பாண்டிக்கொடுமுடி (திருப்பாண்டிக்கொடுமுடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பண்மொழிநாயகி உடனுறை கொடுமுடிநாதர்


மரம்: வன்னி
குளம்: காவிரி

பதிகங்கள்: பெண்ணமர் -2 -69 திருஞானசம்பந்தர்
சிட்ட னைச்சிவ -5-81 திருநாவுக்கசர்
மற்றுப்பற் -7 -48 சுந்தரர்

முகவரி: கொடுமுடி
ஈரோடு மாவட்டம், 638151
தொபே. 04204 222375

இது கொடுமுடி புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி - கரூர் - கொடுமுடி என்ற பேருந்து வழியில் பேருந்தின்மூலம் இத்தலத்தை அடையலாம்.

இறைவர் திருப்பெயர் கொடுமுடிநாதர். இறைவி திருப்பெயர் பண்மொழிநாயகி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் காவிரி.

மூவர்களாலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இத் தலத்திற்கு மூன்று பதிகங்கள் இருக்கின்றன, இத்தலத்துச் சுந்தர மூர்த்தி நாயனாரது திருப்பதிகம் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தது. கோயமுத்தூர் வித்துவான், கந்தசாமி முதலியாராலும், வேங்கடரமண தாசர் என்பவராலும் இயற்றப்பெற்ற தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது.



கல்வெட்டு:

இவ்வூர்க்கோயிலில் எட்டுக் கல்வெட்டுக்கள்(See the Annual Reports on South Indian Epigraphy for the year ending 1902, No. 115-135. See also South Indian Inscriptions, Vol. VII, No. 739-759.)முன்னமே படி எடுக்கப்பட்டிருந்தன. அவைகளின் சாரம் பின் வருமாறு:-

1. திருப்பாண்டிக் கொடுமுடியுடையாருக்கும், பெரிய திரு வடி நாயனாருக்கும் மாசி மகத்து விழா, வழிபாடு, கோயில் திருப்பணி முதலியவற்றிற்காக விதரி என்ற திருச்சிற்றம்பல நல்லூர், எழுநூற்றுவர் சதுர்வேதி மங்கலம், திருவூஞ்சலூர், வள்ளிபுரம், வடிவுடைய மங்கை ஐயகரம், திருக்காட்டுத்துறை என்ற ஊர்கள் இறையிலியாகக் கொடுக்கப்பட்டன. காலம் முதலிய விவரங்கள் தெரியவில்லை.

அம்மன் கோயில் அர்த்தமண்டபத்தில் உள்ள கல்வெட்டின் படி கோனேரின்மை கொண்டான் மூன்றாம் ஆண்டில் பாண்டி மண்டலத்து மயிலூர் உடையான் என்னும் போதமுதியான் என்பவன் பாண்டிக் கொடுமுடி ஆளுடையார் கோயிலில் இளைய பிள்ளை யாரையும், பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் கருடாழ்வாரையும் எழுந்தருளுவித்து அரசன் நன்மையின்பொருட்டு இருகூறாக ஐந்து பொன் தந்தான்.

அம்மன் கருவறைச்சுவரில் உள்ளதன்படி விதரி என்ற திருச்சிற்றம்பல நல்லூரில் இருபதுமா நிலத்தை இறையிலியாக மேல்கரை அறையூர்நாட்டார்க்கு விட்ட நான்குமா போக மற்றவைகள் திருப்பாண்டிக் கொடிமுடியுடையார்க்கும், விதரி திருச்சிற்றம் பலமுடையாருக்கும் கொடுக்கப்பட்டன.

வீர நாராயணன் ரவிவர்மன் இருபத்தேழாம் ஆண்டில் திருக்கொடுமுடி மகாதேவர்க்கு வழிபாட்டிற்காகவும், மாசி மகத்திற் காகவும் மேல்கரை, அறையூர்நாட்டு ஊஞ்சலூரை இறையிலியாகக் கொடுத்துள்ளான்.

சுந்தரபாண்டிய தேவர் இரண்டாவது ஆண்டில் பூந்துறை நாட்டார்கள் திருப்பாண்டிக் கொடுமுடி நாயனாருக்கு வேம்புரியான கண்டியதேவ நல்லூரைத் தேவதானமாகக் கொடுத்துள்ளார்கள்.

 
 
சிற்பி சிற்பி