அருள்மிகு ஒப்பிலாம்பிகை உடனுறை தொலையாச் செல்வர்
குளம்: காவிரி, சூரிய தீர்த்தம்.
பதிகங்கள்: செப்பநெஞ் -1 -28 திருஞானசம்பந்தர்
பொய்விராமேனி -4 -41 திருநாவுக்கரசர்
காலை எழுந்து -4 -85 திருநாவுக்கரசர்
கொல்லையேற்றினர் -5 -33 திருநாவுக்கரசர்
மூத்தவனாய் -6 -44 திருநாவுக்கரசர்
அழல்நீர் -7 -94 சுந்தரர்
முகவரி: திருச்சோற்றுத்துறை அஞ்சல்
கண்டியூர் வழி
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613202
தொபே. 04362 262814
சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலம். தஞ்சாவூர் - கண்டியூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. அருளாளர் என்னும் அந்தண அன்பருக்கு அட்சயபாத்திரம் அளித்துப் பஞ்சகாலத்தில் அடியார்களுக்கு அன்னமிட்டுக் காத்த தலம். கௌதம முனிவர் தவஞ்செய்து முத்திபெற்றமையால் கௌத மாஸ்ரமம் என்று வழங்கப்படும்.
இந்திரன், சூரியன் முதலியோர்கள் வழிபட்டு உய்ந்தனர். சூரியன் வழிபட்ட செய்தியை ``செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத்துறைநாதன்`` என்னும் நேரிசையால் அறியலாம். திருவையாற்று சப்தஸ்தானஸ்தலங்களில் ஒன்று. இறைவர்: தொலையாச் செல்வர்.
இறைவி: ஒப்பிலாம்பிகை. வட மொழியில் முறையே ஓதனவனேசுவரர், அன்னபூரணி எனவும் வழங்கப் பெறும். தீர்த்தம் காவிரி.