மயேந்திரப்பள்ளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வடிவாம்பிகை உடனுறை திருமேனியழகர்


மரம்: வில்வ மரம்
குளம்: பிரமதீர்த்தம்

பதிகம்: திரைதரு -3 -31 திருஞானசம்பந்தர்

முகவரி: மகேந்திரபள்ளி அஞ்சல்
ஆச்சாள்புரம்
சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், 609101
தொபே. 04364 292309

சிதம்பரம் -மயிலாடுதுறை இருப்புப் பாதையில், கொள்ளிடம் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கிலுள்ள திருப்பெருமணநல்லூர் (ஆச்சார்யார்கள் புரம்) க்கு வடகிழக்கே ஏழு கி.மீ. தூரத்தில் இருக் கிறது.

இது கோயிலடிப்பாளையம் என்றும் வழங்கப் பெறுகின்றது. இறைவரின் திருப்பெயர் திருமேனியழகர். இத் திருப்பெயர் அழகன் எனவும், அந்தமில் அழகன் எனவும் இவ்வூர்ப் பதிகத்தில் ஆளப்பெற்றுள்ளது. இறைவியின் திருப்பெயர் வடிவாம்பிகை.

சந்திரன், சூரியன், பிரமன், இந்திரன் இவர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இதை ``சந்திரன் கதிரவன் றகுபுகழய னொடும் இந்திரன் வழிபட விருந்தவெம் மிறையவன்`` என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும்.

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் இரண்டு இருக்கின்றது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி