பழனம் (திருப்பழனம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஆபத்சகாயர்


மரம்: வில்வ மரம்
குளம்: காவிரி

பதிகங்கள் வேதமோதி -1 -67 திருஞானசம்பந்தர்
சொன்மாலைபயில் -4 -12 திருநாவுக்கரசர்
ஆடினார் ஒருவர் -4 -36 திருநாவுக்கரசர்
மேவித்துநின்று -4 -87 திருநாவுக்கரசர்
அருவனாய் -5 -35 திருநாவுக்கரசர்
அலையார் -6 -36 திருநாவுக்கரசர்

முகவரி: திருப்பழனம் அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613204
தொபே. 04362 326668

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருவையாறு பேருந்துச்சாலையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

இது திருவையாற்று ஸப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாய திங்களூர் இதற்கு அண்மையில் இருப்பதால் இங்கு வழிபட வந்த அப்பர் அடிகள் இத்தலப் பதிகத்து அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்து அருளிச்செய்தார்கள். விடந்தீர்த்த பதிகமாகிய ``ஒன்று கொலாம்`` என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமானதலம் இது. இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் - காவிரி.



கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. இவைகளும் முதற்பராந்தகன் காலமுதற்கொண்டே தொடங்குகின்றன. இவற்றால் அரசர்களும் அரசியர்களும், அவர்களது தோழிமார்களும், தண்டத் தலைவர்களும் விளக்கிற்காக நிலமும் நெய்யும், பொன்னும் வழங்கியமை அறியலாம். திரிபுவன வீரதேவனான மூன்றாம் குலோத்துங்கன் சிந்திநல்லூரில் உள்ள நிலங்களை 15500 காசுகளுக்கு விற்று, அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். இராஜராஜன் மூன்று காணி ஒரு முந்திரி நிலம் அளித்தான் என்பதால் அரசர்களின் அன்பின் நுணுக்கம் அறியப்பெறுகிறது. கோஇராஜகேசரிவர்மன் காலத்தில் ஒரு வேளாளன் கல்மண்டபம் ஒன்றை எழுப்பித் தந்தான்.

 
 
சிற்பி சிற்பி