சேந்தனார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
`பல்லாண்டு வாழ்க` என வாழ்த்தும் வாழ்த்தினைப் `பல்லாண்டு` என முதற்குறிப்புப் பெயராக வழங்குவர். அஃது இங்குக் காரியவாகுபெயராய் அவ்வாழ்த்தினைக் கூறுவதாய பதிகத்தைக் குறித்துநின்றது. எனவே இறைவனை `பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவது இத் திருப்பதிகம்` என்பது பெறப்பட்டது.
இறைவன் என்றும் உள்ளவனாதலின் வாழ்த்துவார் வாழ்த்தும் வாழ்த்தினானாதல் வைவார் வையும் வைவினானாதல் அவனுக்கு வருவதொன்றில்லையாயினும் வெகுளியுற்றார்க்கு அவ் வெகுளி காரணமாக அவனை வைதல் இயல்பாதல்போல அன்புற் றார்க்கும் அவ்வன்பு காரணமாக அவனை வாழ்த்தலும் இயல் பாதலின் அடைக்கும் தாழ் இல்லாத அவ்வன்பின் செயல் அவர் மாட்டு இயல்பானே வெளிப்படுவதாம். இதனை இதன் நான்காந் திருப்பாட்டிற் கூறுமாற்றானும் உணர்க. அது நிற்க கதிரவன் முன்னர்த் தாமரை மலர்தலும் ஆம்பல் குவிதலும் அதனதன் இயல்பானே ஆய வாறுபோல வாழ்த்தலும் வைதலும் செய்வார் அதுவதற்கேற்ற பயனைத் தம்மியல்பால் தாம் பெறுவார் என அறிக.
இத்திருப்பதிகம் அறுசீரடிகளாலாய பாட்டுக்களால் இயன்றது எனினும் சீர்நிலைமை வரையறையின்றியும் சில அடி சீர்மிக்கும் குறைந்தும் வரப்பெற்றுள்ளது. இது பதின்மூன்று திருப் பாட்டுக்களை உடையதாய் இருத்தல் குறிப்பிடத்தக்கது.
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
தில்லைத்திருநகரம் என்றும் நிலைபெறுக; நம் அடியார்கள் பல்லாண்டு வாழ்க; அடிமை செய்ய ஒருப்படாதவர்கள் இல்லாதொழிய, பொன்மயமான மண்டபத்திலே நுழைந்து உலக மெல்லாம் நிலைபெறுமாறு நின்று, அன்னம் போன்ற நடையினை உடைய இளையள் ஆகிய உமாதேவியின் தலைவன், அடியவர் களாகிய நமக்கு அருள் பாலித்து மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும்படி அடியேமுக்குத் தன் திருக்கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப்பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
குறிப்புரை:
இத் திருப்பாட்டின் முதல் அடியின் இருதொடர்கள் எடுத்துக்கொண்ட பொருட்கு மங்கல வாழ்த்தாய் நின்றன. மன்னுக - என்றும் நின்றுநிலவுக. ``நம் பத்தர்கள்`` என்றது, `நமக்கு உறவாய பத்தர்கள்` என உயர்திணை முறைக்கிழமைப்பொருட்டு. பத்தர்கள் - அடியார்கள். வஞ்சகர் - அடிமை செய்ய ஒருப்படாதவர்கள். ``போய் அகல`` என்றது ஒருபொருட் பன்மொழியாய், `இல்லாதொழிய` எனப் பொருள்தந்தது. `அகலப் புகுந்து` என இயையும். எனவே, வஞ்சகர்க்குத் திருமன்றத்தைச் சேர்தல் வாயாமை