பட்டினத்து அடிகள் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி


பண் :

பாடல் எண் : 1

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்
டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற
மேயுன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மெய்த்தொண்டர், பயன் கருதாது பணி செய்பவர்.
அவர் செல்லும் நெறி, ``தன்கடன் அடியேனையும் தாங்குதல்;- என்கடன் பணி செய்து கிடப்பதே`` 1 - எனக் கொண்டு ஒழுகுதல்.
`மனத் தொண்டு, வாய்த் தொண்டு, கைத்தொண்டு ஆதலின் அது செய்பவரை, ``மிக நற்பணி செய் கைத்தொண்டர் என்றும் `பயன் கருதியாவது அவருடன் கூடி அப்பணியைச் செய்திலேன்`` என்றும் கூறினார்.
உவத்தல் - மகிழ்தல், அது மகிழ்ச்சியோடு செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.
உண்பதற்கு - பயன்கொள்ளுதற் பொருட்டு.
பயன் கொள்ளுதற் பொருட்டுத் திருத்தொண்டினை உயர்த்துப் பேசுதலால், அதனைப் பொய்த் தொண்டு பேசுதலாகக் கூறினார்.
மனத்தின்கண் உள்ள பொய்ம்மை அதன் வழிச் செய்யப்படும் தொண்டினையும் சார்வதாகும்.
``புறம் புறம்`` என்னும் அடுக்குப் பன்மைப் பொருட்டாய், `எப்பொழுதும்` எனப் பொருள் தந்தது.
புறமே போற்றுதலாவது மெய்த் தொண்டிற்கு ஏதுவான மெய்யன்பு உள்ளத்தில் இன்றிப் பொதுவான அன்பினால் போற்றுதல்.
`இவ்வாறு உன்னைப் போற்றினும் யானும் உன் அடியவருள் ஒருவனே` என்பார் தம்மை, ``இத்தொண்டனேன்`` என்றும், `மெய்த்தொண்டர் செய்யும் பணியையன்றி, என்போன்ற தொண்டர் செய்யும் பணியை நீ விரும்புவாயோ` என்பார், ``இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ`` என்றும் கூறினார்.
``கச்சி ஏகம்பனே`` என்பதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 2

ஏகம்ப னேயென்னை ஆள்பவ
னேயிமை யோர்க்கிரங்கி
போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக
பொங்கும்ஐவாய்
நாகம்பொன் னாரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகம் - திருமேனி.
ஆதரித்து - விரும்பி, ஏனைய வெளி.

பண் :

பாடல் எண் : 3

தரித்தேன் மனத்துன் திகழ்திரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தரித்தேன் - தாங்கினேன்.
`உன்திருநாமம் மனத்துத் தரித்தேன்` என்க.
வரித்தேன் - இசைபாடும் `தேன்` என்னும் வண்டுகள்.
`தரித்தேன்; அதனால் என் வல்வினையை அரித்தேன்` என உரைக்க.
ஏழைமை - அறியாமை.
சிரித்தேன் - இகழ்ந்தேன்.

பண் :

பாடல் எண் : 4

தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட் கையம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனியெம் ஏகம்ப
னேயென் றுகந்தவர்தாள்
தளிதரு தூளியென் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அந்திச் செக்கர்.
.
.
தன்மை பெற்று என் மனம் நின் திருவடிவில் சென்று தெளிதருகின்றது; இனி நின் அளிதரு அருட்கு ஐயம் இல்லை` என இயைத்து முடிக்க.
``தெளிதருகின்றது`` என்பதன் பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
அளிதரல் - கனிதல்.
``தெளிதரு, அளிதரு`` என்பவற்றில் `தரு` துணைவினை.
அருட்கு - அருள் கிடைத்தற்கு.
`திருவடிவம்` என்பது பாடமாயின், `திருவடிவத்தின் கண்` என ஏழாவது விரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 5

பெற்றுகந் தேனென்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பத்தின்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
கச்சி, நகரம்.
ஏகம்பம், அந்நகரத்தின்கண் உள்ள ஓர் இடம்.
பற்று - நீங்காதிருத்தல்.
உகந்து - விரும்பி.
ஏறும் - இடபமும்.
உம்மை இறந்தது தழுவியது.
இடபத்தை உகந்தமையாவது, அது செய்த பிழையைப் பொறுத்து அதற்கு அருள்செய்தது.
அது செய்த பிழை யாவது, திருமாலின் ஊர்தியாகிய கருடனது செருக்கை இறைவன் ஆணையின்றித் தானே ஒறுத்து அடக்க முயன்றது.
இவ்வரலாற்றைக் காஞ்சிப் புராணத் தழுவக் குழைந்த படலத்திற் காண்க.
இங்ஙனம் இறைவன் அருள் செய்யும்படி இடபம் வழிபட்ட ஓர் இலிங்கம் திருவேகம்பத் திருக்கோயில் தீர்த்தக் கரையில் இருத்தல் காணலாம்.
சுற்று - சுற்றிக் கட்டுதல்.
ஏர் - அழகு.
`நின் துணையடியே என்றும் அர்ச்சனை செய்யப்பெற்று உகந்தேன்; என்கருத்து இனிதாக நின் பெருகு சீர் கற்று உகந்தேன்` என இயைத்துக் கொள்க.
`இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.
உகந்தேன் - மேலும் மேலும் விரும்பினேன்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 6

அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக் கயற்கலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாமெங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பத்தின்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
கச்சி, நகரம்.
ஏகம்பம், அந்நகரத்தின்கண் உள்ள ஓர் இடம்.
பற்று - நீங்காதிருத்தல்.
உகந்து - விரும்பி.
ஏறும் - இடபமும்.
உம்மை இறந்தது தழுவியது.
இடபத்தை உகந்தமையாவது, அது செய்த பிழையைப் பொறுத்து அதற்கு அருள்செய்தது.
அது செய்த பிழை யாவது, திருமாலின் ஊர்தியாகிய கருடனது செருக்கை இறைவன் ஆணையின்றித் தானே ஒறுத்து அடக்க முயன்றது.
இவ்வரலாற்றைக் காஞ்சிப் புராணத் தழுவக் குழைந்த படலத்திற் காண்க.
இங்ஙனம் இறைவன் அருள் செய்யும்படி இடபம் வழிபட்ட ஓர் இலிங்கம் திருவேகம்பத் திருக்கோயில் தீர்த்தக் கரையில் இருத்தல் காணலாம்.
சுற்று - சுற்றிக் கட்டுதல்.
ஏர் - அழகு.
`நின் துணையடியே என்றும் அர்ச்சனை செய்யப்பெற்று உகந்தேன்; என்கருத்து இனிதாக நின் பெருகு சீர் கற்று உகந்தேன்` என இயைத்துக் கொள்க.
`இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.
உகந்தேன் - மேலும் மேலும் விரும்பினேன்.
சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 7

வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோமல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடினல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`(எம்) தலை வணக்கம் நின் திருவடிக்கே செய்யும்; (யாம்) மையல் கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறிவோமல்லம்; (எம்) கவி நலம், வல் அரவின் குணக் குன்ற வில்லியாகிய நின் குளிர் கச்சி ஏகம்பம் பாடின் அல்லால் மற்றொரு தேவரைப் பாடும் கணக்கு அன்று` என இயைத்து உரைத்துக்கொள்க.
``மையல்`` என்றது இங்குத் திருவருட் பித்தினை.
இதனைத் தத்துவத்துறையில் `சிவராகம்` 1 என்பர்.
`இணங்கு` என்னும் முதனிலை வலித்தல் பெற்றுப் பெயராயிற்று.
மற்றோர் - பிறர்.
அரவின் குணக் குன்ற வில் - பாம்பாகிய நாணினையுடைய மலையாகிய வில்.
கணக்கு - முறைமை.
கணக்கு உடையதனை, ``கணக்கு`` என்றார்.
நலம் - இன்பம்.
இங்ஙனம் தம் அடிமைத் திறத்தை வலியுறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 8

நலந்தர நானொன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்களன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நல்லீர்கள்`` என்னும் விளியை முதற்கண் கொள்க.
`உங்கள் செயல் நலம் தர` என வினைமுதல் வருவித்துக் கொள்க.
கனல் திகிரி - நெருப்புப் போலும் கொடிய சக்கரம்.
``எல்லாம்`` என்பது எஞ்சாமை குறித்து நின்றது.
நிலம் தரமாக - பூமியளவாக; தரைமட்டம் ஆகும்படி.
எதுகை கெடுதலையும் நோக்காது, `நிரந்தரமாக` என ஓதுதல் பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 9

மின்களென் றார்சடை கொண்டலென்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்களென் றார்வெளிப் பாடுதம்
பொன்னடி பூண்டுகொண்ட
என்களென் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்களென் றாருல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கச்சி ஏகம்பத்தானைத் தன் பொன்னடி பூண்டு பிரிந் தறியார்` எனத் தொகுக்கப்பட்ட இரண்டன் உருபை விரித்து மாறிக் கூட்டி பின்னும்.
``தன்கண் என்றார்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
`சடை மின்கள்` என்றார்; `கண்டம் கொண்டல்` என்றார்; `மேனி வண்ணம் புலப்பாடு பொன்கள்` என்றார்; கொண்டல் என்கள் என்றாலும், உலகெல்லாம் நிலைபெற்ற தன்மைகள் தன்கள் என்றார் என்பது இப்பாட்டின் முதன்மைப் பொருள்.
``மின்கள்`` என்பதற்கு ஏற்ப, `சடைகள்` என உரைக்க.
உறுப்பின் பன்மையால் புலப்பாடும் பலவாயின.
``பொன்கள்`` என்னும் பன்மை அதன் சாதிபற்றி வந்தது.
அச்சாதியாவன.
`எவன்` என்னும் வினாப் பெயர் `என்` என்று ஆகி, `கள்` விகுதி ஏற்று ``என்கள்`` என வந்தது.
`எவைகள்` என்பது இதன் பொருள்.
`கொண்ட எவைகள் என்றாலும்` என்றது, `அவன் கொண்ட கோலங் களை எந்த எந்தப் பொருட்கு ஒப்பாகக் கூறியபோதிலும்` என்றவாறு.
`உண்மை, - உலகம் முழுதிலும் நிலைபெற்றுள்ள தன்மைகள் எல்லாம் தன்கள்` (அவனுடைய தன்மைகளே) என்பதாம்.
`தன்னகள்` என்பதில் அகரம் தொகுக்கப்பட்டது.
தன்ன - தன்னுடையன.

பண் :

பாடல் எண் : 10

தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலுஞ் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, அகப்பொருள் ஐந்திணைப் பாங்கற் கூட்டத்தில் தலைவன் பாங்கன் கழற்றெதிர் மறுத்தல் துறையது.
`தவத்தோரும், இமையவரும் ஏகம்பர்` என்க.
தாம், அசை.
வன்மையிற் குன்றாமை மதிலுக்கு அடை.
``ஏகம்பரது வண் கயிலைப் பொன்`` என்றது தலைவியை.
பொன் - திருமகள் போல்வாள்.
`பொன்னினது சாயல் முதலியன காதல் நோயை விளைத்தன` என்றான்.
மயிற் சாயல் - மயிலினது சாயல் போலும் சாயல், சேயரி - செவ்வரிகள்.
புரி - புரிந்த குழல் - கூந்தல், `மென்மையின்` என்பது எதுகை நோக்கி, `மென்மயின்` எனப் போலியாய் வந்தது.
சாய்தல் - மெலிதல்.
மருங்குல் - இடை.

பண் :

பாடல் எண் : 11

தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்மடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியொர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் அகப் பொருள் துறையதே.
துறை, பாங்கி யிற் கூட்டத்தில் தோழி தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தல்.
`கயிலையில் வந்து வினாவி` என்க.
`களிறு வினாவலாவது, கண்டீரோ` என வினாவுதல்.
இது தலைவன் தோழியோடு பேசத் தொடங்குதற்கு ஒரு வழியாகும்.
தொடர்ந்து நிகழ்த்தும் பேச்சி னிடையே கண்ட தலைவனது குறிப்பையே தோழி தலைவியிடம் ``புனம் விட்டு அகலார்`` எனக் குறித்தாள்.
``அவர்க்கு நான் என்ன சொல்வது`` என்பது குறிப்பெச்சம்.
சேய் - முருகன்.
ஆம் பொழுதும்- ``சேயனையார்`` என்பது `தலைவர்` என்னும் அளவாய் நிற்றலின், ஓர் என்பதற்கு முடிவாயிற்று.
முடியும் காலம் வரையில்.
``நம்`` என்பதை `நம் புனம்` என முன்னே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சியே கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலையெம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண் டடிவருத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூங்கொத்தும், இரு தழையும் ஆர் பொழில்` இரு- பெருமை.
பெரியன.
ஆர் - நிறைந்த.
`பொற்பு ஆர் கயிலை` என இயையும்.
`கோங்கத்தொடு` என உருபு விரிக்க.
கோங்கு.
ஒருவகை மரம்.
ஆர் அணங்கு - அரியளாகிய தேவ மாது.
``ஆர் அணங்கே`` என்பதை முதலிற் கொண்டு உரைக்க.
எம் பொன் ஒருத்தி பாங்கு ஒத்து இருந்தனை - எங்கள் பொன் போல்பவளாகிய மகள் ஒருத்தியின் தன்மையோடே ஒத்த தன்மையை உடையவளாய் இருக்கின்றாய்.
(ஆகையால்) `உப்பொழுது அருவி ஆடி வரச் சென்றுள்ள அவள் இங்கு வந்தபின் நீ செல்` என்க.
ஆங்கு - அம்மலையிடத்தில்.
திருந்து, இழை - திருத்தமான அணிகலன்களை யுடையவள்.
`படர் கல் அருவி ஆடி வந்தால்` என இயையும்.
படர் - ஓடுகின்ற, அருவி.
கல் - மலை.
``அடி வருத்து`` என்பது, `உன் பாதத்தை நோகச் செய்` எனப் பொருள் தந்து, `நடந்து செல்` என்னும் கருத்தை உணர்த்திற்று.
இவ்வாற்றால் இப்பாட்டுப் பாங்கி மதியுடன் பாட்டின்பின் ஒருசார் ஆசிரியர் வேண்டும் `நாண நாட்டம்` என்பதில், `வேறுபடுத்திக் கூறல்` என்னும் துறையது.
அஃதாவது, தலைவி அருவியாடும் ஆரவாரத்தில் தோழியர் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று தலைவனொடு கூடி வந்தபொழுது அவள் முன்னையினும் மிக்க மகிழ்ச்சியும், பொலிவும் உடையளாய் இருத்தலைக் கண்டு அவளது செயலை நன்கு உணர்ந்து கொண்ட தோழி தான் அங்ஙனம் உணர்ந்துகொண்டதைத் தலைவிக்குக் குறிப்பால் உணர்த்துவாளாய், அவள் நாணும்படி, தெய்வமாக உணர்ந்தாள் போலக் கூறுதல்.
அங்ஙனம் கூறுதலால் தலைவி தனது புதுநலத்தினையும், அதன் காரணத்தையும் தோழி தெரிந்து கொண்டாள் என அறிந்து நாணமுற்று, ஏதேனும் கூறுவாள்.
தனது களவொழுக்கத்தைத் தோழிக்கும் மறைத்து ஒழுகிய தலைவி பின் மறையாது தோழிக்குக் கூற உடன்படுதல் இக்கூற்றிற்குப் பயன்.

பண் :

பாடல் எண் : 13

வருத்தந் தரும்மெய்யுங் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
காக்கும் தொழிலெமக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஐய`` என்பதை முதலிலும், ``நடக்க`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க.
மெய் - உடம்பு.
அது வருத்தந் தருதற்குக் காரணம் வேட்டையாடி வருதல்.
தழை - பூவும், பச்சிலையும் விரவ, அழகிய மேகலாபரணம்போலக் கைவன்மையால் தொடுக்கப்பட்ட தொரு உடை வகை.
இஃது இளமகளிரது கண்ணையும், கருத்தையும் கவர்வதாய் இருக்கும்.
வேட்டையாடி வருபவன் கையில் நாணில் வைத்துத் தொடுக்கப்பட்ட வில், அல்லது ஈட்டி முதலிய கருவிகள் இருக்க வேண்டுவதுபோய், இளமகளிரது மனத்தைக் கவரும் தழை யிருத்தலைச் சுட்டி, `உம் வினா பொய்யாக வினாவும் வினாவாகும்` என்பதைத் தோழி தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்தி நகைப்பாள், ``வருத்தம் தரும் மெய்யும், மா வினவும் கருத்தும், (இடையே) கையில் தழையும்`` தம்முள் ஒவ்வாதனவாய் உளவே - என்பாள், ``கருத்து அந்தரிக்கும்`` என்றாள்.
``கருத்து`` என்பதிலும் `கருத்தும்` என எண்ணும்மை விரிக்க.
`வேறுபாடு` என்னும் பொருட்டாகிய `அந்தரம்` என்னும் வடமொழிப் பெயர் அடியாக, ``அந்தரிக்கும்`` என்னும், வினைமுற்றுப் பிறந்தது.
அந்தரிக்கும் - வேறுபடா நின்றன.
`இன்று அந்தரிக்கும்` என இயைக்க.
இன்று இப்பொழுது.
திரு - திருவருள் `கயிலையில் எமக்கு இப்புனம் காக்கும் தொழில் (உளது); அதைத் தவறவிடுவது எமக்குத் தொழில் அன்று; ஆதலின் நீவிர் இவ்விடம் விட்டு அப்பால் நடக்க` என ``தொழில்`` என்பதன்பின் `உளது` என்பது எஞ்சி நின்றது.
`தீமை, பிழை` முதலிய பொருள்களைத் தருவதாகிய `துர்` துர் என்னும் வடமொழி இடைச்சொல் ஈற்றில் உகரம் பெற்றுவந்தது நிர் என்பது `நிரு` என வருதல்போல.
இப்பாட்டு தலைவன் பாங்கியை மதியுடன்படுத்தலில் கெடுதி வினாதலுள் வேழம் வினாதல் துறையது.
தோழி இங்ஙனம் இகழ்ந்துரைத் தாளாயினும் தலைவியது நிலைமையைக் குறிப்பால் உணர்ந்து இருவரும் ஒரு மனத்தராயதை உணர்ந்தேவிடுவாள்.

பண் :

பாடல் எண் : 14

எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிட்டு வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையும்
நோக்கம் கவர்கவென்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எம்மையும் - எப்பிறப்பிலும்.
கம்பர் - ஏகம்பர்.
உம்மையும் - (எம்மோடு) உங்களையும்.
மானிடம் - மக்கட் பிறப்பு.
`மானிடமாக` என ஆக்கம் விரிக்க.
விட்ட - விட்டன.
வாழவிட்டன.
வாழ்வோர் பலராதல் பற்றி விட்டதாகிய தொழிலும் பலவாயின.
`கயிலையில் இப்புனத்தே விட்டன` என்க.
`விட்டு` என்பது பாடம் அன்று.
`இங்கு வந்த மைந்தர்தம்மையும்` என்க.
`சிந்தையைக் கவர்தல்` என்பது `வசப்படுத்துதல்` என்னும் பொருட்டாகலின் அது `தம்மை, மானை` என்னும் இரண்டாம் வேற்றுமைகட்கு முடிபாயிற்று.
மானைச் சிந்தை கவர்தல், அதன்நோக்கினும் சிறந்த நோக்கு ஆதலால்.
அம் மை - அழகிய மை.
`மையும், கண்ணும் நோக்கத்தால் கவர்க என்றோ` என இயைக்க.
``பெரியீர்`` என்றது தோழியை.
இதனை முதலிற் கொள்க.
இப்பாட்டு, பாங்கியைத் தலைவன் மதியுடம் படுத்தலில் பிற வினாதல் துறையது.

பண் :

பாடல் எண் : 15

அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலைஎம் ஐயர்அம்பு
இருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விலையுண்டிவ் வையகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தலைவன் தலைவி தோழியுடன் இருக்கும், பொழுது சென்று `கலைமான் ஒன்று கணைதைத்த உடலுடன் இவ்வழியாகச் சென்றதோ` என, அதுபற்றி அவரை நோக்கி, வினாயதற்குத் தோழி தலைவியை நோக்கிக் கூறியது.
``மருளைத் தரு சொல்லி`` என்பது தோழி தலைவியை விளித்தது.
மருள் - மயக்கம்.
சொல்லி - சொல்லை உடையவளே.
`எம் ஐயர் (தமையன் மாருடைய) அம்பு கரியை (யானையை) மறிக்கும்.
(எய்த இடத்திற்றானே மடிந்து விழச் செய்யும்; இவர் ஐயர் (இவர் அவர்களினும் மேலானவர் - வேடரினும் சிறந்த அரசர்.
இவர் தம் அம்பை ஒரு மான்மீது) உறுத்தி எய்ய, (ஆழமாகப் பாயும்படி எய்ய) அந்த மான அந்தக் கணையையும் பறித்துக்கொண்டு எங்கோ போய்விட்டது.
போயின வில்லிமைக்கு (அப்படிப் போய்விடும்படி எய்த இவரது வில் வீரத் தன்மைக்கு) இவ் வையகத்து எங்கோ விலை உண்டு` எனக் கூறித் தோழி நகையாடினாள்.
கம்பர் - ஏகம்பர்.
இரு கரி - இருள்போலும் யானை.
ஐக் கரிய - தலைமை யானை.
வெருள் - அச்சம் மிகுந்த `எம் ஐயர் அம்பு தலைமை யானையை அங்கேயே வீழ்த்தும்.
இவ்ஐயர் அம்பு எய்ய, அச்சம் மிகுந்த ஒரு மான் அந்த அம்பையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டது` என்றாள்.

பண் :

பாடல் எண் : 16

வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனங்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்ததெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வை ஆர் - கூர்மை பொருந்திய `ஐயர்` என்பது நீட்டல் பெற்று ``ஐயார்`` என வந்தது.
`ஐயார் தொடர் வேட்டை` என இயையும்.
``ஐயார், ஐயர்`` என்றவை தலைவனை.
`கலையையும், ஏனத்தையும் கரியையும் தொடர் வேட்டை` என்க.
பொய் ஆன - பொய் ஆயின.
`ஐயர் மனத்தது ஒவ்வொன்றாகப் பரிணமித்து வந்து, முடிவில் பூங்கொடி இடையாயிற்று` என்க.
பின் வந்த ``ஐயர்`` என்பது `அவர்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இப்பாட்டின் துறையும் முன் பாட்டின் துறையே.
இருவரும் உள்வழிச் சென்ற தலைவன் முதற்கண், `இவ்வழியாக, அம்பு தைத்த உடலுடன் மான் ஒன்று போயிற்றா` என்று அவர்களை வினவினான்; விடை யில்லை; பின்பு காட்டுப் பன்றி போயிற்றா`; என்றான் விடையில்லை; பின் `யானை போயிற்றா` என்றான்; விடையில்லை.
(அதனால் அவன் பின் அவர்களை நெருங்கிச் சென்று, `என்ன, ஒருவர் வந்து வினாவினால் யாதும் விடைசொல்லா திருக்கின்றீர்கள்? உங்களைப் பார்க்கும் பொழுது - உங்களுக்கு இடையிருக்கின்றதா என்று ஓர் ஐயம் எழுகின்றது.
இருக்கின்றதா? இல்லையா? சொல்லுங்கள்` என்றான்.
அதைக் கேட்ட தோழி மேற்காட்டியவாறு சொல்லி நகையாடினாள்.
தொடர்தல் - பின்பற்றிச் செல்லல்.
`இவர் முதற்கண் குறித்த மான் வேட்டைகள் எல்லாம் வெறும் பொய்யாகிவிட்டன.
அவ்வேட்டைகள் முதலில் மானாய் இருந்தது.
பன்றியாகப் பரிணமித்து, பின் பன்றி யானையாகப் பரிணமித்து, முடிவில் எங்கள் பூங்கொடி போல உள்ள உனது இடையாகி நிலைபெற்றது` எனக் கூறி நகைத்தாள்.
மனத்தது - மனத்தில் உள்ள கருத்து.
எனவே, `அஃதே உண்மை` என்றும், `முன்னர்க் கூறியன எல்லாம் பொய் என்றும் ஆயின.
இடை சிறிதாய், மெல்லி தாதலின் அது பெரியவாய், வலியவாய கொங்கைகளைத் தாங்கலாற்றாது வருந்திற்று.
பை ஆர் - படம் பொருந்திய அரவு.
இடை - பாம்புபோலும் இடை.

பண் :

பாடல் எண் : 17

பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்
டுருமொத்த திண்குரற் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்பு சார்வரிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வெற்பு`` என்பதை முதலிற் கொள்க.
`முத்து உதிர்த் திடும் நுதல்` என்க.
சீர் - அழகு.
`மத யானை` என்பது, ``மத்த யானை`` என விரித்தல் பெற்றது.
நுதல் - நெற்றி.
பகுந்திட்டு, பிளந்திட்டு.
உரும் ஒத்த - இடியோடு ஒலித்த.
சீயம் - சிங்கம்.
நெறி - வழி.
ஓங்கு - மலைமேல் இருத்தலால் ஓங்கிக் காணப்படுகின்ற.
`ஓங்கு கயிலை` என இயையும்.
முத்தலை வேல் - சூலம்.
கம்பர் - ஏகம்பர்.
நகைதன் நசை - நகையினை உடையாளது விருப்பம்.
ஆல், அசை `வெற்ப, (உனக்குப் பிற யாவும் எளிய எனினும்) புனத்துள் முத்தன்ன நகையாள்மேல் நசை சார்வரிது` என முடிக்க.
நிரம்புதல் கூடாமையால் நசையும் கொள்ளுதல் கூடாதாயிற்று.
இது தன்பால் வந்து குறையிரந்த தலைவனைத் தலைவியது அருமை சொல்லி அகற்றியது.
அருமை யாவது, தோழி இச்செய்தியைத் தலைவிக்குத் தெரிவித்தற்குச் செவ்வி யருமை.
அருமை இன்றாயினும் உள்ளது போலச் சொல்லி அகற்றுதல்; அவனது காதலின் மிகுதி அறிதற்பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 18

அரிதன் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக் கர்ச்சித்த
கண்ணுக் கருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்
கரிதென் றிப்பதெம் பால்வெற்ப
எம்மையர்க் கஞ்சுதுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வெற்ப`` என்பதை முதலிற் கொள்க.
நிரம்பு ஆயிரம் போது அணிய அரி தன் திருக்கண் இடநிரம்பு - ஆயிரம் போது அணிய திருமால் தன் கண்ணையே இட்டமையால் எண் நிரம்பிய ஆயிரம் மலரைச் சாத்த, பறித்து அரி திருவடி - வினைகளை அரித்தொழிக்கின்ற திருவடி.
`மற்றை மலருக்காக அருள்செய்யாது கண்ணாகிய மலருக்கு அருள் செய்தான்`; அஃதாவது, `கண்ணைப் பறித்து சாத்தியதற்கு மகிழ்ந்து அருள்செய்தான்` என்க.
கம்பர் - ஏகம்பர்.
மூன்றாம் அடியில் உள்ள அரி - பகைவன்; இராவணன், திருக்கு - அவனது முறையற்ற செயல்; கயிலை மலையைப் பெயர்த்தது.
அங்குலி - விரல்.
`கம்பர் திருக்கு அழித்த கயிலை` என்க.
அல் - இரவு `கயிலையில் இங்கு நீவிர் அவ்எம்பால் இருப்பது அரிது` என்று எம் ஐயர்க்கு அஞ்சுதும் என முடிக்க.
ஐயர் - தமையன்மார்.
களவொழுக்கத்தில் ஒழுகிய தலைவன், `தலைவி இற்செறிக்கப்படுதல் காரணமாக அது கூடாது` எனக் கருதி, `ஒருநாள் இரவு உங்கள் இல்லத்தில் விருந்தினனாக வருவேன்` என `அதுவேண்டா` எனத் தோழி விலக்கியது இது.
இது, `விருந்திறை விலக்கல்` எனப்படும்.
தலைவன் வேண்டுதல், `விருந்திறை விரும்பல்` எனப்படும்.
இப்பாட்டில், `மடக்கு` என்னும் சொல்லணி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித் தன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோவிவ் வியன்முரசே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அம் சரம்`` என்றது, `பூவாகிய அம்பு` என்றபடி.
நெஞ்சு அரம் - மனமாகிய தடம்.
தாழ்வு - தங்குதல்.
தாழ் வரை - மலைச் சாரல்.
(இவ்வியன் முரசு) குஞ்சரம் வீழ, நும் கொம்பு உய்யக் கும்பம் மூழ்கும் வெஞ்சரத்தார் - யானை கீழே வீழ்ந்தொழியும் படியும், உம் பூங்கொம்புபோலும் மகள் தப்பிப் பிழைக்கும்படியும் யானையின் மத்தகத்தில் மூழ்கிய,கொடிய அம்பினையுடைய அவருடையனவோ? அல்லவோ? `குஞ்சரந் தாழ்வரை` என்பது எதுகை நோக்கி கும்பம் - யானை மத்தகம், வலிந்து நின்றது.
இது, களவொழுக்கத்தில் களிறு தரு புணர்ச்சியால் ஒருவனுக்கு உரியளாகிவிட்ட தலைவி தன் இல்லத்தில் மணமுரசு முழுங்குதலைக் கேட்டு, `இம்முரசொலி என தலைவர் மணத்தனவோ, பிறர் மணத்தனவோ` என ஐயுற்றுக் கலங்கியது.

பண் :

பாடல் எண் : 20

சேய்தந்த அம்மை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட
தோசைப் பகடுவந்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வேய் தந்த தோளி`` என்பதை முதலிற் கொள்க.
அது தோழி தலைவியை விளித்தது.
தந்த, உவம உருபு.
சேய் - முருகன்.
`சேயை` என இரண்டாவது விரிக்க.
``கைப் பகடு வந்து`` என்பதை, ``தயங்கிருள்வாய்`` என்பதன் பின்னரும், ``பூசல் உண்டாம்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க.
தயங்கு - நிறைந்த.
விரை - வாசனை.
வேங்கை - வேங்கை மரம்.
ஊசல் வேங்கை மரக்கிளையில் கட்டப்பட்டிருப்பதால், ``ஊசலொடும் வேங்கை தன்னைப் பாய்ந்து கொண்டதோ`` என்றாள்.
கை - தும்பிக்கை.
பகடு- யானை.
பூசல் - ஆரவாரம் உண்டாம் - உண்டாகாநின்றது.
இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமை யறிந்த தோழி அதனைத் தாய் அறியாவாறு தலைவிக்குக் கூறியது.
இது, வரவுணர்ந்துரைத்தல் எனப்படும்.

பண் :

பாடல் எண் : 21

வந்தும் மணம்பெறிற் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர் மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொன் அனையீர்`` என்பது, தலைவன் தோழியை விளித்தது.
அதனை முதலிற் கொள்க.
பொன் - இலக்குமி.
மனம் பெறில் - இசைவு கிடைக்குமாயின் `கயிலை மலையின்கண்` என ஏழாவது விரிக்க.
சிந்தும் - எதிர்ப்பட்ட வரை அழிக்கின்ற.
புகர் மலை - முகத்தில் புள்ளிகளையுடைய மலை போலும் யானை.
கைச்சல் - கட்டுதல்; அடக்குதல்; இது தலைவன் பாங்கியை மதியுடம் படுத்தற் கண் குறையுற்று நின்றது.

பண் :

பாடல் எண் : 22

திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத் திடுதர
ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
விரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரி அப்புரம் - வானத்தில் திரிகின்ற அந்த மதில்கள்.
`கயிலைக் கிரியில் உள்ள அக்குறவர்` என்க.
பருவம் - மூங்கில்கள் முதிர்ந்து முத்தினைச் சொரியும் காலம்.
இடு தரளம் - சேர்த்து வைக்கின்ற முத்து.
வினையோம் - முயற்சியுடைய யாங்கள்.
(இவ்வாறு தோழி, தலைவி முதலானவர்களைத் தன்னோடு உளப்படுத்துக் கூறினாள்.
) விரியச் சுருள் முதல் - பின் விரிதற் பொருட்டு முன்னே சுருண்டு இருக்கும் இலைகளையுடைய இள மூங்கில், `கயிலைச் சாரலில் உள்ளோர் முற்றிய மூங்கிலினின்றும் பெறுகின்றோம்` எனத் தலைவன் தலைவியை வரைதற்கு முலை விலையாகத் தருவதாகக் கூறிய முத்துத் திரளைத் தோழி, `அஃது எங்கட்கு அரியது ஒன்றன்று` என இகழ்ந்து கூறினாள்.
இவ்வாறு தோழி இகழ்ந்து கூறியதன் கருத்து, `எம் தமர்க்கு உனது (தலைவனது) குல நலம், கல்வி, பண்பு முதலியவைகளை அறிவிப்பின் அவை காரணமாக அவர் வரைவுடம்படுத்தலல்லது, விலைக்குக் கொடுப்ப தாயின் இவட்கு ஏழ் பொழிலைக் கொடுப்பினும் நிரம்பாது ஆகலின் உடன்படார்` எனக் கூறுதலாம்.
1 ``விரைவிரைந்து`` இரட்டைக் கிளவி.
நீர் பிரிய அங்குக் கதிர் முத்தின் பெற்றது என் - வரை பொருட் பிரிதலாக நீர் பிறிதற்கு அங்கு (நும் இடத்தில் - கயிலை மலை சாரலில்)ப் பெறும் முத்தினால் அடையத் தக்க பயன் யாது? `பெறுவது` எனற்பாலது, ``பெற்றது`` என் இறந்து காலமாக ஓதப்பட்டது.
இது தலைவன் வரைபொருட் பிரிதலில் தோழி தலைவற்குத் தலைவியது முலைவிலை பற்றிக் கூறியது.
`முத்துக்கள் எமக்கு அரியவல்ல` என்றற்குத் தோழி முத்தினை இளமூங்கிலே தங்கட்குத் தருவதாகக் கூறினாள்.
பிரிய - பிரிதலால்.
`பிரிதலால் கிடைக்கும் முத்து` என ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 23

பேசுக யாவர் உமைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பன்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லார்க்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`யாவர் பித்தர் (அவர்) உமை, - கணியார்- என்று பேசுக` என மாற்றி இறுதியிற் கூட்டி, அதன்பின், `யாம் அவ்வாறு பேசோம்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
`கணி` என்பது வேங்கை மரத்திற்கும், சோதிடனுக்கும் பெயர் ஆதலால், ``கணியார்` என்றது சிலேடை.
பூசிகை ஆர் - பூசுதலைப் பொருந்திய.
தேசு - அழகு.
கை ஆர் - கையில் பொருந்திய.
சிலை - வில் `தேசு சிலை, கை ஆர் சிலை` எனத் தனி தனி இயைக்க.
வெற்பர் பிரியும் பரிசு இலர் - தலைவர் இது பொழுது இவ்விடம் விட்டும் பிரிந்து போகும் தன்மையை உடையர் அல்லர் (ஆகையால் வேங்கை மரங்களே! நீங்கள், `தலைவர் பிரிவார்` எனச் சோதிடம் கூறுவதால், உம்மைப் பித்தர்கள்தாம் சிறந்த சோதிடர் என்று கூறுவார்கள்; நாங்கள் அவ்வாறு கூறமாட்டோம்.
ஆயின் `உண்மை யாது` எனில்) `கொலை செய்யக் கூசுதல் `சிறிதும் இல்லாத, நன்மையைக் குலைக்கின்ற வேங்கைகள் (புலிகள்) என்பதே உங்கள் பெயர்.
அத்தன்மையையுடைய உங்களை, `வருவதறிந்து கூறும் சோதிடர்` என்று யாவர் சொல்வார்! வேங்கை மரம் பூக்கும் காலத்தில் தினைகளும் அறுவடை செய்யும் காலத்தை அடையும்.
அதனால் வேங்கைகள் பூத்தால் தினைப் புனங் காக்கத் தினைப் புனங்களில் பரண் அமைத்துத் தங்கியிருந்த மகளிரும் ஊருக்குள் உள்ள தங்கள் இல்லத்தை அடைந்து விடுவர்.
ஆகவே, வேங்கைகள் பூத்தால் களவொழுக்கத்தில் ஒழுகுவோர் கவலையடைவர்.
மகளிர் தலைவனுக்குத் தாங்கள் தினைப்புனத்தை விட்டு இல்லம் சென்றுவிடுவதாக அறிவித்து, விரைவில் தலைவியை வரைந்துகொள்ள வற்புறுத்துவர்.
அவ்வாறு வற்புறுத்துதல் `வரைவு கடாதல்` - எனப்படும்.
அங்ஙனம் தலைவனை வரைவு கடாவ எண்ணிய தோழி தலைவன் கேட்கும் படி வேங்கை மரங்களை நோக்கி ஏதோ கூறுபவள் போல இவ்வாறு நகையுண்டாகக் கூறி வரைவு கடாயினாள்.
வேங்கைகள் காலம் அல்லாக் காலத்தில் பூத்ததுபோலக் கூறித் தினை முதிர்வுரைத்து வரைவு கடாயினாள்.
1 `வேங்கை` என்னும் பெயருடைய உங்களைப் பித்தர்கள், `கணியார்` என்று பேசட்டும்; நாங்கள் அவ்வாறு பேசோம் - என்றாள்.

பண் :

பாடல் எண் : 24

பெயரா நலத்தெழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமுமிங்
கோடித் தொழுதுசென்ற
தயரா துரையும்வெற் பற்கடி
யேற்கும் விடைதமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பெயரா நலத்து எழில் - என்றும் மாறா திருக்கும் அழகினால் உண்டாகும் எழுச்சி.
ஏகம்பனார் காலத்தைக் கடந்தவர் ஆதலின் அவரது நலம் என்றும் பெயரா நலமாம்.
`கயிலையினின்றும், தினையை அறுத்த பின்னும் அதன் தாள்களில் தங்கிப் பெயராதிருக்கப் பெறுகின்ற கிளிகளே! யான் பிரிவினால் வருந்திச் சென்றதைப் பின்பு இங்குவரும் வெற்பற்கு (தலைவற்கு) அயராது (மறவாமல்) உரையுங் கள்; அடியேனுக்கு (மறவாமல்) உரையுங்கள்; அடியேனுக்கும் விடை தாருங்கள்` என்று, தலைவன் சிறைப்புறமாகத் தோழி பிரிவருமை கூறி வரைவு கடாயினாள் 2 புனமே பிரிவின் துயர் - இப்புனத்தையே அடியோடு பிரிதலால் வரும் துன்பம்.
``மனமும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
இங்கு உலாவிக்கொண்டே.
``ஓடி`` எனச் சினைவினை முதல் மேல் நின்றது.
தொழுது, மீட்டும் கூட்டு விக்க வேண்டித் தெய்வத்தைத் தொழுது.
தன்னின் வேறாகாமை பற்றித் தலைவியைத் தோழி ``அடியேன்`` எனத் தான் என்றே கூறினாள்.

பண் :

பாடல் எண் : 25

தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தம்மைத் தாம் பிறவிக் கடல் கடப்பித்துக் கொள்ள விரும்புபவர் வணங்கும் ஏகம்பர்` என்க.
எனவே, `ஒருவர் தம்மைத் தாம் பிறவிக் கடலினின்றும் கடப்பித்துக் கொள்ளுதற்கு ஏகம்பரை வணங்குதல் தவிர வேறு வழியில்லை` என்பது பெறப்பட்டது.
``மும்மை`` என்றது, `மூன்று` என்றே பொருள் தந்தது.
`கயிலையில் இன்பந்தரும் புனம்` ஏழாவதன் தொகையாகக் கொள்க.
`அ` என்னும் சுட்டுக் கருங்கண்ணியைச் சுட்டிற்று.
மை, கண்ணிற்கு அடை.
கருங் கண்ணி, தலைவி.
தன், சாரியை, `கருங்கண்ணியோடு சேர்ந்திருந்து முன்பெல்லாம் இன்பத்தைத் தந்து கொண்டிருந்த தண்புனமே` எனத் தலைவன் தினைப் புனத்தை விளித்துக் கூறினான்.
வல்லி எய்தியது - கொடிபோலும் தலைவி உன்பால் வந்தது.
எம்மைக் கவலை செயச் சொல்லியோ - (முதலில் இன்பத்தைத் தந்து பின்பு) எம்மைக் கவலைப் படுத்தச் சொல்லித்தானே? `அவ்வாறு இருத்தல் இயலாது; எம் வினைதான் இவ்வாறு ஆயிற்றுப்போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது தினை அறுக்கப்பட்டபின் அப்புனத்திற்குச் சென்ற தலைவன் அங்குத் தலைவி முதலானோர் இல்லாமல் புனம் வெறிச்சோடிக் கிடத்தலைப் பார்த்து வருந்திக் கூறியது.
`வறும்புனங் கண்டு வருந்தல்` - என்னும் துறை 1 `வறுங்களம் நாடி மறுகல்` எனவும் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 26

இயங்குந் திரிபுரம் எய்தவே
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கும் மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீரொழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இயங்கும் - வானத்தில் திரிகின்ற, திரிபுரம் - மூன்று கோட்டைகள்.
தயங்கும் - விளங்குகின்ற.
(`கயிலைக் கண் தயங்கும்` என்க).
`தட அருவிகாள்` என மாற்றிக் கொள்க.
தட - பெரிய.
முயங்கும் - நாங்கள் தழுவும் இடமாகிய.
மணி அறை - அழகிய பாறை.
`நெஞ்சும் ஒழியாது மயங்கும் பரிசாக` என ஆக்கம் வருவிக்க.
பரிசு - தன்மை `எம்நெஞ்சம்` என உரைக்க.
பொன்னார் - பொன் போல்பவர்கள் பொன் - திருமகள்.
சூழல் - இடம்.
`எமக்கு வகுத்து மொழியீர்` என இயைக்க.
வகுத்து மொழிதல் - விவரமாகச் சொல்லுதல்.
இது வறும்புனம் கண்டு வருந்தும் தலைவன் கண்ட வற்றொடு கவன்றுரைத்தது.
ஆடுதலைப் பொழிலுக்கும் கூட்டுக.
`அவர் ஆடும் பொழில் ஆதலாலும், அவன் ஆடும் அருவி ஆதலாலும், யாம் முயங்கும் அறை ஆதலாலும் உம்பால் அவர்கள் சொல்லியே சென்றிருப்பர்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 27

வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலையிச் சூழ்புனத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, தோழி, `இனிக் களவொழுக்கம் வெளிப்பட்டுத் தீமை பயக்கும்` எனக் கூறி வரைவு கடாவத் தலைவன் மேலும் களவை நீட்டிப்பான் வேண்டி வரை வுடன்படாது மறுத்தது.
``கள்வாய்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
நெகுப்பு - நெகிழ்வு, அது மலர் மலருங் காலத்தைக் குறித்தது.
ஆல் உருபைக் கண்ணுரு பாகத் திரித்துக் கொள்க.
`அருவிகள் தம்பால் மலர்களை வேண்டி நின்றார்க்கு மணிகளைச் சிந்தும் கயிலை` எனவும், `கம்பர் கயிலை` எனவும் தனித்தனி இயைக்க.
`கயிலையில் இப்புனத்தில்` என உரைக்க.
`ஆர் உயிர் ஒன்றாம் இருவரை (அஃது அறியாது) விள்ள - இருவராகிப் பிரிய வைத்து மணத்துக்கு நாள் வகுப்பவரும், மணத் தோடு கூட்டியே இன்பத்தை மிகுப்பவரும் இவரே போலும்` என இயைத்துக் கொள்க.
`உடலால் இருவர் போலத் தோன்றினும் உயிர் ஒன்றேயாய் உள்ளார்க்கு மணம் என்ன வேண்டுகின்றது? எனத் தலைவன் தங்கள் களவொழுக்கத்தின் சிறப்பைப் புலப்படுத்தி வரை வுடன்படாது மறுத்தான்.
`இவரே போலும்` என்பது ``இவர்போல்`` எனத் தொகுத்தல் பெற்றது.
`இவர்` என்றது தோழி வழியாக அன்பைப் பெற வேண்டினார்க்கு, பிறப்பிலே உண்டான அன்பைத் தருவது யாம் வாழிடம்` எனத் தலைவன் இறைச்சிப் பொருள் கூறினான்.
அங்ஙனம் கூறுதல் தலைவர்க்கும் உரித்தாகலின்.

பண் :

பாடல் எண் : 28

புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்கனி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மனங் குழையா`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
மனம் குழையா - மனம் கசிந்து.
அன்பு நீர் சிந்துதல் பற்றிக் கண்களை.
``அருங் கண்`` என்றார்.
கண் கனிதலாவது, நீரைச் சொரிதல்.
கண் கனி பண் - கண்கள் கனிதற்கு ஏதுவான இசைகள்.
முன்னர் மனம் குழைதல் கூறப்பட்டமையால், ``குழையாத் தொழும்`` என்றது, உடல் குழைந்து தொழுதலை.
`ஏகம்பரது இக்கயிலாயம்` என்க.
`புனங் குழையாது` என்று தினை கொய்தது - `புனம் இதற்கு மேல் பசுமை பெற்றுத் தழைக்க மாட்டாது` என்று அறிந்து தினைக் கதிர்களைக் குறவர்கள் கொய்தது.
கனம் குழையாள் தன் பிரியவும் - கனமாகிய குழையை அணிந்த தலைவி புனத்தை விட்டுப் பிரிந்து இல்லத்தில் இருக்கச் செய்தற்கும் ஆம்.
(உம்மை மாற்றி யுரைக்கப் பட்டது.
) குறவர் தம் இயல்பிலே தம் தொழிலைச் செய்தாராயினும் அதனால், நமக்குக் கையறவு உறும் - செயல் அறும் அளவில் துன்பம் உறாநின்றது.
(இதனை அவர்கள் அறியமாட்டார்கள்) ஆல், அசை.

பண் :

பாடல் எண் : 29

உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம் பெரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியின் பாடம் பிழைப்பட்டு, வேறாய்க் காணப்படுகின்றது.
தள் அம்பு - வில்லினின்றும் எய்யப்படுகின்ற அம்பினை.
விண் அரணம் எரியக் கொண்டார் - ஆகாயத்தில் உலாவிய கோட்டைகள் (திரிபுரங்கள்) எரிந்தழியும்படி கைக் கொண்டவர்.
`சிறு மானுடர் உற்ற பொருட் செல்வம் அவரைப் போலும் சிறுமனத்தை உடையவர்கட்கு அடையப்படும் பற்றுக் கோவைத் தன்றித் திரிபுரத்தை எரித்தவராகிய சிவபெருமானுக்கு அடியவராயினரால் அடையப்படுவதன்று` என முடித்துக்கொள்க.
``பொருட் செல்வம் பூரியார் கண்ணு முள`` 1 ஆதலின் அஃது ஒறையே விரும்பி, அருட் செல்வத்தை விரும்பாதாரைச் ``சிறுமானுடர்`` எனவும், ``சிறுமனத்தார்`` எனவும் கூறினார்.
கள்ளம், இரப்பார்க்கு, `இல்லை` எனக் கூறிக் கரக்கும் கரவு.
`சிவனடியார்க்குப் பொருட் செல்வம் செல்வமாய்த் தோன்றாது` என்றபடி.
எனவே, அதனைப் படைக்கவும், காக்கவும் அவர் முயலாமை கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 30

அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதவருவிக்
குன்றும் பதாதியுந் தேருங்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினுங் கம்பர்நன்
நீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்றும் - மாறுபடுகின்ற.
பகை - பகைவர்; ஆகுபெயர்.
அடக்கும் - வெல்கின்ற.
பரிமா - குதிரை.
மத அருவிக் குன்று - யானை - பதாதி - காலாட்படை.
நால்வகைப் படைகளும் இங்குக் கூறப்பட்டன.
கம்பர் - ஏகம்பர்.
நல் நீறு - திருநீறு.
நுதல் - நெற்றி.
திருநீறு நெற்றியில் இல்லாதவர் சிவன்பால் அன்பில்லாதவரே, அதனால் அவர் பெற்ற செல்வம் அவர் முன்செய்த பசுபுண்ணியத்தால் கிடைத்தது ஆகலானும், பசுபுண்ணியம் நிலையற்றது ஆகலானும் `அச்செல்வம் நிலையாது` என்றார்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
என்பதில் கூத்தாட்டோடு உவமிக்கப்பட்டது பசுபுண்ணியங்களே.
சிவனடியார்கட்குச் சிவபுண்ணியத்தால் வரும் செல்வம் சிவ புண்ணியங்கள் நிகழ்தற் பொருட்டுச் சிவனருளால் தரப்படுவ தாகலின், `அஃது என்றும் இருநிலத்தே பொலியும்` என்பதாம்.
நீறில்லா நெற்றிபாழ்
எனவும்,
நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம்; பேய்க்காம்; பரத்தையர்க்காம் - வம்புக்காம்;
கொள்ளைக்காம்; கள்ளுக்காம்; கோவுக்காம்; சாவுக்காம்;
கள்ளர்க்காம்; தீக்காகுங் காண்
எனவும் போந்த ஔவையார் நீதி மொழிகளையும் காண்க.
நம்பன் - சிவபெருமான்.
பம்புக்கு - வாளாத் தொகை பண்ணிக் குவித்தற்கு.
பம்புதல் - நிரப்புதல், பேய்க்கு - புதைத்து வைத்தபின் பூதம் காத்தற்கு.
வம்பு - அடா வழக்கு.
கொள்ளை - கூட்டக் கொள்ளைக்காரர் செயல்.
கள்ளர் - ஒளிந்து நின்று களவு செய்பவர்.
கோ - அரசன் உரியவர் இல்லாத காரணத்தாலும், புதையலாகக் கிடைத்தலாலும் சிலரது பொருள்கள் அரசனுக்கு உரியதாகும்.
இதனை ``உறுபொருள்`` 4 - என்றார் திருவள்ளுவர்.
சாவுக்கு ஆம் - வலிந்து பறிக்கும் கள்வர் செய்யும் கொலைக்கு ஏதுவாம்.
முரசு - வெற்றி முரசு.

பண் :

பாடல் எண் : 31

நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொடங்கம்
வலத்திமைப் போதும் பிரியார்
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பங் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிலத்து இமையோர் - பூசுரர்; அந்தணர்.
தலை - தலைமை; அது குடிச் சிறப்பாம்.
மறை - வேதம் அங்கம் - வேதாங்கம்.
வலத்து - வலிமை பெற்று.
`வல்லராய்` என்றபடி.
``பிரியம்`` என்பதை முற்றெச்சமாக்கி அதனை, ``வளர்த்தாலும்`` என்பதனோடு முடிக்க.
``வளர்த்தாலும்`` என்னும் உம்மை சிறப்பு.
`குலத்து உதித்த` என ஒருசொல் வருவிக்க.
ஏகம்பர் - ஏகம்பர் எழுந்தருளியிருக்கும் இடம்.
கூடி - அடைந்து.
நலம் - நன்மை; ஞானம் அஃது அதனாலாகிய செயலைக் குறித்தது.
`நலத்துக்கண்` என ஏழாவது விரிக்க.
அமையா தவர் - பொருந்தாதவர்.
`வேட்டுவர்தம் படையின் நடு` என மாறிக் கூட்டுக.
நடுவண் நிற்பவரை `நடு` என்றது ஆகுபெயர்.
`நிலத்து இமையோராயினும் ஏகம்பம் கூடித் தொழும் நலத்துக்கண் பொருந்தாதவர் வேட்டுவருள் தலையாய வேட்டுவர்` - என்பதாம்.
வைதிக அந்தணர்கள் வேள்வியிற் செய்யப்படும் கொலையை, `கொலையன்று` என விலக்குதல், சிவபெருமானை முன்னிட்டுச் செய்யின் ஒராற்றாலேனும் அமைவுடையதாம்; அவ்வாறு செய்யாத வழி அவர் வேள்விக்கண் செய்யும் கொலைக்கும், வேட்டுவர் செய்யும் கொலைக்கும் இடையே யாதும் வேறுபாடில்லை` என்பதாம்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்,
புன்மை தெரிவா ரகத்து
என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர் `கொலை வினையர்`- என்றதனால், அத்திருக்குறளில் வேடரும், அவரோடு ஒப்புரவும் செய்யும் கொலை கடியப்பட்டதன்றி, வேள்விக்கண் செய்யப்படும் கொலை விலக்கப்பட்டிலது` என்பதுபட உரை கூறினார்.
அக்கருத்துச் சிவனை முன்னிட்டுச் செய்யப்படும் வேள்விக்கே ஓராற்றால் பொருந்தும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
பரிமேலழகர் கூறிய கருத்து அவரால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டதாகாது, வைதிக அந்தணர்களது பழமையான கருத்தே யாதலின் அது பற்றி இவ் வாசிரியர் இங்ஙனம் அருளிச் செய்தார்.
இதனால் திருநெறியின் முறைமை இனிது விளங்குவதாம்.
``தலையாய்ப் பிறந்தும்.
.
.
.
.
.
வேட்டுவர்`` என்றதனால், ``பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்``1 என்றல் பொருந்தாது; பிறப்பு என்னும் பிறப்பே`` - என்று பிணங்கு வாரது கூற்றும் தகர்க்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 32

படையால் உயிர்கொன்று தின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நாண்சிறி
தின்றிநகும் குலத்தில்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத் தெங்களையாள்
உடையான் கழற்கன்ப ரேலவர்
யாவர்க்கும் உத்தமரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, முன் பாட்டின்பொருட்கு மறுதலையாய பொருளை வற்புறுத்துகின்றது.
படை - கொலைக் கருவி ``கொன்று தின்று`` என்றது; கொல்லுதல், தின்னுதல் ஆகிய இரண்டினுள் ஒன்றே செய்யினும் பாதகமாயினும், இரண்டையுமே செய்து` என்றபடி.
பசுக்கள், ஆறாவது அறிவில்லாமை பற்றி வந்த உவமை.
`ஆறாவது அறிவு உண்டு` என வாதிக்கின், ``பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றமையால்`` `அஃது இருந்தும் பயனில்லை` என்பார்.
``பசுக் களைப் போலச் செல்லும் நடையால் அறிவின்றி`` என்றார்.
``மாக்களே பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாது பிற உயிர்களைக் கொன்று தின்னும்` என்பது கருத்து.
அறிவுளதாயினும் இக்காரணத்தால் - அறிவிலர் - என நல்லோரால் பழிக்கப்படுதல் பற்றிச் சிறிதும் நாணம் ஊறாமல் தாம் செய்வதே செய்வர் - என்றற்கு, ``நாண் சிறிதின்றி`` என்றார்.
`சிறிதும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
`நாண் இன்மையும் மாக்களது இயல்பே` என்றபடி.
`இக்காரணங்களால் இகழப்படும் குலம்` என்றற்கு ``நகும் குலம்`` என்றும், `அவற்றுள்ளும் கடைப்பட்ட குலம்` ``கடையாய்ப் பிறக்கினும்` என்றும் கூறினார்.
யாவருக்கும் உத்தமர் - யாவரினும் மேலானவர்.
``அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே`` - என அருளிச்செய்தது காண்க.
இறுதிக்கண் ``கடையாய்ப் பிறக்கினும்`` என உம்மை கொடுத்து ஓதியதனால், `மேற் கூறப்பட்டனவெல்லாம் கடியப்படாதன அல்ல; கடியத் தக்கனவே` என்பதும், `அவற்றைக் கடிந்து, ஆளுடையான் கழற்கு அன்பாராதல் பொன்மலர் நாற்ற முடைத்தாய வழிப் பெரிதும் பயன்படுதல்போலப் பயனுடையராகச் செய்யும்` என்பதும், `அவற்றைக் கடியாது ஆளுடையான் கழற்கு அன்பராயின் பொன் மலர் நாற்றம் உடைத்தாகாதாயினும் பொலிவுடைத்தா மாறுபோல ஆவர்` என்பதும் கூறியவாறாம்.
``ஆ உரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்`` என அப்பரும் உம்மை கொடுத்தே ஓதியருளினமை காண்க.
மற்றும், கொல்வ ரேனும், குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடினும்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே
குலமில ராயினுங் குலத்திற் கேற்பதோர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சி வாயவே
என்றாற்போல வரும் இடங்களிலும் உம்மை கொடுத்தே ஓதியருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 33

உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்துங்கை யான இருபதுஞ்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யானென் றுகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உத்துங்கம் - உயரம்.
உரி - தோல்.
வைத்து - அழுத்தி.
இலயம் - தாளம்.
`ஒற்றும், எற்றும்` என்பன எதுகை நோக்கி, ``ஒத்தும், எத்தும்`` எனத் திரிந்து நின்றன.
கையால் பாடியது, கைவிரலால் வீணையின் நரம்பைத் தெறித்து இசையை எழுப்பியது.
கயிலையின் ஊடு அளித்தார்` என்க, ``ஊடு`` என்பது ஏழாவதன் பொருள்பட வந்தது ``என்றது`` என்பதை, `என்ன` எனத் திரித்து, `என்று ஆகும் படி` என உரைக்க.
எற்றுதல், இங்கு வெட்டி அழித்தலைக் குறித்தது.
எனவே, ``எற்றும்`` என்பது `அழிக்கும்` என்றதாய், அத்தகைய ஆற்றல் பெற்றமையை உணர்த்திற்று.
`யாவரையும் வெல்லும் வாட் படையை அளித்தருளினான்` என்றபடி.
`புரைபற்றி ஒறுப்பினும், வழிபட்ட பின் அருள்புரிபவர் கச்சி ஏகம்பர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 34

அம்பரம் கால்அனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
வம்பரங் கொள்வதொர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யாரறி
வார்கட்கு நற்றுணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வம்பரம்.
வேழத்து உரியவன், அம்பரம் .
.
.
.
அணு தன் உருவாம் எம் பரன், கச்சியுள் ஏகம்பத்தான், தன் அடியார் இடையாது அடைவான், நம் பரன்` என இயைத்து, இவை அனைத்தையும் எழுவாயாக்கி, ``அறிவார்க்கு நறுந் துணை`` என முடிக்க.
முதலில் அட்ட மூர்த்தங்கள் சொல்லப்பட்டன.
அம்பரம் - வான்.
அணு - ஆன்மா.
வம்பர் - தீயோர்; அசுரர், அம் கொள் வேழம் - (அவர்கள்) அழகிதாகக் கொண்ட யானை.
`கயாசுரன்` என்றபடி.
உரி- தோல் ``எம் பரன்`` என்பதில் ``எம்`` என்றது அடியார்களையும், ``நம்பரன்`` என்பதில் ``நம்`` என்பதும் அனைத்துயிர்களையுமாகும்.
இடையாது - தளர்ச்சியடையாதபடி.
அடைவான் - முன்வந்து காப்பான்.
அறிவார்க்கு - தன்னை மெய்ப்பொருளாக அறிபவர்க்கு.
நறுந்துணை - நல்ல துணைமை; பிறவிக் கடலினின்றும் கைகொடுத்து முத்திக் கரையில் ஏற்றும் துணை.

பண் :

பாடல் எண் : 35

துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமுங் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யுந்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்
தணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க் கழகியவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பிரானார்க்கு, துணைத் தாமரை அடியும்.
முக்கணும் அழகிய` என்க.
துணை - இணை.
குறங்கு - துடை.
பணை- பருத்த ``தோள்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க.
அகலம் - மார்பு.
`மின்னலை அண்டத்தில் (வானத்தில்) பிணைத்தாலன்ன சடை` என்க.
திருச்சென்னி உயரத்தில் உருத்தலால் ``அண்டத்தில் பிணைத் தாலன்ன`` என்றார்.
அழகிய - மிக அழகாய் உள்ளன.
அழகு - தனிமையிலும், தொகைமையிலும் தோன்றுவது.

பண் :

பாடல் எண் : 36

அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோரதமைப்
பற்றலர் பற்றுமன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யாரறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட் டுலந்தார்
உலகிற் கிடந்தனரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அழகு அறிவினும் பெரிதாகிய`` என்றது அழகினைப் புகழ்ந்த புகழுரை.
இறைவர் அறிவிற் பெரியர் (முற்றறி வுடையவர்) என்பது நன்கறியப்பட்டதாகலின், `அஃதேபோல் அழகிலும் பெரியவர் என்பது உணர்த்தியவாறு.
``பெரிதாகிய`` என்னும் பெயரெச்சம் ``ஏகம்பர்`` என்னும் இடப்பெயர் கொண்டது என்னை? `அவனது அழகு ஆடவர் கண்ணைக் கவர்கின்றது` என்றலேயன்றி, `அவள் கண்ணதாகிய அழகு ஆடவர் கண்ணைக் கவர்கின்றது` என்றலும் வழக்காதலின்.
அத்தர் - தலைவர்.
கொற்றம்- வெற்றி.
அஃது அதனால் உண்டாகிய ``பொருள்சேர் புகழின்`` 1 மேல் நின்றது.
``கொற்றத்தின்கண்`` என ஏழாவது விரிக்க.
`பழகு பெரி யோர்` என இயைக்க.
`அன்பாகிய குழகினையுடைய அறிவு` என்க.
இன், வேண்டாவழிச் சாரியை.
குழகு - அழகு.
`அறிவுக்கு அழகு அன்பு` என்றபடி.
ஏற்பு - ஏற்கும் வழிகள்.
`இறைவனிடத்து அன்பை ஏற்கும் வழிகள் பல உளவாக அவற்றினுள் ஒன்றையும் அறியார்` என்றபடி.
`ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
`அறியாமையால்` என ஆல் உருபு விரிக்க.
`கீழ்` எனப் பொருள் தருவ தாகிய `குழக்கு` என்பதில் ககர ஒற்று எதுகை நோக்கிக் குறைக்கப் பட்டது.
உலந்தார் - இறந்தார்.
`பயன் இன்றி இறந்தார்` என்பதாம்.
`பற்றலரும், அறியாரும் ஆகியோர் அறியாமையால் சிவநெறியி னின்றும் அப்பால் - சிறு தெய்வங்கள் பால் - தூக்கியெறியப்பட்டுப் பயன் இன்றி உலகில் உலந்துகிடந்தார்` என வினை முடிக்க.
``உலந்தார்`` முற்றெச்சம்.

பண் :

பாடல் எண் : 37

கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண் டிலங்கும் மலங்குந்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வாளா மலைந்த`` என்பது முதலாகத் தொடங்கி, `சடைமுடிக்கண்` என ஏழாவது விரித்து `ஒருபால் பாம்பு கிடக்கும்; ஒருபால் மதியம் இலங்கும்; கங்கை அலங்கும்; கொன்றை வடமும், தலைமாலையும் சூடப்பட்டிருக்கும்` என முடிக்க.
தொடக்குண்டு - கீழே விழாமல் சிக்குண்டு.
`பாம்பும், மதியும் பகைப்பொருளாயினும் அவரது முடியில் பகையின்றி வாழும்` என்பது கருத்து, அலங்கும் - அலையும்.
`வடங்குண்டு` என்பது, ஏதுகை நோக்கி வலிந்து நின்றது.
குண்டு கட்டு அத் தலை - ஆழ்ந்த கண்களையுடைய அந்தத் தலை; `உலந்தார் தலை` என்றபடி.
தசை முதலாயின இன்மையால் கண்கள் ஆழ்ந்து தோன்றுவ வாயின.
``கட்டு`` என்றது சாதியொருமை.
சுட்டு, உயிரின்மையைக் குறித்தது.
`குண்டு கட்டுத் தலை` எனப் பாடம் ஓதலும் ஆம்.
`வாளால் மலைந்த வெம்போரும்` எனச் சிறப்பும்மை விரிக்க.
கடக்கும் - வெல்லும்.
`போர் விடை` என்றபடி.

பண் :

பாடல் எண் : 38

கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின் கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஏகம்பர்`` என்பதை ``வலம்`` என்பதற்கு முன்னே கூட்டி, அத்தொடரை முதற்கண் கொள்க.
`ஏகம்பர் வலம் கற்றைப் பவளச் சடையும் கமழ் கொன்றைப் பூ அம் தாரும், முற்றுற்றிலா மதியின் கொழுந்தும் - மணிகளாலும், பொன்னாலும் இயன்ற தளிர் களும், கழுநீர் தெற்றி அத்தரம் பொலிகின்ற - குவளை மலரை நெருங்க வைத்து அந்த அளவு சிறப்பாக விளங்குகின்ற.
சூட்டு - தலைவி சூட்டும் அழகாகித் திகழ்தரும்` என உரைக்க.
அர்த்தநாரீசுர வடிவத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 39

தருமருட் டன்மை வலப்பாற்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்ணிடப் பாலது
நீலங் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்
தோங்கும் மலர்க்குழலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செல்வக் கம்பர்`` என்பதை முதலிற் கொண்டு, `அணங்குக்கு இடப்பாலது மதர்த்து நீலம் கனி கருமலர்கண்ணும், மொய் குழலும் எனவும் `நுதற் பொட்டும் (திகழும்)` எனவும் இயைத்துக் கொள்க.
``அருள் தன்மை`` என்பது, எல்லா உயிர்கள் மேலும் கொள்ளும் அருள் தன்மைக்கு அடையாளமாகிய சடையைக் குறித்தது.
``அருள் தன்மையை உடைய வலப்பால்`` என உடம்பொடு புணர்த்துக் கூறியனால், வலப்பால் சடையுண்மை பெறப்பட்டது.
கமலக்கண் - செந்தாமரை மலர்போலும் கண்.
இது செங்கண் ஆதலைக் குறித்தது.
`நெற்றியின்மேல் உள்ள கண்` என இயைக்க.
பிளவின் - (கீழிருந்து மேற் செல்லும்) கீற்றுப் போல்வதாய்த் தழல் திகழும் என்க.
அணங்குக்கு இடப்பாலது - உமைக்கு உரியதாகிய இடப்பக்கத்தில் உள்ளது.
மதர்த்து நீலம் கனி மருமலர்க் கண்ட களிப்புடையதாய் நீலம் மிகுந்த நீலமலர் போலும் கண்ணும்.
மலர்க் குழலும்.
மற்றும் நுதலிற் பொட்டும் திகழும் என்க.
முன்னர்ப் போந்த ``திகழும்`` என்பதை பொட்டிற்கும் கூட்டுக.
`இடப்பாலது` என்பதை `கண், குழல்` என்ப வற்றோடு தனித்தனி இயைக்க.
இப்பாட்டின் கருத்தும் முன்பாட்டின் கருத்தேயாம்.

பண் :

பாடல் எண் : 40

மலர்ந்த படத்துச்சி ஐந்தினுஞ்
செஞ்சுடர் மாமணிவிட்
டலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீல்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வலக் காதினில்`` என்பதுபோல, ``காதிடம்`` என்பதை மாற்றி, `இடக் காதினில்`` என விரித்துக் கொள்க.
படம், பாம்பின் படம்.
``வயிரம் வெயிற் பாய`` எனச் சினைவினை முதல் மேல் நின்றது.
நகும் - ஒளிவீசுகின்ற.
``குண்டலம், மகரக்குழை`` என்னும் இரண்டிற்கும் தனித்தனி, `உள்ளது` பயனிலை அவாய் நிலை யாய் நின்றன.
`ஆடி வரும் நலம்` என இயையும்.
மகரக் குழை மகளிர் அணிவதாதலை, ``மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து`` என்னும் திருமுருகாற்றுப்படையாலும் 1 உணர்க.
`நலத்திரு` என்பது மெலிந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 41

காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் குங்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வலம்`` என்பதை முதலிலும், ``இடம்`` என்பதை, ``தாதலைக்கும்`` என்பதற்கு முன்னும் கூட்டுக.
காது குண்டலத்தால் தோளை அலைக்கின்றது.
பவளக் குன்றம், பொன்மலை இவற்றின் பின், `போல` என உவம உருபு விரிக்க.
போது - பகலவன்.
அவனை அலைத்தலாவது, சுற்றிவரச் செய்தல்.
`போது அலைக்கும் பொன் மலை` என்க.
பனி, நீற்றுக்கு உவமை, ``உயர்ந்து`` என்பதன்பின் `நிற்கும்` என்பதும், `அகலம்` என்பதன்பின் `விளங்கும்` என்பதும் எஞ்சி நின்றன.
அகலம் - மார்பு.
``பொன்மலை`` என்றது அதன் அகலத்தை.
பணை - மூங்கில்.
``அணிந்து`` என்பதன்பின் `விளங்க` என்பது வருவிக்க.
சூது - சூதாடு கருவி `முலை சூது அலைக்கும்` என்க.
அலைத்தல் - வருத்துதல்.
சுந்தரம் - அழகு.
சுந்தரம் `ஏகம்பர் சுந்தரம், வலத் தோள் பவளக் குன்றம்போல உயர்ந்து விளங்கும்; வல மார்பு பனிப் பொன்மலை அகலம்போல் நீற்றின் விளங்கும் மூங்கில் போலும் இடத்தோள் சாந்தணிந்து விளங்கும்; இடமார்பு முலை சூது அலைக்கும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 42

தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உம்பர் மும்மைப்புரம் பொற்பு அழித்த கம்பர்க்கு வலம்` என மாற்றி, முதற்கண் வைக்க.
உம்பர்ப் புரம் - வானத்தில் உலாவும் கோட்டைகள்.
தரம் - தகுதி.
பொற்பு அழிதல் - அழகு அழிதல்.
`அட்டு` என்பது, `அட்டி` எனத் திரிந்து நின்றது.
அட்டு - அழித்து.
`எய்த்துத் தளரா உரம்` என்க.
உரம் - மார்பு.
``தரம் தளரா`` எனக் குணவினை குணிமேல் நின்றது.
`உரம் வயிறாம்` என்க.
வயிறாதலாவது, வயிறோடு ஒப்பதாம்.
உத்தரத்து - இடப்பக்கத்தில்.
இடு பூண் - இடப்பட்ட அணிகலங்களையுடைய.
நிரம்பப் பொறுத்தல் - கடைப்போகத் தாங்குதல்.
வஞ்சி - கொடி.
இஃது உவம ஆகுபெயராய், இடையைக் குறித்தது.
`உத்தரத்தில் முலையும், வஞ்சியும் நேர்தலை உடைத்து அவரது அழகு` என ஒரு சொல் வரு வித்து முடிக்க என்க.
நேர்தல் - பொருந்துதல்.

பண் :

பாடல் எண் : 43

உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்கிமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடல்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடை`` என்பது, `துணி` என்னும் அளவாய் நின்றது.
ஈற்றடியை முதலிற் கூட்டி, அதன்பின் ``வலம்`` என்பதில் `வலத்தின்கண்` என ஏழாவது விரித்துச் சேர்க்க.
புலி - புலித்தோல்.
உரகம் - பாம்பு.
வீக்கி - இறுகக் கட்டி.
கட்டி - கட்டப்பட்டு.
முஞ்சி வடம் - தருப்பைக் கயிறு.
மற்றை அல்குல் - இடப்பக்கத்தில் உள்ள பிருட்டத்தில்.
காஞ்சி - பலவாகிய மணிவடங்களின் தொங்கல்கள்.
`காஞ்சியின்கண் தொடுத்த` என்க.
அரசிலை - அரசிலை வடிவாகச் செய்து கோக்கப்பட்டவை.
``கோவணம்`` என்பதன் பின் உள்ள ``தோன்றும்`` என்பதை, ``துகில்`` என்பதன் பின்னும் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 44

அடிவலப் பாலது செந்தா
மரையொத் ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற் கூற்றின் எருத்திற
வைத்த திளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சுஞ் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பம் மேய வரதருக்கு வலப்பாலது ஆகிய அடி.
கழல் சூழ்ந்து, கூற்றின் எருத்து இற வைத்தது; இடப்பாலது ஆகிய அடி பஞ்சு உற இளந்தளிரின் அஞ்சும்; மற்றும் சிலம்பு அணிந்த வடிவுடைத்து` என இயைத்துக் கொள்க.
அதிர் கழல் - ஒலிக்கின்ற வீரக்கழல்.
சூழ்ந்து - சூழப்பட்டு.
இடி குரல் - இடிக்கின்ற குரல்.
எருத்து - பிடரி.
இற - ஒடியும்படி.
``வைத்தது`` எனச் செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப் பட்டது.
வடிவு - அழகு.
ஆர் கச்சி - பல வளங்களும் நிறைந்த கச்சி.
வரதர் - வரத்தைக் கொடுப்பவர்.
``கற்றைப் பவளச் சடை`` என்னும் பாட்டு முதலாக இதுகாறும் இறைவரது மாதொரு பாதி வடிவமே புகழப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

தருக்கவற் றான் மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றாலிட் டருளும்
கடகத் திருக்கரமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருக்கரம் முப்புரம் எய்து, மழு வாள் விசைத்தது` என வினை முடிக்க.
தருக்கிற்கு ஏதுவாம் பொருள்களின் பன்மை பற்றித் தருக்கினை, ``தருக்கு அவற்றால்`` எனப் பன்மையாற் கூறினார்.
``தலை ஐ`` என்பதை `ஐந்தலை` என மாற்றிக்கொள்க.
`நெருக்கு அவற்றின்றும் ஓட` என ஐந்தாவது விரித்து, ``ஓட`` என்பதற்கு, `சில` என்னும் வினை முதல் வருவித்துக் கொள்க.
`தக்கன் வேள்வியில் பிரமனும் தலை வெட்டப்பட்டான்` என வரலாறு உண்டு.
``அரி அயன் தலை வெட்டி வட்டாடினார்`` 1 என்னும் அப்பர் திருமொழியில் அரியது தலையும் வெட்டப்பட்டதாக வந்துள்ளது.
தக்கன் வேள்விப் பொழுதில் அயன் ஐந்தலையுடன் இருந்ததாகக் கொள்க.
அன்றி, `ஐ-அழகு` எனினும் ஆம், மழு வாள் - மழுவாகிய படைக்கலம்.
விசைத்தது - வீசிற்று.
நெற்கள் - நெற்பயிர்கள் `பருப் பிக்க` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டு, ``பருக்க`` என வந்தது.
அன்றி, `பருத்தற்கு ஏதுவாய் வலியுடைத்து` எனினும் ஆம்.
`பாம்புகளின் திருக்கு அவற்றால் ஆக்கி` என ஒரு சொல் வருவித்துக் கொள்க.
கடகம் - தோள்வளை.
மழுவை வீசும் வலிமை தோளுக்கு ஆதல் பற்றிக் கடகத்தையே கூறினார்.

பண் :

பாடல் எண் : 46

கரத்தத் தமருகத் தோசை
கடுத்தண்டம் மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்
டவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக் கப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர்
ஆடுவர் எல்லியும் மாநடமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வரத்தைத் தரு கம்பர் தமருகத்து ஓசை அண்ட மீப் பிளப்ப, பாதம் அவனி தலம் நெறிய நெரித்திட்டு, திசைகளுக்கு அப்புறம் போர்ப்பச் சடை விரித்து எல்லியும் மா நடம் ஆடுவர்` என இயைத்து முடிக்க.
அவ்வோசை - தமருகத்தினின்றும் எழுந்த அந்த ஓசை.
கடுத்து - மிகுந்து.
மீ - மேலிடம்.
அரத்தம் - சிவப்பு.
அரத்தத்தை - சிவந்த நிறத்தை யுடைய.
அவனி தலம் - பூ தலம்.
`தரத்து ஆக` என ஒரு சொல் வருவிக்க.
தாம் - மேன்மை எல்லி - இரவு `பகலே அன்றி இரவும்` என உம்மை இறந்தது தழுவிற்று.
எனவே, `எப்பொழுதும்` என்றதாம்.
திருநடனத்தை வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 47

நடனம் பிரானுகந் துய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலங் காளத்தியாம்
இடமெம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற் கினியனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கச்சி ஏகம்பம் மேயாற்கும் இனியனவான இடம் மூவாயிரவர் இறைஞ்சி, (காரணம்) அன்பு அன்றி மற்று அறியாத தில்லையம்பலமும், (அத்தன்மைத்தாகிய) காளத்தியுமே` என்க - `நம் பிரான் (உலகம்) உய்ய நடன் உகந்து கொண்டான்` - என்று இறைஞ்சி` என இயைக்க.
`நம் பெருமான் உலகம் உய்ய நடனம் ஆடுதற்கு இத் தில்லையம்பலத்தையே இடமாக உகந்து கொண்டான்` என்று அவ்வருளை நினைந்து மூவாயிரவர்.
பிறிது காரணம் இன்றி அன்பே காரணமாக அப்பெருமானை இறைஞ்சுகின்றனர் என்றபடி.
உலக நலம் கருதினாராயினும் அது தந்நலம் கருதல் அன்மையின் `அன்பே காரணமாக` என்றார்.
கண்ணப்ப நாயனாரது வழிபாட்டிற்கு அன்பன்றிப் பிறிது காரணம் இல்லாமை உலகம் அறிந்ததாகலின் அதனை எடுத்தோதாது, குறிப்பால் தோன்ற வைத்து, வாளா, ``காளத்தி`` என்றார்.
`அம்பலமும், காளத்தியும்` என எண்ணும்மை விரிக்க.
`உமை யம்மை வழிபாட்டிற்கு அன்பன்றி வேறு காரணம் உண்டுகொலோ` என்னும் ஐயத்திற்கே இடம் இல்லாமையால், அங்ஙனம் அன்பே காரணமாக ``என்றும் ஏத்தி வழிபடப்படும்`` 1 பெருமான் கச்சி ஏகம்பப் பெருமான் என்பது உடம்பொடு புணர்த்தலால் தோன்ற, ``ஏகம்பம் மேயாற்கு இனியனவான இடம் அன்பின் கடன் அன்றி மற்று அறியாத் தில்லையம்பலமும், காளத்தியுமே`` என்றார்.
இதனால் பயன் கருதாது செய்யும் நிட்காமிய வழிபாடே சிறப்புடைத் தாதல் குறித்தவாறு.
நடன் - நடம்.
மகரத்திற்கு னகரம் போலி.

பண் :

பாடல் எண் : 48

இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கச்சி ஏகம்பர்`` என்பதை முதலிற் கூட்டி, அதன் பின், ``அவரை ஒப்பார் பிறர்`` என்பதையும் சேர்க்க ``இன்னார்`` என்பது, `இன்ன சிறப்பியல்பை உடையவர்` என்னும் பொருட்டாய், ஒருவரையே வரைந்துணர்த்தும் குறிப்பு வினைப் பெயர்.
தனியர் - ஒப்பற்றவர்.
``முனியவர்`` என்பது, `முனிவர்` என்பதில் ஓர் அகரம் விரிந்து நின்ற பெயர்.
சண்டி - சண்டேசுர நாயனார்.
``மழுவாள்`` என்பது ஒரு பெயராய், ``படை`` என்பதனோடு இருபெயரொட்டாய்த் தொக்கது, ``இடைச்சொற் கிளவி`` 2 என்பதுபோல, ``தையல் உடனாம் உருவர்`` என்றதனால், `அருள் உடையர்` என்பதும், ``அறம் பணித்த முனியவர்`` என்பதனால் ``யாவர்க்கும் முதல் ஆசிரியர்`` என்பதும், ``ஏறும் உகந்தவர்`` என்பதனால், தாம்பணித்த அறத்தை நடத்துபவரும் தாமே`` என்பதும், (ஏறு - அறவிடை.
``ஏறும்`` என்னும் சிறப்பும்மை ``உகந்தவர்`` என்பதனோடே இயையும்.
``உகந்த`` என்றாராயினும் `உகந்தவர்` என்பதே கருத்து என்க.
) ``முக்கண்ணர்`` என்பதனால், `உலகிற்கு முச்சுடரானும் ஒளி வழங்குபவர்` என்பதும், ``சண்டீசர் அன்புக்கு இனியவர்`` என்பதனால், `தம்மையே உண்மை உறவாகக் கொள்பவர்க்கு இனியர்` என்பதும் குறிக்கப்பட்டன.
``மழுவாட் படையார்`` என்றது சண்டிக்கு உதவியவாற்றைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 49

பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனைஉள்ள எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாவிரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இத்தனை`` என்பன மூன்றும், `மிகுதி` என்னும் பொருளையே குறித்தன.
தனை - தன்னை; இது பன்மை யொருமை மயக்கம்.
வரவு - வருகை.
``எங்கு அறிந்தேன்`` என்றது, `எங்கும் அறிந்திலேன்` என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்தின.
அவர் மகனார் முருகப் பெருமான்.
அவர் புரவு - அவரால் புரக்கப்படுவ தொன்று; அஃது அவர் கொடியாகிய கோழி.
அடித்தல் - அழைத்தல்.
அழித்தலை, `அடித்துக்கொண்டேன்` என்றல் வழக்கு.
அழைத்தல் பகலவனை.
`இரவில் மடவார் முன்றிலில் ஆட்டிட அரவு இத்தனை யும் கொண்டார்` என்க.
`ஆடும் பாம்பை ஆட்டுவார் இனிய இசை வழியாக ஆட்டுவர் ஆதலின், ஏகம்பர் அரவம் பூண்டதும் அவற்றை ஆட்டுவார்போல இசையால் மடவாரை மயக்குதற்கே` என, அவர்பால் மையல் கொண்டாள் ஒருத்தி மயங்கிக் கூறினாள்.
அவர் ஆடுவது இரவிலேயாகலின், `ஆட்டுவதும் இரவிலே` என்றாள்.

பண் :

பாடல் எண் : 50

இடவம் கறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்
டிடவஞ் சுவர்மட வாரிரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படமஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படமஞ் சுவரெங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிச்சைக்குச் செல்லும் பொழுது முருட்டுக் காளை மேல் ஏறி, வெற்றெலும்பாய் உள்ள தலையை அணிந்து, ஐந்தலை நாகத்தை மேலெல்லாம் பூண்டு கொண்டு சென்றால் பெண்கள் எப்படி அஞ்சாது வந்துஇடுவர்` என்பது இதன் திரண்ட பொருள்.
இடவம் - இடபம்.
`கறுக்கென` என்பது காலை.
விரைவு உணர்த்துவதோர் `என` என் எச்சம்.
இரிகின்றனர் - ஓடுகின்றார்கள்.
`படத்தின்கண் அஞ்சு வாய்களை உடையதாகிய நாகம்` என்க.
`அதனுக்கு அஞ்சுவர்` என இயையும்.
பாங்குகள் - தன்மைகள்.
`எங்ஙன் உளவாகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 51

பாங்குடை கோள்புலி யின்னதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடக்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைகுமின்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது திருவேகம்பரது பலியேல் கோலத்தைக் கண்டு மையல் உற்றாள் ஒருத்தியது கூற்று.
``கொண்டீர்`` என்பன விளிகள்.
பாங்கு உடை கோள் புலி அதள் கொண்டீர் - பக்கங்களில் பொருந்தும் உடையைக் கொள்ளுதலைப் புலித் தோலாகக் கொண்டவரே.
பாரிடங்கள் - பூதங்கள்.
தாம், அசை.
குடை கொள்ள - குடையை ஏந்திப் பிடிக்க.
தடக் கமலம் - பொய்கையில் உள்ள தாமரைக் கொடி.
பூங்குடை கொள்ள - பூவாகிய குடையைப் பிடிக்க.
இஃது உருவகம்.
`பலிகொள்ள வந்தீர்போல வந்தீர்; (ஆயினும் உண்மை அதுவன்று;) இடை கொள் அக்கலை கொள்ளவே ஈங்கு வந்தீர்` என்க.
கலை - உடை `கலைகொள்ளவே` எனப் பிரிநிலை ஏகாரம் விரிக்க, இன்று இடைக்கும் - இன்று யாம் உமக்குத் தோற்கின்றோம்.
`ஆதலின் திருவுளம் இரங்கிக் கலையினைத் தாரும்` என்பது குறிப்பெச்சம்.
`தடங்கமலம், இடைக்கும்` என்பன பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 52

இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதியார்கள் தஞ்சொல்
கடைக்கண்நன் றாங்கச்சி
ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது
வோதங் கிறித்துவமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, கைக்கிளைக்கண் தலைவி தலைவனை எய்த மாட்டாமையைத் தோழி கூறி அவளை விலக்கியது.
இஃது அகப் புறக் கைக்கிளையாகாது, பாடான் திணையில் வரும் புறப்புறக் கைக்கிளை யாதலின் இதன்கண் இன்னோரன்ன துறைகள் வரப்பெறும் என்க.
மின் - மின்னல்.
முதியோர்கள்தம் சொல் கடைக்கண் நன்றாம் - பெரியோர்கள் சொல்லும் சொல்லின் பயன் காரிய முடிவில் விளங்கும் (தொடக்கத்தில் தெரியாது; செய்து பார்த்தால் தெரியும்.
) ஐயம் - பிச்சை.
கடவும் விடை - செலுத்தி வரும் இடபம்.
தோற்ற - அவர் கண் காண.
நில்லேல் - நிற்காதே.
(ஏனெனில்,) இந்த மொய்குழலார் இனிமுன் நின்று சங்க வளையல்களை இழந்தனர்.
தம் கிறித்துவம் - அவரது பொய்த் தன்மை; வஞ்சனை ஓ இது - ஆ! இது.
கிடைத்தல் - எதிர்ப்படுதல்.
`கிடைக்கும் முன் தோற்றனர்` என்றது.
`அம்பு படும் முன் தலை துணிந்தது என்றல்போல.
`காரியம் முந்துறூஉம் காரண நிலை` என்னும் அதிசய அணி.

பண் :

பாடல் எண் : 53

கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கிறி - பொய்; வஞ்சனை.
அது, `பலியிடுமின்; பலியிடுமின்` எனக் கூறுதல்.
சதிரால் - பெருமையுடன்` மிடுக்குடன்.
கருத்து, விடங்கு பட - அழகு உண்டாக.
குறி - தாள அறுதி.
`குறி பல வற்றொடு` என ஒடு உருபு விரிக்க.
அன்றி, ``குறி`` என்பது ஆகு பெய ராய் அதனையுடைய பாட்டைக் குறித்தது என்றலும் ஆம்.
`ஏகம்பர் பிச்சை யேற்றுக் கொண்டு வர குழலார் மெலிவுற்றனர்` என்க.
நெறி - நெறிப்பு.
`நெறி குழல், பல குழல், வார் குழல்` எனத் தனி இயையும்.
வெள் வளை - சங்கவளையல்.
தாயர்கள் - செவிலித் தாயர்.
தெருவில் சிந்திப்போன வளையல்களைத் தாயர் தேடுதல்.
தம் மகளிர் முதலியோரது மானத்தைக் காத்தற் பொருட்டாம்.
இது, கண்டோர் கூற்று.

பண் :

பாடல் எண் : 54

தேடுற் றிலகள்ள நோக்கந்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
வல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலவெழில் ஏகம்ப
னார்க்குள்ளம் நல்கிடத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, காமம் சாலாப் பெதும்பைப் பருவத்தளாயினும் கச்சி ஏகம்பர்பால் காதல் கொண்டாள் ஒருத்திதன் செவிலித் தாய், `இவளது பருவம் இன்மை காரணமாக அப்பெருமான் இவளை நினை யான் ஆகலின், இவள் ஆற்றுமாறு என்னை` எனக் கவன்று கூறியது.
இஃது உண்மையில், சத்தி நிபாதம் இன்மையால் உலகியலின் நீங்கப் பெறாதவரும் சில வேளைகளில் அவ்வியலிற்றானே ஞான வேட்கை உடையராதலையும், ஆயினும் அது கடைபோகாமையும் குறிக்கும்.
``தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்`` 1 என்றார் திருவள்ளுவரும்.
``இவள்`` என்பதை நோக்கம் முதலியவற்றிற்கும் வருவிக்க.
நோக்கம் - பார்வை.
கள்ளம் தேடுற்றில - உள்ளக் குறிப்பை மறைக்கும் நிலைமை பிறரால் ஆராயப்படும் தன்மையை அடைய வில்லை.
சொற்கள் தெரிந்தில - பேசும் சொற்கள் பொருள் இனிது விளங்கவில்லை.
முடி - தலையில், குழல் கூடிற்றில - மயிர்கள் யாவும் நீண்டு வளர்ந்து முனை ஒக்க ஒன்று கூடவில்லை.
கொங்கை பொடித் தில - கொங்கைகள் புளகம் கொள்ளும் அளவிற்கு வளரவில்லை.
``மணி`` என்றது இவளையே.
மடம் - இளமை.
அல்குல் - பிருட்டங்கள்.
இவள் மாடு உற்றில - இவளது இரண்டு பக்கங்களிலும் உயர வளரவில்லை.
`பருவம் எய்தின் இவையெல்லாம் உளவாம்` என்றபடி.
மற்று, அசை.
நல்கு இடத்து - அருள் பண்ணும் பொழுது.
`ஏகம்பனார்க்கு இவள்பால் உள்ளம் நாடிற்றில` என்க.
உள்ளம் - உள்ளத்தில் எழும் எண்ணங்கள்; ஆகுபெயர்.
`இனி என் செய்வது` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 55

நல்கும் புகழ்க்கட வூர்நன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்
தென்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறையவன், மார்க்கண்டேயர்.
``கூற்றைக் குமைத்த கூற்றம்`` என்றது, `கால காலன்` என்றபடி.
பொன், வெண் பொன், `திருக்கடவூர்க் கால காலனும், திருமறைக்காட்டு அமிர்தும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் கயிலை மலையாவது, மலைமகள் என்றும் புல்கும் கச்சி ஏகம்பம்` என இயைத்து முடிக்க.
திருவேகம்பத்தின் சிறப்புணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 56

மலையத் தகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத் தமரர் தொழவிருந்
தான்நெடு மேருவென்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
வையாற் றருமணியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மலயம், `மலையம்` எனப் போலியாயிற்று.
`மன்னித் தொழ இருந்தான்` என இயையும்.
மலயம் - பொதிய மலை.
`நந்தி பெருமான் காரணத்தால் திருஐயாறும், அம்மை வழிபடும் ஏகம்பத்தோடு ஒத்ததாகும்` என்றற்கு.
``திருஐயாற்று அருமணி` என்பதையும் உடன் கூறினார்.
`வடகயிலை நிலையத்து இருந்தானே ஏகம்பத்தானும், ஐயாற்று அருமணியுமாய் இருந்தான்` என்னாது, `ஏகம்பத்தானும், ஐயாற்று அருமணியும் ஆனவனே வடகயிலை நிலையத்து இருந்தான்` என்றது, தெளிவு மிகுதற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 57

மணியார் அருவித் தடமிம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஒப்பும்இன் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏகம்பர் பருப்பதம் இமயம், கொல்லி, சிராமலை, விந்தம்` என்க.
இறைவர் எழுந்தருளியுள்ள சிறந்த சில மலைகளைக் குறித்தவாறு.
தட - பெரிய `குடக்கு` என்பது ஈறு கெட்டுப் புணர்ந்தது.
குடக்கு - மேற்கு.
ஐவனம் - மூங்கில் நெல் `ஐவனங்களையும், அருவியையும் உடைய சாரல்` எனவும், `கிளி ஒப்பு சாரல்` எனவும் இயைத்துக் கொள்க.
`தினையைக் கவர்கின்ற கிளியை மடவார் ஓப்பும்` வேண்டும் சொற்கள் வருவித்துக்கொள்க.
பருப்பதம் - மலை.

பண் :

பாடல் எண் : 58

பருப்பதம் சார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காவுகந் தான்கச்சி
ஏகம்பத் தெம்மிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பருப்பதம் - திருப்பருப்பதம் (ஷ்ரீ சைலம்) இந்திர நீலம் - இந்திர நீலப் பருப்பதம், இவற்றோடு திருப்பரங்குன்றம் இவை மூன்றும் தேவாரம் பெற்றவை.
மகேந்திரமலை திருவாசகத்தில் சொல்லப்பட்டது.
மந்தர மலை புராணங்களால் புகழப்பட்டது.
இப்பாட்டும் முன்னைப் பாட்டோடு ஓத்தது.
மருப்பு - தந்தம் ``மருப்பது, நெருப்பது`` என்பவற்றில் ``அது``, பகுதிப்பொருள் விகுதி.
அவற்றை அடுத்துள்ள `அங்கு` என்பன.
ஆர் - பொருந்திய.
வெள்ளைத் தந்தம் பொருந்திய கருங் குன்று, யானை, வில் ஆர் - ஒளி பொருந்திய.
ஆகுதி, வேள்வித் தீயில் சொரியப்படும் பொருள்கள்.
இருப்பது - இருக்கும் இடம்.
`ஏகம்பத்து எம் இறை பருப்பதம் முதலிய மலைகளில் இருப்பிடம் அவ்விடத்ததாக உகந்தான்` என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 59

இறைத்தார் புரமெய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றமென் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``இறைத்தார்.
.
.
மறைத்தார்`` என்பதை ``ஏகம்பர்`` என்பதற்கு முன்னே கூட்டுக.
இறைத்து ஆர் வில் இமை.
மிகுதியாக விசைத்து நிறைந்த வில்லின்தொடுப்பு; அம்புக் கூட்டம், `அதனை இமவான்மகட்கு மறைத்தார்` என்றது தாம் தனியே சென்று போர் செய்தார்` என்றபடி.
``கருங்குன்றம்`` முதலிய நான்கும் ஏனைக் கழுக்குன்றம், முதுகுன்றம் போலச் சில தலங்கள் போலும்! `குன்று` எனப் பெயர் பெற்ற தலங்களைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 60

கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்
றேறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன் ஏகம்பம் நினைந்து, (பின்) திருக்குற்றாலம் முதலிய தலங்களை அடைந்து வணங்குங்கள்; துதியுங்கள்; தெளியுங்கள்` என்க.
``தொண்டர்``, விளி.
``என்று`` எண்ணிடைச் சொல்.

பண் :

பாடல் எண் : 61

நினைவார்க் கருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நியமம் - பரி தியம்.
நீர்ப் பனை வார் பொழில் - கடற் கரையில் பனை மரங்கள் நீள்கின்ற பொழிலையுடைய.
பாச்சில் திருப்பாச்சிலாசிராமம்.
அதிகை - திருவதிகை.
நினைவு ஆர் தரு நெஞ்சின் - நினைதல் பொருந்திய நெஞ்சினோடு.
நீர் - நீவிர்.

பண் :

பாடல் எண் : 62

நண்ணிப் பரவுந் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின்சென்றே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 63

சென்றே விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழிலழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதிலொற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நின்று - என்றும் நிலைபெற்று நின்று.
ஏர் தரு கச்சி.
அழகைத் தருகின்ற கச்சி.
நிலாவிய - விளங்குகின்ற தலங்கள் அண்ணாமலை முதலியன என்க.
தேறல் - தேன் அழுந்தூர் - திருவழுந்தூர்.
இஃது இப்பொழுது `தேரழுந்தூர்` என வழங்குகின்றது.
வன் தேரவன் - திரிபுரத்தை எரித்தற்கு ஏறிச் சென்ற வலிய தேரை உடையவன்.
திருவில் பெரும் பேறு - `திருவில்` என்னும் பெயராகிய பெரிய பேற்றைப் பெற்ற தலம்; திருவிற்கோலம் இஃது இப்பொழுது கூவம்` என வழங்குகின்றது.
ஒற்றியூர் - திருஒற்றியூர்.

பண் :

பாடல் எண் : 64

நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென் றடியார்க் கருள்புரி
ஏகம்பர் ஆலயமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருப்புலிவலம், வில்வலம் இவை வைப்புத் தலங்கள்.
கொச்சை - சீகாழி.
இது முன்பு `திருத் தோணிபுரம்` எனச் சொல்லப்பட்டது.
(60) திருப்பனங்காடு - பனங்காட்டூர்.
`புறவார் பனங்காட்டூர் வன்பார்த்தான் பனங்காட்டூர்` என இரண்டு தலங்கள் உள்ளன.
`அலாய்` என்று - `நீ அணுகற்பாலை அல்லை` என்று.
`ஏகம்பர் ஆலயம் திருஓத்தூர் முதலியன என்க.

பண் :

பாடல் எண் : 65

ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு வாலங்கா
டேகம்பம் வாழ்த்துமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அங்கு` என்பன யாவும் அசைகள்.
ஆலை ஆர் - கரும்பு ஆலைகள் நிறைந்த.
கருகாவை - திருக்கருகாவூர், திருக் காரிகரை ஒரு வைப்புத் தலம்.
வேலை - கடல்.
திருஊறல் இப்பொழுது `தக்கோலம்` என வழங்குகின்றது.
திருப்போந்தை - திருப்பனந்தாள்.
முக்கோணம் - திரிகோண மலை; இலங்கைத் தலம்.
கடுக்கை - கொன்றை.

பண் :

பாடல் எண் : 66

வாழப் பெரிதெமக் கின்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழலெம்
ஏழைக் கிடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு உடன் போக்கில், செவிலி புலம்பல் துறையது, பூங்குழல் எம் ஏழை - பூவை யணிந்த கூந்தலை யுடைய எங்கள் பெண்ணை.
இயக்குறின் - தலைவன் நடத்திச் சென்றால்.
ஏகம்ப நாதரை வணங்காதவரே சென்று வாழ்தற்குரிய அந்தப் பரற்கற்கள் நிறைந்த பாலை நிலத்தின் கொடுமையை அவளது மாந்தளிர் போலும் பாதங்கள் பொறுக்க மாட்டா.
குயபாரம் (தன பாரம்) இடையை ஒடித்து விடும்.
`நாங்கள் எங்ஙனம் ஆற்றுவோம்` என்பது குறிப்பெச்சம்.
தாழ் - நீண்டு தொங்குகின்ற, தம், சாரியை.
சுரம் - பாலை.
பரல் - பரற் கற்கள்.

பண் :

பாடல் எண் : 67

உறுகின்ற வெவ்வழல் அக்கடம்
இக்கொடிக் குன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னாலைய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழிற்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுத் தோழி தலைவனைப் போக்கு உடன் படுவித்தது.
``ஐய`` என்பதை முதலிற் கொள்க.
அக் கடம் - அந்தப் பாலைநிலம்.
உன்பின் வரப்பெறுகின்ற வன்மையினால், இக் கொடிக்கு (கொடி போன்றவளாகிய இவளுக்கு) ஏகம்பனார் கச்சியைச் சூழ்ந்து உறும் தண் பணை என்று கொள்` என முடிக்க.
துறுகின்ற - நெருங்குகின்ற.
இளையோர் - இளம் பெண்கள்.
குறுகின்ற- பறிக்கின்ற.
தண்பனை - குளிர்ந்த மருத நிலம்.

பண் :

பாடல் எண் : 68

கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுற்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ துரைப்பரிதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் உடன் போக்கில் செவிலி புலம்பல் துறையது.
`பாலை தீச்சில (உடையது;) வேய் வெடி படும்` என இயைக்க.
கடுங் கதிரின் - கடுமையான பகலவனது கிரணங்களால், கள்ளித் தீ - கள்ளிச் செடிகள் காய்ந்து எரிகின்ற தீ.
(அத்தீயால்) வேய்- மூங்கில்.
உலறி - காய்ந்து விள்ளும்.
வெடி படும் - பிளக்கின்ற வெடியோசை முழங்கும்.
``பாலை படும்`` என, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றபட்டது.
`அதில் என் பாவை போவது உரைப்பரிது` என முடிக்க.
விடலை - காளைப் பருவத்தன்.
`ஏகம்பர் சேவடியை உள்ளும் அது (நினைக்கின்ற அந்தச் செயலை) மறந்தவர்கள் போவது போலப் போவது` என்க.
உரைப்ப அரிது - சொல்ல ஒண்ணாது.
`ஆயினும் நிகழ்ந்து விட்டதே! என்ன செய்ய! என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 69

பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு உடன் போக்கில் இடைச் சுரமருங்கில் தலைவி தமரைக் கண்டு கலங்கத் தலைவன் தேற்றியது.
``செஞ்சடை மேல்.
.
.
அன்ன பொன்னே`` என்பதை முதலிற் கொள்க.
பரிப்பரு - தாங்குதற்கரிய.
``படையது`` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி.
``கானர் எனில் - இந்நிலத்து மாக்கள் எனில், பருந்துக்கு இரையாக்கும் கொடியேனாவேன்.
உமர் எனின் மறைகுவன்; அஞ்சல்`` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 70

வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்துங் கெடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக்கல்லதர் செல்வதெங்
கேயொல்லும் ஏழைநெஞ்சே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொன் அணங்காகிய என் அணங்கு` என்க.
பொன் அணங்கு - அழகிய பொன்.
என் அணங்கு - என் பெண்.
தன வரிப் பந்து - தனம் போன்றுள்ள, வரிந்து செய்யப்பட்ட பந்து.
தலைவி தான் அன்று பின்மாலையில் தலைவனுடன் போக முடிசெய்து விட்டமை யால் முன் மாலையில் செவிலியிடம் கழங்கும், பந்தும் கொடுத்து ஆசை தீர அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
அதனை அப் பொழுது செவிலி அறியாமையால் விடிந்த பின் நினைத்துப் புலம்பி னாள்.
இற் பிரிந்து - இலத்தினின்றும் பிரிந்து.
எங்கே ஒல்லும் - எப்படி இயலும்! `ஒல்கும்` என்பது பாடமன்று.
எனவே, இதுவும் செவிலி புலம்பல் துறை.

பண் :

பாடல் எண் : 71

நெஞ்சார் தரவின்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறற் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இஃது உடன் போக்கில், செவிலி பின் தேடிச் சேறலில் `சுவடுகண்டிரங்கல்` துறை.
பஞ்சு ஆர் அடி - பஞ்சு நிறைந்த பாதம்.
பாங்கு - இடம்.
ஆங்கு - அவ்விடம்.
`அவள் பின் செல முன் செல் காளை போக்கு இவை` என முடிக்க.
`அந்தத்தில் உள` என வேறு முடிபாக்குக.
வெம் சார்வு - விருப்பம் உள்ள சுற்றம்.
வெடுவெடு என்றல், விரைவுக் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 72

இலவவெங் கான்உனை யல்லால்
தொழேஞ்சரண் ஏகம்பனார்
நிலவுஞ் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்கரத்துன்
உலவுங் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏகம்பனார் நிலவும் சுடரொளி வெய்யவனே` என்பதை முதலிற் கூட்டி, அதன்பின், `உனை அல்லால் சரண் தொழேம்; செல்சுரத்துள் தளிரடி செலவும், வெங்கான்பருக்கை குளிர உறு துணைக்கு உன் உலவும் கதிர் தணிவித்தருள்` என இயைத்து முடிக்க.
இது, உடன் போக்கில் `நற்றாய் சுடரோடு இரத்தல் (அல்லது) சுரம் தணிவித்தல்` என்னும் துறை.
இலவம் - இலவ மரம்.
வெய்ய வன் - பகலோன்.
`ஏகம்பரனாரது சுடர் ஒளிபோலும் ஒளியையுடைய வெய்யோன்` என்க.
`மலர்போல் மிதித்துச் செல்ல` என உவம உருபு விரிக்க.
பருக்கை - பருக்கைக் கற்கள்.
`அவை சுடாது குளிரும்படி உன் கதிர் தணிவித்தருள்` என்க.
தலைவியை, `தாமரை மலரில் உள்ள திருமகள் போன்றவள்` எனக் கூறும் கருத்தால் தாமரை மலர்மேல் விருப்பமுடைய பகலவனுக்குத் துணை` என்றாள்.
`வன் துணைக்கு - உன் துணையை வேண்டி` என உரைத்து அதனை உனையல்லால் சரண் தொழேம்` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 73

துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தொன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ டேயொத்த
காதலொ டேகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டை, ``மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை`` என்னும் திருக்கோவையார்ப் பாட்டோடு 1 ஒப்பு நோக்கிக் காண்க.
``துணை`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, `துணையும், ஒத்த கோவையும்போல் பேதையும், தோன்றலும் முன் ஏகினரே` என நிரல் நிறையாக இயைத்துக் கொள்க.
துணை - செவிலியால் காணப் பட்ட தலைவி.
கோ - அவள் தலைவன்.
பேதை - செவிலிதன் பெண் ணாகிய தலைவி.
தோன்றல் - அவள் தலைவன்.
``ஏகினரே`` என்றது வினா.
இருவரது காதலும் இணையொத்ததாய் இருந்ததைச் செவிலி தன் பெண்ணின் இரு கொங்கைகளும் இமையொத்திருப்பது போல் இருந்தது` என விளக்கினாள்.
``கொங்கையொடே`` என்பதை ``ஒத்த`` என்பதனோடே முடிக்க.
முன் இரண்டடிகளும் செவிலிதன் வினா.
பின் இரண்டடிகளும் எதிர் வந்த தலைவன் கூற்று.
அத்தர் - ஏகம்பர்.
ஏறு - அவரது ஊர்தியாகிய இடபம்.
``இவள்`` என்றது, எதிர் வந்த தலைவன் தன் தலைவியைச் சுட்டியது.
``காளையைக் கண்டனம்; நீவிர் சொல்கின்ற மற்றொருவரைப் பற்றி இவளைக் கேட்டுப் பாருங்கள்`` என்றான் எதிர் வந்த தலைவன், இதனால், எதிர் வந்த தலைவன் தன்னைப் போல வந்த தலைவனை மட்டும் நோக்கியதன்றி, அவளுடன் வந்த தலைவியை நோக்கவில்லை` என்பது புலனாகி, அவன் தன் தலைவியை யன்றிப் பிறிதொரு பெண்ணின் முகத்தை நோக்காத பெருந்தன்மையை விளக்கிநிற்கின்றது.
பிணை - பெண் மான்.

பண் :

பாடல் எண் : 74

மின்நலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேலெம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் புணர்ந்துடன் வந்தோரை வினவிய செவிலித் தாயை அவர்கள் மீள (திரும்பிச் செல்லும்படி.
) உரைத்தது.
மின் நலிக்கும் இடை - மின்னலைத் தோற்றத்தால் நலிவிக்கும் இடை.
வணக்கத்து இடை - துவளுதலையுடைய இடை.
இடையாள் - செவிலியால் தேடப்படும் தலைவி.
மீளி, அவள் தலைவன்.
நென்னல்- நேற்று.
பாக்கை - பாக்கம்.
`எந்த மனையில் (இல்லத்தில்) கண்டீர்` எனச் செவிலி வினாவினாள்.
பின்னர் - இங்குத் தங்கிய பின்பு, போக்கரு - செல்லுதற்கரிய.
அவர், செவிலியால் தேடப்பட்ட இருவர், அரி - திருமால்.
``சென்று வைகுவர்`` என்றதனால், `நீவிர் மீளுக` என்பது குறிப்பெச்ச மாயிற்று.

