சேரமான்பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானஉலா

பண் :

பாடல் எண் : 1

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரு மால் - போக்குதற்கு அரிய மயக்கம்.
அழலாய் - அக்கினிப் பிழம்பாய்.
மாலும், அயனும் அடிமுடி தேடிய சிவபுராண வரலாறு பலவிடத்தும் பரவலாக வழங்கும்.

பண் :

பாடல் எண் : 2

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பகுதியில் சிவபெருமானது பெருமைகள் விரித்துரைக்கப்படுகின்றன.
`பிறர் செயற்கையால் அடையும் பெருமைகளைச் சிவபெருமான் இயற்கையாகப் பெற்றுள்ளான்` என்பது பலவகையில் கூறப்படுகின்றது.
தோன்றுதல் - உளன் ஆதல், பிறர் எல்லாம் கால வயப்பட்டு ஒரு காலத்தில் பிறத்தலால் உளர் ஆகின்றனர்; சிவபெருமான் அவ்வாறின்றி, என்றுமே உளனாய் இருக்கின்றான்.
எனவே, காலம் அவனுக்கு உட்படுகின்றதேயன்றி அவன் காலத்திற்கு உட்படுகின்றானில்லை.
பிறர் எல்லாம் கண்ணைக் கருவியாகக் கொண்டு அது வழி யாகவே பொருள்களைக் காண்கின்றனர்; சிவபெருமான் அவ் வாறின்றிப் பொருள்களை நேரே காண்கின்றான்.
`பிறர் எல்லாம் பொருள்களைக் கண் காட்டும் அளவில், அது காட்டியவாறு காண்பர்` என்பதும், `சிவபெருமான் அவ்வாறின்றி, எல்லாவற்றையும் உள்ள படி காண்பான்` என்பதும் விளங்கும்.
கட்புலத்திற்குச் சொல்லியது ஏனைச் செவிப்புலம் முதலிய வற்றிற்கும் ஒப்பதே.
பிறர்க்கெல்லாம் உடம்பு அறிவு இச்சை செயல்கட்கு இன்றி யமையாதது ஆதலின் வேண்டப்படுவதாயினும் அதனால் நிகழும் அறிவு முதலியன பிறவிக்குக் காரணமாதலின் பந்தமாய், அவரால் முயன்று துறக்கப்படுவதாக, சிவனது அறிவு இச்சை செயல்கட்கு உடம்பு வேண்டாமையின் அவன் உடம்போடு கூடிநின்றே அதனாற் பந்தம் உறாது இருக்கின்றான்.

பண் :

பாடல் எண் : 3

ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் எப்பக்கத்திலும் வரம்பின்றிப் பரந்துள்ளவன் ஆதலின், `ஆழம், அகலம், உயரம்` என்பவைகளில் இயல்பாகவே எந்த வகையிலும் ஓர் அளவு இல்லாதவன்.
`பிறர் எல்லாம் மேற்குறித்த அளவுகளில் சிறியராய்த் தோன்றிப் பெரியராய் வளர்வர்.
சிவபெருமான் அன்ன தன்மையில்லாதவன் என்பது, ``ஆழாது, அகலாது, ஊழால் உயராது`` என்னும் சொற்களால் குறிக்கப்பட்டது.
ஊழ் - முறைமை.
விரிந்து பரந்த அறிவைத் தரும் நூல்களை அவன் அவை தோன்றியபின் ஓதி உணராமல் என்றுமே உணர்ந்திருக்கின்றான்.
என்றது.
`அவற்றின் பொருளை அவன் தானே இயல்பாக உணர்ந் திருக்கின்றான்` என்றபடி.
எனவே, `அனைத்துப் பொருள்கட்கும் முதல் நூலைச் செய்தவன் அவனே` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 4

ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் ஆதி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் முன்பு பரியனாய் இருந்து பின்பு நுணுகி நுணுகித் தீர நுணுகுதல் இன்றி, இயல்பிலே தீர நுணுகியிருப்பவன்.
எனவே, `அவனிலும் நுணுகிய பொருள் ஒன்று இல்லை` என்ப தாயிற்று.
`அவனிலும் பரிய பொருளும் எதுவும் இல்லை` என்பது மூன்றாம் கண்ணியில் சொல்லப்பட்டது.
எந்தப் பொருளையும் புதிதாக ஒருகாலத்தில் அணுகாது, இயல்பாகவே எல்லாப் பொருளிலும் அது அதுவாய்க் கலந்து நிற்கின்றான்.

பண் :

பாடல் எண் : 5

அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் சுத்த மாயையில், தானே, `அயன், அரி, அரன்` - என்னும் மும்மூர்த்திகளாய் நின்று, படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்வான்.
எனவே, `அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் தன் அருள்பெற்றவரை அயன்முதலிய பதவியினராகச் செய்து, அவர்கள் வழியாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்விப்பன்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 6

தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் தானே கொள்ளும் வடிவங்கள் `சம்பு பக்கத்தின` என்றும், பிறருக்கு அவனால் தரப்படும் அவ்வடிவங்கள் `அணு பக்கத்தின` என்றும், சொல்லப்படும்.

பண் :

பாடல் எண் : 7

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் எல்லாரினும் மேலாய்த் தேவர்களாலும் அறியப்படாத காட்சியை உடையவன்.
தேவரையெல்லாம் தான் விரும்பிய வண்ணம் படைத்து அவ்வத்தொழிலில் நிறுத்தினான்.

பண் :

பாடல் எண் : 8

தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை யறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.
இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர் தனது உருவமாய் நின்றாராக எவரும் கண்டிலாத, காண வாராத நிலையை உடையவன்.
அத்தகைய அவனே எம் கடவுள்.
இவற்றால் எல்லாம், மூவரும், பிறரும் ஆகிய தேவர் பலரும் `பசு` எனப்படும் உயிர்வருக்கத்தினரேயாகச் சிவபெருமான் ஒருவனே அனைவர்க்கும் தலைவனாகிய பதி - என்பது பல்லாற்றானும் விளக்கப்பட்டது.
`ஏனோர்க்கும்`` என்னும் உம்மை, `சிவநெறி யாளர்க்கேயன்றிப் பிற சமயத்தார்க்கும்` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 9

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவன் என்றும் நீங்காத சிறப்பினையுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில் செந் தாமரை போலும் கண்களையுடைய தேவர்கள் செவ்வியறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, `பெருமானே, திரு வோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்` என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள்.
பொதுவாக, `ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன் றிருத்தல் விரும்பத் தக்கது` என்னும் கருத்தால் ``செங்கண்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவன் என்றும் நீங்காத சிறப்பினையுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில் செந் தாமரை போலும் கண்களையுடைய தேவர்கள் செவ்வியறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, `பெருமானே, திரு வோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்` என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள்.
பொதுவாக, `ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன் றிருத்தல் விரும்பத் தக்கது` என்னும் கருத்தால் ``செங்கண்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மங்கை - இலக்குமி.
புகழ், பெற்றியால் வரும் புகழ்.
எனவே, புகழ் மங்கை கொற்றவையாம்.
நாமங்கை - கலைமகள்.
`இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்` என்க.
ஞானக் கொழுந்து, மலைமகள், அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள்.
நகராசன் - மலையரையன்.
நகம் - மலை.
சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள்.
தேன் மொய்த்த குஞ்சி - `தேன் என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி.
நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின.
ஊனம் - குறை.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 12

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மங்கை - இலக்குமி.
புகழ், பெற்றியால் வரும் புகழ்.
எனவே, புகழ் மங்கை கொற்றவையாம்.
நாமங்கை - கலைமகள்.
`இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்` என்க.
ஞானக் கொழுந்து, மலைமகள், அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள்.
நகராசன் - மலையரையன்.
நகம் - மலை.
சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள்.
தேன் மொய்த்த குஞ்சி - `தேன் என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி.
நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின.
ஊனம் - குறை.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 13

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நந்தா - கெடாத.
வனம் - பூஞ்சோலை `அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை` - என்க மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம்.
நூறாயிரம் - இலட்சம்.
நொந்தா - கெடாத.
வயந்தன் - வசந்தன்.
இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.

பண் :

பாடல் எண் : 14

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நந்தா - கெடாத.
வனம் - பூஞ்சோலை `அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை` - என்க மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம்.
நூறாயிரம் - இலட்சம்.
நொந்தா - கெடாத.
வயந்தன் - வசந்தன்.
இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.
பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ.
பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப் பெண்டிர் உரு வாக்கிய செழுமையான சந்தனக் குழம்பால் பெருமானது மார்பிடம் முழுதும் பூசி.

பண் :

பாடல் எண் : 15

குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ.
பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப் பெண்டிர் உரு வாக்கிய செழுமையான சந்தனக் குழம்பால் பெருமானது மார்பிடம் முழுதும் பூசி.
கற்பகதருவால் தரப்பட்ட, செயற்பாடு நிறைந்த நறுமணம் கமழும் பட்டு உடையை உடுத்து, பொன்னால் ஆகிய வீரக்கழல்களைப் பாதங்களில் விளங்கக் கட்டி.
செயற்பாடு கை வன்மை ஆதலின் ``கலை`` என்றார்.
உடைகளும் மணம் ஊட்டி வைக்கப்படுதல் அறிக.

பண் :

பாடல் எண் : 16

கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கற்பகதருவால் தரப்பட்ட, செயற்பாடு நிறைந்த நறுமணம் கமழும் பட்டு உடையை உடுத்து, பொன்னால் ஆகிய வீரக்கழல்களைப் பாதங்களில் விளங்கக் கட்டி.
செயற்பாடு கை வன்மை ஆதலின் ``கலை`` என்றார்.
உடைகளும் மணம் ஊட்டி வைக்கப்படுதல் அறிக.
ஒளியை வீசுகின்ற சூளாமணி பதிக்கப்பெற்ற மணிமுடியைச் சென்னியிலே கவித்து, உச்சியினின்றும் போந்து நெற்றியில் தொங்குகின்ற சுட்டியைச் சேர்ந்த, ஒளி நிறைந்த நெற்றிப் பட்டத்தை நிலையாக அணிவித்து,

பண் :

பாடல் எண் : 17

சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளியை வீசுகின்ற சூளாமணி பதிக்கப்பெற்ற மணிமுடியைச் சென்னியிலே கவித்து, உச்சியினின்றும் போந்து நெற்றியில் தொங்குகின்ற சுட்டியைச் சேர்ந்த, ஒளி நிறைந்த நெற்றிப் பட்டத்தை நிலையாக அணிவித்து, துளையிடப்படாத மணிகள் அழுத்திய, சுறா மீன் வடிவமாகச் செய்யப்பட்ட வளையங்களைக் காதுகளில் அணிவித்து.

பண் :

பாடல் எண் : 18

மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துளையிடப்படாத மணிகள் அழுத்திய, சுறா மீன் வடிவமாகச் செய்யப்பட்ட வளையங்களைக் காதுகளில் அணிவித்து.
அப்பொழுதே, அழகு பொருந்திய வயிரத்தால் ஆகிய கண்டிகை, பொன் இழை கோத்த பெரிய முத்தாரம், இவை களுடன் அழகிய சன்னவீரம் அழகிய மார்பில் ஒளிவிட, `பூட்டி` என ஒரு சொல் வருவிக்க,

பண் :

பாடல் எண் : 19

ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அப்பொழுதே, அழகு பொருந்திய வயிரத்தால் ஆகிய கண்டிகை, பொன் இழை கோத்த பெரிய முத்தாரம், இவை களுடன் அழகிய சன்னவீரம் அழகிய மார்பில் ஒளிவிட, `பூட்டி` என ஒரு சொல் வருவிக்க, அழகுடைய எட்டுத் தோள்களிலும் தோள் வளைகளைப் பொருத்தி, (தோள்வளை - வாகு வலயம்).
பார்த்தவர் மனம் மகிழும்படி கச்சினை இறுகக்கட்டி.

பண் :

பாடல் எண் : 20

எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அழகுடைய எட்டுத் தோள்களிலும் தோள் வளைகளைப் பொருத்தி, (தோள்வளை - வாகு வலயம்).
பார்த்தவர் மனம் மகிழும்படி கச்சினை இறுகக்கட்டி.
கடி சூத்திரம் - அரை நாண்.
இஃது அழகிற்காக உடைமேல் கட்டப்படுவது.
`கடிசூத்திரம் கொண்டு புனைந்து` என மாற்றியுரைக்க.
கங்கணம் - காப்பு.
திருமேனி முழுதும் பொருந்திய புனையப்படுவன யாவற்றையும் புனைந்து.
ஆங்கு - அதன்பின், அடிநிலை - பாதுகை.
`அடிநிலைமேல் நிற்பித்து` என ஒரு சொல் வரு வித்து, அதனை, `நந்தி மாகாளர் கடைகழிந்த போழ்தத்து` என்பத னோடு முடிக்க.
மேற்கூறிய கோலங்களை எல்லாம் புனைவித்தவர் நந்தி மாகாளர் என்க.
கடை - முதல்வாயில்.
``போழ்தத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.

பண் :

பாடல் எண் : 21

கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 22

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடி சூத்திரம் - அரை நாண்.
இஃது அழகிற்காக உடைமேல் கட்டப்படுவது.
`கடிசூத்திரம் கொண்டு புனைந்து` என மாற்றியுரைக்க.
கங்கணம் - காப்பு.
திருமேனி முழுதும் பொருந்திய புனையப்படுவன யாவற்றையும் புனைந்து.
ஆங்கு - அதன்பின், அடிநிலை - பாதுகை.
`அடிநிலைமேல் நிற்பித்து` என ஒரு சொல் வரு வித்து, அதனை, `நந்தி மாகாளர் கடைகழிந்த போழ்தத்து` என்பத னோடு முடிக்க.
மேற்கூறிய கோலங்களை எல்லாம் புனைவித்தவர் நந்தி மாகாளர் என்க.
கடை - முதல்வாயில்.
``போழ்தத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.
வசுக்கள் - `முப்பத்து மூவர்` எனத் தொகை பெற்ற தேவர்களுள்.
எண்மராய ஒரு குழுவினர்.
இருக்கு - மந்திரங்கள்.
எண்ணருங் கீர்த்தி - அளவிட இயலாத புகழ், எழுவர் இருடிகள் - சத்த இருடிகள் அகத்தியர், புலத்தியர், அங்கிரா.
கௌதமர், வசிட்டர், காசிபர், மார்க்கண்டேயர்.
அண்ணல் - தலைவன்; சிவபெருமான் ஆசிகள் வாழ்த்துக்கள்.
அவை, ``நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க``! 1 என்றாற் போலக் கூறப்படுவன், `வெல்க` என்றும், `சயசய` என்றும் சொல்லப் படுவனவும் வாழ்த்துக்களே.
`இவ்வாறு இறைவனை உயிர் வருக்கத் தினர் வாழ்த்துதல் உலகம் வாழ்தற் பொருட்டு` என்பதை, வாழ்த்து வதும் வானவர்கள் தாம்வாழ்வான்`` 2 என்பதனான் அறிக.

பண் :

பாடல் எண் : 23

எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எண்ணருங் கீர்த்தி - அளவிட இயலாத புகழ், எழுவர் இருடிகள் - சத்த இருடிகள் அகத்தியர், புலத்தியர், அங்கிரா.
கௌதமர், வசிட்டர், காசிபர், மார்க்கண்டேயர்.
அண்ணல் - தலைவன்; சிவபெருமான் ஆசிகள் வாழ்த்துக்கள்.
அவை, ``நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க``! 1 என்றாற் போலக் கூறப்படுவன், `வெல்க` என்றும், `சயசய` என்றும் சொல்லப் படுவனவும் வாழ்த்துக்களே.
`இவ்வாறு இறைவனை உயிர் வருக்கத் தினர் வாழ்த்துதல் உலகம் வாழ்தற் பொருட்டு` என்பதை, வாழ்த்து வதும் வானவர்கள் தாம்வாழ்வான்`` 2 என்பதனான் அறிக.
ஒள் நிறத்த - ஒளி பொருந்திய நிறத்தையுடைய.
ஆதித்தர் - சூரியர்.
முப்பத்து மூவர் தேவரில் சூரியர் பன்னிரு வராவர்.
``பல்லாண்டு`` என்பதும் `பல் யாண்டு` எண்ணில்லாத யாண்டுகள் - வாழ்க` என்னும் குறிப்பினதேயாகும்.
மகதி - `மகதி` என்னும் யாழை ஏந்திய முனிவன்; நாரதன்.

பண் :

பாடல் எண் : 24

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒள் நிறத்த - ஒளி பொருந்திய நிறத்தையுடைய.
ஆதித்தர் - சூரியர்.
முப்பத்து மூவர் தேவரில் சூரியர் பன்னிரு வராவர்.
``பல்லாண்டு`` என்பதும் `பல் யாண்டு` எண்ணில்லாத யாண்டுகள் - வாழ்க` என்னும் குறிப்பினதேயாகும்.
மகதி - `மகதி` என்னும் யாழை ஏந்திய முனிவன்; நாரதன்.
பொன் இயலும் பொன்போல ஒளிவிடுகின்ற.
அங்கி - தீக்கடவுள்.
கமழ் தூபம் - நறுமணப் புகை, சத்த இருடிகள் கூறிய ஆசிகள் முன்பே வேதம் முதலியவற்றில் அமைந்து, மரபாகச் சொல்லப்பட்டு வருவன.
`அவை தம் பயனைத் தப்பாமல் தரும்` என்பது கொள்கை.
இங்கு யமன் வந்து மங்கல மொழிகளால் வாழ்த்தி யது தனது பணிவைப் புலப்படுத்திக்கொள்ளும் உபசார வார்த்தை.
`இவை தம்முள் வேறுபாடு` என்க.

