மங்கலக்குடி (திருமங்கலக்குடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை பிராணநாதேசுவரர்


மரம்: கோங்கிலவு மரம்
குளம்: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், மங்கல தீர்த்தம்

பதிகங்கள்: சீரினார்மணியும் -2 -10 திருஞானசம்பந்தர்
தங்கலப் -5 -73 திருநாவுக்கரசர்

முகவரி: திருமங்கலக்குடி அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612102
தொபே. 0435 2470480

இது மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், ஆடுதுறைப் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே சுமார்4.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆடுதுறையிலிருந்து - திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் இவ்வூரை அடையலாம். காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று.

இறைவரது திருப்பெயர் புராணேசுவரர். இத்திருப்பெயர், இவ்வூர்ப் பதிகம் முதல் திருப்பாட்டில்,

``நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித்தாட்டி யர்ச்சிக்க விருந்த புராணனே``
என ஞானசம்பந்தரால் எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலுள்ள வரலாறு குறிப்புரையில் உணர்த்தப்பட்டது. இறைவியாரது திருப்பெயர் மங்களநாயகி.

தீர்த்தம் காவிரி. காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் இவர்களால் அர்ச்சிக்கப்பெற்றது. இச்செய்தி,

``மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுமுகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே``
என்னும் இவ்வூர்க்கு உரிய அப்பர் பெருமானின் குறுந்தொகைப் பாடலால் தெரிகின்றது. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.



கல்வெட்டு:

இக்கோயிலில் 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. அவையாவன சோழர் 1, பல்லவர் 1, விஜய நகரத்தரசன் 1, மற்றையவற்றிற்குப் பெயரில்லை.

சோழர்களில் இராஜராஜன் 24 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் முந்திய ஆண்டில் பஞ்சம் ஏற்பட்டதால் கோயில் சொத்தைச் சூறை யாடிய சிலரை நீதிபதிகள் பரிகாரங் கேட்டதை அறிகிறோம். பல்லவன் கோப்பெருஞ்சிங்கன் 25 ஆம் ஆண்டில் இக் கோயிலுக்கு, பெருங்கலம் தொண்டைமான் நிலம் வாங்கித் தருமம் செய்தான். கிருஷ்ணதேவராயர் 1439 சகம் ஆண்டில் கோயில்களுக்கு வரி தள்ளுபடி செய்தார். சுங்கந்தவிர்த்த குலோத்துங்கன் தனது 16 ஆம் ஆண்டில் கோயிலுக்குச் சில வரிகள் விதித்து அவைகளை அளித்தான்.

இத்திருக்கோயிலில் சோழர்களுள் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான், இவர்கள் காலங்களிலும், பிற்காலப் பல்லவர்களில் சகல புவனச் சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர் காலத்திலும், விஜய நகர அரசர்களில் வீரப்பிரதாப கிருஷ்ணதேவ மாராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவற்றுள் இராஜராஜதேவரின் கல்வெட்டு, அவ்வரசனின் 23ஆம் ஆட்சியாண்டில் பஞ்சம் ஏற்பட்டதையும், கோனேரின்மை கொண்டானின் கல்வெட்டு முதற் குலோத்துங்க சோழனின் 16 ஆம் ஆட்சியாண்டில் வருவாய்க் கணிப்புக்காக நிலங்கள் அளக்கப் பெற்றதையும் கோப்பெருஞ் சிங்கதேவர் கல்வெட்டு, இத்திருக்கோயில் முதற்பிராகாரத்தில் நாயகர் திருமண்டபத்தில் புராணலிங்க தேவரை எழுந்தருளுவித்து நிவந்தம் அளித்தவன், பாண்டி குலாசனி வளநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்துப் பெருமங்கலத்து உதயஞ் சடையனான தொண்டைமான் என்பதையும் குறிப்பிடுகின்றன. தட்சிணா மூர்த்தி, கோயிலில் நின்ற கோலத்தில் கைகுவித்துக் கடவுளை வணங்கும் முறையில் இருக்கும் உருவம் முல்லைக்குடையான் தியாகப் பெருமாளாகிய வானவன் பல்லவரையன் உருவமே. இரண்டாம் கோபுரத்தில் இருக்கும் உருவம் வரகுணப் பெருமாள் உருவம் ஆகும். இவ்வூர் விருதராச பயங்கர வளநாட்டு வேம்பற்றூராகிய எதிரிலி சோழசதுர்வேதிமங்கலத்து மங்கலக்குடி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

 
 
சிற்பி சிற்பி