ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : பஞ்சமம்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை:

இதனுள், `விளக்கு` முதலியனவாகக் கூறப்பட்டவை உவமையாகுபெயர்கள். ஒளிவளர் விளக்கு என்றதில், வளர்தல், முடிவின்றி விளங்குதல். எனவே, `நெய், திரி, அகல் என்பவற்றைக் கொண்டு ஏற்றப்பட்ட செயற்கை விளக்காகாது இயற்கையில் விளங்கும் விளக்கு` என்றதாயிற்று. இதனையே, `நந்தா விளக்கு` எனவும், `தூண்டா விளக்கு` எனவும் கூறுவர். மாணிக்கமும், வயிரமும் போன்ற மணிவிளக்குக்கள் இங்ஙனம் அமைவனவாம். எனினும், `அவற்றினும் மேம்பட்ட விளக்கு` என்பதையே, `உலப்பிலா ஒன்றே` என்பதனாலும், `அவ்வாறாதல் அறிவே உருவாய் நிற்றலாலாம்` என்பதை, உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே என்பதனாலும் குறித்தருளினார்.
உணர்வு இரண்டனுள் முன்னையது உயிரினது அறிவு. சூழ் - எல்லை. இறைவன் உயிர்கள் அனைத்தையும் தனது வியாபகத்துள் அடக்கி நிற்பவன் ஆதலின், அவனை `அவற்றது அறிவின் எல்லையைக் கடந்தவன்` என்றார். `கடவுள்` என்னும் சொற்கும் இதுவே பொருளாதல் அறிக. தெளிவளர் - தூய்மை மிக்க. `பளிங்கின் திரளாகிய அழகிய குன்றே` என உரைக்க. மணி - அழகு. சிவபெருமான் பளிங்குமலைபோல விளங்குதல், திருநீற்று ஒளியினாலாம். அளி - அன்பு. ஆனந்தக் கனி - இன்பமாகிய சாற்றை யுடைய பழம். `இன்பம்` என்பது, தலைமை பற்றி, வரம்பில் இன்பமாகிய பேரின்பத்தையே குறித்தது. முன்னர், `சித்தத்துள் தித்திக்கும் தேன்` என்றது துரியநிலைக்கண் நிகழும் அனுபவத்தை யும், பின்னர், அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனி என்றது, அதீத நிலைக்கண் நிகழும் அனுபவத்தையும் குறித்தனவாம். வெளிவளர் கூத்து - காட்சிப் புலனாய், முடிவின்றி நிகழும் நடனம். `வெளியாகி` என ஆக்கம் வருவிக்க. தெய்வக் கூத்து - அருள் நடனம். அஃதாவது உயிர் கட்கு `பெத்தம்`, `முத்தி` என்னும் இருநிலைகளிலும் ஏற்ற பெற்றியால் அருள்புரியும் நடனம். அவ்விருவகை நடனங்களின் இயல்பையும், தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
(உண்மை விளக்கம் - 36)
எனவும்,
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு,மலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்.
(உண்மை விளக்கம் - 37)
எனவும் போந்த வெண்பாக்களால் முறையே உணர்க.
விளம்புதல் - துதித்தல். விளம்புமா விளம்பு என்பதற்கு, `யான் விளம்புதற்பொருட்டு, நீ விளம்புவாயாக` எனவும், இதனுள் இனி வரும் திருப்பாட்டுக்களிலும், `பணியுமா பணியே, கருதுமா கருதே` முதலியவற்றிற்கும் இவ்வாறேயாகவும் உரைக்க. இவற்றால், இறைவனது காணும் உபகாரத்தின் இன்றியமையாமை விளக்கப் படுகின்றது. `காட்டும் உபகாரம், காணும் உபகாரம்` என்பவை பற்றி இங்குச் சிறிது கூறற்பாற்று.
அறிவிக்க அன்றி அறியா உளங்கள் (சிவஞானபோதம் சூ. 8, அதி. 2) என்றபடி, உயிர்களின் அறிவு, அறிவிக்கும் பொருளின்றி ஒன்றை அறியும் தன்மையைப் பெறாது. ஆகவே, உயிரினது அறிவு, பிறிதோர் ஒளியின்றித் தானே உருவத்தைக் காணமாட்டாத கண்ணின் ஒளிபோன்றதாம். அதனால், கதிரவன் ஒளி கண்ணொளியிற் கலந்து உருவத்தைக் காணச்செய்யும் முறைபோல, இறைவன் உயிரறிவிற் கலந்து பொருள்களை அறியச் செய்வான். இவ்வாறு செய்வதே, `காட்டும் உபகாரம்` எனப்படும்.
இனிக் கதிரவன் ஒளி கலந்தமையால் விளக்கம் பெற்ற பின்னும் கண்ணொளிதானே சென்று உருவத்தைக் காணமாட்டாது அதனோடு ஆன்மாவினது அறிவும் உடன்சென்று அறிந்தால்தான், கண் உருவத்தைக் காணும் அதுபோல, இறைவனது கலப்பால் விளக்கம் பெற்ற பின்பும் உயிரினது அறிவு, தானே சென்று ஒன்றை அறியமாட்டாது அதனோடு இறைவனும் உடன்சென்று அறிந்தால் தான் உயிர், பொருளை அறியும். ஆகவே, உயிர்கள் அங்ஙனம் அறிதற் பொருட்டு அவற்றோடு தானும் உடன்நின்று அறிதலே, `காணும் உபகாரம்` எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்களாலும், உரைகளாலும் இனிது உணரற்பாலன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అంతులేక వెలుగు జ్యోతీ! మలినమంటని మహిమా!
ఎఱుకనేర్చిన మనుజుల ఎఱుక మీఱిన ఎఱుకా!
స్వచ్ఛమైన స్ఫటికమణి ప్రోవైన మాణిక్యపుకొండా!
చిత్తమును తీపి చేయు తేనియా!
ఎల్లలు మీఱు మనమున ఆనందఫలమా!
అంబలమే అరంగమై వెల్లువగు దైవనాట్య
దర్శనమిచ్చు నిను సేవకుడ నేనే రీతి
పొగడుదునో? పొగడించుకొనకున్న?

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ತಿರುಮಾಳಿಗೈ ತ್ತೇವರ್

ಅನುಗ್ರಹಿಸಿದ
ತಿರುವಿಸೈಪ್ಪಾ
1. ಕೋಯಿಲ್ - ‘ಒಳಿವಳರ್ವಿಳಕ್ಕೆ’

ಪ್ರಕೃತಿ ಸಹಜವಾದ ಬೆಳಕು ಪ್ರತಿದಿನವೂ ವೃದ್ಧಿ ಹೊಂದುವ
ಜ್ಯೋತಿರ್ಮಯನಾದವನೇ ! ಎಂದಿಗೂ ವಿನಾಶವಿಲ್ಲದ
ಎಣೆಯಿಲ್ಲದ ಪರತತ್ತ್ವವೇ! ಜೀವಜ್ಞಾನವನ್ನು ಮೀರಿದ
ಅದ್ವಿತೀಯ ಜ್ಞಾನ ಸ್ವರೂಪನೇ! ಪರಿಶುದ್ಧವಾದ ಸ್ಫಟಿಕದ
ರಾಶಿಯ ಸುಂದರ ಪರ್ವತವೆ! ಶಿವಭಕ್ತರ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ
ಸವಿಯನ್ನುಂಟುಮಾಡುವ ಜೇನೇ! ಸಾಮಾನ್ಯವಾದ ಎಲ್ಲೆಯ
ಮೀರಿ ಪರಮಾತ್ಮನಲ್ಲಿ ಆತ್ಮಸಂಗಾತಗೊಂಡಿರುವ
ಅಂತರಂಗದಲ್ಲಿ ಮಹದಾನಂದವನ್ನು ನೀಡುವ ಫಲಪ್ರದನೇ!
ಪೊನ್ನಂಬಲವನ್ನು (ಚಿದಂಬರದ ಶಿವದೇವಾಲಯ) ತನ್ನ
ನೃತ್ಯ ಪ್ರದರ್ಶಿಸುವ ರಂಗಸ್ಥಳವನ್ನಾಗಿ ಮಾಡಿಕೊಂಡು
ಭಕ್ತರ ಕಾಣ್ಕೆಗೆ ಕಾಣಸಿಗುವ, ಕೃಪಾನೃತ್ಯವನ್ನು
ಅತ್ಯಾಸಕ್ತಿಯಿಂದ ಪ್ರದರ್ಶಿಸುವ ನಿನ್ನನ್ನು, ನಿನ್ನ ಕಿಂಕರನಾದ
ನಾನು ಹೊಗಳುವಂತೆ, ನೀನು ಪವಿತ್ರಾತ್ಮದಿಂದ ನನಗೆ ಕರುಣಿಸು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