பண் :

பாடல் எண் : 75

உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் குங்கச்சி
காணினுங் கார்மயிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கார் மயிலே! ஏகமபனார் சிவாலயம் துவரத் துலங்கு விண்மேல கவரச் சூலம் துலங்கு கொடி திளைக்கும் கச்சி இன்னும் காண்` என இயைத்து முடிக்க.
இப்பாட்டு, தலைவியை உடன்கொண்டு சென்ற தலைவன் அவளுக்குத் தன் நகர் காட்டியது.
உவரச் சொல் வேடு - வெறுக்கப் பேசும் வேடர் இனம்.
அவ்வரக்கன், இராவணன்.
இஃது இடைக் குறைந்து நின்றது.
இராவணன் வான்வழியாகச் சென்றது புட்பக விமானம்.
அது குபேரனுடையது.
அதன் சுற்றளவுபோல ஆயிர மடங்கு சுற்றளவுடையது ஏகம்பனார் ஆலயத்தின் சிகரம், `அச்சிகரத்தை யடைய ஆலயத்தின் மேல் சூலம் துலங்கு கொடி திளைக்கும் கச்சி` என்க.
சிவாலயத்தின் மேல் பறக்கும் கொடியில் இடபத்தோடு சூலமும் எழுதப்பட்டிருக்கும்.
``இன்னும்`` என்றது, `நன்றாக` என்றபடி.
துவர - மிகவும் கார் மயில் - கார் காலத்தில் ஆடும் மயில்.
இஃது உவம ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 76

கார்மிக்க கண்டத் தெழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோரொலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்னொலி
யேயொக்கும் நேரிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, முன்பாட்டின் துறையை அடுத்து வரும் பதிபரிசு உரைத்தல் துறையது.
பதி - நகர்.
பரிசு - அதன் தன்மை.
உரைத்தவன் தலைவன்.
`கச்சியின் வாய்நெல் நடுவோர் ஒலியும், நெல் குவிப்போர் ஒலியும், கரும்பு ஆலையில் ஒலியும் கடலின் ஒலியே ஒக்கும்` என்க.

பண் :

பாடல் எண் : 77

நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யாலிமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கருங்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யாலிமைப் போதணி
சீதஞ் சிறந்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, தலைமகளை உடன்கொண்டு சுரத்திடைச் சென்ற தலைமகன் அப்பால் தன் நகர்ப்பொழில் கண்டு உவந்து கூறியது.
நேர்த்து அமையாமை விறல் - தன்னோடு ஒத்தது பிறிதில்லாத வெற்றி.
`விறலை உடைய, கொடிய வேடரது சுரம்` என்க.
`வேடரது சுரம்` என்பதில் ஆறாவது வாழ்ச்சிக் கிழமைக் கண் வந்தது, `நுமதூர், எமதூர்` முதலியனபோல, `கண்ணின் இமை தீந்தன` என்க.
``பொன்னே`` என்பது, தலைவன் தன் தலைவியை விளித்தது.
பகடு - யானை.
`சிவபெருமான் யானையை உரித்துப் போர்த்த காலத்தில் அதனைப் பார்க்க அஞ்சி உமையவளே அப்பால் ஓடினாள்` என்பது புராணம்.
`நம் நல் ஊழ் கொணர்ந்து சேர்த்தமையால்` என்க.
இமைப் போது - இமைகளாகிய இதழ்கள்.
போது, ஆகுபெயர்.
அணி - அழகு `அணியோடு` என ஒடு உருபு விரிக்க.
சீதம் - குளிர்ச்சி.
சிறந்தன - மிக்கன.
`தீந்துபோன இமைகள் குளிர்ச்சி மிகுந்தன` என்பதாம்.
`கண் தீந்த, சீதம் சிறந்தன` எனச் சினைவினை முதல்மேல் நின்றன.

பண் :

பாடல் எண் : 78

சிறைவண்டு பாடுங் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் முன் போந்த, ``கார் மிக்க கண்டத்து`` என்னும் பாட்டோடு ஒத்தது.
``நன்னுதலை`` என்னும் விளியை முதலிற் கொண்டு, `இவை கமலக் கிடங்கு; இவை கமுகின் பொழில்; உவை வாழைப் பொதும்பு; ஏகம்பனார் கச்சி நாடு எங்கணும் இவ் வண்ணமாம்` என முடிக்க.
கிடங்கு - அகழி.
பழுக்காய் - பாக்கு மரக் காய்.
பொறை - சுமை.
பொதும்பு - பொதும்பர்; சோலை, நறை - தேன்.

பண் :

பாடல் எண் : 79

நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ்
வாயுமிவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாமொப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுள்இப் பொய்கையுளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக் கச்சி மாநகரின் பொய்கைச் சிறப்பைப் புகழ்ந்தது.
``ஏகம்பனார்.
.
.
.
இப்பொய்கையுள்`` என்பதை முதலிற் கொண்டு, `நீலமும், ஆம்பலும் `நன்னுதலார் கண்ணும், வாயும் இவ்வாறு` எனப் போய்ப் பூப்ப, வள்ளை என்று எல்லாம் காது ஒப்பு என்ன வீறிடும் என இயைத்து முடிக்க.
நன்னுதலார் - மகளிர்.
`இவ்வாறு ஆவன` என ஒரு சொல் வருவிக்க.
போய் - வளர்ந்து, ``மன் இதழ் ஆர்`` என்பது நீலத்திற்கு அடை.
`வள்ளை யென்று` என்பதில் ``என்று`` பெயர்ப்பட வந்த எச்சம், `மங்கலம் என்று ஓர் ஊர்` வீறிடும் - சிறந்து நிற்கும்.
``பொன்`` என்பது உவம ஆகுபெயராய் நெருப்பைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 80

உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதவே
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எங்களைஆட் கொள்வார்.
.
.
.
ஏரி களப் பரப்பிலும், கிடங்கு இட்ட நன்னீரிலும் வாளைகளொடு கயல் மேய்கின்றன` என முடிக்க.
உள் வார் - உள்ளே நீண்டு செல்கின்ற இடம்.
நெருங்குதல் - நிரம்புதல்.
கிடங்கு - அகழி.
`கிடங்கில் இட்ட` என உருபு விரிக்க.
இடுதல் - நிரப்புதல்.
வள் - கூரிய.
தலையும்.
வாலும், `ஆட் கொள்வாரும், (எமக்குப்) பிறவியைக் கொடாதவரும் ஆகிய ஏகம்பரது கச்சி` என்க.
கள் வார் - தேனை ஒழுக்கின்ற.
`ஏரியது களம்` என்க.
களம் - இடம்.
ஏரி - பெரிய நீர்நிலை.
`இப்பெயர் இப் பொருளில் வருமிடத்தில் வேற்றுமைப் புணர்ச்சியிலும் வல்லெழுத்து மிகுதி இல்லை` என்பர்.

பண் :

பாடல் எண் : 81

பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னு கராவொருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``பொலி நுதலாய்`` என வந்தமையால் இப் பாட்டினைத் தலைவன் தலைவிக்குப் பதி பரிசு உரைத்ததாகவே கொள்க.
பொலி - விளங்குகின்ற.
பணை - வயல்கள்.
வயல்களில் பாசியும், நீர்ச் சேம்பும் அடர்ந்திருத்தல் வானத்தில் கருமுகில் படிந்தது போலக் காணப்படுகின்றது.
கரா ஒருத்தல் - ஆண் முதலை.
பொருதல் - தாக்குதல்.
`பொருவதாக, அதனைப் பார்` என்க.
`கச்சியின்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 82

கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்கறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமுந் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மகிழ் திரு ஏகம்பர் தேவி மகிழ`` என்பதை முதலிற் கொள்க.
`ஏகம்பர் மலைமகளுக்கு அருள் புரிந்து, - மகிழ் தம் தேவி - என்னும் அன்பு பற்றி` என்றற்கு, ``தேவி மகிழ`` என்றார்.
``மலைமகள் கண்`` என்பதில் கண், ஏழனுருபு.
ஆர - பொருந்த.
`வைத்தார்` என்பது ஏதுகை நோக்கி, ``வைச்சார்`` என மருவிற்று.
`விண்ணோரும், விச்சா தாரும் தொழுகின்ற அவள் விமானமும்` என்க.
பரப்பு - நிலப்பரப்பு.
ஆங்கு - அப்பரப்பின்மேல் மாடங்கள் - மேல் மாடங்கள்.
இதனால் கச்சிக் காமக் கோட்டத்தது சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற தரியுறை
பாடகம் தெவ்இரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊரகம் - உலகளந்த பெருமாள் கோயில்.
பாடகம் - பாண்டவ தூதப் பெருமான் கோயில், இவை கச்சியில் உள்ளவை.
தெவ் - பகை; பகைவர்; அசுரர்.
இரிய - தோற்று ஓட.
கன்னி - துற்கை.
மற்று, அசை.
அவர் - மேலெல்லாம் சொல்லி வருகின்ற கம்பர்.
வான் கவிகள் - தெய்வப் புலவர்கள்.
தாங்கிய நாடு - உயர்த்துக் கூறிய உலகம்அது சத்தி தத்துவ புவனம்.
அதில் இருந்தவள் சத்தி.
``அரி`` என்பதை ``ஓங்கின`` என்பதனோடும் கூட்டுக.
`அரி ஓங்கின (நின்ற கோலமாய் உள்ள) ஊரகம் (அவர் கச்சியில்) உள்ளகம்; ஓர் உட்பகுதி, அரி உறைகின்ற (இருந்த கோலமாய் உள்ள) பாடகம் உம்பர் உருகிட மாம்.
பாங்கினில் (கச்சியில் ஒருபக்கத்தில்) நின்றது.
தெவ் இரிய வாங்கின வாளையுடைய கன்னி அவர் மைத்துனி.
(மனைவிதன் தங்கை) எல்லாப் புவனங்கட்கும் மேலதாகிய சத்தி தத்துவ புனத்தில் உள்ள சத்தி அவருக்கு மனைவி.
(அவர் சத்தி தத்துவத்திற்குமேல் உள்ள சிவ தத்துவ புவனத்தில் இருப்பவர்.
) இங்ஙனம் திருவேகம்பரது பெருமை விளக்கப்பட்டது.
சத்தியை `மனைவி` என்றதனால் அவர் அத்தத்துவத்திற்கு மேலேயிருத்தல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய
தின்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழில்உது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் உடன் போக்கு.
இறுதியில் தலைவன் பதிபரிசு உரைத்தது ``பொன்னே`` என்பதை முதலிற் கொள்க.
பொன் இலக்குமி.
இஃது உவமையாகு பெயராய்த் தலைவியைக் குறித்தது.
`இன்ன பிறங்கல் நம் பிராட்டியது; உது சூலத்தள் பொழில்; (தளர்) நமக்குத் தளர்வில்லை` என முடிக்க.
இழை - அணிகலம்.
ஆர் - நிறைந்த.
`இழையாக அணி` என ஆக்கம் வருவிக்க.
சத்திக்குச் சொல்வதும்போலச் சிவனுக்கும் வலக்கண்ணில் திருமகளையும், இடக்கண்ணில் கலைமகளையும், நெற்றிக் கண்ணில் ஞானமகளையும் தருதல் கூறப்படும்.
ஞானமகள் சத்தியின் கூறே ஆதலாலும், சத்தி மலைமகளாகச் சொல்லப்படுதலாலும் ``இன்ன பிறங்கல்`` என மலையை, ``நம் பிராட்டியது`` எனவும், `காடுகிழாள் மாயோன் தங்கை` என வைத்து `மாயோள்` எனப்படுதலின் கடுக்கைப் பொழிலை, (கொன்றைச் சோலையை) ``திரிசூலத்தள் பொழில்`` என்றும் கூறினான்.
பிறங்கல் - மலை.

பண் :

பாடல் எண் : 85

தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்ததழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாயிவ் வுலகத்துளே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டும் முன் பாட்டின் துறையதே.
``ஈங்கு`` என்பதை ``மடவாய்`` என்பதன் பின்னர்க் கூட்டி, அவ்விரண்டையும் முதலிற் கொள்க.
கிறி படுத்தார் - பொய்யை உண்டாக்கினார்.
தடத்தங்க ளெல்லாம் இறைவனது நாடகமாகக் கூறுதல் பற்றி ஏகம்பர் உமையது வளைத் தழும்பைப் பெற்றதைத் தலைவன் ``கிறி`` வென்றான் கிளை - இனம்.
`கிறிபடுத்தாரது ஏகம்பம் இது.
இங்கு வந்து இதனை இறைஞ்சினமையால் நாம் இவ்வுலகத்துள்ளே உளர் ஆவதன் (வாழ்வதன்) பயனைப் படைத்தோம்` என முடிக்க.
மற்று, அசை.

பண் :

பாடல் எண் : 86

உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் கார் கண்டு தன்னுட் கூறியது.
``முகிலாகிய மத யானைகள் இடியாகிய பிளிறுதலைச் செய்து, மின்னலாகிய பாசத்தை அறுத்துத் தள்ளி, வானமாகிய களத்தில் வருமாயின், பின்னர்த் தலைவி என்னாவாள்` என்பதை நினைத்துப் பார்மின் - எனத் தோழி கூறியதை நினைந்து, ஏகம்பர் கோயில் வாசலில் உள்ள கொடி அலைவதுபோல மனம் அலமரும் நீர்மையை யுடையனானேன் யான் என இயைத்து முடிக்க.
வானத்தைக் `களம்` என்னாமை ஏகதேச உருவகம்.
முகில்களைப் போர்க்களத்து யானைகள் போல்வனவாகக் கண்டு தலைவி இறந்து படும் நிலைமையை அடைவாள் என்பதாம்.
``வலவிய யானைகள்`` என இயையும்.
வார் குழல் - நீண்ட கூந்தலை யுடையவள்.
``யானை`` என வருதலின் முழங்குதல் பிளிறுதலாயிற்று.

பண் :

பாடல் எண் : 87

நீரென்னி லும்அழுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்
றாரென்னி லுந்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லுந்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லுந்தங்கும் வாட்கண்ணி
தானன்பர் தேர்வரவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது கார்ப் பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகளை, `தலைவனது தேர் இனி வருதல் தப்பாது` எனக் கூறி வற்புறுத்தும் தோழி அதனை முகில்கள் முன்னிலையாகக் கூறியது.
` (நீவிர் பெய்வது மழையேயாயினும்) தலைவியது அழும் கண்கள் போலும் முகில்காள்! - கச்சியுள் ஏகம்பர் நீள் மதில் வாய்ச்சேர் - (சேர்ந்திருப்பன) என்னும் தகுவனவாகிய வாள்போலும் கண்களை யுடைய இவள், - நெஞ்சம் அஞ்சலை - என்று அன்பர் தேர்வரவு உரைப்பார் ஆர் என்னிலும் - தமர் - (என்பாள் - என இயைத்து, `ஆதலின், நீவிர் அதனைக் கூறுவீர்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
அமராவதி - இந்திரன் நகர்.

பண் :

பாடல் எண் : 88

வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, தோழி பருவங் காட்டித் தலைவியை வற்புறுத்தது.
``கச்சி அன்னாய்`` என்றது தோழி தலைவியை விளித்தது.
``பரங்கொங்கை தூவல்`` என்பதை இறுதியில் வைத்து, `கார் முகில், நீராகிய முத்தினைத் தாரமாகக் கொண்டு, கொன்றை மரப் பூக்களைக் கொண்டு பொன்னாய் நிற்க, காந்தட் பூவின் கொத்தாகிய கைகளில் அன்பர் தேரின்முன் பொற்சுண்ணம் ஏந்த வேண்டிப் போந்தன.
ஆகவே, நீ நின் கொங்கைகளைப் பரமாக (சுமையாக)ச் சுமக்க வேண்டா` என முடிக்க.
`பரமாக தரமாக` என ஆக்கம் வருவிக்க.
தூவல் - தாங்கற்க; சுமவற்க.
`மின்னலின்கண் நீர்` என ஏழாவது விரிக்க.
``ஏந்தவும்` என்னும் உம்மை சிறப்பு.
`கார் முகில் போந்தன; கொங்கை சுமவல் எனப் பருவங் காட்டி வற்புறுத்தினாள்.
`சுமவல்` என்றது `தனிமை காரணமாகச் சுமையாக எண்ண வேண்டா` என்றபடி.
இயற்கையாய் வந்த கார்ப் பருவத்தை அன்பர் தேரின்முன் சென்று வரவேற்க வந்ததாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணி.

பண் :

பாடல் எண் : 89

கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, பகைவயிற் பிரிவின்கண் தலைமகள் கார்ப் பருவம் கண்டு ஆற்றாது தோழியொடு புலம்பியது.
``நேரிழை`` என்றது தலைவி தோழியை விளித்தது; அதனை முதலிற் கொள்க.
கார்முகம் - வில்.
`கை ஆரக் கொண்டு` என்க.
சென்றார் - சென்ற தலைவர்.
`நம்மை நினையார்` என்க.
புணரி - கடல்.
`அது மேகமாகி இருண்டு சுரந்தது` என்க.
நீர் முகமாக - யார் ஆற்றுவிப்பாராய் நிற்க.
வினை - தீவினையின் விளைவு; ஆகுபெயர்.
அயர்வுயிர்பு - இளைப்பாறுதல்.
`வினைக் கடலை நீந்துதலாகிய அயர்வுயிர்ப்பை ஆர்முகமாகப் பெறுவேம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 90

உயிரா யினவன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்
சிறுத்தன கார்மயிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது வரைவொடு வந்த தலைமகனது தேர்வரவு கேட்டுத் தலைவி மகிழ்ந்த மகிழ்ச்சியைத் தோழி செவிலிக்கு உணர்த்தியது.
புயல் - மேகம்.
இஃது ஆகுபெயராய் மழையைக் குறித்தது.
பல் வளை - பலவாகிய வளையலை யணிந்த தலைவி.
`பல் வளைக்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது.
`தயிரையும், பாலையும் நெய்யோடு ஆடிய ஏகம்பர்` என்க.
`நம் பல் விலைக்கு முன்பு கையில் இராது கழன்ற வளையல்கள் அழுத்தமாகிவிடத் தனங்கள் கச்சினை இறப் பண்ணும்.
பான்மைகள் ஏகம்பர் அருள் போல் கார் மயில் ஆம்` என இயைத்து முடிக்க.
`இறுக்கும்` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டு ``இறும்`` என நின்றது.
``அருள்`` என்பது ஆகுபெயராக அதன் பயனைக் குறிக்க.
கார் மயில் பண்பு பற்றிய உவமையாய் நிற்றலின் அவை தம்முள் வேறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 91

கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனவண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, முல்லை, நிலத்துக் கைக்கிளையாகிய `ஏறு தழுவிக் கோடல்` என்னும் ஆசுர மணத்தில் தழுவவிடப்பட்ட ஏற்றினைக் கண்டோர் கூறியது.
`அன்று கார் வண்ணத்தன் விடை ஏழ் தழுவினும், இன்று அண்டர் தனி விடை ஏகம்பர் கச்சிப் புறவிடை போதவிட்டார்; போர் விடை பெற்று எதிர் (சென்று) மாண்டார் என அம் மழவிடையை (எவரேனும்) தழுவினால் ( அவர்) அண்டரது பொன்னின் பூண் மார்பிடை வைகப் பெறுவார்` என்பது புராணம்.
அண்டர் - ஆயர்.
தனி - ஒற்றை.
புறவு - முல்லை நிலம்.
போத விட்டார் - வர விட்டார்.
போர், இங்கு ஏறுதழுவல் விடை - அதற்கு ஆயர்தரும் ஆணை.
தார் விடை - மணி யணிந்த இடபம்.
தன் பொன்- ஆயர்களுக்கு மகளாகிய இலக்குமி போல்பவள்.
மார்வு - அவளது மார்பு.
வைகல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 92

விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ டான்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போற் கலந்தெழுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதுவும் முன்பாட்டின் துறையதே.
விடை - ஆயர் வரவிட்ட ஏறு.
அது தன் கொம்பால் தம் மார்பிற் பாய இருக்கின்ற கொடுமையை நினையாமல், மேலான ஆயர் கன்னியது வேல்போலும் கரிய கண்ணின் கடை பாய்கின்ற மனத்தினையுடைய காளையர் இனம், முல்லை நிலத்தின் பதியில் (ஊரில்) உள்ள மன்றின்கண் கடல் போற் கலந்து எழும்` என்க.
புல் - புலி.
கொலி - கொல்லி; கொன்றவன்; பன்மை யொருமை மயக்கம்.
கச்சி முல்லை - அடையடுத்த ஆகுபெயர்.
முல்லைக் கொடி வளரும் பாத்தியை ``வயல்`` என்றார்.
கடைதொறும் பாய் - வாயில்கள் தோறும் துள்ளுகின்ற.
`காளையர் இனம்` என மாற்றிக் கொள்க.

பண் :

பாடல் எண் : 93

எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூரம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது நெய்தல் நிலத்துக் களவியலில் தலைவன் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவியைப் புகழ்ந்தது.
இது `நலம் புனைந்துரைத்தல்` எனப்படும்.
துணர் - பூங்கொத்துக்களையுடைய.
`மணற்குன்றில் நிற்கும் பரதர் கொம்பே` என்க.
பரதர் - வலைஞர்.
`உன் முகத்தன சேல் முதலியன அல்ல; கூரிய இரண்டு அம்புபோல ஆலும்`, (பிறழும்) என்க.
ஆவதாக உணர்ந்தன்றி `அன்று` என்றல் கூடாமையின், `சேல் முதலியன அல்ல` என்றானாயினும் இது கண்ணுக்கு அவன் சொல்லிய பலபொருளுவமையேயாம்.
``செழு மலர்`` என்பதில் மலர் தாமரை மலர்.
`செழுமலரின்கண் பிறழும் சேல்` என்க.
``முழுமலர்`` என்பதில் மலர், மன்மதன் அன்பு.

பண் :

பாடல் எண் : 94

முகம்பாகம் பண்டமும் பாகமென்
றோதிய மூதுரையை
உகம்பார்த் திரேலென் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, காட்சியின் பின் தலைவியை ஐயுற்று.
மானுடமகளே எனத் துணிந்த தலைவியது குறிப்பை உணர்கின்றுழிக் கூறியது.
``உயர் ஏகம்பர் கச்சி மூன்னீர்`` என்பதை முதலிற் கொள்க.
கச்சி மூன்னீர் - கச்சிப் புறத்தில் நிற்கின்றவரே.
தலைவியைத் தலைவன் இங்ஙனம் முன்னிலைப் படுத்தனாயினும் அவள் கேட்ப இங்ஙனம் கூறாது தன்னுள்ளே இங்ஙனம் கூறினான்.
பாகம் - பாதி.
``முகம் பாதி; பண்டம் பாதி`` 1 - என்பது ஒரு பழமொழி - என்பது இப்பாட்டால் அறியப்படுகின்றது.
`ஒருவருக்கு ஒன்றைக் கொடுத்து உதவி கொடுப்பவரது முகத்தாற் பாதியும், கொடுக்கப்படும் பொருளாற் பாதியுமாக முழுமை பெறுகின்றது` என்பது இதன் பொருளாகும்.
முகமாவது, தம்பால் வருபவரைத் தொலைவிற் கண்டபொழுதே இன்முகங் காட்டி வரவேற்றல்.
பண்டமாவது, அவர் பின் அணுகியவழி அவர் விரும்பும் பொருளை நல்லனவாகக் கொடுத்தல்.
இன்சொல் முகத்திலே அடங்கிற்று ``சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணியவழி இன்சொல்லும் அது பற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலும் என, விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதன மூன்று`` 2 என்னும் பரிமேலழகர் உரையாலும் அம்மூன்றனுள் ஒன்று இவ்வழியும் உதவி முழுமை யடையாமை விளங்கும்.
ஆகவே, `பொழிலின் கண் பவளச் செவ்வாயைப் பெற்ற நாம் உற்றவர் (நம்மால் உறப்பட்டவர் - விரும்பப்பட்டவர்; தலைவி) தம் உள்ளத்திலும் நம் போலக் காமத்தை உடையராதல் வேண்டும்` என்றான்.
பவளச் செவ்வாயைப் பெற்றமையாவது, ``நோக்கினாள் நோக்கெதிர் நோக்கப் பெற்றது 3 அந்நோக்கு அன்பை மட்டுமே வெளிப்படுத்தியல்லது காமக் குறிப்பினை வெளிப்படுத் தாமையின், ``நாம் உற்றவர் நன் மயல் கொள்க` என்றான், ``கொள்க`` என்பது, வேண்டுதற் பொருட்டு, ``வினைகலந்து வென்றீக வேந்தன்`` 4 என்பதில், ``வென்றீக`` என்பது போல.
``உற்றவர்`` என்பது தன்னுட் சொல்லிய சொல்லிடத்து என முன்னிலைக்கண் படர்க்கை மயங்கிற்று.
மூதுரை - பழமொழி.
உகம் - ஊழி, இது புனைந்துரை வகையால் காலத்தின் நெடுமையைக் குறித்தது.
`மூதுரையை நெடுங்காலமாக உணர்ந்தீராயினும் அதனால் பயன் என் என்பான்.
``மூதுரையை உகம் பார்த்திரேல் நலம் என்`` என்றான்.
`பார்த்திரேனும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
அகம் பாக ஆர்வு - முகம்போல் அகத்தின் பாகமாகிய நிறைவு.
நிறைவு - காம நிறைவு.
அளவு இல்லை - அதன் அளவு வரையறைப் படவில்லை.
`முகத்தால் இயைந்த இவர் அகத் தாலும் இயைதல் வேண்டும்` என்றபடி.
`அகத்தால் இயைந்தமை- கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் 1- அறியப்படும், அதனை யான் இன்னும் பெற்றிலேன் என்பதாம்.
நகம் - மலை `நகப்பால்` என்பது மெலிந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 95

மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ டெறிமகரம்
இயக்கத் திடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர்
கச்சிக் கடலபொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, `களவு நீக்கி வரைதல் வேண்டும்` எனக் கூறுந்தோழி அதனைக் கூறாமல் இரவுக் குறி விலக்கியது.
தலைவன் இரவுக் குறி நீக்கிப் பகற் குறி வேண்டுவானாயின் அதனையும் எவை யேனும் சொல்லித் தோழி விலக்குவாள்.
கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன், கொண்க! கடல் பொன் உன் முயக்கத்து அகல்வு பொருள்; (ஆயினும்) நீ இரவில் வரும் இவ்வூர்க்கு (இவ்வூரின் இயல்பிற்கு) அஞ்சும்.
இவ்வூரின் இயல்பு மயக்கத்த நள்ளிருளில் உப்பங்கழியில் கொல்லும் சுறாவோடு முதலைகள் வெளிப்போதும்.
இயக்கத்துக் கழி கிளர் ஓதம் இடு சுழிகள் மிகுதியாம்.
அக்கழியே முடிவில்லாத நீட்சியது` என்பது குறிப்பெச்சமாம்.
கடல், ஆகுபெயர் அதன் கரைக் கண் உள்ள பாக்கத்தைக் குறித்தது.
அதன்கண் உள்ள பொன்.
நெய்தல் நிலத் தலைவி.
முயக்கத்து அகல்வு - தழுவலின் நீக்கம் - மகரம், இங்கு முதலையைக் குறித்தது.
`சுறாவும் மகரமும் வெளிப்போதும்` என ஒரு சொல் வருவிக்க.
இயக்கம் - வழி, துறை.
ஓதம் - அலை.
``சுழி`` என்னும் எழுவாய்க்கு, `மிகுதி` என்னும் பயனிலை வருவிக்க.
தார் மாலையாகலின் அது நீட்சியைக் குறித்தது.
தார் உடைதனை, ``தார்`` என்றல் உபசாரம்.
துயக்கத்தவர் - அறிவு கலங்கியவர்.

பண் :

பாடல் எண் : 96

மேயிரை வைகஅக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றாரறி வார்நந்
துறைவர்பொய்யே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது தலைவன் வரைவிடை வைத்துப் பொருல் வயிற் பிரிந்த காலத்துப் பிரிவு நீட்டிப்பத் தலைவி தலைவனைத் தெரியாது தலைவனை இயற்பழித்துக் கூறியது.
இது நொதுமலர் வரைவு கேட்டுக் கூறியதுமாம்.
``தினைத்தா ளன்ன சிறுபசுங் கால`` என்னும் குறுந்தொகைப் பாட்டு, ``யானுந் தோழியும் ஆயமு ஆடுந் துறை நண்ணி`` என்னும் பழம்பாட்டு முதலியவற்றோடும் இதனை ஒப்பிட்டுக் காண்க.
இரைமேய் வைகு அக்குருகு உணரா - இரையையே விரும்பி அதன் வரவு பார்த்திருத்தலின் கொக்குகளும் பார்த்திருக்கமாட்டா.
புன்னை மீ மது உண்டு (ஒலிக்கின்ற) வண்டு களோ எனின் அமர்பு கடிய - மதுவிலே படிந்து எழமாட்டா.
எனவே, அவைகளும் பார்த்திருத்தற்கில்லை.
பாய் இரை கடல் வாய் நாகம் கொண்டோன் - பரந்துபட்டு ஒலிக்கின்ற கடலிடத்து பாம்பணையைக் கொண்டோன்; திருமால், பவ்வம் நீர் தூய் இரை கானல் - கடல் நீரைத்தூவி ஒலிக்கின்ற கரையிடத்து.
நம் துறைவர்பொய் மற்று ஆர் அறிவார் - நமது நெய்தல் நிலத்துத் தலைவர் `உன்னைப் பிரியேன்` என்று சூளுரைத்து அதனைப் பொய்த்தமைக்குச் சான்று சொல்வார் வேறுயாவர்! ``குருகு`` எனவும், ``புன்னை மீ வண்டு`` எனவும்.
``கானல்`` எனவும் கூறினமையால் தலைவன் கூடிப் பிரிந்தது கடற் கரைக் கண்ணே என்பதும், `மற்று ஆர் அறிவார்`` என்றதனால், `கூடியது களவினால்` என்பதும் குறிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 97

பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் களினம்வந்
தார்ப்ப அணைகின்றதே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் நீட்டிப்பபு பற்றி வருந்திய தலைவிக்குத் தோழி தலைவனது தேர்வரவைக் கூறியது.
பொய் வரு நெஞ்சினர் - பொய் சொல்லும் எண்ணம் வருகின்ற நெஞ்சையுடையவர்.
`நெஞ்சினரொடு` என்னும் எண்ணொடு தொகுத்தலாயிற்று.
உம்மை - இறந்தது தவிய எச்சம்.
போக விடாமை - தப்ப விடாமை அஃதாவது, `தப்பாது ஒறுப்பவர்` என்பதாம்.
`கச்சியின் கண் அணைகின்றது` என்க.
விரையின - விரைவாகப் பறப்பன.
கை வருதல் - எப் பக்கத்திலும் வருதல்.
`புள்ளினம் வானத்திலும் சங்கு கடலினும் ஆர்ப்ப` என்க.
அதிர்வு கேட்டு இவை ஆர்க்கின்றனவாம்.
புள் - நீர்ப் பறவை.
தாமங்கள் இனம் - தேரிலும், குதிரைகளிடத்திலும் உள்ள மணி ஒழுங்கின் இனம்.

பண் :

பாடல் எண் : 98

இன்றுசெய் வோமித னில்திரு
ஏகம்பர்க் கெத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்
றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடாதடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நெஞ்சே`` என்பதை முதலிற் கொள்க.
திரு ஏகம்பர்க்கு நாளும் விடாது அடிமை நின்று செய்வார் அவர்பால் நின்று நீள்நெறிகாட்டுவர்.
எத்தனையும் (மிகச் சிறிதாயினும் பணி) இன்று செய்வோம் (இன்றே செய்வோம்.
இதனில் நீங்கி, - பணி நாளை நன்று செய்வோம் (மிகுதியாகச் செய்வோம்) - என்று உள்ளி (நினைத்து) உடலில் (உடல் வளர்க்கும் செயலிலே) சென்று, ஒரு நாளும், ஒன்றும் செய்யாரைத் துணை விடு` என இயைத்து முடிக்க.
(பணி சிறிதளவாயினும் அப்பொழுதே செய்தல் வேண்டும்.
`நாளை மிகுதியாகச் செய்வோம்` என்று விடுதல் கூடாது என்பதாம்!

பண் :

பாடல் எண் : 99

காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதவெம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாமவர் பாதங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இது ஆசிரியர் திருவேகம்பர் தமக்குச் செய்த திருவருளை வியந்து போற்றியது.
`காதல் வெல்ளம் ஈட்டி வைத்தார் தொழும் ஏகம்பர், ஏதும் இலாத எம்மை, யாம் தம்மைக் கடிப் பூப் பெய்யக் காட்டி வைத்தார்; அன்பு பூட்டி வைத்தார்; அது பெற்றுப் பதிற்றுப் பத்துப் பாட்டு இவைத் தார்ப் பரவி அவர்பாதங்கள் தொழு தாம்` என இயைத்துக் கொள்க.
காதல் வெள்ளம் ஈட்டி வைத்தார், திருத்தொண்டர்கள்.
ஏதும் இலாத - நல்லது ஒன்றும் இல்லாத கடி - நறுமணம்.
``பூப்பெய்ய`` என்பது `பூசிக்க` என்னும் பொருட்டாகலின் அது.
``தம்மை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
காட்டி - அறி வித்து.
பூட்டி - பூண்பித்து.
அது - அவ்வன்பை ``பதிற்றுப் பத்து`` என்பது `நூறு` என்னும் பொருட்டு.
நூறு பாட்டாகிய இவையாகிய தாரால் (மாலையால்) அவர் பாதங்களை யாம் பரவி (துதித்து)த் தொழுதாம்` என்க.
`யாம் அறிவையும், அன்பையும் பெற்று அவரைப் பூசித்ததும், நூறு பாடல்களாலாகிய பாமாலையால் அவர் பாதங் களைப் பரவித் தொழுததும் எல்லாம் அவர் செய்விக்கவே` என்றபடி.
`வைத்தல்` என்பது துணை வினையாகலின், ``காட்டி வைத்தார்`` முதலிய மூன்றும் ஒரு சொல் நீர்மைய!

பண் :

பாடல் எண் : 100

பாதம் பரவியொர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டு, `இப்பிரபந்தத்தை அடியார்கள் ஏற்றருள வேண்டும்` என அவையடக்கம் கூறியது, அடியார் ஏற்ற பின்பே ஆண்டான் ஏற்பன் ஆகலின்.
பாதம் பரவி- தமது பாதங்களைத் துதிக்கும் துதியாக.
ஓர் பித்துப் பிதற்றினும் - பித்தன் ஒருவன் பிதற்றுதல் போலச் சிலவற்றைப் பிதற்றினாலும், `அது குற்றம் ஆகாதபடி அருள்செய்பவர் திருவேகம்பர்` என்பதாம்.
இதனை, ``முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்`` 1 என்ப தனோடு, ஒப்பிட்டுக் காண்க.
இதனால், இத்தகைய ஏகம்பரது ஏத்து (துதி) என்பது, ஞானம் பொருளாய் நிற்க விளங்கும் இல்லாத புன் சொற்கள் நிறைந்த பாத் தொடையாயினும் அதனை மெய்த் தொண்டர்கள் வேதப் பொருள் பொலிகின்ற பாத் தொடையாகவே மதித்து ஏற்றுக்கொள்வார்` என்பதாம்.
எனவே, `எனது புன்சொற் பனுவலாகிய இதனையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``வகையருள் ஏகம்பர்`` என்றதனால், `வகையருள்பவர் ஏகம்பர்` என்பது அனுவாதத்தால் பெறப்பட்டது.
``போதம் பொருளால் பொலியாத`` என்றது, `போதம் பொருளாக, அதனாற் பொலியாத` எனப் பொருள் தந்தது.
திருஏகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று
சிற்பி