பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பதிக வரலாறு :

தொகை
`ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்`
(தி.7 ப.39 பா.4)
தொகை, பொ-ரை: ஒப்பற்ற நம்பி எனத் தகும் அப்பூதியடிகளின் அடியார்க்கும் அடியேன்.
வகை தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்க ளூரினில் வேதியன் அப்பூதியே
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 29
வகை, பொ-ரை: அன்னங்கள் மிகுந்துள்ள வயல் சூழ்ந்த திங்களூரில் தோன்றிய அந்தணராகிய அப்பூதியடிகள், நாவரசரின் திருவடிகளே அழியாத செல்வம் என எண்ணி, அவர் பெயரையே தாம் வைத்த தண்ணீர்ப் பந்தர் முதலான இடங்கட்கும், பிள்ளைகட்கும் வைத்து, அதனால் நாவரசர் பெருமான் அருளிய தமிழ்ப் பதிகத்தில் தம் பெயரை வைக்கப் பெற்றவர். அவர் எங்கள் தலைவராவார்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.