நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே ! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே ! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து ( விரும்பிச் ) சூடியவனே ! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே ! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவை யுடைய இளம் பிறையைச் சூடியவனே ! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.
எல்லாத் தலங்களுள்ளும் ஓர் ஆண்டிற்குள் ஆறு நாள் அபிடேக விசேடமுடைய தலம் சிதம்பரமேயாதலின் ` ஆடினாய் ` என்பது திருநடனத்தையும் கருதிய தொடக்கம் உடையதாகி நின்றது. தில்லைவாழ் அந்தணருள் நடராசப் பிரானாரும் ஒருவராதலின், பிரியாமை பிரியாதுள்ளது. சிற்றம்பலம் - ஞானாகாசம், பூதாகாசத்தைப் பிரித்தல் ஒல்லும், கடத்தற்குரிய தத்துவங்களுள் ஒன்று அது, ஞானாகாசத்தைப் பிரிதல் என்றும் எவ்வுயிர்க்கும் இல்லை. நாடுதல் - சங்கற்பம். நயத்தல் - விரும்புதல். மறை - சாமவேதம், பிறவும் கொள்ளப்படும். கீதம் - இசைப்பாடல். திங்கள் சூடிய கருணைத் திறம், தொல்வினைச் சுருக்கம் வேண்டுங்கால் குறித்தற்பாலது, பல் சடை எனப்பன்மையும், புன் சடை எனக் குறுமையும், நீள் சடை என நெடுமையும் பொன் சடை என நிறமும், விரி சடை எனப் பரப்பும், நிமிர் சடை என உயர்ச்சியும் பிறவும் திருமுறையுட் காணப்படும். பொன் சடையைப் புன் சடை எனலும் உண்டு.
` அந்தணர்தம் சிந்தையானை ` ( தி.6 ப.1 பா.1) ` அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை, அவர் தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவி ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற் பின்னும் போற்றல் செய்வார் ` ( பெரியபுராணம் திருநாவு. பா - 175) என்பவற்றால் சிந்தையும் சிவபிரானும் பிரியா வினைக்கு முதலாதல் விளங்கும்.
` நின்று சபையில் ஆனந்த நிர்த்தமிடுவோர்க்கு ஆளாயின் வென்ற பொறியார்க்கு ஆனந்த வெள்ளம் பெருக வுய்ப்பர் ` ( பேரூர்ப் புராணம். நாவலன் வழிபடு படலம். பா - 23) என்னும் உண்மையைத் தெளிவிக்க ஆடினாய் என்றெடுத்தார் . ஆடினாய் நறுநெய்யொடு பால் ` பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை ` என்னுந் திருவாசகத்தில் ( பா.35) பாதமலர் என்னும் தொடர் இயைவது போல மீளவும் நெய், பால், தயிர் ஆடினாய் என்று இயைவது உணர்க.
சிவ வழிபாட்டிற்கு, கூறப்படும் உபசாரங்கள் பலவற்றினும், அபிடேகமே சிறந்தது ஆதலின், அதனை எடுத்துக் கூறினார். அதனை, ` சிவதருமம் பல. அவற்றுட் சிறந்தது பூசனை. அதனுள், அவமில் பல உபசாரத்தைந்து சிறந்தன.` ` ஆங்கவை தாம் அபிடேகம் அரிய விரை, விளக்கு, மனுத்தாங்கும் அருச்சனை, நிவேதனம் ஆகும் ` என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால் அறிக. ( பேரூர்ப் புராணம் மருதவரைப் படலம். 29) ` தேன், நெய், பால், தயிர் ஆட்டுகந்தானே ` முதலியவற்றையும் நோக்குக. அந்தணர் - தில்லைவாழந்தணர். எவ்வுயிர்க்கும் கருணைக் கடலென்பார், வேதியர் மறையோர் என்னாது அந்தணர் என்று அருளினார். மெய்ஞ்ஞானிகள், அவனருளே கண்ணாகக் கண்டு திளைக்க, ஆனந்தக் கூத்தாடும் பரஞானவெளி ஆதலின், ஊன் அடைந்த உடம்பின் பிறவி, தான் அடைந்த உறுதியைச் சார, ஆதியும் நடுவும் முடிவும் இல்லாத அற்புதத் தனிக் கூத்தாடும் இடம் சிதம்பரம், ஞானாகாசம் எனப்பெற்றது. ` சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி ` என்றருளிய சேக்கிழார் திருவாக்கினாலும் ( பெரியபுராணம் தில்லைவாழ்அந்தணர் பா.2) உணர்க.
நறும் - நறுமணம் உள்ள, கொன்றை - மந்திரங்களிற் சிறந்ததாகிய பிரணவ மந்திரத்துக்குரிய தெய்வம், தாமே எனத் தெளியச்செய்ய, கொன்றை மாலை யணிந்தனர். அம்மலர், உருவிலும் பிரணவ வடிவாயிருத்தலின் பிரணவ புட்பம் எனப்படும். ` துன்றுவார் பொழில் தோணிபுரவர்தம், கொன்றைசூடும் குறிப்பது வாகுமே ` ( தி.5 ப.45 பா.7) என்னும் திருக்குறுந்தொகையாலும் ` ஓரெழுத்திற்குரிய பொருள் உயர்நெடு மாலயன் என்பார் நீரெழுத்து நிகர் மொழி நின்னில விதழிமுன் என்னாம் ` என்னும் வாட்போக்கிக் கலம்பகப் பாட்டாலும் அறிக. பனிகால் கதிர் - குளிர்ச்சியை வீசும் ஒளியையுடைய, வெண் திங்கள் சூடினாய் என்றது, ` உற்றார் இலாதார்க்குறுதுணையாவன ` சிவபிரான் திருவடியே என்பதைக் குறிக்கும். தொல்வினை என்றது சஞ்சித கருமத்தை. பல்சடை - பூணூல் அபரஞானத்தையும், சடை பரஞானத்தையும் குறிக்கும் என்ப. அதனாலும், சிவசின்னங்களில் சடையே சிறந்ததாயிருத்தல் புகழ்ச்சோழ நாயனார் வரலாற்றாலும், விடந்தீர்க்க வேண்டித் திருமருகற் பெருமானை இரத்தற்கண் ` சடை யாய் எனுமால் ` என்றெடுத் தருளினமையானும் அறியப்படும்.
- తెలుగు /
தெலுங்கு
- ಕನ್ನಡ /
கன்னடம்
- മലയാളം /
மலையாளம்
- චිඞංකළමං /
சிங்களம்
- देवनागरी /
தேவநாகரி
- عربي /
அரபி
- ภาษาไทย /
சீயம்
- မ္ရန္မာစာ /
பர்மியம்
- かたかな /
யப்பான்
- Русский /
உருசியன்
- German/
யேர்மன்
- Diacritic Roman /
உரோமன்
- Afrikaans/Creole/Swahili/Malay/
BashaIndonesia/Pidgin/English
ఆఢి నాయ్నఱు నెయ్యొఢు భాల్తయిర్ అన్త ణర్భిరి యాతచిఱ్ ఱంభలం
నాఢి నాయ్ఇఢ మానఱుఙ్ గొన్ఱై నయన్తవనే
భాఢి నాయ్మఱై యోఢుభల్ గీతముం భల్చ ఢైభ్భని గాల్గతిర్ వెణ్ఢిఙ్గళ్
చూఢి నాయ్అరు ళాయ్చురుఙ్గఎమ తొల్వినైయే.
ಆಢಿ ನಾಯ್ನಱು ನೆಯ್ಯೊಢು ಭಾಲ್ತಯಿರ್ ಅನ್ತ ಣರ್ಭಿರಿ ಯಾತಚಿಱ್ ಱಂಭಲಂ
ನಾಢಿ ನಾಯ್ಇಢ ಮಾನಱುಙ್ ಗೊನ್ಱೈ ನಯನ್ತವನೇ
ಭಾಢಿ ನಾಯ್ಮಱೈ ಯೋಢುಭಲ್ ಗೀತಮುಂ ಭಲ್ಚ ಢೈಭ್ಭನಿ ಗಾಲ್ಗತಿರ್ ವೆಣ್ಢಿಙ್ಗಳ್
ಚೂಢಿ ನಾಯ್ಅರು ಳಾಯ್ಚುರುಙ್ಗಎಮ ತೊಲ್ವಿನೈಯೇ.
ആഢി നായ്നറു നെയ്യൊഢു ഭാല്തയിര് അന്ത ണര്ഭിരി യാതചിറ് റംഭലം
നാഢി നായ്ഇഢ മാനറുങ് ഗൊന്റൈ നയന്തവനേ
ഭാഢി നായ്മറൈ യോഢുഭല് ഗീതമും ഭല്ച ഢൈഭ്ഭനി ഗാല്ഗതിര് വെണ്ഢിങ്ഗള്
ചൂഢി നായ്അരു ളായ്ചുരുങ്ഗഎമ തൊല്വിനൈയേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்
කටි නා.යංනරු. නෙයංයොටු පාලංතයිරං අනංත ණරංපිරි යාතචිරං. ර.මංපලමං
නාටි නා.යංඉට මානරු.ඞං කොනං.රෛ. නයනංතවනේ.
පාටි නා.යංමරෛ. යෝටුපලං කීතමුමං පලංච ටෛපංපනි. කාලංකතිරං වෙණංටිඞංකළං
චූටි නා.යංඅරු ළායංචුරුඞංකඑම තොලංවිනෛ.යේ.
आटि ऩाय्नऱु नॆय्यॊटु पाल्तयिर् अन्त णर्पिरि यातचिऱ् ऱम्पलम्
नाटि ऩाय्इट मानऱुङ् कॊऩ्ऱै नयन्तवऩे
पाटि ऩाय्मऱै योटुपल् कीतमुम् पल्च टैप्पऩि काल्कतिर् वॆण्टिङ्कळ्
चूटि ऩाय्अरु ळाय्चुरुङ्कऎम तॊल्विऩैये.
ملابمرا رسيتهايا ريبيرن' تهانا رييتهالبا ديويني رناينا ديا
malapmar' r'isahtaay iripran' ahtn:a riyahtlaap udoyyen: ur'an:yaan idaa
نايفاتهانينا رينو نقرناما دايينا دينا
eanavahtn:ayan: iar'nok gnur'an:aam adiyaan idaan:
لكانقدين'في رتهيكالكا نيببدي سلب ممتهاكي لبديأا ريماينا ديبا
l'akgnidn'ev rihtaklaak inappiad aslap mumahteek lapudaoy iar'amyaan idaap
.ياينيفيلتهو ماكاينقرسيلا رينا ديس
.eayianivloht ameakgnurusyaal' urayaan idoos
อาดิ ณายนะรุ เนะยโยะดุ ปาลถะยิร อนถะ ณะรปิริ ยาถะจิร ระมปะละม
นาดิ ณายอิดะ มานะรุง โกะณราย นะยะนถะวะเณ
ปาดิ ณายมะราย โยดุปะล กีถะมุม ปะลจะ ดายปปะณิ กาลกะถิร เวะณดิงกะล
จูดิ ณายอรุ ลายจุรุงกะเอะมะ โถะลวิณายเย.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்
အာတိ နာယ္နရု ေန့ယ္ေယာ့တု ပာလ္ထယိရ္ အန္ထ နရ္ပိရိ ယာထစိရ္ ရမ္ပလမ္
နာတိ နာယ္အိတ မာနရုင္ ေကာ့န္ရဲ နယန္ထဝေန
ပာတိ နာယ္မရဲ ေယာတုပလ္ ကီထမုမ္ ပလ္စ တဲပ္ပနိ ကာလ္ကထိရ္ ေဝ့န္တိင္ကလ္
စူတိ နာယ္အရု လာယ္စုရုင္ကေအ့မ ေထာ့လ္ဝိနဲေယ.
アーティ ナーヤ・ナル ネヤ・ヨトゥ パーリ・タヤリ・ アニ・タ ナリ・ピリ ヤータチリ・ ラミ・パラミ・
ナーティ ナーヤ・イタ マーナルニ・ コニ・リイ ナヤニ・タヴァネー
パーティ ナーヤ・マリイ ョートゥパリ・ キータムミ・ パリ・サ タイピ・パニ カーリ・カティリ・ ヴェニ・ティニ・カリ・
チューティ ナーヤ・アル ラアヤ・チュルニ・カエマ トリ・ヴィニイヤエ.
ааты наайнaрю нэййотю паалтaйыр антa нaрпыры яaтaсыт рaмпaлaм
нааты наайытa маанaрюнг конрaы нaянтaвaнэa
пааты нааймaрaы йоотюпaл китaмюм пaлсa тaыппaны кaлкатыр вэнтынгкал
суты наайарю лаайсюрюнгкаэмa толвынaыеa.
ahdi nahj:naru :nejjodu pahlthaji'r a:ntha 'na'rpi'ri jahthazir rampalam
:nahdi nahjida mah:narung konrä :naja:nthawaneh
pahdi nahjmarä johdupal kihthamum palza däppani kahlkathi'r we'ndingka'l
zuhdi nahja'ru 'lahjzu'rungkaema tholwinäjeh.
āṭi ṉāynaṟu neyyoṭu pāltayir anta ṇarpiri yātaciṟ ṟampalam
nāṭi ṉāyiṭa mānaṟuṅ koṉṟai nayantavaṉē
pāṭi ṉāymaṟai yōṭupal kītamum palca ṭaippaṉi kālkatir veṇṭiṅkaḷ
cūṭi ṉāyaru ḷāycuruṅkaema tolviṉaiyē.
aadi naay:na'ru :neyyodu paalthayir a:ntha 'narpiri yaathasi'r 'rampalam
:naadi naayida maa:na'rung kon'rai :naya:nthavanae
paadi naayma'rai yoadupal keethamum palsa daippani kaalkathir ve'ndingka'l
soodi naayaru 'laaysurungkaema tholvinaiyae.