நணா(பவானிமுக்கூடல்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வேதநாயகி உடனுறை சங்கமுகநாதர்


மரம்: இலந்தை
குளம்: பவானி முக்கூடல்

பதிகம்: பந்தார்விரன் -2 -72 திருஞானசம்பந்தர்

முகவரி: பவானி
சத்தியமங்கலம் வட்டம்
ஈரோடு மாவட்டம், 638301
தொபே. 04204 230192

வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நண்ணாத பதியாதலின் நணா என்னும் பெயர்பெற்றது. திரு அடைமொழி. இது பவாநி என்றும், காவிரியும் பவாநியும் கூடுதலால் பவாநிகூடல் என்றும் கூறப்படும். கொங்குநாட்டுத் தேவாரம் பெற்ற பதிகளில் ஒன்று. இது ஈரோடு தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 13.5.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. சேலம், கரூர், ஈரோடு , கோவை முதலிய நகர் களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

இறைவரது திருப்பெயர் சங்கமுகநாதர். இறைவியாரது திருப்பெயர் வேதநாயகி. குபேரன், விசுவாமித்திர முனிவர், பராசர முனிவர் வழி பட்டுப் பேறுபெற்றார்கள். இதுபவாநி முக்கூடல் என்னும் தீர்த்தச்சிறப் புடையது. பவாநி, காவிரி, அமுதநதி இவை ஆலயத்திற்குக் கிழக்கே கூடுகின்றன.

இவ்வாலயத்தில் தனியே ஒரு திருமால் கோயில் இருக் கின்றது. அவர் வழிபட்ட குறிப்பு ``பூமியளந்தானும் போற்றமன்னி`` என்னும் இக்கோயிலுக்குரிய ஞானசம்பந்தர் பதிகம் ஒன்பதாம் பாடல் பகுதியால் புலப்படுகிறது. இது ஞானசம்பந்தரது பதிகம் ஒன்றைப் பெற்றுள்ளது.



கல்வெட்டு:

திருக்கோயிலுள் பொன்னாரமளியம்மன் கோயிலைப் பார்த்திப ஆண்டில் இம்மடி கெட்டி முதலியார் கட்டினார் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி.1735-65 ஆண்ட கிருஷ்ணராஜ உடையார் மந்திரி தளவாய் தேவராயன் ஒரு மண்டபம் கட்டினான். மகாமண்டபத்துக் கல்வெட்டு ஒன்றில் இம்மடி கெட்டி முதலியார் கோயிலில் சில திருப்பணிகள் செய்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. உமாமகேசுவரர் கோயில்முன் உள்ள ஒரு கல்வெட்டின்படி ஒரு நாராயணக்கவுண்டன் அர்த்தமண்டபத்தையும் விமானத்தையும் விஜய ஆண்டில் கட்டினான். பள்ளியறையில் ஒரு தந்தப்பல்லக்கு உள்ளது. கலெக்டர் காஜோ என்ற ஆங்கிலேயன் அதனைக் கோயிலுக்கு உதவினான்.

 
 
சிற்பி சிற்பி