நம்பியாண்டார் நம்பிகள் - திருத்தொண்டர் திருவந்தாதி


பண் :

பாடல் எண் : 1

பொன்னி வடகரை சேர்நாரை
யூரிற் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்குமந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத் துணைதுணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுப் பிற்காலத்தவரால் சிறப்புப் பாயிரமாகச் செய்து சேர்க்கப்பட்டது.
திருத்தொண்டர்களாகிய நாயன்மார்களது வரலாற்றைப் பொதுவாகச் சுட்டும் முறையில் சுந்தர மூர்த்தி நாயனார் பெயரளவாக ஒரு திருப்பதிகத்தில் தொகுத்து அருளிச் செய்தார்.
அதனால் திருத்தொண்டர்களது வரலாற்றுத் தொகையாயிற்று.
அத்திருப்பதிகத்தில் சுட்டப்பட்ட நாயன்மார்களது நாடு, ஊர், குலம், அவர்கள் செய்த தொண்டு இவைகளை ஓரொரு சொல்லால் கூறி ஒருவருக்கு ஒருபாட்டினை அந்தாதியாகச் செய்தமையால் `திருத்தொண்டர் திருவந்தாதி` எனப் பெயர்பெற்ற இவ்வந்தாதி நாயன்மார்களது வரலாற்று வகையாயிற்று.
இவைகளையும், `இதை அருளிச் செய்தவர் திருநாரையூர் நம்பிகள் என்பதையும், இவர் அத்தலத்து விநாயகர் திருவருளைப் பெற்ற திருவருட் செல்வர்` என்பதையும் இப்பாட்டுக் கூறிற்று.
`ஆண்டார்` என்பது ஒரு காலத்தில் ஆதி சைவர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயராய் வழங்கிற்று ஆகலின், `நம்பியாண்டார்` என்பதே இவரது பெயராயிற்று.
இதற்கு மேலும் இவரது சிறப்பைக் குறிப்பதாக `நம்பி` என்பதைச் சேர்த்து, `நம்பியாண்டார் நம்பிகள்` என வழங்குவர்.
`நாயன்மார்களது ஊர், குலம், தொண்டு இவைகளைத் திருநாரையூர் விநாயகர் சொல்ல இவர் பாடினார்` என இப்பாட்டுக் கூறுகின்றது.
இதனை வைத்துத் திருமுறை கண்ட புராணமும் இவ்வாறே கூறிற்று.
1 இதனை ஆராய்ச்சியாளர் `நம்பிகள் விநாயகப் பெருமானது திருவருளைப் பெற்ற திருவட்செல்வர்` - என்னும் அளவில் கொள் கின்றனர்.
`இத் திருவந்தாதியைச் சேக்கிழார் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தோடு ஒத்த அருளாசிரியத் திருமொழியாகக் கொண்டே திருத்தொண்டர் வரலாற்று விரியைத் தாம் அருளிச் செய்தார்` என்பதை, அந்த மெய்ப்பதி கத்து அடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்
எனக் கூறியவாற்றால் அறிகின்றோம்.
`நாதன்` என்பது அருளா சிரியரைக் குறிக்கும் சொல்.
இதன்கண் சேக்கிழார், ``புந்தி ஆரப்புகன்ற வகை`` என்றதன்றி, `விநாயகர் சொல்லிய வகைப்படி`` எனக் கூறாமை நோக்கத் தக்கது.
வகை நூலாகிய இதன் விரியே திருத்தொண்டர் புராணம் ஆகலின், இவ்வந்தாதிப் பாடல்களின் விரி பொருள் அப்புராணத் திலே காணத்தக்கது.
இங்கு அவற்றைத் தந்துரைத்தல் மிகையாகும்.

பண் :

பாடல் எண் : 2

செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க்
கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புவனங்கள் மூன்றினும் ஒப்ப உம்பரின் ஊர் - மூவுலகங்களிலும் ஒருபடித்தாக மேலே திரிந்த ஊர்கள்; திரிபுரம்.
அமுதத் திருநடம் - அமுதம்போல இறப்பினை நீக்கிப் பேரானந் தத்தைத் தருகின்ற நடனம்.
நடர் - நடனமாடுபவர்.
துப்பர் - தூயவர்.
உரிமைத்தொழில் - அகம்படித் தொண்டு; அணுக்கத் தொண்டு; வழிபாடு.
சொல்லுதும் - துதிப்போம்.

பண் :

பாடல் எண் : 3

சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்தர்
பின்னுமை கோனருளால்
வில்லை புரைநுத லாளோ
டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிவன் திரு ஆணை சொல்ல` எனக் கூட்டுக.
சிவன் ஆணை - சிவன்மேல் ஆணை.
`தூய மொழியினையுடையாள்` என்னும் பொருட்டாகிய ``தூமொழி`` என்பது ``துணைவி`` என்னும் பொருட்டாய் நின்றது.
நசை - விருப்பம்.
ஒல்லை - விரைவாக; அப்பொழுதே.

பண் :

பாடல் எண் : 4

செய்தவர் வேண்டிய தியாதுங்
கொடுப்பச் சிவன் தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்டி
னத்துள் இயற்பகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செய் தவர் - தவம் செய்பவர்; சிவனடியார்கள் கொடுப்ப - கொடுத்துவரும் நாட்களில்.
கைதவம் - வஞ்சனை; தூர்த்தர் பேசுவது போலப் பேசியது.
``காவிரிப்பூம்பட்டினம்`` என்றதனானே `வணிகர்` என்பது பெறப்படும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 5

இயலா விடைச் சென்ற மாதவற்
கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
யாக்குமவன் செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறனெங் கற்பகமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இயலா இடை - யாதும் செய்ய இயலாத காலம்.
அது வறுமை நிலையும் பாதி இரவும், மழைப் பெயலும் ஆகிய காலம்.
மாதவன் - சிவனடியான்.
வித்து- விதை.
மனை அலக்கு - வீட்டுக் கூரையாயிருந்த கழிகள்.
செயல் ஆர் பயிர் - வீட்டுப் புழைக்கடையில் அப்பொழுது தான் சிறிதே வளர்ந்த கீரைப்பயிர்.
விழு - விழுப்பம்; மேன்மை.
தீ - இனிமை; இளையான்குடி, ஊர்.
இஃது எந்த நாட்டில் உள்ள என்பது துணியப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 6

கற்றநன் மெய்த்தவன் போலொரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை யவனைச்
செறப்புக லுந்திருவாய்
மற்றவன் தத்தாநமரே
யெனச் சொல்லி வானுலகம்
பெற்றவன் சேதிபன் மெயப்பொரு
ளாமென்று பேசுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தன்னைக் காய் சினத்தால் செற்றவன் நன்மெய்த் தவன் போல் ஒரு பொய்த்தவன்.
அவனை எனக் கூட்டுக.
``போல் பொய்த்தவன்`` என்பது, `போல்கின்ற பொய்த்தவன்` என வினைத் தொகை.
இவன் `முத்த நாதன்` என்னும் பெயரினனாகிய பகையரசன்.
செற- கொல்ல - புகுந்தவன் `தத்தன்` என்னும் காவலாளி - என்பது பின்பு, `தத்தா` என்றதனால் விளங்குகின்றது.
`திருவாயால்` எனவும், `மற்று அவனை` எனவும் உருபுகள் விரித்து, ``சொல்லி`` என்பதன்பின் `தடுத்து` என ஒரு சொல் வருவிக்க.
மற்று, வினை மாற்று.
சேதிபன் - சேதி நாட்டு அரசன்.
சேதிநாடு - திருமுனைப்பாடி நாடாகிய மலையமான் நாடு.

பண் :

பாடல் எண் : 7

பேசும் பெருமையவ் வாரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவ னீசனுக்கே
நேச னெனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆரூரன், சுந்தரமூர்த்தி நாயனார்.
பிரான், திருவாரூர்ச் சிவபெருமான்.
தட்டு - தடை; தடுக்கப்பட்ட இடம்.
புறகு தட்டு - புறம்பாகிய தடுக்கப்பட்ட இடம்.
புறகாகிய இடத்தில் உள்ளவர்களை, ``புறகு தட்டு`` என்றது உபசாரம்.
`புறம்பாகிய இடத்தில் உள்ளவர்களை` என்றது `எம்மவரன்றி, அயலார்` என்றபடி.
`புறகு தட்டு` என்று சொல்லியே ஈசனுக்கு நேசன் ஆயினான்; எனக்கும் பிரான் (தலைவன்) ஆயினான் என்பதாம்.
திருச்செங் குன்றம், மலை நாட்டில் உள்ளது.

பண் :

பாடல் எண் : 8

மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டந் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ்
செல்வமுந் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மிண்டு - நெருங்கிய.
பொழில் - சோலை.
பழையாறை ஒரு பெருநகரம்.
இஃது இடைக் காலத்தில் பல ஆண்டுகள் சோழர்களுக்கு உறைவிடமாய் இருந்தது.
வெண்பொடி - திருநீறு.
முண்டம் - நெற்றி.
தரித்த - தாங்கிய .
வெண்பொடியணிந்த முண்டத்தைத் தரித்த பிரான் சிவன்.
நல்லூர் பழையாறைப்பெருநகரின் ஒரு பகுதி.
கோவணம் நேர் கொண்டு - கோவணத்திற்குச் சம எடையாக ஏற்று.
இங்கு அருள் - இப்பொழுது அருள் புரிவாயாக, `மதிநுதலார்` என்பது, `துணைவி` எனப் பொருள்தந்து நின்றது.
`தொழில்` என்பது,தொண்டினைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங்
காட்டி யெனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செ
யெனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகும் மலரின்நற் றாரெம்பி
ரான்நம்பி யாரூரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தின் வகை யாகிய இவ்வாந்தாதியில் அத்திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாட்டிலும் சுந்தர மூர்த்தி நாயனார் தம்மைக் குறித்தருளினார் ஆகலின் அவரது வரலாற்றிற்குத் தனி ஒரு பாட்டே அமைத்துப் போகாமல், ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்பட்ட அடியார்களைப் பற்றிக் கூறி முடித்தபின், சுந்தரரைப் பற்றிய பாட்டுக்களை அமைத்தருளினார்.
பின்பு இதன் விரிபாடிய சேக்கிழார் நாயனார் ஒரு பாட்டில் உள்ள நாயன்மார்களது வரலாறுகளை ஒரு சருக்கமாகத் தொகுத்தருளினார்.
தொழுதல் - கும்பிடுதல்.
வணங்கல் - வீழ்ந்து வணங்குதல்.
`வணங்கியும் அருஞ் சோதி` என வேறாக்கி முடிக்க.
முரலுதற்கு `வண்டு` என்னும் எழுவாய் வருவிக்க.
ஒழுகும் - ஒழுகுதற்கு முதலாகிய.
மலர், தாமரை மலர்.
தார் - மாலை.

பண் :

பாடல் எண் : 10

ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்
கென் றோருயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாக
ருடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊர் மதில் - வானத்தில் திரிகின்ற கோட்டைகள்.
உயர் தவத்தோன் `சிவகாமியாண்டார்` என்பவர்.
உத்தமற்கு - என்று மலர் கொய்யா (கொய்து) வருபவன்` என்க.
ஊர் - ஊரத்தக்க மலைபோலும் யானை.
மலையினதும், பாகரதும் ஆகிய உடல்களைத் துணி ஆக்கும் அவன் என உரைக்க.
இவரது மரபு அறியப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 11

பத்தனை யேனாதி நாதனைப்
பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை யீழக் குலதீப
னென்பரிந் நீள்நிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எயினை - எயினனூர்.
`ஒழிந்து, அவன் கண்டிப்ப நின்றருளும் நித்தன்` என்க.
ஈழக் குலம் - ஈழச் சான்றார் குலம்.

