கொள்ளம்பூதூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை வில்வவனேசுரர்


மரம்: வில்வம்
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: கொட்டமேகமழுங்கொ -3 -6 திருஞானசம்பந்தர்

முகவரி: திருக்களம்பூர்
திருவாரூர் மாவட்டம், 622414

இது திருக்கொள்ளம்பூதூர் என்று வழங்கப்பெறுகின்றது. திருஞானசம்பந்தப்பெருந்தகையார் தமது அடியார் கூட்டத்தினரோடு, முள்ளிவாய்க்கரையை அடைந்த பொழுது, ஆறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஓடக்காரர்கள் ஓடத்தை விடாமல் கட்டிவிட்டனர். சம்பந்தர் எதிரில் தோன்றும் கொள்ளம்பூதூரை வழிபட ஆர்வங் கொண்டிருந்தமையால் ஓடத்தை அவிழ்த்து அடியார்களை ஏறச்செய்து, தாமும் ஏறி, `கொட்டமேகமழும்` எனத் தொடங்கும் பதிகத்தைப்பாட ஓடம் அக்கரையைச் சென்று அடைய ஞானசம்பந்தரும் அடியார்களும் வழிபட்ட தலம். ஒவ்வொரு ஆண்டிலும் ஐப்பசி மாதத்தில் இவ்விழா நடத்தப்பெற்று வருகின்றது.

இது தஞ்சாவூர் - திருவாரூர் இருப்புப்பாதையில் இருக்கும் நீடாமங்கலம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 9. கி.மீ. தூரத்தில் வெட்டாற்றின் வடகரையில் இருக்கிறது. கும்பகோணம் - குடவாசல் பேருந்தில் இத்தலத்தை அடையலாம். இறைவரின் திருப்பெயர் - வில்வவனேசுரர். இறைவியின் திருப்பெயர் -சௌந்தராம்பிகை. இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

இவ்வூர்க் கோயிலில் மூன்றாங்குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களில் ஏற்பட்ட கல்வெட்டுக்கள் (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1899 No. 1-2. 1917 No. 250 -255. See also the South Indian Inscriptions, Volume VI No. 436 - 437, 487) இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருக்கொள்ளம் பூதூருடையார், இறைவியார் அழகிய நாச்சியார் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

இக்கோயிலில் குளங்கண்ட மகாதேவர், இவரது நாச்சியார் நீரளித்த மென்முலையம்மை; ஆட்கொண்ட நாயகதேவர் இவரது நாச்சியார்; அவிமுத்தீஸ்வரமுடையார், இவரது நாச்சியார்; இவர்களுக்கு வழிபாட்டிற்குப் பல ஊர்களில் நிலங்கள் அளிக்கப் பட்டுள்ளன.

மேற்குறித்த இத்திருமேனிகளில் நீரளித்த மென்முலை நாச்சியாரை இக்கோயிலில் எழுந்தருளுவித்தவன் பெருமூர் உடையான் சங்கரனாகிய அமரக்கோன் ஆவன்.

இக்கோயிலில் எழுந்தருளுவிக்கப்பெற்ற திருநீலகண்டத்துப் பாணனார்க்கு வழிபாட்டிற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தியை மூன்றாங் குலோத்துங்க சோழன் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இவ்வூர் அருமொழித்தேவ வளநாட்டுச் செல்லூர்க் கூற்றத்திற்கு உட்பட்டிருந்தது.

அம்மன் பெயர் வரும் கல்வெட்டுப் பகுதி: திருபுவன வீரதேவர்க்கு யாண்டு (30) சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காட்டூர்க் கோட்டத்து, காக்கனூர் நாட்டு பொத்தூர் மாம்பாக்கிழான் அரையன் தில்லைநாயகனான சிங்களராயன், அருமொழிதேவ வளநாட்டுச் செற்றூர்க் கூற்றத்து உடையார் திருக்கொள்ளம்பூதூர் உடையார்க்கு நான் வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றும், இக்கோயில் திருக்காமக்கோட்டமுடைய அழகிய நாச்சியார்க்கு வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றும் ஆக விளக்கு இரண்டும்``.... என்பதாகும்(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1899 No. 1-2. 1917 No. 250 -255. See also the South Indian Inscriptions, Volume VI No. 436 - 437, 487).கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி