அருள்மிகு கருணைநாயகி உடனுறை பழம்பதிநாதர்
மரம்: புன்னை
குளம்: இலக்குமி தீர்த்தம், பிரம தீர்த்தம்
பதிகங்கள்: மின்னியல்செஞ்சடைவெ -3 -11 திருஞானசம்பந்தர்
சித்தம்நீநினை -7 -50 சுந்தரர்
முகவரி: பொன்பெற்றி
ஆவுடையார்கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், 614629
தொபே. 04371 239202
இது மிகப் பழமை வாய்ந்தபதி என்பதை, இவ்வூர்ப் பதிகத்தில்
``பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே``
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளனர். அறந்தாங்கி தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே 11 கி.மீ. தூரத்திலுள்ள திருப்பெருந்துறைக்குத் தெற்கே 21. கி.மீ.தூரத்தில் உள்ளது. ஆவுடையார் கோயிலிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இறைவரின் திருப்பெயர் - பழம்பதிநாதர். இறைவியின் திருப்பெயர் - கருணைநாயகி. மரம் - புன்னை. தீர்த்தம் - இலக்ஷ்மி தீர்த்தம், பிரம தீர்த்தம். வேதங்கள் வழிபட்டுப் பேறுபெற்றதலம். நந்தியும் மூல லிங்கமும், ஆவுடையாரும் மிகப்பெரியனவாய் உள்ளன. இலிங்கத்திருமேனிக்கு மூன்றுமுழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழப் பரிவட்டமும் வேண்டும் என்பர்.
பாண்டி நாட்டில் உள்ள பதினான்கு தலங்களின் மூர்த்திகளும் இங்கு எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.