பண் :

பாடல் எண் : 12

நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணில்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்திற் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப
னாமென்று கூறுவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இந்நாயனார் வரலாறு மேற்போந்த இரு திருக்கண்ணப்ப தேவர் திருமறங்களிலும் சொல்லப்பட்டது

பண் :

பாடல் எண் : 13

ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரிர் கலயனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்டம் - கழுத்து.
`சிவனை நிலைப்பித்தான்` என்ப தில் இரண்டன் உருபும், பிறவினை விகுதியும் தொகுக்கப்பட்டன.
`கொடுத்துக்கொண்டு` என இயையும்.
காலனைக் காய்ந்த அரன்.
திருக்கடவூர்ப் பெருமான்.

பண் :

பாடல் எண் : 14

கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசு மெனக்கரு தாதவள்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாற னென்னும் வள்ளலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கன்னியாகிய புதல்வி` என்க.
`நல்ல` என்பது இடைக்குறைந்து நின்றது.
பஞ்சவடி.
மாவிரத மதத்தினர் மார்பில் அணியும் மயிர்க்கயிறு.
அலசும் - (மகள்) வருந்துவாள்.
கஞ்சை - கஞ்சாறூர்.

பண் :

பாடல் எண் : 15

வள்ளற் பிராற்கமு தேந்தி
வருவோ னுகலுமிங்கே
வெள்ளச் சடையா யமுதுசெய்
யாவிடி லென்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்தரி வாட்டாயனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வள்ளற் பிரான் - சிவபெருமான்.
அமுது - நிவேதன அமுது.
உகலும் - தவறிக் கீழ் கொட்டிப்போன பொழுது.
கண மங்கலம்.
ஊர்.

பண் :

பாடல் எண் : 16

தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்து
தொல்சீர்த்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாய னென்னை
யுவந்தாண் டருளினனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாயவர் - தாய்போன்றவன்.
துளை - துளைக் கருவி.
வேய் - மூங்கில்.
`துளையால் தொடர்ந்து பரவும் வேயவன்` என்க.
பரவுதல் - துதித்தல்.
மங்கலம், ஊர்.
`ஆன் ஆயன் - பசுக்களை மேய்க்கும் இடையன்.

பண் :

பாடல் எண் : 17

அருட்டுறை யத்தற் கடிமைபட்
டேனினி யல்லனென்னும்
பொருட்டுறை யாவதென் னேயென்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரானடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதன் முதல் இரண்டடிகள் ``பித்தா பிறை சூடி`` எனத் தொடங்கும் திருப்பதிகத்தின் பொருளை உணர்த்தி நின்றன.
குவளை மலர்கள் கருநிறத்தன ஆகலின் அவற்றை இருட்டாக உருவகம் செய்தார்.
நாவல், திருநாவலூர்.

பண் :

பாடல் எண் : 18

அவந்திரி குண்டம ணாவதின்
மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பறையில் தேய்த்துல
காண்டவொண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா
புரியென்னும் நீள்பதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டு அமண் ஆவதில் மாள்வன் - கீழான சமண் சமயத்து அரசன் வழிபட்டு எனது பணியை ஒழிப்பதைவிட இறந்துபடுவேன்.
நிவந்த - ஓங்கிய.

பண் :

பாடல் எண் : 19

பதிகந் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியஞ் சடையாற் கலர்தொட்
டணிபவன் யான்மகிழ்ந்து
துதியங் கழல்சண்பை நாதற்குத்
தோழன்வன் றொண்டனம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்னெனும் அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பதிகம் - திருமுறைத் திருப்பதிகங்கள்.
பதிகந்திகழ்தரு பஞ்சாக்கரம் என்க.
மலர் தொட்டு - பூக்களை மாலையாகத் தொடுத்து.
சண்பை நாதன், திருஞானசம்பந்தர்.
வன்றொண்டன், சுந்தரமூர்த்தி நாயனார், இவர் திருப்புகலூரில் பொன் பெற்ற வரலாற்றைப் பெரியபுராணத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 20

அந்தாழ் புனல்தன்னி லல்லும்
பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொடு ருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தா ருருத்ர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென்
றுரைப்பரிந் நானிலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அம் - அழகிய.
தாழ்புனல் - ஆழமான நீர்.
ஆதரம்- விருப்பம்; உந்தாத - வெளிப்போக்காத.
உருத்திரம் - சீருத்திரம்.
இஃது எசுர் வேதத்தின் ஒரு பகுதியாய் உள்ளது.
இன்றும் சிவாலயங்களில் சிறப்பாக ஓதப்பட்டு வருவது.
வயற்கு - வயல்களில்.
நந்து ஆர் - சங்குகள் நிறைந்த.

பண் :

பாடல் எண் : 21

நாவார் புகழ்த்தில்லை யம்பலத்
தானருள் பெற்றுநாளைப்
போவா னாவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திக ழாதனூ
ரென்பரிம் மண்டலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புறம் - நான்கு வருணங்கட்கும் புறமான சாதி.
அதனால் கோயில்களிலும் புறத்தே நிற்பவர்.
புன்புலை - கீழான புலைச் சாதியில் பிறந்த உடம்பு.
``போய்`` என்பதை, `போக` எனத் திரிக்க.
பதி - ஊர்.

பண் :

பாடல் எண் : 22

மண்டும் புனற்சடை யாந்தமர்
தூசெற்றி வாட்டுவகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவனென்னா
முண்டம் படர்பாறை முட்டு
மெழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா
லியர்தங்கள் தொல்குலமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மண்டும் - நிறைந்த.
தமர் - அடியார்.
தூசு - ஆடை.
எற்றுதல் - அழுக்குப் போகத் துவைத்தல்.
வாட்டும் வகை - உலர்த்தும் படி.
விண்டு - நீங்கி.
`மழை முகில் விண்டு வீடாது எனின்` மாற்றுக.
`விண்டு வீடாது` ஒருபொருட் பன்மொழி.
வீவன் - இறப்பன்.
முண்டம் - நெற்றி.
படர் - அகன்ற.
முட்டும் - மோதிய.

பண் :

பாடல் எண் : 23

குலமே றியசேய்ஞலூரிற்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் சண்டிகண்
டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந்
தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குலம் ஏறிய - குலத்தால் உயர்ந்த; `அந்தணன் ஆகிய` குரிசில் என்க.
குரிசில் - தலைவன்.
விறல் - வெற்றி.
இஃது இதனால் உண்டாகிய புகழைக் குறித்தது.
கண்டீர், முன்னிலையசை.
வலம் - வலக்கை.
`எறிந்தும்` என உம்மை விரித்து, `எறிந்த பின்னும்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 24

நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றிடென்று
துதியா வருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோனென்னும் நற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துருத்தி, வேள்விக்குடி இவையிரண்டும் சோழ நாட்டு இரண்டு தலங்கள்.
இவைகளில் துருத்தி, இப்பொழுது `குத்தாலம்` என வழங்குகின்றது.
இதில் உள்ள சிவபெருமான் பெயரே, `சொன்னவாறறிவார்` என்பது.
வேள்விக்குடியாய் - வேள்விக்குடியில் எழுந்தருளியுள்ளவனே.
அறிகுறி வைத்த புகர்.
அடையாளமாக நீ உண்டாக்கிய உடல்நோய்.
துதியா - துதித்து.
`அருள் பெற்றவன்` என இயைக்க.
காண்.
முன்னிலையசை.
`வைத்து` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 25

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதந்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவ னுற்ற விடம்அடை
யாரிட வொள்ளமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்
கரசெனுந் தூமணியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஆமூரில் நாவுக்கரசெனும் தூமணி` என்பதை ``நற்றவன்`` என்பதன் பின்னர்க் கூட்டி, செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப்பட்ட நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்`` என்பது ``துற்றவன்`` என்பதன் பின்னர் வைத்து உரைக்க.
நல்லூர், தலம்.
உற்ற விடம் - சமணர் கருத்தில பொருந்திய நஞ்சு.
அடையார் - பகைவர்; சமணர்.
`நிறைதல்` எனப் பொருள் தரும் `துறு` என்னும் முதனிலை உண்டலையும் குறிக்குமாதலின், ``துற்றவன்`` என்பது, `உண்டவன்` எனப் பொருள்தந்தது.
``அமுதா உண்டவன்`` என்றதனால் அவ்விடத்தால் தீங்கின்றியிருந்தமை கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலில்
பிணியன கல்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மணி`` என்றதும், ``மருந்து`` என்றதும் திருமறைக் காட்டுப் பெருமானை.
திறப்பித்தன - திறக்க வைத்தன.
பிணி கல், `பிணிக்கப்பட்ட கல்` எனச் செயப்படுபொருள்மேல் தொக்க வினைத் தொகை.
`அந்த` என்னும் கூட்டுப் பொருளைத் தரும் `அன்ன` என்பது இடைக்குறைந்து நின்றது.
`கல்லை` என இரண்டாவது விரிக்க.
அணி- அணிகலம்.
அணியன - அணிபோல்வன.
`பலரது உள்ளங்களையும் கவரச் செய்வன` என்றபடி.
நாயனாரை, ``நாவுக்கரையர் பிரான்`` எனப் போற்றி, வரலாற்றுக்கிடையே அவரது திருப்பதிகங்களை ``சைவப் பெருநெறிக்கு அணி`` எனவும், `செயற்கரியவற்றைச் செய்த அருந்தமிழ்` எனவும் எடுத்தோதியருளிய அருமை அறியற்பாலது.

பண் :

பாடல் எண் : 27

அருந்தமி ழாகரன் வாதி
லமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித்
தோனெழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகரம் - இருப்பிடம், தமிழ் ஆகரன் - தமிழுக்கு இருப்பிடமானவர்; திருஞானசம்பந்தர்.
`அவர் செய்த வாதில் என்க` வாது என்றது வாதத்தின் முடிவை.
அமண் - சமணக் கூட்டம்.
நுதி - நுனி.
இருந்தமிழ் - பெருமைமிக்க தமிழ்; செந்தமிழ் ``தமிழ் நாட்டடை ஏற்றுவித்தோன்`` என்றாராயினும் `தமிழ் நாட்டிடை யிருந்த அமணை ஏற்று வித்தான்` என்றலே கருத்து என்க.
ஏற்றுவித்தது, அரசன் ஆணையால் ஏவலரைக் கொண்டு நிறைவேற்றியது.
பாண்டியன் இந்நாயனார் காலத்துப் பாண்டியன் நெல்வேலி வென்ற நெடுமாறன்.
`கூன் பாண்டியன்` என்றும் சொல்லப் படுவான்.
முன்னோர் சங்கம் வைத்த செயலை அவர் மரபின் வந்த உரிமை பற்றி இவன்மேல் வைத்துக் கூறினார்.
``மதுரைத் தொகை ஆக்கினான்`` 1 என இவ்வாறே ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார்.
சங்கம் புதிதாக வையாவிடினும் சங்கத்தைப் புரந்த செயல் இவனுக்கும் உண்டு என்க.
``அதிகாரி`` என்றது அமைச்சனை.
ஒட்டக்கூத்தரது தக்க யாகப் பரணியில் ``அதிகாரி`` என்னும் சொல் மட்டுமே காணப் படுகின்றது.
மணமேற் குடி - ஊர்.
மன் - தலைவன்.
இந்நாயனாரது மரபு அறியப் படவில்லை.

பண் :

பாடல் எண் : 28

சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை யெய்து
மிவனருள் போற்றவின்றே
பிறைநன் முடிய னடியடை
வேனென் றுடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்ப னெனுநம்பியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாவலூராளி, சுந்தரமூர்த்தி நாயனார்.
`அவர் நாளைக் கயிலை செல்லப்போகிறார்` என்பதை இவர் தம் யோகக் காட்சியால் அறிந்து முன்னாளே யோகத்தால் உடலை விட்டுப் பிரிந்து கயிலை சேர்ந்தார்.
பெருமிழலை, ஊர்.
குறும்பர் - சிற்றரசர்.
`குறும்பர்` என்பது `சிற்றரசர்` எனப் பொருள் தரும்.
எனினும், `சிர்றசராய் இருப்போர் தனியொரு மரபினர் அல்லர் என்பதனாற்போலும் இந்நாயனாரும் மரபறியா அடியார்களுள் ஒருவராகச் சொல்லப் பட்டார்.

