நெய்த்தானம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு இளமங்கையம்மை உடனுறை நெய்யாடியப்பர்


மரம்: வில்வ மரம்
குளம்: காவிரி

பதிகங்கள்: மையாடிய -1 -15 திருஞானசம்பந்தர்
காலனை வீழச் -4 -37 திருநாவுக்கரசர்
பாரிடஞ்சாடிய -4 -89 திருநாவுக்கரசர்
கொல்லியான் -5 -34 திருநாவுக்கரசர்
வகையெலா -6 -41 திருநாவுக்கரசர்
மெய்த்தானத் -6 -42 திருநாவுக்கரசர்

முகவரி: தில்லைத்தானம் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 613203
தொபே. 04362 260553

சோழநாட்டுத்தலம். தஞ்சையை அடுத்துள்ள திருவையாற் றிற்கு மேற்கே 1.5. கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்று சப்தஸ்தான கே்ஷத்திரங்களில் ஏழாவது தலம். இங்கே கலைமகள் வழிபட்டுப் பேறுபெற்றாள். சுவாமிபெயர் நெய்யாடியப்பர். அம்மைபெயர் பாலாம்பிகை. `இளமங்கையம்மை` எனத் தேவாரம் குறிப்பிடுகின்றது.

தீர்த்தம் - காவிரி. கிழக்குப்பார்த்த சந்நிதி. இப்போது தில்லைஸ்தானம் என வழங்குகின்றது. வடமொழியில் கிருதஸ்தான மாயிற்று. இறைவற்குப் பசுநெய் அபிஷேகிப்பது வழக்கம்.



கல்வெட்டு:

இத்தலத்தில் அரசியலார் படிஎடுத்தவண்ணம் 51 கல் வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இத்தலம் இராஜாதிராஜன் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பைங்காநாட்டுத் திருநெய்த்தானம் எனக் குறிக்கப்பெறுகின்றது. இத்தலத்து பராந்தகன் I முதலாக ஐந்து சோழ அரசர்களின் தானங்களைக் குறிக்கும் நிகழ்ச்சிகளும், நந்திவர்மன் தான நிகழ்ச்சிகளும் குறிக்கப்பெறுகின்றன. செம்பியன் ஈக்காட்டு வேளானான பரிசைகிழான் மறவன்நக்கன் என்பவன் 13 கழஞ்சு பொன்னைக் கோயில் விளக்கிற்காகக் கொடுத்தான்.(276 of 1911) கூத்தன் அருள்மொழியான வானவன் பேரரையன் நிலத்தை 25 கழஞ்சு பொன்னுக்கு நங்கை வரகுணபெருமானார் வாங்கி விளக்கிற்காக வைத்தாள்.(277 of 1911) சாமர கேசரி தெரிஞ்ச கைக்கோளர், விக்ரமசிங்க தெரிஞ்ச கைக்கோளர், இருவராலும் பைங்காநாட்டுக் கீழப்பிலாறு கிராமத்தில் நிலம் அளிக்கப் பெற்றது. முற்கூறிய சாமரகேசரி தெரிஞ்ச கைக்கோளருள் ஒருவனான மல்லன் ஆரியனால் நிவந்தம் விடப் பெற்றது. கோயில் காரியத் தலைவனான காமக்கோடநல்லூர் ஆய னால் இரு பொன்பட்டங்கள் கடவுளுக்குக் கொடுக்கப்பெற்றன.(283 of 1911) சோழப் பெருமானடிகளுடைய காமக் கிழத்தியான நங்கை கூத்தப் பெருமானார் 30 கழஞ்சு பொன்னை விளக்குக்காக வைத்தார். அதனைத் திருநெய்த்தானச் சபையார் சுவாமிக்கு ஸ்நபன மண்டபங் கட்டப் பயன்படுத்தி விட்டனர். அதற்குப் பதிலாகக் கோயில் நிலங்கள் சிலவற்றை ஏற்பாடு செய்தனர். வளவர்கோன் பேரரையன் என்பவனும், செம்பியன் தமிழவேளான் விக்கணன் மனைவி கடம்பமா தேவியும், தென்னவன் பிரதிமாராசனான கட்டி ஒற்றியூரான் பராந்தகனும், இளங்கோவேண்மான் மனைவியான வரகுணப் பெருமானாரும் விளக்கிற்காகப் பொன்னும், நிலமும் அளித்தனர். முண்டங்குடி உடையானான கண்ணங்குடி நாராயணன் நைவேத்யத் திற்கு நெல்லளித்தான். இது அளித்தகாலம் பராந்தகன் I காலம். மேளக்காரன், தேவதாசி, வாணிகன் இவர்கள் தருமமும் விளங்கின என்பதை மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

( 22, 33, 36 of 1895) கோப்பர கேசரியான பராந்தகன் Iக்கு மாமியார் முள்ளூர் நங்கையென்று தெரிகிறது.(45 of 1895)

 
 
சிற்பி சிற்பி