பெறப்பட்டது. `பொன்னின் மண்டபம், செய்மண்டபம்` எனத் தனித் தனி இயைக்க. பொன்னின் மண்டபம் - பொன்னால் இயன்ற மண்டபம்; என்றது கூத்தப் பெருமானது திருச்சபையை. இன், சாரியை. செய் மண்டபம் - சிறப்பாகச் செய்யப்பட்ட மண்டபம். புவனி - புவனம்; உலகம். விளங்க - நிலைபெறுமாறு. `விளங்க நின்று` என ஒருசொல் வருவிக்க. அடியோமுக்கு - அடியேங்கட்கு; என்றது, அடியவர் அனைவரையும் உளப்படுத்து. `அடியோமுக்கு அருள்புரிந்து` என்றது, `திருக்கூத்தி யற்றி` என்றவாறு. பின்னைப் பிறவி - மேல்வரும் பிறவி. அறுக்க - நாங்கள் அறுத்துக் கொள்ளும்படி. நெறி - அதற்குரிய வழி; என்றது. திருவடி ஞானத்தை, ``தந்த பித்தற்கு`` எனச் சுருங்க ஓதினாராயினும், தந்தான்; அப்பித்தற்கு` என இருதொடராக உரைத்தல் கருத்தென்க. பல்லாண்டு - பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் வாழ்த்தினை. `உமைகோன், மண்டபத்துள்ளே புகுந்து விளங்க நின்று அருள்புரிந்து நெறிதந்தான்; அவனைப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோமாக` என்பது இதன் திரண்ட பொருள். இதன் ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்தது.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
తిల్లై నగరిలో ఎన్నటికీ నిలిచి ఉండు; మన దాసులు పలుకాలాలు మనాలి; దాసోహమనని వారెవ్వరూ లేక పోవటం; బంగారు కోవెలలో వెలసి లోకమంతా నిలువు; హంసవంటి నడక గల చిన్నారి ఉమాదేవి నాయకుడు; మనలాటి దాసులకు మంచివాడై మరుజన్మ లేకుండేలా దాసులను తన తిరునటనమనే కరుణతో కాచి పాలించి, తిరుపాద జ్ఞానాన్ని ప్రశాదించేవాడు; ఆ పిచ్చివాడిని పలు ఏళ్ళు మను మని దీవించుదాం.
[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
×
ಕನ್ನಡ / கன்னடம்
ಸೇಂದನಾರ್
ಕರುಣಿಸಿದ
ತಿರುಪ್ಪಲ್ಲಾಂಡು
29. ಕೋಯಿಲ್
ಸ್ತುತಿ ಚರಿತ್ರೆ : ‘ಪಲ್ಲಾಂಡು ವಾಳ್ಗೈ’ (ಹಲವುಕಾಲ ಬಾಳ್ಗೆ) ಎಂದು ಹರಸುವ ಹಾರೈಕೆ
‘ಪಲ್ಲಾಂಡು’ (ಹಲವುಕಾಲ) ಎಂಬ ಶೀರ್ಷಿಕೆಯಡಿ ಹೇಳುವರು. ಈ (ದಶಸ್ತುತಿ) ವಿಭಾಗದಲ್ಲಿ
ಸುಮಾರು 13 ಹಾಡುಗಳಿರುವುದು ಗಮನಿಸತಕ್ಕ ಅಂಶವಾಗಿದೆ.
ತಿಲ್ಲೈ ಪವಿತ್ರನಗರ ಸದಾ ಶಾಶ್ವತವಾಗಿರಲಿ, ನಮ್ಮ ಭಕ್ತರು ದೀರ್ಘಾಯುಗಳಾಗಿ ಬಾಳಲಿ ತೊಳ್ತು ಮಾಡಲು ಇಚ್ಛಿಸದ ವಂಚಕರು ಇಲ್ಲದಿರಲು, ಹೊಂಬಣ್ಣದ ಮಂಟಪದಲ್ಲಿ ಪ್ರವೇಶಿಸಿ ಲೋಕದ ಒಳಿತಿಗಾಗಿ ನಿಂತು, ಹಂಸದಂತೆ ನಡಿಗೆಯನ್ನುಳ್ಳ ಎಳೆಯವಳಾದ ಉಮಾದೇವಿಯ ನಾಯಕನು, ಭಕ್ತರಾದ ನಮಗೆ ಕೃಪೆ ಪಾಲಿಸಿ ಮುಂದಿನ ಜನ್ಮವನ್ನು ನಾವು ತ್ಯಜಿಸುವಂತೆ, ನನಗೆ ತನ್ನ ನಾಟ್ಯ ಕೃಪೆಯ ವರ್ಷಗರೆದು ನರ್ತಿಸಿದ ಪವಿತ್ರ ಪಾದಗಳಿಗೆ ಜ್ಞಾನವನ್ನು ಕೃಪಾಕರಿಸುವನು. ಆ ಮರುಳನನ್ನು, ನಾವು ಹಲವುಕಾಲ ಬಾಳಲಿ ಎಂದು ಹಾರೈಸೋಣ.
ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010
×
മലയാളം / மலையாளம்
29. ചേന്തനാര് അരുളിയ തിരുപ്പല്ലാണ്ട് ഗീതങ്ങള് അമ്പലം
ആറു ചീരടിയില് രചിച്ച ഭഗവാന്റെ സ്തുതി ഗീതങ്ങളാണ് ഈ അദ്ധ്യായത്തില് അടങ്ങിയിട്ടുളളത്
മിന്നട്ടെ തില്ല! ഉയരട്ടെ നം ഭക്തരെല്ലാം
വഞ്ചകരെല്ലാം പോയൊഴിയട്ടെ
പൊന്നിന്മണി മണ്ഡപമുളളില്ക്കടന്നു
ഭുവനമെല്ലാം വിളങ്ങിട നില്ക്കും
അന്ന നട മടവ ഉമയവള്കോന് അടി
വണങ്ങി അരുളാര്ന്ന അടിയങ്ങളെ
പിന്നെയൊരു പിറവിയുമില്ലാ നെറിയിങ്കലാക്കും ചിത്തനേ
എന്നങ്ങു പല്ലാണ്ടു പല്ലാണ്ടവനയേ പുകഴ്ത്തുവോം 289
May our Tillai ever be. May servitor`s tribe increase,
Dismissing treasonous dissenters.
Entering the well-wrought Auric Hall,
For worlds to flourish, He, the spouse
Of young Uma of swan-gait, conferring on
Us the seekers of His feet, gnosis great
To snap the onward birth-chain. Blest we hail
That zealot to abide for Eternal Eons
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
maṉṉuka tillai vaḷarkanam pattarkaḷ
vañcakar pōyakalap
poṉṉiṉcey maṇṭapat tuḷḷē pukuntu
puvaṉiyel lāmviḷaṅka
aṉṉa naṭaimaṭa vāḷumai kōṉaṭi
yōmuk karuḷpurintu
piṉṉaip piṟavi yaṟukka neṟitanta pittaṟkup
pallāṇṭu kūṟutumē
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
мaннюка тыллaы вaлaрканaм пaттaркал
вaгнсaкар пооякалaп
поннынсэй мaнтaпaт тюллэa пюкюнтю
пювaныел лаамвылaнгка
аннa нaтaымaтa ваалюмaы коонаты
йоомюк карюлпюрынтю
пыннaып пырaвы ярюкка нэрытaнтa пыттaткюп
пaллаантю курютюмэa
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
mannuka thillä wa'la'rka:nam paththa'rka'l
wangzaka'r pohjakalap
ponninzej ma'ndapath thu'l'leh puku:nthu
puwanijel lahmwi'langka
anna :nadämada wah'lumä kohnadi
johmuk ka'ru'lpu'ri:nthu
pinnäp pirawi jarukka :neritha:ntha piththarkup
pallah'ndu kuhruthumeh
Open the German Section in a New Tab
mannuka thillai va'larka:nam paththarka'l
vanjsakar poayakalap
ponninsey ma'ndapath thu'l'lae puku:nthu
puvaniyel laamvi'langka
anna :nadaimada vaa'lumai koanadi
yoamuk karu'lpuri:nthu
pinnaip pi'ravi ya'rukka :ne'ritha:ntha piththa'rkup
pallaa'ndu koo'ruthumae
Open the English Section in a New Tab