பண் :

பாடல் எண் : 29

நம்பன் திருமலை நான்மிதி
யேனென்று தாளிரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற வுமைநகலும்
செம்பொன் னுருவனெ ன்அம்மை
யெனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின்
மேய குலதனமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``செழுந்தேன்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
காரைக்கால் ஊர்.
குலம் தனம் - பிறந்த குலத்திற்குச் செல்வம் போன்றவள்.
நம்பன், செம்பொன் உருவன் - சிவபெருமான்.
உம்பர்- ஆகாயம்.
மிசை, ஏழன் உருபு.
`மிசையாக` என ஆக்கம் வருவிக்க.
தலைகீழாக நடந்து வருவதைப் பார்த்து உமாதேவி சிரித்தாள்.
அம்மை - தாய்.
தாய்போல அன்பு செலுத்தி உபசரிப்பவள்.
உபசரித்தல் சங்கம வடிவில்.
எனப் பெற்றவள் - என்று சொல்லும் பேற்றினைப் பெற்றவள்.

பண் :

பாடல் எண் : 30

தனமா வதுதிரு நாவுக்கரசின்
சரண மென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்
தாங்கவன் வண்டமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவ
னெங்கள் பிரான்
அனமார் வயல்திங்க ளூரினில்
வேதியன் அப்பூதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புனற் பந்தர் - தண்ணீர்ப் பந்தல் ``வாழ்த்தி`` என்பதை, ``என்னா`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இனம் - அடிமையினம்.
`திங்களூர்` ஊர்ப்பெயர்.
தனது பெயர் - திருநாவுகரசரது பெயர்.
இடப் பெற்றவன் - இட்டப் பேற்றினைப் பெற்றவன்.

பண் :

பாடல் எண் : 31

பூதிப் புயத்தர் புயத்தில்
சிலந்தி புகலுமஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பவுப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று
பிஞ்ஞகன் கேட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்னெனும் வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூதி - விபூதி.
பூதிப்புயத்தர், விபூதியையணிந்த தோள்களையுடையவர் சிவபெருமான் என்றது சிவலிங்கத்தை.
புயம்- தோள்; மேல் இடம்.
`உடம்பின்மேல் சிலந்தி விழுந்தால், அது விழுந்த இடத்தில் கொப்புளம் உண்டாகிவிடும்` என்பர்.
அப்படிக் கொப்புளம் உண்டாகாதிருக்க உடனே வாய் எச்சிலைத் துமிந்து கையால் தேய்ப்பது வழக்கம்.
அப்படி மனைவியார் செய்தார்.
`அஃது அநுசிதம்` என்று நாயனார் அவரைத் துறந்தார்.
உப்பால - துமியப்படாத இடங்கள்.
பேதித்தல் - வேறுபடுதல்.
``பேதித்து`` என்பதை `பேதிக்க` எனத் திரிக்க.
`கொப்புளம் எழுந்தனவற்றைக் காண்க` என உணரக் காட்டியது கனவில்.
சாத்தை - சாத்த மங்கலம்; ஊர்.

பண் :

பாடல் எண் : 32

வேத மறிகரத் தாரூர்
அரற்குவிளக்கு நெய்யைத்
தீது செறியமண் கையரட்
டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக வருகரென்
றன்று விளக்கெரித்தான்
நாதன் எழிலேமப் பேறூ
ரதிபன் நமிநந்தியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறி - மான் கன்று.
சிவபெருமானது சாங்க உபாங் கங்களை வேதமாக உபசரித்தல் மரபாதல் பற்றி, ``வேதமறி`` என்றார்.
வேதத்தை அரனுக்கு அடையாக்கலும் ஆம்.
கையர் - வஞ்சகர்; உள்ளதை `இல்லை` எனக் கரந்தவர்.
அட்டாவிட - வார்க்காமல் மறுக்க.
ஏதம் - குற்றம்; பாவம்.
நாதன் நமிநந்தி எம் தலைவனாகிய நமிநந்தி.
ஏமப்பேறூர், ஊர்.

பண் :

பாடல் எண் : 33

நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
லாரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலில்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்ட
னென்பரிவ் வையகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நந்தி` என்பதும் சிவபெருமானுக்கே பெயர்.
பந்திப் பரியன - செய்யுளாக யாத்தற்கு அரியன.
செந்தமிழ்.
அதனாலாகிய பாடல்களுக்கு ஆகுபெயர்.
படல் புனல், காவிரியாற்றில் ஓடிய வெள்ளம்.
சேவடி, திருஐயாற்றுப் பெருமானது திருவடிகள்.
அவற்றைப் பெற்றமையாவது, வெள்ளம் இருபாலும் ஒதுங்கி வழி விடப் பெற்றமை.
`சேவடி பெற்று, அவன் சேவடியே வந்திருப்பவன்` என்க.

பண் :

பாடல் எண் : 34

வைய மகிழயாம் வாழ
வமணர்வலி தொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென்
குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர்
ஞானசம் பந்தனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

யாம் - சைவர்கள்.
பிரமபுரம் - சீகாழி.
`அரற்கு பாட என இயையும்.
பாட - பாடும் படி.
`அம் வாய், குதலை வாய், செவ்வாய்` எனத் தனித்தனி இயைக்க.
அம் - அழகு.
பருவம், குழவிப் பருவம்.
``குழிப் பருவத்தில் தையல் அருள் பெற்றனன்`` என்றதனால், `திருமுலைப் பால் அருளப் பெற்றான்` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 35

பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தா ரகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தி
லிட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரானருட்
காழியர் கொற்றவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பந்தார் விரலியர் - மகளிர்.
அவர்கட்கு வேள் (மன்மதன்) போன்றவன் கோச்செங்கட் சோழன், முருகன் - முருக நாயனார்.
நீல நக்கன் - திருநீல நக்க நாயனார்.
இவர்கள் பெயர்களை ஞானசம்பந்தர்.
தமது பதிகத்தில் இட்டுப் பாடியன முறையே, ``மழை யார் மிடறா`` எனத் தொடங்கும் திருவானைக்காப் பதிகத்திலும், ``பட்டம் பால் நிற மதியம்`` எனத் தொடங்கும் திருப்புகலூர் வர்த்த மானீச்சரப் பதிகத்திலும், ``திருமலர்க் கொன்றை மாலை`` எனத் தொடங்கும் திருச்சாத்தமங்கை பதிகத்திலும் ஆகும்.
இவர்களோடு சிறுத்தொண்ட நாயனாரது பெயரை இட்டுப் பாடிய திருப்பதிகம், ``நறைகொண்ட மலர்தூவி`` எனவும், ``பைங்கோட்டு மலர்ப்புன்னை`` எனவும் தொடங்கும் திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகங்களாகும்.
இவைகளில் பின்னர்க்கூறிய பதிகத்தின் எல்லாம் சிறுத்தொண்டர் பெயர் இடப்பட்டுள்ளது.
இதனை இவர் பின்வரும் திருவந்தாதி 72-ஆம் பாட்டில் குறிப்பால் உணர்த்தினார்.
``அடியேன் தொடுத்த அந்தாதி கொண்டவன்`` என்றதனால், `அவ்வந்தாதிக்குப் பின்பே இவ்வந்தாதி பாடப்பட்டது` எனக் கருதலாம்.

பண் :

பாடல் எண் : 36

கொற்றத் திறலெந்தை தந்தைதன்
தந்தையெம் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பானென்
றுடைவாள்உருவி யந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடியேயர் சீர்க்குடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தெற்றம் - தெற்றுதல்; பின்னுதல்.
கூட்டம் - கூட்டத்தினர்; ஆகுபெயர்.
``நினது அடியேம்`` என உயர்திணைக்கண் அது உருபு வந்தது பிற்கால வழக்கு.
வன்றொண்டன் - வன்மை பேசி எதிர்வழக்கிட்டு ஆட்பட்டவன்.
ஏகாரம், வினா.
மற்று, அசை.
அந் நோய், சூலை நோய்.

பண் :

பாடல் எண் : 37

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல
னாகின்ற வங்கணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சாத்தனூர், திருவாவடுதுறை அருகில் உள்ள ஓர் ஊர்.
கோக்குலம் - பசுக்கூட்டம்.
குரம்பை - உடம்பு.
படி - அமைப்பு வகை.
``படி`` இரண்டில் முன்னதாகிய `படியால்` என உருபு விரிக்க.
பரவுதல் - துதித்தல்.
``பரவவிட்டு`` என்பதில், `இட்டு` என்பது அசை.
அம்கணன் - அழகிய கண்களையுடையவன்.
கண்ணுக்கு அழகு கருணை.

பண் :

பாடல் எண் : 38

கண்ணார் மணியொன்று மின்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலுந்
தன்னை நகுமமணர்
கண்ணாங் கிழப்ப வமணர்
கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவ
னாரூர் விறல்தண்டியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``ஒன்றும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
`தொடலும்` என்பது விரித்தல் பெற்றது.
தொடுதல் - தோண்டுதல்.
இந்நாயனாரது மரபும் அரியப்படவில்லை.

பண் :

பாடல் எண் : 39

தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தகுகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநல் நீற்ற னடியவர்க்
கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திருவேற்காடு, தொண்டைநாட்டுத் தலம்.
கவறு - சூதாடு கருவி.
வல் ஆயம் - வலிய தொகை; பந்தயக் கணக்கு.
நண்டு அலை நீர் - நண்டுகள் உலாவுகின்ற நீர்.
குடந்தை.
இப்பொழுது `கும்பகோணம்` என வழங்குகின்றது.
இந்நாயனார் இறுதியில் அங்குச் சென்று தங்கினார்.

பண் :

பாடல் எண் : 40

சூதப்பொழி லம்ப ரந்தணன்
சோமாசி மாறனென்பான்
வேதப் பொருளஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் றொண்டன்
தனக்கு மகிழ்துணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சூதம் - மாமரம்.
அம்பர், அம்பர் மாகாளம்; சோழநாட்டுத் தலம்.
`மாறன்` என்பது இயற்பெயர்.
`சோமாசி` என்பது சிறப்பு பெயர்.
`சோமா யாஜி` என்பது `சோமாசி` எனத் திரிந்தது.
இப்பெயரே `இவர் வைதிக அந்தணர்` என்பதைக் காட்டும்.
`வேதப் பொருளை அஞ்செழுத்தாய மந்திரத்தை விளம்பியல்லால் விளம் பான்` என்க.
இதனால் இவர் ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது - நாதன் நாமம் நமச்சி வாயவே`` என்னும் துணிவினராய் இருந்தமை விளங்கும்.
`பரன்பால்` என ஏழாவது விரிக்க.
நித்த நியமம், நித்தியாக்கினி யோம்புதல்.
அதனை, `பரன்பால் மன்னு நியமம்` என்றதனால், சிவாக்கினியாக வளர்த்தமை அறியப்படும்.
`காந்தனாகிய வன்றொண்டன்` என்க.
மேற்கூறிய கொள்கையும், ஒழுக்கமும் உடையவராய் இருத்தமையால் சுந்தர மூர்த்தி நாயனாரைத் தமக்கு ஆசிரியராகக் கொண்டு ஒழுகின்றார் என்க.
இவரது வரலாறு வேறு புராணங்களில் சில பொருள்கள் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 41

துணையு மளவுமில் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையுங் கதிர்நெடு வேலுங்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி
பேரமைத் தோளிரண்டும்
அணையும் மவன்திரு வாரூர
னாகின்ற அற்புதனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துணை - ஒப்பு.
பிணை - பெண் மான் என்றது அதன் பார்வையை.
சங்கிலி, சங்கிலி நாச்சியார்.
அமைத்தோள் - மூங்கில் போலும் தோள்.

பண் :

பாடல் எண் : 42

தகடன வாடையன் சாக்கியன்
மாக்கல் தடவரையின்
மகள்தனம் தாக்கக் குழைந்ததிண்
டோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியில் செங்க
லெறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவ னூர்சங்க
மங்கை புவனியிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சாக்கியன் - பௌத்த மத வேடத்தை மாற்றிக் கொள்ளாதவன்.
அவ்வேடத்தையுடையவர் மருதம் துவம் தோய்ந்த ஆடையை அணிவர் ஆதலாலும், அந்த ஆடைகெட்டியாய்த் துவ ளாது நிற்கும் ஆதலாலும், `தகடு அன்ன ஆடையன்` என்றார்.
மாக்கல் - பெருங்கல்.
பெருங்கல்லாகிய வரை இமய மலை.
``தென் குமரி வடபெருங்கல்`` 1 என்றார் சங்கப் புலவரும்.
கம்பர் - திரு வேகம்பப் பெருமான்.
புவனி - பூமி.

பண் :

பாடல் எண் : 43

புவனியில் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தெ
னாக்கூ ரதிப னருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூதி - விபூதி; திருநீறு.
சாதனம் - உருத்திராக்கம்; இது சைவ மரபுப் பெயர்.
``ஆர்ந்து`` என்பதை `ஆர` எனத் திரிக்க.
தவ நியமம் - தவமாகிய, தப்பாக் கடமை.
இஃது இங்கு சைவாசாரத்தின் மேல் நின்றது.
சிறப்பு, மேல்நிலையில் வைத்து வழிபடுதல்.
தத்துவம்- மெய்ம்மை; அஃதாவது, உளமார நேர்ந்து செய்தல்.
காரணன் - செய்பவன்; கருத்தா.
தலை நிற்றல் - பற்றி நிற்றல்.
`சிறப்புலி` என்பது பெயர்.

பண் :

பாடல் எண் : 44

புலியி னதளுடைப் புண்ணியற்
கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வ னுடல் துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழிலொண்செங் காட்டங்
குடியவர் மன்னவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கலி, பிள்ளைக்கலி.
அதைத் தொலைத்தமை, கறியாகச் சமைக்கப்பட்ட மகன் திருவருளால் மீண்டும் முன்போல உயிர்பெற்று எழுந்து வரப் பெற்றமை.
கண்டீர், முன்னிலையசை.
``தனது புதல்வன்`` என்பதற்கு, மேல் 1 ``நினது அடியேம்`` என்றதற்கு உரைத்ததை உரைக்க.

பண் :

பாடல் எண் : 45

மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மன்னர்பிரான், தென்னர்பிரான், சேரலன்` என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள்.
உவர் - உவர் மண்.
ஊறி - ஊறியதனால்.
நீறு - திருநீறு.
தன்னர்பிரான் தமர் போல - தம்மைப் போல்பவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானுக்குத் தொண்ட ராயினார்போல.
என்னர்பிரான் - என்போன்ற குடி மக்கட்குத் தலைவரே; அண்மை விளி.
``அடி வண்ணான், அடிச்சேரன்`` என்னும் பயனிலைகட்கு `யான்` என்னும் எழுவாய் தனித்தனி வருவிக்க.
``தென்னர்`` என்பது `தமிழர்` எனப் பொதுப் பொருள் தந்தது.
சொல் வாரது குறிப்பினால் சேரநாட்டுத் தமிழரைக் குறித்தது.
கழறிற்று அறி வான், எந்த உயிரும் தன்தன் மொழியில் கூறுவதை அறிய வல்லவன்.

பண் :

பாடல் எண் : 46

சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எனது உள்ளம்`` என்பது விளி; அதனை முதற்கண் வைத்து உரைக்க.
``சேரற்கு, வீரற்கு, சூரற்கு`` என்பன ஒரு பொருள் மேல் வந்த பல பெயர்கள்.
தென்னாவலர் பெருமான், தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவர்; சுந்தரமூர்த்தி நாயனார்.
கட கரி - மத யானை; இது வெள்ளை யானை.
பந்தி, குதிரைப் பந்தி.
இவுளி - குதிரை.
``வைத்த`` என்றது, `ஓட்டிய` என்ற படி.
கருப்பு வில் வீரன், மன்மதன்.
அவனை வெற்றி கொண்டமை யாவது, தமக்கு உரிமைத் தேவியரான பலருள் ஒருவரையும் நினை யாது ஒரு கணத்திலே துறந்து கயிலை சென்றமை.
சூரன் - ஆண்மையுடையவன்.
`ஏனையோரை வெல்லும் ஆண்மைகள் எல்லா வற்றினும் மேலான ஆண்மை மன்மதனை வெல்லும் ஆண்மையே` என்பதாம்.
`சூரற்கு இன்று தொண்டுபட்டு நன்று செய்தாய்` என்க.

பண் :

பாடல் எண் : 47

தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தொண்டரை ஆக்குதலாவது, பிற வழிகளில் முயல் பவர்கள் சிவனது தொண்டு முயற்சியில் திருப்பிடுதல்.
`அம் முயற்சி களுள் அவரவருக்கு ஏற்புடைய பணி இது இது` எனத் தெரிந்து அப் பணியில் அவர்களை ஈடுபடுத்தியவர் இந்நாயனார் என்க.
அப்பணி களுள், திருமுறைகளை ஏட்டில் எழுதல் ஒரு சிறந்த திருப்பணியாகும் `திருமுறை` என்பது பழங்காலத்தில் இறைவணக்கப் பாடல்கள் வரையப்பட்ட ஏடுகளுக்கு வழங்கிய பெயர்.
அண்டர் - தேவர்.
கோணம், வரையறுக்கப்பட்ட இடம்.
கணம் - கூட்டம்; இது சிவ கணத்தையேயன்றிப் பதினெண் கணங்களையும் குறித்தது.
கணத்துக்கு நாயகம் பெற்றது பின்னர் என்க.
காண், முன்னிலையசை.
கண்டல் - தாழம் பூ.
சோறு - சோற்றி.
இஃது, `உணவு` என வேறொரு பொருளையும் நயம்படக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 48

நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாதன் திருவடியே முடியாக - வேறு முடி புனையாமல் தில்லைப் பெருமான் திருவடியே முடியாக.
போதம் - ஞானம்.
பொறித்தல் - பதித்தல்.
அது - அத்திருவடி.
கைகொடுத்தல் - உற்றுழி உதவுதல்.
ஓதம் - அலை; கடல் அலை.
கோதை - மாலை.
இதனை வேலுக்கும், நாயனாருக்கும் கொள்க.
களப்பாளன்.

பண் :

பாடல் எண் : 49

கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக்
காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க்
குருடனுங் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாமித் தரணியிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புகல் - நம்பால் வருதல்.
எவன் - எக் காரணம் பற்றி உண்டாகும்? `உண்டாகாது` என்பதாம்.
`கூற்றுக்கு புகல் எவன்` என மாற்றி, இறுதியில் கூட்டி யுரைக்க.
ஓகாரம் அசை.
திருஆரூரன் - சுந்தர மூர்த்தி நாயனார்.
பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இரட்டையரைப் போல அக்காலத்தில், நடக்க மாட்டாத கூனன் ஒருவனைக் குருடன் ஒருவன் சுமந்து செல்லக் கூனன் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்தும், வெற்றிலைப் பாக்குத் தேடிக் கொணர்ந்தும் நாள்தோறும் சுந்தரருக்குக் கொடுத்து வந்தமையால் அவர் பரவையாரது ஊடலை இறைவன் தூது சென்று தீர்த்தபின் இல்லத்தில் புக்கபொழுது அவ் இவருடைய கூனையும், குருட்டையும் நீக்கி நல்லுடல் பெறச் செய்தமை இப்பாட்டில் குறிக்கப்பட்டது.
இதனைச் சேக்கிழாரும் கூற்றுவ நாயனார் புராணத்து இறுதிப்பாட்டில் கூறியருளினார்.
அடைக்காய் - வெற்றிலைப்பாக்கு.
கோல் - நெறி.
தொத்துதல் - பற்றி நிற்றல்.
`தருமக் கோலில் தொத்து கூனனும், குருடனும்` என்க.
``போய்`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது.
``திரியும்`` என்னும் பெயரெச்சம், ``பழமொழி`` என்னும் பிற பெயர் கொண்டது.
`குற்றே வலுள் ஒன்றிரண்டைச் செய்த கூனனும், குருடனும் நீக்கலாகாத கூனும், குருடும் நீங்கி நலம் பெற்றார்கள் என்றால் அவ் ஆரூரரையே தலைவராகக் கொண்டு அவர்க்கு முழுதும் ஆட்பட்ட நம்பால் கூற்றுவன் வாராது நீங்குதல் அரிதன்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 50

தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதில்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால
வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொய்ம்மை இலாத் தமிழ்ச் சங்கம் - உலகியலை நோக்காத தமிழ்ச் சங்கம்.
இது சைவத் தமிழ்ச் சங்கம்.
`தலை, இடை, கடை` என்னும் மூன்று தமிழ்ச் சங்கங்களும் பெரும்பான்மையும் அறம், பொருள், இன்பங்களையே நெறிப்படுத்தினவாக, இச்சங்கம் வீடு ஒன்றனையே நோக்கி அமைந்தமையால், ``பொய்ம்மையிலாத தமிழ்ச் சங்கம்`` என்றார்.
இது திருவாதவூரடிகளை அமைச்சராகக் கொண்டு விளங்கிய, ``பெரிய அன்பின் வரகுண தேவன்`` எனப்பட்ட பழைய வரகுண பாண்டியனுக்குப் பின் வந்த பாண்டியன் காலம் முதலாகத் தொடங்கி நடைபெற்றது.
எனவே, `இதில் இருந்த கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்கள் பெயரால் ஒன்றுபட்டுக் காணப் பட்ட போதிலும் பழைய உலகியற் சங்கத்தில் இருந்த கபிலர், பரணர், நக்கீரர் முதலியோரின் வேறுபட்டோர்` என்பது உணரற்பாலது.
இவர்களும் முன்னோரைப் போற்றும் வகையில் அவர்களது பெயரைப் பூண்டு விளங்கினர்.
நாற்பத்தொன்பது புலவோர்; மற்றும் பல்புலவோர்` எனத் தனித்தனி இயைக்க.
நாற்பத்தொன்பதின்மர் சிறப்புடையோர் என்க.
`நாற்பத் தொன்பதின்மர்` என்பதும் ஒரு பாடும் புலவர்கள்`` என்றதனால், `இவர்கள் மக்களைப் பாடாத நெறிமையுடையவராதல் விளங்கும்.
இவர்கள் பாடிய பாடல்கள் 11-ஆம் திருமுறையாகக் கோக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 51

புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடுபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக்
கீந்ததொர் வண்புகழே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புலம் மன்னிய மன் - ஞானம் நிலைபெறப் பெற்ற தலைவன்.
கோகன நாதன் குலமுதலோன் - சூரிய குலத்தின் (சோழர் மரபின்) மூதாதை.
இவையிரண்டும் ``புகழ்ச் சோழன்`` எனப்பட்ட அவரையே குறித்தன.
ஐ - அழகு.
`சிங்கள நாட்டைப் பொடிபடுத்த கோகன நாதன் குலம்` என்க.
கரிகாலன் முதலாக அவ்வப்பொழுது வந்த சோழர்கள் சிங்கள நாட்டின்மேற் படைகளை ஏவிப் பலமுறை வென்றார்கள் ஆதலின் அவ்வெற்றியை ஒருவனுக்கே உரித்தாக்கிக் கூறாது, குலம் முழுவதற்குமாக ஆக்கிக் கூறினார்.
குலம் மன்னிய புகழ்க் குலம் - தொன்றுதொட்டு வழி வழியாக நிலைபெற்று வரும் புகழையுடைய குலம்.

பண் :

பாடல் எண் : 52

புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன் இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எம் பரமே - எம் அளவினதோ.
ஏகாரம், வினா.
இத்தொடரை இறுதியிற் கூட்டியுரைக்க.
தவர் - சிவனடியார்கள்.
அவர்கட்கு இந்நாயனார் திருவாதிரைத் திருநாளன்று திருவமுது படைத்து, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு நூறு பொன் நன்கொடையாக அளித்து வந்தார்.
மடவார் புனை வேடம்.
`மடவார்க்கு` என நான்காம் உருபு விரிக்க.
இவ்வேடத்திற்கு இடையே அவன் தானும் பொன் பெற வேண்டி திருநீறு கண்டிகைகளையும் அணிந்துகொண்டு அடியார்களோடு சேர்ந்து வந்தான்.
அவனைப் பிறர் எல்லாரும் இகழ்ந்த போதிலும் இந்நாயனார் அவனுக்கு இருநூறு பொன்னை நன்கொடையாக அளித்தார்.
அதற்குக் காரணம், `அவையிகழ்ந்தால், திருநீறு உருத்திராக்கங்களை நாம் போற்றாதவர் ஆவோம்` எனக் கருதியதே யாம்.

பண் :

பாடல் எண் : 53

திறமமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த
னாகிய பொய்யிலியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடலில் வலையை வீசி மீன் பிடிக்கும் பொழுது மீன் ஒன்றே ஒன்று தனியாக வலையில் அகப்பட்டுக் கிடைக்குமாயின் அந்த மீனை, `இந்த மீன் சிவனுக்கு உரிய மீன்` என்று அதனை மீண்டும் கடலிலே விடுபவர் இந் நாயனார்.
இவருக்குச் சோதனையாகப் பல நாட்களில் வலையில் ஒவ்வொரு மீனே அகப்பட்டு வந்தது.
அதைக் கடலிலே விட்டமையால் உணவின்றிக் குடும்பத்துடன் மெலியும் நாளில் ஒரு நாள் தனி ஒரு மீன் பொன்னும், இரத்தினமுமே உருவாகி, உலகம் விலை பெறும் அளவினதாய் அகப்பட, அதனையும் கடலிலே விடுத்தார்.
உடனே பெருமான் காட்சி தந்து அழைத்துச் செல்ல, முத்தி பெற்றார்.
இந் நாயனார் பத்தருட் சிறந்த `அதிபத்தர்` எனப் பெயர் பெற்றமை உணரற்பாற்று.
அமர் - அந்த மீன் வாழ்கின்ற.
புறம் - புறத்துச் சூழ்ந்த பொய்கைகள்; ஆகுபெயர்.
நாகை - நாகப்பட்டினம்.

பண் :

பாடல் எண் : 54

பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தன் அடியான் - தனக்கு அடிமையாய்த் தனக்குப் பணிசெய்து இருந்தவன்.
சைவம் - சிவ வேடம்.
`கடிந்து, ஆட்பட்டு, கழுவ, நீர் வாரா மனைவி கையைத் தடிந்தவன் கலிக்கம்பன்` என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 55

கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கம்பக் கரி - எப்பொழுதும் அசைந்து கொண்டே யிருக்கும் யானை.
சிவபெருமான் யானைக்கும், சிலந்திக்கும் அருள் புரிந்தது திருவானைக்காத் தலத்தில்.
`கண்ணுதலோன் ஆகிய நாதற்கு` என்க.
உடல் - பொன்; காசு.
தயிலம் - எண்ணெய்.
சக்கிரி - செக்கான்; செக்காடும் தொழிலை உடையவன்.
சக்கிரம் - செக்கு.

பண் :

பாடல் எண் : 56

கிரிவில் லவர்தம் மடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைமக ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கிரி வில்லவர் - மகாமேரு மலையாகிய வில்லை உடையவர்; சிவபெருமான்.
கீழ்மை சொல்லுதல் - இழித்துரைத்தல்.
திரு இல்லவர் - நல் ஊழ் இல்லாதவர்; பாவிகள்.
வரி வில்லவர் - வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தியவர்.
விரை - நறுமணம்.
வரிஞ்சை - வரிஞ்சையூர்.

பண் :

பாடல் எண் : 57

சத்தித் தடக்கைக் குமரன்நற்
றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற்
காயயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா
கின்றநம் பல்லவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சத்தித் தடக்கைக் குமரன் - முருகக் கடவுள்.
அவனுக்குத் தாதை சிவபெருமான்.
தானம் - தலங்கள்.
`தானம் எல்லாம் சென்று, என ஒரு சொல் வருவிக்க.
முத்திப் பதம் - மோட்ச மாகிய அந்த ஒரு பதவியின் பெருமையைப் பற்றியே.
முடி அரசு ஆம் அத்தில் - முடிபுனைந்து ஆள்கின்ற அதைவிட.
அரற்கு ஆள் ஆய் ஐயம் ஏற்றல் மும்மை நன்று என்னும் - சிவபெருமானுக்கு ஆளாகிப் பிச்சை ஏற்று உண்டல் மும்மடங்கு நன்றாகும்` என்று அருளிச்செய்த.
இவர் அருளிச் செய்த தனி வெண்பாக்கள் கிடைத்த அளவில் `சேத்திரத் திருவெண்பா` - எனப் பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
பல்லவர்கள் தமிழ் நாட்டிற்குப் புதியரானமை பற்றி அவர்களைச் சேக்கிழார் புராணம் ``குறுநில மன்னர்`` என்றது.

பண் :

பாடல் எண் : 58

பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தக்கன் வேள்வியில் சூரியன் பல் உதிர்க்கப்பட்டான்` என்பது புராணம்.
செங்கதிரோன் - சூரியன்.
வீரபத்திரர் செயல் இங்குச் சிவபெருமான் செயலாகக் கூறப்பட்டது.
சொல்லவன்- சொற்களை உடையவன்.
நாட்டியத்தான் குடி.
கோட்புலி நாயனாரது ஊர்.
``மாணிக்க வண்ணன்`` என்றது இங்குள்ள சிவபெருமானையே.

பண் :

பாடல் எண் : 59

நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நற் புல் - `கணம்புல்` என்னும் ஒருவகைப் புல்.
கல் நவில்தோள் - கல்போலும் தோள்.
இந்நாயனார் மரபு அறியப்படவில்லை.
``எந்தை தந்தை பிரான்`` என்றது, `எம் குடி முழுதையும் ஆட் கொண்டவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 60

புல்லன வாகா வகையுல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைப்புக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினில் காரியையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உலகத்துப் புணர்ந்தனவும் புல்லன ஆகா வகை ஆக்கி` என இயைக்க.
உலகத்துப் புணர்ந்தன, பொருளிலக்கணத்தில் சொல்லப்பட்ட `முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்` என்னும் மூவகைப் பொருள்கள்.
வெளிக்கு அவைகளைப் பாடுவது போலத் தோன்றும்படி பாடல்களைப் பாடி.
அவற்றினுள்ளே சிவனது பெருமை உள்ளுறையாக அமையச் செய்தவர் இந்நாயனார்.
அதனால், `` உலகத்துப் புணர்ந்தனவும் புல்லன ஆகா வகை நய மாக்கி`` என்றார்.
`சொல்லின உள் நயமாக்கி` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
புல்லன - கீழான தன்மையை உடையன.
அவை உலக நிகழ்ச்சிகள்.
இவ்வாறான பாடல்களால் மூவேந்தர்களைப் பாடி மகிழ்வித்து, அவர் தந்த பரிசுப் பொருளைக் கொண்டு சிவத் தொண்டும், சிவனடியார் தொண்டும் செய்தவர் இந் நாயனார்.
இவரது மரபு அறியப்படவில்லை.
இவர் சங்கப் புலவராகிய காரிகிழாராயின் வேளாண் மரபினராவர்.

பண் :

பாடல் எண் : 61

கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கை - பக்கங்கள் ``முகிற் கை`` என்பது கடலுக்கு அடை.
காழியர் பெருமான் - திருஞானசம்பந்தர்.
அழிந்தது - தோற்றது.
பஞ்சவன் - பாண்டியன்.
வார்த்தை - புகழ்.
அது, பகுதிப் பொருள் விகுதி.
`மாறனுக்கு உரியது` என ஈற்றில் ஒருசொல் வருவித்து முடிக்க.
இவ்வாறு உரையாது `வார்த்தை யதுவுண்டு` எனப் பாடம் ஓதலும் ஆம்.
`பகைவரை வென்ற` எனவும் ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 62

மாறா வருளரன் தன்னை
மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளி விளக்
கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா
னென்று விளம்புவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆறா விளக்கு` என இயையும்.
ஆறா விளக்கு - அணையா விளக்கு அக மலர்வு - நெஞ்சில் எழுகின்ற சிவ நினைவுகள்.
அமிர்தம் - நிவேதனம்.

பண் :

பாடல் எண் : 63

என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``என்று விளம்புவர்`` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க.
அழிந்தவர் - தோற்றவர்.
எறிந்து - கூலி கொடுத்தவரை எதிர்த்து நின்றோரைத் தாக்கி பெருஞ்செல்வம் - படைக்கூலியாகப் பெற்றதனால் வந்த பெருஞ்செல்வம்.
சிலை - வில்.
தமர் - அடியார்.

பண் :

பாடல் எண் : 64

கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அன்று புக்கொளியூரில், முதலை கொள்பிள்ளைக்கு உயிர் கொடுத்தான்` என்றும், `அவிநாசியை மதுர கவி தொடுத்தான்` என்றும், `திருமுருகன் பூண்டியினில் வேடர் சுற்றம் படுத்தான்` என்றும் கூட்டுக.
மதுரம் - இனிமை.
`கவியால் தொடுத்தான்` என உருபு விரிக்க.
தொடுத்தான் - தொடுத்துப் பாடினான்.
புக்கொளியூர், ஊர்ப் பெயர்.
அவிநாசி.
அவ்வூரில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர்.
அவிநாசி - விநாசம் (அழிவு) இல்லாதவன்.
படுத்தான் - வென்றான்.
பராபரம் - மேனவும், கீழனவும் ஆகிய அனைத்துப் பொருள்களுமாய் உள்ள பொருள்; பரம்பொருள்.
இஃது ஆகுபெயராய், அதன்பால் உள்ள இன்பத்தைக் குறித்தது.
மடுத்தான்- உண்டான்.

பண் :

பாடல் எண் : 65

மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆரூர் மணி, திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவன்.
``மாதவத்தோர் - தங்கள் வைப்பு`` ஆவானும் அவனே.
போது - மலர்.
தேவி - பட்டத்துத் தேவி.
`அவனது மூக்கை அரிந்தவர் செருத்துணை நாயனார்` என்பது பின்னர் வரும் பாட்டால் விளங்கும்.
காதி - வெட்டி.
``வைத்து`` என்பது, `முன்னர்ச் செய்து` எனப் பொருள் தந்து நின்றது.
எனவே, அரிவது, பின்னர்ச் செயற்பாலதாயிற்று.
``மொய்த்து ஆர் நாத வண்டு`` எனக் கூட்டுக.
ஆர்த்தல் - ஒலித்தல்.
நாதம் இசை.
இந்நாயனாரைச் சுந்தரர் ``கடல் சூழ்ந்த உலகெலாம் எனப் புகழ்ந்திருக்கவும் சேக்கிழார் புராணம் இவரை ``குறுநில மன்னர்`` என்றே கூறிற்று.

