வாஞ்சியம் (திருவாஞ்சியம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வாழவந்தநாயகி உடனுறை வாஞ்சியநாதர்


மரம்: சந்தனம்
குளம்: குப்த கங்கை

பதிகங்கள்: வன்னி கொன்றை -2 -7 திருஞானசம்பந்தர்
படையும்பூத -5 -67 திருநாவுக்கரசர்
பொருவனார் -7 -76 சுந்தரர்

முகவரி: சிறீ வாஞ்சியம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610110
தொபே. 04366 203305

இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி)த் திருமால் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரித்தென்கரைத் தலங்களுள் 70-ஆவது ஆகும். நன்னிலத்தி லிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

இறைவர் திருப்பெயர் வாஞ்சியநாதர். இறைவியார் திருப் பெயர் வாழவந்தநாயகி. தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது. கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள் விசேடமாக நீராடுகின்றனர்.

தலவிருட்சம் சந்தனமரம். இது பிராகாரத்தில் இருக்கின்றது.

இயமன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் இறப்பவர் களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது மூவராலும் பாடப்பெற்றது. மூன்று பதிகங்கள் இருக்கின்றன.




கல்வெட்டு:

இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கரது மாம். திருவாஞ்சியம் குலோத்துங்க சோழவளநாட்டில் பனையூர் நாட்டில் திருவாஞ்சியம் எனக் கூறப்பட்டது. இவ்வூருக்கு இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்ற மறுபெயர் உண்டு. நிலவிற்பனை, நிலதானம் வரி தள்ளுபடி இவைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இரண்டாம் இராஜராஜதேவன் கல்வெட்டு ஒன்று கோயிலில் சேர்ந்த நிலங்களின் வரிசையைக் கூறுகிறது. இவ்வரசன் காலத்தில் அம்மனுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு, பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. அப்போது நிலமும் வீடும் தானம் செய்யப்பட்டன.

குலோத்துங்கன் காலத்தில் திருப்பள்ளியறை நாச்சியாருக்குக் கோமாங் குடியான் ஒருவன் நிலதானம் செய்தான். மங்களாம்பாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின்படி, இராஜராஜதேவன் II காலத்தில் (கி.பி.18) திருவாஞ்சியமுடையார் கோயிலில் அம்மனுக்கு ஒரு கோயில்கட்டிப் பிரதிட்டை செய்யப் பட்டது. அப்போது நிலம் வீடுகள் தானம் செய்யப்பட்டன. ஒரு நிலத்தில் இருந்த கல்வெட்டின் படி, சிதம்பரத்துப் பிச்சை மடத்து அகோர சிவாசாரியார் சீடர் அச்சுற்ற மங்கலத்துப் பெருமாநாயனார் பண்டாரம் அம்மடத்திற்கு முண்டு வான்சேரியில் ஒரு வேலி நிலம் வாங்கியதாகக் கூறப் பெற்றுள்ளது.

 
 
சிற்பி சிற்பி