வன்பார்த்தான்பனங்காட்டூர் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு புறவம்மை உடனுறை பனங்காட்டீசுவரர்


மரம்: பனை
குளம்: அக்கினி

பதிகம்: விடையின் -7 -86 சுந்தரர்

முகவரி: திருப்பனங்காடு அஞ்சல்
வெம்பாக்கம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், 604410
தொபே. 04182 247411

இது வன்பாக்கம் என்னும் ஊரை அடுத்துப் பனையைத் தலவிருட்சமாக உடைமையால் இப்பெயர் பெற்றது என்பர். இக்காலம் திருப்பனங்காடு என்று வழங்கப் படுகிறது.

திருக்கச்சி ஏகம்பத்துக்குத் தெற்கே நான்கு கி.மீ.இல் உள்ள ஐயன் குளத்தை அடைந்து, அங்கிருந்து மேற்கே ஆர்க்காட்டுக்குப் போகும் பெருவழியில் ஏழு கி.மீ. சென்று பின் வடக்கே 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

இங்கே இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. தெற்கிலிருப்பது அகத்தியர் பூசித்தது. இங்குள்ள இறைவரின் திருப்பெயர்:- பனங் காட்டு நாதர். இறைவியாரின் திருப்பெயர்:- அமிர்தவல்லி.

வடக்கிலிருப்பது:- புலஸ்தியர் பூசித்தது. இங்குள்ள இறைவர்:- கிருபா நாதேஸ்வரர். இறைவி:- கிருபா நாயகி.

தீர்த்தம்:- ஜடாகங்கை




கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1906 No. 233-254 and A.R.E. 1923 No. 421.)

ஆளுடையார் திருப்பனங்காடு உடையநாயனாரின் திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் இராசாதி ராசதேவன், முதலாம் குலோத்துங்க சோழன் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், இவர்கள் காலங்களிலும்; விஜய நகர வேந்தர்களில் வீர அரியண்ண உடையார் மகன் விருப்பண்ண உடையார், கண்ட கட்டாரி சாளுவநாச நாயக்க உடையார் மகன் கிருஷ்ணதேவராயர், வீரபொக்கண்ண உடையார் மகன் கம்பண்ண உடையார், அச்சுத அய்ய தேவமகா ராயர், அரியண்ண உடையார் மகன் தேவராய உடையார் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருப்பனங்காடு உடையார், ஆளுடையார் திருப்பனங்காடுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இவ்வூர், சயங்கொண்ட சோழ மண்டலத்து, காலியூர்க் கோட்டத்து, கழுமலநாட்டுத் திருப்பனங்காடு என்று முதற் குலோத்துங்க சோழன் கல்வெட்டிலும், விருப்பண்ண உடையார் மகன் அறியண்ண உடையார் கல்வெட்டில் காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுப் பிரம தேசப் பற்று திருப்பனங்காடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் தென் சுவரில் உள்ள கல்வெட்டு இக் கோயிலில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை இவர்களின் திரு மேனிகளை எழுந்தருளுவித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. இக்கல் வெட்டில் அரசர் பெயர் இல்லாமையால் அவைகள் எப்பொழுது எழுந்தருளுவிக்கப்பட்டுள்ளன எனக் கூறுவதற்கு இல்லை.

சகம் 1313 அதாவது கி.பி. 1391 இல் இவ்வூரில் பஞ்சம் உண்டாயிற்று. இது நிகழ்ந்தது வீர அரியண்ண உடையார் மகன், விருப்பண்ண உடையார் காலத்தில் ஆகும். இவர் காலத்திலே சகம் 1303 இல் குளம் உடைப்பெடுத்து கோயில் நிலங்கள் தரிசாய்க் கிடந்தன. ஆதலின் கோயிலார் கோயில் நிலங்களில் சிலவற்றை விற்று அவ்வுடைப்பை அடைத்தருளினார்கள். திருக்கண்ணப்ப நாயனார் பரம்பரையைச் சேர்ந்த வேடுவர்களில் சிலர். சம்புவராயருடைய மேன்மை கருதி இக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளனர்.

சகம் 1460 இல் ஏற்பட்ட அச்சுதைய தேவ மகாராயர் கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர் திருப்பனங்காவுடைய நாயனார் அன்புடைய நாயனார் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

 
 
சிற்பி சிற்பி