பண் :

பாடல் எண் : 66

சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிங்கத்து உருவன் - இரணியாசுரனை அழித்தற் பொருட்டுக் கொண்டே நரசிங்கமாகிய உருவத்தையுடையவன்.
செற்றவன் - (சரபமாய்த் தோன்றி) அழித்தவன்; சிவபெருமான்.
கொங்கிற் கனம் - கொங்கம் நாட்டினை வென்று கொணர்ந்த பொன்.
ஆதித்தன் - முதல் ஆதித்த சோழன்.
`இவன் குலத்து முன்னோராய் இருந்தவர் இந் நாயனார்` என்பதாம்.
சிற்றம்பலம் பொன் வேய்ந்தமை பற்றி ஆதித்த சோழன் புகழ்ச்சி மிக்கவனாய் இருந்தமையின், `அத் தகையோன் இந்நாயனார் வழியில் வந்தவனே` என்பது உணர்த்து முகத்தால் இந் நாயனாரது பெருமையைப் புலப்படுத்தினார்` இஃதே பற்றி இந்நூலாசிரியரை அவ் ஆதித்த சோழன் காலத்தவராகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
பறை போக்குதல் - பறை சாற்றுவித்தல்.
`பறை போக்கு இறைவன்` என இயையும்.
``இவரது ஊர் இருக்கு வேளூர்`` எனப்பட்ட போதிலும், ``ஆதித்தன் குல முதலோன்`` எனப் பட்டமையால், சேக்கிழார் புராணம் இவரை ``முடி மன்னர்`` எனக் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 67

கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டின் பொருளை மேல் கழற்சிங்க நாய னாரைப் பற்றிப் போந்த.
``மாதவத்தோர் தங்கள்`` என்னும் பாட்டின் பொருள் பற்றி அறிக.
குமிழ் மலர் மூக்கு - குமிழம்பூப் போன்ற மூக்கு.

பண் :

பாடல் எண் : 68

செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி
யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளும்
நிதியது பெற்றனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

செருவிலிபுத்தூர் அரிசில் ஆற்றங்கரையில் இருத்த லால் `அரிசிற்கரைப் புத்தூர்` எனப்பட்டது.
தேவாரம் பெற்ற தலம்.
சிறுவிலை - பஞ்சம்.
வையம் சிறு விலையை உடையதாய்விட.
உரு - உடம்பு.
வலி கெட்டது உணவின்மையால் ஆகலின், `உணவின்றி உரு வலி கெட்டு` என மாற்றியுரைக்க.
``செய்தருவது`` என்பதில், `தரு` துணைவினை.
`தரியாது நடுங்கி` என ஒரு சொல் வருவிக்க.
நிதி, படிக் காசு.
இவ்வரலாற்றை இத்தலச் சுந்தரர் தேவாரத் திருப்பதிகத்து 6-ஆம் திருப்பாட்டால் அறிக.

பண் :

பாடல் எண் : 69

பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விரையாக் கலி - ஒருவராலும் கடக்கலாகாத ஆணை.
இது சிவபெருமான் மேல் இடப்படும் ஆணைக்கே பெயராய் வழங்கும்.
``தனது`` என்பதில் `தன்` சாரியை.
`தமது` என்பது பாட மன்று.
`பிழைத்தோராகிய தனது சுற்றம்` என்க.
பிழைத்தோர் - கடந் தோர்.
சுற்றத்தாரை, ``சுற்றம்`` என்றது உபசார வழக்கு.
திருநாட்டியத் தான்குடி, ஊர்ப்பெயர்.
குற்றம் அறுக்கும் - ஏனையயோரது குற்றங் களையும் நீக்கவல்ல.
நாவல் - நாவலூர்.
குரிசில் - தலைவன்.
நாவலூர்த் தலைவன் சுந்தரமூர்த்தி நாயனார்.
அவரது அருளாவது, ``கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி`` எனப் புகழ்ந்தருளிய புகழ்த்தொடர்.

பண் :

பாடல் எண் : 70

தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னாலொற்றி
யூருறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூரரசே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நூல்போன`` என்றது சிலேடை நயம்.
`மங்கல நாணை இழந்த என்பது மேற்போக்குப் பொருள்.
ஒருவன் மகட் பேசியதன்றி, பேசப்பட்ட மகளோ, அவன் தன் இருமுது குரவரோ மணத்திற்கு இசையாத நிலைமையில் மகட் பேசினோன் இறந்தமை பற்றி அவனால் பேசப்பட்ட மகளை, ``மங்கல நாணை இழந்தவள்`` என எவரும் கூற ஒருப்படார் ஆதலின் ``நூல் போன`` என்றது சிலேடை நயமேயாம்.
``நூல்`` என்பது விடாத ஆகுபெயராய் அதனைத் தரும் மண வினையைக் குறிக்க, மகட் பேசினோன் உடனே இறந்தமை கேட்டு அவளைமணம் பேச நினைவார் ஒருவரும் இல்லாது போயினர்` என்பதே அத்தொடரின் உட்பொருள்.
இனி உலகம் நகும் வழக்காவது, மகட் பேசினான் உடனே இறந்ததை அறிந்த பின்பு அவ் இறப்பிற்கு ஏதுவாய் நின்ற மகளை மணக்க எவன் ஒருவன் விரும்பினும் `அவன் விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற் றில் வீழ்வான்போலும் அறிவிலி` என உலகம் இகழத் தொடங்கிய வழக்கு.
உலகத்தில் அத்தன்மைத்தாகிய வழக்குச் சுந்தரர்பால் பொய்த்துப் போய் இன்பம் பயந்ததையே ``உலகம் நகும் வழக்கே நன்மையாக`` என்றார்.
இச்சிலேடை நயம் உணர மாட்டாதார் இந் நூலாசிரியர் ``உலகம் `இழுக்கு` எனக் கடிந்த பழியொழுக்கத்தையே சுந்தரர் `நன்று என மேற்கொண்டதாகக் கூறினார்`` என்று இகழ்வர்.
இவரெல்லாம்,
மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பமென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையார்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன்
என்றதில், ``விளங்கிழையார் இருவரோடும் முயங்கிய போதிலும் 2 வன்றொண்டர், தம் அறிவு மோக மயத்ததாகாது, சிவனை மறவாத சிந்தையால் சிவஞான மயமாகவே இருந்தார் என்னும் உண்மை உணர்த்தப்பட்டமையை அறியாது, சிவன் வன்றொண்டர் பொருட்டுத் தான் வகுத்த நெறியினைத் தானே அழித்தானாகக் கூறி மகிழ்பவரோடு ஒரு பெற்றியர் ஆவர்.
இன்னோரைத் தெருட்டுதல் அரிது.

பண் :

பாடல் எண் : 71

அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடல் நிலத்திற்படிய வீழ்ந்து சிவபெருமானது திருவடிகளை வணங்குதல், அன்பினால் நாக்குழற அப்பெருமானது புகழ்தனை எடுத்தோதுதல், உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிதல், கை, கால் முதலிய உறுப்புக்கள் யாவும் அன்பினால் நடுங்கல், கண்களி னின்றும் அன்புக் கண்ணீர் அருவிபோல் உடம்பெங்கும் ஒழுகப் பெறுதல் இவை முதலியவற்றை உடையோர் பத்தராய்ப் பணிவா ராவார்.
கம்பித்தல் - நடுங்குதல்.
அங்கம் - உடம்பு.
தொகுத்தவர் - தொகுக்கப்பட்டவர்.
எனவே, இவரைப் போல ஒருவராகச் சொல்லப்படாமல், பலராகச் சொல்லப்படுவார் `தொகையடியார்கள்` என்பது போந்தது.
போதவே, `ஒவ்வொருவராகச் சொல்லப்பட்டோர் தனியடியாராவர்` என்பதும் பெறப்பட்டது.
``சொரிதரும்`` என்னும் பெயரெச்சம் ``அங்கம்`` என்னும் இடப்பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 72

தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோரென்ப ருத்தமரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``தொகுத்த`` என்னும் பெயரெச்சம் ``இயல், இை\\\\u2970?`` என்னும் செயப்படு பொருட் பெயர்களைக் கொண்டது.
``வடமொழி தென்மொழி`` என்பது உம்மைத்தொகை.
அதன் ஈற்றில் ஏழன் உருபு விரிக்க.
தோன்றியது - கைவந்தது.
``வடமொழி தென் மொழிகளில் யாதொன்று தோன்றியது`` எனக் கூறினமையால்.
நாயன்மார் நெறியில் மொழிவேற்றுமை கொள்ளப்படாமை விளங்கிற்று.
இவற்றுடன், ``தேசிகம்`` எனச் சேக்கிழார் பிறமொழிகளையும் சேர்த்துக்கூறினார்.
``வடமொழியும், தென்தமிழும், மறைகள் நான்கும் - ஆனவன்காண்`` எனவும், ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` 1 எனவும் அப்பர் பெருமானும், ``தமிழ்ச் சொலும் வட சொலும் தாள்நிழற் சேர`` 2 எனத் திருஞானசம்பந்தரும், ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
தமிழ்ச்சொல் வடசொல் இரண்டும் அவனை உணர்த்தும்.
3 எனத் திருமூலரும் அருளினமை காண்க.
செய்யுள்கள் இயலிலும் உண்டு.
அவை `பா` எனவும், `பாவினம்` எனவும் கூறப்படும்.
அவை களிலும் ஓரளவு இசை உண்டு.
``இயல், இை\\\\u2970?`` எனவும், இனம் பற்றி நாடகச் செய்யுளும் கொள்ளப்படும்.
வல்ல வகையில் - இயன்ற அளவில், கோழைமிட றாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும்
ஈசன் 4
எனச் சம்பந்தப் பெருமான் அருளிச் செய்தார்.
வல்ல வகையில் பாட வல்லோர்` - என இயையும்.
வல்லோர் - மன நிலை கொண்டவர்.
நெற்றி - மதிலின் நெற்றி.
உகுத்த மனம் - உருக்கிச் சேர்த்த மனம்.
``பாடவல்லோர் உத்தமர் என்பர்` என மாற்றியுரைக்க.
``என்பர்`` என்பதற்கு, ``உயர்ந்தோர்`` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.

பண் :

பாடல் எண் : 73

உத்தமத் தானத் தறம்பொரு
ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இங்கு, ``உத்தமத்தானம்`` எனப்பட்டவற்றைச் சேக்கிழார், ``காரண பங்கயம் ஐந்து`` 1 என்றார்.
அவை மூலாதாரத் திற்கு மேல் உள்ள ஐந்து ஆதாரங்கள்.
அவற்றில் கீழ் இருந்து பிரமன் விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ஆகிய காரணக் கடவுளர் வீற்றிருப்பராகலின் அவற்றைச் சேக்கிழார், ``காரண பங்கயம் ஐந்து`` என்றார்.
அந்த ஐவரும் முறையே படைத்தல் முதலிய ஐந்து தொழில் களைச் செய்வர் ஆதலானும் அவ் ஐந்தொழில்களில் உயிர்கள் பெறு வன வீடுதவிர, அறம் முதலிய ஏனை மூன்று பயன்களே ஆதலாலும் அம் முப்பயன்களுக்கு மேலான வீடு பெற நின்றாரை, ``அறம், பொருள், இன்பம் ஒடி எறிந்து`` என இவ்வாசிரியர் இங்குக் கூறினார்.
`ஒடிய` என்பது கடைக் குறைந்து நின்றது.
ஒடிய - அழிய.
அறம் முதலிய மூன்றும் பிறப்பையே பயப்பனவாம்.
``அறம், பொருள், இன்பம்`` என்பன ஆகுபெயரால் அவற்றின்மேற் செல்லும் ஆசை களைக் குறித்தன.
வித்தகம் - ஞானம்.
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களை `யோகத் தானம்` என வைத்து, ஆஞ்ஞைக்கு மேல் உள்ள ஏழாம் தானமாகிய நிராதாரத்தையும், அதற்குப் பன்னிரு விரற் கடை கடந்துள்ள துவாதசாந்தத்தையும் `ஞானத் தானம்` என்பார், ``வித்தகத்தானம்`` என்றார்.
`ஆஞ்ஞையோடு நிற்கும் ஆதார யோகமும் பிறப்பை அறுக்காது` என்பதை ``யோகில் - தருவதோர் சமாதி தானும் தாழ்ந்து பின் சனனம் சாரும்`` என்னும் சித்தியார் மொழியால்2 உணர்க.
நிராதாரம் நாதத் தானமாகவும், துவாசாந்தம் நாதாந்தமாகவும் சொல்லப்படுதல் பற்றியும், அதுவே சிவம் விளங்கும் இடமாதல் பற்றியும் சித்தத்தைத் துவாதசாந்தத்தில் செலுத்தியவரைச் சேக்கிழார், ``நாதாந்தர் - தாரணையால் சிவத்த உரைத்த சித்தத்தார்`` என்றார்.
எனவே அதனையே இவ்வாசிரியர் இங்கு வித்தகத் தானத்து ஒருவழிக் கொண்டு சிவன் திருப்பாத மலர்க்கீழ்ச் சித்தம் வைத்தார்`` என்றார் என்க.
ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க; உந்தீபற
விமலற்கு இடம் அது என்று உந்தீபற
என்றே சாத்திரத்திலும் கூறப்பட்டது.
நிராதாரம் - ஏழாம் தானம்.
மீதானம் - துவாதசாந்தம்.
சென்னி மத்தம் வைத்தான் - திருமுடியில் ஊமத்தைப் பூவைச் சூடியிருப்பவன்; சிவன்.
`நிராதார, மீதான யோகங்களே ஞானயோகம்` என்பது உணர்த்துதற்கு அதனையுடைய வர்களை ``வீடுபேறு எய்திய செல்வர்கள்`` என்றார்.
எனவே, பிற் காலத்துச் சாத்திரங்களில் `சிவயோகிகள்` என குறிக்கப்படுவார் இந்த ஞான யோகிகளே என்பது உணர்க.
`சித்தம்` வைத்தாரே வீடுபேறு எய்திய செல்வர்கள் என்பர்` என முடிக்க.

பண் :

பாடல் எண் : 74

செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருவாரூரில் வந்து பிறப்பவர்கள் முன்பு சிவகணத்துள் இருந்தவர்களே` என்பதும், `அவர்கள் முன்னை யுணர்வு முதிரப்பெற்றுச் சிவனடி சேர்தற்கே அங்கு வந்து பிறக் கின்றனர்` என்பதும் அருளாளர் மரபு.
அதனால் அவர்கள் யாவரும் திருத்தொண்டராவர் என்க.
`திருவாரூர்ப் பிறந்தார் யாவரும் சிவ கணத்தவரே` என்பது பெரிய புராணத்துள் நமிநந்தியடிகள் புராணத் துள்ளும் விளக்கப்பட்டது.
`சேவடியே செழுநெறி` என இயைத்து முடிக்க.
செல்வ நெறி திருவருளாகிய செல்வத்தையுடைய நெறி.
அணித்து - அண்மையில் உள்ளது.
மதில் வட்டம் - முதற் காலத்திலே `திருவாரூர்` என வரையறுக்கப்பட்ட எல்லை வட்டம்.
செல்வன் - சிவன்.

பண் :

பாடல் எண் : 75

நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெறிசடை, வார்சடை` - எனத் தனித் தனி இயைக்க.
நெறி - நெறித்த; நெறிப்பில்லாத - தலைமயிர் `கோரை மயிர்` என இகழப்பட்டும் வார் - நீண்ட ``சடையர்`` என்றது, திருக்கோயிலில் எழுந்தருளிருப்பவரையே என உணர்க.
முப்போது - மூன்று காலம்; காலை, பகல் இரவு என்பன.
காலைக்குமுன் வைகறையும், பிற் பகலாகிய அந்தியும், இரவுக்குமுன் மாலையும் வேறுபடுத்துக்கூறி, `காலம் ஆறு` எனப்படும்.
``தீண்டி`` என விதந்து ஓதினமையால் தீண்டும் உரிமை சிலர்க்கே உரித்தாதல் பெறப்பட்டு இவ்வுரிமை யுடையாரைச் சேக்கிழார் ``முதற் சைவர்`` எனவும், ``சிவ வேதியர்`` என்றும் குறித்தருளினார்.
1 இவர்களை யுள்ளிட்ட திருத்தொண்டர் களைத் தொகுத்தோதியருளிய சுந்தரமூர்த்தி நாயனாரும் இவ்வாசிரியரும் அம்மரபினரேயாவர்.
ஆகமம், சைவாகமம்.
அர்ச்சிப்பவர் - வழிபடுபவர்.
`முப்போதும் சடையாரைத் தீண்டி அர்ச்சிப்பவர்` என்க.
``நம்மையும் ஆண்டு`` என்றதனால், அவரது ஆசிரியத் தன்மை குறிக்கப்பட்டது.
முதற் சைவர்கள் தந்தை, மகன், பெயரன் என இவ்வாறு குடி வழியானே ஆசிரியராய் இருத்தலால் அவரவரும் தம் தம் மக்கட்குத் தாமே ஆசிரியராயும் விளங்குவர்.
ஏனையோர்க்கு அவர் ஆசிரியராதல் சொல்ல வேண்டா.
இங்கு ``அமரர்`` என்றது இந்திரன், அயன், மால் உலகத்து உள்ளாரையும், வித்தியசேசுர, மகேசுர உலகத்து உள்ளாரையும்.
மால் உலகத்தவர் ஈறாயினார்க்கு இறைவராதல் உருத்திர புவனங்களில் இருந்தும், ஏனையிருவர்க்கும் இறைவராதல் சுத்த வித்தியா தத்துவ ஈசுர தத்துவ புவனங்களில் இருந்துமாகும்.
ஈசுர தத்துவ புவனத்தில் தலைவ ராயினார் `மந்திர மகேசுரர்` எனப்படுவர்.
எனவே, உருத்திர புவனங்களையும் இங்கு, ``சிவபெருமாற்கு உறைவாய உலகம்`` என்றல் உபசாரமாம்.
இங்ஙனம் வேறுபட்ட உலகத்திற் சென்று இறைவராதல் அவரவர் பத்தி நிலை வேறுபாட்டினாலாம்.
``இறை`` என்றது பன்மையொருமை மயக்கம்.
இவர்கள் சிவலோகத்தில் முக்கண், எண்தோள் முதலாகச் சிவபெருமானது உருவத்தைப் பெறுதல், கிரியையில் யோகமாகிய அகவழிபாட்டில் சிவோகம் பாவனையை மிகச் செய்தலினாலேயாம்.
தில்லைவாழ் அந்தணருட் சிறந்தார் சிலரும் சிவசாரூபிகளாய் நின்றமையைத் திருஞானசம்பந்தர் அவரது புராணத்தால் உணர்க.
ஈறு இல் செல்வம் - தாம் வீடு பெற்ற பின்பும் நீங்காது இருந்தாங்கிருக்கும் செல்வம்.
இவை சுத்த தத்துவ புவனப் பொருள்களாம்.
ஆகவே, இவற்றைப் புசிக்கும் போகமும் சுத்த போகமேயாம்

பண் :

பாடல் எண் : 76

உலகு கலங்கினும் மூழி திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது
பெற்றநல வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூ
ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியு மிறைவர்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``முழு நீறு`` என்பதில் முழுமையை இலக்கண நிறைவு, உடல் நிறைவு இரண்டுமாகக் கொள்க.
இவ் இரு பொருளும் இப்பாட்டில் ``இங்கு`` என்பதனாலும், ``மேனிக்கு`` என்பதனாலும் குறிக்கப்பட்டன.
திரிதல் - மாறி வருதல்.
விலகுதல் - கைவிட்டு நீங்குதல்.
வித்தகர் - திறல் உடையார்.
காண், முன்னிலையசை.
அலகு இல் பெருங்குணம், இறைமைக் குணம்.
`குணத்து அரன்` என்க.
``ஆரூர் அமர்ந்த அரன்`` என்றது எங்கும் உள்ளவனை ஓரிடத்தில் வைத்துக் கூறியவாறு.
`அரன் அடிக்கீழ் நின்று` என ஒரு சொல் வருவிக்க.
இறைவர்கள், கட்புலன் ஆகும் இறைவர்கள்.
``நடமாடக் கோயில் நம்பர்`` 1 எனத் திருமுறையிலும், `பராவு சிவர்`` எனச் சாத்திரத்திலும் 2 சொல்லப்பட்டன.

பண் :

பாடல் எண் : 77

வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``வருக்கம் அடைத்து`` என்பதை, ``மதுரத் தொகை யில்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
வருக்கம் - இனம்; அடியார் இனம் ``அடைத்து`` என்பதை `அடைக்க` எனத் திரித்து, ``அப்பால்`` என்பதை அதன்பின்னர்க் கூட்டுக.
அடைத்தல் - நிரப்புதல்.
அப்பால் இடத்திற்கு அப்பாலும், காலத்திற்கு அப்பாலும்.
இவற்றுள் காலத்திற்கு அப்பாலாவன முன்னும், பின்னும்.
திருத்தொண்டத் தொகையில் சொல்லப்பட்ட அடியார்கள் வாழ்ந்த இடம் தமிழ் நாடே.
காலங்கள் பலவாயினும் அவைகளை ஒருங்கு இணைத்து நோக்கினால் அவை ஒரு கட்டமாய் அமையும்.
`இவ்வாறு உள்ள இடம், காலங்களில்` வாழ்ந்த, வாழும் அடியார்களை யான் அறியேனாயினும் அவர் கட்கும், அவர்தம் அடியார்க்கும் யான் அடியேன்` என நாவலூர் நம்பிகள் அருளிச் செய்தார்.
எனவே அவ்விடம், காலங்களில் முன்பு வாழ்ந்தவர்களுள்ளும், இனி வந்து வாழ்பவர்களுள்ளும் வேத சிவாகமங்களை உணர்ந்தும், உணர்ந்து ஒவுகுவோரைப் பின்பற்றியும் பிறை சூடிதன் பெய் கழற்கே ஒருக்கு மனத்தொடு அவ்வடிக்கே சார்ந்தாரும் திருத்தொண்டராதல் பெறப்பட்டது.
எனவே, ``அப்பாலும் அடிச் சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்`` என நம்பியாரூரர் அருளிச் செய்தது திருத்தொண்டத் தொகைக்குப் புறனடையாயிற்று.
பலவகைப் புறனடைகளில் இஃது ஒழிபாய புனடையாம்.
இவ்வாறு கூறுதல் ``அறியாது உடம்படல்`` என்னும் உத்திவகை.
அஃதாவது ஒரு பொருளைத் தான் சிறப்பு வகையால் அறியாவிடினும் பொதுவகையால் அறிந்த மாத்திரத்தானே அதனை உடம்பட்டுக் கொள்ளுதல் தெரிக்கும் - தெரிக்கப்படும்.
கணம் - குழாம்.
பல்கணம், இனத்தாலும் வாழ்க்கை நெறியாலும் வேறுபட்ட பல குழாத்தினர் எனினும் சிவபெருமானுக்குத் தொண்டுபட்ட வகையில் ஓர் இனத்தவராயினோர்.
`பல்கணத்தவராகிய செழுந்தவர்` என்க.

பண் :

பாடல் எண் : 78

செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டின் பொருளைப் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமப் புராணத்துட் போந்த சுந்தரர் வரலாற்றால் அறிக.
இதனுள், ``என்று`` என்னும் இடைச் சொல், `என்பது` எனப் பெயர்ப்பொருள் தந்தது.
அன்றி, `நாம் கேட்பது ஒன்று` என ஒரு சொல்வருவித்து முடித்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 79

பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனிற் பூசலையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கதுமென - விரைவாக, எல்லி - இருள்.
இரவு உறங்காமை கூறவே, பகல் உறங்காமை சொல்ல வேண்டவாயிற்று.
`அருள்பெற்ற நினைந்து` என மாற்றிக் கொள்க.
எழுவாய் தொழிற்பெயராய வழி பயனிலை வினையெச்சமாய் வருதல் உண்டு.
என்பர் - என்று புகழ்வர்.

