அருள்மிகு உலகநாயகி உடனுறை இலட்சுமிபுரீசுவரர்
மரம்: விளா மரம்
குளம்: இலட்சுமி தீர்த்தம்
பதிகங்கள்: சூலம்படை -1 -18 திருஞானசம்பந்தர்
கொடுங்கண் -5 -23 திருநாவுக்கரசர்
அற்றவனார் -7 -19 சுந்தரர்
முகவரி: திருநின்றியூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609118
தொபே. 04364 320520
சோழநாட்டு காவிரி வடகரைத்தலம். நாகைமாவட்டம் மயிலாடு துறை, வைத்தீஸ்வரன்கோயில் பேருந்துவழியில் உள்ளது.
திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். சோழன் ஒருவன் திருவிளக்கிட்டுத் தினந்தோறும் வழிபட்டுவந்தான். அவன் கொண்டுவந்த திரி ஒருநாள் நின்றுவிடவே, சிவலிங்கத்தினின்றும் ஒரு சோதி தோன்றி, அவன் வழிபாட்டிற்கு இடையூறுண்டாகாமல் உதவி யது. அதனால் திரிநின்றவூர் ஆயிற்று. அது இப்போது திரு நின்றவூர் என வழங்குகின்றது என்பது செவிவழிச்செய்தி.
பரசுராமன் நின்றி யூரை இறைவற்கும், பக்கத்திலுள்ள 360 வேலி நிலத்தை வேதியர்கட்கும் அளித்து வழிபட்டான் என்பது புராண வரலாறு. இதனையே சுந்தரர் தேவாரம் தக்கேசி மூன்றாம்பாடல் குறிப்பிடுகிறது. அடுத்த பாடலில், பசு பால்சொரிந்து அபிஷேகித்து வந்ததாகவும் ஒரு வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது.
சுவாமிபெயர் லக்ஷ்மிபுரீசுவரர்; மகாலட்சுமிநாதர். அம்மை பெயர் உலகநாயகி. தீர்த்தம் நீலதீர்த்தம். (இது அபிதான சிந்தாமணி கூற்று) மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் வழங்கும்.