyuṟai civaperu māṉē
ēṟṟuyar koṭiyuṭai yāyeṉai yuṭaiyāy
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē
Open the Diacritic Section in a New Tab
поотрыэн ваалзмютa лаакыя порюлэa
пюлaрнтaтю пунгкалзaт кынaытюнaы мaлaркон
тэaтрынын тырюмюкат тэмaккарюл мaлaрюм
элзылнaкaы контюнын тырювaты толзюкоом
сэaтрытaлзк камaлaнгкал мaлaрюнтaн вaялсулз
тырюппэрюн тюрaыёрaы сывaпэрю маанэa
эaтрюяр котыётaы яaйэнaы ётaыяaй
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa
Open the Russian Section in a New Tab
pohrrien wahshmutha lahkija po'ru'leh
pula'r:nthathu puhngkashar ki'näthu'nä mala'rko'n
dehrri:nin thi'rumukath themakka'ru'l mala'rum
eshil:nakä ko'ndu:nin thi'ruwadi thoshukohm
zehrrithashk kamalangka'l mala'ru:ntha'n wajalzuhsh
thi'ruppe'ru:n thuräjurä ziwape'ru mahneh
ehrruja'r kodijudä jahjenä judäjahj
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh
Open the German Section in a New Tab
poorhrhièn vaalzmòtha laakiya poròlhèè
pòlarnthathò pöngkalzarh kinhâithònhâi malarkonh
dèèrhrhinin thiròmòkath thèmakkaròlh malaròm
è1zilnakâi konhdònin thiròvadi tholzòkoom
çèèrhrhithalzk kamalangkalh malarònthanh vayalçölz
thiròppèròn thòrhâiyòrhâi çivapèrò maanèè
èèrhrhòyar kodiyòtâi yaaiyènâi yòtâiyaaiy
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè
poorhrhien valzmutha laaciya porulhee
pularinthathu puungcalzarh cinhaithunhai malarcoinh
teerhrhinin thirumucaith themaiccarulh malarum
elzilnakai coinhtunin thiruvati tholzucoom
ceerhrhithalzic camalangcalh malaruinthainh vayalchuolz
thirupperuin thurhaiyurhai ceivaperu maanee
eerhrhuyar cotiyutai iyaayienai yutaiiyaayi
emperu maanpalhlhi elzuintharu lhaayiee
poa'r'rien vaazhmutha laakiya poru'lae
pular:nthathu poongkazha'r ki'naithu'nai malarko'n
dae'r'ri:nin thirumukath themakkaru'l malarum
ezhil:nakai ko'ndu:nin thiruvadi thozhukoam
sae'r'rithazhk kamalangka'l malaru:ntha'n vayalsoozh
thirupperu:n thu'raiyu'rai sivaperu maanae
ae'r'ruyar kodiyudai yaayenai yudaiyaay
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae
Open the English Section in a New Tab
পোৰ্ৰিএন্ ৱাইলমুত লাকিয় পোৰুলে
পুলৰ্ণ্ততু পূঙকলৰ্ কিণৈতুণৈ মলৰ্কোণ্
টেৰ্ৰিণিন্ তিৰুমুকত্ তেমক্কৰুল্ মলৰুম্
এলীল্ণকৈ কোণ্টুণিন্ তিৰুৱটি তোলুকোম্
চেৰ্ৰিতইলক্ কমলঙকল্ মলৰুণ্তণ্ ৱয়ল্চূইল
তিৰুপ্পেৰুণ্ তুৰৈয়ুৰৈ চিৱপেৰু মানে
এৰ্ৰূয়ৰ্ কোটিয়ুটৈ য়ায়্এনৈ য়ুটৈয়ায়্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.