பண் :

பாடல் எண் : 25

அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொன் இயலும் பொன்போல ஒளிவிடுகின்ற.
அங்கி - தீக்கடவுள்.
கமழ் தூபம் - நறுமணப் புகை, சத்த இருடிகள் கூறிய ஆசிகள் முன்பே வேதம் முதலியவற்றில் அமைந்து, மரபாகச் சொல்லப்பட்டு வருவன.
`அவை தம் பயனைத் தப்பாமல் தரும்` என்பது கொள்கை.
இங்கு யமன் வந்து மங்கல மொழிகளால் வாழ்த்தி யது தனது பணிவைப் புலப்படுத்திக்கொள்ளும் உபசார வார்த்தை.
`இவை தம்முள் வேறுபாடு` என்க.
நிருதி - தென்மேற்குத் திசைக்குக் காவலன்.
`இவன் அரக்கன்` என்பது பற்றிச் சிவந்த கண்களையுடையவனாகக் கூறினார்.
முதலோர் - நிருதியின் பரிவாரங்கள், நிழல் - ஒளி.
கலன்கள் - அணிகலன்கள்.
இவை உலா இடையில் எந்த அணிகல மாயினும் பழுதுபடின் உடனே மாற்றிப் பூட்டுதற்கு அமைவன.
வருணன் - மேற்றிசைக் காவலன் கலசம் - நீர்ப் பாத்திரம்.

பண் :

பாடல் எண் : 26

நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிருதி - தென்மேற்குத் திசைக்குக் காவலன்.
`இவன் அரக்கன்` என்பது பற்றிச் சிவந்த கண்களையுடையவனாகக் கூறினார்.
முதலோர் - நிருதியின் பரிவாரங்கள், நிழல் - ஒளி.
கலன்கள் - அணிகலன்கள்.
இவை உலா இடையில் எந்த அணிகல மாயினும் பழுதுபடின் உடனே மாற்றிப் பூட்டுதற்கு அமைவன.
வருணன் - மேற்றிசைக் காவலன் கலசம் - நீர்ப் பாத்திரம்.
வாயு தேவன்.
`தெருவெலாம் விளக்க` என்க.
விளக்குதல், குப்பைகளைப் போக்கி அழகு விளங்கச் செய்தல்.
மழை- மேகம்.
மேகத்திற்குத் தலைவன் இந்திரன் ஆதலின் அவனே மேகங் களைக் கொண்டு தெருக்களில் நீர் தெளிப்பித்தான் என்க.
சோமன் - சந்திரன்.
குபேரனோடு கூட இவனும் வட திசையைக் காக்கின்றான்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 27

வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாயு தேவன்.
`தெருவெலாம் விளக்க` என்க.
விளக்குதல், குப்பைகளைப் போக்கி அழகு விளங்கச் செய்தல்.
மழை- மேகம்.
மேகத்திற்குத் தலைவன் இந்திரன் ஆதலின் அவனே மேகங் களைக் கொண்டு தெருக்களில் நீர் தெளிப்பித்தான் என்க.
சோமன் - சந்திரன்.
குபேரனோடு கூட இவனும் வட திசையைக் காக்கின்றான்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 28

ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈசானன், வடகீழ்த்திசைக் காவலன்.
இவன் உருத்திரர் வகையைச் சேர்ந்தவன்.
அடை - வெற்றிலை.
அதனையுடைய பை அடைப்பை.
எட்டுத் திக்குப் பாலகர்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு பணியை மேற்கொண்டமை யறிக.
வடதிசையில் குபேரனுக்கு ஈடாகச் சந்திரன் சொல்லப்பட்டான்.
குபேரன் பின்பு சொல்லப்படுவான்.
அச்சுனிகள் - அச்சுவினி தேவர்கள்.
இவர்கள் தேவ மருத்துவர்கள்.
முப்பத்து மூவரில் இவர்கள் இருவராவர்.
வாய் ஆர்ந்த - வாய் நிறைந்த.
இவர்கள் வாழ்த்துரைத்தல், `தம்மால் சிவபெருமான் அடையத் தக்க உடல் நலம் ஒன்றில்லை; அவன் நிராமயன்; (இயல்பாகவே நோயிலி என்பது பற்றியாம்,

பண் :

பாடல் எண் : 29

உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு ``உருத்திரர்கள்`` என்றது ஏகாதச ருத்திரரை.
முப்பத்து மூவரில் இவர் பதினொருவராவர்.
இங்ஙனம் தேவர் முப்பத்து மூவரும் திரண்டமையறிக.
`இவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடி பரிவாரம்` என்பதால் தேவர் முப்பத்து முக் கோடியினர் ஆவர், குபேரன் இத்திருவுலாவில் தக்கார்க்கும், வேண்டுவார்க்கும் பொன் மழையும், மணி மழையும் பொழிந்து வந்தான் என்க.
கருத்து - உள்ளன்பு.
தீர்த்தங்கள் - தீர்த்தங்களின் அதிதேவதைகள்.
கவரி - சாமரை.
புடை - இருபக்கத்திலும் இரட்டுதல் - மாறி மாறி வீசுதல்.

பண் :

பாடல் எண் : 30

கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கருத்து - உள்ளன்பு.
தீர்த்தங்கள் - தீர்த்தங்களின் அதிதேவதைகள்.
கவரி - சாமரை.
புடை - இருபக்கத்திலும் இரட்டுதல் - மாறி மாறி வீசுதல்.
தங்கிய - எட்டுத் திசைகளிலும் தங்கியிருக் கின்ற பைந்நாகம் - படத்தையுடைய பாம்பு.
சுடர் - விளக்கு.
அவை தம் தம்மிடத்திலுள்ள மாணிக்கங்களையே விளக்காக எடுத்தன.
கைந் நாகம் - கையையுடைய யானை.
அவை கால்களை மண்டியிட்டு, கைகளைத் தலைமேல் வைத்து வணங்கின.

பண் :

பாடல் எண் : 31

பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தங்கிய - எட்டுத் திசைகளிலும் தங்கியிருக் கின்ற பைந்நாகம் - படத்தையுடைய பாம்பு.
சுடர் - விளக்கு.
அவை தம் தம்மிடத்திலுள்ள மாணிக்கங்களையே விளக்காக எடுத்தன.
கைந் நாகம் - கையையுடைய யானை.
அவை கால்களை மண்டியிட்டு, கைகளைத் தலைமேல் வைத்து வணங்கின.
மெய் - இறைவனுக்குத் திருமேனியாய் உள்ள.
நாகம் - ஆகாயம்.
விதானம் - மேற்கட்டி.
கொடி - துகிற் கொடியாகிய மின்னல் - தோன்றித் தோன்றி மறைதலால் அது காற்றால் மாறி மாறி வீசுகின்ற கொடியாயிற்று.
மோகம் - மயக்கம்.
முரசின் ஓசையால் சிலர்க்கும், சில உயிர்கட்கும் மயக்கம் உண்டாயிற்று.
என்க.
அன்றி, `உலாவைக் காண விருப்பத்தை உண்டாக்கிற்று`` என்றலும் ஆம்.
இங்கும், `மேகம்` எனல்பாடம் அன்று.
உருமு - இடி.
விதானம், கொடி, முரசு இவைகள் உண்மையாகவே பல இருப்பினும், இவை ஒப்புமையால் அவையாய் அழகுசெய்தன.

பண் :

பாடல் எண் : 32

மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத் துருமு முரசறையப் போகம்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மெய் - இறைவனுக்குத் திருமேனியாய் உள்ள.
நாகம் - ஆகாயம்.
விதானம் - மேற்கட்டி.
கொடி - துகிற் கொடியாகிய மின்னல் - தோன்றித் தோன்றி மறைதலால் அது காற்றால் மாறி மாறி வீசுகின்ற கொடியாயிற்று.
மோகம் - மயக்கம்.
முரசின் ஓசையால் சிலர்க்கும், சில உயிர்கட்கும் மயக்கம் உண்டாயிற்று.
என்க.
அன்றி, `உலாவைக் காண விருப்பத்தை உண்டாக்கிற்று`` என்றலும் ஆம்.
இங்கும், `மேகம்` எனல்பாடம் அன்று.
உருமு - இடி.
விதானம், கொடி, முரசு இவைகள் உண்மையாகவே பல இருப்பினும், இவை ஒப்புமையால் அவையாய் அழகுசெய்தன.
தும்புரு நாரதர்கள், உம்மைத் தொகை.
`போகம் சேர் நுண்ணிடையார்` என இயைக்க.
இதுகாறும் வந்த `செய` என் எச்சங்கள் நிகழ் காலத்தன.

பண் :

பாடல் எண் : 33

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தும்புரு நாரதர்கள், உம்மைத் தொகை.
`போகம் சேர் நுண்ணிடையார்` என இயைக்க.
இதுகாறும் வந்த `செய` என் எச்சங்கள் நிகழ் காலத்தன.

பண் :

பாடல் எண் : 34

விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பணிய - பணியும்படி.
இவ்வெச்சம் எதிர் காலத்தது.
இது ``மேல்கொண்டு`` என்பதனோடு முடியும்.
`வெண்நார்` எனப்பிரித்து, `நார் - தனது அன்பிற்கு இடமாகிய விடை` என உரைக்க.
`மேல் கொள்ளல்` என்பது, `ஊர்தல்` என்னும் பொருட்டாக லின் அது ``விடையை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
மழ விடை - இளமையான இடபம்.
எண் ஆர் - எண் நிறைந்த; எண்ணால் மிகுதிப் பட்ட.
கருத்துடைய - அன்புடைய, பாரிடங்கள் - கூளிச் சுற்றம்; பூத கணங்கள்.
`ஒத்துக் காப்புச் செய்ய` என்க.
ஒத்து - இணங்கி.
காப்பு - காவல்.
கடைகள் - வாயில்கள்.

பண் :

பாடல் எண் : 35

கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எண் ஆர் - எண் நிறைந்த; எண்ணால் மிகுதிப் பட்ட.
கருத்துடைய - அன்புடைய, பாரிடங்கள் - கூளிச் சுற்றம்; பூத கணங்கள்.
`ஒத்துக் காப்புச் செய்ய` என்க.
ஒத்து - இணங்கி.
காப்பு - காவல்.
கடைகள் - வாயில்கள்.
செருக்கு - பெருமிதம்; வீரம்.
சேனாபதி - தேவ சேனாபதி; முருகன்.
யானை - ஐராவதம்.
ஆனா - நீங்காத.
போர், அசுரர்மேற் செய்யும் போர், முன் செல்வது தூசிப்படை பின்செல்வது கூழைப்படை.

பண் :

பாடல் எண் : 36

சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செருக்கு - பெருமிதம்; வீரம்.
சேனாபதி - தேவ சேனாபதி; முருகன்.
யானை - ஐராவதம்.
ஆனா - நீங்காத.
போர், அசுரர்மேற் செய்யும் போர், முன் செல்வது தூசிப்படை பின்செல்வது கூழைப்படை.

பண் :

பாடல் எண் : 37

அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைபோத - பக்கத் துணையாய் வர.
கல் - வலிய கல்.
நவிலும், உவம உருபு.
மேல் இட - மேற்பட்டுத் தோன்ற.
கரும்பு வில் இடப்பால் ஏல்வுடைய - கரும்புவில்லை இடப்பக்கத்தில் ஏற்றலை உடைய காமன்.
ஏல்வு, தொழிற் பெயர்.
``பால் மென் கரும்பு`` என்பதில் பால், `சாறு` என்னும் பொருட்டாய்க் கரும்பிற்கு அடையாயிற்று.
எய்வான் - எய்தற் பொருட்டு.
கொங்கு - தேன்.
நறுமணமு மாம், வில் மேலே கூறப்பட்டமையால், `வாளியை அதன் கண் கோத்து அமைத்த` என்க.
வாளி - அம்பு.
கணை ஐந்து மேலே கூறப்பட்டதாயினும் `காமனுக்கு உள்ள சிறப்பு ஐங்கணைகளை எய்வதே` என்பது தோன்றுதற்கு.
``ஐங்கணை யான் காமன்`` எனப் பெயர்த்துங் கூறினார்.
காமனது கொடி மீனக் கொடி.
அவனுடை படைகள் மகளிர் குழாம்.
அவர்கள் ஆடவர்மேல் போர்க்குச் செல்லக் காமன் அப்படைக்குத் தலைவனாய் வில்லும், அம்பும் கொண்டு செல்வான் - ஆயினும் இப்பொழுது அந்தப் படை சிவபெருமான் மேல் வரக் காமன் அச்சத்தால் சிவபெருமானுக்கே துணைசெய்பவனாய்த் தன் குறிப்பறியாது எதிர்த்து வரும் தன் படைகள் மேலேயே தன் அம்புகளை எய்ய வருகின்றான்.
`காமன் தன் கொடிப் படைக்கு எதிராய்ப் போத` என்க.
காரி - ஐயனார்.
கதம் - கோபம்.
வாமம் - அழகு.
`காரியாகிய வாமன்` என்க.

பண் :

பாடல் எண் : 38

மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 39

சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 40

காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கைபோத - பக்கத் துணையாய் வர.
கல் - வலிய கல்.
நவிலும், உவம உருபு.
மேல் இட - மேற்பட்டுத் தோன்ற.
கரும்பு வில் இடப்பால் ஏல்வுடைய - கரும்புவில்லை இடப்பக்கத்தில் ஏற்றலை உடைய காமன்.
ஏல்வு, தொழிற் பெயர்.
``பால் மென் கரும்பு`` என்பதில் பால், `சாறு` என்னும் பொருட்டாய்க் கரும்பிற்கு அடையாயிற்று.
எய்வான் - எய்தற் பொருட்டு.
கொங்கு - தேன்.
நறுமணமு மாம், வில் மேலே கூறப்பட்டமையால், `வாளியை அதன் கண் கோத்து அமைத்த` என்க.
வாளி - அம்பு.
கணை ஐந்து மேலே கூறப்பட்டதாயினும் `காமனுக்கு உள்ள சிறப்பு ஐங்கணைகளை எய்வதே` என்பது தோன்றுதற்கு.
``ஐங்கணை யான் காமன்`` எனப் பெயர்த்துங் கூறினார்.
காமனது கொடி மீனக் கொடி.
அவனுடை படைகள் மகளிர் குழாம்.
அவர்கள் ஆடவர்மேல் போர்க்குச் செல்லக் காமன் அப்படைக்குத் தலைவனாய் வில்லும், அம்பும் கொண்டு செல்வான் - ஆயினும் இப்பொழுது அந்தப் படை சிவபெருமான் மேல் வரக் காமன் அச்சத்தால் சிவபெருமானுக்கே துணைசெய்பவனாய்த் தன் குறிப்பறியாது எதிர்த்து வரும் தன் படைகள் மேலேயே தன் அம்புகளை எய்ய வருகின்றான்.
`காமன் தன் கொடிப் படைக்கு எதிராய்ப் போத` என்க.
காரி - ஐயனார்.
கதம் - கோபம்.
வாமம் - அழகு.
`காரியாகிய வாமன்` என்க.

பண் :

பாடல் எண் : 41

வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 42

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாமம் - அச்சம்.
`விநாயகனை உள்ளுறுத்துக் கதக் காரி செல்ல` என மேலே கூட்டுக.
``மங்கை`` என்பது அப்பருவத்தைக் குறித்தது.
எழுவர் - சத்தமாதர்.
இவருள் காளியும் ஒருத்தியாயினும் அவளைத் தலைவி யாக வேறு பிரித்துக் கூறுதலின் அவளுக்கு ஈடாகத் துர்க்கையைக் கொள்க.
எழுவர் மாதராவார் பிராம்மி, வைணவி, மாகேசுவரி, கௌமாரி, இந்திராணி, வாராகி, காளி.
பிராம்மி, `அபிராமி` என்றும், வைணவி `நாராயணி` என்றும் சொல்லப்படுவர்.
நீலி - காளி.
மடம் - இளமை.

பண் :

பாடல் எண் : 43

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விச்சாதரர் முதல் அசுரர் ஈறாகச் சொல்லப் பட்டவர்கள் தேவ சாதியினர்.
இவர் முதலாகப் பதினெண்கணங்கள் சில இடங்களில் சொல்லப்படும்.
விச்சாதரர் வித்தியாதரர்.
`கந்திருவர்` என்றும் சொல்லப்படுவர்.
இயக்கர் - யட்சர்.
யட்சனுக்குப் பெண்பால் யட்சிணி தேவ சாதியினருள் யட்சர் பேரழகுடையவர்களாகச் சொல்லப்படுவர்.
``அச்சாரணர்`` என்பதில் அகரம் பண்டறி சுட்டு.
எச்சார்வும் - எவ்விடத்திலும்.
சல்லரி முதல் முருடு ஈறாகச் சொல்லப்பட்டவை வாத்திய வகைகள்.
அவற்றுட் பெரும்பாலன தத்தம் ஓசை காரணமாகப் பெயர் பெற்றன.
கல்லவடம்- இரத்தின மாலை.
இதனை மொந்தைக்கு அடையாக்குக.
இலயத்தட்டு, தாள அறுதி தோன்றத் தட்டுதல்.
சங்கு, அத்தட்டினைக் கடந்து ஒலித்தலால், ``தட்டு அழி சங்கம்`` என்றார்.
`சலஞ்சலம்` என்பதும் ஒருவகைச் சங்கே.
தாளம் - பிரம்ம தாளம்.
கட்டு அழியாப் பேரி - வார்க்கட்டுத் தளராத பேரிகை.
கர தாளம் - கைத்தாளம்.
இது சிறிய அளவினதும், குவிந்த வடிவினதுமாய்ச் சிறிய அளவில் ஒலிப்பது.
மகளிர் தனங்கட்கு உவமையாகச் சொல்லப்படும் தாளம் இதுவே.
முன்னர்ச் சொல்லியது பெரிய அளவினதாய்ப் பேரோசையைத் தருவது.
இயம்ப - ஒலிக்க.

பண் :

பாடல் எண் : 44

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விச்சாதரர் முதல் அசுரர் ஈறாகச் சொல்லப் பட்டவர்கள் தேவ சாதியினர்.
இவர் முதலாகப் பதினெண்கணங்கள் சில இடங்களில் சொல்லப்படும்.
விச்சாதரர் வித்தியாதரர்.
`கந்திருவர்` என்றும் சொல்லப்படுவர்.
இயக்கர் - யட்சர்.
யட்சனுக்குப் பெண்பால் யட்சிணி தேவ சாதியினருள் யட்சர் பேரழகுடையவர்களாகச் சொல்லப்படுவர்.
``அச்சாரணர்`` என்பதில் அகரம் பண்டறி சுட்டு.

பண் :

பாடல் எண் : 45

தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 46

குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 47

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எச்சார்வும் - எவ்விடத்திலும்.
சல்லரி முதல் முருடு ஈறாகச் சொல்லப்பட்டவை வாத்திய வகைகள்.
அவற்றுட் பெரும்பாலன தத்தம் ஓசை காரணமாகப் பெயர் பெற்றன.
கல்லவடம்- இரத்தின மாலை.
இதனை மொந்தைக்கு அடையாக்குக.
இலயத்தட்டு, தாள அறுதி தோன்றத் தட்டுதல்.
சங்கு, அத்தட்டினைக் கடந்து ஒலித்தலால், ``தட்டு அழி சங்கம்`` என்றார்.
`சலஞ்சலம்` என்பதும் ஒருவகைச் சங்கே.
தாளம் - பிரம்ம தாளம்.
கட்டு அழியாப் பேரி - வார்க்கட்டுத் தளராத பேரிகை.
கர தாளம் - கைத்தாளம்.
இது சிறிய அளவினதும், குவிந்த வடிவினதுமாய்ச் சிறிய அளவில் ஒலிப்பது.
மகளிர் தனங்கட்கு உவமையாகச் சொல்லப்படும் தாளம் இதுவே.
முன்னர்ச் சொல்லியது பெரிய அளவினதாய்ப் பேரோசையைத் தருவது.
இயம்ப - ஒலிக்க.
மங்கலம் பாடுவார்; சூதரும், மாகதரும், இவர் கள் முறையே திருவோலக்கத்தில் நின்றேத்துவாரும், இருந்தேத்து வாரும் ஆவர்.
மல்லர் - மெய்க்காப்பாளர்.
கிங்கரர் - தூதுவர், இவ ரெல்லாம் சிவ கணத்தவராவர்.
கிலுகிலுத்தல் - முணுமுணுத்தலும், அதட்டுதலும்,

பண் :

பாடல் எண் : 48

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மங்கலம் பாடுவார்; சூதரும், மாகதரும், இவர் கள் முறையே திருவோலக்கத்தில் நின்றேத்துவாரும், இருந்தேத்து வாரும் ஆவர்.
மல்லர் - மெய்க்காப்பாளர்.
கிங்கரர் - தூதுவர், இவ ரெல்லாம் சிவ கணத்தவராவர்.
கிலுகிலுத்தல் - முணுமுணுத்தலும், அதட்டுதலும்,

பண் :

பாடல் எண் : 49

ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருது - ருது.
இது தமிழில் `பெரும் பொழுது` எனப்படும்.
அவற்றைக் கார் முதலாக (ஆவணி முதலாக` வைத்து எண்ணுதல் தமிழ் மரபு.
வசந்தம் முதலாக வைத்து எண்ணுதல் வடநூல் வழக்கு.
(வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம்.
) வசந்தம் முதலிய ஆறும் சித்திரை முதல் இரண்டிரண்டு மாதங்களை யுடையன.
பெரும் பொழுது கூறியதனானே சிறுபொழுதுகளும் கொள்ளப்படும்.
யோகு - யோகம்.
முத்திரை - சின்முத்திரை முதலிய கைக்குறிகள்.
கணம் (க்ஷணம்) - நொடி இதனைக் கூறவே உபலக் கணத்தால் துடி, இலவம் முதலிய பிற நுட்பக்காலங்களும் கொள்ளப் படும்.
இருது முதலாக இதுகாறும் கூறப்பட்டன அவற்றின் அதி தேவர்களையாம்.
வாலகிலியர் - பிரமனது மானச புத்திரனாகிய `கிருது` என்பவனுக்கும், `கிரியை` என்பவளுக்கும் பிறந்த அறுபதினா யிரவர்.
இவர் அங்குட்ட அளவினராய், வானப்பிரத்தர்களாய்ச் சிவநெறியில் நிற்பவர்கள் என்பர்.
ஈண்டி - நெருங்கி.

பண் :

பாடல் எண் : 50

காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி மேலை

பாடல் எண் : 51

இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி எமைஆளும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தேவர் பலரும் பெருமான் புறப்பாட்டின் பொழுது அவனைப் பலவகையால் போற்றி செய்து ஆரவாரித்துப் பூமழையைப் பொழிந்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 53

சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொங்கு அரவா - சீற்றம் மிக்க பாம்பினை அணிந்தவனே.

பண் :

பாடல் எண் : 54

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆற்றல் - தவ வலிமை.
பதம் - திருவடி.
திரு வருளைத் திருவடியாகக் கூறுதல் வழக்கு.
தூய மலை - வெண்மலை; கயிலாயம், மயானம், ஊழிமுடிந்த இடம், நிலை, நித்தியத்துவம்.

பண் :

பாடல் எண் : 55

மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தேவர் பலரும் பெருமான் புறப்பாட்டின் பொழுது அவனைப் பலவகையால் போற்றி செய்து ஆரவாரித்துப் பூமழையைப் பொழிந்தமை கூறப்பட்டது.
தூய மலை - வெண்மலை; கயிலாயம், மயானம், ஊழிமுடிந்த இடம், நிலை, நித்தியத்துவம்.

பண் :

பாடல் எண் : 56

போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாற்றிசையும் எங்கும்`` என்றது, `எந்தப் பக்கத்திலும், எந்த இடத்திலும்` என்றபடி.
ஏற்றுக் கொடி - இடபக் கொடி.
இது சிவபெரு மானுக்கு உரியது.
பதாகை - கொடி.
பொதுப்படக் கூறியதனால் உடன் வந்த மால், அயன், இந்திரன் மற்றும் முருகன் முதலியோரது கொடி களைக் கொள்க.
வடிவு - அழகு.
தொங்கல் - மாலை.
கடி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 57

கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏற்றுக் கொடி - இடபக் கொடி.
இது சிவபெரு மானுக்கு உரியது.
பதாகை - கொடி.
பொதுப்படக் கூறியதனால் உடன் வந்த மால், அயன், இந்திரன் மற்றும் முருகன் முதலியோரது கொடி களைக் கொள்க.
வடிவு - அழகு.
தொங்கல் - மாலை.
கடி - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 58

பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மாண் கருங் குழலார் - பூவையணிந்த, மாட்சிமைப்பட்ட, கரிய கூந்தலையுடைய மகளிர்.
`புதிதாக உண்ண` என ஆக்கம் வருவித்துரைக்க.
உண்ணல் - கவர்தல்.
`புதிதாக` என்றது இதுகாறும் இது நிகழாமையைக் குறித்தது.
எனவே, `மகளிர் உள்ளங்கள் எளிதில் உண்ணப்படும்` என்பது குறித்ததாயிற்று.
`வாம மான` என்பது ``வாமான`` எனக் குறைந்து நின்றது.
வாமம் - அழகு.
மானம் - பெருமை.

பண் :

பாடல் எண் : 59

வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறு இல் சீர் வானவர் - குற்றம் இல்லாத புகழை யுடைய தேவர்.

பண் :

பாடல் எண் : 60

வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாளிகைக்கும், சிவபெருமானுக்கும் சிலேடை.
வான நீர் - ஆகாய கங்கை, மறை - சிவபெருமான் வேதங் களை அழியாமல் காக்கின்றான்.
மாளிகைகள் தம்முள் நிகழும் இரகசியங்களை வெளித் தோன்றாமல் காக்கின்றன.
இருவரும் முடியில் பிறையை அணிகின்றனர்.
சூலம் - சிவபெருமான் சூலம் ஏந்தியுள்ளான்.
மாளிகைகள் (சூல் ஆம்) கருக்கொண்ட மேகங்களைத் தாங்குகின்றன.
அம் - நீர்.
அஃது ஆகுபெயராய் மேகத்தைக் குறித்தது.
ஈனம் - தாழ்வு.
வெள்ளை - திருநீறு; சுதை வேழத்து உரி போர்த்த வள்ளல்.
சிவபெருமான்.
வடிவு - தோற்றம்.
ஒள்ளிய - ஒளி பொருந்திய.
மாடம் - மேல் மாடம்.
அமளி - படுக்கை.
அக்காலத்தில் அரசர்கள் போர் தொடங்கும் பொழுது.
நாளை `இன்ன நாள்` என்றும், களத்தை, `இன்ன இடம்` முன்பே குறித்துக் கொள்வர்.
அவற்றுள் இடம் குறித்தலை, `களம் குறித்தல்` எனக் கூறும் வழக்கம் பற்றி, ``போர்க்களமாக் குறித்து`` என்றார்.
போர், ஆடவரோடு ஆடும் கலவிப் போர்.
சிவபெருமான் உலாப் போதுங்கால் பல திறக்குழாங்கள் குழுமி நிற்குமாயினும், உலாவால் மகளிர் குழாம் பட்ட பாட்டினை எடுத்துக் கூறுவதே இப்பிரபந்தம் ஆதலின், அவை பற்றியே குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 61

வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 62

மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாளிகைக்கும், சிவபெருமானுக்கும் சிலேடை.
வான நீர் - ஆகாய கங்கை, மறை - சிவபெருமான் வேதங் களை அழியாமல் காக்கின்றான்.
மாளிகைகள் தம்முள் நிகழும் இரகசியங்களை வெளித் தோன்றாமல் காக்கின்றன.
இருவரும் முடியில் பிறையை அணிகின்றனர்.
சூலம் - சிவபெருமான் சூலம் ஏந்தியுள்ளான்.
மாளிகைகள் (சூல் ஆம்) கருக்கொண்ட மேகங்களைத் தாங்குகின்றன.
அம் - நீர்.
அஃது ஆகுபெயராய் மேகத்தைக் குறித்தது.
ஈனம் - தாழ்வு.
வெள்ளை - திருநீறு; சுதை வேழத்து உரி போர்த்த வள்ளல்.
சிவபெருமான்.
வடிவு - தோற்றம்.
ஒள்ளிய - ஒளி பொருந்திய.
மாடம் - மேல் மாடம்.
அமளி - படுக்கை.
அக்காலத்தில் அரசர்கள் போர் தொடங்கும் பொழுது.
நாளை `இன்ன நாள்` என்றும், களத்தை, `இன்ன இடம்` முன்பே குறித்துக் கொள்வர்.
அவற்றுள் இடம் குறித்தலை, `களம் குறித்தல்` எனக் கூறும் வழக்கம் பற்றி, ``போர்க்களமாக் குறித்து`` என்றார்.
போர், ஆடவரோடு ஆடும் கலவிப் போர்.
சிவபெருமான் உலாப் போதுங்கால் பல திறக்குழாங்கள் குழுமி நிற்குமாயினும், உலாவால் மகளிர் குழாம் பட்ட பாட்டினை எடுத்துக் கூறுவதே இப்பிரபந்தம் ஆதலின், அவை பற்றியே குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 63

சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிர் ஆடவரோடு ஆடும் கலவியாகிய போருக்கு அவர்தம் காலில் அணிந்துள்ள சிலம்புகளே போர்ப் பறை.
அவை அப்போர்க்காலத்து ஒலித்தல் இயல்பு.
விலங்கு கொடும் புருவம் - விலங்குபோல வளைவான புருவங்கள்.
அவைகளே வில், அவை அப்போர்க் காலத்தில் வளைதல் (நெறிதல்) இயல்பு.
கூழை, வளை இவை சிலேடை.
கூழை - கூந்தல்; கூழைப் (பின்னணிப்) படை.
தாழ அவிழ்ந்து அலைய கலவிக் காலத்துக் கூந்தல் அலைதல் இயல்பு.
அது பினன்ணிப் படை முன்னணிப் படைக் கேற்பச் செயற்படுதலை ஒக்கின்றது.
வளை - கை வளையல்; சங்கு.
இவை இரண்டும் ஒலித்தலைச் செய்யும்.
கை - பக்கம் போதரலாவது போர் செய்வார் வலஞ்செல்லு தலும் இடம் செல்லுதலும் இந்நிலை கலவியிடத்தும் பொருந்தும்.
கேழ் கிளரும் - நிறம் மிக்க.
`நிறம்` என்றது `திதலை` எனப்படும் நிறத்தினை.
அல்குல் - பிருட்டம்.
`துடி இடை` எனக் கூறுதற்கு ஏற்ப, நடுவில் இடை சுருங்கியிருக்க, மேலே ஆகமும், கீழே பிருட்டமும் அகன்றிருக்கும் நிலையில் பிருட்டம் தேர்த்தட்டோடு உவமிக்கப் படுதல் வழக்கமாயிற்று.
உந்தி - செலுத்தி.
மா - யானை.
யானைத் தந்தத்தோடு உவமிக்கப்படுதல் பற்றி யானையாயின.
பொங்க - சினம் மிக; புளகிக்க.
``கொழுநர்`` என்றது, அப்பொழுது உரிமை பெற்றோரை.
அல்லாக்கால் கலவியாலே அவர் மனத்தைக் கவர்தல் வேண்டா என்க.
பொருது - போர் செய்து.
`பொருது அங்கம் அசைந்த` என்க.
அங்கம் - உறுப்புக்கள்.
அசைந்த - சோர்ந்த.

பண் :

பாடல் எண் : 64

கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 65

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மகளிர் ஆடவரோடு ஆடும் கலவியாகிய போருக்கு அவர்தம் காலில் அணிந்துள்ள சிலம்புகளே போர்ப் பறை.
அவை அப்போர்க்காலத்து ஒலித்தல் இயல்பு.
விலங்கு கொடும் புருவம் - விலங்குபோல வளைவான புருவங்கள்.
அவைகளே வில், அவை அப்போர்க் காலத்தில் வளைதல் (நெறிதல்) இயல்பு.
கூழை, வளை இவை சிலேடை.
கூழை - கூந்தல்; கூழைப் (பின்னணிப்) படை.
தாழ அவிழ்ந்து அலைய கலவிக் காலத்துக் கூந்தல் அலைதல் இயல்பு.
அது பினன்ணிப் படை முன்னணிப் படைக் கேற்பச் செயற்படுதலை ஒக்கின்றது.
வளை - கை வளையல்; சங்கு.
இவை இரண்டும் ஒலித்தலைச் செய்யும்.
கை - பக்கம் போதரலாவது போர் செய்வார் வலஞ்செல்லு தலும் இடம் செல்லுதலும் இந்நிலை கலவியிடத்தும் பொருந்தும்.
கேழ் கிளரும் - நிறம் மிக்க.
`நிறம்` என்றது `திதலை` எனப்படும் நிறத்தினை.
அல்குல் - பிருட்டம்.
`துடி இடை` எனக் கூறுதற்கு ஏற்ப, நடுவில் இடை சுருங்கியிருக்க, மேலே ஆகமும், கீழே பிருட்டமும் அகன்றிருக்கும் நிலையில் பிருட்டம் தேர்த்தட்டோடு உவமிக்கப் படுதல் வழக்கமாயிற்று.
உந்தி - செலுத்தி.
மா - யானை.
யானைத் தந்தத்தோடு உவமிக்கப்படுதல் பற்றி யானையாயின.
பொங்க - சினம் மிக; புளகிக்க.
``கொழுநர்`` என்றது, அப்பொழுது உரிமை பெற்றோரை.
அல்லாக்கால் கலவியாலே அவர் மனத்தைக் கவர்தல் வேண்டா என்க.
பொருது - போர் செய்து.
`பொருது அங்கம் அசைந்த` என்க.
அங்கம் - உறுப்புக்கள்.
அசைந்த - சோர்ந்த.

பண் :

பாடல் எண் : 66

பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரவு கலவிப்போரால் சோர்வுற்ற மகளிர் காலையில் குளித்து ஒப்பனை செய்கின்றனர்.
`மணி நீரைப் பொற்கலசத்துள்ளால் எடுத்து முகம் சேர்த்தி` என மாற்றியும், ஒருசொல் வருவித்து என உரைக்க.
``நீர் முகம் சேர்த்தி`` என்றது, `தலை முழுகி` என்றபடி.
மணி நீர் - தெளிந்த நீர்.

பண் :

பாடல் எண் : 67

பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக மகளிரது பருவம் ஏழாகச் சொல்லப்படும்.
அவை பற்றி வரும் பகுதிகளில் காண்க.
மாது - அழகு; இனிமை.
இவர்தல் - மீதூர்தல்.

பண் :

பாடல் எண் : 68

சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூளிகை - மேல் மாடத்தின் நெற்றி.
சூட்டு - சிகரம்.
`இங்கெல்லாம் மின்னல்போல ஒளிவீ\\\\u2970?` என்க.
சுளிகை, சுட்டிகை, இவை மகளிர் நெற்றியில் அணியும் அணி வகைகள்.
வாளிகை - ஒருவகைக் காதணி.
`இவை மின் விலக` என்க.

பண் :

பாடல் எண் : 69

மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மால் - மயக்கம்.
நூல் ஏறு தாமம் - அருள் நூல்களில் எல்லாம் புகழ் இடம் பெற்று விளங்கும் கொன்றை மலர் மாலை.
சடாதாரி - சடையை உடைய சிவபெருமான்.
யாமம் - இரவுப் பொழுது.
அடும் - (எம்மைக்) கொல்லும்.

பண் :

பாடல் எண் : 70

தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூல் ஏறு தாமம் - அருள் நூல்களில் எல்லாம் புகழ் இடம் பெற்று விளங்கும் கொன்றை மலர் மாலை.
சடாதாரி - சடையை உடைய சிவபெருமான்.
யாமம் - இரவுப் பொழுது.
அடும் - (எம்மைக்) கொல்லும்.

பண் :

பாடல் எண் : 71

ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலர், (அழகால்) `இவன் மன்மதனே` என்பார்.
சிலர் அதனை மறுத்து, அங்ஙனம் கூறுவது பொருந்துவதன்று; (இவனது அழகு காமனுக்கு இல்லை - காமன் கரியன்; இவன் செய்யன்) என்பர்.
சிலர் `இவன் வேறு யாவன்` என ஐயுறுவர்.
சிலர் ஆற்றாமையால் கையோடு கையை எறிவார்.
பலரும் முன்பே போய் விட்ட நாணத்தோடு, பின்பு தாம் அணிந்திருந்த சங்க வளையல் களையும் இழப்பர்.
பூ மன்னும் - அழகு நின்ற.
பொன் அரி மாலை பல அணிகலங்களுள் ஒன்றாக மகளிர் கழுத்தில் அணியப்படுவது.
அதனையே இப்பொழுது அவர்கள் மயக்கம் மிகுதியால் சிவபிரான் தம்மைத் தனக்கு உரியர் ஆக்கிக்கொள்ளக் கட்டும் மாங்கல்ய சூத்திர மாக (தாலிக்கயிறாக) நினைத்துத் தாங்களே எடுத்துப் புனைந்து கொள்வார்கள்.
`துன் மாலை, அரி மாலை` எனத் தனித் தனி இயைக்க.
துன் மாலை - இருவரும் ஒன்றுபடுதற்கு ஏதுவான மாலைத்தாலி, அரிமாலை அழகிய மாலை.
அரி - அரித்தல் செய்யப்படுவது.

பண் :

பாடல் எண் : 72

பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மன்னும் - அழகு நின்ற.
பொன் அரி மாலை பல அணிகலங்களுள் ஒன்றாக மகளிர் கழுத்தில் அணியப்படுவது.
அதனையே இப்பொழுது அவர்கள் மயக்கம் மிகுதியால் சிவபிரான் தம்மைத் தனக்கு உரியர் ஆக்கிக்கொள்ளக் கட்டும் மாங்கல்ய சூத்திர மாக (தாலிக்கயிறாக) நினைத்துத் தாங்களே எடுத்துப் புனைந்து கொள்வார்கள்.
`துன் மாலை, அரி மாலை` எனத் தனித் தனி இயைக்க.
துன் மாலை - இருவரும் ஒன்றுபடுதற்கு ஏதுவான மாலைத்தாலி, அரிமாலை அழகிய மாலை.
அரி - அரித்தல் செய்யப்படுவது.

பண் :

பாடல் எண் : 73

ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்களில் மைதீட்டத் தொடங்கித் தீட்டியவர்கள் ஒரு கண்ணிற்கு மட்டும் தீட்டி.
பொழுது உலா ஒலி கேட்டு அதனை விட்டுவிட்டு ஓடித் தெருவிலே வந்து நின்றார்கள்.
`தெருவம்` என்பதில் அம், சாரியை.

பண் :

பாடல் எண் : 74

கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மயக்கத்தால் நிலைக் கண்ணாடியை, `படுக்கை` என்று நினைத்து, அதன்மேல் பஞ்சைச் சொரிந்தார்கள்.
பந்தினை, `கிளி` என்று நினைத்து அதற்கு, `சிவா, முக்கண்ணா, பிறை சூடீ` என்றாற்போலும் சொற்களைச் சொல்லும்படி தங்கள் இசைபோலும் சொற்களைச் சொல்லிப் பயிற்றுவிப்பார்.
அண்ணல், சிவபெருமான்.
மாசாலம் - பெருங் கூட்டம்.
கோலுதல் - குவித்தல்.
`மகளிருடைய அனைத்துக் கண்களும் சிவபெருமான் ஒருவன்மேலே சென்று குவிந்தன` என்றபடி.
திண்ணம் நிறைந்தார் - `இவனைப் பற்றி யல்லது தனியே மீளோம்` என்னும் உறுதியுடன் கூடி நின்றார்கள்.
`திண்ணத்தோடு` என ஓடுருபு விரிக்க.
அவர்கள் கருதியது கூடாமையால் திகைத்தார்கள்.

பண் :

பாடல் எண் : 75

கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அண்ணல், சிவபெருமான்.
மாசாலம் - பெருங் கூட்டம்.
கோலுதல் - குவித்தல்.
`மகளிருடைய அனைத்துக் கண்களும் சிவபெருமான் ஒருவன்மேலே சென்று குவிந்தன` என்றபடி.
திண்ணம் நிறைந்தார் - `இவனைப் பற்றி யல்லது தனியே மீளோம்` என்னும் உறுதியுடன் கூடி நின்றார்கள்.
`திண்ணத்தோடு` என ஓடுருபு விரிக்க.
அவர்கள் கருதியது கூடாமையால் திகைத்தார்கள்.

பண் :

பாடல் எண் : 76

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஐந்துமுதல் ஏழ் ஆண்டு முடியப் பேதைப் பருவம்.
இப்பருவத்தில் காமக் குறிப்புத் தோன்றாதாயினும் உலாப் பிரபந்தத்தில் மற்றைப் பருவ மகளிரோடு இப்பருவ மகளிரையும் கூட்டி நிரப்புதல் வழக்கு.
இப்பிரபந்தம் பட்டாங் குரைப்பதின்றிப் புனைந்துரை வகையால் தலைவனைச் சிறப்பிப்பதேயாகலின்.
பிழையாமை - கடவாமை.
தூதை - சிறுமட்கலம்.
`பேதை சிற்றில் இழைத்துச் சிறுசோறட்டு விளையாடுவாள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 77

இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உம்மைகள் எச்சப் பொருள.
ஏக்கழுத்தம் - செருக்கு; தன் பெண்மை நலத்தைத் தானே வியந்து செருக்குதல்.
இது முதலியன பேதைப் பருவத்தாளிடத்து இல்லாமை யறிக.
நலம் - அழகு.
உடையால் உள் உருக்குதல்.
பொன்னும், மணி யும் பொருந்திய உடைகளின்வழி உண்டாகும் செயற்கை அழகால் ஆடவரது உள்ளங்களை உருகச் செய்தல்.

பண் :

பாடல் எண் : 78

கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கௌவை - பழிச்சொல்.
அஃது, இவன், `தான் யார், இவள் யார்` என்று எண்ணாமல், பலருங்காண இவளை உற்று நோக்குகின்றான் - எனப் பலராலும் பழிக்கப்படுதல்.
`கௌவையால் என உருபு விரித்து, `நோய் செய்யாள்` என இயைக்க.
நோய் செய்தல்- வருத்துதல் ``காளையரை`` என்பதை எல்லாவற்றோடும் கூட்டுக.
`கதிராகிய முலைகள்` என்க.
கதிராதல், உண்மை தெரிக்கும் அளவாய் இருத்தல்.
``முலைகள் தொழில் பூணாள்`` எனச் சினை வினை முதல்மேல் நின்றது.
வெவ்வ நோய் - கொடிய வருத்தம்.
செவ்வன் - செவ்வையாக.
நேர் நோக்கிலும் - ஆடவர் நேர்நின்று பார்த்தபோதிலும், நோய் நோக்கம் நோக்காள் - அவர்கள் உள்ளத்தில் காம நோய் உண்டாக நோக்கும் நோக்கமாக நோக்க அறியாள்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
* என்னும் குறளில், ``நோய் நோக்கு`` என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக.
நோய் நோக்கம் - நோயை உண்டாக்கும் நோக்கம்.
``நோக்கமாக நோக்காள்`` என ஆக்கம் வருவித்துரைக்க.
வாக்கின் - சொல்லால்.
சொல்லால் பிறர் மனத்து வஞ்சித்தலா வது, ஆடவன் ஒருவன் தேர், அல்லது குதிரை மேல் செல்லுதலைக் கண்டபொழுது அவனைக் காதலித்த காதல் காரணமாகக் கண் கலுழ்ந்து நின்றாளைத் தாயர் நோக்கி, `ஏடி, என்ன கண் கலுழ் கின்றாய்` என்று உருத்து வினாயபொழுது `அன்னாய், ஒன்றும் இல்லை; தேர், அல்லது குதிரை சென்ற வேகத்தால் எழுந்த தூசு கண் களில் வீழ்ந்து விட்டன.
கண்கள் கலுழ்கின்றன` என விடையிறுக்க, அவர்கள் உள்ளத்தில், `இவள் நம்மை வஞ்சிக்கின்றாள்` என்னும் எண்ணம் தோன்றச் செய்தல்.
பிறர் மனத்தும் வஞ்சியாள் என்னும் உம்மை, `தன் மனத்தும் வஞ்சனையிலள்` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 79

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செவ்வன் - செவ்வையாக.
நேர் நோக்கிலும் - ஆடவர் நேர்நின்று பார்த்தபோதிலும், நோய் நோக்கம் நோக்காள் - அவர்கள் உள்ளத்தில் காம நோய் உண்டாக நோக்கும் நோக்கமாக நோக்க அறியாள்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
* என்னும் குறளில், ``நோய் நோக்கு`` என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக.
நோய் நோக்கம் - நோயை உண்டாக்கும் நோக்கம்.
``நோக்கமாக நோக்காள்`` என ஆக்கம் வருவித்துரைக்க.
வாக்கின் - சொல்லால்.
சொல்லால் பிறர் மனத்து வஞ்சித்தலா வது, ஆடவன் ஒருவன் தேர், அல்லது குதிரை மேல் செல்லுதலைக் கண்டபொழுது அவனைக் காதலித்த காதல் காரணமாகக் கண் கலுழ்ந்து நின்றாளைத் தாயர் நோக்கி, `ஏடி, என்ன கண் கலுழ் கின்றாய்` என்று உருத்து வினாயபொழுது `அன்னாய், ஒன்றும் இல்லை; தேர், அல்லது குதிரை சென்ற வேகத்தால் எழுந்த தூசு கண் களில் வீழ்ந்து விட்டன.
கண்கள் கலுழ்கின்றன` என விடையிறுக்க, அவர்கள் உள்ளத்தில், `இவள் நம்மை வஞ்சிக்கின்றாள்` என்னும் எண்ணம் தோன்றச் செய்தல்.
பிறர் மனத்தும் வஞ்சியாள் என்னும் உம்மை, `தன் மனத்தும் வஞ்சனையிலள்` என இறந்தது தழுவிற்று.
`குழலை முடியாள்` என்க.
முடியாமைக்குக் காரணம் அவை முடிக்க வாராமை.
பேதைப் பருவத்தாளை, `முடி கூடாதவள்` என்றல் வழக்கு.
பாடவம் - ஆரவாரம்; பகட்டு.
இள வேய் - முற்றா, முளையாகிய மூங்கில்.
தோள்கள் அன்ன சிறிய ஆகலின் ஆடவர்க்கு விருப்பம் தாரா ஆயின.

பண் :

பாடல் எண் : 80

பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`குழலை முடியாள்` என்க.
முடியாமைக்குக் காரணம் அவை முடிக்க வாராமை.
பேதைப் பருவத்தாளை, `முடி கூடாதவள்` என்றல் வழக்கு.
பாடவம் - ஆரவாரம்; பகட்டு.
இள வேய் - முற்றா, முளையாகிய மூங்கில்.
தோள்கள் அன்ன சிறிய ஆகலின் ஆடவர்க்கு விருப்பம் தாரா ஆயின.
`சொல்வது ஒன்று, நினைப்பது ஒன்று, அடுத்து விரும்புவது ஒன்று; இவ்வாறு நிலையாக ஒன்றிலும் நில்லாமை பேதைப் பருவத்து இயல்பு என்றபடி.

பண் :

பாடல் எண் : 81

ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சொல்வது ஒன்று, நினைப்பது ஒன்று, அடுத்து விரும்புவது ஒன்று; இவ்வாறு நிலையாக ஒன்றிலும் நில்லாமை பேதைப் பருவத்து இயல்பு என்றபடி.

பண் :

பாடல் எண் : 82

தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாலி - நாபி அளவும் தொங்கவிடும் அணிகலன்.
அறுவை - துணி.
பேதைப் பருவத்தாள் தெருப் புழுதியில் விளையாடு தல் பற்றி நீலத் துணியை உடுத்து விடுப்பர்.
`அதுவும் ஒரு சுற்றாகவே இருக்கும்` என்றற்கு, ``விரித்துடுத்து`` என்றார்.
கோலம் - அழகு.

பண் :

பாடல் எண் : 83

பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாவை கொண்டு`` என்பதை, `பாவை கொள்ள` எனத் திரிக்க.
கொள்ளுதல், கொண்டு விளையாடுதல்.
ஒருத்தி, ஊராருள் ஒருத்தி.
தான், அசை.
வினவ - குறும்பாகக் கேட்க.
பேதைதன் தாய்.
`இப்பாவைக்குத் தந்தை சிவபெருமான்தான்` அஃதாவது, `கடவுள்தான்` என்று அவளும் குறும்பாக விடையிறுக்க, அந்தச் சிவபெருமான் அப்பொழுது; தற்செயலாய் ஒரு பெரிய இடப வாகனத்தின் மேல் அங்கு வந்தான்.
காய் சினம், விடைக்கு இன அடை.
பேதைப் பருவத்தாள் அவனைக் கண்ணாரக் கண்டாள்.

பண் :

பாடல் எண் : 84

ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பாவை கொண்டு`` என்பதை, `பாவை கொள்ள` எனத் திரிக்க.
கொள்ளுதல், கொண்டு விளையாடுதல்.
ஒருத்தி, ஊராருள் ஒருத்தி.
தான், அசை.
வினவ - குறும்பாகக் கேட்க.
பேதைதன் தாய்.
`இப்பாவைக்குத் தந்தை சிவபெருமான்தான்` அஃதாவது, `கடவுள்தான்` என்று அவளும் குறும்பாக விடையிறுக்க, அந்தச் சிவபெருமான் அப்பொழுது; தற்செயலாய் ஒரு பெரிய இடப வாகனத்தின் மேல் அங்கு வந்தான்.
காய் சினம், விடைக்கு இன அடை.
பேதைப் பருவத்தாள் அவனைக் கண்ணாரக் கண்டாள்.
ஆயினும் தாய் சொல்லிய சொல்லின் முறைமையை முழுமையாக அறிதல் இவளைப்போன்ற பேதைப் பருவப் பெண்களுக்கு இயலாது.
அஃதாவது, இல்லத்தில் தன் தாய் தன்னையும், மற்றும் குழவிகளையும் சீராட்டிப் பாராட்டுதலைப் பார்த்துத் தானும் ஒருபாவையைத் தன்னுடைய மகவாகக் கொண்டு அவ்வாறு சீராட்டி விளையாடுகின்ற பேதைப் பெண், `ஒரு மகவிற்குத் தாயாயினாள் என்றால், அதற்கு முன்னே அதற்குத் தங்கையாகக் கூடிய ஒருவனை மணந்திருக்க வேண்டுமன்றோ` என்னும் ஆழ்ந்த பொருளில் அயலாள் ஒருத்தி, `இப்பாவைக்குத் தந்தை யார்` என்று குறும்பாகக் கேட்டாள்.
இந்தப் பேதைப் பெண்ணுக்கு இதற்குள் மணவாளன் ஏது` என்பதுபடத் தாய், `கடவுள்தான் இப்பாவைக்குத் தந்தை` எனக் குறும்பாக விடையிறுத்தாள்.
இந்த நுட்பங்களைப் பேதை அறியமாட்டாள்.
ஆயினும் தாய் சொன்னபடி தெய்வச் செயலாகச் சிவபெருமான் அங்கு உலாப்போந்தாள்.
பேதை மற்றவர்போலத் தானும் அவனைக் கண்டாள்.
`இவள் போல்வாள் நோக்காள்` என மாறிக் கூட்டி, `ஆயினும் என்பது வருவிக்க.
`தன் பாவைக்குத் தந்தை வேண்டும்` என்றும் `அந்தத் தந்தை சிவபெருமான்தான்` என்று, தாய் கூறிவிட்டாள் - என்றும் இந்த முறைமைகளுக்காகப் பேதை சிவபெருமானை விரும்பவில்லை.
(அந்த முறைமையெல்லாம் அறியும் பருவம் அன்று அவள் பருவம்.
) ஆயினும் தன்னியல்பால் தானே சிவபெருமானைக் காதலிக்கின்ற முறைமையில் காதல் செய்வதற்கு நல்ல நேரத்தில் தொடக்கம் செய்தாள்.
`கணக்கு` இரண்டில் முன்னது முறைமை; பின்னது நூல்.
நாட் செய்தல்- நாள் கொள்ளுதல்; தொடங்குதல்.
பேதையின் காதல் நல்ல முறையில் நல்ல நேரத்தில் தொடங்கியது என்க.
இதற்குமுன் இவள் `காதல்` என்பதையே அறியாள் என்பதைக் குறித்தபடி.
காதல் என்பதையே அறியாதவளும் காதல் தோன்றப் பெற்றாள்; சிவபெருமானது திருவுலா அத்தன்மைத் தாய் இருந்தது.
அவ்வுலாப் `பத்தி` என்பதையே அறியாதவர்க்கும் பத்தியைத் தோற்றுவிக்கும் தன்மையது` என்பது இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 85

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 86

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எட்டு முதல் பதினோர் ஆண்டு முடியப் பெதும்மைப் பருவம்.
பேரொளி - மிக்க அழகு.
சேர்தல் - ஒரு காலைக் கொருகால் மிகுதல்.
கார் ஒளி சேர் மஞ்ஞைக் கவின் இயலாள்- நீல ஒளி வளரப் பெறுகின்ற மயிலைப் போலும் அழகு வளர்தலையுடையவள்.

பண் :

பாடல் எண் : 87

தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு தாமரை மலரிலே இருதளிர், இரு அழகிய கெண்டைமீன், ஒரு சிவந்த கொவ்வைக் கனி, முத்துக்கள், வளைந்த வில், `சுட்டி` என்னும் அணிகலம், சிவந்த பவளம் இவைகளை ஒருங்கு வைத்தது போலும் நன்கு மதிக்கத்தக்க முகத்தையுடையவள்.
தளிர் காது; கெண்டை கண்கள்; கொவ்வைக் கனி இதழ்; முத்துக்கள் பற்கள்; வில் புருவம்; இவையெல்லாம் உருவக வகையால் கூறப்பட்டன.
சுட்டியும்.
பவளமும் உவமையாற் கூறப்பட்டன.
பவள படமும் அணிகலமாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 88

முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒரு தாமரை மலரிலே இருதளிர், இரு அழகிய கெண்டைமீன், ஒரு சிவந்த கொவ்வைக் கனி, முத்துக்கள், வளைந்த வில், `சுட்டி` என்னும் அணிகலம், சிவந்த பவளம் இவைகளை ஒருங்கு வைத்தது போலும் நன்கு மதிக்கத்தக்க முகத்தையுடையவள்.
தளிர் காது; கெண்டை கண்கள்; கொவ்வைக் கனி இதழ்; முத்துக்கள் பற்கள்; வில் புருவம்; இவையெல்லாம் உருவக வகையால் கூறப்பட்டன.
சுட்டியும்.
பவளமும் உவமையாற் கூறப்பட்டன.
பவள படமும் அணிகலமாகக் கொள்க.
ஒத்து அமைந்த - கைக்குப் பொருந்தி அமைந்த.
கங்கணம் - காப்பு.
பெதும்பை ஆதலின் வளை அணியாது, காப்பு அணிந்தாள்.
கதிர் மணி - ஒளி பொருந்திய இரத்தினம்.
கிங்கிணி - சதங்கை.
இதுவும் பெதும்பைக்கு உரியது.

பண் :

பாடல் எண் : 89

கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒண் கேழ் - ஒளி பொருந்திய நிறம்.
மேகலை யணியாது, துகில் மாத்திரமே உடுத்தாள்.
அசைதல் - இறுகக் கட்டப்படுதல்.
பேதை இவ்வாறு கட்டுதல் இல்லை.
ஆய் பொதியில் - தமிழை ஆராய்ந்த இடமாகிய பொதியில் மலை.
`அதன்கண் உண்டான சந்தன மரத்தின் தேய்வை` என்க.
சந்தனத்தைத் தொய்யிலாக எழுதாமல் வாளா பூசிக் கொண்டாள்.

பண் :

பாடல் எண் : 90

அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒண் கேழ் - ஒளி பொருந்திய நிறம்.
மேகலை யணியாது, துகில் மாத்திரமே உடுத்தாள்.
அசைதல் - இறுகக் கட்டப்படுதல்.
பேதை இவ்வாறு கட்டுதல் இல்லை.
ஆய் பொதியில் - தமிழை ஆராய்ந்த இடமாகிய பொதியில் மலை.
`அதன்கண் உண்டான சந்தன மரத்தின் தேய்வை` என்க.
சந்தனத்தைத் தொய்யிலாக எழுதாமல் வாளா பூசிக் கொண்டாள்.
தம் இடத்தை விட்டு வந்து இங்கு எழுவதற்கு ஒளிந்துள்ள மலைகள் தாம் எழுவதற்குரிய காலத்தை எதிர் நோக்கிச் சிறிதே எட்டிப் பார்ப்பது போலும் கொங்கைகளையுடையவள்.
திடர் இடுதல் - மண்ணில் மறைந்திருத்தல்.
`அது போன்ற நிலையினை யுடைய மலைகள்` என்க.
கண் செய்தல் - எட்டிப் பார்த்தல்.
வழி கோலுதலும் ஆம்.
கடல் பட்ட இன்னமுதம் - பாற்கடலில் உருவாகிக் காணப் பட்ட இனிய அமுதம்.

பண் :

பாடல் எண் : 91

திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தம் இடத்தை விட்டு வந்து இங்கு எழுவதற்கு ஒளிந்துள்ள மலைகள் தாம் எழுவதற்குரிய காலத்தை எதிர் நோக்கிச் சிறிதே எட்டிப் பார்ப்பது போலும் கொங்கைகளையுடையவள்.
திடர் இடுதல் - மண்ணில் மறைந்திருத்தல்.
`அது போன்ற நிலையினை யுடைய மலைகள்` என்க.
கண் செய்தல் - எட்டிப் பார்த்தல்.
வழி கோலுதலும் ஆம்.
கடல் பட்ட இன்னமுதம் - பாற்கடலில் உருவாகிக் காணப் பட்ட இனிய அமுதம்.
மடல் பட்ட - பூவின் இதழ்கள் பொருந்திய.
மாலையால் சுற்றிக் கட்டப்பட்ட கூந்தலையுடையவள்.
இளங் கிளி - நன்கு முதிராத கிளி.
தூமொழி - வஞ்சனை கலவாத சொல்.

பண் :

பாடல் எண் : 92

மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மடல் பட்ட - பூவின் இதழ்கள் பொருந்திய.
மாலையால் சுற்றிக் கட்டப்பட்ட கூந்தலையுடையவள்.
இளங் கிளி - நன்கு முதிராத கிளி.
தூமொழி - வஞ்சனை கலவாத சொல்.

பண் :

பாடல் எண் : 93

வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்கள் தம்மியல்பில் தாம் நின்றனவாயினும், காணும் காளையருள் சிலர் தம்மை அவள் விரும்பி நோக்குகின்றா ளாகக் கருத நிற்றலை இங்கு, ``வஞ்சனை`` என்றார்.
இயல்பிலே கவர்ச்சியில்லாதவற்றை அஞ்சனம் தீட்டி அழகாக்கினாள் எஞ்சா - அணிய வேண்டுவனவற்றுள் எதுவும் குறையாத.
மணி - நவமணி, ஆழி - மோதிரம்.
வளை - தோள் வளை.
தான் மங்கைப் பருவத்தள் அல்லளாயினும் அப்பருவத்தாரோடு ஒப்பத் தோன்றும் ஆசையால் அவர்தம் அணிகலங்களையெல்லாம் தானும் அணிந்து ஒப்பனை செய்து கொண்டாள்.

பண் :

பாடல் எண் : 94

மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எஞ்சா - அணிய வேண்டுவனவற்றுள் எதுவும் குறையாத.
மணி - நவமணி, ஆழி - மோதிரம்.
வளை - தோள் வளை.
தான் மங்கைப் பருவத்தள் அல்லளாயினும் அப்பருவத்தாரோடு ஒப்பத் தோன்றும் ஆசையால் அவர்தம் அணிகலங்களையெல்லாம் தானும் அணிந்து ஒப்பனை செய்து கொண்டாள்.
மணி ஆர்ந்த - அழகு நிறைந்த.
`வெண்மணலை இடமாகக் கொண்டு, அதன்கண் எழுதினாள்` என்க.
மங்கையர்போல நன்கு ஒப்பனை செய்து கொண்டு தோழியருடன் தெருவில் வந்தவள், `தனது அழகுக்கு ஏற்ற காதலன் மன்மதன் ஒருவனே` என்னும் எண்ணத்தினால் அவன் உருவத்தை இவள் வெண்மணலிலே எழுதிப் பார்க்க எழுதிக் கொண்டிருந்தாள்.
அதுபொழுது சிவபெருமான் தன் இயல்பிலே தான் இடப வாகனத்தின்மேல் அங்கு உலாப்போந்தான்.
அவனைக் கண்டதும் இப்பெதும்பை அவன் காமனிலும் மிக்க அழகுடையனாய் இருந்தலைக் கண்டு கரை கடந்த காதலை உடையளாய் நிலையழிந்து நின்றுவிட்டாள்.
கரும்பு + சிலை = கருப்புச் சிலை.
சிலை - வில்.
மன்மதனுடைய தேர் தென்றற் காற்று.
அஃது உருவம் இல்லதாயினும் அதன் போக்கினைச் சில கீறல்களால் எழுதிக் காட்டுதல் உண்டு.
ஒருப்பட்டு - காதலனாக ஏற்றுக் கொண்டு.
உடன்- அவனுக்குரிய பொருள்கள் பலவற்றையும் தொகுத்து.
ஊர்தல் - மீதூர்தல், `மீதூர்தற்கு ஏதுவான தீர்த்தன்` என்க.
தீர்த்தன் - பரிசுத்தன்.
வான மால் ஏறு - வானவருள் ஒருவனாகிய மாயோனாம் விடை.
வானம் - உயர்வும் ஆம்.
தான் - பெதும்பை.
`நன்று அறிவார் அமரச் சொன்ன` என்க.
அமர - யாவரும் விரும்பும் வண்ணம்.
நலம் - மகளிர்க்கு உரியன வாகச் சொல்லப்பட்ட உறுப்பிலக்கணங்கள்.
நிறை - மனம்.
தன் இயல்பில் ஓடாதவாறு நிறுத்தும் ஆற்றல்.
கை வண்டு - வளையல்.
இது முன்னர்க் கூறப்படாமையால் இப் பொழுது மற்றை அணிகலங்களுடன் அணிந்து வந்தாள் என்க.
கண் வண்டு, உருவகம்.
கலை - உடை.
நெய் விண்ட - மண நெய் பூசப்பட்ட ``நின்றொழிந்தாள்`` என்பது ஒரு சொல்.

பண் :

பாடல் எண் : 95

தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் காமன்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 96

கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி ஆர்ந்த - அழகு நிறைந்த.
`வெண்மணலை இடமாகக் கொண்டு, அதன்கண் எழுதினாள்` என்க.
மங்கையர்போல நன்கு ஒப்பனை செய்து கொண்டு தோழியருடன் தெருவில் வந்தவள், `தனது அழகுக்கு ஏற்ற காதலன் மன்மதன் ஒருவனே` என்னும் எண்ணத்தினால் அவன் உருவத்தை இவள் வெண்மணலிலே எழுதிப் பார்க்க எழுதிக் கொண்டிருந்தாள்.
அதுபொழுது சிவபெருமான் தன் இயல்பிலே தான் இடப வாகனத்தின்மேல் அங்கு உலாப்போந்தான்.
அவனைக் கண்டதும் இப்பெதும்பை அவன் காமனிலும் மிக்க அழகுடையனாய் இருந்தலைக் கண்டு கரை கடந்த காதலை உடையளாய் நிலையழிந்து நின்றுவிட்டாள்.
கரும்பு + சிலை = கருப்புச் சிலை.
சிலை - வில்.
மன்மதனுடைய தேர் தென்றற் காற்று.
அஃது உருவம் இல்லதாயினும் அதன் போக்கினைச் சில கீறல்களால் எழுதிக் காட்டுதல் உண்டு.
ஒருப்பட்டு - காதலனாக ஏற்றுக் கொண்டு.
உடன்- அவனுக்குரிய பொருள்கள் பலவற்றையும் தொகுத்து.
ஊர்தல் - மீதூர்தல், `மீதூர்தற்கு ஏதுவான தீர்த்தன்` என்க.
தீர்த்தன் - பரிசுத்தன்.
வான மால் ஏறு - வானவருள் ஒருவனாகிய மாயோனாம் விடை.
வானம் - உயர்வும் ஆம்.
தான் - பெதும்பை.
`நன்று அறிவார் அமரச் சொன்ன` என்க.
அமர - யாவரும் விரும்பும் வண்ணம்.
நலம் - மகளிர்க்கு உரியன வாகச் சொல்லப்பட்ட உறுப்பிலக்கணங்கள்.
நிறை - மனம்.
தன் இயல்பில் ஓடாதவாறு நிறுத்தும் ஆற்றல்.
கை வண்டு - வளையல்.
இது முன்னர்க் கூறப்படாமையால் இப் பொழுது மற்றை அணிகலங்களுடன் அணிந்து வந்தாள் என்க.
கண் வண்டு, உருவகம்.
கலை - உடை.
நெய் விண்ட - மண நெய் பூசப்பட்ட ``நின்றொழிந்தாள்`` என்பது ஒரு சொல்.

பண் :

பாடல் எண் : 97

தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 98

நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 99

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பன்னிரண்டு பதின்மூன்றாம் ஆண்டுகள் மங்கைப் பருவம், மங்கை இடம் - மங்கைப் பருவத்தை அடைந்தவள் இருக்க வேண்டிய இடம்.

பண் :

பாடல் எண் : 100

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பன்னிரண்டு பதின்மூன்றாம் ஆண்டுகள் மங்கைப் பருவம், மங்கை இடம் - மங்கைப் பருவத்தை அடைந்தவள் இருக்க வேண்டிய இடம்.

பண் :

பாடல் எண் : 101

அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மங்கையது உறுப்புக்களின் வருணனை.
நோக்கு - பார்வை.
இட்டிடை - சிறிய இடை.
வஞ்சி - கொடி.
பணைத் தோள் - பருத்த தோள்.
வேய் - மூங்கில்.
அல்குல் - (கண்ணி - 64, உரை பார்க்க) மட்டு விரி தேனோடு பூக்கள் மலர்கின்ற.
அறல் - கருமணல்.

பண் :

பாடல் எண் : 102

இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 103

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மங்கையது உறுப்புக்களின் வருணனை.
நோக்கு - பார்வை.
இட்டிடை - சிறிய இடை.
வஞ்சி - கொடி.
பணைத் தோள் - பருத்த தோள்.
வேய் - மூங்கில்.
அல்குல் - (கண்ணி - 64, உரை பார்க்க) மட்டு விரி தேனோடு பூக்கள் மலர்கின்ற.
அறல் - கருமணல்.

பண் :

பாடல் எண் : 104

வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாசிகை, வாசிகைபோல வளைத்துத் தலையில் சூடும் மாலை.
கண்டி - கழுத்தணி.

பண் :

பாடல் எண் : 105

காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 106

பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூவை நாகணவாய்ப் புள்.
கோட்டி கொள்ளுதல்- திறம்படப் பேசுதலை மேற்கொள்ளல்.
ஏல்வை - பொழுது, கோடு - சிகரம்.

பண் :

பாடல் எண் : 107

வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விலங்கல் - மலை.

பண் :

பாடல் எண் : 108

தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாழ்தல் - தங்குதல்.
வாழுமே - உயிர் வாழ்வாளே! மம்மர் - மயக்கம்.

பண் :

பாடல் எண் : 109

தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவனுடைய அழகுக்கு ஒத்த அழகுடைய வளாய் நான் இருக்கின்றேனா` என்பதை இருவர் தோற்றத்தையும் ஒப்பு நோக்கும் முறையால் ஆராய்கின்றாள்.
ஆடவர் போகமாலையே `தார்` எனப்பட, மகளிர் போகமாலை `மாலை` எனப்படுமாயினும் அதனையும் பொதுப்பட இங்கு, ``தார்`` என்றார்.
ஏர், எழில் இவை ஒருபொருட் சொற்கள்.
ஒப்பு நோக்கியபின் ஒப்புத் துணிந்தவளாய், அவன் மார்பை அணைய விரைந்து, அது கூடாமையால் பெருமூச் செறிந்தாள்.

பண் :

பாடல் எண் : 110

தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவனுடைய அழகுக்கு ஒத்த அழகுடைய வளாய் நான் இருக்கின்றேனா` என்பதை இருவர் தோற்றத்தையும் ஒப்பு நோக்கும் முறையால் ஆராய்கின்றாள்.
ஆடவர் போகமாலையே `தார்` எனப்பட, மகளிர் போகமாலை `மாலை` எனப்படுமாயினும் அதனையும் பொதுப்பட இங்கு, ``தார்`` என்றார்.
ஏர், எழில் இவை ஒருபொருட் சொற்கள்.
ஒப்பு நோக்கியபின் ஒப்புத் துணிந்தவளாய், அவன் மார்பை அணைய விரைந்து, அது கூடாமையால் பெருமூச் செறிந்தாள்.

பண் :

பாடல் எண் : 111

உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காதல் வெள்ளம் கரையிறந்ததாக அதனிடையே அகப்பட்டு ஆற்ற மாட்டாது வெப்பமாக மூச் செறிந்தாள்.

பண் :

பாடல் எண் : 112

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதினான்காம் ஆண்டு முதல் பத்தொன்பதாம் ஆண்டு முடிய மடந்தைப் பருவம்.
தமிழின் தெய்வம் - தமிழ்த் தெய்வம்.
இஃது இனிமையும், அழகும் பற்றி வந்த உவமை.
`இன்` வேண்டா வழிச் சாரியை.
திருந்திய - பெண்மை நலம் நன்கமைந்த.
சீர் - சிறப்பு.
``ஏய்ந்த சீர்`` என்பதனைச் சிலைக்கு அடையாக்குக.