1

അമ്പലം

ഇവിടെ അമ്പലം എന്നത് ചിദംബരം നടരാജദേവന്റെ അമ്പലത്തെ മാത്രം കുറിക്കുന്ന പദം ആണ്.

ഒളിചിന്തും വിളക്കേ ഉലപ്പില്ലാ ഒന്നേ
ഉണര്വായ് ചൂഴ്ന്നതിനുളളിലായ് കടന്നതൊരു ഉണര്വേ
തെളിവാര്ന്ന പളിങ്കിന് തിരള്മണിക്കുന്നേ
ചിത്തമുളളിലമര്ന്നു മധുരസംപകരും തേനേ
അളിയാര്ന്നവര് ഉളളിലെ ആനന്ദക്കനിയേ
അമ്പലം ആട്ടക്കളരിയാക്കി
വെളിയായ് നിന്നു കൂത്തുകയ്പ്പോനേ നിന്നെ
തൊണ്ടന് ഞാന് വിളമ്പുമാറു വിളങ്ങു നീയേ 1

ഉലപ്പില്ലാ = അയവില്ലാത്ത; അളിയാര്ന്നവര് = സ്നേഹമാര്ന്നവര്; വെളിയായ് = പ്രകാശമായ്; കൂത്തുകയ്പ്പോന് = ന്യത്തമാടുവോന് (ന്യത്തം നടത്തുവോന്);വിളമ്പുമാറു = ചൊല്ലി സ്തുതിക്കുമാറു

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
01. කෝවිල -- ආලෝකය විහිදුවන පහන


කදම්බාලෝකය පතුරවන ප්‍රදීපය! අසමසම
සිතට හසු නොවන ප්‍රඥාවෙන් දතයුතු සත්‍යවූ
දීප්තිය පිරි පළිඟුව පරයන මැණික් ගිර
දැමුණු සිතට මී වදයකි ඔබ
දනට නැඹුරු බැතිමත් සිත්හි මියුරු ඵලයකි
නිලඹර ඔබ රඟන වේදිකාවයි
දේව නර්තනයට කැමැති ඔබ ගැන
මා පසසා කැඳවන අයුරු පැවසිය යුතුමය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
नौवां तिरुमुरै
कवि - तिरुमाळिकै तेवर - “कोविल” [मंदिर] कविता - 1; ताल - पंजमं

ज्योतिर्मयी दीप, अनुपम एक,
अनुभूतियों को पार किये अनुभूति,
परिशुद्ध स्फ्तिकों से भरा मणि पहाड,
बुद्धि के अन्दरवाली मीठी मधु,
मन में आनंद भरनेवाला फल,
स्वर्ण मंच को नाट्यशाला करके
बाहर आपके दैविक नाच को
सेवार्थी मैं प्रशंस करने की कृपा करें - 1.1

हिन्दी अनुवाद: ओरु अरिसोनन [देव महादेवन] 2017
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কৱি – তিৰুমাল্লিকৈ তেৱৰ – ‘কোৱিল’
কৱিতা – ১ – তাল – পঞ্জমং
জ্যোতিৰ্ময়ী দীপ, এক অনুপম
অনুভূতিক পাৰ কৰে অনুভূতি,
সফিতকেৰে ভৰা মণি পাহাৰ,
বুদ্ধিৰ ভিতৰৰ মিঠা মৌ সদৃশ,
মনত আনন্দ প্ৰদান কৰা ফল
সোণৰ মঞ্চক নাট্যশালা কৰি
বাহিৰৰ আপোনাৰ দৈৱিক নাচক
সেৱাৰ্থীসকলৰ মাজত প্ৰশংসা কৰাৰ কৃপা কৰা। ১.১

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
O! Lamp of accrescent light! Fadeless nonpareil Ens!
Feel of gnosis beyond the being`s know-how!
Heap of a Hill of pure crystal growth!
Honey welling within heart!
Fruit of Bliss in gifted hearts!
Upon Auric-spatium-dais, willing Dancer divine
Discernible to servitor`s eye. May you will so
I, your servient one may praise your will ever
Translation: S. A. Sankaranarayanan (2007)


“O’ Lord, you are the lamp that continuously
shines on and on! You are the eternal and
peerless ONE AND ONLY God! You are the
supreme knowledge, which transcends every
other boundary of knowledge, and you are
known by the supreme Auspicious Wisdom
[Shiva-jňānam]! You are the crystal-like-
mountain-of-ruby sparkling continuously!
You are the honey that tastes so sweet
in thought! You are the fruit that gives rise
to supreme bliss in mind! Please grant me
grace so that I as your slave may describe
and praise you as the ONE, who executes
the cosmic dance without beginning or end
in the tiny innermost chamber of everyone’s
heart as the stage of your cosmic dance!”

Translation: Singaravelu Sachithanantham (2010)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀴𑀺𑀯𑀴𑀭𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑁂 𑀉𑀮𑀧𑁆𑀧𑀺𑀮𑀸 𑀑𑁆𑀷𑁆𑀶𑁂
𑀉𑀡𑀭𑁆𑀯𑀼𑀘𑀽𑀵𑁆 𑀓𑀝𑀦𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀉𑀡𑀭𑁆𑀯𑁂
𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑀴𑀭𑁆 𑀧𑀴𑀺𑀗𑁆𑀓𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀴𑁆𑀫𑀡𑀺𑀓𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑁂
𑀘𑀺𑀢𑁆𑀢𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀢𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑁂𑀷𑁂
𑀅𑀴𑀺𑀯𑀴𑀭𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀸𑀷𑀦𑁆𑀢𑀓𑁆 𑀓𑀷𑀺𑀬𑁂
𑀅𑀫𑁆𑀧𑀮𑀫𑁆 𑀆𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀓
𑀯𑁂𑁆𑀴𑀺𑀯𑀴𑀭𑁆 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀬𑁃𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁂𑀷𑁆 𑀯𑀺𑀴𑀫𑁆𑀧𑀼𑀫𑀸 𑀯𑀺𑀴𑀫𑁆𑀧𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওৰিৱৰর্ ৱিৰক্কে উলপ্পিলা ওণ্ড্রে
উণর্ৱুসূৰ়্‌ কডন্দদোর্ উণর্ৱে
তেৰিৱৰর্ পৰিঙ্গিন়্‌ তিরৰ‍্মণিক্ কুণ্ড্রে
সিত্তত্তুৰ‍্ তিত্তিক্কুন্ দেন়ে
অৰিৱৰর্ উৰ‍্ৰত্ তান়ন্দক্ কন়িযে
অম্বলম্ আডরঙ্ কাহ
ৱেৰিৱৰর্ তেয্ৱক্ কূত্তুহন্ দাযৈত্
তোণ্ডন়েন়্‌ ৱিৰম্বুমা ৱিৰম্বে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே


Open the Thamizhi Section in a New Tab
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே

Open the Reformed Script Section in a New Tab
ऒळिवळर् विळक्के उलप्पिला ऒण्ड्रे
उणर्वुसूऴ् कडन्ददोर् उणर्वे
तॆळिवळर् पळिङ्गिऩ् तिरळ्मणिक् कुण्ड्रे
सित्तत्तुळ् तित्तिक्कुन् देऩे
अळिवळर् उळ्ळत् ताऩन्दक् कऩिये
अम्बलम् आडरङ् काह
वॆळिवळर् तॆय्वक् कूत्तुहन् दायैत्
तॊण्डऩेऩ् विळम्बुमा विळम्बे

Open the Devanagari Section in a New Tab
ಒಳಿವಳರ್ ವಿಳಕ್ಕೇ ಉಲಪ್ಪಿಲಾ ಒಂಡ್ರೇ
ಉಣರ್ವುಸೂೞ್ ಕಡಂದದೋರ್ ಉಣರ್ವೇ
ತೆಳಿವಳರ್ ಪಳಿಂಗಿನ್ ತಿರಳ್ಮಣಿಕ್ ಕುಂಡ್ರೇ
ಸಿತ್ತತ್ತುಳ್ ತಿತ್ತಿಕ್ಕುನ್ ದೇನೇ
ಅಳಿವಳರ್ ಉಳ್ಳತ್ ತಾನಂದಕ್ ಕನಿಯೇ
ಅಂಬಲಂ ಆಡರಙ್ ಕಾಹ
ವೆಳಿವಳರ್ ತೆಯ್ವಕ್ ಕೂತ್ತುಹನ್ ದಾಯೈತ್
ತೊಂಡನೇನ್ ವಿಳಂಬುಮಾ ವಿಳಂಬೇ

Open the Kannada Section in a New Tab
ఒళివళర్ విళక్కే ఉలప్పిలా ఒండ్రే
ఉణర్వుసూళ్ కడందదోర్ ఉణర్వే
తెళివళర్ పళింగిన్ తిరళ్మణిక్ కుండ్రే
సిత్తత్తుళ్ తిత్తిక్కున్ దేనే
అళివళర్ ఉళ్ళత్ తానందక్ కనియే
అంబలం ఆడరఙ్ కాహ
వెళివళర్ తెయ్వక్ కూత్తుహన్ దాయైత్
తొండనేన్ విళంబుమా విళంబే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔළිවළර් විළක්කේ උලප්පිලා ඔන්‍රේ
උණර්වුසූළ් කඩන්දදෝර් උණර්වේ
තෙළිවළර් පළිංගින් තිරළ්මණික් කුන්‍රේ
සිත්තත්තුළ් තිත්තික්කුන් දේනේ
අළිවළර් උළ්ළත් තානන්දක් කනියේ
අම්බලම් ආඩරඞ් කාහ
වෙළිවළර් තෙය්වක් කූත්තුහන් දායෛත්
තොණ්ඩනේන් විළම්බුමා විළම්බේ


Open the Sinhala Section in a New Tab
ഒളിവളര്‍ വിളക്കേ ഉലപ്പിലാ ഒന്‍റേ
ഉണര്‍വുചൂഴ് കടന്തതോര്‍ ഉണര്‍വേ
തെളിവളര്‍ പളിങ്കിന്‍ തിരള്‍മണിക് കുന്‍റേ
ചിത്തത്തുള്‍ തിത്തിക്കുന്‍ തേനേ
അളിവളര്‍ ഉള്ളത് താനന്തക് കനിയേ
അംപലം ആടരങ് കാക
വെളിവളര്‍ തെയ്വക് കൂത്തുകന്‍ തായൈത്
തൊണ്ടനേന്‍ വിളംപുമാ വിളംപേ

Open the Malayalam Section in a New Tab
โอะลิวะละร วิละกเก อุละปปิลา โอะณเร
อุณะรวุจูฬ กะดะนถะโถร อุณะรเว
เถะลิวะละร ปะลิงกิณ ถิระลมะณิก กุณเร
จิถถะถถุล ถิถถิกกุน เถเณ
อลิวะละร อุลละถ ถาณะนถะก กะณิเย
อมปะละม อาดะระง กากะ
เวะลิวะละร เถะยวะก กูถถุกะน ถายายถ
โถะณดะเณณ วิละมปุมา วิละมเป

