அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர்
மரம்: புன்னை
குளம்: அக்கினி தீர்த்தம்
பதிகம்: குறிகலந்த -1 -2 திருஞானசம்பந்தர்
வெங்கள்விம்மு -2 -115 திருஞானசம்பந்தர்
செய்யர் வெண் -4 -16 திருநாவுக்கரசர்
பகைத்திட்டார் -4 -54 திருநாவுக்கரசர்
தன்னைச் சர -4 -105 திருநாவுக்கரசர்
துன்னக் கோவண -5 -46 திருநாவுக்கரசர்
எண்ணுகேன் என் -6 -99 திருநாவுக்கரசர்
தம்மை யேபுகழ்ந் -7 -34 சுந்தரர்
முகவரி: திருப்புகலூர் அஞ்சல்
திருகண்ணபுரம் வழி
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609704
தொபே. 04366 292300
தலம்: சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை - திருவாரூர் புகைவண்டி இருப்புப் பாதை யில் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில் இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப் பேறுபெற்ற தலம். திருநாவுக்கரசர் முத்தி பெற்ற தலம். முருக நாய னாருடைய அவதார ஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங் கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.
பெயர்கள்:
இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை. இறைவன் திருநாமம் தேவாரங்களில் `கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே` `கருந்தாள் குழலியும் தாமும் கலந்து` என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள்.
தீர்த்தம்:
அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடு கிறது.
தல விருட்சம்:
புன்னை. `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்.
விழா:
சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும் அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஐதீகமே நினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷ மான மூர்த்தி.
வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது. வர்த்த மானீச்சரம் இக்கோயிலுக்குள் உள்ளது.