வாழ்கொளிப்புத்தூர் (திருவாழ்கொளிப்புத்தூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பிரமகுந்தளாம்பாள் உடனுறை குந்தளேசுவரர்


மரம்: வாகை
குளம்: பிரம தீர்த்தம்

பதிகங்கள்: பொடியுடை -1 -40 திருஞானசம்பந்தர்
சாகையாயிர -2 -94 திருஞானசம்பந்தர்
தலைக்கலன் -7 -57 சுந்தரர்

முகவரி: திருவாழப்புத்தூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609205
தொபே. 9842538954

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். மயிலாடுதுறை யிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இன்று திருவாளபுத்தூர் என வழங்குகிறது. தேவாரத்தில் வாழ்கொளிபுத்தூர் எனவும், வாள்ஒளிபுற்றூர் எனவும் வழங்கப்பெறு கின்றது. திருமால் மாணிக்க லிங்கத்தைத் தாபித்து வழிபட்டார். வட மொழியில் அரதனபுரம் என வழங்கும். வண்டு, அருச்சுனன் பூசித்த தலம். அர்ச்சுனன் செய்த பூசைக்கு உகந்தபெருமான் அவன் வாளைப் புற்றில் ஒளித்துவைத்திருந்து, மீட்டும் அவன் அத்தினாபுரி திரும்பும் போது அளித்தார் என்பது வரலாறு. இதனாலேயே வாள்ஒளிபுற்றூர் ஆயிற்று என்பது புராணம்.

``உன்கரவாள் நின்ற வாகையின் அயல் புற்றொளித்தான்`` என்பது தலபுராணப் பாடற்பகுதி. இறைவன் திரு மேனி மாணிக்கமாதலின் வாள்ஒளிபுத்தூர் என்பது இங்ஙனமெல் லாம் மாறிற்றோ என்று எண்ணவும் இடமுண்டு. வாள் ஒளி - மிக்க ஒளி.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி