வாயிலார் நாயனார் புராணம்

பண் :

பாடல் எண் : 1

சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.

பொழிப்புரை :

புகழ் விளங்கும் சிறப்புடைய தொண்டை நன்னாட் டில், வளமை மிக்க வாய்மையால் சிறந்த வளமுடைய பதியாக விளங் குவது, பற்பல பெருங்குடி மக்களும் வழிவழியாகத் தொடர்ந்து வதிந்து வரும் செல்வம் நிறைந்த திருமயிலாபுரியாகும்.

குறிப்புரை :

சொல் - புகழ். மயிலாபுரி - மயில்களின் ஒலி மிக்க ஊர் ஆதலின் இப்பெயர் பெற்றது. மயில் ஆர்ப்பு ஊர் - மயிலாப்பூர் என்றாயிற்று. நாவரசர் திருவாக்கில் `மயிலாப்பு\' என்றும், ஞானசம் பந்தர் திருவாக்கில் `மயிலை\' என்றும் சுருங்க அழைக்கப்பெற்றுள்ளது. இத்திருநகர் இன்று சென்னைக் கடற்கரையில் திருவொற்றியூருக்கும் திருவான்மியூருக்கும் நடுவாக விளங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 2

நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.

பொழிப்புரை :

பெருங்கடல், தன்னிடம் உள்ள மணிமுதலான நிதிகளைத் தேடிவைப்பதற்குரிய பண்டாரம் இதுவாகும் எனக் கூறு மாறு, அழகிய ஆடும் கொடிகளையுடைய அந்நகரத்தின் பக்கங்கள் எல்லாம் மரக்கலங்களாகிய சிமிழினால் தள்ளும்,

குறிப்புரை :

சேம வைப்பு - வேண்டும் பொழுது எடுத்துக் கொள் ளுதற்குரிய பொருள் வைப்பிடம். மணி முதலாயினவும், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் பல்கி இருத்தலினாலும், நாளும் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பொருள்கள் கப்பல் வழிவந்து கொண்டு இருத்தலாலும் கடலைப் பெரு நிதி உடையதாகக் கூறினார். செப்பு - சிமிழ்; மணிமுதலிய பொருள்களைச் சிமிழில் வைப்பர். அது பற்றி மரக்கலங்களைச் செப்பு (சிமிழ்) என்றார். கடல் இந்நாட்டைத் தனக்குரிய பொருள்களின் வைப்பிடமாகக் கருதி, பல்பொருள்களை யும் மரக்கலங்களின் வழித்தள்ளும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றும்முத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமும்
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.

பொழிப்புரை :

சேம வைப்பு - வேண்டும் பொழுது எடுத்துக் கொள் ளுதற்குரிய பொருள் வைப்பிடம். மணி முதலாயினவும், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் பல்கி இருத்தலினாலும், நாளும் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பொருள்கள் கப்பல் வழிவந்து கொண்டு இருத்தலாலும் கடலைப் பெரு நிதி உடையதாகக் கூறினார். செப்பு - சிமிழ்; மணிமுதலிய பொருள்களைச் சிமிழில் வைப்பர். அது பற்றி மரக்கலங்களைச் செப்பு (சிமிழ்) என்றார். கடல் இந்நாட்டைத் தனக்குரிய பொருள்களின் வைப்பிடமாகக் கருதி, பல்பொருள்களை யும் மரக்கலங்களின் வழித்தள்ளும் என்பது கருத்து.

குறிப்புரை :

முத்தலம்பு முந்நீர் - தன்பால் உள்ள முத்துக்களைக் கொழித்துக் கரைக்கண் சேர்க்கும் கடல். கடலிடத்துக் காணும் சிப்பி களில், மழை பொழிவதால், தோன்றும் மணிகளும் உளவாதலின் முத்தலம்பு .. மேகமும் எனக் கூட்டி உரைத்தலும் ஒன்று. நாகு - பெண் கன்று (நாம்பன் - ஆண் கன்றுக்கு வருவது போல).

பண் :

பாடல் எண் : 4

தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி
பவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி
உவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால்.

பொழிப்புரை :

வெண்ணிறமுடைய மாளிகைகளையுடைய வீதிக ளின் பக்கங்களில் உள்ள இறப்புக்களில், அசையும் கொடிகளின் வரிசையுள் நுழைந்து சேர்கின்ற தூய்மையான வெண்மை நிறமுடைய மதி, பவளம் போன்ற வாயையுடைய பெண்களின் முகங்களைப் பார்த்து அஞ்சி மறைவிடத்தைச் சேர்ந்து ஒதுங்குவது போல் விளங்கும்.

பாடல் எண் : 5

வீதியெங்கும் விழாவணி காளையர்
தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்
ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.

பொழிப்புரை :

தெருக்கள் எங்கும் திருவிழாக்களின் அழகு மேம்பாடுகள் விளங்கும். பருவம் வாய்ந்த இளைஞர்களின் தூதாக இயங்குவன போல் வண்டுகள் பெண்களின் கூந்தல்கள் எங்கும் விளங்கும். சுண்ணச் சாந்து பூசி ஒப்பனை செய்யப்பட்ட மாடங்கள் எங்கும், அழகிய நிதிகளும் அணிகளும் நீங்காமல் விளங்கும்.

பாடல் எண் : 6

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.

பொழிப்புரை :

நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெரு நகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயி லார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.

குறிப்புரை :

சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க. நன்மைகள் எல்லாவற்றுள் ளும் சிறந்த நன்மை வீடுபேறாம். அதனை வழங்குவதற்குரியவனும் உடையவனும் இறைவன் ஒருவனே ஆவன். அப்பெருமானை அடைதற்குரிய சீலமும் புண்ணியமும் உடையவர் வாயிலார் என்பதாம். தபோதனர் - தவத்தையே செல்வமாக உடையவர்.

பண் :

பாடல் எண் : 7

வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதல் தோன்றியே
நாய னார்திருத் தொண்டில் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்.

பொழிப்புரை :

சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க. நன்மைகள் எல்லாவற்றுள் ளும் சிறந்த நன்மை வீடுபேறாம். அதனை வழங்குவதற்குரியவனும் உடையவனும் இறைவன் ஒருவனே ஆவன். அப்பெருமானை அடைதற்குரிய சீலமும் புண்ணியமும் உடையவர் வாயிலார் என்பதாம். தபோதனர் - தவத்தையே செல்வமாக உடையவர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 8

மறவாமை யால்அமைத்த
மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும்
ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம்
எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும்
அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.

பொழிப்புரை :

இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய்.

பாடல் எண் : 9

அகமலர்ந்த அர்ச்சனையில்
அண்ணலார் தமைநாளும்
நிகழவரும் அன்பினால்
நிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாட்செய்து
சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்.

பொழிப்புரை :

இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய்.

குறிப்புரை :

`சிவனடியைச் சேரும் முத்தி செப்புவதிங்குயாமே\' என்பதால் வீடுபேறு அடைந்தார் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 10

நீராருஞ் சடையாரை
நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால்
அருச்சனைசெய் தடியவர்பால்
பேராத நெறிபெற்ற
பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர்
முனையடுவார் திறம்உரைப்பாம்.

பொழிப்புரை :

கங்கை பொருந்திய சடையையுடைய சிவபெருமா னைத் தம் நீடிய மனக் கோயிலில் நிறுவி, மிகுந்த அன்புடன் வழிபட்டு, அடியவர்களுடன் இருந்து, நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாரான வாயிலார் நாயனாரைப் போற்றி, சிறப்புடைய திருநீடூரில் வாழ்ந்த `முனையடுவாரின்\' இயல்பை இனிக் கூறுவாம்.

சிற்பி