அருள்மிகு மின்னம்மை உடனுறை பூவணநாதர்
மரம்: பலா
குளம்: வைகை
பதிகங்கள்: அறையார்புனலு -1 -64 திருஞானசம்பந்தர்
மாதமர் -3 -20 திருஞானசம்பந்தர்
வடியேறு -6 -18 திருநாவுக்கரசர்
திருவுடை -7 -11 சுந்தரர்
திருவருள்புரிந்தாள் -9 -13 கருவூர்த்தேவர்
முகவரி: திருப்பூவணம் அஞ்சல்
இராமநாதபுரம் மாவட்டம், 623611
தொபே. 9443501761
பாண்டிநாட்டுத் தலம். மதுரைக்குக் கிழக்கே வைகையின் தென்கரையில் 18.கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மதுரையிலிருந்து பேருந்துகள் உள்ளன.
இது பிரமன் பூசித்த தலம். `நான்மறையோன் கழலே சென்றுபேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடமாம்` என்பது சம்பந்தர் தேவாரம். பொன்னனையாள் என்னும் தாசிக்காகச் சொக்கலிங்கப் பெருமான் சித்தர்வடிவாக எழுந்தருளி ரசவாதம் செய்து சோமாஸ் கந்தர் திருவுருவத்தை அமைக்க அருள் செய்தனர் என்பது திருவிளை யாடற்புராணத்துட் காணப்படும் வரலாறு.
இத்தலம் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் ஒருங்கு கூடி வழி பட்ட தலமாக இருந்தது என்பதனை `முன்சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திருப்பூவணம்` என்னும் சம்பந்த சுவாமிகள் வாக்காலும், `உதியருடன் வன்றொண்டர் தாமிருந்த இடங்கெழுமி வளவனார் மீனவனார் வளம்பெருக மற்றவரோடும் அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிதிருந்தார்` என்னும் சேக்கிழார் திருவாக்காலும் அறியலாம்.
இறைவன் பூவணநாதர். இறைவி மின்னம்மை. மின்னனையா ளம்மை என்று வழங்குவதுமுண்டு. விருட்சம் பலா. தீர்த்தம் வைகை.