இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
085 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 2 பண் : பியந்தைக்காந்தாரம்

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

குறிப்புரை :

கொம்பு - பன்றிக்கொம்பு. ஆமை - முற்றலாமை யோடு. ஏழை - உமாதேவியார். ` ஏழை பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய் ` ஒன்பது :- அசுவினி முதலாகக்கொண்டு எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம். ஒன்பதோடொன்று :- பத்து - மகம். ஒன்பதொடேழு :- பதினாறு - விசாகம். பதினெட்டு. கேட்டை. ஆறு :- திருவாதிரை, உடனாய நாள்கள் மற்றயவை. அவை :- பரணி, கார்த்திகை. பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, நாள்கள் என்றதால், ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின. இவ் வுண்மையை, ` ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே.` என்னுஞ் சோதிடநூற் பாட்டாலுணர்க. கயப்பாக்கம் சதாசிவச் செட்டி யார் அவர்கள் எழுதிய அகத்தியர் தேவாரத் திரட்டின் உரை யில் உள்ள தும், தமிழ்ப்பொழில் - துணர் 7.8. 9 இல் பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களும் எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில் குறிக்கப்பட்டதாகும், ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாக்கொண்டு, அதற்கு ஒன்பது சித்திரை. அத னொடு ஒன்று சுவாதி. அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம். அதற்குப் பதினெட்டு பூரட்டாதி. அதற்குமுன் ஆறு பூராடம் என்றும், உடனாய நாள்கள் : பரணி, கார்த்திகை, மகம், பூரம், விசாகம், கேட்டை என்றும் உரைப்பாருமுளர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
ఎముకలు, వరాహకొమ్ము, తాబేలు కవచము మొదలైనవి ధరింఛిన ఛాతిగలిగి, వృషభమునధిరోహించి, ఉమాదేవిసమేతుడై,
బంగారువర్ణపు మకరందముతో నిండియున్న ఉమ్మెత్తపుష్పములమాల, గంగ మొదలైనవానిని శిరస్సుపై ధరించి, నా మదిలో ప్రవేశించి
వెలసి అనుగ్రహించుచున్న కారణంచేత, అశ్విని మొదలైన తిథులలో, అశుభకరమైన తొమ్మిది, పది, పదహారు, పద్దెనిమిది, ఆరు సంఖ్యలలో వచ్చు
చెడు నక్షత్రములు కూడ, నాపై ప్రేమతో మిక్కిలి మంచినే కలుగజేయును. భక్తులకు కూడా మిక్కిలి మంచిని కలుగజేయును!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
ആഭരണങ്ങളായി എല്ല് , പന്നിത്തേറ്റ് ആമ തോട് ഇവയോടൊപ്പം പൊന്‍ പോല്ലുള്ള മകരന്തം ഉള്ള പൂവ് ചൂടി കൊണ്ടും ഗംഗദേവിയെ തന്റെങ ശിരസ്സില്‍ ചൂടി കൊണ്ട് ഉമാദേവിയുടെ കൂടെ കാള മുകളില്‍ കയറി വന്നു എന്റെം മനസ്സില്‍ പ്രവേശിച്ചത്‌ കൊണ്ട് അശ്വതി തുടങ്ങിയ നക്ഷത്രങ്ങളില്‍ തിന്മ ചെയ്യുന്ന ഒന്പത്,പത്തു ,പതിനാറു ,പതിനെട്ടു ,ആറ് തുടങ്ങിയ ക്രമത്തില്‍ വരുന്ന നക്ഷത്രങ്ങളും മറ്റു നക്ഷത്രങ്ങളും സ്നേഹത്തോടെ നല്ലത് മാത്രമേ ചെയ്യുകയുള്ളൂ .അത് ശിവ ഭക്തര്ക്ക് ‌ നല്ലത് മാത്രമേ ചെയ്യുകയുള്ളൂ .
പരിഭാഷ: ശ്രീമതി സന്ധ്യകൃഷ്ണകുമാര്‍, തിരുവനന്തപുരം, (2012)
ඇට කටු‚ සූකර දළය‚ ඉබි කටුව මේ සැම දෙවිඳුන් ලය මත අබරණ වී සිටිද්දී රන්වන් රොන් පිරි ඌමත්ත කුසුම්‚ ගංගා දියණිය සිරස මත දරා ගෙන උමා දේවිය සමගින් වසු වාහනයෙන් දෙව් සමිඳුන් සැරිසරන්නේ‚ අස්විද නැකත විටෙක අයහපතක් සිදු කළමුත් අස්ලිය‚ මා‚ විසා‚ දෙට‚ අට නැකැත් ලොවටත් ලෝ සතටත් සෙත් සාන්තිය සලසනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ornaments such as bones, hog`s tusk, and the sheel of a tortoise to shine in the chest.
riding on a bull, with a lady.
on account of the fact that Civaṉ entered into my mind, wearing a garland of datura flowers which have inside them gold.
the ninth star, Āyiliyam the tenth star, Makam the sixteenth star, vīcākam the 18th star, Kēttai the sixth star, Tiruvātirai the other stars, Paraṇi, Kārttikai, pūram, cittirai, cuvāti, purāṭam and pūraṭṭāti are exceedingly good with love.
[[see 1st verse]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Bones, boar\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s tusk, and tortoise shell adorn Siva\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s chest. He wears a garland of datura flowers (with golden pollen) and the Ganga river on his head. He rides on a bull with Parvathi. He entered my heart and dwells there. Therefore, all the days that are considered inauspicious are good without any blemish. They are very good to the devotees indeed.
Translation: V. Subramaniam, USA. (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ఎన్భొఢు గొంభొఢామై యివైమార్ భిలఙ్గ ఎరుతేఱి యేళై యుఢనే
భొన్భొతి మత్తమాలై భునల్చూఢి వన్తెన్ ఉళమే భుగున్త అతనాల్
ఒన్భతొ ఢొన్ఱొఢేళు భతినెఢ్ఢొ ఢాఱుం ఉఢనాయ నాళ్గ ళవైతాం
అన్భొఢు నల్లనల్ల వవైనల్ల నల్ల అఢియా రవర్గ్గు మిగవే.
ಎನ್ಭೊಢು ಗೊಂಭೊಢಾಮೈ ಯಿವೈಮಾರ್ ಭಿಲಙ್ಗ ಎರುತೇಱಿ ಯೇೞೈ ಯುಢನೇ
ಭೊನ್ಭೊತಿ ಮತ್ತಮಾಲೈ ಭುನಲ್ಚೂಢಿ ವನ್ತೆನ್ ಉಳಮೇ ಭುಗುನ್ತ ಅತನಾಲ್
ಒನ್ಭತೊ ಢೊನ್ಱೊಢೇೞು ಭತಿನೆಢ್ಢೊ ಢಾಱುಂ ಉಢನಾಯ ನಾಳ್ಗ ಳವೈತಾಂ
ಅನ್ಭೊಢು ನಲ್ಲನಲ್ಲ ವವೈನಲ್ಲ ನಲ್ಲ ಅಢಿಯಾ ರವರ್ಗ್ಗು ಮಿಗವೇ.
എന്ഭൊഢു ഗൊംഭൊഢാമൈ യിവൈമാര് ഭിലങ്ഗ എരുതേറി യേഴൈ യുഢനേ
ഭൊന്ഭൊതി മത്തമാലൈ ഭുനല്ചൂഢി വന്തെന് ഉളമേ ഭുഗുന്ത അതനാല്
ഒന്ഭതൊ ഢൊന്റൊഢേഴു ഭതിനെഢ്ഢൊ ഢാറും ഉഢനായ നാള്ഗ ളവൈതാം
അന്ഭൊഢു നല്ലനല്ല വവൈനല്ല നല്ല അഢിയാ രവര്ഗ്ഗു മിഗവേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එනං.පොටු කොමංපොටාමෛ යිවෛමාරං පිලඞංක එරුතේරි. යේළෛ. යුටනේ.
පොනං.පොති මතංතමාලෛ පුන.ලංචූටි වනංතෙනං. උළමේ පුකුනංත අතනා.ලං
ඔනං.පතො ටොනං.රො.ටේළු. පතිනෙ.ටංටො ටාරු.මං උටනා.ය නාළංක ළවෛතාමං
අනං.පොටු නලංලනලංල වවෛනලංල නලංල අටියා රවරංකංකු මිකවේ.
ऎऩ्पॊटु कॊम्पॊटामै यिवैमार् पिलङ्क ऎरुतेऱि येऴै युटऩे
पॊऩ्पॊति मत्तमालै पुऩल्चूटि वन्तॆऩ् उळमे पुकुन्त अतऩाल्
ऒऩ्पतॊ टॊऩ्ऱॊटेऴु पतिऩॆट्टॊ टाऱुम् उटऩाय नाळ्क ळवैताम्
अऩ्पॊटु नल्लनल्ल ववैनल्ल नल्ल अटिया रवर्क्कु मिकवे.
نايدايأ زهيياي ريتهايري كانقلابي رمافييي ميدابومو دبوني
eanaduy iahzeay ir'eahture akgnalip raamiaviy iamaadopmok udopne
لناتهاا تهانكب مايلاأ نتهينفا ديسلنب ليماتهاتهما تهيبونبو
laanahta ahtn:ukup eamal'u nehtn:av idooslanup ialaamahthtam ihtopnop
متهافيلا كالنا يناداأ مردا دودنيتهيب زهدايروندو تهوبنو
maahtiaval' akl'aan: ayaanadu mur'aad oddenihtap uhzeador'nod ohtapno
.فايكامي ككرفارا ياديا لالنا لالنافيفا لالنالالنا دبونا
.eavakim ukkravar aayida allan: allan:iavav allan:allan: udopna
เอะณโปะดุ โกะมโปะดามาย ยิวายมาร ปิละงกะ เอะรุเถริ เยฬาย ยุดะเณ
โปะณโปะถิ มะถถะมาลาย ปุณะลจูดิ วะนเถะณ อุละเม ปุกุนถะ อถะณาล
โอะณปะโถะ โดะณโระเดฬุ ปะถิเณะดโดะ ดารุม อุดะณายะ นาลกะ ละวายถาม
อณโปะดุ นะลละนะลละ วะวายนะลละ นะลละ อดิยา ระวะรกกุ มิกะเว.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ေပာ့တု ေကာ့မ္ေပာ့တာမဲ ယိဝဲမာရ္ ပိလင္က ေအ့ရုေထရိ ေယလဲ ယုတေန
ေပာ့န္ေပာ့ထိ မထ္ထမာလဲ ပုနလ္စူတိ ဝန္ေထ့န္ အုလေမ ပုကုန္ထ အထနာလ္
ေအာ့န္ပေထာ့ ေတာ့န္ေရာ့ေတလု ပထိေန့တ္ေတာ့ တာရုမ္ အုတနာယ နာလ္က လဝဲထာမ္
အန္ေပာ့တု နလ္လနလ္လ ဝဝဲနလ္လ နလ္လ အတိယာ ရဝရ္က္ကု မိကေဝ.
エニ・ポトゥ コミ・ポターマイ ヤヴイマーリ・ ピラニ・カ エルテーリ ヤエリイ ユタネー
ポニ・ポティ マタ・タマーリイ プナリ・チューティ ヴァニ・テニ・ ウラメー プクニ・タ アタナーリ・
オニ・パト トニ・ロテール パティネタ・ト タールミ・ ウタナーヤ ナーリ・カ ラヴイターミ・
アニ・ポトゥ ナリ・ラナリ・ラ ヴァヴイナリ・ラ ナリ・ラ アティヤー ラヴァリ・ク・ク ミカヴェー.
энпотю компотаамaы йывaымаар пылaнгка эрютэaры еaлзaы ётaнэa
понпоты мaттaмаалaы пюнaлсуты вaнтэн юлaмэa пюкюнтa атaнаал
онпaто тонротэaлзю пaтынэтто таарюм ютaнаая наалка лaвaытаам
анпотю нaллaнaллa вaвaынaллa нaллa атыяa рaвaрккю мыкавэa.
enpodu kompodahmä jiwämah'r pilangka e'ruthehri jehshä judaneh
ponpothi maththamahlä punalzuhdi wa:nthen u'lameh puku:ntha athanahl
onpatho donrodehshu pathineddo dahrum udanahja :nah'lka 'lawäthahm
anpodu :nalla:nalla wawä:nalla :nalla adijah 'rawa'rkku mikaweh.
eṉpoṭu kompoṭāmai yivaimār pilaṅka erutēṟi yēḻai yuṭaṉē
poṉpoti mattamālai puṉalcūṭi vanteṉ uḷamē pukunta ataṉāl
oṉpato ṭoṉṟoṭēḻu patiṉeṭṭo ṭāṟum uṭaṉāya nāḷka ḷavaitām
aṉpoṭu nallanalla vavainalla nalla aṭiyā ravarkku mikavē.
enpodu kompodaamai yivaimaar pilangka eruthae'ri yaezhai yudanae
ponpothi maththamaalai punalsoodi va:nthen u'lamae puku:ntha athanaal
onpatho don'rodaezhu pathineddo daa'rum udanaaya :naa'lka 'lavaithaam
anpodu :nalla:nalla vavai:nalla :nalla adiyaa ravarkku mikavae.
சிற்பி