பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பதிக வரலாறு :

தொகை `வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்' (தி.7 ப.39 பா.5) வகை வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய் பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் தைய லருள்பெற் றனனென்பர் ஞானசம் பந்தனையே. பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த அந்தாதி கொண்ட பிரானருட் காழியர் கொற்றவனே'. -தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 33, 34 தொகை, பொ-ரை: மொட்டுக்களினின்றும் நீங்காத வரிகளை யுடைய வண்டுகள் மணம் கமழ மலர்த்தும் தேன்பொருந்திய மலர் களாய கொன்றை மலர்மாலையை அணிந்த சிவபெருமானது திரு வடிகளைத் தவிர, வேறு எதனையும் விரும்பாத திருஞானசம்பந்த நாயனார்தம் அடியவர்க்கும் அடியேன். வகை, 33. பொ-ரை: இவ்வுலகம் மகிழவும், யாங்கள் வாழவும், சமணர் வலி இழக்கவும், சீகாழிப் பெருமானைக் குழந்தைப் பருவத்தில் மழலை மொழியால் பாடிப் பரவுமாறு, மலைமகளின் ஞானம் நிறைந்த அருள் அமுதத்தைப் பெற்றவர் ஞானசம்பந்தர் என உலகோர் கூறுவர். வகை, 34. பொ-ரை: பந்துடைக் கையராம் மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், கோச்செங்கட்சோழர், முருக நாயனார், நல்ல சந்தனம் அணிந்த மார்பினை உடைய நீலநக்க நாயனார் ஆகிய இவர்களின் பெயர்களை, தெய்வ மணமுடைய திருச்சடையையுடைய பெருமா னைப் பாடிய பதிகங்களில் வைத்து, அடியேன் விண்ணப்பித்த ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியையும் ஏற்றுக்கொண்ட பெருமான் அருள்மிகு சீகாழிப் பிள்ளையார் ஆவர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.