செருத்துணை நாயனார் புராணம்

பண் :

பாடல் எண் : 1

உள்ளும் புறம்பும் குலமரபின்
ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி
கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர்
மலிந்த செல்வக் குலப்பதியாம்
தெள்ளுந் திரைகள் மதகுதொறும்
சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு
மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.

பொழிப்புரை :

அகத்தும் புறத்தும் தத்தம் குலமரபில் வரும் ஒழுக்கத்தினின்றும் தவறாது, ஒரு நெறிய மனம் கொண்ட, பண்பு டைய பழங்குடி மக்கள் பலரும் நிறைந்த, செல்வமும் பெருமையு முடைய பதியாவது, தெளிவான அலைகள், மதகுகள் தோறும் சேல் மீன்களையும் கயல் மீன்களையும் செழுமையான மணிகளையும் சேர்க்கின்ற காவிரி பாயும் நீர் நாடுஆய சோழ நாட்டின் `மருகல்\' நாட்டில் உள்ள `தஞ்சாவூர்\' என்பதாம்.

குறிப்புரை :

மருகல் நாடு - தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப்பகுதியி லுள்ள திருமருகல் என்னும் ஊரைச் சார்ந்த பகுதியாகும். எனவே இது கீழைத் தஞ்சாவூராகும். இப்பொழுது தஞ்சாவூர் என அழைக்கப் பெறும் பெருநகர் மேலைத் தஞ்சாவூராகும்.

பண் :

பாடல் எண் : 2

சீரின் விளங்கும் அப்பதியில்
திருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை
நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ்
மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார்
பரவுந் தொண்டின் நெறிநின்றார்.

பொழிப்புரை :

சிறப்புடன் விளங்கும் அத்திருப்பதியில், உலகம் திருந்துதற்கு ஏதுவாய வேளாளர் குடியின் முதல்வராயும், கங்கையை அணிந்த சிவந்த சடையையும் திருநீற்றையும் உடைய இறைவன் கூற்றுவனை மார்பிலே உதைத்த தேன் பொருந்திய மலர் போன்ற திருவடிகளையே, நினைக்கின்ற மெய்யன்புடைய சைவராயும் வாழ்ந்து வந்தவர், இவ்வுலகில் புகழ் விளங்கும் `செருத்துணையார்\' என்பவராவர். இவர், யாவரும் போற்றும் திருத்தொண்டின் நெறியில் நின்று ஒழுகி வந்தார்.

குறிப்புரை :

செருத்துணையார்: சிவநெறித் தொண்டிற்கு மாறாய வரை ஒறுப்பதற்குத் துணை நிற்பவர் ஆதலின், இப்பெயர் பெற்றார். இதனை இவ்வரலாற்றால் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 3

ஆன அன்பர் திருவாரூர்
ஆழித் தேர்வித் தகர்கோயில்
ஞான முனிவர் இமையவர்கள்
நெருங்கு நலஞ்சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள்
செய்து காலங் களின்வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார்
தொண்டு பொலியக் குலவுநாள்.

பொழிப்புரை :

இவ்வாறான அன்பர், திருவாரூரில் ஆழித் தேரில் இவர்ந்து வந்து ஆட்கொள்ளுதலில் வல்லுநரான இறைவரின் கோயிலுள், ஞான முனிவர்களும், தேவர்களும் நெருங்கியிருக்கின்ற நன்மை பொருந்திய திருமுன்றிலினுள்ளே, பெருமையுடைய திருப் பணிகளைச் செய்து, உரிய காலங்களில் வழிபட்டு வணங்கி, வளைந்த இளம்பிறையைச் சூடிய சடையுடைய சிவபெருமானின் திருத் தொண்டு விளங்கச் செய்து வந்த நாள்களில்,

குறிப்புரை :

ஆழி - உருள் (சக்கரம்). பெருந்தேர் ஆதலின் அதன் ஆழியும் பெரிதாய் இருக்கும். `உருள் பெருந்தேர்\' (குறள், 667) என் பர் வள்ளுவனாரும், ஆழித்தேரில் வீற்றிருந்து இல்லங்கள் தோறும் எழுந்தருளிக் பொங்கு மலர்ப் பாதம் தந்தருளும் சேவகனாய்ப் பெருமான் இருந்தனர் என்பதால், `ஆழித்தேர் வித்தகர்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 4

உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்
சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து
மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை யெடுத்து மோந்ததற்கு
வந்து பொறாமை வழித்தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவியெடுத்
தெழுந்த வேகத் தாலெய்தி.

பொழிப்புரை :

உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கழற்சிங்கர் என்னும் கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, அங்குள்ள மலர் மண்டபத்தின் அருகில், கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறியில் நின்று வழுவாது தொண்டு செய்து வரும் தொண்டராதலால், விளங் கும் ஒளிபொருந்திய கூரிய வாயையுடைய வாளினை எடுத்து, விரைவாக வந்து சேர்ந்து,

பாடல் எண் : 5

கடிது முட்டி மற்றவள்தன்
கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்
டபத்து மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.

பொழிப்புரை :

உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கழற்சிங்கர் என்னும் கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, அங்குள்ள மலர் மண்டபத்தின் அருகில், கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறியில் நின்று வழுவாது தொண்டு செய்து வரும் தொண்டராதலால், விளங் கும் ஒளிபொருந்திய கூரிய வாயையுடைய வாளினை எடுத்து, விரைவாக வந்து சேர்ந்து,

குறிப்புரை :

உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கழற்சிங்கர் என்னும் கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, அங்குள்ள மலர் மண்டபத்தின் அருகில், கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறியில் நின்று வழுவாது தொண்டு செய்து வரும் தொண்டராதலால், விளங் கும் ஒளிபொருந்திய கூரிய வாயையுடைய வாளினை எடுத்து, விரைவாக வந்து சேர்ந்து,

பண் :

பாடல் எண் : 6

அடுத்த திருத்தொண் டுலகறியச்
செய்த அடலே றனையவர்தாம்
தொடுத்த தாம மலரிதழி
முடியார் அடிமைத் தொண்டுகடல்
உடுத்த உலகின் நிகழச்செய்
துய்யச் செய்ய பொன்மன்றுள்
எடுத்த பாத நிழலடைந்தே
இறவா வின்பம் எய்தினார்.

பொழிப்புரை :

உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கழற்சிங்கர் என்னும் கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, அங்குள்ள மலர் மண்டபத்தின் அருகில், கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறியில் நின்று வழுவாது தொண்டு செய்து வரும் தொண்டராதலால், விளங் கும் ஒளிபொருந்திய கூரிய வாயையுடைய வாளினை எடுத்து, விரைவாக வந்து சேர்ந்து,

குறிப்புரை :

அடியவர் திறமும், திருத்தொண்டின் திறமும் ஒருங்கு விளங்கியமையை ஆசிரியர் குறித்தருள்கின்றார்.

பண் :

பாடல் எண் : 7

செங்கண் விடையார் திருமுன்றில்
விழுந்த திருப்பள் ளித்தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு
அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணிமூக் கரிந்தசெருத்
துணையார் தூய கழல்இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார்
உரிமை அடிமை யெடுத்துரைப்பாம்.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய ஆனேற்றூர்தியையுடைய இறைவரின் திருமுற்றத்தில் விழுந்த பள்ளித் தாமத்துக்குரிய மலரை எடுத்து மோந்ததற்காக, மன்னரின் பட்டத்துக்குரிய பெருந்தேவியா ரின் பெருமையுடைய அழகிய மூக்கை அரிந்த செருத்துனையாரின் தூய திருவடிகளை வணங்கி, யாண்டும் விளங்கும் புகழையுடைய `புகழ்த்துணையாரின்\' உரிமையான அடிமைத் திறத்தின் இயல்பை இனி இயம்புவாம்.

குறிப்புரை :

துங்கம் - பெருமை; உயர்வு. உரிமையடிமை - சிவ வேதியற்கு என்றே உரிய அடிமைத் திருத்தொண்டு: திருக் கோயிலின் கருவறையில் வழிபாடாற்றும் தொண்டு. செருத்துணை நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி