அருள்மிகு பசுபதிநாயகி உடனுறை பாசூர்நாதர்
மரம்: மூங்கில்
குளம்: சோழ தீர்த்தம்
பதிகங்கள்: சிந்தையிடை -2 -60 திருஞானசம்பந்தர்
முந்திமூவெயில் -5 -25 திருநாவுக்கரசர்
விண்ணாகி -6 -83 திருநாவுக்கரசர்
முகவரி: திருபாசூர் அஞ்சல்
கடம்பத்தூர் அஞ்சல்
திருவள்ளூர் வட்டம்
திருவள்ளூர் மாவட்டம், 631203
தொபே. 9894486890
பசுமை + ஊர் = பாசூர். நீர்வளத்தால் நிலம் பசுமையாய் விளங்குவதால் இப்பெயர்பெற்றதாதல் வேண்டும். தலமரம் மூங்கில் ஆதலாலும், இறைவர் மூங்கிலடியில் முளைத்தவர் ஆதலாலும் இப்பெயர்பெற்றனர் என்பர். (பாசு = மூங்கில்).
இது திருவள்ளூர்க்கு வடக்கில் 5 கி.மீ. தூரத்தில் இருக் கின்றது. திருவள்ளூர் - பேரம்போக்கம் நகரப் பேருந்திலோ காஞ்சி புரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்திலோ பாசூர் செல்லலாம்.
இறைவர் திருப்பெயர் பாசூர்நாதர். இறைவி திருப்பெயர் பசுபதிநாயகி.
குறும்பர் அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள் கரிகால் சோழன் மீது ஏவிய பாம்பைச் சிவபெருமான் எழுந்தருளித் தடுத்து ஆட்டினார் என்பது தலமான்மியம். இச்செய்தி, ``படவரவொன்றது ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே`` என்னும் இத்தலத்துக் குரிய திருத்தாண்டகப் பகுதியாலும் இது உறுதி எய்து கின்றது. சந்திரன் பூசித்துப் பேறு பெற்றான்.
இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, நாவுக்கரசர் பதிகங்கள் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.