அவளிவணல்லூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரியவல்லி உடனுறை தம்பரிசுடையார்

மரம்: பாதிரி
குளம்: சந்திரபுட்கரணி

பதிகங்கள்: கொம்பிரிய -3 -82 திருஞானசம்பந்தர்
தோற்றினான் -4 -59 திருநாவுக்கரசர்

முகவரி: அவளிவணல்லூர்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 612802
தொபே. 04374 316911

இது சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வட கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் உளது. கோயில்வெண்ணி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியும் இவ்வூர்க்குச் செல்லலாம். இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நூறாவது ஆகும். கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சையிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப்பேருந்துகளும் இவ்வூரின் வழியாகவே செல்கின்றன.

அவள் + இவள் + நல்லூர் = அவளிவணல்லூர்.

பழங்காலத்திலே இப்பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பூசித்த ஆதிசைவ அந்தணர் ஒருவர்க்கு இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் மூத்த பெண்ணை மணந்தவர் காசியாத்திரைக்குச் சென்றிருந்தனர்.

சென்றபின் அம்மூத்தபெண் அம்மைவார்க்கப்பெற்று உருவின் நிறம் மாறிக் கண் இழந்திருந்தனர். தந்தையார் இளைய பெண்ணை வேறு ஒருவர்க்கு மணஞ்செய்து கொடுத்திருந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் காசியாத்திரை சென்றவர் திரும்பிவந்தார். அக்காலம் இளைய பெண்ணும் கணவன் வீட்டிலிருந்து வந்திருந்தனர். மூத்த பெண்ணின் நிற வேறுபாட்டைக் கண்டு `இளையவளே தம் மனைவி. மூத்தவளைத் தம் மனைவி என்று சொல்லி ஆதி சைவ அந்தணர் ஏமாற்றுகின்றனர்`. எனக் கூறி மூத்த பெண்ணை மணந்தவர் வழக்கிட்டனர்.

இறைவன் இடபவாகனத்தில் எழுந்தருளி மூத்த மகளே இவரது மனைவி என்னும் பொருளில் அவள் இவள் எனச் சுட்டிக்காட்டிய காரணத்தால், நல்லூர் என்னும் பெயரோடு, அவள் இவள் என்னும் தொடரையும் சேர்த்து அவளிவணல்லூர் என்னும் பெயர் எய்திற்று என்பர். கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவனது பின்பக்கத்தில் இவ் வரலாற்றை உணர்த்தும் பிரதிமைகள் உள்ளன. இவ் வரலாற்றுக்கு ஆதாரமாக அவற்றைக் காட்டுவர்.

1. தம்பரிசுடையார். இப்பெயர் இவ்வூர்க்குரிய திருஞானசம்பந்தர் பதிகத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. சேக்கிழாரும் இப்பெயரைத் ``தம் பரிசுடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி`` எனக் குறித்துள்ளனர்.

2. சாட்சிநாதர். (திருப்புறம்பயத்துப் பெருமானக்குச் சாட்சிநாதர் என்ற பெயர் உண்டு.)இறைவன் ஆதிசைவ அந்தணரின் மூத்த மகளின் பொருட்டுச் சான்று பகர்ந்தமையின் இப்பெயர் பெற்றார். இறைவியின் திருப்பெயர் சௌந்தரிய வல்லி.
வராகமூர்த்தியும் காசிப முனிவரும் இறைவனை வணங்கிப் பேறு பெற்றனர். அம்மையால் வருந்தி உடல் நிறம் மாறிக் கண் இழக்கப்பெற்ற ஆதிசைவ அந்தணரது மூத்த மகள் இவ்வூர்த் தீர்த்தத்தில் மூழ்கப் பெற்றதன் காரணமாக உடல் வனப்பும், கண்ணும் பெற்றுள்ளனர். இவ் ஊர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.


கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு கல்வெட்டுக்கள், மூன்றாம் இராஜராஜசோழனுடைய மகனும், சோழமண்டலத்தைக் கி. பி. 1246 முதல் 1279 முடிய ஆண்டவனுமாகிய மூன்றாம் இராஜேந்திரசோழனின் ஏழாவது, இருபத்திரண்டாவது இராச்சிய ஆண்டுகளில் பொறிக்கப்பெற்றனவாகும். ஏனைய இரண்டு கல்வெட்டுக்களில் அரசர்களின் பெயர்கள் காணமுடியாதவாறு சிதைந்து விட்டன. அவற்றுள் ஒன்று `தேவற்கு யாண்டு பத்தாவது` என்றும், மற்றொன்று உடையார்தம் பரிசு` என்றும் தொடங்குகின்றன.

இக் கல்வெட்டுக்களில் (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902. 603 -606. See also South Indian Inscriptions, Volume VIII. 200 - 203.)

இறைவரின் திருப்பெயர் தம்பரிசுடைய நாயனார் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. இக்கோயிலில் விநாயகப் பிள்ளையாரையும், அம்பெறிந்த பெருமாளையும், நாச்சியாரையும், ஆட்கொண்ட நாயகதேவரையும், நாச்சியாரையும், உடையார்க்குத் திருப்பள்ளியறைநாச்சியாரையும், ஆளுடைய பிள்ளையாரையும் எழுந்தருளுவித்தவன் இவ்வூர் வியாபாரிகளில் சாத்துடையான் தம்பரிசுடையான் ஆதிச்ச தேவனான அமரகோன் ஆவன்.

மார்கழி, சித்திரைத் திருநாள்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வந்தன. இதன் பொருட்டு ஏமலூருடையான் திருப்பங்குடையான் திருவாண்டானின் தந்தையான கிளியுடையான் அணுக்கன் நிலமளித்திருந்தான்.

 
 
சிற்பி சிற்பி