பண் :

பாடல் எண் : 113

ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலை - வில், `சிறந்த வில்` என்றற்கு ``ஈசன் சிலை`` என்றார்.
``சேய் வலங்கை வேல்`` என்றதும் இது பற்றி.
சேய் - முருகன்.
வலம் - வெற்றி.
வெற்றியைத் தருவதனை `வெற்றி` என்றே உபசரித்தார்.
இனி `வலக்கை` என்பது மெலிந்து நின்றதாக உரைத்த லும் ஆம்.
மஞ்சு - மேகம்.
``மேகத்தோடு வரும் மதி`` என்றது கூந்தலைக் குறித்தற்கு.
மாமதி - நிறைமதி.
போல் அசை.
சிலை, பவளம், வேல் முத்து, வஞ்சி (கொடி), வேய் (மூங்கில்), தாமரை மொட்டு, மாமதி இவைகளை நிரலே புருவம், செவ்வாய், கண், எயிறு (பல்), நுசுப்பு (இடை), தோள், கொங்கை, முகம் இவற்றுடன் பொருத்திக் கொள்க.
சிலை முதலாக அனைத்திலும் இரண்டன் உருபு விரிக்க.
உருவம் - அழகு.
பங்கயப் போது - தாமரை மலர்.
சேவடி - சிவந்த பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 114

வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 115

புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 116

கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலை - வில், `சிறந்த வில்` என்றற்கு ``ஈசன் சிலை`` என்றார்.
``சேய் வலங்கை வேல்`` என்றதும் இது பற்றி.
சேய் - முருகன்.
வலம் - வெற்றி.
வெற்றியைத் தருவதனை `வெற்றி` என்றே உபசரித்தார்.
இனி `வலக்கை` என்பது மெலிந்து நின்றதாக உரைத்த லும் ஆம்.
மஞ்சு - மேகம்.
``மேகத்தோடு வரும் மதி`` என்றது கூந்தலைக் குறித்தற்கு.
மாமதி - நிறைமதி.
போல் அசை.
சிலை, பவளம், வேல் முத்து, வஞ்சி (கொடி), வேய் (மூங்கில்), தாமரை மொட்டு, மாமதி இவைகளை நிரலே புருவம், செவ்வாய், கண், எயிறு (பல்), நுசுப்பு (இடை), தோள், கொங்கை, முகம் இவற்றுடன் பொருத்திக் கொள்க.
சிலை முதலாக அனைத்திலும் இரண்டன் உருபு விரிக்க.
உருவம் - அழகு.
பங்கயப் போது - தாமரை மலர்.
சேவடி - சிவந்த பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 117

வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறங்கு - துடை; ஆழித்தேர் - சக்கரத்தையுடையதேர்.
அல்குல் - (கண்ணி. 64 உரை பார்க்க.)

பண் :

பாடல் எண் : 118

திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு.
மற்றொரு மதியம் - வானத்தில் இயல்பாய் உள்ள சந்திரனுக்கு வேறான மற்றொரு சந்திரன்.
இது மயக்க அணி.
நாள் மீன் - அசுவினி, பரணி முதலிய நட்சத்திரங்கள்.
`அவைகட்குக் கணவன் சந்திரன்` என்பது புராணம்.
அதனால், `அவை அங்ஙனம் மயங்கிச் சூழ்ந் தாற்போல்` என்றது தற்குறிப்பேற்ற அணி.
கண்டம் - கழுத்து.
`அணிகலங்கள் மொய்த்தமையால் (நிறைந்தமையால்) ஆரவாரம் (புகழுரை) மிகப் பெருகி` என்க.

பண் :

பாடல் எண் : 119

முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு.
மற்றொரு மதியம் - வானத்தில் இயல்பாய் உள்ள சந்திரனுக்கு வேறான மற்றொரு சந்திரன்.
இது மயக்க அணி.
நாள் மீன் - அசுவினி, பரணி முதலிய நட்சத்திரங்கள்.
`அவைகட்குக் கணவன் சந்திரன்` என்பது புராணம்.
அதனால், `அவை அங்ஙனம் மயங்கிச் சூழ்ந் தாற்போல்` என்றது தற்குறிப்பேற்ற அணி.
கண்டம் - கழுத்து.
`அணிகலங்கள் மொய்த்தமையால் (நிறைந்தமையால்) ஆரவாரம் (புகழுரை) மிகப் பெருகி` என்க.
வித்தகம் - சதுரப்பாடு; திறமை, கள் - தேன்.
அது பூ மாலையைக் குறித்தது.
கடாம், இங்குக் கத்தூரி, இவை வேறு பொருளாம் நயம் தோற்றி நின்றன.
கலவை - சந்தனக் கலவை - கைபோதரல் - தோழியர்களால் கொண்டு வரப்படுதல்.
அவைகளைக் கொண்டு வரும் தோழியர் இவளது அருகிலும், சேய்மையிலும் நின்றதை `உள்ளும், புறம்பும் செறிவு` என்றார்.
அவர் அங்ஙனம் நின்றது இவளை நோக்கியாகலின் ``அமைத்து`` என்றார்.
காளிங்கம் - நீலமணி.
தாள் - அடிப்பாகம்.
`தாளை யுடைய தாமம்` என்க.
தாமம் - மாலை.
நெற்றியிலும் ஓர் இரத்தினமாலை கட்டுவர்.
நுதல் - நெற்றி.
`தோள் எங்கும் அப்பி` என்க.
தண் - குளிர்ச்சி.
சதுர் - பெருமை.
அது `சதிர்` என மருவி வழங்கும்.
``வண்ணம் பெற`` என்றதனால்.
சாந்து, `செஞ்சாந்து` என்க.
மட்டித்தல் - பூசுதல்.

பண் :

பாடல் எண் : 120

கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 121

காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பண் :

பாடல் எண் : 122

தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வித்தகம் - சதுரப்பாடு; திறமை, கள் - தேன்.
அது பூ மாலையைக் குறித்தது.
கடாம், இங்குக் கத்தூரி, இவை வேறு பொருளாம் நயம் தோற்றி நின்றன.
கலவை - சந்தனக் கலவை - கைபோதரல் - தோழியர்களால் கொண்டு வரப்படுதல்.
அவைகளைக் கொண்டு வரும் தோழியர் இவளது அருகிலும், சேய்மையிலும் நின்றதை `உள்ளும், புறம்பும் செறிவு` என்றார்.
அவர் அங்ஙனம் நின்றது இவளை நோக்கியாகலின் ``அமைத்து`` என்றார்.
காளிங்கம் - நீலமணி.
தாள் - அடிப்பாகம்.
`தாளை யுடைய தாமம்` என்க.
தாமம் - மாலை.
நெற்றியிலும் ஓர் இரத்தினமாலை கட்டுவர்.
நுதல் - நெற்றி.
`தோள் எங்கும் அப்பி` என்க.
தண் - குளிர்ச்சி.
சதுர் - பெருமை.
அது `சதிர்` என மருவி வழங்கும்.
``வண்ணம் பெற`` என்றதனால்.
சாந்து, `செஞ்சாந்து` என்க.
மட்டித்தல் - பூசுதல்.
`தன் தோழியர்கள், அமர் தோழியர்கள்` என்க.
அமர்தல் - விரும்புதல்.
தவிசு - ஆசனம்.
பின்னும் ஓர் காமரம்- முன் பாடியது போகப் பின்னும் ஓர் பண்ணினை `யாழின்கண் அமைத்து` என்க.
விரும்பும் பண்கள் தோற்றுமாறு இசைகள் வேறு வேறு வகையாக எழும்படி நரம்புகளைக் கட்டுதல் வேண்டும் ஆதலின் அதனை ``அமைத்து`` என்றார்.
மன்னும் விடம் - நிலைபெற்றுள்ள விடத்தைக் கொண்டுள்ள.
வண்ணக் கண்டம் - கரிய கண்டம்.
வேதியன் - வேதத்தை ஓதுபவன்; சிவபெருமான்.
மகளிர் மடல் பாடுதல் இல்லையெனினும் பலர் அறியப் பாடாமல் தான் இருக்குமிடத்திலே தோழியர் இடையே நகை உண்டாகும்படி தான் சிவபெருமான்மேல் கொண்ட காதலால் நாண் இறந்து பாடுவாள்போலப் பொய்யாகப் பாடத் தொடங்கினாள்.
மடலாவது, ஆடவன் ஒருவன் தான் காதலித்த கன்னிகை தனக்குக் கிட்டாமையால் ஆற்றாது தான் உயிர்விடும் நிலையில் உள்ளதைத் தெருக்கள் தோறும் சென்று தெரிவித்துப் பாடுதல்.
அது நாணத்தையே அணிகலமாகக் கொண்ட மகளிர்க்கு இயல்வதில்லை.
அதனால் மகளிர் மடல் பாடியதாகத் தமிழில் இலக்கியம் இல்லை.
ஆயினும் இவள் தன் இல்லத்திற்குள் தன் தோழியர்முன் வேடிக்கை யாகச் சிவபெருமானை முன் வைத்து மடல் பாடத் தொடங்கினாள்.

பண் :

பாடல் எண் : 123

தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பண் :

பாடல் எண் : 124

விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈண்டு - `அவள் பாடுகின்றாள்` என்றது `இந்த நேரத்தில் கேட்டு` என்க.
அடல் - பகைவரை வெல்லுதல்.
வேல், இங்கு முத்தலை வேல்; சூலம்.
வில் மேரு மலையாகில் வில், மால் வல்லான் - மயக்கத்தைத் தர வல்லவன்.
கோலம் - அழகு - மணி - தன் கழுத்தில் உள்ள மணி - அதன் கழுத்தில் உள்ள மணி.
ஏறு - அந்த மணியினின்றும் எழுந்து எங்கும் பரவுகின்ற ஓசை.
ஆங்கு நோக்கு வாள் - அந்த ஓசை வந்த வழியைப் பார்க்கின்றவள்.
அணி - அழகு.
ஆங்கு - அப்பொழுதே.
அணி ஆர்ந்த கோட்டி - வரிசை வரிசையாய் அமர்ந்திருந்த தோழியர் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 125

வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பண் :

பாடல் எண் : 126

மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தன் தோழியர்கள், அமர் தோழியர்கள்` என்க.
அமர்தல் - விரும்புதல்.
தவிசு - ஆசனம்.
பின்னும் ஓர் காமரம்- முன் பாடியது போகப் பின்னும் ஓர் பண்ணினை `யாழின்கண் அமைத்து` என்க.
விரும்பும் பண்கள் தோற்றுமாறு இசைகள் வேறு வேறு வகையாக எழும்படி நரம்புகளைக் கட்டுதல் வேண்டும் ஆதலின் அதனை ``அமைத்து`` என்றார்.
மன்னும் விடம் - நிலைபெற்றுள்ள விடத்தைக் கொண்டுள்ள.
வண்ணக் கண்டம் - கரிய கண்டம்.
வேதியன் - வேதத்தை ஓதுபவன்; சிவபெருமான்.
மகளிர் மடல் பாடுதல் இல்லையெனினும் பலர் அறியப் பாடாமல் தான் இருக்குமிடத்திலே தோழியர் இடையே நகை உண்டாகும்படி தான் சிவபெருமான்மேல் கொண்ட காதலால் நாண் இறந்து பாடுவாள்போலப் பொய்யாகப் பாடத் தொடங்கினாள்.
மடலாவது, ஆடவன் ஒருவன் தான் காதலித்த கன்னிகை தனக்குக் கிட்டாமையால் ஆற்றாது தான் உயிர்விடும் நிலையில் உள்ளதைத் தெருக்கள் தோறும் சென்று தெரிவித்துப் பாடுதல்.
அது நாணத்தையே அணிகலமாகக் கொண்ட மகளிர்க்கு இயல்வதில்லை.
அதனால் மகளிர் மடல் பாடியதாகத் தமிழில் இலக்கியம் இல்லை.
ஆயினும் இவள் தன் இல்லத்திற்குள் தன் தோழியர்முன் வேடிக்கை யாகச் சிவபெருமானை முன் வைத்து மடல் பாடத் தொடங்கினாள்.
ஈண்டு - `அவள் பாடுகின்றாள்` என்றது `இந்த நேரத்தில் கேட்டு` என்க.
அடல் - பகைவரை வெல்லுதல்.
வேல், இங்கு முத்தலை வேல்; சூலம்.
வில் மேரு மலையாகில் வில், மால் வல்லான் - மயக்கத்தைத் தர வல்லவன்.
கோலம் - அழகு - மணி - தன் கழுத்தில் உள்ள மணி - அதன் கழுத்தில் உள்ள மணி.
ஏறு - அந்த மணியினின்றும் எழுந்து எங்கும் பரவுகின்ற ஓசை.
ஆங்கு நோக்கு வாள் - அந்த ஓசை வந்த வழியைப் பார்க்கின்றவள்.
அணி - அழகு.
ஆங்கு - அப்பொழுதே.
அணி ஆர்ந்த கோட்டி - வரிசை வரிசையாய் அமர்ந்திருந்த தோழியர் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 127

கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழை - காதணி.
வாய் துலக்குதல் - இயல் பாகவே சிவந்திருக்கின்ற வாயை மேலும் சிவக்கும்படி தம்பலந் தின்னல்.
நுதல் - நெற்றி, அது முன்பே குங்குமத்தால் சிவந்துள்ளது.
எனவே, `நுதல் சிவப்ப வாய் துலக்கி முகத்தைக் காட்டி` என்க.
இவையெல்லாம் தனது காதற் குறிப்புத் தோன்றச் செய்தாள் ஆகலின், ``நாட்டார்கள் எல்லாரும் கண்டார்`` என்றார்.
பலரும் அறியத் தான் சிவபெருமானைக் காதலித்து நின்றமை யால், `அவன் பேரருளாளன் ஆதலின் அவனும் எனது கருத்திற்கு உட்படுவான்; ஆயினும் என் ஆயத்தார் அதற்குத் தடையாய் இல்லாமல் இசைதல் வேண்டுதல்` என்பாள், ``இங்கு ஆயம் நல்லாய்ப் படுமேற்படும்`` என்றார்.
`நல்லவாய்` என்பது ``நல்லாய்`` எனக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 128

எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழை - காதணி.
வாய் துலக்குதல் - இயல் பாகவே சிவந்திருக்கின்ற வாயை மேலும் சிவக்கும்படி தம்பலந் தின்னல்.
நுதல் - நெற்றி, அது முன்பே குங்குமத்தால் சிவந்துள்ளது.
எனவே, `நுதல் சிவப்ப வாய் துலக்கி முகத்தைக் காட்டி` என்க.
இவையெல்லாம் தனது காதற் குறிப்புத் தோன்றச் செய்தாள் ஆகலின், ``நாட்டார்கள் எல்லாரும் கண்டார்`` என்றார்.
பலரும் அறியத் தான் சிவபெருமானைக் காதலித்து நின்றமை யால், `அவன் பேரருளாளன் ஆதலின் அவனும் எனது கருத்திற்கு உட்படுவான்; ஆயினும் என் ஆயத்தார் அதற்குத் தடையாய் இல்லாமல் இசைதல் வேண்டுதல்` என்பாள், ``இங்கு ஆயம் நல்லாய்ப் படுமேற்படும்`` என்றார்.
`நல்லவாய்` என்பது ``நல்லாய்`` எனக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 129

செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உறும்`` என்பது முதலிய பலவற்றிற்கும் `உறுவாள்` என்பதுபோலப் பொருள் உரைக்க.
சரணம் கம்பிக்கும் - கால் நடுங்குவாள்; இஃது அவன் நிலை தளர்ந்தமையைக் குறித்தது.
செறித்தல் - சரிந்து வீழாதபடி இறுகக் கட்டுதல்.
ஆகம் - மார்பு.
சிவனுடைய மார்பு.

பண் :

பாடல் எண் : 130

காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``உறும்`` என்பது முதலிய பலவற்றிற்கும் `உறுவாள்` என்பதுபோலப் பொருள் உரைக்க.
சரணம் கம்பிக்கும் - கால் நடுங்குவாள்; இஃது அவன் நிலை தளர்ந்தமையைக் குறித்தது.
செறித்தல் - சரிந்து வீழாதபடி இறுகக் கட்டுதல்.
ஆகம் - மார்பு.
சிவனுடைய மார்பு.
``நாணல் உறும் நெஞ்சம்`` பெயரெச்சத் தொடர்.
நெஞ்சம் ஒட்டாமையால் (தடுத்தலால்) தன் மார்பிலேயே தன் கையைத் தான் அணைத்துச் சிவனைத் தழுவியது பொய்யாய் இருத்த லால் `இவன் என் கைக்கு அகப்படவில்லையே` என்று சொல்லி இவ் வாறு பெரிதும் அல்லற்படுவாள்.

பண் :

பாடல் எண் : 131

புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே
அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நாணல் உறும் நெஞ்சம்`` பெயரெச்சத் தொடர்.
நெஞ்சம் ஒட்டாமையால் (தடுத்தலால்) தன் மார்பிலேயே தன் கையைத் தான் அணைத்துச் சிவனைத் தழுவியது பொய்யாய் இருத்த லால் `இவன் என் கைக்கு அகப்படவில்லையே` என்று சொல்லி இவ் வாறு பெரிதும் அல்லற்படுவாள்.
இவ்வாறு மூழ்கு பெருந்துயரத்தால் அவள் தன்னுடைய மேனியே பொன்பூத்தமையால் கொன்றை மாலை போல ஆய்விட, தான் சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை யாகிய அந்தப் பொன் போலும் பொருளைப் பெறவிரும்பும் காரணத் தால் புலம்பலாயினாள்.
``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.

பண் :

பாடல் எண் : 132

தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இவ்வாறு மூழ்கு பெருந்துயரத்தால் அவள் தன்னுடைய மேனியே பொன்பூத்தமையால் கொன்றை மாலை போல ஆய்விட, தான் சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை யாகிய அந்தப் பொன் போலும் பொருளைப் பெறவிரும்பும் காரணத் தால் புலம்பலாயினாள்.
``கொண்டு`` என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.

பண் :

பாடல் எண் : 133

செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருபது முதல் இருபத்தைந்தாம் ஆண்டு முடிய அரிவைப் பருவம்.
சீறடி - சிறிய பாதம்.
அம் - கேழ் - அழகிய நிறம்.
அஃதாவது, `நிறத்தால் அழகு பெற்றவள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 134

திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திங்கள் முகம்; தாரகை (விண்மீன் நெற்றியில் அணிந்துள்ள முத்துப் பட்டம்; வில் புருவம்; புயல் (மேகம்) கூந்தல்; செவ்வாய் சிலேடை.
`செவ்வாய்` என்னும் கிரகம்; சிவந்த வாய்.
இவைகளால் வானத்தைத் தன்னிடமே விளங்கக் காட்டுவாள்.
மின் ஆர் - மின்னல் பொருந்திய; இதனை வானுக்கு அடை யாகக் கொள்க.
தன் ஆவார் - தன்னை யொப்பவர்.

பண் :

பாடல் எண் : 135

மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திங்கள் முகம்; தாரகை (விண்மீன் நெற்றியில் அணிந்துள்ள முத்துப் பட்டம்; வில் புருவம்; புயல் (மேகம்) கூந்தல்; செவ்வாய் சிலேடை.
`செவ்வாய்` என்னும் கிரகம்; சிவந்த வாய்.
இவைகளால் வானத்தைத் தன்னிடமே விளங்கக் காட்டுவாள்.
மின் ஆர் - மின்னல் பொருந்திய; இதனை வானுக்கு அடை யாகக் கொள்க.
தன் ஆவார் - தன்னை யொப்பவர்.

பண் :

பாடல் எண் : 136

இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சொல், திருக்குறள்.
சொல்லால் - சொல் சொல்லப்படுதலால்.
இயற்கை அழகு இருப்பினும் ஆடை அணிகலங் களாகிய செயற்கையழகு இல்லாவிடில் மற்றை மகளிர் இகழ்ச்சி செய்வார்கள்` என்று கருதி அவைகளை அணிந்தாள் என்க.

பண் :

பாடல் எண் : 137

அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அல்குல் (கண்ணி - 64 உரை பார்க்க.) நல்கூர்தல், வறுமை எய்தல்.
அஃது இங்கே சிறுகுதலைக் குறித்தது.
இடையே - மேலும், கீழும் உள்ள உறுப்புக்கள் செழித்திருக்க அவைகளுக்கு இடையே துவண்டு மெலிய.
கண்டாள்- செய்தாள்.
என்றது, இயற்கையைச் செயற்கை போலக் கூறியது.

பண் :

பாடல் எண் : 138

இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நல்கூர்தல், வறுமை எய்தல்.
அஃது இங்கே சிறுகுதலைக் குறித்தது.
இடையே - மேலும், கீழும் உள்ள உறுப்புக்கள் செழித்திருக்க அவைகளுக்கு இடையே துவண்டு மெலிய.
கண்டாள்- செய்தாள்.
என்றது, இயற்கையைச் செயற்கை போலக் கூறியது.

பண் :

பாடல் எண் : 139

பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பரிசு அமைத்தாள் - தக்கபடி அமைத்தாள்.

பண் :

பாடல் எண் : 140

பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொன் அரி மாலை - பொன்னால் அரிப்புத் தொழில் அமையச் செய்த மாலை.
இது பெரும்பான்மை மார்பில் தொங்கவிடுவது.
சிறுபான்மை தலையிலும் சுற்றப்படும்.
கழுத்துக்கு மகிழ்ச்சியில்லையாயினும் அதனைப் பொலிவித்தலை மகிழ் வித்ததாகக் கூறினார்.
பொன் அன்னாள் - இலக்குமி போன்றவள்.

பண் :

பாடல் எண் : 141

இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வாங்கியது தோழியரிடமிருந்து.
இமையவர்தம் அண்ணல் சிவபெருமான்.
`அவன்மேல் தான் முன்னமே இட்ட ஆசையால்` என்க.
இட்ட - வைத்த.

பண் :

பாடல் எண் : 142

பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 143

இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பிறப்பைக் கைவிட்டமையாவது, தன் மாட்டு வந்தவனை ஏற்றல் அல்லது, தான் பிறனிடம் செல்லாமையாகிய தனது வழக்கத்தைக் கைவிட்டமை.
``தமிழ்`` என்றது தமிழ் இசையை.

பண் :

பாடல் எண் : 144

இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எழில் நலம் காண்பது இன்றன்றே - எழுச்சியுள்ள எனது அழகின் சிறப்பை அளந்தறியும் நாள் இன்றன்றோ? அஃதாவது, `எனது அழகு சிவபெருமானது உள்ளத்தைக் கவரும் ஆற்றலுடையதா, இல்லையா - என்பதை அளந்தறிய வேண்டிய நாள் இன்றேயாம்` என்றாள்.
கொள்ளேனேல் - அவனது உள்ளத்தை யான் கவர்ந்து கொள்ளாவிடில்.
பெண்மை நமக்கு நன்று அன்று - நம்முடைய பெண்மை நலம் நமக்கு உதவுவதன்று.
சென்றவன் - உலாப் போந்தவன் சிவபெருமான்.

பண் :

பாடல் எண் : 145

ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஒண்களபம் - சிவபெருமானது திருமேனி யிலிருந்து காற்றிற் பறந்து திருநீறும் சந்தனச் சாந்தின் துகளும், `இவற் றில் ஆடும்` என்க.
ஆடும் - மூழ்குவாள்.
கண், அரிவை தன் கண்கள்.
(களவு) என்பது அம் பெற்று `களவம்` என வருவது எதுகை நோக்கி, ``களபம்`` எனத் திரிந்து நின்றது.
களவு ஆடுவதுபோல் - நோக்கியும் நோக்காதது போல, ``கண் களவு கொள்ளுதல் சிறு நோக்கம்`` * என்றார் திருவள்ளுவரும்.
கட்டுரைத்தல் - தன் குறிப்பினை வெளிப்படுத்தல்.

பண் :

பாடல் எண் : 146

கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலை - உடை.
திமிர்தல் - பூசுதல்.
ஆர்த்தல் - கச்சினால் இறுகக் கட்டுதல்.
துகில் - உயர்ந்த உடை.

பண் :

பாடல் எண் : 147

சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூழும் - சுற்றுவாள்.
அயாவுயிர்தத்தல் - பெரு மூச்செறிதல்.

பண் :

பாடல் எண் : 148

அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை தொழுது வளை காத்தாள் - மற்ற வருடன் கூடத் தானும் அகங்கைகளைக் குவித்துக் கும்பிட்டமையால் வளைகள் `கழன்று வீழாதபடி காத்துக் கொண்டாள்.
ஆயினும் உடையை வீழாமல் காத்தாள் இல்லை.
நலம் தோற்றாள் - அழகினை இழந்தாள்.

பண் :

பாடல் எண் : 149

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இருபத்தாறாவது முதல் முப்பத்தொன்றாம் ஆண்டு முடியத் தெரிவைப் பருவம்.
ஆர்தல் - நிரம்புதல்.
ஆரா அமுதம் - சுவை மிகுதியால் தெவிட்டாத அமுதம்.
அவயவம், உறுப்புக்கள் பலவும் நல்லனவாய் அமைந்த உடம்பு.
இஃது ஆகுபெயர், உடம்பு, பெண் உடம்பு, `அமுதம் உடம்பு பெற்றது போல்வாள்` என்றது இல் பொருள் உவமை.
சீர்மை- செம்மை.
ஓரா - பொருள் உணர வாராத மழலை - என்க.
`மழலையின் மருள் ஓசை வாய்ச் சொல்` என மாறுக.
அஃதா வது, `மழலை போலும் ஓசையையுடைய வாய்ச் சொல்` என்பதாம்.
இஃது இனிது பொருள் விளங்குதல் இன்மையும் இனிமை யுடைமையும் பற்றி வந்த உவமை.
`மங்கையரும், மடந்தையரும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.
பேரிளம் பெண் இனிது விளங்க எடுத்துப் பேசுவாள்.
தெரிவை இரண்டும் இன்றி இடைநிலையதாகப் பேசுவாள்` என்பதாம்.
``மருள்``, உவம உருபு.
`இத்தன்மைத்தான சொல் விடியற் காலத்தை ஒக்கும்; அஃதாவது பொருள் விளங்கியும், விளங்காதும் நிற்கும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 150

மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓரா - பொருள் உணர வாராத மழலை - என்க.
`மழலையின் மருள் ஓசை வாய்ச் சொல்` என மாறுக.
அஃதா வது, `மழலை போலும் ஓசையையுடைய வாய்ச் சொல்` என்பதாம்.
இஃது இனிது பொருள் விளங்குதல் இன்மையும் இனிமை யுடைமையும் பற்றி வந்த உவமை.
`மங்கையரும், மடந்தையரும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.
பேரிளம் பெண் இனிது விளங்க எடுத்துப் பேசுவாள்.
தெரிவை இரண்டும் இன்றி இடைநிலையதாகப் பேசுவாள்` என்பதாம்.
``மருள்``, உவம உருபு.
`இத்தன்மைத்தான சொல் விடியற் காலத்தை ஒக்கும்; அஃதாவது பொருள் விளங்கியும், விளங்காதும் நிற்கும்` என்பதாம்.
அருள், இங்குக் காதற் குறிப்பு.
உச்சி - உச்சிப் போது; நண்பகல்.
உருவம் - சாயல் ``வெப்பம் தீர்ந்து`` என்பது, அதன் எதிர்மறையாகி `குளிர்ச்சியைத் தந்து` எனப் பொருள் தந்தது.
இவ்வெச்சம் ``செம்மை`` என்புழித் தொக்கு நின்ற `உடைமை` என்னும் வினைக் குறிப்புப் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 151

வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அருள், இங்குக் காதற் குறிப்பு.
உச்சி - உச்சிப் போது; நண்பகல்.
உருவம் - சாயல் ``வெப்பம் தீர்ந்து`` என்பது, அதன் எதிர்மறையாகி `குளிர்ச்சியைத் தந்து` எனப் பொருள் தந்தது.
இவ்வெச்சம் ``செம்மை`` என்புழித் தொக்கு நின்ற `உடைமை` என்னும் வினைக் குறிப்புப் பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 152

தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பாதமும், அகங்கையும் தளிர் போன்றுள்ளன` என்பதாம்.
செம்மை - செம்மை நிறம்.
அந்தம் - எல்லை.
சீர் - அழகு.
இதுகாறும் ஒருத்தியே பல சிறுபொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறினார்; இனிப் பெரும் பொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 153

சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அந்தம் - எல்லை.
சீர் - அழகு.
இதுகாறும் ஒருத்தியே பல சிறுபொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறினார்; இனிப் பெரும் பொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 154

கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பயோதரம்`` என்பது `கொங்கை` எனவும், `மேகம்` எனவும் இருபொருளைத் தரும் ஆதலால் அது சிலேடையா யிற்று.
ஆகவே, ``கண் ஆர்`` என்பதை, `வானமாகிய இடத்து நிறைந்த` என மேகத்திற்கும், `கண்ணிற்கு நிறைந்த`, அல்லது `மார்பிடம் நிறைந்த` எனக் கொங்கைக்கும் பொருத்திக்கொள்க.
கண், கொங்கை யின் கண்ணுமாம்.
``இடை`` என்பதற்கு, `மின்னல்போலும் இடை` என உரைக்க.
கார் - கார்ப்பருவம்.
அதற்கு இளமையாவது தொடக்க மும், நடுவும்.
சவி - ஒளி; என்றது தோற்றத்தை.
வண்ணம் - அழகு.

பண் :

பாடல் எண் : 155

மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மேனி மாந்தளிர்; வாய் முருக்கிதழ்` என மாற்றி யுரைக்க.
இவை இரண்டும் இளவேனிற் பருவத்து உருவாவன.
சிறு பொழுதுகள் பலவும் பெரும்பான்மை பற்றிக் காரும், வேனிலுமாக அடக்கப்பட்டன.
`மாந்தருள்` என உருபு விரிக்க.

பண் :

பாடல் எண் : 156

அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறிவுடையோராயின் ஆவி காப்பர் ஆதலின், அவர்களை ``நின்மின்`` எனவும், அல்லாதார் ஆவி விடுவர் ஆதலின், அவர்களை, ``போம்`` எனவும் பறையறைவதாகக் கூறினார்.
இது தற்குறிப்பேற்றம் `அறைவ போலும் சிலம்பினைச் சேர்த்தினாள்` என்க.
தேர் அல்குல் - தேர் போலும் அல்குல்.
ஓராது - (அளவு கடந்து அகலின் இடம் இன்றாம்` என்பதனை) ஆராயாது, அகலல் உறாது என்று - `அகலல் தகாது ஆதலின் அடங்குக` என்று கருதித் துகிலையும் மேகலையும் சுற்றிக் கட்டினாள் - என்க.

பண் :

பாடல் எண் : 157

சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று சீராலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 158

அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறிவுடையோராயின் ஆவி காப்பர் ஆதலின், அவர்களை ``நின்மின்`` எனவும், அல்லாதார் ஆவி விடுவர் ஆதலின், அவர்களை, ``போம்`` எனவும் பறையறைவதாகக் கூறினார்.
இது தற்குறிப்பேற்றம் `அறைவ போலும் சிலம்பினைச் சேர்த்தினாள்` என்க.
தேர் அல்குல் - தேர் போலும் அல்குல்.
ஓராது - (அளவு கடந்து அகலின் இடம் இன்றாம்` என்பதனை) ஆராயாது, அகலல் உறாது என்று - `அகலல் தகாது ஆதலின் அடங்குக` என்று கருதித் துகிலையும் மேகலையும் சுற்றிக் கட்டினாள் - என்க.
முந்துறவே - இவைகட்கெல்லாம் முன்ன தாகவே.
அடைய - முழுதும்.
பூட்டு உறீஇ - உள் அடக்கி நிறுத்துதலை உறுவித்து.
தொடி - தோள்வளை.
ஏவி - செய்வித்து.
`தோள்களை மெலிய ஒட்டாமல் செய்ய மாட்டாத தொடிகளை, `செய்யும்` என அறியாமையாற் கருதி ஏவினாள்` என்றபடி.
தோள்கள் மெலிந்தவழி அவை கழன்றொழிவன அல்லது காக்க மாட்டாமை அறிக.

பண் :

பாடல் எண் : 159

பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முந்துறவே - இவைகட்கெல்லாம் முன்ன தாகவே.
அடைய - முழுதும்.
பூட்டு உறீஇ - உள் அடக்கி நிறுத்துதலை உறுவித்து.
தொடி - தோள்வளை.
ஏவி - செய்வித்து.
`தோள்களை மெலிய ஒட்டாமல் செய்ய மாட்டாத தொடிகளை, `செய்யும்` என அறியாமையாற் கருதி ஏவினாள்` என்றபடி.
தோள்கள் மெலிந்தவழி அவை கழன்றொழிவன அல்லது காக்க மாட்டாமை அறிக.

பண் :

பாடல் எண் : 160

நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆரம் - கண்ட சரம்.
மறைத்தது, ஆடவர் வருந் தாமைப் பொருட்டு.
வில் பகர்தல் - ஒளி தருதல்.
`மை யாகப் பகரும்` என ஆக்கம் விரித்து, `மழை (மேகம்) என்று சொல்லப்படும் கண்` என உரைக்க.
காவி - குவளை மலர்.
கதம் - கோபம்.
தாவிய அஞ்சனம் - பரந்த மை.
``அகலல் உறாதென்று சூழ்ந்தாள், மனம் கவரும் என்பதனால் பூட்டுறீஇ, காப்பு ஏவி, மறைத்து, கதம் தணிப்பாள் போல`` என்பன வும் தற்குறிப்பேற்றங்கள்.

பண் :

பாடல் எண் : 161

காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மை யாகப் பகரும்` என ஆக்கம் விரித்து, `மழை (மேகம்) என்று சொல்லப்படும் கண்` என உரைக்க.
காவி - குவளை மலர்.
கதம் - கோபம்.
தாவிய அஞ்சனம் - பரந்த மை.
``அகலல் உறாதென்று சூழ்ந்தாள், மனம் கவரும் என்பதனால் பூட்டுறீஇ, காப்பு ஏவி, மறைத்து, கதம் தணிப்பாள் போல`` என்பன வும் தற்குறிப்பேற்றங்கள்.

பண் :

பாடல் எண் : 162

ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகுலம் - மனக் கவலை.
``குணம்`` என்றது நடையையும், குரலையும்.

பண் :

பாடல் எண் : 163

பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல கருதிக் கட்டுதல் - குழல், பனிச்சை, அளகம் முதலிய பல வடிவங்களாகக் கட்டுதல்.
கோடி - மிகப் பல.
கூழை - கடைகுவிதல்.
கலை - கை வினைத் திறம்.
உள் யாதும் இன்றிப் புறம்.
கமழ்தல் - கமழும் பொருள் எதுவும் இல்லாமல் தானே இயற்கையில் கமழ்தல்.
கீழ்த் தாழ்தல் - நீண்டு தொங்குதல்.
கள் - தேன்.
ஆவி - அகிற்புகை.

