மாற்பேறு (திருமாற்பேறு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கருணைநாயகி உடனுறை மால்வணங்கீசர்
மரம்: வில்வம்
குளம்: பாலாறு, சக்கர தீர்த்தம்

பதிகங்கள்: ஊறியார்தரு -1 -55 திருஞானசம்பந்தர்
குருந்தவன் -1 -114 திருஞானசம்பந்தர்
மாணிக்குயிர் -4 -108 திருநாவுக்கரசர்
பொருமாற் -5 -59 திருநாவுக்கரசர்
பாரானைப் -6 -80 திருநாவுக்கரசர்

முகவரி: திருமால்பூர் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம், 631053
தொபே. 04177 248220

தொண்டை நாட்டுத்தலம். காஞ்சிபுரம் - அரக்கோணம் இருப்புப்பாதையில் இரயில் நிலயம். காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. இதுவே எளிதானது.

இத்தலம் ஹரிசக்ரபுரம் எனவும் வழங்கும். திருமால் ததீசி முனிவருடன் போர்செய்ய அவர் சக்கரம் வாய்மடிந்து போயிற்று. சலந்தரனைக் கொன்ற சக்கரம் சங்கரனிடத்திருப்பதையறிந்த திருமால் இத்தலத்திற்குவந்து இறைவனை ஆயிரந்தாமரைகொண்டு அர்ச்சிக்க, இறைவன் ஒரு நாள் ஒரு மலரை மறைத்துவிட்டார். திருமால் அதற்குப்பதிலாகத் தம் கண்ணையிடந்து அர்ச்சிக்க, சுதரிசனம் என்னும் சக்கரத்தை ஈந்தார். கண் இடந்து அர்ச்சித்தமைக்காகப் பதுமாக்ஷன் என்னும் பெயரையும் கொடுத்தார். சோமனும் பூசித்துப் பேறுபெற்ற தலம். இச்செய்தி `மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னுமாற் பேற்றடிகளை` என்னும் தேவாரத்தானும், `பெருமாற்றின் படைவேண்டி நற்பூம்புனல் வருமாற்றின் மலர் கொண்டு வழிபடும் கருமாற்கின்னருள் செய்தவன்` என்னும் திருக்குறுந்தொகை யானும் அறியப்படும். இறைவன்பெயர் மால்வணங்கீசர், மணிகண்டேசர். இறைவி கருணைநாயகி, அஞ்சனாக்ஷியம்மை, தீர்த்தம் பாலாறு.



கல்வெட்டு:

ஜயங்கொண்ட சோழமண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு(271 of 1906) என்று இராஜகேசரி வர்மன் திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன்காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுக்களில் திருமாற் பேறுடையார், ஆளுடையார், உத்தம சோழீசுவரமுடையார், அவிமூக்தீசுவரமுடையார் என்று வழங்கப்படுகின்றன. இத்தலத்தில் அக்கினீசுவரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்கவேண்டும். இக்கோயிலுக்குக் கண்டராதித்தனால் ஐம்பெருங்குழு ஏற்படுத்தி நிலங்களைக் கவனிக்கவும், படையலுக்கு நெல்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன(283 of 1906). இங்குள்ள விஷ்ணு கோயிலிலுள்ள இறைவன் பெயர் கோவிந்தபதியில் நின்றருளிய பெருமானடிகள் என்பது(303 of 1906). இது தண்டகநாட்டின் மாவட்டமான தர்மக்கோட்டத்தின் பிரிவான வல்ல நாட்டில் கோவிந்தபதியிலுள்ள கோயிலிலுள்ள நின்றருளிய பெருமான் ஆகும்(314 of 1906). மாற்பேறுடையார் கோயிலைக் கட்டவும், சுற்று மண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்கிற மண்டலாதித்யனால் தானம் கொடுக்கப்பட்டது(267 of 1906). உத்தம சோழீசுவரமுடையார் உருவம் தயார்செய்ய சேதிராயன் என்பவனால் நிலம் தானம் செய்யப்பட்டது(277 of 1906), உமாபத்தராகியார் (அதிசுந்தர தேவதேவியார்) உருவம் தயார்செய்ய சோழன் இராஜகேசரிவர்மனால் நிலம் தானம்செய்யப்பட்டது(284 of 1906). மணவாளப்பெருமாள் உருவம் செய்யவும், ஆபரணம் தயார்செய்யவும் பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழன் ஆட்சியில் ஆவனசெய்ததைத் தெரிவிக்கின்றது( 321 of 1906). கோயிலில் அனையமான் பரமண்டலாதித்தன் ஒரு மண்டபம் கட்டியுள்ளான்(323 of 1906). நம்மாழ்வார் திருவாய்மொழியின் வரிகள் கருப்பக்கிருகத்தின் மேற்குச் சுவரில் காணப்படுகின்றன(326 of 1906). மணவில் கோட்டத்தின் பகுதியான மேல்பழுங்கூர்நாட்டில் சிறியரூரில் கோவிந்தபதி ஆழ்வார் கோயில் ஒன்று உள்ளது(326 of 1906). தோழனார் தந்தையால் கோவிந்தபதி ஆழ்வார்மீது ஒரு திருப்பதியம் பாடப்பட்டுள்ளது(333 of 1906 ).

சோழன் இராஜகேசரிவர்மன் காலத்தில் வைஷ்ணவர்களில் 18 நாடு குறிக்கப்படுகின்றது. மேலும் வண்டல்படிந்த நிலங்களைப் பற்றியும் பாலாற்றில் வெள்ளம் வந்ததைப்பற்றியும், இதற்குச் செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன(322 of 1906). மற்றைய கல்வெட்டுக்கள் விளக்கிற்கு, பிராமண உணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி