கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை அர்த்தநாரீசுவரர்


மரம்: வன்னி
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: வெந்தவெண்ணீறணி -1 -107 திருஞானசம்பந்தர்

முகவரி: திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம், 637211
தொபே. 04288 255925

கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.

இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன.



கல்வெட்டு:

பரகேசரி வர்மனான முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற் பரகேசரிவர்மன், சுந்தரபாண்டிய தேவன், சொக்கப்பநாயக்கன், சொக்கலிங்கநாயக்கன், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் முதலிய அரசர்களின் கல்வெட்டுக்கள் இங்குக் காணப்படுகின்றன. அவற்றால் அறியப்படுவன பெரும்பாலானவை அந்தணர்களுக்கு அன்னமும், யாத்தீரிகர்களுக்கு உணவும், விளக்கிற்கு நெய்யும் அளிக்கப்பெற்ற நிபந்தங்களேயாகும். 192 முதல் 194 வரையிலுள்ள கல்வெட்டுக்கள் சுப்பிரமணியப் பிள்ளையார் கோயிலைப்பற்றி அறிவிக்கின்றன. கி.பி. 1660 முதல் 1682 வரை அரசாண்ட விஸ்வநாத சொக்கலிங்கர் காசிவிசுவேசர் கோயிலையும் கோபுரத்தையுங்கட்டினார்.

 
 
சிற்பி சிற்பி