விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன். கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு, கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்.
குறிப்புரை:
மாதர்ப்பிறை - அழகுடைய பிறை. பிறைக்கு அழகு முழுமுதற் பொருளின் தலைமேல் வாழ்தலும், வளராத் தேயாச் சிறப்பும், பாம்பினை அஞ்சாமையுமாம். ` அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே ` ( புறநானூறு கடவுள் வாழ்த்து ). என்னும் அதன் சிறப்புணர்க. பிறைக்கண்ணி - பிறையாகிய கண்ணி. தலை மாலை. கண்ணி - தலையில் அணிவது ; ஒரு பக்கம் காம்பு மட்டும் சேர்க்கும் பூந்தொடை. போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய பூவும் புனலும். புகுவார் - அடியவர். யாதும் என்பது ஆதும் என்றாதலுண்டு ` சென்று ஆதுவேண்டிற்று ஒன்று ஈவான் ` ( தி.6 ப.20 பா.9) ` நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதியான் ` ( தி.2 ப.84 பா.8) என அரசும் கன்றும் அருளிய வற்றாலும் அறிக. நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் ` ஆதும் இல்லை ` ` ஆதும் ஓர் பற்றிலாத பாவனை ` எனல் காண்க. ` யாதே செய்தும் யாம் அலோம் நீஎன்னில் ` ஆதே ` ` ஏயும் அளவில் பெருமையான் ` ( திருக்குறுந்தொகை ) என்பதில் அதுவே என்னும் பொருட்டு ஆதலின் அதுவேறு. சுவடுபடாமை :- ` பங்கயம் புரைதாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் கைகளும் மணிபந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தருகவும் ` ` மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும் ` ` உடம்பு அடங்கவும் ஊன் கெடவும் `, சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும் ` ( தி.12. அப்பர். 357-360) உறுப்பழியவும் நின்ற சுவடு தோன்றாமல், தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வாராய்ச் செல்லும் தூய்மை தோன்றல்.
பிடி - பெண் யானை. களிறு - ஆண் யானை ; களிப்புடையது என்னும் காரணப்பொருட்டு. பிடியும் களிறும் சத்தியும் சிவமும் ஆகக் கண்டதால் திருப்பாதம் சிவாநந்தம் ஆகிய முன் கண்டறியாதன வற்றைக் கண்டேன் என்று தம் பேரின்ப நுகர்ச்சியைப் புலப்படுத்தினார். பின் உள்ள எல்லாவற்றினும் பிறையும் பெருமாட்டியும் முதலடியிற் கூறப்பெற்றிருத்தல் அறிக. காட்சியருளிய பிறை சூடி ( சந்திரசேகரர் ) கோயில், அகச்சுற்றின்கண் தென்மேற்கு மூலையில் உளது.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
మదిదోచు జాబిల్లి తాలిచి హిమవంతుని గారాలపట్టితో కూడు వాని పాడి
పొద్దుతో పూచుపూవుల చల్లని నీటితో అర్చించ తలనిడి ఏగువారి వెంట నే
పోదు కైలాశయాత్ర ఏ ఆనవాలులు తోపనీక వారిని వెనువెంట
కాదనక పోతుకరి ఆడు ఏనుగ తోడ రాన్ కంటి
కంటిని ఆ మాతాపితరుల తిరుపాదము కానరానిది నే కంటి
అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
(अनेक तीर्थस्थलों की यात्रा के उपरान्त अप्पर के मन में कैलास पर्वत के अधिपति षिव के दर्षन की इच्छा हुई। वे कैलास पर्वत जाने के लिए तैयार हुए। थक जाने पर रंेगते-रेंगते चलने लगे। भक्त की इस शारीरिक यातना को कम करने के लिए भगवान् ने साधु के रूप में आकर कहा-‘‘हम तुम्हें तिरुवैयारु में कैलास पर्वत में स्थित प्रभु का दर्षन देंगे।’’ तिरुवैयारु पहुँचकर ज्यों ही सरोवर में डुबकी लगाई तो उन्हें कैलास पर्वत स्थित प्रभु के दर्षन हुए। विष्व रूप में षिव-पार्वती के दर्षन कर आनन्द-विभोर होकर भावातिरेक में प्रस्तुत पद गाया। भावुकता से ओत-प्रोत इस पद को आज भी लोग उसी निष्ठा के साथ गाते हैं।)
हमारे प्रियतम प्रभु अर्धचन्द्रधारी हैं।
पर्वत-पुत्री के साथ आपकी स्तुति करते हुए,
पुष्प और जल ले जाने वाले
भक्तगणों का अनुगमन करते हुए,
मैं देवालय में प्रवेष करूँगा।
पद-चिह्न लगे बिना मैं तिरुवैयारु पहुँचा,
स्नेह-सिंचित हथिनी के साथ हाथी को आते देखा।
मैंने उनके श्रीचरणों के दर्षन किये।
अनेकानेक अनदेखे दृष्यों के भी दर्षन किये।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
praising Civaṉ who has a chaplet of beautiful crescent, together with the daughter of the mountain.
I, who was entering the temple following people who entered into it carrying flowers and water.
when I reached aiyāṟu without the slightest indication of the body having become worn out.
I saw male elephants coming along with their loving young female elephants.
I saw his holy feet.
I saw what I did not see previously .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
Singing Him wreathed in crescent cute, with Hill-mans daughter,
Entering the precincts, followin aflock fetching loads of flower and water,
With no trace of wear and tear none, reaching Aiyaaru,
Found I elephants with their dear young females fast in love;
Found I His holy feet little found or known.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013