காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)(மேலை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வார்கொண்டவனமுலையாள் உடனுறை தீயாடியப்பர்


மரம்: வன்னி
குளம்: காவிரி, குடமுருட்டி, சூரிய தீர்த்தம்

பதிகம்: வாருமன்னும் -3 -29 திருஞானசம்பந்தர்
மாட்டுப்பள்ளி -5 -84 திருநாவுக்கரசர்

முகவரி: திருக்காட்டுப்பள்ளி அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 613104
தொபே. 9442347433

காட்டுப்பள்ளி என்னும் பெயர்களுள்ள பாடல்பெற்ற தலங்கள் இரண்டு இருக்கின்றன. அவற்றுள் ஒன்று காவிரியின் வடகரையில் திருவெண்காட்டிற்கு அருகில் இருப்பது அது கீழைத் திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயர் பெற்றுள்ளது. ஆதலின் அதற்கு மேற்கே பல கி.மீ. தூரத்தில் காவிரியின் தென்கரையில் இருக்கும் இது மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயர் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் - திருச்சி இருப்புப் பாதையில் பூதலூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 8. கி.மீ. தூரத்திலிலுள்ளது. திருக்கண்டியூரிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் இப்பதியை அடையலாம். இறைவரின் திருப்பெயர் - தீயாடியப்பர். இறைவியின் திருப்பெயர் - வார்கொண்டவனமுலையாள். இத்தலத்திற்கு ஞான சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் ஒன்றும், ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி