தருமபுரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மதுரமின்னம்மை உடனுறை யாழ்மூரிநாதர்


மரம்: வில்வம்
குளம்: தருமதீர்த்தம்

பதிகம்: மாதர்மடப்பிடி -1 -136 திருஞானசம்பந்தர்

முகவரி: காரைக்கால் அஞ்சல்
புதுவை மாநிலம், 609602
தொபே. 04368 226616

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலம். காரைக்கால் - திருநள்ளாறு பேருந்து வழியில் உள்ளது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறுபெற்றமையின் இப்பெயர் எய்தியது. பிரமதேவரும் பூசித்துப் பேறுபெற்றுள்ளார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிக்காவிடில் திருஞானசம்பந்தர் பாடல் சிறக்காதென்றனர். கேட்ட பாணர் வருந்தித் திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். அவரும் `மாதர் மடப்பிடி` என்னும் பதிகத்தை ஓதினர். பாணனார் யாழிலிட்டு வாசிக்க இயலாமையை உறவினர்க்குணர்த்தினர். யாழையும் உடைக்கச் சென்றனர். திருஞானசம்பந்தர் தடுத்து, இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார்.

இறைவன் பெயர் யாழ்மூரிநாதர். இறைவியின் பெயர் மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி, சதாமதுராம்பிகை. தீர்த்தம் தர்மதீர்த்தம். தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. இடம் காரைக்காலிலிருந்து மேற்கே 1 கி.மீ. உள்ளது.




கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி