மங்கையர்க்கரசி அம்மையார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.

பொழிப்புரை :

மங்கையர்க்கு எல்லாம் ஒப்பில்லாத பேரரசியும், எம் தெய்வமும், சோழரின் குலக்கொழுந்தாக விளங்குபவரும், வளை யலை அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய பாவை போல்பவரும், எங்களுடைய பெருமானா ரான சீகாழித் தலைவரின் அருளால் பெரிய தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி, மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத்தகுவதாகும்.

குறிப்புரை :

வளவர் - சோழர்; மங்கையர்க்கரசியாரின் தந்தை. இவர் பெயர் மணிமுடிச்சோழன் எனத் திருஞானசம்பந்தர் திருவாக் கால் தெரியவருகிறது. உறையூரில் இருந்து அரசாண்ட இவரை, நின்றசீர்நெடுமாறன் ஆய மாறவர்மன் அரிகேசரி ஒரு போரில் வென்று, உறையூரைக் கைப்பற்றினார் என வேள்விக்குடிச் செப்பேடு கள் கூறுகின்றன. எனவே மாறவர்மனார் முதலில் இச் சோழமன் னனை வென்று, பின் அவ்வளவன் வேண்ட, அவர் மகள் மங்கை யர்க்கரசியாரை மணந்து உறவு கொண்டனர் என உய்த்துணரலாம் என்பர் பண்டாரத்தார். (பாண்டியர் வரலாறு : பக்கம் - 40) மானம் - பெருமை; அதனை உடையவர் மானி. இப்பெரு மாட்டியார் திரு ஞானசம்பந்தர் அருளிய `மங்கையர்க்கரசி\\\' (தி.3 ப.120) எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் 1, 3, 5, 7, 9 ஆகிய பாடல்களில் தனித்தும் பதினொராவது பாடலில் குலச்சிறையாரோடு சேர்த்தும் புகழப் பெற்றவர். இவ்வரிய பதிகத்தை உளங்கொண்டே சேக்கிழார் பெருமான் மங்கையர்க்கரசியார் வரலாற்றை இருபாடல்களில் கூறியருள்கின்றார். அவ்வருமை ஒப்பிட்டு மகிழத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 2

பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல்பெறும் தவத்தி னாரைச்
செப்புவதியாம் என்னறிந்து தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப் பின்னை
ஆசில்நெறி யவரோடுங் கூட ஈசர்
அடிநிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்.

பொழிப்புரை :

அந்தணர் தலைவரான சீகாழி வேந்தர் சிவஞான முண்டு அருளிய தூய திருவாக்கினால் ஞான ஒளியுடைய பாடலால் பாராட்டப் பெறுவதற்கு உரிய பெரிய முன்னைத் தவமுடைய அம்மையாரின் பெருமையை நாம் என்னவென்று அறிந்து போற்ற வல்லோம்? பாண்டி மன்னராகவும் குற்றம் நீங்கிய புகழையுடைய வருமான நின்றசீர் நெடுமாறனாருக்குச் சைவத்திறத்தின் வழித் துணையாகி நீண்ட காலம் நிலை பெற்றிருந்து, பின்னர்க் குற்றமற்ற சிவபுண்ணியப் பயனால் அவரொடும் கூட இறைவரின் திருவடியின் கீழே நிலைபெற்றிருக்கும் திருவருளையும் பெற்றார்.

குறிப்புரை :

பூசுரர் - மறையவர். சூளாமணி - முடிமணி.

பண் :

பாடல் எண் : 3

வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளுங்கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்.

பொழிப்புரை :

பூசுரர் - மறையவர். சூளாமணி - முடிமணி.

குறிப்புரை :

***********
சிற்பி