பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
01 தில்லைவாழந்தணர் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

தொகை
`தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்`
(தி. 7 ப.39 பா.1) தொகை, பொ-ரை: தில்லையில் (நாளும் கூத்தப் பெருமானை வழிபட்டு) வாழ்ந்துவரும் அந்தணர்களின் அடியவர்க்கும் அடியேன். இவ்வருந்தொடர் திருவாரூர் தியாகேசப் பெருமானின் திருவாக் காகும்.
வகை
செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊரெரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க்கு அந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 1
வகை, பொ-ரை: புகழ்ந்து பேசத் தகும் தில்லைப்பதியில் வாழ்ந்து வருபவர்களாயும், மூன்றுலகங்களிலும் தேவருக்கு ஒப்பாய் விளங்குபவர்களாயும், முப்புரம் எரித்தவரும் ஆனந்தக் கூத்தியற்று பவரும் பிறையை அணிந்தவருமாய கூத்தப் பெருமானுக்கு
உரிமையாய்ப் பூசை புரிபவர்களாயும் விளங்கும் அந்தணர்களைப் பற்றிக் கூறுவாம்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.