சோபுரம்(தியாகவல்லி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சோபுரநாயகி உடனுறை சோபுரநாதர்


மரம்: கொன்றை
குளம்: பரம தீர்த்தம்

பதிகம்: வெங்கணானை -1 -51 திருஞானசம்பந்தர்

முகவரி: தியாகவல்லி அஞ்சல்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம், 608801
தொபே. 9843670518

நடுநாட்டுத்தலம். சிதம்பரம் - கடலூர் இருப்புப்பாதையில் ஆலப்பாக்கம் இரயில் நிலயத்துக்குக் கிழக்கே உள்ளது. இவ்வழியில் பேருந்துகளிலும் ஆலப்பாக்கம் வரலாம். ஆலப்பாக்கத்திற்குக் கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் சோபுரம் உள்ளது. சாலை வசதி உள்ளது.

இது இப்பொழுது தியாகவல்லி என வழங்குகிறது. முதற் குலோத்துங்கன் மனைவி மூவருள் பட்டத்து மனைவியாகிய தியாக வல்லியால் திருப்பணி செய்யப் பெற்றமையின் இப்பெயர் பெற்றது போலும். அகஸ்தியர் பூசித்த தலம். சமீபகாலம் வரையில் கடற்கரை மணலால் மூடப்பட்டு மேடாய் இருந்தது. ஒரு துறவி கருப்பக் கிருகத்தின் கல்ஸ்தூபி மணலில் காணப்படத் தோண்டி, ஊரவர் உதவியைக்கொண்டு வெளிப்படுத்தினர். பரிவாரங்களுடன் ஆலயம் முழுவதும் மணலிலிருந்து தோண்டப்பட்டது. சில அறிகுறிகளால் நகரமே புதையுண்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சுவாமிபெயர் சோபுரநாதர். அம்மைபெயர் சோபுரநாயகி. தீர்த்தம் பரம தீர்த்தம்.




கல்வெட்டு:

கல்வெட்டுக்கள் ஐந்து உள்ளன. இங்கே நர்த்தனகணபதி கோயில் இருந்ததாகவும், அதற்குச் சுந்தர பாண்டியன் நிலம் அளித்த தாகவும் அறியப்படுகிறது(114 of 1904). இராஜராஜ தேவர், சாரிபுத்த பண்டிதர், மாறவர்மன் சுந்தரபாண்டியன் I, கோநேரின்மைகண்டான், சுந்தர பாண்டிய தேவர் இவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பெறுகின்றன.

 
 
சிற்பி சிற்பி