கோழம்பம் (திருக்கோழம்பம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை கோகிலேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: மது தீர்த்தம்

பதிகங்கள்: நீற்றானைநீள் -2 -13 திருஞானசம்பந்தர்
வேழம்பத் -5 -64 திருநாவுக்கரசர்

முகவரி: எஸ் புதூர் அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612108
தொபே. 9367728984

இது மயிலாடுதுறை-கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், நரசிங்கன் பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாவடுதுறை யிலிருந்தும் செல்லலாம்.

அங்கிருந்து தெற்கே சுமார் 2.5 கி.மீ.தூரத்தில் இருக்கின்றது.

இது காவிரித் தென்கரைத் தலங்களுள் முப்பத்தைந்தாவது ஆகும். இறைவரது திருப்பெயர்:- கோகிலேசுவரர், இறைவியாரது திருப்பெயர்:- சௌந்தரநாயகி.

இந்திரனால் குயிலுருவமாகுமாறு சபிக்கப்பெற்ற சந்தன் என்னும் வித்தியாதரன் இங்குவந்து இறைவனை வழிபட்டுப் பழைய உருவம் எய்தினன். இது திருஞானசம்பந்தராலும் திருநாவுக் கரசராலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இதற்கு இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி