மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
117 117. சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : கௌசிகம்

திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள் ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.
பதிகக் குறிப்பு: மாலைமாற்று என்பது முதலிலிருந்து இறுதிவரை படித்தால் அமையும் பாடலே, இறுதியிலிருந்து முதல்வரை, படிப்பினும் அமைவது. அதைச்சிறுவர்கட்குக் குடகு, விகடகவி என்று கூறிக் காட்டுவர். சொல்லணியில், கூடசதுக்கம், கோமூத்திரி, சுழிகுளம், மாலை மாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள். மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவைபோன்ற கவிதைகளை யமைத்துள்ளனர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.