பண் :

பாடல் எண் : 164

துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல கருதிக் கட்டுதல் - குழல், பனிச்சை, அளகம் முதலிய பல வடிவங்களாகக் கட்டுதல்.
கோடி - மிகப் பல.
கூழை - கடைகுவிதல்.
கலை - கை வினைத் திறம்.
உள் யாதும் இன்றிப் புறம்.
கமழ்தல் - கமழும் பொருள் எதுவும் இல்லாமல் தானே இயற்கையில் கமழ்தல்.
கீழ்த் தாழ்தல் - நீண்டு தொங்குதல்.
கள் - தேன்.
ஆவி - அகிற்புகை.

பண் :

பாடல் எண் : 165

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செங்கழுநீர்ப் பட்டு - செங்கழுநீர்ப் பூப்போலும் பட்டு.
குங்குமத்தால் எழுதுதல் மார்பிலும், தோளிலும்.
தாமம் - மாலை.
நுதல் - நெற்றி.

பண் :

பாடல் எண் : 166

பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கவறு - சூதாடு கருவி.
மணி - சூதுக்கு உரிய காய்கள்.
நற்கு - நன்கு பொருது - சூது போர் ஆடுதல்.

பண் :

பாடல் எண் : 167

தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிலைபேறு - காத்தல் தொழில்.
தோற்றம் - படைத்தல் தொழில்.
கேடு - அழித்தல் தொழில்.
`இம்மூன்றையும் சிவனது திருவடியே செய்யும்` என்பது பற்றி.
`இவையாய் நின்ற தாளான்`` என்றார்.
``போற்றி யருளுக நின் ஆதியாம் பாத மலர்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
சிவனது சத்தியை அவனது திருவடியாக உபசரித்தல் வழக்கு.
கண்ணி - 169, 170 - இல் உள்ள ``சொலற்கரிய தேவாதி தேவன் சிவனாயின், தேன் கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல்`` என்பதை இங்குக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 168

நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை
ஏணார் ஒழிக எழிலொழிக பேணும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாண், `ஏண்` - என்னும் அஃறிணைப் பொருள்கள் `ஆர்` புணர்ந்து உயர்திணை போலச் சொல்லப்பட்டன.
கேளாய நாண் - மகளிர்க்குச் சிறந்த நட்பாகிய நாண், ஏண் - வலிமை.
நலத்தார் - அழகினை உடைய மகளிர் என இவ்வாறு தன்னையே பிறர்போலக் கூறினார்.
அழகுடைய மகளிர்க்கு இடையில்லாமை இயல்பாதலின் எழுந்து சென்று அவனைக் காண இயலாது.
அதனால் அவனே வலிந்து தனது கொன்றை மாலையை எனக்கு ஈயக்கடவன்.
அங்ஙனம் அவன் தான் கடவதை உணர்ந்து கொன்றை மாலையை ஈயாதே அப்பாற் போய் விடுவானாயின், எனது நாண் ஒழியட்டும்; வலிமை ஒழியட்டும் அழகு ஒழியட்டும்; `இவைகளை யெல்லாம் ஒழியாது காப்பாற்றும் குலமகளிர்கள் நாங்கள்` என்று சொல்லிக் கொள்பவர்கள் எனக்கு உறவாகாது ஒழியட்டும்; அந்தக் குல மகளி ரால் குற்றம் உடையவர்களாகச் சொல்லப்படுகின்ற என் போன்ற மகளிரே, என்னுடன் வாருங்கள்; `போதும், போதும்` என்று துயரத் தால் வருந்துகின்றவர்களே, அத்துயரம் நீங்க வேண்டுமாயின் அவனை நினையுங்கள் - என்று இன்ன பல சொல்லி அங்கலாய்த்து அலம் - போதும் அலத்தீர் - போதும் என்று சொல்கின்றவர்களே.
`அலந்தீர்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 169

குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய

பாடல் எண் : 170

தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 171

கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்டால் - (பின்பு ஒருஞான்று அவனை நான் காணாமலா போய்விடுவேன்?) கண்டால்.
அறிவன் - அவன் இவ் வாறு கடவது கடந்த பழிக்குத் தீர்வு காணும் வழியை நான் அறிவேன்.
என்று இவ்வாறெல்லாம் வாய்ப் பறைசாற்றினாளே யன்றி, உண்மையில்.
கை சோர்ந்து வளம் தோற்றாள் - செயலற்று வீழ்ந்து, தன் பெண்மை வளத்தை யெல்லாம் முற்ற இழந்துவிட்டாள்.
முப்பத்திரண்டு முதல் நாற்பதாவது ஆண்டு முடியப் பேரிளம்பெண் பருவம்.
ஒள் தாங்கு - அழகைக் கொண்டிருக் கின்ற.
பணி மொழி - பணிந்த மொழி.

பண் :

பாடல் எண் : 172

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முப்பத்திரண்டு முதல் நாற்பதாவது ஆண்டு முடியப் பேரிளம்பெண் பருவம்.
ஒள் தாங்கு - அழகைக் கொண்டிருக் கின்ற.
பணி மொழி - பணிந்த மொழி.

பண் :

பாடல் எண் : 173

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கட்டுரை`` * என்றது திருக்குறளை மேம் படுத்தமை, அவ்வுரைக்கு இலக்கியமாய் இலங்கினமை.
மண்டலம் - வட்டம்.
உகிர் - நகம்.
`அவை கண்ணாடிபோல விளங்கின` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 174

கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கட்டுரை`` * என்றது திருக்குறளை மேம் படுத்தமை, அவ்வுரைக்கு இலக்கியமாய் இலங்கினமை.
மண்டலம் - வட்டம்.
உகிர் - நகம்.
`அவை கண்ணாடிபோல விளங்கின` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 175

அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரவம் அஞ்சியது, தனது படத்தை வெல்லுதல் பற்றி ``பரந்தகன்ற`` என்பது மீமிசைச் சொல்.
`கொடிபோல நுடங்கும் இடை` என்க.
நுடங்குதல் - துவளுதல்.
எஞ்சாத - மாற்றுக் குறையாத.

பண் :

பாடல் எண் : 176

பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செப்பு - கிண்ணம்.
முகடு - உச்சி.
கிண்ணத்தைக் கவிழ்த்து வைக்கும்பொழுது அதன் அடிப்புறம் உச்சி யாய் விளங்கும்.
`அதன்கண் மணி அழுத்தி வைத்தன போல` என்க.
மணி - நீலமணி.
ஏந்தி - அண்ணாந்து.
ஒத்து - இரண்டும் இணை யொத்து.
சுணங்கு, திதலை.
இவை தேமலின் வகை.
சூழ்போந்து - முழுதும் படர்ந்து.
``கண்டார்`` என்றது ஆடவரை.
அணங்கு - நோய்.
காதல் நோய்.
``அமுதம்`` என்பதற்கு.
`அமுதக் குடம்` என உரைக்க.
அதுகண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது.
இணங்கு ஒத்து - ஆடவர் இணங்குதற்குப் பொருந்தி.
கோலங்கட்கெல்லாம் கோலம் - அழகுகட் கெல்லாம் அழகு.
``நாகிள`` என்பது மீமிசைச் சொல்.
வேய் - மூங்கில்.
அங்கை - அகங்கை.

பண் :

பாடல் எண் : 177

சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 178

கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செப்பு - கிண்ணம்.
முகடு - உச்சி.
கிண்ணத்தைக் கவிழ்த்து வைக்கும்பொழுது அதன் அடிப்புறம் உச்சி யாய் விளங்கும்.
`அதன்கண் மணி அழுத்தி வைத்தன போல` என்க.
மணி - நீலமணி.
ஏந்தி - அண்ணாந்து.
ஒத்து - இரண்டும் இணை யொத்து.
சுணங்கு, திதலை.
இவை தேமலின் வகை.
சூழ்போந்து - முழுதும் படர்ந்து.
``கண்டார்`` என்றது ஆடவரை.
அணங்கு - நோய்.
காதல் நோய்.
``அமுதம்`` என்பதற்கு.
`அமுதக் குடம்` என உரைக்க.
அதுகண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது.
இணங்கு ஒத்து - ஆடவர் இணங்குதற்குப் பொருந்தி.
கோலங்கட்கெல்லாம் கோலம் - அழகுகட் கெல்லாம் அழகு.
``நாகிள`` என்பது மீமிசைச் சொல்.
வேய் - மூங்கில்.
அங்கை - அகங்கை.

பண் :

பாடல் எண் : 179

காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காந்தள் - காந்தள் மலர்.
ஒரு மலரை மட்டுமன்று.
அம்மலரின் குலம் முழுவதையுமே பழித்தாள்.
காதலாள் - காதலுக்கு ஏற்றவள்.
சாந்தம் - சந்தனம்.
அகலம் - மார்பு.

பண் :

பாடல் எண் : 180

ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டும் ஏய்ந்து குவிந்து - இரண்டு இதழ்களும் ஒன்று சேர்ந்து குவிந்து.
மறிந்து - பின் நீங்கி.
(இங்ஙனம் செயற்பட்டு) திரண்டு - நடுவிடம் திரண்டு.
இருபால் தேய்ந்து - கடையிருபக்கமும் சிறுகி.
துடித்து - துடித்தலைச் செய்து.
செழும் பவளம் காய்ந்து இலங்கி - செம்மையான பவழத்தைக் கோபித்து விளங்கி.
முத்தமும் - பற்களும்.
தேனும் - மொழியும்.
(இவையிரண் டும் உருவகம்) பொதிந்து - நிரம்பி.
திறை - கப்பம்.
`திறைகொள்ளல்` என்பது.
`தன்வழிப்படுத்தல்` என்னும் பொருட்டாய், ``முனிவரை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
உம்மை சிறப்பு.
இதனால் ஏனை ஆடவரைத் திறை கொள்ளல் சொல்ல வேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 181

முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டும் ஏய்ந்து குவிந்து - இரண்டு இதழ்களும் ஒன்று சேர்ந்து குவிந்து.
மறிந்து - பின் நீங்கி.
(இங்ஙனம் செயற்பட்டு) திரண்டு - நடுவிடம் திரண்டு.
இருபால் தேய்ந்து - கடையிருபக்கமும் சிறுகி.
துடித்து - துடித்தலைச் செய்து.
செழும் பவளம் காய்ந்து இலங்கி - செம்மையான பவழத்தைக் கோபித்து விளங்கி.
முத்தமும் - பற்களும்.
தேனும் - மொழியும்.
(இவையிரண் டும் உருவகம்) பொதிந்து - நிரம்பி.
திறை - கப்பம்.
`திறைகொள்ளல்` என்பது.
`தன்வழிப்படுத்தல்` என்னும் பொருட்டாய், ``முனிவரை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
உம்மை சிறப்பு.
இதனால் ஏனை ஆடவரைத் திறை கொள்ளல் சொல்ல வேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 182

வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வரி - செவ்வரிகள்.
அஞ்சனம் ஆடி - மையி னுள் முழுகி.
மணிகள் - கண்மணிகள்.
`மணிகளின் உருவம்` என்க.
``சலஞ்சலம்`` என்பது `சலம் + சலம்` என இரு மொழியாய் முறையே `நீர், வஞ்சனை` என இருபொருளையும் `சலஞ்சலம்` என ஒருமொழி யாய் `ஒருவகைச் சங்கு` என வேறு ஒரு பொருளையும் தருதலால் சிலேடை.
வஞ்சனை, ஆடவரை நோக்காதது போல நோக்குதல்.
மகளிர் கண்களைக் கருமையும் விசாலமும், அலைவும் பற்றிக் கட லோடு ஒப்புமை கூறுதற்கு ஏற்ப, அவை சலஞ்சலமும் உடையவாயின என நயம்படக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 183

தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வரி - செவ்வரிகள்.
அஞ்சனம் ஆடி - மையி னுள் முழுகி.
மணிகள் - கண்மணிகள்.
`மணிகளின் உருவம்` என்க.
``சலஞ்சலம்`` என்பது `சலம் + சலம்` என இரு மொழியாய் முறையே `நீர், வஞ்சனை` என இருபொருளையும் `சலஞ்சலம்` என ஒருமொழி யாய் `ஒருவகைச் சங்கு` என வேறு ஒரு பொருளையும் தருதலால் சிலேடை.
வஞ்சனை, ஆடவரை நோக்காதது போல நோக்குதல்.
மகளிர் கண்களைக் கருமையும் விசாலமும், அலைவும் பற்றிக் கட லோடு ஒப்புமை கூறுதற்கு ஏற்ப, அவை சலஞ்சலமும் உடையவாயின என நயம்படக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 184

குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதிமுகம், வினைத்தொகை.
அலம்ப - ஒலிக்க.
நாறுதல் - இயற்கையில் நாறுதல்.
வாசிகை - நெற்றிப் பட்டம்.

பண் :

பாடல் எண் : 185

யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மதிமுகம், வினைத்தொகை.
அலம்ப - ஒலிக்க.
நாறுதல் - இயற்கையில் நாறுதல்.
வாசிகை - நெற்றிப் பட்டம்.

பண் :

பாடல் எண் : 186

பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரையில், ``கேசம்`` என்பதன் பின் `அந்தம்` என்பது தொகுக்கப்பட்டது.
பழிப்பின்மை, அதன் எதிர்மறையாகிய புகழ் உடைமையைக் குறித்தது.
சீத அரி - குளிர்ந்த புகை.
குளிர்ச்சி.
இங்கு நறுமணத்தின் மேற்று.

பண் :

பாடல் எண் : 187

பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மாது ஆர்ந்த - அழகு நிறைந்த.
இதனை, ``சொல்லார்`` என்பதன் பொருளாகிய தோழியர்க்கு அடையாக்குக.
`பல்லாண்டினால் ஏத்த` என்க.
``பல்லாண்டு`` என்பது காரிய ஆகுபெயராய், அதனை உணர்த்தும் சொல்லைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 188

கண்அவனை அல்லாது காணா செவியவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இந்த இரு கண்ணிகளையும் ஒன்றிணைக்க ஒரு நேரிசை வெண்பாவாம்.
இவ்வெண்பாவை இவள் தானே பாடினாளாக நாயனார் அருளிச் செய்தார்.
`அழல் அங்கை கொண்டான் மாட்டு அன்பு அஃது` என இயைத்து முடிக்க.
``அஃது`` என்பது அத்தன்மைத் தாய் இருத்தலைக் குறித்தது.
ஆல், அசை.
`அஃதான்று` என்பது பாடம் அன்று.
`இசையின் கண்கேளா என உருபு விரித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 189

கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இந்த இரு கண்ணிகளையும் ஒன்றிணைக்க ஒரு நேரிசை வெண்பாவாம்.
இவ்வெண்பாவை இவள் தானே பாடினாளாக நாயனார் அருளிச் செய்தார்.
`அழல் அங்கை கொண்டான் மாட்டு அன்பு அஃது` என இயைத்து முடிக்க.
``அஃது`` என்பது அத்தன்மைத் தாய் இருத்தலைக் குறித்தது.
ஆல், அசை.
`அஃதான்று` என்பது பாடம் அன்று.
`இசையின் கண்கேளா என உருபு விரித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 190

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 191

அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - காற்று `விண்பால் காற்றுப் போல விரைந்து செல்கின்ற அரணம்` என்க.
இவை திரிபுரம்.
ஆங்கு - அது போல.
`இரவில் எரி ஆடும் இறைவன்` என்க.

பண் :

பாடல் எண் : 192

ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு கேடில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - காற்று `விண்பால் காற்றுப் போல விரைந்து செல்கின்ற அரணம்` என்க.
இவை திரிபுரம்.
ஆங்கு - அது போல.
`இரவில் எரி ஆடும் இறைவன்` என்க.

பண் :

பாடல் எண் : 193

வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிலம்படியையுடைய மாதாரார்` என்க.
மால் - மயக்கம்.
நொந்தாள் போல் - வெறுத்தாள் போல.
``கை சோர்ந்து`` என்பதில் கை, இடைச் சொல்.
மட்டு - தேன்.
இவரும் - கொப்புளிக்கின்ற.

பண் :

பாடல் எண் : 194

வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று நொந்தாள்போல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 195

கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் கொட்டிமைசேர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிலம்படியையுடைய மாதாரார்` என்க.
மால் - மயக்கம்.
நொந்தாள் போல் - வெறுத்தாள் போல.
``கை சோர்ந்து`` என்பதில் கை, இடைச் சொல்.
மட்டு - தேன்.
இவரும் - கொப்புளிக்கின்ற.
``கொட்டு இமை சேர் பெண்`` என்றது, `மானுடப் பெண் இனம்` என்றபடி.
மஞ்சு - மேகம்.
குடுமி, மாளிகைகளின் சிகரம்.
`வீற்றிருந்த.
போந்த` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``தெரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன.
``தெரு ஆரவாரம் பெரிது`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
ஈற்றில் நிற்கும் இவ்வெண்பாப் பிற்காலத்தவரால் சேர்க்கப் பட்டதாகக் கருதப்படுகின்றது.
(சென்னைச் சைவ சித்தாந்த சமாசப் பதிப்பு - 1940.)
`பக்குவ வேறு பாட்டாற் பலவகைப்படும் நல்லோர் யாவரும் பெருமானது காட்சியால் தம் வசம் இழப்பர்` என்பது இப்பிரபந்தத்தின் உள்ளுறை.
திருக்கைலாய ஞான உலா முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 196

பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 197

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

சிற்பி