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့လိဝလရ္ ဝိလက္ေက အုလပ္ပိလာ ေအာ့န္ေရ
အုနရ္ဝုစူလ္ ကတန္ထေထာရ္ အုနရ္ေဝ
ေထ့လိဝလရ္ ပလိင္ကိန္ ထိရလ္မနိက္ ကုန္ေရ
စိထ္ထထ္ထုလ္ ထိထ္ထိက္ကုန္ ေထေန
အလိဝလရ္ အုလ္လထ္ ထာနန္ထက္ ကနိေယ
အမ္ပလမ္ အာတရင္ ကာက
ေဝ့လိဝလရ္ ေထ့ယ္ဝက္ ကူထ္ထုကန္ ထာယဲထ္
ေထာ့န္တေနန္ ဝိလမ္ပုမာ ဝိလမ္ေပ


Open the Burmese Section in a New Tab
オリヴァラリ・ ヴィラク・ケー ウラピ・ピラー オニ・レー
ウナリ・ヴチューリ・ カタニ・タトーリ・ ウナリ・ヴェー
テリヴァラリ・ パリニ・キニ・ ティラリ・マニク・ クニ・レー
チタ・タタ・トゥリ・ ティタ・ティク・クニ・ テーネー
アリヴァラリ・ ウリ・ラタ・ ターナニ・タク・ カニヤエ
アミ・パラミ・ アータラニ・ カーカ
ヴェリヴァラリ・ テヤ・ヴァク・ クータ・トゥカニ・ ターヤイタ・
トニ・タネーニ・ ヴィラミ・プマー ヴィラミ・ペー

Open the Japanese Section in a New Tab
olifalar filagge ulabbila ondre
unarfusul gadandador unarfe
delifalar balinggin diralmanig gundre
siddaddul diddiggun dene
alifalar ullad danandag ganiye
aMbalaM adarang gaha
felifalar deyfag gudduhan dayaid
dondanen filaMbuma filaMbe

Open the Pinyin Section in a New Tab
اُوضِوَضَرْ وِضَكّيَۤ اُلَبِّلا اُونْدْريَۤ
اُنَرْوُسُوظْ كَدَنْدَدُوۤرْ اُنَرْوٕۤ
تيَضِوَضَرْ بَضِنغْغِنْ تِرَضْمَنِكْ كُنْدْريَۤ
سِتَّتُّضْ تِتِّكُّنْ ديَۤنيَۤ
اَضِوَضَرْ اُضَّتْ تانَنْدَكْ كَنِیيَۤ
اَنبَلَن آدَرَنغْ كاحَ
وٕضِوَضَرْ تيَیْوَكْ كُوتُّحَنْ دایَيْتْ
تُونْدَنيَۤنْ وِضَنبُما وِضَنبيَۤ



Open the Arabic Section in a New Tab
ʷo̞˞ɭʼɪʋʌ˞ɭʼʌr ʋɪ˞ɭʼʌkke· ʷʊlʌppɪlɑ: ʷo̞n̺d̺ʳe:
ʷʊ˞ɳʼʌrʋʉ̩su˞:ɻ kʌ˞ɽʌn̪d̪ʌðo:r ʷʊ˞ɳʼʌrʋe:
t̪ɛ̝˞ɭʼɪʋʌ˞ɭʼʌr pʌ˞ɭʼɪŋʲgʲɪn̺ t̪ɪɾʌ˞ɭmʌ˞ɳʼɪk kʊn̺d̺ʳe:
sɪt̪t̪ʌt̪t̪ɨ˞ɭ t̪ɪt̪t̪ɪkkɨn̺ t̪e:n̺e:
ˀʌ˞ɭʼɪʋʌ˞ɭʼʌr ʷʊ˞ɭɭʌt̪ t̪ɑ:n̺ʌn̪d̪ʌk kʌn̺ɪɪ̯e:
ˀʌmbʌlʌm ˀɑ˞:ɽʌɾʌŋ kɑ:xʌ
ʋɛ̝˞ɭʼɪʋʌ˞ɭʼʌr t̪ɛ̝ɪ̯ʋʌk ku:t̪t̪ɨxʌn̺ t̪ɑ:ɪ̯ʌɪ̯t̪
t̪o̞˞ɳɖʌn̺e:n̺ ʋɪ˞ɭʼʌmbʉ̩mɑ: ʋɪ˞ɭʼʌmbe:

Open the IPA Section in a New Tab
oḷivaḷar viḷakkē ulappilā oṉṟē
uṇarvucūḻ kaṭantatōr uṇarvē
teḷivaḷar paḷiṅkiṉ tiraḷmaṇik kuṉṟē
cittattuḷ tittikkun tēṉē
aḷivaḷar uḷḷat tāṉantak kaṉiyē
ampalam āṭaraṅ kāka
veḷivaḷar teyvak kūttukan tāyait
toṇṭaṉēṉ viḷampumā viḷampē

Open the Diacritic Section in a New Tab
олывaлaр вылaккэa юлaппылаа онрэa
юнaрвюсулз катaнтaтоор юнaрвэa
тэлывaлaр пaлынгкын тырaлмaнык кюнрэa
сыттaттюл тыттыккюн тэaнэa
алывaлaр юллaт таанaнтaк каныеa
ампaлaм аатaрaнг кaка
вэлывaлaр тэйвaк куттюкан таайaыт
тонтaнэaн вылaмпюмаа вылaмпэa

Open the Russian Section in a New Tab
o'liwa'la'r wi'lakkeh ulappilah onreh
u'na'rwuzuhsh kada:nthathoh'r u'na'rweh
the'liwa'la'r pa'lingkin thi'ra'lma'nik kunreh
ziththaththu'l thiththikku:n thehneh
a'liwa'la'r u'l'lath thahna:nthak kanijeh
ampalam ahda'rang kahka
we'liwa'la'r thejwak kuhththuka:n thahjäth
tho'ndanehn wi'lampumah wi'lampeh

Open the German Section in a New Tab
olhivalhar vilhakkèè òlappilaa onrhèè
ònharvòçölz kadanthathoor ònharvèè
thèlhivalhar palhingkin thiralhmanhik kònrhèè
çiththaththòlh thiththikkòn thèènèè
alhivalhar òlhlhath thaananthak kaniyèè
ampalam aadarang kaaka
vèlhivalhar thèiyvak köththòkan thaayâith
thonhdanèèn vilhampòmaa vilhampèè
olhivalhar vilhaickee ulappilaa onrhee
unharvuchuolz catainthathoor unharvee
thelhivalhar palhingcin thiralhmanhiic cunrhee
ceiiththaiththulh thiiththiiccuin theenee
alhivalhar ulhlhaith thaanainthaic caniyiee
ampalam aatarang caaca
velhivalhar theyivaic cuuiththucain thaayiaiith
thoinhtaneen vilhampumaa vilhampee
o'liva'lar vi'lakkae ulappilaa on'rae
u'narvusoozh kada:nthathoar u'narvae
the'liva'lar pa'lingkin thira'lma'nik kun'rae
siththaththu'l thiththikku:n thaenae
a'liva'lar u'l'lath thaana:nthak kaniyae
ampalam aadarang kaaka
ve'liva'lar theyvak kooththuka:n thaayaith
tho'ndanaen vi'lampumaa vi'lampae

Open the English Section in a New Tab
ওলিৱলৰ্ ৱিলক্কে উলপ্পিলা ওন্ৰে
উণৰ্ৱুচূইল কতণ্ততোৰ্ উণৰ্ৱে
তেলিৱলৰ্ পলিঙকিন্ তিৰল্মণাক্ কুন্ৰে
চিত্তত্তুল্ তিত্তিক্কুণ্ তেনে
অলিৱলৰ্ উল্লত্ তানণ্তক্ কনিয়ে
অম্পলম্ আতৰঙ কাক
ৱেলিৱলৰ্ তেয়্ৱক্ কূত্তুকণ্ তায়ৈত্
তোণ্তনেন্ ৱিলম্পুমা ৱিলম্পে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.