நீலக்குடி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அழகம்மை உடனுறை நீலக்குடியீசர்


மரம்: பஞ்சவில்வம்
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: வைத்தமாடு -5 -72 திருநாவுக்கரசர்

முகவரி: திருநீலக்குடி அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612108
தொபே. 0435 2460660

தென்னலக்குடி என இக்காலம் வழங்கும் இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில், ஆடுதுறைத் தொடர்வண்டி நிலையத்துக்குத் தெற்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது.

இறைவர் : நீலக்குடியீசர்.

இறைவி: அழகம்மை.

வருணனும், தேவகன்னிகைகளும் பூசித்துப் பேறுபெற்றனர். இங்கு அம்பிகை சந்நிதிகள் இரண்டுள்ளன.

அப்பர் பெருமானைச் சமணர்கள் கல்லில் கட்டி கடலில் தள்ளியபொழுது, அவர் இறைவன் திருநாமத்தைச் சொல்லி உயர்ந்ததை இவ்வூர்ப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அது ``கல்லினோடெனைப் பூட்டி`` என்று தொடங்கும் பாசுரமாகும்.




கல்வெட்டு:

கோயிலுக்குள் நெற்கூடு கட்டுதல் கூடாது என்பதை ஒரு கல்வெட்டும், மற்றொரு கல்வெட்டு அவ்வூரிலுள்ள மத்தியார்ச்சுனம் என்னும் திருக்குளத்தைப்பற்றியும் தெரிவிக்கின்றன. மேலும் பிந்திய கல்வெட்டு சப்தஸ்தானங்களுக்குரிய ஊர்களின் பெயர்களையும் குறிக்கின்றது(276 ணூசூ 1911).

 
 
சிற்பி சிற்பி