பண் :

பாடல் எண் : 80

பூச லயில்தென்ன னார்க்கன
லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந்
தருக்குத்தென் னாட்டகத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூசல் அயில் தென்னனார் - போரை வெல்லும் வேற்படையையுடைய பாண்டியர்.
``தென்னவனார்`` எனக் குடிப் பெயர் ஈற்று `அன்`னின் முன்னும், `ஆர்` விகுதி வந்தது.
அனல் - சமணர் திருஞானசம்பந்தரது திருமடத்தில் இட்டது.
ஆக - வந்து பற்ற.
`அவர் (பாண்டியர்) பொறாமையினால்` என்க.
``கண்டீர்`` என்னும் முன்னிலை அசையை, ``நாசம் விளைத்தாள்`` என்பதன் பின்னர்க் கூட்டி முடிக்க.
தமிழாகரர் - திருஞானசம்பந்தர்.

பண் :

பாடல் எண் : 81

நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாட்டம் - கண்.
இட்டு - மலராக இட்டு - அரி - திருமால்.
வந்திப்ப - வழிபட.
வெல்படை, இங்குச் சக்கரம்.
தாள் தரிக்கப்பெற்றவன் - திருவடியைத் தலையிலே சூட்டிக் கொள்ளப் பெற்றவன்.
சைவத்தர் - சைவ சந்நியாசிகள்.
அக்கம் + படம் = அக்கப்படம்.
அக்கம் - கண்.
படம் - துணி.
அக்கப்படம் - கண் போலக் காக்கும் துணி; என்றது கிழியினை.
நன்மையாவது சிவபுண்ணியம்.
காம்பீலி நகரம்.
`நேசனை.
`இம்மையில் தாள் தரிக்கப் பெற்றவன்` என்பர் எனக் கூட்டுக.
`மறுமையில் அடையற்பாலதாகிய சிவனடி நிழலை இம்மையிலே அடைந்தவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 82

மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க
ணானென்னுஞ் செம்பியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மற்றோர் நெறி கருதாத் தெய்வக் குடியில் பிறந்த சோழன்` என்க.
`சோழன்` என்பது குடிப்பெயர் ஆதலின் ``தெய்வக் குடி`` என்றது அக்குடியையேயாதல் தெளிவு.
முன்பு - முற்பிறப்பு.
பந்தர் செய்தது, வாய் நூலால் திருவானைக்காவல் இறைவற்கு.
எய்தி- வந்து.
சைவத்து உரு எய்தி - சைவ சமயியாய்ப் பிறந்து.
தரணி, சோழ நாடு.
நீடு ஆலயங்கள் - உயர்ந்த மாடக் கோயில்கள்.
செம்பியன் - சோழன்.
இந் நாயனார் சிவபெருமான் அருளால் தமது முற்பிறப்பின் நிலையை அறிந்திருந்தார்.

பண் :

பாடல் எண் : 83

செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிற்றம்பலத்தைச் செம்பொன் அணிந்தவன் ஆதித்த சோழன்` என்பதை மேலே 1 கூறினார்.
முதல் - மூதாதை.
வம்பு - வாசனை.
மறை வளர்த்தது, தில்லை வாழ்அந்தணர்களுக்கு மாளிகைகளை அமைத்துக் கொடுத்து அவர்களால் வேதத்தை நியமமாக ஓதச் செய்தமையாலாம்.
நிம்ப நறுந்தொங்கல் - வேப்பம்பூ மாலை.
பாண்டியர்க்கு உரிய இதனை இவர்க்குக் கூறியது பாண்டிய நாட்டைப் பற்றினமை பற்றியாம்.
இவர் சேரரை வென்றமை சங்க இலக்கியத்தால் அறியப்படுகின்றது.
பாண்டியரை வென்றதை இதனால் அறிகின்றோம்.
நித்தன் - என்றும் அழியாத புகழ்உடம்பைப் பெற்றவன்.

பண் :

பாடல் எண் : 84

தனையொப் பருமெருக் கத்தம்
பூலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ
னென்பரிப் பூதலத்தே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``நினைய`` என்பதன் இறுதி நிலை தொகுக்கப் பட்டது.
சினை - கிளை.
`சினை ஒப்ப` என்பதில் ``ஒப்ப`` என்பதும் அவ்வாறு நின்றது.
ஒப்ப அலர்தல் - யாவும் ஒன்றுபோல மலர்களைப் பூத்தல்.
சண்பை - சீகாழி.
சண்பையர் கோன், திருஞானசம்பந்தர்.
`அவரது செந்தமிழோடு` என்க.

பண் :

பாடல் எண் : 85

தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை
யுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ
ரனைமுன் பயந்தமையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``விளங்கும்`` என்னும் பெய ரெச்சம், ``திருநாவலூர்`` என்னும் ஏதுபெயர் கொண்டது.
உரைப்பர் - புகழ்வர்.
ஆரூரன், நம்பியாரூரன்.
சுந்தர மூர்த்தி நாயனார்.
`பயந்தமை சொல்லி` என ஒருசொல் வருவித்து, ``உரைப்பர்`` என்பதனோடு முடிக்க.
குவலயம் - நில வட்டம்.
அதன் நலமாவது, முற்செய்தவத்தோரும் அதன் பயனைப் பெற நிற்பது.
``நாம்`` என்றது தம்மையும் உளப்படுத்துச் சிவனடியார்களை.
பலம் - பயன்.
நற்றவத்தின் பயன் அடியார் பெருமையை அறிதல்.
அதனை அறிதலானே மக்கள் மக்களாய் விளங்குவர் ஆதலின் அது பற்றியே ``நாம் விளங்குபடி`` என்றார்.
``இவையெல்லாம் நம்பியாரூரர் திருநாவலூரில் சடையனார் பால் அவதரித்துத் திருத்தொண்டத் தொகையை அருளிச்செய்தமை யாலே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 86

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை
யென்றுங் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப்
புனிதன் அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்று
முரைப்பது ஞானியையே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வெள்ளைக் கயந்தான் உகைத்த நற் காளையைப் பயந்தாள்` என்றும், `அரன் புனிதனவன் திருத்தாள் தனது உள்ளத்து நயந்தாள் என்றும் (அறிந்தோர்) உரைப்பது ஞானியையே - எனக் கூட்டி முடிக்க.
கறுவி - பிறர் செய்த தீமையை மறவாது உட் கொண்டிருத்தல்; இஃது இன அடை.
பொள்ளல் - புழை.
கயம் - யானை.
உகைத்தது - ஊர்ந்தது ``யானையை `காளை` என்றல் சுந்தரர்க்கு ஏற்புடையதே.
அவர் வெள்ளை யானையை ஊர்ந்த காளை`` என்றது நயம்.
ஊர்ந்தது கயிலை செல்லுங்கால்.
ஐயம், `அயம்` எனப் போலியாயிற்று.
ஐயம் - பிச்சை.
``அவன்``, பகுதிப் பொருள் விகுதி.
உரைத்தற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க.
உரைப்பது, தொழிற் பெயர்.
`உரைப்பது தெளிவு` எனப் பயனிலையை வருவித்துக் கொள்க.
தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்துப் பயனிலையை இவ்வாறு சொல்லெச்சமாக வைத்துப் போதல் ஒரு நடை.
இசை ஞானியை `ஞானி` எனச் சுருங்கச் கூறினார்.
`இவரது (`இசைஞானியாரது) பிறந்தகம் திருவாரூர் ஆதல் வேண்டும்` என ஆராய்ச்சியாளர் கருதுவர்.
இங்கு, ``ஆரூர்ப் புனிதனவன் திருத்தாள் தனது உள்ளத்து நயந்தாள்`` எனக் கூறி யிருப்பது அக்கருத்திற்கு அரண் செய்வதாய் உள்ளது.
இன்னும் அக் கூற்றினாலே, `ஆரூர்ப் பெருமானை நோக்கி இவர் செய்த தவத்தானே திருக்கயிலையில் இந்த ஆலால சுந்தரரைத் தமக்கு மகனாகப் பெறும் பேற்றைப் பெற்றார்` எனவும், அதனானே அந்த ஆரூர்ப் பெருமான் பெயரே இவருக்குப் பெயராக இடப்பட்டது` எனவும் கருத இடம் உண்டு.

பண் :

பாடல் எண் : 87

ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மாலை யாக்கையொடும் புக்கவரை`` என்பதை முன்னே கூட்டி, அதனோடும் முதல் அடியை ஈற்றிற் கூட்டுக.
``புக்கவர்`` என்றதும் பின்வரும் இருவரையே ``வடகயிலை`` எனப் பின்னர் வருதலின் வாளா, ``புக்கவரை`` என்றார்.
மானவ யாக்கை - உடல்.
மனித உடலை நீக்காமலே கயிலை அடைந்தவர்கள் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் தவிரப் பிறர் ஒருவரும் சொல்லப்படவில்லை.
கயிலையை அடைந்த பின்னர் அவர்களது உடம்பு வேற்றியல்பைப் பெற்றிருக்கலாம்.
இது, களையா உடலொடு சேரமான், ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள 1 என ஒன்பதாம் திருமுறையிலும் எடுத்தோதப்பட்டது.
இனிச் சண்டேசுர நாயனாரைச் சேக்கிழார்,
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனா ராயினார்
எனக் கூறியது,
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின் றுயர்ந்த சிவமயமாய்
எனச் சிவபெருமான் செய்த பரிச தீக்கையால் என்பதை விளக்கினார்.
சேரரும், ஆரூரரும் அது செய்யப்படவில்லை.
``பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை`` என்பதிற் போல, அறிதல், இங்கு நன்கு மதித்தல்.

பண் :

பாடல் எண் : 88

கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூட்டம் - தொகை.
எனவே, `திருத்தொண்டத் தொகையிற் சொல்லப்பட்ட நாயன்மார்களில் ஒன்பதின்மர் தொகை யடியார்கள்` எனவும் கூறியதாயிற்று.
`பதினொன்று` என்றது பாடல் தொகை.
எனவே, `பாட்டுப் பதினொன்றின் வகை, ஒன்பானொடு, தனிப்பெயர் எழுபத்திரண்டாப் பணித்தனன்` என்பது கொண்டு கூட்டாயிற்று.
``வினையை`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.
``பாட்டும்`` என்னும் உம்மும், மேற்போந்த ஒன்பது, அறுபத்தொன் றாய்ப் பாகுபட்டமையைத் தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 89

பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அணிதிகழ், சீர் இணைத்தல், பின் மணித்திகழ் சொல் - இவை செய்யுள் நோக்கி அடைமொழிகளாய் வந்தன.
இதனுள் பதினொரு முதல் நினைப்புக்கள் கூறப்பட்டமை காண்க.
இப் பாட்டுத் திருத்தொண்டத் தொகையை மனப்பாடம் செய்து சொல்வார்க்குப் பயன் தரும்.
``அணித்திகழ்`` என்பதில் தகர ஒற்று விரித்தல் மணித்திகழ் - மணிபோலத் திகழ்கின்ற.

பண் :

பாடல் எண் : 90

ஓடிடும் பஞ்சேந் திரிய
மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக
ழந்தாதி செப்பிடவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எத்தவம் செய்தனன்`` என்பதற்கு, `யான்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
சேடர் - பெருமையுடையவர்.
இப் பாட்டே இவ்வந்தாதியின் முதற் செய்யுள் முதற் சொல்லால் முடிந்தமை யின் ஈற்று மூன்று பாடல்களுங்கூட ஆசிரியர் அருளிச் செய்தனவே என்க.
திருத்தொண்டர் திருவந்தாதி முற்றிற்று.
சிற்பி